கோவை: புரட்சிப் பெண்கள் மாநாட்டுச் சிந்தனை (1)
இதோ தந்தை பெரியார் பேசுகிறார் கேளுங்கள்! கேளுங்கள்!!
தாய்மார்கள், பெண்களை நன்கு படிக்க
வைக்கவேண்டும். அவர்களுக்கு வாழ்விற் கேற்ற தொழில் கற்பிக்க வேண்டும்.
பெண்கள் அடிமையாக இருப்பதற்குக் காரணமே படிப்பும் - தொழிலும் இல்லாத
காரணத்தாலேயே ஆகும். பெண்களை 22 வயது வரையாவது படிக்க வைக்க வேண்டும்.
அவர்கள் தாங்களாகவே முன்வந்து அவர்களுக்கேற்ற கணவனைத் தேர்ந்தெடுத்துக்
கொள்வதற்கு உரிமை வழங்கப்படவேண்டும். பெற்றோர்கள் தலையீடே இருக்கக்கூடாது.
இரண்டு குழந்தைகள் இருந்தாலே மனிதன்
நாணயமாக இருக்க முடியாது என்கின்றபோது, 5, 6 குழந்தைகள் இருந்தால் எப்படி
மனிதன் ஒழுக்கத்தோடு, நாணயத்தோடு வாழ முடியும்?
100 உத்தியோகங்கள் இருந்தால் அதில் 50 உத்தியோகங்களைப் பெண்களுக்கு ஒதுக்கி வைத்துவிடவேண்டும்.
வாழ்க்கை ஒப்பந்தம் செய்துகொண்ட வர்கள்
பெரியவர்கள் சொன்னபடி நடக்காதீர்கள். இலக்கியங்களில் உள்ளபடி நடவாதீர்கள்.
உங்கள் அறிவுப்படி நடவுங்கள். சினிமா, கோயில் ஆகிய வைகளுக்குக்
கண்டிப்பாகப் போகக்கூடாது. மனித ஒழுக்கக்கேட்டிற்கு அவைகளே காரணமாக
இருக்கின்றன.
---------------------- 15.2.1970 அன்று நெல்லை மாவட்டம்,
கோவில்பட்டி, வடக்கு புது கிராமத்தில் நடைபெற்ற வாழ்க்கை ஒப்பந்த விழாவில்
தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து (விடுதலை, 4.3.1970)
காதல் திருமணமா? அது கூடாது - கூடவே
கூடாது என்று கூறுவோரின் காதுகள் செவிடாகும்படி இப்படிக் கசையடி
கருத்துக்களைக் கூறியுள்ளார் புரட்சியாளர் பெரியார்.
என்ன நிபந்தனை - நன்றாகப் படிக்கட்டும், அந்தப் படிப்பு 22 வயதுவரை வளரட்டுமே என்கிறார்.
இன்றைக்கு ஒரு பெண் பட்டதாரியாகவோ, மருத்துவராகவோ ஆக வேண்டுமானால், இந்த வயது வரம்பு தேவைதான்.
20 வயதுக்குள் வசவசவென்று பிள்ளைகளைப்
பெற்றுக் கொண்டு, தோளில் ஒன்று, இடுப்பில் ஒன்று, வயிற்றில் ஒன்று என்று
கணக்கிட ஆரம்பித்தால் பெண்களுக்கு இதைத்தவிர வேறு வேலையில்லை என்ற நிலை
ஏற்படாதா?
அந்தப் பொறுப்புணர்ச்சியுடனும், நல்லெண்ணத்து டனும்தான் தந்தை பெரியார் இதனை முன்வைக்கிறார்.
ஒரு காலம் இருந்தது. பெண்கள் ருது ஆவதற்கு முன்பே கல்யாணம் செய்து வைத்துவிடவேண்டும் என்ற நிலை இருந்ததுண்டு.
பெண்ணின் திருமண வயதை உயர்த்தி ஆங்கில
அரசு சட்டம் இயற்றியபோது, அடேயப்பா, இந்தப் பார்ப்பனர்கள் என்ன கூச்சல்
போட்டார்கள்; சத்தியமூர்த்தி அய்யர் வாளும், எம்.கே. ஆச்சாரியாரும்
வான்கிழிய வாயைப் பயன்படுத் தினார்களே.
பெண் வயதிற்கு வருவதற்குமுன் கல்யாணம்
செய்யாவிட் டால், ரவுரவாதி நரகத்துக்குப் போக நேரிடும் என்று பராஸர் சொல்லி
இருக்கிறார். நாங்கள் சட்டத்தை மீறி ஜெயிலுக்குப் போனாலும் போவோமே தவிர,
சாஸ்திரத்தை மீறி நரகத்துக்குப் போகமாட்டோம் என்று சொல்லவில்லையா?
இந்து ஏடு 10 வயது பெண்ணோ அல்லது 12 வயது பெண்ணோ ஒருவனுக்குக் கல்யாணத்திற்காக வேண்டும் என்று விளம்பரம் செய்திருந்தது.
இதைப் பார்த்து ஒரு சீர்திருத்தக்காரர் இந்துவை ஒரு கேள்வி கேட்டார்.
அதாவது, ஓ இந்துவே, நீர்
சீர்திருத்தக்காரன் என்று முழக்கம் செய்கின்றனையே! இந்தக் காலகட்டத்தில்கூட
10 வயது அல்லது 12 வயது பெண், ஒரு மாப்பிள்ளைக்குக் கல்யாணத்திற்காக
வேண்டும் என்று விளம்பரம் செய்ய லாமா? என்று கேட்டார்.
அதற்கு இந்துப் பத்திரிகை சொன்ன பதில் என்ன என்று பாருங்கள்.
10 அல்லது 12 வயது பெண்களை இப்போது
விவாகம் செய்வது என்பதாகக் காணப்படுவதானது விவாகச் சடங்கல்ல. அது
நிச்சயதார்த்தத்திற்கு ஒப்பானது. பெண்ணையும், மாப்பிள்ளையையும்
வீட்டிற்குள் விட்டுக் கதவு சாத்துகின்றோமே அதுதான் விவாகம் என்று
அயோக்கியத் தனமாய் பதில் எழுதிற்று.
இதற்கு அந்தச் சீர்திருத்தக்காரர் என்ன பதில் எழுதினார் என்றால்,
ஓ, இந்துவே! 10 வயதிலும், 12 வயதிலும்
கல்யாணம் செய்வதுபோல் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் கல்யாணம் அல்ல, அது
நிச்சயதார்த்தம் என்று சொல்ல வருவா வாயானால் அந்த 10, 12 வயது பெண்களின்
நிச்சய தார்த்தம் செய்யப்பட்ட புருஷன் செத்தால் தாலி அறுபட்ட தாக பெயர்
செய்து, மொட்டையடித்து முக்காடு போட்டு மூலையில் உட்கார வைப்பது - ஏன்?
அதுகூட உன் நிச்சயதார்த்தச் சடங்கில் சேர்ந்த நிபந்தனையா? என்று கேட்டார்.
உப்புக்கண்டம் பறிகொடுத்த பார்ப்பனத்திபோல் இந்து இதற்கு ஒரு மறுமொழியும்
சொல்லாமல் வாயை மூடிக்கொண்டது.
-------------------------(திராவிடன், 13.3.1928, பக்கம்-7)
தந்தை பெரியார் பெண்களின் திருமண வயது 22
என்று சொன்னதும், 50 சதவிகிதம் பெண்களுக்கு உத்தியோகம் ஒதுக்கப்படவேண்டும்
என்று சொன் னதும் - எத்தகைய முற்போக்குச் சிந்தனைகள் - தொலைநோக்கானவை - 43
ஆண்டுகளுக்கு முன்பாகவே!
இந்த அடிப்படையில் கோவை சுந்தராபுரம்
புரட்சிப் பெண்கள் மாநாட்டில் தீர்மானங்கள் வடிப்போம் - வாருங்கள்
சகோதரிகளே, குடும்பம் குடும்பமாக!
------------------ மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை “விடுதலை” -8-4-2013
தாய்த்திரு நாடு என்று போற்றுவதில் குறைச்சல் இல்லை. பாரத புண்ணிய பூமி என்ற கித்தாப்பு வேறு.
சிவனின் தலையில் கங்காதேவி இருக்கிறாள் - அவர் உடலின் ஒரு பகுதியைப் பார்வதி தேவி அணைத்துக் கொண்டு இருக்கிறாள்.
இந்துக் கடவுளின் பட்டியலில் மும்மூர்த்தி இருப்பது போல், மூன்று பெண்மணிக் கடவுள்கள் அணிவகுக் கின்றனர்.
சக்திக்குப் பார்வதி, கல்விக்குச் சரஸ்வதி, செல்வத்துக்கு இலட்சுமி என்று துறை பிரித்து வைப்பதில் ஒன்றும் குறைச்சல் இல்லை.
ஆனாலும், இந்தப் புண்ணிய பூமியில் பெண்கள் நிம்மதியாக வாழ முடிகிறதா?
உரிமையுடன் நடமாட முடிகிறதா?
இதற்குக் கிடைக்கும் பதில் மிகவும் பரிதாபம்தான்.
ஜி-20 நாடுகளில் உள்ள அம்சங்களைக் கணித்து வெளியிடப்பட்ட பட்டியலில் பெண்கள் மிகவும் பாது காப்பாக, சுதந்திரமாக வாழும் நாடுகளின் பட்டியலில் கனடா முதல் இடத்தில் மின்னுகிறது.
அடுத்து ஜெர்மனி, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்சு என்று அணி பெறுகின்றன.
குழந்தைத் திருமணங்கள், அடிமைத்தனம், பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள், பெண் குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக விற்றல், வரதட்சணைக் கொடுமை, வீட்டுப் பணிப் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை - இந்தப் பட்டியலில் பாரத தேவிக்குரிய இடம் என்ன தெரியுமா?
பெண்களுக்குரிய மிக ஆபத்தான நாடுகள் வரிசையில் சவுதி அரேபியா, இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா, மெக்சிகோ போன்ற நாடுகள் கூட இந்தியாவுக்கு முன்னதாகவே உள்ளன.
2011 ஆம் ஆண்டுப் பட்டியல்படி உலகில் பெண் களுக்கு ஆபத்தான பாதுகாப்பு இல்லாத நாடுகளின் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
முதலிடத்தில் ஆப்கானிஸ்தான், இரண்டாமிடத் தில் காங்கோ, 3 ஆவது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது. நான்காவது இடத்தில் இருப்பதுதான் இந்தியா!
தாம்ஸன் ராய்ட்டர்ஸின் பெண்கள் உரிமைக்காக சட்டபூர்வத் தகவல் மற்றும் சட்ட ஆதரவு அமைப்பின் (Global Hub For Women’s Rights) சார்பில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு இது.
2009 இல் உலகில் நடத்தப்பட்ட குழந்தைகள் கடத்தலில் 90 விழுக்காடு இந்தியாவிற்குள் நடந்ததே!
தேசியக் குற்றப் பதிவு மய்யம் (NCRB) அதிர்ச்சியூட்டும் தகவலைத் தந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களுக்குத் தலைமை வகிப்பது தலைநகரமான டில்லிதான்!
பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் 53 நகரங்களில் பாலியல் வன்கொடுமை 17.6 விழுக்காடும், கடத்தல்கள் 31.8 விழுக்காடும், வரதட்சணை மரணங்கள் 14 விழுக்காடும் நடந்துள்ளன.
தலைநகரில் காவல்துறைக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எத்தனை தெரியுமா? 12,000
இன்னொரு அதிர்ச்சிக்குரிய தகவல். கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் கருவில் அழிக்கப்பட்ட சிசுக்களின் எண்ணிக்கை ஒரு கோடியே இருபது லட்சம். கருக்கலைப்புகளின் எண்ணிக்கை ஆண்டு ஒன்றுக்கு ஒரு கோடியே பத்து லட்சம். இதில் பெண் சிசுக்கள் எத்தனை தெரியுமா? 80 லட்சம்!
ஏனிந்த நிலை? இந்தியக் கலாச்சாரத்தின் பெருமைமிகு மணி மகுடம் என்று மார்தட்டுகிறார்களே, அந்தக் கீதை சொல்லுகிறது - பெண்கள் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று (கீதை அத்தியாயம் 9; சுலோகம் 32).
படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.
---------------------------(மனுதர்மம் அத்தியாயம் 9; சுலோகம் 17).
பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும்
யௌனத்தில் கணவன்
ஆக்ஞையிலும், கணவன் இறந்த
பின்பு பிள்ளைகள் ஆக்ஞையிலும்
இருக்க வேண்டியதல்லாமல்
ஸ்திரீகள் தன் சுவாதீனமாக
ஒருபோதும் இருக்கக்கூடாது.
--------------------------------(மனுதர்மம் அத்தியாயம் 5; சுலோகம் 148).
பெண்களையும், பிராமணரல்லாதாரையும் கொல்லுதல் பாதகமாகாது.
---------------------------(மனுதர்மம் அத்தியாயம் 11; சுலோகம் 65).
