Search This Blog

20.10.14

தீபாவளியைக் கொண்டாடும் அறியாமையை என்னென்று கூறுவது?-பெரியார்






    இவ்வருஷத்திய தீபாவளிப் பண்டிகை சமீபத்தில் வரப் போகின்றது. பார்ப்பனரல்லாத மக்களே! என்ன செய்யப் போகின்றீர்கள்? அப்பண்டிகைக்கும், எங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று சொல்லிவிடப் போகின்றீர்களா? அல்லது அப்பண்டிகையைக் கொண்டாடப் போகின்றீர்களா? என்பதுதான் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்பதன் தத்துவமாகும்.

    நண்பர்களே! சிறிதும் யோசனை இன்றி, யோக்கியப் பொறுப்பின்றி, உண்மைத் தத்துவமின்றி, சுயமரியாதை உணர்ச்சி இன்றி, சுயமரியாதை இயக்கத்தின் மீது வெறுப்புக் கொள்ளுகின்றீர்களேயல்லாமல், மற்றும் சுயநலப் பார்ப்பனர் வார்த்தைகளையும், மூடப்பண்டிதர்களின் கூக்குரலையும், புராணப் புஸ்தக வியாபாரிகளின் விஷமப் பிரச்சாரத்தையும், கண்டு மயங்கி அறிவிழந்து ஓலமிடுகின்றீர்களேயல்லாமல், மேலும் உங்கள் வீடுகளிலும், அண்டை அயல்களிலும் உள்ள கிழங்களுடையவும், அழுக்கு மூட்டைகளுடையவும், ஜீவனற்ற தன்மையான பழைய வழக்கம் பெரியோர் காலம் முதல் நடந்து வரும் பழக்கம் என்கின்றதான வியாதிக்கு இடம் கொடுத்துக் கொண்டு கட்டிப் போடப்பட்ட கைதிகளைப் போல் துடிக்கின்றீர்களேயல்லாமல் உங்கள் சொந்தப் பகுத்தறிவைச் சிறிதுகூட செலவழிக்க சம்மதிக்க முடியாத உலுத்தர்களாய் இருக்கின்றீர்கள்.


    பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராயிருக்கிறீர்கள். சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கத் தயாராயிருக்கின்றீர்கள். ஆனால் உங்கள் பகுத்தறிவைச் சிறிதுகூட பயன்படுத்தத் தயங்குகிறீர்கள். அது விஷயத்தில் மாத்திரம் ஏன் வெகு சிக்கனம் காட்டுகின்றீர்கள்? இந்நிலையிலிருந்தால் என்றுதான் நாம் மனிதர்களாவது? பார்ப்பனரல்லாதார்களில் சில பண்டிதர்கள் மாத்திரம் வயிறு வளர்த்தால் போதுமா? புராணப் புஸ்தக வியாபாரிகள் சிலர் மாத்திரம் வாழ்ந்தால் போதுமா? கோடிக்கணக்கான மக்கள் ஞானமற்று, மானமற்று கால்வயிற்றுக் கஞ்சிக்கும் வகையற்று அலைவதைப் பற்றிய கவலை வேண்டாமா? என்று கேட்கின்றேன்.

    புராணக் கதைகளைப் பற்றிப் பேசினால் கோபிக்கின்றீர்கள்; அதன் ஊழலை எடுத்துச் சொன்னால் காதுகளைப் பொத்திக் கொள்ளு-கின்றீர்கள். எல்லாருக்கும் தெரிந்தது தானே! அதையேன் அடிக்கடிக் கிளறுகின்றீர்கள்? இதைவிட உங்களுக்கு வேறு வேலை இல்லையா? என்று கேட்கின்றீர்கள். ஆனால், காரியத்தில் ஒரு நாளைக்கு உள்ள 60 நாழிகை காலத்திலும் புராணத்திலேயே மூழ்கி, மூச்சுவிடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் புராணப் புரட்டை உணர்ந்தவர்-களாவார்களா? புராண ஆபாசத்தை வெறுத்தவர்களா-வார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள்.

    பண்டித, பாமர, பணக்கார ஏழைச் சகோதரர்களே! இந்த மூன்று மாத காலத்தில் எவ்வளவு பண்டிகை, கொண்டாடினீர்கள்? எவ்வளவு யாத்திரை செய்தீர்கள்? இவற்றிற்காக எவ்வளவு பணச் செலவும், நேரச் செலவும் செய்தீர்கள்? எவ்வளவு திரேகப் பிரயாசைப்-பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால் நீங்கள் புராணப் புரட்டை உணர்ந்து புராண ஆபாசத்தை அறிந்தவர்களா-வீர்களா? வீணாய் கோபிப்பதில் என்ன பிரயோஜனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச் சொல்லுகின்றவர்கள் மீது ஆத்திரம் காட்டி, அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றியும் பேசுவதால் என்ன பயன்? நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய் என்றால் அதற்கு நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன் என்று பதில் சொல்லிவிட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா?

    அன்பர்களே! சமீபத்தில் வரப்போகும் தீபாவளிப் பண்டிகையை பார்ப்பனரல்லாத மக்களாகிய நீங்கள் 1000க்கு 999 பேர்களுக்கு மேலாகவே எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள். துணி தேவை இருக்கின்ற-வர்களும், தேவை இல்லாதவர்களும் பண்டிகையை உத்தேசித்து துணி வாங்குவது என்பது ஒன்று; மக்கள், மருமக்களை மரியாதை செய்வதற்கென்று தேவைக்கும், யோக்கியதைக்கும் மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்துவதற்கு ஏற்றதல்லாததுவுமான துணிகள் வாங்குவது என்பது இரண்டு; அர்த்தமற்றதும், பயனற்றது-மான வெடிமருந்து சம்பந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று; பார்ப்பனர் உள்பட பலர் இனாம், பிச்சை என்று வீடுவீடாய், கூட்டங்கூட்டமாய்ச் சென்று, பல்லைக் காட்டிக் கெஞ்சி, பணம் வாங்கி அதைப் பெரும்பாலும் சூதிலும், குடியிலும், செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது நான்கு; இவற்றிற்காக பலர் ஊர் விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது அய்ந்து, அன்று ஒவ்வொரு வீடுகளிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச் செய்து, அவைகளில் பெரும் பாகம் கண்டவர்களுக்குக் கொடுப்-பதும், வீணாக்குவதும் ஆறு: இந்தச் செலவுகளுக்காக கடன்படுவது ஏழு. மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது என்பதும், அதற்காக கடன்பட வேண்டியிருப்பது என்பதும், பட்டாசு வெடிமருந்து ஆகியவை-களால் அபாயம் நேரிட்டு பல குழந்தைகள் சாவதுமான விஷயங்களொருபுறமிருந்தாலும் மற்றும் இவைகளுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்த சைன்ஸ் பொருத்தமோ சொல்லுவதானாலும் தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காக கொண்டாடப்-படுகிறது என்கின்றதான விஷயங்களுக்கு சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம். ஏனெனில், அது எப்படிப் பார்த்தாலும் பார்ப்பனியப் புராணக் கதையை அஸ்திவாரமாகக் கொண்டதாகத்தான் முடியுமே ஒழிய, மற்றபடி எந்தவிதத்திலும் உண்மைக்கோ,-பகுத்தறிவுக்கோ, அனுபவத்திற்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே முடியாது.

    பாகவதம், இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங்கள் பொய் என்பதாக சைவர்கள் எல்லோரும் ஒப்புக் கொண்டாய்விட்டது. கந்த புராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலியவைகள் பொய் என்று வைணவர்கள் எல்லோரும் ஒப்புக் கொண்டாய்விட்டது. இவ்விரு கூட்டத்திலும் பகுத்தறிவுள்ள மக்கள் பொதுவாக இவையெல்லாவற்றையும் பொய்-யென்று ஒப்புக்கொண்டாய்விட்டது. கந்த புராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலியவைகள் பொய் என்று வைணவர்கள் எல்லோரும் ஒப்புக் கொண்டாய்விட்டது. இவ்விரு கூட்டத்திலும் பகுத்தறிவுள்ள மக்கள் பொதுவாக இவையெல்லாவற்றையும் பொய்யென்று ஒப்புக்கொண்டாய்விட்டது. அப்படி-யிருக்க, ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பன்னாயிரக்கணக்கான சம்பவங்களில் ஒன்றாகிய தீபாவளிப் பண்டிகைக்காக மாத்திரம் மக்கள் இந்த நாட்டில், இந்தக் காலத்தில், இவ்வளவு பாராட்டுதலும், செலவு செய்தலும், கொண்டாடுதலும் செய்வதென்றால், அது எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதை வாசகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
    தீபாவளிப் பண்டிகையின் கதையில் வரும் பாத்திரங்கள் 3. அதாவது நரகாசூரன், கிருஷ்ணன். அவனது இரண்டாவது பெண்ஜாதியாகிய சத்தியபாமை ஆகியவை-களாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளை-யிருந்தாலும், இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தவர்கள் என்றாவது, அல்லது இவர்கள் சம்பந்தமான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் நமக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இந்த மாதிரியான ஒரு பண்டிகை தீபாவளி என்று கொண்டாட வேண்டுமென்றாவது ஒப்புக் கொள்ள முடியுமாவென்று கேட்கின்றோம். எப்படியானாலும், இந்த வருஷம் தீபாவளிப் பண்டிகை என்பதை உண்மையான தமிழ் மக்கள் திராவிடர்கள் என்பவர்கள் கண்டிப்பாய் அனுசரிக்கவோ, கொண்டாடவோ கூடாது என்றே ஆசைப்-படுகிறேன். அன்றியும், இத்தீபாவளிக் கதை எவ்வளவு பரிகாசத்திற்கு இடமாயிருக்கிறது என்-பதையுணரும் பொருட்டு அதனையும் கீழே தருகிறேன்.

    தீபாவளியின் கதைச் சுருக்கம்
    ஆதிகாலத்தில் நரகாசூரன் என்று ஒரு அசுரன் இருந்தானாம். அவன் வராக அவதாரத் திருமாலுக்கும், பூமிக்கும் பிறந்தவனாம்.  அவன் தேவர்களையெல்லாம் பலவாறு தூஷித்து இம்சித்து வந்தானாம். தேவர்கள் இதைப்பற்றி அவன் தகப்பனாகிய திருமாலிடம் முறையிட்டார்களாம்.

    உடனே, திருமால் நரகாசூரனைக் கொல்லுவதாக வாக்களித்தாராம். அதற்காக வேண்டி திருமால் கிருஷ்ணனாகவும், பூமிதேவி சத்தியபாமையாகவும் அவதாரமெடுத்து உலகத்துக்கு வந்து நரகாசூரனைக் கொன்று-விட்டார்களாம். நரகாசூரன் சாகும்போது தான் செத்த தினத்தை உலகத்தார் கொண்டாட வேண்டுமென்று கேட்டுக் கொண்டானாம். கிருஷ்ணன் அப்படியே ஆகட்டுமென்று வாக்களித்தாராம். அதற்காக வேண்டி மக்கள் எல்லோரையும் கொண்டாடும்-படி கடவுள் செய்துவிட்டாராம். ஆதலால், நாம் கொண்டாடுகிறோமாம்; அல்லது கொண்டாட வேண்டுமாம். இதை நமது பகுத்தறிவுக்குப் பொருத்திப் பார்ப்போம்.  முதலாவது இந்தக் கதை உண்மையாய் இருக்க முடியுமா?

    எல்லா உலகங்களையும் உண்டாக்கிய, நான்முகனைப் பெற்றவரும், உலகங்களை-யெல்லாம் காத்துவருபவரும், தேவர்கள் தலைவருமாகிய திருமாலுக்கும், பூமிதேவிக்கும் எப்படிக் குழந்தை பிறக்கும்? பூமிதேவி என்றால் உலகம் அல்லவா? அப்படித்தான் பிறந்த அவன் எப்படி அசுரன் ஆனான்? அத்தகைய மேம்பாடுடைய கடவுளுக்குப் பிறந்தவன் எப்படி தீய செயல்களைச் செய்தான்? அப்படித்தான் செய்தாலும் அவனைப் பெற்றவனாகிய திருமால் தனது மகனைத் திருத்தாமல் ஏன் கொன்றான்? அப்படியிருந்தாலும் தானே வந்துதான் கொல்ல வேண்டுமோ? மேற்படி நரகாசூரனைக் கொன்ற போது அதன் தாயாகிய பூமிதேவியும் சத்தியபாமையாகப் பிறந்து உடனிருந்ததாகக் கதை கூறுகிறது. என்னே தாயின் கருணை! இவள்தான் உலகத்தை-யெல்லாம் காப்பாற்றுகிறாளாம்! உலகமக்கள் செய்யும் பாவங்களையெல்லாம் பொறுத்துக் கொள்ளுகின்றாளாம்! பொறுமையில் பூமிதேவிபோல் என்ற உதாரணத்திற்குக்கூட பண்டிதரும், பாமரரும் இந்த அம்மையாரை உதாரணமாகக் கூறி வருகின்றனரே! இத்தகைய பூமிதேவியார் தனது மகனைக் கொல்லும்போது தானும் உடனிருக்க வேண்டுமென்று திருமாலைக் கேட்டுக் கொண்டாராம்! என்னே தாயின் கருணை!!

    தமிழர்களாகிய நம்மையே அசுரர்களென்றும், ஆரியராகிய பார்ப்பனர்கள் தாங்களே தேவர்களென்றும் கற்பித்துக் கதை கட்டியிருக்கிற தேவ -அசுரப் போராட்டத்-தோடு சம்பந்தப்பட்டிருக்கிற இந்தக் கதையைத் தமிழ் மக்களாகிய நாமே கொண்டாடுகிறோம்! நாமே சிறந்த நாளாக கருதுகிறோம்! அந்தோ என் செய்வது? நம்மை ஏமாற்றி நம்மையே பழிக்கும் பார்ப்பனர் கட்டுக் கதையை உண்மையென நம்பி நாமே கொண்டாடி வீண்செலவு செய்வதென்றால், நமது சுயமரியாதையை என்னென்பது? நமது பகுத்தறிவை என்னவென்று சொல்லுவது?

    புராணங்களில் கண்டபடியே இந்தக் கதையை உண்மையென்று ஒப்புக் கொண்டு தமது பகுத்தறிவையிழந்து இந்தத் தீபாவளியைக் கொண்டாடும் நமது தமிழ் மக்களின் அறியாமையை என்னென்று கூறுவது?

    சென்றது போக, இனிமேற்கொண்டாவது தீபாவளியை, அர்த்தமற்ற மூடப்பழக்கத்தை, நம் தலையில் நாமே மண்ணைப் போட்டுக் கொள்ளும் செயலைக் குறித்து ஒரு காசாவது, ஒரு நிமிட நேரமாவது செலவு செய்ய வேண்டாமென்று திராவிட மக்களாகிய உங்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
                                  ---------------------------- தந்தை பெரியார்-”குடிஅரசு” 01.11.1936

    39 comments:

    தமிழ் ஓவியா said...

    ஹிந்துமதக் குப்பைகளுக்கு குட்பை?

    தசரா, விஜயதசமி, தீபாவளி ஆகிய ஹிந்துமதப் பண்டிகைகள் எதுவாக இருந்தாலும், அந்தப் பண்டிகைக்கான புராணக் கதையையோ, அதனுடைய தத்து-வார்த்தத்தையோ பார்ப்பதும், அல்லது அறிவியல் தர்க்கங்களையோ அலசி ஆராயாமல் எதார்த்தமாகப் பார்த்தால்கூட, இந்த ஹிந்துமதப் பண்டிகைகள் மக்கள் விரோதமான காரியங்களையே செய்துகொண்டு இருக்கின்றன.

    இதோ இப்போது கொண்டாடித் தீர்த்திருக்கிறார்களே? தசரா என்றும் விஜயதசமியென்றும், இதன் பயன் என்ன? ஊர்முழுதும் குப்பைமேடானதுதானேதவிர இதில் வேறென்ன இருக்கிறது? சென்னை போன்ற பெருநகரங்களில் இதுபோன்ற பண்டிகைகளின் போது, வாழை இலை, வாழைக்கன்று, மாவிலை உள்ளிட்டவை மங்களப் பொருட்கள் என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டுத் தூக்கி எறியப்படும். இதுபோன்ற நாள்களில் துப்புரவுப் பணியாளர்களும் பிறந்த ஊர்களுக்குச் சென்றிருப்பர். அதுவும் இந்த ஆண்டு தொடர்ந்து ஆறுநாட்கள் விடுமுறை? எப்படியிருக்கும் நகரம். இதில் அத்தியாவசிய உணவுப்பொருளான பூசணிக்காய், தேங்காய் போன்றவற்றைச் சூறையிடுவது என்ற பெயரில் சாலைகள் குப்பைகளால் நிரம்பி வழியும். அந்தக் குப்பைகளும் உடனடியாக அகற்றப்-படாமல் அழுகி துர்நாற்றம் ஏற்படுவதுடன் சுற்றுச்சூழலும் கெடும். இதனால் மக்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படும்.

    தமிழ் ஓவியா said...

    நூறாண்டுகளுக்கு முன்னால் ஈரோட்டில் தொற்றுநோய் பரவி மக்கள் கொத்துக் கொத்தாக மாண்டு கொண்டிருந்த சூழலில், மனிதநேயரான தந்தை பெரியார் தனக்கு அந்த நோய் தொற்றும் என்பதைப்பற்றிக்கூட கவலைப்படாமல், களத்தில் இறங்கி அந்த மக்களுக்கு மருத்துவ உதவி கிடைக்கச் செய்தார்.

