முதல் மணி அடித்தார் தலைவர் வீரமணி!
சென்னை - பெரியார் திடல் நடிகவேள்
எம்.ஆர். இராதா மன்றத்தில் முதல் மணி அடிக்கப்பட்டது. இந்தியாவில்
இந்துராஜ்ஜியத்தை நிறுவுவோம் என்று சூளுரைத்துப் புறப்பட்டுள்ளது ஒரு
கூட்டம்.
இதற்கு முன்பு அரசல்புரசலாகப் பேசிவந்த அந்தக் கூட்டம் இப்பொழுது தேர்தல் நேரத்தில் வெளிப் படையாக மணி அடித்துக் கிளம்பிவிட்டது.
இந்த அபாயத்தைச் சுட்டிக்காட்டும் எச்சரிக்கை மணியை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஒலித்தார்.
இந்துத்துவா - நேற்று - இன்று - நாளை
எனும் தலைப்பில் சிறப்புக் கூட்டம் நேற்று (25.7.2013) மாலை நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில்தான் எச்சரிக்கை மணியை ஒலித்தார்.
ஆர்.எஸ்.எஸின் தலைவராக இருக்கக்கூடிய மோகன்பகவத் கடந்த ஞாயிறன்று குரு பூர்ணிமா நிகழ்ச்சியில் குறிப்பிட்டதை எடுத்துக்காட்டினார்.
இந்தியாவின் அடையாளம் என்பதே இந்துத்து
வாதான் என்று அவர் பேசியிருப்பதை எடுத்துக் காட்டினார். வெகுகாலமாக இந்த
அடையாளம் இருப்பதாக பகவத் சொன்னதில் உண்மை உண்டா?இந்தியா என்பது ஒரு நாடா? துணைக் கண்டமா?
இந்தியா என்ற பெயர் எப்பொழுது வந்தது? 56 தேசங் களாகப் பிரிந்து கிடந்த
நாட்டை ஒரு குடையின்கீழ் துப்பாக்கி முனையில் கொண்டு வந்தவன் வெள்ளைக்
காரன் அல்லவா!
இந்தியாவில் எத்தனை எத்தனை இனங்கள், எத்தனை எத்தனை மொழிகள், எத்தனை எத்தனை பண்பாடுகள்!
இவற்றையெல்லாம் மறந்துவிட்டு இந்துத்துவா என்கிற அடையாளம்தான் இந்தியாவுக்கு என்பது எவ்வளவு பெரிய இமயமலைப் பொய் மூட்டை!
முதலில் இந்து என்றால் என்ன என்பதை விளக்
கட்டுமே பார்க்கலாம் - அதை விளக்கி விட்டல்லவா அதன் அடையாளத்தைப் பற்றிப்
பேசவேண்டும்? என்று ஆணிவேரில் பலத்த அடி கொடுத்தார் ஆசிரியர்.
இந்து என்ற சொல் இந்தியாவில் எந்த மொழியில் உண்டு? என்ன ஆதாரம் கூற முடியுமா?
இந்து என்ற பெயரை வெள்ளைக்காரன் கொடுத்
தானோ, நாம் பிழைத்தோமோ என்று மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார்
சந்திரசேகரேந்திர சரஸ்வதி சொல்லவில்லையா?
இந்த நிலையில் எங்கிருந்து குதித்தது இந்து அடையாளமும் - இந்துக் கலாச்சாரமும்?
இந்து என்ற சொல்லுக்கு இந்திய அரசமைப்புச்
சட்டம் கொடுத்துள்ள விளக்கத்தை திராவிடர் கழகத் தலைவர் எடுத்துச்
சொன்னபொழுது கூட்டமே கலகலத்தது.
யார் யாரெல்லாம் கிறித்தவர் அல்லவோ,
யார் யார் எல்லாம் முசுலிம் அல்லவோ, பார்சி அல்லவோ அவர்கள் எல்லாம்
இந்துக்கள் என்று சொல்லுவதன்மூலம் இந்து என்பதற்கு எந்த ஒரு தனித்துவமும்
இல்லை என்று விளங்கவில்லையா?
எது ஒலி பெருக்கி என்று கேட்டால், எது
மேசை அல்லவோ எது புத்தகம் அல்லவோ, எது பேனா அல்லவோ அதுதான் ஒலிபெருக்கி
என்று சொன்னால், எப்படி இருக்கும்? என்று தமிழர் தலைவர் சொன்ன பொழுது,
சிரிப்பும், கரவொலியும் கலந்து வந்தன.
தனித்துவம் இல்லாத ஒன்று ஒரு நாட்டு மக்களுக்கு அடையாளமாக இருக்க முடியுமா?
கடவுள் நம்பிக்கை இல்லாதவன் கிருத்தவனாக
இருக்க முடியாது; முசுலீமாகவும் இருக்க முடியாது. ஆனால், அர்த்தமுள்ள இந்து
மதத்தில் கடவுள் நம்பிக்கை உள்ளவனும் இந்து, நம்பிக்கை இல்லாதவனும்
இந்துவாம்!
(கூட்டத்தில் ஒரே சிரிப்பு!).
ஹிந்துத்வா எப்படி வந்தது? 1924 ஆம்
ஆண்டுக்குப் பிறகு அதனை அறிமுகப்படுத்திய ஆசாமி யார் என்பதை ஆதாரத்தோடு
தெரியப்படுத்தினார் ஆசிரியர்.
வெளிநாட்டில் சென்று படித்து வந்த வி.டி. சாவர்க்கர் தான் இதன் தந்தை.
