Search This Blog

17.2.13

நல்ல பெயர் வாங்க விரும்புபவன் பொது நன்மைக்கான வேலை செய்ய முடியாது



அன்புள்ள தலைவர் அவர்களே! தோழர் டி.சண்முகம் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! நான் இன்று சென்னைக்கு ஆஸ்பத்திரியில் சேருவதற்காக வந்தேன். இங்கு என்னால் அதிகநேரம் நிற்கவோ பேசவோ முடியாது. தலைவர் சில வார்த்தைகள் கூறுமாறு சொன்னார். நான் சொல்லுவது உங்களுக்கு இனிப்பாயிருக்காது. ஆனால், என் இயற்கைக் குணம் உங்களுக்குத் தெரியும். தோழர்கள் டி.சண்முகம், கயப்பாக்கம் ஜமீன்தார் முத்துலிங்கம் ஆகியோர் என்னுடைய நண்பர்கள். அவர்களுக்கு ஏற்பட்ட இந்தப் பாராட்டுதலை எனக்கு ஏற்பட்டதைப் போலவே கருதுகிறேன். என் விஷயத்தில் அவர் களுக்கு மிக மரியாதையும் நம்பிக்கையும் உண்டு. அவர்கள் விஷயத்தில் எனக்கு மிகுந்த மதிப்பும் நம்பிக்கையும் உண்டு. அவர்களைப் பற்றிப் பாராட்டிப் பேசுவது என்னையே பாராட்டிக் கொள்வதாகு மென்று கருதுகிறேன்.

அவர்களைப் பற்றி உங்களுக்கு நன்றாய்த் தெரியும். அவர்கள் இயற்கையில் வீரர்கள் எந்தக் காரியத்தையும் துணிந்து செய்யக் கூடியவர்கள். தாழ்த் தப்பட்ட மக்களுக்கும், ஏழை மக்களுக்கும் நண்பர்கள். பொது வாழ்வில் அடியோடு சுயநலத்தைச் சம்பந்தப்படுத்தாதவர்கள். அவர்களைப் பற்றிய வார்த்தைகளை இவ்வளவோடு விட்டுவிட்டு, என்னுடைய கொள்கைகளையும், அனுபவத்தையும் ஒட்டிச் சில யோசனைகளை அவர் களுக்குச் சொல்லுகிறேன்.

அதன்படி அவர்கள் சிந்தித்துச் சரி யென்று பட்டதைச் செய்ய வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன்.

தோழர்களே! நானும் எனது நண்பர் ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் ஏதாவது ஒரு வகையில் ஒத்துப்போய் இந்த மாகாண அரசியலைக் கைப்பற்றும் நிலைமை ஏற்பட்டிருந்தால், உண்மையில் இந்த ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி முதலியவைகளைக் கலைத்தே இருப்போம். அல்லது பொப்பிலி ஆட்சி இதுவரையில் இருந்திருக்குமானால் - இந்த ஜில்லா போர்டுகளின் அதிகாரங்களை வெகுவாகக் குறைக்கப்படவே, அதிகாரங்களைக் குறைக்கவே செய் திருப்பேன்.

தாலுகா போர்டைக் கலைக்காமல் இருந்தால் நன்றாயிருக்குமென்று தலை வர் குமாரராஜா அவர்கள் சொன்னார்கள். தாலுகா போர்டை எடுப்பதற்குத் தூண்டுதல் செய்து கொண்டி ருந்தவன் நான்தான். இது டாக்டர் சுப்பராயன் அவர்களுக்கும் பொப்பிலி ராஜா அவர்களுக்கும் தோழர் ராஜகோ பாலாச்சாரி அவர்களுக்கும் தெரியும்.

கட்சி காரியத்திற்காக இந்த ஸ்தாபனங்கள் வேண்டுமென்பது சிலருடைய அபிப்பிராயம். ஜில்லா போர்டைக் கலைத்து விட வேண்டுமென்று சொன்ன ஆச்சாரியார் அவர்களும் அரசியலைக் கைப்பற்றின பிறகு, அவற்றைக் கலைக்காமற் போனதற்குக் காரணம், அவர் கட்சிக்கு அவை பயன்படவேண்டுமென்னும் எண்ணத்தினாலேயே யாகும்.

கட்சிகள் இந்த நாட்டில் பெரும்பாலும் ஜாதி - இனத்தைப் பற்றியவைகளாக இருப்பதால், பொது மக்கள் நலத்தை விட அவரவர்கள் கட்சி நலத்தையே கருதி அரசியல் நடத்த வேண்டியதாகப் போய்விட்டது. இந்த மாதிரியே 2 கட்சிகள் இருக்கிற வரையிலும் நம் நிலைமை இப்படித்தான் இருக்கும்.
எதிரியிடத்திலிருந்து தப்புவதே நம் நோக்கமாயிருப்பதால், மக்கள் நலம் சரிவரக் கவனிக்கப்பட முடிவதில்லை. இது இயற்கையே. ஆனால், சீக்கிரத்தில் ஒரு காலம் வரும்.

இப்போது இந்த ஸ்தாபனத்தில் இருக்கவேண்டியவர்கள் முக்கியமாக மனத்தில் வைக்க வேண்டிய காரியம் ஒன்று உண்டு. அதாவது, பொது ஜனங்களிடத்தில் நல்ல பேர் எடுக்க வேண்டுமே என்கின்ற கருத்தோடு இந்த மாதிரியான ஸ்தாபனங்களில் வேலை செய்யவே கூடாது. நல்ல பேர் எடுக்க கொஞ்சம்கூட முயற்சிக்கவே கூடாது. இதுதான் என்னுடைய பொது நலத்தின் குறிக்கோள்.

நான் பல ஸ்தாபனங்களுக்கு, அதாவது முனிசிபாலிட்டி, தாலுகா போர்டு, தேவஸ்தானக் கமிட்டி, ஸ்கூல் நிர்வாகம், வியாபார சங்கம் முதலிய வைகளுக்குத் தலைவனாக இருந்திருக்கிறேன். ஜில்லா போர்டுக்கும் ஒரு முக்கிய வாயாடி அங்கத்தினனாக இருந்திருக்கிறேன். வேறு சில ஸ்தாபனங் களுக்கும் சர்வாதிகாரியாகவும், தலைவனாகவும் இருக்கிறேன். இவை  ஒன்றிலாவது பொது ஜனங்களிடமோ, நம்மை அனுசரித்துப் பின்பற்றுகிற வர்களிடமோ நல்ல பெயர் வாங்க வேண்டுமே என்று நான் ஒரு நாளும் முயற்சித்ததில்லை. எனது 35 வருடப் பொதுவாழ்வில் நான் நல்ல பெயர் எடுத்ததுமில்லை.

பொது ஜனங்களின் யோக்கியதை எனக்குத் தெரியும். 100-க்கு 85 பேர் தற்குறிகள். தங்களுக்கு வேண்டியவை என்னவென்பதைக் கூடத் தெரியாத வர்கள். தங்கள் முன்னோர்கள் யார்? தங்கள் நாடு எது? தங்கள் ஜாதி - இனம் என்ன? என்பவற்றையே உணராதவர்கள். மீதியுள்ளவர்களில் 14 பேர்கள் சுயநலக்காரர்கள். பக்கத்து வீடு தீப்பிடித்து எரிந்தால் அதை அணைக்க ஒரு செம்புத் தண்ணீர் கூடக் கொடுக்க மனம் வராதவர்கள். அதுவும் நம் வீடு எரியும்போது அணைக்கத் தண்ணீர் வேண்டாமா என்று கருதிக்கொண்டு அதை மிச்சப்படுத்தி வைத்திருக்கும் அவ்வளவு புத்திசாலிகள். இந்தமாதிரி ஜனங்களிடத்தில் ஒரு மனிதன் நல்ல பேர் வாங்குவதென்றால் அது உண்மையான பொதுத் தொண்டு ஆகுமா? அந்த நல்லபேர் பொதுத் தொண்டினால் ஏற்பட்டதாக இருக்க முடியுமா?

இவர்களிடம் நல்ல பேர் வாங்க அனேக பித்தலாட்டங்களும், அயோக்கியத்தனங்களும், ஏமாற்றல்களும் செய்தாக வேண்டியிருக்கும். ஆதலால் தான் பொது ஜனங்களிடம் நல்ல பேர் எடுக்க முயற்சிப்பவன் பொதுத் தொண்டுக்கு லாயக்கற்றவனாவான் என்று சொல்லி வருகிறேன்.

மற்றப்படி, நான் என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுகிறேனென்றால், பொதுநல உணர்ச்சி சிறிதாவது உள்ளவர்கள், பொது மக்களுக்கு உண்மையாக நலம் தரக்கூடிய காரியம் எதுவென்று நடு நிலையிலிருந்து ஆலோசித்து முடிவு கட்டி, அது வேறு யாருக்குக் கேடு தருவதாயிருந்தாலும் சிறிதும் பயப்படாமல், துணிவோடு செய்ய வேண்டும்.

பொதுஜனங்கள் தயவால் மறுபடியும் நாம் இந்த ஸ்தானத்துக்கு வரவேண் டுமே என்று கருதவே கூடாது.

தோழர். டி. சண்முகம் அவர்கள் ஜில்லா போர்டில் எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் கொள்ளையடித்துக் கொண்டு, இரண்டொரு கோயில் களைக் கட்டிப் பார்ப்பனர்களுக்குச் சமாராதனை முதலியவைகளை அடிக்கடி கொடுத்து பல சோம்பேறிகளுக்கும் பரதேசிகளுக்கும் பப்ளிக் ரோட்டில் பொங்கிப்போட்டு சில பத்திரிகைக் காரர்களுக்கு 5,10 என்று பிச்சைக்காசு எறிந்து விடுவார்களானால், தோழர் சண்முகம் பிள்ளை அவர்கள் பெரிய பிரபு ஆகவும், மகா கெட்டிக்கார நிர்வாகி ஆகவும், மகா நாணயஸ்தராகவும், சாகும்வரையில் அவரே அந்த ஸ்தானத்தில் இருக்க வேண்டுமென்று பொது மக்களால் பிரார்த்திக்கப்படுபவராகவும் ஆகிவிடுவார். இது வரையிலும் சற் றேறக்குறைய இந்த முறைதான் - இப்படிப்பட்ட ஸ்தாபனங்களுக்கு இருந்து வந்திருக்கிறது.