இவைதான் இந்தியாவின் தர்ம முத்திரை பொறித்த நவரத்தினக் கற்களாம்!
இந்தப் பின்னணியையும் ஆபாசமான கெட்ட நடத்தை யும் உள்ள ஒரு நாட்டில் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதும், சிசுவிலேயே கொல்லப்படுவதும் அதிர்ச்சிக்குரியதாக இருக்க முடியாதே!
அதுதான் இப்பொழுதும் நடந்துவருகிறது. இந்த ஆபாசப் பாழுங்கிணற்றின் ஊற்றுவரை சென்று நிர்மூலப்படுத்தாதவரை பெண்கள் வாழ ஆபத்தான நாடுகளின் வரிசையில் முதல் பரிசை பாரத மாதாதான் தட்டிச் செல்லுவாள்.
இதற்கு ஒரே தீர்வுதான் உண்டு. தந்தை பெரியார் அவர்களின் புரட்சிச் சிந்தனைகள் என்னும் கூரிய ஆயுதம்தான் இந்தப் பழைமைத் தத்துவத்தின் மார்பைப் பிளக்கும்.
இதனைத் தமிழ்நாட்டுப் பெண்கள் நன்கு உணர்ந்துதான் 1938 இல் பெண்கள், தலைநகரிலே மாநாடு கூட்டி, பெரியார் என்ற பட்டத்தைக் கொடுத்தனர் (13.11.1938).
அந்த வரிசையிலே கோவையில் ஓர் ஒப்பற்ற மாநாடுதான் வரும் ஏப்ரல் 13 இல் புரட்சிப் பெண்கள் மாநாடு என்று மிகப்பொருத்தமாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மாநில மாநாடு போல இருபால் தோழர்களும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
வேலூரில் புத்துலகப் பெண்கள் எழுச்சி மாநாட்டை நடத்தினோம் (29.5.2012) அடுத்து கோவையிலே புரட்சிப் பெண்கள் மாநாடு.
இதுபோன்ற மாநாடுகளை நம்மைத் தவிர நடத்தியவர் யார் உளர்?
புறப்படுங்கள் புலிப் போத்துகளே!
புதியதோர் உலகு செய்வோம்
புரட்சிப் பெண்களின்
அணிவகுப்பை அங்கே
காண்போம்!
மண்ணுக்கும் கேடாய்
மதித்தீரா பெண்ணினத்தை?
என்று புரட்சிக்கவிஞனின் சூட்டுக்கோல் கவிதை வரிகளுக்கு விடை காண்போம்!
வாரீர்! வாரீர்!!
----------------- மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை “விடுதலை” -9-4-2013
கோவை: புரட்சிப் பெண்கள் மாநாட்டுச் சிந்தனை (2)
சிவனின் தலையில் கங்காதேவி இருக்கிறாள் - அவர் உடலின் ஒரு பகுதியைப் பார்வதி தேவி அணைத்துக் கொண்டு இருக்கிறாள்.
இந்துக் கடவுளின் பட்டியலில் மும்மூர்த்தி இருப்பது போல், மூன்று பெண்மணிக் கடவுள்கள் அணிவகுக் கின்றனர்.
சக்திக்குப் பார்வதி, கல்விக்குச் சரஸ்வதி, செல்வத்துக்கு இலட்சுமி என்று துறை பிரித்து வைப்பதில் ஒன்றும் குறைச்சல் இல்லை.
ஆனாலும், இந்தப் புண்ணிய பூமியில் பெண்கள் நிம்மதியாக வாழ முடிகிறதா?
உரிமையுடன் நடமாட முடிகிறதா?
இதற்குக் கிடைக்கும் பதில் மிகவும் பரிதாபம்தான்.
ஜி-20 நாடுகளில் உள்ள அம்சங்களைக் கணித்து வெளியிடப்பட்ட பட்டியலில் பெண்கள் மிகவும் பாது காப்பாக, சுதந்திரமாக வாழும் நாடுகளின் பட்டியலில் கனடா முதல் இடத்தில் மின்னுகிறது.
அடுத்து ஜெர்மனி, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்சு என்று அணி பெறுகின்றன.
குழந்தைத் திருமணங்கள், அடிமைத்தனம், பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள், பெண் குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக விற்றல், வரதட்சணைக் கொடுமை, வீட்டுப் பணிப் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை - இந்தப் பட்டியலில் பாரத தேவிக்குரிய இடம் என்ன தெரியுமா?
பெண்களுக்குரிய மிக ஆபத்தான நாடுகள் வரிசையில் சவுதி அரேபியா, இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா, மெக்சிகோ போன்ற நாடுகள் கூட இந்தியாவுக்கு முன்னதாகவே உள்ளன.
2011 ஆம் ஆண்டுப் பட்டியல்படி உலகில் பெண் களுக்கு ஆபத்தான பாதுகாப்பு இல்லாத நாடுகளின் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
முதலிடத்தில் ஆப்கானிஸ்தான், இரண்டாமிடத் தில் காங்கோ, 3 ஆவது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது. நான்காவது இடத்தில் இருப்பதுதான் இந்தியா!
தாம்ஸன் ராய்ட்டர்ஸின் பெண்கள் உரிமைக்காக சட்டபூர்வத் தகவல் மற்றும் சட்ட ஆதரவு அமைப்பின் (Global Hub For Women’s Rights) சார்பில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு இது.
2009 இல் உலகில் நடத்தப்பட்ட குழந்தைகள் கடத்தலில் 90 விழுக்காடு இந்தியாவிற்குள் நடந்ததே!
தேசியக் குற்றப் பதிவு மய்யம் (NCRB) அதிர்ச்சியூட்டும் தகவலைத் தந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களுக்குத் தலைமை வகிப்பது தலைநகரமான டில்லிதான்!
பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் 53 நகரங்களில் பாலியல் வன்கொடுமை 17.6 விழுக்காடும், கடத்தல்கள் 31.8 விழுக்காடும், வரதட்சணை மரணங்கள் 14 விழுக்காடும் நடந்துள்ளன.
தலைநகரில் காவல்துறைக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எத்தனை தெரியுமா? 12,000
இன்னொரு அதிர்ச்சிக்குரிய தகவல். கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் கருவில் அழிக்கப்பட்ட சிசுக்களின் எண்ணிக்கை ஒரு கோடியே இருபது லட்சம். கருக்கலைப்புகளின் எண்ணிக்கை ஆண்டு ஒன்றுக்கு ஒரு கோடியே பத்து லட்சம். இதில் பெண் சிசுக்கள் எத்தனை தெரியுமா? 80 லட்சம்!
ஏனிந்த நிலை? இந்தியக் கலாச்சாரத்தின் பெருமைமிகு மணி மகுடம் என்று மார்தட்டுகிறார்களே, அந்தக் கீதை சொல்லுகிறது - பெண்கள் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று (கீதை அத்தியாயம் 9; சுலோகம் 32).
படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.
---------------------------(மனுதர்மம் அத்தியாயம் 9; சுலோகம் 17).
பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும்
யௌனத்தில் கணவன்
ஆக்ஞையிலும், கணவன் இறந்த
பின்பு பிள்ளைகள் ஆக்ஞையிலும்
இருக்க வேண்டியதல்லாமல்
ஸ்திரீகள் தன் சுவாதீனமாக
ஒருபோதும் இருக்கக்கூடாது.
--------------------------------(மனுதர்மம் அத்தியாயம் 5; சுலோகம் 148).
பெண்களையும், பிராமணரல்லாதாரையும் கொல்லுதல் பாதகமாகாது.
---------------------------(மனுதர்மம் அத்தியாயம் 11; சுலோகம் 65).
இவைதான் இந்தியாவின் தர்ம முத்திரை பொறித்த நவரத்தினக் கற்களாம்!
இந்தப் பின்னணியையும் ஆபாசமான கெட்ட நடத்தை யும் உள்ள ஒரு நாட்டில் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதும், சிசுவிலேயே கொல்லப்படுவதும் அதிர்ச்சிக்குரியதாக இருக்க முடியாதே!
அதுதான் இப்பொழுதும் நடந்துவருகிறது. இந்த ஆபாசப் பாழுங்கிணற்றின் ஊற்றுவரை சென்று நிர்மூலப்படுத்தாதவரை பெண்கள் வாழ ஆபத்தான நாடுகளின் வரிசையில் முதல் பரிசை பாரத மாதாதான் தட்டிச் செல்லுவாள்.
இதற்கு ஒரே தீர்வுதான் உண்டு. தந்தை பெரியார் அவர்களின் புரட்சிச் சிந்தனைகள் என்னும் கூரிய ஆயுதம்தான் இந்தப் பழைமைத் தத்துவத்தின் மார்பைப் பிளக்கும்.
இதனைத் தமிழ்நாட்டுப் பெண்கள் நன்கு உணர்ந்துதான் 1938 இல் பெண்கள், தலைநகரிலே மாநாடு கூட்டி, பெரியார் என்ற பட்டத்தைக் கொடுத்தனர் (13.11.1938).
அந்த வரிசையிலே கோவையில் ஓர் ஒப்பற்ற மாநாடுதான் வரும் ஏப்ரல் 13 இல் புரட்சிப் பெண்கள் மாநாடு என்று மிகப்பொருத்தமாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மாநில மாநாடு போல இருபால் தோழர்களும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
வேலூரில் புத்துலகப் பெண்கள் எழுச்சி மாநாட்டை நடத்தினோம் (29.5.2012) அடுத்து கோவையிலே புரட்சிப் பெண்கள் மாநாடு.
இதுபோன்ற மாநாடுகளை நம்மைத் தவிர நடத்தியவர் யார் உளர்?
புறப்படுங்கள் புலிப் போத்துகளே!
புதியதோர் உலகு செய்வோம்
புரட்சிப் பெண்களின்
அணிவகுப்பை அங்கே
காண்போம்!
மண்ணுக்கும் கேடாய்
மதித்தீரா பெண்ணினத்தை?
என்று புரட்சிக்கவிஞனின் சூட்டுக்கோல் கவிதை வரிகளுக்கு விடை காண்போம்!
வாரீர்! வாரீர்!!
----------------- மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை “விடுதலை” -9-4-2013
22 comments:
ரிலையன்ஸ் மூலமாக பணம் பறிக்கும் தந்திரம்!
தமிழர்களே, தமிழர்களே கவனியுங்கள்! கவனியுங்கள்!!
பார்ப்பனீயத்தை வளர்க்க சங்கராச்சாரியார்
ரிலையன்ஸ் மூலமாக பணம் பறிக்கும் தந்திரம்!
சென்னை, ஏப்.9- பார்ப்பனீயத்தை வளர்க்க வேத பாடங்களைச் சொல்லிக் கொடுக்க ரிலையன்ஸ் முதலாளிகளின் கூட்டுச் சதியோடு காஞ்சி சங்கரமடம் எப்படி எல்லாம் வலை பின்னுகிறது என்பதைத் தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
1966ஆம் ஆண்டு சமயத்தில் முன்னாள் சங்கராச் சாரியார் ஒரு பிடி அரிசித் திட்டத்தை அறிமுகப்படுத் தினார். அதன்படி குடும்பத் தலைவிகள், சங்கராச்சாரியாரின் அறக் கட்டளைத் தொண்டர்கள் தங்களை அணுகும்போது நாள்தோறும் ஒரு பிடி அரிசி கொடுத்து வந்தனர். இவ்வாறு பெறப்பட்ட அரிசியும் மற்ற தானியங்களும் அருகில் உள்ள கோயில்களில் சமைக்கப்பட்டு, ஏழைகளுக்கும், தேவைப்படும் தகுதி படைத்த மாணவர் களுக்கும் பிரசாதமாகக் கொடுக்கப்பட்டு வந்தது.
அந்த திட்டத்தைத் தொடர்ந்து காஞ்சி மகாசுவாமி வித்யாமந்திரர் சங்கரா அட்டை என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி யுள்ளது.
அதன்படி நீங்கள் அருகில் உள்ள ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கடைகளில்(Fresh Stores)
பொருள்கள் வாங்கும் போது, அதற்குண்டான விலையுடன், ஒரு விழுக்காடு அதிகமாகக் கொடுக்க வேண்டும். மாத இறுதியில் இவ்வாறு பலரிடமும் பெறப்படும் ஒரு விழுக்காடு பணத்துக்குரிய பொருள்கள் காஞ்சி மகா சங்கரமட வித்யா மந்திருக்கு அனுப்பப்படும். இந்த செயலின் விளைவாய், வேதம் படிக்கும் மாணவர்களுக்கான நிதி தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும்.
