Search This Blog

4.4.12

தந்தைபெரியாரும் தன்மானக்கவிஞரும் ஒருபார்வை

புதுவைக்குயில் புரட்சிக் கவிஞர் தேசியப் பாடங்களையும், தெய்வப் பாடல்களையும் பாடிவந்தவரைத் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் கவர்ந்தது. தந்தை பெரியாரின் ஈரோட்டுப் பாதை கே.எஸ். பாரதி தாசனைப் புரட்சிக் கவிஞர் ஆக்கியது.

சமய சடங்குகளும், மூடப் பழக்க வழக்கங்களுமே, இட்டுக் கட்டப் பெற்ற புராணக் கதைகளும் கவிஞரின் கண் டனக் கணைகளுக்கு இலக்காகிப் பாவடிவம் பெற்றன. பகுத்தறிவுக்கு ஒவ்வாதவற்றை ஒதுக்கித் தள்ளினார். தந்தை பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையிலும் ஆழ்ந்த பற்றுக் கொண்டார்.

அதனாலே தான் அக்கொள்கையை ஏற்ற அவர்,

இல்லை என்பார் சிலர்

உண்டென்று சிலர் சொல்வார்

எனக்கில்லை கடவுள் கவலை என்று கவிதை வடிவில் கொள்கைக் குறிப்பு அறிவித்தார்.

சுயமரியாதைக் கொள்கை எழுந்ததை துடிதுடித்துச் சிறிதும் எண்ணங்கள் யாவும்

தூய சுயமரியாதையாய்ச்

சுடர்கொண்டெழுந்ததே சமத்துவம் வழங்கிடத்

தூயஎன் அன்னை நிலமே

என்று பாடினார்.

தந்தை பெரியார்_ புரட்சிக் கவிஞர் தொடர்பு சுயமரியாதை இயக்கம் தொடங்குவதற்குமுன் ஏற்பட்ட தொடர்பு குடிஅரசு இதழில் புரட்சிக் கவிஞரின் கவிதைகள் இரண்டு மட் டுமே! 1930-க்கு முன் வெளி வந்துள்ளன.

ஒன்று ஈரோடு திருவாளர் ஈ.வெ. ராமசாமி நாயக்கவரவர்கட்குப் புதுச்சேரி பொதுக் கூட்டத்தில் வாசித்துக் கொடுத்த வந்தனோபசாரபத்திரம். 10.2.1925 இதழில் வெளி வந்தள்ளது இப்பாடல். அரிய பொக்கிஷம் இது எனலாம்.

வருக உயர் இராமசாமிப் பெயர் கொள்

அறிஞ உன்றன்வரவால் இன்பம்

பருகவரும் இந்நாளை வாழ்த்துகின்றோம்

என்று தொடங்கும் வரவேற்புக் கவிதை நூறு வரிகள் கொண்ட நீண்ட கவிதை வரவேற்புக் கவிதையும் தந்தை பெரியாரை வாழ்த்துவதால் புத்திலக்கியம் ஆகியுள்ளது.

இதை வரவேற்புக் கவிதை என்பதை விடத் தந்தை பெரியாரின் கோட் பாட்டுப் பட்டயம் கவிதை வடிவில், சுயமரியாதைத் தத்துவச் சிதறல்கள் கவிதை வடிவில் என்று கூறலாம்.

ஆதியிலே வாழ்வடைந்த பாரதத் தார்க்

கதன் பிறகு பின்டிக்க வந்த பார்ப்பனீயம்

சோதியிலே வானத்தைக் கீறி நல்ல

சுவர்க்கத்தைக் காட்டியது மெய்யார

என்று கேள்வி எழுப்புகிறார் பாரதி தாசன்.

தந்தை பெரியாருக்கு இன்று வாழ்த்து, பெருமை சிறப்பு, வணக்கம் ஏன்? என்று கேட்கும் சில அவாளுக்கு இன்றைக்கு 86 ஆண்டுகளுக்கு முன்பே புரட்சிக் கவிஞர் செவிட்டில் அறைந்தது போல் கூறியுள்ள பதில் கல்மேல் அன்று மதியா எழுத்து.

