Search This Blog

2.11.13

தீபாவளி இரகசியம் --தந்தைபெரியார்

தீபாவளி இரகசியம்

வழக்கம்போல் பஞ்சாங்கத்தில் தீபாவளி வரப்போகிறது. சுமார் 20 வருட காலமாகத் தீபாவளியைப் பற்றித் திராவிட மக்களுக்கு விளக்கிக் கொண்டு வந்திருக்கிறோம்.
திராவிட நாடு தனி சுதந்திர நாடாக ஆக்கப்பட்டு திராவிடர்கள் சமயம் எது?
அவர்கள் சரித்திரம் என்ன? அவர்கள் மனிதத் தன்மை பெறுவதற்கு ஏற்றவண்ணம் நடத்தப்படுவதற்கு வகுக்கப்பட வேண்டிய முறை என்ன? என்பவைகளை அரசியல் சட்ட மூலமாகவும், பள்ளிப் பாட மூலமாகவும் ஏற்பாடு செய்து அமல் நடத்துகிற வரையிலும் திராவிடர்கள் தம்மை இழிவுபடுத்தி நிரந்தரமாய் அழுத்தி வைக்கப்பட்டிருக்கும் தன்மைலிருந்து மீட்கப்பட முடியாது என்பதோடு திராவிடர்கள் தம்மைத் தாமே இழி மக்களாக ஆக்கிக் கொண்டு தங்கள் பின் சந்ததிகளையும் இழிதன்மையில் இருந்து மீளாமல் இருக்கத்தக்க காரியங்களைச் செய்து கொண்டுதான் இருப்பார்கள்.

இன்று திராவிடர்களின் சமயம் அதாவது மதம் என்பது பெயரளவில் இந்து மதம் என்று சொல்லப்பட்டாலும், அதற்கு எவ்வித பொருளும், ஆதாரமும் இல்லை என்றாலும் உண்மையில் திராவிடர்கள் மதம் என்பது ஆரியப் புராண மதமேயாகும். கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் முதலாகிய இந்துக்கள் அல்லாத மற்ற வேறு எந்தச் சமயக்காரர்களுக்கும் மதங்கள் உண்டு என்றால் அவைகள் பைபிள் மதம் (அதாவது சத்திய வேதம் மதம்) குர்ரான் மதம் (திருக்குர்ரான்படி நடக்கும் மதம்) என்றெல்லாம் பெரிதும் சொல்லப்படுமே ஒழிய வேறு விதமாய் இருப்பதில்லை. ஆனால் திராவிடர்கள் தம்மை இந்து மதஸ்தர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், அப்படிச் சொல்லிக் கொள்ளுகிறவர்கள் அத்தனை பேர்களும் ஆரியப் புராண மதக்காரர்களாகத்தான் இருந்தும், நடந்தும் வருகிறார்களே தவிர தங்களுக்கு என்று வேதமோ சாஸ்திரமோ இல்லாதவர்களாகவே இருந்து வருகிறார்கள்.
திராவிடர்களுக்கு வேதம் கிடையாது. இருப்பதாகச் சொல்லப்படுமானால் அது திராவிடர்களுக்கு சம்பந்தப்பட்டதல்லவென்றும், திராவிடர்கள் பார்க்கவோ தெரிந்து கொள்ளவோ கூடியது அல்ல என்றும்தான் சொல்லப்படுமே ஒழிய திராவிடர்களுக்குரிய வேதம் கிடையாது. திராவிட வேதம் என்று எதையாவது சொல்லப்படுமானால், அது திராவிடர்கள் பின்பற்றுகிற _ நடத்தப்படுகிற தன்மைக்கும், நடப்புக்கும் கட்டுப்பட்டதுமல்ல; பின்பற்றச் செய்வதுமல்ல.
திராவிடர்களுக்கு ஏதாவது சாஸ்திரங்கள் இருக்குமானால் அவை திராவிடர்கள் இன்ன மாதிரியாய் நடத்தப்பட வேண்டியவர்கள் என்றும், நடத்தப்பட வேண்டும் என்றும், திராவிடரல்லாத மற்றவர்களுக்கு அதிகாரம் அளிப்பதும், ஆக்கினை இடச் செய்வதுமான சாஸ்திரங்களே ஒழிய திராவிடர்கள் தாமாகவே நடந்து கொள்ளுவதற்கு ஏற்றதான சாஸ்திரங்கள் அல்ல. ஆகவே, திராவிடர்களாகிய நாம் சமயம் வேதம் சாஸ்திரம் ஆகிய எவையுமில்லாத ஒரு நிபந்தனையற்ற- திக்கற்ற அடிமைச் சமுதாயமாக இருந்து வருகிற ஒரு இழிவான, தாக்கப்பட்ட சமுதாயஸ்தர்களே யாவோம். இந்தப்படியான இழிவை நிலை நிறுத்தவும், திராவிடர்கள் தாங்களே அந்த இழிவைச் சிறிது நேரமாகிலும் இறக்கி வைக்காமல் சதா சுமந்து கொண்டே இருக்கச் செய்வதற்குமாக ஆரியர்களால் (எதிரிகளால்) ஏற்படுத்தப்பட்ட புராணங்களைப் பின்பற்றி நடப்பவர்களாக, இருப்பவர்களாகவே இருந்து வருகிறோம்.
இனி புராணங்களின் கருத்து என்ன என்று பார்ப்போம்
திராவிடர் ஆரியர் என்கின்றதான (தேவர்கள் அசுரர்கள் என்கின்ற) இரு இனங்களைக் குறிப்பிடுவதும், திராவிடர்களை (அசுரர்களை) ஆரியர்கள் (தேவர்கள்) இழிவுபடுத்தி, அடிமைப்படுத்திக் கீழ்மைப்படுத்திக் கொண்டதாகக் கற்பனை செய்யப்பட்ட கற்பனைச் சித்திரங்கள் அல்லாமல் மற்றபடி புராணங்களைப் பற்றிச்சொல்லவோ அதைப் பின்பற்றவோ புராணங்களில் என்ன இருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா?
தேவர்களை அசுரர்கள் தொல்லைப்படுத்தினார்கள். சிவன், விஷ்ணு என்கின்ற கடவுள்கள் தோன்றி அசுரர்களை வெற்றிகொண்டு, தேவர்களுக்கு அடிமையாக்கிக் கொடுத்து, தேவர்களைக் காப்பாற்றினார்கள் என்கின்றதாகவேயில்லாமல் மற்றப்படியான மனிதர்களுக்கு வேண்டியதான அறிவோ, ஒழுக்கமோ, நீதியோ, நாணயமோ எந்தப் புராணங்களிலாவது கடுகளவு காண முடிகிறதா?
அப்படிப்பட்ட புராணங்களில் காணப்படும் நடப்புகளைக் கொண்டாடுவதும் அவைகளில் சொல்லப்பட்டபடி நடப்பதும்தான் இன்று திராவிடர்களின் சமயமாக, நடப்பாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டவே இவ்வளவு சொன்னோம்.
இப்படியாகச் சொல்லப்படுபவைகளுக்கு ஓர் உதாரணம்தான் திராவிட மக்கள் தீபாவளி கொண்டாடுவது என்கின்றோம். இதை 20 வருடங்களுக்கு மேலாகச் சொல்லி வருகிறோம் என்பதை மேலே கூறினோம். அப்படி இருந்தும் இன்னமும் திராவிடர்கள் தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்பதைக் கருதியே இனியாவது கொண்டாடாதீர்கள் என்று வேண்டிக் கொள்ளுவதற்கு ஆகவே இந்த ஆண்டும் சொல்லுகிறோம்.
தீபாவளி என்பது என்ன? என்று பாருங்கள். திராவிடர் நாட்டில் பிராக் சோதிட புரி (வங்காளத்துக்கு பக்கத்தில் இருந்ததாம்) என்ற ஒரு நகரம் இருந்ததாம். அந்த நகரத்தை நரகாசுரன் என்று ஒரு அரசன் ஆண்டானாம். அவன் யார் என்றால் ஒரு பன்றி பூமியைப் புணர்ந்து பூமியைக் கர்ப்பமாக்கி, அந்தப் பூமியால் பெறப்பட்ட ஒரு அசுரனாம். அந்தப் பன்றி யார் என்றால், மகாவிஷ்ணு பன்றியாக அவதாரமெடுத்த பன்றியாம். இந்தப் பன்றிக்குப் பிறந்தவன் என்பதாக அந்த அரசனுக்கு ஒரு இழிவைக் கற்பிக்கத்தான் இந்தக் கதையைக் கற்பித்து புராணங்களில் ஒட்டவைத்திருக்க வேண்டுமே அன்றி மற்றபடி கடவுள் மலம் தின்னும் பன்றி உருவெடுத்ததும் அந்தப் பன்றி நிலத்தை (தரையை பூமியை)ப் புணருவது என்பதும் அந்த நிலம் கர்ப்பமாகிப் பிள்ளையைப் பெற்றது என்பதும் எப்படி அப்படியே நம்பக் கூடியனவாக இருக்க முடியும்?
ஆகவே இதன் இரகசியம் என்ன என்றால் திராவிட நாட்டு எல்லையில் பிறந்தவர்கள் அத்தனை பேரும் இழி மக்கள் என்பதைக் குறிப்பதற்காக அந்த நாட்டு மக்களாகிய திராவிட இனத்தினரைப் பன்றிக்குப் பிறந்தவர்கள் என்று ஆதாரத்தை ஏற்படுத்தினார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அரசன் தேவர்களைத் (ஆரியர்களை) தொல்லைப்படுத்தினான் என்பதாகச் சொல்லி அவன் மீது பழியேற்படுத்தி அவனை விஷ்ணு கொன்றார் என்றும் அக்கொலைக்கு விஷ்ணுவின் மனைவி சத்தியபாமை உதவி செய்தாள் என்றும் என்ன என்னமோ ஆபாசக் கதைகள் கட்டி இருக்கிறார்கள். அதிலும் அந்த விஷ்ணு என்பவர் கிருஷ்ணன் என்கிற ஒரு மனிதன்தானாம். அந்த மனிதன் இலட்சக்கணக்கான பெண்களை மணந்தவனாம். பல இலட்சக்கணக்கான பெண்களைப் புணர்ந்தவனாம். நரகாசுரனைக் கொன்று அவனுடைய 10 பெண்களையும் மணந்தவனாம். இன்னமும் இப்படிப்பட்ட ஆபாசங்கள் ஒரு வண்டிக்கு மேல் ஏற்றும்படியான சேதிகளைத்தான் இந்தப் புராணங்கள் கொண்டிருக்கின்றன.
இப்படிப்பட்ட புராணங்களைச் சமய ஆதாரங்கள் என்று ஏற்றுக் கொண்டு, அதில் வரும் சம்பவங்களைப் பின்பற்றுவது புண்ணிய காரியமென்று கருதிக் கொண்டு அப்படிப்பட்ட நரகாசுரன் கொல்லப்பட்டதற்கு மகிழ்ச்சி அடைந்து கொண்டாடுவது தான் நமது தீபாவளிப் பண்டிகை என்றால் இந்தக் கதை எப்படி இருந்தாலும் இந்தக் கொண்டாட்டம் (தீபாவளி) நாம் கொண்டாடுவது நமக்கு (திராவிடனுக்கு) மானமும், அறிவும் உடைமையாகுமா? என்று கேட்கிறோம்.
ஆகையால் தீபாவளியைத் திராவிடர்களாகிய நாம் வெறுக்கும் தினமாகக் கருதி, திராவிடத் தோழர்கள் அன்றைய தினம் பழைய கருப்பு உடைகளை, சட்டைகளை அணிந்து துக்கம் கொண்டாடும் பாவனையாய் இந்த இழிவு, பித்தலாட்டம், புராண ஆபாசங்கள் ஒழிய வேண்டும் என்கின்ற ஒலியுடன் ஊர்வலம் வந்து இந்தக் கதையை மக்களுக்கு எடுத்துச் சொல்லி உண்மை உணரும்படி செய்ய வேண்டியது கடமையாகும். மற்றபடி அன்று எண்ணெய் முழுக்கு, புதுவேஷ்டி அணிதல், வீட்டில் பலகாரம் செய்து சாப்பிடுதல் முதலியவை அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்.
தீபாவளி கொண்டாட வேண்டாம். அது திராவிடனை இழிவுபடுத்தி மூடனாக்கும் ஆரிய சூழ்ச்சி என்பதை மக்கள் உணரும்படி துண்டு நோட்டீசு எழுதுதல் மூலம் மக்களுக்கு விளக்க வேண்டும். இதைப் பெரிதும் கருப்புச் சட்டைத் தொண்டர்கள் செய்யவேண்டும். இப்போதிருந்தே பொதுக் கூட்டங்கள் மூலம் தெளிவுபடுத்த வேண்டும்.
இந்தக் கூட்டத்தில் அரசியல் பேச்சு, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் முதலிய கட்சிப் பேச்சு சிறிதும் பேசக் கூடாது. தீபாவளி கொண்டாடாதவர்கள் தங்கள் பெயர்களை எழுதி அனுப்பச் செய்ய வேண்டும் என்பவைகளைக் கவனிக்க வேண்டுகிறோம். குறிப்பு:- ஆங்காங்குள்ள திராவிடப் புலவர்களைக் கொண்டு தீபாவளிக் கதையைத் தெரிந்து கொள்ளலாம்.

---------------------------------தந்தைபெரியார் -” குடிஅரசு ”- தலையங்கம் - 12.10.1946

29 comments:

தமிழ் ஓவியா said...


தீபாவளி கொண்டாடுவோரே, வாழ்த்துச் சொல்வோரோ சிந்தனை செய்வீர்!