(அதாவது தகுதி பெற்ற பார்ப்பனருக்கே கிடைக்கும்)
தகுதி பெற்ற ஒரு ஏழை வேதம் படிக்கும் (பார்ப்பனருக்கே) மாணவர் ஒரு பயனுள்ள கல்வியைப் பெறுவதற்கு உதவிய திருப்தியும் உங்களுக்குக் கிடைப்பதுடன் காஞ்சி சங்கராச்சாரியாரின் ஒருபிடி அரிசித் திட்டத்தில் இணைந்து கொண்டாலும் கிட்டும். மேலும் சங்கரா அட்டை வைத்து இருப்ப வர்களுக்கு, இத்திட்டத்தை ஆதரிக்கும் நிறுவனங்களிடமிருந்து விலை தள்ளுபடியும் மற்ற சலுகைகளும் கிடைக்கும். அதுபற்றிய விவரங்கள் அவ்வப்பொழுது தெரிவிக்கப்படும்.
நீங்கள் கொடுப்பது ஒரு விழுக்காடுதான். ஆனால் நூறு விழுக்காடு நிறைவுகிட்டும்.
எப்படி சங்கரா அட்டை உறுப்பினராவது?
சங்கரா அட்டை உறுப்பினராவதற்கான விண்ணப்பத் தாள், இணையதளத்தில் *(அந்த முகவரியை நாம் ஏன் வெளியிடுவானேன்?) அல்லது ஏதாவது ஒரு ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கடையிலோ விண்ணப்பத்தை வாங்கி, நிறைவு செய்து அத்துடன் ரூ.101-க்கான காசோலை யும் சேர்த்து மேலே குறிப்பிட்ட இடங்களிலோ, கீழ்க்காணும் முகவ ரிக்கோ அனுப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது. பார்ப்பனர்களின் நரித் தந்திரத்தைப் பார்த்தீர்களா?
எப்படி எப்படி யெல்லாம் பார்ப்பனீயத்தை வளர்க்கிறார்கள் - முதலாளிகளின் கூட்டோடு? பார்ப்பனர் அல்லாதார் புரிந்து கொள்ள வேண்டாமா?
(பல முகவரிகள் கொடுக்கப்பட்டுள்ளன அதை நாம் வெளியிடத் தேவையில்லை).
வெற்றி பெறக் கற்றுக் கொள்ளுவோம் (1)
தமிழ் ஏடுகள் பலவும் சினிமா - பயனற்ற பல வகைக் கேளிக்கை பொழுது போக்குகள் - இவைபற்றியே விளம்பரப்படுத்தி இளைஞர்களின் உணர்ச்சிகளுக்குத் தீனி போட்டு, தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்வதற்காகவே நடத்தப்படுபவை ஆகும்!
மக்களின் வாழ்க்கையைச் செப்பனிட்டு, செம்மைப்படுத்தி, குறிக்கோளை அடைந்தால் மட்டும் போதாது; அதை அடையும் வழியும் முறையும் நேர்மையானதாகவே இருக்க வேண் டும் என்று வலியுறுத்தும் வாழ்வியல் ஏடுகள் வெகு சிலவே தமிழ்நாட்டில் உள்ளன.
அவற்றில் ஒன்று நண்பர் ஜெயகிருஷ்ணன் அவர்களின் வளர் தொழில் ஏடு ஆகும்.
ஊக்கமும், முயற்சியும், உழைப்பும் எவரையும் முன்னேற்றுவது உறுதி. அப்படி விரும்புவோருக்கு தொழில் உலகில் வழிகாட்டும் ஏடாக உள்ளது இந்த வளர்தொழில் ஏடு அதன் ஆசிரியர் - நிறுவனர் ஜெயகிருஷ்ணன் அவர்கள் உழைப்பால் உயர்ந்த, உயரும் உண்மையான பெருமகன் ஆவார்!
இந்த இதழில் (ஏப்ரல், 2013இல்) உலகப் புகழ் பெற்ற ஊக்கமூட்டும் எழுத்தாளரான திரு. ஜேக்கேன்ஃபீல்ட் என்ற அமெரிக்க எழுத்தாளர் சென்னை வந்திருந்தபோது ஒரு கருத்தரங்கில் பேசிய பின் அவரோடு தனியே பேசிக் கொண்டிருந்தபோது, அவர் பகிர்ந்து கொண்ட சிந்தனைகள்:
நாள்தோறும் அய்ந்து செயல்கள், இலக்கை அடைவீர்கள் என்ற தலைப்பில் தலையங்கமாகவே எழுதியுள்ள சுவையான கருத்துக் கோவை படித்தேன். சுவைத்தேன்.
உங்களுடன் பகிர்ந்து கொள்ளுமுன் அந்த பிரபல எழுத்தாளரான திரு. ஜேக் கேன் ஃபீல்ட், சிக்கன், "சூப் ஃபார் சோல்" Chicken soup for soul’ என்ற வரிசையில் 225 சிக்கன் சூப் தொகுதிகள் (நூல்கள்) பல்வேறு வயதினர் பல்வேறு நிலையினர் அனைவருக்கும் அவரவர்களுக்குப் பயன்படும் வகையில் ஊக்கமூட்டும் அனுபவ அறிவுரைத் தொகுப்புக்களா கவே அவை அமைந்துள்ளவைகளாகும்!
ஒவ்வொரு தொகுதியும் இப்போது பல்வேறு பதிப்புக்களை பல்வேறு மொழிகளில் - 47 மொழிகளில் 50 கோடி மக்கள் இப்புத்தங்களைப் படிக்கும் வகையில் எழுதி பிரபலமாகியுள்ளார் இவர்.
இதன் துவக்கம் - இவரது முயற்சி முதலில் தோல்விகள் - அடுக்கடுக்கான தோல்விகள் என்பவைகளே அடிப் பீடங்களாகி, அதனைத் தாண்டி மேல் ஏறியே வெற்றியின் உச்சத்திற்கு இவர் சென்றுள்ளார்.
முதல் புத்தகம் (சிக்கன் சூப்) எழுதிய நிலையில் 144 புதிய பதிப்பாளர்களை சென்று பார்த்து அவர்களில் எவரும் அச்சிட முன் வரவில்லை. என்றாலும் இவரே சொந்த முயற்சி செய்து அச்சிட்டு, 3 ஆண்டுகள் அதனை விற்கச் சிரமப்பட்டுள்ளார்!
என்றாலும் இவரது தளரா முயற்சி - விடா முயற்சி - கடும் உழைப்பு - நன்னம்பிக்கை - இவருக்கு வெற்றியை அழைத்து வந்து முன்னே நிறுத்தி விட்டது போலும்!
இன்னொரு சுவையான விடா முயற்சிக்கு எடுத்துக்காட்டும்கூட வளர்தொழிலில் சுட்டிக் காட்டப்பட் டுள்ளது!
உலகின் சுவை மிகுந்த கோழி இறைச்சி உணவான (KFC) கே.எஃப்.சியை அறிமுகப்படுத்த கெண்ட்டகி (Kentahey)அவர்கள் 1100 உணவகங்களைப் போய் பார்த்து தோல்வி அடைந்தார்! எல்லோரும் அன்று இவரது கெண்ட்டகி சிக்கனைப் புறக்கணித்தனர்.
இன்று..? அமெரிக்காவில் மட்டும் 5100 (உலகெங்கும் பற்பல நாடுகளில் - ஏன் நம் சென்னையிலும் இளைஞர் களை ஈர்த்ததாகி விட்டதே சிக்கன் சூப் புத்தக ஆசிரியர். கூறிய 5 செயல்கள் பற்றிக் கூறுமுன் அவ்வறிஞர் கூறிய ஒரு முக்கிய கருத்து கல்வியாளர்களின் கேளாக் காது பாராமுகங்களுக்கு எட்ட வேண்டும். இந்தியாவில் மொழியைக் கற்றுத் தருகிறார்கள்; வரலாற்றைக் கற்றுத் தருகிறார்கள்; அறிவியலைக் கற்றுத் தருகிறார்கள். ஆனால் வெற்றிக்கான வழிமுறைகளைக் கற்றுத் தருவ தில்லை. அதைச் சொல்லித் தரத்தான், நான் இங்கே வந்திருக்கிறேன் என்று துவங்கிய அவர்தந்த அறிவுரைகளை நாளை பார்ப்போமா?
- கி.வீரமணி
- (நாளை தொடர்ச்சி)
இலங்கையின் தேசிய கீதம்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. இலங்கை தேசிய கீதத்தில் தமிழ்மொழியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார் கோரிக்கை ஒன்றை வைத்தார்.
அதைக் கேட்டதும் அதிபர் ராஜபக்சே ஆத்திரத்துடன் ஒரு நாட்டின் தேசிய கீதத்தை இரு மொழிகளில் பாடும் நாடு ஏதேனும் உண்டா? இலங்கைத் தேசிய கீதத்தை தமிழில் பாட முடியாது. சிங்கள மொழியில் மட்டுமே பாட முடியும். தேசிய கீதத்தில் தமிழையும் சேர்த்தால் சிங்களப் புத்தமதத் தலைவர்களுடன் பிரச்சினை ஏற்படும். இல்லாத பிரச்சினையை உருவாக்க நான் தயாராக இல்லை என்று கூறியுள்ளார்.
பாசிஸ்டு ராஜபக்சேயிடம் இதனைத் தவிர வேறு எதைத்தான் எதிர்பார்க்க முடியும்?
சிங்களம் மட்டுமே ஆட்சி மொழியென்று 1956ஆம் ஆண்டிலேயே சட்டம் செய்யப்பட்டது. நீதிமன்ற மொழியாக 1960ஆம் ஆண்டில் சிங்கள மொழி ஆக்கப்பட்டது.
ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தப்படி சிங்கள மொழியோடு, தமிழும் ஆட்சிமொழி என்று அறிவிக்கப்பட வேண்டும் - இதுவரை செய்ததுண்டா?
இராணுவத்தை எடுத்துக் கொண்டால் நூறு சதவிகிதமும் சிங்களவர்கள்தாம். காவல்துறையில் வெறும் 2 சதவிகிதமே தமிழர்கள், அரசுப் பணிகளில் வெறும் 8.3 விழுக்காடே தமிழர்கள்.
தமிழ் மாணவர்கள் உயர்கல்வி பெற வேண்டுமென்றால் சிங்களவர்களைவிட அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் (1970) என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1956ஆம் ஆண்டு சிங்களமே ஆட்சி மொழி என்பதை எதிர்த்துதான் தந்தை செல்வா (1956 ஜூன் 5) தலைமையில் பட்டினிப் போராட்டம் நடத்தப்பட்டது.
அந்த அறப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சிங்களக் காடையர்கள் அடித்துத் துவைத்து ஆற்றில் தூக்கிப் போட்டார்கள்.
குருதி சொட்டச் சொட்ட நாடாளுமன்றம் சென்றபோது பிரதமர் பண்டார நாயகா அவர்களைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தாரே!
சிங்களவர்கள் கொஞ்சம் முரடர்கள், பேசாமல் கலைந்து செல்லுங்கள்; இனிமேல் இங்கு சிங்களம்தான் ஆட்சி மொழி! என்று ஆணவமாகப் பேசினாரே!
அந்தப் பண்டார நாயகா சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் சந்திரிகா பண்டார நாயகா புது சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார். அதிபர் தேர்வு என்பது - இனி நேரடித் தேர்தல் என்று ஆக்கினார்.
இனத்தால் சிங்களவராகவும், மதத்தால் பவுத்தராகவும் இருப்பவர்தான் இலங்கையிலே அதிபராகவர முடியும் என்று புதிய சட்டத்தால் திணிக்கப்பட்டது.
இதற்குப் பிறகுதான் தனியீழம் என்ற புதிய முடிவை எடுத்து முழக்கமிட்டார் தந்தை செல்வா. வட்டுக்கோட்டை மாநாட்டில்தான் அந்த முடிவும் எடுக்கப்பட்டது.
தமிழ்ப் பேசும் மக்களின் இழந்த உரிமைகளை மீட்பதற்கே நாங்கள் ஒரு காலத்தில் இணைப்பாட்சி இயக்கத்தை ஆரம்பித்தோம். ஆனால் கூட்டரசு மூலம் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை நிலை நாட்டுவது சாத்தியப்படாது என்பதை கடந்த கால அனுபவங்கள் மூலம் இப்பொழுது அறிந்து கொண்டோம். இதன் அடிப்படையில் நாங்கள் தனியே பிரிந்து வாழ வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தோம். இதனை நாம் செய்யாவிட்டால் தமிழினம் தனது இழந்த உரிமைகளை ஒருபோதும் மீட்டுக் கொள்ள முடியாது. எங்கள் முன்னோர்கள் புத்திசாலிகளாக இருந்தனர். அவர்கள் தங்களுக்கென்று தனியாட்சி வைத்திருந்தனர். இலங்கை வரலாற்றில் எங்களுக்கென்று ஓர் இடம் இருக்கின்றது. நாங்கள் நாட்டைப் பிரிக்கும் படிக் கூறவில்லை. இழந்த எங்கள் உரிமையான அரசை அகிம்சை வழியில் மீள அமைக்க வேண்டும் என்பதே எங்களின் நிலையாகும் - என்று வட்டுக்கோட்டை மாநாட்டில் ஈழத் தந்தை செல்வா பிரகடனப்படுத்தினார்.
