Search This Blog

22.4.14

பிராமணனுக்கும் சூத்திரனுக்கும் அடையாளம் என்ன? - பெரியார்


சூத்திரன் பிராமணன்
(கேள்வி - பதில்)
                                                                                 


வாத்தியார்:- 'சூத்திர'னுக்கும் 'பிராமண'னுக்கும் உள்ள பேதத்தை சொல்லு பார்ப்போம்?

மாணவன்:- சூத்திரனுக்குத் தன் இனத்திற்கு அல்லது ஜாதிக்கு என்று குறிப்பிட்ட பழக்க வழக்கம் ஆச்சார அனுஷ்டானம் கிடையாது. கொஞ்சம் விவரம் தெரிந்தவர்களுக்குள் தாங்கள் சைவர்களா, வைணவர்களா என்ற சமய உணர்ச்சி உண்டு. சிலருக்குச் சூத்திரர்களில் தாங்கள் கீழ்ஜாதியா மேல் ஜாதியா என்ற வகுப்பு உணர்ச்சி உண்டு. இவர்களில் பெரும்பாலோருக்கு வைணவம் என்றால் என்ன? சைவம் என்றால் என்ன? இரண்டிற்கும் என்ன பேதம்? எது மேலானது? இவைகளில் ஒன்றை உரிமையாக்கிக் கொள்வதில் பயன் என்ன? அவைகளைக் கடவுளாகவோ சமயமாகவோ கொள்வதில் பயன் என்ன? என்பன போன்றவைகள் ஒன்றும் தெரியாது.

பிராமணனுக்கு இவையெல்லாம் தெரியும். தெரியாவிட்டாலும் இவைகளால் தனக்கு உள்ள பயன் நன்றாகத் தெரியும்.

வாத்தியார்:- பிராமணனுக்கும் சூத்திரனுக்கும் அடையாளம் என்ன?

மாணவன்:- பிராமணன் தன்னைப் பிராமணன் என்று நினைத்துக் கொண்டு சில தனி உரிமைகளை அனுபவிப்பதும், அதற்கு ஏற்றபடி நடிப்பவனுமாவான்.

சூத்திரன் தன்னைச் சூத்திரன் என்பதாக நினைத்துக் கொண்டு அதற்கு ஏற்ப பிராமணனுக்குப் பயன்படும்படி நடந்து கொண்டு தன்னுடைய இழிவையும் இழி நிலையையும் பற்றிக் கவலையோ மானமோ இல்லாமல் இருப்பவனுமாவான்.

வாத்தியார்:- சூத்திரனுக்குத் தன் இழிநிலைப்பற்றி மானத்தைப் பற்றிக் கவலை இல்லை என்பதற்கு என்ன  உதாரணம்?

மாணவன்
:- சூத்திரன் "பிராமணன் தன்னைவிட மேல் சாதி" என்பதை மனம் வாக்கு காயங்களால் ஒப்புக் கொள்கிறான்.

அவனைச் சாமி என்று அழைப்பதோடு, அவனை மரியாதையோடு பன்மையிலேயே பேசுகிறான்! இந்தப் பழக்கம் சூத்திரர்களில் எல்லா பெரிய மனிதர், படிப்பாளி, பணக்காரர் என்பவர்கள் முதல் எல்லோரிடமும் இருக்கிறது.

உதாரணமாக, ஒரு சூத்திரன் தன்னிடம் வேலைக்கு இருக்கும் 'பிராமணனை' சாமி, வாங்க, போங்க, வாரும், போம் அய்யரே என்று பன்மையில் தான் பேசுகிறார்.

ஒரு போலீசு டிப்டி சூப்ரண்டு (காவல்துறைக் கண்காணிப்பாளர்) ஒரு பிராமண கான்ஸ்டேபிள், தலைமை கான்ஸ்டேபிளைப் பன்மையில்தான் பேசுகிறார். பிராமண சமையற்காரனை அவனது எஜமான் பன்மையில் தான் பேசுகிறார்.

சூத்திரப் பெண்கள் எல்லாம் பிராமணனை வெகுமரியாதையாகப் பேசுகிறார்கள்.

கோவில்களில் 'பிராமணர்கள்' மேல் தாங்கள் பட்டுவிட்டால் தோஷம் என்று கருதுகிறார்கள்.

கல்யாணம், கருமாதி, காரியங்களில் அவர்களின் கால்களில் விழுந்து கும்பிடுகிறார்கள்.

பிராமணர்களுக்குக் கூட்டங்களில் முதலில் மரியாதை செய்கிறார்கள்.

100-க்கு 60 பேர் பிராமணர்கள் வீட்டில் சாப்பிடுவதை உயர்வு என்று கருதுகிறார்கள்.

சூத்திரன் வீட்டுக் கல்யாணம், கருமாதி, பிள்ளைப்பேறு, சாந்தி, குடிபுகுதல் முதலிய சமுதாயக் காரியங்களுக்குப் பிராமணனைக் கொண்டு செய்வது மேல் என்று கருதி அவனை மரியாதை செய்கிறான். அவனை வைத்துச் செய்து கொள்கிறான்.

பிராமணனேதான், பூஜை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருக்கின்ற கோவில்களுக்குச் சென்று வெளியில் இருந்து சாமியை வணங்குகிறான்.

பிராமணன், தான் மேலான ஜாதி என்று உரிமை கொண்டாடுவதைச் சூத்திரன் பொறுத்துக் கொண்டு அனுமதித்துக் கொண்டு இருக்கிறான்.

பிராமணன் உயர்ந்தவன், சூத்திரன் தாழ்ந்தவன் என்று குறிப்பிட்டிருக்கிற நூல்களையெல்லாம் தனது சமய நூல்களாகவும், தனது கடவுள் தன்மை வாய்ந்ததாகவும், புண்ணிய நூலாகவும் கருதி அவைகளுக்கு மரியாதை செய்கிறான்.

ஜாதி முறையை வெறுத்த சூத்திரன், அதை ஆதரிக்கும் புராண இதிகாசங்களைவெறுத்த சூத்திரன் சூத்திரன்களில் 1000-க்கு ஒருவர் கூட கிடையாது.

பிராமணன் மேல் ஜாதி என்பது 100-க்கு 99 சூத்திரர்களின் இரத்தத்தில் ஊறிப் போய் இருக்கிறது. சாதாரணமாகச் சூத்திரர்கள் சங்கராச்சாரியை மதிக்கிற அளவுக்குப் பண்டார சன்னிதிகளை மதிப்பதில்லை.

சாதாரணமாக, சூத்திரர்கள் பிராமணனுக்கு உதவி பண்ணுகிற அளவு பிச்சை கொடுக்கிற அளவு - சூத்திரனுக்குக் கொடுப்பதில்லை.

சாதாரணமாக, மேல் தரத்தில் உள்ள சூத்திரர்கள் பிராமணன் வீட்டில் சாப்பிடுவது போல் அவன் ஓட்டலில் பலகாரக் கடையில் சாப்பிடுவது போல் சூத்திரன் வீட்டில் ஓட்டலில் சாப்பிடுவது இல்லை.

பார்ப்பனன் இடமும், பிராமணனுக்குக் கீழும் இருக்கும் ஆண்கள் எல்லோரும் அவனை சாமி என்றே தான் அழைக்கிறார்கள். அந்தப் பிராமண வீட்டார்கள் தங்களை இழிவாய் கீழாய் நடத்துவதை எல்லா சூத்திர ஆள்களும் பொறுத்துக் கொள்கிறார்கள்.


-------------------------------- பெரியார் ஈ.வெ.ரா உரையாடல்-"விடுதலை", 23.07.1950

25 comments:

Unknown said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

தமிழ் ஓவியா said...


ஹைடெக்கில் பாஜக-அதிமுகவின் மறைமுக பண பட்டுவாடா!


ஹைடெக்கில் பாஜக-அதிமுகவின் மறைமுக பண பட்டுவாடா!

சென்னை, ஏப்.22- தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை முறைகள் அமலில் உள்ளன என்று சாலைகளில் செல் வோர் அனைத்துத் தரப்பினரிடமும் சோதனை என்கிற பெயரில் கெடுபிடிகள். ரயில் பயணிகளிடம், வியாபாரிகளி டம் கெடுபிடிகள் ஏராளம். நள்ளிரவு நேரங்களிலிருந்து விடியவிடிய தொடர்ந்து தேர்தல் பணியில் உள்ள அதிகாரி கள் ஓய்வின்றி இக்கெடுபிடிகளின்மூலம் பறி முதல் செய்துள்ள தொகையே பல கோடியை எட்டியுள்ளது.

இந்நிலையில் பாஜகவை ஆதரிக்கக் கோரும் ஒரு குறுஞ்செய்தி அலைபேசியில் வருகிறது.

Vote for BJP(modi) send this ur frnds and get Rs.551.49 blnc. Free electn offr. Not a joke see NDTV(24hrs)

[Vote for BJP(modi) send this your friends and get Rs.551.49 balance.Free election offer. Not a joke, see NDTV(24hours)]

பாஜகவுக்கு(மோடிக்கு) வாக்களியுங்கள், இச்செய் தியை உங்கள் நண்பர்கள் 15பேருக்கு அனுப்புங்கள். ரூபாய் 551.49 தொகை கிடைக்கும். இலவச தேர்தல் சலுகையாகும். கேலிக்காக அல்ல. 24 மணி நேர என்டிடிவி யைப் பாருங்கள் என்று அச்செய்தியில் உள்ளது. அச்செய்தியை 15 நண்பர்களுக்கு அனுப்பினால், ரூபாய் 551.49 குறுஞ்செய்தியை அனுப்பியவரின் எண் ணுக்கு பணம் ஏற்றப்படுகிறதாம்.

