ஆடி மாதம் என்றால் அதுமட்டும் ஆண்டவன் படைப்பு இல்லையா?
ஆடி மாதம் என்றால் அதுமட்டும் ஆண்டவன் படைப்பு இல்லையா?
அவதாரங்கள் பிறந்த நவமியும், அஷ்டமியும் கெட்ட நாட்களா?
இளந்திரையன் - உஷா திருமண விழாவில் தமிழர் தலைவரின் ஆணித்தரமான வினாக்கள்

விருத்தாசலம், அக். 1- ஆடி மாதம் என்றால் அது மட்டும் ஆண்டவன் படைப்பு இல்லையா?, அவதாரங்கள் பிறந்த நவமியும், அஷ்டமியும் கெட்ட நாட்களா? என்ற கேள் வியை எழுப்பினார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
16.8.2014 அன்று விருத்தாசலத்தில்
நடைபெற்ற இளந்திரையன்- உஷா ஆகியோருடைய மணவிழாவில் திராவிடர் கழகத் தலைவர்
தமிழர் தலைவர் ஆற்றிய உரை வருமாறு:
நம்முடைய திராவிடர் மாணவர் கழகத்தினுடைய
இணைச் செயலாளரான அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரிய செயல்வீரர்
இளந்திரையன் வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்ச்சிகள் என்பது நமது அனைவருடைய
குடும்ப விழா என்கிற பெருமிதத்தோடு, மகிழ்ச்சியோடு நாம் அனைவரும் ஒன்று
திரண்டிருக்கிறோம்.
இது ஒரு புரட்சிகரமான திருமணமாகும்.
எல்லாவகை யிலும்; அவர் இப்படி முடிவெடுத்த நேரத்தில், இன்றைய தேதிதான்
அறிவுக்கரசு அவர்கள் வேண்டுமென்று கேட்டார்கள், இளந்திரையனுக்காக
இன்றைக்குத்தான் ஆடி மாதத்தின் கடைசி நாள் என்று சொல்லி, திரு மணத்தை ஆடி
மாதத்திலேயே நடத்தவேண்டும் என்பதற் காக அவர்கள் என்னிடத்தில் இந்தத்
தேதியைக் கேட்டார் கள். அவருடைய மணவிழா என்று சொன்னால், அது நம் அனைவருடைய
குடும்ப விழா என்கிற உணர்வோடு, நான் எந்தவித மறுப்பும் சொல்லாமல்
ஏற்றுக்கொண்டேன்.
நேற்று முன்தினம் மும்பையில் இருந்து அவசர
அவசரமாக வந்து, இன்றைக்கு இங்கு வந்துள்ளேன். இன்று மாலை தஞ்சையில்
நடைபெறும் ஒரு விழாவில் கலந்து கொள்வதற்கு ஏற்கெனவே
ஒப்புக்கொண்டிருக்கிறேன். எனவே, இவர்கள் முதலில் இந்தத் திருமணத்தை மாலை
யில் வைக்கலாம் என்று சொன்னார்கள். இன்றைக்குச் சனிக்கிழமை, பொதுவாகவே
மண்டபம் கிடைப்பதில் எந்தவித சிக்கலும் இருக்காது. நம்மைத் தவிர யாருமே
திரு மணத்தை நடத்துவதற்குத் தயாராக இருக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு
சூழ்நிலை காலையில் திருமணத்தை நடத்துங்கள் என்று சொல்லி ஒப்புக்கொண்டேன்.
இங்கே வந்திருக்கின்ற தாய்மார்களுக்கும், வயதானவர்களுக்கும்,
பொதுவானவர்களுக்கும் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன்.
உங்களையெல்லாம் சந்திக்கக்கூடியது மகிழ்ச்சி
பொதுவாகவே, மற்றவர்கள் எல்லாம் ஒரு
காலத்தில், அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தார்கள். ராகுகாலம் வந்து விடும்,
அதற்குள்ளே தாலி கட்டவேண்டும்; அதற்குள்ளே திருமணத்தை முடித்துவிட
வேண்டும்; ராகுகாலம் வருகிறது, ராகுகாலம் வருகிறது என்று ஏதோ கவர்னர்,
பிரசிடெண்ட் வந்து போவதைப்போல, அதிசயமாக சொல்வார்கள். ஏதோ, புலி, சிங்கம்,
கரடி வந்தால், பயப்படுகின்ற மாதிரி, மிகப்பெரிய அளவில் ராகுகாலத்தை சொன்ன
காலம் உண்டு. ஆனால், இப்பொழுது, ராகுகாலம் போய்விடக்கூடாது; அதற்குள்ளே
நீங்கள் வந்துவிட வேண்டும் என்று எங்களை நெருக்கி, நாங்கள் வந்துவிட் டோம்,
வழக்கம்போல மிகவும் சீக்கரமாக. 9.30 மணிக்கு இங்கே வந்துவிட்டோம்.
