Search This Blog

10.3.14

புறநானூற்றுத் தாய்! - வாழ்க்கைச் சுவடுகள்...

புறநானூற்றுத் தாய்!


அன்னை மணியம்மையார் அவர்களின் 94ஆம் ஆண்டு பிறந்த நாள் இந்நாள். 60 ஆண்டுகள் முடியு முன்பே அவர்களின் வாழ்வின் காலம் முடிவுக்கு வந்தது. தந்தை பெரியார் அவர்களின் உடல் நலனைப் பேணுவதில் கருத்தும், கவனமும் செலுத்திய அந்தத் தாய் தன் உடல் நலனைப் பேணவில்லை என்பதுதான் உண்மை.

மணியம்மையார் திருமணத்தைக் காரணம் காட்டிப் பிரிந்து சென்ற அறிஞர் அண்ணா அவர்களேகூட பின்னொரு தடவை அன்னை மணியம்மையார் அய்யா பெரியாரைப் பேணிக் காத்த பெற்றியைப் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

அய்யா அவர்களிடம் நான் வந்து சேரும்போது இப்பொழுது எனக்கு என்ன வயதோ, அதே வயதுதான் அப்போது அய்யாவுக்கு. இப்பொழுது எனது உடலில் என்னென்ன கோளாறுகள் உள்ளதோ, அதைவிட அதிகமான கோளாறுகள் அய்யாவுக்கு இருந்தன. அப்படியிருந்த அய்யாவை கடந்த முப்பது ஆண்டு களாகக் கட்டிக் காத்து அவரை நோயின்றி, உடல் நலத்தோடு பாதுகாத்து வரும் பெருமை மணியம்மை யாரையே சேரும் என்று அண்ணா அவர்களே சொன்னார்கள் என்றால், அதன் மூலம் அன்னை மணியம்மையாரின் பணி எத்தகைய மகத்தானது என்பது சொல்லாமலே விளங்கும்.

பெரியார் ஒரு தனி மனிதரல்ல - ஒரு சகாப்தம் என்றார் அறிஞர் அண்ணா. அத்தகைய ஒரு சகாப் தத்தை நீண்ட காலம் வாழ வைத்து அதன் மூலம் இந்தச் சமுதாயம் நலம் பெற்றது - வளம் பெற்றது என்கிற போது, அன்னை மணியம்மையார் தந்தை பெரியாரை உடல் நலத்தோடு நீண்ட காலம் வாழ வைத்ததன் மூலம், இந்தச் சமுதாயத்திற்கே மிகப் பெரிய தொண்டினைச் செய்துள்ளார் என்று தானே பொருளாகும்.

இதனை தந்தை பெரியார் அவர்களின் எழுத்து வாயிலாகவும் அறியலாமே!
மணியம்மையார் இயக்கத் தொண்டுக்கென்றே என்னிடம், வந்து இந்த 20 ஆண்டில் எனக்கு வீட்டு வசதிக்கான பல காரியங்களுக்கு  - தேவைக்கு உதவி செய்து வந்ததன் காரணமாக என் உடல் நிலை எப்படியோ, என் தொண்டுக்குத் தடையில்லாமல் நல்ல அளவுக்கு உதவி வந்ததால் என் உடல் நலப் பாதுகாப்பு, வீட்டு நிர்வாகம் ஆகியவற்றில் எனக்குத் தொல்லை இல்லாமல் இருக்கும் வாய்ப்பை அடைந்தேன் என்றார் தந்தை பெரியார் (விடுதலை 15.10.1962).

இதன் மூலம் அன்னை மணியம்மையார் யார்? அவர் மேற்கொண்ட தொண்டு எத்தகையது என்ற அருமையின் பெருமை புரியும்.

தந்தை பெரியார் எதிர்ப்பார்த்தபடியே, தொலை நோக்கோடு கணித்தபடியே, தந்தை பெரியார் அவர் களின் மறைவிற்குப் பிறகு கழகத்திற்குத் தலைமை யேற்று, பெரியார் அறக்கட்டளைக்குச் செயலாளராக வும் இருந்து, இயக்கத் தொண்டையும், தந்தை பெரியார் தொடங்கிக் கொடுத்த கல்வித் தொண் டையும் எவ் வளவு நேர்த்தியாக மேற்கொண்டார்கள் - அவற்றின் மூலம் எத்தகைய தலைமைப் பண்புக்குத் தகுதியானவர் என்பதையும் நிரூபித்துக் காட்டினார்களே!

தந்தை பெரியார் இறுதியாக அறிவித்து, எந்தப் பணிக்காக களம் அமைத்து  போராடிக் கொண்டிருந் தாரோ, அந்த அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதை நிலை நாட்டுவதற்காக அடுக்கடுக் கான போராட்டங்களை நடத்திக் காட்டினாரே!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங் கள் முன் மறியல் மத்திய அமைச்சர்களுக்குக் கறுப்புக் கொடி காட்டினார். இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்த இராவண லீலா நிகழ்ச்சியை நடத்திக் காட்டி, கீழ் நீதிமன்றம் தண்டனை விதித்த போதிலும், எதிர்த்து மேல் முறையீடு செய்து அதில் வெற்றிக் கொடியையும் நாட்டிய வீரத் தாய் தான் நமது அன்னையார்.
அமைதியான தோற்றத்திற்குள் குடி கொண்டு இருந்ததெல்லாம் அரிமா சீற்றமே!

கொள்கையில் அவர்கள் எந்த அளவுக்குக் கூர் வாளாக இருந்தார் என்பதற்கு ஒரு தகவலைச் சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

அது நெருக்கடி காலம்! பேச்சுரிமை, எழுத்துரிமை களுக்கு விலங்கு மாட்டப்பட்ட இருண்ட காலம்! அந்தக் காலக் கட்டத்தில்கூட  அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கு எதை வேண்டுகோளாக முன் வைத்தார்!?
ஜாதியை ஒழிக்க ஒரு அவசரச் சட்டத்தை நமது பெரு மதிப்பிற்குரிய இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் நாளை பிறப்பிக்கட்டும். நமது கழகத்தின் ஆதரவை அவர்களுக்கே தரும் வகையில் எங்கள் முடிவை மாற்றிக் கொள்ளத் தயார். ஆனால் நடக்க வேண்டுமே! (விடுதலை 24.2.1977). என்று அறிக்கை வெளியிட்ட அப்பழுக்கற்ற கொள்கைக்குச் சொந்தக்காரர்தான் அன்னை மணியம்மையார்.

நெருக்கடி காலம் என்னும் பாம்பு அவரைக் கொத் தியது! ஏடுகளை, இதழ்களை, கல்வி நிறுவனங்களை நடத்த விடாமல் செய்ய வருமான வரி என்னும் வல்லூறு வாதை பல புரிந்தது. கழகப் பொதுச் செயலாளரும் விடுதலை ஆசிரியராகவும் இருந்த ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் மிசா கைதியாக சிறையில் இருந்த நேரம்; கழகத்தின் முக்கிய செயல் வீரர்களும் மிசா கைதியாக இருந்த அந்த இருண்ட காலத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அந்தச் சூழலிலும், மனந் தளராது தன்னந்தனியாக நின்று, முகம் கொடுத்துப் புறங் கண்டவர் அந்தப் புறநானூற்றுத் தாய் என்பதை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் பெரு வியப்பாகத் தான் இருக்கிறது!
உலக வரலாற்றில் ஒரு சமுதாயப் புரட்சி இயக்கத் துக்குத் தலைமை தாங்கி வீரம்- விவேகம் இவை இரண்டின் கலவைகளுடன் நடத்திக் காட்டிய அந்தத் தாயின் பாதையைத் தொடருவோம்.

அன்னையாரின் இந்த 94ஆம் ஆண்டு பிறந்த நாளில் அய்யா மறைந்தபோது அவர்கள் எடுத்துக் கொண்ட அந்தச் சூளுரை உறுதிமொழியில் உறுதியாக நின்று தமிழர் தலைவர் தலைமையில் வெற்றிப் பயணம் தொடர்வோம்! தொடர்வோம்!!  வாழ்க பெரியார்! வாழ்க அன்னையார்!!
               ---------------------------- “விடுதலை” தலையங்கம் 10-03-2014

*************************************************************************************
அன்னையார் வாழ்க்கைச் சுவடுகள்...
1920 மார்ச் மாதம் 10ஆம் நாள் வேலூரில் வி.எஸ். கனகசபை - பத்மாவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் க.காந்திமதி என்பதாகும். உடன் பிறந்தவர்கள் சண்முகம், தியாகராஜன் ஆகிய இரண்டு சகோதரர்களும், கமலா என்ற ஒரு சகோதரியும் ஆவார்கள்.

வேலூரில் உள்ள மகந்த் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு (எஸ்.எஸ். எல்.சி.) வரை படித்தார்.

முதலில் கே.அரசியல் மணி என்று அழைக்கப் பட்டார். பின்னர் கே.ஏ.மணி எனப்பட்டு, மணியம்மையார் என்றே அறியப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டத் திலுள்ள குலசேகரபட்டினம் சி.டி. நாயகம் தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் புலவர் வகுப்பு படிக்கையில் உடல்நலக் குறை வினால் கல்வி தடைப்பட்டு விட்டது.

1936 வேலூருக்கு ஒரு திருமணத் தில் கலந்து கொள்வதற்காக வந்த பெரியா ரிடம் அறிமுகம் செய்து வைக்கப் பட்டார். அப்போது நான்காவது பாரம் படித்துக் கொண்டு இருந்தபோது பெரியாரைச் சந்தித்தார்.  15.5.1943இல் மணியம்மையா ரின் தந்தை கனகசபை அவர்கள் மறைந் தார். 1943 செப்டம்பர் மாதம் 11ஆம்  நாள் - தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கருத்துகளால் கவரப்பட்டு அய்யாவின் தொண்டராகப் பணியாற்ற வந்தார்.

1943 அய்யாவின் தொண்டரான அன்னை முதன்முதலாக மேடை யேறிப் பேசியது காயல்பட்டினம் அருகில் உள்ள குலசேகரப்பட்டினம் கனக நாயகம் சீதக்காதி விழா.
1944    சேலத்தில் ஜஸ்டிஸ் கட்சி திரா விடர் கழகமாக மாறிய மாநாட்டில்  (27.8.1944) அறிமுகம் செய்து வைக் கப்பட்டார்.

அன்னையின் முதல் கட்டுரை இரண் டும் ஒன்றே - கந்தபுராணமும் இராமா யணமும் ஒன்றே என்பதாகும். (குடிஅரசு 08.07.1944)

பெண் கல்வி தோழர் மணியம்மை சொற்பொழிவு எனும் தலைப்பில் 19.8.1944 குடிஅரசில் வெளியானது.