மேலும், இதேபோல் அதிமுகவை ஆதரிக்கிறீர்களா என்று கேட்டுவிட்டு, ஆம் என்றால் அந்த உறுதியின் பேரில் அவருடைய எண்ணுக்கு ரூபாய் இருநூறு உடனடி யாக போய்ச்சேருகிறதாம். இச்செயல்கள் தேர்தல் ஆணையத்தின் கண்ணில் மண்ணைத்தூவிவிட்டு தேர்த லில் வாக்குக்குப் பணம் அளிப்பதாகவே உள்ளது என்று பொதுமக்கள்தரப்பில் கூறப்படுகிறது. இதுபோன்ற ஹைடெக் மோசடிகளைக் கண் காணித்து, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

மோடியின் குஜராத்தில் பணம் பறிமுதல்

அகமதாபாத், ஏப். 22- குஜராத் மாநிலத்தில் நரேந்திரமோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. அங்குள்ள அகமதாபாத் நகர் இசான்பூர் பாலத்தில் நேற்று முன்தினம் மாலை தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது, ஒரு பையில் ரூ. ஒரு கோடி ரொக்கப்பணம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து காரில் இருந்த மாநகர பா.ஜனதா நிர்வாகிகள் 3 பேரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அதில் ரூ.50 லட்சத்துக்கான ஆவணங்களை அதிகாரிகளிடம் கொடுத் தனர். மீதம் ரூ. 50 லட்சத்துக்கான விளக்கத்தை அவர்கள் அளிக்காததால், அந்தப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வாக்காளர்களுக்கு அளிப்பதற்காகக் கொண்டு போகப்பட்டதாகக் கருதப்படுகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/79076.html#ixzz2zfUyKZjW

தமிழ் ஓவியா said...


கேள்விப்பட்டதுண்டா?

விவசாயத்தில் 12 சதவிகிதம் சரிவைக் கண்டது அ.இ.அ.தி.மு.க ஆட்சி; இப்படியிருக்க, இந்தியாவிலேயே வளர்ச்சி தமிழ்நாட்டில் தான் என்று உண்மைக்கு மாறாகப் பேசும் முதலமைச்சர் - ஜெயலலிதாவைப் போல் வேறு எங்கும் கேள்விப்பட்டதுண்டா?

Read more: http://viduthalai.in/e-paper/79077.html#ixzz2zfV7Tkqp

தமிழ் ஓவியா said...

ஜாதீய மரபணுவைக் கண்டுபிடித்த கட்காரி


பி.ஜே.பி.யின் முன்னாள் அகில இந்தியத் தலைவர் நிதின்கட்காரி பிகார் தலைநகரமான பாட்னாவில் கடந்த 19 ஆம் தேதியன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய கருத்து ஒரு சர்ச்சைப் புயலைக் கிளப்பியுள்ளது.

சிலர் வாயைத் திறந்தாலே - அதற்குள் அவர்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் துகள்களும் இருப்பதுண்டு. இப்படி அடிக்கடி சர்ச்சைகளில் மாட்டிக்கொள்பவர் களுள் இவரும் ஒருவரே!

பிகாரின் மரபணுவில் ஜாதீயம் கலந்துள்ளது. அத னால்தான் பிகாரில் ஜாதீயத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதே சமயம் பா.ஜ.க.வில் ஜாதீயத் துக்கு முக்கியத்துவம் கிடையாது. ஜாதீயத்துக்கு எதிரான கட்சி பி.ஜே.பி. என்று கூறியுள்ளார்.

கட்காரியின் இந்தப் பேச்சைக் கண்டித்து பிகார் மாநில காங்கிரஸ் தலைவர் பிரேம் சந்த் மிஸ்ரா பதிலடி கொடுத்துள்ளார். அவரது பேச்சுமூலம் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகியவை பிகார் மக்களுக்கு எதிரா னவை என்பது தெளிவாகியுள்ளது. அவரது பேச்சுக்காக பிகார் மக்களிடம் பா.ஜ.க. மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

பிகார் அய்க்கிய ஜனதா தளத்தின் செய்தித் தொடர் பாளர் ராஜீவ் ரஞ்சனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்து பிகார் மக்களை நிதின்கட்காரி அவமதித்துவிட்டார். இதுகுறித்து எழுத்துப்பூர்வமாக தேர்தல் ஆணையத்திடம் எங்கள் கட்சி புகார் செய்யும் என்று கூறியுள்ளார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பாகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிக்கலில் மாட்டிக் கொண்டதை உணர்ந்தே நிதின்கட்காரி வழக்கமாக பி.ஜே.பி. மற்றும் சங் பரிவார்க்காரர்கள் பின்பற்றும் அதே முறையைப் பின்பற்றியுள்ளார்.

பிகார் மாநில அரசியலில் ஜாதீயம் கலந்துள்ளது என்பதற்குப் பதிலாக மரபணுவில் ஜாதீயம் கலந்துள்ளது என்று தவறுதலாகக் கூறிவிட்டதாக பல்டி அடித்து விட்டார்.

இது ஏதோ வார்த்தைத் தவறி வரக் கூடியதல்ல - ஜாதீ யம் கலந்துள்ளது என்று சொல்லும்பொழுது மரபணு என்ற சொல் எப்படி வரும்? கொஞ்சம் அறிவைப் பயன் படுத்துபவர்களுக்கு இது எளிதில் விளங்காமல் போகாது.

பிகாரில் ஆட்சி அதிகாரம் என்பது பிற்படுத்தப்பட்ட வர்களின் கைகளில் இருந்து வருகிறது. இது இவர்களின் கண்களை உறுத்துகிறது என்பதுதான் உண்மை.

அதேநேரத்தில் பா.ஜ.க.வை எடுத்துக்கொண்டாலும், ஆர்.எஸ்.எஸ். உள்ளடக்கிய சங் பரிவார்களை எடுத்துக் கொண்டாலும், பெரும்பாலான நேரங்களில், பெரும் பாலும் பார்ப்பனர்களாகவேதான் இருந்து வருகிறார்கள் என்பது வெளிப்படையான ஒன்றாகும்.
ஆர்.எஸ்.எஸின் தலைவர்கள் பெரும்பாலும் சித்பவன் பார்ப்பனர்களாகத்தானே வந்திருக்கிறார்கள் - இரண்டொருவர்களைத் தவிர.

பா.ஜ.க. என்றாலே பார்ப்பனர்களின் கட்சி என்ற வெகுமக்களின் எண்ணத்தை மாற்றவேண்டும் என்பதற் காகவே தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர் களும் ஒரு காலகட்டத்தில் திணிக்கப்பட்டனர்.

கோவிந்தாச்சாரியாரின் சமுதாய விஞ்ஞானம் (Social Engineering) இது.

அப்படி வந்தவர்தான் அகில இந்திய பா.ஜ.க. தலை வர் பங்காரு லட்சுமணன்; ஆனால், அடுத்த தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்புக்கூட அளிக்கப்பட வில்லை.

தமிழ்நாட்டில் டாக்டர் கிருபாநிதியும் அவ்வாறு அமர்த்தப்பட்டவர்தான்.

எப்படியெல்லாம் அவர் அவமானப்படுத்தப்பட்டார் என்பதை, அவர் வெளிப்படையாகக் கூறிப் புலம்பி னாரே! பி.ஜே.பி.யின் தேசியக் குழு உறுப்பினர் இல.கணேசன், தன் கையைப் பிடித்துக்கூட முறுக்கினார் என்று கூறினார் என்றால் நிலைமையைத் தெரிந்து கொள்ளலாமே! பிறகு தி.மு.க.வில் சேர்ந்துவிட்டார்.

தமிழ் ஓவியா said...


நினைவிருக்கிறதா?

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த வீரையன் என்ற விவசாயி, பயிர் இழப்பும், கடன் சுமையும் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டார். முதல்வர் ஜெயலலிதா என்ன சொன்னார்?

வீரையன் குடிகாரர், சாராயம் குடித்து இறந்தார் என்று சொல்லவில்லையா?

அது தொடர்பாக கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்கள் செய்தியாளர்கள் கூட்டத்தில், தோழர் வீரையனின் மனைவியை அழைத்துப் பேசச் சொன்னாரே!

என் கணவருக்குக் குடிப்பழக்கம் கிடையாது - கடன் சுமை தாங்காமல்தான் தற்கொலை செய்துகொண்டார். இதை எந்தக் கோவிலில் வேண்டுமானாலும் சத்தியம் செய்து சொல்லத் தயாராக இருக்கிறேன் என்று சொன்னாரே!

அ.தி.மு.க. அரசு என்ன செய்தது?

தோழர் நல்லகண்ணுமீது, மான நஷ்ட வழக்குத் தொடர்ந்தது - இதுதான் அ.தி.மு.க. அரசு - பாடம் புகட்டுவீர்!

Read more: http://viduthalai.in/page-2/79084.html#ixzz2zfX07xz5

தமிழ் ஓவியா said...


கேள்விப்பட்டதுண்டா?

மக்களைச் சந்திக்காமல் தேர்தலுக்குத் தேர்தல் மட்டும் ஹெலிகாப்டரில் பறந்துவந்து எழுதி வைத்ததைப் படித்துவிட்டுச் செல்லும் முதலமைச்சர் ஒருவரைப்பற்றிக் கேள்விப்பட்டதுண்டா?

கேள்விப்படுவதென்ன - இப்பொழுது நேரிலேயே பார்த்துக்கொண்டு தானிருக்கிறோம் - அவர்தான் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா.

கேள்விப்பட்டதுண்டா?

யுத்தம் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று ஈழத்தில் இலங்கை அரசின் போரை நியாயப்படுத்திப் பேசிவிட்டு, இப்பொழுது ஈழத் தமிழர்கள் கொல்லப் பட்டதற்காகக் கண்ணீர்விடும் முதலமைச் சரைக் கண்டதுண்டா?

ஏனில்லை? இங்கே தமிழ்நாட்டில்தான் இருக்கிறார் - அவர்தான் புரட்சியைப் பெயருக்கு முன்னாள் ஒட்டி வைத்துக்
கொண்டுள்ள செல்வி ஜெயலலிதா.

Read more: http://viduthalai.in/page-6/79110.html#ixzz2zfYCsMb9

தமிழ் ஓவியா said...


சென்னையில்ஒருபுத்தகச்சோலை! அறிவுத்தேனருந்தவாரீர்!வாரீர்!!

இன்று உலகப் புத்தக நாள்! ஆங்கில மகாக் கவிஞன் ஷேக்ஸ்பியர் பிறந்த நாளை - உலகம் பொருத்தமாகப் புத்தக நாள் என்று கொண்டாடுகிறது. அந்த வகையில் சென்னை - இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் ஓர் அறிவுச்சோலை உங்களை அறிவுக்கரம் கொண்டு அன்பு தவழ, பொன்முறுவல் பூத்து அழைக்கிறது.