அறிவுக்கரசு அவர்களிடம் நான் வருவதற்கு கொஞ்சம் தாமதமானாலும் பரவாயில்லை,
9.30 மணிக்கு நீங்கள் நிகழ்ச்சியைத் தொடங்கிவிடுங்கள் என்று
சொல்லியிருந்தேன்.
ஆனால், தொடங்குவதற்கு முன்பே நான் வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றேன். திண்டிவனத்தில் தோழர் தாஸ் அவர்களோடு இங்கே வந்து உங்களை யெல்லாம் சந்திக்கக்கூடிய மகிழ்ச்சியைப் பெற்றிருக்கிறோம்.
ஆனால், தொடங்குவதற்கு முன்பே நான் வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றேன். திண்டிவனத்தில் தோழர் தாஸ் அவர்களோடு இங்கே வந்து உங்களை யெல்லாம் சந்திக்கக்கூடிய மகிழ்ச்சியைப் பெற்றிருக்கிறோம்.
நம்முடைய இளந்திரையன் அவர்கள் நமது மாணவர்
இயக்கத்தில், அமைதியாக, ஆழமாக தொண்டாற்றக்கூடிய ஒரு நல்ல இளைஞர்.
விருத்தாசலத்தில், ஆரம்பத்தில் 1945 ஆம் ஆண்டு வாக்கில் திராவிடர் மாணவர்
கழகம் மிகவும் வலிமையாக இருந்தது. அங்கே பழமலை என்ற ஒரு நண்பர்,
பேராசிரியர் பழமலை அல்ல; அந்தப் பழமலை வேறு; பழைய தோழர்களுக்கு நன்றாக
நினைவிருக்கும். தோழர் முனுசாமி அவர்கள், தாஸ் சைக்கிள் மார்ட் வைத்திருந்த
அந்தக் காலகட்டத்தை நான் சொல்கிறேன்.
அப்பொழுதும் மாணவர் கழகம் சார்பாகத்தான்
விருத்தாசலம் வானொலித் திடலில் தான் அந்தக் காலத்தில் கூட்டம் போடுவார்கள்.
ஆகவே, இப்பொழுது நான் வரும்பொழுதுகூட சொல்லிக்கொண்டு வந்தேன். 1944 ஆம்
ஆண்டு, இந்த ஊருக்கு முதல் முறையாக ஆசிரியர் திராவிடமணி அவர்களோடு
வந்திருந்தேன். தோழர் சி.முனுசாமி அவர்கள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு
செய்திருந்தார். இந்த வட்டாரத்திலிருந்த மிகத் தீவிரமான ஒரு இயக்கத் தோழர்,
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்; திட்டக் குடி ஒரு நல்ல பலமான பகுதி,
அந்தக் காலத்தில். அது போன்றே பென்னாடம் நல்ல பலமான பகுதி. விருத்தா
சலத்தில், பொன்னரசு என்பவர், அவருடைய இயற்பெயர் தங்கராசு; பொன்னரசு என்று
பெயர் மாற்றிக் கொண்டார். இப்படி பல தோழர்கள் இருந்தார்கள். அந்தக்
காலகட்டத் தில், வயதானவர்கள் இருந்தாலும், செயல்படக் கூடிய அத்தனை பேரும்,
திராவிட மாணவர் கழகத்தைச் சார்ந்தவ ராகத்தான் இருந்து கூட்டத்தைப்
போடுவார்கள். 1944 ஆம் ஆண்டு வாக்கில் மின்சாரம் வந்ததாக எனக்கு நினை
வில்லை. சேலம் போகவேண்டுமானால், இங்கே வந்து தங்கி விட்டுத்தான்
செல்லவேண்டும். சேலம் மாநாட்டிற்குக்கூட அப்படித்தான் கடலூரிலிருந்து இங்கே
வந்து தங்கிவிட்டு, முன்புகூட நான் உரையாற்றும்பொழுது சொல்லியிருக்
கிறேன். தாஸ் அவர்களின் வீடு டவுனில் இருக்கும். அங்கிருந்து ஜங்சனுக்கு
வரவேண்டும் என்றால், குதிரை வண்டியில் வரவேண்டும் அல்லது நடந்துதான் வரவேண்
டும். நடு இரவில் சேலம் போகவேண்டுமானாலும் சரி, சேலத்திலிருந்து வந்து
கடலூருக்குச் செல்லவேண்டுமானா லும் சரி அதுதான் அன்றைய நிலை. இந்தப்
பகுதியில் அற்புதமான திராவிடர் மாணவர் கழகமாக இருந்தது. இடையில் அதில்
கொஞ்சம் தொய்வு ஏற்பட்டது.
