Search This Blog

15.4.14

இந்து மதம் பற்றி அண்ணல் அம்பேத்கர்

இந்து மதம் ஒரு மிஷனரி மதமா? - அதாவது பிற மதத்தாரை இந்துக்களாக்கும் மதமா? அல்லவா? என்பதைப் பற்றி ஒரு காலத்து வாதப் பிரதிவாதங்கள் நடந்தன. இந்து மதம் ஒரு காலத்தும் மிஷனரி மதமாக இருக்கவில்லை யெனச் சிலர் அபிப்பிராயப்பட்டார்கள். சிலர் மிஷனரி மதமாக இருந்ததெனக் கூறினர். ஆனால், ஒரு காலத்து இந்து மதம் மிஷனரி மதமாக இருந்ததென்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டியதுதான். அது மிஷனரி மதமாக இருந்திராவிட்டால் இந்தியா முழுவதும் பரவியிருக்க இடமில்லை.

ஆனால், இன்று இந்து மதம் மிஷனரி மதமாக இருக்கவில்லை என்பதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டியதுதான். எனவே, இந்த மதம் இப்பொழுது மிஷனரி மதமாயிருக்க முடியாததாயிற்று என்பதே எனது அபிப்பிராயம். மத மாற்றத்துக்கு சாதிக்கும் சம்பந்தமில்லை. மதமாற்றத்துக்கு மதக்கோட்பாடுகளும் நம்பிக்கையும் முக்கிய அம்சங்களாக இருக்கவில்லை. மதமாற்றம் பெற்றவனுக்குச் சமூக வாழ்வில் ஒரு இடம் அளிப்பது ஒரு முக்கியமான பிரச்சினை. மதமாற்றம் பெற்றவனுக்கு எங்கு இடமளிப்பது? அவனை எந்தச் சாதியில் சேர்ப்பது என்பது மதமாற்றத்தையொட்டிய முக்கியப் பிரச்சினைகளாக இருக்கின்றன. எனவே, அந்நியர் களை இந்து மதத்தில் சேர்க்க இந் துக்கள் தயங்குகிறார்கள். கிளப்க ளில் எல்லோரும் சேர்த்துக் கொள் ளப்படுவதுபோல் சாதியில் எல் லோரும் சேர்த்துக் கொள் ளப்படு வதில்லை. அந்தந்தச் சாதியில் பிறந்தவர்களே அந்தந்தச் சாதி யில் அங்கமாக இருக்க முடியும்.

சாதிகள் சுயமாகவே சர்வாதிகாரமுடையவை. மற்றவர் களைச் சாதியில் சேர்த்துக் கொள்ளும்படிச் செய்ய எவருக்கும் அதிகாரமில்லை. இந்துச் சமூகம் பல சாதிகள் சேர்ந்த ஒரு கதம்பமாயிருப்பதனாலும், ஒவ்வொரு சாதியும் கட்டுப்பாடாக அமைக்கப்பட்டிருப்பதனாலும், மதமாற்றம் பெற்றவர்கள் அங்கு இடம்பெற முடியாது. இந்து மதம் பரவாமலிருப்பதற்கும் பிற மதத்தார்களைத் தன்னுள் சேர்த்துக் கொள்ளாததற்கும் சாதியே காரணமாக இருக்கிறது. சாதி இருக்குமட்டும் இந்து மதம் மிஷனரி மதமாக இருக்கவே முடியாது. சுத்த முட்டாள்தனமான சடங்கு; அதனால் பயன் ஏற்படவே செய்யாது.

----------------------- அம்பேத்கர் எழுதிய சாதியை ஒழிக்க வழி எனும் நூலிலிருந்து

37 comments:

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகம் சொன்னால் அது அக்மார்க் முத்திரை!

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை வெளி வந்த நிலையில் வாக்காளர்களின் மனப்பான்மையில் ஒரு திருப்பம் ஏற்படும் என்று எதிர்பாரக்கலாம்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் பி.ஜே.பி. வெளியிட்டு இருப்பது மக்களிடம் வாக்குறுதி கொடுக்கும் ஒரு தேர்தல் அறிக்கையாகத் தெரிய வில்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நெடு நாளாகக் கூறி வந்துள்ள ஹிந்து ராஷ்டிரம் அமைப்போம் என்பதற் கான அதிகாரப் பூர்வ அறிவிப்பாக பிஜேபியின் தேர்தல் அறிக்கையை நினைக்க வேண்டும்.

மதச் சார்பற்ற கொள்கையுடைய இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிந்து விட்டு, அதற்குப் பதிலாக ஹிந்து ராஜ்ஜியத்தின் சட்ட திட்டங்களை அறிவித்துள்ளார்கள். எந்த இடத்திலும் மதச் சார்பற்ற தன்மையைக் காப்போம் என்ற உறுதி மொழி இல்லை.

அதே நேரத்தில், மதச் சார்பற்ற தன்மைக்கு எதிரான செயல் திட்டங்களைப் பதிவு செய்துள்ளனர். ராமன் கோயில் கட்டுவது, பொது சிவில் சட்டம், காஷ்மீர் மாநிலத்திற்கென்றுள்ள தனி சலுகைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் 370ஆம் பிரிவு நீக்கம், பசுவதைத் தடுப்பு, வெளிநாடுகளில் வாழும் இந்துக் களுக்குப் பாதுகாப்பு (அதற்கென்றே தனித்துறை), வடகிழக்கு மாகாணத்தில் கடைப்பிடிக்கப்படும் பிரத்தி யேக வாய்ப்புகள் பறிப்பு (அவர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள்!) இவை எல்லாம் ஆர்.எஸ்.எஸின் ஹிந்துத்துவா செயல் திட்டங்களே!

இவற்றின் மூலம் சிறுபான்மை மக்கள் பிஜேபியை எதிர்த்தால் போதும் என்று நினைத்துவிடக் கூடாது; மதச் சார்பின்மையைத் தகர்க்கும் ஓர் அரசியல் சட்டம் மக்களை மிகப் பெரிய அளவில் செங்குத்தாகப் பிளந்து எறிந்து விடும். நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் மதமாச்சரிய நெருப்பை ஊதிவிட்டு கலகம் விளைவிப்பதை கலையாகக் கருதும் ஓர் மனப்பான்மை வந்து குதித்து விடும். சமூக அமைதி என்பது மயானத் தில் மட்டும்தான் என்ற நிலை உறுதிப்படுத்தப்படும்.

இதில் பெரும்பான்மை சிறுபான்மை என்ற கருத்துக்கு இடமில்லாமல் ஒட்டு மொத்தமான சமுதாயமே அமைதியைத் தொலைத்து விடக் கூடிய அபாயம் தலைக்கு மேல் வாளாகத் தொங்கிக் கொண்டு இருக்கிறது என்பதை உணர வேண்டும். கார்ப்பரேட் முதலாளிகள் மோடியைப் பிரதமராக் குவதற்கு சுயநலவெறி காரணமாக இருக்கிறது என்பது ஒரு பக்கம்; இன்னொரு பக்கம் சமுதாயத்தை மத ரீதியாகக் கூறு போட்டு மக்களின் வளர்ச்சிப் போக்குக்கு மரண குழி வெட்டும் வேலை! பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பிஜேபி கூறும் ஹிந்துத்துவாவை ஏற்கிறார்களா என்பது பிரச்சினையல்ல; பிஜேபி ஆட்சி அமைக்குமானால் அந்தப் பெரும்பான்மை மக்களின் சகல வாழ்வும் சுக்கு நூறாகி விடும் என்பதை மறந்து விடக் கூடாது பெரும்பான்மை என்ற போர்வையில் பிர்மாவின் நெற்றியில் பிறந்தவர்களாகத் தங்களை நினைத்துக் கொண்டிருக்கும் கூட்டத்தின் கைதான் ஓங்கும் - மீண்டும் மனுதர்மமே கோலோச்சத் தொடங்கும். இடஒதுக்கீட்டைப்பற்றி அவர்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாததைத் தெரிந்துகொண்டால் இந்தச் சூட்சுமத்தை எளிதில் விளங்கிக் கொள்ளலாம்.

எனவே, சிறுபான்மை மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் சமூக நீதியிலே அக்கறை உள்ளவர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், பகுத்தறிவாளர்கள், இடதுசாரி சிந்தனையாளர்கள் எல்லோரும் ஓரணியில் நின்று மோடியின் தலைமை யில் அணி வகுத்து நிற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியையே (என்.டி.ஏ.) ஒட்டு மொத்தமாக வீழ்த்திட முனைய வேண்டும். விவரம் தெரியாமல் வழக்கம் போல வந்து போகும் ஒரு பொதுத் தேர்தல் என்று மேம்போக்காகக் கருதிக் கொண்டு, கோட்டை விட்டால், சமூகநீதியின் அஸ்திவாரமே கலைந்து போய் விடும் எச்சரிக்கை!!

சிறுபான்மை மக்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்குள் இருக்கும் சிறு சிறு வேறுபாடுகளை, மாச்சரியங்களை ஓரத்தில் ஒதுக்கி வைத்து விட்டு, இப்பொழுது தேவை ஒட்டு மொத்தமான சமூக நீதி, மதச் சார்பின்மை என்பதை மனதிற் கொண்டு, ஒரு மூச்சுப் பிடித்து பிற்போக்கு அணியை ஊதித் தள்ளிட வேண்டும். நம்மில் சில மனிதர்கள், அமைப்புகள் பதவிப் பசி எடுத்து வித்தாரம் பேசுவார்கள் நீட்டி முழங்குவார்கள்; அந்த மத்தாப்பு வெளிச்சத்தில் மனதைப் பறி கொடுத்து அஸ்திவாரத்திற்குத் தங்களுக் குத் தாங்களே வேட்டு வைத்துக் கொள்ள வேண்டாம் என்பதே பதவி அரசியலுக்கு அப்பாற்பட்ட திராவிடர் கழகம் வேண்டுகிறது - அதன் தலைவர் குரல் கொடுக்கிறார்.

திராவிடர் கழகம் சொன்னால் அது அக்மார்க் முத்திரை என்பதை நினைவிற் கொள்வீர்!

Read more: http://viduthalai.in/page-2/78680.html#ixzz2yufpIX3Z

தமிழ் ஓவியா said...


இந்து மதம்


இந்து மதம், இந்துச் சட்டம், இந்து ஆட்சி என்பவையெல்லாம் பார்ப்பன மதம், பார்ப்பனச் சட்டம், பார்ப்பன ஆட்சியே ஆகும். - விடுதலை, 22.9.1972

Read more: http://viduthalai.in/page-2/78679.html#ixzz2yug2fqcF

தமிழ் ஓவியா said...


மோடி மனைவியை ஒதுக்கி வைக்க ஆர்.எஸ்.எஸ். ஸும் - இந்துத்வாவும் தான் காரணம்


மோடி தனது திருமணம் பற்றிய உண்மையைக் கூறியே ஆக வேண்டும் என்று கோவா மாநில காங்கிரஸ் எம்.பி. சாந்தாராம் நாயக் கோரியிருந்தார். உண்மையை கூறாமல் விட்டு விட்டால் மோடி ஒரு வேளை தேர்தலில் வெற்றி பெற்று இருந்தால், பொய் கூறிய காரணத்தால் பிரதமர் பதவியையே இழக்க நேரிடும் என்பதுதான் உண்மை. எனவே வேறு வழியில்லாமல், திருமணம் ஆனவர் என்றும், முதல் முறையாக மனைவியின் பெயரையும் குறிப்பிட்டுள் ளார். இத்தனை வருடங்களாக (40 வருடங் களுக்கு மேல்) நான் தனி மனுஷன் என்று கூறி வந்தவருக்கு இப்பொழுது மறைத்து வைத்த உண்மையை சொல்ல வேண்டிய கட்டாயம் வந்து விட்டது என்பதுதான் அப்பட்டமான உண்மை.

தமிழ் ஓவியா said...

நான் ஒரு பிரமச்சாரி, எனக்கு குடும் பமும் கிடையாது குழந்தைகளும் கிடை யாது, நான் சுத்தமானவன், நாட்டிற்குத் தான் எனது வாழ்க்கை என்று இன்று வரை வீர வசனம் பேசி வந்த மோடி, நேற்று தான் எனக்கு 19 வயதிலேயே திருமணம் ஆகி விட்டது என்றும் அவர்களுக்கு சொத்து இருக்கின்றதா இல்லையா என்று தெரியாது என்று சாந்த சொருபியான மோடி கூறி விட்டார். 2000-க்கும் அதிக மான சிறுபான்மை மக்களைக் கொன்று குவித்த மோடி எவ்வாறு ஒரு நல்ல கணவனாக இருக்க முடியும்?

சசிதரூர் மனைவியை 55 கோடி ரூபாய் பெண் தோழி என்று கிண்டல் செய்தார். இப்பொழுது அவரும் இறந்து விட்டார். ஆனால் இவர் மட்டும் மனை வியை விலக்கி வைத்துள்ளார். இன்று மோடிக்கும் ஜசோதா பென்னுக்கும் உள்ள தொடர்புதான் என்ன? சட்டப் படி விவாக ரத்து செய்து விட்டார்களா? அப்படியானால் இன்றும் ஜீவனாம்சம் கொடுக்கிறார்களா? குழந்தைகள் உள் ளனவா? கட்டிய மனைவியையே காப் பாற்ற முடியாத மோடி எவ்வாறு இந்தி யாவை நடுநிலையோடு காப்பாற்ற முடி யும்? மேலும் எனக்குக் கார் கூட கிடை யாது என்றும் கூறி உள்ளார் இந்த ஏழை. அதனால்தான் இவர் அதானி குருப் விமா னத்தை உபயோகித்து வருகிறார் போலும்.

அதானி குழுமம் முந்த்ரா பகுதியில் 10,000 ஹெக்டேர் பரப்பளவில் அமைத் துள்ள சிறப்புப்பொருளாதார மண்டலம் 56 மீனவ கிராமங்களையும் 126 குடியிருப்புப் பகுதிகளையும் அடியோடு அழித்தது. குஜராத்தின் கட்ச் வளைகுடாவை ஒட்டி அமைந்துள்ள முந்த்ரா பகுதியில் 7,500 கோடி ரூபாய் மதிப்புமிக்க 5 கோடி சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தை, மோடி தனக்கு மிகவும் நெருக்கமான அதானி குழுமத்திற்கு வெறும் 160 கோடி ரூபாய்க்கு வாரிக் கொடுத்திருக்கிறார். தொழில் தொடங்கப் போவதாகக் கூறி இந்த நிலத்தைப் பெற்ற அதானி குழுமம், அந்த நிலத்தின் பெரும்பகுதியை பிளாட்டு போட்டு விற்றதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாயை இலாபமாகச் சுருட்டிக் கொண்டது. நன்றிக் கடனாக அதானி குழுமம் மோடிக்கு தங்களது விமானத்தையே மோடிக்கு கொடுத் துள்ளது. அதில்தான் மோடி இந்திய முழுவதும் போய் வருகிறார்.

இதிலிருந்து மோடி அவர்கள் இத் தனை ஆண்டுகளாக சட்டத்திற்குப் புறம்பாக பொய் சொல்லி குஜராத்தில் முதல்வராக இருந்து வந்துள்ள சட்ட மீறல் தெரிய வந்துள்ளது. இது ரூம் போட்டு புழுதிவாரி வீசும் திரு சுப்ரமணியன் சுவாமிக்குத் தெரியாமல் இருக்குமா? அந்த ஆர்.எஸ்.எஸ். சுக்கே வெளிச்சம்!

