Search This Blog

3.4.13

பார்ப்பனர்களைப்பற்றி தெரிந்தவர்களுக்குத்தான் இந்தச் சூட்சமங்களை அறிந்துகொள்ள முடியும்!

எந்தக் கலாச்சாரத்தைப் போதிக்கத் திட்டம்? 

தொழிற்கல்வி மாணவர்கள் தங்கள் படிப்புடன் இந்திய வரலாறு, சுதந்திரப் போராட்டம் உள்ளிட்டவற்றைத் தெரிந்து கொள்ளும் வகையில் இந்தியக் கலாச்சாரம் குறித்த பாடத் திட்டத்தைச் சேர்க்க உள்ளோம் என்று டில்லி, அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத் தலைவர் மந்தா தெரிவித் துள்ளார்.

இதன் முழுத்தன்மை விளக்கப்பட்டாக வேண்டும்; இந்திய வரலாறு என்றால் என்ன?

வேதகால வரலாறா? வேதத்தை எதிர்த்த கவுதமப் புத்தனின் வரலாறா? ஆரியம்தான் பூர்வீகக்குடி என்றொரு கதையைத் திணித்து வருகிறார்களே அந்த வரலாறா?

சிந்துச் சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம் என்று அறுதியிட்டுக் கூறப்பட்ட பின், மத்திய ஆட்சியில் பி.ஜே.பி. வந்த காலகட்டத்தில் எருதை - கணினி மூலமாக குதிரையாக ஆக்கிக்காட்டி அது ஆரிய நாகரிகம் என்று திரித்ததன் அடிப்படையிலா?

தென்னிந்தியாவில் எழுந்த சமூக சீர்திருத்தம்பற்றியும், சமூகநீதிப் போராட்ட வரலாறு பற்றியும் பொறியியல் கல்லூரிகளில் சொல்லிக் கொடுக்கப்படுமா?

இந்திய வரலாற்றில், மய்யப் புள்ளியாக ஆரியர் - திராவிடர் போராட்டம் நடைபெற் றுள்ளதே - பார்ப்பனர் எதிர்ப்புக் கருத்துகள் - அமைப்புகள் அவ்வப்போது தோன்றியுள் ளனவே - அவையும் சொல்லிக் கொடுக்கப் படுமா?
புத்தம் தோன்றிய நாட்டில் அது இல்லாது ஆக்கப்பட்ட பின்னணியைச் சொல்லிக் கொடுப்பார்களா?

பவுத்த விகாரங்கள், இந்துக் கோவில்களாக மாற்றப்பட்ட விதம் - அதற்குத் துணை போன சக்திகள்பற்றி விலாவாரியாகச் சொல்லிக் கொடுப்பார்களா?

சமணர்களைக் கழுவில் ஏற்றியதுபற்றிய பாடங்கள் இடம்பெறுமா?

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், சாகுமகராஜ், நாராயணகுரு, மகாத்மா ஜோதிபாபுலே போன்ற தலைவர்களுக்குரிய இடம் அந்தப் பாடத் திட்டத்தில் இடம்பெறுமா? என்கிற நியாயமான வினாக்கள் எழுவது தவிர்க்கப்பட முடியாதவையாகும்.

கலாச்சாரம் பற்றியும் சொல்லிக் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுவும் ஒரு குழப்பமானது என்பதையும் தாண்டி ஆபத்தான ஒன்றாகும்.
முன்பெல்லாம் நீதி போதனை (Moral Instruction) என்றொரு வகுப்பு இருக்கும். அதில் பெரும்பாலும் இராமாயணம், மகாபாரதம், கீதை மற்றும் புராணக் கதைகளைத்தான் சொல்லிக் கொடுப்பார்கள்.

அகில இந்தியத் துறை என்றால், அதில் பெரும்பாலும் பார்ப்பனர்கள்தான் நங்கூரம் பாய்ச்சி இருப்பார்கள். அவர்களின் சித்து வேலைதான் இதுபோன்ற அறிவிப்புகளாகும்.

தொழிற்கல்விக்கும் இந்தப் பாடத் திட்டங்களுக்கும் என்ன சம்பந்தம்?
அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி நிருவாகம் கூறியிருப்பதை அலட்சியமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

எந்தப் பாடத் திட்டமாக இருந்தாலும், அது வெளிப்படையாக வெளிப்படுத்தப்படவேண்டும்.

பார்ப்பனர்களைப்பற்றி உண்மையில் தெரிந்தவர்களுக்குத்தான் இந்தச் சூட்சமங் களை அறிந்துகொள்ள முடியும் - எச்சரிக்கை!

                          -------------------------"விடுதலை” தலையங்கம் 3-4-2013

13 comments:

தமிழ் ஓவியா said...


மத்திய அரசு நடத்தும் தேர்வில் ஆங்கிலப் பாடத்தில் இந்தி கேள்விகள்


மாணவர்கள் கடும் அதிர்ச்சி!

புதுடில்லி, ஏப்.3- மத்திய அரசு நடத்தும் தேர்வில் ஆங்கிலப் பாடத்தில் இந்தியில் கேள்விகள் கேட் கப்பட்டுள்ளது, மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவரம் வருமாறு:

எங்கெல்லாம் தங்களால் இயன்ற அளவு ஒடுக்கப் பட்டோரையும், பிற மொழியினரையும் மத்திய அரசுப் பணிகளில் நுழையாமல் தடுக்க முடியுமோ, அங்கெல்லாம் தடுத்துவிட வேண்டும் என்பதில் வடநாட்டவர்கள் குறியாக இருக்கிறார்கள்.

