Search This Blog

17.4.14

பாபர் மசூதி இடிப்புக்காக டிசம்பர் ஆறாம் தேதியை ஏன் தேர்ந்தெடுத்தனர்?- கி.வீரமணி


அம்பேத்கர்மீது மோடிக்குப் புதுக்காதல் ஏன்?
அம்பேத்கருக்கு பாரத ரத்னா பட்டம் கொடுத்தது வி.பி.சிங் அரசே!
பி.ஜே.பி.யின் பொய்த் திரைகளைக் கிழிப்பீர்!
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது
தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில், அம்பேத்கர் மீது மோடிக்குப் புதுக்காதல் பிறந்திருக்கிறது. அண்ணல் அம்பேத்கருக்குப் பாரத ரத்னா பட்டம் கொடுத்தது பா.ஜ.க. அரசே என்று உண்மைக்கு விரோதமாகக் கூறி, தாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்ற முயற்சிக்கும் மோடியைப் புரிந்துகொள்வீர்! பொய்ப் பிரச்சார முகத்திரைகளைக் கிழிப்பீர்!! என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தேர்தல் நெருங்க நெருங்க, ஆர்.எஸ்.எஸ். அமைப்பி னால் தேர்வு செய்யப்பட்டுள்ள பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியின் வித்தைகள் புதுப்புது வகையாகக் காட்டப்படுகின்றன.

பாரத ரத்னா பட்டம் அம்பேத்கருக்கு வழங்கியது பா.ஜ.க. அரசா?

ஏப்ரல் 14 என்றவுடன் முன்பு எப்போதும் இல்லாத அம்பேத்கர் பக்தி - அவர்மீது திடீர்க்காதல் எல்லாம் வெள்ளமெனப் பெருகி ஓட ஆரம்பித்துவிட்டது!
அம்பேத்கர் போன்றவர்களால்தான் தாம் இந்த அளவுக்கு - பிரதமர் வேட்பாளர் அளவுக்கு வந்துள்ளதாக மிகப்பெரிய பிரச்சார பலூனை - திட்டமிட்டே செய்துள்ளார் மோடி!

தாழ்த்தப்பட்ட சமூகத்துச் சகோதர, சகோதரிகள் இந்த கண்ணிவெடிபற்றி மிகவும் கவனமாக இருக்கவேண்டும்; நிச்சயம் இருப்பார்கள் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு - ஏமாறமாட்டார்கள்.

அண்ணல் அம்பேத்கருக்கு பாரத ரத்னா பட்டத்தை பா.ஜ.க.தான் அளித்ததுபோலவும், ஒரு செய்தியை இரண்டு நாள்களுக்குமுன் மோடி கூறி, காங்கிரஸ் எதிர்ப்பைத் தம் பக்கம் திருப்பி, தாழ்த்தப்பட்ட சமூகத்தை மயக்கிட முயன்றுள்ளார் - உண்மை என்ன?

18 வயது நிறைந்த புதிய இளைஞர்களான வாக்காளர் கள் - வெறும் இணையதளம் அல்லது மோடி ஆதரவு தொலைக்காட்சிகள், ஊடகங்களான ஏடுகளை மட்டுமே பார்த்து முடிவு செய்ய முனைவர் என்பதால், உண்மை களைக் கூறுதல் அவசர, அவசியமாகும்!

வி.பி.சிங்கே வழங்கினார்!

பாபா சாகேப் அம்பேத்கருக்கு பாரத ரத்னா பட்டம் கொடுத்ததும், நாடாளுமன்றத்தில் அவரது படத்தை இடம் பெற வைத்ததும், சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோதுதான்! அது ஆர்.எஸ்.எஸோ அல்லது பா.ஜ.க.வோ முன்மொழிந்த செயல் அல்ல!
அது முழுவதும் பிரதமர் வி.பி.சிங் அவர்களது 9 மாத ஆட்சியின் சாதனை!
பா.ஜ.க. வெளியிலிருந்து ஆதரவு கொடுத்ததே என்று சிலர் கூறி, இந்த மோடி வித்தைக்கு நியாயம் கற்பிக்க எண்ணலாம்!

வி.பி.சிங்கின் சமூகநீதி ஆட்சியைக் கவிழ்த்தது பி.ஜே.பி.யே!

அம்பேத்கரின் உயிர்க்கொள்கையான சமூகநீதிக் கொடி பறக்கச் செய்த மண்டல் கமிஷனின் பரிந்துரையை வேலை வாய்ப்பில் முதல் கட்டமாக 16(4) அரசியல் சட்டப் பிரிவுப் படி - மத்திய அரசில் 1990 இல் செயல்படுத்தியமைக்காகவே, அவரது அரசுக்குத் தந்த ஆதரவினை விலக்கிக் கொண்டு, 9 மாதங்களில் கவிழ்த்தவர்கள் இந்த மோடியின் கட்சி அல்லவா?
மண்டலுக்கு எதிராக கமண்டல் என்று பொருத்தமாக, வி.பி.சிங் அன்று கூறினாரே! மறந்து விட்டதா?

மண்டல் Vs மந்திர் என்பதில் ராமன் கோவில் பிரச்சினையைக் கிளப்பி, 1992 இல் மண்டல் காற்றைத் தடுக்க நாட்டில் கிளர்ச்சிகளை ஏற்படுத்தி, வன்முறை வெறியாட்டம் நடைபெறத் தூண்டியவர்கள் யார்?

டிசம்பர் ஆறாம் தேதியை ஏன் தேர்ந்தெடுத்தனர்?

பாபர் மசூதி இடிப்புக்காக ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி. உள்பட சங் பரிவாரங்கள் தேர்வு செய்த நாள் எது தெரி யுமா? 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களான இளைய நண்பர்களே,

1992 டிசம்பர் 6 ஆம் தேதி - அண்ணல் அம்பேத்கர் மறைந்த நாளே! அந்த முக்கியமான நினைவு நாளையே திட்டமிட்டுத் தேர்வு செய்தவர்கள், இப்போது இப்படி ஒரு நாடகம் ஆடுகிறார்கள்!

என்னே விந்தை! விசித்திரம்! அதுமட்டுமா?

அம்பேத்கர் புத்தர்பற்றி எழுதிய புத்தகத்தைக்கூட வாங்காமல் அவரை அவமதித்தவர்கள் காங்கிரஸ்காரர்கள் என்று கூறுகிறார்.
அந்த நூல்  புத்தமும், தம்மமும் (Buddha & Dhamma)  என்ற மிகப்பெரிய ஆய்வு நூல்; அவர் எழுதிய கடைசி நூலும் அதுதான்!

முன்னுரை எழுதினார் முன் இரவில். விடியற்காலை அவர் இயற்கை எய்தினார் (டிசம்பர் 6, 1956).

அவர் எழுதிய இந்த நூலின் முதற்பதிப்பு வெளி வந்ததே 1957 இல்; அவரது கல்லூரியான பம்பாய், சித்தார்த்தா கல்லூரியின் வெளியீடாக வந்தது!

பொய்த் திரைகளைக் கிழிப்பீர்!
மோடியின் கூற்றுக்கு ஆதாரம் காட்ட முடியுமா?

இதேபோல்தான் அம்பேத்கரே ஆர்.எஸ்.எஸைப் பாராட்டினார் என்று எங்கே, எந்தத் தேதியில், எந்த நிகழ்வில் பேசினார் என்று ஆதாரபூர்வமாகக் கூறாமல், பொத் தாம் பொதுவில் போகிற போக்கில் பேசுவது, எழுதுவது இந்த நவீன கோயபெல்சுகளின் நளினங்களில் ஒன்று!

எனவே, பொய்த் திரைகளைக் கிழித்து, உண்மையை உணரத் தொடங்குங்கள்!
இராமனையும், கிருஷ்ணனையும், இந்து மதச் சடங்குகளையும் மறுத்து 21 உறுதிமொழிகளைக் கூறி, புத்தம் தழுவினார் நாகபுரியில் அம்பேத்கர்.
அவரையும், தேர்தல் துருப்புச் சீட்டாக்க முயற்சிக்கிறார் மோடி!
எச்சரிக்கை! ஏமாறாதீர்கள்!!


------------------கி.வீரமணி தலைவர்,  திராவிடர் கழகம். 17.4.2014

26 comments:

தமிழ் ஓவியா said...


காஞ்சி சங்கராச்சாரியாரின் முகமூடியும் மோடியின் கல்யாண பந்தத்தின் மர்மமும்!

15.4.2014 நாளிட்ட தமிழ் இந்து நாளேட்டில் வெளிவந்துள்ள - இதுவரை மற்ற நாளேடு களிலோ, வார ஏடுகளிலோ வெளிவந்திராத ஒரு செய்தி இதோ, படியுங்கள்!

மோடி தனது மனைவி பெயரை அறிவித்தது எப்படி?: பின்னணியில் காஞ்சி காமாட்சி அம்மனின் அருள் எனத் தகவல் பாஜக கூட்டணியின் பிரதமர் வேட் பாளர் நரேந்திர மோடி தனது மனைவி பெயரை அறிவித்ததன் பின்னணியில் காஞ்சி காமாட்சியம்மன் இருப்பதாக அக்கோயில் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

நரேந்திர மோடி தனது மனைவி யசோதா பென் பெயரை வேட்பு மனுவில் குறிப்பிட்டவுடன், அது நாடு முழுவதும் மாபெரும் விவாதப் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டு, பெரும் சர்ச்சையை ஏற் படுத்தியது. இந்த விவாதத்தின் தீவிரம் குறைந்துவரும் நிலையில், மோடி தனது மனைவியின் பெயரை அறிவிக்கும் முடி வுக்கு பின்னணியில் காஞ்சிபுரம் காமாட்சி யம்மன் இருப்பதாக அக்கோயில் வட் டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயி லில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி உலக நன்மை வேண்டி தசமஹா வித்யா ஹோ மம் தொடங்கியது. மார்ச் 23 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய செயலாளர் முரளிதரராவ், தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதன் பிரசாதத்தை கோயில் பிரதான அர்ச்சகர் நடராஜ சாஸ்திரி எடுத்துக் கொண்டு மார்ச் 26 ஆம் தேதி டில்லியில் உள்ள மோடியை சந்தித்து கொடுத்துள் ளார். பிரசாதத்தில் காஞ்சிபுரம் காமாட்சி யம்மனின் பட்டுப்புடவையும் இருந் துள்ளது. இந்தப் பட்டுப் புடவையைக் கொண்டு சென்ற நடராஜ சாஸ்திரி, இந்தப் புடவையை உங்கள் மனைவியிடம் கொடுங்கள் என்று மோடியிடம் கூறினா ராம். சற்று மவுனம் காத்து பின்னர் வியந்து போய் நரேந்திரமோடி பிரசாதத்தை பெற்றுக்கொண்டாராம். அம்பாள் பக்த ரான நரேந்திர மோடி, காமாட்சியம்மனின் பட்டுப்புடவை வழங்கப்பட்டதையும், அதை அவரது மனைவியிடம் கொடுக்கு மாறு கூறியதையும் காமாட்சியம்மனின் உத்தரவாக எடுத்துக்கொண்டார். அதன் பிறகே வேட்புமனு தாக்கலின்போது, தனது மனைவியின் பெயரை குறிப் பிட்டார் என்று அக்கோயில் வட்டாரங் களில் பேசப்பட்டு வருகிறது.

