Search This Blog

4.4.13

ஜாதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு கேட்பதால் ஜாதி உணர்வு வளருமா?

நாட்டில் நடப்பது ஆரியர் - திராவிடர் போராட்டமே என்பார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.

பெரியார் இயக்கம் தொடங்கப்பட்டு, நாலா திசைகளிலும் ஆரிய எதிர்ப்புப் புயல் சுழன்றடிக்க ஆரம்பித்தும் பார்ப்பனர்கள் வெளிப்படையாகப் பூணூலை உருவிக் கொண்டு எதிர் வியூகம் வகுக்கவில்லை என்றாலும் அவர்களுக்கே உரித்தான சன்னமான - விஷமமான - தந்திரமான வழிமுறைகளைக் கையாண்டு கொண்டு தான் வருகிறார்கள்.

திராவிடர் இயக்கம் நாட்டிலே முதன்முறையாக இடஒதுக்கீட்டுத் திட்டத்தை சட்டரீதியாகக் கொண்டு வந்தநேரத்தில், தொடக்கத்தில் ஜாதி ஒழிப்பு வீரர்களாக தங்களைக் காட்டிக் கொண்டனர்.

ஜாதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு கேட்பதால் ஜாதி உணர்வு வளரும் என்று கூறினர் ஜாதி ஒழிப்பு வீராதி வீரர்கள் போல; ஆண்டு தோறும் பூணூலைப் புதுப்பிக்கவே ஆவணி அவிட்டம் என்று ஒரு நாளையே தேர்ந்தெடுத்து வைத்துள்ளனர் என்பதைக் கவனிக்க வேண்டும். அது எடுபடவில்லை என்றவுடன், இடஒதுக்கீடு காரணமாக தகுதி - திறமை கெட்டுப்போய் விடும் என்று தங்கள் கைகளில் வசமாகச் சிக்கிக் கொண்டுள்ள ஊடகங்களின் பலத்தால் பிரச்சாரம் செய்து பார்த்தனர். அதுவும் எடுபடவில்லை என்றவுடன் - இப்பொழுது அவர்கள் நிலைப்பாடு என்ன தெரியுமா?

எங்களுக்கும் 20 சதவிகிதம் தேவை! என்று மாநாடு கூட்டித் தீர்மானம் போட ஆரம்பித் துள்ளனர்.

மூன்று சதவிகிதமாக உள்ள பார்ப்பனர்கள் 20 சதவிகிதம் கேட்பது நியாயமற்றது,

பேராசை கொண்டது என்றாலும் கூட, இடஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள், இடஒதுக்கீடு தங்களுக்கும் தேவை என்று தீர்மானம் போடும் அளவுக்கு திராவிடர் இயக்கம், தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள் பெரும் வெற்றி பெற்றுள்ளன என்பதுதான் இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்னொரு பக்கம் கொல்லைப்புற வழியாக இடஒதுக்கீடு நோக்கத்தின் வேரை வெட்டும் வேலையில் இயங்கி வருகின்றனர்.

இந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமும் சரி, தமிழ்நாடு அரசின் பணியாளர் தேர்வாணையமும் சரி, திறந்த போட்டியில் உயர் ஜாதிப் பார்ப்பனர்களே இடம் பிடிக்கும் வகையில் சட்ட விரோதமாக தந்திரமாக சூழ்ச்சி வலைகளைப் பின்னி வருகின்றன.

திராவிடர் கழகமும் அதன் தன்னிகரற்ற தலைவர் அவர்களும் இல்லையெனில், இட ஒதுக்கீடு என்பது பெயரளவில் தான் இருக்கும்; பார்ப்பனர்களின் சூழ்ச்சி வலையில் சுக்கல் ஆயிரமாகச் சிதறிப் போயிருக்கும்.
இடஒதுக்கீட்டால் பயன்பெற்ற பார்ப்பனர் அல்லாதவர்களிடத்தில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்களிடத்தில் நாம் கடந்து வந்த பாதையின் வரலாறு தெரிந்து கொள்ளாமல் ஏதோ தங்கள் திறமையில், தகுதியில் இந்த இடத்திற்கு வந்துள்ளோம் என்ற நினைப்பும், மிதப்பும், பொறுப்பற்றத் தன்மையும் இன எதிரிகள் எனும் வயலுக்கு உரமாகிவிடுகிறது.
எனவே நமது இளைஞர்கள், மாணவர்கள் மத்தியிலும் சமூக நீதி குறித்தும், இடஒதுக்கீட்டால் பெற்று இருக்கும் பலன்கள் குறித்தும் விரிவாக விளக்கமாக எடுத்துக்கூறும் பொறுப்பு நிச்சயமாக திராவிடர் இயக்கங்களுக்கு உண்டு, திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை அதனைத் தொடர்ந்து செய்து கொண்டுதானிருக்கிறது.

அரசியல் கட்சியாக இருந்தாலும் திமுகவும் பாசறை வகுப்புகளை நடத்தி வருவது வரவேற்கத் தகுந்ததாகும்.

தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கத்தால் விதைக்கப்பட்ட சமூகநீதி விதைதான் இன்றைக்கு இந்தியா எங்கும் தழைக்க ஆரம்பித்துள்ளது என்பதும் முக்கிய வரலாற்று உண்மையாகும். எனினும் சமூகநீதியாளர்கள் விழிப்பாக இருந்தே தீர வேண்டும்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!


                 ----------------------------"விடுதலை” தலையங்கம் 04-04-2013

21 comments:

தமிழ் ஓவியா said...


எங்கு சென்றாலும் மோடிக்கு மொத்து!

வெளிநாடுகளுக்குத் தான் நரேந்திர மோடி வரக்கூடாது என்று எதிர்ப்பு இருக்கிறது என்றால், உள்நாட்டி லும் அவரைக் கண் டால் வெறுப்பும், எதிர்ப் பும் கைகோத்து நிற்கின்றன.

டில்லியில் பல்கலைக் கழகத்தில் பேசச் சென்ற போதும் எதிர்ப்பு இப்பொழுது.

வரும் 9 ஆம் தேதி கொல்கத்தாவில் நடை பெறவிருக்கும் தொழிலதிபர்கள் கூட்டத்தில் மோடி பேசவிருப்பதாக விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது. அந்தத் தேதியில் கூட்டம் நடக்கும் அரங்கு காலி யாக இருந்தும், மம்தா அரசு அனுமதி மறுத்துவிட்டது.

தமிழ் ஓவியா said...


அடுத்த பிரதமர் என்று தூக்கி நிறுத்தப்படும் மோடியின் முகத்திரை கிழிந்தது


குஜராத்தில் லஞ்சம் ஊழலால் 17 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு மோடி அரசுமீது சி.ஏ.ஜி., குற்றச்சாட்டு

காந்திநகர், ஏப்.4- பிரதமர் பதவிக்கு பா.ஜ.க.வினரால் தூக்கி நிறுத்தப்படும் மோடிமீது தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் குஜராத் தில் லஞ்சம், ஊழல் போன்ற முறைகேடுகளால், 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள் ளது. கடந்த, 2009- 2010 மற்றும் 2010-2011ஆம் ஆண்டிற்கான, தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கை, மாநில சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், அந்த காலகட்டத்தில் நிகழ்ந்த லஞ்சம், ஊழல் முறைகேடுகளால், மாநில அரசிற்கு, 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற் பட்டு உள்ளதாக கூறப்பட்டுள் ளது. மேலும், முறைகேடுகளை தடுக்க, மோடி அரசு தவறிவிட் டது என்றும், கணக்கு தணிக்கை அதிகாரி, அறிக்கையில் தெரிவித் துள்ளார். கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் மோடி தலைமையிலான அரசுமீது கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:

டமாநில அரசுக்கு சொந்த மான குஜராத் மாநில பெட் ரோநெட் லிமிடெட்டுடன் ரிலை யன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த 2007-ஆம் ஆண்டு ஒரு உடன்படிக்கை செய்துகொண் டது. பருச் மாவட்டத்தில் உள்ள பத்புட் என்ற இடத்திலிருந்து எரிவாயுவை ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் சுத்திகரிப்பு ஆலைக்கு குழாய் வழியாக எடுத்துச் செல்ல இந்த உடன் படிக்கை வழி செய்தது.
ரிலையன்ஸ் நிறுவனம் எரி வாயுவை எடுத்துச் சென்றபோது, ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப் பட்ட விதிமுறைகளை மீறி ஒற்றை கட்டண வீதத்தின்படி கட்டணம் வசூலிக்கப்பட்டுள் ளது. இதனால் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.52.27 கோடி பலன் அடைந்துள்ளது. இதற்கு குஜராத் மாநில பெட்ரோநெட் லிமிடெட்தான் பொறுப்பு.

