Search This Blog

18.3.12

வீரமணி அவர்களைச் சீண்டுவது ஏன்?நித்யானந்தாவே, ஓடாதே நில்!


நித்யானந்தா, நித்யானந்தா என்ற ஒரு காஷாயதாரி சென்னைக்கு வந்து ஆடம்பரமான ஓட்டலில் தங்கி அட்டகாசமாக செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்துள்ளார்.

இந்த அவசியம் அவருக்கு ஏன் வந்தது? தான் உத்தம புத்திரன் என்று நிரூபிக்க வேண்டிய அவசரமான நெருக்கடிப் பிரசவம் ஏன் ஏற்பட்டது?

திராவிடர் கழகத் தலைவரை ஏன் இப்படி விழுந்து பிராண்டுகிறார்?

திராவிடர் கழகம் இது போன்ற காஷாயதாரிகளின் கபட கபாலங்களை நொறுக்கி வருகிறதே என்ற ஆத்திரத்தால், ஆபாச ஆசாமியைக் கைது செய் என்று ஆர்ப்பாட்டம் நடத்தியது அந்த ஆத்திரத்தால்தானே!

திராவிடர் கழகத் தலைவர் மீது விழுந்து சேற்றை வாரி இறைப்பதற்கு முன், முதலில் அவரின் சீடர்களுக்கு ஏற்பட்ட கோபத்தைப் பற்றி என்ன சொல்கிறார்?

நடிகை ஒருவருடன் இவர் நடத்திய கோபால கிருஷ்ண லீலைக் காட்சியைத் தொலைக் காட்சியில் பார்த்த பக்தர்கள்தானே, சீடர்கள்தானே நித்யானந்தாவின் ஆசிரமங்களை நாடெங்கும் சூறையாடினார்கள்? தீவைத்துக் கொளுத்தினார்கள்? அதனைக் கண்டிக்கத் துப்பில்லை - ஆசிரியர் வீரமணி அவர்களின் மீது ஆக்ரோஷமாகப் பாய்வானேன்?

இவர் யோக்கிய சிகாமணி என்றால், குற்றமற்ற கோமான் என்றால், ஏன் வடக்கே ஓடித் தலைமறைவாக வேண்டும்?

கொலைகாரர்கள் கூட நாணயமாக நீதிமன்றத்தில் ஆஜராகும் ஒரு நிலையில், ஆண்டவனோடு நேரில் அளவளாவும் இந்த ஆசாமி ஏன் ஓடி ஒளிய வேண்டும்?

இவரது பரமார்த்த சீடர் ஒருவர் அமெரிக்கர். அவர் பெயர் டக்ளஸ் மெக்கெல்லர். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் இந்தச் சாமியார்களின் வேட விளக்கில் விட்டில் பூச்சிகளாக வீழ்கிறார்கள்.

அந்த அமெரிக்க சீடர் கலிபோர்னியா அட்டர்னி ஜெனரலிடம் நித்யானந்தா பற்றி புகார் கொடுத்துள்ளாரே - மறுக்க முடியுமா?

அறைகளில் நித்யானந்தா பெண்களுடன் இருக்கும் போது என்னைத்தான் பாதுகாவலாக நிறுத்தி வைப்பார்; நித்யானந்தா நடத்தும் யாக குண்டங்களில் காய்ந்த கஞ்சா விதைகளைப் போடுவார்.

2007 ஆம் ஆண்டு நித்யானந்தா தமிழ் சினிமா நடிகை ஒருவரை கலிபோர்னியாவுக்குக் கூட்டி வந்தாரு. அந்த நடிகை திருமணம் ஆனவர்தான். அந்த நடிகை கூட என் வீட்டில் 15 நாள் தங்கி இருந்தார். அந்த நடிகைக்கும், நித்யானந்தாவுக்கும் செக்ஷூவல் ரிலேஷன்ஷிப் இருந்ததை நான் புரிஞ்சிக்கிட்டேன். அதைப் பற்றி அவரிடமே கேட்டேன்.

கடவுளை அடைய ஆனந்தமான வழி இதுதான்னு என்னிடம் சிரிச்சிக்கிட்டே சொன்னார் என்று எழுத்து வடிவத்திலேயே கலிபோர்னியா அட்டர்னி ஜெனரலிடம் கொடுத்துள்ளாரே அவரின் அமெரிக்க அந்தரங்க சீடர்.

ஆசிரமத்திற்கு வந்த பல பெண்களுடன் குரூப் செக்ஸ் வச்சுகிட்டதையும் என்னால் உணர முடிந்தது. பல பெண்களோடு சந்தோஷமாக அவர் இருந்ததை அவர் மறைக்கவோ, மறுக்கவோ இல்லை.

சனாதன கோவிலில் நித்யானந்தாவின் பயிற்சிப் பட்டறைகள் நடக்கும். கோயிலோட கர்ப்பக் கிரகத்துக்குப் பக்கத்திலேயே சகல வசதிகளோடு கூடிய சொகுசு அறை இருக்கும். அவருக்காக உருவாக்கப்பட்ட பிரத்தியேக மான அறை அது என்று அவரின் சீடர்தானே விலா வாரியாகக் குறிப்பிட்டுள்ளார்.

