Search This Blog

27.1.13

இன்னுமென்ன சந்தேகம்? பிராமணா! உன் வாக்குப் பலித்தது!!




ஒரு பார்ப்பனன் தன் பெண்ஜாதியின் நடத்தையில் சந்தேகங்கொண்டு அடிக்கடி அந்தம்மாளை விபசாரி, விபசாரி, என்று கூறிக்கொண்டே வந்தான். ஆனால், அந்தம்மாள் தன் புருஷனின் சந்தேகத்திற்கிடமான காரியங்களுக் கெல்லாம் அவ்வப்போது பல சாக்குப் போக்குகள் சொல்லி புருஷனை அடக்கிக் கொண்டே வந்தாள்.

இப்படி இருக்கையில், அந்தப் பார்ப்பான் தன் மனைவி  அந்நிய புருஷனிடம் சம்பந்தப்பட்டுக் கொண்டிருக் கையில் ஒரு நாள் கைப்பிடியாய் பிடித்து விட்டான்.  அப்பொழுது அந்த அம்மாள் வேறு எவ்வித சாக்குப் போக்கும், சமா தானமும் சொல்லித் தப்பித்துக் கொள்ள முடியாமல் போய்விட்டதால் பிராமணா!, உன் வாக்குப் பலித்துவிட்டது. அதற்கு நான் என்ன செய்யட்டும்? என்று பதில் சொல்லி மறுபடியும் புருஷன் மீதே குற்றத்தைக் சுமத்தினாள்.

அதாவது, புருஷனைப் பார்த்து நீ அடிக்கடி என்னை விபசாரி, என்று உன் வாயால் சொல்லிக் கொண்டே  வந்தால் அல்லவா (பிராமணன் வாக்கு பொய்க்காது அது எப்படியும் பலித்துவிடும் என்று சாஸ்திரங்களில் சொல்லி இருக்கின்றபடி) நீர் பரிசுத்தமான பிராமணரானதால் உமது வாக்குப் பலித்துவிட்டது.

உமது வாக்குப் பலிப்பதற்காகவே இந்தப்படி கடவுள் செயலால் ஏற்பட்டுவிட்டது. அதற்கு நான் என்ன செய்வேன்? நீர் ஏன் என்னை அப்படிச் சொன்னீர்? என்பதாகச் சொன்னாளாம்.! அதேபோல் காங்கிரஸ் காரியக் கமிட்டியும், திரு. காந்தியும் சேர்ந்து 12.07.1931 செய்த பிரஜா உரிமை தீர் மானமானது நாம் காங்கிரசையும், அதன் தலைவர்கள் என்பவர்களையும் பற்றி அவர்கள் எப்படிப்பட்ட அபிப்பிராயக்காரர் கள் என்று குற்றம் சொல்லி வந்தோமா, அதே அபிப்பிராயம் இனி வேறு யாரும், வேறு எவ்வித வியாக்கியானமும், தத்து வார்த்தமும் செய்ய முடியாதபடி நன்றாய் வெளிப்படையாய் அழுத்தந்திருத்தமாய் சொல்லப்பட்டுவிட்டது. அது என்ன வென்றால்,

அரசியல் சட்டத்தில் ஜனங்களுடைய ஜீவாதாரமான உரிமை என்பது  பற்றிய, விதிப் பிரிவுகளில் இந்தியாவில் உள்ள சகல சமுகத்தாருக்கும் அவர்களது கலைகள், சமுக நாகரிகங்கள், பாஷைகள், எழுத்துக்கள், தொழில்கள்,  பழக்க வழக்கங்கள். மதம், மத  தர்மங்கள் ஆகியவை காப்பாற்றப்படும் என்பதாக ஒரு உத்திரவாதம். அதாவது ஜாமீன் கொடுக்கப்படும் என்கின்ற நிபந்தனையும் சேர்க்கப்படும் என்பதாகத் தீர்மானித்திருக்கின்றார்கள்.

மற்றும், ஒவ்வொரு சமுக உரிமைகளைப் பற்றிய சட்டங்களும் காக்கப்படும் என்பதாகவும் ஒவ்வொரு மாகாணங்களிலுள்ள சிறுபான்மை வகுப்புகளின் உரிமைகளின் அரசியல் உரிமை மற்றும் இதர உரிமைகள் ஆகியவை காப்பாற்றப்படும் நிபந்தனையானது அரசாங்கத்தின் ஆதிக்கத்திற்குள் இருக்கும்  என்பதாகவும் தீர்மானித்து இருக்கின்றார்கள். அது அசோசியேட் பிரஸ் சேதியாகும்.

மற்றும், 13ஆம் தேதி வெளியான எல்லாத் தினசரிகளிலும் காணப்படுவது மாகும். அன்றியும், இத்தீர்மானங்களை ஆங்கிலத்தில் உள்ளபடியே மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டுமிருக்கின்றன ஆகவே, வாசகர்களுக்கு இவ்விஷயத்தில் இன்னுமென்ன சந்தேகம் இருக்கக்கூடும்? என்பது நமக்கு விளங்கவில்லை.

கராச்சிக் காங்கிரசில் சமதர்மக் கொள்கை ஏற்பட்டுவிட்டது என்று வாய்த் தப்பட்டை அடித்ததெல்லாம் சுத்த ஹம்பக் என்பதாகவோ, அல்லது அது அதனுடைய உண்மை அர்த்தத்தை அறிந்து கொள்ள முடியாத மக்களின் கூற்று  என்பதாகவோ இப்போது யாவருக்கும் நன்றாய் விளங்கியிருக்குமென்றே கருதுகின்றோம்.

ஏனெனில் ஒவ்வொரு வகுப்பாருடைய, அதாவது இந்தியாவில் எத்தனை சமயத்தார், வகுப்பார் உண்டோ அத்தனை வகுப்பாருடைய உரிமைகளையும் பொறுத்த கலை ஆதாரங்கள் அதாவது வேத சாஸ்திர புராணங்கள். அவர்களது பாஷைகள்,  பாஷை எழுத்துக்கள் வகுப்புக் கல்விகள், வகுப்புத் தொழில்கள், அந்தந்த வகுப்பு பழக்க வழக்கத்தில் இருந்துவரும்  நடவடிக்கை கள், ஒவ்வொரு வகுப்பா ருடைய மதங்கள் அதாவது சமயம், உட்சமயம், புறச் சமயம், அந்தந்த மத தர் மங்கள், அதாவது கோவில், கோவில் சொத்து, மடம், மடங்களின் சொத்துக்கள், மததர்மமான மற்ற காரியங் கள் செய்வதற்கு விடப்பட்டி ருக்கும் தர்ம சொத்துக்கள் ஆகியவை எல்லாம் காக்கப்படும் என்பதாக காங்கிரஸ் உறுதிகூறி இருப்பதோடு உத்திரவாதமுமேற்றுக் கொண்டிருக்கின் றது.

ஆகவே, இது சமதர்மக் கொள்கை யாகுமா? அல்லது சுயமரியாதை கொள்கை யாகுமா? அல்லது நவ ஜவான் பாரத சபைக்கொள்கையாகுமா? அல்லது போல்ஸ்விக் கொள்கையாகுமா? என்பதை நம் நாட்டு வாலிபர்களை யோசித்துப் பார்க்கும்படி விரும்புகிறோம். இந்த மாதிரி யான சுயராஜ்ஜியம் ஏற்படுவதற்காக வெள்ளைக்காரன் இருக்கும் அரசியல் அதிகாரத்தைப்  பறித்து இந்த மாதிரி உத்தரவாதம் ஏற்றுக்கொண்ட காங்கிரசுக் காரரிடம் மகாத்மா இடமும் திரு. ஜவஹர் லால் இடமும் ஒப்படைக்கலாமா என்று நிதானமாய் யோசித்துப்பாருங்கள் என்று மறுபடியும் நினைப்பூட்டுகின்றோம்.

மற்றும் பார்ப்பனரல்லாத காங்கிரஸ் பக்தர்களே, இந்த உத்தரவாதமானது காரியக் கமிட்டி  உயர்திருவாளர்கள் சி. ராஜகோபாலாச்சாரியார், பண்டித மாளவியா ஆகிய பிராம் மணோத்தமர்களால் கொண்டு வரப்பட்ட ஏகமானதாய் தீர்மானிக்கப்பட்டிருக்கின் றது என்பதாகவும் அதில் குறிப்பிடப் பட்டிருக்கின்றது என்பதையும் உணருங்கள் என்றே சொல்லுகின்றோம்.

உலகில் வயிறு வளர்ப்பதேதான் பிரதானமான காரியம் என்று கருதி இருப்போமானால், மனித உருவாய் பிறந்ததற்கு வருத்தப்படவேண்டி யது தான் என்பதே எமது அபிப்பிராயம். மற்றபடி சுயமரியாதையே பிரதானமானது என்று கருதுகின்றவர்களுக்குத்தான் மனிதனாய் பிறந்ததைப் பற்றி சில சமயங்களிலாவது மகிழ்ச்சியடைய இட முண்டு என்று சொல்லலாம். நிற்க.