டமாநில அரசின் குஜராத் யுர்ஜா விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனம், அதானி பவர் லிமி டெட்டுடன் செய்து கொண்ட மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் விதி முறைகள் மீறப்பட்டுள்ளது. இதில் மின்சாரம் வழங்கப்படாத தால், உரிய அபராதம் விதிக்கப் படவில்லை. இதன் மூலம் அதானி பவர் லிமிடெட் ரூ.160.26 கோடி பலன் பெற்றுள்ளது. ட சூரத்தில் எஸ்ஸார் உருக்கு நிறுவனம் செய்ததாக கூறப் படுகிற ஆக்கிரமிப்புகளை மாநில அரசு முறைப்படுத்தியது சரியல்ல. 7 லட்சத்து 24 ஆயிரத்து 897 சதுர மீட்டர் நிலம் ஆக்கிரமிக்கப்பட் டுள்ளது. அந்த நிறுவனம் விடுத்த வேண்டுகோளை ஏற்று அரசு, சதுர மீட்டர் ஒன்றுக்கு தற்காலிக மதிப்பாக ரூ.700 என நிர்ணயிக் கப்பட்டது ஏற்கத்தக்கது அல்ல. இது தொடர்பாக குஜராத் அரசு விளக்கம் அளிக்கையில், அந்த நிறுவன திட்டம் உரிய காலத்தில் நிறைவேற்றப்படாததால் நாள் ஒன்றுக்கு ரூ.200 கோடி இழப்பை சந்தித்தது என கூறியதை ஏற்க முடியாது. * போர்டு இந்தியா, லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனங்களுக்கு அரசு நிலத்தை கொடுத்ததில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இதில் மாநில அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

தமிழ் ஓவியா said...


கடவுள் சக்தி இவ்வளவுதான்!


கோவிலில் நகை, பணம் கொள்ளை

மங்களூரு, ஏப்.4-பண்டுவால் அருகே கோவில் சுவரில் துளை போட்டு சிலர் நகை, பணத்தை கொள் ளையடித்து சென்றனர். இது தொடர் பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். தட்சிண கன்னட மாவட்டம் பண்டுவால் வட்டம் பிரம்மாவர் அருகே குட்லா பகுதியில் சிறீமூகாம் பிகை பஜனை மந்திரா என்ற கோவில் அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவில் பூஜாரி நடைகளை சாத்திவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை வழக்கம் போல் அவர் மீண்டும் கோவி லுக்கு சென்றார். அப்போது கோவி லின் ஜன்னலுக்கு அருகே சுவரில் துளைபோட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோவில் முழுவதும் பொருட்கள் சிதறிக் கிடந் தன. மேலும் கோவில் உள்ளே சென்று பார்த்த போது, கருவறைக்குள் இருந்த சாமிக்கு அணிவிக்கப்பட்டு இருந்த ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள வெள்ளி கவசம் மற்றும் உண்டியல் பணத்தை யும் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பண்டு வால் நகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசா ரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து பண்டுவால் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் ஓவியா said...


எப்போதும் கற்போம்! எவரிடமிருந்தும் கற்போம்!!


கற்றுக் கொள்வது என்பதற்கு இதற்குமுன் நம்மில் பலரும் ஒரு குறுகிய பொருளில்தான் புரிந்து கொண்டோம். ஆனால் பகுத்தறிவைப் பயன்படுத்தி யோசித்துப் பார்த்தால், அதற்கு விரிவான விளக்கம் உண்டு.

கற்றுத் தருவோர் எவராயினும் அவர் நமக்கு ஆசிரியர்களே; குரு தான்!

பள்ளிக்கூடம், கல்லூரி, பல்கலைக் கழகம் என்றுதான் அவர்கள் இருப் பார்கள் என்பதில்லை.

இப்போதெல்லாம் நம் வீடுகளி லேயே ஏராளமாக அவர்கள் இருக் கிறார்கள்! யார் அவர்கள்?

அவர்கள்தான் நமது பேரர்களும், கொள்ளுப் பேரர்களும், பேத்திகளும், கொள்ளுப் பேத்திகளும்!

இந்த குமர குருபரர்களுக்குத் தெரிந்த பல்வேறு தொழில் நுட்பச் செய்திகள் - டெக்னாலாஜிக்கல் (Technological) நுட்பங்கள் வயது முதிர்ந்த, குடும்பத் தலைவர் என்ற வெறும் பழம் பெருமையிலேயே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிற நம்மில் பலருக்குத் தெரியாது; நாம் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது மிகப் பெரும் அளவு ஆகும்!

கற்றல் என்பதற்கு வயது இடை வெளி கிடையாது; கூடாது; கூடவே கூடாது! கற்பித்தவர்கள் யார் என்பது பற்றியும் - அய்யோ என்னுடைய பெயர னிடம் இருந்தா மெத்தப் படித்த மோதாவி யாகிய நாம் கற்றுக் கொள்வது என்ற கர்வம் நம்மில் யாருக்கும் தேவையே யில்லை!

யார் யார் வாய் கேட்பினும் அப் பொருள் அறிவதுதான் நம் காலத்திற் கேற்ப பெரும் அரிய தகவல் தொழில் நுட்பம் அடங்கிய கல்வி; காரணம் தற்போதுள்ள யுகத்திற்குப் பெயரே அறிவு யுகத்தின் வெடிப்புகள் - வெளிச்சங்கள்! Knowledge Explosion - “Information Age”

தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத இல்லங்களே பெரிதும் நம் நாட்டில் இல்லை எனலாம்.

அதுபோலவே கைத் தொலைபேசி - செல்போன் கையில் இல்லாத மனிதர் களும் வெகு அபூர்வம்.

வேலை செய்யும் பணிப் பெண்கள், கீரை விற்கும் கீர்த்தியம்மாள் முதல் சித்தாளு, கொத்தாளராக இருக்கிற தாய்மார்கள் உட்பட கைத் தொலை பேசியையே பெரிதும் பயன்படுத்துகிறார்கள்!

இது ஒருவகையான அறிவு வளர்ச்சி. கல்வியும்கூட! அமைச்சர் ராசாவின் அரிய பணி, இந்தக் கருவி சாமான்யர் களும் பயன்படுத்தும் - சகல கலா ஆயுதமாக்கி விட்டது!

ஆனால் இதை தொழில் நுட்ப வசதிகளோடு பயன்படுத்த பெரிதும் நாம் யாரிடம் கற்றுக் கொள்கிறோம்?

நம் வீட்டுப் பேரப் பிள்ளைகளிடம் தானே!

7,8 வயது குழந்தை 70, 80, வயது தாத்தாவுக்கும், பாட்டிக்கும் குமரகுருக் களாகி, போதித்துச் சொல்லிக் கொடுக் கின்ற ஆசான்களாகி விடுகிறார்கள்!

அங்கிங்கெனாதபடி எங்கும் இதே நிலைதான்! அதற்காக நாம் வெட்கப் படுகிறோமா?

இல்லையே!

அறிவும் தகவலும் எங்கிருந்து எவரிடமிருந்து, வயது வித்தியாசம் இல் லாமல் கற்றுக் கொண்டு, கடைப் பிடிக்கிறோமா இல்லையா? எனவேதான், இந்த வாழ்க்கைக் கல்விக்கு வாத்தியார்கள் நம் இளை யர்கள் - குழந்தைகள்தானே!

