Search This Blog

28.2.13

ஜாதி சின்னங்களை,பூணூல் அணிவது உட்பட தடைசெய்யப்பட வேண்டும்!


தூக்குத் தண்டனையை ரத்து செய்க!
தென்மாவட்டங்களைப் பாதிக்கச் செய்யும்
முல்லைப் பெரியாறு தடையை நீக்கிச் செயல்படுத்துக!
சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்படட்டும்!!
கம்பம் திராவிடர் கழக மாநாட்டில் அரிய தீர்மானங்கள்
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் டாக்டர் துரை. சந்திரசேகரன் தீர்மானங்களை முன்மொழிந்தார்
கம்பம், பிப். 28- தென் மாவட்டங்களுக்கு மிகவும் தேவைப்படும் முல்லைப் பெரியாறு நீர்ப்பாசனம் வழக்கம்போல அப்பகுதி மக்களுக்குக் கிடைக்கும் வகையில் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் தமிழ்நாடு உரிமையைக் காப்பாற்றும் வகையில் உரிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறு மாநில, மத்திய அரசுகளை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 27.2.2013 அன்று கம்பத்தில் நடைபெற்ற மதுரை மண்டல திராவிடர் கழக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் 1 (அ) :
ஜாதி என்பதும் - அதன் விளைவான தீண்டாமை என்பதும் பகுத்தறிவுக்கும்,  அறிவியலுக்கும், மனிதத் தன்மைக்கும் விரோதமானதால் அந்தப் பிறவி பேதங்களை முற்றிலும் நிராகரித்து, மனிதர்களாக வாழ வேண்டும் என்று இம்மாநாடு தமிழ்ப்பெருங்குடி மக்களைக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 1 (ஆ) :

தீண்டாமை ஒழிப்பு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மிகச் சரியான முறையில், துல்லியமாக செயல்படுத்த வேண்டுமென்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 1 (இ) :

ஜாதி, மத வெறிகளைத் தூண்டுவதோடு வன்முறைக்குத் தூபம் போடும் வகையில் பேசுகிறவர்கள், எழுது கிறவர்கள், நடந்து கொள்பவர்கள் மீது காலந் தாழ்த்தாது சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று இம்மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் 1 (ஈ) :

அரசியலுக்காக ஜாதியைப் பயன்படுத்தும் போக்கை இம்மாநாடு கண்டிக்கிறது. குறிப்பாக தலித்- தலித் அல்லாதார் என்று ஒரு புதிய முறையில் பிளவுபடுத்திட மேற்கொள்ளப்படும் சிந்தனை - அணுகு முறை - செயல்பாடுகள் அபாயகரமான திசைநோக்கி சமூகத்தை இழுத்துச் செல்லும் என்பதை எடுத்துக்காட்டி, சமூக எழுச்சி வரலாறு அத்தகையோரை மன்னிக்காது - மறக்காது என்பதைச் சம்பந்தப்பட்டவர்களுக்கு இம் மாநாடு சுட்டிக்காட்ட விழைகிறது.

தீர்மானம் 2 : 

சமூகநீதிக் கண்ணோட்டத்தில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஆகிய மிகவும் முக்கியமான இவ்விரு சக்திகளும் இணைந்து போராடி பல உரிமைகளைப் பெற வேண்டிய நிலையில் இருப்பதை இம்மாநாடு சுட்டிக்காட்டி, இருகரங்களாக, தோள்களாக இணைந்து செயல்பட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. நம்மில் ஒற்றுமை நீங்கின் ஆதிக்க சக்திகள் தலைஎடுக்க ஏதுவாகும் என்பதை இம்மாநாடு எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டுகிறது. இச்சமூகங்களை வழிநடத்தும் தலைவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் பிளவு மனப் பான்மையை, பகைமை உணர்ச்சியை மறந்தும் கூட ஏற் படுத்தாது, சமூகப் பொறுப்பு உணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீண்டாமை ஒழிப்பு என்பதற்குப் பதிலாக அரசமைப்புச் சட்டத்தில் ஜாதி மறுப்பு திருத்தம் செய்க!

தீர்மானம் 3 : 

இந்திய அரசமைப்புச்சட்டத்தின் 17ஆவது பிரிவில் தீண்டாமை (UNTOUCHABILITY)
ஒழிக்கப்படுகிறது என்று இருப்பதை மாற்றி ஜாதி (CASTE) ஒழிக்கப் படுகிறது என்று அரசியல் சட்டத்திருத்தம் கொண்டு வருமாறு மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக்கொள் கிறது. இந்த வகையில் மாநில அரசுகளும், முற்போக்குச் சிந்தனை படைத்தவர்களும் வலியுறுத்த வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டத்தைச் செயல்படுத்துக!

தீர்மானம் 4 :
(அ) ஜாதியைப் பாதுகாக்கும், ஊக்குவிக்கும் கீதை, மனுதர்மம் போன்ற வேத சாஸ்திர, புராண, இதிகாச நூல்களைத் தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

(ஆ) ஜாதி - தீண்டாமை என்பவை குற்றமானவை. மனித நேயத்துக்கும், சகோதரத்துவத்துக்கும் எதிரா னவை என்ற உணர்வை தொடக்க நிலையிலேயே மாணவர்களுக் குப் போதிக்கும் வகையில் பாடத் திட்டங்களை வகுக்குமாறு மாநில, மத்திய அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

(இ) ஜாதி என்ற அளவுகோல் சமூகநீதிக் கண் ணோட்டத்தில் இட ஒதுக்கீட்டுக்காக மட்டும், மருந்தில் நோய்க்கொல்லியாக விஷம் சேர்க்கும் அளவு பயன் படுத்தப்படவேண்டும் என்றும், வேறு எந்தக் காரணத் துக்காகவும் ஜாதி முன்னிறுத்தப்படக்கூடாது என்றும் இம்மாநாடு அறிவித்துக் கொள்கிறது. இதுவும் கால வரை யற்றதல்ல; ஒரு சமனியம் பெறும் வகையில் மட்டுமே!

(ஈ) பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டங்களைக் கண்டிப்பாகப் போடக்கூடாது.

(உ) ஜாதி சின்னங்களை குறிப்பாக பூணூலை யாரும் அணியக்கூடாது.
ஆவணி அவிட்டம் என்று கூறி பூணூலைப் புதுப்பிப்பது ஜாதி சின்னங்களை.
 தடைசெய்யப்பட வேண்டும்

(ஊ) தெருக்கள், ஊர்கள் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்கள், வணிக நிறுவனங்களில் இடம்பெறும் ஜாதிப் பெயர்கள் நீக்கப்படும் வகையில் சட்டம் இயற்றுமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
(எ) கோயில்களில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வர தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

(ஏ) ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்து கொள் வோர்க்குப் பிறக்கும் குழந்தைகளை ஜாதியற்றவர்களாக அறிவித்து குறிப்பிட்ட சதவிகிதத்தில் அவர்களுக்கு இடஒதுக்கீடு (INTER CASTE QUOTA) அளிக்கப்பட வேண்டும். இந்த வகையான இடஒதுக் கீட்டின் சதவிகிதம் அதிகரித்துக் கொண்டே போக வேண்டும், ஜாதி அளவு கோல் இடஒதுக்கீட்டின் விகிதாச்சாரம் குறைந்து கொண்டு போகும் வகையில் சட்டத்திருத்ததத்தைக் கொண்டு வருமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

(அய்) தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடுகளைக் கட்டும்போது, தனித்தனி காலனிகளைக் கட்டாது, ஊருக்குள் பலரும் கலந்து வாழும் வகையில் கட்டித் தருவதே சமத்துவம், சகோதரத்துவம், சமூக ஒற்றுமைக்கு நிரந்தர வழிவகுக்கும் என்பதை மாநில, மத்திய அரசுகள் கவனத்தில் கொள்ள இம்மாநாடு வற்புறுத்துகிறது.

தீர்மானம் 5 :

ஜாதி மறுப்பு, மத மறுப்பு திருமணங்களையும், காதல் திருமணங்களையும் - துணைவரை இழந்தோர், மணமுறிவு பெற்றோர், மாற்றுத்திறனாளிகள் ஆகி யோருக்கான திருமணங்களையும் ஊக்குவிப்பது, மன்றல் தேடும் விழாக்களை நடத்துவது, அவர்களுக்குப் பாது காப்பு அளிப்பது என்ற ஆக்க ரீதியான செயல்களில் ஈடு படுவது என்று தீர்மானிக்கப் படுகிறது.

தீர்மானம் 6 :

சிலை திருட்டுப் போன்றவற்றிற்குக் காவல் துறையில் தனி உளவுத்துறை இருப்பது போல ஜாதி, மத மோதல் களைத் தொடக்க நிலையிலே தடுக்கும் வகையில், காவல் துறையில் தனிப் பிரிவு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று இம்மாநாடு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள் கிறது.

(அ) இன்னும் தேநீர்க்கடைகளில் இரட்டைக் குவளை முறை, சுடுகாடு மற்றும் சுடு காட்டுக்குச் செல்லும் பாதைப் பிரச்சினைகள், கோயில் திருவிழாக்களில் ஜாதியச் சிக்கல்கள் அவற்றின் காரணமாக கலவரங்கள் - இவற் றிற்கு இடம் இல்லாத அளவுக்கு இராணுவத் தீர்வு போல செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று இம்மாநாடு மாநில, மத்திய அரசுகளுக்குத் திட்ட வட்டமாகத் தெரிவித் துக் கொள்கிறது.

தீர்மானம் 7 :

நீதித்துறை, தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீட் டைச் செயல்படுத்த வேண்டும் என்றும், பதவி உயர்விலும் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரவேண்டும் என்றும் மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

ராமன் பெயரைச் சொல்லி சேது சமுத்திரத் திட்டத்தை முடக்குவதா?