பொது வாழ்க்கையில் வந்த பின் தனி பட்ட வாழ்க்கையில் தூய்மையாக இருக்கவேண்டும், சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற் பட்டவராக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். இவர் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் என்னென்ன விஷயங்கள் மறைத்து வைத்து உள்ளாரோ? மக்களுக்கு மோடி மீது சந்தேகம் வரத் தொடங்கிவிட்டது, தன் திருமணத்தை மறைத்தவர் மீது கிரிமினல் வழக்கு தொடுக்க வேண்டும். இவரை எப்படி பிரதமர் ஆக ஏற்றுக் கொள்ள முடியும்? மக்கள் சிந்தித்து வாக் களிக்க வேண்டும், அப்படியானால் இதற்கு முன் தேர்தல் கமிஷனுக்கு சமர்ப் பித்த அபிடவிட் (affidavit)
அனைத்தும் பொய் என்பது 100 சதவிகிதம் உறுதியாகி விட்டது.

தமிழ் ஓவியா said...


ஜசோதா பென்னைக் கேட்டால்தான் தெரியும், மகனோ, மகளோ இருக்கின் றார்களா? 40 ஆண்டுகள் ஏன் மனை வியை ஒதுக்கி விட்டார்? இதை வருங் கால பிரதமர் என்று சொல்லப்படும் மோடி மக்களுக்கு சொல்லியே ஆக வேண்டும்!

மோடியின் மனைவி வெளியூர் பயணத்தில் இருப்பதாக பத்திரிகைகள் கூறுகின்றன. உடனே ஆட்கொணர்வு மனு மூலம் அவரைக் கண்டு பிடித்து அவருக்குத் தகுந்த பாது காப்பு கொடுக்க வேண்டும்.

உடனே மோடியின் மனைவிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இனி மோடியின் மனைவியின் உயிருக்கு ஏதும் நேர்ந்தால் மோடியே அதற்குப் பொறுப்பு.

மோடியின் திருமணம் சின்ன வயதி னிலே நடந்தது... அவருக்கு ஆர்.எஸ்.எஸ். மீது இருந்த ஈடுபாட்டினால் மண வாழ்கையை துறந்தார் அவர் தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஆர்.எஸ்.எஸ்.க்காக செலவழித்தார். அவர்கள் கணவன் மனைவி என்கிற உறவிலிருந்து விடுபட்டுக் கொண்டனர் என்றெல்லாம் கூறித் தப்பிவிட முடியாது.


தமிழ் ஓவியா said...

பெண் உரிமைகளைப் பற்றி வாய் கிழிய பேசும் தமிழிசை சவுந்தரராஜனும், வானதி ஸ்ரீனிவாசன்களும் இப்பொழுது என்ன சொல்லப் போகிறார்கள்? கூலிக்கு மார் அடிப்பவர்கள் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள் என்பதே உண்மை. மோடி வித்தை என்பது இதுதானோ! கணக்குல பொண்டாட்டியைகூட காட்ட மாட்டேங்கிறாரு, மோடிக்கு ஒரு மர்ம மான மறுபக்கமா? இத்தனை நாள் இது ஏன் மறைக்கப்பட்டது? இப்போது வெளிப் படுத்தவேண்டிய அவசியம் என்ன? மோடியை இந்திய தேர்தல் ஆணையர் சம்பத் உடனே கைது செய்ய ஆணையிடவேண்டும். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? இது ஒரு கபடம் (Fraud).

மோடி பிரதமர் ஆனால் இந்தியாவின் பிரச்சினைகள் அனைத்தும் தீரும் என்று பொன். ராதாகிருஷ்ணன் அடித்துக் கூறி வருகிறார். ஆனால் மோடி தான் பிரச்சனையே என்பது அவருக்கு தெரியாதா? மனைவி பிரச்னை இன்னும் தெளிவாக்கவும் இல்லை. முடிவாகவும் இல்லை என்பது தான் உண்மை. பெங் களூரு கட்டிடப் பொறியாளர், இளம் பெண் விவகாரம் இன்னும் பூதாகரமாக உள்ளது. அது அமித் ஷாவுக்கே வெளிச்சம்! எக்கச்சக்கமாகச் சிக்கிக் கொள்ளும் வரை, சொக்கத்தங்கம் தான் எங்கள் மோடி..!

இப்பப் புரியுதா இவரின் யோக்கியதை தமிழில் ஒரு சொல்லடை உண்டு யோக்கியன் வர்றான் சொம்பை எடுத்து உள்ளே வை. அது போல் இதுவும்.

தமிழ் ஓவியா said...

uniform ciivil code பற்றி பேசு கிறார்கள். கட்டிய மனைவிக்கு யோக்கிய மாக நடக்கிறார்களா? "சின்ன" என்ற ஒரு பதம் பரவலாக உபயோகத்தில் உள்ளதே. பாவம் இல்லையா? மனைவிக்கு செய்யும் துரோகம் இல்லையா? கலாச்சாரம் பற்றி பேசுபவர்கள் இதில் என்ன நியாயம் கண்டார்கள்? பலதார விவாகத்தை விமர்சிப்பவர்கள் யோக்கியமாக நடந்து கொள்கிறார்களா? இந்த பிஜேபியின் பிரதமர் வேட்பாளர் (Prime Minister Candidate)
அவரின் இந்த விவாக விஷயத்தில் இருக்கும் மறைமுகம் என்ன. உண்மையை மறைப்பவர்கள், யோக் கியமாக இல்லாதவர்களால் நிச்சயமாக நல்லது செய்ய முடியாது என்பது உண்மையாகிப்போனதே அய்யகோ! மோடி விசுவாசிகள் முகத்தை மூடிக் கொண்டு ஓட இடம் ஏதும் இருந்தால் சொல்லுங்களேன்.

இதுதான் ஆர்.எஸ்.எஸ். ஆசாமி களின் உண்மை முகம். திருமணமாகாதவர் என்று கூற வேண்டியது, கிருஷ்ண பரமாத்மா வேலைகளை லீலைகளை ஊர் ஊராக காட்டவேண்டியது. செய்ய வேண்டியது. இந்த ஆளெல்லாம் பிரதமர் ஆவது, அந்தப் பதவிக்கு மட்டுமல்ல , இந்த நாட்டுக்கே கேவலம். (அவர் என்ன செய்வார்? பாவம், ஹிந்து வருணாசிரம தர்மம் அனுமதிக்கிறது. இதற்கு சப்பைக் கட்டு கட்ட பத்து பண்டிதர்கள் வாரணாசி யிலிருந்து வருவார்கள் பாருங்கள்....)

மோடி மனைவியைப் பிரிவதற்கு ஆர்.எஸ்.எஸ். தான் காரணம் என்று ஊடகங்கள் கூறுகின்றன. ஐம்புலன்களை யும் அடக்கி வெற்றி பெறுவதுதான் இந்துத்துவா என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரி லிருந்து, பாபா ராம்தேவ், ஆசாரம் பாபு, நம்ம நித்தியானந்தா, காஞ்சி சங்கராச் சார்யா, இஷா ஜக்கி வாசுதேவ் (ஜீன்ஸ் சுவாமி)... வரை கூறி வருகிறார்கள். இந்த ஐம்புலன்களை அடக்குவது பற்றி புகழ் பெற்ற செக்ஸ் நிபுணர் நாராயண ரெட்டி அவர்களும் பலமுறை கூறி வந்துள் ளார்கள். இந்திரியத்தை அடக்குவதன் மூலம் ஐம்புலன்களை கட்டுக்குள் கொண்டு வருவதுதான் இந்துத்துவா என்று சங் பரிவார்கள் கூறி வருகிறார்கள் என்பதை நாம் அறிவோம். இதன் காரணமாக ஆண்மைக் குறைவும் ஏற்படு வதாக செக்ஸ் நிபுணர்கள் கூறுவதை நாம் அறிவோம்.

கிளிண்டன் மோனிகா கதை போல மோடியின் கதை அதைவிட சுவாராசி யாமான ஒன்றாக இருக்கப் போகிறது. விடியாத இரவு கிடையாது. வெடிக்காத ரகசியங்கள் கிடையாது. கொஞ்சம் பொறுங்கள் இன்னும் எவ்வளவோ மோடி ரகசியங்கள் வர உள்ளன. பொறுத்திருங்கள். நாடே நாறப் போகிறது.

http://www.dnaindia.com/india/video-narendra-modi-s-brother-talks-about-his-marriage-to-jashodaben-1977069

வீடியோ பார்க்க : மோடியின் சகோதரர் பிரகலாத், கவுண்டமணி செந்தில் பாணியில் (அந்தப் பழம்தான் இந்தப் பழம்) என்னும் விதத்தில் எடக்கு முடக்காக பதில் அளித்துள்ளார்.

நமது தாய் நாட்டின் மானம் ஆர்.எஸ்.எஸ். ஸின் கையில் அல்ல. வோட்டு வாக்களிக்கப் போகும் உங்கள் கைகளில்தான் உள்ளன. அது நமது இன்றைய, எதிர்கால சந்ததிகளை பாது காக்கும் கேடயம் ஆகும்.

- ரம்யா சீனிவாசன்

Read more: http://viduthalai.in/page-2/78683.html#ixzz2yugCe7ob

தமிழ் ஓவியா said...


ரஜினியைப் பார்த்த மோடியைப் புறக்கணித்த விஜயகாந்த் பிஜேபி முகாமுக்குள் மோதல்!


டில்லி.ஏப்.14- மோடியின் கவனத்தை அவர் வெற்றிக்காக ஈர்ப்பதில் விஜயகாந்தைவிட ரஜினிகாந்த் இருப்பதாகக் கருதி சென்னை வருகையின்போது, ரஜினி வீட்டுக்கே சென்று சந்தித்தார். இதனால், வருத்தமடைந்த விஜயகாந்த் பாஜகவின் மோடியின் பிரச்சாரக் கூட்டத்தை முழுமையாகப் புறக்கணித்துள்ளார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் கூறியுள்ளபடி, மோடியின் கடைசி நேர சென்னை வருகைகுறித்து விஜயகாந்துக்கு தெரிவிக்கப்படவில்லை. சனிக்கிழமை அன்று பாஜகவின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பங் கேற்க தன் கட்சியினரை விஜயகாந்த் அனுமதிக்கவில்லை. விஜயகாந்த் கட்சி முதலில் கூட்டணியின் அங்கமாக சேர்ந்துவிட்டபின் அவரைப்பின்பற்றும் ஏராளமானவர் களும் பாஜகவுடன் இணைந்து மாநிலம்முழுதும் செயல்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் மோடி வருகை தெரிவிக்கப்படாததோடு, ரஜினிகாந்த்தை சந்தித்த விவகாரத்தால் விஜயகாந்த் கோபத்தில் உள்ளார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் விஜயகாந்த் கட்சிக் காரர் ஒருவர் கூறும்போது, விஜயகாந்த் எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் பிரதமர் வேட்பாளர் மோடிகுறித்து பேசி வருகிறார். ஆனால், பாஜக இவரை விட அடுத்த நடிகருக்கு அதிக முக்கியத்துவம் அளிக் கிறது. ஆனாலும், அந்த நடிகர் பாஜகவுக்கு ஆதரவாக இருப்பதாக கூறவில்லை என்கிறார். மோடிக்கு கெட்ட வாய்ப்பாக ரஜினிகாந்துடனான சந்திப்பு அமைந்துவிட் டது. பாலிவுட் நடிகர் சல்மான்கானை மோடி சந்தித்தது போலவே இதுவும் நடந்துள்ளது. இது குறித்து நட்பு முறையில் சந்தித்ததாகவும், அரசியல் ஏதுமில்லை என்றும் அவர் கூறிவிட்டதால் மோடி ஏமாற்றத்துக்கே ஆளாகி உள்ளார். ரஜினிகாந்த் நன்றாகவே வாழ்த்தினார் என்பதாலேயே அவர் ஆதரித்துள்ளார் என்றால் அதை விட வேறு நகைச் சுவை கிடையாது. இது எதைக் காட்டுகிறது என்று சொன் னால் விஜயகாந்த் கடைசியாக நகைப்புக்கு உள்ளாகிறார் என்பதுதான்.

- -ஃபர்ஸ்ட்போஸ்ட், 14-4-2014, டில்லி

Read more: http://viduthalai.in/e-paper/78672.html#ixzz2yugf8PNM

தமிழ் ஓவியா said...


குஜராத் எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தாது!


நாட்டில் நரேந்திர மோடி அலை இல்லை முரளி மனோகர் முண்டா தட்டுகிறார்

புதுடில்லி, ஏப்.14-நாட்டில் பாரதீய ஜனதா அலைதான் வீசுகிறது என்றும், நரேந்திர மோடி அலை இல்லை என்றும் முரளி மனோகர் ஜோஷி கூறி உள்ளார்.

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிப்பதற்கு அக்கட்சியில் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த தலை வர்களில் ஒருவர் முரளி மனோகர் ஜோஷி. முன் னாள் மத்திய அமைச்சரான இவர், அக்கட்சியின் தேர் தல் அறிக்கை குழுவின் தலைவராக இருந்து வருகிறார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அந்த தொகுதியை நரேந்திர மோடிக்கு விட்டுக் கொடுத்துள்ளார். இந்த நிலையில், செய்திச் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட் டியில் முரளி மனோகர் ஜோஷி கூறியதாவது:-

பிரதமர் பதவிக்கு பார தீய ஜனதாவின் பிரதிநிதி யாக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு கட்சி தலைவர்கள் ஆதரவு தெரி விக்கிறார்கள். நாடு முழுவ தும் ஆதரவு கிடைத்து வருகிறது.

நாட்டில் தற்போது பாரதீய ஜனதா அலை வீசு கிறது. அதை தனிப்பட்ட நபருக்கு (நரேந்திர மோடி) ஆதரவான அலையாகக் கருத முடியாது. குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டது போன்ற அபிவிருத்தி எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது.

அபிவிருத்தியில் எந் தெந்த மாநிலத்தில் நல்ல அம்சங்கள் இருக்கின்ற னவோ அவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். கட்சியில் இருந்து நீக்கப்பட் டுள்ள மூத்த தலைவருக்கு (ஜஸ்வந்த் சிங்), தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது இல்லை என தீர்மானித்தது மத்திய தேர்தல் கமிட்டி எடுத்த முடிவு அல்ல. அது கட்சி யின் தலைவர் (ராஜ்நாத் சிங்), மற்றும் ராஜஸ்தான் முதல்அமைச்சரால் எடுக் கப்பட்ட முடிவு. இவ்வாறு முரளி மனோகர் ஜோஷி கூறினார்.

அவர் இவ்வாறு கூறி இருப்பது பற்றி பாரதீய ஜனதா மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத்திடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர், முரளி மனோகர் ஜோஷி என்ன கூறினார் என்பது பற்றி முழுமையாக அறிந்து கொண்ட பின்னர் தான் அதுபற்றி கருத்து தெரிவிக்க முடியும் என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/78674.html#ixzz2yugpLe00

தமிழ் ஓவியா said...

புதுமாப்பிள்ளை போல பிரதமராவதற்கு அவசரப்படும் மோடி: சரத் பவார் காட்டம்

மும்பை, ஏப்.14- பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரதமராவதற்கு புதுமாப்பிள்ளை போல அவசரப்படுகிறார் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் விமர்சித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் அருகே காங்கிரஸ் மூத்த தலைவர் நாராயண் ரானேயின் மகன் நிலேஷ் ரானேயை ஆதரித்து பிரச்சாரம் செய்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பேசியதாவது:- புதுமாப்பிள்ளை எப்படி திருமணம் செய்து கொள்ள அவசரப்படுவாரோ அதைப் போன்று பிரதமராவதற்கு நரேந்திர மோடி அவசரப்படுகிறார். குஜராத்தில் முன்னாள் காங்கிரஸ் முதல்வர்கள் பலர் மோடியை விட நன்றாக ஆட்சி செய்திருக்கிறார்கள். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலத்தின் பொரு ளாதாரம் 18 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக குறைந் துள்ளது. குஜராத் மக்களின் கடின உழைப்பிற்கான பலனையும், பெருமையையும் மோடி எடுத்துக் கொண்டு விட்டார். இவ்வாறு அவர் பேசினார்.

