tag:blogger.com,1999:blog-1474608369333206681.post6865156779683847591..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பணம் வாங்குவது ஏன்?-பெரியார் விளக்கம்- பெண்கள் நாட்டிற்குப் பயன்பட வேண்டும்தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-99527384414726402014-10-18T20:58:04.350+05:302014-10-18T20:58:04.350+05:30மதத்திற்கு எதிராக..
தன்னுடைய அடிமைத் தனத்தை உணருக...மதத்திற்கு எதிராக..

தன்னுடைய அடிமைத் தனத்தை உணருகின்ற, தன்னை விடுதலை செய்து கொள்வதற்காகப் போராட கிளர்ந் தெழுகின்ற ஓர் அடிமை, தன்னுடைய அடிமை நிலையில் பாதியை ஒழித்து விடுகின்றான்.

தொழிற்சாலை அமைப் பினாலும், பெருமளவு உற்பத்தி செய்யும் நவீன தொழில்மூலமும், நவீன நகர வாழ்க்கையிலும் வளர்ந்து வரும் வர்க்க உணர்வுள்ள தொழிலாளி ஒரு நவீன மதத்துவேச எண்ணங்களை அருவருத்து ஒதுக்கித் தள்ளுகிறான். சொர்க்கலோக நம்பிக்கையைப் பாதிரிமார்களும் பூர்ஷ்வா பிற்போக்காளர்களும் வைத்துக் கொள்ளட்டும் என்று விட்டு விடுகிறான்.

இந்த உலகில் இன்றே இக்கணமே தனக்காக ஒரு நல்வாழ்வை அடைய முன்வருகிறான். நவீன பாட்டாளி வர்க்கம் சோஷலிஸத்தின் பக்கமே நிற்கிறது.

மதம் என்ற பனித்திரையை எதிர்த்த போராட்டத்திற்கு விஞ்ஞானத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது. தொழிலாளர்களை மறு உலக நம்பிக்கையிலிருந்து விடுவித்து, ஒன்றுபடுத்தி இவ்வுலகில் இன்றே ஒரு நல்வாழ்வை அடையப் போராடுகிறது.

- லெனின்

Read more: http://viduthalai.in/page1/89465.html#ixzz3GVitM4QG
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-1080095518412941282014-10-18T20:55:44.838+05:302014-10-18T20:55:44.838+05:30பிராமணன் கடவுள்!
புருஷ சரீரம் பரிசுத்தமாயிருக்கிற...பிராமணன் கடவுள்!

புருஷ சரீரம் பரிசுத்தமாயிருக்கிறது. அதில் நாடிக்கு மேல் பாகம் அதிக பரிசுத்தமானது. ஆகையால் பிர்மாவின் முகம் அதிகம் பரிசுத்தமாயிருக்கிறது. பிர்மாவின் முகத்திலிருந்து ஜனித்ததாயிருப்பதாலும், மற்ற ஜாதி களுக்குத் தருமத்தை உபதேசிக்க வேண்டியிருப்ப தாலும், வேதத்தைத் தரிப்பதாலும் இவ்வுலகில் பிராமணன் கடவுள் ஆகிறான்

- மனு தர்மம் அத்தியாயம் 1, சுலோகம் 92, 93
(பார்ப்பான்தான் கடவுளைக் கற்பித்தான் என்பது விளங்க வில்லையா?)

Read more: http://viduthalai.in/page1/89464.html#ixzz3GVidXOJJ
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-41809775671421384682014-10-18T20:55:23.478+05:302014-10-18T20:55:23.478+05:30கடவுள் இல்லை
கடவுள் என்பது திருடர் களின் இரதத்திற...கடவுள் இல்லை

கடவுள் என்பது திருடர் களின் இரதத்திற்காக செய்யப் பட்ட கடையாணிப் போன்றது. - தந்தை பெரியார்

ஒன்றுமில்லாத இந்த ஆகாயத்திலே கடவுளை வைத் திருக்கும் மனிதர்களை நீ நம்பாதே. - பெர்னாட்சா

கடவுள் என்பது கற்பனையப்பா கற்பனை- காண்டேகர்

கடவுளை யாரும் கண்டதில்லை - குருசேவ் (அய்.நா. சபையில்)

மனிதனுக்குக் கேவலம் ஒரு புழுவைப் படைக்கத் தெரியவில்லை. நிமிடத்துக்கு நிமிடம் ஆயிரக்கணக்கான

கடவுளைப் படைக்கத் தெரியும். - ஒரு மேனநாட்டறிஞன்

உனக்கெட்டாத கடவுளைப் பற்றி நீ நம்பாதே - வால்விச்மன்

Read more: http://viduthalai.in/page1/89464.html#ixzz3GViXNuyR
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-68300728626127998462014-10-18T20:54:59.551+05:302014-10-18T20:54:59.551+05:30ஜோதிடமும் - அறிவியலும்
சஞ்சலமான மனதின் வெளிப்பாட...ஜோதிடமும் - அறிவியலும்

சஞ்சலமான மனதின் வெளிப்பாடாகவே ஜோதிடம் போன்ற புனைவுகளும் பொது வாக அமைவதைக் காணலாம். ஆகவே, இத்தகைய கருத்துக்கள் நமது மனதில் இடம்பிடிக்கத் துவங்கியதும் உடனடியாக தாமதியாது ஒரு மருத்துவரின் உதவியை நாடுவதோடு நல்ல உணவும் ஓய்வும் அவசியம்.

- விவேகானந்தர்

Read more: http://viduthalai.in/page1/89464.html#ixzz3GViQLMZc
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-71764747173594070262014-10-18T20:49:24.283+05:302014-10-18T20:49:24.283+05:30வெற்றிக்கு ஒரே ஒரு பாதை அல்ல; பல உண்டு
நாம் அனைவர...வெற்றிக்கு ஒரே ஒரு பாதை அல்ல; பல உண்டு

நாம் அனைவரும் அன்றாடம் நமது நலம் விரும்பிகளான பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், குடும்ப ஆலோசகர்கள் என்ற பலரும் கடுமையாக உழைத்தால், பொறுப்பான வகையில் புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டால், எதையும் உரிய நேரத்தில் செய்தால் வெற்றி நம் வீட்டுக் கதவைத் தட்டும் என்று கூறுவர்.

கேட்டுப் பழகிய காதுகள் நம் முடையவை; இதனை ஏற்று, அதனைப் பின்பற்றி நாளும் சோர் வறியாமல் உழைத்து வெற்றிக் கனியைப் பறிக்கின்றவர்கள் பல ருண்டு, உண்மைதான்.

ஆனால், இந்த மாதிரி ஒரே வழியைப் பின்பற்றாமல் - பல்வேறு சூழ்நிலைகளாலும் - நெருக்கடி - நிர்ப்பந்தங்களாலும் வழமையான வாழ்க்கை முறைகளைப் பின்பற்ற வாய்ப்பில்லாதவர்களிலும் பலர் வெற்றிப் படிக்கட்டுகளின் மீதே ஏறி நின்று, மற்றவர்களுக்குத் தாங்களும் கூட எடுத்துக்காட்டானவர்கள் - ரோல் மாடல்கள் தான் என்று காட்டுபவர்களும் உண்டு என்பதை நாம் மறந்திடக் கூடாது.

பள்ளிக்கூடம், கல்லூரிப் படிப்புகளை முழுமையாக முடிக்காமல், பெரிய பெரிய ஆய்வுப் பட்டங்களான முனைவர், அதற்கு மேல் உள்ள பட்டங்களைப் பெறாதவர்கள் உலகில் மிகப் பெரிய குறிப்பிடத்தக்க சாதனையாளர்களாக நம் காலத்திலேயே திகழ்கிறார்களே, அவர்கள் பெற்றது பெரு வெற்றி அல் லாமல் வேறு என்ன?

கணினித் துறையில் மிகப் பெரிய சாதனையாளராக உயர்ந்து நிற்கும் மைக்ரோசாஃப்ட் (“Microsoft’’) நிறுவனர் பில்கேட்ஸ் இடையில் கல்லூரிப் படிப்பை நிறுத்திய ஒரு(Dropout) தானே!

அவர் எத்தனைப் பெரிய பில்லியனர்! அவரும் அவரது வாழ்விணையர் மிலிண்டா பில்கேட்ஸ் தங்களது சொத்தில் ஒரு பகுதியை அறக்கட்டளையாக்கி, அந்தப் பொருளை, உலகின் கொடிய நோயான எய்ட்ஸ் (Aids நோயை ஒழிக்க மிகப் பெரிய அளவில் ஓர் இயக்கத் தினையே நடத்துவதன் மூலம்; உலகின் தொண்டறச் செம்மல்களாக உயர்ந் துள்ளனர்!

அதுபோலவே, அதிகம் படிக்காத, கடவுள் நம்பிக்கை அற்ற ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவன - உரிமையாளர் ஸ்டீவ்ஜாப்ஸ் என்ன Ph.D. பட்டமா வாங்கியவர்?அவர் கல்லூரி, பல்கலைக் கழகங்களில் வேலைக்கு மனு போட்டால் அவரை நமது கல்வி அமைப்புகள் விரிவுரையாளர் பதவிக்குக்கூட தேர்வு செய்ய மாட்டாவே! இதுதான் இன்றைய படிப்பறிவுக்கும், பட்டறிவு - சுதந்தரச் சிந்தனைக்கும் இடையே உள்ள மிகப் பெரிய இடைவெளி!

ஆப்பிள் - 6, ஆப்பிள் 6 - பிளஸ், என்ற அண்மையில் வெளியான புது வகைக் கைப்பேசிகள் செல்போன் களுக்கு உலக சந்தையில்தான் எவ்வளவு கிராக்கி! காத்துக்கிடந்து போட்டி போட் டுக் கொண்டு அதனை விலை கொடுத்து வாங்குவதில் நான் முந்தி, நீ முந்தி என்ற போட்டி - அதுவும் ஜப்பான் போன்ற தொழில் வளர்ச்சியில் முந்தியுள்ள நாட்டினரும்கூட! இந்த வெற்றியின் ரகசியம் எதில் உள்ளது?

புரட்சிக் கவிஞர் சொன்ன இரு வரிகளில் உள்ளது என்பது நமது எளிய கருத்து.

அறிவை விரிவு செய் - அகண்டமாக்கு

விசாலப் பார்வையால் விழுங்கு உலகை!

ஒவ்வொரு முறை மாற்றம், புதுமைக்குமேல் புதுமை செய்திட்ட நிலை - கவிஞரின் வரிகளுக்கு சான்று அல்லவா?