தீர்மானம் 8 :
ராமன் பெயரைச் சொல்லி, தமிழ் நாட்டின் நீண்டகால எதிர்பார்ப்புத் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை முடக்குவதைப் புறந்தள்ளி, மக்கள் வளர்ச்சிக் கண்ணோட்டத்தோடு அத்திட்டத்தை உடனடியாகச் செயல் படுத்த மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 9 :
முல்லைப் பெரியாறு அணையினால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட் டங்களில் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனத்துக்குப் பயன்பட்டு வந்தது. 152 அடி நீரைத் தேக்க வசதி படைத்த இந்த அணையில் வெறும் 136 அடியாகக் குறைக்கப் பட்டதால் 38 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தரிசாகி விட்டன. 86 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஒரு போக சாகுபடி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டன.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் கேரள அரசு அடாவடித்தனமாக 152 அடி தண்ணீரைத் தேக்குவதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இப்பிரச்சனையில் அரசியல் கண்ணோட்டம் இல்லாமல் சட்டப்படியான நிலை தொடருவதற்கு ஆவன செய்யுமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 10 :
ஈழத்தில் இனப்படுகொலை செய்த கொடுங்கோலன் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும் இந்தவகையில் இந்திய அரசு முன்னின்று செயல்பட வேண்டும் என்றும் இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

ஈழத்தில் எஞ்சியுள்ள தமிழர்கள் வாழ்வுரிமை பாதிக் கப்பட்டு, அன்றாடம் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும், இதில் இந்தியா அக்கறைகாட்டி செயல்பட வேண்டும் என்றும் இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது. டெசோ அமைப்பின் செயல்பாடுகளை இம்மாநாடு வரவேற்கிறது. இதற்குத் தமிழர்கள் பெரும் ஆதரவு காட்டி ஈழத்தமிழர் களின் உரிமை வாழ்விற்கு ஒத்துழைப்புக் கொடுக்குமாறு இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தூக்குத் தண்டனையை ரத்து செய்க!

தீர்மானம் 11 :
தூக்குத் தண்டனையை அறவே ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 12 :
டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு அரசு உதவி செய்வது மகிழ்ச்சியளிக்கிறது. அதுபோல வறண்ட, நிலத்தடி நீர் குறைந்து போன மற்ற மாவட்ட விவசாயி களுக்கும்,  அரசு மானியம் வழங்க முன்வரவேண்டுமென இம்மாநாடு தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 13 :
விலைவாசியைக் குறைப்பதற்கு அனைத்து முயற்சி களையும் எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
(திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தீர்மானங்களை முன்மொழிந்தார். பலத்த கரஒலிக்கிடையே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன).
      ----------------------”விடுதலை” 28-2-2013

20 comments:

தமிழ் ஓவியா said...

தடைகளை உடைத்துப் படை நடத்திய பாங்கு!
கம்பத்தில் மக்கள் கடலில் தெப்பமாக மிதந்த மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணி!

திராவிடர் கழக வரலாற்றில் கம்பம் நகரில் இப்படி ஒரு மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணி நடத்தப்பட்டதில்லை என்ற நிலையில், நேற்று (27.2.2013) கம்பத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டினையொட்டிய மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணி பொது மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.

அதுவும் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். போன்ற விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர் தவறான பிரச் சாரத்தை ஏற்படுத்தி வைத்திருந்தனர். மாநாட்டு விளம்பரப் பதாகைகளை இரவோடு இரவாகக் கிழித்துத் தங்களின் கோழைத்தனத்தை வெளிப்படுத்திக் கொண்டனர்.

இவையெல்லாம் ஒன்று சேர்ந்து திராவிடர் கழகத்தின் மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிக் கொடுத்துவிட்டது.

எங்குப் பார்த்தாலும் கழகக் கொடிகள்

மாநாட்டையொட்டி ஊரின் எல்லாப் பகுதிகளிலும், சாலையின் இருமருங்கிலும் கழகக் கொடியைக் கம்பீர மாகப் பறக்கவிட்டிருந்தனர். பல வண்ண சுவரொட்டிகள், பதாகைகள் (பிளக்ஸ்) மாநாட்டுக்குக் கட்டியங்கூறிக் கொண்டிருந்தன.

பேரணி 5 மணிக்குத் தொடங்கியது என்றாலும், பேரணி தொடங்கும் காமராசர் சிலை அருகே பிற்பகல் 3 மணிக்கே பொதுமக்கள் திரளத் தொடங்கிவிட்டனர்.

மக்கள் கடல் அலைமோதியது. மாநாட்டுப் பொறுப் பாளர்களேகூட, இன்னும் சொல்லப்போனால், காவல் துறையினரேகூட எதிர்பார்க்காத அளவில் அவ்வளவுப் பெரிய மக்கள் கூட்டம் எங்கு பார்த்தாலும்!

எங்கு பார்த்தாலும் மக்கள் திரள்!

மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணி தொடங்கப்பட்ட இடத்திலும் சரி, பேரணியின் பாதைகளிலும் சரி முண்டி யடித்துக் கொண்டு பொதுமக்கள் திரண்ட காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.

ஆண்களும், பெண்களும், இருபால் இளைஞர்களும் எக்கச்சக்கமாகக் கூடியிருந்தனர்.

கடைவீதியல்லவா - கேட்கவா வேண்டும். வீடுகளின் மொட்டை மாடிகளில் எல்லாம் மக்கள்! மக்கள்!!

தமிழ் ஓவியா said...

தீச்சட்டி இங்கே - மாரியாத்தாள் எங்கே?

அதுவும் கழக மகளிர் அணியினர் தீச்சட்டி ஏந்தி, தீச்சட்டி இங்கே, மாரியாத்தாள் எங்கே? என்று கழக வீராங்கனைகள் எழுப்பிய முழக்கங்கள் பொதுமக்களை மிரளச் செய்தது. பெண்கள் அதிர்ந்து போனார்கள். இளைஞர்களோ உற்சாகமாகக் கைதட்டி வரவேற்றனர்.

கழக மகளிரணித் தோழியர்கள் மதுரை ராக்கு, போடி பேபி சாந்தா, ஜோதி, கமலா ஆகியோர் தீச்சட்டி ஏந்தி வந்து அதிர வைத்தனர்.

அலகுக் குத்தி காவடி எடுத்து ஆடிப்பாடியும், கடவுள் மறுப்புக் கூறியும் வந்த தோழர்கள் நச்சா (தேவர்), கே.எஸ். முருகேசன், முருகன் முதலிய தோழர்கள்.

அலகுக் குத்தி - கார் இழுத்தல்

இந்த மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணியில் முக்கிய அங்கமாக இருந்தது அலகுக் குத்தி கார் இழுத்து வந்த நிகழ்ச்சியாகும். மதுரை தோழர்கள் எரிமலை, ராஜா ஆகியோர் முதுகில் அலகுக் குத்தி காரை வெகு அலட்சியமாக இழுத்து வந்தனர்.

கடவுள் சக்தி என்று சொல்லி சிறு தேர் இழுக்கும் பக்தரே! கடவுள் இல்லை என்று சொல்லி கார் இழுக்கும் தோழர்களைப் பார்த்தீரா? பார்த்தீரா? என்று முழக்கமிட்டு வந்தனர்.

அந்தக் கார் இழுக்கும் பகுதியில் தொடக்க முதல் கடைசிவரை பெரும் இளைஞர் பட்டாளம் சூழ்ந்திருந்தது.

அரிவாள்மீது ஏறி நின்ற காட்சி

பொதுவாக கோவில் திருவிழாக்களில் கோவில் பூசாரிகள் அரிவாள்மீது ஏறி நின்று, ஆத்தாள் சக்தி! என்று அலட்டிக் கொள்வார்கள்.

தமிழ் ஓவியா said...

அது வெறும் மாயைதான் - ஆத்தாவாவது - அடுப்பங் கரையாவது - இதோ பாரீர்! என்று பளபளக்கும் கூரிய அரிவாள் மீது அனாவசியமாக ஏறி நின்று, கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்று முழங்கியதோடு மட்டு மல்லாமல், சூடத்தைக் கொளுத்தி வாயில் போட்டு முழுங்கி வந்தார் கறம்பக்குடி பெரியார் பெருந்தொண்டர் முத்துவும், அவர்தம் குழுவினரும்! அந்தக் காட்சியும் பொதுமக்களைப் பெரிதும் பரவசப்படுத்தியது. சுருள் கத்தி, தீப்பந்த விளையாட்டுகளையும் கருஞ்சட்டைத் தோழர் கறம்பக்குடி முத்து, செய்து காட்டி வந்தார்.

கொள்கை முழக்கங்கள்!

சுருளி - வனக்குயில் குழுவினரின் டிரம்செட் அதிர வைத்தது.

பேரணிக்குக் கட்டியங் கூறியது, பேரணியில் முழங் கப்படவேண்டிய முழக்கங்கள் தலைமைக் கழகத்தால் அச்சிடப்பட்டு அளிக்கப்பட்டது. மக்கள் மத்தியில் சிந்த னையைத் தூண்டும் அந்த முழக்கங்களை பேரணியில் அணிவகுத்து வந்த கருஞ்சிறுத்தைகளான கழகத் தோழர்கள் முழங்கி வந்தனர்.

திராவிடர் கழகத்தின் கொள்கைகளை, நிலைப்பாடு களை பொதுமக்களுக்குத் தெரிவிப்பதாக அந்த முழக்கங்கள் அமைந்திருந்தன.

மாலை 5 மணிக்குக் தம்பீஸ் திரையரங்கு - காமராசர் சிலையிலிருந்து புறப்பட்ட மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணிக்கு தென்மாவட்டப் பிரச்சார குழு அமைப்பாளரும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான மதுரை தே.எடிசன்ராசா தலைமை வகித்தார். மதுரை மண்டல திராவிடர் கழகத் தலைவர் வே. செல்வம் தொடங்கி வைத்தார்.

தேனி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் ம.சுருளிராசு, மாவட்ட இளைஞரணி செயலாளர் க.சிவா, தேனி மாவட்டக் கழக மாணவரணி தலைவர் சு.சின்னமுத்து, செயலாளர் சி.செல்வக்குமார், மாவட்டக் கழக இளைஞரணி அமைப்பாளர் முத்தமிழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாலை 6 மணியளவில் மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணி முக்கிய சாலை (காந்தி சிலை) வழியைக் கடந்து மாநாடு நடைபெறும் வ.உ.சி. திடலை வந்தடைந்தது.

