Search This Blog

26.11.12

பெரியார் திடலில் ஜாதி மறுப்பு, மத மறுப்பு திருமண விழா

ஜாதி மறுப்பு, மத மறுப்பு, துணைவரை இழந்தோர், மணவிலக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கான இணையர் தேடும் மன்றல் விழா!
பெரியார் திடலில் சுயமரியாதைத் தீ!
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் சாதனையோ சாதனை!!

சென்னை, நவ.25- ஜாதி மறுப்பு, மத மறுப்பு, துணைவரை இழந்தோர், மண விலக்குப் பெற்றவர். மாற்றுத் திறனாளிகளுக்கான இணையர் தேடும் மன்றல் நிகழ்ச்சி சென்னை பெரியார் திடலில் இன்று காலை முதல் விழா கோலாகலமாக நடைபெற்றது. பெரியார் திடலே நிரம்பி வழிந்தது என்று சொல்லும் வண்ணம் வந்து கொண்டே இருந்தனர். பெண்கள் உடன்கட்டை ஏறுவதை தடுத்தவர் ராஜாராம் மோகன்ராய் என்று சொல்கிறார்கள்.
ஆனால், ஒரு தீ விபத்தில் தன் கணவரை இழந்த என் மகளுக்கு அதற்கு பிறகும் வாழ்க்கை உண்டு என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி கொடுத்திருப்பது அய்யா தந்தை பெரியாரின் கொள்கைதான். பல்வேறு புரட்சிகரமான நிகழ்வுகளுக்கு முன்னோடியாக இருக்கும் பெரியார் திடல், இப்போதும் இப்படி ஒரு முற்போக்கான நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்துவது வெகு சிறப்பானது, மன்றல் நிகழ்வில் இணையரை இழந்த தன் மகள் சாந்தகுமாரி(33)க்கு மறுமணம் செய்யும் நோக்கோடு வந்திருந்திருந்த ஒரு தந்தை நம்மிடம் நன்றி பெருக்கோடு இப்படி கூறினார்.

ஆம், பெரியார் மறைந்து இத்தனை ஆண்டு களுக்கு பிறகும் கணவனை இழந்த பெண்ணுக்கு மறுமணம் செய்து வைக்கும் துணிச்சல், எண்ணம் இந்த சமூகத்தில் நிலைபெறச் செய்வதற்கு அஸ்திவாரமாக அவரின் கொள்கை வீரியத்தோடு விளங்குகிறது என்பதை எண்ணி பார்த்து நாம் திமிர் கொள்ளலாம். ஞாயிற்றுக்கிழமை காலை பெரியார் திடலில் 9 மணிக்கெல்லாம் சாரை சாரையாக மக்கள் கூட்டம்.

ஏராள பதிவுகள்
ஜாதி மறுப்பு, மத மறுப்பு, மாற்று திறனாளி, இணையை இழந்தோர், மணமுறிவு பெற்றோர் ஆகிய பிரிவுகளுக்கு தனித் தனியே கவுன்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் தங்களுக்கு விருப்பமான கவுன்டர்களில் ஆர்வமாக இளம் வயதினரும் அவர்களுடைய பெற்றோர்களும் பதிவுகளை செய்த வண்ணம் இருந்தனர். எண்ணிக்கை கட்டுக்கடங் காமல் போனதால் ஒருகட்டத்தோடு பதிவுகளை நிறுத்தும் நிலையே ஏற்பட்டது.

இது குறித்து கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய சிறப்பம்சம் ஒன்று உண்டு. பெரியார் திடலுக்கு வந்திருந்த அனைவரின் புருவத்தையும் உயர்த்தியது அந்த நிகழ்வு. நம்புங்கள் தோழர்களே! அமைக்கப்பட்டிருந்த அத்துணை கவுன்டர்களிலும் கூட்டம் அதிகம் மொய்த்த்து ஜாதிமறுப்புக்கான பிரிவில்தான். ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்தோடு தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள நீண்ட வரிசையில் இருபால் இளைஞர்களும் அவர்களின் பெற்றோர்களும் நின்ற காட்சி அடேயப்பா! தந்தை பெரியார் இருந்து இந்த காட்சியைப் பார்த்திருக்க வேண்டும்  பூரித்து போயிருப்பார்!

என் மகள் ஜெயந்தி(31), இசையில் எம்பில் பட்டம் பெற்றிருக்கிறார். கால் ஊனமானவர். அவருக்கு ஏற்ற துணை தேடி வந்திருக்கிறோம். ஜாதி, மதம் எதுவாக இருந்தாலும் அதை பற்றி யெல்லாம் கவலையில்லை. என் மகளை அன்போடு நடத்தக்கூடிய மனமுடையவராக இருந்தால் போதும், சென்னை வானகரத்தில் இருந்து வந்திருந்த மோகன் என்பவர் கூறியது.

இளைஞர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் ஜாதி மறுப்பு திருமணத்திற்கு காட்டும் ஆதரவை பார்க்கும்போது, ஒன்றை மட்டும் உரக்க சொல்லிக் கொள்ளலாம்----பெரியார் வாழ்வார்! பெரியாரியல் வெல்லும்!! வென்றே தீரும்!!!

தமிழ் மண்ணின் ரசாயனத் தன்மையை பெரியார் மாற்றியிருக்கிறார், அவரின் தாக்கம் எந்த அளவுக்கு ஊடுருவி சென்றுள்ளது என்பதற்கு இந்த ஒன்றே தக்க சான்று!
மன்றல் 2012 ஜாதி மறுப்பு இணைதேடல் பெருவிழாவை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் துவக்கி வைத்தார். சுயமரியாதை திருமண இயக்குநர் திருமகள், திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அ. அருள்மொழி, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்கள் பிறைநுதல் செல்வி, இரா. ஜெயகுமார்,  மனித வள பயிற்சியாளர் அருள்வேல்  ஆகியோர் உள்ளனர். (25-11-2012)

சுயமரியாதைத் தீ
ஜாதி, மதம் இவைதான் தமிழினத்தின் விடுதலைக்கு முட்டுக்கட்டையாக நிற்கின்றன. அவற்றை தகர்த்து எறிந்தே தீர வேண்டும். என் உறவுக்காரப் பெண்கள் இருவர் நித்யமலர்(22) மற்றும் தாட்சாயிணி(22) ஆகியோர் இந்த முற்போக்கு திருமணம் செய்து கொள்ள இங்கே பதிவு செய் திருக்கிறார்கள், இது வாணியம்பாடி இளம்பரிதி.

ஜாதி தீ பற்றி எரிந்து கொண்டிருக்கும் வேளை யில் பெரியார் திடல் சுயமரியாதை தீயை பற்ற வைத்திருக்கிறது. தீ பரவட்டும்!
                -----------------------"விடுதலை” 25-11-2012

25 comments:

தமிழ் ஓவியா said...

ஆணுக்கும் - ஆணுக்கும் பிறந்ததாலா?

சபரிமலை அய்யப்பன் கோயி லுக்கு 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் போகக் கூடாதாம். ஒரு தகவல் ஏடுகளில் வெளி வந்துள்ளது.

ஆந்திராவி லிருந்து அய்யப்பன் கோயிலுக்கு வந்த 30 பக்தர்களில் 3 இளம் பெண்களாம். ஆண் வேடத்தில் வந்தார்களாம்! (பக்தி காட்டும் ஒழுக்கம் இதுதான் - குறித்து வைத்துக் கொள்க!)

இந்த மூன்று இளம் பெண்கள் பம்பை நதியில் குளிக்கும்போது சிக்கிக் கொண் டார்களாம். பிறகு வெளியேற்றப் பட்டார்களாம்.

சில ஆண்டு களுக்குமுன் அய்யப்பன் விக்ர கத்தை நடிகை ஜெயமாலினி தொட்டு விட்ட தாகக் கூறி ஒரே கலாட்டா!

இப்பொழுதோ மூன்று பெண்கள் அய்யப்பனைத் தரிசித்து விட்டு, பம்பை நதியிலும் குளித்திருக்கிறார்கள்.

ஏன் அய்யப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் போகக் கூடாது? அதற் குக் காரணம் எதுவாக இருக்க முடியும்?

அய்யப்பப் பக்தர்கள் என்னதான் விரதமாக இருந்தாலும் பெண் களைப் பார்த்ததும் ஒழுக்கம். தவறி நடப்பார்கள் என்ற எண்ண மாகத்தான் இருக்க முடியும்.
சாஸ்திர ரீதியாக இன்னொரு காரணமும் இருக்கக் கூடும்.

அய்யப்பன் பிறப்பே எப்படி? அரி, அரன் என்னும் இரு ஆண்களுக்குப் பிறந்தவன் தானே!

பெண்ணில்லாமல் பிறந்ததால் பெண்ணை வெறுக்கிறார்களோ என்னவோ!
ஆணுக்கும் ஆணுக்குமோ, பெண்ணுக்கும் பெண்ணுக்குமோ பிள்ளை பிறக்காது என்பது பாமர னுக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் பக்திமானுக்குத் தான் புத்தி கிடை யாதே - எதைச் சொன்னாலும் நம்பத் தயாராக உள்ளவர்கள் தானே!

தமிழ் ஓவியா said...

யாகமாம் யாகம்!

டெங்கு நோயை ஒழித்துக் கட்ட மதுரை அரசு மருத்துவமனையில் யாகம் நடத்தப்பட்டுள்ளதாம்.

அரசன் எவ்வழியோ குடிகள் அவ்வழி என்பார்களே அது இது தானோ!

யாகத்தால் நோயை நீக்க முடியும் என்றால் இந்த மருத்துவ மனைகள் ஏன்? மருத்துவக் கல்லூரி கள் ஏன்?

மருந்து உற்பத்திச் சாலை கள் தான் ஏன்? ஏன்?

டெங்கு நோய்க்கு மூலம் ஒரு வகை கொசுதான் என்கின்றனர். அந்தக் கொசுவைப் படைத்தவன் யார்? அதையும் கடவுள்தான் படைத் திருக்க முடியும் - ஆன்மீக நம்பிக் கைப்படி!

கடவுளால் படைக்கப்பட்ட உயிரை அழிக்கலாமா? அபச்சாரம்! அபச்சாரம்!! அதனால்தான் மதுரை மருத்துவமனையில் யாகமோ, கடவுளின் மனதைக் குளிர வைத்து நோயைக் குணப்படுத்தத் திட்டம் போலும்!

பேசாமல் டாக்டர் கோட்டு களைக் கழற்றி எறிந்துவிட்டு, காவித் துண்டை இடுப்பில் கட்டிக் கொள்ளுதல் உத்தமம்!
நம் நாட்டுப் படிப்பு வயிற்றுப் பிழைப்புக்கு ஒரு லைசென்ஸ் - தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

லண்டனைப் பாரீர்!

