Search This Blog

6.2.14

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது சட்டத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரானது!


பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது சட்டத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரானது!

திவேதிகளை அடக்கி வைக்கவேண்டும் காங்கிரஸ் தலைமை

தமிழர் தலைவர் அறிக்கை

இடஒதுக்கீடு அளித்தால் தகுதி - திறமை போய் விடும் என்ற மனப்பான்மையிலிருந்து அ.தி.மு.க. அரசு  மாற வேண்டும்
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவரான ஜனார்த்தன திவேதி பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறியுள்ளதைக் கண்டித்தும், இட ஒதுக்கீட்டின் தத்துவம் என்பது என்ன என்பது குறித்தும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் (Spokes persons) களில் ஒருவரான ஜனார்த்தன திவேதி என்பவர் ஜாதி அடிப்படை யிலான இட ஒதுக்கீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று நேற்று (4.2.2014) கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியிலும், மற்ற கட்சிகளில் உள்ளது போன்ற சமூகநீதிக்கு எதிரானவர்கள் - உயர்ஜாதியினர் - பலர் இன்னமும் உள்ளனர் என்பதற்கு இவரது அரை வேக்காட்டுத்தனமான யோசனை - ஆபத்தானதும், அபத்தமானதும், அரசியல் சட்ட அடிப்படை உரிமைக்கும் கூட முற்றிலும் எதிரானதாகும்!

எங்கும் நிறைந்து கிடக்கும் ஜாதி!

ஜாதியை ஒழிக்காமல், ஜாதி என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் இடம்பெற்றுள்ள தோடு, இன்னமும் ஜாதிப் பஞ்சாயத்து என்று காட்டு மிராண்டித்தன, தான்தோன்றித்தனமான பஞ்சாயத்துகள் வடபுலத்திலும், நாடு முழுவதிலும் மலிந்துள்ள நிலையில், இதை எப்படி ஒழிப்பார்?

ஜாதி அடிப்படையில் மட்டும் அல்ல - தற்போதுள்ள இட ஒதுக்கீடு.

பிரிவுகள் அடிப்படையில் இட ஒதுக்கீடு!

அரசமைப்புச் சட்டத்தில் உள்ள வார்த்தைகளான சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் ‘‘Socially and educationally’’ என்ற சொற்றொடருக்கு எடுத்துக்காட்டு - மனுதர்ம, வருணதர்ம ஜாதி அமைப்புக் காரணமான பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கல்வி வாய்ப்புகள் மற்ற பெரும்பாலோரான உடலுழைப்பு கீழ்ஜாதிக்காரர்களுக்கு - சூத்திர, பஞ்சமர்களுக்கு மறுக்கப்பட்டதால்தான் மலைவாழ், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட (S.C., S.T., O.B.C., M.B.C.)
முதலியவர்களுக்கான பிரிவுகள் அடிப்படையில் இட ஒதுக்கீடு!
இது வெறும் ஜாதி அடிப்படை மட்டுமே அல்ல; ஜாதி என்பது மேற்சொன்ன கல்வி, சமூக ரீதியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட ஏகலைவன் கூட்டத்தினரை மற்றவர்களோடு சமப்படுத்தச் செய்ய துவக்கப்பட்ட ஓர் ஏற்பாடு.
5 ஆயிரம் ஆண்டுகால அநீதிக்கு, கடந்த 50, 60 ஆண்டுகால இட ஒதுக்கீடு - உடனே பரிகாரத்தைத் தேடித் தந்துவிடாது. அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் தொடங்கி, மற்ற பல்வேறு பிரிவுகளிலும் சமூகநீதியை அளிக்கவே இட ஒதுக்கீடு.

எதிர்க்கட்சிகளுக்கு மறைமுகமாகப் பணியாற்றுகிறார்கள்

பொருளாதார அடிப்படை என்பது இந்திரா - சகானி வழக்கு உள்பட பல தீர்ப்புகளில், அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை என்று செல்லாததாக்கப்பட்டு, தீர்ப்பும் அளிக்கப்பட்டது. இந்தப் பார்ப்பன உயர்ஜாதி இரு வேதம் படித்த பெயர் தாங்கியான இவருக்குத் தெரியாதோ!
காங்கிரஸ், வரும் தேர்தலில் தோற்கடிக்கப்பட, இத்தகைய நபர்கள் எதிர்க்கட்சிகளுக்கு மறைமுகமாகப் பணியாற்றுகிறார்கள் போலும்!

நமது கடமை

இத்தகையவர்களின் நாவை அடக்கும்படி செய்ய காங்கிரஸ் தலைமை முன்வரவேண்டும்; இன்றேல் காங்கிரசின் தோல்வி கற்பாறையில் செதுக்கப்பட்டதாக ஆகிவிடும் என எச்சரிக்கை செய்வது நமது கடமை.
வன்மையாகக் கண்டிக்கிறோம்!


-------------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்
5.2.2014

22 comments:

தமிழ் ஓவியா said...


புறப்படுகிறார்கள் கோயபெல்சுகள் உஷார்!

இணைய தளத்தில் நரேந்திர மோடியின் செல்வாக்கை அதி கரிக்கச் செய்ய புதிய திட்டங்களை வகுத்துக் கொண்டு செயல்பட விருக்கின்றனர். இதற் கான ஆலோசனைக் கூட்டம் ஒன்று சென் னையில் நடத்தப்பட் டுள்ளது. தொழில் நுட்பப் பொறியாளர் கள் 350 பேர் கூட்டப் பட்டுள்ளார்கள். பி.ஜே. பி.யின் சென்னைத் தலைமை அலுவலகத் தில் இதற்காகத் தனி அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது என்ற தகவல்கள் வெளி வந்துள்ளன.

சுருக்கமாகச் சொல் லப்போனால், புளுகு களைக் கட்டவிழ்த்து விட கோயபல்சுகள் திட்டம் தீட்டிவிட்ட னர் என்றே கருதவேண் டும்.

இதற்கு முன்பேகூட இணைய தளத்தில் மோடியுடன் தொடர்பில் உள்ளவர்கள் 19 லட்சம் என்று ஒரு கதையைக் கட்டிவிட்டனர்.

இந்தியாவின் முன் னணி செய்தித் தொலைக் காட்சி நிறுவனமான ஹெட் லைன்ஸ் டுடே - மோடியின் டுவிட்டர் சமூக வலை தளக் கணக் கில் இணைந்துள்ளவர் களில் 70 சதவிகிதப் பெயர்கள் போலியானவை என்று அம்பலப்படுத்தி விட்டதே!

2013 ஜூன் மாதத்தில் உத்தரகாண்ட் வெள்ள அபாயத்தில் சிக்கிய 15,000 குஜராத்திகளை வெள்ளத் திலிருந்து நரேந்திர மோடி காப்பாற்றிவிட் டார் என்று கிளப்பி விடவில்லையா?

இராணுவத்தினரே மீட்புப் பணியில் பெரும் இடர்ப்பாடுகளைச் சந் தித்த நிலையில், 80 இன்னோவா கார்களைப் பயன்படுத்தி 15 ஆயிரம் பேர்களை மோடி காப் பாற்றினாராம், நம்புங்கள், கேழ்வரகில் நெய் வடி கிறது!

அதிகபட்சமாகப் போனால், ஓர் இன் னோவா காரில் 7 பேர் களை ஏற்றலாம்; வேண்டு மானால், இரண்டு பேர் களை அதிகமாக ஏற்றிச் செல்லலாம். 80 கார்கள் டேராடூனிலிருந்து ஒரு தடவைக்கு 720 பேர் களைத்தான் கொண்டு செல்ல முடியும். 15 ஆயி ரம் பேர்களை மலைப் பகுதியிலிருந்து கீழே கொண்டு போகவும், வரவும் 21 தடவைகள் பயணிக்கவேண்டும்.

கேதார்நாத்திலிருந்து டேராடூன் 221 கிலோ மீட்டர் தூரமாகும். 21 முறை என்று கணக்கிடும் பொழுது ஒவ்வொரு காரும் சுமார் 9300 கிலோ மீட்டர் பயணிக்கவேண் டும், அதுவும் மலைப் பகுதிகளில்.

சராசரியாக மணிக்கு 40 கிலோ மீட்டர் என்று வைத்துக்கொண்டாலும் கூட 233 மணிநேரம் பயணம் செய்யவேண்டும்.

