Search This Blog

27.9.13

தினமலரில் என் பெயர் வராது,என்னுடைய படமும் வராது-கி.வீரமணி

வணிக நோக்கில் பத்திரிகைகள் முதலாளிகளின் குரலாக இருக்கின்றன பத்திரிகையாளர்கள் பாராட்டு விழாவில் விடுதலை ஆசிரியர் கருத்துரை
சென்னை, செப். 26- இன்றைய தினம் பத்திரி கையில் பணிபுரிவோர் முதலாளிகளின் குரலை ஒலிக்கக் கூடிய அளவுக்கு பத்திரிகைத் துறை வணிக மயமாகி விட்டது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் (ஆருது) பொன் விழா சிறப்பு நிகழ்ச்சிகளின் முதல் நிகழ்ச்சி 22.9.2013 அன்று காலை சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சங்க கட்டடத் தில் நடை பெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந் தினராக பங்கேற்று பேசிய விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றியதாவது:-

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திலே தமிழில் இதழியல் தொடங்கி அதிலே நல்ல பயிற்சி யாளர்களை, இளைஞர்களை உருவாக்கவேண்டும் என்பதற்கு முன்னோடியாக, இதழியலிலே மிகச் சிறப்பாகப் பணியாற்றக்கூடிய, பாராட்டத்தகுந்த பத்திரிகையாளர் - அவர்களுடைய கருத்துகள், எழுத்துகளிலேயே கூட எங்களைப் போன்றவர்கள் பற்பல நேரங்களில் மாறுபட்டிருக்கலாம்; அது வேறு செய்தி. ஆனால், நாம் எல்லோரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள்; பத்திரிகைக் குடும் பத்தைச் சார்ந்தவர்கள்.

நட்டத்தில் பத்திரிகை நடத்துபவர்கள் நாங்கள்

என்னையும், அருமைத் தோழர் அய்யா ஆர்.என். கே. அவர்களையும் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம் என்று அழைப்பிதழில் போட்டிருக்கிறார்கள். இரண்டு இயக்கங்களுக்கும் பத்திரிகைகள் உண்டு. அவருக்கு ஜனசக்தி, எனக்கு விடுதலை. இரண்டு பத்திரிகைகளும் லாபத்தில் நடக்காமல், நஷ்டத்தில் நடைபெறக்கூடிய பத்திரிகைகள்தான். இந்த விழா விற்கு வந்திருக்கக்கூடிய அருமைத் தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களே, இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய சென்னை பத்திரி கையாளர் சங்கத்தின் தலைவர் அருமைத் தோழர் இரா.மோகன் அவர்களே, வரவேற்புரையாற்றிய பொருளாளர் ரகுநாதன் அவர்களே, இணைப்புரை வழங்கிக் கொண்டிருக்கின்ற அருமைத் தோழர் நூருல்லா அவர்களே, வாழ்த்துரை வழங்க இருக்கக் கூடிய பாபு ஜெயக்குமார் அவர்களே,

நாத்திகம் பாலு

இந்த விழாவில் பெருமைப்படுத்தப்படவிருக் கின்ற செய்தியாளர்களாக, பல ஆண்டுகாலம் மூத்த பத்திரிகையாளர்களாக மற்றவர்களுக்கு வழிகாட்டி யாக இருக்கக்கூடியவர்களாக  நாத்திகம் பாலு என்று அழைக்கப்பட்ட, விடுதலையின்மீது உரிமையுள்ள ஒரு செய்தியாளராக என்றென்றைக்கும் அவர்கள் தொடர்ந்து கொண்டிருப்பார்கள். இன்றைக்கும் விடுதலையின் சிறப்புச் செய்தியாளராக என்றைக் கும் தொடர்ந்துகொண்டிருக்கக் கூடியவர்.
அதுபோலவே, நண்பர் தினமணி வி.என்.சாமி என்று அழைக்கப்பட்டாலும், நான் சொல்கின்ற தகவல் இங்கே இருக்கின்ற ஒரு சிலருக்குத் தெரியும்; பல பேருக்குத் தெரியாது. விடுதலை நாளிதழில் இருந்துதான் அவர் தினமணிக்கே சென்றார். பல பேருக்கு நாற்றங்கால் விடுதலை நாளிதழ்தான். அய்யா பெரியாரின் உரையினை குறிப்பெடுத்து, விடுதலையில் வெளியிட்டு, அய்யா அவர்களே பாராட்டக் கூடிய அளவிலே திறமை படைத்தவர் தோழர் சாமி அவர்கள். அன்றைக்குப் பார்த்த சாமி போலவே, இன்றைக்கும் இருக்கிறார். மற்ற சாமிகளை நாங்கள் பாராட்டுகிறோமோ இல்லையோ, இந்த சாமியை மறக்கவே முடியாது. அதுதான் மிக முக்கிய மானது. அந்த வகையிலே அருமைத் தோழர் வி.என். சாமி அவர்களே,

அதுபோலவே, தினமலர் விஸ்வநாதன், அழைப் பிதழில் தினமலர் விஸ்வநாதனைப் பாராட்டுகிறார் கள் என்று போட்டிருப்பதைப் பார்த்து, என்னிடம் ஒரு நண்பர் கேட்டார், என்னங்க, தினமலர் பத் திரிகையில் பணியாற்றியவரைப் பாராட்டப் போகிறார்களா? என்று.

தினமலரில் என் பெயர் வராது

தினமலரில் என்னுடைய பெயர் வராது; என்னு டைய படமும் வராது, அது வேறு செய்தி. வரக் கூடாதவர்கள் பட்டியல் என்று ஆசிரியர் பகுதியில் வைத்திருப்பார்கள், அதில் என்னுடைய பெயரும் அடக்கம். அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. பத்திரிகையாளர் சங்கத்தில் என்னை அழைத்தார்கள்; யாரையும் பாராட்டுவதற்கு எங்களுக்கு வேறுபாடு கிடையாது. கருத்துகள்தான் எங்களுக்கு எதிரியே தவிர, நபர்கள் எதிரிகள் கிடையாது. அவர்கள் பத் திரிகைகளில் பணியாற்று கின்ற பத்திரிகையாளர் களே தவிர, முதலாளிகள் கிடையாது.

முதலாளிகள் பல விஷயங்களை நிர்ணயிக் கிறார்கள்; செய்தியாளர்கள் அவர்களுடைய கட மையைச் செய்துவிடுகிறார்கள்; பல நேரங்களில் அவர்கள் சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள்.

கட்சி, அமைப்பு, தலைமை இவைகளிலெல்லாம் பார்த்தீர்களேயானால், தொண்டர்கள் சில நேரங் களில் பலிகடாக்களாக ஆக்கப்படுவார்கள். தலை வர்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பார்கள். அது போல், பத்திரிகை உலகத்திலும் உண்டு. ஆகவே, பாராட்டுவதற்கும், அதற்கும் சம்பந்தமில்லை என்று அந்த நண்பருக்குக் கூறினேன்.

அதேபோல், தினத்தந்தி ராமஜெயம் அவர்கள், தினத்தந்தி எங்களுக்குப் பக்கத்து வீட்டுக்காரர். அய்யா ஆதித்தனார் காலத்திலிருந்தே, தந்தை பெரி யார் அவர்கள் காலத்திலிருந்தே உறவு இருக்கிறது. என்றைக்கும் மிகப்பெரிய தோன்றாத் துணையாக இருக்கக் கூடியவர்கள். அந்த வகையில் இவர்கள் எல்லோரையும் பாராட் டுவது சிறப்பானதாகும்.

அதைவிட பல நண்பர்கள், மூத்த பத்திரிகை யாளர்கள் பாபு ஜெயக்குமார், பகவான் சிங், மணி போன்றவர்கள் எல்லோரையும் சந்திக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் எல்லோரும் எங்களைத் தாக்கி எழுதியிருப்பார்கள், விமர்சித்திருப் பார்கள். அதில் ஒன்றும் தவறு இல்லை. ஏனென்றால், கருத்துச் சுதந்திரம் உண்டு.

பெரியார் கூறும் கருத்து

பெரியார் அவர்கள் ஒரு கருத்தினை சொல் வார்கள்; என்னுடைய தலைவர் அவர்கள், வழி காட்டியாக இருக்கக் கூடிய அறிவாசான் அவர்கள்.
என்னுடைய கருத்தை மறுக்க உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. அதனால், என் கருத்தை வலியுறுத்திச் சொல்ல எனக்கு உரிமையுண்டு என்று.  அதைத்தான் நாங்கள் கடைபிடிக்கின்ற சூழ்நிலை யாகும்.

இங்கே பழைய கட்டடத்தில் நடைபெறுகின்ற சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் பொன் விழாவில், சந்திக்க வாய்ப்பில்லாத பலரை இங்கே சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அவர்களுக்கு எல்லோருக்கும், வணக்கத்தினையும், வாழ்த்துகளை யும் தெரிவிக்கின்ற இந்த நேரத்தில், இதுபோன்ற நிகழ்ச்சிகள், மூத்த பத்திரிகையாளர்களைச் சந்திக் கின்ற வாய்ப்புகள் என்பது அடிக்கடி நடைபெற வேண்டும்.

தமிழ்நாட்டில் மாறுபட்ட கருத்து என்று சொன் னால், அவர்களை எதிரிகள்போல் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள எவ்வளவுக்கெவ்வளவு பக்குவம் இருக் கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு ஜனநாயகத்தைப் புரிந்தவர்கள் என்று அர்த்தம். மந்தைத்தனம் என்பது ஆடு மாடுகளுக்குத்தான். ஆனால், மனிதர்களுக்கு மந்தைத்தனம் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஒரு பக்கம் சாய்ந்தால், அப்படியே அந்தப் பக்கமே சாய வேண்டிய அவசியம் இல்லை.

பத்திரிகை சுதந்திரம்

சில நேரங்களில், பத்திரிகை சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் என்று நாம் பேசுகின்றோம். பத்திரிகை சுதந்திரம் படுகின்ற பாடு என்னவென்பது மிகத் தெளிவாகத் தெரியும். அதைப்பற்றி விரிவாகப் பேசி, உங்களையெல்லாம் சங்கடத்திற்கு ஆளாக்க விரும்ப வில்லை. அதைப்பற்றி பேசுவதற்கு எங்களுக்குப் பல மேடைகள் இருக்கின்றன.

பொதுவாக, ஜனநாயகத்தில் நாம் பெருமைப்படக் கூடிய ஒரு செய்தி என்னவென்றால், ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிகைகள். அந்த நாலாவது தூண் அவ்வளவு வேகமாக செயல்பட முடிய வில்லை; இது உலகம் முழுவதும் இருக்கக்கூடிய சூழல். நம் நாட்டில் இன்னும் அதிகமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் பார்த்தீர்களேயானால், ஆழமாக வும், தெளிவாகவும், துணிந்தும் எழுதக்கூடியவர்கள்; ஆழமாகச் சிந்திக்கக் கூடியவர்கள். ஆற்றல் உள்ள வர்கள்; ஆற்றலில் குறைந்தவர்கள் நம்மவர்களில்  யாரும் கிடையாது. காஷ்மீர்முதல் கன்னியாகுமரி வரையிலும் எல்லாரும் இங்கிருந்து சென்றவர்கள் தான்.
ஆனால், ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால், நாளேடுகளாக இருந்தாலும், வார ஏடுகளாக இருந் தாலும், மாத ஏடுகளாக இருந்தாலும் அதில் பணி யாற்றக்கூடிய பத்திரிகையாளர்கள் தமது கருத்து களை சுதந்திரமாகப் பதிவு செய்வதற்கு வாய்ப்பே கிடையாது.