Hindus are a nation bound by
a common culture,
a common history,
a common language,
a common country
and a common religion
பொதுக் கலாச்சாரம்
பொது வரலாறு
பொது மொழி
பொது நாடு
பொது மதம் - இவை அய்ந்தும் சேர்ந்ததுதான் இந்துத்துவா என்கிறார் சவர்க்கார்.
இந்த அய்ந்து பொது அம்சங்களும்
இந்தியாவில் எங்கு இருக்கின்றன? ஹிந்து என்பதில்கூட எத்தனை எத்தனைப்
பிரிவுகள் - பிளவுகள் - பிணக்குகள்! எத்தனை எத்தனை முரண்பட்ட அம்சங்கள்!
எப்படி கொண்டு போகிறார்கள்? ஆர்.எஸ்.எஸின்
தலைவராகவிருந்த மோகன் பகவத் கூறுகிறார்: யூதர்களும், பார்சிகளும் தவிர
இந்தியாவிலுள்ள அனைத்து மதக்காரர்களும் இந்துக்கள்தானாம். இந்த பகவத்
மட்டுமல்ல, இவருக்கு முன்னர் இருந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் கு.சி.சுதர்சன்
(குப்பஹள்ளி சீதாராமய்யா சுதர்சன்) ஆக்ராவில் நடைபெற்ற (15.10.2000)
தேசியப் பாதுகாப்பு முகாமின் நிறைவு விழாவில் என்ன கூறினார்?
பூர்வீகத்தில் நாங்கள் இந்துக்கள் என்ற
கருத்தையும், பிற மதங்களின் கருத்தையும், பிற மதங்களின் கருத்து களுக்கு
மதிப்பளிக்கும் தன்மையையும் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஏற்று தேசிய
நீரோட்டத்தில் இணைய வேண்டும்.
ஸ்ரீராமபிரான், ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆகியோ
ருடைய ரத்தம்தான் தங்களுடைய நரம்புகளில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை
முஸ்லிம்கள் ஒப்புக் கொள்ளவேண்டும் (தினமணி, 16.10.2000) என்று
பேசவில்லையா? நேற்றைய கூட்டத்தில் இதனை எடுத்துக்காட்டிய திராவிடர் கழகத்
தலைவர் ஓர் வினாவை எழுப்பவும் தவறவில்லை.
இப்பொழுதுள்ள முஸ்லிம்களும்,
கிறிஸ்தவர்களும் நமது முன்னோர்கள் என்று ஒப்புக்கொண்டுவிட்ட பிறகு -
அவர்களை ஏன் பிரித்துப் பேசவேண்டும்? நம் சகோதரர்கள் என்ற உணர்வு ஏன்
வரவில்லை என்ற வினாவை எழுப்பினாரே பார்க்கலாம்.
கிறித்தவர்கள் ராமனையும், முஸ்லிம்கள்,
கிருஷ் ணனையும்
வணங்கவேண்டும் என்று சொல்லுவ தோடு நிற்கவில்லை. குருஜி
கோல்வாக்கரின் வரையறுக்கப்பட்ட தேசியம் எனும் நூலில் இந்துஸ்தானில் உள்ள
இந்து அல்லாதவர்கள் அன்பு, தியாகம் போன்றவைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
அவர்கள் தங்களை அயல் நாட்டினராகக் கருதக்கூடாது; அல்லது இந்தத் தேசத்தை
முழுவதும் ஆதரித்து வாழவேண்டும்; எதையும் கேட்காமல், எந்தச் சலுகைகளையும்
பெறாமல், எதற்கும் முன்னுரிமை பெறாமல் குடிமக்களின் உரிமையும் இன்றி
இருத்தல் வேண்டும் என்று எழுதி வைத்திருப்பவர்தானே இந்த இந்துத்
துவாவாதிகளின் குருஜியான கோல்வால்கரின் கருத்து.
ஹிந்து ராஜ்ஜியத்தை அமைக்கப் போவதாகச் சொல்லும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த நிலைதானே ஏற்படும்?
அவர்கள் கூறும் ஹிந்துத்துவாவில் கூறிய
படி ஒரே நாடு என்றால் மாநிலங்களே கூடாது - ஒரே நாடாகத் தானிருக்கும் -
சமஸ்கிருதம்தான் ஒரே மொழி - பார்ப்பனக் கலாச்சாரம் ஒன்று மட்டும்தான் அங்கீ
கரிக்கப்படும்.
மதுரையிலே விசுவ ஹிந்து பரிஷத்துக்காரர்களின் மாநாட்டில் போடப்பட்ட தீர்மானத்தைக் கழகத் தலைவர் எடுத்துக்காட்டினார்.
ஹிந்து ராஜ்ஜியம் வந்தால் இந்திய
அரசமைப்புச் சட்டம் தூக்கி எறியப்படும்; மனுஸ்மிருதிதான் அரசமைப்புச்
சட்டமாகும் என்று சொல்லவில்லையா? என்ற தகவலைச் சொன்னபொழுது பார்வையாளர்கள்
மத்தியில் அதிர்ச்சி கலந்த அமைதி நிலைகொண்டது!
நமது அரசர்கள் எல்லாம் என்ன சொல்லுவார்கள்? மந்திரி மாதம் மும்மாரி பொழிகிறதா? மனுதர்மப்படி ஆட்சி நடக்கிறதா? என்றுதானே கேட்பார்கள்.