எனவே கற்றலுக்கும், கற்பித்தலுக்கும் வயது இடைவெளி ஒரு பொருட்டே அல்ல.
அது மட்டுமல்ல பெரிய மேதை, படிப்பாளிகள் என்பவர்களுக்குச் சட் டென்று விளங்காத செய்திகள் - சாதாரணமான பட்டறிவு உள்ளவர் களுக்கு பளிச்சென்று விளங்கி விடு கிறதே!

புவி ஈர்ப்பு பற்றிக் (Laws of Gravitation) கண்டுபிடித்த சர். அய்சக் நியூட்டன் என்ற பெரிய விஞ்ஞானி பற்றி ஒரு கதை உண்டு. (இதைப் பல விஞ்ஞானிகளின் பேர்களிலும் மாற்றி மாற்றிச் சொல்லி வருவதும் உண்டு)

தன் ஆய்வுக் கூடத்தில் ஒரு பூனை இருந்ததற்கு - தொல்லை செய்யாமல் போக அவரது அறைக் கதவில் ஒரு ஓட்டை போடச் சொல்லி தன் பணியா ளரிடம் கூறி அவரும் அதேபோல் செய்து கொடுத்தார்.

சில காலம் கழித்து அந்த பூனை குட்டிகளைப் போட்டது. விஞ்ஞானி சொன்னார்: பூனைக்குட்டிகள் போய் வர பக்கத்திலேயே கதவுகளில் ஓட்டைகளைப் போடுங்கள் என்று, அதை செய்யுமுன் பணியாளர் சிரித் தாராம்! ஏன் சிரிக்கிறாய்? என்று கேட்டார் விஞ்ஞானி!

அதற்குப் பணியாளர், அய்யா பூனை போகும் ஓட்டை மூலமே, குட்டிகளும் போகலாமே, அதற்கென ஏன் தனியே ஓட்டை போட வேண்டும் என்று கேட்ட பிறகு அக்கேள்வியில் உள்ள பகுத் தறிவு வெளிச்சமும், இவரது சிந்தனை யில் இருந்த இருட்டும் இவருக்குப் புலப்பட்டதாம்!

அதுபோல நாம் எவரிடமிருந்தும் கற்றுக் கொள்ள எப்போதும் ஆயத்த மாக இருப்பதே அறிவு வழி! வளர்ச்சிப் பாதையாகும்!
-----------கி.வீரமணி -வாழ்வியல் சிந்தனைகள் -4-4-2013

தமிழ் ஓவியா said...


அருந்ததியருக்கு 3 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கியது தி.மு.க. ஆட்சியிலேதான்

கலைஞர் அறிக்கை


சென்னை, ஏப்.4- தி.மு.க. ஆட்சியில்தான் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 18 சதவிகிதம் இடஒதுக்கீட்டில் இருந்து 3 சதவிகிதம் அருந்ததியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது என்று தி.மு.க தலைவர் கலைஞர் கூறினார்.

இதுகுறித்து அவரது அறிக்கையில் கூறியிருப் பதாவது:-

ஆதி திராவிட மக்களுக்குள், அருந்ததியினர் சமூக மற்றும் பொருளாதார நிலையில் அடித் தளத்தில் மிகவும் பின்தங்கி இருப்பதால் அவர்தம் முன்னேற்றத் திற்கு சிறப்புச் சலுகைகள் அளிப்பது அவசியமெனக் கருதி, ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 18 சதவிகித இட ஒதுக்கீட்டில் இருந்து 3 சதவிகிதம் அருந்ததியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதற் கான முடிவு 27-11-2008 அன்று திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலேதான் எடுக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2009ஆம் ஆண்டில் தமிழ்நாடு அருந்ததியர்கள் தனியார் கல்வி நிலையங்கள் உள்ளடங்கலான கல்வி நிலையங்களில் இடங்களை மற்றும் அரசின் கீழ் வரும் பணிகளில் நியமனங்களை அல்லது பதவிகளை பட்டியல் சாதியி னருக்கான இட ஒதுக்கீட்டிற்குள்ளாக தனி ஒதுக்கீடு செய்தல்) சட்டம் இயற்றப்பட்டு, 29-4-2009இல் இது தொடர்பான விதிகளும் உருவாக்கப்பட்டு வெற்றிகர மாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

தி.மு.கழக ஆட்சியில் இவ்வாறு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதன் காரணமாக 2009-2010இல் அருந்த திய சமுதாயத்தைச் சேர்ந்த 56 மாணவ மாணவியர் மருத்துவக் கல்லூரிகளிலும், 1,165 மாணவ மாணவியர் பொறியியல் கல்லூரி களிலும் சேர்ந்து, மொத்தம் 1,221 பேர் பயன் பெற்றனர்.

2010-2011இல் இந்த எண்ணிக்கை மருத்துவக் கல்லூரிகளில் 70 என்றும், பொறியியல் கல்லூரி களில் 1,813 என்றும் மொத்தம் 1,883 என்றும் மேலும் அதிகரித்தது.

2009-2010இல் முதன் முதலாக - அருந்ததி யர்க்கு மூன்று சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப் பட்ட பின் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து பயனடைந்த அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கம் அளிப்பதற்காக; பெண் சிங்கம் என்ற திரைப்படத் திற்கு நான் கதை வசனம் எழுதி, அதற்கு ஊதியமாகக் கிடைத்த 50 லட்சம் ரூபாயையும், மேலும் என் சொந்தப் பணத்திலிருந்து 11 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயையும் சேர்த்து மொத்தம் 61 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாயை நன்கொடையாக வழங்கி, இந்த 1,221 பேருக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் கல்வி வளர்ச்சி நிதியாக 5-12-2009 அன்று வழங்கினேன்.

தமிழ் ஓவியா said...

தூய்மைப் பணிபுரிவோர் நலவாரியம்

வெள்ளையரை எதிர்த்த வீரபாண்டிய கட்ட பொம்மனின் தளபதிகளில் ஒருவராகத் திகழ்ந்த ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் இறுதியில் தன்னையே மாய்த்துக் கொண்ட வரலாறு ஒரு புறம் என்றால்; மற்றொருபுறம்; வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு முன்பே, நெல்லைச் சீமையின் நெல்கட்டும் செவல் மாவீரன் பூலித்தேவன் வெள் ளையரை எதிர்த்துப் போரிட்டார். வெள்ளையருக்கு எதிரான பல போர்களில் பூலித்தேவனுக்கு முதன்மைப் படைத் தலைவராக இருந்தவர், அருந்ததிய சமு தாயத்தைச் சேர்ந்த ஒண்டி வீரன். கட்ட பொம்மனுக் கும், பூலித் தேவனுக்கும், சுந்தரலிங்கத்துக்கும் நினைவுச் சின்னங்களை எழுப்பிய கழக அரசு, அருந்ததிய சமுதாயத்தினரான விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவைப் போற்றும் வகையில் தக்கதோர் நினைவுச் சின்னம் ஒன்றினை நெல்லைச் சீமையில் எழுப்பும் என்று கழக ஆட்சியிலேதான் நிதிநிலை அறிக்கையிலேயே 19-3-2010 அன்று அறிவிக்கப்பட்டது. அருந்ததியர்களுக்கு அவர்தம் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் நிதிஉதவி வழங்குவதற் கென தமிழ்நாடு தூய்மைப் பணிபுரிவோர் நலவாரியம், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தலைமையில் 8.6.2007 அன்று தொடங்கப்பட்டு, 22 ஆயிரத்து 811 பேர் உறுப்பினர்களாகச் சேர்க்கப் பட்டு, அவர்களுள் 1,133 உறுப்பினர் குடும்பங் களுக்கு 17 இலட்சத்து 86 ஆயிரத்து 440 ரூபாய் நிதிஉதவி வழங்கப் பட்டதும் தி.மு. கழக ஆட்சியிலே தான். மேலும், மனிதக் கழிவை அகற்றித் தூய்மைப் படுத்தும் பணிகளில் முன்னர் ஈடுபட்டிருந் தோருக்கு மாற்றுத் தொழிலில் ஈடுபட உதவுவதற் காக 22 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான மறுவாழ்வுத் திட்டம் ஒன்றும் கழக அரசால் செயல்படுத்தப்பட்டது. இப்பணியாளர்கள் கழிவுநீர்க் குழாய்களில் இறங்கிப் பணிபுரிவதைத் தவிர்க்க, மாநகராட்சிகள் அனைத்திலும் அடைப்பு களை அகற்றும் இயந்திரங்கள் வாங்கத் திட்டமிடப் பட்டு; சென்னை மாநகரைப் பொறுத்தவரை 3 கோடியே 97 லட்சம் ரூபாய்ச் செலவில், 47 தூர்வாரும் இயந்திரங்கள் கொள் முதல் செய்யப்பட்டு, தூய்மைப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன; மற்ற 9 மாநகராட்சி களுக்கும் தேவையான அடைப்பு நீக்கும் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. மாநகராட்சிகள் அனைத்திலும் சாக்கடைகளில் ஏற்படும் அடைப்பு களை நீக்குவதற்காக மனிதர்களை ஈடுபடுத்தும் அவலநிலையை அகற்றி, இயந் திரங்கள் மூலம் தூய்மை செய்யும் பணி தொடங்கப் பட்டது. சென்னை சாந்தோம் கலைவிழா மன்றம் சார்பில் 2008ஆம் ஆண்டுக்கான `வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டபொழுது நான் ஆற்றிய உரையில்,

