சேதுசமுத்திரத்திட்டம்பயனற்றஒன்றா? அரசியல் காழ்ப்புணர்வோடு முதல் அமைச்சர் குறை கூறலாமா?
ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!
சேதுசமுத்திரத்திட்டம்பயனற்றஒன்றா?
அரசியல் காழ்ப்புணர்வோடு முதல் அமைச்சர் குறை கூறலாமா?
இத்திட்டத்தால் தமிழ்நாடு அடையும் பயன்களின் பட்டியல் இதோ!
இராமநாதபுரத்தில் மட்டும் காணாமற்போன இராமன் பாலம்!
ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டுகிறார் தமிழர் தலைவர்
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் ஏதோ
தோல்வித் திட்டம் என்பதைப் போலவும், சுற்றுச் சூழலுக்கும் மீனவர்களுக்கும்,
கேடு விளைவிக்கும் திட்டம் என்றும் முதல் அமைச்சர் ஜெயலலிதா அம்மை யார்
கூறிய குற்றச்சாற்றுகளுக்கு ஆதாரங்களுடன் மறுப்புக் கூறி திராவிடர் கழகத்
தலைவர் கி வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: இராமநாதபுரத்தில்
தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாட்டின் முதல்
அமைச்சரும், அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளருமான மாண்புமிகு செல்வி ஜெ.
ஜெயலலிதா அவர்கள் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் குறித்து அரசியல்
நோக்கத்தோடு சிலவற்றைக் கூறியுள்ளார். (29.3.2014)
1) நான் முதல் அமைச்சராக முதன்
முதலாக இருந்த சமயத்தில் 1994ஆம் ஆண்டு பல்லவன் போக்குவரத்து ஆலோசனைப்
பணிகள் நிறுவனம் மூலம் சேது சமுத்திரத் திட்டத்துக்கான திட்ட அறிக் கையைத்
தயாரிக்க சொன்னேன். இந்த நிறுவனம் இதன் அறிக்கையை 1996ஆம் ஆண்டு அரசுக்குச்
சமர்ப்பித்தது என்று கூறியுள்ளார்.
அந்த நிறுவனம் தன் அறிக்கையில் என்ன
கூறியது என்று முதல் அமைச்சர் கூறாதது ஏன்? அந்த நிறுவனத்தின் திட்ட
அறிக்கை சாதகமாக இருந்த காரணத்தால் தானே 1999, 2001, 2004 ஆகிய தேர்தல்
அறிக்கைகளில் சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தியே தீர வேண்டும்
என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அதில் ஏன் இப்பொழுது முரண்பட்டு நிற்கிறார்
முதல் அமைச்சர்?
சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படுமா?
2) சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படும் என்று முதல்வர் சொல்லியுள்ளாரே? இதில் உண்மை உள்ளதா?
நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச் சார்புப்
பொறியியல் ஆய்வு நிலையம் (Neeri - The National Environmental Engineering
Research Institute) என்கிற அமைப்பு ஆய்வு செய்து, தொழில் நுட்ப ரீதியாக
தந்த தகவல்கள் ஒப்புதல் அடிப்படையிலேயே இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
சுற்றுச்சூழல் தொடர்பாக அவ்வமைப்புக் கூறிய யோசனைகள் அடிப்படையில்
கீழ்க்கண்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
மிக மிக முக்கியமாக மனதில் வைக்க வேண்டிய
ஒன்று இந்தத்திட்டம் இப்பகுதியில் தான் அமைக்க வேண்டிய ஒன்று. இது ஒரு
Site Specific Project வேறெங்கும் இதை அமைக்க முடியாது. அதே நேரத்தில்
மன்னார் வளை குடாவும், பாக்கடல் பகுதிகளும் மீன் வளமும், இயற்கை வளமும்
நிறைந்த பகுதிகள். நாட்டுக்குத் தேவையான, அதே வேளையில் இந்தப்பகுதியில்
தான் அமைய வேண்டிய இந்தத்திட்டம் நிறைவேற்றப்படும்பொழுது சுற்றுப்புறச்
சூழல் தாக்கம் சிறிதும் இல்லாமல் அல்லது தாக்கங்களை குறிப்பிடத்தக்க அளவு
கூட இல்லாமல் குறைத்து செயல்படுத்த வேண்டியது அரசின் கடமை, இதற்காக அரசு
எடுத்துக்கொண்டுள்ள முயற்சிகள்
1) மன்னார் வளைகுடாவில் ஆதாம் பாலத்தின் ஒரு சிறிய பகுதி தவிர பிற பகுதிகளில் எவ்வித ஆழப்படுத்தும் செயலும் இருக்காது.