அந்த நிலை எப்படி மாறியது? எப்பொழுது
மாறியது? கல்வி உரிமை நமக்கு வந்த வரலாறு என்ன? யார் காரணம்? என்ற வினாவை
எழுப்பிய தமிழர் தலைவர் அதற்கு விடையையும் தந்தார். தந்தை பெரியார்,
திராவிடர் இயக்கம்- தன்மான இயக்கம் தோன்றிய பிறகே இந்த நிலைமைகள் மாறின
என்று குறிப்பிட்ட பொழுது பலத்த கைதட்டல்!
ஹிந்துத்துவாவை அரங்கேற்றிய
வி.டி.சாவர்க்கர் இந்து ஆட்சி எப்படி இருக்கவேண்டும் என்கிறார்? அதனை
ஆதாரத்தோடு எடுத்துக்காட்டினார் ஆசிரியர்.
சதர்வர்ணாய வியவஸ்தாபன்
யாஸ்மின்தேஷ் ஹிக நாவித்யத்தே;
தாம் மிலேச்சதேஷ்ம் ஜன்யதார் ஆரிய வர்த்தாஷ் பரே
The land where the system of Four Varnas does not exit should be known as the Mellach country Aryavart lies away from it’’
எந்த நாட்டில் நால் வருணம் இல்லையோ, அந்த
நாடு மிலேச்சர்களின் நாடு என்று பொருள். ஆரிய வர்த்தம் என்பது அதற்கு
மாறுபட்டது என்றுகூறுகிறார் வி.டி.சாவர்க்கர்.
இதில் கிறித்தவர்களாக மாறியவர்கள்
மத்தியில் இன்னும் ஜாதி ஒட்டிக் கொண்டுள்ளது. ஜாதியை முற்றிலும்
நிராகரித்தவர்கள் முஸ்லிம்கள் மட்டுமே!
மோடி ராஜ்ஜியம் வந்தால் அது அசல் மனுதர்ம ராஜ்ஜியமாக ஆரிய வர்த்தமாகத்தான் இருக்கும்.
இதுவரை பின்னணியில் இருந்து இயக்கி வந்த
ஆர்.எஸ்.எஸ். - சங் பரிவார்கள் இப்பொழுது முன்னணி யிலே வந்து நரேந்திர
மோடியை முன்னிறுத்துகின்றன. தேர்தல் களத்திலேயே முன்னிறுத்த முனைந்து
விட்டனர்!
தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது இந்துத் தேசியவாதி என்று மோடி சொல்லுவதன் இரகசியம் இதுதான்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை (Preamble) என்ன சொல்லுகிறது?
We, the people of India having solemnly
resolved to constitute India in to (Sovereign Socialist Secular
Democratic Republic) and to secure to all its citizens Justice, Social,
Economic and Political என்றுதான் தொடங்குகிறது. மதச் சார்பற்ற, சோசலிசக்
குடியரசை அமைப்பது என்பதுதானே இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை.
இந்த மதச் சார்பற்ற தன்மையை
ஏற்றுக்கொள்ளாத - தன்னை ஒரு இந்துத் தேசியவாதி என்று கூறும் ஒருவர்
இந்தியாவின் பிரதமர் என்று சொல்லும் ஹிந்துத்துவா சக்திகளை
முறியடிக்கவேண்டாமா? மோடி கூறுவது சட்ட விரோதம் அல்லவா? என்றார் தமிழர்
தலைவர்.
இந்தியாவுக்கே முதல் மணியை - எச்சரிக்கை மணியை பெரியார் திடல் ஒலிக்கிறது; இது தொடக்கம்தான்.
மத்தியில் இருக்கும் ஆட்சியின்மீது
இருக்கும் சில அதிருப்தி உணர்வுகளைப் பயன்படுத்தி, இதுதான் சந்தர்ப்பம்
என்று கருதி ஹிந்துத்துவாவை அரங்கேற்ற லாம் என்று நினைக்கிறார்கள்.
வெறும் கோபத்தினால் மக்கள் தவறான முடிவை
எடுத்தால் அதன் விளைவு - மனுதர்மம்தான் நம்மை மீண்டும் ஆளக்கூடிய அபாயம்
இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது என்று எச்சரித்தார்; ஆம், முதல்
மணியை அடித்தார் தமிழர் தலைவர்.
75 நிமிடங்கள் உரையாற்றினார். தொடக்கத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையாற்றினார்.
நடிகவேள் ராதா மன்றம் நிரம்பி வழிந்தது -
பலதரப்பினரும் இந்த ஆய்வுரையைச் செவிமடுத்தனர். உரை நிகழ்த்திய பிறகு பல
தரப்பினரும் தமிழர் தலைவரைச் சுற்றி நின்று தங்கள் பாராட்டுகளை, உணர்வுகளை
வெளிப்படுத்தினர்.
பெரியார் பேருரையாளர் பேராசிரியர் மா.நன்னன் அவர்கள்
இதுவரை அறிந்திராத பல புதிய தகவல்களை அறிந்தேன் என்று கூறி,
இந்துத்துவாவின் பேராபத்தை முழுவதும் தாங்கள் உணர்ந்துள்ள அளவுக்கு வேறு
எவரையும் என்னால் நினைக்க முடியவில்லை என்று மனந்திறந்து பாராட்டினார்.
இந்தவுரை முன்னுரைதான் - சில நாட்களில் தொடரும்.
------------------------------------------(வளரும்)
**********************************************************************************
இந்து மதம்பற்றி நீதிபதி ராஜமன்னார்
இந்து மதம்பற்றி நான் பேசுகையில், அந்தச்
சொல்லினுடைய தெளிவில்லாத - கட்டுப்பாடற்ற - பொருள் விளக்கம்பற்றிய
உணர்வோடுதான் இருக்கிறேன் என ஒளிவு - மறைவு இல்லாமல் வெளிப்படுத்தித்
தீரவேண்டியிருந்தது.
