Search This Blog

18.4.12

சோமீது உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா?

கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த துக்ளக் சோ ராமசாமி அய்யர்,

சென்னை உயர்நீதிமன்றத்தில் 1962 இல் ஊழல் நீதிபதி கிடையாது. இப்போது? ஊழல் இல்லா நீதிபதிகள் உண்டா என்று தெரியாது; இதுதான் திராவிடர் கழகம் ஏற்படுத்திய மகத்தான மாற்றம்.(துக்ளக், 18.4.2012 - பக்கம் 29 என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்போதுள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஊழலற்றவர்களா, இல்லையா என்கிற அய்யப்பாட்டை இதன்மூலம் உருவாக்கியிருக்கிறார் சோ.

இதன்மீது சென்னை உயர்நீதிமன்றம் என்ன நடவடிக்கையை எடுக்கப் போகிறது என்று தெரியவில்லை.

1962 இல் ஊழல் நீதிபதிகள் கிடையாது என்று நற்சான்று கொடுத்திருக்கிறார் திருவாளர் சோ.

அப்படியா....?

தலைமை நீதிபதியாக இருந்த பார்ப்பனர் ஒருவர், தன் பிறந்த தேதியை மாற்றியது ஊழலுக்கு அப்பன் அல்லவா?

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இராமச்சந்திர அய்யர் பிறந்து 11 மாதம் கழித்து அவரது தம்பி பிறந்திருக்கிறாரே - இந்த அதிசயம் எப்பொழுது நடந்ததாம்?

பிரம்மாவின் நெற்றியில் இருந்து பிறந்தவர்கள் அல்லவா - (இ)எப்படியும் பிறந்திருக்கலாம் - ஆமென்க!

இதுபற்றி கோயங்கா வீட்டுக் கணக்குப்பிள்ளை எஸ். குருமூர்த்தி அய்யர் என்ன எழுதினார் தெரியுமா?

20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலகட்டத்தில் பிறப்புச் சான்றுகள் என்பது அதிகாரபூர்வமாக இல்லையாம். அதனால் இந்தத் தவறு நேர்ந்துவிட்டதாம்! உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு போடப்பட்ட நிலையில், பதிவாளர் சம்பந்தப்பட்ட தலைமை நீதிபதி இராமச்சந்திர அய்யருக்கு முறைப்படி தெரிவித்த அடுத்த சில விநாடியே பதவி விலகி விட்டாராம். பதவி விலகவில்லை என்றால் என்ன நடக்கும் என்று அவருக்குத் தெரியுமே - சங்கராச்சாரியார்களே கம்பி எண்ணியிருக்கிறார்களே! தலைமை நீதிபதியும் கம்பி எண்ணினார் என்ற பார்ப்பனர்களின் சாதனை வீண் போயிற்று!

அவர் பதவி விலகி இருந்தாலும், தேதியைத் திருத் தியதற்கான மோசடிக்கான தண்டனை எப்படி தப்பியது? குடியரசுத் தலைவர் ஒரு பார்ப்பனர் (டாக்டர் ராதாகிருஷ்ணன்) இவர் ஒரு பார்ப்பனர் என்ற பாசக்கயிறுதானே!

டில்லி தலைமைச் செயலகத்தில் இந்த இராமச்சந்திர அய்யர்வாளின் உடன் பிறப்பு பெரும் பொறுப்பில் இருந்தார். அந்த சாய்காலோடுதான் அய்யர்வாள் இப்படித் திமிர் முறித்தார்.