இந்தச் சூழ்நிலையில் ஆயிரக்கணக்கான அள வில் அல்லாடிக் கொண் டிருக்கும் மக்களில் குஜ ராத் மக்களை அடை யாளம் கண்டு, தேடிக் கண்டுபிடித்துப் பத்திர மாகக் கொண்டு வந்து சேர்த்தாராம், மற்ற மாநில மக்களைப் பார்த்து எப் படியோ தொலைந்து போங்கள் என்று சொல்லி அவர்களை விட்டுவிட்டு வந்துவிட்டாரா மோடி என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (23.6.2013) அம்பலப்படுத்தியதை நினைத்துப் பாருங்கள். ஒரே நாளில் 15,000 பேர் களை மீட்டதாகக் கூறு வது அண்டப் புளுகு ஆகாயப் புளுகுதானே!

இப்பொழுது இளைஞர்களை மயக்க, ஈர்க்க இணையதளத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்; அதற்காகக் கைதேர்ந்தவர்களை வலை போட்டுத் தேடிப் பிடிக்கிறார்கள்.

சீனாவில், குவாங்ஜோ என்னும் நகரில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தை குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் உள்ள தாக இணைய தளத்தில் வெளியிட்ட கோயபல்சு கள் வரிந்து கட்டிக் கொண்டு புறப்பட்டுவிட் டனர்!

உஷார்!! உஷார்!!

- கருஞ்சட்டை

Read more: http://viduthalai.in/e-paper/74713.html#ixzz2sUm2V3Ab

தமிழ் ஓவியா said...


நாடாளுமன்றத்தை நடத்தவிடுக!


இன்று (5.2.2014) நாடாளுமன்றம் கூடுகிறது. 15 ஆவது நாடாளுமன்றத்தின் கடைசிக் கூட்டம் இது. 16 ஆவது மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அடுத்து நாடாளுமன்றம் கூடும். இன்று கூடும் நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை பல முக்கிய மசோதாக்கள் நிறைவேறும் - நிறைவேறவும் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கருத்துகளை எடுத்து வைக்கவும், விவாதிக்கவும் வாய்ப்பு அளிக்கப்படவேண்டும். அதற்கு மாறாக தங்களுக்கு மாறுபாடானது என்பதற்காகவோ, உகந்ததாக இல்லை என்பதற்காகவோ நாடாளுமன்றத் தையே நடத்தவிடாமல் அமளியில் ஈடுபடுவது ஜன நாயகப் பண்பிற்கு உகந்ததல்ல. பல கூட்டத் தொடர்கள் முற்றிலும் முடக்கப்பட்ட மோசமான நிலைகள் எல்லாம் உண்டு. நாடாளுமன்றம் என்பது மக்கள் பிரச்சினைகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எடுத்துக் கூறுவதற்கான மன்றம் என்பதை மக்கள் பிரதிநிதிகள் மறந்துவிடக் கூடாது.

நாடாளுமன்றம் முடக்கப்படுவதால், பொன்னான நேரம் மட்டுமல்ல, மக்கள் பணமும் விரயமாக்கப்படுகிறது என்பதையும் புறந்தள்ளக்கூடாது. 15 ஆவது நாடாளுமன்றத்தின் இந்த இறுதிக் கூட்டத் தில் பல முக்கியமான பிரச்சினைகள் பேசப்பட்டாக வேண்டும்; முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.

1. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம்

2. பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு

3. ஜெனீவாவில் மார்ச் மாதம் நடைபெற இருக்கும் மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவர விருக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்பதோடு இந்தியாவே தனியொரு தீர்மானத்தை இலங்கைக்குக் கொண்டு வருவதுபற்றி முடிவு செய்தல்

4. தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற் படையால் தாக்கப்படுவதற்கு நிரந்தர முடிவு

5. கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான அடிப்படை உரிமைக்கான உத்தரவாதம்

6. தனித் தெலங்கானா பிரச்சினை

7. உயர்கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு என் பதற்கான சட்டத் திருத்தம் என்பது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நீண்ட பட்டியலே உண்டு.

இதில் பெரும்பாலானவை பெரும்பான்மையான கட்சி களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவைதான். இதில் உடன்பாடில் லாத கட்சிகள் விவாதங்களை முன்வைத்து வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்கலாமே தவிர, நாடாளுமன்றத்தையே முடக்கும் வேலையில் ஈடுபடக் கூடாது.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பப் படுகின்றன. வாக்களிக்கும் வெகுமக்களும் அவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை மக்கள் பிரதிநிதிகள் மறந்துவிடக் கூடாது.

நாடாளுமன்றத்தில் எவ்வளவுதான் ரகளைகள் நடந்தாலும், பேரவைத் தலைவராக இருக்கக் கூடியவர்கள் அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதில்லை. உறுப்பினர் களை வெளியேற்றுவதில்லை; தொடர் முழுவதும் அவைக்கு வரக்கூடாது (Suspension)என்று கட்டளைகள் பிறப்பிக்கப்படுவதில்லை. இவையெல்லாம் சர்வசாதாரண மாகக் காணப்படும் ஒரு மாநில சட்டமன்றம் உண்டு என்றால், அது தமிழ்நாட்டுச் சட்டமன்றம்தான் - அதுவும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி நடக்கும்போதுதான்.

ஆளும் கட்சியைப்பற்றி ஒரு வார்த்தை குறை கூறினால்கூட பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு மனநிலை ஆளும் கட்சியிடம் இருப்பதை அனேகமாக நாட்டு மக்கள் பெரும்பாலும் உணர்ந்தே இருக்கிறார்கள்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் எடுக்கும் நடவடிக்கை அளவுக்குச் செல்லாவிட்டாலும், அளவுக்கு மீறி, அவையையே நடத்த முடியாத அளவுக்கு கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள்மீது குறைந்தபட்ச நடவடிக்கைகளையாவது எடுத்து, மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் எட்டப்பட தனது அதி காரத்தை நாடாளுமன்ற அவைத் தலைவர்கள் பயன்படுத்துவதுபற்றி யோசிக்கலாமே!

நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும் கலந்து ஆலோசித்து, அவர்கள் ஒத்துழைப்புத் தருவதாகக் கூறும் வாக்குறுதிகளை நம்பி, மக்களவைத் தலைவர் ஆசனத்தில் அமர்ந்தாலும், அமளி என்பது அரங்கேறிக் கொண்டுதானிருக்கிறது. மக்கள் பிரதிநிதிகள் என்பவர்களிடத்திலேயே ஒழுங்கு, கட்டுப் பாடு இல்லையென்றால், பொதுமக்களிடம் அவற்றை எப்படி எதிர்ப்பார்க்க முடியும்?

Read more: http://viduthalai.in/page-2/74718.html#ixzz2sUmhswuc

தமிழ் ஓவியா said...

என் கையால் தூக்கி, அறிவுச்செல்வி என்னால் பெயரிடப்பட்டவருக்கு இப்பொழுது திருமணத்தையும் நடத்தி வைக்கிறேன்


இதுதான் திராவிடர் இயக்கத்தில் தந்தை பெரியார் செய்த புரட்சி!

அரூர் ஆனந்தன் - ஜானகி இல்ல மணவிழாவை நடத்தி வைத்து தமிழர் தலைவர் பெருமிதம்

தருமபுரி, பிப். 5_ என் கையால் தூக்கி அறிவுச் செல்வி என்று என்னாலே பெயரிடப்பட்ட அவருக்கு நானே திருமணத்தை நடத்தி வைக்கிறேனே இதுதான் திராவிடர் இயக்கம் செய்த புரட்சி, தந்தை பெரியார் செய்த புரட்சி என்று அரூர் கழகத் தோழர் ஆனந்தன் _ ஜானகி இல்ல மண விழாவை நடத்தி வைத்து பேசினார்.
திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி முன்னாள் தலைவர் த.ஆனந்தன் _ ஜானகி ஆகியோர்களது மகள் ஆ.அறிவுச்செல்வி அவர் களுக்கும், பூமணி _ இந்தி ராணி ஆகியோரின் மகன் பூ.அருண்குமாருக்கும் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா 2.2.2014 அன்று காலை 10 மணியள வில் அரூர் என்.என்.மகா லில் நடைபெற்றது.

மணவிழாவிற்கு முன்னாள் அமைச்சரும் தருமபுரி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரான வ.முல்லைவேந்தன், திரா விடர் கழக பொருளாளர் சு.பிறைநுதற்செல்வி, தமிழ் நாடு மண் அள்ளும் இயந் திர உரிமையாளர் நலச் சங்க தலைவர் கத்திபாரா ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலையேற்று வாழ்த் துரை வழங்கினர். மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலை வர் ஊமை ஜெயராமன் வரவேற்புரை நிகழ்த்தி, மணவிழாவை ஒருங்கி ணைத்து நடத்தினார்.