தீபாவளி - நரகாசுரன் கதை கட்டியது பார்ப்பனரே

தமிழ்க்கடல் மறைமலை அடிகளாரின் கருத்து

கண்ணன், நரகாசுரனைக் கொன்ற நாளின் நினைவுக் குறியாக தீபாவளி நாள் கொண்டாடப்படுவதாயிற்று என்னும் கதை பிற்காலத்தில் பார்ப்பனர் கட்டி விட்டதொன்றாகும். பார்ப்பனர் தமது உயிர்க் கொலை வேள்விக்கு உடன்படாத நரகாசுரன் என்னும் மன்னன் ஒருவனை தமக்குத் துணையாயிருந்த தமிழ் மன்னன் கண்ணனை ஏவிக் கொலை செய்தனர்

- தமிழர் மதம் என்ற நூலில் பக்கம் 200-201)

தமிழ் ஓவியா said...


அடுத்த பிசினஸ் ஆரம்பம்!


தீபாவளி இன்றோடு முடிந்தது - காசைக்கரியாக்கியாயிற்று; அடுத்த பிசினஸ் ஆரம்பிக்கப்பட வேண்டாமா?

கந்தசஷ்டி நாளை முதல் தொடக்கமாம்; சூரசம்ஹாரம் நவம்பர் 8ஆம் தேதி என்றுஎழுத ஆரம்பித்து விட்டனர்.

பக்தி என்பது பிசினஸ் என்று சொன்ன வாரியார் இன்று இருந்தால் அவர் வாயில் சாக்கரையைத்தான் அள்ளிக் கொட்ட வேண்டும்.

தமிழ் ஓவியா said...


காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதா? மீறினால் வீட்டுக்கு வீடு கறுப்புக் கொடிகளை ஏற்றுவீர்!


தமிழர்களின் ஒட்டு மொத்தமான உணர்வுகளைப் புறக்கணித்து காமன்வெல்த் மாநாட்டில்

இந்தியா கலந்து கொள்வதா?

மீறினால் வீட்டுக்கு வீடு கறுப்புக் கொடிகளை ஏற்றுவீர்!

பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்கின்ற கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா?

இவ்வாரத்தில் இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது; காரணம் இலங்கை இராஜபக்சே அரசு போர்க் குற்றவாளி என்று அய்.நா. அமைத்த குழு அறிக்கையே தந்து, அந்த ஆட்சியாளர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்து உலக நாடுகளிடையே பரவலாக உள்ளது. அதோடு மட்டுமல்ல; மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக அய்.நா. மனித உரிமை ஆணையம் அதன் தலைவர் நவநீதம்பிள்ளை அவர்கள் தலைமையில் விசாரணைக்கு அனுப்பப்பட்டு அறிக்கை தரும் நிலை உள்ளது. அவரை இராஜபக்சே ஆட்சியினர் எவ்வளவு கொச்சைப்படுத்தி மிகவும் கேவலமாக நடத்த முடியுமோ அவ்வளவு மோசமாக நடந்து கொண்டதும் உலகறிந்த உண்மைகளாகும்!

தமிழ்நாட்டு மக்களின் ஒட்டு மொத்தமான எண்ணம்

தமிழ்நாட்டில் டெசோ உட்பட, பிரதமரோ, இந்திய அரசோ இலங்கையில் இராஜபக்சே தலைமையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் அதிபர்கள் மாநாட்டிற்குச் சென்று கலந்து கொள்ளக் கூடாது என்று ஒரே குரலாக, பலரும் பல கட்சிகள் - வழக்குரைஞர்கள், விவசாயிகள், மாணவர்கள் முதலிய அனைத்துத் தரப்பினரும் பல்வகைப் போராட்டங்களையும் நடத்திய வண்ணமே உள்ளனர். தமிழ்நாடு சட்டப் பேரவையில், ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டின் குரல் - கோரிக்கை மத்திய அரசை நோக்கி இதுதான் என்று உணர்த்தும் வண்ணம் முதல் அமைச்சரால் கொண்டு வரப்பட்ட தீர்மானம், அனைத்துக் கட்சித் தலைவர்களாலும் வரவேற்கப்பட்டுள்ளது.

நீங்காக் கறையாகும்

சட்டமன்ற காங்கிரஸ் கட்சியும் இத்தீர்மானத்தை ஆதரித்தது; இவைகளையெல்லாம் புறக்கணித்து விட்டு, இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டிற்குச் சென்று தீருவது என்று பிரதமர் முடிவு செய்தால் தமிழர்களின் - (உலகத் தமிழர்களும் சேர்த்துப் பார்க்கப்படல் வேண்டும்) உணர்வுகளைப் புண்படுத்துவதும், புறக்கணிப்பதுமான விரும்பத் தகாத செயலாகி, வரலாற்றில் ஆட்சிக்கு என்றென்றும் நீங்காக் கறையாக ஆகிவிடும் என்பதை பிரதமர் உணர்ந்து முடிவு எடுக்கவேண்டும். அங்கு தேர்தல் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டணி, ஆளும் ராஜபக்சே கூட்டணியைத் தோற்கடித்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. திரு. விக்னேஸ்வரன் அவர்கள் முதல் அமைச்சராகத் தேர்ந்து எடுக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். அது இப்போது பொம்மை அரசுதான்!

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாமல் தனது எதிர்ப்பைப் பதிவு செய்வதன் மூலம்தான், இலங்கை போர்க் குற்றவாளி என்பது உறுதி செய்யப்படும் நிலை ஏற்படும் என்று தமிழ்த் தேசிய கூட்டணிக் கட்சி தலைவர் திரு. சம்பந்தன் அவர்கள் தெளிவாகக் கூறி, தமிழ்நாட்டு ஊடகங்களுக்குப் பேட்டியே கொடுத்துள்ளார்.

விக்னேஸ்வரன் சொன்னது என்ன?

இதில் திரு. விக்னேஸ்வரன் மட்டும் இந்தியா கலந்து கொள்ள வேண்டும்; பிரதமர், இலங்கை மாநாட்டிற்கு வர வேண்டும் என்று சொன்னார் என்று ஏடுகளில் வந்த செய்தி அவரால் இன்று மறுக்கப்பட்டுள்ளது. அப்படி மாநாட்டிற்குப் பிரதமர் வரும் பட்சத்தில் அவர் யாழ்ப்பாணம் வந்து பார்க்க வேண்டும் என்றுதான் நான் எழுதினேனே தவிர, அவர் அவசியம் வர வேண்டும் என்று கூறவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

மற்றொரு முக்கிய தகவல்:

காமன்வெல்த் அமைப்பு சார்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழு, வடக்கு மாகாண தேர்தல் ஒழுங்காகக் கூட நடைபெற முடியாமல் ராணுவத்தின் ஆதிக்கம் அதிகம் இருந்தது; எதிர்பார்த்த அளவுக்கு, ஜனநாயக நடைமுறைப்படி தேர்தல் நடைபெறவில்லை. இப்பகுதியில் பத்திரிகையாளர்களும் பாதுகாப்பாக, செய்தி சேகரிக்க முடியாத நிலை காணப்பட்டது. எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் தொடரக் கூடாது. எனவே, இலங்கையில் தன்னிச்சையான தேர்தல் ஆணையம் அமைக்கப்படல் வேண்டும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளது. - (தினமலர் 1.10.2013 பக்கம் 14)

கனடாவைப் பாருங்கள்

கனடா நாடு காமன்வெல்த் அமைப்பில் மிகவும் பங்கு பெற்றுள்ள - இங்கிலாந்துக்கு அடுத்தபடி உள்ள முக்கிய நாடு. அதன் பிரதமரே இலங்கையில் மனித உரிமை மீறல், இனப் படுகொலையை ஏற்காமல் மனிதநேயத்துடன் காமன்வெல்த் மாநாட்டில் பங்கு கொள்ளப் போவதில்லை என்று அறிவித்து விட்டார்.

நமது இந்திய அரசின் பிரதமருக்கு அவரை விட அதிக பொறுப்பும், தமிழர்கள் தொப்புள் கொடி உறவும் உள்ளவர்கள் ஆயிற்றே! தமிழ்நாட்டுத் தமிழர்களின் வாக்கெடுப்பால்தான் இந்த அரசே (UPA) வந்துள்ளது!

தமிழ் ஓவியா said...

மதவாதம் பல்வேறு மாயாஜாலங்களைக் காட்டி ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கும் நிலையில், காங்கிரஸ் இப்படி - அதன் முக்கிய தலைவரின் மத்திய அமைச்சர்கள் பலர்- கருத்தையும் அலட்சியப்படுத்தி விட்டு முடிவு எடுத்தால் - பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அது பெரும் தற்கொலை முயற்சி போல் ஆகி விடாதா என்பதைச் சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

பிரிட்டன் சேனல் - 4 வெளிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்!

பிரிட்டன் சேனல்-4 - மூலம் இசைப்பிரியா பற்றிய இலங்கை அரசின் சகிக்கவே முடியாத மனித உரிமை மீறல் இனப்படுகொலை எப்படிப்பட்டது; எப்படி இதை மூடி மறைத்து போரில் கொல்லப்பட்டதுபோல் ஜோடனை செய்த புரட்டு இப்போது காட்சிகள் மூலம் அம்பலமாகி விட்டனவே! - பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் என்ற இளந்தளிர் சுட்டுக் கொல்லப்பட்ட படம் தமிழ்நாட்டு மக்களின் மனதில் இன்னும் நிழலாடிக் கொண்டிருக்கும் நிலையில் ஊடகவியலார் இசைப்பிரியா கொலை (பிரபாகரனின் மகள் என்ற தப்புக் கணக்கோடு) இராணுவத்தால் நடைபெற்றுள்ள ஒரு பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்பை தமிழ் மண்ணில் ஏற்படுத்தியுள்ளது.

பி.ஜே.பி.யில் குழப்பம்

தமிழ்நாட்டு பா.ஜ.க. தலைவர் திரு. பொன் இராதாகிருஷ்ணன், இந்திய அரசோ பிரதமரோ

கலந்து கொள்ளக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்; வரவேற்கிறோம்.

ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்போ கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது! திரு. வெங்கைய நாயுடு அவர்கள் இரண்டுக்கும் மத்தியில் குழப்பத்துடன் பேசியுள்ளார்!!

13ஆவது சட்டத் திருத்தத்தையோ, தமிழர்கள் அங்கு ஆட்சி அதிகாரத்தைப் பெற வேண்டும் என்பதையோ காமன்வெல்த் மாநாட்டிற்குச் சென்றுதான் நமது பிரதமர் இராஜபக்சேவிடம் வற்புறுத்த வேண்டும் என்பதல்ல; எந்த நிலையிலும் பேசலாம், வற்புறுத்தலாம் (காரணம் அது இரண்டு நாடுகள் இணைந்து போட்ட ஒப்பந்தம் ஆகும்) மேலும் பல்லாயிரங் கோடி ரூபாய்களையும், ஆயுதங்களையும் கொடுத்துதவிய இந்திய அரசுக்கு இப்படி வற்புறுத்திட உரிமையும், அதிகாரமும் உண்டே!

எனவே அங்கே கலந்துகொள்வதற்கு இப்படி ஒரு நொண்டிச் சாக்கு - போலிக் காரணம் தேவை இல்லை.

நமது நாட்டுப் புறக்கணிப்பு என்பது இலங்கைக்கு மட்டும் எச்சரிக்கை ஆகாது. உலக நாடுகளுக்கும் இந்தியா, இலங்கையைப்பற்றி ஒரு வெளிச்சத்தைக் காட்ட அது உதவிடும்.

வீட்டுக்கு வீடு கறுப்புக் கொடி ஏற்றுவீர்!

இவற்றையெல்லாம் மீறி நமது பிரதமர் கலந்து கொள்ள முடிவு எடுத்தால், தமிழ்நாட்டுத் தமிழர்களாகிய நாம் நமது எதிர்ப்பை அறவழியில் காட்டியாக வேண்டும்.

அவரவர் இல்லங்களில், இடங்களில் கறுப்புக் கொடிகளை அந்த நாள்களில் (நவம்பர் 15-17) பறக்க விட்டு நமது துயரத்தை, எதிர்ப்பை, கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.

இது ஒரு கட்சியின் வேண்டுகோள் அல்ல; ஒட்டு மொத்த தமிழர்களின் உணர்ச்சிக்கான அறிவிப்பாகும்.

தமிழ் மானம் காப்போம்!



சென்னை
2.11.2013

தமிழ் ஓவியா said...


இந்து ஏட்டில் ஆர்.எஸ்.எஸ். பற்றி எழுதிய பெண் எழுத்தாளருக்கு கொலை மிரட்டல்
புதுடில்லி, நவ.2- சர்தார் வல்லபாய் படேல் பற்றி கட்டுரை எழுதிய பெண் பத்திரிகையாள ருக்கு ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஜய் மாக் கன் புகார் கூறினார். இச்சம்பவத் துக்குக் கடும் கண்டனம் தெரி வித்த அவர், இது குறித்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக டில்லியில் செய்தியாளர்களிடம் அஜய் மாக் கன் வியாழக்கிழமை கூறியதாவது:

ஆங்கில நாளிதழில் பெண் பத்திரிகையாளர் வித்யா சுப்பிர மணியன் சர்தார் வல்லபாய் படேல் கால நிகழ்வு தொடர்பாக கட்டுரை எழுதினார். அதைத் தொடர்ந்து அவருக்கு ஆர்எஸ் எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப் புகள் மிரட்டல் விடுத்ததாக கடந்த 15-ஆம் தேதி டில்லி நாடா ளுமன்ற சாலை காவல் நிலையத் தில் புகார் அளித்தார். அதில் தனக்கு தொலைபேசி வாயிலாக வும் உடல் ரீதியாகவும் குண்டு வீசி கொலை செய்து விடுவதாகவும் ஆர்எஸ்எஸ், விஸ்வ ஹிந்து பரி ஷத் அமைப்புகளைச் சேர்ந்த வர்கள் மிரட்டல் விடுப்பதாக வித்யா சுப்பிரமணியன் கூறியுள் ளார். இந்த விவகாரம் தொடர் பாக உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி டில்லி காவல்துறைக்கு உத்தர விடும்படி மத்திய உள்துறை அமைச் சர் சுஷீல் குமார் ஷிண்டே வுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.

