Search This Blog

8.2.14

பெரியார் வெறும் சிந்தனையாளர் மட்டுமல்லர்; சிறந்த ஆர்கனைசர்

நூல்கள் ஆதிக்கத்தை வீழ்த்தும் இரு அரிய நூல்கள் அறிமுக விழா! 


நூலாசிரியருக்குத் தமிழர்கள் நன்றிக்கடன்பட்டுள்ளனர்தமிழர் தலைவர் பாராட்டு
நூல்களை தமிழர் தலைவர் வெளியிட, பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருட்டிணன் பெற்றுக்கொண்டார். உடன் நூலாசிரியர் பழ.அதியமான், ஆய்வாளர் வேங்கடாசலபதி
நூலாசிரியர் பழ.அதியமான் மற்றும் அவருடைய இணையருக்கு பயனாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கினார் தமிழர் தலைவர்

பழ.அதியமான் எழு திய இரு நூல்கள்

1. பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜூலு நாயுடு வரலாறு
2. சேரன்மாதேவி குரு குலப் போராட்டமும், திரா விட இயக்கத்தின் எழுச்சியும்

எனும் இரு நூல்களின் அறிமுக விழா சென்னைப் பெரியார் திடலில் நேற்று (6.2.2014) மாலை 7 மணிக்கு நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் திராவிடர் கழ கத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெற் றது. அவர் தமது உரையில் ஒரு வரலாற்றுக் குறிப்பை நினைவூட்டினார்.

சென்னை சட்டப்பேர வையில் தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்த போது திருவாளர் சத்திய மூர்த்தி அய்யர் பேசிய பேச்சு அது:

பெண்களைக் கட வுள் பேராலும், மதத்தின் பேராலும் பொட்டுக் கட்டி விபச்சாரத்திற்கு விடுகிற பழக்கம் தப்பு என்ப தாக நாம் ஒரு முடிவு செய்துவிடுவோமேயா னால் ஈ.வெ.இராமசாமி நாயக்கரும், வரதராஜூலு நாயுடுவும் நாளைக்குக் கோயிலில் சுவாமிக்கு அர்ச்சகர் வேண்டியதில்லை என்று சொல்லுவார்கள்; அதையும் கேட்கவேண்டி யதாய் ஏற்பட்டுவிடும்.

(குடிஅரசு, 11.3.1928) என்று கூறியதை எடுத்துக் காட்டினார்.

பகுத்தறிவுவாளர் கழக மாநிலப் பொதுச்செயலா ளர் வீ.குமரேசன் வரவேற் புரையாற்றினார். மாநில மாணவரணிச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரி யார் தொகுப்புரை வழங் கினார்.

ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி

தமிழ்நாட்டில் தமிழர் களுக்காகப் பாடுபட்ட எத்தனையோ தலைவர்கள் தோன்றினார்கள். அவர்கள் பற்றிய முழு வரலாற்று நூல் கிடைக்கவில்லை. இந்த நிலையில், டாக்டர் பி.வரதராஜூலு நாயுடு பற்றி ஒரு முழு நூலை பழ.அதியமான் கொண்டு வந்திருப்பது சிறப்பானது.

கால்டுவெல் கூட தமது 40 வயதுக்குப் பிறகுதான் எழுதத் தொடங்கினார். அந்த வயதுக்குப் பிறகு தான் போதிய பக்குவம் - தெளிவு ஏற்படும் என்பது அவரது கருத்து. நண்பர் அதியமான் அவர்களும் 40 வயதுக்குப் பிறகே இந்த நூல்களை எழுதினார்.

1988 இல் டில்லியில் நான் இரண்டு மாதம் தங்கி ஆய்வுப் பணிகளை மேற் கொண்டபோது, சுதேசமித் திரன் இதழ்களைப் பார்க்க நேர்ந்தது. அதில் ஏராள மான தகவல்கள் வரத ராஜூலுபற்றி இருந்ததைக் கண்டேன். அதுபற்றி பழ. அதியமான் அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது முதல் கடும் உழைப்பை யீந்து இந்த நூலை எழுதி முடித்துள்ளார்.

வரலாறு படித்து பணி யில் சேர்ந்து பணம் சம் பாதிப்பவர்கள் வரலாறு களை எழுதுவதில்லை. வானொலி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருக் கும் ஒருவர் வரலாற்று நூலை எழுதினார் என்றால், அது சாதாரணமானதல்ல.
20 ஆண்டுகள் இதற்காக உழைத்திருக்கிறார். சேரன் மாதேவி பற்றி நூல்களை எழுதியவர்கள் பெரும் பாலும் வ.வே.சு.அய்யர் பக்கம் நியாயம் இருப்பது போல அவரைக் காப்பாற் றத்தான் முயற்சி செய்துள் ளார்கள். பழ.அதியமான் அவர்களால் எழுதப்பட்ட சேரன்மாதேவிபற்றிய நூல் பல உண்மைகளை வெளிச் சத்துக்குக் கொண்டு வந்து காட்டியுள்ளது என்று குறிப் பிட்டார்.

தமிழர் தலைவர் கி.வீரமணி

அண்மைக் காலத்தில் வெளிவந்த இவ்விரண்டு நூல்களும் நமது வேர் களை நினைவூட்டி, அந்த வேர்கள்மூலம் நமக்கு வெளிச்சம் கொடுத்துள் ளன. மறைக்கப்பட்ட பல உண்மைகள் இந்த நூல்கள் தோண்டி எடுத்து வெளியில் கொண்டுவந்துள்ளன.

இந்த இரு நூல்களும் வெளிவந்ததற்கு முக்கிய மாக உறுதுணையாக இருந் தார் ஆய்வாளர் வேங்கடா சலபதி என்றாலும், பழ. அதியமான் அவர்களின் இணையர் மற்றொரு முக் கிய காரணமாகும். அவர் களின் ஒத்துழைப்பு இல்லா விட்டால், இதுபோன்ற சாதனைகளை நிகழ்த்தவே முடியாது.
இவ்விரு நூல்களும் காலப் பெட்டகங்கள் - தோண்டி எடுத்துக் கொடுக் கப்பட்ட புதையல்கள்!

இன்னொரு முக்கிய நூலை எழுதும் பணியைத் தொடங்கியுள்ளார். அது தான் வைக்கம் பற்றிய வர லாறாகும். இந்தியத் துணைக் கண்டத்தில் மிக முக்கியமா னது வைக்கம் பேராட்டம். வைக்கம் வீரர் பெரியார் என்று வரலாற்றில் நிலை பெறுவதற்குக் காரணமாக இருந்தது.

அத்தகு வரலாற்று ஆவ ணத்தை அவர் தயாரிப்ப தற்காக பெரியார் மணி யம்மைப் பல்கலைக் கழ கம் எல்லா வகைகளிலும் உதவி யாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் (பலத்த கைதட்டல்!).

பழ.அதியமான் அவர் களைப் பொறுத்தவரை அவர் குடும்ப வழி சுயமரி யாதை உணர்வு படைத்த வர். இந்த வகையில் வாரிசு கள் வருவதில் குற்றம் இல்லை. சுயமரியாதை இயக்கம் என்றால் குடும் பம் குடும்பமாக, வாழை யடி வாழையாக இந்தக் கொள்கைகளைப் பின்பற்றி வருவது - வாழ்வது என்பது தான் தனிச் சிறப்பு - இதனை வாரிசு முறை என்று வேறு வகையில் குற்றச்சாற்று போல் கூறுவது சரியான தாக இருக்க முடியாது.

மிக முக்கியமான இந்த இரு நூல்களை அதியமான் அவர்கள் எழுதியமைக்காக இந்த இயக்கம் நன்றி சொல் லக் கடமைப்பட்டுள்ளது.
பெரியார் - மணியம் மைப் பல்கலைக் கழகத் தில் பெரியார் உயராய்வு மய்யம் எனும் தனித்துறை இருக்கிறது. அதற்கு இது போன்ற இயக்கத் தொடர் பான தந்தை பெரியார் சம்பந்தப்பட்ட நூல்கள் தேவைப்படுகின்றன.

பெரியார் பேருரையா ளர்கள் புலவர் இராம நாதன், இறையன், கு.வெ.கி. ஆசான் போன்றவர்கள் இன்று நம்மிடம் இல்லை. இந்தச் சூழ்நிலையில் இன் னொரு பக்கத்தில் இத் தகைய ஆய்வாளர்கள் கிடைத்திருப்பது மன நிறை வைத் தருகிறது. நமது கழகச் சொற்பொழிவாளர் கள் இதுபோன்ற நூல் களைப் பாட நூல்கள் போல படிக்கவேண்டும்.

இராமச்சந்திர குகா போன்றவர்கள் ஆய்வின் அடிப்படையில் எழுது கிறார்கள் - நவீன கால சிற்பிகள் (Makers of Modern) என்று எழுதும்போது அதில் தந்தை பெரியார் அவர்களைத்தான் முக்கிய மாகக் குறிப்பிட்டுள்ளார்.

பெரியார் வெறும் சிந் தனையாளர் மட்டுமல்லர்; சிறந்த ஆர்கனைசர் என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு தலைவர் கருத்துகளைச் சொன்னால் மட்டும் போதாது; அந்தக் கருத்துக் களைப் பிரச்சாரம் செய் யும், செயல்படுத்துவதற் கான அமைப்பினை உரு வாக்கி, தன் காலத்திற்குப் பிறகு அது செம்மையாகச் செயல்படுவதற்கான ஏற் பாடுகளையும் செய்ய வேண்டும்.

இன்றைக்கு இந்த இயக் கம் அசைக்க முடியாத வகையில் நிமிர்ந்து நிற் கிறது என்றால், அதற்குக் காரணம் தந்தை பெரியார் அவர்கள் அமைப்பு ரீதி யான அஸ்திவாரத்தைச் சரி யாக அமைத்துச் சென்றது தான் (கைதட்டல்).
டாக்டர் வரதராஜூலு நாயுடு வரலாறு என்று வருகிறபோது ஒரு முக்கிய நிகழ்வில் எனக்கும் சற்று தொடர்பு இருக்கிறது.

டாக்டர் வரதராஜூலு நாயுடு அவர்கள் மறைந்த போது, அவரின் உற்ற நண் பரான தந்தை பெரியார் திருச்சியிலிருந்து சென்னைக் குப் புறப்பட்டு வந்து மீரான் சாகிப் தெருவில் தங்கியிருந்தார். அப்பொழுது நான் சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். தந்தை பெரியார் அவர்கள் சென்னை வரும்போதெல் லாம் தவறாமல் சந்திப்பேன். அன்றைக்கும் சந்திக்க வந் தேன்.
பெரியார் அவர்கள் டாக்டர் வரதராஜூலு அவர்களின் இறுதி நிகழ்ச் சியில் பங்கேற்கப் புறப் பட்டார். செய்தியைச் சேக ரிப்பதற்கு என்னையும் அழைத்தார். எனக்கு அன்று அந்த வாய்ப்புக் கிட்டியது. இறுதி மரியாதை செலுத்தி, இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள தந்தை பெரியார் தனது வேனில் ஏறச் சென்ற போது, அப்பொழுது அங்கு வந்த காமராசர் அவர்கள் தனது காரில் ஏறுமாறு தந்தை பெரியார் அவர் களை அன்புடன் கேட்டுக் கொண்டார்.

தந்தை பெரி யாரும் தட்டாமல் காமராசர் காரில் ஏறிக்கொண் டார். இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஆயிரக் கணக்கான பொதுமக்களுக்கு பெரியாரும், காமராசரும் ஒரே வாகனத்தில் பயணிப்பது பெரிய செய்தி யாகிவிட்டது. எல்லோர் கவனமும் அங்குச் சென்றது.

இன்றைக்கு இருக்கும் ஓமாந்தூரார் தோட்டத்தில் சட்டமன்ற வளாகத்திற்குள் உள்ள வீட்டில்தான் டாக்டர் வரதராஜூலு அவர்கள் தங்கியிருந்தார். குலக்கல் வித் திட்ட எதிர்ப்புக் காரணமாகப் பதவியை விட்டு ஆச்சாரியார் ராஜாஜி வில கிய நிலையில், அடுத்து முதலமைச்சராகக் காமராச ரைக் கொண்டு வருவதற் கான முடிவை எடுத்த இடம் அவர் வீடுதான். டாக்டர் வரதராஜூலு நாயுடு, காம ராசர் ஆகியோர் அந்த வீட் டில் அமர்ந்து பேசித்தான் அந்த முடிவை எடுத்தனர்.

இந்தத் தலைவர்கள் பாடுபட்டு ஊட்டிய உணர்வு கள்தான் இன்றுவரை தமிழ்நாட்டில் சமூகநீதி நிலை பெற்று இருக்கிறது. திவேதிகள் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக் கீடு என்று கூறினார் என் றால், அடுத்த நொடியே எதிர்ப்புப் புயல்கள் வெடித் துக் கிளம்புகின்றன என் றால், அத்தகைய உணர்வு கள்  விதைக்கப்பட்டுள்ளன.

இந்து நூற்றாண்டு மலரில் சேலத்தில் தந்தை பெரியார் ஆற்றிய உரை வெளியிடப்பட்டு இருக் கிறது.

வெள்ளைக்காரர்கள் ஆட்சி இந்தியாவில் இருக் கும்போதே பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் பிரச்சினைக்கு, ஜாதி முறைக்கு ஒரு முடிவை ஏற்படுத்த வேண்டும்; இல்லாவிட் டால் நாட்டில் டெமாக் கரசி இருக்காது - மாறாக பிராமினோகிரசிதான் இருக்கும் என்று தந்தை பெரியார் குறிப்பிட்டு இருந் ததையெல்லாம் இந்த நூலில் நண்பர் பழ.அதியமான் தவறாமல் எடுத்துக்காட்டி யுள்ளார்.

இங்கிலீஷ் அகராதிக்கு பிராமினோகிரசி என்ற ஒரு புதிய சொல்லை தந்தை பெரியார் கொடுத்துள்ளார்.

இத்தகைய நூல்களை படைத்தமைக்காக அதிய மான் அவர்களை எவ்வள வுப் பாராட்டினாலும் தகும்.

சமூக விஞ்ஞானியாக எழுதியுள்ளார். அதற்காக இந்தச் சமுதாயமே நன்றிக் கடன்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

நூல் ஆசிரியர் பழ.அதியமான் ஏற்புரை

இதை நான் எதிர்பார்க்க வில்லை. தெருவில் இறங்கி, இயக்கத்தில் இணைந்து, மக்களின் திறனை இணைத் துப் போராடி, செயல்படு வது ஒருமுறை. அதுதான் நீண்டகாலப் பலனைத் தரும் செயல்பாடு.

அது என்னால் பல கார ணங்களால் முடியாது போகிறது. அப்போது இரண் டாவது கட்டமாக, அப்ப டிப் போராடுகிறவர்களுக்கு உதவி செய்வது. கருத்தியல் உதவி. வரலாற்று ஆவணங் களை எடுத்துக் கொடுக் கும் வேலை - நம் நூலகத் தில் கோவிந்தன் செய்யும் உதவி - கோவிந்தன் நீங்கள் கேட்டதை எடுத்துத் தரு வார். உங்களுக்குத் தேவை யானது என்று நான் கருது வதை எடுத்துத் தர முயல் கிறேன். அதற்குமேல் இதை நான் என்னளவில் கருதவில்லை.

நிறைய கேள்விகள் - தோன்றியுள்ளன. அவற்றுக் கெல்லாம் உடனடியான பதில்கள் என்னிடம் இப் போது இல்லை. ஆனால், பதில் சொல்வேன். அவை என் கட்டுரைகளாக இருக் கலாம்.

500 + 500 = 1000 பக்கம் எழுதியிருக்கிறேன்.

அதில் உயிரான வரிகள் 4 வருகின்றன. அதை எழுதி யது பெரியார்தான் - 1925 இல் எழுதியது - இன்றும் உயிருடன் இருக்கின்றன.

வைக்கம் சத்யாகிரக மும், குருகுலப் போராட்ட மும் அந்த வீதிகளில் நடப் பதினாலும், ஒரு குழந்தை  உண்பதைப் பார்ப்பதினா லும் தமிழர்களுக்கு மோட் சம் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தைக் கொண்ட தல்ல. வீதிகளில் நடக்கக் கூடாதென்று சொல்லும் பொழுதும், கண்ணால் பார்க்கக் கூடாது என்று சொல்கிறபொழுதும், சொல் கிறவர்கள் மனதில் என்ன நினைத்துக் கொண்டு சொல் லுகின்றனர் என்பதைப்பற் றித்தான் யோசிக்கவேண் டும் (பெரியார் 1928).

வேங்கடாசலபதிக்கு நன்றி சொல்ல இன்னொரு சந்தர்ப்பம் வாய்த்திருக் கிறது என்று கருதுகிறேன். இவ்வளவு பெரிய கூட்டத் தில் மத்தியில் சொல்வது புதிது.

வரவேற்புரை செய்த குமரேசன், சில ஆண்டு களாக என்னைக் கவனித்து அன்பு செலுத்தி வரும் கவிஞர், முன்னிலை வகித்த தோழர்கள், தொகுப்புரை செய்த பிரின்ஸ் என்னாரெசு, நன்றி சொல்ல இருக்கும் கி.சத்திய நாராயணன், நூல கர் கோவிந்தன், புத்தக நிலைய மேலாளர் டி.கே. நடராசன் ஆகியோருக்கும், எனக்குப் பெயர் தெரியா மல், இந்தக் கூட்டத்திற்கு உழைத்த அனைவருக்கும் நன்றி.

