Search This Blog

13.2.15

இதுதான் வால்மீகி இராமாயணம் - 55

இதுதான் வால்மீகி இராமாயணம்


பதின்மூன்றாம் அத்தியாயம் தொடர்ச்சி

பரத்துவாசன் பரதனுக்கும் அவனுடைய சேனைக்கும் விருந்து செய்கிறான். அதில் பிரமன், குபேரன், இந்திரன், தாசிப்பெண்கள் வந்தததாகவும், அப்பெண்கள் சேனாவீரர் ஒவ்வொருவருக்கும் ஏழெட்டு பேராகக் கூடிக்கொண்டு முழுக்காட்டி, அந்தரங்கமாகக் கூடிச் சுரா முதலிய சாராயங்களை ஊட்டினார்களென்றும் தெரியவருகிறது. பல செடிகள் பெண்ணுருவடைந்து அவர்களோடு கூடினவாம். ஆரியர் விருந்து மிக அழகிதே. உணரும், சாராயமும், கட்குடிகளும், பெண்கள சேர்க்கையும் தான் அவர்கள் நடத்தும் விருந்தின் பெருமைபோலும். அதிலும் அரசர்கள் நடத்தும் விருந்தில் வேண்டுமானால் தாசிப்பெண்கள் நடனமும் சேர்க்கையும் குடியும் இருந்தாலும், முனிவன் நடத்தும் விருந்திலுமா இந்தத்தப்பான இழிசெயல்கள் வேண்டும்? பரத்துவாசன் தனது தவ வலிமையை நல்ல வழியிலேயே பயன்படுத்துகிறான்! ஒரு முனிவன் நடத்தும் விருந்திலேயே இவ்வளவு ஆபாச அட்டூழியங்களும் நடைபெற்றன வென்றால், அரசர்கள் நடத்தும் விருந்துகளும் ஆரியப் பொதுமக்கள் நடத்தும் விருந்துகளும் எவ்வளவு கேவலமாக இருந்திருக்க வேண்டும். பரதனுடைய சேனா வீரர்கள் குடித்து மயங்கிப் பெண்களோடு ஆடிக்கீழ் வீழ்ந்து தம் ஊர்திகள் போன இடம் கூடத்தெரியாமல் கிடந்தார்களாம். பரத்துவாசன் இத்தகைய இழிவான, அறிஞர் வெறுக்கத்தக்க, விருந்தை நடத்தி மகிழ்ந்து பெருமை பாராட்டினனாம். பரதன் முதலியோரும் அதைப் புகழ்ந்தனராம். ஆரியர் தம் விருந்து முறை மிக அழகியதே! நாம் முன் கட்டுரையில் எடுத்துக்காட்டிய மனு நூலால் கண்ட விருந்து முறைக்கு, இம்முனிவன் விருந்து ஒரு பொருத்தமான எடுத்துக் காட்டாகும்

பரத்துவாசன் நடத்திய விருந்தில் ஆட்டு மாமிசங்களும், பன்றி மாமிசங்களும் நிரம்பியிருந்தனவாம். விசித்திரமாகப் பக்குவம் செய்யப்பட்ட மான், மயில், கோழி முதலிய பிராணிகளின் மாமிசங்கள் சூடாகப் பானைகளில் மலைகலைப்போல வைக்கப்பட்டிருந்தனவாம்.  இவற்றை யெல்லாம் அத்தாசிப் பெண்கள் இன்சொற்கூறி ஊட்ட, அவர்கள் உண்டு மகிழ்ந்தனராம். அய்யோ அநியாயம்! காட்டில் வாழ்ந்த ஆடுகள், பன்றிகள், மான்கள், கோழிகள், மயில்கள் இன்னும் மற்றைய பிராணிகள் இவற்றையெல்லாம் கொன்று அவற்றின் உடல்களாகிய பிணங்கள் எரிப்பதற்குத் தகுந்த சுடுகாடாகப் பரதன், அவன் சேனா வீரர்கள் இவர் களுடைய வயிறுகள் ஆயினவே! மாமிசங்கள் வெந்து மலை மலையாகக் குவிக்கப் பெற்றிருந்தனவாம். எண்ணிறந்த உயிர்களுக்கு எமனா யினனே இச்சண்டாளன், பரத்துவாசன்! இவனும் ஒரு முனிவனாம், இவன் செய்வதும் தவமாம்!


                                        -------------------------தொடரும்... 6-2-2015

Read more: http://viduthalai.in/page-3/95672.html#ixzz3QxummMZe

**************************************************************************************
இதுதான் வால்மீகி இராமாயணம்
அயோத்தியா காண்டம்
பதின்மூன்றாம் அத்தியாயம் தொடர்ச்சி

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற்குரு! என்றார் பொய்யில் புலவரும். தவத்தின் தன்மை யாது? உயிர்களுக்கு வரும் துன்பங்களுக்கு இரங்கி அத்துன்பங்களைப் போக்குதலும், உயிர்களுக்கு ஒரு விதமான துன்பமும் செய்யாமலிருத்தலுமே தவத்தின் தன்மையாம். இதுவே தமிழ்மக்கள் கொண்ட தவமாம். ஆரிய மக்களோ மலை மலையாக உயிர்ப்பிராணிகளைக் கொன்று குவித்து சுட்டுத்தின்று பலவகைப்பட்ட சாராயங்களையும் குடித்துத் தாசிப் பெண்களுடன் ஆடுதலும், பிறரை ஆட்டுவித்தலுமே தவமெனக் கொண்டனர்போலும். இது உண்மை என்பதற்குப் பரத்துவாசன் செயலே தகுந்த எடுத்துக்காட்டாகிறது. மேலும், இவர்கள் செய்யும் தவமாகிய, யாகமும் பல உயிர்ப்பிராணிகளுக்கு இவர்களை எமதர் மனாக்கி இவர்களுடைய வயிறுகளை அவற்றினுடைய பிணம் இடும் காடாகவுமாக்குவதே என்பது உலகமறிந்ததே.


குகன் பரதனுக்குப் புதுப்புலால், உயர்ந்தபுலால் முதலியன தருவதாகக் கூறுகிறான். பரதன் இராமனிருக்குமிடத்தை யடைந்தபோது இராமன் சீதையை நோக்கி, சீதே! சுத்தமான மாமிசம் இருக்கிறது பார். இது சுவையுள்ளது. நன்றாக வெந்தது எனக்கூறி தான் முதலில் சுவை பார்த்து அவற்றை அவளுக்குக் கொடுத்து மகிழ்வித்தான். என்னே இவ்விராமன் முதலியோருடைய இழிவான வாழ்க்கை! உயர்வொழுக்க முடைய தமிழ்ப்பெருமக்களே! இதனைச் சிந்தித்துப் பாருங் கள். இத்தகைய இழி தொழிலொழுக்கமுடைய அன்னிய னாகிய ஆரியன் இராமனையும் நம்முடைய உடன் பிறந்தாரிற் சிலர் தெய்வமென எண்ணி வணங்குகின்றனரே!


இதைப் போல இழிவான செயல் வேறென்ன இருக்கிறது! வால்மீகி கூறுகிற இவ்வுண்மைகளை உணர்ந்த பின்னரேனும் நாம் இவற்றையெடுத்துக்காட்டி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டாமா? நம் உடன் பிறப்பாளர்களாகிய தமிழ் மக்களைத் தவறு கண்டவிடத்து நல்வழிப்படுத்த வேண்டுவது கடமை யல்லவா?


                  ------------------------------------------- தொடரும் 10-02-2015
Read more: http://viduthalai.in/page-3/95944.html#ixzz3RLG9IKqJ
 ************************************************************************************

இதுதான் வால்மீகி இராமாயணம்


அயோத்தியா காண்டம்

பதின்மூன்றாம் அத்தியாயம் தொடர்ச்சி

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேல்சென் றிடித்தற் பொருட்டு


அழிவின் அவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்புஎன நம் தெய்வத் தமிழ்பெரும் புலவர் திருவள்ளுவர் திருவாய் மலர்ந்து கட்டளையிட்டருளியிருக் கின்றனரன் றோ? ஆதலின் நம்முடைய கடமையை உணர்ந்து நாமும் கம்பரைப்போலக் கோடரிக் காம்பாகாமல் உண்மைத் தமிழ் மக்களெனப் பெயரெடுக்க முன் வருவோமாக! இத்தகைய இழிசெயல்களையெல்லாம் மறைத்து இழிதகையர் - கம்பர் இராமாயணம் பாடியமையன்றோ, தமிழ்ப்பெருமக்கள் உண்மையுணராது தம் மூதாதையரை அநியாயமாகக் கொன்று இழிபுபடுத்திய கதையைப் பாராட்டிப் படிப்பதோடு நில்லாமல், தம் முன்னோரை வஞ்சித்துக்கொன்ற பாதக னாகிய இராமனையும் தெய்வம்போல் வழிபடுகின்றனர்? இவ்வுண்மைகளை உணரும் நண்பர்கள் இனியேனும் அறியா நண்பர்கட்கு இவற்றை எடுத்துக்காட்டி நல்வழிப் படுத்த முன்வர அவர்களை அன்புடன் வேண்டுகிறோம். இத்தகைய கொடிய தீமைகளைத் தமிழுலகத்துக்கு விளைத்த இனத்துரோகியாகிய கம்பரை நினைக்குந் தோறும் நினைக்குந்தோறும் நம் உள்ளத்தே ஊற்றெடுக்குந் துயரத்துக்கோர் அளவு முண்டோ? அவர் விதைத்த தீமைப் பயிரைக் கருவறுக்க வேண்டியதே ஒவ்வொரு தமிழ் மகனுடைய இன்றியமையாத முதற் கடமையாகும். எம் உடன் பிறப்பாளரே! இக்கடனுணர்ந்து மெய்த்தொண்டாற்றி நலம்புரிய முன்வாருங்கள்! முன்வாருங்கள்!


இராமன் சீதையை நோக்கி, பெண்ணே! அதோ சக்கரவாகப் பறவைகள் சம்போகத்திற்காக ஒன்றுக்கொன்று இனிய குரலுடன் அழைத்துச் சம்போக காலத்தில் உண்டாகும் அழகிய ஒலிகளை ஒலித்துக் கொண்டு சேர்க்கையின் பொருட்டு அந்தப் பூக்களின்மேல் ஏறுகின்றன. இந்தச் சித்திரக்கூடம் மிகவும் ஏகாந்தமான போகங்களை அனுபவிக்கும் இடமாக இருத்தலால் இது அயோத்தியினும் இன்பந்தருகிறது. இந்நதி மிகவும் காமத்தை உண்டாக்குகிறது என்று கூறி அவளுடன் நீர் விளையாட்டு ஆடுகிறான். இதனால் இராமனுடைய மனநிலை எப்படிப்பட்டது என்பது தெரிகிறது. அப்போது இலக்குவனும் அருகிலிருக்கிறான். இதனால் அவர் களுடைய ஒழுக்க நிலை மிகவும் இழிந்தது என்பது விளங்குகிறது. இராமனும் சீதையும் படுத்திருக்கும்போது, அவர்களுடைய கால்களை சிருங்கபேரபுரத்தில் கழுவினவன்தானே இவ்விலக்குவன்.


இவர்கள் வெட்கமானத்தை உதிர்த்தவர்கள் போலும்! இராமனும் சீதையும் காமப்பித்தேறி மிருகங்களைப் போலப் பகலென்றும் பாராமல் இரவென்றும் பாராமல் காம இன்பம் நுகர்ந்து திரிந்தனரென்பது தெரிய வருகிறது. இதுபற்றியே சீதை இராமனைப் பிரியாமல் காடு வந்தாள் என நாம் முன் குறித்தது இதனால் நிலைபெறுகிறது.


