Search This Blog

13.3.14

மோடி அலை வீசுகிறதா?

மோடி அலை வீசுகிறதாம்! நம்புங்கள்! இந்தப் பொய்யை


 

தலைவர் கலைஞர் அவர்கள் திரைக் கதை வசனம் எழுதிய மனோகரா திரைப் படத்தில் ஒருகாட்சி. மகன் மனோ கரனைக் கைது செய்து மன்னர் தந்தை அவைக்குக் கொண்டு வருவார்கள்.

அப்போது மனோகரனைப் பார்த்து மன்னர் கேட்பார்.

மனோகரா உன்னை எதற்காக அழைத்து வந்திருக்கிறோம் தெரியுமா?
மனோகரன் பதில் கூறுவார்

மன்னிக்க வேண்டும் மன்னரே. அழைத்து வரவில்லை. இழுத்து வந்திருக் கிறீர்கள் என்று.

அதுபோல் போகும் ஊரில் எல்லாம் கூட்டத்தைக் கூட்டி வந்து காட்டி, அந்தந்த ஊர் தொப்பியை அணிந்து கொண்டு - ஆம்! மலைப்பகுதியில் மலைப்பகுதி மக்கள் அணியும் குல்லா, பஞ்சாபில் சீக்கியர் அணியும் தலைப் பாகை, இராஜஸ்தானில் இராஜஸ்தானிய மக்கள் சுற்றும் தலைத்துணி அணிந்து காட்சி அளித்துப் பாரீர்! பாரீர்! என்று மோடி அலை வீசுவதாகப் போட்ட ஆட்டம் ஓய்ந்து விட்டது இப்போது தேர்தல் அறிவிப்பால்.
அதற்கு முன் குஜராத்தில் பாலாறு, தேனாறு ஓடுகிறது. இந்தியாவில் முதன்மை மாநிலம் குஜராத் - குஜராத்தில் அப்படி முன்னேற்றம், இப்படி முன் னேற்றம் என்று கனைத்ததெல்லாம் பொய்யுரைத்தவையெல்லாம் புள்ளி விவரங்களால், உண்மை நிலவரம் வெளிச்சத்துக்கு வந்ததால் அவை பொய், கனவு, பழங்கதை என்று ஆகிப் போனதையும் பார்த்தோம்.

அடுத்து இந்தியா முழுவதும் வீசுவது பா.ஜ.க.அலை. பா.ஜ.க விலேயே மோடியை ஏற்றுக்கொண்டு விட்டார்கள். உள் கட்சியினர் ராஜ்நாத்சிங், சுஸ்மா சிவராஜ், எல்.கே.அத்வானி ஆகிய எல்லோரும் கொண்டுள்ள அதிருப்தி வெளியாகி உள்ளது. வெட்கக்கேடான அவர்களின் உள்விவகாரம் வெளிச்சத் திற்கு வந்துள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால் குஜராத்தின் முதல்வர், குஜராத்தை குளிரச்செய்து வருபவர் என்றெல்லாம் பகட்டாகப் பேசிய மோடிக்குக் குஜராத் தில் மட்டுமல்ல. வேறு வட மாநிலத்தில் கூட வேட்பாளராகப் போட்டியிடத் தொகுதியே கிடைக்கவில்லை. ஏன் எனில் வெற்றி வாய்ப்புள்ள ஏற்கெனவே வெற்றி பெற்று வந்தவர்கள் தங்கள் தொகுதியை மோடிக்கு விட்டுத்தரத் தயாரில்லை.

எல்.கே.அத்வானி காந்திநகர் தொகுதியில் குஜராத்தில் போட்டியிட்ட காந்தி நகரை அவர் மோடிக்கு விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. ஆகக் குஜராத்திலேயே தொகுதி இல்லை. தனக்கு இடமில்லாதபோது அவருடைய ஆதரவாளர்கள் குஜராத்திலேயே மோடி அலை வீசச்செய்வார்களா? என்பது கேட்கப்படும் கேள்வி.

அடுத்துக் காஜியாபாத் தொகுதி - டெல்லிக்கு அருகில் இருப்பது. அதில் நின்று வெற்றி பெற்றவர் தாண்டன் என் பவர். அந்தத் தொகுதியை அவர் மோடிக்கு விட்டுக்கொடுக்கத் தயாரா யில்லை. உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி தொகுதி என்பது பா.ஜ.க வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பா.ஜ.க கல்வி அமைச்சரும், வாரணாசி பல்கலைக் கழகப் பேராசிரியருமான ஜோஷியின் தொகுதியை மோடி கண் வைத்தார்.

மறந்துபோய் சென்னையில் உணவு விடுதி விருந்தில் தண்ணீர் என்று ஆசிட் டைக் குடித்து விட்டார் என்று அப்போல் லோவில் சேர்க்கப்பெற்றுப் பிழைத்த ஜோஷி தொகுதியை விட்டுக்கொடுக்க மறுத்து விட்டார். தான் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் விட்டுக்கொடுக்க மறுத்துவிட்டார். தான் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் விட்டுக்கொடுக்க இயலாது என்பதை மழுப்புப் பதிலாகத் தெரிவித்து விட்டார்.

அடுத்து லக்னோ தொகுதி இது ராஜ்நாத்சிங், பா.ஜ.க. வின் தலைவரின் தொகுதி. இந்தத் தொகுதியைக் கண் வைத்தார் மோடி. அதுவும் கொடுக்க இயலாது என்று அவரும் சொல்லாமல் சொல்லி விட்டார்.

அடுத்து மிஞ்சி இருப்பவர் சுஷ்மா சுவராஜ். அவர் சமீபத்தில் பெங்களூர் வந்திருந்த போது தொகுதி பறிப்பு விவகாரத்தில் தன் அதிருப்தியைத் தெரிவித்து வெளியேறி விட்டார்.

ஆக இந்தியா முழுவதுமே பா.ஜ.க. வுக்குள்ளேயே குத்து வெட்டை வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்ற மோடிதான் இந்தியத் தலைமை அமைச்சர் வேட் பாளர் என்று கூறிவருவது ஒரு வேடிக்கை.

மராட்டியத்தில் பா.ஜ.க வின் தொடர்ந்த ஆதரவாளர் கட்சி பிற ஊர் மக்களை, மண்ணின் மைந்தர் கொள்கை அடிப்படையில் மராட்டியத்தை விட்டுத் துரத்தப்பல முறை வன்முறையில் ஈடுபட்ட சிவசேனா கட்சி தான். அந்தக் கட்சியுடன்தான் எப்போதுமே பால் தாக்கரே காலத்தில் இருந்து கூட்டு.
இப்போது ராஜ்தாக்கரே எனும் பால்தாக்கரேயின் மகன் நவ நிர்மாண் கட்சி என்று புதிய கட்சியைத் தொடங்கி ஏழு இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டதோடு ஏழு இடங்களில் ஆறு இடங்களில் சிவசேனாவை எதிர்த் துப் போட்டியிடப் போவதாக அறிவித்துத் தோளோடு தோள் இணைந்து மோ டியோடு நடைபோட்டு வருகிறார். சிவசேனா என்ன செய்யும் என்பது வெளிப்படையான உண்மை.

ஏற்கனவே தமிழகத்தில் பா.ஜ.க பூஜ்யம். ஆனால் பொய்க்கணக்கில் ஏராளமாக வைத்திருக்கிறார்கள் என்பதால் நம் ஊர் கேப்டன் கட்சி பா.ஜ.க வுடன் கூட்டு என்று பேச்சு வார்த்தை நடத்துகிறார். இவருடைய எதிரியான பா.ம.கவும், பா.ஜ.க வுடன் கூட்டு என்று பேசிப்பத்துத் தொகுதியை அறிவித்து விட்டது. எட்டுத்தொகுதியாவது போட்டி யிட்டே தீருவோம் என்கிறார் மருத்துவர். திராவிடப் பாரம்பரை என்று சொல்லும் வைகோ இந்த அணி என்று எட்டுத் தொகுதிகளாவது கிடைக்குமா என்று   ஏங்கி நிற்கிறது கொங்கு வேளாளர் கட்சி மோடிதான் பிரதமர் என்று முழங்கிய தெல்லாம் போய் வெளியேறும் நிலை.

இந்த நிலையில்  வழக்கம் போல், இன்னும் இரண்டு நாள்களில் தொகுதிப் பங்கீடு முடிந்துவிடும் என்று ஜோசியம் சொல்லிக்கொண்டு இருக் கிறார். அகில இந்திய அளவிலேயே பிரச்சினையைத் தீர்க்க இயலாத பா.ஜ.க. தலைவர் வந்த பின் எல்லாம் முடிந்து விடுமாம்.

இப்படிக் குழப்பமான குழப்பம் உடைய பா.ஜ.க. தான் அடுத்து ஆட்சி அமைக்கும் என்று மக்களை ஏமாற்று வதில் மட்டும் பா.ஜ.கவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவது என்னவோ உண்மை.

இந்த நிலையில் அலை வங்கக்கடலில், அரபிக்கடலில் வீசலாமே தவிர அது மோடி அலையாக எங்கும் வீசவில்லை. இது தான் உண்மை.

--------------------------------------------------------முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் -"விடுதலை” 12-3-2014
Read more: http://viduthalai.in/page-2/76816.html#ixzz2vnIb8t00

43 comments:

தமிழ் ஓவியா said...


களப்பலியான காளைகள்!


1937 ஆகஸ்டு 27இல் இந்தியைப் புகுத்துவது பற்றி அன்றைய சென்னை மாநிலப் பிரதமர் (றிக்ஷீமீனீவீமீக்ஷீ) சக்ரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் (ராஜாஜி) அறி வித்தார். சமஸ்கிருதத்தைப் படிப்படியாகப் புகுத்துவ தற்கே முதற் கட்டமாக இந்தியைக் கொண்டு வருகி றேன். என்று அவரை அறி யாமலேயே சென்னை இலயோலா கல்லூரியிலே பேசினார். ஆம் பூனைக் குட்டி வெளியில் வந்தது!

தந்தை பெரியார் தலைமை தாங்கினர், தமிழர் கள் எல்லாருமே கட்சி களைக் கடந்து ஜாதி, மதம் பிணக்குகளைத் துறந்து, தலைவர் பெரியார் தலைமை யிலே ஒன்று திரண்டனர்.

ஆம், அந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான் தமிழன் என்ற ஓரினக் கோட்பாட்டின் கீழ் தமிழர் கள் அணி வகுக்கும் நிலையை ஏற்படுத்தியது! தமிழ் மொழியின் பற்றுக் கரை புரண்டு ஓடியது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு ஏற்க வெளியூர்களிலி ருந்து எல்லாம் தோழர்கள் திரண்டு வந்தனர் தலைநகர் நோக்கி. விடுதலை ஏடு ஓர் அழைப்பைக் கொடுத்தது எப்படி? இந்தி எதிர்ப்புச் சத்தி யாக்கிரகம் செய்ய ஒப்புக் கொண்டு, விடுதலையில் பெயர்களை வெளியிட்ட தொண்டர்களில் தங்கள் சொந்தச் செலவில், உடுப் புக்களோடு ரயில் சார்ஜும் கொடுத்து வரக்கூடிய வசதியுள்ளவர்கள் உடனே புறப்பட்டுச் சென்னைக்கு வந்து சேர வேண்டியது - என்பதுதான் விடுதலை யின் அந்த அழைப்பு. (எத்தகைய வித்தியாசம்!)

குடந்தையிலிருந்து அப்படி வந்து சேர்ந்தவர் தான் தாளமுத்து என்ற வீரன்! சென்னை இந்து தியாலாஜிக்கல் உயர்நிலைப் பள்ளி முன் மறியல் செய்து கைது செய்யப்பட்டார்.

சென்னை ஜார்ஜ்டவுன் போலீஸ் கோர்ட் நீதிபதி மாதவராய் முன்னிலையில் நிறுத்தப்பட்டார். இப் படியே விட்டு விட்டால் ஊருக்குப் போய் விடு கிறீர்களா? என்று கேட்டார் நீதிபதி! வில்லிலிருந்து புறப் பட்ட அம்பு போல் பதில் வந்தது - அந்தப் புற நானூற்று வீரனிடமிருந்து. இல்லை முடியாது! என்று. விளைவு நான்கு மாதக் கடுஞ்காவல் தண்டனை. அந்தோ அம்மாவீரன் சிறையிலேயே நோய் வாய்ப்பட்டு வீர மர ணத்தை முத்தமிட்டான்!

இன்னொரு தோழன் சென்னையைச் சேர்ந்த அருமை நடராஜன், அவ் வீரனுக்கோ ஆறு மாதக் கடுஞ்காவல் தண் டனை! அம்மாவீரனும் சிறையிலே மாண்டான். படிப்பறிவு இல்லாத ஹரி ஜன் - ஆதலால் மாண்டான் என்று மமதையோடு சட்ட சபையில் பேசினார் பார்ப் பனரான ராஜாஜி.

நடராஜன் இரங்கல் கூட் டத்தில் தளபதி அண்ணா பேசினார் விடுதலைபெற்ற தமிழகத்தில் தலைவர் பெரி யாரை நடுவில் வைத்து இறந்த இரு மணிகளையும் பக்கத்தில் வைத்து உருவச் சிலை எழுப்ப வேண்டும் என்றாரே!

சென்னை எழும்பூரில் செம்மாந்து நிற்கும் பெரு நகர வளர்ச்சித் திட்ட (MMDA) மாளிகைக்கு தாளமுத்து நடராஜன் என்று பெயர் சூட்டித் திறந்து வைத்தார் மானமிகு மாண்புமிகு முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள்! (14.4.1989). - மயிலாடன்

குறிப்பு: இன்று தாள முத்து மறைந்தநாள் (1939).

Read more: http://viduthalai.in/e-paper/76808.html#ixzz2vnME5b3h

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி.க்குள் எங்கு பார்த்தாலும் குடுமிப் பிடிச் சண்டை

பிரதமர் கனவு மூழ்கும் கப்பலாகி விட்டது

தி எக்னாமிக் டைம்ஸ் படப்பிடிப்பு

புதுடில்லி, மார்ச் 12- பாரதீய ஜனதா கட்சிக்குள் எங்குப் பார்த்தாலும் உள் கட்சிச் சண்டை நடந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக பிரதமர் கனவு என்னும் கப்பல் மூழ்கும் கப்பலாகி விட்டது என்று படம் பிடித்துள்ளது தி எக்னாமிக் டைம்ஸ் ஏடு.

தேநீர்க் கடை விவாதம் (சண்டை) கட்சித் தலைமை அலுவலகத்தில் தீவிரமாக நடந்து கொண்டு இருக் கிறது. பாரதீய ஜனதா கட்சி யின் மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி தலைமை யின் முடிவில் மிகவும் அதி ருப்தியில் உள்ளார்.

முரளிமனோகர் ஜோஷி யின் நாடாளுமன்ற தொகு தியான வாரணாசிமீது பார தீய ஜனதாவின் பிரதம ருக்கான வேட்பாளர் கண் வைத்துள்ளார். தொடக்கம் முதலே இந்த தகவல் முரளி மனோகர் ஜோஷிக்குத் தெரியவந்தாலும் அதை தலைமை தமக்கான தொகு தியை அவருக்கு ஒப்புக் கொள்ளாது என்று நினைத்து வந்தார். ஆனால் இறுதியில் வாரணாசித் தொகுதியை நரேந்திரமோடிக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைக்கு முரளிமனோகர் ஜோஷி தள்ளப்பட்டார். இதனால் விரக்தியடைந்த ஜோஷி கட்சியின் தலை மைக்குக் கட்டுப்படுவேன் என்று கூறினாலும், தனக்கு நெருக்கமானவர்களிடம் வாரணாசி தொகுதியில் நான் போட்டியிடாவிட்டால் கட்சிக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்று கூறிக்கொண்டிருக்கிறார். மேலும் அவர் கூறிய தாவது: தற்போதைய அரசியல் சூழலில் பாரதீய ஜனதா தலைமை கட்சிக்கும், கட்சியின் பிரதம அமைச்சர் பதவி வேட்பாளராக இருக் கும் மோடிக்கும் பாதகம் ஏற்படும் முடிவை கட்சி எடுக்காது என்று நினைக் கிறேன் என்றார்.

சில நாட்களாகவே பார தீய ஜனதா கட்சியில் உட்கட்சிப்பூசல்கள் மெல்ல மெல்ல உருவாகிவிட்டன. முக்கியமாக கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் நரேந்திர மோடி என்ற ஒரு வருக்காக பொதுக்கூட்டங் களில் இரண்டாம் பட்ச நப ர்களாக நடத்தப்பட்டுக் கொண்டு வருகின்றனர். ஜோஷி போர்க் கொடி!

முரளிமனோகர் ஜோஷி யைப் பொறுத்தவரை பார தீய ஜனதா கட்சியின் முக் கியத்தூண்களின் ஒருவராக இருந்து வருகிறார். வார ணாசி தொகுதியில் தொடர்ந்து பாரதீய ஜனதா சார்பாக தேர்தலில் நின்று வெற்றி பெற்று வருகிறார். இந்தச் சூழ்நிலையை மனதில் வைத்து கடந்த இரண்டு முறை வாரணாசியில் பொதுக் கூட்டம் நடத்திய நரேந்திர மோடி வேறு எங்கும் நின்று பரிசோதனை செய்து பார்ப் பதைவிட பாதுகாப்பான வாரணாசித்தொகுதியில் நிற்பதே தற்போது நல்லது என்று நினைத்துத் தலைமை யிடம் கூறினார். தலைமை யும் தற்போது உள்ள அரசி யல் அழுத்தததின் காரண மாக நரேந்திரமோடி இந்த வாரணாசி தொகுதியில் போட்டியிடும் முடிவை ஒப்புக்கொண்டு முரளி மனோகர் ஜோஷியிடம் தெரிவித்துள்ளது, .

தமிழ் ஓவியா said...