பார்ப்பனியம் மேலென்று

சொல்லிச் சொல்லிப்

பழயயுகப் பொய்க் கதைகள் காட்டிக்காட்டி

வேர்ப்புறத்தில் வெந்நீரை வார்த்து பார்த்து

மிகப் பெரிய சமூகத்தை இந்நாள் மட்டும்

தீர்ப்பரிய கொடுமைக்குள் ஆக்கிவிட்ட

செயல் அறிந்து திடுக்கிட்டவீரா நின்னை

ஊர்ப்புரத்து மாந்தர் பலர்உணருங்காலை

உவக்கின்ராய் உள்பணியில் ஓய்ந்தாயில்லை

ஆர்ப்பரித்தும் பணி செய்யும்

தன்மை காண்போம்

அரும் பணிக்கு யாங்களுணை வணக்கம் செய்தோம்.

புரட்சிக் கவிஞரின் இந்த நூறு வரிகளும் சுய மரியாதை இயக்கத்தவர் மனம் செய்து மேடைதோறும் முழங்க வேண்டிய முத்துமுத்தான வரிகர். அத்தனையும் எடுத்து வைக்க ஆசை தான் எனினும் அதற்கு ஏடு இடங் கொளாவ.

பாரதத்தின் இன்றைய நிலை என்னவென்று

பார்க்குங்கால் எவ்விடத்திலும் எதிலும் நன்கு

வேர் விடுத்துப் பார்ப்பனரின் ஆதிக்கர்தான்

மிகச் செழிப்பாய் இருப்ப தனைக் காண்கிறோம்

என்று கூறும் புரட்சிக் கவிஞர்.

பொய் பகட்டுப் பார்ப்பனரை நம்பு மட்டும் பொதுவாழ்வின் உள்ளீடு மாய்வதுண்மை

என்று அழுத்தத் திருத்தமாகச் சொல்லி

சுயமரியாதைப் பெயர் கொள்பயிர் செழிக்கத்

தொண்டு செய்யும் இராமசாமித் தலைவா!

புயத்தெதிரே புவிபெயர்த்து வரும்போதும்

புலன் அஞ்சாத்தன்மையுள்ள கர்மவீரா

செயற்கரிய செயப்பிறந்த பெரியோய்! இந்தச்

செகத்பரியை நன்கறிந்த ஆற்றல் மிக்கோய்

வியப்புறுதி இயக்கமது நன்றே வெல்க!

மேன்மையெல்லாம் நீ எய்தி வாழ்க வென்றே!

எனச் சுயமரியாதை என்னும் பெயரைப் புரட்சிக் கவிஞரே சூட்டி விட்டார் என்பது வியப்புக்குரிய செய்தியாகும்.

10.3.1929ஆம் ஆண்டு குடிஅரசு இதழில் நாளுக்கு நாணம் பாரதி தாசன் எழுதுவது என்று புரட்சிக் கவிஞரின் பாடல் வந்துள்ளது. இழி நிலை அடைந்திருக்கும் நம் சமூகத்தில் ஊழலை எடுத்துக்காட்டக் கதிரவனை அழைத்தவர், கதிரவன் மறைதலுக்குரிய காரணத்தை,

சாதிசமயம் சாத்திரப்புராணம்

மனிதர் மனிதரைச் சாமியாய் வணங்கல்

ஆனவை பலவும் சமூகத்தை அழுத்தி

அழுத்தி வருத்தஅதன் கீழ் அழுந்திக்

கண்டுள மட்டும் இருட்டைவிட்டகலோம்

என்று சொல்லும் இழிநிலைச் சமூகம்

எங்கேயிருக்கக் கண்டிருக்கிறாய்!

புரட்சிக் கவிஞர் குடிஅரசு இதழ் வரத் தொடங்கியபோது எழுதிய கவிதைக்கும் 1929ல் எழுதிய கவிதைக்கு நான்கு ஆண்டு இடைவெளி உள்ளது.

