Search This Blog

21.4.14

எதிரிகளைவிட துரோகிகளே முதலில் ஒழிக்கப்பட வேண்டியவர்கள்!-பெரியார்


எவன் என்னிடம் வந்து நல்லத்தனமாக நடந்து கொஞ்சம் செல்வாக்குப் பெறுகிறானோ அவனைக் கருத்தாக இருந்து துரோகிகள் பிடித்து விடுகிறார்கள். கொஞ்சம் செல்வாக்கு வந்ததும் அவனிடம் இவனுக்கு நட்பு, சிநேகம்! அவன் செய்கிற அயோக்கியத்தனத்திற்கு உடந்தை! என்ன நியாயம்? அவன் செய்கிற அயோக்கியத்தனத்திற்கு இவன் பெயரை இரவல் கொடுக்கிறான். நம்மிடமிருந்து எவனாவது செல்வாக்குப் பெற்றால் அவனோடு கூடிக் குலவி அவன் செல்வாக்கைத் தங்களுக்குப் பயன்படுத்திச் செல்வாக்கைப் பறித்துக் கொண்டு விரட்டி விட்டுவிடுகிறார்கள். இதில் துரோகிகள் கண்ணும் கருத்துமாக இருந்து செய்கின்றனர். இவன் ஏமாந்து நம்மிடம் பெற்ற செல்வாக்கை அவனுக்குப் பயன்படுத்துகிறான்.

உண்மையாகவே சொல்கிறேன்; எதிரிக்கு எவனாவது ஒரு வேளைசோறு போட்டான் என்று தெரிந்தால்கூட எனக்கு அவன் மீது வெறுப்புத்தான். அவன் வந்தாலும் பணம் கொடுப்பது; எனக்கு இவனும்தான் வேண்டும் அவனும்தான் வேண்டும் என்கிற ஆட்கள் தான் ஜஸ்டிஸ் கட்சியினர். என்ன யோக்கியம்? கண்ணீர்த்துளிகள் செய்தத் துரோகம் இவர்களுக்கெல்லாம் தெரியாதா? ஒருவன் அயோக்கியத்தனம் செய்கிறான் என்று தெரிந்தும் அவனுக்கு ஆதரவு கொடுப்பதென்றால் என்ன நியாயம்?

சமுதாயமே ஒழுக்கக்கேடாகப் போனதற்குக் காரணம் ஒருவன் அயோக்கியத்தனம் செய்கிறானென்றால் அதைக் கண்டிக்க வேண்டும் என்று தோன்றாததுதான். என்ன லட்சியம் இவர்களுக்கு இருக்கிறது? அதற்கு இப்போது ஏன் காமராசரைத் தோற்கடிக்க வேண்டும்? யாருக்கு என்ன கவலை? என்னிடம் தினம் 7, 8-பேர் வருகிறார்களே, காமராசரிடம் சொல்லி ஜில்லா சூப்ரின்டெண்ட் (மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்) வாங்கிக் கொடு; டிப்டி கலெக்டர் வாங்கிக் கொடு; (மாவட்ட துணை ஆட்சியர்) சப் இன்ஸ்பெக்டர் கூட அல்ல ஜில்லா சூப்பரின்டென்டே வாங்கிக் கொடுக்கணும் என்று என்னமோ நானும் காமராசரும் கைக் கோர்த்துக் கொண்டு திரிகிற மாதிரி? கொஞ்சமாவது சொரணை வேண்டாமா? இதற்கெல்லாம் காமராசர் வேணும்; காமராசர் இல்லாவிட்டால் யாரிடம் கேட்பது?


எவ்வளவு காலத்திற்குப் பிறகு இன்று இந்த நிலை ஏற்பட்டுள்ளது? பார்ப்பானுக்கு வயிற்றெரிச்சல்! காமராசரை ஒழிக்க வேண்டும் என்கிறான். உனக்கென்ன? இந்த நிலை வருமென்று எதிர்பார்க்கக் கூடியதா? எவ்வளவு கஷ்டப்பட் வேண்டும்? வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைப்பதா? எவ்வளவு துரோகம்? இன்று காமராசரை ஆதரிப்பதால் தமிழர் சமுதாயத்திற்கு நன்மையா? காமராசருக்கு நன்மையா? தோற்றுப் போனால் காமராசர் வீட்டுக்குப் போய் படுத்துக் கொள்கிறார் அடுத்து என்ன? எதற்காக இப்போது காமராசரை ஒழிக்க வேண்டும்? காரணம் சொல். நானும் உன்னோடு சேர்ந்து கொள்கிறேன். ராஜாஜியைவிட காமராசர் என்ன தவறு பண்ணிவிட்டார்? சொல்லட்டுமே! ஏன் காமராசர் ஒழியவேண்டும்? என்று கேட்டால் பெரியார் ஏன் ஆதரிக்கிறார் என்றால் என்ன அர்த்தம்?

------------------------------------ 19.01.1957-அன்று சேலத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு. "விடுதலை", 27.01.1957

25 comments:

தமிழ் ஓவியா said...

எஃப்.அய்.ஆர் பதிவு

பாட்னா, ஏப்.21:-தேர்தல் பிரச்சாரத்தின் போது, சர்சைக்குரிய விதத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கிரிராஜ் சிங் மீது தியோகர் மாவட்டத்தில் உள்ள மோகன்பூர் காவல் நிலையத்தில் எப்அய்ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பீகாரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கிரிராஜ் சிங், பாஜ சார்பில் நாவாடா தொகுதியில் போட்டியிடுகின்றார். இவர் மோடியின் தீவிர ஆதரவாளர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு கிரிராஜ் சிங் பேசும்போது, மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானின் ஆதரவாளர்கள். இவர்கள் தேர்தல் முடிந்தவுடன், பாகிஸ்தானில் போய் குடியேறி விட வேண்டும் என்று சர்ச்சைக்கு உரிய வகையில் கூறியி ருந்தார். இதை காங்கிரஸ் மற்றும் அய்க்கிய ஜனதாதள கட்சிகள் கண்டித்து, தேர்தல் ஆணையத் திடம் புகார் தெரிவித்தன. இதையடுத்து, கிரிராஜின் பேச்சு குறித்து தேர்தல் ஆணையமும் ஆராய்ந்து வருவதாக கூறியிருந்தது. காங்கிரஸ் கோரிக்கை: முன்னாள் அமைச்சர் கிரிராஜ் சிங் பேச்சு குறித்து நடவடிக்கை எடுக்க, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.மிட்டல் தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், கிரிராஜ் சிங்கின் பேச்சு முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நேரத் தில், மதம் மற்றும் சமூக ரீதியாக பொதுமக்களை தூண்டிவிட்டு ஆதாயம் அடைய நினைக்கின்றனர். எனவே, எதிர்காலத்தில் முன்மாதிரியாக இருக்குமாறு தண்டனை வழங்க வேண்டும். என்று மிட்டல் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/79023.html#ixzz2zZbJxsY2

தமிழ் ஓவியா said...

மதவெறியை மாய்க்க ஜனநாயக முற்போக்கு அணியை ஆதரிப்பீர்! தமிழர் தலைவரின் முக்கிய அறிக்கை


மோடியை ஆதரிக்காவிட்டால் பாகிஸ்தான் ஓடுங்கள் என்றார் பிஜேபிக்காரர் ஒருவர்

இந்துக்கள் பகுதியில் முஸ்லீம்கள் வீடுகள் வாங்கினால் கல்லால் அடித்து விரட்டுங்கள் என்கிறார் வி.எச்.பி. தலைவர் தொகாடியா!

ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இந்தவெறி என்றால் ஆட்சிக்கு வந்தால் நாடே சுடுகாடாகும் - எச்சரிக்கை!

மதவெறியை மாய்க்க ஜனநாயக முற்போக்கு அணியை ஆதரிப்பீர்! தமிழர் தலைவரின் முக்கிய அறிக்கை

மீண்டும் 1992ம், 2002ம் நடக்காமல் இருக்க ஜனநாயக முற்போக்கு அணியை ஆதரிப்பீர்!

இந்துக்கள் பகுதிகளில் முஸ்லீம்கள் வீடுகள் வாங்கினால் கல்லால் அடித்து விரட்ட வேண்டும் என்று விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா பேசியுள்ளதை எடுத்துக்காட்டி, இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாடே கலவரப் பூமியாகும் - சுடுகாடாகும் என்று எச்சரித்து, மதவெறியை மாய்த்து மனிதநேயம் காக்க ஜனநாயக முற்போக்குக் கூட்டணியையே ஆதரிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு :

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தியோகர் என்ற பகுதியில் பா.ஜ.க.வின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பிகார் மாநில பா.ஜ.க. மூத்த தலைவர் கிரிராஜ்சிங் என்பவர் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் 19ஆம் தேதி பேசும்போது.

நரேந்திரமோடியை பிரதமராக விடாமல் தடுப் பவர்கள், பாகிஸ்தானுக்குச் செல்ல தயாராக இருங்கள். மோடியை விமர்சிப்பவர்களுக்கு வருங் காலத்தில் (தேர்தலுக்குப் பிறகு) இந்தியாவில் இடமில்லை அவர்கள் வசிக்க பாகிஸ்தானில் தான் இடம் கிடைக்கும் என்று பேசியுள்ளார்.

எஃப்.அய்.ஆர். மட்டும்

பிகாரின் நவாடா தொகுதியில் போட்டியிடும் இவர் மோடியின் தீவிர ஆதரவாளராம். 2005 முதல் 2013 வரை பிகார் மாநில அமைச்சராகவும் இருந்தவர்.

இந்த மேடையில் இவருடன் பா.ஜ.க.வின் முந்தைய தலைவரான நிதின் கட்காரியும் (ஆர்.எஸ்.எஸ்.) மேடையில் உடன் இருந்து அவர் முன்னிலையில்தான் இப்படி கிரிராஜ்சிங் பேசியுள்ளார்.