பம்பாய் காரியக் கமிட்டியின் உத்தரவாத தீர்மானத்தைக் கொண்டு காங்கிரசின் உண்மையான தன்மையை ஒரு வரியில்  கூற வேண்டுமானால், காங்கிரஸ் என்பது சுயமரியாதைக் கொள்கைக்கு நேர்மாறான முரண்பட்ட ஸ்தாபனம் என்று சொல்வதை விட வேறு என்ன சொல்லமுடியும்? என்று அறிவும், நாணயமும், மானமும் உள்ள மக்களை யோசித்து பார்க்கும்படி வேண்டு கின்றோம். நிற்க.

காரியக் கமிட்டியின் இந்த உத்தரவாதத் தீர்மானத்தைப் பற்றி தேசிய பத்திரிகை என்று சொல்லிக்கொண்டு இருக்கும் தமிழ்நாடு பத்திரிகை 13ஆம் தேதி  தனது உபதலையங்கத்தில் எழுதி யிருப்பதையும் இந்தச் சமயத்தில் குறிப் பிடுகிறோம். இந்த உப தலையங்கத்தில் ஒவ்வொரு எழுத்தும் வெகு நடுக்கத்துடன்  எழுதப்பட்டிருந்தாலுங்கூட  அதில் உண்மை ஒருவாறு வெளியாகியே விட்டது. அதாவது:-

இந்திய தேசிய காங்கிரசுக்குத் தலைகுனியும்படியான காலம் வந்ததைக் குறித்து நாம் மிகவும் துக்கப்படுகின் றோம். காங்கிரசின் தேசிய லட்சியம் இப்போது பின்னடையவும் நேர்ந்து விட்டது. பிரதி வகுப்பாரின் பாஷை எழுத்து, கல்வி, ஆசார அனுஷ்டானம், மதம், தர்மச் சொத்துக்கள் ஆகிய விஷயங் களுக்குத் தக்க  பாதுகாப்பளிப்பதாக (காங்கிரஸ்) காரியக்கமிட்டி கூறுவதின் கருத்து நமக்கு விளங்கவில்லை.

மற்ற மக்களுடைய பிரஜா உரிமை, சுயமரி யாதை, மனிதத்தன்மை ஆகியவற்றிற்குப் பங்கம் விளைவிக்காத வரையில் பிரதி மனிதனுடைய மதம், ஆச்சாரம், அனுஷ் டானம் பாதுகாக்கப்படும் என்று காரியக் கமிட்டி கூறி இருந்தால் அதன்பொருள் தெளிவாக ஏற்பட்டிருக்கும். இந்தியா வில் சமதர்மத்தை நிலைநிறுத்துவதற்குக் காரியக் கமிட்டியின் முடிவு முட்டுக் கட்டையாக அமையுமென்று அஞ்சுகின் றோம் என்பதாகக் குறிப்பிட்டு இருக் கின்றது.

இவை எப்படி இருந்தபோதிலும் இன்றைய தினம் இந்த நாட்டில் இருந்துவரும் ஜாதி, மத பேதங்களும், ஆச்சார அனுஷ்டானங்களும், மதங்களும், மத தர்மச் சொத்துக்களும் காப்பாற்றுவ தற்காக நமக்கு சுயராஜ்ஜியம் வேண்டும் என்ற கருத்தின் மீது தான் இன்றைய தேசியக் கிளர்ச்சி நம் நாட்டில்  நடை பெற்று வருகின்றது என்று சொன்னவர் களின் வார்த்தைகளில் எந்த எழுத்தாவது தப்பிதமானது என்று இதிலிருந்து யாரா வது சொல்ல முடியுமா? என்று கேட் கின்றோம்.

அன்றியும், காங்கிரஸ் கூட்டத்தில் இத்தனை காலம் பிரஸ்தாபிக்கப்படாத ஒரு புதிய விஷயமும் இந்த  ஜவாப்தாரி தீர்மானத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது, கவனிக்கத்தக்கதாகும்.அதாவது பழக்க வழக்கம், தொழில், மததர்ம சொத்துக்கள் ஆகியவையும் காப்பாற்றப்படும் என்ப தோடு. அதற்கு ஜவாப்தாரிதனமும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது என்பதாகும். ஆகவே இனிமேல் இந்தியாவைக் காங்கிரஸ்  பார்ப்பனிய சுயராஜ் ஜியமாக்க செய்ய வேண்டிய வேலை எது பாக்கி? என்பதாக நமக்கு விளங்கவில்லை.

இவற்றையெல்லாம் யோசித்துப் பார்த்தால்,  காங்கிரசும், காந்தி கோஷ்டியும்  இப்போது உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சமதர்ம, பொதுவுடைமை உணர்ச்சியை அழிக்க பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு சேர்ந்துக்கொண்டு  பாமர மக்களுக்குச்  செய்யும் சதியும், துரோகமும் அல்லவா என்று யோசித்துப் பார்க்கும்படி பொது மக்களை வேண்டிக் கொள்ளுகின்றோம்.

இந்த உண்மையை உணர்ந்துதானே ருஷ்ய சமதர்மக்காரர்கள், காங்கிரஸ் பொது ஜனங்களுக்குத் துரோகமான தென்றும், காந்தி பொது ஜன துரோகி யென்று தைரியமாய்ப் பிரசாரம் செய்து வருகின்றார்கள். அன்றியும் மாஸ்கோவில் இருந்து வந்த சேதி ஒன்று தமிழ்நாடுவில் பிரசுரித்திருக்கின்றபடி ருஷியாவில் இந்தியா என்பதாக ஒரு நாடகம் ஆடப்படுவதாகவும்.

அதில் பிரிட்டிஷ் ஆட்சி கொடுங்கோன்மையானதென்றும், காந்தி பொது ஜனங்களைத் தப்பான வழியில் ஏமாற்றி நடத்திக் கொண்டு போகின்றவர் என்றும் கருத்து வைத்து சரித்திரம் எழுதி நாடகம் நடை பெறுகின்றதென்பதாகக் குறிப்பிடப்பட்டி ருக்கின்றது.

இவற்றையெல்லாம் பார்த்த பிறகும், நன்றாய் உணர்ந்த பிறகும் இனியும் சுயமரியாதைக்காரர்கள் காங்கிரசைப் பற்றி சிறிது கூட தாட்சண்யம் பார்க்க வேண்டியதில்லை என்பதாகவும், அது ஒரு பெரிய ஜன சமுகத் துரோக சபையாகவும், தாழ்த்தப்பட்ட ஏழை மக்களை ஏமாற்றி கழுத்தறுக்கும் வஞ்சக சபையாகவும் இருக்கின்ற உண்மையை பொது ஜனங் களுக்குப்படும்படி விளக்க வேண்டி யதையே முக்கிய கடமையாகக் கொள்ள  வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். இந்தக் கடமைக்கு யாரும் பயப்படுவது சிறிதும் மனிதத் தன்மை யாகாதென்றே தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

இதற்காக, நாம் யாரையும் காங்கிரஸ் கூட்டத்தில்  கலகம் செய்யும்படியாகச் சொல்லவில்லை. அது மிகவும்  தப்பான தும், பயங்காளித்தனமானது மான காரிய மாகும். ஆதலால், ஒவ்வொரு இடங்களி லும் இதற்கென்றே தனிக்கூட்டம் கூட்டியே பேச வேண்டுமென்று வலியுறுத்திச் சொல்லுகிறோம். அப்படிப்பட்ட கூட்டத்தில் காங்கிரசுக் காரர்கள் குழப்பம் செய்தால் அதற்காக யாரும் பின்வாங்க வேண்டிய தில்லை  அதன் மூலமாகவே காங்கிரஸ் என்பது காலித்தனமும் உடையது என்பதை ருஜிப்பிக்க ஒரு சந்தர்ப்பம் கூடப் பெறலாம். ஆகையால் அதற்குப் பயப்பட வேண்டியதில்லை.

ஆனால்,  சுயமரியாதைக்காரர்கள் என்ன செய்து விட்டார்கள்? என்று கேட்டால், காங்கிரசின் புரட்டை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்று சொல்லிவிடும் பதிலே அதற்குப்  போதுமான பதிலாகும்.  ஏனெ னில், சுயமரியாதைக் கொள்கைகளுக்கு நேர்மாறான கொள்கைகளேதான் பெரிதும் காங்கிரசில் இருப்பதை மனதார உணர்ந்தும் சுயமரியாதையும் காங்கிரஸ் கொள்கையும்ஒன்றுதான் என்று சிலர்  விஷமப்பிரசாரம் செய்வதால் அதை ஜனங்கள் அறியும்படி செய்வதன் மூலமே சுயமரியாதை கொள்கைகளை எடுத்துச் சொல்ல வசதி ஏற்படுகின்றது . எனவே, இந்தச் சமயத்தில் அலட்சியமாய் இருக்கக் கூடாது என்று தெரிவித்துக் கொண்டு இதை முடிக்கிறோம்.