(‘‘When I speak of Hindu religion I am
actually conscious of the vague connotation of that word’’ Michael vs
Venkateswaran case: MLJ 239/1952-1)
தம்முடைய நிலைக்குப் பக்கத் துணையாக
நீதிபதி ராஜமன்னார் அவர்கள் இந்தியப் பண்பாட்டு மரபு என்னும் நூலிருந்து
கீழ்வருவதைச் சான்று காட்டினார்.
மதம் என்ற சொல்லை இப்போது நாம்
புரிந்துகொள்ளும் பொருளின்படி இந்துவியல் என்பது ஒரு மதம் இல்லை. அச்சொல்
இந்திய மூலத்தைக் கொண்டதன்று. அல்லது இந்துக்கள் என்பவர்களால் அச்சொல்
தங்களின் மதத்திற்குப் பெயராக ஒருபோதும் பயன்படுத்தப் பெற்றதே கிடையாது.
(‘‘Hinduism is not a religion in the
sense in which we now understand the word. The word is not Indian in
origin; nor was it ever used by the Hindus as the name of their
religion’’ The Cultural Heritage of India; Haridass Battacharia; ILR
1953 (Madras)- 106).
சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் இதனை எடுத்துக்காட்டினார்.
******************************************************************************
----------------------------------------26-7-2013
ஹிந்துராஷ்டிரம் வந்தால்... எச்சரிக்கிறார் தமிழர் தலைவர்!
இந்துத்துவா - நேற்று - இன்று - நாளை
எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் எடுத்து
வைத்த தகவல்கள் (25.7.2013) பலவும் பார்வையாளர்களுக்குப் புத்தம்
புதியதாகவே இருந்தன. நேபாளம் முதல் கேரளா வரை இந்து ராஜ்ஜியம் எப்படி
கொடிகட்டி ஆண்டது என்பதை எடுத்துச் சொன்னால், ஹிந்துராஷ்டிராவின் ஆபத்தை
உணரலாம் என்ற பீடிகையோடு பல்வேறு ஆதாரங்களையும் எடுத்துக்காட்டினார்.
20 ஆம் நூற்றாண்டுவரை இந்துக்களுக்கு
என்று ஒரு ராஜ்ஜியம் இருந்து வந்தது; அதுதான் நேபாளம் - இந்து மன்னர்களின்
கைகளில் அந்த ஆட்சி இருந்து வந்தது. மாவோயிஸ் டுகள் தலைதூக்கி அந்த ராஜ்
ஜியத்தைத் தரை மட்டமாக்கினர்.
ஹிந்துராஷ்டிராவை அமைக்கப் போவதாக
இந்தியாவில் உள்ள காவிகள் - சங்பரிவார்கள் முஷ்டி யைத் தூக்கிக்கொண்டு
அரட்டைக் கச்சேரிகளை நடத்துகிறார்களே, மீண்டும் மனுதர்மக் கொடியைப்
பறக்கவிட்டுக் குளிர்காயலாம் என்று ஆரிய நரிகள் நாக்கைத் தொங்கப்
போட்டுக்கொண்டு அலைகின் றனவே - அப்படி ஓர் இந்து ராஜ்ஜியம் வந்தால் அது
எப்படி இருக்கும் என்பதை எடுத்துக்காட்டவே இந்து ராஜ்ஜியமாக இருந்த நேபாளம்
எப்படி இருந்தது என்பதை எடுத்துக்காட்டினார் - எதையும் ஆதாரத் துடன்
மேடைகளில் பேசுவதை தம் இயல்பாகக் கொண்ட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு
கி.வீரமணி அவர்கள்,
நேபாளத்தைப் பாரீர்!
மகா தவிரா சங்கராசி
ஸ்த்ரா (Maha sthavira sangharakshita)
என்ற புத்த பிக்கு விசுவ ஹிந்து பரிஷத்தினர் ஏற்பாடு செய்த டில்லிக்
கூட்டத்தில் (23.2.1982) பேசிய பேச்சினை ஆதாரப்படுத்தினார்.
இதோ புத்தப் பிக்குப் பேசுகிறார்:
1949 மற்றும் 1952-களில் நான் நேபாளம்
சென்றதுண்டு. ஜாதி முறை எப்படியெல்லாம் அங்கே கடைபிடிக்கப்படுகிறது என்பதை
நேரில் கண்டேன். ஜாதி முறையைப் பின்பற்றவில்லையென்றால், அவர்கள் யாராக
இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள் - அபராதமும் விதிக்கப்படுவார்கள்.
நான் நேபாளத்தில் ஒரு புத்த மடத்தில்
தங்கி இருந்தேன். நடு ராத்திரியில் ஒருவர் கதவைத் தட்டினார்; இந்து
மதத்தைச் சேர்ந்த ஒருவர் வெளியில் நின்று கொண்டிருந்தார். நான் இந்த இரவு
இங்கே தங்கலாமா? அனுமதிப்பீர்களா? என்று கேட்டார்.
ஏன்? என்ன அவசியம்? என்று கேட்டேன்.
அதற்கு அந்த இந்து மதக்காரர் என்ன சொன்னார் தெரியுமா? நான் என் ஜாதியை
இழந்துவிட்டேன்; ஜாதிக்கு விரோ தமாக நடந்துகொண்டு விட்டேன். அதனால் நான்
என் வீட்டுக்குச் செல்ல முடியாது; என் மனைவியும், என் வீட்டுக்குள்
அனுமதிக்க மாட்டாள்; அப்படி அவள் அனுமதித்தாலும் அவளும் ஜாதியை
இழந்துவிடுவாள்!