குடிஅரசு இதழில் 1930-க்குப் பிறகு 1940க்கு முன்பு பதினைந்து கவிதைகள் வெளிவந்துள்ளன இந்தப் பத்தாண்டுகளில் தான் புரட்சிக் கவிஞரின் அதிக எண்ணிக்கை கொண்ட கவிதைகள் வெளிவந்தன. அவை எட்டாவது ஆண்டிற் குடிஅரசு, புதுவை சுய மரியாதைத் திருமணத்தில் மணமக்களுக்குத் தோழர் பாரதிதாசன் வாசித்த வாழ்த்துப் பத்திரம், விடுத்தம் (குடிஅரசு வாழ்த்துப்பா) எங்கள் வீணை, தொழிலாளர் விண்ணப் பங்கள் சைவப் பற்று, பலி பீடம், ஆய்ந்து பார், கும்பகோணம் மகாமகம், தொழிலாளர் தோழமைப் பயல், பிழைப்புக்கு வழி, சாய்ந்த தராசு, ஹிந்தி எதிர்ப்புப்பாம், முஸ்லீம் இளைஞர்களுக்கு வேண்டு கோள் ஆகியனவாகும்.

எட்டாவது ஆண்டிற் குடிஅரசு எனும் புரட்சிக் கவிதை 1932ஆம் ஆண்டில் மேத் திங்கள் முதல் நாள் இதழில் அட்டையில் வெளி வந்துள் ளது. குடிஅரசு எட்டாவது ஆண்டிற் காலடி வைத்ததைக் கண்ட புரட்சிக் கவிஞரின் பூரிப்பு, புளகாங்கிதம் வெளிப்படுகிறது.

தந்தை பெரியாரின் பாராட்டும் பெற்ற முத்திரைக் கவிதை வரிகள் இவை ஏழாண்டினின்று நீ எட்டாம் ஆண்டிற் எழிற் பீடம் ஏறி விட்டாய் வெல்க வெல்க!

பாழண்டப் படிவிட்டே அறிவிளக்கப்

படியேற்றிப் படியேற்றி நாங்கள் கொண்ட

வழுவாத நிலை நீக்கி வாழ்நிலைக்கு

வரச் செய்ய பணியாற்றும் நன்மை தள்ளில்

ஆள்கின்ற குடிஅரசே! வெல்க! உன்றன்

சுயமரியாதைக் கொள்கை ஒன்றே.

பொது உடைமை இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்றபின் சோவியத்து நாடு பெற்றுள்ள நலன்களைத் தமிழ் மக்களுக்கு எடுத்துக் கூறி அதன் மூலம் விழிப்பூட்டலாம் என்றிருந்தேன். ஆனால் நான் வந்து அக்கருத்துக்களைச் சொல்வதற்கு முன்னர் பாரதிதாசன் இப்பாடலில் பாடி விட்டாரே! என் வேலையைச் சுலபமாக்கி விட்டார் என்று தந்தை பெரியார் பாராட்டினார்.

சுயமரியாதை இயக்கத்திற்குக் கவிதைப் பிரச்சார பீரங்கியாகப் புரட்சிக் கவிஞர் விளங்கியிருக்கிறார் இதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வது புதுவையில் பொன்னுசாமி என்பார் மகன் சிவசங்கரனுக்கும், கோபாலன் மகள் கிருஷ்ணவேணிக்கும், திருவேங்கனார் மகள் பவுனாம்பாளுக்கும் கோபாலன் மகன் கேசவனுக்கும் நடந்த திருமணத்தில் தந்தை பெரியாரும், புரட்சிக் கவிஞரும் பங்கேற்றனர். மணமக்களுக்கு வாசித்தளித்த வாழ்த்துப் பத்திரம் சுயமரியாதை இயக்கத்தின் அருமைகளையும் பெருமைகளையும் இவ்வாறு கூறி யுள்ளார்.

அந்த இயக்கம் அரைவதென்ன வெணில்

எல்லோரும் ஓர் குலம் எனப்படல் வேண்டும்

எல்லாரும் இந்தியர் எனப் பாடல் வேண்டும்

உயர்வு தாழ்வுகள் ஒழித்திட வேண்டும்

பெண்கள் விடுதலை பெற்றிட வேண்டும்

கைம்மைக் கொடுமை களைந்திட வேண்டும்

காதல் மணமே காணுதல் வேண்டும்

பகுத்தறிவுச் சொல் பரவுதல் வேண்டும்

மூடச் செயல்கள் முரிபடல் வேண்டும்

யார்க்கும் கல்வி ஈந்திடல் வேண்டும்

தொழிற் கல்வி எங்கும் தோள்திடல் வேண்டும்.

