ஓடிக்கொண்டிருக்கும் பெரியாரியல் இணைய நதியாய்....
பல ஆண்டுகள் தொடர்ந்து காலை 4 மணி முதல் காலை 6 மணிவரை இணையத்தில் தகவல்களை ஏற்றும் தோழர். விடுதலையில் , உண்மையில் , பெரியார் பிஞ்சுவில் வரும் செய்திகளை, தனது வலைத்தளத்தில் தரும் தோழர். ஆரம்பித்த காலத்தில் , பரம்பரைப் பகைவர்கள், பொய்ப்பெயர்களில் வந்து திட்டிக் குவித்தபோதும், ஆபாசமாய் அர்ச்சித்த போதும், தனது பணியைத் தொடர்ந்து செய்தவர். பழகுவதற்கு மிகவும் இனியவர். சாதி மறுப்புத்திருமணம் செய்து கொண்டவர்.நண்பரின் இணையர் தமிழரசி, மேல் மெய்ஞ்ஞானபுரத்து திராவிடர் கழகக் குடும்பத்தினைச்சேர்ந்தவர். ஒத்த மனதினராய், ஒருமித்த கருத்தினராய், தந்தை பெரியாரின் கருத்துக்க்ளை தரணி எங்கும் கொண்டு செல்லும் ஆற்றல் மிக்க இணையருக்கு ஆக்கபூர்வமாய் ஒத்துழைக்கும் அன்புத் தங்கை தமிழரசி அவர்கள். பெரியார் பன்னாட்டு மையத்தின் தலைவர் , மதிப்பிற்குரிய சிகாகோ டாக்டர் சோம்.இளங்கோவன் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னால் , மிகப்பெரிய பணி, தமிழ் ஓவியாவின் பணி, அவரை அறிவீர்களா எனக்கேட்டார். நன்றாக அறிவேன் என்று கூறியபோது, மிகப்பெரிய அளவிலே பாராட்டினார்கள். இன்றைக்கும் உலகத்தில் இருக்கும் பெரியார் தொண்டர்கள், தமிழர் தலைவர் ஆசிரியரின் தலைமையைஏற்றுச்செல்பவர்கள் எல்லாம் பார்த்து வியக்கும் வண்ணம் , அன்பிற்குரிய நண்பர் பழனி வ.மாரிமுத்து அவர்களின் பணி அமைந்துள்ளது. இயக்க ரீதியாக என்னைச்சுற்றி இருக்கும் பல தோழர்களைப் பார்க்கிறேன், வியக்கின்றேன். என்ன எதிர்பார்ப்பு வாழ்வில் அவர்களுக்கு, தந்தை பெரியார் சொன்ன மனித நேயக்கொள்கை வளரவேண்டும் என்பதனைத் தவிர. , தன் வீட்டுச்சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு,தன் சொந்தக் காசை செலவழித்து பொதுத்தொண்டு ஆற்றும் பெரியாரின் தொண்டர்களைப் பார்த்து பல நேரம் வியந்திருக்கின்றேன். . பழனி மாவட்டத்தின் பகுத்தறிவாளர் கழக மாவட்டத்த்லைவராக பணியாற்றக்கூடிய அருமையான தோழர் அவர். அவரின் பணி இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். அவருடைய உழைப்பிற்கு தலை வணங்குகின்றேன்.
"19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி " என்று தன்னுடைய வலைத்தளத்தில் பதிந்திருக்கின்றார் தமிழ் ஓவியா .
இதுவரை அவரது வலைத்தளத்திற்குள் செல்லாதவர்கள் சென்று பாருங்கள் . http://thamizhoviya.blogspot.in/. வியந்து போவீர்கள். ஓடிக்கொண்டிருக்கும் பெரியாரியல் இணைய நதியாய்- தமிழ் ஓவியாவின் வலைத்தளம்,பாராட்டுக்கள் , பாராட்டுக்கள். .
-----------------------நன்றி. பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மானமிகு முனைவர் வா. நேரு அவர்கள் அவருடைய தளத்தில் எழுதியுள்ள கட்டுரை -- மேலும் தகவல் அறிய கீழ்கண்ட சுட்டியை சுட்டவும்
http://vaanehru.blogspot.in/2013/12/11.htm
25 comments:
ன்றைய நமது கேள்வி????
அ.இ.அ.தி.மு.க. தேர் தல் அறிக்கையில் மத்திய காங்கிரஸ் கூட்டணி மற்றும் தி.மு.க.வால் தமிழகத்திற்கு இழைக் கப்பட்ட துரோ கங்கள் என்று (பக்கம் 11-13) விளாசப்பட்டுள்ளதே - அதில் சேது சமுத்திர கால்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்திடத் துடிக்கும் துரோகிகள் என்று ஏன் குற்றப் பத்திரிகைப் படிக்கவில்லை? உள்ளுக்குள் பயமோ!
Read more: http://viduthalai.in/e-paper/75978.html#ixzz2uTuAa9Ej
வரலாற்றுப் பிழைகளின் குப்பைத் தொட்டியான மோடி ராஜ்ஜியம்
காந்திநகர், பிப்.26- வர லாற்று விவரங்களை தப் புத்தப்பாக குஜராத் முதல் வர் நரேந்திரமோடி பேசி வருவது ஒன்றும் தற்செய லான விஷயமல்லவோ என்று சந்தேகம் கிளம்பு மளவுக்கு அம்மாநிலப் பள்ளிப்பாடங்கள் அமைந் துள்ளன. இமாலயத்தவறு என்று சுட்டிக்காட்டுகிறார்கள்
ஆங்கில மொழி வழியில் எட்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கான சமூக அறிவியல் பாடப்புத்தகம் மொத்தம் 124 பக்கங்களைக் கொண்டதாகும். இதில் 59 பிழைகள் உள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வெறும்மாதிரிதான் என்றும், கிட்டத்தட்ட ஆங் கில மற்றும் குஜராத்தி வழிக் கல்வி ஆகிய இரண்டிற்கு மான பாடப்புத்தகங்களில் இப்படித்தான் நிலைமை உள்ளது என்று குற்றம் சாட் டுகிறார்கள் கல்வியாளர்கள். அதோடு நிற்கவில்லை, இவையெல்லாம் பிழைகள் என்று சொல்வது பிரச்சி னையைக் குறைத்து மதிப் பிடுவதாகும். இமாலயத் தவறு என்று சுட்டிக்காட்டு கிறார்கள் அந்தக் கல்வி யாளர்கள்.
யார் சுட்டுக் கொன்றது?
சில எடுத்துக்காட்டுகள், இரண்டாம் உலகப் போர் நிறைவடையும் தருணத்தில் அமெரிக்கா மீது ஜப்பான் அணுகுண்டு வீசித்தாக் கியது. நாட்டின் தந்தை என அழைக்கப்படும் காந்தி யார், அக்டோபர் 30, 1948 அன்று சுட்டுக் கொல்லப் பட்டார். (தேதியைத் தவ றாகக் குறிப்பிடும் பாடப் புத்தகத்தில் யார் சுட்டுக் கொன்றது என்ற விபரம் கவனமாக நீக்கப்பட்டிருக் கிறது).
தாதாபாய் நவ்ரோஜி, சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் கோபாலகிருஷ்ண கோகலே ஆகியோர் தீவிர வாதிகள் என்று அழைக்கப் பட்டனர். 1947 இல் நாடு பிரிந்த போது, இஸ்லாமிய இஸ்லா மாபாத் என்கிற புதிய நாடு உருவானது.
அதன் தலை நகராக இந்துகுஷ் மலைத் தொடரிலுள்ள கைபர்காட் அமைந்தது. ஆயிரக்கணக்கான மாண வர்கள் இவற்றை மனப் பாடம் செய்து தேர்வு எழு தத் தயாராகியுள்ள நிலை யில், ஆம்! தவறுகள் நேர்ந் துள்ளன. அவற்றைப் பட்டி யலிட்டு இணையதளத்தில் வெளியிடப் போகிறோம் என்கிறார் பள்ளி நூல்களுக் கான வாரியத் தலைவர் நிதின் பேதானி.
Read more: http://viduthalai.in/e-paper/75981.html#ixzz2uTuI00cm
செய்திக் கொத்து
என்ன சந்தோஷமோ?
எந்த ஒரு நல்ல திட்டமாக இருந்தாலும் சரி - அது தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டால், அதற்கு மூடுவிழா செய்வதுதான் இந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் சாதனை!
சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையில் பறக்கும் சாலைத் திட்டம் தி.மு.க. ஆட்சியின்போது செயல்படுத்தப்பட்டது. பணிகள் தொடங்கப்பட்டு, குறிப்பிட்ட அளவுக்கு முடிக்கவும் பட்டன. இந்த நிலையில், அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த நிலை யில், அந்தத் திட்டம் முடக்கப்பட்டது. அதனை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் திட்டத்தை நிறைவேற்று மாறு தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்துள்ளது செல்வி ஜெயலலிதாவின் தலை மையிலான இவ்வாட்சி.
இதுபற்றி செய்தி வெளியிட்டுள்ள தினமலர் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு? துறைமுகம் - மதுரவாயல் மேம் பால சாலைத் திட்டத்தில் திருப்பம் என்று தலைப் பிட்டு மகிழ்ந்துள்ளது. இதில் என்ன திருப்பம் வேண்டிக் கிடக்கிறது? வேண்டுமானால், குதர்க்கம் என்று போட்டிருக்கலாம்.
ரூ.1816 கோடியில் மேற்கொள்ளப்பட்ட, மக்கள் நலன் சார்ந்த - போக்குவரத்து நெரிசலுக்கு விடிவு காணக்கூடிய ஒரு திட்டத்தை ஓர் அரசு முடக்குகிறது என்றால், இதற்குப் பெயர் மக்கள் நல அரசா? இதுபற்றி எல்லாம் இந்த நாட்டு ஊடகங்கள் வாயைத் திறக்கவே திறக்காது!
இதில் அமைதி - வளம் - வளர்ச்சி என்ற தேர்தல் கோஷம் வேறு!