    சமூக மருத்துவரான தந்தை பெரியார், அந்த நோய் பரவியதற்கான காரணத்தைச் சொல்லும்போது, இந்த மாதிரி நோய் வரக்காரணம் அந்த மாதங்கள் உற்சவ காலம். பல ஊர்க்காரர்கள் வந்து ஓர் ஊரில் கூடுவது உற்சவத்தின் அறிகுறி _- கண்டபடி சாப்பிடுவது; கண்ட இடத்தில் அசிங்கம் செய்வது; வாய்க்கால் ஓரத்தில் இருக்கும் ஊர்களின் ஜலதாரைக் கசுமாலத் தண்ணீர் வாய்க்காலில் விழுவது; அந்தத் தண்ணீரைக் குடிப்பது; தூக்கம் கெடுவது; பாமர மக்கள் அதிகம் போக்குவரத்துக் காரணமாய் ஆங்காங்கு நோய் பற்றியும், அம்மக்கள் வழிப்பயணத்தில் அடைந்த பலவீனம் -- அசவுகரியம் காரணமாய்த் தங்கும் இடங்களில் நோய்க்கிருமிகள் பரவிப் பல வழிகளில் மக்களைப்பற்றும்படி ஆகிவிடுகிறது. (கடவுளும் மனிதனும் - தந்தை பெரியார்) என்று பல்லாண்டுகளுக்கு முன்னாலேயே தெள்ளத் தெளிவாகக் கூறியிருக்கிறார். ஆனால், இன்னமும் பெருவாரியான மனிதர்கள் மாறவில்லையே. இதோ அடுத்தொரு பண்டிகை. தீபாவளி. ஆளாளுக்கு ஒரு வியாக்கியானம். அதில் பட்டாசுகளை வெடித்து சாலைகள் மொத்தமும் சிதறிக் கிடக்கும். மழை பெய்யும் வாய்ப்பும் உண்டு. அந்த வெடிமருந்துடன் மழைநீரும் சேர்ந்து என்னென்ன கேடுகள் வரப்போகிறதோ? இதில் உயிருக்கும் ஆபத்துண்டு.

    சுற்றுச்சூழல் கேடும் பெருமளவில் ஏற்படும். இந்த ஹிந்து மதத்தால் மக்கள் படுகிறபாடு கொஞ்சமா நஞ்சமா? சென்னையைப் போலவே பெருநகரமாக இருக்கின்ற பூங்கா நகரம், தூய்மை நகரம் என்றும் பெயர் பெற்ற பெங்களூரு, இந்தப் பண்டிகைகளால் குப்பை நகரமாக மாறியதென்று தினகரன் கர்நாடகப் பதிப்பு கட்டுரை தீட்டியிருக்கிறது. அதில், பெங்களூரு மாநகராட்சிப் பகுதி வசந்த் நகரில், மாதம்தோறும் 5 டன் குப்பைகள் உருவாகின்றன.

    அத்துடன் வீடுகளில் சேகரிக்கப்-படும் குப்பைகள் தனியாக 2 அல்லது 3 டன்னும் சேர்கிறது. சாதாரண இந்தச் சூழலிலேயே துப்புரவுப் பணியாளர்கள் குறைந்த அளவில்-தான் ஈடுபடுகிறார்கள். இந்நிலையில் தசரா, - ஆயுத பூஜைக்காக கிராமங்களில் இருந்து மாவிலை, வாழை இலை, வாழைக்-கன்றுகள் கட்டுக்கட்டாக குவிந்துள்ளன. மக்கள் போடுகிற குப்பைகள் தவிர, விற்பனையாகாத இதே பொருள்களை, கடைக்காரர்கள் அப்படியப்படியே போட்டு-விட்டுப் போய்விடுகிறார்கள். இவையெல்லாம் சேர்ந்து 198 வார்டுகளிலும் நூற்றுக்கணக்கான டன் குப்பைகள் சேர்ந்துவிட்டன. மலையெனக் குவிந்துவிடும் குப்பைகளை அகற்றுவதில் பணியாளர்கள் கவனம் செலுத்துவதில்லை என்று மாநகராட்சி தரப்பில் கவலையோடு கூறுகின்றனர் என்று பொறுப்போடு செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.

    இதனால் தூய்மை நகரம் இன்று குப்பை நகரமாக மாறியிருக்கிறது. இதுமட்டுமா? உணவுப் பொருள்கள் எவ்வளவு வீணா-கின்றன? இந்தப் புள்ளி விவரங்களையெல்லாம் யார் எடுப்பது? கொடுப்பது? இந்தக் கணக்கு, சுகாதாரம் இவைகளில் கவனம் செலுத்தாத நாடு எப்படி உருப்படும்?

    இந்தக் கேடுகளைப் பார்த்தாவது மக்களுக்குப் புத்திவரவில்லையே என்றுதான் நமக்குக் கவலையாக இருக்கிறது. கடவுள், அது தொடர்பான மூடநம்பிக்கைகள் ஆகியவற்றில்-தான் மக்கள் பலருக்குத் தெளிவு ஏற்படவில்லை என்றாலும், அவர்களை நேரிடையாகப் பாதிக்கின்ற இது போன்ற சுகாதார விசயத்திலாவது புத்தி கொள்முதல் ஆகாதா என்று நாம்தான் தவிக்க வேண்டியிருக்கிறது. கர்நாடகாவில் இதையெல்லாம் சுட்டிக்-காட்டுவதற்கான வாய்ப்பாவது இருக்கிறது. இங்கு அதுவும் இல்லை. ம்.. என்ன செய்வது? மதச்சார்பற்ற அரசு அல்ல மதமற்ற ஓர் அரசு வந்தால்தான் இந்த ஹிந்துமதக் குப்பைகளுக்கு குட்பை சொல்ல முடியும்! அதுவரையில் ஊதுகிற சங்கை ஊதிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

    - உடுமலை

    தமிழ் ஓவியா said...

    1கோடியே,-68லட்சத்து,-97ஆயிரத்து-425-ரூபாய்,-மற்றும்-88-கிராம்-தங்கம்,-149-கிராம்-வெள்ளி-நகைகள்

    சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தை தமிழ்க அரசின் இந்து சமய அறநிலையத்துறை எடுத்துக் கொண்டு 2009ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி செயல் அலுவலரை அரசு நியமித்தது. இதனையடுத்து நடராஜர் கோயிலில் 9 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டன. இந்நிலையில், செயல் அலுவலர் நியமனத்தை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் கடந்த ஜனவரி 6ம் தேதி உத்தரவிட்டது. மீண்டும் தீட்சிதர்களின் நிர்வாகத்தின் கீழ் கோயில் வந்தது. 2014 அக்டோபர் 7-ஆம்தேதி கடைசியாக உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் 25 முறை உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் கிடைத்த மொத்த தொகை இது. சராசரியாக ஆண்டொன்றுக்கு 35 லட்ச ரூபாய்க்கும் மேல் வருமானம் கிடைத்த உண்டியல்கள் அகற்றப்பட்டு, இனி தீட்சதர்களின் தொப்பை தான் உண்டியலாகப்போகிறது. இப்படி தீட்சதர்கள் கைக்குக் கோயில் போகுமாறு ஆணையிட்டது உச்சநீதிமன்றம்! பார்ப்பனப் பண்ணையம்!

    தமிழ் ஓவியா said...

    அ.தி.மு.க. தலைமை சிந்திக்கட்டும்!


    வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளருக்கும், அவருடன் மற்ற மூவருக்கும் பெங்களூரு தனி நீதிமன்றம் கடந்த 27.9.2014 அன்று நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் வழங்கியுள்ளதைக் கண்டு அ.தி.மு.க.வினர் அதிர்ச்சியும், துயரமும் அடைவது இயற்கைதான்.

    அதற்கென இனி உள்ள சட்டபூர்வ வாய்ப்புகள் - பிணை (ஜாமீன்) கோரி, தண்டனையை நிறுத்தி வைக்கவும் அல்லது ரத்து செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் போன்ற மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் பரிகாரம் தேடி, வெளியே வர முயற்சிப்பதும்தான் சரியான வழிமுறை.

    நீதிபதியை மனம்போனபடி விமர்சிப்பது, கருநாடக அரசு, மத்திய அரசு போன்றவற்றில் பொறுப்பில் உள்ளவர்களை உணர்ச்சிவசப்பட்டு தாக்கிப் பேசிடுவது, பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் மிகப்பெரிய அளவில் இடையூறுகளைத் தானே உண்டாக்கும்? ஆங்காங்கே துண்டு துண்டாக நினைத்தபடி கிளர்ச்சிகளை, கடையடைப்புகளை, தமிழ்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் களை - குறிப்பாக கலைஞர் போன்ற மூத்த தலைவர்களை வசைபாடுவதோ, பிரச்சினைக்குத் தீர்வை கொண்டு வந்து சேர்க்காது; மாறாக சட்டப்பூர்வமான ஆக்க ரீதியான மேல்முறையீடுகளைச் செய்யலாம்.

    அனுதாப அலை என்றெல்லாம் காட்ட ஆவேசம், உணர்ச்சிவயப்பட்டு சட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டு, மனம்போன போக்கில், பதிவாகவேண்டும் நம் எதிர்ப்பு - உரியவர்கள் கவனத்திற்குச் சேர வேண்டும், எதிர்கால பதவி அரசியலுக்கு இதுவே ஒரு அரிய வாய்ப்பு என்றும் நினைக்கலாமா? வன்முறை அல்லது பொது அமைதிக்குக் கேடு விளைவித்தல்மூலம், மக்களின் வெறுப்புதான் வளருமே தவிர, வேறு உருப்படியான பலன் கிடைக்காது.

    இப்போது இவர்கள் நீதிமன்றங்களைக் கடுமையாக விமர்சிப்பது, நீதிபதிகளைத் தரக்குறைவாக உள்நோக்கம் கற்பித்துப் பேசுவது, எழுதுவது, தீர்மானங்களை தாங்கள் வகிக்கும் பொறுப்பான மன்றங்களில் நிறைவேற்றுவது போன்றவை எந்த அளவுக்கு அம்மையார் ஜாமீனில் வெளியே வருவதற்குத் துணை புரியும் என்பதை அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கவேண்டும்.


    எல்லாவற்றையும்விட, இக்கட்சியினர் தமிழகத்தில் ஆளுங்கட்சி என்ற பொறுப்பில் இருந்துகொண்டு ஆட்சி நடத்துகின்ற நிலையில், அவர்களுக்குச் சட்டம் - ஒழுங்கு, பிரச்சினையை ஏற்படுத்தலாமா? அன்றாட அரசியல் ஆளுமை, மின்வெட்டு முதலான பல்வேறு பிரச்சினை களுக்குத் தீர்வு காண்பதல்லவா அவசியம்!
    இவ்வாட்சியை இவர்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமா? வேண்டாமா? என்பதுபோல மத்திய அமைச் சர்கள் இங்கே விடுக்கும் எச்சரிக்கைகளை - எல்லாம் மனதிற்கொண்டு, தங்களது நடவடிக்கைகளை ஆளும் கட்சியினர், ஒழுங்குபடுத்திக் கொள்ளவேண்டியதே இப்போது அவசியமாகும்!

    மீறி நீதிமன்ற நடவடிக்கைகள், தாறுமாறான விமர் சனங்கள் - அவர்களது தலைவி வெளியே வருவதற்கு இத்தகு நடவடிக்கைகள் உதவுவதற்குப் பதிலாக, எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்; ஊடகங்கள்மூலம் நீதித் துறையும், உலகமும், பொதுவானவர்களும் பார்த்துக் கொண்டு, முகம் சுளிக்கவும் செய்கின்றனர்!

    நாம் இப்படி எழுதுவது அக்கட்சி-யினருக்குக் கசப்பாகக் கூட இருக்கலாம். முதியவர்கள் சொல்லும் முதுநெல்லிக் கனியும் முன்னே கசந்து பின்னே இனிக்கும் என்பது பழமொழி. அ.தி.மு.க.வினரின் நடவடிக்கை எதுவாயினும் - இந்த இக்கட்டான தருணத்தில் அவர்கள் தலைவிக்கு உதவுமா? கேடு செய்யுமா? என்றே யோசிக்கவேண்டுமே தவிர, ஆத்திரக்காரர்களுக்கு அறிவு மட்டு என்ற முறை யில் ஆவேசம், ஆர்ப்பாட்டம், தரமற்ற வசைமாரிகளால் கேடுகளும், எதிர்-விளைவுகளும்-தான் மிஞ்சும்.

    யார் வழக்குப் போட்டது என்று ஆத்திரப்படுவதைவிட, ஏன் வழக்கு வந்தது? என்று சம்பந்தப்பட்டவர்கள் சுயபரிசோதனை செய்து, இனி எதிர்கால பொதுவாழ்க்கை எப்படி அமைத்துக் கொள்ளப்படவேண்டும் என்று முடிவு எடுத்துச் செயல்பட்டால், அது பயனுறு விடையாக, தீர்வாக உண்மையிலே அமையும்!

    இப்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் தைரியத்தில் விரும்பத்தகாத செயல்கள் மேலும் மேலும் பிரச்சினைகளை சிக்கலாக்கும் என்பதை உணர்ந்து, அத்தலைமையே முன்வந்து இவர்களுக்கு அறிவுரை கூறினால், அது அவருக்கும், கட்சிக்கும், ஆட்சிக்கும் பயன்படக் கூடும்.

    அரசியல் பார்வை இதில் ஏதுமில்லை!

    கி.வீரமணி,
    ஆசிரியர்

    தமிழ் ஓவியா said...

    சிறுகதை : அவ வயசு அப்படி!

    தூங்கிப் பல மாசமாச்சும்மா... சாப்பிட முடியல... பசிக்குது... சாப்பாடு உள்ள போக மாட்டேங்குது

    சோகமாய், எப்போது வேண்டுமானாலும் அழுது விடுவேன் என்பதுபோல், கலங்கிய கண்களுடன் மனநல மருத்துவர் கயல்விழி முன் அந்தப் பெண் அமர்ந்திருந்தார்.

    கயல்விழி அந்தச் சின்ன நகரத்தில் கொஞ்சம் பிரபலமான மனநல மருத்துவர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடிக்கடி அவர் பேசும் பெண்ணுரிமைச் சிந்தனைகள் பலரது புருவங்களை உயர்த்தும். பெண் _ பெண்ணுடல், பாலியல் குறித்து பட்டவர்த்தனமாக, தெளிவாகப் பேசக் கூடியவர். பழைமைவாதிகள் அவர் கருத்தை மறுத்தாலும், அறிவியல் பார்வை உள்ள யாவரும் கயல்விழியின் கருத்துக்குக் கை கொடுக்கவே நினைப்பார்கள்.

    உங்களுக்கு என்ன வயசும்மா?

    46 ஆகுதும்மா...

    கயல்விழி அப்போதுதான் கவனித்தாள். இந்த முகத்தை... மூக்கின் அருகில் பெரிய மச்சம்... ஓ! இது மைதிலி மாமியில்ல!

    சட்டென்று பொறிதட்டியது கயல்விழிக்கு.

    கயல்விழியின் சக மருத்துவர் ஆனந்தனின் பரிந்துரையில் வந்தவர்தான் மைதிலி மாமி.

    45 வயது மதிக்கத்தக்க பெண் இவர். கணவனை இழந்தவர். வீட்டிற்கு அருகில் தன்னைவிட வயது குறைந்த இளைஞரோடு பாலியல் உறவில் வாழ்ந்தவர். கல்லூரியில் படிக்கும் மகள் கண்டுபிடித்ததால் மனம் உடைந்து தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது காப்பாற்றப்பட்டவர் என்பதுதான் கயல்விழிக்குச் சொல்லப்பட்ட மைதிலி மாமியின் முன்கதைச் சுருக்கம்.

    தமிழ் ஓவியா said...

    10 ஆண்டுகளுக்கு முன் இந்த மைதிலி மாமியால் தன் வீட்டில் நடந்த கொடுமையான நிகழ்வு கயல்விழியின் மனத்திரையில் ஓடியது.

    கயல்விழி அப்போது மருத்துவக் கல்லூரி மேல்படிப்பு மாணவி. அண்ணன் திடீரென விபத்தில் இறந்து போனார். இரண்டு குழந்தைகளையும் மாமியார் மாமனார் பார்த்துக் கொண்டதால், கணவனின் வேலையை கயல்விழியின் அண்ணி கலாவதி பார்த்துக் கொண்டிருந்தார். இந்த மைதிலி மாமி அதே தெருவில் கடைசி வீட்டில் வசித்தவர். ரேடியோ பெட்டி என்பதுதான் அந்தத் தெருவில் மைதிலியின் பட்டப்பெயர்.

    யாரைப் பற்றியும் தப்பும், தவறுமாய் அடுத்தவரிடம் வத்தி வைப்பதுதான், அவரது பொழுதுபோக்கு.

    அப்படித்தான் ஒருநாள் மழைநாளில் தன்னுடன் பணி செய்யும், சக நண்பர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வீடு வந்தார் கலாவதி. அவ்வளவுதான். ஒரே வாரத்தில் கலாவதி மனமுடைந்து தூக்குக் கயிற்றை மாட்டிக்கொள்ளும் அளவிற்கு, அந்தத் தெரு முழுவதும் கலாவதியை, அந்த இளைஞனுடன் இணைத்து வைத்து, இல்லாததும், பொல்லாததுமாகப் பேசித் தூற்றி விட்டார் மைதிலி மாமி.

    காலம் கெட்டுப் போச்சு. அவ விதி சின்ன வயசுல தாலி அறுத்திட்டா, ரெண்டு பிள்ளைகள வச்சுக்கிட்டு, புதுசா ஆம்பிள கேக்குதாக்கும் அவளுக்கு. செத்துப் போன புருசனுக்குத் துரோகம் செய்யலாமா? மைதிலியின் டயலாக் இது.

    அம்மாவும், அக்காவும் சண்டைக்குப் போய்விட்டார்கள். அப்பா மைதிலி மாமியை அடிக்கவே போய்விட்டார்.

    மைதிலி நீயும் ஒரு பொம்பளதான, இப்படி நீ நாக்குல நரம்பில்லாமப் பேசலாமா? நடுங்கும் குரலில் நியாயம் கேட்டார் அம்மா.

    மாமி ஒன்றும் சளைத்தவரில்லை. என்னக்கா நீங்க? மருமகளை வேலைக்கு அனுப்பலாமா? நா அவளத் தப்புச் சொல்லல, அவ வயசு அப்படி. பாவம் அவ என்ன செய்வா? என்றாள் மாமி.