         ---------------------------------தந்தை பெரியார்-"குடிஅரசு" - தலையங்கம் -  19.07.1931

16 comments:

தமிழ் ஓவியா said...

பெரியார் பெயரில் விருது பெறுபவர்கள் திராவிட இனத்தின் நன்முத்துகள்


சென்னை பெரியார் திடலில் மிகச் சிறப்பாக நடைபெற்ற திராவிடர் திருநாள் - தமிழ்ப் புத்தாண்டு - பொங்கல் விழா

பெரியார் பெயரில் விருது பெறுபவர்கள் திராவிட இனத்தின் நன்முத்துகள்
- சாதனையாளர்களுக்கு விருது வழங்கி தமிழர் தலைவர் புகழாரம்!


சென்னை, ஜன.27-பெரியார் பெயரில் விருது பெறுபவர்கள் திராவிட இனத்தின் நன்முத்துகள் என்று சென்னை பெரியார் திடலில் மிகச் சிறப்பாக நடைபெற்ற திராவிடர் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழாவில் விருது வழங்கி தமிழர் தலைவர் புகழாரம் சூட்டினார்.

... தான் அதுவரை பார்த்திராத ஒருவருக்கு மனுதர்மத்தின் கொடுமைக்கு ஆளானார் என்பதற்காக எதிர்ப்பு தெரிவித்து சிறைக் குச் சென்றவர் தந்தை பெரியார். அப்படிப்பட்ட பெரியார் பெயரில் தான் இந்த விருது வழங்கப்படுகிறது என்று தமிழர் தலைவர், பெரியார் விருதின் சிறப்பை எடுத்துரைத்தார்.

சென்னை பெரியார் திடலில், பெரியார் நூலக வாசகர் வட்டம், பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை யுடன் இணைந்து தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் நடத்திய இரண்டாவது நாள் விழா நேற்று (26.1.2013) மாலை, முதல் நாளைவிட கோலாகலமாக விழாக் கோலம் பூண்டிருந்தது.

லயோலா இந்தியன் கலைக்குழு தோழர்களின் பறையாட்டத்துடன், பெரி யார் விருது வழங்கும் நிகழ்ச்சி அமர்க்களமாகத் தொடங்கியது. அவர்களுக்கு தமிழர் தலைவர் சிறப்பு செய்தார்.

தமிழ் ஓவியா said...

தொடர்ந்து, பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் துணைச் செயலாளர் சுப்பிர மணியன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பிறகு பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பில் விடுதலை வைப்பு நிதியாக ரூ.3,500 அய், பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் பொருளாளர் மனோகரன் தமிழர் தலை வரிடம் வழங்கினார்.

தெய்வத்தால் ஆகாதெனினும்!

அதைத் தொடர்ந்து திரா விடர் கழகத்தின் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு அறிமுகவுரையாற்றினார். அவர் தனது உரையில், விருது பெறுகின்ற பெரு மக்கள் ஒவ் வொருவரையும் பற்றி பேசும் போது, அழகிய பெரியவனின் கதை எழுதும் திறமையை பலருடன் ஒப்பிட்டு, சமுதாய உணர்வோடு எழுதுவதில் அவர் மற்றவர்களைவிட சிறந்து விளங்குகிறார் என்றும், பத்மாவதி விவேகானந் தன்பற்றி குறிப்பிடும்போது பெரியாரியப் பெண்ணியம் - என்று அவர் எழுதிய நூலை ஆய்வு செய்து உரையாற்றும் வாய்ப்பு தனக்கு கிடைத் ததைப் பற்றி குறிப்பிட்டு, பத்மாவதி விவேகானந்தனின் சிறப்பை குறிப்பிட்டார். அதே போல், தம்பி ராமையாபற்றி ஆனந்தவிகடனில் படித்த ஒரு நேர்காணலைக் குறிப் பிட்டார். அதில், தம்பி ராமையா, கடவுள் என் நெஞ் சில் கால் வைத்து அழுத் தினார். அதையும் தாண்டி நான் எழுந்தேன் - என்று குறிப்பிட்டிருந்ததைச் சொல்லி, தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்ற குறளை நினைவூட்டி பேசினார். மேலும் அவர்,

ஊடகத் துறையில் முழுக்க முழுக்க அவாளே நிறைந்திருக்கையில் தம்பி ராஜாவின் பணி மிகவும் சிறப்புக்குரியதென்று பேசி, அந்த வகையில் இந்த அமைப்பு நமது மக்களை அழைத்து பெருமைபடுத் துகிறது என்று கூறி அமர்ந் தார்.

சங்கராச்சாரியாரின் புரட்டு

செயலைத் தலைவரைத் தொடர்ந்து, திராவிடர் கழகத் தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமையுரையை வழங் கினார். அவர் தமது உரை யில், வீர விளையாட்டுகளை வழங்கிய பொன்னேரி குழுவினரின் திறமையை வியந்து பாராட்டினார். இப் படிப்பட்ட வீர விளையாட்டு களை பார்ப்பனர்கள் செய்வதேயில்லை. கடுமை யான பணிகளையெல்லாம் அவாள் செய்வதில்லை. அத னால்தான் விவசாயம் ஒரு பாவத் தொழில் என்று சொல்லி விட்டார்கள்.

1980-இல் சென்னையில், இந்து சமய கலை விழா என்ற பெயரில் சங்கராச்சாரியார் ஓர் அறிவிப்பைச் செய்து பார்ப்பனி யத்துக்கு உயிரூட்ட முயன்றார்.

அதைக் கண்ட தமிழர் தலைவர் அவர்கள், அதை முறியடிப் பதற்காக புரட்சிக் கவிஞரின் பிறந்த நாளையொட்டி, தமிழர் பண் பாட்டுக் கலை விழாவைத் தொடங்கி நடத்தச் சொன் னார். மறுநாள் அவாள் தரப்பிலிருந்து மறுபடியும் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அது இந்து சமய கலை விழா அல்ல. இந்திய சமய கலை விழாதான் - என்று, (கைதட்டல்) அப்படிப்பட்ட தலைவர்தான் இந்த பெரு மக்களுக்கு விருது வழங்கப் போகிறார் என்று பேசினார்.

தொடர்ந்து, பெரியார் விருது வழங்கும் நிகழ்வு தொடங்கியது. முதலில், தாம்பரம் மாவட்ட மகளிரணி தோழியர் திவாரி, பத்மாவதி விவேகானந்தன் பற்றிய தன் விளக்கக் குறிப்பை வாசித்தார். தொடர்ந்து, தம்பி ராஜா, தம்பி ராமையா, அழகிய பெரியவன், கலைமகள் ஆகியோரின் தன் விளக்கக் குறிப்புகளை முறையே, ஆவடி மாவட்ட இளை ஞரணித் தலைவர் தோழர் கார்வேந்தன், பிரதிபா லெனின், வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தமிழ்ச்செல்வன், பொன்னேரி நகர செயலாளர் தோழர் சுதாகர் ஆகியோர் வாசித்தனர். பல்துறையில் சாதனையாளர்களாக விளங்கும் மேற்கண்டவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடையை அணிவித்து, பெரியார் விருது மற்றும் இயக்க நூல்கள் அளித்து சிறப்பித்தார்.
தனிப்பெரும் சூரியன் தந்தை பெரியார்!

அதைத் தொடர்ந்து, விருது பெற்ற பெரு மக்கள் ஏற்புரை வழங்கும் நிகழ்ச்சி தொடர்ந்தது. பத்மாவதி விவேகானந்தன் தனது ஏற்புரையில், பெரியார் பேசிய அளவுக்கு, பெண் ணுரிமை பற்றி உலகத்தில் வேறு எந்தத் தலைவரும் பேசியதில்லை என்று குறிப்பிட்டார். மேலும் அவர், தன்னலமில்லாத தனிப் பெரும் சூரியன் தந்தை பெரியார் என்று புகழாரம் சூட்டினார். ஆகவே, இந்த விருதை என் வாழ்நாளின் சாதனையாகக் கருதுவேன் என்று பேசினார்.

நமது பாதை பெரியார் பாதை!

தமிழ் ஓவியா said...

அவரைத் தொடர்ந்து, ஊடகவியலாளர் தம்பிராஜா தனது ஏற்புரையில், இந்த விருதில் தமிழ்நாட்டையே உள்ளடக்கமாக்கித் தந்திருப்பதாகவே நான் கருதுகிறேன் என்று சொல்லி விட்டு, இளைஞர்கள் ஊடகங்களில் அதிகமாக வர வேண்டும். அதற்கு நமது வரலாற்றை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்து, நமது பாதை அன்னாஹசாரே, அரவிந்த கெஜ்ரிவால் பாதையல்ல, பெரியார் பாதை என்று இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்து அமர்ந்தார்.

தமிழ் ஓவியா said...


அடுத்தவனைக் கெடுக்காதே!
அடுத்தவனிடம் கெட்டுப் போகாதே!!