நிதின்கட்காரி இதை ஆட்சேபித்தோ, பிறகு மறுத்தோ பேசவே இல்லை என்பது கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய உண்மையாகும்.

இவர்கள் இருவரின்மீது பிகார் தேர்தல் ஆணையர் இ.பி.கோ. மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி எஃப்.அய்.ஆர். போட்டிருக்கிறாரே தவிர, அவர்களைக் கைது செய்யவில்லை இதுவரை!

இரண்டாவதாக, மோடி ஆளும் குஜராத்தில் (இன்று (21.4.2014) காலை வந்துள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏட்டுச் செய்திப்படி) ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிரவாத அமைப்புக்களான விசுவ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகளின் தலைவர்கள் வெறியூட்டும் வகையில் பேசியுள்ளனர். (இவர்களின் தலைவர்கள் எல்லாம் பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது). கல்லால் அடித்து விரட்டுங்கள்

குஜராத்தில் ராஜ்கோட் நகரில் பவந்தர் பகுதியில் முஸ்லீம் வியாபாரிகள் இந்துக்கள் வாழும் பகுதியில் வீடுகள் வாங்கியுள்ளனர். அவரது வீட்டிற்கு முன் பஜ்ரங்தளம் அலுவலகம்! என்று போர்டு மாட்ட வேண்டும்; அந்த வீட்டை நாம் ஆக்கிரமித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இங்கு குஜராத்தில் உள்ள சட்டப்படி இந்துக்கள் பகுதியில் முஸ்லீம்கள் அசையா சொத்துக்கள் வாங்குவது சட்ட விரோதம் என்ற(Inter Community Sale of Immovable Property) மோடி அரசு சட்டப்படி (Disturbed Areas Act) தவறு என்று வலுக்கட்டாயமாக அதை இந்து அமைப்புக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்; 48 மணி நேரத்துக்குள் வீட்டைக் காலி செய்யாவிட்டால் கற்களை வீசுங்கள், டயரைக் கொளுத்தி எறியுங்கள் - தக்காளியை வீசுங்கள்! வழக்குப்பற்றி பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று பேசி, இரவில் ஊர்வலம் நடைபெற்றுள்ளது. ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களையே தூக்கில் போடவில்லை; அதனால் நாம் கவலைப்பட வேண்டாம் என்றும் வி.எச்.பி. தலைவர் தொகாடியா பேசியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

தலைக்கொழுத்துப் பேசி பச்சையாக குஜராத்தில் வன்முறை வெறியாட்டத்தைத் துவக்கி மீண்டும் 1992 பாபர் மசூதி - 2002 குஜராத் கலவரங்களைப் புதுப்பிக்க அச்சாரப் பாட்டு பாடுகிறார்கள்!

மோடி பதவிக்கு வருவதற்கு முன்பே இப்படியா?

மோடி பதவிக்கு வரவில்லை; இப்போதே இப்படி இவர்கள் ஹிட்லர் மொழியில் பேசுகிறார்கள் என்றால் அதன் விளைவு என்னவாகும்? நாடே கலவரப் பூமியாகும் - சுடுகாடாகும்!

நரிக்கு நாட்டாண்மை என்றால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும்! என்ற நிலை தானே ஏற்படும்?

வாக்காளர்களே சிந்தியுங்கள் - மதச் சார்பற்ற சக்திகள் விழித்தெழ வேண்டிய மிக முக்கியமான நேரம் இது! பி.ஜே.பி.க்குத் துணை போகக் கூடியவர்களும் சிந்திக்க வேண்டும். மதச் சார்பின்மையைக் காப்பாற்றவும் மக்களைப் பாதுகாக்கவும், சமதர்ம அரசாக சமூக நீதி அரசாக, மத்திய அரசு அமையவும், மதவெறி மாய்த்து மனிதநேயம் காக்கவும், சிறுபான்மையினரின் அச்சத்தைப் போக்கவும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து, பாசிசத்திலிருந்தும், மதவெறிகளிலிருந்தும் நாட்டைக் காப்பாற்ற முன் வாருங்கள்!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்



21.4.2014
திருச்சி (முகாம்)

Read more: http://viduthalai.in/e-paper/79026.html#ixzz2zZbQ8OeB

தமிழ் ஓவியா said...


என்ன?


காட்டுமிராண்டித்தன்மை என்றால் என்ன? மனிதன் அறிவுப் பக்குவம் அடையாமல் மிருகப் பிராயத்தில் இருக்கும் தன் மையைக் குறிப்பிடும் சொல். இது உலகத் தில் எல்லா நாடுகளிலும் எந்தச் சமூகத் திலும் இருந்து வந்த நிலைமையேயாகும். - (விடுதலை, 24.1.1968)

Read more: http://viduthalai.in/page-2/79032.html#ixzz2zZc4qimg

தமிழ் ஓவியா said...


இந்துத்துவாவுக்குத் துணைபோகும் கூட்டணிக் கட்சிகள்!

பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை வெளி வந்ததும் - சில அலைகள் கிளம்பி விட்டன. மோடி அலை அலை என்று சொல்லி வந்தவர்களை புதிய எதிர்ப்பு அலை கிளம்பி அவர்களைத் துரத்திக் கொண்டுள்ளது.

தேர்தலுக்குப் பல மாதங்களுக்கு முன்பே - பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் எங்களின் இந்துத்துவா நிகழ்ச்சி நிரல் இடம் பெறும் என்று பிஜேபியின் முக்கிய தலைவர்கள் வெளியிட்டு வந்தனர். ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத்தும் தெரிவித்து வந்ததும் உண்மை. இது குறித்துத் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் எச்சரிக்கை வெளியிட்டும் இருந்தார்.

பி.ஜே.பி.யோடு கூட்டுச் சேரும் எண்ணத்துடன் இருந்த தமிழ் நாட்டுக் கட்சிகள் அப்பொழுதாவது விழித்துக் கொண்டிருக்க வேண்டும் - இந்தக் கட்சி களுக்குக் கொள்கைகள் சித்தாந்தம் என்பது தங் களுக்கு உண்டு என்று நினைத்திருந்தால்,.. அப்பொ ழுதே பிஜேபி உயர் மட்டத் தலைவர்களோடு பேசியிருக்க வேண்டும். இந்துத்துவா நிகழ்ச்சி நிரல் உங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெறுமாயின் நாங் கள் கூட்டணியில் இடம் பெறுவது என்பது கடினமான ஒன்றாக இருக்கும் என்று சொல்லியிருக்க வேண்டும்.

கொள்கைகள், கோட்பாடுகள் மீது பிடிப்பு இருந் தால் அல்லவா அந்த மாதிரி சிந்திப்பார்கள்? இதில் வெட்கக்கேடு என்னவென்றால், எந்தவித நிபந்தனை களுமின்றி முதன் முதலில் பிஜேபியோடு கூட்டணி வைத்துக் கொள்ள முதல் குரல் கொடுத்தது அடியேன் வைகோதான் என்று மார்தட்டுகிறார் என்றால் இந்தப் பிற்போக்குத்தனத்தை என்னவென்று சொல்லுவது!

ஊழல் ஊழல் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். ஊழலைவிட ஆபத்தானது மதவாதம் ஆயிற்றே! பாலில் தண்ணீர் கலப்பது ஊழல் என்றால் பாலில் நஞ்சு கலப்பது மதவாதம் ஆகும். (அப்படியே பார்த்தாலும் பிஜேபி ஒன்றும் ஊழலுக்கு அப்பாற்பட்ட உத்தமப் புத்திரன் அல்ல - சவப் பெட்டியிலேயேகூட ஊழல் செய்ய முடியும் என்று சாதித்துக் காட்டியவர்களே!).

எந்த ஊழல் காரணமாக கருநாடகாவில் பி.எஸ். எடியூரப்பா கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டாரோ, அந்த எடியூரப்பா மீண்டும் பா.ஜ.க.வுக்குப் பூர்ண கும்பம் கொடுத்து வரவழைக்கப்பட்டு விட்டாரே! பி.ஜே.பி. சார்பில் கருநாடகத்தில் போட்டியிடும் சிறீராமுலு யார்? சுரங்கத் தொழில் கொள்ளையில் அவர் பங்கு என்ன என்பது ஊர் சிரிக்கவில்லையா? ஊழல் என்ற பார்வையில் பார்த்தாலும் பி.ஜே.பி. யோடு கூட்டுச் சேர தமிழக அரசியல் கட்சிகள் தயங்கியிருக்கவே வேண்டும்.

பிஜேபியின் இந்துத்துவா தேர்தல் அறிக்கையின் அடிப்படையில் அதனோடு கூட்டுச் சேர்ந்த ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. கட்சித் தலைவர்களை நோக்கி வினாக்கள் வெடித்துக் கிளம்பிய நிலையில், மூச்சுத் திணறி, ஏதோ ஒரு பதிலைச் சொல்லித் தீர வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளாகி விட்டனர்.

எங்களிடையே கொள்கை வேறுபாடு உண்டு என்பது உண்மைதான். கொள்கை வேறுபாடு இல்லா விட்டால் ஏன் தனித்தனியே கட்சியாக இயங்குகின் றோம் என்று சாமர்த்தியமாகப் பதில் சொல்லுவதாக நினைத்துக் கொண்டு ஜாலம் செய்து பார்க்கிறார்கள். ஒரு முக்கியமான கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள். தேர்தலில் எதை முக்கியமாக வைத்துப் பரப்புரை செய்கிறார்கள்?

நாட்டில் மோடி அலை வீசுகிறது, மோடிதான் பிரதமர்! ஆகவே எங்கள் அணிக்கு வாக்களியுங்கள் என்று தானே வாக்குக் கேட்கிறார்கள்.

