Search This Blog

5.2.14

இந்து மதத்தில் சண்டை போடாத கடவுள்களையோ, கற்பழிக்காத கடவுளையோ மருந்துக்காகவாவது ஒன்றே ஒன்றைக் காட்ட முடியுமா?

தெய்வங்கள் விளையாடிய நாடாம்! 

தெய்வங்கள் விளையாடிய, நம் நாட்டில் உள்ள ஒற்றுமை உலகில் வேறு எங்கும் இல்லை என பொருளியல் அறிஞரும், பட்டயக் கணக்காளருமான குருமூர்த்தி பேசினார் என்ற ஒரு செய்தியை தினமலர் வெளியிட்டுள்ளது (2.2.2014 பக்கம் 3).

இதைப் படிக்கும்பொழுது - பார்ப்பனர்கள் எந்த எல்லைக்கும் சென்று எவ்வளவு விபரீதமான பொய் மூட்டைகளையும் அவிழ்த்து விடக் கூடியவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இவர்களின் தெய்வங்கள் எப்படியெல்லாம் விளையாடின என்பது எல்லோருக்கும் தந்தை பெரியார் அவர்களாலும், கருஞ்சட்டைத் தோழர்களாலும் விலா வாரியாக மக்கள் மத்தியில் விளக்கிக் கூறப்பட்டுள்ளனவே!

அயோத்தியில் 450 ஆண்டு கால வரலாறு படைத்த முசுலிம்களின் வழிபாட்டுத் தலத்தை உடைத்தவர்கள்தான் இப்படிப்பட்ட அபாண்டமான பொய்களை அவிழ்த்துக் கொட்டுகின்றனர்.

அப்படி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயிலைக் கட்டுவோம் என்று முண்டா தட்டுகின்றனர்.

அந்த ராமன் யார்? ஒரு காட்டிலே தவம் செய்து கொண்டிருந்த சம்பூகன் என்பவனை வாளால் வெட்டிக் கொன்றான்; ஏன் வெட்டினானாம்? வெட்டப்பட்டவன் சூத்திரனாம். சூத்திரன் நேராகக் கடவுளைக் காண முயலக் கூடாதாம். கேட்டால் ஹிந்து மதத்தின் வருணாசிரமம் அப்படி கூறியுள்ளது என்று கூறுகிறார்கள்.

ஹிந்து மதம் கூறினாலும் சரி, அவர்களின் சாஸ்திரங்களில் எழுதி வைக்கப்பட்டு இருந்தாலும்  சரி அவைகளினால் ஏற்பட்ட விளைவு என்பது ஒற்றுமைக் குலைவுதானே?

இதில் இன்னொரு சுட்டிக் காட்டத் தகுந்த கொடுமை என்ன தெரியுமா? அந்தச் சூத்திர சம்பூகன் தவமிருந்ததாலே பார்ப்பான் வீட்டுப் பிள்ளை ஒன்று செத்துப் போய் விட்டதாம். அதாவது வருணாசிரம தர்மத்துக்கு விரோதமாக சூத்திரன் தவம் செய்து விட்டானாம். அதனாலே பார்ப்பான் வீட்டுப் பிள்ளை செத்துப் போய் விட்டதாம். அப்படி வருண தருமத்துக்கு விரோதமாக தவம் செய்த சம்பூகன் என்ற சூத்திரனை ராமன்வெட்டிக் கொன்று வருணாசிரமத் தர்மத்தைக் காப்பாற்றியதால் செத்துப் போன பார்ப்பான் வீட்டுப் பிள்ளை உயிர் பிழைத்துக் கொண்டதாம்.

இந்த யோக்கியதையில் எவ்வளவுப் பெரிய பொய்யர்களாக இருந்தால் தெய்வங்கள் விளையாடிய நம் நாட்டில் உள்ள ஒற்றுமை உலகில் வேறு எங்கும் இல்லை என்று கதைக்கிறார்கள்.

இந்து மதத்தில் சண்டை போடாத கடவுள்களையோ, கற்பழிக்காத கடவுளையோ மருந்துக்காகவாவது ஒன்றே ஒன்றைக் காட்ட முடியுமா?

கொல்லுவது உயர்ந்த தர்மம் என்று சொல்லுவதற்கே ஒரு நூலை வைத்திருக்கிறார்களே இந்து மதத்தில் - அதுதானே கீதை! கொன்றாலும் உடல்தான் அழியும் ஆத்மா அழியாது என்று சொல்லிக் கொடுப்பதற்காக ஒரு கடவுள், ஒரு தெய்வ நூல் என்றால் நாட்டின் நிலை என்ன?

கொலை செய்தவன் எல்லாம் நீதிமன்றத்தில் நான் கொன்றது உடலைத் தான் - ஆத்மாவையல்ல - அதனால் நான் கொலைகாரன் அல்ல என்று சொல்ல  ஆரம்பித்தால் நாடு என்னாவது? அரசு ஏன் - சட்டம் ஏன்? நீதிமன்றங்கள் ஏன்?
இன்றைக்கு ஏதோ நாட்டில் ஒற்றுமை நிலவுகிறதாமே! ஆர்.எஸ்.எஸின் ஆலோசகர் குருமூர்த்தி சொல்லுகிறார் - அதனை மக்கள் நம்பித் தொலைக்க வேண்டும்; ஏன் என்றால் இவாள் எல்லாம் பிர்மாவின் நெற்றியில் பிறந்த கூட்டமாயிற்றே! (அய்யய்ய.. பிர்மாவின் முகம் இவ்வளவு ஆபாசமா!) ஆர்.எஸ்.எஸ். விசுவஹிந்து பரிஷத் கும்பல் திரிசூலத்தைத் தூக்கிக் கொண்டு கிளம்புகிறதே - அது  என்ன ஒற்றுமையை உருவாக்கவா? பார்ப்பான் படித்தவனாக இருந்தாலும் அவர்கள் புத்தி குரூரமானது என்பதற்கும் இந்தக் குருமூர்த்திகளும், அத்தகையவர் களுக்கு அடைமொழி சேர்த்து எழுதும் தினமலர்களும் போதுமான சாட்சியங்களே!

                  --------------------------------”விடுதலை” தலையங்கம் 4-2-2014

19 comments:

தமிழ் ஓவியா said...


புறப்படுகிறார்கள் கோயபெல்சுகள் உஷார்!

இணைய தளத்தில் நரேந்திர மோடியின் செல்வாக்கை அதி கரிக்கச் செய்ய புதிய திட்டங்களை வகுத்துக் கொண்டு செயல்பட விருக்கின்றனர். இதற் கான ஆலோசனைக் கூட்டம் ஒன்று சென் னையில் நடத்தப்பட் டுள்ளது. தொழில் நுட்பப் பொறியாளர் கள் 350 பேர் கூட்டப் பட்டுள்ளார்கள். பி.ஜே. பி.யின் சென்னைத் தலைமை அலுவலகத் தில் இதற்காகத் தனி அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது என்ற தகவல்கள் வெளி வந்துள்ளன.

சுருக்கமாகச் சொல் லப்போனால், புளுகு களைக் கட்டவிழ்த்து விட கோயபல்சுகள் திட்டம் தீட்டிவிட்ட னர் என்றே கருதவேண் டும்.

இதற்கு முன்பேகூட இணைய தளத்தில் மோடியுடன் தொடர்பில் உள்ளவர்கள் 19 லட்சம் என்று ஒரு கதையைக் கட்டிவிட்டனர்.

இந்தியாவின் முன் னணி செய்தித் தொலைக் காட்சி நிறுவனமான ஹெட் லைன்ஸ் டுடே - மோடியின் டுவிட்டர் சமூக வலை தளக் கணக் கில் இணைந்துள்ளவர் களில் 70 சதவிகிதப் பெயர்கள் போலியானவை என்று அம்பலப்படுத்தி விட்டதே!

