Search This Blog

2.9.13

கடவுள் என்றால் என்ன? - பெரியார்


நம்மில் அநேகர் கடவுள் என்றால் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? 

கடவுள் நம்மைப் போல் மனித உருவத்தோடு இருப்பதாகவும், அதற்குப் பெண்ணாட்டிப் பிள்ளை, தாய் தகப்பன், வீடு வாசல், சொத்து சுகம் உண்டென்றும், அதற்கும் கல்யாணம், ருது சாந்தி, படுக்கை, வீடு, சீமந்தம், பிள்ளைப்பேறு உண்டென்றும், இப்படி ஆயிரக்கணக்கான கடவுள் - ஆயிரக்கணக்கான பெயரினால் இருக்கிறதாகவும், அதற்கு அபிஷேகமோ, பூஜையோ, தீபாராதனையோ, உற்சவமோ செய்வது தான் பக்தி என்பதாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதுபோலவே மதம் என்பதையும், நெற்றியில் நாமமோ, விபூதியோ, கோபியோ, சந்தனமோ பூசுவது தான் இந்து மதம் என்றும், ஒருவரை ஒருவர் தாழ்ந்த சாதி, உயர்ந்த சாதி என்று சொல்லுவதைத் தான் இந்து மதம் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரி சுவாமிகளுக்குக் கோயில் கட்டு-வதையும், உற்சவம் நடத்துவிப்பதையும், இந்த உற்சவத்திற்கு வரும் ஜனங்களுக்கு மடம் கட்டுவதும், சத்திரம் கட்டுவதும், சாப்பாடு போடுவதும் தர்மம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்விதக் காரியத்தைப் பிரசாரம் செய்வதையும், இவ்விதக் காரியங்-களை நிர்வகிப்பதையும், இதற்காகப் பொது-ஜனங்கள் பொருளைச் செலவு செய்வதையும் பரிபாலனம் என்று நினைக்கிறார்கள்.
இந்து சமூகத்திற்கு அடிப்படையான குற்றம் - அதாவது அஸ்திவாரத்திலேயே பலவீனம் - நாம் கடவுளையும், மதத்தையும் அறிந்திருக்கும் பான்மையே தான். இந்தப் பான்மையுள்ள சமூகம் உருப்படியாவதற்கு மார்க்கமே இல்லை. தொட்டதற்கெல்லாம் கடவுள் செயல் என்பதும், நமது  தேவைகளையெல்லாம், நமது பிரயத்தனமில்லாமல், கடவுளை ஏமாற்றி அடைந்து விடலாம் என்கிற பேராசைப் பயித்தியமும், நம்மை விட்டு நீங்க வேண்டும்.
மனிதர்கள் இவ்வளவு அக்கிரமங்கள் செய்யக் காரணமே, கடவுளைச் சரியானபடி உணராததும், உணர்ந்திருப்பதாய் நினைக்கும் பலர் கடவுளை வணங்கி மன்னிப்புக் கேட்டால் மன்னித்து விடுவார் என்கிற நம்பிக்கையும் தான். கடவுள் ஒருவர் இருக்கிறார், அவர் எல்லா-வற்றையும் அறிந்து கொண்டு இருக்-கிறார் என்று எண்ணுகிற மக்களிலேயே ஆயிரத்தில் ஒருவன் கூட கடவுள் கட்டளைக்குப் பயந்து நடப்பது அருமை-யாய்த்தான் இருக்கிறது. இவற்றிற்குக் காரணம் இயற்கைக்கு விரோதமான கட்டளைகளையும், உண்மையான கடவுள் தன்மையையும் அறியாததே தான்.
கடவுள் கட்டளை என்று சொல்வது ஒவ்வொரு தேசத்திற்கும் ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு விதமாக இருந்து வருவதை நாம் காண்கின்றோம். இவை எப்படிக் கடவுள் கட்டளையாக மதிக்கப்படும்? அதுபோலவே பாவ புண்ணியம் என்பது தேசத்திற்கொரு விதமாகவும், மதத்திற்கொரு விதமாகவும், ஜாதிக்கொரு விதமாகவும் தான் கருதப்-படுகிறது. நமது கல்யாணங்களிலேயே மதத்திற்கு மதம் வித்தியாசம், ஜாதிக்கு ஜாதி வித்தியாசம். சிலர் தனது சிறிய தகப்பனார், பெரிய தகப்பனார் புத்திரியை மணக்கிறார்கள்; சிலர் அத்தை மாமன் புத்திரியை மணக்-கிறார்கள்; சிலர் யாரையும் மணக்கிறார்கள். ஆகார விஷயத்திலோ சிலர் பசுவை உண்ணு-வது பாவம் என்கிறார்கள். சிலர் பன்றியை உண்பது பாவம் என்கிறார்கள். சிலர் கோழியை உண்பது பாவம் என்கிறார்கள். ஜந்துக்களி-லேயே சிலர் பசுவை அடித்து, துன்புறுத்தி வேலை வாங்கலாம். ஆனால், பாம்பை அடிப்பது பாவம் என்கிறார்கள். சிலர் எந்த ஜீவனையும் வதைக்கக் கூடாது என்கிறார்கள். சிலர் எல்லா ஜீவன்களும் மனிதன் தன் இஷ்டம் போல் அனுபவிப்பதற்குத் தான் படைக்கப்-பட்டன என்கிறார்கள். இந்த நிலையில் எது உண்மை? எது கடவுள் கட்டளை? எது பாவம்? என்று எப்படி உணர முடியும்? இவற்றைப் பற்றி எவராவது ஆராய்ச்சி செய்யப் புகுந்தால் உடனே அவரை நாஸ்திகர் என்று சொல்லுவதும், இதெல்லாம் உனக்கு எதற்காக வேண்டும்? பெரியவர்கள் சொன்னபடியும், நடந்தபடியும் நடக்க வேண்டி-யது தானே என்றும் சொல்லி விடுவார்கள்.
சிலர் வேதம் என்று ஒன்றைச் சொல்லி, அதன்படி எல்லாரும் நடக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதில் என்ன சொல்லி-யிருக்கிறது? நான் பார்க்கலாமா என்றால், அது கடவுளால் சொல்லப்பட்டது, அதை நீ பார்ப்பது பாவம், நான் சொல்வதைத் தான் நம்ப வேண்டும் என்பார்கள். உலகத்தில் எத்தனைக் கடவுள் இருப்பார்கள். ஒரு கடவுள் தானே! அவர் சொல்லியிருப்பாரானால் அது உலகத்திற் கெல்லாம் ஒப்புக் கொள்ளப்-பட்டதாயிருக்க வேண்டாமா? அப்படியானால் கிறித்து, முகம்மது முதலிய மதங்களும், இந்தியா தவிர, மற்ற தேசங்களும் இதை ஒப்புக் கொள்ளும்படி கடவுள் ஏன் செய்யவில்லை? இம்மாதிரி மூடுமந்திரமானதும் இயற்கைக்-கும், அனுபவத்திற்கும், நாணயத்திற்கும் விரோத மானதுமான கொள்கைகள், நமது நாட்டில் இந்து மதத்தின் பெயரால் இருந்து கொண்டு ஒரு பெருஞ் சமூகத்தையே தேய்ந்து போகும்-படிச் செய்வதோடு, இதன் பரிபாலனம் என்னும் பெயரால் தேசத்தின் நேரமும், அறிவும், பொருளும் அளவற்று அனாவசிய-மாய்ச் செலவாகியும் வருகின்றன.
பெரியவர்கள் கோயிலில் சுவாமி கும்பிடும்போது கட்கத்திலிருக்கும் குழந்தை எப்படி ஒன்றும் அறியாமலும், மனதில் ஒன்றும் நினைக்காமலும் தானும் கைகூப்பிக் கும்பிடுகிறதோ, அதுபோலவே நமக்கும் தெய்வம் - மதம் - தர்மம் என்கிற சொற்கள் மற்ற-வர்கள் சொல்வதைக் கேட்டு, அர்த்தமில்லாமல் நமக்குள் பதிந்து விட்டன. இதுபோலவே, பக்தி - தொண்டு - அகிம்சை என்னும் பதங்களும் அர்த்தமில்லாமலே வழங்கப்படுகின்றன. யோசித்துப் பார்ப்போமேயானால் நம்மிடை-யில் உள்ள மக்களிடம் காட்டும் அன்புதான் நாம் பக்தி செய்யத்தக்க கடவுள்; அவர்களுக்குச் செய்யும் தொண்டு தான் கடவுள் தொண்டு; அம் மக்களின் விடுதலை தான் மோட்சம்; அச்சீவன்களிடம் கருணை காட்டுவதும் அவை வேதனைப் படாம-லிருப்பதும் தான் அகிம்சை.
-------------------------------------------(ஏழாயிரம் பண்ணையில் பாலிய நாடார் சங்க இரண்டாம் ஆண்டு விழாவில், தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து...) குடிஅரசு 30.5.1926.

24 comments:

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார் பிறந்த நாள் - வாழ்விலே ஒரு திருநாள்!


பெரியார் ஆயிரம் வினா - விடையில் இலட்சக்கணக்கான மாணவச் செல்வங்கள் பங்கேற்றுச் சாதனை!

பட்டிதொட்டியெல்லாம் பெரியார் கொள்கை முழக்கம் கேட்கட்டும்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

தந்தை பெரியார் 135ஆம் ஆண்டு பிறந்த நாளை (செப்டம்பர் 17) புதிய அம்சங்களுடன் சிறப்பாகக் கொண்டாடுவோம் - பட்டி தொட்டி யெல்லாம் பெரியார் கொள்கை முழக்கம் கேட்கட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத்தினர்களே,

கனிவான வணக்கம்.

செப்டம்பர் பிறந்து விட்டது!

நமது கொள்கைத் திருவிழாவின் கொடியேற்றம் துவங்கி விட்டது என்பதுதானே அதன் பொருள்?

போதி மரம் செல்லாப் புத்தன்!

தரணிக்கெல்லாம் தன்மானத்தைப் போதித்த, போதி மரம் செல்லாத புத்தனாம், நமது பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் பெருவிழா - திருவிழா (செப்டம்பர்) 17ஆம் தேதி துவங்கி, உலகெலாம் உன்னத அறிவுத் திருவிழாவாக, அறியாமைக்கெதிராக அறிவொளி பாய்ச்சும் அற்புத விடியல் விழாவாக நடைபெற திட்டமிடப்படுகிறது!

அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் ஒரு தனி நபர் அல்ல - அறிஞர் அண்ணா அவர்கள் அழகுற அறிவுச் செறிவுடன் கூறியபடி பெரியார் ஒரு சகாப்தம், ஒரு கால கட்டம், ஒரு திருப்பம்!

மக்களுக்கு மாலை நேர வகுப்புக்களை எடுத்தவை களாக தனது பொதுக் கூட்டங்களைப் பயன்படுத்திச் சொல்லிக் கொடுத்த தமிழகத்தின் முதல் பேராசிரியர்!

ஒப்பாரும், மிக்காரும் இல்லாத ஒரே தலைவர் சிந் தனையும், செயலும் இணைந்த ஓர் இணையற்ற மாவீரர்; மாமனிதர்!
தனி மனிதரல்ல பெரியார்!

தனி மனிதரானால் அவர் மறைந்து விட்டார் என்ற குறிப்பு உண்டு; நிறுவனங்கள் அப்படியல்ல; நீடித்து நிலைத்தவை!

கடைசி மூடநம்பிக்கையும், அறியாமைக் கொடுமையும், சமூக அக்கிரமும், வக்கிரமும் இருக்கும் வரை பெரியார் என்ற தத்துவமும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும் - நோய் தீர்க்கத் தேவைப்படும் மருந்து போல!