ஏன் அப்படி என்று நான் கேட்டேன். அதற்கு
அந்த இந்து ஆசாமி சொன்ன பதில்: வியா பார நிமித்தமாக நான் வெளியூருக்குச்
சென்றிருந்த இடத்தில் நான் உடல்நலம் பாதிக்கப்பட்டேன். ஒரு சத்திரத்தில்
தங்கினேன் - தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த ஒருவர் எனக்கு உதவினார். எனக்கு வேறு
யாரும் உதவ முன்வரவில்லை; அந்தத் தாழ்ந்த ஜாதிக்காரன் தந்ததையும்
சாப்பிட்டேன்; அதனால் என் ஜாதி என்னை விட்டுப் போய் விட்டது. எனவே, என்னைத்
தயவு செய்து இந்த இரவு தங்கிட அனுமதியுங்கள் என்றான்.
நாளை நானே நேரில் போலீஸ் ஸ்டேசனுக்குச்
சென்று நடந்ததைச் சொல்லி அபராதம் கட்டி, இழந்த என் ஜாதியை மீண்டும்
பெறுவேன். என் மனைவியும் அப்பொழுது என்னை ஏற்றுக்கொள்வாள் என்று
கூறியவற்றையெல்லாம் விசுவ ஹிந்து பரிஷத் கூட்டத்தில் அந்தப் பவுத்த பிக்கு
சொன்னதை கழகத் தலைவர் 25.7.2013 அன்று நடைபெற்ற கூட்டத்தில்
எடுத்துக்காட்டினார்.
-------------------(ஆதாரம்: Religion and secularism - a lecture given to vishva Hindu Parishad)
இந்தப் பகுதியை எடுத்துக்காட்டிய தமிழர்
தலைவர் - இந்தியாவில் ஹிந்து ராஜ்ஜியம் வந்தால், இங்கும் அந்த நிலைதான்
ஏற்படும் என்று எச்சரித்தார்.
அப்படி ஒரு ராஜ்ஜியம் வந்தால் நம்
மக்களும் சூத்திரப் பட்டத்தை நல்ல இடத்தில் குத்துங்கள் என்று முகத்தைக்
காட்டினாலும் காட்டுவார்கள் என்று தமிழர் தலைவர் சொன்னபொழுது, அனைவருக்கும்
ஒரே மன இறுக்கம் தான்!
மகாராட்டிரத்தைப் பாரீர்!
நேபாளம் அப்படி என்றால், மகாராட்டிரத்தின் நிலை என்ன?
மலை எலி என்று கூறப்படும் சிவாஜி, யுத்தம் பல வென்று ஒரு புது சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினான்.
களம் பல வென்ற அந்த மாவீரன் சிவாஜி
முடிசூட்டிக் கொள்ள முடிந்ததா என்றால், முடியவில்லை; காரணம் சிவாஜி
சூத்திரனாம்; இந்து மதத்தின் வருண தர்மத்தின்படி சூத்திரன் முடிசூட்டிக்
கொள்ள முடியாது - சத்திரியன்தான் அரசாள முடியும்.
முடி சூட என்ன வழி என்று சிவாஜி
கேட்டபோது, சில பிராயச்சித்தங்களை நடத்தி சத்திரியனாக்கி முடிசூட்டும்
தகுதியைப் பெறலாம் என்றனர். அதற்கு என்ன செய்யவேண்டும்? யாகங்கள்
செய்யவேண்டும் என்றனர்- பார்ப்பனர்கள்!
கங்கைக்கரைப் பகுதியிலிருந்து
பார்ப்பனர்கள் வரவழைக்கப்பட்டனர். ஒருவர் அல்லர், இருவர் அல்லர், 11 ஆயிரம்
பார்ப்பனர்கள் அழைத்து வரப்பட்டனர். கங்க பட்டர் என்ற பார்ப்பனர்
காசியிலிருந்து வரவழைக்கப் பட்டார். அவர்தான் தலைமைப் புரோகிதர்.
1674
மே 28 ஆம் தேதியன்று கங்கப்பட்டன் என்ற அந்தப் புரோகிதன், சிவாஜியின்
காதில் காயத்ரி மந்திரங்களை ஓதி, சூத்திரன் சிவாஜியை சத்திரியனாக
மாற்றினானாம்.
சிவாஜியின் 300 ஆவது ஆண்டு விழா கொண்டா
டப்பட்டபோது, டாக்டர் ஏ.இராமசாமி முதலியார் நீதிக்கட்சியின் அதிகாரப்பூர்வ
இதழான ஜஸ்டிஸ் ஏட்டில் மூன்று அற்புதத் தலையங்கங்களை அற்புதமான
ஆங்கிலத்தில் எழுதினார்.
18 மாதங்கள் யாகங்கள் நடத்தப்பட்டன. விளைவு சிவாஜியின் கஜானா காலியனதுதான் மிச்சம்!
மிக அழகாக டாக்டர் இராமசாமி முதலியார்
எழுதி னார். சுரண்டிக் கொழுத்த பார்ப்பனர்களுக்கு ஏகபோக
ஆதிக்கக்காரர்களுக்கு - அவர் இட்ட பெயர் மோனோ பொலிஸ்ட்ஸ் (Mono polists)
They got the lost pie out of his treasury.