நாம் விழித்தால், அவர்கள் சுருட்டிக் கொள் வார்கள் வாலை! அதற்கு அண்மையில் யுபிஎஸ்சி தேர்வுகளில் கொண்டுவரப்பட்ட புதிய முறையை யும், பின்னர் அது பின் வாங்கிக்கொள்ளப்பட்ட தையும் சான்றாகக் கொள்ளலாம். இது தவிர, மத்திய அரசுப் பணிகளுக்கான பல தேர்வுகள் பற்றி நமக்குத் தெரியவே தெரியாது. அதற்கு விளம்பரங்களெல் லாம் வரும் - ஏதோ ஒரு மூலையில், பொதுவாக யாருமே கண்டுகொள்ளாத இடத்தில்!

அப்படி வந்த விளம்பரங்களில் ஒன்று Council of Scientific and Industrial Research (CSIR) - Combined Administrative Services Examination (CASE) என்ற தேர்வு! எந்த பட்டப்படிப்பு படித்தவரானாலும் விண்ணப் பிக்கலாம் என்ற வாய்ப்புடைய இந்தத் தேர்வை சொற்ப ஆட்கள்தான் நாடு முழுக்க எழுதியிருக் கிறார்கள்.

இரண்டு தாள்கள் கொண்ட இந்த போட்டித் தேர்வின் முதல் தாளில் (Paper-I)
இரண்டு பிரிவுகள் (Part A & B). இதில் Part-B பகுதி இங்கிலீஷ் மொழிப் பகுதி!

தேர்வின் நடைமுறை குறித்த விளக்கமான விளம்பரம் ஒன்று இணையத்தில் உள்ளது. அதில் Medium of Examination என்னும் பகுதியில், முதல் தாளின் இங்கிலீஷ் பிரிவு தவிர ஏனைய பகுதிகள் ஹிந்தி, இங்கிலீஷ் ஆகிய இரு மொழிகளில் இருக்கும். ஏதேனும் ஒன்றில் எழுதலாம்.

நேர்முகத் தேர்வையும் இரு மொழிகளில் ஒன்றில் எதிர்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Medium of Examination: The question papers for the examination will be bilingual i.e. in Hindi and English except for the English Language part of the Paper-I. For interview, the candidates will have an option to converse in Hindi or English.

தமிழ் ஓவியா said...

ஆனால், அதே நேரம் தேர்வுக்கான பாடங் களைக் குறிப்பிடும் பாடத் திட்டம், (syllabus) பகுதி யில் Part-B (Language & Comprehension) Comprehension (1 passage each of Hindi and English of 10 marks each) - 20 Marks என்றொரு இடமும் இடம்பெற்றுள்ளது.

இதற்கென்ன விளக்கம் என்ற அய்யத்துடன், சரி, ஆங்கிலப்பாடத்திலும், இந்தியில் விளக்கம் கொடுக்கிறார்கள் (இரு மொழிகளிலும் ஒரே கேள்வி) போலும் என்று விண்ணப்பித்தவர்கள் சிலர் தாங்களாகவே நண்பர்களுடன் விவாதித்து கருதிக் கொண்டார்கள் தேர்வு எழுதும் முன்னர்.

இங்கிலீஷ் தேர்வில் இந்தியில் கேள்விகள்

அலுவல் மொழிகள் அனைத்திலும், தேர்வு எழுதவும், நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படாவிட்டாலும், இங்கிலீஷ் வாய்ப்பு இருக்கிறதே என நினைத்தவர்களுக்கு தேர்வு எழுதும் போது தான், தங்களிடமிருந்து சுளையாக 10 மதிப்பெண்கள் பறிக்கப்பட்டது தெரிந்தது.

முதல் தாளின் இரண்டாம் பகுதி இங்கிலீசுக் கானது. கேள்வித் தாளின் 20-ஆம் பக்கத்தில் வந்த 101- 110 வரையிலான கேள்விகள் முழுக்க இந்தியில் மட்டுமே இடம்பெற்றிருந்தன. ஒரு வேளை இது அதற்கு முன் இடம்பெற்றுள்ள ஆங்கிலப் பகுதி Comprehension-ன் இந்திப் பதிப்பா என்று நினைத்தால், இரண்டும் வேறு வேறு.

அதாவது ஆங்கில மொழி அறிவைச் சோதிக்கும் பகுதியில் English Part, என்றே குறிப்பிடப்படும் தாளில் இந்திக் கேள்விகள்! எப்படி இருக்கும் இந்த அதிர்ச்சி! மாற்றி எதாவது குறித்துவைத்தால் எதிர் மறை மதிப்பெண்கள் வேறு உண்டு. எனவே 10 மதிப் பெண்களைச் சுத்தமாகத் தொடாமல், விட்டுவிட்டு வந்திருக்கிறார்கள் இந்தி அல்லாத மாணவர்கள்.

இங்கிலீஷ் தாளில் இந்திக்கு என்ன வேலை? இங்கிலீஷ் பகுதியின் கேள்விகள் மட்டும் இந்தியில் இருக்காது; இங்கிலீஷில் தான் இருக்கும் என்று சொல்லிவிட்டு, பிறகு இங்கிலீஷ் தாளில், இங்கிலீஷ் இல்லாமல் 10 மதிப்பெண்ணுக்கு இந்தியைத் திணித்தது எப்படி?

அதற்கென்ன விளக்கம்? வியாக்கியானம்? இந்தி மொழி அறிவைச் சோதிக்க எந்தப் பகுதியும் கேள்வி யும் இருப்பதாக அறிவிப்பில் கிடையாது! இங்கி லீஷ் தாள் என்று குறிப்பிட்டு அங்கே இந்தி மொழி யில் வாய்ப்பே கிடையாது என்கிறது அறிவிப்பின் ஒரு பகுதி! ஆனால் அதன் அடுத்தடுத்த பகுதிகளில் படித்தவர் குழம்பும்படி, இந்தியை மெதுவாகத் திணித்துவிட்டு, கேள்வித் தாளிலும் ஹிந்தியை வைத்துவிட்டார்கள். 10 மதிப்பெண்களை இந்தி மாணவர்களுக்கு அதிகப்படுத்திக் கொள்ள வாய்ப் புத் தருவதும், இந்தி அல்லாத மாணவர்கள் 10 மதிப்பெண்களை இழக்கவும் தான் இந்தச் சதி.3-4-2013

தமிழ் ஓவியா said...