மோடிதான் பிரதமர் என்று சொன்னபிறகு மோடி பிரதமர் ஆசனத்தில் உட்கார்ந்தால், அவர்களுடைய தேர்தல் அறிக்கையின்படி ஆட்சி செய்யக் கடமைப் பட்டவர் ஆகி விடவில்லையா?

பிஜேபியின் தேர்தல் அறிக்கை வந்த பிறகாவது மோடிதான் பிரதமர் என்கிற பரப்புரையையாவது நிறுத்தினார்களா?

இந்த நிலையில், ஏதோ பிஜேபிதான் மதவாதக் கட்சி என்று நினைக்காமல், அதற்குத் துணை போகும் மதிமுகவும், பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் ஒரு வகையில் மதவாதக் கட்சிகளே என்ற முடிவுக்குத்தான் வாக்காளர் கள் உணர வேண்டும்.

பி.ஜே.பி.க்கு வாக்களித்தாலும், அதனுடன் கூட் டணி சேர்ந்துள்ள இந்தக் கட்சிகளுக்கு வாக்களித் தாலும் அடிப்படையில் ஒன்றுதான். இந்துத்துவா ஆட்சிக்கு, ராம ராஜ்ஜியத்துக்கு வாக்களித்ததாகவே பொருள்படும். தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண் - இதில் சம்பந்தப்பட்டவர்களை ஒருக்காலும், ஒருபோதும் மன்னிக்காது - மன்னிக்கவே மன்னிக்காது.

வாக்காளர்களே ஏமாந்து விடாதீர்கள்! எச்சரிக்கை! எச்சரிக்கை!!

Read more: http://viduthalai.in/page-2/79033.html#ixzz2zZcD8RkC

தமிழ் ஓவியா said...


பச்சை பதவி வெறி


2006-2007-ல் தமிழ் நாட்டில் கலைஞர் தலைமையில் திமுக ஆட்சி நடைபெற்ற நேரத்தில் சிறப்பு பொரு ளாதார மண்டலம் அமைத்திட திட் டங்கள் தீட்டப்பட்டது. இவற்றை பாமக நிறுவனர் கடுமையாக எதிர்த்தார். சென்னை விமான நிலையம் விரிவாக்கப்பட புளிச்சலூர் பகுதிகளில் நிலங்கள் கையகப்படுத்திட, பாமக எதிர்ப்பு தெரிவித்தது. உடனே அனைத்துக் கட்சி கூட்டம் 22.5.2007-ல் கலைஞரால் கூட்டப்பட்டு, அதில் பங்கேற்ற பாமக, மதிமுக, கம்யூ னிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகளின் கருத்தை ஏற்று, புளிச்சலூர் பகுதியல் லாமல், மக்களை வெகுவாக பாதிக் காத பகுதிகளை கையகப்படுத்தி விமான நிலையம் அமைத்திட ஓர் ஒருமித்த கருத்தை உருவாக்கினார்.

இது கலைஞரின் அணுகுமுறை.

ஆனால், குஜராத்தில் நடப்பது என்ன?

பாமக, மதிமுக புகழும் மோடி யின் ஆட்சியில், கடலோரப்பகுதியில் அதானி குழுமத்திற்கு, ஒரு சதுர அடி ரூ.1500 உள்ள நிலங்கள், ரூ.1 முதல் ரூ.32-க்கு தொழிற்சாலை நடத்துவ தற்கு, மக்களின் ஒப்புதல் இல்லாமல், கட்டாயப்படுத்தி கொடுக்கப்பட் டுள்ளது. ஆனால், அதானி குழுமம், இந்த இடங்களில் பெரும்பான்மை யான நிலங்களை, வேறு நிறுவனங் களுக்கு, அதிக விலையில் விற்றுவிட் டார்கள்.

எஸ்ஸார் நிறுவனத்திற்கு, ஹஜிரா பகுதியில் 7,24,687 சதுர அடி நிலம், மிகக்குறைந்த விலையில் விற்கப்பட்டது. இதனால், குஜராத் அரசுக்கு ரூ.238.50 கோடி நஷ்டம்.

மகுவா பகுதில் விளை நிலங் களை, தரிசு நிலங்கள் என மோசடி யாக அறிவித்து, 15000 மக்களின் வாழ்வாதாரத்தை நாசம் செய்து, சிமெண்ட் தொழிற்சாலை அமைத் திட, 269 ஹெக்டேர் நிலத்தை நிர்மா நிறுவனத்திற்கு அளித்தவர் மோடி.

மேற்கு வங்கத்திலிருந்து டாடா நிறுவனத்தின் நானோ கார் தொழிற் சாலையை குஜராத்திற்கு கொண்டு வந்து 1100 ஏக்கர் நிலத்தை, ஒரு சதுர மீட்டர் ரூ.900 என்று விற்றவர் மோடி. இந்த நிலங்களின் சந்தை மதிப்பு ஒரு சதுர மீட்டர் ரூ.10000. தமிழ் நாட்டில், கலைஞர், மற்ற கட்சிகளின் கருத்தை யும், மக்களையும் மதித்து, முடிவு எடுக்கிறார். அவர் ஒழிய வேண்டும்; திமுக தோற்கடிக்கப்பட வேண்டும் என்கிறது பாமகவும், மதிமுகவும்.

சிறப்புப் பொருளாதார மண்டலத் திற்காக, விவசாய நிலங்களை கட்டாயப்படுத்தி, குறைந்த விலைக்கு வாங்கி, பல்லாயிரம் விவ சாயிகளின் வாழ்க்கையைச் சிதைத்து, சில முதலாளிகளுக்கு சாதகம் செய் யும் மோடி, எந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியும் முடிவு எடுக்க வில்லை; ஏன், தனது அமைச்சரவை யைக்கூட்டி எந்த முடிவும் எடுப்ப தில்லை. அத்தகைய மோடி வெற்றி பெற வேண்டும் என இங்கே தொண் டையை உயர்த்தி முழக்கமிடுகிறது பாமக, மதிமுக.

ஆக, நோக்கம், பொருளாதார வளர்ச்சியும் இல்லை; ஒரு வெங்காயமும் இல்லை; பச்சை பதவி வெறி. இவர்களுக்கு தக்க பாடம் அளித்திட மக்களுக்கு கிடைத்த நல் வாய்ப்பு தான் ஏப்ரல் 24.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/79037.html#ixzz2zZccxL13

தமிழ் ஓவியா said...


கேள்விப்பட்டதுண்டா?


கேள்விப்பட்டதுண்டா?

ஓர் ஆட்சியில் 32 உயர் மட்ட காவல் துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்த அந்த 32 காவல்துறை அதிகாரிகளும், ஒரு மாநில முதல் அமைச்சர்மீது குற்றஞ்சாட்டுவதுபற்றி இதற்கு முன் கேள்விப்பட்டதுண்டா? ஆம், பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளரான மோடி ஆளும் குஜராத் மாநிலத்தில்தான் இந்த நிருவாக லட்சணம்!

கேள்விப்பட்டதுண்டா?

ஒரு மாநில முதல் அமைச்சரை நீரோ மன்னன் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டித்த பிறகும்கூட, அதைப்பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாமல், பதவியில் ஒட்டிக் கொண்டிருந்த முதல் அமைச்சரைப்பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்ட குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடிதான் அவர்.



கேள்விப்பட்டதுண்டா?

போலி என்கவுண்டர் தொடர்பான ஒரு வழக்கில் இந்த மாநிலக் காவல் துறையை நம்பக் கூடாது என்று உயர்நீதிமன்றம் சொன்னதற்குப் பிறகும்கூட இதுகுறித்து அலட்டிக்காமல் ஆட்சிப் பொறுப்பில் ஒட்டிக்கொண்டு இருந்த முதல் அமைச்சர் பற்றி கேள்விப்பட்டதுண்டா?

இப்பொழுது நாடு நேரில் பார்த்துக் கொண்டிருக்கும் குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடி தான் அவர்!



கேள்விப்பட்டதுண்டா?

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் கொல்லப்பட்டும் தனக்கு எந்தவித பொறுப்பும் இல்லை என்று சொன்ன முதல் அமைச்சரை எங்கேனும் கேள்விப்பட்டதுண்டா?

முதன் முதலாக - குஜராத்தை ஆளும் மோடி என்ற ஒருவரை இப்பொழுது தான் கேள்விப்பட்டுள்ளோம்.

Read more: http://viduthalai.in/page-2/79031.html#ixzz2zZd5MdYt

தமிழ் ஓவியா said...


வரிவரியாய் ஒரு வைரம் பீர்க்கங்காய்


இயற்கையின் உன்னத படைப்பில் காய், கனிகள் விளைகின்றன. பீர்க்கங்காய், பீட்ரூட், பாகற்காய், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகளில் அதிக சத்துக்கள் உள்ளன. இதில் முக்கிய இடத்தை பீர்க்கங்காய் பிடிக்கிறது. இயற்கை சத்துக்கள் நிறைந்துள்ளதால், சந்தையில் இதற்கு கிராக்கி அதிகம். பீர்க்கங்காயில் குறைவான கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புச் சத்து உள்ளது.

இதில் நன்மை தரும் நார்ச்சத்து, வைட்டமின் சி, ரைபோபிளேவின், துத்தநாக சத்து, இரும்பு சத்து மற்றும் மெக்னீசியம் உள்ளது.ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை உள்ளது. இதில் உள்ள இயற்கை சத்துக்கள் ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கிறது. பீர்க்கங்காயில் உள்ள பீட்டா குரோடீன் கண் பார்வைக்கு ஊட்டம் தரும்.