தமிழர் தலைவரின் பாராட்டு

நூல் ஆசிரியர் பழ. அதியமான் அவர்தம் இணை யர் மற்றும் ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி ஆகியோருக்குச் சால்வை அணிவித்து கழகத் தலை வர் சிறப்பு செய்தார்.
            ----------------------"விடுதலை” 7-2-2014

36 comments:

தமிழ் ஓவியா said...

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பளிங்குகல்லிலான பிள்ளையார் சிலை

கரூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகம் முன்பு பளிங்குகல்லிலான விநாயகர் சிலை அரச மரம், வேப்ப மரம் ஒருங்கே அமைந்துள்ள இடத்தில் செங்கற்களை அடுக்கி அதன் மேல் விநாயகர் சிலையை வைத்தும், அரளி பூ மாலை போட்டும் விளக் கேற்றியும், பூலப்பூ மரத் தில் சூட்டியும், குங்குமம், மஞ்சள், சாம்பல் (திருநீறு) கொண்டும் தினமும் அங்கு பூசை செய்து வருவதாக அலுவலக ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

அரசு அலுவலக வளா கங்களில் மதவழிபாட்டுத் தலங்களை அமைக்கக் கூடாது என்னும் அரசா ணை படி எந்த அரசு அலுவலகங்களிலும், ஒரு குறிப்பிட்ட மத சம்பந்த மான கடவுள் சிலை வைத்து வழிப்படக் கூடாது என் றும் அரசாணையை மதிக் காமல் செயல்படும் நபர் கள்மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட ஆட்சித் தலைவர் ச. ஜெயந்தி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். உடனடியாக அந்த கோயில் சிலை பகு தியை அகற்ற உத்தரவிட வேண்டும்.

சமூக விரோ திகள்மீது தக்க தண்டனை வழங்க வேண்டும். இல்லை யேல் கரூர் மாவட்ட திராவி டர் கழக தோழர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களைத் திரட்டி பெரிய போராட் டம் நடைபெறு வதை தவிர்க்க வேண்டுகிறோம். தகவல்: தே. அலெக்சாண்டர், கரூர் மாவட்ட செய்தியாளர்

Read more: http://viduthalai.in/e-paper/74825.html#ixzz2sgoR5PLc

தமிழ் ஓவியா said...

உடைந்து போன இன்னொரு குஜராத் குட்டு!


வேலை வாய்ப்புப் பெறும் தகுதியுள்ள இளைஞர்கள்அதிகம் உள்ள மாநிலப் பட்டியலில் குஜராத்துக்கு இடம் இல்லை

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா படப்பிடிப்பு

புதுடில்லி, பிப்.7- வேலை வாய்ப்பு பெறுவ தற்கான அதிக அளவு திறமை படைத்த இளைஞர் கள் அதிக அளவில் இருக் கும் மாநிலங்களின் பட்டிய லில் முதல் பத்து இடங் களில் குஜராத் இடம் பெற் றிருக்கவில்லை. அதே போல ஆற்றல் நிறைந்த மாணவர்கள் அதிக அள வில் இருக்கும் நகரங்களில் பட்டியலிலும் முதல் பத்து இடங்களிலும் குஜராத் மாநில நகரங்கள் எதுவும் இடம் பெற்றிருக்கவில்லை. இதுதான் மோடியின் ஆட்சி யில் குஜராத் இளைஞர்கள் வளர்த்துக் கொண்ட திறமையா? இதைத்தான் மோடி இந்திய இளைஞர் களுக்கான கனவு என்று சொல்லுகிறாரோ! குஜ ராத்தை முன்னேறிய மாநி லமாக, வளர்ச்சி அடைந்த மாநிலமாக மோடியின் தொண்டர்கள் படம் காட்டு கிறார்கள். ஆனால் உண்மை யான கள நிலவர மும், ஆதார தகவல்களும் அவர் களுடைய முகமூடியைக் கிழிப்பவையாக உள்ளன.

ஒரு லட்சம் பட்ட தாரி மாணவர்களின் பல் வேறு பட்ட ஆற்றல்களைப் பற்றி ஒரு மதிப்பீடு மேற் கொண்ட போது, பணி நிய மனம் பெறுவதற்கு அவர் களில் 34 விழுக்காட்டினர் மட் டுமே தகுதி பெற்றவர் களாக இருந்தனர் என் பதும், அவர்களில் ஆண் களை விட பெண்கள் தகுதி மேம்பட்டவர்களாக இருந் தனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இவ்வாறு பணி நியமனம் பெற தகுதி படைத்தவர் களில் பெரும் பகுதியினர் பஞ்சாப், தமிழ் நாடு, உத்தரப்பிரதேசம், டில்லி, ஆந்திரப் பிரதேசம், அரியானா, ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங் களில் இருப்பவர்களா கவே அமைந்திருந்தனர் என்பதும் தெரிய வந்துள் ளது. நாகாலாந்து, மேகா லயா, ஜம்மு-காஷ்மீர், மணிபூர், ஜார்கண்ட் மற் றும் பிகார் ஆகிய மாநி லங்கள் இப்பட்டியலில் கடைசி நிலையில் இடம் பெற்றுள்ளன.

கடைக்கோடி குஜராத்

தமிழ் ஓவியா said...

28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மாணவர்களிடம், கணித, தர்க்கவாத, தகவல் தொடர்பு, மற்றும் உலக, நாட்டு நடப்பு பற்றிய ஆற் றலை பற்றிய இந்த மதிப் பீட்டை வீபாக்ஸ் நிறு வனம் மேற்கொண்டது.

முதல் பத்து மாநிலங் களின் பட்டியலில் குஜ ராத் இடம் பெறவில்லை. இது தான் மோடியின் ஆட்சியில் குஜராத் இளைஞர்கள் வளர்த்துக் கொண்ட திறமை, ஆற்றல் போலும். இதைத் தான் இளைஞர்களுக்கான கனவு என்று மோடி கூறு கிறாரோ!

இதன் பொருள் என்ன வென்றால், தகுதி மிகுந்த இளைஞர்கள் என்று நாம் கருதிக் கொண்டிருப்பவர் களில் மூன்றில் இரண்டு பகுதியினர் நியமனம் பெற தகுதி பெற்றவர்களாக இல்லை என்பது சிஅய்அய், மக்கள் பலம் மற்றும் வீல் பாக்ஸ் தயாரித்து வெளி யிட்ட 2014 தேசிய ஆற்றல் அறிக்கையில் சுட்டிக்காட் டப்பட்டு, நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் காக முக்கியமான துறை களில் கூடுதல் வேலை வாய்ப் புகளை உருவாக்குவது மற் றும் அவற்றில் நியமிப்ப தற்கான சரியான ஆற்றலும் தகுதிகளும் படைத்த இளைஞர்களை உருவாக் குவது பற்றி நாம் உடனடி கவனம் செலுத்துவது மிக வும் அவசியமானது என் பதேயாகும்.

பணி நியமனம் பெறத் தகுதியான மாணவர்கள் அதிக அளவில் உள்ள முதல் பத்து இந்திய நகரங்களின் பட்டியலில் அஜ்னலா, தாரி வால், அகோடா, ஃபதேகர், புதுடில்லி, கோயமுத்தூர் மற்றும் மதுரை ஆகிய நக ரங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் பணி நியமனம் பெறுவதற்கான ஆற்றல் உள்ள இளைஞர் கள் மருந்தியல் துறையிலும் அதனைத் தொடர்ந்து, பொறியியல், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், மேலாண்மை ஆகிய துறைகளிலும் இருப் பதாகவும் இந்த ஆய்வில் கண்டறி யப்பட்டுள்ளது.

அடுத்து மத்தியில் ஆட்சிக்கு வரப்போகும் அரசின் தலையாய செயல் திட்டமே தகுதி மிகுந்த பட்டதாரி இளைஞர்களை யும், அவர்களை நிய மிப்பதற்கான கூடுதல் பணி யிடங்களையும் உருவாக் குவதுதான் என்று வீல் பாக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவ லர் நிர்மல் சிங் கூறுகிறார்.

பலே, பலே, பெண்கள்!

இந்த சோதனை மேற் கொள்ளப்பட்ட பெண் களில் 42 விழுக்காட்டினர் நியமனம் பெறத் தகுதி படைத்தவர்களாக இருக் கும் நிலையில், 30 விழுக் காட்டு ஆண்கள் மட் டுமே நியமனத் தகுதி பெற்றவர் களாக இருக்கின்றனர் என்பதையும் இந்த மதிப் பீடு காட்டுகிறது. தகுதியும் ஆற்றலும் படைத்த பெண்கள் இந்த அளவுக்கு இருக்கும் நிலையில், தங் கள் நிறுவனப் பணிகளில் பெண்களை அதிக எண் ணிக்கையில் நியமனம் செய்து பெண் பணியாளர்களின் சதவிகிதத்தை உயர்த்துவ தற்கான ஒரு மாபெரும் வாய்ப்பு அனைத்து நிறு வனங்களுக்கும் கிடைத் துள்ளது என்று இந்த ஆய் வறிக்கை தெரிவிக்கிறது.

தமிழ் ஓவியா said...


இச்சோதனையில் ஆங் கில மொழியில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாணவர் கள் அதிக அளவில் இடம் பெற்று, ராஜஸ்தான், ஆந்தி ரப்பிரதேசம், அரியானா, உத்தர காண்ட், பஞ்சாப், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்கள் முதல் இடங் களில் உள்ளன. இதே போல கணித ஆற்றலும், தர்க்கவாத ஆற்றலும் நிறைந்த மாணவர்கள் அதிக அளவில் இடம் பெற்று ராஜஸ்தான், தமிழ் நாடு, உத்தரப் பிர தேசம், டில்லி, அரியானா, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங் கள் முதல் இடங் களில் உள்ளன. இந்த வகையில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள் இருந்த நகரங்களில் புது டில்லி, வடமதுரை, கோயம்புத்தூர், காஜியா பாத், சென்னை, ஈரோடு, பெங்களூரு, மற் றும் ஆக்ரா போன்றவை முதல் இடங்களில் உள்ளன.

பணி நியமனம் பெறுவதற் கான கணினி பொறியியலில் உயர்தகுதி படைத்த மாண வர்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ள மாநிலங்களில் ஒன்றாக புதுச்சேரி உருவாகி யுள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, உத்தரப் பிரதேசம், கேரளா, ஹரியானா மற்றும் டில்லி ஆகிய பத்து மாநிலங் கள் கணினி திறன் பற்றிய இத் தகுதி சோதனையில் முதல் பத்து இடங்களைப் பெற் றுள்ளன.

பணி சந்தையில், பணி நியமனம் செய்யப்படு வதற்கான தகுதியும், திறமை யும் படைத்தவர்களை உரு வாக்குவதற்குத் தேவையான தரம் வாய்ந்த கல்வி முறையை உருவாக்கி, மாண வர்களின் ஆற்றல்களை மேம்படுத்தும் ஒரு மாபெரும் சவாலை எதிர் கொள்ள வேண்டிய கட்டாய நிலையில் நமது அரசு இன்று உள்ளது. ஆண்டுதோறும் 120 லட்சம் இளைஞர்கள் பணி நியமனச் சந்தையில் புதிது புதிதாக சேர்வதால், பணி நியமனம் பெறுவோர் மற்றும் பெறாதோருக்கு இடையே உள்ள இடை வெளியை நிரப்புவதற்கு மாபெரும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட வேண்டும் என்று வல்லுநர்கள் தெரிவிக் கின்றனர். படிக்கும் மாண வர்கள் அனைவருமே மருத்துவர்களாகவும், பொறி யாளர்களாகவும் ஆகிவிட முடியாது என்று தெரிவிக்கும் டீம்லீஸ் என்னும் பணி நியமன நிறுவனத்தின் மூத்த உதவித் தலைவர் ரிதுபர்ணா சக்ரவர்த்தி, பணிநியமனக் கண்ணோட்டத்தில் தீவிர மாற்றங்கள் ஏற்பட வேண் டும் என்று வலியுறுத்து கிறார். பணி நியமனம் செய்யப்படுவர்களுக்கும், செய்பவர் களுக்கும் கவர்ச்சி கரமாக இருக்குமாறு பணி நியமன பயிற்சி சட்டத்தை அடுத்து மத்தியில் ஆட்சிக்கு வரும் அரசு மாற்றியமைக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். பணி நியமனச் சந்தையின் தேவைக்கு ஏற்ற வாறு அது இருக்கவேண் டும் என்று அவர் வலி யுறுத்துகிறார்.

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா, 30.1.-2014 (சுரோஜித் குப்தா)

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

Read more: http://viduthalai.in/e-paper/74816.html#ixzz2sgoa3foX

தமிழ் ஓவியா said...


அபவ்ருஷம்


வேதம் என்பது எப்போது, யாரால் சொல்லப்பட்டது என்பதை மறைப்பதற்கு ஆகவே அது அனாதி என்றும், மனிதனால் சொல்லப்படாத அபவ்ருஷம் என்றும் சொல்லப்படுகிறது.
(விடுதலை, 8.3.1953)

Read more: http://viduthalai.in/page-2/74826.html#ixzz2sgolPfCz

தமிழ் ஓவியா said...


எதிலும் எல்லையுள்ள இலக்குடன் வாழுங்கள்!


வாழ்க்கையில் பலரும் தங்களது மகிழ்ச்சியைத் தாங்களே தொலைத்து விட்டு, அல்லற்படுகிறார்கள். மகிழ்ச்சி- இன்பம் - இவை எல்லாம் எட்டாக் கனிகள் அல்ல; கிட்டா நிலைகள் அல்ல. எளிமை நிறைந்த வாழ்க்கை இன்ப வாழ்க்கையாகும்.

இன்பம் - மகிழ்ச்சி, என்பதை அடைய வெறும் பணம் சம்பாதிப்பது மட்டும் வழிமுறையாகி விடுமா? எத்தனை பணக்காரர்கள் மகிழ்ச்சி யோடு வாழுகிறார்கள்? எத்தனை செல்வந்தர்கள், கோடீசு வரப் பிரபுக்கள் இன்பத்தை அனுப வித்து வாழுபவர்களாக உள்ளார்கள்?

கணக்கெடுத்துப் பாருங்கள், ஏமாற்றம்தான் மிஞ்சும்!

ஒரு வகையான தவறான எண்ணத் தால் பணம் இருந்தால் நமக்கு எல்லாமே கிட்டிவிடும் என்ற தப்புக் கணக்கால் - பலர் மாய்ந்து மாய்ந்து குறுக்கு வழிகளில், கோணல் வழிகளில், பிறரைக் கசக்கிப் பிழிந்து, ஈத்துவக்கும் இன்பம்கூட என்னவென்றே தெரியாது வைக்கோல் போரைக் காத்த நாய்களாக வாழ்ந்து, நொந்து நூலாகி வாடி வதங்கி, தான் பெற்ற செல்வத்தைக்கூட நுகராமல் மாண்டு மடிகிறார்கள்!
ஒரு சாதாரணமான கல்லூரி விரிவுரையாளர்; பிறகு பேராசிரியர் - எப்படியோ அவருக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைத்தது; அவ்வளவு அரசு ஏற்றுமதி உலகில் இவர் மன்னரானவர்; மற்றவர்களுக்கு உதவிடவில்லை. கோடிக் கணக்கில் அந்நியச் செலாவணி உட்பட புழங்கியது.

பிள்ளை குட்டிகள்கூட கிடையாது! கணவன் மனைவி இருவரும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் - பணம் சேர்த்து, அதன்மீது அமர்ந்தார், எரிமலை வெடித்ததைப் போல, ஓர் நாள் ஒரு கொடுமையான செய்தி - வேலைக்காரியோ; வேலைக்காரரோ, திட்டமிட்டு கொலை செய்தனர் உறவினர் சொத்தை அனுப விக்க. இப்படி ஒரு கொலைத் திட்டம்! வாழ்க்கை முடிந்தது; சேர்த்த பொருள்... கேள்விக்குறிதான்

அதுவே உயிர்க்கொல்லி ஆகிவிட்டது! சொத்து இல்லாதவரை இருந்த சுதந்திரம் நிம்மதி. சொத்துகள் கோடிக்கணக்கில் சேர்ந்த தும் பறிபோனதுடன், இரு உயிர்களும் அல்லவா பறிக்கப்பட்ட கொடுமை நடை பெற்றது?

என்னே பரிதாபம்!

மனிதர்கள் துன்பப்படாமல் வாழப் பணம் - செல்வம் (ஓரளவு) தேவை; அதற்காக அதை எல்லையற்று சேர்த்தால் அதுவே அவர்கள் உயிர்க்கு இறுதியாகி விடுகிறதே!
ஏனோ ஆறறிவு படைத்த மனிதர்கள் இது புரியாமல் நடக்கிறார்கள்!

படிப்பு, பட்டம், பதவி, எதுவும் இவர் களுக்கு இதனைப் போதிக்கவில்லையே!