எனவே தேர்வில் அதிக மதிப் பெண் பெறவில்லை அல்லது முதல் முயற்சியிலேயே வெற்றிகிட்டிட வில்லை என்று மனமுடைந்து விரக்தியில் தற்கொலை முயற்சி அல்லது உலகமே இருண்டு விட்டது போன்ற கற்பனையின் உச்சி, விரக்தியின் விளிம்புக்குச் சென்று, வெறுப்பினால் மன உளைச்சல் எதுவும் கொள்ளாமல் வெற்றிக்கான இந்தக் கதவு மூடினால், இன்னொரு திறக்கப்படும் கதவைக் கண்டு வாழ்வினை வெளிச்சம் உள்ளதாக ஆக்கி, விரக்தி இருட்டை விரட்டி அடித்து, வெள்ளி முளைப்பதைக் கண்டு, வீறு நடை போடுவோம் என்று எழுந்து நடவுங்கள் - துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை அள்ளி அணையுங்கள்!

- கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page1/89429.html#ixzz3GVgtoi7F
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-36380688454040007372014-10-18T20:46:19.975+05:302014-10-18T20:46:19.975+05:30அரசியல் கட்சிகளுக்கு புதிய கடிவாளம்
அரசியல் கட்ச...அரசியல் கட்சிகளுக்கு புதிய கடிவாளம்

அரசியல் கட்சிகளின் நிதி, தேர்தல் செலவுகள் ஆகியவற்றை முழுமையாகக் கண்காணிக்கும் நோக்கில் தேர்தல் ஆணையம் புதிய நெறிமுறைகளைக் கொண்டுவந்துள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 324ஆவது பிரிவின் கீழ், கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி, தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு பிறப்பித்திருந்தது. அன்று பிறப்பித்த உத்தரவின் நெறிமுறைகளில்,

* அரசியல் கட்சியின் பொருளாளர், தனது கட்சியின் வரவு, செலவுக் கணக்குகள் அடிமட்ட நிலைகளிலும் பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

* பராமரிக்கப்படும் ஆண்டுக் கணக்குகள், தகுதியுடைய கணக்குத் தணிக்கையாளர்களால் முறையாக சான்றளிக்கப்பட வேண்டும்.

* அரசியல் கட்சிகள் 20 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான தொகையை எந்தவொரு தனிநபருக்கோ, நிறுவனத்திற்கோ ரொக்கமாக வழங்கக்கூடாது.

* மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, தேர்தல் செலவுகளுக்காக வேட்பாளருக்கு அனுமதிக்கப்பட்ட தொகைக்கு மேல் அரசியல் கட்சிகள் வழங்கக்கூடாது.

* வேட்பாளருக்கான தொகையை வங்கிக் கணக்கு மூலம் காசோலையாகவோ, வரைவோலையாவோ மட்டுமே வழங்க வேண்டும்.

* அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், கணக்கு தணிக்கையாளர் ஆய்வு செய்து சான்றொப்பம் அளித்த ஆண்டு வரவு-செலவு தொடர்பான அறிக்கைகளை, தேர்தல் ஆணையத்திடம் ஆண்டுதோறும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

* அங்கீகரிக்கப்படாத கட்சிகள், மாநிலத் தேர்தல் அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
முதலான புதிய விதிமுறைகள் குறிப்பிடப்பட்டன. இந்தப் புதிய நெறிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

Read more: http://viduthalai.in/page2/89484.html#ixzz3GVgEciHS
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-34049344622176250422014-10-18T20:42:07.717+05:302014-10-18T20:42:07.717+05:30இறந்த பிறகும் உயிர் வாழச் செய்யுறாங்க....
போடி ஜே...இறந்த பிறகும் உயிர் வாழச் செய்யுறாங்க....

போடி ஜே.கே. பட்டியில் சுந்தரபாண்டியன் என்பவர் திடீரென்று இறந்து போகவே கண்தானம் வழங்க சம்பந்தப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் உடனே ரகுநாகநாதனுக்கு போன் பண்ணுங்க.. எனக் கூறியது வியப்பாக இருந்தது. அவர்களிடம் கேட்ட போது.... இறந்த பின்பும் உயிர் வாழத்தான் கண் கொடை என்றனர். சிறிது நேரத்தில் மருத்துவர் மற்றும் செவிலியர்களும் வீட்டிற்கு வந்தனர். சற்று நேரத்திலே அறுவை சிகிச்சை செய்து சுந்தரபாண்டியன் கண்களை கொண்டு சென்றனர். சரி ரகுநாகநாதன் யார் என்று கேட்டபோது, போடி பி.எச். ரோட்டில் குருதி, விழி, உடல் கொடைக் கழகம் நடத்தி வருகிறார்.

இனி ரகுநாகநாதன்....

இருக்கும்போது நாம் பலருக்கு உதவியாக இருக்கின்றோம். இறந்த பின் மண்ணுக்கு உரமாவது தவிர வேறு பயன் ஒன்றும் தருவதில்லை. ஆனால், இறந்த பின்பும் நம் உடல் உறுப்புகள் உடல் வாழ்வதற்கும், மருத்துவ கல்லூரி மாணவர்கள் மனித உடல் சம்பந்தமாக பயிற்சி பெறுவதற்கும் உதவிகரமாக இருக்கும். இந்த நோக்கம் பிடித்துப் போனதால் குருதி விழி, உடல் கொடைக் கழகம் என்ற பெயரில் குருதி, கண், உடல் உறுப்புகள் கொடை பெற்று மற்றவர்களுக்கு உதவி செய்து வருகின்றோம். 10 பேர் கொண்ட நிர்வாகக் குழு மூலம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு என்றார். இறந்த பின்பும் பிறர் உயிர் வாழ விழி, உடல் கொடை செய்ய ரகுநாதகநாதனை தொடர்பு கொள்ள - 98421 20321.

Read more: http://viduthalai.in/page2/89481.html#ixzz3GVf9hbPq
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-32772424806033356252014-10-18T20:39:08.938+05:302014-10-18T20:39:08.938+05:30பொதுபலசேனா -இலங்கை ஆர்.எஸ்.எஸ். - ஆர்.எஸ்.எஸ். இந்...பொதுபலசேனா -இலங்கை ஆர்.எஸ்.எஸ். - ஆர்.எஸ்.எஸ். இந்திய பொதுபலசேனா

சில நாட்களுக்கு முன்பு இலங்கையின் சிங்கள பயங்கரவாத இயக்கமான பொதுபலசேனா இந்துத்துவ இயக்கமான ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்தது. மேலும் கீழை நாடுகளில் உள்ள பல்வேறு பவுத்த இயக்கத்துடன் பேசி வருவதாகவும், அடுத்த ஆண்டு வைசாக் அன்று இலங்கையில் பவுத்த இந்து அமைப்புகள் இணைந்து மாநாடு ஒன்று நடத்தவிருப் பதாகவும் செய்திகள் வந்தது.இதில் முக்கியமான அமைப்பு ஒன்று தானாகவே முன்வந்து கரம் கோர்த்துள்ளது, அந்த அமைப்பு கடந்த ஆண்டு பர்மாவில் உள்ள ரெஹிங்கோ இஸ்லாமிய கலவரத்தில் மறைமுகத்தொடர்பு கொண்ட மியன்மா 969 அமைப்பு என்ற அமைப்பாகும்.தெற்காசியப்பகுதியில் சமத்துவமற்ற அமைதியற்ற சூழலை உருவாக்க பொதுபலசேனா தயாராகி வருகிறது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஈரான் பகுதிகளை இணைத்து அகண்ட பாரதம் என்ற கனவு காண்கிறேன், இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்களே என்று கூறுகிறார். அதாவது தற்போது சில பழமைவாதக் குழுக்களால் மேற்கு மற்றும் மத்திய ஆசியப்பகுதியில் அமைதி குலைந்து இருப்பது போன்ற சூழ்நிலையை தெற்காசியாவிலும் உருவாக்க முனைவது இவர்களின் பேச்சிலும் போக்கிலும் நன்றாகத்தெரிகிறது. முக்கியமாக 2009 இலங்கையில் போர் முடிந்த பிறகு பொதுபலசேனா ஒரு அறிக்கை ஒன்றை விடுத்திருந்தது. அதில் இலங்கையில் உள்ள இஸ்லாமியர் மற்றும் இதர மதத் தவர் சிங்கள நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டும், என நேரடியாக மிரட்டும் தொனியில் அறிக்கை ஒன்றை விட்டிருந் தது. அன்றிலிருந்தே இலங்கையில் இஸ்லாமியர் மீதான விரோதப்போக்கு மெல்ல மெல்ல அதிகரித்து 2013- அக் டோபரில் கலவரத்தில் முடிந்தது.

அதா வது இந்தியாவில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இலங்கையில் இயங்கும் பொதுபலசேன இரண்டும் சிறுபான்மை மதத்தினருக்கு ஒரு அச்சுறுத்தலை தெற்காசியப்பிராந்தியத்தில் உருவாக் குவதை விரும்புகிறதோ என்றே தோன்று கிறது. ஒரு பழமைவாத மத அமைப்பிற்கு மற்றொரு பழமைவாத மத அமைப்பு என்றுமே ஒரு தீர்வாக இருக்காது. போட்டிக்கு போட்டி என்பது சமூகத்தில் அமைதியற்ற சூழலை உருவாக்கி பிராந்தியத்தையே அச்சத்தில் வாழும் சூழ்நிலையை உருவாக்கிவிடும். இதை நாம் மத்திய ஆசிய இஸ்லாமிய நாடுகளில் கண்டு வருகிறோம். அங்கு அளப்பரிய எண்ணெய் வளம் இருப்பதால் பிற நாடுகளின் தலையீடு இருக்கிறது. ஆனால் இங்கே அழிந்து வரும் இயற்கை வளம் மற்றும் மூடப்பழக்கங்களில் உழலும் மக்கள் அதிகம் வாழும் பிராந்தியத்தில் இப்பழமை வாதிகளின் போக்கு மிகவும் மோசமான சூழலை உருவாக்கிவிடும். பொதுபல சேனாவின் இந்த வெளிப் படையான அறிக்கைக்கு இந்துத்துவத் தலைவர்களின் சிலர் முக்கிய காரணமாக இருக்கின்றனர். முக்கியமாக சுப்பிர மணிய சுவாமி மற்றும் சில வட இந்திய ஆர்.எஸ்.எஸ் தலைவர் இலங்கையில் இஸ்லாமியத்தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக அறிவித்திருந்தனர்.

