மோதிரம் மாற்றுவது மூடநம்பிக்கை
லண்டன் நகரத்தில் சமீபத்தில் நடந்த இரண்டொரு கல்யாணங்களில் மணமகன் மோதிரம் மாற்றிக் கொள்வது கூட மூடநம்பிக்கையில் சேர்ந்தது என்று கருதி மணவினையின் போது மணமகன் மோதிரம் மாற்றிக் கொள்ள சம்மதிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டாராம்.
"நாங்கள் ஒருவரை ஒருவர் வாழ்க்கைத் துணைவர்களாக ஏற்றுக் கொண்டோம் என்று சொல்லி இருவரும் கையொப்பமிட்டு பிறகு மோதிரம் மாற்றிக் கொள்வது எதற்காக" என்று மணமக்கள் கல்யாணப் பதிவு ரிஜிஸ்டராரை கேட்டார்கள். அதன் மேல் கல்யாணப்பதிவு ரிஜிஸ்டராரும் பாதிரியும் ஒன்றும் பேசாமல் கல்யாணத்தை பதிந்து கொண்டார்களாம். இந்த விஷயம் சென்ற வாரத்திய கிராணிக்கல் வாரப்பத்திரிகையில் காணப்படுவதுடன் தம்பதிகளின் உருவப் படங்களும் அதில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. நமது நாட்டில் நடத்தும் சுயமரியாதைத் திருமணங்களில் தாலி கட்டவில்லையே என்று அழுவாரும், விளக்குப் பற்ற வைக்கவில்லையே என்று அழுவாரும், சாணி உருண்டை பிடித்து வைத்து தேங்காய் பழம் உடைக்கவில்லையே என்று அழுவாரும், பார்ப்பான் காலில் விழுந்து அம்மிக்கல்லில் முட்டிக் கொள்ளவில்லையே என்று அழுவாரும் இதற்கு என்ன பதில் சொல்வார்கள் என்று அறிய ஆசைப்படுகின்றோம்.
ஆகவே இனி கல்யாணம் என்றால் ஒவ்வொருவரும் ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டியதை தான் முக்கிய காரியமாய் கருத வேண்டும். இதை விட ஜாக்கிரதையான முறையில் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமானால் மணமக்கள் இருவருக்கும் டாக்டர் சர்டிகேட் பெற வேண்டும் ஆகிய இந்த இரண்டு காரியங்களைத் தவிர கல்யாணக் காரியத்தில் வேறு எந்தக் காரியமும் கலந்து கொள்ளாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுவது தான் தற்கால நிலைமைக்கு ஏற்ற சுயமரியாதைக் கல்யாணமாகும்.
அந்தப்படி சகிக்காமல் " அதாவது வேண்டாமா? இதாவது வேண்டாமா?" என்று சொல்லிக் கொண்டு செய்யப்படும் கல்யாணங்கள் எதுவும் அஞ்ஞானக் கல்யாணமும், புராண மரியாதைக் கலியாணமுமேயாகும் என்பது நமது அபிப்பிராயம்.
பந்துக்களையோ நண்பர்களையோ அழைப்பதும், அவர்களுக்கு மரியாதை செய்வதும் வீண் செலவு என்று சொல்லுகின்றோமே தவிர அவற்றை மூடநம்பிக்கை என்று சொல்ல வரவில்லை. ஆனாலும் அது ஆடம்பரங்களில் கொண்டு வந்து விட்டு கடைசியாக பணச்செலவு, திரேகப்பிரயாசை காலக்கேடு முதலியவைகளுக்கு அடிமையாக்கி வைத்து விடுகின்றதுடன் இந்த ஆடம்பரங்கள் மக்களை போட்டியில் கொண்டு வந்து விட்டு விடுகின்றது என்றே பயப்படுகின்றோம்.
----------------------------- தந்தைபெரியார் - “பகுத்தறிவு ”கட்டுரை 16.12.1934
29 comments:
வா(வீ)ழ்க சோஷலிசம்!
இந்தியாவில் கார்ப்ப ரேட் நிறுவனங்கள் வைத் துள்ள வரி பாக்கி ரூ.2.46 லட்சம் கோடி இதில் 45 நிறுவனங்கள் ரூ.500 கோடிக்கு மேல் வரி பாக்கி வைத்துள்ளன என்று நிதித்துறை இணை அமைச்சர் ஜே.டி. சீலம் மக்களவையில் தெரிவித் துள்ளார் (6.2.2014).
இந்தியாவில் நாள் வருமானம் 20 ரூபாய் என்ற நிலையில் உள்ள வர்கள் 70 சதவீதம் என்று சென்குப்தா அறிக்கை கூறுகிறது. உலகில் 120 கோடி மக்கள் வறுமை யின் வன்பிடியில் சிக்கி விழிபிதுங்குகிறார்கள் என்றால் அதில் மூன்றில் ஒரு பகுதி (40 கோடி) மக்கள் பாரத புண்ணிய பூமியாம் இந்தியாவில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் பெரும் பணத் திமிங்கலங்கள் இலாபம் கொழிக்கும் எஜமானர்கள், அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி யைச் செலுத்தவில்லை என்றால் இதற்குக் கார ணம் என்ன?
பண முதலைகள், ஏமாற்றுக்காரர்கள் என் பது ஒருபுறம் இருக்கட் டும்; அந்த முதலைகளை அடக்க ஒரு அங்குசம் இந்திய அரசிடம் இல்லை என்பது பரிதாபமே!
கேதன் தேசாய் என்ற பார்ப்பனர் இந்திய மருத் துவக் கவுன்சிலின் தலை வராக இருந்தார். வரு மான வரித்துறையினர் அவர் வீட்டில் புகுந்து சோதனை நடத்திய போது 1500 கிலோ தங்கக் கட்டிகளையும், ரூ.1800 கோடி ரொக்கத்தையும் கைப்பற்றினார்களே - அதற்குப் பிறகு ஒரே ஒரு வரி செய்தி வெளியில் கசிந்ததுண்டா?
சுவிஸ் வங்கியில் மட் டும் முடங்கிக் கிடக்கும், இந்தியர்களின் பணம் ரூ.80 லட்சம் கோடி; இதனை இலகுவாகச் சொல்ல வேண்டுமானால் இந்தியாவுக்கு வெளிநாடு களில் இருக்கும் கடன் தொகையைவிட 13 மடங்கு அதிகம் - இதன் மதிப்பு. இந்தத் தொகையைப் பறிமுதல் செய்தால் ஒவ் வொரு இந்தியக் குடி மகனுக்கும் ரூ.50 ஆயி ரம் இலவசமாக சுண்டல் போலக் கொடுக்கலாமாம்.
பிஜேபி. ஆனாலும் சரி, காங்கிரசானாலும் சரி, சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணத் தைக் கொண்டு வந்தே தீருவோம் என்று முண்டாதட்டினார்களே தவிர சல்லிக்காசுகூட வந்து சேரவில்லை.
பணத் திமிங்கலங் களை மேலும் வளர்ப்பது தான் இந்திய அரசின் கொள்கை போலும்! சொகுசு கார் வாங்க நினைத்தால் அதற்கு இந் திய வங்கிகளில் வட்டி 7 சதவீதம், குளிர்ப்பதனக் கிடங்கு கட்டுவதற்கு முகேஷ் அம்பானிக்கு அளிக்கப்பட்ட கடனுக்கு வட்டி வெறும் 4 சதவீதம்.
அதே நேரத்தில் ஓர் விவசாயி ஒரு டிராக்டர் வாங்க வேண்டுமானால் வங்கி விதிக்கும் வட் டியோ 14 சதவீதம்.
ஹரிபீ கட்டாவோ! (வறுமையே வெளியேறு!) - மயிலாடன்
Read more: http://viduthalai.in/e-paper/74962.html#ixzz2srqbBCwS
காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ். கொள்கையைப் பின்பற்றுபவர்தான் மோடி! ராகுல் காந்தி தாக்கு!
பர்டோலி, பிப்.9- காந்தியின் படுகொலைக்கு பின்னணியில் ஆர்.எஸ். எஸ்.இன் கொள்கைதான் உள்ளது. அதைதான் மோடி யும் பிரதிபலித்து கொண்டி ருக்கிறார் என மோடியை ராகுல்காந்தி தாக்கி பேசி னார். குஜராத் மாநிலம் பர் டோலியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று (8.2.2014) தேர்தல் பிரசாரம் செய்தார்.
இதை முன்னிட்டு ஹசாரி பக் என்ற இடத்தில் பேர ணியும் நடந்தது. அதில், இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் மிகப் பெரிய அளவில் மக்கள் கலந்து கொண்டனர். பின் னர் நடந்த கூட்டத்தில் பேசிய ராகுல், இம்மாநில முதல்வரும் பாஜ.வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை நேரடி யாக தாக்கி பேசினார். அவ ருடைய பேச்சு விவரம் வருமாறு:
சர்தார் வல்லபாய் படே லின் சிலையை அமைப்ப தாக இங்குள்ள தலைவர் கூறி வருகிறார். ஆனால், படேலின் வரலாற்றை அவர் சரியாக படிக்கவில்லை. அவருடைய கொள்கைகள் பற்றி சரியாக தெரியவில்லை.
ஆனால், அவருக்கு சிலை அமைப்பதாக மட்டும் கூறி கொள்கின்றனர். ஆர்எஸ்எஸ் ஒரு விஷ அமைப்பு என்று படேல் கூறினார். மகாத்மா காந் தியின் படுகொலைக்கு பின் னணியில் ஆர்எஸ்எஸ்.இன் கொள்கைதான் உள்ளது. அதைதான் மோடியும் பிர திபலித்து கொண்டிருக் கிறார். உண்மையில்லை என்று தெரிந்தாலும் கூட, தனது மனதில் தோன்றுவதை எல்லாம் அவர் பேசுகிறார்.
நாடு முழுவதும் தகவல் அறியும் உரிமை சட்டத்தை காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. ஆனால், ஊழ லுக்கு எதிராக போராடுவ தாக கூறிக் கொள்ளும்படி மோடி, குஜராத் மாநிலத் தில் லோக் அயுக்தா அமைப்பை உருவாக்குவதற்கான தீர்மா னத்தை 9 ஆண்டுகள் நிறை வேற்றாமல் இருந்தார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் 10 தகவல் ஆணையர்கள் இருக்க வேண்டும்.
ஆனால், குஜ ராத்தில் ஒரே ஒரு தகவல் ஆணையர்தான் இருக் கிறார். அதுவும், நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகுதான் இவரும் நியமிக்கப்பட் டார். ஊழலை ஒழிப்பதில் பாஜ.வுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், அது சம்பந்தப்பட்ட 6 மசோ தாக்களை நாடாளுமன்றத் தில் நிறைவேற்ற காங்கிர சுக்கு ஏன் உதவக் கூடாது? விவசாயிகளின் நலனுக்காக பாடுபடும் ஒரே கட்சி காங்கிரஸ்தான். குஜராத்தில் 13 ஆயிரம் அரசுப் பள்ளி கள் மூடப்பட்டு கிடக்கின்றன. ஏழை மக்களையும், ஆதிவாசிகளையும் புறக் கணித்து விட்டு, மாநிலம் வளர்ச்சி பெறுவதில் எந்த பலனும் இல்லை.
மக்களின் கையில் அதிகாரத்தை வழங்கவே காங்கிரஸ் விரும்புகிறது. வறுமையை ஒழிப்பது பற்றி காங்கிரஸ் பேசுகிறது. பாஜ.வோ ஏழைகளை ஒழிப்பது பற்றி பேசுகிறது. நாடு முழுவதும் மக்கள் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக் கின்றனர். சிலர் டீ விற்கின் றனர். சிலர் டாக்சி ஓட்டு கின்றனர். சிலர் விவசாயம் செய்கின்றனர்.
யார் எந்த தொழில் செய்தாலும் அதை மதிக்க வேண்டும். ஆனால், ஒரு மனிதர் நம்மை எல் லாம் முட்டாளாக்கி கொண் டிருக்கிறார். அது போன்ற வர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டிய அவ சியமில்லை. இவ்வாறு ராகுல் பேசினார்.
Read more: http://viduthalai.in/e-paper/74968.html#ixzz2srqlNoyk
தீட்சதர் வால்
சாதாரணமாகவே குரங்கு அது கள்ளுக் குடித்த போது தேளும் கொட்டி னால் என்னாகும்? என்று தந்தை பெரியார் கூறுவதுண்டு.
இது சிதம்பரம் தீட்சதர் களுக்கு நூற்றுக்கு நூறு பொருந்தும். சிதம்பரம் நட ராஜர் கோயில் தீட்சதர் களின் சிண்டுக்குள் சிக்கி விட்டது என்றவுடன் பூணூல் விரைக்கத் தானே செய்யும்?
சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிற்சபை அரு கில் ஓதுவார் ஆறுமுகசாமி தேவாரம், திருவாசகம் பாடச் சென்றபோது கோயில் தீட்சதர்கள் தடுப்பு வேலையில் இறங்கியுள்ள னர். ஆறுமுகசாமி வழக் கமாக உட்கார்ந்து தேவா ரம், திருவாசகம் பாடும் இடத்தில் எண்ணெயை ஊற்றி அவரை அமர விடாமல் தடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஆறுமுக சாமி காவல்துறையில் புகார் செய்துள்ளார். சிதம்பரம் கோயில், தீட்சதர் கையிலி ருந்து இந்து அறநிலையத் துறைக்குச் சென்ற நிலை யில், கோயிலுக்குள் உண்டி யல் வைக்கப்பட்டு இருந் தது. அப்பொழுது இந்தத் தீட்சதப் பார்ப்பனர்கள் என்ன செய்தார்கள் தெரி யுமா? உண்டியலுக்குள் நெய்யை ஊற்றினார்கள்.
ஏன் தெரியுமா? ரூபாய் நோட்டுகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு நாசமாகப் போய் விட வேண்டும் என்ற பரந்த மனப்பான்மைதான்; தனக் குப் பயன்படாத ஒன்று நாச மாகப் போய்விட வேண் டும் என்பதுதானே பார்ப் பனப் புத்தி!
Read more: http://viduthalai.in/e-paper/74963.html#ixzz2srquW5hk
செருப்பினை செய்திடவும் தெரியும் பயன்படுத்தவும் தெரியும்
- குடந்தையான்
1970-ல் சேலம் மாநாட்டு ஊர்வலத்தில் இரா மனை பெரியார் செருப்பால் அடித்தாராம். அதற்காக புரட்சியாளர் பெரியாரை அப்போதே தாக்கியிருக்க வேண்டும் என, பார்ப்பனன் ஹெச்.ராஜா அண்மை யில் பேசியதற்கு, பலரும் கோபப்படுகிறார்கள்; சிலர் கூட்டம் போட்டு கண்டனம் செய்துள்ளார்கள். நியாயம் தானே;
சாதாரண வார்டு உறுப்பினர் மீது அவதூறு பேசினாலே, அந்த பக்கத்தில் பேருந்து ஓட முடியாத நிலை ஏற்படும் காலத்தில், இரண்டாயிரம் ஆண்டு அடிமைத்தனத்தை புரட்டிப்போட்ட பெரியாரை அவமதிக்க நினைத்தால், கோபப்படாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.
ஆனால், பார்ப்பனன் ஹெச்.ராஜாவுக்கு, அவரது தலைவன் மோடியைப் போல வரலாறு தெரியாது.
காந்தியாரை, ஹெச்.ராஜாவின் ஜாதிக்காரன் சுட்டுக் கொன்ற நிலையில், நாடெங்கும் பதற்றமும், சில இடங்களில் பார்ப்பனர்களைத் தாக்கும் வன் முறையும் ஏற்பட்ட நிலையில், தமிழ் நாட்டில் எந்தக் கலவரமும் ஏற்படக்கூடாது என்ற நோக் கத்தில், அன்றைய அரசு, யாரை அழைத்தது தெரி யுமா? ஹெச்.ராஜாவின் பாட்டன் இராசகோபாலாச் சாரியை அழைக்கவில்லை; ஹெச்.ராஜாவின் (உ)லோக குரு சீனியர் சங்கராச்சாரியை அழைக்க வில்லை;
மனித நேயர் பெரியாரைத் தான் வானொலி மூலம் அமைதிப் படுத்திட அழைத்தார்கள். அன்றைக்கு பெரியார், காந்தியாரைக் கொன்றவன் கோட்சே என்ற பார்ப் பனன் தான் என்று சொல் லியிருந்தால், இன்றைக்கு ஹெச்.ராஜாவின் சமுதாயமே தமிழ் நாட்டில் இருந்திருக்காது.
கடலூரில் பொதுக்கூட்டம் முடிந்து வரும் வழியில், பெரியார் மீது செருப்பு ஒன்று வீசினான் ஹெச்.ராஜாவை ஒத்த ஒருவன். ஆனால் பெரியார் மிரண்டு விட வில்லை; மாறாக, இன்னொரு செருப்பு வீசினால், பயன்படுமே என்று வண்டியை அந்த பக்கமே திருப்பச் சொன்னவர் பெரியார். இன்று அந்த இடத்தில் பெரியாரின் சிலை கம்பீரமாக நிற்கிறது இந்த செய்திகளுடன். செருப்பு ஒன்று விழுந்தால், சிலை ஒன்று முளைக்கும் என்றான் ஒரு கவிஞன்.
ஹெச்.ராஜாவின் ஜாதிக்காரன், இப்போது பிஜேபியில் சேர்ந்துள்ள சுப்ரமணியன் சாமி, (உ)லோக குரு சீனியர் சங்கராச்சாரியை சந்தித்து, தான் பொது வாழ்வில் செல்வதற்கு ஆசி வழங்கிட கோரினார். அப்போது, சீனியர் சங்கராச்சாரி என்ன சொன்னார் தெரியுமா? என்றார். காரணம் கேட்ட போது, சீனியர் சொன்னார், மக்களை அன்றாடம் சந்தித்து வந்தவர் பெரியார்; அதன் காரணமாக, அவர் களிடத்தில் அறிமுகமும், அவர்களின் பிரச்சினை களை அறிந்து கொள்ளவும் முடியும் என்றார்.
பெரியாரின் ஈடுபாட்டால் வைக்கம் போராட்டம் தீவிரம் அடைந்ததால், அங்கே உள்ள பார்ப்பனர்கள், சத்ரு சங்கார யாகம் நடத்தினர். அவ்வாறு செய்தால், அவர்களால் எதிரியாகக் கருதப்படும் பெரியார் இறந்து விடுவார் என்ற எண்ணம். ஆனால் நடந்தது என்ன தெரியுமா? திருவாங்கூர் சமஸ்தானத்தின் ராஜாதான் இறந்து போனார். ஓர் சமஸ்தானத்தின் ராஜாவுக்கே இந்த கதி என்றால், வெறும் பெயரில் மட்டும் ராஜாவாக உள்ள ஹெச்.ராஜா கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.
பெரியாரின் அறிவுரையை ஏற்று, பெயருக்குப் பின்னால் இருந்த ஜாதிப் பெயரை, மெத்த படித்த பண்டிதர் முதல், சாமான்ய மக்கள் வரை நீக்கிய மண் இந்த தமிழ் மண்.
பெரியாரின் கட்டளையை ஏற்று, இந்திய அரசியல் சட்டம், ஜாதியை பாதுகாக்கிறது; அதற்கான பிரிவுகளை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அரசியல் சட்டத்தை கொளுத்தி, அதன் காரணமாக, மூன்றாண்டுகள் வரை கடும் தண்டனையை பெற்ற பெரியார் தொண்டர்கள் வாழும் நாடு இந்த தமிழ் நாடு. ஹெச்.ராஜாவுக்கு, செருப்பினை காலில் மாட்ட மட்டும் தான் தெரியும். ஆனால், திராவிடர் சமுதாயத் திற்கு, செருப்பினை செய்திடவும் தெரியும்; அதற் கான ஆயுதமும் கையில் இருக்கிறது.
Read more: http://viduthalai.in/page-2/74973.html#ixzz2srrVMDIx
மணமகனுக்குத் தாலி
இன்றைய நாளேடு களில் ஒரு செய்தி பர பரப்பாக வெளியிடப் பட்டுள்ளது. நீடாமங் கலம் காட்டு நாயக்கன் தெருவைச் சேர்ந்த சோமு. கல்யாணி இணையரின் மகள் கல்யாணி; சிறீரங் கம் பழனி நாயக்கன் - திலகவதி ஆகியோரின் மகன் சதீஷ் ஆகியோரின் திருமணம் நீடாமங்கலத் தில் நடைபெற்றுள்ளது.
வழக்கம்போல மாலை அணிவிக்கப்பட்டது. மணமகன் மணமகளுக் குத் தாலி கட்டினார்; இது வரை ஒன்றும் இல்லை - எங்கும் நடக்கக் கூடியது தான்; மணமகள் மணமக னுக்கும் தாலி கட்டினாரே பார்க்கலாம்; ஒரே பரப்பு சலசலப்பு! கிசு கிசு!
ஆணும், பெண்ணும் சமம் என்பதற்கு அடை யாளமே இது என்று பெற்றோர் அறிவித்தனர்.
இது வரவேற்கத்தக்க ஒன்றே! திராவிடர் கழகத் தைப் பொறுத்தவரை இது ஒன்றும் புதுமையல்ல; ஏற் கெனவே நடைபெற்றது தான். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் மகள் சரஸ்வதி - புலவர் கண்ணப்பர் திருமணம் நடந்தது. மஞ்சுளா பாய் அம்மையார்தான் முன் னின்று ஏற்பாடு செய்தார்.
மணமகளிடம் மண மகன் கண்ணப்பனைப் பற்றி எடுத்துக் கூறினார். நல்ல பகுத்தறிவுவாதி - நம் கொள்கை வழிப்பட் டவர் என்று எல்லாம் எடுத்துக் கூறினார்.
தாலி உண்டா என்று புரட்சிக்கவிஞரின் மகள் கேட்டார். தாலி எல்லாம் உண்டு என்று மஞ்சுளா பாய் அம்மையார் கூறி னார். அப்படியென்றால் மணமகனுக்கு நானும் தாலி கட்டுவேன் - சம் மதமா என்று எதிர்க் கேள்வி போட்டார் மண மகள் சரஸ்வதி. (புரட்சிக் கவிஞர் மகள் அல்லவா!) அதன்பின் தாலியில்லா மல் அந்தத் திருமணமும் நடைபெற்றது. (23.1.1944).
கையொப்பமிட்டு அழைப்புக் கொடுத்தவர் கள் ஈ.வெ. ராமசாமி மஞ்சுமளாபாய்வைசு.
1964ஆம் ஆண்டில் மன்னார்குடி வட்டம் எடமேலையூர் பெரியார் பெருந்தொண்டர் சாம்பசிவம் அவர்களின் மகள் பானுமதி - சகோதரி யின் மகன் சவுந்தரராச னுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா தந்தை பெரியார் தலை மையில் நடைபெற்றது.
அந்த விழாவிலும் மணமகள் மணமகனுக் குத் தாலி கட்டினார். செய்யாறையடுத்த வாழ்குடை என்ற ஊரில், வி.எஸ். கிருஷ்ணசாமி என்பவருக்கு (கான்ஸ்ட புள்) திருமணம் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்றது. மணமகன் தாலியும் கட்டி விட்டார்; தாலி பெண் அடிமை என்பதற்கு அடையாளம் என்று தந்தை பெரியார் பேசினார்; தன் கழுத்தில் கட்டப்பட்ட தாலியை திடீரென்று மணமகள் கழற்றி மேசையின்மீது போட்டாரே பார்க்கலாம்.
உலகில் நடக்கும் எந்த கலாச்சாரப் புரட்சிக் கும் மேலானது - தந்தை பெரியார் தம் கருஞ் சட்டைக்காரர்களின் அன்றாடப் புரட்சிகள்!
- மயிலாடன்
Read more: http://viduthalai.in/e-paper/75035.html#ixzz2sy9Sz0a2
செய்திச் சிதறல்கள்.....
சரஸ்வதி யாகமாம்
திருப்பதியில் சரஸ்வதி யாகம் நடத்தப்பட்டுள்ளது. ஏராள மாணவர்கள் கலந்து கொண்டார்களாம். தேர்வு நன்றாக எழுத கங்கணக் கயிறுகளும் கட்டப்பட்ட தாம்.
(மாணவர்களைக் கெடுப்பதற்கு அவர்களின் தன்னம்பிக்கையையும் விடா முயற்சியையும் குலைப் பதற்கு இது போன்ற மூடத் தனங்கள் அரங்கேற்றப்படு கின்றன - இவை தடுக்கப்பட வேண்டும்).
நல்ல நேரம்
தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டம் நிதி நிலை தாக்கலுக்காக 13ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கும் என்று அறிவிக் கப்பட்டு இருந்தது. இப் பொழுது திடீரென்று காலை 11 மணிக்கென்று மாற்றப்பட் டுள்ளது. காரணம் இதுதான் நல்ல நேரமாம். வாழ்க அண்ணா நாமம்!
(விஞ்ஞான மனப்பான் மையை வளர்க்க வேண்டும் - ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரச மைப்புச் சட்டம் கூறுகிறது. முதலில் முதல் அமைச்சர் களைக் கூட்டிப் பகுத்தறி வுப் பாடம் நடத்துவது அவசியம்).
தீராவினை!
திருப்பதி ஏழுமலை யானை தரிசிக்க இலங்கை அதிபர் ராஜபக்சேயின் மனைவி சிராந்தியா ராஜ பக்சே சனியன்று திரு மலைக்கு வந்தா ராம்.
தீராத வினையெல்லாம் தீர்த்து வைக்கும் திருவாளர் ஏழுமலையான், இலட்சக் கணக்கான தமிழர்களைக் கொன்ற பாவத்தைத் தீர்த்து வைக்க மாட்டாரா என்ற நம் பிக்கையாக இருக்குமோ!
(இன்னொரு கூடுதல் தகவல்: புத்தர் விகாரமான இருந்ததுதான் ஏழுமலை யான் கோயிலாக மாற்றப் பட்டது என்பது வரலாறு.)
சர்வதேச அவமானம்!
அருணாச்சலப் பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் மகன் டில்லியில் நிடோ தனியம் கொல்லப்பட்டது தேசிய அவமானம் என்று பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.