    பரிவு காட்டுவதுபோல் நடித்தாலும், வார்த்தைகளில் பரிகாசமே மேலோங்கி நின்றது.

    ஒரு பொம்பள கேவலம் 5 நிமிசச் சொகத்துக்காக, மான மரியாதையை எழந்து நிக்கனுமா? உங்க மருமகளால உங்க குடும்ப கௌரவம் போச்சேக்கா நீட்டி முழக்கிப் பேசினாள் மாமி.

    தமிழ் ஓவியா said...


    சீ! நீயும் ஒரு பொம்பளயா? இனிமே ஏதாவது பேசுன... வார்த்தைகள் வராமல், நடுக்கத்துடன் தடுமாறினார் அப்பா...

    வீட்டிற்குள் வந்தவுடன் எல்லாரிடமும் நடந்ததுபற்றிப் பேசினார். இளம் பெண்ணை, துணை இல்லாமல் வதைப்பது தவறோ? என யோசித்தவர் போல. அண்ணி பிடி கொடுக்கவே இல்லை. ஆறுமாதம் கழித்து நண்பரின் மகனை அண்ணிக்கு மறுமணம் செய்து வைத்தபின்தான் ஓய்ந்தார் அப்பா.

    அப்போதும் இதே மைதிலி மாமியின் வாய் விசமாய்த்தான் வார்த்தைகளைக் கொட்டியது. இது என்ன கூத்துடா சாமி? மாமனாரே மருமகளுக்குக் கல்யாணம் முடிக்கிறாராம்.

    என்ன டாக்டர் ஊசி போடுவீங்களா? மைதிலியின் கேள்வி, கயல்விழியை நிகழ் காலத்திற்குக் கொண்டு வந்தது.

    உங்க பிரச்சினை என்னம்மா? சொல்லுங்கம்மா...?

    எப்போதடா கேட்பாள் என்றிருந்த மாதிரி, மைதிலி மாமி மடைதிறந்த வெள்ளம்போல் வார்த்தைகளைக் கொட்டத் தொடங்கினார்.

    என் ஆத்துக்காரர் செத்து ரெண்டு வருமாச்சு, அந்த மனுசனோட நான் ஒன்னும் சந்தோசமா குடும்பம் நடத்தல. 6 மாசத்துக்கு முன்ன அந்தக் கடங்காரன் எதிர் வீட்டுல குடி வந்தவன் சும்மா இருந்திருக்கப்படாதோ?

    ஒரு நாள், மாமி எங்க வீட்ல பேன் மாட்டனும். உசரமா நாற்காலி இருந்தாக் குடுங்கன்னு வந்தான்.

    நான் கண் இமைக்காம டி.வி.யில கிரிக்கெட் பாத்துக்கிட்டிருந்தேன். அவனும் டி.வி.யை ஆர்வமாய்ப் பார்த்தான். ஏன் மாமி உங்களுக்கு கிரிக்கெட் ரொம்பப் புடிக்குமான்னான். ஆமான்டா அம்பின்னேன். பக்கத்துல அலமாரியில இருந்த பொன்னியின் செல்வன் புத்தகத்தை ஆர்வமா எடுத்து இத யாரு படிப்பான்னான்? ஏன் கேக்குற? எனக்கு கல்கியின் கதைன்னா உயிர்னேன். எனக்கும் ரொம்பப் புடிக்கும்னு சொன்னான்.

    வாசல்ல வச்சிருந்த செம்பருத்திச் செடிய ரசிச்சான். என்னமோ தெரியல அவனுக்குப் புடிச்சதா சொன்ன, அவன் ரசிச்ச எல்லாமும் எனக்கும் புடுச்சித் தொலைஞ்சது. அடிக்கடி வீட்டுக்கு வந்தான். அவன் பேச்சை மட்டுமல்ல, அவனையும் ரசிக்க ஆரம்பிச்சேன். எனக்கு என்னென்ன பிடிக்கும்னு தெரிஞ்சுக்கிட்டு அதையெல்லாம் வாங்கித் தந்தான். என் புருசனிடம் அனுபவிக்காத ஏதோ ஒரு அன்னியோன்யமும், அன்பும் அவன்ட்ட இருந்தது. கடைக்குக் கூட்டிக்கிட்டுப் போனான். அப்புறம் சினிமா போனோம். வீட்டுக்குள்ள படுக்கையறைவரை வந்துட்டான்.

    நான் இந்த வயதில் தடுமாறித்தான் போனேன்.... எல்லை மீறியாச்சு... என் பொண்ணு பார்த்துட்டா... நான் காதலிக்கிறவன் என்ன ஜாதியோன்னு குதி, குதின்னு குதிச்சியே, நீ மட்டும்... இவன் என்ன ஜாதி...? வெளிப்படையா கல்யாணம் கட்டிக்கத்தான் ஜாதி வேணுமா? யாருக்கும் தெரியாமப் படுத்துக்க ஜாதி முக்கியமில்லையா?ன்னு அசிங்க அசிங்கமாப் பேசினா. அவமானம் தாங்க முடியல...

    தமிழ் ஓவியா said...


    குலுங்கிக் குலுங்கி அழுதாள் மைதிலி மாமி.

    மாமி, மைதிலி மாமி அழாதீங்க என்றதும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் மாமி.

    மாமி என்னைத் தெரியலையா? நான்தான் சுந்தரம் வாத்தியார் மகள் கயல்விழி. கேவலம்... அஞ்சு நிமிச சொகத்துக்குன்னு... நீங்க பேசுன அந்த வார்த்தையைக் கேட்டுத்தான் எங்க அண்ணி தூக்கு மாட்டப் போனாங்க தெரியுமா?

    கெஞ்சும் முகத்தோடு கையெடுத்துக் கும்பிட்டாள் மைதிலி.

    கயல் மன்னிச்சுடும்மா. அன்னைக்கு என்னமோ திமிருல பேசிட்டேன். தலைவலி, காய்ச்சல் தனக்குன்னு வந்தாத்தான் தெரியும்பாங்க. அது உண்மைதான்.

    மாமி முதல்ல உங்க குற்ற உணர்ச்சியில் இருந்து வெளியில வாங்க. எந்த வயதானாலும், ஆணுக்கும், பெண்ணுக்குமான பாலியல் உறவை, கேவலம் அஞ்சு நிமிச சுகம்னு இழிவாச் சொல்ல முடியாது.
    இயற்கை மனித மறு உற்பத்தியையே அந்த அஞ்சு நிமிச சுகத்தில்தான் பொதிந்து வைத்திருக்கிறது தெரியுமா?

    பெண் என்றால் கணவனைத் தவிர யார் மீதும் காதல் வரக்கூடாதுன்னும், பிள்ளைகள் பெரிசாயிட்டா 40 வயசுக்குமேல பெண்ணுக்கு எதுக்குக் காதலும் காமமும்னு நாம நினைக்கிறோம். இதெல்லாமே, காலம் காலமாய், இங்க இருக்கிற தப்பான மூடநம்பிக்கைகள்தான்.

    மனிதனுக்குப் பயந்து, அடங்கி நடக்கிற யானை மதம் பிடித்தால் காட்டையே துவம்சம் பண்ணுது. மதம்னா என்னன்னு தெரியுமா? யானைக்குப் பாலியல் தேவை பூர்த்தி அடையாமல் போவதால்தான் மதமாக _ கொடூரமாக வெளிப்படுகிறது.

    ஆணும், பெண்ணும் எந்த வயதிலும் காம வயப்படுதல் தவறில்லை. அதுதான் இயற்கை. பாலியல் உணர்வை பாவம் என்று சொல்லி மதங்கள்தான் நம்மை மூளைச்சலவை செய்து வைத்திருக்கின்றன.
    மாமியின் முகத்தில் லேசாய்த் தெளிவு தென்பட்டது.

    மாமி! நாளைக்கு உங்க மகளைக் கூட்டிட்டு வாங்க...

    அடுத்த நாள் மாமியின் மகள் உமா கயல்விழியின் முன் அதே கலவர முகத்தோடு அமர்ந்தாள். கயல்விழி மெதுவாய், அதே சமயம் அழுத்தமாய் அந்தப் படித்த பெண்ணிடம் அறிவியல்பூர்வமாய் விளக்கம் தந்தாள்.
    உமாவிற்கு தன் அம்மா, தன் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டிவிட்டார் என்ற செய்தியை மருத்துவர் கயல்விழி கூறியபோது சந்தோசத்தில் கண் கலங்கியது.

    இங்க பாரு உமா, பள்ளியில, கல்லூரியில படிக்கிறப்ப வர்ற காதலையே ஏத்துக்காத சமூகம் நம்முடையது.

    உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? ஆணுக்கும், பெண்ணுக்கும், 20, 30 வயதில் மட்டும் இல்லை. 40, ஏன் 60 வயதிற்கு மேலும் காதல் வரும் தெரியுமா?

    தண்ணீரின் இயல்பு பள்ளத்தை நோக்கிப் பாய்வதுதான். மனசும் அப்படித்தான். அன்போ, அரவணைப்போ இல்லாமல் காய்ந்து கிடக்கிற மனசு, அன்பு காட்டும் அக்கறை செலுத்தும், பெண்ணையோ, ஆணையோ அருகாமையில், நெருக்கமாய் சந்தித்தால் காதல் கொள்வதும்கூட இயற்கைதான்.

    உன் அம்மா அந்த நபரை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. அதுதான் மனம். ஆனால் Time will heal all the wound. காலம் எல்லாப் புண்ணையும் ஆற்றும் அருமருந்து.

    நீ உன் அம்மாவிடம் அன்பும், அக்கறையுமாக நடந்து கொள். முடிந்தவரை கூடவே இரு. கோவில், சினிமா, பூங்கா, கடை என எங்காவது கூட்டிக் கொண்டு போ என்றதும் மகிழ்ச்சியாய் விடை பெற்றுக் கொண்டார்கள் தாயும், மகளும்.

    அம்மா முழுமையாக குணமடைந்து விட்டதாக அந்த மகள் நம்பினாள். கணவனை இழந்த 46 வயதான அந்தத் தாய்க்கு இன்னும் அன்பும், அரவணைப்புமாய் ஓர் ஆண் துணை தேவை என்பதை மனம், உடல்ரீதியாக அறிந்த மருத்துவர் கயல்விழி அறிவார்.

    உன் அம்மாவிற்கு மறுமணம் செய்து வை, அதுதான் தீர்வு என கயல்விழி கூறவில்லை. அதை உமாவே விரைவில் உணர்வாள் என்று கயல்விழிக்குத் தெரியும்.

    நீண்ட பெருமூச்சோடு கயல்விழி அடுத்த நோயாளியைக் கவனிக்கத் தயாரானார்.

    தமிழ் ஓவியா said...

    இதுவரை கேட்காத குரல்


    சுசீந்திரனின் சமூகநீதி சிக்ஸர்!

    விளையாட்டு தொடர்பான படங்கள் இதுவரை வராமலில்லை. குறிப்பாக கிரிக்கெட் படங்களும் வராமலில்லை. கிரிக்கெட்டில்/ விளையாட்டில் அரசியல் படங்களும் வராமலில்லை. ஆனால், கிரிக்கெட்டில் நிலவும் ஜாதிப் பிரச்சினை....? சமூகநீதிக்குக் குரல் கொடுக்கும் படங்கள் வராமலில்லை. திறமையுள்ளவர்கள் புறக்கணிக்கப்படுவதற்கு எதிரான குரல் எழுப்பப்படாமலில்லை. ஆனால், பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிரான இப்படியொரு வெளிப்படையான குரல்?


    தமிழ் ஓவியா said...


    ஜீவா படத்தின் மூலம் இந்த இரண்டு இல்லைகளையும் இல்லாமல் செய்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். திரைப்படங்களில் சமூகப் பிரச்சினைகளைப் பேசுவதே துணிச்சல். அதிலும் பலருக்கு அரைவேக்காட்டுத்தனம் தான் இருக்கும். ஜாதி, சமூகநீதி குறித்தெல்லாம் பேசுவதற்கு இன்னும் துணிச்சல் வேண்டும். பார்ப்பனியத்திற்கெதிராகப் பேசுவதென்றால் கூடுதல் துணிச்சல் வேண்டும். அதிலும் இத்தனை வெளிப்படையாய்ப் பேச...? இதை எண்ணுகிறபோதுதான் முன்னிலும் பன்மடங்கு உயர்ந்து நிற்கிறார் சுசீந்திரன். கிரிக்கெட்டில் மிளிரத் துடிக்கும் இரண்டு இளைஞர்களின் வாழ்க்கையைச் சொல்லும் கதை 'ஜீவா'. படம் பார்க்கும் நேரம் முழுவதும் நம்மை பதின் பருவத்திற்கே அழைத்துச் செல்கிறது. சின்ன வயதில் கிரிக்கெட் மீது ஏற்படும் ஆர்வம், மெல்ல அதுவே வாழ்க்கையாகி ஒரு நல்ல கிரிக்கெட் வீரனாக வளர்வதை பந்தும், மட்டையுமாய் ஆடுகளத்திலிருந்தே அசத்தியிருக்கிறார்கள். படத்தின் தொடக்கத்தில் பதின்பருவக் காதலும், அதில் ஏற்படும் தோல்வியால் துவண்டு-போவதும், தண்ணியடிப்பதுமாகத் தான் போகிறது. ஆனால், அதற்கான மாற்றாக விளையாட்டை முன்னிறுத்தலாம் என்று வளர்ப்பு அப்பா யோசனை தந்த பிறகு ஜீவாவின் போக்கும், படத்தின் போக்கும் மாறுகிறது.

    தமிழ் ஓவியா said...

    ஜீவாவாக விஷ்ணுவிஷாலும், ரஞ்சித்தாக லட்சுமணன் ராமகிருஷ்ணனும் விளையாடி படம் முழுக்க சிக்ஸர்களாக குவித்திருக்கிறார்கள். பார்ப்பன ஆசிரியர்கள் மாணவர்களின் முதுகைத் தடவி, பூணூலை நெருடிப் பார்க்கும் சூட்சமத்தை, நாம் நேரடியாக அனுபவித்த-தோடு, சுயமரியாதைப் பயிற்சிப்-பட்டறைகளில் பலர் சொல்லக் கேட்டிருக்கி-றோம். இன்றும் வங்கிகளில், மத்திய அரசு நிறுவனங்களில் இந்தத் தடவிப் பார்த்தல் நடந்துகொண்டு-தானிருக்கிறது. ஜீவாவின் விளையாட்டில் அசந்த பார்ப்பன அதிகாரி அவன் முதுகைத் தட்டிக்-கொடுப்பது போல் தடவிப் பார்க்கிறார். அதை அறிந்ததும், "தட்டிக் கொடுத்தார்னு நினைத்தேன். அவர் முதுகைத் தடவிப் பார்த்திருக்கிறார்" என ஜீவா பேசும் வசனத்திற்கு கைதட்டல் ஒலியில் அரங்கமே அதிர்கிறது. இந்தியக் கிரிக்கெட் அணியில் நுழைவதற்கான முதல்படியாகக் கருதப்படும் ரஞ்சிக் கோப்பை அணியில், ஜீவாவையும், ரஞ்சித்தையும் தவிர்க்க முடியாமல் வேண்டா வெறுப்பாகச் சேர்க்கிறார் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைமைப் பார்ப்பனர். அணியில் சேர்த்தாலும் மைதானத்தில் அவர்களை விளையாட அனுமதிக்காமல் விளையாடு-பவர்களுக்குக் குளிர்பானம் கொடுக்க மட்டுமே பயன்படுத்தும் காட்சி பார்ப்பனியத்தின் வக்கிரப்புத்தியை நம் புத்தியில் உறைக்கும்படிச் சொல்கிறது.

    தமிழ் ஓவியா said...


    அடுத்த ஆண்டில் மூன்றே போட்டிகளில் மட்டும் விளையாட வைத்து, அதிலும் பார்ப்பன நரித்தனத்தைக் காட்டி அடுத்த ஆண்டில் ரஞ்சி அணியிலிருந்தே அவர்களை நீக்கிவிடும் இடம் வர்ணாசிரமத்தின் உச்சம். இப்படி எத்தனை ஆயிரம் இளம் திறமையாளர்களின் வாழ்க்கையை நாசமாக்கியிருப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும்போது நம் கண்களில் ஈரம் கசிவதைத் தடுக்க முடியாது.

    ஸ்ரீராமையும், சேஷகோபாலனையும் அணியில் நுழைக்க நடக்கும் தங்களுக்கு எதிரான பார்ப்பன சூழ்ச்சியைப் புரிந்து கொண்ட ரஞ்சித், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவரிடம் கேட்கும் கேள்விகள் "இதுவரை தமிழ்நாட்டிலிருந்து போன 16 பேரில 14 பேரு உங்க ஆளுங்கதானே?" எனக் குமுறி, புள்ளிவிவரத்தோடு கேட்கும் கேள்விகள் அதிகார வர்க்கத்தின் மீது வீசப்பட்ட சாட்டையடி!

    தமிழ் ஓவியா said...