அதே போல் தமிழ் நாட்டில் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டு அவர்கள் பாகிஸ் தானின் உளவாளிகள் என்று பத்திரி கையில் செய்திகள் வெளியாகின. மோகன் பகவத்தின் அக்டோபர் 3-இல் பேசிய பேச்சில் தெளிவாக இரண்டு வார்த்தைகளை குறிப்பிட்டார். அதாவது தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தீவிர வாதிகளின் நடமாட்டம் உள்ளது என்று கூறினார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் புலிகள் இன்றும் தங்களது தீவிரவாத நடவடிக்கைகளை தொடரத் தயாராக இருக்கிறார்கள் என்று சிங்கள பத்திரிகை ஒன்று கடந்த செப்டம்பர் முதல் வாரம் செய்திவெளியிட்டிருந்த்து.

அதாவது இலங்கையில் பாதுகாப்பு மாநாடு நடந்து கொண்டு இருக்கும், போது இந்த செய்தி பத்திரிகைகளில் வெளிவந்தது தீவிரவாதிகளின் நடமாட் டம் இருக்கிறது, புத்தமதத்திற்கும் இந்துத்துவாவிற்கும் என்ன தொடர்பு என்று கேள்வி வைக்கப்பட்டால் ஒரு உண்மை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும். இலங்கையில் இருக்கும் தேரவாத புத்தம் என்பது பார்ப்பனிய வகைப்பட்ட புத்தவாதம். இன ஒதுக்குதலையும், இனவெறியையும் உள்ளே வைத்து செயல்படும் பவுத்தம் உன்மையான பவுத்தமல்ல. இங்கே தாழ்த்தப்பட்ட மக்களை தங்கள் பக்கம் இழுக்க அம்பேத்கரின் பெயரைக்கூறி சில சாதி அமைப்புகள் ஆர்.எஸ்.எஸ்சின் சூழ்ச்சிக்கு பலியாகி இருப்பதுவும், தேசியம்-பாரதம்-இந்துப்புனிதம் என்று பேச ஆரம்பித்திருப்பதையும் கவனத்தில் எடுக்கவேண்டும். இதில் ஒரு புறம் தமிழர்களை இந்துத்துவ மயமாக்க முற்படுவதும், மறுபுறத்தில் பவுத்த பேரினவாதத்திற்கு துணை போவதும் கவனிக்கப்படவேண்டியவை. இவ்விரண்டு பேரினவாத அமைப்பு களின் முக்கிய நோக்கம் தமிழர் அழிப்பு என்பதில் மய்யம் கொண்டு இருக்கிறது என்பதை கவனிக்கவேண்டியது இங்கே அவசியமாகிறது. அதாவது இத்தனை நாட்களாக தனித்தனியாக இயங்கிவந்த மதவாதக்குழுக்கள் ஆட்சி அதிகாரம் முழுமையாக கையில் வந்த பிறகு பிராந்தியத்தையே தங்கள் கைவசம் கொண்டுவரும் திட்டத்தில் இறங்கி விட்டது.

Read more: http://viduthalai.in/page2/89476.html#ixzz3GVePkkBC
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-6560600938388081042014-10-18T20:38:35.142+05:302014-10-18T20:38:35.142+05:30மும்பையைத் தொடர்ந்து பெங்களூருவிலும் பார்ப்பனர்களு...மும்பையைத் தொடர்ந்து பெங்களூருவிலும் பார்ப்பனர்களுக்கு மட்டும் என்ற விளம்பரம்

2013 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த ஒரு தனியார் கட்டிட நிறுவனம் பார்ப்பனர்களுக்கு மாத்திரம் என்று விளம்பரமிட்டு ஆங்கில நாளிதழ்களில் விளம்பரம் செய்திருந்தது. பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு புறப் பட்டதும் இவ்விளம்பரத்தை நீக்கி விட்டது. தற்போது பெங்களூருவில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று வேதிக் ஆசிரமம் என்ற பெயரில் ஒரு குடியிருப்புத் தொகுப்பு வீடுகளைக் கட்டிவருகிறது. இதன் விளம்பரத்தில் வேதிக் ஆசிரம வீடுகள் பார்ப்பனர்களுகாக உருவாக்கப்பட்டது என்று அனைத்துப் பத்திரிகைகளிலும் விளம்பரம் கொடுக் கப்பட்டுள்ளது.

பெங்களூரு--அய்தராபாத் தேசிய நெடுஞ்சாலையில் 1200 தொகுப்பு வீடு களைக் கொண்ட வேதக்கிராமத்தை தனியார் நிறுவனம் ஒன்று கட்டி வரு கிறது. சுமார் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தப்பகுதி முழுவதுமே தொகுப்பு வீடுகளைக் கட்டி வருகிறது, இச்செயற்கை கிராமம் பார்ப் பனர்களுக்கு மாத்திரமாம்.

இது குறித்து இந்த கட்டுமான நிறுவனத்தின் தலைவர் டாக்டர் வி.பி.ராவ் தன் செயலுக்கு நியாயம் கற்பிக்கிறார். செய்தித் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் பார்ப்பனர் என்பது சாதியல்ல; அது ஒரு நல்ல எண்ணஓட்டம் கொண்ட மனிதர்களைக் குறிக்கும் குறியீடாகும். இதை பார்ப்பன சாதி என்று பார்க்காமல் பார்ப்பன அய்டியாலஜி (சித்தாந்தம்) என்று கூறுவதுதான் சரியானது. மேலும் இது போன்ற செயற்கை கிராமங்களின் மூலம் சமூகத்தில் எந்த சச்சரவும் இல்லாமல் அமைதியான சூழலில் வாழும் நிலையை நாம் உருவாக்க முடியும். தற்போதுள்ள சூழலில் அனைத்துப் பிரிவு மக்களும் பல்வேறு சிந்தனை கொண்ட வர்கள் பழக்க வழக்கங்களைக் கொண்டவர்கள். அதனால் அங்குள்ள வர்களின் பழக்கவழக்கங்களினால் சில பிரச்சனைகள் ஏற்படும்.

இது போன்ற தனிக் குடியிருப்புகள் கட்டும் போது சச்சரவற்ற நிலையில் அமைதியான சூழலில் வாழ வகை யுண்டு. இதனால் பல நன்மைதான் உண்டு, வேண்டுமென்றால் பல்வேறு பிரிவு மக்கள் அவர்களுக்கு என்று குடி யிருப்புகளைக் கட்டிக்கொள்ளட்டும், இதில் எங்கும் பாகுபாடு என்ற பேச்சிற்கே இடமில்லை, ஒரே எண்ண ஓட்டம் கொண்டவர்கள் ஓரிடத்தில் வாழ்வது எப்படி பாகுபாடு ஆகும்? அடுத்தடுத்து இது போன்ற செயற்கைக் கிராமங்கள் உருவாக வேண்டும். அப்படி உருவாகும் போது சமூகம் அமைதியான சூழலில் வாழும் நிலை ஏற்படும் என்று கூறினார். இந்த திட்டம் ஆரம்பித்த உடனேயே 90 சதவீத வீடுகள் விற்றுத் தீர்ந்து விட்டன இதுவே எங்களின் திட்டத்திற்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page2/89475.html#ixzz3GVeHrlS9
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-25547355317448477672014-10-18T20:37:43.885+05:302014-10-18T20:37:43.885+05:30உள்ளத்தால் உயர்ந்த கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிதி...உள்ளத்தால் உயர்ந்த கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிதி

இந்தியாவில் கிரிக்கெட் விளையாடி கோடி கோடியாக சம்பாதித்தவர்கள் எல்லாம் ஹோட்டல், மற்றும் பெரிய நிறுவனங்களைத் தொடங்கி தங்களின் தொழிலை மட்டுமே வளமாக்கிக் கொண்டார்கள். தனக்காக கைதட்டிய ரசிகனை பற்றி ஒரு முறையும் சிந்திக் காதவர்கள்.

நாம் ஓய்வு பெற்ற பின்பும் எதாவது வருமானம் வருமா என்று ஏங்கி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தான் அதிரடி ஆட்டக்காரர் ஷாஹித் அப்ரிடி, எந்த அளவிற்கு அதிரடி ஆட்டகாரரோ, அதே அளவிற்கு இளகிய மனம் படைத்தவர்.

ஆம், .தன் வாழ்நாளில் சம்பாதித்த பணத்தை எல்லாம் அவர் பிறந்து வளர்ந்த கிராமத்திற்கு இலவச மல்டி ஸ்பெஷல் மருத்துவமனை அமைப்ப தற்கும் மற்றும் தரமான சாலைகள் போடுவதற்கும் செலவு செய்துள்ளார். இதுவரை அவர் இதற்காக 17 மில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளார். இந்திய மதிப்பில் 77 கோடிக்கும் மேல் இருக்கும். முன்னதாக ஷாஹித் அப்ரிதி தனது கிராமத்தின் பாதை நிர்மாணத்துக்கு ஒரு மில்லியன் அன்பளிப்பு செய்திருந்தமை குறிப் பிடத்தக்கது. அப்ரிடியின் மனிதநேய செயலை பாராட்டுவோம்.. வாழ்த் துவோம்..!

இன்னும் சிலரோ ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் அகடமி தொடங்கு வார்கள். அதில் புதிய ஆட்டகாரரர்கள் நுழைவதற்கு லட்சக்கணக்கில் பணம் வாங்குவார்கள். அவர்களின் சம்பளத் தில் இருபது சதவீதம் வாழ்நாள் முழு வதும் தரகு பெறுவார்கள். இது தானே இங்கே நடந்து கொண்டு இருக்கிறது.

Read more: http://viduthalai.in/page2/89472.html#ixzz3GVdyJIZk
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-30708558814843974762014-10-18T20:32:38.773+05:302014-10-18T20:32:38.773+05:30விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் அய்ரோப்பிய ஒன்ற...விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் அய்ரோப்பிய ஒன்றியத்தை இந்திய அரசும் பின்பற்ற வேண்டும்! தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்!

சென்னை, அக்.18_ அய் ரோப்பிய ஒன்றியத்தின் நீதிபதிகள் விடுதலைப்புலி கள் அமைப்பு மீதான தடையை நீக்கி, சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளனர். 2006 ஆம் ஆண்டு முதல் விடு தலைப்புலிகள் மீது விதித் திருந்த தடையைத் தற் போது விலக்கிக் கொண் டிருக்கிற அய்ரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம், இந்திய அரசின் நடவடிக் கைகளையும் விமர்சித்துள் ளது.