இது குறித்து நடராஜ சாஸ்திரியிடம் கேட்டபோது, நரேந்திர மோடியை சந் தித்ததும், அவருக்கு அம்மனின் பட்டுப் புடவை வழங்கப்பட்டதும் உண்மை. இதன் பின்னரே அவருக்கு மனமாற்றம் ஏற்பட்டு மனைவி பெயரைத் தெரிவித் துள்ளார் என்றார் அவர்.

காஞ்சி காமாட்சி மோடிக்காக அருள்பாலித் துள்ளார் போலும்; (அவாள் காஞ்சி காமாட்சி யம்மன்) முழுக்க முழுக்க காஞ்சி மடத்தின்கீழ் - அதாவது ஜெயில் - பெயில் புகழ் ஜெயேந் திர சரசுவதி அன்ட் கோவின் நிர்வாகத்தின்கீழ் நடைபெறுவதால், இந்த ஏற்பாடே பெரிய வாள், சிறியவாள் அனுமதியோடோ அல்லது முழு ஆதரவோடுதானே நடந்திருக்க முடியும்; இல்லையா! (காசி விசாலாட்சியம்மையார் என்ன செய்வாளோ).

காஞ்சி மடத்தின் அருள், நித்திய கல்யாண குணங்களோடு ஆசிகள் வழங்கியுள்ளார், நாளைய பிரதமர் என்ற பூரிப்பில், புளகாங் கிதத்தில் உள்ள ஹரஹர நரேந்திரருக்காக!

இந்த ஹரஹர நரே சத்தம் வடக்கேயுள்ள (ரூப் ஆனந்த்) சங்கராச்சாரிக்கு ஏக கோபத்தை உண்டாக்கி, மோடியை வாரணாசியில் ஒரு வகையாக தேர்தல் வேலை பார்க்க முடிவு செய்துவிட்ட நிலையில்,

இங்கே காஞ்சிப் பெரியவாள் யாகம், யோகம் எல்லாம் செய்து, முந்தைய அத் வானியை வர வழைத்ததுபோல, காஞ்சிக்கு மோடியை தம்பதி சமேதராக வரவழைத்துத் தர முன்னேற்பாடு திட்டமோ!

இதற்காக, செருப்புப் பேச்சுப் புகழ் காரைக் குடி அய்யரும் தனி ஏற்பாடு செய்துள்ளாராம்!

பலே, பலே, யாகம் கைகொடுக்குமா?

மே 16 இல் தெரியும்!


- ஊசிமிளகாய்

Read more: http://viduthalai.in/e-paper/78802.html#ixzz2zC9HNYWD

தமிழ் ஓவியா said...


மோடியை எதிர்த்துக் கிளம்புகிறார்கள் உள்நாட்டு - வெளிநாட்டு அறிஞர்கள்


புதுடில்லி, ஏப்.17- பாஜக தலைவர் மோடி, தன்னு டைய பிரதமர் பதவிக்கான ஓட்டத்தின் இறுதிக்கட் டத்தை எட்டும் நிலையில் உள்ளார். இந்நிலையில் உள் நாட்டிலும், வெளிநாடுகளி லும் உள்ள சுதந்திர சிந்த னையாளர்கள், அறிஞர்கள் மோடிக்கு எதிராக உள்ள னர் என்கிற தகவல் வெளி யாகியுள்ளது.

அவதார புருஷர்போல் உருவகம் பெற்று பிரச் சாரக்களத்தில் உள்ள மோடி மீதான எதிர்தாக்குதல் அவ ரைச்சுற்றி முழுவடிவத்தை அடைந்துவருகின்றது. சுமார் 25 கலைஞர்கள், கல்வியா ளர்கள், எழுத்தாளர்கள் மோடிக்கு எதிராக கள மிறங்கியுள்ளனர்.

எழுத்தாளரும், நாவலா சிரியருமான சல்மான் ருஷ்டி இங்கிலாந்திலிருந்து வெளி வரும் தி கார்டியன் செய்தித்தாளில் மோடி பிரத மர் வேட்பாளராக நிறுத்தப் பட்டுள்ளதுகுறித்து தீர்க்க முடியாத கவலை என்கிற தலைப்பில் எழுதியுள்ளார்.

நீதிக்கான நடத்தையிலி ருந்தும், அரசியல் நாகரிகங் களில் மாறுபட்டும் முற்றி லும் முரண்பட்டுள்ள மோடி யின் நடத்தை இந்தியாவின் மதச் சார்பற்ற அரசமைப் புக்கு பல்வேறு வகைப் பட்ட விளக்கங்களைக் கூறு வதற்கு ஒப்பாக உள்ளது என்று ருஷ்டி எழுதுகிறார். அதைப்போலவே கலைஞ ராகிய அனீஷ் கபூரும் எழுதி யுள்ளார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக உள்ள பிரியம்வதா கோபால், மேற்கத்திய ஊடகங்கள் யாவும் சரியாக மோடியை விமர்சித்தே எழுதி வரு கின்றன. 2002 ஆம் ஆண் டில் குஜராத்தில் நடை பெற்ற கலவரங்களில் மோடியின் பங்குபற்றி மட்டு மின்றி, அமைதிக்கு உதவாத, மோசமான வெளி நாட்டுக்கொள்கையும் மோடி பிரதமராக நிறுத்தப் படும்போது, அவர் முன் னுள்ள கேள்விகளாகும். ஹிந்து தீவிரவாதத்துக்கு பிரிட்டன் என்றுமே தோள் கொடுக்காது. கலவரங்களில் தாக்குதல் சம்பவங் களைப் பற்றிக்கூறும்போது, உணர்ச் சிவசத்தால் ஏற்பட்டதாக பாஜக கூறிவரு கிறது என்று கார்டியன் இதழில் எழுதி யுள்ளார்.

இலண்டனில் இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பு உருவாக்கப்பட்ட எழுத்தாளர் இயக்கமாகிய முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில், மோடி போட்டியிடும் வாரணாசி யில், மோடிக்கு எதிராக பிரச்சாரம் செய்ய உள்ள தாகவும், கவிஞர் குல்சார், ஷப்னம் ஆஸ்மி மற்றும் இயக்குநர் மகேஷ் பட் உள் ளிட்ட பிரபலமானவர் களும் அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட அழைக்கப்பட்டுள் ளனர்.

இயக்குநர் பட் கூறும் போது, வளர்ச்சி என்று ஓங்கி ஒலிப்பது, இலைமறை யாக உள்ள சங்கத்தின் (ராஷ் டிரிய சுயம் சேவக் சங்கம்) கொள்கைகளை மறைப்ப தற்கு வேண்டுமானால் பயன் படக்கூடும். சர்வாதிகாரிக்கு பெரும்பான்மை ஆதரவு என்பது மக்களுக்கு எதிரா கவே இருக்கும்.

மோடி பங்கேற்கும் ஹிந் துத்துவாவை முதன்மைப் படுத்தும் பிரச்சார நிகழ்ச்சி களை, இனவெறியுடன் கூடிய ஹிந்துத்துவா நிகழ்ச்சி களைப் புறக்கணிக்க வேண் டும். மாற்றங்களை ஏற்காத வலதுசாரிகள் கலாச்சாரத்தை வளர்ப்பதாகக் கூறிக் கொண்டு பிரதமராக வருவது குறித்து பலரும் அச்சத்துடன் உள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் இயக்குநர் பட், மோடிக்கு எதிரான பிரச்சாரத்தில் வலம் வந்துகொண்டு இருக்கிறார். அவர் கூறும்போது, ஒரு படத்தயாரிப்பாளர் என்கிற வகையில், விளம்பரத்துக்கு உள்ளதெல்லாம் நல்ல படங்களாக இருப்பதில்லை என்று என்னால் கூற முடி யும் என்றார். அன்ஹட் என்கிற தொண்டு நிறுவனத் தை நடத்திவரும் ஷப்னம் ஆஸ்மி கூறும்போது, 50 அமைப்புகள், நூற்றுக்கணக் கான தொகுதிகளை சுற்றி வருவது, இரண்டாயிரம் தொண்டர்களுடன் அதி வேகத்துடன் இயக்கிவரும் மோடி என்று அனைத்தையும் கண்டாலும், நம் அரசமைப் பையும், ஜனநாயகத்தையும் காக்கும் பொறுப்புடன் செயல்பட வேண்டியுள்ளது என்றார்.

- ஹிந்துஸ்தான் டைம்ஸ், 15.4.2014, புதுடில்லி பதிப்பு

Read more: http://viduthalai.in/e-paper/78800.html#ixzz2zC9T2SzZ

தமிழ் ஓவியா said...


பார்ப்பான் உயிர்

பார்ப்பான் உயிர் கடவுள் பொம்மையிலும், கல்லிலும்தான் இருக்கிறது. அவை ஒழிந்தால் பார்ப்பானைப் பிராமணன் என்றோ, சாமி என்றோ, மேல்சாதியான் என்றோ எவனும் மதிக்கமாட்டான். - (விடுதலை, 3.12.1971)

Read more: http://viduthalai.in/page-2/78796.html#ixzz2zC9fXdnm

தமிழ் ஓவியா said...

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள்- உஷார்!

பாபர் மசூதி இடிப்புப்பற்றி கோப்ரா போஸ்ட் என்ற புலனாய்வு இணைய ஏடு வெளியிட்டுள்ள தகவல் நாட்டு மக்கள் மத்தியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

பி.ஜே.பி. வட்டாரத்தில் பெரும் கலக்கத்தையும் ஏற்படுத்திவிட்டது. தேர்தல் ஆணையத்திடம் காவடி எடுத்துப் பார்த்தார்கள். அதைத் தடை செய்யவேண்டும் என்றனர் - தேர்தல் ஆணையம் உடன்படவில்லை.

23 முக்கிய தலைவர்கள் பேட்டி எடுக்கப்பட்டனர் - இரகசியமாக வீடியோவிலும் பதிவு செய்துவிட்டனர்.

இந்த இரகசிய வீடியோ பதிவில் இடம்பெற்றவர்கள் யார் என்பதைத் தெரிந்துகொண்டால் ஒரு வகையில் ஆச்சரியமாகவும் - ஏன் அதிர்ச்சியாகவும்கூட இருக்கும்.

வினய் கட்டியார், உமாபாரதி, கல்யாண்சிங், சுவாமி சச்சிதானந்த், சாக்ஷி மஹராஜ், மஹந்த் ராம்விலாஸ் வேதாந்தி, சாத்வி ரிதம்பரா, மஹந்த் அவைத்யநாத், சுவாமி நிருத்ய கோபால்தாஸ் உள்ளிட்ட மேலும் பி.ஜே.பி. பஜ்ரங்தள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும் இந்த வீடியோ பதிவில் இடம்பெற்றிருந்தனர்.