பெரியார் தம் அறிவுரைகளும், ஆக்கப்பூர்வ திட்டங்களும், புதிய உலகுக்குப் புத்தொளி பாய்ச்சிடும், புதுமைப் படைக்கலன்கள் ஆகும்!

அதனை மக்கள் மன்றத்திற்கு - காலத்திற்கேற்ற புதிய உத்திகளுடன் - மின்னணு, தகவல் புரட்சி யுகத்தின் தேவைக்கும் தேடுதலுக்கும் ஏற்ப செதுக்கிச் செயல் படுத்த வேண்டிய நமது கடமை - காலத்தின் கட்டளை யாகும்.

பெரியார் ஆயிரம் வினா -விடைப் போட்டியின் மாட்சி!

அதன் முதல் பிரச்சாரம் பெரும் முயற்சிதான் - சுமார் லட்சத்திற்குமேல் பெரியாரைப் புரிந்து கொள்ளப் புறப்பட்ட பள்ளிக்கல்வி மாணவச் செல்வங்கள் (இரு பாலரும்) கடந்த சில நாள்களாக பங்கு பெற்று (பெற்றோர்களுடனும் இணைந்து) மகிழும் பெரியார் ஆயிரம் வினா விடைப்போட்டி நாடு தழுவிய அளவில் எங்கெங்கும் எழுச்சியோடு நடைபெற்றுள்ளன!

ஏற்பாட்டாளர்களைப் பாராட்டுகிறேன்.

நமது தலைமைக் கழகத்தின் சீரிய செயல்பாட்டின் மூலம், பெரியார் பற்றிய புரிதலை - இளம், வளர் இளம் பிராய இருபால் மாணவச் செல்வங்கள் அறிந்து கொண்டுள்ள அற்புத முயற்சி!

திட்டமிட்டதைவிட, எதிர்பார்த்ததைவிட அதிகமான வரவேற்பு இதற்கு நாடெங்கும்!

இது இன்னும் பல கட்டங்களாக தமிழ், ஆங்கில மொழிகளில் மட்டுமில்லை. இந்திய மொழிகள், உலக மொழிகளிலும், On - Line
மூலமாக - கணினி மூலம் உலகத்தின் பற்பல நாடுகளில் பலவற்றிற்கும் எடுத்துச் சென்று பெரியாரை உலகமயமாக்கிடும் அரிய சிறப்பான முயற்சியின் துவக்கம்!

புதிய திட்டங்கள் தயார்!

அடுத்தடுத்து, இளைய தலைமுறை, மகளிர் - இரு சாராரை ஈர்க்கும் கொள்கை வகுப்புப் போன்ற பல முயற்சிகள் - இல்லத்தரசிகள் கொள்கை அரசிகளாக்கப் படல் வேண்டும் என்பதற்கே மகளிர் மாண்புக்குக் காரணமான பெரியார்தம் தொண்டறம் பற்றிய செய்திகளும், அவைகளையே துடுப்புகளாக்கி தமது வாழ்க்கையில் ஓடத்தை ஓட்டி - வெற்றிக்கரை சேர வாரீர்! என்று அழைக்கும் அமைதியான அறிவுப் புரட்சித் திட்டங்களும் தயாராகிக் கொண்டுள்ளன!

உற்சாகம் பொங்கி வழிய, கொள்கைத் திருவிழாவைக் கோலாகலமாகக் கொண்டாடுவோம்.

நமக்கென உள்ள வாழ்விலோர் திருநாள் பெரியார் பிறந்த நாள் என்ற திருநாள் - பெருநாள்!

மனிதர்களை வாழவைக்கும் மருத்துவ முகாம் போன்றவைகளை பெரியார் மருத்துவ அணி மருத்துவச் செம்மல்கள் ஊக்கத்துடன் துவங்கி திசையெட்டும் நடத்த முன்வந்து நடத்தி வெற்றிச் சாதனை புரிந்து வரு கின்றனர்.

இப்படி புதுமையுடன் இந்த ஆண்டு 135 துவங்கி நடைபெறட்டும்!

பட்டி தொட்டியெங்கும் பெரியார் கொள்கை முழங்கட்டும்!

உங்கள் தொண்டன்

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்


சென்னை
2.9.2013

தமிழ் ஓவியா said...


சிறுத்தையின் உறுமல்!


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் மானமிகு தொல் திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் விழா - பொன் விழா நிறைவுப் பெரு விழாவாக சென்னை காமராசர் அரங்கில் எழுச்சியுடன் நடைபெற்றது. (31.8.2013)
இளைஞர்களின் அடர்த்தித் திரளாக அமைந் திருந்தது அந்த நிகழ்ச்சி. மண்டபம், வெளிப்புறம் என்று எங்கு பார்த்தாலும் இளைஞர்களின் எழுச்சிச் சங்கமம்.

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமை தாங்கிட முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் நிறைவுரை ஆற்றிட விழா நிறைவான விழாவாக அமைந்திருந்தது.

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் தம் சிந்தனைகளைச் சுற்றிச் சுழன்ற நிகழ்ச்சி! இந்தக் கால கட்டத்தில் முன்னெடுக் கப்பட்ட சிந்தனைகள் இவைதானே!

எழுச்சித் தமிழர் ஏற்புரையில் சொன்னது மிக முக்கியமானது; ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடக் கூடிய, தேர்தலில் போட்டியிடாத திராவிடர் கழகம், தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. - இத்துடன் சிறுபான்மை மக்களின் பிரதிநிதி களாக பேராயர் எஸ்றா சற்குணம், கவிக்கோ அப்துல் ரகுமான் ஆகியோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியைத் தேர்தலுக்கும், அரசியலுக்கும் அப்பாற்பட்ட இணைப்பாகக் கருத வேண்டும் என்று மானமிகு திருமா அவர்கள் சொன்னது மிக முக்கியமானது. இது ஒரு கோட்பாட்டுப் பார்வை. இன்றைய கால கட்டத்தில் சமூக நீதிக்காகப் பாடுபடக் கூடிய தேவைப்படக் கூடிய அமைப்புகளின் வலிமை வாய்ந்த ஒற்றுமை மிகவும் அவசியம்.

மதவாத சக்திகளுக்கும், மதத்தை முன் வைத்து அரசியலை நடத்தத் துடிக்கும் பிற்போக்குவாதிகளுக்கும் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட சாட்டைதான் இந்த இணைப்பு.

இந்து நேஷனலிஸ்ட் என்று வெளிப்படை யாகத் தன்னைப் பற்றிய ஓர் அறிமுகத்தோடு இந்தியாவின் பிரதமருக்கான வேட்பாளர் என்று மார்தட்டிக் கூறும் கால கட்டம் இது.

இத்தகு சூழ்நிலையில் சென்னை காமராசர் அரங்கம் அந்தச் சக்திகளை, முகத்துக்கு முகம் சந்தித்து வீழ்த்திட, ஒரு பெரிய குரலைக் கொடுத்திருக்கிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

பெரியார் திடலில் வெளிச்சம் கிடைத்துப் புறப்பட்ட சிறுத்தை என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டதன் பலனை, அவருடைய பேச்சு பறைசாற்றி விட்டது. தன்னை ஆற்றுப் படுத்தி வரும் இரு தலைவர்கள் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களும்தான் என்பதையும் மனந்திறந்து நன்றி உணர்ச்சி மேலிடப் பிரகடனமும் செய்தார்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் ஒரு தலைவர் பிறந்து முறையாக வளர வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். அப்படி உருவாகும் இளைஞர் பெரியாரி யலையும், அண்ணல் அம்பேத்கர் இயலையும் சுவாசித்து உள் வாங்கிக் கொண்டு எந்தவித சபலத்திற்கும் ஆளாகாமல் இலட்சியப் பயணத் தைத் தொடரும் பட்சத்தில் நிச்சயம் எதிர்காலம் அவர்கள் வசப்படும் என்பதில் அய்யமில்லை.

பஞ்சமி நில மீட்பு, ஈழத் தமிழர் விடிவு, தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு இம் மூன்றையும் முன்னிறுத்தி அவர் பேசியதில் சமூகநீதி, இனவுணர்வு, உரிமை மீட்பு என்ற மூன்றும் முத்தாய்ப்பாக முறுகி நிற்கிறது. அது மேலும் வளரட்டும்!

தந்தை பெரியாரை முன்னிறுத்தியதால் பகுத்தறிவு ஒளி அங்கே தானாகவே ஊடுருவி விட்டது.

எத்தனை இடம் கிடைக்கும் என்பதைவிட தமிழன் எந்த இடத்தில் இருக்கிறான்? அவன் முழு விடுதலைக்குரிய இடம் எது? என்பதில் குறியாக இருப்பதுதான் சிறந்த குறிக்கோளாக இருக்க முடியும். அது எழுச்சித் தமிழரின் ஏற்புரையில் உறையிலிருந்து வெளிவந்த வாளாக மின்னியது. அந்தப் பொன் விழா நிறைவு காணும் இலட்சிய சிறுத்தைக்கு நமது வாழ்த்துக்களைக் கூறுவோம். தமிழா இனவுணர்வு கொள்!

தமிழா தமிழனாக இரு!

தமிழ் ஓவியா said...


முட்டாள்தனம்


மனிதனின் செல்வம், புகழ், பெருமை நிலைக்கக் கூடியதல்ல. அவன் காலத்திலேயே மாறும். அவன் சந்ததிக் காலத்திலும் மாறும். ஆகவே, அதைச் சம்பாதிப்பதே முடிந்த முடிவு என்றெண்ணுவது முட்டாள்தனம்.

(விடுதலை, 28.4.1943)

தமிழ் ஓவியா said...


சோழங்கநல்லூர் பெரியார் மருத்துவமனையை- பெரியார் மருத்துவ அணியின் பொறுப்பில் ஒப்படைக்கிறோம்!


ஆண்டிற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் மருத்துவமுகாம் நடைபெற

சோழங்கநல்லூர் பெரியார் மருத்துவமனையை-

பெரியார் மருத்துவ அணியின் பொறுப்பில் ஒப்படைக்கிறோம்!

மருத்துவ முகாமில் தமிழர் தலைவர் உரை


சோழங்கநல்லூர், செப்.2- ஆண்டிற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் மருத்துவ முகாம் நடத்துவதற்கு ஏதுவாக சோழங்கநல்லூர் பெரி யார் மருத்துவமனையை பெரியார் மருத்துவ அணியின் பொறுப்பில் ஒப்படைக்கிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

மிகுந்த மகிழ்ச்சியோடு நடைபெறக்கூடிய அறிவாசன் தலைவர் தந்தை பெரியார் அவர் களுடைய 135 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா வையொட்டி, சோழங்கநல்லூர் பகுதியிலே பெரி யார் மருத்துவ அணி - டேங்க் சிட்டி திருவாரூர் ரோட்டரி சங்கம் -நாகை பவர் பிரைவேட் லிமிடெட் திருவாதிரை மங்கலம் ஊராட்சி மன்றம் ஆகிய மூன்று அமைப்புகள் இணைந்து குறுகிய காலத்திலே நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டாலும், நல்ல வெற்றிகரமாக, இந்த சோழங் கநல்லூர் மருத்துவ முகாம் - மக்கள் முகாமாக ஆகியிருக்கிறது என்ற அந்தப் பெருமைக்குரிய நிகழ்வாக, நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரையில், முதலில் எல்லோருக்கும் மருத்து வப் பரிசோதனை செய்வது என்பது, வாய்ப்பாக இருக்குமா? என்று மருத்துவர்கள் திட்டமிட்ட நேரத்தில், மதியம் வரை 500 பேர் வரை மருத் துவப் பரிசோதனை செய்வதற்குச் சாத்தியம் உண்டு என்று மருத்துவர்கள் சொன்னார்கள். எதுவாக இருந்தாலும், அது உங்களுடைய வாய்ப்பு, வசதி, ஒத்துழைப்பைப் பொறுத்தது.