நீங்கள் அங்கு ஏன் வர வேண்டும்? அங்குதான் 200 புத்தக அரங்குகள் சங்கமித்துள்ளன.

சென்னையைச் சேர்ந்த பதிப்பகங்கள் மட்டுமல்ல; டில்லி, மும்பை ஆகிய மாநிலங்களிலிருந்தும் அரங்குகள் அமைந்துள்ளன.

தமிழ்நாட்டிலும் கோவை, மதுரை, ஈரோடு முதலிய மாவட்டங்களிலிருந்தும் பதிப்பகத்தார்கள் தங்கள் வெளியீடுகளை அணி வகுக்கச் செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் உலகப் புத்தக நாளையொட்டி சென்னை பெரியார் திடலில் சென்னை புத்தகச் சங்கமம் தொடங்கப்பட்டது.

பதிப்பகத்தார்கள் போட்டி போட்டுக் கொண்டு அரங்குகளை அமைக்க முன் வந்ததால், இடவசதி கருதி ஓய்.எம்.சி.ஏ. மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

விரிவான ஏற்பாடுகள், வந்தவர்கள் வியப்படைகிறார்கள் வாகனங்கள் நிறுத்தும் வசதிகள் எல்லாம் உண்டு.

நூறு தமிழ்ப் பதிப்பகத்தார்கள்
35 ஆங்கில நூல் வெளியீட்டாளர்கள்
10 மல்டி மீடியா நிறுவனங்கள்

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பல் துறை மணம் கமழும் நூல்கள் எனும் அறிவு சார் கருவூலங்கள்!

மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சி கள், பட்டிமன்றம், ஆய்வரங்கம், பொம்ம லாட்டம், பறை இசை எனும் செவி விருந்துகள்!

நாவிற்கு விருந்தில்லையா என்று கேட்டு விடாதீர்கள் - வந்து பாருங்கள் நேரில் அனுபவித்தால்தான் அதன் அருமை எத்தகையது என்பது விளங்கும்; ஏட்டுச் சர்க்கரை என்றால் இனிக்காதே!

10 முதல் 50 விழுக்காடு வரை (பழைய நூல்கள்) தள்ளுபடி செய்து தரும் நூல் களும் உண்டு.

விருந்தாகவும் - மருந்தாகவும் பயன் படக் கூடிய நூல்கள் அணி அணியாகக் கண்களையும், கருத்துக்களையும் பறிக் கின்றன.

தேர்தல் சந்தடியிலும்கூட குடும்பம் குடும்பமாக மக்கள் மொய்த்த வண்ணமே உள்ளனர். சென்னையின் நடுநாயகமான இடத்தில் இது அமைந்துள்ளதைப் பொது மக்கள் பாராட்டுகின்றனர்.

கற்றது கை மண்ணளவு

கல்லாதது உலகளவு

என்பதை மறந்து விடாதீர்கள்!

புத்தகத்தைப் படிப்பது குறித்து பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் கூறுவதைக் கவனியுங்கள்.

நீங்கள் எந்தப் புத்தகத்தைப் படித்தால்தான் என்ன பயன்? படிப்பது என்பது அறிவு உண்டாவ தற்கு. ஆனால், நீங்கள் படிக்கும் புத்த கம் எல்லாம் மடமை வளர்ச்சிக்கும், மூடநம்பிக்கை ஏற்படவும் பயன்படு கிறது. அதனால்தான் நம் மக்கள் பகுத்தறிவற்றிருக்கிறார்கள்.

நீங்கள் குடிஅரசு, பகுத்தறிவுப் பதிப்பக புத்தகம் வாங்கிப் படித்தால் கட்டாயம் பகுத்தறிவுவாதியாவீர்கள். இந்தப் புத்தகங்கள் மதம், ஜாதி நம் அரசியல் முதலிய துறைகளில் அவற் றில் உள்ள புரட்டுகளை விளக்கி உங் களைப் பகுத்தறிவுவாதிகளாக்கும்.

விலை மிக மிக மலிவுக்கு பொது நலத்தை முன்னிட்டே நட்டத்திற்கு பதிப்பிக்கப்படுகிறது!

1962இல் தந்தை பெரியார் அவர்களால் எழுதப்பட்டது இது பெரியார் இயக்க நூல்களும் இடம் பெறுகின்றன என்பதற்காக இதனைக் குறிப்பிடுகிறோம்.

மேலும் யார்க்கு எது விருப்பமோ அந்த வகையில் அறிவு ருசிக்கான நூல்கள் தடபுடலாக இருக்கின்றன. குழந் தைகள் முதல் தொண்ணூறைத் தாண்டும் முதியோர் வரை பலன் பெறும் பழ முதிர்ச்சோலை இது!

18ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்தப் புத்தகச் சங்கமம் 27ஆம் தேதி முடிய நடைபெற உள்ளது. பெரியார் சுயமரியா தைப் பிரச்சார நிறுவனமும், தேசிய புத்தக நிறுவனம் (ழிஙிஜி) இணைந்து நடத்துகின் றன காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வீர்!
கடைசியாக ஒரு கொசுறு.

நண்பர் ஒருவர் ஆப்ரகாம் லிங்கனி டம் படிப்பதால் பணம் கொட்டப் போவதில்லை; பின் ஏன் நீங்கள் எப்போதும் படித்துக் கொண்டே இருக்கிறீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு லிங்கன் நான் பணம் சேர்ப்ப தற்காகப் படிக்கவில்லை. பணம் வரும் போது எப்படிப் பண்போடு வாழ வேண் டும் என்பதைத் தெரிந்து கொள்வதற் காகப் படித்துக் கொண்டிருக்கிறேன் என்றார். பல ஆண்டுகள் கழித்து அமெ ரிக்கக் குடியரசுத் தலைவராக ஆன பிற கும்கூட இதே பணிவோடுதான் இருந்தார்.

இதற்குமேல் எந்த எடுத்துக்காட்டு தேவை?

நல்லதோர் வாய்ப்பெனும் விருந்து நழுவ விடலாமா! இடையில் இன்னும் நான்கு நாள்களே!

- கவிஞர் கலி. பூங்குன்றன்

Read more: http://viduthalai.in/page-2/79122.html#ixzz2ziZULGR2

தமிழ் ஓவியா said...


நாட்டோரே, நல்ல தீர்ப்பு வழங்குவீர்!


ஜனநாயகத்தை பணநாயகமாக மாற்ற அனுமதிக்கலாமா?

தேர்தல் ஆணையமும், காவல்துறையும் ஆளும் கட்சிக்குச் சாதகமான நிலை!

நாட்டோரே, நல்ல தீர்ப்பு வழங்குவீர்!

ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை அமோக மாக வெற்றி பெற வைக்க, தமிழக மக்கள் - குறிப்பாக வாக்காளர்கள் தயாராகியுள்ள நிலையில், ஆளும் கட்சி சார்பில் ஆங்காங்கு பண மழை பொழியத் துவங்கி இரண்டு நாள்கள் ஆகின்றன! தஞ்சை, நீலகிரி, வடசென்னை - முதலிய தொகுதிகள் உட்பட விலையில்லாத மதிப்புள்ள வாக்குகளை 500, 1000 ரூபாய்களுக்கு விலை வைத்து வாங்கி விடுவதன் மூலம் தேர்தலில் தங்களைத் தழுவும் தோல்வியைத் தடுக்கலாம் என்று அந்த முறையைக் கையாண்டு வருகின்றனர்.

எவ்வளவு எதிர்ப்புக் காட்டப்பட்டாலும், காவல்துறை, தேர்தல் ஆணையம் கண்டும் காணாதவர்களைப் போல் ஆளும் அ.தி.மு.க. அணிக்கே சாதகமாக உள்ளார்கள்.

புகார் தருகின்ற தி.மு.க. மற்ற கட்சி நண்பர்கள் மீதே பொய் வழக்கும் போடத் தவறுவதில்லை!

நாளை நடைபெறும் தேர்தலுக்காக 144 தடை உத்தரவா? பணம் பட்டுவாடாவுக்கு வசதியான ஏற்பாடா? என்பதே பலரின் கேள்விக் குறியாக உள்ளது!

ஜனநாயகத்தைப் பணநாயகமாக மாற்ற அனுமதிக்கலாமா?

வாக்காளர்களே, கடமையாற்றிட வேண்டிய காவல்துறையினரும், நீதியை நிலை நிறுத்தும் தேர்தல் கமிஷனும் இப்படி கண்டும் காணாத காட்சிகளை அரங்கேற்றலாமா?

நாளை நல்ல தீர்ப்பு வழங்குங்கள் வாக்காளர்களே!

ஜனநாயகம் காக்கப்பட வேண்டாமா?

Read more: http://viduthalai.in/e-paper/79128.html#ixzz2zlOODGuX

தமிழ் ஓவியா said...


அன்று கொலையாளி! இன்று.....?


கலவர பூமியில் கறைபடிந்த கத்தியுடன் ஆக்ரோசமாக காட்சிதரும் அசோக் மோச்சி, மனம் வருந்தி திருந்தி மாற்றம் பெற்ற மனிதனாய்..... மோச்சியின் வாக்குமூலம்: அன்று உற்சாகமாக கலவரம் செய்ய அழைக்கும் போது முதல் ஆளாக கலந்துகொண்டு வன்முறையில் ஈடுபடும் போது எதிரில் உள்ள இஸ்லாமியர்களின் முகத்தில் தெரியும் மரண பயத்தைக்கண்டு இரசித்து ஆரவாரம் செய்தவர்களில் நானும் ஒருவன். ஆனால், அன்று நான் எப்படி இருந்தேனோ அதில் சிறிதளவு மாறாமலேயே இன்றும் இருக்கிறேன்.