கோயில் கதைகளைக் கேளுங்கள்! அடிதடி - குத்துவெட்டு - கொலை!


கோயில் விழா நடத்துவதில் தகராறு 144 தடை உத்தரவு

அரூர், ஏப்.3-தர்மபுரி மாவட் டம் அரூர் அருகே உள்ள வாச் சாத்தி கிராமத்தில் 300-க்கும் மேற் பட்ட மலைவாழ் மக்கள் வசிக் கின்றனர். இங்குள்ள பழை மையான மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் திருவிழா நடத்தப்படும். இந்த ஆண்டும் சித்திரை திருவிழா நடத்துவது தொடர்பாக பொது மக்கள் கூடி பேச்சுவார்த்தை நடத் தினர். அப்போது இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.
ஏற்கனவே முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவின் போது இரு தரப்பினரிடையே முன் விரோதம் ஏற்பட்டதாகவும், அந்த தகராறு இந்த விழாவிலும் தொடர்வதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

இந்த பேச்சு வார்த்தையின் போதும் உடன்பாடு ஏற்படாத தால் கிராமத்தில் இரு தரப்பி னரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. மோதல் அபாயத்தை தவிர்ப்பதற்காக வாச்சாத்தி கிராமத்தில் 144 தடை உத்தரவை பிறப்பிக்க மாவட்ட ஆட்சியருக்கு கோட்டாட்சியர் காமராசர் பரிந்துரை செய்தார்.

இதையடுத்து மாவட்ட ஆட்சி யர் லில்லி வாச்சாத்தி கிராமத்தில் 144 தடை உத்தரவை பிறப்பித் துள்ளார். நேற்று அதிகாலை முதல் வாச்சாத்தி பகுதியில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. அரூர் காவல் நிலைய ஆய்வாளர் சென்னகிருஷ்ணன் தலைமையில் காவல்துறையினர் வாச்சாத்தி கிராமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

பெண்ணை விலைபேசிய அர்ச்சகன்

சத்தர்பூர், ஏப்.3- திருமணமான பெண்ணை கோயில் அர்ச்சகர் கடத்திச் சென்று பாலியல் வன் முறை செய்து, அவரை ரூ.40 ஆயிரத்துக்கு விற்ற கொடூர சம்பவம் ம.பி.யில் நடந்துள்ளது.

ம.பி மாநிலம் சத்தர்பூர் மாவட் டம் கவார் கிராமத்தைச் சேர்ந்த 33 வயது பெண், தனது 5 வயது குழந்தையுடன் கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் தேதி காணாமல் போனார். அவரது குடும்பத்தினர் எங்கு தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்தும் பலனில்லை.
ஆனால் பெண்ணின் தம்பி மட்டும் தனது அக்காவைத் தொடர்ந்து தேடி வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாள் களுக்கு முன் திகம்கர் மாவட்டத் தில் உள்ள பிப்ரா கிராமத்தில் ஒரு வீட்டில் தனது அக்கா சிறை வைக்கப்பட்டிருப்பதை கண்டு பிடித்தார். அக்காவை குழந்தை யுடன் மீட்டு காவல் நிலையத் துக்கு அழைத்துச் சென்றார்.

காவல்துறையினரிடம் அந்த பெண் கொடுத்த புகாரில் திடுக் கிடும் தகவல்கள் வெளியாயின. கடந்த ஜனவரி 18 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே வந்த அந்தப் பெண்ணை கிராமக் கோயில் அர்ச்சகர் பாலபிரசாத் சுக்லா கடத்திச் சென்றுள்ளார். வேறு கிராமத்துக்குக் கொண்டு சென்ற அவர், அந்த பெண்ணை தனது நண்பர் தேவேந்திர சுக்லா வுடன் சேர்ந்து 13 நாள்களுக்கு மாறிமாறி பாலியல் வன்முறை செய்துள்ளார்.

பின்னர், ஜனவரி 30 ஆம் தேதி பெண்ணை ரூ.40 ஆயிரத்துக்கு சுக்லா விற்றுள்ளார். அந்தப் பெண்ணை விமலேஷ், பப்பு, வீரேந்திரா ஆகிய அண்ணன் தம்பி கள் வாங்கி உள்ளனர். அவர்கள் பிப்ரா கிராமத்தில் உள்ள தங்கள் வீட்டுக்குப் பெண்ணை கொண்டு சென்று அடைத்து வைத்துள்ள னர். அவர்கள் 3 பேரும் அந்த பெண்ணை தொடர்ந்து பாலியல் வன்முறை செய்துள்ளார்கள்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் அந்தப் பெண்ணை பாலியல் வன்முறை செய்த 5 பேரையும் தேடி வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...

திருப்பதி அருகே விபத்து கார் மீது லாரி மோதல் 9 பக்தர்கள் பலி!

சித்தூர், ஏப்.3- ஆந்திராவில் மெதக் மாவட்டத்தில் உள்ள பெத்தசங்கரம்பேட்டையை சேர்ந்தவர் நரசிம்மலு (40). இவர் தனது குடும்பத்தினர், உறவினர் கள் 10 பேருடன் ஏழுமலை யானை தரிசிக்க நேற்று முன் தினம் இரவு காரில் திருப்பதிக்கு வந்தார். நேற்று காலை 6.30 மணிக்கு ரேணிகுண்டா அருகே குக்கலதொட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது, திருப்பதியில் இருந்து எதிரே வந்த லாரி, கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. விபத்து நடந்ததும் லாரியை விட்டுவிட்டு ஓட்டுநர் தப்பியோடி விட்டார்.