அது எவ்வளவு நியாயமானது என்பதை ஈழத் தமிழர்கள் மட்டுமல்லாமல், உலகத் தமிழர்கள் தேசிய இன உரிமை உணர்வை உணர்ந்த ஒவ்வொருவரும் ஒப்புக் கொள்ளவே செய்வர்! தனியீழமே தமிழர் தாகம்!
சிறிதும் இராது
பார்ப்பனருக்கு நோக்கமெல்லாம் பதவி, உத்தியோகம் ஆகியவற்றில் தங்களுக்கு ஏகபோகம் இருக்கவேண்டும் என்பதுதானே ஒழிய, மற்றபடி நாணயம், நீதி, நேர்மைபற்றியோ பார்ப்பனர் தவிர்த்த மற்றவர்பற்றியோ கவலை சிறிதும் இராது.
(விடுதலை, 10.6.1968)
மோட்சத்துக்குக் குறுக்கு வழியோ! மூன்று மடாதிபதிகள் தற்கொலை!
பெங்களூரு, ஏப். 9-கர்நாட காவில் தலைமை மடாதிபதி இறந்த சோகத்தில் இளைய மடாதிபதிகள் 3 பேர் நெய் ஊற்றி வளர்த்த யாக குண்டத் தீயில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், பீதர் மாவட்டத்தில் பழைமையான ஜவளிதாபுமந்திர மடம் உள் ளது. அதன் மடாதிபதியாக கணேஷ்வரஅவதூதசுவாமி (65) இருந்தார். கடந்த ஜனவரி 2ஆம் தேதி அம்மடத்தில் இளைய மடாதிபதியாக இருந்த மாருதி சுவாமி திடீரென காணாமல் போய்விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக் காததால், மடாதிபதிதான் அவரை கொலை செய்து விட்டார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், மனம் உடைந்த மடாதிபதி கணேஷ்வரர், கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி இரவு கோயில் கருவறையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு அங்கேயே தற் கொலை செய்து கொண்டார். அந்தக் கடிதத்தில் மற்றவர்கள் குறைகளை போக்கும் மடாதி பதிகளுக்கும் குறைகள் உள் ளன. மனவேதனை காரணமாக சிவபாதம் சேருகிறேன். அனை வர் வாழ்விலும் அமைதி நிலைக் கட்டும் என்று எழுதியிருந்தது. மடாதிபதியின் மரணம் குறித்து பீதர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரிகாரம் - யாகமாம்
இந்நிலையில், இளைய மடாதிபதிகளான மண்ணூர் கிராமத்தை சேர்ந்த ஈராரெட்டி சுவாமிகள் (45), நாகூர் கிரா மத்தை சேர்ந்த ஜெகநாதசுவாமி கள் (24), ஜவளிகிராமத்தை சேர்ந்த பிரணவ்சுவாமி (16) ஆகிய மூவரும் மடத்தை பராம ரித்து வந்தனர். 2 மாதத்துக்கு முன் தலைமை மடாதிபதி தற்கொலை செய்து கொண்ட தால் மடத்துக்கு தீட்டு ஆகி விட்டது என்றும் அதற்கு பரி காரமாக சிறப்பு யாகம் நடத்த வேண்டும் என்றும் இவர்கள் கூறினர். இதையடுத்து, யாக குண்டம் அமைத்தனர். நேற்று காலை யாகம் நடத்துவதாக இருந்தது.
நேற்று அதிகாலை 5.30 மணியளவில் யாக குண்டத்தில் நெய் ஊற்றி தீயை எரிய விட் டனர். திடீரென மடாதிபதிகள் 3 பேரும் யாக குண்டத்தில் குதித்து விட்டனர். சத்தம் கேட்டு மடத்தில் இருந்தவர்கள் அங்கு வந்த பார்த்தபோதுக் கோரக்காட்சியை கண்டு அலறி னர். பக்தர்களும் மடத்து நிர் வாகிகளும் சுதாரித்துக் கொண்டு தீயை அணைத்து 3 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால், இந்த முயற்சி பலனளிக்காமல் மடாதிபதிகள் 3 பேரும் தீயில் கருகி இறந்தனர்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம் பவ இடத்துக்கு வந்து உடல் களை கைப்பற்றினர். தலைமை மடாதிபதி இல்லாததால் மன வேதனையில் தற்கொலை செய்து கொண்டோம். இதற்கு யாரும் காரணம் இல்லை என்று மடாதிபதிகள் 3 பேரும் கடிதம் எழுதி வைத்துள்ளனர். சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ஜவளி மடத்தில் சில மாதங் களாக நடைபெற்று வரும் சம் பவம் குறித்து அரசு விசாரணை துவக்கியிருந்தால் இதுபோன்ற கெட்ட நிகழ்வு தொடர்ந்திருக் காது என்று மடத்தை சேர்ந் தவர்கள் தெரிவிக்கின்றனர்.
மாருதி சுவாமி காணாமல் போனது குறித்து மடத்தை சேர்ந்த சில நிர்வாகிகளுக்கு தெரியும். ஆனால், அதுகுறித்து அவர்கள் அமைதியாக இருந்து விட்டனர். காவல் நிலையத்தில் இதுகுறித்து எழுத்து மூலமான புகார் தெரிவிக்காமல் தகவல் மட்டும் கூறினர். ஆனால், காவல்துறையினர் மடம் சார்ந்த விஷயங்களில் மென்மையான அணுகுமுறை மேற்கொள்வது வழக்கம். எனவே, விசாரணை மந்தமானது. அதற்குள் கணேஷ் வரர் முடிவை தேடிக்கொண் டார். அதன் பின்னராவது உள வுத்துறை சுதாரித்து இருந்தால் இதுபோன்ற கெட்ட நிகழ்வு தடுக்கப்பட்டிருக்கும் என்பது ஜவளி கிராமத்தை சேர்ந்த மக்களின் கருத்தாக உள்ளது.
ஆன்மீகவாதிகளின் கோர நிகழ்வு!
ஜவளி மட தற்கொலை சம் பவங்களுக்கு அரசை குறை கூறுவதை அமைச்சர் அசோக் மறுத்துள்ளார். இதுகுறித்து யாரும் இதுவரை புகார் பதிவு செய்யவில்லை. மடம் தொடர் பான விவகாரங்களை அவர் களே பேசி தீர்த்துக்கொண்டி ருப்பதுதான் இதுவரை நடந்து வந்துள்ளது என்று அவர் கூறினார்.
மடாதிபதிகள் மூவர் யாக குண்டத்தில் குதித்து தற் கொலை செய்த சம்பவம் குறித்து பல்வேறு மடங்களை சேர்ந்த நிர்வாகிகள் அதிர்ச்சி யும், கவலையும் தெரிவித்துள்ளனர்.
பெல்காம் மடாதிபதி பச வபிரபுசுவாமி விடுத்துள்ள அறிக்கையில், ஆன்மிகவாதி களின் கோரமான சம்பவமாக இது நடந்துள்ளது. எதிர்காலத் தில் இதுபோல் நடக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக் கப்பட வேண்டும் என கூறியுள் ளார். ஜவளி மடத்தில் நடந் துள்ள சம்பவம் கொலையா? தற்கொலையா என்ற சந்தேகத் தையும் எழுப்பியுள்ளது.
தமிழகத்தின் முதல் பைக் பெண்
முடியுமான்னு கேட்டா முயற்சி பண்றேன்னு சொல்வேனே தவிர, முடியாது என்று சொல்லி எனக்குப் பழக்கமில்லை. ஒவ்வொரு முறையும் புதுசா ஒரு சாதனையைப் பத்தி யோசிக்கிறப்பவும், உன்னால நிச்சயம் முடியும்னு மனசு சொல்றதை அப்படியே நம்பி, முயற்சி செய்வேன். என்னுடைய இத்தனை வெற்றிகளுக்கும் அதுதான் மூலகாரணம் என்றார் சித்ரா ப்ரியா.
தமிழகத்தின் முதல் பெண் பைக் ரேஸர்! 2011 இன் பைக்கர் ஆஃப் தி இயர் பட்டம் வென்ற நாயகி! ஆண்களே ஆக்கிரமித்திருக்கும் பைக் ரேஸிங் துறையில், நம்பிக்கையளிக்கிற ஒரே பெண்!
சைக்கிள் ஓட்டற வயதில் இரண்டு சக்கர வாகனம் ஓட்ட ஆரம்பிச்சேன். பார்த்துப் போ... பத்திரமா போ... மெதுவா ஓட்டுன்னு வழியனுப்பி வைக்கிற அம்மா-அப்பாவைத்தான் பார்த்திருப்போம். எங்கம்மா, அப்பா, அண்ணன்கள் எல்லாரும், தைரியமா போ... தன்னம்பிக்கையோடு ஓட்டு என்று சொல்லி ஊக்குவித்தார்கள்.
முதல் முதல்ல யமாஹா என்டைசர் வாங்கினேன். அண்ணா நகர்ல எங்க வீட்டிலிருந்து, காட்டாங்குளத்தூரில் உள்ள கல்லூரி வரை பைக்லதான் போவேன். என்னுடைய வேகத்தை பார்த்த ஒரு நண்பர், பெங்களூருவில் நடக்கும் ட்ராக் ரேஸ் பத்தி சொல்ல, அதில் கலந்துக்கிட்டேன். முதல் பந்தியத்திலேயே எனக்கு முதலிடம். அடுத்து மும்பை, சென்னையில் நடந்த அந்தப் பந்தயத்திலும் கலந்துகொண்டேன்.
சிறீபெரும்புதூரில் ரேஸ் டிராக் இருக்கிறது பத்தி சொல்லி, அங்கே பயிற்சி செய்யச் சொன்னார்கள் சில நண்பர்கள். பயிற்சி முடிந்தது போட்டிக்குத் தயாரானேன். 30 பேருக்கு மத்தியில் நான் மட்டும்தான் பெண்! எனக்கு மூன்றாவது இடம் கிடைத்தது. ஆனாலும், அந்த ரேஸ் டிராக்கில் ஆண்களோடு போட்டி போட்ட முதல் தமிழ் பெண் நான்தான் என்று பாராட்டு கிடைத்தது.
அப்புறம் தொடர்ந்து நிறைய போட்டி, நிறைய வெற்றிகள் என்று மிக வேகமாக சென்றுகொண்டிருக்கிறது வாழ்க்கை... என்ற சித்ரா, கடந்த வருடம், கிரேட் இந்தியன் ரைடு என்கிற பெயரில் கன்னியாகுமரி முதல் பூனா வரை 45 நாள்கள் பைக்கிலேயே சுற்றுப்பயணம் செய்திருக்கிறார். அதையடுத்து, உலகின் மிக உயரமான மோட்டார் வாகனச் சாலையான கார்துங்லாவுக்கு தென்னிந்தியா சார்பாக சென்று வந்த ஒரே பெண் என்கிற பெருமையுடன், இன்னொரு சாகசத்தையும் சந்தித்து விட்டு வந்திருக்கிறார்.
பெங்களூரு டூ பூனா, மறுபடி பூனா டூ பெங்களூரு வரை 1,600 கி.மீ. தூரத்தை வெறும் 24 மணி நேரத்துல பைக்கில் சென்று வந்தேன். பொதுவா 3 மணிநேரம் வண்டி ஓட்டினாலே, உடம்பு சூடாயிடும். களைப்பாயிடும். நான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாம, ராத்திரி, பகல் என்று பாராமல் வண்டி ஓட்டினேன். ரொம்ப ரொம்ப கடினமான விஷயம் என்று சொன்ன அவர், பந்தயங்களின் போது பல விபத்துகளை சந்தித்திருக்கிறாராம்.
ஒரு தடவை ரேஸில் பெரிய விபத்தாகி, இடதுகை மணிக்கட்டு உடைந்தது. நெத்தி கிழிஞ்சு, ஏகப்பட்ட தையல்... எல்லாம் சரியாகிற வரைக்கும் சும்மா இருக்க வேணாமேன்னு ஃபிலிம் மேக்கிங், எம்.பி.ஏ.,ன்னு படித்தேன். ஆனா, மனசெல்லாம் ரேஸிங்கை சுத்தியே வந்தது.
எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு, மறுபடி ரேஸில் குதிச்சிட்டேன். இப்ப என்னால ரேஸிங்கை தவிர வேற எதைப் பத்தியும் நினைச்சுப் பார்க்க முடியலை... என்னோட இந்த சாதனைகளை எல்லாம் நான் வெளிநாட்டில் போய் செய்யலாம். ஆனாலும், இந்தியாவில் ஒரு பெண் சாதிச்சிருக்கான்னு பேச வைக்கிறதுதான் என்னோட கனவு, ஆசை எல்லாம் என்று ஆர்வமுடன் கூறினார் சித்ரா ப்ரியா. அவருடைய ஆசை நிறைவேற வாழ்த்துகள்!
மிகச் சிறந்த பெண்மணி ஹைபேஷா
கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் எகிப்தின் தலைநகராக இருந்த அலெக்ஸாண்ட்ரியா கல்வி, அறிவியல், அரசியலில் சிறப்பு பெற்றிருந்தது.