இந்திய அரசு, இலங் கைப் பிரச்சினையில், ஒரு சார்பான அணுகுமுறை களைக் கொண்டிருக் கிறது என்றும், எனவே, விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அரசு முன்வைக்கும் கருத்து களில் நம்பிக்கை இல்லை என்றும் அய்ரோப்பிய ஒன்றியத்தின் நீதிபதிகள் தமது தீர்ப்பில் குறிப்பிட் டுள்ளனர். விடுதலைப் புலிகள்மீது சிங்கள அர சும், இந்திய அரசும் எவ் வாறு அவதூறுகளைப் பரப்பிவந்துள்ளன என் பதை இதிலிருந்து சர்வ தேச சமூகத்தால் அறிந்து கொள்ள முடியும்.

சிங்கள இனவெறியர்களின் கைகளில் ஆட்சியதிகாரம் இருப்பதால், மிக இலகு வாக சர்வதேச நாடுகளின் ஆட்சியாளர்களை அணுகி, விடுதலைப் புலிகளுக்கு எதிரான அவதூறுகளைப் பரப்ப முடிகிறது. ஒரு தரப்பு கருத்துகளை மட் டுமே கேட்கிற வாய்ப் பைப் பெற்ற நாடுகள், அவற்றை உண்மையென நம்பி, விடுதலைப் புலி களுக்கு எதிரான முடி வெடுக்கும் நிலையும் உரு வாகிறது. சிங்கள அரசுக் குத் துணையாக இந்திய அரசு விடுதலைப் புலி களுக்கு எதிரான அவ தூறுகளைப் பரப்பி சர்வதேச நாடுகளை நம்ப வைத்துள்ளது.

அதனடிப் படையில், அய்ரோப்பிய ஒன்றிய நாடுகளும் விடு தலைப் புலிகள் மீது தடைவிதித்திருந்தது. தற்போது, சட்டபூர்வ மாக விசாரணை நடத்தி யதில் அய்ரோப்பிய ஒன் றியத்தின் நீதிபதிகள் அக் கருத்தை மாற்றிக் கொண்டு, புலிகள் மீதான தடையை விலக்கிக் கொண்டுள்ளனர்.

இது சர்வதேச சமூகத்தின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத் தும் என்பதுடன், புலி களின் மீது ஒரு புதிய பார் வையை ஏற்படுத்தும் என் றும் நம்புகிறோம். அய் ரோப்பிய ஒன்றியத்தைப் பின்பற்றி பிற நாடுகளும் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் நிலை உருவாகும்.

அந்த வரி சையில், இந்திய அரசும் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண் டுமென்றும் புலிகளின் மீதான தடையை விலக் கிக் கொள்ள வேண்டு மென்றும் விடுதலைச் சிறுத்தைகள் இந்திய ஆட்சியாளர்களுக்கு வேண்டுகோள் விடுக் கிறது.

அத்துடன், விடு தலைப் புலிகள் இயக்கம் வெகுமக்களின் பேராதரவு பெற்ற ஒரு தேசிய இன விடுதலைப் போராட்ட இயக்கம் எனவும் இந்திய அரசு அங்கீகரித்து ஏற்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக் கொள்கிறது. _ இவ்வாறு அவர் அறிக்கையில் கூறி யுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/89531.html#ixzz3GVcl7000
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-54163501879613784722014-10-18T20:31:27.783+05:302014-10-18T20:31:27.783+05:30திருநெல்வேலி ஜில்லா 4ஆவது சுயமரியாதை மகாநாடு
சகோத...திருநெல்வேலி ஜில்லா 4ஆவது சுயமரியாதை மகாநாடு

சகோதரர்களே! இன்று இந்த மகாநாட்டுக்குத் தலைமை வகிக்கும் திரு.எஸ். இராமநாதன் அவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. அவர் தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு மிராசுதாரகுமாரர். அவர் எம்.ஏ., பி.எல்., படித்துப் பட்டமும், சன்னதும் பெற்று, சென்னையில் ஹைகோர்ட்டு வக்கீலாயிருந்தவர்.

ஒத்துழையாமையின் போது வக்கீல் வேலையையும் தனது சம்பாதனையையும் விட்டு வெளியேறி சிறைச் சென்றவர். இவர் சிறைச் சென்ற காலம் எது என்றால், இப்போதைப்போல் சிறைக்குப் போகின்றவர்களுக்கு மாமியார் வீட்டுக்கு முதல் தவணை செல்லும் மருமகனை போல் அளவுக்கும், தகுதிக்கும் மீறின மரியாதைகளும், சுக போகங்களும் சிறையில் கிடைத்துக் கொண்டிருக்கும் காலம் அல்ல அது.

திரு. இராமநாதன் அவர்கள் தலையில் கூடையும், கையில் மண்வெட்டியும் கொடுக்கப்பட்டு தெருவில் ரோடு போடும் வேலை செய்தவர். சிறை அதிகாரிகளால் பல நிர்ப்பந்த தண்டனைகள் செய்யப்பட்டதல்லாமல், தனி அறையில் அதாவது கூனுகொட்டடியில் போட்டு மக்களைப் பார்ப்பதற்கும், பேசுவதற்கும் இல்லாமல் வதைக்கப்பட்டவர்.

இதற்காக இவரைப்பற்றி மாத்திரம் சட்டசபையில் பலகேள்விகள் கேட்கப்பட்டதும் உங்களுக்குத் தெரியும். தவிர, சென்னை மாகாஜன சங்க காரியதரிசியாயும், தமிழ்நாடு மாகாண காங்கிரஸ் கமிட்டியில் காரியதரிசி யாயும் இருந்தவர். இவ்வளவும் தவிர தமிழ் , கேரளம், கர்நாடகம் ஆகிய நாடுகளுக்கு கதர் போர்டு நிர்வாகக் காரியதரிசியாகவும் இருந்தார்.

திரு. காந்தியவர்களுக்கு உற்ற சீடராகவும் இருந்து, திரு. காந்தியவர்களால் மிகவும் போற்றப்பட்டவராகவும் இருந்தவர் இவ்வளவும் அல்லாமல், யாதொரு சுயநலப் பிரதிப்பிரயோஜனமும் எதிர்பாராமலும், தன் கைப்பொறுப்பிலேயே சகல செலவும் செய்து கொண்டு இவ்வியக்கத்தில் உழைப்பவர்.

அன்றியும் அவரது கொள்கையில் மயக்கமும், குளறுபடியும், சமயத்திற்குத் தகுந்த அர்த்த வியாக்கி யானமும் இல்லாமல் மிகத் தெளிவும், ஒரே நிலையும் உள்ளவர். ஆகவே, இப்படிப்பட்ட ஒருவர் இந்து மகாநாட்டுக்குக் கிடைத்திருப்பதால் மகாநாடு உண்மைச் சுயமரியாதை மகாநாடாக நடந்து உண்மையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மக்களுக்கு உண்மை யான வழிகாட்டும் என்பதில் அய்யமில்லை.

குடிஅரசு - சொற்பொழிவு - 12.04.1931

Read more: http://viduthalai.in/page-7/89545.html#ixzz3GVcU9gBT
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-62989206864377563902014-10-18T20:30:15.773+05:302014-10-18T20:30:15.773+05:30மூன்றாவது மாகாண சுயமரியாதை மகாநாடு
விருதுநகரில் ந...மூன்றாவது மாகாண சுயமரியாதை மகாநாடு

விருதுநகரில் நடக்கவிருக்கும் 3வது சுயமரியாதை மகாநாடானது முன் குறிப்பிட்டபடி ஜூன் 6, 7, தேதிகளில் நடத்துவது சற்று தாமதித்து அதாவது ஒரு வாரம் பொறுத்து நடத்த வேண்டியதாக ஏற்பட்டு விட்டதென்று தெரிவிக்க வேண்டியதாகி விட்டது.

ஏனெனில், மகாநாட்டிற்குத் தலைமை வகிக்க ஏற்கனவே இசைந்து அதை உத்தேசித்தே சுமார் 1 மாதத்திற்கு முன்னதாகவே இங்கு வந்து நீலகிரியில் (ஊட்டியில்) தங்கியிருந்த உயர்திருவாளர் ஹரி சிங்கவர் அவர்களுக்கு பல்லில் வலி ஏற்பட்டு அதனால் ஒரு பல் எடுக்கவேண்டியதாகியும், மேலும் அவருக்கு அந்த வலி நிற்காமல் மிகவும் தொந்தரவு கொடுத்ததால் அவர் மகாநாட்டுக்கு வர முடியாமலும் திடீரென்று தமது ஊருக்குப் புறப்பட வேண்டியதாகிவிட்டது.

ஆன போதிலும் மகாநாட்டை எந்த விதத்திலும் ஒரு வாரம் முன் பின்னாகவாவது நடத்தி விடலாம் என்கிற தீர்மானத்தின் மீதே தலைவர் உயர்திருவாளர் சௌந்தரபாண்டியன் அவர்களும் மற்றும் விருதுநகர் பிரமுகர்கள் திருவாளர்கள் வி.வி.ராமசாமி, செந்தில்குமார் நாடார் முதலியவர்களும் வெகு மும்முரமாகவே மகாநாட்டு வேலைகளைக் கவனித்துக்கொண்டு வருகின்றார்கள். வேறு தலைவர் தேர்ந்தெடுத்து சீக்கிரம் மகாநாடு நடக்கும் தேதியை தெரிவிக்கப்படும்.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 24.05.1931

Read more: http://viduthalai.in/page-7/89546.html#ixzz3GVcDkV8T
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-15470100574525657282014-10-18T20:28:42.360+05:302014-10-18T20:28:42.360+05:30தந்தை பெரியார் பொன்மொழி
ஒருவன் சமதர்மத்திற்கு உழை...தந்தை பெரியார் பொன்மொழி

ஒருவன் சமதர்மத்திற்கு உழைப்பதானால் அவன் முதலில் ஓர் உண்மையை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். உழைப்பதற்கென்றே பிறந்திருக்கும் வகுப்பு ஒன்று;

இவர்களது உழைப்பின் பயனை அனுபவித்துக் கொண்டு சுகபோகியாய் வாழ்வதற்கென்றே பிறந்திருக்கும் வகுப்பு ஒன்று இருப்பதை ஒழிக்க வேண்டும் - கிள்ளி எறிய வேண்டும் என்பதே அந்த அடிப்படை நிலை.

இதைச் செய்யும் வரையில் எவ்விதப் பொருளாதாரச் சமதர்மத் திட்டமும் இந்த நாட்டில் அரை வினாடி நேரமும் நிலைத்து நிற்காது என்பதைச் சமதர்மம் பற்றிப் பேசுவோர். நினைப்போர், ஆசைப்படுவோர் மனத்தில் கொள்ள வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-7/89544.html#ixzz3GVbpO59D
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-11366581789831516482014-10-18T20:28:21.409+05:302014-10-18T20:28:21.409+05:30சுப்பண கவுண்டர்
கோபிக்கு அடுத்த கூகலூர் திருவாளர...சுப்பண கவுண்டர்

கோபிக்கு அடுத்த கூகலூர் திருவாளர் கே. சுப்பண கவுண்டர் அவர்கள் காங்கிரசினிடமும், காந்தியினிடமும் அதிகப்பற்றுள்ளவராயிருந்தாலும் தீண்டாமை, வருணா சிரமம் ஆகியவைகள் ஒழிய வேண்டுமென்பதில் உண்மையாகவே பற்றும், உண்மையான ஊக்கமும், செல்வமும், செல்வாக்கும் கொண்ட ஒரு வேளாளப் பெரியாராவார்.