திராவிடர் கழக மகளிர் பாசறையின் மாநில பொருளாளர் அகிலா எழிலரசன் தலைமை செயற்குழு உறுப்பினர் பழனி புள்ளையண்ணன், மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாவட்ட தலைவர் இரா. வேட்ராயன், மாவட்ட செயலாளர் வீ.சிவாஜி, திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் வி.ஜி.இளங்கோ, பெரியார் பெருந்தொண் டர் வி.ஆர்.வேங்கன், வேலூர் மண்டல செயலா ளர் பழ.வெங்கடாசலம், மேட்டூர் மாவட்ட தலை வர் சுப்பிரமணியம் ஆகி யோர் மணமக்களை வாழ்த்தினர். புதிய தலை முறை இதழின் செய்தியா ளர் குணசேகரன் நன்றி கூறினார்.

தமிழ் ஓவியா said...

தருமபுரி அ.தமிழ்ச்செல்வன் அவர்களின் மகள் த.சுடரொளி - சத்தரபதியின் முதலாம் ஆண்டு திருமண நாள் மகிழ்வாக விடுதலை, உண்மை சந்தாவினை தமிழர் தலைவரிடம் வழங்கினர். இணையர்களுக்கு தமிழர் தலைவர் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த மணவிழாவை நடத்திக் கொண்டிருக்கும் தோழர் ஆனந்தன் _ ஜானகி ஆகியோர்களது மகள் ஆ.அறிவுச்செல்வி, பெ.பூமணி _ இந்திராணி ஆகியோர்களது மகன் பூ.அருண்குமார் ஆகி யோர்களது திருமண நிகழ்ச்சியை நடத்தி வைப்பதிலே எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இங்கே மேடையை பார்க் கும் போதே மாநாடு போல உள்ளது.

இருக்கைகள் அனைத்தி லும் மக்கள் அமர்ந்துள் ளது மட்டும் இல்லாமல் அரங்கம் முழுவதும் நின் றுள்ளதுடன் வெளியிலும் நின்றுள்ளனர். இதைப் பார்க்கும் போது எங்களை போன்றவர்களுக்கெல்லாம் மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது.

தோழர் ஆனந்தன் இயக்கத்தில் மாவட்ட இளைஞரணியின் பொறுப் பாளராக இருந்துள்ளார். கழக பணியாற்றியுள்ளார். வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கிறார் அவரது குடும்பம் அரூர் வட்டம் என்று சொன்னால் அது பெரியாரின் பூங்கா _ பெரியார் பூங்கா என்று சொன்னால் அது அரூர் பகுதியாகும் இந்த பகுதி யிலே மிசா காலத்தில் செல்லன், சின்னவெள்ளை, தேசாய் வேணுகோபால், வேங்கன் பெருமாள், ராமசாமி போன்றவர்கள் எல்லாம் போராடியவர் கள் சிறை சென்றவர்கள். இன்றைக்கும் வகுத்துப் பட்டி கிருஷ்ணன், ராமி யம்பட்டி சாமிக்கண்ணு, திராவிடமுத்து இவர்கள் எல்லாம் எதிலும் மாற வில்லை கொள்கைகளியி லிருந்து உறுதியாக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த பகுதியில் தந்தை பெரியார் அவர்கள் கால் படாத கிராமமோ பிரச் சாரம் செய்யாத கிரா மமோ இல்லை. அனைத்து தேர்தல்களிலும் தந்தை பெரியார் ஆதரித்து பிரச் சாரம் செய்து அவர்களின் வெற்றியை நிர்ணயித்து இருக்கிறார். அந்த வகை யில் அரூர் என்பது பெரி யார் பூங்காவாகும் (கைதட் டல்).

இங்கே மணமகளாக அமர்ந்திருக்கும் அறிவுச் செல்வியை குழந்தையாக இருக்கும்போதே கையால் தூக்கி தோளில் போட்டு அறிவுச் செல்வி என்று பெயரிட்டேன். அதே அறி வுச்செல்வியின் திரும ணத்தை நடத்தி வைக் கிறேன் என்றால் இதுதான் திராவிடர் இயக்கத்தின் புரட்சி. தந்தை பெரியார் செய்த புரட்சி.

திராவிடத்தால் வீழ்ந் தோம் என்று பேசி வரு கிறார்களே சிலர், அவர் களுக்கு சொல்லிக்கொள்கி றேன். திராவிடத்தால் ஒரு போதும் விழவில்லை. வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அன்று முதல் இன்று வரை ஆனந்தன் அடக்க மாக இருப்பதுடன் கொள் கையில் என்றைக்கும் உயர்ந்து நிற்கிறார். அறி வுச்செல்வி பி.டெக் படித் திருக்கிறார். அருண்குமார் கணினி துறையில் எம்பிஏ படித்து வங்கியில் பணி யாற்றுகிறார் என்றார் அதுதான் நமக்கெல்லாம் மகிழ்ச்சி.

மணவிழாவில் முன்னி லையேற்று முன்னாள் அமைச்சர் வ.முல்லை வேந்தன் வாழ்த்துரையில் பேசியதாவது.

இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிற மண விழாவை பார்க்கும்போது அண்ணாவையும், தந்தை பெரியாரையும் யாரும் மறந்துவிடமுடியாது. இங்கே எந்த வித எதிர் பார்ப்பும் இன்றி தந்தை பெரியாரின் கொள்கையை பரப்பிட பட்டம் பதவி சுகங்களை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு தன்னையே அர்ப்பணிக்கின்ற தொண் டர்களாக திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களால் பல ஆயிரம் இளைஞர்கள் கருப்புடை அணிந்து களத்திலே நிற்பதை பார்த் தால் பெரிய மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், மேட்டூர் தலைவர் சுப்பிரமணியன், திருச்சி ப.சுப்பிரமணியன், தருமபுரி சின்னராசு, விடுதலை தமிழ்ச்செல்வன், கதிர் பீ.தமிழ் பிரபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் தா.திருப்பதி, கரு.பாலன், ஆர்.வி. சாமிக் கண்ணு, அண்ணா சரவ ணன், மு.தியாகராசன், வன வேந்தன், பெரு.முல்லைய ரசு, இரா.கிருஷ்ணமூர்த்தி, இரா.இளங்கோ, ப.கிருட்டி ணன், தீ.சிவாஜி, கதிர் செந்தில், மு.மனோகரன், பழ.பிரபு, எஸ்.முருகேசன், வே.இராவணன், சித.வீர மணி, சித.அருள், கவிஞர் கண்ணிமை, ஆசிரியர் கருணாநிதி, ஊற்றங்கரை கருணாநிதி, திராவிடமணி, சென்னை செல்வி, சேலம் சவுந்தரராசன், மு.பரமசி வம், சேலம் கிருஷ்ண மூர்த்தி, தமிழ்ச்செல்வன் (திமுக) மற்றும் திருப்பத் தூர் இளங்கோ, தமிழ்ச் செல்வன், தருமபுரி, கிருஷ் ணகிரி, திருப்பத்தூர், சேலம் மாவட்ட கழகத் தோழர் கள் கலந்து கொண்டனர்.

இளைஞரணி, மாண வரணி பொறுப்பாளர்கள் சி.காமராஜ், கோவிந்தராஜ், ஏங்கல்ஸ், சத்யராஜ், ராஜா, யாழ்.திலீபன், மகளிரணி திருப்பத்தூர் கவிதா, ஆசிரியை இந்திரா காந்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மெய்க்காப்பாளர்களுக்கு புத்தாடை

தமிழர் தலைவரின் மெய்க்காப்பாளர்களுக்கு ஊமை செயராமன், தகடூர் தமிழ்ச்செல்வி இணையர், தமிழர் தலைவர் கி.வீர மணி அவர்கள் மூலமாக தமிழ்ப் புத்தாண்டு பொங் கல் மகிழ்வாக கழகச் சீருடைக்கான புத்தாடை வழங்கி மகிழ்ந்தனர்.

Read more: http://viduthalai.in/page-4/74731.html#ixzz2sUnRGkDM

தமிழ் ஓவியா said...


தினமலருக்குப் பதிலடி

சக மனிதனை தொட்டால் தீட்டு என, சொன்னவர்களும்; செருப்புப் போட்டு கீழ் ஜாதிக்காரன் நடக்கக் கூடாது என, சொன்னவர்களும்; ஆத்திகரா, நாத்திகரா? அனைவருக்கும் பொதுவானவர் கடவுள்' எனக் கூறிக் கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்களை, கோவிலுக்குள் விடாமல் தடுத்தவர்கள், ஆத்திகரா, நாத்திகரா? கோவிலுக்குள், தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையப் போராட்டம் நடத்தியவர்கள் ஆத்திகரா, நாத்திகரா? இதிகாசம், புராணங்களை மட்டும் வைத்துக் கொண்டுள்ள தமிழை, காட்டுமிராண்டி மொழி என்றார் ஈ.வெ.ரா. பெரியார் அவர்தான் கணினியில் தமிழைப் பயன்படுத்தும் அளவுக்கு எழுத்து சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தவர்.