பத்திரிகை சுதந்திரத்தைப் பாது காப்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. சமூகத்தைப் பிரதிபதி லிக்கும் நிகழ்வுகளை ஆய்வு செய்து கட்டுரை எழுதும் பத்திரி கையாளரை அதுவும் பெண் பத்திரிகையாளருக்கு மிகவும் இழிவான முறையில் ஆர்எஸ்எஸ் அமைப்பு விடுக்கும் மிரட்டல் ஏற்றுக்கொள்ள முடியாதது. கண்டனத்துக்குரியது என்றார் அஜய் மாக்கன்.

இது குறித்து கருத்து தெரி வித்த மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே, அஜய் மாக்கனின் கடி தத்தை மத்திய உள்துறைச் செய லாளர் அனில் கோஸ்வாமிக்கு அனுப்பியுள்ளேன். உரிய நடவ டிக்கை எடுக்கப்படும். ஜனநாயகத் தில் ஓர் அமைப்பு தொடர்பான விமர்சனங்களை ஏற்றுக் கொள் ளும் பக்குவம் சமூக அமைப்பு களுக்கு இருக்க வேண்டும். மிரட் டல் விடுவது சரியல்ல என்றார்.

இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லேகி கருத்து கூறுகையில் அஜய் மாக் கனின் கடிதத்துக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என்று வித்யா சுப்பிரமணியனே தொலைக்காட் சிக்கு அளித்த பேட்டியில் கூறி யுள்ளார். இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி ஆதாயம் பெற காங்கிரஸ் முயற்சிக்கிறது என்றார்.

இதற்கிடையே, வித்யா சுப்பிரமணியன் புகார் குறித்து நாடாளுமன்ற காவல் நிலைய துணை ஆணையர் எஸ்.பி.எஸ். தியாகியிடம் கேட்டதற்கு பெண் பத்திரிகையாளர் அளித்த புகார் மீது இந்திய தண்டனைச் சட்டம் 506-ஆவது பிரிவின்படி (குற்றம் புரியும் நோக்குடன் அச்சுறுத்து வது) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவர் புகார் கூறிய அதே நாளில் அதை மேல் விசாரணைக்காக தமிழ்நாடு காவல்துறைக்கு தில்லி காவல் துறை அனுப்பி விட்டது என்றார்.

தமிழ் ஓவியா said...


சொல்லவேண்டும்


பார்ப்பனியமும், மத ஆதிக்கமும் ஒழிந்தாலொழிய இந்தியாவில் யோக்கியமான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர்பார்க்க முடியாது. பார்ப்பனிய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.
(குடிஅரசு, 17.8.1930)

தமிழ் ஓவியா said...


கலைஞர்மீது காய்ச்சல்!
மோடியைப் பிரதமர் நாற்காலியில் உட்கார வைத்தே தீருவது என்று, ஒற்றைக்காலில் ஊசி முனையில் அமர்ந்து தவம் இருக்கும் திருவாளர் சோ ராமசாமி, தமது துக்ளக் இதழில் (30.10.2013 பக்.21) கேள்வி ஒன்றுக்கு அளித்த பதில் வருமாறு:

கேள்வி: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தை, குஜராத் அரசு முறையாகச் செயல்படுத்தவில்லை என்று, சி.ஏ.ஜி. குற்றம் சாட்டியுள்ளாரே! இதற்கு உங்கள் பதில் என்ன?

பதில்: இதற்கு உங்கள் பதில் என்ன என்று என்னை நீங்கள் கேட்பதற்கு நான் என்ன குஜராத் அரசா?

என்று பதில் எழுதியுள்ளார். சோவின் அறிவு நாணயம் எந்தத் தன்மையது - பதில் சொல்லும் தரம் எந்தத் தகுதியானது? என்பதற்கு இது ஒருபதம்.

மோடியைப் பற்றியும் அவர் ஆட்சியையும் பற்றிக் கேட்டால் இதே பாணியில்தான் பதில் சொல்லி வந்திருக்கிறாரா?

பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடிக்குப் பயங்கரவாதிகளால் ஆபத்து இருப்பதாக நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு இதே பாணியில் பதில் சொல்வதாக இருந்தால் என்ன சொல்லியிருக்க வேண்டும்? நான் என்ன சி.பி.அய். இயக்குநரா இதையெல்லாம் தெரிந்து வைப்பதற்கு என்று சொல்லவில்லையே! இன் றைக்கு, இந்தியத் தலைவர்களில் பாதுகாப்பு மிகவும் தேவைப்படுகிறவர், மோடிதான் என்பதில் சந்தேகமே இல்லை, என்று பதில் சொல்லுகிறாரே எப்படி?

மோடியைக் காப்பாற்ற முடியவில்லை என்றால், நழுவி ஓடுவது, அல்லது எதிர்க் கேள்வி போட்டுத் தப்பிப்பது - இதுதான் சோவின் சூரத்தனம் போலும்!

2ஜிபற்றி சி.ஏ.ஜி. சொன்னால் அத்திரிபாட்சா கொழுக்கட்டை என்று தாவி குதிப்பார். அதே சி.ஏ.ஜி. குஜராத் முதல் அமைச்சர் பற்றி குற்றம் சுமத் தினால் நான் என்ன குஜராத் அரசா என்று குறுக்கு வழியில் தப்பித்து ஓடப் பார்ப்பார்.

உண்மையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தில், குஜராத் படுபாதாளத்தில் விழுந்து கிடக்கிறது.

குழந்தைகள் இறப்பு விகிதம் ஆயிரத்திற்கு 62 குஜராத்தில்; பிற மாநிலங்களிலோ 12 முதல் 14 வரைதான்!

மற்ற மற்ற மாநிலங்களில் பெண்களின் ஆயுள் காலம் 75 என்றால், குஜராத்தில் வெறும் 64 ஆண்டுகள்தான்.

அதே சி.ஏ.ஜி. 2012இல் குஜராத் மாநிலத்தில், நடைபெற்ற ஊழல் ரூ.16 ஆயிரம் கோடி என்று கூறியுள்ளார் - சி.ஏ.ஜி. அறிக்கை என்றால், அது 2ஜி மட்டும்தான் - திமுக சம்பந்தப்பட்டதுதான் - அதற்கு மட்டும்தான் சோ அய்யர் வாளால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இன்னொரு கேள்வி:

வரும் மக்களவைத் தேர்தலில் மோடியுடன் கை கோர்க்க கலைஞர் முன் வந்தால், அந்தக் கூட்டணிகளுக்கு உங்கள் ஆதரவுண்டா?

சோவின் பதில்: அவசியமே இல்லை. அது தானாகவே தோற்கும்; என் உதவி தேவைப்படாது என்கிறார்.

இந்தியா பூராவும் மோடியின் செல்வாக்குப் பறப்பதாக தம் பட்டம் அடிக்கும் திருவாளர் சோ திமுகவோடு கூட்டணி சேர்ந்தால் தோற்கும் என்கிறாரே இதன் பொருள் என்ன? (தமிழ் நாட்டிலே பி.ஜே.பி. இருக்கும் நிலையில் தி.மு.க.வுடன் கூட்டுச் சேர்ந்தால் பிஜேபிக்கும் இடம் கிடைக்கும் என்று அவரால் எழுத முடியாது. அப்படியொரு கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்பது வேறு சங்கதி)

மோடி பிரதமராக வரவேண்டும் என்பதைவிட கலைஞர் மீதான வெறுப்பு என்பது பூணூலில் நெருப்புப் பிடித்ததுபோல் கொதிக்கிறது.

அவர் வந்தால் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பார்; செம்மொழிக்கு சிம்மாசனம் கிடைக்கும், இடை இடையே தமிழன் தமிழ்ப் பண்பாடு, தமிழீழம், பகுத்தறிவுக் கொள்கை என்றெல்லாம் பேசிக்கொண்டே இருப்பார்.

பொறுக்குமா பூணூல் கோத்திரங்களுக்கு? அதுதான் கலைஞர்மீது பாய்ந்து பிராண்டுவ தற்குக் காரணம்; பார்ப்பனர்களுக்குத் தெரிவது தமிழர்களுக்குத் தெரிவதில்லையே என்ன செய்வது!

தமிழ் ஓவியா said...


வென்று அடக்கப்பட்ட அடிமைகள் - கதைப்பாடல்

(19ஆம் நூற்றாண்டில் மராத்திய மாநிலத்தில் சமூகப் புரட்சியாளர் ஜோதிராவ் பூலே அவர்கள் மக்களால் மகாத்மா என்று அப்போதே அழைக்கப் பட்டவர். பெரியார் போன்றே தெளிவான கொள்கை உரம் உள்ளவர் அவரது ஒரு கதைப் பாடல் 2 நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது இது: - ஆசிரியர்)

இந்த மண்ணின் ஆதிக்குடிகளை (ஆதிவாசிகளை) கேடு கெட்ட ஆரிய பார்ப்பனர்கள் வென்றார்கள். அவர் களை அடிமைப்படுத்தி தமது (வெறுப்புக் குரிய) அடிமைகளான அவர்களுக்கு இழிவு கற்பித்து வைத்துள்ளார்கள். நாம் யாருக்கும் ஒரு போதும் அடிமை (குடி) அல்லோம். வேதங்களை வெளிப்படை யாக கேள்விக்கு உள்ளாக்குங்கள். பகிரங்கமாக (வெளியில் அவற்றை இழுத்துப் போடுங்கள். தஸ்யூக்கள் (= அடிமைகள்) உண்மையில் வீரமும், இதய சுத்தமும், தம் நடத்தையில் நேர் மையும் உள்ளவர்களாக இருந்தார்கள்....

ஓ தஸ்யூக்களே, நீங்களே இந்த மண்ணின் பூர்வீகமான ஆண்டவர்கள். (ஆரியரால்) உங்கள்மீது கொண்டு வரப்பட்டுள்ள தாழ்வு (சீரழிவு) பற்றி நடுநிலையாகப் பாருங்கள். (பகுத்தறி வோடு சிந்தியுங்கள்). உங்களைத் தாழ்த்தி அவமானப்படுத்தியதன் மூலம் மனிதகுலமே அவமானப்படுத்தப்பட்டுள் ளது. யாருமே உங்களை மதிப்பது இல்லை. (உங்களைப்பற்றி நல்லவித மாகப் பேசுவதில்லை). அடிமைத்தனம் என்பது மிகவும் மதிப்புக்குறைவான தாகும் (கேவலமாகும்). உங்கள் குழந்தைகளின் வருங்காலம் மிகவும் மங்கலாக, மனச்சோர்வளிப்பதாகவே உள்ளது. ஓ தஸ்யூக்களே! தொலை நோக்கு சிந்தனையை மேற்கொள்ளுங் கள். நவீன. பகுத்தறிவுக் கருத்துகளை தழுவுங்கள். (ஏற்றுக் கொள்ளுங்கள்). இதுவே என் நிலைப்பாட்டின் சாரம் (என்கிறான் ஜோதி).

தமிழ் ஓவியா said...

ஆரியர்கள், மாங்குகளை பலவாறும் சித்திரவதை செய்தார்கள். சில சமயம் (தம்) கட்டடங்களின் அடித்தளங்களில்.. உயிரோடு புதைக்கவும் செய்தார்கள். இந்தக் கொடுமைகளுக்குத் தப்பிப் பிழைத்தவர்களாய், அந்த ஆரியர்களின் அநீதியான ஆட்சியில் தமக்கு எந்த வாய்ப்புகளோ, ஒளிமயமான எதிர் காலமோ கிடையாதவர்களாய், அவர் களின் தடபுடல் விருந்துகளில் இருந்து விழும் சில பருக்கைகளுக்காக (எச்சில் சோற்றுக்காக) பிச்சை எடுக்க வேண்டி யவர்களாய் சூத்திரர்கள் இருக்கிறார் கள். ஓ சூத்திரர்களே, சத்தியத்தைக் குறித்து எவ்வித நாட்டமும், ஆர்வமும், மதிப்பும் உங்களுக்கு இல்லை. உங்கள் சொந்த கண்ணியத்தை, அந்தஸ்தைப் பற்றியும் உங்களுக்கு கவலை இல்லை. இவ்வாறு (ஆரியரால்) நீங்கள் ஆண்மை அற்றவர்களாக (ஆற்றல் இல்லாதவர் களாக) ஆக்கப்பட்டிருக்கிறீர்கள். எல்லா அதிகாரத்தையும், செல்வாக்கை யும் பறிகொடுத்து விட்டதால் உங் களுக்கு கேடுகாலம் சூழ்ந்துள்ளது. இது மிகவும் வேதனைக்குரியதே. (உம் சோக நிலவரம் குறித்து) கவனமாகவும் உள்ளுக்குள் ஆழமாகவும் சிந்தியுங்கள்...

அவர்களின் சேவையில் நீங்கள் கடுமையாக பாடுபட்டிருந்தாலும், அந்தப் போக்கில் (உம் உடல், பொருள், ஆவி என) அனைத்தையும் தியாகம் செய்தி ருந்தாலும், இதுவரை தொடர்ந்து அவர்களை நீங்கள் பாதுகாத்து வந்திருந்தாலும் அவர்கள் உங்கள் மேல் துளியும் இரக்கம் வைக்கவில்லை. பூதேவர்கள் (பார்ப்பனர்கள்) உங்களைக் குறித்து பூரிப்பு கொண்டார்கள். எனவே, சித்திரவதைகளுக்கும், சீரழிவு களுக்கும் உங்களை கையளித்து உங் களைவிடுவித்துள்ளார்கள் அவர்கள்! பார்ப்பனர்களின் பாதங்களில் பழிக் கிடையாய் கிடக்கும்படி அவ்வளவு அடிமைத்தன்மை உள்ளவர்களாக நீங்கள் ஆனது எப்படி? மனு சுமிருதி யையும், பார்ப்பனர்களின் பிற (போலி) சாத்திரங்களையும் கவனமாகப் படித் தால் அவற்றுள் ஒளிந்துள்ள பெரிய அபாயத்தை நீங்கள் உணர்ந்து கொள் வீர்கள். பார்ப்பனர்களுக்கு நீங்கள் தாராள தானங்கள் வழங்கி சாந்தப் படுத்தும் வரைதான் அவர்கள் உங்களி டம் சினம் தணிந்திருப்பார்கள் என்பதை உங்கள் அனுபவத்தில் நீங்களே கண்டி ருக்கிறீர்கள். ஓ சூத்திரரே! பார்ப்பனன் உம் மனைவியை ஓர் அடிமையாக அல்லது வீட்டு வேலைக்காரியாக உம் கண் முன்னாலேயே மானபங்கம் செய்யும் மடத் துணிச்சல் உள்ளவனாக இருக்கிறான். நாம் இந்த மண்ணில் முன்னொரு காலத்தில் ஓ சூத்திரர்களே நீங்கள் சத்திரியராக இருந்தீர்கள் என்பதை வேதங்களில் இருந்து மேற் கோள் காட்டி நிரூபிக்கிறேன். (இந்த உண்மையை) கவனமாக காது கொடுத்து கேளுங்கள்.