பாமர மக்களையும் சுய நலக்காரரையும் திருப்திப்படுத்துவதுதான் பொதுநலத் தொண்டு என்று எண்ணினால், உண்மையான நல்ல காரியம் ஒன்றும் செய்ய முடியாது. இவர்களை லட்சியம் செய்யாமல் நமக்குச் சரியென்றுபட்டதைத் தைரியமாகச் செய்துகொண்டு போனால் அவை இன்றுள்ள மக்களால் போற் றப்படாவிட்டாலும் இவர்களது பின் சந்ததியார் நன்மையடைந்து அவர்களால் போற்றப்படத் தக்கவையாக இருக்கும்.

முன்னோர்கள் செய்துவைத்ததை மாற்றக்கூடாதே என்று கவலைப் படுகிறவர்கள் கோழைகளேயாவார்கள். முன்னோர்களைவிடக் கண்டிப்பாக நாம் அதிக அனுபவசாலிகளே யாவோம். நம்மை விட நமக்குப் பின்னால் வருகிறவர்கள் இன்னும் அனுபவசாலிகளேயாவார்கள். 5 வயதுப் பையனைவிட, 10 வயதுப் பையன் எப்படிக் கொஞ்சம் புத்திசாலியோ, அவனுக்கு விஷயம் தெரிந்து கொள்ள எப்படிப் பல சவுகரியங்களும் சாதனங்களும் இருக்கின்றனவோ, அது போலவே, முன்காலத்தைவிட இந்தக் காலத்தவர்களுக்கு அதிக விஷயம் தெரிந்து கொள்ளச் சில சவுகரியங்களும் சாதனங்களும் இருக்கின்றன. அது போலவே, நமக்கு முன் இருந்தவர்கள் செய்த காரியத்திற்கும், நாம் செய்யவேண்டிய காரியத்திற்கும் தன்மை தெரியவேண்டுமானால், அவர்கள் யார்? நாம் யார்? அவர்கள் லட்சியம் என்ன? நம் லட்சியம் என்ன? என்பவற்றைச் சிந்தித்துப் பார்த்து நாம் செய்ய வேண்டிய காரியத்தைச் செய்ய வேண்டும்.

உதாரணமாக, காந்தி ஆசிரமத்துக்கு காந்தியாருக்குப் பிறகு நான் தலை வனாகப் போனால், அந்தக் குளிர் நாட்டில் காலையில் 5 மணிக்கு எழுந்து அங்குள்ள குழந்தைகளை, வாலிபர் களைத் தண்ணீரில் முழுகவைத்து இராமபஜனை செய்யச் சொல்ல முடியமா? செய்வேனா? அது போலவே, இன்னும் அனேக மகான்கள் என்பவர்களுடைய காரியங்களெல்லாம் இந்தக் காலத்து மகான்கள் - பெரியார்கள் என்பவர்களுக்குப் பொருத்தமாயிருக்க முடியுமா?

ஆகவே, காலத்தையும், எதிர்காலத்தையும்,மக்கள் நிலைமையையும் கவ னிக்க வேண்டும். இந்த நிலைமைக்குக் காரணம் என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும். அதுதான் பொதுநலத் தொண்டு செய்பவர்களுக்கு இருக்க வேண்டிய குணமாகும். அப்படிப்பட்டவர்கள் நம் இடையில் தோழர்கள் டி. சண்முகம், சவுந்திரபாண் டியன் முதலிய வெகுசிலர் தாம் நம் கூட்டத்தில் இருக்கிறார்கள். இவர்கள் பொதுஜன அபிப்பிராயத்தைக் கருதாதவர்கள். அதனாலேயே இப்படிப்பட்டவர் களிடத்தில் எனக்கு அதிக மதிப்புண்டு.

இப்பொழுது நாட்டில் நம் எதிரிகள் ஒரு கிளர்ச்சி துவக்கியிருக்கின்றார்கள். அதாவது சர்க்காரார் மதுபானத்தைப் புகுத்துகிறார்கள் என்றும் அதை நான் ஆதரிக்கின்றேன் என்றும் பிரசாரம் செய்கிறார்கள். அதைப் பற்றி நான் பயப்படவில்லை. சர்க்கார் உத்தரவை நான் வரவேற்கிறேன். இந்த உத்தரவு போடவேண்டுமென்று 3,4 வருட காலமாகவே, வைஸ்ராயிடத்திலும் நம் கவர்னரிடத்திலும் நேரில் பல தடவை சொல்லியிருக்கிறேன். ஆதலால், நான் அந்தக் குற்றச்சாட்டு என்பதிலிருந்து மறைந்து கொள்ள ஆசைப்படவில்லை. பேசுகிறவர்களுக்கு மதுவைப் பற்றிய விஷயம் தெரிந்திருக்குமென்றோ, அல்லது தெரிந்தவர்கள் நாணயமாய் பேசுகின்றார்களென்றோ நான் கருத வில்லை. இந்த உத்தரவை நம் எதிரிகள் சர்க்காரை வையவும், என்னைக் குறைகூறவும் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்கள். தங்களைக் காப்பாற்றிக் கொள்ள சர்க்காருக்குத் தெரியும். என் குறைபாடுகளைப் பற்றி நான் கவலைப் படுவதில்லை.

உண்மையான மதுவிலக்கு எப்படி என்பது எனக்குத் தெரியும். நான் மதுவினால் ஏற்படும் கெடுதியை நீக்க வேண்டுமென்று சொல்பவனே தவிர, அடியோடு மதுவே கூடாது என்கிற வர்ணாசிரமக்காரனல்ல. சுத்தக்காரனோ, அசுத்தக்காரனோ என்பது பாராமல் ஒருவனைப் பிறவி காரணமாகத் தொடக்கூடாது என்பதே வருணாசிரமம். பிறவியைக் கவனிக் காமல் சுத்தமாயிருப்பவனைத் தொட லாமென்பதும், அசுத்தமாயிருப்பவனைச் சுத்தப்படுத்தித் தொடத்தக்கவனாக ஆக்கிக் கொள்ளலா மென்பதும் எனது கொள்கை.

இந்த மேடையை அரசியல் மேடை யாக ஆக்கிக் கொள்ள எனக்கு இஷ்ட மில்லை. இதற்காக வேறு கூட்டம் ஏற்பாடு செய்து. காயலாவோடே ஆஸ்பத் திரியிலிருந்து விடைபெற்றுக்கொண்டு வந்து ஒரு நாளைக்குப் பேசலாமென்றிருக்கிறேன். பின் ஏன் இங்கு இதைச் சொன்னேன் என்றால், நான் பாமரப் பொதுஜன அபிப்பிராயத்துக்கோ, சுயநலக் கூலிப் பத்திரிகைகளின் கூப் பாடுகளுக்கோ செவிசாய்ப்பதில்லை எனத் தெரியப்படுத்திக் கொள்ள வேயாகும்.

                                       --------------------------04.12.1943  அன்று சென்னை, திருவொற்றியூரில் மாலை திருவொற் றியூர் பஞ்சாயத்து போர்டு ஆபீஸ் காம்பவுண்டில், செங்கற்பட்டு ஜில்லா போர்டு தலைவர் தோழர் டி. சண்முகம் அவர்களுக்கும், உபதலைவர் கயப் பாக்கம் ஜமீன்தார் தோழர் கே. முத்துலிங்கம் அவர்களுக்கும் நடத்தப் பட்ட தேநீர் விருந்தின் போது தமிழரின் தனிப்பெருந் தலைவர் பெரியார். ஈ.வெ.ரா. அவர்கள் ஆற்றிய சொற் பொழிவு- - தந்தை பெரியார்- "குடிஅரசு" - சொற்பொழிவு - 18.12.1943

18 comments:

தமிழ் ஓவியா said...


ஈடெது?


நீடாமங்கலத்தையடுத்த இராயபுரம் கழகத்தின் பாடி வீடு - இன்று நேற்றல்ல; நீண்ட காலமாகவே அக் குக்கிராமம் தந்தை பெரியார் கொள்கையிலும் திராவிடர் கழகத்திலும் நீங்கா ஈடுபாடு கொண்டது.

அவ்வூரில் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு வ. காத்தையன் கடந்த 11.2.2013 அன்றுமறைவுற்றார். அவரின் வயது 86. தந்தை பெரியார் ஆணையை ஏற்று திராவிடர் கழகத் தோழர்கள் ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட் டார்கள் (26.11.1957). சட்டத்தை எரித்தால் மூன்றாண்டுக் கடுங்காவல் என்று இந்தப் போராட்டத் துக்காகவே அவசர அவசர மாகச் சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டு இருந்தும் அதனைத் துச்ச மாகக் கருதி 10 ஆயிரம் கருஞ்சட்டைத் தோழர்கள் அந்தப் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

அந்த மகத்தான போர் வீரர்களுள் ஒருவர்தான் இராயபுரம் பெரியார் பெருந் தொண்டர் பெருமைமிகு காத்தையன் அவர்கள்.
பிறகு அவர் காமராசரின் மீதான அனுதாபத்தால் காங்கிரசிலும் இணைந்தார். ஆனாலும் கதர்ச் சட்டைக்கு மேல், தோளில் அந்தக் கறுப்புத் துண்டு அணிகல னாகவே இருக்கும்.

