Search This Blog

27.3.14

காசி விசுவநாதன் ஆதரவு யாருக்கு?நரேந்திர மோடிக்கா?ஆம் ஆத்மியின் கெஜ்ரிவாலுக்கா?


பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளராக அறி விக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி வாரணாசி என்ற காசிக்குச் சென்றார். காசி விசுவநாதர் கோவிலுக்குச் சென்றார். கருவறைமுன் அமர்ந்தார். அவர் நெற்றியில் கோவில் அர்ச்சகர் சிறீகாந்த் மிஸ்ரா சந்தனத்தை மூன்று முறை அப்பினார். பிரதமராக ஆகவேண்டும் என்று சங்கல்பம் எடுக்கச் சொன்னாராம் அர்ச்சகர் பார்ப்பனர் - அவ்வாறே மோடியும் எடுத்துக்கொண்டார் என்பது செய்தி.

மோடியை எதிர்த்து நிற்கவிருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரான கெஜ்ரிவாலும் வாரணாசிக்குச் சென்றுள்ளார். கங்கையில் குளித்தெழுந்துள்ளார். அங்குள்ள பைரவர் கோவிலுக்குச் சென்றார். அங்கு சாமி கும்பிட்டார்.

எந்தக் காரியத்தைச் செய்தாலும் பைரவரை வணங்கித் தொடங்கவேண்டும்; பைரவர்தான் காவல் தெய்வம் என்னும் கெஜ்ரிவால், அதோடு விடவில்லை, காசி விசுவநாதர் கோவிலுக்குச் சென்றார். அவருக்கும் பிரசாதம் அளிக்கப்பட்டது. திருநீறும் பூசிக்கொண்டார். இதே காசி விசுவநாதர் கோவிலுக்குத்தான் மோடியும் சென்றார். அவருக்கும் பிரசாதம் அளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஜெயலலிதா பிரதமராக ஆகவேண்டும் என்பதற்காக சிறப்புப் பூஜைகள் என்ன, யாகங்கள் என்ன, அன்னதானங்கள் என்ன என்று ஒரே களேபரம்தான்.

சென்னையைச் சேர்ந்த அ.இ.அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் ஆயுத பேர புகழ் சாமியார் சந்திராசாமியாரின் ஆலோசனைப்படி ராஜராஜேஸ்வரி யாகம் ஒன்றை நடத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் பி.ஜே.பி.யை உள்ளடக்கிய கூட்டணிக் காக வரிந்து கட்டிக் கொண்டு பேரம் பேசிய மணியன் என்பவர் மதுரை மீனாட்சி அருள்பாலித்து விட்டார் என்று சொல்லித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளாராம்.
இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது தேர்தலில் ஈடுபடும் இவர்கள் கொள்கைக் கோட்பாடுகளையோ, திட்டங்களையோ, சாதனைகளையோ நம்பாமல், கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் தேர்தலில் குதித்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

உண்மையிலேயே அவர்களுக்குக் கடவுள்களின்மீது, கோவில்களின்மீது நம்பிக்கை இருக்குமேயானால், பாரத்தைக் கடவுள் தலையின்மீது போட்டுவிட்டு, அக்கடா என்று இருக்கவேண்டியதுதானே! எதற்காகத் தேர்தல் சுற்றுப்பயணங்கள்?

எதற்காக மணிக்கணக்கில் தொண்டைத் தண்ணீர் வற்ற வற்றப் பேசித் தொலைக்க வேண்டும்? கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டியழ வேண்டும்? தொண்டர்களைக் கொளுத்தும் வெயிலில் அலையவிட வேண்டும்?

இவையெல்லாம் நியாயமான, நேர்மையான கேள்வி கள் அல்லவா! உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், இந்தப் போக்குகள் எதைக் காட்டுகின்றன.

தங்கள்மீது நம்பிக்கை வைக்கவில்லை; நம்பிக்கை வைக்கும் அளவுக்கு அவர்களிடம் சரக்குகளும், சாதனைகளும் இல்லை. மக்கள் மத்தியில் படர்ந்திருக்கும் பக்தியைப் பகடைக் காயாகப் பயன்படுத்தலாம் என்ற அசாத்திய நம்பிக்கைதான் இதற்கு முக்கிய காரணமாகும்.

இதில் வேடிக்கை என்னவென்றால், அதே காசி விசுவநாதன் கோவிலில் தான் நரேந்திர மோடியும் சென்று சாமி கும்பிட்டார்; பிரசாதமும் வழங்கப்பட்டது.
ஆம் ஆத்மியின் கெஜ்ரிவாலும் அதே காசி விசுவநாதன் கோவிலுக்கும் சென்றார். சாமி கும்பிட்டார்! அவருக்கும் கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.
அப்படியென்றால், காசி விசுவநாதன் யாருக்கு ஆதரவளிப்பான் என்ற கேள்வி எழுகிறது அல்லவா! வெற்றி பெறப் போகிறவர் காசி விசுவநாதனின் அருளே அருள்! சக்தியே சக்தி! என்று புகழ்வாரேயானால், தேர்தலில் தோற்றவர் அந்தக் காசி விசுவநாதனைப்பற்றி அக்கடவுளின் சக்திபற்றி என்ன சொல்லவேண்டும்?

கடவுளாவது - புடலங்காயாவது - வெறும் கல்லு என்று சொல்லுவார்களா? கடவுள் பக்தி என்பது முறையான சிந்தனைக்கும், செயல்பாட்டுக்கும் வழிவகுக்கிறதா என்பதைச் சிந்திக்கவேண்டும்.

தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் அவர்கள் சார்ந்த மதத்தின் கடவுள்களைத்தானே கும்பிடுகிறார்கள்? அந்த மதத்தில் உள்ளவர்கள் மட்டும் வாக்களித்தால் போதுமா?

வேறு மதத்தவர்களின் நிலைப்பாடு என்னாவது? குறைந்தபட்சம் தேர்தல் நேரத்திலாவது மதச்சார்பற்ற தன்மையில் நடந்துகொள்ளவேண்டாமா?
சரி, மத நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் பகுத்தறிவுவாதிகள் கோவிலுக்குச் செல்லமாட்டார்களே - அவர்கள் தேர்தலில் நிற்கக்கூடாதா? அப்படியே நின்றா லும், அவர்கள் கோவிலுக்குச் செல்லாததால் வாக்களிக்க மாட்டார்களா?

மதத்தின் பெயரால் மக்களுடைய சிந்தனை எப்படி யெல்லாம் சிதற அடிக்கப்படுகிறது!

தேர்தல் என்பது எதைப் பொறுத்தது? சம்பந்தப்பட்ட கட்சிகள் முன்வைக்கும் தேர்தல் அறிக்கை என்ன? அதில் குறிப்பிடப்பட்டு இருப்பதென்ன?

அந்தக் கட்சியின் கடந்தகால செயல்பாடுகள் என்ன? நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்ன? என்று பார்ப்பதற்குப் பதிலாக மக்களின் மதம் சார்ந்த சிந்தனையைத் தங்கள் பக்கம் ஈர்க்கும் வகையில் நடந்துகொள்வது மக்களை ஏமாற்றும் மோசடியேயாகும்!

மத சாயலைக் காட்டும் வேட்பாளர்களிடம் எச்சரிக்கை யாக இருக்குமாறு வாக்காளர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

-------------------------------” விடுதலை” தலையங்கம் 26-03-2014

45 comments:

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி.,க்குள் நடக்கும் பனிப்போர் வீதிக்கு வந்த கேலிக் கூத்து!


போபால், மார்ச் 26- பி.ஜே.பி.க்குள் நடக்கும் பனிப்போர் இப்பொழுது வீதிக்கும் வந்து சந்தி சிரிக் கிறது.

பா.ஜ.க., பிரதமர் வேட் பாளர், நரேந்திர மோடிக் கும், கட்சியின், முக்கிய தலைவர்களில் ஒருவரான, சுஷ்மா சுவராஜுக்கும் இடையே மோதல் ஏற்பட் டுள்ளதாக வெளியாகும் தக வல்களால், பா.ஜ.க.,வினர் இடையே கலக்கம் நிலவு கிறது.

தேர்தல் பிரச்சார கூட் டங்களில், சுஷ்மா சுவராஜ், நரேந்திர மோடியின் பெயரை உச்சரிப்பதில்லை என, தகவல் வெளியாகியுள் ளது.

வேட்புமனு தாக்கல்

பா.ஜ.க.வின் மூத்த தலை வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, ஜஸ்வந்த் சிங்கிற்கு, ராஜஸ்தான் மாநி லம், பார்மர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட, வாய்ப்பு மறுக்கப்பட்டது. பா.ஜ.க., தலைவர்கள், தனக்குத் துரோகம் செய்து விட்டதாக கூறிய ஜஸ்வந்த் சிங், அந்தத் தொகுதியில், சுயேச்சை வேட்பாளராக போட்டியிட, வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஜஸ் வந்த்சிங்கிற்கு வாய்ப்பு அளிக்கப்படாததற்கு, பா.ஜ.க., மூத்த தலைவர் களில் ஒருவரான, மக்க ளவை எதிர்க்கட்சித் தலை வர், சுஷ்மா சுவராஜ் கண் டனம் தெரிவித்திருந்தார். பாரதீய ஜனதாவைச் சேர்ந்த, முதல்வர் சிவராஜ்சிங் சவு கான் தலைமையிலான, மத்திய பிரதேச மாநிலம், விதிஷா மக்களவைத் தொகு தியில், சுஷ்மா சுவராஜ் போட்டியிடுகிறார். இதற் காக அவர், அங்கு, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள் ளார். ஆனால், அவர் பங் கேற்கும் கூட்டங்களில், மறந்தும்கூட, பா.ஜ.க., பிர தமர் வேட்பாளர், நரேந்திர மோடியின் பெயரை, அவர் உச்சரிப்பதில்லை. கட்சி யின் மற்ற தலைவர்கள், மோடியை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யும் நிலை யில், சுஷ்மா, தனி ஆவர்த் தனம் செய்வது, பா.ஜ.க., வினரிடையே, அதிர்ச்சி யையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
கலக்கம்

மோடிக்கும், அவருக் கும் இடையே, பனிப்போர் நிகழ்வதாகவும், இதனால், பா.ஜ.க.,வின் வெற்றி பாதிக் கப்படும் என்றும், அந்தக் கட்சியினர் கலக்கம் அடைந் துள்ளனர். மத்திய பிரதேசத் தின் 29 மக்களவைத் தொகு திகளுக்கு, மூன்று கட்டங் களாக தேர்தல் நடக்கிறது. சுஷ்மா போட்டியிடும், விதிஷா தொகுதிக்கு, அடுத்த மாதம், 24 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. அந்த தொகுதியின் இப்போதைய எம்.பி.,யும் அவர் தான்.

ஜஸ்வந்த் சிங் ஏற்கெ னவே அதிருப்தியில் உள் ளார். மூத்த பி.ஜே.பி. தலை வரான அவருக்குத் தேர்த லில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்த நிலையில், அவர் சுயேச்சையாக நிற்க முடிவு செய்துள்ளார்.

அத்வானிக்கும், அவர் கேட்ட தொகுதி கொடுக்கப் படாததால் சிக்கல் ஏற்பட் டது. தொடர்ந்து பா.ஜ.க. தேர்தல் அறிக்கைத் தயாரிப் புக் குழுவின் தலைவரான முரளிமனோகர் ஜோஷி வழக்கமாக நிற்கும் வார ணாசி தொகுதி மறுக்கப் பட்டு, அந்தத் தொகுதியை மோடி பெற்றுக்கொண் டுள்ளார். மூத்த தலைவர் கள் பி.ஜே.பி.யில் ஒதுக்கப் படுவதாகக் குற்றச்சாற்று எழுந்து, கட்சியை ஒரு கலக்குக் கலக்குகிறது. இதற் கெல்லாம் காரணம், பின் னணியில் இருந்து பி.ஜே. பி.யை இயக்கும் ஆர்.எஸ். எஸ்.தான்.
2014 இல்

சுஷ்மா படம் இல்லை

கடந்த தேர்தல் அறிக்கை யில் பி.ஜே.பி.யின் முக்கிய தலைவராகக் கருதப்பட்டு, அட்டைப் படத்திலும் இடம்பெற்றிருந்த சுஷ்மா சுவராஜின் படம் 2014 ஆம் ஆண்டு தேர்தலில் திட்ட மிட்டு நீக்கப்பட்டுள்ளது. இவ்வளவுக்கும் அக்கட் சியில் முன்னணியில் இருக் கும் ஒரே பெண்மணி சுஷ்மாதான்! ஏற்கெனவே உமாபாரதி ஒதுக்கப்பட்டு விட்டார் என்பது தெரிந் ததே!

Read more: http://viduthalai.in/e-paper/77603.html#ixzz2x7Y96hEt

தமிழ் ஓவியா said...


பல்நோக்கு மருத்துவமனை எப்படி இருக்கிறது? கலைஞர் பதில்



சென்னை, மார்ச் 26- சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் திமுக ஆட்சி யில் கட்டப்பட்ட புதிய சட்டமன்றத்தில், அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட் டுள்ள பல்நோக்கு மருத்து வமனை எப்படி இருக்கி றது என்ற கேள்விக்கு திமுக தலைவர் கலைஞர் அளித் துள்ள பதில் வருமாறு:

கேள்வி: சென்னையில் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்த பல் நோக்கு மருத்துவமனை எவ்வாறு செயல்படுகிறது?

கலைஞர்: ஓமந்தூரார் வளாகத்தில் எழிலோடு கட்டப்பட்ட மாளிகையில் நெருக்கடி இல்லாமல் தலைமைச் செயலகமும், சட்டப்பேரவையும் இயங்கி வந்தது. அதன் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமரும், சோனியா காந்தி அம்மையாரும் சுற்றிப் பார்த்துவிட்டு சிறப்பாக இருப்பதாகப் பாராட்டி னார்கள். ஆனால் முதல மைச்சர் ஜெயலலிதா மூன் றாண்டு காலம் அதனை மூடி வைத்தார்.

தலைமைச் செயலகமும், சட்டப்பேர வையும் பழைய இடத்தி லேயே தொடர்ந்து நடை பெறும் என்று அறிவித்து, தற்போது அங்கேதான் நடைபெறுகிறது. பல பகுதிகளில் அவ்வப்போது அந்த கட்டடம் இடிந்து விழுந்து கொண்டிருக்கிறது. இட நெருக்கடியோ கேட்க வேண்டியதே இல்லை. பல அலுவலர்கள் வராந்தாவில் தான் காலம் தள்ளுகிறார் கள். முதலமைச்சர் அறை யைத் தவிர மற்ற அமைச் சர்களுக்கும் நெருக்கடி தான். ஆனால், ஓமந்தூரார் வளாகத்திலே உள்ள மாளி கையில், பல்நோக்கு மருத் துவமனையை, ஒரு கிலோ மீட்டர் தொலைவிலிருந்து முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத் தார். 2016 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வேறொரு முதலமைச்சர் வந்து, இந்த பல்நோக்கு மருத்துவமனையில் வேறொரு அலுவலகத்தை அமைக்கப் போவதாக கூறுவார்! இப்படிப்பட்ட வேடிக்கைகள் எல்லாம் நடக்கும். தற்போது ஜெய லலிதா தொடங்கி வைத்த பல்நோக்கு மருத்துவம னையில் பத்து நாட்களில் வந்த நோயாளிகள் எத் தனை ஆயிரம் பேர் தெரி யுமா? பல்நோக்கு மருத்து வமனை செயல்பாட்டிற்கு வந்து, பத்து நாட்கள் ஆன பிறகு, புற்றுநோய், இதய நோய், நீரிழிவு நோய் என்று பல்வேறு பிரிவுகளில் 40 பேர்தான் அனுமதிக்கப் பட்டார்களாம்!

அறிவிப்பு ஒன்றுதான் அதிமுக ஆட்சியின் இரண்டாண்டுகால சாதனை!

கேள்வி: தொலை நோக்குத் திட்டம் பற்றி முதலமைச்சர் அடிக்கடி பேசி வருகிறாரே?

கலைஞர்: அதைப் பற்றி அண்மையில் வெளி வந்த ஒரு செய்தியைக் கூறுகிறேன். 2012-2013 இல் தமிழக அரசு வெளியிட்ட முதல் தொலை நோக்குத் திட்ட ஆவணத்தில் 104 அணைகளைப் புனரமைக் கப் போவதாக அறிவித் தார்கள். இந்தத் திட்டத்திற் கான மதிப்பீடு 745 கோடி ரூபாய். இதில் 80 சதவிகிதம் உலக வங்கி கடனாகவும் 20 சதவிகிதம் மாநில அரசின் பங்களிப்பாகவும் இருக் குமென உலக வங்கியுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. திட்டப் பணிகளை 2012 இல் துவங்கி, 2018 க்குள் நிறைவேற்றப்போவதாகச் சொன்னார்கள். பணிகளில், பல்வேறு துறைகளின் பங் களிப்புகளை ஒருங்கி ணைக்க தலைமைச் செய லாளரின் தலைமையில் மாநிலத்திட்ட மேலாண் மைக்குழுவும் உருவாக்கப் பட்டது. முதல் கட்டப் பணிகளுக்கான விரிவான மதிப்பீட்டிற்கு, இந்தக் குழு ஒப்புதல் அளித்த தோடு சரி மேற்கொண்டு எந்தப் பணியும் நடக்க வில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளிலும் பருவ மழை பொய்த்ததால், பெரும்பா லான அணைகள் வறண்டு கிடந்தன. அந்த நேரத்தில் சுலபமாக அணை களை மேம்படுத்தி இருக்க வேண் டும். ஆனால் தற்போது வரை திட்டப் பணிகள் துவங்கவில்லை. 2012 இல் வெளியிடப்பட்ட தொலை நோக்குத்திட்ட ஆவணத் தில் இந்தத் திட்டத்திற்காக 745 கோடி ரூபாய் செல வாகும் என தெரிவிக்கப் பட்டது. இந்த ஆண்டு வெளியிடப்பட்ட இரண் டாவது ஆவணத்தில் 750 கோடி ரூபாயாக மதிப்பீடு மாற்றப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஒன்றுதான் அதி முக ஆட்சியின் இரண் டாண்டு காலச்சாதனை!

(முரசொலி, 26.3.2014)

Read more: http://viduthalai.in/e-paper/77608.html#ixzz2x7YVA8W4

தமிழ் ஓவியா said...


தேர்தல் துணுக்குகள்!

காப்புத் தொகை?

2009 மக்களவைத் தேர் தலில் போட்டியிட்ட 8070 வேட்பாளர்களில் 6829 (84%) பேர் காப்புத் தொகை இழந்தனர்.

தேவை நட்சத்திர சின்னம்

தேர்தலில் தங்களுக்கு நட்சத்திர சின்னம் ஒதுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் எம்.முகம் மது யூசுப் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

விதிமீறல்

சென்னை மாவட்டத் தில் நேற்றுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு களின் எண்ணிக்கை 1964. பணப் பட்டுவாடா தொடர் பாக 20-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளனவாம்.

சரண்!

கருநாடகத்தில் பிரபல சுரங்க ஊழல் புகார் பேர் வழி சிறீராமுலு மீண்டும் பி.ஜே.பி.யில் சேர்க்கப் பட்டு தேர்தலில் நிற்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள் ளது. தேர்தலில் விதி மீறல் தொடர்பாக அவர்மீது ஒரு வழக்கு நடந்து வந்தது. நீதிமன்றத்தில் ஆஜரா காததால், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலை யில், நீதிமன்றத்தில் சரண டைந்துள்ளார்.

பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட வாகனச் சோதனைகளில் இதுவரை ரூ.12 கோடி அளவுக்கு ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.

தலைகீழ் கட்டை விரல்

யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பவர் களுக்கு தலைகீழ் கட்டை விரல் சின்னம் வழங்கிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

ராகுல் காந்தி

காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந் தால், மக்களின் ஆரோக்கி யத்தை அடிப்படை உரி மையாக்கும் சட்டம் கொண்டு வரப்படும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மீதிப் பணம் எங்கே?

திண்டுக்கல்லில் பேசு வதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் நேற்று வந்தார். கூட்டம் முடிந்த தும், அ.தி. மு.க. ஒன்றிய செயலாளரி டம் பெண்கள் பிரச்சி னையை எழுப்பியுள்ளனர். 200 ரூபாய் கொடுப்பதாகக் கூட்டத்துக்கு அழைத்து வந்தீர்கள்; இப்பொழுது நூறு ரூபாய்தானே கொடுத் துள்ளீர்கள். மீதி நூறு ரூபாய் எங்கே? என்று சண்டை போட்டனர். சாப்பாடு, பிஸ் கெட், தண்ணீருக்கு நூறு ரூபாய் சரியாகி விட்டது போ என்று அ.தி. மு.க. பொறுப் பாளர் கூறியுள்ளார்.

ஓ, கூட்டம் கூடுகிறதா? கூட்டப்படுகிறதா? கேள் விக்கு விடை கிடைத்து விட்டது.

Read more: http://viduthalai.in/e-paper/77606.html#ixzz2x7Ye8s9k

தமிழ் ஓவியா said...


மேலான ஆட்சி


தந்திரத்திலும், வஞ்சகத்திலும் மக்களின் அறியாமையினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கத்தைவிட, துப்பாக்கியாலும், பீரங்கியினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கம் மேலானது. - (குடிஅரசு, 3.11.1929)

Read more: http://viduthalai.in/e-paper/77595.html#ixzz2x7Z0e1If

தமிழ் ஓவியா said...


இதுதான் பாஜக சொல்லும் மாற்றம்?


பாஜக சார்பில் விளம்பரம் வெளி யிட்டுள்ளார்கள். மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. அது பாஜகவிற் கான நேரம்; மோடிக்கான நேரம் என விளம்பரம் வந்துள்ளது.

நாமும் ஏதோ பெரிய மாற்றம் வருகிறது எனப் பார்த்தால், மாற்றம் வந்துள்ளது. எப்படி? மோடியை வளர்த்த அத்வானிக்கு மூக்குடைப்பு; மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கிற்குக் கல்தா; நாடாளுமன்ற மக்களவைத் தலைவராக இருந்த சுஷ்மா சுவராஜ் கருத்தைக் கேட்காமல் புறக்கணிப்பு. சரி, இது அவர்கள் உட்கட்சி விஷயம். எக்கேடும் கெட்டுப் போகட்டும்.

பிரமோத் முத்தாலிக் என்பவர் கருநாடகாவில் ராம் சேனா என்கிற அமைப்பின் செயலாளர். சங் பரி வாரத்தின் ஒரு அமைப்பு. 2009 இல் மங்களூரில், இந்து கலாச்சார பாது காப்பு என்கிற பெயரில், விடுதியில் இருந்த பெண்களை, கேளிக்கையில் ஈடுபட்டார்கள் என்று கூறி, சாலை யில் விரட்டி அடித்த கொடுமைக்குச் சொந்தக்காரர். அவர் மீது பல வழக் குகள் உள்ளன.

அவர் பிஜேபியில் காலையில் சேர்க்கப்பட்டார். பிஜேபி ஆட்சி செய்யும் கோவா முதல்வர் மனோகர் பரிகார், முத்தாலிக் சேர்க் கப்பட்டதற்கு தனது கடும் எதிர்ப் பைத் தெரிவித்தார். கோவாவில் பாஜகவிற்கு ஒரு வாக்குக்கூட கிடைக் காது எனக் கூறியதும், அன்று மாலையே, முத்தாலிக், பாஜகவி லிருந்து விலக்கப்பட்டார். பிரமோத் முத்தாலிக் போன்ற ரவுடிகளைச் சேர்க்கும் நிலையில் இன்று பாஜக இருப்பது நல்ல மாற்றம் தானே? இது மட்டுமா?

உ.பி.யில், முசாபர்நகரில் 2013 ஆகஸ்டில் கலவரம் ஏற்பட்டு, சிறு பான்மை மக்கள் கொல்லப்பட்ட னர்; வீட்டை விட்டு விரட்டப்பட்டு, இன்றுவரை, ஏறத்தாழ 360 குடும் பங்கள் முகாம்களில் இருக்கின்றனர். அந்த கலவரத்தின் போது, பெண்கள் பலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினர். இத்தனையும் செய்தது, சங் பரிவார் கும்பல் தான். அந்த கலவரத்தில் ஈடுபட்டு குற்றம் சாட் டப்பட்ட பாஜகவின் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஹீக்கும் சிங், சஞ்சீவ் பலியான் இருவரையும், பாஜக நாடா ளுமன்ற வேட்பாளராக அறிவித் துள்ளது. அதுவும், கலவரம் நடந்த முசாபர் நகர் மற்றும் கைரானா தொகுதிகளுக்கு.

உ.பி. கலவரத்தில் ஈடுபட்ட கிரி மினல்கள், வேட்பாளர்களாக அறி விப்பு; குஜராத் கலவரத்தின்போது, முதல்வராக இருந்த நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளர்.

இதைத்தான் மாற்றம் என பாஜக கூறுகிறது.

நம்மூரில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள வைகோவும், மற்ற தலைவர்களும், மோடி தலைமை யில் இந்தியா முழுவதும் இந்த மாற் றம் கொண்டுவர ஆசைப்படுகிறார் கள்.

ஆனால், தமிழகம் பெரியார் பிறந்த மண்; அது மட்டுமல்ல; பெரி யாரால் பண்படுத்தப்பட்ட மண். மக்கள், தகுந்த பாடத்தை பாஜகவிற் கும், அதற்குத் துணை போவோருக் கும் தருவார்கள்.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/e-paper/77601.html#ixzz2x7Z97Zeh

தமிழ் ஓவியா said...


இலங்கைத்தீவிலிருந்து தமிழர்களை விரட்ட தயாராகிக் கொண்டிருக்கும் இலங்கை அரசு


ஜெனிவா, மார்ச் 26- ஜெனிவாவில் அய்நாவின் மனித உரிமை அமைப்பு இலங்கையில் நடந்த போர்க்குற்றம் மற்றும் மனிதக் கடத்தல்கள் இலங்கை இராணுவம் நடத்திய படுகொலைகள் போன்றவற்றை விசாரித்து வருகிறது. இதில் பல சான்றுகள் மற்றும் பாதிக்கப் பட்டவர்கள் நேரடியாக தங்களது குமுறல்களை சான்றுகளாக பகிர்ந்து கொண்டு இருக்கின்றனர் இந்த நிலை யில் உலகின் கவனத்தைத் திசை திருப் பவே இலங்கை அரசு புதிதாக புலி நாடகங்களைப் போடுகின்றது.

இதுகுறித்து வடக்கு மாகாண முதல மைச்சர் விக்னேஷ்வரன் கூறியதாவது:

இலங்கை அரசு ஜெனிவா விசார ணையைக் கருத்தில் கொண்டு மீண்டும் அரச பயங்கரவாதத்தைக் கையில் எடுக்க ஆரம்பித்துள்ளனர் என்று நாம் எண்ணக்கூடாது. அதற்கும் அப்பால் தமிழர்கள் என்பதே இலங்கைத் தீவில் இல்லாமல் ஆக்குவதே இலங்கை அர சின் முக்கிய நோக்கமாக உள்ளது, என நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்றார்.

2009 இறுதிப் போரின் அவல முடிவுக்குப் பின்னர், தமிழ் மக்களது புலப் பெயர்வுகள் என்றுமில்லாத அள விற்கு அதிகரித்துள்ளது. தமிழீழ விடு தலைப் போருடனும், விடுதலைப்புலி களுடனும் நெருக்கமானவர்கள் பெரும் பாலும் வெளியேறி விட்டார்கள். அல் லது, வெளியேறி வருகின்றார்கள். அதற் கும் அப்பால், தமது பிள்ளைகளை சிங் கள ஆட்சியாளர்களாலும், அவர்களது படையினராலும் ஊக்குவிக்கப்படும் கலாச்சாரச் சீரழிவுக்குள்ளும், வன் முறைக் கெடுபிடிக்குள்ளும் வாழ வைக்க முடியாது என்ற நிர்ப்பந்தம் கார ணமாக இளைய வயதினரும் பெற்றோ ரால் புலம்பெயர நிர்ப்பந்திக்கப்படு கின்றார்கள்.

இதனைத் தமக்குச் சாதகமாகப் பயன் படுத்தும் முயற்சியில் சிங்கள அரசு இப் போது முழுமையாக இறங்கியுள்ளது.


தமிழ் ஓவியா said...

தாவது, பலத்த அச்சுறுத்தல் அல் லது உயிராபத்து என்ற சூழலை வலிந்து தமிழ் மக்கள் மீது திணிப்பதன் மூலம் உள்ளூர் இடப்பெயர்வு என்பதற்கு இடமே இல்லாத அவர்களை, வேக மாகப் புலம்பெயர வைக்கும் திட்டம் ஒன்றும் இதன் மூலம் அரங்கேற்றப் படுகின்றது.

இந்த வேகமான புலப்பெயர்வு உருவாக்கும் வெற்றிடம், இலங்கைத் தீவின், மக்கள் வாழ்வியல் சமநிலையை முற்றாகக் குழப்பிவிடும். அதாவது, மனித வளமற்ற பகுதியாகத் தமிழர் நிலம் மாற்றமடைந்துவிடும்.

அது தமிழர் பிரதேசங்களில் நடை முறைப்படுத்தப்படும் சிங்களக் குடி யேற்றங்களையும், நில அபகரிப்புக் களையும் எதிர்ப்பு இல்லாத காலத்தை உருவாக்கிக் கொடுத்துவிடும்.

தமது நியாயங்களுக்காகப் போரா டும் மக்களது மனித வளம் நிர்மூலமாக் கப்படும் போது, சரணாகதி நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள். வேகமாகக் குறைந்து வரும் அரசியல் பலமும் அடியோடு சாய்ந்துவிடும்.

அதன் பின்னர், சிங்கள தேசத்தை அச்சுறுத்தி வரும் தமிழினத்திற்கான நீதி கோரலுக்கான தேவை என்பதே இல்லா மல் போய்விடும். சிங்களவர்களது மகாவம்சக் கனவுக்கு எந்த இடையூறும் அதன் பின்னர் உருவாகக் காரணமே இல்லாமல் போய்விடும்.

கிழக்கு மாகாணம் என்று அழைக்கப் படும் தென் தமிழீழம் சிங்கள ஆட்சியா ளர்களது திட்டமிட்ட சிங்களக் குடியேற் றங்களாலும், நில அபகரிப்புக்களாலும் நிலை மாற்றம் அடைந்துவிட்டது.

மாகாணத்தில் பெரும்பான்மையின ராக பல நூற்றாண்டு காலம் வாழ்ந்த தமிழர்கள் சிங்களக் குடியேற்றங்களால், இரண்டாமிடத்திற்குத் தள்ளப்பட்டு, தற்போது மற்ற இனங்களின் இனப் பரப்பலுடன் போட்டி போட முடியாத உளவியல், பொருளாதார காரணங் களால் மூன்றாம் இடம் நோக்கி நகர்ந்து வருகின்றனர்.

கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரம் தமிழர்களிடமிருந்து பறி போனதையும் நாம் இந்த இடத்தில் கணக்கில் கொள்ளவேண்டும். கிழக்கின் அரசியல் பலம் தமிழர்களிடமிருந்து அகன்றதற்கு எதுவெல்லாம் காரணமாக இருந்ததோ, அதுவெல்லாம் சிங்களத் தால் வடக்கில் பரீட்சித்துப் பார்க்கப் படுகின்றது.

அதன் எதிர்ப்பு நிலையிலிருந்து தமி ழர்களை அப்புறப்படுத்தும் முயற்சி யாகவே தமிழ் மண்ணில் புலி நாட கத்தை நடத்துகின்றது சிங்களப் படை. அதாவது, பிரச்சினைக்கான இன முரண் பாடு என்ற அடிப்படையையே இல் லாமல் ஆக்குவது சிங்களத்தின் நோக்க மாக உள்ளது.சிங்களத்தின் இந்தப் புலி நாடகத்தில் துப்பாக்கிச் சூடுகள், அதன் தொடர்ச்சியான கைதுகள், கடத்தல்கள், காணாமல் ஆக்குதல் மட்டுமல்ல, குண்டு வெடிப்புக்கள், அரசியல் படு கொலைகளும் அரங்கேற்றப்படும்.

அவை எல்லாவற்றிற்கும் காரண மாக சிங்களத்தால் உருவாக்கப்பட்ட புலிகளே கற்பனையாக வலம் வருவார் கள். விடுதலைப் புலிகளது மீள் இணைவே இதற்குக் காரணம் என்று அய்.நா. மன்றத்திலும் பதில் அறிக்கை வாசிக்கப்படும்.

இப்போது ஆரம்பிக்கப்படும் அரச பயங்கரவாதம் இந்த இலக்கை நோக்கி யதே! திட்டமிட்டு நடத்தப்படும் இந்த அரச பயங்கரவாதம் தமிழ் மக்களை மீண்டும் ஒரு வேகமான புலம்பெயர் வுக்கு நிர்ப்பந்தப்படுத்தப் போகின்றது.

இதை, எப்படிக் கையாளப் போகின் றோம் என்பதே, தற்போது எமக்கு முன்னுள்ள மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.

- ஈழத்திலிருந்து செய்தியாளர் கரிகாலன்

Read more: http://viduthalai.in/e-paper/77597.html#ixzz2x7ZIOEFq

தமிழ் ஓவியா said...


பாலிமர் தொலைக்காட்சியில் தலைவர் நேர்காணல்



பாலிமர் தொலைக்காட்சியில் உங்கள் (ஆசிரியர்) நேர்காணல் ஞாயிறு அன்று மிகச்சிறப்பாக இருந்தது. அது பெரியார் எதிர்ப்பலைகளை தவிடு பொடியாக்கியது. இதை விட மிகச் சிறப்பாக யாரும் பதில் கூறி இருக்க முடியாது. தாங்கள் எடுத்தது, பெரியார் தந்தது என்பது மிகச் சரியான விளக்கம்.

சிறிய கோடுக்கு முன் அதைவிட சிறிய கோடு போட்டால், சிறியது, பெரியது ஆகி விடுகிறது. அதைப்போல், ஜெயாவின் குற்றங்கள் மற்ற ஜெயாவின் குற்றங்களால் மறக்கடிக்கப்படுகிறது. ஆனால் மக்கள் ஜெயாவின் குறைகளை எளிதில் மறந்து விடுவதை நாம் தொடர்ந்து பார்த்து வரு கிறோம். எத்தனையோ குறைகள் ஜெயா மீது கூறினாலும் அடுத்தடுத்த குறை களைக் கூறி மறக்கச் செய்து விடுகிறது. எனவே நாம் மக்களை அதிகம் பாதிக்கக் கூடிய குறைகளைத் தேர்வு செய்து மக்களை ஜெயாவுக்கு எதிராக நிறுத்த வேண்டும். தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் என்பார்கள்.

இன்றைய சூழ்நிலையில் மின்வெட்டு ஒவ்வொருவரையும் பாதித்துக் கொண்டு இருக்கும் ஒன்று. எனவே ஜெயா சொன்ன 3 மாதத் தீர்வு இன்றுவரை நடக்க வில்லை. மூன்று ஆண்டுகள் ஆகி விட்டது. தேர்தல் முடியும் வரை அதில் எந்த மாற்றமும் வராது. எனவே திரு.ஸ்டாலின் கேட்பதற்குப் பதில் - பொது மக்கள் ஜெயாவிடம் கேள்வி கேட்டு அதை தொலைக்காட்சியிலோ அல் லது பத்திரிகைகளிலோ தேர்தல் முடியும் வரை கேட்டுக் கொண்டே இருக்கவேண்டும். உதாரணமாக:

i.e. General Public Vs Jayalalitha

மூன்று மாதத்தில் மின்வெட்டு நீங்கும் என்று உறுதி அளித்த அம்மா அவர்களே - இன்று வரை நீங்கள் உறுதியை காற்றில் பறக்கவிட்டீர்கள், என்று தீரும் என்று தேர்தலுக்கு முன் சொல்லுங்கள்? நீங்கள் பதில் சொல்லும்வரை உங்களை நாங்கள் விட மாட்டோம். நீங்கள் பதில் கூற இன்னும் 24 நாள்கள் உள்ளன. - பொது மக்கள் மறுநாள் 23 நாள்கள் அடுத்த நாள் 22 நாள்கள் அடுத்து 21 நாள்கள் . . . .

என்று தேர்தல் முடியும் வரை எண்ணிக் கொண்டே, நாள்தோறும் தொலைக்காட்சி யிலும் பத்திரிகைகளிலும் கூறிக் கொண்டே வந்தால், மின் வெட்டு என்பது மக்கள் மனதில் நிலைத்து நிற்பதோடு, தேர்தலிலும் ஜெயாவுக்கு எதிராக வாக்குகள் தி.மு.க. வினருக்குக் கிடைக்கும். இதனால் ஜெயா வினால் தப்பவே முடியாது. பதில் கூறியே ஆக வேண்டும். மின்வெட்டு மாணவர் களையும், பெண்களையும், தொழிலாளர் களையும் மிகவும் பாதிப்பதால், நல்ல பலன் கிடைக்கும்.

முதல்வரை, பொது மக்கள்முன் கொண்டுவந்தால், வெற்றி நமதே!

- ரம்யா சீனிவாசன்

Read more: http://viduthalai.in/e-paper/77599.html#ixzz2x7ZSlqNi

தமிழ் ஓவியா said...


இரட்டை இலை நீக்கம், மு.க. அழகிரி நீக்கம் பற்றி கலைஞர்


சென்னை, மார்ச் 26- இரட்டை இலை நீக்கம், மு.க.அழகிரி நீக்கம் பற்றி செய்தியாளர்களிடம் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் (நேற்று) குறிப்பிட்டதாவது:

செய்தியாளர் :- இரட்டைஇலை சின்னங்கள் சிறிய பேருந்துகள் போன்றவற்றில் மறைக்கப்பட வேண்டு மென்றுபொருளாளர் மு.க. ஸ்டாலின் தொடுத்தவழக்கில் உயர்நீதிமன்றம் இன்றையதினம் தீர்ப்பு அளித்திருப்பதைப் பற்றி?

கலைஞர் :- தேர்தல்ஆணையத்தின் செயல்பாடுகளை நாங்கள்கவனித்துக் கொண்டிருக்கிறோம். நீதிமன்றத் தீர்ப்புக்குத் தலைவணங்கி அனைவரும் நடந்துகொள்ள வேண்டும். குறிப்பாகதேர்தல்ஆணையம் ஜனநாயகரீதியில் நடைபெறுகிறதுஎன்பதற்குஅடையாளமாக, ஏற்கெனவே இந்த இரட்டைஇலை சின்னங்களைமறைக்க வேண்டு மென்றுகூறியிருந்தது. அந்தத் தீர்ப்பைமதித்து, கட்சிசின்னங் களை, அரசுசார்புடையஎந்தநிகழ்விலும் அறிமுகப்படுத்தக் கூடாது, பயன்படுத்தக் கூடாதுஎன்பதைநானும் கண்டிப் பாகஎடுத்துக் கூற விரும்புகிறேன். இது தான் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பாகவும் அமைந்திருக்கிறது.

