Search This Blog

1.1.13

திரு.வி.க. பார்வையில் பெரியார் -1

தமிழ் இயல், இசை, நாடகம் என்று மூன்று தமிழுடைத்து. அதுபோல் தமிழ் கூறு நல்லுலகம் உணர்ந்து தெளிந்த போற்றிட பரவிய மூவர் - தமிழ் இசை மூவர் போல திரு.வி.க., பெரியார்., வரதராஜுலு ஆவர். அன்றைய நாளில் அவர்கள் விரும்பாவிடினும் முதலியார், நாயக்கர், நாயுடு என மூவரும் அறியப் பெற்றனர்.

தந்தை பெரியார் மேலே சொன்ன இருவரிடையே கொண்டிருந்த அன்பு, பற்று, பாசம், பரிவு அளவிடற்கரியது. காலத்தின் கோலத்தினால் மூவரும் மூன்று திசைகளில் பயணித்த போதும் அவர்களைப் பிணைத்த அன்புச் சங்கிலியின் ஒரு கீற்றுகூட ஒரு போதும் விடுபட்டதில்லை, அறுபட்டதில்லை.

பெரியாரைக் குறித்து எழுதிய திரு.வி.க., நாயக்கர் சென்னை மாகாணச் சங்கத்தின் உதவித் தலைவருள் ஒருவர்; யான் அமைச்சருள் ஒருவன் டாக்டர் வரதராஜூலு நாயுடுவும் யானும் நாயக்கர் வீட்டில் தங்கி னோம். நாயக்கர் தலையிலும், உடலிலும், இடுப்பிலும் பட்டணி ஒளி செய்தது. அவர் மனைவியின் தோற்றம் (நாகம்மையார்) மணி பூத்த பொன் வண்ணமாகப் பொலிந்தது. அவர் ஜமீன்தார் ஆகவும், இவர் ஜமீன் தாரணியாகவும் காணப்பட்டனர்.
நாயக்கர் பேச்சில் கருத்துச் செலுத்தாத காலமுண்டு. அவர் பேச்சில் கருத்துச் செலுத்திய பின்னர் தமிழ் நாட்டுக் காளமேகமானார். நாயக்கர் பேச்சு மழையாகும் கன மழையாகும். மழை மூன்று மணி நேரம் நான்கு மணி நேரம் பொழியும்.
முன்னாளில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தொண்டு செய்தவர் என்ற முறையில் எவர்க்கேனும் பரிசில் வழங்கப் புகுந்தால், முதற்பரிசில் நாயக் கருக்கே செல்வதாகும். தமிழ்நாட்டுக் காங்கிரஸ் நாயக்கர் உழைப்பை நன்றாக உண்டு கொளுத்தது

இவ்வாறு பாராட்டிப் பெருமை செய்த திரு.வி.க., அவர்கள் பெரியாருடன் தமக்கு ஏற்பட்ட கருத்து வேற்றுமையைக் கூறினாலும் இருவருக்கிடையே மின்னலெனப் பளிச்சிட்ட, ஒளி வெள்ளம் பாய்ச்சிய உறவு, நட்பை வியந்து போற்றத் தவறவில்லை.

நாயக்கர் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்து, சுயமரியாதை இயக்கம் கண்டு பிரச்சாரம் செய்தார். அதனால் தென் னாட்டுக்கு கேடு விளைதல் கண்டு, யான் எதிர்ப் பிரச்சாரம் செய்தேன். இருவர் போரையும் தென்னாடு வேடிக்கை பார்த்தது. போரிட்டோம்; பத்திரிகையில் போரிட்டோம்; மேடையில் போரிட்டோம்; என் உடல் நலம் குன்றும் வரை, யான் முன்னணியில் நின்று போர் புரிந்து வந்தேன் போர் உச்சம் பெற்ற காலத்திலும் நாயக்கர் வீட்டிற்கு யான் செல்வேன். என் வீட்டுக்கு அவர் வருவார். எங்கள் நட்புக்குலையவே இல்லை. ஒரே மேடையில் இருவரும் பேசுவோம் அவர் கொள்கையை அவர் சொல்லுவார். என் கொள்கையை யான் சொல்லுவேன் ஒரே இடத்தில் உண்போம்; உறங்குவோம் நட்பு முறையில் உறவாடுவோம்.

எப்படிப்பட்ட மாபெரும் பண்பாடு மிக்க தலைவர்கள் இவர்கள். இவர்களைப் பெற்றதால் தமிழகம் பெருமை மட்டும் கொள்ளவில்லை. உயர்வும் பெற்றது.
இவ்வளவு சீரும், சிறப்பும் பெற்ற தந்தை பெரியாரைச் சில சில்லுண்டிகள், முகவரி தொலைந்ததுகள் தாக்கத் தொடங்கியிருக்கின்ற அவல நிலை காண்கிறோம்.

பெரியாரைத் தாக்கத் தொடங்கியிருக்கும் எதிரிகள் ஒருபுறம் திராவிடத்தால் வீழ்ந்தோமென்று வசைபாடும் கூட்டம் ஒருபுறம். இன்றைக்குத் தருமபுரிகள் தந்தை பெரியாரின் தேவையை வலியுறுத்துகின்றன. பெரியாரை இழந்த மானிடம் நல்ல வேளையாக ஆறுதல் தேட ஆசிரியர் இருப்பதால் நச்சரவு களின் நாக்கு வெட்டப்பட்டு விடும்.

அ.ச.ஞா. எழுதியவை

தமிழ்ப் பெரியவர் அ.ச. ஞான சம்பந்தம் அவர்கள் நான் கண்ட பெரியவர்கள் எனும் தம் நூலில் பெரியார் ஈ.வெ.ரா. எனும் தலைப்பில் எழுதியவை திரு.வி.க. பார்வையில் பெரியாரின் பெரும் உளப் பாங்கினை எடுத்துக்காட்டுகிறது. அ.ச.ஞா. எழுதுகிறார். 


தொடக்கத் தில் பெரியார் அவர்களைப் பற்றியும், அவர் பண்பாடு பற்றியும் அறிந்து கொள்ள நான் முயலவில்லை. அன்றியும் பிள்ளையார் சிலை உடைப்பு, இராமாயண எதிர்ப்பு முதலியவற்றால் என் மனம் பெரிதும் வெறுப்புக் கொண்டிருந்தமை யின் அவரைப்பற்றி நல்ல முறையில் சிந்திக்க எனக்கு வாய்ப்பு இல்லை.

ஆனால் பெரியார் திரு.வி.க.விடம் வந்து போன பொழுதெல்லாம் சின்னையா அவர்கள் (திரு.வி.க.) அவருடைய பண்பாடு பற்றிப் பெரிதாகப் பேசுவார். அவருடைய கொள்கைகளை விட்டு விட்டு மனிதர் என்ற முறையில் பார்த்தால் அக்காலத்தில் அவருக்கு ஈடிணையான பண்பாளரைக் காண்பது கடினம் என்று அடிக்கடி சின்னையா சொல்வார்கள்.