Read more: http://viduthalai.in/e-paper/78678.html#ixzz2yuh2di74

தமிழ் ஓவியா said...

பா.ஜ.க. ஊடக விளம்பரம் மூலம் மோடி அலையை உருவாக்குகிறது: ராஜீவ் சுக்லா

சிம்லா, ஏப். 14- நாட்டில் எங்கேயும் மோடி அலை இல்லை. பா.ஜ.க. ஊடகங்களின் விளம்பரம் மூலம் மோடி அலை இருப்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சி செய்கிறது. என காங்கிரஸ் தலைவரும், மத்திய அமைச்சருமான ராஜீவ் சுக்லா இன்று கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர் களிடம் அவர் கூறுகையில், நாட்டில் பாதியளவில் கூட பா.ஜ.க. இல்லை. மோடி அலையை உருவாக் கும் ஊடக விளம்பரங்கள் கிராமப்புறங்களில் சென் றடைய வில்லை. ஏனென்றால் களத்தில் உண்மை நிலவ ரங்கள் வேறுபட்டுள்ளன.

அறிக்கைகளின் படி, பா.ஜ.க. ஊடக பிரச்சார விளம்பரங்களுக்காக பல கோடிகளைச் செலவு செய் துள்ளது. ஆனால் காங்கிரஸ், அய்க்கிய முற்போக்கு கூட்டணியின் சாதனைகள் மற்றும் செயல்பாட்டின் அடிப்படையிலேயே வாக்குகளை கேட்கும். இமாசல பிரதேசத்தின் 4 மக்களவை தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும். என்றார்.

மேலும், பிரதமரின் முன்னாள் ஊடக ஆலோசகர் சஞ்சய பாரு தன்னுடைய புத்தகத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி குறிப்பிட்டிருந்த கருத்துக்கு பதிலளித்த அவர், அது முற்றிலும் கற்பனையானது, உண்மையான தகவல்களின் அடிப்படையில் அந்த புத்தகம் எழுதப்படவில்லை. வணிக லாபத்திற் காகவே அது எழுதப்பட்டுள்ளது. ஏற்கனவே இது சம்பந்தமாக பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளி யிட்டிருந்தாலும், சஞ்சய பாரு தேர்தல் நேரத்தில் இந்த புத்தகத்தை வெளியிட்டிருப்பது கேள்விக் குரியது. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காகவே சிலர் சதியில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/78678.html#ixzz2yuhAC5n5

தமிழ் ஓவியா said...

பிரதமர் வேட்பாளர் என்ற கருத்து கற்பனையானது: மம்தா

கொல்கத்தா, ஏப். 14-தேர்தல் கருத்துக் கணிப் புகள் பிரதமர் பதவிக்கான போட்டியில் நரேந்திர மோடி முன்னிலையில் இருப்பதாக கூறி வரும் நிலையில் பிரதமர் வேட்பாளர் என்ற கருத்து கற்பனையானது, அரசியலமைப்பில் அது போன்ற ஒன்றே கிடையாது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி யில் அவர் தெரிவித்ததாவது:- பிரதமர் வேட்பாளர் என்பது கற்பனையான கருத்து, அது போன்ற எதுவும் அரசியலமைப் பிலேயே கிடையாது. நாடாளுமன்ற ஜனநாயகத்தில், மக்கள் நாடாளுமன்ற பிரதிநிதி களைத் தேர்வு செய்கின்றனர். அந்த நாடாளுமன்ற பிரதிநிதிகள் பிரதமரை தேர்வு செய்கின்றனர்.

ஊழல், குடும்ப அரசியல், மதவாதம், ஆகிய வற்றை எதிர்த்து போராடுவதற்கு தயாராக இருக்கும் கட்சிகள் எங்கள் கூட்டணியில் உள்ளன. ஆனால் இதனை செய்வதற்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தவறிவிட்டது. காங்கிரஸ் நாட்டை ஆட்சி செய்வ தற்கு தேவையான நம்பகத்தன்மை, பொறுப்பு மற்றும் நன்னடத்தை ஆகிய அனைத்தையும் இழந்து விட்டது. மீண்டும் நம்மால் ஊழல் மிகுந்த அர சையோ, மதக்கலவரங்களை தன்னுடைய முகமாக கொண்டிருக்கும் அரசையோ ஆட்சிக்குக் கொண்டு வர முடியாது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இரண்டு கட்சிகள் வெல்லும் இடங்களை கூட்டினால் 273 இடங் களுக்கு கீழேயே இருக்கும். இதுதான் இன்றைய அரசியல் உண்மை. காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டு கட்சிகளும் இந்தியாவை விற்பதற்கான அரசையே அமைக்கின்றன. காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜ.க. மாற் றுக்கட்சி அல்ல. இரண்டு கட்சிகளும் ஒன்றுதான். இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/78678.html#ixzz2yuhGf5jk

தமிழ் ஓவியா said...


முதல் அமைச்சர் சொன்னதை அப்படியே செய்த குடிமக்கள்!


அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தமிழ்நாடு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தொடர்ந்து ஒன்றைச் சொல்லிக் கொண்டு வருகிறார். தி.மு.க.வினரை விரட்டி அடியுங்கள் - விரட்டி அடியுங்கள் என்று சொல்லிக் கொண்டு வருவதைப் பொது மக்கள் அப்படியே அட்சரம் பிறழாமல் செய்கிறார்கள்.

தேனியில் அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை மக்கள் விரட்டியடித்தனர். கரூரில் தம்பித்துரையை விரட்டியடித்தனர். சொன்னவர் முதல் அமைச்சர் அல்லவா? குடி மக்கள் கேட்க வேண்டாமா? - (பொது மக்கள் கைதட்டி சிரித்தனர்). அதைத்தானே குடி மக்கள் செய்கிறார்கள்!

- ஆற்காடு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி

Read more: http://viduthalai.in/e-paper/78676.html#ixzz2yuhMvMhQ

தமிழ் ஓவியா said...

அம்பேத்கர் பிறந்த நாள் நமது சூளுரை
திராவிடர் கழகத் தலைவர் பேட்டி

இன்று உலகத் தலைவர் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள். அவர் வாழ் நாளில் எல்லாம் மதவாதத்தை ஜாதிய வாதத்தை - சமதர்மத்திற்கு எதிரான சக்திகளை எதிர்த்து வந்தவர். தந்தை பெரியாரின் அன்புக்கும் மதிப்புக்குமுரியவர் - அவர்கள் இருவரும் ஒரு நாணயத்தின் இரு பக்கம் போல்.மதவாத சக்திகளும், ஜாதியவாதிகளும், பிற்போக்குவாதிகளும் தலை தூக்க எத்தனிக்கும் இந்தக் கால கட்டத்தில் அம்பேத்கர் அவர்கள் எண்ணங்களை நிறைவேற்றிட இந்நாளில் சூளுரை மேற்கொள்வோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.

- சென்னையில் செய்தியாளர்களிடம் 14.4.2014

Read more: http://viduthalai.in/e-paper/78677.html#ixzz2yuharuXT

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி.யின் மார்க்கெட்டிங் ஏஜெண்டுகள் தருமபுரி கூட்டத்தில் அடையாளம் காட்டினார் தமிழர் தலைவர்


தருமபுரி, ஏப். 14- பி.ஜே.பி. தன் தேர்தல் அறிக்கையில் தான் இந்துத்துவாவை பிரகடனப்படுத்திவிட்டது. அதற்குப் பிறகும் அக்கட்சியை ஆதரிக்கின்றனர் சிலர் என்றால், அவர் கள் பி.ஜே.பி.யின். மார்க்கெட்டிங் ஏஜெண்டுகள் ஆவார்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

ஓசூர், தருமபுரியில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் 12.4.2014 அன்று உரையாற்றினார். மக்கள் மறுமலர்ச்சியோடு மாற்றத்திற்குத் தயாராகி விட்டார்கள். நாம்தான் தயாராகவேண்டும். குறிப்பிட்ட கட்சியின் தலைவர் தன் கட்சிக்கு மட்டும்தான் வாக்கு சேகரிக்கிறார். ஆனால், ஜனநாயக முற்போக்குக் கூட்டணி யில் தனது வேட்பாளருக்கு இடம் விட்டு, மாற்று வேட்பாள ருக்கு முன்னுரிமை கொடுத்து வாக்கு சேகரிக்கிறார்கள்.

முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்று கேட்பார்கள்.

இளைஞர்கள் சிந்திக்கவேண்டும்

இன்றைக்குப் பதினெட்டு வயதை அடைந்த - புதிதாக வாக்களிக்கவிருக்கும் இளைஞர்களை இணையத்தில் தேடி, அவர்களைப் பொய்யான பிரச்சாரங்கள்மூலம் கவர்ந்திழுக்க நினைக்கிறார்கள்.

இன்றைக்கு நாம் சமுதாயத்தில் பெரிய மாற்றத்தைப் பெற்றிருக்கிறோம் என்றால், அதற்குக் காரணம், திராவிடர் இயக்கம், தந்தை பெரியார் அவர்கள்தான்.

இன்றைய இளைஞர்களுக்கு குலக்கல்வித் திட்டம் என்றால், என்னவென்று தெரியாது. நம் குழந்தைகள் அரைநேரம் படிக்கவேண்டும்; மற்ற நேரங்களில், அவரவர்களின் குலத்தொழிலை செய்யவேண்டும். ஜாதி தொழிலை செய்யவேண்டும் என்ற நிலை இருந்தது. இதனை ஒழித்த ஒரு இயக்கம் திராவிடர் கழகம். அதன் தலைவர் தந்தை பெரியார்.

தமிழ்நாட்டில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இது எப்படி சாத்தியமானது? நம்மவர்கள் பலர் வழக்குரைஞர்களாக, மருத்துவர்களாக இங்கே அமர்ந்திருக்கிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் இதுபோன்று இல்லை. இந்த மாற்றத்தைக் கொண்டு வந்த இயக்கம்தான் திராவிடர் இயக்கம். அதன் மகத்தான புரட்சிதான் இது!

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சில பைத்தியக் காரர்கள் உளறிக் கொண்டிருக்கிறார்கள். திராவிடத்தால் யாரும் வீழ்ந்ததாக வரலாறு இல்லை. வாழ்ந்ததாகத்தான் வரலாறு இருக்கிறது. வீழ்ந்த இனம் மீண்டு இருக்கிறது.

இன்றைய இளைஞர்கள் இதனை நன்றாகப் புரிந்து கொள்ளவேண்டும். அன்றைய காலகட்டத்தில் பாபர் மசூதியை இடித்துவிட்டு, மதக் கலவரத்தை நாடு முழுவதும் அரங்கேற்றினார்கள் பா.ஜ.க.வினர். அதில் ஒரே ஒரு மாநிலம் மட்டும் அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்தது. அது தமிழ்நாடு மட்டும்தான். காரணம் இது தந்தை பெரியார் பிறந்த மண்.

வாஜ்பேயி காலத்தில்...

அந்த மதக் கலவரத்தை இன்றைக்கு அரங்கேற்றிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இதைத்தான் புரிந்துகொள்ள வேண்டும். வாஜ்பேயி காலத்தில்கூட மறைமுகமாக இருந் ததை, இன்றைக்கு வெளிப்படையாக ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற திட்டத்தைக் கையில் எடுத்து இருக்கிறார் கள். மதவாதத்தை வளர்க்க, ஆர்.எஸ்.எஸ். இந்தத் தேர்தலை முன்னின்று நடத்துகிறது. பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் வெளிப்படையாக இதனை அறிவித்திருக்கிறார்கள். வழக்கு நடந்துகொண்டிருக்கிறது - அதனைப்பற்றயெல்லாம் அவர் கள் கவலைப்பட்டதில்லை.

இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற்று வரவேண்டும் என்பதைவிட - யார் வரக்கூடாது என்பதை நீங்கள் சிந்தித்து வாக்களிக்கவேண்டும்.

மார்க்கெட்டிங் ஏஜெண்டுகள்

வெளி மாநிலங்களிலிருந்து பல சரக்குகள் இங்கு வருகின்றன - மோடியைப் போன்று. இங்கு நேரிடையாக பொருளை விற்பனை செய்ய முடியாது என்ற நிலையில், இங்கு மார்க்கெட்டிங் ஏஜெண்டுகளை பதவி வெறி உள்ள வர்களைப் பயன்படுத்துகிறார் மோடி. பல கம்பெனிகளுக்கு மார்க்கெட்டிங் ஏஜெண்டுகள் இருப்பதைப்போன்று, இங்கு (தமிழ்நாட்டில்) பல கட்சிக்காரர்கள் மோடிக்கு மார்க் கெட்டிங் ஏஜெண்டாக மாறியிருக்கிறார்கள். அவர்களுக்கும், இந்த சமுதாயத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

மோடிக்கு ஒரு கொள்கை இருக்கிறது - அவர் சார்ந்த கட்சிக்கு ஒரு கொள்கை இருக்கிறது. அது என்ன? அதுதான் மதவாதம். அடிப்படையில் மதவாதத்தை உருவாக்க வேண்டும் என்பதே அது!

தமிழ் ஓவியா said...

சில பேர், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் முஸ்லிம்கள், மற்ற கட்சியினர் இருக்கிறார்களே, இது எப்படி மதச்சார்பற்ற கூட்டணியாகும் என்று கேட்கிறார்கள். அவர் களுக்கு நாங்கள் பதில் சொல்வோம். குழப்புபவர்களுக்கு, தூங்குவது போன்று பாசாங்கு செய்பவர்களுக்குப் பதில் சொல்லத் தேவையில்லை.


பி.ஜே.பி. என்ற எழுத்துகளை அழித்துவிட்டு, ஆர்.எஸ். எஸ். என்று போட்டுக்கொள்ளலாம். அன்றைக்கு பி.ஜே.பி. முன்னால் நின்றது; இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். முன்னால் நிற்கிறது.

மதவாத ஆட்சியில் சிறுபான்மையினர் இருக்கலாம். எப்படி? கிறித்தவர்கள் கிருஷ்ணனை வணங்கவேண்டும்; இஸ்லாமியர்கள் ராமனை வணங்கவேண்டும். அப்படி இருந்தால், மதவாத ஆட்சியில் சிறுபான்மையினர் இருக் கலாமாம். இந்த அணியில் சிறுபான்மையினர் தங்களின் உரி மைகளுக்காக பாதுகாப்புக்காக அமைப்பினை வைத்துள்ள வர்கள். தாங்கள் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக அல்ல - பிஜேபியோ ஹிந்துத்துவா ஆளவேண்டும் என்கிறது. இது என்ன முக்கிய பிரச்சினையா?
10 ஆண்டுகளுக்கு முன்னாள் இருந்த வாஜ்பேயி ஆட்சிக்காலத்தில் போட்டதிட்டங்கள், பல நேரங்களில் சொல்லி, வாஜ்பேயி ஆட்சியில் செய்யாத, செய்யத் தயங்கிய அயோத்தி ராமன் கோவில் திட்டம், காஷ்மீரில் இருக்கக்கூடிய 370 திட்டம் - அதை நீக்கவேண்டும் என்ற நிலைமை. அதுபோலவே, பொது சிவில் சர்வீஸ் திட்டம். இது மக்கள் பிரச்சினையா? சாதாரண பிரச்சினையா? இது தீர்க்கக்கூடிய பிரச்சினையா? இது என்ன அவ்வளவு அவசர அவசரமான பிரச்சினையா? ஏன் செய்கிறார்கள்? இப்போது விட்டால், எப்போது செய்வது. கடைசியாக ஒரு முடிவு எடுத் திருக்கிறார்கள். அந்த இறுதி முடிவுக்கு, இறுதியாக முடிவு கட்ட இருக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு.

எதிர்காலம் இருண்ட காலமாக இருக்கக்கூடாது என்பது தான் எங்களின் கவலை.

