Search This Blog

30.11.12

தந்தை பெரியாரும் - கலைவாணர் என்,எஸ்.கே அவர்களும்

கலைவாணர் பிறந்த நாள் - நவம்பர் 30 

தந்தை பெரியாரும் தமிழ்க் கலைவாணரும்

தந்தை பெரியார் பார்ப்பனரல்லாத மக்கள், தமிழர்கள் எல்லாத் துறைகளிலும் தன்மானம் பெற்று உரிமை பெற வேண்டும் என்று விரும்பினார். தகுதி இருந்து, திறமை இருந்து, ஆற்றல் இருந்து தன்மானத்தை இழக்காதவர்களை எல்லாம் தூக்கி நிறுத்தியவர் தந்தை பெரியார், கலைத் துறையிலும்  பெரியாருடைய கண் ணோட்டம் சுயமரியாதைக் கண் ணோட்டமாக இருந்தது. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களுக்குத் தந்தை பெரியார் ஆதரவு காட்டினார்.
கலைவாணர் திரைப்படம், நாடகம் வாயிலாகச் சுயமரியாதைக் கருத்து களை நாட்டில் உலவ விட்ட நாகரிகக் கோமாளியாக விளங்கினார். அவரே அதனை நல்லதம்பி திரைப்படத்தில் நாட்டுக்குச் சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தானய்யா, ஆட்டம் ஆடி, பாட்டுப் பாடி - நல்ல அழகான ஜதை யோடு வந்தானய்யா! மோட்டாரை விட்டிறங்கி வந்தானய்யா! முன்குடுமி சீவிக்கிட்டு வந்தானய்யா!  ராட்டினம் போல் சுழன்று வந்தானய்யா! - நம்ம ராஜ்ஜியத்தைச் சுற்றிப் பார்த்து வந்தானய்யா! என்று பாடினார்.

30.8.1957-இல் நம் நாடு இதழில் தி.மு.க.வின் அதிகார பூர்வ ஏடாக விளங்கிய இதழில் தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கோட்பாட்டின் வழி நின்றவர்தாம் என்பதை அவர் மறைந்த போது வெளியிட்ட இரங்கல் செய்தி யில் பதிவு செய்திருப்பது கலைவாணர் பகுத்தறிவு நெறி, பகுத்தறிவு இயக்க வழி நின்றவர் என்று காட்டும்.

தமிழகம், தன்னைச் சிரிக்க வைத்தே சிந்திக்கச் செய்த பகுத்தறிவுக் கலைஞனை இழந்து தவிக்கிறது. அன்பும், பண்பும் நிறைந்த கள்ளமில்லா வெள்ளை உள்ளமும், எப்போதும் இதழ்க்கடையில் தங்கும் புன்னகையும், அகமும் முகமும் மலர்ந்து தரும் அன்புரையும் நகைச்சுவையோடு இணைந்த  நற்கருத்தும் இனி நமக்கு எங்குக் கிடைக்கும்? கலைவாணர் மறைந்துவிட்டார். ஆனால் கலைத் துறை மூலம் பகுத்தறிவு வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய அரும்பணி, பொது வாழ்வுத் துறையில் அவர் காட்டிய அக்கறை, ஏழை எளிய மக்கள் மீது அவர் கொண்ட அன்பு, அவர்களின் ஈடேற்றத்திற்காக - ஈட்டிய பொருளை எல்லாம் வாரி வழங்கிய வள்ளல் தன்மை - திரைப்பட உலகிற்கு அவர் செய்துள்ள சேவை முதலியவற்றால் அவர். தமிழ் நாட்டில் பெற்றுள்ள புகழ், தென்னவர் உள்ளத்தில் பெற்றுள்ள இடம் என்றும் மறையாது - மங்காது
கலைவாணர் திரைப்படத்தில் சிரிப்பு நடிகர். ஆனால் அவரிடம் ஆழ்ந்து ஊறித் திளைத்தது தந்தை பெரியார் ஊட்டி வளர்த்த பகுத்தறிவு உணர்ச்சி. எனவே அதைச் சுட்டிக் காட்டாமல் எவரும் கலைவாணர் குறித்துப் பேசினால் பேசாமல் விட்டு விட முடியாது என்பதற்கு சென்னை - மெரீனா கடற்கரையில் 6.9.1957ஆம் நாள் நடைபெற்ற கலைவாணரின் இரங்கல் கூட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பேச்சை முதலில் தொட்டுக் காட்டுவோம். ஏனென்றால் இப்படி ஒரு பகுத்தறிவுக் கலைஞர் கலைவாணர் இருக்கிறார் என்று தந்தை பெரியாருக்கு முதலில் எடுத்துக் கூறித் தந்தை பெரியாரை முதலில் பாராட்டச் செய்தவர் பேரறிஞர் அண்ணா. அண்ணா இரங்கலுரையில் கூறுகிறார்:

கலைவாணர் மக்களின் உள்ளத்தைத் தொட்டுச் சிரிக்க வைத்தவர் உல கிலேயே இவர் ஒருவர் தாம் மக்களிடத் திலே தொடர்பு கொண்டு, மக்களுக்காக உழைத்த கலைஞராவார். இவரைப் போன்ற நல்ல உள்ளம் படைத்தவர்கள் நாட்டிலே இருப்பது மிக அபூர்வம்.

மக்களின் மன அழுக்கு நீங்க, மூடநம்பிக்கை அகல, குருட்டுப் பழக்க வழக்கங்கள் ஒழிய, தாழ்ந்த மக்கள் தன்னுணர்ச்சி பெற இதுவரை இந்த நாட்டில் எந்த ஒரு  நடிகனும் கலை வாணரைப் போல் பணியாற்ற முடிந்த தில்லை. இந்த நாட்டில் மட்டுமல்ல மேலை நாடுகளிலும்கூட இப்படிப்பட்ட ஒரு கலைஞன் இருந்ததுமில்லை, இருக்கவுமில்லை. (நம் நாடு 7.9.1957).

பெரியார் வழியில் பகுத்தறிவுப் பாதையில் தனி வாழ்க்கையும், கலை வாழ்க்கையும் மேற்கொண்ட கலைவாணர் பெரியாரைப் பற்றிக் குறிப்பிடுகையில் தூங்காமை, கல்வி துணிவுடைமை என்ற நீங்காக் குணம் படைத்த ஆங்காரமான அறிவுத் தந்தை பெரியார் பிறந்த நாடு என்றே குறிப்பிட்டுச் சொன்னார் என்றால் அவர் உள்ளத்தில் பெரியார் உரம் எந்த அளவிற்கு ஊறித் திளைத் திருத்தது என்பது விளங்கும்.

கலைவாணர் கதர் கட்டினாலும், காந்தியைப் பெரிதும் போற்றினாலும் தன்னை ஒரு சுயமரியாதைக்காரன் என்றே கூறிக் கொண்டார். இதற்குச் சான்று வேண்டுமாயின் 1952 தென்றல் ஏட்டின் பொங்கல் மலருக்கு அளித்த நேர்முகம் இது.