லண்டனில் ஒலிம்பிக் போட்டி நடந்ததல்லவா! போட்டி நடக்கும் நேரத்தில் அபாய கட்டத்தில் இருக் கும் நோயாளிகளுக்கு ரத்தம் தேவைப்படுமே!

என்ன செய்தனர் அங்கிருந்த சமூக ஆர்வலர்கள்? எட்டு பேர் கொண்ட ஒரு குழு உள்ளாடையை மட்டும் அணிந்து, உடலின்மீது வித் தியாசமான ஓவியங்களை வரைந்து கொண்டனர். ரத்த நாளங்கள் மற்றும் இதயம் போன்றவை வெளி யில் பார்வைக்குத் தெரிவதுபோல உடலில் ஓவியங்களை வரைந்து கொண்டு மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் ஊர்வலமாகச் சென்றனர்.

இது பெரும் விளைவை ஏற்படுத் தியது. ஏராளமான அளவுக்குக் குருதியும் கிடைத்தது.

நம் நாட்டில் என்ன என்றால் பெண்கள் நிர்வாணமாக ஏர் உழு தால் மழை கொட்டோ கொட்டென்று கொட்டும் என்று பீலா விடு கிறார்கள்! இது அர்த்தமுள்ள இந்து மதத்தின் சரக்கு - வெட்கக்கேடு!

தமிழ் ஓவியா said...

கங்காவின் கருணை?

பீகார் தலைநகரான பாட்னாவில் பக்தியின் பெயரால் மனித உயிர்கள் பலியாகியுள்ளன. தீபாவளி கொண் டாடிய ஆறு நாட்களுக்குப் பின் சூரியக் கடவுளை வணங்கும் சாத் பூஜா கொண்டாடப்பட்டுள் ளது. வட மாநிலங்களில் கொண் டாடப்படுவது வழமையாகும்.

இதற்கான பாட்னா அருகே - அதாலக் கன்ச் என்ற இடத்தில் கங்கை ஆற்றின் கரையில் ஏராள மாக பக்தர்கள் கூடியிருந்தனர். ஆற்றுப் பாலத்தின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மூங்கில் பாலத்தில் அளவுக்கு அதிகமான எண்ணிக் கையில் பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு கடக்க முயன்றதால், மக்கள் கூட்டத்தில் நசுங்கி 20 பேர் பலியானார்களாம்.

என்ன கொடுமையடா இது! கங்கா தேவி என்கிறார்களே. சிவபெருமான் தலையில் பார்வதி தேவியாரின் சக்களத்தியாக அமர்ந்து கொண்டு இருப்பதாகக் கித்தாப்புப் பேசுகிறார்களே. அந்தக் கடவுள் தன் பக்தர்களைக் காப் பாற்றவில்லையே!

இதுபோன்ற நிகழ்வு தொடர்ந்து நடந்து கொண்டுள்ள நிலையிலும் கூட மக்கள் தங்கள் பகுத்தறி வுக்குக் கொஞ்சம் வேலை கொடுக் கக் கூடாதா?

தமிழ் ஓவியா said...


புதுவை மாநாடு - ஓர் அலசல்


மழை மிரட்டியது - மாநாடோ அதனை விரட்டியது

புதுவை மாநாடு - ஓர் அலசல்

- நமது சிறப்புச் செய்தியாளர்

புதுச்சேரி மாநாட்டையொட்டி மாபெரும் பேரணி புதுச்சேரி பேருந்து நிலையம் சுப்பையா சிலையருகிலிருந்து புறப்பட்டு, பல முக்கிய வீதிகள் வழியாக நதி போல் ஓடி - இறுதியில் கடலூர் சாலை பெரியார் திடலில் சங்கமம் ஆயிற்று வழி நெடுக ஆயிரக்கணக்கான பொது மக்கள் பேரணியைக் கண்டு மகிழ்ந்தனர்.

முரசொலி முகிலன் கலைக் குழு

மாலை 5 மணி முதல் மாநாட்டு மேடையில் முரசொலி முகிலன் குழுவினரின் கலை நிகழ்ச்சி, களை கட்டியது; உள்ளூர் மக்கள் இருக்கைகளில் வந்து அமர்ந்து விட்டனர்.

புதுச்சேரியில் நடைபெறும் திராவிடர் கழக மாநாட்டு மேடைக்குப் புரட்சிக் கவிஞர் பெயரைச் சூட்டாமல் வேறு யார் பெயரைத்தான் சூட்ட முடியும்?

வெறும் பாவலர் மட்டுமல்ல - இயக்கவாதியாக விளங்கியவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆயிற்றே! கழகக் கொடியைப் பற்றி அவர் பாடிய பாடல் காலத்தை வென்று பட்டொளி வீசிப் பறக்கக் கூடியதாயிற்றே!

அழகான அரங்கம் கலை வண்ணம் பொலிந்த மேடையில் நிகழ்ச்சிகள் தொடக்கப் பெற்றன.

பேரணியில் பங்கு பெற்று வந்த சடையார் கோயில் நாராயணசாமி அவர்களின் பெரியார் பிஞ்சுகள் கோலாட்டமும், பறையாட்டமும் தூள் கிளப்பின.

தொடர்ந்து புதுவை திராவிடர் கழக மேனாள் செய லாளர் இரா. இராசு வரவேற்புரையாற்ற, புதுச்சேரி திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி மாநாட்டுத் தலைமையுரையை ஆற்றினர்.

தமிழ் ஓவியா said...

புதுச்சேரி வரலாற்றில் புதுமையான மாநாடு, வரலாற் றில் நிலைக்கக் கூடிய மாநாடு இது. முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இந்த மாநாட்டை நடத்திட அனுமதியளித்த தமிழர் தலைவருக்கு நன்றி என்று கூறினார் மாநாட்டுத் தலைவர் சிவ.வீரமணி.

வீ. அன்புராஜ்

கழகக் கொடியைக் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் வாழ்த்து முழக்கங்களுக்கிடையே ஏற்றி வைத்தார்.

மக்களை வாழ வைப்பது பெரியார் கொள்கைதான்
- பாவலர் மன்னர்மன்னன்

பாவலர் மன்னர் மன்னன்

எனது 18ஆம் வயதில் புதுச்சேரி பெருமாள் கோயில் வீதியில் உள்ள எங்கள் வீட்டு வாயிலிலிருந்து புறப்பட்ட தொண்டர் படைக்குத் தலைமையேற்று கழகக் கொடி ஏந்தி வந்த அந்த நாள் நிகழ்ச்சி இப்பொழுது என் மனக் கண் முன் நிழலாடுகிறது. இந்த மாநாட்டைப் பார்க்கும் பொழுது, தந்தை பெரியார் அவர்களின் கொள்கைக்கு எவ்வளவு வலிவு இருக்கிறது என்பதை உணர்ந்து மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறேன். அன்றைக்கு ஒரு கும்பல் என்னைத் தாக்கியது; கிழித்தது என் சட்டையை அல்ல - இதயத்தை! இன்றுதான் எவ்வளவு பெரிய மாற்றம் - எழுச்சி!

பெரியார் சொன்ன கொள்கைகள் எல்லாம் சட்டங் களாகி வருகின்றன. பெரியார் கொள்கை ஒன்றுதான் நம்மை வாழ வைக்கும். புதுச்சேரியில் கழகத்துக்காகப் பாடுபட்ட கொள்கைவாதிகள் பட்டியலை இங்கே வைத்துள்ளனர். என் நினைவில் அந்த இலட்சியவாதிகள் எல்லாம் வந்து வந்து போகின்றனர்.

அன்றைய எதிர்ப்புகள் - இன்றைய வெற்றிகள் - இது பெரியார் கொள்கைக்கு மக்கள் அளித்து வரும் ஒப்புதல் என்று குறிப்பிட்டார் புரட்சிக்கவிஞரின் மைந்தர் பாவலர் மன்னர்மன்னன்.

தீர்மானங்கள்

மாநாட்டில் முத்து முத்தான பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா. செயக்குமார் முன்மொழிந்தார் (காண்க விடுதலை 24.11.2012).

உலகத் தமிழர்கள் மத்தியில் மதிக்கப்படுபவர் தமிழர் தலைவர் - புதுவை தமிழ்ச் சங்கத் தலைவர் வி. முத்து

புதுவை தமிழ்ச் சங்கத் தலைவர் வி. முத்து

20 ஆண்டுகளுக்கு முன் தொழில் நுட்பக் கல்வி மாநாட்டில் தமிழர் தலைவரைச் சந்தித்தேன் அதற்குப்பின் ஈப்போவில் நடைபெற்ற தமிழர்கள் மாநாட்டில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. உலகெல்லாம் உள்ள தமிழர்கள் நமது தலைவரை எப்படி எல்லாம் மதிக்கிறார்கள் என்பதை நேரில் கண்டு பூரித்தேன். ஈப்போவில் ஊர்வலத்தைத் தொடங்கி வைத்து ஆசிரியர் அவர்கள் ஆற்றிய உரை இன்னும் என் காதுகளில் எதிரொலிக்கிறது. அவர் பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அந்தப் பணிகள் நாட்டுக்குத் தேவை தொடரட்டும் என்று கூறினார்.

திராவிடர் கழக மாநாட்டில் கம்பீரமாகப் பங்கேற்கிறோம்
- புதுவை மாநில சி.பி.அய். செயலாளர் இரா. விசுவநாதன்

இரா. விசுவநாதன் சி.பி. அய்.,

புதுவை மாநில இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இரா. விசுவ நாதன் அவர்கள் தம் உரையில் குறப்பிட்டதாவது:

திராவிடர் கழகம் நடத்தும் இந்த மாநாட்டில் மகிழ்ச்சியோடு கம்பீரமாகக் கலந்துகொள்கிறேன். இதனை மிகப் பெரிய வாய்ப்பாகவும் கருதுகிறேன்.

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு கொள்கை களை சமதர்ம கருத்துக்களை இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி மனப் பூர்வமாக ஏற்றுக் கொள்கிறது. கொள்கை விஷயத் தில் எந்த விதத்திலும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் பெரும் பணி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் மிகச் சிறப்பாகச் செய்து கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீடு இன்றைக்குச் செயல்படுகிறது என்றால், அந்த திட்டத்தை, சட்டத்தை உருவாக்கிய இடம் திராவிடர் கழகத்தின் பெரியார் திடல் - தமிழர் தலைவர் கி.வீரமணி ஆவார்கள். புதுச்சேரியிலும் அத்தகைய சட்டம் தேவை; புதுச்சேரியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு உண்டு. ஆனால் பிற்படுத்தப்பட்டோருக்கு இல்லை - ஆண்டவர்கள் ஆள்கிறவர்கள் இதனைப் பொருட்படுத் துவது இல்லை.