எல்லையுள்ள இலக்கு- விரும்பத் தக்கது எளிதில் - உழைப்பால் - அடையத் தக்கது.
ஆனால் எல்லையற்ற இலக்கு விரும்பத்தகாது மட்டுமல்ல; எவராலும் அடைய முடியாதது; காரணம், ஆசை பேராசையாக மாறுகிறபோது அதன் இலக்கை அடைய நேர்வழிகள் விடை பெறுகின்றன. குறுக்கு வழிகளும் கோணல் புத்திகளும் வழி தவறி நடக்க வருக வருகவென்று அழைத்துச் சென்று அதல பாதாளத்தில் - ஆழ்குழியில் விழுந்து வாழ்க்கையை முடிக்கவே முயலுகிறது.

எனவே எச்சரிக்கையுடன் வாழுங்கள்.

- கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/74831.html#ixzz2sgpBW4ac

தமிழ் ஓவியா said...


நீதி கெட்டது யாரால்?

- குடந்தையான்

ஆசிரியர் தகுதித் தேர்வில், ஒடுக் கப்பட்ட மக்களுக்கு மதிப்பெண் தளர்த்தப் பட வேண்டும் என்ற மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்ற காரணத்தைச் சொல்லி தள்ளுபடி செய்துள்ளது.

நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு சரியா? கொள்கை முடிவுகளில் நீதி மன்றங்கள் தலையிட்டது இல்லையா?

தமிழ் நாட்டில், பெரும்பான்மை மக்களான ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 69 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்திட வேண்டும் என்ற அரசின் கொள்கைக்கு, எந்த அடிப்படையில் உச்ச நீதி மன்றம் தடை விதித்தது?

அரசியல் சட்டம் 340-இன் படி அமைக்கப்பட்ட மண்டல் குழுவின் பரிந்துரைப்படி, விபி சிங் அரசு, பிற் படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இட ஒதுக் கீடு வழங்கிய ஆணையை, மத்திய அரசு கொள்கை முடிவாக அறிவித்த தற்கு, உச்சநீதிமன்றம் எந்த அடிப் படையில் முதலில் தடை விதித்தது? 50 விழுக்காட்டிற்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்றும், பிற்படுத் தப்பட்டோரில் முன்னேறிய பிரி வினரை நீக்க வேண்டும் என்றும், அரசின் கொள்கை முடி வுக்கு எதிராக, அரசியல் சட்டத்தின் பிரிவுகளுக்கு எதிராக, எந்த அடிப் படையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது?

ஆக, பெரும்பான்மை ஒடுக்கப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக, அரசு கொள்கை முடி வினை எடுத்தால், நீதி மன்றங்கள் எதிராகவும், இந்த மக்களுக்கு எதிரான ஒரு முடிவை எடுத்தால், நீதி மன்றங்கள், கொள்கை முடிவில் தலையிட முடியாது என்றும், தீர்ப்பு அளிப்பது, நீதி கெட்டது யாரால் என்ற வரலாற்றுப் பதிவினை, புரட் சியாளர் பெரியார் நீதி மன்றத்தில் பதிவு செய்ததை, நினைவுப்படுத் தவும், இன்றளவும் நீதிமன்றங் கள் மாறவில்லை என்பதாகவும் தான் நாம் கருத வேண்டியுள்ளது. ஒடுக்கப் பட்ட மக்களுக்கு எதிரான பாசிச ஆட்சி யின் முன்னோட்டமாக, நீதி மன்றங் களும், ஊடகங்களும், அண்மைக் காலமாக தங்களது கருத்து களை பதிவு செய்து வருகின்றன என்பதை யும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டிய தருணம் இது.

Eternal vigilance is the price of liberty. உரிமைக்கான விலை, நாம் என்றும் விழிப்புணர்வோடு இருத்தலே.

Read more: http://viduthalai.in/page-2/74833.html#ixzz2sgpdtDms

தமிழ் ஓவியா said...


குண்டுவெடிப்புகளில் சுசீமானந்த் அளித்த செய்தி அனைத்தும் உண்மையே!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் பகவத் உத்தரவு பேரில் குண்டுவெடிப்புகளில் சுசீமானந்த் அளித்த செய்தி அனைத்தும் உண்மையே!

செய்தி சேகரித்த பத்திரிகையாளர் லீனாகீதா ரகுநாத் தகவல்


புதுடில்லி, பிப்.7- ஆர்.எஸ்.எஸ். தலைவர் பகவத் உத்தரவின் பேரில் குண்டு வெடிப்புகள் நடத்தப் பட்டன என சிறையில் இருக்கும் இந்து தீவிரவாத சுவாமி அசீமானந்த் அளித்த தகவல் அனைத்தும் உண் மையே என்றும் அவர் குரல் பதிவை கொடுக்கத் தயார் என்றும் செய்தி சேகரித்த பத்திரிகையாளர் லீனா கீதா ரகுநாத் இன்று தனியார் தொலைக்காட்சி நேர் காணலில் கூறியுள்ளார்.

இந்தியாவில் நடந்த சில பயங்கரமான குண்டுவெடிப் பில் நூற்றுக்குக்கும் மேற் பட்டோர் கொல்லப்பட்ட னர். இந்த குண்டுவெடிப்பு வழக்கில் காவித்தீவிரவாதி களின் நேரடி தொடபை ஆதாரத்துடன் நிறுபிக்கப் பட்டு சாது பிரஞ்யா தாக்கூர் என்ற பெண் சாமியார், அசி மானந்தா, இந்திய ராணுவப் படையில் உயரதிகாரி பொறுப்பு வகித்த சிறீகாந்த் புரோகித் மற்றும் தயானந்த் பாண்டே போன்றவர்கள் கைதாகி சிறையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஆர் எஸ் எஸின் நேரடி தொடர்பில் இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சம்ஜோதா விரைவு தொடர்வண்டி குண்டுவெடிப்பில் கைதான அசிமானந்தா என்ற சாமியார் ஹரியானா மாநிலம் அம் பாலா சிறையில் இருந்து வருகிறார். இவரிடம் காரவன் என்ற ஆங்கில மாத இதழ் நேரடி பேட்டி ஒன்று எடுத்தது. இந்த பேட்டியின் போது பல முக்கிய திடுக்கிடும் தகவல் களைக் கூறினார். அதில் முக்கியமானது இன்று மத்தியில் ஆட்சி அமைக்க துடித்துக்கொண்டு இருக்கும் பாரதிய ஜனதா கட்சியை இயக்கிக்கொண்டு இருக்கும் ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத் தான் இத் தனை தீவிரவாதத் தாக்கு தலுக்கும் காரணமானவர் அவரின் ஆணைப்படிதான் குண்டுகள் வைக்கப்பட்டது என்ற தகவல்.

இந்த செய்தி வெளிவந்த உடனே டில்லியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்துவங்கியது. எப்போதும் போல் பாரதிய ஜனதா இது பொய்யான ஒரு செய்தி என்றும் ஆதார மில்லாத இந்த செய்தியை பாரதிய ஜனதாவின் நரேந்திர மோடி பதவிக்கு வரவிடாமல் செய்ய காங்கிரஸ் மற்றும் சில தேச விரோத சக்திகளுக்கு வளைந்துகொடுக்கும் கட்சிகளின்\இயக்கங்களின் சதிச்செயல் என்று கூறியது. இந்த செய்தி குறித்து தனியார் தொலைக்காட்சியில் அளித்த நேர்காணலில் கார வான் இதழுக்காக இந்த செய்தியை சேகரித்த இணை ஆசிரியர் லீனா கீதா ரகுநாத் கூறியதாவது. இந்த செய்தி அனைத்தும் உண்மையே.

இது அவரிடம் இருந்து வாய் மொழியாக பதிவுசெய்யப் பட்டுள்ளது, எந்த விசா ரணைக்கும் இந்த குரல் பதிவை கொடுக்கத்தயார் என்று கூறினார். ஹரியா னாவில் உள்ள அம்பாலா சிறையில் உள்ள அசீமானந் தாவை சிறை அதிகாரிகளின் அனுமதியின் பேரில் சந்தித்து பேட்டி எடுத்தேன். மேலும் பேட்டியை அவரது அனுமதி யின் பேரில் தான் குரல் பதிவு செய்தேன் என்று கூறினார். காரவன் இதழ் அசிமானந் தாவின் குரல் பதிவை (இன்று)வெள்ளிக்கிழமை காலை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியது.

Read more: http://viduthalai.in/page-3/74811.html#ixzz2sgpzkdBK

தமிழ் ஓவியா said...


உடுமலையாரின் பாடல்!

ஆண்: காசிக்குப் போனாக் கருவுண்டாகு மென்ற காலம் மாறிப் போச்சு... இப்ப
ஊசியைப் போட்டா உண்டாகு மென்ற உண்மை தெரிஞ்சு போச்சு

பெண்: ஈசன் செயலால் இறப்பும் பிறப்பும் எல்லாம் நடக்குதுங்க - அதை
எண்ணாமே எவனோ சொன்னான்னு கேட்டு ஏமாந்து போகாதீங்க!

ஆண்: ஆகாரம் சமைக்க சூரிய ஒளியால் அடுப்பை மூட்டுறாங்க
ஆணைப் பெண்ணாக பெண்ணை ஆணாக
ஆளையே மாத்துறாங்க - இங்கே ஆளையே மாத்துறாங்க.

பெண்: அது... ஆயிரங்காலத்துக் கப்பாலே நடக்கிற
ஆராய்ச்சி விசயமுங்க... மூளை
ஆராய்ச்சி விசயமுங்க - நம்ம அறிவுக்குப் பொருத்தம் ஆறு, கோயில், அரசமரந்தானுங்க!

ஆண்: கோழியில்லாமெ தன்னால முட்டைகளில்
குஞ்சுகளைப் பொரிக்க வச்சார் - உங்
கொப்பன் பாட்டன் காலத்தில் யாரிந்த
கோளாறைக் கண்டு பிடிச்சார்.... இந்தக்
கோளாறைக் கண்டு பிடிச்சார்!

பெண்: அந்தக் குஞ்சுகள் பொரிக்க வச்ச கோளாறுக் காரனை
முட்டை யொண்ணு பண்ணச் சொல்லுங்க? - பார்ப்போம்
முட்டை யொண்ணு பண்ணச் சொல்லுங்க - வாய்
கூசாமல் எதையும் யோசனை செய்யாமே பேசுவது தப்பித முங்க

ஆண்: எட்டாத விஷயத்தை ஈசன் பெயரால்
இயற்கை யெங்குறாங்க - இனிமேல்
இயற்கையுங் கூட செயற்கையில்.. ஆகும் முயற்சியும் பண்ணுறாங்க!

- சுயமரியாதைக் கவிஞர் உடுமலை நாராயண கவி இயற்றி கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், மதுரமும் பாடிய பகுத்தறிவுக் கருத்துகள் நிறைந்த இப்பாடல் டாக்டர் சாவித்திரி எனும் படத்தில் இடம் பெற்றுள்ளது.

Read more: http://viduthalai.in/page-8/74850.html#ixzz2sgquEJDJ

தமிழ் ஓவியா said...

கே.எம்.பணிக்கர் கூற்று!

ஜாதி உணர்ச்சி பற்றி குற்றம் சாட்டும் பெரும்பாலோர் ஜாதிகளின் பிரதிநிதிகளாகவே இருந்தவர்கள்!

ஒரு காலத்தில் அவர்கள் தங்கள் பகுதிகளில் அரசியல் ஆதிக்கத்தை ஏக போகமாக அனுபவித்து வந்தவர்கள். இன்று வயது வந்தோர்க்கு வாக்குரிமை என்பதன் அடிப்படையில் உள்ள மக்கள் ஆட்சியில் இதுவரை சமுதாயத்தில் செல்வாக்கும் அரசியல் ஆதிக்கமும் இழந்திருந்த மக்கள் தங்களுக்குச் சவால் விடும் அளவுக்கு உயர்ந்து விட்டனரே என்பதால்தான் ஜாதி உணர்ச்சி ஓங்கி விட்டது என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஜனநாயக வழிமுறைகளினால் கீழ் ஜாதிக்காரர்கள் அரசியல் ஆதிக்கம் வகிக்கும் அளவுக்கு முன்னேறி வருவது இந்திய ஜனநாயகத்தில் மிகவும் வரவேற்கத்தக்கதொரு அம்சமாகும்.

- ஜம்மு - காஷ்மீர் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.எம்.பணிக்கர், கருநாடகப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் 1962ஆம் ஆண்டு உரையாற்றியது.

Read more: http://viduthalai.in/page-8/74851.html#ixzz2sgrMUhLG

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வு: இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயம்


சென்னை, பிப்.7- ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 விழுக்காடு மதிப்பெண் சலுகைக்குப் பிறகு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ண யிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடி யினர், பிற்படுத்தப்பட் டோர், பிற்படுத்தப்பட் டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் 150-க்கு 82 மதிப்பெண் பெற் றாலே தேர்ச்சி பெறலாம்.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அரசாணை யின் விவரம்: ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவதற்கான தேர்ச்சி மதிப்பெண் (60 விழுக்காடு) 150-க்கு 90 ஆக நிர்ணயிக்கப் பட்டிருந்தது.

இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதிலளித்த முதல்வர், ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங் கப்படும் என அறிவித்தார்.

இந்த மதிப்பெண் சலு கைக்குப் பிறகு இடஒதுக் கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 82.5 ஆகக் குறைகிறது. இந்த மதிப்பெண்ணை முழு மதிப்பெண்ணாக மாற்று வதற்காக இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 82 என நிர்ண யம் செய்யப்படுகிறது.

அதேநேரத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற பொதுப்பிரிவி னர் 150-க்கு 90 மதிப்பெண் பெற வேண்டும்.

இந்த மதிப்பெண் சலுகையையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண் 82 ஆக நிர்ண யிக்கப்படுகிறது.

இனி நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு களிலும் பொதுப்பிரிவினருக் கான தேர்ச்சி மதிப்பெண் 90 எனவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப் பெண் 82 எனவும் நிர்ணயிக் கப்படுவதாக அந்த அரசா ணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

10 ஆயிரம் பேர் வரை அதிகரிக்கலாம்: இடஒதுக் கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணை 82.5-க்குப் பதில் 82 என நிர்ணயித்துள்ளதால் 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக 10 ஆயிரம் பேர் வரை தேர்ச்சி பெற வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்விகள் மட்டுமே இடம்பெறும்.

எனவே, 82.5 என்ற மதிப் பெண்ணுக்குப் பதிலாக 82 அல்லது 83 என்ற முழு மதிப்பெண் மட்டுமே தேர்ச்சி மதிப்பெண்ணாக நிர்ணயிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 மதிப்பெண் வரை பெற்ற இடஒதுக் கீட்டுப் பிரிவினர் கணக் கெடுக்கப்பட்டு, அவர்களுக் கென தனியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.

அதன் பிறகே, பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடை நிலை ஆசிரியர் பணி நிய மனம் இருக்கும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Read more: http://viduthalai.in/page-8/74846.html#ixzz2sgrlIwCv

Jawahar said...

18 comments என்றதும், அடேடே அருமையான debate நடக்கிறது, கலந்து கொள்ளலாம் என்று வந்தேன். வந்து பார்த்தால்தான் தெரிகிறது எல்லா காமெண்ட்டுமே பிளாக் ஆத்தரே எழுதியது என்று!

தமிழ் ஓவியா said...


சைவரும் - வைணவரும்!


வைணவதாசன்: என்ன தேசிகர்வாள்! உடம்பெல்லாம் இவ்வளவு சாம்பல்? விபூதியை எடுத்து அப்பிக் கொண்டிருக்கிறீர்களே! இது என்ன பார்வைக்கே அசிங்கமாக இல்லையா?

சைவபண்டாரம்: அசிங்கம் என்னய்யா வந்தது? ஒரு சிம்டா சாம்பல் மேலே பட்டால் பட்ட வஸ்து பிணமானாலும், கட்டையானாலும் அது எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் மோட்சத்திற்குப் போய் சேர்ந்து விடும் என்பதாக விபூதி மகாத்மியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. நாம் நல்ல காரியம் செய்து மோட்சத்திற்கு ஒரு காலமும் போக முடியாத படி சைவ நெறிகள் ஏற்பட்டு விட்டது. ஆதலால் விபூதி பூசியாவது மோட்சத்திற்குப் போகலாம் என்றால், இதில் உமக்கேன் இத்தகைய பொறாமை?

வைணவர்: மோட்சத்திற்குப் போங்கள். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்.

சைவர்: என்ன சந்தேகம்?

வைணவர்: ஒரு சிம்டா சாம்பல்பட்ட வஸ்துக்கள் எல்லாம் மோட்சத்துக்குப் போய்விடும் என்கிறீர்களே! மக்கள் இங்கு அதிகமாக சாம்பலை மலத்தின் மீது கொட்டி கொட்டி மலமே தெரியாமல் மூடுகிறார்களே, சனியன் பிடித்த மலங்கள் எல்லாம் மோட்சத்திற்குப் போய் இருக்குமே! அப்போது தாங்களும் அங்கிருந்தால் மோட்சத்திற்குப் போய் அந்த இழவு நாற்றத்தை எப்படி சகிப்பது என்கின்ற சந்தேகம்தான்!

-சித்திரபுத்திரன்

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/74849-2014-02-07-12-27-41.html#ixzz2sjAYJKBf

தமிழ் ஓவியா said...

எலி ஒழிப்பிலும் மதம்!

நிருபர்: சேமிப்பு உணவு தானியங்களை எலிகள் பாழடித்து விடுகின்றன. சிலர் பட்டினியால் சாகக் கூடிய நிலை இருந்தும், பம்பாய் தானாபந்தர் பகுதியில் பெரும் வியாபாரிகள் அந்த நகர சபையின் எலி ஒழிப்புத் திட்டத்துக்குப் பெரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.