கருநாடக மாநிலக் காவல் துறை தயாரித்துள்ள குற்றப் பத்திரிகை நித்தியானந்தாவின் பல ஆபாச அணுகுண்டுகளை வெடிக்கச் செய்திருக்கிறது. "நான் கிருஷ்ணன். நீ என்னோட கோபிகை!" என்ற வசனத்தைத்தான் பக்தைகளிடம் அடிக்கடி கூறுவாராம் இந்த நித்தியானந்தா. (அதாவது நித்யமும் ஆனந்தமாக இருக்கும் ஆசாமி என்றும் பொருள் கொள்ளலாம்).

பாலுறவு மூலம் மோட்சத்தை அடையமுடியும் என்ற நிபந்தனையை ஏற்கும் ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பம் வாங்கிக் கொண்டு பெண்களிடம் லீலைகளை நடத்தினார் என்றால் இந்த ஆசாமி எப்படிப்பட்ட கில்லாடியாக இருக்க வேண்டும். இந்த ஆபாசமான தகவல்கள் கருநாடக் காவல்துறையின் 430 பக்கக் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றுள்ளனவே!

இவையெல்லாம் தவறான தகவல்கள் என்று நீதி மன்றத்தில் நிரூபித்து நிரபராதி என்று வெளியில் வருவதுதான் யோக்கியர்க்கு அழகு. தேவையில்லாமல் ஆத்திரத்தின் அலை மோதலில் திராவிடர் கழகத் தலைவரைச் சீண்டுவது ஏன்? (பாவம்! ஆழம் தெரியாமல் காலை விட்டுப் பார்க்கிறார், புலி வாலை மிதிக்கப் பார்க்கிறார்.)

வீரமணியிடம் விவாதிக்கத் தயாரா என்ற கேள்விக்கு நெளிந்து வளைந்து ஏதேதோ வார்த்தைகளைப் போட்டுக் குதப்பி (அவர் பேட்டி . . பதிவு செய்யப்பட்டுள்ளது - நம்மிடம் உள்ளது.) கடைசி கடைசியாக ஆரோக்கிய மானதாக இருந்தால் தயார்தான். ஆனாலும் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் விடுமே என்று அஞ்சுகிறாராம்.

நித்யானந்தா போன்றவர்களிடம் வாதிட திராவிடர் கழகத் தலைவரா வேண்டும்? தமிழ்நாட்டில் ஒரு தேதியையும் இடத்தையும் சொன்னால் திராவிடர் கழகத்தின் தொண்டர் ஒருவரை அனுப்பி வைக்கத் தயார்! தலைவர் வீரமணியின் பொதுவாழ்க்கை வயதுகூட உம் வயது கிடையாதே!

சங்கராச்சாரியார் போன்றவர்கள் விவாதத்துக்கு வந்தால் அப்போது வேண்டுமானால் திராவிடர் கழகத் தலைவர் நேரிடையாக விவாதிக்க வருவது பற்றி யோசிக்கலாம்.

கடைசியாக ஒன்று. நித்யானந்தா போன்ற காஷாய தாரிகள் அந்தராத்மாவோடு நேரடியாகப் பேசுபவர்கள் ஆயிற்றே!

(1) அத்தகையவர் எப்படி குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப்படுகின்றார்?

(2) தன்மீது வீண் பழி சுமத்தப்படுகிறது. பகவானே நீயே பார்த்துக் கொள் என்று சிவனே என்று இல்லாமல் எதற்காக வக்கீல்களைத் தேடுகிறார்? பத்திரிகையாளர் களுக்குப் பேட்டி கொடுக்கிறார்?

(3) ஏன் இமாச்சலப் பிரதேசத்துக்கு ஓடி ஒளிய வேண்டும்? (அங்குதான் கைது செய்யப்பட்டார்!)

(4) அப்படி என்றால் இவருக்கே, தான் நம்புவதாகக் கூறும் கடவுள் மீது உண்மையான நம்பிக்கை இல்லை என்று ஒப்புக் கொள்வாரா?

அய்ம்பொறிகளையும் மூடிக் கொண்டு ஒழுங்காக இருந்தால் வண்டவாளங்கள் எல்லாம் மறுபடி தண்ட வாளத்தில் ஏறவேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காதே!

பணத்திமிரும், பாலியல் உணர்வில் திகட்டிப் போகாத வாலிபக் கொழுப்பும், நாட்டு அரசியல் மாற்றங்களும் மறுபடியும் வாலாட்ட வைத்துள்ளது - விளைவு வட்டியும் முதலுமாகக் கிடைக்கப் போவதுதான் மிச்சம் - சட்டம் தன் கடமையைச் செய்யுமே!

----------------- மின்சாரம் அவர்கள் 18-3-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

8 comments:

தமிழ் ஓவியா said...

ரயில் கட்டணங்கள் உயர்ந்துள்ளனவே தவிர, மக்களுக்கான வசதிகள் அதிகம் காணப்படவில்லை!


தமிழ்நாட்டிற்கு மேலும் பல திட்டங்கள் தேவை! எம்.பி.க்கள் வற்புறுத்த வேண்டும்
ரயில்வே பட்ஜெட்பற்றி தமிழர் தலைவர் கி.வீரமணி கருத்து


2012-2013-க்கான ரயில்வே பட்ஜெட்டில் கட்டணங்கள் உயர்த்தப் பட்ட அளவுக்குப் பயணிகளுக்கு வசதிகள் பெருகவில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

2012-2013க்கான மத்திய (பட்ஜெட்) வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் நாடாளுமன்ற மக்களவையில் 16.3.2012 அன்று சமர்ப்பித்துள்ளார்!