தலைமையிடத்தில் பொது விவாதம் வைக்கவில்லை

முரளி மனோகர் ஜோஷி யின் தொகுதியில் நரேந்திர மோடி போட்டி இடுவது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களான சுஸ்மா சுவராஜ், அத்வானி மற்றும் லால்ஜிடண்டன் போன்ற வர்களிடம் விவாதிக்க வில்லை, இதனால் கட்சித் தலைமையில் பெருத்த பிளவு ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது. நரேந்திர மோடி பிரதம ராக கட்சித் தலைமை அறி வித்ததில் இருந்தே மூத்த தலைவர்களான அத்வானி, சுஸ்மா சுவராஜ் போன்ற தலைவர்கள் புறக்கணிக் கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மோடி யின் தொகுதித் தேர்வு பிரச்சனையும் சேர்ந்து கொள்ள, தலைமையில் பிளவு கூடிக் கொண்டே வருகிறது.

தற்போது நாடு முழு வதும் ஏற்பட்டுள்ள அரசி யல் கூட்டணி குறித்து மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். முக்கியமாக பாஸ்வானுடனான கூட் டணியில் எந்த மூத்த தலை வர்களின் ஆலோசனையை யும் பெறவில்லை, அதே போல் தொகுதிப்பங்கீட்டி லும் மூத்த தலைவர்களின் கருத்து புறக்கணிக்கப்பட் டது. தற்போது பாரதீய ஜனதா கட்சித் தலைவர் ராஜ நாத் சிங் தலையாட்டி பொம் மையாக மாறிவிட்டார்.

கர்நாடகாவில் எடியூ ரப்பா கட்சியில் இணைந்த விவகாரம் குறித்து சுஷ்மா சுவராஜ் சமூகவளை தளத் தில் அதிருப்தி தெரிவித் துள்ளார். சுஷ்மா சுவராஜ் நேரடி யாகவே பாரதீய ஜனதா கட்சித் தலைவர் ராஜநாத் சிங் மீது குற்றம் சுமத்த ஆரம் பித்து விட்டார். சமூக வளை தளத்தில் கட்சித்தலைவர் என்பவர் அனைத்து உறுப் பினர்களையும் ஒரேமாதிரி யாக பாவிக்கவேண்டும் என்று மறைமுகமாக ராஜ நாத் சிங்கைக் குறிப்பிட் டுள்ளார், மாநிலத்தில் குடுமிப் பிடிச்சண்டை பாரதீய ஜனதா தேர்தல் வேலை ஆரம்பித்ததில் இருந்தே மாநிலங்களிலும் உட்கட்சிச் சண்டை தீவிர மாக துவங்கிவிட்டது.

சிவசேனா பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியில் மராட் டிய மாநில துணைப் பிரதமராக இருந்த கோபி நாத் முண்டே மற்றும் கட் சியின் முன்னாள் தலை வரும் ஆர்.எஸ்.எஸ்சுக்குப் பிரியமான நிதின் கட்கரியும் தற்போது பொது மேடை யிலேயே சண்டையிட ஆரம் பித்து விட்டனர். குறிப்பாக மராட்டிய பாரதீய ஜனதா கட்சி கிழக்கு மேற்கு என இரண்டு பிரி வாக பிரிந்து அவர்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு இருக்கின்றனர். நிதின் கட் கரி மீது வருமானவரித்துறை குற்றம் சாட்டியதில் இருந்தே அவரை கட்சியின் முக்கிய பதவியில் நீடிக்கவிடாது கோபிநாத் முண்டே தலை மைக்கு அடிக்கடி கடிதம் எழுதி மிரட்டிவந்தார். இந்த சூழ்நிலையில் தான் நிதின் கட்கரிக்கு பாரதீய ஜனதா கட்சித்தலைவர் பதவி மீண் டும் கிடைக்காமல் ராஜநாத் சிங்கின் கையில் சென்றது, இதனால் கோபிநாத் முண்டே மீது கடுங்கோபத்தில் இருந்த நிதின் கட்கரி மராட்டிய மாநில பாரதீய ஜனதா வேட் பாளர் தேர்வில் கைவைத் தார். கோபிநாத் முண்டே யின் ஆதரவாளர்களில் பலருக்கு போட்டியிட வாய்ப்புக் கிடைக்காமல் இருந்து தனக்கு ஆதர வானவர்களின் பெயர்களை மாத்திரமே அதிகம் பரிந் துரை செய்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த கோபிநாத் முண்டே தலைமைக்கு எச்சரிக்கை விடும் தொனியில் கடிதம் எழுதியுள்ளார். ஆகையால் மராட்டிய மாநில வேட்பா ளர்கள் அறிமுகமாவது சிக்கலில் உள்ளது,

எடியூரப்பா ஒரு பிரச்சினை!

அதே போல் பிரிந்து சென்று மீண்டும் கட்சியில் இணைந்த எடியூரப்பா அனைத்துத் தரப்பிலும் கட்சியினரிடம் தனது அதி காரத்தை காட்டி வருகிறார். இது பாரதீய ஜனதா கர் நாடகத் தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள் ளது, கட்சித் தலைமையை மதிக்காமல் கட்சியை விட்டு விலகி புதுக்கட்சி ஆரம் பித்து அது போணியாகாமல் மீண்டும் திரும்பி கட்சிக்கு வந்தவருக்கு மோடி முக் கியத்துவம் கொடுத்து வருகிறார். இதன் காரண மாக எடியூரப்பா தலைக் கனம் பிடித்து அலைகிறார். கட்சிக்காக சிரமமான காலத்திலும் ஒன்றாக நின்று பாடுபட்ட நாங்கள் தற் போது கட்சிக்கு வேண்டாத வர்களாக ஆகிவிட்டோம், எங்களின் ஆலோசனை களை யாரும் ஏற்பதில்லை என்று கர்நாடகா பாரதீய ஜனதா கட்சித் தலைவர் ஒருவர் தன்னுடைய ஆதங் கத்தை வெளிப்படுத்தினார். ஏற்கெனவே பஸ்வானு டனான கூட்டணி குறித்து பிகார் மாநில பாரதீய ஜன தாவின் முக்கிய தலைவர்கள் எதிர்ப்புக் காட்டி வந்த நிலையில் தற்போது மெல்ல மாநிலம் முழுவதும் உட் கட்சிப் பூசல் அதிக அளவில் பெருகியுள்ளது.

இது தேர்தல் நெருங்க நெருங்க மேலும் அதிகரிக் கும் என்றே தெரிகிறது. ஆட்சிக்கனவில் மிதந்து கொண்டு இருந்த பாரதீய ஜனதா கப்பல் தற்போது உட்கட்சி சண்டை காரண மாக மெல்ல மெல்ல மூழ் கிக்கொண்டு இருக்கிறது.

(தி எக்னாமிக் டைம்ஸ் 10.3.2014)

Read more: http://viduthalai.in/e-paper/76809.html#ixzz2vnMTygV6

தமிழ் ஓவியா said...


மோடிக்கு குட்டு!!


- குடந்தை கருணா

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, போட்டியிடும் தொகுதியைத் தேர்ந்தெடுப்பதில் பாஜக தலைவர்களிடையே கடும் சச்சரவு ஏற்பட்டுள்ளது. மோடி வாரணாசி தொகுதியில் நிற்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். அந்த தொகுதியில் பாஜகவின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி சென்ற முறை வெற்றி பெற்ற தொகுதி. இந்த முறையும் தனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என கேட்கிறார். இப்போது மோடி அந்த தொகுதியை கேட்பதால், ஜோஷி ஆத்திரம் அடைந்துள்ளார்.

கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் இத் தகைய முடிவு எந்த அடிப்படையில் எடுக்கப்படுகிறது என கேள்வி எழுப்பி உள்ளார். பாஜகவின் மக் களவைத் தலைவராக இருந்த சுஸ்மா சுவராஜ், ஜோஷிக்கு ஆதரவாக உள்ளார்.

ஏற்கனவே, குஜராத்தில் அத்வானி தொடர்ந்து வெற்றி பெறும் காந்தி நகர் தொகுதியில் மோடி தான் நிற் பதற்கு முயற்சி செய்து, அத்வானியின் கடும் எதிர்ப்பால், அது நிறுத்தப் பட்டது.

இப்போது, வாரணாசி தொகுதி யில், ஜோஷியை விரட்டி விட்டு தான் நிற்கலாம் என முடிவு செய்திருப்ப தற்குக் காரணம், அங்கே ஆர். எஸ்.எஸ். மோடிக்கு ஆதரவாக ஏற் கனவே பிரச்சாரம் துவக்கிவிட்டது.

இந்நிலையில், தனது டிவிட்டரில், மோடிக்கு நாடு முழுவதும் அலை வீசுகிறது என்றால், எதற்காக, வார ணாசி தொகுதிதான் தனக்கு வேண் டும் என ஏன் கேட்க வேண்டும்; மற்ற தலைவர்களும், அவரவர் தொகுதியிலேயே போட்டியிட லாமே? என கேள்வி எழுப்பி உள்ளார் சுஸ்மா சுவராஜ்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல் இதுவரை மூன்று பட்டி யல் வெளியிடப்பட்டது. ஆனால், மோடி எந்த தொகுதி என இன்னமும் தெரிவிக்கப்படவில்லை.

அண்மையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள், ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும்போது, மோடிக்கு அலை வீசுவதாக ஊடகங் கள் சொல்கின்றன. மோடிக்கு அலை ஒன்றும் வீச வில்லை; மோடி தான் அலைந்து கொண்டிருக்கிறார் என்று பேசினார்கள்.

ஆசிரியர் வீரமணியின் இந்த பேச்சை, வழிமொழிவது போல் இருக்கிறது பாஜகவின் மூத்த தலை வர் சுஸ்மா சுவராஜின் கருத்து.

Read more: http://viduthalai.in/page-2/76819.html#ixzz2vnMxPPf6

தமிழ் ஓவியா said...

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை (1)
நடக்கவிருக்கும் 16ஆவது மக்களவைத் தேர்தலை யொட்டி திமுக வெளியிட்டுள்ள நூறு அம்சங்களைக் கொண்ட தேர்தல் அறிக்கை என்பது வரலாற்றுப் பெட்டகம்!

அரசியலில் ஈடுபடும் ஒரு திராவிட இயக்கம் - தன் விழுமிய வேர்களை மறந்து விடாமல், அதன் சித்தாந்தங்கள் - கோட்பாடுகளின் அடிப்படையில் இதைவிடச் சிறப்பாகத் தீட்டப்பட முடியாது என்று கூறும் வகையில், இந்தத் தேர்தல் அறிக்கை செப்பமாக உருவாக்கப்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

தேர்தல் அறிக்கையின் முன்னுரையே - நூறு அம்சத் திட்டத்தின் முகப்படாமாக - முத்திரையடியாக ஜொலிக்கிறது!

1912இல் டாக்டர் சி. நடேசனார் அவர்களால் தொடங்கப்பட்ட மதராஸ் அய்க்கிய லீக் (விணீபீக்ஷீணீ ஹிஸீவீமீபீ லிமீணீரீமீ) தொடங்கி - ஒரு நூற்றாண்டுக்கு மேலான வரலாற்றுப் பொன் வரிகளால் நெய்யப்பட்ட ஒரு பொக்கிசமாக இது பளபளக்கிறது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுதுதான் சூரியனுக்கும், கருகிய இலைக்கும் இடையே உள்ள வேறுபாட்டின் எல்லை என்ன என்பது விளங்கும்.

திராவிட இயக்கத்தைப்பற்றியோ அதன் நோக் கத்தைப் பற்றியோ, அது கடந்து வந்த அந்த அரிமா நடைபற்றியோ, அதன் ஒப்பற்ற தலைவர்களின் ஆளுமை குறித்தோ மருந்துக்குக்கூட அ.இ.அ.தி. மு.க.வின் தேர்தல் அறிக்கையில் நுண்ணாடியை வைத்துத் தேடினாலும் கிடைக்கப் பெறவில்லை.

அதுவும் ஒரு வகையில் நல்லதுதான்! அ.இ.அ.தி. மு.க.வுக்கும் திராவிட இயக்கத்தின் அடிப்படைச் சித்தாந்தங்களுக்கும் எந்த வகையிலும் ஒட்டும் இல்லை- உறவும் இல்லை என்று தெரிந்து கொள்வதற்கு நல்ல வாய்ப்பாகவே இது அமைந்து விட்டதல்லவா!

தமிழ் ஓவியா said...

தேர்தல் அறிக்கை என்பதைக்கூட மறந்து விட்டு, அதில்கூட தி.மு.க. தலைவரை பக்கத்துப் பக்கம் வசைபாடும் போக்கு அக்கட்சியின் தரத்தை விளக்கும் தன்னிலை விளக்கமாகும். அண்ணாவின் படத்தை அட்டையில் போட்டால் போதுமா? அவர் வற்புறுத்திய கண்ணியம் என்பதும் கடைச் சரக்காகி விட்டதே!

அதே நேரத்தில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திரத் திட்டத்துக்கு எதிராக ஆளும் அ.தி.மு.க. அரசு செயல்பட்டுள்ளதை அவசியம் கருதி நாகரிகமாகவே சுட்டிக் காட்டியுள்ள கண்ணியத்தையும், நனி நாகரிகத்தையும் கவனிக்கத் தவறக் கூடாது. அப்பொழுதுகூட கட்சியின் பெயர் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதே தவிர, செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் பெயரைக் கூடக் குறிப்பிடவில்லை என்பது அடிக் கோடிட்டுப் படிக்கத் தகுந்ததாகும்.

ஒரு தேர்தல் அறிக்கை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை! ஒரு தேர்தல் அறிக்கை எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை!

நாட்டு வளர்ச்சிக்கு மிகவும் தேவை என்று எதிர்பார்க்கப்படும் தமிழர்களின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டம் குறித்து தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை பேசுகிறது.

அ.இ.அ.தி.மு.க.வின் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்றிருந்த சேது சமுத்திரத் திட்டம் இந்தத் தேர்தல் அறிக்கையில் காணாமற் போன மர்மம் என்ன? இப்பொழுது அக்கட்சி எடுத்துள்ள முடி வையாவது அறிவித்திருக்கலாமே! அப்படிச் செய்வது தானே அறிவு நாணயமாகவும் இருக்க முடியும்?

ஏனிந்த இரட்டை வேடம்? குறிப்பாக சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முதல் அமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் தொடுத்துள்ள வழக்கு - இந்த தேர்தலில் அவருக்கு மிகப் பெரிய எதிர்ப்புச் சுனாமியை - பின்னடைவை ஏற்படுத்தப் போகிறது என்பதை இப்பொழுதே எழுதி வைத்துக் கொண்டு விடலாம்.

தி.மு.க.வும் - அதன் தோழமைக் கட்சிகளும் குறிப்பாக தென் மாவட்டங்களில் நடைபெறும் - பிரச்சாரத்தில் அ.தி.மு.க. அரசின் இந்த மன்னிக்கவே முடியாத துரோகத்தைத் தோலுரித்துத் தோரணமாகத் தொங்க விட வேண்டும்.

இந்த எதிர்ப்பை எதிர் கொள்ள இயலாமல் அ.இ.அ.தி.மு.க. அணி திணற வேண்டும். சேது சமுத் திரத் திட்டம் என்னால்தான் வந்தது என்று மார்தட்டிக் கொண்ட மறுமலர்ச்சி தி.மு.க.வின் திடீர்ப் பல்டியையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் மதுரவாயலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் (10.3.2014) தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிக் கொடுத்து விட்டார்.

ஓர் ஆட்சி என்பது வளர்ச்சிக்கா? தளர்ச்சிக்கா? வளத்திற்கா? வறட்சிக்கா? என்று எழுப்பிய வினாவும், அதற்காக அவர் எடுத்து வைத்த ஆவண ரீதியான ஆதாரங்களும் நடக்க இருக்கும் தேர்தலில் முக்கிய இடம் பெறும் என்பதில் அய்யமில்லை.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை நடக்க இருக்கும் 16ஆவது மக்களவைத் தேர்தலில் உலா வரும் உத்தமக் கதாநாயகனாக இருக்கப் போகிறது என்பதில் அய்யமில்லை. தேர்தல் அறிக்கையினைத் தயாரித்த குழுவினர்க்கு நாம் மட்டுமல்ல; அதனைப் படிக்கும் ஒவ்வொரு குடிமகனும், குடிமகளும் வாக்காளரும் பாராட்டுவர் என்பதில் அய்யமில்லை.

வெல்லட்டும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி!

Read more: http://viduthalai.in/page-2/76815.html#ixzz2vnN8UZzF

தமிழ் ஓவியா said...


கடவுள் - மதம்



மற்ற நாடுகளில் மனிதனுக்கு மனிதன் பற்றும், அன்பும் உண்டாக்கக் கடவுள், மதம் இருக்கின்றன. நமது நாட்டிலோ, மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், வேற்றுமையும் உண்டாக்கவே கடவுள், பக்தி, பூசை, சடங்குகளை ஏற்படுத்து கிறார்கள்.
(விடுதலை, 16.5.1968)

Read more: http://viduthalai.in/page-2/76814.html#ixzz2vnNKZ4gR

தமிழ் ஓவியா said...


தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தொலைநோக்குத் திட்டங்கள்




நதிகள் தேசிய மயம் - நதிகள் இணைப்பு தேசிய மீனவர் நல ஆணையம் உருவாக்கம்

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தொலைநோக்குத் திட்டங்கள்


28. மீனவர் நலன்

கிழக்கு கடற்கரைப் பகுதிகளிலும் மற்றும் கச்சத் தீவு அருகிலும் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதும், அவர்கள் பிடித்த மீன்களை இலங்கை கடற்படையினர் கையகப்படுத்திக் கொள்வதும், வாடிக்கையாகிவிட்டது. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகிறார்கள். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த நிலை யினை அகற்றிட இருநாட்டு அரசுகளும், மீனவச் சமுதாயத்தின ரோடு கலந்து பேசி நிரந்தரத் தீர்வு காண்பதோடு, இப்பிரச் சினையை கண்காணிக்க, இருநாட்டுக் கடற்கரைப் பகுதியிலும் சிக்கல் தீர்க்கும் மையம் உருவாக்கிட வலியுறுத்துவோம்.