ஆதிமுதல் குடிஅரசு, கிருஷ்ண சாமி பாவலர் நடத்திய தேசபந்து ஆகிய இரண்டு பத்திரிகைகளையும் நான் படித்து வந்தேன். அப்போதுநான் சிறுவன். நாடகக் கம்பெனியில் வேலை. பக்தி மார்க்கத்திற்கும், நாஸ் திகத்திற்கும் உள்ள வேறுபாடுகளை நான் அப்போது நானாகத் தெரிந்து கொண்டேன். படித்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தேன். சுயமரியாதைக் கொள்கை நம் நாட்டுக்குத் தேவை என்பதுதான் அந்த முடிவு

மாணிக்க வாசகர்

கலைவாணர் நடித்த மாணிக்க வாசகர் எனும் திரைப்படம்தான் அண்ணாவை ஈர்த்தது மட்டுமல்லாமல் பெரியாரிடம் கலைவாணரை அண்ணா அழைத்துச் செல்லவும், பெரியாரின் பாராட்டைக் கலைவாணர் நேரில் பெறவும் துணை புரிந்தது.

1939இல் வெளிவந்த திரைப்படம் இசை மேதை எம்.எம். தண்டபாணி தேசிகர் நடித்த மாணிக்கவாசகர் எனும் படம். அதில் மேஸ்திரி வெங்குப் பிள்ளையாகக் கிருஷ்ணன் நடித்தார்.

அந்தப் படத்தில் மன்னர் எதையும் தானே சொந்தமாகச் சிந்தித்து முடிவெ டுப்பதில்லை. அரச குடும்பத்துப் புரோகிதர் சொல்வதைத்தான் அவர் கேட்கிறவர். இதைக் குறித்து அரண் மனை நிருவாகி வெங்குப் பிள்ளையிடம் ஒருவர் சொல்லிக் கொண்டிருக்கப் புரோகிதர் அவர்களைக் கடந்து போவார்.
நம்மைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என்று யூகித்த புரோகிதர், உச்சிக்குடுமி வைத்துப் பூணூல் அணிந்தவர் அவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்பார். அதைப் பார்த்துவிட்ட வெங்குப் பிள்ளை பாத்திரமேற்ற கலைவாணர் தலையை ஆட்டிக் கொண்டு என் கையில் இருக்கும் இது என்ன தெரியுமா? எழுதுகோல்! தர்ப்பைப் புல் இல்லை. தொலைச்சுப் புடுவேன் தொலைச்சு நினைவு வைச்சுக்க ஜாக்கிரதை என்று புரோகிதர் காதில் விழும்படி உரக்கக் கூறுவார்.

அண்ணாவின் வியப்பு
மாணிக்கவாசகர் படத்தைத் தம் நண்பர்களுடன் பார்த்து விட்டு அண்ணா வியந்து போனார். நாம் இத்தனை வருடங்களாகச் சொல்ல முயற்சி செய்ததை ஒரு நிமிடத்தில் சொல்லி விட்டாரே, இவர் என்று தந்தை பெரியாரிடம் அண்ணா சொல்ல, அதைக் கேள்விப்பட்ட பெரியார் கலைவாணரை நேரில் பார்க்க விரும்பினார்.

பெரியார் பாராட்டு

அண்ணா, அவரைப் பெரியாரிடம் அழைத்துக் கொண்டு போனார். பெரியார் பாராட்ட, பெரியார் அறிமுகம் கிடைத்த மகிழ்ச்சியில் கிருஷ்ணன் பெரியாருக்கு மாலை அணிவித்து வணங்கினார். தாம் சொல்ல விரும்பும் கருத்துக்கள் கிருஷ்ணனுக்குப் பிடித்துப் போனவையாக இருந்தது குறித்து அறிந்த பெரியார் மகிழ்ந்தார்.

கலைவாணரைப் பெரியார் பாராட்டிப் பேசிய பேச்சுக்கள் பலவாகும். 31.7.1944இல் சென்னையில் சந்திரோதயம் நாடகத்துக்குப் பெரியார் தலைமை வகித்தார்.

நாடகத்திற்குச் சென்னை மாநில மாஜிஸ்ட்ரேட், கலைவாணர், தியாகராஜ பாகவதர், தண்டபாணி தேசிகர் பல திரைப்பட நடிகர்கள் உட்பட சுமார் 4000 பேர் வரையில் வந்திருந்தனர்.

மண்டப ஒலி பெருக்கி பெரிதாய் வைத்து மேடை நடிப்பு, பேச்சுக்கள் ஆகியன ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை கேட்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரியார் நடிப்பின் கடைசிப் பகுதியில் சொற்பொழிவாற்றினார்.

தாய்மார்களே! தோழர்களே! நகைச்சுவை அரசு என்.எஸ். கிருஷ்ணன் முதலாகிய திராவிடக் கலைவாணர்களே! கலா நிபுணர்களே! உங்கள் மத்தியில் பேசக் கிடைத்த வாய்ப்பைப் பெரும் பேறாகக் கருதுகிறேன் தோழர் அண்ணாதுரை அவர்களால் துவக்கப்பட்டு, அவரே தலைமை வகித்துச் சுயமரியாதை இயக்கத்தார் ஆதரவில் நடைபெற்ற சந்திரோதய நாடகத்தைக் கண்டு களித்தீர்கள். நீங்கள் 4000 பேர் கண்டும் கேட்டும் உணர்ச்சி பெற்று அனுபவித்த மகிழ்ச்சி இன்பம் எவ்வளவோ அவ்வளவு இன்பத்தைவிட பெரும் பாகத்தை நான் ஒருவன் அனுபவித் தேன். திராவிட கலைவாணர்களாகிய தோழர்கள் என்.எஸ். கிருஷ்ணன் தியாகராஜ பாகவதர், தண்டபாணி தேசகர் முதலியோர் முன்பு ஒருவர் நடிப்பது என்றால் அதுவே ஒரு அதிசயிக்கத் தகுந்த காரியமாகும். அப்படி இருந்தும் நீங்கள் ஆரம்பம் முதல் முடிவு வரை மிக்க மகிழ்ச்சியோடு சுவைத்ததை நான் கண்டு வந்தேன் என்று தொடங்கினார்.

அடுத்து அவர் நாடகத் துறையில் இன்று சில திராவிடர்கள் நடந்து வரும் மானங்கெட்ட தன்மையான நடிப்புகளை மாற்றி திராவிடர் நலனுக்கு ஏற்ற வண்ணம் நடித்துக் காட்டி அதை நாட்டில் பரவச் செய்ய நகைச்சுவை அரசு என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் மங்கள கான சபை என்னும் ஒரு நடிகக் குழுவை தனதாக்கி அதன் செயலை ஏற்று நடத்தப் போகிறார்கள் என்று கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன். அவர் நானறிந்த வரை சுமார் 10,15 வருட காலமாகவே திராவிட உணர்ச்சி கொண்டு துணிந்து திராவிடத் தொண்டு ஆற்றுவதானது உண்மைத் திராவிடன் ஒவ்வொருவரும் அவருக்குக் கடமைப்பட்ட வனாக ஆக வேண்டியதாகும் என்பதோடு மற்ற நடிகர்கள் வெட்கப்பட வேண்டியது மாகும் என்று கூறியவர் தோழர் என்.எஸ். கிருஷ்ணன் தொண்டானது திராவிடர்கள் தன்மானம் பெற்று மனிதத் தன்மை அடைந்து விட்டார்கள் என்று திராவிட சரித்திரத்தில் முக்கிய இடம் பெற வேண்டியதாகும் என்று பாராட்டினார்.