ஏரல் திராவிடர் கழக மாநாட்டில் மணியம்மையார் பேசிய பேச்சு குடிஅரசு ஏட்டில் (15.7.1946) வெளியானது. கழகக் கொடி குறித்தும், கொடி கூறும் இலட்சியம் குறித்தும் முதன் முதலாகப் பேசியவர் மணியம்மையாரே.
சீதையைப்பற்றிய  நடுநிலை ஆராய்ச்சி எனும் தலைப்பில் அன்னையின் கட்டுரை (10.11.1945)

பாரதி விழா எனும் தலைப்பில் மணி யம்மை எனும் பெயரில் எழுதிய கட்டுரை ஆகியன வெளியாயின (9.12.1944).

(பிற சமயமும் நம் (இந்து) சமயமும், (12 வருடத்துக்கு முன் ஒரு இந்துப் பெண் எழுதியது, மணி தொகுத்தது கட்டுரை குடிஅரசில் (9.12.1944) வெளியானது.
தேவர்களின் காம விகாரம் - மணி திரட்டியது குடிஅரசில் (20.12.1944) வெளியானது. அம்மாவின் முதல் வடபுலப் பயணம் - முதன் முதலாகக் கல்கத்தா விற்கும் பின்னர் கான்பூருக்கும் பயணம் 21.12.1944 முதல் 6.1.1945 வரை.

1946 திராவிடர் கழக மாநில நிருவாகக் குழுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அம்மா முதன் முதலாகப் பங்கேற்றார்.

திராவிடர் கழக நிருவாகக்குழு கூட் டம் 23.6.1946இல் ஸ்பெஷல் அர்ஜன்ட் எக்சிக்யூடிவ் கமிட்டி மீட்டிங் அன்னை யார் பங்கேற்பு. (விடுதலை 18.6.1946 நடைபெறுவதாகச் செய்தி அறிவிப்பு)

6.6.1946 முதல் வெளியிடப் பெற்ற விடுதலையில் ஆசிரியர், வெளியிடுபவர், அச்சிடுபவர் என அன்னை பொறுப்பு ஏற்றல்  (1978 வரை அப்பொறுப்பை வகித் தவர் அவர்).

1948 செல்வி மணியம்மையாருக்குச் சென்னை அரசின் தலைமைச் செயலர், விடுதலை வெளியீட்டாளர் ஆன ஸ்ரீ கே.ஏ.மணி, பாலகிருஷ்ண பிள்ளை தெரு, சிந்தாதிரிப் பேட்டை, சென்னை எனும் முகவரியிட்டு, 1931ஆம் ஆண்டைய இந்தியன் பிரஸ் (எமர்ஜென்சி) பவர்ஸ், சட்டம் 7(3) பிரிவுப்படி நடவடிக்கை எடுக்கும் வகையில் ரூ.2,000 ஜாமீன் 15.6.1948க்குள் சென்னை மாநில முதன்மை நீதிமன்ற நீதிபதியிடம் செலுத்த ஆணை. (21.6.1948இல் செலுத்தப்பட்டது)
22.8.1948இல் சென்னையில் பெரியார் இல்லத்தில் திராவிடர் கழக நிருவாகக் குழுக்கூட்டம் நடைபெற்ற போது, காவல்துறை ஆணையாளர் அங்குக் கூடியிருந்த அனைவரையும் கைது செய்வதாகக் கூறிக் கைது செய்து காவல்துறை ஆணையாளர் அலுவலகத் திலும், சென்பெனிடன் ஹியரிங் சிறையில் வைத்தார். பெரியார், அண்ணா, வேதா சலம் முதலானவர்களுடன் சிறை வைக்கப் பட்ட அன்னையார் இரு நாட்களுக்குப் பின் விடுதலை ஆனார்.
1948 டிசம்பர் 20ஆம் நாள் குடந்தையில் நடந்த மொழி உரிமைப் போரில் (இந்தி எதிர்ப்பு) அரசு தடையை மீறியதாகக் கைது செய்யப்பட்டு, பாபநாசம் கிளை சிறையில் அடைக்கப் பட்டார். (இதுவே மணியம்மையார் அவர்களின் முதல் கைது ஆகும்.)

விசாரணைக்குப் பின் இரண்டு மாதம் தண்டனை அளிக்கப்பட்டு வேலூர் சிறையில் காவலில் வைக்கப்பட்டார்.

24.12.1948இல் சிறை சென்றவர் 1949 பிப்ரவரி மாதம் 23ஆம் நாள் வேலூர் சிறையிலிருந்து விடுதலை அடைந்த மணியம்மையாரைத் தந்தை பெரியார் நேரில் சென்று சிறை வாயிலில் வர வேற்றார்.

1949 - 1949 மார்ச் மாதம் 29ஆம் நாள் சென்னை யில் மணியம்மை யார் தலைமையில் இந்தி எதிர்ப்பு மறியல் போர் நடந்தது.

1949 ஜூலை மாதம் 9ஆம் நாள் பெரியார்  - மணியம்மையார் பதிவுத் திருமணம் என்னும், திருமண ஏற்பாடு திருமண பதிவாளர் முன்னிலையில் சென்னையில் பதிவு செய்யப் பட்டது.

திருமணத்திற்குப் பிறகு ஜூலை 1949லிருந்து ஈ.வெ.ரா. மணியம்மை என்று தமிழிலும் E.V.R.Maniammai என்று ஆங்கி லத்திலும் அழைக்குமாறு தந்தை பெரியார் வேண்டுகோள் விடுத்தார்.

மணியம்மையின் மீது 8.9.1949இல் சம்பத் தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்தது. 1949இல் பெரியாருடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
பெரியார் மணியம்மை 28.11.1949 முதல் ஒரு வாரம் ஓய்வு எடுத்தனர்.  சென்னை மாவட்டக் கழக நிருவாகிகள் கூட்டம்  25.12.1949இல் சென்னையில் நடை பெற்றது. அதில் பங்கேற்றார்.

1950 அய்யாவுடன் மீண்டும் அம்மா சுற்றுப்பயணம்.

1950  நவம்பரில் தந்தை பெரியாருடன் ஆன திருமண ஏற்பாட்டிற்குப் பின் மணியம்மையாரின் முதல் மேடைப் பேச்சு பேரளம் பொதுக்கூட்டத்தில் நடைபெற்றது.

கடலூர், தென்னார்க்காடு மாவட்ட 3ஆவது திராவிடர் கழக மாநாட்டில் மணியம்மையார் கொடி ஏற்றிச் சொற் பொழிவு (28.11.1950)

9.2.1950 மும்பையில் கழக மாநாட்டில் பங்கெடுத்துப் பயணம். மும்பை மாநாட் டில்  மணியம்மையார்.தலைமை உரை. ஒரு மாநாட்டிற்குத் தலைமை வகிப்பது இதுவே முதல் முறை.

6.3.1950 அன்று விடுதலை ஜாமீன் வழக்கு நடைபெற்றது. மணியம்மையார்  சார்பில் வழக்காடியவர் வகுப்புரிமைச் சிற்பி முன்னாள் அமைச்சர் எஸ்.முத் தையா முதலியார் என்பது குறிப்பபிடத் தக்கது.

18.3.1950 சென்னை மாவட்ட திராவிடர் கழக 15ஆவது மாநாடு மார்ச் 18ஆம் நாள் சென்னை நேப்பியர் பூங்கா அருகில் அமைந்திருந்த எஸ்.டி.எம். பழனிச்சாமி அரங்கில் கூடியபோது அன்னையார் கலந்து கொண்டு கொடியேற்றினார்.

3.4.1950 குன்னம் எனும் ஊரில் திரா விடர் கழகக் கொடியை ஏற்றி வைத்துத் திராவிட இலட்சியங்களை விளக்கி அம்மா சொற்பொழிவு

9.4.1950 புதுக்கோட்டையில் நடை பெற்ற திராவிடர் கழக மாநாட்டில் மணி யம்மையார் கொடியேற்றி வைத்துச் சொற்பொழிவு.

20.5.1950இல் பெங்களூரில் மணி யம்மையார் திராவிடர் கழகக் கொள் கைகளை விளக்கிச் சொற்பொழிவு.

22.6.1950 அம்மாவிற்கு முதன்முதலாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

1.8.1950இல் கரூரில் பெரியாருக்குமுன் மணியம்மையார் பேச்சு.
1952 இல் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் பதிவு செய்யப்பட்டது.(22.02.52) பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் ஆயுள் செயலாளராகத்  தந்தை பெரியாரால் அம்மா நியமிக்கப் பட்டார். (1978இல் தாம் மறையும் முன் திரு.வீரமணி அவர்களிடம் அப் பொறுப்பை ஒப்படைத்தார்.) இதே ஆண் டில் திருச்சியில் இருந்த குழந்தைகள் காப்பகக் குழந்தைகளைப் பேணி வளர்க்க வேண்டிய பொறுப்பினை மேற்கொண் டார்.

1952 திராவிட விவசாயத் தொழிலாளர் மாநாடு கள்ளக்குறிச்சி வட்டத்தில் கூட்டியபோது அம்மாநாட்டில் தலைமை உரையை அம்மா ஆற்றினார். 1953 18.9.53இல் திரு.வி.க. மறைவுக்கு வருத்தம் தெரிவிக்க அய்யாவுடன் சென்னை வருகைபுரிந்தார்.

1954 பர்மாவிலுள்ள ரங்கூன் உலக பவுத்த மாநாட்டுக்கு 1954 நவம்பர் 23ஆம் நாள் சென்னையைவிட்டு எஸ்.எஸ்.ஜயகோ பால் கப்பலில் பெரியாருடன், அன்னை யார் புறப்பாடு. 1954 டிசம்பரில் மலேசியா சுற்றுப்பயணம். 28.12.1954 முதல் 8.4.1955 வரை சிங்கப்பூர் பயணம். 17.1.1955 சென்னை திரும்புதல். ஏறக்குறைய 50 நாள்கள் பயணம்.

1957 இல் பெரியார் அவர்கள் மீதும் திருமதி ஈ.வெ.ரா.மணியம்மை அவர்கள் மீதும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரல் தொடுத்த நீதிமன்ற வழக்கு மணியம்மையார் நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்குச் சட்டப்படி ஆளாகி இத்தகைய நீதிமன்ற அவதிப்பை அவர் மீண்டும் செய்தால் மிகக் கண்டிப்பான நடவடிக்கைக்கு ஆளாவார் என்று எச்சரிக்கப்பட்டார்.

18.4.1957இல் திருச்சியில் கூடிய மய்ய செயற்குழுவில் சாதி ஒழிப்புக் கிளர்ச்சி யின் ஒரு கூறாக 5.5.1957 முதல் பார்ப்பனர் ஓட்டல்களில் முன்பு பலகைகளில் உள்ள பிராமணாள் என்ற எழுத்துக்களை அழிப் பதாக மேற்கொள்ளப்பட்ட முடிவின்படி, 8.5.1957இல் சென்னை முரளீஸ்கபே முன்பு மறியலில் ஈடுபட்டு மணியம்மையார் கைது ஆனார். மூன்று வாரம் கடுங்காவல் தண்டனை பெற்றார்.