பிரதமர்: பம்பாயிலா அப்படி நடக்கிறது?

நிருபர்: ஆம்; பம்பாயில் தான்.

பிரதமர்: எனக்குத் தெரியாது. அதுபற்றி நான் கவனிக்கிறேன். அவர்கள் ஏன் இந்த திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்?
நிருபர்: மத உணர்ச்சி அடிப்படையில் எதிர்க்கிறார்கள்.

பிரதமர்: எலி ஒழிப்பிலுமா மத உணர்ச்சி?

நிருபர்: ஆமாம்; எலி ஒழிப்பில்தான் மத உணர்ச்சி. இது அங்கு நிறைய இருக்கிறது ; இதை நீங்கள் நன்றாக கவனிக்க வேண்டும்.

பிரதமர்: இது மிகவும் வருத்தத்திற்குரியது. நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன; இவர்கள் இப்படியெல்லாம் எதிர்ப்புத் தெரிவிப்பதினால்தான் எந்தப் பிரச்சினைகளையும் வெல்லமுடியவில்லை.

- பிளிட்ஸ் ஏட்டுக்கு பிரதமர் அளித்த பேட்டி, 26.2.1977 இதழிலிருந்து

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/74849-2014-02-07-12-27-41.html#ixzz2sjAiYSdI

தமிழ் ஓவியா said...


தாழ்த்தப்பட்ட மக்களுடைய கல்வியின் தலையில் கை வைப்பதா?


திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை

தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல (ஆதிந3) துறை அரசு ஆணை (நிலை) எண் 92 நாள் 11.9.2012இன்படி +2 படித்து முடித்து சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் இதர சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளைப் படிக்கும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மற்றும் கிருத்துவமதம் மாறிய ஆதி திராவிடர் மாணவர் மாணவியர்களுக்கு முழுக் கட்டணத்தையும் மத்திய அரசின் உதவித் திட்டத்தின் கீழ் மாநில அரசு வழங்கும். இது 2011-2012ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்தது.

ஆண்டு வருவாய் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் பெற்றோர்களின் வருமானம் இருக்க வேண்டும் என்பது மட்டும் தான் நிபந்தனை.

இத்தகு நிதி உதவியின் காரணமாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், மாணவிகள் பல்லாயிரக்கணக்கில் பொறியியல் கல்லூரிகள் உட்பட படித்துப் பயன் பெற்றனர்.

ஆண்டாண்டுக் காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட, தீண்டத்தகாத மக்களாக வெறுக்கப்பட்டவர்கள் கல்வி வாய்ப்புப் பெற்றால்தான் சம உரிமை பெற்றவர்களாக வாழ முடியும் என்பது யதார்த்தமானதாகும்.

இந் நிலையில் ஏற்கெனவே உள்ள அரசாணை 92-க்குப் பதிலாக அரசாணை எண் 106 மற்றும் 107 என்று இரு ஆணைகள் 4.12.2013 நாளிட்டு ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்துறையால் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய ஆணைகளின்படி ஏற்கெனவே சுயநிதிக் கல்லூரிகளுக்கான முழுக் கட்டணங்களையும் அரசே ஏற்கும் என்பதற்குப் பதிலாக, அரசு கல்வி நிறுவனங்களில் நிர்ணயிக்கப்பட்ட தொகை மட்டுமே சுயநிதிக் கல்லூரிகளில் படிக்கும் இருபால் மாணவர்களுக்கும் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக அரசு கல்லூரியில் ஆண்டுக் கட்டணம் ரூபாய் 40 ஆயிரம், தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் ஆண்டுக் கட்டணம் ரூ.70 ஆயிரம் என்ற நிலையில் இதுவரை 70 ஆயிரம் ரூபாயை முழுமையாக அரசே ஏற்றுக்கொண்டதற்குப் பதிலாக அரசு கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்ட வெறும் ரூ.40 ஆயிரத்தை மட்டும்தான் தனியார் கல்லூரிகளுக்கும் அளிக்கப்படும் என்பது தான் புதிய ஆணையின் சாரமாகும்.

இந்தப் புதிய ஆணையின் காரணமாக அரசு செலுத்தும் தொகை போக மீதியை மாணவர்களே கட்டும் நெருக்கடியும், சுமையும் ஏற்பட்டுள்ளது. கட்டணத்தைச் செலுத்தாத மாணவர்கள் சுயநிதிக் கல்லூரிகளிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.

தமிழ்நாடு அரசின் இந்த முடிவும், போக்கும் சமூக நீதிக்கு முற்றிலும் எதிரானதாகும். இவ்வளவுக்கும் மத்திய அரசால் அளிக்கப்படும் உதவி நிதி இது.

மாநில அரசு மூலமாக, மத்திய அரசு ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் கல்விக்காக நிதியை வழங்குகிறது. இடையில் நந்தியாக இருந்து தமிழ்நாடு அரசு தடை செய்வது ஏன்? மத்திய அரசு கொடுக்கும் முழு நிதியையும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு அளிக்காமல், அந்த நிதியை வேறு துறைகளுக்குச் செலவிடுகிறார்கள் என்ற குற்றச்சாற்றும் எழுந்துள்ளது. சமூகநீதித் திசையில் அ.இ.அ.தி.மு.க. அரசு தொடர்ந்து தவறான அணுகுமுறையை மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கதாகும்.

ஆண்டாண்டுக் காலமாகக் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்கள், முதல் தலைமுறையாக கல்லூரிகளின் படிக்கட்டுகளை மிதிக்கும்போது கால்களைத் தட்டிவிட வேண்டாம் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம். ஆச்சாரியார்தான் (ராஜாஜி) கல்வியில் கைவைத்தவர் என்ற கெட்ட பெயர் உண்டு. அந்த ஆச்சாரியார் வழியை அம்மையார் பின்பற்ற வேண்டாம். முறையான வேண்டுகோளுக்குத் தமிழ்நாடு அரசு செவி சாய்க்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.

இல்லையெனில், இது குறித்துக் களம் அமைக்க கழகம் தயங்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.



கி.வீரமணி
தலைவர் , திராவிடர் கழகம்

சென்னை
8.2.2014

Read more: http://viduthalai.in/e-paper/74856.html#ixzz2smne5iu4

தமிழ் ஓவியா said...


ஆகா, அவாளின் சமத்தோ சமத்து!

கேள்வி: ஜெயலலிதா ஊழல் குற்றம் புரிந்தவர் என்றும், அ.தி.மு.க. ஆட்சி ஊழல் ஆட்சி என்றும் சாடிய அதே நண்பர் சோ தான், இன்றைக்கு ஜெய லலிதாவுக்கு வக்காலத்து வாங்கி அ.தி.மு.க. ஆட்சிக் குப் புகழ் பாடுகிறார் என்று கலைஞர் ஆதங்கப் பட்டிருக்கிறாரே?

பதில்: ஜெயலலிதா வின் 1991-96 அரசைக் கடுமையாக விமர்சனம் செய்தவன்தான் நான். ஆனால் 96-ல் வந்த தி.மு.க. அரசு செயல்பட்ட விதம் தவறாக இருந்ததால், 2000 ஆண்டு வாக்கில் அதே ஜெயலலிதாவை நான் ஆதரிக்க ஆரம்பித்தேன். 2001 தேர்தலில் அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகச் சில முயற்சிகளைச் செய்தேன். அதிலிருந்து தொடர்ந்து அ.தி.மு.க.வை ஆதரித்துத் தான் எழுதி வருகிறேன். அதற்கு முக்கியக் காரணம் தி.மு.க.வின் சீர்கேடுகள் தான்.
(துக்ளக் 12.2.2014 பக்கம் 9)

கலைஞர் அவர்கள் முர சொலியில் (18.1.2014) கலை ஞர் பதில்கள் பகுதியில் எழுதிய ஒரு பகுதிக்கு மட் டும் தான் பதில் சொல்ல முயற்சி செய்துள்ளார். கலைஞர் அவர்கள் அந்தப் பதிலில் சோவின் ஒரு குலத்துக்கொரு நீதி சோ சொல்லும் சோவின் மனு தர்மப் புத்தியையும் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

14.1.2002 சென்னையில் துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சியில் நண்பர் சோ ராமசாமி அவர்கள்.

இப்போது டான்சி உட் பட அய்ந்து வழக்குகளில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். விடுதலை என்று தீர்ப்பு வந்து விட்டதாலேயே ஜெயலலிதா நிரபராதி என்று சொல்ல மாட்டேன். 1991-1996 ஆண்டுகளில் பதவி வகித்த அ.தி.மு.க. ஆட்சியின்போது ஊழல் நடந்தது உண்மையே. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தொடர்ந்த வழக்குகளை பொய் வழக்குகள் என்றும் கூற மாட்டேன். அ.தி.மு.க. ஆட்சியில் அதிக அளவுக்கு ஊழல் நடந்தது என்பது மறுக்க முடியாது. அப்படி நான் குற்றம் சாட்டியதில் எந்தத் தவறும் இல்லை. குற்றச்சாட்டு நிரூபிக்கப் படாததால் விடுதலை செய் யப்பட்டிருக்கிறார் அவ் வவளவுதான் என்று துக்ளக்கில் திருவாளர் சோ ராமசாமி எழுதியதை கலைஞர் அவர்கள் எடுத் துக்காட்டியுள்ளார். நரேந்திரமோடிபற்றிய பிரச்சினை வரும் போதெல் லாம் என்ன எழுதுகிறார் சோ! நீதிமன்றம் குற்றம் செய்யவில்லை என்று சொல்லிவிட்டதே என்று மோடியைக் காப்பாற்ற முயலுகிறார். அன்று ஜெய லலிதா மீதான தீர்ப்பைக் குறித்து சோ வெளியிட்ட கருத்து மோடிக்கு மட்டும் பொருந்தாதா? விடுதலை என்று தீர்ப்பு வந்து விட்டதாலேயே நிரபராதி என்று சொல்ல மாட்டேன் என்று எழுதினாரே -

அந்தப் பகுதியை வசதி யாக இருட்டடிப்பார் சோ மதிமுக பொதுச் செயலாளருக்குச் சமர்ப்பணம்

கேள்வி: ஈழத் தமிழர் கள் பிரச்சினையில் காங் கிரஸ் செய்த துரோகத்தை பா.ஜ.க., செய்யாது என்ப தால், அவர்களுடன் கூட் டணி அமைக்கிறோம் என்று வைகோ கூறியுள்ளது பற்றி?

பதில்: கூட்டணி நிர்பந் தத்தினால் அவர் இப்படிப் பேசியிருக்கலாம். ஆனால், வைகோ மிகவும் வற்புறுத் துகிற தனி ஈழம் பா.ஜ.க. வினால் ஏற்கப்படவில்லை. இலங்கை பிளவுபடுவதை பா.ஜ.க.வும், காங்கிரஸைப் போலவே எதிர்க்கிறது.

அதைத் தவிர விடு தலைப்புலிகளை வைகோ ஆதரிப்பதைப் போல பா.ஜ.க. ஆதரிப்பதில்லை. மாறாகக் கடுமையாக எதிர்க்கிறது. ஆகையால் இலங்கைப் பிரச்சினை யில் வைகோ நிலையி லிருந்து பா.ஜ.க.வின் நிலை மாறுபட்டது. அதை மூடி மறைப்பதற்காக நீங் கள் சுட்டிக் காட்டியிருப் பதைப் போல வைகோ பேசியிருக்கலாம். - (துக்ளக் 12.2.2014 பக்கம் 12)

பி.ஜே.பி.பற்றி வைகோ அவர்களைவிட திருவா ளர் சோ ராமசாமிக்கு மிக நன்னாவே தெரியும்.

சோவின் கூற்றுக்கு மறுப்புச் சொல்லுவாரா அல்லது உண்மையைச் சொல்லி நம்மை தர்ம சங் கடத்தில் தள்ளி விட்டாரே என்று உள்ளுக்குள் பொரு முவாரா மறுமலர்ச்சி வைகோ?

- கருஞ்சட்டை

Read more: http://viduthalai.in/e-paper/74882.html#ixzz2smnq1K6F

தமிழ் ஓவியா said...


அப்படி என்ன பெரிய அப்பா டக்கரா ஜனார்த்தன் திவேதி

- குடந்தையான்

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவேதி, இட ஒதுக்கீடு ஜாதி அடிப்படையில் கூடாது; பொருளாதார அடிப்படை யில் இருக்க வேண்டும் என கூறியதற்கு, சமூக நீதியில் அக்கறை கொண்ட அரசியல் கட்சித் தலைவர் கள் கடும் கண்டனத்தைத் தெரிவித் ததை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ஜாதி அடிப்படையில் தற்போது நடை முறையில் உள்ள இட ஒதுக்கீடு தொடரும் என அறிவித்துள்ளார்.

ஜனார்த்தன் திவேதி காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவு எடுக்கும் குழுவில் உள்ளவர். இப்படி ஒரு கருத்தை சொல்வதால் வரும் பிரச் சினைகளைப் பற்றி அறியாதவர் அல்ல;

தேர்தலை சந்திக்க உள்ள நிலை யில் இத்தகைய முரண்பாடான கருத்தை ஏன் சொல்ல வேண்டும்?

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்கிற கூப்பாட்டை, பார்ப்பனர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். கம்யூனல் ஜிஓ தமிழ் நாட்டில் ஒழிக்கப்பட்ட நிலையில் இந்த கருத்தை முன் வைத்துத் தான் செண்பகம் துரைராசன் பெயரில் வழக்கு தொடர்ந்தனர் பார்ப்ப னர்கள்;

அரசியல் சட்ட முதல் திருத்தம் 15(4) வரும் நிலையில், நாடாளு மன்றத்தில் பார்ப்பனர்கள் இந்த கருத்தை முன் வைத்து வாக்கெடுப்பு நடத்தி தோற்றனர். ஜாதி அடிப் படையில் இட ஒதுக்கீடு என்பதற்கு ஆதரவாக 245 வாக்குகளும், வரு மான அடிப்படைக்கு 5 வாக்கும் தான் கிடைத்தன.

1990-இல் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் 27 விழுக்காடு இட ஒதுக் கீட்டை மண்டல் குழு அடிப்படை யில் ஆணை பிறப்பித்த நிலையில், உச்சநீதிமன்றம் சென்று தடை ஆணையினை பார்ப்பனர்கள் பெற் றனர். அப்போதும், ஜாதி அடிப் படையில் கூடாது என வாதம் செய் தனர். உச்ச நீதி மன்றத்தின் இறுதி தீர்ப்பில், ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு செல்லும் என்றும், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு செல்லாது என்றும் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.

2005-இல் மத்திய அரசின் கல்வி நிலையங்களில் 27 விழுக்காடு வழங் கிய நிலையில், மீண்டும் பார்ப் பனர்கள் உச்சநீதிமன்றத்தில் ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என வாதிட்டனர். உச்ச நீதி மன்றம் தனது தீர்ப்பில், ஜாதி அடிப் படையில் கல்வியில் இட ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு வழங்கியது.

இத்தனையும் அறிந்தவர்தான் ஜனார்த்தன் திவேதி.

தற்போது, அரசு வேலை வாய்ப்பு மட்டுமல்லாது, தனியார் துறை யிலும் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வரும் சூழ்நிலையில், ஜாதி அடிப் படையில் வேண்டாம், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தந்தால், பார்ப்பனர்களுக்கு என்றைக் கும் பாதிப்பு இருக்காது என்கிற ஒரு நோக்கில், கருத்தினை, ஜனார்த்தன் திவேதி மூலமாக வெளியிட்டிருக் கிறார்கள் என்று தான் நாம் கருத வேண்டியுள்ளது.

தனி மனிதனாக கருத்து சொல் லும் அளவுக்கு, ஜனார்த்தன் திவேதி அவ்வளவு பெரிய அப்பா டக்கர் இல்லை

Read more: http://viduthalai.in/page-2/74893.html#ixzz2smodhUAl

தமிழ் ஓவியா said...


வீழ்ந்துவிடும்


பார்ப்பான் என்கின்ற பெரிய மரத்திற்கு வேர் கடவுளும், மதமுமேயாகும். இந்த வேரை அழித்தால் மரம் தானாகவே வீழ்ந்துவிடும்.
(விடுதலை,20.9.1964)

Read more: http://viduthalai.in/page-2/74884.html#ixzz2smoo4r6t

தமிழ் ஓவியா said...


பெரிய அக்கிரமம்!


பம்பாயில் ஆயிரம் பேர்கள் பார்ப்பன மதத்தில் சேர்க்கப்பட்டதாக கேட்க மிகவும் வருந்துகிறோம். இது ஒரு பெரிய அக்கிரமமாகும். இந்த அக்கிரமத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பம்பாய் பார்ப்பனரல்லாதாருக்கு அறிவிருந்ததா இல்லையா என்று சந்தேகிக்கின்றோம். அதாவது,

ஆயிரம் தீண்டாதார்கள் என்பவர்களுக்குப் பூணூல் போட்டு உபநயனம் செய்யப்பட்டதாம். இதற்காகப் பார்ப்பனர்களுக்கு செய்யும் சடங்குகள் எல்லாம் செய்யப்பட்டனவாம். இந்தத் தீண்டாதார்கள் எனப்படும் ஆயிரம் பேரும் நாளைக்கு நமக்கு எமனாய் வரப்போகிறார்கள் என்பது சத்தியம்.