தொண்டா? தொழிலா?

ஏனென்றால், பத்திரிகை தொண்டா? தொழிலா? என்று கேட்டால், தொண்டில்தான் பத்திரிகைகளு டைய கருத்து ஆரம்பமாகிறது. ஆனால், இன்றைக்கு அது தொழிலாக மாறிவிட்ட காலகட்டத்தில், சுதந்திரத்தை அவர்கள் வலியுறுத்த முடியாது.

நம்முடைய எழுத்தாளர்களாக இருக்கின்ற பெருமக்கள் இருக்கின்றார்கள் பாருங்கள், அவர்கள் எல்லாம் மற்றவர்களிடம் பணியாற்றுகின்ற நேரத் தில், அவர்களுக்கு எந்தளவுக்கு சுதந்திரம் உண்டு என்பதைத் தெளிவாக எண்ணிப் பார்க்கவேண்டும்.

எங்களைப் போன்றவர்களானாலும் சரி, அய்யா நல்லகண்ணு போன்றவர்களானாலும் சரி, நாங்க ளெல்லாம் இயக்கப் பத்திரிகைகளை நடத்து கிறவர்கள். எங்களுக்கென்று சில கொள்கைகள் இருக்கின்றன. அதனால் லாபம் வராது; நட்டம்தான் வரும். ஆனால், கொள்கைகளைப் பரப்பி இருக் கின்றோம்; அதைப் பொதுமக்களிடம் கொண்டு செல்கிறோம் என்ற ஒரு மனநிறைவு.

வணிக நோக்கில் ஏடுகள்

ஆனால், இப்பொழுது வணிக நோக்கத்தோடு பத்திரிகைகள் நடைபெறுகின்ற நேரத்தில், கார்ப்ப ரேட் குரூப் என்று சொல்லக்கூடிய பன்னாட்டு நிதியங்கள், பன்னாட்டு அமைப்புகளின் கருத்துக் கேற்ப, அவர்களின் மனம் கோணாதபடி இருக்க வேண்டும். விமர்சனங்களே வந்தாலும்கூட, பாம் புக்கும் நோகாமல், பாம்படித்த கோலுக்கும் நோகாமல் விமர்சனங்கள் இருக்கவேண்டும் என்று சொல்வார்கள்.

நம்முடைய செய்தியாளர்களுக்கும், பத்திரிகை யாளர்களுக்கும் இருக்கின்ற சிக்கல் என்னவென்றால், மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்று சொல்வதுபோல, என்னய்யா, நான் அளித்த பேட்டி யில் சொன்னதைவிட்டுவிட்டு மாற்றி போட்டிருக் கிறீர்களே, பிறகு எப்படி இப்பொழுது என்னிடம் பேட்டிக்கு வந்திருக்கிறீர்கள் என்று தலைவர் மிகவும் சீரியசாகக் கேட்பார்.

இல்லீங்க, என்னுடைய முதலாளிதான் போட வேண்டாம் என்று சொன்னார் என்று முதலாளி யையும் காட்டிக்கொடுக்க முடியாது.

அதேநேரத்தில், போடவில்லை என்பதற்குரிய அந்தப் பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நமக்கே புரியும். சில பேர் மவுனமாக ஒரு சிரிப்பை சிரித்து அப்படியே மழுப்பி விடுவார்கள்.

ஆகவேதான், இரண்டு பக்கமும் அடி வாங்கக் கூடிய ஒரு தொழில்தான், பத்திரிகை, பத்திரிகையாள ராக இருக்கக்கூடியவர்களின் நிலை.

தொலைக்காட்சிகள்

இப்பொழுது ஊடகங்கள் என்று சொல்லக்கூடிய தொலைக்காட்சிகள் நிறைய போட்டிக்கு வந்து விட்டன. அதில் உரையாற்றுவதற்கு ஆட்கள் அதிக மில்லை என்பதால், மீண்டும் மீண்டும் அவர்களே வரக்கூடிய நிலை இருக்கிறது; ஒரு பிரச்சினையைப் பற்றி முழுவதும் தெரிந்தவர்களோ, தெரியாதவர் களோ அவர்களை வைத்துதான் தொலைக்காட்சிகள் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கின்றன.

ஆகவே, இந்த வகையில் நெருக்கடியான ஒரு காலகட்டம் இது. ஒரு பக்கத்தில் பார்த்தீர்களே யானால், கருத்துச் சுதந்திரம், உரிமை, அடிப்படை சுதந்திரம் இவை அத்தனையும் இருக்கிறது.

ஆனால், அதேநேரத்தில் இன்னொரு பக்கம் பார்த்தீர்களேயானால், சுதந்திரம் இல்லை என்பது மிகவும் முக்கியமாகச் சொல்லப்படவேண்டும்.
ஒவ்வொரு நாளும் பொதுநல வழக்குகள்; நீதி மன்றங்கள் நாட்டை ஆளுகின்றனவா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நாட்டை ஆளு கின்றார்களா? என்பதற்கு சுலபத்தில் பதிலளிக்க முடியாத ஒரு கேள்வி.

நீதி போக்கு!

ஜூடிசியல் ஆக்டிவிசம் என்று ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு. ஏனென்றால், தயிர் சாதம் சாப்பிடு வதா? சாம்பார் சாதம் சாப்பிடுவதா? என்பதை நீதிபதி முடிவு செய்து சொல்கிறார். இதுதான் மிக முக்கியம்.

இன்னும் சில இடங்களில் நீதி போக்கு எப்படி இருக்கிறது என்றால், யார் நீதிபதி? யார் வழக் குரைஞராக இருக்கவேண்டும்? என்பதையெல்லாம் நான்தான் முடிவு செய்யவேண்டும் என்று சொல்லக் கூடிய அளவிற்கு இன்றையக்கு நீதியின் போக்கு சென்று கொண்டிருக்கிறது.

ஆனால், எல்லோரும் பார்வையாளராக இருக்க முடியுமே தவிர, அதைப்பற்றி எழுதுகின்றவர்களா கவோ, துணிச்சலோடு பதிவு செய்யக்கூடியவர்களா கவோ, கருத்துரிமை உள்ளவர்களாக இருக்க முடியாது.

எனவேதான், ஒரு 40, 50 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த பத்திரிகையாளர்களுக்கு இருந்த சுதந்திரம், அவர்களுக்கு இருந்த துணிவு, நெஞ்சுரம் எல்லாம் இன்றைய பத்திரிகைகளுக்கு இருந்தாலும், அதனை வெளியே காட்டிக் கொள்ள முடியாத அளவிற்கு அவர்கள் இருக்கின்றனர். எனவே, இந்த சூழ்நிலை யில், இங்கே பாராட்டப்பட்ட இவர்கள் எல்லோரும் ரோல் மாடல் ஏன் நாம் அவர்களைப் பாராட்டு கிறோம் என்று சொன்னால், இவர்கள் 40, 50, 60 ஆண்டுகள் பணியாற்றி, அவர்கள் தங்களது கடமை களையும் செய்திருக்கிறார்கள்; அதேநேரத்தில், மனசாட்சிக்கு விரோதமில்லாத, தங்களுடைய சுதந்திரமான கருத்துகளை காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல் செய்திகளை வெளியிட்டிருக்கிறார் கள்.

நம்முடைய பாலு அவர்களேகூட, எந்தப் பாராட்டு விழாவிற்கும் வரமாட்டார்; அதிசயமாக வும், மிகவும் பொறுமையாகவும் இங்கே அமர்ந் திருக்கிறார். நான் சொல்வது அவர் காதில் விழுந்ததா என்பதும் நமக்குத் தெரியாது; அது ஒரு வகையில் நல்லதுதான். மிகவும் முரட்டுத்தனமான கருத்தைச் சொல்லக்கூடியவர். நாத்திகம் பாலு சுயமரியாதைக் காரர். செய்திகளை உற்சாகத்தோடு கொடுப்பார்; மிகவும் பெரிதாகப் போடவேண்டும் என்று சொல் வார். எல்லோரையும் வழி நடத்திச் செல்லக்கூடியவர். குடும்பத்தில் மூத்த அண்ணன் எப்படியோ அது போன்றவர் பாலு அவர்கள்.

சாமி அவர்கள் பாலுவிற்கு நேர் எதிரானவர். மிகவும் அடக்கமானவர், அமைதியானவர்; அன் றைக்கு எப்படி இருந்தாரோ, இன்றைக்கும் அப் படியே இருக்கிறார்.  அவரைப் பார்த்தபொழுது, எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இங்கேயுள்ள மீரான்சாகிப் தெருவில் அன்றைய காலகட்டத்தில், தந்தை பெரியாரிடம் பணியாற்றி, பிறகு தின மணிக்குச் சென்றவர்கள்.
மற்றவர்களைப் பற்றி அவ்வளவாக எனக்குத் தெரியாது. இருந்தாலும், அவர்கள் பத்திரிகையில் பணியாற்றிய வகையில் பெருமைப்படுத்தப்படக் கூடிய நிலையில் உள்ளனர்.

கருத்துச் சுதந்திரம்

எனவே, நம்முடைய பத்திரிகையாளர்களுக்கு உரிய கருத்துச் சுதந்திரத்திற்கு ஒரு பாதுகாப்பு நிச் சயமாகத் தேவை. பத்திரிகையாளர்கள் சங்கடத்திற்கு ஆளாகும்பொழுது, நம்மைப் போல் உள்ளவர்கள் வேடிக்கைப் பார்ப்பவர்களாக இருக்கக்கூடாது. எனக்கு எதிராக எழுதியவர்தானே; அவர் எப்படி யாவது மாட்டிக்கொள்ளட்டும் என்று யாரும் நினைக்கக்கூடாது. அதுதான் மிகவும் முக்கியமானது. அரசுகளை மாற்றக்கூடிய சக்தி பத்திரிகைகளுக்கு உண்டு. நவமணி பத்திரிகையைப் பார்த்தீர்களே யானால், மாறுபட்ட கருத்துகளை வெளியிடுவார் கள். மறைந்த பத்திரிகையாளர் சோலை போன்ற வர்களாகட்டும், கல்யாணம் போன்றவர்களாகட்டும் துணிந்து கருத்துகளை சொல்லக்கூடியவர்கள்.

காமராசர் என்ன கூறுவார்!

நம்முடைய மூத்த தலைவர்கள் பெரியார், காமராசர், அண்ணா போன்றவர்களிடம் உரிமை எடுத்துக்கொண்டு பேசக்கூடியவர்கள்.
பத்திரிகையாளர்களிடம் காமராசர் உரையாற் றும்பொழுது, எல்லாவற்றையும்பற்றி பேசுவார்; ரகசியம் என்று ஒன்றும் இல்லை. ஆனால், பத்திரி கையில் எதைப் போடவேண்டும் என்பதையும் சொல்லிவிடுவார் - ஆஃப் தி ரெக்கார்டு என்று.

