Search This Blog

19.2.12

பூணூலை அறுத்து எறியும் காட்சி -இயக்குநருக்கு மிரட்டல்


சத்யா - பவீனா இணைந்து நடித்து வெளிவந்த ஒரு திரைப்படம் சூழ்நிலை - இதனை இயக்கியவர் செந்தூரன்.
நிழல்கள் ரவி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகனாக வரும் பார்ப்பனர் (நிழல்கள் ரவியே பார்ப்பனர் தானே!) மாமிசம் சாப்பிடுகிறாராம் - ஒரு கட்டத்தில் பூணூலையும் அறுத்து எறிகிறாராம்.

இதற்காகத் தொலைப்பேசி மூலம் இயக்குநர் செந்தூரனை மிரட்ட ஆரம்பித்துள்ளனர்.

இவ்வளவுக்கும் இயக்குநர் ஒன்றும் பார்ப்பனர் எதிர்ப்பாளரல்ல; வித்தியாசமாக இருக்கட்டுமே என்று இப்படி ஒரு திரைப்படத்தை எடுத்துள்ளார்!

இந்தக் காட்சிக்கான சமாதானத்தைத்தான் சொல்லிக் கொண்டுள்ளார்.

பார்ப்பனர்கள் மாமிசம் சாப்பிடுவது என்ன இந்தக் காலத்தில் அதிசயமா?

அந்தக் காலத்திலிருந்து ஆரியப் பார்ப்பனர்கள் மாமிசம் தின்றவர்கள்தானே!

யாகங்களில் தீ வளர்த்துக் கொல்லப்படும் மிருகங்களின் எந்தெந்த பாகத்தை எப்படியெல்லாம் ருசித்துத் தின்னவேண்டும் என்பதெல்லாம் அவர்களுக்கு அத்துப்படி ஆயிற்றே!

இயக்குநர் செந்தூரன் அவர்களை மிரட்டும் பார்ப்பனர்கள், ஒவ்வொரு முனியாண்டி ஓட்டல் வாசலிலும் நின்று, எந்தெந்த பார்ப்பனர்கள் சாப்பிடச் செல்லுகிறார்கள் என்று பார்த்து, சட்டையைப் பிடித்து இழுத்து, பிடரியில் இரண்டு சாத்துக் கொடுக்கவேண்டியதுதானே! யார் தடுத்தது?

பூணூலை அறுத்ததுதான் பிரச்சினை என்றால், இதற்கு முன்புகூட எத்தனையோ படங்களில் பூணூலை அறுத்து எறியும் காட்சி இடம் பெற்றுள்ளதே!

புரட்சி இயக்குநர் பாரதிராஜா எடுத்த அலைகள் ஓய்வதில்லை, வேதம் புதிது ஆகிய படங்களில் பூணூலை அறுத்தெறியும் காட்சி இடம்பெற்றதே! பார்ப்பனர்கள் அப்பொழுதெல்லாம் கண்மூடித் தவம் செய்து கொண்டு இருந்தார்களா? அஞ்ஞான வாசம்தான் செய்துகொண்டு இருந்தார்களா?

அப்படிப் பார்க்கப்போனால், காந்தியாரே பூணூலை அறுத்தெறிந்திருக்கிறாரே!

அறுத்தெறிந்தவர் சாதாரணமானவர் அல்லவே! சாதாரண ஆத்மா அல்லவே - மகாத்மாவாயிற்றே!

அவர் அறுத்தெறிந்தபோது எதிர்ப்புக் குரல் கொடுத்தவர்கள் யார் யார்?

பூணூலை அறுத்தெறிந்ததற்குக் காந்தியார் என்ன காரணம் சொன்னார்?

லட்சக்கணக்கான இந்துக்கள் பூணூல் தரிக்காமலிருக்கும் போது அது எனக்கு அவசியமென்று தோன்றவில்லை. ஆத லால் நான் அதை அணியவில்லை. பூணூலை அணிபவன் உயர்ந்த வாழ்வு - மாசற்ற வாழ்வு வாழவேண்டும்; ஆத்மார்த்தீக மான புனிதத் தன்மையின் அறிகுறியாக இருக்கவேண்டும், இப்பூணூல் இன்றுள்ள இந்துக்கள், இன்று இந்து மதம் உள்ள நிலையில், இப்பூணூலை அணிந்துகொள்வதற்குத் தகுதியுள்ளவர்களா என்பது எனக்குச் சந்தேகம். இந்து மதத்திலுள்ள தீண்டாமை, உயர்வு தாழ்வு வேற்றுமை, இன்னும் பல கொடுமைகள், போலித்தனம் - யாவும் ஒழிந்த பிறகுதான் இந்துவுக்குப் பூணூல் அணியும் உரிமையுண்டு; ஆகையால் பூணூல் அணிவதை என் மனம் எதிர்க்கிறது. இந்து மதத்தை உயர்த்துவதற்கு இது ஒரு வழி என்று எனக்குத் தோன்றவில்லை - (சுயசரிதம்: பக்கம் 480) என்றாரே காந்தியார் - இதற்குப் பதில் என்ன?

காந்தியார் கூற்றில் கருத்துக் குழப்பம் இருக்கிறது என்றாலும், பூணூலை அறுத்து எறிந்தார் என்பதுதான் இந்த இடத்தில் எடுத்துக் கொள்ளப்படவேண்டியதாகும்.

பூணூல் என்னமோ ஜாதியை, தீண்டாமையை ஒழிக்கும் தத்துவம்போல காந்தியார் கூறியிருப்பது அடிப்படையில் தவறானதே!

பூணூல் என்பதே ஜாதியின் சின்னம்தான்; அதுவும் உயர்ஜாதிக்காரர்கள் அணியும் சின்னம்தான்.

தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்படும் தாழ்த்தப்பட்டவர்களோ நான்காம் ஜாதி என்று இந்து மதத்தால் அறிவிக்கப்படும் சூத்திரர்களுக்கோ இந்து சாஸ்திரப்படி பூணூல் அணிய உரிமை கிடையாதே!

சூத்திரன் பிராமண ஜாதிக் குறியை - பூணூல் முதலியதைத் தரித்தால் அரசன் சூத்திரனின் அங்கங்களை வெட்டிவிடவேண்டும் என்கிறது மனுதர்மம் (அத்தியாயம் 9; சுலோகம் 224).

உயர்ஜாதி ஆணவத்தைக் காட்டும் பூணூலை அறுக்கவேண்டும் என்று இழிவுபடுத்தப்பட்ட மக்கள் நினைத்தால், திட்டமிட்டால் அதைக் குற்றமாகவோ, நியாயத்துக்கு விரோதமானதாகவோ கூடக் கருத முடியாதே!