இலக்குவன் எப்படியாவது பரதனைக் கொன்றுவிடு வதாகக் கூறுகிறான். இதனால் இவன் பரதனைக் கொன்று விட்டால் எப்படியாவது தான் பட்டத்துக்கு வந்துவிடலாம் என எண்ணுகிறான். இராமன் மகாசூதனென்பதும், அவன் எவ்வாறாவது பரதனை ஏமாற்றி அரசைக் கைக்கொள் வதற்கு வழி, காட்டுக்குப் போவதே எனத்துணிந்து காடு போந்தனனென்றும் முன் கூறினோம். அவன் இலக்கு வனுடைய தந்திரத்தை உடனே அறிந்து, முன் தந்தையைக் கொல்வேனென்றாய், இப்போது அண்ணனைக் கொல்வே னென்கிறாய். உனக்கு அரசாட்சி வேண்டுமென்று விரும்பு கின்றாய் போலும்! என்று மிகவும் உண்மையாக வினாவு கிறான். தீயவனாகிய இலக்குவன் தனது சூதை இராமன் உணர்ந்து கொண்டது பற்றி வெட்கி, உடனே பேச்சை மாற்றி, நமது தந்தை வந்தாலும் வரலாம் என்கிறான். இத்தீய மதியனை என் செய்வது? இராமனுக்கு இலக்கு வனுடைய தீயசிந்தை நன்றாகத் தெரியும்.


அதனாலலேயே முன்னால் தந்தையைக் கொன்று அரசிப் பெறலா மென்றாய் என்கிறான். இதனால் இலக்குவன் முன்னர்க் கோசலை முன்னிலையில், அண்ணா! நீ அரசைக் கைப்பற்று. உனக்குப் பிரியமில்லையானால், நான் அரசாட்சியைப் பெறுகிறேன் என்று சொல்லிய பேச்சை இராமன் மறவாமல் நினைத்திருந்தது விளங்குகிறது. அயோத்தியா காண்டம் சருக்கம் இருபத்தி மூன்றில் இராமனை நோக்கி இலக்குவன், இராஜ்யம் அடிக்கடி மாறுமென்று தங்களுக்குச் சந்தேக முண்டாகி அதனால் தங்களுக்கு இராஜ்யம் வேண்டாமென்றால், சமுத்திரத்தை அதன் கரை காப்பதுபோல நான் இந்த இராஜ்யத்தைக் காப்பாற்றுவேன். இப்படியே சபதம் செய்கிறேன் என்று கூறிய செய்தி காணப்படுகிறது. இவ்விடத்து நாம் முன் 23.12.2028 இல் வெளிவந்த எட்டாம் கட்டுரையிலுள்ள பின்வரும் குறிப்பை அறிஞர் சிந்தித்து உண்மையுணருமாறு மறுபடியும் கீழே குறிக்கின்றோம். அது வருமாறு:-
தந்தையைக் கொன்றேனும் அரசைக் கைப்பற்ற வேண்டுமென்பதே அவனுடைய கேவலமான எண்ணமாக இருக்கிறது. இவனைப்போலும் பிள்ளைகள் வேண்டுவது அவசியமே. இராமனுங்கூட அவனை நோக்கி, நம் தகப்ப னாராயிருந்தாலும் அவரைக் கொன்று நாடாளு வோமென்ற கேவல புத்தியை விட்டுவிடு என்று கூறுகிறான். இலக் குவன் இவ்வளவோடு நின்றதாகத் தெரியவில்லை.


------------------------------------ தொடரும் -      ”விடுதலை” 13-02-2015

29 comments:

தமிழ் ஓவியா said...

செய்தியும்
சிந்தனையும்

கேவலம்

செய்தி: கோவில் திருட் டைத் தடுக்கக் கோவில் களில் எச்சரிக்கை மணி பொருத்தவேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள் ளதே!

சிந்தனை: கடவுள் சக் தியை இதைவிட வேறு எப்படிக் கேவலப்படுத்த முடியுமாம்?

Read more: http://viduthalai.in/e-paper/96369.html#ixzz3S0kVZ1ch

தமிழ் ஓவியா said...

அடையாளம்

மகன்: காதலர் தினம் என்பதற்கு எதிராக சில இந்து முன்னணி, சிவ சேனா அறிஞர் பெரு மக்கள்? மிக ஆர்வத் துடன் நாய்க்கும், குரங் குக்கும் இப்படி மிருக ஜீவன்களுக்குத் திரு மணம் தடபுடலாக நடத்தி, பத்திரிகையில் விளம்பரம் பெறுகிறார் களே, ஏன் அப்பா? காதலர்களை கேலி செய்யவா இம்முறை?

அப்பா: மகனே, உனக் குத் தெரியாதா? யார் யாரின் நெருங்கிய சொந்தங்களோ, அவர் கள்தான் இம்மாதிரி ஏற்பாடு செய்யப்படும் திருமணங்களை செல வழித்து நடத்தி மகிழ்ந் திடுவார்கள்.

அதைத்தான் இந்த சொந்தங்களின் சொந் தங்கள் செய்து தங் களை உலகத்திற்கு அடை யாளம் காட்டிக் கொள் ளுகிறார்கள் மகனே! புரிந்ததா?

Read more: http://viduthalai.in/e-paper/96375.html#ixzz3S0kmN07G

தமிழ் ஓவியா said...

இலங்கையில் எல்லா இனத்தவருக்கும்

சமநீதி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் வலியுறுத்துகிறது

இலங்கையில் எல்லா இனத்தவர்களுக்கும் சமநீதி கிடைக்கவும், அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவும், அதிபர் மைத்ரிபால சிறி சேனா முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்கவேண் டும் என்று சர்வதேச பொது மன்னிப்பு கழக இந்திய பிரிவு வலியுறுத்தி உள்ளது.

இலங்கை அதிபர் மைத் ரிபால சிறிசேனா, 4 நாள் பயணமாக டில்லி வந்துள் ளார். பிரதமர் நரேந்திர மோடி உள்பட முக்கியத் தலைவர்களை சந்தித்து இருநாட்டு நல்லுறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இது குறித்து சர்வதேச பெது மன்னிப்புக் கழக இந்தியப் பிரிவு (ஆம்னஸ்டி இன்டர் நேஷனல் இண்டியா) திட்ட இயக்குநர் ஷமீர்பாபு நேற்று செய்தியாளர்களி டம் கூறியதாவது:

இலங்கையில் சிங்கள வர்கள், தமிழர்கள் உட்பட எல்லா இனத்தவர்களும் இணக்கமாக வாழும் சூழ் நிலையை அந்நாட்டு அதி பர் சிறீசேனா ஏற்படுத்த வேண்டும். அவருக்கு இப் போது மிக அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்மூலம் எல்லோ ருக்கும் சமநீதி கிடைக்க வழி வகை செய்யவேண்டும். மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சீர்திருத்தங்கள், மறுவாழ்வு திட்டங்களை செயல் படுத்தவேண்டும்.

சுதந்திரம், சம உரிமை, சுயமரியாதை ஆகியவற் றின் அடிப்படையில் மறு சீரமைப்புப் பணிகளை சிறீசேனா மேற்கொள்ள வேண்டும். அதிபர் சிறீ சேனா அறிவித்துள்ள 100 நாள் சீர்திருத்த திட்டம், மக்களிடம் அதிக நம்பிக் கையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், நீதித்துறை உள்பட முக்கிய துறைகள் சுதந்திர மாக செயல்படுவதற்கு அவர் எடுத்துவரும் நடவடிக்கை கள் வரவேற்கத்தக்கன. இலங் கையில் வாழும் மக்களி டம் பாரபட்சம் காட்டக் கூடாது. பேச்சு சுதந்தி ரத்தை உறுதிப்படுத்த வேண்டும். இலங்கையில் நீதியை நிலைநாட்டவும், நம்பிக்கையை ஏற்படுத்த வும் சிறீசேனாவுக்கு எல்லா உதவிகளையும் பிரதமர் மோடி செய்யவேண்டும்.

விடுதலைப் புலிகளுட னான இறுதிக்கட்ட போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து உள்நாட்டிலேயே விசாரணை நடத்துவோம் என்று சிறீசேனா அறிவித் துள்ளார். அந்த விசா ரணை சுதந்திரமான, வெளிப்படையான, உண் மையான, நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும். அதே சமயம் இலங்கையில் நடந்த மனித உரிமைகள் குறித்து அய்.நா. நடத்தி வரும் விசாரணைக்கு சிறீசேனா அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு ஷமீர் பாபு கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/96372.html#ixzz3S0ktuHE6

தமிழ் ஓவியா said...

மகிழ்ச்சிபற்றி ஒரு புதுக்கண்ணோட்டம்

அண்மையில் சிங்கப்பூருக்குச் சென்ற குறுகிய கால நான்கு நாள் பயணத்தில், வழக்கமாகச் சென்று புத்தங்களைப் பார்க்கும் கினோ குனியா (kinokuniya) புத்தகக் கடைக்குச் சென்று சில புத்த கங்களை வாங்கிப் படித்தேன்; மகிழ்ந் தேன்.

அதில் ஒரு புத்தகம் மகிழ்ச்சி (Happiness) என்பதாகும்.

நம்மைப் பொறுத்தவரையில் புதிய புத்தகங்களை வாங்குவதும், படிப்பதும், படித்ததை மற்ற நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதுமே மகிழ்ச்சிதான்.

அறிவை விரிவு செய்; அகண்டமாக்கு
விசாலப் பார்வையால் விழுங்கு உலகத்தை

என்ற புரட்சிக்கவிஞரின் அறிவுரைக் கேற்ப இந்த நூல்கள் நமது மனச் சுமையைக் குறைத்து அல்லது அகற்றி ஒரு புத்துணர்ச்சியை, புத்தாக்கத்தைத் தருவதாக அமைந்துள்ளது என்பது உண்மை.

பயணச் சுமையைக் குறைத்து, துணைவனாக இருப்பது - தனிமையில் பயணிக்கும்போது - இத்தகைய புத்தகங்களே!

ஆஸ்திரேலியாவிலும், அமெரிக் காவிலும், இங்கிலாந்திலும் வெளியிடப் பட்டு, மகிழ்ச்சிபற்றி பல்வேறு தத்துவ அறிஞர்கள் வெளியிட்ட பலதரப்பட்ட கருத்துக்களையும் ஒரு புதிய கோணத் தில் தொகுத்தளித்து ஆய்வு செய்துள்ள இந்நூல், ஒரு நல்ல தொகுப்புக் களஞ்சியம் - சிறு கைப் புத்தகம் ஆகும்.

வில் பக்கிங்காம் என்ற தத்துவ கர்த்தாவும், புதின எழுத்தாளருமான இவர் இந்த அருமையான நூலை எழுதியுள்ளார்.

உலகின் ஆதிகால கிரேக்கத் தத்துவ மேதைகள் தொடங்கி, இந்தியாவின் புத்தர், சீனத்துக் கன்ஃபூஷியஸ், ஸுவாங் சீன, மெனிக்யூயஸ் போன்ற அறிஞர் கள் கருத்தையெல்லாம் வாழ்க்கையில் பரிசோதனைக்குட்படுத்தி, வாழ்வில் மகிழ்ச்சியை வெறும் தத்துவமாகப் பார்க்காமல், படிக்காமல், நடைமுறைக்கு உகந்ததாக்குவதுதான் முக்கியம் என் பதை நன்கு விளக்கியுள்ளார் - இந் நூலாசிரியர் வில் பக்கிங்காம் என்ற தத்துவ சிந்தனையாளர்.

இரு வேறு அணுகுமுறைகள்பற்றிய சிறந்த ஆய்வும் சிந்தனைக்கு விருந் தாக அமைந்துள்ளன.

1. வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது தான் பொது விதி. துன்பம் என்பது இடையில் ஏற்படுவது, அதை ஏற்கும் பக்குவம் இன்றியமையாதது - அது விதிவிலக்கு.

மற்றொன்று 2. துன்பம்தான் நம் வாழ்க்கையில் பொது விதி. எப்போதாவது ஏற்படு வதால், மகிழ்ச்சி என்பதுதான் விதிவிலக்கு.

இப்படி இரு மாறுபட்ட அணுகு முறைகளும் அலசி, வாதப் பிரதிவாதங் களோடு ஜெர்மானியத் தத்துவ அறிஞர் களின் கருத்துகளும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தக்க தரவு களாக மேற்கோள்கள் காட்டப்பட்டுள் ளன.

இன்பம் விழைதல், உயிர்களின் பொது வியற்கை; மனித குலத்தின் ஆறாவது அறிவு அவ்வின்பத்திற்கு அவ்வப்போது புதுப்புது பொருள் கண்டு, கொண்டு, சமூகத்திற்கு வழங்குவதற்குத் தயங்குவதில்லை.

உடல் இன்பத்தால் விளையும் மகிழ்ச்சியை உருவாக்கும் காரண மானதை காமம் என்று வர்ணிக் கின்றனர். சொல்லாடலில் பயன்படுத்து கின்றனர்.