இப்பொழுது ஆஃப் தி ரெக்கார்டு என்பதற்கே என்ன பொருள் என்று யாருக்குமே தெரியாத அளவிற்கு,  எல்லாமே ஆஃபான ரெக்கார்டாகவே இருக்கிறது. ஆஃப் தி ரெக்கார்டு இல்லை. இப்பொழுது ஆஃப் தி ரெக்கார்டு ஆக எல்லாவற்றையும் பேசிவிட்டு, அதையே செய்தியாக்கி விடுவது. செய்தியாக்க வேண்டியவை எல்லாவற் றையும் ஆஃப் தி ரெக்கார்டு ஆக ஆக்கிவிடுவது. இதுபோன்ற வேடிக்கையான சூழல் நிலவுகிறது. ஏனென்றால், நானும் பத்திரிகையாளன் என்ற முறையில் சொல்கிறேன். நான் செய்தியாளர்களைச் சந்திக்கும்பொழுது, முக்கியமான செய்திகளுக்காக நான் உரையாற்றும் பொழுது, உதாரணமாக, மத்திய அரசு திருச்சி விமான நிலையத்திற்குத் தந்தை பெரியார் பெயரை வைக்கவேண்டும் என்று சொன்னால்,

ஒரு செய்தியாளர் என்ன கேட்பார் என்றால், இன்று தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகளுக்கிடையே இப்படி இருக்கிறதே, அதைப்பற்றி என்ன நினைக் கிறீர்கள் என்று.

நான் உடனே, இந்தக் கேள்விக்கு இப்பொழுது நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால், நான் உங்களை எந்த நோக்கத்திற்காக அழைத் தேனோ, அந்த நோக்கம் நிறைவேறாமல் போகும். நீங்கள் கேட்ட கேள்விக்கு இன்னொரு சூழலில் பதில் அளிக்கிறேன் என்று சொன்னேன்.

ஆகவே, மிகச் சிறப்பான வகையில் தொண் டாற்றிய பத்திரிகையாளர்களான இவர்களுக்கு, எல்லா வகையிலும், என்னென்ன முறையில் ஒத்துழைப்புக் கொடுக்க முடியுமோ, அத்தனையும் நாம் செய்யவேண்டும்.

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கு வாருங்கள்

இந்தப் பாராட்டு விழாவிற்கு நம்முடைய மோகன் அவர்கள் என்னை பங்கேற்க அழைக்கும்பொழுது, நான் ஒப்புக்கொண்டதற்கு இன்னொரு சுயநல காரணம் உண்டு. அது என்னவென்றால், மூத்த தமிழியல் பத்திரிகையாளர்களாக இருக்கக்கூடிய நீங்கள், எங்களுடைய பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் அடிக்கடி நடைபெறும், தமிழ் இதழியல் பயிற்சிப் பட்டறைக்கு நீங்கள், உங்களை யெல்லாம் வருகைப் பேராசிரியர்களைப் போல ஆக்கிக் கொள்ளுங்கள்; அதற்காக எங்களுடைய கதவுகள் திறந்து இருக்கின்றன. 

நாங்கள் உங்களை அன்போடு வரவேற்கத் தயாராக இருக்கிறோம்.
மூத்தப் பத்திரிகையாளர்கள், நல்ல அனுபவம் உள்ளவர்கள் நிறைய இளைஞர்களைத் தயாரிக்க வேண்டும். உதாரணமாக, தமிழ் தேசியக் கூட்ட மைப்பு இன்றைக்கு மிகப்பெரிய அளவிற்கு வடக்கு மாகாணத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.

இந்தச் செய்தியை இரண்டே வரிகளில் போடக் கூடிய அளவில் இருக்கக்கூடாது. இதனுடைய வரலாறு என்ன? ஈழப் பிரச்சினை என்ன? இதற்காக நடைபெற்ற போராட்டம் என்ன? என்பதைப் பற்றியெல்லாம் தெரிந்திருக்கவேண்டும்.

நம்முடைய மூத்த பத்திரிகையாளர்களின் சிறப்பு என்னவென்றால், அவர்கள் ஒரு கேள்வி கேட்டார் கள் என்றால், ஆத்திரமூட்டக்கூடிய அளவில் இல்லா மல், அதேநேரத்தில், தலைவர்களாக இருக்கட்டும், சிந்தனையாளர்களாக இருக்கட்டும், அவர்களிட மிருந்து கருத்துகளைப் பெறக்கூடிய அளவிலே அது இருக்கும். அதுமாதிரியான அளவிற்கு, செய்திகளைக் கொண்டு செல்லக்கூடிய அளவிற்கு, செய்திகளைக் கொடுக்கக்கூடிய அந்தப் பக்குவங்களைச் சொல்லிக் கொடுங்கள்.  ஏற்கெனவே நீங்கள் அனுபவத்தின் மூலம் அந்தப் பக்குவங்களைப் பெற்றவர்கள்.

சிறந்த பாடம் அனுபவம்!

அனுபவம் என்பதைவிட சிறந்த பாடம் வேறு கிடையாது. ஏனென்றால், உங்களுடைய அனுபவம் இளைய தலைமுறையினருக்குப் பயன்படவேண்டும்.

இல்லை, இல்லை நாங்கள் தஞ்சாவூருக்கு - அவ்வளவு தூரம் பயணம் செய்து வர முடியாது என்று நினைத்தால், நாங்கள் சென்னையில் அந்தப் பட்டறையை ஏற்பாடு செய்து, உங்கள் வசதிக்காக மாணவர்களை தயாரிக்க தயாராக இருக்கிறோம்.

அதைப்பற்றி கலந்தாலோசித்து எங்களிடம் சொன்னால், சென்னைப் பத்திரிகையாளர்கள் சங்கத்தை முழுமையாக எங்களுடைய பணிக்கு உங்களைப் பயன்படுத்திக் கொள்கிறோம். உங்களுக்கு எந்த வகையில் உதவிகரமாக, பாதுகாப்பாக இருக்கவேண்டுமோ, அந்த அளவிற்கு இருப்போம்.
பிபிசி பற்றி நீண்ட நாள்களுக்கு முன்பாக ஒரு செய்தியைப் படித்தேன்.

செய்தியில் கருத்தை திணிக்கக் கூடாது!

பிபிசி செய்தியில், செய்தியாளர்கள் செய்தியைச் சொல்லும்பொழுது, பிபிசி நிர்வாகம் அந்த செய்தி ஆசிரியரை அழைத்து ஒரு விளக்கம் கேட்டு, அவரை பணியில் இருந்து சில நாள் நீக்கி வைத்திருக் கிறார்கள். எதற்காக என்றால், ஒரு துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது; போலீஸ் பயரிங்; அதைப்பற்றி பிபிசி வானொலியில் இவர் செய்தி அளிக்கிறார்; போலீஸ் கேடு டு ஓபன் பயர் என்று.
உடனே, அந்த நிறுவனத்தின் மேலாளராக இருக்கக்கூடியவர் அந்தச் செய்தியாசிரியரை அழைத்து, பிபிசிக்கு கிரிடிபிலிடி என்பதை செய்தி யைத்தான் சொல்லவேண்டும். போலீஸ் ஓபன் தி பயர் என்று சொன்னால், அது செய்தி.

போலீஸ் கேடு டு  ஓபன் தி பயர் என்றால், துப்பாக்கி சுடவேண்டிய சூழல் வந்தது என்று சொன்னால், அது செய்தியல்ல; அதற்கு நீங்கள் பொறுப்பேற்கவேண்டும் என்று சொன்னார்.

ஆனால், இன்றைக்கு அந்தச் சூழல் மறைந்து விட்ட நிலை இருக்கிறது. மீண்டும் அந்தச் சூழலை நாம் உருவாக்கவேண்டும்.

தலையங்கத்தில் கருத்துச் சொல்லலாம்

பத்திரிகையில் எழுதுகின்ற தலையங்கத்தில் கருத்துகளைச் சொல்லலாம்; கட்டுரைகளில் கருத்து களைச் சொல்லாம். ஆனால், செய்திகளைத் திரித்து போடவேண்டிய நிலை இருப்பது விரும்பத்தக்க தல்ல. இதுபோன்ற பல செய்திகளை, நம் பத்திரி கையாளர் சங்கத்தில், நல்ல விவாதங்கள், ஆரோக் கியமான விவாதங்களை உருவாக்கவேண்டும். அதற்கு என்றென்றைக்கும் நாங்கள் உறுதுணையாக இருப்போம்; பெரியார் திடல் உறுதுணையாக இருக்கும்; விடுதலை உறுதுணையாக இருக்கும்.

நாம் எல்லாம் முற்போக்குச் சிந்தனையாளர்களாக இருந்தாலும், இடதுசாரி சிந்தனையாளர்களாக இருந்தாலும், பெரும்பாலான கருத்துகளில் நாங்கள் உடன்பாடுள்ளவர்கள். அரசியலில் மாறுபாடு கருத்துள்ளவர்கள், அது வேறு.

வேண்டாம் ஓய்வு!

மற்ற பொதுவான நோக்கு என்று பார்க்கும் பொழுது, முற்போக்கு சிந்தனை என்று வரும் பொழுது மாறுபட்ட சிந்தனை இருக்காது. ஆகவே, உங்களை அன்போடு நான் கேட்டுக்கொள்வ தெல்லாம், இந்த மூத்தப் பத்திரிகையாளர்களை - ஓய்வு பெற்றவர்களாகக் கருதாமல் - ஓய்வு என்பது இருக்கிறதே, அதுவே, உடல்நலத்தைக் குறைக்கும்; அதுவே முதுமையைத் திணிக்கும்.

அவர்களை இங்கே பாராட்டியதினால், ஒரு பெரிய பலன் என்னவென்று கேட்டால், அவர்களு டைய வயதில் ஒரு பத்து வயதைக் குறைத்திருக்கும்.
ஆகவே, எல்லோரையும் பாராட்டக்கூடிய பழக்கம் வரவேண்டும்.

வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார்.
                  --------------------------"விடுதலை” 26-9-2013

19 comments:

தமிழ் ஓவியா said...


பார்வையற்றோர் பயங்கரவாதிகள் அல்லர்! முதல்வரைச் சந்திக்க வாய்ப்பளிக்க வேண்டும்


பார்வையற்றோர் பயங்கரவாதிகள் அல்லர்!

முதல்வரைச் சந்திக்க வாய்ப்பளிக்க வேண்டும்

கோரிக்கைகளைப் பரிவுடன் பரிசீலிக்கவும் வேண்டும்



http://www.viduthalai.in/images/stories/dailymagazine/2013/mar/19/29.jpg



கடந்த 10 நாட்களாக பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் முதல்வரைச் சந்தித்துக் கோரிக்கை வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.