அதோடு பெரியார் அந்தக் கூட்டத்தில் சில சிந்தனை விதைகளை வழக்கம் போல விதைத்தார்.

கலையோடு மனிதனுக்கு அறிவு, மானம், இனப் பற்று ஆகியவை இருக்க வேண்டாமா? பணமே தானா பெரிது? என்று கேட்டதோடு தாங்கள் பெற்ற கலை வளத்தால் பெற்ற செல்வத்தை உண்மைத் திராவிடன் திராவிடனுக்கும் பயன்படுத்தாவிட்டாலும் திராவிடர் கேட்டிற்குப் பயன் படுத்தாமலாவது இருக்க வேண்டாமா? அப்படித் திராவிடருக்குக் கேடாகப் பயன்படுத்தியவர்களைப் பயன்படுத்துபவர்களை எப்படித் திராவிடர் என்று நம்மால் சொல்ல முடியும் என்று கேட்டார் பெரியார்.

சற்றுக் கடுமையாகவே, இவர்தான் பெரியார் என்று சொல்லும் வகையில் பொருத்தமாக, அப்பப்பா இந்த சினிமாக்களையும் புராண நாடகங்களையும், பாட்டு பிளேட்டுகளையும் எடுத்துக் கொண்டால், நம் கள், சாராயக் கடைகளையும், தாசிவேசிகள் குச்சுக்காரிகள் வீடும், மார்வாடி செட்டி கொள்ளைகளும் ஆயிரம் பங்கு மேலென்று சொல்லுவேனே சுயமரியாதைக்காரர்களின் காரியம் போதிய வெற்றி பெறாமல் தடைப்படுவதற்குக் காரணமே இந்த முக்கலையும், முக்கலைவாணர்களும், முக் கலை ரசிகர்கள் என்று சொல்லப்படுபவர்களுமாவார்கள் என்று கடுமையாகச் சாடினார்.

அடுத்துப் பேசிய கலைவாணர் தந்தை பெரியார் அவர்கள் சொன்னது சரியானதே என்றார் பெரியாரவர்கள் சொன்னதெல்லாம் சரியானதே. நாங்கள் கொள்ளை அடிக்கிறோம் என்பதும் எங்களால் நன்மையை விடக் கேடே அதிகம் என்பதும், எங்களைத் திருத்த வேண்டும் என்பதே சரியான அவசியமானதுமாகும். இதில் என்ன தப்பு என்றார். பெரியார் அவர்கள் இந்த மாதிரி வெகு நாளைக்கு முன்னமே எங்களுக்குச் சொல்லி, எங்களை மிரட்டிக் கண்டித்திருக்க வேண்டும். இப்பொழுது துணிந்து சொன்னதற்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். அண்ணாதுரை அவர்கள் எங்கள் விரோதம் கூடாது என்பதற்கு ஆக எங்களைப் பாராட்டியும் பெரியார் சொன்னதைக் கொஞ்சம் பூசிமெழுகியும் பேசினார். அப்படி ஒருவர், இப்படியும் ஒருவர் இருக்க வேண்டியதுதான் பெரியார் எங்கள் தலைவர்; அண்ணாதுரை என் குரு, தந்தை, சகோதரர் ஆவார். நாங்கள் பெரியார் தொண் டுக்கு உதவியளிக்க வேண்டியவர்களாவோம். அதுவே எங்கள் நன்றி அறிதல் கடமையாகும் என்றார் (குடிஅரசு 6.8.1944).

இதனைப் போலவே 8-9-1944-இல் ஈரோட்டில் கிந்தனார் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றபோதும், 1.11.1944இல் இழந்த காதல் நாடகத்திற்குத் தலைமை ஏற்றபோதும் பெரியார் அய்யா அவர்கள் என்.எஸ். கிருஷ்ணனைப் பாராட்டிப் பேசியுள்ளார்.

நகைச்சுவை அரசர் கிருஷ்ணன் அவர்கள், நான் அறிந்த வரை சுமார் 10,15 வருஷ காலமாகவே, திராவிட உணர்ச்சி கொண்டு துணிந்து திராவிடத் தொண்டு ஆற்றி வருவதால் உண்மைத் திராவிடன் ஒவ்வொருவனும் அவருக்குக் கடமைப்பட்டவன் ஆகிவிட்டான் என்பதோடு, மற்ற நடிகர்கள், நாமும் இப்படி நடிக்கவில்லையே என்று வெட்கப்பட வேண்டியும் ஏற்பட்டு விட்டது தோழர் கிருஷ்ணனின் தொண்டானது திராவிடர்கள் தன்மானம் பெற்று மனிதத் தன்மை அடைந்து விட்டார்கள் என்ற திராவிட சரித்திரத்தில் முக்கிய இடம் பெற வேண்டிய தாகும். இவர் தனது தொழிலில் ஒரு மேதாவி என்றாலும், அதை நடத்தும் முறையில் ஒரு பெரிய புரட்சியாளர் என்றே சொல்ல வேண்டும். அதுவும் லெனின் செய்தது போன்ற, புரட்சி என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் நாடகத் துறையிலும் இசைத் துறையிலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

நம் அருமை கிருஷ்ணன் அவர்கள் தனது தொழிலை வெகு தூரத்திற்கு மாற்றியும், புரட்சி செய்தும், மற்றவர் களுக்கு வழிகாட்டியாகவும் ஆகிவிட்டார். கலை சீர்திருத்தம் சரித்திரத்தில் கிருஷ்ணன் பெயர் பொன் னினால் பொறிக்கப்படும்

கிந்தன் கதை நடத்துவதில் கதை பொய்யானாலும் அதை மக்களுக்கு மானமும், அறிவும் முற்போக் குணர்ச்சியும் ஏற்படும்படி செய்து அதன் வருவாயில் பெரும்பாகம் பொது நலத்துக்கு உதவுகிறார்.
பணப் பிசாசுக்கு அவர் மனம் அடிமைப்படவில்லை. மற்றவர்கள் என்ன சொல்லுவார்கள் என்ற கவலை அவருக்கு இல்லை. இதுபோல எவனொருவன் தன்னலமில்லாமல் தொண்டாற்ற முயலுகிறானோ அவன் வெற்றி பெறுவான் என்பதோடு ஒரு புரட்சி வீரன் என்பதற்கு நமது கிருஷ்ணன் அவர்களே எடுத்துக் காட்டாகும்

கிருஷ்ணனைப் பற்றி நான் நினைக்கும் போதெல்லாம் அவரை ஒரு புரட்சி வீரரென்றே கருதுவது ஏன்? அவர் ஒரு நல்ல தேவையான புரட்சியில் வெற்றி கண்டவர் இனி அவர் செத்தாலும் சரி, அவர் பணம் காசெல்லாம் நழுவி அன்னக் காவடி கிருஷ்ணன் ஆனாலும் சரி நாடகப் புரட்சி உலகைப் பற்றிச் சரித்திரம் எழுதப்பட்டால் அச்சரித்திரத்தின் அட்டைப் பக்கம் கிருஷ்ணன் படம் போடா விட்டால் அச்சரித்திரமே தீண்டப்படாததாக ஆகிவிடும்

பெரியார் வரிசையில்...