இதுபோன்ற குற்றம் பார்ப்பனர் அல்லாத பிரதம நீதிபதியான ராஜமன்னார் அவர்கள் மீதோ, அல்லது ஓய்வு பெற்றுள்ள தமிழர் நீதிபதிகளான சோமசுந்தரம், கணபதியாபிள்ளை போன்றவர்கள்மீதோ அவர்களது பதவிக் காலத்தில் வந்திருக்குமாயின் இந்நேரம் அக்ரகார ஏட்டினர் இதை அகில உலகத்திற்கும் தெரியும் வண்ணம் தம்பட்டம் அடித்திருக்க மாட்டார்களா? கூப் பாடு போட்டிருக்க மாட்டார்களா? என்று அன்று விடுதலையில் எழுதியவர் அன்றைய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் (20.4.1964). சென்னை - கடற்கரை பொதுக்கூட்டத்தில் அம்பலப்படுத்தினார், சமூகநீதியின் தந்தையான பெரியார் (19.4.1964).

பார்ப்பனர்கள் நீதிபதியாக இருந்தால் ஊழல் நடக்காது என்ற பொருளில் எழுதியுள்ள சோவைப் புரிந்து கொள்வீர்.

---------------------"விடுதலை” 18-4-2012

4 comments:

நம்பள்கி said...

பச்ச புள்ளையா விவரம் தெரியாத ஆளா இருக்கிறீங்க நீங்க!

வளரனும் தம்பி! நீங்க வளரனும்!!

தம்பி தமிழ்நாட்டுக்கு புச்சு போலகீது!!!

Seeni said...

athu sari!

தமிழ் ஓவியா said...

அப்பா மகன்


தள்ளுபடி

மகன்: அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் 50 விழுக் காடு தள்ளுபடி விலை யில் கம்பராமாயண நூல்கள் விற்பனைக்கு தயார் என்று அறிவிக் கப்பட்டுள்ளதே, அப்பா! அப்பா: கம்ப ராமா யணக் குப்பைகள் எல்லாம் தள்ளுபடியாகி நீண்ட நாள்கள் ஆகி விட்டதே, மகனே! 19-4-2012

தமிழ் ஓவியா said...

சங்கராச்சாரியார்மீதான கொலை வழக்கு - சூடுபிடிக்கிறது

புதுச்சேரி, ஏப். 19-சங்கரராமன் குடும்பத் துக்கு காவல் பாதுகாப்பு வழங்க புதுவை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் வரத ராஜப்பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. குற்றம் சாட் டப்பட்ட 24 பேரில் ரகு, சுந்தரேசய்யர் உள்பட 7 பேர் நேற்று ஆஜரானார் கள். கடந்த 10ஆம் தேதி சங்கரராமனின் மனைவி பத்மா, மகன் ஆனந்த கிருஷ்ணசர்மா ஆகி யோர் திடீரென மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணையில் பத்மா உள்ளிட்டோர் ஆஜ ராகாததால் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார் பில் வழக்கறிஞர் மணி கண்டன் ஆஜரானார்.

அப்போது சங்கர ராமன் குடும்பத்துக்கு சிபிசிஅய்டி காவல் துறையினர் பாதுகாப்பு அளிக்கவில்லை என்றும் குண்டர்களால் ஆபத்து இருப்பதாகவும், இத னால் நீதிமன்றத்துக்கு அவர் வரவில்லை என் றும் குறிப்பிட்டார்.

இதையடுத்து தலைமை நீதிபதி முருகன் சங்கரராமன் குடும்பத்துக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டார். இதேபோல் மறு விசாரணை தொடர்பாக பத்மா, அவரது மகன் ஆனந்தகிருஷ்ண சர்மா, மகள் பத்மா மைத்ரேயி ஆகியோரை கலந்து ஆலோசித்து தெரியப் படுத்துவதாக வழக்கறி ஞர் மணிகண்டன் தெரி வித்தார்.

இதையடுத்து பத்மா மனு மீதான விசாரணை வருகிற 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட விஜயேந்திரர், ரகு ஆகி யோருடைய வழக்கறி ஞர் லட்சுமணன் அமெ ரிக்கா செல்ல இருப்ப தால் இந்த வழக்கை முன்கூட்டியே விசா ரணை நடத்த வேண்டு மென நீதிபதியிடம் தெரிவித்தார்.

இதையடுத்து இவ் வழக்கு விசாரணையை 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தர விட்டார்.