17 ஆண்டு விசாரணைக்குப் பிறகு நீதிபதி லிபரான் ஆணையம் பாபர் மசூதி இடிப்பில் 68 பேர் குற்றவாளி கள் என்று அறுதியிட்டுக் கூறியது. வாஜ்பேயி பெயரை எப்படி சேர்க்கலாம் என்று நாடாளுமன்றத்தையே நடுங்க வைத்த யோக்கிய சிகாமணிகள்தான் இந்தப் பி.ஜே.பி.யினர் சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்பதெல்லாம் அவர்களின் அகராதியில் கிடையாதே!

ரேபரேலி (உத்தரப்பிரதேசம்) நீதிமன்றம் ஏற்கெ னவே அத்வானி உள்பட 49 பேர்கள் மீது குற்றவியல் சட்டம் 147, 153(ஜி), 149, 153(பி) மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கைப் பதிவு செய்திருந்தது.

கலகம் விளைவித்தல், மக்களிடம் குரோத உணர்ச்சிகளைத் தூண்டுதல், சட்ட விரோதமாகக் கூடுதல், தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளை வித்தல், ஒரு சமுதாயத்துக்கு விரோதமாக குற்றம் செய்யத் தூண்டுதல், பீதியை உண்டாக்குதல் என்ற குற்றங்களின் பிரிவுகள் இவை.

அத்வானியே தலைமை தாங்கிதான் பாபர் மசூதியை இடித்தார். அத்வானிபற்றிய குற்றப் பத்திரிகையில் சி.பி.அய். பகிரங்கமாகக் கூறியுள்ளது.

தமிழ் ஓவியா said...

நீங்களும், மற்றவர்களும் பாபர் மசூதியை இடிக்க ஒரு சதித் திட்டம் தீட்டி இருக்கிறீர்கள். சம்பவ இடத்தில் அன்று காலை (1992, டிசம்பர் 6) பத்தரை மணியளவில் பொதுக்கூட்டம் ஒன்றில் தீவிரமாகப் பங்கெடுத்திருக் கிறீர்கள். பல தலைவர்களும் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கு என்று ஆவேசமாகப் பேசி, கரசேவகர் களை, தொண்டர்களைத் தூண்டினீர்கள், காலை 11.45 மணிக்கு சம்பவ இடத்திற்கு வருமாறு தொண்டர்களுக் குக் கட்டளையிட்டீர்கள். மசூதியை இடிக்க டிராக்டர் களோ, புல்டோசர்களோ வேண்டாம். ஆளுக்கொரு தடியை எடுத்தாலே போதும் - மசூதி இடிந்துவிடும் என்று ஆவேசமாகப் பேசி இருக்கிறீர்கள்.

மசூதி இடிக்கப்படும் வரை உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் கல்யாண்சிங் பதவியை ராஜினாமா செய்யவேண்டாம் என்று சொன்னீர்கள். அப்பொழுது தான் மத்தியப் படை, மசூதி இடிப்பைத் தடுத்து நிறுத்த முடியாது என்று முதலமைச்சர் கல்யாண்சிங்குக்கு யோசனை சொன்னீர்கள்.

கரசேவை என்றால் பஜனையும், பக்திக் கீர்த்தனை யும் பாடுவதல்ல. சர்ச்சைக்குரிய, தகராறுக்குரிய 2.73 ஏக்கர் நிலத்தில் செங்கல் கொண்டு ராமர் கோவில் கட்டுவதாகும் என்று சொல்லியிருக்கிறீர்கள் என்று அத்வானிமீது சி.பி.அய். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மேலும் பிற்பகல் 3.15 மணிக்கு மத்தியப் படையினர் மசூதிக்குள் நுழைவதைத் தடுக்க மசூதிகளின் வாயில்களை இழுத்து மூடுங்கள் என்று உத்தரவிட் டீர்கள் என்ற தகவலும் அதில் அடக்கம்.

பி.ஜே.பி.யில் இருந்து விலகிய நிலையில், கல்யாண் சிங்கும், பாபர் மசூதி இடிப்புத் தொடர்பாக பா.ஜ.க. தலைவர்களை நம்பி ஏமாந்தேன் என்று லக்னோவில் செய்தியாளர்களிடம் கூறினாரே! (தினமணி, 3.6.2009).

அதுமட்டுமல்ல, அத்வானியின் பாதுகாப்பு அதிகாரி அஞ்சு குப்தா அய்.பி.எஸ். என்பவரும், அத்வானிதான் கரசேவகர்களுக்குக் கட்டளையிட்டார் என்று லிபரான் ஆணையத்தின்முன் சாட்சியம் கூறினாரே!

பிசினஸ் இந்தியா ஏட்டின் செய்தியாளர் ருச்சிரா குப்தாவும் அத்வானியின் கட்டளைகள்பற்றி லிபரான் ஆணையத்தின்முன் சாட்சியம் சொன்னதுண்டே!

பத்திரிகையாளர்கள் தாக்கப்படுகிறார்கள் - அவர் களைக் காப்பாற்றுங்கள் என்று அத்வானியிடம் கேட்டுக் கொண்டேன்; அவரோ அசைந்து கொடுக்கவில்லை. மாறாக எனக்கு இனிப்பு வழங்கினார் என்று அந்தப் பெண் பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

இன்னும் ஒருபடி மேலே சென்று, நாடாளுமன்றத் திலேயே அதிகாரபூர்வமான எதிர்க்கட்சித் தலைவ ராகிய சுஷ்மா சுவராஜ் என்ன கூறினார் தெரியுமா? பாபர் மசூதியை இடித்தது நாங்கள்தான் - தண்ட னையை ஏற்கத் தயார்! என்று சொன்னாரே! (தினமலர், 9.12.2009).

இவ்வளவுக்குப் பிறகும் பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் ராஜ நடைபோட்டுத் திரிகிறார்கள் என்றால், இதனைவிட வெட்கக்கேடு வேறு ஒன்று இருக்க முடியுமா?

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு (ஹிறிகி) உரிய முறையில் வழக்கை நடத்தியிருந்தால், இந்தப் பிஜேபி தலைவர்கள் எல்லாம் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் தகுதியையே இழந்து இருப்பார்களே!

கோப்ரா போஸ்ட் புலனாய்வு இணைய தள நிறுவனம், தேர்தல் நேரத்தில் மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. பாபர் மசூதியை இடித்த மதவெறியர்களை ஆளவிடலாமா? என்ற வினாவை வாக்காளர்கள் மத்தியில் எழுப்புவது அவசியமாகும்.

Read more: http://viduthalai.in/page-2/78797.html#ixzz2zC9nw2v6

தமிழ் ஓவியா said...


கைத்தறி நெசவாளர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் இயக்கம் திமுக தான் பல்லடம் தேர்தல் பிரச்சாரத்தில் சுப.வீரபாண்டியன் பேச்சு


அருள்புரம், ஏப். 17- கைத் தறி நெசவாளர்களின் வளர்ச்சி என்றென்றும் உற்ற துணை யாக இருப்பது திராவிட முன் னேற்றக்கழகம் தான் என்று சுப.வீரபாண்டியன் குறிப் பிட்டார்.

திருப்பூர் மாவட்டம், பல் லடம் ஒன்றியத்திற்குட்பட்ட அருள்புரத்தில் (14.4.2014) அன்று மாலை 6 மணியள வில் ஜனநாயக முற்போக் குக் கூட்டணியின் சார்பில் திறந்த ஜீப்பில் தெரு முனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பல்ல டம் ஒன்றிய திமுக செயலா ளர் ராஜசேகர் தலைமை தாங் கினார்.

இப்பிரச்சாரத்தில் கோவை நாடாளுமன்றத் தொகுதியின் திமுக வேட்பா ளர் வழக்குரைஞர் கணேஷ் குமார் அவர்களை ஆதரித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செய லாளர் பேராசிரியர் சுப.வீர பாண்டியன் பேசியதாவது: தமிழகத்தில் காலங்காலமாக தொன்று தொட்டு இருந்து வரும் தொழில்கள் உழவு, நெசவு, மீன்பிடிப்பு ஆகிய வைகளாகும். இந்த அடிப் படையான தொழில்களுக்கு கலைஞர் ஆட்சி என்னென்ன நன்மைகளைச் செய்தது! இன்றைய ஆட்சி என்ன செய் துக்கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி பேசுவதற் குத்தான் இந்தக்கூட்டம்.

கடன் நீக்கம்

விவசாயிகள் எண்ணிப் பார்க்க வேண்டும். திமுக ஆட்சியில் 7000 கோடி ரூபாய் விவசாயக்கடன் ரத்து செய் யப்பட்டது. இதன் மூலம் 2,26,000 குடும்பங்கள் பயன் பெற்றன. மிகமுக்கியமாக இதில் அதிமுகவைச் சார்ந்த நிலவுடைமையாளர் தான் அதிக அளவில் பயன்பெற் றுள்ளார்கள். பாரபட்சமின்றி அனைத்துக் கட்சி நண்பர் களும் இலாபமடைந்திருக் கின்றார்கள். இதற்கு நன்றி காட்ட வேண்டாமா?

இலவச மின்சாரம்

மின்சாரமே இல்லாத நாட்கள் தான் இப்போது வந்து கொண்டிருக்கிறது. அப்படியிருக்கையில் இலவச மின்சாரம் எப்படி வரும்? தமிழகம் முழுவதும் இருள் சூழ்ந்துள்ளது. மின் சாரக் கம்பியில் துணிகாயப் போடும்நிலை ஏற்பட்டுள் ளது. தண்ணீரை ஒரு அரசாங் கம் விற்பனை செய்கிற தென்றால் உலகிலேயே அது தமிழ்நாட்டு அரசாங்கம் தான். கலைஞர் இலவச மின் சாரம் தந்தாரே! விவசாயப் பெருங்குடிமக்கள் நினைத் துப் பார்க்க வேண்டாமா?

உழவர் சந்தை

விவசாயிகளின் உற்பத் திக்கு சரியான விலை கிடைக்க கலைஞர் அவர்கள் உழவர் சந்தையைக் கொண்டு வந் தார். இதன் வரவால் எத் தனை விவசாயக் குடும்பங் கள் மகிழ்ச்சிக் கடலில் தத் தளித்தார்கள் தெரியுமா? முதலில் 117 சந்தைகளை கலைஞர் கொண்டு வந்தார். பிறகு அதிக எண்ணிக்கை யில் கொண்டு வரப்பட்டது. ஆனால், இப்போது 13 காய் கறிக்கடைகளை கோடிக் கணக்கான மக்கள் வாழ் கின்ற நாட்டில் தற்போதைய அரசு திறந்துள்ளது. இது போன்றவர்களுக்கு இனியும் வாக்களிக்கலாமா?
கைத்தறித்தொழில் கைத்தறித்தொழிலுக்கு எப்போதும் துணை நிற்பது திமுக தான். கைத்தறித் தொழிலுக்கு விதிக்கப்பட்டி ருந்த மத்திய மதிப்புக் கூட்டு வரியை நீக்கிய ஆட்சி திமுக வின் பொற்கால ஆட்சி, ஆனால் இப்போது இப்பகு தியில் விசைத்தறிகள் ஓட வில்லை. கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி, உரிமை யாளர்களின் வேலை நிறுத் தம் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ஜவுளி உற்பத்தியா ளர்கள் முத்தரப்பு பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட ஒப் பந்தப்படி விசைத்தறி உரி மையாளர்களுக்கு உயர்வு தரவில்லை. இப்பிரச்சினை யைத்தீர்க்க தற்போதைய அரசு எவ்வித நடவடிக்கை யும் எடுக்கவில்லை.