5 லட்சம் புத்தகங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய நூலகமும் ஆராய்ச்சிக்கூடமும் அங்கு இருந்தன. நூலகத்தின் நிர்வாகியாகவும் முக்கிய ஆசிரியராகவும் இருந்தவர் தியோன். கிரேக்க பகுத்தறிவு பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். அவரது அறிவு மகள் ஹைபேஷா.
சிறுமியாக இருந்தபோதே தத்துவம், கணிதம், வானவியல், இலக்கியம் என பல் துறைகளில் விவாதிக்கும் திறன் பெற்றிருந்தார் ஹைபேஷா. பள்ளிப் படிப்பை முடித்தவுடன் கிரேக்கம், இத்தாலி, மத்தியதரைக்கடல் நாடுகளுக்கு உயர் கல்விக்காகச் சென்றார். பல நாட்டு கல்வி, பலவித மனிதர்கள் என்று ஏராள அனுபவங்களுடன் அலெக்ஸாண்ட்ரியா திரும்பினார். கிரேக்கத் தத்துவப் பள்ளியில் பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற ஞானிகளின் தத்துவங்களை போதித்தார். கணித ஆராய்ச்சியையும் தொடர்ந்தார்.
தத்துவம், கணிதம், பகுத்தறிவு, இலக்கியம், அரசியல் துறைகளில் அவர் பெற்றிருந்த தேர்ந்த அறிவு காரணமாக, ஹைபேஷா அலெக்ஸாண்ட்ரியா நகரின் முக்கியப் பெண்ணாக செல்வாக்குப் பெற்றி ருந்தார். பல நாட்டு மன்னர்கள், அறிஞர்கள், செல் வந்தர்கள் தங்கள் குழந்தைகளை ஹைபேஷாவிடம் கல்வி கற்க அனுப்பினர்.
வழக்கமாக பெண்கள் உடுத்தும் உடைகளை அவர் அணியவில்லை. நீண்ட அங்கியையே அணிந்தார். ஆண் தேரோட்டியை அழைக்காமல் தானே குதிரைகள் பூட்டிய தேரை ஓட்டிச் சென்றார். அறிவு, துணிவு, தன்னம்பிக்கையின் அடையாள மாக வலம் வந்த ஹைபேஷாவை மக்கள் கொண்டாடினர்.
பாய்மங்களின் ஒப்பீட்டு அடர்த்தியைக் கண்டறி வதற்கான ஹைட்ரோமீட்டர் கருவியையும், நட்சத் திரங்களின் தன்மையைக் கண்டறியும் ஆஸ்ட்ரோ லோப் கருவியையும் உருவாக்கினார் ஹைபேஷா. கணிதம், தத்துவம், அறிவியல் துறைகளில் பல நூல்களை எழுதினார். ஹைபேஷா வாழ்ந்த 4ஆம் நூற்றாண்டில் எகிப்து, ரோமப் பேரரசின் கீழ் இருந் தது. அப்போது மதத்தலைவர்களின் செல்வாக்கு அதிகரித்திருந்தது.
எகிப்தின் ஆளுநராக இருந்த ஓரிஸ்டஸ், ஹைபேஷாவின் நல்ல நண்பர். இவ்விருவர் மீதும் அலெக்ஸாண்ட்ரியாவின் தலைமைக்குருவாக இருந்த பிஷப் ஸைரிலுக்கு வெறுப்பு ஏற்பட்டது. மத நம்பிக்கைகளுக்கு இவர்கள் முட்டுக் கட்டையாக இருப்பதாகக் கருதினார். ஓரிஸ்டஸின் பதவியைப் பறித்தார். அப்படியும் அவர் ஆத்திரம் அடங்கவில்லை. மதத்துறவிகளை ஏவி, ஓரிஸ்டஸைக் கொலை செய்தார். மத நம்பிக்கை புத்தியைச் செயலிழக்கச் செய்துவிடுமே... அடுத்து அவர் மனதில் தோன்றிய உருவம் ஹைபேஷா...
கி.பி.415. மார்ச் மாதம். ஹைபேஷா மாணவர்களுக்காக சொற்பொழிவு ஆற்றிவிட்டு, தேரில் வந்துகொண்டிருந்தார். மதவாதக் கூட்ட மொன்று ஆர்ப்பரித்து வழிமறித்தது. விஞ்ஞானமும் தத்துவமும் நிறைந்த அலெக் ஸாண்ட்ரியா மக்களை, மதநம்பிக்கை எவ்வளவு கீழ்த்தரமாக மாற்றிவிட்டது என்பதைக் கண்ட ஹைபேஷா மிகவும் துயருற்றார். தேரில் ஏறிய சிலர், ஹைபேஷாவைக் கீழே தள்ளி, சாலையில் இழுத்துச் சென்றனர்.
ஒரு ஆலயத்துக்குள் குற்றுயிரும் குலை உயிருமாகக் கொண்டு செல்லப்பட்டார் ஹை பேஷா. உடைகளைக் களைந்து, கரடுமுரடான சிப்பிகளாலும் ஓடுகளாலும் உடலைக் கீறினர். கால்கள் துண்டிக்கப்பட்டன. இறுதியில், ஹைபேஷாவின் எஞ்சிய உடலைத் தீயிட்டுக் கொளுத்தினர்.
நடமாடும் பல்கலைக்கழகமாகவும் அறிவுக் களஞ்சியமாகவும் இருந்த ஹைபேஷாவைக் கொன்ற செயலால் அறிவுலகம் இருண்டு போனது. இதன் பிறகு பல நூறு ஆண்டுகள் கழித்தே அறிவுலகத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஆண்கள் கோலோச்சிய அறிவுத்துறையில் 1,600 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண், சமூகத்துக்குப் பயன்படும் பல துறைகளிலும் ஒப்பற்றவராகத் திகழ்ந்தார். ஹைபேஷா வாழ்ந்த காலத்தில் அவருக்கு இணையான அறிஞர்கள் யாரும் இல்லை என்கிறார் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சாக்ரடீஸ் ஸ்கொலாஸ்டிகஸ் என்ற வரலாற்றுப் பேராசிரியர்!
அரபு படையெடுப்பால் அலெக்ஸாண்ட்ரியாவில் இருந்த நூலகமும் ஆராய்ச்சிக்கூடமும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. அதில் ஹைபேஷாவின் ஏராளமான நூல்கள் கருகிப்போயின. எஞ்சிய சில நூல்கள் பிற்காலத்தில் அரபு, லத்தீன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. ஹைபேஷாவின் இந் நூல்களே நியூட்டன், டெக்கார்டே போன்ற பிற்கால அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்பு களுக்கு ஆதாரமாகத் திகழ்ந்தன. ஹைபேஷாவிடம் பயின்ற மாணவர்கள் தங்கள் அறிவால் மிகப்பெரிய பதவிகளை வகித்தனர். இம்மாணவர்கள் மூலமே ஹைபேஷா வெளியுலகுக்கு அறியப்பட்டார்.
இன்று பெண்கள் விண்வெளி வீராங்கனையாக, விஞ்ஞானியாக, மருத்துவராக, ஆராய்ச்சியாளராக, தொழில்நுட்பவியலாளராக, பேராசிரியராக சகல துறைகளிலும் கால் பதித்து சாதனை சரித்திரம் படைக்கின்றனர். இருப்பினும், இந்த 1,600 ஆண்டு களில் வானவியலாளர், கணிதவியலாளர், தத்துவ வியலாளர், பேராசிரியர், கண்டுபிடிப்பாளர், எழுத் தாளர் என்று பன்முகம் கொண்ட ஹைபேஷாவுக்கு இணையான இன்னொரு பெண் பிறக்கவேயில்லை!
சுனிதா வில்லியம்ஸ்
அமெரிக்காவில் வாழும் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லி யம்ஸ் விண்வெளியில் அதிக நேரம் பயணம் செய்த பெண்மணி என்ற புகழுக் குரியவர் - இருமுறை பயணித்தவர்.
பெண்ணால் எதனை யும் சாதிக்க முடியும் என்று நிரூபித்துக்காட்டியவர்.
ருசிய பெண் வாலண் டினா விண்வெளி சென்று வியக்க வைத்தார் அன்று.
சுனிதா வில்லியம்ஸின் தந்தையார் குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் - தாயாரோ அய் ரோப்பாவின் சுலோவேனி யாவைச் சேர்ந்தவர்.
இந்து மதமும், கிறித் துவ மதமும் இணைந்த குடும்பத்திற்குச் சொந்தக் காரர் - அதனால்தானோ என்னவோ சுனிதா வில்லி யம்ஸ் விண்வெளிக்குச் சென்றபோது கீதையையும், உபநிஷத்துக்களையும் எடுத்துச் சென்றேன் என்று கூறியுள்ளார்.
விண்வெளி தொடர் பான நுணுக்கங்கள் அவற் றில் நிரம்பி வழிகின்றன என்ற எண்ணத்தில் அவற்றை எடுத்துச் சென் றிருக்க முடியாது. இவற் றைப்பற்றிதான் உலகெங் கும் பறைசாற்றி வைத்துள் ளார்களே - அவற்றின் தாக்கமாக இருக்கக்கூடும்!
உண்மையைச் சொல்லப் போனால், கீதை பெண் களுக்கு உகந்த நூலே அல்ல.
பாவ யோனியில் பிறந்த வர்கள் பெண்கள் (கீதை அத்தியாயம் 9; சுலோகம் 32) என்று கூறுவதுதானே கீதை - அதைப்பற்றி சரி யாகத் தெரிந்திருந்தால் இந்த வீராங்கனை கீதை யைத் தீண்டியிருக்கவே மாட்டார்.
வான்வெளியில் பறந்த ராகேஷ்சர்மா என்ற இந் தியன் விண்வெளிக் கலத் தில் காலடி பதித்தபோது காயத்ரி மந்திரம் உச்சரித் தார் என்பதற்காக உச்சிக் குடுமி பார்ப்பன ஏடான தாம்பிராஸ் (மே 1962) ஒரு முறை பூணூலை இழுத்துப் பார்த்து சந்தோஷப்பட்ட துண்டு.
அவ்வளவு தூரம் போவானேன்? முதல் மனி தன் ககாரின் 1962 இல் விண்வெளி அகண்ட காஸ் மாசில் (Cosmos) சென் றதை விஞ்ஞானியான டாக்டர் சி.வி.இராமன் அழுத்தமாகக் கண்டித்தார். கடவுள் வசிக்கும் இடத் திற்கு மனிதன் தன் பூத உடலுடன் செல்லுவது மிக மிகப் பாவம் என்று சொல்ல வில்லையா?
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் பெரும் பாலும் நாத்திகர்களாக இருந்தாலும், இதுபோன்ற இந்து சாயல் உடையவர்கள் அந்தச் சிறையிலிருந்து அறிவை விடுவித்துக் கொள்ளாதது இரங்கலுக் குரியதே!
- மயிலாடன்
அடே, அப்படியா?
அரசியல்வாதிகளுக்குத் தான் பிரதமர் பதவிமீது ஆசை ஏற்படும். நான் அரசியல்வாதி அல்ல. அரசியல் ஆசைகள் இல்லாத சாதாரண மனிதன். எனவே, பிரதமராக வேண் டும் என்ற ஆசை எதுவும் எனக்கு இல்லை.
- கொல்கத்தாவில் நரேந்திர மோடி, 9.4.2013
பாடம் போதிப்பார்கள் பெண்கள்!
பிரதமருக்கான வேட்பாளராக நரேந்திர மோடி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், அவர்தான் பிரதமருக்கான வேட்பாளர் என்ற தகவல் பரவலாகத் திட்டமிட்டு உரு வாக்கப்பட்டது. இதில் மோடியைப் பொறுத்தவரை தந்திரசாலி - இதுபோல் காய்களை நகர்த்துவதில் வல்லவர்.
பி.ஜே.பி.யின் பார்லிமெண்ட் குழுவில் இடம் பிடித்துவிட்டார். அத்வானியின் மனதில் பிரதமர் நாற்காலி எண்ணம் இருந்ததில் தவறு இல்லைதான். கட்சியின் மூத்த தலைவர், துணைப் பிரதமர்வரை எட்டிப் பிடித்தவர்.
கடந்த முறை பிரதமருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுத் தேர்தலைச் சந்தித்த நேரத்தில் தோல்வியைத் தழுவிக் கொண்ட நிலையில், இந்த முறை மாற்று வேட்பாளரைத் தேடும் நிலைக்குப் பி.ஜே.பி. தள்ளப்பட்டு விட்டது.
தன்னை ஒதுக்கிவிட்டு மோடியை முன்னிறுத் தும் நிலையில், அத்வானி தன் மனக்கிலேசத் தையும் வெளிப்படுத்தத் தயங்கவில்லை. காங்கிரசைப் போல பி.ஜே.பி.யையும் மக்கள் அதிருப்தியுடன் பார்க்கத் தொடங்கிவிட்டனர் என்று குறிப்பிட்டதுடன் நிற்கவில்லை; இன்றைய பி.ஜே.பி.யின் செயல்பாடுகள் என் சிந்தனை களுக்கு ஒத்துப்போகவில்லை என்று பி.ஜே.பி. யின் 33 ஆம் ஆண்டு விழாவில் இந்தியாவின் தலைநகரில் முன்னணித் தலைவர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே மனந்திறந்துள்ளார் அத்வானி.