இதில் உள்ள செல்லுலோஸ் மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றை சீராக வைக்கும். பித்தப்பையை சுத்தப்படுத்தி, உடலில் ஆல்கஹால் இருந்தால், அதன் நச்சு முறிக்கும் அருமருந்து. உடல் எடையை குறைக்க உதவும். தோல் வியாதிகளான சொரியாஸிஸ் மற்றும் எக்ஸீமா ஆகிய வற்றை குணப்படுத்த பயன்படுகிறது.

பீர்க்கங்காய் சிறுநீரை பெருக்கும். உடலுக்கு உரம் ஏற்றும். இந்தக் காய் உடம்பை குளுமைப்படுத்தி தண்ணீரை அதிகரிக்கச் செய்யும். வயிற்று தொந்தரவுகளை நீக்குவதுடன், எளிதில் செரிமானமாகி வீரிய விருத்தியை உண்டாக்கும். பீர்க்கு இலைச் சாறு பித்தத்துக்கு கை கண்ட மருந்து.

இது ரத்தத்தில் உள்ள அசுத்தத்தைப் போக்கும். பெரியவர்கள் ஒரு வேளைக்கு அரை அவுன்சும், குழந்தைகள் கால் அவுன்சும் உட்கொள்ளலாம். பீர்க்கு இலைக் கஷாயத்தைக் கூட இதுபோன்று பயன்படுத்தலாம்.

பீர்க்கங்காயை சீவியெடுக்கும் தோலை துவையல் செய்து சாப்பிடுவதும் உண்டு. இந்தத் துவையல் நாக்கின் ருசியற்ற தன்மையைப் போக்கி செரிமான சக்தியை அதிகமாக்கும். சிறிது வெப்பத்தையும் கொடுக்கும்.

ஆனால் வாத உடம்புக்காரர்களுக்கு இது பொருத்தமானதாக இருக்காது. அவர்களைத் தவிர மற்றவர்களுக்குச் சிறந்தது. பீர்க்காங்காயை அதிகமாக சாப்பிட்டால் மந்தம் உண்டாகும். அதனால் ஏற்படும் தீமைகளுக்கு மசாலாவும், நெய்யும் மாற்றாக அமையும்.

Read more: http://viduthalai.in/page-7/79041.html#ixzz2zZeAvsDI

தமிழ் ஓவியா said...


கேள்விப்பட்டதுண்டா?

1. அச்சுறுத்தப்பட்டு அடங்கியொடுங்கிக் கிடப்போர் நியாயம் கேட்கமாட்டோம் என்று உறுதி அளித்தால்தான் அமைதி திரும்பும் என்று ஒரு முதலமைச்சரே பாதிக்கப்பட்ட மக்களை வானொலி உரைமூலம் அதிகாரப்பூர்வமாக அச்சுறுத்திய முதல்வர்பற்றி அறிந்ததுண்டோ?

இதோ இருக்கிறார் - குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி - இவர்தான் பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளராம்!

2. கலவரம் நடந்துகொண்டிருந்தபோது தனியறையில் அமர்ந்து கொண்டு குற்றவாளிகளை எப்படி தப்ப வைக்கலாம் என்று முதல் அமைச்சர் யோசித்துக் கொண்டிருந்தார் போலும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டும், அதனைத் தூசுபோல் தட்டிவிட்டு, பதவி நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்த முதல் அமைச்சரைப் பற்றிப் படித்ததுண்டா?

ஒருவர் இருக்கிறார் - அவர்தான் பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளரான குஜராத் முதல் அமைச்சர் மோடி.

3. தங்களுக்குப் பிடிக்காத மதத்தைச் சேர்ந்த பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தவர்களிடம் கைகுலுக்கி, உங்கள் செயலுக்காக ஆசீர்வதிக்கப்படு கிறீர்கள் என்று சொன்ன ஆட்சியாளரைக் கேள்விப்பட்டதுண்டா?

முதன்முதலாக இப்பொழுதுதான் கேள்விப்படுகிறோம் - குஜராத் முதலமைச்சர் மோடிதான் - அவர் பி.ஜே.பி.யின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராம்.

4. கார்ப்பரேட் பண முதலைகளும், மதவெறியர்களும் தாங்கிப் பிடிக்கும் ஒருவர்தான் ரோல்மாடல் என்று விளம்பரப்படுத்தப்படும் கேவலத்தை எங்கேயாவது கேள்விப்பட்டதுண்டா? 2014 இல் நடக்கும் இந்தியத் தேர்தலில் நிறுத்தப்படும் மோடி என்பவர்தான் அத்தகையவர் என்பதை நாடே கண்டுகொண்டிருக்கிறது.

Read more: http://viduthalai.in/page-7/79063.html#ixzz2zZeT0z9b

தமிழ் ஓவியா said...



ஆண்மையின் ஆணவமா?

ஆண் நிர்வாணம்
கடவுள் ஆகிறது!
பெண் நிர்வாணம்
காட்சி ஆகிறது!

காட்சி ஆனதோ
கை தொழுகிறது.
கடவுள் ஆனதோ
காமம் கக்குகிறது!

முரண் பாடுகள்
காலங் காலமாய்
சமூகச் சிக்கலா?
ஜாதீய தீண்டலா?
ஆண்மையின் ஆணவமா?

காதல், கண்ணீர்
இன்பம், துன்பம்
உரிமை, உணர்ச்சி
இருவருக்கும் பொதுவென
இன்றளவும் உலகம் நினையாதது ஏனோ?

தன் குழந்தையின்
அம்மணத்திற்கு ஆடை
அடுத்தவர் குழந்தை
ஆடை விலக்கல்.

திருத்தப்பட வேண்டியது
ஆடையா, ஆணவமா?
மறைக்கப்பட வேண்டியது
காதலா காமமா?
மாற்றம் தேவை!

பெண்ணின் ஆடையிலா?
ஆணின் பார்வையிலா?
சமூகத்தின் பதில்நோக்கி
காத்திருக்கும் பெண்குலம்!

- குடியாத்தம் ந.தேன்மொழி

தமிழ் ஓவியா said...

கருத்துரிமையை நெறிக்கும் சட்டம்

- சு.மதிமன்னன்

பிப்ரவரி 15 சனிக்கிழமை. டெல்லி பிரகதி மைதானத்தில் உலகப் புத்தகச் சந்தை. கடை எண் 11. வாசலில் 12 பேர் கூட்டம். பெங்குவின் பதிப்பகத்தின் நூல்கள் விற்கும் இடம். கூட்டம் கூச்சல் போட்டது. வென்டி டானிகர் ஹை! ஹை! என்று கூச்சல். போவோர், வருவோரையெல்லாம் கூச்சல் போடக் கூப்பிட்டனர் அந்த டஜன் நபர்கள். ஒருவரும் இவர்களோடு சேரவில்லை. இவர்கள் டர்ட்டி டஜன் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்குமோ?

வென்டி டானிகர் எழுதிய இந்துக்கள்_ மாற்று வரலாறு எனும் நூலைக் கண்டித்துக் கூச்சல். சிக்ஷா பச்சோ அந்தோலன் எனும் மதவெறிக் குழுவினரின் கூச்சல். அலட்சியப்படுத்திட வேண்டிய கூச்சல்.

ஆனால்....

பெங்குவின் பதிப்பகம் கூச்சலுக்குப் பயந்து பணிந்தது. அந்தப் புத்தகம் மொத்தத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாகக் கூறியது. கூறியவாறு எழுதிக் கொடுத்தது. மதவெறிக் குழு சமாதானம் அடைந்தது. ஆனால், எழுத்தாளர்கள் நொந்து போயினர். கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் வேண்டும் என்பவர்கள் வருத்தப்பட்டனர். ஆயினும் என்ன? 125 கோடி மக்களை அச்சுறுத்த சிறு குழுவினர் போதுமே! அவர்களின் கையில் உள்ள ஆயுதம் அவ்வளவு வலுவானது! மத உணர்வு!

சாத்தானின் கவிதைகள் என்று ஒரு நூல். சல்மான் ருஷ்டி எழுதியது. மத உணர்வு என்று காரணம் காட்டி ஈரான் நாட்டு அதிபரே மரண தண்டனை விதித்தார். அந்த நூலை மொழிபெயர்த்தவர்கள்கூடக் கொல்லப்பட்டனர். ஆசிரியர் பிரிட்டனில் அடைக்கலம் பு-குந்தார். பத்தாண்டுகளுக்கு மேல் அவரைப் பாதுகாத்தது பிரிட்டன். ஆசிரியர் இன்றும் உயிருடன் உலவி வருகிறார்.

இந்த நூலைப் பதிப்பித்ததும் அதே பெங்குவின் பதிப்பகம்தான்! இப்போது மட்டும் ஏன் பெங்குவின் பின்வாங்கியது?

இந்தியாவின் ஆகப் பெரும் பணக்காரர் என்ற பெருமை பெற்றவர், திருபாய் அம்பானி. அவரது வரலாற்றை ஹமிஷ் மக்டனால்டு என்பவர் எழுதினார். தலைப்பு பாலியஸ்டர் இளவரசர்! இந்தியாவின் எல்லா உயர் நீதிமன்றங்களிலும் இந்நூலுக்குத் தடை வாங்கிவிட்டனர் 1998இல்! நூல் வரவே இல்லை!

நேரு _ காந்தி குடும்பம் பற்றி ஒரு நூல். குஷ்வந்த் சிங் எழுதினார். மேனகா காந்தி _ இந்திரா காந்தியின் இரண்டாவது மருமகள் _ வழக்குப் போட்டார். நூல் வெளி வருவதற்கு முன்பே தடை ஆணை வாங்கிவிட்டார்.