இவர் இரண்டு வாரத்திற்கு முன்பு தனது தோட்டத்துக் கிணற்றில் ஆதி திராவிடர்களைத் தண்ணீர் எடுக்க அனுமதித்ததினால் ஊரார் இவரைப் பகிஷ்காரம் செய்து இவர் வீட்டு வேலைக்கும், விவசாய வேலைக்கும் ஆள்களைப் போகாவொட்டாமல் தடுத்து விட்டார்கள்.

இதனால் வெளியூர்களில் இருந்து ஆள்கள் தருவிக்கப் பட்டு திரு. கவுண்டர் அவர்களின் குடித்தனம் கிரமமாய் நடைபெற்று வருகின்றதோடு அநேக அறிவாளிகளும், சில மிராசுதாரர்களும் திரு. சுப்பண கவுண்டருக்கு அனுகூல மாகவும் இருப்பதாகத் தெரிய வருகின்றது.

ஆனாலும், மூடப்பழக்கவழக்கங்களைக் கையாளும் அஞ்ஞானி களாயுள்ள சிலர் அந்த ஜாதிப் பெரியார்களான பட்டக்காரர்கள் என்பவர்களுக்குக் கடிதம் எழுதி கவுண்டர் வீட்டில் வேலை செய்யும் ஆட்களைச் சாதியைவிட்டு நீக்கும்படி கேட்டுக் கொள்வதாகப் பயமுறுத்துகின்றார்கள் என்பதாகத் தெரிய வருகின்றது.

இந்த மாதிரியான காரியங்களில் எல்லாம் பட்டக்காரர் கனவான்கள் துணிந்து முன் வந்து அஞ்ஞானிகளுக்கு ஞான உபதேசம் செய்து இக்கால நிலைக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும், நாகரிகத்திற்கும் ஏற்றவண்ணமே நடந்து மக்களுக்கு சுதந்திரமும், சமத்துவமும் கிடைக்கும்படி செய்வதன்மூலம் தங்கள் பட்டத்திற்கும், ஸ்தானத்திற்கும் பெருமை விளைய செய்வார்கள் என்றே கருதுகின்றோம். கடைசியாக இவ்வளவு மேலான ஒரு காரியத்தைத் துணிந்துமேற்போட்டுக் கொண்டு செய்த திரு. சுப்பண கவுண்டர் அவர்களையும், இவ்விஷயத்தில் அவருக்கு உதவி செய்து துணையாய் இருக்கும் மற்ற கனவான்களையும் போற்றிப் பாராட்டுகின்றோம்.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 17.05.1931

Read more: http://viduthalai.in/page-7/89544.html#ixzz3GVbi0Lpk
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-88571450383685589702014-10-18T20:22:20.164+05:302014-10-18T20:22:20.164+05:30பெண்களின் திருமண வயது உயர்வை வரவேற்போம்!
மதுரை உய...பெண்களின் திருமண வயது உயர்வை வரவேற்போம்!

மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு ஒன்றில் நீதிபதிகள் எஸ். மணிக்குமார், வி.எஸ். இரவி ஆகி யோர் ஒரு முக்கியமான கருத்தினைத் தெரிவித்தனர். பெண்களின் திருமண வயதினை 18லிருந்து 21ஆக உயர்த்துவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் கருத்தாகக் கூறியுள்ளனர்.

இதுகுறித்து தொலைக்காட்சிகளில் விவாதங்கள் களைகட்டத் தொடங்கின. நல்ல கருத்து என்று ஒரு தரப்பிலும் தேவையில்லாத கருத்து என்று இன்னொரு தரப்பிலும் ... அலசப்பட்டும் வருகிறது.

இப்பொழுது ஆண்களுக்குத் திருமண வயது 21 என்றும் பெண்களுக்குத் திருமண வயது 18 என்றும் சட்டம் இருக்கிறது.

ஒரு காலத்தில் பெண்கள் ருது ஆவதற்கு முன்பே திருமணம் செய்து விட வேண்டும் என்ற சாஸ்திர நம்பிக்கை இருந்ததுண்டு. பெண்கள் திருமண வயதை 13க்குக் கீழ்ப்படாமலும் 14 வயதுக்கு மேற்படாமலும் திருமணம் செய்விக்க வேண்டுமென்று சர் அலக்சாந்தர் முட்டிமன் ஒரு மசோதாவை அரசு சார்பில் கொண்டு வந்து 1925இல் நிறைவேற்றப்பட்டது.

வைதிகப் பார்ப்பனர்கள் பொதுவாக பெண்களின் திருமண வயதை உயர்த்தக் கூடாது என்பதில் பிடிவாதமாகவே இருப்பர். ஒரு பெண் ருது ஆவதற்கு முன் கல்யாணம் செய்து கொடுத்துவிட வேண்டும் என்று பராசரர் கூறுகிறார். உங்கள் சட்டமோ அதற்கு மாறாகக் கூறுகிறது. நாங்கள் சட்டத்தை மீறி சிறைக்குச் சென்றாலும் செல்லுவோமே தவிர, ஒருக்காலும் சாஸ்திரத்தை மீறி ரௌரவாதி நரகத்திற்குச் செல்ல மாட்டோம் என்று கூறினார்கள் என்றால் நம் நாட்டின் சனாதனமும், வைதிகமும் எத்தகைய பிற்போக்குக் குணம் கொண்டவை என்பதை அறிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் இப்படி பால்ய வயதில் கல்யாணம் செய்து வைப்பதால் சிறு வயதிலேயே பெண்கள் கருத்தரித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு, நோயின் வடிவமாகக் காட்சி அளிப்பது குறித்து மிஸ்மேயோ என்ற அமெரிக்க மாது இந்தியாவைச் சுற்றிப் பார்த்து பல பிரசவ மருத்துவமனைகளையும் நேரில் கண்டு, கண்ணீர் வடித்துள்ளார்; அது மதர் இந்தியா என்ற நூலாகவே வெளி வந்தது.

9வயது சிறுமி கல்யாணமான மறுநாள் இடது கால் எலும்பு பிசகி விட்டது. கருப்பை கவிழ்ந்து விட்டது, உள்ளே புண்; 10 வயது சிறுமி; நிற்கக் கூட சக்தி இல்லை. பெண் குறியில் புண் உண்டாகி ரத்தம் பெருகி ஒழுகுகின்றது.

இன்னொரு 9 வயது சிறுமி; பெண்ணின் உறுப்பில் அதிக ரணம், இவளைத் தவிர இவள் புருஷனுக்கு இரண்டு மனைவிகள்; ஏழு வயது சிறுமி; சிற்றின்ப விஷயத்தில் புருஷனுடைய கொடுமை பொறுக்க முடி யாமல் உயிர் துறந்தார் என்று மேயோ எழுதியுள்ளார்.

இந்து - வைதிகத்தின் எதிர்ப்புகளை எல்லாம் தாண்டித் தாண்டித்தான் பெண்களுக்குத் திருமண வயது 18 என்று உயர்த்தப்பட்டது.

பெண் கல்வி என்பது நாளும் வளர்ந்து வருகிறது. 18 வயதில் திருமணம் என்று சொன்னால், அனேகமாக +2 என்கிற அளவில் அந்தப் பெண் கல்விக்கு மூடு விழா செய்து கொள்ள வேண்டும்.

குறைந்தபட்சம் ஒரு பட்டப் படிப்பு ஒரு பெண் பெற வேண்டுமானால் கண்டிப்பாக 21 வயதை நெருங்க வேண்டும். மருத்துவம், பொறியியல் கல்லூரி படிப்புகளை முடிக்க வேண்டுமானால் இன்னும் கூடுதல் ஆண்டுகள் கூடத் தேவைப்படும்.

இந்தச் சூழலில் பெண்கள் வயது 18லிருந்து 21ஆக உயர்ந்தப்படுவது அவசியமும், நியாயமும், நேர்மை யுமாகும். பெண் என்றால் ஆணைவிட குள்ளமாக இருக்க வேண்டும். கணவனைவிட பெண் அதிகம் படித் திருக்கக் கூடாது; ஆண் சம்பாத்தியத்தை எதிர்ப்பார்த்து மனைவி இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் தான் பெண்ணின் திருமண வயதுக்கு முட்டுக்கட்டை போடுவார்கள்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இதைத் தான் கூறுகிறார். கணவனைவிட மனைவி அதிகம் படித்து அதிக வருவாய் உடையவராக இருந்தால் ஈகோ ஏற்படும் - எனவே அத்தகைய மனைவிகளை விட்டு வெளியேறுங்கள் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறவில்லையா?

இந்தப் பிற்போக்குத்தனங்களைப் பெண்கள் பொருட்படுத்தத் தேவையில்லை. ஆண்களுக்கு நிகராக மட்டுமல்ல; மேலாகவும் படிக்க வேண்டும்; பொருளாதாரத்தில் தன் காலில் நிற்க வேண்டும்; அந்தச் சூழல் வருமேயானால் பெண்களை ஆண்கள் அடிமைப்படுத்தும் கொடுமை ஒழியும் என்பது தான் தந்தை பெரியார் அவர்களின் கருத்தாகும்.

எனவே மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத் திற்கு மாநில, மத்திய அரசுகள் பச்சைக் கொடி காட்ட வேண்டும் மகளிர் அமைப்புகளும் இதனை வரவேற்க முன் வர வேண்டுமென்று கேட்டுக கொள்கிறோம்.

Read more: http://viduthalai.in/page-2/89522.html#ixzz3GVaAWkwh
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-45732013066617376272014-10-18T20:21:44.761+05:302014-10-18T20:21:44.761+05:30அட்ரா சக்கை; அட்ரா சக்கை!!!
- குடந்தை கருணா
நாங...அட்ரா சக்கை; அட்ரா சக்கை!!!