செய்தியாளர் :- தி.மு.கழகத்திலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்ட மு.க.அழகிரி, ம.தி.மு.க. பொதுச் செயலாளரையும், மற்றகட்சிகளின் தலைவர்களையும் சந்தித்துகட்சியின் மீது அவதூறு கூறி வருகிறாரே?

கலைஞர்:- அவர் தற்காலிகமாக நீக்கி வைக்கப் பட்டதற்குப் பிறகுஉரியவிளக்கங்களை அதற்கு அளிக் காமல், மேலும் மேலும் தி.மு. கழகத்தை விமர்சிப்ப தாலும், தி.மு.கழகத் தலைவர்களைப் பற்றி அவதூறு கூறி வருவ தாலும், அவர் வெளியிடுகின்ற கருத்துகள் தி.மு.கழகத் திற்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், களங்கம் கற்பிக்கும் வகையிலும் இருப்பதாலும், நானும், பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களும் இன்றைக்கு கலந்துபேசி, அவர் கட்சியிலிருந்து நிரந்தரமாக அறவேநீக்கப்படுகிறார் என்று தெரிவித்திருக்கிறோம்.

செய்தியாளர் :- ஜெயலலிதா நான்காயிரம் கோடி ரூபாய்க்குச் சொத்து சேர்த்திருப்பதாக நேற்றையதினம் பெங்களூருவில் நடைபெற்றசொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறாரே?

கலைஞர் :- இந்தச் செய்தி பத்திரிகைகளில் வந்தி ருக்கிறது. பத்திரிகைகள்என்றால், அனைத்துப் பத்திரிகை களிலும் அல்ல. முரசொலியில்வந்திருக்கிறது, தினகரனில் வந்திருக்கிறது. மற்றபத்திரிகைகள்இந்தச் செய்தியை ஜெயலலிதாவை ஆதரிக்கும் வகையில்இருட்டடிப்பு செய் திருக்கின்றன. ஏறத்தாழநான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் சொத்து ஜெயலலிதா தரப்பினரிடம் இருப்பதாகநேற்றைய தினம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில்அரசுவழக்கறிஞர் எடுத்துத் தெரிவித்திருக்கிறார். இந்தச் செய்திப் பற்றி தமிழ் நாட்டுப் பத்திரிகைகள் குறிப்பாக சென்னையி லிருந்து வெளிவருகின்ற பத்திரிகைகள், நடுநிலைஏடுகள் என்றுதங் களைச் சொல்லிக் கொள்கின்ற பத்திரிகைகள் வெளியிடாத தின் காரணம் என்ன? சூட்சுமம் என்ன? ரகசியம் என்ன? நடந்த பேரம்தான் என்ன?

இவ்வாறு கலைஞர் அவர்கள்செய்தியாளர்களுக்கு பேட்டி அளித் துள்ளார்.

(முரசொலி, 26.3.2014)

Read more: http://viduthalai.in/e-paper/77613.html#ixzz2x7Zj2yid

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க.வின் கேவலமான அரசியல்!


பா.ஜ.க.வின் கேவலமான அரசியல்!

வழி நெடுகிலும் கெஜ்ரிவால் மீது முட்டை, மை வீச்சு

வாரணாசி, மார்ச் 26- வார ணாசியில் ஆம் ஆத்மி கட்சி யின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் மீது முட்டை, மை வீசப்பட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதிகளில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட அர்விந்த் கெஜ்ரி வால் முடிவு செய்துள்ளார். தொகுதி மக்களின் கருத்தை அறிந்து, இதற்கான அறி விப்பை வெளியிடுவதற்காக அவர் வாரணாசி சென்ற போது பாஜகவினர் கேவல மாக நடந்து கொண்டனர்.

டில்லியில் இருந்து புறப் படும் முன் அவர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், எனக்கு வெற்றி, தோல்வி முக்கியமில்லை. இந்த நாடு வெற்றி பெறவேண்டும். இதற் காக மோடியுடம், ராகுலும் தோற்கடிக்கப்பட வேண் டும். மோடியை போலவே வாரணா சிக்கு நானும் வெளி ஆள்தான் என்றார்.

டில்லியில் இருந்து தனது குடும்பத்தினருடன் சிவ கங்கா விரைவு ரயில் மூலம் செவ்வாய்க்கிழமை காலை வாரணாசிக்கு போய் சேர்ந் தார் கெஜ்ரிவால். இவருடன் ஆம் ஆத்மியின் மூத்த தலை வர் மணீஷ் சிசோதியா, கட் சியின் உ.பி. பொறுப்பாளர் சஞ்சய்சிங் வந்தனர்.

கங்கையில் நீராடிய கெஜ் ரிவால் அங் குள்ள காலபை ரவர் கோயிலில் வழிபட்டார். வாரணாசியின் புகழ்பெற்ற சிவன் கோயில், சங்கத் மோட்சன் உட்பட பல்வேறு கோயில்களுக்குச் சென்று தரிசனம் மற்றும் சிறப்பு பூஜை செய்தார்.

பாஜகவினர் கேவலம்

அவருக்கு வழிநெடுகி லும் பாஜகவினர் கூடிநின்று எதிர்ப்பு தெரிவித்தனர். கெஜ் ரிவால் ஒழிக,கெஜ்ரிவாலே திரும்பி போ என முழங் கினர். பலர் கறுப்புக் கொடி காட்டினர். கெஜ்ரிவால் பயணம் செய்த வாகனம் மீது கருப்பு மை வீசினர். ஒரு சமயத்தில் அவர் மீது அழுகிய முட்டை வீசப்பட்டது. இதி லிருந்து நூலிழையில் தப்பி னார் கெஜ்ரிவால். கெஜ்ரி வாலுக்கு எதிராக போராட் டம் நடத்தியவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டினர்.

வாரணாசியின் முஸ்லிம் தலைவர்களையும் கெஜ்ரி வால் சந்தித்தது, அந்த சமு தாயத்தினரின் வாக்குகளை யும் அவர் குறி வைத்துள்ள தாகக் கருதப்படுகிறது. இங்கு நடந்த பொதுக்கூட் டம் ஒன்றில், கெஜ்ரிவாலுக்கு முஸ்லிம் பிரமுகர் ஒருவர் தனது குல்லாவை அணிவித் தார். அதை ஏற்றுக்கொண்ட கேஜ்ரிவால் தனது ஆம் ஆத்மி தொப்பியை அவருக்கு அணிவித்தார். வாரணாசியில் கெஜ்ரிவாலுடன் சேர்த்து 6 முனைப் போட்டி நிலவு கிறது. காங்கிரஸ் இன்னும் வேட்பாளரை அறிவிக்க வில்லை.

ராகுல், மோடியை தோற்கடிப்போம்: கெஜ்ரிவால்

ராகுல் காந்தியையும், நரேந்திர மோடியையும் தோற்கடிப்பதுதான் எங்களின் முன்னுரிமைப் பணி என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப் பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறினார்.

வாரணாசியில் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டி யிடுவதை அறிவிக்கும் வகை யில், இங்குள்ள ராஜ்நாரா யண் பூங்கா மைதானத்தில் கெஜ்ரிவால் பேசினார். அவர் பேசுகையில், குஜராத் விவசாயிகளின் நிலங்களை அபகரித்து பல தொழிலதிபர் களுக்கு மிக மலிவான விலை யில் கொடுத்து வருகிறார் மோடி.

விவசாயிகளுக்குக் கிடைத்து வந்த பல மானி யங்கள் நிறுத்தப்பட்டு விட் டன. குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளாக 5,874 விவசாயி கள் தற்கொலை செய்துள்ள னர். குஜராத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆயிரக்கணக் கான சிறுதொழில் நிறுவனங் கள் மூடப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின் றன. இதைத்தான் வாரணாசி யிலும் செய்வார் மோடி. நேரடி அந்நிய முதலீடுகளை கொண்டு வருவதில் காங் கிரசை, பாஜகவும் ஆதரிக் கிறது. எனவே, இருவருக்குள் எந்த வித்தியாசமும் இல்லை என்றார் கெஜ்ரிவால். கெஜ்ரி வால் தனது உரையில் சமாஜ் வாதி கட்சி பற்றியோ, பகு ஜன் சமாஜ் கட்சி பற்றி எது வுமே குறிப்பிடவில்லை.

Read more: http://viduthalai.in/e-paper/77642.html#ixzz2x7aCMH2Y

தமிழ் ஓவியா said...


பக்தி காட்டும் ஒழுக்கம்! திருப்பதி கோவிலில் உண்டியல் எண்ணும்போது நகை திருட்டு


நகரி, மார்ச்.27-திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசூலாகும் உண்டியல் பணத்தை பறக்காமணி என்ற இடத்தில் தன்னார் வலர்கள் மற்றும் தேவஸ் தான ஊழியர்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். அவர்களைப் பறக்கும் படை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காணிக்கை எண்ணும் கண் காணிப்பு பணியை முடித் துக் கொண்டு சீனிவாசலு என்ற ஊழியர் வெளியே வந்தார்- அவரது ஆடை களைக் களைந்து சோதனை செய்தனர்.

அவரது நடவடிக்கை யில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் சீனிவாசலுவை வாயை திறந்து காண்பிக் கும்படி கூறினர். அப்போது ஊழியர் சீனிவாசலுவின் 2 தாடைக்குள்ளும் இரண்டு தங்க நகைகள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந் தது.

அதைத் தொடர்ந்து பறக்கும் படை அதிகாரி சீனிவாசலுவிடம் தீவிர விசாரணை நடத்தினார்.

அப்போது அவர் திருடி யதை ஒப்புக் கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த திருட்டை ஊழியர் சீனிவாசலு மட்டுமே செய் தாரா? அல்லது இந்த திருட் டில் மேலும் யாருக்காவது தொடர்பு உண்டா? என்பது குறித்தும் எத்தனை காலமாக இந்த திருட்டு நடந்து வரு கிறது என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/77660.html#ixzz2xDE6X1u3

தமிழ் ஓவியா said...


ஆட்சியின் சீர்திருத்தம்


ஆட்சியின் சமுதாய சீர்திருத்தப் பணியென்பது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் தகுதி யின்மை என்று சொல்லும்படியான எந்தத் தன்மையையும் ஒழித்து உச்சத் தகுதிக்கு அருகர்களாக ஆக்குவதையே முதல் பணியாகக் கொள்வதுதான்.
_ (விடுதலை, 24.1.1969)

Read more: http://viduthalai.in/page-2/77665.html#ixzz2xDJIwasP

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி. தலைமையில் கூட்டணியும் - தினமணியும்!

21.3.2014 நாளிட்ட தினமணி ஏட்டில், மாற்று அல்ல, மாற்றமும்கூட! என்ற தலைப்பில் தலையங்கம் ஒன்று தீட்டப்பட்டுள்ளது.

1962 ஆம் ஆண்டிலிருந்து இந்தத் தேர்தல்வரை தமிழ்நாட்டில் தேர்தலில் தேசியக் கட்சிகள் தலைமை தாங்கவில்லை; இப்பொழுதுதான் தேசியக் கட்சி யான பி.ஜே.பி. தலைமையில் ஓர் கூட்டணி ஏற்பட்டுள்ளது.

தேசியக் கட்சி தமிழ்நாட்டில் தலைமை தாங்காததால் தான் காவிரி நீர், முல்லைப் பெரியாறு போன்ற பிரச் சினைகளில் தமிழ்நாட்டுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாற்றையும் தினமணி வைத்துள்ளது.

இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட்டாகவேண்டும்; தமிழ்நாட்டில் இப்பொழுதைய தேர்தலில் பி.ஜே.பி. என்ற தேசியக் கட்சி தலைமை தாங்குவதாக தினமணி கூறியிருப்பது கடைந்தெடுத்த நகைச்சுவையாகும்.

ஒரு கட்சி தலைமை தாங்குகிறது என்றால், அந்தக் கட்சிதான் அதிகமான இடங்களில் போட்டிப் போடுவதாக இருக்கவேண்டும்.

ஆனால், தமிழ்நாட்டில் பி.ஜே.பி.யின் நிலை என்ன? முதல் இடத்தில் தே.மு.தி.க. என்ற மாநிலக் கட்சிதான் இருக் கிறது. மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்ள தேசிய கட்சியான பி.ஜே.பி. என்ன பாடுபட்டது - மாநிலக் கட்சிகளின் தயவுக்காக எப்படியெல்லாம் ஊசி முனையில் தவம் இருந்தது என்பது நாடே அறிந்த உண்மை! இதனைத் தினமணி திரையிட்டு மறைக்கும் தந்திரத்தை ரசிக்க முடிகிறது.

தேசியக் கட்சி தலைமை தாங்கவில்லை என்று சொல் லுவதற்குமுன் தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டில் ஏன் தலை யெடுக்கவில்லை என்பதைப்பற்றிச் சிந்திக்கவேண்டாமா?

தமிழ், தமிழன், தமிழ்நாட்டு உரிமை இவற்றில் பற்று வைப்பது - இவற்றுக்காகப் பாடுபடுவது - இந்தப் பிரச்சினைகளுக்குக் குந்தகம் ஏற்படும்பொழுது அதனை எதிர்த்துக் குரல் கொடுப்பது, போராடுவது - தேசியத்துக்கு விரோதமானது என்ற சிந்தனை இருக்குமட்டும் தமிழ் நாட்டில் காங்கிரஸ் மட்டுமல்ல - எந்தத் தேசியக் கட்சியும் கால் ஊன்ற முடியாது. காரணம், தமிழ் மண் தந்தை பெரி யார் அவர்களாலும், திராவிட இயக்கத்தாலும் மேலே கூறப் பட்டுள்ள உணர்வுகளால் செழுமைப்படுத்தப்பட்ட மண்!

இப்பொழுதுகூட பி.ஜே.பி. என்ற தேசிய கட்சி - தேர்தலில் போட்டியிட தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலக் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தாலும்கூட - இது ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணியாகத்தான் இருக்க முடியும்.

ஈழத் தமிழர் பிரச்சினைபற்றி ம.தி.மு.க. பொதுச்செய லாளர் ஒன்று கூறுகிறார் என்றால், மறுநாளே பி.ஜே.பி. சார்பில் உடனே மறுக்கப்படுகிறது - இந்த நிலையில் உள்ள வர்கள் எத்தனை நாள்களுக்கு கைகோத்து நிற்பார்கள்? தவளை - எலி கால்களைக் கட்டிக்கொண்டு குளத்தில் குதித்த கதைதானே!

காங்கிரசின் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்த தி.மு.க. ஏன் விலக நேரிட்டது? ஈழத் தமிழர்ப் பிரச்சி னையில் காங்கிரஸ் நடந்துகொள்ளும் எதிர்மறையான அணுகுமுறைதானே அதற்குக் காரணம்!

இன்னொன்றையும் இதில் கவனிக்கவேண்டிய ஒன்று; தேசியக் கட்சிகள் என்பவை மாநிலத்தில் தங்கள் கட்சி ஆட்சியில் இருந்தால் ஒரு அணுகுமுறை - வேறு கட்சி ஆட்சியில் இருந்தால் மாறுபட்ட அணுகுமுறை கொண் டவை என்பதைத் தினமணி ஏற்றுக் கொண்டிருக்கிறது. இது எந்த வகை நேர்மையைச் சார்ந்தது?

இந்தத் தன்மையில் உள்ள தேசியக் கட்சிகள் மாநிலத் தில் தலைமை தாங்கவேண்டும் என்று கூறுவது நல்லெண் ணத்தின் அடிப்படையில் இல்லை என்பது நிதர்சனமாகும்.

சந்தடி சாக்கில் கந்தப்பொடி தூவுவது என்பதுபோல தினமணி தலையங்கம் எடுத்த எடுப்பிலேயே ஒன்றைக் கூறுகிறது.

தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தலைமையில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., இந்திய ஜனநாயகக் கட்சி, புதுவை என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட ஏழு கட்சிகள் உள்ளடக்கிய கூட்டணி அமைந்திருப்பது தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சரித்திர நிகழ்வு என்று தினமணி குறிப்பிட்டுள்ளது.

இப்படி ஒரு கூட்டணி அமைந்து, அது தொடர்ந்தால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் கால் ஊன்ற முடியாத பி.ஜே.பி.,க்குப் பலன் கொடுக்கும் என்ற தந்திரத்தில் கூறப்பட்ட கருத்து இது.

பல நேரங்களில் பி.ஜே.பி.யுடன் கூட்டணி சேர்ந்த தமிழ்நாட்டுக் கட்சிகள், அடுத்த கட்டத்தில் அதனால் பலன் இல்லை என்று கைவிடப்பட்டதுண்டு; அதன் காரணமாக கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பி.ஜே.பி. போட்டி யிட்ட அத்தனை இடங்களிலும் கட்டிய பணத்தைக்கூட (டெபாசிட்) திரும்பப் பெறவில்லை என்ற உண்மையைத் தெரிந்துகொண்டால், தினமணி எழுதிய தலையங்கத்தின் தந்திரமும், உள்நோக்கமும் என்ன என்பது எளிதில் விளங்கிவிடுமே!

Read more: http://viduthalai.in/page-2/77666.html#ixzz2xDJSKYZ9

தமிழ் ஓவியா said...


நம் கடமை


நாளைய ஆட்சியாளர்களாக மாறத் துடிக்கும் ஆர்எஸ்எஸ் பாஜக வகையறா கா(லி)விக் கும்பலின் இப்போதைய நடவடிக்கைகளை பார்த்தாலே போதும். நாட்டை இவர்களிடம் ஒப்படைத்தால் என்ன நடக்குமென்று.

போன வாரத்தில் பீகாரில் சத்ருகன் சின்கா என்னும் இந்தித்திரைப்பட நடிகர் பாஜக சார்பில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்யச் சென்ற பொழுது, எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவருக்கு கருப்புக்கொடி காட்டிய இளைஞர்களை நையப்புடைத்து மிதிமிதியென்று மிதித்து எறிந்ததை பாஜக ஆதரவு செய்தித் தாள் கள் கூட மறைக்க முடியாமல் அந்தக் கொடுமையை நிழற்படமாக வெளியிட்டன.

இதே போல் வாரணாசியில் நரேந்திர மோ(ச)டியை எதிர்த்துபோட்டியிட முடிவு செய்து வந்திருந்த ஆம் ஆத்மி கட்சி அமைப்பாளர் அர்விந்த கெஜ்ரிவால் அவர்களை இதே காவி ஆதரவுக்கூட்டம் அழுகிய முட்டைகளையும், கறுப்பு மய்யையும் வீசி தங்களது வழக்கமான இயல்பை வெளிப்படுத்தியுள்ளன.

ஜனநாயக நாட்டில் பொது வாழ்க்கை யில் ஈடுபடுபவர்கள், நம்முடைய கொள் கைக்கு எதிரானவர்களாக இருந்தாலும் சகிப்புத்தன்மையுடன் மதிக்க கற்றிருக்க வேண்டும்.

ஆனால் இவர்களுக்கு வழி காட்ட வேண்டியவர்களே மசூதியை இடிப் பதற்கும் மதக்கலவரங்களை தூண்டி நடத் துவதற்கு காரணமானவர்களாக இருக்கும் பொழுது அவர்களை தலைவர்களாக ஏற்று பின்பற்றும் தொண்டர்கள் எப்படியிருப் பார்கள்?

