இன்றைய (30.10.2013) நாளிதழ் தினஇதழ் ஏட்டில் 2 ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ள ஒரு சுவையான செய்தி:
கடலூர் தேவநாதசுவாமி கோவிலில்
வடகலை, தென்கலை பிரிவினர் கைகலப்பு
விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு
வடகலை, தென்கலை பிரிவினர் கைகலப்பு
விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு
கடலூர், அக். 30- கடலூர் அருகே உள்ள திரு
வந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் வடகலை, தென்கலை பிரிவைச் சேர்ந்தவர்கள்
கைகலப்பில் ஈடுபட்டனர். இதுகுறித்து முழுமையான விசார ணைக்கு மாவட்ட
ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம்
மலைப்பகுதியில் தேவநாதசுவாமி பெருமாள் கோவில் உள்ளது. இதை பெரிய திருப்பதி
என்று கூறுவர். திருப்பதிக்கு வேண்டுதல் செய்பவர்கள், அங்கு போக முடியாத
சூழ்நிலை ஏற்பட்டால், திருவந்திபுரம் வந்து வேண்டுதலை நிறைவேற்றிக்
கொள்வர். இக்கோவிலில் வடகலை, தென்கலை யினர் பிரச்சினையால் நேற்று கோவில்
மூடப் பட்டது.
அய்ப்பசி மாதத்தில் மணவாள மாமுனிகள்
சாமிக்கு தென்கலையினர் (பாதம் மிக்க நாமம் போடுபவர்கள்) பத்து நாட்கள்
திருவிழா நடத் துவர். காலை, மாலை இருவேளைகளிலும் உற்சவ மூர்த்தியை வைத்து
ஊர்வலம் செல்வர். இந் நிலையில் நேற்று தென்கலையினர் உற்சவமூர்த் தியை
வைத்து ஊர்வலம் சுற்றி முடிந்து கோவி லுக்கு செல்லும்போது வடகலையைச் (பாதம்
இல்லாத நாமம் போடுபவர்கள்) சேர்ந்தவர்கள், கோவிலின் கதவை பூட்டினர்.
இதனால், இருதரப் பிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. அது பின்னர்
கைகலப்பாக மாறியது.
முன்னதாக தென்கலையினர், மாவட்ட ஆட்சி
யருக்கு அளித்த புகாரில் கடந்த பத்து வருடங் களாக உற்சவமூர்த்தி ஊர்வலம்
கோவிலைச் சுற்றி வரும்போதெல்லாம், வடகலையினர் கோவில் கதவை மூடி பிரச்சினையை
ஏற்படுத்துகின்றனர். எனவே இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று கூறியிருந்தனர். இந் நிலையில், இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட
ஆட்சியர் கிர்லோஷ்குமார் இந்து அறநிலையத் துறை மூலம் விசாரணை நடத்த
உத்தரவிட்டார்.
- கடலூர் அருகில் உள்ள திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில், பிரசித்தி பெற்ற வைணவர்களின் பெருமை வாய்ந்த கோவில் ஆகும்!
அங்குள்ள அவாள் எல்லாம் கொழுக்கு மொழுக் கென்று உடம்பில் மேடு பள்ளமே தெரியாதவாளாக உள்ள பூணூல் திருமேனிகள் - அய்யங்கார்கள்.
இவாளில் பலரும் அவாளது சந்ததியினரும் வக் கீல்களாகவும், நீதிபதிகளாகவும்கூட வந்துள்ளார்கள்.
அப்படிப்பட்ட அவாள் எல்லாம் அர்த்த(மற்ற)
முள்ள(?) ஹிந்து மதத்தவரேயாவர்! என்றாலும், அவாளுக்குள்ளே அடிதடி, கலவரம்,
கலெக்டர் விசாரணை வரை சென்றுள்ளது - இந்த 21 ஆம் நூற்றாண்டில்!
செவ்வாய்க் கிரகத்திற்கு விண்கலம் ஏவப்படு கின்றது ஒருபுறம்; இன்னொருபுறம் இந்த மனித ருக்குள் நாமச் சண்டை அடிதடி வரை சென்றுள்ளது!
எங்கெல்லாம் வைணவக் கோவில்கள் உள்ள ஸ்தலங்களோ அங்கெல்லாம் இவை இன்னமும் நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் நடைபெற்று வருகின்றன!
கோர்ட்டுகளிலும் வழக்குகள் ஏராளம்; இவாளி டையே நிலுவையில் உள்ளன.
ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், நெல்லை மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், திருக்குறுங்குடி.... போன்ற ஊர்களில் இப்படிப் பல பிரச்சினைகள்!
ஒரே மதத்தில் இருபெரும் பிரிவு; இரண்டு
கடவுளர்கள் கட்சியாக! சிவனுக்கும் - விஷ்ணுவுக்கும் - நெற்றிக்குறியில்
தொடங்கி, பல வகையில் நாமம் - விபூதி போன்ற டிராயிங் மார்க்குகள் போடப்
பட்டுள்ளதால் சண்டை!(?).
முன்பு சைவர் - வைணவர் போராட்டங்கள் அநேகம்!
வைணவர்களுக்குள்ளும் இந்த நாமம் இவ்வளவு பெரிய சண்டை சச்சரவுகளுக்கு அடிக் கட்டுமானமாக உள்ளதே!
வடகலை - தென்கலை இரு பிரி வினருக்கும்தான் கடும் சண்டை (அர்த்தமுள்ளதா ஹிந்துமதம்?) அட அபிஷ்டுகளே! யோசிக்க மாட்டீர்களா?
வடகலை பாதம் இல்லாத நாமம் போடுகிறவர்கள் - அதாவது ‘U’ மார்க் கர்கள்!
தென்கலைக்காரர்கள் பாதம் வைத்த நாமம் போடுகிறவர்கள் - அதாவது ‘Y’
மார்க்குக்காரர்கள்!
மார்க்குக்காரர்கள்!
ஆங்கில எழுத்து U-க்கும் Y வுக்கும் இப்படி ஒரு மூர்கத்தன்மையான சண்டை பல நூறு ஆண்டுகளாக!
இவாள் எல்லாம் மனுஷாள்; இவாளோடு போய்த் தொலையக்கூடாதோ?
இவாள் சண்டை கோவில் - யானை பூனைக் கெல்லாம் கூடவா நீளுவது?
வெட்கமில்லையோ!
காஞ்சிபுரத்து கோவில் யானைக்கு வடகலை
நாமம் போடுவதா? தென்கலை நாமம் போடுவதா? என்கிற வழக்கு லண்டன் பிரிவியூ
கவுன்சில் (உச்சநீதிமன்றம் அங்கே) வரை சென்று திருப்பி அனுப்பப்பட்டு
இன்னும் 150 ஆண்டுகளாகத் தீர்ந்தபாடில்லையே!
ஒருமுறை சென்னை உயர்நீதிமன்ற தலைமை
நீதிபதி ஜஸ்டீஸ் கே.வீராசாமி அவர்கள், கோவில் யானைக்கு ஒரு வாரம் வடகலை
நாமம் (U நாமம்), மறுவாரம் தென்கலை நாமம் (Y நாமம்) போட்டுக் கொண்டு
சண்டையை நிறுத்துங்கள் என்றார்!
திருவந்திபுரத்தில் அக்கார அடிசில்
(சர்க்கரைப் பொங்கல்), புளியோதரை, ததியன்னம் (தயிர் சாதம்) எல்லாம் பலவித
நளபாகங்களோடு, நெய் சொட்ட, சுவை குறையாமல் கோவில் பிரசாதங்களை இந்த
அய்யங்கார் திருமேனிகளால் மற்றவர்களுக்கு அவாள்மூலம் கிடைக்கும்.
அவாளோ, அதைத் தின்று தின்று கொலஸ்ட்ரால்
(இதற்குத் தமிழில் கொழுப்பு என்று கூறுவர்) அதிகமாகுன்னோ - எனவே, அவாள்
பலப் பரிட்சை பார்த்திண்டு இருக்கா!
பாழாய்ப்போன தேவநாத சுவாமி வேடிக்கை பார்த்திண்டு இருக்காரேன்னு சில நாத்திகாள் கேட்பா!
அதெல்லாம்பற்றிக் கவலைப்படாதிங்கோ!
காஞ்சிபுரத்தில் தேவனாதன்னு பெயர் கொண்ட அர்ச்சகர் செய்த அற்புதமான
திருப்பணிக்கு ஈடு இணை உண்டோ? அதையே பகவான் பார்த்து ரசிச் சிண்டுதானே
இருந்தார்! இதை வேடிக்கைதான் பார்ப்பான் - பகவன்.
பார்ப்பான் - பார்ப்பான் நன்னாயிருக்கு!
இதெல்லாம் கிடக்கட்டும் - நம்ம மோடி
பிரதமரா வந்துட்டா நம்ம சோ மூலமே இதற்கொரு வழி செய்து இந்து தேசியத்தை
பரந்த பாரத மாதாவின் கையில் பறித்துக் கொடுத்துவிடலாம்!
------------------- ஊசிமிளகாய் 30-10-013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
68 comments:
மதத் திருட்டு
திருச்சி மாவட்டம், சிறீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயில் ஆயி ரங்கால் மண்டபத்தில் தொல்லியல் துறை அகழ் வாய்வு செய்ய இந்திய அரசு அனுமதியளித்துள் ளது என்பது ஒரு செய்தி.
வரவேற்க வேண்டி யதுதான். அதனோடு ஆய்வு செய்ய வேண்டிய கூடுதல் தகவல்களும் உண்டு.
சைவ சித்தாந்த கழகம் வெளியிட்டுள்ள தஞ்சைவாணன் கோவை எனும் நூலில் பக்கம் 7இல் (வரிகள் 26-30) கீழ்க்கண்ட தகவல் உள் ளது.
நாகப்பட்டினத்தில் புத்தர் தெய்வம் பசும் பொன்னால் செய்திருந் தது. அதனை ஆலி நாடர் (திருமங்கை ஆழ்வார்) களவில் கொண்டு வந்து திருவரங்கத்து மதில் செய்வித்தார். அவர் அச்சமயத்தில் கடவுள் தன்மையராய் விளங்கி னார். அவரைக் குற்றம் கூறுநர் ஒருவரும் இலர்! என்று தஞ்சை வாணன் கோவை கூறுகிறது.
சிறந்த ஆய்வியல் அறிஞரான மயிலை சீனி. வேங்கடசாமி அவர் களால் எழுதப்பட்ட பௌத்தமும் தமிழும் எனும் நூலில் (பக்கம் 37) கீழ்க்கண்டவாறு எழுதி யுள்ளார்.
திருமங்கை ஆழ்வார் நாகைப்பட்டினத்துப் பௌத்த ஆலயத்திலி ருந்த பொன்னால் அமைந்த புத்தச் சிலையைக் கவர்ந்து சென்று, அந்தப் பொன்னைக் கொண்டு திருவரங்கத்தில் திருப் பணி செய்தார் என்று கூறப்பட்டுள்ளது.
இதில் இன்னொரு கூடுதல் தகவலும் உண்டு.
இப்படி திருடி வந்த பொன்னைக் கொண்டு சிறீரங்கம் ரெங்கநாதன் கோயில் மதில் சுவர் எழுப்பப்பட்டது அல்லவா!
அக்கோயிலின் மதிற் சுவரையும், கட்டடங்களை யும் எழுப்பிய தொழிலா ளர்களுக்குக் கூலி ஏதும் கொடுக்காமல், தொழி லாளர்களை ஓடத்தில் ஏற்றிச் சென்று காவிரி தீரத்தில் கொண்டு போய்க் கவிழ்த்துக் கொன்று விட்டனர்.
ஆற்று வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்ட இடத்திற்குக் கொள் ளிடம் என்றும், அந்தத் துறைக்குப் பார்வானத் துறை (பார்வானம் = சுடுகாடு, பார்வணம் = சிரார்த்தம் செய்யும் இடம்) என்றும் பெயரிட ஆண்ட வனிடம் இறைஞ்ச, அவ் வாறு அளிக்கப்பட்டு, அன்று கொல்லப் பட்ட வர்களுக்கெல்லாம் முக்தியும் அளிக்கப்பட் டது. (திருமங்கை ஆழ் வார் வைபவம் எனும் நூல்). எவ்வளவுப் பெரிய சூழ்ச்சியும் - பித்தலாட்ட மும் கடவுளின் பெயரால் மதத்தின் பெயரால்!
- மயிலாடன்
பகுத்தறிவு
பகுத்தறிவில்லாத எந்தச் சீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துவதில்லை, தன் இனத்தின் உழைப்பாலேயே வாழ்வதில்லை. தன் இனத்தின்மீது சவாரி செய்வதில்லை.
(குடிஅரசு, 26.5.1935)
முட்டாள்தனத்துக்கு அளவேயில்லையா?
கடவுள் நம்பிக்கையும், மத நம்பிக்கையும் மனிதனை எவ்வளவு தூரம், முட்டாள்தனத்துக்குத் துரத்திக் கொண்டு இருக்கிறது என்பதற்கு ஒரு செய்தி.
கிருட்டினகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், அருகில் தொக்கம்பட்டி கிராமத்தில், பசு மாடு ஒன்றுக்கு ஆண் குழந்தை பிறந்ததாக, வதந்தி ஒன்றைக் கிளப்பி விட்டுள்ளனர்.
இது தருமபுரி கிருட்டினகிரி மாவட்டங்களில், கிராமப்பகுதிகளில் ஒரு மூடநம்பிக்கைக்கு வித்திட்டுள்ளது.
பசு மாட்டுக்கு இப்படி ஒரு ஆண் குழந்தை பிறந்ததால், ஆண் குழந்தைகளுக்கு ஆபத்து என்று, மூடநம்பிக்கை வியாபாரிகள் பரப்பியுள் ளனர். கைப்பேசி மூலம் ஆங்காங்கே விசிறி விட்டுள்ளனர்.
இது உண்மையா? இப்படியெல்லாம் நடக்குமா? என்று சிந்திப்பதற்குப் பகுத்தறிவு தேவைப்படுமே! பக்தி வந்தால் புத்தி பறந்து ஓடிவிடாதா?
அடுத்து என்ன? பரிகாரங்களைத் தேட வேண்டியதுதான். வீட்டுக்கு வீடு விளக்கு ஏற்றுவது, தேங்காய் உடைப்பது... இத்தியாதி.. இத்தியாதி சடங்குகள் சாங்கோ பாங்கமாக நடக்க ஆரம்பித்து விட்டன.
நாளை பொழுது விடிந்தால் இந்தச் செய்தி வெறும் வதந்தி என்பது அம்பலமாகி விடும் - அவ்வளவு தான்.
இது போன்ற புரளிகளைக் கிளப்பி விடுபவர்கள் தண்டிக்கப்படாவிட்டால் இதுபோன்ற முட்டாள் தனங்கள் இறக்கை முளைத்துப் பறந்து கொண்டுதானிருக்கும். முட்டாள்தனம் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். நம்பித் தொலைப்பவர்கள் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாவார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டாமா?
காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்குள் எருமை மாடு நுழைந்து விட்டது என்பார்கள்; திருப்பதியில் அம்மன் தாலி அறுந்து விழுந்து விட்டது என்பார்கள்; பிள்ளையார் பால் குடித்தார் என்று கரடி விடுவார்கள்; அம்மன் சாமி கண் விழித்துப் பார்த்தாள் என்பார்கள். இன்னொரு அம்மனின் கண்களில் ரத்தம் கசிந்தது என்பார்கள்; நம்புவதற்கு ஆள் கிடைத்தால் புளுகுபவர்களுக்கா பஞ்சம்?
பிஞ்சு வயதிலேயே, மூடநம்பிக்கைச் சரக்கு களைத் திணித்து வளர்க்கப்பட்டவர்கள், எதைத் தான் நம்ப மாட்டார்கள்?
சென்னையில் ஒருமுறை தலையில்லா முண்டம் டீ குடித்தது; என்று கிளப்பி விட்டார்கள். அதுபற்றி அப்பொழுது சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த சிறீபால் அவர்கள் அழகாகச் சொன்னார்.
ஏதாவது ஒரு முண்டம் அப்படி சொல்லி யிருக்கும்! என்றார் - அதுதான் இப்பொழுது நினைவிற்கு வருகிறது.
மக்களிடத்தில் விஞ்ஞான மனப்பான்மையைத் தூண்ட வேண்டியது, ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம், கூறி என்ன பயன்? ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது, என்ற பழமொழி இதற்குப் பொருந்தும் போலும்.
முதலில் ஏடுகளும், தொலைக்காட்சிகளும் இதுபோன்ற மூடநம்பிக்கைகளின் தோலை உரித்துக் காட்ட வேண்டாமா? மூடநம்பிக்கை களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. குறைந்த பட்சம், இந்த ஊடகங் களாவது மூடநம்பிக்கையைப் பரப்பாமல் இருந்தால் போதுமே!
காலையில் சுப்ரபாதத்தில் ஆரம்பித்து நாள் பூராவும் மூடத்தனங்களின் மொத்த உருவ மாகத்தானே நடமாடுகின்றன.
எந்த நிறத்தில் சட்டை போடுவது, எந்த நிறத்தில் மோதிரம் அணிவது, இந்த நாள் எப்படிப்பட்ட நாள் - வியாபாரத்தை ஆரம்பிக்கலாமா - கூடாதா என்கிற அக்கப் போர்களின் களமாகத் தானே, இவை இருக்கின்றன.
விஞ்ஞானத்திற்கு முரணானவற்றை ஒளி பரப்பக் கூடாது என்று சட்டம் செய்யப்பட வேண் டாமா? குறைந்தபட்சம் மகாராட்டிர மாநிலத்தில் மூடநம்பிக் கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்தை மத்திய அரசே கொண்டு வரட்டும்! இதைக்கூட செய்யாவிட்டால் அது எப்படி மக்கள் நல அரசாக இருக்க முடியும்?
பகுத்தறிவுச் சிந்தனையுடன் வாழ்ந்து வளம் பெறுங்கள்!
அறிவியலைக் கல்விக்கூடப் பாடமாகப் படிப்பதுடன், அறிவியல் மனப்பான்மையினையும் வளர்த்துக்கொண்டு வாழுங்கள்!
பகுத்தறிவுச் சிந்தனையுடன் வாழ்ந்து வளம் பெறுங்கள்!
ஒடிசா மாநிலம் புவனேசுவரம் ராஜதானி பொறியியல் கல்லூரி மாணவர் மன்றக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஊக்க உரை!
ராஜதானி பொறியியல் கல்லூரியில் அறிவியல் மனப்பான்மை எனும் தலைப்பில் தமிழர் தலைவர் உரையாற்றுகிறார் (28.10.2013)
புவனேசுவரம், அக்.30- ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேசுவரத்தில் உள்ள ராஜதானி பொறியியல் கல்லூரி மாணவர் மன்றக் கூட்டத்தில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தரும், திராவிடர் கழகத்தின் தலைவருமான தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டு, அறிவியல் மனப்பான்மை குறித்து உரையாற்றினார்.
தமது உரையின் மய்யக் கருத்தாக, அறிவியலைக் கல்விக் கூடப் பாடமாகப் படிப்பதுடன், அறிவியல் மனப்பான்மையினையும் வளர்த்துக் கொண்டு வாழ்ந்திடுங்கள். பகுத்தறிவு சிந்தனையுடன் கூடிய அணுகுமுறையினைக் கடைப்பிடித்து வாழ்வில் வளம் பெறுங்கள் என்று மாணவர்களுக்கு ஊக்க மூட்டும் வகையில் தமிழர் தலைவர் உரையாற்றினார்.
புவனேசுவரம்-ராஜதானி பொறியியல் கல்லூரி
ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேசுவரத்தில் சம்ரிதி கல்வி அறக்கட்டளை நடத்திடும் ராஜதானி பொறியியல் கல்லூரி (மான்சேஸ்வரர் ரயில் நிலையக் குடியிருப்புப் பகுதி)யில் நடைபெற்ற மாணவர் மன்றக் கூட்டத்தில் அக்டோபர் 28 ஆம் தேதியன்று காலை 10.30 மணியளவில் பங்கேற்று உரையாற்றினார்.
கல்லூரி முதல்வர் பேராசிரியர்
முனைவர் பிமல் சாரங்கி
ராஜதானி பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் முனைவர் பிமல் சாரங்கி வரவேற்புரையாற்றுகிறார். உடன் கல்லூரி செயலாளர் முனைவர் சரத் சந்திரபண்டே மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர் (28.10.2013).
மாணவர்கள் ஒருங்கிணைந்து நடத்திய கூட் டத்தில் வரவேற்றுப் பேசிய கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் முனைவர் பிமல் சாரங்கி குறிப் பிட்டதாவது:
இன்று (28.10.2013) காலை செய்தித் தாளைப் படித்தபொழுது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் நேற்று புவனேசுவரத்திற்கு வருகை தந்து, பெரியார் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செய்தியினை படிக்க நேர்ந்தது. தலை நகரிலேயே தங்கியிருப்பதாகவும் செய்தி கிடைத்தது. உடனே தொடர்புகொண்டு நமது கல்லூரி மாண வர்களிடையே உரையாற்றிடவேண்டும் என கேட்டுக்கொண்டோம். உடனே ஒப்புதல் அளித்து, அவர் நமது கல்லூரிக்கு வருகை தந்து இன்று மாணவர்களிடம் உரை யாற்றிடும் அரிய வாய்ப்பு கிடைத்துள் ளது. அண்மையில் தமிழ் நாட்டில் தஞ்சை - வல் லத்தில் கல்விச் சேவை ஆற்றிவரும் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில், நடைபெற்ற கருத்தரங்கில் நமது கல்லூரியின் சார்பாக கலந்துகொள்ளச் சென் றிருந்தோம். கல்வி புகட் டுவதோடு, மாணவர்கள் எதிர்காலத்தில் சவால் களைச் சந்தித்து வெற்றி பெறும் வகையில் கல் விப் பணியினை அந்தப் பல்கலைக் கழகம் ஆற்றி வருகிறது.
- இவ்வாறு கல்லூரி முதல்வர் வரவேற்றுப் பேசினார்.
பேராசிரியர் தானேஸ்வர் சாகு
ஒடிசா பகுத்தறிவா ளர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் தானேஸ்வர் சாகு தமது அறிமுகம் மற்றும் தொடக்க உரை யில் குறிப்பிட்டதாவது:
மாணவர்கள் மத்தி யில் சிறப்புரை ஆற்றிட உள்ள பெரியார் மணி யம்மை பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, சட்டம் பயின்றவர். மதிப்புறு முனைவர் பட்டமும் பெற்று சமூக சீர்திருத் தப் பணியில் தந்தை பெரியாரின் சீடராக சமுதாயக் கடமையாற்றி வருகிறார். இவரை தலை வராகக் கொண்டு செயல் படும் திராவிடர் கழ கமும், ஜாதி கட்டமைப் புள்ள சமுதாயத்தை மாற்றிடும் மாபெரும் பணியினைச் சுமந்து கொண்டுள்ளது.
ஒடுக்கப்பட்ட, தாழ்த் தப்பட்ட மக்களின் உரி மைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரு கிறது. இவரை ஆசிரிய ராகக் கொண்டு வெளிவரும் தி மாடர்ன் ரேசன லிஸ்ட் ஆங்கில மாத இதழ், சுயமரியாதை, மதச்சார் பற்ற, மனிதநேயப் பண்பு, அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு ஆகிய லட்சியங்களைக் கொண்டு வெளிவருகிறது.
மனிதரே தமது எதிர்காலத்தை தீர்மானிக்கின் றனர். பண்பாட்டு வளர்ச்சியும், அவர்தம் முடி வுப்படியே முடியும். மனித சமுதாயத்தில் புரை யோடிப்போன நம்பிக்கைகளை, ஏற்றத் தாழ்வுகளை பகுத்தறிவு சார்ந்த முயற்சிகளின்மூலமே களைய முடியும். இந்த சீரிய லட்சியங்களைக் கொண்டு தமது 80 வயதினை நிறைவு செய்யும் வேளையிலும், பரந்துபட்ட அளவில், பயணப்பட்டு தமிழர் தலைவர் கி.வீரமணி பரப்புரை மேற் கொண்டு வருகிறார். பொதுவாழ்வில், சமுதாயப் பணியில், இத்தகைய பணி ஆற்றி வருவது மிகவும் அரிது. இந்த அரிய பணியினை அர்ப்பணிப்பு உணர்வோடு ஆற்றி வருகிறார் டாக்டர் கி.வீரமணி அவர்கள்.
-இவ்வாறு தனது அறிமுக உரையில் பேராசிரியர் தானேஸ்வர் சாகு குறிப்பிட்டார்.
ஒடிசா மாநில பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் தானேஸ்வர் சாகு அறிமுக உரையாற்றுகிறார். உடன் கல்லூரி இயக்குநர் முனைவர் பி.எஸ்.மிஸ்ரா உள்ளார் (28.10.2013).
தமிழர் தலைவரின் உரை
அறிவியல் மனப்பான்மை எனும் தலைப்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி ஆற்றிய உரை வருமாறு:
தந்தை பெரியாருடைய லட்சியங் களில் ஒன்றான அனைவருக்கும் கல்வி கற்கும் வாய்ப்பினை பிரச்சார அளவில் மட்டுமின்றி, நடைமுறைப்படுத்தும் விதமாக பல்வேறு கல்வி நிறுவனங் களை பெரியார் இயக்கம் நடத்தி வருகிறது. கல்வி புகட்டுவதிலும், பெண் கல்விக்கு முன்னுரிமை அளிக் கும் விதமாக, திருச்சியில் பெண்களுக் கான மருந்தியல் கல்லூரி, தஞ்சையில் மகளிருக்கான பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளை நடத்தி வருகிறோம். மகளிருக்கு உயர் கல்வி அளிப்பதை கடந்த 32 ஆண்டு களுக்கும் மேலாக செய்து வருகிறோம். ஒரு குடும்பத்தில் கல்வி புகட்டுவதில் மகளிருக்கு முதலிடம் அளிக்கவேண் டும். ஒரு பெண் கல்வி கற்றால், அந்தக் குடும்பமே கல்வி பெறுவதற்கு சம மாகும். ஏனென்றால், பெண் கல்வியின் தாக்கம் அவரோடு முடிந்துவிடாது. குடும்பத்திலுள்ள அனைவரது கல்வி மேம்பாட்டிற்கும் பயன்படும். கடந்த காலங்களில் கல்வி நிலையத்தில் நுழை யும் வாய்ப்பு மகளிருக்கு மறுக்கப் பட்டு வந்தது. பருவ நிலை அடைந் ததும் பாலியல் இன்பத்திற்கு மட்டுமே மகளிர் பயன்பட்டு வந்தனர். பிள்ளை பெறும் இயந்திரம் என்ற அளவில்தான் மகளிரது வாழ்க்கை அடையாளம் நமது சமுதாயத்தில் நிலவியது. அதை உடைத்து, பெண்ணடிமை விலங்கை முறித்து, மகளிரின் விடுதலைக்கு, அவர் களது முன்னேற்றத்திற்கு அரும்பாடு பட்ட புரட்சியாளர் தந்தை பெரியார் ஆவார்.