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டில் சிறுபான்மையோருக்கு, ஏழை, எளி யோருக்கு, பிச்சைக்காரர்களுக்கு, ஊன முற்றோர்க்கு எல்லோர்க்கும் ஒருவர் பாக்கி இல்லாமல் அரசின் சார்பிலே நன்மைகள் பலவற்றைச் செய்திருந்தா லும்கூட, ஒரு பகுதி விடப்பட்டுள்ளது. ஒரு பகுதி கண்ணிருந்தும் குருடர்களாக - வாயிருந்தும் பேச முடியாதவர்களாக - வாழ முடியாதவர்களாகவே, மதிக்கப் படாதவர்களாகவே ஒரு சமுதாயம் தமிழ்நாட்டிலே இருக்கிறது. இன்னமும் இருந்து வரு கின்றது. அந்தச் சமுதாயத்தின் பெயர்தான் அருந்ததியர் சமுதாயம். அந்த அருந்ததியர் சமுதாயம் தங்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டுமெனக் கேட்டார்கள். அதற்காக நீதியரசர் ஜனார்த்தனம் குழு அமைக்கப் பட்டு, அக்குழு அரசுக்கு அறிக்கையைத் தந்தது. அந்த அறிக்கையை இன்னும் இரண்டொரு நாளில் கூடுகின்ற எங்களுடைய அமைச்சரவைக் கூட்டத்திலே ஆலோசித்து விவாதித்து அந்தச் சமுதாயத்திற்குத் தேவையான சலுகையை இந்த அரசு அளிக்கவிருக் கிறது என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால், மலம் தூக்குகின்ற மனித வர்க்கம் அது; தலையில் மலத்தைத் தூக்கிச் செல்லுகின்ற மனித வர்க்கம்; நாகரிக காலத்தில் மலத்தை அகற்ற - கழிவறைகளைச் சுத்தப்படுத்த - பல வழிமுறைகள் வந்திருந்தும்கூட இன்னமும் கிராமப் பகுதிகளில் அந்த மலத்தைத் தூக்குகின்ற மகா கொடிய நிலை இன்னும் மாறவில்லை. மனிதனை மனிதனாக ஆக்க வேண்டும். மனித மலத்தை மனிதனே தூக்குவது நமக்கெல்லாம் பெருமையாகாது. வெட்கக்கேடு. நமக்கு அதைவிட அவமானம் வேறில்லை.

தமிழ் ஓவியா said...

அவர்கள் அவமானச் சின்னங்கள் அல்ல. அவர்களை அப்படி ஆக்கி வைத்து அரசு நடத்திக் கொண்டிருக்கிறோமே நாம்தான் அவமானச் சின்னங்கள் என்ற எண்ணத் தோடு, அந்த அவமானத்தைப் போக்க எடுத்திருக்கின்ற நடவடிக்கைதான் என்னைப் பொறுத்தவரை முக்கியம். அரசுச் செயலாளர்கள் என்னிடம் பேசும்போது இப்போதே இதைச் செய்ய வேண்டுமா என்றார்கள். அப்போது நான் சொன்னேன். கீழான மக்கள் கேவலப்படுத்தப்படும் மக்கள், புழுக்களாய் நெளிந்து கொண்டிருக்கின்ற மக்கள், மனிதனைப் பார்த்து மனிதனே மதிக்காத அளவிற்கு மட்ட ரகமாக ஆக்கப்பட்ட மக்கள் - அந்த மக்களை கைதூக்கி விடுவதுதான் இந்த கருணாநிதியின் வேலை - இதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். அந்தச் சாதனையிலே, சரித்திரத்திலே, இதுவரை யில் இடம் பெறாமல் இருப்பது இந்த அருந்ததியர் மக்களுக்கு நாம் அன்பு காட்டி அவர்களைக் கைதூக்கிவிடாமல் இருப்பதுதான் - நான் என்னுடைய சரித்திரத்தில் கடைசியாகவாவது - கடைசிப் பக்கத்தில் எழுத வேண்டிய - அச்சடிக்கப்பட வேண்டிய செய்தி அருந்த தியர்களுக்கு சமூக நீதி அளித்தேன் என்ற அந்தச் செய்தி இடம்பெற வேண்டும் - என்று தெரிவித்தேன். இன்னும் கூற வேண்டுமேயானால், அருந்ததியர் இட ஒதுக் கீட்டுக்கான மசோதா பேரவையிலே நிறைவேற்றப்பட விருந்த நாளன்று இராமச்சந்திரா மருத்துவமனையிலே சிகிச்சை பெற்று வந்த நான் 26-2-2009 அன்று என் கைப்பட பேரவைத் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதி னேன். அந்தக் கடிதத்தில், மாண்புமிகு பேரவைத் தலை வர் அவர்களே, அவை முன்னவர் அருமைப் பேரா சிரியர் அவர்களே, சட்டப்பேரவை அனைத்துக் கட்சி அன்பு உடன்பிறப்புகளே,
இன்று வந்து உங்களைச் சந்திப்பதாக இருந்தும் கூட டில்லி மருத்துவரும் சென்னை மருத்துவ நண்பர்கள் குழுவும் அளித்த அறிவுரை யாலும் அச்சுறுத்தலாலும் வர இயலவில்லை. மன்னிக்க வேண்டுகிறேன். நிமிர முடியாமலும், திரும்ப முடியாமலும் நங்கூரம் போட்டது போல நரம் பிணைந்து முதுகுத் தண்டில் வலி! வலி!

ஒன்று உடல் வலி - பிறிதொன்று நீங்கள் வழங்கி யுள்ள மன வலி! கருத்து மாறுபாடுகளுக்கிடையிலே யும் நீங்கள் காட்டும் கனிவு - அரசியல் மாச்ச ரியங் களை மீறி நீங்கள் காட்டும் அன்பு - இன்று நம்மை மீண்டும் இணைக்கிறது - தமிழ்த் தாயின் கரம் நம்மை ஒரு சேர அணைக்கிறது. அறிவியக்கம் - ஆன் மிகம் - நாத்திகம் - ஆத்திகம் - இந்த வேறுபாடுகள் மாறு பாடுகள் கடந்த நன்றியுணர்வும் நன்மனித நேயமும் வளர்த்திடுவோம். ஆரம்பகால பொதுவுடைமை வாதி என்ற முறையிலும் அய்யா, அண்ணா, காமராஜர், அண் ணன் ஜீவா போன்றோரின் அருமைத் தொண்டர்களில் ஒரு வன் என்ற முறையிலும் - அடி மட்டத்துக் கெல்லாம் அடி மட்டமாகக் கிடந்து அவதியுறும் மனித ஜீவன்கள் - அருந்ததிய மக்கள், புதிய உலகம் - புரட்சியுகம் - காண்பதற்காக; இன்று அவையில் நான் முன் வைக்கும் சட்ட முன் வடிவை; உங்கள் ஆதரவு வழங்கி; நிறைவேற்றித் தர வேண்டுகிறேன்.