காவி வேடதாரிகளின் 2 ஆம் கட்ட, 3 ஆம் கட்டத் தலைவர்கள் செய்தி ஊடகங் களின் விவாத அரங்குகளில் பங்கேற்கும் பொழுது மாற்றுக்கருத்து கொண்டவர்களை பேசவிடாமல் தாங்களே ஆக்கிரமித்து கொண்டு கத்துவதும் மற்றவர்கள் மதிக்கும் தலைவர்களை, சிந்தனையாளர்களைப் பற்றி தரம் தாழ்ந்த சொற்களைப் பயன்படுத்தும் இவர்கள் ஒழுக்கம் என்றால் என்னவென்று அறியாதவர்களோ என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது.

தங்களை எதிர்த்து யாரும், எதுவும் சொல்லக்கூடாது, செய்யக்கூடாது, அப்படிச் செய்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று அடாவடித்தனம் செய் வது கடைந்தெடுத்த பாசிசம் அல்லவா?

எதிர்கால இந்தியாவை வழிநடத்தும் ஆட்சி அதிகாரத்தை இவர்களிடம் ஒப் படைத்தால் நாடு என்னென்ன அவலங் களைச் சந்திக்க நேரிடும் என்பதை வாக் காளர்கள் நன்கு உணர்ந்து தங்களின் தேர்தல் கடமையை ஆற்றிடவேண்டும். தங்களிடம் உள்ள வலிமையான வாக்குச் சீட்டை வீண் ஆடம்பரங்களுக்கும், விளம் பரங்களுக்கும், மெய்போல் தோன்றிடும் மிகைப்படுத்தப்பட்ட பொய்களுக்கும் மதவெறியைத் தூண்டும் வீண் உணர்ச்சி களுக்கும் மயங்கித் தவறாகப் பயன் படுத்தாமல், நாட்டின் நாளைய வளர்ச்சிக்கு உறுதுணையாக சமூகநீதியை, உண்மை யான மதச்சார்பின்மையை கட்டிக்காப் பாற்றும் அணிக்கு ஆதரவாக தவறாது பயன்படுத்துங்கள்.

- இசையின்பன்,
சென்னை

Read more: http://viduthalai.in/page-2/77669.html#ixzz2xDJwMGLI

தமிழ் ஓவியா said...

மதத்தீக்கு பலியான நாத்திக வீரன் கியடானோ புருனோ

பிப்ரவரி 17ஆம் தேதி 1600ஆம் ஆண்டு சோகம் தோய்ந்த இரவு. அன்று தான் இத்தாலியின் தலை சிறந்த தத்துவஞானியான புருனோ மதக் கிறுக்கர்களால் எரித்துக் கொல்லப்பட்டார். காம்ப் டீ பியோரி என்ற நாற்சந்தி வாடிகன் நகரிலுள்ளது.

இந்த இடத்தில் புருனோ உயிரோடு துடிக்கத் துடிக்க எரித்துக் கொல்லப்பட்டான். போப்பின் ரோம் நாட்டு நீதிமன்றம் புருனோ ஒரு மத விரோதி; அவன் நாத்திகன் என்று கூறி இந்தக் கடுமையான தண்டனையை அந்த மாவீரனுக்கு வழங்கியது.

அண்டம் நுண்ணிய பல அழிக்க முடியாத அணுக்களால் ஆனது. இதற்கு எல்லைகள் கிடையாது. கண்ணுக்குத் தெரியாத அணுக்கள் வெவ்வேறு புது அணுக்களாக உருவெடுக்கின்றன. பொருளும், அசைவு சக்தியும் அண்டத்தில் இருக்கின்றன என்ற விஞ்ஞான உண்மையை அன்றே கண்டறிந்து கூறினார் புருனோ.

பைபிளை எக்காரணத்தாலும் விஞ்ஞான நூல் என்று கருதமுடியாது. வால் நட்சத்திரங்கள் மனித இனத்தின் மேலுள்ள கோபத்தை வெளிப்படுத்த கடவுளின் ஆயுதங்களில் ஒன்று என்று கூறிய மத குருமார்களின் கருத்து மூடநம்பிக்கை என்று கூறி மக்களிடையே விளக்கினார். இயற்கையின் உண்மைகளை பகுத்தறிவு கொண்டு ஆராய்வதால் ஏற்படுவது தான் உண்மையான அறிவு என்றார் அவர்.

இயேசுநாதரின் உடலும் இரத்தமும் தண்ணீரிலிருந்து உருவாக்கப்பட்டது என்பதும் மோட்சம், நரகம் உண்டு என்பதும் பொய் என்று புருனோ கூறுகிறார். இது கடவுளுக்கு விரோதமானது என்பதுதான் அவர்மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாகும்.

மன்னிப்புக் கேட்டு கருத்தை மாற்றிக் கொள்ள மறுத்து, இறுதிவரை நாத்திகராக இருந்து, நாத்திக கொள்கை களுக்காக உயிர்த் தியாகம் செய்த புருனோவை நாத்திக உலகம் என்றும் நினைவில் கொண்டிருக்கும்.

Read more: http://viduthalai.in/page-7/77742.html#ixzz2xJ1Nb4oD

தமிழ் ஓவியா said...

காண்டேகர் பேசுகிறார்!

உலகம் வெள்ளத்தோடு கூடவே ஓடிக்கொண்டு போக வேண்டியதுதான். அந்த வெள்ளம் அதை எங்கோ கொண்டு போய் விட்டாலும் சரியே. உடை, கல்வி, விவாகம், உணவு எந்த விஷயத்திலும் பார்த்தாலும் அதிகமான மக்கள் வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டவர்கள் போலவே நடந்து கொள்கிறார்கள். வெள்ளத்துக்கு எதிர் திசையில் நீந்துவதுதான் வாழ்க்கை என்ற கற்பனை அவர்களுக்குப் புரிவது கூட இல்லை.

மனிதர்கள் கிழவர்கள் ஆகி விட்டால் வேதாந்தத்தை விரும்புகிறார்கள். வேசியும், கிழவி ஆகிவிட்டால் வேதாந்தத்தைப் பற்றி பேச ஆவல் வருகிறது.

நாணயம், ஒழுக்கம், அன்பு, பக்தி, மனுஷத்தனம் இவை யாவும் புத்தகத்திலுள்ள சொற்கள். வாழ்க்கையில் இவை யாருடைய அநுபவத்திற்கும் வருவதில்லை.

Read more: http://viduthalai.in/page-7/77742.html#ixzz2xJ1UMnoa

தமிழ் ஓவியா said...


இந்து மதம் பற்றி...!


இந்தியாவில் ஜைன மதமும் புத்த மதமும் தோன்றிய பின்பும் கூட வேதங்களில் வேரூன்றிய புரோகித மதம் அடியோடு அழிந்து விடவில்லை. சிறிது காலத்திற்கு அது அரசர்களின் ஆதரவை இழந்த போதிலும், ஆட்சியாளரின் கவர்ச்சியை இழந்து விடவில்லை. பழைய கடவுள்களை மறப்பதும், புதிய கடவுள்களைத் தோற்றுவிப்பதும், விசித்திரமான வழிபாட்டு முறைகளை உண்டாக்குவதும் ஒவ்வொரு நூற்றாண்டிலும் மாறிக் கொண்டே வந்தன.

ஆயினும், இந்து மதத்தின் ஜாதி அமைப்பு முறையும், புரோகிதத் தன்மையும் சிறது கூட மாறவே இல்லை. இந்து மதத்தைப் பற்றி விளக்குவது கிட்டத்தட்ட முடியாத காரியம் உண்மையில் அதை ஒரு மதம் என்று சொல்வதை விட மத - சமுதாய அமைப்பு என்று சொல்வதே பொருத் தமாகும்.

இந்த மதத்தில் மதக் கோட்பாடுகள், தத்துவங்கள், வழிபாட்டு முறைகள் ஆகியவை மலிந்திருந்தாலும், சாதி அமைப்பு முறையே மேலோங்கி நிற்கிறது. பண்டைய மத - சமுதாயச் சட்டங்கள் கடினமாக இறுகி விட்டதால் இன்று கூட அவை அழிக்க முடியாதவைகளாக இருக்கின்றன.

புத்த மதத்தின் செல்வாக்கு உச்ச கட்டத்தில் இருந்த போது தான் மனு தர்ம சட்டத் தொகுப்புகள் பல உண்டாக்கப்பட்டன. இந்து மத நம்பிக்கையிலிருந்து யாரும் விலகிச் செல்லாமலிருக்க சட்டமெனும் சுவர் எழுப்பப்பட்டது. இந்து மதத்தின் அடிப்படையே ஜாதி வேறுபாடுகளாக இருந்ததால், சட்டம் இயற்றியவர்கள் அந்த ஜாதி வேறுபாடுகள் அழியாமல் இருப்பதில் அதிக கவனம் செலுத்தினார்கள்.

உலகத்தின் நன்மைக்காக பார்ப்பனர்கள் உயர்ந் தவர்கள் என்றும் பாட்டாளிகள் தாழ்ந்தவர்கள் என்றும் சொர்க்கத்தின் கட்டளையாக நிலை நாட்டப்பட்டது. பிறப்பிலிருந்து இறப்பு வரை, ஒரு மனிதனுடைய சாதி அவனுடைய மூச்சைப் போல விட்டு விலகாமல் இருந்தது மரணத்திற்கு பின் மண்ணிலே புதைக்கப்படும் போது மூச்சு அவனை விட்டு விலகிய போதிலும், ஜாதி அவனை விட்டுப் பிரியவே இல்லை.

ஆதாரம்: லூயி ஃப்ரவுன் எழுதிய திஸ் பிலீவிங் ஒர்ல்ட் (இந்த நம்பும் உலகம்)
தகவல்: வீ.து.சச்சிதானந்தன்

Read more: http://viduthalai.in/page-7/77741.html#ixzz2xJ1cNiIC

தமிழ் ஓவியா said...

கேரளாவில் ஒரு ஆணை

கேரளாவில் அச்சுத மேனன் முதல்வராக இருந்த பொழுது (அக்டோபர் 74) கீழ்க்காணும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. மதச்சார்பற்ற கொள்கைக்கு விரோதமாக மத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதினால் வகுப்பு கலவரங்களுக்கு வித்திடக் கூடிய சூழ்நிலை உருவாகிறது.



எனவே, இந்த மத நிகழ்ச்சிகளில் அரசு ஊழியர்கள் கலந்து கொள்வது தடை செய்யப்படுகிறது. இந்த உத்திரவு அரசாங்கப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கும் பொருந்தும்

Read more: http://viduthalai.in/page-7/77741.html#ixzz2xJ1nMBZ3

தமிழ் ஓவியா said...

பூனைச் சகுனம்!

மூடநம்பிக்கைகளில் குரங்குப் பிடியாக இருப்பவர் சாம்பசிவம் அவர் வீட்டை விட்டு எங்கேனும் வெளியே புறப்பட்டு விட்டாரென்றால், பூனைச் சகுனம் பார்த்துக் கொண்டுதான் போவார்.



வீட்டு வாசலை விட்டு இறங்கும்போதோ, தெருவில் நடந்து செல்லும் போதோ பூனை குறுக்கே போய்விட்டால் போதும் - அடுத்த அடி வைக்காமல் - போகவேண்டிய காரியத்துக்குப் போகாமல் அப்படியே வீடு திரும்பி விடுவார். மறுநாள்தான் குறிப்பிட்ட காரியத்திற்குப் போவார்.

அடுத்த வாரம் தீபாவளி, நமது குடும்பத்தில் உள்ளவர்களுக்கும், தலைதீபாவளிக்கு வரும் மாப்பிள் ளைகளுக்கும், மகளுக்கும் புத்தாடைகள் எடுத்துக் கொடுக்க வேண்டும். சாம்பசிவத்தின் கையில் சல்லிக் காசுக் கூட இல்லை. தமது நண்பரின் ஜவுளிக்கடையில் கடன் சொல்லி, துணிமணிகள் எடுத்து வரலாமென்று கடையை நோக்கிச் செல்கிறார் சாம்பசிவம்.

கடனுக்கு ஜவுளி கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பதை பதைப்பு அவர் மனத்தில். இந்த லட்சணத்தில் பூனை வேறு வந்து குறுக்கே பாய்ந்து விடுகிறதோ என்ற பயமும் சேர்ந்து விட, துவண்ட நடையுடன் சென்று கொண்டி ருக்கிறார்.

சீ! சனியன்! பயந்தபடியே நடந்து விட்டது - கறுத்த பூனை - பாவம்! சாம்பசிவத்தின் காலுக்கு முன்னால் எவ்வளவு இளக்காரமாக குறுக்கே பாய்ந்து செல்கிறது.... சாம்பசிவத்துக்கு மின்சாரம் தாக்கியது போன்றிருந்தது!

சிலையாக நின்றவரின் கண்ணுக்கு முன்னால் - பத்தடி தூரத்தில் தெருவுக்கு நடுவே பளிச்சிட்டுத் தெரிகிறதே - அது என்ன? நூறு ரூபாய் முழுநோட்டு! யாரோ ஒரு துரதிருஷ்டக்காரன் போட்டுவிட்டுப் போனது போலிருக்கு! அவர் மனதில் ராக்கெட் வேகத்தில் ஒரு போராட்டம் ஒரு வாரத்தில் தீபாவளிப் பண்டிகை... துணிமணிப் பிரச்சினை...

அடுத்து மின்னல் போன்று மனதில் ஒரு உந்துதல் பூனை குறுக்கிட்டால் ஒரு அடிகூட எடுத்து வைக்காத சாம்பசிவம், இப்போது பல அடிகள் எடுத்து வைத்துவிட்டார் - அந்த நூறு ரூபாய் நோட்டை நோக்கி!

- எஸ்.எம்.தங்கவேலன், அகமதாபாத் - 5

Read more: http://viduthalai.in/page-7/77741.html#ixzz2xJ1xnVZv

தமிழ் ஓவியா said...


எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் பொதுவுடைமை சிந்தனையாளர் தி.க.சி மறைவு


தமிழ்கூறும் நல் லுகத்தில் எழுத் தாளர் தி.க.சி என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் தி.க.சிவசங்கரன். தி.க.சி என இலக் கிய வட்டாரங் களில் அறியப் பட்ட இலக்கிய விமர்சகரான தி.க. சிவ சங்கரன் 25ஆம் தேதி இரவு திருநெல் வேலியில் மறைந்தார்.

அவருக்கு வயது 89. கடந்த மாத இறுதியில் நுரையீரல் பாதிக்கப்பட்டு, பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்கு அனுமதிக் கப்பட்ட அவருக்கு கடந்த சில நாட் களுக்கு முன்பு புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. உடல்நிலை மோச மடைந்ததையடுத்து திருநெல்வேலியில் உள்ள அவரது பூர்வீக இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் மறைந்தார்.

1945லிருந்து 64ஆம் ஆண்டுவரை வங்கி ஊழியராகப் பணியாற்றிய அவர், பிறகு சோவியத் கலாச்சார மய்யத்தில் பணியாற்றியபின்னர் ஓய்வுபெற்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இலக் கிய இதழான தாமரையின் ஆசிரியராக பணியாற்றியவர். இலக்கியச் செயல் பாடுகளில் பொதுவுடைமை, முற் போக்குக் கொள் கைகளை வெளிப்படுத்தி வந்தவர். இளம் எழுத்தாளர்களுக்கு அவர்களின் படைப்புகளைப்பற்றி தொடர்ந்து கடிதங்கள் எழுதி ஊக்குவித்து வந்தவர். பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் குறித்த விமர்சனங்களையும், கருத்து களையும் தொடர்ந்து பதிவு செய்து வந்துள்ளவர். கதை, கவிதை, நாடகம், இலக்கிய விமர்சனம், திறனாய்வு எனப் பல தளங்களில் செயல்பட்டுவந்தவர். தி.க.சியின் விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் கொண்டு இவரது நூலுக்கு 2000-ஆம்ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
1925ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி திருநெல்வேலியில் பிறந்த திகசிக்கு கணபதி, வண்ணதாசன் என்கிற கல்யாண சுந்தரம், சேது, ஜெயலட்சுமி, பர்வத குமாரி, கவுரி ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.

Read more: http://viduthalai.in/page2/77757.html#ixzz2xP25oTPj

தமிழ் ஓவியா said...


சாவில் கொட்டு முழக்கம் - ஏன்?

பகுத்தறிவுக் களஞ்சியம் - பகுதியில் (விடுதலை, திருச்சிப் பதிப்பு 15.3.2014) சாவில் கொட்டு ஏன்? என்னும் செய்தியைப் படித்தேன். மனிதன் இறந்தவுடன் நம் நாட்டில் மேளம், தாரை, தப்பட்டை முழக்கம் செய்வத ஒரு மூடநம்பிக்கையல்ல. சமண, பௌத்த சமயங்கள் சார்ந்த குருமார்கள் இறப்பு என்னும் வீடு பேறு அடைந்ததால், அவர்கள் உடலை கொட்டு முழங்கக் கொண்டு சென்று, நல்லடக்கம் செய்ய வேண்டும் என்பது அச்சமயங்களின் மரபாகும்.

துறவறம் மேற்கொண்டவர்களுக்கான இம்மரபை, இச்சமயங்கள் சார்ந்த இல்லறத்தாரும் பின்பற்றலாயினர். இதன் அடையாளமாகவே மனிதன் இறந்தவுடன் கொட்டு முழக்கம் பின்பற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், இம்மரபு இளம் வயதினர் இறப்புகளிலும், அம்மை நோய் கொண்டோர் இறப்புகளிலும், பின்பற்றப்படுவதில்லை என்பது உணரத்தக்கதாகும். அம்மை நோயால் இறந்தவர்களுக்கான இறுதிச் சடங்குகளின்போது நெருங்கிய உறவினர்களுக்கும் சொல்லி விடுவதில்லை. அம்மை நோய், ஒரு தொற்று நோய் என்னும் அறிவியல் அடிப்படையே இதற்குக் காரணமாகும்.

தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து சாதனங்கள் இல்லாத அக்காலக் கட்டத்தில், இறப்பு நிகழ்வின் அறிவிப்பாகவும், அது எந்த நிலையில் இருந்து வருகிறது என்பதை தொலை தூரத்தி லிருந்து வருபவர்களுக்குத் தெரிவிப்பதாகவும் அமைந்ததே இறப்பில் கொட்டு முழக்கம் செய்வதாகும். இதற்குக் கட்டி விட்ட கட்டுக் கதையே உடலிலிருந்து பிரிந்த ஆன்மா பக்கத்தில் உள்ள மரம் செடி கொடிகளில் ஒளிந்து இருக்கும் என்பதாகும். உயர் திணைக்குரியது இறப்பு, மரணம் இழவு என்னும் சொற்களாகும். அஃறிணைக்குரியது சாவு என்னும் சொல்லாகும். எழவு - என்பது வழூஉச் சொல், அதன் திருத்தச் சொல் இழவு என்பதாகும். - தி. அன்பழகன், திருச்சி

Read more: http://viduthalai.in/page2/77760.html#ixzz2xP2i0OL6

தமிழ் ஓவியா said...


மை...தா - எச்சரிக்கை

மைதாவைப் பயன்படுத்தாதீர்! குறிப்பாக முக்கிய பரோட்டா என்பது மைதா இல் லாமல் இல்லை. தொடர்ந்து சாப்பிட்டால் இதயநோய் என்றெல்லாம் எச்சரிக்கை வெளி வந்து கொண்டே இருக்கின்றது.

மைதாவில் கொழுப்புச் சத்து அதிகம் இருப்பதால் பன்றிகளுக்கும், வண்டி இழுக்கும் குதிரைகளுக்கும் உணவாகக் கொடுக்கப்பட்டது. காலப் போக்கில் இதைப் பயன்படுத்தி ரொட்டி தயாரித்து மனிதர்களும் சாப்பிட ஆரம்பித்து விட் டனர்.