பகுத்தறிவுப் பயணத்தைத் தொடங்கி, மக்களுக்கு விழிப்பூட்டி அந்தப் பேரணி மாநாட்டுத் திடலை வெற்றிகரமாக வந்தடைந்தது என்றே சொல்லவேண்டும்.

கலை நிகழ்ச்சிகள்

கருங்குழி கண்ணன் குழுவினரின் பகுத்தறிவு இன்னிசை களை கட்டியது.

திக்கெட்டும் பரவட்டும் திராவிடம்! எனும் தலைப் பில் தெற்கு நத்தம் சித்தார்த்தன், பெரியார்நேசன் குழுவினரின் வீதி நாடகம் அமர்க்களம் செய்தது. பொதுவாக இதுபோன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் அந்தப் பகுதியில் நடைபெறுவது இப்பொழுதுதான் முதல் தடவை என்பதால், புத்தம் புதிய பொங்கி எழும் உணர்வுடன் பொதுமக்கள் கலந்துகொண்டு பெரிதும் மகிழ்ந்தனர் என்றே சொல்லவேண்டும்.

தமிழ் ஓவியா said...


கிரானைட் தயாராவது எப்படி?

கிரானைட் பாறைகள், மலைகளை குடைந்து, வெட்டி அல்லது வெடிவைத்து தகர்த்து எடுக்கப் படுகின்றன. முதலில் கிரானைட் கல்லின் அளவு திட்டமிடப்படுகிறது. அப்போது தான், வெட்டும் போது கற்கள் வீணாவது தடுக்கப்படும். வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்கள், தேவையான அளவிற்கு மாற்றப் படுகின்றன. வாட்டர் ஜெட் கட்டிங் என்ற தொழில் நுட்பம் வெட்டுவதற்கு பயன்படுகிறது. சரியான அளவில், வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட்டின் ஓரங்கள், பக்கவாட்டுப் பகுதிகள் சரி செய்யப்பட்டு செப்பனிடப்படும். இது கல் குவாரியிலேயே நடக்கும்.

பின், மொத்தமாக இருக்கும் கிரானைட்டுகள் தேவையான எண்ணிக்கையில், சரியான அளவில் கேலிப்ரேஷன் முறையில் சிறு சிறு துண்டு களாக்கப்படும். கற்கள் பாலிஷ் செய்யப்படும். பின் கணினி தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரத் தின் உதவியுடன், கற்களின் பரிமாணங்கள் சரி செய்யப்படும். இதை ஆஷ்லர் முறை என்பர். பின் கற்கள் விற்பனைக்கு தயாராகும்.

கிரானைட் எப்படி உருவாகிறது?

புவியின் மேல் ஓட்டில், இயற்கையாக உருவாகும் மிக உறுதியான கற்பாறை தான் கிரானைட். பூமியின் அடியில் உள்ள மாக்மா என்ற கற்குழம்பு குளிர்வடைந்து புளுட்டோனிக் பாறை உருவாகிறது. இதுவே நாளடைவில் கிரானைட்டாக மாறுகிறது. பூமிக்குள் 1.5 கி.மீ., முதல் 50 கி.மீ., ஆழத்துக்குள் இம்மாற்றம் நடக்கிறது.இப்பாறைகள், மிக கடினமாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.கிடைக்கும் இடங்களை பொறுத்து, கிரானைட்டின் தன்மை அமைகிறது. இதை வைத்து, தரம் பிரிக்கப்பட்டு, விலை நிர்ணயிக்கப் படுகிறது. கட்டடங்கள் கட்ட கிரானைட் பயன் படுகிறது.கிரானைட்டில், குவார்ட்ஸ், பெல்ட்ஸ்பார், மைக்கா ஆகிய தாதுக்கள் உள்ளன.

கிரானைட் கற்களின் பண்புகள்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், பூமிக்கு அடியில் இருந்த எரிமலைகள், பாறைகளை உருக்கி, திரவ நிலையில் குழம்புகளாக மாற்றின. நாளடைவில் இந்த குழம்பு, குளிர்ந்து கடினத் தன்மையுடைய எரிமலை பாறைகளாக மாறின. இந்த பாறைகள் பல வகைப்படும். அதில் ஒன்று தான் கிரானைட். படிகங்களாலும், களிமண் பாறை களாலும் இந்த கிரானைட், தனித்தன்மை, வடிவம் பெற்றன. மைக்கா மற்றும் சில தாதுக்கள் இதில் உள்ளன. இந்த தாதுக்களைப் பொறுத்து, கிரானைட்டின் நிறங்கள் மாறுகின்றன. இவற்றைப் பொறுத்தே, வலிமையும், நீடித்து உழைக்கும் தன்மையும் பெற்று, மற்றவற்றிலிருந்து தனித்துவம் பெறுகின்றன.

* உயர்தர பாலிஷ் செய்த பின்னும், கிரானைட்டின் சில இடங்கள் டல்லாக இருக்கும். பார்ப்பதற்கு வாட்டர் மார்க் போல் தெரியும். இதை மந்தமான புள்ளிகள் என்பர்.

தமிழ் ஓவியா said...


*கிரானைட்டின் மற்றொரு பண்பு, குழி விழுதல். கிரானைட்டில் உள்ள சிறிய தாதுப் பொருட்கள், பாலிஷ் செய்யும் போதும், வேறு சில காரணங்களாலும் நீங்கி விடும். அப்போது, அந்த இடத்தில் சிறு குழி விழும். இதையும் சரி செய்யும் தொழில்நுட்பங்கள் தற்போது உள்ளன. *பாறைக் குழம்புகள், குளிர்ந்து தனி கல்லாக மாறும் போது, அதில் சில துவாரங்கள் இயற்கையாக உருவாகின்றன. இந்த துவாரங்கள், கிரானைட்டில் இருக்கும். ஆனால், நாளடைவில் இந்த துவாரங்கள், பெரிதாவதோ, சுருங்குவதோ கிடையாது.

கிரானைட்டில் இருப்பது என்ன?

கிரானைட் பாறைகளில், களிமண் பாறைத் தனிமங்கள், படிகக்கல், கறுப்பு அப்ரகம் (பயோடைட்) ஆகியவை இதன் முதன்மை உட்பொருட்கள். களிமண் பாறைத் தனிமங்கள், 65 முதல் 90 சதவீதமும், படிகக் கல் 10 முதல் 60 சதவீதமும், பயோடைட் 10 முதல் 15 சதவீதமும் இருக்கும். இது தவிர, வேறு சில வேதிப் பொருட்களும் இதில் உள்ளன. இவற்றை 2000க்கும் அதிகமான ஆய்வுகள் மேற்கொண்டு கண்டுபிடித்தனர்.

இதில் உள்ள தனிமங்கள்: சிலிக்கன் டை ஆக்சைடு 72.04 (சிலிகா)

அலுமினியம் ஆக்சைடு- 14.42 (அலுமினா)

பொட்டாசியம் ஆக்சைடு 4.12

சோடியம் ஆக்சைடு 3.69

கால்சியம் ஆக்சைடு 1.82

இரும்பு (அய்அய்) ஆக்சைடு 1.68

இரும்பு (அய்அய்அய்) ஆக்சைடு 1.22

மக்னீசியம் ஆக்சைடு 0.71

டைட்டானியம் டை ஆக்சைடு 0.30

பாஸ்பரஸ் பென்டாக்சைடு 0.12

மாங்கனீஸ் (அய்அய்) ஆக்சைடு 0.05

தண்ணீர் 0.03

கிரானைட் சிட்டி

காலத்தால் அழியாத பல நினைவுச் சின்னங்கள், கிரானைட் கற்களால் உருவாக்கப்பட்டுள்ளன. எகிப்து பிரமிடுகள், கிரானைட் கற்களால் ஆனவை. பல்லவ மன்னர்கள் மகாபலிபுரத்தில் உருவாக்கிய சிற்பங்கள், ஒரு வகை கிரானைட் கற்கள் தான். 11ஆம் நூற் றாண்டின் தென்னிந்திய அரசர்கள், கிரானைட்டின் பயனை அறிந்திருந்தனர்.

ராஜராஜ சோழன், கிரானைட் கற்களை பயன்படுத்தி கலைநயம் மிக்க சிற்பங்களை அமைத்தார். பிரிட்டனில் 1832ஆம் ஆண்டு, முதன் முதலில் கிரானைட் கற்கள், பாலிஷ் செய்து பயன் படுத்தப் பட்டன. இக்கால கட்டத்தில் தான், கிரானைட் கற்களின் உபயோகம், கவுரவத்தின் அடையாளமாக கருதப்பட்டது. நவீன காலத்தில், நினைவுச் சின்னங்கள் அமைக்கவும், சிற்பங்கள் வடிக்கவும் கிரானைட் கற்கள் பயன்படுகின்றன.

கட்டடங்களில் அதிகளவு கிரானைட் உபயோகம் இருக்கிறது. ஸ்காட்லாந்தில் உள்ள அபெர்தீன் நகரில், கிரானைட் கற்களை பயன்படுத்தி அதிக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் அந்நகரம், கிரானைட் சிட்டி என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்காவில் கிரானைட்டை பயன்படுத்தி, ரயில் பாதையே அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


வளர்ச்சியடையும்



நமக்குப் புதிதாகக் கருத்துச் சொல்லக்கூடியவர்கள்கூட இப்போது தேவையில்லை. நம் கருத்துகளுக்கு முட்டுக்கனிட்டை போடுபவர்கள் இல்லாமலிருந்தாலே போதும். மனித அறிவும், சமுதாயமும் நல்ல வண்ணம் வளர்ச்சியடையும்.
(விடுதலை, 24.7.1969)

தமிழ் ஓவியா said...


வெற்றிக் கம்பத்தில், கம்பம் பறக்கிறது!