அதே கூட்டத்தில் மோடிதான் பிரதமருக்கான வேட்பாளர் என்று கட்சியின் அகில இந்தியத் தலைவர் கூறியபோது, இல்லை இல்லை, அத்வானிதான் பிரதமருக்கான வேட்பாளர் என்று டில்லி மாநில பி.ஜே.பி. தலைவர் விஜய்கோயல் பதிலடி கொடுத்துள்ளார்.
மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகானும் தொடர்ந்து முதலமைச்சராக இருந்து வருபவர்தான். மோடிக்குக் கொடுக்கும் முக்கியத் துவம் அவருக்குக் கொடுக்கப்படாததும் - பார்லிமெண்ட் போர்டில் அவருக்கு இடம் அளிக்கப்படாததும் இன்னொரு பக்கத்தில் அதிருப்திப் புயல் மய்யம் கொண்டுதானிருக்கிறது.
போலி என்கவுண்டர் வழக்குகளில் சம்பந்தப் பட்ட - மோடியின் நெருங்கிய சகாவான அமித்ஷா (முன்னாள் அமைச்சரும்கூட) பி.ஜே.பி.யின் அகில இந்திய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட் டுள்ளார். இதுவும் கட்சியில் குடைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டார் மோடி என்றே சொல்ல வேண்டும்.
மக்கள் தொகையில் சரி பகுதி கொண்ட பெண்களின் வாக்குகளின்மீது குறி வைத்துள் ளார். பெண்களுக்காக, தானொன்றும் அதிகம் செய்திடவில்லை என்று தன்னடக்கத்துடன் கூறுவதுபோலக் கூறினாலும், உண்மையும் அதுதானே!
இந்தியாவில் கல்வி வளர்ச்சியில் குஜராத் 14 ஆம் இடத்தில்தானே இருக்கிறது. இந்நிலையில், பெண் கல்வியைப்பற்றிப் பேச என்ன இருக்கிறது?
குஜராத்தின் வளர்ச்சிபற்றி திட்டக் குழுவின் கணிப்பு என்ன? நுண்ணூட்டச் சத்துக் குறை பாட்டில் இன்னொரு சோமாலியா என்று கூறியுள்ளதே!
இது ஒருபுறம் இருக்கட்டும், மோடியின் அமைச்சரவையில் இருந்த ஒரு பெண் மாயா கோத்வானி, நரோடா பாடியா எனும் இடத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைகளுக்குப் பொறுப்பானவர் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்துள்ளதே!
இவ்வளவுக்கும் அந்தப் பெண் ஒரு டாக்டர். கொலை செய்யப்பட்டவர்களோ 97 பேர் - அதுவும் குழந்தைகள் 35 பேர் - என்ன கொடுமை!
இந்த லட்சணத்தில் பெண்கள் முன்னேற்றத் தில் அக்கறை கொண்டதுபோல பசப்புகிறார் மோடி.
யார் முறியடித்தாலும், முறியடிக்காவிட்டாலும் இந்தியப் பெண்கள் முன்னின்று தோற்கடிக்கப்பட வேண்டியவர் நரேந்திர மோடிதான் - நினைவிருக் கட்டும்!
செத்தான்
நாம் ஒரு சிறிதாவது அறிவு பெற்ற பகுத்தறிவுவாதிகள் ஆகிவிட்டோமானால், கொல்லுவாரின்றியே பார்ப்பனன் செத்தான்.
(விடுதலை, 14.3.1970)
வெற்றி பெறக் கற்றுக் கொள்ளுவோம் (2)
சிக்கன் சூப் தொகுதிகள் எழுதிய ஊக்கமூட்டும் எழுத்தாளர் ஒரு கருத் தரங்கில் - பயிற்சி முகாமில் பேசியதை நேற்றைய கட்டுரையில் வளர்தொழில் ஏட்டிலிருந்து எடுத்துக் குறிப்பிட் டிருந்தேன்.
நாள்தோறும் நாம் அய்ந்து செயல்களில் விடாமுயற்சியுடன் ஈடுபட வேண்டும்; அப்படிச் செய்தால் நிச்சயம் நமது இலக்கை அடைய முடியும் என்று மிகுந்த தன்னம்பிக்கை ததும்பும் வகையில் அவர் பேசியிருக்கிறார்.
வெற்றி பெற விரும்பும் அனைவரும் முதலில் தங்களுடைய வெற்றிக்கு தாங்களே முழுப் பொறுப்பு என்பதை உணரவேண்டும். தாய், தந்தை பரிந் துரைப்பர்; உறவினர் கைகொடுப்பர் என்றெல்லாம் பிறரை நம்பி இருப்பதை விட நாமே சொந்தமாக முயற்சி செய்யவேண்டும்.
Event + Response = Out come என்ற ஃபார்முலாவைப் புரிந்துகொண் டால் உங்கள் பொறுப்புணர்வை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும்.
ஒரு நிகழ்வு (Event) நடைபெறுகிற போது, அதையொட்டி நீங்கள் மேற் கொள் கிற செயல்பாடே (Response) விளை வாக (Outcome) வெளிவருகிறது.
உலக நிகழ்வை யாராலும் மாற்ற முடியாது. ஆனால், விளைவை நீங்கள் மாற்ற விரும்பினால், உங்கள் செயல்பாடு களை மாற்றிக் கொள்ளவேண்டும்.
செயற்பாடுகளை நிர்ணயிப்பது மூன்று காரணிகள்தான்.
1. மனப்போக்கு (Behaviour) நடத்தை
2. எண்ணங்கள் (Thoughts)
3. மனதிற்குள் கற்பனை செய்து பார்த்தல் (Visualizing Images)
இந்த மூன்றும்தான் உங்கள் செயல்பாட்டைத் தீர்மானிக்கின்றன.
இந்த மூன்றையும் தெளிவாகப் புரிந்து கொண்டால் நீங்கள் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெற முடியும்.
முதலில் மனப்போக்கை எடுத்துக் கொள்வோம். நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? அதை எப்படிச் சொல்ல விரும்புகிறீர்கள்? என்பது மிக முக்கியம்.
காலங்காலமாக நீங்கள் உங்களிடம் உள்ள பழக்கங்களையும், மனப்போக்கு களையும், திரும்பிப் பார்க்கவேண்டிய நேரம் இது.
எதையெல்லாம் முடியாது என்று எண்ணி இருந்தீர்களோ அதையெல்லாம் முடியும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு செயல்படத் தொடங்குங்கள். எதிர்மறைச் சிந்தனைகள் அனைத்தை யும் நேர்மறைச் சிந்தனைகளாக மாற்றிக் கொள்ளவேண்டும். அதுமட்டுமல்ல, ஒவ்வொரு மனிதரும் நாள்தோறும் அதிகபட்சமாக தன்னைச் சுற்றி இருக்கக் கூடிய அய்ந்து பேரிடம் தான் அதிக நேரத்தைச் செலவழிக்கிறார்கள். அந்த அய்வரையும் உங்களைப் போன்ற வெற்றி ஆர்வலராக இருக்குமாறும் பார்த்துக் கொள்ளுங்கள்.
அயல்நாடுகளில் கார்களில் ஜி.பி.எஸ். என்ற கருவியைப் பொருத்தியிருப் பார்கள். நீங்கள் எந்த இடத்திற்குச் செல்ல வேண்டுமோ, அந்த முகவரியை அதில் பதிவு செய்துவிட்டால், அக்கருவி இடது பக்கம் செல், வலது பக்கம் செல், நேராகப் போ என கட்டளையிட்டுக் கொண்டே வரும். அதுபோன்றுதான் மனமும். இலக்கைக் கொடுத்துவிட்டால் வழியை நமக்கு அது காட்டும்.
சரி, இதனை எப்படிச் செயல்படுத்து வது? இதோ... அதற்கு நான்கு நிலை களை நான் சொல்கிறேன்.
முதல் நிலை:
உங்கள் இலக்கை வரையறை செய்யுங்கள் (Set Your Goal)
நீங்கள் எங்கே செல்லவேண்டும் என்ற இலக்கினை நிர்ணயித்துக் கொள் ளுங்கள். அது ஒரு இலக்காகத்தான் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. வெவ்வேறு வகையான தன்மை கொண்ட பல இலக்குகளாகக்கூட இருக்கலாம். இலக்கை நீங்கள் எப்போது அடைய விரும்புகிறீர்களோ, அதை தேதி மற்றும் நேரத்தோடு குறித்துக் கொள்ளுங்கள்.
இரண்டாவது நிலை:
இலக்கை சிறுசிறு கூறுகளாகப் பிரியுங்கள் (Break Your Goals)
அந்த இலக்குகளை அடைய ஒவ் வொரு ஆண்டும் நீங்கள் செய்யவேண் டிய பணிகளைத் திட்டமிடுங்கள்; பெரிய இலக்கை சிறுசிறு இலக்கு களாக மாற்றிக் கொள்ளவேண்டியது அவசியம். ஒவ்வொரு நாளும் அந்த இலக்கை அடைய ஏதாவது அய்ந்து செயல்களைச் செய்யுங்கள்.
மூன்றாவது நிலை:
உறுதிப்படுதல்
(Affirmations)
உங்கள் இலக்குகளை எல்லாம் உறுதியான சொல் தொடர்களாக எழுதி நாள்தோறும் அதைப் படியுங்கள்.
நான்காவது நிலை:
மனக் கண்களில் வெற்றியைக் காணுதல் (Visualization)
அந்த இலக்கு எட்டப்பட்டவுடன், நீங்கள் எவ்வளவு உற்சாகமாக இருப்பீர்கள் என்ற காட்சியை உங்கள் மனதிற்குள் கட்டாயப்படுத்தி, அதை நாள்தோறும் ஓட விட்டுப் பாருங்கள்.
இப்படிச் செய்தால் உங்களாலும் நிச்சயம் வெற்றி பெற முடியும்.
ஆம், நீங்கள் எதை விரும்பினாலும், அதை அடையக்கூடிய சக்தி மனதிற் குள் இருக்கிறது. எனவே, நிச்சயம் உங்களால் வெற்றி பெற முடியும்.
வாழ்க்கையில் சாதாரண மனித னாக வாழ்வதற்கும், சாதனை மனித னாக வாழ்வதற்கும் ஒரே அளவு நேரத் தையும், ஆற்றலையும்தான் செல வழிக்கப் போகிறீர்கள்.
அதற்கு ஏன் சாதாரண மனித னாக நாம் வாழவேண்டும்? சாதனை மனிதனாக வாழலாமே? என்றார் எழுத்தாளர் ஜேக் கேன்ஃபீல்ட்!
நண்பர்களே, இதனை செயல்படுத் தத் தொடங்குங்கள் - வெறும்படித்ததோடு கீழே போட்டுவிடாதீர்கள்!
இன்பமுடன் வாழ 26 - கட்டளைகள்
1) காலையில் வழக்காக எழுவதற்கு 15 - நிமிடங்களுக்கு முன்னதாகவே எழுந்து விடுங்கள். வெளியே செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்ன தாகவே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்
2) நாட்குறிப்பேட்டில் அன்றைய நாள் செய்ய வேண்டிய பணிகளையும் எப்போது செய்யப் போகிறோம், என்பதையும் குறித்து வைத்து விடுங்கள்.
3) அன்றாடப் பணிகளைத் தள்ளி வைப்பது, மன அழுத்தத்தை அதிகரிக்கும், செய்யும் பணிகளை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள். எதிலும் முன்னதாகவே திட்டமிடுங்கள், எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்த பின் செய்வதைத் தவிர்த்துவிடுங்கள்.
4) செல்ல வேண்டிய இடத்திற்கு சற்று முன்கூட்டியே செல்ல வழக்கப்படுங்கள். பத்து நிமிடத்திற்குள் செல்ல முடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.
5) சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள்.
6) மன இறுக்கத்தை தளருங்கள், சில வேலைகள் தடைபடுவதாலோ, உலகம் முடிந்துவிடப் போவதில்லை என்பதை உண ருங்கள்.
7) தவறாப்போன ஒரு விடயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதைவிட சரியாய் நிகழ்ந்த பலவற்றைக்குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.
8) நாம் செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டுத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
9) சில நேரங்களில் கைப்பேசியையும், தொலைப்பேசியையும், அணைத்து வைத்துவிட்டு (ஸ்விட்ச் ஆப்) ஓய்வு எடுங்கள். எந்த தொந்தரவும் இன்றி இருக்கலாம்.
10) நாம் செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமின்மையால் நாம் செய்ய முடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் மன்னிக் கவும்..... என்னால் செய்ய இயலாது என்று சொல்லப் பழகுங்கள்.