உங்கள் வணக்கத்துக்குரிய ஆண் டைகளாகவும், முன்னோர்களாகவும் இருந்த பலி போன்ற (வீர) மன்னர்களை ஆரிய பார்ப்பனர்கள் அவமதித்து மானபங்கம் செய்தார்கள். உங்களை சித்திரவதைக்கு கையளித்தார்கள். இன்றைக்கு நீங்கள் பட்டினியால் வாடு கிறீர்கள். இவ்வாறு முழு உலகுக்கும் நீங்கள் பரிதாபமாக காட்சி அளிக் கிறீர்கள். பார்ப்பனர்களின் காலைக் கழுவி அந்த அழுக்கு நீரை புனித நீர் என குடிப்பதன் மூலம் உங்களை நீங்களே இழிவுபடுத்திக் கொள் கிறீர்கள். உண்மையான வீரஞ்செறிந்த மரபில் வந்த மக்களுக்கு இதைவிட வேறென்ன கேவலம் வேண்டும்?

கல்வியை நீங்கள் புறக்கணித்தால் நீங்கள் முற்றிலும் நாசமாகி

தமிழ் ஓவியா said...

விடுவீர்கள். உங்கள் பாரம்பரியத்தின் பெருமைக்கு அது ஒரு இழுக்காகவே எண்ணப்படும். ஆரியர்கள் தம் சொந்த வெற்றிக் கொடியை புகழ்க் கொடியை உயர்த்திப் பிடிக்கிறார்கள். தம் அற்ப வட்டத்துக் குள் தமக்குத் தாமே மகிழ்ச்சியாக இருந்து கொள்கிறார்கள். பெருமை வாய்ந்த பெற்றோர்களின் ஒளி பொருந் திய குல விளக்குகளாக நீங்கள் இருக் கிறீர்கள். ஆனால் ஆரியர்களின் கூண்டுகளுக்குள் சிறைப்பட்டிருக்கும் கிளிகளாக இருக்கிறீர்கள். எல்லாவித சிறப்புத் தகுதிகளையும் இழந்த நிலையில் இருக்கிறீர்கள். இதனால் உலகமே உங்களைப் பாராட்ட முடியாமல் இருக்கிறது. உம் தகுதியை கவிஞர்கள் வெளிப்படையாக பாடிப் பரவ முடியாது இருக்கிறது. சல்லிக்காசு இல்லாமல் இருக்கிறீர்கள். பல வண்ண ஓட்டுச் சட்டை போட்டிருக்கிறீர்கள். உங்கள் கழுத்தில் அடிமைத்தனத்தின் அடை யாளமாக ஒரு வெள்ளை பருத்தி நூல் சரடு தொங்குகிறது. வீட்டில் ஒரு விவசாயிக்குள்ள ஏழ்மையே உங்கள் பாடாக உள்ளது. உங்கள் பெண் மக்கள் கந்தலை சுற்றிக் கொண்டு நடமாட வேண்டிய நிர்ப்பந்தம். இணக்கமாகவும், இடைவிடாமலும் உங்களுக்கு உபதேசித் தாலும் உங்கள் கால்களை கட்டிப் போட்டுள்ள விலங்குகளை குறித்து நீங்கள் அவமானகரமாக உணர்வ தில்லை. முற்றிலும் ஒரு பன்றியைப் போலவே நீங்கள் இருக்கிறீர்கள். கங்கையின் தூய நீரில் அதை நீங்கள் குளிப்பாட்டினாலும், வெளியே கொண்டு வந்ததும் அது சாக்கடையில்தான் புரளும்....

சூத்திரர்களின் சேமநலன்கள் பற்றிய உண்மைக் கதையை நான் மறு படியும் உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். அறிவு (கல்வி) பற்றாக்குறையால் பல சூத்திரர்களும் படும் சோகமான துய ரங்களை அடிக்கடி கேள்விப்படுகிறேன். (அனுபவித்தும் இருக்கிறேன்). புகழ் பெற்ற சத்திரிய மன்னர்களான சிந்தி யாக்கள், ஹோல்க்கர்கள், போஸ்லேக் கள் போன்றோர் ஆரியர்களின் ஆழ மான சதித் திட்டத்தின் பேரளவை இன்னும் உணரவில்லை.

தமிழ் ஓவியா said...

வேதங்கள் என்னும் கடலை ஆங்கில பண்டிதர்கள் கடைந்தார்கள். அவற்றில் அடங்கியுள்ள பரம ரகசியத்தை நம் எல்லாருக்கும் வெளிப்படுத்திள்ளார்கள். வேத சாத்திரங்களின் பிழையான தத்து வத்தை அவர்கள் அலப்படுத்தினார்கள். சாசுவத சத்தியத்தை விவரித்து உள் ளார்கள். இவ்வாறு நன்மைத்தனத்தின் ஆட்சியை நிறுவியுள்ளார்கள். பார்ப்ப னர்கள் கதிகலங்கிப் போயிருக்கிறார் கள். (குழம்பிப் போய் இருக்கிறார்கள்). எனவே அவர்களில் சிலர் கிறித்த வத்தை தழுவினார்கள். எப்போதும் சத்தியத்தையே கடைப்பிடிப்பதாக நடிக்கிறார்கள். சாணக்கியத்தனமான பார்ப்பனர்கள் வெவ்வேறு இடங்களில் மக்கள் அமைப்புகளை நிறைய நிறுவத் தொடங்கி இருக்கிறார்கள் (மக்கள் மத்தியில்) ஒற்றுமையை வளர்ப்பதாக பொய்யாக வாக்குறுதி (வேறு உள் நோக்கத்துடன்) வழங்குகிறார்கள். ஆரியர்களின் இந்த சூழ்ச்சிக்கார தன் மையை சூத்திரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சாசுவத உண்மையைத் தேட முயல வேண்டும். ஆரியர்கள் கடைப் பிடித்துவரும் இந்த சூழ்ச்சிகள் மற்றும் நழுவல்களின் விளைவுகள் பேரழிவு பயப்பதாக இருக்கும். எனவே அதைப் பற்றி சூத்திரர்கள் கவனமாக சிந்திக்க வேண்டும். (வணக்கத்துக்குரிய) கவுதம புத்தர் பார்ப்பனர்களை அவர்களின் சொந்த களத்திலேயே தோற்கடித்தார். உலகப்புகழ் பெற்றார். எனவே பார்ப் பனர்கள், தம் இதயங்களில் புத்தருக்கு எதிராக ரகசியமாகப் பொருமுகிறார்கள் / காழ்ப்புணர்வு வளர்க்கிறார்கள். (தம் மனக்கோட்டை கரைந்ததற்கு) மாரில் அடித்துக் கொள்கிறார்கள். சத்தம் போட்டு ஒப்பாரி வைக்கிறார்கள். (புரட்சியின்/விழிப்புணர்வின்) ஒளிவீசும் கதிர்களை கூட்டிச் சேர்க்கவும் அகில அளவில் (= எல்லா இடத்தும்) பார்ப்பனர் களுக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்கவும் சூத்திரர்களால் முடியவில்லை. ஜோதி ராவ் புலேயின் வெளிப்படையான, நேருக்கு நேரான சொற்களில் பொதிந் திருக்கும் (தீர்க்க தரிசனமான) அர்த் தத்தை தயவு செய்து மனதில் வையுங் கள். சத்தியம் ஒன்று மட்டுமே கர்த்தரின் சமயம். வெற்றுப்படிப்பால் என்ன பிரயோ சனம் என்கிறான் ஜோதி.

இவ்வுலகில் சத்தியத்தை தவிர வேறு சமயம் இல்லை. இந்த மறைபொருளை எல்லா மக்களுக்கும் அறிவியுங்கள் என்கிறான் ஜோதி.

பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர் (பன்மொழிப்புலவர்), நற்குணங்கள் நிறைந்தவர், உண்மையை பேசுபவர்; இவர் முறைப்படி எந்த மதத்திலும் இணையத் தேவையில்லை. அவ்வாறே (அவர் காலத்தில்) நாடாளும் சக்கர வர்த்தியின் பாதுகாப்பும் அவருக்கு அவசியமில்லை. வயது அவருக்கு ஒரு பிரச்சினையோ தடையோ இல்லை. அவர்கள் எல்லா (மனித) உயிர்களையும் தன் சகோதர சகோதரியாக கருது கிறார்கள். புறச்சமய அபிப்பிராயங்கள் கொண்டிருப்பதால் அவருக்கு ஆணவம் வளர்ந்து விடுவதில்லை. சத்தியமே அவரது பிரதான சமயமாக இருக்கிறது. அவரது தினசரி செயல்களில் அது உள்ள படி பிரதிபலிக்கிறது என்கிறான் ஜோதி.

உண்மையாக நடப்பதில்தான் மெய்யான மனிதநேய சமயம் அடங்கி உள்ளது. இந்த மந்திர கவசத்தைப் பார்ப்பனன் அறியான். கடினமாக உழைக்கும் சூத்திரரின் பாதங்களை செல்வத்தின் தேவதையான திருமகள் வருடிக் கொடுக்கிறாள். அவர்களை ஒரு போதும் அவள் சாமானிய விவசாயிகள் என்றோ, தொழிலாளர்கள் என்றோ ஏளனமாக வெறுத்து ஒதுக்குவதில்லை. (உங்களைச் சுற்றியுள்ள) எல்லாரையும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கச் செய் தால் உலகில் இருக்கும் அனைத்து தீமைகளும் மறைந்து விடும். சுறு சுறுப்பாக உழைக்கும் மனிதரே ஏழை களின் உண்மையான நண்பர். அவரு டைய மேன்மைக்காக நீங்கள் பாடுபட வேண்டும் என்கிறான் ஜோதி.

நூல்: மகாத்மா புலே/தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் தமிழில்: சிங்கராயர்

தமிழ் ஓவியா said...


தஞ்சை நகர மன்ற தலைவரின் தகாத பேச்சுகள்

ஆசிரியருக்குக் கடிதம்

தஞ்சை நகர மன்ற தலைவரின் தகாத பேச்சுகள்

நான் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் 2003 முதல் தஞ்சை நகர தி.க. செயலாளர் பொறுப்பில் இருந்து கொண்டு இயக்கப்பணி செய்து வருகிறேன். என் துணைவியார் மு.ஜெயலட்சுமி தஞ்சை நகர 3-ஆவது வட்ட திமுக நகர் மன்ற உறுப்பினராக உள்ளார். கடந்த 7.10.2013 அன்று தஞ்சை நகராட்சி சார்பில் கரந்தைப் பகுதியில் மக்கள் குறை கேட்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தஞ்சை நகர் மன்றத் தலைவர் தஞ்சை தொகுதி சட்டமன்ற உறுப்பினர், கரந்தை பகுதி நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளார்கள்.

குறை கேட்கும் சமயத்தில் 3-ஆவது வட்டத்தைச் சேர்ந்த செல்லியம்மன் கோயில் தெரு தனபால் என்பவர் தனது வீட்டுக்கு ஒரு ஆண்டாக குடி தண்ணீர் வரவில்லை என்று சற்று கடுமையாக கேட்டுள்ளார். அது சமயம் என் துணைவியாரும் எங்கள் வார்டில் தண்ணீர் சரியாக வரவில்லை என்று கூறியிருக்கிறார். இது தொடர்பாக நகர் மன்றத் தலைவர் சாவித்திரி கோபால் என்பவர் முகாம் நடந்த இடத்தில் தக்க பதில் அளிக்காமல், மறு நாள் (8.10.2013) அன்று நகர் மன்றத் தலைவர் என்னுடைய அலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் 3-ஆவது வார்டைச் சேர்ந்த அரசுப் பணியி லிருந்த ஓய்வு பெற்ற ஒருவன், அவன் வீட்டுக்கு ஒரு ஆண்டாக தண்ணீர் வரவில்லை என்று சொல்கிறான். உங்கள் பெண்டாட்டியும் தண்ணீர் வரவில்லை என்று சொல்கிறார். என்னிடம் நேரில் வந்து சொல்லாமல் குறை கேட்கும் முகாமில் எப்படி சொல்லலாம். கரந்தை பகுதியில் உள்ள திமுக 3 வார்டுகளிலும் உள்ள பொதுமக்கள் பொய்யான கோரிக்கை மனு கொடுத்து இருக்கிறார்கள் என்று கரந்தையில் ஒலி பெருக்கி வைத்து விளம்பரம் செய்வேன். மூன்று வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் நடைபெறுவதை நிறுத்தி விடுவேன் என்று கடுங்கோபத்துடன் என்னை மிரட்டினார். நான் என் துணைவியாரை விசாரிக்கிறேன் என்று கூறிவிட்டு அலைபேசியை வைத்துவிட்டேன்.