1958 மார்ச் மாதம் 8ஆம் நாள், சாதி ஒழிப்புப் போரில் ஈடுபட்டுத் திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட தோழர் பட்டுக்கோட்டை ராமசாமியும், 10ஆம் நாள் மணல்மேடு வெள்ளைச்சாமியும் சிறைக் கொடுமையால் மாண்டனர். இவர்களின் சடலத்தைத் தரச் சிறை அதிகாரிகள் மறுத்து விட்டனர். அந்த நேரத்தில் மணியம்மையார் அவர்கள் சென்னை சென்று முதலமைச்சர் காமராசர் அவர்களைச் சந்தித்து மறைந்த தோழர்களின் உடல்களைத் திரும்பப் பெற்றார். மணியம்மையார் தலைமையில் இறுதி ஊர்வலம் சிறப்பாக நடந்தது.

19.1.1958 விடுதலையில் வெளியான இளந்தமிழா! புறப்படு போருக்கு என்ற கட்டுரை சம்பந்தமாக அதன் ஆசிரியரும், வெளியிடுபவருமான ஈ.வெ.ரா. மணியம்மையார் மீது வழக்குத் தொடரப்பட்டது. மணியம்மையாருக்கும், கட்டுரையை எழுதிய தோழருக்கும் ஒரு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மணியம்மையாரைச் சிறைக்கு அனுப்பியும் நிறை வடையாத அரசு, மணியம்மையாருக்குச் சொந்தமான 4000 ரூபாய் மதிப்புடைய எம்.எல்.சி 5880 எனும் எண்ணுள்ள காரை 30.8.1958ஆம்  நாள் பரிமுதல் செய்து ஒரு ஜீப்பில் கட்டிஇழுத்துச் சென்றனர்.

அய்யா அவர்கள் 32 மாதச் சிறைத்தண்டனை பெற்று உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்த போதும் கழகத்தின் கொள்கைப் பிரச்சாரத்தை அம்மா தடையின்றி நடத்தினார்.

10.05.1958, 11.05.1958 ஆகிய இரு நாட்களில் சாதி ஒழிப்பு, திராவிடர் கழக மாநாடுகள் புரட்சிக்கவிஞர் தலைமயிலும், சாதி ஒழிப்பு மாநாடு டாக்டர் மா.இராசமாணிக்கனார் தொடங்கி வைக்கவும் அம்மா அன்று கலந்து கொள்ள நடைபெற்றன.

தஞ்சை பூதலூரில் 16.5.1958இல் சாதி ஒழிப்பு மாநாடு நடைபெற்றபோது அன்னை மணியம்மையார் கலந்து கொண்டார்.

கடலூர் சி.எஸ்.கிருஷ்ணசாமி அவர்கள் மகன் கி.வீரமணி, கோட்டையூர் சிதம்பரம் ரங்கம்மாள் சிதம்பரம் அவர்கள் மகள் மோகனா ஆகியோர் வாழ்க்கைத் துணைநல விழா 7.12.1958 அன்று திருச்சியில் நடைபெறும் எனப் பெரியாரும் மணியம்மையாரும் கையெழுத்திட்டு அழைப்பிதழ் அனுப்பினர். மணமக்களும் பெரியாரும் மணியம்மையாரும் கடலூர் மணமகன் இல்லத்திற்கும், திருவண்ணாமலையில் மணமகள் இல்லத்திற்கும் சென்றனர். 1959 அய்யா சிறையிலிருந்து வந்த பின் வடநாட்டில் மேற்கொண்ட 6400 கி.மீ சுற்றுப் பயணத்தில் மணியம்மையாரும் பெரியாருடன் சென்றார். கான்பூர், லட்சுமணபுரி, டெல்லி ஆகிய இடங் களுக்குச் சென்று (1.2.1959 - 1.3.1959)  சென்னை திரும்பினர்.

1959இல் 7.5.1959இல் நடைபெற்ற சாதி ஒழிப்பு மாநாட்டில் அம்மா பேசினார்.
தந்தை பெரியார் அவர்களும், கழக முன்னணியினரும் சிறையில் இருந்த முக்கியக் காலகட்டத்தில் கழகம் சோர்வ டையாமல், கழகப் பணி, நிர்வாகப் பணிகளைத் திறமையாகக் கவனித்துக் கொண்டதற்காக, அன்னை மணியம்மையா ருக்குத் திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழுக் கூட்டத்தில் (19.7.1959) பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1962 குத்தூசி குருசாமி, தி.பொ.வேதாசலம் ஆகியோர் மணியம்மையார் மீது வேண்டுமென்றே குற்றம் சுமத்தி, பெரியார் மாளிகையில் நடப்பது மணியம்மையார் கழகம். அதில் பெரியாரும் வயதான காலத்தில் சேர்ந்து அல்லல் படுகிறார் என அவதூறு எழுதியபோது மணியம்மையார் மீது சுமத்தப்பட்ட அபவாதங்களுக்கும், பழிகளுக்கும் அய்யா தக்க பதில் கூறி 29.1.1963இல் அறிக்கை வெளியிட்டார்.

1964  3.10.1964இல் ஈரோட்டில் நடைபெற்ற பெரியார் பிறந்தநாள் விழாவில் ஏதோ மணியம்மைக்கு ஒன்றிரண்டு (சொத்துக்கள்) இருக்கின்றன என்று பேசியபின், அன்னை எனக்கு அப்படி சொத்து வேண்டிய அவசியமும் இல்லை. எனக்கு என்னையே காப்பாற்றிக் கொள்ளக்கூடிய அறிவு எனது தாய் தந்தையர்களால் அளிக்கப்பட்டவளாகத் தான் இருக்கிறேன். அப்படி அய்யா அவர்கள் எனக்கு என்று வைத்து இருப்பாரேயானால் அதையும் இப்படிப்பட்ட கல்லூரி வளாகங்களுக்குத்தான் செலவு செய்வேன் என்று உறுதிமொழி கூறினார்.

1967 தேர்தலில் திமு.கழகம் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியபோது அதனை அய்யாவின் காலடியில் ஒப்படைக்க வந்தபோது வந்த அண்ணா, கலைஞர், நாவலர் ஆகியோர் திருச்சி வந்தபோது, இயக்கப் பிளவுக்குப் பின் தூற்றியவர்கள் ஆயிற்றே எனத் துளியும் காழ்ப்புணர்ச்சி இன்றித் தாயைப்போல் அன்பு காட்டி வரவேற்றார்.

1967இல் பம்பாயில் சிவசேனைத் திருக்கூட்டம் அட்ட காசம் புரிந்து தமிழர்களைத் தாக்கியபோது அக்டோபரில் நாடெங்கும் கண்டனக் கூட்டம் நடத்துவோம். ஊர்வலம் எடுப்போம். 9 பேர் கொண்ட சிவசேனை எதிர்ப்புக்குழு அமைக்கிறேன் என்று பெரியார் அறிவித்தார். அக்குழுவில் இடம்பெற்ற பெயர்களில் முதல் பெயர் அன்னை மணியம்மையாரின் பெயர் ஆகும்.
24.4.1967 அதிகாலை திண்டிவனம் அருகே நடந்த கார் விபத்தில் கலைஞரும், அவரோடு சென்ற மதுரை முத்து, கவியரசு பொன்னம்பலம், கவிஞர் கருணானந்தம் ஆகி யோர் சிக்கினர். சென்னைப் பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டிருந்த கலைஞரைக் காண திருச்சியில் இருந்து அய்யாவும், அன்னையாரும் 25.9.1967 காலை உடனே விரைந்தனர்.
16.11.1967 ஜாமீனில் சிறையிலிருந்து வெளிவந்த எம்.ஆர்.ராதாவை அய்யாவும் அம்மாவும் சந்தித்தனர்.

31.12.1967 திருச்சியில் காலை 10 மணிக்கு அரசு மருத்துவமனையில் பெரியார் ஈ.வெ.ரா. மணியம்மை குழந்தைகள் பகுதியைக் கலைஞர் தலைமையில் அண்ணா திறந்து வைத்தார். இதற்காகப் பெரியார் ரூபாய் ஒரு லட்சம் வழங்கினார். பெரியார், மணியம்மை இவ்விழாவில் பங்கேற்றனர்.
1969    11.11.1968ஆம் நாள் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய அண்ணாவைப் பெரியார், மணியம்மை, கி.வீரமணி ஆகியோர் சென்று நலம் விசாரித்தனர்.

1970 15.7.1970இல் ஈ.வெ.கி சம்பத்தின் மூத்த மகள் ராகம்மாள், டாக்டர் வெங்கடேஷ் மணவிழாவில் பங்கேற்று, அன்று மாலையில் நடைபெற்ற வரவேற்பு விழாவுக்கு வந்தவர்களைப் பெரியாரும், அன்னையாரும் முதன்மை வரவேற்பாளர்களாக இருந்து வரவேற்றனர்.

1970இல் தம் 92ஆவது வயதில் மும்பைக்கு அண்ணா மறைந்த பின் மும்பை வாழ் தமிழ்மக்கள், ஓர் ஆண்டு கழித்த பின் கொண்டாடியபோது வேனில் அய்யா புறப்பட்டபோது அம்மாவும் அவருடன் பயணித்தார்.
1971 திராவிடர் கழகத்தின் சார்பில் The Modern Rationalist எனும் ஆங்கில மாத ஏடு பதிவு செய்யப்ப பெற்றபோது அதன் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் அச்சிடுவோராக ஈ.வெ.ரா.மணியம்மையார் அவர்களும் விளங்கினர்.
5.8.1971இல் கே.ஆர்.ராமசாமி, நடிப்பிசைப் புலவர் மறைவிற்குத் துக்கம் விசாரிக்க அய்யாவும் அம்மாவும் சென்றனர்.

1971 11.10.1971 காலை பெரியார், மணியம்மையார், ரங்கம்மாள் சிதம்பரம்,என்.எஸ்.சம்பந்தம் ஆகியோர் காலை 9 மணிக்குத் திருச்சி தென்னூரில் வேதாசலம் மறைந்த போது அவர் இல்லம் சென்றனர்.


1972 21.12.1972 மருத்துவமனையில் இராஜாஜி சேர்க்கப்பட்ட சேதி அறிந்து 24.12.1972இல் திண்டுக்கல்லில் இருந்து உடனே புறப்பட்டு  அய்யாவும், அம்மாவும் மருத்துவமனை சென்று அவரைக் கண்டனர். 1973  டிசம்பர் 24ஆம் நாள் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் மறைவுற்றபோது ஈடுசெய்யவியலா இழப்புத் துயருக்கு ஆளானார். பின் கழகத்தவரின் வேண்டு கோளுக்கு ஏற்று அன்னை மணியம்மையார் அவர்கள் கழகத் தலைவர் பொறுப்பேற்றுக் கழகத்தை வழிநடத்திச் சென்றார்.

1974    திருச்சி பெரியார் மாளிகையில் 6.1.1974இல் கூடிய திராவிடர் கழக நிருவாகக் குழு, கழகத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தது.
3.4.1974 அன்று அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வகை செய்ய மத்திய அரசை வற்புறுத்தி சென்னை தலைமை அஞ்சலகம் முன் மறியல் கிளர்ச்சி செய்தார்.