அன்றியும் பல்கலைச் செல்வர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் அவர்களும் பெரியாரின் பண்பு நலன்களைப் பலமுறை எடுத்துப் பேசியது என்னைச் சற்று மாற்றியது. சென்னைப் பல்கலைக் கழகத்தில் தொடர் சொற்பொழிவு செய்ய ஏற்றுக் கொண்ட பல்கலைச் செல்வர், பெரியாரின் கொள்கைகளில் சிறப்பானவற்றைத் தனியே எடுத்துச் சொல்லிச் சொற்பொழிவின் முடிவில் பெரியாரின் பண்பு நலன்களையும் மிக அற்புதமாக எடுத்துப் பேசினார். 

அதனைக் கேட்ட பிறகு  என் மனத்தின் பெரும் பகுதி மாறிவிட்டது. ஆனாலும் பெரியார் அவர்களை நேரில் கண்டு பேச வாய்ப்பு ஏற்படவில்லை. இந்த நிலையில் தமிழ்த் தென்றலின் இறுதி ஊர்வலத்தில் பெரியார் அவர்கள் நடந்து கொண்ட முறையை நேரிற் கண்டபின் அப்பெருமகனார் பற்றித் திரு.வி.க. அவர்களும் தெ.பொ.மீ. அவர்களும் சொல்லியது எவ்வளவு உண்மையானது என்பது தெற்றென விளங்கும்

பெரியாரை எடை போட்டுத் தமிழ றிஞர் நெஞ்சில் பெரியார் நிறைந்து இருந்ததை எடுத்துக் கூறும் போது தமிழ்த்தென்றலின் இறுதி ஊர்வலத் தில் பெரியார் அவர்கள் நடந்து கொண்ட முறையை அறிந்து கொள் வோமாயின் மேலும் நன்றாக இருக் குமே என்ற எண்ணம் எவருக்கும் ஏற்படாமல் போகாது.
1932லிருந்து திரு.வி.க.வுடன் நெருங்கி மகள் என்ற முறையில் பழகி யவர் அ.ச.ஞா. 1940களில்  சென் னைக்கு வந்த பின்னர் ஏறத்தாழ பெரும் பகுதி நேரம் அவருடைய வீட்டிலேயே கழித்தவர் அவர். அவர் அப்போது நிகழ்ந்த நிகழ்ச்சிகள் சிலவற்றைத் தம் நினைவிலிருந்து மறையாத சிலவற் றைத் தொடுத்துக் கொடுத்துள்ளார்.  ---------------தொடரும்.........

--------------------- முனைவர் பேரா. ந.க. மங்களமுருகேசன் அவர்கள் 31-12-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

16 comments:

தமிழ் ஓவியா said...


நெத்தியடி யாருக்கு?


அடேயப்பா அண்ணா திமுக ஏடான நமது எம்.ஜி. ஆர். ஏட்டுக்குக் கோபத்தைப் பாரு! மீசை துடிப்பதைப் பாரு!

தமிழகத்தில் பெண் களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கருத்துக் கூறி விட்டாராம்.

அதற்குப் பதில் என்ன தெரியுமா? கலைஞர் ஆட்சி யில் சரிகாஷா, பால்மலர் என்பவர்களுக்கெல்லாம் அநியாயம் நடக்கவில் லையா என்ற கேள்வியைக் கேட்கிறது.

பெண்களுக்குக் கொடுமை நடந்த போதெல் லாம் தன் கண்டனத்தைத் தெரிவிக்கத் தவறியதில்லை திராவிடர் கழகமும் - அதன் போர்வாளான விடுதலையும்.

எந்த ஆட்சிக் காலத் திலும் அங்கொன்றும், இங்கொன்றுமாக அவலங் கள் நடப்பது இயல்புதான்.

(கலைஞர் ஆட்சியில் கூட இரண்டு நிகழ்ச்சி களைத் தானே சுட்டிக் காட்ட முடிந்திருக்கிறது நமது எம்.ஜி.ஆர். ஏட்டால்?)

ஆனால் பெண் முதலமைச்சராக இருக்கக் கூடிய தமிழ்நாட்டில் பெண் களுக்கான வன்கொடு மைகள் தொடர் கதையாக இருக்கிறதே - அதைச் சுட்டிக் காட்டினால் ஆத்தி ரப்படுவது ஏன்? அலறுவது ஏன்?

திருவைகுண்டம், விருத்தாசலம், நாகை (புத்தகரம்) சிதம்பரம் மஞ்சக்குப்பம், திருப்பத்தூர் என்று அடுத்தடுத்து ஒரு வார காலத்திற்குள் பெண்ணொருவர் முதல் அமைச்சராக இருக்கும் மாநிலத்தில் பெண்கள் சூறையாடப்படுகிறார்களே என்று கேட்டால் பொறுப் போடு சிந்திக்காமல், இந்த அவலம் இனியும் தொடரக் கூடாது என்று எண்ணிப் பார்க்காமல், பூனை கண் மூடினால் பூலோகமே இருண்டு விடும் என்று நினைக்குமாம்; அதுபோல அலமருகிறதே அண்ணா திமுக ஏடு!

அந்த ஏடு கூறுவதை விவாதத்துக்காகவே ஏற்றுக் கொள்வதாக எடுத்துக் கொண்டாலும் அது எப்படி நியாயமாக இருக்க முடியும்?

இன்னொரு ஆட்சியில் நடந்தது; எனவே எங்கள் ஆட்சியிலும் நடக்கும் தான் என்று சொல்லுவது ஆட் சிக்கு அழகா?

டில்லியில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைகிறேன் என்று சொல்லும் தமிழக முதல் அமைச்சர், தன் மாநிலத்தில் அதைவிட அதிக எண்ணிக்கையில் பாலியல் வன்கொடுமை நடக்கும் பொழுது அதை விடப் பல மடங்கு அல்லவா அதிர்ச்சி அடைந்திருக்க வேண்டும்?

பொழுது விடிந்து பொழுதுபோனால், கொலை, கொள்ளை, பூட்டு உடைப்பு, பாலியல் வன் முறை இதுதானே அதிமுக ஆட்சியின் அன்றாட சாதனை! ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்கிக் கட்டிக் கொள்ள ஆசைப்பட வேண்டாம் நமது எம்.ஜி.ஆர். ஏடு. - மயிலாடன்

தமிழ் ஓவியா said...


ஜாதி அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது!


திருச்சியில் ஜாதி, மத மறுப்புத் திருமணங்கள் மாற்றுத் திறனாளிகள், துணைவரை இழந்தோர் பங்கேற்பு

ஜாதி அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது!

தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் இந்நிகழ்ச்சி தொடரும்!