2013 ஜூன் மாதத்தில் உத்தரகாண்ட் வெள்ள அபாயத்தில் சிக்கிய 15,000 குஜராத்திகளை வெள்ளத் திலிருந்து நரேந்திர மோடி காப்பாற்றிவிட் டார் என்று கிளப்பி விடவில்லையா?

இராணுவத்தினரே மீட்புப் பணியில் பெரும் இடர்ப்பாடுகளைச் சந் தித்த நிலையில், 80 இன்னோவா கார்களைப் பயன்படுத்தி 15 ஆயிரம் பேர்களை மோடி காப் பாற்றினாராம், நம்புங்கள், கேழ்வரகில் நெய் வடி கிறது!

அதிகபட்சமாகப் போனால், ஓர் இன் னோவா காரில் 7 பேர் களை ஏற்றலாம்; வேண்டு மானால், இரண்டு பேர் களை அதிகமாக ஏற்றிச் செல்லலாம். 80 கார்கள் டேராடூனிலிருந்து ஒரு தடவைக்கு 720 பேர் களைத்தான் கொண்டு செல்ல முடியும். 15 ஆயி ரம் பேர்களை மலைப் பகுதியிலிருந்து கீழே கொண்டு போகவும், வரவும் 21 தடவைகள் பயணிக்கவேண்டும்.

கேதார்நாத்திலிருந்து டேராடூன் 221 கிலோ மீட்டர் தூரமாகும். 21 முறை என்று கணக்கிடும் பொழுது ஒவ்வொரு காரும் சுமார் 9300 கிலோ மீட்டர் பயணிக்கவேண் டும், அதுவும் மலைப் பகுதிகளில்.

சராசரியாக மணிக்கு 40 கிலோ மீட்டர் என்று வைத்துக்கொண்டாலும் கூட 233 மணிநேரம் பயணம் செய்யவேண்டும்.

இந்தச் சூழ்நிலையில் ஆயிரக்கணக்கான அள வில் அல்லாடிக் கொண் டிருக்கும் மக்களில் குஜ ராத் மக்களை அடை யாளம் கண்டு, தேடிக் கண்டுபிடித்துப் பத்திர மாகக் கொண்டு வந்து சேர்த்தாராம், மற்ற மாநில மக்களைப் பார்த்து எப் படியோ தொலைந்து போங்கள் என்று சொல்லி அவர்களை விட்டுவிட்டு வந்துவிட்டாரா மோடி என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (23.6.2013) அம்பலப்படுத்தியதை நினைத்துப் பாருங்கள். ஒரே நாளில் 15,000 பேர் களை மீட்டதாகக் கூறு வது அண்டப் புளுகு ஆகாயப் புளுகுதானே!

இப்பொழுது இளைஞர்களை மயக்க, ஈர்க்க இணையதளத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்; அதற்காகக் கைதேர்ந்தவர்களை வலை போட்டுத் தேடிப் பிடிக்கிறார்கள்.

சீனாவில், குவாங்ஜோ என்னும் நகரில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தை குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் உள்ள தாக இணைய தளத்தில் வெளியிட்ட கோயபல்சு கள் வரிந்து கட்டிக் கொண்டு புறப்பட்டுவிட் டனர்!

உஷார்!! உஷார்!!

- கருஞ்சட்டை

Read more: http://viduthalai.in/e-paper/74713.html#ixzz2sUm2V3Ab

தமிழ் ஓவியா said...


ஆட்சியின் சீர்திருத்தம்



ஆட்சியின் சமுதாய சீர்திருத்தப் பணியென்பது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் தகுதியின்மை என்று சொல்லும்படியான எந்தத் தன்மையையும் ஒழித்து உச்சத் தகுதிக்கு அருகர்களாக ஆக்குவதையே முதல் பணியாகக் கொள்வதுதான்.

- (விடுதலை, 24.1.1969)

Read more: http://viduthalai.in/page-2/74716.html#ixzz2sUmZSjoT

தமிழ் ஓவியா said...


செய்தியாளர்களிடம் கலைஞர் திருப்பிக் கேட்ட கேள்வி



சென்னை, பிப்.5 தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களை செய்தி யாளர்கள் நேற்று சந்தித்து கேள்வி கேட்ட போது, அவர்களிடம் கலைஞர் திருப்பிக் கேட்ட கேள்வி. சுவையானது. பேட்டி இதோ: கலைஞர் :- உங்களுக்கு என்ன வேண்டும்?
செய்தியாளர் :- இன்று ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பிரசாந்த் பூஷன் அவர்கள் அளித்த பேட்டி யில், காவல் துறை அதிகாரி ஜாபர் சேட் பேசிய டேப்பை வெளியிட்டிருக் கிறார். கலைஞர் தொலைக் காட்சியின் எம்.டி. சரத்கு மார் ரெட்டி, ஆவணங் களையெல்லாம் திருத்தி யிருக்கிறார் என் றெல்லாம் சொல்லியிருக்கிறாரே?

கலைஞர் :- எல்லாம் பொய்! நீங்களும் செய்தி யாளர்கள் தானே?

செய்தியாளர் :- உங்கள் மீது குற்றச்சாட்டு சொல்லி யிருக் கிறாரே?

கலைஞர் :- நீங்கள் எல்லாம் செய்தியாளர்கள் தானே? சொத்துக் குவிப்பு வழக்கு ஒன்று நடைபெறு கிறதே! அதிலே சம்பந்தப் பட்டவர்களிடம் சென்று நீங்கள் இவ்வாறு கேள்வி கேட்க முடியுமா? முதல் அமைச்சரைச் சென்று இதைப் போல நீங்கள் காண முடியுமா? பவானி சிங் என்ற வழக் கறிஞரே தொடர வேண்டு மென்று கேட்பது முறையா என்று யாராவது கேட்டீர்களா? அவர் குற்றவாளிக்கு எதிராக வாதாட வேண்டி யவர், ஆதரவாகப் பேசிக் கொண்டிருக்கிறாரே, அதைப் பற்றியெல்லாம் யாராவது கேட்டீர்களா? ஜெயா தொலைக் காட்சி செய்தியாளர் :- உங்கள் மீது ஒரு குற்றச் சாட்டு கூறும்போது, மற்ற வர்கள் மீது குற்றஞ் சாட்டுவது சரியா?

கலைஞர் :- தமிழ் நாட்டில் ஒரு சில செய்தி யாளர்கள் இப்படி நடந்து கொள்கின்ற காரணத் தினால் - அவர்களின் கலாச் சாரம் இந்த அளவிற்கு ஆகி விட்டதால் நான் இதைக் கேட்க நேர்ந்தது.

ஜெயா தொலைக் காட்சி செய்தியாளர் :- நீங்களும் ஒரு நிருபராக இருந்தவர் ஆயிற்றே, இப்படி சொல்லலாமா?

கலைஞர் :- அதனால் தான் இதுவரை உங்களை மதித்து நடந்து கொண்டு வருகிறேன். இப்போதும் மதிக்கிறேன். அதனால் தான் அங்கே நின்று கொண்டிருந்த உங்களை யெல்லாம் அருகே அழைத்துப் பேசுகிறேன்.

செய்தியாளர் :- தமிழக டி.ஜி.பி. ராமானுஜம் அவர் களின் பதவிக்காலத்தை நீட்டித்திருக்கிறார்களே, என்ன காரணம்?

கலைஞர் :- அது பற்றி எனக்குத் தெரியாது.

செய்தியாளர் :- மூன் றாவது அணியின் சார்பில் ஜெயலலிதா இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், அவர் வெற்றி பெற்றால் பிரதமர் ஆவார் என்றும் சொல்லப் படுகிறதே?

கலைஞர் :- ஆனால் சந்தோஷம்!

Read more: http://viduthalai.in/page-3/74750.html#ixzz2sUn8lZvQ

தமிழ் ஓவியா said...