சிங்கமாக இருந்தவர்கள் எல்லாம், சிறு நரிகளிடம் யாசகம் கேட்பதா? என்றவர்கள், இன்றைக்கு சர்க்கஸ் கம்பெனியில் இருக்கிறார்கள். சிறுநரி, சிறுத்தை, புலி, சிங்கம் எல்லாம் காட்டில் சுதந்திரமாக இருந்தன. இப்போது கூண்டில் இருக்கிறார்கள் - அதுவும் பா.ஜ.க. கூண்டில் இருக்கிறார்கள்.

இந்தத் தொகுதியில் (தருமபுரி) நிற்கின்ற வழக்குரைஞர் தாமரைச்செல்வன், நாடாளுமன்றத்தின் கதவு திறக்கும் பொழுது அவர் முதலில் உட்கார்ந்திருப்பார். எப்பொழுது கடைசியாக வருவார் என்றால், அந்தக் கதவுகள் மூடும் பொழுதுதான் வருவார். மற்றவர்கள் மாதிரி இடையில் எழுந்து வருபவர் அல்ல. சிறந்த வழக்குரைஞர் அவர். தமிழ்நாட்டிலேயும் வழக்குரைஞராக இருக்கிறார்; பெங்களூரூவிலும் வழக்குரைறாக இருக்கிறார். அதுவே பலரின் கண்கள் அவரைக் கண்காணிக்கின்றன என்று உரையாற்றினார். - இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-4/78693.html#ixzz2yui0KEdZ

தமிழ் ஓவியா said...


குஜராத் மாநிலத்தில் கல்விக் கட்டணத்தைக் கட்ட முடியாமல் நிறைய பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்


இந்த நிலையில் குஜராத் இருக்கும்போது தி.மு.க. ஆட்சியை மோடி குறை சொல்வதா? தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பதிலடி

கடலூர், ஏப்.14- குஜராத் மாநிலத்தில் கல்விக் கட்ட ணத்தைக் கட்ட முடியாமல் நிறைய பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்ற செய்தி இப்பொழுது வெளிவந்திருக்கிறது. இந்த நிலையில், குஜராத் இருக் கும்பொழுது தி.மு.க. ஆட் சியை மோடி குறை சொல் வதா? என்று தி.மு.க. பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் உரை யாற்றினார்.

கடலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பா ளர் கொ.நந்தகோபால கிருஷ்ணன் அவர்களை பெண்ணாடம் பகுதியில் ஆதரித்து தி.மு.க. பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் பேசிய போது, இன்று (13.4.2014) சென்னையில் உரையாற்றிய மோடி அவர் கள் திமுக தமிழகத்திற்க்காக எதுவும் செய்யவில்லை என்று ஒரு பொய்ப் பிரச் சாரத்தை செய்துள்ளார்.

இந்த வாரம் ஜூ.வி. பத்திரிக்கையில் ஹியுமன் டெவலப்மெண்ட் இண்ட ஸ்டிரி இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்ளை சர்வே எடுத்துள்ளார்கள். அவர் களின் சர்வேயின்படி மோடி முதல்வராய் இருக் கும் மாநிலம் குஜராத் அது எத்தனையாவது இடம் தெரியுமா 11 ஆவது இடம் அதில் கேரளா மாநிலம் முதல் இடம் பெற்றுள்ளது.

அதே போல் கல்வியில் எடுத்துக்கொண்டால் 2003 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத் தில் ஒன்றாம் வகுப்புச் சேர்ந்த மாணவர்கள் எண் ணிக்கை 17 லட்சத்து 80 ஆயி ரம் பேர் நன்றாக பாருங் கள்; அதே மாணவர்கள் 10 ஆம் வகுப்புத் தேர்வு எழு தும் போது 10 லட்சத்து 30 ஆயிரம் பேர்; ஆக 7 லட் சத்து 50 ஆயிரம் பேர் படிப் பைப் பாதியில் நிறுத்தியுள் ளார்கள்

கல்விக் கட்டணத்தை கட்ட முடியாமல் நிறைய பேர் தற்கொலை செய்துள் ளார்கள். அதேபோல் கல் வியைக் கற்பிக்கும் ஆசிரி யர்கள் கூட நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் கள். இந்த நிலையில் குஜ ராத் இருக்கு போது நம் கழக ஆட்சி ஆட்சியைக் குறை கூறுகிறார்.

ஆக, ஜெயலலிதாவின் ஊதுகோலாக மோடி மாறி இருக்கிறார். அதேபோல் ரிசவர் வங்கி வளர்ச்சி விகித கணக்கீட்டில் குஜராத் மாநி லம் 1981 ஆம் ஆண்டிலி ருந்து 1985 வரை காங்கிரஸ் ஆட்சியில் 16.29 சதவீதம் அதே 1990-1994 ஆண்டின் காங்கிரஸ் ஆட்சியில் 16.73 சதவீதம் அதுவே இப்பொ ழுது மோடியின் ஆட்சியில் 9.35 சதவீதம். இப்படி குஜ ராத் இருக்கும் போது,
மோடி பேசும் பொழுது கூறியிருக்கிறார் பி.ஜே. பி.யை பார்த்து திமுக பயப்படுகிறதாம்.

அவருக்கு நான் ஒன்றை சொல்லி கொள்ள விரும்பு கிறேன். எமர்ஜன்சியை பார்த்தே பயப்படாதவர் கள் திமுகவினர் 1975 ஆம் ஆண்டு ஆட்சி அமைத் தோம். 1976 ஆம் ஆண்டே எமர்ஜன்சி நிலையை பிர கடனப்படுத்தினார். அதை ஆதரிக்க இந்திரா காந்தி அம்மையாரின் தூதுவர் ஒருவர் வந்து கலைஞரை சந்தித்தார்.


தமிழ் ஓவியா said...

அப்போது எமர் ஜன்சியை ஆதரிக்காவிட் டால் உங்கள் ஆட்சி கவிழ்க் கப்படும் என்றார். அப் போது கலைஞர் அவர்கள் தூதுவரிடம் கூறினார் நான் பேரறிஞர் அண்ணா அவர் களால் வளர்க்கப்பட்ட வன்.

இந்த மிரட்டலுக்கு எல்லாம் பயப்படுகிறவன் நான் அல்ல என்று கூறி அனுப்பினார். உடனே கடற் கரையில் லட்சக்கணக்கான உடன்பிறப்புகளைத் திரட்டி தீர்மானம் ஒன்றைப் நிறை வேற்றினோம். எமர்ஜன் சியை ஆதரிக்கமாட்டோம் என்று உடனடியாக கழகத் தோழர்கள் 500-க்கும் மேற் பட்டோர் கைது செய்யப் பட்டனர்.

அப்படிப்பட்ட இயக் கம் நம் இயக்கத்திடம் மோடியின் பூச்சாண்டிக் கெல்லாம் பயப்படாது. பிஜேபி கூட்டணி மதவெறி பிடித்தக் கூட்டணி; அவர் களின் தேர்தல் அறிக்கை யில் காவிரி பிரச்சினைபற்றி ஒன்றும் இல்லை; இலங் கைப் பிரச்சினை பற்றி ஒன்றும் இல்லை; கச்சத்தீவு பற்றி இல்லை; தமிழக மீனவர்கள் பிரச்சினைபற்றி இல்லை. ஆனால் என்ன கூறுகிறார்கள்? ராமர் கோவில் கட்டப்படும் என் கிறார்கள்.

இந்த மதவெறி பிடித்த வர்கள்கூடத்தான் கூட்டணி அமைத்திருக்கிறார்கள் பாமக, தேமுதிக போன்ற கட்சிகள். அதிலும் ராமதாஸ் பற்றி விஜயகாந்த் என்ன கூறுகினார் தெரியுமா? முன்பு மரங்களை எல்லாம் வெட்டினார்கள்; இப் போது பசுமை புரட்சி செய் யப் போகிறோம் என்கிறார் கள்.

20 ஆண்டாக ஒரு ஜாதி யின் பெயரை சொல்லி கொண்டு போராட்டங் களை நடத்துகிறார்; ஏதா வது ஒரு சமூகநீதி போரட் டத்தை நடத்தியிருப்பரா? ஆனால் இப்போது ஒரே கூட்டணியில் இருக்கிறார் கள். ஆனால் அவர் தகு திக்கு, வயதிற்கு, அனுபவத் திற்கு மரியாதை கொடுப் பவர்கள் நாம்.

தமிழ் ஓவியா said...

துக்ளக் பத்திரிக்கை யின் ஆசிரியர் சோ. அவர் எனக்கு நல்ல நண்பரும் கூட, ஆனால் அவர் ஒரு அறிவு ஜீவிபோல் எழுது கிறார் பா.ஜ.க. போட்டி யிடாத தொகுதிகளில் அ.தி. மு.க.வுக்கு வாக்களிப்பது தான் நல்லது. மற்றக் கட்சி களுக்கு வாக்களித்தால் அது அவர்களுடைய வெற் றியை உறுதி செய்யாது. ஓட்டுப் பிளவைத் தான் உண்டாக்கும் என்று.

துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் பா.ஜ.க.விற்கு ஆலோசகர், ஜெயலலி தாவிற்கு என்பது அனை வருக்கும் தெரிந்ததே. இதி லிருந்தே தெரியவில்லையா பாஜகவிற்கும், அதிமுக விற்கும் கள்ளத்தொடர்பு இருக்கிறது என்று. இன்று கரூரில் உரை யாற்றிய ஜெயலலிதா கூட் டணி கட்சியை அறிமுகப் படுத்துகிறார். அப்போது கூறும்போது, பகுஜ் சமாஜ் என்று கூறுகிறார்.

அவர்கள் நேற்றைய தினமே கூட்ட ணியை விலக்கிக் கொண் டனர். ஒரு முதல்வருக்கு தன் கட்சியில் என்ன நடக் கிறதே என்றே தெரிய வில்லை இப்போது நான் உங்களிடம் கேட்கிறேன், ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன் விலைவாசியை குறைப் பேன் என்று சொன்னார்,

அதன்படி விலைவாசியை குறைத்தாரா? 3 மாதத்தில் மின்வெட்டுப் பிரச்சி னை யைத் தீர்ப்பேன் என்று சொன்னார், அதன்படி மின் வெட்டை குறைத்தாரா? இவற்றை எல்லாம் எண்ணிப் பார்த்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், கழக சார்பில் போட்டி யிடும் வெற்றி வேட்பாளர் கொ.நந்தகோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கேட் டுக் கொள்கிறேன்.

- இவ்வாறு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டா லின் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-5/78666.html#ixzz2yul11X1E

தமிழ் ஓவியா said...

சிறுநீரக நோய்களைத் தீர்க்கும் வாழைத்தண்டு

சிறுநீர சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிற வர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்து வதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.

வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. எனவே, இதை நீர்ச் சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்தி வரலாம். மேலும், இது தேவையற்ற உடல் பருமனையும் குறைக்கும்.

சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிகப் பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது. வாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சு போன்றவை வெளியேறி விடும்

சிறுநீரகக் கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரகக் கற்களை வெளியேற்றலாம். வாழைத் தண்டுக்கு சிறுநீரகக் கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. வாழைத்தண்டை சுட்டு, அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் கலந்து பூசிவர தீப்புண், காயங்கள் ஆறும்.

வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் வாழைத் தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

வாழைத்தண்டை உலர்த்தி பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும். மேலும், கல்லீரல் வலுவ டையும். வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.

Read more: http://viduthalai.in/page-7/78673.html#ixzz2yulSPSj4

தமிழ் ஓவியா said...

உடல் நலத்தைப் பாதுகாக்க உணவில் கவனம் அவசியம்

பரபரப்பான தற்போதைய வாழ்க்கை சூழ்நிலையும், உணவு பழக்க வழக்கங்களும் நம்மை நோயில் தள்ளி விடுகின்றன. உணவு முக்கியம்தான். ஆனால், எது நல்லது என்பதை உணர்ந்து தேர்ந்தெடுத்து உண்பது சிறந்தது. பல ரெடிமேட் உணவுகள் கெட்டுப் போகாமல் இருக்க பல வேதிப் பொருட்கள் கலக்கப்படுகின்றன.

இவை ஆரோக் கியத்துக்கு உகந்தவை அல்ல. மேலும் இத்தகைய உணவு சாப்பிடும் குழந்தைகளின் ஆரோக்கியம் கெட்டு, படிப்பையும் பாழாக்கி விடுகிறது.

பீட்சா, பாஸ்தா போன்றவை மைதா மாவில் இருந்து தயாரிக்கப்படுபவை. ருசிக்காக இவற்றை எப்போதாவது சாப்பிட்டாலும், இவற்றுக்கு பதிலாக கோதுமை உணவு களை உட்கொள்ளலாம். இவை சீக்கிரமாக குளுக்கோஸாக மாறாது. எண்ணெய்யில் பொரித்த உணவுகளிலும் சத்து கிடையாது என்பதோடு பல்வேறு சிரமங்கள்தான் மிச்சம்.

ஹைட்ரஜன் செறிவூட்டப்பட்ட எண்ணெய். இது பிஸ்கட்டிலும், பிற நொறுக்குத் தீனிகளிலும் அதிகமாக இருக்கும். உணவுப் பொருள்கள் நீண்ட காலம் கெடாமல் இருக்கவேண்டும் என்பதற்காக எல்லா நிறுவனங்களும் எண்ணெயில் ஹைட்ரஜனை அதிகம் செலுத்துகின்றன.

டிரான்ஸ்ஃபேட் எனப்படும் இதை நம் உடலால் எளிதில் செரிக்க முடியாது. இதை உண்பதால் உடலில் கெட்ட கொழுப்புச் சத்துதான் அதிகம் சேரும். இப்படி அதிகமாகும் கெட்ட கொழுப்பினால், காலப்போக்கில் நாளங்கள் கடினமாகிவிடும். பக்கவாதம், புற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சில உணவுப் பொருள்கள் உங்கள் குழந்தையின் உடல் அமைப்பில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்திவிடக் கூடும்.

ஒவ்வாமை, ஆஸ்துமா, அலர்ஜி, கிட்னி பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். நீர்ச்சத்தும் குறையும். இதுபோல் செயற்கை குளிர்பானங்களை தவிர்த்து, பழச்சாறுகளை அருந்துவது உடலுக்கு மிகவும் நல்லது. எந்த அளவுக்கு நொறுக்குத் தீனிகளை குறைக்கிறோமோ அந்த அளவுக்கு ஆரோக் கியம் பாழாகாமல் இருக்கும்.

இவற்றுக்கு பதிலாக பாதாம், அக்ரூட் போன்ற அதிக சத்துள்ள உணவு பொருட்கள், உடனடி சக்தி கிடைக்கும். இந்த கோடை காலத்தில் மிகவும் கவனம் அவசியம். நீர்ச் சத்து மிகுந்த பழங்களை உண்ணலாம்.

Read more: http://viduthalai.in/page-7/78682.html#ixzz2yulq11a7

தமிழ் ஓவியா said...


மோடி பற்றி கலைஞர் கருத்து

சென்னை, ஏப்.15- திமுக - அதிமுக பற்றி மோடி தெரிவித்துள்ள கருத்துக் குறித்து திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கருத்து வருமாறு:

செய்தியாளர்: நேற்றைய தினம் மோடி ரஜினிகாந்த் அவர்களைச் சந்தித்ததைப் பற்றி, ரஜினிகாந்த் அவரை நல்ல நிர்வாகி என்று சொல்லியிருக்கிறாரே?

கலைஞர்: ரஜினி பேசியதைப் பற்றியோ, அவர் சொன்னதைப் பற்றியோ நோ கமெண்ட்ஸ், நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

செய்தியாளர்: இரண்டாவது கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடித்திருக்கிறீர்கள். அதுபற்றி உங்கள் கருத்து?

கலைஞர்: நான் மகிழ்ச்சி அடையத்தக்க அளவிற்கு இருந்தது.