புதுவை சட்டசபையிலும் அத்தகையதோர் தீர் மானத்தைக் கொடுத்திருக்கிறேன். அதனை எமக்கு ஆக்கித் தந்தவர் தமிழர் தலைவர்தான்.

புதுச்சேரியில் உள்ள 12 லட்சம் பொது மக்களின் உரிமையை எதிர்பார்ப்பை எதிரொலிக்கிறது இம்மா நாட்டுத் தீர்மானங்கள்.

புதுச்சேரியிலும் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டம் பற்றியும் இந்த மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது - வரவேற்கத்தக்கதாகும்.

ஒரு வருந்தத்தக்க செய்தி. தீக்குண்டம் இறங்குவ தற்குக் காவல்துறை அனுமதி கோரி இருந்தனர். அதற்கு அனுமதியை வழங்க மறுத்துவிட்டது காவல்துறை.
தீ மதிக்கக் கூடாதா? கூடாது என்று எந்தசட்டத்தில் உள்ளது? சொல்லட்டும் பார்க்கலாம்.

தமிழ் ஓவியா said...

காவல் நிலையங்களில் சாமி படங்களை மாட்டியுள் ளீர்களே - அதற்கென்று ஆணைகள் உண்டா? திருட னைப் பிடிக்க வக்கில்லை - யாகம் நடத்துகிறீர்களே.
கடவுள் உண்டு என்று சொல்ல உமக்கு உரிமை உண் டென்றால், கடவுள் இல்லை என்ற சொல்ல எங்களுக்கு உரிமை இல்லையா? கருத்துச் சுதந்திரம் கிடையாதா? என்று எழுச்சியுரையாற்றினார்.

பொதுச் செயலாளர் டாக்டர் துரை. சந்திரசேகரன்

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் டாக்டர் துரை சந்திரசேகரன் அவர்கள் தமது உரையில் குறிப்பிட்ட தாவது: இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ். கோழைகள் திருட்டுத் தனமாக இரவோடு இரவாக நாம் ஒட்டியுள்ள சுவரொட்டிகளுக்கு மேலே ஒட்டியிருக்கின்றனர்.

எங்கள் பெறுமையைச் சோதிக்க வேண்டாம். எங்கள் தலைவர் ஆணைக்குக் கட்டுப்பட்டு இருக்கிறோம். இது ஒரு கட்டுப்பாடுடைய இயக்கம் - பாசறை! மீண்டும் இதே புதுவையிலே தீ மிதித்து க் காட்டுவோம் என்று எக்காள மிட்டார் பொதுச் செயலாளர் டாக்டர் துரை. சந்திரசேகரன்.

வழக்குரைஞர் பொருளாளர் கோ. சாமிதுரை

கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை அவர்கள் உரையில் முக்கியமாகக் கூறியதாவது:

நாங்கள் தீக்குண்டம் இறங்கினால் உங்கள் மனம் ஏன் புண்ணாக வேண்டும்? நாத்திகர்கள் தீ மிதித்தால் எங்கள் கால்தானே புண்ணாக வேண்டும்!

கடவுளை வேண்டிக் கொள்ள வேண்டியதுதானே ஏன் காவல்நிலையம் ஓடுகிறீர்கள் என்று வினா தொடுத்தார்.

துணைத் தலைவர் கலி. பூங்குன்றன்

இந்த விழாவில் புரட்சிக் கவிஞர் அவர்களின் மைந்தர் பாவலர் மன்னர் மன்னன் கலந்து கொண்டு தொடக்க வுரை ஆற்றியது பெருமைக்கு உரியது - மகிழ்ச்சிக்குரியது; புரட்சிக் கவிஞர் அவர்கள் இயக்கவாதியாக இருந்தார். ஊரெங்கும் திராவிடர் கழகக் கொடியை ஏற்ற வேண்டும் என்று பாடியவர். கழகக் கொடியின் சிறப்பைப் பாடல் வகையில் பட்டொளி வீசிப் பறக்கச் செய்தவர்.

1957இல் ஜாதி ஒழிப்புப் போராட்டமான இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியை எரிக்கும் போராட்டத்தில் கழக முன்னணியினர் எல்லாம் சிறையில் இருந்தபோது, வெளியில் இருந்து கழகத்திற்காக பணிக்காக பாடுபட்டவர்கள் மூவர், அன்னை மணியம்மையார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அன்றைய சட்டக் கல்லூரி மாணவர் கடலூர் கி.வீரமணி அப்பொழுது நடைபெற்ற ஜாதி ஒழிப்பு மாநாடுகளில் எல்லாம் புரட்சிக் கவிஞர் கலந்து கொண்டு கர்ச்சனை செய்தார். டாக்டர் இரா. இராசமாணிக்கனார் போன்ற வெகு மக்களும் அத்தகைய மாநாடுகளில் கலந்து கொண்டதும் உண்டு.

புதுவை - மத்தியப் பல்கலைக் கழகம்

தமிழ் ஓவியா said...

இங்கே புதுச்சேரியில் மத்திய பல்கலைக் கழகம் என்று ஒன்று இருக்கிறது. ஆனால் புதுவை மக்களுக்குப் பயன் படுகிறதா என்றால் அதுதான் இல்லை. பெரும்பாலும் கருநாடகா, கேரளா பல்கலைக் கழகமாகவே செயல்படு கிறது. 27 ஆண்டுகளில் துணைவேந்தர்கள் பெரும்பாலும் கர்நாடகம், கேரளம் மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தாம். துறைத் தலைவர் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் எல்லாம் வெளி மாநிலத்தவர்களே! மருந்துக்கும் தமிழர்கள் கிடையாது. சம்பந்தப்பட்ட மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 15 விழுக்காடு அளிக்க வேண்டும் என்ற விதியையும் பின்பற்றுவதில்லை.

இவ்வளவுக்கும் மாநில அரசுதான் நிலம் கொடுக்கிறது. வேண்டிய வசதிகளையும் செய்து கொடுக்கிறது. அதே நேரத்தில் மத்தியப் பல்கலைக் கழகமோ வெளி மாநிலத்த வர்களின் குத்தகையாகச் செயல்பட்டு வருகிறது. பல் கலைக் கழகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடும் அள வுக்கு மலையாளிகளின் ஆதிக்கம். இதற்காகப் புதுவை மாநில மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட வேண்டும் என்று கூறினார்.

தமிழர் தலைவர்

இறுதியாக தமிழர் தலைவர் தீர்மானங்களை விளக்கியும் பல்வேறு பிரச்சினைகளை அலசியும் மாநாட்டு நிறைவுரையை நேர்த்தியாக ஆற்றினர். புரட்சிக் கவிஞர் படத்தினையும் திறந்து வைத்தார் (24.11.2012)

புதுச்சேரி திராவிடர் செயலாளர் கி. அறிவழகன் நன்றி கூறிட மாநாடு இரவு 9.55 மணிக்கு நிறைவுற்றது.

பெரியார் திடலே நிரம்பி வழியும் அளவுக்குப் பொது மக்களும் கழகக் குடும்பத்திக்கும் திரண்டிருந்தனர்.

மாநாட்டையொட்டி எங்குப் பார்த்தலும் சுவர் எழுத்துக்கள்! கழகக் கொடிகளும் காட்சி அளித்தன. இதற்காக இரவும் பகலும் பாடுபட்ட கழகத் தோழரின் பாராட்டுதலுக்கு உரியவர்கள் ஆவார்கள்.

மழை மிரட்டியது மாநாடோ விரட்டியது!

திராவிடர் கழக மாநாடு நடைபெற்ற புதுச்சேரியில் வெள்ளியன்று காலை முதல் இரவு வரை வானம் இருண்டு மழை அச்சுறுத்திக் கொண்டே இருந்தது. இடை இடையே தூறல் - பெரு மழை - இருந்து கொண்டே இருந்தது.

ஆனாலும் கழகத் தோழர்கள் சற்றும் சட்டை செய்யாமல் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டே இருந்தனர். பொது மக்களும் வந்து குவிந்து கொண்டே வந்தனர். ஆம் மழை மிரட்டியது - கருஞ்சட்டைப் பட்டாளமோ அதனை விரட்டியது!

நூல்கள் வெளியீடு

மாநாட்டில் முக்கிய அம்சமாக 5 நூல்கள் வெளியிடப்பட்டன.

1) நரகாசூரன் படுகொலை (அருப்புக்கோட்டை எம்.எஸ். இராமசாமி)

2) வாழ்வியல் சிந்தனைகள் பாகம் 8 (தமிழர் தலைவர் கி.வீரமணி)

3) மண்டல் குழுவும் சமூக நீதியும் (தமிழர் தலைவர்)

4) பெரியார் மக்களின் மூச்சுக்காற்று (தமிழர் தலைவர் உரை)

5) பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி (கலி. பூங்குன்றன்)

6) சிறீரங்கத்தில் தமிழர் தலைவர் ஆற்றிய

உரையின் குறுந்தகடு

மேற்கண்ட நூல்களை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட புதுவை தமிழ்ச் சங்கத் தலைவர் வி. முத்து ரூ.5,000/- அளித்து பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து புதுவை மாநில இந்தியக் கம்யூனிஸ் டுக் கட்சியின் செயலாளர் இரா. விசுவநாதன் மற்றும் தோழர்கள் வெகு நேரம் வரிசையாக வந்து கழகத் தலைவரிடம் பெற்றுக் கொண்டன.

நூல்கள் விற்பனை

புதுவை திராவிடர் கழக மாநாட்டில் விற்பனையான நூல்களின் மதிப்பு ரூ.45,855/-

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார் கொள்கைகளின் வெற்றியால்தான் தர்மபுரிகள் நடக்காமல் தடுக்கப்பட முடியும்


தந்தை பெரியார் கொள்கைகளின் வெற்றியால்தான்
தர்மபுரிகள் நடக்காமல் தடுக்கப்பட முடியும் -வழக்குரைஞர் அருள்மொழி

புதுச்சேரி, நவ.25-தருமபுரி சம்பவங்கள் நடவாமல் தடுக்க வேண்டுமானால் தந்தை பெரியார் கொள் கைகள் வெற்றி பெற வேண்டும் என்றார் திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி.

புதுச்சேரி மாவட்ட திராவிடர் கழக மாநாடு பேசு சுயமரியாதை உலகு எனும் தலைப்பிலான கருத்தரங்குடன் தொடங்கப்பட்டது.

புதுச்சேரி வில்லியனூர் சாலையில் அமைந்துள்ள ரீனா மகாலில் நடைபெற்றது.