தினமலருக்குப் பதிலடி

சக மனிதனை தொட்டால் தீட்டு என, சொன்னவர்களும்; செருப்புப் போட்டு கீழ் ஜாதிக்காரன் நடக்கக் கூடாது என, சொன்னவர்களும்; ஆத்திகரா, நாத்திகரா? அனைவருக்கும் பொதுவானவர் கடவுள்' எனக் கூறிக் கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்களை, கோவிலுக்குள் விடாமல் தடுத்தவர்கள், ஆத்திகரா, நாத்திகரா? கோவிலுக்குள், தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையப் போராட்டம் நடத்தியவர்கள் ஆத்திகரா, நாத்திகரா? இதிகாசம், புராணங்களை மட்டும் வைத்துக் கொண்டுள்ள தமிழை, காட்டுமிராண்டி மொழி என்றார் ஈ.வெ.ரா. பெரியார் அவர்தான் கணினியில் தமிழைப் பயன்படுத்தும் அளவுக்கு எழுத்து சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தவர்.

வைக்கம் போராட்டத்தை நிறுத்தி விடுங்கள் என, ஈ.வெ.ரா., பெரியாருக்கு கடிதம் எழுதியவர் காந்தியடிகள். ஆனால், அதை ஏற்காமல் போராட்டத்தைத் தொடர்ந்து, வெற்றி கண்டார் ஈ.வெ.ரா. பெரியார், 'வைக்கம்' போராட்ட வரலாறு அறிந்தவர்களுக்கு தான், இது தெரியும். நாட்டில் உள்ள அனைத்து ஜாதிகளுக்கும் இடஒதுக்கீடு இருந்தது. ஆனால், சண்பகம் துரைசாமி என்ற பார்ப்பான், தன் மகளுக்கு அனைத்து தகுதியும் இருந்தும், மருத்துவக் கல்வி சேர்க்கை கிடைக்கவில்லை என, பொய்யான வழக்கை, தொடர்ந்தார்.

இந்த வழக்கின் மூலம் தான் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நீக்கப்பட்டது. இதன்பின், ஈ.வெ.ரா., நடத்திய போராட்டத்தின் விளைவாகத்தான், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வரப்பட்டு, இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இடஒதுக்கீடு என்பது, செயினை பறித்துச் செல்லும், திருடனிடம் அதை மீட்பது போன்றது.

குறிப்பிட்ட சமூகங்களுக்குக் கல்வியும், வேலைவாய்ப்பும் பல ஆண்டுகாலம் மறுக்கப்பட்டதால், அவர்களையும், பிற சமூகத்தினரைப் போல, சமத்துவப்படுத்த இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இதன்மூலம், சமூகநீதியை நிலைநாட்டி, சமூகங்களுக்கு இடையே உள்ள இழிவைப் போக்குவதே நோக்கம். இதைத் தான் ஈ.வெ.ரா. பெரியார் செய்தார்.

பாமரன், எழுத்தாளர்
(தினமலர், 5.2.2014, பக். 4)

Read more: http://viduthalai.in/page-4/74732.html#ixzz2sUoAf6sO

தமிழ் ஓவியா said...


வீரமா முனிவர் (1680-1747)


இத்தாலி நாட்டுக்கா ரர்- இயற்பெயர் கொன்ஸ் டான் டைன்; ஜோசப் பெஸ்கி பாதிரியார் என் றும் அழைக்கப்படுவார். கொன்ஸ்டான்ஸ் என் றால் தைரியசாலி என்று பொருள் - பின்னர் வீரமா முனிவர் என்று தனித் தமிழ் ஆயிற்று.

1710இல் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தார். தமிழ் மொழி பயின்றார் - இலக்கிய இலக்கண நூல் களைப் பழுதறப் பயின் றார். இவர் படைப்புகளுள் இறவாப் புகழப் பெற்றது சதுர் அகராதியாகும். நான்கு வகைப்பட்ட அக ராதி என்று இதற்குப் பொருள்.

1) பெயர் அகராதி 2) பொருள் அகராதி 3) தொகை அகராதி 4) தொடை அகராதி ஆகும்.

தமிழில் தோன்றிய முதல் அகர முதலி இதுவே யாகும். அவரின் பரமார்த்த குருவின் கதைகள் - தமிழுலகிற்குக் கிடைத்த நகைச்சுவை மணம் வீசும் இலக்கியக் கருவூலமா கும். மதத்தைப் பரப்ப வந்தவர் தமிழ்க் கடலில் மூழ்கி முத்தெடுத்தார். தனது மேலை நாட்டுத் தோற்றத்தைக் தூக்கி எறிந்து தமிழ்ப் பண்பாட் டுக்கு ஏற்ப நடை, உடை பாவனைகளை மாற்றிக் கொண்டார்.

இவரது வாழ்க்கை வரலாற்றினை எழுதிய முத்துசாமிப் பிள்ளை பின்வருமாறு கூறுகிறார் (1822). நெற்றியில் சந் தனம், தலையில் பட்டுக் குல்லா, இடுப்பில் காவி திருநெல்வேலி கம்பிச் சேர்மன் போர்வையைத் தலையிலிருந்து தோள் வழியாக உடலை மூடிய படி பாதக்குறடு அணிந்து நடமாடுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திருக்குறளின் சிறப்பை உணர்ந்து அறத் துப்பாலையும், பொருட் பாலையும் இலத்தின் மொழிக்குக் கொண்டு சென்றார்.

திராவிட மொழியியல், அறிஞர்களுள் முதன்மை யானவர் வீரமா முனி வரே என்று ஆய்வாளர் கமில் சுவலபில் கணித்துக் கூறுகிறார்.

கிறித்தவர்கள் வெளி நாடுகளில் இருந்து மதம் பரப்ப இந்தியாவுக்கு வந்ததுண்டு. அத்தோடு கல்வி, மருத்துவம் இவை இந்தி யாவுக்குக் கிடைப் பதில் அவர்களின் பங்க ளிப்பை உதறித் தள்ளி விட முடியாது.

அதிலும் சிறப்பாக தமிழுக்குத் தொண்டு செய்ததில் வீரமா முனிவர், கால்டுவெல் போன்றவர் களின் அருந்தொண்டுகள் அருந்தமிழ் வாழு மட்டும் வாழ்த்திக் கொண்டே இருக்கும்.

வாழ்க வீரமா முனிவர்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/74651.html#ixzz2sUoVZbOf

தமிழ் ஓவியா said...


கல்கிகளின் கரிசனங்கள்

கேள்வி: குஜராத் கல வரத்தில் மோடிக்குத் தொடர் பில்லை என்று சொல்லி விட்டதே அகமதாபாத் கோர்ட்?

பதில்: ஜாகியா ஜாஃப்ரி மேல்முறையீடு செய்ய எல்லா வாய்ப்பு களும் உண்டு. குஜராத் கலவரத்தின்போது மோடி அலட்சியமாகவோ அல் லது தூண்டி விடும் விதத் திலோ நடந்து கொண்டதற் கான ஆதாரம் ஏதும் இல்லை என்பதை இத்தீர்ப்பு உறு திப்படுத்தி இருப்பது உண்மை. ஆனால், பெரும் பாலான இஸ்லாமியர் மனதில் இன்னமும் மோடி குறித்த அச்சம் தொடர்வது நல்லதல்ல. அவர் இஸ்லா மியர்களுக்கு நம்பிக்கை யூட்டும் விதமாகப் பேசுவ தும் நடந்து கொள்வதும் நல்லது. போதாக்குறைக்கு இளம்பெண்ணை வேவு பார்த்த விஷயத்தை மத்திய அரசு கிளறி, மோடி மீது விசாரணைக் கமிஷன் போட்டு அவநம்பிக்கையை வளர்க் கிறது. (கல்கி 12.1.2014)

நீதிமன்றம் தீர்ப்புக் கூறி விட்டது என்ற திரைமறை வில் கல்கிகள் ராமனைப் போல மரத்தின் பின் ஒளிந்து கொண்டு மோடியைக் காப் பாற்ற முயற்சிக்கின்றன.