பிள்ளைகளுக்கு அவர் சூட்டிய பெயர்கள் மதி வாணன் கவுதமன், இந்திர ஜித் என்பதுபோல்.

மூப்பு அடைந்த அந்தப் பெரியார் பெருந்தொண்டர் தனது இறுதிக்காலம் நெருங்குவதை உணர்ந்தார்.

தன்னுடைய குடும்பத் தவர்களையும், பிள்ளைகளை யும் அழைத்தார்; முக்கிய மாக நான் ஒன்றைச் சொல்லப் போகிறேன் கவனமாகக் கேளுங்கள். எனது மரணம் நெருங்குகிறது. நான் மரணம் அடைந்த நிலையில் எனது உடல் திராவிடர் கழகத் தோழர்களிடம் ஒப்படைக்கப் பட வேண்டும் எந்தவித மதச் சடங்குகளும் இடம் பெறக் கூடாது; நான் தந்தை பெரியார் தொண்டனாக சுயமரியாதைக்காரனாக வாழ்ந்து வந்து இருக்கிறேன். என் சாவிலும் அந்தக் கொள்கை, என்னைப் பொறுத்தவரையில் காப் பாற்றப்பட வேண்டும் என்பது எனது இறுதி விருப்பம். இதற்கு நீங்கள் சம்மதித்தால் இங்கு இருக்கிறேன். ஏற்க வில்லை என்றால் இப்பொ ழுது என்னிடம் சொல்லி விடுங்கள்; இந்த வீட்டை விட்டே இப்பொழுதே வெளி யில் சென்று விடுகிறேன்! என்று அழுத்தமாகத் தெரி வித்ததோடு மட்டுமல்லாமல், அதனையும் எழுதி வாங்கி வைத்துக் கொண்டார்.

வாழ்விலும் சரி, சாவிலும் சரி, தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்கு எவ்வித மாசும் ஏற்பட்டு விடக் கூடாது என்று கருதுகிற தொண்டர் கள் பெரியார் இயக்கத்தைத் தவிர வேறு எங்கு காண முடியும்?

அவர் மறைந்தவுடன் கருப்புச் சட்டை அணிவித்து மக்கள் பார்வைக்கு வைத் தனர். அன்று மாலையே அவ ருடைய படத்திறப்பும் நடந்தது. என்னே பெரியார் தொண்டர்களின் சீலம்!

வாழ்க பெரியார்!
வளர்க அவர் தம் கொள்கை!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் தோன்றியிரா விட்டால் மனுதர்மம்தான் நம்மை ஆண்டு கொண்டிருக்கும்


மூதறிஞர் குழுக் கூட்டத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஸ். மோகன் கருத்து

சென்னை, பிப்.17- தந்தை பெரியார் தோன்றி யிராவிட்டால் மனு தர்மம் தான் நம்மை ஆண்டு கொண்டிருக் கும், திருமணம் உட்பட அனைத்தும் அதன் படிதான் நடந்திருக்கும் என்றார் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், தமிழக மூதறிஞர் குழு வின் தலைவருமான எஸ். மோகன். சமூக எதிர்பார்ப்பு களும் - தீர்வுகளும் என்ற தலைப்பில், அன்னை மணியம்மை யார் அரங்கத்தில் 9.2.2013 அன்று மாலை, மூதறி ஞர் குழு சார்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய் யப்பட்டிருந்தது. பொறியாளர் சுந்தர ராஜுலு வரவேற்புரை கூற, தலைமையேற்றார் நீதியரசர் மோகன். அதைத் தொடர்ந்து பேரா.அ.ராமசாமி சிறப்புரை யாற்றினார். மேனாள் மாவட்ட நீதியரசர் பரஞ்சோதி நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். திரா விடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் முன்னிலை வகித்தார். தயாளன் ஒருங்கிணைப் புப் பணிகளை செய்தார்.

பெரியாரின் பார்வை அவசியம்

முதலில், பொறி யாளர் சுந்தரராஜுலு தமது வரவேற்புரையில், ஒவ்வொரு தனி மனி தனும் சரியாக இருந் தால் இந்தச் சமூகம் நன்றாக இருக்கும். நாம் தான் இந்த சமூகம். அதற்குப் பெரியாரின் பார்வை ஒவ்வொருவ ருக்கும் அவசியம். அப் படி இருந்தால், அதுவே எல்லாப் பிரச்சினை களுக்கும் தீர்வாக இருக் கும். ஏனெனில், தனி மனித ஒழுக்கம் அவ் வளவு முக்கியம் என்று பெரியாரை நினைவு படுத்தி அனைவரையும் வரவேற்றுப் பேசி அமர்ந்தார்.

நீதியரசர் எஸ். மோகன்

பொறியாளர் சுந்தர ராஜுலுவைத் தொடர்ந்து, நீதியரசர் மோகன் தலைமையுரை ஆற்ற வந்தார். அவர் தமதுரையில்:- பழைய வழக்கு ஒன்றை சுட்டிக் காட்டிப் பேசினார். தெய்வானை ஆச்சி என்பவர் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக பல ஆண்டுகள் வாழ்ந்த பிறகு, அந்தத் திருமணம் செல்லாது என்று வழக்கு வந்தது. அதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்துக்கள் அனைவரும் மனுதர்மத் திற்கு கட்டுப்பட்டவர் கள். மனு தர்மத்திலே என்ன முறை சொல் லப்பட்டிருக்கிறதோ அதன்படிதான் திரு மணம் செய்து கொண் டிருக்க வேண்டும். அதாவது, அக்னி சாட் சியாக ஏழுமுறை வலம் வந்து, அய்யர் மந்திரம் ஓத தாலி கட்டினால் தான் அது திருமணம் என்று தீர்ப்பளித்ததைச் சுட்டிக்காட்டி, நிகழ்ச்சி யின் தலைப்பை நினை வூட்டினார்.

தமிழ் ஓவியா said...


இந்தத் தீர்ப்பானது சமுதாயத்தைப் பொறுத்த வரையில் குறைபாடாக தெரிந் தாலும் சட்டத்தைப் பொறுத்தவரையில் குறைபாடாகத் தெரிய வில்லை. தீர்ப்பு சரி யென்றே நினைத்தனர்.

வெகுண்டெழுந்தார் ஈரோட்டுச் சூரியன்

மேற்கண்ட தெய் வானை ஆச்சி என்பவ ரின் வழக்கையும், அதன் தீர்ப்பையும் கூறிவிட்டு, அதன் தொடர்ச்சியாக தந்தை பெரியாரின் எதிர்வினையை விவரித்தார். அவருடைய எதிர்வினை எதில் போய் முடிந்ததென்றால், சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும் என்று பேரறிஞர் அண் ணாவின் ஆட்சிக் காலத்தில் சட்ட மாகவே நிறைவேறியது. பெரியார் தோன்றியி ராவிட்டால் மனுதர்மம் தான் நம்மை ஆண்டு கொண்டிருக்கும், திருமணங்களும் அந்தப்படியே நடந்து கொண்டிருக்கும். இதற்காகவே 1956 இந்து திருமணச் சட்டம் திருத்தி அமைக்கப்பட் டது என்று கூறிவிட்டு, தமிழாசிரியருக்கும் அவரிடம் பயின்ற ஒரு மாணவனுக்கும் நடந்த பிரச்சினைகளைக் கூறி, அந்தப் பிரச்சினை ஒரு வழக்காகவே தன்னி டத்தில் வந்ததையும், அதில், தான் சமுதாயம் எதிர்பார்த்ததற்கு மாறாக சற்றுக் கடுமை காட்டி தீர்ப்பளித்ததையும் கூறிவிட்டு, சமுதாயம் எதிர்ப்பதை பற்றி நீதிபதிகள் கவலைப்படக் கூடாது. ஆனால் சில நேரங்களில் சமுதாயம் எதிர்பார்ப்பதை செய்ய வேண்டும் என்று முடித் துக் கொண்டார்.

திருவள்ளுவரும் ஒரு நீதிபதிதான்

நீதியரசர் மோகன் அவர்களைத் தொடர்ந்து, மேனாள் அழகப்பா பல்கலைக் கழகத்தின் துணை வேந் தர் பேரா.அ.ராமசாமி சிறப்புரையாற்றினார். அவர் தமதுரையில், தீர்ப்பு என்றால் ஒரே தீர்ப்புதான் இருக்க வேண்டும். அது நிலை யான, நேரான , அறி வியல் ரீதியிலானதாக இருக்க வேண்டும் என்று தீர்ப்புக்கு இலக்கணம் கூறிவிட்டு, அப்படி யொரு தீர்ப்பு யாராவது தந்திருக்கிறார்களா? என்று பார்வையாளர் களைப் பார்த்துக் கேட்டு, அவரே, ஆம். தந்திருக்கிறார்கள். அது வும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே, அவர்தான் திருவள்ளுவர் என்று பதிலளித்தார். தொடர்ந்து அவர், அகரமுதல எழுத் தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு என்ற குறளைக் கூறி, இது ஒரு தீர்ப்பு. இதற்கு அப்பீலே கிடையாது. அவ்வளவு தான் முடிந்தே போய் விட்டது என்று கை தட்டல்களுக்கிடையே கூறிவிட்டு, தொடர்ந்து வரிசையாக குறட்பாக் களை கூறி வள்ளுவர் ஒரு நீதிபதி என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து மேனாள் மாவட்ட நீதிபதி பரஞ்சோதி நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். நிகழ்ச்சியில் வரியியல் அறிஞர் ராஜரத்தினம், பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் சத்ய நாரா யண சிங், பொருளாளர் மனோகரன், தங்கமணி, தங்க தனலட்சுமி, திரு மகள் இறையன், பண் பொளி, இறைவி, செல் வராஜ், உமா, ஆடிட்டர் ஜெயராமன் மற்றும் பல் துறை அறிஞர் பெருமக் களும் அரங்கம் நிறையும் அளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழ் ஓவியா said...