இப்பொழுது இல்லாவிட்டாலும், அப்படி ஒரு காலம் வராது என்று கூற முடியாதே!

முஸ்தாபா கமால் பாட்சா செய்யவில்லையா?

இவ்வளவுக்கும் பூணூல் என்பது அந்தக் காலத்தில் கோவணம் கட்டுவதற்குப் பயன்படும் அரைஞாண் கயிறு என்றுதானே விவேகானந்தர் சொல்லியிருக்கிறார்?

இதற்கா அச்சுறுத்தல்?

--------------------- கறுஞ்சட்டை 19-2-2012 “விடுதலை” யிலெழுதிய கட்டுரை

18.2.12

நான் அசல் பிராமணன் அல்ல! சோ ஒப்புதல் !-3

]

(Females activists of Durga Vahini, the women wing of Bajrang Dal are being imparted weapons and sword training at its camps for taking part in future activities against minorities.)

இந்த வன்முறைப் பயிற்சிகள் பற்றி சோவாளின் பேனா வாய் திறந்ததுண்டா?

ஆனந்த விகடனின் கேள்வி (1.2,2012): ஜெயலலிதாவையும், ஆட்சியையும் கைப்பற்றத் துடிக்கும் உங்கள் தலைமையிலான பார்ப்பனலாபியின் சதிதான் சசிகலா நீக்கம் என்று சொல்லப்படுவது பற்றி என்ன நினைக் கிறீர்கள்?

சோவின் பதில்: நீங்கள் சொல்வது போல் வைத்துக் கொண்டால் நான் அ.தி.மு.க.வைக் கைப்பற்றிவிடுவேன். அ.தி.மு.க., எம்.எல்.ஏ.கள் எல்லாம் என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்து விடுவார்கள். அமைச்சர்கள், அதிகாரி கள் எல்லோரும் என் சொல்படிதான் நடப்பார்கள். இப்படியெல்லாம் நான் நம்பவேண்டும். நீங்களே சொல்லுங்கள். அவ்வளவு பெரிய மடையனா நான்?

ஒரு லாபி என்றால் அதில் சில பேர் இருக்க வேண்டும். அப்படிச் சிலரால் பேசப்படும் பிராமண லாபியில் யார் எல்லாம் இருக்கிறார்கள்? நான் பிராமணன். அதுவும் இன்றைய பிராமணன்தான். அசல் பிராமணன் இல்லை.

மொரார்ஜி தேசாய், காமராஜர், ஹெக்டே, என்.டி.ஆர்., எம்.ஜி.ஆர்., வாஜ்பாய் . . . இப்படி எத்தனையோ தலைவர்களோடு நெருக்கமாக இருந்தேன் நான். இவர்கள் எல்லோரும் பிராமணர்களா? அப்பொழுதெல்லாம் இந்தப் பார்ப்பன லாபி குற்றச்சாட்டு எங்கே போனது? இப்போது மட்டும் அது எங்கிருந்து வந்து முளைத் திருக்கிறது?
இவ்வாறு திறமையாக பதில் சொல்ல முயற்சி செய்கிறார்.

இந்தப் பதிலில் கூட நான் மனிதன் என்று சொல்ல முன்வரவில்லை; ஆம் . நான் பிராமணன் என்றுதான் அழுத்தமாகச் சொல்லுகிறார். (அசல் பிராமணன் இல்லை என்கிறார் - இதற்குள் நாம் புகுவது நமது தகுதிக்கு அழகாக இருக்காது)

அதே நேரத்தில் அசல் பிராமணன் யார்? டூப்ளிகேட் பிராமணன் யார்? இரண்டுக்கும் இரு வேறான கல்யாண திருக் குணங்கள் என்ன? என்பதையும் அவர் விளக்கினால் நாம் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

இவர் கூற்றிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகிறது. அவர்கள் கூறும் பிராமண இலக்கணத்துக்குள் வரா விட்டாலும் பிராமணன் என்பதை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. இதுதான் இப்பொழுது பிரச்சினையே!

அசல் பிராமணன் யாரும் இல்லை என்று முடிவான பிறகு, மாற்றங்களை வரவேற்க வேண்டியதுதானே - கலந்து விடவேண்டியதுதானே!

அசல் பிராமணன் இல்லை என்கிற போது பிராமண உரிமை எங்கே இருந்து குதித்தது?

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச் சகர் உரிமை யென்றால், ஆகம சாஸ் திரங்களைத் தூக்கிக் கொண்டு வருவானேன்?

அது எங்கள் பிராமணருக்கு மட்டும்தான் உரியது என்று அடம் பிடிப்பானேன்? உச்சநீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறுவானேன்?

அசல் பிராமணன் இல்லை; ஆனாலும் அசல் பிராமணனுக்குரிய ஜாதித் திமிரும், ஜாதி உயர்வும் அந்தஸ்தும், உரிமைகளும் வேண்டும் என்றால் - அதற்குப் பெயர்தான் வருணாசிரமக் கொழுப்பு என்பது.

இல்லாவிட்டால் ஆச்சாரியார் ராஜகோபாலாச்சாரியார் கொண்டு வந்த கல்வித் திட்டம், குலக்கல்வித் திட்டம் என்பது வெளிப்படையாக ஆனபிறகு, காங்கிரஸ்காரர்களே அவ்வாறு கூறிய நிலையில், திருவாளர் சோ ராமசாமி அந்தக் குலக்கல்வித் திட்டத்தை 34 ஆண்டுகளுக்குப் பிறகு வக்காலத்து வாங்கி எழுதுவதன் உட்பொருள் என்ன?

ராஜாஜி கொண்டு வந்த அருமை யான கல்வித் திட்டம். அதனைத் திரித்துக் கூறி ராஜாஜியை விரட்டி விட்டனர் (துக்ளக் 15-.7.-1988).

இவருடைய பதிலில் காமராஜருடன் தாம் நெருக்கமாக இருந்ததாகக் கூறி, காமராஜர் என்ன பிராமணரா என்று வினா கிளப்பியுள்ளாரே, அந்தக் காமராஜர் ஆச்சாரியாரின் அந்தக் கல்வித் திட்டத்தைக் குலக்கல்வித் திட்டம் என்று கூறவில்லையா? ஆச்சாரியார் பதவியை விட்டு விரட்டப் பட்ட நிலையில், முதல் அமைச்சர் பொறுப்புக்கு வந்த காமராஜர் ஆச்சாரியாரின் அந்தக் குலக்கல்வித் திட்டத்தை ஏன் ஒழித்துக் கட்டினார்?

ராஜாஜி கொண்டு வந்த கல்வித் திட்டத்தை உசத்தியாகத் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் சோவை நோக்கி ஒரு வினா எழுப்புகிறோம்.