    திறமையாளர்கள் என்று அவர்கள் தேர்ந்தெடுத்த அவாள்களால் கடந்த 20 ஆண்டுகளாக ரஞ்சிக் கோப்பையை வெல்ல முடியவில்லை என்பதையெல்லாம் நம் மக்கள் இதுவரை கேள்விப்பட்டிருக்கவே மாட்டார்கள். ஆதாரங்களோடு அடிக்கும்போது பம்முகிறது பார்ப்பனியம். கிரிக்கெட் சங்கத்தின் தலைமையி-லிருந்து பியூன் வரைக்கும் பார்த்தசாரதி கம்யூனிட்டிதான் இருக்காங்க... ரஞ்சி டீம்ல செலக்ட் ஆகிறது மட்டுமில்ல... அதுக்குப்பிறகு உள்ளதையும் தாங்கி, தாண்டிப் போகணும் என்று கோச் எச்சரிக்கும்போது இளைஞர்களுக்குத் தெரிந்திருக்காது. ஆனால் அதை அனுபவித்து, வாழ்க்கை முடிந்ததெனக் கருதி, ரஞ்சித் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் போதுதான் இன்றைய இளைஞர்கள் பலருக்கு உறைக்கக்கூடும். பரோட்டோ சூரி பேட் செய்யும்போது அவுட் ஆகாமல் இருக்க கர்த்தரை வேண்டும் நேரத்தில், எதிரே பந்து வீசுபவரும் நெஞ்சில் சிலுவை போட அதைப்பார்க்கும் சூரி, "அட இவனும் சிலுவை போடுறான்! கர்த்தர் என்ன பண்ணுவார்?" என கமெண்ட் அடிப்பது நறுக் நகைச்சுவை. காதலுக்காக மதம் மாறச் சொல்லி அப்பா கேட்கிறார் என்று சொல்லும் காதலியிடம், அதெல்லாம் முக்கியமில்ல என்று கிரிக்கெட் குறித்து யோசிக்கும் இடத்தில் மதமா பெருசு? என்று எளிதில் மதத்தைத் தூக்கி ஓரத்தில் வைத்துவிடுகிறார் இயக்குநர்.

    தமிழ் ஓவியா said...


    இசையமைப்பாளர் இமானின் இசையும், மதியின் ஒளிப்பதிவும் சிறப்பு. விளையாட்டுத் தளப் பதிவுகள் நாம் நேரில் காண்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. சந்தோஷின் வசனத்தில் சமூக நீதி சபை ஏறியிருக்கிறது. கிரிக்கெட் போர்டின் பார்ப்பன மயம் தோலுரிக்கப்பட்டிருக்கிறது. சுசீந்திரன் அளவுக்குப் பாராட்டப்பட வேண்டியவர்கள் படத்தின் தயாரிப்பாளர்களான நடிகர்கள் விஷாலும், ஆர்யாவும்!

    விளையாட்டில் பிரச்சினை என்றால் பணக்காரர் _- ஏழை பிரச்சினை என்று காட்டுவார்கள். அரசியல்வாதி பிரச்சினை செய்கிறார் என்று காட்டுவார்கள். ஆனால், நாமம் போட்ட பார்த்தசாரதி கும்பலையும், ராகவன், ஸ்ரீராம், சேஷகோபாலன் போன்ற ஆட்களையும், இளம் திறமையாளர்களான தமிழர்களை உள்ளே கொண்டுவந்துவிடத் துடிக்கும் முருகன் என்ற கதாபாத்திரத்தையும் தெளிவாக அடையாளம் காட்டி, பட்டாங்கமாகப் போட்டுடைத்திருக்கும் வசனங்களையும் காட்சிகளையும் கண்டு படத்தைப் பார்த்த பலரும் வியந்துபோயிருக்கிறார்கள். (பார்த்தசாரதிகள் வெலவெலத்துப் போயிருக்கிறார்கள்.)

    ரஞ்சியில் புறக்கணிக்கப்பட்டு ரஞ்சித் மறைந்தபின், சி.பி.எல்_-லில் இர்ஃபான் மூலம் இடம் கிடைத்து, இந்திய கிரிக்கெட் அணியிலும் கால்பதிக்கிறார் ஜீவா. அவர் தன் வாழ்க்கையை பத்திரிகையாளர்களுக்குச் சொல்லும்போதும், நான் இப்படி வெளிப்படையாகப் பேசியதால் என் கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிரச்சினை வரலாம். ஆனால் இதைச் சொல்லியாகணும் என்று மீண்டும் பிரச்சினையை நினைவூட்டி அரங்கை விட்டு வெளியே அனுப்புகிறார்.

    ஓரிடத்தில் மட்டும் சொல்லிவிட்டால் தமிழர்கள் மறந்துவிடுவார்கள் என்பதால் படத்தின் கடைசியிலும் அழுத்திச் சொல்லியிருக்கும் இயக்குநர் சுசீந்திரன் மிகுந்த பாராட்டுக்குரியவர் என்பதோடு சமூகநீதிப் பற்றாளர்களின் மனதில் மரியாதைக்குரிய இடத்தைப் பிடித்திருக்கிறார். காலத்துக்கும் பெரிய பதிவாக நிற்கும் சுசீந்திரனின் ஜீவா.

    தமிழ் ஓவியா said...

    இதுவரை பார்க்காத முகம் மெட்ராஸ்


    இதுவரை பார்க்காத முகம்

    மெட்ராஸ்

    படம் தொடங்கியதுமே அன்பு பேசும் வசனங்-களிலும், வாய்ஸ் ஓவரிலும் இது யாரைப் பற்றிய, யாருக்கான படமெனத் தெளிவாகச் சொல்லிவிடுகிறார்கள். முக்கியமாக, எந்தக் குறியீடுகளுமின்றி. ஊர்ல யார் கொலையானாலும் போலீஸ் எங்க ஹவுஸிங் போர்டு ஆளுங்களத்தான் புடிச்சுட்டுப் போகும் என்கிறார். அன்பு என்பவன் அரசியல் அதிகாரம் ஒன்றுதான் தன் மக்களின் விடியல் என தீவிரமாக நம்புகிறான். ஆனால் கல்வியறிவு அந்த மக்கள் எல்லோரையும் அதற்குத் தயாராக்கும் என்பதை அறியாத கோபக்காரனாக இருக்கிறான். இதை இன்னும் எளிமையாகப் பதிவு செய்ய தன் மகன் பள்ளிக் கட்டணத்துக்காக வைத்திருந்த பணத்தை கட்சிக்காகச் செலவு பண்ணியதாக ஒரு காட்சி வைக்கிறார் இயக்குநர்.

    தமிழ் ஓவியா said...


    காளி சற்று வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன். நல்ல வேலை. அதனால் வாழ்க்கையில் சந்தோஷத்தை மட்டுமே எதிர்பார்க்கும் சராசரி இளைஞன். இடைவேளைக்கு முந்தைய காட்சியில் அன்பும் காளியும் பேசும் வசனங்கள் ஒரு திரைப்படமாக தேவையற்ற இடைச்செருகலாகத் தெரியலாம். ஆனால், ஒரு படித்த இளைஞனின் அறிவும் அதே சமயம் மற்றவர்களைப் பற்றிய அலட்சியமும், அன்புவின் வேகமும் கோபமும் மிகச்சரியாகப் பதிவு செய்யப்படுகிறது. இம்மக்களுக்குத் தேவை அன்புவும், காளியும் இணைந்த ஒரு கலவை என்பதை அழுத்தமாகச் சொல்லும் காட்சி அது.

    மாரி ஒரு சுயநல அரசியல்வாதி. அவன் அப்பா காலத்தில் இருந்தே அதிகாரம் அவர்கள் கைகளில். இவர்கள் எப்படி தன் சொந்த மக்களையே பயன்படுத்தி குளிர்காய்கிறார்கள் என்பதும் வெளிப்படையாகவே சொல்லப்-படுகிறது.

    தமிழ் ஓவியா said...

    கலையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கையாள்வார்கள். பணம் சம்பாதிக்க, பொழுதுபோக்காய், தன்னிறைவுக்காக, வரலாறாக்க, இப்படி.. சிலர், அதைத் தான் நம்பும் புரட்சிக்குத் தூண்டுகோலாய் பயன்படுத்துவார்கள். ரஞ்சித் அப்படிப்பட்ட ஒருவர். அட்டைக்கத்தியின் வணிக வெற்றியை மீறி ஒரு நல்ல படம் என்ற பெயர் கிடைத்ததும் அவருக்கு முன்னணி நாயகனின் படம் கிடைக்கிறது. நல்ல கதையும் வைத்திருக்கிறார். இரண்டாம் பாதியை அன்புவுக்காக காளி பழி வாங்கப் புறப்படுவதாய் திரைக்கதை அமைத்து, இறுதியில் அந்தச் சுவற்றில் அன்பு படத்தை வரைவது போல் மாற்றியிருந்தால் அன்பு பாத்திரத்தில் நடிக்க எந்த நடிகராய் இருந்தாலும் சம்மதித்து இருப்பார்கள். இன்னொரு நாயகன் சேரும்போது 20 கோடியில்கூட படமெடுக்கலாம். ஆனால் ரஞ்சித் தன் நோக்கத்தில் தெளிவாய் இருந்திருக்கிறார்.

    ஜே.பி.சாணக்யாவை உடன்வைத்துக் கொள்கிறார். பாடல்களை அந்த மக்களோடு மக்களாய் வாழ்ந்தவர்களை எழுத வைக்கிறார். சுவரை அரசியல் அதிகாரமாக்கி, அதன் முடிவில் இரட்டைமலை சீனிவாசனார் சொன்ன கல்வி பற்றிய வாசகத்தை எழுதி கல்வி விழுப்புணர்வோடு கூடிய அரசியல் அதிகாரமே நம் விடுதலைக்கான தீர்வு என்று, தான் நம்பும் அரசியலைத் தீர்க்கமாக முன் வைக்கிறார். இரண்டு படங்கள் என்பது போதுமான காலம் இல்லைதான். ஆனால் ரஞ்சித் எப்போதும் தடம்மாற மாட்டார் என்பதை அடித்துச் சொல்லும் படம்தான் மெட்ராஸ்.

    மேலே சொன்ன விஷயங்கள் தாண்டி குறியீடாய் சில விஷயங்கள் இருக்கின்றன என்பது உண்மைதான். தலித்தியத்தின் நீல நிற வண்ணம் படம் நெடுகிலும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. காளியின் கால்பந்து அணி நிறம், இறுதியில் சுவரில் ஊற்றப்படும் பெயிண்ட்டின் நிறம், காளியின் வீட்டு அலமாரிகளில் வைக்கப்பட்டிருக்கும் அம்பேத்கரின் நூல்கள், இன்னும் பல. இவையெல்லாம் இல்லாமலும் இது பேசும் விஷயம் நன்றாகப் புரிகிறது.

    நூற்றாண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்டு மனிதனாகக் கூட வாழ விடாத ஒரு சமூகம் மெள்ள எழுச்சி பெற்று எல்லாத் துறைகளிலும் கால்பதிக்கும் போது ஆண்டைகளுக்குப் பற்றிக் கொண்டு தான் வரும். மெட்ராஸை ஒரு திரைப்படமாக மட்டுமே அணுகி வேகம் குறைவு.. செகண்ட் ஹாஃப் போர் என்ற ரீதியில் எழுதுவது ரஞ்சித்திற்கு நாம் செய்யும் துரோகம். ஜானி, என் உயிர்த்தோழனிலே இருக்கிறார். மெட்ராஸ் பற்றிப் பேசும்போது புதுப்பேட்டை, ஆரண்ய காண்டம் பற்றியெல்லாம் பேசினார்கள். எனக்கு என் உயிர்த்தோழன் மட்டுமே இணையான படமாகத் தோன்றியது.

    - கார்க்கி



    மாறுபட்ட முயற்சி!

    ஜானியாக வாழ்ந்திருக்கும் ஹரியின் உடல் மொழியும், திறனும் வியக்க வைக்கிறது, அநேகமாக எல்லாப் பாத்திரங்களையும் அவர் வென்றுவிட்டார் _ ஒரு நடிகனாக என்றுதான் சொல்ல வேண்டும்.

    முதல் பாதியில் சென்னையின் நடுத்தர ஏழை மக்களின் வாழ்க்கை முறையை அற்புதமாகப் படம் பிடித்திருக்கும் பா. ரஞ்சித் பிற்பாதியில் அரசியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய வன்முறை நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் தருகிறார். ஜி.முரளியின் ஒளிப்பதிவு இன்னும் எட்ட முடியாத உயரங்களுக்குப் போகும் வாய்ப்பிருக்கிறது. இரவு நேரச் சென்னையின் தெருக்கள், அதிகாலை மனிதர்களின் உடல், இயல்பாக வீட்டுக்குள் நிகழ்கிற உரையாடல்களை அவர் படம் பிடித்திருக்கும் கோணம் என்று வியக்க வைக்கிறார்.

    தமிழ் ஓவியா said...

    குறைகளைத் தாண்டி, இந்தச் சமூகத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்வியலை அவர்களின் மொழியை, அவர்களின் உடலைப் படமாக்குவதில் சமூக ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி அடைய வைத்திருக்கும் பா. ரஞ்சித் பாராட்டுக்குரியவர். எளிய ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மய்யமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை "ஸ்டுடியோ கிரீன்" தயாரித்திருப்பது உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது.

    மெட்ராஸ் _ உண்மையில் ஒரு மாறுபட்ட முயற்சி. வாழ்த்துகள்.

    - அறிவழகன்



    பொறுப்பானவர்களிடம் தானே பொறுப்பை எதிர்பார்க்க முடியும்!

    அட்டக்கத்தி பார்த்தபோது இயக்குநர் ரஞ்சித் மீது ஒரு வாஞ்சை உண்டானது. தலித் வாழ்வின் சிலபல அம்சங்களையேனும் தமிழ் சினிமாவில் முதன்முறையாக சமரசமின்றி பதிவு செய்திருந்ததால் அவர்மீது மிகுந்த நம்பிக்கை உண்டானது.

    படத்தில் வரும் அன்பு, காளி குழுவினரின் நட்பு மிகவும் இயல்பாய் நெருக்கத்தைத் தந்தது. அதுவும் அன்புவின் மனைவி மேரி... அடடா... என்ன இயல்பான தோற்றம்... அன்னியோன்னியம்... அவர் காளியை அண்ணே என அழைக்கும்போதெல்லாம் நமக்கு நமது நண்பர்களின் துணையர்தான் நினைவுக்கு வந்தனர். காளியின் அப்பாவும் அம்மாவும் துட்டுக் கேட்கும் ஆயாவும் அற்புதமான யதார்த்த மனிதர்கள். பாத்திரப் படைப்புகளில் இயக்குநரின் எளிமை தெரிகிறது. படத்தில் இரண்டு மோசமான அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைக்கின்றன. அந்தக் கூட்டணிக்கு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என பெயர் வைத்திருக்கிறார் இயக்குநர். எவ்வளவு ஆபத்தான பெயர் சூட்டல் இது. மதச்சார்பற்ற தன்மைக்கு வேட்டுவைக்கும் ஒரு வலதுசாரி அரசியல் மேலோங்கியுள்ள நிலையில், அந்த வார்த்தையே கேலிக்-குரியதாகவும் கிண்டலானதாகவும் ஊடகங்-களின் துணையோடு கட்டமைக்கப்பட்டுவரும் நிலையில், அதை இன்றைய இளம்-தலைமுறையினர் நம்பத் தொடங்கியிருக்கும் நிலையில் மோசமானவர்களாகச் சித்தரிக்கப்-படும் அரசியல்வாதிகளை மதச்சார்பற்ற.. முற்போக்கு என்ற வார்த்தைகளால் அடையாளப்-படுத்துவது என்பது யாருக்குத் துணைபோகிற அரசியல்..?

    எல்லா அரசியல்வாதிகளுமே மோசம்.. அரசியலே மோசம்.. என அரசியல் ஒவ்வாமை வியாதி இளம் தலைமுறையினரைப் பீடித்திருக்கும் நிலையில், மோசமான அரசியல்வாதிகளை (அவர்களின் அரசியல் கொள்கைகள் குறித்து எந்தக் குறிப்பும் படத்தில் இல்லை. உணமையில் அம்பலப்படுத்தப்பட வேண்டியது அதுதான்) வலுவாக சித்தரிக்கும் இயக்குநர், அதற்கு மாற்றான அரசியலையும் அதே வலுவுடன் முன்மொழிய வேண்டாமா..? கடைசிக் காட்சியில் போகிறபோக்கில் சொல்லும்போது அது பார்வையாளனுக்கு எந்தத் தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியும்..?

    ரஞ்சித் போன்ற பொறுப்பான கலைஞர்-களுக்கு அந்தப் பொறுப்பும் இருக்கிறதே...

    - கருப்பு கருணா

    தமிழ் ஓவியா said...

    பெரியாரை உள்வாங்க வேண்டும்!

    சென்னையைப் பற்றிய திரைப்படம் என்றால் பொதுவாக மெரினா கடற்கரை, சத்யம் திரையரங்கம், அண்ணா சாலை, நட்சத்திர விடுதிகள், பெசன்ட் நகர் வீதிகள் என்றுதான் நமக்குத் தமிழ் சினிமாக்கள் அறிமுகப்-படுத்தியுள்ளன. தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ளவர்கள் இந்த சினிமாக்களைப் பார்த்து-விட்டு சென்னையை இப்படிப்பட்ட பிம்பத்துடனேயே உணருவார்கள். அப்படியே வடசென்னையைப் பற்றி ஒன்றிரண்டு படங்கள் வந்தாலும், அவை வடசென்னையை ரவுடிகளின் வாழ்விடம் போலவும், அங்கு சாதாரண மக்கள் அச்சத்துடனேயே வாழ வேண்டும் என்ற நிலைமை நிலவுவது போல சித்தரிக்கப்-பட்டிருக்கும். ஆனால் மெட்ராஸ் திரைப்படம் இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருக்கிறது.

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை, அவர்களுக்குள்ளான அரசியலை, மன உணர்வுகளை மிக அழகாக, நேர்த்தியாக, இயல்பு மாறாமல் கொடுத்ததற்காக இயக்குநர் ரஞ்சித் பாராட்டுக்குரியவர். ஆனால் படத்தில் நமக்கு ஒரு சிறு நெருடல் உண்டு. அந்தக் குறிப்பிட்ட பகுதியைச் சார்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள், தாங்கள் அரசியல் ரீதியாக சுரண்டப்-படுவதிலிருந்து மீண்டு விடுகின்றனர். அதன்பின்பு, இறுதிக்காட்சியில் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் படிப்பகத்தில் மாணவர்களுக்குப் பாடம் புகட்டும் கதாநாயகன், கல்வியோடு சேர்ந்து பகுத்தறி-வோடு கூடிய சமூக, அரசியல் அறிவையும் பெற வேண்டும் என்று போதிக்கிறார். அப்போது அந்தப் படிப்பகத்தில், அம்பேத்கர், ரெட்டைமலை சீனிவாசன் படங்கள் உள்ளன. தலைவர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், பெரியார் தவிர்க்கப்பட்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்குப் போராடி, தான் வாழும் காலத்திலேயே ஒரு மாற்றத்தை உருவாக்கியவர் பெரியார். பகுத்தறிவு என்ற வார்த்தையையே வெகுமக்களிடம் கொண்டு சேர்த்தவர் பெரியார்தான். அதுவும் நமக்கு உள்ள வருத்தம், வடசென்னை பெரியார் இயக்கத்தின் கோட்டையாக இருந்த பகுதி. அப்படியிருக்கும்-போது வடசென்னையைப் பற்றிய படத்தில் பெரியார் தவிர்க்கப்பட்டிருப்பது தற்செயலான-தாகத் தெரியவில்லை. இந்த நிலைப்பாடு, அம்பேத்கரை தாழ்த்தப்பட்டவர்களின் தலைவராகவும், பெரியாரை பிற்படுத்தப்-பட்டவர்களின் தலைவராகவும் பார்க்கின்ற பார்வையின் வெளிப்பாடு. இந்த நிலைப்பாடு, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு வலுசேர்க்காது.