சட்ட விரோதமாகப் பொதுமக்களிடம் திரட்டிய 22 ஆயிரம் கோடி ரூபாயைத் திருப்பித் தருமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அதன்படிச் செய்யாததால் உள்ளே தள்ளப்பட்ட சாஹரா அதிபர் சுப்ரதா ராய் பற்றி ஒரு நூல். சாஹரா: சொல்லப்படாத கதை என்று தலைப்பு. அவதூறாக எழுதப்பட்டிருப்பதாக வழக்குப் போட்டார் சுப்ரதா ராய். நூலுக்குத் தடை விதித்தது கல்கத்தா உயர் நீதிமன்றம்.

ஜெயலலிதா: ஒரு படப்பிடிப்பு என்ற தலைப்பில் ஒரு நூல். வாசந்தி என்ற எழுத்தாளர் எழுதினார். 1-.4.2011இல் வெளியிடப்பட திட்டம். ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தடை. பதிப்பாளர் ஓராண்டுக் காலம் வழக்காடிப் பார்த்தார். 27.8.2012இல் சென்னை அமர்வு நீதிமன்றம் தடை ஆணையை நிரந்தரமாக்கிவிட்டது. பதிப்பாளர் உயர் நீதிமன்றத்திற்குப் போகவில்லை. இதன் பதிப்பாளரும் பெங்குவின்தான்!

சிறீ அரவிந்தரின் வாழ்க்கைகள் என்று ஒரு புத்தகம். பீட்டர் ஹீஹ்ஸ் என்பார் எழுதி நியூயார்க்கில் வெளியிடப்பட்டது.

மனது புண்ணாகிவிட்டது என்று இரண்டு பேர் வழக்குப் போட்டனர். ஒரிசாவில், கீழமை நீதிமன்றங்களில்! வழக்கு விசாரணைக்குத் தடை விதித்துள்ளது ஒரிசா உயர் நீதிமன்றம். நூல் எழுதிய ஆசிரியரை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று ஒரு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில்! வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இந்த நூலின் பதிப்பாளரும் பெங்குவின்தான்.

இப்படி இந்தியாவில் எழுத்துரிமையும் கருத்துரிமையும் படும்பாடுகள் பற்றி எவ்வளவோ எழுதலாம்!

எதனால் இது இங்கே மட்டும்? இந்தியக் குற்றவியல் சட்டப் பிரிவு 295A தான் காரணம்! இச்சட்டம் எழுதப்பட்டது 1857இல்! இந்தியச் சிப்பாய்க் கலகம் நடந்ததற்குப் பிறகு, விக்டோரியா மகாராணி அளித்த உறுதிமொழிகளுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட சட்டம். கிறித்துவர்களான அன்றைய ஆட்சியாளர்கள் தம் நாட்டுக் குடிமக்களான இந்து, முசுலிம்களின் மத உணர்வுகளுக்கு மாறாக நடந்து கொண்டனர் என்பதால்தான் சிப்பாய்க் கலகமே நடந்தது. அம்மாதிரி இனிமேல் நடக்காது என்ற உத்தரவாதத்தின் பேரில் சட்டம் எழுதப்பட்டது. இன்று அந்நியர் ஆட்சியும் இல்லை. எல்லோரும் இந்நாட்டு மன்னர் எனும் மக்களாட்சி(?) நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும் 160 ஆண்டுகளாக மாறுதல் இல்லாமலே சட்டம் இருக்கிறது!

சட்டத்திற்காக மக்களும் அவர்தம் உரிமைகளும் காவு கொடுக்கப்படுகின்றன.

கருத்துரிமை கிரிமினல் குற்றமாகக் கருதப்படுகிறது. சட்டத்திற்காக மக்களா? மக்களுக்காகச் சட்டமா?

தமிழ் ஓவியா said...

எது அறிவியல்

நீரை சூடு படுத்தினால் கொதிக்கும். எப்போது கொதிக்கும்? நீரின் வெப்பம் 100 டிகிரி அடைந்தவுடன் கொதிக்கும்.

எத்தனை தடவை 100 டிகிரி வெப்பத்தில் கொதிக்கும் ? ஒராயிரம் முறை அல்ல, ஈராயிரம் முறை அல்ல, ஒரு லட்சம் முறையானாலும், ஒரு கோடி முறையானாலும், ஒறாயிரம் கோடி முறையானாலும் 100 டிகிரி வெப்பத்தை அடைந்தால்தான் நீர் கொதிக்கும்.

இதுதான் - இப்படிதான் என்று உறுதியாக கூறுவது அறிவியல்.

இந்த மாதிரியும் இருக்கலாம் - இப்படியும் இருக்கலாம் என்பது யூகம் யூகம் யூகம் மட்டும்தான்.

ஜோசியம், ஜாதகம், நல்ல நேரம், கெட்ட நேரம் போன்றவற்றால் - அறிவியல் மாதிரி இதுதான் இப்படிதான் என்று சொல்ல இயலுமா ?

இப்படி சொல்ல இயலவில்லை என்றால், ஜோசியம், ஜாதகம், நல்ல நேரம், கெட்ட நேரம் இவை எவையுமே கண்டிப்பாக அறிவியல் இல்லை!

அறிவியல் இல்லாத ஒன்றை யூகத்தின் அடிப்படையில் நம்புவது நம்பாதது அவரவர் விருப்பமாக இருக்கலாம் ?

ஆனால், அறிவியல் இல்லாத ஒன்றை வைத்துக் கொண்டு, எடுத்து காட்டுக்கு, ஒருவருக்கு செவ்வாய் தோஷம் என்றும், கேட்டய நட்சத்திரம் என்றும், வரப் போற மாமியாருக்கு ஆகாது என்றும் சொல்வதெல்லாம் கடைந்தெடுத்த ஏமாற்றுத்தனம் அல்லாமல் வேறென்ன ? இதை விட அறிவுக்கு பூட்டு போடக் கூடிய செயல் இந்த லோகத்தில் தமிழகத்தை தவிர வேறெங்கே காண முடியும் ?

- - - _ ஹரிஷ் கமுககுடி மாரிமுத்து]

தமிழ் ஓவியா said...

மேதைமை

அறிஞர் பெர்னார்ட்ஷா நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர். அவரது படைப்புகளுக்குப் பதிப்பாளர்கள் ஒரு எழுத்துக்கு இவ்வளவு என்று பணம் கொடுப்பார்கள். பெரும்பாலும் ஓர் எழுத்துக்கு ஒரு ஷில்லிங் கொடுத்து விடுவார்கள்.

இதைக் கிண்டல் செய்ய நினைத்த ஓர் இளைஞன், பெர்னார்ட்ஷாவுக்கு ஆறு ஷில்லிங் அனுப்பி, இதைப் பெற்றுக் கொண்டு, ஷா தன் கைப்பட ஒரு கடிதம் தனக்கு எழுத வேண்டும் என்று கேட்டிருந்தான்.

பெர்னார்ட்ஷா, பண விஷயத்தில் எப்போதும் கறாராக நடந்து கொள்பவர்.

எனவே, தனது கடிதத்தில் ஆறு எழுத்திற்கு மேல் ஓர் எழுத்து கூடக் கூடுதலாக இருக்கக் கூடாது என்று, ஆறு எழுத்துகளைக் கொண்ட ஒரு வார்த்தையை எழுதி, அந்த இளைஞனுக்கு அனுப்பி வைத்தார்.

அந்த ஆங்கில வார்த்தை என்ன தெரியுமா? - Thanks.

தமிழ் ஓவியா said...

பிரபலமான விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு முறை விருந்தொன்றில் கலந்து கொண்டபோது ஒரு நண்பர் அங்கு வந்து பேச ஆரம்பித்தார். எடிசனிடம் அவர் தொடர்ந்து இடை வெளியில்லாது நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தார். எடிசனுக்கோ தாங்க முடியவில்லை. இருந்தாலும் அங்கிருந்து நகலவும் வழியில்லை.

நண்பர் அருகிலிருந்த இன்னொருவரிடம் எடிசனை அறிமுகப் படுத்தினார். பேசும் எந்திரமான கிராம போன் ரிக்கார்டைக் கண்டு பிடித்தது என் நண்பர் எடிசன்தான், என்றார்

எடிசன் அவரிடம் சொன்னார், நான் பேசும் எந்திரத்தைக் கண்டு பிடித்தது உண்மைதான். ஆனால் நினைத்த நேரத்தில் அதை நிறுத்தி விட முடியும்.

- சந்திரன் வீராசாமி

தமிழ் ஓவியா said...

ஆதமும் ஏவாளும்
சாப்பிட்ட பழம் என்ன?

ஆதமும் ஏவாளும் சாப்பிட்ட பழம் என்ன என்ற கேள்விக்கு நீங்கள் உடனடியாக ஆப்பிள் என்று சொல்வீர்கள் என்று தெரியும்

விவிலியம் என்ன சொல்கிறது என்று பார்ப்போமா.

Genesis 2:9 And out of the ground made the LORD God to grow every tree that is pleasant to the sight, and good for food; the tree of life also in the midst of the garden, and the tree of the knowledge of good and evil.

Genesis 2:17 but of the tree of the knowledge of good and evil, thou shalt not eat of it; for in the day that thou eatest thereof thou shalt surely die.’

அது என்ன நன்மை மற்றும் தீமை குறித்த அறிவின் மரம்... இதை விட ஞானப்பழம் என்ற பெயர் பொருத்தமாக உள்ளதா

எத்தியோபியர்கள் படிக்கும் ஈனோகின் புத்தகத்தில் (31:4) இந்த மரம் குறித்து விளக்கப்பட்டிருக்கிறது. அது புளிய மரம் போலிருந்தது. அதன் பழங்கள் மெல்லிய திராட்சைபழங்களை போலிருந்தன, அதன் வாசனை பரவியிருதது

யூதர்களின் தல்முத் என்ற புத்தகம், அந்த பழம் திராட்சை என்கிறது. மற்றொரு தல்முத கதை ஏவாள் அந்த பழத்திலிருந்து வைன் அருந்தினாள் என்கிறது. அதை அத்திப்பழம் என்றும், கோதுமை என்றும் கூட கருதுகிறார்கள்

சிலர் அந்த பழம் மாதுளை என்று கூட சொல்கிறார்கள்.