இங்ஙனம், உங்கள்அன்பு நதியில் - என்றும் நனைந் திடவே விரும்பி வாழும்; உடன்பிறப்பு - உங்களில் ஒருவன், அன்பு மறவாத (மு. கருணாநிதி) 26.2.2009 - என்று எழுதியிருந்தேன். அருந்ததியர் சமுதாயத் தின்பால் எனக்கு எந்த அளவிற்கு ஈடுபாடு உண்டு என்பதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு கூறவேண்டு மேயானால், என்னுடைய அணுக்கத் தொண்டராக - என்னை அன்றாடம் பராமரிப்பதிலே தன்னை முழு அளவிலே ஈடுபடுத்திக் கொண்டவராகப் பணியாற்றும் தம்பி நித்யாவே அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஏன், கழகத்தின் மூன்று துணைப் பொதுச் செயலா ளர்களிலே ஒருவரே அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான்!

இவ்வாறு அவ்வறிக்கையில் கலைஞர் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


குஜராத்: மோடி ஆட்சியின் லட்சணம் பாரீர்!


ஆயிரம் கிராமங்களில் தண்ணீர் பஞ்சமாம்!

3,000 கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறையாம்

காந்திநகர், மார்ச் 27- குஜராத்தில், 1,000 கிராமங்களில் கடும் தண்ணீர்ப் பஞ்சம் நிலவுகிறதாம். மேலும், 3,000 கிராமங்களில், போதிய அளவு தண்ணீர் கிடைக்கவில்லை என, குஜராத் அரசு தெரிவித்துள்ளது.

குஜராத் சட்டசபையில், மாநில வருவாய்த் துறை அமைச்சர், ஆனந்தி படேல் கூறியதாவது:

பருவமழை போதிய அளவு பெய்யாததால் ஏற்பட்டுள்ள பாதிப்பை அறிவதற்காக, மாநிலத் தில், 10 மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 1,000 கிராமங்களில், கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுவது தெரிய வந்துள்ளது. இங்கு, குடிப்பதற்கும், பயன்படுத்துவதற் கும், விவசாயத்துக் கும், தண்ணீர் இல்லை.

அதேபோல், மேலும், 3,000 கிரா மங்களிலும், தண் ணீர் பற்றாக்குறை உள்ளது. இங்கு, ஓரளவுக்கு தண்ணீர் கிடைத்தாலும், அவை மக்கள் பயன் பாட்டுக்கு போதுமானதாக இல்லை. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களிடம், விரிவான அறிக்கை தரும்படி, அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த அறிக்கை அரசுக்கு கிடைத்ததும். அதன் அடிப்படையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பணிகள் அறிவிக்கப்படும். - இவ்வாறு ஆனந்தி படேல் கூறினார்.

இதற்கிடையில், குஜராத் சட்டசபையில், இந்த தண்ணீர்ப் பிரச்சினை தொடர்பாக விவாதிக்க, கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டும் என, நேற்று எதிர்க்கட்சியான, காங்., உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அதை, பேரவைத் தலைவர் ஏற்க மறுத்ததை அடுத்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். உடன், அனைத்து காங்., உறுப்பினர்களும், ஒரு நாள் மட்டும், இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

தமிழ் ஓவியா said...


பரிதாபமே!


இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேஷம் காரணமல்ல; மக்கள்மீது உள்ள பரிதாபமே காரணம்.

(குடிஅரசு, 8.9.1940)

தமிழ் ஓவியா said...


சிறீரங்கம் மாநாடு

சிறீரங்கத்தில் திராவிடர் எழுச்சி மாநாடு 4.4.2013 அன்று வெகு எழுச்சியோடு நடை பெற்றது.

மார்ச்சு 2,3 ஆகிய நாட்களில் பார்ப்பனர்கள் துறவிகள் மாநாடு என்ற பெயரிலும், கிராமக் கோயில் பூசாரிகள் மாநாடு என்ற பெயரிலும் இரு நாட்கள் அங்கு நடத்தியுள்ளனர்.

துறவிகள் மாநாட்டில் காஞ்சிபுரம் சங்கராச் சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கலந்து கொண்டதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை.

அவர் எதைத் துறந்தார் என்று தெரியவில்லை. மண்ணாசை, பொன்னாசை பெண்ணாசை எதையும் துறந்தவர் இல்லை என்பது ஊர் அறிந்த ஒன்றாகும்.

இந்துக்கள் ஒன்று சேர்ந்தால் ராமன் கோயில் கட்டலாம் என்றும், இந்துக்கள் ஒன்றுபட்டால் நமக்குத் தேவைப்படும் ஓர் ஆட்சியை உண் டாக்கிக் கொள்ளலாம் என்றும் பச்சையாக தன் பாசிச உள்ளக் கிடக்கையை அவிழ்த்து வெளியே விட்டுள்ளார்.

450 ஆண்டு கால வரலாறு படைத்த சிறு பான்மை மக்களான முசுலிம்களின் வழிபாட்டுத் தலத்தை சங்பரிவார்க் கும்பல், பிஜேபி எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பட்டப் பகலில் ஆயிரக் கணக்கில் கூடி திட்டமிட்ட வகையில் அடித்து நொறுக்கி விட்டனர்.

அதன் குற்றவாளிகள் கொஞ்சம்கூட கூச்ச நாச்சமின்றி ராஜா போல சுற்றி வருகிறார்கள். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, வினய் கட்டியார், அசோக் சிங்கால் உள்ளிட்ட பிஜேபி, வி.எச்.பி.யினர் முக்கிய தலைவர்கள் இந்தக் குற்றப் பத்திரிகையில் முக்கிய இடம் பெற்றுள்ளனர்.

வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் (இவ்வளவு காலம் தீர்ப்பு அளிக்கப்படாதது பெருங்குற்றமே!) ஒரு மடாதிபதி அங்கு ராமன் கோயில் கட்டுவோம் என்று சொல்லுவது சரியானதுதானா? இது நீதிமன்ற அவமதிப்பு அல்லவா?

பாபர் மசூதி வெறும் கட்டடம்தான் அதனை இடித்தது குற்றமாகாது என்று சொன்னவர் (தீர்ப்பை முன் கூட்டியே கொடுக்கிறார்) மீது நியாயப்படி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டி ருக்க வேண்டும்.

தாமதிக்கப்பட்ட தீர்ப்பு மறுக்கப்பட்ட ஒன்று என்று வக்கணையாகப் பேசுவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை. 21 ஆண்டு காலமாக இந்த வழக்கில் தீர்ப்புக் அளிக்கப்படவில்லை. இந்தியாவின் நிருவாகம் மற்றும் நீதித்துறை எந்தத் தரத்தில் உள்ளது என்பதற்கு இது ஒரு கண்ணுக்கு எதிரான எடுத்துக்காட்டுதான்.

இரண்டாவதாக சிறீரங்கம் மாநாட்டில் பேசிய காஞ்சி மடாதிபதி இந்துக்கள் ஒன்றுபட்டு நமக்குத் தேவையான ஆட்சியை உண்டாக்க வேண்டும் என்று கூறினார் என்பதன் மூலம் பச்சையாக ஓர் அரசியல்வாதி போல காஞ்சி சங்கராச்சாரியார் செயல்படுகிறார் என்பதை எளிதிற் புரிந்து கொள்ள முடியும்.

மதப் போர்வையில் காவி உடை வேடமிட்டு அரசியல் தந்திர நரிகளாக உலா வரும் இவர்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜெகத்குரு என்றெல்லாம் சொல்லுவது ஒரு வகையான விளம்பர உபாயமே தவிர, மற்றபடி வெகு மக்களுக்கும் இவாளுக்கும் என்ன ஒட்டு உறவு?

நூற்றுக்கு மூன்று பேர்களாக உள்ள பார்ப்பனர்களின் ஒரு பிரிவினருக்கு மட்டும் தலைவர் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளட்டும் - அட்டியில்லை.

துறவிகள் மாநாடு என்று சொல்லி தங்கள் உள்ளத்தில் தேக்கி வைத்துள்ள நஞ்சினைக் கொட்டுகிறார்கள் என்பதைக் கணிக்க, கவனிக்க தவறக் கூடாது.