    இப்போதும் படத்தினுடைய கருத்தில் முரண்பாடு இல்லை. ஆனால், இயக்குநர் ரஞ்சித் பெரியாரை உள்வாங்க வேண்டும்; இந்த விமர்சனத்தையும் நேர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உரிமையோடு வேண்டுகோள் வைக்கிறோம்.

    - குட்டிமணி, சூலூர்

    திறமையான எளிய மக்களின் சென்னை!

    தமிழ் ஓவியா said...

    கட்டிட இடுக்குகளில் நுழையத் தொடங்கும் படத்தில ஆரவாரமின்றி கதாநாயகனைக் கால்பந்தாட்டத்துடன் இணைத்து நகர்கிறது. கதாநாயகனிலிருந்து தொடங்கி அதில் நடித்துள்ள அனைத்துக் கதாபாத்திரங்களும் நடிக்கவில்லை, மாறாக, அப்பகுதியினராகவே பிரதிபலித்திருக்கிறார்கள். இப்படத்தில் காட்டியிருக்கும் மக்களின் விளையாட்டான கால்பந்து, கபாடி, கேரம் விளையாட்டுகளில் அவர்களின் ஈடுபாடு. (கேரம் போட்டியில் உலக சாம்பியன் அவர்களில் ஒருவராகத்தான் பார்க்கத் தோன்றுகிறது.) பாடல்களின்போது சிறுவர்கள் ஆடும் (ஹிப் பாப்) நடனம் மேற்கத்திய நடனக் கலைஞர்களுக்கு ஏற்ற போட்டியாளர்கள் இவர்கள்தான் என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழர்கள்... தமிழர்கள் என்று பேசுபவர்கள் ஜாதி மாறித் திருமணங்களைச் செய்வதில்லை என்று ஆரம்பித்து சுயநலத்திற்காக மக்களைப் பிரித்து தன்னை நிலைநாட்டிக் கொள்ளத் துடிக்கும் அரசியல்வாதிகளை சுவரை மய்யக் கருத்தாக வைத்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர். - சோசு எங்கள் வாழ்வியலும் 'அழகியல்' தான்!

    இந்து சமூகம் தலித்துகளின் மேல் சுமத்தி வைத்திருக்கின்ற 'இழி நிலை' மிக மோசமானது,

    தமிழ் ஓவியா said...

    தலித்தாக இருப்பின் ஒரு 'மாநில முதல்வரானாலும்' அவர் கோவிலுக்கு வந்து சென்றபின் தூய்மைப்படுத்த சிறப்பு பூசைகள் நடத்தப்படுகின்றன.

    ஒடுக்கப்பட்ட மக்களின் இருப்பிடத்தைக் குறித்து 'ஹவுசிங் போர்டுல இருப்பவன் என்றும் 'பக்கத்துல ஹவுசிங் போர்டு இருக்கு அதுதான் ஒரே பிரச்சினை' என்பதுமாகவும், இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் பலநூறு தலித் மாணவர்களை அவமானத்தில் தள்ளி தற்கொலை செய்து கொள்ள வைத்திருப்-பதாகவும், 'சேரில உள்ளவன் மாதிரிப் பேசாத' என்ற சொல்லாடல் போலவும், அனைவருக்கும் வருவது போல் இளம் பருவத்தில் ஒரு தலித்துக்கு இயல்பாக காதல் வந்தால் அதனை 'நாடகக் காதல்' என்று இழிவு செய்வது போலவும், தலித் மக்களின் உடை, மொழி, இருப்பிடம், நிறம், உணவு முறை, காதல் என்று பலவற்றையும் (அனைத்தையும்) இந்து சமூகம் தீட்டாகக் கருதி அவமானம் செய்கிறது.

    அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் என்று சமூகத்தில் தலித்துகள் எதிர்கொள்ளும் 'நவீன தீண்டாமை' எழுத்து வடிவத்திற்கும் சொல் வடிவத்திற்கும் அப்பாற்பட்டது. இவ்வாறான சுழலில் இந்த 'இந்து ஜாதி'ச் சமூகத்திலிருந்து வந்த சினிமாக்காரர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்பது புரிந்துகொள்ளக் கூடியதே!

    அவர்கள் தங்கள் ஜாதி வன்மத்தைத் தீர்த்துக்கொள்ளும் மற்றொரு தளமாக 'சினிமா'வைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். தமிழ்த் தேசியம் பேசும் அரசியல் கட்சிகள் 'ஓட்டுக்காக' ஜாதி வெறியைத் தூண்டிவிடுவது-போல வியாபாரத்திற்காக ஜாதி வன்மத்தைத் தூண்டிவிடும் சினிமாக்காரர்கள் பலர் தமிழகத்திலே உள்ளனர்.

    இவ்வாறான சூழலில் 'இயக்குநர்' ரஞ்சித் எங்களுக்கு ஒரு விடி வெள்ளியாகத் தெரிகின்றார். அவரின் காட்சி அமைப்புகள் 'காயம் பட்ட எங்கள் நெஞ்சங்களுக்கு மருந்து தடவுவதாக உள்ளன. 'அட்டக்கத்தி' திரைப்-படத்தைப் பார்த்துப் பலர் கண்ணீர் விட்டு அழுததாகக் கூறினர். அந்தக் கண்ணீர் அந்தப் படத்தில் வரும் நாயகனுக்காக அல்லது கதைக்காக அல்ல' அந்தக் கண்ணீர் வெகுநாள் தமிழ் சினிமாவில் இழிவாகக் காட்டப்பட்டு வந்த தங்களை முதன் முறையாக ஒரு ஹீரோவாகப் பார்த்ததால் வந்தது.. அது எங்கள் வாழ்வியலும் அழகியல்தான் என்ற 'ஆற்றாமையில்' வந்தது.

    ஆகவே, குடும்பத்தோடு நடனமாடுவதும், 'மெட்ராசின்' மொழியில் ஹீரோயின் பேசுவதும், ஹீரோ நன்கு படித்து வேலைக்கு'ச் சென்றவனாக இருப்பதும், காதலிக்கும் செய்தி தெரிந்ததும் பெற்றோர்கள் 'எங்கள் கவுரவத்தைக் கெடுத்துடாத' என்று பேசாமல் இருப்பதும், ஊர் கூடி ஒரு சாவுக்கு அழுவதும், எங்கள் இளைஞர்களின் 'கானா ' பாடல்களும், நாடி நரம்புகளை அசைத்துப் பார்க்கும் பறை இசையும், மாட்டுக் கறியும், எங்கள் வாழ்வியலும் அழகியல்தான்!

    - ஜானகிராமன்

    தமிழ் ஓவியா said...

    உங்களுக்குத் தெரியுமா?


    1925 ஆண்டு காங்கிரஸ்காரரான கோவை அய்யாமுத்து புதுப் பாளையத்தில் நடத்தி வந்த ஆதிதிராவிடர் பாடசாலையில் பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே என்ற பாரதி பாடலை மாணவர்கள் பாடி வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதைப் பாடக் கூடாது என்று தடை போட்டவர் சந்தானம் அய்யங்கார் என்ற பார்ப்பனத் `தேசியத்' தலைவர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

    தமிழ் ஓவியா said...

    எதையுமே ப்ளான் பண்ணிப் பண்ணனும்!


    - கல்வெட்டான்

    ஊரே களேபரமா இருந்தாலும் _ டீக்கடை சந்தானத்துக்காக கத்தி பிடித்துக் கொண்டிருந்தார் சுந்தரம்.

    "என்ன சுந்தரண்ணே, சந்தானம் மாதிரி நீயும் கடைய அடைக்கலையா?" என்று சந்தானத்துக்கு கொக்கி போட்டபடியே சலூன் கடை பெஞ்சில் வந்து அமர்ந்தார் மதியழகன். "கடைய அடைக்கறதுன்னா ஒன்னு எங்க ஆயா செத்துப் போயிருக்கணும், இல்லைன்னா கடைமேல நடக்குற கேஸ்ல அந்த சேட்டு ஜெயிக்கணும்! ஆனால், ரெண்டுமே இழுத்துக்கிட்டு தான இருக்கு! பிறகெதுக்கு அடைக்கணும் மதி சார்?!" சுந்தரம் கிரீமை உண்மையின் உரைகல்லில் தேய்த்துக் கொண்டிருந்த கேப்பில் கவுண்ட்டர் கொடுத்தார் சந்தானம். பெயருக்கேற்ற மாதிரி பேசுறதிலும் கில்லாடிதான் இவரு!"இல்ல தம்பி, புதுசா முளைச்ச தெருமுக்குப் பிள்ளையார் மாதிரி, புதுசா முளைச்ச மக்கள் முதல்வருக்காக அங்கங்க கடையடைப்பும் கலவரமுமா இருக்குதே! அதைக் கேட்டிருக்காப்ல!" என்று சேர்ந்து கொண்டார் சுந்தரம்.

    "ஊரே பத்தியெரிஞ்சாலும் நம்மாளுங்-களுக்கு ரெண்டே ரெண்டு கடை கண்டிப்பா திறந்திருக்கணும்! ஒன்னு ஒயின் ஷாப்பு, ரெண்டாவது டீக்கடை! அதனால நம்ம கடைய அடைக்கச்சொல்லி யாரும் மிரட்ட-மாட்டாங்க சார்!" என்றபடி திரும்பிய சந்தானத்தை இழுத்துப் பிடித்து கழுத்தில் கத்தியை வைத்தார் சுந்தரம்.

    "அதுசரி, மக்களே முன்வந்து அடைக்கிறதால்ல டிவிபெட்டியில சொல்றாங்க?" என்று ஊடகத்தைத் துணைக்-கழைத்தார் மதி.

    "அவனவன் சொந்த மச்சினிச்சி கல்யாணத்துலகூட கலந்துக்காம கடை நடத்துறதாலதான் வீட்டுக்குள்ள ஏகப்பட்ட பிரச்சினையைச் சந்திச்சு சமாளிச்சுக்கிட்டு இருக்குறான்! இதுல யாரு தோழரே மனமுவந்து கடையடைக்கிறாங்க?!" என்று சுந்தரம் பதில் சொல்லத் தொடங்கிவிட்டார் வேலை பார்த்தபடியே!

    "ஏன் இப்படிச் சொல்றீங்க? அங்க அங்க மொட்டையெல்லாம் வேற போடுறாங்களே!"

    "மொட்டை போடுறது யார்னு கவனிச்சுப் பாருங்க... ஊர்ப் பணத்தை மொட்டையடிச்சு தன்னோட குடும்பத்தை வளர்க்கறவனுங்களாத்-தான் இருப்பானுங்க! பெத்த தாயிக்குக் கஞ்சி ஊத்தாதவனுங்களா மத்த தாய்ங்களுக்காக உருகிடப் போறானுங்க?!"

    தமிழ் ஓவியா said...


    "நீங்க சொல்றதும் சரிதான்! இதுல என்ன விசயம்னா இந்தப் புரட்டாசி மாசத்துல கவிச்சி வாடையே ஆகாதுன்னு சொல்லிட்டு மூக்கைப் பொத்திக்கிட்டு திரியிற அவாள்தான் இப்போ "ஜாமீன் கிடைச்சுடுத்தா? ஜாமீன் கிடைச்-சுடுத்தா?"ன்னு மூச்சுக்கு முன்னூறு தடவை கேட்டுட்டுத் திரியுறாங்க! அவா ஆத்துக்-குள்ளயும் மீன் நுழைஞ்சுடுச்சு பார்த்தியா?!"

    "ஆத்துக்குள்ள மட்டும்தான் அவாளுக்கு அபச்சாரம்! ஃபாஸ்ட் புட் கடைப்பக்கம் போயிப் பாருங்க... ஆளோட ஆளா அவாளும் சேர்ந்து வெளுத்துக் கட்டிக்கிட்டு இருப்பாங்க! அதுசரி, வாராவாரம் எதாவது பேஸ்புக் கலாட்டா, கிசுகிசுன்னு சொல்வீங்களே, இந்த வாரத்துக்கு ஏதாவது இருக்கா சார்?" என்று மீண்டும் கேப்பில் சிக்கன் வெட்டினார் சந்தானம்.

    "இல்லாமலா தம்பி? இந்த டவுசர் போட்ட ஆர்.எஸ்.எஸ் பசங்க, பேஸ்புக்லயும் தங்களோட பிரிவினை விஷத்த டைமிங் பார்த்து எடுத்து விட்டிருக்கானுங்க!"

    "அங்கயும் நுழைஞ்சாச்சா? கிழிஞ்சது கிருஷ்ணகிரி!" என்றபடி அடுத்த துண்டுப் பேப்பரைக் கிழித்தார் சுந்தரம்.

    "ஆமா! அதுல ஒரு அறிவிப்பு, ஹிந்து சகோதரர்கள், இஸ்லாமியர்களின் கடைகளில் தீபாவளிப் பட்டாசு, ஜவுளியெல்லாம் வாங்கக்-கூடாதுன்னும், நம்ம ஹிந்துக்களோட பணத்துலதான் இஸ்லாமியர்கள் கல்லாக் கட்டி, தீவிரவாதத்தைப் பரப்புறாங்கன்னும் கிளப்பி விட்டுருக்கானுங்க!" என்றார் மதி.

    தமிழ் ஓவியா said...


    "அப்ப, அம்புட்டுப் பேரும் இனிமேல் கார், டூவீலரையெல்லாம் ஓட்டிட்டுப் போகாமல் உருட்டிட்டுப் போகச்சொல்லுங்க! பெட்ரோல், டீசல், கேஸ், மண்ணெண்ணெய்னு அம்புட்டும் இஸ்லாமிய நாடுகளிலிருந்து தான வருது! இதுல இவனுங்களில் பாதிப் பேர் அரபு நாட்டுலயும், கிறிஸ்தவ நாட்டுலயும்தான் சம்பாத்தியமே பண்ணிட்டு இருப்பானுங்க! அந்தத் துட்டை வச்சுக்கிட்டு இஸ்லாமியர்-களை எதிர்க்குறானுங்களா-மாக்கும்! முதலில் இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்கே பொழப்புக்காகப் போகக்கூடாதுன்னு இவனுங்களுக்குத் தடா போடணும் தோழர்!" என்றார் சுந்தரம்.
    அடானி பிளைட்டுல பறந்து பறந்து பிரதமர் ஆனாரே மோடி! அவரு பேசாம புஷ்பக விமானத்தையில்ல தேடியிருக்கணும். சுந்தரம் கத்தி வைப்பதற்குள் கமெண்ட்டை வைத்தார் சந்தானம்.

    "நீங்க இப்படிச் சொல்றீங்க தம்பி, ஆனால் மேக் இன் இந்தியான்னு மோடி அம்புட்டு வெளிநாட்டுக்காரங்களையும் இந்தியாவுக்குல்ல கூப்பிடுறாரு!"

    "இவங்களை அவரோட "க்ளீன் இந்தியா" திட்டத்தை வைத்தே இந்தியாவிலிருந்து துடைச்சு எறியணும் சார்! அப்பத்தான் நாடு உருப்படும்!" என்று தாமரை படத்தைத் துடைத்து எறிந்தார் சுந்தரம்.

    "சரியாச் சொன்னீங்க! அதுசரி, கருப்புப் பணத்தைக் கொண்டுவரப்போறேன், சுயராஜ்ஜியத்தைக் கொண்டுவரப் போறேன்னு சொல்லிட்டு, கடைசியில் மேக் இன் இந்தியான்னு வெளிநாட்டுக்காரங்களுக்குத்-தான் கம்பளம் விரிக்குறாங்க! கோவிலை விட்டுட்டு கழிப்பிடங்களைக் கட்டுங்கன்னு சொன்னால், அதைக் கண்டுக்காமல் இப்போ "க்ளீன் இந்தியா"ன்னு திட்டத்துக்காக கையில துடைப்பத்தோட போஸ் கொடுக்குறாங்க! ஏற்கெனவே அரசியலுக்காக துடைப்பத்தைத் தூக்குனவங்க கதி என்னாச்சுன்னு தெரிஞ்சுமா இப்படிப் பண்றாங்க?!

    "துடைப்பத்தால குப்பையை அள்ளுவாங்-களோ என்னவோ சார், கண்டிப்பா கொத்துக்கொத்தா பணத்தை அள்ளப்-போறாங்க! லட்சம் கோடி ப்ராஜெக்டாமே சார்! இதுல அம்பானிய வேற கூட்டுச் சேர்த்தால் விளங்குமா?!"

    "காங்கிரஸோட திட்டத்தையெல்லாம் பெயரை மாத்தி, தூசி தட்டி இவங்க பெயருக்கு மாத்துறதை மட்டும்தான் கனகச்சிதமா பண்ணிட்டு வர்றாங்க! மங்கள்யான் திட்டம்-கூட காங்கிரஸோட முயற்சிதான்! இப்ப பெயர் வாங்கிக்கறது என்னவோ இவங்கதான்! கலைஞரோட திட்டங்களில் இந்த அம்மா பெயர் வாங்குற மாதிரிதான் இதுவும்! இதுல மங்கள்யான் திட்டச் செலவு ரொம்பக் கம்மின்னு பெருமை வேற அடிச்சுக்கறாங்க!"