30.4.1935ல் குடிஅரசு வெளிவந்து ஒன்பது ஆண்டுகள் ஆளபோது ஒன்பதாவது ஆண்டு மலரில் குடிஅரசு இதழை வாழ்த்தி விடுத்தப்பாடல் ஒன்று எழுதி வெளிவந்தது. குடிஅரசு இதழ் தொடங்கி ஒன்பது ஆண்டுகள் வரை நான்கு கவிதைகள் எழுதியவர் 1933வது ஆண்டில் மட்டும் 11 கவி தைகள் வெளிவந்துள்ளன. குடிஅரசு இதழ் 1933ஆம் ஆண்டில் பதினொரு கவிதைகளையும் சேர்த்து 1933 வரை பதினைந்து கவிதைகள் வெளியிட்ட பெருமைக்குரிய ஏடு குடிஅரசு.

குடிஅரசு குறித்த தந்தை பெரியாரின் வழி நடைபோட்ட புரட்சிக் கவிஞர் தம் கருத்துகளைப் பதிவு செய்து வைத்துள்ளார்.

தமது மன நிலையை இவ்வாறு தம் நண்பரானநோயெள் என்பவரிடம் கூறியிருக்கிறார்.

இராமாயணமும், பாரதமும் பகுத்தறிவுக்கு

ஒவ்வாதவையே! அவற்றிற்கு மறுப்பு

தலைக்காட்டுமேல் அது எதிர்பார்க்கத்

தக்கதுதான். அது மாத்திரமல்ல; இந்துக்ளின்

வாழ்க்கை முறையில் அடிப்படையே

மடமை எள்ரால், மறுக்க முடியாது.

அதன் பயனாகத்தான் நாம் உருப்படாத

நிலையில் இருக்கிறோம். சாதி வேற்றுமை,

சமய வேற்றுமை இவற்றை அறவே ஒழிக்க வேண்டுமேயானால்

குடிஅரசின் கொள்கைகளை அஞ்சாது

கொள்ளத்தான் வேண்டும்

1933 முதல் 1940 வரை அடுத்த ஒரு ஆண்டுகளில் அதாவது 1940 வரை இரண்டே இரண்டு கவிதைகள் மட்டும் வெளி வந்துள்ள ஒன்று மொழி யுணர்ச்சிப் பாடலான ஹிந்து எதிர்ப்புப் பாடல் இது 24.10.1937 குடிஅரசு இதழில் வெளிவந்தது.

9.1.1938 குடிஅரசு இதழில் முசுலீம் இளைஞர்களுக்கு வேண்டுகோள் என இந்து முசுலீம் ஒற்றுமையை வலியு றுத்தவும், முசுலிம் இளைஞர்களை முன்னேற்றம் அடையச் செய்த பொருட்டும் கவிதை அழைத்து உள்ளது. இதே இதழில் பெரியார் அவர்கள் இந்து முசுலீம் ஒற்றுமை பற்றிப் புதுரகம் முசுலீம் ஆண்டு விழாவில் பெரியாரின் சொற்பொழிவு வெளிவந்துள்ளது. புரட்சிக் கவிஞரின் முசுலீம் இளைஞர்களுக்கு வேண்டு கோள் எனும் தலைப்பில் வெளியான இந்தப்பாடலை இந்தப் பின்புலம் கொண்டு நோக்கிடல் பொருத்தமாகும். இப்பாடல் குடிஅரசு இதழ் அட் டையின் முகப்புப் பாடலாக வெளி வந்து உள்ளது.

இதே ஆண்டில் பாரதிதாசன் கவிதைகள் முதற்பதிப்பு வெளிவந் துள்ளது. தந்தை பெரியார் முதன் முதலாகக் கவிதை நூலுக்கு வழங்கிய சிறப்புரை வந்துள்ளது.