வைக்கம் போராட்டத்தை நிறுத்தி விடுங்கள் என, ஈ.வெ.ரா., பெரியாருக்கு கடிதம் எழுதியவர் காந்தியடிகள். ஆனால், அதை ஏற்காமல் போராட்டத்தைத் தொடர்ந்து, வெற்றி கண்டார் ஈ.வெ.ரா. பெரியார், 'வைக்கம்' போராட்ட வரலாறு அறிந்தவர்களுக்கு தான், இது தெரியும். நாட்டில் உள்ள அனைத்து ஜாதிகளுக்கும் இடஒதுக்கீடு இருந்தது. ஆனால், சண்பகம் துரைசாமி என்ற பார்ப்பான், தன் மகளுக்கு அனைத்து தகுதியும் இருந்தும், மருத்துவக் கல்வி சேர்க்கை கிடைக்கவில்லை என, பொய்யான வழக்கை, தொடர்ந்தார்.

இந்த வழக்கின் மூலம் தான் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நீக்கப்பட்டது. இதன்பின், ஈ.வெ.ரா., நடத்திய போராட்டத்தின் விளைவாகத்தான், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வரப்பட்டு, இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இடஒதுக்கீடு என்பது, செயினை பறித்துச் செல்லும், திருடனிடம் அதை மீட்பது போன்றது.

குறிப்பிட்ட சமூகங்களுக்குக் கல்வியும், வேலைவாய்ப்பும் பல ஆண்டுகாலம் மறுக்கப்பட்டதால், அவர்களையும், பிற சமூகத்தினரைப் போல, சமத்துவப்படுத்த இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இதன்மூலம், சமூகநீதியை நிலைநாட்டி, சமூகங்களுக்கு இடையே உள்ள இழிவைப் போக்குவதே நோக்கம். இதைத் தான் ஈ.வெ.ரா. பெரியார் செய்தார்.

பாமரன், எழுத்தாளர்
(தினமலர், 5.2.2014, பக். 4)

Read more: http://viduthalai.in/page-4/74732.html#ixzz2sUoAf6sO

தமிழ் ஓவியா said...


வீரமா முனிவர் (1680-1747)


இத்தாலி நாட்டுக்கா ரர்- இயற்பெயர் கொன்ஸ் டான் டைன்; ஜோசப் பெஸ்கி பாதிரியார் என் றும் அழைக்கப்படுவார். கொன்ஸ்டான்ஸ் என் றால் தைரியசாலி என்று பொருள் - பின்னர் வீரமா முனிவர் என்று தனித் தமிழ் ஆயிற்று.

1710இல் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தார். தமிழ் மொழி பயின்றார் - இலக்கிய இலக்கண நூல் களைப் பழுதறப் பயின் றார். இவர் படைப்புகளுள் இறவாப் புகழப் பெற்றது சதுர் அகராதியாகும். நான்கு வகைப்பட்ட அக ராதி என்று இதற்குப் பொருள்.

1) பெயர் அகராதி 2) பொருள் அகராதி 3) தொகை அகராதி 4) தொடை அகராதி ஆகும்.

தமிழில் தோன்றிய முதல் அகர முதலி இதுவே யாகும். அவரின் பரமார்த்த குருவின் கதைகள் - தமிழுலகிற்குக் கிடைத்த நகைச்சுவை மணம் வீசும் இலக்கியக் கருவூலமா கும். மதத்தைப் பரப்ப வந்தவர் தமிழ்க் கடலில் மூழ்கி முத்தெடுத்தார். தனது மேலை நாட்டுத் தோற்றத்தைக் தூக்கி எறிந்து தமிழ்ப் பண்பாட் டுக்கு ஏற்ப நடை, உடை பாவனைகளை மாற்றிக் கொண்டார்.

இவரது வாழ்க்கை வரலாற்றினை எழுதிய முத்துசாமிப் பிள்ளை பின்வருமாறு கூறுகிறார் (1822). நெற்றியில் சந் தனம், தலையில் பட்டுக் குல்லா, இடுப்பில் காவி திருநெல்வேலி கம்பிச் சேர்மன் போர்வையைத் தலையிலிருந்து தோள் வழியாக உடலை மூடிய படி பாதக்குறடு அணிந்து நடமாடுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திருக்குறளின் சிறப்பை உணர்ந்து அறத் துப்பாலையும், பொருட் பாலையும் இலத்தின் மொழிக்குக் கொண்டு சென்றார்.

திராவிட மொழியியல், அறிஞர்களுள் முதன்மை யானவர் வீரமா முனி வரே என்று ஆய்வாளர் கமில் சுவலபில் கணித்துக் கூறுகிறார்.

கிறித்தவர்கள் வெளி நாடுகளில் இருந்து மதம் பரப்ப இந்தியாவுக்கு வந்ததுண்டு. அத்தோடு கல்வி, மருத்துவம் இவை இந்தி யாவுக்குக் கிடைப் பதில் அவர்களின் பங்க ளிப்பை உதறித் தள்ளி விட முடியாது.

அதிலும் சிறப்பாக தமிழுக்குத் தொண்டு செய்ததில் வீரமா முனிவர், கால்டுவெல் போன்றவர் களின் அருந்தொண்டுகள் அருந்தமிழ் வாழு மட்டும் வாழ்த்திக் கொண்டே இருக்கும்.

வாழ்க வீரமா முனிவர்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/74651.html#ixzz2sUoVZbOf

தமிழ் ஓவியா said...


பாம்புப் பெண்


சில நாட்களுக்கு முன்பு தாய்லாந்து நாட் டின் தலைநகரான பாங் காக்கில் மார்பகப் பகு திக்கு மேலே பெண் ணாகவும், கீழ்ப் பகுதி பாம்பாகவும் தோற்றமளிக் கும் விசித்திர சிறுமி வாழ்வதாகவும் அந்தப் பெண்ணைக் காண நாள் தோறும் ஆயிரக்கணக் கான மக்கள் வரிசையில் காத்திருப்பதாகவும் செய்திகள் வந்தன.

மேலும் 8 வயதான மய் லி ஃபே என்ற அந்தச் சிறுமி பிறந்த போதே அவளது உடலின் கீழ்ப் பகுதி பாம்பின் தோற்றத் துடனும், தலை முதல் மார்பகம் வரையிலான பகுதி, மனித தோற் றத்துடனும் இருந்ததாக அவருடைய பெற்றோர் கூறுகின்றனர். இதைப் போன்ற வினோதப் பிறவிகள் உல கில் தோன்றுவது மிக, மிக அரிது எனக் குறிப்பிடும் உடல் கூறியல் வல்லுநர் கள், இந்த முரண்பாடான உடல் அமைப்பை மருத்து வக் குறியீட்டின்படி, 'செர் பெண்டொசிஸ் மெலிய னார்கிஸ் அல்லது 'ஜிங் ஜிங் நோய் என்றும் இயற் கைப் படைப்பின் இந்த முரண்பாட்டினை நிவர்த் திக்க இதுவரையில் எவ் வித சிகிச்சை முறையும் கண்டுபிடிக்கப்பட வில்லை எனவும் தாய் லாந்து நாட்டின் மருத்துவ வல்லுநரான மருத்துவர் பிங்லாவ் என்பவர் கூறி யுள்ளதாகவும் கூறுகின் றனர். கதைக்கு கால் முளைத்தாகி விட்டது; இறக்கைகளும் கட்டப் பட்டு விட்டன - இனி அதனைக் காசாக்க வேண் டியதுதானே பாக்கி. ஆரம்பமாகி விட்டது - மூட நம்பிக்கை என் னும் சுரண்டல் தொழில். பாம்புப் பெண்ணான மய் லி ஃபே-வையின் உட லைத் தொட்டு, கண்களில் ஒற்றிக்கொள்ளவும் இந்து, புத்த மதத்தினர், உள்ளூர் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக் கான மக்கள் நாள்தோறும் அதிகாலை முதல் இரவு வரை நீண்ட வரிசையில் கால்கடுக்க காத்துக் கிடக் கின்றனராம் இதனைப் பெரிதுபடுத்தி,

தாய்லாந்து தொலைக் காட்சி ஒன்று தன்னு டைய இணையதளத்தைப் பிரபலமாக்கியுள்ளது பிள்ளையார் பால் குடித்தார் என்று நம் நாட்டில் பரப்ப வில் லையா? தோற்றத்தில் அய்ந்து தலை பாம்பு போல் காய்ந்த தாவரங் கள் மீது, கடவுள் மதச் சாயம் ஏற்றி, மக்களிடம் பணம் பறிக்கலாம் என்று சாணக்கியப் பார்ப்பான் இங்கு கூறியது இப்பொ ழுது தாய்லாந்திலும் குடியேறி விட்டதோ!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/74776.html#ixzz2sdOllkgA

தமிழ் ஓவியா said...