இத்தாலி
கேரளாவைச் சேர்ந்த மீனவர்கள் இருவரை இத்தாலி கடற்படையினர் 2012 இல் இந்தியக் கடல் எல்லைக்குள் சுட்டுக் கொன்றனர்; அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜாமீனில் வெளியில் வந்தனர். இப்பிரச்சினையில் இந்தியா - இத்தாலி ஆகிய நாடு களிடையே உரசல் ஏற்பட்ட சூழலில், குற்றவாளிகளை மரண தண்டனையிலிருந்து விடுவிக்கும் வகையில், கடற்கொள்ளைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கைப் பதிவு செய்யாமல் வேறு பிரிவுகளில் வழக்கைப் பதிவு செய்ய இந்தியா முடிவெடுத் துள்ளதாம்.
குற்றம் ஆளுக்கு ஆள், நாட்டுக்கு நாடு மாறு படக்கூடிய நிலவரத்தை இதன்மூலம் உணர முடி கிறது.
ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் விடயத்தில் மட்டும் மத்திய அரசுக்கு மாற்றுக் கண் ணோட்டம் ஏனோ?
ஞானோதயம்!
ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் ஊழலைவிட மதவாதம் ஆபத்தானது என்று திரு வாய் மலர்ந்துள்ளார்.
காலங்கடந்த ஞானோதயம் என் றாலும், வரவேற்கக்கூடிய கருத்துத்தானே!
நமோ மீன்கடை
பி.ஜே.பி.யைச் சேர்ந்த திருவாளர் இல.கணேசன் அய்யர்வால் நமோ மீன்கடைகளைத் திறந்து வைத் துள்ளார். டீக்கடை திறந்தாச்சு - மீன் கடையைத் திறக்க வேண்டாமா? ஆமாம், திருவாளர் இல. கணேசன் வால் எப்பொழுது அசைவத்துக்கு மாறினார்?
இனிமேல் பார்த்தசாரதி அய்யங்கார் மிலிட்டரி ஓட்டல், கணேசய்யர் மீன் ஸ்பெஷல் கடை என்றெல்லாம் வந்தால் கூட ஆச்சரியமில்லை.
அடடே! தேர்தல் ஸ்டண்டைஎப்படி எப்படியெல் லாம் செய்யலாம் என்று கற்றுத்தருவதற்கு பி.ஜே.பி. ஒரு பல்கலைக் கழகத்தையே ஏற்படுத் தலாம். அதற்கு மோ(ச)டிப் பெயரையும் சூட்ட லாமே!
Read more: http://viduthalai.in/e-paper/75983.html#ixzz2uTuTGbaM
எது குற்றம்?
குற்றம் என்பது நிர்ப்பந்தமில்லாமலே ஒரு மனிதன் தான் எதை எதைச் செய்யப் பயப்படுகிறானோ--மறுக்கிறானோ அதை மற்றொரு மனிதன் செய்தால்தான் குற்றமாகும்.
_ (குடிஅரசு, 3.11.1929)
Read more: http://viduthalai.in/page-2/75985.html#ixzz2uTug0YrX
தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சோதிடப் பாடமா?
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சோதிடம் பட் டயப் படிப்புப் (Diploma) பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது. ஓராண்டு படித்தால் பட்டயம் கொடுத்து விடுவார்களாம். சமயம் என்னும் சூளையில் தமிழ்நட்டால் முளையாது என்றார் புரட்சிக்கவிஞர். அதுதான் இந்த இடத்தில் நினைவிற்கு வருகிறது. பாரதியார்கூட வானநூல் பயில் சோதிடம்தனை இகழ் என்று பாடியிருக்கிறார்.
சோதிடம் அறிவியல் என்று நிரூபிக்கப்பட்டாலொழிய அதனைப் பல்கலைக் கழகத்தில் பயிற்றுவிப்பது அடிமுட் டாள்தனம் மட்டுமல்ல - மாணவர்களைப் பழிவாங்குவதும் ஆகும்.
வானியல் (Astronomy) என்பது வேறு; சோதிடம் (Astrology) என்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல. பூமி சுற்றுகிறது என்று சொன்ன புரூனோவை சித்திரவதை செய்தவர்களின் வாரிசுகள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் குடிபுகுந்துவிட்டார்களா என்ற கேள்வி எழுகிறது.
மதுரைப் பல்கலைக் கழகத்தில் சோதிடம் கற்பிக்கப் படுகிறது என்ற நிலை ஏற்பட்டவுடன், திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தி அந்த முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது. திராவிடர் கழகத்திற்கான வேலையை தஞ்சை - தமிழ்ப் பல்கலைக் கழகம் கொடுத்திருக்கிறது என்றே நினைக்கவேண்டியுள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ(எச்) என்ற பிரிவு விஞ்ஞான மனப்பான்மையை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று வலியுறுத்துகிறது.
இங்கு என்னடா என்றால், ஒரு பல்கலைக் கழகமே இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சரத்தினைக் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்துவிட்டு, குப்பைகளைக் கொண்டு வந்து நடு வீட்டில் குடியமர்த்தம் செய்கிறது.
தஞ்சைப் பல்கலைக் கழகக் கல்வியாளர்களை ஒரு கேள்வி கேட்கிறோம். சோதிடத்தில் சூரியன் என்பது கோள் என்றுதானே குறிப்பிடப்படுகிறது. உண்மையிலேயே அறிவியல் கணிப்புப்படி சூரியன் நட்சத்திரம் அல்லவா! அடிப்படையே ஆட்டம் காணும்போது அதன்மீது சோதிடம் என்ற மூடத்தனத்தின் கட்டடத்தை எழுப்பப் போகிறார்களா?
சோதிடத்தில் ராகு, கேது என்று இரு கோள்கள் சொல்லப்படுகின்றனவே - அப்படி ஏதாவது கோள்கள் உண்டா? எந்த வானியல் அறிஞர் ராகு, கேது என்ற இரு கோள்கள் உண்டு என்று கூறியிருக்கிறார்?
இன்னும் ஒரு நகைச்சுவை உண்டு; பூமியின் துணைக் கோளான சந்திரனைக் கிரகத்தின் பட்டியலில் இடம் கொடுத்து வைத்துள்ள சோதிடர்கள், மூலக்கிரகமான பூமிக்கு இடம் அளிக்கவில்லையே - இதை என்னவென்று சொல்வது!
பூமியின் துணைக் கிரகமான சந்திரனை சோதிடப் பட்டியலில் சேர்த்துக் கொண்டார்களே, அதன்படிப் பார்த் தால், சனிக்கிரகத்துக்கு 17 துணைக் கிரகங்கள் உண்டே! சோதிடத்தில் இவற்றிற்கு எந்தப் பலனையும் வைத்திருக்க வில்லையே. இந்தக் கிரகங்களுக்கெல்லாம் துணைக் கோள்கள் உண்டு என்று தெரியாத காரணத்தால் அதற் கெல்லாம் பலனைக் கிறுக்காமல் விட்டார்களோ!
விலா நொறுங்கச் சிரித்திட இன்னும் பல தகவல்கள் உண்டு. விண்ணில் 25 ஆயிரம் கோடி நட்சத்திரங்கள் உள்ளதாக வானியல் ஆய்வு கூறுகிறது. ஆனால், இந்தச் சோதிடர்கள் வெறும் 27 நட்சத்திரங்களுக்குள் சோதிடத்தின் கதையை முடித்துக்கொண்டு விடுகிறார்கள்.
நட்சத்திரங்கள் எல்லாம் ஒரே கூரையில் பதித்து வைக்கப்பட்டதாக நினைப்பதால்தான் கிரகங்கள் அங்குப் போய்த் தங்குவதாக நினைக்கிறார்கள். ஒரு நட்சத்திரத் திற்கும், இன்னொரு நட்சத்திரத்திற்கும் கோடிக்கணக்கான மைல்கள் இடைவெளியுண்டே!
நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தொலை வில் இருக்கின்றன. ஆனால், நம் கண்களுக்கு அவை எல்லாம் ஓரிடத்தில் திரண்டு இருப்பதுபோலத் தோன்றும். வெவ்வேறு இடங்களில் முளைத்திருக்கும் மரங்கள் தொலைவிலிருந்து பார்க்கும்பொழுது கூட்டமாகத் திரண்டு காணப்படுவதை இங்கு நினைத்துக் கொள்ளலாம் என்பார் வானியல் ஆய்வாளர் பேராசிரியர் கொண்டல் சு.மகாதேவன் அவர்கள்.
பொதுவாக கிரகங்கள் என்பவைகளுக்கு ஈர்ப்பு சக்தி உண்டே தவிர, மற்றபடி அவைகளுக்கென்று எந்தவிதத் தனிக்குணமோ, ஆற்றலோ கிடையாது. அந்த ஈர்ப்புக்கூட குறிப்பிட்ட தூரத்திற்குத்தான் உண்டே தவிர, அதற்கு மேல் கிடையாது. இந்த நிலையில், 9 கோடியே 20 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் புதனோ, 4 கோடியே 20 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் வெள்ளியோ, 7 கோடியே 70 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் செவ் வாயோ 272 கோடியே 20 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தி லிருக்கும் யுரேனசோ, 435 கோடியே 30 லட்சம் தொலை வில் இருக்கும் நெப்டியூனோ பூமிக் கிரகவாசிகளை என்ன செய்யும்?
இன்னும் நவக் கிரகங்களுக்குத்தான் சோதிடம் சொல்லிக் கொண்டு திரிகிறார்களே தவிர, விஞ்ஞானிகள் புதிதாகக் கண்டுபிடித்து அறிவித்துள்ள யுரேனஸ், நெப்டியூனுக்கு சோதிடத்தில் பலன்கள் கிடையாதே!
புராணங்களைத் தவிர தமிழில் என்ன இருக்கிறது - அது அறிவியல் வளர்ச்சி பெற தமிழ்ப் புலவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்று தந்தை பெரியார் கோபத்துடன் கேட்டதுண்டு.
அந்தக் கோபத்துக்குத் தாராளமாக நியாயம் உண்டு என்பதற்கு மற்றுமொரு அடையாளம்தான் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் புராணப் புளுகு மூட்டையான சோதி டத்தை சொல்லிக் கொடுக்கத் திட்டமிடப்பட்டிருப்பது.
கொஞ்சநஞ்சம் மதிப்பு விஞ்சி நிற்கவேண்டுமானால், தமிழ்ப் பல்கலைக் கழகம் சோதிடப் பாடத்தைப் பாடத் திட்டத்திலிருந்து உடனடியாக நீக்கிடவேண்டும்; இல்லை யெனில், இது மக்கள் பிரச்சினையாக்கப்படும் என்று எச்சரிக்கின்றோம்.