அதற்குமுன் - வழமைபோல் ரயில்வே பட்ஜெட் - திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த - அய்க்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சர் - தினேஷ் திருவேதி அவர்களால், இந்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கட்டணம் உயர்வு ஆனால் வசதிகள்தான் இல்லை

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அதிர்ச்சிக் குரியதாக - பயணிகள் கட்டண உயர்வு இரண்டாம் வகுப்புக்கும்கூட விட்டு வைக்கா மலும், ரூபாய் 3 ஆக இருந்த பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ரூ.5 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும், பல்வேறு சங்கடங்களைப் பொது மக்களுக்கு தரும் வகையில் அமைந்துள்ளது!

கட்டண உயர்வைப் பொருட்படுத்தாத அளவுக்கு பயணிகளிடையே மகிழ்ச்சியைத் தரக் கூடிய வசதிப் பெருக்கங்கள் எதுவும் குறிப்பிடத் தக்க வகையில் அறிவிக்கப்படவில்லை; புதிய ரயில் பாதைகள்பற்றியும்கூட இரட்டைப் பாதைகள் கூட தமிழ்நாட்டு மக்கள் வரவேற்கக் கூடியவை இல்லாதது வருந்தத்தக்கது!

எலிகளும், கரப்பான் பூச்சிகளும்

முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, முதல் குளிர் பதன வகுப்புக் கட்டண உயர்வைக் கூட்டும் நிலையில், குறைந்தபட்சம் அதில் பயணிப் போருக்கு இருக்கைகள்கூட தூய்மையாக இல்லை; எலிகள், கரப்பான் பூச்சிகள் வாசம் செய்கின்றன! உணவு எடுத்துக் கொண்டு வரும் பயணிகள் - அல்லது ஊருக்குத் தின்பண்டங் களை எடுத்துச் செல்வோருக்கும் ஏற்பட்ட கசப்பான, வேதனையான அனுபவங்கள் பற்றி ஏனோ மேல் அதிகாரிகள் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை! எலி போன்றவை பயணிகளின் கால்களைக் கடித்து அதனால் பாதிக்கப்பட்டோர் பலருண்டு!

இராயபுரம் முனையம் வரவேற்கத்தக்கதே!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மிகவும் பழைமையான இராயபுரம் ரயில் நிலையம் - நமது திமுக தலைவர்கள், எம்.பி.க்கள் எடுத்த கடும் முயற்சிகள் காரணமாக புதிய முனையமாக அறிவிக்கப்பட்டுள்ளது! பாராட்டத்தக்கது!!

தமிழ் ஓவியா said...

மன்னார்குடி ரயில் நிலையம் மீண்டும் அமைக்கப்பட்டதும், மன்னார்குடி எக்ஸ்பிரஸ் சென்னை வருவதும் திரும்புவதுமான வசதியும், தி.மு.க. நாடாளுமன்றக் குழு தலைவரும், மத்திய ரயில்வே நிலைக்குழுத் தலைவருமான நண்பர் டி.ஆர். பாலு அவர்களது சீரீய முயற்சியால் உருவாகியுள்ளது. அது பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர் என்று வளர்ந்து புதிய இருப்புப் பாதை அமைப்பது வளர்ச்சிக் கண்ணோட்டத்திலும் மிகவும் முக்கியமாகும்.

தஞ்சை எம்.பி.யும், மத்திய நிதித்துறை இணையமைச்சருமான நண்பர் பழனி மாணிக்கம் அவர்கள் அரியலூர் சிமெண்ட் தொழிற்சாலை அதிபர்களைகூட, நிதி உதவி - இத்திட்டத்திற்கு - தருமாறு ஏற்பாடுகளை செய்ய முனைந்தார்கள்; அதுவும் வற்புறுத்தப்பட்டு நடந்தால் தஞ்சை, திருச்சி, பிற்படுத்தப்பட்ட அரியலூர் போன்ற மாவட்டப் பகுதிகள் மேலும் செழித்தோங்கிட வாய்ப்புக்கள் ஏற்படும் என்பது உறுதி!

பெரிய திட்டங்கள் ஏதுவும் நம்முடைய தமிழகப் பகுதியில் இல்லை. முந்தைய திண்டிவனம், செஞ்சி, சேலம், பெங்களூர் திட்டம் என்னாயிற்று?

ரயில் பயணிகள் அதிகரிப்பு

திருச்சி, நாகர்கோவில் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் புதிய ரயில் விட அறிவிப்பு வந்துள் ளது மிகவும் வரவேற்கத்தக்கது!

ரயில்வேயில் போதிய பாதுகாப்பு தேவை; இதற்கு மத்திய - மாநில அரசுகளின் ஒருங் கிணைந்த பாதுகாப்புத் திட்டசேவைக்கான ஒரு வலிமை பொருந்திய திட்டத்தை உருவாக்க வேண்டும். ரயில்வே கட்டணம் மலிவானது என்பதால் தான் இது வெகு மக்களுக்கு மிகவும் பெரிய அளவில் பயண வாய்ப்பைத் தருகிறது!