- குடந்தை கருணா

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக் கும் கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு மூட்டை கட்டிக் கொண்டு வரு வோம்; அந்தப் பணத்தை களவாடி வைத்திருக்கும் பெயர்களை வெளி யிடுவோம் என இந்தியில் நீட்டி முழக்கமிட்டவர் இப்போதைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நூறு நாட்களில் கருப்புப்பணத்தை வெளி நாட்டிலிருந்து கொண்டு வருவோம் என மேடைகளில் சூளு ரைத்தவர். அன்றைய பாஜகவின் தலைவரும், இன்றைய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங்.

தனது டிவிட்டரில், காங்கிரசு ஏன் கருப்புப்பணத்தை கொண்டு வரத் தயங்குகிறது? ஏனென்றால், அது யாருடையது என்று அவர்களுக்குத் தெரியும்; எங்கள் ஆட்சி வந்தவுடன், பைசா முதல் கொண்டு, வெளி நாட்டில் உள்ள கருப்புப் பணத்தை கொண்டுவருவோம் என தேர்த லுக்கு முன், மார்ச் 30, 2014-ல் தனது டிவிட்டரில், நரேந்திரமோடி அளந் தார்.

நம்மாளும், இதை படிச்சுட்டு, ஆகா, வந்துட்டார்யா, யோக்கியர். இவருக்கு வோட்டு போட்டா, எல்லா கருப்புப் பணமும் இந்தி யாவுக்கு வந்துடும். இங்கே, பஞ்சமே இருக்காது. யாரும், வரிக்கூட கட்ட வேண்டியிருக்காதுன்னு, அவரோட அல்லக்கைகள் மேடைபோட்டு முழங்கின. இப்போது, அதைச் சொல்லி ஆட்சிக்கும் வந்தாச்சு; இப்போ என்னாச்சு. நேத்து, நிதி மந்திரி சொல்றார். பெயரெல்லாம் சொல்லக் கூடாது; சொல்ல முடியாது. ஏன்னா, அப்படித்தான் ஒப்பந்தம் போட்டிருக்காங்க.. இது பத்திரிக்கையாளர் கிட்டே அப்படின்னு அவர் சொல்லிட்டார்.

இதுமட்டுமில்லை; உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகட்கி, வெளிநாட்டில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்களின் பெயரை வெளியிட முடியாதுன்னு சொல்லிட்டார். காரணம், ஜெர்மனியோட போட்ட ஒப்பந்தம்னு சொன்னார். முந்தைய காங்கிரசு ஆட்சியிலே, இதே காரணத்தை சொன்னப்ப, ஏத்துக் காத உச்ச நீதிமன்றம், இப்ப, அதே காரணத்தை ஏத்துக்கிடுச்சே.

இந்தக் கருத்தை, மூத்த வழக் குரைஞர் ராம் ஜெத்மலானி கடு மையா சாடியிருக்கார். இந்த மாதிரி கோர்ட் டுலே, குற்றவாளிகள்தான் சொல்லி யிருக்கனும். ஆனா, அரசே சொல் லுதேன்னு, கடுமையா அறிக்கை விட்டிருக்கார்.

அதைவிட இன்னும் சிறப்பு; நம்ம அட்டார்னி ஜெனரல், பத்திரிக்கை யாளர்கிட்ட என்ன சொன்னார் தெரியுமா? வெளி நாட்டில் துவங் கப்பட்டுள்ள இந்தியர்களின் எல்லா கணக்கிலும், கருப்புப்பணம்தான் இருக்கும்னு சொல்லமுடியாது; அப்படி கணக்கை துவங்குறது குற்றம்னு சொல்லமுடியாது; இதைப் பிரிச்சு, எது நல்ல கணக்கு, எது கருப்புக் கணக்குன்னு பார்த்து, அப் புறம்தான் சொல்லமுடியும்னு சொல்லிட்டார்.

அட்ரா சக்கை; அட்ரா சக்கை;

ஆக, இப்போதைக்கு, ஒன்னும் ஆகாதுங்கறது நல்லா தெரியுது.

Read more: http://viduthalai.in/page-2/89528.html#ixzz3GVa2preE
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-52265958878484313482014-10-18T20:19:16.217+05:302014-10-18T20:19:16.217+05:30தீபாவளி தமிழர் விழாவா? எப்பொழுது புகுந்தது தமிழ்நா...தீபாவளி தமிழர் விழாவா? எப்பொழுது புகுந்தது தமிழ்நாட்டில்?

தீபாவளி தமிழ்நாட்டில் தொன்று தொட்டு வந்த திருநாளன்று. மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை - செஞ்சி நாயக்கர்களாலும் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்டதால், பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெரு நாள்... இது பழந்தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்படவேயில்லை.

சென்னை, செங்கற்பட்டு மாவட்டங்களில் தீபாவளியில் புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக் காலம் வரையில் இருந்ததில்லை

- அ.கி. பரந்தாமனார் எழுதிய மதுரை நாயக்கர் வரலாறு - பக்கம் 433-434).

தீபாவளி கொண்டாடும் தமிழர்களே தீபாவளி நமது விழாவா? இப்பொழுது சொல்லுங்கள்!

இடையில் புகுத்த இந்த இடைச்செருகல் எப்படி நமது விழாவானது? ஒரே ஒரு கணம் சிந்தித்து புறக்கணிப்பீர்! புத்தியைப் பயன்படுத்துவீர்!

பொருள் இழப்பைத் தவிர்ப்பீர்!
பொழுதை வீணாக்காதீர்!

ஆரியர் திராவிடரை வீழ்த்திய நாளை திராவிடர்கள் கொண்டாடலாமா? கொண்டாடலாமா?

Read more: http://viduthalai.in/e-paper/89516.html#ixzz3GVYwxxh1
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-76167636483148820392014-10-16T20:14:45.510+05:302014-10-16T20:14:45.510+05:30இப்படி ஏற்கெனவே முப்படைக்கும் தலைமை அமைச்சராகப் பண...இப்படி ஏற்கெனவே முப்படைக்கும் தலைமை அமைச்சராகப் பணியாற்றிய பாபு ஜெகஜீவன்ராம் அவர்களுக்கும் இதேபோன்று நடந்த அவமதிப்பும் நினைவிற்கு வருகிறது.

தேவநாதன்கள் செய்கின்ற காரியத்திற்-கெல்லாம் கடவுள் சன்னதியைக் கழுவினீர்களா என்பதையும் கேட்க வைக்கிறது.

இப்பவெல்லாம் யார் சார் ஜாதி பார்க்கிறாங்க! என்று சொல்லும் ஏமாந்த நம் மக்களும் ஏமாற்றும் பார்ப்பனர்களும் இந்த தலித் முதலமைச்சருக்கு நேர்ந்த நிலைக்கு என்ன பதில் கூறுவார்கள்? நாடெங்கிலும் நமக்காக உழைத்திட்ட நல்ல பெருந்தலைவர்கள் காலத்திற்குப் பின்னும் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் தலித்துகளுக்கு எதிரான மனநிலை இன்னமும் தொடர்ந்து வெளிப்படுகிறதென்றால் இதற்குக் காரண-மான ஜாதிய வெறித்தனத்தையும் இப்படி மனிதர்களைப் பிரித்துப் படைத்ததாகச் சொல்லப்படும் கடவுளையும் அடித்து நொறுக்காமல் வேறு என்ன செய்யலாம்?

நாட்டின் வெளிப்புறத்தைச் சுத்தம் செய்யத் துடிக்கும் மோடி அவர்களே! மனதில் உள்ளுக்குள் இதுபோன்ற நீங்காத கறை-பிடித்த அழுக்குகளுடன் மனிதர்கள் உலாவு-கிறார்களே. இந்த அழுக்குகளுடன் மனிதனை உருவாக்கும் உங்கள் இந்துமதச் சித்தாந்த அழுக்குகளைக் கழுவி சக மனிதனைச் சகோதரனாய்ப் பார்க்க வையுங்கள்.

இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலாவுடன் கூட்டாகப் பெற்றிருக்கின்றாரே கைலாஷ் சத்தியார்த்தி! குழந்தைகள் உரிமைகளுக்காகப் போராடி 80 ஆயிரம் குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுத்திருக்கிறாரே! பல நாடுகளின் விருதுகளைப் பெற்றிருந்தாலும் அவரை நோபல் பரிசுக்கான குழு தேர்ந்-தெடுத்துச் சொல்லும் வரை அவரை யாருக்குத் தெரியும்? இதுவரையில் எந்த செய்தி ஊடகத்திலாவது _ காட்சி ஊடகத்திலாவது அவரைக் காட்டியதுண்டா? விளம்பரமே இல்லாமல் இருந்த அவர் இன்றைக்கு விரிந்துபட்ட உலகிற்குத் தெரிந்த மனிதராய் மாறியிருக்கிறாரே! அதுதான் மனிதநேயப் பணிக்கான இலக்கணம்!

குப்பைகளை அகற்றுவதற்காக குடிசைப் பகுதிக்கு வருவதையே விளம்பரமாக்காமல் எண்ணற்ற குப்பைகளையும், ஆபாசங்களையும் அழுக்குகளையும் உள்ள உங்கள் இந்து மதத்தைத் தூய்மைப்படுத்தி முடிந்தால் மதக் கழிவையே கழுவி வெளியேற்றி சக மனிதனையும் சகோதரனாய்ப் பார்க்க வைக்கும், தழுவிக் கொள்ள வைக்கும் மண-உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவைக்கும் மனநிலைக்கு மாற்றமுயற்சியுங்கள்!

முதலில் சுவாட்ச் பாரத் அபியான் என்று தங்களுக்குத் தெரிந்த மொழியில் மட்டும் சொல்லாமல் நாட்டுடைமைத் தொலைக்-காட்சியிலும், தனியார் தொலைக்காட்சியிலும் அந்தந்த மாநில மொழிகளில் சொல்ல வையுங்கள். சுவாட்சா என்று நீங்கள் சொல்ல எங்க ஆள் உச்சா போகச் சொல்லுகிறார் என்று நினைத்து விடுவான்.

அந்நியமாகிப் போகும் எதனையும் எந்த மனிதனும் சட்டை செய்யவே மாட்டான். காந்தியாரின் கனவாகிய தூய்மையான இந்தியாவை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம் என்னும் பிரதமர் அவர்களே! இதைவிடப் பெரிதாக இன்னொன்றுக்கு ஆசைப்பட்டு கனவு கண்டார் காந்தியார் அவர்கள். அதுதான் மனிதநேயமுள்ள மதச்சார்பற்ற ஒற்றுமையான சமூக நல்லிணக்க இந்தியா! அந்த அருமையான கனவினை நிறை-வேற்றுவீர்களா, காந்தியைக் காவு வாங்கிய கூட்டத்தைக் குருவாக ஏற்றிருக்கும் திருவாளர் இந்துத் தேசியவாதி மோடி அவர்களே!