தமிழர் தலைவர் அறிவிப்பு

ஜாதி மறுப்புத் திருமணம் செய்து சிறப்பாக வாழ்ந்துகாட்டும் திருச்சி, தஞ்சை நகரங்களைச் சேர்ந்த 31 இணையர்களுக்கு திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்ற மன்றல் 2012 நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பாராட்டுக் கேடயம் வழங்கிச் சிறப்பித்தார். உடன் திருமகள் இறையன், லயன் தசரதன், லயன்ஸ் சங்கத் தலைவர் ராஜேந்திரன், கவிஞர் நந்தலாலா, லயன் பன்னீர்செல்வம் ஆகியோர் உள்ளனர். (30.12.2012, திருச்சி) திருச்சி, டிச.31- கடந்த மாதம் சென் னையிலும், இன்று திருச்சியிலும் பெரி யார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் சார்பில் நடைபெறும் ஜாதி மறுப்பு, மத மறுப்பு மற்றும் மாற் றுத் திறனாளிகள், துணைவியை இழந் தோர், மண முறிவு பெற்றோருக்கான மன்றல் விழா தமிழ் நாட்டின் மற்ற பகுதிகளிலும் தொட ரும் என்றார் திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள். மேலும் ஜாதியை வைத்து அரசியல் நடத்துவது தமிழ் நாட்டில் எடுபடாது என்றும் தெரிவித்தார்.

திருச்சி, புத்தூர் பெரியார் மாளிகையில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் ஒருங் கிணைத்த மாபெரும் ஜாதி ஒழிப்பு மன்றல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடக்க நிகழ்ச்சி

மன்றல் ஜாதி, மத மறுப்பு இணை தேடல் நிகழ்ச்சி திருச்சி பெரி யார் மாளிகையில் நேற்று காலை 11 மணியளவில் தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய மாநில இயக்குநர் திருமகள் வரவேற்புரையாற்றினார். பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் (சிகாகோ) டாக்டர் சோம.இளங்கோவன், லயன்ஸ் கிளப் தலைவர் ராஜேந்திரன், லயன் தசர தன், லயன் சோம. சுந்தரம், லயன் பன்னீர் செல்வம், டாக்டர் நரேந் திரன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் இணைதேடல் நிகழ்ச் சியை தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

இணைதேடல்

காலை முதலே இணை தேடல் நிகழ்ச்சியில் பங்கேற்க மாற்றுத் திறனாளிகள், துணையை இழந்தவர்கள், மண முறிவு பெற்றவர்கள், மற்றும் இருபால் இளை ஞர்கள் வருகை தந்தனர். மாற்றுத்திறனாளி ஆண்கள் 19, பெண்கள் 6, துணையை இழந்த வர்கள் ஆண்கள் 11, பெண்கள் 5, மண முறிவு பெற்றவர்கள் ஆண்கள் 20, பெண்கள் 10, மதமறுப்பு 11, ஜாதி மறுப்பு ஆண்கள் 50, பெண்கள் 11 என மொத்தம் 145 பேர் பதிவு செய்து கொண்டு தங் களை அறிமுகம் செய்து கொண்டனர். இதில் பங்கேற்ற 145 பேரும் ஜாதி மறுப்பு திருமணத் திற்கு ஒப்புதல் அளித்து பதிவு செய்து கொண் டனர் என்பது குறிப் பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

நிறைவு நிகழ்ச்சி

மாலையில் நடை பெற்ற நிறைவு நிகழ்ச் சியில் ஈரோட்டைச் சேர்ந்த சுப்பிரமணியன் ராஜி ஆகியோரின் மகள் கணவரை இழந்த கைம் பெண்ணான விஜயா என்பவருக்கும், தஞ்சை, கரந்தையைச் சேர்ந்த வேலூர் காமராஜ் இந்திரகாந்தி ஆகியோர் மகன் விவேக்ராஜ் என்ப வருக்கும் ஆகியோருக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார்.

அப்போது அவர் பேசுகை யில்:

இந்த மாதம் மார்கழி மாதம் பீடைமாதம் என்று சொல் வார்கள். திருமணம் பற்றி பேச்சே எடுக்க மாட்டார்கள். ஆனால் இதே பெரியார் மாளி கையில்தான் எனது திருமண மும், இதே பீடைமாதத்தில் இதே ஞாயிற்றுக்கிழமையில் கொழுத்த ராகுகாலத்தில் தந்தை பெரியார் அவர்கள் நடத்தி வைத்தார்கள். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், எம்.ஆர். ராதா முதலியோர் கலந்து கொண்டனர். நாங்கள் நல்ல முறையில் வாழவில்லையா? இந்த பீடைமாதம் என்று சொல்லி அச்சத்தை உண் டாக்கி வைத்துவிட்டனர். வாழ்க்கையில் அச்சமில்லாத வாழ்க்கை வாழ வேண்டும். இங்கே திருமணம் செய்து கொண்ட இளைஞர் துணிச்ச லாக துணையை இழந்த பெண்ணை ஏற்றுக்கொண்டு உள்ளார். அவரை இந்த நேரத்தில் நான் பாராட்டு கிறேன். அவர்களது பெற்றோர் கள் இதற்கு முன்வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அந்த குடும்பத்தாரை பாராட்டு கிறேன். இதுபோன்ற திரும ணங்கள் மற்றும் ஜாதி மறுப்பு திருமணங்கள் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்படும். நல்ல நேரம், கெட்ட நேரம் என மூடப்பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும். நமது நாள்காட்டியில் நல்லநேரம் என குறிப்பிட்டு 24 மணி நேரம் என போடப்பட்டிருக் கிறது. நல்ல நேரம், கெட்ட நேரம் என்பதெல்லாம் இல்லை.

ஜாதி அரசியல் எடுபடுமா?

இன்றைக்கு அரசியலில் ஓரங்கட்டப்பட்டவர்கள் எல்லாம் ஜாதியை வைத்து அரசியல் நடத்துகிறார்கள். ஜாதி குதிரையின் மீது பந்தயம் செய்ய பார்க்கிறார்கள். நொண்டிக் குதிரை அது பந்த யத்தில் ஜெயிக்காது. பந்தைய குதிரைகள் தான் பந்தயத்தில் ஜெயிக்கும். எப்போதும் வெற்றி யைத்தரும். ஜாதி அரசியல் ஒழிக்கப்பட்டால்தான் நாட்டில் ஜனநாயகத்தை நிலை நாட்ட முடியும். எனவே ஜாதியை ஒழிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும். காதல் திருமணத்தை எதிர்க்கிறவர் கள் அதே போன்று பெண் ணின் திருமண வயதை 18லிருந்து 21 ஆக உயர்த்த வேண்டுமென கூறுபவர்கள் ஓட்டு போடுவதற்கு 18வயதாக இருக்கிறதே அதை 21 வயதான பிறகுதான் ஓட்டு போட வேண்டுமென கூறுவார்களா? கூறமுடியுமா? இதற்காக அவர்கள் போராட்டம் நடத்த முன்வருவார்களா? இவ்வாறு தமிழர் தலைவர் பேசினார். முன்னதாக ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட 36 வாழ்விணையர்களுக்கு தமிழர் தலைவர் நினைவு பரிசினை வழங்கி பாராட் டினார்.