Read more: http://viduthalai.in/page-2/75986.html#ixzz2uTuouVeX
மோடி புளுகு -4
- குடந்தை கருணா
அண்மையில் புதுடில்லியில் பேசிய நரேந்திர மோடி, விவசாயி களின் முன்னேற்றத்திற்காக குஜராத் தில் நிறைய வசதிகள் செய்யப்பட் டுள்ளன. அதேபோன்று நாடு முழு வதும், அவர்களின் முன்னேற்றத்திற்கு பிஜேபி பாடுபடும் எனப் பேசினார்.
அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள தோலிரா கிராமத்தில், மோடியின் பிரியத்துக்குரிய திட்டமான சிறப்பு முதலீடு பிராந்தியம் (Special Investment Region SIR) துவக்கப்படுகிறது.
இதற்காக விவசாயிகளின் விளை நிலங்களைக் கையகப்படுத்தி, பெரு முதலாளி நிறுவனங்களுக்கு கொடுக் கப்பட உள்ளது. இதற்கு அங்குள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரி வித்து வருகின்றனர். தோலிரா கிராமம் மட்டுமல்லாது, குஜராத் தலைநகர் காந்தி நகரிலும் போராட்டத்தை நடத்த உள்ளனர். இந்தக் கிராம மக்கள் நர்மதா பாசனத் திட்டம் மூலம் தங்களது விவசாய நிலங்களான ஏறத்தாழ முப்பதாயிரம் ஏக்கர் நிலங்களுக்குத் தண்ணீர் பெற்று வந்தனர்.
இப்போது, இவர்களது நிலங்களை கையகப் படுத்துவதற்காக, அந்த பாசனத் திட்டத்தையே மோடி அரசு நிறுத்தி விட்டது. விவசாயிகள் நிலங்களை விற்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். மோடி அரசு, இதுபோன்று விவ சாய நிலங்களை கையகப்படுத்த முயல்வது புதிதல்ல; சில ஆண்டு களுக்குமுன், பாவ் நகர் பகுதியில், சிமெண்ட் ஆலை அமைத்திட, விவ சாய நிலங்களைக் கையகப்படுத்திட மோடி அரசு முயன்று, விவசாயிகள் உச்சநீதிமன்றம்வரை சென்று தடுத்து விட்டனர். சென்ற ஆண்டு, வட குஜ ராத்தில், சிறப்பு முதலீடு பிராந்தியம் துவக்கப்பட, மோடி அரசு முனைந்த போது, விவசாயிகள் போராட்டம் காரணமாக, நிறுத்தப்பட்டது.
தற்போது, தோலிரா கிராமப் பகுதிகளில் 920 சதுர மீட்டர் விளை நிலங்களை ஏறத்தாழ 15000 விவசாய குடும்பங்களை விரட்டி, கையகப் படுத்திட மோடி அரசு முனைந்து, அதற்கான சட்ட அறிவிப்பையும் செய்துள்ளது. மாற்றாக, வேறொரு பகுதியில் நிலங்கள் விவசாயிகளுக்கு தரப்படும் எனவும் மோடி அரசு கூறுகிறது. அண்மையில் மத்திய அரசு நிறை வேற்றியுள்ள, நில கையகப்படுத்தும் சட்டம் 2013, நிலங்களுக்கு, சந்தை விலையைக் காட்டிலும் நான்கு மடங்கு, பணம் தர வேண்டும் எனக் கூறுகிறது. ஆனால், இந்த சட்டத்திற்குப் புறம் பாக, 2011 சந்தை விலையை மட்டுமே தர முடியும் என மோடி அரசு, விவ சாயிகளை அச்சுறுத்துகிறது. இத்தகைய, விவசாயக் கொள் கையை நிலை நாட்டும் மோடி தான், விவசாயிகளின் நலனுக்காக பாடு பட்டு வருவதாக, புதுடில்லியில் கதைக்கிறார்.
Read more: http://viduthalai.in/page-2/75991.html#ixzz2uTv5PkME
உண்டியலில் காணிக்கை ஏன்? வருமான வரிகட்டுவது நல்லது: கமல்
சென்னை, பிப்.26-வருமான வரித் துறை அலுவலகம் சார்பில், தேசிய கலை விழா, சென்னையில், இரண்டு நாள் கள் நடக்கிறது. நேற்று, முதல் நாள் விழாவை, தமிழக- புதுவை மாநில வருமான வரித் துறை முதன்மை ஆணையர், ரவி தலைமை தாங்கினர். இயக்குநர் ஜென ரல் ஜெய்சங்கர், முதன்மை ஆணையர்கள் பிரதீப் ஆர் சேத்தி, மிஸ்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், சிறப்பு விருந் தினராக பங்கேற்ற, நடிகர் கமல்ஹாசன் பேசியபோது,
கடவுளுக்கு, உண்டிய லில் காணிக்கை செலுத்து வதை விட, வருமான வரி செலுத்தினால், நாட்டு மக்க ளுக்கு உடனடியாக பயன் கிடைக்கும். நான் நேர்மை யாக வரி செலுத்தி வருகி றேன். சிலர், வரிகட்டும் போது மட்டும், வீரபாண்டிய கட்டபொம்மன் போல, பேச முயல்கின்றனர்.
வரியினால், நடைமுறைப் படுத்தப்படும் திட்டங்க ளால், பொதுமக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை நினைத்துப் பார்த்தால், வரி யின் முக்கியத்துவமும், நாட்டு நலத் திட்டங்களுக்கு உதவியதில், வரி செலுத்து வோரின் பங்கும் தெரியும் வரும்என்று தெரிவித்தார்.
Read more: http://viduthalai.in/page-8/76024.html#ixzz2uTvUUyKA
குஜராத் மதுவிலக்கின் லட்சணம் மனைவியை எரித்துக் கொன்ற குடிகாரன்
அகமதாபாத், பிப். 26- குஜராத் மாநிலம், ராஜ்கோட் நகரில் உள்ள சுனாராவாட் பகுதியில் திங்கள் அன்று இரவு குடிக்கப் பணம் தராத மனைவியை உயிருடன் எரித் துக் கொலை செய்தான். சுனாராவாட் பகுதியைச் சேர்ந்த அமித் வசானி, இவ ரது மனைவி பூனம், இவர் களுக்கு இரண்டு குழந்தை கள் உள்ளன. குடிப்பழக்கம் உள்ள அமித் அன்றாடம் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து சண் டையிடுவார். கடந்த ஞாயிறு மாலை தனது மனைவியிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் அவரது மனைவி பணம் இல்லை என்று கூறி யுள்ளார். இந்நிலையில் இரவு முழுவதும் சண்டையிட்ட அமித், திங்கள் கிழமையன்று காலை, தூங்கிக்கொண்டு இருந்த தனது மனைவி மீது, மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து விட்டு ஓடி விட்டார். உடல் முழுவதும் எரிந்த நிலையில் அலறிக் கொண்டு இருந்தவரை அரு கில் உள்ள உறவினர்கள் மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனை யில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் திங்கள் கிழமை மாலை உயிரிழந்தார். பூனம் தனது மரண வாக் குமூலத்தில் கூறியிருப்பதா வது நீண்ட காலமாகவே அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு வீட் டிற்கு வந்து துன்புறுத்துவார். வேலைக்குச் செல்வதும் கிடை யாது நான் அவ்வப்போது கூலிவேலைக்குச்சென்று கொண்டுவரும் பணத்தை யும் பிடுங்கிக்கொண்டு குடித் துவிட்டு வருவார். ஞாயிற்றுக்கிழமை மாலை வேலை இல்லா ததால் என்னிடம் பணம் இல்லை, இந்த நிலையில் மாலை என்னிடம் வந்து குடிக்க பணம் கேட்டார். நான் இல்லை என்று கூறியும் கேட்காமல் என்னை அடித்து துன்புறுத்தினார். பிறகு வெளியே சென்று விட்டார். திங்கள் கிழமை காலை வீட் டிற்கு வந்தவர் திடீரென மண்ணெண்ணெய் பாத்தி ரத்தை எடுத்து என்மீது வீசி னார், என் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் பரவியது.
உடனே தீக்குச்சியை பற்றவைத்து என்மீது வீசி விட்டு ஓடிவிட்டார், தீப்பற்றி யதும் என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை, அதற்குள் என்மீதிருந்த ஆடைமீது பற்றிக்கொண்டு என் உடல் முழுவதும் தீ பர வியது. அதற்குள் வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் என் அலறல் ஒலி கேட்டு என்னை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். என்று காவல்துறையினரிடம் மரண வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.
Read more: http://viduthalai.in/page-8/76027.html#ixzz2uTvcWTMA
அரசியல் என்றால்..
அரசியல் என்பதே சமுதாயக் கோளாறுகளைஒழிப்பதற்காக ஏற்பட்டுள்ள ஒரு சாதனம் என்பதுதான்நம்கொள்கை.சமுதாய வேலையைக் கலக்காதஓர்அரசியல் மனிதசமுதாயத்திற்குஎதற்காக வேண்டும்?
_ (குடிஅரசு, 29.6.1946)
Read more: http://viduthalai.in/page-2/76043.html#ixzz2uZbOdDNx
தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின்முன் ஆர்ப்பாட்டம்
சோதிடத்தில் ஏற்றி வைக்கப்பட்டுள்ள மூடத்தனங் களும், ஆபாசங்களும் கொஞ்சநஞ்சமல்ல. கிருத்திகை இராசியில் உள்ள ஏழு நட்சத்திரங்களும் ஏழு முனிவர் களின் மனைவிகளாம். அம்பா, துலா, நிதத்நி, அய்யந்தி, மேகயந்தி, வர்ஷயந்தி, சுபினிகா என்ற அந்த மனைவி மார்களின் பெயர்களாம்.
இந்தப் பெயர்களைப் பார்த்தாலே தமிழுக்கும், இவற் றிற்கும் எவ்வித உறவும் இல்லை. இவற்றின் வேர் என்பது ஆரியம் என்பது சொல்லாமலே விளங்கும்.
இன்னும் சில அபத்தங்கள் உண்டு. சூரியனுக்குப் பகை சனிக்கிரகம், சந்திரனுக்குப் பகை ராகு, கேது (இவை இரண்டும் பாம்புகளாம்; சந்திரனை விழுங்குகின்றனவாம் - அதுதான் சந்திர கிரகணமாம்!).
குருவுக்குப் பகை புதன் கிரகமாம்; புதனுக்குக் குரு கிரகம் பகையாம்! இவை மட்டுமா?