இப்போராட்டத்தின் இரண்டாம் கட்டமாக 26.5.1974 அன்று சென்னை வந்த டெல்லி அமைச்சர் ஒய்.பி. சவானுக்கு கறுப்புக் கொடி காட்டினார்.
அன்னை மணியம்மையார் அவர்களின் எதிர்காலப் பாதுகாப்பைக் கருதி, அன்னை மணியம்மையார் அவர் களுக்கே கூடத் தெரியாத நிலையில் தந்தை பெரியார் அவர்கள் ஏற்பாடு செய்து வைத்திருந்த சொத்துகளைத் தமக்காகப் பயன்படுத்திக் கொள்ளாமல், மக்களின் பொதுநலனுக்கே அவை பயன்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் உடல் நலமின்றித் தாம் சென்னை பொது மருத்துவமனையில் இருந்தபோது, அன்னை மணியம் மையார் அவர்கள் 23.9.1974 அன்று பெரியார் மணியம்மை கல்வி அறக்கட்டளைக் கழகம் தொடங்க ஏற்பாடு செய்தார்கள். அந்த அமைப்பு 24.9.1974 அன்று சென்னை யில் பதிவு செய்யப்பட்டது. அந்த அறக்கட்டளைக்கு அன்னை மணியம்மையார் தலைவராகவும், கி. வீரமணி அவர்கள் செயலாளராகவும் இருந்தார்கள். இந்த அறக் கட்டளைமூலம் தற்போது ஏராளமான கல்வி நிறுவனங்கள் நடந்து வருகின்றன.

டிசம்பர் 25ஆம் நாள் சென்னை - பெரியார் திடலில் நடந்த இராவண லீலா நிகழ்ச்சி சம்பந்தமாகக் கைது செய்யப் பட்டார். இது சம்பந்தமாக தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது.

பெரியார் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மய்யத்தை நிறுவினார். பெரியார் - மணியம்மை பெண்கள் உயர்நிலைப் பள்ளியைத் திருச்சியில் ஏற்படுத்தினார்.
1975    சென்னை - அண்ணாசாலையில் பெரியார் விரும்பியவாறு 21.9.1975 அன்று கலைஞர் சிலையை அமைத்துத் திறப்பதற்கு ஏற்பாடு செய்தார்.
1976    செப்டம்பர் 9ஆம் நாள் இராவண லீலா வழக்கில் மணியம்மையார், கழக தோழர்கள் ஆகியோருக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. வழக்கை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது.

மிசா காலத்தில் 16.9.1976 அன்று தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவிற்கு முதல் நாள் திடீரென்று கைது செய்யப்பட்டு இரண்டு நாள் கழித்து விடுதலை செய்யப்பட்டார்.

1977    ஏப்ரல் 25ஆம் நாள் இராவண லீலா வழக்கில் மணியம்மையாரும், மற்றத் தோழர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

அக்டோபர் மாதம் 30ஆம் நாள் தமிழ்நாடு வந்த, முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு, தமது உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் கறுப்புக் கொடி  காட்டிய தற்காகக் கைது செய்யப்பட்டார்.

பெரியார் திடல் முகப்பில் பெரியார் பில்டிங்ஸ் என்ற ஒரு பெரிய கட்டடத்தை உருவாக்கினார்.

1978    மார்ச் மாதம் 16ஆம் நாள் மாரடைப்பு நோயால் சென்னை - பொது மருத்துவமனையில் காலமானார்

      -------------------------------------- "விடுதலை” 10-03-2014

19 comments:

தமிழ் ஓவியா said...


எங்களின் பயண இன்ப சூளுரை நாள்!


இன்று - மார்ச் 10ஆம் நாள் - தியாகத்தின் இலக்கணமாம்
நம் அன்னையார் தம் பிறந்த 94ஆம் ஆண்டு துவக்கம்.

அன்னையார் பிறந்த நாள், தூய தொண்டறத்தின் கதவுகள் திறந்த நாள் - சிறந்த நாள் - தொண்டுள்ளம் கொண்டோருக்கு!

இள வயதிலேயே அவர், தந்தை பெரியார் எண்ணிய புரட்சிப் பெண்ணாகும் தகுதியைப் பெற்றார்!

கொள்கை வழிப்பட்ட வாழ்வே தம், வாழ்வு என்பதை வேலூரில் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோதே முடிவெடுத்து - அய்யாவின் லட்சிய வழி நிற்கத்
திட்டமிட்டார். இது அவரை அதற்கு மேற்பட்ட ஆசிரியர் படிப்பில்கூட நாட்டத்தை ஏற்படுத்தவில்லை.

அய்யாவிடம் சரண் அடைந்து புதியதோர் விடை கண்டார் தமது கொள்கை ஏக்கத்திற்கு!

அதுதான் அய்யாவுக்குத் தொண்டு செய்து அதன் மூலம் கொள்கைப் பயணத்தின் வெற்றிக்கு உழைப்பது என்ற மாறாத உறுதி!

அரண்மனையை அவர் விரும்பவில்லை; கொள்கைக்கு அரணாக இருந்து அதனை (இன) எதிரிகளிடமிருந்து காப்பதே எம் ஒரே பணி என ஒரே நிலையில் பிடிவாதமாய் நின்றார்.

தூற்றுவோரும் பழி பரப்புவோரும் எத்தனை விபரீத விஷமப் பிரச்சாரத்தை வீசினாலும் அவைகளைத் தூசாகத் தட்டி தூய தொண்டறத்தின் உச்சிக்கே சென்றார். ஆம். நம் அறிவு ஆசானை 95 ஆண்டு காலம் பாதுகாத்து
வாழ வைத்தார்; அதன்மூலம் இந்த மாபெரும் இயக்கத்தினைப் பாதுகாத்தார்.

அய்யாவின் பின்னும் அவ்வியக்கத்தினையும் காத்து காலத்தால் அழியாது, கடுஞ் சோதனைகளையெல்லாம்
வென்றெடுத்து, நம் அனைவர் கையிலும் அதனை பலமாக்கித் தந்து விட்டு தன் பணி முடித்த பிறகே விடை பெற்றார்!

கடந்த 35 ஆண்டுகாலமாக நாம் (அன்னையார் இல்லாத காலத்தில்)
கடந்து வந்த பாதை ஒரே பிரமிப்பு!

தொடரும் தொடரும் - நம்
தொண்டின் பயணம் தொடரும்!

அய்யா அன்னையாரின் பாதுகாப்புக்
கென தந்த சொத்தையும் தம் சொந்த சொத்தையும்
கூட மக்களுக்கே தந்து விட்டு - பொது அறக்கட்டளையாக்கி மக்களுக்கே தந்து காவலர்களாகக் கடமை வீரர்களான கழகத்து வீரர், வீராங்கனைகளை உருவாக்கி, விட்டுத் தான் தன் கண்களை மூடினார்!

அவரது மூடிய கண்கள், பெரியார் -
மணியம்மை கல்விக் கூடங்களாக, அறச் செல்வங்களாக அவருக்குப்பின்
திறந்தன - திறந்தன- தமிழ் மக்களுக்கு,
அந்த ஒளி மிகுந்த பார்வையில், இன்று விழியின் வெளிச்சத்தைப் பெற்று தம் வாழ்வை வசந்தமாக்கிக் கொள்கின்றனர் - பல்லாயிரம் மாணவ இளைஞர்கள்
ஆதரவற்றோர் என்ற துயரநிலை
மாறி, அன்பு உள்ளங்களால் அரவணைக்கப்
பட்டோர் என்ற மகிழ்ச்சி வெள்ளத்தில் - நாகம்மை குழந்தைகள் இல்லத்தில்
கல்வி வாய்ப்புக்களை பெறும் எம் இளந்
தலைமுறையின் நன்றி மலர்ச்சியால்
அந்த ஒளி மேலும் பன்மடங்காகி
அன்னையார் மறையவில்லை
நம் நெஞ்சங்களில் நிறைந்துள்ளார் என்ற
உணர்வின் பெருக்கத்தை கொட்டும்
மழையாய், குளிர்விக்கும் தென்றலாய்,
குதூகலிக்கும் இன்ப ஊற்றாய்
மகிழ வைக்கிறது!

எம் தலைவரால் பக்குவப்பட்டு,
தலைவர் கண்ட இயக்கத்தையும் காத்த
எம் அன்னையே! உங்கள் பிறந்தநாள்
எங்களின் பயண இன்ப சூளுரை நாள்!
வாழ்க பெரியார்!
வாழ்க அன்னையார்!!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
10.3.2014

Read more: http://viduthalai.in/e-paper/76720.html#ixzz2vc7iW9cN

தமிழ் ஓவியா said...


துணிவின் சின்னம்! அன்னை மணியம்மையார்


துணிவின் சின்னம் நீவிர் !
காமராசரையே கலங்க வைத்தீர்
கழகத்தினர் உடலுக்காக ! அரசையே அதிர வைத்தீர்

இராவண லீலை நடத்தி! மிசா வன் கொடுமை உமது இதயத்தைத் தாக்கியது

துணிவோடு செயல் பட்டீர்! கழகத்தைக் காத்திட்டீர் !

வாழிய உம் புகழ் ! வாழிய வாழியவே!

- சோம. இளங்கோவன் பெரியார் பன்னாட்டமைப்பு.

Read more: http://viduthalai.in/e-paper/76726.html#ixzz2vc7uWHH3

தமிழ் ஓவியா said...


இந்நாள்.. இந்நாள்..


சென்னை மாநிலத் தின் பிரதமராக இருந்த நீதிக் கட்சியின் முக்கிய தலைவர் பொப்பிலி ராஜா மறைந்த நாள் (1978).

Read more: http://viduthalai.in/e-paper/76717.html#ixzz2vc84h3cK

தமிழ் ஓவியா said...


அன்னை மணியம்மையாரின் 94ஆம் ஆண்டு பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை


சென்னை, மார்ச்.10- அன்னை மணியம்மையார் அவர்களின் 94ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (10.3.2014) அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், நினை விடத்தில் மலர் வளையம் வைத்தும் மரியாதை செய் தார் தமிழர் தலைவர்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர் களை 95 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ வைத்த அன்னை மணியம்மையா ரின் 94ஆம் ஆண்டு பிறந்த நாள் கழகத்தின் சார்பில் தமிழகமெங்கும் கொண் டாடப்படுகிறது.

சென்னை வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ் சாலையில் உள்ள அன்னை மணியம்மையாரின் சிலைக்கு தமிழர் தலைவர் தலைமையில் கழகத் தோழர் - தோழியர்கள் புடை சூழ சென்று மாலை அணிவித்தனர்.