தந்தை பெரியாரின் சிறப்புரை இது. தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் (குடிஅரசு ஆசிரியர்)

1) பாரதிதாசன் கவிதைகள் என்னும் புத்தகம் தமிழ்நாட்டுக்கு ஒரு சிறந்த பொக்கிறமாகும். இது படிப்போருக்குக் கவியா வசனமா என்று மலைக்கும் படியான ஓர் அற்புதக் கவித் திரட்டு என்றுதான் சொல்ல வேண்டும். கவிதைகளின் அமைப்புப் பெருமை இவ்வளமிருக்க கவிகள் கொண்ட கருத்துக்களே முற்றிலும் சமூக சமய சீர்திருத்தக் கருத்துக்களேயாகும். சிறப்பாக மூடநம்பிக்கைகளை யகந்தம் தன்மையில் புரோகிதம், பார்ப்பனீயம், கடவுள்கள், பெண்டிமை, விதவைக் கொடுமை, ஜாதிபேதம், பொருளாதார உயர்வு - தாழ்வு ஆகியவைகளைக் கண்டித்து மறுத்தும் அவைகளிலுள்ள சூழ்ச்சிகளையும் புரட்டுகளையும் வெளியாக்கியும், மிக மிகப் பாமர மக்களுக்கும் பசு மரத்தில் ஆணி அரைத்தது. போய் விளங்கும்படியும் பதியும்படியும் பாடப்பட்டிருப்பதுடன் கவிரயமோ புலவர்களுக்கு ஒரு ரல் விருந்தாகவும் அமைந்துள்ள அருமை புத்தகமாகும்.

தோழர் பாரதிதாசன் அவர்கள் தமிழ்நாட்டுக்குப் புதியவரல்ல. அவர் சென்ற 10 ஆண்டுகளாகச் சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாய் ஈடுபட்டு வரு கிறார். மனித சமுதாயத்தின் ஒற்று மைக்கு முன்னேற்றத்திற்கும் சந்தோஷ வாழ்க்கைக்கு இன்றியமையாத புரட் சியான பல சீர்திருத்தங்களை ஆதரிப் பது மட்டுமின்றி அவைகளை ஜனசமூ கத்தில் பல வழிகளில் பரப்ப வேண்டு மென்று இசையைக் கொண்டவர். சிறப்பாகவும், சுருக்கமாகவும் கூற வேண்டுமானால், பாரதிதாஸன் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பந்த கவி என்றுதான் கூற வேண் டும். இந்த ஒரு காரணத்தினாலேயே, அவர் இன்று சிறந்த கவியாயிருந்தும், அவருடைய புகழ் போதுமான வரையில் பரவாமலிருக்கிறது. ஆனால் அவர் மட்டும் வெறும் புகழை விரும்புவா ரானால் காலத்திற்கும், பாமர மக்கள் உணர்ச்சிக்கும் ஏற்றவாறு தம் கருத்துக்களா மாற்றிக் கொண்டு மிகச் சிறந்த கவிகள், பெயரை எளிதில் பெற்று விடலாம். ஆனால் உண்மை, நியாயம், ஆற்ற, முதலியவற்றைச் சிறிதும் விட்டுக் கொடுக்க இசையாத இயற்கையான ஒரு பிடிவாதமுடைய வராதலால், அவர் புகழை எதிர்பாரா மல் தம் கொள்கைகளில் விடாப் பிடியாய் இருந்து வருகிறார். இக் குணத்தை நான் அவரிடம் பல தடவை களில் கண்டிருக்கிறேன்.

இத்தகைய ஒருவரால் எழுதப்பட்ட இப்புத்தகத்தை தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் சிறப்பாகச் சமூகப் புரட்சிக் கருத்துடையவர்களே சமூக சீர்திருத்தத் தொண்டு செய்பவர்கமே வால்கி, அனுபவித்து, அதன் கருத்துக் களை மக்களிடையில் பரப்ப வேண் டியது மிக அவசியமாகும். இப்பாட்டு களைப் பாடிய தோழர் பாரதிதாசன் அவர்களுக்கும் இவைகளைத் திரட்டி வெளியாக்கிய தோழர் குஞ்சிதம் குருசாமி அவர்களுக்கும் சீர்திருத்த உலகம் கடப்பாடுடையதாகும்.