கல்கிகளுக்கு மிகவும் நெருக்கமான திருவாளர் சோ ராமசாமி இது போன்ற தீர்ப்புகள் பற்றிக் கூறியதை எடுத்துக் கூறி னால் கல்கி கனபாடிகளின் குளிருக்குக் கொஞ்சம் கணப் புச் சட்டியாக இருக்கும்!

இப்போது டான்சி உட்பட அய்ந்து வழக்கு களில் ஜெயலலிதா விடு தலை செய்யப்பட்டிருக் கிறார். விடுதலை என்று தீர்ப்பு வந்து விட்டதாலேயே ஜெயலலிதா நிரபராதி என்று சொல்ல மாட்டேன். - 1991 - 1996 ஆண்டுகளில் பதவி வகித்த அ.தி.மு.க. ஆட்சியின் போது ஊழல் நடந்தது உண்மையே! திமுக ஆட்சிக்கு வந்ததும் தொடர்ந்த வழக்குகளை பொய் வழக்கு என்று கூற மாட்டேன். அ.தி.மு.க. ஆட்சியில் அதிக அளவுக்கு ஊழல் நடந்தது என்பது மறுக்க முடியாது. அப்படி நான் குற்றஞ்சாட்டியதில் எந்தத் தவறும் இல்லை; குற்றச்சாட்டு நிரூபிக்கப் படாததால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார் அவ்வளவுதான்! (துக்ளக் 14.1.2002) என்று திருவாளர் சோ சொன்னதுதான் கல் கிக்கும் பதில்.

பாபர் மசூதி பிரச்சினை யில் நீதிமன்றம் சொன் னாலும் ஏற்க மாட்டோம். காரணம் இது எங்களின் நம்பிக்கைப் பிரச்சினை என்று அரட்டை அடிப்ப வர்கள், மோடி விடயத்தில் நீதிமன்றத்தைப் பிடித்துக் கொண்டு தொங்குவதை ஒப்பிட்டுப் பார்க்க வேண் டும்.

இதே மோடியை உச்ச நீதிமன்றம் நீரோ மன்ன னுக்கு ஒப்பிட்டுச் சொன் னதை மிக வசதியாக மறந்து விடுவார்கள் - ஏன் மறைக் கவும் முயலுவார்கள். குஜ ராத்தில் இரண்டாயிரத்துக் கும் மேற்பட்ட முசுலிம் கள் கொல்லப்பட்டபோது ஆட்சியில் முதல் அமைச்ச ராக இருந்தவர் நரேந்திர மோடி இல்லை என்று கூடச் சொன்னாலும் சொல் வார்கள் - யார் கண்டது?

பிஜேபி சட்டமன்ற உறுப்பினர்களே, குஜராத் கலவரத்தின்போது முதல்வர் மோடி எப்படி எல்லாம் எங்களுக்குக் கட்டளையிட்டார் என்று தெகல்காவிடம் கூறியது வீடியோ காட்சிகளாக வெளி வந்ததே - மறுக்க முடியுமா?

மோடி ஆட்சியில் மிக உயர்ந்த பதவிகளில் இருந்த காவல்துறை அதிகாரிகளே குஜராத் கலவரத்தில் மோடி யின் பங்கை விலாவாரி யாகக் கூறி இருக்கிறார்களே - அப்படி உண்மையைச் சொன்ன அதிகாரிகளைக் கூட பொய் வழக்கில் சிக்க வைத்து சிறையில் தள்ளிய புண்ணியவான் ஆயிற்றே மோடி.

அரியலூரில் ரயில் கவிழ்ந் ததால் ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரியும், இணை அமைச்சர் ஓ.வி. அழகேசனும் பதவிகளை ராஜினாமா செய்தார்களே! காரணம் என்ன? இந்த இரண்டு பேர்களுமா அந்த ரயிலை ஓட்டினார்கள்?

குஜராத் மாநிலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்ட போது ஆட்சியில் முதல மைச்சராகவிருந்த மோடி பொறுப்பு ஏற்க வேண் டாமா? ராஜினாமா செய்ய வேண்டும் முதல் அமைச் சர் மோடி என்று பிரதம ராக இருந்த வாஜ்பேயி சொன்னதாக அத்வானி கூறியது ஏன்?)

நாணயமான - நேர்மை யான மனிதராக மோடி இருந்தால் குஜராத் கலவ ரத்திற்கான பொறுப்பை ஏற்று அன்று ராஜினாமா செய்திருக்க வேண்டும் அல்லது இப்பொழுதா வது அதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

குஜராத்தில் முசுலிம் கள் கொல்லப்பட்டதை யும் காரில் பயணம் செய் யும் பொழுது நாய்க் குட்டி அடிபடுவதையும் சமமாக ஒப்பிட்டு இப்பொழுது கூடச் சொல்லுகிறார்கள்! என்றால் - இத்தகையவர் களைக் காப்பாற்ற கல்கி கூட்டங்கள் கனைக்கின் றன என்றால் அவாளின் குரூரக் குணத்தையும், மத வெறியையும் கணக் கிட்டுக் கொள்ளலாமே!

- கருஞ்சட்டை

Read more: http://viduthalai.in/page1/74778.html#ixzz2sdPVPyhc

தமிழ் ஓவியா said...


இதோ இன்னொரு மோ(ச)டி!


ஒபாமா கூட மோடி பேச்சை கேட்கிறார்: ஃபேஸ்புக்கில் பரவும் போலி போட்டோ

அமெரிக்க அதிபர் ஒபாமா - இந்தியப் பிரத மருக்கான ஆர்.எஸ்.எஸின் சிபாரிசு தாரர் நரேந்திர மோடியின் மேடைப் பேச்சை தொலைக்காட்சி யில் கண்டு ரசிப்பது போன்று சித்தரிக்கப் பட்ட படம் வலைக்காட்சி யில் உலவ விடப்பட்டுள் ளது. (பேஸ் புக்) குஜராத் பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர் நவசாரி என்பவரின் பேஸ் புக்கில் இந்தப் பித்தலாட் டப் படம் பதிவு செய்யப் பட்டுள்ளது.

உண்மை என்ன தெரி யுமா? 2011இல் எகிப்து அதிபர் முபாரக்கின் உரையை டி.வி.யில் ஒபாமா பார்ப்பது போன்ற காட் சியை உல்டா பண்ணி இந்த மோசடியைச் செய் துள்ளனர்.

இதுகுறித்து நவசாரி எம்.பி.யிடம் கேட்டபோது இதற்கும் தனக்கும் சம்பந்த மில்லை என்று கழற்றிக் கொண்டார். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட நேரும் என்பது பழமொழி.

Read more: http://viduthalai.in/page1/74781.html#ixzz2sdPd3TaD

தமிழ் ஓவியா said...


வளர முடியும்


நமது நாட்டில் மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், பேதமும் உண்டாக்கவே கடவுள், மதம், ஜாதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை ஒழிந்த இடத்தில்தான் மனிதனுக்கு அன்பு வளர முடியும்.

- (விடுதலை, 20.9.1968)

தமிழ் ஓவியா said...


மோடியின் கொல்கத்தா பேச்சில், வங்காளிகளின் மூக்கைச் சொறிகிறாராம் மோடி?


மோடியின் கொல்கத்தா பேச்சில்,
வங்காளிகளின் மூக்கைச் சொறிகிறாராம் மோடி?

- ஊசி மிளகாய்

இவர் நிலை என்ன?