கவிஞர் நந்தலாலா

இந்நிகழ்ச்சியில் கவிஞர் நந்தலாலா கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இன் றைக்கு இருக்கிற பிரச்சி னையில் பிரச்சினையை மேலும் அதிகப்படுத்துவதற்கு வழிவ குக்கக் கூடியவர்களாகத்தான் இருக்கிறார்கள். நோயை குணப்படுத்துபவர்தான் மருத்துவர். ஆனால் நோயை மேலும் அதிகப்படுத்துபவர் மருத்துவரா? தமிழ்நாட்டில் எத்தனையோ ஹீரோக்கள் இருக்கிறார்கள். ஆனால் உண்மையான ஹீரோ இங்கே திருமணம் செய்து கொண்ட இளைஞர்தான். அவரை நான் மனதார பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக ஒருங்கிணைப்பாளர் பேரா.ப.சுப்பிரமணியன், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார், திருச்சி மண்டல தலைவர் ஞா-.ஆரோக்கியராஜ், செயலாளர் சி. காமராஜ், திருச்சி மாவட்ட தலைவர் மு.சேகர், செயலாளர் கணே சன், தஞ்சை மாவட்டத் தலை வர் வழக்கறிஞர் அமர்சிங், மாவட்ட செயலாளர் குடந்தை குருசாமி, அரியலூர் மாவட்ட தலைவர் நீலமேகம், மாணவ ரணி செயலாளர் இளந்திரை யன், கலைத்துறை செயலாளர் சித்தார்த்தன், லால்குடி மாவட்ட தலைவர் வால்டர், செயலாளர் ஆல்பர்ட், மாநகர தலைவர் நற்குணம், செயலா ளர் ஜெயராஜ், அமைப்பாளர் விடுதலை செல்வம் உள்ளிட்ட பொறுப்பாளர்களும், தோழர் களும், திரளான பொதுமக்க ளும் கலந்து கொண்டனர். நிறைவாக மாநில ஊடகத் துறை செயலாளர் பிரின்ஸ் என்.ஆர்.எஸ். பெரியார் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியை முனைவர் அதிரடி அன்பழகன், கி. தளபதிராஜ், இறைவி, பண்பு, மாட்சி,பசும்பொன், இசையின்பன்,உடுமலை வடிவேல்,பேராசிரியர்கள் சபீக், சுமதி ஆகியோர் ஒருங் கிணைத்து நடத்தினார்கள்

தமிழ் ஓவியா said...


நலிவுகள் நீங்கிப் பொலிவுகள் ஓங்கும் புத்தாண்டாக மலரட்டும்!


காவிரி நீரும், மழையும் இன்றி காய்ந்த பயிர்களால் மாய்ந்த நம் விவசாயத் தோழர்களின் உயிர்களும், மனித மிருகங்களால் பலி கொள்ளப்பட்ட பெண்களான நம் கண்மணிகளுக்கு ஏற்பட்ட பரிதாப நிலையும், வாழ்வுரிமைக்கு இன்னமும் போராடும் கைதிகளாகக் கிடந்துழலும் ஈழ மண்ணின் தமிழர்களின் துயரமும், அன்றாட அவலங்களைச் சந்திக்கும் தமிழக மீனவ சகோதரர்கள் அனுபவிக்கும் கொடுமையும், ஜாதிவெறிக்குப் பலியாகி பரிகாரம் காண முடியாத ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் கண்ணீருமாக அவதியுற்ற ஆண்டு சென்ற - நகரும் ஆண்டு (2012).

வருகின்ற புத்தாண்டில் இந்நலிவுகள் நீங்கி பொலிவுகள் ஓங்கும் ஆண்டாக அமைய நன்னம்பிக்கை யுடன் வரவேற்போம்!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்



சென்னை 31.12.2012

தமிழ் ஓவியா said...


இந்நாள்.... இந்நாள்....


50 சதவிகிதத்துக்கு மேல் இடஒதுக்கீடு போகக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் ஆணையி லிருந்து தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த 69 விழுக்காடு இடஒதுக்கீட்டைக் காப்பாற்றிட திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களால் கருத்துரு தரப்பட்டதோடு மட்டுமல்லாமல், அதற்கான மாதிரி மசோதாவையும் தயாரித்துக் கொடுக்கப்பட்டு, அந்த 31(சி) மசோதா தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட நாள் இந்நாள் (1994). 31-12-2012

தமிழ் ஓவியா said...


பூமி பூஜையா? 22 கார்கள் ஊர்வலமா?



திருப்பூர் மாநகராட்சியில் 20 கோடி ரூபாய் செலவில் வளர்ச்சிப் பணிகள் தொடக்க விழா நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு மண்டலத் திலும் வார்டு வாரியாக பூமி பூஜையாம்! 22 கார்கள் புடைசூழ அமைச்சரும், மேயரும் வலம் வந்தார்களாம் - போக்குவரத்து நெரிச லால் திருப்பூர் நகரமே மூச்சுத் திணறியதாம்.

அது என்ன பூமி பூஜை? இந்து மத ஆட்சியா நடக்கிறது? சென்னை கோட்டூர் புரத்தில் தலைமைச் செயலகம் கட்டுவதற்காக யாகம் நடத்தப்பட்டு, பட்டுப் புடவைகள் எல்லாம் எரிக்கப்பட்ட அந்தப் பூமி பூஜை என்னாயிற்று? அங்குத் தலைமைச் செயலகம் கட்டப்பட்டதா? சிந்திப்பீர்!

தமிழ் ஓவியா said...


உள ரீதியான உறுதி தேவை!


இந்தியா உலக நாடுகள் முன் தலைகுனியும் நிகழ்வுகள் அவ்வப்பொழுது நிகழ்வதுண்டு.

இந்தியா சுதந்திரம் அடைந்ததாகக் கூறி மகிழ்ச்சிக் கூத்தாடிய கால கட்டத்தில், அதற்காகப் போராடிய தலைவரான காந்தியாரை இந்துத்துவா வெறியன் ஒருவன் சுட்டுக் கொன்றான்.

காந்தியாரை நாங்கள் காப்பாற்றினோம் - உங்களால் காப்பாற்ற முடியவில்லையே என்று வெள்ளைக்காரன் ஏகடியம் செய்த நிலை!