தமிழ்நாட்டில் பேருந்துக் கட்டண உயர்வு அதிகமாக்கப்பட்டு விட்ட காரணத்தால், ரயில் பயணிகள், எண்ணிக்கை கூடுவது இயல்பாகவே அதிகரித்து விட்டது.

லாலுபிரசாத்தின் சாதனைகள்!

இதற்குமுன் லாலு - பிரசாத் இரயில்வே அமைச்சராக இருந்தகாலம்தான் ரயில்வேயின் பொற்காலமாக அமைந்தது!
லாலுவை அவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர் - சமூக நீதியில் நம்பிக்கை உள்ள யதார்த்த பட்டறிவாளர் என்பதால் ஊடகங்கள் கேலியும் கிண்டலும் செய்தன. இன்னமும் பல பார்ப்பன ஏடுகளும், தொலைக்காட்சிகளும் அதை தங்கள் ஜாதி ஆணவ வாடிக்கையாகவே ஆக்கிக் கொண்டுள்ளன!

ஆனால் அவர்தான் பொது பட்ஜெட்டிற்கு, ரயில் பட்ஜெட் மூலம் கூடுதல் நிதியைத் தந்தவர்!

கட்டணங்களை உயர்த்தாமலேயே, அவரது நிர்வாகத் திறமை அனைவராலும் பாராட்டப் பட்டது! அமெரிக்க ஹார்வேடு பல்கலைக் கழக நிர்வாக இயல்துறை இவரை அழைத்துப் பேச வைத்து எப்படி சாதிக்க முடிந்தது என்று கேட்டு விளக்கும்படி கேட்டுப் பயன் பெற்றது அப்பல்கலைக் கழகம்!

மற்ற மேல் ஜாதி பார்ப்பனர்கள் தற்போது ரயில்வே அமைச்சர் - பார்ப்பனர்தான் - வெளி நாட்டில் படித்த விமானம் ஒட்டியவராவார்! (பொது வாக மம்தா கட்சியே உயர்ஜாதிக் கட்சிதான்!)

இதைப்பற்றி முன்பு லாலுவை தரந் தாழ்ந்து விமர்சித்தவர்கள் இப்போது கட்டணம் உயர்வைக்கூட நியாயப்படுத்ததானே ஊடகப் பூணூல்கள் முயலுகின்றன! அவ்வளவு பாசம்!!

பார்ப்பன ஊடகங்களின் பரிகாசம்!

பல ஆண்டுகள் முன்பு வாணியம்பாடி அருகே ரயில் விபத்து நடைபெற்றபோது, (அப்போது பாபுஜெகஜீவன்ராம் அவர்கள் ரயில்வே அமைச்சர்) தகுதி, திறமை இல்லாத - தாழ்த்தப் பட்ட சமூகத்தவர் அமைச்சரானால் இப்படித்தான் என்று அன்றைய சுயஜாதி மித்திரனான சுதேசமித்திரன் நாளேடு தலையங்கம் தீட்டியது! - என்ன கொடுமை!

தமிழ் ஓவியா said...

ரயில்வேயில் வளர்ச்சித் திட்டங்களை மட்டும் லாலுபிரசாத் பெருக்கவில்லை - அவர் ரயில்வே அமைச்சராக இருந்தபோது!

போர்ட்டர்கள் போன்ற கடைகோடி மக்களை ரயில்வே ஊழியர்களாக்கி, அடித்தள மக்களுக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கி, சமூக நீதிக்கும் பாதுகாப்பு அரணாக இருந்தாரே!

தகுதி, திறமை என்பது உயர்ஜாதியினருக்கே உரிய ஏகபோகம் என்ற புரட்டை தனது ஆற்றலால் உடைத்துக் காட்டினாரே!
பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும்?

பொதுவாக பட்ஜெட் என்பது வெறும் வரவு - செலவு திட்டம் மட்டுமல்ல; உண்மையான பொருளாதார நிபுணர்கள் பார்வையில் அது சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளைப் போக்கக் கூடிய வகையில் பயன்படுத்தப்பட வேண்டிய மிக அருமையானதொரு கருவியும் ஆகும்!

தற்போது மாநில அரசு வரிகளும் பேருந்து கட்டணம், பால் கட்டணம், மின் கட்டணம் இப்படி பல உயர்வுகளை மக்கள் முதுகுகளை உடைக்கும் நிலையில், இரயில் பயணமும்கூட சுமையாக ஆக்கப்படுவது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்!
ரயில்வேயில் கடைகள் வாடகை, ரயில் பெட்டிகளில் விளம்பரங்களைப் பெற்று வருவாய்ப் பெருக்கம், முதலிய புதிய புதிய வருவாய் வழிமுறைகள்பற்றி சிந்தித்திருந்தால் இந்தப் பணம் வருமே!

நடைமேடை (பிளாட்ஃபார்ம்) டிக்கெட் குறைவாக இருப்பதை உயர்த்தினால் நம் மக்களில் பலர் டிக்கெட்டே எடுக்காமல் தவிர்த்து உள்ளே வந்து திரும்பி விடுவார்கள். நடைமுறை அனுபவம் அது! ரயில்வேக்கு நட்டமே ஏற்படும்.
ஓட்டைகளை அடையுங்கள்

தென்னாட்டில் டிக்கெட் இல்லாப் பயணம் குறைவு. வடக்கே போகும் இரயில்களில் டிக்கெட் எடுப்பவர்கள் மிகவும் குறைவுதான் என்பது அனுபவ உண்மை! ஆனால் அவர்களுக்கு வசதிப் பெருக்கம்; முறையாக டிக்கெட் எடுப்போருக்கு வசதி சுருக்கம்! இது ஒரு புதிய மனுநீதி போலும்!