ஈரோடு

1938 ஜனவரி ஈ.வெ.ராமசாமி

1940 வரை குடிஅரசு இதழில் புரட்சிக் கவிஞரின் பதினைந்து கவிதைகள் வெளிவந்தன. 1940--க்குப் பிறகு புரட்சிக் கவிஞரின் சர். பன்னீர் செல்வம் எனும் கவிதை (7.4.1940), தமிழ்நாட்டு தவக்கொளுத்தின் மறைவு (14.4.1940) எனும் இரண்டு கவிதைகளும் சர் ஏ.டி. பன்னீர்செல்வம் விபத்தில் இறந்தவுடன் பாடிய கவிதையாகும்.

தம் துணைவியார் நாகம்மையார் இறந்தபோதுகூடக் கண்ணீர் சிந்தாத பெரியார் ஐயா - ஏ.டி. பன்னீர்செல்வம் 1940 மார்ச் திங்கள் முதல் நாள் மறைந்தபோது கண் உருந்தார்.

நமதுநாடகம் சினிமா என்ற 5.2.1944ல் வெளிவந்த பாடல் குடிஅரசு இதழில் வெளியான கடைசிப் பாடல் களும். இருபத்திராண்டு ஆண்டுகள் வெளிவந்த குடிஅரசு இதழில் இருபது கவிதைகள் பேட்டி புரட்சிக் கவிஞரின் கவிதைகள் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கப் பிரச்சாரத்திற்குப் பெரிதும் துணை நின்றன.

1928 நவம்பரில் பெரியார் முன்னிலையில் சுயமரியாதை இயக்கத்தில் தாமும் தம் குடும்பமும் பகுத்தறிவுக் கொள்கையை மேற்கொள்ளச் செய்த முதல் கவிஞர்.

1931ல் சுயமரியாதைச் சுடர் எனும் 10 பாடல்களைக் கொண்ட நூலினைக் கிண்டல்காரன் எனும் பெயரில் வெளியிட்டுக் குத்தூசி குருசாமிக்கு இந்நூலைப் படைத்தார். 1933ல் மா.சிங்காரவேலர் தலைமையில் நடந்த சென்னை நாத்திகர் மாநாட்டில் கலந்து கொண்டு நாள் ஒரு நிரந்தரமான நாத்திகன் என்று எழுதிவதைப் பதிவேட்டில் கையெழுந்திட்டவர்.

9.9.1934ல் இரணியன் அல்லது இணையற்ற வீரர் நாடகம் புரட்சிக் கவஞர் எழுதியது இராவணன் பெருமை கூறும் நாடகம் பெரியார் தலைமை நடைபெற்றது. தன்மான இயக்கத்தில் ஒப்பற்ற பாவலர் என்று பெரியாரால் பாராட்டப் பெற்ற புத் துலகக் கவிஞர் பெரியார் முன்னி லையிலே மூத்த மகள் சரசுவதியின் திருமணத்தை நடத்தினார். 72 ஆண்டுகள் 11 மாதம் 28 நாள் வாழ்ந்த புரட்சிக் கவிஞர் தந்தை பெரியாரின் அடிச்சுவட்டில், தன்மான இயக்கப் பாதையில் நடைபோட்ட தன்மானக் கவிஞர்

--------------முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் அவர்கள் 11-2-2012 “விடுதலை” ஞாயிறுமலர் 11-2-2012 இல் எழுதிய கட்டுரை

2 comments:

தமிழ் ஓவியா said...

தமிழன் தலையில் மிளகாய் அரைக்கும் கூட்டம்!