செய்தியாளர்: அ.தி.மு.க.வினர் தொடர்ந்து ஒவ்வொரு கூட்டத்திலும் உங்களை சாடிக் கொண்டிருக்கிறார்களே?

கலைஞர்: அவர்கள் ஆத்திரத்தில் இருக்கிறார்கள். தோல்வி பயம் அதிகமாகி விட்டது. ஆகவே எங்களைச் சாடுகிறார்கள்.

செய்தியாளர்: முதன் முதலாக நேற்று தமிழகத்தில் பேசிய மோடி, திமுக - அதிமுக ஆகிய இரண்டு கட்சி களுக்குமே மக்களைப் பற்றி அக்கறை இல்லை என்று சொல்லியிருக்கிறாரே?

கலைஞர்: தமிழ்நாட்டில் முதன் முதலாக பிரச் சாரத்தைத் தொடங்கி இருக்கிறார். அப்போது ஒரு அருமையான வாசகத்தை முதன் முதலாக வெளியிட் டிருக்கிறார்.

தமிழ்நாட்டு மக்களின் வருத்தத்தை சம்பாதிக்க வேறு காரணமே தேவை இல்லை.

இவ்வாறு கலைஞர் அவர்கள் செய்தியாளர் களுக்குப் பேட்டி அளித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/78726.html#ixzz2z0KhxsRx

தமிழ் ஓவியா said...


சிலர் ஹிட்லரைப்போல் வர கனவு காணுகிறார்கள் மோடிமீது பவார் தாக்கு!

டில்லி.ஏப்.15- மத்திய வேளாண்மைத்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரசு கட்சியின் தலைவ ருமாகிய சரத் பவார் சமூக வலைதளமான டிவிட்டரில் தன்னுடைய கருத்தைப் பதிவிட்டுள்ளார். அப்பதி வில் சிலர் என்று மோடியை மறைமுகமாகக் குறிப் பிட்டு, சிலர் ஹிட்லராக வருவதற்கு கனவு காணு கிறார்கள் என்று தாக்கி உள்ளார்.

காங்கிரசே இல்லாத நாடாக இந்தியா வரும் என்று மோடி கூறியிருந்தார். பவார் அதைக்கண்டித்துக் கூறும்போது, மனநல மருத் துவமனையில் இருக்க வேண் டியவர் என்று சாடினார்.

தற்போது சிலர் என்று மோடியை மறைமுகமாகக் குறிப்பிட்டு ஹிட்லராக உருவாக கனவு காண்கிறார் கள். அப்படிப்பட்ட சக்தி களை வெற்றிபெற அனும திக்கக் கூடாது. அப்படிப் பட்டவரின் முயற்சிகளை நசுக்கிட வேண்டும் என் றார். மராட்டிய மாநிலத்தில் விதர்பாவில் தொடர்ச்சி யான இரு கூட்டங்களில் மோடி பேசும்போது, விவ சாயிகளைப் பாதுகாக்க வில்லை என்று பவார்மீது குற்றஞ்சாட்டிப் பேசினார்.

அதற்குப் பதிலடியாக பவார், நாம் அய்ம்பது விழுக்காடு பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண் டும் என்று கூறுகிறோம். ஆனால், பாஜக தலைவர் கள் தனிப்பட்ட முறையில் பெண்களை கேலிப் பொரு ளாக்குகிறார்கள். நாட்டை எப்படி அவர்கள் நடத்து வார்கள்? என்று கேட்டார்.

பாஜக தேர்தல் அறிக்கை, காங்கிரசு தேர்தல் அறிக் கையிலும் நாடாளுமன்றத் திலும், சட்டமன்றத்திலும் 33 விழுக்காடு இட ஒதுக் கீடு வழங்கப்படும் என்று கூறி உள்ளனர். மேலும், மோடியின் வரலாறு குறித் தும், அறிவு குறித்தும் கேலி செய்துள்ளார். காந்தி ஒத் துழையாமை இயக்கத்தை அகமதாபாத்திலிருந்து தொடங்கியதாக கூறாமல், வார்தாவிலிருந்து தொடங் கினார் என்றாரே என்று கேலி செய்துள்ளார். பவார் கட்சியான தேசியவாதக் காங்கிரசுக் கட்சி கடந்த பத்து ஆண்டு களாக அய்க்கிய முற் போக்குக் கூட்டணியான காங்கிரசு அணியில் 1999லி ருந்து அங்கம் வகித்து வருகிறது.
-ஹிந்துஸ்தான் டைம்ஸ், 14-4-2014, டில்லி பதிப்பு

Read more: http://viduthalai.in/e-paper/78727.html#ixzz2z0L42SVv

தமிழ் ஓவியா said...


இந்தியாவுக்கே தேவைப்படும் திராவிடர் கழகத் தலைவரின் குரல்!

பொதுத் தேர்தலுக்கு இன்னும் இடையில் எட்டு நாள்களே உள்ளன. தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் இயற்கைத் தட்ப வெப்ப நிலையோடு போட்டிப் போட்டுக் கொண்டு அனல் பறக்கிறது.

வட இந்தியாவிலிருந்து தலைவர்கள் படை எடுக்க ஆரம்பித்து விட்டனர். தலைநகரில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நேற்று இரு கூட்டங்களில் பிரச்சாரம் செய்தார். பொது மக்களும், இளைஞர்களும், சிறுபான்மையினரும் திரண்டு அவர் உரையைக் கேட்கிறார்கள்.

இவருடைய கருத்தும், உரையும் வித்தியாசமாகவே இருக்கிறது. நடக்க இருக்கும் தேர்தலின் தனித் தன்மை என்ன? என்பது குறித்துத் தமக்கே உரித்தான ஈரோட்டுக் கண்ணாடி அணிந்து கருத்துக்களை எடுத்து வைக்கிறார்.

ஒரு காலத்தில் ஜன சங்கமாக இருந்த அமைப்புதான் இன்றைய பாரதீய ஜனதா கட்சி; இதற்கு முன் தனது இந்துத்துவா திட்டத்தை இலை மறை காயாகத் தான் வைத்திருந்தது. அப்பொழுதெல்லாம் ஆர்.எஸ்.எஸ். என்ற அவர்களின் தாய் நிறுவனம் பின்புலத்தில் இருந்தது. நடக்கவிருக்கும் 16ஆவது மக்களவைத் தேர்தலில் அது முன்னுக்கு வந்து, பிஜேபியைக் கட்டளையிடும் இடத்திற்கு நகர்ந்துள்ளது.

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையைப் பார்த்தாலே அது எளிதில் விளங்கி விடும். தேர்தல் அறிக்கைக் குழுவின் தலைவர் முரளிமனோகர் ஜோஷியே அந்த உண்மையைப் பட்டாங்கமாய் ஒப்புக் கொண்டுள்ளார். ஆர்.எஸ்.எஸின் ஆலோசனைகளின்படிதான் தேர்தல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் நாங்கள் பெருமைப்படுகிறோம் என்றும் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தி விட்டார்.

அதன் காரணமாக ராமன் கோயில் கட்டுதல், பொது சிவில் சட்டம், காஷ்மீர் மாநிலத்துக்கான அரசமைப்புச் சட்டம் 370ஆவது பிரிவு நீக்கம் இவை பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

இதனையும் தாண்டி ஆர்.எஸ்.எஸின் முக்கிய கோட்பாடான பசுவதைத் தடுப்பு என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, பசு பாதுகாப்புக்கென்று தனித் துறையே உருவாக்கப்படும் என்ற தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களுக்கென்றுள்ள சிறப்புச் சலுகைகளும் மாற்றி அமைக்கப்படும் என்று பி.ஜே.பி. தேர்தல் அறிக்கை கூறுகிறது.

இதன் மூலம் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மதச் சார்பின்மை என்பதைத் தூக்கி எறிந்து விட்டு, இந்து ராஜ்ஜியம் என்கிற ஆர்.எஸ்.எஸின் அடிநாதக் கொள்கை என்பதை அரங்கேற்றக் கூடிய ஒரு திட்டத்தோடு தேர்தலைச் சந்திக்க உள்ளனர். இந்தக் கோணத்தில் தான் திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் மக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். அதனால்தான் இந்தத் தேர்தல் வழக்கம் போல வந்து போகும் தேர்தல் அல்ல; நமது தலை முறையைப் பாதிக்கச் செய்யக் கூடிய பிரச்சினைகள் இருக்கின்றன.

குறிப்பாக சிறுபான்மை மக்களைக் குறி வைத்து இந்தத் தேர்தலைப் பார்க்கிறது பி.ஜே.பி. ஏற்கெனவே நாட்டில் மதக் கலவரங்களைத் திட்டமிட்டு அது நடத்தி வந்துள்ளது.

நாடு தழுவிய அளவில் மதக் கலவரங்களின் பின்னணியில் சங்பரிவார் இருந்திருக்கிறது என்பதை இந்தியாவின் உள் துறையே சொல்லியிருக்கிறது. காவி பயங்கரவாதம் என்ற ஒரு சொலவடையையே கூட உள்துறை அமைச்சராகவிருந்த ப. சிதம்பரம் சொன்ன துண்டு.

மாலேகான் குண்டுவெடிப்பைக் கவனித்தால் சங்பரிவார்க் கும்பல் இந்திய இராணுவம் வரை ஊடுருவி இருப்பதை அறிய முடிகிறது. இராணுவத்தில் பயன்படுத்தப்படும் வெடி மருந்தை இவர்கள் கையாண்டுள்ளனர். இது சாதாரணமானதல்ல; மிகப் பெரிய சதித் திட்டம் இதன் பின்னணியில் இருக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போதே மிகப் பெரிய சதித் திட்டத்தை வகுத்து நாட்டில் கலவரத்தைச் செய்துள்ளது மதவெறிப் பிடித்த ஒரு கும்பல் என்றால், ஆட்சி அதிகாரத்துக்கு வந்து விட்டால் எப்படி யெல்லாம் ஆட்டம் போடுவார்கள் என்பதை ஒரே ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஏற்கெனவே பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸின் பாடத் திட்டங்கள் இடம் பெற்று விட்டன. மனு தர்மத்தைப் பாடமாக வைக்கும் அளவுக்கு நிலைமை மோசம். அரசு நிருவாகத் துறைகளிலும் இந்துத்துவா சக்திகள் ஊடுருவி விட்டன. இராணுவத் துறையிலும் பெரும் அளவுக்கு ஊடுருவி விட்டதாக கப்பல் படைத் தளபதியாக இருந்த விஷ்ணு பகவத் கூறியுள்ளார்.

ஏதோ வாக்குச் சாவடிக்குள் சென்று ஒரு பொத்தானை அழுத்துகிறோம் என்ற சம்பிரதாயக் கடமை என்று நினைக்காமல், இந்தியாவின் எதிர் காலத்தையே அச்சுறுத்தும், குறிப்பாக சிறுபான்மை மக்களைக் குறி வைக்கும், சமூக நீதிக்கும் எதிரான சக்திதான் பிஜேபி என்பதை மனதிற் கொண்டு அதனையும், அதற்கு முட்டுக்கொடுக்கும் கட்சி களையும் அடையாளம் கண்டு, ஒரே கல்லால் பல காய்களை வீழ்த்தும் வாக்களிப்புக் கடமையைச் செய்ய வேண்டும்; திராவிடர் கழகத் தலைவரின் இந்தப் பிரச்சாரம், வேண்டுகோள் தமிழ்நாட்டு அளவில் இருந்தாலும் - இந்தியத் துணைக் கண்டத்திற்கே தேவைப்படுவதாகும்.

Read more: http://viduthalai.in/page-2/78730.html#ixzz2z0LO7v7r

தமிழ் ஓவியா said...


நிழல் யுத்தம்?


ஒரு வழியாக, ஜெயலலிதா பாஜகவை கண்டித்துவிட்டாராம்; ஓட்டு போடாதீர்கள் என்றும் சொல்லி விட்டாராம். கர்நாடகத்தில் காவிரி தண்ணீர் விடுவதற்கு, பாஜக, காங் கிரஸ் இரண்டுமே துரோகம் செய்து விட்டதை நேற்றுதான் கண்டுபிடித்தது போல எதிர்ப்பு காட்டுகிறார் ஜெயலலிதா. உடனே, மோடி சும்மா இருப்பாரா? ரஜினியை சந்தித்து டீ சாப்பிட்டுவிட்டு வந்தவர், தமிழ் நாட்டில் அதிமுக, திமுக இரண்டுமே அவர்களுக்குள் சண்டை போடுவதைத்தான் செய்கிறார்கள். வேறு ஒன்றும் செய்யவில்லை என சொல்லிவிட்டார்.

எல்லோரும் சொன்னீங்களே. இருவரும் ஒருவரை ஒருவர் இது வரை தாக்கிப்பேசவில்லை என்று. பார்த்தீர்களா? பார்த்தீர்களா? ஜெய லலிதாவும் பாஜகவை கண்டித்து விட்டார்; மோடியும் அதிமுகவை கண்டித்து விட்டார்.

சரி; திமுக கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் அதிமுக முடக்குகிறது என்பது ஊரறிந்த செய்தி. அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக எப்போது முடக்கியது. அதிமுக புதிதாக ஒரு திட்டமும் கொண்டு வரவில்லை என்பதும் உண்மை. இரண்டையும் ஒரே தட்டில் வைத்து மோடி பேசு கிறார். இங்கே வைகோ, ராமதாஸ் இருவரும் கூறும் அதே கருத்தைத் தான் மோடியும் சொல்லி இருக்கிறார். வேறு ஒன்றும் சொல்லவில்லை.

ஆட்சிக்கு வந்து மூன்றாண் டுகளில், ஜெயலலிதா ஒரு உருப்படி யான திட்டமும் கொண்டு வர வில்லை; சொத்துக்குவிப்பு வழக்கில் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது அரசு வழக்கறிஞரால் ஆதாரத்துடன்;

முந்தைய பாஜகவின் ஆட்சிக்கு இடையில் ஆதரவை விலக்கியது என எதைப்பற்றியும் பேசாமல், திமுகவும், அதிமுகவும் ஒன்று என்பது போல போலியாக ஒரு அதட்டலை விட்டுச் சென்றுள்ளார் மோடி.

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ராமர் கோவில், 370 பிரிவு, பொது சிவில் சட்டம் இதைப் பற்றி ஜெயலலிதாவின் நிலை என்ன? ஏற்றுக்கொள்கிறாரா அல்லது எதிர்க் கிறாரா? என்று சொல்லவில்லை.

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ஈழப்பிரச்சினை, மீனவர் பிரச்சினை பற்றி எதுவும் சொல்லவில்லை. அதைப்பற்றி ஜெயலலிதா எதுவும் பேசவில்லை.

மாறாக, கர்நாடகத்தில் காவிரி தண்ணீர் பிரச்சினைப்பற்றி பாஜகவின் நிலைப்பாட்டைப்பற்றி இப்போது பேசுகிறார். கர்நாடகத்தில், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலைமை தான் என்று கூறும் ஜெயலலிதாவிற்கு ஒன்றை ஞாபகப்படுத்த வேண்டும்.

இதே கர்நாடகத்தில் ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று எஸ்.ஆர். பொம்மை முதல்வராக இருக்கிறார். அதே ஜனதா தளத்தைச் சேர்ந்த வி.பி.சிங் மத்திய அரசில் பிரதமராக உள்ளார். தமிழ் நாட்டில் கலைஞர் முதல்வராக உள்ளார். கலைஞரின் வேண்டுகோளை ஏற்று, காவிரி நடுவர் மன்றம் அமைத்திட, எஸ்.ஆர். பொம்மை எதிர்ப்பையும் மீறி, வி.பி.சிங் அமைத்தார். அத்தகைய வி.பி.சிங் ஆட்சியை கண்டித்தவர் ஜெயலலிதா; வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்தது பாஜக ஆட்சி.