அதற்காகப் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். முதல் அமைச்சர் சந்திப்புக்கான வாய்ப்பை அளிப்பதற்கு மாறாக பார்வையற்றவர்களைக் காவல்துறையினர் நடத்தும் முறை வேதனை அளிக்கிறது. பார்வையற்றோர் தங்கள் கோரிக்கையை முதல் அமைச்சரிடம் அளிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:



சென்னையில் கடந்த 10 நாள்களுக்கு மேல், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தங்களுக்குள்ள வேலை வாய்ப்பு இடஒதுக்கீடு சரிவர நிரப்பப்படல் வேண்டும் என்றும் மற்றும் சில கோரிக்கைகளை முன் வைத்தும் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களிடம் காவல்துறையினர் நடந்து கொள்ளும் முறை மிகவும் வேதனையாக இருக்கிறது! பார்வையற்றவர்களிடம் - அதுவும் அவர்கள் தமக்கு வாழ்வுரிமை தேவைக்கென போராடும்போது, அவர்களை ஏதோ பயங்கரவாதிகளைப் போல கருதி, அடக்குமுறைகளை ஏவுதல், அலைக்கழிக்கப்படுதல், எவ்வகையிலும் நியாயமல்ல; ஜனநாயக ஆட்சியின் அம்சமாகவும் அமையாது! மக்களாட்சித் தத்துவம் என்பது ஆட்சியாளர்களை நேரில் சந்திக்கும் அம்சத்தை அடிப்படையாகக் கொண்டதல்லவா?



தமிழக முதல் அமைச்சர், போராட்டக்காரர்களை அழைத்து - மனிதாபிமானத்துடன் கருணை காட்டி, அவர்களது கோரிக்கைகளைக் கேட்டு, செய்ய வாய்ப்பிருப்பவைகளை செயல்படுத்த ஆணை பிறப்பிக்கலாம்! அவர்கள்மீது கருணைபொழிய நடந்து கொண்டால்தான் ஆட்சிக்கு அவப்பெயரைத் தடுக்க முடியும். காவல்துறையினரையும் கடிதோச்சி மெல்ல எறியும் வண்ணம் அறிவுறுத்த வேண்டும்.



பார்வையற்ற பரிதாபத்திற்குரிய அத்தோழியர், தோழர்களின் கோரிக்கையை ஏற்று செயல்படுத்தினால் பொருளாதாரத்தில் பெரும் நட்டம் ஒன்றும் ஏற்பட்டு விடாது.



எல்லாவற்றிற்கும் மேலாக, இவர்கள் வாக்குரிமை உள்ள குடிமக்கள் என்பதை, தமிழக அரசு -ஆளுங் கட்சி மறந்து விடக் கூடாது!



எனவே ஆட்சியாளர் மனிதாபிமானத்தோடு அவர்கள் பிரச்சினையைத் தீர்த்து வைப்பது அவசர அவசியமாகும். மாற்றுத்திறனாளிகள் சாகும்வரை உண்ணாவிரதம் என்ற முறையைத் தயவு செய்து கைவிட்டு அறவழியில் அரசின் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பது நல்லது.



கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்



சென்னை

26.9.2013

தமிழ் ஓவியா said...


பதவி ஆசை



பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலம் தவிர மனிதப் பற்றோ நாட்டுப் பற்றோ சிறிதளவும் காண முடியாது. - (விடுதலை, 3.5.1965)

தமிழ் ஓவியா said...


தகுதி திறமை பேசும் அ.இ.அ.தி.மு.க. அரசு


செல்வி ஜெயலலிதா அவர்களின் தலைமையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு, ஆண்டாண்டுக் காலமாக அரும்பாடுபட்டுக் கட்டிக் காத்து வந்த சமூக நீதியின் ஆணி வேரை, வெட்டும் ஓர் ஆபத்தான வேலையில் திட்டமிட்ட வகையில், இறங்கி விட்டதாகத் தெரிகிறது.

மக்கள் செல்வாக்குப் பெற்றிருந்த எம்.ஜி.ஆர். அவர்களே, சமூகநீதியின் தலையில் (பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வருமான வரம்பு) கை வைத்ததன் பலனை, 1980 மக்களவைத் தேர்தலில் வட்டியும் முதலுமாக அனுபவித்தார். தமிழ்நாட்டில் மொத்தம் 39 இடங்களில் 37 இடங்களில் தோல்வியைத் தழுவினார். தேர்தலில் அவர் சந்தித்த மகத்தான மரண அடியாகும் அது.

தோல்விக்கான காரணத்தை உணர்ந்து கொண்ட மாண்புமிகு எம்.ஜி.ஆர். வருமான வரம்பு ஆணையை ரத்து செய்ததோடு அல்லாமல், அதுவரை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 31 சதவீதமாக இருந்த இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தினார். தமிழ்நாட்டின் இந்த வரலாற்றினை எந்தக் காரணத்தாலோ, உணர மறுத்தால் 1980இல் எம்.ஜி.ஆர். அவர்கள், மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது போலவே, 2014 மக்களவைத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. பெரும் அளவில் மண்ணைக் கவ்வும் என்பது உறுதி.

ஆசிரியர் பணி நியமனத்திற்கான தகுதி தேர்வு என்ற பெயரில் சமூக நீதிக்கு மரண அடியை அ.இ.அ.தி.மு.க. அரசு கொடுத்து விட்டது.

தேசிய ஆசிரியர் கல்வி ஆணையம் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தும் அதற்கு மாறாக உயர் ஜாதியினருக்கு என்ன தகுதி மதிப்பெண்ணோ அதே தகுதி மதிப்பெண்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிக்கும் என்று தமிழ்நாடு அரசு எடுத்த முடிவு - இதுவரை, தமிழ் மண் கட்டிக் காத்து வந்த சமூக நீதிக்கு, வெட்டப் பட்ட சவக்குழி அல்லாமல் வேறு என்ன?

69 சதவீத இடஒதுக்கீட்டைக் கட்டிக் காக்க திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சட்ட ரீதியாக, வழிகாட்டி அதற்கான மசோதாவையும் உருவாக்கித் தந்து, அன்றைய முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதாவை சட்டமாக்கச் செய்தார்.

இன்று சோ இராமசாமிகள் ஆலோசகர்களாக இருக்கின்ற காரணத்தால், சமூகநீதிக்குச் சாவு மணி அடிக்கிறார் என்று தானே பொருள்?

ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்கில், தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில், தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரம் இவ்வாறு கூறுகிறது.

The State Govt has taken a policy decision not to compromise on the quality of teachers and decided not to grant relaxation to any of the categories என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி திறமை என்பதில் எந்தவிதமான சமரசத்துக்கும் இடமில்லை என்பதுதான் எங்கள் அரசின் நிலைப்பாடு, என்று கூறுகிறது அரசின் பிரமாணப்பத்திரம்.

தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு என்கிற பிரச் சினையை தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்ட ஆரம்பக் கட்டத்தில், எல்லாவற்றிலும் ஆதிக்கக் கொடியைக் கையில் ஏந்திய பார்ப்பனர்கள் எந்தத் தகுதி - திறமையைப் பேசி இடஒதுக்கீட்டுக்கு எதிரான வாதத்தை வைத்தார்களோ, அதே பார்ப்பனர் வாதத்தைதான் செல்வி ஜெயலலிதா அவர்களின் அரசு இன்றைக்கு வைத்துள்ளது - அதுவும் உயர்நீதிமன்றத்தில், பிரமாணப் பத்திரமாகவே தாக்கல் செய்துவிட்டது.

சமூகநீதிப் போராளிகளுக்கு மீண்டும் வேலை வந்துவிட்டது. கட்சிகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் தமிழ்நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்கள் வீதிக்கு வந்து போராடும் ஒரு நிலையை அ.இ.அ.தி.மு.க. அரசு உருவாக்கிக் கொடுத்து விட்டது.

தகுதி - திறமை மோசடி பற்றி தந்தை பெரியார் கூறாததா? கல்வி வள்ளல் காமராசர் கூறாததா?

அறிஞர் அண்ணா பேசாததா?

ஒடுக்கப்பட்ட மக்களே, சமூகநீதிக் களத்தில் இறங்கிடத் தயாராவீர்!

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவரின் வானொலி உரை


பெருமதிப்பிற்கும், வணக்கத்திற்கும் உரிய அய்யா தமிழர் தலைவர் அவர்களுக்கு வணக்கம்.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 135-ஆம் ஆண்டு பிறந்த நாளன்று (17.9.2013), வானொலியில் தாங்கள் ஆற்றிய உரை, சொற்செறிவும், பொருள் ஆழமும் கொண்டு, தந்தை பெரியாரைப் படம் பிடித்துக் காட்டியது. உணர்ச்சிக்கு இடங்கொடுக்காமல், அறிவுப்பிழம்பாய்த் திகழ்ந்த அந்த உரையில், தாங்கள் கூறிய

தந்தை பெரியாரின் கருத்துகள் காலத்தால் அழியாதவை; கருத்தால் நிலையானவை; பயன்பாட்டால் இன்றும், என்றும் வேண்டப்படுபவை என்ற முடிவுரை, நெஞ்சை நெருடியது. அந்த உரையில் தொண்டறச் செம்மல் என்ற தலைப்பே, ஈர்ப்புடையது அவர் (பெரியார்) பதவியை நாடாதவர்; புகழைத் தேடாதவர்; பொதுவாழ்வில் நேர்மையும், சிக்கனமும் கொண்ட, தொண்டறச் செம்மல், என்ற வாசகங்கள் பெரியாருக்குப் புகழாரம் சூட்டின.

அவருடைய சொந்த சொத்துக்களும், மக்கள் அவருக்கு கொடுத்த பணமும், இப்போது கல்விக் கூடங்களாக, மருத்துவமனைகளாக, பிரச்சார நிறுவனங்களாக காப்பகங்களாக விளங்குகின்றன என்ற விளக்கம், தந்தை பெரியாரைத் தொண்டறச் செம்மலாகப் படம் பிடித்தது. கிரேக்க அறிஞன் சாக்ரடீசுக்கு வாய்த்த பிளோட் டோவின் பெயர் என் நெஞ்சில் நிழலாடியது.

- வீ.செ.கந்தசாமி, சென்னை- 14

தமிழ் ஓவியா said...

சமநிலை!


உயர்ந்தவன் - தாழ்ந் தவன், பார்ப்பான் - பறையன், முதலாளி - தொழிலாளி, குரு - சிஷ்யன், மகாத்மா - சாதாரண ஆத்மா, அரசன் - குடிமகன், அதிகாரி - பிரஜை என்பவை முதலாகிய பாகு பாடுகளை இடித்துத் தள்ளி தரைமட்ட மாக்குங்கள். அதன்மீது தேசம், மதம், ஜாதி என்கின்ற பாகுபாடு இல்லாத தாகிய மனித சமூகம், சம உரிமை - சமநிலை என் கின்ற கட்டடத்தைக் கட்டுங்கள்.

- தந்தை பெரியார் (இலங்கையில் 1-10-1932இல் உரை)

தமிழ் ஓவியா said...

ஓ, பாவிகளே!

மத்தேயு (விவிலியம்) என்னும் நூல், ஆறாம் அதிகாரம், 19, 20ஆவது வசனங்கள்:-

பூமியிலே பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அவைகளை கெடுக்கும். இங்கே திருடரும் கன்னக் கோலிட்டுத் திருடுவார்கள்; பரலோகத்தில் உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்.