(ஒருவர் கொல்லப்பட் டதே தேசிய அவமானம் என்றால் குஜராத்தில் 2000 பேர் கொல்லப்பட்டது சர்வ தேச அவமானம் அல்லவா!)
நாணயம்?
கழிப்பறையில் கட்டணம் வசூலித்தால் 1913 என்ற எண்ணுக்குத் தொலைபேசி செய்யுங்கள் என்று மாநக ராட்சி அறிவித்துள்ளது
(நம் நாட்டின் நாணயம், பொது ஒழுக்கம் எந்த யோக்கி யதையில் உள்ளது என்ப தற்கு இது ஒன்று போதாதா? முன்பெல்லாம் ரயில் நிலை யங்களில் குடிதண்ணீர் பானையில் குவளையை சங்கிலியால் கட்டி பூட்டுப் போட்டுத் தொங்க விடுவார் கள். அதுபற்றி அப்பொழுது விடுதலை கிண்டல் செய் ததுண்டு - இந்த 2014-லும் இப்படியொரு நிலையா? இதுதான் பாரத புண்ணிய பூமியாம்.
(வெட்கக்கேடு சர்வசக்தி கடவுள் கோயிலுக்கும், உண்டியலுக்கும்கூட இங்கு பூட்டுத் தேவைப்படுகிறதே!)
Read more: http://viduthalai.in/e-paper/75041.html#ixzz2syA3RfGr
சிக்கன எளிய திருமணம் - கலைஞர் மன நிறைவு -
சென்னை, பிப்.10- தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் இல்லத்தில் எளிமையான முறையில் கலைஞர் தொலைக்காட்சி ஊழியர் தம்பிதுரை இல்லத் திருமண விழா நடைபெற்றது. கலைஞர் நடத்தி வைத்தார். சுயமரியாதை முறையி லான எளிய திருமண நிகழ்ச்சிகளை ஆடம்பரமாக நடத்துவதைத் தவிர்த்து நம்முடைய வீட்டிலேயே நடத்திக் கொள்கிற இந்தச் சிக்கனம் போற் றத்தக்கது - பாராட்டத்தக்கது. தந்தை பெரியார் பலமுறை இந்த முறையைப் பாராட்டியிருக்கிறார் - நானும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார் கலைஞர் (9.2.2014).
Read more: http://viduthalai.in/e-paper/75038.html#ixzz2syACdAj1
விபீஷணத்தனத்துக்குப் பாடம் கற்பிப்போம்!
சென்னையில் பிப்ரவரி 15,16 ஆகிய நாட்களில் அகில இந்திய வித்யார்தி பரிஷத் (ஏபிவிபி) என்னும் தேசிய மாணவர் அமைப்பின் இரண்டு நாள் மாநாடு நடை பெறுகிறதாம்.
மாநாடு நடைபெறும் இடம், சென்னை - கொரட்டூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளி வளாகம்; விவேகானந்தர் பெயரிலும், ஜெயகோபால் கரோடியா என்னும் பெயர்களிலும் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் எல்லாம் (இதில் தேசிய என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்) இந்த சங்பரிவார்களுக்கான கேந்திரமான இடங்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற கல்விக் கூடங்களில் காவி சமாச்சாரங்கள் தான் முக்கியமாக திணிக்கப்படும் என்பதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படாது.
நடக்கவிருக்கும் மாநாட்டில் யார் யார் எல்லாம் கலந்து கொள்கிறார்களாம்?
பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.எம்.பல்கலைக் கழக வேந்தர் பச்சமுத்து மாநாட்டை தொடங்கி வைக்கிறார். காந்தீய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன் அமைப்பின் மாணவர் பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனராம்.
இதன் மூலம், இவர்களைத் தமிழ்நாட்டு மக்கள் அடையாளம் காண வேண்டும் என்பதுதான் நமது அன்பான வேண்டுகோள்.
கடந்த ஒரு நூற்றாண்டாக, தமிழ் மண்ணிலே பகுத்தறிவு, சுயமரியாதை, மனித சமத்துவம், சமூகநீதிக்காக ஒரு மாபெரும் தலைவர் தந்தை பெரியார் சிந்தனைகளை விதைத்து, ஓய்வறியாப் பிரச்சாரங்களை மேற்கொண்டு, களங்கள் பல கண்டு, தியாக நெருப்பில் குளித்தெழுந்து மிகப் பெரிய எழுச்சி, மாற்றம் தமிழ் மண்ணில் உருவாக்கப் பட்டுள்ளது. அதன் காரணமாக, ஆண்டாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களிடையே தன்மான உணர்வு - விழிப்புணர்வு ஏற்பட்டது. கல்வி வாய்ப்புக் கதவுகள் திறந்து விடப்பட்டன; வேலை வாய்ப்புக்குப் பாட்டைகள் கிடைத்தன.
தூர போ - கிட்டே வராதே என்ற உயர் ஜாதி ஆதிக்கக் குரல்களின் குரல் வளைகள் நெரிக்கப்பட்டன. பொதுச் சாலைகளும், வீதிகளும், குளங்களும் எல்லோருக்கும் பொதுவானவை; அனைவரும் புழங்கிட உரிமை உண்டு என்ற உத்தரவாதம் உண்டாக்கப்பட்டது. பேருந்துகளின் தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதியில்லையென்றால், பேருந்துகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும்; பள்ளிகளில் தாழ்த்தப்பட்டோருக்கு இடம் இல்லையென்றால் உதவித் தொகை நிறுத்தப்படும் என்று - இந்தியத் துணைக் கண்டத்தில் யாரும் கனவு காணாத கால கட்டத்தில் தமிழ்நாட்டில் இதற்கான மாற்றங்களுக்கான விதைகள் ஊன்றப்பட்டு, மாச்சரியங்கள் மருண்டோடச் செய்யப்பட்டு மனிதம் இங்கு தழைத்தோங்கும் நிலை ஏற்படுத்தப்பட்டது.
தந்தை பெரியார் அவர்களால் 1925இல் சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்ட அதே காலத்தில்தான், இந்து மகா சபையும் இங்கு உண்டாக்கப்பட்டது. ஆனால் பெரியார் பிறந்த மண்ணில் அந்த நச்சுச் செடியால் முளைவிட முடியவில்லை.
இன்றைக்கும்கூட இந்தியாவின் வேறு சில பகுதியில் இந்தக் காவிக் கூட்டம் கால் பதித்திருந்தாலும், தமிழ் மண் ணில் எவர்கைகளாவது கிடைக்காதா? யார் கால்களாவது தட்டுப்படாதா என்று பரிதவிக்கும் பரிதாப நிலைதான்.
நமக்குள்ள வேதனையெல்லாம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர்கள்கூட, இன்றைக்குப் பணம் தங்கள் கையில் சிக்கி இருக்கிறது என்பதற்காக ஏதோ ஒரு கணக்குப் போட்டு, நமது நீண்ட கால அடிமைத்தனத்துக் குக் காரணமாக இருந்த சக்திகளுக்கு நடைபாவாடை விரிக்கத் துடிக்கிறார்கள் என்றால் இந்தக் கேவலத்தை என்னவென்று சொல்ல!
காந்தியின் பெயரால் கட்சி வைத்துக் கொண்டு இருக்கிற - அறிவு ஜீவி என்று தனக்குத்தானே முதுகைத் தட்டிக் கொள்கின்றவர்கள் எல்லாம் வருண வெறி- மதவெறிப் பிடித்த பாசிசக் கும்பலுக்குக் கைலாகு கொடுக்கிறார்கள்; காந்தியைக் கொன்ற கும்பலுக்குப் பூர்ண கும்ப வரவேற்பு அளிக்கிறார்கள். என்றால் - எத்தகைய கேவலம், அவமானம்!
எனக்குள்ள கவலையெல்லாம் தமிழர்களுள் விபீஷணர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதே என்று சொன்னாரே தந்தை பெரியார் - அது தான் நினைவிற்கு வருகிறது. தந்தை பெரியார் அவர்களின் தொலைநோக்கை எண்ணிப் பார்க்க வேண்டும்.
தமிழ்நாட்டு மக்கள் ஏமாந்துவிட மாட்டார்கள். நடக்க இருக்கும் 16ஆவது மக்களவைத் தேர்தலில் காவிக் கூட்டத்தை மண்மூடிப் போகச் செய்வதோடு - அந்தக் கூட்டத்துக்குத் தமிழ் மண்ணில் நடை பாவாடை விரிக்கும் வீடணர்களுக்கும் சரியான பாடத்தையும் கற்பிக்க வேண்டும்; தந்தை பெரியார் அவர்களால் பயன் பெற்ற - பக்குவம் பெற்ற நம் தமிழ்நாட்டு மக்கள் அதனைச் செம்மையாக செய்வார்கள் என்பதில் அய்யமில்லை வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
Read more: http://viduthalai.in/page-2/75024.html#ixzz2syARcQyn
திருக்குறள்
நம் நாட்டினருக்கு என்ன கலை, என்ன குறிக்கோள், என்ன நாகரிகம் என்று கேட்டால் அதற்கு ஆதாரமாகத் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் ஒன்றைத்தான் எடுத்துக்காட்ட முடியும். - (விடுதலை,3.10.1958)
Read more: http://viduthalai.in/page-2/75021.html#ixzz2syAr7S9z
திரும்பத் திரும்ப பேசற நீ
-குடந்தையான்
அண்மைக் காலமாக நரேந்திர மோடி, பேசும் பொதுக் கூட்டங்களில் எல்லாம் தான் டீ விற்று வந்தவன் என்பதை அடிக்கடி சொல்லி, அவ் வாறு சொல்வதன் மூலம், தான் சாமானிய மக்களின் பிரதிநிதி போல காட்டிக் கொள்ள முயல்கிறார். ஆனால், நடைமுறையில், குஜராத்தின் முதல்வராக மோடியின் செயல்பாடு கள், சாமானிய மக்களின் வளர்ச்சிக் காக இல்லை; மாறாக, இந்த நாட்டின் பெரு முதலாளிகள், பெரும் கொள் ளையடிப்பதற்கான திட்டங்கள் தான், மோடி தலைமையிலான குஜராத்தில் முன்னுரிமை பெறுகின்றன. இந்த பெரும் தொழில் நிறுவனங் களால், பெரிய அளவில் வேலை வாய்ப்பு நடைபெறவில்லை. வேலை வாய்ப்பை அதிக அளவில் உருவாக் கும் குறு, சிறு, தொழில் செய்யும் தொழில் துறையினருக்கு எந்த உதவியும் செய்யப்படவில்லை. குஜராத்தின் வரவு செலவு கணக்கில் 40 விழுக்காடு, பெரு முதலாளி களுக்கான மானிய நிதியாகவும், சிறு, தொழில் செய்வோருக்கு 2.3 விழுக் காடு மானிய நிதியாகவும் தான் அளிக் கப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனத் திற்கும், அதானி குழுமத்திற்கும் தான் குஜராத்தில் அதிக அளவில் சலுகை கள் தரப்பட்டுள்ளன. இந்நிறுவனங் களால் பெரிய அளவில் வேலை வாய்ப்பு தரப்பட வில்லை. மோடியை பிரதமராக்கிடுவதில் பெரு முத லாளிகள் தான் அதிக அளவில் பணம் செலவழித்து வருகிறார்கள்.