கல்கிகளின் கரிசனங்கள்

கேள்வி: குஜராத் கல வரத்தில் மோடிக்குத் தொடர் பில்லை என்று சொல்லி விட்டதே அகமதாபாத் கோர்ட்?

பதில்: ஜாகியா ஜாஃப்ரி மேல்முறையீடு செய்ய எல்லா வாய்ப்பு களும் உண்டு. குஜராத் கலவரத்தின்போது மோடி அலட்சியமாகவோ அல் லது தூண்டி விடும் விதத் திலோ நடந்து கொண்டதற் கான ஆதாரம் ஏதும் இல்லை என்பதை இத்தீர்ப்பு உறு திப்படுத்தி இருப்பது உண்மை. ஆனால், பெரும் பாலான இஸ்லாமியர் மனதில் இன்னமும் மோடி குறித்த அச்சம் தொடர்வது நல்லதல்ல. அவர் இஸ்லா மியர்களுக்கு நம்பிக்கை யூட்டும் விதமாகப் பேசுவ தும் நடந்து கொள்வதும் நல்லது. போதாக்குறைக்கு இளம்பெண்ணை வேவு பார்த்த விஷயத்தை மத்திய அரசு கிளறி, மோடி மீது விசாரணைக் கமிஷன் போட்டு அவநம்பிக்கையை வளர்க் கிறது. (கல்கி 12.1.2014)

நீதிமன்றம் தீர்ப்புக் கூறி விட்டது என்ற திரைமறை வில் கல்கிகள் ராமனைப் போல மரத்தின் பின் ஒளிந்து கொண்டு மோடியைக் காப் பாற்ற முயற்சிக்கின்றன.

கல்கிகளுக்கு மிகவும் நெருக்கமான திருவாளர் சோ ராமசாமி இது போன்ற தீர்ப்புகள் பற்றிக் கூறியதை எடுத்துக் கூறி னால் கல்கி கனபாடிகளின் குளிருக்குக் கொஞ்சம் கணப் புச் சட்டியாக இருக்கும்!

இப்போது டான்சி உட்பட அய்ந்து வழக்கு களில் ஜெயலலிதா விடு தலை செய்யப்பட்டிருக் கிறார். விடுதலை என்று தீர்ப்பு வந்து விட்டதாலேயே ஜெயலலிதா நிரபராதி என்று சொல்ல மாட்டேன். - 1991 - 1996 ஆண்டுகளில் பதவி வகித்த அ.தி.மு.க. ஆட்சியின் போது ஊழல் நடந்தது உண்மையே! திமுக ஆட்சிக்கு வந்ததும் தொடர்ந்த வழக்குகளை பொய் வழக்கு என்று கூற மாட்டேன். அ.தி.மு.க. ஆட்சியில் அதிக அளவுக்கு ஊழல் நடந்தது என்பது மறுக்க முடியாது. அப்படி நான் குற்றஞ்சாட்டியதில் எந்தத் தவறும் இல்லை; குற்றச்சாட்டு நிரூபிக்கப் படாததால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார் அவ்வளவுதான்! (துக்ளக் 14.1.2002) என்று திருவாளர் சோ சொன்னதுதான் கல் கிக்கும் பதில்.

பாபர் மசூதி பிரச்சினை யில் நீதிமன்றம் சொன் னாலும் ஏற்க மாட்டோம். காரணம் இது எங்களின் நம்பிக்கைப் பிரச்சினை என்று அரட்டை அடிப்ப வர்கள், மோடி விடயத்தில் நீதிமன்றத்தைப் பிடித்துக் கொண்டு தொங்குவதை ஒப்பிட்டுப் பார்க்க வேண் டும்.

இதே மோடியை உச்ச நீதிமன்றம் நீரோ மன்ன னுக்கு ஒப்பிட்டுச் சொன் னதை மிக வசதியாக மறந்து விடுவார்கள் - ஏன் மறைக் கவும் முயலுவார்கள். குஜ ராத்தில் இரண்டாயிரத்துக் கும் மேற்பட்ட முசுலிம் கள் கொல்லப்பட்டபோது ஆட்சியில் முதல் அமைச்ச ராக இருந்தவர் நரேந்திர மோடி இல்லை என்று கூடச் சொன்னாலும் சொல் வார்கள் - யார் கண்டது?

பிஜேபி சட்டமன்ற உறுப்பினர்களே, குஜராத் கலவரத்தின்போது முதல்வர் மோடி எப்படி எல்லாம் எங்களுக்குக் கட்டளையிட்டார் என்று தெகல்காவிடம் கூறியது வீடியோ காட்சிகளாக வெளி வந்ததே - மறுக்க முடியுமா?

மோடி ஆட்சியில் மிக உயர்ந்த பதவிகளில் இருந்த காவல்துறை அதிகாரிகளே குஜராத் கலவரத்தில் மோடி யின் பங்கை விலாவாரி யாகக் கூறி இருக்கிறார்களே - அப்படி உண்மையைச் சொன்ன அதிகாரிகளைக் கூட பொய் வழக்கில் சிக்க வைத்து சிறையில் தள்ளிய புண்ணியவான் ஆயிற்றே மோடி.

அரியலூரில் ரயில் கவிழ்ந் ததால் ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரியும், இணை அமைச்சர் ஓ.வி. அழகேசனும் பதவிகளை ராஜினாமா செய்தார்களே! காரணம் என்ன? இந்த இரண்டு பேர்களுமா அந்த ரயிலை ஓட்டினார்கள்?

குஜராத் மாநிலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்ட போது ஆட்சியில் முதல மைச்சராகவிருந்த மோடி பொறுப்பு ஏற்க வேண் டாமா? ராஜினாமா செய்ய வேண்டும் முதல் அமைச் சர் மோடி என்று பிரதம ராக இருந்த வாஜ்பேயி சொன்னதாக அத்வானி கூறியது ஏன்?)

நாணயமான - நேர்மை யான மனிதராக மோடி இருந்தால் குஜராத் கலவ ரத்திற்கான பொறுப்பை ஏற்று அன்று ராஜினாமா செய்திருக்க வேண்டும் அல்லது இப்பொழுதா வது அதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

குஜராத்தில் முசுலிம் கள் கொல்லப்பட்டதை யும் காரில் பயணம் செய் யும் பொழுது நாய்க் குட்டி அடிபடுவதையும் சமமாக ஒப்பிட்டு இப்பொழுது கூடச் சொல்லுகிறார்கள்! என்றால் - இத்தகையவர் களைக் காப்பாற்ற கல்கி கூட்டங்கள் கனைக்கின் றன என்றால் அவாளின் குரூரக் குணத்தையும், மத வெறியையும் கணக் கிட்டுக் கொள்ளலாமே!

- கருஞ்சட்டை

Read more: http://viduthalai.in/page1/74778.html#ixzz2sdPVPyhc

தமிழ் ஓவியா said...


வளர முடியும்


நமது நாட்டில் மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், பேதமும் உண்டாக்கவே கடவுள், மதம், ஜாதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை ஒழிந்த இடத்தில்தான் மனிதனுக்கு அன்பு வளர முடியும்.

- (விடுதலை, 20.9.1968)

தமிழ் ஓவியா said...


மோடியின் கொல்கத்தா பேச்சில், வங்காளிகளின் மூக்கைச் சொறிகிறாராம் மோடி?


மோடியின் கொல்கத்தா பேச்சில்,
வங்காளிகளின் மூக்கைச் சொறிகிறாராம் மோடி?

- ஊசி மிளகாய்

இவர் நிலை என்ன?

கொல்கத்தாவில், பேசிய நரேந்திரமோடி, பெரிய தேசீயவாதி என்றும், ஆர்.எஸ்.எஸ். குறுகிய ஜாதி, மாநில பிரிவுகள் எண்ணங்களிலிருந்து விடுபட்டு தேசீய பார்வை மக்களுக்கு அளிக்கவே அவதாரம் எடுத்ததாகச் சொல்லி பீற்றிக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்.ஆல் பி.ஜே.பி.யின்மீது திணிக்கப்பட்ட பிரதமர் வேட்பாளராக ஆங்காங்கே பெருங் கூட் டத்தை அழைத்து வந்து, மீடியாக்கள், பெரு முதலாளி கள் தயவுடன் விளம்பர வெளிச்சத்தில் உலா வருகிறாரே! குஜராத் மக்களிடத்தில் பேசும்போது சர்தார் வல்லபாய் பட்டேலுக்காக உருகுகிறார் வல்லபாய் பட்டேலுக்கு சிலை என்ற வித்தையில் இறங்கி அதனை அரசியல் யுத்தியாக்கி நேருவைத் தாக்கி, பட்டேலை உயர்த்துகிறார்!