இந்த நிலையில் தான் திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் அதே சிறீரங்கத்தில் கடந்த 4ஆம் தேதி திராவிடர் எழுச்சி மாநாடு கூட்டப் பெற்று அரிய ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பார்ப்பனர்கள் நடத்திய மாநாட்டுத் தீர்மானங் களையும், திராவிடர் கழகம் நடத்திய மாநாட்டுத் தீர்மானங்களையும் பொது மக்கள் எடை போட்டுப் பார்க்கட்டும்.

எது தேவை? எது தேவையற்றது? எது சமுதாயத்துக்கானது? எது சமுதாயத்துக்குத் தேவையற்றது, என்பதை எளிதிற் தெரிந்து கொள்ளலாமே! 6-4-2013

தமிழ் ஓவியா said...


சிறீரங்கம் மாநாடு

சிறீரங்கத்தில் திராவிடர் எழுச்சி மாநாடு 4.4.2013 அன்று வெகு எழுச்சியோடு நடை பெற்றது.

மார்ச்சு 2,3 ஆகிய நாட்களில் பார்ப்பனர்கள் துறவிகள் மாநாடு என்ற பெயரிலும், கிராமக் கோயில் பூசாரிகள் மாநாடு என்ற பெயரிலும் இரு நாட்கள் அங்கு நடத்தியுள்ளனர்.

துறவிகள் மாநாட்டில் காஞ்சிபுரம் சங்கராச் சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கலந்து கொண்டதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை.

அவர் எதைத் துறந்தார் என்று தெரியவில்லை. மண்ணாசை, பொன்னாசை பெண்ணாசை எதையும் துறந்தவர் இல்லை என்பது ஊர் அறிந்த ஒன்றாகும்.

இந்துக்கள் ஒன்று சேர்ந்தால் ராமன் கோயில் கட்டலாம் என்றும், இந்துக்கள் ஒன்றுபட்டால் நமக்குத் தேவைப்படும் ஓர் ஆட்சியை உண் டாக்கிக் கொள்ளலாம் என்றும் பச்சையாக தன் பாசிச உள்ளக் கிடக்கையை அவிழ்த்து வெளியே விட்டுள்ளார்.

450 ஆண்டு கால வரலாறு படைத்த சிறு பான்மை மக்களான முசுலிம்களின் வழிபாட்டுத் தலத்தை சங்பரிவார்க் கும்பல், பிஜேபி எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பட்டப் பகலில் ஆயிரக் கணக்கில் கூடி திட்டமிட்ட வகையில் அடித்து நொறுக்கி விட்டனர்.

அதன் குற்றவாளிகள் கொஞ்சம்கூட கூச்ச நாச்சமின்றி ராஜா போல சுற்றி வருகிறார்கள். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, வினய் கட்டியார், அசோக் சிங்கால் உள்ளிட்ட பிஜேபி, வி.எச்.பி.யினர் முக்கிய தலைவர்கள் இந்தக் குற்றப் பத்திரிகையில் முக்கிய இடம் பெற்றுள்ளனர்.

வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் (இவ்வளவு காலம் தீர்ப்பு அளிக்கப்படாதது பெருங்குற்றமே!) ஒரு மடாதிபதி அங்கு ராமன் கோயில் கட்டுவோம் என்று சொல்லுவது சரியானதுதானா? இது நீதிமன்ற அவமதிப்பு அல்லவா?

பாபர் மசூதி வெறும் கட்டடம்தான் அதனை இடித்தது குற்றமாகாது என்று சொன்னவர் (தீர்ப்பை முன் கூட்டியே கொடுக்கிறார்) மீது நியாயப்படி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டி ருக்க வேண்டும்.

தாமதிக்கப்பட்ட தீர்ப்பு மறுக்கப்பட்ட ஒன்று என்று வக்கணையாகப் பேசுவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை. 21 ஆண்டு காலமாக இந்த வழக்கில் தீர்ப்புக் அளிக்கப்படவில்லை. இந்தியாவின் நிருவாகம் மற்றும் நீதித்துறை எந்தத் தரத்தில் உள்ளது என்பதற்கு இது ஒரு கண்ணுக்கு எதிரான எடுத்துக்காட்டுதான்.

இரண்டாவதாக சிறீரங்கம் மாநாட்டில் பேசிய காஞ்சி மடாதிபதி இந்துக்கள் ஒன்றுபட்டு நமக்குத் தேவையான ஆட்சியை உண்டாக்க வேண்டும் என்று கூறினார் என்பதன் மூலம் பச்சையாக ஓர் அரசியல்வாதி போல காஞ்சி சங்கராச்சாரியார் செயல்படுகிறார் என்பதை எளிதிற் புரிந்து கொள்ள முடியும்.

மதப் போர்வையில் காவி உடை வேடமிட்டு அரசியல் தந்திர நரிகளாக உலா வரும் இவர்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜெகத்குரு என்றெல்லாம் சொல்லுவது ஒரு வகையான விளம்பர உபாயமே தவிர, மற்றபடி வெகு மக்களுக்கும் இவாளுக்கும் என்ன ஒட்டு உறவு?

நூற்றுக்கு மூன்று பேர்களாக உள்ள பார்ப்பனர்களின் ஒரு பிரிவினருக்கு மட்டும் தலைவர் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளட்டும் - அட்டியில்லை.

துறவிகள் மாநாடு என்று சொல்லி தங்கள் உள்ளத்தில் தேக்கி வைத்துள்ள நஞ்சினைக் கொட்டுகிறார்கள் என்பதைக் கணிக்க, கவனிக்க தவறக் கூடாது.

இந்த நிலையில் தான் திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் அதே சிறீரங்கத்தில் கடந்த 4ஆம் தேதி திராவிடர் எழுச்சி மாநாடு கூட்டப் பெற்று அரிய ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பார்ப்பனர்கள் நடத்திய மாநாட்டுத் தீர்மானங் களையும், திராவிடர் கழகம் நடத்திய மாநாட்டுத் தீர்மானங்களையும் பொது மக்கள் எடை போட்டுப் பார்க்கட்டும்.

எது தேவை? எது தேவையற்றது? எது சமுதாயத்துக்கானது? எது சமுதாயத்துக்குத் தேவையற்றது, என்பதை எளிதிற் தெரிந்து கொள்ளலாமே! 6-4-2013

தமிழ் ஓவியா said...


மூட்டை சோதனை

பிராமணர்கள் தங்கள் பின்னால் திரியும் பிராமணரல்லாதாரிடம் வைத்திருக்கும் மதிப்பு

சென்ற மாதத்திற்கு முன் மதுரையில் நடந்த மாகாண காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் முடிந்து எல்லோரும் திரும்பி ரயிலுக்கு வரும்போது ரயில்வே மேடையில் ஸ்ரீமான் சீனிவாசய்யங் காருடைய சட்டைப் பையிலிருந்த சிறு பணப்பை காணாமல் போய்விட்டதாம். இதற்காகவேண்டி அவர்களுடன் சென்ற இரண்டு முக்கியமான பிராமணரல்லாதாரின் மூட்டையையும், மடியையும் சோதனைப் போட்டுப் பார்த்ததாக ஒரு நிருபர் எழுதியிருக்கிறார்.

இதை நாம் கேட்கும் போது நமது காதில் நாராசம் காய்ச்சி ஊற்றியது போலிருந்தது. அவ்விரண்டு பிராமணரல்லாதாருள் ஒருவர் 5,6 வருஷமாய் காங்கிரஸிலுழைத்து வரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினர். மற்றொருவர் செல்வாக்கும் மதிப்புமுள்ள பிரபலஸ்தர்.

இவர்கள் ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் பணப்பைக் காணாமல் போனதற்காக எந்தக் காரணத்தைக் கொண்டானா லும், தங்கள் மூட்டையைப் பிரித்துக் காட்டினதற்கு நாம் மிகவும் வெட்கப் படுகிறோம்.

அல்லாமலும் இந்தப் பிராமணர்களுக்கும் இவர்களைப் பரிசோதனை செய்யும்படியானதோர் தைரியமேற்பட்டதானது பிராமணரல்லாதாரின் நிலையை இகழ்ந்து காட்டுகிறது. இன்னும் சிலருக்கு எந்தச் சமயத்தில் என்ன மரியாதைகள் கிடைக்குமோ கடவுளுக்குத்தான் தெரியும்.