இதையடுத்து பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் கழகத் தோழியர் - தோழர்கள் வரிசையாக சென்று அன்னை மணியம் மையார் நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் மலர் வளையம் வைத்து மரி யாதை செய்தார். அதைத் தொடர்ந்து மகளிரணி சார் பிலும், பெரியார் மணி யம்மை மருத்துவமனை சார்பிலும், திராவிடன் நல நிதி சார்பிலும், பெரியார் திடல் பணியாளர்கள் திரா விடர் தொழிலாளர் அணி, பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பிலும் மணி யம்மையார் நினைவிடத் தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து தந்தை பெரியார் நினைவி டத்தில் தமிழர் தலைவர் தலைமையில் அனைவரும் ஒன்றுகூடி மலர் வளையம் வைத்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

95 ஆண்டுகளுக்கு மேலாக தந்தை பெரியார் அவர்களை வாழ வைத்த அன்னை மணியம்மையா ரின் 94ஆம் ஆண்டு பிறந்த நாள் இப்பெரு விழாவில், அய்யா தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை அவரின் மறைவிற்கு பிறகு 5 ஆண்டுகள் தலைவராக இருந்து கழகத்தைக் கட்டிக் காத்த அன்னை மணியம் மையாரின் இப்பிறந்த நாள் பெரு விழாவில் அய்யா அம்மா விட்டுச் சென்ற பணிகளை கட்டுப்பாட்டு டன் செய்து முடிப்போம் என உறுதி கொள்கிறோம் என திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கழகத் தோழர் தோழியர் புடை சூழ உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் முன் னாள் மத்திய அமைச்சர் க. வேங்கடபதி, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு, பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை. சந்திரசேக ரன், வீ. அன்புராஜ், பிரச்சார செய லாளர் வழக்கறிஞர் அ. அருள்மொழி, கழகத் தலைமைச் செயற்குழ உறுப்பினர்கள் க. பார்வதி, திருமகள் மற்றும் மோகனா வீரமணி முன்னாள் மாவட்ட நீதிபதி பரஞ்ஜோதி, திரா விட மகளிர் பாசறை செய லாளர் டெய்சி மணி யம்மை, பொதுக்குழு உறுப்பினர் சைதை எம்.பி. பாலு, சென்னை மண்டல செயலாளர் பன்னீர் செல் வம், பேராசிரியர் மங்கள முருகேசன், பேராசிரியர் ராஜதுரை, தமயந்தி ராஜ துரை, கழக வழக்கறிஞர் அணி அமைப் பாளர் வீரமர்த்தினி, தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் பார்த்தசாரதி துணைச் செயலாளர் கோ.வீ. ராக வன், பெரியார் திடல் மேலாளர் வி.சீதாராமன், விடுதலை அச்சக பிரிவு மேலாளர் சரவணன் பெரி யார் மணியம்மை மருத் துவமனை ஒருங்கிணைப் பாளர் டாக்டர் மீனாம்பாள், மேலாளர் குணசேகரன், திராவிடன் நலநிதி தலை வர் டி.கே. நடராஜன், பொது மேலாளர் அருள் செல்வன் மற்றும் பெரியார் பணி மனை தோழர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/76718.html#ixzz2vc8H0clF

தமிழ் ஓவியா said...


சூழ்ச்சியே இது


உண்மையான தகுதியும், திறமையும் கெட்டு ஒருவனை ஒருவன் கீழ்ப்படுத்துவதற்குச் சாதனம் எதுவோ அதுதான் இன்று தகுதி - திறமை ஆக்கப் பட்டு வருகிறது. கீழ்ச்சாதி ஆக்கப்பட்ட மக்களைக் கீழ் நிலையிலேயே நிரந்தரமாக இருத்தி வைக்கும் சூழ்ச்சியே இது.

(விடுதலை, 28.10.1967)

Read more: http://viduthalai.in/page-2/76728.html#ixzz2vc8gkbMc

தமிழ் ஓவியா said...


பார்வை இழப்பை ஏற்படுத்தும் கண் நீர் அழுத்த நோய்


க்ளாக்கோமா என்பது கண்ணின் பார்வை நரம்பைப் பாதித்து, பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு ஆபத்து நிறைந்த கண் பிரச்சினைகளின் தொகுப்பு. உலக அளவில், கண் பார்வை இழப்புக்கான காரணிகளில், க்ளாக்கோமா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை எல்லோரையும் பாதிக்கிற இந்தப் பிரச்சினையைப் பற்றி, அறிகுறிகள், தீர்வுகள் பற்றியெல்லாம் விளக்கமாக கூறுகிறார் விழித்திரை சிறப்பு சிகிச்சை நிபுணர் வசுமதி வேதாந்தம்.

நம் கண்ணின் முன்பகுதியில் உள்ள அறையில் சுரக்கும் நீரின் அழுத்தம், சாதாரண நிலையிலிருந்து படிப்படியாக அதிகரிக்கும்போது ஏற்படும் பிரச்னை இது. கண்ணில் உள் நீர் அழுத்தமானது, பார்வை நரம்பினால் தாங்கக் கூடிய அளவை தாண்டும்போது, க்ளாக்கோமா' ஏற்படுகிறது.

ரத்த அழுத்தம் போலவே கண்களுக்கும் ஒரு வித அழுத்தம் உண்டு. அது அதிகமாவதால் உண்டாகிற பிரச்சினை இது. ஆண்களைவிட, பெண்களை அதிகம் பாதிக்கிற பிரச்சினை. இந்தியப் பெண்கள் அதிகம் பாதிக் கப்படுகிறார்கள். 40 வயதில் பரவலாகக் காணப்படுகிறது.

இந்தப் பிரச்சினையில் இரண்டு வகைகள் உண்டு. கண் ணின் திரவம் வெளியே போகிற வழியில் அடைப்பிருந் தால் விளக்கொளியைப் பார்க்கிற போது, அதைச் சுற்றி கலர் கலராக வானவில் மாதிரித் தெரியும்.

தலைவலி, கண்களில் வலி, சிவந்த கண்கள், குமட்டல், பக்கவாட்டுப் பார்வை பாதிப்பு, படிப்படியான பார்வை இழப்பு போன்றவை இதன் அறிகுறிகள். மாலை நேரத்தில் இவை தீவிரமாகலாம். கண்ணின் திரவம் வெளியே போகிற வழியில் அடைப்பில்லாவிட்டால், அதற்கான அறிகுறிகள் பெரிதாக வெளியே தெரியாமலிருக்கலாம்.

மருத்துவரால் மட்டும்தான் கண்டுபிடிக்க முடியும். எனவே தான் கண் அழுத்தம் அதிகமாகி கண்களில் பிரச் சினை வரும் போது, எப்போதுமே கண் மருத்து வரைப் பார்க்க வேண்டும். கண்ணாடிக்கடையில் போய் பரி சோதித்து, நீங்களாக கண்ணாடி வாங்கிப் போடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது. மருத்துவர்கள் பரி சோதிக்கும் போதும், கண்களின் பிரஷர் நார்மல் எனக் காட்டலாம். என்கிறார் விழித்திரை சிறப்பு சிகிச்சை நிபுணர் வசுமதி வேதாந்தம்.

Read more: http://viduthalai.in/page-7/76727.html#ixzz2vc9VhNG3

தமிழ் ஓவியா said...

கோடையில் குளிர்ச்சி தரும் உணவுகளை சாப்பிடுங்க!

கோடை வெயிலின் எதிரொலியாக, குளிர்பான கடைகளில் விற்பனை சூடுபிடித்துள்ளது. ஆரம்பமே அசதியை தருவதாகத் தான் இருக்கிறது. பச்சிளம் குழந் தைகள் முதல் முதியோர்கள் வரை, அனைத்து வயதின ரையும் வாட்டி வதைக்கும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க சில வழிகள்.

கோடை வெப்பத்தின் தாக்கத்தால், நம் உடம்பில் உள்ள நீர்ச்சத்தின் அளவு, அளவிற்கு அதிக மாக வெளியேறும் வியர்வை, ஆவியாதல் ஆகியவற்றால் குறையும். இதனால், உடல் சோர்வு, மயக்கம் ஏற்படும். உடல் உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயமும் உண்டு.

இதனை தடுக்க, ஆறு மாதத்திற்கு உட்பட்ட தங்கள் பச்சிளம் குழந்தைகளுக்கு, தாய்ப்பால் தரும் இளம் தாய்மார்கள் உள்ளிட்டோர், தினமும், 3 லிட்டர் முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். ஆறு மாதத் திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உணவு ஊட்டும்போது, உணவு மட்டுமின்றி, அவ்வப்போது தண்ணீர் கொடுக்க வேண்டும்.

டைபாய்டு, மஞ்சள் காமாலை, காலரா, வாந்தி பேதி ஆகிய நோய்கள் வராமல் தடுக்க, கோடை காலம் என்றாலும், தண்ணீரை நன்றாக காய்ச்சி, ஆற வைத்து பருக வேண்டும். குளிர்பான கடைகளில், பயன்படுத்தப் படும் தண்ணீரின் தூய்மையை பொறுத்தே, வெளி யிடங்களில், ஜூஸ், குளிர்பானங்களை குடிக்க வேண்டும். குளிர்பானங்களை முடிந்தவரை, வீட்டிலேயே தயார் செய்ய வேண்டும்.

உடம்பின் நீர்ச் சத்தை பராமரிக்க பயன்படும், தர்பூசணி பழம், வெள்ளரிக்காய் ஆகியவற்றை, கடைகளில் வாங்கும்போது, அவற்றில், ஈ மொய்க்காமல், சுகாதாரமாக விற்கப்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

நீர்சத்து நிறைந்த, இளநீர், நுங்கு ஆகியவற்றை தொடர்ந்து உட்கொள்வதால், கொப்புளங்கள், வேர்க்குரு போன்ற சரும நோய்கள், சின்னம்மை ஆகியவற்றுக்கு இலக் காகாமல் இருக்கலாம். நாகரிகம் என்ற பெயரில், ஜீன்ஸ், டீ-ஷர்ட் போன்ற இறுக்கமான ஆடைகளை அணியாமல், வியர்வை உறிஞ்சும் தன்மைக் கொண்ட, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-7/76727.html#ixzz2vc9ds8li

தமிழ் ஓவியா said...


வெயிலுக்கு இதமான மண்பானைத் தண்ணீர்


வெயிலோட தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கு. அடுத்த மாதம் இன்னும் அதிக மாக வெயில் கொளுத்தும். இந்த வெயிலில் இருந்து தப்பிக்க குளிர்பானம், ஜூஸ், பழங்கள், நுங்கு, பதனீர், தர்பூசணி, வெள்ளரின்னு குளிர்ச்சியானதை சாப்பிட்டு கிட்டுதான் இருக்கோம்.

என்னதான் சாப்பிட்டாலும், குடிச்சாலும் இந்த வெயிலுக்கு தண்ணீர்தான் அதிகமாக குடிக்க வேண்டி யிருக்கு. இந்த நேரத்தில தண்ணீர் குடிக்கிறதும் உடலுக்கு ரொம்ப நல்லது. வெயில் காலத்துல தண்ணீர ஜில்லுன்னு குடிக் கணும்தான் ஆசைப்படுவோம். அதனால பிரிட்ஜில் வைத்திருக்கும் தண்ணீர், குளிர்ந்த வாட்டர் பாக்கெட் போன்றவற்றை குடிக்கிறோம்.