பெண்கள் கொடுத்த கராத்தே அடி!

திருவனந்தபுரத்தில் சங்கு முகம் என்ற கிராமத்தில் கராத்தே போட்டி நடைபெற்றது. அதில் கல்லூரி மாணவி அம்ரிதா மோகன் என்பவரும் கலந்து கொண்டார். பிறகு அவர் ஓட்டல் ஒன்றுக்குச் சென்றுள்ளார்.

அந்த நேரத்தில் அங்கு இருந்த சில இளைஞர்கள் அந்தப் பெண் ணைப் பார்த்து கேலியும், கிண்டலும் செய்தனர். நடனமும் ஆடினர்; அவ் வளவுதான்! கராத்தே வீராங்கனை அல்லவா!

கராத்தே அடி என்ன என்பதைக் காட்டினார்; அவருடன் வேறு சில கராத்தே கற்ற பெண்களும் சேர்ந்து கொண்டனர். அடியும், உதையும் பட்ட அந்த இளைஞர்கள் துண்டைக் காணோம் வேட்டியைக் காணோம் என்று தலைதெறிக்க ஓடியுள்ளனர்.
இதுதான், ஆம்! இதுதான் இன்றைக்கு அவசியம் தேவையாகும். அடி உதவுவது மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான் என்பது நம் நாட்டு சொலவடை!

பெண்கள் என்றால் வீட்டு வேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது, பாத்திரம் கழுவுவது, கும்மி யடிப்பது, கோலாட்டம் அடிப்பது போன்ற அடிமை வேலைக்குத் தயார் செய்யாதீர்கள் என்று தந்தை பெரியார் 1936ஆம் ஆண்டிலேயே சொன்னதை இந்த இடத்தில் நினைத்துப் பாருங்கள் (குடிஅரசு 8.3.1936).

திருவனந்தபுரத்தில் நடந்தது போல் நான்கு இடங்களில் நடக் கட்டும் திமிர் பிடித்த ஆண்கள் பெட்டிப் பாம்பாக அடங்கி விடுவார்கள்.

கல்வி நிறுவனங்களில் முக்கிய மாக மாணவிகளுக்குக் கராத்தே பயிற்சி என்பது கட்டாயப்படுத்தப்பட வேண்டும்.

தமிழ் ஓவியா said...

பில்லி சூன்யமா?

ஒடிசா மாநிலம் கந்தர்கள் மாவட் டத்தில் சிர்லகா என்னும் கிராமம். அவ்வூரில் மர்மக் காய்ச்சலாம். பெரும்பாலோர் பாதிக்கப்பட்டனர்.

இதற்குப் பில்லி சூன்யமே காரணம் என்று ஊருக்குள் புரளி கிளப்பி விடப்பட்டது. யார் வைத்திருப்பார்கள் என்ற ஆராய்ச்சி.

ஒரு தனி வீட்டில் மூன்று வயதான பெண்களும், ஒரு பெரியவரும் வசித்து வந்தனர். அவர்கள்தான் ஏதோ பில்லி, சூன்யம் வைத்து விட்டனர் என்று கூறி, அவர்களை அடித்து உதைத்து, நிர்வாணப்படுத்தி முகத்தில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, தெரு தெருவாக இழுத்துச் சென்றுள்ளனர்.

காவல்துறைக்கு தகவல் சென்று அந்த மூவரையும் மீட்டு, மூவரைக் கைது செய்துள்ளனர்.

என்ன கொடுமை இது! அப்பாவி முதியவர்களை அடித்து நிர்வாணப் படுத்தி தெருத் தெருவாக இழுத்துச் செல்லுவது அசல் காட்டு விலங் காண்டித்தனம் அல்லவா?

மூடநம்பிக்கைகள் மனிதநேயத் திற்கு அப்பாற்பட்டவை என்பது விளங்கவில்லையா?

இதில் எந்தமதமும் விதி விலக்குக் கிடையாது. திருவிடை மருதூரில் உள்ள மகாலிங்கசாமி கோயிலில் மன நலம் பாதிக்கப்பட்டவர்களை அடிக்கும் கொடுமை இன்னும் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது.

ஏர்வாடியில் உள்ள முசுலிம் தர்கா பேய் விரட்டலுக்குப் பிரபலமான இடம். கிறித்தவர்களின் பைபிளில்கூட பேய், பிசாசுகள், சாத்தான்கள் கதை உண்டு.

ஒரு கேள்விக்கு எந்த மதக்காரரும் பதில் சொல்லட்டும்! படித்த டாக்டர்கள், அய்.ஏ.எஸ். அதிகாரிகள் போன்றவர் களுக்கு பேய் பிடிப்பதில்லையே - ஏன்? இந்த நிலையில் உள்ளவர்கள்மீது பில்லி, சூன்யத்தை ஏன் ஏவ முடிய வில்லை? இந்த மூடநம்பிக்கைகள்பற்றி மறைந்த டாக்டர் ஏ.டி. கோவூர் அவர் கள் அறிவியல் பூர்வமாக விரிவாக ஆய்வு செய்து அம்பலப்படுத்தியுள்ளார்.

இவையெல்லாம் புலன்களை ஏய்க்கும் உணர்ச்சிகளே! (Deceptive Perceptions) ஆகும். அறிவியல் மூன்று வகைகளாக பிரிக்கின்றது.

1) மாயப்புணர்ச்சி (Illusion) 2) மயக்கப் புலன் உணர்ச்சி Hallucination) 3) மருட்சி (Delusion) என்று அறிவியல் பூர்வமான காரணங்களைச் சொல்லுகிறது அறிவியல் (விரிவாகத் தெரிந்துகொள்ள கழகம் வெளியிட் டுள்ள பேய், பில்லி, சூனியம், ஆவி, சோதிட மோசடிகள் எனும் நூலை வாங்கிப் படியுங்கள் வெறும் 5 ரூபாய் தான்).

தமிழ் ஓவியா said...

மோடி ஆட்சியின் முகரை

மோடி ஆட்சி முதல் நம்பர் ஆட்சி என்று ஒரு புளுகுப் பிரச்சாரம் செய்து கொண்டு அலைகிறார்கள் அல்லவா!

ஆங்கே சமூக நிலை என்ன? தாழ்த்தப்பட்டவர்கள் கோயில்களுக் குள் நுழைவது பெரும்பாலும் தடுக் கப்பட்டு வருகிறது.

ஆமதாபாத், தாங்குகா வட்டத்தில் கல்கனா கிராமத்தில் நூற்றுக்கும் அதிகமான தாழ்த்தப்பட்டவர்கள் வாழ் கிறார்கள். அந்த ஊரில் உள்ள அய்ந்து கோயில்களிலும் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய முடியாது என்பது - தான் நிலைமை!

தொழிற்சாலை கட்டினார். அதை செய்தார், இதை செய்தார் என்று கொட்டி அளக்கிறார்களே - சமூக மாற்றத்திற்கு ஒரு துரும்பைக் கிள்ளிப் போட்டார் மோடி என்பது போன்ற ஒரே ஒரு செய்தியாவது இதுவரை வந்ததுண்டா?

சிறுபான்மையினர் எதிர்ப்பு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிமை மறுப்பு - இதற்குப் பெயர்தான் பி.ஜே.பி.யின் மோடி அரசு என்பது. இந்த லட்சணத்தில் இவர் பிரதமராக ஆக வேண்டுமாம்!

தமிழ் ஓவியா said...

கலாச்சாரக் காவலர்களோ!

காஷ்மீரில் 10ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியர் மூவர் ஓர் இசைக் குழுவை ஏற்படுத்தி நிகழ்ச்சியை நடத் தினர். இந்த இசைக் குழு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

இதனை காஷ்மீரில் உள்ள மத குருவான பஷிருதீன்அகமது இந்தப் பெண்கள் இசைக் குழுவுக்குத் தடை விதித்துள்ளார். இணையதளம் மூலம் எச்சரிக்கை. அதன் விளைவு அந்தப் பெண்கள் இசைக் குழுவை தொடர்வ தில்லை என்று அறிவித்து விட்டனர்.

இது என்ன வெட்கக்கேடு, இந்துத்துவாவில் சில கலாச்சாரக் காவலர்கள் இருப்பதுபோல, எல்லா மதங்களிலும் இருக்கத்தான் செய் கிறார்கள். ஆடல் பாடல்கூட அல்ல; வெறும் இசை நிகழ்ச்சிதான் -அதற் குக் கூடப் பெண்களுக்கு அனுமதி யில்லை என்றால் அது அசல் பிற் போக்குத்தனம்தானே! மதம் மனிதனுக் கும் பிடித்தால் ஆபத்து

தமிழ் ஓவியா said...


கோவை மண்டல திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்


ஏப்ரல் 21 கோவை சுந்தராபுரத்தில் புரட்சிப் பெண்கள் மாநாடு

நமது இயக்கத்தில் பொறுப்புக்கள் மட்டுமே! பதவிகள் கிடையாது!

கறுப்புச்சட்டை; சமூகப் போராட்டங்களின் சின்னமாகிவிட்டது!

கோவை மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் கழகத் தலைவர் உரையாற்றுகிறார் (15.2.2013, பொள்ளாச்சி)

கோவை, பிப். 17- கோவை மண்டல திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், நீலமலை உள்ளடக்கிய மாவட்டங்கள் பங்கு பெற்று மிகுந்த எழுச்சியுடன், 15.2.2013 மாலை 5 மணிக்கு பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி விவாஹா திருமண அரங்கில் தமிழர் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கழகப் பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், மருத்துவர் பிறைநுதல்செல்வி, கழக அமைப்புச் செயலாளர் உரத்தநாடு குணசேகரன், கோவை மண்டல தி.க. தலைவர் வசந்தம் கு.இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. முன்னதாக குறிச்சி சிற்றரசு, கடவுள் மறுப்புக் கூற, மண்டலச் செயலாளர் திருப்பூர் பாண்டியன் வரவேற்பு ரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...