உங்களால் முடிந்த அளவுக்கு செய்யுங்கள்!

சோழங்கநல்லூர் பெரியார் மருத்துவமனை யின் பயனை அனுபவிப்பவர்கள் எல்லாம், ஏழை, எளிய, விவசாயப் பெருங்குடி மக்களாக இருக்கக் கூடிய, நம்முடைய திராவிட சமுதாயத்தின் பெருமக்கள், உழைப்பாளிகளாக, விவசாயிகளாக இருக்கக்கூடிய தாய்மார்கள், பெரியோர்கள், முதியோர்கள் ஆவார்கள். ஆகையால், உங்க ளால் முடிந்த அளவுக்கு நீங்கள் செய்யுங்கள் என்று சொன்னேன்.

இவ்வளவு சிறப்பான வகையிலே, இந்த மருத் துவ முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ள ரோட்டரி சங்கத் தலைவர் முரளிதரன் அவர்களே,

நாகை பவர் பிரைவேட் லிமிடெட் பொறுப் பாளர் மணிகண்டன் அவர்களே,
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர்கள் டாக்டர் பிறைநுதல்செல்வி அவர்களே, ஜெயக் குமார் அவர்களே, மண்டல செயலாளர் முரளி தரன் அவர்களே, மாவட்டத் தலைவர் மோகன் அவர்களே, மருத்துவமனையில் பொருளாளராக

இருக்கக்கூடிய அருண்காந்தி அவர்களே,

பெரியார் மருத்துவ அணியைச் சார்ந்த, சிறப்புமிகுந்த தொண்டறச் செம்மல்களாக இருக்கக் கூடிய டாக்டர்கள் மீனாம்பாள் அவர்களே, டாக்டர் கவுமதன் அவர்களே, டாக்டர் குமார் அவர்களே, டாக்டர் ருக்மணி அவர்களே, டாக்டர் சிவசுப்பிரமணியன் அவர் களே, டாக்டர் தியாகசுந்தரம் அவர்களே, டாக்டர் ஜெகன்பாபு அவர்களே, டாக்டர் இனியன் அவர்களே, டாக்டர் டான்பாஸ்கோ அவர்களே, டாக்டர் புஷ்பா அவர்களே, டாக்டர் புகழேந்தி அவர்களே, டாக்டர் அனிதா அவர் களே, டாக்டர் வேல்துரை அவர்களே மற்றும் இந்த நிகழ்ச்சியிலே கலந்துகொண்டு, இவ்வளவு சிறப்பான வகையில் நிகழ்ச்சியை அமைத்திருக் கின்ற திருவாதிரை மங்கலத்தின் ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில் அவர்களே,
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கின்ற அத்துணை தாய்மார்களே, இயக்கப் பொறுப் பாளர்களே, ஒன்றிய அமைப்பாளர் ராஜேந்திரன் அவர்களே, மகளிரணி தோழியர்கள் மகேசுவரி, பெரியார் மகளிரணியினைச் சார்ந்தவர்களே, இம்மருத்துவமனையின் மேலாளராக இருக்கக் கூடிய சேது அவர்களே, கண்ணை பாதுகாக்கக் கூடிய விழிபோல் இருந்து சிறப்பான தொண்ட றத்தைச் செய்துகொண்டிருக்கக்கூடிய பியூலா அவர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.

அற்புதமான சாதனைத் திருவிழா!

இன்றைக்கு இந்த மருத்துவ முகாமில், ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படக்கூடிய அளவில் இருப்பது, வரலாற்றுச் சாதனையாகும். இந்த மருத்துவமனை வரலாற்றிலேயே இது ஒரு பொன்னாள். ஒரு குறிப்பிடத்தகுந்த அற்புதமான சாதனைத் திருவிழா என்றே சொல்லவேண்டும்.

அந்த வகையிலே, இந்த சுற்றுவட்டார மக்கள் எல்லோரும் இங்கே வந்திருக்கிறார்கள். அவர் களுக்கு, உணவு மற்றும் உதவிகளை நம்முடைய மேனாள் பால்வளத்துறை அமைச்சராக இருந்த, என்றென்றைக்கும் நம்முடைய கொள்கைக் குடும்பத்தைச் சார்ந்த மதிவாணன் அவர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அவருக்கு எங் களுடைய மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதுபோலவே, இங்கே மருத்துவமனையில் ஊழியர்களாக இருக்கக்கூடியவர்கள், சலிப்பில் லாமல் ஒரு தொண்டறத்தை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் பாராட்ட வேண்டிய ஒன்றாகும்.

தமிழ் ஓவியா said...

நம்முடைய இயக்கத் தோழர்கள் நல்ல ஒத் துழைப்பினைக் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.

மருத்துவர்களுக்கு நன்றி செலுத்தவேண்டியது மிகமிக முக்கியம்

இந்த மருத்துவ முகாமில், சுமார் 700 பேர் வரை பயன் பெற்றிருக்கிறார்கள், இந்த நேரம் வரையில். மீதியுள்ளவர்களையும் பரிசோதித்து விட்டே நாங்கள் செல்கிறோம் என்று மருத்து வர்கள் உறுதியோடு சொல்லியிருக்கிறார்கள். இதற்காக நாம் அத்தனை பேரும் அந்த மருத்து வர்களுக்கு நன்றி செலுத்தவேண்டியது அது மிகமிக முக்கியமாகும்.

அதோடு, இங்கே தெளிவாகச் சொன்னார் கள்; அது என்னவென்றால், இங்கேயுள்ள மக்களைப் பரிசோதித்தபோது, ரத்தசோகை, பல்வேறு உடல் கோளாறுகள் எல்லாம் நம் முடைய விவசாய மக்களுக்கு இருக்கிறது என்று மருத்துவர்கள் சொன்னார்கள். பாதிக்கப்பட் டுள்ளவர்கள் ஒருமுறை மட்டும் மருத்துவ மனைக்கு வந்தால் போதாது; இரண்டு மாதங் களுக்கு ஒருமுறை வந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் மிகவும் நன்றாக இருக்கும். அதற்கு நிர்வாகம் என்ன சொல்கிறது, அவர்களுடைய கருத்து என்ன என்று சற்று நேரத்திற்கு முன்பாக, மருத்துவர்கள் கூறினார்கள்.

இந்தப் பகுதி நம்முடைய இயக்கப் பாசறை!

நான், மிகவும் மகிழ்ச்சியோடு, அந்தக் கருத் தினை வரவேற்பதற்குக் கடமைப்பட்டிருக்கிறேன். இப்படி சேவை செய்ய மருத்துவர்கள் வர மாட்டார்களா என்றுதான் கவலைப்பட்டிருக் கிறேன். இந்தப் பகுதி ஏழை, எளிய, திராவிட விவசாயப் பெருங்குடி மக்களைக் கொண்ட நம்முடைய இயக்கப் பாசறையாகும்.

தமிழ் ஓவியா said...

இதுதான் தொண்டறம்!

இந்தப் பகுதியிலே, பிரசவத்திற்காக, ஒரு நாள் கயிற்றுக் கட்டிலிலே தூக்கிக் கொண்டு, நாகை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். நாங்கள் ஆண்டுதோறும் இந்தப் பகுதிக்கு வரக் கூடிய நாங்கள் இதனைப் பார்த்த பிறகுதான், இப்படியொரு மருத்துவமனை இங்கே உரு வாக்கவேண்டும் என்று நினைத்து, பல லட்சக் கணக்கான ரூபாயினை செலவு செய்து, ஒரு பெரிய மருத்துவமனையாக, கிராமத்திலே பயன்படக் கூடியதாக இதனை செய்துகொண் டிருக்கின்ற நிலையில், கிராமப்புறத்தில் பணி யாற்றக் கூடிய மருத்துவர்கள் மிகவும் சொற்ப மாக இருக்கிறார்கள்; எளிதாகவும் அந்தப் பணிக்கு மருத்துவர்கள் கிடைப்பதில்லை. இன்றைக்கு அந்தக் குறைகளைப் போக்கக் கூடிய வகையில், இங்கே வந்துள்ள மருத்துவர்கள் மிகவும் பிரபலமானவர்கள்; நிறைய நோயாளி களைப் பார்க்கக் கூடியவர்கள்; அவர்கள் தன்னுடைய வருமானத்தைப்பற்றிக் கவலைப் படாமல், தொண்டாற்றவே இங்கே வந்திருக் கிறார்கள், அது மிகவும் பாராட்டவேண் டியதாகும். அவர்கள் சம்பாதிப்பது முக்கியம் என்றாலும், அதேநேரத்தில், இதுபோல் தொண்டு செய்வதும் அவசியமாகும். இதுதான் தொண்டறம்.

அந்த வகையிலே, நான் இங்கே அதிக நேரம் பேசவேண்டிய அவசியமில்லை. நான் சுருக்க மாகச் சொல்கிறேன், ஏனென்றால், மருத்துவ முகாமில் நிறைய பேரை பரிசோதிக்க வேண்டி யுள்ளதாலும், இப்பொழுது இங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சி காலையிலிருந்து நான்காவது நிகழ்ச்சியாகும்; அடுத்து அய்ந் தாவது நிகழ்ச்சிக்கும் நான் செல்லவேண்டி யிருக்கிறது. அதனால், நான் இங்கே சுருக்கமாகச் சொல்கிறேன்,

இங்கே வருகை தந்த மருத்துவர்கள், இந்த மருத்துவமனையையும், இங்கே உள்ள சிறப்பான வசதியையும் பார்த்தார்கள்; இங்கே வந்துள்ள ஏழை, எளிய நோயாளிகளையும் பார்த்தார்கள். இது ஒரு கிராமம்; பல கிராம மக்கள் திரண் டுள்ளனர். இங்கே வருகின்றவர்களுக்கு சிகிச்சை கொடுப்பதுதான் உண்மையான மருத்துவத் தொண்டறமாகும்.

இங்கே சிறப்பாக உரையாற்றிய மருத்துவர் அணியின் தலைவராக இருக்கக் கூடிய மருத் துவர் மீனாம்பாள் அவர்கள், குழந்தை வளர்ப் பும், பெற்றோரின் பங்களிப்புப்பற்றியும் மிக அருமையாக உரையாற்றினார்.

இதையெல்லாம் நீங்கள் மனதில் வைத்துக் கொண்டு, இரண்டு வகையாகப் பிரித்துக் கொள்ளவேண்டும்.

இங்கே மருத்துவ முகாமிற்காக வருகின்ற நேரத்தில், ஒரு நாள் அல்லது அரை நாள் முழு வதும் வெறும் பிரச்சாரத்தினை மட்டுமே செய்ய வேண்டும். குறிப்பாக, புகையிலை போடுவதை நிறுத்தவேண்டும் என்றும், பொடி போடுவதை யும், சிகரெட் குடிப்பதையும் நிறுத்தவேண்டும் என்று தாய்மார்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரத்தினை செய்ய வேண்டும்.

தமிழ் ஓவியா said...