சிவாஜியின் கஜானாவிலிருந்து கடைசிப் பைசாவைக் கூட பார்ப்பனர்கள் சுரண்டிக் கொண்டு விட்டனர் என்று எழுதினாரே!
அறிஞர் அண்ணா அவர்கள் சந்திரமோகன் அல்லது
சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் எனும் நாடகத்தை எழுதினார். அதில் சிவாஜி
எப்படி யெல்லாம் பார்ப்பனர்க ளால் ஆட்டி வைக்கப் பட்டான். அவன் செல்வம்
எப்படியெல்லாம் சுரண் டப்பட்டது என்பதை நாடக வடிவத்தில் விளக் கினார். அந்த
நாடகத் தில் அண்ணா அவர் களே காகப்பட்டராக அருமையாக நடித்திருக் கிறார்.
சிவாஜியின் அந்திம கால வாழ்வு மிகவும் பரி
தாபகரமானது. சிவாஜிக் குப் பிறகு ராஜ்ஜியம் பேஷ் வாக்கள் எனும் பார்ப்
பனர்களின் கைக்குச் சென்றது.
சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் என்பது இந்தி யாவுக்கு ஒரு சரியான எச்சரிக்கையான பாட மாகும்! என்றார் திரா விடர் கழகத் தலைவர்.
கேரளாவைக் காணீர்!
அடுத்து தெற்கே கேரள மாநிலத்தை எடுத்துக் கொள்ளலாம்.
ஹிந்துத்துவா அங்கே எப்படி ஆட்கொண்டது என்பதும் முக்கியமானதாகும்.
Missionaries and a Hindu State
Travancore 1858-1936 எனும் தலைப்பில் ஜப்பானிய நாட்டின் பல்கலைக் கழகப்
பேராசிரியர் கோஜி கவாஷிமா (Kogi Kawashima) என்பவர் எழுதியுள்ளார்.
அந்த நூலைப்பற்றிப் பேராசிரியர் ஆ.சிவசுப்பிர மணியன் அவர்கள் 2013 ஜூன் திங்கள் உங்கள் நூலகம் எனும் அருமையான இதழில் சிறப்பான கட்டுரை ஒன்றைத் தீட்டியுள்ளார்.
திருவாங்கூர் அரசை ஓர் இந்து அரசு என வரை
யறுத்துவிட்டு, சமய வேறுபாடுகளுக்கிடையில் கல்வி மருத்துவ வளர்ச்சியில்
திருவிதாங்கூர் அரசும் மிஷனரி களும் செயல்பட்ட முறை குறித்தும்,
திருவிதாங்கூர் பகுதியின் அடித்தள மக்கள் பிரிவினர் மீதான அரசு மற்றும்
மிஷினரிகளின் அணுகுமுறை குறித்தும் இந்நூல் ஆராய்கிறது.
இதோ கட்டுரை தொடர்கிறது:
இந்து அரசு
மன்னர்களால் ஆளப்பட்ட திருவிதாங்கூர்ப்
பகுதியில் வேணாட்டு மரபு என்ற பெயரிலான ஆட்சி மரபைத் தோற்றுவித்தவர்
மார்த்தாண்ட வர்மா (1729-1758). ஆட்சி அதிகாரத்திற்கான போராட் டத்தில்
தனக்கு முந்தைய மன்னனின் மகன்களைக் கொலை செய்ததுடன், தனக்கு எதிராகச்
செயல்பட்ட 42 பேர்களைத் தூக்கிலிட்டார். அத் துடன் நில்லாது அவர்களின்
பரம்பரையே அற்றுப் போகவேண்டி அவர்களது குடும்பப் பெண்களையும்,
குழந்தைகளையும் அடிமைகளாக ஏலமிட்டார். மனுதர்மம் அனுமதிக்காது என்பதால்,
தனக்கு எதிராகச் செயல்பட்ட பிராமணர்களைக் கொலை செய்யாது, பிராமண ஜாதிக்குப்
புறம்பாக்கி அவர் களது நெற்றியில் நாய்ச் சின்னத்தைப் பொறித்தார்.
மற்றொரு
பக்கம் சில நிர்வாகச் சீர்திருத்தங் களும் மேற்கொள்ளப்பட்டன. நாடெங்கிலும்
நிலங்கள் முறையாக அளக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்டன. மிளகு வாணிபம்
அரசின் ஏகபோக உரிமையானது.
இவையெல்லாவற்றையும்விட 1750 ஆம் ஆண்டில்
அவர் செய்த ஒரு செயல் திருவிதாங்கூர் வரலாற்றில் மிக முக்கியமான செயலாக
அமைந்தது. அரசர் தன் குடும்பத்தினரும் அமைச்சர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும்
புடைசூழ திருவனந்தபுரத் திலுள்ள பத்மனாபசாமி கோவிலுக்குள் சென்று, தன்னை
பத்மனாபசாமியின் அடிமையாக அவர் அறிவித்துக் கொண்டார். அடிமை என்ற பொருளைத்
தரும் தாசன் என்ற சொல்லை அக் கடவுளின் பெயருடன் இணைத்து பத்மனாபதாசன் என்ற
பெயரைத் தம் இயற்பெயருடன் இணைத்துக் கொண்டார். (இவரையடுத்து வந்த ஏழு
மன்னர் களும் பத்மனாபதாசன் என்ற பட்டத்தைத் தாங்கியே ஆட்சி புரிந்தனர்).