Read more: http://viduthalai.in/page2/77758.html#ixzz2xP2sNKdm

தமிழ் ஓவியா said...


அரசு அலுவலகங்களில் மதப் பிரார்த்தனை தடைசெய்து நீதிமன்றம் உத்தரவு


மேரிலாண்ட் நீதிமன்றத்தில் அமெ ரிக்க மனிதநேய அமைப்பு சார்பில் நீதிமன்றத்தில் அரசும், மதமும் தனித்தே இருக்க வேண்டும் என்றும், அரசு நிகழ்ச்சிகளில் நாட்டின் அரசு வாரியக் கூட்டங்களில் இயேசு கிறிஸ்து அல்லது கர்த்தர் என்று பிரார்த்தனை இடம்பெறச் செய்வதற்கு அனுமதி அளித்துள்ளதானது நாட்டின் அரசியலமைப்பின் முதல் விதியை மீறுவதாகும் என்று வழக்கு தொடுத்துள்ளது. இவ்வழக்கில் நீதிபதி அரசு அலுவலகங்களில் பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்த தடைவிதித்து தீர்ப்பளித்துள்ளார்.
அமெரிக்க மனிதநேய அமைப்பின் சார்பில் அதன் வழக்கறிஞர் மோனிகா மில்லர் இதுகுறித்து கூறும்போது, அரசு அலுவலர்கள் அடிக்கடி அரசுக் கூட்டங் களில் இயேசு அல்லது கர்த்தரை அழைப் பது, சட்டத்துக்குட்பட்டு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நடத்தப்படலாம் என் பதை சாதகமாகக் கொண்டு, அரசு அலு வலகக் கூட்டங்களில் பிரார்த்தனை நடத் துவது அரசியலமைப்பை மீறுவதாகும். கிறிஸ்துவர் அல்லாதவர்கள் இதுபோன்ற அயோக்கியத்தனமான பிரார்த்தனைக் கூட்டங்களிலிருந்து விலகி இருக்க வேண்டி உள்ளது. மதத்துக்கு வெளியே இருப்பவர்களாக நடத்தப்படுவது தம் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுவதாக எண்ண வேண்டியுள்ளது என்றார்.

மேரிலாண்ட் மாவட்ட நீதிபதி உத்தரவில், கேரல் கவுண்டி பகுதி அலு வலர்கள் கூட்டங்கள் நடைபெறும்போது கூட்டத் தொடக்கத்தின்போது, குறிப்பிட்ட கடவுள் பெயரைச் சொல்லி அழைப்பது, மத நம்பிக்கையின்மீதான செயல்கள், நம்பிக்கை என்று சொல்லி நடைபெறும் பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்துவதி லிருந்தும் மற்றும் அதில் பங்கேற்பதி லிருந்தும் அரசு அலுவலர்கள் தடை செய்யப்படுகிறார்கள். தொடக்க நிகழ்வு களில் வேண்டுமானால் அயோக்கித்தன மில்லாத கடவுளை அழைத்து கூட்டத் தைத் தொடரலாம் என்று உத்தரவிட் டுள்ளார்.

அப்பிக்னானி மனிதநேய சட்ட மய் யத்தின் சட்டப்பிரிவு இயக்குநர் டேவிட் நியோஸ் கூறும்போது, அரசும், மதமும் பிரிந்தே இருக்க வேண்டும் என்பதில் இது மிகப்பெரிய வெற்றியாகும் என்றார். பொது நிறுவனக் கூட்டங்களில் அயோக் கியத்தனமான கடவுளை அழைப்பது கூடாது என்பதை நாட்டில் அப்பட்டமாக உடைத்து மீறிக்கொண்டுள்ளார்கள் என்று கூறினார்.

கேரல் கவுன்டி அலுவலர்கள் மூவர் அலுவலகக் கூட்டங்களில் பிரார்த்தனை குறித்து கொடுத்த முறையீட்டின்பேரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே அமெரிக்க மனித நேய அமைப்பு கேரல் கவுன்டி ஆணையர்களுக்கு பிரார்த்தனை குறித்த புகார்களை கடிதம்மூலம் எழுதி அனுப்பி உள்ளது. கடந்த ஆண்டு அமைப்பின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதத்தில் வழக்கின் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதேபோன்ற வழக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கிரீஸ் நகரத் திலும் இதுபோன்ற வழக்கில் கடந்த ஆண்டில் வாதங்கள் முடிவுற்றுள்ளன. இந்த நிலையில்தான், மேரிலாண்ட் நீதிபதி உத்தரவு வந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

(http://americanhumanist.org/news/details/2014-03-christian-prayers-at-carroll-county-meetings-must-en)

Read more: http://viduthalai.in/page3/77762.html#ixzz2xP39IRPL

தமிழ் ஓவியா said...


73ஆம் இடத்தில் இந்தியா!



இண்டர் - நாடாளுமன்ற யூனியன் மற்றும் அய்.நா. பெண்கள் அமைப்பு ஆகியவை இணைந்து சர்வதேச நாடுகளில் நாடாளுமன்றத்தில் பெண் கள் பங்கு குறித்த ஆய்வு மேற் கொண்டனர். அதில், இந்தியாவுக்கு 73ஆவது இடம் கிடைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் எம்.பி.கள் அல்லது அமைச்சர்களாக 9.9 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள் இருந்துள்ளனர்.

தற்போது இந்தியாவில் மத்திய அரசில் 43 கேபின்ட் அமைச்சர்கள் உள்ளனர். அவர்களில் 4 பேர் மட்டுமே பெண்கள் அமைச்சர்களாக இருக் கின்றனர். தர வரிசை பட்டியலில் கெய்தி, ருவாண்டா, காங்கோ, ஜாம்பியா ஆகிய நாடுகளைவிட இந்தியா கீழ் மட்டத்தில் உள்ளது.

இந்தியாவை ஒப்பிடும்போது பாகிஸ்தான் நாடாளுமன்றம் மிகவும் கீழ் மட்டத்தில் உள்ளது.
பாகிஸ்தானில் உள்ள 17 கேபினட் அமைச்சர்களில் பெண் ஒருவர்கூட இல்லை. அதே போன்று சவுதி அரேபியா மற்றும் லெபனானிலும் பெண் அமைச்சர்கள் கிடையாது.

அதே நேரத்தில் இங்கிலாந்தில் 20 சதவீதமும் அமெரிக்காவில் 40 சத வீதமும் பெண் அமைச்சர்கள் உள் ளனர்.

Read more: http://viduthalai.in/page3/77763.html#ixzz2xP3WUQbd

தமிழ் ஓவியா said...


எம் குலக் கொழுந்து நீ

நாளொன்பது ஆண்டுகட்கு முன் - அந்த
நாளென்பது எதிரிகளின் காலம் நீ அன்று
அம்மாவிடம் பெற்றது பொறுப்பு அல்ல பெரு நெருப்பு . அது
அணைந்து போகாமல் இருப்பது கொள்கையோடு நீ
இணைந்து போவதால் தான் - எதிரிகள்
அணைத்து விடாமலிருக்க
அனைத்து தமிழரையும்
ஒன்றிணைத்து அவர்தம் நலம்
ஒன்றினையே நினைக்கிறாய் !

உனக்கு
இரண்டகம் செய்தவர்களும்
இரண்டு-அகம் கொண்டவர்களும்
பிழைத்துக் கொண்டார்கள் - ஆனால்
நிலைத்து நிற்கவில்லை !

உன்னை
ஒழிக்க நினைப்பவனும் ஒலிக்கச் சொல்லுவான்
தமிழர் தலைவர்
நீதானென்று !

ஆத்திரங் கொண்டு இருப்பவர் கூட உன்
சூத்திரங் கண்டு சுருங்கி போவார்கள்
உண்மை உணர்ந்து நெருங்குவார் - பின்னர்
உன்-மை எழுதும் சாசனம் தான்
தமிழர் உயர்ந்தமரும் ஆசனம் என்றுணருவார்.

தவறுகள் நடந்தால்
இடித்துரைக்கும் உன்னிடம்
படித்துறையின் ஆனைத் தலைமுதல்
படித்த-துரையின் ஆணையர் தலை வரை
உருளுமென்பது உண்மை.

அன்று
பெஞ்சில் ஏறிநின்று பேசி - இன்றெங்கள்
நெஞ்சில் நிறைந்தவன்.

பெரியவர் முதல்
வறியவர் வரை யாரையும்
எழுந்து வணங்கும் - எம்குல
கொழுந்து நீ !

தமிழர்மேல் நீ
தொடர்-பற்று வைத்ததால்தான்
தொடர்பற்று இருந்தோரெல்லாம்
திரும்பி உன்னிடம்
விரும்பி வருகிறாரகள் !

கழகத்தின்
விலாசம் கேட்டால் - நீ
விசாலமாய் எழுப்பிய கொள்கை
வளாகங்கள் கை காட்டும் !

அதற்காக நீ பட்ட கடனை
அடைத்து விட்டாய் ! உனக்கு
நாங்கள் பட்ட கடனை அடைக்க முடியாது !
உன் பாதை எமக்கு பெருமை
உன் உழைப்புக்கு முன்
எல்லாமே வெறுமை !

- பொறியாளர் த.சண்முக வடிவேல் பி.இ., தஞ்சாவூர்

Read more: http://viduthalai.in/page4/77764.html#ixzz2xP3wz9jO

தமிழ் ஓவியா said...


தமிழக தேர்தல் களத்தில் இரண்டு திருநங்கைகள்

அரசியல் கட்சிகள் பெரும் பான்மையாக வசிக்கும் சாதியி னரின் ஓட்டை பெற திட்டமிட்டு வேட்பாளரை தேர்ந்தெடுத்து நிறுத்தி வெற்றியை தங்கள் இலக்காக மாற்ற திட்டமிட்டுக் கொண்டு களமிறங்கி பணியாற்றி வருகின்றனர். இதற்கு மாற்றாக சமூக ஆர்வலர்கள் தேர்தலில் தங்களின் பங்கை வலியுறுத்தும் வகையில் வேட்பாளர்களாக களமிறங்கி வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் அய் ஏ எஸ் அதிகாரிகள், தொழில் நிறுவன தலைவர்கள் என பிரபலமான முகமாக தேர்தலில் இறங்குகின் றனர்.

இவர்களில் சிலரை தேசிய அரசியல் கட்சிகள் தங்கள் வசம் இழுத்து தங்களின் வேட்பாளராக நிறுத்தி விடுகிறது உதாரணத்திற்கு நந்தன் நீலகேணி (காங்) வி.கே.சிங் (பாரதீய ஜனதா) போன்றவர் களைக்கூறலாம்.

இவர்களின் வரிசையில் தற்போது தமிழகத்தில் இரண்டு திருநங்கைகள் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.

திருநங்கைகள் தேர்தல் களம் என்பது புதிதல்ல, 1967- முதல்முதலாக மராட்டிய மாநிலம் தானேமாவட்டத்தில் பீவண்டி சட்ட மன்றத்தொகுதியில் திருநங்கை ஒருவர் போட்டி யிட்டார். சுயேட்சையாக போட்டி இட்ட அவருக்கு அதிக ஆதரவும் இருந்தது, இருப்பினும் காங் கிரஸ்கட்சியிடம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும் வாய்ப்பை இழந்தார்.

அதன் பிறகு நகர்மன்ற தேர்தலில் இந்தியாமுழுவதும் துணிச்ச லுடன் பல திருநங்கைகள் களமிறங்கினர்.

முதல் முதலாக 1987-ல் மத்திய பிரதேசம் குவாலியர் நகர்மன்றத்தேர்தலில் ஒரு திருநங்கை வெற்றிபெற்று திருநங்கைகளுக்கான அரசியல் பாதையை திறந்து வைத்தார்.

இவரின் வெற்றி நாடு முழுவதிலும் திருநங்கைகளுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த அதன் பிறகு நடந்த பல தேர்தல்களில் திருநங்கைகள் மத்திய பிரதேசம், ஹரியானா, இராஜஸ்தான், மராட்டியம், ஒரிசா, கேரளா, பிகார், போன்ற மாநிலங்களில் களமிறங்கினார்கள்.

2000-த்திற்கு பிறகு தமிழகத்திலும் திருநங்கைகள் போட்டியிட முன்வந்தார்கள், ஆனால் முக்கிய அரசியல் கட்சிகள் எதுவும் ஆதரவு தராத நிலை யிலும், திருநங்கைகள் பற்றிய விழிப்புணர்வு தமிழக மக்களிடம் சரிவர சென்று சேராமையாலும், பிரச் சாரத்தின் போதே கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளா னார்கள்.

கல்வி மற்றும் சமூக அக்கறையின் முன்னணியில் நிற்கும் மாநிலமான தமிழகத்தில் திருநங்கைகளுக்கு அரசியல் களத்தில் வரவேற்பு இல்லாததும், கல்வி யறிவு மற்றும் பொதுநலன் சார்ந்த பார்வையில் இன்றளவும் பிற்போக்குத் தனத்தை கடைப்பிடிக்கும் பல மாநிலங்களில் திருநங்கைகள் அரசியல் களமிறங்கி வெற்றி கரமாக செயல்படுவதும் வியப்பிற்குரிய மனநிலை மாற்றங்களாகும்.

16-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா முழுமைக் கும் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுவிட்டநிலையில், கடுமையான அரசியல் களப் போட்டிகளுக்கும் மத்தியில் தமிழகத்தில் இரண்டு திரு நங்கைகள் தேர்தல் களத்தில் போட்டியிட முடிவு செய் துள்ளனர். ஒருவர் பாரதி கண்ணம்மா, மற்றொருவர் சகோதரி என்ற சமூக தொண்டு நிறுவனத்தின் நிறுவனராக அனைவருக்கும் அறிமுகமான முகம் கல்கி சுப்பிர மணியன், கடந்த 7 வருடங்களாக இந்தியா முழுவதிலும் சென்று திருநங்கைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர்.

இந்திய திருநங்கைகள் சார்பாக அயல்நாடுகளுக்கு சென்று பல பொது நிகழ்ச்சியில் பங்கெடுத்தவர். கடந்த சட்டமன்றத்தேர்தலில் தி மு க சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். அப்போது அவர் போட்டியிட விரும்பிய தொகுதி கூட்டணிக்கு சென்று விட்டதால் அவரால் போட்டியிட முடிய வில்லை.

இம்முறை விழுப்புரம்(தனி) தொகுதியில் சுயேட்சைவேட்பாளராக களமிறங்குகிறார்.

மதுரையில் பாரதி கண்ணம்மா என்ற திருநங்கை சுயேட்சையாக களமிறங்கியுள்ளார்.

இவரும் திருநங் கைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதை தடுக்கும் பல போராட்டங்களை சமூகத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் முன்னின்று நடத்தி யுள்ளார்.

திருநங்கைகளுக்கான சுயதொழில் வேலை வாய்ப்பு மற்றும் அரசு உதவிகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சராம் செய்து வருகிறார். மதுரை தியாகராஜர் கல்லூரியில் பொருளா தாரத்தில் இளங்கலை முடித்து, மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் சமூகவியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இது தவிர கணினி அறிவி யலில் டிப்ளமோவும் பெற்றுள்ளார்.

மதுரை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட முன்வந்தவர்; அவரது வாக்காளர் அட்டையில் ஆண் என்று குறிப்பிடப்பட்டிருந்தது, ஆனால் வேட்பு மனுவில் திருநங்கை என்று குறிப்பிட்டிருந்ததால் அவரது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர். தனியார் வங்கியில் பகுதி நேர ஊழியராகப் பணிபுரிந்த இவர் தான் தேர்தலில் வெற்றி பெற்றால் தனது தொகுதி மக்களுக்கு தன் னலமற்ற சேவை செய்வேன் என்ற குறிக்கோளுடன் களத்தில் இறங்கியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page4/77765.html#ixzz2xP4Hhve3

தமிழ் ஓவியா said...


இந்த ஆண்டுக்கான மதச்சார்பின்மை விருது பெறுகிறார் மலாலா


அனைத்துப் பெண்களுக்கும் சமமான கல்வி அளிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்துவருபவர் பாகிஸ்தான் பள்ளிச் சிறுமியான மலாலா. இவர் பாகிஸ்தானில் பள்ளிமீது தாலிபான் தீவிரவாதிகள், மத அடிப்படைவாதிகள் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து உலகுக்கே அவர் குரல் ஒலிக்குமாறு செய்தவர். இதனால், துப்பாக்கிக் குண்டு அவர்மீது பாய்ந்தது. மலாலா குண்டுக் காயமடைந்தபோது, அவர் மதக் கருத்துக்களுக்கு எதிராக இருந்ததால்தான் சுடப்பட்டார் என்று தாலிபான்கள் தெரிவித்தனர். மயிரிழையில் உயிர் தப்பிய அவர் இலண்டனில் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்த பின்னரும் தன் கொள்கையிலிருந்து, பெண்களுக்கு கல்வியின் அவசியத்தைக் கூறுவதி லிருந்து பின்வாங்காமல் மத அடிப்படை வாதிகளுக்கு பெரும் சவாலாக இருக் கிறார்.

இதனால், 2013ஆம் ஆண்டு மலாலாவின் 16ஆம் ஆண்டு பிறந்த நாளான சூலை மாதம் 12ஆம் நாளை அய்.நா. சபை மலாலா தினம் என்றே அறிவித்தது. உலகெங்கும் மலாலா நாள் பெண்குழந்தைகள் கல்விக்கான நாளாக கொண்டாடப்படுகிறது. மலாலாவைக் கவுரவிக்கும் பொருட்டு, இங்கிலாந்தை மய்யமாகக் கொண்டு செயல்பட்டுவரும் தேசிய மதச் சார்பின்மைக்கான அமைப்பு மலாலாவை இந்த ஆண்டுக்கான மதச் சார்பின்மை விருதுக்கு உரியவராக அறிவித்து அவ் விருதை மலாலாவுக்கு அளிக்கிறது.

இதற்கான அறிவிப்பை தேசிய மதச் சார்பின்மைக்கான அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த விருது அளிக்கப் படுவதன் மூலம் பெண்களின் கல்வி விழிப்புணர்வு, மதச் சார்பின்மைக்கான விருதின் நோக்கத்தின்படி அனைவருக் கும் கல்வி, அதிலும் குறிப்பாக பெண் களுக்கு சம அளவிலான கல்வி அளிப்பது என்பதே மதச்சார்பின்மைக்குரிய ஒன் றாகக் கூறப்பட்டு, அதன்படி அவ்விருது மலாலாவுக்கு அளிக்கப்படுகிறது. இங்கிலாந்து பணத்தில் ஏழாயிரம் பவுண் டுக்கான தொகையினை விருதுடன் வழங்குகிறது. பெண்கள் திட்ட நிதியாக இது பயன்படுத்தப்பட உள்ளது. ஏனென் றால் நான் ஒரு பெண் என்கிற தலைப்பி லான பிரச்சாரம்மூலம் பெண்கள் தங்கள் உரிமைகளைப் பெறவும், சிறப்பாக வாழ வும், கல்வியே மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிற விழிப்புணர்வு ஏற்படுத்தப் படுகிறது.

மலாலாவுக்கு இவ்விருதைப் பரிந் துரைத்துள்ள தேசிய மதச் சார்பின்மைக் கான அமைப்பு பெண்கள் கல்விப் பிரச் சாரத்தை ஆதரித்ததால், முரட்டுத்தனமான இசுலாமிய மதவெறி அமைப்பின் வன் முறையை எதிர்கொண்டவர் மலாலா என்கிறது.