ஏனெனில் இதுபோல் ஒவ்வொரு காலத்தில் சீர்திருத்தம் என்னும் பெயரால் நம்மவர்களுக்கு போட்ட பூணூலினாலும் செய்த உபநயனத்தாலுமே இந்நாட்டில் இத்தனை பார்ப்பன எமன்கள் தோன்றியிருக்கின்றன என்பது ஆராய்ச்சி உள்ள எவருக்கும் தெரியும்.

எனவே இந்தப் பூணூல் போட்ட ஆயிரம் பேரும் நாமம் போட்டார்களானால் ஸ்ரீமான்கள் சி. ராஜகோபாலாச்சாரியார், எஸ். சீனிவாசய் யங்கார், வி.வி. சீனிவாசய்யங்கார் களாகவும் விபூதி பூசினார்களானால் ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, சிவசாமி அய்யர், சீனிவாச சாஸ்திரிகள், கே. நடராஜன் போன்றவர்களாகவும், கோபி சந்தனம் போட்டார்களானால் ஸ்ரீமான்கள் மதனமோகன மாளவியாவாகவும் தோன்றப்போகிறார்கள் என்பதில் ஒரு சிறிதும் சந்தேகமே இல்லை.

இவைகளுக்குச் சற்று தாமதமானாலும் ஸ்ரீமான் ஆதிநாராயண செட்டியாராகவாவது வெகு சீக்கிரத்தில் வரப்போகிறார்கள் என்பது உறுதி. பூணூலை அறுத்தெரிய வேண்டிய சமயத்தில் ஆயிரக்கணக்கான பேருக்குப் பூணூல் உபநயனம் நடப்பது அக்கிரமம்! அக்கிரமம்!! பெரிய அக்கிரமம்!!!

எனவே தீண்டாதார்கள் என்கிற நமது சகோதரர்களைப் பார்ப்பன மதத்திற்கு விட்டு பார்ப்பனர்களுக்குப் பறிகொடுக்காமல் அவர்களுக்குச் சகல உரிமைகளும் கொடுக்க வேண்டியது பார்ப்பனரல்லாதாரின் முக்கிய கடமையாகும்.

- குடிஅரசு - கட்டுரை - 25.03.1928

Read more: http://viduthalai.in/e-paper/74908.html#ixzz2smpwt7J0

தமிழ் ஓவியா said...


யார் வார்த்தைகள் கடினம்?


பார்ப்பனர்களுக்கு அனுகூலமில்லாத மந்திரிகளைக் கண்டிப்பதற்கு என்று பார்ப்பனர்கள் காங்கிரசின் பேரால் கோகலே ஹாலில் ஸ்ரீ பெசண்டம்மையின் தலைமையில் ஒரு கூட்டம் கூடியபோது ஒருவர் பேசுகையில் மந்திரிகள் தங்கள் பெண் ஜாதிகளை விட்டுக்கொடுத்து மந்திரி வேலைகளைச் சம்பாதிப் பார்கள் என்று சொன்னாராம்.

இது யோக்கியமான வார்த்தையா என்று கேட்கின்றோம். இவ்வார்த்தைகளை எந்த யோக்கியர்களாவது கண்டித்தார்களா என்று கேட்கின்றோம். ஸ்ரீ வரதராஜுலுவாவது அவரது பத்திரிகையாவது தமது தலைவர்களுடைய இம்மாதிரி வார்த்தைகளை கண்டித்தாரா என்று கேட்கின் றோம்.

ஸ்ரீமான் குழந்தை கடற்கரையில் மந்திரிகளைக் கொடும்பாவி கொளுத் தியதற்கு கோபித்துக்கொண்டதாக வேஷம் போட்ட ஸ்ரீவரதராஜுலுவுக்கும் தமிழ்நாடுக்கும் பெண்ஜாதிகளை விட்டுக் கொடுப்பார்கள் என்று சொன்ன வார்த்தை அவ்வளவு கடினமானதாக தோன்றவில்லைபோல் இருக்கின்றது. இதனால் அக்கோஷ்டியின் அற்பத்தனமும் காலித்தனமும் எவ்வளவு என்பது விளங்கவில்லையா?

சாதாரணமாக ஹைகோர்ட் ஜட்ஜுகளில் யாருக்காவது மேகவியாதி இருக்குமானால் அது மைலாப்பூர் காங்கிரஸ்வாதிகள் தேசியவாதிகள் உபயமேயாகும். இம்மாதிரி யோக்கியர்கள் மிகுதியும் நிறைந்த சென்னை காங்கிரஸ்வாதிகள் தங்கள் யோக்கியதைகளை மறைத்துக் கொண்டு இம்மாதிரிப் பேச அயோக்கியர்களைத் தூண்டிவிடுவதும், அதை கண்டிக்காமல் இருக்கச் செய்வதும் ஒரு ஆச்சரியமல்ல.

தவிர, வேறு ஒரு காங்கிரஸ் தலைவராகிய ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்களும், அவரது ஆயுளில் இம்மாதிரியாக அநேக தடவைகளில் அதிகப்பிரசங்கித் தனமாய்ப் பேசிவிட்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டதானது ஸ்ரீவரதராஜுலு மன்னிப்பு கேட்டுக் கொண் டதைவிட நூறு பங்கு அதிகமாகவே இருக்கும்.

ஆகவே யாருடைய வார்த் தைகள் கடினமானதென்பதும் முழுவதும் அக்கிரமமானதும், பொய்யானதும் என்பதும் இழிவானது என்பதும் இதிலிருந்தாவது பொது ஜனங்கள் உணர வேண்டுமாய் எதிர்பார்க்கின்றோம்.

அன்றியும் பார்ப்பனர்களுக்கு அனுகூலமான, உத்தியோகங்கள் என்ன வேலை செய்து யார் பெற்றாலும் பத்திரிகைகள் என்ன வேலை செய்து யார் நடத்தினாலும் அவைகள் எல்லாம் யோக்கியமான தேசியமென்பதும் பார்ப்பனர்களுக்கு அனுகூலமில்லையானால் அவைகளைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதுமே தேசியமாகவும் காங்கிரஸ் சட்டமாகவும் இருக்கின்றது என்பதையும் உணரவேண்டுமாய் விரும்புகின்றோம்.

- குடியரசு - கட்டுரை - 25.03.1928

Read more: http://viduthalai.in/e-paper/74907.html#ixzz2smqDs6tR

தமிழ் ஓவியா said...


ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியாரின் ஞானோதயம்


ராஜீய உலகத்தில் பார்ப்பனர்களுடையவும், அவர்களது வால்களினு டையவும் நாணயமும் யோக்கியதையும் அடியோடு ஒழிந்து அவர்களின் அயோக்கியத்தனம் வெளியாய் விட்டதால் இந்த சமயம் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க யாரும் இல்லாததை அறிந்து ஸ்ரீமான் காந்தி காலத்தில் அவர் நிழலில் யோக்கியதை பெற்ற ஸ்ரீ சி. ராஜ கோபாலாச்சாரியார் இப்போது வெகு மும்முரமாய் முழு பார்ப்பன வேஷத்தோடு ஆதரிக்க வெளிவந்து விட்டார்.

முதலாவதாக, மனுதர்ம சாஸ்திரத்தை ஆதரித்து எழுதினார். பிறகு ஜஸ்டிஸ் கட்சியை வைது எழுதினார். இப்போது அரசியலே அயோக்கியத்தனமென்றும் தற்கால மந்திரிகள் ராஜினாமா கொடுக்க வேண்டும் என்றும் எழுதி இருக்கிறார். ஸ்ரீ ஆச்சாரியார் அரசியல் அயோக்கியத்தனம் என்பதை என்றைய தினம் தெரிந்து கொண்டார்? திருட்டுத்தனமாய் பார்ப்பனர்களுடன் சேர்ந்துகொண்டு ஒத்துழையாமைக்கு டில்லியில் உலைவைத்தாரே அன்றா?

அல்லது காகிநாடாவில் சட்டசபைக்கு போனவர்களை ஆதரித்தாரே அன்றா? அல்லது ஜமன்லால் பஜாஜ் இடம் ரூ.50,000 வாங்கினாரே அன்றா? அல்லது புதுப் பாளையம் ஜமீன்தாரிடம் 10,000 ரூபாய் பெறுமான தோப்பு தானமாய் வாங்கினாரே அன்றா? அல்லது ஸ்ரீ வெங்கட்டரமணய்யங்காருக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்க நாயக்கர்மார்கள் கிராமங்களில் சுத்தினாரே அன்றா? அல்லது மது விலக்கின் பெயரால் சுயராஜ்யக் கட்சிக்கு ஓட்டுச் செய்யும்படி பத்திரிகைகளில் கோடு கட்டிய குறள்கள் எழுதிவந்தாரே அன்றா?

அல்லது சட்டசபைத் தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சிக்குப் பலம் குறைந்ததாகத் தெரிந்தவுடன் சென்னைக்கு ஓடி டாக்டர் சுப்பராயனை முதல் மந்திரி ஆக்கினாரே அன்றா? அல்லது தமிழ் நாட்டில் எந்தப் பார்ப்பனரும் வெளியில் தலைகாட்டுவதற்கு யோக்கியதை இல்லாமல் போன சமயம் பார்த்து ஸ்ரீமான் காந்தியை தமிழ் நாட்டுக்கு அழைத்து வந்து வருணாசிரமப் பிரச்சாரம் செய்வித்து அவரை அடியோடு ஒழித்தாரே அன்றா?

அல்லது ஸ்ரீமான் காந்தி செய்த பிரச்சார தைரியத்தை வைத்துக் கொண்டு மனுதர்ம சாஸ்திரப் பிரசாரம் செய்யத் துணிந்தாரே அன்றா? அல்லது புதுப்பாளையத்தில் பார்ப்பனரல்லாத ஜமீன்தாராகிய ஸ்ரீ ரத்தின சபாபதி கவுண்டர் தானமாய் கொடுத்த தான பூமியில் இருந்து கொண்டு பத்மாசூரன் கதைபோல் அந்த சமுகத்தையே ஒழிக்க ஒரு பத்திரிகை சீக்கிரத்தில் ஆரம் பிக்க முடிவு செய்தாரே அன்றா?

அல்லது இவர் பார்ப்பனருக்கு அனுகூலமாக பிடித்து வைத்த மந்திரிக்கு பார்ப்பனரல்லாதார் அபிமானம் சிறிது தோன்ற ஆரம்பித்ததே அன்றா? என்று கேட்கின்றோம். நமது ஆச்சாரியாருக்கு தானும் தன் இனமும் என்ன அயோக்கியத்தனம் செய்தாலும் அது காந்தீயம், ஒத்துழையாமை, தேசாபிமானம், ஆஸ்ரமத் தன்மை முதலியவை ஆகி விடுகின்றது.

பார்ப்பனரல்லாதார் நன்மைக்காக ஏதாவது ஒரு சிறுநன்மை காணப்பட்டால் அது திடீரென்று தேசிய அயோக்கியத்தனமாகி விடுகின்றது.

இதுவே தற்கால பார்ப்பனரல்லாதார் நிலைக்கு உதாரணம் போலும். நம்மவரே நம்ம குலத்தைக் கெடுக்கக் கைப்பிடியாய் இருக்கும் போது இரும்பு என்ன செய்யும்?, என்று ஒரு மரம் சொல்லிற்றாம். அதுபோல் பார்ப்பனரல்லாதாரிலே உள்ள கோடாலிக் காம்புகளை நினைக்கும்போது ஸ்ரீராஜகோபாலாச்சாரியாரின் நடவடிக்கை நமக்கு ஆச்சரியமாகத் தோன்றவில்லை.

- குடிஅரசு - தலையங்கம்-01.04.1928

Read more: http://viduthalai.in/e-paper/74906.html#ixzz2smqTuaBe

தமிழ் ஓவியா said...


ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்


நான் அலுவலகத்தில் நுழைந்ததும் முதல் காரியமாக நான் அலுவலகத்தில் நுழைந்ததும் முதல் காரியமாக எனது மேஜையை ஒழுங்குபடுத்து வதில் 10 நிமிடங்கள் செலவிடுவேன். எல்லாத் தாள்களையும் விரைவாகத் துருவிப் பார்த்து வகைப்படுத்திக் கொள்வேன். உடனடியாக கவனம் தேவைப்படுபவை; குறைந்த முக்கியத்துவம் கொண்டவை; படிப்பதற்கான விஷயங்கள் என்று பகுத்துக் கொள்வேன். அதிக முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டிய தாள்களை மட்டும்தான் மேஜையில் வைத்துக் கொள்வேன். வேறெதும் அதில் இருக்காது''.

- ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்

Read more: http://viduthalai.in/page2/74924.html#ixzz2smrDWc3l

தமிழ் ஓவியா said...


கடவுளும்ஜாதியும்!

- அ.கருப்பையா

சிவபெருமானின் திருவீதி உலாவைப் பாட எண்ணினார் கவி காளமேகம். இறைவனின் ஊர்வலம் வரும்போது தெருவெங்கும் மக்கள் ஜாதி வேறுபாடின்றி வழிபட்டு மகிழ்வது வழக்கம். சிவபெருமானே முழுமுதற் பொருள் என்னும் கருத்தில், பிற தெய்வங்களை எல்லாம் இணைத்துப் பாடுகிறார் புலவர். அவர்களை எல்லாம் ஜாதிகளின் பெயரால் குறிப்பிடுகிறார்.

சிவபெருமானின் திருக்கோலத்தைப் பிறர் காணவும், தரிசிக்கவும் உற்சவ மூர்த்தியாக தெருவில் தூக்கிச் செல்லும் கடப்பாடுடையவர்கள் சிலர் ஊர்தோறும் உள்ளனர். அவர்களும் பல்வேறு இனத்தைச் சார்ந்தோராவர். ஆனால், புலவர் இறைவன் முன்னர் அனைவரும் சமம் என்பதைக் குறிப்பால் உணர்த்தி, அவரவர் சார்ந்த குலத்தொழிலைத் தவறாமல் செய்ததாகக் கூறுகிறார்.

வாணியன் பாடிட, வண்ணான் சுமக்க, வடுகன் செட்டி
சேணியன் போற்ற, கடல்பள்ளி தொழ, தீங்கரும்பைக்
கோணியன் வாழ்த்த, கருமான் துகில்தனைக் கொண்டணிந்த

வேணியன் ஆனவன் தட்டான் புறப்பட்ட வேடிக்கையே! பிரமன் பாட்டுப்பாட, நந்திதேவர் உருவத்தைச் சுமக்க, பைரவர், முருகன், இந்திரன் ஆகியோர் மந்திரம் முழங்க, திருமால் பணிவுடன் முன்னே வணங்கிச் செல்ல, மன்மதன் வாழ்த்துக்கூற, கரிய யானையின் தோலை ஆடையாக அணிந்தவனும், சடைகளைத் தாங்கியவனும், எவர் கண் ணுக்கும் புலப்படாதவனுமாகிய சிவ பெருமானின் ஊர்வலம் புறப்பட்டதாம்'!
இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள ஜாதிப் பெயர்களும், குலத்தொழில்களும் கடவுளர்களும், அவர்கள் ஊர்வலத்தில் செய்துவந்த செயல்களுக்கும் காரண-காரியப் பெயர்களாக அமைந்துள்ளது தான் பாடலின் தனிச் சிறப்பாகும்.
1. வாணியன் - கலைமகளை நாவில் உடைய பிரமன் பாடினான் (எண்ணெய் ஆட்டுபவன் - செக்கில் எண்ணெய் ஆட்டும்போது ராகம் பாடுவதுபோல் சப்தம் வரும்), 2. வண்ணான் - வெண்மை யான நிறம் பொருந்திய நந்திதேவர் சிவனின் உருவத்தை வாகனமாகச் சுமந்தார் (துணிகளை வெண்மையாகத் துவைத்துத் தோளில் சுமத்தல்), 3. வடுகன், 4. செட்டி, 5. சேணியன் - பைரவர், முருகன், இந்திரன் மந்திரச் சொற்களை ஓதிக் கொண்டு வந்தனர். (மாயா ஜாலம் செய் யும் கருநாடக தேசத்தவர், பொருள் களைக் கூவி விற்பவர், யாகம் நடத்து பவர் இவர்கள் அனைவரும் வாய்விட்டு ஒலி எழுப்புபவர்கள்), 6. கடல் பள்ளி - கடலில் பள்ளி கொண்டுள்ள திருமால், சிவபெருமானைத் தன் மைத்துனன் என எண்ணி வணங்கினான் (தாழ்த்தப்பட் டோர் தமக்கு மேலான இனத்தவரைத் தொழுது வணங்குவர்), 7. தீங்கரும்பைக் கோணியன் - சுவையான கரும்பை வில் லாக வளைத்துக் கையில் கொண்டு மலரம்பு வீசும் மன்மதன் வாழ்த்தினான் (கோனார் எனப்படும் இடையர் குலத்தைச் சார்ந்தோர், தம் தெய்வமாகிய திருமால் வணங்குவதால் தாமும் வணங்கி வாழ்த் துவர்).