நாம் இப்பொழுது தொழில்நுட் பம், செய்திப் பரிமாற்ற கணினி உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வளர்ந்துவரும் உலகில் நாமும் அந்த வேகத்தோடு இணைந்து வாழ்ந்திட வேண்டும்; வளர்ந்திடவேண்டும். கல்விக் கூடங்களில் அறிவியலைப் பாடமாக படிப்பது என்பது ஒரு நிலை. அறிவியல் மனப்பான்மையுடன் வாழ்வது என்பது மற்றொரு நிலை. கல்லூரியில் கற்கும் நிலை அறிவியல் மனப்பான்மையுடன் வாழும் தொடர் நிலையாக மாறவேண்டும். எதையும் பகுத்தறிவுக் கண்ணோட்டம் கொண்டு அணுகும் முறையினை வளர்த்துக்கொள்ளவேண்டும்.
அறிவியலுக்குப் புறம்பான புராண நம்பிக்கைகள்
கல்விக் கூடத்தில் சூரிய கிர கணம், சந்திர கிரகணம்பற்றி மாண வர்கள் படிக்கின்றனர். கிரகங்களின் நிலைப்பாட்டில் ஏற்படும் மாறுதல் களுக்குப் புராண அடிப்படையி லான மூடத்தனமான நம்பிக்கைகள், அதையொட்டிய நடவடிக்கைகள் நிலவுகின்றன. அறிவியலுக்கு பொருந்தாத அந்த நடவடிக்கைகள் மனித முன்னேற்றத்திற்கு பெரும் தடைக்கல்லாக உள்ளன. அறிவி யலைப் படித்துவிட்டு, பட்டம் பெற்றுவிட்டு அதற்குப் புறம்பான நடவடிக்கைகளை கடைப்பிடிப் பதை முற்றிலும் கைவிடவேண்டும். படித்த அறிவியலுக்கேற்ப அறிவி யல் மனப்பான்மையுடன் நீங்கள் வாழவேண்டும்.
மனிதகுல வரலாற்றில் கற்கால மனிதர்களைப்போல ஒருவரை ஒருவர் அழிக்கும் நிலை மாறி, வில், அம்பு, கருவிகளைப் பயன்படுத்தும் காலம் வந்து, படிப்படியாக பல் வேறு நிலை கடந்து, இன்று ராக் கெட்மூலம் செவ்வாய் கிரகத்திற்குப் பயணப்படும் காலமாக அறிவியல் வளர்ந்துள்ளது. இது அறிவு யுகம். அறிவியல் மனப்பான்மையுடன் வாழ்வதே அறிவு வளர்ச்சியை ஊக்குவிக்கும். 20 வயதில் 60- 80 வயதுடையோர்போல மூட நம்பிக் கையுடன் வாழ்வதை விடுத்து 60- 80 வயதிலும் 20 வயதுக்குரிய புத்தாக் கக் கண்ணோட்டத்துடன் வாழ வேண்டும்.
அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மை
இப்படி அறிவியல் மனப்பான் மையினை வளர்ப்பதை அரச மைப்புச் சட்டத்தின் 51-ஏ(எச்) வலி யுறுத்துகிறது. இந்திய நாட்டின் ஒவ் வொரு குடிமகனின் அடிப்படைக் கடமையாக அறிவியல் மனப்பான் மையினை வளர்த்திடவேண்டும்.
உளப் பாங்குதான் வாழ்வில் உயர் வினைத் தரும். பகுத்தறிவு நோக்கில் எதையும் அணுகிடும் உளப் பாங்கு வேண்டும். வாழ்க்கையில் மனிதர் கள் தோல்விகளைச் சில நேரங் களில் சந்திக்க நேரிடும். தோல்வி களைச் சமாளித்திடும் உரிய உளப் பாங்கினை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
மாபெரும் அறிவியல் அறிஞர் தாமஸ் ஆல்வா எடிசன் மனித வாழ் வின் பயன்பாட்டிற்குத் தேவையான பல அரிய கண்டுபிடிப்புகளை உரு வாக்கியவர். அவர் பல நேரம் தோல் விகளைச் சந்தித்தார்; ஆனால், அவ ருடைய கூற்று நான் வாழ்க்கையில் தோல்வியைச் சந்தித்ததே இல்லை என்பதாகும். மற்றவர்கள் தோல்வி எனக் கருதுவதை தாமஸ் ஆல்வா எடிசன் தனக்கு அது ஒரு புதிய அனு பவங்கள் எனக் கூறிக் கொண்டார். தோல்வியையும் புதிய அனுபவங் களாகக் கருதி, அதிலும் கற்றுக் கொள்ள வேண்டியவைகளை கற் றுக்கொண்டு, தோல்வி தொடரா வண்ணம் வாழ்ந்திடவேண்டும். எந்த மாணவரும் மோசமானவர் அல்ல. அவர்களை முறையாக பயிற்றுவித்து, அவரது திறமைகளை வளர்த்து முறைப்படுத்திடவேண் டும். கல் பட்டை தீட்டப்பட்டால் தான் வைரமாக ஜொலிக்கும். நான் எங்களது குடும்பத்தில் படித்து வந்த முதல் பட்டதாரி. வசதி குறைந்த சூழ லிலும் படிப்பில் முதல் மாணவனாக வந்தேன். முயற்சி செய்தால் மாணவர் கள் அனைவரும் உன்னத நிலையினை அடைய முடியும்.
சமுதாயத்தில் பிறப்பின் அடிப் படையில் பேதம் கற்பிக்கும் வருணா சிரம, ஜாதி அடையாளங்கள் ஒழிக் கப்படவேண்டும். மேல்ஜாதி, கீழ்ஜாதி, தீண்டாமை என்பது உயிருக்குப் போராடி ரத்தம் தேவைப்படும் சூழ லில் வலியுறுத்தப்படுவதில்லை. கீழ் ஜாதி எனக் கருதப்படுபவரின் ரத்தம் மேல்ஜாதியினரின் உயிரைக் காப் பாற்றப் பயன்படுகிறது. ஜாதி வேறு பாட்டை மாணவர்கள் மறுத்திட வேண்டும். சாமியார்களின் மூட நம் பிக்கைகள் தோலுரித்துக் காட்டப் படவேண்டும். தனி நபர் மட்டுமல் லாமல், அரசாங்கமே சாமியார்களின் அறிவுரைப்படி நடப்பதை கைவிட வேண்டும். தங்கப் புதையல் இருப்ப தாக சாமியார் கூறியதை நம்பி மண் ணைத் தோண்டிய அரசின் நடவடிக் கைகள், அறிவியல் உலகத்தில்தான் நாம் வாழ்கிறோமா என்ற வினாவினை எழுப்புகிறது. அறிவியலில் வளர்ச்சி உலகை வழி நடத்தும்; அறிவியல் மனப்பான்மையினை வளர்த்திடும், பகுத்தறிவு அணுகுமுறையுடன் வாழ்ந் திடுங்கள்; படிப்பிலும், வாழ்விலும் இவைகளை கடைபிடித்து வாழ்வில் வளம்பெற உங்களை வாழ்த்துகிறேன். நீங்கள் வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்திடவேண்டும்.
- இவ்வாறு தமிழர் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியின் நிறைவாக கல்லூரி யின் இயக்குநர் முனைவர் ஜி.எஸ். மிஸ்ரா, தமிழ்நாட்டில் பெரியாரின் சமுதாயப் பணியினால் விளைந்த விழிப்புணர்வு, முன்னேற்றங்கள்பற்றி தான் நேரில் கண்டதை எடுத்துக் கூறி, தமிழர் தலைவருக்கு நன்றி தெரிவித் தார். தமிழர் தலைவருடன் பகுத்தறி வாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன், அகில இந்திய பிற்படுத் தப்பட்ட ஊழியர் நலச் சங்கக் கூட்ட மைப்பின் பொதுச்செயலாளர் கோ.கரு ணாநிதி ஆகியோர் சென்றிருந்தனர்.
நிகழ்ச்சி முடிந்ததும், மாணவர்கள் பக்கம் சென்று, தமிழர் தலைவர் அவர்களுடன் சற்று நேரம் உரையாடி விட்டு சென்றார்.
தமிழர் தலைவரின் உரையினைக் கேட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் புதிய சிந்தனைத் தாக்குதலுக்கு ஆளானதை மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பித் தெரிவித்தனர்.
மன்மோகன் அவர்களும் - மோடியும்!
இன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கும், பிரதமர் கனவில் மிதக்கும் நரேந்திர மோடியும் ஒரே மேடையில் காட்சியளித்தனர் - நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர் என்பது, ஆரோக்கியமான ஒன்றே!
அதேநேரத்தில், தன்னைப் பிரதமராகவே நினைத்து மிதந்து கொண்டிருக்கும் நரேந்திர மோடி, ஆரோக்கியமான ஒரு பண்பாட்டைக் கடைப்பிடித்தாரா என்றால், இல்லை என்பது தான் அதற்குரிய பதிலாகும்.
சர்தார் வல்லபாய் படேல் அருங்காட்சியகம் திறப்பு விழா நிகழ்ச்சி அது; அந்த விழாவில் வல்லபாய் படேலைப்பற்றிப் புகழ்வது சரிதான் - யாருக்குச் சிலை திறக்கப்படுகிறதோ அவரைப் பற்றித்தானே பெருமையாகப் பேசவேண்டும் - அதுதானே மரபும்!
மோடி எப்படிப் பேசினார்? வல்லபாய் படேல் மட்டும் பிரதமராகப் பொறுப்பு ஏற்றிருந்தால் ஆட்சி எவ்வளவோ சிறப்பாக இருந்திருக்கும் என்று பேசுகிறார் என்றால் அதன் பொருள் என்ன?
ஜவகர்லால் நேரு பிரதமராகப் பொறுப்பு ஏற்றதால் நாடு வளர்ச்சி அடையவில்லை என்று மறைமுகமாகச் சொல்லுவதாகத்தானே பொருள்?
பிரதமராக இருக்கக் கூடிய மன்மோகன்சிங் அந்த மேடையில் வீற்றிருக்கும்போது, அப்படிப் பேசுவது சரியானதுதானா? நாகரிகம்தானா?
படேலைப் பொறுத்தவரை இந்துத்துவா சாயல் கொண்டவர் என்ற கருத்துண்டு. காந்தி யாரைக் கொன்றவன் ஆர்.எஸ்.எஸ். அல்ல - இந்து மகாசபைக்காரன் என்று முதலில் சொன்னார்; பின் அந்தக் கருத்தை மாற்றிக் கொண்டார்.
அதேநேரத்தில் 1949 டிசம்பர் 22 ஆம் தேதியன்று, இரவோடு இரவாக பாபர் மசூதி வளாகத்துக்குள், ராமன் பொம்மையைக் கொண்டு வைத்தது காவிவெறிக் கும்பல்.
அதனை அப்புறப்படுத்தவேண்டும் என்று பிரதமர் நேரு கூறினாலும், துணைப் பிரதமராக இருந்த வல்லபாய் படேலும், உத்தரப்பிரதேச முதலமைச்சராகவிருந்த கோவிந்த வல்லப பந்தும் ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை. பிரதமர் நேரு கருதியபடி - திருட்டுத்தனமாக உள்ளே திணிக்கப்பட்ட ராமன் பொம்மையை அன்று அப்புறப்படுத்தியிருந்தால், பிற்காலத்தில் மிகப்பெரிய விலையைக் கொடுக்கவேண்டிய அவசியம் இருந்திருக்காதே!
படேல் மீது ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு மதிப்பும், அனுதாபமும் இருப்பதற்குக் காரணம் அன்று அவர் நடந்துகொண்ட விதம்தான். அதே உணர்வோடுதான், நேருவை மறைமுக மாகத் தாக்கும் தன்மையிலும், படேலைப் பெருமைப்படுத்தும் வகையிலும், பேசியதன் உட்பொருளும், இரகசியமுமாகும்.
ஒரு பொது மேடையில் இப்படி ஜாடை பேசுவதெல்லாம் கீழ்க்குணம் என்பதை, நரேந்திர மோடியிடம் எதிர்பார்க்க முடியுமா?
இன்னும் கேவலம் என்னவென்றால், பிரதமர் மன்மோகன்சிங் பேசும்போது, பி.ஜே.பி.காரர் களும், சங் பரிவார்க் கும்பலும் கூச்சல் போட்டுள்ளனர்.
அவர்களைப் பொறுத்தவரை மோடிமுதல் பஜ்ரங்தள் வரை அனைவரும் ஒரே தகுதி உடையவர்கள்தான்.
அதேநேரத்தில், எதைப்பற்றியும் கவலைப் படாமல், பிரதமர் மன்மோகன்சிங் பதற்றப் படாமல், பண்பாட்டோடு தன் சொற்பொழிவை நிகழ்த்தியுள்ளார் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.
பிரதமராக வர ஆசைப்படுவது என்பது ஒன்று. அதற்குத் தகுதியாகத் தம்மை ஆக்கிக் கொள்வது என்பது மற்றொன்று என்பதை வாக்காளர்கள் முதலில் தெரிந்துகொள் வார்களாக!
இயற்கைத் தடைகள்
நாளைக்கு வேண்டும் என்று தேடும் தன்னம்பிக்கையற்ற தன்மை யும், எவ்வளவு கிடைத் தாலும் போதாது என்கிற ஆசை அடிமைத் தன்மையும், மனிதனின் பிறப்புரிமை யாகிய தன்மானத்திற்கு இயற்கைத் தடைகள். - (குடிஅரசு, 9.1.1927)
உத்தரப்பிரதேசத்தில் தங்கக் கனவு சாமியார்- மோடியின் மூக்கை உடைக்கிறார்
உத்தரப்பிரதேசத்தில் உள்ள உன் னாவ் பகுதியில் உள்ள தாண்டியா என்ற ஊரில், இந்தியத் தொல்லியல் துறை யினரால் ஒரு சாமியாரின் கனவில் மன்னர் வந்து தங்கப் புதையல் பற்றி சொன்ன காரணத்தால், தங்க வேட்டை நடத்தி வருகிறார்கள். அதை குஜராத்தின் முதல் அமைச்சர் நரேந்திர மோடி கேலி செய்துள்ளார்.
இதனால் அந்த கனவு கண்ட சாமியார் சோபனா சர்க்கார் மிகவும் வருத்த மடைந்தார். மோடியின் பேச்சு தன்னை வருத்தமடையச் செய்ததாக, ஓம்ஜி என்ற மற்றொரு சாமியார் மூலம், அவர் ஒரு திறந்த மடல் அனுப்பினார். தங்கம் தோண்டுதலைப்பற்றி கேலி செய்த பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர், சாமி யாரின் கடிதம் பார்த்தார். உடனே தனது டிவிட்டரில் சாமியார்மீதும் அவரது செயல்பாடுகள்மீதும் தான் மிகுந்த மதிப்பு வைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.
சாமியாரின் கடிதம்
சாமியாரின் கடிதத்தில் அப்படி என்ன தான் இருந்தது?
முதலில் அந்தக் கடிதம் மோடியை கான்பூருக்கு வருமாறு, அழைப்பு விடுத்து இருந்தது. அடுத்து, மோடியின் கருத்துக்கள் மன வருத்தத்தை அளிப் பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. நான் மிகத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புவது என்னவென்றால், நடுவண் அரசின்மீதும் சோனியா காந்திமீதும் நீங்கள் அவசரமாகத் தாக்கிப் பேசும்போது, நீங்கள் ஒரு சாமியாரின் கவுரவத்தை அவமதித்து இருக்கிறீர்கள்.அனாவசியமான ஆவேசப்பேச்சுகளில் நேரத்தை வீண் அடிக்காமல் சோபன் சர்க்கார் ஆகிய சாமியாரை நீங்களே பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள் என்று அறிவுரையும் கூறப்பட்டிருந்தது. நாங்கள் எல்லாம் மதிப்பிற்குரிய சாமியார்கள். ஆனால் சோபனா சர்க்கார் பெரு மதிப்புக்கு உரியவர்
மோடி இந்தியாவின் அடுத்த பிரத மராகப் பார்க்கப்படுவதால் சாதாரண மனிதரும் சாமியார் சங்கமும் (சாது சமாஜ்) சில பிரச்சினைகளில் மோடியின் கருத்தைக் கேட்க ஆவலாக உள்ளனர். அதற்காக சோபனா சர்க்கார் மோடியை ஒரு பொது விவாதத்துக்கு அழைத் துள்ளார். நீங்கள் பிரதமராக இருந்தால், தங்கப் புதையல் பற்றிய தகவல் கிடைத்தால், என்ன செய்வீர்கள்? அதைப் பற்றிச் சொல்லுங்கள். தற் போதைய தோண்டப்பட்ட பணிகளால் நாட்டின் கவுரவம் கேலி செய்யப்படுவ தாக நீங்கள் உணருகிறீர்களா? வாது புரிவதற்கு பல பிரச்சினைகள் உள்ளன நேரம் ஒதுக்கித் தரும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
பல வழிகளிலும் அந்தக் கடிதம் மோடியையும் அவர் கட்சியையும் சிக்க வைத்துள்ளது. அந்தக் கடிதத்தில் வாஜ்பேயி பிரதமராக இருந்த பொழுது, ஏன் ஸ்விஸ் வங்கியிலிருந்து கருப்புப் பணம் கொண்டு வரப்படவில்லை என்று, கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும் அந்தக் கடிதம் மோடியின் மற்றும் பா.ஜ.க.வின் பிரச்சாரங்களுக்காகச் செலவிடப்படும் பணம் வெள்ளையா அல்லது கறுப்பா? என்பதை விளக்க வேண்டும் என்பதுடன் சேதுக் கால் வாய் பற்றிய பா.ஜ.க.வின் கருத்துக்கள் சவாலாக்கப்பட்டுள்ளது. உங்கள் கட்சி யைப் பொறுத்தமட்டில் அது நம்பிக்கை சார்ந்த ஒன்று.
அயோத்திக்குப் புறப்படுமுன், ராமன் விபீஷணனிடம் ராம் சேது பாலத்தை அழித்து விடும்படி கேட்டுக் கொண்டுள்ளான். பத்ம புராணத்தைப் பார்த்து, இதை உறுதி செய்து கொள்ளலாம். உங்கள் கட்சி செய்தித் தொடர்பாளரையும், சுதன்சு மிட்டலையும் நம்பிக்கை தொடர்பான பிரச்சினை களை எழுப்பும் முன்பு, அவற்றைப் பற்றி நன்கு படித்துக் கொள்ள வேண்டும் என்று அந்தக் கடிதம் கூறுகிறது.
அந்தக் கடிதம் மேலும், மோடிக்கு ஒரு நிகழ்வை நினைவூட்டுகிறது. சாம்பிரோட்டோ என்ற வல்லுநர் சி. டாட் என்ற திட்டத்தைச் செயல்படுத்தி அதன் மூலம் நாட்டைக் கணினி மயப்படுத்து வதற்கான அடிப்படைகளை அமைக்க ஆரம்பித்தபோது வாஜ்பாயியின் தலை மையிலிருந்த பா.ஜ.க., நாடு முழுதும், கணினி வந்தால் வேலையில்லாத் திண்டாட்ட வலையில் நாடு சிக்கிக் கொள்ளும் என்று வீதியெங்கும் கூக்குரல் எழுப்பினர். அந்தச் சமயத்தில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு தவ றானது என்று ஒத்துக் கொள்ளும் துணிவு உங்களிடம் உள்ளதா? என்று சாமியார் ஓம்ஜியின் அந்தக் கடிதம் கேள்வி எழுப்புகிறது.
ராணுவத்தினரின் மன உறுதியைக் குலைக்கும் வகையில் போஃபர்ஸ் லஞ்ச ஊழலைப் பற்றியும் அந்த ஆயுதங்கள் பயனற்றவை என்ற அய்யங்களையும் கிளப்பி விட்டதாக பா.ஜ.க., மீது அந்தக் கடிதம் குற்றம் சாட்டுகிறது. பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோது, ஏன் போஃ பர்ஸ் லஞ்ச ஊழல் பற்றிய ரகசியங்களை வெளியிடவில்லை? கார்கில் போரின் போது போஃபர்ஸ் ஆயுதங்கள் இல் லாமல் இருந்திருக்குமானால் என்ன நடந்திருக்கும் என்பதை விளக்க முடியுமா? என்று அந்தக் கடிதம் கேட் கிறது. மோடியை டெக்ரி அணைபற்றி மேலும் சிக்க வைக்கிறது. உங்கள் கட்சி எப்பொழுதும் டெக்ரி அணை ஆபத் தானது என்றும் சாபக்கேடு என்றும் சொல்லி வருகிறது. டெக்ரி அணை மட்டும் இல்லாமல் இருந்தால் கேதார் நாத் பேரழிவினால் சமவெளிகள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டிருக் குமே; அதன் பிறகு கான்பூர் பேரணியில் நீங்கள் எங்கிருந்து பேசுவது? என்றும் அந்தக் கடிதம் கேட்கிறது.
பெரியார் உலகம் படைப்போம்
- திருக்குவளை இல.மேகநாதன்
26.10.2013 அன்று மாலை கீழ்வே ளூரில் நாகை மாவட்ட திராவிடர் கழகத் தின் செயல் மறவர்கள் கூட்டமும் பெரியார் 1000 வினா - விடை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரிசினை வென்ற மாணவ மாணவியருக்கான பரிசளிப்பு விழா திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் நானும் கலந்து கொள்கிற நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தது.
பெரியார் தோட்டத்தின் பிஞ்சுகளின் ஆற்றல்களை அதுவும் பெண் குழந்தைகள் அதிகமாக பங்கேற்று பரிசு பெற்றது பெரியார் பெருவிருப்பத்தின் வெற்றியாகும்.
பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நிறைவுற் றதும் - மாவட்ட திராவிடர் கழக செயல் வீரர்கள் கூட்டம் - தீர்மானத்தின் அடிப் படையில் நடைபெற்றது. தீர்மானங்களை விரித்தும் - விவரித்தும் - கழகப் பேச்சாளர் அதிரடி க.அன்பழகன் பேசும்போது - திருச்சி அருகில் சிறுகனூர் கிராமத்தில் பெரியார் சுயமரியாதை நிறுவனத்துக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலத்தில் 27 ஏக்கரில் அறிவாசான் அய்யா அவர்களின் பெயரில் பெரியார் உலகம் அமையப் போகிற சிறப்பை பேசி பெரியார் உல கத்தை, அது எப்படி இருக்கப்போகிறது என்பதையும் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் சிலைகளும், சித்திரங்களும், சிற்பங்களும் சொல்லும் கதைகள் சொல்லி, அதைவிடவெல்லாம் சிறந்ததாக அய்யா அவர்களுக்கு உலகத்திலேயே எங்கும் இல்லாத அளவுக்கு 95 அடி உயர வெண்கலச் சிலையும், அதை சுற்றி ஒரு கற்பனை உலகத்தை கண் முன்னே காட்டி உரையாற்றினார். அந்தப் பணி அய்யா தேர்ந்தெடுத்து வளர்த்திட்ட தேக்குமரம் தமிழர் தலைவரின் 81-ஆம் ஆண்டு பிறந்த நாளில் 1000 பவுன் முதற்கட்டமாக வழங்கி முடுக்கி விடப்படுகிறது.
தம் பிறந்த நாள் விழாவை கொண் டாடாத தலைவர் 75-ஆம் வயது வரை தமது பிறந்த நாளில் தொண்டர்களின் கண்களில்படாமல் ஒதுங்கி தனது பிறந்த நாள் விழாவை ஒதுக்கி வைத்த தமிழர் தலைவரின் 75-ஆம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடியே தீரவேண்டும் என்ற தலைவர் கலைஞரின் அன்புக் கட்டளை யின் அடையாளமாக 75-ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அது போல 80-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும் கலைஞர் - தளபதி இவர்களின் பேரன்பின் அடையாளமாக அது நடத்தப் பட்டு கழக குடும்பங்களும், கழக தோழர் களும் பங்கேற்று பெருமைப்படுத்திய விழா 80-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவாகும். டிசம்பர் 2 அன்று 81-ஆவது பிறந்த நாளை காணுகிற தமிழர் தலைவர் தந்தை பெரியாரின் சிலை அமைக்க 1000 பவுன் வழங்குவதாக இருந்தால் என் பிறந்த நாள் விழாவை கொண்டாட மகிழ்ச்சியாக ஒப்புக்கொள்கிறேன் என பிறந்த நாள் விழாவை விரும்பாத தலைவர் தன் பிடி வாதத்தை தளர்த்திக்கொண்டு பெரி யாருக்கு பெருமை சேர்க்கும் பணியில் நீண்ட நாட்களாக தமது உள்ளக்கிடக் கையில் உயர்ந்து நின்ற எண்ணத்திற்கு, செயல் வடிவம் தருகிற இந்த பெரும் பணிக்கு நிதி திரட்டி வழங்கும் பணிக்கு நம்மையெல்லாம் ஈடுபடுத்திக் கொள்கிற அரிய வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது.