- குடிஅரசு - செய்தி விளக்கம் - 25.04.1926

தமிழ் ஓவியா said...


அறிவுப்பூர்வ ஆதாரம்!


பொதுவாக நம் மக்களிடையே நிலவிவரும் நம்பிக்கைகளில் சித்திரையில் குழந்தை பிறந்தால் ஏதோ பெரிய அசம்பாவிதம் நடந்தவிடும் என்று கருதும் பழக்கம், படித்தவர், படிக்காதவரிடையே குறிப்பாக வயதான பாட்டிகளிடத்தேயும் உள்ளது அனைவரும் அறிந்ததே.

சித்திரையில் பிறந்த பெரியோர்கள் சாமுவேல் ஜான்சன் - ஆங்கில அகராதியைத் தொகுத்தவர், சார்லி சாப்ளின் - உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர். விக்டோரியா - நீண்ட காலம் இங்கிலாந்தை ஆண்டவர், தற்போதைய இங்கிலாந்து அரசியார் 2ஆம் எலிசபெத். காண்ட் - ஜெர்மன் தத்துவஞானி, கார்ட்ரைட் - பவர்லூம் கண்டுபிடித்தவர். அலெக்சாண்டர் - உலக மாவீரன், காரல்மார்க்ஸ் - புதிய சமதர்ம சமுதாயக் கருத்தைத் தந்த கம்யூனிசத்தந்தை, டார்வின் - பரிணாமவாத கொள்கையினால் வரலாற்றில் நிலையான இடம் பெற்ற மாபெரும் விஞ்ஞானி, சிக்மெண்ட் பிராய்ட் - மனோதத்துவ ஆராய்ச்சியாளர், பிரான்சிஸ் டிரேக்-பிரிட்டனின் புகழ்பெற்ற கடற்படை தளபதி

நன்றி: குமுதம்; தகவல்: சம்பத்ராஜ், பேட்டைவாய்த்தலை

தமிழ் ஓவியா said...


கடவுள் துறைகள்!


திருச்சி உறையூரில் வெக்காளியம்மன் கோயில் இருக்கிறது. அக்கோயிலில் காணப்படும் அறிவிப்புப் பலகையில் கீழ்க்காணும் விவரம் எழுதப்பட்டுள்ளது. எந்தெந்த கோயிலை வழிபட்டால் என்னென்ன நன்மைகள் கிட்டும் என்ற பட்டியல் அது.
வ.எண் அம்பாள் அருள்பவை
1 மதுரை மீனாட்சி கலை
2 திருவானைக்கா
அகிலாண்டேஸ்வரி செல்வம்
3 கன்னியாகுமரி குமரி அம்மன் அமைதி
4 சமயபுரம் மாரி(த்தாய்) மழை
5 தில்லை எல்லைக் காளி ஆற்றல்
6 காசி விசாலாட்சி
ஞானம்
7 தஞ்சை முத்துமாரி
வீரம்
8 பட்டீசுவரம் துர்க்கை அழகு
9 காஞ்சி காமாட்சி காமம் அழிப்பாள்
10 உறையூர் வெக்காளி
எல்லாம் தருவாள்

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு விதமாக அருள் பாலிக்கும் சக்தியாம். இத்தனைக் கடவுள்களைக் கும்பிட்டும் இந்த மக்கள் அடைந்த பலன்தான் என்ன?

உறையூர் வெக்காளி கடவுளுக்கு மட்டும் எல்லாம் வழங்கும் சக்தியாம்.

எல்லா வித நோய்களையும், தீர்க்கும் ஒரே மருந்து என்கிற மூர் மார்க்கெட் மோடி மஸ்தான் வியாபார தந்திரம் தானே, சமயபுரத்தம்மானை வேண்டிக்கொண்டுதானே இருக்கிறார்கள் எங்கே மழை?

தமிழ் ஓவியா said...


நமது நாடகம், சினிமா!


சீரிய நற்கொள்கையினை எடுத்துக் காட்ட சினிமாக்கள், நாடகங்கள் நடத்த வேண்டும். கோரிக்கை பணம் ஒன்றே என்று சொன்னால் கொடுமை இதைவிட வேறே என்ன வேண்டும்? பாராத காட்சியெலாம் பார்ப்பதற்கும், பழைமையினை நீக்கி நலம் சேர்ப்பதற்கும் ஆராய்ந்து மேனாட்டார் நாடகங்கள் அமைக்கின்றார், முன்னேற்றம் அடைகின்றார்கள்.

ஒரு நாட்டின் வேரிலுள்ள தீமை நீக்கி உட்புறத்தில் புத்தொளியைச் சேர்ப்பதற்கும் பெருநாட்கள் முயன்றாலும் முடியா ஒன்றைப்பிடித்த பிடியில் முடித்துத் தீர்ப்பதற்கும், பெருநோக்கம் பெருவாழ்வு கூட்டுதற்கும், பிறநாட்டார் நாடகங்கள் செய்வார்! என்றன் திருநாட்டில் பயனற்ற நாடகங்கள் சினிமாக்கள் தமிழர்களைப் பின்னே தள்ளும்.

தமிழ்நாட்டில் நாடகத்தால் சம்பாதிப்போர் தமிழப்பாஷையின் பகைவர்; கொள்கையற்றோர்; இமயமலையவ்வளவு சுயநலத்தார்; இதம் அகிதம் சிறிதேனும் அரியாமக்கள்; தமைக்காக்க! பிறர்நலமும் காக்க என்னும் சகஜ குணமேனுமுண்டா? இல்லை இந்த அமானிகள் பால் சினிமாக்கள், நாடகங்கள் அடிமையுற்றுக் கிடக்கு மட்டும் நன்மையில்லை.

- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் (குடிஅரசு 5.2.1944

தமிழ் ஓவியா said...


நான் மனிதனா ?


இராமன் கௌசல்யாவுக்கு

பிறந்தததால் இந்துவானேன்.

எட்வர்டு ஜெனிபருக்கு

பிறந்ததால் கிறிஸ்துவனானேன்.

சலீம் அனார்கலிக்கு

பிறந்ததால் முஸ்லிமானேன்.

யாருக்கும் யாருக்கும்

பிறந்தால்

மனிதனாவேன்?

- ஜெயபிரபா

தமிழ் ஓவியா said...