இவ்வாறு உலாவந்த சிவபெருமா னின் செயலையும், பெயரையும் மூன்று ஜாதியின் பெயரால் குறிப்பிட்டுச் சிறப்பி த்துள்ளார் காளமேகம். கருமான் துகில் அணிந்தவன் - கரிய உடல் பொருந்திய விலங்கான யானையைக் கொன்று அதன் தோலை ஆடையாக உடையவன். (கரிய புகைபடிந்த ஆடையணிந்து, இரும்புத் தொழில் செய்யும் கொல்லர்); வேணியன் - அடர்ந்த சடைகளைத் தலையில் கொண்டு விளங்குபவன் (ஆடை நெய் பவர் உயிரையும் உடலையும் இணைப் பதுபோல் இரு நூல்களை இணைத்து நெருக்கி ஆடையை உருவாக்குவர்); தட்டான் - புலன்களுக்குக் குறிப்பாகக் கண்களுக்குத் தட்டுப்படாதவன் (பொற் கொல்லர் பொன்னைத் தட்டித் தட்டித் தொழில் செய்வர்).

காளமேகம், எல்லாக் கடவுளர்க்கும் ஜாதிப்பெயர்களை பொருத்திப் பொருள் கொள்ளும் வண்ணம் இருபொருள்படக் கூறிய சொல்லாட்சி போற்றத்தக்கது. மனிதர்களில் ஜாதிப் பிரிவு இருப்பதாகக் கருதினால், அதற்குக் கடவுளரும் விதி விலக்கல்லர் என்பதை நகைச்சுவையாகக் கூறியுள்ளார். அதனால்தான்,

சிவபெருமானின் திருவீதி உலாவை வேடிக்கை எனக்கூறி முடித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page3/74926.html#ixzz2smrQzhnm

தமிழ் ஓவியா said...


மக்கள் சிந்தனைக்கு

அசுர குருவான சுக்கிரன் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் (தமிழர்) ஏற்பட்ட போரில் இறந்த அசுரர்களை உயிர்பெற செய்துள்ளான்.

சிவபெருமான் கொடுத்த வரத்தை தவறான வழியில் பயன்படுத்தியதால் சுக்கிரனை சிவன் விழுங்கி விட்டான். அசுரர்களின் வேண்டுதலுக் கிணங்க சுக்கல வழியாக வெளியே வந்தான். வெள்ளி என்று பெயர் வந்ததாம்.

மகாபலியிடம் திருமால் வாமனனாக வந்து மூன்றடி மண் கேட்க கமண்டலத்தில் உள்ள நீர் வெளியே வராமல் சுக்கிரன் வண்டு வடிவத்தை எடுத்து துவாரத்தை அடைத்து விட்டானாம். திருமால் தர்ப்பையால் குத்த சுக்கிரன் கண் குருடானது.
நாம் பிறக்கும் போதே நம் சாதக கட்டத்தில் நம் கண்ணுக்கு தெரியாமலே இறைவன் எழுதி விடுகிறான். இது விவரம் தினகரன் வார (8.1.2014) இதழில் வந்துள்ளது.

இந்த கதையின்படி கடவுள் மனிதனின் சாதக கட்டத்தில் எழுதிவிட்ட பின்பு சுக்கிரனுக்கு என்ன வேலை? இந்த பித்தலாட்டத்தை எழுதிய வனுக்கு எப்படி தெரியும் கடவுளும் சுக்கிரனும்.

###

வீடோ, நிலமோ வாங்க முற்படுகிறவர்கள் வடக்கா அல்லது கிழக்கா என திசையை கேட்கும் வாஸ்து ராசி பலனுக்கு ஏற்றதாக இருக்க வேண்டுமெனவும் கேட்கிறார்கள் இவர்களுக்கு ராசி பலனும் வாஸ்து சாஸ்திரமும் தெரியாது. யாருக்கோ யாரோ சொன்னதை வைத்து கிழக்கு வடக்கு திசையாக வீடு வாங்க கேட்பதே வழக்க மாகி விட்டது. அப்படியே ராசி பலன்படி வீடு வாங்கட்டும். கழிப்பிடம் இல்லாமல் வீடு இருக் குமா? வாஸ்துபடி வீட்டில் கழிப்பிடம் (ஜிஷீவீறீமீ) இருக்கக் கூடாதே. ஜாதகம், சாஸ்திரம் என்ன ஆனது.

ஆனால் இவர்களுக்கு பின்னர் வரும் வாரிசுகள் இவர்களின் ராசிபடியே அல்லாமல் எதிர்மறையாக தெற்கு மேற்கு ராசிபலன் உள்ள வர்களாக பிறந்தால் இவர் கட்டிய வீட்டை இடிக்கவா? விற்கவா? எண்ணில் அடங்கா உதாரணங்கள் பல இருந்தாலும் சிந்திக்க வேண்டியது நீங்கள்தான். 21ஆம் நூற்றாண்டில் வாழும் நாம் வெளி நாட்டான் கண்டுபிடித்த மின்சாரம், தொலைப்பேசி, ரேடியோ, டி.வி. என பலவற்றையும் பயன்படுத்துகிறோம். 20ஆம் நூற்றாண்டு வரை நமக்கு கல்வி கொடுக்க சரஸ்வதிகூட வரவில்லையே. சுதந்திரம் பெற்ற பின்பும் கல்வி கொடுக்க மறுக்கப்பட்டது. தந்தை பெரியாரின் கருத்தை ஏற்ற காமராஜர் வந்த பிறகுதானே படிப்பு அனைவருக்கும் கிடைத்தது. சமஸ்கிருதம் படித்ததால் மட்டுமே மருத்துவ சீட்டு என்று நிபந்தனை வைத்திருந்தார்கள். நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் படிப்பில்லாமல் மூடநம்பிக்கை கொண்டு வாழ்ந்தார்கள். கால நேரத்தை வீணாக்காமல் மூடநம்பிக்கைகளை கைவிட்டு பகுத்தறிவு கொள்கையை கடைபிடிப்போமாக.

-_- வணங்காமுடி, தருமபுரி

Read more: http://viduthalai.in/page4/74928.html#ixzz2smriw3yl

தமிழ் ஓவியா said...


இதழ ஒனறன இருவேறு பககஙகள!

- சிவகாசி மணியம்

கேளவ: பெருமபாலான குடுமபஙகளல பரச சனைககுக காரணமாக அமைவது எது?
பதல: கணவன மனைவககடையே 20-ம பககததல (அரசு பதல) இபபடி நோமையான, அறவாததமான பதல இது எனறால, மூடததனததன மூலததை அடைய வழகாடடும முரணபாடு அதே இதழன 50-ஆம பககததல! செனனை 108-லருநது ஒரு பகதை எழுபபும கேளவ இது:

எனககுத தருமணமாக 8 ஆண்டுகள ஆக வட டது. ஒரு பெண குழநதையும உணடு. தனமும என கண வருககும எனககும எதறகாவது சணடைதான நாஙகள ஒறறுமையுடன வாழ எநதக கோவலுககுச செலல வேணடும?

கணவன மனைவ உறவு பலம பெற எனும கடடு ரையல பயா கலயாணராமன எனபவான வழ காடடுதலைப பாருஙகள.

குடுமப ஒறறுமை உணடாக மடடுமலல, எலலா நலனும நஙகள பெற நமமத பெற நமமதயாக நஙகள படுததுறஙக சுருடடபபளள பளளகொணடேசுவரரை கடடாயம ஒரு முறை தாசனம செயது பாருஙகள, பலனகளை உடனடியாக உணாவகள. இது சததயம எனறவா அநதக கோவல எஙகே இருககறது, எபபடிச செலவது எனபதையும வவாககறா. ரொமப சமபள, செனனை கோயமபேடடிலருநது புததூ வழயாகச செலலும எலலா பஸகளும இநதக கோவல வாசலல நறகும. அலலது ஊததுககோடடைச செனறு அஙகருநது ஷோ ஆடடோ (ரூபாய 5) அலலது பஸஸல செலலலாம. தமழக ஆநதர எலலையல அமைநதுளளது. செனனையலருநது 35 ரூபாய. சாபபட ஊததுககோடடை வரவேணடாம. கோவலல தனம மதய உணவு உணடு (இது போதுமே!) குடுமப ஒறறுமை சறககும எனபதே இதன சறபபு எனறு அடிததுச சொலகறா. (கோவல நேரஙகளும தொலைபேச எணணும இதனுள அடககம!)

செனனைககுளளேயும அருகாமையலும எததனை கோயலகள? அவறறையெலலாம அலடசயபபடுதத வடடு எஙகோ கடககும ஓ அனாமதேயக கடவுளன அடரஸ கொடுகக வேணடிய அவசயம ஏன ஏறபட டது? இஙகுளள கடவுளகளுககு எநத சகதயும இலலையா? எலலாம வலல இறைவன எனகறாகளே அதெலலாம யாரை ஏமாறற? நமம ஊ டாகடா களைபபோல ஒவவொனறும தனததன ஸபெச லஸடாக அலலவா இருககனறன?

இதழகளல இது போனற கேளவகளைக கேடடு பதலுககாகக காததருபபவாகள படிககாத பாமராகள அலல! மெததபபடிதத மேதாவகள தான, குடுமப ஒறறுமைககு எனன செயய வேணடும எனறு கேடடால போதாதா? எநதக கோவலுககுச செலல வேணடும? எனறு கேடடால அது பகதச சுரணடலுககு வழ வகுககும எனபதை அறயவேணடாமா? இபபடிப படட ப(க)தாகளை நனைததால பாதாபமதான ஏறபடுகறது. தனனடம யோசனை கேடபவான பலவனம அவரது கேளவயலேயே பளசசடுமபோது பாகாரம சொலபவான வேலை எளதாகவடுகறது.

வாழககை படுபோ அடிககறது எனன செயயலாம? எனறு ஒருவா கேடடால நலல புததகஙகளைத தேடி எடுததுபபடி எனலாம. அதைவடடு எஙகே போகலாம? என மொடாக குடிகாரனடம கேடடால டாஸமாக பககம தான கை காடடுவான. தஙகளடம வரும மனநோயாளகளுககு கவுனசலங நடததும மனநல மருததுவாகள எசசாககையாய இருபபது நலலது. காசு சுருடடும வேலையை சுருடடபபளள தூஙகு மூஞச பொமமை எடுததுககொளளாமல வழபபுடன இருஙகள:

நம ஆசயா அவாகள மண வழாககளல வாழவணையா எனும வாததையை அழுததமாகக குறபபடுவா. இணையா எனற சொல இருவரும சமம எனபதைச சொலகறது. ஒரு மனதாக சகபபுத தனமையுடன பேசசசதது வடடுக கொடுதது வாழகறபோது குடுமபததல குழபபமும, அமைத யனமையும எஙகருநது வரும? வதணடா வாதமும, வண படிவாதமும செயது நாள முழுகக சணடை யடடுக கொணடிருபபதால நமமத கெடடு ஒருவா முகததை ஒருவா பாபபதே கசபபாக வடு மயான பூம ஆகவடும அவவளவு தான!

Read more: http://viduthalai.in/page4/74929.html#ixzz2smrssWy8

தமிழ் ஓவியா said...


இதயத்திற்கு இதம் தரும் ஆப்பிள்


இன்றைய உலகில் மக்களை இரு விதமான நோய்கள் அதிகமாக ஆட்டிப் படைக்கின்றன. அவை நீரிழிவு, இரத்த அழுத்தம். இரத்த அழுத்தமானது இத யத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது. இதய நோய் வந்தால் குணப்படுத்தவும், வராமல் தடுக்கவும் இயற்கை நமக்களித்த கொடை தான் காய்களும் கனிகளும்.

இதயத்திற்கு இதம் தரும் பழங்கள் பல உள்ளன. அவை இதயத்தை பலப்படுத்தி சீராக செயல்பட வைக்கும். ஆப்பிள் பழம் இதயத்திற்கு உற்சாகத்தையும், புத்துணர்வையும் தரவல்லது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை என்கிறது ஒரு ஆங்கில பழமொழி. இதிலிருந்து ஆப்பிளின் மருத்துவப் பயன் நமக்கு புரியவரும். இதுபோல் புத்தம் புது திராட்சை, அன்னாசி, ஆரஞ்சு, சீதாபழம் ஆகியவை இதயத்தை பலப்படுத்தும். வாதுமையும் தேங்காய் நீரும் இதயத்திற்கு ஊக்கம் அளிப்பவை. நெல்லிக்கனி இதயத்திற்கு மிகுந்த பலனைத் தர வல்லது. ஒரு நெல்லிக்கனியில் 4 ஆப்பிளுக்கு இணையான சத்துக்கள் இருப்பதாக விஞ் ஞானிகள் கூறுகின்றனர். இதனை ஜாமாக வும், இலேகியமாகவும் செய்து சாப்பிட லாம். மார்பில் வலியும், மரத்துப் போன உணர்வும் ஏற்பட்டால் உடனே திராட்சைச் சாறு அருந்தலாம். இது வலியைக் குறைக்கும் இதய நோயாளிகள் தினமும் திராட்சை சாறு பருகுவது நல்லது. அது நோயைக் குணப்படுத்த உதவும். ஆரஞ்சு பழமும், அதன் பழச்சாறும் இதயம், மார்புநோய் போன்றவற்றிற்கு சிறந்த டானிக் ஆகும். இதனை இதய சம்பந்தப்பட்ட நோயாளிகள் தினமும் அருந்துவது நல்லது. அதுபோல் உலர்ந்த திராட்சை, பேரீச்சை, அத்திப்பழம் போன்றவை இரத்தத்தை சுத்தப் படுத்துவதுடன் இதயத்தை பாதுகாக்கவும் செய்கிறது.உடலில் உள்ள அதிக உப்பைக் குறைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கனிகளுக்கு உண்டு.

Read more: http://viduthalai.in/page4/74930.html#ixzz2sms237d1

தமிழ் ஓவியா said...


சீதா பிராடடியின குளியல

- மு.வி.சோமசுந்தரம்

சயாமாசாஸத சனனதத தெரு வல பாரதககதை உபனயாசம செயகறா.
சடகோப அயயஙகா வடககு மாட வதயல ராமா படடாபஷேக கதாகாலடசேபம செயகறா.

அமபுஜம மாம, அகரகார அயநதாம தெருவல அசுவததாமன கதை கசசோ நகழததுகறா.

இநத கூடடஙகளுககு வெததலைப பெடடியுடனும, சவல பொடடலஙகளுடனும, சஙகம மூககுபபொடி டபபயுடனும குவநது இருககும அககரகார அவாள கூடடததுககு வணடி வணடியாக அபதத கதைகளையும, மூடடை மூட டையாக பகவான தருவளையாடல களையும கொடடிக் குவததாலும, தலையை ஆடடி ஆடடி, பயபகத யுடன பகவான கதைகளைக கேடடு ஆதமசாநத அடைவாகள.

இததகைய கூடடததனா, சந தனை, அறவயல, பகுததறவு பககம தலை வைததுபபடுககத தயாராக இருபபதலலை. ஜடஙகளாக ஜவதது வருபவாகள.

கதா காலடசேபம, உபனயாசம செயபவாகளைப பறற அதக கவனம செலுததத தேவையலலை எனறா லும, சமுதாயததல பொறுபபான வகையல மககளை நலவழபபடுததும கடமை ஊடகஙகளுககு குறிப்பாக, முதன்மை நாளிதழ்களுக்கு இருகக வேணடும. மூடநமபககைத தனமை, அறவயலுககு அபபாறபட்ட தனமை கொணட நகழசசகள செயதயாக வநதால ஓரளவல தவறலலை. மாறாக, பகுததறவுககு ஒவவாத கதைகளை, நகைபபுககடம அளக் கும வகையல வலய எடுதது கடடு ரைகளாக வழஙகுவது இருடடுக் காடடுககுள சமூகததை அழைததுச செலவதறகு ஒபபாகும.

அததகைய ஒரு வேடிககைச செயதக கடடுரை, அறவுககு வெடி குணடு வைககும கடடுரை 15-.11.-2013 அனறு இநது இணைபபு இதழல வநதுளளதைக காணபோம.

தமழகததல, கடடடககலையன மேனமையைப் பறைசாறறும கடட டஙகள, சறபககலையன நுடபத தனமையை உணாததும சறபஙகள மகுநது காணபபடுவது பெருமை சோபபதாக உளளது. இவறறன சறபபுகள பகத, மதம அடிப படையல எழுபபபபடட கோயல களல குவநதுளளன எனபதும உணமையே. இஙகுளள கடடடம, சறபம பறற வயநது பேசுவதல குறறம ஏதுமலலை. ஆனால இதனை வைதது அறவைச் சூறையாடுவது தான சகததுககொளள முடியாத ஒனறு.

காநாடகததல, மைசூ நகருககு 57 க.ம. அபபால, கருஷணராஜநகா தாலுககாவல கோதணடராமா கோயல ஒனறுளளது. இது காவ ஆறறன கரையல அமைநதுளளது, அருகல நவழசசகள உளளதும இநத இடததுககு இயறகை நலல சூழலை அமைததுளளது. இன இநத இடததை வைதது பகத முகமூடியல கூறபபடும புழுதத புழுகு வெடகப படுவதாக உளளது. (அதத சாஸ தரம, காடடியுளள வழமுறை இதுதான)

இநத கோயல ராமனுககு அப பணககபபடட கோயல. நாடு கடத தபபடட ராமபரான இநத காடடுப பகுதககு வநதபோது ஓயவு முகா மடடா. அஙகருநத மலைவாழ மககளன வருநதோமபலல இருநது வநதா. உடன மனைவயும, தமபயும இருநதனா. இநத காடடில தான, ராமன அகநததர ஷயை சநதத தா. ஷககு ஒரு ஆவல வநதது. அதை ராமனடம கூறனா. சதை ராமனன வலது பககததல இருநது பாகக வேணடும எனறு ஆசையைக கூறனா. (இது எனன ஒரு ஆசையோ?) அதனபடி சதை வலது பககததல இருகக காடசயளததா. (இதல எனன சறபபை ஷ கண டாரோ?) அதுவே இநத கோயலன வசேஷம.