தேனி மாவட்டம் கம்பத்தில் நேற்று (27.2.2013) மதுரை மண்டல திராவிடர் கழக மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது.
இம்மாநாடு பல முறை ஒத்தி வைக்கப்பட்டாலும் நேற்று பொது மக்களின் பெருத்த ஆதரவோடு எழுச்சிக் காவியமாக நடைபெற்றது.

தொடக்க முதலே இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். என்று சொல்லக் கூடிய இந்துத்துவா கும்பல் காவல்துறையிடம் சரண் அடைந்து திராவிடர் கழக மாநாட்டை - பேரணியை நடத்திட அனுமதிக்கக் கூடாது என்று மனுக்களைக் குவித்துக் கொண்டே இருந்தனர்.

இதைவிட கடைந்தெடுத்த கோழைத்தனம் வேறு ஒன்றும் இருக்க முடியாது. திராவிடர் கழகத்தின் கருத்துக்களை, கொள்கைகளை அறிவு ரீதியாக சந்திக்க முடியாத பிற்போக்கு சக்திகள் காவல்துறையிடம் சரண டைகின்றன என்பது இதன் மூலம் சூரிய வெளிச்ச மாகவே தெரிந்துவிட்டது.

தங்களுக்குத் தெளிவான மக்கள் நலம் சார்ந்த கொள்கைக் கோட்பாடுகள் ஏதாவது இருக்குமே யானால் அவற்றைப் பொது மக்களிடம் எடுத்துக் கூற எத்தனையோ வழிமுறைகள் மக்கள் நாயகத்தில் இருக்கத்தான் செய்கின்றன.

திராவிடர் கழகத்தின் கொள்கைகளை பொதுக் கூட்டம் போட்டு தாராளமாகவே விமர்சனம் செய்யலாம். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்? வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறார்கள்? கைச் சரக்கு இல்லாத கையறு நிலையில் காவல் துறையிடம் காகித மனுக்களைக் குவிக்கிறார்கள்.

சில இடங்களில் காவல்துறையிலும் சரியான அணுகு முறைகள் இல்லை என்பதும் பெரிதும் வருந்தத்தக்கது.

எந்த ஊரில் திராவிடர் கழகப் பிரச்சாரம் நடை பெற்றாலும் தி.க.வினர், இந்து மதத்தைத் தாக்கிப் பேசுவார்கள்; எங்கள் மனம் புண்பட்டுப் போய் விடும்; எனவே தி.க., நிகழ்ச்சிக்கு அனுமதிக்கக் கூடாது என்று காவல்துறையிடம் கெஞ்சுகின்றனர்.

புகார் கொடுக்க வந்த அந்தக் கும்பலிடம் கூட்டம் போட்டு தி.க.வினர் பேசுவதற்கு சட்ட ரீதியாக அவர்களுக்கு உரிமை உண்டு; நீங்கள் வேண்டுமானால் தனிக் கூட்டம் போட்டு உங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்லுங்கள் என்று காவல்துறையினர் அவர்களிடம் சொன்னால் அந்தப் பிரச்சினை அந்த இடத்திலேயே தீர்ந்ததாகி விடும். அதற்கு மாறாக இந்துத்துவா பிற்போக்குச் சக்திகள் கொடுத்த புகாரை வைத்துக் கொண்டு, திராவிடர் கழகப் பொறுப்பாளர்களை அழைத்துப் பேசுவதும், சில நிபந்தனைகளைக் கூறுவதும், சில இடங்களில் உங்கள் நிகழ்ச்சிக்கு அனுமதியில்லை என்று சட்ட விரோதமாகக் கூறுவதும் விரும்பத்தக்கதுதானா?

ஒவ்வொரு ஊரிலும் பல்வேறு அமைப்புகள், கட்சிகள் கூட்டங்கள் நடத்தும்போது, வேறு அமைப்பை, கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட்டம் நடத்தக் கூடாது என்று புகார் மனு கொடுத்தால் நிலைமை என்ன ஆகும்?

இந்தப் பொது ஒழுக்கச் சிதைவை காவல்துறை அனுமதிக்கக் கூடாது. கருத்துரிமை, பிரச்சார உரிமை என்பதை இந்திய அரசமைப்புச் சட்டம் அனுமதித்து இருக்கிறது.

இன்னும் சொல்லப் போனால் கம்பம் மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டதைக் காவல்துறையினர் தங்களின் வழி காட்டும் நெறியாக (Code) எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் 51A(h) என்ற பிரிவு மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும். சீர்திருத்தக் கருத்துகளுக்கு ஆக்கம் சேர்க்க வேண்டும்.

அப்படி செய்வது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது.

அந்தச் சட்டரீதியான கடமையைச் செய்யக் கூடிய இயக்கம் இந்தியாவிலேயே திராவிடர் கழகம் மட்டும் தான் செய்து கொண்டிருக்கிறது. நியாயமாக அரசும், காவல்துறையும் திராவிடர் கழகத்தின் இந்தப் பணிக்கு எல்லா வகையிலும் ஆக்கமும், ஊக்கமும் காட்ட வேண்டும்.

இதற்கு மாறாக மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியில் மக்களின் அறியாமையை, மூடநம்பிக்கையை, பக்திப் போதையைத் தெளிய வைக்கும் வகையில் பெண்கள் தீச்சட்டி ஏந்தி வருதல், அலகுக் குத்தி கார் இழுத்தல், அலகுக் குத்தி காவடி எடுத்தல், தீக்குண்டம் இறங்குதல் என்பவை எல்லாம் மனித சக்திதானே தவிர - கடவுள் சக்திதான் என்று நம்புவது அறியாமையே என்பதைப் பொது மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் செயல்முறை விளக்கங்கள் (Demon strations) செய்து காட்டினால், இவற்றை எல்லாம் ஊர்வலத்தில் செய்யக் கூடாது என்று நிபந்தனை விதிப்பது சரியானதுதானா - அரசமைப்புச் சட்டத்தை காவல்துறை இன்னும் தெரிந்து கொள்ள வில்லையா? நிபந்தனைகளை விதிப்பது சட்ட விரோதம் அல்லவா!

இப்படி பல தடைகளையும் மீறி கம்பம் மாநாடு -மக்கள் கடலில் மிதந்தது; அபரிமிதமான ஆதரவு திராவிடர் கழகத்தின் கொள்கைக்குப் பொது மக்களிடம் உள்ளது என்பதற்கான ஆவணமாக அமைந்துவிட்டது. மாநாட் டுத் தலைவரும், மாவட்ட திராவிடர் கழகத் தலை வருமான மானமிகு போடி இரகுநாகநாதன் தலைமை உரையில் கூறியதுபோல தேனி மாவட்டத்தில் அனைத்துப் பகுதியிலும் மூடநம்பிக்கைகளை முறியடிக் கும் பணி தொடரப்படும் - அந்த வகையில் கம்பம் மாநாடு வெற்றிக் கம்பத்தில் பறக்கிறது. வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம்

வாழ்வியல் சிந்தனை

விடுதலை (2.2.2013) வெளி வந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் வாழ்வியல் சிந்தனைகள் - எதிலும் கையெழுத்துப் போடுமுன்! என்ற கட்டுரை இன்றையக் காலக் கட்டத்திலே அனைவரும் படிக்க வேண்டிய, படித்து பின்பற்ற வேண்டிய அற்புதமான கட்டுரை.

1. நீங்கள் எதில் கையெழுத்துப் போடுவதாக இருந்தாலும் அதை படித்துப் புரிந்து பிறகே கையொப்பம் இடுங்கள். அப்போதுதான் அதன் மூலம் ஏற்படக் கூடிய விளைவுகளி லிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

2. என்னதான் நமக்கு உயிருக்கு உயிரான நண்பராக இருந்தாலும்கூட ஜாமீன் கையெழுத்து (ளரசநவல) போடும் பழக்கம் கூடாது. கூடவே கூடாது. அந்த நண்பருக்கு, உறவினர்களுக்கு நீங்கள் எந்த அளவு வேண்டுமானா லும் உதவி செய்யலாம். ஜாமீன் கையெழுத்துப் போடுவது மட்டும் கூடாது என்பது வாழ்க்கையில் கடைப் பிடிக்க வேண்டும்.

திசை தடுமாறி வரவுக்கு மேல் செலவு செய்து எப்படியாவது பணம் பெற ஜாமீன் போட்டு வாழ்க்கையை இழந்தவர்கள் பலர் உண்டு. தக்க தருணத்தில் ஆசிரியரின் கட்டுரை அனைவருக்கும் நல்வெளிச்சம்!

14.2.2013 விடுதலையில் வெளிவந்த வாழ்வியல் சிந்தனைகள் தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய கட்டுரை யான எத்தனை காலம் தான் ஏமாறுவரோ? மூடநம்பிக்கைகள், குருட்டு நம்பிக்கைகள் எவ்வளவு பெரிய பதவி யிலிருப்பவர்களையும் விட்டு வைப்ப தில்லை என்பதை விளக்கி ஆதாரப் பூர்வ செய்தியாக மத்திய பிரதேச முதல் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான், வள்ளல் டாக்டர் ஆர்.எம். அழகப்பச் செட்டியார், ஓமந்தூரார், ராஜீவ்காந்தி ஆகியோர் ஏமாற்றிய ஆசாமிகள் ஏமாந்த கதைகள் - எத்தனை காலம்தான் ஏமாறுவதோ? தந்தை பெரியார் கூறுவது போல் படிப்பு வேறு - அறிவு வேறு - ஆசிரியரின் கட்டுரை அறிவுப் பொக்கிஷம்.

3. மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் முனைவர் வா. நேரு அவர் கள் எழுதிய ஏய்த்துப் பிழைக்கும் தொழிலே சரிதானா? என்ற கட்டுரைகள் பிரார்த் தனை மோசடி குறித்தும் - பார்ப்பனர் களின் பித்தலாட்டம் குறித்தும் விரிவாக ஆராய்ச்சிப் பூர்வமாக அருமையாக இருந்தது.