மேல்நாட்டு ஓவியர்கள் மட்டுமே அந்த பழத்தை ஆப்பிள் ஆக்கினார்கள். (அவர்களுக்கு தெரிந்த பழம் அதுதான்). அதனால் தான் மேல் நாட்டு (ஐரோப்பிய) ஓவியங்களில் அந்த மரம் ஆப்பிள் மரமாகவும் அந்த பழம் ஆப்பிளாகவும் காட்டப்படுகின்றன. அவர்கள் (ஐரோப்பிய ஓவியர்கள்) என்ன செய்வார்கள். அவர்களுக்கு தெரிந்த பழத்தை ஓவியத்தில் வரைந்து விட்டார்கள். ஒரு வேளை ரவி வர்மா, இந்த காட்சியை வரைந்திருந்தால் தேங்காய் வரைந்திருக்கலாம்

அது இயேசுவும் அல்ல அது ஆப்பிளும் அல்ல

- மரியானோ ஆண்டோ புரூனோ மஸ்காரெனாஸ்

தமிழ் ஓவியா said...

மனுநீதிச் சோழன் நீதியின் அடையாளமா?


சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மனுநீதிச் சோழனின் சிலையை அகற்ற வேண்டும் என்று கோரி சேலம் இந்திரா நகரைச் சேர்ந்த வழக்குரைஞர் ஜி.பிரவீணா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,

மனுநீதிச் சோழனின் மகன் சாலையில் தேரோட்டிச் சென்றபோது திடீரென சாலையின் குறுக்கே ஓடிவந்த ஒரு பசுவின் கன்று தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தது. இந்நிலையில் பசுவின் துயரத்தை அறிந்த மனுநீதிச் சோழன் தன் சொந்த மகனையே தேரை ஏற்றிக் கொன்றான். இதனால் நீதியின் அடையாளமாகப் போற்றப்படும் மனு நீதிச் சோழனின் சிலை உயர் நீதிமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

பசுவின் கன்று திடீரென சாலையின் குறுக்கே ஓடிவந்து தேர் சக்கரத்தில் சிக்கிக் கொண்டது. இதில் மனுநீதிச் சோழன் மகன் எந்தத் தவறும் செய்யவில்லை. பசுவின் கன்றைக் கொல்ல வேண்டும் என்ற எவ்வித நோக்கமும் அவனுக்கு இல்லை.

இந்நிலையில் ஒரு சிறுவனை கொடூரமாகக் கொன்ற மனுநீதிச் சோழனை நீதியின் அடையாளமாகக் கூற முடியாது. ஆகவே, உயர் நீதிமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மனுநீதிச் சோழன் சிலையை அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவினை விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் மனுதாரரின் கோரிக்கை ஏற்புடையது அல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து மார்ச் 27 அன்று ஆணையிட்டனர். ஆனால்,கோரிக்கை என்னவோ மிகச்சரியானதுதானே. மனுநீதி என்பதே ஒரு குலத்துக்கு ஒரு நீதி உரைப்பதுதான். மனுநீதியை நம்பிய அந்த மதி கெட்ட மன்னன் ஓர் மனித உயிரை அல்லவா கொன்றிருக்கிறான். இன்றைய காலத்தில் சாலை விதிகளை மீறி குறுக்கே வந்து உயிரிழப்பவர்கள் அதிகம் இருக்கிறார்கள். அன்றாடம் செய்தி ஏடுகளில் பல்வேறு விபத்துகளை படிக்க நேர்கிறது. இன்று சாலை விதிகளை மதிக்கவில்லையென்றால்தான் தண்டனை.ஏனென்றால் இது மனித நீதிக் காலம். இப்படி ஓர் வழக்கு, இந்தக் காலத்தில் வந்தால் நீதிபதிகள் எந்த அடிப்படையில் தீர்ப்பளிப்பார்கள்? மனு நீதிச்சோழன் காட்டிய வழியிலா? அல்லது மனிதநீதி வகுத்த சாலைப் போக்குவரத்து சட்டங்களின் படியா?

இந்தக் கதையை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகக் காட்டப்படும் விலங்குபசுவின் கன்று என்பதால் தான் மனுநீதி வேலை பார்த்திருக்கிறது. அது எருமையாகவோ, நாயாகவோ, கழுதையாகவோ ஏன் காட்டப்படவில்லை என்று கேள்வி எழுப்பிப் பார்த்தால் தெரியும் பார்ப்பன மனுநீதியின் லட்சணம். பசு புனிதமானது என்ற சிந்தனையைத் தவிர மனுநீதிச் சோழன் கதையைப் பார்ப்பனர்கள் முன்னிறுத்த வேறென்ன காரணம் இருக்க முடியும்?

- பெரியாரிடி

தமிழ் ஓவியா said...


ஹைடெக்கில் பாஜக-அதிமுகவின் மறைமுக பண பட்டுவாடா!


ஹைடெக்கில் பாஜக-அதிமுகவின் மறைமுக பண பட்டுவாடா!

சென்னை, ஏப்.22- தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை முறைகள் அமலில் உள்ளன என்று சாலைகளில் செல் வோர் அனைத்துத் தரப்பினரிடமும் சோதனை என்கிற பெயரில் கெடுபிடிகள். ரயில் பயணிகளிடம், வியாபாரிகளி டம் கெடுபிடிகள் ஏராளம். நள்ளிரவு நேரங்களிலிருந்து விடியவிடிய தொடர்ந்து தேர்தல் பணியில் உள்ள அதிகாரி கள் ஓய்வின்றி இக்கெடுபிடிகளின்மூலம் பறி முதல் செய்துள்ள தொகையே பல கோடியை எட்டியுள்ளது.

இந்நிலையில் பாஜகவை ஆதரிக்கக் கோரும் ஒரு குறுஞ்செய்தி அலைபேசியில் வருகிறது.

Vote for BJP(modi) send this ur frnds and get Rs.551.49 blnc. Free electn offr. Not a joke see NDTV(24hrs)

[Vote for BJP(modi) send this your friends and get Rs.551.49 balance.Free election offer. Not a joke, see NDTV(24hours)]

பாஜகவுக்கு(மோடிக்கு) வாக்களியுங்கள், இச்செய் தியை உங்கள் நண்பர்கள் 15பேருக்கு அனுப்புங்கள். ரூபாய் 551.49 தொகை கிடைக்கும். இலவச தேர்தல் சலுகையாகும். கேலிக்காக அல்ல. 24 மணி நேர என்டிடிவி யைப் பாருங்கள் என்று அச்செய்தியில் உள்ளது. அச்செய்தியை 15 நண்பர்களுக்கு அனுப்பினால், ரூபாய் 551.49 குறுஞ்செய்தியை அனுப்பியவரின் எண் ணுக்கு பணம் ஏற்றப்படுகிறதாம்.

மேலும், இதேபோல் அதிமுகவை ஆதரிக்கிறீர்களா என்று கேட்டுவிட்டு, ஆம் என்றால் அந்த உறுதியின் பேரில் அவருடைய எண்ணுக்கு ரூபாய் இருநூறு உடனடி யாக போய்ச்சேருகிறதாம். இச்செயல்கள் தேர்தல் ஆணையத்தின் கண்ணில் மண்ணைத்தூவிவிட்டு தேர்த லில் வாக்குக்குப் பணம் அளிப்பதாகவே உள்ளது என்று பொதுமக்கள்தரப்பில் கூறப்படுகிறது. இதுபோன்ற ஹைடெக் மோசடிகளைக் கண் காணித்து, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

மோடியின் குஜராத்தில் பணம் பறிமுதல்

அகமதாபாத், ஏப். 22- குஜராத் மாநிலத்தில் நரேந்திரமோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. அங்குள்ள அகமதாபாத் நகர் இசான்பூர் பாலத்தில் நேற்று முன்தினம் மாலை தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது, ஒரு பையில் ரூ. ஒரு கோடி ரொக்கப்பணம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து காரில் இருந்த மாநகர பா.ஜனதா நிர்வாகிகள் 3 பேரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அதில் ரூ.50 லட்சத்துக்கான ஆவணங்களை அதிகாரிகளிடம் கொடுத் தனர். மீதம் ரூ. 50 லட்சத்துக்கான விளக்கத்தை அவர்கள் அளிக்காததால், அந்தப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வாக்காளர்களுக்கு அளிப்பதற்காகக் கொண்டு போகப்பட்டதாகக் கருதப்படுகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/79076.html#ixzz2zfUyKZjW

தமிழ் ஓவியா said...


ஒழுக்கமும் சட்டமும்!


இன்றுள்ள ஒழுக்கங்கள் என்பவை எல்லாம் சட்டம்போல் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்குப் பொருந்தியவையே தவிர, எல்லோருக்கும் பொருந்தியவை அல்ல. - (குடிஅரசு, 24.11.1940)

Read more: http://viduthalai.in/page-2/79078.html#ixzz2zfVdweIO

தமிழ் ஓவியா said...

ஜாதீய மரபணுவைக் கண்டுபிடித்த கட்காரி


பி.ஜே.பி.யின் முன்னாள் அகில இந்தியத் தலைவர் நிதின்கட்காரி பிகார் தலைநகரமான பாட்னாவில் கடந்த 19 ஆம் தேதியன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய கருத்து ஒரு சர்ச்சைப் புயலைக் கிளப்பியுள்ளது.

சிலர் வாயைத் திறந்தாலே - அதற்குள் அவர்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் துகள்களும் இருப்பதுண்டு. இப்படி அடிக்கடி சர்ச்சைகளில் மாட்டிக்கொள்பவர் களுள் இவரும் ஒருவரே!