அந்தக் கல்வித் திட்டத்தை அறிமுகப் படுத்தியதோடு அல்லாமல் ஆறாயிரம் பள்ளிகளை இழுத்து மூடி னாரே - அதற்குள் முக்காடு போட்டு ஒளிந்திருக்கும் சூழ்ச்சியின் நிறம் என்ன? அதற்கு என்ன சமாதானம்?

ஒரு அரசு என்பது கல்வியைக் கொடுக்கவா - கெடுக்கவா?

அசல் பிராமணன் இல்லையென்றாலும் அந்தப் பார்ப்பனீயத்தைக் கட்டிக் காப்பதில் மட்டும் கண் மூடித்தனமான வெறி ஏன்?

சிதம்பரம் நடராசர் கோவிலில் சிற்றம்பலத்தில் ஓதுவார் ஆறுமுகசாமி தேவாரம் பாடியபோது தீட்சதப் பார்ப்பனர்கள் தாக்கினார்களே - அதனைக் கண்டித்து ஒரு வரி எழுத முன்வராததோடு மட்டுமல்ல, மாறாக என்ன எழுதுகிறார்?

ஒரு கோவிலின் வழிகாட்டு முறைகளில் தலையிட அறநிலையத் துறைக்கோ அதன் மூலம் அரசுக்கோ அதிகாரம் இருக்கிறதா? தலையிடலாம் என்றால் எதில், எந்த அளவில்? இந்தக் கேள்விகள் இந்த விவகாரத்தில் அடங்கியுள்ளன. தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் சிதம்பரம் கோவி லினுள் கனகசபையில் நின்று பாட வேண்டும் என்று சொல்வது அநீதி. (துக்ளக் தலையங்கம் 19-.3.-2008)

தமிழ்நாட்டுக் கோவிலில், தமிழின அரசர்கள் கட்டிய கோவில்களில் தமிழில் பாடினால் இந்த அய்யருக்கு பொத்துக் கொண்டு கிளம்பும் புயல் வேக சினத்தைத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வளவுக்கும் இவர் அசல் பிராமணர் அல்ல. கலப்படப் பிராமணர்தான்.

எங்கிருந்து கொண்டு பேசுகிறார்? தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழில் பாடினால் நாஸ்திகம் என்கி றாரே! அந்த அளவுக்கு நம் இனவு ணர்ச்சி மரத்துப் போய்க் கிடக்கிறது!
பொது ஆர்வமா? மத துவேஷமா? என்ற தலைப்பில் துக்ளக்கில் என்ன எழுதினார்?

நாயன்மார்களும், ஆழ்வார்களும் இயற்றிய தமிழ்ப் பாடல்களை ஸமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தால் அர்த்தம் இருக்கும். அருள் இருக்காது. ரிஷிகளும் பக்த சீலர்களும் இயற்றிய ஸமஸ்கிருத துதிகளை தமிழில் மொழி பெயர்த்தால் பொருள் இருக்கும். புனிதம் இருக்காது. அதாவது இங்கு முக்கியத்துவம் மொழிக்கு அல்ல, ஒலிக்கு (துக்ளக் 18-.11.-1988) என்று தலையங்கம் தீட்டுகிறாரே!

இவர் கூற்றுப்படி தமிழில் துதிபாடி யவர்கள் தேவாரம் பாடியவர்கள் எல் லாம் பக்த சீலர்கள் இல்லை. அப்படித் தானே?

ஒலிதான் கடவுளுக்குப் பிடிக்கும் என்பதை எப்படிக் கண்டுபிடித்தார்? இப்படிக் கூறுவதற்கு இவருக்குள்ள தகுதி (Authority) என்ன? ஆதாரம் என்ன?

எல்லாம் கடந்த வல்லவரான கடவுள் கேவலம் ஒரு ஒலிக்குத்தான் மயங்குவாரா?

பார்ப்பானுக்குச் சமஸ்கிருதம் தேவைப்படும் என்றால் எதையோ சொல்லுவார்கள். இப்பொழுது ஒலியைக் கண்டுபிடித்துள்ளனர். எலும்பைப் பெண்ணாக்கியது, பாம்பு கடித்த பாலகனை மீட்டது என்ற தேவாரப் பார்ப்பனர்களின் சக்தி எல்லாம் சுத்தப் புரூடா என்று இன்னும் வெளிப்படையாக எழுதுவாரா?

தேவாரப் பாடலின் ஒலியைக் கேட்டு பகவான் அருள் புரிந்தது எல்லாம் சுத்த கப்சா என்று எழுதட் டுமே பார்க்கலாம்.

எழுதமாட்டார். ஏன் என்றால் அப்படிப் பாடியவர்கள் எல்லாம் முதுகில் பூணூல் தொங்கும் பிராம ணோத்தமர் ஆயிற்றே!

தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று தி.மு.க. அரசு சட்டம் கொண்டு வந்தால், ஏ அப்பா, எப்படிப் பாய்கிறது இந்தப் பூணூல்?

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பது வழக்கத்துக்கு விரோதமானது. நம்பிக்கைக்கு விரோதமானது. நமது கலாச்சாரத்துக்கு விரோதமானது (துக்ளக் 27.-12.-2010) என்று எழுதுவதில் தமிழின் மீதான துவேஷ உணர்வு துடிக்க வில்லையா?

நமது கலாச்சாரத்துக்கு எதிரானது என்கிறாரே - அது என்ன நமது கலாச்சாரம்! அந்த நமது என்பது யார்? எவ்வளவுத் தந்திரமான சொற்பிரயோகம்! பார்ப்பனக் கலாச்சாரம்தான் நமது கலாச்சாரமா?

நாரதனுக்கும் கிருஷ்ணனுக்கும் (இரு தடிப் பயல்களுக்கு) பிறந்ததுதான் 60 தமிழ் வருஷங்கள் என்பதுதான் தமிழ்க் கலாச்சாரமா?

இந்தப் பிரச்சினை பற்றி எந்த நிலையிலும் விமர்சிக்க நெருங்குவ தில்லையே _ ஏன்? அதற்குப் பெயர் தான் வெட்கம் கெட்ட பார்ப்பனீயத் தின் அறிவு கெட்ட நாணயம் என்பது!
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பார்களே, என்னதான் அ.தி.மு.க.வை ஆலிங்கனம் செய்து கொண்டிருந்தாலும், ஒரு முறை சட்டப்பேரவையில் அதிமுக அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் நடந்து கொண்டதைக் குறித்து எப்படி ஆத்திரப்படுகிறார் இந்த அய்யர்வாள்?

கேள்வி: சட்டசபையில் அதிமுக. வைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம், பிராமண பாஷையில் பேசியது யாரைக் கிண்டல் செய்ய?