ஆனால், அதனை மறைப்பதற்கு, தன்னுடைய தொடக்க கால நிலையைக் கூறி, மக்களிடம் அனுதாபம் பெற முயலுகிறார் மோடி. குஜராத்தில் 2003 முதல் 2011 வரை சுமார் 673 பில்லியன் டாலர்கள் அன்னிய முதலீடுகளுக் கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்ட தாகவும், அதில் 84 விழுக்காடு அளவில் திட்டங்கள் நிறைவேற்றப் பட்டதாக மோடியின் அரசு செய்தி வெளியிட்டது. இது உண்மையாக இருந்திருக்குமானால், குஜராத், சீனாவின் அன்னிய முதலீட்டு அளவை விட கூடுதல் நிதியை பெற்றுள்ளதாக அர்த்தம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை; மாறாக 2012-13 க்கான அன்னிய நேரடி முதலீடு, குஜராத்திற்கு ரூ.2473 கோடிதான், அதாவது நாட்டின் மொத்த அன்னிய முதலீட்டில் 2.38 விழுக்காடு பெற்று, ஆறாவது இடத் தில் உள்ளது. மராட்டிய மாநிலம் 40 விழுக்காடு அதாவது, ரூ.49000 கோடி நேரடி அன்னிய முதலீட்டை பெற்று முதல் இடத்தில் உள்ளது. அடுத்த நிலையில், தில்லி, தமிழ் நாடு, ஆந் திரா, கர்நாடகா மாநிலங்கள் உள்ளன. ரிசர்வ் வங்கி அறிக்கையின் படி, அன்னிய நேரடி முதலீடு, மராட்டிய மாநிலத்திற்கு 45.8 பில்லியன் டாலர்கள், தில்லிக்கு 26 பில்லியன் டாலர்கள், கர்நாடகா 8.3 பில்லியன் டாலர்கள், தமிழ் நாடு 7.3 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் கிடைத்தது. மோடியின் குஜராத் அரசுக்கு 7.2 பில்லியன் டாலர்கள் தான் கிடைத் தது. (தி ஹிந்து 13.4.2013) ரிசர்வ் வங்கி அமைத்த குழு அளித்த தகவலின்படி, குறைந்த அளவு முன்னேற்றம் அடைந்த மாநிலமாக குஜராத்தை அறிவித்துள்ளது. கல்வி, வீட்டு வசதி, வறுமைக் கோட்டின் அளவு, மருத் துவம், கல்லாதவர் விகிதம் ஆகிய காரணிகளைக் கொண்டு நிர்ணயிக்கப் படும் மனித வள குறியீட்டில், 12-வது இடத்தைத் தான் குஜராத் மாநிலம் பெற்றுள்ளது. கேரளா, கோவா, தமிழ் நாடு ஆகிய மாநிலங்கள் முன்னேறிய மாநிலங்களாக கருதப்படுகின்றன. (டெலிகிராப் செப் 27, 2013). கார்ப் பரேட் முதலாளிகளின் காவலனாக இருக்கும் மோடி, இந்த உண்மை நிலையை மறைத்து, தான் ஏதோ சாமான்ய மக்களுக்கு காவலன் போலவும், குஜராத் மாநிலம் தமிழ் நாடு உள்ளிட்ட மாநிலங்களைக் காட்டிலும் முன்னேறிவிட்டதைப் போலவும், தொடர்ந்து புளுகு மூட் டைகளை அவிழ்த்து விடுகிறார். முன்னேற்றம், முன்னேற்றம் என்று தான் மோடி சொல்கிறாரே தவிர, ஒரு இடத்தில் கூட, அனைத்து மக்களையும் உள்ளடக்கிய முன்னேற் றம் என்பதை மறந்தும் சொல்ல வில்லை; அவரது பேச்சிலும், செய லிலும் சமூக நீதியைப் பற்றி எந்த கருத்தும் இல்லை. அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு, கோயபல்ஸ் புளுகு என்பதையெல்லாம் மிஞ்சி, இனி மோடி புளுகு என்று வரலாற்றில் பதிவு செய்யும் அளவுக்கு, திரும்பத் திரும்ப பொய்களை சொல்லிக் கொண்டே வருகிறார். தமிழக மக்கள் மோடி புளுகை நம்பும் ஏமாளிகள் அல்ல என்பதை வரும் தேர்தல் மூலம், மோடிக்கும், அவருக்கு கைலாகு கொடுக்கும் கூட்டத்திற்கு உணர்த்த வேண்டும்.
Read more: http://viduthalai.in/page-2/75034.html#ixzz2syBN6Fic
கிராம அதிகாரப் பகிர்வு நடைமுறையில் யாருக்குப் பயன்படுகிறது?
ஜனவரி 30, 2014 அன்று காந்தியாரின் நினைவுநாள் நிகழ்ச்சிகளில் நாட்டின் அர சியல் அதிகாரத்தில் இருப் போரின் நடவடிக்கைகள் நாட்டின் தந்தை மகாத்மா காந்தி என்பதை மறந்து வருகின்ற நிலைமைகளை தெரிவிப்பதாக அமைந்து விட்டன. மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ஆளுநர் கலந்துகொண்ட நினைவு நாள் நிகழ்ச்சியில் அந்த மாநில அரசின் ஒரு அமைச்சர் கூட கலந்து கொள்ளவில்லை. மும்பாய் மாநகர மேயர் சுனில் பிரபு தேசத் தந்தையின் நினைவுநாள் நிகழ்ச்சியி னையே மறந்துவிட்டார். தமக்கு நினைவூட்டவில்லை என அதிகாரிகள் மீது பழி போட்டுவிட்டார். இந்த நிலை வியப்பினை அளிக்கத் தக்கதாக இல்லை என்பதை அண்மையில் ஒரு செய்தி ஊடகம் பொதுமக்களிடம் நடத்திய வாக்கெடுப்புப் பணியின் முடிவுகள் முன் னமே தெரிவித்துவிட்டன. நாட்டில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு வாக்காளர் கள் சோனியா காந்தியை மகாத்மா காந்தியின் உறவி னர் எனக் கருதுவதாக அந்த ஆய்வின் முடிவு கூறுகிறது.
காந்தியாரின் போதனை கள் பலரை ஊக்குவிப்ப தாகத் தோன்றுகிறது! ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் காந்தி குல்லாவை அணிவதன் மூலம் காந்தியாரின் தத்து வத்திற்கு தம்மை சொந்த மானவர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள். அதிகாரப் பங்கீட்டை வலியுறுத்துவ தன் மூலம் காந்தியாரின் கிராம சுயராஜ்யத்தை நிறை வேற்ற முயல்வதாகக் கூறு கின்றனர்.
ஆனால் அவர்கள் காந்தி யாரின் நிழல் ஆதிக்கத்தில் வாழ்ந்த மற்றொரு பேரு ருவாகத் திகந்த தலைவர், காந்தியாரின் தத்துவப் போதாமையை தம் மறை விற்கு பின்னர் வெளிப்படுத் திக் காட்டிய வலிமையினை அக்கட்சியினர் கருத்தில் கொள்ள வேண்டும். ஆம் தலித் மக்களின் தலைவராகக் கருதப்பட்ட டாக்டர் பீம ராவ் அம்பேத்கர் ஆவார் அவர்.
காந்தியாரின் கொள்கை
கிராம நிர்வாகத்தைப் பொறுத்த வரையில் காந்தி யாரின் கொள்கைகளும், அம் பேத்கரின் கொள்கைகளும் எதிரானவை. மய்ய அரசு தம்மிடம் குறைந்த அதிகா ரத்தை வைத்துக் கொண்டு, பெரும்பான்மை அதிகாரங் களை கிராம சபையிடம் அளித்துவிட வேண்டும்; கிராமத் தலைவர் ஆட்சி செலுத்தும் பழைமைவாத அடிப்படை நிலவிட வேண் டும் என்று காந்தியார் விரும் பினார். ஆனால் அம்பேத் கரோ கிராமங்கள் மற்றும் அதன் நிர்வாகத் தலைமை யினர், கொடுங்கோன்மை, ஜாதி பாகுபாடு, வகுப்பு பேதம் ஆகியவற்றின் ஊற் றுக் கண்ணாய் திகழ்ந்து வரு கிறார்கள் எனக் கருதினார். மனித நேயத்திற்குப் புறம் பாக நடந்து கொள்ளும் ஆதிக்க மனப்பான்மையி னரிடம், மனித உரிமைகள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் எனக் கேள்வி கேட் டார். ஒரு முறை பம்பாய் மாநில சட்ட மேலவையில், கிராமத் தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளித்திட வல்ல. மசோதா விவாதத் திற்கு வந்த பொழுது அம் பேத்கார் கூறியது நினைவூட் டத்தக்கது:
ஜாதியக் கட்டுப்பாட் டுக்குள் உள்ள மக்கள் பகுதி யினர் - பழைமைவாத ஆதிக்க மனப்பான்மை கொண்ட மக்கட் பிரிவு - சமத்துவக் கோட்பாட்டிற்கு எதிரான ஒரு பிரிவினர் - சமூக தளத்தில் பிறப்பின் அடிப்படையி லான வேறுபாட்டை வலி யுறுத்தும் வகையினர் - மக்களில் ஒரு பகுதியினர் உயர்ந்தவர்கள், பிறர் தாழ்ந் தவர்கள் எனும் கருத்தைக் கடைப்பிடிப்போர் - இவர் களிடம் நியாயமான வகை யில் நீதியை எதிர்பார்க்க இயலுமா? கிராமத் தலை மைக்கு ஆட்சி அதிகாரப் பகிர்வை நான் வன்மையா கக் கண்டிருக்கிறேன். அப் படிப்பட்டவர்களிடம் எமது வாழ்வு, விடுதலை, எங்கள் உடமைகளை அடகு வைத் திட நாங்கள் தயாராக இல்லை.
டாக்டர் அம்பேத்கரின் ஆய்ந்த முடிவுகள் 80 ஆண்டு களைக் கடந்த வேளையில் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. அரசமைப்புச் சட்ட அரவ ணைப்புப் பிரிவுகள், இதர சட்டப் பிரிவுகள், அரசியல் பிரகடனங்கள் உள்ள நடப்பு வேளையிலும் பலமாகவே ஒலிக்கத் தொடங்கிவிட்டன. கிராமத்தை நோக்கிய அதிகா ரப் பகிர்வு, சிறுபான்மை மக்களை அச்சுறுத்துவதாக உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் - முசாபர் நகரில் கொத்தாக முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்ட நிலைமை நிகழ்ந்துள்ளது. ஒரு முஸ்லிம் ஆண், ஒரு இந்துப் பெண்ணை விரும்பிய நிகழ்வு, வெறுப் பினை ஊட்டும் ஜாட் மகா சபைப் பேச்சால் கொலை நடைபெறும் அளவிற்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது.
பஞ்சாப் மற்றும் ஹரி யானா மாநிலத்தில் உள்ள கப் பஞ்சாயத்து (ரிலீணீஜீ ஜீணீஸீநீலீணீஹ்ணீ) நில உடைமை, கால்நடை உடமை பற்றிய விசாரணை, மணமுடித்தல் முதல் மனிதக் கொலை உள்ளடக்கிய விசா ரணை செய்து, தீர்ப்பு அளிக் கின்ற நீதிமன்றங்கள் போல செயல்பட்டு வருகின்றன. மனித உரிமை பற்றிய ஒவ் வொரு சட்ட விதியையும் அவை உடைத்தெறிந்து வரு கின்றன. பெண்கள் நாகரிக மாக உடையணிவதைக் கூட தடுக்கவல்ல தீர்ப்பினை வழங்குகின்றன. செல்பேசி பயன்பாட்டைத் தடுப்பது. குழந்தைத் திருமணத்தை ஆதரிப்பது, இளம் தம்பதி யரை, மரியாதைக் கொலை என்பதன் பேரால் முடிவு கட்டுவது என மனித உரிமை மீறலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இப்படிப்பட்ட கொலைகள் மணம் புரிந்த ஆணும் பெண்ணும் வெவ் வேறு ஜாதியினைச் சார்ந்த வர்களாக இருக்கும் பொழுது நடைபெறுகின்றன. மேலும் மணம் புரிந்த இணையர் ஒரே கோத்திரத்தைச் சார்ந்த வர்களாக இருந்தாலும் நடைபெறுகிறது.
மேற்கு வங்கத்திலும்...
இப்படிப்பட்ட அவல, காட்டுமிராண்டித்தனமான நிகழ்வுகள் நாட்டின் வடக் குப் பகுதியில் மட்டும் நிக ழுவதாக கருதிவிடமுடியாது. இரண்டு வாரங்களுக்கு முன்பு மேற்கு வங்க மாநிலத்தின் 20 வயதுப் பெண்ணை, 13 ஆண்கள், சேர்ந்து பாலியல் வன்முறை செய்திட கிராம சபையினர் தண்டனை விதித் தனர். அந்தப் பெண் செய்த தவறு (?), வேறு ஜாதியைச் சார்ந்த ஆணை விரும்பியதே!
அரியானா மாநிலத்தை விட முற்போக்கு மாநிலமா கக் கருதப்படும் தமிழ்நாட்டி லும் தவறு நடக்காமல் இல்லை. ஒரு தலித் ஆண், வன்னியர் சமுதாயப் பெண் இருவரும் விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்ட தால் 268 தலித் குடும்பத்தினர் வீடுகள் தீக்கிரையாக்கப்பட் டன. வன்னியர் சமுதாய, டாக்டர் ராமதாஸ் காதல் திருமணத்தை கடுமையாகத் தாக்கி, தலித் ஆண்கள், வன் னியர் சமுதாயப் பெண்களை மயக்கிக் காதல் வயப்படுத்தி, பின்னர் அவர்களை கைவிட்டு விடுவதாகக் கூறுகிறார். தமிழ் மக்களுக்கு எதிராக ஜாதி இந்துக்களின் கூட்டணி யினை அவர் கோருகிறார். ஜாதி மறுப்புத் திருமணத்தை தடை செய்திடவும், தலித் வன்கொடுமைச் சட்டத்தில் திருத்தங்களையும் வேண்டு கிறார்.
இத்தகைய நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நடைபெற்ற தனிப்பட்ட நிகழ்வுகள் அல்ல. தலித் மக்களுக்காக ஒதுக்கப் பட்ட சில ஊராட்சி மன்றங் களில் தலைவருக்கான தேர்த லில் வேட்பு மனு தாக்கல் செய்திட ஒரு தலித் கூட முன் வரவில்லை. காரணம் ஆதிக்க ஜாதியினரின் அச்சுறுத்தலால் தலித் யாரும் முன்வரவில்லை.
உலக வங்கி மேற்கொண்ட ஒரு ஆய்வின், முடிவு - உல கில் அனைத்து நாடுகளிலும், கிராமங்களை விட அதிகாரம் கொண்ட மய்ய அரசுகள், முற்போக்கு மதசார்பின்மை கொண்டவைகளாக உள் ளன. அம்பேத்கர் குறிப்பிட்ட கட்டுப் பெட்டியான கிராமம் இன்னும் உலக உண்மையா கவே உள்ளது.
