Search This Blog

20.4.08

கிருஷ்ணனையும் கீதையையும் செருப்பால் அடிக்கத் துணியாமல் போனால் நீ சூத்திரன் தானே! பயந்தீன்னா நீ சூத்திரனாக இருந்துக்கோ!

சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகள்!

அப்ப அதுக்கு என்ன கொள்கை? சுயமரியாதை இயக்கம் - அது என்ன? மனிதனுடைய வாழ்வு இழிவாப் போனது எந்தக் காரணத்தினால், கடவுளால் ஏற்பட் டது. எந்தக் கடவுளால்? அந்தக் கடவுளை ஒழிக்கணும். மதத்தினால் ஏற்பட்டது; அதனால் மதத்தை ஒழி! காங்கிரசினால் ஏற்பட்டது; அதனால் காங்கிரசை ஒழி! காந்தியினாலே; காந்தியை ஒழி! பார்ப்பானாலே பார்ப்பானை ஒழி!

இந்த அய்ந்தையும் ஒழிக்கிறதுதான் சுயமரியாதைச் இயக்கத்தின் கொள்கை. சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை - கடவுள், மதம், காங்கிரசு, காந்தி, பார்ப்பான் இவங்களை ஒழிக்கிறது.


இவங்கள்ளாம் சுயமரியாதை இயக்கத்துக்குக் கேடான கொள்கைப் பிரச்சாரம் பண்ணி மக்களுக்குள்ளே புகுத்தி, மக்களுடைய ரத்தத்திலே புகுத்தி வச்சுட்டாங்க! ரத்தத்தோட கலக்கி வச்சுட்டாங்க!

அதை ஒழிக்கணும்னா இந்த அய்ந்தையும் ஒழிச்சாலொழிய முடியாது. இதிலொன்றறும் அரசியலைப் பத்தி பேசணும்னு அல்ல. அரசியலே இங்கே வரக் கூடாதுதான். ஆனால், அது இந்தக் காரியத்திற்குத் தேவைங்கறதுனாலே அதைப்பற்றி நான் எடுத்துச் சொல்கிறேன். காங்கிரசினுடைய கொள்கை காந்தியைக் காப்பாத்ணும், மதத்தைக் காப்பாத்தணும், ஜாதியைக் காப்பாத்தணும், அந்தஸ்தைக் காப்பாத்தணும், இன்றைக்கு அதனுடைய கொள்கை அதுதான். அதுக்கு முந்திப் பிடிச்சுவச்சாங்க காந்தியை!

அந்த ஆளு ஒரு களிமண் மூளைக்காரன்! அவன் என்னமோ சாமி, பூதம், பக்தி, அது, இது என்று பேசினதுனாலே பிடிச்சுவச்சுட்டாங்க. அவனை மகாத்மான்’னு! அவனும் பயித்தியக்காரனுக்குக்கள் ஊத்துனாப்போல என்னேரம் பார்த்தாலும் கடவுள், கடவுள்’’ என்று, “இராமன், சாஸ்திரம், வர்ணாசிரமம், இந்துமதம்’’ அப்படின்னு பிரச்சாரம் பண்ண ஆரம்பிச்சான்.அவன் பிரச்சாரத்துக்கு நல்ல பலம் இருந்தது. பார்ப்பான்கிட்டதான் எல்லாப் பத்திரிகையும் நம்மாள்கிட்டே ஒன்றும் இல்லை. அவங்க பேரைச் சொன்னாலே ஜனங்களெல்லாம் கும்பிடற அளவுக்குப் பிரச்சாரமாயிருக்கு! அதனாலே அவனை ஒழிக்கணும்னு ஆரம்பிச்சோம். கடவுள், மதம் ஒழிக்கணும், வர்ணாசிரமத்தைப் பிரச்சாரம் பண்ணின காந்தியை ஒழிக்கணும். இதை எல்லாம் காப்பாத்தறதுக்காக அடிப் படைச் சட்டம் வச்சுக்கிட்டிருக்கிற ஆட்சி செய்கிற அரசாங்கத்தை ஒழிக்கணும்; இதுக்கெல்லாம் கர்த்தாவாக இருக்கிற பார்ப்பானை ஒழிக்கணும், அதன்படிதான் நடந்து வருகின்றது.