மோடியும், ஜெயலலிதாவும், இத்தகைய நிழல் யுத்தம் நடத்துவது தேர்தலுக்காகத்தான் என்பதுகூடவா தெரியாது மக்களுக்கு?

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/78733.html#ixzz2z0LY2t3D

தமிழ் ஓவியா said...


சுதந்திரப் போராட்ட வீராங்கனை அன்னிபெசன்ட் அம்மையார்

இந்திய சுதந்திரப் போர்க்களத்தில் சுதேசி சிந்தனை யுடன் ஆங்கில ஆட்சியை எதிர்த்த இந்திய வீரர்கள் அநேகம்பேர். அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை! காரணம் தம் தாய்நாட்டை அந்நியரின் பிடியிலிருந்து விடுவிக்க, அம்மண்ணின் மைந்தர்கள் போராடுவது இயல்பானதும் யாராலும் புரிந்து கொள்ளக் கூடியதும் ஆகும்.

ஆனால், வேற்று நாட்டில் பிறந்து, இந்த மண்ணுக்கு வந்து, இந்தியா என் தாய்நாடு என்று உள்ளத்தால் ஒன்றிப்போய், இந்திய விடுதலைக்குக் குரல் கொடுத்தார் ஓர் அன்னிய நாட்டுப் பெண்மணி, என்றால் நமக்கு ஆச்சரியம் ஏற்படத்தானே செய்யும். ஆம். அப்படி ஒருவர்தான் புகழ்பெற்ற ஹோம்ரூல் இயக்கம் தொடங்கிய அய்ரிஷ் பெண்மணியான அன்னிபெசன்ட் அம்மையார்.

அன்னிபெசன்ட் என்று அழைக்கப்பட்ட அன்னிவுட் பிறந்தது லண்டனில். 1847 அக்டோபர் முதல் தேதி பிறந்தவர் அன்னிவுட். அவருடைய தந்தை டாக்டர் வில்லியம் பேஜ்வுட் என்பவர். தாயார் பெயர் எமிலி என்பது. எமிலியின் முன்னோர்கள் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள்.

அன்னியின் தந்தை மருத்துவ வல்லுநராக மட்டுமல்லாது, சிறந்த மேதையாகவும் திகழ்ந்தார். அரசியல் மற்றும் சமூக எண்ணம் கொண்டிருந்த அன்னிபெசன்ட் 1913 இல் நாட்டு விடுதலைக்கான களமாகத் திகழ்ந்த காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1918 இல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மகாநாட்டில் அன்னிபெசன்ட் அம்மையாரே தலைமை தாங்கும் அரிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

இப்படி காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநாட்டில் தலைமை வகித்த முதல் பெண்மணி என்ற சிறப்பு பெற்றார் அன்னி பெசன்ட் அம்மையார். 1917 இல் மாதர் சங்கம் அமைத்தார். அதன்மூலம் பெண்களுக்கான விழிப்புணர்வுகளைப் பரப்பினார். பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பெண்களுக்கு சிறுவயதிலேயே திருமணம் நடப்பதால், அவர்களில் பெரும்பாலோர் இளவயதிலேயே விதவைகளாக ஆகி விடும் கொடுமையைக் கண்டு மனம் நொந்து பால்ய விவாகத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தவர் அன்னி பெசன்ட் அம்மையார். இறுதியில் அவர் 1933 செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி தம் 86 ஆம் வயதில் இறந்தார்.

Read more: http://viduthalai.in/page-7/78738.html#ixzz2z0N2CJML

தமிழ் ஓவியா said...

பெண்களுக்கு சம உரிமை கிடைத்திட போராடிய பெண்

பல நூறு ஆண்டுகளாக உலகெங்கிலும் பெண்கள், தங்கள் உரிமைக்காகப் போராடி வந்திருக்கிறார்கள். 1800இல் நடந்த பெண்கள் போராட்டத்தின் குறிக்கோள், சுதந்திரமும் வாக்குரிமையும் அடைவதுதான். நூறு ஆண்டுகள் கழித்து, 1990இல் அவர்களின் குறிக்கோள்களில் சில நிறைவேறின.

1792இல் வோல்ஸ்டன் கிராப்ட் (1759-1797) என்ற பெண்மணி, 'பெண்ணுரிமைக்கான நியாயம்' என்ற நூலை எழுதினார். மணமான பெண்கள் வீடு என்ற கூண்டுக்குள், சிறகொடிந்த பறவைகளாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

1800இல் மேடம் போடிச்சான் (பார்பரா ஸ்மித்) என்பவர் மணமான பெண்களுக்குரிய சொத்துரிமை, கல்வியுரிமை மற்றும் இதர உரிமைகளுக் காகப் போராட்டங்களைத் தொடங்கினார்.

1840ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த பெண்கள், வாக்குரிமைக்காகப் போராடத் தொடங்கினர். பெண்களின் நிலை சமுதாயத் தில் உயர, வாக்குரிமை பெறுவது ஒன்றே வழி என்பது அவர்களின் வாதம்.

1960இல் பெண்களின் சுதந்திரப் போராட்டங்கள் அரசியல் நிகழ்வுகளாக வெடிக்கத் தொடங்கின. பெண்களுக்கு சமஉரிமை வழங்க அரசியல் சட்டமியற்ற வேண்டுமென்றும், பால் வேறுபாடு மற்றும், கல்வித் தகுதி இவற்றைக் காட்டி பெண்கள் ஒதுக்கப்படக் கூடாது எனவும் வலியுறுத்தினர்.

1968இல் இங்கிலாந்து ஃபோர்டு மோட்டார் தொழிற் சாலை பெண் ஊழியர்கள், தங்களுக்கு ஆண் ஊழியர் களுக்கு சமமான ஊதியம் வேண்டுமென போராடினர்.

1970இல் உலக அழகிப் போட்டிகளில் பெண்கள் காட்சிப் பொருளாக்கப்பட்டு, அவர்களின் கவுரவம் குலைக்கப் படுவதைச் சுட்டிக்காட்டி அதை நிறுத்துமாறு போராடினார். 1975இல் இங்கிலாந்தில் பெண்களுக்கான சம உரிமை சட்டம் அமலுக்கு வந்தது.

1949இல் பிரெஞ்சு தத்துவ மேதை சீமன் தூ போவார் (1908 - 1986) என்ற பெண்மணி எழுதிய இரண்டாம் பாலினம்' என்ற நூலில், ஆண்கள் எவ்வா றெல்லாம் பெண்களுக்குக் கிடைக்கக் கூடிய உரிமையைக் கெடுத்துவருகிறார்கள் என விளக்கியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-7/78738.html#ixzz2z0NDX5gj

தமிழ் ஓவியா said...


அணையா நெருப்பு டீஸ்டா செடல்வாட்


குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த மதக் கலவரத்தை நிகழ்த்திய மதவாதச் சக்திகளுக்கு எதிராக அதிகமாகப் போராடியவை மனிதஉரிமை அமைப்புகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும்தான்.

அப்படி குஜராத்தில் நேர்மையையும் நீதியையும் நிலைநாட்டப் போராடி வருபவர்களுள் நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பின் சார்பில் செயல்படும் டீஸ்டா செடல்வாட்டும் ஒருவர்.

பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கிய டீஸ்டா செடல்வாட், இந்தியாவின் முதல் அட்டர்னி ஜெனரலான எம்.சி. செடல்வாடின் பேத்தி. வழக்கறிஞர் அதுல் செடல்வாட், சீதா செடல்வாடின் மகள். மும்பையில் தி டெய்லி, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், பிசினஸ் இந்தியா ஆகியவற்றில் பணிபுரிந்தார்.

டீஸ்டா நினைத்திருந்தால், பரபரப்பான, பிரபலமான ஒரு பத்திரிகையாளராக மாறியிருக்க முடியும். ஆனால், அந்தப் பாதையை அவர் தேர்ந்தெடுக்கவில்லை. அவர் விரும்பிய பத்திரிகைப் பணியே, அவரது வாழ்க்கை யின் திருப்பத்துக்குக் காரணமாக அமைந்தது.

1993இல் மும்பையில் மதக் கலவரம் மூண்டபோது, அவரது வாழ்க்கை தலைகீழ் மாற்றம் கண்டது. பத்திரி கையாளர் என்பதால், கலவரச் சம்பவங்களுடன் அவர் நேரடியாக உறவாட வேண்டியிருந்தது. கண்ணெதிரே நிகழ்ந்த கலவரக் காட்சிகள், அவரை உலுக்கின. அதன் பிறகு முழுநேர மனித உரிமை செயற்பாட்டாளராக மாறினார்.

கம்யூனலிசம் காம்பாட் (மத அடிப்படை வாதத்துக்கு எதிரான போர்) என்ற மாத இதழைக் கணவர் ஜாவெத் ஆனந்துடன் சேர்ந்து தொடங்கினார். ஜாவெத் ஆனந்தும் ஒரு முன்னாள் பத்திரிகையாளர்தான்.

தொடர்ந்து மத அடிப்படைவாதச் சக்திகளுக்கு எதிராகவும், அவர்களது வெறுப்புணர்வுக் கொள்கைகளையும் மனச்சிதைவையும் அம்பலப்படுத் துவதை நோக்கமாகக் கொண்டு டீஸ்டா செயல்பட்டு வருகிறார்.

இப்படி மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தளராத உறுதியுடன் டீஸ்டா போராடினாலும், ஒருபுறம் அவருக்கு எதிரான அவப் பிரச்சாரமும் நடந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக குஜராத் அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்திருக்கிறது.

Read more: http://viduthalai.in/page-7/78739.html#ixzz2z0NKPAIy

தமிழ் ஓவியா said...

முனைவர் பட்டம் பெற்ற பார்வையற்ற முதல் பெண்

சிசுவிலேயே கள்ளிப் பாலைப் புகட்டும் உசிலம் பட்டியில் பிறந்த அவர், பல தடைகளை உடைத்தெறிந்து தென்னிந்திய அளவில் முனைவர் பட்டம் பெற்ற பார்வையற்ற முதல் பெண். புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் வரலாற்று துறை தலைவராகப் பணி புரிந்து வரும் ராதாபாய்தான் இவ்வளவு சிறப்புக்கும் உரியவர். நான் இன்னைக்கு இந்தச் சிறப்பைப் பெற்றிருக்கிறேன் என்றால், அதற்கு என் தாயும் தந்தையும்தான் காரணம்.

எங்கள் வீட்டுக்கு நான் 8ஆவது குழந்தை. அதுவும் பார்வையற்ற குழந்தை. அந்தக் காலத்தில் பெண் குழந்தை என்றாலே வேண்டாப் பொருளாகப் பார்க்கும் ஊரில், பார்வையற்ற பெண்ணான நான் நிச்சயமாகக் கல்வி என்ற அறிவு ஒளியைப் பெற வேண்டும் என்று விரும்பியவர் என் தந்தை. பத்தாம் வகுப்பு வரை படித்த பிறகு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது திருச்சியில் உள்ள விழியிழந்தோர் பள்ளிக்குச் சென்றேன்.

அங்குதான் பி.யு.சி.யும், முதுகலை படிப்பும் படிக்க விதை விதைக்கப்பட்டது என்கிறவர், கடந்த கால நிகழ்வுகளில் மூழ்கினார். பி.யு.சி. படித்த பிறகு கல்லூரியில் அத்தனை சுலபத்தில் ராதாபாய்க்கு இடம் கிடைக்கவில்லை. விரும்பிய துறையும் கிடைக்கவில்லை. கிடைத்த வரலாற்றுத் துறையை விரும்பிப் படித்தார் ராதாபாய். 1989ஆம் ஆண்டில் தமிழகத்தில் பார்வையற்றோர் நிலையும், மறுவாழ்வும் என்ற தலைப்பில் முனைவர் பட்டம் படிக்க விரும்பினார்.

முனைவர் பட்டம் படிக்கவும் வழிகாட்டி கிடைக்காமல் திண்டாடி, நீண்ட போராட்டத்துக்குப் பிறகே அந்தப் படிப்பையும் அவரால் சாதிக்க முடிந்தது. இத்தனை கஷ்டத்துக்குப் பிறகு கல்லூரியில் வேலை கிடைத்த பிறகும் ராதாபாய் சும்மா இருக்கவில்லை. வாழ்க்கை என்பதே சவால்கள் நிறைந்ததுதான்.

ஆனால், பார்வையற்றவர் களுக்குக் கூடுதல் சவால் நிறைந்தது வாழ்க்கை. அவர்களின் நிலை எனக்குத் தெரியும் என்பதால், பார்வையற்ற மாணவிகளுக்கு விழிப்புணர்வு தரத் தொடங்கினேன். சுற்று வட்டாரங்களில் உள்ள ஊர்களுக்குச் சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்.

நம்மால் நிச்சயம் படிக்க முடியும் என்று அவர்களிடம் நம்பிக்கை விதையை விதைக்கத் தொடங்கினேன். இப்போது பார்வையற்ற மாணவிகள் பலரும் கல்லூரிகளில் படிக்கிறார்கள். அது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார் ராதாபாய்.

Read more: http://viduthalai.in/page-7/78739.html#ixzz2z0NVA32r

தமிழ் ஓவியா said...


மாட்டு வண்டியில் பயணித்து ரிசர்வ் வங்கியின் நிர்வாகசபை வரை சென்றடைந்த ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் தமிழர் ஆர்.காந்தி


காந்தி என்ற பெயரைச் சொன்னதும் நெல் விளையும் திருநெல்வேலி மாவட்டத்தில் தேவநல்லூர் என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தவர் என்பது மட்டுமே சிலருக்கு தோன்றலாம்; ஆனால், ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஆர்.காந்தி பழகுவதற்கு இனிமை யானவர்; நேசிக்கத்தக்கவராகவும் விளங்குகிறார் என்பது அவரை நெருக்கமாக அறிந்தவர்களுக்குப் புரியும்.

அரசுத் துறையில் பதவி உயர்வு என்பது ஓர் புதிர் போல நிலைமை என்ற அளவில், காந்தி அவர்களுக்கு ரிசர்வ் வங்கியின் இந்த உயர்ந்த பதவிக்கு தேர்வானது நல்வாய்ப்பாக அமைந்துள்ளது என்பது மட்டுமல்ல; ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் வங்கியில் சிறந்த முறையில் சேவையும், நுண்ணறிவும் பெற்ற ஒருவருக்கு இந்த பதவி கிடைத்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

பணிமூப்பு அடிப்படையில் ஜி.கோபாலகிருஷ்ணா விற்கு இந்த வாய்ப்பு வராத நிலையில், பி. மொஹாபத்ரா அல்லது பி.விஜய் பாஸ்கர், இந்த இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என நினைத்த நேரத்தில், பள்ளிக்கு மாட்டு வண்டியில் சென்ற ஓர் விவசாயி மகன் காந்தி, வெற்றிக் குதிரையாக, இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இந்த பதவியில், வங்கி நடைமுறை மற்றும் மேம்பாடு பற்றிய துறையை அவர் கவனிப்பார். ரிசர்வ் வங்கியின் முக்கிய மாற்றங்களில், காந்தியின் பங்கு மகத்தானது. செபி எனும் பங்கு பரிமாற்றம் குறித்த கட்டுப்பாடு நிறுவனத்தில், காந்தியின் முன்னாள் தலைவர் டாக்டர் மேத்தாவின் வேண்டுகோளுக்கு ஏற்ப, செபியின் நடவடிக்கைகளை மேம்படுத்திட அரும்பணி ஆற்றியவர்.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர்களாக இருந்த எஸ். வெங்கிடரமணன், சி.ரங்கராஜன் இருவரது நம்பிக் கையும் பெற்று, அவர்களுக்கு செயல் உதவியாளராக பணியாற்றியவர் ஆர்.காந்தி. அதனால் தான், ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த டாக்டர் மேத்தா, செபி நிருவனத்தில் பொறுப் பேற்ற போது, காந்தியையும் உடன் அழைத்துச் சென்றார். எளிமையானவர்; நல்ல மனிதர் என அவருடன் பணிபுரியும் சக பணியாளர்களாலும், நண்பர்களாலும் பாராட்டப்படுவர் ஆர்.காந்தி.