இந்த விபத்தில், காரில் பய ணம் செய்த நரசிம்மலு (40), அவரது மனைவி ஜோதி (33), மகன் கார்த்திக் (10), மகள் பிரீத்தி (9) மற்றும் உறவினர்கள் 5 பேர் உள்பட 9 பேர் சம்பவ இடத்தி லேயே உடல் நசுங்கி இறந்தனர். உறவினரின் மகளான சிறுமி மட்டும் படுகாயத்துடன் உயிர் தப்பினாள். அப்பகுதி மக்கள் அவளை மீட்டு, மருத்துவமனை யில் சேர்த்தனர். விபத்து நடந்த இடத்துக்கு வந்த கடப்பா எஸ்.பி. மணீஷ் குமார் சின்ஹா மற்றும் காவல்துறையினர், இடிபாடு களை ஜேசிபி இயந்திரம் மூலம் உடைத்து உடல்களை மீட்டனர்.

தமிழ் ஓவியா said...

அர்ச்சகர் கொலை

சென்னை, ஏப். 3-மகளை கிண் டல் செய்ததை தட்டிக் கேட்ட திருப்பதி தேவஸ்தான அர்ச்சகர் இரும்பு குழாயால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டார். இரு வரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருப்பதியைச் சேர்ந்தவர் ராகவன் (63). திருப்பதி தேவஸ் தானத்தில் அர்ச்சகராக பணி யாற்றி வந்தார். இவரது மனைவி அமிர்தவல்லி, ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர் களுக்கு ஜெயசிறீ (30), பத்மசிறீ (25) என்ற இரண்டு மகள்கள். ஜெயசிறீக்கு திருமணமாகி கணவர் ரங்கநாதனுடன் செங் கல்பட்டு அடுத்த வெங்கடாபுரம் அக்ரகார வீதியில் வசிக்கிறார். இளைய மகள் பத்மசிறீ, தந்தை யுடன் வசிக்கிறார்.

அமிர்தவல்லி இறந்து ஒரு ஆண்டு ஆனதைத் தொடர்ந்து அவருக்கு திதி கொடுக்க மகள் பத்மசிறீயை அழைத்துக் கொண்டு ராகவன், கடந்த சில நாள்களுக்கு முன்பு வெங்கடா புரத்தில் வசிக்கும் மற்றொரு மகள் ஜெயசிறீ வீட்டுக்கு வந்தார். அங்கு திதி கொடுத்து விட்டு நேற்று முன்தினம் மாலை மகள் பத்மசிறீ, பேத்தி அட்சயசிறீ (5) ஆகியோருடன் அதே பகுதியில் வாக்கிங் சென்றார் ராகவன். அப்போது அந்த வழியாக வந்த 3 இளைஞர்கள், பத்மசிறீ, அட்சய சிறீயை கிண்டல் செய்துள்ளனர். அதை ராகவன் தட்டி கேட்டுள் ளார். எங்க ஊருக்கு வந்தா அப்படித்தான் செய்வோம், நீ உன் வேலையை பார்த்து போ என அந்த இளைஞர்கள் கூறியுள்ள னர்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஒரு இளைஞர், கையில் வைத்திருந்த இரும்பு குழாயால் திடீரென ராகவனின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். மற்றவர்களும் அருகில் கிடந்த தடியை எடுத்து ராகவனை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் அலறித் துடித்து மயங்கிச் சாய்ந்தார். இதை பார்த்து பத்மசிறீயும் அட்சய சிறீயும் கதறி அழுதனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் 3 இளைஞர் களும் தப்பிவிட்டனர்.

உயிருக்கு போராடிய ராக வனை மீட்டு காட்டாங்கொளத் தூரில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை ராகவன் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

இதுகுறித்து பாலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அதில், ராகவனை தாக்கியது அதே பகுதி யைச் சேர்ந்த முனிராஜ் மற்றும் அவரது நண்பர்கள் என தெரியவந்தது. கொலையாளி களைப் பிடிக்க ஆய்வாளர் மோகன்ராஜன் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள் ளன. வால் ஏழுமலை என்பவரை கைது செய்தனர். மேலும் இருவரைத் தேடி வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...

ஊரை ஏமாற்றி சாமியார் ஓட்டம்! ஓட்டம்!!

பெங்களூரு, ஏப்.3- காவி உடை யணிந்து, சிறப்பு முடியலங்காரம் செய்து, மக்களை ஏமாற்றி வந்த சாமியார் ஒருவரின் செயல் பாடுகள் அம்பலமானதால், அவர் தலைமறைவாகி விட்டார்.