11) உணவு, உடை, உறைவிடம், தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்கு கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.
12) எளிமையாக வாழுங்கள்.
13) உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.
14) நன்றாகத் தூங்குங்கள், முடிந்தால் அலாரம் வைத்துத் தூங்குங்கள், தடையற்ற தூக்கத்திற்கு அது உதவும். வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள், அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருட்களால் தேவையற்ற மன அழுத்தம் தரும்.
15) ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிட வேண்டும்.
16) பிரச்சனைகளை எழுதப் பழகுங்கள், கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை, குறைக்க எழுத்து வடிகாலாகும்.
17) குழப்பம், கவலைகளை மனதிற்குள் போட்டு குழம்பாமல் உங்களின் நம்பிக்கைக் குரியவர் களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
18) தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் ஏதேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.
19) பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள், செய்யும் அனைத்துச் செயல்களையும், மனமார்ந்த அன்போடு செய்யுங்கள்.
20) என்னை யாரும் புரிந்து கொள்ள வில்லையே! எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.
21) உங்கள் உடை, நடை, பாவணைகளில் தன்னம்பிக்கை மிளிரட்டும். ஆடைகளை நன்றாக அணிவதன் மூலமாக தன்னம்பிக்கை மிளிரட்டும். ஆடைகளை நன்றாக அணிவதன் மூலமாக தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிருபிக்கப்பட்ட உண்மையாகும்.
22) அதிகமாக வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள், ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.
23) வாரத்தின் இறுதி நாள், விடுமுறை நாட்களை மிகச்சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதை புத்துணர்ச்சியாக்குங்கள்.
24) இன்றைய பணிகளை செவ்வனே செய்வதால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதிற் கொள்ளுங்கள்
25) பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்துவிடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.
26) மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் மற்றவர்களின் மனதை காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.
கோவைக்கு வாருங்கள் உரக்கப் பேசுவோம்!
நாளை மறுநாள் 13.4.2013 சனியன்று கோவை - சுந்தராபுரத்தில் புரட்சிப் பெண்கள் மாநாடு நடைபெற உள்ளது. இது ஒரு மாநில மாநாடு எனும் அளவுக்குப் பெருமையும், தகுதியும் உடையதாக இருக்கப் போகிறது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளன.
மாநாட்டுக்குத் தீர்மானங்கள் வரவேற்கப்பட்டன. இந்தக் கால கட்டத்திற்குத் தேவையானதும், எதிர்காலத்தில் சந்திக்கப்பட வேண்டியதும் சிந்திக்கப்பட வேண்டியதுமான தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற வாய்ப்பு இருக்கிறது.
இந்தியாவின் தலைநகரில் மருத்துவக் கல்லூரியில் படித்த மாணவி ஒருவருக்கு நிகழ்ந்த கொடூரம் உலகையே உலுக்கி எடுத்து பெண்கள் பாதுகாப்புப் பற்றி உரக்கச் சிந்திக்க வைத்தது.
பெண்களுக்குத் துப்பாக்கிக் கொடுக்கப்பட வேண்டும் என்கிற அளவுக்குக்கூட கருத்துகள் உலா வந்தன.
இதுபோன்ற ஒரு கால கட்டத்தில் திராவிடர் கழகம் நடத்தும் கோவை மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் அய்யமில்லை.
என்னதான் கல்வி வாய்ப்புகள் பெண்களுக்குப் பெருகி இருந்தாலும் பெண்கள் தங்களைக் காத்துக் கொள்வது, தேவைப்பட்டால் எதிர்தாக்குதல் கொடுப்பதெல்லாம் தேவைப்படுகிறது.
அதற்காகப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டிய இடம் கல்விக் கூடங்கள்தாம்! உடற்பயிற்சி, கராத்தே போன்ற சிறப்புப் பயிற்சிகள் கண்டிப்பாக அளிக்கப்பட வேண்டும். உள ரீதியாக தன்னம்பிக்கை, துணிவு - இவை எல்லாம் அவசியம் தேவை. அதற்கான கல்வித் திட்டம் நம் நாட்டில் இல்லை என்பதை மரியாதையாக ஒப்புக் கொண்டே தீர வேண்டும்.
1929ஆம் ஆண்டிலேயே பெண்களை இராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேறச் செய்தவர் தந்தை பெரியார்.
பெண்களுக்குக் கும்மி, கோலாட்டம் கற்றுக் கொடுப்பதும், கோலம் போடச் சொல்லிக் கொடுப்பதும் தேவையில்லை. மாறாக கைக்குத்து, குஸ்தி போன்றவை சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும் என்று அந்தக் காலத்திலேயே கோடிட்டுக் காட்டியுள்ளார் - பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.
1987இல் கோவையில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட தென் மாநில ஒடுக்கப்பட்டோர் சமூக நீதி மாநாட்டில் பெண்கள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் மிக முக்கியமாக பெண்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு பெண் களுக்குத் தேவை என்று வலியுறுத்தப்பட்டது.
ஆசிரியர் பணிகளில் ஓரளவு இந்த வாய்ப்பு இருந்தாலும் பொதுவாக பெண்களுக்கென்று தனி இடஒதுக்கீடு அளிக்கப்படுவதில்லை.
நாடாளுமன்றம், மற்றும் சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு என்ற மசோதா 1996 முதல் நிலுவையில் இருக்கிறது. கட்சிகளைக் கடந்து ஆண்கள் இதற்கு எதிர்ப்பாகவே இருக்கிறார்கள். இதுதான் இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதில் தாமதம் ஏற்படுவதற்குக் காரணம் ஆகும். பெண்கள் மத்தியில் போதிய விழிப்புணர்ச்சி இல்லாமையும் முக்கிய காரணமாகும்.
இதுகுறித்து கோவை மாநாட்டில் முக்கியமாகக் கருத்துகள் உருவாகும் என்று எதிர்ப்பார்க்கலாம். இந்த மாநாட்டின் தனிச் சிறப்பு என்னவென்றால், காலை கருத்தரங்கமாக இருந்தாலும் சரி பிற்பகல் நடக்கும் பட்டிமன்றமாக இருந்தாலும் சரி, மாலையில் நடக்கவிருக்கும் திறந்த வெளி மாநாடாக இருந்தாலும் சரி அனைத்து நிகழ்விலும் பெண்களே கலந்து கொள்வார்கள். கழகத் தலைவர் என்கிற முறையில் மானமிகு கி. வீரமணி அவர்களுக்கு மட்டுமே விதி விலக்கு.
இந்திய அளவில்கூட இப்படி ஒரு மாநாடு இந்த வகையில் நடப்பது கோவை மாநாடே! இதற்கு முன்பு கடந்த ஆண்டு மே மாதத்திலும் வேலூரில் நடத்தப் பட்டது.
ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு என்பது திராவிடர் கழகத்தின் இரு கண்கள் போன்றவை யாகும்.
இந்த இரு நிலைகளிலும் வெற்றி பெற்றால்தான் சமுதாயத்தில் சமத்துவம் ஏற்பட முடியும். ஏற்றத் தாழ்வுகள் பிளவுகள் காரணமாக ஏற்படும் பிரச்சினைகளும் கட்டுப்படுத்தப்படும்.
சமூக நிலையிலே இருக்கக் கூடிய இத்தகைய ஏற்றத் தாழ்வைப் போக்காத நிலையில், வேறு எந்த சீர்திருத்தம், மாற்றம் வந்தாலும் அது நிலைக்காது என்பது கல்லின்மேல் செதுக்கப்பட்ட எழுத்தாகும்.
உரக்கப் பேசுவோம் - வாருங்கள் - கோவைக்கு!
பார்ப்பனரும் அல்லாதாரும்
ஆண்களும் பெண்களும் கோயில் களுக்குச் சென்று தலை மொட்டை அடித்துக் கொள்வதும், காவடிக் கட்டையைத் தூக்கிக் கொண்டு தெருவில் குதிப்பதும் புண்ணியக் காரியம் என்கிறார்கள். எந்தப் பார்ப் பனராவது பார்ப்பனப் பெண்ணாவது மொட்டை அடித்துக் கொள்ளவோ, தெருவில் குதிக்கவோ வருகிறார்களா?
(விடுதலை, 29.8.1950)
சிறீரங்கம் - திராவிடர் எழுச்சி மாநாடு
சிறீரங்கத்தில் திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 4.4.2013 அன்று மாலை வெகு எழுச்சியோடு நடைபெற்றது. மாநாட்டுக்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார்.
மாவட்டக் கழகத் தலைவர் வரவேற்புரை
மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மு.சேகர் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்டக் கழகச் செயலாளர் ச.கணேசன் நன்றி கூறினார். மாநாட்டுத் தீர்மானங்களை கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.செயக்குமார் முன்மொழிந்தார்.
முனைவர் துரை.சந்திரசேகரன்
பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் அவர்கள் தமதுரையில் இதே சிறீரங்கத் தில் பார்ப்பனர்கள் மாநாடு நடத்தியுள்ளனர். அதில் கிராமக் கோயில் பூஜாரிகள் மாநாடும் ஒரு நாள் நடைபெற்றது.
இதன் நோக்கமென்ன? கிராமக் கோயில் பூஜாரிகள் என்பவர்கள் பார்ப்பனர் அல்லாதார் தான். அவர்கள் நகரப் பகுதியில் உள்ள பெரிய பெரிய கோயில்களில் அர்ச்சகர்களாக ஆகக் கூடாதா?
அந்த எண்ணம் - அந்த ஆசை அவர்களுக்கு எப்படியும் வந்து விடக்கூடாது என்பதுதான் இதற்குள்ளிருக்கும் சதி என்று குறிப்பிட்டார்.
செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு
மாநாட்டினைத் திறந்து வைத்து உரையாற் றினார் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் தமதுரையில் குறிப்பிட்டதாவது:
இந்து என்ற சொல் வெள்ளைக்காரன் கொடுத் தது என்று மறைந்த காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் தமது தெய்வத்தின் குரல் எனும் நூலில் (பக்கம் 266) குறிப்பிட்டுள்ளார். சிறீரங்கம் மாநாட்டில் பேசிய மாஜி சங்கராச்சாரியர் ராமன் கோயில் கட்டுவதன் அவசியம் பற்றி சிலாகித்துள்ளார்.
மக்களுக்கு இப்பொழுது முக்கிய பிரச்சினை ராமன் கோயில் கட்டுவது தானா? ராமன் கோயில்தான் சர்வரோக மருந்தா?
இதே ஊரில் பிராமணாள் என்ற பெயரில் ஒருவர் உணவு விடுதியை நடத்தி வந்தார். கழகம் களத்தில் குறித்த காரணத்தால் அந்தப் பெயர் நீக்கப்பட்டதோடு, கடையையே காலி செய்து விட்டார்.
சாஸ்திரப்படியே கேட்கிறோம் பிராமணர் ஓட்டல் நடத்தலாமா? உணவை விற்கலாமா? கூடாது என்று மனுதர்ம சாஸ்திரம் கூறியுள்ளதே!
பார்ப்பான் பிச்சை எடுத்துதான் ஜீவனம் செய்ய வேண்டும் என்று அதே மனுதர்மத்தில் எழுதப்பட்டுள்ளதே (மனுதர்மம் அத்தியாயம் 10, சுலோகம் 112).
பார்ப்பனர்கள் சங்கீதக் கச்சேரிகளை நடத்து கிறார்களே. மனுதர்மத்தில் சங்கீதம், பார்ப்பனர் களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதே (மனுதர்மம் 4, சுலோகம் 15).
மற்றவர்களுக்கு சாஸ்திரத்தை உபதேசிக்கும் பார்ப்பனர்கள் முதலில் தாங்கள் அவற்றைப் பின்பற்றட்டும் என்று குறிப்பிட்டார்.
துணைத் தலைவர் கலி.பூங்குன்றன்
சிறீரங்கத்தில் விசுவ ஹிந்து பரிஷத்துக்காரர்கள் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய காஞ்சி சங்கராச்சாரியார் இந்துக்கள் ஒற்றுமை யாக இருந்தால் விரைவில் ராமன் கோயிலைக் கட்டலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
450 ஆண்டுகால வரலாறு படைத்த முசுலீம் களின் வழிபாட்டுத் தலத்தை சங்பரிவார் பிஜேபி கும்பல் ஒரு பட்டப்பகலில் இடித்தது.
அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அசோக் சிங்கால், வினய் கட்டியார் போன்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டுள்ள நிலையில் ஜெயிலுக்கும், பெயிலுக்குமாக அலைந்து கொண் டிருக்கக்கூடிய சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயில் கட்ட வேண்டும் என்று பேசலாமா?
அது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா? சட்டத் தின் முன் அனைவரும் சமம் என்றால் அவர்மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அதுமட்டுமல்ல, பாபர் மசூதி என்பது வெறும் கட்டடம்தான் - அதை இடித்தது குற்றமல்ல என்றும் பேசியதும் இதே சங்கராச்சாரியர்தான் இதன்மீதுகூட சட்டப்படி வழக்குத் தொடுக் கலாம் ஏன் செய்யவில்லை?