இப்படிப்பட்ட சூழலி லும், பஞ்சாயத்துகளுக்கு அதிக அதிகாரம் வழங்கிட வும், நீதிக் கொள்கை வகுத் திடவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட போக்குகள் கிராம அளவில் மக்களைப் பாகுபடுத்திப் பார்க்கும் போக்கினைப் பேணுவதாகவே அமையும். கிராமப் பஞ்சாயத்துகளில் ஒரு சிலவற்றை மட்டும் தலித் மக்களுக்காக, பெண் களுக்காக ஒதுக்கிவிடுதால் மட்டும் நியாயமான பலன், நீதி கிடைத்து விடுவதில்லை.
அறிவார்ந்த பார்ப்பனர் கள், கிராம பஞ்சாயத்துகளில் நிலவி வரும் மக்களைப் பாகுபடுத்திப் பார்க்கும் நிலைமையினை நீக்கி விடுவார்கள் என அரவிந்த் கெஜ்ரிவால் போன்றவர்கள் நினைக்கின்றனர். இது நகைப்பிற்கு இடமானது. காந்திக் குல்லாயை அவர்கள் போட்டுக் கொள்ளட்டும்; அருள் கூர்ந்து அம்பேத்கரை யும் அவர்கள் செவி மடுத்திட வேண்டும்.
ஆதாரம்: சுவாமினோமிக்ஸ்
தி டைம்ஸ் ஆப் இந்தியா - 9.2.2014
மொழியாக்கம்: வீ.குமரேசன்
Read more: http://viduthalai.in/page-4/75001.html#ixzz2syBhXQLp
ஆந்திரா - போரவரிப்பாலம் கிராமத்தில் தமிழர் தலைவர்: செய்தியாளர்கள் சந்திப்பு
ரேபல்லியில் பாராட்டு விழா நிகழ்ச்சியில் பங் கேற்ற பின்னர், சமூக நீதி மன் றத்தின் மதிப்புறு தலைவர் கேச சங்கர்ராவ் அவர்கள் தமது கிராமமான போர வரிப்பாலத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு தமிழர் தலைவரை அழைத்துச் சென்றார். ஒடுக்கப்பட்ட வகுப்பினரான, மரத்திலி ருந்து கள் இறக்கும் மக்கள், பெரும்பான்மையினராக வாழும் சிற்றூர் அது.
அங்கு தமிழர் தலைவ ரின் செய்தியாளர்கள் சந்திப் புக்கு ஏற்பாடு செய்திருந் தனர். செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் தெரி வித்தவைகளின் சுருக்கம்:
நீதித் துறையின் உயர் மட்ட நீதிபதிகள் நியமனத் தில் நியாயமான, சமூக நீதி யினை நிலைநாட்டும் வகை யில் தெரிவுகள் நடைபெற வேண்டும். நாடு விடுதலை பெற்று 66 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் தற்சமயம் உச்சநீதிமன்றத்தில் உள்ள 31 நீதிபதிகளில் தாழ்த் தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் கூட இல்லை என்பது சமூகநீதிக்கு ஏற் பட்ட அவல நிலையாகும். 66 ஆண்டுகள் கழித்துத்தான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தைச் சார்ந்தவர் இந்தியா வின் தலைமை நீதிபதியாக வர முடிந்துள்ளது. உயர்நீதி மன்ற, உச்சநீதிமன்ற நீதிபதி கள் நியமனத்தில் பிற்படுத் தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற் றும் பழங்குடி வகுப்பின ருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. பெண் கள் நீதிபதிகளாக நியமனம் பெறுவதிலும், உயர்ஜாதி மகளிருக்கே அத்தகைய பதவிகள் அளிக்கப்படுகின் றன.
சமூகநீதி என்பது கொடை அல்ல; ஒடுக்கப் பட்ட மக்களின் அடிப்படை உரிமையாகும். உச்சநீதிமன் றம் மற்றும் உயர் நீதிமன்றங் களில் நீதிபதி பதவிகள் பிற் படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினருக்கு உரிய அளவில் இடம் கிடைத் திடும் வகையில் வலிமை யான சமூகநீதி இயக்கம் உருவாக்கப்பட்டு வருகிறது. அரசியல் எல்லைகளைக் கடந்து அனைத்து கட்சிகளி லும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் தலைவர்கள் ஒருங் கிணைந்து போராட முன் வரவேண்டும்.
அண்மையில் காங் கிரசு இயக்கத்தின் தலைவர் சோனியா காந்தி அவர்கள் இடஒதுக்கீட்டு நடை முறைக்கு பொருளாதார அளவுகோல் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது; ஜாதி அடிப்படையில் வழங் கப்படும் தற்போதைய நிலை மையே நீடிக்கும் என உறுதி செய்துள்ளதை வரவேற்கி றோம். காரணம், இந்நாட்டில் இன்னமும் ஜாதி அமைப்பு முறை நீங்கியபாடில்லை என்பதே அது. அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங் களில் மட்டுமே நடை முறைப்படுத்தப்படும் இட ஒதுக்கீடு, தனியார் துறையி லும் கடைப்பிடிக்கப்பட போராட வேண்டும், தனியார் மயமாக்கப்படும் சூழலில் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க் கப்படுகின்றன. எடுத்துக்காட் டாக, அரசு வசம் இருக்கும் விமான நிலைய மேலாண் மைப் பொறுப்பு தனியாருக் குச் சென்றிடும் நிலை உரு வாகி உள்ளது.
வரி விதிப்பில் புதி தாக உணவு தானிய விற்ப னையில் அரிசிக்கு சேவை வரி விதிப்பிற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அரிசி உணவு உட்கொள்ளும், தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கேரளா, கர்நாடகா, மாநில மக்களைப் பெரிதும் பாதிக் கும் வரி விதிப்பாகும் இது. உணவு பழக்கவழக்கப் பண் பாட்டில், ஒரு சாராரை மட் டும் (அரிசி உணவு உண்பவர் கள்) பாகுபடுத்தி அவர்க ளுக்கு வரிப்பளுவைக் கூட் டிட வல்ல மய்ய அரசின் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
- மேற்கண்டவாறு தமிழர் தலைவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
Read more: http://viduthalai.in/page-4/74999.html#ixzz2syBsPPjf
ஆர்.எஸ்.எஸ்.காரரான மோடியை மக்கள் ஏற்கமாட்டார்கள் கருநாடக முதல் அமைச்சர்
பெங்களூரு, பிப். 10- நரேந் திரமோடி ஒரு ஆர்.எஸ்.எஸ். தொண்டர் என்று கர்நாடக முதல் அமைச்சர் சித்தரா மையா கூறினார்.
நாடாளுமன்ற தேர்த லையொட்டி பாரதீய ஜனதா வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி நாடு முழுவ தும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். மேலும், நாட்டில் நரேந்திர மோடி அலை வீசுவதாக பார தீய ஜனதாவினர் சொல் கிறார்கள்.
ஆனால் நரேந்திரமோடி யின் திட்டம் கர்நாடகத்தில் எடுபடாது என்று முதல் அமைச்சர் சித்தராமையா கூறினார். 2010-2011ஆம் ஆண்டுக்கான சினிமா விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று தார்வார் செல்லும் வழியில் ஊப்ளி வந்த சித்தரா மையா அங்கு செய்தியாளர் களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது செய்தியாளர் களின் கேள்விக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:
நாடாளுமன்ற தேர்த லில் பாரதீய ஜனதா வெற்றி பெறாது. மத்தியில் அய்க்கிய முற்போக்கு கூட்டணி மீண் டும் வெற்றி பெற்று ஆட் சியை பிடிக்கும் என்ற நம் பிக்கை எனக்கு உள்ளது. பார தீய ஜனதா பிரதமர் வேட்பா ளர் நரேந்திரமோடியின் திட் டம் கர்நாடகத்தில் எடு படாது. இது கடந்த சட்ட மன்ற தேர்தலிலேயே நிரூ பிக்கப்பட்டு விட்டது.
இங்கு உள்ள வாக்கா ளர்கள் அறிவாளிகள். மத சார்பற்ற கட்சியை அடையா ளம் கண்டு ஆதரிப்பார்கள். கர்நாடகத்தைப் பொறுத்த வரையில் மதசார்பற்ற கொள்கையில் உறுதியாக இருப்பது காங்கிரஸ் மட் டுமே! நரேந்திரமோடி ஒரு ஆர்.எஸ்.எஸ். தொண்டர். அதனால் பா.ஜனதாவுக்கு வாக்காளர்கள் ஓட்டுப் போட மாட்டார்கள். இவ் வாறு சித்தரா மயா கூறினார்.
Read more: http://viduthalai.in/page-8/75032.html#ixzz2syD7ZQ5P
நோய்களை தகர்க்கும் முருங்கை
இன்றைய சூழ்நிலையில் நோய் பாதிக்கப்படாதவர்களே இல்லை என்கிற நிலை உள்ளது. உணவு, தண்ணீர், காற்று போன்றவைகளால் ஏராளமான நோய்கள் உருவாகி மக்களை தாக்குகின்றன. பாதுகாப்பற்ற தண்ணீர், மாசு படிந்த காற்று ஆகியவற்றாலும் நோய் வேகமாக பரவுகிறது. இவற்றை தடுக்க மனிதர்கள் அனைவரும் முயன்றால் மட்டுமே முடியும்.
இது சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது. என்றாலும் நோயின் தாக்கத்தை தாங்கிக் கொள்ளும் வகையில் கீரை, பழங்கள் போன்றவற்றை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை ஆகும். அந்த வகையில் முருங்கை கீரையை சாப்பிடலாம். இது ரசாயன உரம் இன்றி வீடுகளில் கூட தண்ணீர் இருந்தால் மிக வேகமாக வளர்ந்து நமக்கு பயன் தரக்கூடியதாகும். இதன் பயன்கள் அளவிட முடியாத வகையில் உள்ளது.
முருங்கை கீரை, காய், பூ என அனைத்தும் பெரும் பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடியவை. அதிக சத்து நிறைந்தவை. திருமண விருந்தை மணமாக்க கூடியவை முருங்கைக்காய். முருங்கை கீரை, பூ, காய், விதை, வேர், பட்டை என எல்லாமே மருத்துவ குணம் கொண்டவை ஆகும். இவற்றில் கால்சியம், வைட்டமின் சத்துக்கள் நிறைய உள்ளன. இருமல், தொண்டைக் கம்மல் ஏற்பட்டால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இவற்றை போக்க முருங்கை இலையை சாறு பிழிந்து எடுத்து அதில் சிறிது சுண்ணாம்பு, தேன் ஆகியவற்றை நன்றாக குழைத்து தொண்டைக் குழியின் மேல் தடவினால் இருமல், தொண்டைக்கம்மல் நீங்கும்.
கெட்டநீர் வெளியேற முருங்கை இலையின் காம்புகளை எடுத்து அதனை நன்றாக இடித்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு ஒரு லிட்டர் சுத்தமான தண்ணீர் விட்டு கால் லிட்டராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இந்த கஷாயத்தை காலை மாலை என 2 வேளையும் 3 அவுன்ஸ் குடித்து வந்தால் உடலில் சேர்ந்துள்ள கெட்ட நீர் வெளியேறி உடல் நலமாகும்.
உடம்பில் வாயுத்தொல்லை அதிகமாகிவிட்டால் தொந்தரவுகள் உண்டாகும். முருங்கை பிஞ்சை கறியாக சமைத்து உட்கொண்டால் வாயு தொல்லை அகலும். வாயுவினால் பிடிப்பு ஏற்பட்டிருந்தாலும் அகன்று விடும். மனிதர்களுக்கு மிக எளிதாகும் நோய்களில் தலைவலி முதலிடத்தில் உள்ளது.
இந்த தலைவலி தீர, முருங்கைப் பட்டையை இடித்து சாறு எடுத்து சாறின் அளவுக்கு பசும்பால் சேர்த்து நெற்றியில் பற்று போட வேண்டும். இவ்வாறு செய்தால் தலை வலி விரைவில் குணமாகும்.
Read more: http://viduthalai.in/page-7/75020.html#ixzz2syDK5TJu
ஆரோக்கியம் தரும் கருப்பட்டி
கிராமங்களில் எப்போதுமே கருப்பட்டி காபி என்றால் எக்ஸ்டிரா ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம் இருப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவ குணமும் அதிகம் இருக்கிறது. கருப்பட்டியை இனிப்புக்காக மட்டும் பயன்படுத்த வில்லை. ஏனெனில் இதில் இருக்கும் கூடுதலான மருத்துவத் தன்மை யின் காரணமாக இதை இன்றும் கிராமங்களில் பயன்படுத்து கின்றனர்.
இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் கருப்பட்டி யானது நமது உடலை சுத்தப்படுத்தி செரிமானத்திற்கும் பணிபுரிகிறது. பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு எலும்புகள் வலுப்பெறுவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலியை போக்க கருப்பட்டி சாப்பிடலாம். சீரகத்தை வறுத்து சுக்கு மற்றும் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்.
ஓமத்தை கருப் பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும். குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்.
ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபியில் சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.
சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்.
சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். உடலுக்கு தேவையான ஆற்றலை தரக்கூடிய உணவாக கருப்பட்டி கருதப்படுகிறது.
இதை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம். கருப்பட்டியை நாள்தோறும் சர்க்கரைக்கு பதிலாக அனைவரும் பயன்படுத்தினால் உடலின் ஆரோக்கியம் மேம்படும்.