மாணவர் கழகம் அமைப்பு மிகவும் செல்வாக்காக உருவாகிக் கொண்டிருந்தது
ஆனால், இளந்திரையன் போன்ற நண்பர்கள், நம்
முடைய சந்திரசேகரன் மற்ற தோழர்கள், எல்லோரும் நன் றாகப் பழகி, ஏராளமான
தோழர்கள் இங்கு உருவானார்கள். குறிப்பாக, விருத்தாசலம் அரசினர் கலைக்
கல்லூரி வந்த வுடன், ராசவேல் போன்றவர்கள், தீவிரமாக மாணவர் கழகத்தை இங்கு
அமைத்தார்கள். மாணவர் கழகத்தின் சார்பாக, நம்முடைய தோழர்கள் பலர்
கல்லூரியில் பேசவேண்டும் என்று அழைத்தார்கள். அப்பொழுதும் மாணவர் கழகம்
என்ற அமைப்பு மிகவும் செல்வாக்காக உருவாகிக் கொண்டிருந்தது. பிறகு
இன்றைக்கு நல்ல இளைஞர்கள், ஆற்றல் வாய்ந்த தோழர்கள் அத்துணை பேரும்
தீவிரமாக இருக்கக்கூடிய அந்த வாய்ப்பினைப் பெற்றுள்ளார்கள், தோழர்
இளந்திரையன் அவர்கள் அமைதியாக, அடக்கமாக, ஆழமாக நல்ல பணியைச் செய்யக்கூடிய
எடுத்துக்காட்டான ஒரு தோழர்.
திராவிட இயக்கத்தவர்களில் பெரும்பாலோர் எல்லோருமே கொள்கையாளர்கள்
மூட நம்பிக்கைகளை ஒழிக்கவேண்டும்
என்பதில், தந்தை பெரியார். அவர்கள்தான் வழிகாட்டினார்கள். பெரியார்
பிறந்திருக்காவிட்டால், இந்தத் துணிச்சல் வந் திருக்குமா என்பதை தயவு
செய்து நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். அதுமட்டுமல்ல, திராவிடர்
கழகத்தவர் என்று சொன்னால், திராவிட இயக்கத்தவர்களில் எல் லோருமே
கொள்கையாளர்கள். அரசியலுக்குச் சென்றவர் கள் வேண்டுமானால், சில நேரங்களில்,
இந்தக் கொள் கைக்கு கொஞ்சம் மாறுபட்ட நிலையில், வெறும் அரசியல் என்ற
உணர்வோடு இருக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். ஆனால், அடித்தளமாக, திராவிட
முன்னேற்றக் கழகத்தில் எடுத்துக்கொண்டாலும்கூட, ஆதிநாளில் இருந்து பகுத்தறி
வாளர்களாகத்தான் இயக்கத்தில் அடிப்படையில் இருப்பார் கள், அடிப்படைக்
கொள்கையோடு. அந்த மாதிரி வரும் பொழுது, நாள் என்ன? நட்சத்திரம் என்ன?
நன்றாக நீங்கள் நினைத்துப் பாருங்கள்.
அண்ணா அவர்கள் ராகுகாலம் என்கிற
நேரத்தில்தான் நாமினேசன் போட்டார். முதலமைச்சராகவும் ஆனார். அதுதான் மிக
முக்கியம். எதற்காக இதனைச் சொல்கிறேன் என்று சொன்னால், மூட நம்பிக்கையைச்
சொல்லி, நம் மூளைக்கு விலங்கு போட்டு வைத்திருக்கிறார்கள்.