தேசிய மதச்சார்பின்மைக்கான அமைப் பின் தலைவர் டெர்ரி சாண்டர்சன் கூறும் போது, இங்கிலாந்தின் பெண்களுக்கான கல்வித் திட்டங்கள் குறித்த பிரச்சாரத்தில் மிகச்சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. ஆகவே, நாங்கள் இவ்விருதை வழங்க உற்சாகத்துடன் வழங்க முடிகிறது. கல்விக்காக அனைத்து தரப்பினரையும் கடும் எதிர்ப்புகளுக்கிடையே விழித் தெழச் செய்துள்ளார். மலாலாவின் நம்ப முடியாத எழுச்சியால் முக்கியமாக கவுரப் படுத்த வேண்டும். மதச்சார்பின்மை என்பது எப்போதுமே மதத்தின் பேரால் ஆதிக்கம், அடக்குமுறைகளைக் கடந்த, மனித உரிமைகளுக்கானதாகும். உலகெங் கும் ஒடுக்கப்பட்ட பெண்கள், சிறு பான்மையருக்கான நம்பிக்கையை ஏற் படுத்துவதே மதச் சார்பின்மையாகும் என்றார்.

மதசார்பின்மையை ஊக்கப்படுத்த 1937ல் ஜான் என்பவரால் இவ்விருது தோற்றுவிக்கப்பட்டது. தற்போது இவ் விருதை அவர் மகன் டெப்பி லாங்டன் தொடர்ந்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page4/77767.html#ixzz2xP4rwdY8

தமிழ் ஓவியா said...


சுவையான தகவல்கள்!

இறுதி மரியாதை செலுத்த முடியவில்லையா?

அயர்லாந்தில் நெருக்கமானவர் ஒருவர் உயிரிழந்தால் பல்வேறு காரணங் களால் இறுதி மரியாதை செலுத்த முடியா தவர்களுக்காக அயர்லாந்து நாட்டில் உலகின் எந்த மூலையில் இருப்பவரும் இறுதி மரியாதை செலுத்தவும், அடக்கம் செய்யுமிடத்தில் நடைபெறும் நிகழ்ச்சி களைக் காணவும் அதே நேரத்தில் காணும் வகையில் நேரிடையாக ஒளிபரப்பு செய்ய ஒரு தனியார் நிறுவனம் முன் வந்துள்ளது. இதற்கு தனியே கட்டணம் வசூலிக்கப் படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. அதே நேரத்தில் காண முடியாதவர்கள் விரும்பிக் கேட்டால் தனிக்கட்டணத் துடன் அந்நிகழ்ச்சியின் பதிவை அஞ்சல் மூலம் அனுப்பவும் உத்தேசித்துள்ளதாக அந்நிறுவனம் கூறுகிறது. மேலும், இணையதளம்மூலம் நேரடி ஒளிபரப்பும், அஞ்சல்மூலமும் அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளது. இத்தகவலை அந்நிறு வனத்தின் உரிமையாளர் ஆலன் பவுடி தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கேற்ப இறுதி மரியாதை செலுத்தப்படும் நிகழ்வை தொடக்கம் முதல் அடக்கம் செய்யப்படும் கடைசி நிகழ்வுவரை பதிவு செய்து இரண்டு மணி நேரத்தில் வாடிக்கையாளருக்கு அனுப்பி வைக்கப்படும். வாடிக்கையாளர்கள் மட்டும் காணத்தக்கவகையில் கடவுச் சொல் அளிக்கப்பட்டு அவர்களுக்கு அளிக்கப்படும். இதன்மூலம் உரியவர்கள் மட்டுமே அந்நிகழ்ச்சியைக் காண முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆறு மாதத்திற்குப்பிறகே தெரியவந்த ஒரு மரணம்!

ஜெர்மனியின் பிராங்க்பர்ட் மாகா ணத்தைச் சேர்ந்த ஓபெருர்செல் நகரில் 66 வயது பெண்மணி அடுக்குமாடி குடியி ருப்பில் வசித்து வந்துள்ளார். இவருக்கான அஞ்சல் பெட்டியில் அவருக்கு வந்த ஏராளமான கடிதங்கள் குவிந்து அஞ்சல் பெட்டி நிரம்பி வழிந்துள்ள நிலையிலி ருந்தது.. இதைக் கண்ட அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடத்தின் உரிமையாளர் இதுகுறித்து, மற்றவர்களிடம் அவரை பற்றி விசாரித்துள்ளார். அதற்கு மூதாட் டியை பார்க்க சுமார் கடந்த சில மாதங் களில் யாரும் வரவில்லை என குடி இருப் பவர்கள் கூறியுள்ளனர். இதனால் சந்தேக மடைந்த உரிமையாளர் அப்பெண் மணியின் வீட்டிக்கு சென்று குரல் கொடுத் தும், அழைப்புமணியை அடித்தும் எவ்வித பதிலும் வரவில்லை. எனவே, வேறு வழியின்றி கதவை உடைத்து கொண்டு உள்ளே புகுந்ததில் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தே போனார்கள்.

வீட்டினுள் நடுக்கூடத்தில் தொலைக் காட்சி ஓடிக்கொண்டேயிருக்க, நாற்காலி யின் மீது அமர்ந்தபடி, அப்பெண்மணி அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள் ளார். மேலும் அவரது அருகே கடந்த செப்டம்பர் மாதம் வெளியான தொலைக் காட்சி நிகழ்ச்சிக்கான நிரல் இருந்தை வைத்து, அவர் 6 மாதங்களுக்கு முன்னரே இறந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சில மாதங்களாகவே அந்த மூதாட்டியின் வீட்டை கடந்து செல்லும் வேளையில் துர்நாற்றம் வீசியது என்றும், அதனை அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் யாரும் பொருட்படுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது.

Read more: http://viduthalai.in/page4/77769.html#ixzz2xP5DC8Q1

தமிழ் ஓவியா said...




முயற்சி - வீண் முயற்சி

முயற்சி: மத்திய அமெரிக்க நாடான எல்சல்வடாரைச் சார்ந்த மீனவர் ஜோஸ் சல்வடோர் அல்வ ரெங்கா வயது 37 பசிபிக் கடலில் மீன் பிடிக்க சென்றபோது, வழி தவறி சுமார் 10 ஆயிரம் கி.மீ., தொலைவை சிறிய படகு மூலம் கடந்து 13 மாதங்களுக்குப்பிறகு மீண்டும் கரை சேர்ந்தார். இது மார்ஷல் தீவுக்கும் - மெக்ஸிகோவுக்கும் இடையே உள்ள பகுதியில் நடந்தது. வழியில் ஆமை, மீன் உள்ளிட்டவற்றை பச்சை யாகவே உண்டு தன் சிறிய படகில் மிதந்துள்ளார்.

வீண் முயற்சி: தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு குமரி மாவட்டம் குமாரகோவில் - சுப்பிர மணியன் சுவாமி கோயிலில் மாவட்ட பிராமணச் சங்கத்தினர் அதிமுக கூட்டணி 40 மக்களவை தொகுதி களிலும் வெற்றி பெறவும், ஜெயலலிதா நீண்ட நாள் வாழவும் ஆதித்ய ஹநதயம் ஹோமம் நடத்தினார்களாம். காலை 5 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற்ற இதில் ஒரு லட்சம் மந்திரங்கள் சொல்லி பிரார்த்தனை நடைபெற்ற தாம். பிராமண சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்களாம்!
- எஸ். நல்லபெருமாள், வடசேரி

Read more: http://viduthalai.in/page4/77770.html#ixzz2xP5fpoe1

தமிழ் ஓவியா said...


குறும்பா

கடவுளைத்
திட்டினால்....
மனிதனுக்கேன்
பொத்துக் கிட்டு
வருதுகோபம்?
கடவுளையே..
உருவாக்கியவன்
மனிதன் என்பதால்!
நாமனைவரும்
கடவுளின்
குழந்தைகளில்லை!
கடவுள்கள் தான்...
மனிதனின் குழந்தைகள்

***
இல்லாத தொன்றை (கடவுள்)
இருக்குன்னு சொன்னால்
ஒத்துக் கொள்வான்...
ஆன்மிகவாதி...!
அது பெரியவர் சொன்னால்
பெருமாள் சொன்ன மாதிரியாம்
சரி...!
இல்லாத ஒன்றை
இல்லையென்றே சொன்னால்...?
ஒத்துக் கொள்ள வேண்டியதுதானே
அதுவும் பெரியவர் (பெரியார்)
சொன்னால் பெருமாள்
சொன்ன மாதிரிதானே??!

***
மனிதனுக்கே...
வயதாக ஆக..
சக்தி குறையுது...!
கல்லுக் கடவுளுக்கு
காலங் காலமாய்
சக்தி எப்படியிருக்கும்
நிரந்தரமாய்??
- கோ. கலியபெருமாள்
மன்னார்குடி

Read more: http://viduthalai.in/page4/77772.html#ixzz2xP6EnLfz

தமிழ் ஓவியா said...


மூடநம்பிக்கையைப் பரப்புவதா? அமிதாப்பச்சன் படத்துக்கு எதிர்ப்பு

டில்லி, மார்ச் 29- மராட்டிய மாநிலத்தில் மூட நம்பிக்கை ஒழிப்புக்கான சட்டத்தின்கீழ் அமிதாப் பச்சன் நடித்துள்ள தொலைக் காட்சி விளம்பரப் படத் தின்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்நிலை யத்தில் ஹேமந்த் பாட்டீல் என்பவர் புகார் கொடுத் துள்ளார்.

சிறுவர்கள் அருந்தும் ஊக்க பானத்துக்கான விளம் பரத்தில் அமிதாப்பச்சன் பேய் வேடத்தில் நடித் திருப்பதன்மீது உடனடி நடவடிக்கைக் கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மும்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதி பதி சீதா குல்கர்னி வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

அமிதாப் பச்சன் ஏற்கெ னவே பூட்நாத் என்கிற பேய் படத்தில் நல்லது செய்கிற பூதமாக நடித்தி ருப்பார். அதேபோல் மீண்டும் அடுத்த மாதத்தில் பூட்நாத் ரிடர்ன்ஸ் அதாவது மீண்டும் பூட்நாத் என்கிற படம் வெளியாக உள்ளது. இதனிடையே தொலைக் காட்சி விளம்பரப் படத்தில் பூதமாக நடித்துள்ளார். இது குறித்து, வழக்கு தொடுத் துள்ள பாட்டீல் கூறும் போது, இந்த விளம்பரம் பேய், ஆவி மற்றும் அவற் றின் அற்புதங்கள் என்பன வற்றை திணிப்பதாகும். மூட நம்பிக்கையையும், ஆதிக்க மனப்பான்மையை யும் பரப்பும் நோக்கில் உள்ளது. பாந்த்ரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்த போது அவர்கள் புகாரைப் பெற மறுத்தனர். ஆகவே, நீதிமன்றத்தை நாட வேண் டிய கட்டாயம் ஏற்பட்டுள் ளது. இந்த விளம்பரம் குறித்து எவ் விதத்திலும் பொறுப்பேற்காமல் தொலைக்காட்சியில் விளம் பரத்தை வணிக நோக்கில் ஊக்க பான நிறுவனம் ஒளிபரப்பி உள்ளது என்று கூறினார். இவ்வழக்கு விசார ணையை நீதிபதி சீதா குல் கர்னி அடுத்த மாதம் 18ஆம் தேதியில் வைத்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/77800.html#ixzz2xP89p8XV

தமிழ் ஓவியா said...


இனமான பேராசிரியரைச் சந்தித்தார் தமிழர் தலைவர்


திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களை இன்று காலை 11.30 மணி அளவில் திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி அவர்கள் சந்தித்து உடல் நலம் விசாரித்து, இயக்கம் அண்மையில் வெளியிட்ட நூல்களை அளித்தார். நூல்களைப் பெற்றுக் கொண்ட இனமானப் பேராசிரியர் அவர்கள் அடுத்து ஒரு நூற்றாண்டுக்குத் தேவையானதை நீங்கள் செய்து வருகிறீர்கள் என மனந் திறந்து பாராட்டினார். கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் உடன் சென்றிருந்தார். (சென்னை - 29.3.2014).

Read more: http://viduthalai.in/e-paper/77806.html#ixzz2xP8YPtRm

தமிழ் ஓவியா said...


காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் தேர்தலில் மக்களும் வாக்களிக்க மாட்டார்கள்!


ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் புறந்தள்ளி

ஜெனிவாவில் வாக்களிக்க மறுத்த காங்கிரஸ் ஆட்சிக்கு

வரும் தேர்தலில் மக்களும் வாக்களிக்க மாட்டார்கள்!

தமிழர் தலைவர் அறிக்கை

உலகத் தமிழர்களின் வெந்த புண்ணில் வேல்!


ஜெனிவாவில் மனித உரிமை ஆணையத்தில் இனப்படுகொலைக்கு எதிராக வாக்களிக்க மறுத்த காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் தேர்தலில் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையில் காங்கிரஸ் தொடர்ந்து, அவர்களுக்கும் அவர்களது தொப்புள் கொடி உறவுள்ள தமிழர்களுக்கும், உலக மனிதநேய, மனித உரிமைப் போராளிகளின் உணர்வுக்கும் தொடர்ந்து துரோகம் இழைத்துக் கொண்டே வந்திருக்கிறது. கடந்த 27ஆம் தேதி அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றிய இலங்கைப் போர்க் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணைக் குழு மூலம் விசாரணை ந;டத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்காமல் இலங்கை அரசுக்கு ஆதரவாக புறக்கணிக்கிறோம் என்று ஒரு நிலைப்பாட்டை எடுத்து, இராஜபக்ஷே அரசின் இனப்படுகொலைக்குத் துணை போயுள்ளது; காங்கிரசின் கை ரத்தக் கறை படிந்த கையாகவே ஆக்கிக் கொண்டு அதை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இலங்கையின் இறையாண்மையா?

1. இதைவிட வேதனையும் வெட்கக் கேடானதுமான செய்தி நமக்கு வேறில்லை. கேட்டால் அது இலங்கையின் இறையாண்மையில் தலையிடுவதாகுமாம்! அப்படியானால் இதற்குமுன் ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் போட்டார்களே (அது வெறும் ஏட்டுச் சுரைக்காய் இன்றளவும் என்ற போதிலும்) அது தலையீடு அல்லவா?

2. அந்த நாட்டிற்கு அமைதிப்படை (IPKF) என்ற பெயரால் நம் நாட்டு இராணுவத்தை அங்கே அனுப்பி, இந்திரா காந்தி அம்மையாரின் கொள்கை நிலைப் பாட்டிற்கே முற்றிலும் எதிரான நிலையை எடுத்து, மிகப் பெரிய அவமானத்துடன் திரும்பியதன் மூலம் நமது பெருமைமிக்க இராணுவத்திற்கு அவப் பெயர் ஏற்பட வில்லையா?

சிங்கள இராணுவக்காரன் ராஜீவ் உயிருக்குக் குறி வைக்கவில்லையா?

இராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் போட கையெழுத்திடச் சென்ற நம் நாட்டுப் பிரதமர் இராஜீவ்காந்தி (Guard of Honour) இலங்கை இராணுவ மரியாதையைப் பெற சென்றபோது விஜயமுனி விஜயந்த ரொஹன்ன டிசில்வா என்ற சிங்கள இராணுவ வீரன் துப்பாக்கிக் கட்டையால் பிரதமர் ராஜீவை அடித்துக் கொல்ல முயன்றபோது, அனிச்சையாக அவர் குனிந்ததால் தப்பித்தார் என்ற நிலையில், பிறகு அதே சிங்களவன் தேர்தலில் நிற்கவில்லையா?

இதைவிட இந்திய இறையாண்மையைக் கேவலப் படுத்திய அசிங்கம் வேறு உண்டா? அப்படிப்பட்ட சிங்கள அரசுக்குத் துணை போகலாமா?

இதெல்லாம் மன்மோகன்சிங் அரசுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் வசதியாக மறந்து விட்டது போலும்!

ஜெனிவாவில் வாக்களிக்க மறுத்தவர்களுக்கு மக்களும் வாக்களிக்க மாட்டார்கள்

90,000 தமிழச்சிகள் வாழ்விழந்து, விதவை நிலைக்குத் தள்ளப்பட்டனரே! பல லட்சக்கணக்கில் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்ட நிலையை - அது (No Fire Zone) துப்பாக்கி குண்டு பொழியாத பாதுகாப்பான பகுதி என்று அப்பாவி (ஈழ) தமிழ்க்குடிகளை நம்ப வைத்து, ஒன்று திரட்டி, ஒரே முகாமுக்குள் நிறுத்தி, கொத்துக் குண்டுகளைப் போட்டு குழந்தைகள், முதலியவர்களைக் கொன்றதை போர் நடந்தால் இப்படி அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜமே என்று முன்பு தமிழ்நாடு முதல் அமைச்சர் அம்மையார் கூறியதுபோல, தமிழர்களின் உணர்வை அலட்சியப்படுத்தும் வகையில்தானே ஜெனிவாவில் வாக்களிக்க மறுக்கப்பட்டது இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கும் அதேநிலை தமிழகத்துத் தேர்தலில் ஏற்படப் போகிறது சில நாள்களில் - மறவாதீர்!


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்



சென்னை
29.3.2014

Read more: http://viduthalai.in/e-paper/77794.html#ixzz2xP8oFgDN

தமிழ் ஓவியா said...


சொன்னது யாராம்?


தந்தை பெரியாரும், பேரறி ஞர் அண்ணாவும், எம்.ஜி. ஆரும் தமக்காக ரத்தம் சிந்திய தொண்டர்களின்மீது அபரிமிதமான பாசமும், நம்பிக்கையும் வைத்த தலை வர்கள் அவர்களது புனித மான அந்த வழிகாட்டு தலைத்தான் நானும் பின் பற்றிக் கொண்டிருக்கிறேன்.

- முதல் அமைச்சர் புரட்சி தலைவி அம்மா (Dr. நமது எம்.ஜி.ஆர். 27.3.2014 பக்.3)

அடேயப்பா - பாருங்கய்யா! தந்தை பெரியார் கொள்கையையும், அறிஞர் அண்ணாவின் கோட்பாடு களையும் மண்சோற்றில் போட்டுப் புதைத்து விட்டு, யாக நெருப்பில் போட்டுக் கொளுத்தி விட்டு, அவர் களின் பெயர்களை உச்சரிப் பதற்கு உண்மையிலே தைரியம் தான் வேண்டும்.

Read more: http://viduthalai.in/e-paper/77790.html#ixzz2xP8xvKBp

தமிழ் ஓவியா said...


அறிவு நாணயம் இல்லை

கேள்வி: அரசியல் சட்டம் 376, ராமர் கோயில், பொது சிவில் சட்டம் ஆகியவற்றைக் குறித்த கருத்தை பா.ஜ.க., தேர்தலையொட்டி தெளிவுபடுத்த வேண்டும் என்று சிதம்பரம் சொல்கிறாரே?

சோ ராமசாமி: இந்தச் சர்ச்சைக்குரிய பிரச் சினைகளைப் பற்றி பா.ஜ.க. பல முறை சொல்லி யிருக்கிறது. பா.ஜ.க., தனித்தே பெரும்பான்மை பெறும்போதுதான் இவை குறித்த மேல் நடவடிக்கை எடுப்போம் என்றும்; கூட்டணி அரசை நடத்தும்போது இவை குறித்துப் பேச மாட்டோம் என்பதே பா.ஜ.க. நிலைப்பாடு. (கல்கி 30.3.2014 பக்.26).

இதன்பொருள் என்ன? பெரும்பான்மை பெறுகிறதா? கூட்டணி ஆட்சி நடத்துகிறதா? என்பது அல்ல பிரச்சினை. இந்த மூன்று கொள்கைககளும் பா.ஜ.க.வின் கொள்கை என்பதில் இரு கருத்துக்கு இடம் இல்லை என்பதுதான் அப்பட்டமான உண்மை.