பதில்: தெரியவில்லை. இதையே தி.மு.க.வினர் யாராவது செய்திருந்தால் கடுமையாகக் கண்டித்திருப்பேன். இப்போது! ஏன் அப்படிச் செய்தார்? என்ற கேள்விதான் என் மனதில் எழுகிறது. விடை தெரியவில்லை. (துக்ளக் 22-.7-.2009 - பக்கம் 14)

தான் ஒரு பச்சைப் பார்ப்பான் - வெறியன் என்பதை இதன் மூலம் தன் குடலை அறுத்து மாலையாகப் போட்டுக் கொண்டு புலம்புகிறாரே திருவாளர் சோஅய்யர்வாள்?

பிராமண பாஷையைக் கிண்டலாகப் பேசியது குற்றம் என்றால் யார் பேசி இருந்தால் என்ன? கண்டிக்க வேண்டியதுதானே!

தி.மு.க.வில் யாராவது பேசியிருந்தால் கண்டித்து இருப்பாராம். சோவின் அறிவு நாணயம் அம்பலமாகி விட்டதே! ஏதோ ஆதாயத்தை எதிர்பார்த்துக் கண்டிக்கவில்லை. அப்படித்தானே!

சமஸ்கிருதத்துக்கு தமிழின் தயவால் செம்மொழி தகுதி கிடைத்தால் உச்சி குளிர்கிறது. தமிழ் மொழிக்குக் கிடைத்தால் . . .

செம்மொழி, மஞ்சள் மொழி, பச்சை மொழி என்று சொல்லி கற்காலத்துக்கு தமிழ் ஜனங்களை அழைத்துச் செல்வதில் குறியாக அலைகின்றனர். (துக்ளக் _ 15.-10.-2008)

சங்கராச்சாரி பார்ப்பனரிலிருந்து சவுண்டிகள் வரை தமிழ் மீது எவ்வளவு துவேஷத்தை நெஞ்சில், நாக்கில் தேக்கி வைத்துள்ளனர்?

பார்ப்பனர் என்றால் நீதி, ஒழுங்கு, சட்டம் எதையும் பாராது விழுந்து புரளக்கூடிய புத்தி பார்ப்பனர்க்கே உரியது.

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் படுகொலையில் கைது செய்யப்பட்டு 61 நாள் வேலூர் மத்திய சிறையில் தவமிருந்தார் காஞ்சி சங்கராச்சாரியார் திருவாளர் ஜெயேந்திரர்.

அதைப்பற்றி என்ன சொல்கிறார் இந்த சோ? சங்கர மடத்துக்கு அநீதி நடந்துள்ளது (இந்தியா டுடே 9-.2.-2006 பக்கம் 22).

பார்ப்பான் கொலை செய்தால் முண்டனம் செய்து விடவேண்டும். (அதாவது பார்ப்பானின் தலையிலிருந்து ஒரு மயிரை நீக்கிவிடவேண்டும்) என்ற மனுதர்மம் இன்று இல்லையே! அந்த ஆத்திரத்தில் இப்படி சட்டத்தையும், நீதி மன்றத்தையும் உதைத்துத் தள்ளி, உஷ்ணமாகப் பேசுகிறார். இதற்குப் பெயர்தான் பார்ப்பனத்தனம் என்பது - அவர் அசலாக இல்லாவிட்டாலும் கூட!

தமிழர்கள் பாதிப்புக்கு ஆளா கிறார்கள் என்றால் எள் முனை அள வுக்குக் கூட இதயத்தில் இரக்க நீர் சுரக் காது. ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் எவ்வளவு குரூரமாக எழுதினார்? அதே நேரத்தில் காஷ்மீர்ப் பார்ப் பனர்கள் பற்றி இவர்களின் நிலைப்பாடு என்ன?

20-.8.-2008 நாளிட்ட துக்ளக்கில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த திருவாளர் சோ என்ன பதில் எழுதினார்?

லட்சக்கணக்கான ஹிந்துக்கள் காஷ்மீரிலிருந்து வெளியேறி, அகதி களாக டில்லியிலும், நாட்டின் வேறு பகுதிகளிலும் வசிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சொந்த நாட்டி லேயே ஒரு பகுதி மக்களுக்கு இப்படிப் பட்ட கெதி நேர்ந்ததும், அவர்களை இந்நிலைக்கு ஆளாக்கிய சூழ்நிலை களை மாற்றுகிற முயற்சி எதுவும் நடக்கவில்லை என்று மனம் நொந்து எழுதினாரே!

அதே நேரத்தில் ஈழத் தமிழர் களைப் படுகொலை செய்தபோது, அடித்து விரட்டியபோது இதே பூணூல் ஒரு வரி அனுதாபத்தோடு எழுதியதுண்டா?

தமிழர்கள் என்றால் ஒரு கண் ணோட்டம். காஷ்மீர்ப் பண்டிதர் களான பார்ப்பனர்கள் என்கிறபோது இன்னொரு கண்ணோட்டம். இதற்குப் பெயர்தான் பார்ப்பன இனப்பற்று என்பது.

கேள்வி: மரணமடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., செல்வராஜூக்கு, தனது உடல் நலனையும் பொருட் படுத்தாது, நேரில் சென்று கலைஞர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி விட்டு வந்துள்ளது பற்றி?

பதில்: கர்நாடக சங்கீதத்தில் பெரும் புகழ்பெற்ற டி.கே.பட்டம்மாள் குறித்து ஒரு அனுதாபச் செய்தி கூட கலைஞரிடமிருந்து வரவில்லை.
(துக்ளக் 29.-7-.2009 பக்கம் 25)

டி.கே.பட்டம்மாள் பற்றி சோவுக்கு என்ன அவ்வளவு காருண்யம்? ஒன்று மில்லை. அவர் பார்ப்பனர் என்பது தான்.

இதே பார்ப்பன ஏடுகள் பார்ப் பனர் அல்லாதார் தலைவர்கள் மறைந்தபோது எவ்வாறு நடந்து கொண்டன?

அன்னை மணியம்மையார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மறை வினை மரணமடைந்தவர்கள் பகுதியில் (Obituary) என்ற இடத்தில்தானே வெளியிட்டது அவாளின் இந்து ஏடு?

தந்தை பெரியார் மறைவுக்கு ஒரு துணைத் தலையங்கம் கூடத் தீட்ட மனம் வரவில்லையே இந்துவுக்கு?

பனகல் அரசர், மறைமலையடிகள், ஆர்.கே.சண்முகம், திரு.வி.க. ஆகிய திராவிடத் தலைவர்கள் மறைந்த தற்குத் தலையங்கம் எழுதாத ஹிந்து சத்ய மூர்த்தி அய்யர், சீனிவாச சாஸ்திரி, கோபால்சாமி அய்யங்கார் ஆகிய ஆரிய தலைவர்களுக்கு மட்டும் தலையங்கம் எழுதக் காரணமென்ன? திராவிடத் தோஷம்! திராவிடனே சிந்தித்துப்பார்! - (விடுதலை 16-.10.-1957)

பார்ப்பனர்களின் போக்கு எப்பொ ழுதுமே இப்படித்தான். இந்த நிலையில் டி.கே.பட்டம்மாளுக்கு கலைஞர் ஒரு அனுதாபம் தெரிவிக்கவில்லையாம்! என்னே பார்ப்பனர்களின் தளுக்கும் குலுக்கும் நிறைந்த இரட்டை வேட சாகசம்!

The above pictures are from training camps of Hindu terrorist group 'Durga Vahini'. They are famous for their theory of elimination of Sikhs and Muslims from Pakistan to make India a Hindu-only state. They have been killing Sikhs and Muslims in India and spreading their saffron terror.

வன்முறையைப் பற்றிக் கூட வாய்கிழிய பேசுவார். அது கூட ஒரு வழிப்பாதைதான்! ஈழத்தில் தமிழ்ப் பெண்கள் சிங்களக் காடையர்களால் வேட்டையாடப்பட்ட போது, தன் தாயும், மகளும், சகோதரியும் தன் கண்ணெதிரே அந்தக் கயவர்களால் மானபங்கப்படுத்தப்பட்ட போது ஆயுதம் ஏந்திய போராளிகள் வன்முறையாளர்கள் - சோவின் பார்வையில்.

அதே நேரத்தில் ஆயிரக்கணக்கில் மண் வெட்டியையும் கோடாரியையும் தூக்கிக் கொண்டு சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலத்தை அயோத்தியில் இடித்த அநாகரிக வன்முறைக் கூட்டத்துக்கு அசல் மனு தர்மப் பீலி கொண்டு விசிறிவிடுவார். இதற்குப் பெயர்தான் அவாளின் இரட்டை வேடம் என்பது.

கேள்வி: திராவிடர் கழக உறுப்பினர்களுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப் போவதாக கி.வீரமணி அறிவித்துள்ளது பற்றி . . . ?

பதில்: ஒழுங்காக லைசென்ஸ் வாங்கி துப்பாக்கி வைத்திருப்பவர் களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டால், அதில் பிரச்சினை இருக்காது. விதி முறை எல்லாம் பற்றிக் கவலைப் படாமல், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ஒரு துப்பாக்கிக் கும்பலை இவர் தயார் செய்தால், அது விபரீதத்திற்கு வழி வகுக்கும். - (துக்ளக் 24-.7.-2002)

விதிமுறைகளைத் தெரிந்து கொண்டு கட்டு பட்டும் நடப்பது தான் திராவிடர் கழகம். கத்தி வைத் திருக்க வேண்டும் என்று தந்தை பெரியார் கட்டளையிட்டபோது கூட அது சட்டத்திற்குட்பட்ட அளவினை உடையதாக இருக்க வேண்டும் என்று சொல்லத் தவறவில்லை தந்தை பெரியார்.

அதே நேரத்தில் சோ ஆதரிக்கும் பி.ஜே.பி. சங் பரிவார்க் கும்பலின் நிலை என்ன?

விசுவ ஹிந்து பரிஷத்தின் சார்பில் துர்கா வாஹினி என்ற பெண்கள் அமைப்புக்குக்கூட உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளித்த செய்தி படத் துடன் ஏடுகளில் வெளிவந்துள்ளதே. அது பற்றி எழுத சோ பேனா மூடியைத் திறந்தது உண்டா? ஒருவர், இருவருக்கல்ல. விசுவ ஹிந்து பரிஷத் என்றால் திரிசூலங்களை தொண்டர் களுக்கு வழங்கி வன்முறைக்குத் தூபம் போடும் அமைப்பு. 5000 பெண்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியை அளிக் கிறது என்றால் அதன் விபரீதத்தைச் சொல்லவும் வேண்டுமா?

2000 மார்ச்சில் இது போல மது ராவில் பயிற்சி அளிக்கப்பட்டபோது, நாங்கள் இந்து இளைஞர்களுக்குக் காமக் களியாட்டப் பயிற்சியா அளிக்கிறோம்? எங்களுக்குக் காந்தி யின் அகிம்சையில் நம்பிக்கை இல்லை. எந்த சவாலையும் சந்திக்கத் தயார்! என்று விசுவ ஹிந்து பரிஷத்தின் முன்னணித் தலைவர் ஓம் கார்பாவே கூறினாரே - சோ ராமசாமி அப் பொழுது எங்கே போயிருந்தார்?

இப்படிப் பச்சையாக பார்ப்பன வெறி கொண்டு திரியும் இந்த ஓநாய் மொரார்ஜி தேசாய், காமராஜர், ஹெக்டே, என்.டி.ஆர்., எம்.ஜி.ஆர்., வாஜ்பாய் - இப்படி எத்தனையோ தலைவர்களோடு நெருக்கமாக இருந்தவன் நான். அப்பொழு தெல்லாம் இந்தப் பார்ப்பன லாபி குற்றச் சாட்டு எங்கே போனது? என்று சாமார்த்தியமாக எழுதுவது போல பூணூலுக்கு முத்தம் கொடுத் துப் பேசுகிறார்.

காமராஜரைப் பார்ப்பனர்கள் எப்படியெல்லாம் கேலி செய்தார்கள்? ஏன், அவர்களின் ஆச்சாரியாரே கறுப்புக் காக்கை. அதை சுட்டுக் கொல்லவேண்டும் என்று கடற்கரையில் பேசினாரே!

பெரிய பதவி, சின்னப் புத்தி என்று கல்கி கார்ட்டூன் போட்டதே!

சங்கராச்சாரியார்களும், சங் பரிவார்களும், நிர்வாண சாமியார்களும் இந்தியாவின் தலைநகரில் பட்டப் பகலில் பகிரங்கமாக பச்சைத் தமிழர் காமராசரைப் படுகொலை செய்யத் துடித்தார்களே - அதன் பின்னணி என்ன?

காமராசரிடம் நெருக்கமாக இருந்த தாகச் சொல்லுகிறாரே! இதனைத் தெரிந்து வைத்திருக்க வேண்டாமா? தெரியும் என்றால் குரலை மாற்றி ஏன் பேசுகிறார்? இதற்குப் பெயர்தான் அசல் பார்ப்பனத்தனம் என்பது!

ஆக இந்தப் பூணூல் காமராசரிட மும் வேடம் போட்டு ஏமாற்றியிருக் கிறது என்றுதானே பொருள்?

----------------நிறைவு .... 18-2-2012"விடுதலை” ஞாயிறுமலரில் - கலி.பூங்குன்றன் அவர்கள் எழுதிய கட்டுரை

17.2.12

ஜெயேந்திர சங்கராச்சாரியார் சட்டத்துக்கு மேலானவரா?


காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள்கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகிய காஞ்சி மட சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, 61 நாள்கள் வேலூர் மத்திய சிறைச்சாலையில் கம்பி எண்ணி விட்டு பிணையில் வெளியில் வந்தார்.

இந்தக் கொலை வழக்கில் பெரும்பாலான சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறியுள்ளனர். இன்னும் சொல்லப் போனால் கொலையுண்ட சங்கரராமனின் மனைவி, குடும்பத்தினர்கூட இந்தப் பட்டியலில் இடம் பெற்றனர் என்பது அதிர்ச்சிக்குரிய ஒன்றாகும்.

இந்தக் கொலையில் மிக முக்கிய சாட்சியாகக் கருதப்படும் ஆடிட்டர் இராதா கிருஷ்ணனைப் பொய்ச் சாட்சி சொல்லும்படி அடியாட்களை வைத்து ஜெயேந்திர சரஸ்வதி அச்சுறுத்துகிறார் என்று காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியமாகும்.

ஜெயேந்திரருக்கு இருக்கும் பண பலம், அப்பாவிப் பக்தர்களின் பலம், இன பலம், ஆன்மீகப் பலம், ஏடுகளின் பலம் இவற்றினைக் கொண்டு எதையும் சாதிக்கக் கூடிய நிலவரம் நாட்டில் உண்டு.

பெரும்பாலான சாட்சிகள் கலைக்கப்பட்டது குறித்து இந்தக் கண்ணோட்டத்தோடு அணுக வேண்டும். சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறியதன் பின்னணியைக் காவல்துறையின் உளவுத் துறை கண்டறிய வேண்டும்.

குற்ற வழக்கை விசாரித்த புதுவை நீதிபதியிடம் பேரம் பேசிய செய்திகள் ஆதாரப் பூர்வமாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டுள்ளன. இது எவ்வளவுப் பெரிய குற்றம் என்பதை விளக்க வேண்டிய அவசியம் இல்லை.

யாரையும் விலைக்கு வாங்கி விடலாம் என்ற பொருளாதார மிதப்பில் ஆசாமி இருப்பதாகத் தெரிகிறது.

இதற்கிடையே கொலைக் குற்றவாளி என்ற வழக்குச் சுமத்தப்பட்ட ஒருவர் தமிழக ஆளுநரைச் சந்தித்துப் பேசி இருப்பது ஆச்சரியமான ஒன்றே!

இவர்தான் எப்படி ஆளுநரைச் சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறார்? ஆளுநர் தான் ஒரு குற்றவாளியைச் சந்திக்க எப்படி ஒப்புதல் அளித்தார் என்பது சர்ச்சைக்குரியதாகி விட்டது.


படுகொலை செய்யப்பட்ட சங்கரராமனின் மனைவியே இது குறித்து குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

ஜெயேந்திரருக்கு அளிக்கப்பட்ட இந்த வாய்ப்பு இன்னொரு குற்றவாளிக்கு கிடைக்கப் பெற்றிருக்குமா?

தமக்கு நாட்டில் இன்னும் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்று காட்டிக் கொள்ளத் தானே இந்தச் சந்திப்பு பயன்படும்?

கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவராகவா ஜெயேந்திரர் நடந்து கொள்கிறார்? கொஞ்சம் கூட கூச்சம் நாச்சம் இல்லாமல் ஏதோ பெரிய காரியத்தைச் சாதித்து விட்டது போல அல்லவா ஊர்தோறும் திரிகிறார்.

தொடக்கத்தில் இவர் சிறையில் இருந்து பிணையில் வெளியில் வந்த கால கட்டத்தில் இந்து அற நிலையத்துறையே சுற்றறிக்கை ஒன்றை அனைத்துக் கோவில்களுக்கும் அனுப்பியதுண்டு.

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மீது கொலைக் குற்றம் இருப்பதால் அவரைக் கோவில்களுக்கு அழைப்பதோ, பூர்ணகும்ப வரவேற்பு கொடுப்பதோ, குட முழுக்கு நிகழ்ச்சிகளை நடத்தச் சொல்லி அழைப்பதோ கூடாது என்று அந்த அறிக்கையில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டு இருந்தது.

அந்தச் சுற்றறிக்கைக்கு வலிமை இப்பொழுது இருக்கிறதா என்று தெரியவில்லை. பல கோவில்களில் குட முழுக்கில் அவர் கலந்து கொண்ட சேதிகள் ஏடுகளில் படங்களுடன் வெளிவருகின்றன. இது எந்த வகையில் சட்ட ரீதியாகவோ, சம்பிரதாய ரீதியாகவோ சரியானதாக இருக்க முடியும்?

சங்கராச்சாரியார் என்றால் சட்டத்துக்கு மேலானவரா? அந்தரத்தில் நடப்பவரா?

சூத்திரனுக்கொரு நீதி - தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு ஒரு நீதியா - என்று சுப்பிரமணிய பாரதியாரே பாடியிருக்கிறாரே - அதுதான் இந்த 2012இலும் நடப்பா?

அரசும் நீதித் துறையும் உரியது செய்யட்டும்!

-----------------------"விடுதலை” தலையங்கம் 17-2-2012

16.2.12

அம்பேத்கருக்கும் பூணூலா?

விட்டால் அண்ணல் அம்பேத்கருக்கும் பூணூல் போட்டு விடுவார்கள் போலிருக்கிறது.
ஒப்பற்ற தேசியத் தலைவர்! என்று தலைப்பிட்டு ஆர்.எஸ்.எஸ். வார ஏடான விஜயபாரதம் எழுதுகிறது.

நாகபுரியில் 1956ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி அவர் புத்த மதத்தைத் தழுவினார் (மதம் அல்ல - மார்க்கம்!) அவருடன் ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட சகோதரர்களும் புத்த மதத்தில் இணைந்தனர்.

தாழ்த்தப்பட்டவன் தீண்டாத்தகாதவன் என்றெல்லாம் சொல்லி, அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் கணக்கற்றவை. எனினும் அவர் தீண்டாமைப் பிரச்சினையை தேசியக் கண்ணோட்டத்துடன் அணுகினார். புத்த மதத்தில் இணைவதற்கு அவர் கூறிய காரணங்கள் இதைத் தெளிவாக்குகின்றன.

புத்த மதம் பாரதீய இந்து கலாச்சாரத்தில் பிரிக்கப்பட முடியாத அங்கம். எனவே, இந்த மாற்றத்தால் இந்த நாட்டின் கலாச்சாரத்திற்கோ, பாரம்பரியத்திற்கோ எவ்விதப் பாதிப்பும் இல்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்

இவ்வாறு அண்ணல் அம்பேத்கர் சொன்னதாக ஆர்.எஸ்.எஸ். வார இதழ் வழக்கம் போல தனது வக்கணைப் புத்தியை, திரிபு வாதக் கொள்ளியைச் கழற்றிச் சொல்லி இருக்கிறது.