    "அதுசரி, மங்கள்யானுக்குக் கம்மியா செலவு பண்ணிட்டு, காந்திக்கு மாற்றா இவங்க பில்ட் அப் பண்ற பட்டேலோட சிலைக்கு ஆயிரம் கோடிகள் செலவுல்ல பண்றாங்க! கங்கையில பல ஆயிரம் கோடிய கொட்டப்-போறோம்ன்றாங்க!"

    "கங்கையைச் சுத்தப்படுத்தப்போறோம்னு ஆரம்பிச்சாங்க, அடுத்து கோதாவரி, யமுனான்னு வரிசையா கிளப்பிட்டு இருக்காங்க! ஆத்துல போட்டாலும் அளந்து போடுன்னு-சொல்வாங்க! இவங்க என்னடான்னு-ஆறுகளை வச்சே அளவில்லாமல் ஆட்டையப் போட அய்டியா பண்றானுங்க!" என்று வேலையை முடித்து சந்தானத்தை எழுப்பி-விட்டார் சுந்தரம்.

    "இதுக்குத்தான் ஆறுங்களுக்கு பொண்ணுங்கபெயரை வைக்கவே விட்டிருக்கக் கூடாது! ஒரு ஜோசப்பு, கந்தன், மணிமாறன், சந்தானம்னு ஆம்பளைப் பசங்க பெயரை வச்சிருந்தா ஆறுங்களைக் கண்டுக்கவே மாட்டானுங்க!"

    "பொண்ணுங்கன்னு சொன்னதுக்கப்புறம்-தான் ஒரு விஷயம் நினைவுக்கு வருது, நம்ம ஜேசுதாஸ், பொண்ணுங்க ஜீன்ஸ் போடுறது கலாச்சாரத்துக்குப் பொருத்தமில்லாததுன்னு பேட்டி குடுத்து மாட்டிக்கிட்டாரு பார்த்தியா தம்பி?"

    "இவருக்கெதுக்கு சார் வேண்டாத வேலை? நம்மளை மாதிரி தினமும் ஷேவிங் பண்றதை விட்டுட்டு இவரும் பெரியார் மாதிரி தாடி விட்ட பின்னாலதான் கேரளாவுல பலரும் இவரை ஒரு முன்மாதிரியா வச்சுக்கிட்டு தாடி வளர்க்கறாங்க! அதுக்காக தாடி வளர்க்கறது கலாச்சாரச் சீர்கேடுன்னா நாம சொல்றோம்? அவங்கவங்களுக்கு எது சவுகரியமோ அதைச் செஞ்சுட்டுப் போறாங்க! இவருக்கு என்னவாம்?!" என்று சட்டையை உதறிப் போட்டுக்கொண்டார் சந்தானம்.

    "இதுலயும் நுண்ணரசியல் இருக்கு. ஜேசுதாஸ் மட்டுமா? அடிக்கடி இப்படி குரல் பலர்ட்ட இருந்து வரும். பூணூல் போடுறதும், குடுமி வைக்கிறதும் நாமத்தைப் போட்டுக்-கறதும், நான் அவா இல்ல இவான்னு காட்டிக்கறதுக்காக இருக்கும்! ஆனால் ஜீன்ஸ் மாதிரி ட்ரெஸ்ல அத்தனை பேரும் ஒரே மாதிரி ஆயிடுறாங்க! குறிப்பா, அவாளுக்குன்னே இருக்குற யூனிபார்மெல்லாம் மாறிப்-போகுதில்ல! அந்த வயித்தெரிச்சல் இருக்காதா என்ன?!"

    "சரியாச் சொன்னீங்க சார்! அந்த அம்மாவை ஆதரிச்சு போஸ்டர் ஒட்டுறேன் பேர்வழின்னு கர்நாடக நீதிபதியைத் திட்டி அவங்களே ஆப்பு வச்சுக்கிட்ட ஆளுங்கட்சி மாதிரி ஆயிடுச்சே ஜேசுதாஸோட நிலையும்! இதுக்குத்தான் சார், எதையுமே ப்ளான் பண்ணிப் பண்னணும்கறது!"

    "ஹஹஹ! :-)"

    தமிழ் ஓவியா said...

    கருத்து


    மேல்நாடுகளில் சிறந்த கல்விமுறை வேண்டி ஆசிரியர்கள் போராடு-கின்றனர். ஆனால், இங்கே அதற்காக எந்த ஆசிரியரும் போராடவில்லை. சம்பள உயர்வு கேட்டுத்தான் போராடுகின்றனர். கல்வி முறையும் உலக நாடுகளை ஒப்பிடுகையில் மிகவும் மோசமாக உள்ளது.

    -தங்கர் பச்சான், திரைப்பட இயக்குநர்.

    முதியவர்கள் மீதான நம்முடைய அன்பும் அக்கறையும் கூடுதலாகத் தேவைப்படுகிறது. தங்களின் பெற்றோர்களைக் கவனிக்க வேண்டியது ஒவ்வொரு இளைஞனின் கடமையாகும். இதனைக் கடமை என்று மட்டும் எண்ணாமல், பெற்றோர்களுக்கு முதுமைக் காலத்தில் உறுதுணையாக இருப்பது பெருமை எனக் கருத வேண்டும்.

    - கே.ரோசய்யா, தமிழக ஆளுநர்

    தரமான விதைகள், தடையில்லா மின்சாரம், உயர்தர உரம் போன்றவற்றை வழங்கினாலே விவசாயம் செழிக்கும். மானியமே வேண்டாம் என பிகார் விவசாயிகள் என்னிடம் தெரிவித்துள்ளனர். குறைந்த நீரில் அதிக மகசூல் செய்யும் விதைகளை ஆராய்ச்சி செய்து அதனைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

    -அப்துல் கலாம், மேனாள் குடியரசுத் தலைவர்


    இந்தியாவில் மனித உரிமை மீறல்கள், அனைத்துத் துறைகளிலும் நடக்கின்றன. மனித உரிமைகள் ஆணையத்திற்கு ஆண்டு-தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புகார்கள் வருகின்றன. இதில், போலீசார் மீதான புகார்களே அதிகமாக உள்ளன.

    -கே.ஜி.பாலகிருஷ்ணன், மனித உரிமைகள் ஆணையர்

    புகையிலைப் பொருள்கள் பயன்-படுத்தாதவர்-களுக்கும் புற்றுநோய் ஏற்படுகிறது. வாய்ப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோயால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்-படுகின்றனர். இது குறித்த ஆராய்ச்சிகளில் முன்னேற்றம் காண வேண்டும்.

    - மருத்துவர் வி.சாந்தா, அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மய்யத் தலைவர்



    சொல்றாங்க....

    காஷ்மீர் பிரச்சினையைப் பொருத்தவரை, அதை இனியும் மூடிமறைக்க முடியாது. காஷ்மீர் மக்கள் தங்களது நிலையை சுய நிர்ணயம் செய்து கொள்ளும் வகையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என அய்.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 60 ஆண்டு-களுக்கு மேலாகிவிட்டது. இதுவரை அந்தப் பொது வாக்கெடுப்பு நடைபெறவில்லை. காஷ்மீர் மக்களின் உரிமையை நிலைநாட்டுவதுதான் பாகிஸ்தானின் லட்சியம் ஆகும்.

    - நவாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் பிரதமர்

    ஜம்மு காஷ்மீர் மக்கள் உலகம் முழுவதும் ஏற்றுக்-கொண்ட ஜனநாயக கொள்கைகள் மற்றும் நெறி-முறைகளின் அடிப்படையில் தங்களது எதிர்காலத்தைத் தேர்ந்தெடுத்து அமைதியான முறையிலேயே வாழ்ந்து வருகிறார்கள். அதையே அவர்கள் தொடர்வார்கள் என்பதையும் பெருமைமிக்க இந்தச் சபையின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். எனவே, பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்த கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

    - அபிஷேக் சிங், அய்.நா.சபைக்கான இந்தியத் தூதரக முதன்மைச் செயலாளர்

    தமிழ் ஓவியா said...

    சிம்சாங் கார்ட்டூனும் யோகன் கார்ட்டூனும்

    அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை விவாதத்திற்குரிய கருத்துப் படம் ஒன்றை வெளியிட்டதாகப் பரபரப்பு கிளம்பியது.

    அறிவியலாளர்கள் உள்ள பணக்கார நாடுகளின் Elite Space Clubக்குள் தலைப்பாகை, வேட்டியுடன் இந்தியர் ஒருவர் மாடு ஓட்டிக்கொண்டு வந்து அலுவலகக் கதவைத் தட்டுவது போன்று கருத்துப் படம் வரையப்பட்டுள்ளது.

    இந்தியர்களை, குறிப்பாக மலையாள மக்களை இந்தக் கருத்துப்படம் கோபப்படுத்தி உள்ளதாம். (அவர்கள் ஆதிக்கம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிகம் உள்ளதால் இருக்குமோ?) நியூயார்க் டைம்ஸ் பன்னாட்டுப் பதிப்பில் தலையங்கத்தை ஒட்டி வெளியிடப்பட்ட இந்த கருத்துப்படம் சிங்கப்பூர் ஓவியர் ஹெங் சிம்சாங் என்பவரால் வரையப்பட்டது.



    பணக்கார, மேற்கத்திய நாடுகளால்தான் முடியும் என்பதை மாற்றி, இந்தியா செவ்வாய்க்கலன் ஏவியுள்ளது என்பதையே கருத்துப் படத்தின் ஓவியர் கருத்துப்படத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்துப்படத்தின் மூலம் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினால், நிறுவனத்தின் சார்பில் மன்னிப்பைக் கோருகிறோம். ஓவியர் ஹெங் எந்தவிதத்திலும் இந்தியாவையோ, அதன் அரசு மற்றும் குடிமக்களையோ எதிராகக் கருதவில்லை என்று நியூயார்க் டைம்ஸ் செய்திப் பிரிவின் சார்பில் அந்தப் பக்கத்திற்கான ஆசிரியர் ஆன்ட்ரியூ ரோசன்-தால் தெரிவித்துள்ளார்.

    கோபம் எதற்கென்றால், தலைப்பாகை, கையில் மாடு என்று ஏழை வடநாட்டுக் குடியானவன் போல படம் போட்டு விட்டார்கள் என்பதற்காகவாம். சம்பந்த-மில்லாமல் தேசபக்தியும், ரோசமும் பொத்துக்-கொள்ளும் இவர்களுக்கு! இப்படித்தான் இந்த நாட்டின் வெகுமக்கள் இருக்கிறார்கள். அப்படியே இப்படம விமர்சிக்கிறது என்றாலும் அது மேலை நாடுகளையே ஏளனம் செய்கிறது. இந்தியாவைப் பாராட்டத்-தான் செய்கிறது. போகட்டும். இவர்களை இப்படியா விமர்சிப்பது? மங்கள்யானை அனுப்புவதற்கு கோயில், நாள், நேரம் என்று திரிந்தவர்கள் எங்கு எதை அனுப்பினால் என்ன? அடிப்படை அறிவில்லாவிட்டால் செவ்வாய்க்கலன் அனுப்பி என்ன பயன்? மைல் கல்லைக் கும்பிடும் இந்தக் கும்பலுக்கும், ராக்கெட் மாதிரியைக் காட்டி பகவானிடம் அப்ரூவல் வாங்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? எனக்கென்னமோ, சிம்சாங்கின் கார்ட்டூனை விட, நம் கார்ட்டூனிஸ்ட் யோகனின் கார்ட்டூன்தான் இதற்கு சரியென்று படுகிறது.

    தமிழ் ஓவியா said...

    டில்லியில் இராவணன் விழா : தெலங்கானாவில் நரகாசுரன் விழா :


    டில்லியில் இராவணன் விழா :

    தெலங்கானாவில் நரகாசுரன் விழா :

    மைசூரில் இராவணனுக்குக் கொண்டாட்டம் :

    இராமாயணத்தால் இழிவுபடுத்தப்பட்ட தென்னாட்டு மக்களைத் தொடர்ந்து இழிவு-படுத்தும் விதமாக ஆண்டுதோறும் இராவணன், கும்பகர்ணன்,மேகநாதன் உருவங்களைக் கொளுத்தி ராமலீலா கொண்டாடு-கின்றனர் வடநாட்டார். அதற்கு எதிர்வினையாக இராமன், லட்சுமணன், சீதை உருவங்களைக் கொளுத்தி அன்னை மணியம்மையார் நடத்திய இராவணலீலா வடநாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது வரலாற்றுக் குறிப்பு. எனினும் இன்னும் இராமலீலா நடைபெற்றே வருகிறது.

    அண்மைக்காலமாக, தமிழ்நாட்டில் மட்டும் ஒலித்த இராமலீலாவுக்கு எதிரான குரல், இப்போது பரவலாக பல இடங்களிலுமிருந்து வருகிறது. தில்லி ஜவகர்லால் பல்கலைக்-கழகத்தின் உயர்பொறுப்பில் இருப்போர் இத்தகைய விழாக்களில் பங்கெடுப்பதைக் கண்டித்தும், நாங்கள் இராவண லீலா நடத்தினால் இராமனைக் கொளுத்த வருவீர்களா என்று கேட்டும், அப்பல்கலைக்கழகத்தின் துணை-வேந்தருக்கு மாணவர்கள் ஒரு திறந்த மடலை எழுதியுள்ளனர். தமிழ்நாட்டில் இராவணலீலா நடந்தபோது அன்றைய பிரதமர் இந்திராகாந்திக்கு அன்னை மணியம்மையாரின் சார்பாக ஆசிரியர் கி.வீரமணி எழுதிய கடிதத்தையும் அதில் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள் மாணவர்கள். மேலும் தந்தை பெரியாரின் படத்தையும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருக்-கிறார்கள்.

    தெலங்கானா உஸ்மானியா பல்கலைக்-கழக மாணவர்கள் அக்டோபர் 31 அன்று திராவிட வீரன் நரகாசுரன் நினைவுநாளை அனுசரிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். இந்நிலையில், கர்நாடகா பி.ஜெ.பி. தலைவர் பிரகலாத் ஜோஷி,இராவணன், லங்கேஷ் என்று பெயர் வைத்திருப்பவர்கள் எல்லாம் மாமாக்கள். என்று உளறிக் கொட்ட, கான்பூர் முதல் கன்னியாகுமரி வரை, மைசூர் உள்பட பலவிடங்களிலும் இராவணனைக் கொண்டாடும் மக்கள் இருப்பதை எடுத்துக் காட்டி பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் கன்னட இளைஞர்கள். திராவிடர் இயக்கம் வைத்த இன உணர்வுத்தீ நாடெங்கும் பற்றிப் பரவுகிறது என்பதைத்தானே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன.

    தமிழ் ஓவியா said...

    தூர்தர்ஷன் துஷ்பிரயோக்


    மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நிறுவப்பட்ட நாள் நிகழ்ச்சியில் அதன் தலைவர் மோகன் பாகவத் ஆற்றிய உரை அரசு ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்சனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்கு நாடெங்கும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன. கண்டனம் தெரிவித்து டில்லி காங்கிரஸ் சார்பில் அக்டோபர் 5 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    மூன்று முறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். இன்றைய தலைவர் மோகன் பாகவத்தின் பேச்சு தூர்தர்ஷனில் நேரலை செய்யப்பட்டது நாட்டின் மதச் சார்பின்மை கொள்கையின் அடிப்படையையே தகர்த்துள்ளது. நாடெங்கும் மதக் கலவரங்களைப் பரப்பி வரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிகழ்ச்சி நாட்டில் முதல் முறையாக அரசுத் தொலைக்காட்சியில் நேரலை செய்யப்பட்டுள்ளது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.

    இதுபோன்று மதச்சார்பின்மைக் கோட்பாட்டைத் தகர்க்கும் மத்தியில் ஆளும பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளையும், தூர்தர்ஷனை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஊதுகுழலாக மாற்ற முயற்சிப்பதையும் காங்கிரஸ் கட்சி பொறுத்துக் கொள்ளாது. என்றார் டில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங். இடதுசாரிகள், முற்போக்காளர்கள், மதச்சார்பற்றோர் முன்னமே எதிர்பார்த்த மோடி அரசின் இந்தப் போக்கு மோடிக்கு வாக்களித்தவர்கள் மத்தியிலேயே வெறுப்பைத் தோற்றுவித்துள்ளது.

    தமிழ் ஓவியா said...

    மேடிசன் மோடி... மோகன்’லால்’ காந்தி!


    பிரச்சாரத்திற்குப் போன காலத்திலெல்லாம் தப்புந்தவறுமாக வரலாற்றுச் செய்திகளைச் சொல்லிக் கொண்டுதிரிந்த மோடி, பத்தாண்டுகளாக நுழைய முடியாமலிருந்த அமெரிக்காவுக்குப் போவதற்காகவே பிரதமராகி, சகிக்க முடியாமல் அவர்களும் அனுமதித்துவிட்டார்கள். விசா மறுக்கப்பட்டுவந்த மோடிக்கு, அங்கே ரொம்ப காலமாக சம்மன் மட்டும் தயாராக இருந்தது வேறு கதை! நம் கதை... சாரி... மேடிசன் சதுக்கத்தில் பேசிய மோடியின் கதை என்னவென்றால், காந்திக்குப் புதுப்பெயர் வைத்தது தான். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்று ஒன்னாப்பு படிக்கும் பிள்ளைக்குக் கூட சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும் நாட்டின் பிரதமரோ மோகன்லால் காந்தி என்றார். கமுக்கமாகச் சிரித்தார்கள் அமெரிக்கக் காவலர்கள்! (முன்குறிப்பு: மேடிசனில் மட்டுமல்ல... ராஜஸ்தானில் கடந்த ஆண்டு பேசும்போதும் காந்தியை அவர் மோகன் லால் என்று குறிப்பிட்டதை அப்போதே பத்திரிகைகள் எடுத்துக் காட்டின.) வாட் டு டூ? மோடி கேட்ச்சுடு ரேபிட் ஹாஸ் திரி லெக்ஸ்பா! அட, புரியலையா... அவர் புடிச்சா முயலுக்கு மூணு காலுதான். சப்போஸ், நாலு காலுன்னு முயல் சொன்னா, ஒரு காலை உடைச்சுட்டு இப்போ மூணு தானே என்பார். சோ, மூணு என்று ஒப்புக்கொள்ளுதல்தானே முயலுக்கு நல்லது. அதுமாதிரி காந்தியே வந்து பெயரை மாற்றினாலும் மாற்றிக் கொள்ளக்கூடும்.