272 விஷன் என்று சொல்லித்தானே புறப்பட் டுள்ளனர். பெரும்பான்மை பெற வேண்டும் என்று தானே தேர்தலில் போட்டியிடுகிறார்கள். தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காது என்ற எண்ணத் தோடுதான் போட்டியிடுகிறார்களா?

பெரும்பான்மை பெற்றதாக வைத்துக் கொண்டாலும் அந்த வெற்றியில் கூட்டணிக் கட்சிகளின் பங்கும், சக்தியும் மிக முக்கியமானதுதானே!

இந்த மூன்றிலும் உடன்பாடு இல்லாத கட்சிகளோடு கூட்டணி வைத்துக் கொள்வது. அந்தப் பலத்தால் பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவது; பெற்றுக் கொண்ட பிறகு மேற்கண்ட கொள்கைகளை நிறைவேற்றுவது என்றால் இதில் அறிவு நாணயம் கொஞ்சமேனும் இருக்கிறதா? ஏமாற்றும் தந்திரம் தானே புதைந்து கிடக்கிறது!

பிஜேபி விரும்பும் இந்த மூன்றையும் கூட்டணிக் கட்சிகள் விரும்பாத நிலையில், அவர்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டு விட்டு, அவர்கள் விரும் பாதவற்றை நிறைவேற்றுவது அசல் மோசடியல்லாமல் வேறு என்னவாம்?

பா.ஜ.க.வினரின் இந்தத் திட்டம் என்பது ஒரு புறம் இருக்கட்டும்; இப்படிப் பதில் சொல்லும் திருவாளர் சோ ராமசாமி இது பற்றி என்ன நினைக்கிறார் என்று வெளிப்படையாகச் சொல்ல வேண்டாமா? இந்த மூன்றிலும் எங்களின் நிலைப்பாடு இதுதான்; நாங்கள் பெரும்பான்மை பெற்றால் இவற்றை நிறைவேற்றத்தான் செய்வோம் - எனவே இந்த எங்களின் கோட்பாட்டை ஏற்றுக் கொள்வோர்கள் மட்டும் எங்களோடு கூட்டுச் சேர வேண்டும் என்று கூட்டணி சேருமுன் நிபந்தனையாக பிஜேபி வைக்க முன் வர வேண்டாமா? அப்படி முன் வைப்பதுதானே அறிவு நாணயமானது என்று கருத முடியும்.

இது ஒருபுறம் இருக்கட்டும்; பா.ஜ.க.வோடு கூட்டுச் சேர்ந்த தே.மு.தி.க.வாக இருக்கட்டும்; பா.ம.க., மதிமுக வாகட்டும் பா.ஜ.க.வின் இந்த ஏற்பாட்டை, திட்டத்தை ஏற்றுக் கொள்கிறார்களா? சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் ஏதாவது உறுதி மொழியைத்தான் பெற்றுள் ளார்களா? பெறவில்லை என்றால் பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டாமா?

அப்படி செய்யவில்லை என்றால் அதன் பொருள் என்ன?

எங்களுக்குப் பதவி தான் முக்கியம்! கொள்கை யாவது மண்ணாங் கட்டியாவது, என்பதுதான் பா.ஜ.க.வோடு கூட்டுச் சேரும் கட்சிகளின் நிலைப்பாடு என்பது நிர்வாணமாகத் தெரிந்து விடவில்லையா?

இப்படி ஒரு கூட்டுக் களவாணி நடைபெற்று வருவதை வாக்காளர்கள் உணர்ந்திட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!

பி.ஜே.பி.க்கு மட்டும்தான் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் என்று கருத வேண்டாம்; பிஜேபியோடு கூட்டு சேரும் கட்சிகளுக்கும் அப்படி ஒரு நிகழ்ச்சி நிரல் இருக்கிறது என்பதை வாக்காளர்ப் பெரு மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

எவ்வளவுப் பெரிய சதியை பி.ஜே.பி.யும் அதனோடு கைகோக்கும் கட்சிகளும் மறைத்து வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றிடத் திட்டமிட்டுள்ளன என்பதைப் புரிந்து கொண்டால், இந்தக் கூட்டுச் சதிகாரர்களுக்குச் சரியான பாடம் புகட்டிட நடைபெறவிருக்கும் 16ஆவது மக்களவைத் தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வார்களாக!

Read more: http://viduthalai.in/page-2/77814.html#ixzz2xP9JVRSD

தமிழ் ஓவியா said...


ஏ.டி.எம். கார்டு பயன்படுத்துவோருக்கு காவல்துறை எச்சரிக்கை


சென்னை, மார்ச் 29- ஏ.டி.எம். கார்டு பயன்படுத்துவோர் கவனத்து டனும் எச்சரிக்கையுடன் இருக்க வேண் டும் என சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

ஏ.டி.எம். கார்டுகளின் ரகசிய எண்ணை அடிக்கடி மாற்ற வேண்டும், மேலும் கார்டின் சி.வி.வி. எண் உள்ளிட்ட ரகசியத் தகவல்களை யாரிடமும் தெரி விக்கக் கூடாது. பணப் பரிவர்த்தனை நடைபெறும்போது செல்பேசிக்கு உட னுக்குடன் குறுஞ்செய்தி வரும் வகையில் வங்கியில் இருந்து சேவையை பெற்றிருக்க வேண்டும்.

ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுக்கும்போது பிரச்சினை ஏற்பட்டால், அடுத்த நபர்களின் உதவியைப் பெறக் கூடாது. மேலும் அந்த இயந்திரத்தில் கார்டை பொருத்தும் பகுதியில் ஏதேனும் கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டிப்பாக பரிசோதித்துப் பார்க்க வேண்டும். ஏதேனும் கருவி பொருத்தப் பட்டு இருந்தால், ஏ.டி.எம். கார்டை அந்த இயந்திரத்தில் பயன்படுத்தக் கூடாது.

அவசியம் எதுவும் இல்லாதபட்சத் தில் உலகம் முழுவதும் பயன்படும் வகையில் ஏ.டி.எம்.கார்டு பெறக் கூடாது. பெட்ரோல் பங்க், உணவகம், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் சேவை ஊழியர்களிடம் கொடுத்து பயன்படுத் தக் கூடாது. அங்கீகாரமற்ற முறையில் பணப் பரிவர்த்தனை ஏதேனும் நடை பெறுவதாக தெரிய வந்தால், உடனடி யாக அந்த அட்டையின் செயல்பாட்டை முடக்க வேண்டும்.

கார்டை சோதனை செய்ய வேண்டியுள்ளது, பழைய கார்டை மாற்றி புது கார்டு தருகிறோம், கடன் தொகையை உயர்த்தி தருகிறோம் என்று வங்கியின் வாடிக்கையாளர் சேவை மய்யத்தில் பேசுவது போன்று கூறி கார்டின் ரகசிய எண், சி.வி.வி. எண் போன்ற தகவல்களைக் கேட்டால், அந்த தகவல்களைக் கூற வேண்டாம். ஏனெ னில் எந்தவொரு வங்கியும் ரகசிய எண், சி.வி.வி.எண் ஆகியவற்றை வாடிக்கை யாளர்களிடம் கேட்பதில்லை. மேலும் உங்களது கார்டை அடுத்த வர்களிடம் கொடுத்து பயன்படுத்த அனுமதி அளிக் காதீர்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-2/77820.html#ixzz2xP9lg9mE

தமிழ் ஓவியா said...


வடஆற்காடு ஜில்லா பார்ப்பனரல்லாத வாலிபர்கள் முதலாவது மாநாட்டில் படத்திறப்பு விழாவின் போது ஆற்றிய உரை

சகோதரி சகோதரர்களே! இந்த மகாநாட்டின் திறப்பு விழா நடத்த என்று நான் இங்கு வந்தவன். இந்தச் சமயத்தில் என்னைப் பற்றி இவ்வளவு காரியங்கள் நடக்குமென்றும், இவ்வளவு தூரம் புகழ்ந்து பேசப்படும் என்றும், நான் நினைக்கவில்லை!

ஊர்வல மூலமாகவும், வரவேற்புப் பத்திர மூலமாகவும் எனது படத்திறப்பு மூலமாகவும், அளவுக்கு மீறிய உற்சாகமும் வரவேற்பும், புகழ்ச்சி உரைகளும் காணவும் கேட்கவும் நான் மிகுதியும் சந்தோஷமடைகிறேன்.

எனது தொண்டில் உள்ள இடையறாத கஷ்டங்களிடையே இம்மாதிரியான சில வைபவங்கள் ஏற்படுவதால் சிலசமயங்களில் பரிகாசமாகவும், சில சமயங்களில் உற்சாகமாகவும் இருக்கச் செய்கின்றது.

என்னைப் பற்றிய ஆடம்பர வரவேற்பும் புகழுரைகளும் நான் உங்களிடம் ஒரு சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை. நீங்களும் இத்துடன் உங்கள் கடமை தீர்ந்து விட்டதாக தயவு செய்து நினைத்து விடாதீர்கள்.

நாம் பிரவாகமான எதிர்வெள்ளத்தில் நீந்துகின்றோம் என்பதையும், நமக்கு எதிரிகளும் எதிர்ப்பிரசாரங்களும் வெளிப்படையாயும், திரைமறைவிலும் சூழ்ச்சி களுடனும் நடைபெற்று வருகின்றதை கருத்தில் வையுங்கள். அவற்றிற்குத் தலை கொடுக்கத் தயாராயிருங்கள்.

நமது தலைவர் பனகால் அரசர் காலமான ஒரு நெருக்கடியான சமயமானதால் இந்தச் சமயத்தில் உங்கள் விழிப்பும் தியாகமும் அதிகம் தேவை இருக்கின்றது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்வதுடன் உங்களுக்கும் சிறப்பாக திருமதி மார்த்தா ஆரியா அம்மையார் அவர்களுக்கும் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(4,5-1-29 நாட்களில் ராயவேலூர் லட்சுமணசாமி முதலியார் நகர மண்டபத்தில் கூட்டிய மாநாட்டில் தமது படத்திறப்பு நிகழ்ச்சியின் போது ஆற்றிய நன்றியுரை)

குடிஅரசு - சொற்பொழிவு - 13-01-1929

Read more: http://viduthalai.in/page-7/77781.html#ixzz2xPF1ixu5

தமிழ் ஓவியா said...

இது ஓர் அதிசயமா? பகுத்தறிவும் அதன் விரோதிகளும் - சித்திரபுத்திரன்-

மதம், சமயம், கடவுள், குரு, புரோகிதன், வேதம், சாஸ்திரம், புராணம், ஆகமம், சிவன், விஷ்ணு, பிரம்மா, சில்லறை தெய்வங்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ரிஷிகள், முனிவர்கள், இன்னமும் அநேக சங்கங்கள் பகுத்தறிவுக்கு விரோதிகளாகும்.

உதாரணமாக, மேல் நாட்டில் ஒருபெரிய கூட்டத்தில் ஒரு பெரிய பாதிரியார் (பிஷப்) பேசும் போது, ஒவ்வொருவனும் தன்தன் பகுத்தறிவைக் கொண்டு ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து பார்க்க வேண்டுமே ஒழிய குருட்டு நம்பிக்கைக் கூடாது என்று உபதேசம் செய்து கொண்டு வரும்போது ஒரு குட்டிப் பாதிரியார் எழுந்து இந்தப் பிஷப் நாஸ்திகம் பேசுகின்றார், இவர் பெரிய பாதிரியார் வேலைக்கு லாயக்கில்லை? என்று சொன்னாராம்.

கூட்டத்திலிருந்தவர்கள் ஏன், எதனால் இப்படிச் சொல்லு கின்றீர்கள்? என்று கேட்டதற்கு, குருட்டு நம்பிக்கை வேண்டாம் என்று சொல்லி விட்டால். அல்லது பகுத்தறிவை உபயோகித்துவிட்டால் கிறித்தவ மதமோ ஆண்ட வனோ இருக்க முடியுமா? நம்பிக்கையை விட்டு பகுத்தறிவை உபயோகித்துப் பார்ப்பதனால் வேதத்தின் அஸ்திவாரமே ஆடிப்போகாதா? ஆதலால் மதமோ கடவுளோ வேதமோ இருக்க வேண்டுமானால் நம்பிக்கை இருக்க வேண்டும்.

பகுத்தறி வால் வாதம் செய்யக் கூடாது. ஆதலால், ஒருவன் குருட்டு நம்பிக்கையை விட்டு பகுத்தறிவின் ஆராய்ச்சிக்குப் புகும்படி மக்களுக்கு எடுத்துச் சொல்லுவது நாத்திகத்தை உபயோகிப்பதேயாகும் என்று சொன்னாராம்.

உடனே அந்தக் கூட்டத்தில் உள்ள குட்டிப் பாதிரிகளும் மற்ற ஜனங்களும் இதை ஒப்புக் கொண்டு பிஷப் சொன்னதை பின் வாங்கிக் கொள்ள வேண்டும், மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று சொன் னார்களாம்! பிஷப், தாம் சொன்ன அக்கிரமமான வாக்கி யங்களைப் பின் வாங்கிக் கொண்டு நாம் சொன்ன மகாபாதகமான வார்த்தைக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டாராம்.

எனவே 100க்கு 75 பேர்களுக்கு மேல் எழுதப் படிக்கத் தெரிந்த மேல் நாட்டுக் கடவுள்களும், மதமும் வேதமுமே இவ்வளவு பலமான நிபந்தனை மேல் நிற்கும்போது 100க்கு 7ஆண்களும் 1000க்கு ஒன்றரை பெண்களும் படித் திருக்கும் நம் நாட்டின் சாமிகளுக்கும் சமயங்களுக்கும் வேதங்களுக்கும் எவ்வளவு பலமான நிபந்தனை வேண்டியிருக்குமென்பதையும் பார்ப்பன அகராதியில் வேத புராணங்களை யுக்தியால் வாதம் செய்கின்றவன் நாத்திகன் என்று எழுதிவைத்திருப்பதையும் யோசித்தால் அறிவும், ஆராய்ச்சிக் கவலையும் உள்ள மக்களுக்கெல்லாம் நாத்திகப் பட்டம் கிடைப்பது ஒரு அதிசயமா?

குடிஅரசு - கட்டுரை - 03-02-1929

Read more: http://viduthalai.in/page-7/77781.html#ixzz2xPFAnlPZ

தமிழ் ஓவியா said...

வடஆற்காடு ஜில்லா பார்ப்பனரல்லாத வாலிபர்கள் முதலாவது மாநாடு

மகாநாட்டைத் திறந்து வைத்து சில வார்த்தைகள்:-

சகோதரி சகோதரர்களே, நமது நண்பரும் சகோதரரு மான திரு. ஆரியா அவர்களால் துவக்கப்பட்ட இந்தப் பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கமானது இப்போது நமது நாடு முழுவதும் ஏற்பட்டு பெருத்த கிளர்ச்சி செய்து வருகின்றது.

எனது இயக்கத்தையும் தொண்டையும், எனது உடல்நலிவும் சரீரத் தளர்ச்சியும் எதிரிகள் தொல்லையும் ஒரு சிறிதும் தடை செய்ய முடியாமல் என்னை மேலும் மேலும் உற்சாகப்படுத்தி, வெற்றிக் கொடியை நாட்டி வருவதற்குப் பெரிதும் உதவியாய் இருந்து வருவது, இந்த வாலிப இயக்கமேயாகும்.

உண்மையிலேயே இப்போதைய வாலிபர்களிடம் எனக்கு அளவுக்கு மேற்பட்ட நம்பிக்கை இல்லாதிருந் திருக்குமானால் என்னுடைய கடையை வெகுநாளைக்கு முன்பே சுருட்டிக் கட்டிக் கொண்டு வேறு ஏதாவது ஒரு துறையில் மூழ்கி இருப்பேன். ஆதலால் இந்த வாலிப இயக்கம்தான் நமது நாட்டிற்கு மாத்திரமல்லாமல் வெளிநாட்டிற்கும் சுதந்திரமும் விடுதலையும் சுயமரியாதை யும் வாங்கிக் கொடுக்கப் போகின்றது.

எப்படி எனில், எந்த ஒரு நாட்டிற்கும் அரசியல் தலைவனோ, தேசியத் தலைவனோ மதத்தலைவனோ பாஷைப் பண்டிதனோ, சாஸ்திரியோ முயற்சித்து உண்மை யான சுதந்திரமோ, விடுதலையோ வாங்கிக் கொடுத்ததாக சரித்திரக் காலந்தொட்டு நமக்கு ஆதாரங்கள் கிடையாது. எங்கும் வாலிபர் கிளர்ச்சிதான் விடுதலை அளித்திருக் கின்றது. ஒவ்வொரு விடுதலை முயற்சியும் முதலில் கட்டுப் பாட்டை உடைத்தெறிந்த பின்தான் வெற்றி பெற்றிருக் கின்றது.

கட்டுப்பாடுகளை உடைப்பதற்கு வாலிபர்களால் தான் முடியுமே ஒழிய மற்றவர்களால் சுலபத்தில் சாத்தி யப்படாது. ஆதலால் நான் முழுவதும் இந்த வாலிபர் களையே மனப் பூர்வமாக நம்பி இருக்கின்றேன்.

அவர்கள் இயக்கமும் கிளர்ச்சியும், வெகுசீக்கிரத்தில் உலகை நடத்த முன்வர வேண்டும் என்றும் ஆசைப்பட்டுக் கொண்டு இம்மகாநாட்டைத் திறக்கின்றேன்.

குடிஅரசு - சொற்பொழிவு - 13-01-1929

Read more: http://viduthalai.in/page-7/77782.html#ixzz2xPFh1Wok

தமிழ் ஓவியா said...

ஈழத் தமிழர், தமிழக மீனவர் பிரச்சினைகளில் காங்கிரஸ், பிஜேபி நிலைப்பாட்டில் வேறுபாடு கிடையாது!
மாற்று அணியல்ல, ஏமாற்று அணியே பிஜேபி!
மக்களே பொய்ப் பிரச்சாரத்தில் ஏமாந்து விடாதீர்கள்! தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் ஈழத் தமிழர், தமிழக மீனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்ற பொய்ப் பிரச்சாரத்திற்குத் தமிழக வாக்காளர்களே ஏமாந்து விடாதீர்கள் - இவற்றில் காங்கிரசுக்கும், பி.ஜே. பி.க்கும் மாற்றுக் கருத்துக் கிடையாது - உண்மைக்கு மாறான பிரச்சாரத்தைக் கேட்டு பொது மக்கள் ஏமாந்து விடக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டையே எடுத்து வருவதில் காங்கிரசும் சரி, பா.ஜ.க.வும் சரி ஒன்றுக்கு மற்றொன்று பெரிதும் மாறுபட் டவை அல்ல. ஒரே குட்டையில் ஊறிடும் மட்டைகளே!

கூர்த்த மதியோடும் நுண்ணிய பார்வையோடும் பார்க்கும் எவருக்கும் புரியும்.

சகோதரர் வைகோ அவர்களின் (மதிமுக) தேர்தல் அறிக்கை!

பதவிப் பசியால் துவண்டு, துடித்து, பா.ஜ.க., வீசிய வலையில் சிக்கி மோடி இராகம் பாடி, ராஜாவை மிஞ்சும் இராஜவிசுவாசியராக காட்சியளிக்கும் பரிதாபத்திற்குரிய சகோதரர் வைகோ தேமுதிக, பாமக போன்ற கட்சிகள் ஏதோ பா.ஜ.க. - மோடி மத்தியில் அரியணையில் அமர்ந்த தும் சூமந்திரக்காளி! என்ற மந்திரக்கோல் மூலம், மோடி வித்தை மூலம் ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினை தீர்க்கப்படும் என்று கூறுகின்றனர் தனி ஈழம்பற்றியெல்லாம் மதிமுக தேர்தல் அறிக்கையில் பிரலாபித்துள்ளார்.