என் இயக்கம் பனைமரம் மாதிரி

கூட்டத்தில் கழகத் தலைவர் தமது வழிகாட்டுதல் உரையில், உங்களையெல்லாம் சந்திக்கும் போது எனக்கு களைப்பு, சோர்வு, அசதி எதுவும் இல்லை. நிறைய தோழர்கள் வந்துள்ளது எனக்கு ஊக்கமருந்தாக உள்ளது. தலைமைக் கழகம் முடிவுகளை, மாவட்டம், ஒன்றியம், கிளைக்கழகம் வரை தோழர்கள் மத்தியில் கொண்டு செல்லும் தொடர்பணிகளை மாவட்டப் பொறுப்பாளர்கள் செய்ய வேண்டும். கடைக்கோடியில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத வேர்கள், இந்தப் பகுதியைச் சார்ந்தது, ஆனைமலை நரசிம்மன் அனீபா போன்றவர்களின் உழைப்பால் இந்த மேடை காட்சியளிக்கிறது. தொண்டர்கள், தோழர்கள் - இயக்கத்தின் ரத்த ஓட்டங்கள்; இன்றைக்கு குடிஅரசு 43 தொகுதிகள் வெளியிட்டுள்ளோம். குடிஅரசு நூலில் தந்தை பெரியார் சொல்கிறார், என் இயக்கம் பனைமரம் மாதிரி என்று ஏனென்றால் அதற்குத்தான் தண்ணீர் தேவை யில்லை; கிளை கிடையாது; எந்த சீற்றத்தையும் தாங்கி நிற்கக்கூடியது! அதன் நுங்கு சாப்பிடுவதற்கு! இலை வீட்டிற்கு, கொட்டகை பயன்பாட்டிற்கு, வேர்கள் மருந்துக்கு, மரம் கட்டடம் மற்றும் அடுப்புகளுக்கு இப்படி எதையெடுத்தாலும் அதன் உபயோகம் முழுவதும் மனிதர்களுக்குத்தான். மனைமரத்தின் நிறமும் கறுப்பு, நமது நிறம் கறுப்புச் சட்டை. எனவே தான் அய்யா அவர்கள் தென்னை மரத்தை சொல்லாமல், பனை மரத்தை உதாரணம் காட்டிச் சென்றிருக்கிறார்.

கோவை மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துக் கொண்டோர் (15.2.2013, பொள்ளாச்சி)

கறுப்புடை என்றாலே போராட்டம்தான்

இன்றைக்கு சட்டமன்றத்திலேயும் கறுப்புச் சட்டை; மருத்துவமனையில் பணியாற்றும் நர்சுகள் கூட கறுப்புடை அணிந்து போராட்டம் நடத்து கிறார்கள். எனவே தவிர்க்க முடியாத போராட் டங்களின் சின்னமாகவே கறுப்புடை ஆகிவிட்டது.

மாண்புமிகு வரும் போகும்; மானமிகு என்றும் போகாது

ஆயுதமல்லா அறிவுப் புரட்சியை செய்து கொண்டிருக்கிறோம்! அதற்கு சரியான ஆயுதம் தான் நமது கறுப்புச்சட்டை; மாண்புமிகு வந்து போவது. ஆனால் மானமிகு ஒன்றுதான் சுடுகாடு செல்லும் வரை இருக்கும். இப்படி ஓர் இயக்கம் உலகத்திலேயே இல்லை என்று பெரியார் திடலுக்கு வந்து போகும் வெளிநாட்டினர் நம்மைப் பார்த்து வியக்கிறார்கள். இந்த ரயில் ஓடிக்கொண்டே யிருக்கும். அதை ஓட்டுகின்ற என்ஜின் டிரை வருக்குத் தெரியும். எங்கே பிரேக் போடுவது, ரயில் பாதை சரியாக இருக்கிறதா? எதிரே ரயில் வராமல் இருக்கிறதா? என்று பார்ப்பது எங்கள் வேலை, இதன் பயணம் குறிப்பிட்ட இலக்கை, அடைந்து சென்றே தீரும்! நமது தனித்தன்மை, கட்டுப்பாடு, கட்டுப்பாடு, கட்டுப்பாடு, தமிழர்களுக்கு தொல்லை ஏற்படும் போதெல்லாம் திராவிடர் கழகத்தின் தேவை இருந்து கொண்டேயிருக்கும்.

தமிழ் ஓவியா said...

பெரியார் புரட்சிப் பெண்கள் மாநாடு

நமது இயக்கத்தில் வழங்கப்படுவது பொறுப் புக்கள் தானேயொழிய பதவிகளல்ல! நமக்கு ஒழுக்கம், நாணயம், நேர்மை இவை மிக முக்கியம். எதிரிகள், துரோகிகள் உருகிப்போகும் ஐஸ்கட்டி கள்; நாம் பாறைகள் யாரும் நம்மீது மோதமுடியாது. மோதினால் ஆபத்து அவர்களுக்குத்தான்! கோவையில் ஏப்ரல் 21 - பெரியார் புரட்சிப் பெண்கள் மாநாட்டை சிறப்பாக நடத்துங்கள், எழுச்சி மிகு தீர்மானத்தை நிறைவேற்றுங்கள் என்று தோழர்களிடையே கருத்துரை வழங்கினார். கழக மாணவரணி துணைத் தலைவர் இமயவரம்பன் நன்றி கூறினார்.

அதிக அளவில் விடுதலை சந்தா வழங்க முடிவு

கூட்டத்தில் விடுதலை சந்தா சேர்ப்புத் தொகையினை தங்களது மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட சந்தாக்களை முழுமையாக முடித்து விரைந்து வழங்குவதாகவும் கோவையில் நடைபெறும் புரட்சிப் பெண்கள் மாநாட்டை சிறப்பாக நடத்துவதெனவும், நமது மண்டலத்தில் கிராமப் பிரச்சாரத் திட்டத்தை விரிவுபடுத்தி தெருமுனைக் கூட்டங்கள் மூலம் கழகப் பிரச்சாரம் செய்வது கழகத் தலைமை எடுக்கும் முடிவுகளை விரைந்து செய்து முடிப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கோவை பகுத்தறிவாளர் கழக செயலாளர் கண்ணன், கோவை மாநகர தி.க. துணைத் தலைவராக கவி.கிருட்டிணன், பொள்ளாச்சி மாவட்டத் துணைத் தலைவராக சிற்றரசு, மேட்டுப்பாளையம் இளைஞரணி தலைவராக சிவக்குமார், அண்ணூர் ஒன்றிய செயலாளராக பெருமாள் சாமி, செயலாளராக சீனிவாசன் ஆகியோர் கழகத் தலைவரால் அறிவிக்கப்பட்டனர்.

பெரியார் பெருந்தொண்டர் கோவை கண்ணன் அவர்களின் 75ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். (15.2.2013, பொள்ளாச்சி)

கலந்துகொண்டோர்

மண்டலக் கலந்துரையாடல் கூட்டத்தில் பொள்ளாச்சி மாவட்ட தலைவர் பரமசிவம், செயலாளர் மாரிமுத்து, சிற்றரசு, தமிழ்முரசு, செழியன், நாகராஜ், இரவி, பொள்ளாச்சி பாரதி, கழகப் பொதுக் குழு உறுப்பினர்கள் செந்தில்நாதன், திலகமணி, அக்ரி.நாகராஜ், கோவை மாநகரம் மாவட்டத் தலைவர் பிரகஸ்பதி, செயலாளர் இரகுநாத், அமைப்பாளர் தமிழ்செல்வம், பழ.அன்பரசு, ப.க. தலைவர் முனியன், இளைஞரணி செயலாளர் ராஜ்குமார், கு.வெ.கி.செந்தில், சக்தி, பகவதி, மே.ப.ரங்கசாமி, மேட்டுப்பாளையம் மாவட்டத் தலைவர் வேலுசாமி, செயலாளர் வெள்ளியங்கிரி, செல்வராசு, திருப்பூர் மாவட்டத் தலைவர் ஆறுமுகம், நகரத் தலைவர் பாலகிருஷ்ணன், குமாரராஜா, மாவட்டச் செயலாளர் சக்திவேல், கருணாகரன், நீலமலை மாவட்டத் தலைவர் கருணாகரன், செயலாளர் ராஜேந்திரன், டாக்டர் புகழேந்தி மற்றும் கோவை மண்டலத்திலிருந்து 80-க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

குன்னூர் மருத்துவர் கவுதமன், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய அமைப்பாளர் திருமகள், அரியலூர் மாவட்ட தி.க. தலைவர் நீலமேகம், சிந்தனை செல்வன், சாந்தா இராமமூர்த்தி மற்றும் கழக முக்கியப் பிரமுகர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழ் ஓவியா said...


சி.நடேசனார்


பார்ப்பனர் அல்லாதாரே, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத் தோழர்களே, தொழிலாளர் கழகத் தோழர்களே!

இன்று ஒரே ஒரு மணித்துளியாவது எழுந்து நின்று இந்த மனிதனை நினைவு கூருங்கள். உங்கள் குடும்பத்தாரிடமும் உற்றார் உறவினரிடமும் இந்த மனிதன்பற்றி ஒரே ஒரு தகவலையாவது சொல்லி வையுங்கள்.

திராவிடர் இயக்கத்தின் தோற்றுநர் என்ற பெருமைக்குரிய டாக்டர் சி. நடேசனார் அவர்களின் நினைவு நாள் இன்று (1937).