இது தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. அன்றாடம் தொழில் நிமித்தமாகப் பய ணித்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள், பேருந்து கட்டண உயர்வைப் பற்றி நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. நீங்களே நன்றாகச் சிந்தித் துப்பாருங்கள்.

மீன்பிடி தொழிலுக்கு எவ்வித நன்மைகளையும், பாதுகாப்பையும் வழங்காத அரசாக தற்போதைய அரசு இருந்து வருகிறது. இந்த நிலைமாற அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி திமுக வேட்பாளர் கணேஷ் குமார் அவர்களை நீங்களெல் லாம் பெற்றிபெற வைக்க வேண்டும் என்று சுப.வீ. அவர்கள் உரையாற்றினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத்தின் திருப்பூர் மாவட் டச் செயலாளர் யாழ்.ஆறுச் சாமி, பேராசிரியர் அவர்க ளுக்கு சிறப்பு செய்தார். திரா விட இயக்கத் தமிழ் பேரவை யின் மாநில இணைப் பொதுச் செயலாளர் சிற்பி செல்வராசு, சேகாம்பாளையம் ரங்கசாமி, ரமேஷ், திருப்பூர் பிரகாசு, சிவாசலமூர்த்தி, சரவண மூர்த்தி, திமுக இலக்கிய அணியின் மாவட்ட துணை அமைப்பாளர் இளங்கோ, தி.க இளைஞரணியைச் சார்ந்த மணிகண்டன் உள்ளிட்ட ஜனநாயக முற்போக்குக் கூட் டணியின் செயல் வீரர்கள் பலரும் பங்கேற்று நிகழ்வைச் சிறப்பித்தனர்.

Read more: http://viduthalai.in/page-3/78827.html#ixzz2zCAumyBS

தமிழ் ஓவியா said...


தேர்தல்: தா.பாண்டியன் கணிப்பு இந்த தேர்தலில் தமிழகத்தில் வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கும்?


திமுகவுக்குத் தொடக்கத்தில் இருந்த தைவிட இப்போது நம்பகத்தன்மை தருகிற சூழ்நிலை வந்திருப்பது உண்மை. அதிமுக எடுத்த நிலை காரணமாக திமுகவுக்கு சிறுபான்மையினர் ஆதரவு பெருகி இருப் பது மறுக்க முடியாத ஒன்று. ஆகவே தொடக்கத்தில் இருந்ததைவிட இப்போது திமுக முன்னேறி இருக்கிறது.

அதேபோல தேர்தல் தொடங்குவதற்கு முன்பு, அதிமுக வுக்கு இருந்த நம்பிக்கை, மக்கள் தந்த ஆதரவு என்பது கரைந்து வருவது தெளி வாகத் தெரிகிறது.

காங்கிரஸ் கட்சி, வெற்றிபெற மாட் டோம் என்பதை அவர்களாகவே அறிவித்து விட்டார்கள். தமிழகத்தில் சமூக சேர்க்கை காரணமாக பி.ஜே.பி ஓரிரு இடங்களில் வெற்றி பெறக்கூடும் என்று நானும் நினைத் தது உண்டு.

ஆனால் அவர்களின் தேர்தல் அறிக்கைக்குப் பின், தமிழகத்தில் அவர் களும், அவர்களோடு கூட்டு சேர்ந்தவர்க ளும் ஓர் இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை.

கம்யூனிஸ்ட் இயக்கம் அமைத்துள்ள அணி அனைத்து இடங்களிலும் ஜெயிக்கும் என்று வீரவசனம் பேசமாட்டேன். ஏனென் றால் தேர்தல் என்பது பணம் புழங்கும் அரசியல் சந்தை.

- தா.பாண்டியன் - ஜூனியர் விகடன் (20.4.14) பேட்டியிலிருந்து

Read more: http://viduthalai.in/page-8/78823.html#ixzz2zCCGml24

தமிழ் ஓவியா said...


ராஜஸ்தானில் பாஜக தேர்தல் செலவுக்கு பாபா ராம்தேவின் பணமா?


செய்தியாளர்களிடமிருந்து தப்பித்து ராம்தேவ் ஓட்டம்!.

ஜெய்ப்பூர்.ஏப்.18- செய்தியாளர் சந்திப்பில் யோகா சாமியார் பாபா ராம்தேவ் தப்பி ஓட்டம் பிடித்தார். யோகா குரு என்று சொல்லிக் கொள் ளும் சாமியார் பாபா ராம் தேவ் சிபாரிசின்பேரில் பாஜகவின் வேட்பாளராக மஹந்த் சந்த்நாத் யோகி என்பவர் ஆல்வார் தொகு தியில் நிறுத்தப்பட்டுள் ளார். ஆல்வார் தொகுதியில் மத்திய அமைச்சர் ஜிதேந் திர சிங் காங்கிரசு தரப்பில் நிறுத்தப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை அன்று செய்தியாளர்களி டையே ராம்தேவ் பேசும் போது வெளிநாடுகளில் கறுப்புப் பணம் பதுக்கப் பட்டுள்ளது குறித்துப் பேசினார். தம்மிடம் மைக்ரோ மைக் உள்ளதை மறந்து ஆல்வார் தொகுதி பாஜக வேட்பாளர் மஹந்த் சந்த்நாத் யோகி பல இடங் களிலிருந்தும் பணத்தைக் கொண்டுவருவதில் ஏராளமான பிரச்சினை களை சந்தித்து வருவதாக ராம்தேவிடம் கூறினார். அப்போது வேகமாக இடைமறித்த ராம்தேவ் இந்த இடத்தில் இந்த பிரச்சினையைப் பற்றிப் பேசக்கூடாது. நீ என்ன முட்டாளா? என்று கேட்டு மஹந்திடமிருந்த மைக்ரோ மைக்கைப்பிடுங்கிக் கொண்டார்.

செய்தியாளர்கள் முன் னிலையில் ராம்தேவும், மஹந்தும் வெட்கித் தலை குனிந்தனர்.

இதுகுறித்து அனைத்து செய்தியாளர்களும் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள். செய்தியாளர்களின் கேள்வி களுக்குப் பதில் அளிக்கா மல் போக்குக்காட்டி விட்டு, செய்தியாளர்களின் சந்திப்பை பாதியில் நிறுத் தியதோடு அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டார். இதுகுறித்து பின்னர் மஹந்த் கூறும்போது, பணத்தைப்பற்றி பேசிக் கொள்ளவில்லை. செய்தி யாளர்கள்தான் தேவையில் லாமல் பதட்டத்தை உரு வாக்கி விட்டார்கள் என்று கூறினார். ராஜஸ்தானில் இப் பிரச்சினையே கறுப்புப் பணம்மீட்பது குறித்துப் பேசிவரும் பாஜகவுக்கு பதிலடியாக காங்கிரசின் பிரச்சாரத்தில் பொறிபறக்க வழிவகுத்துள்ளது.

காங்கிரசு சார்பில் தொடர்பாளராக உள்ள அர்ச்சனா ஷர்மா கூறும் போது, மோடிக்கு ராம் தேவ் உதவுவதுடன், கறுப் புப் பணம்குறித்து தேசத் தையே தவறான பாதைக்கு கொண்டு செல்கிறார். உண் மையான தகவல் என்ன வென்றால், ராம்தேவும், அவர் சீடர்களும் ஏராள மான கறுப்புப் பணத்தை வைத்துள்ளனர். அவர் கருப்புப் பணத்தைக் காட்டி தன்னுடைய சீடர் களுக்குப் போட்டியிடும் இடத்தைப் பெற்றதோடு, தேர்தல் பிரச்சாரத்துக்கும் பணத்தை தள்ளி விடுகிறார். தேர்தல் ஆணையத்திடமி ருந்தும், ராஜஸ்தான் மாநில தேர்தல் துறையிடமிருந் தும் நடவடிக்கை எடுப் பார்கள் என்று எதிர்பார்க்கி றோம் என்றார்.

(- ஹிந்துஸ்தான் டைம்ஸ், 17-4-2014)

Read more: http://viduthalai.in/e-paper/78856.html#ixzz2zHrSvlaj

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


பெண்?

செய்தி: மோடி பிரதமரா னால் மகளிர் நலத் திட் டங்கள் நிறைவேற்றப்படும்.
- இல. கணேசன் (பிஜேபி)

சிந்தனை: மகளிர் நலத் திட் டங்களை நிறைவேற்றுவது இருக்கட்டும். முதலில் உங்கள் கட்சி சார்பில் ஒரு பெண்ணுக்காவது தேர்த லில் நிற்க வாய்ப்புக் கொடுத் தீர்களா?

சாடுகிறார் மோடி

மீனவர் பிரச்சினைக்கு காரணம் ஜெயலலிதாவும் சோனியாவும்தான். - குமரியில் மோடி

மோடிக்குப் பதிலடி!

குஜராத் மாநிலத்தைவிட தமிழகம் பல்வேறு துறைகளில் முதலிடத்தில் உள்ளது.

- கிருஷ்ணகிரியில் முதல் அமைச்சர் ஜெயலலிதா


பாஜக - தெலுகு தேசம் கூட்டணி சிக்கல்

சீமாந்திராவில் பாஜக கூட்டணியிலிருந்து விலகி தெலுகு தேசம் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படு வார்கள் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

சீமாந்திராவில் அறிவிக்கப் பட்டுள்ள பாஜக வேட்பாளர் கள் பலவீனமாக உள்ளதால், வெற்றி வாய்ப்பு இருக்காது எனவே, சீமாந்திராவில் பாஜக கூட்டணியிலிருந்து விலகி உள்ளதாக தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/78855.html#ixzz2zHroKDKJ

தமிழ் ஓவியா said...

பணத்திற்குப் பதில் பண்டங்கள்!

தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டு வாடா செய்வதில் சிக்கல் இருந்தால் மளிகைக் கடைகள் மூலம் மளிகைச் சாமான்களை வழங்கும் ஒரு புது யுக்தி கையாளப்படுகிறதாம். எப்படி இருக்கிறது? மக்கள் தயாராக இருந்தால் யார் தான் என்ன செய்ய முடியும்? முதலில் தேவை விழிப் புணர்வே! இயற்கையாக இல்லையென்றால் ஊட்டப் பட வேண்டும்.

Read more: http://viduthalai.in/e-paper/78861.html#ixzz2zHrwO1xJ

தமிழ் ஓவியா said...