2) செலவு கூடுதல் என்றால் கூட,
கடல்வழிப்பாதையை மாற்றியமைத்து, அருகில் உள்ள கடல் வாழினத் தேசியப்
பூங்காவைச் சேர்ந்த சிங்களத் தீவிலிருந்து, ஆதாம் பாலத்தில்
ஆழப்படுத்தப்போகும் பகுதி ஏறத்தாழ 20 கி.மீ. தொலைவு.
3) மன்னார் வளைகுடாவில், இயற்கை ஆழம் உள்ள கப்பல் செல்லும் வழித்திட்டம் இத்தீவுகளிலிருந்து குறைந்தது 20 கி.மீ. தொலைவில் அமைத்தல்.
4) ஆழப்படுத்தும் தொழில்நுட்பம் சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்ப அமைத்தல்.
5) தோண்டி எடுக்கப்படும், மணல்
கொட்டப்போகும் இடங்கள்
வங்கக்கடலிலும், மன்னார் வளைகுடாவிலும் தகுந்த
விஞ்ஞானப் பூர்வமான ஆய்வுகள் நடத்தி, பவளப் பாறைகளுக்கு எந்த ஒரு சிறு
தாக்கமும் இல்லாத வகையில் தேர்ந்தெடுக்கப்படும் இவ்விடங்கள் 25-லிருந்து 40
மீட்டர் ஆழம் உள்ள பகுதிகளாகவும், குறைந்தது கடற்கரை யிலிருந்து 25 கி.மீ.
தொலைவுள்ளதாகவும் இருக்கும்.
6) தகுந்த ஆய்வுகள் நடத்தி கால்வாய் ஏற்படுவதால் நீரோட்டத்தின் விசை, திசை மாறுமா என்று கண்டறிதல்,
ஆய்வுகள் விசையிலும், திசையிலும் எவ்வித மாறுதல்களும் இருக்காது என்று நிரூபித்துள்ளன.
NEERI gave a clean report on environmental condition/
Supreme court directed the
Government of India to appoint another committee. National Institutute
of Ocean at Goa under took the survey and also gave a clean report/
Jayalalitha spoke about her State Government report on environmental condition which is not necessary.
மீன்வளம்: கடற்கரை மாவட்டங்களில் நடைபெற்ற பல கூட்டங்களில் கலந்து கொண்ட மீனவர்கள் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மீன்வளம் பாதிக்காது.
பவளப்பாறை:
சேதுசமுத்திரக் கால்வாய் அருகில் 21 தீவுகள் உள்ளன. அதில் மிக அருகில்
உள்ளது ஷிங்கிலி (Shingley) தீவு. அந்தத் தீவுக்கருகில் பவளப்பாறைகள்
பாதுகாப்பாகவும், வளமாகவும் உள்ளன. மேலும் தூத்துக்குடி துறைமுகத்திற்கு
உள்ளேயே இப்போதும் பவளப்பாறைகள் நலமாகவும், வளமாகவும் உள்ளன.
கப்பல் போக்குவரத்து: உலகில் தற்போதுள்ள கப்பல்களில் 82 சதவீதம் கப்பல்கள் சேதுக்கால்வாயில் போகலாம் - போகின்றன.
Coastal Community Development:
சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டச்செலவில் 2 சதவீதம் கடற்கரை ஓரத்தில்
வாழும் மக்கள் நலவளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படுகிறது. படகு இயந்திரப்
பராமரிப்பு போன்ற வேலை அங்குள்ள இளைஞர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது.
3) சென்னை அய்.அய்.டி. பேராசிரியர்கள் கூறியது என்ன?
சென்னை அய்.அய்.டி.யின் கடல் சார்
பொறியியல் துறைத் தலைவர் டாக்டர் ஆர். சுந்தரவடிவேலு, பேரா சிரியர் எஸ்.பி.