அந்த ஓட்டைகளை அடைத்து டிக்கெட் இல்லாத திருட்டுப் பயணத்தைத் தடுத்து நிறுத்தினால், ஓட்டைகள் அடைபட்டால் நீர் வரத்து அதிகமாகி தொட்டி நிரம்புவதுபோல வருவாய் பெருக வாய்ப்பு ஏற்படுமே!
பொது பட்ஜெட்பற்றி நாளை விரிவாக எழுதுவோம்!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம் 18-3-2012

தமிழ் ஓவியா said...

அட ராமா?


அயோத்தியில் தான் இராமன் பிறந்தான்.. அங்குதான் அவன் பிரசவம் நடந்தது. ராமன் என்றால் சாதாரண மானவைனல்ல! சென் னையில் தங்கசாலையில் அத்வானிகூட பேசினார்.

ராம் என்று சொல்லி கற்களைக் கடலில் போட் டதும், என்ன ஆச்சரியம்! அப்படியே அது பாலமாக ஆகிவிட்டதாம். அப்படிப் பட்ட சக்தி வாய்ந்தவன் எங்கள் ராமபிரான் என்று கதைக்கிறார்களே!

அப்படி இருக்கும் பொழுது வீணாக ஏன் பாபர் மசூதியை இடிக்க வேண்டும்? வழக்குகளில் சிக்க வேண்டும்? ராமன் கோவிலைக் கட்ட ஏன் முயற்சிக்க வேண்டும்? ராம் ராம் என்று பஜனை பாடினால் ராமன் கோவில் எழும்பி விடாதா?

இன்னொரு முக்கிய தகவல்: ராமன் பிறந்த தாக இவர்கள் கதைக் கிறார்களே, அந்த அயோத்தி சட்டமன்ற (உ.பி.) தேர்தலின் தற் போதைய முடிவு என்ன தெரியுமா?

5 முறை அயோத்தி யில் வெற்றி பெற்ற பிஜேபியைச் சேர்ந்த லல்லுசிங் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் தேஜ் நாராயணனிடம் மண் ணைக் கவ்வியுள்ளார்.

1991 தேர்தலில் அதே தொகுதியில் பிஜேபி வாங்கிய வாக்குகள் 51.3 விழுக்காடு; அடுத்த தேர்தலில் 38.72 விழுக் காடு; அதற்கடுத்து 37 விழுக்காடு வாக்குப் பெற்று, வெற்றிப் பெற்ற ராமன் கட்சியான பி.ஜே.பி. இந்தத் தேர்தலிலோ தோல்வியைத் தழுவிக் கொண்டு விட்டது.

அயோத்தி அடங்கிய பைசாபாத் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 5 தொகு திகளில் 4 இடங்களில் பிஜேபி மண்ணைக் கவ்வி யது என்பது இன்னொரு கூடுதலான தகவலாகும்.

அயோத்தியில் 2ஆவது இடம்; மிலகிபூர் தனித் தொகுதியில் மூன் றாவது இடம்; கோசை கன்ஜில் தொகுதியில் 4ஆவது இடம்; பீகபூரில் 5ஆவது இடம் பி.ஜே. பி.க்கு கிடைத்துள்ளது. கோசை கன்ஜ் தொகு தியில் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் பி.ஜே.பி. தோற்றது தெரியுமா? ஒரு லட்சத்து 23 ஆயிரம்.

அட ராமா? உன் அபார சக்தி இவ்வளவு தானா? அந்தோ பரிதாபம்!

ராமன் கோவிலை மக்கள் நிராகரித்து விட் டனர் என்று ஏன் இந்த ஊடகங்கள் வாயைத் திறக்கவில்லை?
பார்ப்பனர்களுக்கே வெளிச்சம்! - மயிலாடன் 18-3-2012

தமிழ் ஓவியா said...

செய்திச் சிதறல்கள்!


குஜராத்தில் சுதந்திரமான லோக் அயுக்தா நீதிபதி நியமிக்கப்படவில்லையானால் இவ்வாண்டு இறுதியில் குஜராத்தில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் மோடியை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வேன். - கிரேன்பேடி

ஊருக்குத்தான் உபதேசம் எனக்கு இல்லையடி என்றா னாம் - அதுபோல பிஜேபி ஊழல் ஒழிப்பு ராகம் பாடினா லும் அது சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு இருக்கவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு தான் குஜராத்தில் லோக் அயுக்தா - நீதிபதிகூட இல்லாமல் தள்ளாடுவதாகும்; மடியில் கனமில்லை என்றால் லோக் அயுக்தாவை செயல்பட வைக்க வேண்டியதுதானே? வைத்தியரே முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள்.