- இசையின்பன் தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-53356139748802590542014-10-16T20:14:38.315+05:302014-10-16T20:14:38.315+05:30விளக்குமாறு வியாபாரிகளோ வியாபாரத்தை பெருக்கி-யதற்க...விளக்குமாறு வியாபாரிகளோ வியாபாரத்தை பெருக்கி-யதற்காக நன்றி கூறுகிறார்கள் நரேந்திர மோடிக்கு. வீதியைக் கூட்டியது போதும் மோடிஜி. வாருங்கள்! மலத்தை மனிதர்கள் தங்களுக்கு முடிந்த இடத்தில் இருந்து வைத்து-விடுகிறார்கள். கண்ட இடத்தில் கழித்து விடுபவர்களுக்கு நமது சுவட்சா பாரத் அபியானைப் பற்றிச் சொல்லுங்கள். முன்னு-தாரணமாக நீங்களே செயலில் இறங்குங்கள். வராக அவதாரத்தை வணங்கும் தாங்கள் பூமாதேவியின் மேல் கிடக்கும் நரகலை-யெல்லாம் கூடையில் வாரிப் போடுங்கள். ஸ்டார்ட்... கேமரா ரெடி! ஆக்க்ஷன்! நாடெங்கும் நேரடியாக ஒளிபரப்புங்கள். 9 பேரைத் தேர்ந்தெடுத்து இதையும் செய்யச் சொல்லுங்கள். இன்னும் நாட்டில் நிறைய நடிகர், நடிகைகள், தொழில் அதிபர்கள் பாக்கி இருக்கிறார்கள்.

ஆனால் பாருங்கள்! என்ன சொன்னாலும் கேட்கமாட்டேன் என்கிறார்கள் நம் மக்கள். நாம் காட்டாத எய்ட்ஸ் விளம்பரமா? குடியின் தீமை பற்றி, சிகரெட்டின் அபாயம் பற்றி நாம் சொல்லாததா? சாலை விதிகள் பற்றி நாம் கூறாததா? தூய்மை இந்தியா இயக்கமாகட்டும், மற்ற எதுவாக வேண்டுமென்றாலும் ஆகட்டும், தனி மனிதனுக்கு தன்னைப் பற்றியும் நாட்டைப் பற்றியும் பொறுப்புணர்ச்சி வர வேண்டும். அதனைக் கொண்டு வருவதற்கு கேமரா முன்னால் நடிப்பதை விட்டுவிட்டு நல்லதாக தங்களிடம் உள்ள வலிமை வாய்ந்த அரசு இயந்திரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்பதை யோசித்துப் பார்த்துச் செயல்படுத்துங்கள்.

இப்படி விளம்பர வெளிச்சத்திலேயே நாட்டை ஆளும் பிரதமராக மட்டும் இருக்காதீர்கள். வாக்குகளைக் கூட்டுவதற்காகவும், பெருக்கு-வதற்காகவும் தன்னால் இயன்ற அளவு மனிதர்களின் மனதை வளைத்துப்போடும் முயற்சியில் பிரதமராகிய நீங்கள் ஒருபுறம் இறங்கியிருக்க, நாட்டின் இன்னொரு பகுதியில் தான் வந்து சென்றதற்காக கோவிலில் தண்ணீர் ஊற்றிக் கழுவிப் பெருக்குவதையும், கூட்டுவதையும் நொந்து போய்ச் சொல்கிறார், ஒரு மாநிலத்தின் முதல்வர்.

பீகார் மாநிலத்தின் மதிப்புமிகுந்த முதல்வர் மாண்புமிகு ஜிதன்ராம் மாஞ்சி தான் அவர். மாநிலத்தின் எச்செயலும் இவர் இசைவின்றி நடவாது.

ஆனால் என்ன செய்ய? கல்லைக் கடவுள் என்றெண்ணிக் காணச் சென்றதால் காவி உடைதரித்த பார்ப்பனர்கள் அவர் கால் வைத்த இடங்களையெல்லாம் கழுவிச் சுத்தம் செய்தார்களாம்.

தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-44367728848849999972014-10-16T20:14:23.604+05:302014-10-16T20:14:23.604+05:30தொடர்ந்தார்கள் நாட்டின் மற்ற மற்றப் பகுதிகளில். கூ...தொடர்ந்தார்கள் நாட்டின் மற்ற மற்றப் பகுதிகளில். கூட்டு கூட்டு என்று கூட்டினார்கள்; பெருக்கு பெருக்கு என்று பெருக்கினார்கள். தமிழிசையும், வானதியும், உமா பாரதியும், ஸ்மிருதி ராணியும் கூட்டிப் பழகத் தொடங்கினார்கள். முடிந்த காட்சியின் முடிவுரையாக 9 பேருக்கு அழைப்பு விடுத்தார் பிரதமர். கமலஹாசன் களிப்படைந்துபோய் தனக்குக் கிடைத்த பெரும்பாக்கியம் என்றார். பாவம் அவர் என்ன செய்வார்? விசுவரூபம் பாகம் 2 வெளியாக வேண்டுமே! சூர்யா சுறுசுறுப்பாக நானும் கூட்டுவதற்குத் தயார் என்றார். இவர் எல்லோருக்கும் நல்லவராகவே இருக்கப் பார்க்கிறார். குஷ்புவோ நானும் கூட்டுகிறேன் குப்பையை என்று சொல்லிவிட்டார். அடுத்ததாக அகில உலக ஆறாவது பணக்காரர் அனில் அம்பானி நானும் இந்த ஆட்டத்திற்குத் தயார் என்று துடைப்பத்தோடு நாட்டைச் சுத்த்த்தமாகத் துடைப்பதற்குத் தயாராகிவிட்டார்.

தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-23058593726231184442014-10-16T20:13:44.099+05:302014-10-16T20:13:44.099+05:30வாங்க கூட்டலாம்!
இந்திய நாட்டில் இன்னல்களே இல்லாம...வாங்க கூட்டலாம்!

இந்திய நாட்டில் இன்னல்களே இல்லாமல் செய்யும் வல்லமை படைத்தவராக தன்னைக் கருதுபவரும் வல்லபபாய் பட்டேலுக்கு உலகத்தில் இல்லா உயரச் சிலை உருவாக்கியே தீருவேன், இந்து தேசத்தை அமைத்தே தீருவேன் என்ற உறுதிப்பாடுடன் அதற்காக மக்களைத் தன்வயப்படுத்துவதற்காக தன்னால் இயன்றமட்டிலும் தனி மனிதனாய் நின்று இடைத்தேர்தல்களில் இடுப்பொடிந்து தள்ளாடும் தன் தாமரைச் சின்னக் கட்சியைத் தாங்கிப் பிடிக்கும் நம் தலைமையமைச்சர் நரேந்திர மோடியின் நரித் தந்திரத்தில் உருவான சுவட்சா பாரத் அபியான் (தூய்மை இந்தியா இயக்கம்) திட்டத்தில் நாடெங்கிலும் உள்ள நல்ல நடிகர்கள் தப்புதப்பு... மனிதர்கள் பங்கேற்றனராம்.

பரந்துபட்ட பாரத தேசத்தின் பல பகுதியிலும் பாரதத்தின் புதல்வர்களும், புதல்விகளும் அகன்ற பாரதத்தின் அழுக்கை அகற்றுவதற்காக அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்த நாளன்று விளக்கமாற்றைத் தூக்கிக் கொண்டு வீதி வீதியாய் வந்துவிட்டனர்.

புதுடில்லியில் உள்ள வால்மீகி காலனிக்கு துடைப்பக் கட்டையுடன் வாளியை எடுத்துக்-கொண்டு குப்பை அள்ளுவதற்காக குழுவோடு வந்து சேர்ந்தார் புதிய நடிகர்; சாரிங்க! மறுபடியும் மறுபடியும் தப்பாவே தோணுது. டி.வி.யில உங்களுடைய படத்தையே அடிக்கடி காட்ட ஆரம்பித்துவிட்டதால் பிரதமர் என்பதே மறந்து போகுதுங்க.

துப்புரவுத் தொழிலாளிகள் வசிப்பிடத்திற்கே துப்புரவு செய்ய வந்துவிட்டார் மோடி. அதிகாலையில் மலம் அள்ளச் சென்று மாலையில் வீடு திரும்புபவர்கள் வீதியைப் பளபளக்கச் செய்த செப்படி வித்தைக்காரர் நரேந்திர மோடி அவர்கள் நல்ல உடையணிந்து வந்துவிட்டார். தெருக்களைக் கூட்டிப் பார்த்தார், தேகமெங்கும் வியர்க்க வியர்க்க. காமிராக்கள் காட்சிகளை அள்ளிக் கொண்டன. அகிலமெங்கும் காட்டத் தொடங்கின.

தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-24045205627619650792014-10-16T20:12:51.080+05:302014-10-16T20:12:51.080+05:30
சிம்சாங் கார்ட்டூனும் யோகன் கார்ட்டூனும்
அம...
சிம்சாங் கார்ட்டூனும் யோகன் கார்ட்டூனும்

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை விவாதத்திற்குரிய கருத்துப் படம் ஒன்றை வெளியிட்டதாகப் பரபரப்பு கிளம்பியது.

அறிவியலாளர்கள் உள்ள பணக்கார நாடுகளின் Elite Space Clubக்குள் தலைப்பாகை, வேட்டியுடன் இந்தியர் ஒருவர் மாடு ஓட்டிக்கொண்டு வந்து அலுவலகக் கதவைத் தட்டுவது போன்று கருத்துப் படம் வரையப்பட்டுள்ளது.

இந்தியர்களை, குறிப்பாக மலையாள மக்களை இந்தக் கருத்துப்படம் கோபப்படுத்தி உள்ளதாம். (அவர்கள் ஆதிக்கம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிகம் உள்ளதால் இருக்குமோ?) நியூயார்க் டைம்ஸ் பன்னாட்டுப் பதிப்பில் தலையங்கத்தை ஒட்டி வெளியிடப்பட்ட இந்த கருத்துப்படம் சிங்கப்பூர் ஓவியர் ஹெங் சிம்சாங் என்பவரால் வரையப்பட்டது.

பணக்கார, மேற்கத்திய நாடுகளால்தான் முடியும் என்பதை மாற்றி, இந்தியா செவ்வாய்க்கலன் ஏவியுள்ளது என்பதையே கருத்துப் படத்தின் ஓவியர் கருத்துப்படத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்துப்படத்தின் மூலம் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினால், நிறுவனத்தின் சார்பில் மன்னிப்பைக் கோருகிறோம். ஓவியர் ஹெங் எந்தவிதத்திலும் இந்தியாவையோ, அதன் அரசு மற்றும் குடிமக்களையோ எதிராகக் கருதவில்லை என்று நியூயார்க் டைம்ஸ் செய்திப் பிரிவின் சார்பில் அந்தப் பக்கத்திற்கான ஆசிரியர் ஆன்ட்ரியூ ரோசன்-தால் தெரிவித்துள்ளார்.