புதுவை மாநில திராவிடர் கழகத் தலைவராக இருந்து சாதனைகள் பல படைத்த பெரியார் பெருந் தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி சி.மு.சிவம் அவர்கள் பெயர் மிகப் பொருத்தமாக அரங்கத்திற்கு சூட்டப்பட்டிருந்தது.

காரைக்கால் பகுதியில் தலைதாழாக் கருஞ்சட்டைச் சிங்கமாக உலா வந்தவர் சி.மு.சிவம். அவருடைய மகனுக்கெல்லாம் புரட்சி மணி என்றும், வீரமணி என்றும் பெயர் சூட்டியவர். அவருடைய தந்தையார் பெயரில் காரைக்காலில் முருகையனார் திடல் என்ற ஒன்றுள்ளது. அந்த அளவுக்குக் காரைக்கால் வட்டாரத்தில் மிகுந்த செல்வாக்குள்ள குடும்பமாகும்.

மானமிகு சி.மு.சிவம் அவர்களின் மகன்தான் இன்றைய புதுச்சேரி திராவிடர் கழகத்தின் தலைவர் சிவ.வீரமணியாவார்.

கருத்தரங்கத்தின் தொடக்கமாக புதுச்சேரி கே.குமார் பெரியார் முரசு கருத்து விருந்தளித்த கலை நிகழ்ச்சி கூடியிருந்தவர்களைப் பெரிதும் ஈர்த்தது.

வ.சு.சம்பந்தம்

ரீனா மகால் அரங்கம் நிறைந்து மக்கள் காணப் பட்டனர். கடலூர் மண்டல திராவிடர் கழகத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் வ.சு.சம்பந்தம் அனை வரையும் வரவேற்று உரையாற்றினார்.

பேசு சுயமரியாதை உலகு எனும் தலைப்பில் அமைந்துள்ள இந்தக் கருத்தரங்கம், காலத்திற்கு ஏற்ற, தேவையான ஒன்றாகும்.

புதுச்சேரியைப் பொறுத்தவரை, அண்ணா சாலை இருக்கிறது, பாரதிதாசன் சாலை இருக்கிறது. பெரியார் பெயரில் சாலை இல்லை.

தமிழ்நாட்டில் உள்ளதுபோல பெரியார் நினைவு சமத்துவபுரம் உருவாக்கப்பட வேண்டும். புதுவை மாநில அரசு அலுவலகங்களில், வளாகங்களில் சட்ட விரோத மாக கடவுள் சிலைகள், உருவங்கள் வைக்கப்பட்டுள்ளன; அவை அகற்றப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

எதிர்ப்போம் பார்ப்பனர்களை!

எதிர்ப்போம் பார்ப்பனர்களை என்ற தலைப்பில் கழகச் சொற்பொழிவாளர் முத்து.கதிரவன் உரையாற்றினார்.

பூணூலை நமக்குக் கொடுக்கும் பருத்தியை உருவாக்கித் தந்த கடவுளுக்கு வணக்கம் என்கின்றனர் பார்ப்பனர். பருத்தியை உற்பத்தி செய்த விவசாயிகளுக்கு நன்றி காட்டாது - திசைதிருப்பும் பார்ப்பனர் நாட்டுக்குத் தேவையா? என்ற வினாவை எழுப்பினார்.

ஒழிப்போம் ஜாதியை! இந்தத் தலைப்பில் மாங்காடு மணியரசன் உரையாற்றினார்.

சோறு வேண்டும், கூலி வேண்டும் என்று சொல்லு வார்கள். தேவைதான் - அதில் ஒன்றும் குற்றமில்லை. சுயமரியாதை வேண்டும் என்று சொல்வதில்லையே - சொல்லுவதில்லையே.

வ.உ.சி. படத்திற்கும், மாவீரன் பிரபாகரன் படத்துக்கும் மாலை போட்டு கொண்டாடுகிறார்கள். கேட்டால் சொல்லுகிறார்கள். இவர்கள் இருவரும் பிள்ளைமார் ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று ஜாதியவாதிகள் சொல்லுகின்றனர்.

நினைவிடத்திற்கு மாலை போடுவதாகச் சொல்லி அரிவாளை எடுத்துச் செல்லுகிறார்களே, இது நியாயமா என்ற அர்த்தமிக்க வினாவை எழுப்பினார் மணியரசன்.

தகர்ப்போம் மூட நம்பிக்கைகளை!

இந்தத் தலைப்பில் பகுத்தறிவு கலை, இலக்கிய அணியின் மாநில செயலாளர் மஞ்சை வசந்தன் அவர்கள் தம் உரையில் குறிப்பிட்டதாவது:
சோதிடம் என்பதே கடவுளை மறுக்கும் நாத்திகம்தான். ஒருவன் இந்த ஜென்மத்தில் அனுபவிப்பது, வாழ்வது என்பது போன ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியம் - கடவுளின் கட்டளை - தலை எழுத்து - கர்மபலன் என்று சொல்லிவிட்ட பிறகு இந்த நேரத்தில் பிறந்ததால் இந்த பலன், பிறந்த நட்சத்திரம் இவற்றால் அடிப்படையில் சோதிடம் சொல்லுவது நாத்திகம்தானே. கடவுள் எழுதி வைத்தது என்பதை மறுப்பதுதானே? என்ற அர்த்தமுள்ள வினாவை எழுப்பினார். அர்த்தமற்ற இந்து மதம் எழுதிய மஞ்சை வசந்தன்.

தமிழ் ஓவியா said...

ஒழிப்போம் மதங்களை

பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் தம் உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:

1683 இல் மதத்தை எதிர்த்தது ராணி கரோலினிபுரட்சி செய்தார்; கிறித்துவர்களிடம் நிலவும் ஒழுக்கக் குறைவு குறித்து ரசல் குறிப்பிடுகிறார். மதம் மக்களுக்கு நன்மை பயக்கக் கூடியதல்ல. மதத்தை எதிர்த்த தந்தை பெரியார் எடுத்துக்கூறிய கருத்துக்கள் எவராலும் மறுக்க முடியாதவை. மதத்தின் காரணமாகத் தான் நாம் இழி ஜாதி ஆக்கப்பட்டோம். அதை ஒழிக்க வேண்டும் என்றார்.

கருத்தரங்கத் தலைவர் வழக்குரைஞர் அருள்மொழி

கருத்தரங்க தலைவர் வழக்குரைஞர் அருள்மொழி தம் உரையில் குறிப்பிட்டதாவது:

இந்த உலகத்தில் உள்ள எல்லா அகராதிகளையும் கொண்டு வந்து போட்டு, ஒவ்வொரு ஏடாகப் புரட்டிப் பார்த்தாலும் - அழகும், பொருளும் சக்தியும் நிறைந்த வார்த்தையாகிய சுயமரியாதை என்ற வார்த்தைக்கு மேலானதாகவோ, ஈடானதாகவோ உள்ள வேறு ஒரு வார்த்தையை யாராலும் கண்டு பிடிக்க முடியாது. (குடிஅரசு 1.6.1930)என்றார் தந்தை பெரியார்.

உலகத்தில் எங்கும் - இல்லாத நோய் இந்த ஜாதி நோய். அது டாக்டர்களைக் கூடத் தொற்றக் கூடியதாக இருக்கிறது.

தந்தை பெரியார் அவர்களை சில பேர் குறை கூறக் கிளம்பி இருக்கிறார்கள். பெரியாரை இந்த தவறான கோணத்தில் விமர்சிக்க விமர்சிக்க தருமபுரிகள் நடக்கத்தான் செய்யும். தருமபுரிகள் தாழ்த்தப்பட்ட குடியிருப்புகள் எரியூட்டப் படாமல் இருக்க வேண்டுமானால் தந்தை பெரியார் அவர்கள் தொண்டு முழுவதாக வெற்றி பெற்றாக வேண்டும் என்று குறிப்பிட்டார்.

நிறைவுரையை தமிழர் தலைவர் கி.வீரமணி வழங்கினார்.

புதுச்சேரி திராவிடர் கழக அமைப்பாளர் கே.குமார் நன்றி கூறிட கருத்தரங்கம் நிறைவுபெற்றது.

கருத்தரங்கில் பங்கு கொண்டு உரையாற்றிய வர்களுக்கு மகளிரணியைச் சேர்ந்த விலாசினி அவர்கள் பயனாடை அணிவித்தார்.


தந்தை பெரியார் சிலை திறப்பு

புதுவை மூலக்குளத்தில் முக்கியசாலையில் தந்தை பெரியார் முழு உருவச் சிலையை (புதுப்பிக்கப்பட்டது.) திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திறந்து வைத்தார். 23.11.2001 இல் ஏற்கெனவே இதே இடத்தில் தந்தை பெரியார் சிலையை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழ் ஓவியா said...


முதல்முறையாக சென்னையில் இன்று ஜாதி மறுப்பு இணை தேடல் பெருவிழா: மன்றல் அரங்கம் சென்னை பெரியார் திடலில் துவங்கியது




பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு, எண்ணற்ற சுயமரியாதைத் திருமணங்களையும், ஜாதி மறுப்புத் திருமணங்களையும் நடத்தியுள்ளது. மணமுறிவு பெற்றோர், துணையை இழந்தோரும் புது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் பெரிதும் பயன்பட்டிருக்கிறது.

திராவிட இயக்கங்கள், பொதுவுடைமை இயக்கங்கள், தமிழ் அமைப்புகள், ஒடுக்கப்பட்டோர் நலன் காக்கும் இயக்கங்கள், சிறுபான்மை மக்களின் அமைப்புகள் என பல தரப்பினரும் ஜாதி மறுப்பு/மதமறுப்புத் திருமணங்கள் செய்யத் தயாராக இருக்கும் நிலையில், இத்தகைய முற்போக்குச் சிந்தனையுள்ள குடும்பத்தினருக்குப் பயன்படும் வகையில், தமிழகம் தழுவிய அளவில் மாபெரும் ஜாதிமறுப்பு இணை தேடல் பெருவிழாவினை மன்றல் 2012 என்ற பெயரில் நடத்த பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் திட்டமிட்டது.அதன்படி இன்று 2012 நவம்பர் 25 - ஞாயிற்றுக்கிழமை, சென்னை - பெரியார் திடலில் மன்றல் அரங்கம் துவங்கியது .


இன்றைய நாளில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

1. ஜாதி மறுப்பு இணைதேடல் பெருவிழா

2. ஜாதி மறுப்புத் திருமண அரங்கம் 1. ஜாதி மறுப்பு இணைதேடல் பெருவிழா

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள ஜாதி ஒழிப்பில் ஈடுபாடு கொண்ட குடும்பத்தினர் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். தாங்கள் விரும்பிய வாழ்க்கைத் துணையை ஜாதி, மதம் தடையில்லாமல் தேர்ந்தெடுக்க இந்நிகழ்ச்சியில் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் இது மட்டுமில்லாமல், மாற்றுத் திறனாளிகள், மணமுறிவு பெற்றோர், துணையை இழந்தவர்கள் ஆகியோருக்கான தனிப் பிரிவுகளும் உண்டு.