தந்தை பெரியார் அவர்களைப்பற்றி சொல்கின்ற
நேரத் தில், புது யுகத்தினுடைய முன்னோக்குள்ள தொலைநோக் காளர்; பின்னாளில்
வரக்கூடிய செய்திகளை, முன்னாளில் சொல்லக்கூடியவர்.
உலக அமைப்பாக இருக்கக்கூடிய யுனெஸ்கோ
அதனைத் தெளிவாக எடுத்துச்சொல்லி, தென்கிழக்கு ஆசியாவினுடைய சாக்ரட்டீஸ்
என்று வருணித்து, சமூக சீர்திருத்த இயக்கத்தினுடைய தந்தை அவர் என்பதையும்
சுட்டிக்காட்டி, இந்த மூன்று செய்திகளையும் சொல்லிவிட்டு, நான்காவதாக
அவருக்குக் கொடுத்த அந்த விருதில், அய்யா அவர்களைப்பற்றி யுனெஸ்கோ
எழுதியது,
அதாவது மூட நம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகள் இவைகளுக்கெல்லாம் பெரியார் கடும்
எதிரி என்று சொன்னார்கள்.
அந்த எதிர்ப்பினுடைய அறுவடைதான், நம்முடைய
இளந்திரையன் போன்றவர்கள் இன்றைக்கு நடத்திக் கொள்ளக்கூடிய ஒரு அற்புதமான
கொள்கைப் பிரச்சார விழாவான, கொள்கைக்கு வெற்றி விழா எடுக்கக்கூடிய விழாவாக
அமைந்திருக்கக்கூடிய இந்தத் திருமண விழா என்று சொன்னால், மகிழ்ச்சியோடு
பாராட்டவேண்டியதுதான்.
பெரியாருக்குப் பிறகு இயக்கம் இருக்குமா?
பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம்
இருக்குமா? என்று கேட்டார்கள். சில பேர் புரியாமல், விடுதலையைப்
படிக்காமல், சொல்வார்கள். பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்கிறது
என்றவுடன், பெரியார் காலத்தில் இருந்ததுபோல், இப்பொழுது இல்லீங்க என்று.
அவர்கள் விடுதலை நாளிதழையும் படிப்பதில்லை, செய்திகளையும்
தெரிந்துகொள்வதில்லை. பெரியார் காலத்தைவிட இப்பொழுது பெரியது என்று
சொல்வது, நாங்கள் பெருமை கொண்டாடுவதற்காக அல்ல. பெரியாருக்குப் பிறகு
இயக்கம் இருக்குமா என்று கேட்டார்கள், இருக்கும் என்பது மட்டுமல்ல,
தீவிரமாக இயங்குகிறது என்பதை இதுபோன்ற மணவிழாக்கள் காட்டிக்
கொண்டிருக்கும்.
இந்த ஆடி மாதம் என்று சொன்னால், ஆடியில்
அடியெடுத்து வைக்கக்கூடாது என்று சொல்வார்கள். இதனுடைய விளைவு, இந்த
மாதத்தில் எந்தத் திருமண நிகழ்வுகளையும் செய்யமாட்டார்கள். மண்டபங்கள்
எல்லாம் காலியாகவே இருக்கும். அதிலும் சனிக்கிழமை என்றால், அந்த நாளில்
திருமணங்களை நடத்தமாட்டார் கள். மூடநம்பிக்கைகளில் இது ஒரு மூடநம்பிக்கை.
செவ்வாய்க் கிழமையில்தான் விண்கலத்தை அனுப்பினர்
செவ்வாயே வெறும் வாய் என்று சொல்லிக் கொண்
டிருந்தார்கள். இன்றைக்குச் செவ்வாய்க் கோளுக்கே விண்கலத்தை
அனுப்பியிருக்கிறார்கள். அது செவ்வாய்க் கோளினை சென்றடையும். செவ்வாய்க்
கிழமையன்றுதான் அந்த விண்கலத்தை விஞ்ஞானிகள் அனுப்பியிருக்கிறார்கள்.