Read more: http://viduthalai.in/page-7/75023.html#ixzz2syDf4K8z
தேங்காய் நல்லதா? கெட்டதா?
தேங்காய் ஆபத்தானது என்று அதைத் தவிர்ப்பவர்கள் ஒரு பக்கம்... கேரளாவிலும் இலங்கையிலும் தேங்காய் சாப்பிடறவங்க எல்லாம் வியாதிக் காரங்களாகவா இருக்காங்க? அதெல்லாம் ஒண்ணும் செய்யாது என்று அதைச் சேர்த்துக் கொள்கிறவர்கள் இன்னொரு பக்கம்... உண்மையில் தேங்காய் நல்லதா? கெட்டதா?
தேங்காயை சமையலில் உபயோகிப்பதில் தவறே இல்லை. அதை எப்படி உபயோகிக்கிறோம் என்பதில்தான் விஷயமே இருக்கிறது. தினசரி 30 முதல் 40 கிராம் தேங் காயை உபயோகிக்கலாம். அதை அப்படியே பச்சையாக சேர்த்துக் கொள்கிற வரை பிரச்சினையில்லை. துருவி, பால் எடுத்துக் கொதிக்க வைக்கிற போதுதான் அதில் கொழுப்பு அதிகரிக் கிறது. அதே மாதிரிதான் கொப்பரையும். சில வகை உணவுகள் கொப்பரை சேர்ப்பதால் கூடுதலாக ருசிப்பதுண்டு.
அந்தக் கொப் பரைதான் கெடுதலே. தேங்காய் முற்றி கொப்பரையாகும் போது, அதிலுள்ள நல்ல தன்மைகள் மாறி, கொழுப்பு கூடுகிறது. கூடிய வரை கொப்பரையை சமையலில் சேர்க்காம லிருப்பதே நலம். மற்றபடி சமைக்காத தேங்காயானது எல் லோருக்குமே நல்லதுதான். கொலஸ்ட்ரால் அதிகமுள்ளவர்கள் மட்டும் தேங்காயைத் தவிர்ப்பது பாதுகாப்பானது. தேங்காயை பால் எடுத்து உபயோகிக்கிற போது, அதிலுள்ள நார்ச்சத்தை எடுத்து விடுகிறோம்.
வெறும் கொழுப்பு மட்டுமே மிஞ்சி யிருக்கும். தேங்காய்க்கு வயிற்றுப்புண்களை ஆற்றும் சக்தி உண்டு. அதனால்தான் வாயில் புண் வந்தால்கூட, தேங்காயை பச்சையாக மென்று சாப்பிடச் சொல்வார்கள். அதன் பால் புண்ணில் பட்டால், சீக்கிரமே ஆறும். அல்சர் நோயாளி களுக்கும் தேங்காய் பால் சேர்த்த உணவுகளை அதிகம் பரிந்துரைப்பதன் பின்னணியும் இதுதான்.
சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் எனப்படுகிற கெட்ட கொழுப்பு அதில் அதிகம் என்பதே காரணம். கொப்பரை மற்றும் சமைத்த தேங்காயில் இது அதிகம். மற்றபடி குழந்தைகளுக்கு புரதம் மற்றும் கொழுப்பின் அளவை அதிகரிக்க வேண்டும் என்கிற நிலையில், தேங்காய் சேர்த்த பர்பி, தேங்காயும் வெல்லமும் சேர்த்த இனிப்புகளும் அதிகம் தரலாம்.
எடை குறைவான குழந்தைகளுக்கு கொப்பரையில் உள்ள புரதம், கொழுப்பு மற்றும் கலோரி உதவும். அவர்களுக்கு கொப் பரையில் செய்த பொடி, கொப்பரை மிக்சர் போன்றவற்றை அடிக்கடி கொடுக்கலாம்.
Read more: http://viduthalai.in/page-7/75025.html#ixzz2syDnOI3F
ஆரியப் பண்டிகைகள்
ஆரியப் பண்டிகைகளின் அடிப்படைக் காரணமெல்லாம் திராவிடர்களை ஆரியர்கள் அடக்கினது; கொன்றது; இழிவுபடுத்தியதுதான். அதுவும் சாதாரண மக்களைக் கடவுள் அவதாரம் என அழைத்து நமது அரசர்களை அசுரர்_சூத்திரர் என்று இழிவுபடுத்தி ஏற்படுத்தப்பட்ட பண்டிகைகள்.
- (விடுதலை,18.1.1951)
Read more: http://viduthalai.in/page-2/75086.html#ixzz2t3wigu8T
மூன்றாவது அணிபற்றி நரேந்திர மோடி
பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளரான நரேந்திர மோடிக்கு இப்பொழுது மேலும் சில சிக்கல்கள் சிரங்காக உருவெடுத்துள்ளன.
ஆம் ஆத்மி கட்சி ஒருபுறம்; டில்லி தேர்தல் முடிவுகள் மோடியையும் அவரது பரிவாரங்களையும் பாடாகப்படுத்தியுள்ளன. அந்த ஆத்திரம் அவர்களின் அலுவலகத் தைத் தாக்குவது வரை கொண்டு வந்து விட்டுள்ளது.
கடுமையான வார்த்தைகளால் அர்ச்சிக்கவும் ஆரம்பித்து விட்டனர்; இன்னொரு புறம் - மூன்றாவது அணி, அது குறித்தும் திருவாளர் மோடி மூன்றாந்தர அணி என்று மூர்க்கமாகத் தாக்க ஆரம்பித்து விட்டார்.
தொடக்க முதலே அய்க்கிய ஜனதாதளம் - அதன் தலைவர்களும், குறிப்பாக பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார் பி.ஜே.பி.மீது கடுமையான விமர்சனத்தை வைத்து வருகின்றார். பிகார் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்துக் கொண்டி ருந்தாலும், தேர்தல் பிரச்சாரத்துக்கு பீகாருக்கு குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி வந்துவிடக் கூடாது என்பதிலே தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தார். கூட்டணியிலிருந்து பிஜேபி விலகியது குறித்து சிறிதும் அவர் அலட்டிக் கொள்ளவும் இல்லை. பிஜேபி என்பது மதவாதக் கோட்பாடுள்ள ஒரு நோய் என்கிற அளவுக்கு படம் பிடித்தும் காட்டி விட்டார்.
சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங்கும் பி.ஜே.பி.யின் முகத்திரையைக் கிழிக்க ஆரம்பித்துள்ளார். ராமன் கோவில் பிரச்சினையைத் தேர்தல் ஆதாயத்துக்காக பிஜேபி பயன்படுத்துவதாகக் குற்றம் சுமத்துகிறார்.
இடதுசாரிகள் எப்பொழுதுமே பிஜேபியை விமர்சனம் செய்யக் கூடியவர்கள் தான்.
இந்த மூன்றாவது அணியின் முக்கிய பங்குதாரர் யார் என்றால் தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. அதன் பொதுச் செயலாளர், செல்வி ஜெயலலிதா தான்; மூன்றாவது அணி வெற்றி பெற்றால், தான்தான் பிரதமர் என்ற கனவில் மிதக்கக் கூடியவர்; தேவேகவுடாவுக்கு அடித்ததுபோல லாட்டரி அடிக்காதா என்று கருதிக் கொண்டிருக்கக் கூடியவர்.
நியாயமாக பிஜேபியையும், அதன் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியையும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தானே கடுமையாகச் சாட வேண்டும்! தோலுரித்துக்காட்டிட வேண்டும். அதுவும் மூன்றாவது அணி என்பது மூன்றாந்தர அணி என்று மோடி விமர்சித்த நிலையில், கடுமையாகச் சாடிய நிலையில், ஜெயலலிதா தரப்பிலிருந்து உக்கிரமான பதிலடிச் சம்மட்டி ஏன் புறப்படவில்லை?
தன்மீது ஒரு துரும்பு அளவு மற்றவர்கள் கிள்ளிப் போட்டால்கூட விட்டேனா பார்! என்று விடுபட்ட அம்புபோல அக்னி அம்புகளால் சரம் தொடுக்கும் பாணியைக் கொண்ட செல்வி ஜெயலலிதா மவுன சாமியாராக இருப்பது - ஏன்?
ஜெயலலிதா பதவியேற்றால் தனி விமானத்தில் மோடி சென்னைக்கு வருவார்; மோடி பதவியேற்றால் தனி விமானத்தில் அகமதாபாத் போய் சேர்வார் ஜெயலலிதா. சென்னைக்கு வந்தால் நாற்பது வகை சிறப்பு விருந்து வைத்து, உபசரித்து திக்கு முக்காடச் செய்யக் கூடியவர்.
ஆனாலும் தனக்குப் போட்டி என்று வந்த நிலையில் நரேந்திர மோடி, ஜெயலலிதாவையும் சேர்த்துத்தான் மூன்றாவது அணியின் மீது மோதிடத் தயாராகி விட்டார்; மோசமான வார்த்தைக் கற்களால் கவண் வீசுகிறார். என்றாலும் தமிழ்நாடு முதல் அமைச்சர் 16ஆவது மக்களவைத் தேர்தலில் பெரு வெற்றி பெற்று டில்லிக் கோட்டையில் அமரத் துடிதுடித்துக் கொண்டு இருப்பவர், மோடிக்குப் பதிலடி கொடுக்க மறுப்பது ஏன்?
திருவாளர் சோ ராமசாமியின் அறிவுரையா - வழிகாட்டுதலா? மோடியைத் தாக்க ஆரம்பித்தால் ஊடகங்கள் திசை மாறிப் போய் விடும் என்ற அச்சமா?
தேர்தலுக்குப் பிறகு உருவாகும் - அரசியல் சூழல் (கற்பனையாகத்தான்) கெட்டுப் போய் விடக் கூடாது என்ற கெட்டிக்காரத்தனமான தொலை நோக்கா?
மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தத்தளிக்கும் பரிதாப நிலையை எண்ணிப் பரிதாபப்படத் தான் வேண்டியுள்ளது. ஆனாலும், தேர்தலுக்கான நாள்கள் நெருங்க நெருங்க மூன்றாவது அணி - தேசிய ஜனநாயகக் கூட்டணி (மோடி)களுக்கிடையே கத்திகளை இறக்கை களில் கட்டிக் கொண்டு ஆவேசமாக போரிடும் சேவல் சண்டைகளை நாடு காணத்தான் போகிறது.
Read more: http://viduthalai.in/page-2/75087.html#ixzz2t3xA9i5e
மோடி அலை என்பதாக ஒன்றுமில்லை; ஊடகங்களின் உருவாக்கமே அது! அஜித்சிங் படப்பிடிப்பு
புதுடில்லி, பிப்.11- ராஷ்ட்ரிய லோக்தள கட்சி யின் தலைவரான அஜித்சிங், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டு சேருவதற்கு வாய்ப்பே இல்லை; வர இருக்கின்ற மக்களைத் தேர்தலுக்கு முன்பும், பின்பும் காங்கிரசுக் கட்சியுடன் கூட்டாக இருந் திடவே விருப்பம் எனத் தெரிவித்தார். அண்மையில் ராஷ்ட்ரிய லோக்தள கட்சி யின் தலைவர் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அவைகளில் ஒரு சில:
கேள்வி: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பா ளர் நரேந்திர மோடி செல் லுமிடங்கலெல்லாம் மக்கள் கூட்டம் திரளாக வருகிறதே. மோடி அலை என்பதாக அதனைப் பார்க்கின்றீர்களா?
பதில்: அலை என்ப தாக ஒன்றுமில்லை; ஊட கங்களின் அலங்காரச் சொல் லாக இடக்கர் அடக்கல் (Euphemism) மொழியாகச் சொல்லப்படுகிறது. உண் மையில் பிரச்சினை வேறு விதமானது. தொலைத் தொடர்புத் துறையில் நிகழ்ந்த முன்னேற்றங்கள் காரணமாக வாக்களிக்கும் மக்களின் ஆவல்கள் (குறிப் பாக உத்திரபிரதேசத்தில்) அதிகரித்துள்ளன. ஆனால் அவைகளை நடைமுறைப் படுத்தும் வாய்ப்புகளோ குறைந்து வருகின்றன. இந்த நிலையினால் மக்களிடம் ஒரு வித மனமுடக்கம் ஏற் பட்டுள்ளது. ஆட்சியில் உள் ளோரிடம் கோபமாக அவை வெளிக்கிளம்புகின்றன.
மக்களிடம் நிலவும் இந்த மன முடக்கம் மற்றும் வெறுப்பினை, கொம்பு சீவிவிடும் செயலில் நரேந் திரமோடி இறங்கியுள்ளார். ஒன்றை மோடி புரிந்து கொள்ள வேண்டும். கூடு கின்ற மக்கள் கூட்டமெல் லாம் தேர்தல் போட்டியின் ஒரு அங்கமே. தேர்தல் முடி வுகளை பிரதிபலிப்பவை அல்ல அவை. ஒவ்வொரு வரது கொள்கையும் கூட்ட ணியுமே வெற்றியினை நிர் ணயிக்கிறது.
கேள்வி: உங்களது நிலைப்பாடு மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் மாறுமா?