    தமிழ் ஓவியா said...

    வாங்க கூட்டலாம்!

    இந்திய நாட்டில் இன்னல்களே இல்லாமல் செய்யும் வல்லமை படைத்தவராக தன்னைக் கருதுபவரும் வல்லபபாய் பட்டேலுக்கு உலகத்தில் இல்லா உயரச் சிலை உருவாக்கியே தீருவேன், இந்து தேசத்தை அமைத்தே தீருவேன் என்ற உறுதிப்பாடுடன் அதற்காக மக்களைத் தன்வயப்படுத்துவதற்காக தன்னால் இயன்றமட்டிலும் தனி மனிதனாய் நின்று இடைத்தேர்தல்களில் இடுப்பொடிந்து தள்ளாடும் தன் தாமரைச் சின்னக் கட்சியைத் தாங்கிப் பிடிக்கும் நம் தலைமையமைச்சர் நரேந்திர மோடியின் நரித் தந்திரத்தில் உருவான சுவட்சா பாரத் அபியான் (தூய்மை இந்தியா இயக்கம்) திட்டத்தில் நாடெங்கிலும் உள்ள நல்ல நடிகர்கள் தப்புதப்பு... மனிதர்கள் பங்கேற்றனராம்.

    பரந்துபட்ட பாரத தேசத்தின் பல பகுதியிலும் பாரதத்தின் புதல்வர்களும், புதல்விகளும் அகன்ற பாரதத்தின் அழுக்கை அகற்றுவதற்காக அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்த நாளன்று விளக்கமாற்றைத் தூக்கிக் கொண்டு வீதி வீதியாய் வந்துவிட்டனர்.

    புதுடில்லியில் உள்ள வால்மீகி காலனிக்கு துடைப்பக் கட்டையுடன் வாளியை எடுத்துக்-கொண்டு குப்பை அள்ளுவதற்காக குழுவோடு வந்து சேர்ந்தார் புதிய நடிகர்; சாரிங்க! மறுபடியும் மறுபடியும் தப்பாவே தோணுது. டி.வி.யில உங்களுடைய படத்தையே அடிக்கடி காட்ட ஆரம்பித்துவிட்டதால் பிரதமர் என்பதே மறந்து போகுதுங்க.

    துப்புரவுத் தொழிலாளிகள் வசிப்பிடத்திற்கே துப்புரவு செய்ய வந்துவிட்டார் மோடி. அதிகாலையில் மலம் அள்ளச் சென்று மாலையில் வீடு திரும்புபவர்கள் வீதியைப் பளபளக்கச் செய்த செப்படி வித்தைக்காரர் நரேந்திர மோடி அவர்கள் நல்ல உடையணிந்து வந்துவிட்டார். தெருக்களைக் கூட்டிப் பார்த்தார், தேகமெங்கும் வியர்க்க வியர்க்க. காமிராக்கள் காட்சிகளை அள்ளிக் கொண்டன. அகிலமெங்கும் காட்டத் தொடங்கின.

    தொடர்ந்தார்கள் நாட்டின் மற்ற மற்றப் பகுதிகளில். கூட்டு கூட்டு என்று கூட்டினார்கள்; பெருக்கு பெருக்கு என்று பெருக்கினார்கள். தமிழிசையும், வானதியும், உமா பாரதியும், ஸ்மிருதி ராணியும் கூட்டிப் பழகத் தொடங்கினார்கள். முடிந்த காட்சியின் முடிவுரையாக 9 பேருக்கு அழைப்பு விடுத்தார் பிரதமர். கமலஹாசன் களிப்படைந்துபோய் தனக்குக் கிடைத்த பெரும்பாக்கியம் என்றார். பாவம் அவர் என்ன செய்வார்? விசுவரூபம் பாகம் 2 வெளியாக வேண்டுமே! சூர்யா சுறுசுறுப்பாக நானும் கூட்டுவதற்குத் தயார் என்றார். இவர் எல்லோருக்கும் நல்லவராகவே இருக்கப் பார்க்கிறார். குஷ்புவோ நானும் கூட்டுகிறேன் குப்பையை என்று சொல்லிவிட்டார். அடுத்ததாக அகில உலக ஆறாவது பணக்காரர் அனில் அம்பானி நானும் இந்த ஆட்டத்திற்குத் தயார் என்று துடைப்பத்தோடு நாட்டைச் சுத்த்த்தமாகத் துடைப்பதற்குத் தயாராகிவிட்டார்.

    விளக்குமாறு வியாபாரிகளோ வியாபாரத்தை பெருக்கி-யதற்காக நன்றி கூறுகிறார்கள் நரேந்திர மோடிக்கு. வீதியைக் கூட்டியது போதும் மோடிஜி. வாருங்கள்! மலத்தை மனிதர்கள் தங்களுக்கு முடிந்த இடத்தில் இருந்து வைத்து-விடுகிறார்கள். கண்ட இடத்தில் கழித்து விடுபவர்களுக்கு நமது சுவட்சா பாரத் அபியானைப் பற்றிச் சொல்லுங்கள். முன்னு-தாரணமாக நீங்களே செயலில் இறங்குங்கள். வராக அவதாரத்தை வணங்கும் தாங்கள் பூமாதேவியின் மேல் கிடக்கும் நரகலை-யெல்லாம் கூடையில் வாரிப் போடுங்கள். ஸ்டார்ட்... கேமரா ரெடி! ஆக்க்ஷன்! நாடெங்கும் நேரடியாக ஒளிபரப்புங்கள். 9 பேரைத் தேர்ந்தெடுத்து இதையும் செய்யச் சொல்லுங்கள். இன்னும் நாட்டில் நிறைய நடிகர், நடிகைகள், தொழில் அதிபர்கள் பாக்கி இருக்கிறார்கள்.

    தமிழ் ஓவியா said...

    ஆனால் பாருங்கள்! என்ன சொன்னாலும் கேட்கமாட்டேன் என்கிறார்கள் நம் மக்கள். நாம் காட்டாத எய்ட்ஸ் விளம்பரமா? குடியின் தீமை பற்றி, சிகரெட்டின் அபாயம் பற்றி நாம் சொல்லாததா? சாலை விதிகள் பற்றி நாம் கூறாததா? தூய்மை இந்தியா இயக்கமாகட்டும், மற்ற எதுவாக வேண்டுமென்றாலும் ஆகட்டும், தனி மனிதனுக்கு தன்னைப் பற்றியும் நாட்டைப் பற்றியும் பொறுப்புணர்ச்சி வர வேண்டும். அதனைக் கொண்டு வருவதற்கு கேமரா முன்னால் நடிப்பதை விட்டுவிட்டு நல்லதாக தங்களிடம் உள்ள வலிமை வாய்ந்த அரசு இயந்திரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்பதை யோசித்துப் பார்த்துச் செயல்படுத்துங்கள்.

    இப்படி விளம்பர வெளிச்சத்திலேயே நாட்டை ஆளும் பிரதமராக மட்டும் இருக்காதீர்கள். வாக்குகளைக் கூட்டுவதற்காகவும், பெருக்கு-வதற்காகவும் தன்னால் இயன்ற அளவு மனிதர்களின் மனதை வளைத்துப்போடும் முயற்சியில் பிரதமராகிய நீங்கள் ஒருபுறம் இறங்கியிருக்க, நாட்டின் இன்னொரு பகுதியில் தான் வந்து சென்றதற்காக கோவிலில் தண்ணீர் ஊற்றிக் கழுவிப் பெருக்குவதையும், கூட்டுவதையும் நொந்து போய்ச் சொல்கிறார், ஒரு மாநிலத்தின் முதல்வர்.

    பீகார் மாநிலத்தின் மதிப்புமிகுந்த முதல்வர் மாண்புமிகு ஜிதன்ராம் மாஞ்சி தான் அவர். மாநிலத்தின் எச்செயலும் இவர் இசைவின்றி நடவாது.

    ஆனால் என்ன செய்ய? கல்லைக் கடவுள் என்றெண்ணிக் காணச் சென்றதால் காவி உடைதரித்த பார்ப்பனர்கள் அவர் கால் வைத்த இடங்களையெல்லாம் கழுவிச் சுத்தம் செய்தார்களாம்.

    இப்படி ஏற்கெனவே முப்படைக்கும் தலைமை அமைச்சராகப் பணியாற்றிய பாபு ஜெகஜீவன்ராம் அவர்களுக்கும் இதேபோன்று நடந்த அவமதிப்பும் நினைவிற்கு வருகிறது.

    தேவநாதன்கள் செய்கின்ற காரியத்திற்-கெல்லாம் கடவுள் சன்னதியைக் கழுவினீர்களா என்பதையும் கேட்க வைக்கிறது.

    தமிழ் ஓவியா said...

    குப்பைகளை அகற்றுவதற்காக குடிசைப் பகுதிக்கு வருவதையே விளம்பரமாக்காமல் எண்ணற்ற குப்பைகளையும், ஆபாசங்களையும் அழுக்குகளையும் உள்ள உங்கள் இந்து மதத்தைத் தூய்மைப்படுத்தி முடிந்தால் மதக் கழிவையே கழுவி வெளியேற்றி சக மனிதனையும் சகோதரனாய்ப் பார்க்க வைக்கும், தழுவிக் கொள்ள வைக்கும் மண-உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவைக்கும் மனநிலைக்கு மாற்றமுயற்சியுங்கள்!

    முதலில் சுவாட்ச் பாரத் அபியான் என்று தங்களுக்குத் தெரிந்த மொழியில் மட்டும் சொல்லாமல் நாட்டுடைமைத் தொலைக்-காட்சியிலும், தனியார் தொலைக்காட்சியிலும் அந்தந்த மாநில மொழிகளில் சொல்ல வையுங்கள். சுவாட்சா என்று நீங்கள் சொல்ல எங்க ஆள் உச்சா போகச் சொல்லுகிறார் என்று நினைத்து விடுவான்.

    அந்நியமாகிப் போகும் எதனையும் எந்த மனிதனும் சட்டை செய்யவே மாட்டான். காந்தியாரின் கனவாகிய தூய்மையான இந்தியாவை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம் என்னும் பிரதமர் அவர்களே! இதைவிடப் பெரிதாக இன்னொன்றுக்கு ஆசைப்பட்டு கனவு கண்டார் காந்தியார் அவர்கள். அதுதான் மனிதநேயமுள்ள மதச்சார்பற்ற ஒற்றுமையான சமூக நல்லிணக்க இந்தியா! அந்த அருமையான கனவினை நிறை-வேற்றுவீர்களா, காந்தியைக் காவு வாங்கிய கூட்டத்தைக் குருவாக ஏற்றிருக்கும் திருவாளர் இந்துத் தேசியவாதி மோடி அவர்களே!

    - இசையின்பன்

    தமிழ் ஓவியா said...

    அவசியம்


    கருத்து வேற்றுமை ஏற்படுவது மனித இயல்பு; இது இயற்கையே. நமக்கே சில விசயங்களில் நாம் முன்பு நினைத்தது, செய்தது தவறு என்று தோன்றும். இது அதிசயமல்ல. என்னதான் கருத்து வேறு பாடு இருந்தாலும் மனிதத் தன்மையோடு நடந்து கொள்வதே முக்கியமும் அவசியமுமாகும்.
    (விடுதலை, 17.6.1970)

    Read more: http://viduthalai.in/page-2/89624.html#ixzz3GhBuLlqc

    தமிழ் ஓவியா said...

    பலவித வெள்ளத்தில் மக்கள் தவிப்பு!


    திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்கள் ஒரு முறை எழுதி இருந்தார்கள். ஒரு 24 மணி நேரம் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் மழை பெய்தால் தலைநகரம் மக்கள் நடமாட, புழங்கிடத் தகுதியற்றதாக, சகஜ வாழ்க்கைக்கு லாயக்கற்றதாக மாறி விடுகிறது என்று எழுதினார்.

    36 ஆண்டுகளுக்குப் பிறகும் தலைநகரமான சென்னை அதே நிலையில் தானிருக்கிறது என்பது வருத்தத்திற்கு உரியது.

    எங்கு பார்த்தாலும் மழை நீர்த் தேக்கம், போக்குவரத்துப் பாதிப்பு, அலுவலகங்களுக்குச் செல்ல முடியாத ஊழியர்களின் பரிதாப நிலை, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் கட்டாய நிலை. இத்தியாதி இத்தியாதி வசதிக் குறைவுகள் சென்னை மாநகரைப் புரட்டிப் போட்டுள்ளன.

    இவ்வளவு மழை பொழியும் என்று எதிர்பார்க்க வில்லை; உடனடியாகப் பரிகாரம் செய்ய முடியாது, படிப்படியாகத்தான் செய்ய முடியும் என்கிறார் வணக்கத்திற்குரிய மேயர்.

    மக்கள் நடந்து செல்ல முடியவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும்; இரு சக்கர வாகனங்களில் செல்லக் கூடியவர்களின் நிலை ஆபத்துக்குரியதாக இருக்கிறது.

    ஆங்காங்கே குழிகள் திறந்து கிடப்பதால் அதில் வாகனங்கள் விழுந்து உயிருக்கே ஆபத்தாகும் நிலை. மின் கம்பிகள் அறுந்து விடுவதால், ஏற்படும் விபரீதம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

    ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்யும்போது மட்டும் இதுபற்றியெல்லாம் பேசபடுகிறதே தவிர, அந்தப் பருவம் முடிந்தவுடன் அதனைப்பற்றிப் பொது மக்களும் சிந்திப்பதில்லை. அரசு - மாநகராட்சியும் திட்டமிடுவதில்லை.

    சென்னைப் பெரு நகரின் எல்லைகள் விரிவடைந்து கொண்டே செல்லுகின்றன - மக்கள் பெருக்கம் இன்னொரு பக்கம் அச்சுறுத்தல்; வெளியூர்களிலிருந்து தலைநகருக்கு வரும் பொது மக்கள் நாள்ஒன்றுக்குப் பல லட்சம் - வாகனங்கள் பெருக்கம் என்பவையெல் லாம் சேர்ந்து சென்னைப் பெருநகரத்தை மூச்சுத் திணறலுக்கு ஆளாக்கி விடுகின்றன.

    அரசியல் காழ்ப்புணர்வால் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட பூங்காக்கள் எல்லாம் குப்பைத் தொட்டிகளாகி விட்டன. எதில்தான் அரசியல் பார்ப்பது என்ற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது.

    போதும் போதாதற்கு இந்த மூடத்தனப் பண்டி கைகள்! அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மெச்ச வேண்டும் என்பதற்காகக் கடன் வாங்கியாவது பண்டிகைகளைத் தாம்தூம் என்று கொண்டாடும் மூடத்தனங்கள்; தீபாவளி இதில் முதல் இடத்தை வகிக்கிறது.

    தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம் என்பதை அறியாமலேயே அதன்மீது ஒரு கவர்ச்சி! வியாபாரிகள் மக்கள் பணத்தைக் கைப்பற்றிட கைத்திறன் காட்டும் விளம்பர யுக்திகள் - இவற்றின் காரணமாக கொட்டு மழையிலும் கூட துணிக் கடைகளிலும், நகைக் கடைகளிலும் நெரிசலோ நெரிசல்! மக்களிடம் பகுத்தறிவு வளர்ச்சி பெருகாவிட்டால் எல்லா வகையிலும் இடர்ப்பாடுகளை வருந்தி அழைத்து அவதிப்பட வேண்டியநிலை!

    அதுவும் விஞ்ஞானம் பெற்றெடுத்துக் கொடுத்த இந்த ஊடகங்கள் செய்யும் அநியாயம் இருக்கிறதே - அவற்றிற்கு மன்னிப்பே கிடையாது.

    அப்பப்பா, ஒவ்வொரு மாதமும் வந்து போகும் பண்டிகைகளைப் பற்றி சற்றும் அறிவுக்குப் பொருந்தாத அளப்புகள் போட்டிப் போட்டுக் கொண்டு காகித ஊடகங்கள் ஆன்மிக இணைப்பு இதழ்களை வெளி யிட்டு, அதிலும் மக்களின் பணத்தைப் பறிக்கின்றனர்.

    மூடத்தனமான தல புராணக் குப்பைக் கதைகளை அதில் கொட்டி, கடைசி வரியில் என்பது... நம்பிக்கை... ...என்பது ஆன்மிகம் என்று பொறுப்பைத் தட்டிக் கழித்து வெளியிடும் மோசடித்தனம்!.

    தடுக்கி விழுந்தவன் அரிவாள்மணையில் விழுவது போல பக்தியால் புத்தி கெட்டுப் போன மக்களை மேலும் மேலும் பழி வாங்குகின்றனவே இந்த ஊடகங்கள் நாட்டைப் பீடித்த அய்ந்து நோய்களுள் பத்திரிகை என்பதையும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் கூறியதை நினைத்துப்பார்த்தால் ஆகா எவ்வளவு தொலை நோக்கோடு இந்த அறிவுலக ஆசான் கணித்துள்ளார்! என்று வியக்க வைக்கிறது.

    மழையில் ஆரம்பித்து பத்திரிகை வரை கடுமையாக விமர்சிக்கப்படுகிறதே என்று எண்ண வேண்டாம். மூடச் சங்கிலி ஒவ்வொன்றையும் தொட்டுத் தொட்டு, இணைக்கிறதே என் செய்ய!

    மழை வெள்ளத்திலும் தீபாவளிச் சந்தை கொடி கட்டிப் பறக்கிறது. ஜேப்படிக்காரர்களின் கைவரிசை இன்னொரு பக்கம்.