இது ஒருபுறம் இருக்க, குஜராத் மாநிலம் பொருளாதார வளர்ச்சியில் ஆகா ஊகா! என்று அள்ளி விட்டுக் கொண் டுள்ளனர். குஜராத் மாநில முதல்வருக்கு திட்டக் குழுத் துணைத் தலைவர் அலுவாலியா கடிதம் ஒன்றை எழுதியுள் ளார்.என்ன கடிதம் அது?
ஆந்திரப்பிரதேசம் மகாராட்டிரா மற்றும் கருநாடக மாநிலங்களை விட மிகவும் பின்தங்கிய நிலையில் குஜராத் உள்ளது. தேசிய சராசரியான 7 விழுக்காட்டைவிட பொருளா தார வளர்ச்சியில் பின்தாங்கி யுள்ளது. 2009-2010ஆம் ஆண்டில் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (னுழுஞ)யில் மாநிலத்தின் வரி வருவாய் 6.4 விழுக்காடாக இருந்தது. இது தேசிய சராசரியான 10 விழுக்காட்டைவிட குறைவு என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுதான் குஜராத்தின் நிலவரம்! குப்பை மேட்டுப் பிராணிக்கு ஏப்பத்தைப் பாரு என்கிற பழமொழிதான் நினை வுக்கு வருகிறது.

எகிறும் இராணுவச் செலவு!

இந்திய நிதி நிலை அறிக்கையில் இராணுவத் திற்கு 13.15 விழுக்காடு அதிகரிப்பு.

அணு ஆயுதங்கள் வைத்துக் கொண்டு இருக்கும் நாடு களின் மத்தியில் உலகத்தில் எந்த நாட்டுக்கும் பாதுகாப்பு கிடையாது. இந்த நிலையில் போர் விமானங்கள், டாங்கிகள், துப்பாக்கிகள் வாங்குவது என்பதெல்லாம் நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வதுதான்.

நாள் ஒன்றுக்கு 20 ரூபாய் வருமானம் உள்ள மக்கள் 77 விழுக்காடு உள்ள இந்தியாவில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் 937 கோடி ரூபாய் இராணுவத் துக்காகச் செலவு செய்வது அறிவார்ந்ததுதானா என்பது நியாயமான கேள்விக் குறி யாகும்.

இலங்கையில், சீனா பலமாக தளம் அமைத்துக் கொண்டு விட்டது. ஏதோ ராஜ தந்திரம் என்று நினைத்து இலங்கைக்கு இந்தியாவும் இராணுவ உதவிகளைச் செய்து வருகிறது. இதனால் முழுமை யாக பலன் அடைந்து வருவது இலங்கை தான்.
எதிரும் புதிருமாக இருக்கக் கூடிய நாடுகளை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் இலங்கை புத்தி சாலியா? இந்தியா புத்தி சாலியா?

ஒட்டு மொத்தமாக இந்தி யாவின் ஆயுதங்கள் உட்பட தமிழர்களை அழிப்பதற்குத் தான் பயன்பட்டு இருக்கிறது. இதை நினைக்கும் பொழுது இந்திய இராணுவத்தின்மீது எரிமலை எரிச்சல்தான் ஏற்படு கிறது.

துப்பாக்கிகளின் ரவைகளில் அக்கறை செலுத்துவதைவிட மனிதனின் வயிற்றுப் பசியை, கவ்விப் பசியை நோக்கட்டும் இந்தியா

அய்க்கியம் என்பதற்கு பொருள் என்ன?

கடினமான முடிவுகளை எடுக்கும்போது கூட்டணிக் கட்சிகளிடம் ஆலோசிப்போம் - பிரதமர் மன்மோகன்சிங்

ரொம்ப சரி. இது இன்றைய தேதியில் இருந்தா? இதற்கு முன்பிருந்தேவா?

அப்படி நடந்திருந்தால் திமுக நாடாளுமன்ற உறுப் பினர்கள் ஈழத் தமிழர் பிரச் சினையில் ஏன் வெளிநடப்புச் செய்ய வேண்டும்?
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் குறிப்பிட்டுள்ளாரே - மத்தியில் இருப்பது காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மை கொண்ட ஆட்சியல்லவே!

தி.மு.க. திரிணாமுல் காங் கிரஸ் போன்ற கட்சிகள் ஆதரவு பெற்ற ஆட்சிதானே மத்தியில்? அதனால்தானே அய்க்கிய (United)
என்ற சொல்லே முதலில் முத்தாய்ப் பாக இடம் பெற்றுள்ளது.

நிலைமை இப்படி இருக்கும் போது காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவைத் தானே கூட்டணிக் கட்சிகள் மேல் திணிக்கின்றனர். தி.மு.க.வின் கொள்கை, நுழைவுத் தேர்வு கூடாது என்பது; கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த நிலையில் தான் அதற்கான சட்டமும் இயற்றப்பட்டது.

ஆனால் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை என்ன முடிவு எடுக்கிறது? அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வினை 2013-லிருந்து நடத்துவோம் என்பது எப்படி சரியாகும்? நியாயமாகும்?

கூட்டணி ஆட்சி நடக்கும் போதே. இந்த நிலை என்றால், காங்கிரஸ் தனிப் பெரும் பான்மை பெற்று அதனடிப் படையில் அமைந்தால் நாடு தாங்காதப்பா, தாங்காது! 18-3-2012

தமிழ் ஓவியா said...