மூட மக்கள்


ஒவ்வொருவனும் தன்னை அன்னியன், கீழ்ச் சாதி என்று கூப்பிடுவதைச் சகித்துக் கொண்டுதான் மற்றவனைக் கீழ்ச் சாதி என்று கூப்பிடுவதில் திருப்தியும், பெருமையும் அடைகிறான். அதுதான் மூட மக்கள் என்பதற்கு அடையாளம்.

(விடுதலை, 24.9.1950)

Read more: http://viduthalai.in/page-2/78862.html#ixzz2zHsn9KRr

தமிழ் ஓவியா said...


இவர்களை அடையாளம் காண்பீர்! காண்பீர்!!

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் ஈழத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்கள் பிரச்சினை, காவிரி நீர்ப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை களான தமிழ்நாட்டு மக்கள் பிரச்சினைகள்பற்றி ஒரு வரிகூடச் சொல்லப்படவில்லையே என்ற குற்றச்சாற்று வலுவாக எழுந்து விட்டது.

முதலில் அகில இந்திய ரீதியில் கடந்த 7ஆம் தேதி தேர்தல் அறிக்கையை அது வெளியிட்டு இருந்தது. அதில் தமிழ்நாட்டுப் பிரச்சினைகள் இடம் பெற வில்லையே என்ற கோபக் குரல் தமிழ்நாட்டில் வெடித்த நேரத்தில், பிஜேபி தென் சென்னை வேட் பாளரும், பிஜேபியின் தேசியக் குழு உறுப்பினருமான திருவாளர் இல. கணேசன் என்ன சொன்னார்? அவசரப்படாதீர்கள் அடுத்து ஒரு துணைத் தேர்தல் அறிக்கை வெளிவரும்; அதில் இவையெல்லாம் இடம் பெறும் என்று சமாதானம் சொன்னார்.

தமிழ்நாட்டுக்கென்று தமிழில் ஒரு தேர்தல் அறிக்கையை பி.ஜே.பி. வெளியிட்டது. இல. கணேசன் அவர்கள் சொன்னதுபோல தமிழ்நாட்டுப் பிரச்சினை அறவே இடம் பெறவில்லை. அகில இந்திய அளவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பி.ஜே.பி.யினருக்கு எந்த அளவு முக்கியத்துவமும், மதிப்பும் கைகோத்துள்ளன என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.

பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் இவை எல்லாம் காணாமல் போய் விட்டன என்பது ஒருபுறம் இருக்கட்டும்!

பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் தங்கள் வாய்களை கோணி ஊசியை வைத்துத் தைத்துக் கொண்டுள்ளன! பதவிப் பசி எடுத்தால் பத்தும் பறந்துபோகும் என்ற பழமொழிக்கு, ஒட்டு மொத்தக் குத்தகைத்தாரர் ஆகி விட்டதையே இது பறைசாற்றும்.

இதன் பொருள் என்ன? பிஜேபி ஆட்சிக்கு வந்தால் (?) இந்தப் பிரச்சினைகள்மீது அக்கறை செலுத்தப்பட மாட்டாது என்பது இப்பொழுதே விளங்கி விட்டது.

பி.ஜே.பி..யைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு இதில் எதுவும் ஆச்சரியமாகவே இருக்காது; காரணம் அவர்கள் இந்துத்துவாவாதிகள் - பார்ப்பன மேலாண்மை என்பது அதற்குள் ஓடும் ரத்தம் ஆகும்.

தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள், ஊடகங்கள், ஈழத் தமிழர் பிரச்சினையில் எப்படியெல்லாம் நடந்து கொண்டு வந்துள்ளனர் என்பது நம் மக்களுக்குத் தெரியாதா?

சோ ராமசாமியைவிட, குருமூர்த்திகளைவிட ஆர்.எஸ்.எசுக்கோ, பி.ஜே.பி.க்கோ, நெருக்கமான வர்கள், ஆலோசகர்கள் யார்? ஈழத் தமிழர் பிரச்சினையில் இவர்களின் நிலைப்பாடு என்ன? சு. சாமியின் உணர்வென்ன? இவற்றின் பிரதிபலிப்புதான் பிஜேபியின் தேர்தல் அறிக்கை.

இவ்வளவும் தெரிந்திருந்தும் ம.திமுகவும், பா.ம.க.வும், பிஜேபியோடு கூட்டணி வைத்துள்ளன என்றால் இதன் பொருள் என்ன?

இந்தப் பிரச்சினையில் இவர்கள் இதுவரை சொல்லி வந்த - வெளிப்படுத்தி வந்த உணர்வுகளேகூட சந்தேகத்துக்கு உரியன ஆகிவிடவில்லையா?

2000 ஏப்ரலில் ஆணையிரவை விடுதலைப்புலிகள் கைப்பற்றிய நேரத்தில் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா துடிதுடித்து போகவில்லையா?

உதவி! உதவி!! என்று உலக நாடுகளிடம் மடிப் பிச்சை கேட்ட நேரத்தில், வாஜ்பேயி தலைமையிலான பி.ஜே.பி. அரசு, இலங்கைக்கு உதவிக்கரம் நீட்ட வில்லையா? சுகன்யா எனும் மிக முக்கியமான போர்க்கப்பலைக் கொடுத்து உதவிடவில்லையா?

அந்த நேரத்தில் விடுதலைப்புலிகளுக்கு எச்சரிக்கை கொடுத்ததும் வாஜ்பேயி அரசு தானே! அந்த நேரத்தில் பத்து கோடி அமெரிக்க டாலரை (ரூ.450 கோடி) இலங்கை சிங்கள அரசுக்கு வாரி வழங்கியதும் அதே அரசுதானே! விடுதலைப்புலிகள் அமைப்பையும் அப்பொழுது அது தடை செய்யவில்லையா?

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலையே என்ற ஒரு தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்ட நிலையில், அதற்காக இந்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது - எதிர்க்கட்சித் தலைவரான - பி.ஜே.பி. யைச் சேர்ந்த சுஷ்மா சுவராஜ்தானே, மறுக்க முடியுமா?

இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டால்தான் தேர்தல் அறிக்கையில் பிஜேபி ஈழத் தமிழர்ப் பிரச்சினையை அறவே புறக்கணித்ததன் இரகசியம் என்னவென்று புரியும்.
நியாயமாக தமிழ்நாட்டு வாக்காளர்களின் சினத்தீ - இந்தக் கண்ணோட்டம் உடைய பி.ஜே.பி., அதனோடு இணைந்து கைகோத்து வரும் தமிழ்நாட்டுக் கட்சிகள் மீதுதான் சீறிட வேண்டும்; இவர்களை அடையாளம் காண இதுதான் சரியான சந்தர்ப்பம்! சந்தர்ப்பம்!!

Read more: http://viduthalai.in/page-2/78863.html#ixzz2zHswVEPu

தமிழ் ஓவியா said...

ஜனநாயகத்துக்கே கேடான சர்வே

என்டிடிவியின் சர்வே முறைகேடு வெளுத்துவாங்கும் டில்லி இணைய ஊடகம்

டில்லி. ஏப்.18- என்டிடிவி அளித்துள்ள புதிய சர்வே முடிவுகள் அப்படியே எடுத்துக் கொண்டால், நடைபெற்றுவரும் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 275 இடங்களைப் பெறும் என்று முன்கூட்டியே சொல்லி உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி மற்றும் காங்கிரசு இதற்குமுன் பெற்ற எண்ணிக்கைகளை மொத்தமாக இழந்து நிற்பதாகவும், அவர் களைக்காட்டிலும், மோடி அலையால் உபியில் மொத்தமாக 51 இடங்களை வாரிச் சுழற்றிக் கொள்வதாகவும் சர்வே கூறுகிறது.

காங்கிரசு அனைத்துத் தேர்தலிலும் தனியே குறைந்தபட்சமாக 92 இடங்களை வென்றுள்ளது. சர்வேபடி அய்க்கிய முற் போக்கு கூட்டணியில் வெறும் 111 இடங் கள் மட்டுமே பெறும் என்று கூறியுள்ளது.

ஆம்ஆத்மி டில்லியில் வெடித்துக் கிளம்பியது. சர்வேபடி, மிகச் சொற்ப மாகவே அக்கட்சி பெறும் என்கிறது.

பாஜக, அதன் ஆதரவாளர்களுக்கு அல்லது சர்வே எடுத்ததாக சொல்பவ ருக்கு கிறிஸ்துமஸ் ஆண்டின் தொடக்கத் திலேயே வந்துவிடுகிறது என்பதுபோல் சர்வே முடிவு உள்ளது.

சர்வேயில் எடுக்கப்பட்ட முடிவுகள் உண்மையாகவே வாக்காளர்களின் கருத்துகளைக் கொண்டதுதானா?

எப்படிப் பார்த்தாலும், தேர்தல் நேரத்தில் என்டிடிவி எடுத்துள்ள இந்த சர்வே, போதுமான ஆதாரங்கள் இல்லா மல், பரப்பப்பட்டுள்ளது. அவர்களின் பிழைப்புக்காகவும் எடுக்கப்பட்டிருக் கிறது. சர்வே முடிவு என்பது ஊடகங்களின் கருத்துத்திணிப்புதானோ என்று எல்லோ ருடைய மனதிலும் எழுந்துள்ள கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும்.

பிரச்சினையே தேர்தல் ஆணை யத்தின் முடிவால் அல்ல. அது வரை யறுத்துள்ள கெடுபிடியான நேரம்தான். ஒரு மாதம்வரையிலான தேர்தலின் மத்தியில் சர்வே எடுக்கும் உரிமை மறுக் கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளால் நிலைமை மோசமாகி விட்டது. தேர்தல் ஆணையத்தின் அவசரகோலத்தில் எடுக்கப்பட்டுள்ள திடீர் முடிவுகளால், தற்போது என்டிடிவி சர்வே முடிவுகளை உறுதிப்படுத்தவோ, சர்வே முடிவுகளுக்கு மாறான நிலையிலிருப்பதை எடுத்துக்காட்டவோ வழி இல்லை. சர்வே முடிவால் பாதிக்கப் பட்டவர்கள் கருத்து தெரிவிக்க இயலா மலும் உள்ளது. என்டிடிவி சர்வே ஆணை யத்தின் விதிமுறைகளை கடைப்பிடித் துள்ளதாகக் கூறினாலும், உள்ளார்ந்த உணர்வுகளுக்கு இடம் கொடுக்கவில்லை.

ஆணையத்தின் இறுதிக்கெடுவாகிய ஏப்ரல் நான்காம் தேதிக்குப்பிறகு கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டதை மன்னித்து, சாதகமான காரணங்களைக் கூறி வெளியிட அனுமதித்துள்ளது.

தமிழ் ஓவியா said...

வாக்களிப்பவர்கள் தாமாக முடி வெடுப்பதற்கு வாய்ப்பாக, போதிய கால இடைவெளி இருக்கவேண்டும் என்கிறது. இதனாலேயே, தேர்தலுக்குப்பின் கருத்துக்கணிப்பு என்கிற பெயரில் வாக்களித்தவர்கள் யாருக்கு வாக்களித் தார்கள் என்பதை வெளியிடும்போது, வாக்களிக்கக் காத்திருப்போரையும், அதைப்போலவே வாக்களிக்க வலியுறுத் துவதாகிவிடும். எனவே, ஆணையம் அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு முடியும்வரை கருத்துக்கணிப்பை வெளி யிடுவதைத் தடை செய்துள்ளது.