    பள்ளிப் பருவத்தில் பாடத் திட்டத்தில் ஆரம்பித்து , பாட்டி சொல்லும் கதைகள் முதல் ஒரு பெரிய மாற்றம், மறுமலர்ச்சி வரவில்லை என்றால் இந்த மக்கள் மேலும் மேலும் துன்பச் சுமையால் முதுகெலும்பு முற்றிலும் முறிந்து பக்கவாதத்தில் வாழ்வைத் தொலைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

    Read more: http://viduthalai.in/page-2/89625.html#ixzz3GhC3WpzT

    தமிழ் ஓவியா said...

    ஒரு கல்லில் பல மாங்காய் அடிக்கும் பலே மோடி?


    -குடந்தை கருணா

    சனிக்கிழமை அன்று நடை பெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மோடி அரசு ஒரு முடிவை எடுத்து அறிவித்துள்ளது.

    இனி, காந்தி அடிகள் பிறந்த, மறைந்த நாள் மட்டும் தான், மத்திய அரசின் நிகழ்வாக நடத் தப்படும்.

    இதுவரை கொண்டாடப் பட்டு வந்த பிற தலைவர்களின் நிகழ்வுகளை, அரசு நிகழ்ச்சியாக இனி இருக்காது என்ற முடிவை மோடி அரசு எடுத்துள்ளது.

    ஆகா, மோடியைப் பார், அனாவசியமாக, அரசு விழாக்கள் எடுத்து செலவு செய்வதை எப்படி தடுத்து நிறுத்தி, சிக்கனத்தைக் கடைப்பிடித்து, நாட்டை பொருளாதார வளர்ச்சிக்கு இட்டு செல்கிறார் என ஊடகங்களும், நம்மூர் குருமூர்த்திகளும், சோக்களும், வரிந்து கட்டிக்கொண்டு பேசு வார்கள்.

    ஆனால், அரசு விழாவாக இது நாள் வரை, நிகழ்த்தப்பட்ட தலைவர்களின் பிறந்த நாள், மறைந்த நாள் என நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சரண்சிங், போன் றோரின் நிகழ்வுகள் இனி நடைபெறாது என்பதை, மறைமுகமாக மோடி அரசு கூறியுள்ளது.

    அதுமட்டுமல்ல, இந்த பட்டி யலில் பாபாசாகிப் அம்பேத்கர், பாபு ஜெகஜீவன்ராம் ஆகியோரும் அடங்குவர் என்பதையும் நாம் புரிந்துகொண்டால்தான், மோடியின் ஆர்.எஸ்.எஸ். அரசு, இந்த முடிவை எந்த கோணத்தில் எடுத்துக்கொண்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

    இந்த முடிவை இங்கே உள்ள ஊடகங்கள் பெரிதாக செய்தி வெளியிட்டதாக தெரியவில்லை;

    அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் பெயரில் ஒவ்வொரு திட்டமாக இனி அறிவிக்க இருக் கிறார்கள். அதன் முதல் துவக்கம் தான், அக்டோபர் 16-ஆம் தேதி யன்று, மோடி துவக்கிய பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா ஸ்ராமேவ் ஜெயதே கார்யகிரம் திட்டம்; அதாவது, தீன்தயாள் உபாத்யாயா தொழிலாளர் மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.

    ஆர்.எஸ்.எஸில் முழு நேர பிரச்சாரக இருந்து, ஜனசங்கத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவராகவும் இருந்த தீன்தயாள், சங்கராச்சாரியா,ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஹெக்டேவர் ஆகியோ ரின் வாழ்நாள் சரித்திரத்தைப் பற்றி எழுதியவர்.

    அவரது வாழ்நாளில், தொழி லாளர் போராட்டம் எதிலும் கலந்து கொண்டதாக ஒரு குறிப்பும் நமக்கு இல்லை; இருந்தாலும், அவரது பெயரில் தொழிலாளர் திட்டம் ஒன்று துவக்கப்பட்டிருக் கிறது மோடி அரசால் என்றால், இவர்களின் போக்கு எப்படி செல்கிறது என்பதற்கு இது ஒரு சான்று.

    இந்த அய்ந்து ஆண்டுகளில், மோடி அரசில் இன்னும் ஆர். எஸ்.எஸ். தலைவர்களின் பெயரில் பல திட்டங்கள் சூட்டப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது.

    ஆக, ஒரு பக்கம், ஏற்கனவே, இருந்த தலைவர்களின் நிகழ்வுகள், மெல்ல மெல்ல இருட்டடிப்பு செய்யப்படும்; ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் பெயரில் திட் டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

    இது தான், மோடி அரசுக்கு உள்ள உண்மையான அஜெண்டா. ஒரு கல்லில் பல மாங்காய் அடிக் கும் வித்தை இது தான்.

    Read more: http://viduthalai.in/page-2/89627.html#ixzz3GhCQJG9G

    தமிழ் ஓவியா said...

    ஜெயலலிதாவுக்காக நாரிமன் வாதாடியது தெளிவான விதிமீறல்: முன்னாள் நீதிபதி கருத்து


    சென்னை, அக்.20- சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக் கப்பட்டு பெங்களூரு சிறையில் இருந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா தனக்கு இடைக் கால பிணை வழங்கக் கோரி இந்திய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் சார்பில் மூத்த வழக்குரைஞர் களில் ஒருவரான பாலி எஸ்.நாரிமன் ஆஜராகி வாதாடி னார்.

    அதன் தொடர்ச்சியாக கடந்த வெள்ளிக்கிழமை இந்திய உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவுக்கும் அவருடன் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட அவரது தோழி சசிகலாவுக்கும், அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரனுக்கும் நிபந்தனையுடனான இடைக்கால பிணை வழங்கி உத்தரவிட்டிருக்கிறது.

    அதே சமயம், பாலி எஸ்.நாரிமன், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இந்த வழக்கில் வாதாடியது தவறு என்கிற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

    காரணம் இந்த சொத்துக் குவிப்பு வழக்கு உள்பட ஜெயலலிதாவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட பல்வேறு ஊழல் வழக்குகள் தொடர் பான விசாரணைகளை எதிர்த்து ஜெயலலிதா முன்னர் வழக்கு தொடுத்தபோது, இதே நாரிமன், தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சார்பாகவும், திமுக சார்பாகவும், ஜெயலலிதாவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்திலும்,

    இந்திய உச்சநீதிமன்றத்திலும் வாதாடியிருப்பதாக கூறும் திமுகவைச் சேர்ந்த வழக் குரைஞர் சண்முகசுந்தரம், இப்படி கடந்த காலத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாடியவர், அதே வழக்கு தொடர்பான இந்த பிணை கோரும் வழக்கில் ஜெயல லிதாவின் சார்பில் வாதாடுவது வழக்குரைஞர்களுக்கான தார்மீக நெறிமுறைகளை மீறும் செயல் என்று சண்முக சுந்தரம் விமர்சித்திருந்தார்.

    சண்முகசுந்தரம் முன்வைக்கும் விமர்சனம் சரியே என்கிறார் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.சந்துரு. இதில் நாரிமன் வெறும் தார்மீக நெறி முறைகளை மட்டும் மீறவில்லை;

    மாறாக வழக்குரைஞர் களுக்கான இந்திய பார் கவுன்சிலின் நடத்தை விதி முறைகளையும் தெளிவாக மீறியிருப்பதாக கூறும் நீதிபதி சந்துரு, இதற்காக நாரிமன்மீது டில்லி பார் கவுன்ஸிலும், இந்திய பார் கவுன்ஸிலும் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

    அத்துடன், பாலி எஸ்.நாரிமனின் மகன், இந்திய உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் சூழலில் நாரிமன் இந்திய உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து வழக் குரைஞராக பணிபுரிவதே தவறு என்கிறார் நீதிபதி சந்துரு.

    இந்திய உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உறவினர் கள் யாரும், அந்த நீதிபதிகள் பணிபுரியும் உயர்நீதி மன்றங்களில் பணிபுரியக் கூடாது என்று இதே இந்திய உச்சநீதிமன்றம் தெளிவாக அறிவுறுத்தி, வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார் நீதிபதி சந்துரு.

    இந்திய உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அவர்களின் உறவினர்களில் இருக்கும் வழக்குரைஞர்களுக்கும் இந்திய உச்சநீதிமன்றம் பரிந்துரைக்கும் அந்தக் கட்டுப் பாடுகள் மற்றும் வழிமுறைகள் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும்,

    அவர்களின் உறவினர்களுக்கும்கூட அப்படியே பொருந்தும் என்று தெரிவித்த நீதிபதி சந்துரு, இது தொடர்பில் இந்திய பார் கவுன்சில் வழக்குரை ஞர்களுக்கான நடத்தை விதிமுறைகளில் ஒரு சிறு திருத்தம் செய்வது இதை மேலும் வலுப்படுத்தும் என்றும் வலியுறுத்தினார்.

    Read more: http://viduthalai.in/page-2/89649.html#ixzz3GhD6411m

    தமிழ் ஓவியா said...

    இதயம் காக்க எளிய வழிகள்!


    இதயம் காக்க எளிய வழிகள் நம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்து கொண்டால் போதும். மாரடைப்பு வாய்ப்பை 95 சதவீதம் குறைத்துவிடலாம். அதற்குத்தான் இந்த யோசனைகள்...

    ரத்த அழுத்தம் சரியாக இருக்கட்டும்!

    மாரடைப்பு ஏற்படுவதற்கு உயர் ரத்த அழுத்தம் ஒரு முக்கியக் காரணம். சாதாரணமானவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது. ரத்த அழுத்தம், 120/80 என்பதுதான் நார்மல். இது 140/90 என்ற அளவைத் தாண்டக்கூடாது. அதேநேரம் 90/60 என்ற அளவுக்குக் கீழேயும் இறங்கி விடக்கூடாது.

    ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் உணவில் உப்பைக் குறைப்பது, புகைப்பழக்கத்தைக்கைவிடுவது, ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், அப்பளம், வடாம், சிப்ஸ் போன்ற உப்பு நிறைந்த உணவுகளைக் குறைத்துக் கொள்வது என்று வாழ்க்கைமுறைகளைச் சரி செய்துகொண்டால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். இவர்கள் மாதம் ஒருமுறை ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டியது முக்கியம்.

    சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துங்கள்!

    ரத்தத்தில் சர்க்கரை அளவு வெறும் வயிற்றில் 80-100 மி.கி. / டெ.லி. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து 120-140 மி.கி. /டெ.லி. என்று இருக்க வேண்டும். இந்த அளவுகள் மிகுந் தால், சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லை என்று பொருள்.

    மற்றவர்களைவிட சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு 2 மடங்கு அதிகரிக்கிறது. ஆகவே, சரியான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றியும், தேவையான மாத்திரை, இன்சுலின் போன்ற சிகிச்சைகளை எடுத்துக்கொண்டும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த வேண்டியது முக்கியம்.

    கொழுப்பு கவனம்!

    மாரடைப்புக்கு வாய்ப்புள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை ரத்தக் கொழுப்பு அளவுகளைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ஒருவருக்கு மொத்தக் கொழுப்பு 200 மி.கி. / டெ.லி.க்குக் குறைவாகவும், டிரைகிளிசரைட் கொழுப்பு 150 மி.கி. / டெ.லி.க்குக் குறைவாகவும், எல்.டி.எல். எனும் கெட்ட கொழுப்பு 100 மி.கி. / டெ.லி.க்குக் குறைவாகவும், ஹெச்.டி.எல். எனும் நல்ல கொழுப்பு 40 மி.கி./ டெ.லி.க்கு அதிகமாகவும் இருக்க வேண்டும்.

    ஆரோக்கியமான உணவுப்பழக்கம்

    அரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு மற்றும் முழுத் தானி யங்கள், நார்ச்சத்து மிகுந்த பயறு வகைகள், ஓட்ஸ், துவரை, பட்டாணி, அவித்த கொண்டைக்கடலை, வெண்ணெய் நீக்கப்பட்ட பால், மோர், கீரைகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள். தக்காளி, அவரை, வெண்டைக்காய், வெள்ளைப் பூண்டு, முருங்கை, புடலங்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, பூசணிக்காய், முட்டைக்கோஸ், காளிஃபிளவர், புரோக்கோலி ஆகியவை இதயம் காக்கின்ற உணவுகள்.

    அசைவம் சாப்பிடுபவர்கள் தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சியைச் சாப்பிடலாம். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இதயத்துக்குப் பாதுகாப்பு தரும் ஒரு சத்துப்பொருள். இது மீனில் உள்ளது. மீனையும், கோழி இறைச்சியையும் எண்ணெயில் பொரிக்காமல் வேகவைத்து குழம்பாக்கிச் சாப்பிடுவது நல்லது.

    பழங்களில் ஆரஞ்சு, திராட்சை, ஆப்பிள், கொய்யா, மாதுளை, அன்னாசி நல்லது. காபிக்குப் பதிலாக க்ரீன் டீ குடிக்கலாம். இந்த உணவுகளில் கொழுப்பு குறைவு. கலோரிகளும் அதிகரிக்காது. ஆகவே, இவற்றை இதயத்துக்கு இதம் தரும் உணவுகள் என்கிறோம்.

    தவிர்க்கவேண்டியவைகள்

    பாமாயில், தேங்காய் எண்ணெய், வனஸ்பதி (டால்டா), முட்டையின் மஞ்சள் கரு, ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி. தயிர், வெண்ணெய், பாலாடை மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகள், தேங்காய், முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, அப்பளம், வடை, பஜ்ஜி, போண்டா, பூரி, சிப்ஸ், சீவல், சமோசா, எண்ணெயில் ஊறிய, வறுத்த, பொரித்த உணவுகளை ஓரங்கட்டுங்கள்.

    செயற்கை இனிப்புகள், நொறுக்குத் தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், விரைவு உணவுகள் ஆகியவற்றை ஒதுக்கிவிடுங்கள். எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடாக்கிப் பயன்படுத்துவதைத் தவிருங் கள். மதுவையும் தவிர்த்து விடுங்கள். 40 வயதுக்குப் பிறகு உப்பு, இனிப்பு, கொழுப்பு இந்த மூன்றையும் குறைத்துக் கொள்வது மிக நல்லது.

    நல்ல சமையல் எண்ணெய் எது?

    ஒரு சிறந்த சமையல் எண்ணெயில் செறிவுற்ற கொழுப்பு அமிலம், ஒற்றைச் செறிவற்ற கொழுப்பு அமிலம், பலவகை செறிவற்ற கொழுப்பு அமிலம் ஆகிய மூன்றும் 1 : 1 : 1 என்ற அளவில்தான் இருக்க வேண்டும்.

    ஆனால், இப்போது நாம் பயன்படுத்தும் எண்ணெய்களில் இந்த விகிதத்தில் எந்த எண்ணெயும் இல்லை. இந்த விகிதத்தில் கொழுப்பு அமிலங்கள் கிடைப்பதற்கு பலவித எண்ணெய்களைத் தேர்ந்தெடுத்து, அளவோடு பயன்படுத்தலாம்.

    சூரியகாந்தி எண்ணெய், வறுப்பதற்குக் கடலை எண்ணெய், தாளிக்க நல்லெண்ணெய் என்று வாரம் ஒருமுறை சுழற்சி முறையில் பயன்படுத்தினால் கொழுப்பு அமிலங்கள் மிகாது. இதயத் துக்கும் நல்லது.

    Read more: http://viduthalai.in/page-7/89644.html#ixzz3GhDlQNHg

    தமிழ் ஓவியா said...

    வெந்நீர் அருந்துங்கள் இளமையாக இருக்கலாம்


    என்றென்றும் இளமையாக இருக்க தண்ணீரை அதிகளவில் உட்கொள்வது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என பெரியவர்கள் முதல் மருத்துவர்கள் வரை சொல்லக்கேட்டிருப்போம்.

    ஆனால், மிதமான நீரை பருகுவதை விட வெந்நீரை குடிப்பதால் அதிகளவில் நன்மைகள் உண்டு என்பது நம்மில் பலருக்கும் தெரியுமா என்பதே சந்தேகம் தான். தினமும் வெந்நீரை காலையில் அருந்துவது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது என கூறுகின்றனர்.

    உடலை சுத்தம் செய்யும் இந்த வெந்நீர் வேகமாக வயதாவதையும் குறைத்து இளமையை தக்க வைத்து கொள்ள உதவும். கடும் குளிர்காலத்தில் ஏற்படும் மூக்கடைப்பு தொண்டைகட்டிற்கு வெந்நீரை குடிப்பது நலம் தரும்.

    வெந்நீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து கொண்டால் இன்னும் சிறந்தது. டீன் ஏஜ் பெண்கள் மற்றும் ஆண்களை தொல்லை செய்யும் முகப்பருக்களும் வெந்நீர் பருகுவதால் சுத்தமாக அகன்றுவிடும்.

    அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் முடிகள் நன்றாக வளர்வதுடன் முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி நல்ல வளர்ச்சி அடையும். வெந்நீரால் இரத்த ஓட்டம் சீராவது மட்டுமின்றி நரம்பு மண்டலத்தின் ஒரத்தில் உள்ள கொழுப்புகளும் குறைந்துவிடும்.

    மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள் பெரிதும் அவதிபடுவார்கள். அந்த சமயத்தில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால் மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாகக் குறையும். உடற்பயிற்சி மய்யத்திற்கு சென்று போராடாமல் எளிதில் உடல் எடையை குறைக்க சிறந்த வழி வெந்நீர் குடிப்பது தான்.

    மதியநேர சாப்பாட்டிற்கு பின் சிறிது வெந்நீர் பருகினால் இதயத்தில் சேரக்கூடிய தேவையற்ற கொழுப்புக்களை அகற்றிவிடும் ஆற்றல் கொண்டது. காலை வேளையில் மலம் எளிதில் வரவில்லையா ஒரு தம்ளர் வெந்நீர் குடித்தால் எல்லாம் சரியாகிவிடும்.

    Read more: http://viduthalai.in/page-7/89645.html#ixzz3GhDw4MZk