இந்தியாவில் முதல் பெண்கள்


முதல் பெண் குடியரசுத் தலைவர்... - பிரதிபா பாட்டீல்

முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி

முதல் பெண் மக்களவை சபாநாயகர் - மீராகுமார்

முதல் பெண் கவர்னர் - சரோஜினி நாயுடு

முதல் பெண் முதல்வர் - சுசேதா கிருபளானி

முதல் பெண் அமைச்சர் - விஜயலட்சுமி பண்டிட்

முதல் பெண் மத்திய அமைச்சர் ராஜ்குமாரி அம்ரித் கௌர்

காங்கிரஸின் முதல் பெண் தலைவர் - டாக்டர் அன்னிபெசன்ட்

அய்.நா. பொதுச்சபையின் முதல் பெண் தலைவர் - விஜயலட்சுமி பண்டிட்

இந்தியாவின் முதல் பெண் அரசி - ரஸியா சுல்தானா

முதல் பெண் ஏர்மார்ஷல் - பத்மா பந்தோபத்யாய

முதல் பெண் லெப்டினன்ட் ஜெனரல் - புனீதா ஆரோரா

பால்கே விருதுபெற்ற முதல் நடிகை - தேவிகா ராணி

புக்கர் பரிசு பெற்ற முதல் பெண் - அருந்ததி ராய்

மகசேச விருது பெற்ற முதல் பெண் - அன்னை தெரசா

அயல்நாட்டுத் தூதரான முதல் பெண் - விஜயலட்சுமி பண்டிட்

முதல் பெண் அய்.ஏ.எஸ். அதிகாரி - அன்னா ஜார்ஜ் மல்ஹோத்ரா

முதல் பெண் அய்.பி.எஸ். அதிகாரி - கிரண்பேடி

முதல் பெண் வழக்கறிஞர் - கர்னேலியா சொராப்ஜி

முதல் பெண் நீதிபதி - அன்னா சாண்டி

உச்சநீதிமன்ற முதல் பெண் நீதிபதி - ஃபாத்திமா பீவி

உச்சநீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதி - லெய்லா சேத்

முதல் பெண் மருத்துவர் - காதம்பினி கங்குலி

முதல் பெண் தலைமை பொறியாளர் - பி.கே. த்ரேசியா

முதல் பெண் சிவில் சர்ஜன் - முஞ்செர்ஜி ஜமாஸ்ஜி மிஸ்த்ரி

முதல் பெண் பட்டதாரி - கர்னேலியா சொராப்ஜி

முதல் பெண் டிஜிபி - காஞ்சன் பட்டாச்சார்யா

முதல் பெண் போட்டோகிராபர் - ஹோமி வியாரவாலா

விண்வெளி சென்ற முதல் இந்தியப் பெண் - கல்பனா சால்லா

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண் - பச்சேந்திரி பால்

சாகித்ய அகாதெமி விருது பெற்ற முதல் பெண் - அம்ருதா ப்ரீதம்

ஞானபீட விருது பெற்ற முதல் பெண் - ஆஷா பூர்ணா தேவி

புலிட்சர் பரிசு பெற்ற முதல் பெண் - ஆஷா பூர்ணா தேவி

ராஜீவ்காந்தி கேள் ரத்னா விருது பெற்ற முதல் பெண் - கர்ணம் மல்லேஸ்வரி

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண் - கர்ணம் மல்லேஸ்வரி

முதல் கமர்ஷியல் பெண் பைலட் - துர்பா பானர்ஜி

முதல் பெண் செஸ் கிராண்ட் மாஸ்டர் - எஸ். விஜயலட்சுமி

முதல் பெண் கிரிக்கெட் நடுவர் - அஞ்சலி ராஜகோபால்

முதல் பெண் மேயர் (மும்பை) - சுலோச்சனா மோடி

ராணுவத்தின் முதல் பெண் அதிகாரி - ப்ரியா ஜிங்கன்

முதல் பெண் ரயில் ஓட்டுநர் - திலகவதி

தமிழ் ஓவியா said...


கஞ்சா அடிக்கும் இந்து சாமியார்?


அது எங்கள் பிரசாதம்: கும்பமேளாவில் கூடிய சாதுக்களிடம் காணப்பட்ட பொதுவான அம்சம் யாதெனில், சோறு, தண்ணீர், தூக்கம் கூட இல்லாமல் இருந்து விடுவர். ஆனால், நீள் போதை தரும் கஞ்சாவை, புகைக்காமல் இருக்க மாட்டார்கள்.

தினமலர் 4.3.2013 பக்கம் 16

தினமலே சொல்லுகிறது. தெரிந்து கொள்ளுங்கள் இந்து சாமியார்களின் யோக்கியதையை.

தமிழ் ஓவியா said...


பரமசிவன் விரும்புகிறான் பார்ப்பனப் பிணவாடையை!

திருவாரூரில், ஓடம் போகியாறு கரையில் பார்ப்பனர்களுக்கென்று தனியாக ஒரு சுடுகாடு இருக்கிறது. இதிலிருந்து சுமார் ஒரு பர்லாங்கு தொலைவில் இருப்பது ருத்ர கோடீசுவரர் ஆலயம்!

சுடுகாட்டைச் சுற்றியுள்ள பகுதியில் இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு விட்டன!

பிணத்தை எரிக்கும் போது வரும் புகையும் -_ வாடையும் சகிக்க முடியதாததாக இருக்கிறது என்று குடியிருப்புகள் பெருகிவிட்டதால் சுடுகாட்டை வேறு ஒதுக்குப்புறமான இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது!.

இப்பகுதியில் உள்ள ருத்ர கோடீசுவர சுவாமிக்குப் பிணவாடை இருக்க வேண்டும் என்பது அய்தீகம் என்பது பார்ப்பனர்களின் எதிர்வாதம்! சட்டம் விசாரித்தது - அய்தீகம் வென்றதாம். எல்லாம் வல்ல இறைவனின் (?) மோப்ப சக்தி ஒரு பர்லாங்கிற்கு மேல் செல்லாதா?

உயிரில்லாக் கற்சிலைக்கும், உதவாத அய்தீகதத்திற்கும் வக்காலத்து வாங்கும் பார்ப்பனர்கள் என்று தான் திருந்துவார்களோ?

- சி.நா.திருமலைசாமி, சின்ன நெகமம், 642137
செய்திக்கு ஆதாரம்: மேகலா மாத இதழ் செப்டம்பர் 83

தமிழ் ஓவியா said...


மூளை என்னும் கணினி


அமெரிக்காவின் மிகப் பெரிய திட்டங்களில் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது தான் மனித மூளையைப் பற்றிய பெரும் ஆராய்ச்சி. அமெரிக்காவின் மனிதனை நிலவுக்கு அனுப்ப வேண்டும் என்ற ஆராய்ச்சி அறிவிக்கப்பட்டபோது இது முடியுமா என்ற கேள்விதான் பெரிதாக இருந்தது.

மரபணு ஆரய்ச்சியில் அக்குவேறு ஆணிவேறாக மனித மரபணுவின் அடிப்படையான டி என் ஏ வின் ஜீனோம் திட்டம் அறிவிக்கப் பட்ட போது அறிவியல் உலகமே மகிழ்ச்சியான அதிர்ச்சியில் ஆழ்ந்தது. அது வெற்றிகரமாக முடிந்தாலும் எதிர் பார்க்கப்பட்ட முழுப் பயனும் இன்னும் அடையப்படவில்லை. தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. பல நோய்களின் மரபனுக்கள் வெற்றிகரமாக ஆராயப்பட்டுள்ளன.

விண்ணுலகத்தை ஆராய்ந்ததைவிட நமது மூளை எனும் உலகின் சிறந்த கணினியை ஆராய்ந்து பல நோய்களுக்கும் அடிப்படை காண முயல்வது விஞ்ஞானிகளுக்கே பெரிய சவாலாக, முடியுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

மூளையில் உள்ள ஆயிரம் கோடி நியூரான் எனும் செல்களை ஆராய முடியுமா? ஒவ்வொரு நியூரானும் ஒரு பெரிய கணினிக்குச் சமம். இதயத்தின் ஒவ்வொரு செல்லும் கிட்டத்தட்ட ஆராயப்பட்டு, இதயத்தின் துடிப்பைக் கட்டுப்படுத்தும் இடத்தையும், சில நேரங்களில் ஒழுங்காக செயல்படாத அந்த செல்கள் இதயத்துடிப்பு ஒழுங்காகச் செயல்படாத போது அந்த சிறு இடத்தைக் கண்டுபிடித்து அவற்றை அறுவை சிகிச்சை இல்லாமலேயே "பொசுக்கி" இதயத் துடிப்பைச் சரி செய்யும் அளவிற்கு வளர்ந்து விட்டது.

மூளையின் பல இடங்கள் எதை எதைக் கட்டுப்படுத்துகின்றன என்பது துல்லியமாக ஆராயப்பட்டு வருகின்றது. ஆனாலும் பல மூளைக் கோளாறுகள் ஏன் ஏற்படுகின்றன? பிறவிக் கோளாறுகள் எப்படி, ஏன் ஏற்படுகின்றன? வயதான மூளைத் தாக்கங்கள் ஏன் ஏற்படுகின்றன?

அவற்றை எப்படித் தடுக்கலாம் என்பன மிகவும் முக்கியமான ஆராய்ச்சிகளாக அமையும். அமெரிக்கத் தலைவர் ஒபாமாவே இந்த ஆரய்ச்சியைத் தொடங்கி வைத்து ஆதரித்து இன்று பேசியுள்ளார். இதை அமெரிக்க நாடாளுமன்றம் ஏற்றுக் கொள்ள வேண்டும். மருத்துவத்தின் கோட்டையாக உள்ள மூளையின் கதவுகள் திறக்கப் படப்போவது நிச்சயம்.

டாக்டர் சோம. இளங்கோவன் (அமெரிக்கா