tag:blogger.com,1999:blog-1474608369333206681.post8822535047502537369..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: முகம்மது நபியும் - வள்ளுவப் பெரியாரும்தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-66692359641267170992010-03-27T07:46:14.772+05:302010-03-27T07:46:14.772+05:30'இன இழிவு தீர இஸ்லாமே நன்மருந்து' -இது பெர...'இன இழிவு தீர இஸ்லாமே நன்மருந்து' -இது பெரியார் சொன்னது.

தங்களின் கட்டுரையை படிக்கும் பொழுது தாங்கள் இஸ்லாத்தை பற்றி முழுமையாக அறியவில்லை என்பது தெரிகிறது.

//நபிகள் நாயகத்தைப் பின்பற்றுவதாகக் கூறி இஸ்லாம்களாக இருக்கிற மக்கள் யாவரும் நபிகள் நாயகம் சொன்னபடி நடப்பதாகவும், நாயகம் நடந்தபடி நடப்பதாகவும் சொல்லி நடித்து வருகிறார்கள்.//
நீங்கள் சொல்லும் அந்த நடிகர்கள் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அது இஸ்லாம் என்றில்லை, எல்லா மதத்தவர்களிலும், ஏன் தங்களை பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் உங்கள் போன்றவர்களிலும் அது போன்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

//ஆண்டவனால் சொல்லச் செய்தவைகளை மனிதன் அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்ப்பது என்றால், அப்போது ஆண்டவனின் கருத்து என்ன ஆவது? என்கின்ற பிரச்சினை எழும். ஆதலாலேயே இஸ்லாத்தில் அறிவுக்கு மதிப்பு இருந்தாலும், நபிகள் நாயகம் சொன்னவற்றிலும், குர் ஆனில் சொல்லப்படுபவைகளிலும் அய்யம் கொண்டோ, தெளிவு ஏற்படவில்லை என்றோ, ஆராய்ச்சி செய்ய எந்த முஸ்லிமும் கருதக்கூடாது; அல்லது முயலக்கூடாது என்பது முஸ்லிம்களின் கொள்கைகளில் ஒன்று;//
மன்னிக்கவும். இறைவனோ, அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ ஒரு போதும் அப்படி சொல்லவில்லை. மாறாக, பின்வரும் குர்ஆன் வசனம் என்ன சொல்கிறது என்று பாருங்கள்.
இந்த குர்ஆனை அவர்கள் ஆராய்ந்து பார்க்க மாட்டார்களா? அல்லது அவர்களின் இதயங்கள் மீது பூட்டுக்கள் போடப்பட்டு இருக்கின்றனவா? [குர்ஆன் 47:24]
முடிந்தால் நீங்களும் ஒரு முறை குர்ஆனை படித்துப் பாருங்கள். படிக்கும் போது நடுநிலைமையோடு படியுங்கள்.

இஸ்லாத்தை முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டுமானால், நீங்கள் குர்ஆனை படியுங்கள். மாறாக மீடியாக்கள் மூலம் தெரிந்துக்கொள்ள முயலாதீர்கள்.Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.com