இத்தகைய அயல்நாட்டு அச்சுறுத்தல்களிலிருந்து இந்திய மற்றும் தமிழக மீனவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகை யில் மத்திய அரசில் ஒரு தனி அமைச்சகத்தை உருவாக்கி, தனிப் பொறுப்பு வாய்ந்த அமைச்சரையும் நியமித்திட மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

மீனவர்களுக்கான தேசிய சேமிப்புத் திட்டம் முன்பிருந்ததைப் போலவே, மீனவர் - மாநில - மத்திய அரசு மூன்றும் 1:1:1 என்ற சமபங்கு விகிதாசாரம் கொண்டதாக மாற்றி அமைக்கப்பட தி.மு.கழகம் வலியுறுத்தும்.

கடற்கரைப் பகுதிகளில் வாய்ப்புள்ள இடங்களில் மீன்பிடித் துறைமுகங்கள் ஏற்படுத்தவும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், கடலூர், புதுவை, காசிமேடு (சென்னை) ஆகிய இடங்களிலுள்ள மீன்பிடித் துறைமுகங்களை, தண்ணீர் வசதி, மின்வசதி, எரிபொருள் நிரப்பும் வசதி போன்ற அத்தியாவசியத் தேவைகள் நிறைவு பெறும் வண்ணம் மேம்படுத்தவும், அனைத்து மீன்பிடித் துறைமுகங்களிலும் நவீன குளிர்பதன வசதியுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த கிடங்குகள் அமைக்கவும், மீன்பிடித் தொழில் லாபகரமானதாகவும் அத்தொழிலைச் சார்ந்திருக்கும் மீனவர்கள் தங்கள் உழைப்பிற்கு உரிய பலன் பெறுவதற்கும் நவீன மீன்பிடி உத்திகளைக் கையாள்வதற்குரிய பயிற்சியையும், அதற்குத் தேவைப்படும் நவீன கருவிகளை மானிய விலையில் வழங்குவ தற்கும், அக்கருவிகளை பயன்படுத்தும் முறைகளைக் கற்றுத் தருவதற்கும் ஓர் அமைப்பினை உருவாக்கிட வேண்டும் என்று மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

மேலும் மீனவர்களுக்கு உரிய விலை கிடைத்திடும் வகையில் ஏற்றுமதியாகும் மீன் வகைகளின் பராமரிப்புத் தரத்தை மேம்படுத்திட உரிய பயிற்சிகளை மீனவர்கள் பெற்றிட, பயிற்சி நிறுவனங்களை மத்திய அரசு தொடங்கிட வேண்டுமென்றும் தி.மு.கழகம் வலியுறுத்தும். இந்தியாவில் உள்ள அனைத்து கடல் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் தேசிய மீனவர் நல ஆணையம் ஒன்றை உருவாக்கவும் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள தி.மு.க. பாடுபடும். 29. பழங்குடியினர் பட்டியலில் மீனவர்கள்.

தமிழ் ஓவியா said...

மீன்பிடித் தொழில் நாகரிகம் வளர்ந்த காலத்திற்கு முன்பிருந்தே நடைபெற்று வரும் மிகப் பழமையான தொழிலாகும். மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடிப்பதை மட்டுமே தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு கேரளா மற்றும் கர்நாடக மாநில அரசுகள் மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் இணைத்துள்ளனர். எனவே, இந்தியா முழுவதும் இருக்கும் மீனவர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் இணைப்பதற்கும் - பழங்குடியினருக்குள்ள அனைத்து சலுகைகளையும் மீனவர்கள் பெறுவதற்கும் தி.மு.கழகம் பாடுபடும்.

30. மீனவர்களை பாதுகாத்திட தனித்துறை உருவாக்கல்

இந்திய மீனவர்கள் குறிப்பாக, தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால், அச்சுறுத்தல் - துப்பாக்கிச் சூடு - படகுகள் பறிமுதல் செய்தல் - நடுக்கடலில் வலைகளை அறுத்தெறிதல் - பிடித்த மீன்களை கொள்ளை அடித்தல் போன்ற கொடுமைகளை தொடர்ந்து பன்னெடுங் காலமாக அனுபவித்து வருகின்றனர். இத்தகைய அயல்நாட்டு அச்சுறுத்தல்களிலிருந்து இந்திய, தமிழக மீனவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் வகையில் மத்திய அரசில் ஒரு தனி அமைச்சகத்தை உருவாக்கிட மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

31. கடற்கரைவாழ் மக்கள் இயற்கைச் சீற்றப் பாதுகாப்புச் சட்டம்

சுனாமிக்குப் பின் கடற்கரை கிராமங்களில் வாழும் மக்கள் திரும்பவும் ஆழிப்பேரலை அழிவு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, மீன்வளம் - கடற்கரைப் பாதுகாப்பு ஏற்படுத்த, கடலியல் சார்ந்த வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் பொறியாளர் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்து, கடற்கரைவாழ் மக்கள்; இயற்கைச் சீற்றப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றிட தி.மு.கழகம் வலியுறுத்தும். மேலும், ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களைக் காப்பாற்றிட இந்தியக் கப்பல் படை மற்றும் கடலோரப் பாதுகாப்புப் படையுடன் மீனவர்களுக்குத் தங்கு தடையற்ற தொலைத் தொடர்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்து ஆங்காங்கே ஹெலிகாப்டர் தளம் அமைத்து, அதன் மூலம் மீனவர்களின் உயிரிழப்புகளை தவிர்த்திட வேண்டுமென தி.மு.கழகம் வலியுறுத்தும்.

அதுபோலவே, நடுக்கடலில் உயிரிழக்கும் மீனவர்களின் குடும்பங்கள் இறப்புச் சான்றிதழ் பெறுவதில் உள்ள சிரமங்களைப் போக்கி, மீனவர் சங்கங்களின் பிரமாண வாக்குமூலத்தின் அடிப்படையில், இறப்புச் சான்றிதழ் வழங்கிட வேண்டுமென தி.மு.கழகம் வலியுறுத்தும்.

32. கடல் வேளாண்மை

உலகின் பல நாடுகளில் கடற்கரையோரங்களில் நிர்ணயிக்கப்பட்ட கடற் பரப்பில் அதன் தன்மைக்கேற்ப உயிரியல் தொழில் நுட்பத்தோடு கடல்வாழ் உயிரினங்களை வளர்க்கும் கடல் வேளாண்மை முறை பின்பற்றப் படுகிறது. சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய பயிற்சி பெற்ற மீனவர்கள் இவ்வகை கடல் வேளாண்மையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியக் கடல் பகுதிகளில் இதுபோன்ற கடல் வேளாண்மை முறையை பின்பற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு உருவாக்கிட வேண்டுமென்று தி.மு.கழகம் வலியுறுத்தும்.

33. மொழிக் கொள்கை - தமிழ் ஆட்சிமொழி

தமிழ் ஓவியா said...

நம் தாய்மொழியாம் தமிழ்மொழியைக் காத்திடவும், இந்தித் திணிப்பை எதிர்த்திடவும், ஈட்டிமுனையாகச் செயல்படுகின்ற திராவிட முன்னேற்றக் கழகம் அதற்காக எண்ணிலடங்கா இழப்புகளை ஏற்றுக் கொண்டுள்ளதோடு, தொடர்ந்து அவ்வழியில் பணியாற்றிடவும் உறுதி கொண்டுள்ளது.

இந்தி பேசாத மக்கள் விரும்புகிற காலம் வரை மத்திய ஆட்சி மொழியாக ஆங்கிலமே நீடிக்கும் என்றும், பிறமொழி பேசும் மக்கள்மீது இந்தி திணிக்கப்பட மாட்டாது என்றும் பண்டித நேரு வழங்கிய வாக்குறுதி எப்பொழுதும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதைத் தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் தனது உரையில், அனைத்து மாநிலங்களிலும் ஆட்சிமொழிகளாக உள்ள இந்திய மொழிகள் அனைத்தும் (Official Indian Languages of all the States)) மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக ஆக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். எனினும் இதுவரை மத்திய அரசு அனைத்து இந்திய மொழிகளையும் ஆட்சி மொழிகளாக ஆக்குவதற்கான எத்தகைய முயற்சியையும் மேற் கொள்ளவில்லை. குடியரசுத் தலைவர் உரையில் அறிவித்த தற்கேற்ப, அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி மொழிகளாக உள்ள இந்திய மொழிகள் அனைத்தும் (Official Indian Languages of all the States) மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக ஆக்கப்படுவதற்குரிய வகையில் ஆட்சி மொழிச் சட்டத்தில், உரிய திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வர தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தும்.

அதனடிப்படையில், திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியான இலக்கியப் பண்பாட்டு வளம் நிறைந்த தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்கவேண்டு மென்று 1996ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தும்.

அதுவரை மத்திய அரசுப் பணிகளுக்கும் மத்திய பணியாளர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் நடைபெறும் பணியாளர் தேர்வுகளுக்கும் அந்தந்த மாநில ஆட்சி மொழிகளாக உள்ள இந்திய மொழிகளையும் இணைத்து, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தும்.

34. மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழி
செம்மொழியான நமது தாய்மொழி தமிழ், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இணை ஆட்சி மொழியாக (Co-official Language) பிரகடனப்படுத்தப்பட்டு, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் - நிறுவனங்கள் - தேசியமய மாக்கப்பட்ட வங்கிகள் ஆகியவை தமிழிலேயே செயல்பட வேண்டுமென்றும்; இதற்காக இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 343ஆவது பிரிவில் உரிய சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டுமென்றும் மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

35. உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ்

இந்திய உச்ச நீதி மன்றத்தின் அதிகாரங்களைப் பரவலாக்கிடும் நோக்கத்துடன், புது டெல்லியில் ஒரு உச்ச நீதி மன்றம், மண்டல அளவிலான மேல்முறையீட்டு நீதி மன்றங்கள்(Four Regional Courts of Appeal)
நாட்டின் நான்கு பகுதிகளிலும் உருவாக்கப்பட வேண்டுமென்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கு செயல் வடிவம் கொடுக்க பாடுபடுவோம்.

தமிழ் ஓவியா said...

இந்திய ஆட்சி மொழிச் சட்டம் 1963 பிரிவு -7ன்படி இந்தி அல்லது மாநிலங்களின் ஆட்சி மொழிகள், மாநில உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகள் பயன்படுத்தப்படலாம் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பயன்பாட்டிற்கு சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி, அதனை ஆளுநர் அவர்களின் பரிந்துரையுடன் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினால், அவர் அதனையேற்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் இந்திய ஆட்சி மொழிச் சட்டம் கூறுகிறது. அதன் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள், தமிழக சட்டமன்றத்தில் 6-12-2006 அன்று தமிழை நீதிமன்ற மொழியாக்கிட வேண்டுமென்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, அதனை ஆளுநர் பரிந்துரையுடன் மத்திய அரசுக்கு 11-2-2007 அன்று அனுப்பி வைத்தார். ஆனால் இதுவரை மத்திய அரசு எவ்வித முடிவும் எடுக்கவில்லை. எனவே, தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக ஏற்க வேண்டுமென்று தி.மு.கழகம் மத்திய அரசை வலியுறுத்தும்.

36. நதிகள் தேசிய மயமும், இணைப்பும்

2002ஆம் ஆண்டில் இந்திய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நதிநீர் தேசிய மயம் - நதிநீர் இணைப்பு தொடர்பான பொதுநல வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினைத் தொடர்ந்து, காலாகாலமாக கிடப்பிலே போடப்பட்டுள்ள - இந்திய நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும், தேசிய மயமாக்கி இந்தியாவின் வடபாகத்தில் உள்ள கங்கை நதியை தென் பகுதியில் ஓடிக்கொண்டிருக்கும் கிருஷ்ணா, பெண்ணாறு, காவேரி, வைகை, தாமிரபரணி, நெய்யாறு ஆகிய நதிகளுடன் இணைத்திட வேண்டுமென்றும், கேரள மாநிலத்தில் மேற்கு நோக்கிப் பாய்ந்து, அரபிக் கடலில் வீணாகும் அச்சன்கோவில் - பம்பா நதிகளை தமிழ்நாட்டோடு இணைத்திட வேண்டுமெனவும், இந்த நடவடிக்கைகளுக்கு வடிவம் கொடுப்பதற்கும் நிறைவேற்ற வழிவகைகள் காண்பதற்கும், நிபுணர்கள் அடங்கிய சிறப்புக் குழு ஒன்றை உருவாக்கி அதற்குரிய திட்டச் செலவையும் ஒதுக்கீடு செய்து, இந்தியாவில் கிடைத்திடும் முழு அளவு நீரின் பயன்பாட்டை உயர்த்தி, உரிய நீர் மேலாண்மை மூலம் இந்திய வேளாண்மையின் தரத்தையும் உற்பத்தியையும் அதிகரித்து வேளாண் பெருங்குடி மக்களைக் காப்பாற்றவும், அனைத்துப் பகுதிகளிலும் குடி நீர்த் தேவையை முழுமையாக நிறைவு செய்திடவும் மத்திய அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள தி.மு.கழகம் பாடுபடும்.

37. மின்சாரம்

அந்தந்த மாநிலங்களில் மத்திய அரசின் நிறுவனங்கள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை அந்தந்த மாநிலங்களின் பயன் பாட்டிற்கே வழங்கப்படுவதற்கும், மிகை மின்சாரம் உற்பத்தி யாகும் நிலையில் மட்டுமே மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்படுவ தற்கும், ஒரு மாநிலத்தில் உள்ள மிகை மின்சாரத்தை மின் தட்டுப்பாடு உள்ள மற்றொரு மாநிலத்திற்கு எளிதில் கொண்டு செல்வதற்கு ஏதுவாக இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங் களையும் இணைத்திடும் வகையில் மின்வழித் தடங்கள் உருவாக்கப்படு வதற்கும் மத்திய அரசை வலியுறுத்துவோம்.

38. தூக்கு தண்டனை ஒழிப்பு நாகரீகம் வளர்ந்துள்ள இருபத்தோறாம் நூற்றாண்டில், உலகின் 150 நாடுகளில் தடை செய்யப்பட்ட மரண தண்டனையை இந்திய அரசும் ஏற்று, இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் உரிய திருத்தங்களை கொண்டு வந்து தூக்கு தண்டனையை அடியோடு ரத்து செய்ய வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

39. பொருளாதாரக் கொள்கை

விலைவாசிக் கட்டுப்பாடு, தொழில் துறையிலும் விவசாயத் துறையிலும் வேகமான வளர்ச்சி, சமுதாயத் துறைகளுக்கு (Social Sector) அதிகமான நிதி ஒதுக்கீடு, அதன் வாயிலாக நாடெங்கும் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், அனைவருக்கும் வேலைவாய்ப்பு, எல்லோருக்கும் வீட்டு வசதி, தனிநபர் வருமானத்தை அதிகப்படுத்தல், வறுமை ஒழிப்பு இவைதான் நாடு கடைப்பிடிக்க வேண்டிய பொருளாதாரக் கொள்கை.

வறுமை ஒழிப்பு என்பது அறநெறிக் கோட்பாடு மட்டுமல்ல; அது ஒரு அடையக்கூடிய இலட்சியமே'' (Eradicating absolute poverty is more than a moral imperative; it is an attainable goal).

தமிழ் ஓவியா said...

இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படைக் கட்ட மைப்பாக இருந்து, அந்தந்தப் பகுதி மக்களின் வேலைவாய்ப்புத் தேவைகளை நிறைவு செய்வதற்கு பொதுத்துறை நிறுவனங்களே உறுதுணையாக இருந்தன. மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து, சமுதாய வளர்ச்சிக்கும், சமமான பொருளாதார முன்னேற்றத்துக்கும் அடிப்படையாக அமைந்து இலாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படவும், இழப்புக்கு உள்ளாகும் பொதுத்துறை நிறுவனங்களை வலிவுடையனவாக சீரமைக்கவும், சிறப்புத் திட்டங்களை உருவாக்க வேண்டும். குறிப்பாக, தமிழகத்திலுள்ள பொதுத்துறை நிறுவனங்களான, இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ், ஐ.டி.பி.எல். ஆகியவற்றை எக்காரணம் கொண்டும் மூடவோ, தனி யார் மயமாக்கவோ கூடாது எனவும், அவை தொடர்ந்து செயல் பட, உரிய முதலீடு செய்வதும் மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்துவதும் தேவை என வலியுறுத்துவோம். நெய்வேலி நிலக்கரி நிறுவனம் போன்ற மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்கிட வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்து வோம்.

மேலும், கேரள மாநிலத்திலுள்ள உர நிறுவனமான FACT நிறுவனத்தில் மேலும் ஒரு அலகு அமைப்பதற்காக 8,000 கோடி ரூபாயினை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதேநேரத்தில், சென்னையில் உள்ள சென்னை உரத் தொழிற்சாலை (Madras Fertilizers Ltd) விரிவாக்கத்திற்கு 4,800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்ப டவில்லை. கடந்த மூன்றாண்டு காலமாக தொடர்ந்து லாபத்தில் இயங்கி வரும் சென்னை உரத் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு போதிய நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

கடந்த சில ஆண்டுகளாக பணவீக்கம் அதிகரிக்கும் போக்கு நிலவுகிறது. அதுபோலவே வெளிநாட்டுக் கடன்கள் திருப்பிச் செலுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அரசின் கொள்கை முடிவுகளில், அரசு சாராத நிறுவனங்களின் தலையீடு அதிகரித்து, அதன் விளைவாக முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சம் தான் இதற்கு அடிப்படைக் காரணம் என்று தி.மு.கழகம் கருதுகிறது.

எனவே, அரசின் கொள்கை முடிவுகளில், அரசு சாராத நிறுவனங்களின் தலையீட்டைக் கட்டுப்படுத்த உரிய முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள தி.மு.கழகம் வலியுறுத்தும்.

40. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு

மத்திய அரசின் ஒட்டுமொத்த வரி வருவாயில் 60 விழுக் காட்டை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும்.

நிதிக்குழுவின் அமைப்பு (Constitution of Finance Commission) மற்றும் ஆய்வு விதிகள்(Terms of Reference) ஆகியன மாநிலங்களுக்கான மன்றத்தில் (Inter-State Council) மட்டுமே முடிவு செய்தல் வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தும்.