நன்றி என்பது பலனடைந்தவர்கள் காட்ட வேண்டிய உணர்வு என்றார் அய்யா. ஈரோட்டுக்கும் - செயின்ட் ஜார்ஜ் கோட் டைக்கும் இடையில் உள்ள சாலை வெறும் சரளை கற்களாலும் - தாரினாலும் உரு வானதல்ல. பெரியாரின் எண்ணத்தாலும், சிந்தனையாலும் உருவானது என்ற உணர்வோடு, அரசியல் வானில் மின்னுகிற அத்தனை தலைவர்களும் எண்ணிப் பார்த்து - தாங்களே முன்வந்து இப் பணிக்கு உதவிட வேண்டும். அய்யா இன்று உடலால் இல்லை. உணர்வால் உலகமய மாகி வருகிறார். அவர்கள் ஆற்றிய தொண் டும் அரும்பணிகளும் இந்த சமுதாயத்தில் எந்த அளவுக்கு மாற்றத்தை - மகிமையை - மறுமலர்ச்சியை குருத்து விடச் செய் துள்ளது என்பதை பட்டியலிட்டால் ஏடும் கொள்ளாது - எழுதியும் முடியாது. சுருங்க சொன்னால் சுரண்டல்களை ஒடுக்கி - மானத்தை காத்து - அறிவினை வளர்த்து உரிமைகளை நமது உடைமைகளாக்கி, மனிதர்களை மனிதர்களாகவும் மாமனிதர் களாகவும் ஆக்கும் பெரிய முயற்சியில் வெற்றி கண்டவர் அய்யா. உலக வரலாற் றில் இம்முயற்சிக்கு ஈடான பணிகளே இல்லை. அய்யா பெரியாருடன் ஒப்பிட உலக வரலாற்றில் எடுத்துக்காட்டோ, முன் மாதிரியோ இல்லை, யாரும் இல்லை.
மதவாதத்தை வீழ்த்தி - வகுப்புரிமைக் கொடியை உயர்த்தி - குலக்கல்வி திட் டத்தை தகர்த்து - ஏகாதிபத்திய இந்திக்கு எதிராக மொழிப்போர் களம் கண்டு, சாஸ்திரத்தை, சம்பிரதாயத்தை - மனுதர் மத்தை வேரோடும், வேரடி மண்ணொடும் வீழ்த்தி - கமண்டலம் ஏந்தியவர்களின் கபட நாடகத்தை எதிர்த்து, தள்ளாத வய திலும் - நடமாட முடியாத அளவுக்கு அவரை சிறுநீரக நோய் அவதிக்குள் ளாக்கிய போதும் - மூத்திர பையை கையில் பிடித்துக் கொண்டு அய்யோ, அம்மா, என முனகிக்கொண்டு தமிழன் ஊர்களில் அவன் தலையெழுத்தை மாற்றிட இதயத் தில் இயங்கிக் கொண்டிருக்கிற இலட்சியம் உறுதியாக இருந்த காரணத்தினால், இறுதி வரை இலட்சிய சூறாவளியாக சுழன்று இனத்தின் மேன்மைக்கு பாடுபட்டவர் அய்யா,
இப்படிப்பட்ட பெருமைகளுக்கு உரிய தலைவருக்கு - வாழ்நாள் முழுவதும் மனிதனை மனிதனாக்கும் மாபெரும் பணியில் ஈடுபட்டு இந்த இனம் உயர -தன்னை தாழ்த்திக் கொண்ட தலை வருக்கு, பயனடைந்த இந்த இனம் நன்றி செலுத்துகிற நல்ல நேரம் இது.
95 அடி உயரத்திற்கு வெண்கலச் சிலை - முதற்கட்ட எதிர்பார்ப்பு அய்யா ஆசிரியர் பிறந்த நாளில் 1000 பவுன், திட்ட மதிப்பீடு சுமார் 10 கோடி ரூபாய். இது சாதாரணம் - மிகச்சாதாரணம்.
அய்யாவின் தொண்டிற்கும் - உழைப் பிற்கும் இமயமலையை தங்கமாக்கி, அதை இடம் பெயர்த்து தந்தாலும் ஈடாகாது. உலக தமிழர்களோடு 10 கோடி தமிழர்கள் நாம். இன்று அமைச்சராக, எம்.எல்.ஏ.வாக, எம்.பி.யாக அரசு ஊழியர்களாக - ஆசிரி யர்களாக - மருத்துவர்களாக - பொறி யாளர்களாக - வழக்கறிஞர்களாக பல்வேறு நிலைகளில் உயர்ந்துள்ளவர்கள். தாங்கள் இந்த உயரத்திற்கு உயர காரணமானவர்கள் யார்? காரணம் என்ன? என்பதை எண்ணிப்பார்த்து - குலக்கல்வி திட்டத்தை தகர்த்து, ராஜாஜி மூடிய பள்ளிகளை யெல்லாம் பெருந்தலைவர் காமராஜர் மூலம் திறக்க செய்து இன்று கல்வி வெள் ளாமையை கருத்தரித்தவர் அய்யா பெரியார் என்பதை உணர்ந்து, அந்த பெருமைக் குரிய தலைவரை பெருமைப்படுத்தும் இந்த நிகழ்ச்சிக்கு உதவிட முன்வரவேண்டும். பயன்பெற்றவர்கள் ஒரு நாள் ஊதியத்தை அல்ல, ஒரு மாத சம்பளத்தை “THE PERIYAR SELF PRESPECT PROPAGANDA INSTITUTION” என்று முகவரிக்கு வழங்கி இந்த பெரும் பணியில் தங்களை இணைத்துக் கொண்டு நன்றியுணர்ச் சியை வெளிப்படுத்திட வேண்டும் என விரும்புகிறேன்.
கேதார்நாத் பேரழிவுக்கு தமிழ் மக்களின் பங்களிப்பை நிதி திரட்டி வழங்கியது (கோடி கணக்கில் தான்) ஒரு தமிழ் நாளேடு. அதன் சூட்சுமம் மக்களுக்கு உதவுவது என்பதை விட, அது ஒரு புனித தலம் அதை காப்பாற்ற வேண்டும் என்ற இந்ததுத்துவா உணர்வு மேலோங்கி நின்றது.
அது மக்களுக்கு பயன்பட்டால் மகிழ்ச்சி, மத உணர்ச்சிக்காக என்றால் ...?
தங்களுக்கென்று ஒரு நாடு வேண்டும் என போராடிய யூதர்களின் விடுதலை வரலாற்றில் ஒரு செய்தி. உலக அரங்கில் யூதர்கள் வேட்டையாடப்பட்டபோது அவர்கள் தங்களுக்கு ஒரு நாடு வேண்டும். சொந்த மண்ணில் அவர்கள் கொடி பறக்க வேண்டும் என பல்வேறு நாட்டில் அகதி களாக வாழ்ந்த மக்கள் தங்கள் மண்ணில் போராடியபோது ஆயுதம், இல்லை, பணம் இல்லை, வெற்றி பெற வேண்டும் என்ற உள்ள உறுதி மட்டுமே இருந்தது.
டேவிட் பென்குரியன் என்ற யூத இன தலைவன். அமெரிக்க நாட்டில் யூத இன மக்கள் செல்வாக்கோடும் - வசதியோடும் வாழ்கிறார்கள். அவர்களிடம் சென்று உதவி கேள் என கோல்டா மேயரிடம் பணித்தபோது கோல்டா மேயர் அமெரிக்கா சென்றார். சில யூத இன சீமான்களிடம் நாடு விடுதலை பெற வேண்டிய அவசியத்தையும், ஆயுதமில்லாமல் போராட முடியாது என்பதையும், அமெரிக்க வாழ் யூதர்கள் உதவிட வேண்டியும் கேட்கிறார். அமெரிக்க வாழ் யூதர்கள் கோல்டா மேயருக்கு விருந்து வைக்கிறார்கள். விருந்து உண்பதற்கு முன் கோல்டா மேயர் பேசுவார் என அறிவிக்கப்படுகிறது. கடமை உணர்ச்சியோடும், கண்ணீரோடும், யூத இனம் படும்பாட்டை விவரிக்கிறார். நீங்கள் மது அருந்துகிற செலவில் ஒரு பகுதியை, பெண்கள் ஒப்பனை செய்யும் செலவுகளில் ஒரு பகுதியை தாருங்கள். அந்தப் பணம் போதும், நம் மண்னை மீட்க, ஆயுதம் வாங்க என்று உருக்கமாக பேசுகிறார். விளைவு அந்த ஒரே கூட்டத்தில் 10 மில்லி யன் டாலர் காசோலை எழுதி வழங்கு கிறார்கள். இரண்டு கப்பல்களில் ஆயுதம் வாங்கி கொண்டு வந்து டேவிட் பென் குரியனிடம் வழங்குகிறார். கோல்டா மேயர் அந்த யூத இன மக்களுக்கு குறைந்தவனா, அய்யாவால் பயன் பெற்ற தமிழன்.
இந்திய திருநாட்டின் சுதந்திர போராட்ட காலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆங்கிலேயரை அப்புறப்படுத்த - இந்திய நாடு சுதந்திரம் பெற வேண்டும் என பர்மா - சிங்கப்பூர் பகுதிகளில் பேசிய போது தமிழ் மக்கள் - குறிப்பாக பெண்கள் தாங்கள் அணிந்திருந்த காசுமாலை களையும், தங்க காப்புகளையும் சுபாஷ் சந்திரபோஸின் கையில் வழங்கினார்கள் என்பதும் மீண்டும் பிறந்தால் நான் தமிழனாக பிறக்க வேண்டும் என சுபாஷ் சந்திரபோஸ் சொன்னாராம்.
அந்த தமிழ் மக்கள் இன்னும் இருக் கிறார்கள். நம்மை ஆளாக்கி - அடையாளம் காட்டிய தந்தை பெரியாருக்கு நாம் காட்டுகிற நன்றியுணர்ச்சியை காட்டக் கூடிய நல்ல வாய்ப்பு இதுதானே!
தந்தை பெரியார் இன்று நம்மிடையே இல்லை. நாம் என்ன செய்கிறோம் - எப்படியெல்லாம் அவருக்கு புகழாரம் சூட்டுகிறோம் என்பதை பார்ப்பதற்கும் - கேட்பதற்கும் அய்யா இல்லை. அவர்களின் கொள்கைகள் விரிந்து பரந்து வளர்ந் திருக்கிறது. அந்த கொள்கைகள் நம்மை வாழ்விக்கின்றன என்பதை பறைசாற்றும் முயற்சியே இது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் எந்த திட்டத்தை முன்மொழிந் தாலும் அல்லது முடிவெடுத்தாலும் கால தாமதமின்றி அந்த திட்டத்தை நிறைவேற்றி பழக்கப்பட்டவர். இந்த திட்டத்திற்கு 3 ஆண்டு காலம் காலநீடிப்பு வழங்கியிருக் கிறார்களே ஏன் என சிந்தித்தேன்... பொருள் திரட்டுவதில் காலதாமதமாகும் என்பதாலா? பெரியார் உலகம் படைக்க கட்டுமான பணிகளில் காலவிரயம் ஆகும் என்பதாலா? இல்லை இல்லவே இல்லை இன்னும் 3 ஆண்டு காலம் கழிந்தால்தான் தமிழினத் தலைவர் கலைஞருக்கு 95 வயது வரும், 95 ஆண்டு காலம் வரலாறாய் வாழ்ந்த பெரியாரின் 95 வயதை குறிக்கும் அய்யாவின் 95 அடி உயர சிலையை 95 வயதில் அடியெடுத்து வைக்கும், பெரியாரின் எண்ணங்களை சட்டமாக்கி சரித்திரம், படைத்து வரும் பெரியாரின் பெருந்தொண்டர், மூத்த தொண்டர் திமுக தலைவர் கலைஞர் அவர்களின் திருக்கரங் களால் திறப்பு விழா நடத்த வேண்டும் என்ற பேரவா பொதிந்து கிடக்கிறதோ...!
இல்லை இன்னும் 3 ஆண்டு காலத்தில் தமிழனுக்கு எதிரான இந்த ஆட்சி, இந்துத்துவா ஆட்சியை புரட்டிப்போட்டு விட்டு தமிழ்நாட்டில் தமிழனின் ஆட்சியை - கலைஞரின் ஆட்சியை அவர் கரங்களில் வழங்கிவிட்டு, அய்ந்தாவது முறையாக அரசவை பெற்று வரும் திமுக தலைவர் கலைஞர் கரங்களால் பெரியாரின் பேருருவச் சிலை திறப்பு விழா செய்ய வேண்டும் என்ற எண்ணத்தாலா எண்ணிப் பார்க்கிறேன். இறும்பூது எய்துகிறேன்.
இந்த பெருமுயற்சிக்கு வழிகாட்டுகிற நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் பெருமுயற்சிக்கு வாழ்த்து சொல் வோம். அவரது இந்த முயற்சியும், அவரது உள்ளக் கிடக்கையும் வெற்றி பெற துணை நிற்போம். தோள் கொடுப்போம். 1000 பவுன் அல்ல 10,000 பவுன் வழங்க முடிவெடுப் போம். இந்த முயற்சியை அனைத்து தமிழர்களின் இதயத்தில் பற்றிப்படர்ந்திட பசை தடவி ஒட்டுவோம். இந்த விழிப் புணர்ச்சியை விரிவுபடுத்துவோம். பெரியார் உலகம் அமையும் அந்த பெரும் பணியில் நாமும் இணைந்தோம். 10,000 பவுனில் நமது பவுனும் ஒன்றாக இருக்க உறுதி கொள்வோம். நாம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு இழிவை சுமந்த பெரியாருக்கு மகுடம் சூட்டுவோம்.
பகுத்தறிவு
பகுத்தறிவில்லாத எந்தச் சீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துவதில்லை, தன் இனத்தின் உழைப்பாலேயே வாழ்வதில்லை. தன் இனத்தின்மீது சவாரி செய்வதில்லை.
(குடிஅரசு, 26.5.1935)
காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கும் முடிவை காங்கிரஸ் திரும்ப பெற வேண்டும்: திருமாவளவன்
புதுச்சேரி, அக்.31-விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. இன்று (31.10.2013) புதுவை வந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு பங்கேற்க கூடாது என ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமும் வலியுறுத்தி வருகிறது. தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் நேற்றைய தினம் கூடிய காங்கிரஸ் உயர் மட்ட குழு காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்ற முடிவை எடுத்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
தி.மு.க. தலைவருக்கு பிரதமர் எழுதியுள்ள கடிதத்தில் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கப்படும் என்று கூறி இருந்தார். ஆனால் அதற்கு நேர்மாறான முடிவை காங்கிரஸ் உயர்மட்ட குழு எடுத்துள்ளது. இந்த முடிவை காங்கிரஸ் கட்சி திரும்ப பெற வேண்டும். தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்.
இந்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டால் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்திக்கும். 1967ஆம் ஆண்டு ஏற்பட்ட பின்னடைவை விட கூடுதல் பாதிப்பை ஏற் படுத்தும். தமிழக காங்கிரஸ் தலைவர்களும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என நேரடியாகவே வேண்டுகோள் விடுத்து இருந்தனர். ஆனால் அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கப் படவில்லை.
3ஆம் தேதி ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவை கண்டித்தும், இந்த முடிவை திரும்ப பெறக்கோரியும் வருகிற 3ஆம் தேதி எனது தலைமையில் சென்னையில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் அடுத்த 2 ஆண்டுகளுக்கான புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். புதிய தலைவராக ராஜ பக்சேவை தேர்வு செய்ய கூடாது என காமன்வெல்த் நாடுகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். இது தொடர்பாக காமன்வெல்த் நாடுகளுக்கு விடுதலை சிறுத் தைகள் கட்சி சார்பில் மின் அஞ்சல் (ஈமெயில்) அனுப்பப்படும்.
பரமக்குடியில் 7 தலித்துகள் படுகொலை செய்யப் பட்டது தொடர்பாக சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் தரப்பில் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிட்டது. அதே நேரத்தில் தமிழக சட்டசபையில் அரசு நியமித்த ஆணையத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது காவல்துறைக்கு ஆதரவாகவும், தலித்துகள் படு கொலையை நியாயப்படுத்தியும் உள்ளது. எனவே தமிழக அரசு இந்த அறிக்கையை புறக்கணிக்க வேண்டும். சி.பி.அய். விசா ரணைக்கு முழு ஒத்துழைப்பும் அளிக்க வேண்டும். பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்கவும் வழி வகை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் ஜாதியின் பெயரால் தலித் சமூகத்துக்கு எதிராக ஒரு அரசியல் அமைப்பு உருவாகி வருகிறது. இது சமூக விரோத கூட்டணி. இந்த கூட்டணி ஜாதி வெறியை தூண்டி வன்முறையை தமிழகத்தில் உருவாக்கி சட்டம்ஒழுங்கை சீர்குலைக்கவும் செய்கிறது. எனவே தமிழக அரசு இதனை கண்காணித்து அதன் செயல் பாடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோல் புதுவை பண்டசோழநல்லூர் ஜாதிய மோதல் உருவாக்கப்பட்டது. இந்த பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை கண்டிக்கிறோம். இந்த தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
ஜாதி வெறியர்களின் நடவடிக்கைகள்
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விடுதலை சிறுத்தை கட்சியின் கொடிகம்பங்கள், பேனர்கள் சுவரொட்டிகள் திட்டமிட்டு ஜாதி வெறியர்களால் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் உழைக்கும் மக்களின் இரு பிரிவினருக்கும் மோதல் ஏற்படுகிறது. இதில் அப்பாவி மக்கள்தான் பலியாகிறார்கள். எனவே தமிழக அரசும், மத்திய அரசும் சமூக விரோத சாதிய கூட்டணியை கண்காணிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலம் உள்ளது. தற்போது நாங்கள் தி.மு.க. கூட்டணியில் நீடிக்கிறோம். ஏற்காடு இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரமும் செய்ய உள்ளோம். மத்தியில் மதவாதிகள் ஒருங்கிணைந்த ஒரு கூட் டணியும், தமிழகத்தில் ஜாதிய வாதிகள் ஒருங்கிணைந்த ஒரு கூட்டணியும் உருவாகி வருகிறது.
சமீபத்தில் டில்லியில் காங்கிரசும், பாரதீய ஜனதாவும் அல்லாத ஒரு கூட்டணியை உருவாக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இது வரவேற்க கூடியது. இருப்பினும் அகில இந்திய அளவிலும், தமிழகத் திலும் 3ஆவது அணி எடுபட்டது இல்லை. அதோடு வாக்கு சிதறல்களை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. எனவே தலைவர்கள் எச்சரிக்கை உணர்வோடு முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காமன்வெல்த் - இந்தியா பங்கேற்பு: காங்கிரஸ் விளைவுகளை சந்திக்கும்
கலைஞர் பேட்டி
சென்னை, அக்.31- இலங் கையில் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற் றால் அதன் விளைவை காங் கிரஸ் சந்திக்கும் என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர்.
செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:
செய்தியாளர் :- நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் உயர் நிலைக் குழுவில்; இலங்கை யில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள முடிவெடுத்திருப் பதைப் போல செய்திகள் வந்திருக்கிறதே; அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
கலைஞர் :- தமிழ் நாட்டில் உள்ள தமிழ் உணர்வு படைத்த எல்லா கட்சிகளும் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு பிரதமர் செல்லக் கூடாது என்று வலியுறுத்திக் கூறியும் கூட, பத்திரிகைகளில் இன்று வந்துள்ள செய்தியைப் பார்க்கும்போது பிரதமர் செல்லக் கூடுமென்று யூகிக்கக் கூடிய வகையில் உள்ளது. அப்படி தமிழர்களை வேட்டையாடிய சிங்கள வெறியர்கள் நடத்துகின்ற காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டால், அதனுடைய விளைவுகளை அவர்கள் சார்ந்துள்ள கட்சியே அனுபவிக்க நேரும்.
கேள்வி :- பிரதமருக்குப் பதிலாக வேறு யாராவது இந்தி யாவிலிருந்து சென்று அந்த மாநாட்டில் கலந்து கொண்டால்?
கலைஞர் :- இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்றால், இந்தியாவைச் சார்ந்த துரும்பு கூட இந்த மாநாட்டிற்குச் செல் லக் கூடாது என்று தான் பொருள்.
கேள்வி :- சட்டப் பேரவை யில் இந்தப் பிரச்சினைக்காக தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, தமிழ் மக்களின் உணர்வு களுக்கேற்ப நீங்களும் அதனை ஆதரித்தீர்கள். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் அதனை ஆதரித்தார்கள். அந்த உணர்வு களுக்கு மாறாக மத்தியில் காங் கிரஸ் கட்சி இப்படி யொரு முடி வெடுக்கிறதே?
கலைஞர் :- வினை விதைத் தவர்கள், வினை அறுப்பார்கள்!
கேள்வி :- டெசோ அவசர மாகக் கூட்டப்படுமா?
கலைஞர் :- டெசோ கூட்டம் நடைபெற்றுத் தான் முதன் முதலில் இதற்கான தீர்மானத்தை நாங்கள் நிறைவேற்றினோம். அதை மீறித் தான் இப்போது காங்கிரஸ் கட்சி அல்லது பிரதமர் செயல்படுகிறார் என்று நான் கருதுகிறேன்.
கேள்வி :- டெல்லியிலிருந்து வருகின்ற தகவல், காங்கிரஸ் கட்சியின் முடிவினை எதிர்த்து மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் ராஜினாமா செய்யப் போவதாகச் சொல்லப்படுகிறதே?
கலைஞர் :- அதைப்பற்றி எனக்குத் தெரியாது. செய்தி வந்த பிறகு தான் அதைப் பற்றி கருத்து சொல்ல முடியும்.
தீபாவளி -அறிவுடையோர் சிந்திப்பீர் !
லால்குடி இந்துவின் தீபாவளி வேறு, லாகூர் இந்துவுக்கு தீபாவளி மற்றோர் காரணத்துடன் ஏற்பட்டிருக்கிறது. லாகூரில் ஒரு ரூபாய்க்குப் பதினாறு அணா, லால்குடியிலும் அதேதான்! இதோ தீபாவளி பற்றி அண்ணா அவர்களின் கட்டுரை.
இங்கே தீபாவளி நரகாசுரவதத்தைக் குறிக்கிறது அல்லவா? பஞ்சாபிலே அப்படிக் கிடையாது. நளச் சக்கரவர்த்தி, சூதாடி அரசு இழந்த இரவுதான் தீபாவளியாம்! இங்கே நாம், அசுரனை ஒழித்த நாளென்று ஸ்நானம் செய்து மகிழ்வது சடங்காகக் கூறப்படுகிறதல்லவா? பஞ்சாபிலே நடப்பது என்ன? சூதாடுவார்களாம், பண்டிகையின்போது! தமிழகத்து இந்து, தீபாவளியை நரகாசுரவதமாகவும், பஞ்சாப் இந்து அதே தீபாவளியை நளமகாராஜனுடைய சூதாட்டத் தினமாகவும் கருதுவது எதைக் காட்டுகிறது? வேடிக்கையல்லவா? லாகூரில் ஒரு ரூபாய்க்குப் பதினாறு அணா, லால்குடியிலும் அதேதான்! ஆனால் லாகூர் இந்து தீபாவளியின் போது, நரகாசுரனை நினைத்துக் கொள்ளவில்லை. லால்குடி இந்துவுக்கு தீபாவளி, நளச் சக்ரவர்த்தி சூதாடிய இரவு என்று தெரியாது. மான்செஸ்டரிலே உள்ள கிறிஸ்துவரை, ஏசுநாதர் எதிலே அறையப்பட்டார் என்று கேளுங்கள், சிலுவையில் என்பார். மானாமதுரையிலே மாயாண்டி, மத்தியாஸ் என்னும் கிறிஸ்துவரான பிறகு அவரைக் கேளுங்கள், அவரும் ஏசு சிலுவையில் அறையப்பட்டார் என்றுதான் சொல்வார்.
இங்கோ லால்குடி இந்துவின் தீபாவளி வேறு, லாகூர் இந்துவுக்கு தீபாவளி மற்றோர் காரணத்துடன் ஏற்பட்டிருக்கிறது. அவ்வளவோடு முடிந்ததா வேடிக்கை! - மேலும் உண்டு. மகாராஷ்டிர தேசத்திலே, தீபாவளிப் பண்டிகை எதைக் குறிக்கிறது என்று கேட்டால், விநோதமாக இருக்கிறது. மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலியின் முடியிலே அடியை வைத்த நாளாம் அது! லால்குடிக்கு லாகூர் மாறுகிறது. லாகூரிலிருந்து புனா போனால், புதுக் கதை பிறந்துவிடுகிறது. கூர்ஜரத்திலே தீபாவளி புது வருசத்து வர்த்தகத்தைக் குறிக்கிறதாம்! வங்காள தேசத்தில் காளிதேவியை இலட்சுமியாகப் பூஜை செய்யும் நாளாம் தீபாவளி! சிலர், ராமன் மகுடம் சூட்டிக் கொண்ட தினமே தீபாவளி என்று கொண்டாடுகிறார்களாம்! சரித்திர ஆராய்ச்சியைத் துணை கொள்ளும் சில இடங்களிலே, தீபாவளி என்பது தேவ கதைக்கான நாளல்ல; உஜ்ஜைனி நகர அரசன் விக்கிரமாதித்தன் பட்டம் சூடிய நாளைக் கொண்டாடும் பண்டிகையாம்! இவ்வளவோடு முடிந்ததா? இல்லை.
இந்திய தேசத்திலே நான்கு ஜாதிகள், சிரவணம் பிராமணருக்கு, நவராத்திரி க்ஷத்திரியர்களுக்கு, வைசியர்களுக்கு தீபாவளி, இதராளுக்கு (!!) ஹோலிப் பண்டிகை என்று சம்பிரதாயம் ஏற்பட்டிருப்பதாக மற்றோர் சாரார் கூறுகின்றனர்.
இதில் எது உண்மை? அறிவுடையோர் சிந்திப்பீர்!
- தொகுப்பு: க. பரணீதரன்
தீபாவளியைப் பற்றிய சரடுகள்!