கோபம் எதற்கென்றால், தலைப்பாகை, கையில் மாடு என்று ஏழை வடநாட்டுக் குடியானவன் போல படம் போட்டு விட்டார்கள் என்பதற்காகவாம். சம்பந்த-மில்லாமல் தேசபக்தியும், ரோசமும் பொத்துக்-கொள்ளும் இவர்களுக்கு! இப்படித்தான் இந்த நாட்டின் வெகுமக்கள் இருக்கிறார்கள். அப்படியே இப்படம விமர்சிக்கிறது என்றாலும் அது மேலை நாடுகளையே ஏளனம் செய்கிறது. இந்தியாவைப் பாராட்டத்-தான் செய்கிறது. போகட்டும். இவர்களை இப்படியா விமர்சிப்பது? மங்கள்யானை அனுப்புவதற்கு கோயில், நாள், நேரம் என்று திரிந்தவர்கள் எங்கு எதை அனுப்பினால் என்ன? அடிப்படை அறிவில்லாவிட்டால் செவ்வாய்க்கலன் அனுப்பி என்ன பயன்? மைல் கல்லைக் கும்பிடும் இந்தக் கும்பலுக்கும், ராக்கெட் மாதிரியைக் காட்டி பகவானிடம் அப்ரூவல் வாங்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? எனக்கென்னமோ, சிம்சாங்கின் கார்ட்டூனை விட, நம் கார்ட்டூனிஸ்ட் யோகனின் கார்ட்டூன்தான் இதற்கு சரியென்று படுகிறது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-63381302191071542582014-10-16T20:12:18.661+05:302014-10-16T20:12:18.661+05:30இதோ இப்போது கொண்டாடித் தீர்த்திருக்கிறார்களே? தசரா...இதோ இப்போது கொண்டாடித் தீர்த்திருக்கிறார்களே? தசரா என்றும் விஜயதசமியென்றும், இதன் பயன் என்ன? ஊர்முழுதும் குப்பைமேடானதுதானேதவிர இதில் வேறென்ன இருக்கிறது? சென்னை போன்ற பெருநகரங்களில் இதுபோன்ற பண்டிகைகளின் போது, வாழை இலை, வாழைக்கன்று, மாவிலை உள்ளிட்டவை மங்களப் பொருட்கள் என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டுத் தூக்கி எறியப்படும். இதுபோன்ற நாள்களில் துப்புரவுப் பணியாளர்களும் பிறந்த ஊர்களுக்குச் சென்றிருப்பர். அதுவும் இந்த ஆண்டு தொடர்ந்து ஆறுநாட்கள் விடுமுறை? எப்படியிருக்கும் நகரம். இதில் அத்தியாவசிய உணவுப்பொருளான பூசணிக்காய், தேங்காய் போன்றவற்றைச் சூறையிடுவது என்ற பெயரில் சாலைகள் குப்பைகளால் நிரம்பி வழியும். அந்தக் குப்பைகளும் உடனடியாக அகற்றப்-படாமல் அழுகி துர்நாற்றம் ஏற்படுவதுடன் சுற்றுச்சூழலும் கெடும். இதனால் மக்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படும்.

நூறாண்டுகளுக்கு முன்னால் ஈரோட்டில் தொற்றுநோய் பரவி மக்கள் கொத்துக் கொத்தாக மாண்டு கொண்டிருந்த சூழலில், மனிதநேயரான தந்தை பெரியார் தனக்கு அந்த நோய் தொற்றும் என்பதைப்பற்றிக்கூட கவலைப்படாமல், களத்தில் இறங்கி அந்த மக்களுக்கு மருத்துவ உதவி கிடைக்கச் செய்தார்.

சமூக மருத்துவரான தந்தை பெரியார், அந்த நோய் பரவியதற்கான காரணத்தைச் சொல்லும்போது, இந்த மாதிரி நோய் வரக்காரணம் அந்த மாதங்கள் உற்சவ காலம். பல ஊர்க்காரர்கள் வந்து ஓர் ஊரில் கூடுவது உற்சவத்தின் அறிகுறி _- கண்டபடி சாப்பிடுவது; கண்ட இடத்தில் அசிங்கம் செய்வது; வாய்க்கால் ஓரத்தில் இருக்கும் ஊர்களின் ஜலதாரைக் கசுமாலத் தண்ணீர் வாய்க்காலில் விழுவது; அந்தத் தண்ணீரைக் குடிப்பது; தூக்கம் கெடுவது; பாமர மக்கள் அதிகம் போக்குவரத்துக் காரணமாய் ஆங்காங்கு நோய் பற்றியும், அம்மக்கள் வழிப்பயணத்தில் அடைந்த பலவீனம் -- அசவுகரியம் காரணமாய்த் தங்கும் இடங்களில் நோய்க்கிருமிகள் பரவிப் பல வழிகளில் மக்களைப்பற்றும்படி ஆகிவிடுகிறது. (கடவுளும் மனிதனும் - தந்தை பெரியார்) என்று பல்லாண்டுகளுக்கு முன்னாலேயே தெள்ளத் தெளிவாகக் கூறியிருக்கிறார். ஆனால், இன்னமும் பெருவாரியான மனிதர்கள் மாறவில்லையே. இதோ அடுத்தொரு பண்டிகை. தீபாவளி. ஆளாளுக்கு ஒரு வியாக்கியானம். அதில் பட்டாசுகளை வெடித்து சாலைகள் மொத்தமும் சிதறிக் கிடக்கும். மழை பெய்யும் வாய்ப்பும் உண்டு. அந்த வெடிமருந்துடன் மழைநீரும் சேர்ந்து என்னென்ன கேடுகள் வரப்போகிறதோ? இதில் உயிருக்கும் ஆபத்துண்டு.

சுற்றுச்சூழல் கேடும் பெருமளவில் ஏற்படும். இந்த ஹிந்து மதத்தால் மக்கள் படுகிறபாடு கொஞ்சமா நஞ்சமா? சென்னையைப் போலவே பெருநகரமாக இருக்கின்ற பூங்கா நகரம், தூய்மை நகரம் என்றும் பெயர் பெற்ற பெங்களூரு, இந்தப் பண்டிகைகளால் குப்பை நகரமாக மாறியதென்று தினகரன் கர்நாடகப் பதிப்பு கட்டுரை தீட்டியிருக்கிறது. அதில், பெங்களூரு மாநகராட்சிப் பகுதி வசந்த் நகரில், மாதம்தோறும் 5 டன் குப்பைகள் உருவாகின்றன.

அத்துடன் வீடுகளில் சேகரிக்கப்-படும் குப்பைகள் தனியாக 2 அல்லது 3 டன்னும் சேர்கிறது. சாதாரண இந்தச் சூழலிலேயே துப்புரவுப் பணியாளர்கள் குறைந்த அளவில்-தான் ஈடுபடுகிறார்கள். இந்நிலையில் தசரா, - ஆயுத பூஜைக்காக கிராமங்களில் இருந்து மாவிலை, வாழை இலை, வாழைக்-கன்றுகள் கட்டுக்கட்டாக குவிந்துள்ளன. மக்கள் போடுகிற குப்பைகள் தவிர, விற்பனையாகாத இதே பொருள்களை, கடைக்காரர்கள் அப்படியப்படியே போட்டு-விட்டுப் போய்விடுகிறார்கள். இவையெல்லாம் சேர்ந்து 198 வார்டுகளிலும் நூற்றுக்கணக்கான டன் குப்பைகள் சேர்ந்துவிட்டன. மலையெனக் குவிந்துவிடும் குப்பைகளை அகற்றுவதில் பணியாளர்கள் கவனம் செலுத்துவதில்லை என்று மாநகராட்சி தரப்பில் கவலையோடு கூறுகின்றனர் என்று பொறுப்போடு செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.

இதனால் தூய்மை நகரம் இன்று குப்பை நகரமாக மாறியிருக்கிறது. இதுமட்டுமா? உணவுப் பொருள்கள் எவ்வளவு வீணா-கின்றன? இந்தப் புள்ளி விவரங்களையெல்லாம் யார் எடுப்பது? கொடுப்பது? இந்தக் கணக்கு, சுகாதாரம் இவைகளில் கவனம் செலுத்தாத நாடு எப்படி உருப்படும்?

இந்தக் கேடுகளைப் பார்த்தாவது மக்களுக்குப் புத்திவரவில்லையே என்றுதான் நமக்குக் கவலையாக இருக்கிறது. கடவுள், அது தொடர்பான மூடநம்பிக்கைகள் ஆகியவற்றில்-தான் மக்கள் பலருக்குத் தெளிவு ஏற்படவில்லை என்றாலும், அவர்களை நேரிடையாகப் பாதிக்கின்ற இது போன்ற சுகாதார விசயத்திலாவது புத்தி கொள்முதல் ஆகாதா என்று நாம்தான் தவிக்க வேண்டியிருக்கிறது. கர்நாடகாவில் இதையெல்லாம் சுட்டிக்-காட்டுவதற்கான வாய்ப்பாவது இருக்கிறது. இங்கு அதுவும் இல்லை. ம்.. என்ன செய்வது? மதச்சார்பற்ற அரசு அல்ல மதமற்ற ஓர் அரசு வந்தால்தான் இந்த ஹிந்துமதக் குப்பைகளுக்கு குட்பை சொல்ல முடியும்! அதுவரையில் ஊதுகிற சங்கை ஊதிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

- உடுமலைதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-16256350296398090902014-10-16T20:12:12.900+05:302014-10-16T20:12:12.900+05:30ஹிந்துமதக் குப்பைகளுக்கு குட்பை?
தசரா, விஜயதசமி, ...ஹிந்துமதக் குப்பைகளுக்கு குட்பை?

தசரா, விஜயதசமி, தீபாவளி ஆகிய ஹிந்துமதப் பண்டிகைகள் எதுவாக இருந்தாலும், அந்தப் பண்டிகைக்கான புராணக் கதையையோ, அதனுடைய தத்து-வார்த்தத்தையோ பார்ப்பதும், அல்லது அறிவியல் தர்க்கங்களையோ அலசி ஆராயாமல் எதார்த்தமாகப் பார்த்தால்கூட, இந்த ஹிந்துமதப் பண்டிகைகள் மக்கள் விரோதமான காரியங்களையே செய்துகொண்டு இருக்கின்றன.

தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com