கொல்கத்தாவில், பேசிய நரேந்திரமோடி, பெரிய தேசீயவாதி என்றும், ஆர்.எஸ்.எஸ். குறுகிய ஜாதி, மாநில பிரிவுகள் எண்ணங்களிலிருந்து விடுபட்டு தேசீய பார்வை மக்களுக்கு அளிக்கவே அவதாரம் எடுத்ததாகச் சொல்லி பீற்றிக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்.ஆல் பி.ஜே.பி.யின்மீது திணிக்கப்பட்ட பிரதமர் வேட்பாளராக ஆங்காங்கே பெருங் கூட் டத்தை அழைத்து வந்து, மீடியாக்கள், பெரு முதலாளி கள் தயவுடன் விளம்பர வெளிச்சத்தில் உலா வருகிறாரே! குஜராத் மக்களிடத்தில் பேசும்போது சர்தார் வல்லபாய் பட்டேலுக்காக உருகுகிறார் வல்லபாய் பட்டேலுக்கு சிலை என்ற வித்தையில் இறங்கி அதனை அரசியல் யுத்தியாக்கி நேருவைத் தாக்கி, பட்டேலை உயர்த்துகிறார்!

மேற்கு வங்காளத்திற்குச் சென்றால், அங்கே பிரணாப் முகர்ஜியைத் தூக்கி அவரையல்லவா மன்மோகன்சிங்க்குப் பதில் பிரதமராக்கி இருக்க வேண்டும்? என்று வங்க வாக்கு வங்கியைக் குறி வைக்கிறார்! பிரணாப் முகர்ஜி போன்றவர்கள் இருக்க இவர் எப்படி பிரதமர் என்றார்! அது காங்கிரஸ் கட்சியும் தலைமையும் தீர்மானிக்க வேண்டிய உள் விஷயங்கள். அதே கேள்வியை மோடியைப் பார்த்து மற்றவர் களும் கேட்கலாமே!

மூத்த தலைவர் அத்வானி,
எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மாசுவராஜ்,
மூத்த மற்ற தலைவர் ஜஸ்வந்த் சிங்,
முரளி மனோகர் ஜோஷி இப்படிப் பலரைப் பின் தள்ளி மோடி எப்படி - ஆர்.எஸ்.எஸ். ஆணைப்படி இப்படி ஒரே அடியில் ஜாக்பாட் பெற்றார்?

அதற்குச் சில வாரங்களுக்குமுன் நான் குஜராத் முதல் அமைச்சராக மட்டுமே நீடிப்பேன் என்றாரே அது ஏன் காற்றில் பறந்தது?

Read more: http://viduthalai.in/e-paper/74820.html#ixzz2sgnr8ekz

தமிழ் ஓவியா said...


கிரீமிலேயரை நீக்குக! கலைஞர் கருத்து

கிரீமிலேயர் எனும் பாகுபாட்டை அகற்றிட மத்திய அரசு முன்வர வேண்டும் என்று கலைஞர் கோரியுள் ளார். இதுகுறித்து முரசொலியில் அது தெரி வித்திருப்பதாவது:
கேள்வி :- இடஒதுக் கீடு பற்றி திருமதி சோனியா காந்தி அம்மையார் கருத்துத் தெரிவித்திருக்கிறாரே?

கலைஞர் :- நேற்று மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் பொதுச் செய லாளர் ஜனார்த்தன் துவிவேதி, ஜாதி அடிப் படையிலான இடஒதுக்கீடு முடிவுக்கு வரவேண்டும். பொருளாதார ரீதியில் பின் தங்கிய அனைத்து சமூகத் தினருக்கும் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று பேசினார். அவரு டைய இந்தக் கருத்தை பல் வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் கடுமை யாக எதிர்த்திருக்கிறார்கள். இதனையடுத்து, மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சுக்லா விளக்கமளித் துப் பேசுகையில், பொரு ளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பதற் கான எந்த உத்தேசத் திட்டத் தையும் அரசு பரிசீலிக்க வில்லை. அரசியல் அமைப் புச் சட்டத்தின்படி இப் போதுள்ளது போலவே இட ஒதுக்கீடு தொடர்ந்து நீடிக்கும். துவிவேதி தெரிவித்தது அவரது தனிப்பட்டக் கருத்து தான் என்று அறிவித்திருக் கிறார். இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் திருமதி சோனியா காந்தி அம்மையார் வெளி யிட்டுள்ள அறிக்கையில், ஜாதி ரீதியிலான இடஒதுக் கீடு முறை நீடிக்கும் என்று தெரிவித்திருக்கிறார். திருமதி சோனியா காந்தி அம்மையார் இட ஒதுக்கீடு குறித்து செய் திருக்கும் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக் கதே. மத்தி யப் பணியாளர் தேர்வாணை யம் நடத்தும் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற தேர்வுகளில் வரு மான வரம்பை அடிப் படையாகக் கொண்ட கிரீமி லேயர் என்ற பாகுபாடு பின் பற்றப்பட்டு வருவதை திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. மத்திய அமைச் சர் ராஜீவ் சுக்லா அறிவித் துள்ள படி பொருளாதார அடிப்படையில் இடஒதுக் கீடு அளிப்பதற்கான எந்த உத்தேசத் திட்டத்தையும் அரசு பரிசீலிக்கவில்லை என்பது மத்திய அரசின் உறுதியான நிலைப்பாடு எனில், கிரீமி லேயர் எனும் பாகுபாட்டை அகற்றிட மத்திய அரசு முன்வர வேண் டும் என்ற நமது நீண்ட நாள் கோரிக் கையை இந்தத் தருணத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

Read more: http://viduthalai.in/e-paper/74821.html#ixzz2sgoAdjiO

தமிழ் ஓவியா said...

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பளிங்குகல்லிலான பிள்ளையார் சிலை

கரூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகம் முன்பு பளிங்குகல்லிலான விநாயகர் சிலை அரச மரம், வேப்ப மரம் ஒருங்கே அமைந்துள்ள இடத்தில் செங்கற்களை அடுக்கி அதன் மேல் விநாயகர் சிலையை வைத்தும், அரளி பூ மாலை போட்டும் விளக் கேற்றியும், பூலப்பூ மரத் தில் சூட்டியும், குங்குமம், மஞ்சள், சாம்பல் (திருநீறு) கொண்டும் தினமும் அங்கு பூசை செய்து வருவதாக அலுவலக ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

அரசு அலுவலக வளா கங்களில் மதவழிபாட்டுத் தலங்களை அமைக்கக் கூடாது என்னும் அரசா ணை படி எந்த அரசு அலுவலகங்களிலும், ஒரு குறிப்பிட்ட மத சம்பந்த மான கடவுள் சிலை வைத்து வழிப்படக் கூடாது என் றும் அரசாணையை மதிக் காமல் செயல்படும் நபர் கள்மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட ஆட்சித் தலைவர் ச. ஜெயந்தி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். உடனடியாக அந்த கோயில் சிலை பகு தியை அகற்ற உத்தரவிட வேண்டும்.

சமூக விரோ திகள்மீது தக்க தண்டனை வழங்க வேண்டும். இல்லை யேல் கரூர் மாவட்ட திராவி டர் கழக தோழர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களைத் திரட்டி பெரிய போராட் டம் நடைபெறு வதை தவிர்க்க வேண்டுகிறோம். தகவல்: தே. அலெக்சாண்டர், கரூர் மாவட்ட செய்தியாளர்

Read more: http://viduthalai.in/e-paper/74825.html#ixzz2sgoR5PLc

தமிழ் ஓவியா said...


அபவ்ருஷம்


வேதம் என்பது எப்போது, யாரால் சொல்லப்பட்டது என்பதை மறைப்பதற்கு ஆகவே அது அனாதி என்றும், மனிதனால் சொல்லப்படாத அபவ்ருஷம் என்றும் சொல்லப்படுகிறது.
(விடுதலை, 8.3.1953)

Read more: http://viduthalai.in/page-2/74826.html#ixzz2sgolPfCz

தமிழ் ஓவியா said...