ஆனால், இங்கேயுள்ள நம்மாள்கள் செவ்வாய்
தோஷம் என்று சொல்லி, 40 வயதான பெண்களுக்கு இன்னும் திருமணம் செய்யாமல்
வைத்திருக்கிறார்கள். இதனால் பல பெண்கள் தற்கொலை செய்யக்கூடிய அளவிற்கு
விரக்திய டைந்துள்ளார்கள். மூட நம்பிக்கையினால் லாபமா? நட்டமா? என்று
கேட்டால், முழுக்க எவ்வளவு பெரிய கேடு என்பதை நீங்கள் தெளிவாகப்
புரிந்துகொள்ள வேண்டும்.
நீங்கள் எல்லோரும் புரிந்துகொள்வதற்காக
இந்த மணவிழா; இது வெறும் மணவிழா அல்ல; ஒரு பெரிய மூட நம்பிக்கை ஒழிப்பு
நிகழ்ச்சி. நாங்கள் சுயமரியாதைக்காரர் கள் என்று சொன்னால், எதைப்
பேசுகிறோமோ, அதைத் தான் செய்வோம்; எதைச் செய்கிறோமோ அதைத்தான் பேசுவோம்
என்பதற்கு இதுதான் தெளிவான அடையாளம், எடுத்துக்காட்டாகும்.
இந்த ஆண்டு பாருங்கள், ஆடி மாதம் ஒன்றாம் தேதி தொடங்கிய நிகழ்வுகள், ஆடி மாதம் கடைசி நாளான 31 ஆம் தேதியும் தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. ஏனென்றால், ஆடி மாதத்தில்தான் தேதி வேண்டும் என்று தோழர்கள் கேட்கிறார்கள்.
இந்த ஆண்டு பாருங்கள், ஆடி மாதம் ஒன்றாம் தேதி தொடங்கிய நிகழ்வுகள், ஆடி மாதம் கடைசி நாளான 31 ஆம் தேதியும் தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. ஏனென்றால், ஆடி மாதத்தில்தான் தேதி வேண்டும் என்று தோழர்கள் கேட்கிறார்கள்.
பெரியார் இயக்கம் சக்தி வாய்ந்ததாக பெரியாருக்குப் பின் இயங்குகிறதா இல்லையா?
இந்த ஆடி மாதத்தில், கடலூரில் நம்முடைய
இளம் வழுதி அவர்களுடைய பெயரத்தி, புகழேந்தி அவர்களு டைய இல்லத் திருமணம்;
மணமகன் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர். அவர் பின்லாந்தில்
பணியாற்றுகிறார். மணமகளும் ஆஸ்திரேலியாவில் பணியாற்றக்கூடியவர்.
இருவருக்கும் மணவிழாவினை நடத்தி வைத்தோம்.
அதேபோல், திருமகள் இறையனார் இல்லத்
திருமணம்; பெங்களூர்காரர்களுடைய திருமணம்; பவள விழாக்கள் நிகழ்வுகள்
இதுபோல், இந்த மாதத்தில் மட்டும் நான் நடத்தி வைத்த நிகழ்ச்சிகள்,
மகிழ்ச்சியான வைதீக மொழியில் சொல்வதென்றால், சுபகாரியம்; நாங்கள் ஒன்றும்
சுபகாரியம், சுபதினம் என்ற வார்த்தைகளை நம்புவதில்லை. இந்த மாதத்தில்
மட்டும் பத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருக் கின்றன என்று சொன்னால்,
மணவிழாக்கள் உள்பட நிகழ்வுகளை நானே நடத்தி வைத்திருக்கிறேன் என்று
சொன்னால், பெரியார் இயக்கம் வெற்றி பெற்றதா இல்லையா? பெரியார் இயக்கம்
சக்தி வாய்ந்ததாக பெரியாருக்குப் பின் இயங்குகிறதா இல்லையா?