அதைத் தொடர்ந்து திரைப்பட நடிகர் தம்பி ராமையா தனது ஏற்புரையில், இந்த இடம் தமிழகத்தை புரட்டிப் போட்ட இடம். தமிழர்களை தமிழர்களாக வாழ வைத்த இடம். நான், தந்தை பெரியாரை கொஞ்சம் வாசித்தவன். என் தந்தை, பெரியார் இறக்கும் வரையிலும் சுவாசித்திருக்கிறார் என்று குறிப்பிட்டுவிட்டு, அடுத்தவனைக் கெடுக்காத, அடுத்த வனிடம் கெட்டுப் போகாத சுயமரியாதை வேண்டும். ஆகவே இந்த விருது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். அதுவும் தமிழர் தலைவர் கையில் பெற்றது இன்னும் சிறப்பு என்று பேசினார்.

நடமாடும் கலைக்களஞ்சியம் தமிழர் தலைவர்

தம்பி ராமையாவைத் தொடர்ந்து புரட்சி எழுத்தாளர் அழகிய பெரியவன் தமது ஏற்புரையின் போது, நெகிழ்ச்சி யான தருணம் இது. எப்பொழுதுமே எனது அடையாளமாக திகழக் கூடிய விருதாக இது இருக்கும். அது மட்டுமல்ல இதுவரையிலும் நான் சரியாகத்தான் எழுதியிருக்கிறேன் என்பதற்கு அடையாளம்தான் இந்த விருது என்றும் கருதுகிறேன்.
தொலைக்காட்சியில் ஆசிஸ் காந்தி என்பவர், தமிழர் தலைவரிடம், இடஒதுக்கீடு வந்ததால் பிற்படுத்தப் பட்டவர்கள் ஏராளமாக பணிக்கு வந்தனர். அவர்களால்தான் லஞ்சம் வாங்குவது அதிகரித்திருக்கிறது என்று சொல்லப் படுகிறதே என்று கேட்டார். நான் தமிழர் தலைவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று பதற்றத்துடன் காத்திருந்தேன். சற்றும் தயக்கம் இல்லாமல், பார்ப்பனர்கள் எங்கெங்கு எப்போதெல்லாம் யாரெல்லாம் லஞ்சம் வாங்கினார்கள் என்று அடுக்கிக் கொண்டே போனார். நிருபர் வாய் அடைத்துப் போனார். நானும்தான். அப்படி ஒரு நடமாடும் கலைக்களஞ்சி யமாக தமிழர் தலைவர் இருக்கிறார். அப்படிப்பட்டவரின் கரங்களால் இந்த விருதைப் பெற்றிருக்கிறேன் என்று பேசினார். மேலும் அவர், தாழ்த்தப்பட்டவர்களுக்கு பெரியாரைவிட சிறந்த ஆயுதம் வேறு இல்லை என்பது எனது திண்ணமான எண்ணம் என்று பேசினார்.

நான் பெரியார் திடலில் வளர்ந்தவன்...

அதைத் தொடர்ந்து, மேனாள் மத்திய அமைச்சர் ஆ. இராசா விருது பெற்ற பெரு மக்களைப் பாராட்டிப் பேசினார். அவர் தனது உரையில், ஊடகங்கள் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதற்கு 2ஜி-யே முக்கிய சாட்சி என்று குறிப்பிட்டுவிட்டு, சி.பி.அய். ரூ.3000 கோடி என் பெயரில் வெளிநாட்டில் கணக்கு வைத்திருந்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை எழுதியது. நான் நீதிமன்றத்தில் சி.பி.அய்.க்கு சவால் விட்டேன். இதை நிரூபிக்க முடியுமா என்று இந்தத் துணிச்சல் எனக்கு எவரிடமிருந்து வந்தது? சொன்னது நானல்ல. தந்தை பெரியார் சொல்ல வைத்தார் என்று பேசிவிட்டு, நான் பெரியார் திடலில் வளர்ந்தவன், ஆசிரியரின் அரவணைப்பில் இருந்தவன், கலைஞரின் வழியில் நடப்பவன். ஆகவே இந்த விருது பெற்ற பெரு மக்கள் போல, வளர்ந்து வருகிற எல்லாத் துறைகளிலும் நம் மக்கள் வர வேண்டும் வந்தால்தான் நாம் வெல்ல முடியும் என்று தனது பாராட்டுரை நிறைவு செய்தார்.

தமிழ் ஓவியா said...


ஊடகங்களுக்கு வெட்கமில்லை

அதைத் தொடர்ந்து, சிறப்புரை வழங்கிய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தமதுஉரையில்: தந்தை பெரியார் அறிமுகமேயில்லாத நம் மக்களுக்காக அவர்கள் மனுதர்மத்தின் கொடுமைக்கு ஆளானதற்காக சிறை சென்றதை எடுத்துக் கூறினார். 2ஜி புரட்டில் ராசாவுக்கு வெளிநாட்டில் ரூ.700 கோடி மதிப்பில் வீடு இருக்கிறது என்று பார்ப்பன ஊடகங்கள் எழுதியதையும், அது தவறான தகவல்கள் என்று உண்மை இதழ் அதை அம்பலப்படுத்தியதையும், அந்த புரட்டு உண்மையில்லை என்று தெரிந்த பிறகும். தனது தவறை நேர்மையாக ஊடகங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. பொய்களைச் சொல்வதற்கு அவை வெட்கப்படவில்லை என்று அவாளின் ஊடகங்களுக்கு சாட்டையடி கொடுத்தார்.

1925-களில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருட்டு நடந்ததையும் அதற்கு அர்ச்சகப் பார்ப்பானே காரணமாக இருந்ததையும் அதைக் கண்டுபிடித்த சப்-இன்ஸ்பெக்டர் ஒரு நாடார் சமூகத்தவர் என்பதையும் அதற்கு முன்பு இருந்த பார்ப்பனர் ஒருவர் கண்டுபிடிக்காததையும் வெள்ளைக்கார மேலதிகாரி மூலம் இந்த புரட்டு வெளிப்பட்டதையும் குறிப்பிட்டார். மேலும் அவர், கோபு எழுதிய நூலில் இருந்த ஒரு முக்கியமான வரலாற்று ஆதாரத்தை சுட்டிக் காட்டினார். அதில், கும்பகோணம் திருநீலக்குடியில் இருந்த தாசி, தன்னுடைய கடனை மளிகைக் கடைக்காரருக்கு திருப்பிக் கொடுத்ததையும், மளிகைக் கடைக்காரர் பார்ப்பனர் ஒருவரிடம் தான் வாங்கிய கடனை தாசி கொடுத்த பணத் தால் அடைக்க முயன்றதையும், அந்தப் பார்ப்பனர் அந்தப் பணம் தாசி கொடுத்து என்று அறிந்து அது தீட்டுப்பட்டு விட்டது. ஆகவே அவளிடமே திருப்பிக் கொடு என்று மளிகைக் கடைக்காரை திருப்பி அனுப்பியதையும், அந்த தாசி சுயமரியாதையால் உந்தப்பட்டு, அந்தப் பார்ப்பனர்மீது வழக்கு போட்டு, அந்த பார்ப்பனரின் சொத்து கரைந்தே போனதையும் சுட்டிக்காட்டி, பார்ப்பனர் களின் ஆதிக்கத்தை எதிர்த்த தாசியின் சுயமரியாதை வெற்றி பெற்றது.

ஆனால், இந்த இழிவு மீண்டும் திரும்ப வேண்டுமா என்று கேள்வி கேட்டு வரக் கூடாது என்பதற்காகத்தான் இப்படிப்பட்ட பெரு மக் களுக்கு விருது வழங்குகிறோம் என்று அவர்களை மனமு வந்து வாழ்த்தினர். இந்த நன்முத்துக்கள் மேலும் சிறப் படைய வேண்டும். ஏனெனில் இவர்கள்தான் திராவிட இனத் தின் சொத்துக்கள் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார். நிகழ்ச்சியில் சிறப்பாக இணைப்புரையை திராவிடர் மகளிர் பாசறை செயலாளர் டெய்சி மணியம்மை வழங்கினார். இறுதியில் மாநில ஊடகத் துறை செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் நன்றியுரை வழங்க விழா நிறைவுற்றது.

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார் முத்தமிழ்மன்றம் நடத்திய திராவிடர் திருநாள் - பொங்கல் விழாவில் பாராட்டப்பட்ட தமிழ் பெருமக்கள்


ஆய்வாளர் பத்மாவதி விவேகானந்தன்

இவர் சென்னையில் 1955ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் தேதி பிறந்தார். முதுகலைத் தமிழில் எம்.ஏ., மொழிபெயர்ப்புத் துறையில் எம்.பிஃல்., பி.எச்.டி முடித்திருக்கிறார். இவரது பெற்றோர் பெயர் வேதம்மாள், இராஜகோபால். இவருடைய மகன் பெயர் கோபிநாத். பல் மருத்துவராக இருக்கிறார்.