கழிப்பறைகளைப் பயன்படுத்தவேண்டும் என்பதுபற்றியும், இப்பொழுது கழிப்பறைகள் கட்டுவதற்கு அரசாங்கமே மானியம் கொடுக் கிறார்கள் என்பதைப்பற்றியும், ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பறை இருப்பது முக்கியம் என்பதைப்பற்றியெல்லாம், இந்த மருத்துவமனை ஒரு பிரச்சார யூனிட்டைத் தனியாக வைத்துக் கொண்டு, நம்முடைய இயக்கத் தோழர்கள் ஆங்காங்கே இருக்கிறார்கள்; எல்லா ஊர் களிலும் உள்ள மக்களை ஆங்காங்கே திரட்டி வைப்பார்கள்; அங்கே சென்று மருத்துவ முகா மினை நடத்தி, இரண்டு மாதத்திற்கு ஒருமுறை என்று சொன்னார்கள், அவர்கள் வசதிப்படி எத்தனை முறை வேண்டுமானாலும் செய்வதற் காக, சுருக்கமாகச் சொல்கிறேன், இந்த மருத்துவ மனையை, பெரியார் மருத்துவ அணியினரிடம் நாங்கள் இன்றைக்கு ஒப்படைக்கிறோம் என்று சொல்லக்கூடிய அளவிலே, நீங்களே திட்ட மிட்டு, உங்களுக்குள்ளேயே ஒரு குழுக்களை அமைத்து, மாற்றாக, ஒருமுறை வந்தவர் வராமல், ஏனென்றால், அவரவர்களுக்குத் தொழில் உண்டு; பணிகளும் உண்டு; அதனால் நீங்களே திட்டமிட்டு வாருங்கள்; உங்களுக்கு என்னென்ன உதவிகள் வேண்டுமோ அதனை செய்து தரு வதற்கு, நிர்வாகம் தயாராக இருக்கிறது; பெரி யார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் தயா ராக இருக்கிறது; கழகத் தோழர்களுடைய உழைப்பு உங்களுக்கு என்றென்றைக்கும் கிடைக் கத் தயாராக இருக்கிறது. நீங்கள் உங்கள் தொண் டறத்தைக் கொடுத்து, இந்தச் சுற்றுவட்டாரமே, சோழங்கநல்லூர் பகுதி, திருவாரூர் பகுதி, நாகப் பட்டினம் வரையில், நம்முடைய பெரியார் மருத்துவமனையினுடைய முத்திரை எல்லாக் கிராமங்களுக்கும் பரவக்கூடிய அளவிற்கு ஒரு சிறப்பான திட்டத்தை உருவாக்கி, ஆண்டுக்கு, ஆறுமுறையோ, அய்ந்து முறையோ, நான்கு முறையோ எத்தனை முறை வேண்டுமானாலும், நீங்கள் எல்லோரும் சேர்ந்து, மாலையில் என் னோடுதான் திரும்புவார்கள் என்று நினைக்கி றேன்; நான் திருத்திக் கொள்கிறேன்; அவர் களோடு நான் திரும்புவதாக இருக்கிறேன். ஆகவே, இங்கே அவர்களோடு பேசுவதற்கு நேரம் இருக்காது. இங்கேயிருந்து திருவாரூர் வரையில் பேசிக்கொண்டே செல்வதற்கு அந்தப் பயணத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆகவே, ஒரு நல்ல வாய்ப்பாக, இந்த மருத்துவ முகாம் என்பது தொடக்கம்; இது முடிவல்ல. அந்த வகையில் இது ஒரு பெரிய வாய்ப்பாக, இந்தப் பகுதி மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. இது வரவேற்க வேண்டிய ஒன்று என்று சொல்லி, அனைவருக்கும் நன்றி கூறி, முடிக்கிறேன். வணக்கம்! நன்றி! வாழ்க பெரியார், வளர்க பகுத்தறிவு!

குறிப்பாக சொல்லவேண்டுமானால், டேங்க் சிட்டி திருவாரூர் ரோட்டரி அமைப்பையும், அதேமாதிரி நாகை பவர் பிரைவேட் லிமிடெட், திருவாதிரை மங்கலம் ஊராட்சி மன்றத்திற்கும் எங்களுடைய தனிப்பட்ட முறையில், மருத்துவர் களுக்கும், அமைப்பாளர்களுக்கும் மருத்துவ மனை சார்பாக நாங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.



தமிழர் தலைவரின் மனிதநேயம்!


ஓடாச்சேரியில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, தஞ்சை திரும்பும் வழியில் திருவாதிரை மங்கலத்தில் பெரியார் பெருந்தொண்டர் மாணிக்கம், தமிழர் தலைவரின் வாகனத்தினைக் கைகாட்டி நிறுத்தினார். உடன் இறங்கிய தமிழர் தலைவர், மாணிக்கத்திடம் என்ன உதவி வேண்டுமென மனிதநேயத்துடன் விசாரித்தார்.

பெரியார் பெருந்தொண்டர் மாணிக்கம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் கால் அடிபட்டு, சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், மேலும் சிகிச்சைக்காக உதவி கோரினார். அவரை, தமிழர் தலைவர், தன்னுடன் வந்த வாகனத்திலேயே அவரை அழைத்துக்கொண்டு, மருத்துவ முகாம் நடைபெறும் சோழங்கநல்லூர் பெரியார் மருத்துவமனையில் மருத்துவர்களிடம் ஒப்படைத்து, அவருக்குத் தேவையான சிகிச்சையினை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியைக் கண்ட அவ்வூர் மக்கள் தமிழர் தலைவரின் மனிதநேயத்தைப் பார்த்து பாராட்டினர். (1.9.2013).

தமிழ் ஓவியா said...


நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறாமல் கச்சத் தீவை இலங்கைக்கு ஒப்படைத்தது சரியா?


உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பை எதிர்பார்ப்போம்: டெசோ தலைவர் கலைஞர் அறிக்கை



சென்னை, செப்.2- நாடாளுமன்றத்தில் ஒப்பு தலைப் பெறாமலேயே தமிழ்நாட்டுக்கு சொந்தமான கச்சத்தீவை இலங்கை அரசுக்கு தாரை வார்த்தது எப்படி சரியாகும்? என்ற வினாவை எழுப்பி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டுக்கு சாதகமான தீர்ப்பை எதிர்பார்ப்போம் என்று டெசோ தலைவரும் - தி.மு.க. தலைவருமான கலைஞர் அறிவிக்கை விடுத்துள்ளார்.

கச்சத்தீவு பற்றிய வழக்கில் மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் கச்சத்தீவு எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாமல் இருந்தது; ஆங்கி லேயர் ஆட்சிக் காலத்தில் கச்சத் தீவுக்கு யார் உரிமை கொண்டாடுவது என்ற பிரச்சினை இந்தியா, இலங் கை இடையே நீடித்து வந்தது; அதைத் தொடர்ந்து இந்திய - இலங்கைக் கடல் பகுதியில் சர்வதேச எல்லைக்கோட்டை நிர்ணயித்தபோது கச்சத் தீவு இலங்கை வரம்புக்குள் சென்றுவிட்டது. அதன்பிறகு 1974ஆம் ஆண்டில் இந்தியா - இலங்கை இடையே கச்சத் தீவு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 1976ஆம் ஆண்டில் இரு நாடுகளிடையே மேற்கொள்ளப் பட்ட ஒப்பந் தத்திலும் கச்சத்தீவு இலங்கையின் பகுதியில் இருப்பதை இந்தியா ஏற்றுக் கொண் டுள்ளது. இந்திய எல்லைக்கோட்டுக்குள் இருந்த கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்ததாக மாயை ஏற்படுத்துவது தவறானது என்றெல்லாம் தெரிவித்திருப்பது தமிழ் மக்க ளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. கச்சத் தீவு இந்தியாவிற்குத்தான் சொந்தம் என்றும், அதனை 1974ஆம் ஆண்டு இந்திய அரசு இலங்கைக்கு ஒரு ஒப்பந்தத்தின் வாயிலாகத் தாரை வார்த்து விட்டது என்றும், அந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத் தில் ஒப்புதல் பெறாத காரணத்தால், அது செல்லாது என்றும் தமிழகத்தின் சார்பில் முதலமைச்சர் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறார். டெசோ கூட்டத்தில் கச்சத் தீவு பற்றி 15-4-2013 அன்று நடைபெற்ற டெசோ அமைப்பின் கூட்டத்தில், கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதியாகும். அது 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி இலங்கை அரசுக்கு இந்திய அரசால், சட்டமன்றத் திலும், நாடாளுமன்றத்திலும் நாம் தெரிவித்த எதிர்ப்புகளையெல்லாம் மீறி விட்டுக் கொடுக்கப்பட்டது. இந்தியா வின் எந்தவொரு பகுதியையும் வேறு ஒரு நாட்டிற்கு விட்டுக் கொடுப்பதென்றால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 368வது பிரிவின்படி நாடாளு மன்றத்தின் பரிசீலனைக்கு வைத்து சட்டம் இயற்றப்பட வேண்டும். கச்சத் தீவைப் பொறுத்தவரை அப்படி எந்தவொரு சட்டமும் இதுவரை நிறைவேற்றப் படாததால், கச்சத் தீவை இலங்கைக்கு ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக் கொடுத்தது அரசியல் சட்ட ரீதியாகச் செல்லுபடி ஆகாது என்பதுதான் உண்மை. எனவே 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதைப் பிரகடனப்படுத்தவும், டெசோ அமைப் பின் மூலம் உச்சநீதி மன்றத்தை அணுகுவதென இந்தக் கூட்டம் தீர்மானிக்கின்றது என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

டெசோ சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில், டெசோ அமைப்பின் சார்பில் நான் இந்திய உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை 10-5-2013 அன்று தாக்கல் செய் திருக்கிறேன். உச்ச நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த இந்த மனு, 15.7.2013 அன்று தலைமை நீதிபதி அல்தமாஸ் கபீர், நீதிபதிகள் எப்.எம். இப்ராகிம் கலிபுல்லா, விக்ரம் ஜித் சென் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்னிலையில் விசா ரணைக்கு வந்தது. விசாரணையின்போது, எனது மனுவினை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிட உத்தரவிட்டனர்.

தமிழ் ஓவியா said...

கச்சத் தீவைப் பொறுத்தவரை அது பாரம்பரிய மான நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது என்பதை மத்திய அரசுக்கு நினைவுபடுத்த வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட் டுள்ளோம்.

கச்சத்தீவில் புனித அந்தோணியார் கத்தோ லிக்க தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் ஒருவாரத் திருவிழா விற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களே அதிகம் செல்வர். இலங்கை மீனவர்களும் கலந்து கொள்வர். தொன்றுதொட்டு தமிழக மீனவர்களும் இலங்கை மீனவர்களும் இப்பகுதியில் மீன்பிடித்து வரு கின்றனர். அதன் தொடர்பான, வலைகளை உலர்த் துதல், களைப்பாறுதல் போன்றவற்றிற்கும் இத்தீவி னைப் பயன்படுத்துவர்.

ராமநாதபுரம் ராஜாவுக்கு சொந்தமானது

இத்தீவானது பன்னெடுங்காலமாக ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகையில் இருந்தது. இலங்கையை ஆட்சி செய்த டச்சுக் கம்பெனி அந்தத் தீவை 1660இல் குத்தகைக்குப் பெற்றிருந்தது. பின்னர் 1870-73, 1875, 1880, 1889 ஆகிய ஆண்டுகளிலும் ராமநாதபுரம் அரசர் இந்தத் தீவிற்கு அருகில் உள்ள சங்குப் படுகையைக் குத்தகைக்கு விட்டிருந்தார் என்பதும், இலங்கை கவர்னரின் 1757-1962 நினைவு ஏடுகளில் குறிப்பிடப்பட்டிருப்பதும், 1766இல் கண்டி அரச ரால் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமும், 1845ஆம் ஆண்டில் இலங்கை லெப்டினன்ட் கவர்னர் எழுதிய கடிதமும், இத்தீவு ராமநாதபுரம் அரசரின் ஆளுகை யிலும், கட்டுப்பாட்டிலும் இருந்தது என்பதற்கான ஆதாரங்களாகும். இந்தக் காலகட்டத்தில் ராமநாத புரம் அரசர் ஆங்கிலேய அரசுக்குக் கட்டுப்பட்ட குறுநில மன்னராக இருந்தார். இந்தியா விடுதலை பெற்ற பின் இத்தீவு தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1250 சர்வே எண்ணில் கட்டுப் பட்டிருந்தது. தமிழ்நாடு அரசு வெளியிட்ட ராமநாத புரம் மாவட்ட ஆவணத் தொகுப்பேட்டிலும் (கெ ஜட்டிலும்) இவ்விவரம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க எதிர்ப்பு
உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூலத்தில் தெரி விக்கப் பட்ட கருத்துக்கு, தமிழக அரசு மூன்று வாரங்களில் விளக்கம் தர வேண்டுமென்று நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ள நிலையில், மேலே குறிப்பிட்டுள்ள வரலாற்றுப்பூர்வமான ஆதாரங் களையும், மேலும் தமிழக அரசிடம் இருக்கும் கூடுதல் ஆவணங் களையும் இணைத்து உச்ச நீதிமன்றத்தில் உரிய முறையில் தாக்கல் செய்வது மிக மிக அவசியமாகும். 1974ஆம் ஆண்டு இந்திய அரசு இலங்கை அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட காலக் கட்டத்திலேயே, மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று, 21.8.1974 அன்று திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், நான் முதலமைச்சராக இருந்தபோதே தமிழகச் சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

தமிழ் ஓவியா said...