கிரகங்களிலும் ஆண், பெண் வேறுபாடாம். சூரியன், செவ்வாய், குரு ஆண் கிரகங்களாம். சந்திரன், சுக்கிரன், ராகு பெண் கிரகங்களாம். அதோடு விட்டார்களா? அலி கிரகங்களும் உண்டாம்.
அவை - புதன், சனி, கேது ஆகிய மூன்றுமாம்!
கிரகங்களோடு இந்தக் கட்டுக்கதைகளை முடித்தார் களா? அதுதான் இல்லை; நட்சத்திரங்களிலும் பால் இன வேறுபாடாம்.
ஆண் நட்சத்திரங்கள் 8; பெண் நட்சத்திரங்கள் 16; அலி நட்சத்திரங்கள் 3.
வானியல் ஆய்வுப்படி 25 ஆயிரம் கோடி நட்சத் திரங்கள் இருக்கும்பொழுது, வெறும் 27 நட்சத்திரங்களை மட்டும் கணக்கில் கொண்டு கதையளக்கும் அறியா மையை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் விலாநோகச் சிரிப்புதான் வெடிக்கும்.
சோதிடத்தில் பெண் அடிமைத்தனம் என்பது ஆணி அடித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பெண் மூல நட்சத்திரத்தில் பிறந்தால் மாமனாருக்கு ஆகாதாம்; ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தால் மாமியார் மண்டையைப் போட்டு விடுவாராம். கேட்டையில் பிறந்தால் கணவனின் மூத்த சகோதரன் மூச்சை விட்டு விடுவார்... விசாக நட்சத்திரத்தில் பிறந்தால் கணவனின் இளைய சகோதரனுக்கு ஆபத்தாம்.
இதில் என்ன கொடுமை என்றால், இந்த நட்சத்திரங் களில் பெண் பிறந்தால்தான் இந்தத் தீய விளைவுகளாம்! ஆண்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்தாலும் அதனால் பாதிப்புக் கிடையாதாம். ஆரியக் கலாச்சாரம் என்கிறபோது அங்கு பெண் அடிமை என்பதுதானே அடிப்படை!
1955 ஆம் ஆண்டில் பிரதமர் நேரு அவர்கள் மத்திய அரசு சார்பில் மேனக்ஷா என்ற விஞ்ஞானியின் தலைமை யில் ஒரு குழு அமைக்கப்பட்டது. பஞ்சாங்கம், சோதிடம் பற்றி ஆய்வு செய்வது அக்குழுவின் நோக்கமாகும்.
இந்து காலண்டர் பஞ்சாங்கம் என்பது மனிதர் கள் தங்கள் சிந்தனையில் கற்பனையில் உருவாக்கப் பட்டதால், அதில் ஏராளமான மூட நம்பிக்கைகளை யும், அரைகுறையான உண்மைகளையும், இடைக் காலத்தில் இணைத்து விட்டார்கள் - அதில் பல குளறு படிகளும், குழப்பங்களும் உள்ளன. 23 நாள்கள் இடைவெளி வித்தியாசத்தில் இந்துப் பஞ்சாங்கம் போய்க்கொண்டிருக்கிறது. கடந்த 1400 ஆண்டு களாகக் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்ட கால இடைவெளி நீண்டு 23 வித்தியாசத்தில் நிற்கிறது என்று அந்தக் குழு சுட்டிக்காட்டியுள்ளதே!
இந்த விவரங்கள் எல்லாம் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் உள்ள கற்றறிந்த மக்களுக்குத் தெரியாதா? அவர்கள் என்ன கற்காலத்திலா வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர்?
இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த விஞ் ஞானி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளாரே!
சூரியக் குடும்பத்தில் வெகுதொலைவிலுள்ள கிரகங் கள்மீது மக்களுக்கு இவ்வளவு ஆர்வமும், அக்கறையும் வந்திருக்கிறது. அவற்றுடன் தங்கள் வாழ்க்கையை எதற்காக இப்படிப் பிணைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் என்னால் நிஜமாகவே புரிந்துகொள்ள முடியவில்லை.
அறிவியலை ஒதுக்கி வைத்துவிட்டு, சோதிடத்தை ஏற்றுக்கொள்வது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. கிரகங்களின் இயக்கங்கள்பற்றிய சிக்கலான கணிப்பு களைக் கூட்டிக் கழித்துப் பகுத்துப் பார்த்து தங்கள் வாழ்க் கையை கிரகங்கள் ஆட்டிப்படைக்கின்றன என்று எப்படி நம்புகிறார்கள்? என்கிறார் அப்துல்கலாம்.
சோதிடத்தின் பித்தலாட்டத்தைத் தனது வாழ்க்கை யிலிருந்தே எடுத்துக்காட்டினார் தந்தை பெரியார்.
என் சோதிடத்தில் எனக்கு 67 வயது என்று குறித்து என் பெற்றோர்கள் அச்சுப் போட்டிருக்கிறார்கள். ஆனால், நான் இன்று 94 வயதில் சவுக்கியமாக இருக்கிறேன். என் ஜோதிடம் இன்னமும் இருக்கிறது - ஆனால், பொய்யாகி விட்டது - அந்தக் காலத்தில் 100 வயது இருப்பது என்பது அதிகம் என்று கருதி எனக்கு 67 வயது என்று ஜோதிடன் கணித்தான். இப்போது சராசரி வயது 52. இப்போது அப்படி எழுதமாட்டான் (பெரம்பலூரில் பெரியார் பேச்சு, 13.7.1973).
உண்மைகள் இவ்வாறு இருக்க, அறிவியலுக்கு விரோதமான சோதிடத்தை தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பாடத் திட்டத்தில் சேர்த்திருப்பதை கைவிட வேண்டும் :என்பதே நமது அழுத்தமான வேண்டுகோள்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின்முன் 3.3.2014 அன்று காலை 11 மணிக்கு திராவிடர் கழகம், மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
திரளுங்கள் தோழர்களே!
சமூகநீதிக்குச் சவக்குழி!
- குடந்தை கருணா
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தற் போது உள்ள இட ஒதுக்கீட்டு முறையை முற்றிலுமாக ஒழித்துவிட்டு, பொருளா தார அடிப்படையில் ஆண்டுக்கு ஒரு லட்சம் வருமானத்திற்கும் குறைவாக உள்ள தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின ருக்கு மட்டும், இட ஒதுக்கீடு வழங்கிட பாஜக ஆட்சிக்கு வந்தால் உரிய சட்டம் கொண்டு வரும் என, பாஜக தாழ்த்தப் பட்டோர் அமைப்பின் தலைவர் சஞ்சய் பஸ்வான் கூறி உள்ளார். அது மட்டுமல்ல; தாழ்த்தப்பட்டோர் குடும்பத்தில் கண வன், மனைவி இருவரும் இரண்டாம் நிலை பதவியில் இருந்தாலும், அல்லது கணவனோ அல்லது மனைவியோ, முதல் நிலை பதவியில் இருந்தாலும், அவர் களின் பிள்ளைகளுக்கு. இட ஒதுக்கீடு முறையில் அரசு பணிகள் கிடையாது என்றும் சட்டம் கொண்டு வரப்படும் எனக் கூறி உள்ளார். இது அவரது தனிப்பட்ட கருத்து அல்ல; பாஜகவின் கருத்து என அழுத்தம் திருத்தமாக கூறி உள்ளார் சஞ்சய் பஸ்வான். 1990 இல் வி.பி.சிங் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக் காடு இடஒதுக்கீடு வழங்கிடும் ஆணையை எதிர்த்து, அத்வானி ரத யாத்திரை நடத்தி, வட நாட்டில் கலவரம் உருவாகக் காரணமாக இருந்தது பாஜக. தற்போது, ஆட்சிக்கு வந்தால், தாழ்த் தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டிலும், பொருளாதார அடிப் படையை புகுத்திட திட்டமிட்டுள்ளனர்.
மோடி பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தைச் சேர்ந்தவர்; அவர் பிரதமரானால், அம்மக்களுக்கு உரிமைகள் கிடைக்கும் என ஆர்.எஸ்.எஸ். உத்தரபிரதேசத்தில் மாநாடு நடத்திக் கொண்டு வருகிறது. இன்னொரு பக்கம், ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீட்டு முறையை அரசியல் சட்டத்திற்கு மாறாக மாற்றிட முடிவு செய்துள்ளனர். இதுதான் பாஜக ஆர்.எஸ். எஸ்.-இன் இரட்டை வேடம். தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் ராம் தாஸ் அதாவ்லே, உதித்ராஜ், ராம்விலாஸ் பஸ்வான் போன்றோர் இப்போது பாஜக அணியில் தங்களை இணைத்துக்கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள். அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டத்திற்கு எதி ரான நிலையை மேற்கொள்ளும் பாஜக வோடு கூட்டணி சேரும் கட்சி களுக்கும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக் கள் வரும் தேர்தலில் தக்க பாடம் அளிக்க வேண்டும். இல்லையென்றால், போராடி பெற்ற சமூகநீதி, சவக்குழிக்கு சென்றி டும், ஜாக்கிரதை!
Read more: http://viduthalai.in/page-2/76047.html#ixzz2uZc9zEWN
அமைதி, வளம், வளர்ச்சி இதுதானா?
தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தமிழக ஆளுங் கட்சித் தலைவர், அம்மையார் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையை அ.இ.அ.தி.மு.க. சார்பில் வெளியிட்டு உள்ளார். அமைதி, வளம், வளர்ச்சி இந்தியா மேன்மையுற செயல்திட்டம் என்று கூறியுள்ளது கவர்ச்சியான வாசகங்கள் தான்.
தமிழகத்தில் மதுரை உள்பட நெல்லை நகரங்களில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவியுள்ளது.
எனவே அமைதி - எங்கே?
வளம் - யாருக்கு?
கடன் தொல்லையால் மாண்ட விவசாயிகள், பயிர்கள் வாடியதால் மரித்த விவசாயிகள், பரமக்குடி துப்பாக்கிச் சூட்டினால் பலி! நாடு கண்ட வளம் இதுதானா?
வளம் கண்டவர்கள் யார்?
விழிகளில் குளம் கண்டவர்கள் எண்ணிக்கையில் குறைந்தால்தான் வளர்ச்சி! வளர்ச்சி எங்கே? கோடிகளில் செலவழிப்பேன் எனக்கூறும் வேட்பாளர்கள் வாழ்விலா?