உயர்நீதிமன்றத்திலும் வழக்காடு மொழியாக தமிழ்


திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் சென்னையில், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் மிக முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. (6.2.2014)

குறிப்பாக உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழியாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஙீக்ஷிமிமி ஆம் பகுதியில் 344 முதல் 351 வரையில் உள்ள பகுதிகள் மொழி பற்றியவையாகும். இதில் 343 மற்றும் 344 ஆகிய பிரிவுகள் இந்திய ஒன்றியத்தின் மொழி பற்றிய முதல் அத்தியாய மாக உள்ளது. 345 முதல் 347 வரையில் உள்ள பகுதிகள் இரண்டாவது அத்தியாயமாக உள்ளன. 348 மற்றும் 349 பிரிவுகள் நீதிமன்ற மொழிகள் பற்றிய மூன்றாவது அத்தியாயமாக உள்ளன.

இந்திய அரசமைப்புச் சட்டம் 348 (2) ஆவது பிரிவு மற்றும் 1963ஆம் ஆண்டு ஆட்சி மொழிச் சட்டத்தின் 7ஆவது பிரிவின்கீழ் இந்தியாவில் பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களில் உயர்நீதிமன்ற நடவடிக்கைகளில் இந்தி வழக்கு மொழியாகப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
2006ஆம் ஆண்டு டிசம்பரில் திமுக ஆட்சியில் தமிழ் மொழியை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்கிட சட்டப் பேரவையில் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கான அனுமதி ஆதாரப் பூர்வமாகக் கிட்டவில்லை.

சென்னை உயர்நீதிமன்றத்திலும், மதுரைக் கிளை உயர்நீதிமன்றத்திலும் நீதிபதிகளைப் பொறுத்து தமிழிலும் வாதாடலாம் என்கிற தர்மகர்த்தா முறையில் அனுமதி வழங்கப்படுகிறது. இதெல்லாம் நிரந்தரமான தீர்வாக இருக்கவே முடியாது.

இந்தி பேசும் மாநில,ங்களில் உள்ள நீதிமன்றங்களில் இந்திக்கு அனுமதி இருக்கும்போது, இந்தி பேசாத மாநிலங்களில் அவரவர்களின் தாய்மொழியில் உயர்நீதி மன்றங்களில் வழக்காடுவதுதானே சரியானதாகவும் நியாயமானதாகவும் இருக்க முடியும்.

இந்தியா பல மொழிகள், பல இனங்கள், பல பண்பாடு கள் நிறைந்த துணைக்கண்டம் அல்லவா? அப்படி இருக் கும்போது அந்தந்த மாநிலங்களில் அவரவர்களின் தாய்மொழியில் நீதிமன்றம் நடைபெறுவதுதானே சரியானது. இந்தியா என்றாலே இந்திக்குத்தான் முதல் உரிமையா என்ற கேள்வி எழும்படி இந்திய அரசு நடந்து கொண்டால் அதன் விளைவு - இந்தியத் தேசியத்தையே கேள்விக் குறி ஆக்கி விடாதா?

தாய்மொழியிலேயே கல்வி பயிலலாம் என்று சட்டம் இருக்கும்போது, தாய்மொழியில் படித்தவர்கள் நீதிமன்றங் களில் தாய்மொழியில் விவாதம் நடத்த அனுமதிப்பது தானே முறையானது.

தமிழுக்குச் செம்மொழித் தகுதி கிடைத்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் செம்மொழி தமிழில் வழக்காடக் கூடாது என்பது - செம்மொழி என்பதற்கு என்னதான் அடையாளம்? என்னதான் மரியாதை?

திராவிடர் கழகச் செயற்குழுவின் தீர்மானத்தில் நியாயமான ஒரு பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது. வழக் கில் சம்பந்தப்பட்ட பொது மக்களுக்கு நீதிமன்றத்தில் தங்களுக்குச் சம்பந்தமான வழக்கு எந்த வகையில் நடைபெறுகிறது என்று தெரிந்து கொள்ள விரும்புவது அடிப்படை உரிமையல்லவா! தாய்மொழியில் நடை பெற்றால் தானே அவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.

தமிழ்நாட்டில் வழக்குரைஞர்களும் இதுகுறித்துப் பல சந்தர்ப்பங்களில் உரிமைக் குரலை எழுப்பியுள்ளனர்; பல வகையான போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதையும் பொருட்படுத்துவதில்லை என்று இந்திய அரசு முடிவு செய்து விட்டதா என்று தெரிந்து கொள்ள விரும்புகின்றோம்.

சென்னை உயர்நீதிமன்றம் என்பதை மாற்றி தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று பெயர் மாற்றம்செய்யப்பட வேண்டும் என்ற சாதாரண தமிழ்நாட்டின் கோரிக்கைக்குக் கூட இந்திய அரசு தன் காதுகளை நம் பக்கம் திருப்புவ தில்லை என்றால் பார்த்துக் கொள்ளலாமே!

மத்திய அரசுக்குப் புரியும் மொழி என்பது கடுமையான போராட்டம்தானா? மக்களைத் தூண்டுவதில் அப்படி என்ன சுவையோ!

தமிழ்நாட்டைச் சேர்ந்த அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சிகளைக் கடந்து ஒன்றாகத் திரண்டு எழுந்தால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் செய்வார்களா?

Read more: http://viduthalai.in/page-2/74827.html#ixzz2sgp1LgaZ

தமிழ் ஓவியா said...


எதிலும் எல்லையுள்ள இலக்குடன் வாழுங்கள்!


வாழ்க்கையில் பலரும் தங்களது மகிழ்ச்சியைத் தாங்களே தொலைத்து விட்டு, அல்லற்படுகிறார்கள். மகிழ்ச்சி- இன்பம் - இவை எல்லாம் எட்டாக் கனிகள் அல்ல; கிட்டா நிலைகள் அல்ல. எளிமை நிறைந்த வாழ்க்கை இன்ப வாழ்க்கையாகும்.

இன்பம் - மகிழ்ச்சி, என்பதை அடைய வெறும் பணம் சம்பாதிப்பது மட்டும் வழிமுறையாகி விடுமா? எத்தனை பணக்காரர்கள் மகிழ்ச்சி யோடு வாழுகிறார்கள்? எத்தனை செல்வந்தர்கள், கோடீசு வரப் பிரபுக்கள் இன்பத்தை அனுப வித்து வாழுபவர்களாக உள்ளார்கள்?

கணக்கெடுத்துப் பாருங்கள், ஏமாற்றம்தான் மிஞ்சும்!

ஒரு வகையான தவறான எண்ணத் தால் பணம் இருந்தால் நமக்கு எல்லாமே கிட்டிவிடும் என்ற தப்புக் கணக்கால் - பலர் மாய்ந்து மாய்ந்து குறுக்கு வழிகளில், கோணல் வழிகளில், பிறரைக் கசக்கிப் பிழிந்து, ஈத்துவக்கும் இன்பம்கூட என்னவென்றே தெரியாது வைக்கோல் போரைக் காத்த நாய்களாக வாழ்ந்து, நொந்து நூலாகி வாடி வதங்கி, தான் பெற்ற செல்வத்தைக்கூட நுகராமல் மாண்டு மடிகிறார்கள்!
ஒரு சாதாரணமான கல்லூரி விரிவுரையாளர்; பிறகு பேராசிரியர் - எப்படியோ அவருக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைத்தது; அவ்வளவு அரசு ஏற்றுமதி உலகில் இவர் மன்னரானவர்; மற்றவர்களுக்கு உதவிடவில்லை. கோடிக் கணக்கில் அந்நியச் செலாவணி உட்பட புழங்கியது.