நாடாளுமன்றத்திலும் எதிர்ப்பு

1974ஆம் ஆண்டு இந்தியா இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டபோது நாடாளு மன்றத்தில் அதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. 23.7.1974 அன்று அந்த ஒப்பந்தத் தின் நகலை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுவரண்சிங் தாக்கல் செய்தபோது, தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததை நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட் டோம் என்று தி.மு.கழகத்தின் சார்பில் இரா. செழியன் நாடாளு மன்றத்தில் கூறினார். பார்வர்டு பிளாக் கட்சியின் உறுப்பினராக இருந்த அருமை நண்பர் மூக்கையா தேவர், எனது இராமநாதபுரம் தொகுதிக்குள் அடங்கியுள்ள இத்தீவை இலங்கைக்கு வழங்கியது அரசியல் சட்டத்துக்கு முரணானது என்றார். இலங்கையின் நட்பைப் பெறுவதற்காகவே ரகசிய பேரம் நடத்தி கச்சத்தீவைத் தானமாக வழங்கியுள்ளது என்று வாஜ்பாய் பேசினார். இப்படிப்பட்ட கருத்துக் களை மாநிலங்களவையில் கழகத்தின் சார்பில் எஸ்.எஸ். மாரிசாமி, சோஷலிஸ்ட் கட்சி சார்பில் ராஜ்நாராயண், முஸ்லீம் லீக் சார்பில் நண்பர் அப்துல் சமது ஆகியோர் தெரிவித்தனர்.

இதையெல்லாம் முற்றிலும் மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு, மத்திய அரசு உச்ச நீதி மன்றத்தில் தற்போது தாக்கல் செய்துள்ள பிரமாணத்தில் உண்மைக்கு மாறான தகவல் களைத் தெரிவித் துள்ளது. கடந்த வாரம் டெல்லிக்கு வந்த இலங்கை அமைச்சர் பெரீஸ், கச்சத் தீவு முடிந்துபோன அத்தியாயம் என்று வரம்பு கடந்து பேசியதற்கு மத்திய அரசு பின்பாட்டு பாடுவதைப்போல, இந்தப் பிரமாண வாக்குமூலத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. கச்சத்தீவு, இராமநாதபுரம் சேதுபதி அரசருக்குச் சொந்தமானது. இந்தத் தீவை வணிகர்களான ஜனாப் முகமது காதர் மரக்கா யருக்கும், முத்துசாமி பிள்ளைக்கும் அரசர் சேதுபதி அய்ந்தாண்டுகளுக்குக் குத்தகைக்கு வழங்கியிருந்தார். இதற்கான ஆவணம், இராமநாத புரம், துணைப் பதிவாளர் அலுவலக ஆவண எண். 510/570, தேதி 2.7.1980. 1947இல் ஜமீன் ஒழிப்புச் சட்டத்தின் மூலம் இந்தியாவிற்குச் சொந்தமானது. கச்சத் தீவு இந்தியா விற்குச் சொந்தம் என்பதற்கு பல ஆவணங்கள் உள்ளன.

நல்ல தீர்ப்பை எதிர்பார்ப்போம்

இந்த ஆவணங்களையும், அடிப்படை ஆதாரங் களையும் இந்திய அரசியல் சட்ட நெறிமுறை களையும் ஆழமாகப் பரிசீலனை செய்து உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கிடும் என்று நாம் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், கச்சத்தீவு இலங்கை வரம்புக்குள் உள்ளது என்று மத்திய அரசு பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய் திருப்பது, தமிழகத்திற்குப் பேரிடி போன்றது; இந்தப் பிரச்சினையில் பெரும் பின்ன டைவை ஏற்படுத்திடக்கூடியது. மத்திய அரசின் இந்த முடிவு கடும் கண்டனத்திற்குரியதாகும். எனி னும், கச்சத்தீவுப் பிரச்சினையில் தமிழகத்தின் பக்கம் நீதியும் நேர்மையும் நிரம்ப இருப்பதால், நமது உரிமையை உச்ச நீதிமன்றம் நிலைநாட்டிடும் என்று நம்புவோம்!
(முரசொலி, 2.9.2013)

தமிழ் ஓவியா said...

சாலைக்குப் பெயர் வைப்பதினாலோ -கல்வெட்டு திறப்பதினால் மட்டுமோ வாழக்கூடியவர்கள் அல்ல;


தொண்டாலே, கொள்கை உணர்வாலே திராவிடர் இயக்க வரலாற்றில் இடம்பிடித்தவர்கள்

பெரியார் பெருந்தொண்டர் ஓடாச்சேரி உத்திராபதி நினைவு கல்வெட்டினைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் உரை

திருவாரூர், செப்.2- பெரியார் பெருந் தொண்டர் உத்திராபதி போன்றவர்களின் பெயரை சாலை வைப்பதினாலோ, கல்வெட்டு திறப்பதினால் மட்டுமோ வாழக்கூடியவர்கள் அல்ல; தொண்டாலே, கொள்கை உணர்வாலே இந்த இயக்க வரலாற்றில் இடம் பிடித்தவர்கள் என்று பெரியார் பெருந்தொண்டரும், மதி வாணன் அவர்களின் தந்தையார் உத்திராபதி கல்வெட்டினைத் திறந்து தமிழர் தலைவர் உரையாற்றினார் (பகல் 2 மணிக்கு).

திருவாரூர் மாவட்டம் ஓடாச்சேரியில் நேற்று (1.9.2013) முன்னாள் பால்வளத் துறை அமைச் சரின் தந்தையும், பெரியார் பெருந்தொண்டர், சுய மரியாதைச் சுடரொளி உத்திராபாதி அவர்களின் கல்வெட்டினைத் திறந்து வைத்தும், கழகக் கொடியினை ஏற்றி வைத்தும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

நம்முடைய முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் கொள்கை வீரர், சுயமரியாதை வீரர் அருமை உத்திராபதி அவர்களுடைய நினைவை இந்த மண்ணில் காலடி எடுத்து வைக்கும் பொழுது எங்களால் மறக்க முடியாது.

என்றென்றைக்கும் எங்கள் நெஞ்சங்களில் பதிந்தவர்

கல்வெட்டுகள் திறந்தோம் என்று சொல்வதை விட, என்றென்றைக்கும் எங்கள் நெஞ்சங்களில் பதிந்த பெரியார் பெருந்தொண்டர்களில் உத்தி ராபதி அவர்கள் இந்தப் பகுதியிலே முதன்மை யானவர்.

திருவாரூர் பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன் னாலே, திராவிட விவசாய சங்கத்தை அமைத்து, பாவா நவநீதகிருஷ்ணன் போன்றவர்கள், அதே போல், சுப்பராயலு, முருகய்யா போன்ற மற்ற மற்ற நண்பர்கள் ஏராளமாக உண்டு.

இந்த வட்டாரத்தை எடுத்துக்கொண்டால், கங்களாஞ்சேரி தொடங்கி, நாகூர்வரையில் இருக்கக்கூடிய பகுதிகள் ஆனாலும், சோழங்க நல்லூர் தொடங்கி திருவாரூர் வரையிலே இருக்கக் கூடிய பகுதிகள் ஆனாலும், அதுபோல், கீழ்வேளூர் மற்ற சுற்று வட்டாரப் பகுதிகள் ஆனாலும், எல்லா இடங்களுக்கும் சென்று இவர் கள் கடுமையாக உழைத்தவர்கள். அவர்கள் செய்த பணிகளிலேயே, மிகவும் சிறப்பான பணி, மறக்க முடியாத பணி திராவிட விவசாயத் தொழிலாளர்கள் என்ற அமைப்பை மிகச் சிறப்பாகக் கட்டிக் காத்தார்கள்.

தமிழ் ஓவியா said...


திருவாரூர் சிங்கராயர், சொரக்குடி வாசு தேவன், இங்கே விவசாயிகளுக்குத் தலைமை தாங்கினார்கள்.

அவர்களுடைய பெயராலே இங்கே கல்வெட் டினைத் திறந்து வைக்கும் வாய்ப்பினைக் கொடுத் தமைக்காக, அவர்களுக்கு நாங்கள் நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம்.

அவ்வளவு சிறப்பான முதுபெரும் பெருந் தொண்டர்கள், சுயமரியாதைப் பேரொளிகளை யெல்லாம் நினைவூட்ட வேண்டும்.

நமக்கெல்லாம் பெருமையான ஒன்றாகும்!

அந்த வகையிலே, அவர்கள் செய்த மகத்தான தொண்டு தொடர்வதற்கு, அவரோடு அந்தப் பணிகள் முடிந்துவிடவில்லை என்று காட்டு வதற்கு, மிக அருமையான கொள்கை வீரராக மதிவாணன் அவர்களை விட்டுச் சென்றிருக் கிறார் என்பதுதான் நமக்கெல்லாம் பெருமை யான ஒன்றாகும்.

மதிவாணன் அவர்களுக்கு, பால்வளத் துறையை முதல்வர் கலைஞர் அவர்களால் சிறப்பான முறையில் கொடுக்கப்பட்டது. அத் துறையினை மதிவாணன் அவர்கள் சிறப்பாக வளப்படுத்தினார். எல்லா இடங்களிலும் அவர் செய்த பணி பயன்படக் கூடியதாக இருந்து கொண்டிருக்கிறது. இன்னமும் அதனுடைய பயன் நீடித்துக் கொண்டிருக்கிறது. அப்படிப் பட்ட அவர், இன்றைக்கு அவர் தந்தையார் இருந்தால் எப்படி வரவேற்பாரோ, அதேபோல, அதற்கு சற்றும் குறைவில்லாமல், அவரும், அவரது பிள்ளைகளும், அடுத்தடுத்த தலைமுறை, மூன்றாவது தலைமுறை வரையிலே, இன்றைக்கு இந்தக் கொள்கைப் பயிர் வளர்வதற்கு சிறப்பாக இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் நேரத்தில், பாராட்டவேண்டிய ஒரு செய்தி.

திராவிடர் கழகம் என்பதே ஒரு அரசியல் கட்சியல்ல!

அதேநேரத்தில், மோகன் அவர்கள் என் னிடத்தில் சொல்லிக்கொண்டு வந்தார்கள்; உத் திராபதி அவர்கள் மிகப்பெரிய அளவிற்கு பாடு பட்ட ஒரு சமூகநலத் தொண்டர்; அவர் ஒரு கட்சிக்குச் சொந்தமல்ல; திராவிடர் கழகம் என்பதே ஒரு அரசியல் கட்சியல்ல; அது சமு தாயத்திற்குப் பொதுவானது; அப்படி பாடுபட்ட வருடைய பெயராலே, ஒரு சாலைக்குப் பெயர் இருந்து, அந்த சாலை மிகச் சிறப்பாகப் பயன் பட்ட நேரத்தில், அந்தப் பெயரை மீண்டும் எடுப்பது என்ற அரசியல் உள்நோக்கம் என்பது தேவையில்லாத ஒன்று. ஆனால், நிச்சயமாக மீண்டும் அச்சாலைக்கு உத்திராபதி பெயர் நிச் சயமாக வருவதற்குரிய வாய்ப்புகளை உருவாக்கு வோம் என்று இந்த நேரத்திலே தெளிவாகச் சொல்லிக் கொள்கிறோம்.