25 முதல் 34 வசனங்கள் வரை:

என்னத்தை உண்போம், என்னத்தை குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும் என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்திற்காகவும் கவலைப்படாதிருங்கள். ஆகாயத்துப் பட்சிகளைப் பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை; அறுக்கிறதுமில்லை. அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார். ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள்.

அருமைக் கிருத்துவ நண்பர்களே! இயேசுவின் இவ்வுரைப்படி நடப்பவர்கள் உங்களில் ஒருவரேனும் உண்டா? வங்கியில் நீங்கள் கணக்கு வைத்திருந்தால் அதை உடனே முடிவுக்குக் கொண்டு வந்து அந்தப் பணத்தைத் தானதருமம் செய்து விடுங்கள்.

நிலபுலன்கள், வீடு வாசல்கள், துணிமணிகள், நீங்கள் சேர்த்து வைத்திருந்தால் அவற்றைப் பொதுவுக்குக் கொடுத்து விடுங்கள். ஏசுவின் அறிவுரைகளை மீறாதீர்கள். இவற்றைச் செய்யாமல், ஊருக்கு உபதேசம் செய்து என்ன பலன்?

வி.சாம். பன்னீர்ச்செல்வம், பழனி

தமிழ் ஓவியா said...


செப் 27: (இன்று) : உலக சுற்றுலா தினம்


சுற்றுலாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கிலும், சுற்றுலா எப்படி அரசியல், சமூக, பொரு ளாதாரத்தில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை விவரிக்கும் விதத்திலும் செப்., 27 ஆம் தேதி உலக சுற்றுலா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சுற்றுலா மற்றும் தண்ணீர்: எதிர்கால தேவையை பாதுகாப்போம் என்பது இந்தாண்டு இத்தினத்தின் மய்யக்கருத்து.

சுற்றுலா பலவிதம்

கல்விச் சுற்றுலா, இன்பச் சுற்றுலா, வியாபார சுற்றுலா என பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நாட் டுக்கும் ஒரு பெருமை, அடையாளம், தனித்தன்மை உள்ளது. ஒரு இடத்தில் வசிப்பவர்கள், புதிய இடங் களை காண செல்வது என்றால் மகிழ்ச்சி தானே. மலைகள், நீர் வீழ்ச்சி, தீவுகள், உலக அதிசயங்கள், கட்டடங்கள், கேளிக்கை பூங்காக்கள், கடற்கரை என உலகில் பல்வேறு வகையான சுற்றுலா இடங்கள் உள்ளன.

2012 ஆம் ஆண்டில் உலகளவில் 100 கோடி பேர் சுற்றுலா மேற்கொண்டனர். இது 2010 ஆம் ஆண் டோடு ஒப்பிடும் போது, 3.8 சதவீதம் அதிகம் என உலக சுற்றுலா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த ஆண்டில் அதிக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்த நாடு என்ற பெருமையை பிரான்ஸ் பெற்றுள்ளது.

இந்தியா இந்த பட்டியலில் இல்லாதது, சுற்றுலாத்துறையில் நாம் எந்தளவுக்கு பின்னடைந்துள்ளோம் என்பதை காட்டுகிறது. சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கு, மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உலகை ஈர்க்கும் நாடு எத்தனை பேர்

பிரான்ஸ் 8 கோடியே 30 லட்சம்
அமெரிக்கா 6 கோடியே 70 லட்சம்
சீனா 5 கோடியே 77 லட்சம்
ஸ்பெயின் 5 கோடியே 77 லட்சம்
இத்தாலி 4 கோடியே 64 லட்சம்
துருக்கி 3 கோடியே 57 லட்சம்
ஜெர்மனி 3 கோடியே 4 லட்சம்
இங்கிலாந்து 2 கோடியே 93 லட்சம்
ரஷ்யா 2 கோடியே 57 லட்சம்
மலேசியா 2 கோடியே 50 லட்சம்

தமிழ் ஓவியா said...


சாயிபாபா பக்தரின் கண் இப்பொழுதுதான் திறந்தது

1979 சனவரி திங்களில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மலேசியா நாட்டில் தீவிரச் சுற்றுப்பயணம் செய்த நேரத்தில் புட்டபர்த்தி சாய்பாபாவின் பித்தலாட்ட முகத்திரையைக் கிழித்தெறிந்தார். அப்பொழுது சாய்பாபா பக்த வக்கீல் குழாம் ஒன்று கி.வீரமணி அவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது. புட்டபர்த்தியாரைப் பற்றிப் பேசினால் வழக்குப் போடுவோம் என்று அச்சுறுத்தியது.

அதற்குப் பதில் நோட்டீஸ் கி.வீரமணி அவர்கள் கொடுத்தார்கள். நான் அப்படித்தான் பேசுவேன்... முடிந்தால் நடவடிக்கை எடு என்று பதில் கொடுத்தார். அப்படி வக்கீல் நோட்டீஸ் கொடுத்த அதே வழக்கறிஞர்தான் இப்பொழுது 8.1.1981 நாளிட்டு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார் அதன் புகைப்பட நகல் இதோ!

தமிழ் மொழிபெயர்ப்பு: அன்புள்ள அய்யா,

நீங்கள் 1979ஆம் ஆண்டு மலேசியா நாட்டில் இருந்த போது இந்த நிறுவனத்திடமிருந்து நோட்டீஸ்கள் வந்தது தங்களுக்கு நினைவிருக்கும்.

சத்திய சாயிபாபா என்று சொல்லப்படுகிறவரின் சீடர்களுக்காக அப்போது நான் வாதாடினேன். அந்த சாய்பாபாவைப் பற்றி தங்கள் குறை கூறிப் பேசுவதை தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டேன். தனிப்பட்ட முறையிலும் அப்போது நான் சத்திய சாய்பாபாவின் சீடராகவே இருந்தேன்.

ஆண் புணர்ச்சி

அப்படிப்பட்ட சத்திய சாய்பாபா வொயிட்ஃபீல்ட் நகரத்திலும், புட்டபர்த்தியிலும் உள்ள அவரது கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடமே ஆண் புணர்ச்சியில் ஈடுபட்டார் என்ற விஷயம் தெரியவந்தது. அங்கே படிக்கும் மலேசிய மாணவர்களிடையே இதைச் செய்திருக்கிறார் என்பது மிகப்பெரிய தவறாகும். எனவே, அந்த சாய்பாபா பற்றி சரியான முடிவுக்கு வரவேண்டிய அவசியம் மலேசிய மக்களுக்கு வந்திருக்கிறது.

துரதிருஷ்டவசமாக, இங்கு சாய்பாபா பற்றி கிடைக்கும் நூல்கள் எல்லாம், அவரது சீடர்களால் வெளியிடப்பட்ட அவரது புகழைப் பரப்பும் நூலாகவே இருக்கின்றன.

அவசரத் தேவை

எனவே, சாய்பாபாவின் மோசடிகளை, ஏமாற்றுத் தனத்தை அம்பலப் படுத்தும் புத்தகங்களை பத்திரிகைச் செய்திகளை ஆங்கிலத்திலும், தமிழிலும் எங்கள் நாட்டில் பரப்பப் வேண்டியது மிகவும் அவசரமான தேவையாக இருக்கிறது. எல்லாவற்றையும் வாங்கிக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன். உங்களிடம் அத்தகைய நூல்கள் இருந்தால், தயக்கமின்றி உடனே அனுப்பி வையுங்கள். எவ்வளவு விலை என்று எழுதுங்கள். உங்களிடம் இல்லை என்றால் அவைகளை எங்கிருந்து பெற முடியும் என்பதற்கான முகவரியை எழுதுங்கள்.

நாத்திக மாநாடு

அண்மையில் விஜயாவாடாவில் நாத்திகர்கள் மாநாடு நடந்ததாக எங்கள் நாட்டு பத்திரிகைகளில் செய்தி படித்தோம்.

அந்த மாநாட்டு நிகழ்ச்சிகளை அறிய விரும்புகிறேன். அவைகளை மலேசிய மக்களிடம் எடுத்துச் சொல்ல முடியும்.

ஒன்றுபடுவோம்

மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் சாய்பாபாவின் மோசடிகளை தோலுரித்துக் காட்டுவதில், நாம் ஒன்றுபட்டு செயல்படுவோம்.

அன்போடு விவரமாக எழுதுங்கள்.

தங்கள் உண்மையுள்ள ஹரிராம் ஜெய்ராம் (கையொப்பம்)

-இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாய்பாபாவுக்காக பரிந்து கொண்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியவர்களே, இப்போது சாய்பாபாவின் மோசடியையும் ஒழுக்கக்கேட்டையும் புரிந்து கொண்டு பொதுச் செயலாளருக்கு இவ்வாறு கடிதம் எழுதியுள்ளனர்.

நாடு விட்டு நாடு நம் கொள்கை தாவிப்படர்கிறது. உண்மையின் வீச்சை எத்தனை நாளைக்குத் தடை செய்ய முடியும்? இன்னும் சாய்பாபாவை மதிக்கும் அன்பர்கள் எவரேனும் இருந்தால் அவர்களுக்கு அனுதாபங்கள்!

தமிழ் ஓவியா said...


பரிதாபமே!



இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேசம் காரணமல்ல. மக்கள்மீதுள்ள பரிதாபமே காரணம்.
(குடிஅரசு, 8.9.1940)

தமிழ் ஓவியா said...


அறிவியல் சிந்தனை



பண்டைய கிரேக்கத்தில் அறிவியல் சிந்தனை தழைத்ததற்கு முக்கிய காரணம் அங்கு நிலவிய அரசியல் சூழல்தான். கிரேக்கத்தின் நகர அரசுகள் அறிவியல் சிந்த னைகளுக்குத் தடை விதிக்க வில்லை. கிரேக்க அறிவியல் தத்துவ ஞானிகள் இயற்கையையும், இயற்கை நிகழ்வுகளையும் புதிய கோணத்தில் அணுகுவதற்கு இந்த நகர அரசுகள் தந்த சுதந்திரம் பெரும் உதவியாக இருந்தது.

எனினும் இங்கும் அரசியல் செயல்கள் ஒரு சில சமயங்களில் அறிவியலை பாதித்தன என்பதற்கு ஆர்க்கிமிடிஸின் இறப்பு ஒரு எடுத்துக்காட்டாகும்.

உரோமானிய மன்னன் கிரேக் கத்தின் மீது படையெடுத்தபோது உரோமானியத் தளபதி ஆர்க்கி மிடிஸிக்கு எந்த வித பாதிப்பும் ஏற் படக் கூடாது என்று கட்டளை யிட்டிருந்தார்.

ஆர்க்கிமிடிஸ் மணலில் வடிவக் கணிதவியல் (Geometry) படத்தை வரைந்து கொண்டிருந்த போது ஒரு போர் வீரன் அவரை யாரென்று அறியாமல் கொன்று விட்டான்.

தன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றுபோர் வீரனை விலகுமாறு அவர் செய்த சைகையைத் தவறாகப் புரிந்து கொண்டயோர் வீரன் அவரைக் கொன்றது அறிவியலுக்கு செய்த மிகவும் பாதகமான செயலாகும்.

(அறிவியலின் வரலாறு பேரா கு.வி. கிருஷ்ணமூர்த்தி பக்.36).
- _ க. பழநிசாமி, திண்டுக்கல்

தமிழ் ஓவியா said...


பெண்கள்சுதந்திரத்தில்தமிழ்நாட்டுக்குமுதலிடம் கடைசி இடத்தில் மேற்கு வங்காளம்


தேசிய அளவில் குடும்ப நலன் தொடர்பாக 2011ஆ-ம் ஆண்டு நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் பெண்களிடையே கருத்து கேட்கப்பட்டது. திருமணமான குடும்பப் பெண்களில் படித்தவர்களின் செல்வாக்கு வீட்டில் எப்படி இருக்கிறது? அவர்கள் பேச்சு எடுபடுகிறதா? குடிநீர்த் தேவையை எப்படி சமாளிக்கிறீர்கள்? மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்களா? என்பது குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் நாட்டிலேய மேற்கு வங்காளத் திலும், ராஜஸ்தான் மாநிலத்திலும்தான் குடும்பத்தில் பெண்கள் நிலை மிகவும் பின்தங்கி உள்ளது. மேற்கு வங்காளத்தில் பெண்கள் கருத்துரிமை கூட இல்லாத நிலையில் வாழ்கின்றனர் என்ற கசப்பான உண்மையை சுட்டிக் காட்டியுள்ளது. குடிநீர் பிடிப்பதற்காக அன்றாடம் 2 மணி நேரத்தை பெண்கள் செலவிடுவதாகவும், அடுப்பு எரிப்பதற்காக விறகு சேகரிக்க 6 மணி நேரம் மேற்குவங்க பெண்கள் அலைவதாகவும் இந்த அறிக்கை வருத்தத்துடன் குறிப்பிடுகின்றது.

அம்மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் வாதிகள், எழுத்தாளர்கள், சிந்தனை வாதிகள் என்று புகழப்படும் வெகு சில பெண்களின் முன்னேற்றத்தை மட்டுமே அளவுகோலாக வைத்து பார்க்காமல், ஆழ்ந்து நோக்கினால் ஆண்- பெண் பிறப்பு விகிதாச்சாரம், பெண்கள் கல்வியறிவு ஆகியவற்றை எல்லாம் பின்னுக்கு தள்ளும் வகையில் குடும் பங்களில் கருத்து கூறுவதற்கு கூட பெண் களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கப் படாத நிலையில் ஆணாதிக்கம் ஓங்கி உள்ளது. கணவனின் அனுமதி இல்லாமல் பெற்றோரைப் பார்ப்பதற்கு கூட பெண்களால் முடியவில்லை. வீட்டிற்குத் தேவையான சாதனங்களை வாங்குவதில் தொடங்கி என்ன சமையல் செய்ய வேண்டும் என்பது வரை பெண்ணின் ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டுள் ளன. 1 கோடியே 70 லட்சம் பெண்கள் திறந்தவெளி கழிப்பிடங்களையே உபயோகிக்கின்றனர். 58 சதவீத பெண்களுக்கு பள்ளிகளில் போதிய கழிப்பிட வசதி இல்லை. மேற்கு வங்க மாநிலம் நிலையான முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்றால் சமு தாயத்தில் நிலவும் பெண்களுக்கு எதி ரான அடக்குமுறைகள் முடிவுக்கு வர வேண்டும் என்றும் அந்த ஆய்வு பரிந்துரைத்துள்ளது. இந்தியாவில் பெண்கள் கல்வியறிவு, அதிகபட்ச இலக்கு 65 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மேற்கு வங்க பெண்கள் 71 சதவீத கல்வி யறிவில் தேறியவர்களாக இருந்தபோதும் பெண்ணுரிமை செயலாக்கத்தில் அம் மாநிலம் மிகவும் பின் தங்கியே உள்ளது. தேசிய அளவிலான பெண்ணுரிமை இலக்கு 37 சதவீதமாக உள்ளது. ராஜஸ் தான் மாநிலமும் மேற்கு வங்காளத்தை போலவே உள்ளது. ஆனால் இந்தி யாவிலேயே சர்வசுதந்திரத்துடன் குடும்பத் தலைவியாக நிர்வாகம் செய்யும் ஒரே மாநிலமாக தமிழ்நாடு தலை சிறந்தும், தலை நிமிர்ந்தும் நிற்கின்றது. தமிழ்நாட்டில் 49 சதவீதம் பெண்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப் படுகிறார்கள். தமிழகத்துக்கு அடுத்த இடத்தில் மராட்டியத்தில் பெண்கள் சுதந் திரம் 45 சதவீதமாகவும், ஆந்திராவில் 40 சதவீதமாகவும் உள்ளது.

தமிழ் ஓவியா said...


பெரியார் பிறந்ததால்...

சுய மரியாதைச் சொரனை பிறந்தது
சூது மதியாளர் சூழ்ச்சி தெரிந்தது
பார்ப்பாரப் புளுகு பஞ்சாய் பறக்குது
பகுத்தறிவு தெளிவு பாங்காய் சிறக்குது
ஆன்மீகப் பயிரு காய்ந்து கருகுது
ஆரிய வயிரு வெந்து ஏறியது

பள்ளிக்கூடம் பல்கிப் பெருகுது
கல்லூரிக்கல்வி கடல்போல் வளருது
எல்லார்க்கும் படிப்பு இலட்சிய மானது
இல்லார்க்கும் படிப்பு எளிதாய் ஆனது
பஞ்சமர் சூத்திரர் அறிவு வென்றது
பார்ப்பனர் சாத்திரம் அழிந்து ஒழிந்தது

திராவிடர் இனத்திற்கு முகவரி பிறந்தது
ஆரியர் இனத்திற்கு ஆணிவேர் அறுந்தது
ஜாதி சனாதனம் தூக்கில் தொங்குது
சங்கர ஆச்சாரிக்கு தூக்கு நெருங்குது
பெரியார் கொள்கை உலகம் சுற்றுது-சுய
மரியாதை உலகம் இனிதான் பிறக்குது -
- அதிரடி க.அன்பழகன்

தமிழ் ஓவியா said...


சந்திரனில் நீர்


இந்திய செயற்கைக்கோள் சந்திராயன் சேகரித்து கொடுத்து தகவல்களின் அடிப்படையில் சந்திரனில் நீர் இருப்பது தெரிய வந்துள்ளது என்று யு.எஸ். வான்வெளி ஆராய்ச்சி அமைப்பு நாசா கூறியுள்ளது. சந்திரனின் தரைக்குள் கண்டறியப்படாத ஆழத்தில் நீர் இருப்பதற்கான தடயங்களை அதன் தரையில் காணப்படும் கனிம துகள்கள் காட்டுகின்றன என்றும் அது கூறுகிறது. இந்த ஆய்வு தகவல் நேச்சர் ஜியாகிராபிக் இதழில் வெளியாகியுள்ளது. சந்திரனின் உள்பகுதி முன்பு நினைத்தது போல் வறண்டு போய் கிடக்கவில்லை என்பதற் கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று கிரகங்களின் புவியியல் நிபுணர் ரேச்சல் கில்மா கூறுகிறார். இவர் லாரல் நகரில் உள்ள ஜான்ஸ் ஹாப் கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு இயற்பியல் சோதனைச்சாலை யில் பணியாற்றுகிறார்.

சந்திரனில் உள்ள பாறைகள் எலும்பு போல் காய்ந்து போய் உள்ளன என்று நெடுங்காலமாக ஆராய்ச்சியாளர்கள் நம்பி வந்தனர். அப்போல்லோ செயற்கைக் கோளில் கிடைத்த மாதிரிகளில் காணப்பட்ட நீர்த்திவலைகள் பூமியின் மிச்ச சொச்சங்கள் என்றும் கூறினர்.

இதுவெல்லாம் தவறு என்று தற்போதைய சந்திராயன் கொடுக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன என்றும் அவர் சொன்னார். அய்ந்தாண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்திய புதிய சோதனைச்சாலை தொழில் நுட்பங்கள் சந்திரனின் உட்பகுதி முன்னர் நினைத்தது போல் காய்ந்து போய் கிடக்கவில்லை என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.

தமிழ் ஓவியா said...


ஒன்றுமே இல்லை



பார்ப்பனரின் பதவிக் கொள்கையெல்லாம், தனக்கு வராதவை தமிழனுக்குப் போகக்கூடாது - கீழே கொட்டி விடுவோம். அதாவது தமிழன் என்கின்ற உணர்ச்சி இல்லாத எவனுக்கோ போகட்டும் என்பதைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை.
(விடுதலை, 17.10.1954)

தமிழ் ஓவியா said...


மோடியின் முகத்திரை கிழிந்தது



குஜராத்தைப் பாருங்கள், மோடியின் நிகரற்ற ஆற்றலால், இந்தியாவிலேயே குஜராத் மாநிலம் வளங் கொழிக்கும் பூமியாக ஜொலிக்கிறது பாரீர்! பாரீர்!! என்று இந்தியா முழுவதும் செய்து வந்த பிரச்சாரப் பலூன் உடைந்து சிதறி விட்டது - அது ஒரு திட்டமிட்ட உயர் ஜாதி இந்துத்துவா - மற்றும் பெரு முதலாளி களின் பெரும் பிரச்சாரம் என்பது அதிகார பூர்வமான ஒரு அறிக்கையின் மூலம் அம்பலமாகி விட்டது.

பிரதமரின் தலைமைப் பொருளாதார ஆலோச கராக இருந்த ரகுராம்ராஜன் (இன்றைய ரிசர்வ் வங்கி ஆளுநர்) தலைமையில், அமைக்கப்பட்ட குழு இந்திய மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், பொருளாதார நிலைகள்பற்றி ஆய்வு செய்து, அறிக்கை ஒன்றினைக் கொடுத்துள்ளது.

மூன்று வகை நிலைகளை அது அட்டவணைப் படுத்தியுள்ளது.

முதல் நிலையில், சிறப்பாக உள்ள மாநிலங்கள் தமிழ்நாடு உட்பட ஏழு. இந்த ஏழு மாநிலங்களின் பட்டியலில் குஜராத்துக்கு இடம் இல்லை என்பதை, நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.

மிகக் குறைவான வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் 10 என்ற அட்டவணையில், குஜராத் இல்லை என்று வேண்டுமானால், முதுகைத் தட்டிக் கொள்ளலாம்.

குறைவான வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் பதினொன்று. அதில் 7ஆவது இடத்தில், குஜராத் மாநிலம் இருக்கிறது.

இந்த ஆய்வு என்பது, அரசியல்வாதிகளால் தயாரிக்கப்பட்ட அறிக்கை அல்ல; பொருளாதார வல்லுநர்கள் அடங்கிய குழுதான் வெளியில் கொண்டு வந்துள்ளது.

உண்மை இவ்வாறு இருக்க, நரேந்திர மோடி பிரதமராக வந்தால் இந்தியாவைக் குஜராத் ஆக்குவார் என்று தம்பட்டம் அடிப்பது ஏன்?

வேண்டுமானால் வேறுவிதமாக எடுத்துக் கொள்ளலாம்; இந்தியா, குஜராத் மாநிலம் போல குறைவான வளர்ச்சியுடைய நாடாகப் பந்தயம் கட்டி மாற்றிக் காட்டுவோம் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பொருளாதார மேதையும், அதற்காக நோபல் பரிசு பெற்றவருமான, அமர்த்தியாசென், அவர் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவரல்லர்.