பிள்ளை குட்டிகள்கூட கிடையாது! கணவன் மனைவி இருவரும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் - பணம் சேர்த்து, அதன்மீது அமர்ந்தார், எரிமலை வெடித்ததைப் போல, ஓர் நாள் ஒரு கொடுமையான செய்தி - வேலைக்காரியோ; வேலைக்காரரோ, திட்டமிட்டு கொலை செய்தனர் உறவினர் சொத்தை அனுப விக்க. இப்படி ஒரு கொலைத் திட்டம்! வாழ்க்கை முடிந்தது; சேர்த்த பொருள்... கேள்விக்குறிதான்

அதுவே உயிர்க்கொல்லி ஆகிவிட்டது! சொத்து இல்லாதவரை இருந்த சுதந்திரம் நிம்மதி. சொத்துகள் கோடிக்கணக்கில் சேர்ந்த தும் பறிபோனதுடன், இரு உயிர்களும் அல்லவா பறிக்கப்பட்ட கொடுமை நடை பெற்றது?

என்னே பரிதாபம்!

மனிதர்கள் துன்பப்படாமல் வாழப் பணம் - செல்வம் (ஓரளவு) தேவை; அதற்காக அதை எல்லையற்று சேர்த்தால் அதுவே அவர்கள் உயிர்க்கு இறுதியாகி விடுகிறதே!
ஏனோ ஆறறிவு படைத்த மனிதர்கள் இது புரியாமல் நடக்கிறார்கள்!

படிப்பு, பட்டம், பதவி, எதுவும் இவர் களுக்கு இதனைப் போதிக்கவில்லையே!

எல்லையுள்ள இலக்கு- விரும்பத் தக்கது எளிதில் - உழைப்பால் - அடையத் தக்கது.
ஆனால் எல்லையற்ற இலக்கு விரும்பத்தகாது மட்டுமல்ல; எவராலும் அடைய முடியாதது; காரணம், ஆசை பேராசையாக மாறுகிறபோது அதன் இலக்கை அடைய நேர்வழிகள் விடை பெறுகின்றன. குறுக்கு வழிகளும் கோணல் புத்திகளும் வழி தவறி நடக்க வருக வருகவென்று அழைத்துச் சென்று அதல பாதாளத்தில் - ஆழ்குழியில் விழுந்து வாழ்க்கையை முடிக்கவே முயலுகிறது.

எனவே எச்சரிக்கையுடன் வாழுங்கள்.

- கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/74831.html#ixzz2sgpBW4ac

தமிழ் ஓவியா said...


குண்டுவெடிப்புகளில் சுசீமானந்த் அளித்த செய்தி அனைத்தும் உண்மையே!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் பகவத் உத்தரவு பேரில் குண்டுவெடிப்புகளில் சுசீமானந்த் அளித்த செய்தி அனைத்தும் உண்மையே!

செய்தி சேகரித்த பத்திரிகையாளர் லீனாகீதா ரகுநாத் தகவல்


புதுடில்லி, பிப்.7- ஆர்.எஸ்.எஸ். தலைவர் பகவத் உத்தரவின் பேரில் குண்டு வெடிப்புகள் நடத்தப் பட்டன என சிறையில் இருக்கும் இந்து தீவிரவாத சுவாமி அசீமானந்த் அளித்த தகவல் அனைத்தும் உண் மையே என்றும் அவர் குரல் பதிவை கொடுக்கத் தயார் என்றும் செய்தி சேகரித்த பத்திரிகையாளர் லீனா கீதா ரகுநாத் இன்று தனியார் தொலைக்காட்சி நேர் காணலில் கூறியுள்ளார்.

இந்தியாவில் நடந்த சில பயங்கரமான குண்டுவெடிப் பில் நூற்றுக்குக்கும் மேற் பட்டோர் கொல்லப்பட்ட னர். இந்த குண்டுவெடிப்பு வழக்கில் காவித்தீவிரவாதி களின் நேரடி தொடபை ஆதாரத்துடன் நிறுபிக்கப் பட்டு சாது பிரஞ்யா தாக்கூர் என்ற பெண் சாமியார், அசி மானந்தா, இந்திய ராணுவப் படையில் உயரதிகாரி பொறுப்பு வகித்த சிறீகாந்த் புரோகித் மற்றும் தயானந்த் பாண்டே போன்றவர்கள் கைதாகி சிறையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஆர் எஸ் எஸின் நேரடி தொடர்பில் இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சம்ஜோதா விரைவு தொடர்வண்டி குண்டுவெடிப்பில் கைதான அசிமானந்தா என்ற சாமியார் ஹரியானா மாநிலம் அம் பாலா சிறையில் இருந்து வருகிறார். இவரிடம் காரவன் என்ற ஆங்கில மாத இதழ் நேரடி பேட்டி ஒன்று எடுத்தது. இந்த பேட்டியின் போது பல முக்கிய திடுக்கிடும் தகவல் களைக் கூறினார். அதில் முக்கியமானது இன்று மத்தியில் ஆட்சி அமைக்க துடித்துக்கொண்டு இருக்கும் பாரதிய ஜனதா கட்சியை இயக்கிக்கொண்டு இருக்கும் ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத் தான் இத் தனை தீவிரவாதத் தாக்கு தலுக்கும் காரணமானவர் அவரின் ஆணைப்படிதான் குண்டுகள் வைக்கப்பட்டது என்ற தகவல்.

இந்த செய்தி வெளிவந்த உடனே டில்லியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்துவங்கியது. எப்போதும் போல் பாரதிய ஜனதா இது பொய்யான ஒரு செய்தி என்றும் ஆதார மில்லாத இந்த செய்தியை பாரதிய ஜனதாவின் நரேந்திர மோடி பதவிக்கு வரவிடாமல் செய்ய காங்கிரஸ் மற்றும் சில தேச விரோத சக்திகளுக்கு வளைந்துகொடுக்கும் கட்சிகளின்\இயக்கங்களின் சதிச்செயல் என்று கூறியது. இந்த செய்தி குறித்து தனியார் தொலைக்காட்சியில் அளித்த நேர்காணலில் கார வான் இதழுக்காக இந்த செய்தியை சேகரித்த இணை ஆசிரியர் லீனா கீதா ரகுநாத் கூறியதாவது. இந்த செய்தி அனைத்தும் உண்மையே.

இது அவரிடம் இருந்து வாய் மொழியாக பதிவுசெய்யப் பட்டுள்ளது, எந்த விசா ரணைக்கும் இந்த குரல் பதிவை கொடுக்கத்தயார் என்று கூறினார். ஹரியா னாவில் உள்ள அம்பாலா சிறையில் உள்ள அசீமானந் தாவை சிறை அதிகாரிகளின் அனுமதியின் பேரில் சந்தித்து பேட்டி எடுத்தேன். மேலும் பேட்டியை அவரது அனுமதி யின் பேரில் தான் குரல் பதிவு செய்தேன் என்று கூறினார். காரவன் இதழ் அசிமானந் தாவின் குரல் பதிவை (இன்று)வெள்ளிக்கிழமை காலை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியது.

Read more: http://viduthalai.in/page-3/74811.html#ixzz2sgpzkdBK

தமிழ் ஓவியா said...


சிவசேனாவின் மதவெறி

மும்பை, பிப்.7- மும்பை செய்தியாளர் சங்க அரங்கத்தில் பாகிஸ் தானைச் சேர்ந்த மேக்கல் ஹசன் என்ற பிரபல இசைக்குழு இந்தியா வில் தனது இசைப்பயணம் குறித்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந் தது, இந்த இசைக்குழுவின் முக்கிய நோக்கம் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த இசைக்கலைஞர் களின் மூலம் இரு நாட்டிற்கு மிடையேயான நல் லிணக்கத்தை உருவாக்கும் விதமாக இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் இசை நிகழ்ச்சி கள் நடத்த முடிவு செய் திருந்தது.

இக்குழுவில் இந்தியா வைச் சேர்ந்த பிரபல பாடகி ஷர்மிஸ்தா சாட்டர்ஜி மற் றும் போஜ்புரி பாடகல் பிர்ஜேஸ் மிஸ்ராவும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது, செய்தி யாளர்கள் சந்திப்பின் போது பாகிஸ்தான் புல்லாங் குழல் இசைக்கலைஞர் முகமது அஹசான் பாபு கூறியதாவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் செயற்கையாக இரு நாடுகளாக பிரிந்திருந்தாலும் மக்கள் உள்ளுணர்வில் ஒரு தாய்மக்களாகவே வாழ் கின்றனர்.