ஆந்திராவைச் சேர்ந்தவர் சிவசாய்பாபா. இவர், சன்னியாசி வேடமணிந்து, கருநாடகாவின் தொட்டபல்லாபூரில், வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, ஆசிரமம் அமைத்தார். பக்தர் களைக் கவர, பல வித்தைகளை செய்தார். மக்களை இழுக்க, சகல வித்தைகளையும் செய்தார். தன் முடியையும், வித்தியாசமாக அலங்கரித்து, புதுமையான தோற்றத்தில் காட்சி அளித்தார். ஆனால், பக்தர்கள் மயங்க வில்லை. பின்னர், தன் பாணியை மாற்றிய, சிவசாய்பாபா, யாகம், ஹோமம் செய்து, மக்களிடம் பணத்தை கறந்தார். இவரது பேச்சு, செயல்பாடுகளில், பெரிய, பெரிய அரசியல்வாதிகளும் மயங் கினர். பெல்லாரியின் சுரங்க அதிபர்களும் பக்தர்களாக மாறி னர். மத்திய அமைச்சர் முனி யப்பா, முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, பி.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் சிறீராமுலு, கருநாடகா அமைச் சர்கள், பல தடவை ஆசிரமத் துக்கு வந்துள்ளனர். இதை, தனக்கு சாதகமாக பயன்படுத்திய சாமியார், எனக்கு ஆட்சியில் உள்ள எல்லா அமைச்சர்களும் நன்றாக தெரியும். உங்களுக்கு ஏதாவது காரியம் ஆக வேண்டு மென்றால், என்னிடம் கூறுங்கள். நான் செய்து கொடுக்கிறேன் என, ஆசை வார்த்தை கூறினார். இவருக்கு மூன்று மனைவி இருப்பதாக கூறப்படுகிறது. சில நாள்களாக, இவரது செயல்பாடு பற்றி விமர்சனம் கிளம்பியதால், கன்னட அமைப்பினர் போராட் டம் நடத்தினர். பெண்களிடம் முறைகேடாக நடந்ததாக கேள் விப்பட்ட, கன்னட அமைப்பி னர், ஆசிரமத்துக்கு சென்று, அங்கு ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை தீ வைத்தனர். ஆசிரமத்துக்கு பூட்டு போட முயன்றனர். இதையறிந்த அவர், தலைமறைவாகி விட்டார். பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் செய்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறையினர் தெரிவித்துள் ளனர்.

சாமியார் சிவசாய்பாபா, ஆந்திரா மாநிலத்தில் பதுங்கி யிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர், முறைகேடான விஷயங்களுக்கு, மடத்தைப் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் காவல்துறையி னரிடம் சிக்கியுள்ளது. இது குறித்து விரைவில் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படும் என, காவல்துறை தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


பெண்களின் தர்மம்...



சாத்திரச் சம்பிரதாயங்களில் பெண்களின் தர்மம் என்ன என்று பார்த்தால் நிபந்தனையற்ற அடிமையாக அடங்கி ஒடுங்கி வாழ்பவளே மோட்சத்திற்குப் போவாள் என்று கூறப்பட்டுள்ளது. - (விடுதலை,5.4.1961)

தமிழ் ஓவியா said...


ஏப்ரல் 5ஆம் தேதி மாலை தஞ்சையிலும், திருவாரூரிலும் திரளுவோம் தோழர்களே!


தமிழ் நாட்டு டெல்டா விவசாயிகளின் விவரிக்க முடியாத வேதனையைச் சுட்டிக்காட்டி தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் (23.3.2013 விடுதலை).

தமிழ்நாடு அரசு நிவாரணம் அறிவித்தும் போதிய அளவு உரிய வகையில் போய்ச் சேரவில்லை என்ற உண்மையை அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியும் இருந்தார். திராவிடர் கழகம், அதிமுக ஆட்சியின்மீது குறை சொல்வதற்காக இப்படி சொல்கிறது என்று குற்றம் கூறமுடியாது.

அ.இ.அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்டு)யின் சட்டப் பேரவை உறுப்பினரான தோழர் கே.பாலகிருஷ் ணன் அவர்கள் சட்டப் பேரவையிலேயே இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் வறட்சி நிவாரணம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள பாரபட்சம் குறித்தும் விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக் கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், குத்தகை விவசாயிகளின் குத்தகைப் பாக்கிகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் சட்டப்பேரவை யிலேயே பேசியுள்ளார் (தீக்கதிர், 26.3.2013 பக்கம் 5).

25.3.2013 அன்று சென்னையில் நடைபெற்ற தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டத்தின் தீர்மானத்தில்கூட (எண் - 9) கீழ்க்கண்ட கருத்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காவிரித் தண்ணீரை உரிய நேரத்தில் தேவையான அளவிற்கு ஜெயலலிதா பெற்றுத்தராத காரணத்தால் டெல்டா மாவட்டங்களில் குறுவைப் பயிரும், சம்பா சாகுபடியும் பெருமளவிற்குப் பொய்த்துப் போய் 17 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்த பிறகும், ஜெயலலிதா அறிவித்த ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் கூட இன்னும் விவசாயிகளுக்கு முழுமையாய்ப் போய்ச் சேரவில்லை என்று அந்தத் தீர்மானத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கழகத் தலைவர் அவர்கள் பயிர்களைக் கண்டு மனமுடைந்த ஏழை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட விவரத்தை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சுட்டிக்காட்டியிருக்க வேண்டும்; மறைக்கத் தேவையில்லை.

நீர்த் தட்டுப்பாட்டால் விவசாயம் பொய்த்து டெல்டா மக்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள னர் என்று எடுத்துக் கூறியிருந்தால் மேலும் பலன் கிடைத்திருக்கும் என்று கழகத் தலைவர் தம் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

காவிரி நீர்ப் பிரச்சினையில் பெரும் வெற்றி பெற்று விட்டதாகக் கூறி முதல் அமைச்சருக்கு மிகப் பெரிய அளவில் விழா எடுக்கப்பட்டது. பாராட்டட்டும் - அதில் நமக்கொன்றும் வருத்தம் கிடையாது.

அந்த விழாவிலே விவசாயிகளுக்காக சில அறிவிப்புகளை ஏழை விவசாயிகள் எதிர்பார்த் தனரே - ஆரவாரத்தோடு விழா முடிந்ததே தவிர, விவசாயியின் வறுமைப் பாம்பு கடிக்கு மருந்து இல்லையே!

அதிமுகவின் முக்கிய தோழமைக் கட்சியான சி.பி.அய்.யின் விவசாய சங்கத் தலைவர் தோழர் முகுந்தன் விடுத்த வேண்டுகோள் விழாவுக்கு முன் ஜனசக்தியில் வெளிவந்ததே - விழா வெளிச்சத்தில் இந்தக் கோரிக்கைகள் மறைந்து போயிற்றே என்பதுதான் நமது வேதனை.