பொதுக் கண்ணோட்டத்தில் ஒரு கருத்தினை வெளிப்படுத்தினார்.

Modi could have also taken both of the facts, that Gujarat record in education and health care is pretty bad and he has to concentrate on that என்றாரே!

குஜராத் மாநிலத்தில் கல்வி வளர்ச்சியிலும், சுகாதார வளர்ச்சியிலும் முதல் அமைச்சர் மோடி மிகவும் கவனம் செலுத்த வேண்டும். அவை இரண்டிலும் குஜராத் மிகவும் மோசமாக உள்ளது என்று கூறினாரே - இதற்கு எந்த வகையிலும் அரசியல் முத்திரை குத்த முடியாதே!

இராமச்சந்திரகுகா, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு போன்றவர்களுக்கும் மோடி பற்றிய கணிப்பு என்ன என்பது ஊரறிந்த உண்மையாகும்.

ஆந்திர மாநில முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி, மோடிக்குச் சரியான பதிலடி கொடுத்தார். ஆந்திர மாநில காங்கிரஸ் ஆட்சி குறித்து வழக்கம்போல வாய்த்துடுக்காக மோடி பேசியதற்குத்தான் ஆந்திர முதல்வர் பதிலடி கொடுத்துள்ளார்.

அறியாமை பாவமல்ல; ஆனால் திட்டமிட்ட அறியாமை பாவமேதான்! அதுதான் பொய் கூறிய மோடி! ஆந்திரா, குஜராத் திறமை வளர் நிலைபற்றி முழு அளவில் அறிந்திருந்தும், மக்கள் முன்பு பல தவறான தகவல்களை அளித்துள்ளார் மோடி. அவருடைய தரத்துக்கு அது நல்லதல்ல.

ஆந்திர மாநிலம் 3.25 லட்சம் இளைஞர்களுக்கு திறமை வளர் பயிற்சிகளை அளித்துப் பணிகளில் அமர்த்தியுள்ளது. குஜராத் 52,000 இளைஞர்களுக் கும், தமிழ்நாடு 1.6 லட்சம் இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்துள்ளன. ஆனால் வேலைகள் கொடுக்கப்பட வில்லை என்று ஓங்கி அடித்தார் ஆந்திர முதல் அமைச்சர். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட நேரும் என்பார்கள்; மோடியின் பொய்ப் பிரச்சாரமும் உரிய காலத்தில் அம்பலமாகி விட்டதே!

தமிழ் ஓவியா said...


பாரதத்தாயின் துயரம்

- சித்திரப்புத்திரன்

ஏ காங்கிரசே! நீ என்று ஒழிகிறாயோ அன்றுதான் நான் விடுதலை அடைவேன். நீ இப்போது பாரதத் தாயாகிய என்னை மீளா நரகத்திலாழ்த்தி விட்டாய்.

என் மக்களில் பெரும்பாலோரை அயோக் கியர்களாக்கி விட்டாய். யோக்கியமான மக்களை குறைத்து விட்டாய். நீ இல்லாமலிருந்தால் இப்போது தலைவர்கள், தேசபக்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அநேக அயோக்கி யர்கள் என் சார்பாய் பேசி வயிறு வளர்க்க முடியுமா? நீ இல்லாவிட்டால், எனது அருமைப் புத்திரனான காந்திமகான் எனக்காகச் செய்த தவமும், தியாகமும், ஆத்ம சக்திப் பிரயோகமும் பலனற்றுப் போகுமா?

நீ இல்லாவிட்டால் உன்னுடைய உபத்திரவம் இல்லாவிட்டால், எனது அருமை மகன் மகாத்மா மூலையில் உட்கார முடியுமா? நீ இல்லாவிட்டால் பம்பாயில் கூடிப்பேசிய அயோக்கியர்களும், சுயநலக்காரர்களும், துரோகிகளும் ஜனப்பிரதிநிதிகள் ஆவார்களா? என் பெயரைச் சொல்லி என்னைக் காட்டிக் கொடுத்து மாதம் 1- க்கு 1000, 2000, 3000, 4000, 5000, 6000 வீதம் எனது ஏழைகளின் பணத்தைக் கொள்ளை கொள்ளுவார்களா? என்னை மானபங்கப்படுத்த இத்தனை வக்கீல்கள் வருவார்களா? எனது கற்பை அழிக்க இத்தனை கோர்ட்டுகள் ஏற்படுமா? இவற்றிற்கு எல்லாம் யார் பொறுப்பாளி?

காங்கிரஸ் பாவியாகிய அரக்கி நீ அல்லவா எனக்கு எமனாய்த் தோன்றி இருக்கிறாய்? என்று நீ ஒழிவாய்? அன்று நான் நரகத்தில் இருந்து எழுவேன். விடுதலை பெறுவேன். சுயமரியாதை அடைவேன். இது சத்தியம்.

பாரதத்தாய் தனது மக்களுக்குச் சொல்வது.

ஏ மக்களே! உங்கள் மூடபுத்தி என்று ஒழியும், உங்கள் மூட புத்தியாலல்லவா நாட்டில் பிளேக்கு, காலரா, வைசூரி முதலிய தொத்து வியாதிகள் இருப்பது போல் காங்கிரஸ், சுயராஜ்யம், தேசியம் முதலிய தொத்து வியாதிகள் பரவி என்னைப் பாழாக்குகிறது. காலரா, பிளேக், வைசூரி ஒவ்வொன்றும் மனிதனின் சரீரத்தையும் உயிரையும் மாத்திரம் பற்றி கொள்ளை கொள்ளக் கூடியது,

ஆனால் காங்கிரஸ் சுயராஜ்யம் தேசியம் என்னும் வியாதிகளோ எனது, முப்பத்து முக்கோடி மக்களையும், அவர்கள் வாழும் தேசமாகிய என்னையும், அவர்களது அறிவையும், செல்வங்களையும், ஒழுக்கங்களையும், என் உயிர் போன்ற சுயமரியாதையையும் கொள்ளைகொண்டு பாழ்பண்ணிக் கொண்டு வருகிறதே, இதை கவனிப்ப தில்லையா? மக்களே! நீங்கள் மாக்கள் அல்ல என்பதற்கு இது தானா அடையாளம்?

இவ்வியாதிகளின் பேரால் வைத்த பாரமெல்லாம் சுமக்கிறேன் இன்னும் வை இன்னும் வை என்று உங்கள் முதுகைக் குனிந்து கொடுக்கிறீர்களே இதுதான் உங்கள் மக்கள் தன்மையா?

எவனாவது ஒரு காங்கிரஸ்காரன், இந்த ஊருக்கு ஒரு கோர்ட்டு வேண்டுமென்று விண்ணப்பம் எழுதிக்கொண்டு வந்தால் உடனே நீங்கள் அப்பன், மக்கள் எல்லோரும் கையெழுத்து போட்டு விடுகிறீர்கள். கோர்ட்டு வைத்த மறுநாளே நீங்கள் அப்பன், மக்கள், அண்ணன், தம்பி, எஜமான், குமாஸ்தா, குடியானவன், மிராஸ்தார் என்கிற முறையில் கோர்ட்டுக்குப் போக வேண்டியுள்ள வர்களாகிறீர்கள்.

பிராமணியம், பிரிட்டாணியம் இந்த இரண்டைவிட தேசியமே பெரிய ஆபத்தானது. பிரிட்டாணியத்தை கடுகளவாவது அசைக்க வேண்டுமானால் முதலில் இந்த தேசியமும், இரண்டாவது ஆக பிராமணியத்தையும் தொலைக்க வேண்டும். பிராமணியத்தை நிதானமாகக்கூட ஒழிக்கலாம்.

அவசரமாக தேசியத்தைத் ஒழிக்க வேண்டும். ஏனெனில், தேசியமே பிரிட்டானியத்திற்கு அஸ்திவாரமாயிருக்கிறது. தேசியத்தை இடித்து விட்டால் பிரிட்டானியம் ஆடிப்போகும். தேசியமில்லாதிருக்குமானால் வெகு நாளைக்கு முன்பே பிரிட்டானியம் உண்மையான சுதேசியமாய் விட்டிருக்கும்.

- குடிஅரசு - கட்டுரை - 05.06.1927

தமிழ் ஓவியா said...


ஒரு சமாதானம்

சென்ற வாரம் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு தமது பத்திரிகையில் நாயக்கரின் நய வஞ்சகம் என்று எழுதிய விஷயங்களுக்குப் பதிலாக ஸ்ரீ வரதராஜுலுவின் வண்டவாளம் என்னும் தலைப்பின் கீழ் சில விஷயங்களை அதாவது, அதில் பல கனவான்கள் எழுதியதாக எழுதப்பட்டிருந்த கடிதங்களுக்குச் சமாதான காகிதம் ஸ்ரீமான் நாயுடுவாலேயே நாயக்கருக்கு கொஞ்சகாலத்திற்கு முன் எழுதியதாக காட்டப்பட்டிருந்த கடிதத்திற்குச் சமாதானமாகவும் அடுத்த வாரம் எழுதுவதாக பதில் எழுதியிருந்தோம்.

அதை உத்தேசித்து அநேக கனவான்கள் நமக்கு பலவிதமான கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். அதாவது, நாம் எழுதப்போகும் பதிலுக்கு மேலும் மேலும் தக்க ஆதாரங்களாக சிற்சில விஷயங்களைக் குறித்து அனுப்பி இருப்பதும், பலர் நாயுடுவைத் தங்கள் இஷ்டப்படி கண்டித்து நாயுடுவுக்கு பதில் என்கிற முறையில் எழுதி பல கடிதங்களும்;

இவ்விதம் இருவர் சண்டை போட்டுக்கொள்வது ஒழுங்கல்ல வென்கிற முறையில் சிற்சில கடிதங்களும், இந்த விஷயத்தைப் பற்றி நாம் சென்ற வாரம் எழுதினதுபோல் இவ்வாரம் எழுதிப் பிரசுரிக்கப் போகும் பத்திரிகையின் சுமார் 250 பத்திரிகை வரையில் அதிகமாக அனுப்பிக் கொடுக்கும்படி பல கடிதங்களும் வந்திருக்கின்றன.

இவ்வளவும் நாம் இந்த வாரத்தில் பிரசுரிக்கும் போது பதில்களுடன் சேர்ந்து பிரசுரிக்கவே வந்திருக்கின்றன. நாமும் சென்ற வாரம் எழுதியது போலவே, நமக்கு கிடைத்துள்ள ஆதாரங்களைக் கொண்டும் மனப்பூர்வமாக நாம் சரி என்று எண்ணுவதையும் கொண்டு ஒரு விரிவான வியாசம் எழுதலாமென்றுதான் இருந்தோம். ஆனால் நமது மதிப்புக்கும், மரியாதைக்கும் உரியவரும் உண்மையான நண்பர் என்று எண்ணிக் கொண்டிருப்பவருமான ஒரு கனவான் இவ் விஷயத்தில் மிகுதியும் சிரமம் எடுத்துக்கொண்டு சில நிபந்தனைகளின் பேரில் விவாதத்தை இத்துடன் நிறுத்திவிட வேண்டுமென்று கட்டாயப்படுத்தினார்.