தீபாவளி என்றால் அதற்குக் காரணா காரியத்தைப் பொருத்த மாகச் சொல்லட்டும். ஆள் ஆளுக் குத் தத்தம் விருப்பம் போல் அவிழ்த் துக் கொட்டுகிறார்கள் என்றால் அதன் பொருள் என்ன?
உண்மை என்று இருந்தால் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் அது எப்படி இப்படியெல்லாம் மாறுபடும்?
தீபாவளி சிறப்பிதழ் என்று போட்டி போட்டுக் கொண்டு வெளியிடு கிறார்களே -_ அவற்றில் தான் எத்தனை எத்தனை மாறுபாடுகள்.
இதோ ஓர் இதழ்:
மகாலட்சுமியும் தீபாவளியும்
பாற்கடலில் அவதரித்த மகா லட்சுமி தன் மனம் கவர்ந்த மகா விஷ்ணுவிற்கு மாலை சூட்டினாள். திரு மார்பன் (ஸ்ரீவத்ஸன்) என்ற பெயர் பெருமாளுக்கு ஏற்படும் வண்ணம் எம்பெருமாள் இதயத்தில் இடம் பிடித்தாள். மகாலட்சுமி பாற்கடலில் அவதரித்த நாள். எம் பெருமானைமணந்த நாள் தீபாவளி திருநாளாம்.
அயோத்தியில் தீபாவளி
பதினான்கு ஆண்டு கால வன வாசத்துக்கு பிறகு தம் நகரத்துக்கு திரும்பிய ராமபிரானை அயோத்தி நகர மக்கள் வரவேற்றபோது வீதி களில் வரிசையாக விளக்குகள் ஏற்றப் பட்டன. அந்த நாள் தான் தீபவாளி திருநாள் என்பது அயோத்தியில் கடைப்பிடிக்கும் சம்பிரதாயமாம்
தமிழகத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கார்த்திகை தீப திருநாளை தான் வடநாட்டினர் தீபாவளி என்னும் பெயரோடு கொண்டாடி வருகின்றனர்.
மூவடியால் உலகை அளந்து பாதாளம் சென்ற மாவலி ஆண்டிற்கு ஒரு முறை பூவுலகம் வர மகா விஷ் ணுவிடம் வரம் பெற்றான். அப்படி அவன் வரும் நாள் தீபாவளி என்பது கேரள மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகையின் மறை பொருள்.
(தினத்தந்தி தீபாவளி சிறப்பிதழ் ஆன்மிகம் 29.10.2013).
வடநாட்டுப் பண்டிகையே தீபாவளி!
தீபாவளி குறித்து வெவ்வேறு கதைகள் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வழங்குகின்றன. தமிழகத்தில் தீபாவளிக்கு நரகாசுரன் கதை கூறப்படுகிறது. இக்கதைக்கும், தீபாவளிக்கும் தொடர்பே இல்லை.
தீபாவளி புதுக்கணக்குப் புத்தாண்டுப் பிறப்பு விழாவாகும். இது விஜய நகரத்திலும் புத்தாண்டுப் புதுக்கணக்கு விழாவாகக் கொண்டாடப்பட்டதை நிக்கோலோ டிகாண்டி என்பவர் குறிப்பிட்டுள்ளார். இது வடநாட்டுக் குஜராத்திகளுக்கும், மார்வாரிகளுக்கும் புதுக்கணக்குப் புத்தாண்டு விழாவாகும். விஜயநகரத்திலிருந்து வந்து மதுரையில் குடியேறிய சவுராஷ்டிரர்களும் இதைக் கொண்டாடி வருகிறார்கள். தீபாவளி அன்று புதுக்கணக்கு எழுதப்படும். வடநாட்டார் தீபாவளி அன்று விளக்கு அலங்காரம் செய்வதுண்டு. தீபம் = விளக்கு; ஆவளி = வரிசை; தீப ஆவளி=தீபாவளி. குஜராத்திகளும், மார்வாரிகளும் இன்றும் தீபாவளி அன்று வீடுகளில் விளக்கேற்றி வைக்கிறார்கள். புதுக் கணக்கு எழுதுகிறார்கள். ஆனால், தீபாவளி தமிழ்நாட்டில் தொன்று தொட்டு வந்த திருநாளன்று. மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை - செஞ்சி நாயக்கர்களாலும் தமிழகத்தில் புகுத்தப்பட்டதால் பதினாறாம் நூற்றாண்டி லிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படவே இல்லை. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங் களில் தீபாவளியில் புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக் காலம் வரையில் இருந்ததில்லை.
(ஆசிரியர்: பேராசிரியர் அ.கி. பரந்தாமனார், நூல்: மதுரை நாயக்கர் வரலாறு பக்கம்: 433-434)
தீபாவளி
மனித நேயங்களை நசுக்கி எரித்து தன் சுயநலத்தை பகட்டை காட்டுவதற்கு தெரிந்தே தானே போய் ஏமாற, தன்னுடைய உடலுழைப்பை வினாடிகளில் கரியாக்க கொண் டாடப்படும் உலகின் ஒரே ஒரு மடத் தனமான கேளிக்கை கூத்து என்றால் அது மிகையாகாது. தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு 700 விலைபட்டியல் ஒட்டி 50 தள்ளுபடி என்று விற்ற அதே பொருள் திபாவளி நெருங்கிய உடன் 2000 லேபிள் ஒட்டி 300 ரூ தள்ளுபடி என்று ஏமாற்றி விற்பனை செய்வார்கள், நம்ம ஆள் அதை அடித்து பிடித்து வாங்க ஓடுகிறான், கூடவே பையனுக்கு ஒரு 10 ரூ மதிப் புள்ள சைனா தொப்பி இலவசமாம், இன்றைய விலைவாசியில் பணம் சேர்ப்பது என்பது சாமானியர்களுக்கு குதிரைக்கொம்பு பணக்காரர்களுக்கு வேண்டுமென்றால் பொழுதுபோக்காக இருக்கலாம் ஆனால் அவர்கள் உழைத்து பணம் சேர்த்திருந்தார்கள் என்றால் அதன் மதிப்பு தெரிந்து விரயமாக்கமாட்டார்கள் அவர்கள் ஏழைகளின் உழைப்பைச்சுரண்டி சேர்த்த பணம் தானே அது.
இருவருமே உழைப்பின் ஊதி யத்தை பட்டாசு என்ற பெயரில் சில வினாடிகளில் கரியாக்குகிறார்கள், உங்க காசு நீங்க என்னமும் செய்யலாம் என்று கூறிவிடமுடியாது. பட்டா சினால். காற்று மாசு ஓசை மாசு, மற்றும் ஒளிமாசு என இயற்கையை வன் கொடுமை செய்கிறார்கள், எத்தனை காகங்கள் குருவிகள் அணில்கள் சென்னை சாலையில் செத்துவிழு கின்றன தெரியுமா, காரணம் காற்றில் அதிகம் கலந்துவிடு கந்தகம் உயிரினங் களின் மென்மையான சுவாச உறுப்பு களை வெந்து போக செய்துவிடும். பெருநகரங்களில் எந்த பாவமும் அறியாமல் செயற்கைச்சூழலை எதிர்த்து போராடும் ஒரு சில உயிரினங்களையும் கொலை செய்யும் போது செயலை ஏன் செய்கிறீர்கள், உலகின் வெறெந்த விழா விலும் ஏழைகளின் முகங்களில் இய லாமையின் ஏக்கத்தை காணமுடியாது அது பொங்கலானாலும் சரி, ரம்ஜானாக இருந்தாலும், கிருஸ்துமஸாக இருந்தா லும் சரி இந்த விழாக்களில் பரம்,அ ஏழைகள் முதல் அனைவரின் மனதி லும் ஒருவித சந்தோசம் இழையோடும் இதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் தீபாவளியோ நாள் நெருங்க நெருங்க ஏழைகளில் மனதில் வேதனை குடிகொண்டுவிடும், சென்ற வருடம் தீபாவளிக்கு வாங்கிய வட்டி யும் முதலும் சமீபத்தில் தான் அடைத் திருப்பான் மீண்டும் அந்த கொடூரக் கும்பலிடம் கையேந்தும் கொடுமையும் தீபாவளியில் தான். அடுத்தவர் முன்பு பகட்டாக கொண்டாட சிலர் நினைக் கும் இந்த மடத்தனமான கேளிக்கை வேதனையான தொடர்விளைவுகளை உண்டாக்கிவிடுகிறது, சமூகத்தில் அனைத்து மட்டத்திலும் இயற்கைச் சூழலிலும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த மடத்தனமான கோளிக்கையை புறக்கணிப்போம்.
- சரவணா. இராசேந்திரன்
53 ஆண்டுகளாக தீபாவளியைப் புறக்கணிக்கும் கிராமம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா சிங்கம்புணரி ஒன்றியத்தைச் சேர்ந்த எஸ். மாம்பட்டி ஊராட்சி கிராம மக்கள் 53 ஆண்டுகளாக தீபாவளிப் பண்டிகையைப் புறக்கணித்து வருகின்றனர். மயில்ராயன்கோட்டை என்று அழைக்கப்படும் எஸ்.மாம்பட்டி ஊராட்சி வானம் பார்த்த பூமியாகும். இங்கு சுமார் 3,500 பேர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் ஒப்பிலான்பட்டி, தும்பைப்பட்டி, சத்திரப்பட்டி, எம்.வலையப்பட்டி, கிளுகிளுப்பைப் பட்டி, திருப்பதிபட்டி, கச்சப்பட்டி, தோப்புப்பட்டி, இந்திராநகர், கலிங்குபட்டி ஆகிய ஊர்கள் அடங்கியுள்ளன. இக்கிராம மக்களின் வாழ்வாதாரமே விவசாயமும், கால்நடை வளர்ப்பும் தான். விவசாயம் தொடங்கும் காலத்தில் தீபாவளி வருவதால் அனைவரின் பொருளாதாரத்திலும் ஏற்றத்தாழ்வு நிலவிவருகிறது. இதனை கருத்தில் கொண்டு மாம்பட்டி கிராமத்தின் அப்போதைய அம்பலக்காரர் சேவுகன்அம்பலம், முன்னாள் அம்பலக்காரர்களோடு விவாதித்தார். எல்லோரும் மாற்றுக் கருத்துக்கு இடம் அளிக்காமல் 1959இல் ஊர்க் கூட்டம் கூட்டி, ஊராட்சிக்குள்பட்ட 12 கிராமங்களிலும் தீபாவளிப் பண்டிகையை கொண்டாட வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று வரை தீபாவளி பண்டிகையை கொண்டாடாமல் புறக்கணித்து வருகின்றனர். இதுகுறித்து சேவுகன் அம்பலம் மகன் சபாபதி அம்பலம் கூறுகையில், எனக்கு திருமணமான ஆண்டுதான் தீபாவளி திருநாள் கைவிடப்பட்ட ஆண்டு. இந்தியாவே கொண்டாடும் ஒரு பண்டிகையை ஒரு கிராமம் நிறுத்துவதா என்ற கேள்விகளை தூக்கியெறிந்து, மற்ற கிராமங்கள் கொண்டாடும் போது நாம் கொண்டாடவில்லை என்றால் ஊருக்கு இழுக்காகுமோ என்ற போலி சித்தாந்தங்களை உடைத்தெறிந்து, சூழ்நிலைக்கும் இயற்கை அமைப்பிற்கு ஏற்ப வாழ்ந்து கொள்வதுதான் சரி என்று தீர்மானித்தோம். அதன்படி இன்றுவரை வாழ்ந்து வருகிறோம். மேலும் சேவுகன்அம்பலம் உலகநாதன் கூறுகையில், விவசாயங்கள் மறைந்து வெளிநாட்டு வருமானத்தில் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஏற்பட்டாலும் அன்று கிராமங்கள் கட்டுப்பட்டு நின்றது போல எங்கள் தலைமுறையிலும் கட்டுப்பாடு காக்கப்படுகிறது. இனிவரும் தலைமுறையும் இதனை கடைப்பிடிக்கும் என்று நம்புகிறோம் என்றார். மேலும், இக்கிராமங்களில் வெள்ளாடு வளர்ப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது ஏன் என்று வினவும் போது மரம், செடி, கொடிகள் காக்கப்படவே தடை செய்யப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.
பார்க்கவில்லையா உள்ளங்கையை?
நம் உள்ளங்கையில் விரல் நுனியில் லட்சுமியும், மத்தி யில் சரஸ்வதியும், கடைசியில் துர்க்கா தேவியும் உள்ளனர். காலையில் எழுந்ததும் உள்ளங்கையைக் கண்களால் பார்ப்பது நல்லது
- காஞ்சி சங்கராச்சாரியார் தினமணி 21.9.2010 பக்கம் 2
காஞ்சி வரதராஜ பெரு மாள் கோயில் சங்கர்ராமன் கொலை வழக்கில் இதே காஞ்சி சங்கராச்சாரியார் ஒரு தீபாவளி நாளில் கைது செய்யப்பட்டாரே அன்று காலை எழுந்தவுடன் தன் உள்ளங்கையைப் பார்க்கத் தவறி விட்டாரோ!
கடவுளிடம் வேண்டுதல் என்பது சரியானதுதானா?
கடவுள்தான் எல்லாம் அறிந்தவர் என்றும் அவனன்றி ஓரணுவும் அசையாது என்றும் ஆன்மீக சிரோன்மணிகள் அளக்கிறார்களே _ அப்படி இருக்கும் போது ஆண்டவனி டம் கோரிக்கைகளை வைப்பது ஏன்? வரங்களை வேண்டு வது - _ ஏன்?
அவன்தான் எல்லாம் அறிந்தவனா யிற்றே? கல்லினுள் தேரைக்கும் படியளப் பவனாயிற்றே _ அப்படி இருக்கும் பொழுது ஆண்டவ னிடம் அதைக் கொடு, இதைக் கொடு என்று கேட்பது அதி கப் பிரசங்கித்தனமா அல்லது ஆண்டவன் ஒரு அறியாமை ஆசாமி _ நாம் எடுத்துச் சொன்னால்தான் விளங்கிக் கொள்வான் என்று கருதும் மனப்பான்மையா? இதுகுறித்து கறுப்புச் சட்டைக்காரன் கூறினால் கொஞ்சம் கசக்கும்தான்
கல்கி சொன்னால் இனிக்கும் அல்லவா?
இதோ கல்கியில்
கடவுளை வியாபாரியாக்காதே!
கேள்வி: கோயிலுக்குச் சென்று கடவுளிடம், எனக்கு அதைக் கொடு இதைக் கொடு! என்று கேட்பது சரியா தவறா...?
- - _ வி. மனோகரி, குமாரபாளையம்
பதில்: அப்படிக் கேட்பதன் மூலமாக நீங்கள் கடவுளை ஒரு வியாபாரி யாக்கிக் கேவலப்படுத்துவதாக நான் நினைக்கிறேன். எனக்கு இந்த வேலையை முடித்துக் கொடு. நான் உனக்கு பாலபிஷேகம் செய்கிறேன். வேல் சாத்துகிறேன். ஒரு மண்டலம் பூஜை செய்கிறேன் என்றெல்லாம் பேரம் பேசுவது இறைவழிபாடு அல்ல. கடவுளிடம் நாம் எதையும் கேட்க வேண்டியது இல்லை. நமக்கு எதைத் தர வேண்டும். எதைத் தரக் கூடாது என்பதெல்லாம் அவனுக்குத் தெரியும். எந்த ஒரு கோரிக்கையும் இல்லாமல் கோயிலுக்குப் போக வேண்டும். அப்படிக் கோரிக்கை எதுவும் இல்லாவிட்டால் நாம் கோயில்களையே மறந்து விடுவோம்.
ஒரு பிரச்சினை தீர்ந்தால் இன்னொரு பிரச்சினை என்று மனித வாழ்வில் எட்டிப் பார்ப்பதால்தான் இன்றைக்குக் கோயில்களில் கூட்டம் கூடுகிறது. பிரதோஷம் என்றால் பத்து வருடங்களுக்கு முன்பு கோயில் குருக்களுக்கு மட்டுமே தெரியும். இன்றைக்கு பிரதோஷம் எல்லாக் கோயில்களிலும் பிரபலம். பக்தி என்பது நமது உள்ளத்தைச் சுத்தப்படுத்தும் ஒரு கருவி. அந்தக் கருவியை உபயோகித்து இறைவனிடம் பேரம் பேசி நமது பேராசைகளை பிரார்த்தனை என்ற பெயரில் நிறைவேற்றிக் கொள்ள நினைப்பது, நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் ஓர் அவமானம். எல்லாம் நீயே! என்று சரணடைந்து பாருங்கள். மனசுக்குள் நிம்மதி பச்சைப் பசேலென்று துளிர்விடும்.
(எழுத்தாளர் ராஜேஷ்குமார் _ கல்கி 6.11.2011)
சரணடைந்து பாருங்கள்! என்று சொல்லுவது ஒருபுறம் இருக்கட்டும்!
பிரார்த்தனை என்பது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் ஓர் அவமானம் என்று கருப்புச் சட்டை சொல்லவில்லை கல்கி சொல்லுகிறதே இதற்கு என்ன பதில்?
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
தீபாவளி என்றால் மனுசர்களுக்கு மட்டுமல்ல; கடவுள் களுக்கும்கூட தலைத் தீபாவளியாம்.
திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகனுக்கு இந்திரன் தன் மகள் தெய்வானையைக் கட்டிக் கொடுத்தா ராம். பிறகு முருகனுக்குத் தலைத் தீபாவளி சீர்வரிசை செய் தாராம்.
சிவன் கோயிலில் இந்தத் திருக்கூத்து என்றால் வைணவர்கள் சும்மா இருப்பார்களா?
ஆண்டாளை ரெங்கனுக்குக் கட்டிக் கொடுத்த பெரியாழ்வார் தீபாவளிக்கு முதல் நாள் மருமகனாகிய ரெங்கனுக்கு நல்லெண்ணெய் சீயக்காய்களை அனுப்பி வைப்பாராம்.
தீபாவளி விடியற்காலையில் ரெங்கநாதன் ஆண்டாளுக்குப் புத்தாடை அணிவிப்பார்களாம்.
பிள்ளை விளையாட்டே என்று இராமலிங்க அடிகள் சும்மாவா சொன்னார்?
திரு நீறு - திரு நீறு
திரு நீறு எப்படி தயாரிக்க வேண்டும் தெரியுமா? அதற்கென்றும் சில சடங்காச்சாரங்கள் உண்டாம். வியாதியில்லாத கன்றுடன் (எப்படி தேடி பிடிப்பார்களோ?) கூடிய பசு சாணம் போடும் வரை காத்திருக்க வேண்டும். சாணம் போடும் சமயத்தில் கையில் வைத்திருக்கும் தாமரை இலை யில் அந்தச் சாணத்தைப் பிடித்து, உருண்டையாக்கி சில மந்திரங்கள் சொல்லி அக்னியில் எரிக்க வேண்டும்; -இப்படிதான் திருநீறு தயாரிக்க வேண்டுமாம். அய்தீகம் சொல்கிறது. இப்பொழுதெல்லாம் இப்படிதான் திருநீறு தயாரிக்கப்படுகிறதா? கடைகளில் விற்பனைப் பொருளாகி விட்டதே! மற்ற மற்ற விஷயங்களுக்குகெல்லாம் வக்கணைப் பேசுபவர்கள் இதுபற்றி ஏன் சிந்திக்கவில்லை?
மகாலட்சுமியின் குடியிருப்பு பசுவின் பின்புறமாம்
பசு தேவராலும், மூவராலும், முத்தேவியராலும் தொழப்பெறும் கோமாதா காரணம், பசுவின் உடலில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு தெய்வம் இருப்பதுதான். பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். காலையில் எழுந்ததும் காணத் தக்கவற்றுள் பசுவின் பின் பக்கமும் ஒன்று. அருகம்புல்லைப் பசுவிற்கு கொடுப் பது 32 வகை அறங்களுள் ஒன்றாகும். யாவர்க்கும் ஆம் பசுவிற்கு ஒரு வாயுறை என்றார் திருமூலர். (மாலை மலர்)
வெளியிட்டுள்ள தீபவாளி மலர் பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி குடியிருக்கிறாளாம். வாடகை இல்லாத வீடு அங்குதான் கிடைக்குமோ!
பெரியார் திரட்டு!
தீபாவளி
கொண்டாடும்
திராவிடா!
உன்னைத்தான்.
திக்கித் திணறாமல்
நேருக்கு நேர்
பதில் கூறு பார்க்கலாம்
எழவு வீட்டிலா
திருமணம்?
திராவிடர் வீட்டிலா
தீபாவளி?
என்னடா
வெட்கக்கேடு?
கன்னக்கோலா
செங்கோல்?
சாக்கடையா
சந்தனம்?
பூக்கடையா
பொதிசேறு?
தமிழர் பண்பாட்டு
தாடை மூக்கு
தட்டுப்படுகிறதா
கூறு!
ஆரியன் வைத்த கண்ணியிலே
அறுந்தது திராவிட
வேரல்லவா!
சங்க இலக்கியத்தில்
உண்டா? தமிழர்
சரித்திரத்தில்தான்
கண்டவொன்றா?
கிருஷ்ண பரமாத்மா
சத்தியபாமா
சத்தியமா
சொல்லுக!
என்ன உறவு?
என்ன உறவு?
இந்தத் திராவிட
இனத்துக்கு?
இருளுக்கு எதிரி
சூரியனே? இன
உரிமைக்கு எதிரி
ஆரியனே!
பூமியைப் பாயாகச்
சுருட்டுவதா?
புத்தியுள்ளோர் - இதைப்
போய் நம்புவதா?
வராக (பன்றி)
அவதாரத்திற்கும்
பூமாதேவிக்கும்
பிள்ளை பிறக்குமா?
சரி சரி
அதை விடுங்கள்
ஒரு கேள்வி
கேட்க ஆசை!
பன்றி அவதாரத்திற்கு
தீபாவளியன்று
எதை வைத்துப் படைக்க உத்தேசம்?
நல்லாதான்
வருது வாயில்!
நாக்கைப் பிடுங்க
நாலு வார்த்தை கேட்கும் முன்
மரியாதையாக
மாறிவிடு!
மூடக் கழுதையை
உதைத்துவிரட்டு
மானமும் அறிவும்
மனிதனுக்கழகு - இது
ஞாலப் பெரியார்
ஞானத் திரட்டு!
- கவிஞர் கலி. பூங்குன்றன்
பட்டாசு வெடிப்பதால்....
ஒவ்வொரு தீபாவளிக்கும் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபாடு, ஒலி மாசுபாட்டின் அளவு எல்லையை மீறிச் செல்வதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.
2011ஆம் ஆண்டில் சென்னையில் பட்டாசு ஒலி மாசுபாடு கண்காணிக்கப்பட்ட அயனாவரம், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, சௌகார்பேட்டை, தி.நகர் ஆகிய பகுதிகளில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாகவே இருந்திருக்கிறது. அதே ஆண்டில் காற்றில் கலந்திருந்த சஸ்பெண்டட் பார்ட்டிகுலேட் மேட்டர் (காற்றில் கலந்திருக்கும் துகள்) கியூபிக் மீட்டருக்கு 498 மைக்ரோகிராம் அளவு இருந்திருக்கிறது.
125 டெசிபலுக்கு மேலாக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடை செய்துள்ளது. ஆனால், சந்தையில் கிடைக்கும் சில பட்டாசுகள் ஏற்படுத்தும் சத்த அளவு கீழே தரப்பட்டுள்ளது. ஆட்டம் பாம் - 145 டெசிபல், சரவெடி - 142 டெசிபல், தண்டர்போல்ட் - 140 டெசிபல், கிங்பிஷர் ஷெல் - 141 டெசிபல், ஹைட்ரஜன் பாம் - 122 டெசிபல். இவை அனைத்துமே அந்தக் கட்டுப்பாட்டை மீறுகின்றன.
இந்த அளவு சத்தத்தைக் கேட்டால் காது செவிடாவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அது மட்டுமில்லாமல் உயர் ரத்த அழுத்தமும் தூங்குவதில் பிரச்சினைகளும் ஏற்படலாம்.
காற்று மாசுபாட்டால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம், அவர்களது நுரையீரல் வளர்ந்து வரும் நிலையில் இருப்பதுதான். குறைவான மாசுபாட்டைக்கூட அவை தாங்குவதில்லை. எதிர்காலத்தில் அவர்களிடம் சுவாசக் கோளாறை ஏற்படுத்துவதில் பட்டாசுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
விநாயகர்
தென் ஆப்பிரிக்காவில் ஒரு தமாஷ்! இந்திய கிரிக் கெட் விளையாட்டுக் கம் பெனி. தென் ஆப்பிரிக்கா வுக்குக் கிரிக்கெட் விளை யாடப் போகிறது. தென் னாப்பிரிக்காவில் உள்ள ஆங்கில ஏட்டில் கார்ட்டூன் ஒன்று வெளி வந்துள்ளது. பிரபலமான கார்ட்டூனிஸ்ட் ஜோனாதன் ஷபிரோ என் பவர் அதை வரைந்துள் ளார்.
விநாயகர் ஒரு கையில் கிரிக்கெட் மட்டை; இன் னொரு கையில் நிறைய பணம்; அந்த விநாயகர் சிலை முன் தெ. ஆப்பிரிக் காவின் கிரிக்கெட் குழு பொறுப்பாளர் ஹாரூன் வேஸ்ட் என்பவரைப் பலி கொடுப்பது போன்ற கார்ட்டூன் அது!
இதைப் பார்த்து விட்டு தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்துக்கள் கொதித் துப் போய் விட்டார்களாம்.
இதில் கொதித்தெழ என்ன இருக்கிறது? இந்த விநாயகன் பிறப்பே ஆபா சம்! பார்வதி தேவியாரின் உடல் அழுக்கிலிருந்து பிறந்தவன் விநாயகன் என்று சொல்லும் பொழுது வராத கோபம் இப்பொழுது மட்டும் வருவது ஏன்?