மக்கள் குறை கேட்கும் முகாம் நடைபெற்ற விவரத்தை என் துணைவி யாரிடம் கேட்டபோது தெருக்களுக்கு தண்ணீர் சரியாக வரவில்லை என்று தான் சொன்னேன். மற்றபடி தவறாக எதுவும் சொல்லவில்லை என்று கூறினார். இதன் பிறகு நான் 9.10.2013 அன்று அலைபேசியில் மிரட்டியது குறித்து நகர் மன்றத் தலைவர் சாவித்திரி கோபால் அவர் அறையில் நேரில் சந்தித்து விவரம் கேட்டேன். அப்போதும் மக்கள் குறை கேட்கும் முகாமில் தண்ணீர் வரவில்லை என்று உங்கள் பெண்டாட்டி எப்படி சொல்லலாம்? அலுவலகத்தில் என்னிடம் நேரில் வந்துதானே சொல்ல வேண்டும் என்று ஆத்திரம் பொங்க கேட்டார். அதற்கு நான் என் துணைவியார் தவறாக கேட்கவில்லையே அவ்வாறு அவர் கேட்டது தவறு என்று உங்களுக்கு பட்டிருந்தால் அங்கேயே முகாம் நடந்த இடத்தில் கவுன்சிலரை கேட்க வேண்டியது தானே என்றவுடன், உங்கள் செல்போன் நம்பர்தானே இங்கு இருக்கிறது என்றார். ஏன் முரணாக பதில் சொல்லுறீங்க என்று கேட்டதும் மிகவும் கோபத்துடன் உங்களையெல்லாம் நாற்காலியில் உட்கார வைத்துப் பேசுவதே தப்பு என்று சொன்னார். அவருடைய எதிர்பாராத வார்த்தையில் அதிர்ச்சி அடைந்த நான் தொடர்ந்து வாதம் செய்தால் மேலும் அசிங்க படுத்துவார் என்று எண்ணி உடனடியாக அவர் அறையை விட்டு வெளியே வந்தேன். நான் அவரிடம் தவறாகவும் பேசவில்லை, தவறாகவும் நடந்து கொள்ளவில்லை. அவ்வாறு இருக்கும்போது நாற்காலியில் உட்கார வைத்துப் பேசுவது தப்பு என்று ஏன் சொன்னார் என்ற விவரம் தெரிய வில்லை. ஒரு வேளை அவர் உயர்ஜாதி (பாப்பாத்தி) பெண்மணியாகவும் நான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவன் என்ற எண்ணமா? அல்லது தி.க.காரனை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பேசினாரா? என்ற விவரம் தெரியவில்லை. எனவே இந்த நிகழ்வு தொடர்பாக கண்டனம் தெரிவிக்கும் வகையில் மேற்படி செய்தியை விடுதலையில் வெளியிட வேண்டும் என்று கணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

- கரந்தை சு. முருகேசன், நகரச் செயலாளர், தி.க. தஞ்சாவூர்

தமிழ் ஓவியா said...

ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு வந்த புதுவாழ்வு


கொஞ்ச நாளைக்கு முன்பு சுதேசமித்திரன் ஸ்ரீமான் ஈ. வெ. ராமசாமி நாயக்கரைப் பற்றி விஷமப் பிரசாரம் செய்து எழுதுகையில்,
ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் நடந்துகொண்டு வரும் நடவடிக்கையையும், பேசிவரும் பேச்சையும் பார்த்தால் வெகு சீக்கிரத்தில் ஸ்ரீமான் நாயக்கர் சென்னை கவர்னர் வீட்டுக்குக் கட்டித் தூக்கிக் கொண்டு போகப்படுவார் என்று தோன்றுகிறது என்று எழுதி இருந்தது. அதாவது ஸ்ரீமான் நாயக்கர் சர்க்காருக்கு அவ்வளவுதூரம் நல்லப்பிள்ளையாய் போய்விட்ட தாகவும், சர்க்காருடன் சேர்ந்துவிட்டதாகவும், இனி சர்க்கா ரையே ஆதரிப்பார் என்றும் ஜனங்கள் நினைக்கும்படியாக எழுதியிருந்தது.

அது எழுதியதிலிருந்து நாயக்கரும் தனக்கு ஏதாவது சர்க்கார் சன்மானம் வரும் என்றே எதிர்பார்த்தார். கடைசியாக அவர் பேரில் போடப்பட்டிருந்த இரகசியப் போலீசுகூட எடுபடாமல் இன்னமும் தொடருவதுடன், கலெக்டரும் போலீசாரும் கண்ணும் கருத்துமாயிருக்கிறார்கள். இது எப்படியோ இருக்கட்டும். ஆனால் சதா சர்வ காலம் சர்க்காரைத் தாக்குவதாக வேஷம் போட்டுப் பார்ப்பானல் லாதாரை தாக்குவதாலேயே பார்ப்பனர்களால் தேசியவீரர் என்று பெயர் பெற்று வயிறு வளர்க்கும் ஸ்ரீமான் சத்திய மூர்த்தி அய்யர் அவர்களை இப்போது சர்க்காரார் கவர்னர் வீட்டுக்கு ஒரே தூக்காக தூக்கிக் கொண்டே போய்விட்டார்கள்.

அது மாத்திரமல்ல, கவர்னர் பிரபு வீட்டு வாசல் படியைக் காக்கும் படியும் செய்துவிட்டார்கள். கவர்னர் பிரபு வீடு மாத்திர மல்ல கவர்னர் ஜனரல் பிரபு வாயில் காக்கும்படியும் செய்தாய்விட்டது. காரணம் என்ன? ஸ்ரீமான் ஈ. வெ. ராமசாமி நாயக்கர் இந்த கவர்னர் பிரபுவின் ஆட்சி யோக்கியமானதாக இல்லை. பார்ப்பனர்களின் கைக்குழந்தையாய் இருக்கிறாரா?

தமிழ் ஓவியா said...

இவர் ஆட்சியில் நடைபெறாத அக்கிரமங்களே இல்லை என்றும், நாணயக்குறைவு என்பது இந்த கவர்னர் ஆட்சியில் தாண்டவம் ஆடுவது போல் வேறு எந்த ஆட்சியிலும் இல்லை என்றும் சொல்லி இவரை திருப்பி அழைத்துக் கொள்ள வேண்டும் என்பதாக கோவை மகாநாட்டில் ஒரு பிரேரேபணை பிரேரேபித்ததும், ஸ்ரீமான் சத்தியமூர்த்தி போன்றோரின் உதவியில்லாமல் கவர்னர் நிருவாகம் நடைபெற முடியாமல் போய்விட்டதால் கவர்னர் பிரபு வீட்டிற்கு ஸ்ரீமான் சத்திய மூர்த்தியை மந்திரிமார்களும், சர் சி.பி.யும் கட்டித் தூக்கிக் கொண்டு போகவேண்டியதாய் ஏற்பட்டுப் போய்விட்டது. பிறகு கவர்னர் பிரபு தன் வீட்டிலிருந்து ஸ்ரீமான் சத்தியமூர்த்தியைக் கவர்னர் ஜெனரல் வீட்டுக்கு தூக்கிக் கொண்டுபோய் போட வேண்டியதாய் ஏற்பட்டுவிட்டது.

அல்லாமலும், தற்காலம் நமது கவர்னரின் நல்ல நடவடிக்கைக்கு ஸ்ரீமான் சத்தியமூர்த்திதான் நற்சாட்சி பத்திரமளிக்க வேண்டியதாய்விட்டது. அதற்காகவே வைசிராய் பிரபுவின் தரிசனமும் சத்தியமூர்த்திக்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டியதாய்விட்டது. ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு வந்த புதுவாழ்வே வாழ்வு! இதைக் கண்டு யாரும் பொறாமைப்படாமல் இருக்க முடியாது.

ஆனால் ஒருவிஷயம்; சர்க்கார் வாசனையே கூடாது என்று வேஷம் போட்ட மைலாப்பூர் கோஷ்டிக்கு, சர்க்கார் சம்பந்தமான விருந்துகளுக்குக் கூப்பிட்டாலும் போகக் கூடாது என்று கடும் பத்தியம் வைத்த சுயாஜ்ஜியக் கட்சிக்கு ஏதோ ஒரு வெள்ளைக்கார சீமாட்டி விருந்துக்கு ஸ்ரீமான் ஆர். கே. சண்முகம் செட்டியார் போய்விட்டு வந்ததால், சண்முகம் செட்டியார் பத்தியம் தவறிவிட்டார் என்று கத்தின சுயராஜ்ஜியக்கட்சி தலைவர்களுக்கு, ஆகிய இத்தனைக்கும் ஜீவாதார மான ஸ்ரீமான் சத்தியமூர்த்தி - தமிழ்நாட்டு காங்கிரஸ் கமிட்டி காரிய தரிசியும் காங்கிரஸ் முட்டுக்கட்டை பிரிவு கட்சி உப தலைவரான -சத்தியமூர்த்தி - கவர்னர் பிரபுவையும் வைசிராய் பிரபுவையும் பார்க்கப்போனதின் இரகசியம்தான் நமக்கு விளங்கவில்லை.

பார்ப்பனர்கள் தங்கள் காரியம் ஆவதற்கு எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்பதை மாத்திரம் வாசகர்களுக்குத் தெரிவிக்க இதை உபயோகித்துக் கொண்டோமே அல்லாமல் இதனால் தேசத்திற்கு நன்மையோ தீமையோ இருக்கிறதைக் காட்டுவதற்காக அல்ல. அன்றியும் கவர்னர் பிரபு வீட்டு வாசற்படி மிதித்த உடன் ஸ்ரீமான் சத்திய மூர்த்திக்கு பூர்வஞானம் வந்துவிட்டதற்கும் ஒரு சிறு உதாரணம் காட்டிவிட்டு இதை முடிக்கிறோம்.

அதாவது நீலகிரி மலையில் கவர்னர் பிரபுவைப் பார்த்துவிட்டு திரும்பின வுடன், மலையாளக்குடிவார மசோதா விஷயமாய் ஏற்படுத்திய சர்க்கார் கமிட் டியைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருக் கையில், தானும்கூட இருந்து நிறைவேற்றிய மலையாளக் குடிவார மசோதாவை சர் சி.பி. அய்யர் கவர்னரைக் கொண்டு நிராகரிக்கச் செய்து விட்டாரே என்கிற சொரணை இல்லாமல்,

சர் சி.பி. மலையாள ஜன்மிகளுக்குக் கொடுத்த வாக் குறுதியை நிறைவேற்றுகிற விஷயத்தில் கவலை எடுத்துக் கொண்டு அக் கமிட்டியை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்வதும் , தக்க மெஜாரிட்டி இருந்தால் மந்திரி வேலைகளை ஒப்புக் கொண்டு இரட்டை ஆட் சியை நடத்திப் பார்க்கலாம் என்று சொல்லுவதும் முதலான எவ்வளவு புதிய ஞானம் உண்டாயிருக்கிறது என்பதையும் வாசகர்கள் தான் அறிந்து கொள்ள வேண்டும்.

- குடிஅரசு - துணைத் தலையங்கம் - 07.08.1927

தமிழ் ஓவியா said...


டெல்லி கிருஷ்ணனும் - தமிழ்நாட்டுக் கிருஷ்ணனும்: சித்திரபுத்திரன்


டெல்லியில் உள்ள பாலகிருஷ்ண சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி என்கிற பண்டி கையின்போது தீண்டாதவர்கள் என்கிறவர்களை எல்லாம் கோவி லுக்குள் அனுமதிக்கப்பட்டிருப்ப தாக தமிழ்நாடு பத்திரிகையில் காணப்படுகிறது. புராணங்களின்படி கிருஷ்ணன் என்பதாக ஒரு சுவாமியோ, ஆசாமியோ இருந்ததாக நாம் ஒப்புக் கொள்வதானால் அது ஒரே சாமியாகத் தான் இருந் திருக்கலாமே தவிர, டெல்லிக்கு ஒரு கிருஷ்ணனும், தமிழ்நாட்டுக்கு ஒரு கிருஷ்ண னும் இருந்திருக்க முடியாது.

அப்படியிருக்க டெல்லி கிருஷ்ணன் தீண்டாதவர்கள் கோவிலுக்குள் போனால் ஓடிப்போகாமல் கோவில்களுக் குள்ளாகவே தைரியமாய் உயிருடன் இருக்கும்போது, நமது தமிழ்நாட்டுக் கோவில்களில் உள்ள கிருஷ்ணன் மாத்திரம் தீண்டாதவர்கள் உள்ளே போனால் கோவிலைவிட்டு ஓடிப்போவதோ அல்லது ஒரே அடியாய் செத்துப்போவதோ ஆனால் இந்த மாதிரி கிருஷ்ணனை வைத்து பூஜை செய்வ தால் நமக்கு என்ன பலன் அவரால் உண்டாகக் கூடும்?

ஒரு மனிதன் உள்ளே வந்தால் தாக்குப் பிடிக்காத கிருஷ்ணன் யாருக்கு என்ன செய்ய முடியும்? ஆதலால் தமிழ் நாட்டு கிருஷ்ணனை துரத்திவிட்டு டெல்லி கிருஷ்ணனைத்தான் தருவித்துக் கொள்ளவேண்டுமேயல்லாமல் இந்த மாதிரி சக்தியில்லாத, கிட்டப்போனால் ஓடிப்போகிற கிருஷ்ணன் நமக்கு அரை நிமிஷங்கூட கண்டிப்பாய் உதவவே உதவாது.

- குடிஅரசு - கட்டுரை - 28.8.1927

தமிழ் ஓவியா said...

ஒரு மறுப்பு!:நாயக்கர் முதல் மந்திரிக்கு உபசாரம் செய்தது

தமிழ்நாடு பத்திரிகையில் ஈரோடு ரெயில்வே ஸ்டேஷனில் ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் முதலானவர்கள் கனம் முதல் மந்திரியை வந்து சந்தித்து உபசரித்தார்கள் என்றும் சுதேசமித் திரனில் ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் டாக்டர் சுப்பராயனைக் கண்டு பேசினார் என்றும் எழுதப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு பத்திரிகைகளும் முறையே மந்திரிக்கு உபசாரம் மந்திரிகளின் பிரசாரம் என்ற தலைப்பு களின் கீழ் இதை எழுதியிருக்கின்றனர்.