விஞ்ஞானத்திற்கு எதிரான செய்திகளை, விஞ்ஞானக் கருவிகள் மூலமாகப் பரப்புகிறார்கள்
தொலைக்காட்சிகள், விஞ்ஞானத்திற்கு எதிரான செய்திகளை, விஞ்ஞானக் கருவிகள் மூலமாகப் பரப்புகிறார் கள். மற்ற நாடுகளில், விஞ்ஞானம் வந்தது என்றால், அஞ்ஞானம் போகும்; மெய்ஞானம் வரும் என்று இருந்தது. இங்கே இருக்கின்ற ஞானமும் போய்விடும், தொலைக் காட்சிகளைப் பார்த்தால். எனவே, கூடுமானவரையில், தொலைக்காட்சிகளைப் பார்க்காமல் இருந்தால், ஆயுளும் விருத்தியாகும், அறிவும் விருத்தியாகும் அதுதான் மிக முக்கியம் இருக்கின்ற அறிவைப் பறித்துக் கொள்கிறான். அறிவை நமக்குக் கொடுக்கின்ற மாதிரியான நிகழ்ச்சிகள் கிடையாது. இந்த மணவிழாவினைப் பொறுத்தவரையில், முதலாவ தாக மூட நம்பிக்கை ஒழிப்பிற்கு மிகப்பெரிய ஒரு வாய்ப் பாகும். ராகு காலத் திருமணம் என்பதால்.
தொலைக்காட்சிகள், விஞ்ஞானத்திற்கு எதிரான செய்திகளை, விஞ்ஞானக் கருவிகள் மூலமாகப் பரப்புகிறார் கள். மற்ற நாடுகளில், விஞ்ஞானம் வந்தது என்றால், அஞ்ஞானம் போகும்; மெய்ஞானம் வரும் என்று இருந்தது. இங்கே இருக்கின்ற ஞானமும் போய்விடும், தொலைக் காட்சிகளைப் பார்த்தால். எனவே, கூடுமானவரையில், தொலைக்காட்சிகளைப் பார்க்காமல் இருந்தால், ஆயுளும் விருத்தியாகும், அறிவும் விருத்தியாகும் அதுதான் மிக முக்கியம் இருக்கின்ற அறிவைப் பறித்துக் கொள்கிறான். அறிவை நமக்குக் கொடுக்கின்ற மாதிரியான நிகழ்ச்சிகள் கிடையாது. இந்த மணவிழாவினைப் பொறுத்தவரையில், முதலாவ தாக மூட நம்பிக்கை ஒழிப்பிற்கு மிகப்பெரிய ஒரு வாய்ப் பாகும். ராகு காலத் திருமணம் என்பதால்.
புராணக் கதையில், ராமனுக்கும், சீதைக்கும்
திருமணத் திற்கு தேதி பார்த்தது, சாதாரண புரோகிதர் அல்ல; புரோகிதர்களிலேயே
பெரிய புரோகிதர் வசிஷ்டர்; அவர் சாதாரணமானவர் அல்ல. வசிஷ்டர் வாயால் என்று
சொல் வார்கள். அந்த வசிஷ்டர் நாள் பார்த்துக் கொடுத்ததுதான் ராமன் - சீதை
திருமண நாள். ராமாயணக் கதைப்படி. அந்தத் திருமணம் என்னாயிற்று? 14 ஆண்டுகள்
காட்டுக்குப் போனார்கள்; கதைப்படிதான்.
சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை
நிறைவேற்றுவ தற்காக அண்ணா அவர்கள், சட்டமன்றத்தில் முன்மொழிந்து
பேசுகிறார். அப்பொழுது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருத்திருமன்
சொன்னார், அந்தக் காலத்தில், ராமனுக்கும், சீதைக்கும் என்று ஆரம்பித்தார்.
பெரியாருடைய சுயமரியாதைத் திருமணத் திட்டம் மிகவும் அற்புதமானது
முதலமைச்சர் அண்ணா அவர்கள்,
எதிர்க்கட்சிக்காரர் கள் எந்தக் கருத்தைச் சொன்னாலும் அனுமதிப்பார்.
ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையிலும் இருந்தார்கள்.
எதிர்க்கட்சி காங்கிரஸ் தலைவர்
கருத்திருமன்; கலியுகக் கம்பர் என்று அவருக்குப் பெயர். எதற்கெடுத்தாலும்,
கம்ப ராமாயணத்தில் இருந்துதான் அவர் மேற்கோள் காட்டி பேசுவார்.
அப்போதெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் எழுந்தால், முதலமைச்சர் உட்காருவார்;
முதலமைச்சர் எழுந்தால், எதிர்க்கட்சித் தலைவர் உட்காருவார்.
கருத்திருமன் எழுந்து, ராமாயணத்திலேயே
அந்தக் காலத்தில் ராமனுக்கும், சீதைக்கும் நடந்த திருமணம் என்று
ஆரம்பித்து, ஏதோ சொல்ல வந்தார்.
