Search This Blog

27.7.09

கைம்மாறு கருதாதற்குப் பெயர்தான் தொண்டு!


தொண்டு என்பது கைம்மாறு எதிர்பார்க்காதது வியாபாரம் லாபத்தை எதிர்பார்ப்பது

புதுச்சேரி காஸ்மாஸ் ரோட்டரி சங்க நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் பேச்சு


தொண்டு என்பது எந்த கைம்மாறையும் எதிர்பார்க்காதது. வியாபாரம் என்பது லாபத்தை எதிர்பார்ப்பது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

புதுச்சேரியில் 7.7.2009 அன்று நடைபெற்ற காஸ்மாஸ் ரோட்டரி சங்க நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

என்னை அறிமுகப்படுத்திய நண்பர்

என்னை அறிமுகப்படுத்திய அருமை நண்பர் ரொட்டேரியன் கோவிந்தராஜன் அவர்கள் பல செய்திகளைச் சொன்னார்கள். அத்தனைத் தகுதிகள் எனக்கு இருக்கிறது என்று நான் நினைப்பதை விட, இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறவர்களுடைய நம்பிக்கையை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் மேலும் தொண்டாற்ற வேண்டும் என்ற அந்த உறுதியை அதன் மூலமாக நீங்கள் எனக்குக் கிரியா ஊக்கியாக ஆக்கியிருக்கின்றீர்கள்.

அதற்காகத் தலைவணங்கி நன்றி செலுத்துகின்றேன். இதிலே மிகச் சிறப்பாக நான் மகிழ்ந்த பகுதி ஒன்று உண்டு. தங்கமெடல் பெற்றேன் என்பதல்ல

தங்க மெடல் பெற்றேன் என்பதல்ல. அதே போல 9 வயதிலே மேடை ஏறினேன் என்பதல்ல. மாறாக நான் ஒரு பெரியார் தொண்டன் என்று நீங்கள் குறிப்பிட்டீர்களே, அது தான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கக் கூடிய செய்தி. அன்றாடம் நான் செய்து கொண்டிருக்கின்ற பணிக்கு எனக்கு சரியான அறிமுகம் கொடுக்கக் கூடிய அந்த வாய்ப்பை எனக்கு நல்கியிருக்கின்றீர்கள்.
அதற்காக உங்களுக்கு உங்கள் அமைப்பிற்கு இந்த பெரும் சாதனைகளைப் புரிந்துகொண்டிருக்கக் கூடிய பாண்டிச்சேரி ரோட்டரி காஸ்மாஸ் அமைப்புகளுக்கும் அதனுடைய முன்னாள், இந்நாள், எந்நாளும் உறுப்பினர்களாக இருக்கக் கூடிய அருமை நண்பர்களுக்கும், தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அரங்கத்தைப் பார்க்கும் பொழுது எல்லையற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது.

நாங்கள் எல்லாம் ஜாதி ஒழிப்பிற்காக மேடை ஏறிப் பேசுகின்றோம். மூடநம்பிக்கை ஒழிப்பிற்காகப் பேசுகின்றோம்.

புரட்சிக்கவிஞரை தந்த மண்

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைத் தந்த மண் இந்த மண். எனவே இந்த மண்ணிலே பாரதிதாசன் ஆத்திச் சூடியிலே முதல் வாக்கியமே அனைவரும் உறவினர் இதுதான் அவர்களுடைய முதல் ஆத்திச்சூடி.

எனவே, அனைவரும் உறவினர் என்பதை எப்படிக் காட்டுவது என்பதை யாருக்காவது புரிய வைக்க வேண்டுமானால், அவர்களை இங்கே அழைத்துக்கொண்டு வந்து இதோ பாண்டிச்சேரி காஸ்மாஸ் இருக்கிறது.

இந்த ரொட்டேரியன்கள் எவ்வளவு அற்புதமாகத் தங்கள் பங்களிப்பை அளித்திருக்கிறார்கள். போட்டி போட்டுக்கொண்டு அளிக்கிறார்கள்.

போட்டியிலே கூட ஓர் ஆரோக்கியமான போட்டியாக பொறாமை இல்லாத போட்டியாக ஒருவரை இன்னொருவர் கவிழ்க்கத் தெரியாத போட்டியாக, ஒருவரை இன்னொருவர் உயர்த்தக்கூடிய போட்டியாக இது எப்படி இருக்கிறது என்பதை மிக அருமையாகப் பார்க்கக் கூடிய வாய்ப்பைப் பெறுகின்றோம்.

104 ஆண்டுகளுக்கு முன்னாள் தொடங்கப்பட்ட நிறுவனம்

இந்தத் தொண்டு நிறுவனம் 104 ஆண்டுகளுக்கு முன்னாலே நால்வர் திட்டமிட்டு, எவ்வளவு அற்புதமாக சிக்காக்கோ நகரிலே தொடங்கப்பட்டது, உலகெலாம் பரவியிருக்கிறது.

குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் முறையான அமைப்புகளாக இந்த அமைப்புகள் இருக்கும் என்று சொல்ல தொண்டறத்திற்கு நீங்கள் வழிகாட்டியாக உருவம் கொடுக்கக்கூடியவர்களாக இருக்கின்றீர்கள். அதற்காகப் பாராட்ட வேண்டும். அதிலே எனக்கொரு பெரிய மகிழ்ச்சி என்னவென்று சொன்னால், நம்முடைய புதிய தலைவராக இப்பொழுது பொறுப்பேற்று ஏற்கெனவே உங்களுக்கு அறிமுகமான அருமை நண்பர் சிவ.வீரமணி அவர்கள் எங்களுடைய இயக்கக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்.

ஆனால், அந்த இயக்கக் குடும்பம் என்பது இன்னும் பெருங்குடும்பமாக காஸ்மாஸ் குடும்பத்திலே அவர்கள் தலைவராக இருக்கிறார்கள் என்று சொல்லும் பொழுது அது அவருக்கு மட்டும் பெருமை அல்ல. எங்கள் இயக்கத்திற்கும் பெருமை. பெரியார் கொள்கையினுடைய வெற்றிக்கும் அது அடையாளம் என்ற முறையிலே அவரை வாழ்த்துவது அவரோடு இணைந்த பொறுப்பாளர்களையும் சேர்த்து வாழ்த்துவது மிகவும் பொருத்தமானது. என் தலைவர் பொறுப்பை ஒப்படைக்கிறேன்

இது ஒரு கூட்டு அமைப்பு. இது ஒரு சிறந்த உணர்வு. நம்முடைய தலைவர் செல்வநாதன் அவர்கள் மிக அருமையாகச் சொன்னார்கள். குறுகிய நேரத்திலே என்னுடைய உள்ளத்திலே ஒரு நல்ல இடத்தைப் பிடித்த ஓர் அருமையான தோழர் என்பதை மகிழ்ச்சியோடு நான் இங்கே தெரிவித்துக்கொள்கின்றேன்.

சரளமாகச் சொல்லி கொண்டு பல செய்திளை சொல்லிவிட்டு கடைசியிலே முடிக்கும் பொழுது ஒன்றைச் சொன்னார்கள்.

நான் தலைவர் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்கின்றேன். என்னுடைய சாதனையை அவர் முறியடிக்க வேண்டும் என்ற ஒரு வேண்டுகோளை வைத்தார்கள். இந்த உணர்வு. பல நேரங்களிலே மற்றவர்களுக்கு வெளியே வராது.

இந்த உணர்வு இது போன்ற தொண்டறங்களிலே இருக்கக் கூடியவர்களுக்குத் தான் வருமே தவிர, மற்றவர்களுக்கு வராது.