நாளைக்கு யாரோ ஒருவர் ஆத்திரப்பட்டு காஞ்சி மடத்தையோ ரங்கநாதர் கோயிலையோ இடித்தால் அது வெறும் கட்டடம்தான் - இடித்ததது குற்றமில்லை என்று சொன்னால் சங்கராச்சாரியார் ஏற்றுக் கொள்வாரா? இடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. சங்கராச்சாரியார் கூறியிருப்பதால் அதற்குப் பதிலாக இதனைக் கூறுகிறோம். வன்முறையை தூண்டுவது கழகத்துக்கு உடன்பாடல்ல என்றும் குறிப்பிட்டார்.
அண்டப்புளுகு என்பது இதுதானோ!
2012 மார்ச்சில் ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் இலங்கை அரசுக்கு எதிராக நிறைவேற்றப் பட்டது. போர்ப் படிப்பினை மற்றும் மறு சீரமைப்புக் கான குழு (L.L.R.C) என்னும் பெயரில் இலங்கை ராஜபக்சே அரசால் அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கையில் கண்டுள்ளவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டது.
அந்தக் குழுவில் இடம் பெற்றவர்கள் எல்லாம் போர்க் குற்றங்களைச் செய்த இலங்கை அரசின் அதிகார வர்க்கம்தான்.
2012 மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் கண்டிருந்தபடி எல்.எல்.ஆர்.சி. மீது இலங்கை அரசு எந்தவிதமான உருப்படியான நடவடிக்கையையும் எடுக்காத நிலையில், மீண்டும் கடந்த 21.3.2013 ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் மீண்டும் அதே பல்லவிதான்.
மனித உரிமை ஆணையத்தின் ஆணையர் திருமதி நவநீதம்பிள்ளை 18 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றினைத் தாக்கல் செய்தார்.
இலங்கையில் நடைபெற்றுள்ள போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திர பன்னாட்டுக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அமெரிக்காவின் தீர்மானத்தில் இது மிக விழிப்பாக நீக்கப்பட்டு மறுபடியும் இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
திருடன் கையில் சாவி கொடுத்த கதை என்று அப்பொழுதே விமர்சனம் எழுந்தது.
நேற்று வந்த ஒரு தகவல் அது உண்மைதான் என்பதை அப்பட்டமாக வெட்ட வெளிச்சமாகி விட்டது. எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளை இராணுவ நீதிமன்றத்திடம் ஒப்படைத்து விட்டது. அதன்மேல் இலங்கையின் இராணுவ நீதிமன்றம் விசாரணை நடத்தியதாம். அந்த விசாரணையின் முடிவில் அது தெரிவித்திருக்கும் விடையங்கள் எதிர்பார்க்கப்பட்டவைதான் என்றாலும், அய்.நா.வும் அமெரிக்காவும், உலக நாடுகளும் மனித உரிமை ஆணையமும் இவ்வளவு ஏமாளிகளாக இருக்கின்றனவே என்ற எண்ணத்தைத்தான் ஏற்படுத்துகிறது.
சிங்கள இராணுவ வீரர்கள் மிகவும் கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நடந்து கொண்டுள்ளனர். பாதுகாப்பு வளையப் பகுதிகளில் எந்த ஒரு அப்பாவித் தமிழரும் இராணுவத்தால் கொல்லப்படவில்லை. அதே நேரத்தில் விடுதலைப்புலிகள்தான் சர்வதேச நெறிமுறைகள் அனைத்தையும் மீறியுள்ளனர் என்று இராணுவ நீதிமன்றம் தீர்ப்பாகவே கூறிவிட்டது.
பல்லாயிரம் தமிழர்களைப் படுகொலை செய்தது இலங்கை இராணுவம் அல்லாமல் வேறு எந்த நாட்டுப் படை கொன்று குவித்ததாம்?
பிரிட்டனின் சேனல் 4 ஒளிபரப்பிய காட்சிகள் எல்லாம் பொய் - சிங்கள ஓநாய்கள் - ஆட்டுக்குட்டிகளை எங்கள் மார்போடு அணைத்து பத்திரமாகப் பாதுகாத்து வைத்துள்ளோம் என்று சொன்னால் நம்பித் தொலைக்க வேண்டியதுதானே!
தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பன ஊடகங்கள் சொல்லுவதைத்தான் இலங்கை இராணுவ நீதிமன்றமும் சொல்லியுள்ளது.
இதற்குப்பின் அடுத்த கட்டம் என்ன? அய்.நா.வும், மனித உரிமை ஆணையமும் அமெரிக்காவும் என்ன செய்யப் போகின்றன?
நமக்கு ஒரு சந்தேகம்; அய்.நா.வின் பொதுச் செயலாளர் பான்கீ மூன் இந்தோனேசியா நீதிபதி தருஸ்மான் தலைமையில் நியமித்த மூவர் குழு விசாரணை நடத்தி அறிக்கை கொடுத்ததே - அதன்மீது என்ன நடவடிக்கை என்பதுபற்றி மூச்சுப் பேச்சே இல்லையே - அவை வெறும் காகிதக் கட்டுகள் தானா?
அய்.நா. அமைத்த குழுவின் அறிக்கை நம்பகத் தன்மை உடையதா? கொலைகாரனே நீதிபதியாகி தீர்ப்பு சொன்ன இலங்கை இராணுவ நீதிமன்றத்தின் முடிவு நம்பகத்தன்மை உடையதா?
இதுபற்றி முடிவு செய்யும் தன்மையில்தான் உலகின் யோக்கியதாம்சமே அடங்கியுள்ளது.12-4-2013
உயிர் நாடி
மதங்களுக்கு உயிர் நாடியாய் இருப்பது பிரச்சாரமும், பண முமேயல்லாமல் அவற்றின் கடவுள் தன்மையோ, உயர்ந்த குணங்களோ அல்லவே அல்ல.
(விடுதலை, 1.4.1950)
பார்ப்பனப் பெண் மொட்டை அடிப்பதுண்டா?
ஆண்களும், பெண்களும் கோவில்களுக்கு சென்று தலை மொட்டை அடித்துக் கொள்வதும், காவடி கட்டையைத் தூக்கிக் கொண்டு தெருவில் குதிப்பதும் புண்ணிய காரியம் என்கிறார்கள். எந்த பார்ப்பனராவது, பார்ப்பனப் பெண்ணாவது மொட்டை அடித்துக் கொள்ளவோ தெருவில் குதிக்கவோ வருகிறார்களா?
யாரால் அனுப்பப்பட்டார்கள்?
ஆழ்வார்கள், அவதார புரு ஷர்கள், நாயன்மார்கள், நபிகள், தேவகுமாரர்கள் என்பவர்கள் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்றால், அயோக்கியர்கள், பொய் யர்கள், திருடர்கள், கொலைகாரர் கள், நம்பிக்கைத் துரோகம் செய் கிறவர்கள், வன்னெஞ்சர்கள், சோம்பேறிகள், ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பவர்கள், மூடர்கள் என்பவர்கள் யாரால் அனுப்பப் பட்டவர்கள்?
(குடிஅரசு, 27.8.1949
நாத்திகம் பற்றி வினோபா
நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவனல்ல. எல்லாக் கட்சியினரும் எனக்கு வேண்டும். நாஸ்திகன் தான் மக்களுக்கு உண்மையான சேவை செய்பவன், ஆத்திகனால் சேவை செய்ய முடியாது. உதாரணமாக ஒருவர் பீடி குடிக்கிறான் என்றால், அவனுக்கு பீடி கொடுத்துக் கொண்டிருப்பது சேவை செய்வதாகாது.
அவனுடைய மனதை மாற்றி, பீடி குடிப்பதை நிறுத்துவதுதான் உண்மையான சேவையாகும். எந்த அரசாங்கமும் நாத்திகத் தன்மையில் இருந்தால் தான் மக்களுடைய தேவைகளை அனுசரித்து சேவை செய்ய முடியும்.
(22.8.1956 காலை 10 மணிக்கு பவானி கூடுதுறையில் உள்ள திருமுறை கழகக் கட்டடத்தில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் ஆச்சாரியார் வினோபா உரையாற்றுகையில் குறிப்பிட்டது
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்: பயிற்சி பெற்றோருக்கு உடனே பணி ஆணை வழங்குக! குடந்தையில் தமிழர் தலைவர்
குடந்தை, ஏப்.12- அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களுக்கு இன்னும் இரண்டு மாதத்தில் பணி வழங்கவேண்டும் என்றும், இல்லையென்றால், கட்சி வேறுபாடு, ஜாதி வேறு பாடின்றி பொதுமக்களைத் திரட்டி திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் போராட்டம் நடை பெறும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் உரையாற்றினார்.
குடந்தையில் 10.4.2013 அன்று மாலையில், மகாமகாக் குளம் மேல்கரையில், குடந்தை பெரு நகரம் மற்றும் ஒன்றிய திராவிடர் கழகம், குடந்தை கழக மாவட்டம் ஆகியவற்றின் சார்பில், திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தமிழர் தலைவரின் எழுச்சி உரை
இக்கூட்டத்தில், தமிழினம் சந்திக்கும் சவால்கள் எனும் தலைப்பில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் எழுச்சியுரையாற்றினார்.
தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தன் உரையில், பார்ப்பன ஜாதி ஆதிக்கம், ஆணவம் என்பதனு டைய விளைவாக, இன்னமும் கோயில்களுக் குள்ளே, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாது என்று ஏன் எதிர்க்கவேண்டும்.
கேரளாவில் பெரிய பெரிய கோவில் இருக்கின்றது. அங்கே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் இருக்கிறதே, அதனை எதிர்த்து யாரும் நீதிமன்றத்திற்குச் செல்லவில்லையே?
ஆனால், இங்கே அச்சட்டத்தினை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிறார்களே!
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண் டும் என்று தி.மு.க. நிறைவேற்றிய அந்தச் சட்டம் மீண்டும் எழுந்து நடமாடக் கூடிய அளவிற்குச் செயல்படுத்தவேண்டும். அது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள், பார்ப்பனர்கள் உள்பட அனைத்து ஜாதியினரும் அவரவர்கள் பங்கிற்கேற்பத் தயாராக இருக் கிறார்கள். அதனை செயல்படுத்தவேண்டும்.
தமிழக அரசு, சுமுகத் தீர்வு என்கிறது ஏதோ புதிர் நாவல் மாதிரி சஸ்பென்ஸ் இருக்கக்கூடாது. சுமுகத் தீர்வு வந்தால் நல்லதுதான். இந்தச் சட்டத்தைப் நாங்கள் ஏற்கிறோம் என்று பார்ப்பனர்கள் சொல்லவேண்டிய கட்டத்தை இந்த ஆட்சி உரு வாக்கினால், நாங்கள் பாராட்டிச் சொல்வோம். நல்லது செய்யும்போது பாராட்டுவோம்; தவறு செய்யும்போது கண்டிக்கிறோம்.
நாங்கள் ஒன்றும் கண்களை மூடிக்கொண்டு இல்லையே!
எந்தவொரு ஆட்சியாக இருந்தாலும், மனித நேயத்திற்கு எதிராகப் போனால், அதனைக் கண் டிக்கவேண்டியது மனிதநேயர்களுடைய கடமை. அந்த அடிப்படையில்தான், தமிழக அரசுக்கு, அ.தி.மு.க. அரசுக்கு - ஏற்கெனவே அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, எங்களிடத்தில் மட்டுமல்ல, சட்டமன்றத்திலே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். 60 சதவிகித இட ஒதுக்கீடு, அதன்படி பயிற்சி நடைபெறும் என்று. அதற்குப் பிறகு வந்த தி.மு.க. ஆட்சி அந்தச் சட்டத்தை நிறைவேற்றி, 69 சதவிகித அடிப்படையில் அதை நடைமுறைப்படுத்தி, பயிற்சி கொடுத்திருக்கிறார் கள். அதை இப்பொழுதுள்ள ஆட்சி நடைமுறைப் படுத்தவேண்டும் அல்லவா!
பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் இப்பொழுது பணி யின்மையால் பட்டினியாக இருக்கிறார்கள். ஆகவே, அவர்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும். இதில் என்ன நட்டம் வந்துவிடும்.
இன்னும் இரண்டு மாதங்களுக்குள்ளாக, தெளிவாக தமிழக அரசு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்ற சட்டத்தை, சுமூகத் தீர்வு என்ற பெயராலே என்ன செய்தாலும், நடத்தி வெற்றி காணவேண்டும்; அமுல்படுத்தவேண்டும்.
இல்லையென்றால், கட்சி வேறுபாடு இல்லாமல், ஜாதி வேறுபாடு இல்லாமல் அனைவரையும் திரட்டி மாபெரும் போராட்டத்தை திராவிடர் கழகம் அறிவிக்கும். ஜூன் மாதம் முதற்கொண்டு அப்பணிகளைச் செய்யும் என்பதை இக்கூட்டத்தின் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
Post a Comment