450 ஆண்டு கால வரலாறு படைத்த சிறுபான்மை மக் களான இசுலாமியர்களின் வழிபாட்டுத்தலத்தை அயோத்தியில் பெருந் தலைவர்கள் வழிகாட்ட, இந்துத்துவா காவி வெறி கூட்டமான சங்பரிவார்க் கும்பல் பட்டப் பகலில் எந்தவிதக் கூச்சமுமின்றி இடித்து முடித்தனர் (1992 டிசம்பர் 6)

2002 பிப்ரவரியில் குஜராத் மாநில அரசே முன்னின்று சிறுபான்மை மக்களான முசுலிம்களை ஆயிரக்கணக் கில் கொன்று குவித்தது.

அந்தக் கட்சியைச் சேர்ந்த பிரதமரான வாஜ்பேயியே எந்த முகத்தோடு நான் வெளிநாடு செல்லுவேன் என்று கூனிக் குறுகினார்.

இந்தியாவில் இந்து சாமியார்கள் என்பவர்கள் ஆயிரக்கணக்கில் நிர்வாணமாக வந்து கும்பமேளாவில் குளிப்பது - இந்த 21ஆம் நூற்றாண்டிலும் இந்தியா காட்டுவிலங்காண்டி நாடாக இருக்கிறதே என்று வெளி நாட்டவர்கள் பரிகசிக்கும் போக்கு இன்னொரு பக்கம்.

இந்தக் கால கட்டத்தில் மிகக் கேவலமான அவமானம் என்பது இந்தியாவில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை.

இந்தியாவின் தலைநகரான டில்லியே இதற்குத் தலைமை தாங்குகிறது என்றால், இது படுகேவலம் அல்லவா!

புதுடில்லியில் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் கயவர்களால் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு எவ்வளவோ முயன்றும் அந்தப் பெண்ணின் உயிரைக் காப்பாற்ற முடியாத பரிதாபமே!

அதனைத் தொடர்ந்து வட மாநிலங்களிலும்,தமிழ் நாட்டிலும் சிறுமிகள் காம மிருகங்களால் வேட்டை யாடப்படும் கேவலம்!

இதில் வேதனை என்னவென்றால், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், சென்னை ஆர்ப்பாட்டத் தில் (29.12.2012) குறிப்பிட்டது போல புதுடில்லியிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி பெண் முதல் அமைச்சர்கள் இருக்கும் நிலையில், இத்தகு கொடுமைகள் பெண்களுக்கு நடந்திருக்கிறதே என்பதுதான். இந்தியாவில் நிலவும் இந்துத்துவா மனப்பான்மை என்பது பெண்களை ஓர் உயிராகக் கூடப் பாவிக்காத தன்மை கொண்டதாகும்.

பெண்களையும், பிராமணரல்லாதாரையும் கொல் லுதல் பாவமாகாது என்கிறது இந்துக்களின் முக்கிய சாஸ்திர நூலான மனுதர்மம் (அத்தியாயம் 11, சுலோகம் 66).

படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோகச் சிந்தனை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார் என்பதும் அதே மனுதர்மம்தான் (அத்தியாயம் 9, சுலோகம் 17).

இத்தகைய மனப்பான்மை உள்ள இந்து சமூக அமைப்பில் பெண்களைக் காமப் பொம்மைகளாகக் கருதும் நிலை இன்னும் தொடர்கிறது.

இதற்கு என்ன தீர்வு? முத்தேவிகள் இந்து மதத்தில் இருக்கிறார்களே. அவர்களைப் பூசை போட்டால் தீர்வு கிடைக்குமா? எத்தனை எத்தனை ஆண்டு காலமாக நவராத்திரி பூஜைகளை நடத்தி வந்திருக்கின்றனர்? சக்தி, கல்வி, செல்வம் என்றெல்லாம் வியாக்கியானம் செய்து வந்துள்ளனர்.

அதன் பலன் இதுதானா? சிந்திக்க வேண்டும் -குறிப்பாகப் பெண்கள்!

பெண்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளுதல், தேவைப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களைத் தாக்குதல் என்கிற அளவுக்குப் பக்குவமும், சக்தியும் பெற்றாக வேண்டும்.

பள்ளிகளில் பெண் பிள்ளைகளுக்குக் கராத்தே பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும், துப்பாக்கி அனுமதி வேண்டும் என்றும் சென்னை ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மகளிரணி மற்றும் பாசறையினர் முழக்கமிட்டது வெறும் ஆர்ப்பாட்டச் சொற்கள் அல்ல.

இன்றைய நடைமுறையில் தேவைப்படக் கூடியவை. நான்கு இடங்களில் பெண்களைச் சீண்டியவர்கள் பெண்களால் தாக்கப்பட்டனர்; அடித்து விரட்டப்பட்டனர் என்று செய்தி பரவினாலே போதுமே, நிலைமை கட்டுக்குள் வந்து விடாதா?

தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆளும் கை என்றார் புரட்சிக் கவிஞர். பெண்கள் இராணுவ அதிகாரிகளாக, விமான ஓட்டிகளாக வளர்ந்துவிட்ட காலம் இது அல்லவா!

உரிய பயிற்சி அளிக்கப்பட்டால் பெண்கள்மீதான வன்முறை விடை பெறும். அதைவிட மிக முக்கியம், பெண்கள் உளரீதியாக, உறுதிபடைத்தவர்களாக வளர்த்தெடுக்கப்படுவதாகும். பாடத் திட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் பெண்ணியச் சிந்தனைதான் அதற் குத் துணை நிற்க முடியும் - அரசுகள் சிந்திக்கட்டும்!! 31-12-2012

தமிழ் ஓவியா said...


அடிமைத்தனம்


யாரோ ஒருவன், எப்போதோ ஒரு காலத்தில், ஏதோ ஒரு மொழியில், என்னமோ ஒரு உத்தேசத்தின் மீது சொன்னதாக, யாராலோ எழுதி வைக்கப்பட்டதை ஒப்புக் கொண்டு பின்பற்ற சம்மதிப்பதைவிடப் பெரிய அடிமைத்தனம் வேறில்லை. - (விடுதலை, 12.7.1950)

தமிழ் ஓவியா said...

பீடி...கை

மகன்: இனம் மொழி வேறுபாட்டை இசை யில் இறைவன் பார்ப் பதில்லை என்று இசை விமர்சகர் ஒருவர் எழுதி இருக்கிறாரே, அப்பா?

அப்பா: ஆமாம். சமஸ்கிருதம், தெலுங் கில் மட்டுமே பாடுவது தான் இறைவனுக்குப் பிடிக்கும் தமிழ்நாட்டில் இசை மேடையில் தமிழில் பாடக் கூடாதா என்று கேட்டு விடக் கூடா தல்லவா - அதற்குத் தான் இந்தப் பீடி...கை மகனே!

தமிழ் ஓவியா said...