ஒரு முறை அக்கிரகாரத்து அதிசய மனிதர் வ.ரா. பெரியார் வரிசையில் கலைவாணர் என்று எழுதியி ருந்தார். இதுபற்றி மாறபாடன கருத்துடை யவர்கள் வ.ரா.வும் எப்படி இவ்வாறு எழுதலாம் என்று மோதினர். உடனே அவர் இது பற்றி என்னிடம் கேட்பதைவிடப் பெரியாரிடமே கேட்டுப் பாருங்கள் என்று கூறவே பெரியாரிடம் போய் இதுகுறித்துக் கேட்டார்கள்.

அதற்குத் தந்தை பெரியார் தனக்கே உரிய வகையில் நானும் சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்கிறேன்; கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும் சொல்றாரு. நான் சொல்லும்போது அழுகிய முட்டையையும் நற்காலியையும் வீசி எறிகிறார்கள். ஜனங்க, இதையே கலைவாணர் சொன்னா காசு குடுத்துக் கேட்டுக் கை தட்டி ரசித்துச் சிரிச்சுட்டு அதை ஒத்துக்கிட்டுப் போறாங்க. அந்த வகையிலே என்னைவிட அவரு உசந்துட்டாரு

பெரியார் மேல் கலைவாணரின் பற்று

திரைப்பட உலகிலே முதன் முதலாக பெரியார் என்ற பெயரை அறிவித்தவர் கலைவாணர் என்று கூறலாம். பணம் படத்தில் வரும் பாடலில் தினா - முனா கானா என்பதில்

பெரியார் வள்ளுவப் பெரியார்
அந்தப் பாதையில் நாடு சென்றிட வழி
வகுப்பதும் அதன்படி நடப்பதும் எங்கள்

ராஜா ராணி படத்தில் சாக்ரடீஸ் ஒரங்க நாடகம் இடம் பெறும். அந்த நாடக நிகழ்ச்சிக்குக் கலைவாணர் தலை மையேற்று நாடகத்தில், சாக்ரடீசுக்கு நஞ்சு கொடுக்கும் கட்டத்தில் நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த கலைவாணர் மேடைக்கு ஓடிப் போய் நாட்டுக்கு நல்லது செய்த பெரியாரையா சாகச் சொல்றீங்க? என்று பதறிக் கேட்பார். அவர் தந்தை பெரியாரை நினைத்துக் கேட்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட மக்களின் ஆரவாரக் குரலால் திரை அரங்கே அதிரும்.

கலைவாணர் தந்தை பெரியாரைக் குறித்துக் கூறிய இந்த வைர வரிகளில் பெரியார் அவர் நெஞ்சில் வாழ்ந்தார் என்பது விளங்கும். தமிழகம் பெற்றிருக்கும் பொதுச் செல்வங்களில் அவரும் ஒருவர். பூப்போன்ற நெஞ்ச முள்ளவர் புகழுக்காகத் தம் போக்கை மாற்றிக் கொள்ள மாட்டார். அவருக்காக வேண்டுமானால் புகழ் தான் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். புனிதமான மனிதர் துணிவு என்றும் மூன்றெழுத்து முத்தமிழ் பண்பை மனித உருவில் காண வேண்டுமாயின் அந்த உருவம் ஈ.வெ.ரா.தான் வேறு எதுவும் இல்லை

வானொலியில்...

1947 முதல் விடுதலை நாள் கொண்டாட இருந்த வேளையில் சென்னை வானொலியில் கலைவாணரின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஒலிபரப்பப்பட இருப்பதாக விளம்பரம் செய்தனர். கலைவாணர் நடத்தும் அந்த நிகழ்ச்சிக்குரிய எழுத்து வடிவத்தைச் சென்னை வா னொலி நிலையத்துக்கு அளித்தவர் ராங்கு விடுதலைக்குப் பாடுபட்ட தலைவர்கள் வரிசையில் தந்தை பெரியார் பெயரைக் குறிப்பிட்டிருந்தார்.

ஒலிபரப்புப் பதிவாக வேண்டிய நாளில்  நிலையம் வந்த கலைவாணரிடம் வானொலி நிலைய உயர் அதிகாரி எழுத்து வடிவத்தில் பெரியார் பெயர் நீக்கப்பட்டிருப்பதை எடுத்துச் சொல்லி ஒலிபரப்பின் போது பெரியார் பெயரைச் சொல்லாமல் விட்டுவிடச் சொன்னபோது கலைவாணர் அதிர்ச்சி அடைந்ததுடன், பெரியார் பெயர் இடம் பெறாது என்றால் எந்த நிகழ்ச்சியும் தன்னுடைய நிகழ்ச்சி வானொலியும் இடம் பெறாது என்றால் எந்த நிகழ்ச்சியும்  தன்னுடைய நிகழ்ச்சி வானொலியில் இடம் பெறாது என்று வெளியேறினார். அதிகாரிகள் செய்வதறியாது திகைத் தனர். மறுபடியும் கூடிப் பேசி கலைவாணர் விரும்பியவாறே பெரியார் பெயரைச் சேர்த்துச் சொல்லுவதை அனுமதிக்க வைத்து அதன்படியே நிகழ்ச்சியை ஒலிபரப்பினார்கள் என்றால் கலைவாணர் தந்தை பெரியார் மீது கொண்ட பற்றும் அன்பும், மதிப்பும் சாதாரணமானதா? 

14.1.1948 திராவிடன் பொங்கல் மலரில் இச்செய்தி அன்றே இடம் பெற்றது.
தந்தை பெரியார் கலைவாணர் குறித்து என்ன கருத்துக் கொண்டிருந்தாரோ அதே கருத்தை மாற்று முகாமைச் சேர்ந்தவரானாலும் தந்தை பெரியாரின் நண்பராகவே வாழ்ந்த இராஜாஜியும் கொண்டிருந்தது வியப்பு எனலாம். எனவேதான் இராஜாஜி கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் விட்டுச் சென்ற இடத்தில் வேறு யாரும் புகுந்து புகழ் பெற இயலாது என்று வெகு பொருத்தமாகச் சொன்னதை இங்கே சுட்டிக் காட்டுவோம். அது உண்மையே. கலைவாணர் மறைந்து 50 ஆண்டுகள் ஆனபின்பும் வெற்றிடமாகவே அவ்விடம் நிரப்பப்படாத இடமாகவே உள்ளது என்பது உண்மையே.

---------------- - முனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன்  அவர்கள் 30-11-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

11 comments:

தமிழ் ஓவியா said...


துக்ளக் துடுக்கர் சுப்புக்கு இதோ ஓர் ஆப்பு!


- ஊசி மிளகாய்-

திராவிடர் இயக்கத்தினை கொச்சைப்படுத்திடும் திருப் பணியை கொயபெல்ஸ் பாணி பிரச்சாரத்தினை, துக்ளக் பார்ப்பன ஏடு தொடர்ந்து செய்து வருகிறது.

வெறுக்கத்தக்கதா பிராமணியம்? என்ற சோவின் தொடருக்கு விடுதலையில் ஆசிரி யர் வீரமணி வெறுக்கத்தக்கதே பிராமணீயம்! எனும் தலைப்பில் மறுப்புக் கட்டுரைகள் எழுதி, அந்நூலும் வெளிவந்தது.