பிகாரின் மரபணுவில் ஜாதீயம் கலந்துள்ளது. அத னால்தான் பிகாரில் ஜாதீயத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதே சமயம் பா.ஜ.க.வில் ஜாதீயத் துக்கு முக்கியத்துவம் கிடையாது. ஜாதீயத்துக்கு எதிரான கட்சி பி.ஜே.பி. என்று கூறியுள்ளார்.

கட்காரியின் இந்தப் பேச்சைக் கண்டித்து பிகார் மாநில காங்கிரஸ் தலைவர் பிரேம் சந்த் மிஸ்ரா பதிலடி கொடுத்துள்ளார். அவரது பேச்சுமூலம் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகியவை பிகார் மக்களுக்கு எதிரா னவை என்பது தெளிவாகியுள்ளது. அவரது பேச்சுக்காக பிகார் மக்களிடம் பா.ஜ.க. மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

பிகார் அய்க்கிய ஜனதா தளத்தின் செய்தித் தொடர் பாளர் ராஜீவ் ரஞ்சனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்து பிகார் மக்களை நிதின்கட்காரி அவமதித்துவிட்டார். இதுகுறித்து எழுத்துப்பூர்வமாக தேர்தல் ஆணையத்திடம் எங்கள் கட்சி புகார் செய்யும் என்று கூறியுள்ளார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பாகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிக்கலில் மாட்டிக் கொண்டதை உணர்ந்தே நிதின்கட்காரி வழக்கமாக பி.ஜே.பி. மற்றும் சங் பரிவார்க்காரர்கள் பின்பற்றும் அதே முறையைப் பின்பற்றியுள்ளார்.

பிகார் மாநில அரசியலில் ஜாதீயம் கலந்துள்ளது என்பதற்குப் பதிலாக மரபணுவில் ஜாதீயம் கலந்துள்ளது என்று தவறுதலாகக் கூறிவிட்டதாக பல்டி அடித்து விட்டார்.

இது ஏதோ வார்த்தைத் தவறி வரக் கூடியதல்ல - ஜாதீ யம் கலந்துள்ளது என்று சொல்லும்பொழுது மரபணு என்ற சொல் எப்படி வரும்? கொஞ்சம் அறிவைப் பயன் படுத்துபவர்களுக்கு இது எளிதில் விளங்காமல் போகாது.

பிகாரில் ஆட்சி அதிகாரம் என்பது பிற்படுத்தப்பட்ட வர்களின் கைகளில் இருந்து வருகிறது. இது இவர்களின் கண்களை உறுத்துகிறது என்பதுதான் உண்மை.

அதேநேரத்தில் பா.ஜ.க.வை எடுத்துக்கொண்டாலும், ஆர்.எஸ்.எஸ். உள்ளடக்கிய சங் பரிவார்களை எடுத்துக் கொண்டாலும், பெரும்பாலான நேரங்களில், பெரும் பாலும் பார்ப்பனர்களாகவேதான் இருந்து வருகிறார்கள் என்பது வெளிப்படையான ஒன்றாகும்.
ஆர்.எஸ்.எஸின் தலைவர்கள் பெரும்பாலும் சித்பவன் பார்ப்பனர்களாகத்தானே வந்திருக்கிறார்கள் - இரண்டொருவர்களைத் தவிர.

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க. என்றாலே பார்ப்பனர்களின் கட்சி என்ற வெகுமக்களின் எண்ணத்தை மாற்றவேண்டும் என்பதற் காகவே தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர் களும் ஒரு காலகட்டத்தில் திணிக்கப்பட்டனர்.

கோவிந்தாச்சாரியாரின் சமுதாய விஞ்ஞானம் (Social Engineering) இது.

அப்படி வந்தவர்தான் அகில இந்திய பா.ஜ.க. தலை வர் பங்காரு லட்சுமணன்; ஆனால், அடுத்த தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்புக்கூட அளிக்கப்பட வில்லை.

தமிழ்நாட்டில் டாக்டர் கிருபாநிதியும் அவ்வாறு அமர்த்தப்பட்டவர்தான்.

எப்படியெல்லாம் அவர் அவமானப்படுத்தப்பட்டார் என்பதை, அவர் வெளிப்படையாகக் கூறிப் புலம்பி னாரே! பி.ஜே.பி.யின் தேசியக் குழு உறுப்பினர் இல.கணேசன், தன் கையைப் பிடித்துக்கூட முறுக்கினார் என்று கூறினார் என்றால் நிலைமையைத் தெரிந்து கொள்ளலாமே! பிறகு தி.மு.க.வில் சேர்ந்துவிட்டார்.

உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு ஒரு பிற்படுத்தப்பட் டவர் தேவை என்றபோது கல்யாண்சிங்கை முன் னிறுத்தினார்கள். அவரைப் பலிகிடாவாக்கி பாபர் மசூதியையும் இடித்துத் தரை மட்டமாக்கினார்கள்.

ஆர்.எஸ்.எஸின் வேலை முடிந்தவுடன் கல்யாண் சிங் தூக்கி எறியப்படவில்லையா? அதேபோல, மத்தியப் பிரதேசத்தில் உமாபாரதி - அவருடைய உழைப்பால் மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது; சிறிது காலம் அதன் முதலமைச்சராகவே இருந்தார். வழக்கு ஒன்றின் காரணமாகப் பதவி விலக நேர்ந்தது; வழக்கில் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வந்த நிலையில், மீண்டும் அவர் மத்தியப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக அமர்த்தப்பட்டாரா? அதுதான் இல்லை.

பி.ஜே.பி.யை விட்டு வெளியேறும் நிலைக்கு அவர் தள்ளப்படவில்லையா? அந்த நேரத்தில் ஆர்.எஸ். எஸின் தலைவராக இருந்த சுதர்சன், உமாபாரதி வளர்ந்த விதம், குடும்பம் - சமூகநிலைபற்றித் தரக்குறைவாகப் பேச வில்லையா? ஒரு கட்டத்தில் உமாபாரதியும், கல்யாண் சிங்கும், பங்காரு லட்சுமணனும் பி.ஜே.பி. என்றாலே உயர்ஜாதி பார்ப்பனர் கட்சிதான் என்று விமர்சிக்கவில்லையா?

ஜகந்நாத் மிஸ்ரா போன்ற பார்ப்பனர்களின் ஆதிக் கத்தில் இருந்த பிகார் மாநிலம் - பிற்காலத்தில் பிற்படுத் தப்பட்டோர் கைகளுக்கு வந்த நிலையில், அதனைப் பொறுக்கமாட்டாது வெளியில் வந்து விழுந்த வார்த்தை கள்தான் - நிதின்கட்காரியின் அந்த ஜாதி மரபணு விஷயம்.

பார்ப்பன விரியன் குட்டிகளாயிற்றே - சும்மாவா ஆடும் பூணூல்?

Read more: http://viduthalai.in/page-2/79079.html#ixzz2zfVmLVZm

தமிழ் ஓவியா said...


கேள்விப்பட்டதுண்டா?


சேது சமுத்திரத் திட்டம் முதல் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை முடக்கி விட்டு, நான் எந்தத் திட் டத்தையும் முடக்கவில்லை யென்று மிகத் தைரியமாக மக்களிடம் பொய் மூட் டையை அவிழ்த்துக் கொட்டும் ஒரு முதல்வரை, ஜெயலலிதாவைத் தவிர வேறு எங்கும் கேள்விப் பட்டதுண்டா?

Read more: http://viduthalai.in/page-2/79087.html#ixzz2zfWTq8UG

தமிழ் ஓவியா said...


மனுஷ்யபுத்திரனின் பதில்


மனுஷ்ய புத்திரன் தேர்தல் களத்தில் இளைஞர்களின் பங்கு பற்றி சன் தொலைக்காட்சியில் விவாதத்தில் பங்கு கொண்டு பேசிக்கொண்டு இருந்தபோது கிரிஷ்ணகிரியில் மோடி பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்தார்கள். மோடி குஜராத்தில் மின்சாரமும், தண்ணீரும் வெள்ளமாய் கிடைப்பது பற்றியும், வேலைவாய்ப்பில் குஜராத் கொடி கட்டிப் பறப்பது பற்றியும் பொய் சொல்லிக்கொண்டு இருந்தார்

நேரடி ஒளிபரப்பு முடிந்ததும் செய்தி யாளர் மனுஷ்யபுத்திரனிடம் இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்ச்சியுடன் இருக் கிறார்களா என்று கேட்டார்கள். அதற்கு பதில் அளித்த மனுஷ்ய புத்திரன் சற்றுமுன் பேசிய மோடி எவ் வளவு பொய்கள் கூறி இளைஞர்களை ஏமாற்றுகிறார் என்று பாருங்கள்.

குஜராத் அரசின் ஜூனியர் லெவல் வேலைக்கு 1500 இடங்களுக்கு 13 இலட்சம் பேர் விண்ணபிக்கிறார்கள். இதுதான் வேலையில்லாத் திண்டாட்டத்தை மோடி ஒழித்ததன் இலட்சியமா? நான்கு இலட்சம் விவசாயிகள் குஜராத்தில் மின் இணைப் புக்கு விண்ணப்பித்துவிட்டு பல மாதங் களாகக் காத்திருக்கிறார்கள். குஜராத் கிராமப்புறங்களில் மக்கள் குடி தண்ணீருக்காக பல மைல் தூரம் நடக் கிறார்கள். விவசாய நிலங்களை அதானி களுக்கும், டாட்டாவுக்கும் மோடி அள்ளி வழங்கியதில் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தினார் என்று சொல்லி அடுக்கடுக்காக அவர் சொன்ன அத்தனை யையும் கூறி குஜராத்தின் உண்மை நிலையை வெளிக்கொணர்ந்தார். மேலும் மோடி, இந்தத் தேர்தல் வாக் காளர்களுக்கான தேர்தல் அல்ல; கட்சி களுக்கான தேர்தல் அல்ல; இந்தியாவின் அத்தனைக் கோடி மக்களும் தேர்தலில் நிற்கிறார்கள் என்றார். அதற்கு பதிலளித்த மனுஷ்யபுத்திரன், மோடி வேட்பாளர்களை, கட்சியை , சித்தாந்தங்களைத் தாண்டி தனது தனிநபர் எதேச்சதிகாரத்தை நிறுவ விழைகிறார். அதுதான் அவர் பேசிவருவதன் அர்த்தம் என்றார்

இன்று மோடி பேசி முடித்த அடுத்த நிமிடம் அதே நேரலையில் விரிவாக மறுத்ததது சிறப்பானதாக இருந்தது.