சூரபத்பனுக்கும் சுப்பிர மணியனுக்கும் சண்டை நடந்தபோது தன் சகோ தரனுக்காக வல்லபை என்ற அசுரப் பெண்ணின் குறியி லிருந்து படை வீரர்கள் வந்து கொண்டே இருந் தனர், என்றறிந்து தன் துதிக்கையை வல்லபை யின் குறியில் வைத்து அடைத்தான் என்று எழுதி வைத்து இருப்பதைக் கண்டு வராத கோபம் இப் பொழுது மட்டும் வரு வானேன்? (பெண்ணின் குறியில் துதிக்கையை வைத்துள்ள இந்த விநாய கருக்கு வல்லபைக் கணபதி என்று பெயர் மத்தூர் கோயி லில் இன்றும் காணலாம்.)
கார்கில் பிள்ளையார் என்று கூறி பிள்ளையாரின் கையில் துப்பாக்கியைக் கொடுத்தபோது, கிரிக்கெட் பிள்ளையார் என்று சொல்லி விநாயகன் கையில் கிரிக் கெட் மட்டையைக் கொடுத்து ஊர்வலம் வந்தபோது வராத கோபம். இப்பொழுது மட்டும் எங்கிருந்து குதித்த தாம்?
கோபப்படுவதைவிட வெட்கப்படுவதற்கு இன் னும் எத்தனை எத்த னையோ இந்த விநாய கனைப் பொறுத்து உண்டு.
அம்மாவைப் போல் தனக்கு ஒரு பெண் வேண் டும் கல்யாணம் செய்து கொள்ள என்று கேட்டவன் என்று எழுதி வைத்துள் ளனரே எவ்வளவு கோவலம் - ஆபாசம்!
தாயா, தாராமா?
விநாயகர் சமுத்திர ஸ்நானம் செய்யப் போனா ராம். அப்பொழுது கட லையே உறிஞ்சி விட்டாராம். பின் அதை சிறு நீராகக் கழித்தாராம். அதிலிருந்து தான் கடல் நீர் உப்புக் கரிக்கிறதாம்! (கடவுள் சமாச்சாரம் என்றாலே நல்ல தமாஷ் தான்!)
கடைசியாக ஒன்று ;விநாயகரை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கிறோம் என்ற பெய ரில் அந்த பொம்மைகளை உதைத்து அடித்துத் துவைக்கிறார்களே பக்தர்கள் - அப்பொழுது ஏன் கோபம் குமுறிக் கொண்டு வரவில்லையாம்?
- மயிலாடன்விநாயகர்
தென் ஆப்பிரிக்காவில் ஒரு தமாஷ்! இந்திய கிரிக் கெட் விளையாட்டுக் கம் பெனி. தென் ஆப்பிரிக்கா வுக்குக் கிரிக்கெட் விளை யாடப் போகிறது. தென் னாப்பிரிக்காவில் உள்ள ஆங்கில ஏட்டில் கார்ட்டூன் ஒன்று வெளி வந்துள்ளது. பிரபலமான கார்ட்டூனிஸ்ட் ஜோனாதன் ஷபிரோ என் பவர் அதை வரைந்துள் ளார்.
விநாயகர் ஒரு கையில் கிரிக்கெட் மட்டை; இன் னொரு கையில் நிறைய பணம்; அந்த விநாயகர் சிலை முன் தெ. ஆப்பிரிக் காவின் கிரிக்கெட் குழு பொறுப்பாளர் ஹாரூன் வேஸ்ட் என்பவரைப் பலி கொடுப்பது போன்ற கார்ட்டூன் அது!
இதைப் பார்த்து விட்டு தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்துக்கள் கொதித் துப் போய் விட்டார்களாம்.
இதில் கொதித்தெழ என்ன இருக்கிறது? இந்த விநாயகன் பிறப்பே ஆபா சம்! பார்வதி தேவியாரின் உடல் அழுக்கிலிருந்து பிறந்தவன் விநாயகன் என்று சொல்லும் பொழுது வராத கோபம் இப்பொழுது மட்டும் வருவது ஏன்?
சூரபத்பனுக்கும் சுப்பிர மணியனுக்கும் சண்டை நடந்தபோது தன் சகோ தரனுக்காக வல்லபை என்ற அசுரப் பெண்ணின் குறியி லிருந்து படை வீரர்கள் வந்து கொண்டே இருந் தனர், என்றறிந்து தன் துதிக்கையை வல்லபை யின் குறியில் வைத்து அடைத்தான் என்று எழுதி வைத்து இருப்பதைக் கண்டு வராத கோபம் இப் பொழுது மட்டும் வரு வானேன்?
(பெண்ணின் குறியில் துதிக்கையை வைத்துள்ள இந்த விநாய கருக்கு வல்லபைக் கணபதி என்று பெயர் மத்தூர் கோயி லில் இன்றும் காணலாம்.)
கார்கில் பிள்ளையார் என்று கூறி பிள்ளையாரின் கையில் துப்பாக்கியைக் கொடுத்தபோது, கிரிக்கெட் பிள்ளையார் என்று சொல்லி விநாயகன் கையில் கிரிக் கெட் மட்டையைக் கொடுத்து ஊர்வலம் வந்தபோது வராத கோபம். இப்பொழுது மட்டும் எங்கிருந்து குதித்த தாம்?
கோபப்படுவதைவிட வெட்கப்படுவதற்கு இன் னும் எத்தனை எத்த னையோ இந்த விநாய கனைப் பொறுத்து உண்டு.
அம்மாவைப் போல் தனக்கு ஒரு பெண் வேண் டும் கல்யாணம் செய்து கொள்ள என்று கேட்டவன் என்று எழுதி வைத்துள் ளனரே எவ்வளவு கோவலம் - ஆபாசம்!
தாயா, தாராமா?
விநாயகர் சமுத்திர ஸ்நானம் செய்யப் போனா ராம். அப்பொழுது கட லையே உறிஞ்சி விட்டாராம். பின் அதை சிறு நீராகக் கழித்தாராம். அதிலிருந்து தான் கடல் நீர் உப்புக் கரிக்கிறதாம்! (கடவுள் சமாச்சாரம் என்றாலே நல்ல தமாஷ் தான்!)
கடைசியாக ஒன்று ;விநாயகரை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கிறோம் என்ற பெய ரில் அந்த பொம்மைகளை உதைத்து அடித்துத் துவைக்கிறார்களே பக்தர்கள் - அப்பொழுது ஏன் கோபம் குமுறிக் கொண்டு வரவில்லையாம்?
- மயிலாடன்
மத்திய அரசும், தனியாரும் கூட்டுச் சேர்ந்து மாநிலங்களில் மாதிரிப் பள்ளிகளைத் தொடங்குவதா?
அன்று நவோதயா கல்வியை எதிர்த்ததுபோல
இன்றும் தமிழ்நாடு சும்மா இராமல் பொங்கி எழும்!
தமிழர் தலைவர் விடுத்துள்ள எச்சரிக்கை!
பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்கின்ற கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா?
மத்திய அரசும் - தனியாரும் இணைந்து மாநிலங்களில் மாதிரிப் பள்ளிகளை தொடங்குவது - மாநில அரசுகளின் உரிமையில் தலையிடு வதாகும். முன்பு பிரதமர் ராஜீவ்காந்தி காலத்தில் கொண்டு வரப்பட்ட நவோதயா கல்வித் திட்டத்தை எதிர்த்தது போல இந்தத் திட்டத்தையும் தமிழ்நாடு எதிர்க்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டில் மத்திய அரசு, ஏற்கெனவே ஆக்கிர மித்தது போதாது என்ற முறையில், கல்வித் துறையில் புதியதோர் ஆக்கிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் ராஷ்டிரிய ஆதர்ஷ் வித்தியாலயா திட்டப்படி, மத்திய அரசும், தனியாரும் கூட்டுச் சேர்ந்து மாதிரிப் பள்ளிகள் என்று தனியே தொடங்கிட முயற்சிப்பதாக வந்துள்ள செய்தி- சரியாக இருக்குமானால் - அதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மாநிலப் பட்டியலிலிருந்து கல்வியைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதால் ஏற்படும் விபரீதம்
கல்வி என்பது ஏற்கெனவே மாநிலப் பட்டியலில் இருந்த முக்கிய துறையாகும்; அதனை - நெருக்கடி கால நிலையில் - ஓசையில்லாமல் மத்திய அரசு, பொதுப் பட்டியலில் (State to Concurrent List) கொண்டு போய் சேர்த்து மாற்றம் ஏற்படுத்தியது.
இது நடந்தது 1976-இல்; அதன்பின் வந்த ஆட்சிகள் இதை ஒரு முக்கிய பிரச்சினையாக எடுத்துக் கொண்டு, மீண்டும் பழைய படி மாநிலப் பட்டியலுக்குள் கல்வியைக் கொண்டு வரத் தவறியதன் விளைவே, பல்வேறு சமூக அநீதிகளும், சமூகக் கொடுமைகளும் சட்ட பூர்வமாகவே மத்திய அரசால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன - மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை என்ற கல்வித் துறையின் மூலம். எடுத்துக் காட்டாக, மாநில அரசு ஒழித்த பொது நுழைவுத் தேர்வு என்பதை - மருத்துவக் கல்வி, மற்றும் தொழிற்படிப்புகளில் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை ஆதிக்க அதிகார சக்திகள் செய்து வரு கின்றன. ஏற்கெனவே உச்சநீதிமன்ற பெரும்பான்மைத் தீர்ப்பு நுழைவுத் தேர்வு ரத்து சரிதான் என்று கூறிய பிறகும் மருத்துவக் கவுன்சில் மறுசீராய்வு மனுவைப் போட்டுள்ளது; மத்திய அரசும் அதனை ஆதரிக்கிறது!
இது போன்ற கல்வியில் இரண்டு எஜமானர்கள் ஒரே நேரத்தில் அதிகாரம் செலுத்தும் விசித்திர நிலை ஏற்பட்டுள்ளது!
மாநிலங்கள் வெறும் நகராட்சிகளா?
மாநிலங்களின் உரிமைகள் - அதிகாரங்கள் ஏற்கெனவே பெரிதும் பாதிக்கப்பட்டு, வெறும் முனிசிபாலிட்டிகளைப் போன்று மாநில அரசுகள் ஆக்கப்பட்டுள்ள நிலையில், இது போன்ற புதிய அறிவிப்புகள் மேலும் மேலும் மாநிலங்களின் அதிகாரப் பறிப்புக்குத் தான் வழி வகுக்கும். தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் அறிக்கை, காலத்தால் தரப்பட்ட சரியான எச்சரிக்கைமணி!
மாநில அரசின் ஒப்புதலோ, அல்லது அதனுடன் கலந்து ஆலோசிக்காமலோ இப்படி தன்னிச்சையாக மத்திய அரசு நடந்து கொள்வது எவ்வகையில் நியாயம்?
கல்வியை வியாபாரமாக்காதே என்ற குரல் ஓங்கி முழங்கிக் கொண்டே இருக்கும் நிலையில், வெளிநாட்டுப் பெரும் வணிகத் திமிங்கிலங்களுக்குக் கதவு திறந்து விட்டு, நம் நாட்டில் சில்லறை வணிகத்தினை அழிப்பது போல, இப்போதுள்ள பள்ளிகளையும்கூட மறைமுகமாக கொஞ்சம் கொஞ்சமாக இத்தகைய மாதிரிப் பள்ளிகள் - வணிகமயம் ஆகும்; அதுவும் மத்திய அரசும் தனியாரும் (Private - Public Partnership) நடத்துவது எவ்வகையில் நியாயப்படுத்தக் கூடியது?
அன்றே நவோதயாவை எதிர்த்தோமே!
கல்வி அடிப்படை உரிமை (Education is Citizen’s Fundamental Right - Right to Education) என்று அரச மைப்புச் சட்டத்தில் சட்ட ரீதியாக அறிவிக்கப்பட்டபின், இப்படி மத்திய கல்வித்துறை ஒரு முடிவு எடுத்திருப்பது மிகப் பெரிய, அரசியல் சட்ட விரோதப் போக்காகும்!
இதனை தமிழ்நாட்டுக் கல்வி அறிஞர்கள், மாநில உரிமை காக்க விழைவோர், உண்மையான ஜனநாயக விரும்பிகள், அனைவரும் ஒட்டு மொத்தக் குரலில் எதிர்க்க வேண்டும்; தமிழக அரசும் முதல்வரும் உடனடியாக எதிர்ப்பைப் பதிவு செய்தாக வேண்டும்.
முன்பு ராஜீவ்காந்தி கொண்டு வந்த நவோதயா பள்ளிகளே ஹிந்தித் திணிப்புக்கு மறைமுக வழி என்று கண்டித்து நிறுத்திய தமிழ்நாடு, இப்பொழுது சும்மா இருக்காது - இருக்கவும் கூடாது. கிளர்ந்தெழ வேண்டும்.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை
1.11.2013
தொல்லை
வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப்படுபவர்கள் நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பவர்கள்.
(குடிஅரசு, 19.9.1937)
இந்தியாவின் தோல்வி
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகள் மதிக்கப்படும் என்று டெசோ தலைவர் கலைஞர் அவர்களுக்கு பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் எழுதிய கடிதம் - இப்பொழுது பிரதமரின் நம்பகத் தன்மையைக் கேள்விக் குறியாக்கி விட்டது.
பிரதமர் கருத்து மதிக்கப்படவில்லையா? அவர் பின்னணியில் அந்த உணர்வை வீழ்த்தும் சக்தி எது என்ற கேள்விகள் எழுந்து நிற்கின்றன -என்பது ஒருபுறம் இருக்கட்டும்.
இந்தப் பிரச்சினையில் திராவிடர் இயக்கக் கட்சிகள் கூறும் கருத்து மறுபுறம் இருக்கட்டும். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மற்றும் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள தமிழர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாண்புமிகு ஜி.கே. வாசன் தெரிவித்த கருத்துகளும், அகில இந்திய காங்கிரசின் உயர் மட்டக் குழுவால், நிராகரிக்கப்பட்டு விட்டன.
தமிழ்நாடு சட்டப் பேரவையில், ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும், மதிக்கத் தயாராக இல்லை, அகில இந்தியக் காங்கிரஸ் தலைமை.
இதன் விளைவு என்ன? திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களும் டெசோ தலைவரும் தி.மு.க. தலைவரு மான மானமிகு கலைஞர் அவர்களும் வெளியிட்ட கருத்தின்படி இதற்குரிய கடுமையான விலையைக் காங்கிரஸ் கொடுத்தே தீர வேண்டும், தமிழ் நாட்டைப் பொறுத்தவரை காங்கிரஸ் கை கழுவி விட்டது என்பது கடைசியாகவும் உறுதி செய்யப் பட்டு விட்டது என்று எடுத்துக் கொள்ளலாம்.
இது ஒரு புறம் இருந்தாலும், இந்திய ஆட்சி பற்றிய பொது மதிப்பீடு என்னவாக இருக்க முடியும்?
இலங்கையில் நடப்பது இனப்படுகொலை (Genocide) என்று பகிரங்கமாக சொன்னவர் அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி (16.8.1983).
அவரைத் தொடர்ந்து பிரதமராக வந்த ராஜீவ்காந்தியும், இனப் படுகொலை என்ற கருத்தை திராவிடர் கழகத் தலைவரிடம் சொன்ன துண்டு (டில்லி - 2.6.1990).
ஒரு நாட்டில் இன படுகொலை நடந்தால், அதில் தலையிடவும், கண்டிக்கவும் எந்த ஒரு நாட்டுக்கும் உரிமையுண்டு என்ற அய்.நா.வின் எழுதப்பட்ட எழுத்துக்கு உகந்த வகையிலும், நடந்திடவில்லை இந்திய அரசு.
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்ப தால் இலங்கை வாழ் தமிழர்களுக்குத் தேவை யானவற்றை வாதாடிப் பெற முடியும் என்பது ஒப்புக்குச் சப்பாணி நியாயக் கற்பிப்பு!
இதுவரை, இந்த வகையில் இந்தியா நடந்து கொண்டதற்குக் கிடைத்த பலன் என்ன?
1987இல் ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதா? - அதில் கண்டுள்ள எந்த சரத்தை இலங்கை அரசு நிறைவேற்றியது?
வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பு நடந்ததா? தமிழுக்குரிய அரசு மொழித் தகுதி தரப்பட்டதா? இவை செய்யப்படாத நிலையில், இலங்கை அரசைத் தட்டிக் கேட்கும் தைரியம் இந்தியாவுக்கு இருந்ததா?
ராஜ தந்திர நிலையில், இந்தியா வெற்றி பெற்றுள்ளதா? இந்தியா - சீனா யுத்தத்தின் போதும் சரி, இந்தியா - பாகிஸ்தான் சண்டையின் போதும் சரி, இலங்கை இந்தியாவுக்கு எதிராக நடந்து கொள்ளவில்லையா?
இப்பொழுதுகூட இந்தியாவின் எதிர் வரிசை யில் இருக்கும் சீனா மற்றும் பாகிஸ்தானோடு தானே தோளில் கை போட்டுத் திரிகிறார் ராஜபக்சே.
இந்தியாவின் எதிரி நாடுகள் உள்பட இந்தியா வையும் கையில் போட்டுக் கொண்டு சாமர்த்திய மாகக் காயை நகர்த்துகிறதே சுண்டைக்காய் நாடான இலங்கை; இந்த வகையில் வெற்றி பெற்றது இந்தியாவின் ராஜ தந்திரமா? இலங்கை அரசின் ராஜ தந்திரமா?
எல்லா வகையிலும் இந்தப் பிரச்சினையில் இந்தியா முழுத் தோல்வியை அடைந்து விட்டது என்பதுதான் அறிவு நாணயத்தோடு ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மையாகும்.
ஏழு மொழிகள்
1. என்னிடம் ஆறு நேர்மையான பணியாளர்கள் உள்ளனர். அவர்களின் பெயர்கள் வருமாறு: எங்கே? என்ன? எப்போது? ஏன்? எப்படி? யார்?
- ரட்சார்ட் கிப்லீவ்
2. அர்ச்சகன் பொறுக்கித் தின்ன ஆண்டவன். அதிகாரி பொறுக்கித் தின்ன அரசாங்கம். அயோக்கியன் பொறுக்கித்தின்ன அரசியல்
- தந்தை பெரியார்
3. தேசீயம் என்பதெல்லாம் பொய். இது எதார்த்தப் பொருள் அல்ல. கற்பனை உணர்ச்சி; இளமையிலிருந்து சொல்லிக் கொடுத்த வெறுஞ்சொல்.
- ம.சிங்காரவேலர்
4. புரட்சி தவிர்க்கப்படக் கூடியது அல்ல என்பதே எப்போதும் எனது - கருத்தாகும்.
-பெஞ்சமின் டிஸ்ரேலி வெண்டல் பிலிப்ஸ்
5. ஆயுதப் புரட்சிக்கு முன்னோடியாக எப்போதும் கருத்துப் புரட்சி நிகழ்ந்தே வந்திருக்கின்றது.
- பகத்சிங்
6. நாட்டின் அறியாமையைக் கண்டு என் உள்ளம் வேதனை யால் துடிக்கின்றது! அரசியல் விடுதலை சோசலிசம் என்ற இலட்சியத்துக்கான வழியை மட்டுமே தரும். ஆனால் உண்மை யான சோசலிசம் என்பதோ இங்குள்ள மதமூட நம்பிக்கைகள் ஒழிக்கப்பட்டால் தான் முடியும்.
7. (1) பார்ப்பான் (2) படிப்புக்காரன் (3) பதவிக்காரன் (4)பணக்காரன் நான்கு எதிரிகள்
- தந்தை பெரியார்.
தெரியவில்லை மகனே!
மகன்: பூமியிலே கண்டம் அய்ந்து, மதங்கள் கோடி என்று பாரதி பாடியிருக்கிறான் இல்லையா? அப்பா.
அப்பா: ஆமாம் மகனே!
மகன்: இருக்கிற மதங்களிலேயே மிகவும் சகிப்புத் தன்மை வாய்ந்த மதம் இந்து மதம் தான் என்று இந்து மதத் தலைவர்கள் பறைசாற்றுகிறார் கள் இல்லையா அப்பா...!
அப்பா: ஆமாம் மகனே.
மகன்: அப்படி யென்றால் அண்மையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மீனாட்சிபுரம் என்ற ஊரில் ஆயிரம் தாழ்த்தப்பட்டவர்கள் இஸ்லாம் மதத்தில் சேர்ந்து விட்டதற்காக ஏதோ பிரளயம் ஏற்பட்டு விட்டதைப் போல இந்து மதவாதிகள் ஆகாயத்திற்கும் பூமிக்கும் தாவிக் குதிக்கிறார்களே! அது ஏன் அப்பா?
அப்பா: தெரியவில்லை மகனே. உண்மையான தெய்வம் எதிரே இருக்கும் கல்லிலே இல்லை; அது உங்கள் தோள் வலிமையிலேஇருக்கிறது!
ரோம் நகரம் எரிந்த போது பிடில் வாசித்த நீரோவைப் போலவே, இந்த உலகமும் கொடுமை நிறைந்ததாகவே இருக்கிறது! நிலவையும் நிழலையும் பிணைத்து வைக்கிறது, கற்களை வழிபடுவதற்காக மலர்களை உண்டாக்குகிறது. உண்மையிலேயே கற்களல்லவா கற்களை வழிபட வேண்டும்!
- வி.ச. காண்டேகர், தகவல்: புலவர். வெற்றியழகன்
குற்றால நாதருக்கு தீராத தலைவலியாம்
குற்றாலத்தில் உள்ள குற்றால நாத சாமிக்கு தினமும் காலையில் குளிப் பாட்டும்பொழுது கொஞ்சம் மூலிகைத் தைலம் வைத்து தான் குளிப்பாட்டுவார்கள். காரணம் அவருக்குத் தலைவலியாம்!
தகவல்: இரா.பேச்சிமுத்து, குற்றாலம் (நெல்லை)
சோதிடம் - அறிவியலல்ல!
விண்வெளிக் களங் களைப் பற்றி என்னிடம் பல நண்பர்கள் கேள் விகள் கேட்ட போது, அவர்கள் சில நேரங் களில் ஜோதிடம் பற்றியும் கூட கேள்விகள் கேட் டனர்.
நமது சூரிய மண்டலத்தில் நம்மை விட்டு வெகு தொலைவில் உள்ள கோள்களுக்கு நமது மக்கள் இந்த அளவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்ததன் பின்னணியில் உள்ள காரணத்தை உண்மையில் என்னால் எப்போதுமே புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.
ஜோதிடம் ஒரு கலை என்பதற்கு எதிராக நான் எந்தக் கருத்தையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் அது அறிவியல் என்ற போர்வையில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு நான் வருந்தவே செய்கிறேன்.
இந்த கோள்கள், நட்சத்திரக் கூட்டங்கள், செயற்கைக் கோள்கள் ஆகியவை மனித உயிர்கள் மீது ஆற்றல் செலுத்த இயலுமென்ற கட்டுக் கதைகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன
என்பதை நானறியேன். விண்வெளியில் உள்ள இவற்றின் சரியான இயக்கத்தைச் சுற்றி, குழப்பம் மிகுந்த கணக்குகளை கற்பனையில் உருவாக்கி அவற்றிலிருந்து மக்களின் வாழ்க்கை நடைமுறைகள் பற்றி முடிவுகளைப் பெறுவது என்பது சரியானதென எனக்குத் தோன்றவில்லை.
நான் காணும் வரை, பூமி ஒன்றே ஆற்றல் மிகுந்த, சுறுசுறுப்புடன் இயங்கும் ஒரு கோளாகும். தனது இழந்த சொர்க்கம் (8ஆம் புத்தகத்தில்) ஜான்மில்டன் அழகாக கூறியபடி,
பூமிக்கும் மற்ற நட்சத்திரங்களுக்கும் சூரியன் மய்யமானதாக இருந்தால் என்ன?
மூன்று வேறுபட்ட வழிகளில் பூமி அறிவற்றபடி இயங்குவதாக தோன்றினாலும், பூமி என்னும் இக்கோள் எவ்வளவு உறுதியாகச் செயல்படுகிறது!
நெருப்பு இறக்கைகள் என்ற தனது சுயசரிதையில் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியும், இந்திய அரசின் அறிவியல் ஆலோசகருமான ஏ.பி.ஜே.அப்துல்கலாம்.
உடுமலையாரின் பாடல்
ஆண்: காசிக்குப் போனாக் கருவுண்டாகு மென்ற
காலம் மாறிப் போச்சு... இப்ப
ஊசியைப் போட்டா உண்டாகு மென்ற
உண்மை தெரிஞ்சு போச்சு
பெண்: ஈசன் செயலால் இறப்பும் பிறப்பும்
எல்லாம் நடக்குதுங்க - அதை
எண்ணாமே எவனோ சொன்னான்னு கேட்டு
ஏமாந்து போகாதீங்க!
ஆண்: ஆகாரம் சமைக்க சூரிய ஒளியால்
அடுப்பை மூட்டுறாங்க
ஆணைப் பெண்ணாக பெண்ணை ஆணாக
ஆளையே மாத்துறாங்க - இங்கே
ஆளையே மாத்துறாங்க.
பெண்: அது... ஆயிரங் காலத்துக் கப்பாலே நடக்கிற
ஆராய்ச்சி விசயமுங்க... மூளை
ஆராய்ச்சி விசயமுங்க - நம்ம
அறிவுக்குப் பொருத்தம்
ஆறு, கோயில், அரசமரந்தானுங்க!
ஆண்: கோழி யில்லாமெ தன்னால முட்டைகளில்
குஞ்சுகளைப் பொரிக்க வச்சார் - உங்
கொப்பன் பாட்டன் காலத்தில் யாரிந்த
கோளாறைக் கண்டு பிடிச்சார்.... இந்தக்
கோளாறைக் கண்டு பிடிச்சார்!