இஙகு இரணடு குரஙகுகள (ஹனு மன) கோயலகள உளளன. ஒனறு கோயலன வாசலல, அடுத்தது கோயலுககு அடுதது காவக் கரையல. இஙகு சறபபாக ஒனறு கூற வேணடும எனறு கடடுரை ஆசயா எழுதுகறா. அதாவது, குரஙகு களன எணணககை அதகம. இவை ராமபகதரான ஹனுமான அவ தாரஙகளாகும எஙகும குரஙகு களாம. கோயலன உளளே புகுந தவை கர்ப்பகரகததனுள புகுநது, தடை ஏதுமலலாமல பரசாதங களை எடுததுச செலகனறன. (ராம பகதாகள தருடடு, ரௌடித தனம). இதை தடுகக எவருககும வழ தொய வலலை (ராமபரான, ஷககுக கூடவா?)

சீதைககுப பயணக் களைபபால குளிகக வேணடும எனறு தோனறியது. உடனே இராமன, தமப லடசு மணனை நோகக, ஒரு அமபை எடுதது எதல உளள பாறையன மது எயயுமபடி கூறனான (ஏன அதை அவன செயயககூடாதா?). லடசுமணன அமபு பாறையல படடதும, பாறையலருநது மூனறு வகைத தணண வெளவநதது. ஒனறு மஞசள பொடி கலநதது. இரணடாவதல எணணெய் கலந தது. மூனறாவது சயககாய கலநதது. (எனனே அபததம, அபததம எனறு வாயல அடிததுககொளளாதகள. இநது இதழ இநத செயதயை வெளயடுகறது). சதை இநத தணணல குளதததால, இஙகுளள தணண, மஞசள ருச, வாசனை கொணடுளளது (வேறு எஙகெஙகு குளததாகள எனறு தொநதால அநத ஆறறு நரையும பாககலாம. ஒரு கலலல இரணடு மாஙகாய எனபது போல ஒரு அமபல, மஞசள, எணணெய, சயககாய, பாறைய லருநது வநதுளளது. முதலமைசசா சததராமையா, நபுணாகுழுவைக கொணடு Three in one கடைககும இடததைக கணடறய சொலலலாம).

Read more: http://viduthalai.in/page5/74931.html#ixzz2smsDHfg1

தமிழ் ஓவியா said...


தெரிநது கொளளுஙகள

தமழனை அசுரன, அரககன, ராடசசன, தஸயு, குரஙகு, கரடி எனறும தேவடியாள மககள எனறும எழுத வைததுளளான, ராமாயணம, மகாபாரதம மறறும பல கதை களலும கதாபாததரஙகளை சனமாவலும காடடி வருகனறான. அதை பாததும படிததும ரசககனறோம.

இநதக காடடுமராணடிப புராணஙகளை படிதது அதலுளள கயவாளததனஙகளை அபபோதே பொயா, அணணா, கலைஞா போனற அறஞாகளும மலவு வலை புததகஙகளல எழுதயும சல நாடக சனமாவலும சுடடிககாடடி உளளனா.

காணாத கடவுளகளுககு மனைவகள, கூததகள, குடடிகள இருபபதையும அறகறோம. மனதனுககுத தேவையான எநத அறவயல பொருடகளை எநத கடவுளாவது கொடுததது உணடா? சடடி பானை முதல மனசாரப பொருடகளும கணன, ஆகாயததையும, பூமயையும அதல உளள அனைததையும கணடபடிததது மனதன தானே? ஆணும பெணணும கலவ செயயாமலே குழநதையைப பறகக செயததும மனதனதானே?

சவனுககும பாவதககும நடநத தருமணததலே புரோகதம செயத பரமமா பாவதயன தொடையை பாததுப பீசசியடிதத வநதல ஷகள, மருகஙகளும பிறநதுளளன. ஆனால முருகககடவுளுககு ஒனறுககு இரணடு மனைவகள இருநதும குழநதைகள இலலாதது ஏன? இதை எழுதயவன மனதன தான. கடவுளன லீலைகள இவனுககு எபபடி தொயும? இதல இருநதே கடவுள எனபது கடடுககதையே எனபது தொகறதே.

கடவுளாகக காடடபபடுபவாகள அரசா களே. அவாகள தான ஒனறுககு மேறபடட மனைவகள கூததகள வைததருநததை பனனா வநத மனதாகள அவாகளுககு ஏற றபடி புராணக கதைகளைககடடி வேதங் களாக ஆகக வைததனா.
கடவுளகளதான ஜாதயை உண டாககயதாக சொலலுகனறனா. அபபடி இழவான மககளை படைதத கடவுள தேவையா? பேருநதுகளல, நாடகஙகளல டிககட வாஙகனாலும உடகார அனுமதககாத காலம உணடு. உணவு விடுதயல உடகாநது சாபபிட முடியாது. பளளககூடம படிககச செனறாலும தனமை. வீதயல செனறாலும தடை.மனுதாமததன படிதான அனைதது ஜாதயனரும அசசகாகளாக ஆக முடியவலலை எனபது தொயுமா? இதை எலலாம போராடிப பெறறு எலலோரும மனதாகளதான எனகற நலையை உணடாககயவாகளதான அமபேதகா, பொயா, அணணா, கலைஞா இவாகளுககு முனனோடிகளாக இருநத (1916) பிடடி தயாகராயா, டாகடா நடேசனா, டி.எம.நாயா, பனகல அரசா, பனனீசெலவம, இரடடை மலை சீனவாசன, அயோதததாசா போனற நீதககடசத தலைவாகளைபபறற அற வீகளா? இரணடு லடசம ஆணடுகளுககு முனனா ஆபபகக கணடததலதான முதல பெண பறநததாகவும, ஆபபிககாவிலதான முதல மனிதன பிறநதான எனறும அறயப படுவதால இநத ஜாத எஙகே பிறநதது?

எலலா தலைவாகளும நகரஙகளல சுறற இதுபோனற கருததுககளைச சொலலவடடுப போகனறாகள. ஆனால குடடித தலை வாகள தலைவாகளன கருததைக கராமங களல பரபப முனவருவதலலை. இன அதை செயலபடுதத தலைவாகள அறவுரைகள வழஙகுவாகளா?

- வணஙகாமுடி

Read more: http://viduthalai.in/page6/74933.html#ixzz2smsWZ1Xo

தமிழ் ஓவியா said...


புதுக்கவிதைகள்


சக்தியுள்ள
கடவுளுமில்லை
பக்தியுள்ள
மனிதனுமில்லை
சமத்துவ மதத்தில்!

சக்தியில்லா
கடவுளுண்டு
பக்தியுள்ள
மனிதனுண்டு
இந்த(து) மதத்தில்!

***
என்ன பொருத்தம்!
எங்களூர்ப்
பெருமாள்
கோயிலில்
அர்ச்சக
அய்யங்கார்
வாய் பேசாதவர்
சாமியும் பேசாதது...
என்னே பொருத்தம்!!

- கோ. கலியபெருமாள்,
மன்னார்குடி

Read more: http://viduthalai.in/page6/74934.html#ixzz2smsgmmuN

தமிழ் ஓவியா said...


இயேசு சிலையில் ரத்தம் வடிகிறதாம்! ஓ பாசிட்டிவா? நெகட்டிவா?

சென்னை சேத்துப்பட்டு புனித அன்னாள் மேல் நிலைப்பள்ளியில் சிலுவையில் அறைந்த நிலையில் இயேசு சிலை உள்ளது. இந்த சிலையின் கால், கை மற்றும் கழுத்துப் பகுதியில் இருந்து புதன்கிழமை மாலை 3 மணியளவில் ரத்தம் வடிந்ததாக கூறப்படுகிறது. அதை பார்த்த கன்னி யாஸ்திரிகள் ஆச்சரியமடைந்தனர். பின்னர் இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியது. உடனே பொதுமக்கள் கூட்டம் கூடத் தொடங்கியதை அடுத்து ஆயிரக்கணக்கான பொது மக்கள் திரண்டனர். அப்போது (5 காயங்கள்) மற்றும் சிலை பகுதியில் ரத்தம் வடிந்து காய்ந்த நிலையில் இருந்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் பரவச மடைந்தனர். அங்கு சிறப்பு பிரார்த் தனை செய்து சென்றனர். சிலையில் ரத்தம் வடிந்த தகவல் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் பரவி யுள்ளது. வெளியூர்களில் இருந்து கிறிஸ்தவர்கள் வேன், பஸ் மூலமாக சேத்துப்பட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் ரத்தம் வடிந்த தாக கூறப்படும் ஏசு சிலை முன்பு கூட்டம் கூட்டமாக நின்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு செல்கின்றனர். செல்போன்கள், வீடியோ காமிராக்களிலும் ஏசு சிலையை படம் எடுத்து சென்றனர். இதனால் சேத்துப் பட்டு, கிறிஸ்தவ ஆலய வளாகம் பரபரப்பாக காணப்படுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இயேசு சிலையில் வடியும் ரத்தத்தை என்ன வகை (குரூப்) ரத்தம் என்று பரிசோதனை செய்து அறிவிப்பதற்கான அரிய வாய்ப்பு அல்லவா இது! இதே போல் உலகம் முழுக்க இயேசு சிலையின் கண்ணில் இருந்து வழியும் ரத்தங்களையும் பரிசோதித்து ஒப்பு நோக்கலாம். அதன் மூலம் இயேசு வாழ்ந்தார் என்பதற்கான ஆதாரமாக வும் இதைப் பயன்படுத்தலாம். வழக்கமாக இயேசு ரத்தம் என்று ஒயினை வழங்கிக் கொண்டிருக்கும் மோசடிக்கு விடை கொடுத்து, எந்த குரூப் ரத்தமோ அதில் நனைத்து அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கலாம். ஏற்கெனவே உலகின் ரத்தக் கொடை ஞராக இருக்கும் ஓ பாசிட்டிவ் வகை ரத்தமாக இருக்கலாம் என்று சிலர் கருதுவதையும் சரி பார்த்துக் கொள்ளலாம்.

http://wiki.answers.com/Q/What_was_the_blood_group_of_Jesus_Christ?)
What was the blood group of Jesus Christ?
Answer: From analysis of the shroud of Turin, some people have said that Jesus was a type O- blood type (which is the universal donor), but it would be difficult or even impossible to confirm.

அப்படியே கன்னி மேரி கண்களி லிருந்து ரத்தம் வடிவதாக சொல்லப் படும்போதும் இதைப் பின்பற்றலாம். தாய்க்கும் மகனுக்கும் என்ன வகை ரத்தம் என்பது தெரிந்தால், அது மனித ரத்தமா அல்லது தேவ ரத்தமா என்பது தெரியக்கூடும். இந்த ரத்தம் எப்போது உற்பத்தியானது என்பதையும் கூட அறியும் வாய்ப்பு ஏற்படலாம். எப்படியும் குறைந்தது 1981 (கி.பி.2014- இயேசு மறையும் போது அவரது வயது 33) ஆண்டுகள் பழமையான ரத்தம் கிடைப்பது வரலாற்று, அறிவியல் அபூர்வம் அல்லவா? இந்த அரிய வாய்ப்பை நழுவ விடலாமா? பரி சோதனைக்கு நாங்கள் தயார்! இயேசு வுக்கு வசதி எப்படி?

Read more: http://viduthalai.in/page7/74935.html#ixzz2smsqm0N2

தமிழ் ஓவியா said...


நாடு எங்கே போகிறது

பாலியல் வன்முறை, கொலை உள்ளிட்ட கொடூரமான குற்றங்களில், ஈடுபடும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையளிப்பதாக உள்ளது' என, தேசிய குற்ற பதிவுகள் அமைப்பு கூறியுள்ளது. தேசிய குற்ற பதிவுகள் அமைப்பு, வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறியதாவது; பாலியல் வன்முறை குற்றங்களில், 2002ஆம் ஆண்டு 485 சிறார்கள் ஈடுபட்டுள்ளனர். இது, 2012இல் 1,175ஆக அதிகரித்துள்ளது. கொலையில் ஈடுபட்டதாக, 531 சிறார்கள், 2002இல் கைது செய்யப்பட்டனர். 2012இல், 990ஆக அதிகரித்துள்ளது.இதை தவிர்த்து, 2002,இல் 63 சிறார்கள், கூட்டுக் கொள் ளையிலும்; 207பேர் வழிப்பறியிலும், 1,723பேர் கொள்ளையிலும்; 3,361 சிறார்கள், திருட்டு வழக்கிலும் ஈடுபட்டுள்ளனர். இது 2012இல் ஒப்பிடும்போது, முறையே, 174;767; 2,625 மற்றும் 5,528ஆக அதிகரித்துள்ளது. கடத்தல் மற்றும் ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக 164 சிறார்கள் மீது, 2002ஆம் ஆண்டும், 2012இல், 789சிறார்கள் மீதும், வழக்கு பதிவு செய்யப்பட் டது. பெண்களை தாக்கியது, பாலியல் தொந்தரவு செய்தது என, 2002இல், 476 சிறார்கள் மீதும், 2012இல் 613 சிறார்கள் மீதும், வழக்குபதிவு செய்யப்பட்டது.

இவ்வாறு, புள்ளி விவரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. இதன்மூலம், கடுங்குற்றங்களில் ஈடுபடும் சிறார்கள் எண்ணிக்கை அதிகரிப்பது, கவலையளிப்பதாக உள்ளது. சுற்றுப்புறச் சூழல், தவறான சேர்க்கையால், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுகின்றனர். மேலும், சமூக - பொருளாதார பின்னணி,மனநிலை போன்றவையும், குற்றங்கள் அதிகரிப்புக்கு காரணம் என,தேசிய குற்றபதிவுகள் அமைப்பு தன் கருத்து தெரிவித்துள்ளது.

- தினமலர்- 8-.12.-2013 பக்கம் 8

Read more: http://viduthalai.in/page8/74938.html#ixzz2smtX1dGz

தமிழ் ஓவியா said...


வா(வீ)ழ்க சோஷலிசம்!


இந்தியாவில் கார்ப்ப ரேட் நிறுவனங்கள் வைத் துள்ள வரி பாக்கி ரூ.2.46 லட்சம் கோடி இதில் 45 நிறுவனங்கள் ரூ.500 கோடிக்கு மேல் வரி பாக்கி வைத்துள்ளன என்று நிதித்துறை இணை அமைச்சர் ஜே.டி. சீலம் மக்களவையில் தெரிவித் துள்ளார் (6.2.2014).

இந்தியாவில் நாள் வருமானம் 20 ரூபாய் என்ற நிலையில் உள்ள வர்கள் 70 சதவீதம் என்று சென்குப்தா அறிக்கை கூறுகிறது. உலகில் 120 கோடி மக்கள் வறுமை யின் வன்பிடியில் சிக்கி விழிபிதுங்குகிறார்கள் என்றால் அதில் மூன்றில் ஒரு பகுதி (40 கோடி) மக்கள் பாரத புண்ணிய பூமியாம் இந்தியாவில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் பெரும் பணத் திமிங்கலங்கள் இலாபம் கொழிக்கும் எஜமானர்கள், அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி யைச் செலுத்தவில்லை என்றால் இதற்குக் கார ணம் என்ன?

பண முதலைகள், ஏமாற்றுக்காரர்கள் என் பது ஒருபுறம் இருக்கட் டும்; அந்த முதலைகளை அடக்க ஒரு அங்குசம் இந்திய அரசிடம் இல்லை என்பது பரிதாபமே!

கேதன் தேசாய் என்ற பார்ப்பனர் இந்திய மருத் துவக் கவுன்சிலின் தலை வராக இருந்தார். வரு மான வரித்துறையினர் அவர் வீட்டில் புகுந்து சோதனை நடத்திய போது 1500 கிலோ தங்கக் கட்டிகளையும், ரூ.1800 கோடி ரொக்கத்தையும் கைப்பற்றினார்களே - அதற்குப் பிறகு ஒரே ஒரு வரி செய்தி வெளியில் கசிந்ததுண்டா?

சுவிஸ் வங்கியில் மட் டும் முடங்கிக் கிடக்கும், இந்தியர்களின் பணம் ரூ.80 லட்சம் கோடி; இதனை இலகுவாகச் சொல்ல வேண்டுமானால் இந்தியாவுக்கு வெளிநாடு களில் இருக்கும் கடன் தொகையைவிட 13 மடங்கு அதிகம் - இதன் மதிப்பு. இந்தத் தொகையைப் பறிமுதல் செய்தால் ஒவ் வொரு இந்தியக் குடி மகனுக்கும் ரூ.50 ஆயி ரம் இலவசமாக சுண்டல் போலக் கொடுக்கலாமாம்.

பிஜேபி. ஆனாலும் சரி, காங்கிரசானாலும் சரி, சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணத் தைக் கொண்டு வந்தே தீருவோம் என்று முண்டாதட்டினார்களே தவிர சல்லிக்காசுகூட வந்து சேரவில்லை.