வள்ளுவரின் காமத்துப் பால் என்று முப்பாலில் ஒரு முக்கிய பகுதி அது பற்றித்தானே என்று வாதாடுகின்றனர்.

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பதில் உள்ள காமுறுவர் எதைக் குறிக்கிறது?

குறுகிய பொருள் அல்ல காமத்திற்கு.

கைவிடப்படாத, விட முடியாத, நினைத்து நினைத்து மகிழ்ச்சியைப் பெருக்கத்தான் காமுறுதல் என்பதற்கு முழுப் பொருள் என்று கொள்ளலாமே!

உடலுக்கும், உள்ளத்திற்கும் இரண்டுக்கும் மகிழ்ச்சி - உள்ளத்தில் ஊறிய உணர்ச்சிக்கு உடலின் வடிவம் ஏற்படுவதுதானே காமம்?

இப்படி மகிழ்ச்சியை 2500 ஆண்டு களுக்குமுன்பே தோன்றிய தத்துவ ஞானிகளின் பட்டியலில் திரு வள்ளுவரையும் இணைக்கவேண்டும்.

மேலைநாட்டுத் தத்துவ அறிஞர் களில் ஆல்பர்ட் ஷைவட்சர்தான் இதில் பெரும் சாதனை செய்தவர். ஜி.யூ.போப் அவர்களுக்குப் பிறகு.

நம்மில் பலரும் வாய் வீச்சு, எழுத்து வியாபாரத்துடன் நிறுத்திக் கொண் டோம்.

உலக மயமாக்கியிருந்தால் வள்ளு வரும் அந்நூலில் இடம்பெற்றிருப்பாரே என்ற கவலை என்னைத் தாக்கியது!

மற்றவை நாளை!

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

Read more: http://viduthalai.in/e-paper/96380.html#ixzz3S0lUqlXL

தமிழ் ஓவியா said...

சிதம்பரம் கோவில் விவகாரம்:

யார் பெரியவர்கள்: தீட்சதர்களா? பிரமுகர்களா?

இரண்டு இடங்களில் தனித்தனியே நாட்டியாஞ்சலியாம்!

சிதம்பரம், பிப்.16_ சிதம் பரத்தில் நடராஜன் கோவில் தீட்சதர்களுக்கும், உள்ளூர் பிரமுகர்களுக்குமிடையே யார் பெரியவர்கள்? என்ற குஸ்தி நடைபெறுகிறது. அதன் விளைவு தனித் தனியே ஒரே காலத்தில் நாட்டி யாஞ்சலி நடைபெறுகிறது.

கடந்த 33 ஆண்டு களாக மகாசிவராத்திரி அன்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் நகர முக்கிய பிரமுகர்களால் அமைக்கப் பட்ட சிதம்பரம் நாட்டி யாஞ்சலி டிரஸ்ட் என்ற அமைப்பு 5 நாள்கள் நாட் டியாஞ்சலி விழாவை நடத்தி வந்தது. வெளிநாடு, வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல இடங் களில் இருந்து நாட்டியக் கலைஞர்கள் வந்து பரதம், குச்சிப்புடி, கதகளி, மோகினி ஆட்டம், கதக் போன்ற நாட்டியங்கள் நடைபெறும். இந்நிலையில் உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி கோயில் நிர்வாகம் கடந்த ஆண்டு பொது தீட்சதர்களிடம் வந் தது. இதனை தொடர்ந்து தீட்சிதர்கள் தில்லை நாட் டியாஞ்சலி டிரஸ்ட் என்ற அமைப்பை ஏற்படுத்தி இந்த ஆண்டு மகாசிவராத் திரி அன்று கோயிலில் நாட் டியாஞ்சலி நடப்பதாக அறி விப்புப் பலகை வைத்தனர்.

மகாசிவராத்திரியான நாளை (பிப்.17- ஆம் தேதி) முதல் தொடர்ந்து 5 நாள் கள் நடக்கும் நாட்டியாஞ் சலி விழாவில் யார், யார் கலந்து கொண்டு எந்தெந்த நேரத்தில் நாட்டியம் ஆடு கிறார்கள் என்று அழைப் பிதழ் அச்சிட்டு அனை வருக்கும் தில்லை நாட்டி யாஞ்சலி டிரஸ்ட் நிர்வாகி கள் வழங்கினர்.

இதற்கிடையே சிதம் பரம் நாட்டியாஞ்சலி டிரஸ்ட் நிர்வாகிகள் தங் களது 34- ஆவது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தெற்குவீதியில் உள்ள தனி யாருக்குச் சொந்தமான இடத்தில் நடைபெறும் என்று அறிவித்தனர். மேலும் யார்,யார் கலந்து கொண்டு எந்தெந்த நேரத் தில் நாட்டியம் ஆடுகிறார் கள் என்று அழைப்பிதழ் அச்சிட்டு அனைவருக்கும் கொடுத்துள்ளனர்.

தில்லை நாட்டியாஞ் சலி டிரஸ்ட் நிர்வாகிகள் நாட்டியாஞ்சலி விழாவுக் காக கோயிலினுள் மேடை அமைக்கும் பணியில் ஈடு பட்டுள்ளனர். அதேபோன்று நாட்டியாஞ்சலி டிரஸ்ட் நிர்வாகிகள் கோயிலின் வெளியே தெற்குவீதி ராஜா சர் அண்ணாமலை செட்டி யார் டிரஸ்ட் வளாகத்தில் மேடை அமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். 5 நாள் களும் மாலை 5 மணிமுதல் இரவு 9.30 மணிவரை இரு இடங்களிலும் நாட்டியாஞ் சலி நடப்பதால் எதை பார்ப்பது என்ற குழப்பத் தில் உள்ளனர் சிதம்பரம் மற்றும் அதனை சுற்றி யுள்ள கிராம மக்கள்.

இந்நிலையில் கோயில் புராணத்துக்கும், இறை யாண்மைக்கும் எதிரானது நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி என்று தொடர்ந்து எதிர்த்து வரும் கைலாசங்கர் தீட் சதர், இரு அமைப்பைச் சேர்ந்தவர்களும் நாட்டி யாஞ்சலி நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்று வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார்.

பாவம் நடராஜர், இவற் றையெல்லாம் பார்த்துக் கொண்டு அப்படியே சிலையாக நிற்கிறார். (எப் பொழுதும் சிலைதானே!).

குறிப்பு: கோவிலுக்குள் தீட்சதர்கள் நாட்டியாஞ்ச லியை நடத்தக்கூடாது என்று கைலா சங்கர் தீட் சதர், கைலாச ஆனந்த நட ராஜ தீட்சதர், ராஜா தீட் சதர் ஆகிய மூன்று தீட்ச தப் பார்ப்பனர்கள் இன்று முதல் கோவில் கிழக்கு வாயில் 21 படிகளுக்குமுன் பட்டினிப் போராட்டத் தைத் தொடங்கியுள்ளனர். பொது தீட்சதர்களுக்கு பூஜையைத் தவிர எந்த வேலையிலும் ஈடுபடக் கூடாது _ தீட்சதர்கள் நாட் டியாஞ்சலி நடத்துவது கோவில் புராணத்துக்கு விரோதமானது என்று கூறுகின்றனர்.

Read more: http://viduthalai.in/page1/96312.html#ixzz3S0oDSImp

தமிழ் ஓவியா said...

வயிற்றுப்புண்ணை குணமாக்கும் மணத்தக்காளி

வாய்ப்புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும். இந்தப் பிரச்சினைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை. இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப் புண்ணும், வயிற்றுப் புண்ணும் நீங்கும்.

நோயைக் குணமாக்கி உடலின் கட்டுமானப் பகுதியைப் பார்த்துக் கொள்ள 410 மில்லி கிராம் கால்சியமும், நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கும் 11 மில்லி கிராம் வைட்டமின் சி யும் இக்கீரையில் உள்ளன. மூலநோய்க்கும் குடல் பிரச்சினைக்கும் இந்தக் கீரை நல்ல மருந்தாகும். மேடைப் பேச்சாளர்கள், பாடகர்களுக்கு தொண்டைக் கட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம்.

இவர்கள் மணத்தக்காளி கீரையை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. இக்கீரை உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகள் முதலியவற்றை எதிர்த்துப் போரிடும். அவற்றைக் குணப்படுத்தியும் விடும்.

சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும். அத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும். சிறிது கசப்புச் சுவையுடையது இக்கீரை. சமைத்து சாப்பிடும் போது கசப்பு குறைவாய் இருக்கும்.

நீர்க்கோவை நோய் மிகச்சிறந்த முறையில் குணமாக இக்கீரை பயன்படுகிறது. இக்கீரையைக் கஷாயமாய் அருந்தலாம். அல்லது பருப்பு சேர்த்து மசியல், பொரியல் என்று சாப்பிடலாம்.

கீரையையும், இளந்தண்டு களையும் சாறாக மாற்றி ஒரு வேளைக்கு ஆறு மில்லி வீதம் அருந்தலாம். மேற்கண்ட மூன்று முறைகளுள் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினாலும் நீர்க்கோவை நோய் விரைந்து குணமாகும்.

கீரையைப் போலவே இதன் பழமும் சக்தி வாய்ந்த மருந்தாகும். காசநோயாளிகள் இப்பழங் களைத் தினமும் சாப்பிடுவது நல்லது. மணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவேதான் இருக்கும். நன்கு பசி எடுத்துச் சாப்பிடவும் இப்பழம் உதவுகிறது. தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம்.

உடலில் வலி உள்ள இடங்களிலும் வலிநீக்கும் மருந்து போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப் பெறலாம். நாள்பட்ட நோய் வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்தி வரவேண்டும்.

மணத்தக்காளிக் காயை வற்றல் போடலாம். வற்றலிலும் மருத்துவக் குணங்கள் சிதையாமல் இருக்கின்றன.

Read more: http://viduthalai.in/page1/96342.html#ixzz3S0q1Ph74

தமிழ் ஓவியா said...

மருத்துவ குணங்கள் நிறைந்த வாழைப்பூ

மருத்துவக் குணமும் மகத்தான நலமும் கொண்டது வாழைப்பூ. ஆனாலும், அது சமையலில் அரிதாகவே இடம்பெறுகிற ஒன்றாக இருக்கிறது. வாழைப்பூவை சமைக்கத் தெரியா தவர்கள் ஒரு பக்கம் என்றால், வாழைப்பூவை ஆய்ந்து, சுத்தப்படுத்தி சமைப்பதற்கு அலுத்துக் கொண்டு அதைத் தவிர்ப்பவர்கள் இன்னொரு பக்கம்.

அறியாமையையும், அலுப்பையும் தவிர்த்து வாழைப்பூவை அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்கிறவர்களின் வீடுகளில் ஆரோக்கியம் தாண்டவமாடும் என்பதில் சந்தேகமில்லை. வாழைப்பூவின் குணநலன்களை விளக்குவதோடு, அதை வைத்து சூப்பர் உணவுகளையும் செய்து காட்டுகிறார் சஞ்சீவனம் ஆயுர்வேத தெரபி மய்யத்தின் மருத்துவ அதிகாரி விஜயகுமார்.

நமது உணவில் காய்கறிகள் முக்கிய அங்கம் வகிக் கின்றன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்திய உணவு வகைகளில் எப்போதுமே காய்கறிகள் ஒரு பகுதி யாவது இடம்பெறுகின்றன. பெரும்பாலும் நமது உணவில் ஒன்றுக்கும் மேற்பட்ட காய்கள் இடம்பெறுகின்றன. காய்கள் சேர்ந்த உணவுக் கலவை அல்லது தொட்டுக்கொள்ளும் ஒரு உணவாக காய்கறி இடம்பெறுகிறது.

சில காய்கறிகள் பொதுவாக நமது உணவில் வழக்கமாக தினசரி இடம் பெறுகின்றன. சில காய்கறிகள் பொதுவாக சமைக்கப் படுவதே கிடையாது. வாழைப்பூ, பெரும்பாலான வீடுகளில் விரும்பப்படும் உணவாகும்.