அதுபோலவே வேறு ஒரு பார்ப் பனர் பழைய கருப்பையா லட்சுமி நாராயணன் என்ற உண்மை பெய ரில் ஏதோ மிகப் பெரிய ஆய்வா ளரைப் போல் எழுதியதை, விடுதலை யில் அதன் நிருவாக ஆசிரியர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் பல்வகை ஆதாரங்களுடன் - உண்மைகளை சான்றுகளுடன் அடுக்கி, பார்ப்பனப் புரட்டுக்கு தக்க பதிலடி கொடுத்து அது ஒரு நூலாகி நூல்களின் சாயத்தை வெளுக்கும்படிச் செய்துள்ளது!

இந்நிலையில் பழைய கருப்பையர்கள் கிட்டாததால் புதிய சுப்புகளை விட்டு திராவிட மாயை என்ற தலைப்பில் - அத்தலைப்புகூட ஒரி ஜினல் அல்ல; கம்யூனிஸ்ட் பி. இராம மூர்த்தி முன்பு எழுதிய திராவிட மாயையா? என்ற நூல் தலைப்பே ஆகும்!

திராவிடம் மாயை அல்ல; உண்மை இல்லாவிட்டால் இந்திய தேச வாழ்த்துப் பாடலில் வங்கத்து கவிஞர் தாகூர், திராவிட உத்சல வங்கா... என்ற பாடியிருப்பாரா? புண்ணாக்குகளே புரிந்து கொள் ளுங்கள்! (புண் - நாக்குப் படைத்தோர் என்றும் கொள்க)

5.12.2012 துக்ளக் இதழில் சுப்பு ஒரு பெரிய கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்து எழுதிவிட்டார்!

இறைவனை வேண்டி ஈ.வெ.ரா. என்று எழுதுகிறார்.

தமிழ் ஓவியா said...

...ஈ.வெ.ரா.வை என்ன சொல்வது என்ற கேள்வி மிஞ்சுகிறது. அவரை புளுகு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் என்றே சொல்லிவிட லாம் என்று பொருத்தமில்லாமல் புளுகியிருக்கிறார்.

அட பொய்யில் புழுத்த புழுக் களே, இந்தப் புளுகு கந்தபுராணத் திலும் இல்லை என்ற பழமொழிக்குப் பொருள் என்னப்பா?

நியாயமாக கந்தபுராணம் அல்ல புளுகு ஊற்று, புளுகு பல்கலைக் கழகம் என்று பொருள் அல்லவா?

மகா பாரதத்தில் பொய் சொல்லி அல்லவா எதிரியை வீழ்த்துகின்ற (அசுவத்தாமா எதா குஞ்சரா) அதை விட பெரிய இடத்துப் பெரும் புளுகுக்கு வேறு சான்று வேண் டுமா?

மரத்தின் பழம் மீண்டும் ஒட்டாத போது மனதில் மறைத்ததைச் சொல் லும்படி செய்ய அதுவரை மறைத் திருந்த அய்வர் (பஞ்சபாண்டவர் போதாது என்று ஆறாவது கர்ணன் மீதும், ஆசைப்பட்ட துரவுபதை கதை காரர்களா புளுகு பற்றிப் பேசுவது!) அட அப்புவே! குடிஅரசுக்கு துவக்கக் காலத்தில் இரண்டு ஆசிரியர்கள் (காங்கிரஸ்காரரான தங்கப் பெருமாள் பிள்ளை ஈரோடு வக்கீல் அவர் எழுதிய தலையங்கம் அது பெரியார் எழுதியதல்ல)
இதை ஆசிரியர் வீரமணி முன்பே பல முறை விளக்கியுள்ளார்!

பேராசிரியர் சுப. வீரபாண்டியன்

சதுர்வர்ணம் மயா ஸ்ருஷ்டம் என்ற கீதைசுலோகத்தில் கடவுளான கிருஷ்ணன் நாலு வர்ணத்தை நானே படைத்தேன் - என்று கூறி யதை மறைமலை நகரில் பேசினா ராம்; இந்த அப்புவுக்கு பொத்துக் கொண்டு கோபம் வந்து, அதன் பின்பகுதியில் குணகர்மபாக என்று உள்ளதை வைத்து திசை திருப்பிடும் வேலை.

அது குணங்களையும் செய லையும் அடிப்படையில் வைத்து நான்கு வர்ணங்களை நான் உண்டாக்கினேன் என்றுதான் கீதையில் கூறப்பட்டுள்ளது. இது பிறவி அடிப்படையில் செய்யப்படும் ஏற்ற தாழ்வுகளுக்கு இடமே இல்லை என்று ஒரு புளுகு - புரட்டு வியாக்யானம் எழுதி புலம்புகிறார்!

இந்த பூணூல் வரியிலுள்ள காஞ்சிகாமகோடி ஸ்ரீ சந்திசேக ரேந்திர சுவாமிகளின் தெய்வத்தின் குரல் நூலில் இப்படி விளக்கம் சிலர் கீதைக்குச் சொல்வது தவறு என்று அவரால் ஓங்கி அடித்துச் சொல் லப்பட்டுள்ளதே! படிக்கவில்லையா?

பகவான் கிருஷ்ணன் - பிறவி அடிப்படையில் தான் அதைக் கூறினார். குணம், தோஷம் அது, இது என்பதெல்லாம் கிடையாது என்று தெளிவாக, திட்டவட்டமாக அவர் சொல்லி விட்டாரே!

இவரது இந்த மறுப்பு பழைய (ஜெயில் பெயில் தலைக்காவிரி புகழ் இன்றைய சங்கராச்சாரிகள் அல்ல) பெரியவாளுக்கா? அல்லது சு.ப.வீக்கா!
அட அபிஷ்டுகளே (அவாள் பாஷையிலேயே) அதே கீதையில் 18வது அத்தியாயத்தை நன்னா படியுங்கோ.

பகவான் சொல்லிண்டு இருக் காரே!

வர்ணக் கலப்பு கூடவே கூடாது அது வருங்கால சந்ததிகளே அழித் திடும்ன்னு சொல்லியிருக்காளே!

அந்த ச்லோகத்தில் உள்ளபடி, பிறவி சுபாவப் படி வர்ணம் பிறவி அடிப்படைதான் என்பதை குணம் என்பது இன்னின்ன ஜாதி வர்ணப் பிரிவுக்கு இன்ன குணம் என்பதை வைத்தே சொல்லப்படுகிறது - மறுக்கவே முடியாதே!

இதோ அந்தச் சுலோகம்.
ப்ராமண - க்ஷத்திரிய - விசாம் - சூத்ராணாந்
கர்மாணி ப்ரவி பக்தானி ஸ்பாவ
- ப்ரபவைர் - குண
(அத்தியாயம் 18 - சுலோகம் 41)

இதன் பொருள்: பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்பவர்களுக்கு சுபாவமாக உண் டான குணங்களைக் கொண்டே தர்மங்கள் வகுக்கப்பட்டன.

இதன் பொருள் இப்போது விளங்குகிறதா? இந்த குணம் என்பதே அந்த வர்ண ஜாதிக்கே உரியது, கலந்து விடக் கூடாது என்றும் ஒருபடி மேலே போய் - நான் ஜாதியை உண்டாக்கியது மட்டுமல்ல; அவை ஒன்றோடு ஒன்று கலக்காமலும் பார்ப்பதே (வருண) தருமம் என்பதில் வேறு வியாக் யானத்திற்கு இடமே இல்லாமல் கீதை சொல்லுகிறதே!

கெட்டிக்காரன் புளுகுக்கே உச்சவரம்பு எட்டு நாள்கள்தான்
துக்ளக் சுப்புகளின் புளுகு ஒருநாள், ஒரு மணி கூட நிற்காதே! 30-11-2012

தமிழ் ஓவியா said...

விரி நதிநீர்ப் பிரச்சினை: அனைத்து கட்சிக் கூட்டத்தை உடனே கூட்டுக!


திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை

காவிரி நீர்ப் பிரச்சினையில் தமிழ்நாடு மற்றும் கருநாடக மாநிலம் முதல்வர்களின் பேச்சு வார்த்தை தோல்வி அடைந்த நிலையில் தமிழக முதலமைச்சர் உடனே அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :

தமிழ் ஓவியா said...

உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்று, தமிழ்நாடு முதல் அமைச்சர், காவிரி டெல்டா பகுதியில் கருகிவிடும் நிலையில் உள்ள 14 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்களுக்கு காவிரி நடுவர் நீதிமன்றத் தீர்ப்பின்படியும், காவிரி நதி நீர் ஆணையத்தின் கட்டளைப்படியும், குறைந்தபட்சம் 30 டி.எம்.சி. தண்ணீராவது தரவேண்டும் என்பதை வலியுறுத்தி நேரில் நேற்று (29.11.2012) கர்நாடகத் தலைநகர் பெங்களூருக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

நேற்றே கருநாடக முதல் அமைச்சர் ஷெட்டர் ஒரு சொட்டு தண்ணீர்கூடத் தரும் நிலையில் நாங்கள் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்து, செய்தியாளர்களிடையே சொன்னதுபோலவே, இன்று பேச்சு வார்த்தையில், தமிழக விவசாயிகளும், கருநாடக விவசாயிகளைப் போலவே மனிதர்கள்தான் என்பதை எண்ண மறந்து, சற்றும் மனிதாபிமானம் காட்டாது - மரியாதைக்காகக்கூட அடையாளமாக ஒரு அளவு தண்ணீரை நாம் இருவருமே பகிர்ந்துகொள்வோம் என்று கூறவில்லை.

வெட்டொன்று துண்டு ரெண்டு என்பதைப்போல பேசிவிட்டார். இது நாம் எதிர்பார்த்த ஒன்றுதான். இதற்கு 127 தடவை பேச்சுவார்த்தைகள் 30 ஆண்டுகளுக்குமேல் நடந்து உருப்படியான முடிவு எதனையும் எட்ட இயலாத நிலை என்பதால்தான் நாம் நடுவர் மன்றம் கோரினோம்.

சமூக நீதிக்காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது அமைத்து இந்த அளவுக்கு வழி செய்தார்! கருநாடக நதிநீர் ஆணையம் பிரதமர் தலைமையில் கொடுத்த ஆணையையும் மதிக்காமல், மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கே வந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு வேறு வழியின்றி உச்சநீதிமன்றத்தில் நீதி கேட்டது சரியான நிலைப்பாடே ஆகும்.

ஆனால், அவர்கள் தீர்ப்பு வழங்கி சம்பா பயிர்களைக் காப்பாற்ற இருக்கும் நீரை எப்படியும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று சொன்னதன் விளைவாக, உச்சநீதிமன்றத்தின் கருத்துப்படி, தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை நடத்திட பெங்களூரு சென்றார். அது தோல்வியில் முடிந்துள்ள நிலையில், தமிழக காவிரிப் பாசன விவசாயிகள் நெஞ்சம் பதைபதைத்து நிற்கின்றனர். இந்நிலையில், அவசரமான தீர்வுகளை காலதாமதம் இன்றி கண்டாக வேண்டும்.

1. நாளை (30.11.2012) உச்சநீதிமன்றத்தில் இதை விளக்கி தமிழக அரசு உரிய நிவாரணம் கேட்டுப் பெறுவது ஒரு வழி.

2. காவிரிப் பாசன விவசாயிகள் தங்கள் சம்பா பயிர்களைக் காப்பாற்ற தடையில்லாமல் - மின்வெட்டு இன்றி குறைந்தது ஒரு வாரத்திற்காவது தர தமிழக அரசு முடிவு செய்யவேண்டும்.

3. விவசாயிகளுக்குப் போதிய நிவாரண உதவிக்குரிய, நட்ட ஈட்டுத்தொகையை மதிப்பீடு செய்ய வேண்டும்.

4. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளையும், விவசாயப் பிரதிநிதிகளையும் அழைத்து தமிழக அரசு ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை காலதாமதம் செய்யாமல் கூட்டவேண்டும். தொலை நோக்குடன், (அ) காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வழங்கி பல ஆண்டுகள் ஆகியும், மத்திய அரசின் கெசட்டில் இது பதிவு செய்யப்படவில்லை.

பதிவு செய்யப்பட்டால்தான் முழு சட்ட உரிமையும், வலிமையும் ஏற்படும். (ஆ) தமிழ்நாட்டு நதிகளை முதலில் இணைக்கும் திட்டத்தை, நீர்ப்பாசன, நீரியல் துறை வல்லுநர்களை அழைத்து திட்டம் தீட்டி, அதற்கான நிதி ஆதாரங்களை (உலக வங்கி சேவைகளையும், சர்வ தேச நிதி ஆணையம் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி போன்றவைகளையும் பெற தணிக்கைக் குழு அமைத்து ஆலோசனைப் பெறுவது அவசியம்).

நெய்வேலியிலிருந்து உற்பத்தியாகி கருநாடகம் மற்றும் இதர மாநிலங்களுக்கு அனுப்பப்படும் மின்சாரத்தை, தமிழ்நாட்டிற்கே வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். அனைவரும் ஒரே குரலில் - அரசியல் மாச்சரியம் பாராமல் வற்புறுத்திட வேண்டும். அதன்மூலமாக, இப்போது காவிரி விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரத்தை குறைந்தபட்ச தேவை நாள்கள் வரை தாராளமாக வழங்க முடியும்.

நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி வேறுபாடின்றி பிரதமரைப் பார்த்து முறையிட்டு தமிழ்நாட்டு காவிரி பிரச்சினை விவசாயிகளின் துயர நிலையை - ஏற்படவிருக்கும் பேரிடரைத் தடுத்து நிறுத்த முடியும். கருநாடகத்தில் எல்லோரும் ஓர் அணி. இங்கேயும் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஓர் அணியில் நிற்பது - உரிமைகளை வலியுறுத்துவது அவசர - அவசியம். தமிழக முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி பலரது கருத்தையும் கேட்டு, கருத்திணக்க முறையில் இப்பிரச்சினையை அணுகித் தீர்வுகாணவேண்டியது மிகவும் இன்றியமையாதது. கருநாடகம் இவ்வளவு பிடிவாதம் காட்டுவதற்கு மூலகாரணம் வாக்கு வங்கி அரசியல் - தேர்தல் களம்தான் என்பது உலகறிந்த ரகசியமாகும்.

(கி.வீரமணி)
தலைவர்,
திராவிடர் கழகம் 30-11-2012

தமிழ் ஓவியா said...


கழகத் தோழர்களுக்கும் அன்பர்களுக்கும் கனிவான வேண்டுகோள்


தமிழர் தலைவரின் 80ஆம் ஆண்டு பிறந்த நாளான டிசம்பர் 2 ஞாயிறன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் கூறிடக் கழகக் குடும்பத்தினர்க்கும், பெருமக்களுக்கும் பெரியார் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சால்வைகள், பூங் கொத்துகள் என்பவைகளை விட சந்தாக்கள் பெரியார் (தொண்டர்கள்) நலப் பாதுகாப்பு அறக்கட்டளைக்கு “Periyar Health Care Trust” க்கு நிதியளித்து ஆதரவளிக்கக் கோருகிறோம்.