அவர் தனது வாழ்க்கையில் இன்னும் அதிக முன்னேற்றத்தைக்கூட அடைந்திருக்க முடியும்; ஆனால், அவரது சமூக சூழ்நிலையில், தந்தையின் கட்டளைப்படி, ரிசர்வ் வங்கியில் பணியில் சேர்ந்தார். பொதுக்காப்பீட்டு கழகம், பாரத ஸ்டேட் வங்கி, ரிசர்வ் வங்கி என மூன்று நிறுவனங்களிலிருந்தும் ஆர்.காந்திக்கு அதிகாரி பதவி வழங்கியபோது, தந்தை யின் விருப்பப்படி, ரிசர்வ் வங்கியை தேர்ந்தெடுத்தார் என அவரை நன்கு அறிந்த அவரது நண்பர் கூறினார்.

களக்காடு க.அ.மொ.பீ.மீரானியா உயர்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பையும், பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியில் புதுமுக வகுப்பும், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் பட்டப்படிப்பும் மேற்கொண்டவர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பொருளாதாரத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர் இன்றைக்கு ரிசர்வ் வங்கியின் பல்வேறு பொறுப்புகள் பெற்று, துணை ஆளுநராக உயர்ந்திருக்கிறார் ஆர்.காந்தி. சிறிய கிராமத்தில் பிறந்த காந்திக்கு, பணி செய்வதிலும், புத்தகங்கள் படிப்பதிலும் அதிக ஆர்வம் உள்ளவர்.

எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் காந்தியின் இரண்டு மகன்களும், ரெய்கி எனும் ஜப்பானிய புத்த மார்க்கத்தின் ஓர் முறையை பயன்படுத்தி வருகிறார் கள். காந்தியும் அவரது துணைவியாரும், இந்த முறையை பயன்படுத்தி குணப்படுத்தும் முறையில் சிறந்த பயிற்சியாளர்களாகவும் உள்ளார்கள்.

வங்கியில் ஆர்.காந்தியின் மிகச்சிறந்த செயல்பாடு என்பது இன்றைக்கு பண வர்த்தகத்தை நாடு முழு வதும் வங்கிகள் செயல்படுத்தும், ஆன்லைன் மூல மாக பணத்தை ஒரு வங்கியின் கணக்கிலிருந்து எந்தவொரு வங்கியின் கணக்கிற்கும், துரிதமாக அனுப்பும் முறையை செயல்படுத்தியது.

இந்த முறையினால், பண வர்த்தகம், பல நாட்கள் கழித்து கணக்கில் சென்றடையும் நிலையை மாற்றி, சில நிமிடங்களில் சென்றடைந்து, வர்த்தகர்களுக்கு மிகப்பெரிய நன்மையை உண்டாக்கி உள்ளது. காந்தியின் வெற்றி தொப்பியில் மேலும் ஓர் இறகு இந்த ஆர்டிஜிஎஸ் எனும் பண வர்த்தக முறையை அமுல்படுத்தியதாகும்.

செபியில் பணியாற்றிய காலத்திலும், நிறுவனங்கள் பொய்யான வருமானத்தையும், லாபத்தையும் காட்டி, மக்களை ஏமாற்றி தங்களது பங்குகளை அதிக விலைக்கு விற்கும் மோசடித்தனத்தை, கட்டுப்படுத்தி அதனை நெறிப்படுத்தியதில் ஆர்.காந்தியின் பங்கு மகத்தானது. காந்தி ஓர் மக்கள் மனிதர் என்கிறார், செபி நிறு வனத்தின் முன்னாள் அதிகாரியும், சட்ட ஆலோசக ருமான பி.ஆர்.ரமேஷ்.

ஆம், மக்கள் மனிதர் ஆர்.காந்தி, ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பொறுப்பேற்பதில் நமது மகிழ்ச்சி யையும், வாழ்த்தையும் தெரிவிப்போம்.

Read more: http://viduthalai.in/page-7/78736.html#ixzz2z0NttKPA

தமிழ் ஓவியா said...


குஜராத் கலவரங்கள்பற்றிய கடிதங்கள்: மோடிக்குப் புது சிக்கல்


புதுடில்லி, ஏப்.15- குஜ ராத் கலவரத்தின்போது அப்போதைய பிரதமர் வாஜ்பாயுடனான கடிதப் போக்குவரத்து விவரங் களை வெளியிடுவது குறித்து, அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடி யின் கருத்தை பிரதமர் அலு வலகம் கேட்டுள்ளது.

இதுதொடர்பான விவ ரங்களை கேட்டு தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஅய்) பிரதமர் அலு வலகத்தில் ஏற்கெனவே மனு அளிக்கப்பட்டது.

குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதால், அந்த விவரங்களை அளித் தால் விசாரணையில் பாதிப்பு ஏற்படும் என்று கூறி, மனுவை பிரதமர் அலு வலக பொதுத் தகவல் அலு வலர் தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் அலுவலக இயக் குநருக்கு மேல்முறையீடு செய்யப் பட்டது.

அதில், சரியான காரணம் தெரி விக்காமல், மனுவை பொதுத் தகவல் அலுவலர் தள்ளுபடி செய்துள்ளதாக வும், 11 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம் பவம் தொடர்பான விவ ரங்களையே கேட்டுள்ள தாகவும், அதனை அளிப்ப தால் விசாரணையில் பாதிப்பு ஏற்படாது என்றும் வாதிடப்பட்டுள்ளது.

அதையடுத்து, மனு தாரர் கேட்டுள்ள விவரங் களை 15 நாள்களுக்குள் அளிக்கும்படி பிரதமர் அலுவலக பொதுத் தகவல் அலுவலருக்கு இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து செய்தியா ளர்களிடம் பொதுத் தகவல் அலுவலர் எஸ்.வி. ரிஸ்வி கூறுகையில், தகவல் உரிமைச் சட்டத்தின் 11 (1) பிரிவின்படி, மூன்றாவது நபர் குறித்த தகவல்களைக் கேட்டு யாரேனும் விண் ணப்பித்தால், அந்த விவ ரங்களைத் தருவதற்கு முன் அந்த மூன்றாவது நபரின் கருத்து கேட்கப்பட வேண் டும்.

இதேபோன்ற வேறொரு கோரிக்கை தொடர்பாக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் கருத்து கேட் கப்பட்டுள்ளது. எனவே, தகவல் உரிமைச் சட்டத்தின் 11 (1) பிரிவில் கூறப்பட் டுள்ள நடைமுறைகளுக் குப் பிறகு, மனுதாரர் கேட் டுள்ள விவரங்கள் அளிக் கப்படும் என்றார்.

தகவல் உரிமைச் சட் டத்தின் 11ஆவது பிரிவின் படி, கருத்து கேட்கப்படும் 3ஆவது நபர் தனது பதிலை 5 நாள்களில் தெரிவிக்க வேண்டும். ஆனால் அது போன்று கால அளவு எதை யும் நிர்ணயித்து மோடிக்கு பொதுத் தகவல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பவில்லை.

குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தின்போது ஏரா ளமானோர் பலியாகினர். இந்த சம்பவத்தின் போது நரேந்திர மோடிக்கும் பிர தமர் அலுவலகத்துக்கும் இடையே 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி மற்றும் அதே ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி இடையே பரஸ்பரம் அனுப்பப்பட்ட அனைத்து கடிதங்களின் நகல்களை யும் கேட்டு, தகவல் அறி யும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத் தில் மனு அளிக்கப்பட் டுள்ளது.

அதில் குஜராத் கலவரத் தின்போது, அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கும், மோடிக்கும் இடையே பரஸ்பரம் அனுப்பப்பட்ட கடிதங்களின் நகல்களை அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது

Read more: http://viduthalai.in/page-8/78723.html#ixzz2z0O8Eo4X

தமிழ் ஓவியா said...


அம்பேத்கருக்குப் பாரத ரத்னா பட்டம் வழங்கியது பிஜேபி அரசாம் - மோடியின் பொய்யான தகவல்


இந்தியாவின் சட்ட மேதை பாபாசாகிப் அம் பேத்கரின் பிறந்த நாள் விழா வின் போது நரேந்திரமோடி, காங்கிரஸ் கட்சியை கடு மையாக தாக்கிப் பேசினார். அவர் கூறியதாவது: காங் கிரஸ் அரசு, அம்பேத்கர் வாதிகளையும், தலித்துக் களையும் அவமானப் படுத்தி அவர்களை அடி மைகளாக்கி வைத்துள்ளது என்று கூறினார்.

இதற்கு பதில் அளித்த காங்கிரஸ் துணைத் தலைவர் குஜராத் மாடல் அங்குள்ள தொழிலதிபர்களுக்குத்தான் அதிக லாபத்தை ஈட்டித் தந்திருக்கிறதே தவிர, அடிப்படை வசதிகள் கூட சாமானிய மக்களைச் சென்ற டையவில்லை, அங்குள்ள தலித் மற்றும் பழங்குடியின மக்களின்நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது மோடி, தலித்மக்களை தேவை யற்ற குடிமகன்களாகவே கருதுகிறார், கடந்த 15 ஆண்டுகளாக குஜராத்தில் தலித்துக்களின் நிலை மிக வும் மோசமானதாக மாறி விட்டது, என்று கூறினார்.

ராகுல்காந்தியைத் தொடர்ந்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சந்தீப் சுரஜ்வாலா, மோடியின் குற்றச்சாட்டிற்கு பதிலளிக் கும் போது கூறியதாவது இந்தியா முழுவதும் இத்தேசத்தின் அரசியல் சாசன தந்தையை கொண் டாடிக்கொண்டு இருக்கும் போது நரேந்திரமோடி, தலித் விரோத மனப்பான் மையை வெளிப்படுத்து கிறார்.

அவர் தலித்துகளை மனதால் பாதிக்கப்பட்டவர் கள் என்றும், தலித்துகளின் குணம் என்றும் மாறாத ஒன்று என்றும் பழித்துக் கூறுகிறார். மோடி எழுதிய கர்ம யோக் என்ற நூலைப் பற்றி சுரஜ்வாலா, மோடி தனது நூலில்(48, 49 ஆம் பக்கத்தில்) தூய்மைப் பணியாளர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது தூய் மைப்பணியாளர்களின் முன்னோர்கள் மனித மலங்களை அள்ளுவதை கடவுளுக்குச்செய்யும் பணியாகக் கருதினார்கள், ஆகவே அவர்கள் முகம் சுழிக்காமல் தங்கள் பணி களை பயபக்தியுடன் செய்து வந்தனர். அவர்களின் நோக்கமே சமூகத்திற்கு ஆற் றும் தொண்டுதான், கட வுளுக்கு ஆற்றும் தொண்டு என்று கருதினர்.

ஆகவே இந்தத் தொழிலை நூற்றாண்டு களாக பயபக்தியுடன் செய்து வந்தனர். இந்தப் பணியை, ஆன்மீகப் பணியை விட மேன்மை யான பணி என்று கருதலாம். இந்த நிலையில் தூய்மைப்பணியாளர்களை வேறு ஒரு பணிக்கு அமர்த் துவதோ அல்லது அவர் களாக வேறு ஒரு பணியைத்தேர்ந்தெடுப்பதோ, கடவுளுக்குச் செய்யும் விரோதமான காரியமாகும் என்று எழுதியுள்ளார். 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பள்ளிவிழாவில் கலந்துகொண்ட போது மோடி கூறியதாவது; மனவளர்ச்சி குன்றிய வர்கள், தலித்துகளைப்போன்றவர்கள், அவர்களுக்கும் உங்களைப்போன்று சிறப்பு கவனிப்பு தேவைப்படுகிறது. அவர்கள் கண்காணிப்பில் வைக்கப் படவேண்டியவர்கள், என்று கூறினார். மோடியின் இந்தப் பேச்சு எவ்வளவு கீழ்த்தரமானது. கடந்த 10 ஆண்டுகளில் மோடி தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான எந்த ஒரு திட்ட வரைமுறையையும் முன்வைக்க வில்லை என்றார். மீண்டும் பொய்: அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கியது, வாஜ்பாய் தலைமையிலான அய்க்கிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்கிறார் நரேந்திர மோடி அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்கியது, வி.பிசிங் தலைமையிலான அரசு. இது அனைவருக்கும் தெரிந்த பொதுவான செய்தியாகும்

Read more: http://viduthalai.in/e-paper/78763.html#ixzz2z6IgEwqO

தமிழ் ஓவியா said...


பாஜ ஆட்சியமைத்தால் மதக்கலவரம் வெடிக்கும்: ப. சிதம்பரம்


காரைக்குடி, ஏப். 16-பாஜ கையில் ஆட்சி சென்றால் நாட்டில் மதக்கலவரம் ஏற்படும் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்தார்.

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்துக்கு வாக்குகள் சேகரித்து காரைக்குடி அருகே கோட்டையூர், பள்ளத்தூர், கானாடுகாத்தான் உள்பட பல்வேறு பகுதிகளில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: மத்திய அரசை அமைக்கக்கூடிய சக்தி, வல்லமை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உள்ளது. 1999இல் பாஜ ஆட்சி அமைத்து, இந்தியா ஒளிர்கிறது எனக்கூறி மீண்டும் தேர்தலை சந்தித்தது. ஆனால் தோல்வியையே சந்தித்தது.

ஆர்எஸ்எஸ் இயக்கம் நேரடியாக அரசியலுக்கு வராமல் பாஜ முகமூடியுடன் வருகிறது. இது மத, மொழி வெறியர்கள் நடத்தும் நச்சு இயக்கம். பாஜ சுதந்திரமாக செயல்பட முடியாது. ஆர்.எஸ்.எஸ். நினைத்தது எல்லாம் பாஜ தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. சேது சமுத்திர திட்டத்தை ராமர் பாலம் என்று கூறி தடுத்தவர்கள். இவர்கள் கையில் ஆட்சி சென்றால் மதக்கலவரம் ஏற்படும். பாஜ தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீடு குறித்து சொல்லவில்லை. இவர்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள்.

இவ்வாறு சிதம்பரம் பேசினார்.

மோடியின் போலி வாக்குறுதிகளால் நல்லது நடக்காது: அசோக் கெலாட்

ஜெய்ப்பூர், ஏப். 16-''பா.ஜ.க.வின் போலியான வாக்குறுதிகள் நாட்டிற்கு எந்த நன்மையையும் அளிக் காது. ராகுல் காந்தியின் வளர்ச்சிக்கான பாதைகளும், திட்டங்களுமே நாட்டிற்கு நன்மையை வழங்கும்'' என முன்னாள் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் மோடி இருவரும் வழங்கி வரும் போலியான வாக்குறுதிகள் குறித்து வாக்காளர்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அவர்கள் தேர்தல் பிரச்சாரங்கள் மூலம் மக்களை ஏமாற்றுவதற்கு முயற்சி செய்கிறார்கள். தனது பேச்சுக்களில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் மோடி, போலி வாக்குறுதிகளை வழங்குவதன் மூலம் பதவி நாற்காலியை அடைவதையே தனது குறிக் கோளாக கொண்டுள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான எந்த மாற்றுத் திட்டங்களும் அவரிடம் இல்லை. அவர் மக்களை தவறாக வழிநடத்துகிறார்.' என்றார்.