ஒன்றை நினைவிலே வைத்துக்கொள்ள வேண்டும் மற்றவர்கள்; சாலைக்குப் பெயர் வைப்பதன்மூலமாக மட்டும் வாழக்கூடியவர்கள் அல்ல; வெறும் கல்வெட்டு திறப்பதினாலே மட்டும் வாழக்கூடியவர்கள் அல்ல; அவருடைய தொண்டாலே, அவருடைய கொள்கை உணர் வாலே ஒவ்வொரு நேரத்திலும், இந்த இயக் கத்தில் பதிவான வரலாற்றில் இடம்பிடித்தவர் கள். ஆகவே, அவருடைய வழியில் நின்று நம் முடைய தோழர்கள் கட்டுப்பாடாக திராவிடர் இயக்கத்தை வலிமைப்படுத்தவேண்டும் என் பதை எடுத்துச் சொல்லி, எங்களையெல்லாம் அன்போடு வரவேற்றிருக்கின்ற மதிவாணன் சகோதரர் அவர்களுக்கும், உங்களுக்கும், தாய் மார்களுக்கும் மனமுவந்த நன்றியினைத் தெரி வித்து,

காய்கின்ற வெயில் வேகமாக இருக்கின்ற காரணத்தால், உங்களை அதிலே வாட்ட விரும் பவில்லை. இன்னொருமுறை பொதுக்கூட்டத் திற்கு வந்து, விளக்கமாக உரையாற்றுவேன் என்று சொல்லி விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...


இலக்குவனார்


1973 செப்டம்பர் 3 - தமிழர்கள் நினைவு கூர வேண்டிய முக்கிய நாள். நமது பேராசிரியர் சி. இலக்குவனார் அன்றுதான் மறைந்தார்.

தந்தை பெரியாரின் சீடர்; திராவிட இயக்கத் தீரர் - மூடநம்பிக்கையின் வைரி. தமிழுலகிற்கு தலை சிறந்த நூல்களைத் தந்த பெருமகன். தொல் காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பெரும் புலவர். இலக்குவனார் மொழி பெயர்த்த அந்த நூலைத் தான் முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் யேல் பல்கலைக் கழகம் சென்ற போதும் தன்னோடு எடுத்துச் சென்று தமிழன் பெருமையை, தமிழன் சீர்த்தியை அமெ ரிக்கப் பெருமகன்களுக்கு வழங்கியதன் மூலம் அறியச் செய்தார்.

எழிலரசி, தமிழிசைப் பாடல்கள், மாணவர் ஆற்றுப் படை, துரத்தப்பட்டேன், அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து எனும் செய்யுள் நூல்கள், எல்லோரும் இந் நாட்டு மன்னர் (இரு தொகு திகள்) அமைச்சர் யார்? வள்ளுவர் வகுத்த அரசியல் தொல்காப்பிய ஆராய்ச்சி, தமிழ் கற்பிக்கும் முறை ஆகிய ஆய்வு நூல்கள், இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்க காலம்) கரும வீரர் காமராசர், என் வாழ்க்கைப் போர் ஆகிய வரலாற்று நூல் களையும் வழங்கிய எழுத்து வள்ளல் இலக்குவனார்.

சங்க இலக்கியம், (கிழமை இதழ்) இலக்கியம் (திங்கள் இருமுறை இதழ்) திராவிடக் கூட்டரசு (திங்கள் இருமுறை) குறள் நெறி (திங்கள் இரு முறை), குறள் நெறி (நாளிதழ்) ஆகிய தமிழ் இதழ்களையும், ஆங்கில இதழ்கள் னுசயஎனையை குநனநசயவடி (திங்கள் இருமுறை) முரசயட சூநச (திங்கள் இரு முறை) ஆகிய இதழ்களையும் நடத்திய எழுச்சித் தமிழர் அவர்.

அவர்தம் சிறப்புக் கருதி அவருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அடைமொழிகள் தமிழ் அரிமா, தமிழ்ப் போராளி, 20ஆம் நூற்றாண்டுத் தொல் காப்பியர், இரண்டாம் நக்கீரர், பெரும் பேராசிரியர், தன்மானத் தமிழ் மறவர், இந்தி எதிர்ப்புப் படை தளபதி, செந் தமிழ்ப் படையின் மானச் செம்மல் என்ற பெருமைமிகு மணிமகுடங்களுக்குச் சொந் தக்காரர்.
அவருடைய தமிழ் -தமிழர் உணர்வால் ஓரிடத்தில் நிரந்தரமாகப் பணியாற்ற முடியாமல் துரத்தித் துரத்தி அடிக்கப்பட்டவர் - ஆனா லும் உள்ளம் தளராத உருக்கு நெஞ்சுக்குச் சொந் தக்காரர்.

1965 இந்தி எதிர்ப்பின் போது சிறைப் பிடிக்கப்பட் டார். அவர் பற்றி நீதிமன் றத்தில் அரசு வழக்குரைஞர் என்ன சொன்னார் தெரி யுமா?

இலக்குவனார் தமிழ்ப் பற்றாளர். உள்ளம் கவர்ந் தவர், இதழ் நடத்துபவர். அவர் வெளியே இருந்தால் அரசுக்கும், அமைச்சர்களுக் கும் பாதுகாப்பு இராது என்று சொல்லப்பட்டது - இலக்குவனாரின் உணர்வுக் கான வெள்ளிக் கீற்றே!
இலக்குவனார் வழியில் பேராசிரியர் மறைமலை உள் ளிட்ட அவரின் செல்வங்கள் தமிழ்த் தொண்டு சிறப்பாக ஆற்றி வருவது பாராட்டிற் குரியது!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


வாஸ்து வாங்கிய பலி!


சென்னை - புழல் அருகே, விநாயகபுரம் என்ற இடத்தில் நடந்துள்ள ஒரு நிகழ்ச்சி, நெஞ்சை உலுக்குகிறது.

வாஸ்துவை நம்பியதால், நான்கு பேர் பலியா னார்கள் என்பதுதான் அந்தத் துயர நிகழ்வாகும்.

அழகு நிலையம் அமைப்பதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தன. மாடியில் அதற்கான அறை ஏற்பாடு செய்யப்பட்டது. செப்டம்பர் முதல் தேதி அதிகாலை 4.30 மணியிலிருந்து காலை 6 மணி வரை யாகக் குண்டம் வளர்க்கப்பட்டது. அதற்காக பல்லாவரத்திலிருந்து பார்ப்பனப் புரோகிதர் ஒருவரும் வரவழைக்கப்பட்டிருந்தார்.

விளம்பரப் பலகை வைக்க வேண்டும் அல்லவா! அதற்காக திலகராஜ், சினேகா, நவீன் சந்திரன் மற்றும் அர்ச்சகப் பார்ப்பனரான ராமமூர்த்தி ஆகியோர் மேல் மாடிக்குச் சென்றனர். அழகு நிலையத்திற்குப் பெயர், லட்சுமி அழகு நிலையம். விளம்பரப் பலகையை வாஸ்து சாஸ் திரப்படி வைக்குமாறு அர்ச்சகப் பார்ப்பனர் ராம மூர்த்தி சொன்னார். அய்யர் சொன்னதற்கேற்ப, அப்படியும், இப்படியுமாக விளம்பரப் பலகையை மாற்றி, மாற்றி வைத்தனர். கடைசியாக, அவர் சொன்னபடி விளம்பரப் பலகையைத் திருப்பிய போது, மேலே சென்ற உயர்மின் அழுத்த மின்சாரக் கம்பி, விளம்பரப் பலகையின்மீது பட்டதுதான் தாமதம்; விளம்பரப்பலகையில் கை வைத்த அந்த நான்கு பேர்மீதும் (புரோகிதப் பார்ப்பனர் உட்பட) மின்சாரம் பாய்ந்ததால் அதே இடத்தில் பரிதாப கரமான முறையில் மரணம் அடைந்தனர் என்பது, துயரம் மிகுந்த நெஞ்சைப் பிழியும் சம்பவமாகும்.

மூடத்தனமான வாஸ்துவை நம்பியதால், விலை மதிக்கப்பட முடியாத நான்கு மனித உயிர்கள், பரிதாபகரமான முறையில் பறி போனதே!

சமீப காலமாக இந்த வாஸ்துவை விளம்பரத் தால் ஊதிப் பெருக்கச் செய்து விட்டனர். வீடுகளில் இப்போதெல்லாம் கரு நிறமான (னுயசம ஊடிடடிரச) வண்ணங்களைப் பூச ஆரம்பித்துள் ளார்கள் - காரணம் வாஸ்து சாஸ்திரமாம்.

முதலில் ஒரு கேள்விக்கு, வாஸ்து நம்பிக்கைக் காரர்கள் பதில் சொல்லட்டும், பார்க்கலாம். வாஸ்து சாஸ்திரப்படி வீடுகளில் கழிவறை வைக்கலாமா? கழிவறைபற்றி வாஸ்து சாஸ்திரத்தில் எங்காவது சொல்லப்பட்டுள்ளதா?

வாஸ்து என்பது திசையை அடிப்படையாகக் கொண்டதாகக் கூறப்படுகிறது. சூரியச் சுழற் சியைக் கொண்டு திசை நிர்ணயிக்கப்படுகிறது.

சூரியன் நிலையானது. அது மேற்கு நோக்கி நகரவில்லை. ஆனால் காலையில் சூரியனை நோக்கிச் செல்கின்ற ஒரு புள்ளியானது, மாலையில் சூரியனிலிருந்து விலகிச் செல்லுகிறது. அதாவது காலையில் கிழக்கு நோக்கி நகரும் மனிதன் மாலையில் மேற்கு நோக்கி நகருகிறான்.

புரியும்படிச் சொன்னால் காலையில் கிழக்காக இருக்கும் திசை மாலையில் மேற்காக மாறுகிறது, இந்த அடிப்படை புரியாமல் திசையை வைத்து வாஸ்து கரணம் போடுவதை நினைத்தால் வயிறு குலுங்கச் சிரிப்பாய் வருகிறது.

பி.என். ரெட்டி, என்பவர் வாஸ்து என்பது விஞ்ஞானம் என்று நிரூபிக்கபடாதபாடுபட்டார். திருப்பதி கோயிலுக்கு, மற்ற கோயில்களைவிட அதிக வருமானம் வருவதற்குக் காரணம் வாஸ்து முறைப்படி அது கட்டப்பட்டதுதான் என்றெல்லாம் எழுதினார். அவரைப் பார்த்து பிரபல பகுத்தறிவாளர் பிரேமானந்தா வினா ஒன்றை முன் வைத்தார். குஜராத்தில் உள்ள சோமநாதபுரம் கோயிலும் முழுமையாக வாஸ்து அடிப்படையில்தானே கட்டப் பட்டது? மிகப் பெரிய பணக்காரக் கோயிலாக அந்தக் காலத்தில் பேசப்பட்ட கோயில் அது. அந்தக் கோயில்மீதுதானே கஜினி முகம்மது படையெடுத்துப் பெரும் பொருளைக் கொள்ளை கொண்டு சென்றான்? என்று பிரேமானந்தா கேட்ட கேள்விக்கு இதுவரை பதில் இல்லையே!