இக்கட்டுரைகள் குறித்து மாவட்ட கழகத் தலைவர் என். இனிய நண்பர் இரா. வீரபாண்டி அவர்களுடன் கலந்துரை யாடிய போது, தமிழர் தலைவரின் வாழ்வியல் சிந்தனைகளையும், விடு தலையும் ஒருவர் தொடர்ந்து படித்தால் சிந்தனைத் தெளிவும், சீரிய தன்னம் பிக்கையும், ஏற்படுவது உறுதி! தமிழர் களின் பகுத்தறிவு சூரியன் விடுதலை!

தமிழர்களின் சுயமரியாதைச் சுடர் விடுதலை!

வாழ்க பெரியார்! வளர்க பகுத் தறிவு! வெல்க விடுதலை!

- தி.க. பாலு
மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்,
திண்டுக்கல் மாவட்டம்

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்

சக்தி!

செய்தி: பங்காரு அடிகளாரின் மனைவி, மகன்கள் முன்ஜாமீன்.

சிந்தனை: அம்மாவின் சக்தி இவ்வளவு தானா?

#####

பிசினஸ்

செய்தி: சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் திருப்பதி ஏழுமலையான் உருவம் பொறித்த கடிகாரத்திற்கு ரூ.27 லட்சம் விலை வைத்துள்ளது.

சிந்தனை: ஏழுமலையான் தரிசனத்துக்கே ரேட் வைத்துள் ளார்கள். கடவுள் கதையானாலும் எல்லாம் பிசினஸ் தானே!

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் செயல்படுத்த வலியுறுத்தி மதுரையில் மாபெரும் மாநாடு!


கம்பம் மாநாட்டில் தமிழர் தலைவர் அறிவிப்பு

கம்பம், பிப்.28- தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டமான நீண்ட கால எதிர்பார்ப்புத் திட்ட மான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் சார்பில் கட்சிக்கு அப்பாற்பட்ட முறையில் மதுரையில் பொது மாநாடு நடத்தப்படும் என்றார் திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

கம்பத்தில் நேற்று (27.2.2013) நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் குறிப் பிட்டதாவது:

மாநாட்டையொட்டி காலையில் யாதவர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்கம் நிறைவுரையிலும் மாலை பொது மாநாட்டின் நிறைவுரையிலும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது: தென் மாவட்டங்களை குறிப்பாக தேனி மாவட் டத்தைப் பொறுத்த வரையில் மிக முக்கியமான பிரச்சினை முல்லைப் பெரியாறு பற்றியதாகும்.

இந்தப் பிரச்சினைக்காக கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி மக்கள் கட்சிகளைக் கடந்து ஓரணியில் திரண்டு நின்று தங்கள் உரிமை வளர்ச்சியைக் காட்டிய விதம் மிகவும் பாராட்டுக்குரியது. இந்த உணர்வு தமிழ்நாட்டுக்கே வழிகாட்டக் கூடியதாகும்.

தமிழ்நாட்டின் ஒட்டு மொத்தமான பொதுப் பிரச்சினைகளுக்காகப் போராடும் போது கம்பம் பள்ளத்தாக்குப்பகுதி மக்கள் காட்டிய பொது வுணர்வு பின்பற்றப்படத்தக்கதாகும் என்று பாராட் டினார்.

மேலும் தமதுரையில் குறிப்பிட்டதாவது:

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்பது நீண்ட காலமாக தமிழ்நாட்டு மக்கள், அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் திட்டமாகும்.

தமிழ் ஓவியா said...

தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு, அந்நிய செலாவணி வரவு - கண்ணோட்டத்தில் பார்க்கும்பொழுது சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்பது மிக மிக முக்கியமானதாகும். 150 ஆண்டுகளுக்கு மேலாக இத்திட்டம் பற்றிப் பேசப்பட்டாலும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் ரூ.2500 கோடி செலவில் திட் டத்தைச் செயல்படுத்துவதற்கான முயற்சி தொடங் கப்பட்டது.
குறிப்பாக தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர். பாலு அவர்கள் அந்தத் துறைக்கான அமைச்சரான நிலையில், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் மிகுந்த தீவிரம் காட்டினார். திட்டத்தின் முக்கால் பகுதிகள் நிறைவேற்றி முடிக்கப்பட்ட நிலையில் ராமன் என்ற கற்பனைப் பாத்திரத்தை முன் வைத்து அத்திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் சென்று முடக்கி விட்டனர்.

சு.சாமி வழக்குத் தொடுத்தது ஒருபுறம் இருக் கட்டும் - திராவிட இயக்கம் என்று சொல்லிக் கொள்ளும் அண்ணா தி.மு.க.வின் பொதுச் செயலாளராக இருக்கக் கூடிய தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களே இந்தத் திட்டமே கூடாது, ராமன் பாலத்தை இடிக்கக் கூடாது என்று இந்துத்துவா கண்ணோட்டத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பது எந்த வகையில் நியாயம்? எந்தவகையில் சரி? முதலமைச்சராக இருக்கக் கூடியவர் நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, மதத்தை முன்னிறுத்தி திட்டத்தை முடக்குவது சரியானது தானா?

இவ்வளவுக்கும் இதே அ.இ.அ.தி.மு.க. இரண்டு தேர்தல் அறிக்கைகளில் (2001 தேர்தல் அறிக்கை, 2004 தேர்தல் அறிக்கை) என்ன கூறப்பட்டுள்ளது? ராமர் பாலம் என்று எங்காவது கூறப்பட்டுள்ளதா? மணல் திட்டு என்றும் ஆடம்ஸ் பிரிட்ஜ் என்றும் தானேஅ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது அந்தத் திட்டமே கூடாது என்று சொல்லுவது எந்த அடிப்படையில்?
இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், அதன் பெருமை அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும், குறிப்பாக தி.மு.க.வுக்கும் போய்ச் சேர்ந்து விடும் என்கிற அரசியல் குறுகிய நோக்கமும் இதில் இருக்கிறது. சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான தொழில் நுட்ப ரீதியான திட்டத்தை வகுத்துக் கொடுத்தவர்கள் அரசியல் வாதிகள் அல்ல. நீரி என்று சொல்லப்படக் கூடிய தொழில் நுட்ப அமைப்புதான் பல வழித் தடங் களையும் சீர்தூக்கிப் பார்த்து, ஆறாவது கடல் வழித் தடம் தான் உகந்தது என்று முடிவு செய்து அறிவித்தது. தொழில் நுட்ப ரீதியாக முடிவு செய்யப்பட வேண்டிய திட்டத்தை அரசியல் கண் கொண்டு பார்ப்பதும், மதக் கண் கொண்டு பார்ப்பதும் மிகவும் பிற்போக்குத்தனமாகும்.

பி.ஜே.பி., ஆட்சி காலத்தில்தான்....

இன்னும் சொல்லப் போனால் இந்த ஆறாவது வழித்தடத்தில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று முடிவு செய்தது - அனுமதி அளித்தது அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசல்ல - பிஜேபி ஆட்சியில் தான் வாஜ்பேயி பிரதமராக இருந்தபோதுதான் அனுமதி வழங்கப் பட்டது.

அருண்ஜெட்லி, உமாபாரதி, திருநாவுக்கரசர் இவர்கள் எல்லாம் பிஜேபி அமைச்சர்கள் - இவர்கள்தான் ஒவ்வொரு கட்டத்திலும் இந்தத் திட்டத்திற்கு அனுமதி அளித்தனர் என்பதை மறுக்க முடியுமா?

அன்று அனுமதி கொடுத்துவிட்டு, இன்று எதிர்ப்பது ஏன்? இது போன்ற தமிழ்நாட்டின் நலன் சார்ந்த பிரச்சினைகளில் திராவிடர் கழகம் மிகவும் அக்கறை கொண்ட அரசியல் நோக்கமற்ற சமூகப் புரட்சி இயக்கமாகும்.

சேது சமுத்திரத் திட்டத்தின் தொடக்கத்திற்கு விழா நடத்தப்பட்ட அதே மதுரையில், அந்தத் திட்டத்தை நிறைவேற்றியே தீர வேண்டும் என்பதற்கான பொது மாநாட்டை திராவிடர் கழகம் விரைவில் நடத்தும். கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் தமிழர் நலன் சார்ந்த இந்தப் பிரச் சினையில் அக்கறை கொண்ட அனைவரும் அம் மாநாட்டுக்கு அழைக்கப்படுவார்கள் (பலத்த கைதட்டல்) என்று குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...


நம் இளைஞர்களின் நிலை



நாம், நம் இளைஞர்களைத் தயா ரிக்க வேண்டும்; வாக்கு வங்கி அரசிய லுக்குத்தான் நம் இளைஞர்கள் இருக்கி றார்களா?

தந்தை பெரியார், காமராசர், திராவிடர் இயக்கம் இவர்களின் உழைப் பால் இன்று சிகாகோவிலும், லண்டனி லும் கணினிப் பொறியாளர்களாக கைநிறைய சம்பளம் பெறுபவர்களாக இருக்கின்றனரென்றால் அதற்கு எந்தத் தடியும் தாடியும் காரணம்?

இன்று ஆயிரம் ரூபாய் கொடுத்து கிரிக்கெட் பார்க்க டிக்கெட் வாங்குகிற இளைஞர்கள் பல்வேறுப் போதை களுக்கு ஆட்பட்டுள்ளனர் நுகர்வுக் கலாச்சாரம் அவர்களை ஆட்டிப் படைக்கிறது.

யாருக்கோ வந்த விருந்து என்று நினைக்கிறார்கள். ஒரு வீதியில் ஒரு வீடு தீப்பற்றி எரிந்தால், அந்தத் தீ உன் வீட்டுக்கு வர எவ்வளவு நேரம் ஆகும்? என்று தெரியாமல் இருக்கின்றனர்.

இந்த இளைஞர்களை சரியான பாதைக்குக் கொண்டு வரவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது அதனைச் செய்வோம்.

- சென்னை பெரியார் திடல் சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி (25.2.2013)

தமிழ் ஓவியா said...


தூக்குத் தண்டனையை மறு ஆய்வு செய்க! பேரா. சுப.வீரபாண்டியன் முழக்கம்!