62 ஆண்டுகள் வாழ்ந்த இந்த மாமனிதர் பார்ப்பனர் அல்லாதாராகிய திராவிடர் என்ற இனம் இருக்கும் வரைக்கும் இதயப் பேழையில் நன்றி உணர்வோடு சீராட் டப்பட வேண்டியவர் ஆவார்.

ஆரிய ஆதிக்க முதலைப் பிடியில் மூர்க்கத்தனமாகக் சிக்குண்டு கிடந்த திராவிடரை மீட்டுக் கொடுத்த திராவிடர் இயக்கத்தின் பிரசவ அறை இவர்தான்.

1912இல் அவரால் தோற்றுவிக்கப்பட்ட சென்னை அய்க்கிய சங்கம் தான் திராவிடர் சங்கமாக, தென்னிந்திய நல உரிமைச் சங்கமாக (South Indian Liberal Federation) நீதிக் கட்சியாகப் பரிணமித்தது.

டாக்டராக இருந்து அவர் ஈட்டிய பொருள் எல்லாம் பொது நலம் என்ற கழனிக்கே பயன்படுத்தப் பட்டது.

அவரால் ஆக்க ரீதியாக உருவாக்கப்பட்ட திராவிடர் இல்லம் (Hostel) பார்ப்பனர் அல்லாதார் கல்விக்குப் பால் வார்த்த தாய் வீடாகும். ஏழை -எளிய மக்களுக்குத் தங்கும் வசதி, இலவச உணவு அளித்து நம் மக்களை உச்சிமோந்த பெருமகன் ஆவார்.

இந்த இல்லத்தில் தங்கிப் படித்தவர்கள்தான் பிற்காலத்தில் அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக வந்த டி.எம். நாராயணசாமி அவர் களும், பிற்காலத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக வந்த சிவ சுப்பிரமணிய நாடார் அவர் களும் ஆவார்.

சட்டமன்றத்தில் அவர் கொண்டு வந்த தீர்மா னத்தை இப்பொழுது நினைத் தாலும் மயிர்க் கூச்செரியக் கூடியதாகும்.

பார்ப்பனர் அல்லாதா ருக்குக் கிடைக்க வேண்டிய விகிதாச்சார உரிமை கிடைக்கும் வரை, இனிமேல் அரசாங்க உத்தியோகங்கள் யாவும் பார்ப்பனர் அல்லாதா ருக்கே கொடுக்கப்பட வேண்டும் என்ற தீர் மானத்தைக் கொண்டு வந்தார் (5.8.1921).

கல்லூரிகளில் மாண வர்கள் சேர்க்கைக்குக் கல்லூரிக் குழு அமைக்க வழி செய்தவரும் இந்தப் பெருமகன்தான்.

ஒரு நடேசன் நலிந்தால் நாம் நலிவு கொண்டு விடாமல் 1000 நடேசனைக் காணுவோமாக! - என்று தலையங்கம் தீட்டியது குடிஅரசு (21.12.1937)

வணக்கம் செய்வீர், திராவிடர்களே - இந்த வாழ்வித்த வள்ளலுக்கு!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


சிந்தனைச் சிற்பி


இனி வரும் புதிய அரசியல் திட்டத்தை வழங்க, நமது சுயமரியாதையோர் தேர்தலில் தலையிடுவார் களேயானால் Sweep The Polls என்று சொல்லும் வகையில் முற்றும் அவர் கைக் கொள்ள என்ன தடை?

இவர்கள் முன் யார் நிற்கிறார்கள்? இவர்கள் முன் யார் இருப்பினும், எந்த மகாசபையாக இருப்பினும் சுயமரியாதைத் தொண்டர் கள்முன் பேசும் திறமையில் நிகர் யாருமில்லை என்று சொல்லலாம்.

- இவைகளின் சிறப்பை யோசிக்குங்காலை, உங்கள் இயக்கத்திற்கு ஒரு மகத்தான வருங்காலம் இருக்கிறது. அதற்கு There is a Great Future என்று சொல்லலாம். இனி வருங்காலத்தில் உங்கள் இயக்கம் இந்திய உலகத்திற்குச் சிறந்ததோர் நன்மை பயக்கத்தக்க கருவியாக நிற்கப் போகின்றது. ஆனால் எதிர்கால செல்வாக்கு உங்கள் தளரா வன்மையும், ஆற்றலையும் விட முயற்சியை யும் பொறுத்தது - சுயமரியாதையோருக்கு மதங்கள் ஒழிந்து விட்டதென இன்று கூறலாம்.

இந்த இயக்கம், முதலில் லூத்தர் மிஷன் மதத்தைப் போல், மதங்களைச் சீர்திருத்தும் இயக்கமாக ஆரம்பித்து, இன்று கடவுளென்ற பெயரையே அகராதியிலி ருந்து எடுத்து விடும் போல் தோன்றுகிறது. உங்கள் இயக்கத்தால் தமிழ்நாட்டில் பல்லாயிரவர் வாயில் கட வுளென்ற பெயரைப் பய பக்தியோடு உச்சரிப்பது போய், பரிகாசம் செய்யும் நிலைமையில் வந்துவிட்டது

கடவுளென்ற ஒருவர் இருப்பாராயின், அவர் என்முன் வருவாராயின், அவர் கழுத்தை அறுப்பேன் என்று ஒரு சுயமரியாதை யுணர்வுடன் எழுதுகிறார்! இல்லாத மனப்பான்மை, நமது தமிழ்நாட்டில் இவ்வளவு சீக்கிரத்தில் தோன்றியதற்கு, நமது தோழர் ஈ.வெ.ராமசாமி செய்த அருந்தொண்டும் உழைப்புமே ஆகும் (குடி அரசு 13.11.1932) என்று குடிஅரசு இதழில் எழுதிய சிந்தனைச் சிற்பி மயிலை சிங்காரவேலரின் பிறந்த நாள் இந்நாள் (1860).

மீனவர் சமூகத்தில் பிறந்த அவர் அந்தக் கால கட்டத்திலேயே வழக்குரைஞர் ஆனவர். சுதந்திரப் போராட்டத்துக் காக வழக்குரைஞர் தொழிலைத் தூக்கி எறிந்தவர்.

மூட நம்பிக்கைகளை எதிர்த்து அவர் எழுதிய கட்டு ரைகள் அந்தக் கால கட்டத்தில் மகத்தானவை. குடிஅரசு இதழை அதற்காகப் பயன்படுத் திக் கொள்ள வாய்ப்பும் அளித் தார் பெரியார். இன்னும் சொல்லப் போனால், தனக்கு மாறுபட்ட தாக இருந்தாலும் அந்தக் கருத்தை அப்படியே பதிவு செய்ய சிங்காரவேலருக்கு வாய்ப்பளித்த பெருந்தன்மையும் தந்தை பெரியார் அவர்களையே சாரும்.

வெறும் வர்க்கப் பேதத்தை மட்டும் பேசவில்லை. அதைவிட முதன்மையான வருணபேதம் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்று போர்க் குரல் கொடுத் தவர். சென்னையில் முதல் நாத்திக மாநாட்டை நடத்தி முதல் நாத்திகன் என்று தம்மைப் பறைசாற்றிக் கொண்ட உண்மையான கம்யூனிஸ்டு அவர். போர்க் குண மிகுந்த செயல் முன்னோடி பொதுவு டைமைக் கேகுக. இவன் பின்னாடி என்றார்.

- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

இத்தகைய சிந்தனைச் சிற்பியின் பிறந்த நாள் இந்நாள் (1860). அந்த மாவீரருக்கு ஒரு புரட்சி வணக்கம்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


அழித்தாக வேண்டும்


மக்களைச் சுயமரியாதை இல்லாமல் செய்து மிருகங்களாக்கி, நாய், பன்றிகளைவிட இழிவாய் நடத்த ஆதாரமாய் இருக்கும் மதம் எதுவானாலும் அதை அழித்தாக வேண்டும்.

(குடிஅரசு, 18.12.1927)

தமிழ் ஓவியா said...

வார ஏட்டுக்கு ஒரு சூடு! இது விபச்சாரத்தைவிட இழிவானது குமுதம் ரிப்போர்ட்டர் இதழைக் கண்டித்து சுப.வீ.


சென்னை, பிப். 19- கருத்துச் சுதந்திரம் வேண்டும் என்னும் கருத்துடையவர் கள்தாம் நாம். ஆனால், அநாகரிக மாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் எழுதுவது கருத்துச் சுதந்திரம் ஆகாது. இப்போது வெளிவந்துள்ள குமுதம் ரிப்போர்ட்டர் என்னும் குப்பை இதழ் ஒன்று, நம் தலைவர் கலைஞர் அவர் களையும், குஷ்புவையும் தொடர்புபடுத்தி, மனம் புண்படும் வகையில் எழுதியுள்ளது. இன்னொரு மணியம்மை என்று தலைப் பிட்டு, தன் வக்கிர புத்தியை வெளிப் படுத்தியுள்ளது.

ஒரு பெண் நடிகையாய் இருந்தால் அவரைப்பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாமா? இந்த இதழின் ஆசிரியர் வரதராஜனைப் பார்த்துக் கேட்கிறேன், உங்கள் வீட்டுப் பெண்களைப்பற்றி இப்படி நாங்களும் எழுதட்டுமா? அரசி யல் எழுது, ஆயிரம் விமர்சனங்களை வை, வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால், ஆபாசமாகவும், அருவருப்பாக வும் எழுதித்தான் பணம் சேர்க்க வேண்டுமா? இதனைவிட நீ வேறு பிழைப்பு நடத்தலாமே?