இந்நிகழ்வு இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இத்துடன் திருமணத்திற்குத் தயாராதல் குறித்த மருத்துவ, மனநல ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சியும், மருத்துவ முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஜாதி, மத மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்களும், பல்துறைசார்ந்த முக்கியப் பிரமுகர்களும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யவுள்ளனர்.

2. ஜாதி மறுப்புத் திருமண அரங்கம்

முன்பே, ஒருவருக்கொருவர் விரும்பி ஜாதி, மதம் பாராமல் காதலித்துத் திருமணம் செய்துகொள்ள விரும்புவோர் சட்டப் பாதுகாப்போடு இந்நிகழ்விலேயே திருமணம் செய்துகொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பங்கேற்று திருமணங்களை நடத்திவைத்து உரையாற்றுகிறார் . ஜாதிக்கான சுயம்வரங்கள் இதுவரை தனித்தனியாக நடைபெற்றிருந்தாலும், முதன்முறையாக ஜாதிமறுப்புக்கென ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இணை தேடல் நிகழ்ச்சி தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்படவுள்ளது.

தமிழ் ஓவியா said...

உலகில் அர்ச்சகன், மாந்திரிகன், சோதிடன் இவர்களைவிடப் பித்தலாட்டத்தில் கைதேர்ந்தவர்கள் கிடையாது. (விடுதலை, _ 27.6.1973)

தமிழ் ஓவியா said...


இரு பயிற்சிகள்!


ஏடுகளில் இன்று இரண்டு செய்திகள் வெளிவந்துள்ளன. ஒன்று முதலமைச்சர் ஆணைப்படி மனநல மும், உடல்நலமும் பேணு வதற்காக 45 யானை களுக்குச் சிறப்பு நுழைவு முகாம் இன்று தொடங் குகிறது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களி லிருந்தும் யானைகள் லாரிகள்மூலம் முகாம் களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன என்பது ஒரு செய்தி.

இன்னொரு செய்தி இன்றைய நாளேடுக ளில் வெளிவந்துள்ளது.

அர்ச்சகர்களுக்குப் புத்தொளி பயிற்சி முகாம் - காஞ்சிபுரத்தில் தொடக்கம் என்பது தான் அந்த இன் னொரு செய்தி.

இதுவும் தமிழக முதல்வரின் உத்தரவுப் படிதான். தமிழகக் கோவில்களில் அர்ச்ச கர்களாகப் பணிபுரி வோர்க்கு புத்தொளி பயிற்சி முகாம் 42 நாள் கள் நடத்தப்படுகிறது.

முன்னது 48 நாள் கள்; பின்னது 42 நாள் கள். கிட்டத்தட்ட ஒரே அளவில் புத்தாக்கப் பயிற்சி முகாம்கள்.

சபாஷ், நல்ல நட வடிக்கைதான் - நல்ல ஒற்றுமைதான்!

யானைக்கு மதம் பிடிக்கும்; இந்த அர்ச்ச கர்களுக்கும் மதம் (இந்து) பிடிக்கும். ஆக, இரு வகைப் பிரிவினர்க் கும் பிடித்தது ஒன்று - மதம்தானே!

மதம் பிடித்ததால் தானே இதே காஞ்சி புரத்தில் மச்சேந்திர நாதன் கோவில் அர்ச்ச கன் தேவநாதன் கோவிலுக்குத் தரிசிக்க வந்த பெண்களை வேறு வகையில் தரிசித்தான்!

பெரியவாளுக்கு மதம் பிடித்ததால்தானே இதே காஞ்சிபுரம் வரத ராஜபெருமாள் கோவி லில் பட்டப் பகலில் சங் கரராமன் படுகொலை செய்யப்பட்டார்.

யானைக்கு அய்ந் தறிவு; அதனால் மதம் பிடித்துத் துவம்சம் செய் கிறது. ஆறு அறிவு கொண்ட மனிதனுக்கு மதம் பிடித்தால் ஓரறிவு குறைந்து அய்ந்தறிவு யானையாகி துவம்சம் செய்கிறான்.

இவற்றையெல்லாம் நல்லறிவால் சிந்தித்து நமது முதலமைச்சர் ஒரே நாளில் இப்படி இரு அறிவிப்புகளைக் கொடுத்துள்ளார்! பலே! பலே!!

யானைக்கு மதம் பிடித்தால் ஆபத்து! மனி தனுக்கு மதம் பிடித் தாலோ பேராபத்து!! - மயிலாடன் -26-11-2012

தமிழ் ஓவியா said...


புதுவையில் 69 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கவேண்டும்


தமிழர் தலைவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி

திராவிடர் கழக மாநாடு புதுவையில் நடைபெற்றது. இதில் பங்கேற்க புதுவை சென்ற தமிழர் தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கிட வேண்டும். நாள் ஒன்றுக்கு ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் மத்திய அரசுக்கு புதுவை மாநில அரசு வட்டி செலுத்தி வருகிறது. கழுத்தை நெரிக்கக் கூடிய அளவுக்கு இது உள்ளது. மாநில அரசின் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டுமென மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்.

அதேபோல, தமிழ்நாட்டைப் போல புதுவையிலும் 69 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கிட உரிய முறையில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அரசியல் சட்டத்தைத் திருத்தவேண்டும். அதற்கான நடைமுறைகளை மாநில அரசு மேற்கொள்ளவேண்டும்.

அதேபோல, புதுவையிலும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக மாநில அரசு சட்டம் இயற்றவேண்டும்.

மாநிலத் தகுதி

மத்திய அரசு தென்னக மாநிலங்களில் நிலவும் மின் பற்றாக் குறையைப் போக்கிட உரிய மின் வழித்தடத்தை அமைக்கவேண்டும். வடநாட்டில் பெருத்த வெள்ளம் ஏற்பட்டு கடலில் சென்று தண்ணீர் வீணாகிறது. இதற்காக நதிகளை இணைக்க வலியுறுத்துவதைப்போல மின்சாரத்தையும் மிகையாக உள்ள இடங்களில் இருந்து உபரியாக உள்ளதை மற்ற மாநிலங்கள் பயன்படுத்தும் வண்ணம் தென்னக மாநிலங்களில் மக்களுக்குப் பயன்பட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

காவிரி நதிநீர்

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பும், கெஜட் செய்யாமல் இருக்கிறது. அரசிதழில் வெளியிட்டால்தான் சட்ட வலிமை ஏற்படும். புதுவை மாநிலம் காரைக்கால் பகுதிகளுக்கு 5 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும் உரிய பங்கு நியாயமான ஆதங்கமாகத்தான் இருக்கிறது.

எனவே, மேற்கண்ட கோரிக்கைகளை தீர்மானங்களாக மாநாட்டில் நிறைவேற்றி இருக்கிறோம். இதனை மத்திய - மாநில அரசுகள் நிறைவேற்றவேண்டுமென தமிழர் தலைவர் கேட்டுக் கொண்டார்.

உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர்கள் துரை. சந்திரசேகரன், வீ. அன்புராஜ், புதுவை மாவட்டத் தலைவர் சிவ. வீரமணி ஆகியோர் இருந்தனர்.

தமிழ் ஓவியா said...


எக்கணமும் சிக்கனமே சிறந்தது!


வாழ்க்கையில் சிக்கனம் என்பது எக்கணமும் தேவை!

பேச்சில் சிக்கனம், நேரத்தை அனாவசியமாகச் செலவிடுவதைக் குறைத்து, பயனுறு வகையில் செலவிடும் காலச் சிக்கனம் தலையாயது; செலவிடுவதில் மட்டும் பொருள் சிக்கனம் மட்டும்தான் சிக்கனம் என்ற ஓர் எண்ணம் பரவலாக உள்ளது. அது ஏற்கத்தக்கது அல்ல. குழந்தைப் பேற்றில்கூட சிக்கனம் என்பதன் வெளிப்பாடுதான் குடும்பக் கட்டுப்பாடு என்ற அளவான குடும்பம் வளமான வாழ்வு என்பதன்மூல காரணம் ஆகும்! பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! என்று வாழ்த்தி விடுபவர்கள், கடைசியாக எச்சரிக்கிறார்கள், பதினாறு என்றால் குழந்தைகள் என்று எண்ணி, 16 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முயலாதீர்கள்; மாறாக, பதினாறு பேறுகள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் என்று விளக்கம் கூறுகிறார்கள்!

சொல்பவர்கள் எதை நினைத்துச் சொல்கிறார்கள் என்பதைவிட, புரிந்துகொள்பவர்கள் எப்படிப் புரிந்துகொண்டு செயல்படுகிறார்கள் என்பதே முக்கியம்.

திருமணங்களில் தேவையற்ற ஆடம்பரச் செலவுகளை, வசதி அதிகம் இல்லாத குடும்பத்தவர்கள்கூட, போலிப் பெருமை, வெற்று ஜம்பம், வீண் பெருமை இவைகளை எண்ணி கடன் வாங்கியாவது ஆடம்பர மண்டபங்களில் ஏற்பாடு செய்து, அதிகமானவர்களுக்கு அழைப்புகளை அனுப்பி, செலவு செய்து நடத்துகின்றனர்; டம்பாச்சாரிகளாக செலவழிக்கின்றனர்.

இதில் பெண் வீட்டுக்காரர் செலவு என்று அவர்கள் தலையில் இச்சுமையை ஏற்றி, கழுத்தை ஒடிப்பதுபோல அவர்கள் வாழ்க்கையை ஒடித்து விடுகிறார்கள் - பல திருமணங்களில்!

அழைப்பிதழ்கள் எளிமையாக இருந்தால் போதாதா? தகவல் தரத்தானே அழைப்புகள்? அதில் தேவையான விவரங்கள் இருந்தால் மட்டும் போதுமே!

அதற்கு எத்தனை எத்தனை டிசைன்கள், ஒலிப்பதிவில் தங்கள் குரலை ஒலிக்கச் செய்து, நேரில் அழைக்க திறக்கும்போதே நாதஸ்வர ஓசையுடன் கூடிய அழைப்பு - இது ஒன்று சுமாராக 150, 200 ரூபாய்கள் இருக்குமே! ஒரு புத்தகத்தைப் புரட்டுவதுபோல ஏழெட்டுப் பக்கங்கள்! அழைப்பிதழைப் பெறும் எவரும் அதைப் பாதுகாத்து, புத்தக அலமாரியிலா வைக்கப் போகின்றார்கள்? அல்லது பூஜை அறையில் (பக்தர்களாக இருந்தால்) வைத்து பூஜிக்கப் போகிறார்களா? என்னே விசித்திரம் - ஆடம்பர வெளிச்சம்!