இது அவ்வளவு நல்லது கிடையாது. பிரிட்ஜில் வைத்து அதிக குளிர்ச்சியான தண்ணீரை குடிப்பதால் சளி பிடிக்கவும், தலைவலி வரவும் வாய்ப்பிருக்கு.

இதை தவிர்க்க இயற்கையாக குளிர்ந்து இருக்கும் மண்பானை தண்ணீரை குடிக்கலாம். மண்பானை தண்ணீர் மிதமான குளிர்ச்சியுடனும், சுவையாகவும் இருக்கும். உடலுக்கும் நன்மை தரக்கூடியது. பல இடங்களில் குழாய் பொருத்திய மண்பானைகள் விற்கப்படுகின்றன. இந்த மண்பானைகளை வாங்கி நாமும் பயன்பெறலாமே.

Read more: http://viduthalai.in/page-7/76730.html#ixzz2vc9nZ9Gx

தமிழ் ஓவியா said...

கண்பார்வையை மேம்படுத்தும் பொன்னாங்கண்ணி

பொன்னாங்கண்ணி ஈரமான இடங்களில் வளரும் தாவரம் ஆகும். இக்கீரைக்கு கொடுப்பை, சீதை என்னும் வேறு பெயர்களும் உண்டு. இது உலகில் பல்வேறு நாடுகளில் உணவுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் இளம் தளிர் பாகங்கள் உணவுக்கு பயன்படும் உணவு மற்றும் மருத்துவதேவைகளுக்காக பயிரிடவும் படுகிறது.

இக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் முதுமையிலும் கண்ணாடி அணிய வேண்டிய தேவை இருக்காது. கண் எரிச்சல், கண் மங்கல், கண் கட்டி, கண்ணில் கட்டி ஆகியவற்றுக்கு கண்ணாடி அணிய வேண்டிய தேவை இருக்காது. பின்பு இந்நோய்கள் குணமாகும்.

Read more: http://viduthalai.in/page-7/76730.html#ixzz2vc9vj2Pc

தமிழ் ஓவியா said...

கோடை வெயிலால் வரும் அம்மை நோய்கள்

வெயில் காலம் ஆரம்பித்து வெயிலின் தாக்கத்தால் அம்மை நோய்கள் வருவது கோடை காலத்தில் நிகழும் ஒன்று. வருமுன் காப்பது சிறந்தது என்பதை நினைவில் கொண்டு அதை தடுக்க முயற்சிகள் செய்ய வேண்டும்.

வியர்க்குரு, பெரியம்மை, விளையாட்டம்மை, மணல்வாரி அம்மை, பூட்டு தாளம்மை அல்லது பொன்னுக்கு வீங்கி இவை அனைத்துமே உடலின் எதிர்ப்பு சக்தி குறையும் போது வைரஸ் கிருமிகளால் ஏற்படும் அம்மை நோய் களாகும். சருமத்தில் உடலில் அனைத்து பகுதிகளிலும் அம்மை தோன்றினால் உடலின் பல உறுப்புகள் பாதிக்கப் படுகின்றன.

இவை அனைத்துமே எளிதில் தொத்திக்கொள்ளும் தொற்று நோய்கள். முதலில் தோன்றும் ஜுரத்தின் போதே இருமல் வழியாகவும், நோய் பரவக்கூடும். எனவே தும்மல் வழியாகவும், அவர் படுக்கும் படுக்கை வழியாகவும் நோய் பரவக்கூடும். எனவே அம்மைநோய் கண்டவரை தனி அறையில் வைத்து மருத்துவம் மேற்கொள்ள வேண்டும்.

தடுக்க என்ன செய்யலாம்

சரியான நேரத்திற்கு உணவு உண்பது, சரியான நேரத்திற்கு தூங்க செல்வது, உடலுக்கும், வயதுக்கும் தகுந்த உழைப்பு, உழைப்புக்கு தகுந்த ஓய்வு, உடலை குளிர் விக்கும் உணவுகள், பழங்கள், காய்கள், கீரைகள், தயிர், மோர் சேர்ப்பது, களைப்பு தீர குளிப்பது, உடலின் எதிர்ப்பு சக்தி குறையாமல் பார்த்துக் கொள்வது போன்ற வற்றால் மேற்கண்ட அம்மை நோயை சரிவர கண் காணித்து குணப்படுத்தாத நிலையில் மூளை, நரம்பு மண்டலம் கூட பாதிக்கப்படக்கூடும்.

வீட்டு தலை வாசல், நில வாசலில் வேப்பிலையை நிறைய சொருகி வைக்க, தோரணம் கட்டி தொங்கவிட வைரஸ் கிருமிகள் தாக்கம் குறையும். காய்ச்சல் அதிகம் இருப்பின் நிலவேம்பு இலைச்சாறு அல்லது பப்பாளி இலைச்சாறு 300 மில்லி அளவு 3 வேளை தேனில் கலந்து தரலாம்.

மலக்கட்டு இருப்பின் திரி பலா பொடியை 5 முதல் 10 கிராம் இளவெந்நீரில் கலந்து காலை, மாலை தரலாம். குளியல் பொடியாகவும் திரிபலா பொடியை பயன் படுத்தலாம்.

Read more: http://viduthalai.in/page-7/76730.html#ixzz2vcA26hPe

தமிழ் ஓவியா said...

நாங்கள் சொன்னால் அது அக்மார்க் முத்திரை

திராவிடர் கழகம் ஒன்றும் தேர்தல் கூட்டணிக் கட்சியல்ல. யார் ஆட்சிக்கு வர வேண்டும், யார் வரக் கூடாது என்று அடையாளம் காட்டும் தகுதி கருஞ் சட்டைக்கு உண்டு. காவலுக்குக் கெட்டிக்காரன் கறுப்புச் சட்டைக்காரனாயிற்றே!

எதையும் மக்கள் நலக் கண்ணோட்டத்தோடு பகுத்தறிவின் அடிப்படையில் சிந்தித்து நல்ல முடிவை மக்களுக்குத் தெரிவிப்பவர்கள்; நாங்கள் சொன்னால் அது அக்மார்க் முத்திரை. தேர்தல் நாளன்று தவறாமல் வாக்குச் சாவடிக்குச் செல்லுங்கள். தி.மு.க.வின் சின்னமான உதயசூரியன் இருக்கும் பொத்தானை அழுத்துங்கள் - அதன் மூலம் நாட்டுக்கே வெளிச்சம் கிடைக்கும் - அதே போல அதன் தோழமைக் கட்சி களுக்குரிய சின்னங்களின் பொத்தானை அழுத்தி வெற்றிப் பெறச் செய்வீர்!

- மதுரவாயல் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி (10.3.2014)

Read more: http://viduthalai.in/e-paper/76768.html#ixzz2vhV0bJhw

தமிழ் ஓவியா said...


ஆர்.எஸ்.எஸ். நமோ நமோ பஜனை பாட முடியாது மோடிக்கு மோகன் பகவத் எச்சரிக்கை!


டில்லி, மார்ச்.11- ராஷ்டிரிய சுயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்.) அமைப் பின் தலைவர் மோகன் பக வத் அந்த அமைப்பின ருக்கு விடுத்துள்ள எச்சரிக் கையில் பாஜகவை ஆதரித் துப் பணியாற்றும் ஆர். எஸ்.எஸ். தன் எல்லையைக் கடந்து பணிபுரிவதாகவும், நமோ பஜனை பாடுவது அந்த அமைப்பின் பணி யல்ல என்றும் எச்சரித்துள் ளார். இதன்மூலம் பாஜகவின் கொள்கைகளை முடிவு செய்வது ஆர்.எஸ்.எஸ். என் பதும், மோடியை ஆதரித்து முழுவீச்சுடன் ஆர்.எஸ். எஸ். களமிறங்கி பணிபுரிந் துள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பெங்களூருவில் ஞாயி றன்று நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரதிநிதி சபாக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அப் போது பாஜக தலைவர் ராஜ்நாத்சிங், ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகரும், பாஜகவின் பொதுச்செயலாளருமாகிய ராம்லால் ஆகியோரும் அந் தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசும் போது குறிப்பிட்டதாவது:

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அரசியலில் இல்லை. நம் முடைய வேலையும் நமோ பஜனை பாடுவது இல்லை. நமக்கான இலட்சியத்துக் காகவே நாம் பணிபுரிய வேண்டும். இடைவெளி விட்டு பணியாற்றுவது தற் போதைய சூழ்நிலையில் மிகவும் முக்கியமானது.

இன்றைய நாளில் அடுத்த அரசை யார் அமைக் கிறார்கள் என்பதைவிட, மிகப்பெரிய கேள்வி யார் அடுத்த அரசை அமைத்து விடக்கூடாது என்பதில் தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசி உள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/76776.html#ixzz2vhVBHGzZ

தமிழ் ஓவியா said...


வளமா? வறட்சியா?


இந்தப் பொதுக்கூட்டம் நடைபெறும் இந்த மதுரவாயல் சம்பந்தப் பட்ட ஒரு வளர்ச்சித் திட்டம் - துறைமுகத்தி லிருந்து மதுரவாயல்வரையிலான பறக்கும் பாலமாகும். ரூ.1800 கோடி மதிப்பிலான திட்டம் இது. தி.மு.க.வின் முயற்சியால் அத்துறையின் அமைச்சராக தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு அவர்களும் இருந்தமை யால் கொண்டுவரப்பட்ட திட்டம் இது.

இந்தத் திட்டத்தையும் எதிர்த்து தமிழக முதலமைச்சர் உயர்நீதிமன்றம் சென்றார். அரசியல் நோக்கத்திற்காக இதுபோன்ற திட்டங்களை முடக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்ட நிலையில், அதோடவாவது தடை செய்யும் முயற்சியைக் கைவிட்டிருக்க வேண்டாமா? உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்தது இந்த அரசு.

சென்னை மதுரவாயல் பகுதி திராவிடர் கழக இளைஞரணி தலைவர் வேலுச்சாமி ரூ.50 ஆயிரத்தினை தமிழர் தலைவரிடம் வழங்கினார் (சென்னை, மதுரவாயல், 10.3.2014).

உச்சநீதிமன்றம் அ.இ.அ.தி.மு.க. அரசின் தலையில் ஓங்கிக் குட்டி வளர்ச்சித் திட்டத்தை அரசியல் நோக்கத்தோடு முடக்கக்கூடாது என்று கூறிவிட்டதே!

இதற்கு முன்பே பிரதமர், அரசு செயலாளர் ஒருவரை இத்திட்டம் குறித்துப் பேச தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்தார். இந்தத் திட் டத்தை நிறைவேற்றிட மாநில அரசின் ஒத்துழைப்பைக் கோரிய பிறகும், அதற்கு உடன்படத் தயாராக இல்லை.

தாம்பரம் இராவணன் நிறுவனத்தின் சார்பில் மண்டல தலைவர் தி.இரா.இரத்தினசாமி, மாவட்ட மாணவரணி தலைவர் சிவசாமி ஆகியோர் ரூ.50 ஆயிரத்தினை தமிழர் தலைவரிடம் வழங்கினர் (சென்னை, மதுரவாயல், 10.3.2014).