தி.க. தலைவர் வீரமணி: சேது சமுத்திரத் திட்ட அமலாக்கம், ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கு உத்தரவாதம், காவிரி நீரில் தமிழருக்குரிய உரிமை மீட்பு ஆகியவற்றை வலியுறுத்தி, 11ம் தேதி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

டவுட் தனபாலு: மற்ற கட்சிகள் எல்லாம், மின் கட்டண உயர்வு மாதிரி, சீசன் பிரச்னை களுக்காக போராட்டம் நடத்தி, மாட்டிக்கிறாங்க... நீங்கதான், சேது சமுத்திரம், தனி ஈழம், காவிரி மாதிரியா நிரந்தர பிரச்னைகளை கையிலெடுக் கறீங்க.... இந்த சாமர்த்தியம், மற்றவங்களுக்கு இல்லையே...! - தினமலர், 4.4.2012

தினமலர் திராவிடர் கழகத்தின் செயல் பாட்டைப் பாராட்டுகிறதா? கேலி செய்கிறதா?

தினமலர் சொல்கிறபடி பார்த்தாலும் சீசன் போராட்டங்களைவிட நிரந்தரப் பிரச்சினை களுக்காகப் போராடுவது முக்கியமானதும், அவசியமானதும்தானே?

நிரந்தர பிரச்சினைகளைக் கையில் எடுப்பது சாமர்த்தியம் என்று எழுதுகிறதே, இதன் பொருள் என்ன?

காலையில் வரும் ஆசிரியர் கடிதங்களைப் பெயர் மாற்றி மாலையில் தான் நடத்தும் இன்னொரு பத்திரிகையில் வெளியிடும் சாமர்த்தியம் தினமலர் மடிசஞ்சி கூட்டத்துக்கு மட்டுமே உரித்தான ஏகபோகம்!

இது மற்றவர்களுக்கு வருமா என்ன?

சேது சமுத்திரத் திட்டம், ஈழத் தமிழர் பிரச்சினை, காவிரி நீர்ப் பிரச்சினை என்னும் தமிழர்களின் உயிர்நாடிப் பிரச்சினைகளுக்காகப் போராடினால், பார்ப்பான் வீட்டில் எழவு விழுந்தது மாதிரிதான் - அந்த அளவுக்குத் தமிழின வெறுப்பு.

ஆனாலும், தமிழர்களிடம் ஏடுகளை விற்று மட்டும் பிழைப்பு நடத்திடவேண்டும். நாய் விற்ற காசு குரைக்கவா போகிறது?

தமிழர்கள் பார்ப்பான் நடத்தும் பத்திரிகைகளை வாங்கு மட்டும் - இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் பார்ப்பனர்கள் தமிழர்கள் தலையில் மிளகாய் அரைத்துக்கொண்டுதான் இருப்பார்கள். தமிழன் தொடையிலேயே கயிறு திரித்துக் கொண்டும் இருப்பார்கள்.

தமிழர்களே, எச்சரிக்கை! 4-4-2012

தமிழ் ஓவியா said...

தருமபுரி மாவட்டத்தில் ரத்தக் காட்டேரியா?


வெடித்துக் கிளம்புகிறது கிராமங்கள்தோறும் திராவிடர் கழகப் பிரச்சாரப் பணி!

தமிழர் தலைவர் அறிவிப்பு



தருமபுரி மாவட்டத்தில் ரத்தக் காட்டேரி என்னும் பீதி கிளப்பி விடப்பட்டுள்ளது. இந்த மூட நம்பிக்கையை முறியடிக்கும் வகையில் திராவிடர் கழகப் பகுத்தறிவுப் பிரச்சாரப் பணிகள் தருமபுரி மாவட்டத்தில் முடுக்கி விடப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கை வருமாறு:

தருமபுரி மாவட்டத்தில்....

தருமபுரி மாவட்டத்தில் சில கிராமங்களில் ரத்தக் காட்டேரி புகுந்துவிட்டது என்றும், வீட்டுச் சாமான்கள் எல்லாம் தூக்கி எறியப்படுகின்றன என்றும், கதவுகள் படார் படார் என்று அடிக்கின்றன என்றும் திட்டமிட்ட வகையில் ஒரு மூடத்தனத்தைக் கிளப்பி விட்டுள்ளனர்.

வழக்கம்போல ஊடகங்களும் இதற்குத் தீனி போட்டு தெம்பூட்டி பாமர மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பி விடுகின்றன.

ஊடகங்களின் வெட்கங் கெட்டத்தனம்!