நாளுக்கு நாள். காரணம், அதையே எடுத்துக்காட்றேன். நான் சொல்றேன் கேளுன்னு அல்ல! அந்தப் புத்தகத்திலே இருக்கு. இந்த வேதத்திலே இருக்கு. அந்த சாஸ்திரத்திலே இருக்குன்னு அல்ல, எனக்குத் தோணுது என் அறிவுக்குத் தோணுது. அது மாதிரி உன் அறிவுக்குத் தோன்றினா ஒத்துக்க; இல்லாட்டி வேண்டாம். நான் ஒண்ணும் உங்களைக் கட்டாயப்படுத்துவதாக நினைக்கவேண்டாம்! உங்களை ஏய்க்கறதாக நினைக்கவேண்டாம்! உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்! உங்களுக்கு இவ்வளவு சக்தியுண்டு! உங்களால் இந்தக் காரியம் செய்ய முடியும்! இந்தப் பாவிக் கடவுள், மதம், சாஸ்திரங்களாலோ, மற்ற உபதேசம் செய்யறதாலோ பார்ப்பான்களினாலோ நம்ம சக்தி இந்த மாதிரி அடிமையாச்சு!

இதைத்தான் சொல்றோம். மாத்தியாகணும் என்று; மாறாது இருக்கிற ஆளுக உலகத்திலே நாம் தான்! மற்றவன் எல்லாம் மாறிவிட்டான். நாம்தான் இன்னும் மாறவில்லை.

பகுத்தறிவுக் கழகம்!

நம்ம நாட்டுக்கு இப்ப வேண்டியிருக்குத் தீவிரமான கொள்கைகள்! பகுத்தறிவுவைப்பற்றிய கொள்கைகள்! அந்தக் கொள்கைகளைப் பிரச்சாரப்படுத்த முயற்சி பண்றோம். ஆகவேதான் பகுத்தறிவுக் கழகம் வைக்கிறோம். இது இதுக்கு விரோதமோ, அதுக்கு விரோதமோ அப்படியாகுமோ, இப்படியாகுமோ? என்று யாராவது சொல்லக் கூடும்! எதுக்கு விரோதமாக இருந்தாலும் நியாயத்துக்கு விரோதமல்ல!

நாம் பகுத்தறிவுக் கழகம் என்று ஏன் சொல்கிறோம்!

உன் அறிவைக் கொண்டு சிந்தனை பண்ணிப்பாரு! அதுதான் பொருத்தம் என்று சொல்கிறோம்! மிருகத்தோடு சேர்ந்த மத்த பசங்க என்ன பண்ணுறாங்க? வர்ணாசிரம தர்ம சபைன்னு வைக்கிறாங்க! சாதியைக் காப்பாத்தற சபையென்றும் வைக்கிறாங்க! சனாதன தர்மசபையென்கிறான். சாதியைக் காப்பாத்த வேண்டும். முன்னோர்கள் சொன்னதைக் காப்பாத்த வேணு மென்கிறான்.கடவுள் கதை என்கிறானே! ராமன் இப்படிப் பண்ணினான்; கிருஷ்ணன் இப்படிப் பண்ணினான் என்று இதையெல்லாம் சொல்ல அவனுக்கு உரிமை இருக்கிறது! எதைப் பார்த்துச் சொல்றேன்னா ஆதாரத்தைப் பார்த்துச் சொல்றேன். உன் புத்தி என்னடான்னா? புத்தியை உபயோகப்படுத்தக் கூடாது; மதம், கடவுள், சாஸ்திரம் முன்னோர்கள், பெரியோர்கள், மதத் தலைவர்கள் இவர்கள் சொன்ன காரியத்துக்குப் புத்தியை உபயோகப்படுத்தக் கூடாது - படுத்தினா அவர்களுக்கு விரோதம்; மதத்துக்கு விரோதம் என் மனம் புண்ணாகுது என்பானுக.இவனும் இவன் மதமும் இவன் மதத்தலைவனோ, வெங்காயமோ மனம் புண்ணாகுமோ? நாசமாகப் போகட்டும்! என் கதி என்னாகிறது? நான் எத்தனை நாளைக்குச் சூத்திரனாக இருக்கிறது? நான் எத்தனை நாளைக்கு அறிவை இழந்து, கண்டவன் சொன்னதைக் கேட்டுவிட்டுத் தலை வணங்கி, கும்பிட்டுக்கிட்டு இருக்கிறது? மத்தவன் ஆகாயத்தில் பறக்கிறான்; நாம் இங்கே பார்ப்பான் காலைக் கழுவித் தண்ணியைக் குடிக்கணுமா? அதனாலே உன் புண்ணில் புழுக்கட்டும், எங்கதி எனக்கல்ல; என்னை விடவா உன் மனசு பெரிசு? என் மானத்தைவிடவா உன் மனசு பெரிசு? ஆனதனாலே நம்ம கடமையை நாம் செய்யவேணும். ஆபத்து வரும்; பயப்படாதீங்க. வந்தா என்ன?நாளைக்குச் சாகிறவன் இன்றைக்கே சாகிறான். கஷ்டம் வரும். இந்த மாதிரி தான் இந்த நாட்டிலேயே மாறுதலே ஏற்படாமல் இருக்கும்படியாகச் செய்ததுக்குக் காரணம் எல்லாம் பலாத்காரம்; படிச்சவன் எல்லாம் அயோக்கியப் பயலாக இருந்தது; காலிப்பசங்கள் எல்லாம் சேர்ந்து மதத்தைக் காப்பாத்தணும்னு பலாத்காரம் பண்ணியது தான் காரணம்.