பத்மனாப சாமியிடம் நில மானியம் பெற்ற குடி
ஆளாகத் தம்மை வெளிப்படுத்திக் கொண்டார். பத்மனாபசாமியே உண்மையான
ஆட்சியதிகாரம் பெற்றவர் என்று வெளிப்படுத்தியதன் வாயிலாக அவரது ஆட்சி
தெய்வீகமயமாக்கப்பட்டது.
பத்மனாபசாமியின் தாசன் என்பதை மக்களுக்கு
நினைவூட்டிக் கொள்ளும் வகையில் புதிதாகப் பதவியேற்கும் மன்னர் படியேத்தம்
என்ற சடங்கு ஒன்றை நிகழ்த்துவார். இச் சடங்கின்படி கோவிலின் முன்புள்ள
பீடத்தில் தன் வாளை அவர் வைத்துவிடுவார். கோவிலில் பூசை செய்யும் போத்தி
வாளை எடுத்துச் சென்று கருவறைக்குள் இறைவனின் முன்வைத்து பூசை நடத்திவிட்டு
அதை எடுத்து வந்து மன்னரிடம் தருவார். இச்சடங்கு மன்னன் என்பவன்
தெய்வத்தின் பிரதிநிதி என்பதை மக்களுக்கு நினைவூட்டி வந்தது.
திருவிதாங்கூரின் திவா னாக இருந்த சர்.சி.பி.ராமசாமி அய்யர், பத்மனாபசாமியே
உண்மையில் ஆட்சி புரிபவர் என்றும், ஆட்சியை நிர்வகிக்கும் வைசிராய்தான்
திருவாங்கூர் மன்னர் என்றும் நவீன அரசியல் மொழியில் குறிப்பிட்டார். மன்னரை
விமர்சிப்பது சுவாமித் துரோகம் என்றானது.
இந்து சமயம் சார்ந்தவர் என்ற முறையில்,
இரண்யகர்ப்பதானம் துலாபுருஷதானம் என்ற இரு தானங்கள் திருவிதாங்கூர்
மன்னர்களால் வழங்கப்பட்டன. இவற்றுள் இரண்யகர்ப்பதானம் பின்வருமாறு நிகழும்.
பெரிய வடிவிலான தாமரை மலர் ஒன்று
தங்கத்தால் செய்யப்படும். இதனுள் பஞ்சகவ்வியம் (பசுவின் பால், தயிர்,
வெண்ணெய், சிறுநீர், சாணம் ஆகியனவற்றின் கலவை) ஊற்றப்படும். மலர் வடிவிலான
இப்பாத்திரத்தில் மன்னர் நுழைவார். அதன்பின் இம்மலர் மூடப்படும். பஞ்ச
கவ்வியத்துள் அய்ந்து முறை மூழ்கி மன்னர் வெளிவருவார். இதன் பின்னரே
அவருக்கு முடி சூட்டப்படும். இதன்பின் தங்கத் தாமரையைத் துண்டு துண்டாக
வெட்டியெடுத்து மன்னரின் அந்தரங்க ஊழியர்களுக்கும், பிராமணர் களுக்கும்
கொடையாக வழங்குவர்.
துலாபுருஷதானம் என்பது மன்னரின் எடைக்கு இணையான தங்கத்தை பிராமணர் களுக்குக் கொடையாக வழங்குவதாகும்.
முறஅய்ப்பம் என்பது அரசின் மற்றொரு
முக்கிய சடங்காகும். தலைநகரான திருவனந்த புரத்திலுள்ள பத்மனாபசாமி கோவிலில்
மன்ன ராட்சியால் நடத்தப்படும் இச்சடங்கின் நோக்கம், போரின்போது
மேற்கொள்ளப்பட்ட செயல் களினால் ஏற்படும் பாவங்களைப் போக்கிக் கொள்வதும்,
நாடு செழிக்கவேண்டும் என்பதும் தான். இச்சடங்கில் நம்பூதிரிப்
பிராமணர்களும் போத்தி என்றழைக்கப்படும் பிராமணர்களும் மட்டுமே கலந்துகொள்ள
அழைக்கப்படுவர்.
இச்சடங்கின்போது தலைமைப் புரோகிதர்
வீற்றிருக்கும் பல்லக்கை, சிறிது தூரம் மன்னர் சுமப்பார். பின் அவரது
காலில் விழுந்து வணங்கி அவரைத் தங்க சிம்மாசனத்தில் அமரச் செய்து, அவரது
பாதங்களைக் கழுவுவார். இச்சடங்கில் கலந்துகொள்ளும் பிராமணர்களுக்கான தங்கு
மிடம், உணவு, தட்சிணை ஆகியவற்றுக்கான செலவை அரசே ஏற்றுக்கொள்ளும். 1875-76
இல் 182,009 ரூபாய் இச்சடங்கிற்குச் செலவானது.
இது அந்த ஆண்டு கல்விக்காகச் செலவிடப்பட்ட தொகையைவிட அதிகமாகும். 1911 ஆம் ஆண்டில் அய்ந்து லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது.
இது அரசின் அந்த ஆண்டுச் செலவில் நாலு
விழுக் காடாகும். இவை தவிர வருடத்திற்கு இருமுறை நிகழும் ஆராட்டுத்
திருவிழாவின்போது கடலில் நீராட, ஊர்வலமாக பத்மனாபசுவாமியின் உலோகப் படிமம்
எடுத்துச் செல்லப்படும். இவ் வூர்வலத்தை உருவிய வாளுடன் தலைமையேற்று
நடத்திச் செல்பவர் திருவிதாங்கூர் மன்னர்தான். மன்னருடன் அரசு உயர்
அதிகாரிகளும் செல்வர்.