இவர், பேச்சாளர், எழுத்தாளர், கல்லூரி பேராசிரியர், கவிஞர் என்று பல்வேறு தளங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறார். இதுவரையில் 19 நூல்களை எழுதியிருக்கிறார். அதில் குறுநாவல் ஒன்று, சிறுகதைகள் தொகுப்பு ஒன்று, கவிதைத் தொகுப்புகள் ஒன்று, ஆய்வுக் கட்டுரைகள் 16.

2000த்தில் வெளிவந்த இவரது கவிதை நூலுக்கு, சிறந்த கவிதை நூலுக்கான தமிழக அரசின் விருதை பெற்றிருக்கிறார். காலம்தோறும் மானுடம் - என்ற நூலுக்கு சேலம் முசுழு நாகப்பன் அறக்கட்டளை விருது பெற்றிருக்கிறார்.

தலித் இலக்கியம் ஓர் பார்வை - நூலுக்கு பாரத ஸ்டேட் வங்கியின் விருது. 1999- காசிபூர் ரங்கம்மாள் இலக்கிய விருது. 2000-க்கான ஞஆளு - அறக் கட்டளை விருது, 2005-சினேகிதி இதழுக்கான பெண் சாதனையாளர் விருது, பெண் கவிதை மொழியும் - பெண் கவிஞர்களும் - நூலுக்கு, அருவி அமைப்பின் சிறந்த ஆராய்ச்சி நூலுக்கான விருது ஆகிய விருதுகளை பெற்றிருக்கிறார்.

மேலும், ஆழ்வார்கள் ஆய்வு மய்யம் அளித்த தமிழ்ச் சான்றோர் விருதும் ரூபாய் 10,000 பரிசும் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் ஆய்வு மய்யம் தமிழ் சான்றோர் விருது தந்து சிறப்பித்தது.

மலையாள இலக்கியங்களை தமிழில் சிறந்த முறையில் மொழிபெயர்த்த பணிக்காக புனித சூசையப்பர் கல்லூரியின் புனித சூசையப்பர் விருது இவருக்கு அளிக்கப்பட்டது.

இவர், 2004ஆம் ஆண்டில் சாகித்ய அகாடமியில் சிறந்த நூலைத் தேர்வு செய்யும் குழுவில் உறுப்பி னராகவும், தமிழ்நாடு அரசின், சிறந்த நூல் தேர்வுக் குழுவில் 10 ஆண்டுகள் உறுப்பினராகவும் இருந்து தனது சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல், காலந்தோறும் பெண்கள் நிலை - என்ற தலைப்பில் காவல்துறை பயிற்சிக் கல்லூரியில் 18 மாதங்கள் இருபால் காவலர்களுக்கும் வகுப்பு எடுத்திருக்கிறார்.

சென்னை மீனாட்சிக் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக 25 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சமூகவியல் துறையில் பேராசிரியராகவும், துணைத் தலைவ ராகவும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார்.

மேலும், பல்வேறு பல்கலைக்கழகங்களில் பேரா சிரியர்களுக்கான, புத்தாக்கப் பயிற்சி - வகுப்பு எடுத்த பெருமை இவருக்குண்டு. 300 கருத்தரங்குகளுக்கு மேல் கலந்து கொண்டு ஆய்வுக்கட்டுரைகளை அளித்திருக்கிறார்.

பெரியாரிய, மார்க்சிய கொள்கைகளான பெண் ணியம், தலித்தியம், பகுத்தறிவு போன்ற தலைப்பு களில் சுமார் 1000 கூட்டங்களுக்கு மேல் பேசி யிருக்கிறார்.

இத்தகைய சிறப்புகளைப் பெற்றுள்ள பத்மாவதி விவேகானந்தன் அவர்களுக்கு தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம், இந்த பெரியார் விருதை அளித்து சிறப்பித்து மகிழ்கிறது.

(இந்த தன்குறிப்பை படித்தவர் திவாரி, தாம்பரம் மாவட்ட மகளிரணி பொறுப்பாளர்

தமிழ் ஓவியா said...

ஊடகவியலாளர் ஜெ. தம்பிராஜா

இவர், மயிலாடுதுறையில் 17-06-1961இல் பிறந்தார். இவரது பெற்றோர் அ. ஜெயராமன் - மேரி ஜோசஃபின். தந்தை கடலூர் மாவட்ட ஆட்சியாளரிடம் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இப்பொழுது மறைந்துவிட்டார்.

இவரது இணையர் எலிசபெத் கலைராணி, மகன் நவீன்குமார் தற்போது ஹசைஉநட நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்.

இவரது அம்மாவின் தாத்தா நீதிக்கட்சியில் இருந்தவர். இவரது அப்பாதான் முதல் பட்டதாரி. தம்பிராஜா அஞ்சல் மூலம் எம்.ஏ. வரலாறு பயின்றார். திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்றார். விருதுநகர் மாணவர் தி.க. தலைவராக இருந்திருக்கிறார். விடுதலை பத்திரிகையில் அப்பொழுதே இவரது தந்தை பெயர் வந்திருக்கிறது. இதனாலேயே இவரது அப்பா கல்லூரி விட்டு கல்லூரி மாறியிருக்கிறார்.

இவர் தனது பணியை சுய பத்திரிகையாளராகத் தொடங்கினார். 1995-இல் வளர்தொழில் துணை ஆசிரியர், சாவி - பத்திரிகையில் துணை ஆசிரியர், அகில இந்திய வானொலியில் செய்திப் பிரிவு துணை ஆசிரியர் என சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்.

2000-ஆம் ஆண்டில் சன் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவில் பணியில் சேர்ந்து 2008- வரையிலும் தொடர்ந்தார். இடையில், ஓராண்டு மக்கள் தொலைக் காட்சியில் செய்தி இணை ஆசிரியராக பணியாற்றி யிருக்கிறார். 2008-லிருந்து கலைஞர் தொலைக்காட்சி யின் சிறப்புச் செய்தியாளராகவும், பொறுப்பா சிரியராகவும் இன்றளவும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

இலங்கையில் நடந்து முடிந்த இன அழிப்புப் போருக்குப் பிறகு, செப்டம்பர்-2009ஆம் ஆண்டில் சிறப்புச் செய்தியாளராக வவுனியா, மன்னார், மாணிக் ஃபார்ம் போன்ற இடங்களிலும் மலையகப்பகுதியான நுவரேலியா, ஹட்டன் ஆகிய பகுதிகளிலும் சென்று தமிழ்மக்களின் வாழ்க்கை நிலையை 10 நாட்கள் இருந்து பதிவு செய்து திரும்பியிருக்கிறார்.

இவர், தமிழ்நாட்டின் மொழிப்போராட்டத்தை ஆவணப்படமாக ஆக்கித் தந்திருக்கிறார். ஈழத்திலும், அதன் பாதிப்பாக தமிழ்நாட்டிலும் 1983-லிருந்து இறுதிப்போர் வரையிலும் நடந்த பல்வேறு நிகழ்வுகளைத் தொகுத்து டெசோ - என்ற பெயரில் ஒரு ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.

2004-ஆம் ஆண்டு சுனாமியின்போது 10 நாட்கள் அந்த சம்பவங்களை தொகுத்தளித்தது மறக்க இயலாத அனுபவம் என்று கருதும் இவர் அதன் பிறகும், அந்த மக்களுக்கு உதவித் தொகைகள் கிடைக்கும் வகையில் பல்வேறு பணிகளை தொடர்ந்திருக்கிறார்.

இப்பொழுது இவர் நேர்காணல் செய்யும் எத்தனை கோணம் - எத்தனை பார்வை - நிகழ்ச்சி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிகழ்ச்சிகளில் ஒன்று. இவர் தனது நேர்காணலில் சமூக வரலாறு, அரசியல் வரலாறு, நடப்புச் செய்திகள் ஆகியவற்றை விரல் நுனியில் வைத்துக்கொண்டு கேள்விக் கணைகளை தொடுப்பார். இவர் நமது தமிழர் தலைவரை பலமுறை நேர்காணல் கண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சிறப்புகளைப் பெற்ற தம்பிராஜா அவர்களுக்கு தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் பெரியார் விருது வழங்கி சிறப்பித்து மகிழ்கிறது.

(இந்த தன்குறிப்பை படித்தவர் கார்வேந்தன், ஆவடி மாவட்ட இளைஞரணி தலைவர்)

தமிழ் ஓவியா said...

எழுத்தாளர் அழகிய பெரியவன்

இவருடைய இயற்பெயர் சி. அரவிந்தன். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பேரணாம்பட்டு எனும் ஊரில் 1968ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் தேதி பிறந்தார். பெற்றோர் பெயர் சி.சின்னத்துரை - திருமதி கெ. கமலம். இவருடைய இணையர் பெயர் பு. தேபோராள் ஜான்சி ராணி. மகள் யாழினி. மகன் ஓவியன்.