தமிழ் ஓவியா said...

ஆனால், அது வெளி வந்த மறுநாளே, பா.ஜ.க.வின் வெங்கய்ய நாயுடு தொடங்கி, தமிழக பா.ஜ.க. தலைவர் பொன் இராதாகிருஷ்ணன் அவர்கள் உட்பட தனி ஈழத்தை ஒரு போதும் எங்கள் (பா.ஜ.க.) கட்சி ஏற்காது என்று திட்ட வட்டமாக செய்தியாளர்கள் மத்தியில் கூறி விட்டனரே!

பிஜேபிக்குத் திடீர் கரிசனமா?

ஈழப் பிரச்சினையில் (ஏதோ தமிழக மீனவர்கள் ஓட்டுக்களைப் பெறுவதற்காக மீனவர்கள் பால் திடீர் கரிசனம் பீறிட்டுள்ளது பா.ஜ.க.வுக்கு; இல்லையென்றால் நண்பர் இல. கணேசன் மோடி மீன் விற்பனை நிலையத்தை பட்டினப்பாக்கம் எஸ்டேட்டில் (Foreshore) திறந்து வைக்க முன் வருவாரா?) இந்த பா.ஜ.க. ஆட்சி முன்பு எப்படி நடந் துள்ளது என்பதை சற்று நினைவுபடுத்திக் கொண்டால் நல்லது.

கல்கியில் என். இராம் பேட்டி!

6.4.2014 நாளிட்ட கல்கி வார ஏட்டில் வெளி வந்துள்ள இந்து ஆங்கில நாளிதழ் ஆசிரியர் என் இராம் அவர் களின் பேட்டியில்
ஒரு கேள்விக்கு பதில் கூறுகிறார்:

கேள்வி: மோடி பிரதமராக வந்தால் ஈழப்பிரச்சினை, மீனவர் பிரச்சினை ஆகியவற்றுக்குத் தீர்வு காணப்படும் என்கிறாரே வைகோ?

பதில்: நல்ல ஜோக் இது. பா.ஜ.க. ஆட்சி வந்தாலும் இலங்கையைக் குறித்த இந்திய நிலைப்பாடு மாறவே மாறாது என்பதுதான் உண்மை!

ராஜீவ்காந்தி கொலை வழக்குத் தீர்ப்பும் - பிஜேபியின் நிலைப்பாடும்!

இதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு, இராஜீவ் கொலை வழக்கில் கொலைக் குற்றம் சாற்றப்பட்ட தூக்கு தண்டனைக் கைதிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் போன்றவர்கள் கருணை மனுவும் பல ஆண்டு கால தாமதம் மறுக்கப்பட்ட நீதி, என்பதைக் கூறி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.

மாநில அரசு இவர்களது 23 ஆண்டு கால சிறை தண்டனை பற்றி மனிதநேயத்துடன் சட்டப்படி சிந்திக்கலாம் என்றும் கூறியது தான் தாமதம்! உடனே அவசர அவசரமாக - எங்கே அவர்கள் விடுதலை செய்யப்பட்டு விடுவார்களோ என்ற ஆவேசத்தில் தேசீயக் கட்சிகளும் பா.ஜ.க. உட்பட அதனைக் கண்டிக்கத்தானே செய்தன? இதில் காங்கிரசிலிருந்து எவ்வகையில் பி.ஜே.பி. மாறுபட்டது? நடுநிலையில் நின்று சிந்திக்க வேண்டும்.

ம.பி.க்கு வந்த ராஜபக்சேக்குச் சிகப்புக் கம்பளம் வரவேற்பு கொடுத்தது யார்?

சகோதரர் வை.கோ மத்தியப் பிரதேசத்திற்குச் சென்று போர்க் குற்றவாளி இராஜபக்ஷேவை எதிர்த்து கருப்புக் கொடி போராட்டம் நடத்தினாரே! ராஜபக்சேவை தனது மாநிலத்திலும் வரவழைத்து சிவப்புக் கம்பள வரவேற்பு தந்த முதல் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் யார்?

பா.ஜ.க. முதல் அமைச்சர் (ஆட்சி) அல்லவா! ராஜபக்சேவை இந்தியாவிற்கு வர அழைப்புக் கொடுத் தவரே எதிர்க்கட்சித் தலைவரும், துணைப் பிரதமர் ஆசையில் மிதப்பவருமான திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்கள் அல்லவா?

தமிழர்களின் வாக்குகளைப் பறிக்கும் ஏமாற்று வேலை!

வாஜ்பேயி பிரதமராக இருந்த நேரத்தில் ஈழத்தில் நடைபெற்ற மோதலின் போது இராஜபக்சே அரசுக்கு எதிரான நிலைப்பாட்டையா எடுத்தார்? நம் நாட்டில் இல்லாத புலி இயக்கத் தடை நீக்கப்பட்டதா?

காங்கிரசின் இன்றைய வெளி உறவுக் கொள்கைக்கும் பா.ஜ.க. கொள்கைக்கும் ஈழப் பிரச்சினையில் எவ்வித மாறு பாடும் இல்லையே!

உருட்டைக்கு நீளம் புளிப்பில் அதற்கு அப்பன் என்ற ஒரு பழமொழி போன்றதுதானே பி.ஜே.பி.யின் நிலைப்பாடு! தமிழின வாக்காளர்களை ஏமாற்ற ஈழப் பிரச்சினையைப் பயன்படுத்தலாமா? எனவே இது மாற்று அணி அல்ல; ஏமாற்று அணி! ஈழப் பிரச்சினையில் வாக்காளர்களே புரிந்து கொள்ளுங்கள்.

சென்னை
30.3.2014

கி. வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/77873.html#ixzz2xUqHw4Ce

தமிழ் ஓவியா said...


தந்தையை சிறையிலிட்ட அவுரங்கசீப்பைப் போல் செயல்படும் மோடி காங்கிரஸ் கண்டனம்!


அகமதாபாத், மார்ச் 30- பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் அரசியல் அனுகுமுறைகள் மொகலாய மன்னர்கள் பாணியில் உள்ளதாக குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் அர்ஜுன் மோத்வாடியா குற்றம் சாட்டியுள்ளார்.

குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் செய்தியாளர் களுக்கு பேட்டியளித்த அர்ஜுன் மோத்வாடியா கூறியதாவது:- பா.ஜ.க.வின் மூத்த தலைவர் அத் வானியை கையாலாகாதவர் ஆக்கி, அவர் விரும்பிய போபால் தொகுதிக்கு பதிலாக காந்திநகர் தொகுதி யில் போட்டியிடும் நிலைக்கு மோடி தள்ளிவிட்டார்.

இதேபோல், வாரணாசி தொகுதியில் போட்டியிடுவ தில் பிடிவாதமாக இருந்த முரளி மனோகர் ஜோஷிக்கு கான்பூர் தொகுதி தான் ஒதுக்கப்பட்டது. மூத்த தலைவரான ஜஸ்வந்த் சிங்குக்கு சீட் மறுப்பு, கேசுபாய் பட்டேல், காஷிராம் ராணா, சுரேஷ் மேத்தா, ஏ.கே.பட்டேல் போன்றவர்களை கட்சியில் இருந்து நீக்கியது,

சஞ்சய் ஜோஷிக்கு எதிராக 'சி.டி.' தயாரித்து அவரை ஓரம் கட்டியது உள்ளிட்ட கட்சி யின் மூத்த தலைவர்களை அடக்கி, ஒடுக்கும் வேலை களில் ஈடுபடும் மோடியின் செயல்பாடுகள், இந்திய கலாச்சாரத்துக்கு உகந்ததாக இல்லை. மொகலாயர் ஆட்சிக் காலத்து சுல்தானைப் போல் அவர் செயல் படுகிறார்.

பெற்ற தந்தையையே சிறையில் போட்ட மொகலாய மன்னர் அவுரங்கசீப்பைப் போல் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களிடம் மோடி நடந்துக் கொள்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

மோடியின் குஜராத் மாடல் முழக்கம் தோல்வி அடையும்: ராகுல்

சத்னா, மார்ச் 30- தனிநபர் சர்வாதிகாரத்தை கொண்டு வர பாஜ விரும்புகிறது என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்து வருகிறார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் அஜய் சிங்கை ஆதரித்து சத்னாவில் ராகுல் பேசியதாவது: மோடியின் ஜம்மு பிரச்சார பேச்சை கேட்கும் போது பாஜ தனி நபர் சர்வாதிகார ஆட்சியை கொண்டு வர விரும்புகிறது என்பது பகிரங்கமாக தெரிந்து விட்டது.

காங்கிரசை பொறுத்த அளவில் ஒவ்வொரு சாதாரண மனிதனுக்கும் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறது.

ஆனால் பாரதீய ஜனதா கட்சி தனி நபர் சர்வாதிகார ஆட்சியை கொண்டு வர விரும்புகிறது. லட்சக்கணக் கான காவலாளிகள் இந்த நாட்டை காக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

இதுதான் எங்களுக் கும் பாஜவுக்கும் உள்ள வித்தியாசம். இவ்வாறு ராகுல் பேசினார்.குஜராத் மாநிலத்தை போல மாடல் என்ற மோடியின் முழக்கத்தையும் ராகுல் தாக்கி பேசினார். இதுகுறித்து ராகுல் கூறுகையில், கடந்த தேர்தலின் போது இந்தியா ஒளிர்கிறது என்று பேசினர். தற்போது குஜராத் மாடல் என்று பேசி வருகின்றனர்.

இந்தியா ஒளிர்கிறது என்ற முழக்கம் தோல்வி அடைந் ததை போலவே குஜராத் மாடல் முழக்கமும் மக்கள் மத்தியில் எடுபடாது, தோல்வி அடையும் என்றார்.

மோடிக்கு அசோக்சவான் கேள்வி

மும்பை, மார்ச் 30- பா.ஜ., வேட்பாளர் நரேந்திர மோடி எங்கு வேண்டும் என்றாலும் பிரச்சாரம் செய்யலாம். ஆனால், அவர் மகாராஷ்டிரா மாநில வளர்ச்சி குறித்து கவலைப்பட தேவை யில்லை. ஏனெனில், அதன் வளர்ச்சி நன்றாகவே உள்ளது என, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக்சவான் கூறி உள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பா.ஜ.,வில் மீண்டும் எடியூரப்பாவை சேர்த்துக் கொண்டுள்ளது பற்றி, மோடி இதுவரை வாய் திறக்காதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/77872.html#ixzz2xUr16py2

தமிழ் ஓவியா said...


கழகத்தின் நீண்ட நாள் கோரிக்கைக்கு வெற்றி! பெல் ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரப்படுத்த உயர்நீதிமன்றம் ஆணை


திருச்சி, மார்ச் 30- திராவிடர் கழக பெல் ஒப் பந்த தொழிலாளர் சங்கத் தின் நீண்ட நாள் கோரிக்கை, ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பதாகும்.

இது தொடர் பாக கழகம் தொடுத்த வழக்கில் மதுரைக் கிளை உயர்நீதிமன்றம், திருவெ றும்பூர் பெல் ஒப்பந்த தொழிலாளர்களை தீர்ப்பு நகல் கிடைத்த எட்டு வாரங்களுக்குள் பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என்று நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் உத்தரவு பிறப் பித்தார். 1,189 ஊழியர்களை பணி நிரந்தம் செய்ய வேண் டுமென பெல் நிர்வாகத் திற்கு மதுரை உயர்நீதிமன் றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 35 ஆண்டுகளாக திருவெறும்பூர் பெல் நிறு வனத்தில் ஒப்பந்த ஊழி யர்களாக பணியாற்றி வரும் 1,189 ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் நிரு வாகம் அலட்சியப்படுத்தி வந்தது.

மேலும் அவர்கள் இதுவரையில் ஒப்பந்த ஊழியர்களாகவே பணி யாற்றியும் வருகின்றனர், அவர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி தி.க தொழிலாளர் சங்கம் சார் பில் பல்வேறு போராட் டங்கள் நடத்தப்பட்டு வந்த தோடு, திராவிடர் கழக மாவட்டத் தலைவர் மு.சேகர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கும் தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கின் விசா ரணை நேற்று முன்தினம் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பெல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர் களாக பணியாற்றி வரும் ஊழியர்களை அவர்களின் தகுதி அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய பெல் நிர் வாகத்திற்கு உத்தரவிட்டார்.

தி.க. தொழிலாளர் சங் கத்தின் நீண்டநாள் கோரிக் கையான இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது என் றும் இதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண் டுமென மு.சேகர் தெரிவித் துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/77869.html#ixzz2xUrAE2Jl

தமிழ் ஓவியா said...

மகிந்தா ராஜபக்சேவிற்கு மக்களிடையே ஆதரவு குறையத் துவங்கியது

கொழும்பு மார்ச் 30-தென்மாகாணசபைக்கு நேற்று நடந்த தேர்தலில் இலங்கை அதிபரின் சொந்த மாவட்டமான, அம்பாந் தோட்டையில் ஆளும் அய்க் கிய மக்கள் சுதந்திர முன் னணி வெற்றி பெற்றுள்ள போதிலும், அதன் வாக்கு வங்கி கணிசமாக வீழ்ச்சி யடைந்துள்ளது.

கடந்த தேர்தலில் 192,961 (66.95%) வாக்குகளைப் பெற்று 8 இடங்களைக் கைப்பற்றிய அய்க்கிய மக்கள் சுதந்திர முன்ன ணிக்கு, இந்த முறையும் அதே இடங்கள் கிடைத் துள்ளன. ஆனால், ஆளும் கட்சி 174,687 (57.42%) வாக் குகளையே இம்முறை பெற முடிந்துள்ளது. இதன்படி, சுமார் 18 ஆயிரம் வாக்கு களை ஆளும்கட்சி இம் முறை இழந்துள்ளது.

எதிர்கட்சிகளான அய் தேக, ஜேவிபி, ஆகிய கட்சி களுக்கு செல்வாக்கு அதி கரித்துள்ளது. கடந்த தேர் தலில், 62,391 (21.65%) வாக்குகளுடன் 3 இடங் களை கைப்பற்றிய அய்தேக வுக்கு, இம்முறை, 4 இடங் கள் கிடைத்துள்ளதுடன், 79,829 (26.24%) வாக்குகளை யும் அந்தக் கட்சி பெற் றுள்ளது. இதன்படி, அய்தேக வுக்கு சுமார் 17,500 வாக்குகள் அதிகமாக கிடைத்துள்ளது.

ஜெனிவா தீர்மானத்தின் போது அய்.நா மனித உரி மைக்குழு இலங்கை அரசு மீது சுமத்திய குற்றச்சாட் டிற்கு அரசு சரியான முறை யில் பதிலளிக்காததாலும், மனித உரிமைமீறல் பரப்பு ரைகள் பல சமூக தொண்டு ஆர்வலர்கள் முன்னெடுத் துச்செல்வதாலும் இலங்கை அதிபரின் மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.

இதன் மூலம் எதிர்கட்சிகள் இந்த வாய்ப்பை தொடர்ந்து நல்ல முறையில் பயன் படுத்திக்கொண்டால் இலங் கையில் அடுத்து வரும் அதிபர் தேர்தலில் இலங்கை யில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/77871.html#ixzz2xUrcQEDt

தமிழ் ஓவியா said...


இலங்கைத் தமிழர்களுக்காக ஜெயலலிதா சிறை சென்றது உண்டா? கலைஞர் கேள்வி


சென்னை, மார்ச் 30- இலங்கை தமிழர்களுக்காக முதல்-அமைச்சர் ஜெய லலிதா சிறை சென்றது உண் டா? என்று கலைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தலை வர் கலைஞர் வெளியிட் டுள்ள கேள்வி-பதில் அறிக் கையில் கூறியிருப்பதாவது:-

கேள்வி:-இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தைக் கூட தமிழ்நாடு சட்டப்பேர வையில் நிறைவேற்ற கருணா நிதிக்கு துணிவில்லை, இந்த பயத்துக்கு காரணம் தன்ன லம் என்று திண்டுக்கல்லில் ஜெயலலிதா சொல்லியிருக் கிறாரே?

பதில்:-இலங்கை தமிழர் களுக்கு அண்ணா உயிரோடு இருந்தபோதே, 29-1-1956 அன்று சிதம்பரம் நகரில் நடைபெற்ற பொதுக்குழு வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முன்மொழிந் தவனே நான்தான்.

ஈழத்தமிழர்களுக்காக தி.மு.க. தொடர்ந்து போராடி வந்ததோடு, ஆட்சிப்பொறுப் பிலே இருந்த போது 23-8-1990 அன்று சட்டப்பேரவையில் இலங்கைத் தமிழர் பிரச் சினைக்காக தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறை வேற்றியிருக்கிறேன். அதை காரணமாக காட்டித்தான் 1991ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தி.மு.க. ஆட்சி இரண்டாவது முறையாக கலைக்கப்பட்டது.

23-4-2008 அன்று தமிழக சட்டப்பேரவையில் இலங்கைத் தமிழர்களுக்காக ஒரு தீர்மானத்தை நான் முன் மொழிந்து நிறைவேற்றிட செய்தேன். 12-11-2008 அன்று பேரவையில் மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினோம்.

என்னை கேள்வி கேட்ட முதல்-அமைச்சரிடம் நான் ஒரு கேள்வியை திருப்பிக்கேட் கிறேன். நீங்கள்(ஜெயலலிதா) இலங்கை தமிழர்களுக்காக எத்தனை முறை கைது செய் யப்பட்டு சிறையிலே இருந் தீர்கள்? இலங்கை தமிழர் களுக்காக நீங்கள் ஏற்றுக் கொண்ட இழப்பு என்ன? ஆட்சியை இழந்தீர்களா? அல்லது குறைந்த பட்சம் உங்கள் சட்டப் பேரவை உறுப்பினர் பதவி யையாவது ராஜினாமா செய்திருக்கிறீர் களா?.

கேள்வி:- மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசும்போது, யாரும் கவலைப்பட வேண் டாம், மின்வெட்டே இல்லாத மாநிலமாக விரைவில் தமிழ கம் திகழும் என்று உறுதி கொடுத்திருக்கிறாரே?

பதில்:- கடந்த மூன் றாண்டு காலமாக, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதையேதான் திரும்ப திரும் பச்சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். மின்வெட்டு பிரச்சினையில் இந்த ஆட்சி யினர் தொடர்ந்து மூன் றாண்டு காலமாக கவலை வேண்டாம், மின் வெட்டே இல்லாத மாநிலமாக விரை வில் தமிழகம் ஆகும், மின் மிகை மாநிலமாக மாறும் என்றெல்லாம் குழந்தைக்கு நிலாவைப்பிடித்துத் தருவ தாக கதை சொல்வதைப் போல கற்பனையான வாக்கு றுதிகளைக்கொடுத்து, தமிழ் மக்களை ஏமாற்றியே ஆட்சிக் காலத்தைக் கடத்திவிடலாம் என்று எண்ணுகிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் திறமைசாலி கள், இவருடைய பொய்க்கும், பித்தலாட்டத்திற்கும் இனி யும் ஏமாறமாட் டார்கள்.

இவ்வாறு தி.மு.க. தலை வர் கலைஞர் தெரிவித்துள் ளார்.

Read more: http://viduthalai.in/page-3/77836.html#ixzz2xUsAce8C