உடனே முதலமைச்சர் அண்ணா குறுக்கிட்டு,
ராமனை யும், சீதையையும் தயவு செய்து கூட்டிக்கொண்டு வராதீர் கள்;
சுயமரியாதைத் திருமண சட்டத்தை யாரும் எதிர்க்க வில்லை. மிகவும்
மகிழ்ச்சியாக நாம் அந்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறாம்.
பெரியாருடைய அந்தத் திருமணத் திட்டம் மிகவும் அற்புதமானது என்று நாம்
அந்தச் சட்டத்தை நிறைவேற்ற இருக்கிறோம். இந்த நேரத்தில், வாழ்க்கையில்
கஷ்டப்பட்டு சேர்ந்து, பிறகும் பிரிந்த அந்த ஜோடியைப்பற்றி இப்பொழுது
ஞாபகப்படுத் தாதீர்கள் என்று அண்ணா அவர்கள் மிகவும் வேடிக்கை யாக சொன்னார்.
அந்த நிகழ்வு மிகவும் வேடிக்கையாக இருந்தது.
விடாப்பிடியாக கருத்திருமன் அவர்கள், என்ன
பெரிய சீர்திருத்தம் செய்திருக்கிறீர்கள், சுயமரியாதைத் திருமணத் தில்
என்று கேட்டார். இதனால், பெரிய ஆபத்து ஒன்று இருக்கிறது என்று சொன்னார்.
என்ன ஆபத்து என்று விளக்கி சொல்கிறார்; புரோகிதர் களுக்கு வேலையில்லாத்
திண்டாட்டம் வரும் என்று சொன்னார்.
உடனே முதலமைச்சர் அண்ணா அவர்கள்
எழுந்தார்; அன்றைய தினம் நானே விடுதலை நாளிதழுக்காக செய்தி சேகரிக்க
சட்டமன்றத்திற்குச் சென்று, பத்திரிகையாளர் களுக்காக ஒதுக்கப்பட்ட அந்தப்
பகுதியில் அமர்ந்திருந் தேன்; அண்ணாவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
ஏனென்றால், நான் பார்த்துவிட்டு, தந்தை பெரியாரிடம் என்ன நடந்தது என்று
சொல்வேன் என்பதால் அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. என் வாழ்க்கையில் மறக்க
முடியாத ஒரு நாள் அந்த நாளாகும்.
புரோகிதத் திருமணத்தை தடை செய்கின்ற மசோதா அல்ல!
எழுந்த முதலமைச்சர் அண்ணா அவர்கள்
சிரித்துக் கொண்டே, நான் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்குச்
சொல்லிக் கொள்கிறேன். இது புரோகிதர் இல்லாத திருமணத்திற்கு, புரோகிதர்
வராமல் நடத்திக் கொள்ளும் திருமணத்திற்கு சட்டம் வடிவம் கொடுக்கக் கூடிய
மசோதா நாம் இப்போது நிறைவேற்றக்கூடிய மசோதா - சட்டமாகப் போகிறது. புரோகிதத்
திருமணத்தைத் தடை செய்கின்ற மசோதா அல்ல. புரோகிதத் திருமணம்
செய்துகொள்கிறவர்கள், இரண்டு, மூன்று புரோகிதர்களை வைத்துக்கூட திருமணம்
செய்து கொள்வதில் எங்களுக் கொன்றும் ஆட்சேபணையில்லை என்று சொன்னார்.
கருத்திருமன் விடவில்லை, மறுபடியும்
எழுந்து, என்னென்னவோ பெரிய சீர்திருத்தம் என்று சொல்கிறீர் கள்; என்னுடய
திருமணத்தை அந்தக் காலத்தில், புரோகி தரை வைத்துத்தான் நடத்தினேன்;
மந்திரத்தை நீட்டிக் கொண்டிருந்தார்; நான் உடனே சீக்கிரம் முடியுங்கள்
என்று சொன்னேன். அந்தப் புரோகிதர் அய்ந்து நிமிடத்திலேயே மந்திரத்தை
முடித்துக்கொண்டார். நீங்கள்தான் சீர்திருத்தம் செய்வீர்களா? நான் என்னுடைய
திருமணத்தில் சீர் திருத்தம் செய்யவில்லையா? என்று கேட்டார்.