இல்லாட்டி, இதெல்லாம் மாறி இருக்குமோ! ஏதாவது ஒண்ணு சொன்னால் கிருத்துவன் வந்தர்றான் சண்டைக்கு. ஏன் என் மதத்தைத் தாக்கு கிறேன்னு? நாசமா போன்னு விட்டுட்டா? இன்னொன்று சொன்னா முஸ்லிம் வந்துடுறான் சண்டைக்கு; ஏன் எங்க மதத்தை இந்த மாதிரி சொல்றேன்னு. இரண்டு பேரும் தொலைஞ்சு, நாசமாகுன்னு விட்டுவிட்டு நம் மதத்தைப்பற்றிப் பேச ஆரம்பிச்சா பார்ப்பான் மட்டும் ரகளை பண்ண மாட்டான்.அவனோட வைப்பாட்டி மகன்னு நினைச்சுக்கிட்டு, சாம்பலை அடிச்சிக்கிட்டு நாமம் போட்டுக்கிட்டு “சிவசிவ ராமா ராமா’’ னுட்டு உளறுகிறானே. அந்தப் பயல்தான் நம்ம கிட்டே சண்டைக்கு வருவான். இப்பக்கூட கேசைப் பத்தி ஒண்ணும் சொல்லலே நடப்புப்பத்தி சொல்றேன். சேலத்திலே இராமனைச் செருப்பாலே அடிச்சுட்டேன்னு பார்ப்பான் எவனும் பிராது போடல்ல. நம்மவன்தான் பிராது போட்டிருக்கிறான். “அவன் இராமனைச் செருப்பாலே அடிச்சான்! அந்த மாதிரி பண்ணுனா என் மனசு புண்ணாகுது!’’ அப்படிப் போட்டு இருக்கிறான்.இப்ப சம்மன் வந்திருக்கிறது. பேப்பரிலே பார்த்திருக்கலாம். பெலமா அறுத்தாதானே அது அறும்; அது சொத்தை வச்சிட்டுதே, புழுத்துகிட்டே போகுதே; அதனாலேதான் அடியில் இருந்து ஆரம்பிக்கிறான். அந்த மாதிரி சொன்னால் ஒழிய மாறாது! ஆகவேதான் இந்த இயக்கம் ஆரம்பித்ததற்குக் காரணமும் இன்னும் சில தன்மைகளும், கொள்கைகளும் இதுதான். மதத்தை ஒத்துக்கிட்டா நான் மேல் சாதி, கீழ்ச் சாதின்னு ஏத்துக்கத்தானே வேணும்!நான் ஒரு இந்துன்னு ஒத்துக்கிட்டேன்னா நான் சூத்திரன்னு ஒத்துக்கத் தானே வேணும்! அது மாத்திரமல்ல, மற்ற சாஸ்திர சம்பிரதாயங்களை ஒத்துக்கிட்டா, கடவுளை ஒத்துக்கிட்டா கடவுள் சொன்னார் என்பதற்கெல்லாம் நாம் கட்டுப்பட்டுத்தானே ஆக ணும்! சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதற்கு நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்! யாரடா சொன்னா, உன்னைத் தேவடியா மகன்னு, சூத்திரன்னு சொன்னா? கிருஷ்ணன் சொன்னான்! எங்கடா சொன்னான்? கீதையிலே சொன்னான்! கிருஷ்ணனையும் கீதையையும் செருப்பால் அடிக்கத் துணியாமல் போனால் நீ சூத்திரன் தானே! பயந்தீன்னா நீ சூத்திரனாக இருந்துக்கோ!

----------- தந்தைபெரியார்- நூல்: "சிந்தனையும் பகுத்தறிவும்" பக்கம் 8-11

0 comments: