Search This Blog

19.6.08

சுப்பிரமணியன் சுவாமி `அகாசுகா' பேர் வழி + கட்டுக்கதையாக, பொய்யாகப் பேசுகிறார்


தி.மு.க. - பா.ம.க. பிரச்னை ஒருபுறமிருக்க, `ராஜீவ்காந்தி படுகொலையில், வெளிநாட்டு சதிவலைத் தொடர்புகள் உள்ளதா என்பதை விசாரிக்க, சி.பி.ஐ.யின் டீம் ஒன்று, ஜெர்மன் நாட்டிற்குப் பயணிக்க உள்ளது. அங்கே கே. பத்மநாபன் என்பவரிடம் விசாரணை நடத்தவுள்ளது. இந்த கே. பத்மநாபன் வேறு யாருமல்ல; விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதி நிர்வாகப் பொறுப்பாளர். `கே.பி.' என்று புலிகளால் அன்போடு
அழைக்கப்படுபவர். அவ்வளவு எளிதில் நெருங்க முடியாத நபர்!

இப்படிப்பட்ட `கே.பி.'யைத்தான் டாக்டர் ராமதாஸ் ரகசியமாகச் சென்று சந்தித்துப் பேசினார். எனவே, ஜெர்மன் சென்று கே.பி.யை விசாரிக்கப் போவதாகச் சொல்லும் சி.பி.ஐ., அதற்கு முன்பு டாக்டர் ராமதாஸிடம் விசாரணை நடத்தினால் பல உண்மைகள் கிடைக்கும். எனவே, ராம தாஸிடம் விசாரணை நடத்தவேண்டும்!' என்கிறார் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி. இந்த நிலையில் நாம் அவரைச் சந்தித்தோம்.

என்ன, திடீரென்று இப்படியொரு குற்றச்சாட்டை எழுப்புகிறீர்கள்? எப்போது நடந்தது அந்தச் சந்திப்பு?

``நான் சொல்வதென்றால் எதையும் ஆதாரத்தோடுதான் சொல்வேன். இல்லையென்றால் பேசவேமாட்டேன். 2006-ம் ஆண்டு ஜனவரி ஒன்பதாம் தேதி டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் உள்ளிட்ட ஒரு டீம் மலேசியாவுக்குச் சென்றது. கோலாலம்பூர் ஏர்போர்ட்டில் இவர்கள் இறங்கி னார்கள். அங்கே அடையாளம் தெரிந்த விடுதலைப்புலி நிர்வாகிகள்தான் இவர்களை வரவேற்று அழைத்துச் சென்றார்கள். ஓர் இடத்தில் தங்கினார்கள். பிறகு, அடுத்தடுத்து சில இடங்களுக்குச் சென்று கூட்டங் களில் கலந்துகொண்டார்கள். அப்படியே தாய்லாந்துக்குச் சென்றார்கள். அங்கேதான் கே. பத்மநாபன் இருக்கிறார். அங்கேதான் இவர்கள் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார்கள். இதை வழிநடத்தி முடித்தது டாக்டர் ராமதாஸ்தான். `கே.பி.' என்பவர் புலிகளின் பண விஷயத்தைக் கையாள் பவர். ராஜீவ்காந்தி கொலையில் இவரையும் சி.பி.ஐ. விசாரிக்கப் போகிறது என்ற செய்தி வெளிவந்தது. அதற்குத்தான் `எதற்காக ஜெர்மன் நாட்டிற்குச் செல்லவேண்டும்? ராமதாஸிடமும், திருமாவளவனிடமும் விசாரித்தாலே கே.பி.யைப் பற்றியும் மற்ற தொடர்புகள் பற்றியும் தெரிந்துவிடுமே' என்று நான் கூறுகிறேன்.''

சந்தித்தார்கள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? என்ன ஆதாரத்தில் இந்தக் குற்றச்சாட்டைக் கூறுகிறீர்கள்?

``சமீபத்தில் நான் தாய்லாந்துக்குச் சென்றிருந்தேன். அப்போது அங்கே உள்ள `ரா' உளவுப் பிரிவு அதிகாரிகள் என்னைச் சந்தித்தார்கள். சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில்தான் `என்ன இந்த ராமதாஸும், திருமாவளவனும் வந்து இப்படிச் செய்கிறார்கள்' என்ற விஷயத்தைக் கூறினார்கள். உடனே நான், `புலிகளைச் சந்தித்தார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளதா?' என்றேன். `ஆமாம். கோலாலம்பூர் ஏர்போர்ட்டில் வந்து வரவேற்ற டீமில் புலிகளின் நிர்வாகிகள் இருந்தார்கள். போட்டோ ஆதாரம்கூட இருக்கிறது' என்றார்கள். அதைத்தான் நான் சொல்கிறேன்.''

அந்த போட்டோ ஆதாரம் உங்களிடம் உள்ளதா?

``எதற்கு? தேவைப்படும்போது மத்திய அரசோ சி.பி.ஐ.யோ கேட்டால் அப்போது வெளியிடுவேன்'' என்றார் சுவாமி.

சுவாமியின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து `விடுதலைச் சிறுத்தைகள்' அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவனிடம் பேசினோம்.

``சுப்பிரமணியன் சுவாமி தான் ஓர் `அகாசுகா' பேர் வழி என்பதை அவ்வப்போது இப்படித்தான் காட்டிக் கொள்கிறார். தமிழ்ப் பாதுகாப்புச் சங்கத்தைத் தொடங்கி வைப்பதற்காக நாங்கள் அங்கே சென்றோம். அதிகாலை மூன்று மணி தூக்கக் கலக்கத்தில் விமான நிலையத்தில் இறங்கியபோது, `சுவாமி' சொல்வதுபோல் யாருமே எங்களை வரவேற்கவில்லை. வன்னியர் சங்க நிர்வாகிகள் நான்கைந்து பேர்தான் அங்கே வந்து எங்களை வரவேற்றார்கள். அடுத்து, கே. பத்மநாபன் என்கிற அந்தப் பெயரை சுப்பிரமணியன் சுவாமி சொல்லித்தான் இப்போது அறிகிறேன். அவரை நான் பார்த்ததோ சந்தித்துப் பேசியதோ கிடையாது. சுத்த பொய்ப் பிரசாரம் இது. அந்த மலேசியப் பயணத்தின் போது மட்டுமல்ல, எப்போதுமே நான் தைவானோ, தாய்லாந்தோ சென்றதில்லை. அப்படிச் சென்றிருந்தால், என் பாஸ்போர்ட்டில் அந்த நாட்டின் முத்திரை விழுந்திருக்க வேண்டுமே. இதிலிருந்தே, சுவாமி பேசுவது ஒவ்வொன்றும் இப்படித்தான் கட்டுக்கதையாக, பொய்யாகப் பேசுகிறார் என்பது வெட்டவெளிச்சமாகி உள்ளது. அவரது குற்றச்சாட்டு எல்லாம் இப்படித்தான் போலிருக்கிறது!'' என்றார் திருமா.

-----------------------------நன்றி: "குமுதம்" -22-6-2008

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என்றைக்கு உயர முடியும்?






ஏன் பெரிய பெரிய கொள்கைகள், குறிக்கோள்கள், எண்ணங்கள் எல்லாம் பெரும் பாடுபட்டும் கூட தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்ற அறிவுலக மேதைகளாலும், அண்ணல் அம்பேத்கர் போன்ற அத்தகைய அறிஞர் பெருமக்களாலும் சொல்லப்பட்ட இந்தக் கருத்துகளெல்லாம் ஏன் இன்னும் முழுமையான அளவில் வெற்றி பெறவில்லை என்றால், அதிலேதான் வருந்தத்தக்க செய்தி உள்ளது.

இந்தக் கருத்துகள் யாருக்காக சொல்லப்படுகிறதோ அவர்கள் இந்தக் கருத்துகளை ஏற்றுக் கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். யாருக்காக இந்தத் தலைவர்கள் பாடுபடுகிறார்களோ அவர்கள் இந்தத் தலைவர்களை ஏற்றுக் கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். யாருக்குப் பாடுபடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாதவர்களாக ஒரு பெரிய சமுதாயம் இருக்கின்றது.

நான் ஒருமுறை பெரியார் அவர்களிடத்திலே பேசிக் கொண்டிருக்கும்போது “அய்யா! நாம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைத்துப் பாடுபடுகிறோம். இவ்வளவு சலுகைகள் அறிவிக்கிறோம். அதைப் போலவே தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிட மக்களுக்காக நாம் பணியாற்றிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் அவர்கள் நம்மை உணர்ந்ததாகத் தெரியவில்லையே?” என்று கேட்டபோது, பெரியார் சொன்னார்: “அதனால்தான் அவர்கள் இன்னமும் பிற்படுத்தப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். இன்னமும் தாழ்த்தப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் நம்மைப் புரிந்து கொண்டால், நம்முடைய எண்ணங்களைப் புரிந்து கொண்டால் அவர்கள் உயர்ந்து விடுவார்கள். அவர்கள் வாழ்க்கையை நடத்த முற்படுவார்கள். வாழ்க்கையினுடைய உண்மையை உணருவார்கள்” என்று பெரியார் அவர்கள் கூறினார்கள்.

-------------- முதல்வர் கலைஞர் அவர்களின் நெல்லைப் பேச்சு -"விடுதலை" 19-6-2007

உள்ளங்கையில் உண்டாயிருக்கும் கோடுகள் (ரேகை) தோன்றியது எப்படி?

குறி பார்த்தல் (3)

இன்றைக்கு வாலுடைய குரங்குகளும், வாலில்லாக் காட்டு மனிதக் குரங்குகளும் அம்மாதிரியாகவே தாவிச் செல்கின்றன. அப்படித் தாவிச் செல்வதால் கைகளும் மடிக்க வேண்டி வருகின்றன. கைகள் மடியுண்ட இடங்களில் வரி வரியாகக் கோடுகள் உண்டாயின. அப்படி உண்டான கோடுகள்தான் அந்தச் சந்ததி மூலமாக நமக்கும் வந்திருக்கின்றன. இதுதான் நமது உள்ளங்கையில் உண்டாயிருக்கும் கோடுகளின் உற்பவம். மரத்தைத் தாண்டி மடிந்த இடங்களைக் கொண்டு நமது நடத்தைகளை எப்படி அறியக் கூடும் எனக் கேட்கின்றோம்? இரண்டு வரி அய்ந்தாம் விரலுக்குக் கீழ் இருந்தால் அவனுக்கு இரண்டு பெண்சாதியாம்! ஆனால் ஒரு வரியுடய பலருக்கு பல பெண்சாதிகள் இருப்பதை காணலாம். ஆதலின் இந்த வரிகளைக் கொண்டு நமது நடவடிக்கைகளைக் குறிப்பது ஆங்கிலத்தில் pureguess என்று சொல்லலாம். அதாவது வெறும் உத்தேசம்! இந்த வெறும் உத்தேசத்தை உண்மையென நினைத்துக் கொண்டு மோசம் போகின்றவர்கள் அநேகர் உளர்.


இந்த ஆதாரத்திற்கு இன்னொரு நியாமும் உண்டு. விரல்கள் மடியும் இடங்களில் கோடுகளைப் பார்க்கலாம். இந்தக் கோடுகள் விரல்கள் மடியுண்டபடியால் விரல் மடிப்புகளிலெல்லாம் விரல் வரிகள் தோன்றியுள்ளன. இந்தப் பிரத்தியட்ச காட்சி போலவே மற்ற கைவரிகளும் தோன்றியுள்ளன. ஆனால் விரல் மடிப்புகள் பிரயோஜன மில்லையெனில் மற்ற கை மடிப்புகள் மாத்திரம் பிரக்யாதி பெற்றது எவ்விதம்? எவனோ ஒருவன் ஒரு காலத்தில் கைக் கோடுகளைப் பார்த்து குறிசொல்லி இருப்பான். அது முதலில் வெறும் உத்தேசமாகவே சொல்லி இருப்பான். இதை உண்மையென நம்பி, பழக்க வாசனையால் கையைப் பார்த்துக் குறி சொல்லும் பழக்கம் வந்திருக்க வேண்டும். இவ்விதமாகத்தான் நமது கையைப் பார்த்து குறி சொல்லும் பழக்கம் உண்டாகி இருத்தல் வேண்டும். எந்த மூடனும் இந்த பழக்கத்தைக் கையாளலாம். ஆனால் இந்த மூடநம்பிக்கையில் விஸ்வாசமுள்ளவர்களைப் பற்றித் தான் நாம் வருந்துகின்றோம்.