நாக்பூரில் அண்ணல் இந்து மதத்தை விட்டு உதறி புத்த மார்க்கத்தில் இணைந்த போது அவரும், அவரைச் சார்ந்த லட்சோப லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களும் (ஆயிரக் கணக்கில் என்று விஜயபாரதம் புளுகு வதைக் கவனிக்கவும்) இணைந்த போது மேற்கொண்ட உறுதிமொழிகளையும் வெளியிட்டு இருந்தால் அதற்குப் பெயர்தான் அறிவு நாணயம் என்பது.

அவர்களால் அதனை எடுத்துப் போட முடியாது. காரணம் அவர் அதில் இந்து மதத்தின் வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றியிருக்கிறாரே! அவர்கள் வெளியிடா விட்டால் என்ன? விடுதலை இதோ வெளியிடுகிறது.

1956 அக்டோபர் 14 ஆம் நாள் பார்ப்பன ஆதிபத்திய வருணாசிரம இந்து மதத்தி லிருந்து 5 லட்சத்துக்கும் அதிகமான தாழ்த் தப்பட்ட தோழர்களும் பவுத்தம் தழுவியபோது அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களும், மற்றவர்களும் எடுத்துக் கொண்ட உறுதி மொழிகள் இதோ:

1. பிரம்மனையோ, விஷ்ணுவையோ, சிவனையோ நான் கடவுள் என்று கருத மாட்டேன். அவர்களை வழிபாடு செய்யவும் மாட்டேன்.

2. இராமனையோ, கிருஷ்ணனையோ நான் கடவுள் என்று கருதமாட்டேன்; அவர்களை வழிபாடு செய்யவும் மாட்டேன்.

3. இந்துத் தெய்வங்களான கவுரி, கணபதி, இத்தியாதிகளை நான் கடவுள் என்று ஏற்க மாட்டேன்; அவைகளை வழிபாடு செய்யவும் மாட்டேன்.

4. கடவுள் பிறவி எடுத்ததாகவோ, எந்தவொரு உருவத்தில் அவதாரம் செய்ததாகவோ நான் நம்பமாட்டேன்.

5. பகவான் புத்தர்; மகா விஷ்ணுவின் அவதாரம் என்பதை நான் நம்பமாட்டேன். அப்படிப்பிரச்சாரம் செய்வது விஷமத்தன மானது, தவறானது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

6. சாவு சம்பந்தப்பட்ட இந்து மதச் சடங்கான சிரார்த்தத்தை நான் ஒருபோதும் செய்யமாட்டேன்; இறந்தவர்களின் பெயரால் நான் பிண்டம் கொடுக்கவும் மாட்டேன்.

7. பவுத்தத்தின் கோட்பாடுகளுக்கு எதிராக நான் என்றுமே நடக்க மாட்டேன்.

8. பார்ப்பனர்களால் நடத்தப்படும் சமஸ்காரங்கள் எதனையும் நான் என்றுமே ஏற்றுக்கொள்ளமாட் டேன்.

9. அனைவரும் சமம் என்ற கொள்கையை நான் நம்புகிறேன்.

10. சமத்துவத்தை நிலைநாட்ட நான் முயல்வேன்.

11. பகவான் புத்தர் காட்டிய எட்டு அம்ச வழியை நான் பின்பற்றுவேன்.

12. தம்மதத்தின் 12 பரமிதங்களையும் நான் பின்பற்றுவேன்.

13. எல்லா உயிர்ப் பிராணிகளிடத்தும் நான் கருணை காட்டுவேன்; அவைகளைக் காக்க முயலுவேன்.

14. நான் பொய் சொல்லமாட்டேன்.

15. நான் திருட மாட்டேன்.

16. காமத்தில் நான் உழல மாட்டேன்; பாலுணர்வில் அத்துமீற மாட்டேன்.

17. போதைக்குக் காரணமான குடியையோ, மதுவையோ நான் அருந்த மாட்டேன்.

18. ஞானம், கருணை, அறிவுரை ஆகியவற்றின் அடிப்படையிலான புத்தரின் போதனைகளுக்கு இணங்க என் வாழ்வை உருவாக்க நான் முயலுவேன்.

19. பார்ப்பனர் தவிர்த்த பிற மனிதர்களை கீழான பிறவிகள் என்று கருதுவதும், சமத்துவமற்ற நிலையில் நம்பிக்கை உடையதும், மனிதர்களின் விடுதலைக்குக் கேடாக இருப்பதுமான இந்து மதத்தை நான் கைவிட்டு விட்டு இன்று புத்த மதத்தைத் கைக் கொள்ளுகிறேன்

20. புத்த தம்மமே சிறந்த மார்க்கம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

21. இன்று புதிய பிறவி எடுக்கிறேன் என்று நான் நம்புகிறேன்.

22. புத்த தம்மத்துக்கு இணங்கவே இன்று முதல் நான் செயல்படுவேன் என்று உறுதி கூறுகிறேன். இந்த உறுதி மொழிகளில் இந்து மதத்தின் மீது ஏதாவது அபிமானம் காணப்படுகிறதா?

நான் இந்துவாக சாக மாட்டேன் என்று சொன்னவர் தம் வாழ்நாளில் அதனைச் சாதித்துக் காட்டினார்.

உண்மை இவ்வாறு இருக்க, மத மாற்றத்தால் இந்து மதக் கலாச்சாரத்துக்கோ பாரம்பரியத்திற்கோ எவ்விதப் பாதிப்பும் இல்லை என்று சொன்னாராம் அண்ணல். எங்கே சொன்னார்? எப்பொழுது சொன்னார்? ஆதாரத்துடன் வெளியிட வேண்டாமா? கொஞ்சம் அசந்தால் அண்ணல் அம்பேத்கர் அவர்களை அய்யங்காராக்கிப் பூணூலையும் போட்டு விடுவார்கள் போலும்!

------------------- “விடுதலை” 16-2-2012 இதழில் - கறுஞ்சட்டை - எழுதிய கட்டுரை

உண்மையில் தமிழ்ப் புத்தாண்டு எது?


எது தமிழ்ப் புத்தாண்டு?


ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டிய அறிந்து பின்பற்ற வேண்டிய உண்மை இது.

காரணம், உலகுக்கு எல்லாவற்றையும் கொடுத்த தமிழன், இடையில் எல்லாவற்றையும் இழந்து, இன்று எல்லாவற்றையும் இரவல் பெற்று வாழ்கிறான். அவற்றுள் ஒன்றுதான் ஆண்டு.