திருமண மண்டபங்கள் பிடிக்க 6 மாதங்கள் முன்பே அலைச்சல், பல லட்ச ரூபாய்கள் அதற்கு வாடகைக் கட்டணம்!

சமையல் கலைஞர்கள், அறுசுவையில் தொடங்கி, லட்சக்கணக்கில் விருந்து செலவுகள் -

பசித்துச் சாப்பிடுவதோ,

தேவைக்கேற்ப சாப்பிடுவதோ,

உடல்நலத்தைப் பாதுகாக்க (அளவீடு)

உதவும் வகையிலோ, சாப்பிடுவதோ அற்ற

வீண் விரய விருந்துகள்

படைக்கும் நிலை புகழ் வாய்ந்த பாடகருக்கு லட்சக்கணக்கில் கொடுத்து, எவரும் கேட்பதில்லை; ரசித்துக் கேட்கும் சூழ்நிலையும் அங்கு இருப்பதில்லை. வெறும் ஒலிநாடா போதாதா?

ஒரு நாள் மட்டுமல்ல, இரு நாள், பலமான காலை, முற்பகல் (பகல்கூட அல்ல) பசியில்லா விருந்து - அதில் வீணாகி இலையோடு கொட்டும் பண்டங்கள் அளவு வர்ணிக்க முடியாத கொடுமை!

மணப்பெண் வரவேற்புக்கு பியூட்டி பார்லர் சென்று சிங்காரம் செய்ய, ஆயிரக்கணக்கில் செலவு செய்யப்படுகிறது. (கிராமங்களில்கூட இத்தொற்றுநோய் பரவி) இயற்கை அழகான பெண்களை அலங்கோல உருவமாக்கிட செலவு - என்னே கொடுமை! அடடா!!

இப்படி திருமணச் சிக்கனம் மிகவும் தேவை!

1976 இல் 100 இலைகளுக்குமேல் கூடாது என்ற நெருக்கடி காலம் மீண்டும் வராதா என்று நெருக்கடி காலத்தை விரும்பாதவர்களே, விரும்பும் அளவுக்கு அது தள்ளி விடுகிறதே!

அந்தஸ்து வெளிச்சத்திற்காக இப்படி ஒரு வீண் செலவுகளை நிறுத்தும்போதுதான் நாமும் உருப்படுவோம்; நாடும் உருப்படும்.

இன்று (26.11.2012) உலகச் சிக்கன நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


இழிநிலை


உலகெங்கும் உள்ள மக்கள் விஞ்ஞான அறிவியல் துறையில் தீவிர முன்னேற்ற மடைந்து கடவுள்களிடம் போட்டியிட்டு வருகையில், தமிழன் மட்டும் இன்னும் மாட்டு மூத்திரம் குடித்து, மோட்சம் போக எண்ணும்படியான காட்டுமிராண்டியாய் மானமற்று வாழ்வதேன்? புத்தரின் அறிவுப் பிரச்சாரத்தைக் கைவிட்டதன் பயனல்லவா இந்த இழிநிலை! (விடுதலை, 10.8.1961)

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம்


மன்றல் 2012 நிகழ்வும் - வேண்டுகோளும்!

அய்யா வணக்கம்.

மன்றல் 2012 என்ற நிகழ்ச்சி பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி தமிழகம் மட்டுமல்ல, இந்தி யாவிற்கே எடுத்துக்காட்டாக விளங்கக் கூடிய வகையில் அமைந்தது என்றால் அது மிகையாகாது.

நேற்று (25.11.2012) சென்னை பெரியார் திடலில் காலை 8 மணி முதலே மணவிழாக்கோலம் பூண்டது.

ஜாதி மறுப்பு, மத மறுப்பு, மாற்றுத் திறனாளிகள், இணையை இழந்தோர், மண முறிவு பெற்றோர் ஆகியோருக் கென தனித்தனியே பதிவு மய்யங்கள் அமைக்கப்பட்டு இருந் தன.

இந்த நிகழ்ச்சி நம் பகுதிகளிலும் நடக்காதா என தமிழகம் முழுவதி லுமிருந்து வந்திருந்த அனைவரும் எதிர்பார்க்கும் வண்ணம் இருந்தது.

சில மாதங்களுக்கு முன் திரு மணம் நடந்த ஒரு இளைஞர், நான் துணையை இழந்தவரைத்தான் திரு மணம் செய்யவேண்டும் என்று நினைத் திருந்தேன்.

ஆனால், இது போன்ற நிகழ்ச்சி இப்போதுதான் நடைபெறுவ தால் என் ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே என்று வருத்தத் துடன் தன் நண்பர்களிடம் சொல்லிய தையும் கேட்க முடிந்தது.

சென்னை பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால், நேற்று நடைபெற்ற மன்றல் 2012 நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஜாதி மறுப்பு திருமணத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பகிரங்க மாக அந்த மேடையில் அறி வித்தது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத் தது.

ஜாதி மறுப்பு மட்டுமல்ல, மத மறுப்புக்கும் நாங்கள் தயார் என்று 33 பேரும்,

மாற்றுத் திறனாளிகள் 29 பேரும்,

மண முறிவு பெற்றோர் 51 பேரும்,

துணையை இழந்தவர்கள் 34 பேரும் தங்களது இணை தேடலுக் காகப் பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் சென்னை மட்டுமல்லாது, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களிலும் நடை பெற்றால், ஆங்காங்குள்ள இருபால் இளைஞர்களுக்கும் ஏதுவாக இருக் கும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்நிகழ்வுகளை நடத்த வேண்டும் என்பது பலருடைய கருத்தாகும்.

தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவரின் வழிகாட்டுதலோடு மன்றல் 2012 இணை தேடல் நிகழ்ச்சி நடை பெற்றது.

நிகழ்ச்சியின் முடிவில் தமிழர் தலைவர் தலைமையில் ஜாதி மறுப்பு திருமணம் இரண்டு இணையர்க ளுக்கு நடைபெற்றது நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக இருந்தது.

பெரியார் காண விரும்பிய ஜாதி யற்ற சமுதாயம் படைக்க இதுபோன்ற இணை தேடல் நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்றால், இந்த ஜாதி என்ற அடையாளம் மாறி, அனைவரும் ஒரு ஜாதி - அது மனித ஜாதி என்ற உணர்வு மேலோங்கி இருக்கும்.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் தமி ழகம் முழுவதும் அவசியம் நடைபெற வேண் டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அய்யா அவர்களை மிகப் பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்.நன்றி!

- ச. பாஸ்கர், சென்னை-18

தமிழ் ஓவியா said...


அரசு மருத்துவமனையில் யாகம்: ஆர்டிஓ விசாரணை


மதுரை, நவ.26- டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்கள் நலம் பெற அரசு மருத்துவமனையில் நடத்தப் பட்ட யாகம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் (ஆர்டிஓ) விசா ரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது: அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்காக யாகம் நடத்துவது மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை களை அவமதிப்பு செய்வதாக இருக் கிறது. இது மருத்துவர்களுக்கும் மனவருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது அரசின் மதச்சார்பின்மைக்கும் எதிரானது. ஆகவே, இதுகுறித்து கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். விசாரணையின் அறிக்கையைப் பெற்று மேல்நட வடிக்கைக்கு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

தமிழ் ஓவியா said...


மதத்தின் பெயரால் கருத்து சுதந்திரம் திட்டமிட்டு நசுக்கப்படுகிறது நீதிபதி சந்துரு பேச்சு


சென்னை, நவ. 26- கருதது சுதந் திரத்திற்கு எதிரான சக்திகள் வளர்ந்து விட்டன. எனவே, ஒவ்வொருவரும், அறிவியலை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தில் உள்ளோம் என உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு பேசினார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் இருந்து வெளிவரும் துளிர் சிறுவர் களுக்கான அறிவியல் மாத இதழின் வெள்ளி விழா மாநாடு, தியாகராயர் நகரில் உள்ள, சர்.பி.டி. தியாகராயர் கலை அரங்கத்தில், நவ. 24இல் நடந் தது. இதில், பொன் விழாவையொட்டி, சிறப்பு அஞ்சல்வில்லை வெளியிடப் பட்டது.

மாநாட்டை துவக்கி வைத்து நீதிபதி சந்துரு பேசியதாவது:

அறிவியலுக்கு, கருத்து சுதந்திரம் அடிப்படை தேவை. கருத்து சுதந்திரம் இல்லாத நாட்டில், ஒரு போதும் அறிவியல் வளராது, நம் நாட்டில், கருத்து சுதந்திரத்திற்கு எதிரான சக்தி கள் வளர்ந்து விட்டன. ஒவ்வொரு வரும், அறிவியலை முன்னெடுப்பதன் மூலமாகவே, எதிரான சக்திகளை முறியடிக்க முடியும். பாகிஸ்தானை சேர்ந்த மலாலா என்ற சிறுமி, பெண் குழந்தைகள், பள்ளிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்ததற்கு எதிராக பேசினார்.

அதற்காக, தலிபான் பயங் கரவாதிகளால் சுடப்பட்டு, லண்ட னில் சிகிச்சை பெற்று வருகிறார். பள்ளிக்கு செல்ல வேண்டும் என, விருப்பப்படும் கோடிக்கணக்கான பெண் குழந்தைகளின் குறியீடாக, மலாலா மாறிவிட்டார்.

லெனின், ரஷ்யாவில் மறைந்த போது, ரஷ்யாவை ஆட்சி செய்த ஸ்டாலின், லெனினுக்காக ரஷ்யா ஒரு நிமிடம் மட்டும் இயங்காது. மற்றபடி வழக்கம்போல் செயல்படும் என்றார்.

சமீபத்தில், மும்பையில், அரசியல் கட்சி தலைவர் இறந்ததற்காக, பந்த் நடத்தப்பட்டது. அதனால், மும்பை மாநகரமே, ஸ்தம்பித்தது. இதை எதிர்த்து, இரண்டு பெண்கள், பகத் சிங் இறந்தபோதுகூட, பந்த் நடக்க வில்லை. அப்படிப்பட்ட பூமியில் ஏன், பந்த் நடத்தவேண்டும். பந்த்தால் பொது மக்களே வெகுவாக பாதிக்கப் படுகின்றனர் என, முகநூலில் எழுதி னர். அதற்காக அவர்கள் கைது செய் யப்பட்டு, தற்போது பிணையில் வெளி வந்துள்ளனர். இங்கு கருத்து சுதந்திரம் கருவிலேயே நசுக்கப்படுகிறது.