41. புதுவைக்கு முழு மாநிலத் தகுதி

புதுவை நீண்ட நெடுங்காலமாகவே யூனியன் பிரதேசமாக இருந்து வருவதால், அதற்கு முழு மாநிலத் தகுதி தரப்பட வேண்டுமென்ற நம்முடைய கோரிக்கை வெற்றி பெற மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்.

தமிழ் ஓவியா said...

42. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு

இந்திய நாட்டில் சுமார் 50 ஆயிரம் கோடி மதிப்புள்ளதும், மக்கள் தொகையில் இருபது கோடி மக்களுக்கு உணவு அளிப்பதுமான இந்தியாவின் சில்லரை வணிகத்தை, கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பரில் ஒற்றை இலச்சினை சில்லரை வணிகத்தில் நூறு விழுக்காடு அந்நிய முதலீட்டையும், பல இலச்சினை சில்லரை வணிகத்தில் 51 விழுக்காடும் அந்நிய நேரடி முதலீட்டை சில நிபந்தனைகளோடு மத்திய அரசு அனுமதித்தது. ஆனால், தற்போது அந்த நிபந்தனைகளைத் தளர்த்தி அந்நிய முதலீட்டாளர்களுக்குப் பல்வேறு சலுகைகளை வழங்கிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொண்டு அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் இறங்குமானால், சில்லறை வணிகம் முற்றிலும் பாதிக்கப்பட்டு தங்களுடைய வாழ்வாதாரத்திற்கு, அதையே நம்பியிருக்கும் பல கோடி சிறு வணிகர்களும் பாதிப்புக்கு ஆளாகும் நிலைமை உருவாகும் என்பதை உணர்ந்து, சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை முற்றிலுமாகத் தடை செய்வதற்கு தி.மு.கழகம் பாடுபடும்.

43. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டுச் சட்டம்

மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்த உள்ள உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டுச் சட்டம், பொருளாதாரத்தில் மிகவும் அடித்தட்டில் உள்ள சிறு, குறு வணிகர்களின் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய கடுமையான விதிகளை கொண்ட சட்டமாக அமைந்துள்ளது. எனவே, உணவுத் தரத்தைக் கட்டுப்படுத்துவது தேவை என்றாலும், தற்போதுள்ள சட்டத்தைத் திரும்ப பெற்றுக் கொண்டு - சிறு, குறு வணிகர்களின் நலன் எந்த வகையிலும் பாதிக்காத அளவிற்கு, அவர்களுடன் கலந்துபேசி, புதிய சட்டத்தை உருவாக்கிட மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

தமிழ் ஓவியா said...

44. கல்விக் கடன்கள் தள்ளுபடி

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பங்களைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், கல்விக் கடன் பெற்று, தங்கள் படிப்பை நிறைவு செய்துள்ளனர்; பலர் படிப்பைத் தொடர்ந்து வருகின்றனர். கல்வி நிலையங்களில் தங்கள் படிப்பை முடித்த மாணவர்களுக்கு, உடனடியாக வேலை கிடைக்காத நிலையில் அவர்கள் பெற்ற கல்விக் கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வங்கிகள் கடன் பெற்ற மாணவர்களின் குடும்பங்களை நிர்பந்தித்து வருகின்றன. மேலும், கடன் பெற்ற மாணவ - மாணவியரின் விவரங்களை பொது அறிவிப்பாகவும், வங்கிகள் வெளியிடுகின்றன. இதனால், மாணவர்களும் அவர்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் மனரீதியாக பெரிதும் பாதிப்படைந்து சோர்வுற்றுள்ளனர். இத்தகைய மனிதாபிமானமற்ற அணுகுமுறையினை வங்கிகள் மாற்றிக் கொள்ளவும் - வங்கிகள் மாணவர்களுக்கு வழங்கிய கல்விக் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யவும் தி.மு.கழகம் பாடுபடும்.

45. மாவட்டத் தலைநகரங்களில் சர்வதேச விளையாட்டரங்கம்.

இன்றைய இளைஞர்கள் சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு உரிய தகுதிகளைப் பெறுவதற்கும் - பயிற்சி அளிப்பதற்கும் தேவையான நவீன உலகத் தரம் வாய்ந்த அடிப்படை கட்டுமானங்களை மாவட்டத் தலைநக ரங்கள் தோறும் அமைத்திட, மத்திய அரசை வலியுறுத்தும்.

46. அடிப்படைக் கட்டமைப்பு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கி, போக்குவரத்து, மின்சாரம், இணைப்புச் சாலை வசதிகள், நீர்வளம் ஆகியவற்றினை மேம்படுத்துவதற்கு வசதியாகப் புதிய தொழிற்கொள்கை வகுத்திட வலியுறுத்தப்படும்.

தமிழ் ஓவியா said...

47. சென்னைத் துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம்

பொதுவாக தத்தமது மாநிலத்தின் நலன் விரும்பும் அரசுகள் மத்திய அரசிடமிருந்து தேவையான திட்டங்களைக் கேட்டுப் பெற்று செயல்படுத்துவதுதான் நடைமுறை. ஆனால், தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.கழக ஆட்சிக் காலத்தில், மத்திய அரசிடம் கோரிப் பெற்ற சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்தை, காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அ.தி.மு.க. அரசு முடக்கி வைத்தது கண்டனத்திற்குரிய ஒன்றாகும். தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டு, அத்திட்டத்தை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது. அதன்படி அந்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நேரத்தில், தமிழக அரசு தொடர்ந்து இந்தத் திட்டத்தை நிறைவேற்ற விடாமல், உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார்கள். எனினும் உச்ச நீதி மன்றம் தடையாணை ஏதும் வழங்கவில்லை. பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. எனவே இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட வேண்டுமென்று மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

தமிழ் ஓவியா said...

48. குளச்சல் துறைமுகம்

குளச்சல் துறைமுகம் இயற்கையாக அமைந்துள்ள ஒன்று. வளர்ந்து வரும் உலக வர்த்தகத்தால் சிங்கப்பூர், கொழும்பு துறைமுகங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதால் கப்பல் நிறுத்த இடமின்றிக் காலதாமதம் ஏற்பட்டு, பன்னாட்டுக் கப்பல்கள் சிரமத்திற்கும் இழப்புக்கும் உள்ளாக்கப்படுகின்றன. வளர்ந்து வரும் சரக்குக் கப்பல் போக்குவரத்தை எதிர்கொள்வதற்கு குளச்சல் துறைமுகம் மிகவும் அவசியமாகிறது. சில ஆண்டு களுக்கு முன்பு தி.மு.கழக அரசு மேற்கொண்ட ஆய்வின்படி துறைமுகத்தின் அருகிலேயே கப்பல் போக்குவரத்திற்குத் தேவையான ஆழமான பகுதியைக் கொண்டிருப்பதால் அதிகச் செலவின்றிக் குளச்சல் துறைமுகத்தை பன்னாட்டுத் துறை முகமாக நிறுவிட முடியும். கிழக்கே உள்ள நாடுகளுக்கும் மற்றும் மேற்கே உள்ள நாடுகளுக்கும் இந்தத் துறைமுகம் ஒரு நுழை வாயிலாக விளங்கும். ஆகவே, குளச்சல் துறைமுகத்தை நவீன வசதி கள் கொண்ட பன்னாட்டுத் துறைமுகமாக மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு வலியுறுத்துவோம்.

49. தொழிலாளர் - பணியாளர் நலன்

மத்திய அரசின் தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் தொழிலாள ர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அமையவில்லை. இத்திட்டத்தை எதிர்த்து பல்வேறு தொழிற் சங்கங்களும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்நிலையில் மத்திய அரசு, பணி ஓய்வு பெற்றோர் நலச் சங்கங்களுடன் அரசே மூன்றாண்டுகளுக்கு ஒரு முறையோ அல்லது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையோ பேச்சு வார்த்தை நடத்தி அவர்களுடைய ஓய்வூதிய உயர்வினை வழங்கிட வேண்டுமென தி.மு.கழகம் வலியுறுத்தும். அதுபோலவே புதிய அரசு ஊழியர் ஓய்வூதியத் திட்டமும், அரசு ஊழியர்களின் நலன்களுக்கு உகந்ததாக அமையவில்லை. எனவே, இத்திட்டம் குறித்தும் மத்திய அரசு மறு ஆய்வு செய்து, அரசு ஊழியர்கள் 2004ஆம் ஆண்டுக்கு முன்பு பெற்று வந்த சலுகைகள் குறையாத வகையில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள தி.மு.கழகம் பாடுபடும். தொழிலாளர்களுக்கான போனஸ் வழங்குவதற்கான அனைத்து உச்ச வரம்பினையும் முழுமையாக நீக்கிட வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

தொழிலாளர் நலத் திட்டங்கள் முறையாக நடைமுறைப் படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காக தேசிய அளவில் கண்காணிப்பு ஆணையம் ஒன்று அமைக்கப்பட தி.மு.கழகம் வலியுறுத்தும்.

50. கிராமப் புற அஞ்சல் தொழிலாளர்கள்

அஞ்சல் துறையில் பணிபுரியும் ஏறத்தாழ இரண்டரை இலட்சம் ஜி.டி.எஸ். தொழிலாளர்கள் அரசு ஊழியர்களாகவோ, தொழிலாளர் நலச் சட்டங்களின் அடிப்படையில் தொழிலாளர் களாகவோ கருதப்படாமலும், குறைந்த ஊதியத்தில் பணியாற்று வதோடு, தொழிலாளர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் கிடைக்கும் பணிக்கொடை, ஓய்வூதியம், வைப்புநிதி போன்ற அனைத்து வகை சமூகப் பாதுகாப்புத் திட்டங்களையும் பெற இயலாதவர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள். இவர்களை பணி நிரந்தரம் செய்வதோடு, அவர்களுக்கு உரிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வற்புறுத்தும்.

மாநிலப் பட்டியலில் மீண்டும் கல்வி
போர்க்கால அடிப்படையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

திமுக தேர்தல் அறிக்கையில் சமதர்மத் திட்டம்

* பத்து லட்சம் மகளிர்க்கு வேலை
* பாதுகாக்கப்பட்ட குடிநீர்
* அகல ரயில் பாதைகள்
* விவசாயக் கடன் ரத்து
51. அமைப்பு சாராத் தொழிலாளர் நலன்

கழக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள், மரமேறுவோர், முடிதிருத்துவோர், கட்டுமானப் பணியாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், ஆட்டோ - டாக்சி ஓட்டுனர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான கைவினைஞர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கென நலவாரியங்கள் உருவாக்கப்பட்டு, அந்த வாரியங்களின் உறுப்பினர்களான தொழிலாளர் எவரும் திடீரென மரணமடைந்தால், அவர்கள் குடும்பத்திற்கு ஒரு இலட்ச ரூபாய் நிதி - அவர்களின் பிள்ளைகளின் கல்விக்கு ரூ.2000த்திலிருந்து 6000 வரை உதவித் தொகை, பணிக்காலத்தில் விபத்துக்குள்ளாகும் எவரும் உடலு றுப்புகளை இழக்க நேரிட்டால், ரூ.50,000த்திலிருந்து ஒரு இலட்சம் வரை உதவித் தொகை, என்ற வகையில் வழங்குவதெற்கென ஒரு மாபெரும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதேபோன்ற திட்டத்தை இந்தியா முழுமைக்கும் விரிவுபடுத்தப் பாடுபடுவோம். மேலும், மத்திய அரசு இத்திட்டத்திற்காக நிலையான நிதியம் ஒன்றை ஏற்படுத்தி, அதற்கு உச்ச வரம்பு விதிக்காமல், மத்திய அரசே முழு செலவினங்களையும் ஏற்றுக் கொள்ளவேண்டு மென்று தி.மு.கழகம் வலியுறுத்தும்.

தமிழ் ஓவியா said...


52. அனைத்து இந்தியத் தொழிற் சங்கங்களின் பத்து அம்ச கோரிக்கை

இந்தியாவிலுள்ள தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற் சங்கங்களும் இணைந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக பத்து அம்சத் திட்டத்தினை முன்வைத்து, தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஆனால், பல்வேறு போராட்டங்களை நடத்தியும், எந்தவித பயனும் கிடைக்கவில்லை. இதன் விளைவாக தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்த பத்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற தி.மு.கழகம் தொடர்ந்து பாடுபடும்.

53. தொழிலாளர் மருத்துவக் காப்பீடு

அனைத்து மாவட்டங்களிலும், தொழில் நகரங்களிலும் தொழிலாளர் மருத்துவக் காப்பீட்டு மையங்களை மத்திய அரசு தொடங்கிட தி.மு.கழகம் வலியுறுத்தும்.

54. போனஸ் திட்டம்

அரசுப் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் போனஸ் தொகையினை 8.33 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக உயர்த்திட, மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

55. வங்கி ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம்

அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரியும் ஊழியர் களுடைய ஊதிய ஒப்பந்தம் 2012ஆம் ஆண்டு முதல் எதிர் பார்த்துக் கொண்டிருந்தபோதும், இதுவரைக் கையெழுத்திடப் படவில்லை. மிக முக்கியமான இந்தப் பிரச்சினை குறித்து தி.மு. கழகம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, அதன் மூலம் ஒப்பந்தம் ஏற்படுத்திட வலியுறுத்தும்.

56. தனிநபர் வருமான வரி உச்சவரம்பு

ஆண்களின் மாத வருமானம் 50 ஆயிரம் வரையிலும் (அதாவது ஆண்டு வருமானம் ரூ. 6 இலட்சம் ) - பெண்கள் மாத வருமானம் 60 ஆயிரம் வரையிலும் (அதாவது ஆண்டு வருமானம் ரூ. 7.20 இலட்சம் ) இருந்தால், அந்த வருமானத்திற்கு வரிவிலக்கு அளித்திட வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

தமிழ் ஓவியா said...

57. மூத்த குடிமக்களுக்கு வருமான வரி விலக்கு

அரசு பணிகளிலிருந்து ஓய்வு பெறும் அலுவலர்களுக்கு, ஓய்வு நாளில் வழங்கப்படும் ஓய்வூதியப் பணிக் கொடைக்கு வருமானவரி விலக்கு அளித்திட வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும். மூத்த குடிமக்கள் ஐந்து ஆண்டுகள் வரை வைப்புத் தொகையாக ரூ.20 இலட்சம் வரை வைத்திருந் தால், அதில் வரும் வட்டிக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென மத்திய அரசை தி.மு.க. வலியுறுத்தும்.

58. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

படித்துவிட்டு வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்கள் தீவிரவாத திசைநோக்கித் திரும்பி, நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பேராபத்து விளைவிப்பதைத் தடுத்து நிறுத்துவதற்காக பொருளாதாரக் கொள்கைகளிலும், தொழிற் கொள்கையிலும் உரிய மாற்றங்களை மேற்கொண்டு, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களைப் பெருமளவில் உருவாக்க போர்க்கால அடிப்படையில் ஒரு சிறப்புத் திட்டத்தினைச் செயல்படுத்திடவும் அதற்கேற்ப தேவைப்படும் கல்வி மற்றும் தேவையான பயிற்சி மையங்கள் நாடு முழுதும் அமைத்திடவும் தி.மு.கழகம் வலி யுறுத்தும். நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பினை உருவாக்குவ தற்கெனத் தனி முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். அரசுத் துறையில் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதுடன், சுயவேலை வாய்ப்புத் திட்டங்கள் உருவாக்கல், புதிய தொழில் முனைவோரை ஊக்குவித்தல், சிறுதொழில் மற்றும் நுண்தொழில் துறைகளில் ஈடுபடுவோருக்கு ஊக்கமளித்தல் போன்ற நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தி.மு.க. வலியுறுத்தும்.

பெரும்பான்மையோர் வேலைவாய்ப்பு பெறுவதற்கும், வறுமையின் கொடுமை குறைவதற்கும் சிறுதொழில் மற்றும் கிராமத் தொழில்கள் ஆகியவற்றில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புக்களைப் பெற, சிறுதொழில் முன்னுரிமைப் பட்டியல் உருவாக்கப்பட வேண்டுமென தி.மு.க. வலியுறுத்தும்.

குறிப்பாக, மிகுந்த வேலைவாய்ப்புகள் உடைய ஆடைகள் தயாரித்தல், பழச்சாறு, குளிர்பானம், உணவு பதனிடுதல், வீட்டு உபயோகத்துக்கான சிறு பொருள்கள், கைவினைப் பொருள்கள், தீப்பெட்டி, சோப்பு, சமையல் எண்ணெய் விநியோகம் போன்ற தொழில்கள் மற்றும் சேவைத் துறைகள் இப்பட்டியலில் இடம்பெற தி.மு.க. வலியுறுத்தும். தற்போது இலட்சக்கணக்கான இந்தியர்கள் அரபு நாடுகளில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். ஆனால், அந்த நாடுகள் மேற்கொண்டுள்ள கொள்கை மாறுதல்கள் காரணமாக அவர்கள் வேலையிழந்து தாயகம் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களைப் பாதுகாத்து, இவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்கக்கூடிய வகையில், இவர்களுடைய பிரச்சினைகளை ஆராய்ந்து முடிவெடுக்கவும் - அவர்களுடைய மறுவாழ்வுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்திடவும் ஒரு குழு அமைத்து, அந்தக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்திட தி.மு.கழகம் வலியுறுத்தும். வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்து, வேலை வாய்ப்புக் காகக் காத்திருக்கும் பள்ளி இறுதிப் படிப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த இளைஞர் களுக்கு உரிய வேலை வாய்ப்பு கிடைத்திடும் வரை, மாதந்தோறும் உதவித் தொகை வழங்கிட மத்திய அரசை வலியுறுத்துவோம்.



59. 10 இலட்சம் மகளிருக்கு மக்கள் நலப்பணியாளர் வேலைவாய்ப்பு

அரசுத் திட்டங்களைப் பயனாளிகள் புரிந்து கொண்டு திட்டங்களின் மூலம் நன்மை அடையும் வகையில் நாடெங்கும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக, கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ், கழக ஆட்சியில் நியமிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களைப் போல; அகில இந்திய அளவில் பத்தாம் வகுப்பு வரை படித்த பத்து இலட்சம் மகளிர் கிராமப் பணியாளர்கள் நியமிக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளுமாறு வலியுறுத்துவோம்.