இருப்பினும் மற்ற காய்கறி களான கேரட், முட்டை கோஸ், பீட்ரூட், பாகற்காய் உள்ளிட்ட காய்களைப் போல இது பயன்படுத்தப் படுவதில்லை. வாழைப்பூவில் என்ன சமைப்பது என்று பலருக்குத் தெரியாததுதான் காரணமாகும். சமையல் பயன் பாட்டுக்கு அப்பால், உணவு வகைகள் சிறந்த மருத்துவக் குணங்களைக் கொண்டதாகவும் திகழ்கின்றன.

வாழைப் பூவில் சில உணவு வகைகள் தயாரிக்கத் தெரிந்து கொள் வதற்கு முன்பாக வாழைப்பூவில் உள்ள உடலுக்கு நன்மை தரும் விஷயங்களை தெரிந்து கொள்வோம்.ஆயுர்வேத மருத்துவத்தில் பல காய்கறிகள் பற்றிய குறிப்புகள் இருந்தாலும், அவற்றில் முதன்மையானதாக கதலி எனப்படும் வாழைப்பூ முக்கிய இடம் பிடித்துள்ளது.

இதில் உள்ள நன்மை தரும் விஷயங்களால் இதை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. வாழைப்பூவில் அதிக காரம் மற்றும் மசாலா பொருட்கள் சேர்க்காமல் சமைத்துச் சாப்பிடுவது மிகவும் பயனளிக்கக் கூடியது.

வாழைப்பூ சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். ஆயுர்வேதத்தில் இது பித்த சம்ஹா (உடலில் பித்தத்தைத் தணிக்கும் குணம் கொண்டது) எனப்படுகிறது.

இதை உரிய வகையில் சமைத்து சாப்பிடும்போது வெப்பத்தால் ஏற்படும் பலவித நோய்களை - அதாவது, சிறுநீரகம் சார்ந்த நோய்கள், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் உள்ளிட்ட வற்றைக் குணப்படுத்த உதவுகிறது.

Read more: http://viduthalai.in/page1/96340.html#ixzz3S0qDtxzz

தமிழ் ஓவியா said...

மே நரேந்திர மோடி போல்த்தா ஹூம்

எரிவாயு உருளை விசயத்தில் ஏற்கெனவே ஏகப்பட்ட தேவையற்ற அலைச்சல் உள்ள இந்த காலகட்டத்தில் எரிவாயு உருளை தேவைக்காக பதிவு செய்ய எங்கள் மடிப் பாக்கம் பகுதிக்கு தானி யங்கி சேவைக்காக இயங் குகின்ற கைப்பேசி எண் ணுக்கு தொடர்பு கொண்ட போது முன் எப்போதும் என்னுடன் தொடர்பில் இல்லாத ஒரு குரலைக் கேட்டேன். படபடப்பாக தவறுதலாக வேறு எண் ணுக்குப் போட்டு விட் டோமோ என்று மீண்டும் தானியங்கிச் சேவை எண்ணைச் சரிபார்த்தேன்.

சரியாகத் தானிருந்தது. மீண்டும் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டேன். திரும்பவும் அதே குரல். இப்போது தெளிவாகக் கேட்டேன். மே நரேந்திர மோடி போல்த்தா ஹீம் என்று தொடங்கி 30 வினாடிகளுக்கும் மேலாக என்னிடம் பிரதமர் ஹிந்தி யில் பேசினார். நான் புரி யாமல் கேட்டுக் கொண்டி ருந்தேன். அதன் பிறகு 24 மணி நேர தானியங்கிச் சேவை என்னை தமிழில் வரவேற்றது. அப்பாடா என்று நிம்மதியாக பெரு மூச்சு விட்டுக்கொண்டே என்னுடைய எரிவாயு உரு ளைக்கான எண்ணைப் பதிவு செய்தேன்.

- இசையின்பன், சென்னை-91

மேற்கண்ட தகவல் களை தோழர் ஒருவர் தெரிவித்துள்ளார். எரிவாயு உருளை தேவைக்காகப் பதிவு செய்யும் அலுவலகத் தில் நரேந்திர மோடி எங்கு வந்தார்? அவர்தான் இந்த நிறுவனத்தின் முதலாளியா? அப்படியென்றால் அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டியது அவசி யமாகிறது. இந்தி பேசாத ஒரு மாநிலத்தில் இந்தியா வின் பிரதமர் ஒருவர் வாடிக்கையாளரகளுடன் வாடிக்கையாளர் செலவில் 30 வினாடிகள் பேசுகிறாராம்.

மத்தியில் உள்ள ஓர் ஆட்சி அதிகாரத்தை அலங்கோலப்படுத்தி வரு கிறது என்பதற்கு இந்த எடுத்துக்காட்டு ஒன்று போதாதா?

இன்னொரு வகையில் பார்த்தால் இந்தித் திணிப் பின் இன்னொரு வடிவம் தானே இது? இப்படியெல் லாம் இந்தியைத் திணித்து விட முடியுமா? இது எதிர் விளைவைத் தான் ஏற் படுத்தும் என்கிற அடிப் படை அறிவுகூடவில்லையே! பிஜேபி தலைமையில் உள்ள மத்திய அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு புறப்பட்டு விட்டதாகவே தெரிகிறது.

வேறு எந்த மாநிலத்தில் தன் விளையாட்டைப் போட்டுக் காட்டுவதற்கும், தமிழ்நாட்டில் மொழி அகங்காரத்தின் வாலை நுழைப்பதற்கும் அடிப் படையில் மிகப் பெரிய வேறுபாடு உண்டு.

சிங்கத்தின் வாலை மிதித்துப் பார்ப்பதோ, எரிமலையின் மேல் பட்டு விரித்துப் படுப்பதோ ஆபத்தை ஆசையோடு அரவணைப்பதற்கு ஒப் பாகும். 30 வினாடி பேசினா லும் சரி 30 மணி நேரம் பேசினாலும் சரி அது யாருக்குப் புரியப் போகிறது என்கிற அடிப்படை அறிவு வேண்டாமா?

இனிய செந்தமிழ் மொழி வீழ்தல் - ஹிந்தி
எனுமொரு வடமொழி எதிர்ப்பின்றி வாழ்தல்
அநியாய மிவை யன்றோ? தமிழா! உன்
ஆண்மையும் ரோஷ மும் அழிந்ததோ தமிழா!

இது 1938ஆம் ஆண் டிலேயே தமிழ் மண்ணில் எழுந்த போர்ப் பாட்டு (பாடல் ஆசிரியர்: சித்த மல்லி அ. சிதம்பரநாத பாவலர்) மீண்டும் கிளரும் போர் -எச்சரிக்கை!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/96192.html#ixzz3S0spojcN

தமிழ் ஓவியா said...

பதவி ஆசை


பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலம் தவிர மனிதப் பற்றோ நாட்டுப் பற்றோ சிறிதளவும் காண முடியாது. - (விடுதலை, 3.5.1965)

தமிழ் ஓவியா said...

பட்டும் புத்தி வரவில்லை!


டில்லி தேர்தலில் பாஜகவின் அவமானகரமான தோல்விக்கு பாஜக அமைச்சர்கள் இந்துத்துவ கொள்கையில் மென்மையான போக்கை கடைபிடித்தது தான் முக்கிய காரணம் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்பு களின் முக்கிய தலைவர்களைக் கடிந்துகொண்டாராம், நமது கொள்கையை சரியான முறையில் இந்துக்களிடம் கொண்டு சென்றிருந்தால் இந்துக்களின் ஓட்டுகள் அனைத்தும் நமக்குக் கிடைத்திருக்கும்;

ஆனால் பாஜகவும் இந்துத்துவ அமைப்புக்களும் அந்தக் காரியத்தை செய்யாமல் பேச்சோடு நின்ற காரணத்தால் தான் பாஜக தோற்றது என்று கூறியுள்ளார்.

தேர்தல் தோல்வியின் காரணத்தை விளக்க மத்தியஅமைச்சர் ஸ்மிருதி இராணி, நிர்மலா சீதாராமன், ரவிசங்கர்பிரசாத் வியாழன் மாலை மோகன் பகவத்தைச் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து மத்திய அமைச் சர்களாக ஆனவர்களும் உடனிருந்தனர். அப்போது பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான சீதாராமன் அமைச்சர்களிடம் ஏன் அரவிந்த் கேஜரி வால் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தகுந்த ஆதாரங்களுடன் பிரச்சாரம் செய்யவில்லை? கேஜரிவால் மீது வார்த்தைகளால் தான் தாக்குதல் நடத்தினீர்கள்.

உறுதியான ஆதாரங்களை ஏன் வைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். மேலும் டில்லியில் அனைத்து மத்திய அமைச்சர்களும் கலந்தாலோசித்து ஒற்றுமையாகப் பிரச்சாரம் செய்யாதது ஏன்?. உங்களில் ஒருவருக்குக் கூடவா இந்த அவமானகரமான தோல்வி ஏற்படும் என்று தெரிய வில்லை? அப்படியே தெரிந்திருந்தும் முன்கூட்டியே தலைமைக்கு ஏன் தெரிவிக்கவில்லை என்று கேள்வியெழுப்பினாராம். சுமிருதி இராணி மீது மோகன் பகவத் மிகவும் கடுமையான கோபத்தில் இருந்தார். டில்லியை சொந்த ஊராகக் கொண்ட சுமிருதி இராணியின் தொகுதியில் பாஜக மூன்றாம் இடத்தைப் பெற்றது; இது தொடர்பாக மோகன் பகவத் கூறியபோது நீங்கள் அமைச்சாரனதும் தொண்டர்களையும் இதர உள்ளூர் தலைவர்களையும் மதிக்கவில்லை! உங்கள் மீது சங்பரிவாரத் தொண் டர்கள் பலமுறை புகார் அளித்துள்ளனர். இந்தத் தோல்வியில் இருந்து நீங்கள் என்ன பாடம் கற்றுக்கொண்டீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

மத்தியில் உள்ளவர்களில் சிலர் இந்துத்துவக் கொள்கைகளுக்கு விரோதமாக செயல்படுவதாகத் தெரிகிறது, மக்கள் நாம் இந்து ராஜ்யத்தை அமைப் போம் என்ற நம்பிக்கையில் தான் வாக்களித்து ஆட்சியைக் கொடுத்துள்ளனர். அதில் இருந்து விலகியதால் தான் இந்தத் தோல்வி ஏற்பட்டது என்று மோகன் பகவத் கூறினார். மோகன்பகவத்துடனான சந்திப்பிற்கு பிறகு ஊடகவியலாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சுரேஷ் சோனி மற்றும் கிருஷ்ண கோபால் கூறியதாவது, தேர்தல் தோல்வி குறித்து மோகன் பகவத் மிகவும் கோபத்தில் உள்ளார். தற்போதைய கால கட்டத்தில் இது போன்ற தோல்வி மக்களிடையே வேறு மாதிரியான எண்ணத்தை உருவாக்கிவிடும்; இதற்கு நாம் எக்காரணத்திலும் இடம் கொடுத்துவிடக்கூடாது.

இந்துக்களின் ஓட்டுகளை பெறுவதில் நாம் என்றும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். இந்துத்துவா கொள்கையில் மிதமான போக்கை கடைபிடித்ததால் தான் இந்த தோல்வி ஏற்பட்டது என்று கூறினார். டில்லி தேர்தல் தோல்வி தொடர்பான விவரமான அறிக்கை ஒன்றை வரும் 15 ஆம் தேதி தலைமையகமான நாக் பூரில் நடக்கும் பொதுக்குழுவில் சமர்ப்பிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் என்று கூறினார்கள்

டில்லியில் இவ்வளவுப் பெரிய தோல்வியைச் சந்தித்த பிறகும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்க் கும்பல் திருந்துவதாகத் தெரியவில்லை. இந்து வெறி அவர் களின் கண்களையும், கருத்துகளையும் திரையிட்டு மறைக்கிறது. இன்னும் கெட்டுப் போகிறேன் - என்ன பந்தயம் கட்டுகிறாய்? என்று கேட்பது போலிருக்கிறது; இவர்களின் புத்தியும் - போக்குகளும், பந்தயம் கட்டியா கெட்டுப் போக வேண்டும்?
மத்தியில் ஆட்சி அமைத்து ஒரு எட்டு மாத இடைவெளியில், இந்தியாவின் தலைநகரத்தில் ஏற்பட்டுள்ள கடும் தோல்விக்குப் பிறகும் புத்திக் கொள் முதல் பெற தயாராகவில்லை - சங்பரிவார் என்றால், இவர்களிடம் புத்திக் கூர்மையை எதிர்பார்க்க முடியாது; காரணம், மதவெறிதான் - அதுவும் கண்மூடித்தனமான மதவெறி என்றால் எப்படித் தவறுகளைத் திருத்திக் கொள்வார்கள்?

தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த கால கட்டத்திலேயே டில்லித் தலைநகரில் கிறித்தவர்களின் சர்ச்சுகள் இடிக்கப்பட்டன; எரிக்கப்பட்டன என்றால் இந்தக் கூட்டம் எந்தத் தைரியத்தில் தேர்தலைச் சந்திக்கிறது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இன்னொரு கேள்வியும் இருக்கிறது. இவர்கள் என்ன இந்துக்களின் ஏகப் பிரதிநிதிகளா? என்ற கேள்வியும் இந்துக்கள் மத்தியில் கேள்வி எழுந்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை.

Read more: http://viduthalai.in/page1/96180.html#ixzz3S0tQsvSe

தமிழ் ஓவியா said...

சமதர்மம் என்றால் சாதாரணமாகப் பாரபட்சமற்ற நீதி, சமத்துவம், பேதமற்ற அதாவது உயர்வு தாழ்வு இல்லாத நிலை என்பதாகும். ஆனால், இன்றைய வாழ்க்கை யில் ஒவ்வொரு அம்சத்திலும் அதாவது ஜாதியில், கல்வியில், செல்வத்தில், வாழ்க்கை அந்தஸ்து நிலையில் மேல் கீழ் நிலை இருந்து வருகிறது. இவற்றை ஒழித்து யாவற்றிலும் சமத்துவத்தை நிறுவுவதற்குச் சமதர்மக் கொள்கை ஆட்சி அவசியம்.-

தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page1/96216.html#ixzz3S0uCpqxi

தமிழ் ஓவியா said...

பரோடாவில் ஆலயப் பிரவேசம்

சுதேச சமஸ்தானங்களில் முற்போக்கான காரியங்களை முதன்மையாகச் செய்து வரும் சமஸ்தானம் பரோடா சமஸ்தானம் ஒன்றேயென்பதை நாம் கூற வேண்டியதில்லை. அதிலும் தாழ்த்தப்பட்டவர்கள் விஷயத்தில், பரோடா அரசாங்கம் மிகவும் அனுதாபங் கொண்டு அவர்களுக்குப் பல நன்மைகள் செய்து கொண்டு வருகின்றது.

தாழ்த்தப்பட்ட வகுப்புப் பிள்ளைகளை எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் ஆட்சேபணையின்றிச் சேர்த்துக் கொள்ள வேண்டுமெனச் சென்ற வருஷத்தில் பரோடா அரசாங்கத்தார் உத்தரவு பிறப்பித்தனர். இவ்வுத்தரவை அகங்காரம் பிடித்த உயர் ஜாதி இந்துக்கள் எவ்வளவோ எதிர்த்தனர்.

பள்ளிக் கூடங்களில் சேரவந்த தாழ்த்தப்பட்ட வகுப்புப் பிள்ளைகளுக்கு எவ்வளவோ கஷ்டங்களை உண்டாக்கினார்கள், தங்கள் பிள்ளைகளை ஜாதி இந்துக்களின் பிள்ளைகள் வாசிக்கும் பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பிய தாழ்த்தப்பட்ட வகுப்புக் குடும்பத்தினரின் குடிசைகளை நெருப்புக்கிரையாக்கினர்.

அவர்கள் தண்ணீர் எடுக்கும் கிணறுகளில் மண்ணெண்ணெய் ஊற்றிகுடி, தண்ணீருக்குத் திண்டாட விட்டனர். இவ்வாறு உயர் ஜாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சகிக்க முடியாத கொடுமைகளைச் செய்தாலும், அவர்கள் அரசாங்கத்தார் தமக்குக் கொடுத்த சுதந்திரத்தை உபயோகிக் காமல் விட்டு விட வில்லை.

அரசாங்கத்தாரும், தாம் பிறப்பித்த உத்தரவை மாற்றாமல், பிடிவாதமாகவே நிறைவேற்றினார்கள். இவ்வகையில் அரசாங்கம் கொண்டிருந்த உறுதியைத் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர்பால் அனுதாபம் உள்ள எவரும் பாராட்டாம லிருக்க முடியாது.

இப்பொழுது இன்னும் சிறந்த துணிகரமான காரியமாக, தாழ்த்தப்பட்டார் அனைவரும் கோயிலுக்குள் செல்ல உரிமையுண்டு என்றும் உத்தரவு பிறப்பித்ததை நாம் பாராட்டு கிறோம். இதற்கு முன் போர் சமஸ்தானத்திலும் இவ்வாறே தாழ்த்தப்பட்ட சமுகத்தார்க்கும் கோயில் பிரவேசம் அளித் திருக்கின்றனர்.

அதைப்பின்பற்றி பரோடாவும் தைரியத்தோடு வைதிகர்களின் எதிர்ப்பைச் சிறிதும் பொருட்படுத்தாமல் இக்காரியத்தைச் செய்ததைப் பாராட்டு கிறோம். இப்பொழுது தான் சென்னைச் சட்டசபையில், தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கோயில் பிரவேசம் அளிக்கத்தக்க சட்டத்தை ஏற்படுத்துமாறு அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்வதாக தீர்மானம் நிறை வேறியிருக்கின்றது.

சென்னை அரசாங்கத்தார் இத்தீர்மானத்தை அனுசரித்தும் பரோடா, போர்பந்தர் முதலிய சமஸ்தானங்கள் செய்திருக்கும் உத்தரவுகளைப் பார்த்தும் தாமதமில்லாமல் தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கோயில் பிரவேசம் அளிக்கத் தகுந்த சட்டத்தை நிறைவேற்ற முன்வருமா? என்று கேட்கிறோம்.

சுதேச சமதானங்கள் இக்காரியத்தைச் செய்த பின்னும் சென்னை மாகாண பொது ஜனங்களின் பிரதிநிதியாகிய சட்டசபை இக்காரியத்தை நிறை வேற்ற வேண்டுமென்று சிபாரிசு செய்த பிறகும் சென்னை அரசாங்கம் மௌனஞ் சாதித்துக் கொண்டு வாளாவிருக்குமாயின் அது நேர்மையும் ஒழுங்கும் ஆகாது என்பதைச் சொல்ல விரும்புகிறோம்.

அரசாங்கத்தின் நோக்கம் எல்லா வகுப்பினருக்கும் சமத்துவமளிப்பதும், எல்லா வகுப்பினருக்கும் நீதி புரிவதும் அல்ல வென்று பொது ஜனங்கள் நினைக்கும் படி இருக்கும். ஆகையால் சென்னை அரசாங்கம் சிறிதும் தாமதம் இல்லாமல் பரோடா போர்பந்தர் முதலிய சமஸ்தானங்கள் செய்தது போலத் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கு ஆலயங்களில் சம உரிமை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறுகின்றோம்.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 06.11.1932

Read more: http://viduthalai.in/page1/96218.html#ixzz3S0uJcGzK

தமிழ் ஓவியா said...

பொன்மொழி

தன்னை எதிரி வென்று விடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயமாய்த் தோல்வியுறுவான். - நெப்போலியன்

சதுரங்க விளையாட்டினைப் போல், வாழ்க்கையிலும் முன் யோசனையே வெல்கிறது - பக்ஸ்டன்

Read more: http://viduthalai.in/page-1/96212.html#ixzz3S0v2goo9

தமிழ் ஓவியா said...

பிற்படுத்தப்பட்டோரின் கவனத்துக்கு...

யுஜிசி என அழைக்கப்படும் பல்க லைக்கழக மானியக் குழுவானது ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உள் ளிட்ட சிறுபான்மையினர், பெண்கள் உள் ளிட்டோருக்குப் பல்வேறு விதமான கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. தற்போது, முதல்முறையாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவ -மாணவிகளுக்குப் புதிய கல்வி உதவித் தொகை திட்டத்தை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது.

எம்.ஃபில். பிஎச்.டி. (முனைவர் பட்டம்) படிப்பதற்கு இந்த உதவித் தொகை கிடைக்கும். கலை, சமூக அறிவியல், அறிவியல், பொறியியல், தொழில் நுட்பம் ஆகிய படிப்புகளுக்கு உதவித் தொகை பெறலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

(விண்ணப்பதாரர்கள் யுஜிசி அல்லது அறிவியல் மற்றும் தெழில்நுட்ப அமைச் சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அறிவி யல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி (சிஎஸ்அய்ஆர்) நிறுவனத்தின் ஜெஆர் எஃப் உதவித்தொகை பெறக்கூடாது என்பது ஒரு நிபந்தனை). ஆண்டு தோறும் 300 ஓபிசி மாணவர்களுக்கு உதவித் தொகை களை வழங்க யுஜிசி முடிவு செய்துள்ளது. இதில் 3 சதவீதம் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப் பட்டிருக்கிறது.

தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு முதல் 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் கல்வி உதவித்தொகையாக ரூ.25 ஆயிரம் கிடைக்கும். அத்துடன் எதிர்பாராத செல வுக்காக ஆண்டுக்கு ரூ.10 ஆயிரமும் (கலை படிப்புகள்), ரூ.12 ஆயிரமும் (அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம்) வழங்கப்படும்.

இரண்டு ஆண்டுகள் முடிந்த பின்பு கல்வி செயல்பாடுகள் திருப்தியாக இருக் கும் பட்சத்தில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூ.28 ஆயிரம் கிடைக்கும். அதோடு எதிர்பாராத செலவினங்களுக் காகக் கலைப் படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.20,500-ம், அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.

இந்த உதவித்தொகை விண்ணப்ப தாரரின் வங்கிக்கணக்குக்கு ஆன்லைனில் நேரடியாக (E- payment) வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கல்வி ஆண்டின் உதவித்தொகையைப் பெறுவ தற்கு வரும் பிப்ரவரி மாதம் 10-ம் தேதிக் குள் ஆன்லைனில் (www.ugc.ac.in) விண்ணப்பிக்க வேண்டும் என்று யுஜிசி அறிவித்துள்ளது.

ஓ.பி.சி. வகுப்பினர் யார்?

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத் தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர் களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்குள் இருக்கும் நபர்கள் ஓ.பி.சி பிரிவின் கீழ் வருவார்கள். பி.சி, எம்.பி.சி பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்தைத் தாண்டிவிட்டால் அவர்கள் ஓ.பி.சி. வகுப் பினராகக் கருதப்பட மாட்டார்கள். ஓபிசி வகுப்பினருக்கான சான்றிதழைத் தாசில்தார் வழங்குவார். இதற்கு உரிய படிவத்தில், தேவையான ஆவணங் களுடன் கிராம நிர்வாக அதிகாரி, வரு வாய் ஆய்வாளர் மூலமாக விண்ணப் பிக்க வேண்டும்.

(தி இந்து 3.2.2015 இணைப்பு பக்கம் 1)

Read more: http://viduthalai.in/page-1/96222.html#ixzz3S0xHmjRx

தமிழ் ஓவியா said...

சென்னைத் தலைமைச் செயற்குழுவில்
கழகத் தலைவர் தெரிவித்த கருத்துகள் (சென்னை 12.2.2015)

1) கழகத் தலைவர் கலந்து கொள்ளும் ஊர்களில் கட்டாயம் மண்டலம் / மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்.

2) ஒப்படைக்கப்பட்ட நன்கொடைப் புத்தகங்களை கணக்குகளுடன் ஒப்படைக்க வேண்டும் என்று விடுதலையில் அறிவிப்பு வருவது உகந்ததல்ல - அந்த அளவிற்கு பொறுப்பாளர்கள் நடந்து காட்டவேண்டும்.

3) 2015 ஏப்ரல் 28, 29 நாட்களில் (மாலை 5 மணிக்கு) சமஸ்கிருத ஆதிக்க எதிர்ப்பு மாநாடு பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து மீட்டுருவாக்கம் - கருத் தரங்கம்; மொழிப்போர் வீரர்களுக்கும் படத் திறப்புகள்; நுழைவுக்கட்டணமும் உண்டு. இனி எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் நன்கொடையாக இருந்தாலும் பெரியார் உலகத்திற்கே!