சிவசேனா வன்முறை

நீண்ட காலமாக இரு நாட்டிற்கு இடையே நிலவி வரும் கசப்புணர்வை நீக்க இசை மற்றும் விளையாட்டு போன்றவை மிகவும் முக் கியமான ஒரு அருமருந்தாக வே நினைக்கிறோம். எங் களது இந்திய இசைப் பயணத்தின் நோக்கமும் அதுதான், அதே போல் பல இந்திய இசைக்கலைஞர்கள் பாகிஸ்தான் வந்து எங் களுடன் இசைப்பயணத்தில் சேர முன்வந்துள்ளனர் என்று கூறினார். பத்திரிக் கையாளர் கூட்டம் முடிந்த பிறகு அவர்கள் ஒன்றாக இசைவிருந்து படைக்க தயாராகிக்கொண்டு இருந் தனர். அப்போது திடிரென சுமார் இருபதுக்கும் மேற் பட்ட சிவசேனா கட்சி யினர்கள் அரங்கத்திற்குள் நுழைந்து ரகளை செய்ய ஆரம்பித்தனர். இதனால் இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்த செய்தியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் பயந்து வெளி யேற ஆரம்பித்தனர். சிவ சேனா கட்சியினர் அரங்கத் திற்கு வெளியே வந்து பாகிஸ்தான் இசைக்கலைஞர் களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிக்கொண்டு இருந்தனர். பாகிஸ்தானியரே வெளியேறு வந்தே மாதரம் என்று முழக்கங்கள் எழுப்பி செய்தியாளர்கள் சந்திப்பு வளாகத்தில் உள்ள அரங்கத் தில் இருந்த பூச்செடிகளை உடைத்து ரகளை செய்தனர். இச்சம்பவம் குறித்து பிரஸ் கிளப் தலைவர் குருபீர் சிங் கூறுகையில் சிவசேனா வினர் ஏன் இது போன்ற ஒரு வன்முறையில் இறங் கினார்கள் என்று தெரிய வில்லை, இந்த இசை நிகழ்ச்சியின் நோக்கமே இரண்டு நாடுகளுக்கு இடை யேயான கசப்புணர்வை நீக்கி சுமூகமான சூழ்நிலையை உருவாக்குவது தான் ஆனால் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் செய்தியாளர் சந்திப்பில் குழப்பத்தை ஏற்படுத்த முனைவது சர் வாதிகாரத்தனமான செய லாகும். சிவசேனா இது போன்ற செயல்களை நிறுத்த வேண்டும் நிகழ்ச்சிகள் பற்றி அதன் தலைமை முழுமை யாக அறிந்துகொள்ள வேண் டும் என்று கூறினார். மும்பை செய்தியாளர் சங்கம், இச்சம் பவம் குறித்து காவல்துறை யில் புகார் செய்த்து. இதனை அடுத்து சம்பவ இத்திற்கு வந்த காவல்துறையினர் 3 பெண்கள் உட்ப்ட 20 சிவசேனாவினரை கைது செய்தனர். இவர்கள் மீது பொது நிகழ்ச்சிக்கு பங்கம் விளை வித்து, பொதுச்சொத்தை சேதப்படுத்தியது, மற்றும் இசைகலைஞர்களை மிரட்டியது தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப் பட்டது. சிவசேனாவைச் சேர்ந்தவர்கள் கடந்த காலங்களில் பாகிஸ்தான் கலைஞர்களுக்கு எதிராக பல போராட்டங்கள் நடத்தி மக்களிடையே அவப்பெ யரைப்பெற்றுள்ளது. 2010 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தான் பெண் கலைஞர் வீனா மாலிக்கிற்கு எதிராக போராட்டம் நடத்தி தேசிய மகளிர் ஆணையத்தின் கண் டனத்தைப் பெற்றது அனை வரும் அறிந்ததே!

Read more: http://viduthalai.in/page-3/74812.html#ixzz2sgq9z8ws

தமிழ் ஓவியா said...


உடுமலையாரின் பாடல்!

ஆண்: காசிக்குப் போனாக் கருவுண்டாகு மென்ற காலம் மாறிப் போச்சு... இப்ப
ஊசியைப் போட்டா உண்டாகு மென்ற உண்மை தெரிஞ்சு போச்சு

பெண்: ஈசன் செயலால் இறப்பும் பிறப்பும் எல்லாம் நடக்குதுங்க - அதை
எண்ணாமே எவனோ சொன்னான்னு கேட்டு ஏமாந்து போகாதீங்க!

ஆண்: ஆகாரம் சமைக்க சூரிய ஒளியால் அடுப்பை மூட்டுறாங்க
ஆணைப் பெண்ணாக பெண்ணை ஆணாக
ஆளையே மாத்துறாங்க - இங்கே ஆளையே மாத்துறாங்க.

பெண்: அது... ஆயிரங்காலத்துக் கப்பாலே நடக்கிற
ஆராய்ச்சி விசயமுங்க... மூளை
ஆராய்ச்சி விசயமுங்க - நம்ம அறிவுக்குப் பொருத்தம் ஆறு, கோயில், அரசமரந்தானுங்க!

ஆண்: கோழியில்லாமெ தன்னால முட்டைகளில்
குஞ்சுகளைப் பொரிக்க வச்சார் - உங்
கொப்பன் பாட்டன் காலத்தில் யாரிந்த
கோளாறைக் கண்டு பிடிச்சார்.... இந்தக்
கோளாறைக் கண்டு பிடிச்சார்!

பெண்: அந்தக் குஞ்சுகள் பொரிக்க வச்ச கோளாறுக் காரனை
முட்டை யொண்ணு பண்ணச் சொல்லுங்க? - பார்ப்போம்
முட்டை யொண்ணு பண்ணச் சொல்லுங்க - வாய்
கூசாமல் எதையும் யோசனை செய்யாமே பேசுவது தப்பித முங்க

ஆண்: எட்டாத விஷயத்தை ஈசன் பெயரால்
இயற்கை யெங்குறாங்க - இனிமேல்
இயற்கையுங் கூட செயற்கையில்.. ஆகும் முயற்சியும் பண்ணுறாங்க!

- சுயமரியாதைக் கவிஞர் உடுமலை நாராயண கவி இயற்றி கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், மதுரமும் பாடிய பகுத்தறிவுக் கருத்துகள் நிறைந்த இப்பாடல் டாக்டர் சாவித்திரி எனும் படத்தில் இடம் பெற்றுள்ளது.

Read more: http://viduthalai.in/page-8/74850.html#ixzz2sgquEJDJ

தமிழ் ஓவியா said...


வசம் கெட்டது!


குடிக்கவும் நீரற்றிருக்கும் - ஏழைக்
கூட்டத்தை எண்ணாமல் கொடுந்தடியர்கள்
மடங்கட்டி வைத்ததினாலே - தம்பி
வசம் கெட்டுப் போனது நமது நாடு

- புரட்சிக்கவிஞர்

Read more: http://viduthalai.in/page-8/74851.html#ixzz2sgrA02rs

தமிழ் ஓவியா said...

மதம் தோன்றியதும் உண்மை மறைந்தது

ஆரம்பக் காலத்தில் மதம் என்பது இருந்ததில்லை... மதம் தோன்றியதும் உண்மை மறைந்தது. எனது மதம் என்றும், உனது மதம் என்றும் மோதல் இருக்கும் போது உண்மையும் மதமும் இணைந்திருக்க முடியுமா?

- கேரளம் சுவாமி சிவானந்த பரமஹம்சர்

Read more: http://viduthalai.in/page-8/74851.html#ixzz2sgrTfZ1m