எனவே, இதைப் படிக்கிறவர்கள் சந்தேகப்படக்கூடும். என்ன வெனில் மந்திரி சுப்பராயன் முதலியவர்களின் அக்கிரமமான நடத்தைகளை ஆதரிப்பதற்காகவும், மேன்மை தங்கிய கவர்னர், கவர்னர் பதவிக்கு லாயக்கில்லை, ஆதலால் அவரை திருப்பி அழைத்துக்கொள்ள வேண்டுமென்று கோவை மகாநாட்டில் தீர்மானம் கொண்டுவந்த ஒருவர் அதே மந்திரிக்கு ரயிலில் உபசாரம் செய்தார் என்பதாக ஏற்படுமானால் அவருக்கு (தீர்மானம் கொண்டு வந்தவருக்கு) எவ்வளவு யோக்கியப் பொறுப்பு இருக்கும் என்பதாக ஜனங்கள் நினைக்கக்கூடும் என்பதற்காகவும்,

மந்திரி தனது வேலையைக் காப்பாற்றிக் கொள்ளும் முறையில் அவர் செய்யும் பிரசாரத்தில் நமக்குப் பங்கு இருந்தது என்று பலர் நினைக்க இடமுண்டாகும் என்கிற எண்ணத்தின் பேரிலும், அந்த இரண்டு பத்திரிகைகளின் கூற்றையும் மறுக்கக் கடமைப்பட்டவனாக இருக் கிறேன். எனது நண்பர் ஸ்ரீமான் பி.டி.ராஜன் அவர்கள் தான் 26ஆம் தேதி மெயிலில் நீலகிரியிலிருந்து வருவதாக தந்தி கொடுத் திருந்ததால் அவரை வரவேற்க நான் ரயிலுக்குப் போயிருந்தேன். அப்போது ஸ்ரீமான் ராஜன் அவர்களும், டாக்டர் சுப்பராயன் அவர்களும் ஒரே வண்டியில் இருந்ததால் ஒருவருக்கொருவர் வந்தனம் செய்து கொண்டோம். நீலகிரிமலையில் மழை உண்டா என்று கேட்டேன். மந்திரி ஆம் என்றார்.

இதே மாதிரி மந்திரி கேட்ட ஒரு கேள்விக்கு நான் ஆம் என்றேன். இதற்குள் ஸ்ரீமான் ராஜனவர்களின் சாமான்கள் வண்டியி லிருந்து இறக்கப்பட்டு விட்டதால் இருவரும் டாக்டர் சுப்பராயனிடம் பயணம் சொல்லிக்கொண்டு புறப்பட்டு விட்டோம். மந்திரி இலாகா நியமனத் திற்காகவும், அவ்விலாகாவிலுள்ள ஆவலாதி களுக்காகவும், பலர் அங்கு வண்டிக்குள்ளாகவே கூடிவிட்டார்கள். இதுதான் நடந்த விஷயம். இவற்றைத் திரித்து நிருபர்கள் பத்திரிகைகளுக்கு எழுதி இருப்பது சரியல்லவென்றே கண்டிக்கிறேன்.

மந்திரிகளை நான் பார்ப்பது எனது நிலைக்கு உயர்வு தாழ்வு என்றாவது கருதி நான் இம்மறுப்பை எழுதவில்லை. அவசியம் நேர்ந்தால், அல்லது நண்பர்கள் என்கிற முறையில், ஒருவரை ஒருவர் காணவும், அளவளாவவும் கடமைப்பட்டவர்களே யாவோம். ஆனால், இந்த சந்தர்ப்பத்தில் விஷமத் தனமான தலையங்கமிட்டு ஜனங்கள் தப்பர்த்தம் கொள்ளும்படி எழுதியிருப்பதால் மறுக்க நேரிட்ட தற்கு வருந்துகிறேன்.

- குடிஅரசு - அறிவிப்பு - 31.07.1927

Unknown said...

தீபாவளி குறித்து தமிழின தலைவர் கருணாநிதி எதிர் வாதம் வைக்கும் அவர்...அவர்கள் நடத்தும் தொலைகாட்சியில் தீபாவளி லோகவை ஏன் போடா வேண்டும்.(மற்ற டிவி-களில் தீபாவளி லோகோ தீபாவளி ஆண்டு காலை தான் ஒளிர்ந்தது..ஆனால் கலைஞர் டிவி,இசை அருவி,சிரிபொலி,முரசு டிவி-யில் நேற்றே ஒளிர ஆரம்பித்து விட்டது....ஊருக்கு மட்டும் தான் உபதேசமா?

2. முரசு டிவி -யில் ஒவ்வொரு வெள்ளி கிழமைகளிலும் ஏதாவது பக்தி படம் ஒளிபரப்பு செய்வது rss டிவி கலை விட கலைஞர் டிவி தான் முன்னிலை வகிக்கின்றது. இது குறித்த......!!!????

3. தலைவர் அறிக்கை சூடாக இருந்தது....நான் உடனே twitter -இல் தலைவர் அறிக்கைக்கு இந்த நிலைபாடு ..எத்தனை நாழிகைக்கு என்று வினவி இருந்தேன்...இதோ இன்று சிதம்பரம் வந்தாயிற்று....இனி அறிக்கை மாறும்....வழ வழ ...கொழ கொழ.....!

4.எத்தனை நாள் இப்படி மாற்று அறிக்கை கொடுத்து கோமாளியாக சேஷ்டை செய்வார்..?

Unknown said...

தீபாவளி குறித்து தமிழின தலைவர் கருணாநிதி எதிர் வாதம் வைக்கும் அவர்...அவர்கள் நடத்தும் தொலைகாட்சியில் தீபாவளி லோகவை ஏன் போடா வேண்டும்.(மற்ற டிவி-களில் தீபாவளி லோகோ தீபாவளி ஆண்டு காலை தான் ஒளிர்ந்தது..ஆனால் கலைஞர் டிவி,இசை அருவி,சிரிபொலி,முரசு டிவி-யில் நேற்றே ஒளிர ஆரம்பித்து விட்டது....ஊருக்கு மட்டும் தான் உபதேசமா?

2. முரசு டிவி -யில் ஒவ்வொரு வெள்ளி கிழமைகளிலும் ஏதாவது பக்தி படம் ஒளிபரப்பு செய்வது rss டிவி கலை விட கலைஞர் டிவி தான் முன்னிலை வகிக்கின்றது. இது குறித்த......!!!????

3. தலைவர் அறிக்கை சூடாக இருந்தது....நான் உடனே twitter -இல் தலைவர் அறிக்கைக்கு இந்த நிலைபாடு ..எத்தனை நாழிகைக்கு என்று வினவி இருந்தேன்...இதோ இன்று சிதம்பரம் வந்தாயிற்று....இனி அறிக்கை மாறும்....வழ வழ ...கொழ கொழ.....!

4.எத்தனை நாள் இப்படி மாற்று அறிக்கை கொடுத்து கோமாளியாக சேஷ்டை செய்வார்..?

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்

கடவுளா? நதியா?

செய்தி: வரும் காலங்களில் வெள்ளப் பெருக்கிலிருந்து கோதார்நாத் சிவன் கோவிலைக் காப்பாற்ற வேண்டுமானால் நடுவே ஓடும் மந்தாகினி ஆற்றின் வழியை மாற்றியமைக்க வேண்டும் என்று தொல் பொருள் ஆய்வுத் துறை வலியுறுத்தியுள்ளது. சிந்தனை: ஆமாம், நாட்டுக்கு நதியைவிட குத்துக் கல்லுக் கடவுள்தானே முக்கியம்? ஆமாம் கடவுள் தான் சர்வசக்தி வாய்ந்தவரா யிற்றே - அவரைக் காப்பாற்றிக் கொள்ள அவராலேயே முடியாதா?

தமிழ் ஓவியா said...


கணக்கு மேதை ராமானுஜமும், கற்க வேண்டிய உண்மைப் பாடங்களும்!


- ஊசி மிளகாய்

விஜயபாரதம் மலரில் பருத்தியூர் டாக்டர் கே. சந்தானராமன் என்பவர் கணித மேதை (கும்பகோணம்) ராமானுஜன்பற்றி ஒரு வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை எழுதியுள்ளார்.

(ராமானுஜன் வாழ்க்கைப்பற்றிய வரலாற்றுத் திரைப்படத்தை பெரியார் படத்தின் இயக்குநர் ஞானராஜசேகரன் அவர்கள் தயாரித்து முடித்துள்ளார்).

இந்த ராமானுஜன் ஒரு ஏழை பார்ப்பனர் குடும்பத்தில் பிறந்தவர்; திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படித்தவர். அய்ந்தாம் வகுப்பு (பொதுத் தேர்வு அப்போது உண்டு) தஞ்சை மாவட்டத்திலேயே முதலாவதாக தேர்வாகி, ஸ்காலர்ஷிப் பெற்றுப் படித்தவர்.

பள்ளிப் பருவத்தில் கணக்கில் ஆர்வம் கொண்டு சிறந்தவராகத் திகழ்ந்த இவர் அங்கும் கணக்குப் புலி என்றால் கும்ப கோணம் அரசுக் கல்லூரியில் இண்டர் மீடியட் வகுப்பில் சேர்ந்து ஒரு முறை அல்ல; மூன்று முறை (இருமுறை கும்பகோணம் கல்லூரி, ஒருமுறை பச்சையப்பன் கல்லூரியில்) தோல்வி அடைந்தார்.

பிறகு குமாஸ்தா வேலையில் சேர்ந்து குடும்ப வாழ்வை நடத்தினார்.

இவருக்கு வாழ்வளித்தவர்கள் பச்சை யப்பன் கல்லூரி பேராசிரியர் சிங்காரவேலு, கேம்ப் பிரிட்ஜ் பல்கலைக் கழக ஹார்டி என்ற கணிதப் பேராசிரியர், லிட்டில்வுட் என்ற பேராசிரியர் மற்றும் கில்பர்ட்டி வாக்கர்.

1916ஆம் ஆண்டு இராமா னுஜத்திற்கு அவரின் கணித அறிவைப் பாராட்டி கேம் பிரிட்ஜ் பல்கலைக் கழகம் அவருக்கு பி.ஏ. பட்டம் வழங்கியது. (சென்னைப் பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவராக இருந்தபோது அங்கே கிடைக் காத பட்டம் கேம்பிரிட்ஜில் கிட்டியது).

தகுதி, திறமை முதல் வகுப்பு தேர்வு மார்க்குகளே அறிவின் எல்லை என்பவை போலித் தனங்கள் என்பதை இந்த சம்பவங்கள் காட்டவில்லையா?

வெள்ளைக்காரர்களுக்கு - இருந்த மனிதநேயம், சொந்த நாட்டு ஜாதிக்காரர் களுக்கோ, பணம், நிலபுல வசதி படைத்த வர்களுக்கோ இல்லையே! வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களும் அதன் பேராசிரியர் களும் காட்டிய பரிவு, கொடுத்த அங்கீகாரத் தின் முன்பு சுய ஜாதி அபிமானம், தேசாபிமானம் எம்மாத்திரம்?

அது மட்டுமா?

லண்டன் புறப்படுவதற்கு முன்னால் ராமானுஜன் குடுமியை எடுத்துவிட்டு கிராப்புத் தலையாக மாற்றிக் கொண்டார்! ஆங்கிலேயரைப் போல் கோட்டும், சூட்டும், டையும் அணிந்தார்!

பூஜை, புனஸ்காரங்களைவிடவில்லை (அதையும் இவர் எழுதியுள்ளார்)

அப்படியெல்லாம் இருந்து வாழ்ந்த அவருக்குரிய இறுதி மரியாதை அவர் சாவின் போது அந்த ஜாதி யினர், சொந்த உறவுகளால் கிடைத்ததா? அதுதான் வேதனை - வெட்கம்!

1920ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் நாள் இராமனுஜன் மறைந்தார். ராமானுஜன் இறுதிச் சடங்குகளில் அவர் உற வினர் வரவில்லை; காரணம் கடல் கடந்தார் (இராமன் கடல் கடந்துதானே இராவ ணனிடம் சண்டை போட்ட தாக இராமாயணம் கூறுகிறது; அது தோஷ மில்லையா? அதனால்தானோ என்னவோ இராமன் சரயு நதியில் வீழ்ந்து மாண்டான் போலும்!) என்பதற்காக யாரும் கலந்து கொள்ளவில்லை. ஜாதி வெறி - சனாதனம் படுத்திய பாட்டைப் பார்த்தீர்களா?

கட்டுரையாளர் எழுதுகிறார்:

நம் பெருமாள் செட்டியார் என்பவரும், சென்னை கலெக்டரும் (வெள்ளைக்காரர்) இறுதிக் கடன்களை இயற்றினர்!

நாடே இன்று போற்றுகின்ற இராமானு ஜத்தை உலகறியச் செய்தது அவரது ஜாதியல்ல; மதமல்ல, அறிவுதான் என்பதும், அதனை அங்கீகரித்து உதவியவர்கள் வெள்ளைக்காரர்கள் - அந்நியர்கள் என்பதும், இறுதி மரியாதை செலுத்தக் கூட ஜாதியும், சனாதனமும் முன் வராமல் இதயமற்ற முறையில் நடந்து கொண்டன என்பதும்தான் கற்க வேண்டிய பாடம் அல்லவா?

தமிழ் ஓவியா said...


தமிழா எது புனிதம்?


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான் என்றார் வள்ளுவனார்!

பிறக்கின்ற மனிதரிலே ஜாதி என்ற அடையாளம் இருப்பதுண்டா?

ஆதியிலே தொழில் முறையில் ஜாதி எனும் குறிப்பைத் தந்தார்.

பின்னாளில் ஜாதியிலே பேதம் தந்தார்

நால் வருண பேதமதை சுய நலத்தால்

மனுதர்மமெனும் பெயரில் எழுதி வைத்தார்.