அய்யப்பன் காப்பற்றவில்லையே அய்யப்ப பக்தர் குளத்தில் மூழ்கி பலி


தஞ்சை, டிச.31- தஞ்சை மாரியம்மன் கோயில் குளத்தில் மூழ்கி சென்னையை சேர்ந்த அய்யப்ப பக்தர் நேற்று இறந்தார். சென்னை பெரம்பூர் கண்ணபிரான் கோயில் தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் தினேஷ் (23). அய்யப்ப பக்தர். இவர் தனது நண்பர்கள் 10 பேருடன் சபரிமலை புறப்பட்டார். வழியில் தஞ்சை மாரியம்மன் கோயிலில் நேற்று தரிசனம் செய்ய வந்தனர்.

அப்போது, தினேஷ் மற்றும் அவருடன் வந்த 5 பேர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் இறங்கி குளித்தனர். ஆனால், வெகு நேரமாகியும் தினேஷ் மட்டும் குளத்தில் இருந்து வெளியே வரவில்லை. இது குறித்து தஞ்சை தாலுகா காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு வந்த காவல்துறையினர் குளத்தில் இறங்கி தேடியபோது, இறந்த நிலையில் தினேஷின் சடலம் கிடைத்தது. பிரேத பரிசோதனைக்காக தினேஷின் உடல் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து தஞ்சை தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...


அட (அ) யோக்கியர்களே!


ஒரு பார்ப்பன ஏடு வார மலரில் மனங்களில் மகர ஜோதி என்று ஒரு சிறப்புக் கட்டுரையை வெளியிட்டு உள்ளது.

அய்யப்பன் கோயில் மகரஜோதி பற்றி சிலாகித்து உள்ளது; மகர ஜோதி என்பது உண்மையல்ல, கேரள மின் வாரியத்தைச் சேர்ந்தவர்களால் செயற்கையாக உருவாக்கப்படுவது என்பதை கேரளாவின் தேவசம் போர்டே ஒப்புக் கொண்டு விட்டது. அற நிலையத்துறை அமைச்சரே ஒப்புக் கொண்டு விட்டார். இன்னும் சொல்லப் போனால் கேரள மாநில முதல் அமைச்சராக விருந்த ஈ.கே. நாயனாரே ஒப்புக் கொண்டார்.

நீதிமன்றத்தில் வழக்குக்கூடத் தொடுக்கப் பட்டுள்ளது; இந்த நிலையில் அய்யப்பன் கோயில் மகர ஜோதியைப் பற்றி இன்றைக்கும் சிலாகித்து சப்புக் கொட்டி எழுதுகிறார்கள் என்றால், அவர்களைவிட முதல் நம்பர் மோசடிக் காரர்கள் வேறு யாராவது இருக்க முடியுமா?

கடவுள் பக்தி ஒழுக்கத்தை வளர்க்கும் யோக்கியதை இதுதானா? இதுதானா?

தமிழ் ஓவியா said...


புத்தொளிக் கதிர்கள் பூக்கட்டும்! திமுக தலைவர் கலைஞர் புத்தாண்டு வாழ்த்து


2013ஆம் ஆண் டுக்கான திமுக தலைவர் கலைஞர் அவர்களின் புத் தாண்டு செய்தி வரு மாறு:

தமிழக முன் னேற்றத்தில் பல தடைக்கற்களை ஏற் படுத்திய 2012ஆம் ஆண்டு முடிவடையும் வேளையில், புத்தொளிக் கதிர்கள் பூத்திடாதா எனும் ஏக்கத்துடன் 2013ஆம் ஆண்டினை வரவேற்று, தமிழக மக்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றேன்.

2012 - சென்னை நீங்கலாகத் தமிழகம் முழுவதும் 18 மணி நேரம் மின்வெட்டு நிலவுவதால்; தொழில் வளர்ச்சி பாதிக்கப் பட்டுப் பல்லாயிரக்கணக்கான குறுசிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன; இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்புகளை இழந்து தவிக்கின் றனர்;

பொருளாதாரம் சிதைந்து, சீரழிந் துள்ளது; வீடுகளில் இருள் கப்பி அல்லல் படும் தாய்மார்களுடன், பள்ளிக் குழந்தை கள் எல்லாம் தேர்வுக்குக் கூடப் படிக்க முடியாத அவலத்திற்கு ஆட்பட்டுள்ளனர்.

அவலை நினைத்து உரலை இடித்த கதையாகத் தமிழக மக்கள் தடம் புரண்டு உருவாக்கிய ஆட்சியின் அதிகார மமதை யால் - எடுத்தேன்; கவிழ்த்தேன் எனும் ஆணவப் போக்கினால், அரசின் எல்லாத் துறைகளிலும் நிர்வாகச் சீர்கேடு மலிந்து விட்டது.

அண்டை மாநிலங்களுடன் நல்லுறவு பேணாத ஆட்சியால் காவிரிநீர் தமிழகத்திற்குக் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்பட்டு, விவசாயக் குடும்பங்கள் தத்தளிக்கின்றன. ஏழை விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் படலம் தொடர்கிறது. தினமும் கொலை, கொள்கை, கழுத்துச் சங்கிலி அறுப்பு, கற்பழிப்புகள் போன்ற கொடிய சம்பவங்கள் தொடர்கதையாகி, சட்டம் - ஒழுங்கு நிலை கெட்டுக் கேள்விக்குறியாகிவிட்டது.

அல்லலுக்கு ஆட்பட்ட மக்களின் கண் ணீரைத் துடைத்திடக் காரியமாற்றிடும் பணியில் கவனம் செலுத்தாமல், குறை களைச் சுட்டிக்காட்டிடுவோர்மீதும் பொய் வழக்குகள் புனைவதும், எடுத்ததற் கெல்லாம் கழகத்தின்மீதும், மத்திய ஆட்சியின்மீதும் பழி போடுவதும் வாடிக் கையாகிவிட்டது. இவற்றால், அய்யகோ, தமிழக மக்களல்லவா பாதிக்கப்பட்டுச் செய்வதறியாமல் தவிக்கின்றனர்.

தமிழகத்திற்கு - தமிழக மக்களுக்கு இத்தகைய எண்ணற்ற இன்னல்களை இழைத்த 2012ஆம் ஆண்டு மறையட்டும்!

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்

எனும் திருக்குறள் கூறுவதுபோல், விளைந்துள்ள கேடுகளை எண்ணிப் பார்த்து வாழ்வின் விடியலுக்கு, தமிழக முன்னேற்றத்திற்கு உதவுவோர் யார் என அடையாளம் காணும் உணர்வினை 2013ஆம் ஆண்டு தமிழக மக்களிடையே வளர்க்கட்டும் எனக் கூறித் தமிழக மக் களுக்கு எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்கு கின்றேன்!

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனைகளும்

ஏமாற்றமோ!

பாலியல் வெறியாட்டத்துக்குப் பலியான டில்லி மருத்துவக் கல்லூரி மாணவியின் உடலை அவசரமாக தகனம் செய்ததற்குப் பா.ஜ.க. கண்டனமாம்.