சென்னை, மார்ச் 1- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண் டனை விதிக்கப்பட்ட வர்கள் மீதான தீர்ப்பை மறு ஆய்வு செய்ய சட் டத்தில் இடம் உண்டு என்றார் திராவிட இயக் கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீர பாண்டியன். 25.2.2013 அன்று சென்னை பெரி யார் திடலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட் டதாவது.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை யின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீர பாண்டியன் அவர்கள் தமதுரையில் குறிப் பிட்டதாவது:-

நாகப்பட்டினத்தில், தமிழக மீனவர்களுக்காக ஆர்ப்பாட்டம் நடந்த அன்று இந்து ஏட்டில் பாலகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப் பட்டதை பார்த்த போது திடுக்கிட்டோம்.

அதே நேரத்தில் நமது ஆசிரியர் அவர்கள் சென் னையில் இது குறித்து ஒரு பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யலாமா என்று கருத்து கூற பத்தே நிமிடத்தில் இந்த கூட் டம் ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்த நாட்டிலே தண் டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் வரவேற் கப்படுகிறார்கள் - வர வேற்கப் பட வேண்டிய வர்கள் தண்டிக்கப்படு கிறார்கள்.

பாலச்சந்திரன் படு கொலை செய்யப்பட்டுக் கிடந்த காட்சியைவிட அடுத்துத் தனக்கு என்ன நடக்கப் போகிறது என் பதை அறியாமல் தின் பண்டத்தைத் தின்று கொண்டிருக்கும். காட்சி தான் நம்மைப் பெரிதும் பாதிக்கச் செய்கிறது. ஒரு படம் உலகையே உலுக்கி எடுத்து விட்டது.

இந்தியாவின் தலை நகரமான புதுடில்லியில் டெசோ சார்பில் மார்ச் 7ஆம் தேதி மாநாடு - கருத் தரங்கம் நடைபெற உள் ளது. அது உலகம் முழு வதும் நம் உணர்வைக் கொண்டு சேர்க்கும்.

இரண்டு செய்திகள் கொலைக்காரன் ராஜ பக்சேவுக்கு வரவேற்பு - வீரப்பன் கூட்டாளிகள் என்பதற்காக நான்கு பேர் களுக்குத் தூக்கா.

இழுத்து மூடு நீதிமன்றத்தை!

தூக்குத் தண்ட னையே கூடாது என்று சொல்லுபவர்கள் நாம். கசாப் தூக்கிலிடப்பட் டது ஏன் ரகசியமாக வைக்கப்பட்டது ஏனென் றால் வெளியில் தெரிந் தால் சில மனித உரிமை அமைப்புகள் நீதிமன்றம் சென்று விடுவார்களாம்.

எப்படிப்பட்ட தந் திரம். அப்படியென்றால் மனித உரிமைகள் பற்றி இந்த அரசினர் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்! நீதிமன் றங்கள் இந்த நாட்டில் ஏன்? இழுத்து மூட வேண்டியதுதானே!

குடியரசுத் தலைவராக கே.ஆர்.நாராயணன் இருந்தார் - அவரைத் தொடர்ந்து அப்துல் கலாம் இருந்தார் - அப் பொழுதெல்லாம் அவர் கள் கருணை மனுக் களை நிராகரிக்கவில்லை; தூக்குத் தண்டனையை நிறைவேற்றச் சொல்ல வில்லை.

பிரணாப் குடியரசுத் தலைவராக ஆனபின்...

பிரணாப் முகர்ஜி குடி யரசுத் தலைவரானபின் தூக்குத் தண்டனைகள் அவசர அவசரமாக நிறை வேற்றப்படு வது - ஏன்? தெரிந்து கொள்ளலாமா?

வீரப்பன் கூட்டாளி கள் என்பதற்காக தூக்குத் தண்டனையா? இங்கே அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நம் எதிரில் கண்ணீர் வடித்துக் கொண்டு அமர்ந்துள் ளார்கள். அவர்களுக்கு நாங்கள் சொல்லு வதெல்லாம் கலங்காதீர் கள்! கலங்காதீர்கள்!! உங் களுக்காகக் குரல் கொடுக் கக் கூடியவர்கள் நியாயம் கேட்கக்கூடியவர்கள் இங்கே இருக்கிறார்கள்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட் டவர்கள் 22 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்ட னர். இப்பொழுது அவர் களைத் தூக்கில் போட வேண்டும் என்று கூறுகி றார்கள். ஒரு குற்றத்திற் காக? இரண்டு தண்டனை களா? சட்டத்தில் அதற்கு இடமுண்டா?

இதுபோன்ற வழக்கு களை மறு ஆய்வு செய்ய சட்டத்தில் இடம் உண்டு. உச்சநீதிமன்ற நீதிபதியே கூறி இருக்கிறார். அதைத் தான் நாங்களும் வலி யுறுத்துகிறோம். இந்தக் கூட்டத்தின் வாயிலா கவும் வலியுறுத்துகிறோம்.

சு.சாமி ஓட்டம்

சு.சாமி ஒரு தொலைக் காட்சிப் பேட்டிக்கு வந்தார். அப்பொழுது அவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டேன். உங் களை எப்பொழுது கைது செய்யப் போகிறார்கள் என்று கேட்டேன் ஏன்? என்னை எதற்குக் கைது செய்யவேண்டும் என்று கேட்டார். ஜெயின் கமிஷ னில் உங்கள் பெயரும், சந் திரசாமி பெயரும் குறிப் பிடப்பட்டுள்ளதே என்று சொன்னேன். உடனே நடையைக் கட்டிவிட் டார் என்று குறிப்பிட் டார்.

தமிழ் ஓவியா said...


தனிச் சலுகை

ஏழைகள் வாழ்வு மலரவே சமதர்மம் விழைகிறோம். எல்லா வகுப்பினரும் சம வாய்ப்புப் பெறும் வரையில் திட்டமிட்டுப் பரம்பரையாய்த் தாழ்ந்துள்ள சமூகத்தினர்க்குத் தனிச் சலுகை தரப்படவேண்டும். - (விடுதலை, 8.12.1967)

தமிழ் ஓவியா said...


தளபதி மு.க.ஸ்டாலின் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க! வளர்க!!


60 ஆம் ஆண்டில் அடிவைக்கும் இளைஞர்களின் இதயத்துடிப்பாம்

தளபதி மு.க.ஸ்டாலின் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க! வளர்க!!

இன்று மார்ச் 1 இல் 60ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அருமைத் தளபதி மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், சீரிளமைத் திறத்தோடு சிறப்பான உழைப்பின் உருவமாகி, பெரியார், அண்ணா, கலைஞர் என்ற வரிசையில் கலைஞரின் தகுதிமிக்க அரசியல் வாரிசாகி, வாகைசூடிடும் கொள்கை வைரமாகும்! அடக்கம், அன்பு, கொண்ட கொள்கையில் உறுதி, லட்சோபலட்ச இளைஞர் பட்டாளத்தின் ஈடுஇணையற்ற தளநாயகன், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் உழைப்பில் கலைஞர் போல் உயர்ந்து நிற்கிறார்!

மேயராகி, அமைச்சராகி, துணை முதலமைச்சராகி, எதிர்கட்சி தலைவராகவும் ஆகி அவர் வகிக்கும் அரசியல் பொறுப்பு எதுவானாலும் தன் அடிகளை அளந்து வைத்து எதிரிகளையும் வீழ்த்தி வியக்கச் செய்யும் வித்தகர் அவர்!

ஆயிரங்காலத்துப் பயிரான திராவிடர் இயக்கங்களின் அரசியல் சரித்திரத்தில் அடுத்தகட்ட அத்தியாயமாய் பரிணமித்து ஜொலிக்கிறார்!

உலகத்தமிழர்களின் உள்ளங்களிலும் நீங்கா இடம் பெற்றவராய் உலா வருகிறார்!

சிறைச்சாலைத் தியாகங்களாலும், சீலத்துடன் கூடிய பொதுவாழ்வின் தொண்டறத்தாலும் மிளிறும் இத்தொண்டர்களின் தோழன், இயக்கத்தின் அரண், கட்டுப்பாடு காத்து, தன் தலைவர் கிழித்த கோட்டை தாண்டாத கொள்கைக் கோமானாகி, நாளும் வளர்கிறார், கழகத்தையும் வளர்க்கிறார் - கண்ணியத்துடன் கடமையாற்றும் கழகக் கட்டுப்பாட்டின் இலக்கணமாம் அவர்!

வளர, வளர அவரிடம் ஆர்வம் குன்றாது இருப்பதைப் போலவே, அடக்கம் அவரை உயர்த்திடும் அற்புதக் கவசமாகி அவரது வளர்ச்சிக்கு அதுவே வெளிச்சமாகவும் உதவுகிறது!

60ஆம் ஆண்டு அகவையில் கூட இளைஞர் போன்று ஓடி ஆடும் ஓயாத தேனீயாகி, இவர் எப்படி சலிப்பின்றி இலட்சியப் பயணம் செல்கிறார் என்று சிலர் வியக்கக் கூடும்.

அந்த இரகசியம் ஊர் அறிந்தது; உலகறிந்தது. 95 வயதிலும் போராட்டக் களம் காணவே ஆயத்தமான தலைவர் தந்தை பெரியார்தம் ஈரோட்டுக் குருகுல இணையற்ற மாணவராம் 90 வயது இளைஞர் நம் மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞரின் ஆணை ஏற்று, செயல்படும் இவர் 60 வயது இளைஞர் என்பதுதான்! இவர் எல்லாம் பெற்று, எதிர்காலத்தை மட்டுமல்ல, நிகழ்காலத்திலும் வரலாற்று வைரவரிகள் எழுதிட, வளர்ந்து உயர்ந்திட வாழ்த்துகிறோம்! வாழ்த்துகிறோம்!!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

1.3.2013 சென்னை

தமிழ் ஓவியா said...


சித்திரை முதல் நாள் அறிவிப்புக்கு வேதனை


தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என
புதிய சட்டம் இயற்ற தமிழக அரசுக்குக் கோரிக்கை!
மலேசிய மாநாட்டில் தீர்மானம்!

மலேசியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பில் தலைநகர் கோலாலம்பூர், தான்சிறீசோமா அரங்கில், கடந்த ஞாயிறன்று தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக் கம் உலகப் பரந்துரை மாநாடு, அதன் தலைவர் அ. இராமன் தலைமையில் நடைபெற்றது. காப்பாளர் இரா. தமிழ ரசி தமிழ் வாழ்த்துடன் மாநாடு தொடங்கியது.

துணைச் செயலாளர் கரு. பன்னீர் செல்வம் வரவேற்புரையாற்றினார். சமுதாயக் காவலர் சே.பி. சாமுவேல் இராசு மாநாட்டு மலரை வெளியிட்டு உரையாற்றினார். நீண்ட வரிசையில் நின்று மாநாட்டு மலரைப் பலர் பெற்றுக் கொண்டனர்.

மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தலைவர் இரா. திருமாவளவன், தமிழிய ஆய்வுக் களம், தலைவர் இர. திருச் செல்வம், மலேசிய சைவ நற்பணிக் கழகத் தலைவர், திருமுறைச் செல்வர் ந. தர்மலிங்கம், தமிழ்நாடு தேவநேயப் பாவாணர் அறக்கட்டளை நிறுவனர் பாவலர் கதிர். முத்தையன் ஆகியோர் ஆய்வுரை நிகழ்த்தினர்.

தமிழ்நாடு பச்சையப்பன் கல்லூரி முன்னாள் முதல்வரும் தமிழாலயம் சிறப்பாசிரியருமான பேராசிரியர் முனைவர் மு.பி. பாலசுப்பிரமணியன் நிறைவுப் பேருரை நிகழ்த்தினார்.

தமிழ்ப் பண்பாட்டின் வெளிப்பாடான நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. மு. நிர்மலாதேவி தருமலிங்கம் தொகுத்து வழங்கிய, தொன்மை, நாகரிகம் தொடர் பான ஆவணப்படங்கள் மற்றும் குமரிக் கண்டம் ஆணவப் படங்கள் உள்ளடக்கிய வெண்திரைக்காட்சிகள் பார்வையாளர் களை வெகுவாகக் கவர்ந்தன.

முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் மலேசியாவிலிருந்து வந்திருந்த வாழ்த்துச் செய்திகள் படிக்கப் பெற்றன.

தமிழ் இலக்கியக் கழகச் செயலாளர் மா. கருப்பண்ணன், மாநாட்டின் தீர்மானங்களைப் படித்தார். அவை பலரால் முன்மொழியப்பட்டு வழிமொழியப் பட்டன.

துணைத் தலைவர் ந. பொன்னுசாமி நன்றி கூறினார்.

நடுவத் தலைவர் போகையா முனியாண்டி நெறியாளராக இருந்து நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:

1. மலேசியத் தமிழ் இலக்கியக் கழகம் மற்றும் தமிழ் அமைப்புகளின் வேண்டு கோளை ஏற்று, தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு எனச் சட்டம் இயற்றி அறிவித்த அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களுக்கு உளமார்ந்த நன்றியை இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

2. அச்சட்டத்தை ரத்து செய்து, சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு எனத் தமிழ் பண்பாட்டுக்கு விரோதமாக இன்றைய தமிழக அரசு சட்டம் இயற்றியதற்கு மிகுந்த வேதனையை இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

3. அச்சட்டத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, மீண்டும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு எனப் புதிய சட்டம் இயற்றி அறிவிக்க இன்றைய தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

4. தை முதல் நாளைப் பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டாக, மலேசியத் தமிழ்ப் பெருமக்கள் அனைவரும் இணைந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள். அந்நாளை, பொது விடுமுறை நாளாக அறிவிக்குமாறு, மலேசிய நடுவணரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

5. தொன்மை வாய்ந்த மூத்த தமிழுக்குச் செம்மொழித் தகுதி வழங்கிச் சிறப்பித்த இந்திய நடுவணர சுக்கும் அதற்குத் துணைபுரிந்த அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியை இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது. இந்திய நடுவணரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின்கீழ் சென்னையில் இயங்கிவரும் செம் மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்திற்குக் கூடுதல் நிதி உதவி அளிப்பதுடன், தற்போது முடங்கிக் கிடக்கும் அதன் நிருவாகத்தைச் சீர்படுத்தி மேலும் சிறப்புடன் செயற்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்திய நடுவணரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

6. தமிழர் வாழ்வியல் திருமறையாக வும் உலகப் பொதுமறையாகவும் திகழும் திருக்குறளை, தேசிய நூலாக அறிவித் துப் பெருமைப்படுத்துமாறு இந்திய நடுவணரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

மற்றும் பல தீர்மானங்கள் அம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

தமிழ் ஓவியா said...


பாவம் ராஜாக்கள்!


கேள்வி: தகாத வழி களில் பணத்தைச் சம் பாதித்து ஒரு பகுதியை திருப்பதி உண்டியலில் போடுபவர்கள் உண்மை யான கடவுள் பக்தி உள்ள வர்களா?

இளையராஜா (இசை இயக்குநர்) பதில்: அந்தப் பணம் அவர்களிடமிருந் தால் மேலும் தகாத வழி களில் அவர்கள் உபயோ கித்து விடலாம் என்று கடவுள் தனது டோல் கேட்டின் மூலம் வசூலிக் கிறது போலும் என்று நீங்கள் ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது? (குமுதம் 27.2.2013 பக்கம் 85).

திருப்பதி உண்டியலில் அப்படிப் போடப்படும் பணம் 5000 கோடி ரூபாய் ஒன்றுக்கும் பயன்படாமல் வங்கிகளில் தூங்குவதால் யாருக்கு என்ன பயனாம்?

பகுதி பணத்தை உண்டியலில் போட்டவன், தகாத வழியில் மறுபடியும் சம்பாதிக்க மாட்டான் என்பதற்கு என்ன உத்தர வாதம்? அவ்வாறு செய் வதற்குத்தானே ஒரு பகு தியைக் கோயில் உண்டிய லில் போடுகிறான்! பணம் உண்டியலில் போடாத வர்கள் எல்லாம் தக்க வழியில் சம்பாதிக்காத வர்களா?

ஏன் இவ்வளவு தூரம் மூக்கைத் தொட சுற்றி வளைப்பானேன்? தக்க வழியில் சம்பா தித்து தக்க வழியில் செல வழிக்கும் நல்ல புத்தியை அந்த ஏழுமலையான் கொடுக்கக் கூடாதா?

ஏன் நல்ல புத்தியைக் கொடுக்கவில்லை? அப்படி யென்றால் ஏழுமலையான் நல்லவன் கிடையாதா?

ஏழுமலையான் என்பது உண்மையாக இருந்து அந் தக் கடவுளுக்குச் சக்தி யிருந்தால் நல்ல புத்திதான் கொடுத்திருப்பான். அதெல் லாம் சுத்த கப்சா, யாரோ சிற்பி செதுக்கிய சிலையை வைத்து இல்லாதது பொல் லாததுகளைக் கற்பித்து, புத்தியைப் பறி கொடுத்த மக்களின் பக்தியைப் பயன் படுத்தி சுரண்டல் தொழிலை நடத்துகிறார்கள் என்பது தானே உண்மை!

ஏழுமலையானுக்கு சக்தியிருப்பது உண்மை யானால் உண்டியல் பணத்தை எண்ணும்போது நாலு பக்கமும் கேமிராவைப் பொருத்தி வைப்பது ஏன்? உண்டியலின் பக்கத்தில் ஏ.கே.47 துப்பாக்கி ஏந்தி காவலாளி நாலு பக்கமும் கண்களைச் சுழற்றிச் சுழற் றிப் பார்த்துக் கொண்டு நிற்பானேன்?

அரசர் கிருஷ்ணதேவ ராயன் அன்பளிப்பாக திருப்பதி கோயிலுக்குக் கொடுத்த நகைகளைக் காணவில்லை என்ற புகார் எழுவானேன்? நகைகள் கணக்குப் பார்த்து நீதி மன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிடு வானேன்?

பாவம் இளையராஜாக் கள்? சிறீரங்கம் கோயில் திருப்பணிக்கு பல லட்சம் ரூபாய் கொடுத்து என்ன பயன்? வெளியில்தானே நிற்க வைத்தனர்?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


ஜெனிவாவில் இந்தியாவே தீர்மானம் கொண்டு வருமா?


கொண்டு வந்தால் இந்தியாவின் கடமை உணர்வையும்
உலகத் தமிழர்களின் உணர்வையும் அது எதிரொலிக்கும்

சென்னை, மார்ச் 3- ஜெனி வாவில் மனித உரிமைக் கழகத்தில் இந்தியாவே இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தால் அது இந்திய நாட்டின் கடமை உணர்வையும் உலகத் தமிழர்களின் உள்ள உணர்வுகளையும் எதிரொ லிப்பதாக அமையும் என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர். சென் னையில் இன்று காலை (3.3.2013) அண்ணா அறிவாலயத்தில் செய்தி யாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

திமுக பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் மணி விழா மலரினை தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் இன்று வெளியிட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார். அதுபோது செய்தியாளர்களை கலை ஞர் சந்தித்த விவரம் வருமாறு:-

செய்தியாளர் :- டெசோ சார்பில் நீங்கள் 5ஆம் தேதியன்று இலங்கை துதுவரகத்தின் முன்னால் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருக்கிறீர்கள். இன்னொரு குழுவினர் 4ஆம் தேதி யன்று முற்றுகை போராட்டம் அறிவித்திருக் கிறார்களே?

தலைவர் கலைஞர் :- நாங்கள் 3ஆம் தேதியன்று முற்றுகைப் போராட்டத்தை அறிவிக்காததற்குக் காரணம், அவர்கள் 4ஆம் தேதியன்று முற்றுகைப் போராட்டம் என்று அறிவித்திருப்பதால்தான்!

செய்தியாளர் :- மத்திய அரசு தொடர்ந்து இலங்கைப் பிரச்சினை யில் தி.மு.கழகத்தின் கோரிக்கையை ஏற்க மறுக்கிறதே?