பி.எஸ்ஸி., பி.எட். பயின்றுள்ள இவர் அறி வியல் ஆசிரியராக பணிபுரிகிறார். நீ நிகழ்ந்தபோது, அரூப நஞ்சு, உனக்கும் எனக்குமான சொல் ஆகிய கவிதை நூல்களும், தீட்டு அழகிய பெரியவன் கதைகள், நெரிக்கட்டு, கிளியம்மாவின் இளஞ் சிவப்புக் காளை, சிவபாலனின் இடப்பெயர்ச்சிக் குறிப்புகள், குரடு, திசையெங்கும் சுவர்கள் கொண்ட கிராமம் ஆகிய கதைகளையும் எழுதியுள்ள இவர் தகப்பன் கொடி என்ற புதினத்தையும் எழுதியுள் ளார்.

வெட்கம் கெட்ட நாடு, மீள் கோணம், மூடிய முகங்களில், பெருகும் வேட்கை, கம்பளிப் பூச்சி இரவு, வகுப்பறைகளில் ஜாதி போன்ற தலைப்பு களில் இவர் எழுதிய கட்டுரைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவை.

கணையாழி பரிசு, கலை இலக்கிய இதழ் பரிசு, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, கலை இலக்கிய பெருமன்ற விருது, தலித் முரசு கலை இலக்கிய விருது, சிற்பி இலக்கியப் பரிசு, இந்தியா டுடே விருது போன்ற 15க்கும் மேற்பட்ட விருதுகளையும், 2003ஆம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான தமிழ்நாடு அரசின் பரிசு, 2010ஆம் ஆண்டில் சிறந்த கவிதை களுக்கான தமிழ்நாடு அரசின் பரிசையும் பெற்றவர்.

தலித் முரசு, காக்கைச் சிறகினிலே ஆகிய இதழ் களின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றுள்ளார். இவருடைய நடந்த கதை குறும்படமாக வெளி வந்துள்ளது. உயிரிடம் குறும்படமாக தயாரிப்பில் உள்ளது. இவருடைய படைப்புகள் 5க்கும் மேற் பட்ட கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பாடத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

10க்கும் மேற்பட்ட ஆய்வியல் நிறைஞர் ஆய்வு களும் 5க்கும் மேற்பட்ட முனைவர் பட்ட ஆய்வு களும் கல்விப் புலத்தில் இவரின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளாகும். இத்தகைய சிறப்புகளைப் பெற்ற அழகிய பெரியவன் அவர்களுக்கு தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் பெரியார் விருதினை அளித்து மகிழ்கிறது.

(இந்த தன்குறிப்பை படித்தவர் இரா. பெரியார் செல்வன், வடசென்னை மாவட்ட ப.க. தலைவர்)

தமிழ் ஓவியா said...

திரைப்பட நடிகர் தம்பி ராமையா

புதுக்கோட்டை மாவட்டம் ராயவரம் பகுதியில் பிறந்தவர். இவரது பெற்றோர் ஜெகன்நாத பிள்ளை, பாப்பம்மாள். இவரு டைய இணையர் பெயர் பொன் அழகு.

இவர் திரைப்பட இயக்குநர், நடிகர், கவிஞர் என்ற முப்பரி மாணங்களில் மிளிர்பவர். டி. ராஜேந்தர் மற்றும் பி. வாசுவிடம் இணை இயக்குநராக பணியாற் றியவர்.

இனமுரசு சத்யராஜ் நாயகனாக நடித்த மலபார் போலீஸ் திரைப் படத்தில் சிறிய வேடத்தில் அறிமுக மானவர். இந்தப் படம் 2010 ஆம் ஆண்டு வெளிவந்தது. தொடர்ந்து சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.

இதற்கு முன்னதாக, 2001 ஆம் ஆண்டு மனுநீதி என்ற படத்தை இயக்கினார். 2008 ஆம் ஆண்டு வைகைப் புயல் வடிவேலு நாய கனாக நடிக்க இந்திரலோகத்தில் நா. அழகப்பன் என்ற திரைப் படத்தை இயக்கினார்.

( சமீபத்தில் வெளிவந்த மைனா திரைப்படம் இவருக்கு திரைவாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது. இதில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். இதற்காக இவர் தேசிய அளவில் சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றி ருக்கிறார்.

தொடர்ந்து, சமீபத்தில் வெளி வந்த கும்கி திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பலரா லும் மனம் திறந்து பாராட் டப்பட்டு வரு கிறது. அதைத் தொடர்ந்து சாட்டை திரைப்படத்தி லும் வில்லன் பாத்திரத்தில் நடித்து தனி முத்திரை பதித் திருந்தார். மிகச்சிறந்த குணச் சித்திரப் பாத்திரங்களை ஏற்று நடிப்பதில் வல்லவராக இருக்கிறார்.

இத்தகைய சிறப்புகளைப் பெற்ற தம்பி ராமையாவிற்கு தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் பெரி யார் விருது வழங்கி சிறப்பித்து மகிழ்கிறது.

(இந்த தன் குறிப்பை படித்தவர் பிரதீபா லெனின்)

தமிழ் ஓவியா said...

சீன வானொலி தலைவர் கலைமகள்

இந்த சீன மங்கையின் பெயர் ஸாஓ ஜியாங். ஆனால் இவர் தன்னை தனது தமிழ் பெயரான கலைமகள் என்று அடையாளப்படுத்துவதையே விரும்புகிறார். 15 ஆண்டுகளுக்கு முன் தமிழை இவர் பயில தொடங்கிய போது இவரால் தமிழ் எழுத் துருக்களை புரிந்து கொள்ள முடியாமல் இருந் திருக்கலாம். ஆனால் இப்போதோ இவர் தமிழில் புத்தகமே எழுதிவிட்டார்.

சீன அரசின் பன்னாட்டு வானொலியில் உள்ள தமிழ் பிரிவில் வேலை பார்க்கும் இவர், தமிழக தமிழர்கள் கலப்புத் தமிழில் உரையாடுவது போல அல்லாமல் தூய தமிழில் தெளிவாக உரையாடுகிறார். சுமார் 25,000த்துக்கும் மேற்பட்ட வானொலி நேயர்களை ஈர்த்துள்ளார். அதுவும் இந்த ரசிகர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. தமிழகத்திற்கும் சீனாவிற்கும் உள்ள தொடர்பை ஊக்கப்படுத்தும் நிமித்தமாகவே இவர் தமிழின் மேல் ஆர்வம் செலுத்தத் தொடர்கினார்.

இவருடைய வானொலி நேயர்கள் சீனா பற்றி தாங்கள் அறிந்து கொள்ள தமிழில் நூல் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்கியே சீனாவில் இன்ப உலா என்ற தனது முதல் தமிழ் நூலினை வெளியிட்டார்.

இப்புத்தகத்தில் சீனாவின் தலைநகரான பெய்ஜிங், ஷாங்காய் நகரம் மற்றும் திபெத்தின் வரலாறு மட்டும் கலாச்சாரங்கள் குறித்து கலைமகள் எழுதி உள்ளார். தமிழக மக்களின் கவனத்திற்கு இதை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற காரணத்திற்கு தான் இப்புத்தகம் எழுதப்பட்டது என்று கூறுகிறார் கலைமகள். சீனாவில் உள்ள தகவல் தொடர்பு பல்கலைக் கழகத்தில் கலைமகள் தமிழ் மொழியில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.

சீனாவில் தமிழ் மொழி கற்றுக் கொடுக்கப்படும் ஒரே பல்கலைக் கழகம் இதுவே ஆகும். பட்டப்படிப்பு முடித்தவுடன் இவர் சீன வானொலியில் அறிவிப் பாளராக வேலைக்கு சேர்ந்தார். தமிழ் படிக்கும் சீனர்களை அதிக அளவில் சீன வானொலி வேலைக்கு அமர்த்துகிறது. தமிழ் படித்தால் தமிழ் நாட்டில் வேலை இல்லை என்ற நிலை இங்கிருக்க, தமிழ் படித்தால் சீனாவில் வேலை உள்ளது என்பது நமக்கு மகிழ்ச்சியை தருகிறது.

கலைமகள், தமிழ்நாட்டில் பல இடங்களுக்கு பயணித்துள்ளார். பட்டி தொட்டி எங்கும் சென்று வந்துள்ளார். இவரின் தமிழ் வாசகர்களை சந்திக்கும் நிமித்தமாகவே இவர் 2003 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு சுற்றுலா மேற்கொண்டார். தற்போது தமிழ் நாட்டில் ஓராண்டு தங்கி தமிழ்படிக்க வேண்டும் என விரும்புகிறார்.

பொதுவாக சீன மக்களுக்கு இந்தியா என்றாலே புது டெல்லி தான், வடஇந்தியா தான் என்ற எண்ணத்தை மாற்றி தென் இந்தியா, தமிழகம் குறித்த விழிப்புணர்வை சீன மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக இவர் ஒரு புத்தகம் எழுத உள்ளார். இதன் மூலம் சீன பயணிகள் தமிழகத்திற்கு அதிக அளவில் வருவார்கள், தென் இந்தியாவின் பண்பாடுகளை அறிந்து கொள்வார்கள் என்று கூறுகிறார் கலைமகள்.