விளையாட்டின் தத்துவமே - நட்புரிமை

தேர்தலிலே நிற்கிறார்கள். அந்தத் தேர்தலிலே தோற்றுப் போனவர்கள் என்னென்ன விளக்கம் சொல்லுகிறார்கள் என்பதை நாம் நாட்டிலே பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

அதே போலத்தான் விளையாட்டினுடைய தத்துவமே ஒரு நட்புரிமை என்பது தான் மிக முக்கியம். வெற்றியையும், தோல்வியையும் சமமாகப் பார்க்கின்ற ஓர் அற்புதமான நிகழ்வு. ஆனால் பல நேரங்களிலே இன்றைக்கு வெற்றி பெற்றார் என்று சொல்லும் பொழுதே வெற்றியை ஒரு சூதாட்டக் களத்திலே நின்று நடத்தக் கூடிய அளவிற்கு ஒரு தரம் தாழ்ந்த நிலை இருக்கிறது. ஆகவே அவைகளை எல்லாம் பார்த்துவிட்டு, வெளியிலே எவ்வளவு பெரிய வெப்பம் என்று பார்த்துவிட்டு உள்ளே வருகிற பொழுதுதான் உங்களை எல்லாம் சந்திக்கின்ற பொழுதுதான் எவ்வளவு அருமையான ஒரு வாய்ப்பு, எவ்வளவு நல்ல ஒரு கூட்டுக்குடும்பம் இங்கே உருவாகியிருக்-கிறது என்பதை பார்த்து மகிழக் கூடிய நிலையிலே நாங்கள் இருக்கிறோம். ஏனென்றால் இங்கே உறுப்பினர்களைப் பற்றிச் சொன்னீர்கள்; அவர்களுடைய சாதனைகளைச் சொன்னீர்கள். புதிய உறுப்பினர்கள். பழைய உறுப்பினர்கள், எல்லோரைப் பற்றியும் எடுத்துச்சொன்னீர்கள்.

உலகம் ஒரு நிலம்


ஒவ்வொருவரைப் பார்க்கும் பொழுது இங்கே ஜாதிக்கு இடமில்லை. மதத்திற்கு இடமில்லை. கட்சிக்கு இட-மில்லை. ஏன், நாட்டின் எல்லைக்குக் கூட இடமில்லை. உலகம் ஒரு நிலம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு மிக அருமையான ஒரு பண்பாட்டை மனித குலத்தினுடைய வெற்றி என்பது இதைப் பொறுத்திருக்கிறது. வள்ளுவர் ரொம்ப அழகாகச் சொன்னார்.

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு

என்று அழகாகச் சொன்னார்கள். ஒரு நூல் என்பதற்கு என்ன அடையாளம் என்று சொன்னால் ஒரு முறைப் படித்துவிட்டு அதைக் கீழே வைக்கக் கூடாது. மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்ட வேண்டும். அந்த நூல் அதுதான் சிறந்த நூல்.

நல்ல நண்பர்களின் நட்பு

நவில்தொறும் நூல்நயம் போலும் அது எப்படிப்பட்டது என்று சொன்னால், நல்ல நண்பர்கள் பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்று நம்முடைய நாட்டிலே ஒரு பழமொழி உண்டு.

ஆனால், நல்ல நண்பர்கள் நல்ல நட்பு என்று சொல்லும் பொழுது அது புளிக்காது, அது நாளும் இனிக்கும்; நாளும் அது மேலே மேலே பெருகும். அதைத்தான் வள்ளுவர் அவர்கள் மிக அழகாகச் சொல்லும் பொழுது பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு ஒவ்வொரு முறையும் அவரிடம் பழகும் பொழுது இதைப் புதிதாகப் பார்க்கிறோம். இவ்வளவு அருமையாக இருக்கிறாரே, இவ்வளவு சிறப்பாக இருக்கிறாரே என்று ஒவ்வொரு முறையும் எண்ண வேண்டும். அதன் மூலம் மற்றவர்கள் வளர வேண்டும்.