வேடிக்கை விசித்திரம்
தென்மாவட்டங்களில் வாழும் மக்கள் அமைதியாக முன்னேற்றம் காண வழிசெய்யவே 2000 கோடி ரூபாய் செலவு சேதுசமுத்திரத்துக்கான நலத் திட்டத்தை வளமைக்கு வழிவகுக்கும் திட்டத்தை இராமர் பாலம் என்று கூறி கிடப்பில் போட நீதிமன்றம் மூலம் தடை செய்து, இலங்கைக்கு வருவாய்த் தேடி தருவது மூலம் கிடைத்தது அமைதியா?
வளமா? அதனால் ஏற்பட்ட வளம் யாருக்கு?
நாட்டு வளர்ச்சிக்கு இதுவா அடையாளம்? மதுரவாயல் திட்டம் உயர்நீதிமன்றத்தில் ரூ.1800 கோடி பெருவழிச் சாலைக்கு அடிக்கட்டுமான வசதியை தடுத்து உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்வதுதான் வளர்ச்சியா?
தமிழ்நாட்டு வாக்காளர்கள் சிந்திக்க மாட்டார்களா?
- போடி நாயக்கனூர் பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் உரையின் ஒரு பகுதி (26.2.2014)
Read more: http://viduthalai.in/page-2/76055.html#ixzz2uZd3nuvH
மாயாஜாலங்கள் பற்றி
சங்கராச்சாரியார்!
கல்கத்தாவில் தங்கியிருந்த காஞ்சி சங்கராச் சாரியாரிடம் மந்திர மாயாஜாலங்கள் பற்றி நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ஆச்சாரியார் அளித்த பதிலாவது:
மந்திரங்கள், மாயாஜாலங்கள் மதத் துறையை பிடித்த ஒரு சாபக்கேடு. ஆன்மீக உலகில் தூய்மைக்குக் களங்கம் விளைவிக்கும் இத்தகைய யுக்திகளும் தந்திரங்களும் சமயத்துறையின் அங்கங்களாகப் பாவிக்கப்படுவது பெருந் தவறு. இந்து மதம் வெறும் மாய வித்தைகளைக் கொண்டது அல்ல. (23.10.74 செய்தித்தாள்களில்)
Read more: http://viduthalai.in/page-8/76123.html#ixzz2ufX69hpZ
புரட்சிக் கவிஞரின் பதில்
மதுரையில் நடைபெற்ற ஒரு தமிழ் மாநாட்டில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கலந்து கொண்டார். அப்போது கி.ஆ.பொ.விசுவநாதம் அவர்கள் வைகையிலே சென்று புண்ணிய முழுக்குப் போட புரட்சிக் கவிஞரை அழைத்தார். புரட்சிக் கவிஞரோ, நீங்கள் வைகையில் மூழ்கி உங்கள் பாவத்தைக் கழித்து விட்டு, எனக்குப் குளிப்பதற்கு கொஞ்சம் நீர் கொண்டு வாருங்கள். நான் அதை சுடவைத்து, அதில் உள்ள பாவங்களைப் போக்கி விட்டு, பிறகு குளிக்கிறேன் என்றாரே பார்க்கலாம்!
Read more: http://viduthalai.in/page-8/76123.html#ixzz2ufXCVFn7
இந்தியில் ஒரு சிறுகதை
சிறீராமச்சந்திரன் அயோத்தி நகருக்கு திரும்பி வந்த போது பொதுத்துறையிலும் தனியார் துறையிலும் சீரும் சிறப்பு மிக்க வரவேற்பு விழாக்கள் நடத்தப்பட்டன. உள்ளூர் பத்திரிகைகளும் வெளியூர் பத்திரிகைகளும் பல நாட்கள் இது பற்றி செய்திகளை வெளியிட்டன.
ஒரு நாள் சிறீராமன் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது அவரது தம்பி பரதன் மிகுந்த பரபரப்புடன் அவரை நோக்கி வந்து, மதிப்புக்குரிய அண்ணா; இன்றைய பத்திரிகை பார்த்தீர்களா? என்று வினவினான்.
ராமன், பார்க்கவில்லையே என்று பதிலளித்தார். பரதன் பல்வேறு பத்திரிகைகளிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட காகிதக்கட்டை காண்பித்து விட்டு சொன்னான்; நம் நாட்டைச் சேர்ந்த ஒரு சாதாரண பிரஜையான ரஜகன் என்ற சலவைத் தொழிலாளி தங்கள் அரசியல் வாழ்க்கையில் களங்கம் ஏற்படுத்த முயற்சித்திருக்கிறான்.
மதிப்புக்குரிய சீதை அண்ணிக்கு ராவணன் விருந்தளித் தாரல்லவா; இதை மய்யமாக வைத்து உங்கள் இருவர் மீதும் கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளை சுமத்தி அவன் பத்திரிகைகளில் அறிக்கை விடுத்துள்ளான் என்றதும், சிறீராமன் பத்திரிகைச் செய்திகளைப் படித்து பார்த்தார். அவர் முகத்தில் இருட்டு ஏறியது. பரதனைப் பார்த்து அவர் சொன்னார். தம்பீ, உனக்குத் தெரியுமல்லவா இது விஷமிகளின் கற்பனை என்று. பரதன் மிகப் பணிவுடன் பதில் அளித்தான்: மதிப்புக்குரிய அண்ணா, நான் தங்களது அந்தரங்கச் செயலாளனல்லவா! எனக்கு அனைத்தும் கட்டுக்கதைகள் என்பது தெரியாதா? இவற்றை நாம் காரி உமிழ்ந்து புறக்கணிக்க வேண்டும். இருப்பினும் மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களை போக்க வேண்டுமல்லவா... இப்படிப்பட்ட சாதாரண பிரச்சினைகள் பெரும் குற்றச்சாட்டுகளாக மாறலாம்..
கடவுளே! அப்படியானால் நாம் என்ன செய்வது? தேர்தல் நெருங்குகிறது. எனது பப்ளிக் இமேஜ் போய் விடுமே ராமன் ஆழ்ந்த கவலையுடன் கூறினார்.
அண்ணி, அக்னி பரீட்சை நடத்தட்டும் - பரதன் ஆலோசனை வழங்கினான்.
டாம்ஃபூள்! புதிய சட்டப்படி அது தற்கொலை முயற்சி என்பது உனக்குத் தெரியாதா? ராமன் கோபத்துடன் கத்தினார். சகோதரர்கள் இருவரும் சிந்தனையில் மூழ்கினர். திடீரென்று பரதன் ஆரவாரத்துடன் அளவற்ற மகிழ்ச்சி கலந்த குரலில், ஒன்டர்ஃபுள், நானும் உலகத்தைப் புரிந்து கொண்டிருக்கிறேன். இதற்கு சரியான பரிகாரம் கிடைத்துவிட்டது என்று சத்தமிட்டு துள்ளிக் குதித்தான்.
அடுத்த நாள் பத்திரிகைகளில் தனது பெயரில் வெளியாகியிருந்த ஒரு அறிக்கைக்கும் தனக்கும் எந்த வித சம்பந்தமுமில்லை யென்றும், தான் அப்படி ஒரு அறிக்கை விடுவது பற்றி கனவில் கூட எண்ணவில்லையென்றும் சொல்லி, தான் சிறீராமன் மீதும் அவர் துணைவியார் மீதும் வைத்திருக்கும் மதிப்பை விளக்கியும், அவர்களது ஆட்சி சிறப்பை வர்ணித்தும் ரஜகன் விடுத்திருந்த அறிக்கை முதற் பக்கங்களிலேயே வெளியாகியிருந்தது.
அதற்கு அடுத்த நாள் பத்திரிகை ஒன்றின் ஒருமூலை யில், ரஜகன் என்பவர் சர்க்கார் கணக்குப் பிள்ளையாக நியமனம் செய்யப்பட்ட செய்தி அச்சிடப்பட்டிருந்தது.
Read more: http://viduthalai.in/page-8/76123.html#ixzz2ufXL6NPg
விதவைத் துயரம்
என்னைக் கேட்டால் இந்தக் கொடிய நாட்டில் விதவைகளுக்குத் துன்பத்தை இழைத்தவர் நமது இராஜாராம் மோகன்ராய் அவர்கள் என்பதே எனது அபிப்ராயம். ஏனெனில், அவரால்தான் நமது விதவைகள் இருக்கவும், கஷ்டப்படவும் ஏற்பட்டு விட்டது. எப்படி என்றால், மோகன்ராய் அவர்கள் உடன்கட்டை ஏற்றும் வழக்கத்தை நிறுத்தா திருப்பாரானால் ஒவ்வொரு பெண்டும் புருஷன் இறந்தவுடனே அவனோடு கூடவே அவன் பக்கத்தில் மாங்கல்ய ஸ்திரீ யாகவே உயிருடன் கட்டையில் வைத்துச் சுடப்பட்டுக் கற்பு லோகத்தை அடைந்து, மோட்ச லோகத்திலிருப்பாள்!
கற்புலோகமும், மோட்சமும் எவ்வளவு புரட்டாயிருந் தாலும் - ஒன்று மாத்திரம் நிச்சயம். அதாவது, உயிருடன் சுடப்பட்ட பெண்ணுக்கு ஒரு மணி நேரந்தான் கஷ்டம் இருந்திருக்கக் கூடும். ஆனால், அந்தப்படி நடவாமல் காப்பாற்றப்பட்ட விதவைப் பெண்ணுக்கு அவள் ஆயுள் காலம் முழுவதும் அங்குலம் அங்குலமாகச் சித்திரவதை செய்வது போன்ற கஷ்டத்தை விநாடிதோறும் அனுபவித்து வர நேரிடுகின்றதா-இல்லையா என்றுதான் கேட்கிறேன்.