4) பெரியார் உலகம் தொடர்பான பணிகளும், கழகத் பிரச்சாரத் தொடர்பான பணிகளும் தங்குத் தடை யின்றி இணைந்தே நடைபெறவேண்டும்.

5) இளைஞரணி - மாணவரணி மகளிர் அணிகள் விரிவாக்கம். மகளிர் அணி - 30 வயதுக்கு மேல்; மகளிர் பாசறை - 30 வயதுக்குள்
(மாணவரணி, இளைஞரணிக்கும் இது பொருந்தும்)

6) இளைஞரணி - மாணவரணி மாநாடு - ஆகஸ்டில் (பெரியார் சமூகக்காப்பு அணியும் இணைந்தது) நடைபெறும்.

இளைஞரணி - மாணவரணி அமைப்புக்குழு பொதுச்செயலாளர்கள்:

1) வீ.அன்புராஜ், 2) டாக்டர் துரை. சந்திரசேகரன், 3) தஞ்சை இரா.ஜெயக்குமார், 4) உரத்தநாடு இரா.குணசேகரன், 5) மாணவரணிச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், 6) இளை ஞரணிச் செயலாளர் இல.திருப்பதி, 7) இளந்திரையன், 8) ஒருங்கிணைப்பாளர் முனைவர் செயக்குமார் - கடலூர்.

7) மகளிர்அணி ஒருங்கிணைப்பு: 1) கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி, 2) பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, 3) மகளிர் பாசறை செயலாளர் டெய்சி மணியம்மை 4) உமா செல்வராசு

8) தலைமைக் கழகத்தினர் சம்பந்தப்பட்ட மாவட்டங் களில் இயக்கப்பணிகளுக்கும், செயல்பாட்டுக்கும் பொறுப்பாளர்கள் ஆவர். மாவட்டப் பொறுப்பாளர்களோடு தொடர்பிலேயே இருக்க வேண்டும். தலைமைச்செயற்குழுவுக்கு வரும்போது திட்டங் களோடும், கருத்துக்களுடனும் வருதல் வேண்டும். அவற்றை முறைப்படுத்தி செயல்படுத்தவும் வேண்டும்.

9) மாவட்டத்திற்கு இரு இளைஞர்கள் / மாணவர்களை தேர்வு செய்து சிறப்பான பயிற்சி (INTENSIVE TRAINING) களப்பணி - மாணவர்கள், இளைஞர்கள் சேர்க்கை, ஊடக விவாதங்களில் பங்கேற்பு உள்ளிட்ட துல்லியமான பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட கருத்துருகளை கழகத் தலைவர் கழகத் தலைமைச் செயற் குழுவில் அறிவித்தார்.

Read more: http://viduthalai.in/page1/96136.html#ixzz3S0y93I52

தமிழ் ஓவியா said...

ஈழத்தில் நடந்த இனப்படுகொலை குறித்து அய்.நா. விசாரணை நடத்த வேண்டும் என்ற இலங்கை வடகிழக்கு மாகாண அரசின் தீர்மானம் வரவேற்கத்தக்கதே!

இந்திய நாடாளுமன்றத்திலும் இத்தகைய தீர்மானம் கொண்டு வரப்பட
தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

டில்லி தேர்தல் முடிவுகள்

ஈழத்தில் வடகிழக்கு மாகாண அரசு ஒரு முக்கியமான தீர்மானத்தை நிறைவேற்றியுள் ளது. ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து அய்.நா. விசாரணை நடத்திட வேண்டும் என்று நிறைவேற்றிய தீர்மானம் வரவேற்கத் தக்கது என்றும். இதனை வலியுறுத்தும் வகை யிலும், அழுத்தம் கொடுக்கும் தன்மையிலும் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட, தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இலங்கையில் இராஜபக்சே தலைமை ஆட்சி ஒழிந்த நிலையில், பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்ற மைத்திரி பாலசிறீசேனாவின், தலைமையில் அமைந்துள்ள புதிய ஆட்சி, (இதுவும் சிங்களப் பெரும்பான் மையை வைத்துள்ள ஒரு ஆட்சி என்ற போதிலும்) இராஜபக்சே அணுகுமுறைக்கு விடை கொடுத்தால் ஒழிய, உலகத்தார் கண்முன் சீரிய ஆட்சியாகத் திகழ வாய்ப்பில்லை என்பதாலும், பொது மரியாதை கிடைக்காது என்ற தன்மையாலும், தமிழர்களின் வாக்குகளைப் பெற்றே ஆட்சிக்கு வந்துள்ளோம் - அவர்களின் ஒத்துழைப்பும், நல் லெண்ணமும் ஆட்சிக்குத் தேவை என்பதாலும், தமிழ் நாட்டு மக்களின் உணர்வை ஓரளவு புரிந்து கொண்ட தாலும், இவற்றைப் புரிந்து கொண்டு ஆட்சி செய்ய வேண்டும் என்ற நோக்கில் இதுவரை எதிர்பார்த்ததற்கு சற்று மேலாக, பழைய கள் புது மொந்தை என்பது போல் அல்லாது, பல்வேறு வரவேற்கத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

புதிய அரசின் செயல்பாடுகள்

1. வடகிழக்கு மாகாண ஆளுநரை மாற்றியது.

2. அங்கே உள்ள இராணுவத்தைத் திரும்ப அழைத்திடும் பல்வேறு நடவடிக்கைகள்.

3. சிங்களர், குடியேற்றப் பகுதிகளை மீண்டும் தமிழர் பகுதியாக்கிட, மீள் குடியேற்ற நடைமுறைத் திட்டங் களை வகுத்து, தமிழர்களுக்குரிய உரிமைகளை மீட்டுத் தரும் நடவடிக்கை.

4. முந்தைய ஒப்பந்தத்தில் உள்ள 13ஆவது பகுதி (அதனால் பெரும் அளவுக்கு லாபமில்லை என்றாலும்) கொஞ்சம் பரவாயில்லை என்ற வகையில் அரசியல் தீர்வுக்கு வழி வகை செய்தல்.

5. இராஜபக்சேவின் ஜால்ரா தலைமை நீதிபதியை மாற்றி அதற்குப் பதில் திறமை மிக்க ஒருவரை அமர்த்தி யுள்ளமை.

இவை எல்லாம் மிகப் பெரும் காயம்பட்ட நிலையில் முதலுதவிபோல, முன் சிகிச்சை போன்ற ஓரளவு திருப்தி தரும் புதிய அரசின் நடவடிக்கைகளாகும்.

தமிழ் ஓவியா said...

தமிழக மீனவர்களின் படகுகள் மீட்பு

இவை அல்லாமல் -

1. தமிழக மீனவர்களிடமிருந்து அடாவடித்தனமாக இராஜபக்சே ஆட்சியினால் பறிக்கப்பட்ட 87 படகுகளை - சுப்ரமணியசாமி போன்ற அரசியல் தரகர்களின் விஷம ஆலோசனைகளை ஏற்று, இலங்கை மண்ணில் முடக்கி வைத்து, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்ததை மாற்றி, அவர்களுக்குத் திருப்பி தரும் நிலைப்பாட்டை எடுத்துள்ளதானது - நல்லெண்ண நடவடிக்கைகளாகும்.

வடகிழக்கு மாகாண முதல் அமைச்சர் திரு. விக்னேசுவரன் தலைமையிலான அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானம் முக்கியமானது; இலங்கையில் நடைபெற்றது - அப்பட்டமான இன அழிப்புப் படுகொலையே! (Genocide) அய்.நா. வெளியிலிருந்து சுதந்தரமானவர்களை வைத்து அதை விசாரணை செய்து, குற்றவாளி இராஜபக்சேயையும் அவரது கூட்டத்தினையும் தண்டிக்க வேண்டும் என்ற கருத் தமைந்த வடகிழக்கு மாகாண அரசின் தீர்மானம் - அனைத்து மக்களாலும் வரவேற்றுப் பாராட்டக் கூடியது ஆகும்!

மனித உரிமைப் பறிப்பு - அய்.நா. சாசனத்திற்கு முரணானது.

இதை திராவிடர் கழகமும், டெசோ அமைப்பும், பற்பல ஆண்டுகளாக வற்புறுத்தி வருகின்றன.

உலக நாடுகளின் ஆதரவைப் பெறும் தீர்மானம்

அ.ய்.நா. அமைத்த போர்க் குற்ற விசாரணை அறிக்கை யில் கூறப்பட்ட கருத்துக்களை நடுநிலையோடு ஆராய்ந் தால், நிமீஸீஷீநீவீபீமீ என்ற இன அழிவுப் படுகொலைக்கான அத்தனை சம்பவங்களும் நடந்தன என்பது எளிதாக விளங்குமே!

திரு விக்னேசுவரன் அரசின் தீர்மானம் உலக நாடு களின் ஆதரவை - நியாய உணர்வு - மனித உரிமை அடிப்படையில் பெற்றே தீரும் என்பது உறுதி.

இவையெல்லாவற்றினும் மேலாக இந்திய அரசு - பிரதமர் மோடி தலைமையில் உள்ள அரசு, இலங்கையில் நடைபெற்றது அப்பட்டமான இன அழிப்புப் படுகொலை என்பதை வலியுறுத்தி, இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு தனித் தீர்மானமே கொண்டு வர முன்வர வேண்டும்.

இனப்படுகொலை குறித்து அய்.நா.வின் சுதந்திரமான விசாரணை தேவை!

வருகிற தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடரில் இப்படி ஒரு தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வரவும், விக்னேசுவரன் அரசின் தீர்மானத்தின் கருத்தை ஆதாரமாக்கி, தமிழர் இனப்படுகொலைபற்றி அய்.நா.வின் சுதந்திரமான ஒரு விசாரணைக் குழு நடத்திட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் கொண்டு வர வேண்டும்.

அத்துணைக் கட்சிகளும், ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற பேதமின்றி, ஒரு மனதாக ஒருமித்த குரலில் ஆதரவு கொடுத்து வரலாற்றில் இனி எங்கும் இப்படிப்பட்ட மனித இனப்படுகொலை தலை தூக்கக் கூடாது என்று நிலையை உருவாக்கிட அது பெரிதும் உதவும் என்பது உறுதி.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
13-2-2015

Read more: http://viduthalai.in/page1/96130.html#ixzz3S0yGyZew

தமிழ் ஓவியா said...

நீங்குமா? நீங்காதா?மதத்தைக் காப்பாற்றவே கோயில் களும், சொத்துகளும், அவற்றைக் காக்க மடங்களும், மடாதிபதிகளும் ஏற்பட்டனர். இவை மக்கள் வாழ்க்கைக்கு அவசியமா? அதனால் மக்கள் கஷ்டம் நீங்குமா? நீங்காதா? என்பதைத்தான் கவனிக்க வேண்டும்.
(விடுதலை, 3.12.1962)

Read more: http://viduthalai.in/page1/96119.html#ixzz3S0zWGFZJ

தமிழ் ஓவியா said...

உங்களுக்கு தெரியுமா?

-தந்தை பெரியார்

சூத்திரன் பார்ப்பானைக் கடவுளாகக் கொண்டு தவம் செய்யாமல் கடவுளை நினைத்துத் தவம் செய்வதற்காக, ராமன் சம்புகன் என்ற சூத்திரனைச் சித்திரவதை செய்து கொன்றான். அதாவது சூத்திரனுக்கு (திராவிடனுக்கு) கடவுள் பார்ப்பான்தான். பார்ப்பானைக் கடவுளாகக் கொண்டு வணங்காதவனைப் பார்ப்பான் அரசன் கொல்ல வேண்டும். இது இராமாயண தர்மம் மாத்திரமல்லாமல் மனுதர்மமுமாகும். எனவே இராமாயணம் இருக்க வேண்டுமா?

**************
பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகிய நான்கு ஜாதிகளை நான் படைத்தேன் என்றும், பிராமணனுக்குச் சூத்திரன் அடிமைப்பணி செய்ய வேண்டும்; செய்யாவிட்டால் நரகத்தில் புக வேண்டும் என்பதாகவும் பாரதத்தில் (கீதையில்) கிருஷ்ணன் சொல்லி இருக்கிறான். எனவே பாரதம் இருக்க வேண்டுமா?

**************

சூத்திரன் என்பவன் தாசி புத்திரன், பார்ப்பானின் வைப்பாட்டி மகன். இதுதான் மனுதர்மம்; மனுதர்ம மாத்திரமல்ல, இந்து லாவும் இப்படித்தான் சொல்லுகிறது.