சரி - நிதிநிலை அறிக்கையிலாவது மின்னல் தெரிந்ததா? வெறும் அம்மா பாட்டு இருந்ததே தவிர டெல்டா விவசாயிகளின், அம் மாபெரும் கஷ்டத் துக்கு வடிகால் கிடைக்கவில்லையே.

நடுவர் மன்றத் தீர்ப்பு கெசட்டில் வெளியிடப்பட்டு விட்டதாம். இந்தப் பிரச்சினையில் எல்லாம் முடிந்து பட்டாபிஷேகம் சூட்டப்பட்டு விட்டதாக வாண வேடிக்கை விட்டோமானால் நாம் ஏமாந்தவர்கள் ஆவோம்.

இதற்கு முன்புகூட இப்படி நடந்ததுண்டு; நாளை என்ன என்பதுதான் முக்கியம்.

அடுத்த கட்ட நடவடிக்கை இதில் என்ன என்பதுதான் முக்கியம்.

அதனைச் செய்விக்க மத்திய அரசை வற்புறுத் திட வேண்டும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பையும், நடுவர் மன்ற தீர்ப்பையும் கூட குப்பைக் கூடையில் வீசி எறிந்தது கருநாடகம் என்பதை மறந்து விடக்கூடாது.

மேலும் விவசாயம் பஞ்சமர், சூத்திரர்களுக்கான பாவப்பட்ட தொழிலாயிற்றே - (மனுதர்மம் பாவத் தொழில் என்றே கூறுகிறது). அதனால்தான இத் தனை வேதனைகள் - சோதனைகள். விழிப்புணர்வு தேவைப்படும் காலகட்டத்தில்தான் நாம் இருக் கிறோம் என்பதை நம் கழகத் தலைவர் சுட்டிக்காட்டி இருந்தார் (விடுதலை, 22.2.2013).

இவற்றையெல்லாம் வலியுறுத்திடவே வரும் 5ஆம் தேதி மாலை தஞ்சையிலும், திருவாரூரிலும் திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!!

விவசாயப் பெருங்குடி மக்களே!

கட்சி - அரசியல் கண்ணோட்டம் கிஞ்சிற்றும் இல்லாத தமிழ்நாட்டின் உரிமை இயக்கமாம் திராவிடர் கழகம் குரல் கொடுக்கிறது.

பதவிப்பக்கம் செல்லாப் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் கண்ட இயக்கத்தை வழி நடத்தும் தமிழர் தலைவர் வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

திரண்டு வருக - திறனைக் காட்டுக!

மாநில அரசின் காதுகளையும்

மத்திய அரசின் காதுகளையும்

கேட்க வைப்போம் - வாரீர்! வாரீர்!!

- கருஞ்சட்டை -

தமிழ் ஓவியா said...


எப்போதும் கற்போம்! எவரிடமிருந்தும் கற்போம்!!


கற்றுக் கொள்வது என்பதற்கு இதற்குமுன் நம்மில் பலரும் ஒரு குறுகிய பொருளில்தான் புரிந்து கொண்டோம். ஆனால் பகுத்தறிவைப் பயன்படுத்தி யோசித்துப் பார்த்தால், அதற்கு விரிவான விளக்கம் உண்டு.

கற்றுத் தருவோர் எவராயினும் அவர் நமக்கு ஆசிரியர்களே; குரு தான்!

பள்ளிக்கூடம், கல்லூரி, பல்கலைக் கழகம் என்றுதான் அவர்கள் இருப் பார்கள் என்பதில்லை.

இப்போதெல்லாம் நம் வீடுகளி லேயே ஏராளமாக அவர்கள் இருக் கிறார்கள்! யார் அவர்கள்?

அவர்கள்தான் நமது பேரர்களும், கொள்ளுப் பேரர்களும், பேத்திகளும், கொள்ளுப் பேத்திகளும்!

இந்த குமர குருபரர்களுக்குத் தெரிந்த பல்வேறு தொழில் நுட்பச் செய்திகள் - டெக்னாலாஜிக்கல் (Technological) நுட்பங்கள் வயது முதிர்ந்த, குடும்பத் தலைவர் என்ற வெறும் பழம் பெருமையிலேயே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிற நம்மில் பலருக்குத் தெரியாது; நாம் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது மிகப் பெரும் அளவு ஆகும்!

கற்றல் என்பதற்கு வயது இடை வெளி கிடையாது; கூடாது; கூடவே கூடாது! கற்பித்தவர்கள் யார் என்பது பற்றியும் - அய்யோ என்னுடைய பெயர னிடம் இருந்தா மெத்தப் படித்த மோதாவி யாகிய நாம் கற்றுக் கொள்வது என்ற கர்வம் நம்மில் யாருக்கும் தேவையே யில்லை!

யார் யார் வாய் கேட்பினும் அப் பொருள் அறிவதுதான் நம் காலத்திற் கேற்ப பெரும் அரிய தகவல் தொழில் நுட்பம் அடங்கிய கல்வி; காரணம் தற்போதுள்ள யுகத்திற்குப் பெயரே அறிவு யுகத்தின் வெடிப்புகள் - வெளிச்சங்கள்! Knowledge Explosion - “Information Age”

தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத இல்லங்களே பெரிதும் நம் நாட்டில் இல்லை எனலாம்.

அதுபோலவே கைத் தொலைபேசி - செல்போன் கையில் இல்லாத மனிதர் களும் வெகு அபூர்வம்.

வேலை செய்யும் பணிப் பெண்கள், கீரை விற்கும் கீர்த்தியம்மாள் முதல் சித்தாளு, கொத்தாளராக இருக்கிற தாய்மார்கள் உட்பட கைத் தொலை பேசியையே பெரிதும் பயன்படுத்துகிறார்கள்!

இது ஒருவகையான அறிவு வளர்ச்சி. கல்வியும்கூட! அமைச்சர் ராசாவின் அரிய பணி, இந்தக் கருவி சாமான்யர் களும் பயன்படுத்தும் - சகல கலா ஆயுதமாக்கி விட்டது!