நான் சொல்வது கலவரம் செய்பவனாக அல்ல, என்னுடைய வாழ்வியல் அன்றுபோல் இன்றும் அன்றாட தேவைகளுக்கு கூட போராடும் ஒரு நிலையிலேயே தான் இருக்கிறேன். ஆனால் என்னைப்பயன் படுத்திக்கொண்டவர்கள் இன்று நாட்டின் உயர்பதவியைப் பிடிக்க, மீண்டும் என்னைப்போன்றே ஏமாந்த இளைஞர் கூட்டத்தை பயன்படுத்தி அதில் இவர்கள் குளிர்காய இன்றும் தங்களுடைய நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். ஆனால் அந்த இளைஞர்களிடம் இப்போது கூறினால் நிச்சயம் கருத்தில் கொள்ளமாட்டார்கள், என்னைப் போன்றே ஒரு நாள் அவர்களும் உணர்வார்கள் இப்போது அந்த இஸ்லாமியர்களை நேரில் பார்க்கும் போது ஏற்படுகின்ற குற்றவுணர்விற்கு அளவே இல்லை.

Read more: http://viduthalai.in/e-paper/79131.html#ixzz2zlOcPvoM

தமிழ் ஓவியா said...


இந்து மதத்தை முன்னிறுத்தி வாக்குக் கேட்கும் ஆர்.எஸ்.எஸ்.


போபால் ஏப்.23- மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை சமூகத் தினர் நூறு விழுக்காடு வாக்குகளை செலுத்தி வர லாறு படைக்க வேண் டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தீவிரப் பிரச்சா ரம் மேற்கொண்டு வருகிறது.

மத்தியப் பிரதேச மாநி லத்தில், பாரத் விஜய் அபி யான் என்ற தலைப்பில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பி னர் துண்டுப் பிரசுரங் களை விநியோகித்து வருகி ன்றனர்.

அதில் சிறுபான்மைச் சமூகத்தினரை திருப்திப் படுத்துவதற்காக, பெரும் பான்மைச் சமூகத்தினருக்கு அநீதி இழைக்கப்பட்டு வந்துள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ளது.

மேலும், பா.ஜ.க., காங் கிரஸ் கட்சிகளின் பெய ரைக் குறிப்பிடாமல், இது நாட்டில் தேசியவாத அரசு அமைவதற்கான தருணம்.

இந்த நாட்டை நீண்ட காலம் ஆட்சி செய்தவர்கள் ஏழ்மையில் தவிக்க விட்டு விட்டனர். சிறுபான் மையை திருப்திப்படுத்து வதிலேயே கவனம் செலுத் தினர். சிறுபான்மையினருக் காக பெரும்பான்மை சமூ கத்தை பிளவுபடுத்தினர். தற்போதைய தேர்தலில் இந்த நிலைமையை மாற் றிக் காட்ட வேண்டும்.

பெரும்பான்மை சமூ கத்தினர் நூறு விழுக்காடு வாக்குகளை ஒற்றுமையாக செலுத்தி வரலாறு படைக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

(இந்து என்று சொல் லாமல் மறைமுகமாக பெரும்பான்மையினர் என்று கூறும் தந்திரத்தைக் கவனிக்க வேண்டும்.)

Read more: http://viduthalai.in/e-paper/79132.html#ixzz2zlOmZMXE

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் மோடி ஆட்சிக்கு வருவது அபாயகரமானது! அண்டை நாடுகளிலும் பதற்றத்தை ஏற்படுத்தும்!


இங்கிலாந்தைச் சேர்ந்த 75 பேராசிரியர்கள், கல்வியாளர்கள் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை

இலண்டன், ஏப்.23- இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 75 கல்வியாளர்கள், பேராசிரியர்கள் நரேந்திர மோடி இந்தியாவின் பிரத மர் ஆனால் அது இந்தி யாவுக்கு ஆபத்து மட்டு மல்ல - மற்ற நாடுகளிலும் பதற்றத்தை ஏற்படுத்தும் என்று கையொப்பமிட்டு அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளனர். இந்தியாவைப் பூர்வீக மாகக் கொண்ட (இங்கி லாந்தில்) வாழ்ந்துவரும் கல்வியாளர்கள், அறிஞர் கள் இந்தியாவில் நடை பெறும் தேர்தல்குறித்து தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். பாஜக சார்பில் மோடி அதிகாரத் துக்கு வருவது மிகுந்த அச்சத்துக்கிடமானது என்று கூறுகின்றனர்.

75 பேராசிரியர்களும் கல்வியாளர்களும் மோடி அதிகாரத்துக்கு வரும் எண் ணமே எங்களை அச்சத்தில் மூழ்கடிக்கிறது என்கின் றனர். தி லண்டன் ஸ்கூல் ஆஃப் எகானமிக்ஸ் டுடே என்கிற இதழில் பேராசிரி யர் சேட்டன் பட், கவுதம் அப்பா ஆகியோர் தலை மையில் 75 பேராசிரியர்கள் மற்றும் இங்கிலாந்தில் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்க லைக்கழகத்தில் பணிபுரி பவர்கள் ஆகியோர் கூட் டாக வெளியிட்டுள்ள திறந்த மடலில் இந்தியாவில் நடைபெறும் தேர்தல் குறித்து தங்களின் கருத்தை வெளியிட்டுள்ளனர். அதை அப்படியே லண்டனிலி ருந்து வெளிவரும் தி இண்டிபென்டன்ட் இதழ் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தாவது: இந்தியாவில் அடுத்த அரசைத் தேர்வு செய்யுமிடத்தில் மக்கள் உள்ளனர்.

தமிழ் ஓவியா said...

மோடியின் தலைமையிலான பாஜக அரசு அமைந்துவிட்டால்

இந்தியாவில் ஜனநாய கம், பல்வேறு இனம், மொழி, கலாச்சாரம், பண் பாடுகள் என்று பிரிந்திருந் தாலும் அவற்றின்மீதான சகிப்புத்தன்மை மற்றும் மனித உரிமைகள் ஆகி யவை மிகுந்த சவாலுக்கு உள்ளாகும் என்பதை எண்ணி மிகவும் கவலை கொள்கிறோம் என்று கூறி யுள்ளனர்.

மோடியின் எண்ணங் கள் அதிகாரம் பெறுவது நம்மை அச்சத்தில் மூழ் கடிக்கிறது என்கிற தலைப் பிலான அக்கடிதத்தில்,

நரேந்திர மோடி ஹிந்துத் தேசியவாத அமைப்பின் வலையில் உள்ளவர். ஆர்.எஸ்.எஸ், சங் பரிவாரங்கள் கடந்த காலங்களில் சிறுபான்மை யருக்கு எதிரான வன்முறை யில் ஈடுபட்டுள்ளன. அண் மையில் பொதுமக்களுக்கு எதிரான தீவிரவாதத் தாக் குதல்களையும் நடத்தி உள் ளன என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

இம்மாதத் தொடக்கத் தில் இந்தியாவைச் சேர்ந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, நடிகர் அனீஷ் கபூர் மற்றும் பலரும் தி கார்டி யன் இதழில் எழுதியதன் தொடர்ச்சியாகவே இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் குறிப் பிட்டுள்ளதாக இன்டிபென் டண்ட் இதழில், குஜராத் தில் ஆட்சியிலிருந்தபோது நடைபெற்ற வன்முறை கள், பல்வேறு சம்பவங் களுக்கு மோடிதான் முழுப் பொறுப்பாளி என்று பல்வேறு தரப்பினரால் ஒப்புக்கொள்ளப்பட்ட தகவல்கள் வெளியாயின. மேலும், அவற்றுக்கு சாட்சி யாக தற்போதைய மூத்த பாஜக தலைவர்களின் பேச்சுக்களும் அமைந்துள் ளன. இந்த முறையிலான அரசு நிச்சயமாக ஜனநாய கத்தைப் பலவீனப்படுத்தி விடும். பொதுத்துறை நிறுவனங்கள் அதோ கதி!


அதோடு, மோடி-பாஜக வின் மாதிரி பொருளாதார வளர்ச்சி என்பது பெரிய வணிகர்களுடன் தொடர் புள்ளதே. பொதுத்துறை நிறுவனங்களை தனியா ருக்குத் தாரை வார்த்து, ஏழைமக்களுக்கு எதிராக வும், அவர்களை வாட்டி வதைப்பதற்கு ஒப்பாக வும், செல்வத்தையும், அதி காரத்தையும் பெரும் பணக்காரர்களிடம் ஒப் படைப்பதே ஆகும். மோடியின் வெற்றி என்பது நீதியின்மீது, அதன் கொள்கைகள்மீது விடுக் கப்படும் சவாலாகும். குறிப்பாக, மகளிர்மீதான தடைகள், கண்காணிப்பு கள் ஏற்படுத்தி, சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி விடும். இந்தியாவில் மட்டு மின்றி அண்டை நாடுகளி லும் அப்பதற்றம் ஏற் பட்டுவிடும் அபாயம் உள்ளது என்று கடிதத்தில் குறிப்பிடப்பட் டுள்ளது.

பிரிட்டீஷ் குறிப்பிடத் தக்க பல்கலைக்கழக மாகிய ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவரான பேரா சிரியர் நந்தினி கூப்து மற்றும் கேம்பிரிட்ஜ் பல் கலைக்கழகத்தில் பணிபு ரிபவராகிய ஜோயா சாட் டர்ஜி ஆகியோர் குறிப் பிட்ட தகவல்களை கல்வி யாளர்கள் கடிதத்தில் மீண் டும் குறிப்பிட்டுள்ளனர்.

பிரிட்டீஷ் இதழ்களி லும், பிற ஊடகங்களிலும் அதிக இடத்தை இக்கடி தம் பிடித்துள்ளது. இக் கடி தத்தில் குறிப்பிடப் பிட்டுள்ள படி,

13ஆண்டுகள் மேற்கு மாநிலமான குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த மோடி அரசின் அயோக் கியத்தனத்துக்கு ஆதார மாக கோத்ரா கலவரம் உள்ளது. 2002இல் குஜ ராத்தில் எல்லைகடந்த வன் முறையாக ஹிந்துக்களால் கலவரம் ஏற்பட்டு ஆயிரக் கணக்கிலானவர்கள் குறிப் பாக முசுலீம்கள் இறந் தனர். இந்த வன்முறை வெறியாட்டம் மோடியின் ஆட்சியில்தான் நடைபெற் றது. இந்த வன்முறையில் மோடியின் பங்கு குறித்து, வன்முறை சம்பவங் களுக்கு அனுமதியும், அவற்றை வேகப்படுத்தி யதுமான மோடியின் பங்கு கள் குறித்து மூத்த அதிகாரி கள், காவல்துறை அதிகாரி கள் ஒப்புதல் வாக் குமூலங் களில் தெரிவித்துள் ளனர். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/79127.html#ixzz2zlOvCOSO

தமிழ் ஓவியா said...