60. 10 இலட்சம் பேருக்கு சாலைப் பணியாளர்கள் வேலைவாய்ப்பு

தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் மாநில நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்கு நியமிக்கப் பட்டது போல - மத்திய அரசுத் திட்டத்தின்கீழ் தரம் உயர்த்தி அமைக்கப்படும் சாலைகளைப் பராமரிப்பதற்கும், 13,000 கிலோ மீட்டர் தங்க நாற்கரச் சாலைகள் மற்றும் கிழக்கு - மேற்கு; வடக்கு - தெற்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆகியவற்றைப் பராமரிப்ப தற்கும் பத்தாம் வகுப்பு வரை படித்த இளைஞர்கள் 10 இலட்சம் பேர் சாலைப் பணியாளர்களாக நியமிக்கப்பட வேண்டுமென வலியுறுத்துவோம்.

61. குடிநீர்

இந்தியா முழுமைக்கும் குடிமக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளவும், குடிநீர் வழங் குதலை முறைப்படுத்துவதற்கு வல்லுனர் குழு நியமிக்கப்படவும் தி.மு.க. பாடுபடும். சென்னைப் பெருநகர், குடிநீர் பற்றாக்குறை யால் மிகப் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. எல்லா கிராமப்புறங் களிலும் நகர்ப்புறங்களிலும் இதேநிலை நீடிக்கிறது. இதனைப் போக்குவதற்கு மத்திய அரசு, அவசர கால நடவடிக்கையாகக் கருதி, போதிய நிதி உதவி செய்யவேண்டு மென்று தி.மு.க. வலியுறுத்தும்.

தமிழ் ஓவியா said...

62. மழை நீர் சேகரிப்பு

நிலத்தடி நீர் மட்டம் மிக வேகமாகக் குறைந்து கொண்டே போவதால், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் தொழிற்சாலைகள் பயன்படுத்துகின்ற தண்ணீரின் அளவை கணக்கில் எடுத்துக் கொண்டு, கட்டாயமாக ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மழை நீர் சேகரிப்புத் திட்டங்களை நிறைவேற்றிடவும் - மேலும், லாபம் ஈட்டும் தொழிற்சாலைகள், தங்களுடைய லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை இத்திட்டங்களுக்குப் பயன்படுத்தும் வகையில் புதிய சட்டம் ஒன்றினை மத்திய அரசு கொண்டுவரவும் தி.மு.கழகம் வற்புறுத்தும்.

63. மரபுசாரா எரிசக்தி

சுற்றுச்சூழல் மேம்பாட்டினையும், நீடித்த நிலைத்த வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்கும் வகையிலும் காற்று, சூரிய ஒளி, மற்றும் கடல் அலைகள் ஆகியவற்றின் சக்திகளைக் கொண்டு மரபுசாரா எரிசக்தி உற்பத்தி செய்ய சிறப்புத் திட்டங்கள் வகுத்து முனைப் புடன் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.

கிராமங்களில் உள்ள அரசு நிலங்களில் அந்தந்த கிராமத்தின் தேவையை கருத்தில் கொண்டு, சூரியஒளி மின் உற்பத்தி செய்திட, உரிய திட்டம் வகுத்துச் செயல்படுத்திட மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

64. மக்கள் நல்வாழ்வு

வருமுன்காப்போம் திட்டம் கழக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு, மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்ற வருமுன்காப்போம் திட்டத்தை அகில இந்திய அளவில் விரிவுபடுத்த வேண்டுமென தி.மு.கழகம் வலியுறுத்தும். மேலும் நாட்டின் மொத்த உள்உற்பத்தியில் 3 சதவிகிதம், மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வற்புறுத்தும்.

65. இந்திய உள்நாட்டு மருத்துவத் துறையில் உயர் ஆராய்ச்சி

இந்தியாவின் உள்நாட்டு மருத்துவ முறைகளான சித்த மருத்துவம், ஹோமியோபதி, யுனானி மருத்துவம் மற்றும் ஆயுர் வேதம் ஆகிய இயற்கை மருத்துவ முறைகளை கோடிக்கணக்கான இந்திய மக்கள் பின்பற்றி வருகிறார்கள். இந்த உள்நாட்டு மருத்துவ முறைகளில் உயர் ஆய்வு மேற்கொள்வதற்கும் - பின்விளைவுகள் இல்லாத இந்த மருத்துவ முறைகளை, மக்கள் நம்பிப் பயன்படுத்துவதற்கும் ஏதுவாக ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் ஆயுர்வேத மருத்துவப் பல்கலைக் கழகத்தைப் போல, தமிழகத்தில் சித்த மற்றும் யுனானி மருத்துவ முறைகளுக்கான பல்கலைக் கழகத்தை நிறுவிட மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

66. கல்வி

மாநிலப் பட்டியலில் மீண்டும் கல்வித் துறை 1950இல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி கல்வி மாநிலப் பட்டியலிலேயே இருந்தது. பல்வேறு இன, மொழி, பண்பாட்டு அடையாளங்களைக் கொண்ட இந்தியாவில், கல்வித்துறை மாநிலங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான் சிறப்பாக இருக்கும் என மத்திய அரசு அமைத்த கோத்தாரி குழுவும் பரிந்துரைகளை அளித்துள்ளது. 1976க்குப் பிறகு கல்வியைப் பொதுப்பட்டியலுக்கு எடுத்துச் சென்றதன் காரணமாகப் பல இடையூறுகளும், முரண்பாடுகளும் கல்வி வளர்ச்சியில் ஏற்பட்டு வருகின்றன என்பதை அனுபவ ரீதியாக உணருவதால், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும் என்று தி.மு.கழகம் வலியுறுத்தும்.

தமிழ் ஓவியா said...

சென்ற 2004 நாடாளுமன்றத் தி.மு.கழக தேர்தல் அறிக்கையில் மொத்த உள்உற்பத்தியில் கல்விக்கு 6 விழுக்காடு ஒதுக்கப்பட வேண்டுமென்று அரசுக்கு ஏற்கனவே பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. எனினும் அப்பரிந்துரையின்படி 6 விழுக்காடு இதுவரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தற்போது கல்வி பயில் வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், கல்விக்கென்று மொத்த உள்உற்பத்தியில் 7 விழுக்காடு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

67. வேளாண்மை

மாநில அரசுகள் விவசாயத்திற்கென இலவச மின்சாரம் வழங்க முற்பட்டால், அதற்கு உரிமை அளிக்கும் வகையில் மின்சாரக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் தளர்த்தப்பட வேண்டுமென வலியுறுத்துவோம்.

உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட விவசாய விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப் பாடுபடுவோம். விவசாய உற்பத்தி உயர வழி வகைகள் காணும் கருத்துக்களை வலியுறுத்துவோம்.

உணவுப் பொருள்களின் வணிக ரீதியான உற்பத்திக்கும் அவற்றைப் பதப்படுத்துவதற்கும், சேமித்து வைப்பதற்கும் உரிய திட்டங்கள் உருவாக்கப் படுவதற்கான முயற்சி மேற்கொள்வோம்.

தமிழ் ஓவியா said...

வறட்சி, புயல், வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கைச் சீற்றங்களால் வேளாண் பயிர்கள் பாதிப்புக்குள்ளாக்கப்படும்போது, விவசாயிகளின் உற்பத்திச் செலவைக் கணக்கிட்டு, முழுமையான இழப்பீடு வழங்க வலியுறுத்துவோம். பயிர்க் காப்பீட்டுத் திட்டம் முழுமையாக விவசாயிகளுக்குப் பயனளித்திடும் வகையில், அந்தத் திட்டத்தை எளிமைப்படுத்துவதற்கு விவசாயிகள் சங்கங் களைக் கலந்தாலோசனை செய்து தேவையான திருத்தங்கள் நடைமுறைக்கு வருவதை வலியுறுத்துவோம்.
வளரும் நாடுகளின் வேளாண்மைப் பொருள்கள் ஏற்று மதியைப் பாதிக்கக்கூடிய வகையில், உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறி, வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டு விவசாயிகளுக்கு வழங்கிவரும் சலுகைகளைத் தடுத்து நிறுத்துவதன் மூலம் நமது நாட்டு விவசாயிகளைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துவோம். கரும்பு விவசாயிகளுக்கு உரிய காலத்தில் கரும்பு விலைக்கான தொகையை வழங்கும் வகையில் கூட்டுறவு, பொதுத்துறை மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து ஆலைகளிலும் விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்யப்பட்ட மூன்று மாத கால அவகாசத்திற்குள், மத்திய அரசு நிர்ணயம் செய்யும் கரும்பு ஆதாரவிலை மற்றும் மாநில அரசு வழங்கும் கூடுதல் விலை இரண்டையும் சேர்த்து முழுமையாக விவசாயிகளுக்கு வழங்கிடத் தக்க வழிவகை செய்வதற்கு தி.மு.க. பாடுபடும்.

தேயிலை விவசாயிகள் படும் துயரங்களைக் களைவதற்கு மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று தி.மு.க. வலியுறுத்தும். காய்கறி, பழங்கள், மலர்கள் ஆகியவற்றின் வணிக ரீதியான உற்பத்திக்கென திட்டங்கள் வகுக்கப்படவும் அவற்றின் ஏற்றுமதி சலுகைகள் உயர்த்தப்படவும் தி.மு.க. வலியுறுத்தும். இதற்காகத் தமிழகத்தில் ஒரு மண்டல தாவரவியல் வாரியம் அமைக்கவும், தேசிய அளவில் ஒரு தாவரவியல் பயிற்சி நிறு வனம் அமைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டுமென்று தி.மு.க. வலியுறுத்தும்.

நாட்டில் உற்பத்தியாகும் உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், மலர்கள் ஆகியவை உரிய முறையில் பாதுகாக்கப்பட தேவையான அளவு கிடங்குகளும் குறிப்பாக, அழுகக்கூடிய பொருட்களுக்கு குளிரூட்டப்பட்ட கிடங்குகளும் மாவட்டந் தோறும் அமைக்கப்பட வேண்டும் என்று தி.மு.கழகம் வலியுறுத்தும்.

68. காவிரிப் படுகை பகுதியில் மீத்தேன் எரிவாயு

தமிழகத்தின் காவிரிப் படுகைப் பகுதியான திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் பூமிக்கடியில் இருக்கும் மீத்தேன் வாயுவை வணிக ரீதியாக எடுக்கும் பொருட்டு, மத்திய அரசு ஒரு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. அப்போது அந்தத் திட்டத்தினால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று கூறப்பட்டதால் தமிழக அரசு அதனை நல்லெண்ணத்தோடு ஒப்புக் கொண்டது. ஆனால், மீத்தேன் வாயு கிணறுகள் ஆழமாகத் தோண்டும்போது, பூமிக்கடியில் நிலத்தடி நீர் மிகவும் கீழே செல்வதுடன்; கடல் நீர் உட்புகும் என்பதால்; அந்நிலம் விவசாயத் திற்குப் பயன்படாமல் - வீணாகும். அதனால் இத்திட்டத்திற்கு அப்பகுதி விவசாயப் பெருங்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். எனவே, வளம் மிக்க விவசாயப் பகுதியான காவிரிப் படுகையில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தைக் கைவிட்டு, விவசாயத்தைப் பாதுகாத்திட வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

69. விவசாயிகளுக்கு நெல் அறுவடை இயந்திரம் வழங்கல்

காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு உரிய காலத்தில் நெல் அறுவடை செய்வதற்கு மிகக் கடுமையான ஆள் பற்றாக்குறை ஏற்படுவதால், ஒவ்வொரு கிராமத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கும், அப்பகுதியில் உள்ள விளைநிலங் களின் பரப்பளவினை கணக்கில் கொண்டு தேவைப்படுகின்ற நெல் அறுவடை இயந்திரங்களை நூறு சதவிகித மானியத்துடன் மத்திய அரசு வழங்கிட வேண்டும். நெல் அறுவடை இயந்திரங் களின் பராமரிப்புச் செலவிற்காக, அப்பகுதி விவசாயிகளிடமிருந்து கிராம கூட்டுறவு சங்கங்கள் குறைந்தபட்ச தொகையினை வாடகையாக நிர்ணயித்து பெற்றுக் கொள்ளும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.

தமிழ் ஓவியா said...


70. இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்தல்

இயற்கை வேளாண்மை முறை; விவசாய மண் வளத்தை நீண்ட நாள் பாதுகாப்போடும் வளமோடும் வைத்திருக்கும் என்பதோடு, அத்தகைய முறையில் விளையும் உணவு தானியங்கள் நச்சுத்தன்மையின்றி இருக்கும். எனவே, இயற்கை வேளாண்மை முறையை ஊக்குவிக்கும் முழுமையான திட்டம் ஒன்றை வகுத்துச் செயல்படுத்திடவும், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்திடவும், இம்முறையைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்களை மானிய விலையில் வழங்குவதற்கும் தி.மு. கழகம் பாடுபடும்.

71. சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகள் நலன்

சொந்த நிலத்தையும் - உழைப்பையும் மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்ற சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகள், தங்கள் நிலத்தில் விவசாயம் செய்திட தேவைப்படுகின்ற விதை, உரம், இடுபொருட்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் ஆகியவற்றை வாங்க முடியாமல் இருக்கும் நிலையினை உணர்ந்து, அவர்களின் பொருளாதார நிலையினைக் கருத்தில் கொண்டு, விவசாயம் செய்வதற்கு இத்தகைய பொருள்களுக்கு நூறு சதவிகித மானியம் அளித்திட வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

தமிழ் ஓவியா said...

72. விவசாயக் கடன் ரத்து

சிறு விவசாயிகள் பெற்ற கடன் அனைத்தையும் ரத்து செய்வதோடு, அந்த விவசாயிகளுக்கு இனிமேல் விதை - உரம் - இடுபொருள்கள் - பூச்சிக் கொல்லி மருந்துகள் ஆகியவற்றை அரசாங்கமே மானியமாக வழங்கிட மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

73. நெல், கரும்பு, கொப்பரைத் தேங்காய் மற்றும் பச்சைத் தேயிலை ஆகியவற்றிற்கு குறைந்தபட்ச ஆதரவு விலை

தமிழகத்தின் பெரும்பாலான விவசாயப் பெருங்குடி மக்கள் பயிரிடும் நெல், கரும்பு, தென்னை ஆகிய பயிர்களின் விளைச்சலுக்கு தேவைப்படுகின்ற விதை, இடு பொருட்கள், விவசாயக் கூலி, உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளின் தற்கால விலையேற்றத்தைக் கருத்தில் கொண்டு, அந்தந்த மாநிலங்களின் தேவைக்கேற்ப குறைந்த பட்ச ஆதார விலையினை மத்திய அரசு அவ்வப்போது உயர்த்தித்தரவும் - குறிப்பாக, வரும் ஆண்டில் கரும்பு டன் ஒன்றுக்கு - ரூ.3,500/-ம், நெல் குவிண்டால் ஒன்றுக்கு - ரூ.2,500/-ம், கொப்பரைத் தேங்காய் கிலோ ஒன்றுக்கு - ரூ. 90/-ம் நிர்ணயம் செய்து, விவசாயிகள் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் அளித்திட மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும். மலைவாழ் மக்களின் வாழ்வாதாரமாக உள்ள தேயிலை விவசாயம் தற்போதுள்ள இடுபொருள்களின் விலை உயர்வால் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. எனவே தேயிலைத் தொழி லையே வாழ்வாதாரத்தின் அடிப்படையாகக் கொண்டுள்ள பல்லாயிரக்கணக்கான தேயிலை விவசாயி களைக் காப்பாற்றும் பொருட்டு ஒரு கிலோ பச்சைத் தேயிலைக்கு ரூபாய் 25 என்று கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டுமென்பதை வலி யுறுத்துவோம்.

தமிழ் ஓவியா said...

74. விலைவாசியைக் கட்டுப்படுத்துதல்

நுகர்பொருள்களின் விலைகளை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வ தோடு, வாங்கும் சக்தி குறைவாக உள்ள ஏழையெளிய நடுத்தரக் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் அத்தியாவசியப் பொருள் களின் விலையைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம். பெட்ரோலியப் பொருள்களின் விலை நிர்ணயம் தற்போது அவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங் களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளதால், அந்த நிறுவனங்கள் இலாப நோக்கத்தையே முக்கியமானதாகக் கருதி மாதந்தோறும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உயர்த்துகின்றன.

அதன் காரணமாகப் பொதுமக்களுக்கு பெரும் இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன. எனவே இதனைத் தவிர்த்திட பெட்ரோலியப் பொருள்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்வதற்கேற்ப விலை நிர்ணயக் கொள்கையை மாற்றியமைத் திட மத்திய அரசை வலியுறுத்துவோம்.

தமிழ் ஓவியா said...


75. சிலந்தி நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம்

தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளாக சிலந்தி நோயால் பாதிக்கப்பட்டு, பட்டுப் போன இலட்சக்கணக்கான தென்னை மரங் களுக்கு உரிய இழப்பீட்டினை வழங்கி, தென்னை விவசாயிகளின் துயர் போக்கிட தி.மு.கழகம் மத்திய அரசை வற்புறுத்தும்.

76. மண்வளப் பாதுகாப்பு.

தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, ஏழை விவசாயிகளுக்கு இலவசமாக நிலத்தைப் பண்படுத்தி விவசாயம் செய்வதற்கு ஏற்ற விதமாக மாற்றி வழங்கியதைக் கருத்தில் கொண்டு, அதைப்போலவே சிறு, குறு விவசாயிகளின் வளமற்ற விவசாய நிலங்களைப் பண்படுத்தி, பயிர் செய்யத் தகுதியான நிலங்களாக மாற்றுவதற்குரிய ஒட்டுமொத்த முதல் முறைச் செலவினை மத்திய அரசே ஏற்கவேண்டுமென தி.மு. கழகம் வலியுறுத்தும். 77. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றம் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் விவசாயி களுக்கு விவசாயப் பருவ காலத்தில் தேவைப்படும் விவசாயக் கூலி ஆட்கள் கிடைக்காமல் ஏற்படும் தட்டுப்பாட்டினைத் தவிர்ப்பதற்கும்; இத்திட்டத்தில் பணிபுரிவோருக்கு மண்வெட்டி, கடப்பாரை போன்ற உபகரணங்களை இத்திட்ட நிதியிலிருந்து கொள்முதல் செய்து அளித்திடவும்; விளைச்சல் காலம் தவிர்த்து, எஞ்சியுள்ள அந்த ஆண்டின் அனைத்து நாட்களிலும் கூலித் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திடும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் உரிய மாற்றங்களைக் கொண்டு வர வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

78. உப்பு உற்பத்தி

உப்பு உற்பத்தியாளர்கள் கடல் சீற்றத்தினால் பாதிக்கப்பட்டு, அதன் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை இழக்க வேண்டிய சூழ்நிலையிலிருந்து அவர்களைக் காப்பாற்றிட, உரிய பாதுகாப்பு வழங்கிடும் வகையில் திட்டம் வகுத்திட தி.மு.கழகம் பாடுபடும்

79. உப்பளத் தொழிலாளர்கள்

உப்பளத் தொழிலாளர்கள் வேலை நிரந்தரமின்றியும் - மழைக் காலங்களில் வருவாய் இன்றியும் தவிக்கின்ற நிலை தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையை மாற்றி அமைத்து, உப்பளத் தொழிலாளர்களின் நல்வாழ்வுக்கென ஒரு ஆணையத்தை உருவாக்கி, அதன் மூலம் அவர்களைப் பாதுகாத்திட மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

80. இரயில் போக்குவரத்து

தமிழகத்திலுள்ள அனைத்து மீட்டர்கேஜ் இரயில் பாதைகளையும் அகல இரயில் பாதைகளாக மாற்றியமைக்கவும்; தடையற்ற சாலைப் போக்குவரத்துக்கென நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து ரயில்வே கிராசிங்களும் அகற்றப்பட்டு, சுரங்கப்பாதை அல்லது மேம்பாலங்கள் அமைக்கவும்; சிறுநகரங்களிலும் கிராமப்புறங்களிலும் வசிக்கும் மக்கள் விரைவு இரயில்களைப் பயன்படுத்த முடியாத நிலையில், திருச்சி, மதுரை, கோவை, விழுப்புரம் போன்ற இரயில் நிலையங் களிலிருந்து அருகிலுள்ள ஊர்களுக்கு இரண்டு அல்லது மூன்று பெட்டிகள் கொண்ட இரயில்பஸ்கள் இயக்கவும்; ஏற்கனவே அறி விக்கப்பட்ட புதிய வழித் தடங்களை, தேவையான நிதி ஒதுக்கீடு செய்து அகல ரயில் பாதைகள் அமைத்துச் செயல்முறைக்குக் கொண்டு வரவும்; சென்னை, கன்னியாகுமரி இடையேயான அகல ரயில் பாதை தற்போது பெரும்பாலான இடங்களில் ஒரு வழிப் பாதையாக உள்ளது. இதனை இருவழிப் பாதையாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் தி.மு.கழகம் வலியுறுத்தும். சென்னை ஐ.சி.எப். இரயில்பெட்டி தொழிற்சாலையின் இரண்டாவது அலகினை அமைத்திட மத்திய ரயில்வே நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை இந்தப் பணி தொடங்கப்படவில்லை. இந்த இரண்டாவது அலகு உடனடியாக தொடங்கிட உரிய முயற்சிகளை தி.மு.கழகம் மேற்கொள்ளும். தற்போது ரயில் பெட்டிகள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப் படுவதில்லை. மேலும் ரயில் நிலையங்களில் குடிநீர் வசதிகள், கழிப்பிட வசதிகள் ஆகியவை முறையாகக் கிடைக்கப் பெறுவதில்லை. எனவே, ரயில் நிலையங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும் - மாற்றுத் திறனாளிகள், முதியோர் ஆகியோர் சிரமமின்றி பயன்படுத்தவும் - மகளிருக்கு ரயில் நிலையங்களில் உரிய பாதுகாப்பு கிடைத்திடவும், நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மத்திய அரசை தி.மு.க வலியுறுத்தும்.



- தொடரும்

Read more: http://viduthalai.in/page-4/76804.html#ixzz2vnNev81A

தமிழ் ஓவியா said...


இயற்கைக்கும், செயற்கைக்கும் வித்தியாசம் தெரியாதா முதல்வருக்கு?


தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இரட்டை இலை போன்ற தோற்றம் இருக்கிறதோ, அவற்றை யெல்லாம் மறைக்க வேண்டும் என்று ஸ்டாலின் வழக்குத் தொடுத்திருக்கிறார். அப்படியெனில் காங்கிரஸ் கட்சியின் சின்னம் கை. எனவே அனைவரின் கையையும் வெட்டச் சொல்லி மனு கொடுப்பாரா ஸ்டாலின்?

- என்ற வினாவை சிதம்பரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசி இருக்கிறார் முதல் அமைச்சர் ஜெயலலிதா.

இயற்கையில் விளைந்திருக்கும், மலர்ந் திருக்கும் இலைகளை வெட்டச் சொல்லவில்லை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், எம்.ஜி.ஆர். நினைவிடத்தின் முகப்பில் உள்ள இரட்டை இலை உருவமாக இருந்தாலும் சரி, பேருந்துகளில் இடம் பெற்றுள்ள இரட்டை இலைப் படங்களாக இருந்தாலும் சரி. இவை எல்லாம் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட ஏற்பாடுகள்! மக்கள் மத்தியில் அஇஅதிமுகவின் தேர்தல் சின்னத்தை நினை வூட்டிக் கொண்டே இருக்கவேண்டும் என்ற திட்டமிட்ட செயற்கையான ஏற்பாடு - மலிவான பிரச்சார யுக்தி.

இயற்கைக்கும், செயற்கைக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசலாமா ஒரு முதல் அமைச்சர்?

Read more: http://viduthalai.in/page-8/76803.html#ixzz2vnPfsCoe

தமிழ் ஓவியா said...

குஜராத் அனைத்து துறைகளிலும் ஒரு வளர்ச்சியடைந்த மாநிலம் என்றும், ஊழலற்ற நிர்வாகம் கொண்டது என்றும் அம்மாநில முதலமைச்சரும், பா.ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கூறிவரும் நிலையில், அதனை தவிடுபொடியாக்கும் விதமாக, தனது ட்விட்டர் தளத்தில் சூடு பறக்கும்17 கேள்விகளை எழுப்பி, மோடி அரசை நார் நாராக கிழித்து தொங்கவிட்டுள்ளார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால்.

அவர் எழுப்பி உள்ள கேள்விகளின் தொகுப்பு கீழே...

1) மத்திய அரசு கிருஷ்ணா கோதாவரி ஆற்றுப்படுகையின் இயற்கை எரிவாயு விலையை ஒரு யூனிட்டுக்கு ரூ.16 என்று உயர்த்த உள்ளதா? நீங்கள் பிரதமர் ஆனால் அதே அளவுக்கு விலை எற்றுவீர்களோ?

2) ஒப்பந்த புள்ளிகள் கோராமல் குஜராத் அரசு சூரிய சக்தி மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு 13 ரூபாய் கொடுத்து வாங்குகிறதா? மத்தியப் பிரதேசத்திலும், கர்நாடாகாவிலும் இதே சூரிய ஒளி மின்சாரம் ரூ.7.5 மற்றும் ரூ.5.5க்கு ஒப்பந்த புள்ளிகளின் மூலம் வாங்கும்போது, ஏன் உங்களுடைய அரசு அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்குகிறது?

3) குஜராத்தில் விவசாயத்தின் வளர்ச்சி 11 சதவிகிதம் என்று குறிப்பிட்டீர்கள். ஆனால், உங்களுடைய அரசாங்கத் துறைகள் தரும் குறிப்புகளின்படியே 2006-07ல் விவசாய உற்பத்தி 27,815 கோடிகள் என்றும், ஆறு ஆண்டுகள் இடைவெளியில் 2012-13ல் 25,908 கோடிகளாகவும் விவசாய உற்பத்தி ஏற்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கின்றன. அப்படி பார்த்தால் உங்களுடைய ஆட்சிக்காலத்தில் குஜராத்தின் விவசாய வளர்ச்சி -1.18 சதவிகிதம் குறைந்திருக்கிறது. பின்னர் எப்படி 11% வளர்ச்சி என்று சொல்கிறீர்கள்?

4) கடந்த பத்தாண்டுகளில் மூன்றில் இரு பங்கு சிறுதொழில்கள் குஜராத்தில் மூடப்பட்டிருக்கின்றன. மிகச்சிறிய ஊரான மெஹ்சனாவிலேயே 187 சிறுதொழில் நிறுவனங்களில் 140 நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில், எதை நீங்கள் வளர்ச்சிக்கான மாதிரி என்று எதை முன்னிறுத்துகிறீர்கள்? இதுதான் உங்களின் மாதிரி என்றால், இந்தியாவின் சிறுதொழில்களை மூடி விட்டு சில தேர்ந்தெடுக்கப்பட்ட பெருநிறுவனங்களிடம் இந்தியாவின் தொழில்களை ஒப்படைத்து விடுவீர்களா?

தமிழ் ஓவியா said...

5) குஜராத்தில் லஞ்சமோ ஊழலோ இல்லை என்பது நீங்கள் அடிக்கடி பெருமையோடு சொல்லிகொள்ளும் வாசகம். நாங்கள் நேரில் மக்களைப் பார்த்து பேசிய பொழுது பல்வேறு சிறுநகரங்களிலும், கிராமங்களிலும் இருக்கும் அரசு அலுவலங்களில் ஊழலும், லஞ்சமும் ஆறாய் ஒடுகிறது. வறுமைக்கோட்டுக்கு கீழேயான ரேஷன் கார்டுகள், அரசு திட்டங்கள், லைசன்ஸ்கள் என்று எதை வாங்க வேண்டுமானாலும் லஞ்சம் கொடுக்க வேண்டியதிருக்கிறது என்கிறார்கள். அப்புறம் எப்படி ஊழலற்ற மாநிலம் குஜராத் என்று பெருமையோடு சொல்லிக்கொள்கிறீர்கள்?

6) நிதி மோசடிகளில் உங்கள் அமைச்சரவையில் இருக்கும் இரண்டு அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று குற்றசாட்டப்பட்டு இருக்கிறது. ஆறு கோடி குஜராத மக்களில் அமைச்சரவையில் சேர்க்க நேர்மையான ஆட்களே கிடைக்கவில்லையா?

7) உங்களுக்கும் தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்குமான தொடர்பினைப் பற்றி விளக்க முடியுமா?

8) குஜராத் அரசின் 1,500 ஜூனியர் லெவல் வேலைகளுக்கு 13 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். இந்த சூழலில் குஜராத்தில் வேலையில்லா திண்டாட்டமே இல்லையென்று ஏன் கம்பீரமாக பறைசாற்றிக்கொள்கிறீர்கள்?

தமிழ் ஓவியா said...


9) உங்கள் அரசின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டிருக்கும் இளைஞர்களுக்கான சம்பளம் மாதத்திற்கு ரூ.5,300. ஒரளவிற்கு படித்த, தன்மானமிக்க ஒருவரால் ரூ.5,300ல் வாழ முடியுமா?

10) தரமான கல்வியை தருவது ஒரு அரசின் பொறுப்பு என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா? கடந்த சில நாட்களில் குஜராத்தின் சிறு நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் நாங்கள் பயணம் போனபோது, குஜராத் அரசு பள்ளிகள் மோசமான நிலையில் இருக்கின்றன என்பதை கண்கூடாக கண்டோம். சில பள்ளிகளில் 600 மாணவர்களுக்கு வெறும் மூன்று ஆசிரியர்கள்தான் இருக்கிறார்கள். இந்த மாதிரியான ஒரு மோசமான கல்விச் சூழலை வைத்துக் கொண்டு, இந்தியாவை எப்படி முன்னேற்றுவீர்கள்?

11) நல்ல தரமான மருத்துவ வசதியை குடிமக்களுக்கு தருவது என்பதை ஒரு அரசின் கடமை என்பதை ஏற்றுக்கொள்வீர்கள் இல்லையா? குஜராத் அரசின் மருத்துவ சேவைகள் முடமாகிக்கிடக்கிறது. எல்லா இடங்களிலும் ஊழல் மலிந்து போயிருக்கிறது. பல கிராமங்களில், முதன்மை சுகாதார மையங்கள் மூடப்பட்டு சீரழிந்து கொண்டிருக்கின்றன. தாலுகா, மாவட்ட அளவில் இருக்கும் மருத்துவமனைகளில், பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமலே இருக்கிறது. பணியில் இருக்கும் ஆட்களும் ஒழுங்காக் சுகாதார நிலையத்துக்கு வருவதில்லை. மருத்துவமனைகளில் மருந்து மாத்திரைகள் இல்லை. இந்த லட்சணத்தில் என் மாநில மருத்துவ சேவை பிரமாதம் என்று ஏன் பொய் சொல்லுகிறீர்கள்?

12) விவசாயிகள் குஜராத் முழுக்க உங்களுடைய ஆட்சியின் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்கள் விவசாயத்துக்கு செய்யும் செலவைவிட குறைந்த விலையையே உங்களின் அரசின் அலட்சியத்தால் அவர்களின் உற்பத்தி பொருள்களுக்கு பெறுகிறார்கள். விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். கடந்த சில வருடங்களில் அப்படி 800 விவசாயிகள் குஜராத்தில் தற்கொலை செய்து கொண்டார்கள்?

13) நாடெங்கும் பேசுகிற இடங்களில் குஜராத்தில் எல்லா கிராமங்களுக்கும் மின்சாரத்தை கொண்டு சேர்த்தேன் என்று அறிவித்து கொள்கிறீர்கள். எங்களுடைய ஆய்வில், குஜராத்தில் நான்கு லட்சம் விவசாயிகள் மின்சார இணைப்புக்கு விண்ணப்பித்து இன்னமும் இணைப்பு கிடைக்காமல் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இணைப்பே தராமல் மின்சாரம் போய் சேர்ந்து விட்டதாக சொல்வது எந்த வகையான சாமர்த்தியமோ?

14) உங்களுடைய ஆட்சியில் விவசாயிகளின் நிலங்கள் பிடுங்கப்பட்டு மிகக்குறைவான விலையில் உங்களுக்கு சாதகமான பெரு நிறுவனங்களுக்கு கொடுக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு தருவதில்லை. அப்படியே தந்தாலும் அது மார்க்கெட் விலையை விட குறைவாகவே இருக்கிறது. அடானி, அம்பானி நிறுவனங்களுக்கு ஒரு சதுர மீட்டர் நிலம் ஒரு ரூபாய்க்கு
கொடுப்பது ஏனோ? ஏன் விவசாயிகளிடம் உங்கள் அரசு இதயமே இல்லாமல் நடந்துகொள்கிறது?

15) கட்ச் மாவட்டத்தில் இருக்கும் மக்களின் குடிநீர் மற்றும் விவசாயப்பாசன தேவைகளுக்காக 2005ல் நர்மதா அணையின் உயரத்தினை உயர்த்தினீர்கள். எட்டு வருடங்களாகியும், கட்ச் மாவட்டத்தில் இருக்கும் மக்களுக்கு சொட்டுத்தண்ணீர் கூட எட்டவே இல்லை. உங்களின் அரவணைப்பில் இருக்கும் தொழிலதிபர்களுக்கு அந்த நீர் திருப்பி விடப்பட்டுள்ளது. கட்ச் மக்களிடம் ஏன் இப்படி ஒரு பாரபட்சம்?

16) பஞ்சாபில் உரையாற்றுகிறபோது சீக்கியர்களின் நிலங்களை கட்ச் பகுதியில் பிடுங்கமாட்டோம் என்று சூளுரைத்தீர்கள். உண்மையில்சீக்கியர்களின் நிலங்களை பிடுங்க கோர்ட் வாசல்படி ஏறி இருக்கிறது உங்கள் அரசு. அந்த வழக்கை திரும்பப் பெறுவீர்களா?

17) நீங்கள் தனியார் விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும் பயணிக்கிறீர்கள். இதைபோல எத்தனை ஹெலிகாப்டர்கள், விமானங்கள் உங்களிடத்தில் இருக்கின்றன? யாருக்கு சொந்தமானவை அவை? நீங்கள் தான் இவற்றுக்கு பணம் செலுத்துகிறீர்களா? அப்படி இல்லையென்றால் யார் இந்த செலவினை உங்களுக்காக ஏற்கிறார்கள்? ஏன் உங்களின் விமான போக்குவரத்து செலவுகளை பகிரங்கமாக மக்களுக்கு தெரிவிக்கக் கூடாது?

தமிழ் ஓவியா said...


வீரப்பன் கூட்டாளிகள்மீதான மத்திய அரசின் சீராய்வு மனு தள்ளுபடி! உச்சநீதிமன்றத்தின் நாடு போற்றும் நல்ல தீர்ப்பு!

தமிழர் தலைவர் அறிக்கை

வீரப்பன் கூட்டாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்ற அமர்வு ரத்து செய்து ஆயுள் தண்டனையாகக் குறைத்ததை எதிர்த்து மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததை வரவேற்று, நாடு போற்றும் நல்ல தீர்ப்பு என்று பாராட்டுத் தெரிவித்துள் ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

அறிக்கை வருமாறு:

முன்பு வீரப்பன் கூட்டாளிகள் மீசை மாதையன், ஞானப்பிரகாசம், பிலவேந்திரன், சைமன் ஆகிய நான்கு பேரும் (தூக்குத் தண்டனை விதித்திருந்த நிலையில் அந்நான்கு பேரும்) தாங்கள் நிரபராதிகள் என்றும், வேண்டுமென்றே தங்களை வழக்கில் காவல் துறை இணைத்துவிட்டது என்றும் வாதாடினர்.

அதன்பின்னரும் தூக்குத்தண்டனை அளிக்கப்பட்டது. அதை வைத்து குடியரசுத் தலைவருக்கு - அதாவது மத்திய அரசுக்கு - தங்களுக்குக் கருணை காட்டவேண்டுமென்று கருணை மனுமூலம், சட்டப்படி தண்டனை பெற்றோர் வேண்டிக்கொண்டனர்.