மணியம்மையின் வரலாறு தெரியுமா உனக்கு? 1957 ஆம் ஆண்டு போராட் டத்தில் தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். நம் ஆசிரியர் வீரமணி அவர்கள் அப்போது சட்டக் கல்லூரி மாணவராக இருந்தார். அந்த நேரத்தில், திருச்சி சிறையில், சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றிருந்த மணல் மேடு வெள்ளைச்சாமி, பட்டுக்கோட்டை ராமசாமி ஆகிய இருவரும் சிறையிலேயே இறந்துபோனார்கள்.

இருவரின் உடல் களையும் அதிகாரிகள் சிறையிலேயே புதைத்து விட்டனர். உடனே மணியம்மையார்தான், நடிகவேள் ராதாவின் காரில் சென்னை வந்து அன்றைய முதலமைச்சர் காமராஜர் அவர்களைச் சந்தித்து, வாதாடி, மீண்டும் அவர்களின் உடல்களைத் தோண்டி எடுக்க வைத்தார். அதற்குப் பிறகு அந்த உடல்களை ஏந்தியபடி, திருச்சி முழுவதும் மாபெரும் ஊர்வலத்தை நடத்தி, அய்யா களத்தில் இல்லாதபோதும், இயக்கத்திற்குப் புதிய வலிவை ஊட்டியவர் மணியம்மையார் தான். இந்த வரலாறெல்லாம் வரத ராசன்களுக்கு எங்கே தெரியப் போகிறது?

கண்டதையும் எழுதிக் காசு சேர்ப்பது, பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசுவதைப் போலக் கொடுமையானது. விபச்சார விடுதி நடத்துவதைவிட இழிவானது. (பேசியபடியே, அந்த இதழை அவர் மேடையில் கிழித்தெறிந்தார்).

(16.2.2013 அன்று மாலை, சென்னையை அடுத்துள்ள மேடவாக்கம் பகுதியில் நடைபெற்ற திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை நடத்திய, திராவிட இயக்க நூற்றாண்டு நிறைவுப் பொதுக்கூட்டத்தில், சுப.வீரபாண்டியன் ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது).

தமிழ் ஓவியா said...


இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடுவோம், வாரீர்! பிப்ரவரி 28ஆம் தேதி போராட்டம்!


பிரபாகரன் மகன் படுகொலைப் படங்கள் பொய்யா?

இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடுவோம், வாரீர்!

பிப்ரவரி 28ஆம் தேதி போராட்டம்!

தமிழர் தலைவர் அறிவிப்பு


மாவீரன் பிரபாகரனின் மகன் பாலச் சந்திரனைப் படுகொலை செய்ததோடு அல்லாமல் அந்த உண்மைச் செய்தியை - வெளியில் வந்த படங்களை பொய்யென்று கூறி உலக மக்கள் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவும் இலங்கை அரசின் தூதரக அலுவல கத்தை முற்றுகையிடும் போராட்டம் வரும் 28ஆம் தேதி நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி மூலம் அந்நிறுவனத்தின் இயக்குநர் கெல்லம்மெக்ரே - மாவீரன் பிரபாகரனின் 12 வயது பாலகன் பாலச்சந்திரன் கொடூரமாக மார்பில் அய்ந்து குண்டுகளைப் பாய்ச்சிப் பச்சைப் படுகொலை செய்யப்பட்ட படங்களை உலகெங்கும் பரப்பி பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி விட்டார்.

இன்று உலகளவில் பேசப்படும் முதல் நிலைச் செய்தி இதுதான். இதன் மூலம் இலங்கை சிங்கள இனவாத அரசு - அதன் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் மனிதாபிமானமற்ற கொடிய இட்லர் முகம் உலகெங்கும் அம்பலப்படுத்தப்பட்டு விட்டது.

ஜெனிவாவில் அமெரிக்கத் தீர்மானம் கொண்டு வரப்படும் ஒரு கால கட்டத்தில்...

அதுவும் ஜெனிவாவில் மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்க அரசால் இலங்கைக்கு எதிராகப் புதியதோர் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள ஒரு கால கட்டத்தில் இப்படி ஒரு செய்தி உலகெங்கும் தொலைக்காட்சி மூலம் அதிரடியாக வெளி வந்திருப்பது - இலங்கை அரசின் மீதான உலகப் பார்வை மேலும் கொழுந்து விட்டு எரியக் கூடிய நிலைதான். போர்க் குற்றவாளிதான் ராஜபக்சே என்பதற்குக் கூடுதல் சாட்சியமாகும்.

மிகப் பெரிய நெருக்கடியில் இலங்கை அரசு

கடுமையான - அதேநேரத்தில் உண்மையான இந்தக் குற்றச்சாற்றிலிருந்து எப்படியாவது விடுவிக்கப்பட வேண்டும் என்ற மிகப் பெரிய நெருக்கடிப் பள்ளத்தாக்கில் இலங்கை அரசும், ராஜபக்சேவும் தள்ளப்பட்டு விட்டனர்.

பொய்தானே - இந்தக் கொடியவர்களின் கையில் உள்ள கேடு கெட்ட பொல்லாத ஆயுதம்?

ஹிட்லரும், முசோலினியும், இடி அமீன்களும் என்றாவது உண்மைகளைப் பேசி இருக்கிறார்களா? இலங்கை இராணுவ செய்தித் தொடர்பாளர் (பிரிகேடியர் ரூபன் வானிகசூர்யா) என்ற ஒருவர் பெயரால் பிரிட்டன் சேனல் 4 ஒளிபரப்புப் படங்கள் பொய்யானவை என்று மறுப்பு வெளி வந்துள்ளது.

கெல்லம்மெக்ரே திட்டவட்ட அறிவிப்பு

படுகொலை செய்யப்பட்ட பிரபாகரன் மகன் பாலசந்திரன் படம் உண்மையானதுதான்; சித்திரிக்கப் பட்டவையல்ல; வெளியிடப்பட்ட படங்களுக்கான பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ளார் - பிரிட்டன் நிறுவனத்தின் இயக்குநர் கெல்லம்மெக்ரே.

அது மட்டுமல்ல, தமிழ்ப் பெண்களுக்கு எதிராக சிங்கள இராணுவ வெறியர்கள் நடத்திய பாலியல் வன்கொடுமை, சரண் அடைய வந்த போராளிகளை சுட்டுக் கொன்ற காட்சிகள் எல்லாம் விரைவில் ஒளிபரப் பப்பட உள்ளன என்று பிரிட்டன் நிறுவனம் அறிவித் திருப்பதன் மூலம் ராஜபக்சேயின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளார் இயக்குநர் கெல்லம்மெக்ரே.

28இல் முற்றுகைப் போராட்டம்!

இந்த நிலையில் உலக மக்களின் கண்களில் மிளகாய்த் தூள் தூவி உண்மைத் தகவலை முற்றிலும் தகர்த்திட வழக்கமான பொய்ப் பிரச்சாரம் என்னும் பட்டத்தை உலகெங்கும் பறக்க விட முயற்சிக்கிறார்.

ராஜபக்சேயின் இந்தக் கேவலத்தைக் கண்டிக்கும் வகையிலும், கீழே தள்ளியதோடு அல்லாமல் குழியையும் பறிக்கும் இலங்கைப் பாசிச அரசின் முகமூடியைக் கிழிக்கும் வகையிலும், இந்திய அரசே இலங்கைத் தூதரகத்தை இழுத்து மூடு! எனும் முழக்கத்தை முன்னெடுப்போம்.

வரும் 28.2.2013 வியாழன் காலை 11 மணிக்கு சென் னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை திராவிடர் கழகம் மேற்கொள்ளும்.

தமிழின உணர்வாளர்கள் கட்சிகளைக் கடந்து ஓரணியில் ஒன்றுபடுவோம் வாரீர்! வாரீர்!!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


தாண்டவமாடுகின்றன...



இந்திய மக்களின் கல்வி அறிவு வாசனையற்ற தன்மையும், பாமரத் தன்மையும், அடிமைத்தன்மையும் எல்லாம் சேர்ந்து உலகத்தில் வேறு எந்தத் தேசத்திலும் இல்லாத அவ்வளவு மதங்களும், மத வேற்றுமைகளும், மத மாற்றமும் இங்குத் தாண்டவமாடுகின்றன.

- விடுதலை, 30.4.1958

தமிழ் ஓவியா said...


தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையை இலங்கை அரசு மேலும் அதிகப்படுத்தி வருகிறது


வரலாறு மீண்டும் திரும்பும் - ஈழப் படுகொலை ஆவணப்பட இயக்குநர் கருத்து

ராஜபக்சே கும்பல் இனியும் நீடித்தால் இலங்கையில் மீண்டும் ரத்தக்களரி ஏற்படுவதைத் தடுக்க முடியாது என்று ஈழப்படுகொலை ஆவணப்பட இயக்குநர் காலும் மக்ரே கூறியுள்ளார் .