கலைமகள் போன்ற சீனர்கள் தமிழ் மொழி, பண்பாட்டின் மீது இவ்வளவு ஆர்வம் காட்டுகையில் தமிழக மக்களோ தமிழில் பேசுவதை, தமிழில் பெயர் வைப்பதை கேவலமாக எண்ணுகின்றனர் என்பது கசப்பான உண்மை தான். இவரை பார்த்தாவது தமிழர்கள் இனி திருந்த வேண்டும். தமிழ்மொழியின் சிறப்பை உணர்ந்து தமிழர்கள் தங்கள் மொழியை போற்ற வேண்டும். கலைமகளுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழின் மீது தீராத காதல் கொண்டுள்ள இந்த சீன நங்கை கலைமகள் அவர்களுக்கு தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் பெரியார் விருதினை அளித்து மகிழ்கிறது.

(இந்த தன் குறிப்பை படித்தவர் மு.சுதாகர், பொன்னேரி நகர செயலாளர்)

தமிழ் ஓவியா said...


தன்மான உணர்வும் - தமிழுணர்வும் தளராது நடைபயிலும் குடும்பம்!


- துரை. சந்திரசேகரன்

சிதம்பரம் வட்டத்தில் நளம்புத்தூர் கிராமம் சான்றோர் பெரு மக்களை வழங்கிய ஊர். சுயமரியாதை இயக்கம் தொடர்ந்து திராவிடர் கழகம் என பரிணமித்த அறிவியக்கத்துக்கு ஆக்கமும், ஊக்கமும் சேர்த்த பெரு மக்கள் பலர் அந்த ஊரிலே பிறந்த வர்கள்.

சப்ரிஜிஸ்திரார் பூவராகவன் சீரிய கொள்கையாளர். அறிவுசார் அய்யா பெரியார் பற்றாளர். நல்ல இயக்கவாதி. எவருக்கும் அஞ்சாது அவர் பணியாற்றிய ஊர்களில் இயக்கத்தின் கொள்கை பரவிட, தந்தை பெரியாரை அழைத்து பேச வைத்திட, இயக்கத் தொண்டர்களை ஊக்குவித்திட, கழகக் கொடியைப் பறக்கச் செய்திட எதிர்பார்ப் பின்றி, இழப்பைப்பற்றி கவலைப்படாது பாடு பட்டவர். அன்றைய காலத்தில் சுயமரி யாதைக்காரனாக, பெரியார் தொண் டராக அரசு ஊழியர் செயலாற்றுவது என் பது எளிதான காரிய மல்ல. மாறு தலைப் பற்றி, பதவி உயர்வைப் பற்றி கவலைப்படாது இனம் பாழ்பட்டு கிடக் கிறதே - அதை தூக்கி நிறுத்த, பகுத்தறிவால் மேம்பாடுத்த பெரியார் கொள்கை மட்டுமே உதவும் என எண்ணி பொதுத் தொண்டாற் றிய பெருந்தகைதான் பூவராகவன். அவரை, அவரின் பெரியாரிய பணியை வியந்து பார்க்கவே செய்வார்கள் அந்தக் காலத்தில்!

இப்போதும் அவரின் கொள்கை உறுதியை, கொள்கைப் பரவலுக்கு அவர் ஆற்றிய பங்கு பணியை மாணவப் பருவத்தில் நேரில் கண்டு உற்சாகம் பெற்ற இன்றைய கழகத் தலைவரான தமிழர் தலைவர் பசுமையான நினைவு களால் பாராட்டுவதைப் பார்க்கும் போது என்ன அருமையான தோழர் பூவராகவன் என கேட்போர் வியக்கவே செய்கின்றனர்.
சப்-ரிஜிஸ்திரார் பூவராகவனின் மகன் இரண்டாம் தலைமுறைக்கு இயக்க வரலாற்றில் சொந்தக்காரர் நிலவு பூ. கணேசன். நாவலர் இரா. நெடுஞ்செழி யன், பேராசிரியர் க. அன்பழகன் ஆகி யோரின் படிப்புக்கால அண்ணாமலைப் பல் கலைக் கழக தோழர். விடுதலை ஏட்டின் துணை ஆசிரியராக சில காலம் பணி யாற்றியவர். நிலவு இலக்கிய பகுத்தறிவு முற்போக்கு இதழின் ஆசிரியர். பின்னா ளில் குடும்ப நலத் துறை இணை இயக்குநராக, செய்தி மக்கள் தொடர்பு துறையின் துணை இயக்குநராக பணியாற்றியவர். புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது அமைக்கப் பெற்ற தந்தை பெரியார் நூற்றாண்டு விழாக் குழுவின் தனி அலுவலராக செயலாற்றியவர். தமிழர் தலைவரின் நெருக்கமான சகாக் களில் ஒருவர். இவரின் உடன் பிறப்புக் கள்தாம் சீரிய மகப்பேறு மருத்துவ நிபுணராக பூ. பழனியப்பன், வேளாண் மைத் துறை இயக்குநராக செயலாற்றிய பூ. சோலையப்பன் ஆகியோர்.

நிலவு பூ. கணேசன் - பழநியம்மாள் இணையரின் மகள் மெல்லியல் (என்ன அருமையான தமிழ்ப் பெயர்) மருகர் மணி இணையரின் மகள் ம. செந்தளிர் - சேதுராமன் மணவிழாவை நடத்தி வைக்க தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் 18.1.2013 வெள்ளியன்று கடலூர் வருகை தந்தார்கள். நான் உட்பட முக்கிய தோழர்களும் அத்திருமண விழாவில் பங்கு கொண்ட உணர்வோடு திராவிடர் இயக்கத்தில் அந்த குடும்பம் தொடர்கிறது என்பதை நேரில் கண்டு வியந்தோம்; மகிழ்ந்தோம்; பெருமையும் கொண்டோம்.

தமிழ் ஓவியா said...

103 வயதில் மறைவுற்ற சுயமரியாதைச் சுடரொளி என்.வி. இராமசாமி (என்.வி. ஆர்) இந்த குடும்பத்தின் நெருங்கிய உறவினர். என்.வி.ஆர். தென்னார்க்காடு மாவட்ட தி.க. தலைவராக இருந்த போது நான் (துரை. சந்திரசேகரன்) மாவட்ட செயலாளர். தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் - தமிழர் தலைவர்மீது அதீத அன்பும், இயக்கத்தை உயிரென நேசிக்கும் பண்பும், தலைமைக்கு கட்டுப்பட்ட தோழமையும் பூண்டவர். நாட்டளவில் சாரணர் இயக்க நெறியாளராகப் போற்றப்பட்ட தூய் மையும், வாய்மையும் நிரம்பிய மனிதர் அவர். அவருக்கு நேரில் சென்று பாராட்டு செய்து விருது வழங்கினார் தமிழர் தலைவர். அவரின் பிள்ளைகள் இளங்கோவன் உட்பட அனைவரும் கொள் கைக் குடும்பத்தினரே.

நிலவு பூ. கணே சனின் இன்னொரு மருமகன் டாக்டர் வே. நமச்சிவாயம் கட லூரில் பிரபலமான குழந்தை நல மருத் துவர். அவரின் இயக்க உணர்வை அவரால் நடத்தப் பெறும் மருத்துவ மனைக்குச் சென் றாலே அனைவரும் உணரலாம். அரிய லூர் மாவட்டம் குறிச்சிகுளம் அவரின் சொந்த ஊர். வெங்கடாசலம் மாவட்டம் முழுதும் அறியப்பட்ட பெரிய மனிதர் - மனிதநேயர் கீழமாளிகை தமிழ் மறவர் பொன்னம்பலனாரால் தமிழ் உணர்வு - பகுத்தறிவு உணர்வு ஊட்டப் பெற்ற குடும்பம் டாக்டரின் குடும்பம்.

நான்காவது தலைமுறை மண விழாவை நடத்தி வைக்க வந்த தமிழர் தலைவரிடம் அந்த குடும்பத்தினர் அனைவரும் காட்டிய அன்பும், மதிப்பும், பழகிய தன்மையும், மதித்திட்ட பாங்கும் பெரியாரின் மனிதநேய உணர்வால் எப்படி மக்கள் மாற்றம் - வளர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பதை நேரில் காணும் வாய்ப்பு. பலர் சீரிய மருத்து வர்கள், பலர் நல்ல பொறியாளர்கள், பலர் வெளிநாட்டில் நிபுணர்களாக - ஆல்போல் தழைத்துள்ள குடும்பம். இன்னும் சுயமரியாதை வீரியம் குறையாத குடும்பம்.