தி.மு.க. தலைவர் கலைஞரின் நன்றியும் - பாராட்டும்!


சென்னை, ஏப்.23- தேர்தல் பரப்புரைகளை சிறப் பாக செய்த பெருமக்களுக்கு நன்றியையும் பாராட் டுதலையும் தெரிவித்துள்ளார் தி.மு.க. தலைவர் கலைஞர்.

இதுகுறித்து இன்று (23.4.2014) முரசொலியில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தாவது:

நாளை தமிழகத்திலே நாடாளுமன்றப் பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. கடந்த இரண்டு மூன்று மாதங்களாக ஒவ்வொரு நாளும் நீர் பாய்ச்சி, இமையசைக்காமல் காப்பாற்றி, களைகளை நீக்கி, உரமிட்டு பயிர் வளர்த்து, உழைத்த உழைப்புக்கான அறுவடையை காணக்கூடிய நாள். நேற்று மாலையோடு ஒலிபெருக்கி வாயிலாகப் பிரச்சாரம் செய்வது முடிந்துவிட்டது.

நமது கழகத்தின் சார்பில் நானும், பொதுச் செயலாளர் க.அன்பழகனும் வயதையும், உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் எங்களால் முடிந்த அளவுக்குக் காரிலும், வேனிலும் பயணம் செய்து பிரச்சாரம் செய்திருக்கிறோம். இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் 90 வயதைக் கடந்தும் ஈடு பட்ட அரசியல் தலைவர்கள் இந்தியாவிலேயே நானும், க.அன்பழகனும், கேரளத்தில் அச்சுதானந் தமும்தான் என்று பத்திரிகைகளே சுட்டிக்காட்டி யிருந்தன.

கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. தமிழகம் முழுவ திலும் ஒரு தொகுதி பாக்கியில்லாமல், வேனி லேயே பயணம் செய்து பிரச்சாரம் செய்திருக்கிறார். இந்தத் தேர்தலில் அவருடைய பிரச்சாரம்பற்றி பாராட்டி எழுதாத ஏடுகளே இல்லை.

கழக ஆட்சியின்போது தமிழக மக்களுக்காக ஆற்றிய பணிகள், சாதனைகள்பற்றியும்; அ.தி.மு.க. ஆட்சி யின் நிர்வாக அலங்கோலங்கள், அவலங்கள் பற்றியும், ஒவ்வொரு கூட்டத்திலும் திரண்டு வந்த மக்களிடையே எளிதில் புரியும் வண்ணம் கழகப் பொருளாளர் தம்பி ஸ்டாலின் விளக்கிச் சொன் னதை நீயே நேரிலும் கண்டிருக்கிறாய்; கேட்டி ருக்கிறாய்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் கேள்வி களுக்கெல்லாம் அவ்வப்போது ஆணித்தரமாக வும், ஆதாரங்களுடனும் பதிலளித்திருக்கிறார்.

அடுத்து கழகத்தின் முன்னணித் தலைவர்கள், கலையுலகத்தினர், கழகச் சொற்பொழிவாளர்கள், பல் வேறு அணிகளைச் சேர்ந்தவர்கள், துணைப் பொதுச்செயலாளர்களான சகோதரி சற்குண பாண்டியன், வி.பி. துரைசாமி மற்றும் கவிஞர் கனிமொழி, ரகுமான்கான், திருச்சி சிவா, பேராயர் எஸ்றா சற்குணம், வாகை சந்திரசேகர், குஷ்பூ சுந்தர், கம்பம் செல்வேந்திரன், பேராசிரியர் சபாபதி மோகன், நூர்ஜகான் பேகம், சங்கரி நாராயணன், புலவர் இந்திரகுமாரி, புதுக்கோட்டை விஜயா, தஞ்சை கூத்தரசன், வி.பி.ராஜன், நெல்லிக்குப்பம் புகழேந்தி, திண்டுக்கல் லியோனி, குமரிமுத்து, வாசு விக்ரம், இனிகோ இருதயராஜ், மனுஷ்யபுத்திரன் மற்றும் தோழமைக் கட்சிகளின் முக்கிய தலைவர் கள் எல்லாம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள்.

முக்கியமாக திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஒரு நாள் கூட பாக்கியில்லாமல், தேர்தல் பயணத் தில் ஈடுபட்டு, கழகக் கூட்டணிக்கு வாக் களிக்க வேண்டியதன் அவசியத்தை அறிவியல் பூர்வமாக விளக்கிப் பேசியிருக்கிறார். துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் என்னுடன் சுற்றுப்பயணத்தில் உடன் வந்தார்.

அவர்களுக்கெல்லாம் கழகத்தின் தலைவர் என்ற முறையில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

முரசொலி , 23.4.2014

Read more: http://viduthalai.in/page-5/79113.html#ixzz2zlRhd578

தமிழ் ஓவியா said...


மதச் சண்டைக்குத் தூபம் போடுகிறார்கள்! பி.ஜே.பி.,பற்றி கலைஞர் பேட்டி

சென்னை, ஏப். 23- பி.ஜே.பி.யில் சில தலைவர்கள் மதச் சண்டைக்கு என்னென்ன வேண்டுமோ அதையெல்லாம் செய்கிறார்கள் என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர். நாட்டில் நல்லாட்சி அமைவதற்கு தி.மு.கழகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் நேற்று தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வதற்கு முன்பு அளித்த பேட்டியில் வேண்டுகோள் விடுத் துள்ளார்.

கலைஞர் அவர்கள் நேற்று (22.4.2014) காலை சென்னை யில் வீதி வீதியாகப் பிரச்சாரம் செய்வதற்காக தமது இல்லத்திலிருந்து புறப்பட்டார். அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டிவருமாறு:

செய்தியாளர்: வாக்காளர்களுக்கு ஏதாவது வேண்டு கோள் விடுக்கிறீர்களா?

கலைஞர்: நாட்டில் நல்லாட்சி அமைவதற்கு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கழகக் கூட்டணி வேட் பாளர்களை ஆதரித்து வாக்களிக்கவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

தேர்தல் ஆணையம் நடுநிலையாக நடக்கிறதா?

செய்தியாளர்: தேர்தல்ஆணையம் நடுநிலையாக நடக்கிறதா?

கலைஞர்: நடுநிலையா? நடுநிலை போல் நடிக் கிறார்களா? என்பது தெளிவாகத் தெரியவில்லை!

செய்தியாளர்: மோடிசிறந்த நிர்வாகம் படைத்தவர் இல்லை! தான்தான் சிறந்த நிர்வாகம் படைத்தவர் என்று ஜெயலலிதா நேற்று சொல்லியிருக்கிறாரே?

கலைஞர்: நிலைக் கண்ணாடி முன்னால் நின்று சொல்லியிருப்பார்.

செய்தியாளர்: தேர்தல்ஆணையம் எந்தத் தேர் தலிலும் இல்லாத வகையில் மக்களைப் பயமுறுத்து வதைப் போல 144 தடைவிதித்திருக்கிறார்கள் சி.பி.எம். போன்ற கட்சிகள் அதனை எதிர்த்து இருக்கின்றன. அது சம்பந்தமான உங்கள் கருத்து என்ன?

கலைஞர்: பயமுறுத்துவதைப் போலத் தெரிய வில்லை. எந்த எண்ணத்தோடு அதைப் பிறப்பித்திருக் கிறார்கள் என்று இப்போது கூற முடியாது.

மதக்கலவரத்தைத் தூண்டுதல்

செய்தியாளர்: இந்தியாவிலுள்ள பா.ஜ.க. தலை வர்கள், பிரவீன் தொகாடியா போன்றவர்கள் சிறு பான்மை மக்களுக்கு எதிராக கருத்து வெளியிட்டி ருக்கிறார்கள். அது அபாயகரமான விஷயமாக உள்ளது. நீங்கள் தமிழகத்தில் சிறுபான்மை மக்களின் ஆதரவோடு இந்தத் தேர்தலைச் சந்திக்கிறீர்கள். பா.ஜ.க.வினர் இவ்வாறு மோடி பிரதமரானால் இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுவார்கள் என்றெல்லாம் சொல்கிறார்களே?

கலைஞர்: அவ்வாறு ஒரு சிலர் பேசுகின்ற கருத்து களால் சிறுபான்மையினரை பயமுறுத்தும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. மத சண்டைக்கு என்னென்ன வேண் டுமோ அதையெல்லாம் செய்கிறார்கள். இந்தச் சூழலில் மதச்சார்பற்ற அரசு அமையவேண்டும் என்பதுதான் என்னுடையகருத்து.

தமிழ்நாட்டில் மோடி அலை இல்லை!

செய்தியாளர்: பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பெரிய அபாயம் என்றுநினைக்கிறீர் களா?

கலைஞர்: அப்படிக் கருதாமல் இருக்க முடியாது.

செய்தியாளர்: தமிழகத்தில் மோடி அலை இருப்ப தாக பா.ஜ.க.வினர் சொல்கிறார்கள். அப்படி மோடி அலை இருக்கிறதா?
கலைஞர்: தமிழகத்தில் அப்படி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் பேட்டியில் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-5/79114.html#ixzz2zlRtLVO9

தமிழ் ஓவியா said...


தேர்தல் துணுக்குகள்


மோடியை எதிர்த்தவர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டும் என்ற நஞ்சைக் கக்கிய பிஜேபி பிரமுகர் கிரிராஜ் பிரச்சாரத்துக்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

தமிழ்நாடு - 39, புதுச்சேரி - 1, மே.வங்காளம் - 6, உத்தரப் பிரதேசம் - 12, ராஜஸ்தான் -5, மகாராஷ் டிரம் - 19, மத்தியப் பிரதேசம் - 10, ஜார்க்கண்ட் - 4, காஷ்மீர் - 1, சத்தீஸ்கர் - 7, பீகார் - 7, அசாம் - 6 ஆகிய மாநிலங்களில் 117 தொகுதிகளுக்கு நாளை வாக்குப் பதிவு.

தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே முதன்முதலாக வாக்குப் பதிவையொட்டி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

புதுச்சேரி உள்பட தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது.

தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் திங்களன்று மட்டும் ஒரு நாள் பெருங்குடி மக்கள் வாங்கிய மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.173 கோடியாம்!

தேர்தல் பணிகளுக்காக தமிழ்நாட்டில் ஈடுபடுத்தப் பட்டுள்ள காவல் துறையினர் 1.43 லட்சம்.

அதிமுகவினர் லாட்ஜில் பணம் பட்டுவாடா செய்ததை எதிர்த்து நீலகிரி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ. இராசா தோழர்களுடன் நள்ளிரவில் மறியல் செய் தார்.

தமிழ்நாடு முழுவதும் தேர்தலையொட்டி பறிமுதல் செய்யப்பட்ட பணம் ரூ.50 கோடி! பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 2835.

மோடியைப் பார்த்து முசுலீம்கள் அச்சப்படுகின்றனர் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

குஜராத் மாநில அமைச்சர் புருசோத்தம் சோலங்கி (பி.ஜே.பி.) வந்த ஹெலிகாப்டரிலிருந்து ரூ.1.75 லட்சம் பணம் தேர்தல் ஆணைய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

ஒவ்வொருவரும் வாக்களித்தால் இந்த நாடு நன்றியு டையதாகவிருக்கும் என்கிறார் குடியரசு முன் னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்.

Read more: http://viduthalai.in/page-8/79123.html#ixzz2zlT7ClHy

தமிழ் ஓவியா said...


கேள்விப்பட்டதுண்டா?
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாட்டில் அன்றாடம் கொலை, கொள்ளை, திருட்டு என்று நடைபெற்றுக் கொண்டிருக்க, இந்தியாவிலேயே அமைதி தவழும் மாநிலம், சட்டம் - ஒழுங்கு சீராக இருக்கும் மாநிலம் தமிழ்நாடு தான் என்று துணிச்சலாக சட்டமன்றத் திலேயே கூறும் முதல்வரைப்பற்றிக் கேள்விப் பட்டதுண்டா? ஆம்! அவர்தான் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா!

Read more: http://viduthalai.in/page-8/79154.html#ixzz2zlTEU1iW

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க.வில்தான் குற்றப் பின்னணி வேட்பாளர்கள் அதிகம் தன்னார்வ அமைப்பு தகவல்


புதுடில்லி, ஏப். 23- பாஜக ஆட்சிக்கு வந்தால் குற்றப்பின்னணி கொண்ட மக்களவை உறுப்பினர் கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மோடி தன் பிரச்சாரத்தின்போது தெரிவித்திருந்தார்.

ஜனநாயக மறுசீரமைப்புக்கான சங்கம்

இந்நிலையில், ஜன நாயக மறுசீரமைப்புக் கான சங்கம் (ஏடிஆர்) சார்பில் இது தொடர்பான புள்ளி விவரம் வெளி யிடப்பட்டுள்ளது.

முதல் ஆறு கட்ட தேர்தலில் போட்டியிடும் 5,380 வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்பு மனு வில் உள்ள விவரங்களின் அடிப்படையில் இத்தக வல்கள் தொகுக்கப்பட் டுள்ளன.

குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன

மொத்தமுள்ள 5,380 வேட்பாளர்களில் 879 பேர் (16%) மீது குற்ற வழக்குகள் உள்ளன. 533 பேர் மீது கொலை, பாலி யல் வன்முறை, வழிப் பறி உள்ளிட்ட தீவிர குற்ற வழக்குகள் பதிவு செய் யப்பட்டுள்ளன.

காங்கிரஸின் 287 வேட் பாளர்களில் 13 சதவீதத் தினர் அதாவது 36 வேட் பாளர்கள் மீது தீவிர குற்ற வழக்குகள் பதிவாகியுள் ளன.

பாஜகவில் 48 வேட்பாளர்கள்

பாஜகவின் 279 வேட் பாளர்களில் 88 பேர் (32%) மீது தீவிர குற்ற வழக்கு கள் பதிவாகியுள்ளன. ஆம் ஆத்மியின் 291 வேட் பாளர்களில் 29 பேர் (10%) மீதும், பகுஜன் சமாஜின் 318 வேட்பாளர்களில் 39 பேர் (12%) மீதும் தீவிர குற்ற வழக்குகள் பதி வாகியுள்ளன.

காங்கிரஸின் 287 வேட்பாளர்களில் 75 பேர் (26%), பாஜகவின் 279 வேட்பாளர்களில் 88 பேர் (32%), ஆம் ஆத்மியின் 291 வேட்பாளர்களில் 44 பேர் (15%), பகுஜன் சமாஜின் 318 வேட்பாளர்களில் 65 பேர் (20%) மீதும் குற்ற வழக்குகள் பதிவு செய் யப்பட்டுள்ளன.

Read more: http://viduthalai.in/page-8/79121.html#ixzz2zlTNDmMn

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டில் வளர்ச்சி தி.மு.க. ஆட்சியிலா - அ.தி.மு.க. ஆட்சியிலா?


தமிழகத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி களுக்கு முக்கிய காரணம் திராவிட இயக்கமும் திமுக வும்தானே. கலைஞர் ஆட்சி செய்த இறுதியாண்டில் (2011) நிஞிறி எனப்படும் பொருளாதார மொத்த உற்பத்தி யானது 13.12 சதவிகிதமாக இருந்தது, இதே கால கட்டத்தில் மோடியின் குஜராத் மாநில நிஞிறி வெறும் 10 சதவிகிதமாக இருந்தது. இந்தியாவில் நான்காம் இடத்தில் தமிழ்நாடு இருந்தது, குஜராத் இருந்ததோ ஏழாம் இடத்தில்!

ஆனால், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த இந்த மூன்றே ஆண்டுகளில் நிஞிறி 4.14 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்து விட்டது. தொழில்துறை, உற்பத்தித்துறை, விவசாயத் துறைகளின் வீழ்ச்சியால், தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதல பாதாளத்துக்கு சென்றுள்ளது.

கலைஞர் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சியில் நான்காம் இடத்திலிருந்த தமிழ்நாடு, ஜெயாவின் ஆட்சி யில் கடைசி இடத்துக்கு வந்துவிட்டது. ஜெயா அறிவித்த எல்லா திட்டங்களும், முதலீடுகளும் வெறும் ஏட்டள வில்தானே உள்ளது.

இப்பொழுது சொல்லுங்க, தமிழகம் அடைந்துள்ள சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிகளுக்கு முக்கிய காரணம் திமுக ஆட்சிதானே!

Read more: http://viduthalai.in/page-8/79119.html#ixzz2zlTV5q6l

தமிழ் ஓவியா said...

மோடியிடம் தினமணியின் அவசரப் பேட்டி - ஏன்?


தினமணி, பிஜேபி - ஆர்.எஸ்.எஸ். ஏடு என்று நாம் சுட்டிக்காட்டிய போதெல்லாம் - அதைப்பற்றி ஆழமாகச் சிந்திக்காதவர்கள்கூட, இந்தத் தேர்தலில் அது நடந்து கொண்டு வரும் போக்கினை நிதானமாகச் சிந்தித்தால் - திராவிடர் கழகத்தின் கணிப்பு விடுதலை யின் - மதிப்பீடு மிகவும் துல்லியமானதே என்று புரிந்து கொள்வார்கள்.

இதற்காக வெகு தூரத்திற்குச் சென்று ஆராய்ச்சிக் கடலில் மூழ்கி முத்தெடுக்க வேண்டாம்.

இன்று தமிழ்நாடெங்கும் - புதுவையும் சேர்த்து 40 இடங்களில் வாக்குப் பதிவு; இந்தக் கால கட்டத்தில் நேற்றைய தினமணி (23.4.2014) அவசர அவசரமாக தினமணியின் ஆசிரியர் திருவாளர் வைத்தியநாதய்யர் பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளரான திருவாளர் நரேந்திரமோடியைப் பேட்டி கண்டு, தினமணியின் முதல் பக்கத்தில் விரிவாக வெளியிடு கிறார் என்றால் இதன் அவசியம் என்ன? இதன் பின்னணி என்ன? என்பது - தமிழ்நாட்டில் கோலி விளையாடும் கோவணம் கட்டத் தெரியாத சிறுவன் கூடப் புரிந்து கொள்வானே!

பேட்டிக்கு முகவுரையாக தினமணி ஆசிரியர் அய்யர்வாள், மோடிபற்றிக் கொடுக்கும் முன்னுரை அவரின் முகவரியைப் பச்சையாகக் கட்டம் கட்டி வெளிப்படுத்தக் கூடியதாகும்.

ஆர்.எஸ்.எஸ். பிரசாரகராக தனது பொது வாழ்க்கையைத் தொடங்கிய மோடியின் அரசியல் பயணம் பிரமிப்பை ஏற்படுத்தும், இவரது சுறுசுறுப்பும், மன வலிமையும் நிகரற்றது. சொலல் வல்லன், சோர்வு இலன் அஞ்சான், அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது என்கிற வள்ளுவப் பேராசானின் குறளுக்கு நரேந்திர மோடியை உதாரணம் கூறலாம்.

இப் போது குஜராத் முதல்வர், தேர்தல் முடிவானால் அனேகமாக இந்தியப் பிரதமர்

என்று மோடிக்கு தினமணி ஆசிரியர் இப்பொழுதே பிரதமர் என்கிற மணிமுடியைச் சூட்டி விட்டார். தமது ஆசையைக் குதிரையாக்கி சவாரியும் செய்து விட்டார்.

மோடி என்றால் இதுதானா? மோடி என்றால் இரண்டாயிரம் சிறுபான்மை மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் என்ற விலாசம் கிடையாதா?

மோடி என்றால் சிறுபான்மை மக்களுக்குப் பயங்கரமான எதிரி, நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலிலும் சரி, நடந்து கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தலிலும் சரி ஒரே ஒரு முஸ்லீம்கூட வேட்பாளராக பி.ஜே.பி. சார்பில் போட்டியிட வாய்ப்புத் தராதவர் என்ற அறிமுகம் அவரைப் பற்றிக் கிடையவே கிடையாதா?