இப்போதும் விதவைகளுக்கு உடனே மணம் செய்யவேண்டும்; மணமில்லாத பெண் இருக்கக்கூடாது என்ற நிர்பந்தம் கொஞ்ச காலத்திற்காவது இருக்க வேண்டும். இல்லையானால் உண்மையான ஜீவகாருண் யத்தை உத்தேசித்துப் பழைய உடன்கட்டை ஏற்றும் வழக்கத்தையாவது புதுப்பிக்க வேண்டும் என்பதுதான் எனது அபிப்பிராயம். ஏனெனில், விதவைத் தன்மையை நினைத்தால் வயிறு பற்றி எரிகிறது; நெஞ்சம் கொதிக்கிறது. மனிதனுக்குத் தன் பெண்சாதி சமீபத்தில் இல்லாத காலங்களில் போக இச்சை ஏற்பட்டால் உடனே போக மாதர்களைக் கொண்டு அவ்விச்சையைத் தணிக்க வேண்டியதும்;
மிருகங்களுக்கு ஏற்படும் தினவைத் தீர்த்துக் கொள்ள மைதான வெளியில் சொறிக்கல் நட்டு வைக்க வேண்டியதும் 32 தர்மங்களில் 2 தர்மங்களாகக் கொண்டு - கோயில்களில் தாசிகளை வைத்தும், கிராமங்கள்தோறும் நத்தங்களில் ஆனால், இப்பேர்ப்பட்ட ஜீவகாருண்ய அறிவு - நமது பெண் மக்களிடம் மாத்திரம் ஏன் காட்ட முடியாமல் போய்விட்டது என்பதை நினைக்கும்போது, ஜீவகாருண்யப் புரட்டும் 32 தர்மங்களின் புரட்டும் நன்றாய் விளங்கும்.
- (குடிஅரசு, 27.10.1929)
Read more: http://viduthalai.in/page-8/76123.html#ixzz2ufXSfHBe
சிந்தனைத் துணுக்குகள்
எது நிஜம்?
இறந்தவர்களுக்குத் திதி கொடுக்க வேண்டு மென்றால் இறந்து போனவர்களின் ஆத்மாவைப் பற்றி மூன்று விதமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.
1. இறந்துபோகும் ஜீவனின் ஆத்மா, மற்றொரு சரீரத்தைப் பற்றிக்கொண்டு விடுவதாக,
2. இறந்துபோன ஜீவனின் ஆத்மா இறந்தவுடன் பிதிர்லோகத்தில் அங்கு இருப்பதாக, (பிதிர்களாய் இல்லாத ஆத்மா எங்கிருக்குமோ!)
3. இறந்துபோன ஜீவனின் ஆத்மா அதனதன் செய்கைக்குத் தகுந்தபடி மோட்சத்திலோ நரகத்திலோ பலன் அனுபவித்துக் கொண்டிருப்பதாக,
ஆகவே இந்த மூன்று விஷயத்தில் எது நிஜம்? எதை உத்தேசித்து திதி கொடுப்பது?
இதுதவிர ஆத்மா என்பது கண்ணுக்குத் தெரியாதது என்றும், சரீரம் உருவம், குணம் இல்லாதது என்றும் சொல்லப்பட்டிருக்கிறதே? சரீரம், குணம் இல்லாததற்கு நாம் பார்ப்பானிடம் கொடுக்கும் அரிசி, பருப்பு, செருப்பு, விளக்குமாறு ஆகியவை எப்படிப் போய்ச் சேரும்? அவற்றை ஆத்மா எப்படி அனுபவிக்க முடியும்?
வெட்கம், புத்தி இல்லையோ?
குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்தன. குடும்பம் பெருத்துவிட்டது. அதனால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடினார் என்று புராணக் கதை சொல்லுகிறது. குசேலர் பெண்ஜாதி குறைந்தது வருஷத்திற்கு ஒரு பிள்ளையாகப் பெற்று இருந்தாலும் கைக் குழந்தைக்கு ஒரு வருஷமாவது இருக்குமானால் மூத்த பிள்ளைக்கு 27ஆவது வருஷமாவது இருக்கும். ஆகவே 20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேராவது இருந்திருப்பார்கள். இந்த 7 பிள்ளைகளும் ஒரு காசுகூட சம்பாதிக்காத சோம்பேறிப் பிள்ளைகளாகவா இருந்திருப்பார்கள்?
20 வருஷத்திற்கு மேம்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சைக்குப் போக குசேலருக்கு வெட்கமிருந் திருக்காதா? அல்லது பிச்சை போட்ட கிருஷ்ண பகவானுக் காவது என்ன, பெரிய வயது வந்த பிள்ளைகளை தடிப் பயல்களாட்டமாய் வைத்துக்கொண்டு பிச்சைக்கு வந்தாயே, வெட்கமாக இல்லையா? என்று கேட்கக்கூடிய புத்தி இருந்திருக்காதா? -சித்திரபுத்திரன்
Read more: http://viduthalai.in/page-8/76123.html#ixzz2ufXaQKtS
சபாஷ் நீதிபதிகள்!
நீதிபதிகளில் பகுத்தறிவுச் சிந்தனையின் பார்வையில், தீர்ப்புகள் வழங்குபவர்களைப் பார்ப்பது அரிது. விடுமுறை நாள்களில்தானே, அரசு அலுவலகங்களில் பூஜை நடக் கிறது; அதில் என்ன தவறு இருக்கிறது என்று தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள் எல்லாம் உண்டு. விடுமுறை இல்லாத நாள்களிலும்கூட, வெள்ளிக் கிழமைகளில் பூஜை போடும் அலுவலகங்கள் இல்லையா?
அரசு என்றால், மதத் தொடர்பு இல்லாதது என்ற அடிப்படைக்கூட இல்லாமல், தன் மனம் போன போக்கில் பச்சை மையால் ஏதோ கிறுக்கித் தள்ளுகிறார்கள்.
சென்னை உயர்நீதிமன்றக் கிளையில் நீதியரசர்கள் சுதாகர், வேலுமணி ஆகிய இரு நீதிபதிகள் கடந்த 25 ஆம் தேதி அளித்த தீர்ப்பு எடுத்துக்காட்டானது - பின்பற்றத் தகுந்ததாகும்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி அருகே அய்யம் பாளையம் பாரதி நகரைச் சேர்ந்த முத்துரத்தினம் என்பவர் மதுரைக் கிளை உயர்நீதிமன்றத்தில், வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.
அவர்கள் ஊரில் உள்ள பகவதி மாரியம்மன், இளையாண்டி அம்மன் சாமிகளுக்குப் பாலாபிஷேகம் செய்ய அவ்வூரில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, தங்களுக்கும் பாலாபிஷேகம் செய்ய அனுமதி பெற்றுத்தரவேண்டும் என்பதுதான் மனுவின் சாரம்.
அந்த வழக்கின்மீது மேலே சொல்லப்பட்ட நீதிபதிகள் இருவரும் கீழ்க்கண்ட தீர்ப்பினை வழங்கினார்கள்.
நமது நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் போதுமான உணவு, தங்கும் இடம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இளம் குழந்தைகள் பலர், பால் போன்ற சத்தான உணவுகள் கிடைக்காமல் உள்ளனர். பால் ஓர் அத்தியாவசிய உணவுவாகும் என்பதை மனுதாரரும், அவருடைய கிராமத்தினரும் நன்கு அறிவர்.
இதுபோன்ற அத்தியாவசிய உணவுப்பொருளை இந்தியாவில் உள்ள ஏழைக் குழந்தைகள், ஆதரவற்ற வர்களுக்கு வழங்கி அவர்களது பசியைப் போக்கலாம் என்பதை மனுதாரர் அறியவேண்டும். மனுதாரர் கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும் என்று இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.
நீதிபதிகள் சொன்னவை சத்தான வார்த்தைகள் என்பதில் அய்யமில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை யில் 72 விழுக்காட்டினர் சத்தற்ற உணவை உட்கொள்கின் றனர். ஊட்டச் சத்து குறைவான குழந்தைகள் 30 விழுக் காடாகும். இவற்றையெல்லாம் மனதில் கொண்டு நீதிபதி களால் அளிக்கப்பட்ட தீர்ப்பின் பொன்னான வரிகள் அவை!
பச்சைக் குழந்தைகள் பாலுக்கு அழுவுது - குழவிக் கற்களுக்குப் பாலாபிஷேகம் ஒரு கேடா? என்று திராவிடர் கழகப் பேரணிகளில் கருஞ்சட்டைத் தோழர்கள் முழங்கியது வீண் போகவில்லை - நீதிபதிகள் வாயா லேயே வேறு சொற்களில் சொல்ல வைத்திருக்கிறது.
கடவுள் எல்லாவற்றையும் படைத்தார் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக்கொண்டு, இன்னொரு பக்கத்தில் அந்தக் கடவுளுக்குத் தட்சணை கொடுப்பது, உண்டியலில் பணம் போடுவது, நேர்த்திக்கடன் கழிப்பது, பாலாபிஷேகம், சந்தனாபிஷேகம், நெய்யினால் அபிஷேகம் செய்வது எல்லாம் சிறு பிள்ளை விளையாட்டு அல்லவா - சர்வசக்தி வாய்ந்த(?) கடவுளையும் கேலி செய்வது அல்லவா!
உணவுப் பொருள்களைப் பொருளற்ற முறையில் வீணடிப்பது உற்பத்தி நாசம் அல்லவா! பொதுவாகச் சிலை வணக்கம் என்பதே புத்தி குறைந்த மக்களுக்கு என்று ஆக்கப்பட்டுவிட்ட ஒன்றாகும்.
உத்தர கீதை என்னும் சாத்திர நூல் என்ன கூறுகிறது?
துவி ஜாதிகளுக்கு அதாவது இரு பிறப்பாளர் களான பிராமணர்களுக்கு தெய்வம் அக்னியில், முனிவர்களுக்குத் தெய்வம் இருதயத்தில்; புத்தி குறைந்த மக்களுக்குத் தெய்வம் சிலையில் என்று கூறப்பட்டுள்ளதே!
சிலைகளைக் கும்பிடுவது, சிலைகளுக்கு அபிஷேகம் செய்தால், அதன் பொருள் என்னவென்றால், தங்களைப் புத்தி குறைந்தவர்கள் என்று ஒப்புக்கொள்வதேயாகும்.
பொருளுக்குப் பொருளையும் கொடுத்து, காலத்தையும் வீணாகச் செலவழித்துக் கண்ட பலன் புத்திக் குறை வானவர்கள் என்ற பட்டத்தை வாங்கிக் கட்டிக்கொள் வதுதானா?
சூத்திர, பஞ்சம தமிழர்களே பதறாமல் சிந்திப்பீர்!
மீண்டும் நீதிபதிகளுக்குப் பாராட்டுகள்!