ஆனால் இதை தொழில் நுட்ப வசதிகளோடு பயன்படுத்த பெரிதும் நாம் யாரிடம் கற்றுக் கொள்கிறோம்?

நம் வீட்டுப் பேரப் பிள்ளைகளிடம் தானே!

7,8 வயது குழந்தை 70, 80, வயது தாத்தாவுக்கும், பாட்டிக்கும் குமரகுருக் களாகி, போதித்துச் சொல்லிக் கொடுக் கின்ற ஆசான்களாகி விடுகிறார்கள்!

அங்கிங்கெனாதபடி எங்கும் இதே நிலைதான்! அதற்காக நாம் வெட்கப் படுகிறோமா?

இல்லையே!

அறிவும் தகவலும் எங்கிருந்து எவரிடமிருந்து, வயது வித்தியாசம் இல் லாமல் கற்றுக் கொண்டு, கடைப் பிடிக்கிறோமா இல்லையா? எனவேதான், இந்த வாழ்க்கைக் கல்விக்கு வாத்தியார்கள் நம் இளை யர்கள் - குழந்தைகள்தானே!

எனவே கற்றலுக்கும், கற்பித்தலுக்கும் வயது இடைவெளி ஒரு பொருட்டே அல்ல.
அது மட்டுமல்ல பெரிய மேதை, படிப்பாளிகள் என்பவர்களுக்குச் சட் டென்று விளங்காத செய்திகள் - சாதாரணமான பட்டறிவு உள்ளவர் களுக்கு பளிச்சென்று விளங்கி விடு கிறதே!

புவி ஈர்ப்பு பற்றிக் (Laws of Gravitation) கண்டுபிடித்த சர். அய்சக் நியூட்டன் என்ற பெரிய விஞ்ஞானி பற்றி ஒரு கதை உண்டு. (இதைப் பல விஞ்ஞானிகளின் பேர்களிலும் மாற்றி மாற்றிச் சொல்லி வருவதும் உண்டு)

தன் ஆய்வுக் கூடத்தில் ஒரு பூனை இருந்ததற்கு - தொல்லை செய்யாமல் போக அவரது அறைக் கதவில் ஒரு ஓட்டை போடச் சொல்லி தன் பணியா ளரிடம் கூறி அவரும் அதேபோல் செய்து கொடுத்தார்.

சில காலம் கழித்து அந்த பூனை குட்டிகளைப் போட்டது. விஞ்ஞானி சொன்னார்: பூனைக்குட்டிகள் போய் வர பக்கத்திலேயே கதவுகளில் ஓட்டைகளைப் போடுங்கள் என்று, அதை செய்யுமுன் பணியாளர் சிரித் தாராம்! ஏன் சிரிக்கிறாய்? என்று கேட்டார் விஞ்ஞானி!

அதற்குப் பணியாளர், அய்யா பூனை போகும் ஓட்டை மூலமே, குட்டிகளும் போகலாமே, அதற்கென ஏன் தனியே ஓட்டை போட வேண்டும் என்று கேட்ட பிறகு அக்கேள்வியில் உள்ள பகுத் தறிவு வெளிச்சமும், இவரது சிந்தனை யில் இருந்த இருட்டும் இவருக்குப் புலப்பட்டதாம்!

அதுபோல நாம் எவரிடமிருந்தும் கற்றுக் கொள்ள எப்போதும் ஆயத்த மாக இருப்பதே அறிவு வழி! வளர்ச்சிப் பாதையாகும்!
-----------கி.வீரமணி -வாழ்வியல் சிந்தனைகள் -4-4-2013

தமிழ் ஓவியா said...


பரிதாபமே!


இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேஷம் காரணமல்ல; மக்கள்மீது உள்ள பரிதாபமே காரணம்.

(குடிஅரசு, 8.9.1940)

தமிழ் ஓவியா said...


சிறீரங்கம் மாநாடு

சிறீரங்கத்தில் திராவிடர் எழுச்சி மாநாடு 4.4.2013 அன்று வெகு எழுச்சியோடு நடை பெற்றது.

மார்ச்சு 2,3 ஆகிய நாட்களில் பார்ப்பனர்கள் துறவிகள் மாநாடு என்ற பெயரிலும், கிராமக் கோயில் பூசாரிகள் மாநாடு என்ற பெயரிலும் இரு நாட்கள் அங்கு நடத்தியுள்ளனர்.

துறவிகள் மாநாட்டில் காஞ்சிபுரம் சங்கராச் சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கலந்து கொண்டதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை.

அவர் எதைத் துறந்தார் என்று தெரியவில்லை. மண்ணாசை, பொன்னாசை பெண்ணாசை எதையும் துறந்தவர் இல்லை என்பது ஊர் அறிந்த ஒன்றாகும்.

இந்துக்கள் ஒன்று சேர்ந்தால் ராமன் கோயில் கட்டலாம் என்றும், இந்துக்கள் ஒன்றுபட்டால் நமக்குத் தேவைப்படும் ஓர் ஆட்சியை உண் டாக்கிக் கொள்ளலாம் என்றும் பச்சையாக தன் பாசிச உள்ளக் கிடக்கையை அவிழ்த்து வெளியே விட்டுள்ளார்.

450 ஆண்டு கால வரலாறு படைத்த சிறு பான்மை மக்களான முசுலிம்களின் வழிபாட்டுத் தலத்தை சங்பரிவார்க் கும்பல், பிஜேபி எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பட்டப் பகலில் ஆயிரக் கணக்கில் கூடி திட்டமிட்ட வகையில் அடித்து நொறுக்கி விட்டனர்.