இதுவேதான் நம் தமிழர் தலைவரின் கனிவான வேண்டுகோளும்கூட!

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


இந்து மத ஆட்சியா?


தமிழ்நாட்டில் இந்து மத ஆட்சியா நடக்கிறது? டிசம்பர் 24ஆம் தேதி வைகுந்த ஏகாதசியாம். வைஷ் ணவர்களால் பெரிதும் கொண்டாடப்படும் விழா இது.

ஸ்மார்த்தர்கள் சிவராத்திரி கொண்டாட வில்லையா? இவர்களுக்குள் இது போட்டிக் கடை அது எப்படியோ தொலைந்து போகட்டும்.

வைகுந்த ஏகாதசி சிவராத்திரி கொண்டாடும் பக்தர்கள் நேரிடையாக சொர்க்கத்துக்கே போகட்டும்!

(அந்த நாள்களில் விரதம் இருந்து கொண்டாடு வோர் திரும்பி வர மாட்டார்கள். அவர்கள் சொர்க்கத்திற்குப் போய் விடுவார்கள் என்பது உண்மையாகுமானால் ஒரே ஒரு பக்தராவது கோயில் பக்கம் செல்லுவாரா? என்பது வேறு விடயம்)

இப்பொழுது என்ன பிரச்சினை? சிறீரங்கத்தில் நடக்கவிருக்கும் அந்தக் கோயில் விசேடத்துக்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் பல துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கூடிப் பேசி இருக்கிறார்கள். பக்தர்கள் அதிகம் வரக் கூடும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை, வசதிகளைச் செய்து கொடுப்பது குறித்து விவாதித்துள்ளனர். அதெல்லாம் சரி தான், ஓர் அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையும்கூட!

ஆனால் வெளியில் வந்திருக்கும் சேதி அதிர்ச்சி தரக் கூடியதாகும். அந்த நாளில் சிறீரங்கம் வருவோர்க்குப் பேருந்தில் கட்டணம் கிடையாதாம்.

அது எப்படி என்று தெரியவில்லை. எந்தச் சட்ட விதியின்கீழ் மாவட்ட ஆட்சியர் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் என்பதை விளக்க வேண்டும்.
வைகுந்த ஏகாதசி மட்டும் நெய்யில் பொரித்ததா? மற்ற மற்ற மதக்காரர்களும் ஏன், இந்து மதத்திலேயே இன்னொரு பிரிவுக்காரர்களும் அந்த வாய்ப்பைக் கோர மாட்டார்களா?

பகுத்தறிவுவாதிகள் மதச் சார்பற்றவர்கள் எடுக்கும் விழாக்களுக்கும் இந்த வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் சென்றால் மாவட்ட ஆட்சியரின் நிலைப்பாடு சிக்கலுக்கு ஆளாகாதா?

பக்தர்களுக்கு வசதிகளைச் செய்து கொடுப்பது என்பது வேறு - இலவசமாகப் பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று கூறுவது வேறு.
அரசு என்பது மதச் சார்பற்ற தன்மை கொண்டது. இந்திய அரசமைப்புச் சட்டம் அவ்வாறுதான் கூறுகிறது.

மதச் சார்பின்மை என்பது எந்த மதத்தையும் சாராதது என்பதாகும். எல்லா மதத்தையும் சமமாகப் பாவிப்பது என்பதெல்லாம் தவறான வியாக்கியானமே!

சிறீரங்கத்துக்கு மட்டும் அப்படி என்ன தனிச் சலுகை? முதல் அமைச்சர் தொகுதி என்பதாலா? இது உண்மையாக இருக்குமானால், அதுகூட பிற மதத்தவர்கள் மத்தியில் முதல் அமைச்சர் பற்றி கடும் அதிருப்தி ஏற்படத்தான் வழி வகுக்கும்.

முதல் அமைச்சரின் தொகுதி என்பதால் சட்டத்திற்கு உட்பட்டு கூடுதல் திட்டங்களைச் செயல்படுத்துவதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக முதல் அமைச்சர் அந்தப் பிரிவைச் சார்ந்தவர் என்பதற்காக ராஜாவை விஞ்சிய விசுவாசிகளாக அதிகாரிகள் செயல்படத் துடிப்பது ஆபத்தானதாகும். ஒரு கட்டத்தில் நெருக்கடி அதிகமானால் அரசே அதிகாரிகளைக் கைவிட்டு விடும்.

தமிழ்நாடு எங்கும் (சென்னையைத் தவிர்த்து) வெளி மாவட்டங்களில் 16 மணிக்கு மேல் மின் தடை! ஆனால் சிறீரங்கம் வைகுந்த ஏகாதசி விழா நடக்கும் காலத்தில் மூன்று நாட்களுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுமாம்.

இது என்ன கேலிக் கூத்து! அங்கு அடித்து வைக்கப்பட்டுள்ள ஸ்ரீமான் ரெங்கநாதனுக்குச் சக்தியிருந்தால் அந்த மூன்று நாட்களுக்குமே சூரியன் மறையாமல் பார்த்துக் கொள்ள வைக்கலாமே - காற்றையும் வீசச் செய்து புழுக்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாமே - கொசுக் கடியில்லாமலும் காப்பாற்றலாமே!

பாவம், அவர் என்ன செய்வார்? கோயில் தீப்பற்றி எரிந்து சிறீரங்கநாதனே எரிந்து வெடித்துச் சிதறவில்லையா? வேறு சிலைதானே வடித்து வைக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டில் கல்வி வளர்ந்த சமுதாயத்தில் வாழ்கிறோம் என்று சொல்லுவதற்கே வெட்கப்படத்தான் வேண்டியுள்ளது.

அய்.ஏ.எஸ்., படித்து மாவட்ட ஆட்சியர் ஆனால் என்ன? பகுத்தறிவு வேலை செய்யவில்லையே! அரசமைப்புச் சட்டத்தையும் மதிக்கவில்லையே! மாவட்ட ஆட்சியர் முடிவை மாற்றாவிட்டால் எதிர் காலத்தில் பல்வேறு கோரிக்கைகள் பெருகிக் கொண்டே போகும். மாவட்ட ஆட்சியர் திண்டாடத் தான் நேரும்.30-11-2012

தமிழ் ஓவியா said...


இந்து மதம் பற்றி ரஜினீஷ்

இந்துமதம் பாசிசத் தன்மை கொண்டது. அய்யாயிரம் ஆண்டுகளாக இந்துமதம் மக்களை அடிமைப்படுத்தியே வந்திருக்கிறது.

தாழ்த்தப்பட்ட மக்களை தீண்டத்தகாதவர்களாகக் கருதி, அவர்களை மனிதனை விட கேவலமாக நடத்தி வருகிறது. ஜாதி, இந்து என்று சொல்லிக் கொண்டு பார்ப்பனர்கள், தாழ்த்தப்பட் மக்களைக் கொடுமைப்படுத்தினர். இன்னும் அவர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். அவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு வருகிறது.