அப்படிப்பட்ட அரிய நண்பர்கள் ஒரு கூட்டுக்குழுவாக இங்கே இயங்குகிறார்கள். நாங்கள் இதை எல்லாம் சாதித்திருக்கிறோம் என்று நம்முடைய சிவ.வீரமணி தலைவர் அவர்கள் சொன்னார்கள்.

கூட்டுக்குழு மனப்பான்மை நான் எந்தவிதமான ஒரு பரபரப்பும் இல்லாமல் டென்ஷன் இல்லாமல் இருக்கிறேன். காரணம் என்னுடைய தோழர்கள் இருக்கிறார்களே இந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இருக்கிறார்களே அவர்கள் எல்லோரும் சேர்ந்து நாங்கள் இணைந்து முடிப்போம் காரியங்களை செய்வோம் என்று அவர்கள் பரபரப்பு இல்லாமல் சொன்னார்கள். அதற்குப் பெயர் தான் கூட்டுக்குழு மனப்பான்மை என்பது.

ஒரு விளையாட்டில் பதினொன்று பேர் சேர்ந்து விளையாடுகிறார்கள் என்று சொன்னால், அதை டீம் என்று நாம் சொல்லுகிறோம்.

அந்த டீம் என்று சொல்லும்பொழுது ஒருவர் விடுகின்ற இடத்தை இன்னொருவர் கண்டுபிடித்து மேலே அதை சரிசெய்யக் கூடிய ஆற்றல் இருக்கிறதே அது தான் தனி நபருக்கும், ஒரு கூட்டுக்குழுவிற்கும் இருக்கின்ற மிகப்பெரிய வேறுபாடு.

ஆகவே அந்த வேறுபாட்டை மிக அருமையாக இங்கே நீங்கள் உணர்ந்து சிறப்பாக ஒரு நல்ல குழுவை இங்கே தேர்ந்தெடுத்து யார் யாருக்கு உதவ வேண்டுமோ அவர்களுக்கெல்லாம் உதவி செய்திருக்கின்றீர்கள்.

தாகத்தில் தவித்தவர்களுக்கு இந்த உதவிக்காக நீங்கள் அவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அதே நேரத்திலே நாம் வளர்ந்த பிற்பாடு. நாம் செல்வம் சேர்த்த பிற்பாடு மற்றவர்களுக்கு உதவ வேண்டும் யாருக்கு உதவி தேவையோ, யார் சங்கடத்திலே இருக்கிறார்களோ, தாகத்தில் தவித்தவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பதைப் போல அந்த உதவிகள் தேவைப்படுகின்றன என்ற உணர்வை தெளிவாக ஊட்டக்கூடிய அந்த வாய்ப்பைப் பெற்றிருக்கின்றீர்கள்.

தொண்டு என்பதற்கே என்ன அடையாளம் என்று சொன்னால் கைம்மாறு கருதாதற்குப் பெயர்தான் தொண்டு என்று சொல்லுவது.

தொண்டு - வியாபாரம்

எனக்கு இன்னது கிடைக்கும் உனக்கு இன்னது கிடைக்கும் என்று யாராவது உதவி செய்தால், அந்த உதவி வேறுவகையானது என்று நினைக்க வேண்டுமே தவிர, அது ஒரு வகையான வியாபாரம் போன்றது.

தொண்டுக்கும், வியாபாரத்திற்கும் இருக்கின்ற ஒரு வேறுபாடு என்னவென்றால் லாபத்தை எதிர்பார்க்காதது, கைம்மாறு எதிர்பார்க்காதது தொண்டு. லாபத்தை எதிர் பார்ப்பது, நட்டம் வரும் பொழுது சங்கடப்படுவது இவை போன்றது வாணிபம் வியாபாரம்.