சுப்பிரமணியம் ஆகியோர் கூறிய அறிவியல் தகவல்கள் முக்கியமானவை.
இந்தத் தகவலை வெளியிட்டது கூட கல்கி இதழ்தான் (17.6.2007). அந்த நிபுணர்கள் கீழ்க்கண்டவாறு கருத்து களைக் கூறியுள்ளனர்.
சுற்றுச்சூழல் திட்டச் செலவு ஆகியவற்றைக்
கணக்கில் எடுத்துக் கொண்டே சேது சமுத்திரக் கால்வாய் வெட்டப்படுகிறது.
இப்போது அதன் போக்கை மாற்ற வேண்டும் என்பது சரியல்ல; ஏற்கெனவே
அப்பகுதியில் உள்ள பவளப் பாறைகள் பாதிக்கப்படக் கூடாது என்று கால்வாயின்
பாதை சிறிது மாற்றி அமைக்கப் பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் நிறுவனங்கள்
திட்டத்திற்கு அனுமதி கொடுத்திருக்கின்றன. உலகளவில் சுற்றுச்சூழலுக்கு
முக்கியத்துவம் கொடுக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று; பா.ஜ.க. அரசாங்கம்
இருந்தபோதே அனுமதி கொடுக் கப்பட்ட திட்டம். இது நிறைவேற்றப்பட்டால் தென்
தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் சிறந்தோங்கும்
சொல்லுவது கல்கி கூறுபவர்களோ சென்னை
அய்.அய்.டி. கடல் சார் பொறியியல் துறைத் தலைவரும், பேராசிரியரும் என்பது
குறிப்பிட்டத்தக்கதாகும்.
சேது சமுத்திர திட்ட சுற்றுச் சூழல்
கண்காணிப்புக் குழுத் தலைவர் டாக்டர் எஸ். கண்ணையன் செய்தியாளர் களுக்கு
அளித்த பேட்டியில் (25.4.2007) என்ன கூறினார்?
ராமன் பாலம் என்றழைக்கப்படும் ஆதாம்
பாலத்தில் 70 இடங்களில் 20 மீட்டர் ஆழத்துக்கு பாறை மாதிரிகளை
ஜியோகெமிக்கல் முறையில் சோதனை செய்தோம்; அதில் கடலில் உள்ள படிமங்கள்தான்
உள்ளன. அறிவியல் ரீதியாக ராமன் பாலத்தை எவரும் உருவாக்கியதற்கான எந்த
அடையாளங்களும் இல்லை. பாலம் இருக்கும் இடத்திற்குப் பதிலாக வேறு இடத்தில்
கால்வாய் தோண்டினால், மன்னார் வளைகுடாப் பகுதியில் இருக்கும் 21 தீவுகளும்
அழிந்துவிடும் வாய்ப்பு அதிகம் என்று தெரிவித்தார்.
இவற்றையெல்லாம் புறந்தள்ளிய நிலையில் பச்சோரி குழு சொன்னதை மட்டும் பிடித்துக்கொண்டு தொங்க லாமா?
சேதுசமுத்திரத் திட்டம் கூடவே கூடாது. அது
செயல்பட்டால் அதன் பலன் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும்,
அத்துறை அமைச்சராகவிருந்து அத்திட்டத்தை வெகு சிறப்பாகச் செயல்படுத்தியதால்
அதன் பலன் தி.மு.க.வுக்கும், துறை அமைச்சர் டி.ஆர். பாலு அவர்களுக்கும்
போய்ச் சேர்ந்து விடுமே என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி மேலோங்கி நிற்பதால்
அதற்குத் தோதாக பச்சோரி குழுவைப் பிடித்துத் தொங்குகிறார்கள் என்பதுதான்
உண்மை!
பச்சோரி நிபுணர் குழுகூட திட்டமே கூடாது என்று சொல்லவில்லை - அதிக செலவுகள் பற்றிதான் குறிப் பிட்டுள்ளது. (Economic Liability)
4) நீதிமன்றம் கூறியது என்ன?