விளக்கு வைத்துப் பார்த்தல் என்னும் ஒரு மூடப் பழக்கம் பாமர மக்கள் வீடுகளில் வழங்கி வருகின்றது. ஒரு பூசாரி தன்முன் விளக்கை ஏற்றி, அந்த எரியும் சுடரை அந்த அம்மன், இந்த அம்மன் என்று வர்ணித்து, இதைச் சொல்லம்மாவென எரியும் சுடருடன் பேசுவதைப்போல் நடித்து, சுடர் அசையாமலிருந்தால் அம்மா உத்தரவு அளிக்கவில்லை என்றும், அசைந்தால் அம்மா உத்தரவு கொடுத்தாள் எனவும் அர்த்தப்படுத்திக் கொண்டு மக்களை ஏமாற்றும் விதம் ஒன்றுண்டு. இதுவும் ஒரு ஜீவன உபாயமென அறிக. கிராமாந்திரங்களில் ஏழைகள் நோய் வாய்ப்பட்டால் இம்மாதிரியான மூடப் பழக்கங்களைக் கொண்டு நிவர்த்திக்கப் பார்க்கின்றார்கள். இதனுடைய ஆபாசத்தை சற்று விளக்கிப் பார்க்கவேண்டும்.


கோடானுகோடி கோடி தீபங்கள் தெரிகின்றன. அசையாத தீபங்களையும் தற்காலத்தில் பார்க்கின்றோம். அதாவது, மின்சார தீபங்கள். இந்தத் தீபச் சுடர்கள் காற்றிலும் அசைவதில்லை. காற்றில்லாமல் போமாகில் அசைவற்று எரியும். காற்று வீசியதும் தீபச் சுடர்கள் அதைப் பார்க்கலாம். இந்தச் சுடர்கள் அசேதனங்கள்; அதாவது உயிரற்றவை. நமது சொல்லையும் கேட்க முடியாதவை. காலில் மிதிபடும் கல்லுக்கும் விளக்கில் எரியும் தீபச் சுடர்களுக்கும், மேற் கண்ட விஷயங்களில் வித்தியாசமில்லை. அப்படியிருக்க, எவ்விதம் சுடர்களுடன் பேசக் கூடுமோ அது நமக்கு விளங்க வில்லை. பைத்தியம் பிடித்தவர்கள்தான் சுடருடனும், சுவருடனும், செடி , மரங்களுடனும் பேசுவார்கள். இந்த விஷயத்தை யோசியாமல் விளக்கு வைத்துப் பார்த்து அத்துடன் பேசுவதென்றால் என்ன மூடத்தன மென்று எண்ணவேண்டும்? பூசாரிதான் அவன் ஜீவனத்திற்கு மோசம் செய்கின்றான். பகுத்தறிவுடைய ஏழை மக்கள் அவன் பித்தலாட்டத்திற்கு ஏமாந்து, அவன் பிதற்றுவதைக் கேட்டு, அவனை நம்புவதென்றால், என்ன மதி மோசம்! விளக்கில் அம்மனோ, சாத்தானோ, சனியனோ, புகுந்து கொண்டு பூசாரி கேட்பதற் கெல்லாம் விடை கொடுப்பதாகச் சொன்னாலும், முன் நம்பிக்கையைவிட இது நம்பத்தகாதது; அதனினும் ஆபாசமே ஆகும்.


தீபச் சுடர்களைக் காற்றில்லாத அறைகளில் எரிய வைத்து, திருஷ்டாந்தமாக இதனை யாரும் பரீட்சித்து பார்க்கலாம். காற்றில்லாத கூடத்து அறையில் விளக்கை ஏற்றி அதன் அருகே உட் கார்ந்து கொண்டு, காற்றை மெதுவாக வாயின் மூலமாக இழுத்தால் சுடர் அசைவற்று நிற்கும். அது நமது, இஷ்டப்படி அசையவேண்டுமானால், கையை ஆட்டினாலும், நமது தேகத்தை ஆட்டினாலும், அல்லது மெதுவாக ஊதினாலும் தீபச்சுடர் அசையும் இவ்வித இவ்விதச் சலனமற்ற நிலையையும், அசையும் நிலைமையையும் யாரும் செய்து காட்டலாம். ஆனால், இவ்விதமாகச் சுடர்களை அசையச் செய்வதையும், அசையாமல் இருக்கச் செய்வதையும், யாரும் தகுந்த இடங்களில் செய்து காட்டலாம். இவ்விதமாக யாவரும் செய்துகாட்ட முடியும்போது, எந்த அம் மனும், மாரியாத்தாளும், மதுரை வீரனும் தீபச் சுடரில் புகுந்து கொண்டதாக எண் ணுவதில்லையே. ஆனால், பூசாரி அதே மாதிரி அசைய வைத்தால், அந்த அசைவு தெய்வங்களால் உண்டானதாக எண்ணுவது பைத்தியக்காரத் தனமல்லாது வேறென்ன?
காற்றில்லாமலிருந்தால் சுடர் அசைவற்று எரிகிறது. காற்றுப்பட்டால் அசைகிறது. ஆதலின் அசைவுக்கும் அசையா தன்மைக்கும் காற்றே காரணம். இதற்கு எந்த அம்மன் தயவும் வேண்டுவதில்லையே! இந்தப் பித்தலாட்டங்களைச் செய்யும் பூசாரிகளையும், அவர்கள் சொல்வதைக் கேட்கும் பாமர மக்களையும் ஒன்று கேட்கின்றோம். அதாவது காற்றடிக்கும் அறைகளில் அதாவது ஜன்னல்களுக்கு எதிரிலாகிலும், வாசல்களிலும், தெருக்களிலாகிலும், தீபத் தைக் குத்து விளக்கில் ஏற்றி அதன் சுடரை அசைவற்று நிற்கும்படிச் செய்யுங்கள் பார்ப்போம்? என்னதான் நீங்கள் உரத்து அம்மனை வர்ணித்தாலும், அந்த அம்மன் சுடரில் நுழையவே மாட்டாள்! இந்தத் தந்திரத்தை அறிந்த பூசாரி, கூடத்து மூலையிலும் காற்றில்லா அறையிலுமே சுடரை எரியப் பார்ப்பான்; இதுதான் பூசாரிகள் செய்து வரும் தந்திரம்.



----------ம.சிங்காரவேலர் அவர்கள் எழுதிய கட்டுரை

கனிமொழி பேச்சும் - வெங்கைய நாயுடுவின் வினாவும்!


பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் அகில இந்தியத் தலைவர் திரு. வெங்கைய நாயுடு சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியுள்ளார்.

கடலூர் மாநாட்டில் கனிமொழி பேசும்போது, மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், தமிழகம் இன்னொரு குஜராத் மாநிலமாக மாறிவிடும் என்றார். குஜராத் மாநிலத்தில் அப்படி என்ன குறை உள்ளது? - என்ற வினாவை எழுப்பியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவைப் பொறுத்தவரை - வெளியில் அண்ணா தி.மு.க. என்ற முத்திரையைக் குத்திக் கொண்டு இருந்தாலும் உள்ளடக்கத்தில் ஓர் இந்துத்துவாவாதிதான் என்பதைப் பல நேரங்களில் வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்.
குஜராத் மாநில முதலமைச்சராக நரேந்திர மோடி பதவியேற்றபோது, அந்தப் பதவி ஏற்பு விழாவுக்குச் சென்ற ஒரே ஒரு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாதான்.

அதே நரேந்திரமோடி சென்னை வந்தபோது தன் வீட்டுக்கு அவரை அழைத்து தடபுடலாக விருந்தும் அளித்து தன் இந்துத்துவா விசுவாசத்தைக் காட்டிக் கொண்டவர். அத்தகைய ஒருவர் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு குஜராத் ஆக மாறும் என்று கவிஞர் கனிமொழி கூறியிருப்பதன் பொருள் எளிதாகப் புரிந்துகொள்ளக் கூடியதுதான்.

110 கோடி மக்கள் தொகையுள்ள இந்தியாவில் பல இனம், பல மொழி, பல கலாச்சாரம், பல மதம், மதமற்ற தன்மை என்கிற நிலையில், மக்கள் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர்.
பா.ஜ.க.வின் அணுகுமுறை என்ன? அதனைப் பரீட் சார்த்தமாக நரேந்திரமோடி மூலம் குஜராத்தில் அரங்கேற்றி இருக்கின்றனர்.

2002 இல் கோத்ரா இரயில் நிலையத்தில் சபர்மதி இரயிலில் ஏற்பட்ட ஒரு நிகழ்வின் பின்னணியில், நரேந்திர மோடியின் தலைமையில் உள்ள ஓர் அரசால், மக்களை மத வாரியாகப் பிரித்து, இந்துக்களை ஏவிவிட்டு, முஸ்லிம் களைப் பூண்டோடு அழிக்கும் குரூர வன்முறை ஏவிவிடப் பட்டது.

இரண்டாயிரம் முசுலிம்கள் கொல்லப்பட்டனர். அவர் களின் வீடுகள், வணிக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப் பட்டன. பொடா சட்டத்தின்கீழ் 287 பேர் கைது செய்யப்பட் டனர் என்றால், அதில் 286 பேர் முசுலிம்கள் - ஒருவர் சீக்கியர். எந்த சிறுபான்மை மக்கள் பாதிப்புக்கு ஆளானார்களோ, அவர்களே பொடாவின்கீழ் கைதும் செய்யப் பட்டனர்.

இதன்மூலம் இந்துக்கள் வாக்கு - முசுலிம்கள் வாக்கு என்று மத அடிப்படையில் வாக்கு வங்கி உருவாக்கப்பட்டது.

இந்த முறையை இந்தியா முழுமையும் அமல்படுத்த வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் திட்டம். அதனை நரேந்திர மோடி வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொடுத்தார் என்பதுதான் அவர்களின் வட்டாரத்தில் அவரைத் தூக்கிப் பேசும் காரணமாகும்.

இந்த நிலை தமிழ்நாட்டுக்கு வந்துவிடக் கூடாது என்பதுதான் கவிஞர் கனிமொழி கடலூர் மாநாட்டில் பேசியதன் கருத்தாகும்.

இதனைப் புரிந்துகொண்டு இருந்தும், திருவாளர் வெங்கைய நாயுடு குஜராத்தில் அப்படி என்ன குறை? என்று வினா எழுப்பியுள்ளார்
.
கனிமொழி அவர்களை நோக்கி திருவாளர் வெங்கையா நாயுடு வினா எழுப்புமுன், அவரை நோக்கி முக்கிய வினா ஒன்று இருக்கிறது.

குஜராத்தில் நடைபெற்ற மதக் கலவரத்திற்குப் பின் அன்றைய பிரதமர் அடல்பிகாரி வாஜ்பேயி கூறினாரே நினைவிருக்கிறதா? எந்த முகத்தோடு நான் வெளிநாடு செல்வேன்? என்றாரே - ஏன் அப்படிச் சொன்னார்? சொல்ல வேண்டிய அவசியம் ஏன் வந்தது? என்ற வினாவுக்கு விடை எதுவோ, அதுவேதான் கவிஞர் கனிமொழி கடலூர் தி.மு.க. மகளிர் மாநாட்டில் ஆற்றிய உரைக்கான பொருளுமாகும்.

என்ன புரிகிறதா?

-----------நன்றி: "விடுதலை" 19-6-08

பிராமணீயம் ஒழிய வேண்டும்.


அர்ஜூனன் : ஏ கிருஷ்ணா! சுயராஜ்யக் கட்சி காங்கிரசில் சேராமல் தனித்திருந்த போது அதற்குக் கொஞ்சம் மரியாதை இருந்தாப் போல் தெரிந்ததே. இப்பொழுது காங்கிரசில் சேர்ந்து சுயராஜ்யக் கட்சியே காங்கிரசாக மாறி மகாத்மா காந்தியும் ஆசீர்வாதம் பண்ணியும் அவர் சிஷ்யர்களும் எவ்வளவோ அதற்கு வெளிப்படையாயும் இரகசியமாயும் உதவி செய்தும் இப்படி துள்ளத் துள்ள செத்துப் போய் விட்டதே அதன் காரணம் என்ன?