அந்த மனுமீது உடனடியாக பதில் அளிக்கப்படா மலேயே சுமார் 9 ஆண்டுகளுக்கும்மேலாக கிடப்பில் போடப்பட்டு, பிறகே நிராகரிக்கப்பட்டு, தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் திரு.ப.சதாசிவம் அவர்கள் தலைமையில் அமைந்த அமர்வு (மூன்று நீதிபதிகளைக் கொண்டது) வட நாட்டில் இப்படி ஒரு வழக்கில் கருணை மனு காலதாம தமான நிலையில், தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும் - அதாவது அநீதியேயாகும் என்ற கருத்தை - நியா யத்தை உள்ளடக்கி, அவர்களது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து கொடுத்த தீர்ப்பு, உச்சநீதிமன்ற சட்ட வலிமை பெற்ற தீர்ப்பாகியது!

அந்த அடிப்படையிலேயே இவர்களுக்கும் இவர்களை யொத்து 13 ஆண்டுகளுக்கும்மேலாக மறுக்கப்பட்ட நீதியின் கோணலைச் சரி செய்யும் வகையில், ராஜீவ் காந்தி கொலை சம்பந்தமாக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர்தம் கருணை மனு நிராகரிப்புப்பற்றிய உச்சநீதிமன்ற வழக்கிலும் தீர்ப்பளிக்கப்பட்டது.

தீர்ப்பு சொல்ல உரிமை இல்லையா?

வீரப்பன் கூட்டாளிகளுக்கு ஆயுள் தண்டனை மாற்றத்தை எதிர்த்து மத்திய அரசு, சீராய்வு மனுவை ஒரு வழக்காக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து, வாதாடியது.

அக்கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்பு, சட்ட ரீதியாக உச்சநீதிமன்றத்திற்குத் தீர்ப்புச் சொல்லும் உரிமை இல்லை என்பதாக வாதாடியது மத்திய அரசு!

அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு வீரப்பன் கூட்டாளிகளான நால்வருக்கு ஆயுள் தண்டனையாகக் குறைத்தது, தவறு என்ற மத்திய அரசின் வாதத்தில் வலிமையோ, பசையோ இல்லை என்று கூறி, மறுசீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.

நாடு போற்றும் நல்ல தீர்ப்பே!

மறுக்கப்பட்ட நீதிக்கு மனிதநேயத்துடன் சரியான பரிகாரத்தைத் தந்த இந்தத் தீர்ப்பு, நாடு போற்றும் நல்ல தீர்ப்பு. இதனை வரவேற்கிறோம்.

சென்னை
13.3.2014

கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/76843.html#ixzz2vtN26NWc

தமிழ் ஓவியா said...


தேர்தல் துணுக்குகள்

அத்வானியின் அருள்வாக்கு!

வரும் தேர்தலில் பா.ஜ.க.விற்கு 182-க்கும் அதிக மான இடங்கள் கிடைக்க வாய்ப்பில்லை.

- எல்.கே.அத்வானி

பெரும்பான்மை கிடைக்கும் - ஆட்சியைப் பிடிப்போம் என்று பீலா விடும் பி.ஜே.பி.யினருக்கு இது அர்ப்பணம்!

பாஷ்யம்

நமோ நமோ கோஷத்தை எழுப்பவேண்டா மென ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் கூறவில்லை. ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் தனிப்பட்ட எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாகப் பணியாற்ற மாட்டார்கள் என்ற ரீதியில்தான் கருத்துத் தெரி வித்தார்.

- மன்மோகன் வைத்யா, ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பாளர்

அய்யோ பாவம்! ஆர்.எஸ்.எஸ். தலைவரின் பேச்சுக்கு வெண்டைக்காய், விளக்கெண்ணெய், கத்தாழை பாஷ்யங்களைச் சொல்ல புதிய பாஷ்ய கர்த்தாக்கள் புறப்பட்டுள்ளனர் போலும்!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சு சலசலப்பை ஏற் படுத்தியது உண்மைதான். அதனைச் சமாளிக்கத்தான் இந்த உதார்களோ!

சோதிடமா?

அ.தி.மு.க.வில் வேட்பாளர்கள் ஜோதிடத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர். தி.மு.க.விலோ தொண்டர்கள் தேர்வு செய்கின்றனர்.

- தா.மோ.அன்பரசன், மேனாள் அமைச்சர்

தேர்தலில் நிற்கும் அ.தி.மு.க.வினர் ஜாதகத் தோடு வரவேண்டும் என்று கடந்த தேர்தலில் அ.தி. மு.க. தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது என்பது நினைவூட்டத்தக்கது.

சாயம் வெளுக்கும்!

ஹோலிப் பண்டிகைக்கு உத்தரப்பிரதேசம் தயா ராகிக் கொண்டிருக்கிறது. ராகுல் வண்ணப் பொடி, மோடி வண்ணப் பொடி என்று வியாபாரம் நடக் கிறதாம். இதில் யார் சாயம் வெளுக்கப் போகிறது என்பதைப் பார்க்கத்தானே போகிறோம்.

மோடி காமிக்ஸ்!

டில்லியில் உள்ள ஒரு பதிப்பகம், மோடி காமிக்ஸ் என்று ஒரு புத்தகத்தை வெளியிட்டு, காசு சம் பாதிக்கத் திட்டமிட்டுள்ளதாம்.
பொதுவாக மோடி என்றாலே ஒரு காமிக் என்ற நிலைதானே நாட்டில் ஏற்பட்டுள்ளது.

குஜராத்தில் பிறந்த காந்தியாரின் முழுப் பெயரைக்கூடத் தெரிந்து வைத்திராத குஜராத் முதலமைச்சராயிற்றே மோடி!

பில்லி - சூன்யம்

பா.ம.க.விலிருந்து பிரிந்து சென்ற ஒரு கட்சியின் பிரமுகர் சந்திரசேகரன் என்பவர் சிறீபெரும்புதூரை யடுத்த சிவன்தாங்கல் என்னும் ஊரைச் சேர்ந்தவர். உள்ளூர் பா.ம.க. பெண் ஒருவர், சந்திரசேகரன் வீட்டுக்குள் எலுமிச்சம் பழத்தையும், தகடையும் வீசியுள்ளார்.

பில்லி - சூன்யம் வைக்கப்பட்டதாகப் பயந்து மந்திரவாதிகளை அழைத்து இதுவரை ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளாராம்! (அரசியல் எப்படியெல்லாம் போகிறது பார்த்தீர்களா?) மூடநம்பிக்கைக் குழியில் விழுந்தால் ஒரு லட்சம் என்ன எத்தனை இலட்சம் வேண்டுமானாலும் நட்டம்தான். மூட நம்பிக்கைவாதிகளை விரட்டு வதும் எதிரிகளுக்கு எளிதுதானே!

மண் குதிரையோ!

டில்லியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி யும், அன்னா அசாரேயும் கலந்துகொள்ளும் பொதுக் கூட்டம் நேற்று நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந் தது. கூட்டத்தில் அசாரே பங்கேற்காத நிலையில், மம்தா மட்டுமே பங்கேற்றார்.

அசாரே, ஏன் வரவில்லை? என்று தமக்குத் தெரியவில்லை என்றார் மம்தா. இவ்வளவுக்கும் அக்கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களே, அன்னா அசாரே அவர்களின் ஆதரவாளர்கள்தானாம்.

எப்படி இருக்கிறது? அன்னா அசாரேயுடன் கைகோர்த்த கெஜ்ரிவால், அந்த விளம்பரத்தை - ஏணியாகப் பயன்படுத்திக் கொண்டார். பரிதாபத் திற்குரிய காந்திக் குல்லாய் அசாரேயோ ஏமாற்றத்தில் இருக்கிறார். அவரை நம்பிய மம்தாவுக்கு அனு தாபங்கள்!

பஸ்வான் பரிதாபம்

மதச்சார்பின்மை என்பது தேர்தல் தந்திரம் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார் லோக்ஜனசக்தியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான். மதச்சார்பின் மைக்கு விரோதமான மதவாதக் கட்சி என்று கூறி, பி.ஜே.பி. கூட்டணியிலிருந்து பஸ்வான் வெளியேறினாரே - அதுகூட தேர்தல் தந்திரம்தானா? பி.ஜே.பி. கூறுவதை அட்சரம் பிறழாமல் சொல்லுகிறாரே!

சமூகநீதி என்று பார்த்தாலும் பி.ஜே.பி.யின் நிலைப் பாடு என்ன என்று பஸ்வானுக்குத் தெரியாதா? வி.பி.சிங் ஆட்சியை ஏன் அவர்கள் கவிழ்த்தார்கள்.

பஸ்வான் - புதைக்குழிக்குள் சிக்கிக்கொண்டு விட்டார் - இந்தக் கறையிலிருந்து மீண்டும் மக்கள் மதிப்பென்னும் கரையைத் தொடுவது அவ்வளவு எளிதல்ல!

Read more: http://viduthalai.in/e-paper/76841.html#ixzz2vtNCuF8f

தமிழ் ஓவியா said...


வகுப்புவாதம் ஒழியாது


வகுப்புவாதம் பல தடவைகளில் மாறி மாறி வெற்றி தோல்விகள் ஏற்பட்டு வந்திருக்கின்றன என்று மாத்திரம்தான் சொல்லலாமே ஒழிய, வகுப்புவாதம் என்றாவது ஒழிந்திருந்ததாகக் கூறுவதற்கில்லை.

(குடிஅரசு, 26.5.1935)

Read more: http://viduthalai.in/page-2/76842.html#ixzz2vtNsdiLA

தமிழ் ஓவியா said...

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை (2)

அரசுகள் வரும் - போகும் - சாலைகள்போடும் - தெரு விளக்குகளை உருவாக்கும் - கிணறுகள் வெட்டும் - இதுபோன்ற பணிகளைத்தான் செய்யும். (Ameliorative Measures) ஆனால், சமுதாய மாற்றக் கண்ணோட்டத்தோடு புதுமையையும், புரட்சியையும் பூக்கச் செய்யும் அடிப்படை மாற்றம் என்ற கண்ணோட்டத்தோடு ஆட்சி லகானைப் பிடிப்பதற்குத் தனி ஆற்றலும், தத்துவார்த்தமும் தேவைப்படும்.

அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சி நாற்காலியில் குறுகிய காலமே அமர்ந்திருந்தாலும், காலத்தை வென்று நிற்கும் முத்தான மூன்று சாதனைகளைப் பொறித்துச் சென்றார்.

1. சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்ற பெயர்

2. சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட அங்கீகாரம்

3. இந்திக்கு இடமில்லை, தமிழ்நாட்டில் தமிழும் - ஆங்கிலமுமே என்று - எவரும் எந்தக் காலத்திலும் கை வைக்கத் துணியாத மூன்று முத்திரைகளைப் பொறித்துச் சென்றார்.

கலைஞர் அவர்களின் ஆட்சியில் பெண்களுக்கான மறுமலர்ச்சித் திட்டங்கள் (சொத்துரிமை உள்பட) தமிழ் செம்மொழி, தைமுதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு, பெரியார் நினைவு சமத்துவ புரங்கள், இது சூத்திரர்களின் அரசு என்ற பிரகடனம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

நடக்கவிருக்கும் 16 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க. அறிக்கை இத்திசையில் மேலும் பல மைல் கற்களைப் பதித்துள்ளது.

13 ஆவது அம்சமாகச் சொல்லப்பட்டு இருப்பது அகில இந்திய அளவில் சுயமரியாதைத் திருமணச் சட்டம் (Self Marriage Act).

திராவிடர் இயக்கம் பல சமூகச் சீர்திருத்தக் கருத்து களை மக்களிடம் வலியுறுத்தி, பல முற்போக்கான சட்டங் களை நடைமுறைப்படுத்தியுள்ளது. சடங்குகளற்ற, மதச் சார்பற்ற, சீர்திருத்த திருமணச் சட்டமான சுயமரியாதைத் திருமணச் சட்டம் 1968 ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

பல சமூகவியல் அறிஞர்களும், அரசியல் தலைவர்களும், இந்த முற்போக்கான சட்டத்தை வரவேற்றுள்ளனர். எனவே, அகில இந்திய அளவில் இந்துத் திருமணச் சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு, சுயமரியாதைத் திரு மணத்தை சட்டப்படி அங்கீகரிக்கவேண்டும் என்று தி.மு. கழகம் வலியுறுத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


இது சாதாரணமானதல்ல. சுயமரியாதை இயக்கத்தின் சிற்பியான தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை இந்தியத் துணைக் கண்டம் அளவுக்கு விரிவுப்படுத்தும் விவேக மிகுந்த சிந்தனையாகும். அதன்மூலம் இக்கண்டத்தில் வாழும் பார்ப்பனர் அல்லாத சூத்திர, பஞ்சம மக்களின் இன இழிவினை ஒழிக்கும் புரட்சிகரமான திட்டமாகும்.

சென்னையில் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற சுயமரியாதைத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்றைய மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி அவர்கள், அத்திருமண முறையைப் பார்த்துவிட்டு வியந்த நேரத்தில், மானமிகு கலைஞர் அவர்கள் அகில இந்திய அளவில் செயல்படுத்த சட்டம் இயற்றலாமே என்று சொன்ன கருத்தை மக்களவைத் தலைவர் அன்று ஏற்றுக்கொண்டாரே!

அண்ணா பெயரில் கட்சியை வைத்துக்கொண்டு அண்ணா கொண்டு வந்த சுயமரியாதைத் திருமணச் சட்டத்தைச் சற்றும் மதிக்காமல், தன் வளர்ப்பு மகனுக்குப் பார்ப்பனப் புரோகிதர்களை அழைத்து வைதிகத் திருமணத்தை நடத்தி வைத்த அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரிடம் இதுபோன்ற சிந்தனைகளை எதிர்ப்பார்க்க முடியுமா? அதனால்தான் அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் மருந்துக்குக்கூட சீர்திருத்த வாடையைக் காண முடியவில்லை.

சுயமரியாதைத் திருமணம் என்கிறபோது வெறும் புரோகித மறுப்பு மட்டுமல்லவே, ஆண் - பெண் சமத்துவம் அதன் உள்ளடக்கமாயிற்றே! மூட நம்பிக்கையை முறியடிக்கும் பகுத்தறிவுச் சிந்தனை மணம் பரப்பும் சாத்தியக்கூறு அதில் மிக முக்கிய அம்சம் ஆயிற்றே! ஜாதி மறுப்பு என்ற மகத்தான மகரந்தமும் அதற்குள்ளிருக்கிறதே!

திராவிட இயக்கத்தால் உருவாக்கப்பட்டு, நடத்தப்பட்டுவரும் இந்தச் சுயமரியாதைத் திருமணக் காற்றினை வட மாநிலங்களில் வீசும்படிச் செய்தால், மிகப்பெரிய மாற்றத்தை அங்கெல்லாம் காண முடியுமே - கவுரவக் கொலைகள், குழந்தை மணங்கள் வேரற்றுப் போய்விடுமே!

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் மற்றுமொரு குறிப் பிடத்தகுந்த திட்டம் பெரியார் நினைவுச் சமத்துவபுரங்கள் ஆகும்.

சாதி சமயப் பிணக்குகளை அகற்றி, அனைத்து சமுதாய மக்களும் நல்லிணக்கமாக ஒன்றுகூடி, சமத்துவ உணர் வுடன் வாழ்கின்ற சூழ்நிலையை உருவாக்கும் வகையில் இந்திய சுதந்திரப் பொன்விழாவிவையொட்டி, 1997 ஆம் ஆண்டில் தி.மு. கழக அரசு உருவாக்கிய புதுமையான - புரட்சிகரமான திட்டமாம் பெரியார் நினைவு சமத்துவ புரம் திட்டத்தின்மூலம் தமிழகத்தில் 145 சமத்துவப் புரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சாதி, பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிடும் நோக்கில், சமத்துவபுரங்களை நாடெங்கிலும் ஏற்படுத்திட வலியுறுத்துவோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய மக்களை அரித்துத் தின்னும் கொடும் கரையான், ஜாதி என்னும் அமைப்பு முறை! மனிதனின் சமத்துவ உணர்வுக்கும், சகோதரத்துவச் சிந்தனைக்கும் நேர் எதிரானது இந்த ஜாதி அமைப்பு! பிறப்பிலேயே பேதம் ஏற்படுத்தும் படுபாதக அமைப்பு முறை - எந்த விலை கொடுத்தேனும் இதனை ஒழிக்கவேண்டும் என்று பாடுபட்டவர் - அதற்கான கருத்துருக்களைத் தந்தவர் பகுத்தறிவுப் பகலவனாம் தந்தை பெரியார் அவர்களே!

தமிழ்நாட்டைவிட பிற மாநிலங்களில் இந்த ஜாதி என்னும் பார்த்தீனியம் படர்ந்து ஒட்டுமொத்தமான சமுதாயத்தையே உருக்குலைத்து வருகிறது.

ஜாதி என்னும் முறை தனி மனிதனை மட்டுமின்றி ஒட்டுமொத்தமான சமூகத்தையே பகை முகாமாக்கிப் பாழ்படுத்தி வருகிறது.

மானமிகு கலைஞர் அவர்கள் சிந்தனையில் உதித்த தன்னிகரற்ற - தனித்துவமான இந்தத் திட்டம் இந்தியாவுக்கே தேவையான மூலிகைத் தோட்டம் போன்றதாகும்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அ.இ.அ.தி.மு.க. ஆட்சி இந்தத் திட்டத்தை விரிவாக்க மறுப்பதோடு, ஏற்கெனவே உள்ள பெரியார் நினைவு சமத்துவ புரங்களையும் பராமரிக்கத் தவறி வருவதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை என்பது சமுதாய வளர்ச்சிக் கான தொலைநோக்குத் திட்டங்களின் தொகுப்பு. இந்தியாவில் உள்ள எந்த அரசியல் கட்சிகளாலும் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத ஓர் ஆவணக் காப்பகம் என்பதில் அய்யமில்லை.

Read more: http://viduthalai.in/page-2/76844.html#ixzz2vtOErLGX

தமிழ் ஓவியா said...