பதில்: நிச்சயமாகக் கிடையாது. இந்தக் கருத்தில் மறு பரிசீலனைக்கு இடமே இல்லை. மேலும் தேசிய முன்னணி அதிகார மய்யத்திற்கு அருகில் வரும் வாய்பே இல்லை. கேரளா, தமிழ் நாடு, ஒடிசா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், போன்ற மாநி லங்களில் - 200 மக்க ளவைத் தொகுதிகளை உள் ளடக்கிய அந்த மாநிலங்களில் பார திய ஜனதா கட்சியின் தடமே கிடையாது.
- (நன்றி: தி எக்னாமிக் டைம்ஸ் 10.2.2014)
Read more: http://viduthalai.in/e-paper/75074.html#ixzz2t3xNxPmx
செய்தியும் சிந்தனையும்
சிபாரிசு
செய்தி: அரசியல் கட்சி யானது காந்திய மக்கள் இயக்கம்; 2016 தேர்தலில் போட்டியிட முடிவு.
சிந்தனை: கட்சியின் கொடி யில் ஸ்வஸ்திக் தேர்தல் சின் னமாக கோட்சேயின் துப் பாக்கி - இவற்றைச் சிபாரிசு செய்கிறோம்.
Read more: http://viduthalai.in/e-paper/75072.html#ixzz2t3xzNk56
பொறுப்பற்றவர் மோடி! அசாம் முதல்வர் தாக்கு
கவுகாத்தி, பிப். 11-அசாமில் இரண்டு நாட் களுக்கு முந்தைய தனது தேர்தல் பிரச்சாரத்தில் தவறான கருத்துக்களை தெரிவித்துள்ள பா.ஜ.க. பிர தமர் வேட்பாளர் நரேந்திர மோடி பொறுப்பற்றவர் என்று அசாம் முதல்-அமைச்சர் தருண் கோகாய் கூறியுள்ளார்.
கவுகாத்தியில் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மோடி குறித்து தருண் கோகாய் மேலும் பேசியதாவது:-
இன்று மோடியை பற்றி அம்பலப்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. மோடியை போன்ற பொறுப் பற்ற தலைவரை நான் இதுவரை பார்த்ததில்லை. அசாம் மாநிலம் பின்தங்கி யுள்ளதாக மோடி முதலைக் கண்ணீர் வடிக்கிறார். தேர் தல் வரும்போதும், கவு காத்தி விமானநிலையத்தில் கால் வைக்கும் போதும் மட்டுமே மோடி அசாம் குறித்து கவலைப்படுகிறார். அசாமை விட்டு சென்ற தும் மறந்து விடுகிறார். வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அவர் அசாமிற்கு எதுவும் செய்யவில்லை. காந்தியாரின் மரணத்திற்கு காரணமான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் ஈடுபாடுமிக்க தொண்டராக மோடி இருக் கிறார்.
என்னுடைய தொலை நோக்கு பார்வையும் மோடி யின் தொலைநோக்குப் பார் வையும் வேறு. மோடியின் பார்வை எப்படி ஆடைகள் அணிவது? எப்படி பெரிய அமெரிக்க நிறுவனங்களி டம் பேசுவது என்பதை பற்றியது. ஆனால் கிரா மத்து மக்களுக்காகவும், சாதாரண மனிதனுக்காவும் உழைப்பதே என்னுடைய பணியாகும்.
குஜராத்துடன் ஒப்பி டுகையில் அசாமின் மொத் தக் கடன் ரூ.29,200 கோடி, ஆனால் குஜராத்தின் கடன் ரூ.1,76,500 கோடி. 2013இல் அசாமின் தனி நபர் கடன் ரூ.9,368, ஆனால் மோடி யின் மாநிலத்தில் ரூ.29,228. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் மோடி முற்றி லும் தவறான புள்ளி விவ ரங்களை தெரிவித்துள்ளார். இருந்தாலும் அசாமைவிட குஜராத் நகர்புற வளர்ச்சித் திட்டங்களுக்கு அதிகம் செலவிடுகிறது.
ஆரோக்கியம் குறித்த குறியீட்டில் இந்தியா விலேயே அசாம் 3ஆம் இடத்தில் உள்ளது. ஆனால் குஜராத் 13ஆவது இடத்தில் பின்தங்கியுள்ளது. கல்வி யில் அசாம் 13ஆவது இடத் தில் உள்ளது. ஆனால் குஜ ராத் 20ஆவது இடத்தில் தான் உள்ளது. குஜராத்தை விட அசாம் மாநிலத்தில் குற்றங்கள் நடைபெறுவது குறைவு. அசாம் மாநிலம் சட்டவிரோதமாக இடம் பெயர்தல், வெள்ளம், பொரு ளாதார வளர்ச்சியின்மை, கிளர்ச்சிகள் போன்ற பிரச் சினைகளை சந்தித்து வருகிறது. ஆனால் குஜராத்தில் இது போன்ற பிரச்சினைகள் கிடையாது.
குஜராத் ஒருபோதும் நிதிச்சிக்கலில் இருந்தது கிடையாது. சுதந்திரம் பெற் றது முதல் வசதியாகவே இருந்துள்ளது. ஆனால் அசாமின் பொருளாதாரம் கடனில் உள்ளது. இங்கு ஊதியம் மிக்குறைவு. சட் டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. இதற்கு மத்தி யிலும் நாங்கள் நன்மை களை செய்து வருகின்றோம். குஜராத்தைக் காட்டிலும் அசாமில் குற்றங்களின் எண்ணிக்கை குறைவு.
உடல்நலம் பாதிக்கப் பட்ட பூபென் ஹசரிகா, பா.ஜ.க நாடாளுமன்ற உறுப் பினராக இருந்தாலும் அவருடைய மருத்துவச் செலவுகளை அசாம் அரசு ஏற்றுக்கொண்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
Read more: http://viduthalai.in/e-paper/75075.html#ixzz2t3yIxNdk
ஆசிரியருக்குக் கடிதம் >>>
சரியான நேரத்தில் சரியான அறிக்கை
நமது தலைவர் கி.வீரமணி அவர்களின் அறிக்கை, விடுதலை 5.2.2014 (புதன்) பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது சட்டத்திற்கும், சமூகநீதிக்கும், எதிரானது! நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஜனார்த்தன திவேதி களை அடக்கி வைக்க வேண்டும் காங்கிரசு தலைமை; பொருளாதார அடிப்படையில் - இடஒதுக்கீடு கொண்டு வரப்பட வேண்டும் என்று கூறியுள்ளதை, தக்க தருணத்தில் கண்டித்திருப்பது மிகவும் உணர வேண்டிய அறிவுரையாகும்.
சமூக நீதிக்கு எதிரானவர்கள்; உயர் ஜாதியினர் பலர், இன்னமும் உள்ளனர் என்பது இவரது அபத்தமானதும், ஆபத் தானதும், அரசியல் சட்ட அடிப்படை உரிமைக்கும்கூட முற்றிலும் எதிரானதாகும் என்பது உண்மையே; காங்கிரசுத் தலைவர் சோனியா காந்தி அவர்களும் ஜாதி அடிப் படையிலான இடஒதுக்கீடு தொடர்ந்து நீடிக்கும் என்றும் உறுதியளித்தும் இப்போது இடஒதுக்கீடு வழங்குவதில் தீவிரமாக காங் கிரசு செயல்படுகின்றது. திவேதியை காங் கிரசுத் தலைவர் சோனியா காந்தி கண்டித் துள்ளார் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புத் தெரி வித்து அமளிகளில் ஈடுபட்டனர். அவர் களை சமாதானப்படுத்திய மத்திய ராஜாங்க அமைச்சர் ராஜீவ் சுக்லா அவர்கள் ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு தொடரும் என்றும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என்றும் அறிவித் தார். இருப்பினும் அமளி தொடர்ந்ததால் சபை நாள் முழுதும் ஒத்தி வைக்கப்பட்டது.
- ஆ. இனியன் பத்மநாதன், ஈரோடு -11
Read more: http://viduthalai.in/page-2/75092.html#ixzz2t3yklHKH
சபாஷ், உயர்நீதிமன்றம்! இடிக்கப்படுகிறது ஒரு கோவில்!
சென்னை,பிப்.12-உயர் நீதிமன்ற நுழைவாயிலில் எம்ஜிஆர் நினைவாக கட் டப்பட்ட அம்மன் கோயிலை இடித்துவிட்டு அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதிகள் அதிகாரி களுக்கு உத்தரவிட்டனர்.
பொதுநல வழக்கு
சென்னையில் உள்ள சாலையோர கோயில்களை இடிக்கக் கோரியும், உயர் நீதிமன்ற நுழைவாயிலில் சாலையோரம் உள்ள எம்ஜிஆர் நினைவாக கட் டிய கோயிலை இடிக்கக் கோரியும் உயர்நீதிமன்றத் தில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உயர்நீதி மன்றம் ஏற்கெனவே விசா ரித்து, சாலையோர கோயில் களை இடிக்க உத்தரவிட் டது. இதைத் தொடர்ந்து எம்ஜிஆர் நினைவாக கட் டிய கோயிலை இடிக்கும் படி அதன் அறங்காவலர் காந்தா சீனிவாசனுக்கு மாநக ராட்சி தாக்கீது அனுப்பியது. இதை ரத்து செய்யக்கோரி காந்தா சீனிவாசன் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், முன்னாள் முதல் வர் எம்ஜிஆர் வெளிநாட் டில் சிகிச்சை பெற்றபோது அவர் குணமடைய இந்த அம்மன் கோயில் கட்டப் பட்டது. அதன்பிறகு அவர் குணமடைந்து சென்னை திரும்பினார். அவர் நினை வாக அவர் பெயரில் இந்தக் கோயில் உள்ளது. இதை இடிக்கக் கூடாது. மாநக ராட்சி அனுப்பிய தாக்கீதை ரத்து செய்யவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி கள் அக்னிகோத்ரே, சசித ரன் ஆகியோர் விசாரித்து அளித்த தீர்ப்பு வருமாறு:
வழக்கு தள்ளுபடி
சாலையோரம் உள்ள அனைத்து கோயில்களை யும் இடிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. அதன் அடிப் படையில்தான் மனுதார ருக்கு மாநகராட்சி தாக்கீது அனுப்பியுள்ளது. இதில் எந்தத் தவறும் இல்லை. எனவே மனுவைத் தள்ளு படி செய்கிறோம். இந்தக் கோயிலை மாநகராட்சி இடிக்கலாம். இந்தக் கோயில் அனுமதியில்லாமல் கட்டப் பட்டுள்ளது என்று தெளி வாக தெரிகிறது. உயர்நீதி மன்ற வளாகத்தின் சுற்றுச் சுவரையொட்டி கோயில் உள்ளது. கோயில், மசூதி, தேவாலயம் ஆகியவற்றை தனியார் இடத்தில் வைக்க உரிமையுள்ளது. பொதுமக் கள் பாதிக்கும் வகையில் வைக்கக்கூடாது என்று உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பல்வேறு தீர்ப்புகளில் கூறி யுள்ளது. மத ரீதியான கட்டடங்களை பொது இடத் தில் கட்ட யாருக்கும் உரிமை யில்லை. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்கி றோம். - இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
இந்த உத்தரவை நடை முறைப்படுத்தாததால் மாநக ராட்சி அதிகாரிகள் மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை அதே நீதிபதிகள் நேற்று (11.2.2014) விசாரித்து, எம்ஜிஆர் நினைவு கோயிலை அதிகாரிகள் 12 ஆம் தேதிக்குள் இடித்து விட்டு அதன் அறிக்கையை தாக் கல் செய்யும்படி அதிகாரி களுக்கு உத்தரவிட்டனர்.
Read more: http://viduthalai.in/e-paper/75128.html#ixzz2t9pNu8y4
தேசிய மயமாக்கப்பட்ட வங்கி இலச்சினையில் கடவுளர் படமா?
பாங்க் ஆப் இந்தியா என்னும் தேசிய மயமாக் கப்பட்ட வங்கியின் இலச் சினை அடையாளத்தில் சிங்கம், சூலத்துடன் ஒரு பெண் உருவம் இருப்ப தான படத்துடன் இலச் சினை உள்ளது. நாடு விடுதலை அடை வதற்குமுன் 1906 இல் தொடங்கப்பட்ட வங்கி யில் இந்துமத கடவுள் படத்துடன் தனியாரால் மும்பையில் தொடங்கப் பட்டு, பின்னர் 1969 இல் தேசியமயமாக்கப்பட்டது. மதசார்பற்ற நாட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் இலச்சினையில் இதுபோன்ற ஒரு சார்புள்ள மத சின்னம் இடம் பெற லாமா? வாடிக்கையாளர்கள் ஒரு மதத்தை மட்டும் சார்ந் தவர்களாகவா உள்ளனர்? வங்கி நிர்வாகம், மத்திய அரசு சிந்திக்குமா?
அய்ந்து ரூபாய், பத்து ரூபாய் நாணயங்களிலும் கூட இந்து மதக் கடவுள் களின் உருவங்கள் பொறிக் கப்பட்டுள்ளன. இதற்குப் பெயர்தான் மதச்சார்பற்ற அரசாம்!
Read more: http://viduthalai.in/e-paper/75127.html#ixzz2t9q9Iax3
ஆசிரியர் தகுதித் தேர்வும் தினமணியும்!