Read more: http://viduthalai.in/page1/96149.html#ixzz3S10MOE7L

தமிழ் ஓவியா said...

இராமாயணம் கட்டுக்கதையே! சி.ஆர்.

விடுதலையின் பிரச்சாரத் தொண்டு வெகு விரைவில் மாற்றுக் கொள்கையுடைவர்களையும் விழிப்புறச் செய்வதற்கு நல்ல சான்றுகள் கிடைத்து வருகின்றன.

அதில் வெளிவரும் புராண சாஸ்திர ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஆஸ்திகப் பிரசாரகர்களே அவ்வாராய்ச்சியிற்கண்ட உண்மைகளை ஒப்புக் கொள்ள வேண்டிய நிலைக்குக் கொண்டு வந்து விட்டிருக்கின்றன. உண்மையான பகுத்தறிவு பிரச்சாரத் தொண்டுக்கே உயர்வு கிடைக்கும் என்பதும் தெளிவாகிறது.

மதுரையில் பேசிய முதலமைச்சர் ஆச்சாரியார், திராவிடத் தலைவர் பெரியாரைக் குறிப்பிட்டு அவர்கள் இருவரிடையேயும், பழங்காலமிருந்தே நிலவிவரும் சிறப்பான நட்பும், பெரியார் அவர்கள் நாட்டுப்பணியில் தீவிர சிரத்தையுடன் முந்தை நாளிலிருந்தே பாடுபடு வதையும் புகழ்ந்து கூறியிருப்பதுடன் பெரியாரின் பகுத்தறிவுப் பிரச்சாரத்தில் காணும் உண்மைகளை ஒப்புக் கொண்ட வகையில் கோயில்களின் புனிதத்தன்மை குறைந்திருப்பதையும்,

இராமாயணம், ஓர் கட்டுக்கதை யென்றே சொல்ல வேண்டுமென்றும், தர்மம் என்பதே மனச்சான்றுக்குச் சரியெனப் படுவதுதானென்றும், அக்காலத்தில் மக்களிடம் குடிகொண்டிருந்த ஒழுக்கக் குறைபாடுகளைப்பற்றி கவி வாணரால் சித்திரிக்கப்பட்டது தான் ராமாயணம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

Read more: http://viduthalai.in/page1/96149.html#ixzz3S10SLsAV

தமிழ் ஓவியா said...

திருடர்க்கு அழகு திருநீறணிதல்!

திருநீறு என்றால் என்ன? எதற்காக அதை நெற்றியில் இடுவது? இடுகிறவர்கள் அதை என்ன கருத்தோடு இடுகிறார்கள்? என்கின்ற விஷயங்களை யோசித்துப் பார்த்தால் திருடர்க்கு அழகு திருநீறடித்தல் என்பது நன்றாய் விளங்கும்; இல்லாவிட்டால் மூடர்க் கழகு திருநீறடித்தல் என்பதாவது விளங்கும்.

எப்படியெனில், திருநீறு என்பது சாம்பல். அதை இடுவதால் கடவுளின் அருளைப் பெறலாம் என்று அதை இடுகின்றவர்கள் கருதுவதும், தாங்கள் எவ்வளவு அக்கிரமக்காரர் ஆனாலும் திருநீறிட்ட மாத்திரத்திலே சகல பாவமும் போய்க் கைலாயம் சித்தித்து விடும் என்று நினைப்பதுமேயாகும்.

இதற்கு ஆதாரமாக திருநீறின் மகிமையைப் பற்றிச் சொல்லுகின்ற பிரமோத்திர காண்டம் என்னும் சாஸ்திரத்தில் ஒரு பார்ப்பனன் மிக்க அயோக்கியனாகவும், கொலை, களவு, கள், காமம், பொய் முதலிய பஞ்சமாபாதகமான காரியங்கள் செய்து கொண்டே இருந்து ஒருநாள் ஒரு புலையனான சண்டாளன் வீட்டில் திருட்டுத்தனமாய் அவன் மனைவியைப் புணர்ந்ததாகவும்,

அந்தச் சண்டாளன் இதை அறிந்து அந்தப் பார்ப்பானை ஒரே குத்தாகக் குத்திக் கொன்று அப்பிணத்தை சுடுகாட்டுக்குப் பக்கத்தில் கொண்டு போய் எறிந்து விட்டதாகவும், அந்தப் பார்ப்பனனை அவன் செய்த பாவங்களுக்காக எமதூதர்கள் கட்டிப் பிடித்து கும்பிபாகம் என்னும் நரகத்தில் தள்ளிக் கொண்டு போனதாகவும், அந்தச் சமயத்தில், சிவகணங்கள் இரத்தின விமானத்துடன் வந்து அந்தப் பார்ப்பனனை எமதூதர் களிடமிருந்து பிடுங்கி இரத்தின விமானத்தில் வைத்து, கைலாயத்திற்குப் பார்வதியிடம் கொண்டு போனதாகவும்,

எமன்வந்து, இவன் மகாப்பாவம் செய்த கெட்ட அயோக்கியப் பார்ப்பனனாயிருக்க நீங்கள் கைலாயத்திற்கு எப்படி கொண்டு போகலாம்? என்று வாதாடினதாகவும், அதற்கு சிவகணங்கள் இந்தப் பார்ப்பான் மீது சற்றுத் திருநீறு பட்டுவிட்டதால் அவனுடைய பாவம் எல்லாம் ஒழிந்து அவன் மோட்சத்துக்கு அருகனானதனால் பரமசிவன் எங்களை அனுப்பினார் என்று சொன்னதாகவும்,

அதற்கு எமன் சித்திரபுத்திரன் கணக்கைப் புரட்டிப் பார்த்து இந்தப் பார்ப்பான் ஒரு நாளும் திருநீறு பூசவில்லை, ஆதலால் இவனுக்கு மோட்சத்தில் இடமில்லை என்று சொல்லி வாதிட்டதாகவும், அதன் மீது சிவகணமும் எமகணமும், எமனும் சிவனிடம் சென்று இவ்வழக்கைச் சொன்னதாகவும், பிறகு சிவன் இந்தப் பார்ப்பான் உயிருடன் இருக்கும் வரை மகாபாதகங்கள் செய்திருந்தாலும் இவனைக் குத்திக் கொன்று சுடுகாட்டில் இவன் பிணத்தை எறிந்த விட்டபோது,

மற்றொரு பிணத்தைச் சுட்ட சாம்பலின்மீது நடந்து வந்த ஒரு நாய் இவனது பிணத்தைக் கடித்துத் தின்னும் போது அதன் காலில் பட்டிருந்த அந்தச் சாம்பலில் கொஞ்சம் பிணத்தின் மீது பட்டுவிட்டதால், அவனுக்குக் கைலாயத்தில் இடம் கொடுக்க வேண்டியதாயிற்று என்று சொல்லி எமனைக் கண்டித்து அனுப்பி விட்டுப் பார்ப்பானுக்கு மோட்சம் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆதலால் திருநீறு எப்படியாவது சரீரத்தில் சிறிது பட்டுவிட்டால் எப்படிப்பட்ட அயோக்கியர்களுக்கும் மோட்சம் கிடைக்குமென்று சிவன் சொல்லி இருப்பதைப் பார்த்து நமது சைவர்கள் திருநீறு அணிகின்றார்கள். அந்த சாஸ்திரத்தின் அடுத்த அத்தியாயத்தில் திருநீறு அணியும் விதம், இடங்கள் எல்லாம் குறிப்பிட்டு இதில் எழுதக் கூடாத படுபாதகங்கள் செய்வதனால் ஏற்படும் பாவங்கள் எல்லாம் நீங்குமென்றும் அவன் பிதுர்க்கள் செய்த பாவங்கள் கூட நீங்கி நரகத்திலிருந்தாலும் சிவனிடத்தில் சேர்வார்கள் என்றும் எழுதப்பட்டிருக்கின்றது.

இவை பிரமோத்திர காண்டம் 14ஆவது 15ஆவது அத்தியாயத்தில் உள்ளது. இந்த ஆதாரத்தை நம்பி மோட்ச ஆசையால் திருநீறு அணிகின்றவர் திருடராகவாவது, அதாவது பேராசைக்காரராகவாவது, மூடராகவாவது இருக்காமல் வேறு என்னவாக இருக்கக் கூடும்? என்பதை யோசித்துப் பார்க்கக் கோருகிறோம்.

- விடுதலை 29.12.1950

Read more: http://viduthalai.in/page1/96150.html#ixzz3S10a2KjD

தமிழ் ஓவியா said...

அறிவியல்

23.1.1938 அன்று ஆயக்கவுண்டன் பாளையத்தில் கூடிய மாநாட்டில் தந்தை பெரியார் குறிப்பிட்டதாவது:-

மக்கள் பிறப்பது கூட இனி அருமையாகத்தான் போய்விடும். அதுபோலவே சாவும் இனி குறைந்து விடும். மனிதன் வெகு சுலபமாக நூறு ஆண்டுகள் வாழ முடியும். யாரும் சராசரி ஒன்று, இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற மாட்டார்கள். ஆண் - பெண் புணர்ச்சிக்கும், பிள்ளை பேறுக்கும் சம்பந்தமில்லாமலே போய்விடும்.

வேலை செய்கிற குதிரைகள் வேறு. குட்டி போடுகிற, போடச் செய்கிற குதிரை வேறு என்கிற மாதிரி மனித சமூகத்தில் இருக்கும். பிள்ளைப் பெறும் தொல்லை, வளர்க்கும் தொல்லை, அதற்குச் சொத்து சுகம் தேடும் தொல்லை ஒழிந்து போகும் என்கிற நம்பிக்கை உண்டு.

- குடிஅரசு, 30.1.1938

Read more: http://viduthalai.in/page1/96150.html#ixzz3S10hClsX

தமிழ் ஓவியா said...

வேடிக்கை வாதம் போலி சயின்ஸ்

சுயமரியாதைக்காரர்.: மாட்டுச் சாணியை உருட்டி கொளுக்கட்டை போல் ஆக்கி சாமியாக வைத்துக் கும்பிடுகிறார்களே இதன் காரணம் என்ன? அந்தச் சாணி நாற்றமடிப்பதில்லை என்கின்ற காரணம் தானே?

பார்ப்பான்: ஓய் உமக்கென்னங்காணும் தெரியும்? பசுஞ்சாணியில் ஜர்ம்ஸ் (பூச்சி)களைக் கொல்லும் சக்தி இருக்கிறது ஓய்.

சு.ம.: இது எந்த டாக்டர் சொன்னார் உமக்கு? அல்லது இது எதிலிருக்கிறது?

பார்ப்பான்: ஓய், ஓய், இந்தக் காலத்து டாக்டர்களை யெல்லாம் விட, இந்தக் காலத்து சைன்ஸ் புத்தகங்களை யெல்லாம் விட, அந்தக்காலத்துப் பெரியவாளும், சாஸ்திரங்களும் எவ்வளவோ மேலானது. தெரியுமா? இதற்கெல்லாம் ஆதாரம் கேட்காதேயும், இப்படிக் கேட்டவர் வெகு பேருக்கு வாய் புளுத்துப் போய்விட்டது.

சு.ம.: ஓ! ஓ! அப்படியா? பகுத்தறிவில்லாத மாட்டுச் சாணிக்கே ஜர்ம்சைக் கொல்லுகிற சக்தி இருந்தால் அதை விட உயர்ந்த பிறவியான பகுத்தறிவுள்ள மனுஷன் சாணிக்கு இன்னமும் என்ன என்னமோ சக்தி இருக்கலாமே: பின்னை அதை...

பார்ப்பான்: சீச்சீ, நீர் என்ன? சுயமரியாதைக் காரராக்கும். உம்மிடம் யார் பேசுவார்?
(குடிஅரசு 20.11.1943)

Read more: http://viduthalai.in/page1/96151.html#ixzz3S10oAeZb

தமிழ் ஓவியா said...

கே.எம்.பணிக்கர் கூற்று!

ஜாதி உணர்ச்சி பற்றி குற்றம் சாட்டும் பெரும்பாலோர் ஜாதிகளின் பிரதிநிதிகளாகவே இருந்தவர்கள்!