சேது சமுத்திரத் தொடக்க விழாவைத் (2.7.2005) தடுக்க வேண்டும் என்பதற்காக சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தை
அணுகினர். அப்போதைய தலைமை நீதிபதி கீழ்க்கண்ட வாறு கூறி மனுவைத் தள்ளுபடி
செய்தார்.
தேசிய நலனுக்காக கொண்டு வரப்படும் சேது
சமுத்திரத் திட்டத்தைத் தடை செய்யும் நோக்கத்தோடு மனுதாரர்
நீதிமன்றத்துக்கு வந்து வழக்குத் தொடுத்துள்ளார். சேது சமுத்திரத் திட்டம்
நாட்டிற்கு நல்ல பலனைக் கொடுக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த
ஒன்றாகும். ஏனென்றால் தற்போது கப்பல்கள் இலங்கை நாட்டைச் சுற்றி வங்காள
விரிகுடா கடலுக்கு வர வேண்டியுள்ளது. பாக் ஜல சந்தியிலே குறுக்காக கால்வாய்
அமைத்தால் பெரும் அளவு பணமும், நேரமும் சேமிக்கப்பட ஏதுவாகும். ஆகவே
விழாவுக்குத் தடை கிடையாது என்று தீர்ப்புக் கூறப்பட்டதே!
(5) மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற குற்றச் சாற்றையும் இராமநாதபுரம் கூட்டத்தில் முதல் அமைச்சர் வைத்துள்ளாரே?
இது அடிப்படையற்றது!
1) மன்னார் வளைகுடாவிலிருந்து பாக் கடலுக்குச் சென்று வர தடையின்றி வழி கிடைக்கும்.
2) புதிதாக மீன்பிடித்துறைமுகங்கள்
உருவாவதால் அவற்றைச் சார்ந்து குளிர் சாதன சேமிப்புக் கிடங்குகள், மீன்
பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமையும்; அதனால் மீனவர்கள் பிடிக்கும்
மீன்களுக்கு நல்ல விலை கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.
3) கால்வாய்த்திட்டம் அதைச்சார்ந்த மற்ற
சிறு திட்டங்கள் ஆகியவற்றில் நேரடி வேலை வாய்ப்பு மற்றும் மறைமுக வேலை
வாய்ப்புகள் கிடைக்கும். 10 ஆயிரம் பேர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பும், 50
ஆயிரம் பேர்களுக்கு நேர்முக, மறைமுக வேலை வாய்ப்பும் கிடைக்கும்.
4) எந்த ஒரு பகுதியும் தொழில் வளர்ச்சி
அடையும் பொழுது, அதனால் உடனடியாக பயன்பெறப்போவது அப்பகுதி மக்கள் தான்.
அந்த வகையில் சேதுக்கால்வாய்த் திட்டத்தால் கடலோர மாவட்ட மக்கள் பெரிதும்
பயன் பெறுவர். இதில் மீனவர்களும் அடங்குவர்.
5) சேது சமுத்திரக்கால்வாய் இந்திய -
இலங்கை கடல் எல்லையைச் சார்ந்து அமையப் போவதால், எல்லை தெரியாமல் மீனவர்கள்
இலங்கைக் கடல்பகுதியில் சென்று அங்குள்ள கடற்படையினரிடம் அவதிக்குள்ளாகும்
நிலை மாறும்.
6) தூத்துக்குடி துறைமுகத்தை
எடுத்துக்கொண்டால், அதனால் மிகுந்த பயன் பெற்றவர் மீனவர் இனத்தவர்தான்.
அங்குள்ள முகவர்களில் பெரும்பாலோர் மீனவ இனத்தைச் சார்ந்தவர்கள் தான். 30
ஆண்டுகளுக்கு முன் முகவர்களாக இருந்தவர்கள் இன்று முதலாளிகளாக
இருக்கின்றார்கள். அதைப்போல சேதுக்கால்வாய்த் திட்டத்தால் இன்று சாதாரணமாய்
மீன்பிடித் தொழிலில் இருக்கும் கடலோர மாவட்டங்களைச் சார்ந்த பல மீனவர்கள்
தொழில் அதிபர்களாய் மாறும் வாய்ப்பு ஏற்படும்.
மேற்கண்ட காரணங்களால் சேதுசமுத்திரத் திட்டத்தால் மீனவர்கள் வாழ்வு நிச்சயம் மேம்பாடு அடையும்.
(6) இந்தத் திட்டத்தினால் ஏதும் பயன்கள் கிடையாது என்கிறாரே முதல் அமைச்சர்?
2008 இல் 3000 கப்பல்களும், 2025இல் 8000
கப்பல்களும் பயணம் ஆகும். இத்திட்டத்திற்காக செலவு செய்யப்படும் 2427.40
கோடி ரூபாயும் 2017இல் வட்டியும் முதலுமாக வந்து சேரும். கிழக்குக்
கடற்கரைப் பகுதிகளில் உள்ள துறை முகங்கள் வளர்ச்சி பெறும். தொண்டியில்
ரூ.16 கோடி செல வில் சிறு கப்பல்கள் தங்கும் தளம் - முத்துப் பேட்டையில்
இரு சிறு மீன் பிடி துறைமுகங்கள், தனுஷ்கோடியில் ரூ.16 கோடி செலவில்
மீன்பிடி துறைமுகம் மீனவர் வளர்ச்சிக்காகச் செலவிடப்படுகிறது.
அ) இந்தியக்கடல் எல்லைக்குள் ஒரு கடல் வழி நெடுஞ்சாலை அமையும்.
ஆ) இந்தியக் கிழக்குக்கடற்கரைத்
துறைமுகங்களிலிருந்து ஏற்றுமதி
இறக்குமதிச் சரக்குகளின் போக்குவரத்துச்
செலவு குறையும். எனவே உலகச் சந்தையில் நம் ஏற்றுமதிப் பொருட்கள் போட்டி
போடமுடியும்; இறக்குமதியாகும் கச்சாப் பொருட்களின் விலை குறையும் என்பதால்
உற்பத்தியாகும் பொருட்களின் விலை குறையும்.
இ) இந்தியாவின் கடலோர வணிகம் மேம்பாடு
அடையும், இதனால் எல்லாத் துறைமுகங்களிலும் வேலை வாய்ப்பும், அதைச்சார்ந்த
பகுதிகளில் தொழில் உற்பத்தியும் பெருகும்.
ஈ) தமிழகக் கடலோர வணிகமும், பன்னாட்டு
வணிகமும் சிறக்கும்; இதனால் புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய
ஊர்களில் இப்போது இருக்கும் சிறு துறைமுகங்கள் பெருமளவில் வளர்ச்சி
அடையும். இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு புதிய சிறு துறைமுகம் அமையும்.
உ) மீனவர்களுக்கு நேரடியாக பயன்படும்
வகையில் தூத்துக்குடிக்கும் - நாகப்பட்டினத்திற்கும் இடையில் மீன்பிடி
துறைமுகங்கள் தேவைக்கேற்ப உண்டாகும்.
ஊ) தமிழகக் கடலோரப் பகுதிகளில் தொழில்
வளர்ச்சி பெருகும். இதனால் பொருளாதார வளர்ச்சி அடையும். புது மீன்பிடி
துறைமுகங்களால் மீனவர்கள் பிடிக்கும் மீன்களுக்கு நல்ல விலையும்
கிடைக்கும்.
எ) மன்னார் வளைகுடாவிலிருந்து பாக்கடல் சென்று வர மீனவர்களுக்கு இக்கால்வாய் வசதியளிக்கும்.
ஏ) தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பெருகும்.
அய்) இந்தியச் சரக்குகள் அந்நியத் துறைமுகங்களில் பரிமாற்றம் செய்யப்படுவது தவிர்க்கப்படும்.
ஒ) பல்வேறு வகைகளிலும் அந்நியச் செலாவணி மீதமாகும்; அந்நியச் செலாவணி வருவாயும் அதிகரிக்கும்.
(7) இந்தத் திட்டத்தால் 20 ஆயிரம்
டன் எடை கொண்ட கப்பல்கள்தான் செல்ல முடியும். 30 ஆயிரம் டன் எடை கொண்ட
கப்பல்களை எடுத்துக் கொண்டால் தற்போதுள்ள கப்பல்களில் ஒரு சில கப்பல்கள்
தான் செல்ல முடியும் என்று கூறியுள்ளரே முதல் அமைச்சர்?
ஆனால் உண்மை நிலை என்ன?
இந்தக்கால்வாய் அமைக்கப்பெற்று கப்பல்கள்
செல்லத் துவங்கும் பொழுது 10.7 மீட்டர் மிதவை ஆழத்திற்கு ஏறத்தாழ 50,000
டன்கள் வரை சரக்குகள் கொண்ட கப்பல்கள் ஆண்டிற்கு 2000-த்திலிருந்து 3000
வரை செல்லக்கூடும். இது ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 6 இல் இருந்து 9 மட்டுமே.
இந்த எண்ணிக்கை தொடர்ந்து வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கலாம்.
கால்வாய் 300 மீட்டர் அகலம் இருப்பதால் ஒரே சமயத்தில் கப்பல் செல்வதற்கும்,
வருவதற்கும் எந்தச் சிரமமும் இருக்காது. மேலும் கால்வாயில் கப்பல்கள் தவிர
மீனவர்களின் படகுகளும் செல்ல அனுமதிக்கப்படும்.
(8) பி.ஜே.பி. இத்திட்டத்தை எதிர்ப்பது சரியா?
உண்மையில் இந்தத் திட்டத்திற்கு அனுமதி
அளிக்கப் பட்டதே வாஜ்பேயி பிரதமராக இருந்த பிஜேபி ஆட்சி யின்போதுதான்!
முரளி மனோகர் ஜோஷி, சு. திருநாவுக்கரசர், வேத் பிரகாஷ் கோயல் ஆகியோர்
இத்திட்டத்திற்கு ஆதரவாக இருந்து ஒப்புதலும் அளித்தனர்.
1998 செப்டம்பர்
15 அன்று சென்னை கடற்கரையில் ம.தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட
பெரியார் - அண்ணா பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற பிரதமர் வாஜ்பேயி சேது
சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று அறிவித்தார்.
1999 பட்ஜெட்டில் நிதி அமைச்சர் (பிஜேபி)
யஷ்வந்த் சின்கா சேது சமுத்திரத் திட்ட தொடக்க ஆய்வுக்காக ரூ.5 கோடி
ஒதுக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
9) இராமன் பாலம் பற்றி முதல் அமைச்சர் பேசாதது ஏன்?
ராமர் பாலம் குறித்து மத்திய அரசு
முரண்பாடான தகவல்களைத் தருகிறது. ராமன் பாலத்தைத் தகர்த்து மதக் கலவரங்கள்
ஏற்படுத்த மத்திய அரசு எடுக்கும் முயற்சியைக் கழகம் தடுக்கும் (அதிமுக
அதிகாரப்பூர்வ ஏடான நமது எம்.ஜி.ஆர். - 23.10.2008) என்று கூறி அதன்
அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கினைத் தொடுத்த முதல் அமைச்சர்
ஜெயலலிதா, ராமநாதபுரத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்துப் பேசிய
போது, ராமன் பாலம் குறித்துப் பேசாமல் திட்டமிட்டு இருட்டடித்தது ஏன்?
காரணம் அத்தொகுதியில் அ.இ.அ.தி.மு.க.வின் வேட்பாளரே அன்வர் ராஜாவாயிற்றே!
முஸ்லீம்கள் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாயிற்றே. அங்கே அதனால்
இராமன் பாலம் வாதம் காணாமற் போயிற்றுப் போலும்! என்ன தந்திரம்! இதெல்லாம்
மக்களிடத்தில் எடுபடப் போவதில்லை.