யாகம், நல்ல நேரம், லட்சுமி (அழகு நிலையத் தின் பெயர்), புரோகிதம், வாஸ்து இவையெல்லாம் என்னாயிற்று?
புழல் பகுதியில் ஏற்பட்ட உயிர் பலிக்கும் பிற காவது மக்கள் புத்தி கொள் முதல் பெறட்டும்!

தமிழ் ஓவியா said...


மனிதன்


பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
(விடுதலை, 9.6.1962)

தமிழ் ஓவியா said...


பெரியார் பெருந்தொண்டரின் கொள்கை உள்ளம்


மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம் பலப்பல! நான் ஒரு பச்சை நாத்திகன். 60 ஆண்டு கால விடுதலை வாசகன். 1942இலேயே குடியரசுப் பத்திரிகை வாசிப்பு மூலம் சுயமரியாதைக்கார னானவன். 1944-இல் இருந்து கருஞ்சட்டையணிந்து தி.க.வாகி, ஒருங்கிணைந்த நன்னிலம் தாலுகா தி.க.வில் சொரக்குடி வே. வாசுதேவன், புத்தகரம் பி. செயராமன் போன்றோருடன் இணைந்து, பல பொறுப்புகளை ஏற்று கழகத் தொண்டாற்றியவன். 1955-இல் திருப்புகலூர் சின்னப்பிள்ளை என் கின்ற ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவன்.

1981இல் தங்கள் தலைமையிலும், வே. சற்குணம் (திருமருகல் ஒன்றிய முன்னாள் பெருந் தலைவர்) முன்னிலையிலும், என் மகன் மதிவாணனுக்கு இராகு காலத்தில் திருமணம் செய்வித்தேன். இன்று அவனுடைய மகன்கள் மூவரும் சென்னையிலும், வெளிநாட்டிலும் சிறந்த பொறியாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். மகன் மதிவாணனும் CRC இல் பணிபுரிந்து வருகிறான். குடும்பத்தில் எந்தக் குறையும் இல்லை.

நான், சென்ற 6.5.2012-இல் தி.க. சார்பில் திருமருகலில் நடந்த உடற்கொடை வழங்கும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, உடற்கொடை தந்து, தங்கள் கையால் உடற்கொடை சான்றிதழ் பெற்றுள்ளேன். இந் நிகழ்ச்சி 8.5.2012-இல் விடுதலையில் மற்றவர்களோடு என் பெயரும் சேர்ந்து வெளி வந்துள்ளது. தற்போது எனக்கு வயது 85. ஓரளவு உடல் நலத்தோடு நடமாடுகிறேன். எஞ்சிய காலத்தையும் இதே கொள்கை உறுதியோடு வாழ்ந்து முடிப்பேன்.
வாழ்க பெரியார்.

T.R.M. கிருட்டிணன், மேலப்பகுதி, திருப்புகலூர் அஞ்சல், நாகப்பட்டினம் தாலுக்கா.

தமிழ் ஓவியா said...


ராகுவாம்!


ஜோதிடம் - அதுவும் இந்திய ஜோதிடம் இருக் கிறதே - அதை ஒரு கணம் நினைத்தால் போதும் வாந் தியும், பேதியும் சேர்ந்தே வந்துவிடும்.

இன்னும் நவக்கிரகங் களைக் கட்டிக்கொண்டு அழுகிறார்கள். யுரேனஸ், நெப்டியூன் என்னும் புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனவே - அவைபற்றி ஜோதிட ஜாதகத்தில் எந்தக் குறிப்பும் கிடையாது. எந்தக் காலத்திலோ எந்தக் கிறுக் கனோ எழுதி வைத்ததை வைத்துக்கொண்டு வயிற்றுப் பிழைப்பு நடக்கிறது.

ராகு, கேது என்று இரு கிரகங்களாம். அப்படி கிர கங்களே கிடையாது என்பது விஞ்ஞான முடிவு!

ஆனாலும், இன்னும் வெட்கம் சிறிதும் இல்லாமல் ராகு, கேதுபற்றி எழுதுகி றார்களே, அறிவைக் கெடுக் கும் இவர்களைத் தண்டிக்க வேண்டாமா?

ராகுவின் புராண அளப் பைக் கேளுங்கள், கேளுங் கள்!

பாற்கடலைக் கடைந்த போது (பாற்கடல், தயிர்க் கடல், நெய்க்கடல் இவை எங்கே இருக்கின்றனவாம்?) அமுதம் கிடைத்ததாம் - அதை யார் பருகுவது என்று தேவர்களுக்கும், அசுரர் களுக்கும் சண்டையாம். உடனே மகாவிஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்து சினிமா நடிகைபோல தோன் றினானாம். அவள் அழகில் மயங்கிய அசுரர்கள் அமிர் தத்தைப் பெறுவதில் கோட்டை விட்டு விட்டார் களாம்.

சுவர்பானு என்னும் ஒரு அசுரன் மட்டும் சுதாரித்துக் கொண்டு தேவர்கள் அமரும் பந்தியில் போய் சூரியனுக் கும், சந்திரனுக்கும் இடையில் போய் குந்தினானாம். மோகினி அமிர்தத்தை வழங் கிக்கொண்டு இருந்தபோது அவனும் வாங்கிச் சாப்பிட்டு விட்டானாம் - சூரியனும், சந்திரனும் இவன் அசுரன் என்று சொன்னார்களாம்.
கோபம் கொண்ட மோகினி, சுவர்பானுவின் தலையில் தன் கையிலிருந்த கரண்டியால் அடித்தாளாம். சுவர்பானுவின் தலை ஒரு பக்கமும், உடல் இன்னொரு பக்கமும் தனித்தனியாக விழுந்ததாம். அவன் தேவா மிர்தம் உண்டதால் சாக வில்லையாம்.

அவன் கைகளும், தலை யும் பர்ப்பரதேசத்தில் (அது எங்கு இருக்கிறதாம்?) போய் விழுந்ததாம்.
அந்தத் தேசத்து அரசன் பைடீசனசன் என்பவன் அவற்றை எடுத்துச் சென்று வளர்த்தானாம்.... அரசனால் வளர்க்கப்பட்ட அந்தக் கையும், தலையும்தான் ராகு வாம்.
ராகு விஷ்ணுவை நோக் கித் தவம் இருந்து, கறுத்தப் பாம்பின் உடலையும் கிரகப் பதவியும் பெற்றானாம்.
சூரிய, சந்திரர் இருவரும் மோகினியிடம் தன்னைக் காட்டிக் கொடுத்ததால் அவர்களைப் பிடிக்கத் தொடங்கினானாம் கேது. அதுவே சந்திர, சூரியக் கிரகணமாம்.
எப்படி இருக்கிறது? தந்தை பெரியார் கூறுவது போல, சாராயம் குடித்த பைத்தியக்காரனுக்குத் தேள் கொட்டினால் எப்படி உளறு வானோ - அப்படி உளறித் தள்ளியுள்ளார்களே!
ஆன்மிக இதழ்கள் இன் றைக்கும் இப்படியெல்லாம் வெளியிடுகிறார்களே!
வெட்கம்! மகாவெட்கம்!!
- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


காவல்துறை கவனத்திற்கு...



நமது காவல்துறையில் பணியாற்றுவோர் கவனத்துக்குத் தேவையான தகவல் தாய்லாந் திலிருந்து கிடைத்துள்ளது.
தாய்லாந்தில் குற்றங்கள் பெருகிய நிலையில், அதற்கான காரணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அரசின் கவனம் காவல்துறை பக்கம் சென்றது. காவல்துறையில் பணியாற்றுவோர் தொந்தியும், தொப்பையுமாக இருந்தால் எப்படி அவர்கள் சிறப்பாகப் பணியாற்ற முடியும்? 60 சதவிகிதக் காவல் துறையினருக்குத் தொப்பை விழுந்திருந்தது. 60 கிலோ எடைக்கு மேல் உள்ளவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, எடையைக் குறைக்க உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அரசு என்றால் இப்படியல்லவா இருக்கவேண்டும்.

தமிழ் ஓவியா said...


ஜாதி சங்கங்களால்...


தென் மாவட்டங்களில் ஜாதி தலைவர்களின் குரு பூஜைகளால் அரசு மற்றும் தனியார் சொத்துக்க ளுக்கு ரூ.2.05 கோடி ரூபாய் அளவுக்குச் சேதம் ஏற்பட்டது.

பல நிகழ்வுகளில் 29 பேர் கொல்லப்பட்டனர் என்று மதுரைக் கிளை உயர்நீதிமன்றத்தில், காவல் துறை துணைத் தலைவர் (டி.அய்.ஜி.) தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


ஆதரிப்பது...



எந்த முறையிலாவது புராணப் பண்டிதர்களைப் பொது மக்கள் ஆதரிப்பது, கொள்ளியை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்வது போலாகும்.
(குடிஅரசு, 18.5.1930)

தமிழ் ஓவியா said...


கோவில் தங்கம் குறட்டைவிட வேண்டுமா?


நாட்டில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதுபற்றி, மிகப்பெரிய அளவில் பேசப் படுகிறது. நாடாளுமன்றத்தில் கடும் புயற்காற்று வீசுகிறது. ஊடகங்களில், விவாதப் போர்கள் நடந்துகொண்டுள்ளன.

உண்மைதான் - இதிலிருந்து இந்தியாவை மீட்கவேண்டியது அவசியமே!

இதற்கொன்றும் வழியில்லாமலும் இல்லை. கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்காக அலைவது, அழுவது புத்திசாலித் தனமல்ல.

ஒரு கருத்து கசிந்தது. இந்தியாவில் கோவில் களில் உள்ள தங்கங்களை, சொத்துக்களை மக்கள் நலப் பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாதா? என்ற அறிவார்ந்த வினா பொறி தட்டிக் கிளம்பியுள்ளது. அப்படி ஒரு கருத்து அரசுக்கு வந்ததாகவும் செய்திகள் வந்தன. அதற்குள்ளாக இந்துத்துவாவாதிகள் தொடை தட்டி, தோள் தட்டிக் கிளம்பி விட்டனர்.

மக்களைப் பற்றி, அவர்களுக்கு எப்பொழுதுமே கவலை இருக்காது; கல்லு சாமிகள், குழவிக் கற்கள்மீதுதான் அவர்களுக்கு அக்கறை. அந்தக் கடவுள் சிலைகள் இருந்தால்தான் உயர்ஜாதித் தன்மை காப்பாற்றப்படும். அந்தச் சிலைகளை மூலதனமாக வைத்துத்தான், தங்கள் புரோகிதச் சுரண்டலை, வெகுஜோராக நடத்த முடியும்.

சிதம்பரம் நடராஜன் கோவில் சங்கதி என்ன? தீட்சிதர்கள் கையில் அந்தக் கோவில் இருந்த போது, வருமானம் என்ன? இப்போது வருமானம் என்ன?

திருப்பதி கோவிலில் நடக்கும் மோசடிகள் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டனவே! மன்னன் கிருஷ்ணதேவராயன் திருப்பதி கோவி லுக்கு அளித்த நகைகள், கிரீடங்கள் எங்கே? எங்கே? என்ற கேள்விகள் எழவில்லையா? டாலர் ரங்காச்சாரி ஊழல்கள் வெளிச்சத்திற்கு வர வில்லையா?

திருப்பதி கோவில் நகைகளின் கணக்குகளை சரி பார்க்கவேண்டும் என்று ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதே!

இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், நாட்டில் ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் கோவில் நகைகளை மக்கள் நலனுக்காக பயன்படுத்தவேண்டும் என்று சொல்லுகிறபோது பூமிக்கும் விண்ணுக்கும் குதிப்பானேன்?

இதுபற்றி தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள், விடுதலையில் இரண்டு ஆண்டு களுக்குமுன் அறிக்கை ஒன்றில் தெளிவு படுத்தினார் (விடுதலை, 5.11.2011).