மக்கள் மத்தியில் எந்த வகையிலும் பகுத்தறிவு வளர்ந்துவிடக் கூடாது என்பதில் இந்த ஊடகங்களுக்கு அளவுக்கு அதிகமான ஆர்வமும், அக்கறையும் உண்டு.

பிள்ளையார் பால் குடித்தார் என்பார்கள்; தலையில்லா முண்டம் டீ குடித்தது என்று அவிழ்த்து விடுவார்கள். திருப்பதி தாயாரம் மாவின் தாலி அறுந்து விழுந்தது - கணவர் களுக்கு ஆபத்தோ ஆபத்து என்று கூச்சல் போடுவார்கள்; காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்குள் எருமை மாடு நுழைந்துவிட்டது - ஏதோ கெட்ட சகுனம் என்பார்கள்.

ஊர் கோடி புளிய மரத்தில் பேய் என்று புரளியைக் கிளப்புவார்கள்.

ஒரே ஊரில் குழந்தைகள் அடுத்தடுத்து சாவு - பில்லி சூன்யம் வைத்துவிட்டனர் என்பர்.

இந்த ஆண்டு பிறப்பு துரதிர்ஷ்டமானது; சகோதரி களுக்குப் பச்சைப் புடவை எடுத்துக் கொடுக்கவேண்டும் என்பார்கள்.

மானங்கெட்ட வயிற்றுப் பிழைப்பு!

இப்படியெல்லாம் பீதியைக் கிளப்பிவிட்டு இவற்றி லிருந்து விடுபெற பிராயச்சித்தங்கள் செய்யவேண்டும் என்பார்கள்.

கோவிலுக்குச் செல்லுவார்கள்; நேர்த்திக் கடன் கழிப்பார்கள்; ஜோதிடர்களையும், மந்திரவாதிகளையும் தேடி ஓடுவார்கள்.
பணத்தைக் கொட்டுவார்கள் - பயத்தின் காரணமாக!

மக்களிடத்தில் மூடத்தனம் கொடிகட்டிப் பறக்கும்வரை பார்ப்பனர்களுக்கும், ஜோதிடர்களுக்கும், மந்திர வாதிகளுக்கும் கொழுத்த கொள்ளைவரும்படிதானே!

கழகத்தின் களப்பணி!

இதுபோன்ற மூடத்தனங்கள் கிளப்பி விடப்படும் பொழுதெல்லாம் களத்தில் குதித்து, மக்கள் மத்தியில் மூடத்தனங்களை எடுத்துக் காட்டி, பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்வதை ஒரு முக்கிய கடமையாகவே கழகம் செய்து வந்துள்ளது. அதன் காரணமாக, மக்கள் தெளிவு பெறுகிறார்கள். கட்டிவிடப்பட்ட மூடத்தன சமாச்சாரங்களும் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைகின்றன.

பிரச்சாரம் சுழன்றடிக்கும்!

அதே முறையில் இப்பொழுது தருமபுரி மாவட்டத்தில் கழகத்தின் சார்பில் மூட நம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம் (மந்திரமா? தந்திரமா? உள்பட) மேற்கொள்ளப்படுகிறது.
இம்மாதம் 6, 7, 8 ஆகிய நாள்களில் இந்தப் பிரச்சாரம் புயல் வேகத்தில் முடுக்கிவிடப்படும். (ஊர்கள், பேச்சாளர் களின் விவரம் 8 ஆம் பக்கம் காண்க).

தருமபுரி மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறி வாளர் கழகப் பொறுப்பாளர்கள் இதற்கான திட்டத்தை வகுத்துள்ளார்கள். பக்கத்து மாவட்ட மான கிருட்டினகிரி மாவட்டப் பொறுப்பாளர்களும் தேவையான ஒத் துழைப்பைக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படு கின்றனர்.

தொடர்பு கொள்க!

இதுபோல் வேறு எங்கு மூட நம்பிக்கை கட்டுக் கதைகள் அவிழ்த்து விடப்பட்டாலும் உடனே தலைமைக் கழகத்திற்குத் தெரிவிக்குமாறும் கழகப் பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம் 4-4-2012