முன்கூட்டியே அறிவித்து, அவகாசம் கொடுத்து, பட்டப் பகலில் எரியூட்டினால், அதை வைத்து மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தி, அரசியல் குளிர் காயலாம் என்று நினைத்தவர்களின் வாயில் மண் விழுந்து விட்டதல்லவா - அதனால்தான் இந்த ஒப்பாரி!

தண்டனை

தலை நகரமான டில்லியில் 2012ஆம் ஆண்டில் மட்டும் 635 வன்புணர்ச்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஒரே ஒருவருக்கு மட்டும்தான் தண்டனை கிடைத்துள்ளதாம்.

நம் நாட்டு சட்டமும், நீதியும், நிருவாகமும் இந்தக் கதியில் தான் உள்ளன. இதுபோன்ற செயல்களை சாட்சியை வைத்துக் கொண்டா நடத்துவார்கள்?

பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் கொடுத்தாலே போதும் என்கிற அளவுக்கு எளிமையாக்கினால்தான் குற்றவாளிகள் சிறைக் கூண்டுக்குள் தள்ளப்படுவார்கள்.

மீண்டும் டில்லி

டில்லியில் கடந்த 29ஆம் தேதி கயாலாவி லிருந்து லஜ்பத் நகருக்குச் சென்று கொண்டிருந்த டில்லி மாநகரப் பேருந்தில் பயணம் செய்த ஒரு மாணவியிடம், பேருந்து நடத்துநர் பாலியல் வன்முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

இந்தக் காம கொடூரர்களை விலங்கிட்டு வீதிக்கு வீதி அழைத்துச் சென்று அவமானப் படுத்தி, அதற்குப் பின் சட்ட ரீதியான தண்டனை கொடுக்கலாம் அல்லவா!

தமிழ் ஓவியா said...

ரஜினி?

சினிமா நகர் ரஜினியை அரசியலுக்கு இழுக்கப் பார்க்கிறார்கள். அவரோ என் வழி தனி வழி என்கிறார்.

தெரியாமல் தான் கேட்கிறோம். ஒரு சிறந்த நடிகர் என்பதாலேயே அவர் அரசியலுக்கு வர வேண்டுமா? ஆட்சியைப் பிடிக்க வேண்டுமா? ஒரு சிறந்த மல்யுத்த வீரர் என்பதாலேயே அவர் முதல் அமைச்சர் ஆகிவிடலாமா? ஒரு ஆல்ரவுண்டு கிரிக்கெட் விளையாட்டுக்காரர் என்றால் அவர் நாட்டை ஆளத் தகுதி படைத்து விடுவாரோ?

இந்த விடயத்தில் தமிழ்நாடு கெட்டதுபோல வேறு எந்த மாநிலமும் கெட்டுப் போய்விடு வதில்லை.

பக்தி ரசம்!

சென்னையில் இசை மழை கொட்டுகிறது. சாமன்ய மக்களுக்கு அங்கு வேலையில்லை, பொழுது போகவில்லையே என்று திமிர் முறித்துக் கிடப்பவர்கள் குறிப்பாக மாமா மாமிகள் சங்கமிக்கிறார்கள்.

இறைப்பக்தி வெள்ளமாக நான்குகால் பாய்ச்சல் போடுகிறதாம்! இதுபற்றி இன்றைய நாளேடு ஒன்றில் விமர்சனம் எழுதியிருக்கிறார் ஒருவர். சுகிஸ்வரமாக இறைவனை அடையும் மார்க்கம் பக்தி ஒன்றே! அதுவும் அன்பு, பிரேமை போன்ற இவை மட்டுமே இறைவன் நம்மிடம் எதிர்பார்க்கிறனாம்!

அப்படியா சேதி?

அது என்ன இறைவனை அடையும் மார்க்கம்? செத்துப் போவதுதான் இறைவனை அடையும் மார்க்கமா? வாழ்வதற்குத்தான் வழி கிடைப்பது கடினம்; செத்துப் போவதற்கு வழியா இல்லை? ஒரே ஒரு நிமிடம் போதுமே செத்துப் போவதற்கு!

சொர்க்கத்துக்குப் போவதாக நினைத்துக் கொண்டு சொர்க்கவாசல் திறப்பு என்ற பெயராலே உள்ளே நுழைந்து வெளியே வந்து ஆத்துக்கு திரும்புறாளே - அந்த ஏமாற்று வேலையும் இதில் அடங்குமா?

அன்பு, பிரேமை, பேரன்பை மட்டும்தானே இறைவன் நம்மிடம் எதிர்பார்க்கிறான். அப்படி என்றால் வீட்டில் இருந்து கொண்டே இதனைச் செய்ய முடியாதா? கோயில்கள் ஏன்? கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டி கோயில்களைக் கட்டுவானேன்?

கோயிலுக்குள் கடவுள் சிலைகள் ஏன்? அர்ச்சகன் ஏன்? பூஜை புனஷ்காரங்கள் ஏன்? ஏன்? ஆண்டு முழுதும் உற்சவங்கள் ஏன்? மக்கள் கூட்டம் ஏன்? உண்டியல் ஏன்? காணிக்கைகள் ஏன்? ஏன்? இன்னும் சில கோயில்களில் உயிர்ப்பலி ஏன்?

இதில் எது உண்மை? கடவுளிடம் அன்பைச் செலுத்துவதா? கோயில் என்ற நிறுவனத்தை ஏற்படுத்தி சுரண்டல் தொழிலை ஜோராக நடத்துவதா? எது வேண்டும் சொல் மனமே?

தமிழ் ஓவியா said...


தென்றல் - சரவணன் ஜாதி மறுப்புத் திருமணம் தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்


சென்னை, டிச. 31- திராவிடர் கழகப் பொதுக் குழு உறுப்பினர் வேலுர் சத்துவாச்சாரி கு.இளங்கோவன் - சகுந்தலா ஆகியோரின் செல்வி தென் றல் - சென்னை சித்ரா - அண்ணா மலை ஆகியோரின் செல்வன் சரவ ணன் ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா 27.12.2012 வியாழன் மாலை 6.30 மணிக்கு சென்னை - கோயம்பேடு கோல்டுமைன் ஓட்டல் 3ஆவது தளத்தில் நடைபெற்றது.

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் மூலம் ஏற்பாடு செய்யப் பட்ட இத்திருமணத்தில் திருமண நிலைய இயக்குநர் திருமகள் வரவேற் புரை கூறினார்.

மக்கள் வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் - சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் வேல்முருகன் மணமக் களை வாழ்த்தி உரையாற்றினார். தந்தை பெரியார் அவர்களின் உழைப் பால் நாடு பெற்ற வளர்ச்சியினை எடுத்துரைத்தார். ஆடம்பர சடங்கு சம்பிரதாயங்களை மாற்றி சிக்கனமாக திருமணம் நடைபெறவேண்டும் என்று தந்தை பெரியாரின் கருத்தை எடுத்துக் கூறினார்.