மேற்கு வங்காளத்திற்குச் சென்றால், அங்கே பிரணாப் முகர்ஜியைத் தூக்கி அவரையல்லவா மன்மோகன்சிங்க்குப் பதில் பிரதமராக்கி இருக்க வேண்டும்? என்று வங்க வாக்கு வங்கியைக் குறி வைக்கிறார்! பிரணாப் முகர்ஜி போன்றவர்கள் இருக்க இவர் எப்படி பிரதமர் என்றார்! அது காங்கிரஸ் கட்சியும் தலைமையும் தீர்மானிக்க வேண்டிய உள் விஷயங்கள். அதே கேள்வியை மோடியைப் பார்த்து மற்றவர் களும் கேட்கலாமே!

மூத்த தலைவர் அத்வானி,
எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மாசுவராஜ்,
மூத்த மற்ற தலைவர் ஜஸ்வந்த் சிங்,
முரளி மனோகர் ஜோஷி இப்படிப் பலரைப் பின் தள்ளி மோடி எப்படி - ஆர்.எஸ்.எஸ். ஆணைப்படி இப்படி ஒரே அடியில் ஜாக்பாட் பெற்றார்?

அதற்குச் சில வாரங்களுக்குமுன் நான் குஜராத் முதல் அமைச்சராக மட்டுமே நீடிப்பேன் என்றாரே அது ஏன் காற்றில் பறந்தது?

Read more: http://viduthalai.in/e-paper/74820.html#ixzz2sgnr8ekz

தமிழ் ஓவியா said...

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பளிங்குகல்லிலான பிள்ளையார் சிலை

கரூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகம் முன்பு பளிங்குகல்லிலான விநாயகர் சிலை அரச மரம், வேப்ப மரம் ஒருங்கே அமைந்துள்ள இடத்தில் செங்கற்களை அடுக்கி அதன் மேல் விநாயகர் சிலையை வைத்தும், அரளி பூ மாலை போட்டும் விளக் கேற்றியும், பூலப்பூ மரத் தில் சூட்டியும், குங்குமம், மஞ்சள், சாம்பல் (திருநீறு) கொண்டும் தினமும் அங்கு பூசை செய்து வருவதாக அலுவலக ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

அரசு அலுவலக வளா கங்களில் மதவழிபாட்டுத் தலங்களை அமைக்கக் கூடாது என்னும் அரசா ணை படி எந்த அரசு அலுவலகங்களிலும், ஒரு குறிப்பிட்ட மத சம்பந்த மான கடவுள் சிலை வைத்து வழிப்படக் கூடாது என் றும் அரசாணையை மதிக் காமல் செயல்படும் நபர் கள்மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட ஆட்சித் தலைவர் ச. ஜெயந்தி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். உடனடியாக அந்த கோயில் சிலை பகு தியை அகற்ற உத்தரவிட வேண்டும்.

சமூக விரோ திகள்மீது தக்க தண்டனை வழங்க வேண்டும். இல்லை யேல் கரூர் மாவட்ட திராவி டர் கழக தோழர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களைத் திரட்டி பெரிய போராட் டம் நடைபெறு வதை தவிர்க்க வேண்டுகிறோம். தகவல்: தே. அலெக்சாண்டர், கரூர் மாவட்ட செய்தியாளர்

Read more: http://viduthalai.in/e-paper/74825.html#ixzz2sgoR5PLc

தமிழ் ஓவியா said...


அபவ்ருஷம்


வேதம் என்பது எப்போது, யாரால் சொல்லப்பட்டது என்பதை மறைப்பதற்கு ஆகவே அது அனாதி என்றும், மனிதனால் சொல்லப்படாத அபவ்ருஷம் என்றும் சொல்லப்படுகிறது.
(விடுதலை, 8.3.1953)

Read more: http://viduthalai.in/page-2/74826.html#ixzz2sgolPfCz

தமிழ் ஓவியா said...


நீதி கெட்டது யாரால்?

- குடந்தையான்

ஆசிரியர் தகுதித் தேர்வில், ஒடுக் கப்பட்ட மக்களுக்கு மதிப்பெண் தளர்த்தப் பட வேண்டும் என்ற மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்ற காரணத்தைச் சொல்லி தள்ளுபடி செய்துள்ளது.

நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு சரியா? கொள்கை முடிவுகளில் நீதி மன்றங்கள் தலையிட்டது இல்லையா?

தமிழ் நாட்டில், பெரும்பான்மை மக்களான ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 69 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்திட வேண்டும் என்ற அரசின் கொள்கைக்கு, எந்த அடிப்படையில் உச்ச நீதி மன்றம் தடை விதித்தது?

அரசியல் சட்டம் 340-இன் படி அமைக்கப்பட்ட மண்டல் குழுவின் பரிந்துரைப்படி, விபி சிங் அரசு, பிற் படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இட ஒதுக் கீடு வழங்கிய ஆணையை, மத்திய அரசு கொள்கை முடிவாக அறிவித்த தற்கு, உச்சநீதிமன்றம் எந்த அடிப் படையில் முதலில் தடை விதித்தது? 50 விழுக்காட்டிற்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்றும், பிற்படுத் தப்பட்டோரில் முன்னேறிய பிரி வினரை நீக்க வேண்டும் என்றும், அரசின் கொள்கை முடி வுக்கு எதிராக, அரசியல் சட்டத்தின் பிரிவுகளுக்கு எதிராக, எந்த அடிப் படையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது?

ஆக, பெரும்பான்மை ஒடுக்கப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக, அரசு கொள்கை முடி வினை எடுத்தால், நீதி மன்றங்கள் எதிராகவும், இந்த மக்களுக்கு எதிரான ஒரு முடிவை எடுத்தால், நீதி மன்றங்கள், கொள்கை முடிவில் தலையிட முடியாது என்றும், தீர்ப்பு அளிப்பது, நீதி கெட்டது யாரால் என்ற வரலாற்றுப் பதிவினை, புரட் சியாளர் பெரியார் நீதி மன்றத்தில் பதிவு செய்ததை, நினைவுப்படுத் தவும், இன்றளவும் நீதிமன்றங் கள் மாறவில்லை என்பதாகவும் தான் நாம் கருத வேண்டியுள்ளது. ஒடுக்கப் பட்ட மக்களுக்கு எதிரான பாசிச ஆட்சி யின் முன்னோட்டமாக, நீதி மன்றங் களும், ஊடகங்களும், அண்மைக் காலமாக தங்களது கருத்து களை பதிவு செய்து வருகின்றன என்பதை யும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டிய தருணம் இது.

Eternal vigilance is the price of liberty. உரிமைக்கான விலை, நாம் என்றும் விழிப்புணர்வோடு இருத்தலே.

Read more: http://viduthalai.in/page-2/74833.html#ixzz2sgpdtDms

தமிழ் ஓவியா said...


குண்டுவெடிப்புகளில் சுசீமானந்த் அளித்த செய்தி அனைத்தும் உண்மையே!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் பகவத் உத்தரவு பேரில் குண்டுவெடிப்புகளில் சுசீமானந்த் அளித்த செய்தி அனைத்தும் உண்மையே!

செய்தி சேகரித்த பத்திரிகையாளர் லீனாகீதா ரகுநாத் தகவல்


புதுடில்லி, பிப்.7- ஆர்.எஸ்.எஸ். தலைவர் பகவத் உத்தரவின் பேரில் குண்டு வெடிப்புகள் நடத்தப் பட்டன என சிறையில் இருக்கும் இந்து தீவிரவாத சுவாமி அசீமானந்த் அளித்த தகவல் அனைத்தும் உண் மையே என்றும் அவர் குரல் பதிவை கொடுக்கத் தயார் என்றும் செய்தி சேகரித்த பத்திரிகையாளர் லீனா கீதா ரகுநாத் இன்று தனியார் தொலைக்காட்சி நேர் காணலில் கூறியுள்ளார்.

இந்தியாவில் நடந்த சில பயங்கரமான குண்டுவெடிப் பில் நூற்றுக்குக்கும் மேற் பட்டோர் கொல்லப்பட்ட னர். இந்த குண்டுவெடிப்பு வழக்கில் காவித்தீவிரவாதி களின் நேரடி தொடபை ஆதாரத்துடன் நிறுபிக்கப் பட்டு சாது பிரஞ்யா தாக்கூர் என்ற பெண் சாமியார், அசி மானந்தா, இந்திய ராணுவப் படையில் உயரதிகாரி பொறுப்பு வகித்த சிறீகாந்த் புரோகித் மற்றும் தயானந்த் பாண்டே போன்றவர்கள் கைதாகி சிறையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஆர் எஸ் எஸின் நேரடி தொடர்பில் இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சம்ஜோதா விரைவு தொடர்வண்டி குண்டுவெடிப்பில் கைதான அசிமானந்தா என்ற சாமியார் ஹரியானா மாநிலம் அம் பாலா சிறையில் இருந்து வருகிறார். இவரிடம் காரவன் என்ற ஆங்கில மாத இதழ் நேரடி பேட்டி ஒன்று எடுத்தது. இந்த பேட்டியின் போது பல முக்கிய திடுக்கிடும் தகவல் களைக் கூறினார். அதில் முக்கியமானது இன்று மத்தியில் ஆட்சி அமைக்க துடித்துக்கொண்டு இருக்கும் பாரதிய ஜனதா கட்சியை இயக்கிக்கொண்டு இருக்கும் ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத் தான் இத் தனை தீவிரவாதத் தாக்கு தலுக்கும் காரணமானவர் அவரின் ஆணைப்படிதான் குண்டுகள் வைக்கப்பட்டது என்ற தகவல்.

இந்த செய்தி வெளிவந்த உடனே டில்லியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்துவங்கியது. எப்போதும் போல் பாரதிய ஜனதா இது பொய்யான ஒரு செய்தி என்றும் ஆதார மில்லாத இந்த செய்தியை பாரதிய ஜனதாவின் நரேந்திர மோடி பதவிக்கு வரவிடாமல் செய்ய காங்கிரஸ் மற்றும் சில தேச விரோத சக்திகளுக்கு வளைந்துகொடுக்கும் கட்சிகளின்\இயக்கங்களின் சதிச்செயல் என்று கூறியது. இந்த செய்தி குறித்து தனியார் தொலைக்காட்சியில் அளித்த நேர்காணலில் கார வான் இதழுக்காக இந்த செய்தியை சேகரித்த இணை ஆசிரியர் லீனா கீதா ரகுநாத் கூறியதாவது. இந்த செய்தி அனைத்தும் உண்மையே.

இது அவரிடம் இருந்து வாய் மொழியாக பதிவுசெய்யப் பட்டுள்ளது, எந்த விசா ரணைக்கும் இந்த குரல் பதிவை கொடுக்கத்தயார் என்று கூறினார். ஹரியா னாவில் உள்ள அம்பாலா சிறையில் உள்ள அசீமானந் தாவை சிறை அதிகாரிகளின் அனுமதியின் பேரில் சந்தித்து பேட்டி எடுத்தேன். மேலும் பேட்டியை அவரது அனுமதி யின் பேரில் தான் குரல் பதிவு செய்தேன் என்று கூறினார். காரவன் இதழ் அசிமானந் தாவின் குரல் பதிவை (இன்று)வெள்ளிக்கிழமை காலை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியது.

Read more: http://viduthalai.in/page-3/74811.html#ixzz2sgpzkdBK

தமிழ் ஓவியா said...


பேரறிவாளன் உள்ளிட்ட மூவர் வழக்கில் மத்திய அரசின் நிலைப்பாடு சரியல்ல: கலைஞர் கருத்து

சென்னை, பிப்.7- தூக்குத் தண்டணைக் கைதி களான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்கள் தொடர் பான வழக்கில் மத்திய அரசின் நிலைப்பாடு சரியல்ல என தி.மு.க. தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று (7.2.2014) முரசொலியில் கலைஞர் பதில்கள் பகுதியில் அவர் அளித்துள்ள கருத்து வருமாறு:-

கேள்வி :- தூக்குத் தண் டனைக் கைதிகளின் கருணை மனுக்களில் முடிவு எடுக்க கால தாமதம் கூடாது என்று உச்சநீதிமன்றம் வரலாற் றுச் சிறப்பு மிக்க தீர்ப் பினை அளித்த பிறகும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண் டனை விதிக்கப்பட்ட சாந் தன், முருகன், பேரறிவா ளன் ஆகியோரின் வழக்கில் மத்திய அரசு அவர்களை விடுவிக்க வேண்டாமென்று மனு செய்திருக்கிறதே?

கலைஞர் :- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப் பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகி யோரின் தண்டனையை உச்சநீதிமன்றம் 2000ஆம் ஆண்டு உறுதி செய்தது. அதன் பின்னர் தி.மு. கழக அரசு மேற்கொண்ட முயற்சி காரணமாக நளினிக்கு விதிக் கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்கள், குடியரசுத் தலை வரிடம் 11 ஆண்டுகள் நிலுவையில் இருந்த பிறகு 2011ஆம் ஆண்டு குடியரசுத் தலைவரால் தள்ளுபடி செய்யப்பட்டன. தங்களின் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் குடியர சுத் தலைவர் அலுவலகம் 11 ஆண்டுகள் கால தாமதம் செய்தது என்ற காரணத்தைக் காட்டி, தங்கள் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டுமென்று இவர்கள் மூவரும் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் கருணை மனுக்கள் மீது முடிவெடுப் பதில் காட்டப்பட்ட மித மிஞ்சிய தாமதம், விவரிக் கப்படாத தாமதம், தண் டனைக் குறைப்புக்குத் தகுதியானது என்று கூறி வீரப்பன் நண்பர்கள் நான்கு பேர் வழக்கு உள்ளிட்ட 13 பேர் தொடர்பான வழக்கு களில் சம்பந்தப்பட்ட 15 பேரின் மரண தண்டனையை, ஆயுள் தண்டனை யாகக் குறைத்து 21-1-2014 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித் தது. இந்தத் தீர்ப்பினை யொட்டி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் வழக்கு உச்சநீதி மன்றத்தில் தலைமை நீதிபதி சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் சிவ் கீர்த்தி சிங் ஆகி யோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றிருக் கிறது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், சித்தார்த் லூத்ரா வாதாடுகையில், கருணை மனுக்கள் மீது முடிவெ டுக்க ஏற்பட்ட கால தாம தத்தைக் குறிப்பிட்டு அண் மையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை ஆய்வு செய்ய வேண்டியிருப்ப தால், தங்கள் தரப்பு வாதங் களை முன்வைக்க மேலும் இரண்டு வாரங்கள் கால அவகாசம் தேவை என்றும், வழக்கு விசாரணையைத் தள்ளி வைக்க வேண்டு மென்றும் கேட்டிருக்கிறார்கள்.

அப்போது மனுதாரர் கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத் மலானி கடும் எதிர்ப்பினைத் தெரிவித்திருக்கிறார். அப்போதுதான் நீதிபதிகள் குறுக்கிட்டு, அண்மையில் எங்களால் வழங்கப்பட்ட தீர்ப்பில் கருணை மனுவின் மீது முடிவெடுக்க தேவை யற்ற காலதாமதம் எடுத்துக் கொண்டதை விமர்சித் திருக்கிறோம். எனவே இந்த மனு மீதான விசார ணையை தாமதப்படுத்த முடியாது. ஜனவரி 21ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை புரிந்து கொள்ள மாட்டோம் என்பதுதான் மத்திய அரசின் நிலைப் பாடா? என்று கேட்டு, வழக்கினைத் தள்ளி வைத் தார்கள். தற்போது அவர் களை விடுவிக்க வேண்டா மென்று மத்திய அரசு மனு தாக்கல் செய்திருப்பதாக அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது.

Read more: http://viduthalai.in/page-3/74813.html#ixzz2sgqIaGIL

தமிழ் ஓவியா said...


உடுமலையாரின் பாடல்!

ஆண்: காசிக்குப் போனாக் கருவுண்டாகு மென்ற காலம் மாறிப் போச்சு... இப்ப
ஊசியைப் போட்டா உண்டாகு மென்ற உண்மை தெரிஞ்சு போச்சு

பெண்: ஈசன் செயலால் இறப்பும் பிறப்பும் எல்லாம் நடக்குதுங்க - அதை
எண்ணாமே எவனோ சொன்னான்னு கேட்டு ஏமாந்து போகாதீங்க!

ஆண்: ஆகாரம் சமைக்க சூரிய ஒளியால் அடுப்பை மூட்டுறாங்க
ஆணைப் பெண்ணாக பெண்ணை ஆணாக
ஆளையே மாத்துறாங்க - இங்கே ஆளையே மாத்துறாங்க.

பெண்: அது... ஆயிரங்காலத்துக் கப்பாலே நடக்கிற
ஆராய்ச்சி விசயமுங்க... மூளை
ஆராய்ச்சி விசயமுங்க - நம்ம அறிவுக்குப் பொருத்தம் ஆறு, கோயில், அரசமரந்தானுங்க!

ஆண்: கோழியில்லாமெ தன்னால முட்டைகளில்
குஞ்சுகளைப் பொரிக்க வச்சார் - உங்
கொப்பன் பாட்டன் காலத்தில் யாரிந்த
கோளாறைக் கண்டு பிடிச்சார்.... இந்தக்
கோளாறைக் கண்டு பிடிச்சார்!

பெண்: அந்தக் குஞ்சுகள் பொரிக்க வச்ச கோளாறுக் காரனை
முட்டை யொண்ணு பண்ணச் சொல்லுங்க? - பார்ப்போம்
முட்டை யொண்ணு பண்ணச் சொல்லுங்க - வாய்
கூசாமல் எதையும் யோசனை செய்யாமே பேசுவது தப்பித முங்க

ஆண்: எட்டாத விஷயத்தை ஈசன் பெயரால்
இயற்கை யெங்குறாங்க - இனிமேல்
இயற்கையுங் கூட செயற்கையில்.. ஆகும் முயற்சியும் பண்ணுறாங்க!

- சுயமரியாதைக் கவிஞர் உடுமலை நாராயண கவி இயற்றி கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், மதுரமும் பாடிய பகுத்தறிவுக் கருத்துகள் நிறைந்த இப்பாடல் டாக்டர் சாவித்திரி எனும் படத்தில் இடம் பெற்றுள்ளது.

Read more: http://viduthalai.in/page-8/74850.html#ixzz2sgquEJDJ

தமிழ் ஓவியா said...


வசம் கெட்டது!


குடிக்கவும் நீரற்றிருக்கும் - ஏழைக்
கூட்டத்தை எண்ணாமல் கொடுந்தடியர்கள்
மடங்கட்டி வைத்ததினாலே - தம்பி
வசம் கெட்டுப் போனது நமது நாடு

- புரட்சிக்கவிஞர்

Read more: http://viduthalai.in/page-8/74851.html#ixzz2sgrA02rs

தமிழ் ஓவியா said...

கே.எம்.பணிக்கர் கூற்று!

ஜாதி உணர்ச்சி பற்றி குற்றம் சாட்டும் பெரும்பாலோர் ஜாதிகளின் பிரதிநிதிகளாகவே இருந்தவர்கள்!

ஒரு காலத்தில் அவர்கள் தங்கள் பகுதிகளில் அரசியல் ஆதிக்கத்தை ஏக போகமாக அனுபவித்து வந்தவர்கள். இன்று வயது வந்தோர்க்கு வாக்குரிமை என்பதன் அடிப்படையில் உள்ள மக்கள் ஆட்சியில் இதுவரை சமுதாயத்தில் செல்வாக்கும் அரசியல் ஆதிக்கமும் இழந்திருந்த மக்கள் தங்களுக்குச் சவால் விடும் அளவுக்கு உயர்ந்து விட்டனரே என்பதால்தான் ஜாதி உணர்ச்சி ஓங்கி விட்டது என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஜனநாயக வழிமுறைகளினால் கீழ் ஜாதிக்காரர்கள் அரசியல் ஆதிக்கம் வகிக்கும் அளவுக்கு முன்னேறி வருவது இந்திய ஜனநாயகத்தில் மிகவும் வரவேற்கத்தக்கதொரு அம்சமாகும்.

- ஜம்மு - காஷ்மீர் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.எம்.பணிக்கர், கருநாடகப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் 1962ஆம் ஆண்டு உரையாற்றியது.

Read more: http://viduthalai.in/page-8/74851.html#ixzz2sgrMUhLG

தமிழ் ஓவியா said...

மதம் தோன்றியதும் உண்மை மறைந்தது

ஆரம்பக் காலத்தில் மதம் என்பது இருந்ததில்லை... மதம் தோன்றியதும் உண்மை மறைந்தது. எனது மதம் என்றும், உனது மதம் என்றும் மோதல் இருக்கும் போது உண்மையும் மதமும் இணைந்திருக்க முடியுமா?

- கேரளம் சுவாமி சிவானந்த பரமஹம்சர்

Read more: http://viduthalai.in/page-8/74851.html#ixzz2sgrTfZ1m

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவுச் சிந்தனை!

அறிவு வளர்ச்சி அடையும் போது அதோடு கூடவே பணிவு என்னும் நற்பண்பும் வளர்ச்சிப் பெறுகிறது. புத்திசாலித்தனமான பணிவுத்தன்மை - அடிமைத்தனமாகாது.அறியப்பட்ட உண்மைகளுக்குக் கீழ்ப்படிவது அரசர் செயல்; அடிமையின் செயலல்ல.பணிவு பெருமையை உண்டு பண்ணுமேயன்றி, ஒரு போதும் அவமதிப்பைத் தேடிக் கொடுக்காது. - ஷேக்ஸ்பியர்

Read more: http://viduthalai.in/page-8/74851.html#ixzz2sgra0qZh

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வு: இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயம்


சென்னை, பிப்.7- ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 விழுக்காடு மதிப்பெண் சலுகைக்குப் பிறகு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ண யிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடி யினர், பிற்படுத்தப்பட் டோர், பிற்படுத்தப்பட் டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் 150-க்கு 82 மதிப்பெண் பெற் றாலே தேர்ச்சி பெறலாம்.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அரசாணை யின் விவரம்: ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவதற்கான தேர்ச்சி மதிப்பெண் (60 விழுக்காடு) 150-க்கு 90 ஆக நிர்ணயிக்கப் பட்டிருந்தது.

இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதிலளித்த முதல்வர், ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங் கப்படும் என அறிவித்தார்.

இந்த மதிப்பெண் சலு கைக்குப் பிறகு இடஒதுக் கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 82.5 ஆகக் குறைகிறது. இந்த மதிப்பெண்ணை முழு மதிப்பெண்ணாக மாற்று வதற்காக இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 82 என நிர்ண யம் செய்யப்படுகிறது.

அதேநேரத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற பொதுப்பிரிவி னர் 150-க்கு 90 மதிப்பெண் பெற வேண்டும்.

இந்த மதிப்பெண் சலுகையையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண் 82 ஆக நிர்ண யிக்கப்படுகிறது.

இனி நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு களிலும் பொதுப்பிரிவினருக் கான தேர்ச்சி மதிப்பெண் 90 எனவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப் பெண் 82 எனவும் நிர்ணயிக் கப்படுவதாக அந்த அரசா ணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

10 ஆயிரம் பேர் வரை அதிகரிக்கலாம்: இடஒதுக் கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணை 82.5-க்குப் பதில் 82 என நிர்ணயித்துள்ளதால் 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக 10 ஆயிரம் பேர் வரை தேர்ச்சி பெற வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்விகள் மட்டுமே இடம்பெறும்.

எனவே, 82.5 என்ற மதிப் பெண்ணுக்குப் பதிலாக 82 அல்லது 83 என்ற முழு மதிப்பெண் மட்டுமே தேர்ச்சி மதிப்பெண்ணாக நிர்ணயிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 மதிப்பெண் வரை பெற்ற இடஒதுக் கீட்டுப் பிரிவினர் கணக் கெடுக்கப்பட்டு, அவர்களுக் கென தனியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.

அதன் பிறகே, பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடை நிலை ஆசிரியர் பணி நிய மனம் இருக்கும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Read more: http://viduthalai.in/page-8/74846.html#ixzz2sgrlIwCv

தமிழ் ஓவியா said...

எலி ஒழிப்பிலும் மதம்!

நிருபர்: சேமிப்பு உணவு தானியங்களை எலிகள் பாழடித்து விடுகின்றன. சிலர் பட்டினியால் சாகக் கூடிய நிலை இருந்தும், பம்பாய் தானாபந்தர் பகுதியில் பெரும் வியாபாரிகள் அந்த நகர சபையின் எலி ஒழிப்புத் திட்டத்துக்குப் பெரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.

பிரதமர்: பம்பாயிலா அப்படி நடக்கிறது?

நிருபர்: ஆம்; பம்பாயில் தான்.

பிரதமர்: எனக்குத் தெரியாது. அதுபற்றி நான் கவனிக்கிறேன். அவர்கள் ஏன் இந்த திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்?
நிருபர்: மத உணர்ச்சி அடிப்படையில் எதிர்க்கிறார்கள்.

பிரதமர்: எலி ஒழிப்பிலுமா மத உணர்ச்சி?

நிருபர்: ஆமாம்; எலி ஒழிப்பில்தான் மத உணர்ச்சி. இது அங்கு நிறைய இருக்கிறது ; இதை நீங்கள் நன்றாக கவனிக்க வேண்டும்.

பிரதமர்: இது மிகவும் வருத்தத்திற்குரியது. நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன; இவர்கள் இப்படியெல்லாம் எதிர்ப்புத் தெரிவிப்பதினால்தான் எந்தப் பிரச்சினைகளையும் வெல்லமுடியவில்லை.

- பிளிட்ஸ் ஏட்டுக்கு பிரதமர் அளித்த பேட்டி, 26.2.1977 இதழிலிருந்து

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/74849-2014-02-07-12-27-41.html#ixzz2sjAiYSdI