கலைஞர் :- அதை நாங்கள் பல முறை வற்புறுத்தி சுட்டிக் காட்டியிருக் கிறோம். தொடர்ந்து வலியுறுத்து வோம். எங்கள் உணர்வுகளை உணர்ந்து, அவர்கள் செயல்படுவார்கள் என்று நம்புகிறோம். நாங்கள் மாத்திரமல்ல; உலகத்தில் உள்ள தமிழர்கள் அனை வரும் இதில் இந்தியா எடுக்கும் முடிவை ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். செய்தியாளர் :- 7ஆம் தேதி டில்லி யில் நடைபெறும் டெசோ கருத்தரங் கில் காங்கிரஸ் கலந்து கொள்கிறதா?

கலைஞர்:- அவர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம். கலந்து கொள் வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

செய்தியாளர் :- தமிழ்நாட்டுக் காங்கிரசார் இங்கே பேசும்போது இலங்கைப் பிரச்சினைக்கு ஆதரவாக வும், டில்லியில் பேசும்போது எதி ராகவும் பேசுகிறார்களே?

கலைஞர்:- யார் அப்படி பேசு கிறார்கள்?

செய்தியாளர் :- தமிழ்நாடு காங் கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன் அவர்களே அப்படி பேசியிருக்கிறாரே?

டி.ஆர். பாலு :- இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக டெல்லியில் அவர் பேசவில்லை.

செய்தியாளர் :- அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதற் குப் பதிலாக, இந்தியாவே தீர்மா னத்தை முன் மொழியுமா?

கலைஞர் :- இந்தியாவே தீர்மா னத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்று நாங்கள் ஏற்கனவே கூறியிருக்கிறோம். நான் எழுதியும் இருக்கிறேன். அமெரிக்கா கொண்டு வருகிற தீர்மானத்தை இந்தியா ஆத ரிக்க வேண்டும். இந்தியாவே தீர்மானம் கொண்டு வந்தால், அது இந்திய நாட்டின் கடமை உணர்ச்சியையும், உலகத் தமிழர்களின் உள்ள உணர்வு களையும் எதிரொலிப்பதாக அமை யும். இந்தத் தீர்மானத்தின் மீது இந் தியா என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் அக் கறையோடு கவனிக் கிறார்கள்; நாங்களும் தான்!

செய்தியாளர் :- மதுவிலக்குப் பிரச்சினைக்காக காந்தியவாதி சசி பெருமாள் 33 நாட்களாக உண்ணா விரதம் இருக்கிறார். தற்போதைய சூழலில் மதுவிலக்கு சாத்தியம் என்று நினைக்கிறீர்களா?

கலைஞர் :- சாத்தியம் இல்லை என்பதற்கு பல சான்றுகளை ஏற்க னவே அளித்திருக்கிறோம். சாத்தியம் இல்லை என்பதற்காக நல்ல காரியங் களை விட்டு விட முடியாது. அள வுக்கு மீறி மது புழக்கத்தையும், அதைப் பயன் படுத்துவதையும் அனு மதிக்க வேண்டுமா என்ற கேள்விக்குத் தான் சமூக ஆர்வலர்களும், அரசு நடத்துகிறவர்களும் விடையளிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

செய்தியாளர் :- நாடாளுமன்றத் தேர்தல் எப்படி இருக்கும் என்று கருதுகிறீர்கள்?

கலைஞர்:- எப்படி இருக்கவேண் டும் என்று கேளுங்கள். குறிப்பாக தமிழ் நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.

செய்தியாளர் :- ஒவ்வொரு முறை யும் ஆறு மாதத்திற்குள் மின் வெட்டுப் பிரச்சினையைத் தீர்ப்போம் என்று ஆட்சியிலே இருப்பவர்கள் சொல்லி வருகிறார்கள். ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆன நிலையிலும், மின் வெட்டு நீங்கிய பாடில்லையே?

கலைஞர் :- அதைப்பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. செய்தியாளர் :- இலங்கையில் ராஜபக்ஷேயை சுப்பிரமணிய சுவாமி சந்தித்ததைப் பற்றி?

கலைஞர் :- நீங்கள் அவரையே கேட்டிருக்கலாமே!

இவ்வாறு பேட்டியில் கலைஞர் கூறினார்.

தமிழ் ஓவியா said...


டெசோ கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றி


இலங்கைக்கு சர்வதேசக் குழுவை அனுப்ப வேண்டும்
அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது

ஜெனிவா, மார்ச் 3- இலங்கையில் உள்ள நிலைமைகளைக் கண் காணித்து சர்வதேச குழுவினரை அனுப்ப வேண்டும் என்கிற புது தீர்மானம் ஒன்றை ஜெனிவா மனித உரி மைக் குழுவில் அமெ ரிக்கா ஒன்றைக் கொண்டு வர உள்ளது. டெசோ மாநாட்டில் இத்தகையதோர் தீர் மானம் நிறைவேற்றப் பட்டது என்பது குறிப் பிடத்தக்கதாகும். இலங்கை ராணுவத் தின் போர்க் குற்றங் களை கண்டித்து அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா நாளை 2ஆவது தீர்மானத்தை கொண்டு வருகிறது. இதை இந்தியா உள்பட பல நாடுகள் ஆதரிக்கும் என்பதால், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கடி முற்றுகிறது. இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டில் விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இறுதிகட்ட போர் நடந் தது. அப்போது, பல ஆயிரக்கணக்கான அப் பாவி தமிழர்கள் கொல் லப்பட்டனர். மேலும், குழந்தை கள், பெண்கள் என்றும் பாராமல், எல்லோரை யும் ராணுவத்தினர் மிகக் கொடூரமாக நடத்திய தும் தெரிய வந்தது. இங்கிலாந்து நாட்டின் சேனல்-4 என்ற டி.வி, இறுதிக்கட்ட போரில் இலங்கை ராணுவத்தின ரின் அத்துமீறல்களை வெளிகாட்டும் பல காட் சிகளை வெளியிட்டது. இதனால், உலக அளவில் இலங்கை அரசுக்கு கடும் கண்டனம் எழுந்தது. கடந்த ஆண்டு மார்ச்சில் ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலின் 19ஆவது கூட்டம் நடைபெற்றது. அதில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஒரு தீர் மானம் கொண்டு வந் தது. தமிழர்கள் மறு வாழ்வு தொடர்பாக இலங்கையை நிர்ப்பந் தம் செய்யும் அந்த தீர் மானம், 47 உறுப்பினர் கள் கொண்ட கவுன்சி லில் 9 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியடைந்தது. இதனால், இலங்கையில் முள் வேலி முகாம்களில் அடைக்கப் பட்டி ருந்த தமிழர்களை மீண்டும் அவர்களின் பகுதிகளில் குடியேற்றி, மறுவாழ்வு பணிகளை மேற் கொள்ள வலியுறுத்தப்பட்டது. மேலும், அந்நாட்டு ராணுவத்தின் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச சட்டப் படி விசாரிக்க அறிவுறுத் தப்பட்டது. ஆனால், இதுவரை இலங்கை அரசு அவற்றை முறைப் படி மேற்கொள்ளவில்லை. இந் நிலையில், இங்கிலாந் தின் சேனல் -4, கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் சில காட்சி களை வெளி யிட்டது. அதில், பிரபாகரனின் 12வயது இளைய மகன் பாலச் சந்திரன் எப்படி ராணுவத்தினரால் கொடூரமாக கொல்லப்பட்டான் என சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இது உலக மக்களி டையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும் இலங்கைக்கு எதிராக போராட் டங்கள் நடத்தின.

இதற்கிடையே, ஜெனிவாவில் அய்.நா. பாது காப்பு கவுன்சிலின் 22ஆவது கூட்டம், கடந்த வாரம் துவங்கியது. இதில் அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் எஸ்தர் பிரிம்மர் பேசுகையில், இலங் கையை பொறுத்தவரை இந்த கவுன்சிலின் பணி இன்னும் முடியவில்லை. அங்கு எல்எல்ஆர்சி பரிந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை. அங்குள்ள நிலைமைகளை கண்காணிக்க சர்வதேசக் குழுவினரை அனுப்ப வேண்டும். இது தொடர்பாக, இன்னொரு தீர்மானத்தை அமெரிக்கா இங்கு கொண்டு வர உள்ளது என்றார். இதன்படி, இலங்கைக்கு எதிரான 2ஆவது தீர்மானத்தை அமெரிக்கா, அய்.நா. கவுன்சிலில் நாளை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில், போர்க் குற்றங்களை சர்வதேச சட்டப் படி விசாரிக்கவும், தமிழர் மறுவாழ்வு பணி களை சர்வதேச குழுவினர் கண்காணிப்பில் மேற்கொள்ளவும் வலியுறுத்தப் படும் என தெரிகிறது. இந்த தீர்மானத்தை பல நாடுகள் ஆதரிக்கும் என்பதால், எளிதாக வெற்றி பெறும். இதனால், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கடி முற்றுவ தாகக் கருதப்படுகிறது.

இதற்கிடையில் பல நாடுகளின் ஆட்சித் தலைவர் களைச் சரிப் படுத்தும் வேலையில் இலங்கை அரசு ஈடு பட்டு வருகிறது.

12.8.2012 அன்று சென்னையில் டெசோ சார்பில் நடைபெற்ற மாநாட்டின் 2ஆவது தீர்மானத்தில் காணப் படும் வாசகமாவது.

அய்.நா. அவையின் மனித உரிமைக் குழுவின் சார்பில் சர்வதேசக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அங்கு நடைபெற்ற போர்க் குற்றங்கள் கண்டறியப் பட்டு போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு அய்.நா. அவையை வலியுறுத்துகிறது.

தமிழ் ஓவியா said...


முக்கியம்


தைரியம் இருந்தால் நல்ல காரியங்கள் செய்யலாம். நல்ல காரியங்களைச் செய்யும்போது எத்தகைய எதிர்ப்பிருந்தாலும் பயப்படத் தேவையில்லை. தைரியமே முக்கியம்.

பெரியார் -(விடுதலை, 22.11.1964)