இவையெல்லாம் திருவிதாங்கூர் மன்னராட்சி யானது ஓர் இந்து ஆட்சியாக விளங்கியதன் அடையாளங்களாகும்.
------------------------(நூல்: திருவிதாங்கூர் இந்து ராஜ்ஜியமும் மிஷனரிகளும்)
மேற்கண்ட தகவல்களை தமிழர் தலைவர் அடுக் கடுக்காக வெளியிட்டார்.
நேபாளம்முதல் திருவனந்தபுரம்வரை...
நேபாளம் தொடங்கி மகாராட்டிரம் உள்ளிட்டு,
திருவனந்தபுரம், கேரளம்வரை ஹிந்து சாம்ராஜ்ஜியம் எப்படியெல்லாம்
தலைவிரித்தாடியது; பார்ப்பனர்கள் கொட்டம் போட்டனர் என்பதை நல்ல வண்ணம்
விளக்கினார் விடுதலை ஆசிரியர்.
ஹிந்து ராஜ்ஜியத்தை அமைக்கப் போவதாகக்
கூறிப் புறப்பட்டுள்ள காவிகளின் கைகளில் ஆட்சி அதிகாரம் சென்றால்,
நேபாளத்திலும், மகாராட்டிரத்திலும், திருவனந்தபுரத்திலும் என்ன நடந்ததோ,
பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்தினார்களோ, அதே நிலைதான் இந்தியா முழுவதும்
ஏற்பட்டுவிடும் என்று எச்சரித்தார் தமிழர் தலைவர்.
ஹிந்துத்துவாவைக் கையில் எடுத்துக்கொண்டு
காவி சக்திகள் இந்தியா முழுமையும் புறப்பட்டுச் செல்லுமானால், அதனை
எதிர்த்து முறியடிக்கக் கூடியது தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள் தான்.
திராவிடர் இயக்கத் தத்துவம்தான் - அதன் தொடக்க நிகழ்ச்சிதான் இது என்று
வெகுநேர்த்தியாக தன் உரையை அமைத்து முடித்தார் திராவிடர் கழகத் தலைவர்
கி.வீரமணி அவர்கள்.
***********************************************************************************
அரசன் தோன்றியது - ஏன்?
அரச பதவியின் தோற்றத்தைக் குறித்து சாந்தி
பருவத்தில் (மகாபாரதம்) அடங்கியிருக்கும் இரு கருத்துக்களுமே,
ராஜ்ஜியத்தின் தோற்றத்தைப் போற்றிய ஒப்பந்தத் தத்துவத்தை உள்ளடக்கியதாகப்
பொருள் கொள்ளத் தக்கன. இந்தக் கருத்துக்களின் நோக்கங்கள் முற்றிலும்
மாறுபட்டவை, முற்றிலும் முரண்பட்டவை. ஆகையால், இவை ராஜதர்மம் என்ற
தலைப்பில் ஒரே காலத்தில் எழுதப்பட்டனவா என்பது நமக்குத் தெரியாது. தண்டம்,
தண்டநீதி என்பனபற்றிய நீண்ட விவாதத்துடன் தொடங்கும் 59 ஆம் அதிகாரத்தில்
முதல் கருத்து இடம்பெறுகிறது. ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்காக, விஷ்ணு தன்
மனத்திலிருந்து ஒரு மகனைத் தோற்றுவித்து உண்டாக்கினான் என்றும், ஆனால்,
அவன் பின்னோர்கள் உலகப் பற்று நீங்கினர் என்றும், அதனால் வேணனின்
கொடுங்கோலாட்சி ஏற்பட்டதாயும் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த அரசனின் உயிருக்கு முனிவர்கள்
முற்றுப்புள்ளி வைத்தனர் என்றும், அவனுடைய வலது தொடையிலிருந்து பிருதுவை
உண்டாக்கினர் என்றும் கூறப்படுகிறது. பிருது, விஷ்ணுவின் எட்டாவது சந்ததி.
எந்த அடிப்படையில் பிருது வைன்ய என்பவன் சிம்மாசனத்தில் வீற்றிருக்கலாம்
என்பதை முனிவர்கள் தெளிவாக எழுதி வைத்தார்கள்.
(1) தண்ட நீதிக் கொள்கையின்படி அரசாள்வேன்
(2) பிராமணர்களுக்கு எவ்விதத் தண்டனையும் வழங்கமாட்டேன் (3) ஜாதிக் கலப்பு
ஏற்படாதபடி உலகைக் காப்பாற்றுவேன் என்று மூன்று உறுதிமொழிகளைச் சத்தியம்
செய்து கொடுக்கும்படி முனிவர்கள் அவனை வேண்டினார்கள்.
மனிதர்களுக்குள் காளைகள் போன்று
விளங்குவதால், பிராமணர்களைப் பெரிதும் மதித்து அவர்களை வணங்கி வழிபடுவதாக,
பிருது, முனிவர்களிடம் கடவுள் சாட்சியாகச் சத்தியம் செய்தார். அரசாங்க
இயலுக்கு ஏற்பவும், நியாயமாகவும் செய்யவேண்டிய எல்லாவற்றையும் செய்வதாக
அவன் ஏற்கெனவே உறுதி மொழி கொடுத்திருந்தான்.
(பழங்கால இந்தியாவின் அரசியல் கொள்கைகள் - நிலையங்கள் சில தோற்றங்கள் (பக்கம் 90) - ஆர்.எஸ்.சர்மா)
*********************************************************************************
--------------------------------தொகுப்பு: மின்சாரம்-"விடுதலை” 27-7-2013