அதன் குற்றவாளிகள் கொஞ்சம்கூட கூச்ச நாச்சமின்றி ராஜா போல சுற்றி வருகிறார்கள். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, வினய் கட்டியார், அசோக் சிங்கால் உள்ளிட்ட பிஜேபி, வி.எச்.பி.யினர் முக்கிய தலைவர்கள் இந்தக் குற்றப் பத்திரிகையில் முக்கிய இடம் பெற்றுள்ளனர்.

வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் (இவ்வளவு காலம் தீர்ப்பு அளிக்கப்படாதது பெருங்குற்றமே!) ஒரு மடாதிபதி அங்கு ராமன் கோயில் கட்டுவோம் என்று சொல்லுவது சரியானதுதானா? இது நீதிமன்ற அவமதிப்பு அல்லவா?

பாபர் மசூதி வெறும் கட்டடம்தான் அதனை இடித்தது குற்றமாகாது என்று சொன்னவர் (தீர்ப்பை முன் கூட்டியே கொடுக்கிறார்) மீது நியாயப்படி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டி ருக்க வேண்டும்.

தாமதிக்கப்பட்ட தீர்ப்பு மறுக்கப்பட்ட ஒன்று என்று வக்கணையாகப் பேசுவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை. 21 ஆண்டு காலமாக இந்த வழக்கில் தீர்ப்புக் அளிக்கப்படவில்லை. இந்தியாவின் நிருவாகம் மற்றும் நீதித்துறை எந்தத் தரத்தில் உள்ளது என்பதற்கு இது ஒரு கண்ணுக்கு எதிரான எடுத்துக்காட்டுதான்.

இரண்டாவதாக சிறீரங்கம் மாநாட்டில் பேசிய காஞ்சி மடாதிபதி இந்துக்கள் ஒன்றுபட்டு நமக்குத் தேவையான ஆட்சியை உண்டாக்க வேண்டும் என்று கூறினார் என்பதன் மூலம் பச்சையாக ஓர் அரசியல்வாதி போல காஞ்சி சங்கராச்சாரியார் செயல்படுகிறார் என்பதை எளிதிற் புரிந்து கொள்ள முடியும்.

மதப் போர்வையில் காவி உடை வேடமிட்டு அரசியல் தந்திர நரிகளாக உலா வரும் இவர்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜெகத்குரு என்றெல்லாம் சொல்லுவது ஒரு வகையான விளம்பர உபாயமே தவிர, மற்றபடி வெகு மக்களுக்கும் இவாளுக்கும் என்ன ஒட்டு உறவு?

நூற்றுக்கு மூன்று பேர்களாக உள்ள பார்ப்பனர்களின் ஒரு பிரிவினருக்கு மட்டும் தலைவர் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளட்டும் - அட்டியில்லை.

துறவிகள் மாநாடு என்று சொல்லி தங்கள் உள்ளத்தில் தேக்கி வைத்துள்ள நஞ்சினைக் கொட்டுகிறார்கள் என்பதைக் கணிக்க, கவனிக்க தவறக் கூடாது.

இந்த நிலையில் தான் திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் அதே சிறீரங்கத்தில் கடந்த 4ஆம் தேதி திராவிடர் எழுச்சி மாநாடு கூட்டப் பெற்று அரிய ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பார்ப்பனர்கள் நடத்திய மாநாட்டுத் தீர்மானங் களையும், திராவிடர் கழகம் நடத்திய மாநாட்டுத் தீர்மானங்களையும் பொது மக்கள் எடை போட்டுப் பார்க்கட்டும்.

எது தேவை? எது தேவையற்றது? எது சமுதாயத்துக்கானது? எது சமுதாயத்துக்குத் தேவையற்றது, என்பதை எளிதிற் தெரிந்து கொள்ளலாமே! 6-4-2013

தமிழ் ஓவியா said...


மூட்டை சோதனை

பிராமணர்கள் தங்கள் பின்னால் திரியும் பிராமணரல்லாதாரிடம் வைத்திருக்கும் மதிப்பு

சென்ற மாதத்திற்கு முன் மதுரையில் நடந்த மாகாண காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் முடிந்து எல்லோரும் திரும்பி ரயிலுக்கு வரும்போது ரயில்வே மேடையில் ஸ்ரீமான் சீனிவாசய்யங் காருடைய சட்டைப் பையிலிருந்த சிறு பணப்பை காணாமல் போய்விட்டதாம். இதற்காகவேண்டி அவர்களுடன் சென்ற இரண்டு முக்கியமான பிராமணரல்லாதாரின் மூட்டையையும், மடியையும் சோதனைப் போட்டுப் பார்த்ததாக ஒரு நிருபர் எழுதியிருக்கிறார்.

இதை நாம் கேட்கும் போது நமது காதில் நாராசம் காய்ச்சி ஊற்றியது போலிருந்தது. அவ்விரண்டு பிராமணரல்லாதாருள் ஒருவர் 5,6 வருஷமாய் காங்கிரஸிலுழைத்து வரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினர். மற்றொருவர் செல்வாக்கும் மதிப்புமுள்ள பிரபலஸ்தர்.

இவர்கள் ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் பணப்பைக் காணாமல் போனதற்காக எந்தக் காரணத்தைக் கொண்டானா லும், தங்கள் மூட்டையைப் பிரித்துக் காட்டினதற்கு நாம் மிகவும் வெட்கப் படுகிறோம்.

அல்லாமலும் இந்தப் பிராமணர்களுக்கும் இவர்களைப் பரிசோதனை செய்யும்படியானதோர் தைரியமேற்பட்டதானது பிராமணரல்லாதாரின் நிலையை இகழ்ந்து காட்டுகிறது. இன்னும் சிலருக்கு எந்தச் சமயத்தில் என்ன மரியாதைகள் கிடைக்குமோ கடவுளுக்குத்தான் தெரியும்.

- குடிஅரசு - செய்தி விளக்கம் - 25.04.1926