-சரவணா இராஜேந்திரன்,
திருநெல்வேலி

Read more: http://viduthalai.in/page-2/79086.html#ixzz2zfWcgXmY

தமிழ் ஓவியா said...


நினைவிருக்கிறதா?

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த வீரையன் என்ற விவசாயி, பயிர் இழப்பும், கடன் சுமையும் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டார். முதல்வர் ஜெயலலிதா என்ன சொன்னார்?

வீரையன் குடிகாரர், சாராயம் குடித்து இறந்தார் என்று சொல்லவில்லையா?

அது தொடர்பாக கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்கள் செய்தியாளர்கள் கூட்டத்தில், தோழர் வீரையனின் மனைவியை அழைத்துப் பேசச் சொன்னாரே!

என் கணவருக்குக் குடிப்பழக்கம் கிடையாது - கடன் சுமை தாங்காமல்தான் தற்கொலை செய்துகொண்டார். இதை எந்தக் கோவிலில் வேண்டுமானாலும் சத்தியம் செய்து சொல்லத் தயாராக இருக்கிறேன் என்று சொன்னாரே!

அ.தி.மு.க. அரசு என்ன செய்தது?

தோழர் நல்லகண்ணுமீது, மான நஷ்ட வழக்குத் தொடர்ந்தது - இதுதான் அ.தி.மு.க. அரசு - பாடம் புகட்டுவீர்!

Read more: http://viduthalai.in/page-2/79084.html#ixzz2zfX07xz5

தமிழ் ஓவியா said...


கேள்விப்பட்டதுண்டா?


முஸ்லீம்கள் மட்டும்தான் சிறுபான்மையினரா? கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள், பார்சிகள் இருக்கிறார்கள், புத்த மதத்தினர் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு, இப்பொழுது முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு கொடுத்தது நான்தான் என்று ஜமக்காளத்தில் வடிகட்டிய உண்மைக்கு மாறாக அப்பட்டமாகச் சொல்லக் கூடிய ஒரு முதல் அமைச்சர் பற்றி கேள்விப்பட்டதுண்டா? வெகுதூரம் போக வேண்டாம் - தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதாதான் அவர்.

Read more: http://viduthalai.in/page-4/79070.html#ixzz2zfXKDnE9

தமிழ் ஓவியா said...


சென்னையில்ஒருபுத்தகச்சோலை! அறிவுத்தேனருந்தவாரீர்!வாரீர்!!

இன்று உலகப் புத்தக நாள்! ஆங்கில மகாக் கவிஞன் ஷேக்ஸ்பியர் பிறந்த நாளை - உலகம் பொருத்தமாகப் புத்தக நாள் என்று கொண்டாடுகிறது. அந்த வகையில் சென்னை - இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் ஓர் அறிவுச்சோலை உங்களை அறிவுக்கரம் கொண்டு அன்பு தவழ, பொன்முறுவல் பூத்து அழைக்கிறது.

நீங்கள் அங்கு ஏன் வர வேண்டும்? அங்குதான் 200 புத்தக அரங்குகள் சங்கமித்துள்ளன.

சென்னையைச் சேர்ந்த பதிப்பகங்கள் மட்டுமல்ல; டில்லி, மும்பை ஆகிய மாநிலங்களிலிருந்தும் அரங்குகள் அமைந்துள்ளன.

தமிழ்நாட்டிலும் கோவை, மதுரை, ஈரோடு முதலிய மாவட்டங்களிலிருந்தும் பதிப்பகத்தார்கள் தங்கள் வெளியீடுகளை அணி வகுக்கச் செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் உலகப் புத்தக நாளையொட்டி சென்னை பெரியார் திடலில் சென்னை புத்தகச் சங்கமம் தொடங்கப்பட்டது.

பதிப்பகத்தார்கள் போட்டி போட்டுக் கொண்டு அரங்குகளை அமைக்க முன் வந்ததால், இடவசதி கருதி ஓய்.எம்.சி.ஏ. மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

விரிவான ஏற்பாடுகள், வந்தவர்கள் வியப்படைகிறார்கள் வாகனங்கள் நிறுத்தும் வசதிகள் எல்லாம் உண்டு.

நூறு தமிழ்ப் பதிப்பகத்தார்கள்
35 ஆங்கில நூல் வெளியீட்டாளர்கள்
10 மல்டி மீடியா நிறுவனங்கள்

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பல் துறை மணம் கமழும் நூல்கள் எனும் அறிவு சார் கருவூலங்கள்!

மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சி கள், பட்டிமன்றம், ஆய்வரங்கம், பொம்ம லாட்டம், பறை இசை எனும் செவி விருந்துகள்!

நாவிற்கு விருந்தில்லையா என்று கேட்டு விடாதீர்கள் - வந்து பாருங்கள் நேரில் அனுபவித்தால்தான் அதன் அருமை எத்தகையது என்பது விளங்கும்; ஏட்டுச் சர்க்கரை என்றால் இனிக்காதே!

10 முதல் 50 விழுக்காடு வரை (பழைய நூல்கள்) தள்ளுபடி செய்து தரும் நூல் களும் உண்டு.

விருந்தாகவும் - மருந்தாகவும் பயன் படக் கூடிய நூல்கள் அணி அணியாகக் கண்களையும், கருத்துக்களையும் பறிக் கின்றன.

தேர்தல் சந்தடியிலும்கூட குடும்பம் குடும்பமாக மக்கள் மொய்த்த வண்ணமே உள்ளனர். சென்னையின் நடுநாயகமான இடத்தில் இது அமைந்துள்ளதைப் பொது மக்கள் பாராட்டுகின்றனர்.

கற்றது கை மண்ணளவு

கல்லாதது உலகளவு

என்பதை மறந்து விடாதீர்கள்!

புத்தகத்தைப் படிப்பது குறித்து பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் கூறுவதைக் கவனியுங்கள்.

நீங்கள் எந்தப் புத்தகத்தைப் படித்தால்தான் என்ன பயன்? படிப்பது என்பது அறிவு உண்டாவ தற்கு. ஆனால், நீங்கள் படிக்கும் புத்த கம் எல்லாம் மடமை வளர்ச்சிக்கும், மூடநம்பிக்கை ஏற்படவும் பயன்படு கிறது. அதனால்தான் நம் மக்கள் பகுத்தறிவற்றிருக்கிறார்கள்.

நீங்கள் குடிஅரசு, பகுத்தறிவுப் பதிப்பக புத்தகம் வாங்கிப் படித்தால் கட்டாயம் பகுத்தறிவுவாதியாவீர்கள். இந்தப் புத்தகங்கள் மதம், ஜாதி நம் அரசியல் முதலிய துறைகளில் அவற் றில் உள்ள புரட்டுகளை விளக்கி உங் களைப் பகுத்தறிவுவாதிகளாக்கும்.

விலை மிக மிக மலிவுக்கு பொது நலத்தை முன்னிட்டே நட்டத்திற்கு பதிப்பிக்கப்படுகிறது!

1962இல் தந்தை பெரியார் அவர்களால் எழுதப்பட்டது இது பெரியார் இயக்க நூல்களும் இடம் பெறுகின்றன என்பதற்காக இதனைக் குறிப்பிடுகிறோம்.

மேலும் யார்க்கு எது விருப்பமோ அந்த வகையில் அறிவு ருசிக்கான நூல்கள் தடபுடலாக இருக்கின்றன. குழந் தைகள் முதல் தொண்ணூறைத் தாண்டும் முதியோர் வரை பலன் பெறும் பழ முதிர்ச்சோலை இது!

18ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்தப் புத்தகச் சங்கமம் 27ஆம் தேதி முடிய நடைபெற உள்ளது. பெரியார் சுயமரியா தைப் பிரச்சார நிறுவனமும், தேசிய புத்தக நிறுவனம் (ழிஙிஜி) இணைந்து நடத்துகின் றன காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வீர்!
கடைசியாக ஒரு கொசுறு.

நண்பர் ஒருவர் ஆப்ரகாம் லிங்கனி டம் படிப்பதால் பணம் கொட்டப் போவதில்லை; பின் ஏன் நீங்கள் எப்போதும் படித்துக் கொண்டே இருக்கிறீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு லிங்கன் நான் பணம் சேர்ப்ப தற்காகப் படிக்கவில்லை. பணம் வரும் போது எப்படிப் பண்போடு வாழ வேண் டும் என்பதைத் தெரிந்து கொள்வதற் காகப் படித்துக் கொண்டிருக்கிறேன் என்றார். பல ஆண்டுகள் கழித்து அமெ ரிக்கக் குடியரசுத் தலைவராக ஆன பிற கும்கூட இதே பணிவோடுதான் இருந்தார்.

இதற்குமேல் எந்த எடுத்துக்காட்டு தேவை?

நல்லதோர் வாய்ப்பெனும் விருந்து நழுவ விடலாமா! இடையில் இன்னும் நான்கு நாள்களே!

- கவிஞர் கலி. பூங்குன்றன்

Read more: http://viduthalai.in/page-2/79122.html#ixzz2ziZULGR2