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில், ஒரு லட்சம் கோடி ரூபாய் சொத்து, புட்டபர்த்தி சாய்பாபா மடத்தில் திரண்ட சொத்துகள், குரு வாயூரப்பன் கோவில், சபரிமலை அய்யப்பன் கோவில்களில் குவிந்து கிடக்கும் தங்க நகைகள், வைரங்கள் இவற்றை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். மக்கள் கொடுத்த சொத்துக்களை மக்களுக்கே திருப்பிக் கொடுப் பதில் தவறு ஏதும் இல்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்!

இந்த நேரத்தில், அதனைச் சுட்டிக்காட்டுவது மிகவும் பொருத்தமாகும். தங்கத்தைச் சேமிக் காதீர்கள் - வாங்காதீர்கள் என்று மத்திய நிதி அமைச்சர், மக்களுக்கு வேண்டுகோள் வைக்கும் இந்த நேரத்தில், ஒன்றுக்குமே பயன்படாமல் தூசு படிந்து, முடங்கிக் கிடக்கும் - குறட்டை விட்டுக் கொண்டிருக்கும் கோவில் நகைகளைப் பயன்படுத்துவதுதானே புத்திசாலித்தனம்!

தங்கம் அரசாங்கத்தின் ரிசர்வ் வங்கியில் இருக்கவேண்டிய பொருளே தவிர, சிலைகளின் கழுத்திலும், மனிதர்களின் உடலிலும் ஜொலிக் கின்ற பண்டமல்ல.

கடுமையான நோய்க்குத் தீவிர சிகிச்சைப் பிரிவு இருப்பதுபோல, பொருளாதார நிலையில் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கும் இந்தியா, தப்பிப் பிழைக்க - தங்கம் அனைத்தும் அரசின் கஜா னாவுக்கு வந்து சேரவேண்டும் என்ற சர்வாதிகார சட்டம் போட்டாலும் தவறு இல்லை.

தமிழ் ஓவியா said...


வ.உ.சி.


வ.உ.சி.

இந்தியாவின் விடு தலைப் போராட்ட வரலாற்றில் தியாகச் செம்மல் தகுதியில் முதல் பரிசு கொடுக்கப்பட வேண்டுமானால் அதற்குரிய வர் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரே! அந்தப் பெருமகனார் பிறந்த பொன் னாள் இந்நாள் (1878).

வழக்குரைஞர் பட்டம் பெற்றவர். தன் வாழ்க்கையை வளமைப்படுத்திக் கொள்ள நினைத்திருந்தால் வழக்குரைஞர்கள் அரிதாக இருந்த அந்தக் கால கட் டத்தில் அந்தப் பட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கலாமே.

சுதந்திரத் தீயில் குறித்து இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப் பெற்று, சிறையில் செக்கு இழுத்தது அல்லாமல் அவரது வழக் குரைஞர் அந்தஸ்தும் வெள் ளைக்கார அரசால் பறிமுதல் செய்யப்பட்டது. கடைசிக் காலத்தில் எண்ணெய்க் கடை வைக்கும் நிலைக்கு அந்த எண்ணக் கடலின் வாழ்க்கை வண்டி குடை சாய்ந்தது.

தொழிலாளர்களுக்காக அவர் கொடி பிடித்தவர் மட்டு மல்ல - அந்தக் கோட்பாட்டில் கொட்டைப் போட்டுப் பழுத்த மரமானவர்.

கோயில்பட்டிக்கு ஒரு நாள் ஆச்சாரியார் (ராஜாஜி) வ.உ.சி.யைத் தேடி வருகிறார். தன்னோடு கோவை வரை வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஏன்? எதற்கு? என்று எந்தக் கேள்வியையும் கேட்காமல் பயணப்பட்டார் வ.உ.சி.,

இரயிலில், பயணம் நேரம் முழுவதும் தொழிலாளர் களின் பிரச்சினைகள்பற்றி கேள்வி கேட்டுத் துளைத் தார் ராஜாஜி.

எல்லாவற்றிற் கும் நிதானமாக நிறை தரும் கருத்துக்களைக் கூறி வந் தார் வ.உ.சி.

கோவை வந்தாயிற்று; அப்பொழுதுதான் வ.உ.சி.க்கு தெரிகிறது - ராஜாஜி ஒரு தொழிலாளர்கள் கூட்டத்தில் பேசுவதற்காக - அதைப் பற்றித் தெரிந்து கொள்வதற் காகத் தான் தம்மை அழைத்து வந்தார் என்ற உண்மை.

ராஜாஜி அந்தத் தொழி லாளர்கள் கூட்டத்தில் உரையாற்றினார்;

பேச்சு முழுவதுமே வ.உ.சி.யிடம் ரயில் பயணத்தில் கேட்டறிந்தவை தான்!

ராஜாஜி பேசி முடித்த வுடன் அவர் அருகில் சென்று ஒரு கருத்தைவிட்டு விட்டீர் களே என்று நினைவுபடுத் தினார் வ.உ.சி. பேசி அமர்ந்து விட்டேனே என்ன செய்வது என்று கையைப் பிசைந்தார்.

கூட்டத் தலைவரின் அனுமதி பெற்று 10 நிமிடம் உரையாற்றினார்; வ.உ.சி., பேச்சைக் கேட்ட தொழிலாளர் கள். பேசுங்கள்! பேசுங்கள்!! என்று குரல் கொடுத்தனர்.

ஒரு மணி நேரம் பேசினார் என்றால் அது சாதாரணமா?

மறுநாள் ஆங்கிலப் பத்திரிகையைப் புரட்டினார் வ.உ.சி.; ராஜாஜியின் முழுப் பேச்சும் இடம் பெற்றது.

கடைசி ஒரு வரியில் வ.உ.சி.யும் பேசினார் என்றிருந்தது.

என்ன செய்வது! அவர் ஆச்சாரியார் ஆயிற்றே! இவரோ சூத்திரர் ஆயிற்றே! தந்தை பெரியாரோடு இணைந் தார் -

சுயமரியாதை இயக்க மாநாடுகளில் மனம் விட்டு ஏன் பேசினார் என்பது இப் பொழுது விளங்கி இருக்குமே!

- மயிலாடன் 5-9-2013

தமிழ் ஓவியா said...


தொல்லை



வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப் படுபவர்கள் நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பவர்கள்.
(குடிஅரசு, 19.9.1937)

தமிழ் ஓவியா said...


காவிரி நீரிலும் அரசியலா?



காவிரி நீர் என்பது பிரச்சினைக்குரிய ஒன்றாகத் தொடர்ந்து ஆக்கப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் தமிழ்நாடு அல்ல; கருநாடக மாநில அரசே! அம்மாநிலத்தின் எல்லையில் காவிரி உற்பத்தியாகிறது என்கிற ஒரே காரணத்துக்காக கீழ்ப்படுகையில் உள்ள தமிழ் நாட்டுக்கு அதில் உரிமை கிடையாது என்கிற செருக்குத்தனம் கருநாடக மாநில அரசுக்கு இருந்து வருகிறது.

இந்திய சட்டமும் சரி, சர்வதேச சட்டங்களும் சரி கருநாடக அரசின் பக்கம் இல்லை என்பதை அம்மாநில அரசு உணராதது அறியாமையல்ல - தன்னல வெறியில் நியாயத்தைப் புறக்கணிக்கும் புத்திப் பேதலிப்பாகும்.

கருநாடகத்தைப் பொறுத்தவரையில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அதன் போக்கில் நேர்மையான சிந்தனைத் தடம் இருப்பதில்லை. காவிரி நீர்ப் பிரச்சினையை அரசியலாக்கி ஆதா யம் பெறும் ஒரு நிலையை ஏற்படுத்திக் கொண்டு விட்டது. மேலும், புரியும்படிச் சொன்னால் காவிரிப் பிரச்சினையை மாநில மக்களின் வெறி உணர்ச் சிக்குத் தீனி போடும் பண்டமாக கருநாடகாவி லுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு மாற்றி விட்டன. ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கின் நிலை அல்லது நாயர் பிடித்த புலி வால் என்றும் கூறலாம்.
மத்திய அரசோ தன் பொறுப்பை கடமையை, சட்டத்தின் நிலையை உணர்ந்த - மத்திய அரசாக இருப்பதில்லை. பாம்புக்கும் நோகாமல், கொம்புக் கும் நோகாமல் மத்திய அரசு நடந்து கொள்ள முயற்சிக்கிறது.

சட்டப்படியும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியும் மத்திய அரசே நடந்து கொள்ளத் தடுமாறும்போது, மாநில அரசுகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

உச்சநீதிமன்றம் 2007இல் இறுதித் தீர்ப்பை வழங்கிவிட்ட நிலையிலும், அதனைச் செயல் படுத்த முன்வராதது ஏன்? நடுவர் மன்ற தீர்ப்பை கெசட்டில் வெளியிட வேண்டியது - மத்திய அரசின் தவிர்க்கவே முடியாத கடமையும் - பணியும் ஆகும்.

சட்டப்படி ஓர் அரசு நடந்து கொள்ள வேண்டும் என்று மக்கள் போராடுவது என்பது ஒரு விசித்திர நிலையே!

நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் (கெசட்டில்) வெளியிட வேண்டும் என்பதற்காகப் போராட்டம்; அதன் தொடர்ச்சியாக காவிரி மேலாண்மை ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற் காகப் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. நீதிமன்றத்தை மறுபடியும் மறுபடியும் அணுக வேண்டியுள்ளது என்றால் சட்டம் ஆட்சி செய்யும் ஒரு நாட்டில்தான் நாம் இருக்கிறோமா என்ற வினாவை அது எழுப்புகிறது.

மத்திய அரசின் இந்த இயலாமையை நன்கு புரிந்து கொண்ட கருநாடக மாநில அரசு, கருநாடக மாநில எல்லைக்குள், காவிரியின் குறுக்கே அணைகளைக் கட்ட முனைந்துள்ளது. இது சட்டப்படி தவறாகும். எந்த ஓர் அணையை, மாநிலம் கட்டுவதாக இருந்தாலும் அதன் கீழ்ப் பகுதியில் உள்ள பாசனத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது; சம்பந்தப்பட்ட மாநிலத்தின் அனுமதியையும், மத்திய அரசின் அனுமதியையும் பெற வேண்டும் என்பதே சட்டத்தின் நிலைப் பாடாகும்.

எந்தச் சட்டத்தையும் தீர்ப்பையும் குப்பைக் காகிதம் என்று கருதுகிற கருநாடக மாநில அரசின் அத்துமீறும் போக்குக்கு என்னதான் பரிகாரம்?

தனியார்த் தொலைக்காட்சி ஒன்றில் விவாத மேடையில் பங்கேற்ற தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஒரு கருத்தை முக்கியமாக முன் வைத்தார்.

இந்திய அரசமைப்புச் சட்டம் 262ஆம் பிரிவின்படி நதி நீர் பங்கீடு தொடர்பாக மாநிலங் களுக்கிடையே ஏற்படும் தாவாவைத் தீர்க்க, நதி நீர் சம்பந்தமாக மாநிலங்களுக்கிடையே ஏற்படும் வழக்குகளைத் தீர்க்கும் சட்டம் (The Inter-State Disputes Act) இருக்கிறதே அது ஏன் செயல்படுத்தப்பட வில்லை என்று அர்த்தமுள்ள வினாவை திராவிடர் கழகத் தலைவர் எழுப்பினார்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசானா லும் சரி (UPA) பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசனாலும் சரி (NDA) நடுவண் அரசு என்ற தன்மையில் நடந்து கொள்ளவில்லை என்பதுதான் கசப்பான உண்மையாகும். முதற் கட்டமாகக் கருநாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்டப்படும் முயற்சியைத் தடுப்பது மத்திய அரசின் தவிர்க்கவே முடியாத கடமையாகும்.