மணவிழாவினை நடத்தி வைத்து, தமிழர் தலைவர் பேசியபோது - பதிவாளர் பூவராகனை, நிலவு பூ. கணேசனை, அந்த குடும்பத்தின் சிறப்பை, பெருமையை, பெரியாரிய பற்றுதலை அருமையாக நினைவு கூர்ந்தார். எடுத்துக்காட்டாக இந்த குடும்பத்தினரின் பெயர்களைப் பாருங்கள் என சுட்டிக்காட்டிப் பாராட் டினார்.

இதோ, நிலவு பூ.கணேசன் குடும்பத்தினர் பிள்ளைகள் மற்றும் பேரப் பிள்ளைகள் பெயர்களைப் பார்ப்போமா?

வே.ந. பூங்கொடி, ப. தேன்மொழி, ம. மெல்லியல், க. அன்புமணி, க. செல்வமணி, க.வெ. பூவழகன், க. வெற்றிமணி, ந. பூங்குழலி, கோ. நல்லியல், வே.ந. பூங்குன்றன், இளமுகில், ப. இளந்திரையன், இ. செவ்விதழ், இ. இனியன், இ. இன்பன், செந்தளிர் ம. செம்பியன், அ. பூவேந்தன், விண்மதி, செ. விண்ஒளி, பூம்பாவை, வெ. பூவழகன், கோ. யாழினி.

படிப்பில், பதவியில் உயர்ந்துவிட் டோம், நாகரிக உலகில் சஞ்சரிக் கிறோம் என்று இனத்துக்கோ, மொழிக்கோ, வரலாற்றுக்கோ சம்பந்த மில்லாத பெயர்களை பிள்ளை களுக்குச் சூட்டி மகிழும் சமுதாயத்தில் பெரியார் ஏற்படுத்திய தன்மான உணர் வோடும், தமிழியக்க உணர்வோடும் தள ராது நடைபயிலும் குடும்பமாக நிலவு பூ. கணேசன் குடும்பம் திகழ்கிறது என்பதை, பழநியம்மாள் கணேசன் தமிழர் தலைவரை கட் டிப் பிடித்து அன்பு பொழிந்த காட்சியைக் கண்டு பெருமிதம் கொண் டோம். ஆம்! நல்ல குடும்பம் ஒரு பல் கலைக் கழகம்!

தமிழ் ஓவியா said...

பழம் பிரச்சினை

பழநிகோயிலில் பஞ்சாமிர்தம் இதுவரை மலை வாழை, கற்பூர வள்ளி, குடகு வாழைப் பழங்களைக் கொண்டு தயாரித்து வந்ததற்குப் பதிலாக இப்பொழுது பூவன் பழத்தைப் பயன்படுத்துகிறார்கள் - பக்தர்கள் இதனால் எதிர்ப்பாம்

ஏன் பூவன் பழம் வாழைப்பழம் வகையில் சேர்ந்தது இல்லையோ? பழனி ஆண்டவன் பூவன் பழத்தில் பஞ்சாமிர்தம் தயாரிக்கக் கூடாது என்று கனவில் வந்து சொன் னானா?

எதை எதில் கலந்தால் என்ன? அந்தக் கோவணாண்டியான உலோ கச் சிலைக்கு என்ன தெரியப் போகிறது?

பஞ்ச மூலிகைகளால் மூலவர் சிலை தயாரிக்கப்பட்டதாம். பணத் துக்கு ஆசைப்பட்டு அந்தச் சிலையை சுரண்டிக் கொடுத்தனர் பார்ப்பன அர்ச்சகர்கள். பள்ளம் விழுந்து விட்டது. அப்பொழுதே ஒன்றும் செய்ய முடியாத முருக னுக்கு பஞ்சாமிர்தம் பூவன் பழத்தில் செய்தால் என்ன? மலை வாழையில் செய்தால் என்ன?

இந்தப் பழத்தில்தான் செய்ய வேண்டும் என்று அய்தீகம் இருப்பது உண்மையானால் கோயில் நிருவா கம் அதை ஏன் மீறுகிறது - அய்தீ கம், ஆகமம் எல்லாம் அவாள் வைத் ததுதானே சட்டம் - கிழித்ததுதானே கோடு!

இதெல்லாம் நம்ப பஞ்சம சூத்திரப் பக்தர்களுக்கு என்ன தெரி யப் போகிறது? மொட்டை போடவும் உண்டியலில் காசு போடவும்தான் தெரியும். முருகனே ஒரு மாம்பழ பிரச் சினையில் சகோதரன் விநாயகனி டம் ஏமாந்தான் என்கிறது புராணம். இப்பொழுதும் பழப் பிரச்சினை தானா?

தமிழ் ஓவியா said...

மந்திரவாதிகள்

இந்தியத் துணைக் கண்டத்தில் கருநாடக மாநிலம் விசித்திரமான அரசியல்வாதிகளைக் கொண்டது. மக்களை நம்புவதைவிட ஜோதிடர் களையும், மந்திரவாதிகளையும்தான் நம்புவார்கள்.

கருநாடக மாநிலத்தில் அரசியல் நெருக்கடி முற்றி வெடித்துள்ள இந்தக் கால கட்டத்தில், அரசியல் தலைவர்கள் தங்கள் எதிர் காலத்தைக் காப்பாற்றிக் கொள்ள மந்திரவாதிகளைத் தேடிக் கொண்டு திரிகிறார்களாம்.

முன்னாள் பிரதமர் தேவேகவுடா நாமக்கல் சோதிடரிடம் மாதம் தோறும் வருவார் - முடிவு என்னா யிற்று? விளக்கெண்ணெய்க்குக் கேடாக முடிந்ததே தவிர பிள்ளை பிழைத்த பாடில்லை.

முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பா போகாத கோயில்களா? முட்டிக் கொள்ளாத குழவிக் கற்களா? சோதிடர் பேச்சைக் கேட்டு நிர்வாணமாகக்கூடப் படுத்துக் கிடந்தார். முடிவு என்னாயிற்று? அதுவும் விளக்கெண்ணெய்க்குக் கேடாகத்தான் முடிந்தது.

தமிழ் ஓவியா said...

குடியரசுத் தலைவரின் எச்சரிக்கை

இந்தியாவின் குடியரசு நாள் விழாவை முன்னிட்டு குடியரசு தலைவர் விடுத்துள்ள செய்தியில், இந்தியாவின் நட்பைக் கெடுத்துக் கொள்ளும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என்று பாகிஸ்தானை எச்சரித்துள்ளார்.

இருக்கட்டும்; இருக்கட்டும்; அத்தோடு சேர்ந்து இலங்கைக்கும் இந்த எச்சரிக்கையைக் கொடுத் திருக்க வேண்டாமா?

தமிழர்களின் தொப்புள் கொடி உறவுள்ள தமிழர்கள் இலங்கைத் தீவில் சிங்கள இனவாத அரசால் அரச பயங்கரவாதமாக பல்லாயிரக் கணக்கில் குலை குலையாகக் கொன்று குவிக்கப்பட்டார்களே!

இந்திய அரசக்கு இலங்கை அரசின் சார்பில் கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதியையும் காப்பாற்ற வில்லையே! தமிழக மீனவர்களை இதுவரை 500-க்கும் மேற்பட்டவர் களைச் சுட்டுக் கொன்றனரே - இவை எல்லாம் இந்தியாவுக்கு எதி ரான நடவடிக்கைகள் இல்லையா?
தமிழ்நாட்டை - தமிழ்நாட்டு மக்களை - அவர்களின் உணர்வு களை மதிப்பதில்லை என்று இந்திய அரசு முடிவு செய்துவிட்டது!

தமிழ் ஓவியா said...

கோயில் திருவிழாவும் - போக்குவரத்தும்

சென்னை மயிலாப்பூர் கோயில் திருவிழாவை முன்னிட்டு இம்மாதம் 28ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் என்று பெருநகரக் காவல் துறை அறிவித்துள்ளது.

சமுதாய இயக்கங்கள், அரசியல் கட்சிகள் ஊர்வலங்கள் நடத்தக் கூடாது; இதனால் போக்குவரத்துப் பாதிப்பு என்று ஊளையிடும் பேர் வழிகள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

போக்குவரத்துப் பாதிப்புக்குக் காரணமாக எதுவாக இருந்தாலும் சட்டத்திற்குமுன் பொதுதானே!

கட்சிகள் இயக்கங்கள் ஊர்வலம் நடத்துவது மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி அதற்கேத் தடை என்கிறபோது ஒன்றுக்கும் உதவாத கோயில் திருவிழாக்களுக்கு மட்டும் பச்சைக் கொடி காட்டுவானேன்?

கோயில் திருவிழா நின்று விட்டால் எந்தக் குடி மூழ்கப் போகிறது? எனக்குத் திருவிழா நடத்தாவிட்டால்.. ஜாக்கிரதை என்று கபாலீஸ்வரர் கனவில் வந்து சொன்னாரா?

மதம் மிருகத்துக்குப் பிடித்தாலும் சரி, மனிதனுக்குப் பிடித்தாலும் சரி காரியத்தில் ஒன்றுதான் - ஆபத்தோ, ஆபத்து!