என்டிடிவி சட்டத்தின் ஓட்டைகளில் நுழைந்து, ஆணையம் விதித்த கெடு வுக்குமுன்பாக எடுத்து முடிக்கப்பட்டது போல் இருப்பது முற்றிலும் தவறானது. ஏப்ரல் நான்காம் தேதிக்கு முன்னதாக எடுத்துள்ளதாகக் கூறி தற்போதைய நிலவரங்களையும் இணைத்தே சர்வே முடிவை வெளியிட்டுள்ளது.

இந்த முடிவு மக்களிடையே ஒருசார் பான ஆதரவுநிலையை அதிகப்படுத்தும் நோக்கமேயாகும். மேலும், உச்சகட்ட தேர்தல் காய்ச்சலில் இருக்கும்போது, வாக்காளர்களின் முடிவு என்னவென்றே ஊகிக்க முடியாத நேரத்தில் தேர்தலின் ஒரு பகுதியாக சர்வே முடிவை ஒரு சார்பாக வெளியிட்டுள்ளது.

ஊடகங்களிடையே உள்ள கடும் போட்டியில் பார்வையாளர்கள் மத்தியில் சர்வே எடுத்தது அந்த ஊடகத்தின் பெரிய வெற்றியாகும். ஆனால், அதன் விலை என்ன?

ஒரு குறிப்பிட்ட கட்சிமட்டும் மிகப் பெரிய வெற்றி பெறும் என்று வெளியிட்டு வாக்காளர்களைத் திசை திருப்புவதை என்டிடிவி செய்துள்ள நோக்கம் தெரி கிறது. தவிர்க்கவே முடியாதவகையில் திரும்பதிரும்ப அவர்களிடையே வெற்றிபெறுவது இன்னார்தான் என்று கருத்து வெளியிடும்போது, அவர்களும் தங்கள் கருத்தை மாற்றிக்கொண்டு வெற்றிபெறுவதாக சித்தரிக்கப்பட்டதன் பக்கம் சாய்வதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் யார் வெல்வதாக கருது கிறார்களோ அவர்களை ஆதரிக்கும் மனோநிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

மூத்த செய்தி ஆசிரியர் ஒருவர் கூறும்போது, ஒரு பெண்ணுக்கு மோடியைப்பற்றி ஒன்றுமே தெரியாது, அவர் நாட்டுக்கு நல்லது செய்வார் என்பதைவிட, வெற்றிபெறுவார் என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது கேள்விப் பட்டாராம். அதனால் வாக்களிக்க திட்டமிட்டுள்ளாராம். இப்படித்தான் அனைத்து அரசியல்வாதிகளும் உண்மை வேறாக இருந்தாலும், அதற்கும் மேலாக தொடர்ந்தாற்போல் மிகப்பெரிய வெற்றி பெறுவதாகக் கூறிவருகின்றனர். இப்படித்தான் மோடி வெற்றிபெறுவதாக, அடுத்த பிரதமர் என்று தொடர்ந்து கூறி, வாக்காளர்களை திசை திருப்பி வருகின்றனர்.

என்டிடிவி சர்வே பாஜகவுக்கு உதவுகிறது. அதேநேரத்தில் காங்கிரசை ஒரு பொருட்டாகக் கூட கருதவில்லை. ஆம்ஆத்மி கட்சி, தன்னைக்காத்துக் கொள்ள போராடும் தேவை உள்ளதாகும். அந்த அமைப்புகள், அதன் கொள்கைகள் ஆகியவற்றைத் தாக்குவதுபோல் சர்வே முடிவு உள்ளது. மற்ற இடங்களைக் காட்டிலும், வாக்காளர்கள் மத்தியில் டில்லியில் இதன்பாதிப்பு அதிகமாகும்

எல்லாவற்றையும் கடந்து, இந்த கசப்பான தேர்தல் பிரச்சாரக் காலத்தில் இதுபோன்ற வாதங்கள் பங்குதாரர்களால், சர்வே முடிவை பாராட்டுபவர்கள், வரவேற்பவர்களுக்கு கொள்கை ஏதும் கிடையாது. பிரச்சாரக் களத்தில் இந்த சர்வே முடிவைச் சொல்லி கிடைக்காத இடத்திலும் ஆதரவைத் தேட முயல் வார்கள். அநேகமாக மாபெரும் தேர் தலின் முடிவு என்பது சர்வே முடிவுக்கு தொடர்பின்றியே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-ஃபர்ஸ்ட் போஸ்ட், 15-4-2014, டில்லி

Read more: http://viduthalai.in/page-2/78865.html#ixzz2zHt9PKii

தமிழ் ஓவியா said...


ஒரு லட்சம் விதவை தாய்மார்களை ஏமாற்றிய ஜெயலலிதா


குடும்ப ஓய்வூதியதாரர்களாகிய விதவை தாய்மார்களை ஏமாற்றிவிட்ட தற்போதைய அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதாவால் சுமார் ஒரு லட்சம் குடும்ப ஓய்வூதியம் பெறும் விதவை தாய்மார்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் எப்படி என்றால் 1.6.1988 முதல் 31.12.1995 முடிந்த காலத்தில் தமிழ்நாடு அரசு ஊழியராக வேலை பார்த்துஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப் பட்டதில் அகவிலைப்படி முழுமையாக சேர்த்து வழங்காமல் 13 சதவீதம் மட்டும் சேர்த்து வழங்கியது தவறு என உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதில் கடந்த 17.1.2013 இல் உச்சநீதிமன்றம் ஓய்வூ தியதாரர்களின் மேல்முறையீடு மனுவை ஏற்று அகவிலைப்படியை முழுமையாக வழங்க வேண்டுமென தீர்ப்பு வழங்கியது.

இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு 23.8.2013 தேதியிட்டு அரசாணை எண் 363அய் வெளியிட்டது. இதில் என்ன வேதனை என்றால் மேற்படி அரசாணை எண். 363 இன் பாரா 15 இன் வரிசை எண். 3,4,5 இல் மேற்படி அரசானை வெளியிடப்பட்ட தேதியான 23.8.2013 இல் யார், யார் உயிருடன் இருக்கிறார்களே, அவர்களுக்குத் தான் இந்த ஆணை பொருந்தும். 23.8.2013 தேதிக்கு முன்பே இறந்த ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய பலன் கிடையாது என்பது தான் சரத்து இதனால் முற்றிலும் பாதிக்கப்பட்டவர்கள் குடும்ப ஓய்வூதியம் பெறும் விதவை தாய்மார்கள் என்பது தான் விதவை தாய்மார்களுக்கு ஜெயலலிதா செய்த துரோகம் என்றால் மிகையாகாது.

வயது முதிர்ந்த (Senior Citizen) விதவை குடும்ப ஓய்வூதியம் பெற்று வருப வர்களின் வயிற்றெரிச்சலை விளக்க வேண்டும். நமது தேர்தல் பிரச்சாரத்தின் போது விளா வரியாக அதாவது பெண்களுக்கு அதிலும் விதவை தாய்மார்களுக்கு துரோ கம் செய்த ஜெயலலிதாவுக்கா? உங்கள் ஓட்டு.

குறிப்பு: தீர்ப்பின்படி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் எந்த தேதியில் இறந்தாரோ, அந்த தேதியில் பணப்பயன் கொடுக்க வேண்டும் - அ.அப்துல் ஜப்பார், கூட்டுறவு சார்பதிவாளர், பிள்ளையார் பட்டி, தஞ்சாவூர்.

Read more: http://viduthalai.in/page-2/78867.html#ixzz2zHtkRmCA

தமிழ் ஓவியா said...


சூனியமும் புராதன மதங்களும்


சூனிய வித்தையை விடுவதென்றால் நமது புண்ணிய புராதன நூல்களைத் தூர எறிவதாகும் என்று சர்.தாமஸ் மோர் கூறினார். என்னுடைய அபிப்பிராயத்தில் அவர் கூறியது முற்றிலும் சரியே.

ஜான்வெஸ்லி என்பவர் பேய் பிசாசுகளிலும், சூனிய வித்தைகளிலும் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார். இது சம்பந்தமான சட்டங்கள் எல்லாம் இங்கிலாந்தில் ரத்தாகி அநேக ஆண்டுகளுக்குப் பின்னும் இவர் தம் நம்பிக் கையை வற்புறுத்தியிருக்கிறார்.

இந்த ஜான் வெஸ்லி என்பவர்தான் முதன் முதலாக நூதன மாதிரி கோவில் ஸ்தாபித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நியூ இங்கிலாந்தில் ஒரு பெண் சூனிய வித்தைக்காரி என்பதற்காகவும், அவள் நரியாக மாறினாள் என்பதற் காகவும் குற்றம் சாற்றப்பட்டாள். இந்த நிலையில் அவளைச் சில நாய்கள் கடித்துவிட்டன.

நியாய ஸ்தலத்தின் உத்தரவின்படி ஏற்பட்ட மூன்று பேர் கூடிய கமிட்டியார் அவளைச் சோதனை செய்தனர். அவர்கள் அவளுடைய ஆடையை விலக்கி சூனியக் காரியின் சூட்சம ஸ்தானத்தைத் தேடினார்கள். அதாவது, அந்த விசேஷ இடத்தில் குண்டூசியால் குத்தினால் வேதனை உண்டாகாதாம். அவள் தான் ஒரு போதும் நரியாக மாறினதில்லை என்று மறுத்தாள்.

கமிட்டியார்கள் செய்த சிபார்சின் பேரில் அவள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டாள். இவ்வட்டூழியங்கள் எல்லாம் (இங்கிலீஷ் சர்ச்சிலிருந்து பிறந்தவர்களான) ப்யூரிட்டன் பிரதர்ஸ் என்று சொல்லப் பட்ட கடவுளை வணங்க தைரியமாக கடல் கடந்து இங்கிலாந்திலிருந்து அமெரிக்கா சென்று தம் சகோதரர்களைக் கொடுமைப்படுத்திய கிறிஸ்தவர்களால் செய்யப்பட்டன.

கோடைகாலத்தில் பனியுண்டாக்கியதற்காகவும், மூடு பனியால் விளை பொருள்களைக் கெடுத்ததாகவும், புயல், பீர், சாராயம் முதலியன கசப்படைந்ததற்காகவும், ஒரு பாவமும் அறியாத மனிதர்கள் தீயிட்டுக் கொளுத்தப் பட்டனர். எவனும் எந்தக் குற்றத்துக்காவது உள்ளாகி தண்டனை அடையாமல் இருக்க முடியவில்லை.

குற்றம் சாட்டப்பட்ட எல்லோரும் தண்டிக்கப்பட்டனர். எல்லோருடைய ஜீவனும் ஆபத்துக் கிடமானதாகவே இருந்தது. ஒவ்வொருவனும் மற்றவனுடைய இரக்கத்தை எதிர்பார்த்தவனாக இருந்தான்.