மதத்தின் பெயரால், கருத்து சுதந் திரம் திட்டமிட்டு நசுக்கப்படுகிறது. விஞ்ஞானம் என்றாலே, மேலை நாடுகளை உதாரணம் காட்டுகிறோம்.

அயர்லாந்தைச் சேர்ந்த அன்னி பெசன்ட், இங்கிலாந்தில் பகுத்தறிவு கழகத்தை ஆரம்பித்து செயல்பட் டார். விஞ்ஞானத்தில் முன்னேற்றம் அடைந்த நாடாக நாம் நினைக்கும் இங்கிலாந்து, அன்னிபெசன்ட், மதத் திற்கு எதிராக செயல்படுகிறார் எனக் கூறி, அவர்மீது நடவடிக்கை எடுத்தது.

உலகத்தின் பல நாடுகளில், மதத் தின் பெயரால், கருத்து சுதந்திரம் நசுக் கப்படுகிறது.

சென்னை அய்.அய்.டி.யில், நாடி ஜோதிடம், அறிவியலா என விவாதம் நடந்தது. போகும் போக்கை பார்த் தால், கிளி ஜோசியமும், அறிவியலா எனும் கோணத்தில் ஆராய்ச்சி நடந் தாலும் நடக்கும்.

கருத்து சுதந்திரம் வளர்ந்தால் மட்டுமே, அறிவியல் வளரும். கடந்த, 1976ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி, 51ஏ, என்ற பிரிவு, இந்திய குடிமக்களின் கட மையை விவரிக்கிறது. அதில், அறிவி யலை வளர்க்கவும், முன்னெடுத்துச் செல் லவும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் முயல வேண்டும் என்கிறது. இது, ஒவ்வொரு குடிமகனின் கடமை. அதை பின்பற்றி, அனைவரும் அறிவியலை வளர்க்க முன்வர வேண்டும்.

- இவ் வாறு அவர் பேசினார்.

தமிழ் ஓவியா said...

ஒரே மாதிரி மணமகனை தேடும் இரட்டை சகோதரிகள்


பிற ஏடுகளிலிருந்து

ஒரே மாதிரி மணமகனை தேடும் இரட்டை சகோதரிகள்

மணமக்களை தேடும் விழாவில் ருசிகரம்

வாழ்க்கைத் துணை! ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. ஆனால் அதை தேர்வு செய்வது அவ்வளவு எளிதல்ல.

மனம் ஒத்து கைபிடித்தவர்கள்கூட மணமுறிவு ஏற்பட்டு தவிக்கிறார்கள். எல்லா பொருத்தமும் பார்த்து திருமண பந்தத்தில் இணைந்தவர்களும் துணையை இழந்து வாடுகிறார்கள். சாதி, மத கட்டுப்பாடுகளால் விரும்பிய துணையோடு இணைய முடியாமல் தவிப்பவர்களும் இருக்கிறார்கள்.

இவர்களுக்காக சாதி மதங் களுக்கு அப்பாற்பட்டு மணமக்களை தேடும் நவீன திருமண தேடல் விழா பெரியார் திடலில் இன்று (நவ.25) நடந்தது. பொதுவாக ஜோடி சேர இளசுகள் படையெடுக்கும் இடம் கலகலப்பாக இருக்கும். ஆனால் இந்த இணை தேடல் விழா சற்று வித்தியாசமாக இருந்தது.

சாதி மறுப்பு, மத மறுப்பு, மாற்று திறனாளிகள், மணமுறிவு எற்பட்டவர் கள், துணையை இழந்தவர்களுக்காக தனி தனி பதிவு மையங்கள் அமைக் கப்பட்டிருந்தது. சாதி வேண்டாம், மதம் வேண்டாம் மனசுக்கு பிடித்த துணை வேண்டும் என்று தேடியவர்கள் கல கலப்பாக அரங்கத்தை சுற்றி வந்தார்கள்.

ஆனால் மண முறிவு ஏற்பட்டு மனம் ஒடிந்து போனவர்களும், துணையை இழந்து தவித்தவர்களும் இனி வாய்க்கும் துணையாவது காலமெல்லாம் துணையாய் இருக்க வேண்டும் என்ற ஏக்கத்தோடு தேடி னார்கள். அவர்களில் பலர் காமி ராவுக்கு முகத்தை காட்ட தயங்கி னார்கள். அப்போது அவர்களையும் அறியாமல் அவர்கள் கண்கள் கலங்கி யதை பார்க்க முடிந்தது.

தமிழரசி

இல்லத்தரசியாக வாழ்ந்து வெறும் 3 மாதங்கள்தான் ஆகிறது தமி ழரசிக்கு. ரயில் விபத்தில் கண வனை பறி கொடுத்து திரு மணமான மூன்று மாதத் தில் விதவை கோலத்துக்கு மாறினார். தற்போது திருப்பத்தூரில் பாலி டெக்னிக்கில் டைப்பிஸ்டாக வேலை பார்க்கிறார். தன்னை கண் கலங்காமல் காப்பாற்ற ஒரு துணை வேண்டும் என்பதே இவரது ஆசை.

தேவகி

திருமணமான 2 வருடத்தில் கண வனை இழந்தார். குழந்தைகளும் இல்லை. தனி மரமாக 25 ஆண்டுகளை ஓட்டி விட்டார். அயனாவரத்தில் சொந்தமாக டெய்லர் கடை நடத்தி வருகிறார். வயது ஆக ஆக வாழ்க்கையை பற்றிய பயம். நமக்கென்று துணை இல்லாவிட்டால் கடைசி காலம் எப்படி இருக்கும்....? நினைத்து பார்த்த தேவகி உறவினர்களுடன் இணை தேடி வந்துவிட்டார்.

மனைவியை இழந்தவர் கிடைத்தாலும் பரவாயில்லை கடைசி காலத்தில் எனக்கு அவரும் அவருக்கு நானுமாக வாழ வேண்டும் என்பதே என் ஆசை நிறை வேறுமா? என்கிறார் ஏக்கத்துடன்.

தமிழ் ஓவியா said...

கீதா - சீதா

கரூர் பள்ளிப்பட்டை சேர்ந்த இவர்கள் இரட்டை சகோதரிகள் கீதா-சீதா. பள்ளி மாணவிகள்போல் ஒரே சீருடையில் வந்திருந்த கீதாவும், சீதாவும் கூறிய தாவது:-

ஒன்றாகவே பிறந்தோம், ஒன்றாகவே படித்தோம். இப்போது இருவரும் ஒரே நிறுவனத்தில் ஒன்றாகவே வேலை பார்க்கிறோம். இதுவரை எங்களுக்குள் சின்ன சின்ன சண்டைகூட வந்தது இல்லை. எங்களைப்போல் இரட்டையர் கள் மாப்பிள்ளையாக கிடைத்தால் மிகவும் சந்தோஷப்படுவோம். இல்லாவிட்டால் அண்ணன், தம்பிகளுக்கு ஒரே வீட்டில் வாழ்க்கைப்பட வேண்டும் என்று ஆசைப் படுகிறோம்.

நாங்கள் நன்றாக படித்து சம்பாதிக் கிறோம் வரப் போகிறவரும் படித்தவராக நல்ல குணம் கொண்டவராக கொஞ்சம் அழகாக இருக்க வேண்டும் அவ்வளவு தான் என்றார்.

அமுதா

பாண்டிச்சேரியில் தனியார் மருந்து கம்பெனியில் நிர்வாக அதிகாரியாக பணி புரிகிறார் அமுதா. நாங்கள் 2 பெண்கள். அம்மாவும்- அப்பாவும் சுயமரியாதை திரு மணம் செய்தவர்கள். அதேபோல் நானும் சுயமரியாதை திருமணத்தை விரும்புகிறேன். ஆனால் ஒரு கண்டிசன் வரப்போகிறவர் எங்க வீட்டு பிள்ளையாக என் அப்பாவுக்கு மகனைப்போல் இருக்க வேண்டும் என்கிறார்.

ஜெயந்தி

பார்ப்பதற்கு ரதியாக இருந் தாலும் கால்கள் இரண்டையும் கடவுள் பறித்து விட்டானே என்று ஜெயந் தியை பார்த்த வர்கள் ஆதங்கப் பட்டார்கள். ஊன்று கோல் களுடன் வந்த ஜெயந்தி கூறிய தாவது:-

எம்.ஏ., எம்.பில் படித் துள்ளேன். நெற்குன்றம் மேட்டுக்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறேன். என் நிலையை உணர்ந்து எனக்கு உற்றதுணையாக இருந்து என்னை கவனித்து கொள்பவர் மாப்பிள் ளையாக கிடைக்க வேண்டும் என்றார்.

மகேந்திரன்

இரு கால்களையும் இழந்து தவழ்ந்து வந்த தாம்பரம் மகேந்திரன் (30), சொந்தமாக பழக்கடை நடத்தி மாதம் ரூ.20 ஆயிரம் சம்பாதிக்கிறார்.

ஊனம் இல்லாத நல்ல மனம் படைத்த பெண் வேண்டும் என்பது இவரது ஆசை.

பாலசுப்பிரமணியன்

தேவகோட்டை பாலசுப்பிரமணியன் துபாயில் பணிபுரிகிறார். குடும்பத்தில் எல்லோரும் சமூக கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்தாலும் சுயமரியாதை கொள்கை பிடிப்பு கொண்ட இவர் தனது சிந் தனைக்கு ஏற்ற பெண்ணை தேடி வந்திருந்தார்.

மதியம் வரை 200-க்கும் மேற்பட்டவர் கள் ஜோடி தேடி பதிவு செய்திருந்தார் கள். திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் மருத்துவ மற்றும் மனவள சோதனைக்கு பிறகு திரும ணத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். திருமணத்துக்கு சம்மதிக்கும் ஜோடி களுக்கு கி.வீரமணி இன்று (நவ.25) மாலையில் திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

நன்றி: மாலைமலர் 25.11.2012

தமிழ் ஓவியா said...


குமரியில் திருவள்ளுவர் சிலை பராமரிப்பு


ஆசிரியருக்குக் கடிதம்

குமரியில் திருவள்ளுவர் சிலை பராமரிப்பு

பேரன்புமிக்க தமிழர் தலைவர் அய்யா அவர்களுக்கு கோ. வெற்றிவேந்தன் வணக்கத்துடன் எழுதிக் கொள்வது கன்னியாகுமரியில் இருக்கும் திருவள் ளுவர் சிலை பராமரிப்பு தொடர்பான தகவலை தங்களுக்கு எழுதுகிறேன்.