பெண்: அந்தக் குஞ்சுகள் பொறிக்க வச்ச கோளாறுக் காரனை
முட்டை யொண்ணு பண்ணச் சொல்லுங்க? - பார்ப்போம்
முட்டை யொண்ணு பண்ணச் சொல்லுங்க - வாய்
கூசாமல் எதையும் யோசனை செய்யாமே
பேசுவது தப்பித முங்க
ஆண்: எட்டாத விஷயத்தை ஈசன் பெயரால்
இயற்கை யெங்குறாங்க - இனிமேல்
இயற்கையுங் கூட செயற்கையில்.. ஆகும்
முயற்சியும் பண்ணுறாங்க!
- சுயமரியாதைக் கவிஞர் உடுமலை நாராயண கவி இயற்றி கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், மதுர மும் பாடிய பகுத்தறிவுக் கருத்துகள் நிறைந்த இப் பாடல் டாக்டர் சாவித்திரி எனும் படத்தில் இடம் பெற் றுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வும்-நீதிபதி விதித்த அபராதமும்! தி.மு.க. தலைவர் கலைஞர் கருத்து
சென்னை, நவ.1- ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர் பான வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அளித்த அபராதம் குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் தெரிவித்த கருத்து வருமாறு:
கேள்வி: ஆசிரியர் தகுதித் தேர்வில் குளறுபடி நடைபெற்றதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்ற (மதுரைக் கிளை) நீதிபதி நாகமுத்து அவர்கள் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறாரே?
கலைஞர்: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலை வராக ஒரு மூத்த அய்.ஏ.எஸ். அதிகாரிதான் பணியில் இருந்து வருகிறார். அவருக்கு உயர்நீதிமன்றம் அப ராதம் விதித்திருப்பது என்பது அரசுக்கே அவ மானத்தைத் தரக்கூடிய ஒரு தீர்ப்பாகும்.
நீதியரசர் தனது தீர்ப்பில், இந்த வழக்கு ஓராண் டாக நிலுவையில் உள்ளது. பலமுறை விசார ணைக்கு வந்தும், தேர்வு வாரியத்தின் தலைவர் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. அரசுத் தரப்பிற்கு கால அவகாசம் அளித்தும், நடவடிக்கை இல்லை. இத னால் மனுதாரர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி யுள்ளார்.
தேர்வு வாரியத் தலைவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன். அவர் தொகையை மனுதாரருக்கு வழங்கவேண்டும் என்றெல்லாம் சொல்லியிருப்பது, தனிப்பட்ட ஒரு அதிகாரிக்குக் கண்டனம் அல்ல, அ.தி.மு.க. அரசுக்கே விதிக்கப் பட்ட தண்டனையாகத்தான் கருத வேண்டும்.
இந்த வழக்கிலே மாத்திரமல்ல; இரண்டு நாட் களுக்கு முன்பு உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஜெயச்சந் திரன், நாகமுத்து ஆகியோர், கொலை வழக்கு ஒன்றில் அளித்த தீர்ப்பிலேகூட தங்கள் வேதனை யைத் தெரிவித்திருக்கிறார்கள். அந்தத் தீர்ப்பில், குற்றவாளிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கீழ் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கொலைக்குப் பயன்படுத்திய அரிவாளை காவல்துறையினர் பறி முதல் செய்துள்ளனர்.
அதை நீதிமன்றத்தில் ஒப்ப டைக்கவில்லை. அதில் படிந்திருந்த ரத்தக்கறையை டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பி, அந்த அரி வாளைத்தான் கொலையாளிகள் பயன்படுத்தினர் என்பதை நிரூபிக்கவில்லை. விசாரணையில் பல் வேறு குறைபாடுகள் இருந்தன. அந்தக் குறை பாடுகளைக் களைய காவல்துறையினருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதைக் காவல்துறையினர் சரி யாகப் பயன்படுத்தவில்லை.
இந்த வழக்கில் காவல்துறையினரின் பல்வேறு குறைபாடுகள், தவறுகள், திறமையின்மை வெளிப் பட்டுள்ளது. இதற்குமேல் விசாரணை அமைப்பை எப்படி விமர்சனம் செய்யவேண்டும் எனத் தெரிய வில்லை. கல்நெஞ்சம் படைத்த கொலையாளிகள் நான்கு பேரைக் கொடூரமாகக் கொலை செய் துள்ளனர். காவல்துறையினரின் விசாரணை முழு வதும் வீணாகி விட்டது. உயர்நீதிமன்றம் வைத் திருந்த நம்பிக்கையை காவல்துறையினர் தகர்த்து விட்டனர்.
தகுந்த ஆதாரங்கள் சாட்சியங்களின் அடிப்படையில் நிரூபிக்க காவல்துறையினர் தவறிவிட்டனர். காவல்துறையினர் பொறுப்பு, கடமைகளில் தவறியதை உணரவேண்டும். விசாரணையில் காவல்துறையினர் அலட்சியம் காட்டுவது, நீதி, நியாயம் தோற்கக் காரணமாக அமைகிறது.
இந்த வழக்கில் நீதி தோற்றதை கனத்த இதயத்துடன் சொல்கிறோம் என்று காவல்துறைபற்றி நீதிபதிகள் விமர்சித்திருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இப்படியொரு தீர்ப்பு வந்திருந்தால் உடனே காவல்துறைக்குப் பொறுப் பேற்றுள்ள மைனாரிட்டி ஆட்சியின் முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்று அறிக்கை கொடுத் திருப்பார்கள். ஆனால் இப்போது?
- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.
பிரபாகரன் மகள் என சந்தேகித்து இசைப்பிரியாவை கைது செய்யும் காட்சிகள்... புதிய வீடியோ வெளியீடு!
லண்டன், நவ.1 இலங்கை இறுதிப் போரில் இலங்கை ராணுவத்தின ரால் கைது செய்யப் பட்டு பின்னர் பாலியல் வன்முறைக்கு ஆளாக் கப்பட்டு கொலை செய் யப்பட்ட தமிழீழத் தேசிய தொலைக்காட் சியின் செய்தி வாசிப்பா ளரான இசைப்பிரியா தொடர்பான புதிய போர்க்குற்ற ஆதாரம் ஒன்றை சேனல் 4 தொலைக்காட்சி வெளி யிட்டுள்ளது.
இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை ராணுவத்தி னரால் இசைப்பிரியா படுகொலை செய்யப் பட்டு கிடக்கும் காட்சி கள் ஏற்கெனவே வெளி யாகியிருந்தன. ஆனால் இசைப்பிரியா போரின் போதே கொல்லப்பட் டார் என்று இலங்கை அரசு கூறி வருகிறது.
இந்நிலையில் இலங்கை ராணுவத்தின ரால் இசைப்பிரியா உயி ரோடு கைது செய்யப் பட்ட வீடியோ ஆதா ரத்தை இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக் காட்சி நேற்று வெளி யிட்டுள்ளது. கடற்கரை ஒன்றில் மேலாடையின்றி நீருக் குள் அமர்ந்திருக்கும் இசைப்பிரியாவை இலங்கை ராணுவத்தி னர் வெள்ளைத் துணி ஒன்றைப் போர்த்தி இழுத்து வரும் காட்சி அதில் பதிவாகியுள்ளது.
இலங்கை ராணுவத் தினர் 6 பேர் இசைப் பிரியாவை பிடித்து வரு வதும் அப்போது அவர் கள் பிரபாகரனின் மகள் என்று அவரைக் கூறு வதும் அதற்கு அவர் அய்யோ அது நானில்லை என்று அழுவதும் அந்த காட்சியில் பதிவாகி யுள்ளது.
இதன் மூலம் இசைப் பிரியா இலங்கை ராணு வத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டு படு கொலை செய்யப்பட் டுள்ளது உறுதியாகியுள் ளது. வெள்ளைத் துணி போர்த்தப்பட்ட நிலை யிலும், துணி அகற்றப் பட்ட நிலையிலும் இசைப்பிரியாவின் உடல் கிடந்த காட்சிகள் ஏற்கெனவே வெளியாகி யிருந்தன என்பது குறிப் பிடத்தக்கது.
இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் இந்த புதிய போர்க்குற்ற ஆதார வீடியோ வெளியாகி இருப்பது அந்நாட்டுக்கு பெரும் நெருக் கடியை ஏற்படுத்தியுள்ளது.
விதவையர்க்கும் மரியாதை!
- கர்நாடகத்தில் ஓர் மாற்றம்!
கோவில் கருவறைக்குள் பெண்கள் நுழையவே அனுமதியில்லாத நம் நாட்டில் விதவைப் பெண்களான இந்திரா சாந்தி, லட்சுமி சாந்தி என இருவர் அர்ச்சகராகியுள்ளனர். மங்களூர் குத்ரோலியில் இருக்கும் கோகர்னாதேஸ்வரர் கோவிலில் இரண்டு விதவைப் பெண்கள் தினமும் சிவனுக்கு அர்ச்சனை செய்து வருகின்றனர். கோவிலுக்குள் வந்ததும் பாரம்பரிய முறைப்படி மேளதாள வரவேற்பு அர்ச்சகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கான பெருமை மேனாள் மத்திய நிதி அமைச்சரும், தற்போது கோவிலின் ஆலோசனைக் குழுத் தலைவருமான ஜனார்த்தன பூஜாரியைச் சாரும்.
கோவிலுக்குப் பக்கத்து ஊரான பன்னூர் கிராமத்திலிருந்து வரும் இந்திராசாந்தி திருமணமான சிறிது காலத்திலேயே கணவனை இழந்து சமுதாயக் கொடுமைகளுக்கு ஆளானவர். இவரை அழைத்த கோவில் நிர்வாகம், கோவிலில் பூஜை செய்ய வேண்டும் என்று சொன்னபோது பயந்தவர், பின்பு, சமூகத்தில் விதவைப் பெண்கள் மீதான மூடநம்பிக்கையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக ஒத்துக் கொண்டதாகக் கூறியுள்ளார். மேலும், தான் செய்யும் பூஜையை ஏற்றுக்கொண்ட பக்தர்கள், தன்னிடம் தீர்த்தம், பூ, பிரசாதம் வாங்கிச் செல்வது மகிழ்ச்சியாக உள்ளது என்று பூரித்துள்ளார்.
இது குறித்து ஜனார்த்தன பூஜாரி,
எந்த ஜாதியைச் சேர்ந்த பெண்களாக இருந்தாலும், எந்த மதத்தைச் சார்ந்த பெண்களாக இருந்தாலும் ஒரு நாள் பயிற்சி எடுத்துக்கொண்டு இந்தக் கோயில் கருவறைக்குள் சென்று பூஜை செய்யலாம். விதவைப் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். கோவில் நிர்வாகத்தின் சார்பாக விதவைகளுக்கு மறுமணமும் இலவசமாக செய்து வைக்கிறோம். இதை யாரும் எதிர்க்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. காரணம், அவர்களும் ஒரு பெண்ணின் வயிற்றில்தான் பிறந்திருப்பார்கள் என்று கூறியுள்ளார். மேலும், மாறிவரும் காலத்திற்கேற்ப நாமும் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். பெண்களை பூமா தேவியாக மதிக்கும் நம் நாட்டில், அவர்கள் கணவனை இழந்துவிட்டால் எந்த நல்ல காரியத்திலும் பங்கு கொள்ள அழைக்காமல் புறக்கணிப்பது மூடநம்பிக்கையின் அடையாளம். இந்த வழக்கம் நாட்டிலிருந்து ஒழிய வேண்டும் என்றும் கூறியுள்ளார் பூஜாரி.
விதவைப் பெண்கள் அர்ச்சகர் நியமனத்தை கர்நாடகாவிலுள்ள பல பெண்கள் அமைப்பினர் வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வறுமையில் முதலிடம் மோடியின் குஜராத்
நாட்டிலேயே அதிகமாக வறுமையில் வாடுபவர்கள் குஜராத் மாநிலத்தில் வசிக்கிறார்கள் என்பதை சமீபத்திய ஆய்வு ஒன்று தெளிவுபடுத்தியது. குஜராத்தில் நர்மதா பள்ளத்தாக்கில் இருந்த 2 இலட்சம் பேர் அரசால் வெளியேற்றப்பட்டதால் இன்று மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் பிச்சை எடுத்துக் கொண்டு பிளாட்பாரங்களில் தூங்கிக் கொண்டு உள்ளனர். மோடியைப் போன்றவர்கள் நாட்டை ஆண்டால் என்னவாகும்!
- ஹர்ஷ் மந்திர், அய்.ஏ.எஸ்
ராகுல் காந்திககு சில கேள்விகள்
எனது பாட்டியைக் கொன்ற பேயந்த் சிங், சத்வந்த் சிங் ஆகியோர் மீதான கோபம் தணிய எனக்கு சுமார் 15 ஆண்டுகள் ஆனது. பஞ்சாப் மக்கள் அப்போது கோபமாக இருந்தார்கள். இப்போது தணிந்துவிட்டது. சில மாதங்களுக்கு முன் பஞ்சாபிலிருந்து என்னைப் பார்க்க சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் வந்தார். திரும்பிப் போவதற்கு முன் என்னைப் பார்த்து 20 ஆண்டுகளுக்கு முன் உங்களைச் சந்தித்திருந்தால் கொன்றிருப்பேன். அப்போது கோபமோ கோபம். இப்போது கோபம் தணிந்துவிட்டதாகக் கூறி என்னைத் தழுவிக் கொண்டார். கோபம் தணிய பல ஆண்டுகள் ஆகிறது. அதைத் தூண்டி விட ஒரு நிமிடம் போதும். கோபத்தை மறக்கவும் சகோதரத்துவத்தை ஏற்படுத்தவும் பல நாட்கள் ஆகின்றன. இப்படிப் பேசியிருப்பவர் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி.
இவரது உணர்வுகளை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. கொலை என்பது எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. கொலைகளை யார் செய்தாலும் குற்றம் குற்றமே. இதில் நமக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், சில கேள்விகளும் நம்மிடம் உள்ளன. இவரது தந்தை ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் ஈழத் தமிழர்களில் சிலர் என்பதால் அவர்கள் மீதான கோபம் இன்னும் ராகுலிடம் தணியவில்லையே, ஏன்? 22 ஆண்டுகள் கடந்தும் கூட அந்தக் கோபம் நீடிப்பது ஏன்? ஒரு சிலர் செய்த தவறுக்காக அந்த இனத்தையே அழிக்க சிங்களர் அரசுக்குத் துணைபோவது சரியா? 2009 ஆம் ஆண்டில் நடந்த முள்ளிவாய்க்கால் போருக்கு ராகுலின் கட்சி ஆளும் இந்திய அரசு துணைபோனதா? இல்லையா? இதற்குப் பெயர் பழிவாங்கும் நடவடிக்கை அல்லவா? 2009க்குப் பின் நான்கு ஆண்டுகள் ஆகியும் இன்னும் தமிழின அடையாளங்களை அழிக்கும் சிங்கள அரசின் கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பது சரியா? அவரது தலைமையை ஏற்கும் வகையில் காமன்வெல்த் மாநாட்டுக்கு இந்தியா செல்லுவது என்ற முடிவில் இன்னும் மாற்றமில்லையே ஏன்?
அமைதிப் படை என்கிற பெயரில் ஈழத்தில் தமிழர்களை உங்கள் அப்பா ராஜீவின் இந்திய ராணுவம் கொன்றது உங்களுக்குத் தெரியுமா? அதனால் அவர்கள் கோபம் கொண்டார்கள் என்பதை அறிவீர்களா? இவ்வளவு நடந்த பின்னும் தமிழ்நாடு உங்கள் மீது கோபம் கொள்ளாமல் இன்னும் கோரிக்கை மட்டுமே வைத்துக் கொண்டிருக்கிறதே, இதனை நீங்கள் புரிந்துகொண்டீர்களா? உங்கள் தந்தையைக் கொன்றதற்கு உங்கள் குடும்பத்தை விட அதிகம் அழுதவர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ராகுல்? 1991 வரை ஈழத்தமிழர்களுக்கு எல்லா வகையிலும் உதவி வந்த தமிழ்நாடு, உங்கள் தந்தையைக் கொன்றதையடுத்து, அவர்கள்மீது ஒருவித கண்டிப்புடனே நடந்ததே, நீங்கள் அறிவீர்களா?
பஞ்சாபியர்களின் கோபம் தணிக்க மன்மோகன் சிங்கை 10 ஆண்டுகள் பிரதமர் பதவியில் உட்கார வைத்தீர்கள். இன்னும் தங்களிடம் நேசம் காட்டும் தமிழர்கள்மீது உங்களது பாசத்தை எப்போது காட்டுவீர்கள் ராகுல்?
- பெரியாரிடி
நூல்
நூல்: தமிழர் தலைவரின் அரசியல் பயணம் |
ஆசிரியர்: கி. வீரமணி
வெளியீடு: திராவிடர் கழக(இயக்க) வெளியீடு,
84/1,(50) ஈ.வெ.கி.சம்பத் சாலை, சென்னை-_7. (: 044_26618161
பக்கங்கள்: 64 | விலை: ரூ.35/_
பத்து வயது அடையும் முன்பே பெரியார் கொள்கையைப் பரப்பத் தொடங்கி, 80 வயதிலும் அதே தொண்டைத் தொடர்ந்து கொண்டிருக்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் அரசியல், சமூக நீதிப் பயணத்தை திரும்பிப் பார்க்கும் நூல்! துக்ளக் இதழில் இந்த ஆண்டு தமிழர் தலைவர் கி.வீரமணி எழுதிய தொடர் கட்டுரைகளுடன், 1982ஆம் ஆண்டு சோ அவர்களால் துருவித் துருவிக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு திராவிடர் கழகத் தலைவர் அளித்த விளக்கமான நேர்காணலும், 1985ஆம் ஆண்டு வைக்கம் போராட்டம் பற்றி வெளிவந்த கட்டுரைச் செய்திக்கு தகுந்த ஆதாரங்களுடன் கொடுத்த மறுப்பும் சேர்க்கப்பட்டிருக்கிறது. மாற்றுக் கருத்துடைய இதழ் ஒன்றில் இடம் பெற்ற பதிவுகளின் தொகுப்பு என்பது கூடுதல் ஆர்வத்தைக் கொடுக்கிறது.
ஆவணப்படம்
அஃறிணைகள்
இயக்கம் : இளங்கோவன்
செல்பேசி 9789725197
திருநங்கைகளுக்கும் மனம் உண்டு, அறிவாற்றல், சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு உண்டு என்பதை வெளிப்படுத்தியுள்ள படம். ஆண் என்ற நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உணர்வுகளால் மாறி திருநங்கையாகும் விதம் மனநல மருத்துவரின் விளக்கத்துடன் இடம் பெற்றுள்ளது.
அரவணைக்க வேண்டிய பெற்றோர் காட்டும் வெறுப்பு, சமூகம் பார்க்கும் பார்வை, எதிர்கொள்ளும் பிரச்சினைகள், எதிர்நீச்சல் போட்டு முன்னுக்கு வரும் வழிமுறைகள், விளக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட நபர்களே கதாபாத்திரங்களாக தோன்றி இயல்பு நிலையை வெளிப்படுத்தி காண்போர் நெஞ்சையும் கருத்தையும் நிறைத்து திருநங்கைகளுக்கு சமுதாயத்தில் ஓர் அங்கீகாரத்தை - மதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. உணர்வுகளால் மாற்றம் பெற்று வரும் ஆண்களுக்கு தன்னம்பிக்கையை உண்டாக்கியுள்ள படம்.
சட்டத்தை மதிக்கும் நீதிபதி
இது மதச்சார்பற்ற நீதிமன்றம். இங்கு இந்துமதப் பண்டிகையான ஆயுதபூஜைக்கான செலவை யார் ஏற்பது? நீதிமன்றச் செலவுகளுக்கு அரசு கொடுக்கும் பணத்தில் பூஜை நடத்துவது சட்ட விரோதம். ஊழியர்கள் தங்கள் சொந்தச் செலவில் கொண்டாடினால் அதனால் ஏற்படும் செலவினங்களை அவர்கள் எப்படி ஈடுகட்டுவார்கள். அது தவறு செய்ய அவர்களைத் தூண்டிவிடும் செயலாக மாறிவிடும். எனவே, இந்த பூஜைக் கொண்டாட்டங்கள் எல்லாம் நான் நீதிபதியாக இருக்கும் நீதிமன்றத்தில் நடத்தக் கூடாது. இப்படிச் சொல்லி இருப்பவர் ஒரு நீதிபதி. தமிழ்நாட்டில் உள்ளவர் அல்ல; கர்நாடக மாநிலத்தில் இருப்பவர். அவர் பெயர் முடிகவுடா. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து வருபவர் இவர்தான். இந்தியாவின் அரசியல் சட்டம் மதச்சார்பற்ற நாடு என்கிறது. ஆனால், இங்கே அரசு இயந்திரங்கள் எல்லாம் இந்து மதச் சாயம் பூசிக்கொள்கின்றன. கொஞ்சமும் கூச்சமில்லாமல் தமது சொந்த மத நம்பிக்கையை எல்லோருக்கும் பொதுவான அரசின் மீது திணிக்கிறார்கள்.
அரசு ஆணைகள் எல்லாம் அவமதிக்கப்படுகின்றன. அரசை வழிநடத்தும் ஆட்சியாளர்கள் வாழ்த்து சொல்கிறார்கள்; அதிகாரிகள் அலுவலகங்களில் பூஜை போடுகிறார்கள். நீதிபதிகளே தங்களின் அலுவலகத்தில் மதக் கடவுள் படங்களை வைத்துக் கொள்கிறார்கள். மத விழாக்களுக்குச் செல்கிறார்கள்; மதவாதிகளுக்கு அடி பணிகிறார்கள். இத்தகைய நேர்மையில்லாத சூழலில் நீதியரசர் முடிகவுடாவின் நேர்மைக்கு ஒரு வணக்கம் சொல்வோம்; முடிகவுடா அவர்களுக்கு மதச்சார்பற்ற மனிதநேயர் என்ற மகுடம் சூட்டுவோம்.
துளிச் செய்திகள்
வியாழனைவிட எட்டு மடங்கு பெரிய கோளினைக் கண்டுபிடித்து அதற்கு எம்.ஓ.எ.2011_பி.எல் என்று பெயரிட்டுள்ளனர்.
நியூசிலாந்து நாட்டின் பெண் எழுத்தாளர் எலியனார் காட்டன் (வயது 28) எழுதிய தி லூமினரீஸ் என்ற நாவலுக்கு புக்கர் விருது (2013) வழங்கப்பட உள்ளது.
இணைய இணைப்புக்காக எல்இடி பல்புகளைப் பயன்படுத்தி சமிக்ஞைகளைக் கடத்தும் லைஃபை என்ற புதிய தொழில் நுட்பத்தை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பூமியிலிருந்து 80 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள புதிய கிரகத்தைக் கண்டுபிடித்த அமெரிக்காவின் ஹவாயில் உள்ள விஞ்ஞானிகள் அதற்கு பி.எஸ்.ஓ.ஜெ 318.5_22 என்று பெயரிட்டுள்ளனர்.
செல்பேசி மூலம் ரயில் பயணச்சீட்டை முன்பதிவு செய்யும் வசதியை அய்.ஆர்.சி.டி.சி. அறிமுகப்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 15 கடல்மைல் தொலைவில் நுழைந்த எம்வி சீமேன் கார்டு ஓகியோ என்ற ரோந்துக் கப்பலினை அக்டோபர் 12 அன்று இந்தியக் கடலோரக் காவல் படையினர் பிடித்தனர்.
செய்தியும் சிந்தனையும்
துடைப்பத்தை எடுத்த பெண்ணும் துடைப்பத்தால் அடிபட்ட பெண்ணும்!
உலக அதிசயங்களுள் ஒன்றாக ஆக்ராவை அலங்கரிக்கும் தாஜ்மகால் கருதப்படுகிறது.
அமெரிக்கப் பெண்மணியின் பெயர் எரின் நயிட் (30) தாஜ்மகாலைப் பார்க்க வேண்டும் என்று பறந்தோடி வந்தார். தாஜ்மகாலைச் சுற்றிப் பார்த்தவருக்கு ஒரு அதிர்ச்சி!
எங்குப் பார்த்தாலும் குப்பைக் கூளங்கள் அசுத்தம் _ மூக்கைத் துளைத்தன.
வெளிநாட்டுக்காரர்கள் இந்தியா வரத் தயங்குவதற்கு முக்கிய இடம் வகிப்பது இந்த அசுத்தங்களும் திறந்த வெளியில் மலம் கழிக்கும் போக்கும் இந்தக் கொசுக்களும்தான்.
என்ன இருந்தாலும் இந்தப் பூமிக்குப் புண்ணிய பூமி என்ற பெயர் மட்டும் இன்று வரை தள்ளாடாமல் நிற்கிறது.
அமெரிக்கப் பெண் சாதாரணமானவரும் அல்லர். உளவியல் மருத்துவரும்கூட!
அழகிய ஆக்ரா அழுக்குப் போர்வை போர்த்திக் கொண்டு அசிங்கப்பட்டுக் கிடக்கிறது. இதைவிடக் கூடாது; இந்த நகரைச் சுத்தப்படுத்தியே தீருவேன் என்று கையில் துடைப்பத்தை எடுத்துக் கொண்டு ஆக்ராவின் வீதியில் இறங்கிவிட்டார். தாஜ்மகாலையும் பெருக்க ஆரம்பித்துவிட்டார்.
தாஜ்மகாலாக இருந்ததால் தப்பித்தோம். இதுவே இந்துக் கோயிலாக இருந்திருந்தால், என்னதான் எலிப்புழுக்காக நாற்றமும், நாய் விட்டைப் போடும் கக்கூசாக இருந்தாலும் சரி, ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி துடைப்பத்தை எடுத்துக் கொண்டு சுத்தம் செய்யும் வேலையில் இறங்க முடியுமா? முதலில் கோவில் வளாகத்துக்குள்தான் காலடி எடுத்து வைக்கவும் முடியுமா?
வேற்று மதக்காரர்கள் உள்ளே நுழையக் கூடாது என்ற எச்சரிக்கை _ கோவிலின் நுழைவு வாயிலிலேயே கால்களை இயங்காது ஆக்கிவிடுமே.
இதற்கு விளக்கம் வேண்டுமானால் 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு நாம் பயணிக்க வேண்டும்.