சேனல் - 4 தொலைக்காட்சி ராஜபக்சே அரசு அரங்கேற்றிய கொடூர நிகழ்வுகளை ஒளிபரப்பி யுள்ளது . காலும் மக்ரே தலைசிறந்த மனித உரிமை ஆர்வலர் ஆவார் . இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை அவர் வெளிச் சத்திற்குக் கொண்டு வந்துள்ளார் . இதுதொடர்பாக ஏற்கெனவே பல பதிவுகளை அவர் வெளியிட்டுள் ளார். நோ பயர் சோன்: த கில்லிங் பீல்ட்ஸ் ஆஃப் சிறீலங்கா என்ற பெயரில் ஆவணப்படத்தை அவர் உருவாக்கியுள்ளார். ஜெனிவா நகரில் அடுத்த மாதம் அய்.நா. மனித உரிமைகள் மன்றத்தின் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது இந்த ஆவணப்படத்தை திரையிட்டுக் காட்ட காலும் மக்ரே முடிவு செய்துள்ளார். காலும் மக்ரே , கடந்த கால நினைவுகள், நிகழ்கால சம்ப வங்கள் மற்றும் எதிர் காலம் குறித்து அலசி ஆராய்ந்து கட்டுரை எழுதி யுள்ளார். அதில் அவர் குறிப்பிட் டுள்ளதாவது:- இலங்கை அதிபர் ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர் ராணுவச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே ஆகியோர், இலங்கை குற்ற நிகழ்வு கள் குறித்த கடினமான கேள்விக ளுக்கு பதிலளிக்க முடியாத நிலையில் உள்ளனர் . ஏனெனில் இலங்கையை பொறுத்தவரை அரசுக்கும் , ராணு வத்துக்கும் இடையே வித்தியாசம் ஏதுவும் இல்லை. விடுதலைப் புலிகள் குற்றம் இழைத்துள்ளார்கள் என்று இலங்கை அரசு திரும்ப திரும்ப கூறி வருகிறது. விடுதலைப் புலிகளில் ஒரு பிரிவினர் மனித வெடிக் குண்டுகளாக இயங்கினார் கள் . சிறுவர்களை கேடயங்களாகப் பயன்படுத்தினார்கள் என்றெல்லாம் இலங்கை அரசு விடுதலைப்புலிகள் மீது குற்றச்சாற்றுகளை சுமத்துவதால் இலங்கை அரசு தனது குற்றங்களை நியாயப்படுத்த முடியாது.

ஒரு தரப்பின் குற்றத்தால், மற்றொரு தரப்பின் குற்றத்தை ஒரு போதும் நியாயப்படுத்த முடியாது . சர்வதேச மனித நேய சட்டத்தைப் பின்பற்றுகிறோம் என்கிற அரசு, விடுதலைப்புலிகள் குற்றம் செய் தார்கள் என்று கூறி அந்தக் குற்றச்சாற்றின் பின்னால் ஒளிந்து கொள்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்தியாவுக்கும் கடும் தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது. இந்த கேள்விகளுக்கு என்ன பதில்கள் என்பதால் மட்டும் ஏற்பட்ட சங் கடம் அல்ல இது. இந்த கேள்வி களை எழுப்புகிறவர்கள் யார் என்ப தாலும் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலை இது . இவற்றிற்கு எல்லாம் மய்யப் புள்ளியாக இந்தியா இருக்கிறது.

இது ஏற்கெனவே சொல்லப்பட்ட உண்மை தான். ஆனால், இப்போது மீண்டும் அழுத்தம் திருத்தமாக இதை சொல்ல வேண்டிய நிலை ஏற் பட்டுள்ளது . நீதியின்றி அமைதியோ, இணக்கமோ சாத்தியம் இல்லை. அதைப்போல உண்மையின்றி நீதியும், சாத்தியம் இல்லை .இது கல்வியியல் சார்ந்த வாசகம் அல்ல . இது வரலாற் றின் குரலாகும் . இதை தட்டிக்கழித் திட முடியாது, இலங்கையில் கொடூரங்களை அரங்கேற்றிய வர்களே, இப்போது ஆட்சிப்பீடத் தில் அமர்ந்திருக்கிறார்கள். இலங் கையின் வடக்குப் பகுதியில் தமிழர் களை இப்போதும் கொடூரமாக ஒடுக்கி வருகிறார்கள். அரசை யார் விமர்சித்தாலும் அவர்கள் கடும் தண்டனைக்கு இலக்காக்கப்படு கிறார்கள். இலங்கையின் தலைமை நீதிபதி, இலங்கை அரசுக்கு உடன் பாடில்லாத சில கருத்துக்களைத் தெரிவித்தார். இதையடுத்து, அவரை இலங்கை அரசு தலைமை நீதிபதி பதவியிலிருந்து நீக்கி விட்டது. உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண எந்த முயற்சியும் மேற் கொள்ளப்படவில்லை,

தமிழர்கள் தொடர்ந்து அடக்குமுறைக்கு ஆளாகி வருகிறார்கள் . இன்னும் சொல்லப்போனால் தமிழர்களுக்கு எதிரான அடக்கு முறையை இலங்கை அரசு மேலும் மேலும் அதிகப்படுத்தி வருகிறது. தொலை நோக்கில் பார்த்தால் வரலாறு மீண் டும் திரும்பும் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன் . இலங்கையில் மிகவும் உக்கிரமாக மீண்டும் ரத்தக் களரி ஏற்படும். வட்டார உறுதித் தன்மை குலையும் . இலங்கை குற்ற நிகழ்வுகள் குறித்து நம்பத்தகுந்த, பார பட்சமற்ற சுயேச்சையான சர்வதேச ஆய்வு நடத்தப்பட வேண்டுமென்று ஏற்கெனவே அய்.நா. வல்லுநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது . இதற்கு ஏற்பாடு செய்வதுதான் தீர்வுக்கு வழிவகை செய்யும் என்பது இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடு களில் உள்ள மனித உரிமை ஆர்வலர் களின் எண்ணமாகும். வல்லுநர்கள் அடங்கிய சர்வதேசக் குழு, இருதரப்பினர் செய்ததாக சொல் லப்படும் எல்லா குற்றங்கள் குறித்தும் ஆய்வு நடத்த வேண்டும் .இதற்கு இந்தியா ஆதரவு தெரிவித்தால் அது, இலங்கைக்கு மிகவும் இன்றியமை யாத ஆனால் இதுவரை நடை முறைப்படுத்தப்படாமல் தாமதிக்கப் பட்டுவரும், அரசியல் நீதி, அமைதி, இணக்கம் ஆகியவற்றை நிலைநாட் டுவதற்கான தொடக்கமாக அமையும். இவ்வாறு காலும் மக்ரே தமது கட்டுரரையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...


ஜெயலலிதாவை சிக்கலில் மாட்ட வைக்கும் நமது எம்.ஜி.ஆர்.


டாக்டர் நமது எம்.ஜி.ஆர். என்று ஒரு நாளேடு நடந்து வருகிறது. அது, அ.இ.அ.தி. மு.க.வின் அதிகாரபூர்வமான நாளேடாகும்.

அதில் கட்டுரை தீட்டுவோர், பெட்டிச் செய்தி வெளியிடுவோர் எழுதிவரும் விவரங்கள் - அக் கட்சியின் பொதுச்செயலாளரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தக் கூடி யவை. அவர்மீது எளிதாக எதிர் தரப்பினர் தாக்குதல் தொடுப்ப தற்கான வசதியைச் செய்து கொடுத்து வருகின்றனர். எத் தனையோ உண்டு - எடுத்துக் காட்டுக்கு இதோ ஒன்றே ஒன்று.

நமது எம்.ஜி.ஆரில். இம் மாதம் 18 ஆம் தேதி பக்கம் நான்கில் ஒத்தக் குரல் கொடுத்து ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுப்போம்! என்று திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கூறிவிட்டாராம்!

அடேயப்பா அண்ணா தி.மு.க. ஏடு எப்படி எல்லாம் எகிறிக் குதிக்கிறது?

டெசோ நாடகக் கம்பெனியாம்... விமர்சிக்கிறது அந்த ஏடு.

ஈழத் தமிழர் பிரச்சினையில் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவின் நிலைப்பாடு என்ன? இவரைப் போல இந்தப் பிரச்சினையில் சந்தர்ப்ப சதிராடும் வேறு ஒருவரைக் காட்ட முடியுமா?

இந்தியாவைத் தலையிட வைப்பதுபற்றி எல்லாம் பேச ஆரம்பித்துள்ளனரே - நியாயம்தான் - இந்தியா தலையிடவேண்டும்தான்!

ஆனால், செல்வி ஜெயலலிதாவின் நிலைப்பாடு என்ன?

அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட (14.10.2008) தீர்மானத்தைப் பார்த்தால், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் தற்போது நடைபெறும் உள் நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை அய்ந்து முறை முதலமைச்சரான கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது.

இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால், பின்னர் நம் நாட்டு உள்விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறுவிளைவிப்பதாக அமையும். அடுத்த நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளாது.
(டாக்டர் நமது எம்.ஜி.ஆர்., 16.10.2008).

அம்மையார் ஜெயலலிதாவின் இந்தக் கூற்றுக்கு அறிவு நாணயமான முறையில் பதில் சொல்லிவிட்டு, இந்தப் பிரச்சினையில் மேற்கொண்டு மூக்கை நுழைப்பதுதான் சரியாக இருக்க முடியும்.

பந்தை அடிக்க முடியாத பேர்வழி காலை அடிப்பது என்பது ஒரு வகை கோழைத்தனமாகும்.

ஈழத் தமிழர் பிரச்சினை - விடுதலைப் புலிகள்பற்றி பிரச்சினை பற்றி எல்லாம் தமிழர் விரோதமாக செல்வி ஜெயலலிதா எடுத்துக் கூறியவை எல்லாம் வண்டி வண்டியாக இருக்கின்றன.

கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய ஆசைப்பட்டால், அதன் விளைவு என்ன என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இடம் தெரியாமல் காலை வைக்க ஆசைப்படவேண்டாம்!

திராவிடர் கழகத்தின் மீதோ அதன் தலைவர் மீதோ அவதூறு பேச ஆரம்பித்தால், ஆயிரம் ஆயிரம் எதிர் அம்புகள் அம்பறாத் தூணியில் தயார்! தயார்!!

கூடுதல் தகவல் (Tail - Piece)

அத்தகைய பதிலடிகள் வரும்போது செல்வி ஜெயலலிதாவின் முரண் பாடுகளில் தமிழர் விரோத நடவடிக்கைகளும்தான் அம்பலப்படும் - அதன் விளைவு நமது எம்.ஜி.ஆர். ஏட்டின் இத்தகைய எழுத்தாளர்களுக்குத்தான் எதிர்விளைவை ஏற்படுத்தும். அம்மா சேதி தெரியும் அல்லவா!