ஆர்.எஸ்.எஸ்.-இன் இரட்டை வேடம்


- குடந்தை கருணா

மும்பை பிவாண்டி பகுதியில் பேசிய ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தான் காந்தியை சுட்டுக் கொன்றது. ஆர்.எஸ்.எஸ்.-இன் கொள் கையைத்தான் பிஜேபி ஏற்றுக்கொண் டுள்ளது. சர்தார் படேல், ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக இருந்தவர். ஆனால், இன்று, காந்தியாரையும், சர்தார் படே லையும் பிஜேபி கொண்டாடுவதாக சொல்கிறது என பேசினார்.

உடன், ஆர்.எஸ்.எஸ். தனது எதிர்ப்பை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கிறது; சட்ட ரீதியாக நடவ டிக்கை எடுக்கும் என சொல்கிறது.

சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் பற்றி இப்போது புகழ் பாடுகிறார் மோடி. அவருக்கு மிக உயரமான சிலையை அமைத்திட நாடு முழுவதும் இரும்பு திரட்டுகிறார். மோடியின் இந்த செயலை பாஜக ஆதரிக்கிறது. பல்லாயிரம் கோடியில் ஊடகங்களில் விளம்பரம் செய்கிறது.

காந்தியார் சுடப்பட்ட நிலையில், 1948-இல் உள்துறை அமைச்சராக இருந்தவர் சர்தார் படேல். அவர் ஆர்.எஸ்.எஸ் பற்றி என்ன கருத்தை தெரிவித்தார்? ஆர்.எஸ்.எஸ்-இன் நடவ டிக்கைகள் அரசுக்கும் நாட்டிற்கும் மிகப் பெரிய எச்சரிக்கையாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ்-இன் இந்த விஷத் தன்மையான விளைவினால், காந்தியா ரின் விலை மதிப்பில்லா உயிரை இழந்து நாடு அவதிப்பட காரணமா யிற்று.

காந்தியார் கொல்லப்பட்டதற்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள். என சர்தார் படேல் கருத்து தெரிவித்தார். பின் அவரது உள்துறை அமைச்சக ஆணையின்படி தான் 5.2.1948-இல் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது.

நாட்டில் வெறுப்பும், வன்முறையும் முற்றிலுமாக வேரறுக்க ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது என தடை ஆணையில் விளக்கமும் அளிக்கப் பட்டது. காந்தியாரைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ்.-இன் விஷ விளைவு என சொன்னவர் சர்தார் படேல்; ஆர்.எஸ். எஸை தடை செய்தவர் சர்தார் படேல். இந்த கருத்தைத் தான் ராகுல் காந்தி தற்போது நினைவு படுத்தி உள்ளார்.

ராகுல் காந்தி மீது கோபப்படும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள், ராகுல் சொன்ன காரணத்தை உறுதிப்படுத்திய சர்தார் படேல் மீது தான் கோபப்பட வேண்டும்; அவமதிப்பு வழக்கு போட வேண்டும்.

ஆனால், மக்கள் இந்த வரலாற்றையெல்லாம் மறந்தி ருப்பார்கள் என நினைத்து, இன்றைக்கு படேலுக்கு சிலை வைக்க முயல்வ தும், படேல் சொன்ன காரணத்தை நினைவு படுத்திய ராகுல் காந்தி மீது வன்மம் காட்டுவதும், வழக்கம் போல், ஆர்.எஸ்.எஸ்-இன் இரட்டை வேடத்தைத் தான் அம்பலப்படுத்து கிறது.

Read more: http://viduthalai.in/page-2/76897.html#ixzz2vzDvmu5a

தமிழ் ஓவியா said...


மே. ஜெர்மனி கிண்டல் செய்கிறது!


சில வருடங்களுக்கு முன் வட இந்தியாவில் பெரும் பஞ்சம். அப்பொழுது மேற்கு ஜெர்மனி பத்திரிகை ஒன்று இந்தியாவைக் கிண்டல் செய்து எழுதி இருந்தது. பஞ்சமோ பஞ்சம் என்று இந்திய மக்கள் தவிக் கிறார்கள். ஆனால் இந்த நிலையிலும் கூட எலியைக் கடவு ளாகக் கருதி, அதற்கு உணவுப் பண்டங்களை வைத்து படைக்கிறார்களே! என்று எழுதி இருந்தது.

கட்டுரையுடன் மட்டும் நிற்கவில்லை. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள எடாவா என்ற இடத்தில் உள்ள எலிச் சாமி கோயிலில் எலிக்குப் படையல் போடுவதை அப்படியே படம் பிடித்தும் போட்டு விட்டது.

இதைக் கண்டதும் நமது நாட்டு வைதீகப் புலிகள் ஓலமிட்டன. மதவாதிகள் மனம் புண்படுவதாக மூக்கால் அழுதன. நாட்டு உறவையே துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று கூடக் கூறினர். இந்தியாவின் வெளி விவகார இலாகா மேற்கு ஜெர்மனியில் உள்ள நமது தூதுவர் மூலம் அந்நாட்டு அரசை விளக்கமும் கேட்கச் செய்தது.

ஆனால், அந்தப் பத்திரிகையோ, நாங்கள் எழுதியது முற்றிலும் உண்மை; மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை என்று கூறிவிட்டது. அதற்கு பிறகு இந்தச் செய்தி உண்மையா என்று கண்டறிய உ.பி மாநிலம் எடாவா மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உத்தரவிட்டது. அவரும் அது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ஒன்றும் கொடுத்தார்.

உயர்ந்த ரக தானியத்திலும், நெய்யிலும் பண்டங்கள் செய்யப்படுவதாக ஜெர்மனி பத்திரிகை கூறுவது தவறு. சாதாரண ரகத் தானியத்தையும், டால்டாவையுமே பயன்படுத்துகிறார்கள். வெள்ளித் தட்டிலே தின்பண்டங்களைப் படைக் கிறார்கள் என்பதும் தவறு; பித்தளைத் தட்டிலேதான் படைக்கிறார்கள்! என்று அந்த அறிக்கையிலே கூறப்பட்டு இருந்தது.

Read more: http://viduthalai.in/page-7/76920.html#ixzz2vzEwZJ9u

தமிழ் ஓவியா said...

அந்த இருவர் சந்தித்த போது...

மதம் எப்படி உண்டாயிற்றென்றால், உலகத்தில் முதல் அயோக்கியன் ஒருவன், முதல் முட்டாள் ஒருவனைச் சந்தித்த போது அந்த முட்டாளின் மூலம் அந்த அயோக்கியன் லாபம் பெற்றுப் பிழைக்க இந்த மதப் புரட்டை உண்டாக்கினான். - வால்டையர்

Read more: http://viduthalai.in/page-7/76920.html#ixzz2vzF5HgUQ

தமிழ் ஓவியா said...

காட்டுமிராண்டி ஏன்?

நம்மைப் போன்ற எல்லா குணமும், உணர்ச்சியும், நடப்பும் உள்ள மனிதனை கடவுள் என்கின்றோம்; கடவுள் அவதாரம் என்கின்றோம்; அதற்கு ஆதாரங்கள் வேறு தேடி, அதற்கு அற்புதங்கள் கற்பித்து நாம் காட்டு மிராண்டிகள் ஆவதோடு, மற்ற மக்களையும் காட்டு மிராண்டிகளாக்குகிறோம்.

இது எதற்கு? பாமர மக்களை ஏமாற்றுவதற்குத் தானே? இந்தக் குணம் காட்டுமிராண்டித் தன்மை உடையது அல்லவா? ஒவ்வொருவரும் சிந்தித்து பாருங்கள். முஸ்லீம் யாருக்குமே கடவுள் தன்மை கொடுக்க மாட்டான்; யாருக்குமே கடவுளுக்கு ஒப்பானவன் என்பதாகக் கூட கொடுக்க மாட்டான்.

நமக்குத்தான் குரங்கு, பாம்பு, காக்காய், கழுகு, ஆடு, மாடு, யானை, குதிரை எல்லாம் கடவுள்களாகி விடுகின்றன. தினமும், பூசை, ஆராதனைகள் கூட செய்யப் படுகின்றன. இவை போதாதா நாம் காட்டுமிராண்டிகள் என்பதற்கு?

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/76920.html#ixzz2vzFEP1tJ

தமிழ் ஓவியா said...

பக்தி ஏன் வராது?

இடங்கொண்டு விம்மி யிணைக் கொண் டிறுகி
யிளகி முத்து வடங் கொண்டகொங்கை மலைகொண் டிறைவர் வலிய நெஞ்சை நலங்கொண்ட கொள்கை
நலங்கொண்ட நாயகி நல்லரவின் படங்கொண்ட வல்குல் பனிமொழி வேதப் புரியிறையே!
- அபிராமிபட்டன் எழுதிய அபிராமி அந்தாதி, பாடல் எண் 42.,



பொருள்: அகன்று, பருத்து, விம்மி, இணைந்து இறுகி வேண்டுங்கால் இளகி, முத்து வடமணிந்து இருக்கின்ற கொங்கையாகிய மலைகளைக் கொண்ட கல்லினும் வலிய கணவர் நெஞ்சை ஆடும்படிச் செய்த வெற்றி மாது யாரெனில், பாம்பின் படம் போன்ற அல்குலினை (பெண்குறி)யும் குளிர்ந்த மொழியினையும் உடைய வேதச் சிலம்பைத் தரித்த அபிராமியே!

Read more: http://viduthalai.in/page-7/76920.html#ixzz2vzFSIHVs

தமிழ் ஓவியா said...

ஒரு எடுத்துக்காட்டு!

19.6.1977 தேதிய ஆனந்த விகடனில் 77ஆம் பக்கத்தில், கம்ப்யூட்டரைத் தோற்கடித்த கணித மேதை! என்ற தலைப்பிட்டு இந்தியா டுடே என்ற ஏட்டில் வந்த கீழ்க்கண்ட செய்தியை வெளியிட்டுள்ளது.

கணித மேதை சகுந்தலாதேவி அண்மையில் அமெரிக்காவுக்கு சென்று அங்குள்ள உலகிலேயே மிக வேகமாகக் கணக்குப் போடும் கம்ப்யூட்டர் ஒன்றை போட்டியில் தோற்கடித்து, 20ஆம் நூற்றாண்டின் இணையற்ற ஹீரோயின் என்ற பட்டப் பெயருடன் திரும்பியிருக்கிறார்.

சகுந்தலாதேவி ஏன் தன்னுடைய கணவர் பெயரைத் தன் பெயருடன் சேர்த்துக் கொள்வதில்லை? நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்: கணவனும் மனைவியும் உண்மையிலேயே சரிசமமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவள் நான்.

சாதாரணமாக திருமணமானதற்குக் அடையாளமான அணிகலன்களைக் கூட நான் அணிவதில்லை. இதைப் படித்த பிறகாகிலும் பெண்கள் ஆண்களுக்கு தாம் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பதை உணர்ந்து, தாலி கட்டிக் கொள்ளும் பழக்கத்தினை வெறுத்து ஒதுக்குவார்கள் என நம்புகிறேன்.

-கிருஷ்ணவேணி, (தாலி கட்டிக் கொள்ளாமல் திருமணம் செய்து கொண்டவர்) பண்ருட்டி

Read more: http://viduthalai.in/page-7/76921.html#ixzz2vzFmJckY

தமிழ் ஓவியா said...

மத விபச்சாரம்

ஒரு மனிதன் புத்திரப் பேறு இல்லாமல் இறந்தால், அவனது மனைவி தனது கணவனின் மூத்த சகோதரனைக் கலவி செய்து புத்திரப் பேறு பெறலாம். இந்த வழக்கத்துக்கு இந்து மதத்தில் நியோகா என்று பெயர். இது விபச்சாரத் தன்மையாகக் கருதப்படுவதில்லை. இதைவிட மிக மோசமான சம்பவம் மகாபாரதத்திலே காணப்படுகிறது.

பாண்டு ஏதோ ஒரு சாபத்தால் மனைவியைத் தொட்டால் மரணமடைவான் என்று இருந்ததால் தன் மனைவியைப் பல கடவுள்கள் புணர்ந்து புத்திரப் பேற்றைப் பெற வலியுறுத்தினான். அதன்படியே அவள் அய்ந்து பிள்ளைகளைப் பெற்றாள்.

Read more: http://viduthalai.in/page-7/76921.html#ixzz2vzG9rdlR

தமிழ் ஓவியா said...


சுயமரியாதைச் சுடரொளி மானமிகு சாந்தா இராமமூர்த்திக்கு நமது வீர வணக்கம்!


திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பி னரும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பென்னாகரம் தோழர் பி.கே.இராமமூர்த்தி அவர்களின் வாழ்விணையரும், கோவை மண்டலத் திராவிடர் கழகத் தலைவர் குன் னூர் டாக்டர் இரா.கவுதமன் (பெரியார் மருத் துவர் அணி பொறுப்பாளர்) அவர்களின் அன் னையாரும், கழகப் பொருளாளர் டாக்டர் சு.பிறைநுதல் செல்வி அவர்களின் மாமியா ருமான சுயமரியாதைச் சுடரொளி மானமிகு திருமதி சாந்தா இராமமூர்த்தி அவர்கள் (வயது 82) குன்னூரில் இன்று (14.3.2014) விடியற் காலை 4.30 மணியளவில் டாக்டர் கவுதமன் இல்லத்தில் இயற்கை எய்தினார் என்பது மிகவும் துன்பத்திற்கும், துயரத்திற்குமுரியது ஆகும்!

வாழ்நாள் முழுவதும் தந்தை பெரியார் வழியில் கொள்கை வாழ்வு வாழ்ந்தவர் அம்மா சாந்தா இராமமூர்த்தி அவர்கள் ஆவார்கள்.

மாநாடுகள், போராட்டங்கள் எல்லாவற் றிலும் கலந்துகொண்டு உயிர் மூச்சடங்கும் நிலையிலும் கடவுள் மறுப்பாளராக வாழ்ந்து காட்டியவர் மறைந்த கொள்கைப் பற்றாளர் மானமிகு சாந்தா இராமமூர்த்தி அவர்கள்.

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறு வனம் என்ற அறக்கட்டளைக்குச் சொந்த மான தருமபுரி பெரியார் மன்றம் - தோழர் பி.கே.இராமமூர்த்தி அவர்களின் அயரா உழைப்பால் உருவானதாகும். அந்த மன்றத் தின் மேற்பார்வை பொறுப்பாளராக இருந்து, நாணயமாக கணக்குகளைத் தவறாமல் தலைமைக்கு அனுப்பி, மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் அம்மையார் மானமிகு சாந்தா இராமமூர்த்தி அவர்கள் ஆவார்கள்.

ஒவ்வொரு கமிட்டி, மாநாடு, இயக்க நிகழ்வுகள் எது நடந்தாலும் குடும்பத்தாரோடு - தனது தளர்ந்த உடல் நிலையிலும் கலந்து கொள்ளத் தவறாதவர்.

அவரை கடைசியாக நேரில் அரூர் திரு மணத்திற்கு 3.2.2014 அன்று சென்ற பொழுது தருமபுரியில் சந்தித்து உரையாடிடும் வாய்ப்புப் பெற்ற நிலையில், இப்படி அலைகிறீர்களே உங்கள் உடல்நிலை என்னாகும்? என்று உரிமையுடனும், அன்புடனும் கடிந்து கொண்டவர்.

அவரது அருமைச் செல்வங்கள் மகன் டாக்டர் கவுதமன்-மருமகள் டாக்டர் பிறைநுதல்செல்வி, மகள் மலர்விழி-மருமகன் பழனியப்பன், மகன் டாக்டர் புகழேந்தி-மருமகள் மீனாட்சி, மூத்த மகள் மல்லி, பெயரப் பிள்ளைகள் அனைவரும் அவரை மிகவும் நன்றாகக் கவனித்து உடல்நலம் காக்க கடைசி வரை பாடுபட்டது, ஒரு சிறந்த குடும்பத்தின் கடமை உணர்வு எப்படி அமையவேண்டும் என்பதற்கானதோர் எடுத்துக்காட்டாகும்!

அவரது மறைவால் வாடிடும் அவரது குடும்பத்தினர், அவரது சகோதர, சகோதரிகள் குடும்பத்தினர் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் இயக்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொண்டு, அவரது சிறந்த கொள்கை வாழ்வுக்கும், தொண்டுக்கும் நமது வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கி றோம்.

சென்னை
14.3.2014

- கி.வீரமணி,
தலைவர்,திராவிடர் கழகம்.

குறிப்பு: நாளை (15.3.2014) மதியம் ஒரு மணிக்கு இறுதி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இறுதி நிகழ்ச்சியில் கழகத் தலைவர் பங் கேற்பார்.

Read more: http://viduthalai.in/page-8/76936.html#ixzz2vzGoeXsg

தமிழ் ஓவியா said...


அதிசயம்! ஆனால் உண்மை!! பெங்களூரு: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்குரைஞருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.65,000 அபராதம் விதித்தார் சிறப்பு நீதிமன்ற நீதிபதி


பெங்களூரு, மார்ச் 14- உச்சநீதி மன்றத் தின் ஆணைப்படி விரைந்து முடிக்க வேண்டிய பெங்களூருவில் பல ஆண்டு களாக நடைபெற்றுவரும் தமிழக முதல மைச்சர் ஜெ.ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் வாய்தாமேல் வாய்தா வாங்கி வளர்ந்துள்ள நிலையில், இறுதி விசாரணைக்கு நீதிபதி தேதி குறித் திருந்தார்.

அரசு தரப்பில் அரசு வழக்குரைஞரான பவானிசிங் என்பவர், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, நீதிமன்ற வழக்கை தள்ளித் தள்ளி வாய்தா வாங்கிக் கொண்டு வருவதைக் கண்டு இன்று (14.3.2014) அவரது போக்கிற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், அவரது ஒரு நாள் சம்பளத்தை (ரூ.65,000/-) அபராதமாக விதித்தார்!

இவரைத் தான் தன் வழக்கில் அரசு வழக்குரைஞராக (பப்ளிக் பிராசிகியூட்ட ராக) நீடிக்கவேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார் ஜெய லலிதா என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page-8/76933.html#ixzz2vzH0Slyw