குஜராத்தில் பெண்களின்
தொலைபேசி ஒட்டு கேட்பு
மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு

புனே, ஏப்.16- பாஜ பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி பெண் அதிகாரம் பற்றி பேசி வரு கிறார். ஆனால், அங்கு பெண்களின் தொலைபேசியை ஒட்டுக்கேட்க அவர் உத்தரவிட்டுள்ளார் என்று காங் கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட் டியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனேயில், காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வஜீத் கதமை ஆதரித்து நடந்த நேற்று பிரச்சாரக் கூட்டத்தில், ராகுல் காந்தி பேசியதாவது: குஜராத் முதலமைச்சர் பெண்களின் தொலை பேசியை ஒட்டுக்கேட்கிறார். அம்மாநில காவல் துறையினர் பெண்களை வேவு பார்ப்பதற்காக அவர்களின் பின்னால் சென்று கொண்டிருக்கின்றனர். முதலில் அவர்கள் பெண்களுக்கு மரியாதை கொடுக்க கற்றுக் கொள்ளட்டும். அதன்பின்னர் அவர்கள் பெண் அதிகாரம் பற்றி பேசலாம்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள் ளன. ஆனால், பாஜ ஆளும் மாநிலங்களில் இது மிக, மிக குறைவாக உள்ளது. சட்டீஸ்கரில் 20,000 பெண்கள் காணாமல் போயுள்ளதாக வழக்குகள் பதிவாகி உள்ளன.

நரேந்திர மோடி தன்னுடைய ஒரு பொதுக் கூட்டத்துக்கு 10கோடி செலவழிக்கிறார். இதுதவிர கூட்டத்தை பிரபலப்படுத்த பத்திரி கைகளில் பெருமளவில் பணம் கொடுத்து விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. இந்த பணம் முழுவதும் குஜராத்தில் இருந்துதான் கொண்டு வரப்படுகிறது. குஜராத் மாடல் வளர்ச்சி என்பது வெறும் மிட்டாயை போன்றதுதான். இதன் மூலம் ஒரு சில தொழிலதிபர்கள் மட்டுமே பயன் அடைந் துள்ளனர் என்றார்

Read more: http://viduthalai.in/e-paper/78764.html#ixzz2z6Ixw200

தமிழ் ஓவியா said...


குழப்பத்தின் உச்சியில் முதல் அமைச்சர்!


அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல் அமைச்சருமான செல்வி ஜெயலலிதா அவர்கள் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திடீரென்று சில புதிய சொற்களை உதிர்க்க ஆரம்பித்துள்ளார்.

தமிழ்நாட்டிலேயே எந்த அரசியல் கட்சித் தலைவரும் தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்புவதற்கு முன்பாகவே தனது பிரச்சாரத்தைத் தொடங்கியவர் அவர்.

அ.இ.அ.தி.மு.க.வை எதிர்த்து தி.மு.க. தலைமையில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியும், பிஜேபி உள்ளிட்ட கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரிலும், காங்கிரசும் போட்டியிட்டாலும் இதுவரை திமுக பற்றியும், காங்கிரஸ் பற்றியுமே காரசாரமாக எழுதிப் படித்து வந்தார். பிஜேபியைப் பற்றி ஏன் அவர் வாய்த் திறக்கவில்லை? மோடியைப்பற்றி ஏன் விமர்சிக்கவில்லை? என்ற வினா பல தரப்பிலும் எழுந்து வந்தது; ஏடுகளும் சுட்டிக் காட்ட ஆரம்பித்தன.

பிஜேபிக்கும் அஇஅதிமுகவுக்கும் இடையே மறைமுகமான கூட்டு இருப்பதுதான் இதற்குக் காரணம் என்ற நியாயமான விமர்சனங்கள் வெளி வர ஆரம்பித்தன.

மிகவும் காலந்தாழ்ந்து இப்பொழுதுதான் பிஜேபி யைப்பற்றி விமர்சிக்கத் தொடங்கியுள்ளார்ஜெயலலிதா. பிஜேபியுடன் மறைமுகக் கூட்டு என்ற கருத்து வெடித்துக் கிளம்பிய நிலையில், அது தமக்குப் பாதகமாக அமையும் என்ற எண்ணத்தில் முதன் முதலாக பிஜேபியை எதிர்த்து பேச ஆரம்பித்துள்ளார். பி.ஜே.பி. காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்று கூடக் கூறுகிறார். அதே நேரத்தில் பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திர மோடி குறித்து ஒன்றும் சொல்லவில்லை. நரேந்திர மோடியும் முதன் முதலாக திமுகவோடு இணைத்து அஇஅதிமுக-வையும் சாடியுள்ளார் ஜெயலலிதாவும், மோடியும் சொல்லி வைத்துக் கொண்டு பேசுவதுபோல பேசி இருக்கிறார்கள்.

அது எப்படியோ போகட்டும்; அ.இ.அ.தி.மு.க, பொதுச் செயலாளர் என்ன காரணம் கூறி பி.ஜே.பியைத் தோற்கடிக்க வேண்டும் என்று கூறுகிறார்?

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் காவிரி நீர்ப் பற்றியோ, முல்லைப் பெரியாறு பிரச்சினைபற்றியோ, இலங்கைத் தமிழர் பற்றியோ, தமிழக மீனவர்கள் பற்றியோ, கச்சத் தீவைப் பற்றியோ குறிப்பிடப்பட வில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் பிஜேபியை எதிர்ப்பதாகக் கூறுகிறார் ஜெயலலிதா.

அதே நேரத்தில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சென்னை தேர்தல் கூட்டங்களில் எழுப்பிய வினாவுக்கு அம்மையாரிட மிருந்து விடை இல்லை. பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ள இந்துத்துவா அஜண்டாபற்றி முதல் அமைச்சர் கருத்துத் தெரிவிக்காதது ஏன்?

ராமன் கோயில் கட்டுதல், பொது சிவில் சட்டம், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கென்று உள்ள சிறப்புத் தகுதிகளை உறுதிபடுத்தும் அரசமைப்புச் சட்டம் 370ஆவது நீக்கம் குறித்து ஜெயலலிதா அம்மையாரின் கருத்து என்ன? என்ற வினாவைத் தமிழர் தலைவர் எழுப்பியுள்ளார்.

இந்த முக்கியமான வினாவுக்கு விடையளிக்காமல், வேறு பிரச்சினைக்குச் செல்லுகிறார் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர். இதன் மூலம் பிஜேபியின் இந்துத்துவா கொள்கையோடு ஒத்துப் போகிறார் என்று பொருள். இந்த ஆபத்தான போக்கை தமிழக வாக்காளப் பெரு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தேர்தல் கணிப்புகள் சில நாட்களாக, அஇஅதி முகவுக்குப் பாதகமாக வர ஆரம்பித்துள்ள நிலையில், அஇஅதிமுக பொதுச் செயலாளர் பிஜேபியைப்பற்றி இந்த அளவுக்காவது பேச வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

திடீரென்று காங்கிரஸ், பிஜேபி அல்லாத கட்சிகளின் கூட்டணி அரசு அமைய வேண்டும் என்று கூறியிருக்கிறார். அந்த மூன்றாவது அணியைச் சுக்கல் நூறாக நொறுக்கிய அம்மையாரா அது குறித்துப் பேசுவது? இடதுசாரிகள் இப்பொழுது என்ன நினைப்பார்கள்?

இந்த அம்மாவுக்கு என்னாச்சு? மூன்றாவது அணிக்காகத் தானே இந்த அம்மையாரோடு கூட்டணி வைக்க முயற்சித்தோம், இடதுசாரிகளுடன் கூட்டணியை முறித்துக் கொண்டவர் அஇஅதிமுக பொதுச் செயலாளர் தானே! இந்த நிலையில் மூன்றாவது அணியைப்பற்றிப் பேசுகிறாரே - இது என்ன குழப்பம்! இந்த அம்மாவுக்கு என்று தெளிவான திட்டவட்டமான சிந்தனை ஏதும் கிடையாதா? என்று இடதுசாரிகள் மட்டுமல்ல; விவரம் தெரிந்த எவரும் அவ்வாறு கருதவே செய்வார்கள்.

ஆக அம்மையார் குழப்பத்தின் உச்சியில் இருக்கிறார் என்பது தெரிந்து விட்டது; தோல்விப் பயம் காரணமாக நேற்று என்ன சொன்னோம், இன்று என்ன சொல்லுகிறோம் என்பதுகூடத் தெரியாமல் பேசிக் கொண்டு இருக்கிறார்.

இப்படிப்பட்ட குழப்பவாதியை வெற்றியடையச் செய்தால் நாடுதான் குழப்பத்துக்கு ஆளாக நேரிடும்; முன்னுக்கு பின் முரணாகப் பேசும் அம்மையாருக்கு இந்தத் தேர்தலில், தக்க பாடத்தைப் போதிப்பது தமிழக வாக்காளர்களின் முக்கியக் கடமையாகும்.

Read more: http://viduthalai.in/page-2/78767.html#ixzz2z6JEic00

தமிழ் ஓவியா said...


அடைய முடியும்


மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டுவிட்டு, அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்க வேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போதுதான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும்.

- (விடுதலை, 13.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/78766.html#ixzz2z6JWkho4

தமிழ் ஓவியா said...


திருநங்கைகள் 3ஆம் பாலினம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கலைஞர் வரவேற்பு



சென்னை, ஏப். 16- திருநங்கைகளை 3ஆம் பாலினமாக உச்சநீதிமன்றம் அறிவித்ததை திமுக தலைவர் கலைஞர் வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் கலைஞர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப் பதாவது:

2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, திமுக சார்பில் வெளியிடப் பட்ட தேர்தல் அறிக்கையில், அனைத்து சமுதாயத் தினராலும், ஒதுக்கப்பட்ட நிலையில் வைக்கப் பட்டுள்ள அரவாணிகளின் நலன்களைப் பாது காக்கத்தக்க வகையில், அவர்களின் பல்வேறு கோரிக்கைகளை முறைப்படி பரிசீலித்து முடிவு கள் மேற்கொள்வோம் என்று தெரிவித்திருந் தோம்.

சொன்னதைச் செய்வோம், செய்வதை சொல்வோம் என்பதற்கிணங்க, திமுக ஆட்சியில் 15-4-2008இல் தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம் தொடங்கப்பட்டு, 3,878 அரவாணிகள் கணக்கெடுக்கப்பட்டு, 2,328 அரவாணிகளுக்கு அடையாள அட்டைகளும், 1,238 பேருக்குக் குடும்ப அட்டைகளும், 133 பேருக்குத் தொகுப்பு வீடுகளும், 100 பேருக்குத் தையல் இயந்திரங் களும், 482 பேருக்கு வீட்டு மனைப் பட்டாக் களும், 585 பேருக்கு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவ அட்டைகளும் வழங்கப்பட்டன.

20-08-2009இல் அரவாணிகள் நல வாரியத்தின் மூலம் ரூ. 25 லட்சத்து 53 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது. அரவாணிகளுக்காக 150 சுயஉதவிக் குழுக்கள் அமைப்பதற்கு ரூ. 6 லட்சத்து 9 ஆயிரமும், சுய தொழில் தொடங்க ரூ. 64 லட்சமும் வழங்கப்பட் டுள்ளது. 20-10-2011இல் அரவாணிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் வகையில் வாரியத்திற்கென ரூ 1 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

திருநங்கைகளின் நலனுக்காக திமுக ஆட்சியில் இருந்த போது, இவ்வளவையும் செய்ததோடு, அண்மையில் இந்த நாடாளுமன்றத் தேர்தலை யொட்டி திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையிலும், திமுக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட சலுகைகள் அனைத்தையும், அகில இந்திய அளவில் திருநங்கைகளுக்கு வழங்க திமுக பாடுபடும். மேலும், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளிலும் அவர்களுக்கு உரிய இடம் வழங்கிடுவதோடு, அரவாணிகளை 3ஆம் பாலினமாக அங்கீகரித்திட வேண்டுமென மத்திய அரசை திமுக வலியுறுத்தும் என்றும் தெரிவித்திருந்தோம். தேர்தல் அறிக்கையில் கூறி, அதற்கான தேர்தல் நடைபெறுவதற்கு முன் பாகவே, திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது நிறைவேறு கின்ற வகையில் திருநங்கைகளை 3ஆம் பாலினமாக அறிவித்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி யுள்ளது என செய்தி வெளிவந்துள்ளது.
இந்தத் தீர்ப்பு திருநங்கைகள் வாழ்வில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அந்தத் தீர்ப்பில், மத்திய அரசும், மாநில அரசுகளும் அவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு சிறுபான்மையினருக்கு உள்ள எல்லா உரிமைகளையும் வழங்க வேண்டும். கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத் திலும் சிறுபான்மையினருக்கு உள்ள உரிமை களை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

திருநங்கைகளின் நல்வாழ்வுக்காக பல ஆண்டுக் காலமாக குரல் கொடுத்த திமுகவிற்கு இந்தத் தீர்ப்பு பெரிதும் மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்தத் தீர்ப்பினை வழங்கிய நீதியரசர்கள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஏ.கே. சிக்ரி ஆகி யோருக்கும், இந்த வழக்கைத் தொடுத்த லட்சுமி நாராயணன் திரிபாதிக்கும் நம் இதயமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதோடு, இந்த முடிவினை திமுக சார்பில் பெரிதும் வரவேற்று, பாராட்டு கிறேன். இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-2/78779.html#ixzz2z6K3oO4p

தமிழ் ஓவியா said...


திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து சலுகைகள் வழங்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு


புதுடில்லி, ஏப்.16-திரு நங்கைகள் அனைவரையும் மூன்றாம் பாலினமாக பட் டியலில் சேர்த்து அவர் களுக்கு வாக்காளர் அடை யாள அட்டை, பாஸ் போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து வசதி களையும் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவ டிக்கை எடுக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

திருநங்கைகளை மூன் றாம் பாலினமாக அங்கீ கரித்து அவர்களுக்கு மற்ற வர்களைப் போல் அனைத்து உரிமைகள் மற்றும் சலுகை களை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (என்ஏஎல் எஸ்ஏ) பொது நலன் வழக்கு தொடர்ந்தது.

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங் கிய அமர்வு விசாரித்து நேற்று அளித்த தீர்ப்பில் கூறியதாவது:

ஆண், பெண் என்ற பாலினங்களுக்கு அடுத்த படியாக மூன்றாம் பாலின மாக திருநங்கைகளை பட்டி யலில் சேர்க்க அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்.

அவர்களும் நாட்டின் குடி மக்கள்தான். அவர்களுக்கு மற்றவர்களை போல கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு உட்பட அரசின் அனைத்து சலுகைகளை பெற சம உரிமை உண்டு. சமூகத்தில் முன்பு திருநங் கைகள் மதிக்கப்பட்டனர். ஆனால், தற்போது நிலைமை மாறியுள்ளது. சமூகத்தில் திருநங்கைகள் பிரிக்கப் பட்டு அவர்கள் தொந்தர வுக்கு ஆளாகின்றனர்.

இந்திய தண்டனை சட் டத்தின் 377 ஆவது பிரிவும் திருநங்கைகளுக்கு எதிராக காவல்துறையினரால் தவ றாக பயன்படுத்தப்படு கிறது. அவர்களின் சமூக பொருளாதார நிலை திருப்தி கரமாக இல்லை.

அவர்கள் சமூகத்தின் ஒரு பங்கு என் பதால், அவர்களுக்கும் வாக் காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரி மம் உள்ளிட்ட அனைத்து உரிமைகள், சலுகைகள் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த உத்தரவு திருநங்கைகளுக்கு மட் டுமே பொருந்தும், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு பொருந்தாது. - இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

இந்த உத்தரவை வர வேற்றுள்ள திருநங்கைகள் உரிமை அமைப்பை சேர்ந்த லட்சுமி நாராயண் திரிபாதி, மனித உரிமையை அடிப் படையாக வைத்துதான் நாட்டின் முன்னேற்றமே உள்ளது. எங்களுக்கு சம உரிமை வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டி ருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.

Read more: http://viduthalai.in/page-5/78755.html#ixzz2z6Kcgvl9