பொடா சட்டத்தின் கீழ் குஜராத்தில் 287 பேர் கைது செய்யப்பட்டனர் என்றால் அதில் 286 பேர் முஸ் லிம்கள், ஒருவர் சீக்கியர்; இந்து ஒருவரும் கிடையாது என்ற நிலைப்பாடு, மோடி எத்தகைய பாசிஸ்டு என்பதை உலகுக்கு அறிவிக்கவில்லையா?

வெளிநாடுகளில்கூட கல்வியாளர்கள், பேராசிரி யர்கள் பல்துறைகளைச் சேர்ந்த பெரு மக்கள், இந்தியாவில் மோடி தலைமையில் ஆட்சி அமைந்தால் நாடு மரண பூமியாகும் - அண்டைய நாடுகள்கூடப் பதற்றம் அடையும் என்று கையொப்பமிட்டு அறிக்கை களே கொடுத்து இருக்கிறார்களே - அவை எல்லாம் பார்ப்பனர்களின் கண்ணோட்டத்தில் அற்பம்தானா?

தமிழ் ஓவியா said...


அமெரிக்கா போன்ற நாடுகள் இதுவரை மோடி தங்கள் நாட்டுக்கு வந்திட விசா கொடுக்க மறுத்து வருவது - ஏன்? இதுபற்றியெல்லாம் வைத்திய நாதய்யர் களுக்குத் தெரியவே தெரியாதா?

நானோ கார் தொழிற்சாலையை டாட்டா நிர்மாணிக்க 11,00 ஏக்கர் நிலத்தை சதுர அடி ரூ.900-க்கு அடி மாட்டு விலைக்கு விற்றதால் மாநில அரசுக்கு ஏற்பட்ட நட்டம் என்ன?

சதுர அடி ரூ.10,000 சந்தை மதிப்பு!

அதே டாட்டாவுக்கு 0.1 சதவீத வட்டியில் ரூ.9750 கோடியை 20 வருடத்தில் திருப்பி செலுத்த வாய்ப்பு அளித்தவரும் இந்த மோடிதானே. இவர்கள் கண்ணோட்டத்தில் டாட்டா பரம ஏழையோ!

மோடியைப் பிரதமர் ஆக்குவதில் 74 சதவீத கார்ப்பரேட் முதலாளிகள் - ஆர்வத்துடன் அந்தரத்தில் பறந்து கொண்டு இருக்கிறார்களே - உயர் ஜாதி ஊடகங்கள் உயர்த்திப் பிடிக்கின்றனவே - இந்தப் பின்னணிகளைக் கொண்ட பிற்போக்குவாதிகள் என்ற அடையாளம் வெகு மக்கள் மத்தியில் அறவே அழிக்கப்பட வேண்டும் என்ற தந்திரம் தானே இந்தத் தினமணியின் அவசரப் பேட்டிக்கான அவசியம்!

மோடியை நோக்கி தினமணி ஆசிரியர் வைக்கும் கேள்விக்குள்ளேயே விடையிருக்குமாறு தேர்ந்தெடுத் தல்லவா மோடி முன் வைக்கிறார்.

மோடி ஒரு பிற்படுத்தப்பட்டவர் - அவரைத்தானே இந்த அக்கிரகாரவாசிகள் முன் வைக்கின்றனர் என்ற வினா எழலாம்.

ஒரு வகையிலே அவர்களின் கெட்டிக்காரத்தனம் இது; பச்சையாகப் பார்ப்பனர்களை முன்னிறுத்தும் போது, வெகு மக்கள் அந்த வன்மத்தை, நச்சுக் கோப்பையையும் பளிச்சென்று புரிந்து கொள்வார்கள்.

தந்தை பெரியார் மொழியில் புரியும்படிச் சொல்ல வேண்டுமானால் நிஜப் புலிகளை விட, வேடம் தரித்த புலிகள் அதிகம் குதிக்கும். அதனால்தான் இந்த வேடப் புலியைத் தேர்வு செய்து இருக்கிறார்கள். அதுவும் ஆர். எஸ்.எஸில் பயிற்சிக் கொடுத்துப் புடம் போடப்பட்ட வரைப் பயன்படுத்தி, தங்களின் மனுதர்ம ஹிந்துத்துவா சாம்ராஜ்ஜியத்துக்கு அடிகோல நினைக்கிறார்கள்.

இந்த ஈரோட்டுக் கண்ணாடியைப் போட்டுப் பார்த்தால் தான் சோ ராமசாமிகளின், தினமணி வைத் தியநாதய்யர் அண்ட் சோக்களின் விஷம ஊற்று எங்கே, எப்படி மய்யம் கொண்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

Read more: http://viduthalai.in/page-2/79163.html#ixzz2zqtksBtE

தமிழ் ஓவியா said...


அவ(ன்)ள்


தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கறுப்புப் பெண். தென்னாப்பிரிக்காவிலும் குக்கிராமம். படிப்பும் சொல்லும்படியாக ஏதும் இல்லை. பெண்ணின் பெயர் காஸ்டர் செமன்யா.

சிறிய வயதிலிருந்தே காற்றைக் கிழித்து ஓடுவது - அந்தச் சிறுமியின் பொழுதுபோக்கு! ஆனால் சர்வதேச ஓட்டப் பந்தய மைதானணீத்துக்குள் கொண்டு வந்து நிறுத்தும் என்று கனவிலும் எதிர் பார்க்கவில்லைதான்.

ஆனாலும், அந்தப் பெண் 18 வயதில் பெர்லின் மைதானத்தில் நின்றார். துப்பாக்கிச் சத்தம் கேட் டது - அவ்வளவுதான் கால் கள் தரையில் பாவவில்லை - காற்றைக் கிழித்தார் 800 மீட்டர் தூரத்தை 1.55:45 நேரத்தில் கடந்து எல்லோர் புருவங்களையும் உயர்த் தக் காரணமாக இருந்தார்.

2009இல் அது உலக சாதனை! 1500 மீட்டரிலும் அதற்கு முன்னிருந்த சாதனையைவிட 25 வினாடிகள் குறைவில் முறியடித்தார்.

உடனே ஆராய்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன; அவர்கள் எல்லாம் ஆண்கள்தான். ஒரு பெண்ணா - இவ்வளவு தூரத்தை இவ் வளவுக் குறுகிய நேரத்தில் கடந்தார்? ஆச்சரியமாக இருக்கிறதே - நம்ப முடி யாது. ஒருக்கால் இவள் ஓர் ஆணாக இருப்பாளோ? அல்லது போதைமாத்திரை சாப்பிட்டு இருப்பாளோ? சந்தேகக் கரையான் அரித்துத் தின்ன ஆரம்பித்து விட்டது. காற்றைக் கிழித்து ஓடி முதல் பரிசுக் கோப்பையைப் பெற்ற பெண் அந்த மகிழ்ச்சியைக் கூட அனுப விக்கவில்லை.

அதனால் என்ன? எந்த பரிசோதனைக்கும் தயார்! மடியில் கனமிருந்தால் தானே வழியில் பயம்?

ஆனாலும் இந்தச் சோதனைகள் எல்லாம் முடிக்கப்பட்டு, அவள் பெண்தான்; எந்தப் போதை மருந்தையும் உட் கொள்ளவில்லை என்று அறிவிப்பதற்கு ஓர் ஆண்டு தேவைப்பட்டது என்பதுதான் கொடுமை யாகும். அதன் விளைவு ஓர்ஆண்டு ஓட்டப் பயிற் சிக்குக்கூட ஓய்வு கொடுத் ததுதான் மிச்சம். குற்றமற்றவர் என்று நெருப்பில் குளித்து வெளியில் வந்ததும், மீண்டும் தடகளப் போட்டிக்குள் குதித்தார். அதே பெர்லின் தான் அந்தப் போட்டியில் முதலிடம் பெற்றார் என்றாலும் முன் சாதனையை விட இரு வினாடிகள் அதிகமாகப் போய் விட்டது.

இந்தக் கொடுமையை என்ன சொல்வது! இதற்கு யார் தான் பொறுப்பு!

தமிழ்நாட்டில்கூட புதுக்கோட்டை மாவட்டம், கத்தக்குறிச்சியைச் சேர்ந்த சாந்தி 2006 - தோஹாவில் நடந்த ஆசிய தடகளப் போட்டியில் வெள்ளிப் பரிசு பெற்ற நிலையில் இப்படித்தான் முத்திரை குத்தப்பட்டார்.

பெண்ணென்றாலே இப்படி ஒரு நிலைதான். நம் நாட்டில். வானதி சீனி வாசனும், டாக்டர் தமிழி சையும் வறட்டுத் தவளைகளாக தொலைக் காட்சிப் பெட்டிகளில் கட்சிக்காகக் கத்தினாலும் காரியம் என்று வரும் பொழுது - தேர்தல் களத்தில் ஒதுக்கத் தானேபடுகிறார்கள்? அதுவும் பெண்ணென்றால் பேயென்று பேசும் இந்து மதக் கட்சியில் வேறு எதைத் தான் எதிர்பார்க்க முடியும்?

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/79178.html#ixzz2zqvsun3B

தமிழ் ஓவியா said...


நாடெங்கும் மோடிக்கு எதிர்ப்பு அலை!


மும்பை கல்லூரி முதல்வர் மும்பை, ஏப்.24-மும் பையை சேர்ந்த செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி முதல் வரான டாக்டர் மாஸ்கரன் ஹஸ் தங்களது மாணவர் களுக்கு அனுப்பிய மின் அஞ்சலில் மோடிக்கு வாக் களிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். அவர் அனுப்பிய மின் அஞ் சலில் கூறப்பட்டுள்ளதா வது; குஜராத்தில் கடந்த 10 ஆண்டுகளாக என்ன நடந் துள்ளது என்பது குறித்து மனித அபிவிருத்தி தொடர் பான அட்டவணை நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் கல்வித்துறை அங்கு மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித் துள்ளது. உயர்கல்வி ஒரு கட்டத்திற்கு மேல் வளர முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. வளர்ச்சி என்பது எது? வியாபாரம் பெரிய அளவில் நடைபெறுவதா? அதிக லாபங்களை ஈட்டு வதா? உற்பத்தியில் சாதனை படைப்பதா? இதையா மக்கள் வளர்ச்சியாக கருது கிறார்கள் என்றால் இல்லை என்பதே சரியான பதிலாக இருக்கும்.

மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதுடன், இன்றி யமையாத பொருட்களின் தேவைகள் சரியாகவும், நியாயமான விலையில் கிடைப்பதே உண்மையான வளர்ச்சியாக இருக்கும். ஆனால் இதிலெல்லாம் அம்மாநிலம் கடந்த பத்து ஆண்டுகளில் எவ்வித சாத னையையும் நிகழ்த்த வில்லை. எனவே எதிர் காலத்தை தீர்மானிக்கும் வகையில் மாணவர்கள் கவனமுடன் மோடிக்கு வாக்களிக்காமல் தவிர்க்க வேண்டும் என்று அந்த மின் அஞ்சலில் கேட்டுக் கொள் ளப்பட்டுள்ளது.

இவ்வாறு மின் அஞ் சலில் அனுப்பப்பட்டதற்கு பாரதீய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள் ளதுடன், தேர்தல் ஆணையத் திலும் இது குறித்து புகார் அளித்துள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி கல்லூரி முதல்வருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது.

சீதாராம் யெச்சூரி புதுடில்லி, ஏப்.24-தேர்தல் பிரச்சாரத்தில் மோடி வளர்ச்சி மற்றும் நல்லாட்சி குறித்து பேசு வதும், அதன் பின்னணியில் சிலர் தீவிர மதப்பிரச்சாரம் செய்வதும், பாஜகவின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்துகிறது என்று மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி குற்றஞ் சாட்டியுள்ளார். இது குறித்து புதுடில்லியில் அவர் கூறி யதாவது: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வளர்ச்சி, நல்லாட்சி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து பேசி வருகிறார். ஆனால், அக்கட்சியைச் சேர்ந்த சிலர் இதன் பின் னால் தீவிர மதப்பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதன் மூலம் பாஜகவின் இரட்டை வேடம் வெளிப்பட்டுள் ளது. பாஜ, விஎச்பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்க ளான அமித்ஷா, கிரிராஜ் சிங், பிரவின் தொகாடியா ஆகி யோர், இந்துத்துவத்தை எதிர்ப்பவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக வெளிப்படையாக செயல் பட்டு வருகின்றனர். மோடி யின் நல்லாட்சி, வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற பிரச்சார பொய்த் தோற்றத்தின் கீழ் மதவாதப் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. அவைகள் குறிப்பாக உத்தரப் பிரதே சம் மற்றும் பிகாரில் அதிக அளவில் நடத்தப்படுகிறது. இதன் மூலம், மதவாத சிக்கலும், பிரிவினைவாத வெறுப்புணர்வும் உருவா வதை மறைக்க முடியாது. இந்துத்துவத்தை விமர்சிப் பவர்களை, தேச விரோதிகள் மற்றும் பாகிஸ்தான் ஆதர வாளர்கள் என்று முத்திரை குத்துவது சங்பரிவாரின் பழைய தந்திரமாகும். முஸ்லிம்களை தாக்குவதன் மூலம், அவர்கள் எப்போ தும் பாகிஸ்தானிற்கு விசு வாசமாக இருப்பார்கள் என்று மாயையை உரு வாக்குகிறார்கள் என்றார் யெச்சூரி.

சிரஞ்சீவி

விசாகப்பட்டினம், ஏப்.24- தனது முன்னேற்றத்துக்காக கட்சியின் மூத்த தலைவர் களை ஓரம் கட்டிய பா.ஜ பிரதமர் வேட்பாளர் நரேந் திரமோடி ஒரு ஹிட்லர் என ஆந்திர மாநிலத்தின் காங்கிரஸ் பிரச்சார குழு தலைவர் சிரஞ்சீவி கூறினார்.

விசாகப்பட்டினத்தில் அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: மோடி ஒரு ஹிட்லர். அவர் தனது சுயநலத்துக்காக கட்சி யின் மூத்த தலைவர்களை ஓரம் கட்டினார். அவர் பிரதமரானால், தொழில திபர்கள் நாட்டை ஆட்சி செய்வர். சாதாரண மக் களுக்கு எந்த இடமும் இல்லை. அவருடன் சந்திர பாபு நாயுடு எப்படி கூட்டு சேர்ந்தார்? கடந்த 2004ஆம் ஆண்டு பா.ஜ மீது குற்றம் சுமத்தி தே.ஜ கூட்டணியில் இருந்து விலகியவர்தான் இந்த சந்திரபாபு நாயுடு. பா.ஜ.வுடன் கூட்டு வைத் தது வரலாற்று பிழை என் றார். தற்போது பா.ஜ.கவுடன் மீண்டும் கூட்டணி சேர்ந் துள்ளார்.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் சட்டசபை மற்றும் மக்களவை தொகுதி இடங்களை விற்றுள்ளனர். பணத்தை பெற்றுக் கொண்டு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். பணம் மூலம் ஆட்சிக்கு வர முயற் சிக்கின்றனர். ஆட்சியை கைப்பற்ற அவர்கள் வெறித் தனமாக இருக்கின்றனர்.

இந்தியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் குஜராத் மாநிலம் 8ஆவது இடத்தில் உள்ளது. காங்கிரசுக்கு வீழ்ச்சி என்ற தேர்தல் கருத்து கணிப்புகள் எல்லாம் மக் களை திசை திருப்புவதற் காக சில கட்சிகள் செய்த ஏற்பாடு என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/79181.html#ixzz2zqwB7EJT

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

மாற்றி யோசி!

செய்தி: தமிழகத்தில் தேர்தல் அமைதியாக நடக்க செங்குன்றத்தில் வீரமா காளியம்மன் கோயிலில் பூசணிக்காய் தீபம்.

சிந்தனை: பனங்காய் தீபம் நடத்தியிருந்தால் பணப் பட்டு வாடாவைத் தவிர்த் திருக்கலாமோ!

Read more: http://viduthalai.in/e-paper/79186.html#ixzz2zqwLjR2K

தமிழ் ஓவியா said...


குஜராத்தின் வளர்ச்சி காங்கிரஸ் ஆட்சியில் 17%; மோடி ஆட்சியில் வெறும் 9% தான் சரத்பவார்!!


மும்பை ஏப்.24- குஜராத் மாநி லத்தை காங்கிரஸ் ஆண்டபோது இருந்த பொருளாதார வளர்ச்சியைவிட மிக மோசமாகத்தான் மோடி ஆட்சிக் காலத்து பொருளாதார வளர்ச்சி இருக் கிறது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், பாரதீய ஜனதா வின் நிறுவனர்களில் ஒருவர் அத்வானி. அக்கட்சியின் முன்னாள் தலைவரும் கூட. அவர் போபாலில் போட்டியிட விரும்பினார். ஆனால், அவரது விருப் பத்துக்கு மாறாக காந்திநகரிலேயே அவர் போட்டியிட வைக்கப்பட் டுள்ளார்.

அதேபோல் பாஜகவின் மற்றொரு மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி. அவர் தாம் முன்பு போட்டியிட்ட தொகு தியிலேயே போட்டியிட விரும்பினார். ஆனால் அவர் வேறு தொகுதிக்கு மாற்றப்பட்டார். ஜஸ்வந்த்சிங்.. திறமை யான வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர்.. நல்ல நிதி அமைச்சர். சிறந்த நாடாளுமன்றவாதி.. அவரும் அப் படியே பந்தாடப்பட்டார். ஹிட்லராகிறார் மோடி... மோடியைப் பொறுத்தவரையில் பாஜகவை தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புகிறார். நாம் வரலாற்றில் ஹிட்லரை பார்த்திருக் கிறோம். அவர் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அதிகாரம் அனைத்தும் தம்மிடமே குவிந்திருக்க வேண்டும் என்று செயல் பட்டவர். அப்படி அதிகாரம் குவிந்த தால் யூதர்களை எப்படியெல்லாம் அவர் கொன்றொழித்தார் என்பதை இந்த உலகமே கண்டது. இன்று அதே நிலை மைதான் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஜஸ்வந்த்சிங் ஆகியோரெல் லாம் ஒதுக்கப்பட்டு மோடியின் வசம் அந்த கட்சி சென்று கொண்டிருக்கிறது. இது ஒரு தொடக்கம்தான். குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கால முதல்வர்களாக மாதவ்சிங் சோலங்கி, சிமன்பாய் படேல் இருந்தனர். அப் போது அம்மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 16 முதல் 17.5 சதவீதம் இருந்தது. ஆனால் மோடி ஆட்சிக் காலத்தில் இது 9சதவீதம் ஆக குறைந்தது. இதுதான் சிறந்த நிர்வாகமா? ஏன் வளர்ச்சி விகிதம் குறைந்தது? கடந்த கடைசி 3 ஆண்டு காலத்தில் மகாராஷ்டிரா ரூ.1.42 லட்சம் கோடி அன்னிய முதலீட்டை ஈர்த்துள் ளது. ஆனால், ஏராளமான நிதி மாநாடு களை நடத்துகிற குஜராத்தால் மகாராஷ் டிராவின் அளவில் 20 சதவீதம்கூட ஈர்க்க முடியவில்லையே? அப்படியானால் எங்கே என்ன ஆட்சி நிர்வாகம் நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது? வாஜ் பாயோ இந்திரா காந்தியோ தங்களுக் காக ஓட்டுக் கேட்டதே இல்லை.. தங் களது கட்சிக்காக ஓட்டுக் கேட்டார்கள்.. ஆனால், மோடியோ எல்லாவற்றிலும் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்கிறார் என்றார் சரத்பவார்.

Read more: http://viduthalai.in/page-2/79173.html#ixzz2zqxBXJ48

தமிழ் ஓவியா said...


மரியாதை இல்லை


பிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும் கண்ணியமான பெருமையான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூட நம்பிக்கை ஒழியவேண்டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை. - (விடுதலை, _ 22.6.1973)

Read more: http://viduthalai.in/page-2/79162.html#ixzz2zqxIx07f