தமிழ்நாட்டு மக்கள் 150 ஆண்டு காலமாக
எதிர்பார்க்கும் ஒரு திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்வோடும், ராமன் பெயரைச்
சொல்லியும் தடுத்திடும் அ.இ.அ.தி.மு.க.வையும் இந்துத்துவா கண் கொண்டு
பார்த்து ராமர் பாலத்தைத் தகர்க்கக் கூடாது என்று கூறி, திட்டத்தை
முடக்கும் பி.ஜே.பி. அதற்குத் துணைபோகும் கூட்டணிக் கட்சிகளையும்
தமிழ்நாட்டு வாக்காளப் பெரு மக்கள் அடையாளம் கண்டு நடக்கவிருக்கும் 16ஆவது
மக்களவைத் தேர்தலில் தக்கப் பாடம் கற்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
-----------------------------------------கி.வீரமணி தலைவர் திராவிடர் கழகம்-31-03-2014
சேது சமுத்திரத்திட்டம் : சில முக்கிய குறிப்புகள்
சுற்றுப்புறச்சூழலுக்கு
பாதுகாப்பானதாக அமையும் விதத்தில் சேது சமுத்திரத்திட்டம் 1999 ஆம் ஆண்டு
ஏப்ரல் மாதம் துவங்கப்பட்டது. அப்போது ஆட்சியில் இருந்த பாஜக அரசின்
தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த அருண்ஜெட்லி கடல்வாழ்
உயிரினங்களின் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்த பல ஆய்வாளர்களின்
ஆலோசனையைக் கேட்டு அறிந்த பிறகு இந்த திட்டம் நடைமுறைப்படுத்த தேவையான
ஆய்வை மேற்கொள்ள அனுமதியளித்தார். 2001-ஆம் ஆண்டு அதிமுக அரசின் தேர்தல்
அறிக்கையில் சேதுசமுத்திரத் திட்டமும் இடம்பெற்றிருந்தது. இத்திட்டத்
தின்படி கோதண்டராமசாமி கோவில் பகுதியில் துவங்கி ஆதம் பாலம் எனப்படும்
மணல்மேடுகளை அகற்றலாம் என்ற சுற்றுப்புறச்சூழல் அனுமதியும் கிடைத்தது. 2002
மே மாதம் கலைஞர் அவர்கள் அப்போதைய பாஜக பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயி
அவர்களுக்கு கடிதம் எழுதி சேது சமுத்திரத்திட்டத்தை தாமதமின்றி விரைவில்
நிறைவேற்றிட வேண்டுகோள் விடுத்தார். ஜூலை 2002ஆம் ஆண்டு கப்பல்துறை
அமைச்சர் வி.பி. கோயல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகைதந்து
சேதுசமுத்திரத்திட்டம் பற்றியும், அதனால் விளையும் நன்மைகள் குறித்த
அறிக்கைகள்பற்றி அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார்.
2002
அக்டோபர் 15 ஆம் தேதி கலைஞர் மீண்டும் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதி
சேதுசமுத்திரத்திட்டத்தை விரைந்து முடிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
2002 ஆம் ஆண்டு அக்டோபர் 29 அன்று கப்பல்துறை அமைச்சர் வி.பி.கோயலுக்கு
மத்திய அமைச்சர் எஸ்.திருநாவுக்கரசர் சேதுசமுத்திரத்திட்டம் குறித்து
விரிவான விளக்கம் ஒன்றை அளித்தார். 2005ஆம் ஆண்டு மார்ச் 31 தேசிய
சுற்றுப்புறப்பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி கிடைத்தது. அதன் பிறகு மன்மோகன்
சிங் தலைமையிலான யுபிஏ அரசில் கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக
டி.ஆர்.பாலு பதவியேற்றார். அதன் பிறகு கலைஞரின் விடா முயற்சியால் சேது
சமுத்திரத்திட்டத்திற்கு 2005-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2427.4 கோடி ரூ.
மதிப்பில் திட்டம் துவங்க நிதி ஒதுக்கப்பட்டது. இதனிடையே தமிழ்நாடு
சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் 2004 ஆம் ஆண்டிலிருந்து 2005 வரை
தமிழ் நாட்டின் கடற்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் சேது
சமுத்திரத்திட்டத்தைப் பற்றி அவர்களின் ஆலோசனை களைக் கேட்டு
அறிந்துகொண்டது.
2004
டிசம்பர் 6 ஆம் தேதி சேது சமுத்திர கால்வாய்த் திட்ட நிறுவனம்
அமைக்கப்பட்டது. இதன் துவக்கவிழா மதுரையில் 2005 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம்
தேதி நடைபெற்றது. துவக்கவிழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக
தலைவர் கலைஞர், டி.ஆர்.பாலு, பி.சிதம்பரம் போன்றோர் கலந்து கொண்டனர்.