ஒரு காலத்தில் அவர்கள் தங்கள் பகுதிகளில் அரசியல் ஆதிக்கத்தை ஏக போகமாக அனுபவித்து வந்தவர்கள். இன்று வயது வந்தோர்க்கு வாக்குரிமை என்பதன் அடிப்படையில் உள்ள மக்கள் ஆட்சியில் இதுவரை சமுதாயத்தில் செல்வாக்கும் அரசியல் ஆதிக்கமும் இழந்திருந்த மக்கள் தங்களுக்குச் சவால் விடும் அளவுக்கு உயர்ந்து விட்டனரே என்பதால்தான் ஜாதி உணர்ச்சி ஓங்கி விட்டது என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஜனநாயக வழிமுறைகளினால் கீழ் ஜாதிக்காரர்கள் அரசியல் ஆதிக்கம் வகிக்கும் அளவுக்கு முன்னேறி வருவது இந்திய ஜனநாயகத்தில் மிகவும் வரவேற்கத்தக்கதொரு அம்சமாகும்.

- ஜம்மு - காஷ்மீர் பல்கலைக்கழக துணை வேந்தர் கே.எம்.பணிக்கர், கருநாடகப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் 1962ஆம் ஆண்டு உரையாற்றியது.

Read more: http://viduthalai.in/page1/96151.html#ixzz3S10vh9DC

தமிழ் ஓவியா said...

பாரதியார்


இங்ஙனம் தமிழ் ப்ரதானம் என்று நான் சொல்வதால், டாக்டர் நாயரைத் தலைமை யாகக் கொண்ட திரா விடக் கக்ஷியார் என்ற போலிப் பெயர் புனைந்த தேச விரோதிகளுக்கு நான் சார்பாகி ஆர்ய பாஷா விரோதம் பூண்டு போகிறேன் என்று நினைத்து விடலாகாது.

தமிழ்நாட்டிலே தமிழ் சிறந்திடுக. பாரத தேச முழுவதிலும் எப்போதும் போலவே வடமொழி வாழ்க.

இன்னும் நம் பாரத தேசத்தின் அய்க்கியத் தைப் பரி பூரணமாகச் செய்ய நமது நாடு முழுவதிலும் வடமொழிப் பெயர்ச்சி மென்மேலும் ஓங்குக. எனினும் தமிழ் நாட்டில் தமிழ்மொழி தலைமை பெற்றுத் தழைத்திடுக இவ்வாறு பாரதி கூறுகிறார் (ம.பொ. சிவஞானம் எழுதிய பாரதியும் ஆங்கிலமும் பக்கம் 39-40) எப்பொ ழுதோ பாடினார் என்று அலட்சியப்படுத்தலாம்; ஆனால் அதனை இப் பொழுதும் கையாண்டுள் ளதால் தான் கவனிக்க வேண்டியுள்ளது.

டாக்டர் நாயரைபற்றி பாரதி என்ன சொல்லு கிறார்? திராவிடக் கஷி யார் என்ற போலிப் புனைந்த தேச விரோதி என்கிறார்.

இன்றைய ஆர்.எஸ்.எஸ். காரர்களும், பார்ப்பனர்களும் பார்ப் பனப் பாதந்தாங்கும் புல் லுருவிகளும் என்ன சொல்லுகிறார்களோ, அதையேதானே பாரதி யும் சொல்லியிருக்கிறார். இந்த வகையில் இவர் களுக்கெல்லாம் பாரதி யார் வழிகாட்டி என்று கூட தங்கள் முதுகைத் தாங்களே தட்டிக் கொள் ளலாம்தான்.

திராவிடக் கஷியார் என்றும் போலிப் புனைப் பெயர் என்றும் கோபப் படும் பாரதி தனது பாடல்களில் எத்தனை எத்தனை இடங்களில் ஆரிய நாடு என்றும், ஆரியர் என்றும் கொக் கரிக்கிறார்.

ஆரிய சாத்திர சம் பிரதாயங்களைத் தழுவி வாழ்வாராயின் அச்ச மொன்றும் இல்லை என்றெல்லாம் எழுத வில்லையா? ஆரிய மைந்தன் அகத்தியன் என்றெல்லாம் பாட வில்லையா?

திராவிடர் என்பது பொய். ஆரியர் என்பது தான் மெய் என்று கூறு கிறாரா பாரதி?

வேத முடைய திந்தநாடு - நல்ல
வீரர் பிறந்திருந்த நாடு
சேதமில்லாத ஹிந்துஸ்தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா
என்று பாடியவன் தானே பாரதி.
இன்னும் ஒருபடி மேலே சென்று லெனி னைப் பரம மூடன் என்று எழுதியவரும் இந்த முண்டாசுக் கவிஞன் தான்.

பாரதியாக இருந்தா லும் சரி, விவேகானந்த ராக இருந்தாலும் சரி முற்போக்கும், பிற்போக் கும் கைகோர்த்துக் கொண் டிருக்கும் கலவை என்றே சொல்ல வேண்டும்.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/96071.html#ixzz3S11ei1u1

தமிழ் ஓவியா said...

எச்சரிக்கை

சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்தால் உடனே வெளியேற் றிட வேண்டும்; அடக்கக் கூடாது, தள்ளிப் போட்டால் அங்கேதான் ஆரம்பமாகிறது சிறுநீரக பாதிப்புப் பிரச் சினை! சுகாதாரமான கழிவறை யும் மிகவும் முக்கியம்.

Read more: http://viduthalai.in/page1/96087.html#ixzz3S120ww7r

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

வேண்டுதல்

கடவுள் எல்லாம் அறிந் தவன் தெரிந்தவன் என் றால், பக்தர்கள் எல்லாம் ஏன் அவனிடம் வேண்டு தலை செய்கிறார்கள் - நேர்த் திக் கடன் கழிக்கிறார்கள்?

Read more: http://viduthalai.in/page1/96087.html#ixzz3S127IZTd

தமிழ் ஓவியா said...

உயிர் நாடி...

மதங்களுக்கு உயிர் நாடியாயிருப்பது பிரச்சாரமும், பணமுமேயல்லாமல், அவற்றின் கடவுள் தன்மையோ, உயர்ந்த குணங்களோ அல்லவே அல்ல.

- (விடுதலை, 1.4.1950)

Read more: http://viduthalai.in/page1/96089.html#ixzz3S12Dp6st

தமிழ் ஓவியா said...

மாணவர்களை முட்டாளாக்க வேண்டாம்!

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் இருபால் மாணவர்களுக்கும் சிறப்பு வழிபாடு ஒன்று சென்னை சைதாப்பேட்டையில் காரணீஸ்வரர் கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.

இந்தச் சிறப்பு வழிபாட்டில் பங்கு கொள்ள விரும்பும் மாணவர்கள் முன் கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டுமாம். இந்த வழிபாட்டில் பங்கு கொள்ளும் இருபால் மாணவர்களிடம் அகல் விளக்குகள் வழங்கப்படுமாம். அந்த அகல் விளக்கை ஏற்றி எங்கள் வாழ்வில் ஒளியேற்று இறைவா! என்று மாணவர்கள் வேண்டிக் கொள்ள வேண்டுமாம். அதன் பிறகு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கிட சிறப்பு வழிபாடு நடத்துவார்களாம். அதன் பிறகு பூஜையில் வைக்கப்பட்ட காப்புக் கயிறுகளை மாணவர்களுக்கு வழங்குவார்களாம்.

இதனைப் படிக்கும் பொழுது, இந்த 21ஆம் நூற்றாண்டின் நுழைவு வாசலில் ஆன்மீகவாதிகள் எதிர்கால நம்பிக்கை ஒளி விளக்குகளின் கைகளில் அகல் விளக்கைக் கொளுத்தி கடவுளிடம் விண்ணப்பம் போட்டால் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பாக வெற்றி பெறுவார்கள் என்று சொல்ல முன் வருகிறார்கள் - வெட்கக்கேடு!

இது மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்குப் பதிலாக மூடநம்பிக்கையையும், சோம்பேறித்தனத்தையும் தானே வளர்க்கும்.

கடவுளிடம் கையேந்தினால் தேர்வில் வெற்றி பெறலாம் என்ற பொய் நம்பிக்கையை மாணவர்களிடம் திணித்தால் அவர்கள் கல்வியில் எப்படிக் கவனம் செலுத்துவார்கள்? அன்றாடம் பாடங்களைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்படும்?

அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கும், தேர்வில் சிறப்பாக வெற்றி பெறுவதற்குமான அறிவார்ந்த வழிமுறைகள் உள்ளன. கல்வியாளர்கள் அதைப்பற்றி எல்லாம் எடுத்துக் கூறியுள்ளனர். அவற்றையெல்லாம் புறந்தள்ளி, அறிவுக்கு ஒவ்வாத முறையில் தவறான வழியில் மாணவர்களைத் திசை திருப்பலாமா!?

மக்களிடத்தில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும், சீர்திருத்த உணர்வை ஊட்ட வேண்டும். அது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் (51கி(பி) தெளிவாக, திட்டவட்டமாகக் கூறுகிறது.

இந்த நிலையில், இதற்கு முற்றிலும் முரண்பாடாக மூடநம்பிக்கை வலைக்குள் மாணவர்களைச் சிக்க வைப்பது சட்டப்படி குற்றமல்லவா!? மாணவர்களின் எதிர் காலத்தை இருட்டறையில் தள்ளுவது குற்றம் அல்லவா?

இது ஏதோ ஒரு மதப்பிரச்சினை என்று கருதி விடக் கூடாது; எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இது போன்ற வேலையில் ஈடுபட்டாலும் அது குற்றம் குற்றமே!

இதுகுறித்து ஏடுகளும், இதழ்களும், ஊடகங்களும் விமர்சிக்க வேண்டாமா?

ஆனால் நம் நாட்டு ஏடுகளும், இதழ்களும் ஊடகங்களும் ஆன்மீக மலர்களைத்தானே வெளி யிட்டுக் கொண்டு இருக்கின்றன. அவர்களுக்கு எதை விற்றாவது கல்லாப் பெட்டியை நிரப்ப வேண்டும் என்பதுதானே நோக்கம்.

சரி, கல்வியாளர்கள் இல்லையா? அவர்கள் முன்வந்து கருத்துக்களைச் சொல்லக் கூடாதா என்று கேட்கலாம்; அப்படிச் சொல்லுவதற்கு முதுகெலும்பு வேண்டுமே, நமக்கு ஏன் வீண் வம்பு என்று ஒதுங்கிக் கொள்ளும் சுயநல கதகதப்பில் அல்லவா வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்!

அரசியல்வாதிகள் கருத்துச் சொல்ல பெரும்பாலும் விரும்பாததற்குக் காரணம் இது கடவுளோடு, பக்தி யோடு சம்பந்தப்பட்டது என்பதால் வாக்கு வங்கியை நினைத்து வாய் மூடிக் கொள்ளும் நிலைதான்.

கடைசியில் எங்கு வந்து நிற்கிறது என்றால், இது பகுத்தறிவாளர்கள் அதிலும் குறிப்பாக திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களின் பிரச்சினை என்று நினைத்து ஒதுங்கிக் கொள்கிறார்கள்.

இதில் உண்மை நிலை என்னவென்றால் எதிர் காலத்தின் உலகை நிர்மாணிக்கக் கூடிய மாணவர்களை தன்னம்பிக்கையற்றவர்களாக ஆக்கி விடக் கூடாது என்று கருதுகிற ஒவ்வொரு வரும் சிந்திக்க வேண்டிய, தலையிட வேண்டிய ஒன்றாகும். இது வெறும் கழகப் பிரச்சினையல்ல.

இதில் இன்னொரு கேள்வியும் உண்டு, தேர்வு களுக்குமுன் இப்படி வழிபாடு நடத்திய மாணவர்கள் அனைவரும் வெற்றி பெற்று விட்டனர் என்பதற்கான புள்ளி விவரங்கள் உண்டா?

கடவுள் நம்பிக்கை இல்லாத மாணவர்கள் எல்லாம் தேர்வில் தோல்வி அடைந்து விடுகின்றனரா?

பக்தி என்பது தவறான பாதைக்கு இழுத்துச் செல்லக் கூடிய மூட உணர்வு என்பதற்கு இந்த ஏற்பாடுகள் ஓர் எடுத்துக்காட்டே!

Read more: http://viduthalai.in/page1/96093.html#ixzz3S12M7ryk