Search This Blog

1.5.10

குலக்கல்வித் திட்டமும் முத்துராமலிங்கத் தேவரும்!


ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டமும் முத்துராமலிங்கத் தேவரும்!


1954 ஆம் ஆண்டு, மார்ச் திங்களில் சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சராக இருந்த ராஜகோபாலாச்சாரியார் கொண்டு வந்த குலக்கல்வித்திட்டம், தொழிற் கல்வித் திட்டம் என்று பார்ப்பன ஏடுகளான, கல்கி, துக்ளக் மற்றும் தினமலர் ஆகியவை பசப்புவதை மின்சாரம் (விடுதலை, ஞாயிறுமலர், நாள்: 11.4.2010) தோலுரித்து தொங்கவிட்டுள்ளார். மேலும், அவாள் மூலமே அவாளுக்கு நன்கு ஆப்பு அடித்துள்ளார்.

மெயில் ஏடு, மற்றும் இந்து ஏடு ஆச்சாரியாரின் கல்வித்திட்டத்தைக் கண்டித்து எழுதியிருப்பதை மின்சாரம் சுட்டிக்காட்டியிருப்பது அவாள் ஏடுகளுக்கு ரொம்பவும் ஷாக்ஆகத்தான் இருக்கும். இந்த இவ்விரு ஏடுகள் மட்டுமல்லாது, தினமலர் ஏடு, கரித்துக் கொட்டும் திராவிட கட்சிகளுக்கு எவ்விதத் தொடர்பு இல்லாதவரும், ராஜகோபாலாச்சாரியாரை பெருமைக்குரிய தலைவராகவும் ஏற்றுக் கொண்டிருந்த முத்து ராமலிங்கத் தேவரும் குலக்கல்வித் திட்டத்திற்கு எதிராகக் குரல்கொடுத்ததற்கு தினமலர் வகையறா என்ன சொல்லப்போகிறது?

ஆச்சாரியாரின் குலக்கல்வித்திட்டத்தின் மீது சென்னை மாகாணச் சட்டமன்றத்தில் (26.03.1954) முத்துராமலிங்கத்தேவரின் உரையைக் கேட்போம்:

முதல் அமைச்சரைப் (ஆச்சாரியார்) போன்ற ஒரு பெரியவர் 1953_54, ஆம் வருடத்திலே, தகப்பன் தொழிலை மகன் செய்யவேண்டுமென்று சொன்னாரானால் அது மிகவும் வருத்தப்படவேண்டிய விஷயமாகும் என்பது சிறியேனுடைய அபிப்ராயம்.

தகப்பன் தொழிலை மகன் செய்தாக வேண்டுமென்ற ஒரு சூழ்நிலை, ஒரு சமுதாய அமைப்பு, கல்விமுறை முன்பு இருந்தது. அதை நான் மறுக்கவில்லை. ஆனால், இன்றைக்கு எந்த சாதியில் பிறந்தவனாக இருந்தாலும் கூட, தன்னுடைய திறமைக்கேற்ப எந்தத் தொழிலையும் செய்யலாமென்ற ஒரு சூழ்நிலை இன்றைக்கு ஏற்பட்டுவிட்டது என்பது கனம் முதலமைச்சரைப் போன்ற (ஆச்சாரியார்) அறிவாளிகளுக்குத் தெரியாமலிருக்க முடியாது

திராவிட இயக்கத்திற்கு நேர் எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர் முத்துராமலிங்கத் தேவர். தேசியமும் தெய்வீகமும் அவருக்கு இரண்டு கண்கள் போன்றவை. அவர்தான் ஆச்சாரியாரின் புதிய கல்வித்திட்டம் என்பது போல் சட்டமன்றத்தில் சாடினார். தந்தை பெரியார், ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்திற்கு எதிராக மூட்டிய தீ, தந்தை பெரியாருக்கு எதிரணியில் செயல்பட்ட முத்துராமலிங்கத் தேவருக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்ந்திருக்கிறது என்பதற்கு சாட்சியமே அவரது சட்டமன்ற உரையாகும். தினமலர் வகையறா முத்துராமலிங்கத் தேவரின் உரைக்கு என்ன பதில் அளிக்கப் போகிறது? சூத்திரவா(ள்) பேச்சைக் கேட்டுண்டு பேசியிருப்பா(ள்) என்று பதில் அளிக்குமோ! அப்படியானால் மின்சாரம் சுட்டிக்காட்டியிருக்கும் மெயில் மற்றும் இந்து ஏடுகளின் சாடல்களுக்கு என்ன பதில்? தினமலர் வகையறாவிடமிருந்து பதிலை எதிர்பார்ப்போம்!

பார்ப்பனன் பேச்சு பசப்பாம்; மனுதர்ம வார்ப்பாய் வடிப்பான் வழிந்து.


------------------திருச்சி தி.அன்பழகன் - “விடுதலை” ஞாயிறுமலர் 24-4-2010

2 comments:

அஹோரி said...

என்று தொலையும் உங்கள் பதிவு இம்சை.

Unknown said...

தமிழ் ஓவியா,

இன்றைக்கு நடைபெறுகிற நிகழ்வுகளை, இன்றைய காலக்கட்டத்து பார்ப்பண சூழ்ச்சிகளை பெரியாரியப் பார்வையில் எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றி எழுதுவது பயனுள்ளதாக இருக்கும்.

மாறாக முப்பது நாற்பாது வருடங்களுக்கு முந்தைய பழைய செய்திகளைப் பதிவாகப் போடுவதால் என்ன பயன் இருக்க முடியும் (பழைய செய்தியைத் தெரிந்துகொள்வதைத் தவிற).

@அஹோரி,

தமிழ் ஓவியா எழுதினால் உங்களுக்கு என்ன நட்டமாகிறது? கண்டுங்காணமல் போக வேண்டியதுதானே. விரும்பாத பதிவில் வேலை வினை கெட்டு எதற்காகக் கருத்துரை எழுத வேண்டும்?