இந்த நம்பிக்கை பேய், பிசாசு உண்டு; சூனிய வித்தை உண்டு; சூனிய வித்தைக்காரர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை மிக வேரூன்றி இருந்தபடியால் இதன் உண்மையைச் சந்தேகிக்கும் எவன்பேரிலும் அவ நம்பிக்கை வைக்கப்பட்டது. பேய், பிசாசு இல்லை என்று எவன் சொன்னாலும் அவனைத் தெய்வ நிந்தனையுடைய துஷ்டன் என இகழ்ந்து வந்தனர்.

(கர்னல் ஆர்.ஜி.இங்கர்சால் எழுதிய பேய்-பூதம்-பிசாசு என்ற நூலில்)
தகவல்: குன்னம் ராமண்ணா

Read more: http://viduthalai.in/page-7/78881.html#ixzz2zHu8PV6O

தமிழ் ஓவியா said...

மதம்

மதத்தின் உண்மையான உருவம் யாது? மனித ஜாதியின் குழந்தைப் பருவ மனோ பலவீனமும், அதனால் தோன்றிய மூடநம்பிக்கைகளும் சேர்ந்தது தான் மதம். மதத்தில் இதைவிட வேறேதேனுமிருக்கிறதென்றால் அது புரோகிதர்களும், அதிகாரிகளும் ஆடுகள் தங்கள் கிடையை விட்டு வெளியே போகாமல் இருப்பதற்காகச் செய்யும் ஏமாற்று வஞ்சனைகளும் தான்.

மனிதர்களின் மனோ வளர்ச்சியோடு கூடவே மதமும் எத்தனையோ மாற்றம் அடைந்திருக்கிறது. பெயரில் எத்தனையோ மாற்றம் பெற்றிருக்கிறது. ஆயினும், அந்த மாற்றத்தால் அதன் உள் உருவத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

அது 5000 ஆண்டுகளுக்கு முன் போலவே இன்றும் ஆயிரக்கணக்கான மூடநம்பிக்கைகளையும், மனிதர்களின் மனோ அடிமைத்தனத்தையும் ஆதரிக் கிறது. மூலம் பழையதுதான். உறை மட்டும்தான் மாற்றப்பட்டிருக்கிறது. நமது படித்த சகோதரர்கள் பிசாசு, பூதம், மந்திரம், இவைகளைக் கண்டு முகத்தைச் சுளித்துக் கொள்கிறார்கள்.

ஆனால், அதே விஷயத்தைப் புதிய உருவத்தில் தியாசபி போன்ற சுவராஸ்யமான சொற்களில் விஞ்ஞானத் தோடு கலந்து கொடுத்தால் பெரிய பெரிய அறிவாளிகளும் தங்கள் அறிவை விற்றுவிடத் தயாராகி விடுகிறார்கள்.

நீங்கள் மதத்தின் சரித்திரத்தையும், அதன் இறந்த கால நிகழ்காலத் தலைவர்களின் வாழ்க்கை விவரங்களையும் கவனத்தோடு படித்தீர்களானால், மதத்தில் முதல்தரமான பக்கா அயோக்கியர்களும், பைத்தியங்களும்தான் நிறைந்திருப்பதைக் காண்பீர்கள்.
பொது உடைமைதான் என்ன? என்னும் நூலில் ராகுல சாங்கிருத்தியாயன்.

தகவல்: இரா.நாச்சிமுத்து, கோவை

Read more: http://viduthalai.in/page-7/78881.html#ixzz2zHuGIjyU

தமிழ் ஓவியா said...

இப்போ பிராமணனும் இல்லே பிராமண தர்மமும் இல்லே!

வினா: வேத மந்திரத்தை இந்த மாதிரி விலை பேசி விற்கலாமா?

புரோகிதர் பதில்: எல்லாம் காலக்கோளாறுதான். காலம் ரொம்பத் தப்பாப் போச்சு. நாங்கள்ளாம் இந்த மாதிரி வந்துட்டோம். இப்ப பிராமணனும் இல்லே.. பிராமண தர்மமும் இல்லே.

வினா: நீங்க முன்னே பார்த்த மாதிரி ஜனங்களிடம் பக்தி இருக்கிறதா இப்போது?

புரோகிதர் விடை: பக்தியாவது. ஒண்ணாவது? கோவிலுக்கு வர்றவன் சாமி தரிசனத்துக்கா வர்றான்? சைட் அடிக்கன்னா வர்றான். பொம்மனாட்டிகள் மட்டும் என்ன யோக்கியம்? அவாளும் புடவை, நகை, நட்டு இதெல்லாம் போக, நேரம் இருந்தா சுவாமி, அம்பாளை நெனச்சுக்கிறா!

- துக்ளக், 1-6-1981 இதழ், பக்கம் 32
தகவல்: கிருட்டினசாமி, செகந்திராபாத்

Read more: http://viduthalai.in/page-7/78881.html#ixzz2zHuNt196

தமிழ் ஓவியா said...


நாத்திகக் கருத்துகள்

நாத்திகன்

நாத்திகன் வாழ்க்கையை நடத்த குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கத் தெரியாதவன். கண்ணுக்குப் புலப்படாத வருவாய் இல்லாதவன்.

- ஜான் புச்சன் (ஸ்காட்லாந்து வரலாற்று ஆசிரியர்)

நான் ஒரு நாத்திகன். பல அறிவிலிகள் கண்மூடித் தனமாக நம்புவதை நானும் நம்புவதாக நடிக்கமாட்டேன்.
- க்ளாரென்ஸ்டாரோ, (அமெரிக்க வழக்குரைஞர்)

கடவுள்

ஆண்களைக் கவரும் அழகை இழந்த பெண் முதுமையில் கடவுள் பக்கம் திரும்புகிறாள்.
- பால்சாக் (ஃப்ரெஞ்சு நாவலாசிரியர்)

தோல்வி ஏற்படும் போது கடவுள் பெயரைச் சொல்லாதே. வெற்றி ஏற்படும் நேரம் பார்த்துச் செயலாற்று.
- ஆம்ப்ரோஸ் பியர்ஸ் (அமெரிக்க எழுத்தாளர்)

கல்லினாலும் மரத்தினாலும் ஆண், பெண் கடவுள்களைப் படைப்பதால் எந்தப் பயனும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
- ஜான் பில்லிங்ஸ் என்ற புனைப்பெயர் கொண்ட என்றிவீலர்ஷா என்னும் அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர்

கடவுள் என்பது அகராதியில் கடவு (வழி) என்னும் சொல்லுக்கு அடுத்து உள்ளது.
-சாமுவேல் பட்லர் (ஆங்கில நாவலாசிரியர்)

மருத்துவர் நோயை குணப்படுத்துகிறார். நன்றி ஆண்டவனைச் சேருகிறது!
- ஃப்ராங்ளின் (அமெரிக்க விஞ்ஞானி)

ஆண்கள் கடவுள்களைப் படைக்கிறார்கள். பெண்கள் அவற்றை வணங்குகிறார்கள்.
- ஜேம்ஸ் ஜார்ஜ் ஃப்ரேசர் (அமெரிக்க மனித இன நூல் ஆசிரியர்)

இருப்பவையெல்லாம் கடவுள் அல்ல; இல்லாத ஒன்றே கடவுள்.
- கூர்மான்ட் (ஃப்ரெஞ்சு தத்துவ நூலாசிரியர்)

Read more: http://viduthalai.in/page-7/78880.html#ixzz2zHuUbI7c

தமிழ் ஓவியா said...

கண்டு முட்டு - கேட்டு முட்டு!

வைணவர்களில் இருக்கின்ற இருபிரிவாளர்களான வடகலை நாமக்காரர்களும், தென்கலை நாமக்காரர்களும் ஒருவரையொருவர் பார்த்துவிட்டாலே - அதாவது தென்கலை நாமம் போட்டிருப்பவரை வடகலை நாமம் போட்டிருப்பவர் நேரிடையாகக் கண்டுவிட்டாலும், வடகலை நாமம் போட்டிருப்பவரை தென்கலை நாமம் போட்டிருப்பவர் நேரிடையாகக் கண்டுவிட்டாலும் - அந்த பாவத்தைப் போக்க சுவற்றிலே போய் முட்டிக் கொள்வார்களாம் - இவர்கள் கண்டு முட்டுகள் ஆவார்கள்!

சைவர்களும், வைணவர்களும் ஒருவரையொருவர் எதிர்ப்பாகக் கருதி வந்தனர் அந்தக் காலத்தில் - அப்படி இருக்கும்போது சைவர்கள் செல்லும் வழியில் - செல்லும் போது வைஷ்ணவக் கடவுளைப் பற்றி பெருமையாகவோ, புகழ்ந்தோ பேசுவதைக் காதாலோ கேட்டுவிட்டாலும், அதே போன்று வைஷ்ணவர்கள் காதில் படும்படி சைவர்கள் தங்கள் கடவுளைப்பற்றி பெருமையாகவோ, புகழ்ந்தோ பேசுவதைக் கேட்டுவிட்டாலும் அந்தைப் பாவத்தைப் போக்குவதற்கு சுவற்றிலே போய் முட்டிக் கொள்வார்களாம் - இப்படி செய்வதை கேட்டு - முட்டு என்பர்.

இப்படி கண்டு முட்டு, கேட்டு முட்டுகளைப் போன்று இன்றைய அரசியல் கட்சிக்காரர்கள் எதிர்ப்பாக நடந்து கொள்கின்றனர்.
(10.10.1977 அன்று கடலூர் திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி உரையிலிருந்து)

தகவல்: துரை.சந்திரசேகரன்

Read more: http://viduthalai.in/page-7/78880.html#ixzz2zHudTgpt

தமிழ் ஓவியா said...

விஞ்ஞான முடிவுக்கு எதிரானவை

அறிவாளிகள் ஒரு விஷயத்தின் எல்லா அம்சங் களையும் கவனமாக பரிசீலிக்காமல் அதைப்பற்றி முடிவு கூறமாட்டார்கள். மூடர்களும், கோழைகளும், சிந்திக்கத் தயங்குகிறவர்களும்தான் - குழந்தை பருவத்தில், அறிவு முதிர்ச்சியில்லாத காலத்தில், காரணத்தோடு புரிய முடியாத போது தங்களின் பெற்றோர்களாலும், ஆசிரி யர்களாலும் திணிக்கப்பட்ட மூடக் கொள்கைகளைக் கண்ணை மூடிக் கொண்டு ஏற்கிறார்கள்.

உலகிலுள்ள 80 கோடி இஸ்லாமியரும் வான மண்டல தூதுவரால் குர்-ஆன் அளிக்கப்பட்டதாக நம்புகிறார்கள்; 34 கோடி இந்துக்களும் தங்கள் கடவுளரில் ஒருவனான சிவனுக்கு ஆறு கைகள் இருப்பதாக நம்புகிறார்கள்; 16 கோடி பவுத்தர்களும் மறுபிறவு உண்டென்று நம்புகின்றனர் 91 கோடி கிறிஸ்துவரும் கடவுள் ஆறே நாட்களில் உலகைப் படைத்தான் என்று நம்புகின்றனர்.