கன்னியாகுமரியில் அமைக்கப்பட் டுள்ள திருவள்ளுவர் சிலை தனிக் கல்லி னால் ஆனது. கடலின் நடுவே கல்லினால் எழுப்பப்பட்ட சிலை உலகிலேயே இது ஒன்றுதான். முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் வான்புகழ் கொண்ட வள்ளுவனுக்கு வானுயர அவரது சிலை இருப்பது உள்நாட்டு வெளிநாட்டு சுற் றுலா பயணிகளை மிகவும் கவருகிறது.

திருவள்ளுவர் சிலையை தாங்கும் பீடம் 38 அடியாகவும் அந்த பீடத்தின் மேல் அமைந்துள்ள சிலை 95 அடியாகவும் கொண்டு மொத்தம் 133 அடி உயரத்தில் கடலின் நடுவே உள்ள பாறையில் அமைந்துள்ளது. பீடத்தை சுற்றி மண்டபம் உள்ளது.

திருவள்ளுவர் சிலைப் பணியின் மொத்த செலவு 10 கோடி ரூபாய். இத்திட்டத்திற்குப் பயன்படுத்திய கற் களின் எடை 7000 டன் இந்த சிலை யினை கணபதி சிற்பி அவரது தலைமை யில் 500 சிற்பிகள் கடுமையாக உழைத்து இந்த சிலையினை நிறுவினர்.

திருவள்ளுவர் சிலையினை தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் 2000ஆம் ஆண்டின் முதல் நாள் அன்று கன்னியா குமரியில் திறந்து வைத்தார்கள்.

திருவள்ளுவர் சிலை உப்புக்காற்று மழை, வெயிலால் பழுதுபடாமல் இருக்க 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாலிசிலிக் கான் இரசாயனம் பூசப்பட வேண்டும்.

கடந்த ஆண்டு (2011) இரசாயன கலவை பூசப்பட்டு இருக்க வேண்டும். இதுவரை பூசப்படாததால் சிலை மிகவும் சேத மடையும் ஆபத்து உள்ளது.

இந்த சிலையினை பராமரிக்க வேண் டும் என்று குமரி மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் தமிழக அரசுக்கும், குமரி மாவட்ட ஆட்சி யருக்கும் கோரிக்கை மனு பல முறை கொடுத்தும் இதுவரை பராமரிக்கவே இல்லை. கலைஞர் அந்த சிலையை நிறுவினார் என்ற ஒரே காரணத்திற்காக தற்போதைய முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் அந்த சிலையினை பராமரிக்கவும், பாதுகாக்கவும் முன்வர வில்லை. கன்னியாகுமரியில் இருக்கும் திருவள்ளுவர் சிலையினை பராமரிக்க வேண்டும் என குமரி மாவட்ட தமிழர்களும் உலகத் தமிழர்களும் மிகவும் விரும்புகின்றனர். குமரி மாவட்ட திராவிடர் கழக தோழர்களின் விருப்பமும் இதுவே.

- கோ. வெற்றிவேந்தன்
மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்
கன்னியாகுமரி

தமிழ் ஓவியா said...


தமிழை, தமிழனை நேசித்த ஒரே வடநாட்டுத் தலைவர்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அரசியலில் நேர்மையையும் நியா யத்தையும் கடைப்பிடிப்பவர்களுக்குச் சோதனைகள் அதிகமாகவே இருக்கும். வி.பி.சிங்கிற்கும் அப்படித்தான். ஆதர வளித்துவந்த பாரதிய ஜனதா கட்சி தரப்பிலிருந்து நெருக்கடிகள், துணைப் பிரதமர் தேவிலால், சந்திரசேகர், சுப்ர மணியசாமி போன்றவர்களும் வி.பி. சிங் கிற்கு நெருக்கடிகளை உண்டாக்குபவர் களாக இருந்தார்கள். எத்தனை குறுக் கீடுகள் ஏற்பட்டாலும் அவர் அது பற்றிக் கலங்காதவராகவே செயல்பட்டார்.

எது நியாயம் என நினைத்தாரோ அதனைச் செயல்படுத்துவதில் உறுதியாகவே இருந்தார். உள்கட்சி நெருக்கடிகள் அதி கரித்துக் கொண்டிருந்த நேரத்தில் மண்டல் ஆணையத்தின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவேன் என்ற உறுதியை மேற்கொண்டார். நாடாளுமன்றத்தில் நம்பிக்கை கோரி அவர் நிகழ்த்திய உரையில் சமூக நீதியின் அவசியத்தை அழுத்தமாக வலியுறுத் தினார். அதனை வலியுறுத்திப் பேசும் போதெல்லாம் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா ஆகியோரது பெயர்களை உச்சரித்தார்.

தன் அரசைக் கவிழ்க்க முயல்வது ஏன் என்பதை விளக்கிப் பேசிய அவர், மண்டல் பரிந்துரையை அமல்படுத்த முயன்றது தான் எல்லாவற்றிற்குமே அடிப்படைக் காரணம். அதை நேரடியாக எதிர்க்க முடியாத சக்திகள் வேறு காரணங்களைக் காட்டி திரை மறைவிலிருந்து ஆட்சியைக் கவிழ்க்கச் செயல்பட்டனர் என்றார். எனது கால்கள் உடைக்கப்பட்டிருக் கலாம். ஆனால் அடைய வேண்டிய இலட் சியத்தை நான் அடைந்துவிட்டேன். மரியாதையோடு ஆட்சியை விட்டு நாங்கள் வெளியேறுகிறோம்.

அதற்காகப் பெருமைப்படுகிறோம். அரசியல் நாள்காட்டிகளில் கடைசி தேதி என்று எதுவும் கிடையாது என்று உறுதியான குரலில் தெரிவித்துவிட்டு தோல்வியைத் துணிச்சலாக எதிர்கொண்டார். பிரதமர் பதவியைத் துறந்ததுமே தனக்கு அளிக் கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும்படி தெரிவித்த கண்ணியமான மனிதர் வி.பி.சிங். அவரது அரசைக் கவிழ்ப்பதில் முக்கிய பங்காற்றியவர் சந்திரசேகர்.


தமிழ் ஓவியா said...

மிகக் குறைந்த எண்ணிக்கையிலான எம்.பி.க் களை மட்டுமே தன்வசம் வைத்திருந்த அவரை காங்கிரஸ் கட்சி ஆதரித்ததால் சந்திரசேகரை பிரதமர் பொறுப்பேற்க அழைத்தார் அன்றைய குடியரசுத் தலை வர் ஆர். வெங்கட்ராமன். தனது ஆட்சி யைக் கவிழ்த்துவிட்டு சந்திரசேகர் பிரதம ராகப் பதவியேற்றார் என்றபோதும் அது பற்றிய அரசியல் காழ்ப்புணர்வு ஏதுமின்றி சந்திரசேகரின் பதவியேற்பு விழாவில் தம் மனைவி சீதாசிங்குடன் கலந்து கொண்ட பண்பாளர் வி.பி.சிங். தமிழகத்தின் பல முக்கிய நகரங்களுக் கும் கலைஞருடன் சுற்றுப் பயணம் மேற் கொண்டார் வி.பி.சிங். மண்டல் ஆணை யத்தின் அறிக்கையை அமல்படுத்திய வெற்றிவீரராக அவரைப் பொதுமக்கள் திரண்டு வரவேற்றனர்.

எந்த ஊருக்குச் சென்றாலும் வழியெங்கும் கூட்டம் நிறைந் திருந்தது. அவரை வரவேற்று ஏராளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் தன் இனிஷியல் ஆங்கிலத்திலும் சிங் என்பது தமிழிலும் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்த வி.பி.சிங் காரில் பயணித்தபடியே அதை ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதிப் பழகினார். தமிழ்மொழியும் தமிழர்களின் அன்பும் அவரைக் கவர்ந்தன. தன் கவிதைகள் தமிழில் வெளிவரு வது பற்றிக் குறிப்பிட்டு எழுதியுள்ள வி.பி.சிங் தமிழக மக்கள் என்மீது நிறைந்த பாசத்தைப் பொழிந்துள்ளனர்.

அவர்கள் எனக்குக் காட்டும் பாசவுணர்வுக்கு எந்தவொரு பொருளும் மாற்றுப் பரிசாக இருக்க முடியாது. ஆகையால் என்னுடைய ஆழ்ந்த உணர்வுகளை அவர்கள் முன்பு வைக்கிறேன் என நெகிழ்ச்சியுடன் தெரி வித்தார். அதோடு தனது தமிழாக்க கவிதை நூலிலிருந்து கிடைக்கும் வரு மானத்தை திருச்சியிலுள்ள நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அளித்துவிடு மாறு தெரிவித்தார் வி.பி.சிங். பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் பல மாநிலங் களில் கலவரங்கள் வெடித்தன.

இத்தகைய தொடர் வன்முறைகளால் இந்தியா மதவெறிக்காடாக மாறிவிடும் என அச்சம் கொண்டு சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். அவரை எதிர்த்து உண்ணும்விரதம் இருந்தனர் மதவாதிகள். தனது போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியதால் தண்ணீர் கூடக் குடிப்பதை நிறுத்திவிட்டார் வி.பி.சிங். அதனால் சிறுநீர் வெளியேறுவது நின்றது. இதனால் அவரது இரண்டு சிறுநீரகங் களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப் பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வி.பி.சிங்கின் ஆட்சியைப் பறித்த மதவாதம் அவரது சிறுநீரகங்களையும் பறித்துவிட்டது. வி.பி.சிங்கிற்கு சிறுநீரகக் கோளாறு என்றதும் துடித்துப் போயினர் தமிழக மக்கள். அவருக்கு மாற்று சிறு நீரகம் பொருத்துவதற்காகத் தங்களின் சிறுநீரகத்தைத் தர முன்வந்தனர் ஒரத்த நாட்டைச் சேர்ந்த திராவிடர் கழக இளை ஞர்கள். ஆனால் வி.பி.சிங் வாழவேண்டிய இளைஞர்களின் சிறுநீரகத்தைப் பெற்று என் ஆயுளை நீட்டித்துக்கொள்ள விரும்ப வில்லை.

என்மீது அன்பு கொண்டு சிறு நீரகம் தர முன்வந்த இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று சொன்னதுடன் அடுத்த பிறவி என ஒன் றிருந்தால் நான் தமிழனாகப் பிறக்க ஆசைப்படுகிறேன் என்றார் இதயம் நெகிழ. 15 ஆண்டுகளாக அவரை வாட்டி வதைத்த நோய்கள் உச்சக்கட்டத்தை எட்டின. 2008 நவம்பர் 27ஆம் நாள் (இன்று) தமது (77 வயது) இறுதி மூச்சு வரை சமூகநீதியையும் மதச்சார்பின்மை யையும் இறுகப் பற்றியிருந்த வி. பி. சிங்கின் உயிர் பிரிந்தது. அவர் கொள்கையும் எண்ணமும் வென்றது. (நன்றி: கவின்மீடியா)