கிருஷ்ணன் : ஓ , அர்ஜூனா! இது உனக்குத் தெரியவில்லையா? கலியுக பத்மாசூரன் கை வைத்தால் எதுதான் வாழும்?

அர்ஜூனன் : அது யார்? எனக்குத் தெரியவில்லையே.

கிருஷ்ணன் : உண்மையாய் தெரியாதா?

அர்ஜூனன் : ஆம், தெரியாது.

கிருஷ்ணன் : அதுதான் நமது சிறீமான் எஸ்.சீனிவாசய்யங்கார் .

அர்ஜூனன் : ஓ ஹோ! அவர் தலைவரானதினால்தான் போய்விட்டதோ? சரி, சரி, அதனால்தான் நமது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட செத்துப் போய்விட்டது இப்பொழுது எனக்குப் புரிந்தது. கொஞ்ச காலத்திற்கு முன்கூட ஒரு நண்பர் எனக்குச் சொல்லியிருக்கிறார். அதாவது,"நம் தலைவர்(?) சிறீமான் சீனிவாசய்யங்கார் தொட்டது துலங்காது, எதில் போய் அவர் கையை வைத்தாலும் பத்மாசூரன் கை வைத்தது போலவேதான் முடியும், கடைசி காலத்திற்குத்தான் எந்த இயக்கமும் அவரிடம் போய்ச் சேரும்" என்று சொன்னார். அது சரியாய்ப் போய்விட்டது.

கிருஷ்ணன் : இப்போது உனக்குப் புரிந்ததா.

அர்ஜூனன் : புரிந்தது. ஆனால் இன்னும் ஒரு சந்தேகம்.

கிருஷ்ணன் : என்ன சொல்லு?

அர்ஜூனன் : இது இரண்டும் ஒழிந்து போனது நல்ல காரியந்தான். சிலர் காங்கிரஸ், காங்கிரஸ் என்று இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே அதென்ன?

கிருஷ்ணன் : காங்கிரசுக்கு காலம் கிட்டிக் கொண்டது. இப்பொழுது தொண்டையில் உயிர் இருக்கிறது. இந்த வருஷம் நமது அய்யங்கார் அதற்கும் தலைவராக வரப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். நம்மை பிடித்த நல்லவேளையாய் அதிலும் அவர் கை வைக்கும்படி ஏற்பட்டுவிட்டால் அதுவும் தீர்ந்து போகும்.

அர்ஜூனன் : இம்மூன்றும் ஒழிந்தால் நமது நாட்டைப் பிடித்த சனியன் ஒழிந்து போகுமல்லவா?

கிருஷ்ணன் : இம்மூன்றும் ஒழிந்தால் போதாது . மயில் ராவணன் தலை மாதிரி வெட்ட வெட்ட முளைத்துக் கொண்டுதான் வரும்.

அர்ஜூனன் : பின்ன இன்னமும் என்னவாக வேண்டும்?

கிருஷ்ணன் : நாட்டுக்கு நல்லகாலம் வர வேண்டுமானால், நமது நாட்டு பிராமணீயம் ஒழிய வேண்டும்.

அர்ஜூனன் : அது லேசில் ஒழியாது போல் இருக்கிறதே.

கிருஷ்ணன் : அர்ஜூனா! நீ அப்படி நினைக்க வேண்டாம். இனி நமது கலியுக பத்மாசூரரான சீனிவாசய்யங்கார் பிராமணீயத்திற்கும் ஒரே தலைவராகப் போகிறார். அப்போது அதுவும் ஒழியும். அய்யங்கார் பிரளயம் இந்தக் கொடுமைகளையெல்லாம் ஒழித்த பிறகு மகாத்மா காந்தி மறுபடியும் வருவார். அப்போது உலகத்துக்கு சேமம்பிறக்கும்.

அர்ஜூனன் : அப்படியா! ரொம்பவும் சந்தோஷம்.

-------------- தந்தைபெரியார் - "குடிஅரசு" 18.7.26