மத்திய அரசு மாநில அரசு திட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை என்று குற்றஞ் சொன்ன நிலைமை போய், மத்திய அரசின் திட்டத்திற்கு மாநில அரசு ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை என்ற அவலம் இந்த ஆட்சியில்தான் நடைபெற்றுள்ளது.

1800 கோடி ரூபாயில் முடியவேண்டிய இந்தத் திட்டம், காலதாமதத்தால், மேலும் 400 கோடி ரூபாய் அதிக செலவு செய்யும் ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. 400 கோடி ரூபாய் என்றால், யார் வீட்டுப் பணம்? மக்கள் வரிப் பணம்தானே வீணாகிறது.

இந்தத் திட்டத்தால் இந்த ஊரான மதுர வாயல் உலகெங்கும் பேசும் நிலை ஏற்பட்டு விட்டது.

இந்தியாவிலேயே மிகப்பெரிய பாலம் என்ற பெருமைக்குரியது; 19 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.

சென்னைத் துறைமுகத்திலிருந்து சரக்குகள் விரைந்து செல்லவும் - சரக்குகள் வந்து சேர வும் பெரிதும் பயன்படக்கூடியது. அந்நிய செலாவணியை ஈட்டித்தரக் கூடியது.

அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வளர்ச்சி என்பதோடு வளம் என்று கூறப் பட்டுள்ளதே - அப்படி ஒருபக்கம் கூறிவிட்டு, நாட்டுக்கு வளம் சேர்க்கக்கூடிய இந்தத் திட் டத்தை முடக்குவது வளத்துக்கு அறிகுறியா? வறட்சிக்கு அறிகுறியா?

மதுரவாயல் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி (10.3.2014)

Read more: http://viduthalai.in/page-8/76766.html#ixzz2vhVPEfhu

தமிழ் ஓவியா said...


நலந்தானா? நலந்தானா?


தமிழ்நாடு, மகாராஷ்டிரம், ஜார்க் கண்ட், சத்தீஸ்கர் என்ற யூனியன் பிரதேசம் - ஆகியவைகள் உள்ள 14,227 பேர்களிடம் ஒரு உடல் நலம் பற்றிய மருத்துவ ஆய்வு சர்வே மருத்துவ ஆய்வுக்கான இந்தியக் கவுன்சில் என்ற அமைப்பு மேற் கொண்டது.
அதன் ஆய்வறிக்கையில் காணும் முக்கிய தகவல்கள் நம்மில் பலரையும் அதிர்ச்சி அடையச் செய்யக் கூடிய வைகளாக உள்ளன.

54.4 சதவிகிதத்தினர் அங்குள்ள மக்கள் தொகையில் எவ்வித உடலு ழைப்போ, உடல் சம்பந்தமான பணிகளில் ஈடுபட்டோ வாழ்வதில்லை என்று கண்டறிந்து உள்ளனராம். என்னே கொடுமை!

டாக்டர்ஆர்.என். அஞ்சனா என்பவர் தலைமையில் இந்த- சர்க்கரை நோய் ஆய்வுப் பிரிவினர் மேற்கொண்ட இந்த ஆய்வின்படி அவர்கள் கண்டறிந்த உண்மைகள் (பெட்டி செய்தியில் காண்க). ‘Journal of Behavioural Nutrition and Physical Activity‘ என்ற ஆய்வு ஏட்டில் வெளியாகியுள்ள இத்தகவல் களில் பெரும்பாலானவர்கள் - தொலைக்காட்சி பார்ப்பதிலேயே - அமர்ந்து நல்ல உருளைக்கிழங்கு போண்டாக்கள் போல ஆகி, சர்க்கரை நோய்க்குசிவப்புக் கம்பள வரவேற்பு அளித்து நோயாளிகள் என்ற மிகப் பெரிய படையில் நாளும் சேர்ந்து கொண்டே உள்ளனர்!

குறைந்தபட்சம் 20 மணித் துளிகள் கூடவா நடக்க, ஓட, உடற்பயிற்சி செய்ய ஒதுக்கிடக் கூடாது?

நோய் தாக்கிய பிறகு நாம் டாக்டர் களிடம் சென்று மருந்து மாத்திரை, அறுவை சிகிச்சை என்ற வீணே காலத்தையும், பணத்தையும் செலவழித்து அவதிப்படுவதைவிட, நாம் நாளும் அரைமணி நேரம் குறைந்த பயிற்சியான - பாதுகாப்பான பயிற்சியான நடை பயிற்சியை(Walking) அல்லது சிறு வேக ஒட்ட நடைப்பயிற்சி (Jogging) செய் யலாமே! எது இவர்களுக்கு நல்லது என்ற யோசனை வேண்டாமா?

நடைப்பயிற்சியை நாளும் செய்ய என்ன கட்டணமா செலவா? ஒன்றும் தேவைப்படாதே! கிராமப்புற மக்கள் உடல் உழைப்பை நாளும் செய்வதால் அவர்கள், நகர்ப்புற மக்களைவிட (ஒப்பீட்டு அளவில்) சிறப்பாக இந்த உடல் உழைப்பு - அதனால் சுறுசுறுப் புடன் இயங்கும் - தன்மை உடைய வர்களாக உள்ளனர்!

நாளும் எழுந்து காலைக் கடன் களை முடித்து, உடன் நடைப்பயிற் சியை செய்து பிறகு அன்றாடப் பணியை நாம் மேற்கொள்ள முயலும் போது, நமது மனம் சுமையற்றதாக, பசுமையான உணர்வின் குடியிருப்பாக அமையும் வாய்ப்பிருக்கிறது!

எனவே, இருபாலரும் இந்த நடைப்பயிற்சியை ஒதுக்காதீர்கள்! ஒழுங்காகச் செய்து தேவையற்ற மருத் துவச் செலவைக் குறைக்க முயற்சி செய்யுங்கள்!

பிறகு நாம் அடுத்தவர்களைப் பார்த்து நலந்தானா? நலம் தானா? உடலும் உள்ளமும் நலந்தானா? என்று பெருமிதத்துடன் விசாரித்து நல்லதோர் வாழ்வு பெற முடியுமே!

Read more: http://viduthalai.in/page-2/76783.html#ixzz2vhWBFcua

தமிழ் ஓவியா said...

முதல் விண்வெளிப் பெண் கல்பனா சாவ்லா

1961 ஜூலை 1... அரியானா மாநிலத்தில் கர்னல் என்ற இடத்தில் பிறந்தார் கல்பனா சாவ்லா. அரசாங்கப் பள்ளியில் படித்தார். அப்போது ஜெ.ஆர்.டி. டாடாவின் விமானம் ஓட்டும் திறனைப் பார்த்த கல்பனாவுக்கும் அதே ஆர்வம் வந்தது.

பள்ளிப்படிப்பு முடித்தவுடன் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் படிப்பில் (விமான ஊர்தியியல்) சேர்ந்தார் கல்பனா. பொறியியல் பட்டம் பெற்றவுடன் உயர் படிப்புக் காக அமெரிக்கா சென்றார்.

ஜேன் பியர் ஹாரிசன் என்ற விமானப் பயிற்சி ஆசிரியரின் அறிமுகம் கிடைத்தது. 1983ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண் டனர். அடுத்த ஆண்டு முதுகலைப்பட்டம் பெற்றார் கல் பனா. அவருடைய ஆர்வமும் உழைப்பும் தீவிரமாகின. மேலும் ஒரு முதுகலைப்பட்டம் பெற்றார்.

1988ஆம் ஆண்டு விண்வெளி பொறியியலில் டாக்டர் பட்டம் வாங்கினார். நாசாவில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் விமானம், க்ளைடர்கள் போன்றவற்றைக் கற்றுக் கொடுக்கவும் ஓட்டவும் அனுமதி பெற்றிருந்தார். 1995இல் விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார் கல்பனா.

அடுத்த ஆண்டே அவருடைய கனவு, லட்சியம் நிறைவேறுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. கொலம்பியா விண்வெளி ஓடம் எஸ்டிஎஸ் - 87 இல் பயணம் செல்வ தற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தக் குழுவில் 6 விண் வெளி வீரர்கள் இருந்தனர்.

1997 நவம்பர் 19 அன்று கொலம்பியா விண்வெளி ஓடம் கிளம்பியது. 15 நாள்கள், 16 மணி நேரங்கள், 35 நிமிடங்கள் இந்தப் பயணம் நீடித்தது. டிசம்பர் 5 அன்று பத்திரமாக பூமியை வந்தடைந்தது. இந்தப் பயணத்தில் பல பரி சோதனைகளும் ஆராய்ச்சிகளும் செய்யப் பட்டிருந்தன. கல்பனாவின் புகழ் எங்கும் பரவியது. 2003இல் கல்ப னாவுக்கு ஒரு வாய்ப்பு.

எஸ்டிஎஸ் - 107 கொலம்பியா ஓடம் ஜனவரி 16 அன்று புறப்பட்டது. இதுவும் 15 நாள்கள், 22 மணி நேரங்கள், 20 நிமிடங்கள் பயணம் செய்து, பூமியை நோக்கித் திரும்பியது. ஆனால்... பிப்ரவரி 1 அன்று விண் வெளி ஓடம் வெடித்துச் சிதறியதில் கல்பனாவின் உயிர் பிரிந்தது.

40 வயதில் மறைந்து போன கல்பனா, தன் வாழ் நாளில் 31 நாட்களை விண்வெளியில் செலவிட்டிருக்கிறார். விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் கல்பனாவின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்!

Read more: http://viduthalai.in/page-7/76773.html#ixzz2vhYhXYlO

தமிழ் ஓவியா said...


கணினியை விஞ்சிய சகுந்தலா தேவி


அன்றைக்கு இருந்த கணினியை விட 12 நொடிகள் குறைவான நேரத்தில் விடை கூறினார் சகுந்தலா!

1929 நவம்பர் 4 அன்று பெங்களூருவில் பிறந்தார் சகுந்தலா தேவி. சகுந்தலாவின் தந்தை, சர்க்கஸில் வேலை செய்தார். சீட்டுக் கட்டுகளை வைத்து அவர் பல்வேறு நினைவுத் திறன் நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினார். மூன்றே வயதான சகுந்தலாவுக்கும் ஆர்வம் வந்தது. அப்பாவிடம் சீட்டுக் கணிதத்தைக் கற்றுக்கொண்டார்.

அவற்றைச் செயல் படுத்திக் காட்டினார். அவருடைய கணிதத் திறமையைக் கண்டு, ஊக்குவித்தார் தந்தை. 6 வயதில் கணிதம் மற்றும் நினைவாற்றல் திறமைகளை, மைசூரு பல்கலைக்கழகத்தில் செய்து காட்டும் வாய்ப்பு கிடைத்தது. மிக வேகமாகவும் எளிதாகவும் கணிதப் புதிர்களை விடுவிக்கும் சகுந்த லாவைப் பார்த்து, எல் லோரும் வியந்து போனார்கள்.

8 வயதில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மற்றொரு முறை தன் திறமைகளை நிகழ்த்திக் காட்டினார் சகுந்தலா. மழலை மேதை என்று கொண்டாடினார்கள்.