பிரம்மாவின் சிரசினிலே தோன்றி னோம் என்று

பிறவியிலே தாங்கள் தான் உயர்ந் தோரென்றார்

உழைக்காமல் பிறர் உழைப்பில் வாழ்ந்து கொண்டு

தான் உயர்ந்தோர் என்பதிலே நியாயம் உண்டோ?

மற்றவரை சூத்திரராய் தீண்டாதாராய்

நடத்துவதில் கடுகளவும் தர்மம் உண்டா?

கோவில்களை கட்டுபவன் சூத்திரனா?

சிலை வடிக்கும் சிற்பியும் சூத்திரனா?

சூத்திரர்கள் வெட்டாத குளங்களுண்டா?

உழைப்பதற்கு மட்டும்தான் சூத்திரர்கள்

உழைக்காமல் எப்பொருளும் எமக்கு சொந்தம்

என்கின்ற பார்ப்பனனை அழைத்து வந்து

நம் வீட்டின் நடுவினிலே அமர வைத்து

அவன் வேண்டுகின்ற பொருளனைத்தும் வாரித் தந்து

அவன் காலில் சாஷ்டாங்கதெண்டனிட்டு

புரியாத அவன் மொழியை காதில் கேட்டு

புனித மென்று குடியுங்கள் கோமியத்தை

என்கின்ற அவன் சொல்லை நம்பி நாமும்

கோமியத்தை குடிப்பதனால் புனிதம் உண்டா?

இதை நன்கு சிந்திப்பீர் தமிழர்களே!

நம் வீட்டில் நடத்துகின்ற நிகழ்ச்சிகளுக்கெல்லாம்

பார்ப்பனன் வந்தால் தான் புனிதமென்று நினைப்பீரானால்

நாம் நம்மை சூத்திரராய் ஏற்பதாகும்.

இனியேனும் நமக்கு சுய மரியாதை வேண்டுமானால்

நம் வீட்டு நிகழ்ச்சிகளை நாமே செய்வோம்!

க.ஜெயராமன் (எ) பெரியார் தாசன்
ஜீ.மூக்கனூர்பட்டி.

தமிழ் ஓவியா said...

தீபாவளி: பட்டாசால் விபரீதம்!

கூரை வீடுகள் சாம்பல்

கெங்கவல்லி, நவ.3- கெங்கவல்லி அருகே, பட்டாசு விழுந்ததால், இரண்டு கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது.கெங்கவல்லி அருகே, ஒதியத்தூர் வடக்கு காட்டுக் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். அவருக்குச் சொந்தமான விவசாய தோட்டத்தில், கூரை கொட்டகை அமைத்து குடியிருந்து வந்தார்.

நேற்று பகல், 12.10 மணியளவில், பட்டாசு வெடித்தபோது, அதிலிருந்து வெளியான தீப்பொறி, கூரை கொட்டகையின் மீது விழுந்து, தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த நாகராஜ் தலைமையிலான, கெங்கவல்லி தீயணைப்பு அலுவலர்கள், விரைந்து சென்று, மேலும் தீ பரவாமல் தடுத்தணைத்தனர்.

எனினும், தீ விபத்தில், கூரை வீடு எரிந்து சாம்பலானது.அதேபோல், வீரகனூர், நல்லூரைச் சேர்ந்த சின்னசாமி என்பவரது குடியிருப்பு வீட்டின் அருகில், ராக்கெட் பட்டாசு வெடித்தபோது, அதன் தீப்பொறி கூரைவீட்டின் மேல் விழுந்து, மேற்கூரை தீயில் கருகியது.

மூன்று வீடுகள் சாம்பல்: ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்

நாகப்பட்டினம், நவ.3- நாகையில் நேற்று முன் தினம் இரவு பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று வீடுகள் எரிந்து சாம்பலானது.

நாகை, செக்கடித் தெருவைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (60); கூலித் தொழிலாளி. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை, அப்பகுதியில் உள்ளவர்கள் பட்டாசு வெடித்தனர். ராக்கெட் வெடி ஒன்று திருநாவுக்கரசு வீட்டின் கூரை மீது விழுந்ததில், வீடு தீப்பற்றி எரிந்தது. தீ, அருகில் இருந்த வெங்கடேசன், இளையராஜா ஆகியோர் வீடுகளுக்கும் பரவியது.

மூன்று வீடு களிலும் இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களும் தீயில் சேதமடைந்தன. நாகை, தீயணைப்பு நிலைய கோட்ட அலுவலர் துரை மாணிக்கம் தலைமையிலான, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, தீயை அணைத்தனர். தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மாவட்ட ஆட்சியர் முனுசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும், தலா 5 ஆயிரம் ரூபாய், 5 கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய், வேட்டி, சேலைகளை நிவாரணமாக வழங்கினார். சம்பவம் குறித்து நாகை டவுன் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சாக்குக் கிடங்கில் தீ விபத்து

திருப்பூர் குறிஞ்சி நகர் மெயின் வீதியில் உள்ள தனியார் சாக்குக் கிடங்கில் நேற்று இரவு திடீரெனத் தீப்பிடித்தது.

இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. அருகில் இருந்த சில வீடுகளுக்கும் தீ பரவியது. தகவல் அறிந்த தீய ணைப்புத் துறையினர் வந்து மேலும் பரவாமல் தீயை அணைத்தனர்.

அப்பகுதியில் பட்டாசு வெடித்தபோது தீப்பொறி பட்டு சாக்குக் கிடங்கில் தீப்பிடித்ததாகக் கூறப் படுகிறது. உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

தமிழ் ஓவியா said...


பதிப்பாளர் பார்வையில் பெரியார்



இத்தனை ஆண்டுகள் பதிப் பாளர் வாழ்வில் வர்த்தகரீதி யாக வெற்றிகரமானவராக இல்லையே என்ற வருத்தம் ஏற்பட்டதுண்டா?

வியாபாரத்துக்கு எந்தப் புத்தகம் உதவும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. கிராமத்தி லிருந்து தனது முதல் புத்தகத்தை யாரும் போடுவதற்கு வழியில்லாமல் யார் எடுத்துக் கொண்டு வருகிறார்களோ அவர்களது புத்தகங்களைப் போடவேண்டும் என்பதே எனது கொள்கை. இதுவரை ஆயிரத்துக்கும் மேல் தலைப்புகளில் புத்தகங்கள் போட்டுள்ளேன். நூல்களை ஒரு ரசிகனாக, ஒருவனாகவே வெளியிட்டு வருவ தால் நான் ஒரு வியாபாரியாக ஆக முடிய வில்லை. ஒரு எழுத்தாளனின் முதல் எழுத்தை எப்படியாவது போட்டுவிட வேண்டும் என்று நினைப்பேன். எல்லாரும் போடும் நூல்களைப் போடுவதில்லை என் பதை நான் குறிக்கோளாகவே வைத் துள்ளேன். திரு.வி.கவையும், பெரி யாரையும், காந்தியையும் படிப்பவன், பொருள் சேர்க்க வேண்டும் என்று நினைக்க மாட்டான்.

சிலப்பதிகாரம், தொல்காப் பியம் மற்றும் திருவாசகத்தின் காலம் குறித்து தமிழுணர்வாளர் களின் உணர்வுகளுக்கு எதி ரான கருத்துகள் உங்களிடம் உள்ளனவே?

திருவாசகத்தின் காலம் குறித்த ஒரு விவாதத்தில் மறைமலை அடிகள் அப்போது மூன்றாம் நூற்றாண்டுதான் என தொடர்ந்து வலிந்து எழுதி வந்தார். அதைப்பற்றி அப்பாதுரையிடம் விவாதித்தபோது, அவர் தமிழ்க் கடலையே குற்றம் சொல்கிறாயா என்றுதான் என்னிடம் கேட்டார். அவருக்கு ஒரு கருத்து இருந்தும் அதை அவர் வெளிப் படுத்தவே இல்லை. அறிஞர்களுக்குள்ளும் பக்தி உணர்வு உண்டு என்பதை அப்போது தான் புரிந்து கொண்டேன்.

ஒரு புதிய கருத்தைக்கேட்டால் அதைப் பரிசீலிக்க வேண்டும். அதை நான் பெரியார் வழியாகவே கற்றுக்கொண்டேன். மனிதனை உயர்த்தாத எதையும், மனிதனுக்கு நம்பிக்கை கொடுக்காத எதையும் அவர் எதிர்த்தார். அவர் வழியில் வந்ததால் எந்தப்புதிய கருத் துக்கும் என்னிடம் ஆதரவுண்டு. பெரியார் யாரையும் மேற்கோள் காட்டியதில்லை. சிக்கலுள்ள ஆயிரம் சமூகச் சிக்கல்களைப் பெரியார்தான் எடுத்துக்கொண்டார். மகாத்மா காந்தி அச்சப்பட்ட இடத்தில் பெரியார் நுழைந்தார். பெரியாரின் சிந்தனை கள் இன்னும் புதுமையாகவே இருக்கின்றன. அவரிடம் எதன்மீதும் கண்மூடித்தனமான பக்தி இல்லை. பக்தி இருக்கும் இடத்தில் ஆய்வுகள் உண்மையாக இருக்காது என்பதே எனது எண்ணமும்கூட.
- வெள்ளையாம்பட்டு சுந்தரம்

(தமிழில் வரலாறு, தொல்லியல் சார்ந்த நூல்களை பதிப்பித்தவர் - ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டவர்)

நன்றி: தி இந்து 2.11.2013

தமிழ் ஓவியா said...

கேள்வி: சிற்றுந்தில் இரட்டை இலை அரசு தவிர்த்திருக்கலாம்தானே?

பதில்: அது இரட்டை இலை இல்லை. பசுமையைக் குறிப்பிடும் நல்ல நோக்கத்தில் நான்கு இலைகள் கலைநயத்துடன் வரையப்பட்டுள்ளது என்கிறார் போக்குவரத்துத் துறை அமைச்சர். எம்.ஜி.ஆர். நினைவுச் சின்னத்தில் இரட்டை இலை, பிகாஸஸ் குதிரையின் உயரே எழும் சிறகுகளாக மாற முடியுமென்றால் சிற்றுந்தில் இரட்டை, இரட்டை இலைகள் பசுமையைக் குறிப்பதில் வியப் பில்லைதான்! அமைச்சர் காணும் கலைநயம் பலருக்கு ஜனநாயகப் பண்புகளின் கொலைக் களமாகத் தோன்றுவதிலும் வியப்பில்லை!
(நன்றி: கல்கி 10.11.2013)

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்



நம்நாட்டில் பார்ப்பானுக்கு வேலை கொடுப்பது ஆட்டுப் பட்டிக்கு நரியைக் காவலுக்கு வைப்பதுபோல் தான் ஆகும். குற்றப் பரம்பரையை எப்படி நடத்துகிறோமோ அப்படி நடத்தப் படவே வேண்டியவர்களாவார்கள் இந்தப் பார்ப்பனர்.
(விடுதலை, 12.11.1960)

தமிழ் ஓவியா said...


போலிக் கண்ணீர் மோடி


பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடி, அக்டோபர் 27ஆம் தேதி பாட்னாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றார். அப்பொழுது நிகழ்த்தப் பட்ட குண்டுவெடிப்பில் ஆறு பேர் பலியா னார்கள், 83 பேர் காயம் அடைந்தார்கள்.

அந்த வன்முறை கண்டிக்கத்தக்கதே; காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சிகளும் அதனைக் கண்டிக்கவே செய்தன.

அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய நரேந்திர மோடி, அந்தச் சம்பவம் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை; கண்டனம் தெரிவிக்கவில்லை; பலியானவர்களுக்கு அனுதாபம் தெரிவித்துக் கூடப் பேசவில்லை.

இப்பொழுது அவருக்கு மனதில் ஆறாத் துயரம் வெடித்துக் கிளம்பி, அதிலிருந்து விடு படவே முடியாத ஆற்றாமையால், பீகார் மாநிலத் திற்கு ஓடோடிச் சென்று, இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

பொதுவாகப் பார்ப்பவர்களுக்கு - நல்ல அணுகுமுறைதானே - மனிதத் தன்மை என்பது இதுதானே என்று தோன்றக் கூடும்.

அதே நேரத்தில் மோடியைப் பற்றிய முழு வடிவத்தைத் தெரிந்தவர்களுக்கு, இது சுத்த நடிப்பு - அரசியல் பாசாங்குதனம் - பொது மக் களை ஏமாற்ற வடிக்கும் கிளிசரின் கண்ணீர் என்பதை, எளிதிற் புரிந்து கொள்ளலாம்!

குஜராத்தில் 2000-க்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்பட்ட தற்கு மூலகாரணமாக இருந்தவர் முதலமைச்சர் மோடி என்பது உலகத்துக்கே தெரிந்த உண்மை.

மூன்று நாட்கள் காவல் துறைக்கும், அரசு அதிகாரிகளுக்கும், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்க் கும்பலுக்கும் முழு உரிமை கொடுத்து, சிறுபான்மையினரை வேட்டையாடி முடியுங்கள் - காவல்துறை உங்களைக் கண்டு கொள்ளாது என்று உத்தரவிட்ட புண்ணிய வான் இந்த மோடியல்லவா!

கருவுற்ற பெண்களைக்கூட குத்திக் குடலைக் கிழித்து சிசுவை நெருப்பில் தூக்கிப் போட்டு கும்மாளம் போட்ட காட்டு விலங் காண்டிகளை இதற்கு முன் உலகம் கண்ட துண்டா? இந்த அருவருப்பான சாதனை மோடி அரசில்தான் நிகழ்த்தப்பட்டது.

அதனால்தான் உச்சநீதிமன்ற நீதிபதி, மோடியை நீரோ மன்னனுக்கு ஒப்பிட்டார் என்பதை மறந்து விடக் கூடாது.

குஜராத்தில் நடைபெற்ற இனப்படு கொலைக்கு, நியாயமாக பொறுப்பேற்று முதல் அமைச்சர் மோடி பதவி விலகி இருக்க வேண்டாமா?