இலங்கையை போர் குற்றவாளியாக நிறுத்தி தண்டித்திட வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணியினர் ஆர்பரித்து நடத்திய ஆர்ப்பாட்டம்


சென்னை, மார்ச் 18- அய்.நா. மன்றம் இலங்கை அரசை போர் குற்றவாளி யாக அறிவித்து தண்டிக்கக் கோரி திராவிடர் கழக மாணவரணி இளைஞரணி சார்பில் 17.3.2012 அன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப் பரித்து கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

போர்க் குற்றவாளி இராஜபக்சேவை அய்.நா மன்றத்தில் கொண்டுவர விருக்கும் அமெரிக்காவின் தீர்மானத்தின் படி உரிய தண்டனை வழங்கவும் அதற்கு இந்திய அரசாங்கம் தீரமானத்தை ஆதரிக்கவும். வேலூர் மண்டல திராவி டர் மாணவர் கழக செய லாளர் ஊ.நு. சிற்றரசு தலை மையில் மாபெரும் கண் டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பிற்பகல் 4 மணிக்கு திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவல கம் முன்பு 80க்கும் மேற் பட்ட மாணவர் கழகத் தோழர்கள் பங்கேற்றனர். அய்.நா மன்றத்தின் தீர் மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியும் போர்க் குற்றவாளி இராஜ பக்சேவை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட் டன.

ஆர்ப்பாட்டத்தினை விளக்கி வேலூர் மண்டல திராவிடர் கழக செயலாளர் பழ. வெங்கடாசலம் மாவட்ட செயலாளர். வி.ஜி. இளங்கோ புலவர் அண்ணாமலை தி.மு.க முருகேசன் அன்பழகன் ஆகியோர் உரையாற்றி னார்கள். ஆர்ப்பாட்டத்தில் அண்ணா.சரவணன் சி.வீரமணி தமிழ்ச்செல் வன் எம்.கே.எஸ்.இளங் கோவன் பெரியார்தாசன் அண்ணா.அப்பாசாமி வண்டி ஆறுமுகம் சுகுமார் ஆசிரியர் பழனி குமரேசன் திருநாவுக்கரசு சாமிநாதன் வெங்கடேசன் சிலம்பர சன் கே.டி. மணி பரிதி காளிதாஸ் இராஜேந்திரன் இரா. கனகராஜ் மதியழகன் பெருமாள் கருஞ்ச்சட்டை பாலன் இனியன் பழனி சாமி க. பிரபாகரன் மகேஷ் ஆனந்தன் மற்றும் மாநில மகளிர் பாசறை பொரு ளாளர் அகிலா எழிலரசன் மாவட்ட மகளரணி செய லாளர் ம. கவிதா கே.கே. சி. கமலம்மாள் தாமரை மங்கை செல்வி பவித்ரா பாக்கியவதி உள்ளிட்ட மகளிரணி தோழியர்கள் மற்றும் தி.மு.க ம.தி.மு.க டி.ஆர். இளங்கோ ஆகிய தோழர்களும் பொதுமக் களும் பங்கேற்றனர். இறு தியாக தமிழ்குடிமகன் நன்றி கூறினார்.

விருத்தாசலம்

இலங்கை மீது அமெ ரிக்கா கொண்டு வந்துள்ள மனித உரிமை தீர்மா னத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை வலி யுறுத்தி திராவிடர் மாண வர் கழகம் சார்பில் விருத் தாசலத்தில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அய்க்கிய நாடுகள் அவையில் ஈழத் தமிழர் படுகொலை தொடர் பாக இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள மனித உரிமை மீறல் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண் டும் என்பதை வலியுறுத்தி விருத்தாசலம் பாலக்கரை யில் திராவிடர் மாணவர் கழகம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மாணவரணி துணைச் செயலர் த.சீ. இளந்திரையன் தலைமை ஏற்றார். மாவட்ட மாண வரணித் தலைவர் ரா. தமிழரசன், மாவட்டத் தலைவர் இளங்கோவன், மாவட்ட செயலாளர் சி. கிருட்டினமூர்த்தி, மாவட்ட ப.க செயலாளர் ரா.செழியன், நகர தலைவர் நா.சுப்பிரமணியன், ஒன்றியத் தலைவர் ப.வேல் முருகன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் கழக சொற்பொழிவாளர் முத்து.கதிரவன் தலைமை வகித்து கண்டன உரை யாற்றினார். மாவட்ட இளைஞர ணித் தலைவர் வெ.அறிவு, பாவேந்தர் விரும்பி, ஆசி ரியர் தாமோதரன், ஆழி வீரமணி, மாவட்ட மாண வரணி அமைப்பாளர் க. செல்வமணி, மாணவரணி நிர்வாகிகள் உத்தண்டி, ராசாராமன், ஆசைமணி, அய்யாதுரை, அறிவழகன், சிலம்புச்செல்வி உள்பட கல்லூரி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கோவை

இலங்கைக்கு எதிரான அய்.நா. மன்றத்தின் தீர் மானத்திற்கு இந்தியா ஆத ரவு அளிக்க வேண்டும் என் பதை வலியுறுத்தி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார் பில் கோவையில் 17.3.2012 அன்று மாபெரும் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

திண்டிவனம்

இலங்கைக்கு எதிரான அய்.நா. மன்றத்தின் தீர்மா னத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்க கோரி திண்டி வனம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 17.3.2012 அன்று வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

தருமபுரி

தமிழீழ மக்களின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கொடுங்கோலன் இலங்கை அதிபர் ராஜ பக்சே மீது பன்னாட்டு போர் குற்றவாளி எனும் அய்.நா. தீர்மானத்தை ஆதரிக்க கோரி இந்திய அரசை வலியுறுத்தி தரும புரி மாவட்ட திராவிடர் கழக மாவட்ட மாணவர் அணி சார்பில் 17.3.2012 அன்று நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள், இளைஞர் கள் மற்றும் கழகப் பொறுப் பாளர்கள் பங்கு பெற்றனர். 18-3-2012

Anonymous said...