ஆசிரியர் தகுதித் தேர்வும், சலுகைகளும்! எனும் தலைப்பில் தினமணியில் சிறப்புக் கட்டுரை ஒன்று தீட்டப்பட்டுள்ளது (11.2.2014, பக்கம் 8).
தமிழக அரசியல்வாதிகள், ஆந்திராவில் உள்ளது போல ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக 5 சதவிகித மதிப்பெண் சலுகை வழங்கவேண்டும் என அறிக்கை வெளியிடுகின்றனர். ஜாதிகளைத் தாங்கிப் பிடிக்கும் அரசியல்வாதிகள், அதனால் தரமான, நிறை வான கல்வி குறைபட்டுப் போகுமென தெரிந்திருந்தும் வேண்டுமென்றே குரல் கொடுப்பது வேதனையளிப் பதாக உள்ளது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதன்மூலம் 60 விழுக்காடு மதிப்பெண் வாங்குபவர் 59 விழுக்காடு மதிப்பெண் வாங்குபவரைவிட அறிவாளி, தகுதியானவர் என்று கூறுகிறார்களா?
தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதுதான் தகுதியின் அளவுகோலா? தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, தங்கப்பதக்கம் பரிசு பெறுவோர்தான் நாட்டில் பிரகாசமாக சாதனைகளைப் பொறித்துக் கொண்டு திரிகிறார்களா?
மதிப்பெண் அடிப்படையில்தான் தகுதி -திறமை நிர்ணயிக்கப்படும் என்றால், இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க ஒரு அம்பேத்கர் நமக்குக் கிடைத் திருக்கமாட்டார் என்று உச்சநீதிமன்ற நீதிபதி இரவீந்திரன் கூறியதை மறுக்கமுடியுமா?
மதிப்பெண் போடுவது குறித்து இதே தினமணியில் (9.12.2013) ஒரு செய்தி வெளிவந்ததே!
பிளஸ்-2 மற்றும் 10 ஆம் வகுப்பு விடைத்தாள்களைத் திருத்துவதில் கவனக்குறைவாக இருந்த 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை விளக் கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விடைத்தாள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த 5600 மாணவர்களில் 4000 மாணவர்களின் மதிப்பெண் மாறியது என்று செய்தி வெளியிட்ட தினமணியில்தான் ஆசிரியர் தகுதித் தேர்வில், மதிப்பெண்தான், தகுதி - திறமைக்கு அடை யாளம் என்று வாதிடப்படுகிறது.
இதில் இடைக்குத்து - ஜாதியைத் தாங்கிப் பிடிக்கும் அர சியல்வாதிகள் தகுதியைப்பற்றிக் கவலைப்படுவதில்லையாம். சமூகநீதி என்பது அவ்வளவு அலட்சியமாகப் போய்விட்டதா?
இப்படி எழுதுகிறவரோ, கட்டுரை வெளிவந்துள்ள தினமணியோ உண்மையிலேயே ஜாதி ஒழிப்பு வீரர்கள் தானா? ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கேட்பதால் தான் ஜாதி காப்பாற்றப்படுகிறதா? ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டால் மறுநாள் காலையிலேயே ஜாதி ஒழிந்துவிடுமா?
தினமணி ஆசிரியரின் பூணூலைக் கழற்றச் செய்யட் டும் பார்க்கலாம். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மதப் பாதுகாப்பு என்ற போர்வையில் ஜாதி காப்பாற்றப்படுகிறதே - அதனை நீக்கவேண்டும் என்று தினமணியில் தலை யங்கம்கூட எழுதவேண்டாம் - ஒரு சிறப்புக் கட்டுரையை எழுதச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் பிரச்சினையைத் திசை திருப்பி வேறு எங்கோ இழுத்துச் செல்லும் எத்து வேலையை தினமணியின் சிறப்புக் கட்டுரை செய்கிறது.
தாழ்த்தப்பட்டவருக்கும், பிற்படுத்தப்பட்டவருக்கும் தகுதி மதிப்பெண் 60 விழுக்காடு என்பதை மாற்றி 55 விழுக்காடு என்று தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவை யில் அறிவித்தார். அதனை நாம் வரவேற்றோம். அதே நேரத்தில், 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற தகுதித் தேர்வுக்கு மட்டும்தான் பொருந்தும் என்பது என்ன நியாயம் - என்ன நேர்மை?
அதே ஆசிரியர் தகுதித் தேர்வுதானே - அதில் ஏன் பாரபட்சம்? இதனை எப்படி நியாயப்படுத்துகிறார்கள்? அதைப்பற்றி தினமணியின் சிறப்புக் கட்டுரை மூச்சு விடாமல் வழவழா கொழ கொழா என்று முக்கால் பக்கம் கட்டுரை எழுதுவது ஏன்?
பிளஸ்-2 படித்து அதற்குமேல் ஆசிரியர் பயிற்சி இரண்டாண்டு படித்து பட்டயம் பெற்ற பிறகு, மறுபடியும் ஒரு தகுதித் தேர்வு என்பது போக்கிரித்தனம் அல்லவா!
ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றதற்கான பட்டயம் அளித்து - ஆசிரியர் பணிக்குத் தகுதியானவர் என்று சான்று வழங்கிய நிலையில், மறுபடியும் தேர்வு என்றால், அரசு, தான் நடத்திய தேர்வையே, தான் வழங்கிய சான்றிதழையே, தானே கொச்சைப்படுத்துவது ஆகாதா?
இந்தத் திசையில் தினமணிகள் ஏன் சிந்திப்பது இல்லை? கல்வி, வேலை வாய்ப்பு என்றால், அதில் எந்த வகையிலாவது சமூகநீதியை, இட ஒதுக்கீட்டைக் கொச்சைப்படுத்துவது - குறுக்குச்சால் ஓட்டுவதுதான் பூணூல்களின் வேலை.
அதைத்தான் இப்பொழுதும் தினமணி செய்திருக்கிறது.
Read more: http://viduthalai.in/page-2/75133.html#ixzz2t9qdT3o0
உங்கள் பயணம் எங்கே செல்கிறது அத்வானிஜி!
- குடந்தையான்
ஆர்.எஸ்.எஸ் எனது வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் தந்தது; அதன் தொடர்ச் சியாக, 55 ஆண்டுகளாக அரசியல் பயணம் மேற்கொள்கிறேன். அந்த பயணம் இன்னும் முடிவு பெற வில்லை என பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் எல்.கே.அத்வானி தனது பிளாக்கில் 9.2.2014 அன்று கருத்து தெரிவித்துள்ளார்.
அத்வானி அவர்களே! உங்கள் பயணத்தின் ஒன்றாக, நீங்கள் ரதயாத் திரை ஒன்றை துவங்கினீர்கள். எதற் காக அந்த பயணம்? யாருடைய நன் மைக்காக? யாரை எதிர்த்து? இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, அரசி யல் சட்டம் 340 பிரிவின்படி அமைக் கப்பட்ட மண்டல் குழு பரிந்துரை யின் அடிப்படையில் வேலை வாய்ப் பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் ஆணையை அன்றைய பிரதமர் வி.பி.சிங் அறிவித்தவுடன், உங்களது ரத யாத்திரையை துவக்கி னீர்கள். அயோத்தியில் ராமனுக்குக் கோவில் கட்ட வேண்டும் என்பதற் காக அந்த யாத்திரை என்று சொன் னாலும், இட ஒதுக்கீட்டை எதிர்க்க வேண்டும் என்பது உங்களது நோக் கம்; ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்களின் நோக்கம். அந்த யாத்திரையின் முடி வில் 400 ஆண்டு கால பழைமைச் சின்னமான பாபர் மசூதி இடிக்கப் பட காரணமாக இருந்தீர்கள். நாடு முழுவதும் கலவரம் ஏற்பட்டு, பல்லா யிரக்கணக்கானோர் உயிர் இழந்தனர். உங்கள் வாழ்வில் என்ன அர்த்தத்தை இந்த ர(த்)த யாத்திரை தந்தது?
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீங்களும் குற்றம் சாட்டப்பட்டவ ராக சேர்க்கப்பட்டீர்கள். அதன் பின் மத்தியில் ஆட்சியில் உள்துறை அமைச்சராகவும், துணை பிரதமராக வும் இருந்தீர்கள். குற்றம் சாட்டப்பட் டவரே நாட்டின் உள் துறை அமைச் சராக இருக்கலாமா என உங்கள் மன சாட்சியை எப்போதேனும் கேட்டு, விடை கண்டதுண்டா? சட்டத்தின் ஓட்டையை வைத்து, அந்த வழக்கில் இருந்து எப்படியெல்லாம் தப்பிக்க லாம் என்று தான் கருதினீர்களே தவிர, தைரியமாக, நாங்கள் பாபர் மசூதி இடிப்பில் சம்மந்தப்பட்டிருக் கிறோம் என்று உண்மையை சொல் வதற்கு, உங்கள் ஆர்.எஸ்.எஸ். பள்ளி, கற்றுத் தரவில்லையே.
ஆனால் தமிழ் நாட்டிலே, 1957 இல் அரசியல் சட்ட எரிப்பு நடந்தது. ஜாதிப்பிரிவை காப்பாற்றும் அரசி யல் சட்ட பிரிவை எதிர்த்து, அந்த எரிப்பு நடந்தது. பெரியாரின் கட்ட ளையை ஏற்று, ஆயிரக்கணக்கில் ஆண்களும், பெண்களும், சிறுவர் களும் பங்கேற்று, மூன்றாண்டு வரை கடும் சிறை வாசத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றனர். கைதான ஒரு சிறுவனை எச்சரிக்கை செய்து விடுதலை செய்ய லாம் என நினைத்த நீதிபதி, அந்த சிறுவனிடம், நீ கொளுத்தியது காகி தம் தானே எனக் கேட்கிறார். ஆமாம் என்று சொன்னால், அவனை விடுவிக் கலாம் என்பது நீதிபதியின் எண்ணம். அந்த சிறுவன் என்ன சொன்னான் தெரியுமா அத்வானி அவர்களே! நான் கொளுத்தியது, அரசியல் சட்டத்தில் ஜாதியை காப்பாற்றும் பிரிவுதான் என்று சொன்னான்.
அந்த சிறுவனுக்கு இருந்த தெளி வும், உணர்வும், துணிவும், அறிவு நாணயமும் உங்களிடத்தில் இல்லையே. காரணம், சிறுவன் படித்தது பெரியார் பள்ளியில். நீங்கள் படித்தது ஆர்.எஸ்.எஸ். பள்ளியில்.
உங்களது வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தது ஆர்.எஸ்.எஸ். தான் என்று சொல்கிறீர்களே. 2005 இல் பாகிஸ் தான் சென்ற போது, ஜின்னா சிறந்த மதச்சார்பின்மை கொள்கை கொண்ட வர் என்று சொன்னதற்காக, ஆர்.எஸ்.எஸ். உங்களை கடுமையாக சாடி, நீங்கள் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் விலகினீர்களே.
2005 செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தின் முடிவில் பேசும்போது, ஆர்.எஸ்.எஸின் அனுமதி இல்லாமல் தனது கட்சியினால் எந்த ஒரு முடிவும் மேற்கொள்ளப்பட முடியாது என்ற எண்ணத்தை இந்த நிகழ்ச்சி உறுதிப் படுத்திவிட்டது என்றும், நாம் கொண் டிருக்கும் இந்தக் கண்ணோட்டத்தி னால், பா.ஜ.க.வுக்கோ அல்லது ஆர்.எஸ்.எசுக்கோ எந்த நன்மையும் ஏற்படாது என்றும் சொன்னீர்களே; இதுவும் ஆர்.எஸ்.எஸ்சால் உங்கள் வாழ்க்கையில் கிடைத்த பயன் என எடுத்துக் கொள்ளலாமா?
பின்னர் மே 2009 இல் ஆர்.எஸ்.எஸின் கட்டளையால், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் இழந்து, அக்டோபர் 2011-லேயே, நீங்கள் பிரதமர் வேட்பாளாராக பாஜக சார்பில் போட்டியிட முடியாது என ஆர்.எஸ்.எஸ். கட்டளையிட்டு, இறுதில் ஜூன் 2013 இல் கட்சியில் அனைத்து பதவிகளிலிருந்தும் விலகுவதாக அறிவிக்கும் அளவுக்கு, ஆர்.எஸ்.எஸ் உங்களை தள்ளிவிட்டுள்ளதே; இந்தப் பயணம் இன்னும் முடியவில்லை என நீங்கள் கூறுவதைப் பார்த்தால், இந்த பயணத்தில் தாங்கள் எங்கே செல்வீர்கள் என்று தெரிய வில்லை.
ஒரு வேளை, பாஜகவிலிருந்து நீங்கள் விலகுவதற்கும், ஆர்.எஸ்.எஸ். உங்களுக்கு வழிகாட்டும் என நினைத் தால் தவறில்லையே, அத்வானிஜி.
Read more: http://viduthalai.in/page-2/75138.html#ixzz2t9qnAod1
மனித சமூகம் தேய்ந்ததேன்?
பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெறவேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் தேய்ந்து கொண்டே வருகின்றது.
(விடுதலை,16.6.1935)
Read more: http://viduthalai.in/page-2/75132.html#ixzz2t9r0J7cD
Post a Comment