குறைந்தபட்சம், வருத்தமாவது தெரிவித் திருக்க வேண்டாமா? மாறாக என்ன சொல்லு கிறார்? காரில் பயணம் செய்யும் போது நாய்க் குட்டி அடிபடும் பொழுது ஏற்படும் அளவுக்கு வருத்தப்படுவதாகச் சொல்லுகிறார் என்றால், அவரைப் பற்றிய மதிப்பீட்டைப் புரிந்து கொள்ளலாம்.

சொந்த வீடுகளை இழந்து அகதிகள் முகாம்களில் முடங்கிக் கிடந்த சிறுபான்மை மக்கள் இனவிருத்தி வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர் என்று பேசிய மிகப் பெரிய நாகரிகத்துக்குச் சொந்தக்காரர் இவர்.

தனக்குப் பிடிக்காதவர், சொந்த கட்சியில் இருந்தாலும், போட்டுத் தள்ளக் கூடியவர்; (எடுத்துக்காட்டு அமைச்சர் ஹரேன் பாண் டியா)

தன்னை நம்பி இருந்த அதிகாரிகளைக்கூட தன்மீது பழி வரக் கூடாது என்பதற்காகக், காட்டிக் கொடுத்த கண்ணியவான் இந்த மோடி.

இப்படிப்பட்ட ஒருவர், குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்காக, நேரில் சென்றார்; கண்ணீர் மல்கினார் என்ற செய்தியைப் படிக்கும் பொழுது, சிரிப்புதான் வருகிறது.

தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றிடவும், கடந்த காலத்தில் அவர்மீதுவிழுந்த மரண வியாபாரி என்ற முத்திரை சாயத்தைக் கழுவிக் கொள்ளவும், இப்படியெல்லாம் நாடகம் ஆடு கிறார் என்பதைப் பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் ஓவியா said...


இசைப்பிரியாவுக்கு நடந்த கொடூரத்திற்குப் பிறகும் காமன்வெல்த் மாநாட்டுக்கு இந்தியா செல்ல வேண்டுமா?


சென்னை, நவ. 4-இசைப்பிரி யாவுக்கு நடந்த கொடூரத்திற்குப் பிறகும் இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்ற இந்திய பிரதிநிதிகள் செல்ல வேண்டுமா? என்று திமுக தலைவர் கலைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் கலைஞர் நேற்று (3.11.2013) வெளி யிட்ட அறிக்கை வருமாறு:

பெயரே அழகு! அவள் முகமோ, குழந்தை முகம்! கல்லூரி சென்று வரும் குழந்தை என்று கூடச் சொல்லலாம். 27 வயதே நிரம்பியவள்! அவர் உலகத்தில் பிறந்ததற்கு, செய்த பாவம் விடுதலைப் புலிகளின் ஊட கப் பிரிவில் அவளும் ஒருத்தியாக தன்னை இணைத்துக் கொண்டது தான். விடுதலைப் புலிகள் இயக்கத் தின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன், பாலச்சந்திரனை சுட்டுக் கொலை செய்தது உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கான சிறுவர்களையும், பெண் களையும், முதியோர்களையும் கொன்ற கொடுமைகளுக்கு ராஜபக்சே பதில் சொல்லியே தீர வேண்டும்.

தமிழ்ப் பெண்கள் சிங்கள ராணு வத்தினரால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப் பட்ட காட்சிகளை வெளியிட்டுள்ள சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் தற்போது இசைப்பிரியா தொடர் பான காட்சிகளையும் படமாக்கி வெளியிட்டுள்ளது.

காமன்வெல்த் நாடுகளின் மாநாடு நடைபெறவிருக்கும் நேரத்தில், இசைப்பிரியா தொடர்பான காட்சி களை, அதே சேனல் 4 நிறுவனம் உலகம் முழுவதிலும் வெளிக் கொணர்ந்து நம்மையெல்லாம் தேம்பிப் புலம்ப வைத்துள்ளது. இந்தக் கொடுமையான காட்சியை, நம்முடைய நாட்டுப் பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சரும், ஏன் அந்தக் காமன்வெல்த் மாநாட் டில் இந்தியா கலந்து கொள்ள வேண் டுமென்று இன்னமும் குரல்கொடுத்து கொண்டிருப்பவர்களும் கண்ட பிறகும், அந்த மாநாட்டிலே கலந்து கொள்ள வேண்டுமென்று எண்ணு கிறார்களா? அதில் இந்தியா கலந்து கொண்டால், நாமெல்லாம் தமிழர் கள் தானா என்று சரித்திரம் சாப மிடாதா?

ஈழத்தில் நடந்த இனத் துடைப்பு நடவடிக்கைக்கும், மனித உரிமை மீறல்களுக்கும், வரலாறு கண்டிராத போர்க் குற்றங்களுக்கும் சுதந்திரமான தும், நம்பகமானதுமான சர்வதேச விசாரணை வேண்டும்; குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்; ஈழத் தமிழர் களுக்கு அவர்கள் விரும்பும் நியாயமான அரசியல் தீர்வை அவர்களே முடிவு செய்து கொள்ளும் வகையில், அய்.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்; என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

நெஞ்சை உலுக்கிடும் இந்த நிகழ் வுக்கு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திடும் வகையிலும், இலங்கையிலே நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட் டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று இங்குள்ள தமிழர்களும், உலகெங்கிலுமுள்ள தமிழர்களும் எதிர்பார்க்கிறார்கள். என்ன செய்திடப் போகிறது இந்திய அரசு? இசைப்பிரியா வுக்கு நடைபெற்ற கொடூரத்திற்குப் பிறகும் இந்தியா இலங்கை செல்ல வேண்டுமா? இவ்வாறு கலைஞர் அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

நீதி சொல்லும் சேதியா?

- கி.தளபதிராஜ்

நீதிபதி சந்துரு அவர்கள் 30.10.2013ல் வெளியான இந்து தமிழ் நாளிதழில் "கடைத்தேங்காயும் வழிப் பிள்ளையாரும்" எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் கல்விக்கடனாக 70,000 கோடி ரூபாய் இதுவரை மத்திய அரசு கடன் அளித் துள்ளதாகவும், அதன் விளைவுகள் பத்து ஆண்டுகள் கழித்தே தெரியவரும் என்றும் மத்திய நிதியமைச்சர் ப.சிதம் பரம் தமிழகத்தில் கடந்த வாரம் பேசி யதைச் சுட்டிக்காட்டி, "கடன் வாங் கியோரெல்லாம் சிறப்பான பட்டம் பெற்று தகுந்த வேலையில் அமர்ந்து பத்து ஆண்டுகள் கழித்து கடனைத் திருப்பித் தருவார்களா? என்று பொறுத்துத் தான் பார்க்கவேண்டும்". என்று குறிப்பிட்டுள்ளார்.

கட்டணம் செலுத்தி கல்லூரி செல்ல இயலாத மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவது குற்றமா? கல்விக் கடன் வழங்குவதை கடைத் தேங்காயும் வழிப்பிள்ளையாரும்" என விமர்சிக் கிறார். கல்விக்கடன் வழங்குவதும், முதல் தலைமுறையாக பயிலும் பட்டதாரி மாணவர்களுக்கு அரசே கல்விக் கட்டணத்தை செலுத்தியதும் சமூக நீதியல்லவா? கடைத்தேங்காய் ஆனா லும், காசு கொடுத்து வாங்கியதானா லும் வழிப்பிள்ளையாருக்கு உடைப்ப தால் விரயம் ஆகலாம். கல்விக்கடன் அப்படியா?

இப்படிப்பட்ட கல்விக் கடன்களால் தான் படிப்பறிவே இல்லாத பல்லாயிரக் கணக்கான ஏழைக் குடும்பங்களில் பிறந்த பிள்ளைகள் இன்று கல்லூரி வாயிலை மிதிக்கத் தொடங்கியிருக் கிறார்கள். கடன் வாங்கியோரெல்லாம் சிறப்பான பட்டம் பெற்று தகுந்த வேலையில் அமர்ந்து பத்து ஆண்டுகள் கழித்து கடனைத் திருப்பித்தரு வார்களா? என்று பொறுத்துத்தான் பார்க்க வேண்டும் என்று எழுதுகிறார். அப்படியென்ன அவர்கள் மீது வெறுப்பு? சமூக பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் அப்படிப் படித்து ஏதேனும் பட்டம் பெற்று விடுவார்களோ என்று அஞ்சுவது போலல்லவா தெரிகிறது?

சுயநிதிக் கல்லூரிகளில் சேரும் இலட்சக்கணக்காண மாணவர்களுக்கு கல்விக்கடன் அளிக்கப்படுகிறது. அதற்கான விதிமுறைகளை இந்தியன் வங்கிகள் சங்கமும், ரிசர்வ் வங்கியும் ஏற்படுத்தியுள்ளன. தேர்வில் குறிப்பிட்ட மதிப்பெண்கள் பெற்றுவந்தால்தான் வங்கிக்கடன் தொடரும் என்பதும், வங்கியில் வாராக்கடன் வைத்துள்ள நபர்களின் வாரிசுகளுக்கு கல்விக்கடன் வழங்கப்பட மாட்டாது என்பதும் பல வழக்குகளில் சோதனைக்கு உள் ளானது.

தந்தை வைத்த கடனுக்கு மகனை பலிகடா ஆக்கக்கூடாது என்றும், மதிப்பெண் அடிப்படையில் கடன் கொடுத்தால் அம்பேத்கர் போன்ற மேதைகள் உருவாகியிருக்க முடியாது என்றும், ரிசர்வ் வங்கியின் வழிமுறை களுக்கு சட்ட அடிப்படை இல்லை என்றும் தீர்ப்புகள் வழங்கப்பட்டதாக வேதனையோடு குறிப்பிட்டிருக்கிறார். பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு குறைந்தபட்ச தகுதியும் குறைக்கப்பட்டு விருப்பப்படுவோர் எல்லாம் சேர்ந்து கொள்ளும் வகையில் அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டதாக எழுதுகிறார்

தமிழ் ஓவியா said...

கணிதமேதை இராமானுஜம் இன்டர் மீடியட் படிப்பில் தோல்வி அடைந்தவர். மதிப்பெண்ணே ஒருவரது அறிவாற் றலையோ தகுதியையோ நிர்ணயிப்ப தில்லை என்பதற்கு இவரும் ஒரு எடுத் துக்காட்டு. இன்டர்மீடியட்டில் தோல்வி யுற்றதால் வீட்டிற்கு பயந்து வீட்டை விட்டே வெளியேறினார். அவரது தந்தை 1905ஆம் ஆண்டு இந்து நாளிதழில் விளம்பரம் கொடுத்து இராமானுஜத்தைக் கண்டுபிடித்தார். அப்படிப்பட்டவரின் அறிவுத்திறனை கண்டுகொண்ட ஜி.எச்.ஹார்டி என்ற வெள்ளைக்காரர்தான் அவரை கேம் பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்க ஏற்பாடுசெய்தார். அதனால் தான் நமக்கு ஒரு கணிதமேதை கிடைத்தார். பல்வேறு அறிவியற் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய தாமஸ் ஆல்வா எடிசன் கூட பள்ளிப் படிப்பில் தோல்வியுற்றவர் தானே?

பொறியியல் படிப்புகளில் நடத்தப் படும் தேர்வுகளில், குறைந்த மதிப் பெண் பெற்று கல்லூரியில் சேர்ந்தவர் களுக்கென தனியாக தேர்வு நடத்தப் படுகிறதா? அல்லது வேறு ஏதேனும் சலுகை காட்டப்படுகிறதா? கல்லூரியில் சேர்ந்தபின் அனைவரும் ஒரே மாதிரி யான தேர்வை எழுதித்தானே வெற்றி பெற்று வருகிறார்கள்? இதில் எந்த தகுதி திறமை குறைந்து போயிற்று?

விருப்பப்படுவோர் எல்லாம் சேர்ந்து கொள்ளும் வகையில் அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிடும் போது "எதை கொடுத்தாலும் சூத்திர னுக்கு கல்வியைக் கொடுக்காதே" என்கிற வாசகம் தானே நினைவில் வந்து தொலைக்கிறது. மாணவர்கள் வங்கிகளில் கடன்பெற்று கல்வி பயின்று தொழில்புரிந்து சம்பாதிக்கும் நிலையில் கல்விக்காக வங்கிகளிலிருந்து பெற்ற கடனை திருப்பிச் செலுத்தி, வரும் தலைமுறைக்கும் தொய்வின்றி இத் திட்டம் செயல்பட ஒத்துழைக்க வேண் டியது அவர்களது சமூக பொறுப்பு என் பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

கல்விக்கடன்கள் மனித ஆற்றலைப் பெருக்குமா?அல்லது வாராக் கடன் களுக்கு வழிவகுக்குமா சரித்திரம்தான் கூறவேண்டும் என்று எழுதும் நீதிபதி அவர்களே கல்விக்கடன் என்பது என்ன வியாபாரமா? மாணவர்களுக்கு கல்வி வழங்குவது நாட்டின் வளர்ச்சியல்லவா? சொத்தல்லவா?

பெரும் தொழிலதிபர்களுக்கு வழங்கப்பட்டு வாராக்கடனில் இருக்கும் நிதியோடு ஒப்பிடுகையில் இந்தக் கல்விக்கடன் எம்மாத்திரம்? குஜராத் தில் நானோ கார் உற்பத்தி செலவில் 60 சதவீதத்தை இடம் மற்றும் மற்ற மற்றதன் வாயிலாக அந்த அரசே ஏற்றுக் கொள்வதாக ஒரு புள்ளிவிபரம் கூறு கிறது. இப்படி அரசின் நிதி எத் தனையோ வழிகளில் செலவிடப்படு கிறது. அதையெல்லாம் விடுத்து ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கடன்கள் அவர் கண்களை உறுத்துமா னால் அது ஒரு போதும் நீதி சொல்லும் சேதியாக இருக்க முடியாது.