உலகம் முழுவதும் பல்வேறு கல்விக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள், மேடைகளில் தன்னுடைய திறமை களை உலகம் அறியச் செய்துகொண்டிருந்தார். மின்னல் வேக கணிதத்தையும், நினைவுத்திறனையும் கண்டு பிரமிக் காதவர்களே இல்லை. 1973ஆம் ஆண்டு பிபிசி தொலைக் காட்சியில் பங்கேற்றார். கணிதத்தில் கேட்கப்பட்ட அத்தனை கேள்விகளுக்கும் சட்டென பதில் அளித்தார்.

அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உருவானார்கள். 1977ஆம் ஆண்டு 201 என்ற எண்ணின் 23ஆவது மூலத்தை 50 நொடிகளில் கண்டறிந்தார். அன்றைக்கு இருந்த கணினியை விட 12 நொடிகள் குறைவான நேரத்தில் விடை கூறினார்! இப்படி சகுந்தலா தேவிக்கும் கணினிக்குமான போட்டிகள் பல நடைபெற்றன. கணினியை விஞ்சினார் சகுந்தலா. 1982ஆம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார்.

கணிதம், கணிதத்தில் மேஜிக் என்று எப்பொழுதும் எண்களுடனே வாழ்ந்தார். கணிதம் தொடர்பான பல புத்தகங்களையும் எழுதினார். மனித கணினி என்று அழைக்கப்பட்ட சகுந்தலா தேவி 2013 ஏப்ரல் 21 அன்று உடல்நலக் குறைவால் மறைந்து போனார்.

Read more: http://viduthalai.in/page-7/76773.html#ixzz2vhYrNhzl

தமிழ் ஓவியா said...


களப்பலியான காளைகள்!


1937 ஆகஸ்டு 27இல் இந்தியைப் புகுத்துவது பற்றி அன்றைய சென்னை மாநிலப் பிரதமர் (றிக்ஷீமீனீவீமீக்ஷீ) சக்ரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் (ராஜாஜி) அறி வித்தார். சமஸ்கிருதத்தைப் படிப்படியாகப் புகுத்துவ தற்கே முதற் கட்டமாக இந்தியைக் கொண்டு வருகி றேன். என்று அவரை அறி யாமலேயே சென்னை இலயோலா கல்லூரியிலே பேசினார். ஆம் பூனைக் குட்டி வெளியில் வந்தது!

தந்தை பெரியார் தலைமை தாங்கினர், தமிழர் கள் எல்லாருமே கட்சி களைக் கடந்து ஜாதி, மதம் பிணக்குகளைத் துறந்து, தலைவர் பெரியார் தலைமை யிலே ஒன்று திரண்டனர்.

ஆம், அந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான் தமிழன் என்ற ஓரினக் கோட்பாட்டின் கீழ் தமிழர் கள் அணி வகுக்கும் நிலையை ஏற்படுத்தியது! தமிழ் மொழியின் பற்றுக் கரை புரண்டு ஓடியது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு ஏற்க வெளியூர்களிலி ருந்து எல்லாம் தோழர்கள் திரண்டு வந்தனர் தலைநகர் நோக்கி. விடுதலை ஏடு ஓர் அழைப்பைக் கொடுத்தது எப்படி? இந்தி எதிர்ப்புச் சத்தி யாக்கிரகம் செய்ய ஒப்புக் கொண்டு, விடுதலையில் பெயர்களை வெளியிட்ட தொண்டர்களில் தங்கள் சொந்தச் செலவில், உடுப் புக்களோடு ரயில் சார்ஜும் கொடுத்து வரக்கூடிய வசதியுள்ளவர்கள் உடனே புறப்பட்டுச் சென்னைக்கு வந்து சேர வேண்டியது - என்பதுதான் விடுதலை யின் அந்த அழைப்பு. (எத்தகைய வித்தியாசம்!)

குடந்தையிலிருந்து அப்படி வந்து சேர்ந்தவர் தான் தாளமுத்து என்ற வீரன்! சென்னை இந்து தியாலாஜிக்கல் உயர்நிலைப் பள்ளி முன் மறியல் செய்து கைது செய்யப்பட்டார்.

சென்னை ஜார்ஜ்டவுன் போலீஸ் கோர்ட் நீதிபதி மாதவராய் முன்னிலையில் நிறுத்தப்பட்டார். இப் படியே விட்டு விட்டால் ஊருக்குப் போய் விடு கிறீர்களா? என்று கேட்டார் நீதிபதி! வில்லிலிருந்து புறப் பட்ட அம்பு போல் பதில் வந்தது - அந்தப் புற நானூற்று வீரனிடமிருந்து. இல்லை முடியாது! என்று. விளைவு நான்கு மாதக் கடுஞ்காவல் தண்டனை. அந்தோ அம்மாவீரன் சிறையிலேயே நோய் வாய்ப்பட்டு வீர மர ணத்தை முத்தமிட்டான்!

இன்னொரு தோழன் சென்னையைச் சேர்ந்த அருமை நடராஜன், அவ் வீரனுக்கோ ஆறு மாதக் கடுஞ்காவல் தண் டனை! அம்மாவீரனும் சிறையிலே மாண்டான். படிப்பறிவு இல்லாத ஹரி ஜன் - ஆதலால் மாண்டான் என்று மமதையோடு சட்ட சபையில் பேசினார் பார்ப் பனரான ராஜாஜி.

நடராஜன் இரங்கல் கூட் டத்தில் தளபதி அண்ணா பேசினார் விடுதலைபெற்ற தமிழகத்தில் தலைவர் பெரி யாரை நடுவில் வைத்து இறந்த இரு மணிகளையும் பக்கத்தில் வைத்து உருவச் சிலை எழுப்ப வேண்டும் என்றாரே!

சென்னை எழும்பூரில் செம்மாந்து நிற்கும் பெரு நகர வளர்ச்சித் திட்ட (MMDA) மாளிகைக்கு தாளமுத்து நடராஜன் என்று பெயர் சூட்டித் திறந்து வைத்தார் மானமிகு மாண்புமிகு முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள்! (14.4.1989). - மயிலாடன்

குறிப்பு: இன்று தாள முத்து மறைந்தநாள் (1939).

Read more: http://viduthalai.in/e-paper/76808.html#ixzz2vnME5b3h

தமிழ் ஓவியா said...


மோடிக்கு குட்டு!!


- குடந்தை கருணா

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, போட்டியிடும் தொகுதியைத் தேர்ந்தெடுப்பதில் பாஜக தலைவர்களிடையே கடும் சச்சரவு ஏற்பட்டுள்ளது. மோடி வாரணாசி தொகுதியில் நிற்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். அந்த தொகுதியில் பாஜகவின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி சென்ற முறை வெற்றி பெற்ற தொகுதி. இந்த முறையும் தனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என கேட்கிறார். இப்போது மோடி அந்த தொகுதியை கேட்பதால், ஜோஷி ஆத்திரம் அடைந்துள்ளார்.

கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் இத் தகைய முடிவு எந்த அடிப்படையில் எடுக்கப்படுகிறது என கேள்வி எழுப்பி உள்ளார். பாஜகவின் மக் களவைத் தலைவராக இருந்த சுஸ்மா சுவராஜ், ஜோஷிக்கு ஆதரவாக உள்ளார்.

ஏற்கனவே, குஜராத்தில் அத்வானி தொடர்ந்து வெற்றி பெறும் காந்தி நகர் தொகுதியில் மோடி தான் நிற் பதற்கு முயற்சி செய்து, அத்வானியின் கடும் எதிர்ப்பால், அது நிறுத்தப் பட்டது.

இப்போது, வாரணாசி தொகுதி யில், ஜோஷியை விரட்டி விட்டு தான் நிற்கலாம் என முடிவு செய்திருப்ப தற்குக் காரணம், அங்கே ஆர். எஸ்.எஸ். மோடிக்கு ஆதரவாக ஏற் கனவே பிரச்சாரம் துவக்கிவிட்டது.

இந்நிலையில், தனது டிவிட்டரில், மோடிக்கு நாடு முழுவதும் அலை வீசுகிறது என்றால், எதற்காக, வார ணாசி தொகுதிதான் தனக்கு வேண் டும் என ஏன் கேட்க வேண்டும்; மற்ற தலைவர்களும், அவரவர் தொகுதியிலேயே போட்டியிட லாமே? என கேள்வி எழுப்பி உள்ளார் சுஸ்மா சுவராஜ்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல் இதுவரை மூன்று பட்டி யல் வெளியிடப்பட்டது. ஆனால், மோடி எந்த தொகுதி என இன்னமும் தெரிவிக்கப்படவில்லை.

அண்மையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள், ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும்போது, மோடிக்கு அலை வீசுவதாக ஊடகங் கள் சொல்கின்றன. மோடிக்கு அலை ஒன்றும் வீச வில்லை; மோடி தான் அலைந்து கொண்டிருக்கிறார் என்று பேசினார்கள்.

ஆசிரியர் வீரமணியின் இந்த பேச்சை, வழிமொழிவது போல் இருக்கிறது பாஜகவின் மூத்த தலை வர் சுஸ்மா சுவராஜின் கருத்து.

Read more: http://viduthalai.in/page-2/76819.html#ixzz2vnMxPPf6

தமிழ் ஓவியா said...


இயற்கைக்கும், செயற்கைக்கும் வித்தியாசம் தெரியாதா முதல்வருக்கு?


தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இரட்டை இலை போன்ற தோற்றம் இருக்கிறதோ, அவற்றை யெல்லாம் மறைக்க வேண்டும் என்று ஸ்டாலின் வழக்குத் தொடுத்திருக்கிறார். அப்படியெனில் காங்கிரஸ் கட்சியின் சின்னம் கை. எனவே அனைவரின் கையையும் வெட்டச் சொல்லி மனு கொடுப்பாரா ஸ்டாலின்?

- என்ற வினாவை சிதம்பரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசி இருக்கிறார் முதல் அமைச்சர் ஜெயலலிதா.

இயற்கையில் விளைந்திருக்கும், மலர்ந் திருக்கும் இலைகளை வெட்டச் சொல்லவில்லை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், எம்.ஜி.ஆர். நினைவிடத்தின் முகப்பில் உள்ள இரட்டை இலை உருவமாக இருந்தாலும் சரி, பேருந்துகளில் இடம் பெற்றுள்ள இரட்டை இலைப் படங்களாக இருந்தாலும் சரி. இவை எல்லாம் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட ஏற்பாடுகள்! மக்கள் மத்தியில் அஇஅதிமுகவின் தேர்தல் சின்னத்தை நினை வூட்டிக் கொண்டே இருக்கவேண்டும் என்ற திட்டமிட்ட செயற்கையான ஏற்பாடு - மலிவான பிரச்சார யுக்தி.

இயற்கைக்கும், செயற்கைக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசலாமா ஒரு முதல் அமைச்சர்?

Read more: http://viduthalai.in/page-8/76803.html#ixzz2vnPfsCoe