ஆதம் பாலம் எனப்படும் மணல் திட்டுக்களைத் தோண்டும் பணி 2006-ஆம் ஆண்டு
டிசம்பர் 12இல் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த
நிலையில், இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் மதுரை
நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம்
சுற்றுப்புறச்சூழல் அமைப்பின் அறிக்கை மற்றும் நாட்டு நலன் கருதி அரசு
எடுத்த நடவடிக்கையை தடைசெய்ய முடியாது என்று கூறி
சேதுசமுத்திரத்திட்டத்திற்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது.
2005ஆம்
ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி இந்திய அரசு சேது சமுத்திரத்திட்டத்தை விரைந்து
முடிக்கும் வகையில் கண்காணிப்புக் குழு ஒன்றை நியமித்தது. இதன்
அடிப்படையில் பணிகள் சுமூகமாக நடைபெற்றுக்கொண்டு இருந்தன.
2007ஆம்
ஆண்டு சென்னை பல்கலைகழகத் துணைவேந்தர் இராமச்சந்திரன் தலைமையில் 19
பேராசிரியர்கள் கொண்ட நாக்பூர் தேசிய சுற்றுச் சார்புப் பொறியியல் ஆய்வு
நிலையம் (Neeri) உயிர்வள ஆய்வு மய்யம் (Zoological Survey of India)
அகழ்வாராய்ச்சி மய்யம், (Archaelogical Survey of India) சென்னை
பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் கிருஷ்ணசாமி போன்றோர் இந்தக் கண்காணிப்பு
குழுவில் இடம் பெற்றனர்.
பாரதீய
ஜனதா கட்சி இந்தத் திட்டத்தை ஆரம்பத்தில் முழு ஆதரவு தந்து பிறகு மதவாத
அமைப்புகளின் சூழ்ச்சிக்கு இணங்கி, சேது சமுத்திரத் திட்டம் என்பது இராமர்
இலங்கைக்குச் சென்ற போது கட்டிய பாலம்; இது இந்துக்களின் புனித
சின்னங்களுள் ஒன்றாகும். இதை இடித்து சேது சமுத்திரத் திட்டம் கொண்டு
வரக்கூடாது என்று கூறி சுப்பிரமணியசாமி, ஜெயலலிதா, தண்டி சுவாமி
வித்யானந்தா பாரதி, ராமகோபாலன் போன்றோர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத்
தொடுத்தனர். திட்டம் ஆரம்பித்து நடந்து கொண்டு இருந்த போது உச்ச
நீதிமன்றம் 2007ஆஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று சேதுசமுத்திரத்திட்டத்திற்கு
இடைக்கால தடைவிதித்தது.
பிரபல
வரலாற்று ஆய்வாளர்கள் வின்சென்ட் ஏ சுமித், ஆர்.சத்யநாதய்யர் ரோமில தாப்பர்
போன்றோர் சேதுசமுத்திரத்திற்கும் இராமாயணத்திற்கும் உள்ள கதையை பொய் என
தங்களின் ஆய்வுகளின் மூலம் நிரூபித்துவிட்டனர். மேலும் இராமாயணம் ஒரு
வரலாற்று நிகழ்ச்சி இல்லை; அது ஒரு புனைவுக்கதை என்பது அனைவரும் அறிந்ததே,
அதே போல் இலங்கை தலைமன்னார் நிர்வாகமும் ஆதம் மணல்மேட்டை இராமர் கட்டிய
பாலம் என்பதை மறுத்து இது இயற்கையாக அமைந்த மணல் திட்டு என்று
கூறிவிட்டது. 125 வருடங்களுக்கு முன்பு டச்சுப் பேராசிரியர்கள் ஆதம் மணல்
மேடுகளை ஆராய்ந்து தங்கள் ஆய் வறிக்கையை ஜெர்மன் மொழியில் 1891ஆம் ஆண்டு
பாக் நீரிணைப்பில் உள்ள ஆதம் மேடுகளும், பவளப் பாறைகளும் என்ற தலைப்பில்
நூலாக (Adam’s Bridge and Coral Reef of the Palk Strait)
வெளியிட்டுள்ளனர்.