சு.அறிவுக்கரசு

திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் தம் உரையில் குறிப்பிட்டதாவது:

இதுபோன்ற மாலை நேரத் திரு மணங்கள் ஆந்திரா, நேபாளங்களில் நடைபெறுவது சர்வ சாதாரணம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திராவிடர் கழகத்தின் முயற்சியால் ஜாதி மறுப்புத் திருமணங்கள் பெருகி வருகின்றன. மணமகளின் தந்தையார் இளங்கோவனின் வீட்டில் நடக்கக் கூடிய 14ஆவது ஜாதி மறுப்புத் திரு மணம் இது.

ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட இந்த மணமக்களை மற்ற வர்கள் பார்த்துப் பொறாமைப்படும் அளவுக்குச் சிறப்பாக வாழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கலி.பூங்குன்றன்

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்கள் தம் உரையில் குறிப்பிட்டதாவது:

நண்பர் இளங்கோவன் திரும ணமே புரட்சிகர திருமணமாகும். அவர் வீட்டில் நடக்கும் ஜாதி மறுப்புத் திருமணம் என்பது அதிசயமல்ல.

தந்தை பெரியார் கொள்கைகள் என்பவை வாழ்வியல் சிந்தனையாகும். ஒரு திருமணத்திற்கு எவ்வளவு செலவு செய்யலாம் என்ற திட்டத்தைக் கூட தந்தை பெரியார் கூறியுள்ளார்.

10 அல்லது 15 நாள் வருமானம் அவ் வளவோ அந்த அளவு மட்டுமே செலவு செய்யலாம் என்று தந்தை பெரியார் குறிப்பிட்டார் என்பதை எடுத்துக் கூறி மணமக்களை வாழ்த் தினார்.

தமிழர் தலைவர் கி.வீரமணி

மணமக்களை உறுதிமொழி கூறச் செய்தபின்னர் மணமக்கள் ஒருவருக் கொருவர் மாலை மாற்றிக் கொண்ட னர்; மோதிரம் அணிந்துகொண்டனர்; தாலி தவிர்க்கப்பட்டது. திருமணத்தை நடத்தி வைத்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விழா வில் குறிப்பிட்டதாவது:-

மணமகளின் தந்தை இளங்கோவன் மட்டுமல்ல, அவர்களின் இணையர் சகுந்தலா அவர்களும் கொள்கையில் தீவிரமானவர், போராட்டங்களில் சிறை சென்றவர்; மணமகள் தென்ற லும் போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதானவர்தான். நல்ல குடும்பம் ஒரு சுயமரியாதைப் பல்கலைக்கழகமாகும்.

தந்தை பெரியார் 1927ஆம் ஆண்டி லேயே புரோகிதமற்ற திருமணத்தை அறிமுகப்படுத்தினார். சீனாவில் கூட 1945-க்குப் பிறகுதான் மாவோவால் சீர்திருத்த முறையில் திருமணங்கள் நடக்கத் தொடங்கின.

திருமணங்களில் ஆடம்பரமாகச் செலவு செய்வதைத் தந்தை பெரியார் கண்டித்தார். அழைப்பு ஒன்றுக்கு 200 ரூபாய் செலவு செய்கிறவர்களும் உண்டு.

அதனால் என்ன பயன்? எந்தத் திருமணப் பத்திரிகைகளை, யார் பாதுகாத்து வைக்கின்றனர்?

தந்தை பெரியாரின் சிக்கனம் தமிழ் நாட்டின் மிகப்பெரிய பொக்கிஷ மாகும். அந்தச் சிக்கனம்தான் பல் கலைக்கழகமாக, கல்வி நிறுவனங் களாக, பெரியார் மய்யங்களாக, வெளியீடுகளாக வளர்ந்திருக்கின்றன.

வெளிநாடுகளில் திருமணம் என்றால் 15 அல்லது 20 பேர்கள்தான் அழைக்கப்படுவார்கள்.

மற்ற நாட்டுக்காரர்கள் எங்களைப் பார்த்துக் கேட்பதுண்டு. உங்கள் ஊர்களில் திருமணத்திற்கு எத்தனைப் பேர்களை அழைப்பீர்கள் என்று கேட்கும் பொழுது இரண்டாயிரத்தி லிருந்து 5000 வரை என்று சொல் லுவோம். எங்கள் நாட்டின் மக்கள் தொகையே அவ்வளவு கிடையாதே என்பார்கள்.

இங்கே திருமகள் இறையன் அவர் களின் மகன் இசையின்பன் வந்திருக் கிறார். அவருக்கும், பசும்பொன்னுக்கும் திருமணம் எங்கே நடந்தது தெரியுமா?

காவிரி நீர்ப் பிரச்சினை ஒப்பந்தம் முடிந்து விட்டது என்று சொன்ன குடியரசுத் துணைத் தலைவர் ஆர்.வெங் கட்ராமனுக்குக் கருப்புக் கொடி பிடித்த போராட்டத்தில் நாங்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு ஒரு திருமண மண்டபத்தில் வைக்கப் பட்ட போது அந்த இடத்தில்தான் அவர்களின் திருமணம் நடைபெற்றது என்று குறிப்பிட்டார் கழகத் தலைவர்.

கு.இளங்கோவன்

மணமகளின் தந்தையார் கு.இளங் கோவன் நன்றி கூறி, விடுதலை வைப்பு நிதியாக ரூ. 10 ஆயிரம் கழகத் தலைவரிடம் வழங்கினார்.

அனைவருக்கும் விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...


இவர்தான் பிஜேபி துணை முதல்வர்

கருநாடக மாநிலத்தில் துணை முதல் அமைச்சராக இருக்கக் கூடியவர் ஈசுவரப்பா, இவர் இலஞ்சம் வாங்கிக் குவிக்கிறார் என்ற நிலையில் லோக் அயுக்தா காவல்துறையில் அமைச்சர் வீட்டில் சோதனைகளை நடத்தினர். ஏராளமான பணம், நகைகள், சொத்துப் பத்திரங்கள் சிக்கியது.

இதுகுறித்து அமைச்சரை செய்தியாளர்கள் சந்தித்துக் கேட்டபோது, அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?

என்னிடம் பணம் இருக்கிறது. சொத்துக்களை வாங்குகிறேன்; நீங்கள் யார் இதுபற்றி எல்லாம் கேட்க? நீங்கள் என்ன வருமான வரித்துறை அதிகாரிகளா? அல்லது என் மேலதிகாரிகளா? உங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு போங்கள் - என்று எரிந்து விழுந்துள்ளார். அடுத்தவர்களின் ஊழல்கள்பற்றி கேள்வி கேட்கும் உரிமை பிஜேபிக்குத்தான் குத்தகை; ஆமாம்! பிஜேபி ஊழல்பற்றி யாரும் கேள்வி கேட்கக் கூடாது கப்-சிப்!