அதற்கு முதலமைச்சர் அண்ணா அவர்கள்
மறுபடியும் எழுந்தார், சிரித்துக்கொண்டே சொன்னார், நண்பர் கருத் திருமன்
அவர்கள் சொன்னார், அவருடைய திருமணம் வெகு சீக்கிரத்தில் நடந்ததென்று. அது
சுயமரியாதைத் திருமணமும் அல்ல; சீர்திருத்தத் திருமணமும் அல்ல; தேசியத்
திருமணமும் அல்ல; அது அவசரத் திருமணம் என்று சொல்லி முடித்தார்.
அவ்வளவு மகிழ்ச்சியாக, அப்படி
நிறைவேற்றப்பட்ட அந்த திருமணச் சட்டத்தினுடைய அடிப்படை என்ன என்பதை நீங்கள்
நினைத்துப் பார்க்கவேண்டும். எந்தச் சடங்கும், சம்பிரதாயமும் இல்லாமல்
இந்தத் திருமணம் நடைபெறுகிறது. மணமக்கள் இளந்திரையன் - உஷா மகிழ்ச்சியாக
இங்கே அமர்ந்திருக்கிறார்கள். தேவையற்ற சடங்குகள் இல்லை. சுயமரியாதை
என்றால், விளக்கெண் ணெய் குடிப்பதுபோல, வேப்பெண்ணெய் குடிப்பதுபோல, பெரிய
சங்கடத்தை உண்டாக்குபவை அல்ல; தேவையற்ற சடங்குகள், சம்பிரதாயங்கள் எதுவும்
இல்லை. மகிழ்ச்சியாக இருக்கிறது.
இன்னுங்கேட்டால், இந்த மணவிழாவிற்கு
இவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள் என்றால், இளந்திரையன் அவர்கள் திராவிடர்
மாணவர் கழகத்தில் முக்கிய பொறுப்பாளர் ஆவார். புரட்சிகரமான ஒரு திருமணத்தை
இந்த ஆடி மாதத்தில் நடத்திக்காட்டி, ராகுகாலத்தில், அதுவும் சனிக்
கிழமையில், தாலி இல்லாமல் நடத்திக் காட்டி, மிகப்பெரிய வாய்ப்பினை
ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்றால், இது ஒரு கொள்கைக்கு விளக்கம்
சொல்வதுபோல்.
சில பேர் சொல்வார்கள், இவர்கள் எல்லாம்
பேசுவார் கள், அவர்கள் விஷயம் என்றால் செய்யமாட்டார்கள் என்று சொல்லி,
செய்ய முடியாதவர்கள் சொல்வார்கள். அவர்கள் பேசவும் மாட்டார்கள்,
பேசுவதற்குத் துணிவும் கிடையாது. செய்கிறவர்களைப் பார்த்து, செய்து
முடித்து விட்டால், இதெல்லாம் என்னங்க, இது மாதிரி செய்தால், இது ஒரு
திருமணா? என்று சொல்வார்கள். ஆகவே, நம்முடைய மக்களுடைய மனப்பான்மையைப்
பற்றி நாங்கள் கவலைப்படாதவர்கள்.
அந்த வகையில்தான், இந்த மணவிழா ஒரு எடுத்துக் காட்டான, சிறப்பான மணவிழா.
இன்னொரு விஷயத்தை நீங்கள் நன்றாக
நினைத்துப் பார்க்கவேண்டும் தோழர்களே! எங்கேயாவது பார்ப்பனர் கள் இதனைக்
கடைபிடிக்கிறார்களா? என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். அவர்கள்
ஆடி மாதத்தில் திருமணம் செய்கிறார்கள்; மார்கழி மாதத்தில் திருமணம்
செய்கிறார்கள். ஏனென்றால், அது எங்களுக்கு ஒத்து வரும் என்று
சொல்கிறார்கள். ஆடி மாதத்தில், மண்டபங்கள் காலியாக இருக்கும்; பொருள்கள்
எல்லாம் விலை குறைவாக இருக்கும். போக்குவரத்து நெரிசலும் இருக்காது; ஆகவே,
அந்த மாதங்களில் அவன் திருமணத்தை வைத்துக்கொள்வான். நம்மாள்களை அந்த
மாதங்களில் திருமணங்கள் செய்யக்கூடாது என்று சொல்வான். எல்லாவற்றிலும் அது
மாதிரி செய்திருக்கிறார்கள்.
----------------- தொடரும் 1-10-2014



.jpg)