பமீலா கே ஃபிளிக் (28) என்ற பெண்மணி ஒருவர். அவரும் அமெரிக்காவிலிருந்து வந்தவர்தான்.
வாரணாசியில் வந்து தங்கிய போது அணில் யாதவ் என்ற பொறியாளருடன் காதல் கொண்டு திருமணமும் செய்து கொண்டார். அதற்காக இந்து மதத்திற்கும் மாறினார். ஒரிசா தலைநகர் புவனேஸ்வர் லிங்கராஜ் கோவிலுக்கு அந்த இணையர்கள் வந்தனர்.
அவ்வளவுதான். ஒரே களேபரம்தான். உள்ளே நுழையாதே! என்ற குரல்.
மதம் மாறிவிட்டோம் என்று ஆதாரங்களைக் காட்டியும் பயனில்லை. வார்த்தைகள் முற்றி இணையர்கள் அடி உதை பட்டதுதான் மிச்சம்.
இதனைச் சற்றும் எதிர்பாராத மதம் மாறிய அந்தப் பெண்மணி _ காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார். புகார் மனு பெற்றுக் கொள்ளவும் மறுக்கப்படுகிறது.
இந்தச் செய்தி பரபரப்பாக ஏடுகளில் வெளிவரவே, அவசர அவசரமாக காவல்துறை புகாரைப் பெற்றுக் கொண்டார்கள். பெயர் அளவுக்கு நடந்த சடங்காச்சாரம் அவ்வளவுதான்.
கோவில் நிர்வாகி ராம்காந்த் மிஸ்ரா. அவரிடமும் அந்தப் பிரச்சினை முட்டியது. அவர் மிஸ்ராவாயிற்றே!
நெற்றியில் திலகமிட்டுக் கொண்டாலும் ஒரு வெளிநாட்டுப் பெண் இந்துவாகிவிட முடியுமா? என்று தனது கோணல் திருவாயால் மொழிந்தார்.
பூரி சங்கராச்சாரியார் நிஷ்ச்சாலனந்தா சரஸ்வதிதான் இதில் முடிவெடுக்க முடியும் என்று அவரிடம் அனுப்பி வைத்தனர்.
அங்கும்தான் சென்று பார்ப்போமே! சென்றனர். பெரியவாள் தன் பெரிய வாயைத் திறந்தார்.
வேற்று மதத்தைச் சேர்ந்த ஒருவர் இந்துவாக மதம் மாறி, ஒரு இந்துவை மணம் புரிந்தால் அவரை இந்துவாக ஏற்றுக் கொள்வதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால், வழிபாடுகளில் இவர்களுக்கான உரிமைகள் மாறுபடுகின்றன. இந்து சனாதன தர்மத்தின்படி கோவில் வழிபாடுகள் வர்ணாசிரமத்துக்கு அல்லது ஜாதியின் பிரிவுக்கு ஏற்ப அமைந்துள்ளன.
வேற்று மதத்திலிருந்து இந்துவாக மதம் மாறியவர்கள் வர்ணாசிரம தர்மத்துக்கு அப்பாற்பட்டவர்கள். எனவே, வழிபாடு பற்றிய உரிமைகள் அவர்களுக்குப் பொருந்தாது. யார் வேண்டுமானாலும் இந்து மதத்துக்கு மாறலாம். ஆனால், தான் எந்தத் தரமான இந்து என்பதை அவர்கள் முடிவு செய்துகொள்ள வேண்டும். உலகின் எல்லா மதங்களிலும் விதிகளும், வரன்முறைகளும் உள்ளன. இந்துக் கடவுள்கள் மீது உண்மையான பக்தியும், நம்பிக்கையும் ஒருவன் கொண்டிருப்பானேயானால், தன் மீது விதிக்கப்படும் இந்த ஜாதிகளையும், வரைமுறைகளையும் மனமுவந்து பின்பற்ற வேண்டும் என்று இதோபதேசம் செய்ய ஆரம்பித்து விட்டார் பெரியவாள்.
வெறுத்தே போனார் அந்த வெள்ளைக்காரப் பெண்மணி. இதற்காகவா இந்து மதத்துக்கு மாறினேன் என்று புலம்பினார்.
நம் நாட்டு மொழியில் சொல்ல வேண்டுமானால் என் புத்தியைச் செருப்பால் அடிக்க வேண்டும் என்று சொல்லியிருப்பார்கள். (ஆதாரம்: ஜூனியர் விகடன் 23.11.2005)
ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி ஆக்ரா வருகிறார். தாஜ்மகாலைச் சுற்றிப் பார்க்கிறார். தாஜ்மகாலையும் ஆக்ராவையும் சுத்தப்படுத்த துடைப்பத்தைக் கையில் எடுக்கிறார்.
இன்னொரு அமெரிக்கப் பெண்மணி இந்தியா வருகிறார். இந்துவாகவும் மதம் மாறுகிறார். இந்து மதக் கணவருடன் இந்துக் கோவிலுக்குள் நுழைந்தால் துடைப்ப அடி விழுகிறது.
இதுதான் அர்த்தமுள்ள இந்துமதம்!
சாமியார் கிளப்பிய புருடா நாடு எங்கே போகிறது?
அறிஞர் அண்ணா அவர்கள் தீட்டி சிறப்பான கருத்துகளை உள்ளடக்கிய நல்லதம்பி திரைப்படத்தில் பல்வேறு அரிய தொலைநோக்குச் சிந்தனைகளை கலைவாணர் நகைச்சுவை அரசர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களும், அவரது வாழ்விணையர் டி.ஏ. மதுரமும் சேர்ந்து கூறிடும் அறிவுரைக் காட்சிகள் ஏராளம் உண்டு.
பகுத்தறிவுப் புலவர் உடுமலை நாராயண கவி அவர்களது கருத்தமைந்த பாடல்களும் மேற்கூறிய முற்போக்குப் புரட்சிகர கருத்துகளுக்கு வலிமை சேர்ப்பதாக அமைந்தன.
அதில் ஒரு பாடல் எட்டு, ஏழு, ஆறு என்று தொடங்கும்; அதன் வரிகள் சிறப்பான கருத்துகளைக் கூறும்.
பல்லவி: எட்டு... ஏழு... ஆறு... ஓர் எட்டு... ஏழு... ஆறு... எல்லாம் தங்கம்... ஈயாத பேரு ஏமாற்றும் தங்கம்...
சரணம்: தேசிங்குராஜன் செத்தான்-_அவனது தேசம் அழிஞ்ச பின்னாலே... மாசில்லாத தங்கக் குவியல் மறைஞ்சிருக்குது மண்ணாலே... எட்டடி நீளம்.... ஏழடி அகலம்... கட்டி கட்டியாய் தங்கப் பாளம் வெட்டிப் பார்த்தால் புதையல் இருக்கும் வேறெவரிடமும் சொல்லாதே!
என்று டி.ஏ. மதுரம் அம்மையார் பாடுவார்!
ஏராளமான தங்கம் தரையில் உள்ளது என்று ஒருவர் புரளி கிளப்பி, அதனை உண்மை என நம்பி, பலரும் மண்வெட்டிகளைத் தூக்கிக் கொண்டு, நிலத்தை வெட்டி, உழுது பார்த்திட கூட்டம் கூட்டமாகக் கிளம்பி விடுவர்.
அதுதான் பாட்டின் முதல் வரியாகும்; சோம்பேறிகளாக இருந்த மக்களை உசுப்பி விட்டு, தரிசாக இருந்த நிலங்களை உழுது பண்படுத்திடும் நிலையை உருவாக்குவர் என்பது அப்பாட்டின் மய்யக் கருத்தாகும்!
உலகத்தின் எந்த மூலையிலும் தங்கப் புதையல் வேட்டை நடத்துவது எப்போதாவது நடப்பதுதான் என்ற போதிலும், அண்மையில் எவரோ ஒரு சாமியார் கனவில் ஒருவர் வந்தார்; புதையல் இருப்பதாகச் சொன்னார் என்று கிளப்பிய புருடாவை முன் வைத்து, உ.பி. அரசாங்கம், தொல்பொருள் துறையும் இப்படி இறங்கியிருப்பது, அப்பாவி மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே செல்வது மகா மகா வெட்கக்கேடான மூடநம்பிக்கை அல்லவா?
இந்தப் புரட்டுப் பிரச்சாரத்தில் உ.பி. அரசோ, மத்திய அரசோ (தொல்பொருள் துறையினரும்) இதில் இறங்கலாமா? இதுபற்றி உச்ச நீதிமன்ற வழக்கொன்றில், உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறியிருப்பது அதைவிட வேதனையான, ஏற்க முடியாத நிலையாகும்!
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51A(h) பிரிவு - அறிவியல் மனப்பான்மையைப் பரப்பிட வேண்டிய பொறுப்பு, ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள அடிப்படைக் கடமை என்கிறபோது, அந்தப் பொறுப்பு, குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாத்து, கடமைகளை நினைவூட்ட வேண்டியது உச்ச நீதிமன்றத்தின் முக்கியக் கடமை அல்லவா? அரசின் கொள்கை முடிவுகளிலும் முக்கிய வழக்குகளிலும்கூட கருத்துக் கூறி வேறு வகையான தீர்ப்புகளைக் கூறும் உச்ச நீதிமன்றத்தின் இந்த நிலைப்பாடு, அரசமைப்புச் சட்டத்தின் 51A(h) பிரிவுக்கு உடன்பாடானதாக நமக்குத்
தெரியவில்லை.
அரசியல்வாதிகள் _ குறிப்பாக பிரதமர் வேட்பாளராக பெரும் அளவில் ஊடகங்களாலும், பா.ஜ.க.வாலும் பெரிதாக விளம்பர வெளிச்சம் போட்டுக் காட்டப்படும் மோடி, இந்தத் தங்கப் புதையல் வேட்டையை சில நாள்களுக்குமுன்பு கண்டித்துப் பேசி விட்டு, இப்போது தலைக்குப்புற அந்தர் பல்டி அடித்து, அந்த சாமியாரைப் புகழ்ந்து தள்ளியிருப்பது, மோடி எப்படிப்பட்ட பேசு நா இரண்டுடைய அரசியல்வாதி என்பதை நாடு புரிந்து கொள்ள இது ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது!
மின்னணுவியல் -_ அறிவியல் தொழில் நுட்பம் வளர்ந்து, செவ்வாய்க் கோளுக்கு, விண்கலத்தை, இந்தியா அனுப்பும் அளவுக்கு உள்ள நிலையில், இப்படி ஒரு தங்க வேட்டை என்று சாமியார்களை - மோசடி மன்னர்களை உயர்த்திக் காட்டுவது, அப்பாவி மக்கள் ஏமாறுவது எல்லோரையும் திருவாளர் 420 (ஏமாற்று மோசடி வேலை) செய்ய வைப்பது விரும்பத்தக்கதா?
இந்த தங்க வேட்டைக் கனவின் கதையும், அதை ஒட்டிய நடப்பும் நம் நாட்டு அரசியலில் மூடநம்பிக்கைகள் எப்படி ஆட்சி புரிகின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது; இது அண்மைக் கால விசித்திரங்களில் தலையானதாக உள்ளது!
மத்திய உணவு பதப்படுத்தும் துறையின் இணையமைச்சரான சரண்தாஸ் மகந்த என்பவரிடம் ஒரு சாது (சாமியார்) கூறினாராம்: இப்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி _ ரூபாய் நாணய மதிப்பின் வீழ்ச்சி _- நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க இந்த இடத்தில் தங்கப் புதையலைத் தோண்டினால், அரசு நிதி நெருக்கடிப் பிரச்சினை தீரக் கூடும் என்று. உடனே இந்த அமைச்சர், பிரதமர், நிதியமைச்சர், உள்துறையமைச்சர், சுரங்கத்துறை அமைச்சர், தொல்பொருள் துறை அமைச்சர், அய்.மு. கூட்டணித் தலைவர் திருமதி சோனியாகாந்தி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, புவி ஆய்வுத்துறை GSI (Geologicial Servey of India) எல்லாவற்றிற்கும் எழுதிய பிறகே இது முக்கியத்துவம் பெற்று, பூமி தோண்டும் பணி துவங்கியுள்ளது என்றால், இதைவிட (அரசே) இப்படிப்பட்ட கேலிக் கூத்தில் ஈடுபடும் மூடத்தனத்தின் முடைநாற்றம் வேறு உண்டா? இதைவிட, இஸ்ரேல் போன்ற நாட்டினர் பாலைவனத்தை விவசாயப் பூமியாக்கி உள்ளனரே, அந்தத் தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்தாலாவது பயன் அளிக்காதா?
உழைப்பைத் தொலைத்துவிட்டு, ஊர் மக்களை பேராசைப் பிடித்தவர்களாக்கி விடும் நிலையை மத்திய, மாநில அரசுகளே உருவாக்கிடலாமா? இதற்கு உச்ச நீதிமன்றம் போன்ற அமைப்புகளும்கூட துணை போகலாமா? நாடு எங்கே போகிறது? மதச்சார்பற்ற அரசு என்பதும், அறிவியல் மனப்பான்மையைப் பெருக்குதலும் வெறும் ஏட்டுச் சுரைக்காய்தானா?
வெட்கம்! வேதனை- - தேசிய அவமானம்!
- கி.வீரமணி,
ஆசிரியர்
கவிதை : குறி அறுத்தேன்
மாதவம் ஏதும் செய்யவில்லை நான் குறி அறுத்து
குருதியில் நனைந்து
மரணம் கடந்து
மங்கையானேன்
கருவறை உனக்கில்லை
நீ பெண்ணில்லை என்றீர்கள்
நல்லது
ஆண்மையை அறுத்தெறிந்ததால் சந்ததிக்குச் சமாதி கட்டிய
பட்டுப்போன ஒற்றை மரம் நீ
விழுதுகள் இல்லை உனக்கு
வேர்கள் உள்ளவரை மட்டுமே
பூமி உனைத் தாங்கும் என்றீர்கள்
நல்லது
நீங்கள் கழிக்கும் எச்சங்களை ஜாதி வெறியும் மதவெறியும் கொண்டு
நீங்கள் விருட்சமாக்க
விதைபோட்ட
உங்கள் மிச்சங்களை
சிசுவாக சுமக்கிற
கருவறை எனக்கு வேண்டாம்
உங்கள் ஏற்றத்தாழ்வு
எச்சங்களைச் சுமந்ததால்
பாவம், அவள் கருவறை
கழிவறை ஆனது
நல்லவேளை
பிறப்பால் நான் பெண்ணில்லை
என்னைப் பெண்ணாக
நீங்கள் ஏற்க மறுத்ததே
எனக்குக் கிடைத்த விடுதலை
பெண்மைக்கு நீங்கள் வகுத்துள்ள அடிமை இலக்கணங்களை
நான் வாசிப்பதில்லை
என்னை இயற்கையின் பிழை என்று தாராளமாய் சொல்லிக்கொள்ளுங்கள்
நான் யார் என்பதை
நானே அறிவேன்
மதம் மறந்து ஜாதி துறந்து
மறுக்கப்பட்டவர்கள் ஒன்றுகூடி வாழும் வாழ்க்கையை
வாழமுடியுமா உங்களால்?
கருவில் சுமக்காமலேயே
தாயாக முடியுமா
உங்களால்?
மார்முட்டிப் பசியாறாமலேயே
மகளாக முடியுமா உங்களால்?
என்னால் முடியும்
உங்களின் ஆணாதிக்கக் குறியை
அறுத்துக் கொள்ளுங்கள்
நீங்கள் யார் என்பதை அப்போது நீங்கள் அறிவீர்கள்
பிறகு சொல்லுங்கள்
நான் பெண்ணில்லை என்று.
-
- கல்கி சுப்ரமணியம்
தனது முகநூலில் எழுதியது
கருத்து
எதிர்காலத்தில் நான் அரசியல்வாதியாக வேண்டும் என விரும்புகிறேன். பாகிஸ்தானில் மாற்றம் வரவேண்டும். கட்டாயக் கல்வி கொண்டுவர வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். பாகிஸ்தான் மக்களிடம் அமைதி, சுதந்திரம் அனைத்து உரிமைகள் பெறும் காலம் ஒரு நாள் கண்டிப்பாக மலரும். ஒவ்வொரு சிறுமி மற்றும் சிறுவர்கள் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். எங்கள் நாட்டு சமுதாயத்திடம் இருக்கும் மோசமான சிந்தனை, அதை யாராவது வந்து செய்யட்டும். அதுவரை நாம் காத்திருக்கலாம்.
- மலாலா யூசுஃப்
(தலிபான்களுக்கு எதிராகப் போராடி சுடப்பட பாகிஸ்தான் சிறுமி)
மருத்துவமனையின் தரம் என்பது நோயாளியின் வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டது. மருத்துவமனையில் நோயாளி ஒருவர் உயிரிழக்கிறார் என்றால் அதற்கு நோயை மட்டுமே காரணமாகச் சொல்ல முடியாது. மருத்துவமனையில் நிலவும் நோய் பரவும் சூழலும் ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலோருக்கு இது தெரியாது.
- டாக்டர் கிர்தர் ஜே கியானி,
தலைமை இயக்குநர், இந்திய மருத்துவமனை உரிமையாளர் சங்கம்.
பெற்றோர்கள், பிள்ளைகளின் எதிர்காலம் என்ற பெயரில் பணம், வேலையை மட்டுமே முதன்மையாக நினைக்கின்றனர். எப்படியாவது மதிப்பெண் பெற வேண்டும். எப்படியாவது நல்ல வேலை பெற வேண்டும் என சொல்கிறார்களே தவிர எப்படி உழைக்க வேண்டும், உருவாக வேண்டும் என சொல்லித் தருவதில்லை.
- டாக்டர் சி.ராமசுப்பிரமணியன், மனநல ஆலோசகர்
இந்தியாவில் சராசரி எடையைக் காட்டிலும் குறைந்த அளவிலான எடை கொண்ட 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஒவ்வொரு நகரிலும் அதிகளவில் உள்ளனர். 40 சதவீதம் குழந்தைகள் இதுபோன்ற நிலையில் உள்ளனர். சமூகத்தில் சமத்துவம் இல்லாதது குறைந்த அளவிலான ஊட்டச் சத்து, கல்வி, பெண்களுக்கான சமூக நிலை ஆகியவையே, தெற்கு ஆசியாவில் ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கைக்குக் காரணமாக உள்ளன.
- பார்பெல் டைக்மேன், சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு அமைப்பு
எனது பாதை தொடங்கிய இடம் - நடிகர் கமல்ஹாசன்
நீங்க ஒருத்தரோட முரண்பட்டீங்கன்னா அவன் சொல்றது தப்புன்னு நிரூபியுங்க. ஒருத்தரோட கருத்து தப்புன்னு நிரூபிக்க உயிரை எடுக்காதீங்க. பகுத்தறிவுவாதியான நரேந்திர தபேல்கர் மாதிரியான ஆட்கள் கொல்லப்படுவது, இந்தியாவுக்கே பெருத்த அவமானம். இத்தனை குழப்பங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் நடுவிலே வட இந்தியாவுக்கு ஏற்பட்ட பாதிப்பு தமிழ்நாட்டுக்கு இல்லைங்கிறதுல நான் மிகவும் பெருமைப்படுறேன்.
***
நான் சுயமரியாதை இயக்கத்தோட உருவாக்கம். நான் பிறந்தது எங்கே? சுப்ரபாதம் என் காதில் ஒலிக்கிற சூழல்ல நான் பிறந்தேன். 10 வயசு வரைக்கும் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் பிரார்த்தனை பண்ணுவேன். என்னோட அப்பா, சித்தப்பா, அண்ணன் இவங்க மேல பெரியாரோட தாக்கம்தான் இதுக்குக் காரணம். அவங்க அவரைத் திட்டுவாங்க... விமர்சிப்பாங்க... அவரோட அறிவை எண்ணி உள்ளுக்குள் சிரிச்சிக்குவாங்க. ஆக, அவரோட எதிர் முகாமிலும் அவருக்கு ரசிகர்கள் இருந்தாங்க. நான் அந்த எதிர் முகாம்ல இருந்து வந்தவன்.
***
தபேல்கர் கொலை, நம்பிக்கை இழக்கச் செய்வதாக இருக்கலாம். ஆனால் அது நான் பேசவேண்டியதை பேசுவதிலிருந்து மாற்ற முடியாது. அதற்கு தமிழ்நாட்டுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். இங்கே நிறைய விஷயங்கள் தவறாவும் இருக்கு. கூவம், அடையாறு உட்பட நிறைய விஷயங்கள் சரி செய்யப்படல. அற்புதங்கள்ல எனக்கு நம்பிக்கையில்லை. ஆனா எனக்கு மேஜிக் மேல நம்பிக்கையிருக்கு. ஏதோ ஒன்றை பார்க்கத் தவறும்போது அந்த மேஜிக் நடக்கும். சினிமா அப்படிப்பட்டதுதான். அந்த மேஜிக்கை சினிமா உருவாக்குது. யார் வேணும்னாலும் மேஜிக்கை நிகழ்த்தலாம். கற்றல் என்கிற மிக மெதுவான செயல்முறையால் மாறுதல் நிகழணும்.
***
ராமாயணம் புராணம். அதுல எல்லாம் கலந்து கிடக்கு. நான் சின்னப்பையனா கன்னியாகுமரி போயிருந்தப்ப, ஒரு ஜோடி மிகப்பெரிய காலடித் தடத்தைக் காட்டுனாங்க. அப்ப நான் பக்தி மார்க்கத்துல இருந்தேன். அவங்க இது ராமனோட காலடித் தடம்னு சொன்னாங்க. அது ரொம்ப பெரிசா இருந்ததால, ராமன் என்ன ராட்சஷனான்னு கேட்டேன். பகுத்தறிவுக்கான என்னோட பாதை அங்க தொடங்கிச்சு.
- நன்றி: ஃப்ரண்ட் லைன், அக்டோபர் 18, 2013
இதுதான் பார்ப்பனீயம்!
திருவாளர் சோ என்று ஒருவர் இருக்கிறார். நடுநிலைக்கே அவர்தான் குத்தகைதாரர் என்று பார்ப்பன ஊடகங்களால் முடிசூட்டப் பட்டவர். நம்ம சூத்திர முண்டங்கள் சிலதுகளும் இதனை வழிமொழிவதுண்டு. இரட்டைநாக்குப் பேர்வழியான இந்தப் புளுகுணி தன் இனத்தின் நலனை மட்டுமே முன்னிறுத்திப் பேசும்; எழுதும். பல நூறுமுறை இதன் பார்ப்பனக் குள்ளநரித்தனத்தை நாம் தோலுரித்திருக்கிறோம். இதோ இது அண்மையில் நடந்தது. அக்டோபர் 18 அன்று பா.ஜ.க.வைச் சேர்ந்த நரவேட்டை மோடி சென்னை வந்திருந்தார். சென்னைப் பல்கலைக் கழக மண்டபத்தில் வடநாட்டு சோ-வான அருண்சோரியின் நூலை வெளியிட்டார். அதனைப் பெற்றுக்கொண்ட துக்ளக் சோ அய்யர்வாள் பிரதமர் மன்மோஹன் சிங்கைக் கேலி செய்து பேசினாராம். பேசியதோடு மன்மோஹன்சிங் எப்படி சோனியா, ராகுலுக்கு அடங்கி இருக்கிறார் என்பதை நடித்துக்காட்டினாராம். அதனை மோடி ரசித்தாராம்.
சரி, அவர் நடித்துக்காட்டட்டும். இதில் நமக்கொன்றும் கவலை இல்லை; ஆனால், சோனியா, ராகுலுக்குப் பணிவதை விடக் கேவலமாக தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குக் குனிவதையே மந்திரிமார்கள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனரே, இதனை இதுவரை எத்தனை முறை இந்த நடுநிலை(?) நாற்றமெடுக்கும் சோ கேலி செய்திருப்பார்? இந்த முறை ஜெயலலிதா ஆட்சிப் பொறுப் பேற்கும் போதே அமைச்சர்கள் அந்தக் குனி குனிந்தனரே, எதிரே இந்த சோ உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தாரே, அங்கு மட்டும் எப்படி இவரது நடுநிலை வேலை செய்யவில்லை.
மன்மோஹன் சிங்கைக் கேலி செய்யும் சோ அய்யர், தன்மானத்தை அடகுவைக்கும் அந்த மேடைக்கு முன்னே அமர்ந்திருக்கலாமா? தெரிந்துகொள்ளுங்கள் தமிழர்களே... ஒரு பார்ப்பன அம்மையாரின் காலில் ஒரு தமிழன் விழுவதை ரசிப்பது சோ பார்ப்பனரின் குணம். அது அந்த இனத்துக்கே உரிய தனிக்குணம்.
அடுத்து கருமாதிப் பத்திரிகைக்கு வருவோம். தினமல(ம்)ர் என்றொரு நாளிதழ் இருக்கிறது.இதற்கு தமிழ், தமிழினம், திராவிடம், ஈழத்தமிழர் என்றால் பேதியாகிவிடும். அவ்வளவு அலர்ஜி. தமிழின வளர்ச்சிக்குப் போராடுபவர்களை அவ்வளவு கேலி செய்யும். தி.க., தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க,. என கொள்கை முழங்கும் கட்சிகளையெல்லாம் சிறுமைப்படுத்தும்.
ஆனால், இதனிடம் சில நாட்களுக்கு முன் ஒரு மாற்றம். கடந்த வாரம் ஜாதிக் கட்சிகளையெல்லாம் திரட்டி பா.ம.க. ராமதாஸ் தேர்தலில் நிற்கப்போவதாக அறிவித்தார்.இதுவரை சமூகநீதி, தமிழ், தமிழினம், ஈழத்தமிழர், பெரியார் என்றெல்லாம் பேசிவந்த ராமதாஸ், ஒரு தேர்தலில் காணாமல் போகவே ஜாதி ஆயுதத்தைக் கையில் எடுத்தார். அவ்வளவுதான் தினமல(ம்)ர் பா.ம.க.வின் செய்தியை படத்துடன் 6 பத்தியில் போடுகிறது.(தினமலர் சென்னை பதிப்பு, பக்.12, 23.10.2013).