தமிழன்தான் உலகில் முதன்முதலில் நாள் கணக்கையும், மாதக் கணக்கையும், ஆண்டுக் கணக்கையும் உருவாக்கியவன்.

அதுதான் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று பல்வேறு திரிபுகளைப் பெற்று வழங்கப்படுகிறது.

ஆனால், அதற்கு எதிர்நிலையாக, தனக்கென்று எதுவும் இல்லாத ஆரியர்கள், மற்றவர்களுடையதைத் தனதாக்கி, மூலத்தை அழித்து, மாற்றாருக்கு எதுவும் இல்லையென்றும், எல்லாம் தங்களிடமிருந்து வந்ததென்றும், பொய் கூறி, பித்தலாட்டம் செய்து பிழைத்து வருகின்றனர்.

அப்படி அவர்கள் செய்த பித்தலாட்டங்களில் ஒன்றுதான், தமிழர் ஆண்டை மறைத்து, புராணக் கதையில் தங்களால் புனைந்து உருவாக்கப்பட்ட 60 ஆண்டுகளை (சமஸ்கிருத மொழியில் உள்ள ஆண்டுகளை) தமிழாண்டு என்று கொண்டாடச் செய்தனர்.

தமிழன் கோயிலில் சமஸ்கிருத மந்திரம், தமிழன் திருமணத்தில் சமஸ்கிருத மந்திரம் என்பதுபோல, தமிழன் ஆண்டையும் சமஸ்கிருதமாக்கிய ஆதிக்க நிலையே இது.

தமிழிலே பெயரில்லாத, சமஸ்கிருதத்தில் பெயருள்ள ஆண்டு எப்படித் தமிழாண்டாகும்? என்று சிந்தித்தாலே இங்கு உண்மை வெளிப்படும்.

உண்மையில் தமிழ்ப் புத்தாண்டு எது?

தமிழர்கள் வாழ்வே இயற்கையை அடிப்படையாய் வைத்தது. அவ்வகையில், ஆண்டு மட்டுமல்ல, மாதம், நாள் இவற்றையும் இயற்கையின் அடிப்படையிலே கணித்தனர்.

நாள்: நாள் என்பது சூரியன் தோன்றி மீண்டும் சூரியன் தோன்ற எடுத்துக்கொள்ளும் கால அளவு.

மாதம்: மாதம் என்பதற்கு திங்கள் என்ற பெயருண்டு. திங்கள் என்பது நிலவு. நிலவை அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்பட்ட காலம் என்பதால் அது திங்கள் (மாதம்) எனப்பட்டது.

ஆண்டு: சூரியன் ஆண்டின் எல்லா நாள்களிலும் தலைக்கு நேர் இருப்பதில்லை. ஒரு காலத்தில் தென்கோடியில் இருக்கும்; அடுத்து தலைக்கு நேர் வரும்; அடுத்து வடகோடிக்குச் செல்லும். மீண்டும் தலைக்கு நேர் வரும். அதன்பின் மீண்டும் தென்கோடிக்குச் செல்லும்.

சூரியன் தென்கோடியிலிருந்து, வடக்கு நோக்கத் தொடங்கும் நாளை, ஆண்டின் முதல் நாளாகக் கொண்டு தமிழர்கள் ஆண்டைக் கணக்கிட்டனர். அதன்படி தை முதல் நாள் சூரியன் தென்கோடி முனையிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லத் தொடங்கும் - சித்திரை மாதம் தலைக்கு நேர் இருக்கும். ஆனி மாதக் கடைசியில் வடகோடிக்குச் செல்லும்; புரட்டாசி மாதக் கடைசியில் தலைக்கு நேர் மீண்டும் வரும்; மார்கழி கடைசியில் தென் கோடிக்குச் செல்லும்.

ஆக, சூரியன் தென்கோடியிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லத் தொடங்கி, மீண்டும் தென்கோடியைச் சென்றடைய எடுத்துக் கொள்ள ஆகும் காலம் ஓர் ஆண்டு.

மீண்டும் தை முதல் நாள் வடக்கு நோக்கிச் செல்லத் தொடங்கும். எனவே, தை முதல் நாள் தமிழ் ஆண்டின் தொடக்க நாளாகத் தமிழர்கள் கொண்டனர்.

இதை அடிப்படையாக வைத்தே ஆங்கில ஆண்டு உருவாக்கப்பட்டது. இங்கிலாந்து இருப்பது நமக்கு 6000 மைல்களுக்கு அப்பால் வடமேற்கில் தள்ளியிருப்பதால் 13 நாள்கள் முன்னமே அவர்கள் கணக்கீடு வந்து ஜனவரி 1 ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளப்படுகிறது.

மற்றபடி ஏசு பிறப்பை வைத்து ஜனவரி 1 என்று உருவாக்கப்படவில்லை. 2012 என்பது ஏசு பிறந்து அத்தனை ஆண்டுகள் என்பதுதானேயன்றி, அவர் பிறந்ததிலிருந்து ஜனவரி 1 என்று கொள்ளப்படவில்லை.

அவர் பிறப்புதான் ஆங்கில ஆண்டின் தொடக்கம் என்றால், டிசம்பர் 25ஆம் தேதிதான் அவர் பிறந்தது. டிசம்பர் 25 ஆண்டில் தொடக்கம் அல்லவே!

எனவே, தமிழாண்டை ஒட்டியே ஆங்கில ஆண்டும் சூரியன் இருப்பைக் கொண்டு உருவாக்கப்பட்டது.

ஆனால், சித்திரையை ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளும், பிரபவ முதல் அட்சய வரையிலான 60 ஆண்டுகள் நாரதருக்கும் கிருஷ்ணனுக்கும் பிறந்த பிள்ளைகள் என்று புராணக்கதை கூறி, அறிவிற்கு ஒவ்வாத, அறுவறுப்பான ஆண்டைத் தமிழாண்டு என்று சூடும், சொரணையும், மானமும் உள்ள தமிழன் ஏற்கலாமா? சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நாரதரும் கிருஷ்ணனும் ஆண்கள். ஆணுக்கும் ஆணுக்கும் குழந்தை பிறக்குமா? அதுவும் ஆண்டு பிறக்குமா? ஆண்டு என்பது கால அளவு. அது எப்படி குழந்தையாய்ப் பிறக்கும்?

எனவே, இழிவை விலக்கி உண்மையை உணர்ந்து தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட வேண்டியது தமிழன் ஒவ்வொருவனின் கடமை! மாறாக சித்திரை மாதத்தைத் தமிழ்ப் புத்தாண்டாக, தமிழனாய்ப் பிறந்தவர்கள் கொண்டாடக் கூடாது.
------------------- சிகரம் -”பெரியார் பிஞ்சு” பிப்ரவரி 2012