Read more: http://viduthalai.in/page-2/76099.html#ixzz2ufXom3Hy
வன்முறையைப் பொது வாழ்விலிருந்து விரட்டியடிப்போம்! தமிழர் தலைவர் அறிக்கை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப் படுத்தப்பட்டவர்களை விடுதலை செய்யும் பிரச்சினையில் காங்கிரசின் நிலைப்பாடு நமக் கும், தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலோருக்கும் உகந்தது அல்ல; என்றாலும், அதற்காக காங்கிரசு அலுவலகத்தைத் தாக்குவது, ராஜீவ் காந்தி சிலைகளை உடைப்பது சரியான அணுகுமுறை யல்ல; தமிழ்நாட்டின் பொது வாழ்விலிருந்து வன்முறைகளை விரட்டியடிக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, தூக்குத் தண்டனைக்குள்ளாகி 23 ஆண்டுகளாக அவர்களது கருணை மனுவை பரிசீலிக்காமல், காலதாமதத்திற்குக் காரணமான மத்திய அரசின் செயல், நீதி கேட்டவர்களுக்கு நீதி மறுக்கப்பட்ட அநியாயம் என்பதால், அதனை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலை மையிலான அமர்வு ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. (இதற்குமுன் வீரப்பன் கூட்டாளி களான நான்கு பேருக்கும் வழங்கப்பட்ட தீர்ப்பையொட்டி - வழங்கப்பட்ட நியாயத்தை அடிப்படையாகக் கொண்டதே இது) அத் தீர்ப்பில் இதற்குமேல் அவர்களது விடுதலைபற்றி சிந்தித்து முடிவு எடுக்கவேண்டிய பொறுப்பு - உரிய அரசுகளுக்கு உண்டு என்று அத்தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டதையொட்டி, தமிழக முதல் வர் எடுத்து அறிவித்த முடிவு மனிதநேய அடிப் படையில் விடுதலை என்ற போதிலும், மத்திய அரசுக்குக் கெடு விதித்து அறிவித்த முறை அவசர, அதீத போக்கு என்ற நிலை ஒருபுறம் இருந்தாலும், முடிவு எடுக்கத் தகுதியுள்ள அரசு மாநில அரசு என்பதும் சிறைத் தண்டனையைக் குறைக்கும் (Remission) அதிகாரம் சட்டப்படி அதற்கு உண்டு என்பதெல்லாம் சட்டப்பூர்வ நிலைப்பாடே!
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், அதனுள் விரிவாகச் செல்வது சட்டப் படி சரியான நிலைப்பாடாக இருக்காது என்பதால், நாம் இங்கே விளக்க விரும்பவில்லை.
காங்கிரசு நிலைப்பாடும் - வன்முறை செயல்பாடுகளும்!
காங்கிரசு கட்சியின் நிலைப்பாட்டில் நமக்கு உடன்பாடு இல்லை - மனிதநேய அடிப்படை யில், அதற்காக அதனை (காங்கிரசு கட்சியின் நிலைப்பாட்டை) எதிர்க்கும் வகையில், சில கட்சிகளோ, நண்பர்களோ, நபர்களோ, ராஜீவ் காந்தி சிலைகளை உடைப்பது, காங்கிரசுக் கட்சி அலுவலகத்தைச் சென்று தாக்குவது என்பது சரியான பரிகாரமோ, முறையாகவோ இருக்காது. அது தவறான வன்முறை வெளிப்பாடாகும்.
வன்முறைகளை விரட்டியடிப்போம்!
எழுப்பப்பட்டுள்ள தலைவர்கள் சிலைகள் நமக்கு ஏற்புடையதாக இல்லை என்பதால், அவற்றை உடைப்பது, ஊனப்படுத்துவது அசல் அரசியல் அநாகரிகம் ஆகும். இதை வன்மை யாகக் கண்டிக்கிறோம்.
காங்கிரசுக் கட்சியின் நிலைப்பாட்டை மனித நேயம் உள்ள எவரும் ஏற்கமாட்டார்கள்; என் றாலும், அதற்கு மாற்று- சிலைகள்மீதும், கட்சி அலுவலகங்கள் மீதும் தாக்குதல் என்பது தவறான அணுகுமுறையாகும்.
ஆர்ப்பாட்டக்காரர்களை முன்கூட்டியே அப்புறப்படுத்தி (Whisking Away) அதன்மூலம் இத்தகைய விரும்பத்தகாத நிகழ்வுகளைத் தடுக்கவேண்டும்.
அதுபோலவே, கட்சித் தலைவர்கள் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசுவதும் முறையாகாது - அதனையும் கண்டிக்கிறோம்.
வன்முறையை தமிழகத்தின் பொதுவாழ் விலிருந்து விரட்டியடிக்கவேண்டும்; காவல் துறையும் பாரபட்சமின்றி செயல்படவேண்டும்.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.
சென்னை
28.2.2014
Read more: http://viduthalai.in/e-paper/76091.html#ixzz2ufY2ieKl
அரசியல் இலாபம்
அரசியலில் உழல்வதென்பது என்றைக்கு இருந்தாலும் ஒரு நாளைக்காவது மனிதன் தன்னை அயோக்கியனாக்கிக் கொள்ளாமலும், தேசத்தையும், சமூகத்தையும் காட்டிக் கொடுக்காமலும் வாழும்படி செய்யவே செய்யாது. - (குடிஅரசு, 31.7.1927)
Read more: http://viduthalai.in/page-2/76098.html#ixzz2ufYdshp2
ராஜீவ் கொலை வழக்கு: விடுதலைபற்றி உச்சநீதிமன்றம் கருத்து
புதுடில்லி, பிப்.28- ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய உச்சநீதி மன்றம் வியாழக்கிழமை இடைக்கால தடை விதித்தது.
ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந் தன், பேரறிவாளன் ஆகியோர் தங்களது தண்டனையைக் குறைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந் தனர்.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், மூவரின் மரண தண்டனையை ஆயுளாகக் குறைத்தது. மேலும் அவர்களை விடு விப்பது தொடர்பாக தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டது.
அதன்படி இந்த வழக்கில் தொடர்பு டைய முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச் சந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதில், முதல் மூன்று பேரையும் விடுதலை செய் வதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் முருகன், சாந்தன், பேரறிவாளனை விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்து கடந்த 20 ஆம் தேதி உத்தர விட்டது.
இந்நிலையில் நளினி உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்வதை எதிர்த்தும், மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை புதிதாக ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி பி.சதா சிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் ராகேஷ் திரிவேதி ஆஜரானார். அவர் வாதாடியபோது, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள ரிட் மனு ஏற்புடையது அல்ல. 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்குப் பரிந்துரை கடி தம் அனுப்பியுள்ளது. அதற்கு பதில் அளிக்காமல் மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சொலி சிட்டர் ஜெனரல் மோகன் பராசரன், முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக் கில் குற்றவாளிகள் தொடர்பாக முடி வெடுக்க மத்திய அரசுக்குத்தான் அதி காரம் உண்டு. மாநில அரசுக்குக் கிடை யாது என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட தலைமை நீதிபதி பி.சதாசிவம் கூறிய தாவது:
எங்களது தீர்ப்பில், மூன்று குற்றவாளி களின் மரண தண்டனை ஆயுள் தண்ட னையாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். அவர் களை விடுதலை செய்வது தொடர்பாக நாங்கள் எதுவும் கூறவில்லை. சம்பந் தப்பட்ட மாநில அரசு வழக்கமான சட்ட நடைமுறைகளை பின்பற்றலாம் என்று தீர்ப்பில் தெளிவுபடுத்தி உள்ளோம்.
அந்த நடைமுறைகளின்படி குற்ற வாளிகள் முறைப்படி கோரிக்கை மனு அளிக்க வேண்டும். அதன் பின் மாநில அரசு சம்பந்தப்பட்ட விசாரணை நீதி மன்றத்திடம் அறிக்கை கோரவேண்டும். அதன் பின்னரே உரிய முடிவு எடுக்க வேண்டும்.
ஒரு வாரத்தில் தீர்வு
குற்றவாளிகள் விடுதலை செய்யப் படக்கூடாது என்பது எங்கள் நோக்கம் அல்ல. எல்லாவற்றுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. அதைத்தான் பின்பற்ற வேண்டும். குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பான சட்ட நடைமுறைகளை அனைத்து மாநில அரசுகளும் அறிந்து வைத்திருக்கவேண் டும். இந்தப் பிரச்சினைக்கு காரணம் நாங்கள்தான். இதற்கு இன்னும் ஒரு வாரத்தில் தீர்வு காண்போம் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.
மேலும் மத்திய அரசின் மனு தொடர் பாக விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு தாக்கீது அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை 4 பேரையும் விடுதலை செய்யக்கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.
Read more: http://viduthalai.in/page-2/76102.html#ixzz2ufZIEcyI
என் கருவறை பெரியார் திடல்தான்! கவிஞர் கனிமொழி எம்.பி. உரை
சென்னை.பிப். 28- சென்னை பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கத் தில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் திமுக நாடாளு மன்றஉறுப்பினர் கவிஞர் கனிமொழி எழுதிய நூல்க ளுக்கான விமர்சனக் கூட்டம் நேற்று (27.2.2014) மாலை நடைபெற்றது.
கவிஞர் கனிமொழி எழு திய கட்டுரை நூல்கள், கவிதை நூல்களை திராவிடர் இயக்க ஆய்வாளர், எழுத்தாளர் க. திருநாவுக்கரசு விமர்சனம் செய்துபேசினார்.
கவிஞர் கனிமொழி ஏற் புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
வாசகர் வட்டம் தொடர்ந்து நடத்துவதுபெரிய விஷ யம்.கட்சிக் கூட்டங்கள் நடத் திடலாம். தமிழகத்தில் வாசிப்பு அந்த நிலையில் உள்ளது. பல நூல்விமர்சனக் கூட்டங்களுக்கு நான் சென் றுள்ளேன். பெரியார் திடல் எனக்கும் கருவறைதான். என்னுடைய எழுத்துக்களில் எந்த இடத்தில் மோதல் வரும் என்பது எனக்குத்தெரி யும். உங்களைப் போன்றவர் களிடம் பேச நேரம் கிடைக் காதா என்று ஏங்குகிறேன். உங்களுக்கு நேரம் இருக்க வேண்டும். ஏனென்றால், உங்களிடம் பேசும்போது கிடைக்கும் அனுபவம் ஒரு புத்தகத்தைப் படித்தால் கூடக்கிடைக்காது. நீங்கள் ஒதுக்கித் தரும்அந்த நேரத் திற்காகக் காத்திருக்கிறேன்.
கவிதையில் பிடிபட வில்லை, பொய் இருக்கிறது என்கிறீர்கள். நான் மிகவும் உண்மையாக இருப்பது கவிதையில்தான். ஒரு கவிதை எழுதும்வரைதான் அது என் கவிதை. எழுதி முடித்தபின் அது வாசகரு டையது. வாசிப்பவர் தன் அனுபவத்தைக் கவிதையின் பின்னால் வாசகரின் அனு பவம்இருக்கும்.கவிதை ஒரு நிலைக்கண்ணாடிமாதிரி. அனுபவத்தைத் தாண்டி வந்தால்தான் புரியும்.
மொழிபெயர்ப்பில் பல விஷயங்கள் தொலைந்து விடும். ஒரு கவிதை தமிழில் எழுதப்பட்டு, நமக்கென்று இருப்பது கவிதை, அதையே நமக்கு தொடர்பில்லாத வேறு மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, மீண்டும் தமிழில் மொழிபெயர்க்கப் படும் போது பல விஷயங் கள் தொலைந்து போகும்.
ஆண்கள் மனதில் இல்லாத வார்த்தை பெண் விடுதலை. பிறக்கும்போதே விடுதலை உணர்வுடன் உள்ளவர்கள் ஆண்கள். ஆனால், பெண்கள் அது இல்லாமல் பிறந்தவர் கள். ஆண்களாக சொல்லி தரும் எந்த விடுதலையும் எங் களுக்கு வேண்டாம். நீங்கள் வரையறுக்க முடியாத கோடு போட முடியாத , யாரும் வழங்கி பெறுவது விடுதலை இல்லை. நாங்கள் நாங்களா கத் தேடும் விடுதலை. ஆண் கள் கீழே போட்டு மிதித்திட மெத்மெத்தென்று பெண்கள் இருந்து விட்டார்கள்.
பாலியல் வன்முறைக்கு ஆளான பெண் என்று வரும் போது அந்தப் பெண்ணிடம் நியாயம் கேட்கும் நிலை தான் உள்ளது. அவமானம் அவளுக்கும், அவள் பெற் றோருக்கும். காவல் நிலை யத்தில் எந்த உடை என்று கேள்வி கேட்கிறார்கள். பக் கத்து வீட்டார் அந்த நேரத் தில் ஏன் போனாள் என்கி றார்கள். தனியே ஏன் சென்றாள் என்கிறார்கள். பெண்கள் தினமும் வேதனை, வலி இருப்பதை நினைக்கக் கூட ஆண்கள் தயாராக இல்லை. குறும்படம் பார்த்துவிட்டு நண்பர் ஒருவர் அதிர்ச்சியாக இருக்கிறது என்றார். ஆண் வேலை முடித்து வீட்டுக்கு வரும்போது மனைவி காபி கொடுப்பார். ஏன் இதை மாற்றி எண்ணிப்பார்க்கக் கூட முடியவில்லை?
ஒரு பெண் ஒரு நாளைக்கு 40 தோசைகள் சுடுகிறார் என்று வருகிறது. அவர் வாழ்க்கை அதிலேயே முடிந்து விடுகிறது. ஆயிரக்கணக் கான, இலட்சக்கணக்கான பெண்கள் சமையலறையி லேயே முடங்கிப்போய் விடு கிறார்கள். பெண்களுக்கு எல்லைகள் அற்ற விடுதலை வேண்டும். நான் கச்சேரிக்கு செல் வதைப்பற்றி சொன்னார்கள். அவரும் அங்கு வந்தவர் தானே? கச்சேரி நடக்கும் இடங்களில் 2,3 பேர் மட் டுமே பார்ப்பனர் அல்லாத வர்களாக இருப்பார்கள். நமக்கென்று இருந்ததை தாரைவார்த்துக் கொடுத்து விட வேண்டுமா? பரத நாட் டியம் என்னுடையது. இசை எனக்கும் பாத்யதையானது. ஏன் விட்டுக்கொடுக்க வேண் டும்? மல்லிகா நடன நிகழ்ச்சி வரும். பெண் கருக்கலைப் புக்கு வருவாள். பெண் மருத் துவர் கேட்பார் நீயும் பெண் தானே? ஒரு தாய்தானே இப்படி கருவைக்கலைக்க லாமா? அதற்கு அந்தத் தாய் சொல்லுவாள் உனக்கென்ன? டாக்டராகி நகரில் இருக்கிறாய். நான் 5 பிள்ளைகளோடு கணவனோடு சேர்ந்து வாழ வேண்டாமா? இந்த குழந்தையோடு சென்றால் நான் கணவனைவிட்டு வெளியேற வேண்டி இருக்கும் என்பாள். திராவிடர் இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு அவர்களால் பாராட்டு பெற்றதைப் பெரும்பேறாகக் கருதுகிறேன்.
நான் எங்கிருந்தாலும், என் கருவறை, எனக்குரிய இடம் இந்தப் பெரியார் திடல்தான் என்றார் கவிஞர் கனிமொழி.
முன்னதாக வாசகர் வட்ட துணை செயலாளர் த.சுப்பிரமணியன் வரவேற்றார். பெரியார் பற்றிய பாடலை விஜயா தாயன்பன் பாடினார்.
தொமுச பேரவை (உழைப்பாளர் இதழாசிரியர்) நிர்வாகி அ.சி.அருணகிரி தொடங்க உரை ஆற்றினார். திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை மாநிலத் தலைவர் கவிஞர் கனிமொழி, திராவிடர் இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு ஆகியோருக்கு வாசகர் வட்ட செயலாளர் சத்திய நாராயண்சிங் பயனாடை மற்றும் கேடயம் வழங்கினார். வாசகர் வட்டப் பொருளாளர் கு.மனோகரன் நன்றி கூறினார்.
Read more: http://viduthalai.in/page-8/76132.html#ixzz2ufa3oKEM
பெரியார் உலகம் நிதியளிப்பு மனந்திறக்கிறார் ஒரு தோழர்
மயிலாடுதுறை மாவட்ட கழக சார்பில் சீர்காழி ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் ந.நாராயணன் தந்தை பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூபாய் 25 ஆயிரத்துக்கான காசோலையை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்களிடம் வழங்கினார். உடன் மாவட்ட தலைவர் எஸ்.எம்.ஜெகதீசன், மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ், புலவர் இராவணன் உள்ளனர்.
திராவிடர் கழகத்தின் சார் பில் திருச்சியில் அமையவி ருக்கும் பெரியார் உலகத் திற்கான நன்கொடை பெற கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேக ரன், மாவட்டத் தலைவர் எஸ்.எம்.ஜெகதீசன் ஆகியோ ரோடு சீர்காழி ஒன்றிய கழகச் செயலாளர் ந.நாராயணன் அவர்களை சந்திக்க பூம்பு கார் சென்றிருந்தோம்.
எங்களைக் கண்டதும் மிகுந்த மன மகிழ்ச்சியுடன் வரவேற்று தேநீர் விருந்த ளித்து உரையாடினார் நாராய ணன். நான் முழுமையான கடவுள் மறுப்பாளன். என்னு டைய பிள்ளைகளை அப்படி வளர்க்கத் தவறிவிட்டேன். அந்த மன உறுத்தலுக்கு அடிக் கடி ஆளாகிறேன். இதனா லேயே சில நாள் வீட்டில் கோபித்துக் கொண்டு உணவு விடுதியில் சாப்பிட்டேன். வீட்டையே திருத்த முடியாத என்னால் எப்படி ஊரை திருத்த தகுதியாவேன்? என தொடர்ந்து புலம்பிக் கொண் டிருந்தார். கழகப் பொதுச் செயலாளர், நாம் பகுத்தறி வாளர்கள், ஆத்திரப்படக் கூடாது என்று சொல்லி அவரை அமைதிப்படுத்தினார்.
நாராயணன் அவர்களோ, கழகப் பொதுச் செயலாள ரைப் பார்த்து நான் அந்தக் காலத்து பி.ஏ. எங்கள் பகுதி யிலேயே பள்ளிக்கூடம் சென்று படித்தவன் நான்தான். அதனாலேயே என்னை பள் ளிக்கூடத்தார் என்றுதான் கூப்பிடுவார்கள். நான் பூம்புகார் சுற்றுலாத் துறை யில் பணியாற்றி ஓய்வு பெற் றவன். பெரியார் இல்லையா னால் இந்த வாய்ப்புகள் எனக்கு கிடைத்திருக்குமா? எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும். எங்கள் பகுதியில் ஒரு பயிற்சி வகுப்பு எடுக்க வேண்டும். என் பிள்ளைகள் உட்பட ஒரு அரங்கு நிறையும் அளவிற்கு இளைஞர்களைக் கலந்து கொள்ள செய்கிறேன். இதற் கான முழு செலவுத் தொகை யும் நானே ஏற்கிறேன். இது எனது சுயநலம்தான் என்றார்.
இதில் சுயநலம் ஒன்றும் இல்லை. உங்கள் வீட்டு பிள் ளைகளோடு பல தோழர்கள் பயன்பெற வாய்ப்பு ஏற் படும். அவசியம் ஏற்பாடு செய்வோம் என்றார் துரை. சந்திரசேகரன்.
நாராயணன் அவர்கள் நடுத்தர குடும்பத்தை சார்ந்த வர்தான். அவர் மூலம் அந்த ஊர் பிரமுகர்களை சந்தித்து நன்கொடை பெறலாம் என சென்ற எங்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. சிலைக்கு எவ்வளவு நன் கொடை? என அவர்கேட்க குறைந்தபட்சம் ஒரு பவு னுக்கான தொகை ரூ. 25 ஆயி ரம் என்று சொன்னது தான் தாம தம், உடனே ஒரு காசோலையை தந்து தன் சார் பில் ரூ.25 ஆயிரத்தை அளிப்பதாக கூறி காசோலையை பூர்த்தி செய்யச் சொன்னார். சற்றும் எதிர்பாராத நானும் மாவட் டத் தலைவரும் மிக்க நன்றி என்று கூறினோம். இந்த வாய்ப்பை அளித்த உங்களுக் குத்தான் நன்றி சொல்ல வேண் டும் என்று திரும்ப திரும்ப வழி நெடுகச் சொல்லி மனதை நெகிழ வைத்தார் நாராயணன்.
Read more: http://viduthalai.in/page-8/76133.html#ixzz2ufaygCR5
Post a Comment