சமூக நீதி பேசியவர் ஜாதிக் கட்சியானபின் அதனை ஊக்குவிக்கிறது. அதுவும் இன்னொரு ஜாதிக்கட்சிக்காரரைச் சந்திக்கும் நிகழ்ச்சிக்கே இவ்வளவு பெரிய விளம்பரம். தமிழினத்தை மேலும் மேலும் பிரிக்கும் செயலைச் செய்யும் துரோகிகளுக்கு விளம்பரம் வழங்கும் வேலையை தினமல(ம்)ர் செய்யத் தொடங்கியுள்ளது.திராவிட இயக்கத்தால் ஒழிக்கப்பட்ட ஜாதிவெறியை மீண்டும் உயிர்ப்பிக்கும் செயலுக்கு ஊக்கம் கொடுக்கிறது.
தமிழர்களே...ஆரியத்தின் நோக்கம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டாமா?
- பெரியாரிடி
செய்திகளை பகிர்ந்து கொள்ள
புதுப்பா
காசா? கடவுளா?
காசியில் இருக்கும் கடவுளுக்கும்
காசினியில் வாழும் மனிதனுக்கும்
காசுமட்டும் இருந்தால் ஏகமதிப்பு!
காசுமட்டும் இல்லாவிடில் ஏதுமதிப்பு!
கடவுளுக்கும் காசுக்கும் ஓட்டம்
கண்டுகழிக்க மானுடக் கூட்டம்
காசிடம் கடவுள் தோற்கிறது
காசைத்தான் அதுகள் ஏற்கிறது (பிச்சையெடுத்தல்)
காசுபணம் பறிப்பதற் காகவே
கற்பனைக் கடவுள்களை விதைத்தனர்
விண்ணையும் மண்ணையும் காட்டியே
விற்பனையில் மனிதநேயத்தைப் புதைத்தனர்
காசுபொருள் இருக்கும் கோவிலில்
கடல்போல் மனிதக் கூட்டம்
காசில்லா கோவில் என்றாலே
காணலையே மக்கள் நடமாட்டம்
- மின்சாரம் வெ.முருகேசன், விருதுநகர்
தீபாவளி கொண்டாடுவோரே, வாழ்த்துச் சொல்வோரோ சிந்தனை செய்வீர்!
தீபாவளி - நரகாசுரன் கதை கட்டியது பார்ப்பனரே
தமிழ்க்கடல் மறைமலை அடிகளாரின் கருத்து
கண்ணன், நரகாசுரனைக் கொன்ற நாளின் நினைவுக் குறியாக தீபாவளி நாள் கொண்டாடப்படுவதாயிற்று என்னும் கதை பிற்காலத்தில் பார்ப்பனர் கட்டி விட்டதொன்றாகும். பார்ப்பனர் தமது உயிர்க் கொலை வேள்விக்கு உடன்படாத நரகாசுரன் என்னும் மன்னன் ஒருவனை தமக்குத் துணையாயிருந்த தமிழ் மன்னன் கண்ணனை ஏவிக் கொலை செய்தனர்
- தமிழர் மதம் என்ற நூலில் பக்கம் 200-201)
அடுத்த பிசினஸ் ஆரம்பம்!
தீபாவளி இன்றோடு முடிந்தது - காசைக்கரியாக்கியாயிற்று; அடுத்த பிசினஸ் ஆரம்பிக்கப்பட வேண்டாமா?
கந்தசஷ்டி நாளை முதல் தொடக்கமாம்; சூரசம்ஹாரம் நவம்பர் 8ஆம் தேதி என்றுஎழுத ஆரம்பித்து விட்டனர்.
பக்தி என்பது பிசினஸ் என்று சொன்ன வாரியார் இன்று இருந்தால் அவர் வாயில் சாக்கரையைத்தான் அள்ளிக் கொட்ட வேண்டும்.
இந்து ஏட்டில் ஆர்.எஸ்.எஸ். பற்றி எழுதிய பெண் எழுத்தாளருக்கு கொலை மிரட்டல்
புதுடில்லி, நவ.2- சர்தார் வல்லபாய் படேல் பற்றி கட்டுரை எழுதிய பெண் பத்திரிகையாள ருக்கு ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஜய் மாக் கன் புகார் கூறினார். இச்சம்பவத் துக்குக் கடும் கண்டனம் தெரி வித்த அவர், இது குறித்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக டில்லியில் செய்தியாளர்களிடம் அஜய் மாக் கன் வியாழக்கிழமை கூறியதாவது:
ஆங்கில நாளிதழில் பெண் பத்திரிகையாளர் வித்யா சுப்பிர மணியன் சர்தார் வல்லபாய் படேல் கால நிகழ்வு தொடர்பாக கட்டுரை எழுதினார். அதைத் தொடர்ந்து அவருக்கு ஆர்எஸ் எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப் புகள் மிரட்டல் விடுத்ததாக கடந்த 15-ஆம் தேதி டில்லி நாடா ளுமன்ற சாலை காவல் நிலையத் தில் புகார் அளித்தார். அதில் தனக்கு தொலைபேசி வாயிலாக வும் உடல் ரீதியாகவும் குண்டு வீசி கொலை செய்து விடுவதாகவும் ஆர்எஸ்எஸ், விஸ்வ ஹிந்து பரி ஷத் அமைப்புகளைச் சேர்ந்த வர்கள் மிரட்டல் விடுப்பதாக வித்யா சுப்பிரமணியன் கூறியுள் ளார். இந்த விவகாரம் தொடர் பாக உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி டில்லி காவல்துறைக்கு உத்தர விடும்படி மத்திய உள்துறை அமைச் சர் சுஷீல் குமார் ஷிண்டே வுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.
பத்திரிகை சுதந்திரத்தைப் பாது காப்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. சமூகத்தைப் பிரதிபதி லிக்கும் நிகழ்வுகளை ஆய்வு செய்து கட்டுரை எழுதும் பத்திரி கையாளரை அதுவும் பெண் பத்திரிகையாளருக்கு மிகவும் இழிவான முறையில் ஆர்எஸ்எஸ் அமைப்பு விடுக்கும் மிரட்டல் ஏற்றுக்கொள்ள முடியாதது. கண்டனத்துக்குரியது என்றார் அஜய் மாக்கன்.
இது குறித்து கருத்து தெரி வித்த மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே, அஜய் மாக்கனின் கடி தத்தை மத்திய உள்துறைச் செய லாளர் அனில் கோஸ்வாமிக்கு அனுப்பியுள்ளேன். உரிய நடவ டிக்கை எடுக்கப்படும். ஜனநாயகத் தில் ஓர் அமைப்பு தொடர்பான விமர்சனங்களை ஏற்றுக் கொள் ளும் பக்குவம் சமூக அமைப்பு களுக்கு இருக்க வேண்டும். மிரட் டல் விடுவது சரியல்ல என்றார்.
இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லேகி கருத்து கூறுகையில் அஜய் மாக் கனின் கடிதத்துக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என்று வித்யா சுப்பிரமணியனே தொலைக்காட் சிக்கு அளித்த பேட்டியில் கூறி யுள்ளார். இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி ஆதாயம் பெற காங்கிரஸ் முயற்சிக்கிறது என்றார்.
இதற்கிடையே, வித்யா சுப்பிரமணியன் புகார் குறித்து நாடாளுமன்ற காவல் நிலைய துணை ஆணையர் எஸ்.பி.எஸ். தியாகியிடம் கேட்டதற்கு பெண் பத்திரிகையாளர் அளித்த புகார் மீது இந்திய தண்டனைச் சட்டம் 506-ஆவது பிரிவின்படி (குற்றம் புரியும் நோக்குடன் அச்சுறுத்து வது) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவர் புகார் கூறிய அதே நாளில் அதை மேல் விசாரணைக்காக தமிழ்நாடு காவல்துறைக்கு தில்லி காவல் துறை அனுப்பி விட்டது என்றார்.
சொல்லவேண்டும்
பார்ப்பனியமும், மத ஆதிக்கமும் ஒழிந்தாலொழிய இந்தியாவில் யோக்கியமான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர்பார்க்க முடியாது. பார்ப்பனிய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.
(குடிஅரசு, 17.8.1930)
கலைஞர்மீது காய்ச்சல்!
மோடியைப் பிரதமர் நாற்காலியில் உட்கார வைத்தே தீருவது என்று, ஒற்றைக்காலில் ஊசி முனையில் அமர்ந்து தவம் இருக்கும் திருவாளர் சோ ராமசாமி, தமது துக்ளக் இதழில் (30.10.2013 பக்.21) கேள்வி ஒன்றுக்கு அளித்த பதில் வருமாறு:
கேள்வி: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தை, குஜராத் அரசு முறையாகச் செயல்படுத்தவில்லை என்று, சி.ஏ.ஜி. குற்றம் சாட்டியுள்ளாரே! இதற்கு உங்கள் பதில் என்ன?
பதில்: இதற்கு உங்கள் பதில் என்ன என்று என்னை நீங்கள் கேட்பதற்கு நான் என்ன குஜராத் அரசா?
என்று பதில் எழுதியுள்ளார். சோவின் அறிவு நாணயம் எந்தத் தன்மையது - பதில் சொல்லும் தரம் எந்தத் தகுதியானது? என்பதற்கு இது ஒருபதம்.
மோடியைப் பற்றியும் அவர் ஆட்சியையும் பற்றிக் கேட்டால் இதே பாணியில்தான் பதில் சொல்லி வந்திருக்கிறாரா?
பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடிக்குப் பயங்கரவாதிகளால் ஆபத்து இருப்பதாக நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு இதே பாணியில் பதில் சொல்வதாக இருந்தால் என்ன சொல்லியிருக்க வேண்டும்? நான் என்ன சி.பி.அய். இயக்குநரா இதையெல்லாம் தெரிந்து வைப்பதற்கு என்று சொல்லவில்லையே! இன் றைக்கு, இந்தியத் தலைவர்களில் பாதுகாப்பு மிகவும் தேவைப்படுகிறவர், மோடிதான் என்பதில் சந்தேகமே இல்லை, என்று பதில் சொல்லுகிறாரே எப்படி?
மோடியைக் காப்பாற்ற முடியவில்லை என்றால், நழுவி ஓடுவது, அல்லது எதிர்க் கேள்வி போட்டுத் தப்பிப்பது - இதுதான் சோவின் சூரத்தனம் போலும்!
2ஜிபற்றி சி.ஏ.ஜி. சொன்னால் அத்திரிபாட்சா கொழுக்கட்டை என்று தாவி குதிப்பார். அதே சி.ஏ.ஜி. குஜராத் முதல் அமைச்சர் பற்றி குற்றம் சுமத் தினால் நான் என்ன குஜராத் அரசா என்று குறுக்கு வழியில் தப்பித்து ஓடப் பார்ப்பார்.
உண்மையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தில், குஜராத் படுபாதாளத்தில் விழுந்து கிடக்கிறது.
குழந்தைகள் இறப்பு விகிதம் ஆயிரத்திற்கு 62 குஜராத்தில்; பிற மாநிலங்களிலோ 12 முதல் 14 வரைதான்!
மற்ற மற்ற மாநிலங்களில் பெண்களின் ஆயுள் காலம் 75 என்றால், குஜராத்தில் வெறும் 64 ஆண்டுகள்தான்.
அதே சி.ஏ.ஜி. 2012இல் குஜராத் மாநிலத்தில், நடைபெற்ற ஊழல் ரூ.16 ஆயிரம் கோடி என்று கூறியுள்ளார் - சி.ஏ.ஜி. அறிக்கை என்றால், அது 2ஜி மட்டும்தான் - திமுக சம்பந்தப்பட்டதுதான் - அதற்கு மட்டும்தான் சோ அய்யர் வாளால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
இன்னொரு கேள்வி:
வரும் மக்களவைத் தேர்தலில் மோடியுடன் கை கோர்க்க கலைஞர் முன் வந்தால், அந்தக் கூட்டணிகளுக்கு உங்கள் ஆதரவுண்டா?
சோவின் பதில்: அவசியமே இல்லை. அது தானாகவே தோற்கும்; என் உதவி தேவைப்படாது என்கிறார்.
இந்தியா பூராவும் மோடியின் செல்வாக்குப் பறப்பதாக தம் பட்டம் அடிக்கும் திருவாளர் சோ திமுகவோடு கூட்டணி சேர்ந்தால் தோற்கும் என்கிறாரே இதன் பொருள் என்ன? (தமிழ் நாட்டிலே பி.ஜே.பி. இருக்கும் நிலையில் தி.மு.க.வுடன் கூட்டுச் சேர்ந்தால் பிஜேபிக்கும் இடம் கிடைக்கும் என்று அவரால் எழுத முடியாது. அப்படியொரு கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்பது வேறு சங்கதி)
மோடி பிரதமராக வரவேண்டும் என்பதைவிட கலைஞர் மீதான வெறுப்பு என்பது பூணூலில் நெருப்புப் பிடித்ததுபோல் கொதிக்கிறது.
அவர் வந்தால் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பார்; செம்மொழிக்கு சிம்மாசனம் கிடைக்கும், இடை இடையே தமிழன் தமிழ்ப் பண்பாடு, தமிழீழம், பகுத்தறிவுக் கொள்கை என்றெல்லாம் பேசிக்கொண்டே இருப்பார்.
பொறுக்குமா பூணூல் கோத்திரங்களுக்கு? அதுதான் கலைஞர்மீது பாய்ந்து பிராண்டுவ தற்குக் காரணம்; பார்ப்பனர்களுக்குத் தெரிவது தமிழர்களுக்குத் தெரிவதில்லையே என்ன செய்வது!
தஞ்சை நகர மன்ற தலைவரின் தகாத பேச்சுகள்
ஆசிரியருக்குக் கடிதம்
தஞ்சை நகர மன்ற தலைவரின் தகாத பேச்சுகள்
நான் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் 2003 முதல் தஞ்சை நகர தி.க. செயலாளர் பொறுப்பில் இருந்து கொண்டு இயக்கப்பணி செய்து வருகிறேன். என் துணைவியார் மு.ஜெயலட்சுமி தஞ்சை நகர 3-ஆவது வட்ட திமுக நகர் மன்ற உறுப்பினராக உள்ளார். கடந்த 7.10.2013 அன்று தஞ்சை நகராட்சி சார்பில் கரந்தைப் பகுதியில் மக்கள் குறை கேட்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தஞ்சை நகர் மன்றத் தலைவர் தஞ்சை தொகுதி சட்டமன்ற உறுப்பினர், கரந்தை பகுதி நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளார்கள்.
குறை கேட்கும் சமயத்தில் 3-ஆவது வட்டத்தைச் சேர்ந்த செல்லியம்மன் கோயில் தெரு தனபால் என்பவர் தனது வீட்டுக்கு ஒரு ஆண்டாக குடி தண்ணீர் வரவில்லை என்று சற்று கடுமையாக கேட்டுள்ளார். அது சமயம் என் துணைவியாரும் எங்கள் வார்டில் தண்ணீர் சரியாக வரவில்லை என்று கூறியிருக்கிறார். இது தொடர்பாக நகர் மன்றத் தலைவர் சாவித்திரி கோபால் என்பவர் முகாம் நடந்த இடத்தில் தக்க பதில் அளிக்காமல், மறு நாள் (8.10.2013) அன்று நகர் மன்றத் தலைவர் என்னுடைய அலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் 3-ஆவது வார்டைச் சேர்ந்த அரசுப் பணியி லிருந்த ஓய்வு பெற்ற ஒருவன், அவன் வீட்டுக்கு ஒரு ஆண்டாக தண்ணீர் வரவில்லை என்று சொல்கிறான். உங்கள் பெண்டாட்டியும் தண்ணீர் வரவில்லை என்று சொல்கிறார். என்னிடம் நேரில் வந்து சொல்லாமல் குறை கேட்கும் முகாமில் எப்படி சொல்லலாம். கரந்தை பகுதியில் உள்ள திமுக 3 வார்டுகளிலும் உள்ள பொதுமக்கள் பொய்யான கோரிக்கை மனு கொடுத்து இருக்கிறார்கள் என்று கரந்தையில் ஒலி பெருக்கி வைத்து விளம்பரம் செய்வேன். மூன்று வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் நடைபெறுவதை நிறுத்தி விடுவேன் என்று கடுங்கோபத்துடன் என்னை மிரட்டினார். நான் என் துணைவியாரை விசாரிக்கிறேன் என்று கூறிவிட்டு அலைபேசியை வைத்துவிட்டேன்.
மக்கள் குறை கேட்கும் முகாம் நடைபெற்ற விவரத்தை என் துணைவி யாரிடம் கேட்டபோது தெருக்களுக்கு தண்ணீர் சரியாக வரவில்லை என்று தான் சொன்னேன். மற்றபடி தவறாக எதுவும் சொல்லவில்லை என்று கூறினார். இதன் பிறகு நான் 9.10.2013 அன்று அலைபேசியில் மிரட்டியது குறித்து நகர் மன்றத் தலைவர் சாவித்திரி கோபால் அவர் அறையில் நேரில் சந்தித்து விவரம் கேட்டேன். அப்போதும் மக்கள் குறை கேட்கும் முகாமில் தண்ணீர் வரவில்லை என்று உங்கள் பெண்டாட்டி எப்படி சொல்லலாம்? அலுவலகத்தில் என்னிடம் நேரில் வந்துதானே சொல்ல வேண்டும் என்று ஆத்திரம் பொங்க கேட்டார். அதற்கு நான் என் துணைவியார் தவறாக கேட்கவில்லையே அவ்வாறு அவர் கேட்டது தவறு என்று உங்களுக்கு பட்டிருந்தால் அங்கேயே முகாம் நடந்த இடத்தில் கவுன்சிலரை கேட்க வேண்டியது தானே என்றவுடன், உங்கள் செல்போன் நம்பர்தானே இங்கு இருக்கிறது என்றார். ஏன் முரணாக பதில் சொல்லுறீங்க என்று கேட்டதும் மிகவும் கோபத்துடன் உங்களையெல்லாம் நாற்காலியில் உட்கார வைத்துப் பேசுவதே தப்பு என்று சொன்னார். அவருடைய எதிர்பாராத வார்த்தையில் அதிர்ச்சி அடைந்த நான் தொடர்ந்து வாதம் செய்தால் மேலும் அசிங்க படுத்துவார் என்று எண்ணி உடனடியாக அவர் அறையை விட்டு வெளியே வந்தேன். நான் அவரிடம் தவறாகவும் பேசவில்லை, தவறாகவும் நடந்து கொள்ளவில்லை. அவ்வாறு இருக்கும்போது நாற்காலியில் உட்கார வைத்துப் பேசுவது தப்பு என்று ஏன் சொன்னார் என்ற விவரம் தெரிய வில்லை. ஒரு வேளை அவர் உயர்ஜாதி (பாப்பாத்தி) பெண்மணியாகவும் நான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவன் என்ற எண்ணமா? அல்லது தி.க.காரனை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பேசினாரா? என்ற விவரம் தெரியவில்லை. எனவே இந்த நிகழ்வு தொடர்பாக கண்டனம் தெரிவிக்கும் வகையில் மேற்படி செய்தியை விடுதலையில் வெளியிட வேண்டும் என்று கணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
- கரந்தை சு. முருகேசன், நகரச் செயலாளர், தி.க. தஞ்சாவூர்
டெல்லி கிருஷ்ணனும் - தமிழ்நாட்டுக் கிருஷ்ணனும்: சித்திரபுத்திரன்
டெல்லியில் உள்ள பாலகிருஷ்ண சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி என்கிற பண்டி கையின்போது தீண்டாதவர்கள் என்கிறவர்களை எல்லாம் கோவி லுக்குள் அனுமதிக்கப்பட்டிருப்ப தாக தமிழ்நாடு பத்திரிகையில் காணப்படுகிறது. புராணங்களின்படி கிருஷ்ணன் என்பதாக ஒரு சுவாமியோ, ஆசாமியோ இருந்ததாக நாம் ஒப்புக் கொள்வதானால் அது ஒரே சாமியாகத் தான் இருந் திருக்கலாமே தவிர, டெல்லிக்கு ஒரு கிருஷ்ணனும், தமிழ்நாட்டுக்கு ஒரு கிருஷ்ண னும் இருந்திருக்க முடியாது.
அப்படியிருக்க டெல்லி கிருஷ்ணன் தீண்டாதவர்கள் கோவிலுக்குள் போனால் ஓடிப்போகாமல் கோவில்களுக் குள்ளாகவே தைரியமாய் உயிருடன் இருக்கும்போது, நமது தமிழ்நாட்டுக் கோவில்களில் உள்ள கிருஷ்ணன் மாத்திரம் தீண்டாதவர்கள் உள்ளே போனால் கோவிலைவிட்டு ஓடிப்போவதோ அல்லது ஒரே அடியாய் செத்துப்போவதோ ஆனால் இந்த மாதிரி கிருஷ்ணனை வைத்து பூஜை செய்வ தால் நமக்கு என்ன பலன் அவரால் உண்டாகக் கூடும்?
ஒரு மனிதன் உள்ளே வந்தால் தாக்குப் பிடிக்காத கிருஷ்ணன் யாருக்கு என்ன செய்ய முடியும்? ஆதலால் தமிழ் நாட்டு கிருஷ்ணனை துரத்திவிட்டு டெல்லி கிருஷ்ணனைத்தான் தருவித்துக் கொள்ளவேண்டுமேயல்லாமல் இந்த மாதிரி சக்தியில்லாத, கிட்டப்போனால் ஓடிப்போகிற கிருஷ்ணன் நமக்கு அரை நிமிஷங்கூட கண்டிப்பாய் உதவவே உதவாது.
- குடிஅரசு - கட்டுரை - 28.8.1927
ஒரு மறுப்பு!:நாயக்கர் முதல் மந்திரிக்கு உபசாரம் செய்தது
தமிழ்நாடு பத்திரிகையில் ஈரோடு ரெயில்வே ஸ்டேஷனில் ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் முதலானவர்கள் கனம் முதல் மந்திரியை வந்து சந்தித்து உபசரித்தார்கள் என்றும் சுதேசமித் திரனில் ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் டாக்டர் சுப்பராயனைக் கண்டு பேசினார் என்றும் எழுதப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு பத்திரிகைகளும் முறையே மந்திரிக்கு உபசாரம் மந்திரிகளின் பிரசாரம் என்ற தலைப்பு களின் கீழ் இதை எழுதியிருக்கின்றனர்.
எனவே, இதைப் படிக்கிறவர்கள் சந்தேகப்படக்கூடும். என்ன வெனில் மந்திரி சுப்பராயன் முதலியவர்களின் அக்கிரமமான நடத்தைகளை ஆதரிப்பதற்காகவும், மேன்மை தங்கிய கவர்னர், கவர்னர் பதவிக்கு லாயக்கில்லை, ஆதலால் அவரை திருப்பி அழைத்துக்கொள்ள வேண்டுமென்று கோவை மகாநாட்டில் தீர்மானம் கொண்டுவந்த ஒருவர் அதே மந்திரிக்கு ரயிலில் உபசாரம் செய்தார் என்பதாக ஏற்படுமானால் அவருக்கு (தீர்மானம் கொண்டு வந்தவருக்கு) எவ்வளவு யோக்கியப் பொறுப்பு இருக்கும் என்பதாக ஜனங்கள் நினைக்கக்கூடும் என்பதற்காகவும்,
மந்திரி தனது வேலையைக் காப்பாற்றிக் கொள்ளும் முறையில் அவர் செய்யும் பிரசாரத்தில் நமக்குப் பங்கு இருந்தது என்று பலர் நினைக்க இடமுண்டாகும் என்கிற எண்ணத்தின் பேரிலும், அந்த இரண்டு பத்திரிகைகளின் கூற்றையும் மறுக்கக் கடமைப்பட்டவனாக இருக் கிறேன். எனது நண்பர் ஸ்ரீமான் பி.டி.ராஜன் அவர்கள் தான் 26ஆம் தேதி மெயிலில் நீலகிரியிலிருந்து வருவதாக தந்தி கொடுத் திருந்ததால் அவரை வரவேற்க நான் ரயிலுக்குப் போயிருந்தேன். அப்போது ஸ்ரீமான் ராஜன் அவர்களும், டாக்டர் சுப்பராயன் அவர்களும் ஒரே வண்டியில் இருந்ததால் ஒருவருக்கொருவர் வந்தனம் செய்து கொண்டோம். நீலகிரிமலையில் மழை உண்டா என்று கேட்டேன். மந்திரி ஆம் என்றார்.
இதே மாதிரி மந்திரி கேட்ட ஒரு கேள்விக்கு நான் ஆம் என்றேன். இதற்குள் ஸ்ரீமான் ராஜனவர்களின் சாமான்கள் வண்டியி லிருந்து இறக்கப்பட்டு விட்டதால் இருவரும் டாக்டர் சுப்பராயனிடம் பயணம் சொல்லிக்கொண்டு புறப்பட்டு விட்டோம். மந்திரி இலாகா நியமனத் திற்காகவும், அவ்விலாகாவிலுள்ள ஆவலாதி களுக்காகவும், பலர் அங்கு வண்டிக்குள்ளாகவே கூடிவிட்டார்கள். இதுதான் நடந்த விஷயம். இவற்றைத் திரித்து நிருபர்கள் பத்திரிகைகளுக்கு எழுதி இருப்பது சரியல்லவென்றே கண்டிக்கிறேன்.
மந்திரிகளை நான் பார்ப்பது எனது நிலைக்கு உயர்வு தாழ்வு என்றாவது கருதி நான் இம்மறுப்பை எழுதவில்லை. அவசியம் நேர்ந்தால், அல்லது நண்பர்கள் என்கிற முறையில், ஒருவரை ஒருவர் காணவும், அளவளாவவும் கடமைப்பட்டவர்களே யாவோம். ஆனால், இந்த சந்தர்ப்பத்தில் விஷமத் தனமான தலையங்கமிட்டு ஜனங்கள் தப்பர்த்தம் கொள்ளும்படி எழுதியிருப்பதால் மறுக்க நேரிட்ட தற்கு வருந்துகிறேன்.
- குடிஅரசு - அறிவிப்பு - 31.07.1927
Post a Comment