ஜாதி, இந்துக்களின் தெருவிலுள்ள கிணற்றிலிருந்து கூட தாழ்த்தப்பட்ட மக்கள் இன்றுங்கூட தண்ணீர் எடுக்க அனுமதிப்பதில்லை. இந்துமதப் பெண்களை ஆண்டாண்டு காலமாக அடிமைப்படுத்தி வருகிறது. இவற்றையெல்லாம் நான் எதிர்க்கிறேன். ஆண்களைப் போன்றே பெண்களையும் சமமமாகக் கருதுகிறேன். என்னைப் பொறுத்தவரை பார்ப்பானும், தாழ்த்தப்பட்டவனும் ஒன்றே. மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிற அனைத்து கலாச்சாரத்தையும், இதிகாசங்களையும் அழிக்க வேண்டும், அவற்றிற்கு தீயிட வேண்டும்.

(ரஜனீஷ் - ஆன்லுக்கர் - 15.12.1970)

தமிழ் ஓவியா said...


மகரதீபம் மோசடி - கேரள அரசே ஒப்புதல்


மகரஜோதி மனிதர்களால் ஏற்றப்படுவது - இயற்கையானதல்ல என்பதை வலியுறுத்தி தடைசெய்யக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கேரள அரசின் சார்பில் திருவாங்கூர் தேவசம் போர்டு செயலாளர் ஆர்.அனிதா தாக்கல் செய்த பதில் மனுவில் கூறி இருப்பதாவது:

மகர சங்கராந்தி நாளன்று பொன்னம்பலமேடு பகுதியில் வானத்தில் தெரியும் மகரஜோதி ஒரு நட்சத்திரம். அது இயற்கையாக தோன்றக் கூடியதே! மனிதர்களால் ஏற்றப்படுவது அல்ல ஆனால் மகரஜோதி வானத்தில் தோன்றும் அதே நேரத்தில் பொன்னம்பலமேட்டில் சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

அப்போது மகர தீபம் பொன்னம்பல மேட்டில் ஏற்றப்படுகிறது. அது மனிதர்களால் ஏற்றப்படுவதுதான். அதைதான் பக்தர்கள் மகரஜோதி என்று கும்பிட்டு வருகிறார்கள். காலம் காலமாக இது நிகழ்கிறது. அந்த மகர ஜோதி தெய்வீகமானது என்று நாங்கள் (தேவசம் போர்டு) கூறியதில்லை. ஜோதி பக்தர்களின் நம்பிக்கைத் தொடர்பான விஷயம் என்பதால் மகரஜோதி ஏற்றப்படுவதைக் தடைசெய்ய முடியாது.

(விடுதலை, 26.4.2011)

தமிழ் ஓவியா said...


இந்து மதம் - சங்கர மடங்கள் பற்றி


ஜெயபிரகாஷ் நாராயண்

வரலாற்றாசிரியர் கே.எம். பணிக்கர் அவர்கள் கூறியிருப் பது போல இந்து மதத்தின் இதயம் தர்ம சாஸ்திரங் களிலேயே வெளிப்படுகிறது.

சமூகப் பண்பும், தத்துவமும் ஒரே பொருள் அல்ல. ஒரு இந்து வை இனம் குறிப்பது வேதாந்தம் அல்ல. ஒரு அமெரிக்கர், ஒரு ரஷ்யர் அல்லது ஒரு ஜெர்மானி யர் வேதாந்தியாக இருக்கலாம். ஆனால் அவர்களை இந்துக்கள் என்று யாரும் கருதுவதில்லை.

ஜாதியும், தீண்டாமை மட்டுமே ஒரு இந்துவை இனம் காட்டுபவை அல்ல. ஆனால் வழக்கங்கள், சடங்குகள், அனுஷ்டானங்கள், கற்களை, மரங்களை, மிருகங்களை நாம் வழிபடுவது கர்ம காண்டம் என்பது - ஆகியவைகளே ஒரு இந்துவை இனம் காட்டு கின்றன.

படுபயங்கரமான சிக்கலாகச் சிக்கிக் கிடக்கும் இந்த வலைதான், இந்து சமுதாயத்தை பிணைந்து வைத்திருப்பது - அத்துடன் இந்து சமுதாயத்தின் தார்மீக, பொருளாதார முன்னேற்றத் துக்கு முட்டுக் கட்டை போட்டி ருப்பது இதுவே ஆகும்.

இந்த நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக பரந்து கிடக்கும் எண்ணற்ற சங்கரமடங்களை பாருங்கள். அவை குருட்டுப் பழமை வாதத்தின் குகைகளாக மட்டுமா இருக்கின்றன? பச்சை யான சுரண்டல் களங்களாகவும் அல்லவா இருக் கின்றன.

இந்து மதத்தின் உச்சகட்ட உறைவிடங்களான சங்கர மடங்களையே எடுத்துக் கொள்ளுங்கள். இன்று அங்கே பதவி வகித்துக் கொண்டிருப்பவர் களில் குறைந்தபட்சம் ஒரு சங்கராச்சாரியாவது (பூரி) குருட்டுப் பழைமை வாதத்துக்கும், வெறிபிடித்த ஆச் சாரத்துக்கும் முன் மாதிரியாக விளங்க வில்லையா?

இந்த டில்லிப் பட்டணத்தையே சில ஆண்டு களுக்கு முன்னாள் அவமானத்துக் குள்ளாக்கிய பசுவதைத் தடை போராட்டத்துக்கு பின்னால் இருந்து தூண்டி விட்ட சக்திகளில் இவரும் ஒருவர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

நம்முள்ளே நாம் திறந்த உள்ளத்துடன் இருப்போம். நமது சமுதாயம் சீரிழிந்து கொண்டி ருக்கும் ஒரு சமுதாயம். நமது சமுதாயத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் ஒட்டடைகளிலிருந்து அதை விடுவிக்கவும், அதனை சுத்தப்படுத்தவும் ஒரு புதிய புத்தனே தேவைப்படுகிறான் என்பதை மனம் திறந்து ஒப்புக் கொள்ளுவோம்.


(இந்தியன் எக்ஸ்பிரஸ், 20.9.1972)

தமிழ் ஓவியா said...


குறும்பா


மண்டையில்
மண்ணாய்
இருக்கலாமாம்...!
மனதில்
புண்ணாய்
ஆக்கிடக் கூடாதாம்
மகேஸ்வரனைத் திட்டினால்
(மட) மாத்தமிழனுக்கு!!
ஆத்திகம் நாத்திகம்
வித்தியாசம்...?
கல்லைக் கடவுள் என
கும்பிடுவது ஆத்திகம்...!
கடவுளைக் கல்லென
கருதுவது நாத்திகம்!!


- கோ.கலியபெருமாள், மன்னார்குடி

தமிழ் ஓவியா said...


கடவுள் வருவாரா?


உலகத்தில் கடவுளுக்கு
வக்காலத்து வாங்கி பேசும்
ஓர் இனம் உண்டென்றால்
அது...
தமிழ்நாட்டில்தான்!
தமிழன்
வதை படுகிறான்
உதை படுகிறான்
பிறர் நாட்டில்....!
தண்ணீரில்லாமல்...
மின்சாரமில்லாமல்
தவிக்கிறான்
சொந்த நாட்டில்...!
இவைகளுக்கெல்லாம்
வக்காலத்து வாங்கி
பேசி தீர்த்திட
கடவுள் வரவில்லையே?!!