அந்த ஆசாமியையும் மனுஷனா (?) நெனச்சி ஒரு பதிவு போட்டிருக்கீங்க...

தமிழ் ஓவியா said...

ரஞ்சிதா - நித்யானந்தா பாலியல் காட்சி உண்மையானதே! தடய அறிவியல் நிபுணர் அதிரடி சாட்சி


பெங்களூரு, மார்ச் 19- நடிகை ரஞ்சிதாவுடன் தனியறையில் இருந்த காட்சி பொய் என்று அறிக்கை தரு மாறு நித்யானந்தாவின் சீடர்கள் தம்மை அணுகியதாக தடய அறி வியல் நிபுணர் சந்திரசேகரன் திடுக் கிட வைக்கும் குற்றச்சாட்டை கூறி யுள்ளார்.

தடய அறிவியல் துறையில் நெடுநாள் அனுபவமும் பத்மபூஷன் விருது பெற்றவருமான பி. சந்திர சேகரன், பெங்களூரில் இதனைக் கூறியுள்ளார். அந்த வீடியோவை தாம் ஆய்வு செய்தபோது நிலை யான இடத்தில் பொருத்தப்பட்ட காமிரா மூலம் எடுக்கப்பட்டது என்பதும், அதில் மார்பிங் போன்ற காட்சி தந்திரங்கள் எதுவும் செய் யப்படவில்லை என்றும் தெரியவந் ததாக அவர் தெரிவித்துள்ளார்.

நித்யானந்தா பற்றிய செக்ஸ் வீடியோ ஒளிபரப்பப்பட்ட உடனே அடுத்த நாள் காலையில் சென்னை யில் இருந்த நித்யானந்தாவின் ஆசிரமத்தைச் சேர்ந்த ஒருவர், எனக்கு டெலிபோன் செய்து, இந்த வீடியோ பொய் என்று ஒப்பீனியன் கொடுக்க முடியுமா என கேட்டார்.

நான் சொன்னேன்; வீடியோவைப் பார்த்து பொய் நிஜம் என்றெல்லாம் சொல்ல முடியாது. சந்தேகப்பட்ட வீடி யோவை கொண்டு வரவேண்டும் என் றேன். ஆனால் அடுத்த நாளும் அதற்கு அடுத்த நாளும் ஆசிரமத்தில் இருந்து யாரும் வரவில்லை. ஆனால் அடுத்த நாள் ஒரு தனியார் தொலைக்காட்சியில் இருந்து, அந்த செக்ஸ் வீடியோவையும், நித்யானந்தா சொற்பொழிவு ஆற்றும் வீடியோவையும் கொடுத்து இதில் இருப்பது உண்மைதானா? நித்யானந் தாதானா? என விஞ்ஞானப்பூர்வமாக சொல்ல முடியுமா? என கேட்டனர்.

அதை கம்ப்யூட்டரில் வைத்து ஆராய்ந்து பார்க்கும்போது, அது ஒரு கேமராவை நிலையான இடத்தில் பொருத்தி எடுக்கப்பட்டது தெரியவந் தது. அதில் உள்ள உருவங்கள் எல்லாம் ஆடாமல் நிலையான இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ என்றும், ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ என் றும் கண்டுபிடித்தேன்.

அந்த வீடியோவிலே அனி மேஷன், எடிட்டிங், மார்பிங் எல் லாம் இருக்க சாத்தியமேயில்லை. திரும்ப திரும்ப ஆய்ந்து பார்த்ததில் அது ஒரிஜினல் வீடியோதான். இதில் எந்த சேர்க்கையோ அல்லது விடுபட்டதற்கான தடயங்கள் இல்லை என்பதை கண்டறிந்தேன்.

அந்த வீடியோவில் நித்யானந் தாவின் உருவமும், ரஞ்சிதாவின் உருவமும்தான் இருந்தது. அந்த வீடியோவை வேறு ஒருவருடன் எடுக்கப்பட்டது என ரஞ்சிதா சொல்வதிலும் உண்மையில்லை என்று சந்திரசேகரன் கூறியுள்ளார்.

இந்த வீடியோ உண்மையானது அல்ல என்று அமெரிக்க நிபுணர் கள் சான்று தந்திருப்பது பற்றி கேட் டதற்கு, பன்னாட்டு தரத்திற்கு உள்ள அய்தராபாத் ஆய்வகத்தில் நித் யானந்தாவும், ரஞ்சிதாவும் நெருக் கமாக இருந்த காட்சிகள் உண்மை தான் என உறுதி கூறியிருப்பதை சந் திரசேகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவுக்கு நித்யானந்தா அனுப்பி வைத்த சிடி வேண்டுமா னால் போலியாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.
19-3-2012