பணத் திமிங்கலங் களை மேலும் வளர்ப்பது தான் இந்திய அரசின் கொள்கை போலும்! சொகுசு கார் வாங்க நினைத்தால் அதற்கு இந் திய வங்கிகளில் வட்டி 7 சதவீதம், குளிர்ப்பதனக் கிடங்கு கட்டுவதற்கு முகேஷ் அம்பானிக்கு அளிக்கப்பட்ட கடனுக்கு வட்டி வெறும் 4 சதவீதம்.

அதே நேரத்தில் ஓர் விவசாயி ஒரு டிராக்டர் வாங்க வேண்டுமானால் வங்கி விதிக்கும் வட் டியோ 14 சதவீதம்.

ஹரிபீ கட்டாவோ! (வறுமையே வெளியேறு!) - மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/74962.html#ixzz2srqbBCwS

தமிழ் ஓவியா said...


காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ். கொள்கையைப் பின்பற்றுபவர்தான் மோடி! ராகுல் காந்தி தாக்கு!

பர்டோலி, பிப்.9- காந்தியின் படுகொலைக்கு பின்னணியில் ஆர்.எஸ். எஸ்.இன் கொள்கைதான் உள்ளது. அதைதான் மோடி யும் பிரதிபலித்து கொண்டி ருக்கிறார் என மோடியை ராகுல்காந்தி தாக்கி பேசி னார். குஜராத் மாநிலம் பர் டோலியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று (8.2.2014) தேர்தல் பிரசாரம் செய்தார்.

இதை முன்னிட்டு ஹசாரி பக் என்ற இடத்தில் பேர ணியும் நடந்தது. அதில், இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் மிகப் பெரிய அளவில் மக்கள் கலந்து கொண்டனர். பின் னர் நடந்த கூட்டத்தில் பேசிய ராகுல், இம்மாநில முதல்வரும் பாஜ.வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை நேரடி யாக தாக்கி பேசினார். அவ ருடைய பேச்சு விவரம் வருமாறு:

சர்தார் வல்லபாய் படே லின் சிலையை அமைப்ப தாக இங்குள்ள தலைவர் கூறி வருகிறார். ஆனால், படேலின் வரலாற்றை அவர் சரியாக படிக்கவில்லை. அவருடைய கொள்கைகள் பற்றி சரியாக தெரியவில்லை.

ஆனால், அவருக்கு சிலை அமைப்பதாக மட்டும் கூறி கொள்கின்றனர். ஆர்எஸ்எஸ் ஒரு விஷ அமைப்பு என்று படேல் கூறினார். மகாத்மா காந் தியின் படுகொலைக்கு பின் னணியில் ஆர்எஸ்எஸ்.இன் கொள்கைதான் உள்ளது. அதைதான் மோடியும் பிர திபலித்து கொண்டிருக் கிறார். உண்மையில்லை என்று தெரிந்தாலும் கூட, தனது மனதில் தோன்றுவதை எல்லாம் அவர் பேசுகிறார்.

நாடு முழுவதும் தகவல் அறியும் உரிமை சட்டத்தை காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. ஆனால், ஊழ லுக்கு எதிராக போராடுவ தாக கூறிக் கொள்ளும்படி மோடி, குஜராத் மாநிலத் தில் லோக் அயுக்தா அமைப்பை உருவாக்குவதற்கான தீர்மா னத்தை 9 ஆண்டுகள் நிறை வேற்றாமல் இருந்தார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் 10 தகவல் ஆணையர்கள் இருக்க வேண்டும்.

ஆனால், குஜ ராத்தில் ஒரே ஒரு தகவல் ஆணையர்தான் இருக் கிறார். அதுவும், நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகுதான் இவரும் நியமிக்கப்பட் டார். ஊழலை ஒழிப்பதில் பாஜ.வுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், அது சம்பந்தப்பட்ட 6 மசோ தாக்களை நாடாளுமன்றத் தில் நிறைவேற்ற காங்கிர சுக்கு ஏன் உதவக் கூடாது? விவசாயிகளின் நலனுக்காக பாடுபடும் ஒரே கட்சி காங்கிரஸ்தான். குஜராத்தில் 13 ஆயிரம் அரசுப் பள்ளி கள் மூடப்பட்டு கிடக்கின்றன. ஏழை மக்களையும், ஆதிவாசிகளையும் புறக் கணித்து விட்டு, மாநிலம் வளர்ச்சி பெறுவதில் எந்த பலனும் இல்லை.

மக்களின் கையில் அதிகாரத்தை வழங்கவே காங்கிரஸ் விரும்புகிறது. வறுமையை ஒழிப்பது பற்றி காங்கிரஸ் பேசுகிறது. பாஜ.வோ ஏழைகளை ஒழிப்பது பற்றி பேசுகிறது. நாடு முழுவதும் மக்கள் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக் கின்றனர். சிலர் டீ விற்கின் றனர். சிலர் டாக்சி ஓட்டு கின்றனர். சிலர் விவசாயம் செய்கின்றனர்.

யார் எந்த தொழில் செய்தாலும் அதை மதிக்க வேண்டும். ஆனால், ஒரு மனிதர் நம்மை எல் லாம் முட்டாளாக்கி கொண் டிருக்கிறார். அது போன்ற வர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டிய அவ சியமில்லை. இவ்வாறு ராகுல் பேசினார்.

Read more: http://viduthalai.in/e-paper/74968.html#ixzz2srqlNoyk

தமிழ் ஓவியா said...


தீட்சதர் வால்


சாதாரணமாகவே குரங்கு அது கள்ளுக் குடித்த போது தேளும் கொட்டி னால் என்னாகும்? என்று தந்தை பெரியார் கூறுவதுண்டு.

இது சிதம்பரம் தீட்சதர் களுக்கு நூற்றுக்கு நூறு பொருந்தும். சிதம்பரம் நட ராஜர் கோயில் தீட்சதர் களின் சிண்டுக்குள் சிக்கி விட்டது என்றவுடன் பூணூல் விரைக்கத் தானே செய்யும்?

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிற்சபை அரு கில் ஓதுவார் ஆறுமுகசாமி தேவாரம், திருவாசகம் பாடச் சென்றபோது கோயில் தீட்சதர்கள் தடுப்பு வேலையில் இறங்கியுள்ள னர். ஆறுமுகசாமி வழக் கமாக உட்கார்ந்து தேவா ரம், திருவாசகம் பாடும் இடத்தில் எண்ணெயை ஊற்றி அவரை அமர விடாமல் தடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஆறுமுக சாமி காவல்துறையில் புகார் செய்துள்ளார். சிதம்பரம் கோயில், தீட்சதர் கையிலி ருந்து இந்து அறநிலையத் துறைக்குச் சென்ற நிலை யில், கோயிலுக்குள் உண்டி யல் வைக்கப்பட்டு இருந் தது. அப்பொழுது இந்தத் தீட்சதப் பார்ப்பனர்கள் என்ன செய்தார்கள் தெரி யுமா? உண்டியலுக்குள் நெய்யை ஊற்றினார்கள்.

ஏன் தெரியுமா? ரூபாய் நோட்டுகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு நாசமாகப் போய் விட வேண்டும் என்ற பரந்த மனப்பான்மைதான்; தனக் குப் பயன்படாத ஒன்று நாச மாகப் போய்விட வேண் டும் என்பதுதானே பார்ப் பனப் புத்தி!

Read more: http://viduthalai.in/e-paper/74963.html#ixzz2srquW5hk

தமிழ் ஓவியா said...


பிஸ்கெட் சாப்பிடுவது உடல் நலத்துக்கு கேடு


சென்னை, பிப். 9-குழந் தைகள் சாப்பிடும் முக்கிய உணவு வகைகளில் பாலுக்கு அடுத்தபடியாக பிஸ்கெட் முக்கிய இடத்தை பிடிக் கிறது. மேலும் பெரியவர் களும் சாப்பாட்டுக்கு மாற்று உணவாக பிஸ்கெட்டுகளை அதிகம் விரும்பி சாப்பிடு கின்றனர். பிஸ்கெட் சாப் பிட்டால் உடல் நலத்துக்கு நல்லது. குழந்தைகள் உயர மாக வளருவார்கள் என விளம்பரப்படுத்தப்படுகிறது.

அது உண்மை இல்லை. பிஸ்கெட்டில் உடல் நலத் துக்கான கேடுகள் மறைந்து இருப்பதாக புதிய ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கான்சர்ட் என்ற நிறுவனம் சமீபத்தில் 34 பிரபல நிறு வனங்களின் பிஸ்கெட்டு கள் மற்றும் 25 நிறுவனங் கள் தயாரிக்கும் ஊறுகாய் போன்றவற்றை சேகரித்து ஆய்வு நடத்தியது. அவற் றில் உணவு பாதுகாப்பு மற் றும் தர நிர்ணய அமைப் பின் விதிகளின்படி பிஸ் கெட்டுகள் தயாரிக்கப்பட் டுள்ளதா? இந்திய தர நிர் ணய அமைப்பு தெரிவித் துள்ள கொழுப்பு, புரோட் டீன், சர்க்கரை மற்றும் அமில அளவு சரியான அளவில் உள்ளதா? என ஆய்வு நடத்தப்பட்டது.

தமிழ்நாடு, ஆந்திரபிர தேசம், கேரளா, கருநாடகம் மற்றும் புதுச்சேரி மாநிலங் களில் கடந்த ஏழு மாதங் களாக பிஸ்கெட்டுகள் பரி சோதனை செய்யப்பட்டன.

இந்த ஆய்வு குறித்து கான்சர்ட் நிறுவனத்தின் இயக்குநர் சந்தனராஜன் கூறியதாவது:

ரசாயன கலவைகள்

கிழங்குமாவு, கிரீம், உப்பு, பால் மற்றும் பேக் கரியில் இருந்து தயாரிக்கப் படும் பிஸ்கெட்டுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இவற்றில் பெரும்பாலான அளவு சர்க்கரை உள்ளது. மேலும் அவை பல மாதங் கள் கெட்டுப் போகாமல் இருக்க உடலுக்கு தீமை விளைவிக்கும் ரசாயன கலவைகள் அதிகம் சேர்க் கப்பட்டுள்ளன.
ஆனால் பேக்கரிகளில் தயாரிக்கப்படும் பிஸ்கெட் டுகளில் ரசாயனக் கலவை குறைவாக உள்ளது. எனவே, பிஸ்கெட்டுகள் சாப்பிடுவ தன் மூலம் உடலில் சக்தி, தெம்பு ஏற்படலாம்.

கவர்ச்சியான விளம்பரங்கள்

மாறாக உடலில் சத்து கள் உருவாகாது. பெரும்பா லான பிஸ்கெட்டுகளில் நார்ச்சத்து, தேன், கால்சியம் போன்றவை இல்லை. ஆனால், பிஸ்கெட் உண வுக்கு மாற்றானது. சுறுசுறுப்பு கொடுக்க கூடியது. பால், தேன் கலந்துள்ளது. சர்க் கரை நோயாளிகள் சாப்பிட லாம் என நிறுவனங்கள் கவர்ச்சிகரமான விளம் பரங்களைச் செய்கின்றன.

இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுகின்றனர். புகை யிலைப் பொருட்களை பயன் படுத்துவதால் மட்டும் புற்று நோய் வராது. நாம் சாப்பிடும் உணவு பொருட் களாலும் 30 விழுக்காடு புற்று நோய் வர வாய்ப் புள்ளது என்றார். எலுமிச்சை, மாங்காய், காய்கறி கலவை மற்றும் மீன் ஊறுகாய் வகைகள் பரிசோதனை செய்யப்பட்டன. பெரும் பாலான ஊறுகாய்களில் சோடியம் அதிக அளவில் உள்ளது. பென்ஷோயிக் அமிலமும் அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளது.

நீரிழிவு, ரத்த அழுத்தம்

இனிப்பு வகை ஊறு காய்களில் அதிக அளவில் சர்க்கரை உள்ளது. இது நுகர்வோருக்கு இருதய நோய்களையும், நீரிழிவை யும் ஏற்படுத்தும். அதிக உப்பு சத்து சேர்ப்பதால் ரத்த அழுத்தம் அதிகரிக் கும். இந்தத் தகவலை இந் திய நுகர்வோர் சங்க தலை வர் ராஜன் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-5/74949.html#ixzz2srslzQSz

தமிழ் ஓவியா said...


சிதம்பரம் நடராஜர் கோவிலில் பால்ய விவாகம் - சூதாட்டம்!


தமிழ்நாடு அரசு விழிக்குமா? செயல்படுமா?
சிதம்பரம் நடராஜர் கோவிலில் பால்ய விவாகம் - சூதாட்டம்!
முன்னாள் எம்.பி. வி.வி.சுவாமிநாதன் கேள்வி

சிதம்பரம், பிப்.9- சிதம் பரம் நடராஜர் கோவிலில் நடக்கும் சட்டமீறல்கள், ஒழுக்கக்கேடுகள்பற்றி முன்னாள் மாநில அமைச் சரும், நாடாளுமன்ற முன் னாள் உறுப்பினருமான வி.வி.சுவாமிநாதன் முதல மைச்சருக்குத் தகவல் அனுப்பினார்.
6.1.2014 அன்று உச்சநீதி மன்றம் எந்தவித நிபந் தனையுமின்றி, தமிழ்நாடு அரசு அறநிலையத் துறை மதச்சார்பற்ற நிர்வாகத் தின்கீழ் 2.2.2009-லிருந்து இருந்து வந்ததை, தில்லை தீட்சதர்களிடம் ஒப்படைத் ததின் விளைவு, தீட்சதர்கள் சட்டத்தையும், அவர்கள் கடைப்பிடித்த பழைய மரபு களையும் மீறி பக்தர்களை, வழிபடுவோர்களை ஆத் திரம் மூட்டும்படி நடப்ப தாகும்.

எடுத்துக்காட்டாக இந் தியக் குடியரசுத் தலைவர், பிரதமர், மாநில முதல்வர் கார்கள்கூட நுழைய அனு மதிக்காத நடராசர் கோவி லுக்குள், கொலைக்குற்றம், பாலியல் வன்முறைக் குற் றங்கள் சாட்டப்பட்டு, விடு தலையான காஞ்சி சங்கராச் சாரியாரின் காரை கோவிலுக் குள் அனுமதித்ததைக் கண் டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப் பட்டிருந்தன. அதுமாத்திர மல்ல,
குழந்தைத் திருமணம் இந்தியா முழுவதும் தடை செய்யப்பட்டது தெரிந் தும், நிர்வாகம் தங்கள் கையில் இருக்கிறது; கோவி லின் நான்கு கோபுர வாசல் கதவுகளின் பூட்டு சாவிகள் தங்கள் கைகளில் இருப்ப தால், 18 இளம் ஆணுக்கும், பெண்ணுக்கும், பூட்டப் பட்ட கோவிலுக்குள் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் 10.2.2014 அன்று அதிகாலை 4 மணிமுதல் 5 மணிக்குள் திருமணங்கள் நடத்த ஏற் பாடாகி இருக்கிறது.

எனக்கு நம்பகமான தகவல் கிடைத்தவுடன், 3.2.2014 அன்று மதியமே தமிழ்நாடு முதலமைச்சருக் கும், அன்றே விழுப்புரம் டி.அய்.ஜி.க்கும் தந்தி மூல மும், கடிதம்மூலமும் தக வல் கொடுத்திருக்கிறேன்.

7.2.2014 உள்ளூர் சிதம் பரம் துணை ஆட்சியரிட மும் 18 குழந்தைத் திரு மணங்களைத் தடுப்பது டன், நடத்துபவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கடிதம் எழுதியிருக் கிறேன். கோவிலுக்குள் வரு கிற பக்தர்களுக்குப் பாது காக்கப்பட்ட குடிநீர் வழங் கப்படவில்லை; வழிபட வருகிறவர்களுக்கு அவசரத் திற்கு சிறுநீர் கழிக்கக்கூட கழிப்பறை இல்லை.

பழையபடி கோவிலுக் குள் இரவில் சீட்டாட்ட மும், மது அருந்துதலும் தொடர்வதாகத் தகவல்.

நடராசர் கோவில் பொதுக் கோவில் என்பதால், அதற் குள் குழந்தைத் திருமணம் போன்ற குற்றங்கள் நடப்ப தைத் தடுக்க அரசு நட வடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிடவேண் டும். மனித உரிமை ஆர்வ லர்கள் குழந்தைத் திரு மணங்களைத் தடுக்க முயன் றால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.

தமிழக அரசு குழந்தைத் திருமணங்களைத் தடுக்க, திருமண ஏற்பாடுகளை செய்தவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்குமா? என்று முன்னாள் மாநில அமைச்சரும், நாடாளு மன்ற உறுப்பினருமான வி.வி.சுவாமிநாதன், தமிழ் நாடு அரசுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளார்.


முதலமைச்சருக்கு அனுப்பப்பட்ட தந்தி (3.2.2014)

Hon., J.Jayalalitha Amma
Chief Minister
Government of Tamil Nadu
Secretariat, Chennai-9
Request to prevent 28 Children both bride and bridegroom Marriages between 4 am to 5 am on 10.2.2014 in Ayirankkal Mandapam by Thillai Deekshadars inside Lord Natarajar Koil in Chidambaram Town Cuddalore District Proposed to be conducted by Printed invitations.

- V.V.Swaminathan, Ex. M.P.,
Former HRCEA Minister, Chidambaram

Read more: http://viduthalai.in/page-8/74957.html#ixzz2srsx1KmT