ஏறக்குறைய அவர் உறுதி கொடுத்த நிபந்தனைகளானது நமது பிற்கால பிரயத்தனங்களுக்கு கெடுதியில்லாததாகவும் அனுகூலத்தைக் கொடுக்கக் கூடியதாகவும் இருந்ததோடு, அந்நிபந்தனைகள் நிறைவேற்ற அவரே பொறுப்பேற்றுக் கொண்டதினாலும், ஸ்ரீலஸ்ரீ கைவல்யசாமிகள் முதல் பல பெரியவர்கள் இது விஷயமாக நமக்கு எழுதியிருப்பவைகளுக்கிசைந்து ஒருவாறு நிறுத்திக்கொண்டு இருக்கிறோம்.

இம்மாதிரி நாம் எழுதியிருப்பதானது அநேகருக்கு ஏமாற்றத்தைக் கொடுக்குமென்பது நமக்குத் தெரியும். ஆனாலும் ஏமாற்றமடைந்தவர்களில் பலருக்கும் நமக்கும் ஒரு குறிப்பிட்ட லட்சியத்தினிடத்திலே தான் அதிக கவலையும் மதிப்புமே தவிர சண்டையும், அவசியமில்லா வீரியமும் பெரியதல்ல. இது விஷயமாக வந்த பல கடிதங்களை இதுசமயம் போடாததற்கு நிருப நேயர்கள் மன்னிக்க வேண்டும்.

இதற்குமேல் விரிவான சமாதானத்தை விரும்புகின்றவர்களுக்கு கோயம்புத்தூர் மகாநாட்டுக்குப் பிறகு தெளிவாக கூறுவோம்.

- குடிஅரசு - செய்தி விளக்கம் - 29.05.1927

தமிழ் ஓவியா said...


மித்திரன் நிருபரின் அயோக்கியத்தனம்


நமது பத்திரிகாலயத்தில் ஒரு பார்ப்பனர் சூழ்ச்சியால் இரண்டு அச்சுக் கோப்போர்கள் திடீரென்று சொல்லாமல் நின்று விட்டதற்குக் காரணமாக கோவையில் இருந்து மித்திரன் நிருபர் ஒருவர் மிகவும் அயோக்கியத்தனமான ஒரு நிருபத்தை மித்திரனுக்கு அனுப்பியிருக்கிறார். அதாவது ஒரு விஷயத்தை நாம் அச்சுக் கோர்க்கும்படி சொன்னதாகவும், அதை அச்சுக் கோர்ப்போர் கோர்க்க மறுத்து வேலை நிறுத்தம் செய்து விட்டார்கள் என்றும் எழுதியிருக்கிறார்.

இது மிகவும் அல்ப ஜாதித்தனம் என்றே சொல்லுவோம். எல்லா பத்திரிகை நிருபர்களும் மானம், வெட்கம், சுத்த ரத்தவோட்டம் முதலிய தன்மைகள் குறைந்தது கொஞ்சமாவது இருப்ப தாகக் காண்கிறோம். நமது சுதேசமித்திரன் நிருபர்களுக்கு மாத்திரம் பெரும்பாலும் இக்குணங்கள் காணப்படுவதே இல்லை.

இதன் காரணமும் நமக்குத் தெரிவ தில்லை. மித்திரனுக்காவது மனிதத் தன்மையும், யோக்கியப் பொறுப்பும் இருந்தால் அச்சுக் கோப்போர் கோக்க மறுத்தது என்ன விஷயம் என்றாவது அல்லது வேறு சமாதானமாவது எழுதுவான் என்று நினைக்கிறோம்.

நமது பத்திரிகை பதிப்பகத்தில் உள்ள அச்சுக் கோர்ப்போரை கலைக்க சூழ்ச்சி செய்தது காரைக்குடியில் உள்ள ஒரு பத்திரிகை காரியா லயத்தில் இருக்கும் ஒரு பார்ப்பனர் என்று தெரிவிக்கிறோம். ஆனாலும், அதனால் பத்திரிகை வேலை குந்தகப்படாமல் நடந்தேற உதவிய நண்பருக்கு நமது வந்தனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

- குடிஅரசு - செய்திக்கட்டுரை - 12.06.1927

தமிழ் ஓவியா said...


விருத்தாசலத்தை வியக்க வைத்த மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம்



நேற்று (28.9.2013) விருத்தாசலத் தில் நடைபெற்ற திராவிடர் கழக மாணவரணி கடலூர் மண்டல மாநாட்டையொட்டி மாலை நடை பெற்ற மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி காண்போரை வியக்க வைக்கும் அளவிற்கு மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.

திராவிடர் கழக மாநாடு என்றால் ஊர்வலம் இல்லாமலா? அதிலும் மாணவர் கழக மாநாடு. குறிப்பாக, இளைய தலைமுறையிடம் தானே இயக்கத்தின் கொள்கைகள், இமயமாய் உயர்ந்து நிற்கின்றன; நிற்க வேண்டும். அரசு கலைக்கல்லூரி அருகே தொடங் கிய ஊர்வலத்தை கடலூர் மண்டல திக செயலாளர் அரங்க.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்க, மாவட்ட மாண வரணி தலைவர் த.தமிழ்செல்வன் தலை மையில் கடலூர் மண்டல இளைஞ ரணிச் செயலாளர் சி.மணிவேல், விருத்தா சலம் மாவட்ட இளைஞரணி தலைவர் வெ.அறிவு, கடலூர் மாவட்ட மாணவ ரணி அமைப்பாளர் அ.முத்துராஜா, சிதம்பரம் மாவட்ட மாணவரணி செய லாளர் ச.செங்குட்டுவன், விழுப்புரம் மாவட்ட மாணவரணி தலைவர் ச.எடிசன், விருத்தாசலம் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செ.சிலம் பரசன், விருத்தாசலம் மாவட்ட மாண வரணி அமைப்பாளர் வெங்கட்ராசா, கல்லக்குறிச்சி மாவட்ட மாணவரணி தலைவர் கூ.தமிழ்மணி, கல்லக்குறிச்சி மாவட்ட மாணவரணிச் செயலாளர் செ.திலீபன், திண்டிவனம் மாவட்ட மாணவரணிச் செயலாளர் இரா.சீனிவா சன் முன்னிலையில் மாணவர் கழகத் தோழர்கள் கழகக் கொடிகளைக் கையி லேந்தி விருத்தாசலத்தின் மிக முக்கிய வீதிகளில் முழங்கி வந்த காட்சி மூடநம் பிக்கையின் முதுகெலும்பைத் தேடித் தேடி ஒழிக்கும் வகையில் அல்லவா இருந்தது!

கூத்தனூர் பறையாட்டம், கூடியிருந்த வர்களை குதூகலிக்கச் செய்தது. மாலை நேரம், முக்கிய கடைவீதிகள், மக்களோ ஆயிரம் ஆயிரமாய் ஆர்வத்துடன் வைத்த கண் வாங்காமல் பார்த்த காட்சி என்னே! என்னே!! உலகில் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்கின்ற ஒரு இயக்கம், அதன் கொள்கைகளை மக்களிடையே நேரடியாகச் சென்று, மூடநம்பிக்கை களைத் தோலுரிக்கும் வண்ணம் (DEMO) விளக்க நிகழ்ச்சிகளை செய்துகாட்டும் அறிவியல் இயக்கம், நம்மை விட்டால் வேறு உண்டா?

கழக மகளிரணியின் கைகளிலே ஏந்தி வந்த தீச்சட்டியைக் கண்டு விருத்தாசலம் மக்கள் குறிப்பாக பெண்கள், குழந்தை கள் வியந்து போயினர். தீச்சட்டி இங்கே! மாரியத்தா எங்கே? என்ற முழக்கம் பக்தர்களின் காதில் இடியெனப் பாய்ந் தது. பதிலைத்தான் காணோம். அரிவாள் மீது ஏறி நின்று, கறம்பக்குடி முத்து - சண்முகசுந்தரம் குழுவினர் கேட்டபோது திகைத்து நின்றனர்.

கழகத் தோழர்கள் அலகு குத்தி கார் (டாடா சுமோ) இழுத்த காட்சி காண் போரை, பக்தர்களை வெட்கப்படச் செய்தது. மடையரைத் திருத்ததங்களை வருத்திக்கொண்ட கழகத் தோழர் களைப் பாராட்ட வார்த்தைகள் ஏது? ஆம்; திண்டிவனம் சக்திவேல், முருகன் என்கிற சிந்தனைச் சிற்பி, ரமேஷ் ஆகிய தோழர்கள் தான் அந்த மாவீரர்கள்.

சடையார் கோயில் நாராயணசாமி குழுவினரின் ஆடல், பாடலுடன் கூடிய கோலாட்ட நிகழ்ச்சி அதுவும் பெரியார் பிஞ்சுகளைக் கொண்ட அந்த எழில் கொஞ்சும் நிகழ்ச்சி காண்போரின் மனதைக் கொள்ளை கொண்டது. மாண வர்களின் அணிவகுப்பு, அலகுக் காவடி, சரசுவதி அறிவாலயப்பள்ளி மாண வர்கள், சிதம்பரம் கழக மாணவரணி, திண்டிவனம் கழக மாணவரணி, கல்லக் குறிச்சி கழக மாணவரணி, ஊர்வலத்தில் பதாகை தாங்கிய பேரணியும் இடம் பெற்றது. கடலூர் மாவட்டம் வேகாக் கொல்லையைச் சேர்ந்த மா.மணிமொழி - மா.வெண்மணி ஆகிய பெரியார் பிஞ்சுகளின் சிலம்பாட்டம் அனை வரையும் ஈர்த்தது. பாலக்கரை அருகில் அமைக்கப்பட்ட தனிமேடையில் தமிழர் தலைவர், கழகத் தலைவர் பார்வையிட் டார். அப்போது கழக மகளிரணியினர் கைகளிலே ஏந்திவந்த தீச்சட்டி தலை வரது கரத்திற்கு மாறியது. பொதுமக்கள் இதனைப் பார்த்து தெளிவுற்றனர்.
அரசு கலைக்கல்லூரி தொடங்கி ஜங்சன் சாலை, பங்களாத் தெரு, ஆவடி சாலை, கடலூர் சாலை, மணிமுத்தாறு வழியாக மாநாட்டுத் திடல் - வானொலித் திடலை அடைந்தது. நமது இயக்கப் பேரணி களைத் தவிர, வேறு எந்தக் கட்சியின் ஊர்வலம், பேரணிகளில் இவ்வளவு கட்டுப்பாட்டை தொடக்கம் முதல் இறுதி வரை, கடைப்பிடித்திருக்க முடியுமா? என்று காவல்துறையினரே வியந்து போகும் வண்ணம் கழகத்தின் ஊர்வலம் அமைந்தி ருந்தது. மேற்கண்ட வீதிகளில் மட்டுமல்ல, விருத்தாசலத்தின் நகரெங்கும் நம் மாநாட்டை பற்றியே பேச்சு. அதன் எதி ரொலி இன்னும் கேட்டுக் கொண்டு தானிருக்கப் போகின்றது.