இப்படியெல்லாம் நம்புவதற்கு விஞ்ஞான ரீதியான சான்று எதுவும் இல்லை. அறிவைக் கொண்டு இதுவரையில் காணப்பட்ட உண்மைகளுக்கு இவை நேர் விரோத மானவை என்பதை விஞ்ஞானம் காட்டி விட்டது.

- ஜேம்ஸ் ஹார்வி ஜான்சன்

Read more: http://viduthalai.in/page-7/78880.html#ixzz2zHumGwZ4

தமிழ் ஓவியா said...


அம்மையாரை அம்பலப்படுத்தும் அண்ணா திமுக ஏடு


ஈழத் தமிழர்களுக்காக ஆட்சியை இழந்தது திமுக என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சொல்லிவிட்டாராம்.
அதிமுக ஏடான நமது எம்.ஜி.ஆர். சும்மா இருக்குமா? விட்டேனா பார்? என்று எகிறிக் குதிக்கிறது.

முடிந்தால் காரணா காரியத்தோடு மறுக்க வேண்டும். முடியாவிட்டால் மூலையில் போய் முடங்கிட வேண்டும். ஏன் வீணாக அரட்டைக் கச்சேரி நடத்த வேண்டும்?

பதினெட்டு கடல்மைல் தொலைவில் பல்லாயிரம் உயிர்கள் அய்யோ என ஓலமிட்டு எழுப்பிய மரண ஒலியை, அன்றாடம் பாராட்டு விழாக்கள் நடத்தி, அதில் எழுந்த ஜால்ரா சத்தத்தின் மூலம் மறைத்து விட்ட மாபாதகன் கருணாநிதி என்று எழுதுகிறதே - எதற்காக?

கண்ணாடி மாளிகையிலிருந்து கற்கோட்டை நோக்கிக் கல் எறியலாமா?

போரை நிறுத்த வேண்டும் என் பதன் மூலம் கருணாநிதி விடுதலைப் புலிகள் அமைப்பைக் காப்பாற்றுவதற் கான முயற்சியில் தற்போது ஈடுபட்டு இருக்கிறார் - இது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல என்று சொன்னவர் யார்? அம்மையார் ஜெயலலிதா தானே, இதனை வெளியிட்டதும் இதே நமது எம்.ஜி.ஆர்ஏடு தானே! (16.10.2008).

இதன் மூலம் என்ன தெரிகிறது? ஈழத்தில் போரை நிறுத்த வேண்டும் என்று கலைஞர் வற்புறுத்தி இருக்கிறார் என்பதையும், அப்படிப் போரை நிறுத்தக் கூடாது என்று ஜெயலலிதா கூறியிருக் கிறார் என்பதையும், நமது எம்.ஜி.ஆர் ஏடே ஏற்றுக் கொண்டு இருக்கிறதே!

18 கடல் மைல் தொலைவில் பல்லா யிரம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்துக் கண்ணீர் வடிக்கிறதே நமது எம்.ஜி.ஆர். - அந்தப் பல்லாயிரம் உயிர் கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத் தியவர்தானே செல்வி ஜெயலலிதா!

ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும் போது அப்பாவி மக்கள் கொல்லப் படுவார்கள் - இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல - என்று ஜெயலலிதா சொல்லவில்லையா? அப்படி சொன்னதை இதே நமது எம்.ஜி.ஆர். ஏடும் (18.1.2009). கொட்டை எழுத்தில் பொறிக்க வில்லையா?

கூட இருந்தே குழி பறிக்கும் என்பார் கள்; நமது எம்.ஜி.ஆர் ஏட்டின் எழுத் தாளர்கள் இதைத்தான் செய்து கொண்டு இருக்கிறார்களோ என்று சந்தேகப்பட வேண்டியுள்ளது.

அம்மையாரை அம்பலப்படுத்த வைப் பதில் அவர்களுக்கு அப்படி என்னதான் தீராத ஆசையோ!

Read more: http://viduthalai.in/page-8/78890.html#ixzz2zHv0aT8x

தமிழ் ஓவியா said...


நடிகர்கள் - பதில் சொல்லியாக வேண்டும்!


ஒரு நாள் ரஜினி சந்திப்பு! - இன்னொரு நாள் நடிகர் விஜய் சந்திப்பு! ஆக மோடி தேர்தல் நடிகர் ஆகி? இருக்கிறார் என்பதுதானே இந்த நாடகத்தின் பின்னணி. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்! சம்பிரதாய சந்திப்பாம்! சொல்லுகிறார்கள்; படிப்பவர்களின் காதுகளில் பூ சுற்றுகிறார்கள்! நேரடியாகச் சொல்லத் தைரியம் இல்லை - இதில் யாருக்கும் வெட்கம் இல்லை!

தமிழ்நாட்டு மக்கள் ஒன்றும் ஏமாந்த சோணகிரிகள் அல்லர்.

இந்தத் தமிழ்நாட்டு நடிகர்களும் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்துத்துவாவைக் கையில் எடுத்துக் கொண்டு, மதவாதத்தைத் திணித்து மக்கள் மத்தியில் கல வரத்தை உண்டு பண்ணத் திட்டமிட்ட மதவெறியர் களுக்கு ஒரு வகையில் துணை போயிருக்கிறார்கள் இந்த நடிகர்கள் என்பதை மறக்க வேண்டாம்!

இந்தத் தவறுக்குப் பின்னொரு காலத்தில் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டிய நிலை ஏற்படும்! - சிறுபான்மை மக்கள் மத்தியிலும் மதச்சார்பற்ற எண்ணங்கொண்ட மக்கள் மத்தியிலும் இவர்களுக்குரிய இடம் என்ன? ஏன் இந்த விஷப் பரிட்சை?

Read more: http://viduthalai.in/page-8/78888.html#ixzz2zHvL8ukw

தமிழ் ஓவியா said...


தனியார் துறையில் இட ஒதுக்கீடு - நந்தன் நிலகேனி -


பெங்களூரு, ஏப். 18- தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீட்டின் அவசியம் குறித்து பெங்களூரு காங் கிரஸ் வேட்பாளர் நந்தன் நிலகனி கருத்துக் கூறி யுள்ளார்.

தனியார் துறையில் இட ஒதுக் கீடு அவசியம் என்ற குரல் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு முற் போக்கு அரசியல் தலை வர்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது. இன்போ சிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் என்ற முறையில் இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

சமூகத்தில் குறிப்பிட்ட சில வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளும் பல நூற்றாண்டுகளாக திட்ட மிட்டு மறுக்கப்பட்டிருக்கிறது. அதனை ஈடுசெய்வதற்கா கவே டாக்டர் அம்பேத்கர் பொதுத் துறையில் இடஒதுக் கீடு முறையை கொண்டு வந்தார். எனினும், பின்தங் கிய மக்களால் இன்னும் முன் னேற முடியாத நிலையே இருக்கிறது.

பொதுத்துறை யைப்போல தனியார் துறை யிலும் இட ஒதுக்கீடு முறையை கொண்டு வர வேண்டும். நாட்டின் வளர்ச்சி என்பது அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியே தவிர, ஒரு குறிப் பிட்ட மக்களின் வளர்ச்சி மட்டுமல்ல.

எனவே வேலை வாய்ப்பை உருவாக்கும் தனி யார் நிறுவனங்கள் சமூகத் தில் ஒடுக்கப்பட்டவர்களுக் கும், பெண்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-8/78886.html#ixzz2zHvTbXb3

தமிழ் ஓவியா said...

முஸ்லிம்கள் மீதான மோடியின் அன்பு போலியானது: அகிலேஷ்

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, முஸ்லிம்கள் மீது காட்டி வரும் அன்பு போலித் தனமானது என்று உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் சாடினார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹார்டோயில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசும்போது, "மோடிக்கு தேர்தல் நேரத்தில் தான் முஸ்லிம்களின் ஞாபகம் வருகிறது. அவர் முஸ்லிம்கள் மீது தற்போது காட்டி வரும் அன்பு போலியானது.

முஸ்லிம்கள் தன்னை நேரில் பார்த்தால், என்னை விரும்ப ஆரம்பித்து விடுவர் என்று நேற்றுகூட அவர் பேசியுள்ளார். ஆனால், முஸ் லிம் மக்கள் மோடியையும், பாஜக தலைவர் களையும் நம்பிவிடக் கூடாது.

காங்கிரஸின் தவறான கொள்கைகளால் மட்டுமே பாஜக என்ற கட்சி இன்னும் இருக் கிறது. தற்போது ஒரு பக்கம் மதவாத சக்திகளும், மறுபக்கம் சோசலிச சிந்தனையாளர்களும் இருக்கின்றனர்.

இதில், யாரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்கால் மட்டுமே நாட்டின் நலனை காக்க முடியும் என்றார் அகிலேஷ் யாதவ்.

Read more: http://viduthalai.in/page-8/78884.html#ixzz2zHvdsM50

தமிழ் ஓவியா said...

கார்ப்பரேட், மதவாத சக்திகளின் பொது வேட்பாளர் நரேந்திர மோடி: பிரகாஷ் காரத் தாக்கு

பாஜக பொது வேட்பாளர் நரேந்திர மோடி கார்பரேட் நிறுவனங்கள், மதவாத சக்திகளின் பொது வேட்பாளர் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தெரி வித்துள்ளார்.

வாரணாசியில் செய்தியாளர்களிடம் வியாழக் கிழமை அவர் கூறியதாவது:

நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் பொது வேட்பாளரை நிறுத்தலாம் என்று முதலில் ஆலோசிக்கப்பட்டது.

அதற்காக காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத் தினால் மார்க்சிஸ்ட் வேட்பாளரை திரும்பப் பெற்றுக் கொள்ள தயாராக இருந்தோம். ஆனால், கட்சிகளிடம் கருத்தொற்றுமை ஏற்பட வில்லை.

இந்திய வரலாற்றில் முதல்முறையாக கார்ப் பரேட் நிறுவனங்கள் அனைத்தும் மோடியை ஆதரிக்கின்றன. இதற்கு முன்பு காங்கிரஸை ஆதரித்த கார்பரேட் நிறுவனங்கள் இப்போது மோடிக்கு ஆதரவாக மாறியுள்ளன. கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் மதவாத சக்திகளின் பொது வேட்பாளராக மோடி உள்ளார்.

வாரணாசியில் மோடி நிறுத்தப்பட்டிருப் பதன் மூலம் மதத்தின் அடிப்படையில் வாக் காளர்களை ஈர்க்க பாஜக, ஆர்.எஸ்.எஸ். திட்ட மிட்டிருப்பது தெளிவாகிறது.

இந்த நேரத்தில் விவசாயிகள், தொழிலா ளர்கள், இளைஞர்கள், மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து பாசிச, முதலாளித்துவ, மதவாத சக்தியை எதிர்த்துப் போராட முன்வர வேண் டும். வாரணாசியில் மோடியை தோற்கடிக்க வேண்டும் என்றார்.

Read more: http://viduthalai.in/page-8/78884.html#ixzz2zHvjIFHs