எனவே தொண்டு என்பது வாணிபமல்ல. ஆனால் நம்முடைய நாட்டிலே தொண்டு என்பது இப்பொழுது பெரிய வணிகமாக இருக்கிறது. எப்படி அரசியல் என்பதை ஒரு மூலதனமாக வைத்து பலர் குறுகிய காலத்தில் லாபம் பெறலாம் என்று நினைக்கின்றார்களோ, அது போலத்தான் தொண்டைப் பற்றி பலர் நினைக்காதவர்களாக இருக்கின்றார்கள்.

---------------------தொடரும்...."விடுதலை" 26-7-2009

4 comments:

Kiss said...

நான் http://thamizhoviya.blogspot.com/ (தமிழ் ஓவியா) என்ற பெயரில் வலைப்பூ ஒன்று தொடங்கப் பட்டு பெரியாரின் சிந்தனைகளை பதிவு செய்து வருகிறேன். ஏதோ ஒரு நோக்கத்திற்காக பெயர் தெரியாத நபர் ஒருவர் http://thamizhovia.blogspot.com/ (THAMIZHOVIA) என்ற பெயரில் வலைப்பூ ஒன்றைத்தொடங்கியுள்ளார் நன்றாக கவனியுங்கள் எனது வலைப் பூவின் பெயர் http://thamizhoviya.blogspot.com/ (தமிழ் ஓவியா). வேறு ஒரு நபரால் தொடங்கப்பட்ட வலைப்பூ வின் பெயர் http://thamizhovia.blogspot.com/ (THAMIZHOVIA) மிக நுணுக்கமான வெறுபாட்டைக் கவனித்தீர்களா? எனது வலைப்பூவில் oviya (தமிழ் ஓவியா) என்று இருக்கும் வேறு ஒரு நபர் தொடங்கிய வலைப்பூவில் ovia (THAMIZHOVIA) என்று இருக்கும் . எனவே தோழர்கள் ஏமாறாமல் இருக்கும்படி கெட்டுக் கொள்கிறேன். அந்த வலைப்பூ விற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தோழர்கள் இதைக் கவனத்தில் கொண்டு தமிழ் ஓவியா வலைப்பூ விற்கு ஒத்துழைக்கும் படி வேண்டுகிறேன். நன்றி


அய்யா இது எனது தனி முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூ. எனது வலைப்பூவை தவறாக விமர்சனம் செய்யாதீர்கள். உங்களது வலைப்பூ
எமது தளத்தின் பெயரில் இருப்பது எமக்கு தெரியாது. இருவரது தளத்திற்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம் இருப்பது தற்போது தாங்கள் கூறி தான் எமக்கு தெரியும். இதற்கு முன்பு தங்களது தளம் இந்த பெயரில் இருப்பது எமக்கு தெரியாது. ஆகையால் தங்களது தளத்தில் தெரிவிக்கும் விமர்சனத்தை நீக்கும்படி கூறுகிறேன்.

இப்படிக்கு,
http://thamizhovia.blogspot.com/
http://ayyyyya.blogspot.com/
http://tcwebs.blogspot.com/

Kiss said...

நான் http://thamizhoviya.blogspot.com/ (தமிழ் ஓவியா) என்ற பெயரில் வலைப்பூ ஒன்று தொடங்கப் பட்டு பெரியாரின் சிந்தனைகளை பதிவு செய்து வருகிறேன். ஏதோ ஒரு நோக்கத்திற்காக பெயர் தெரியாத நபர் ஒருவர் http://thamizhovia.blogspot.com/ (THAMIZHOVIA) என்ற பெயரில் வலைப்பூ ஒன்றைத்தொடங்கியுள்ளார் நன்றாக கவனியுங்கள் எனது வலைப் பூவின் பெயர் http://thamizhoviya.blogspot.com/ (தமிழ் ஓவியா). வேறு ஒரு நபரால் தொடங்கப்பட்ட வலைப்பூ வின் பெயர் http://thamizhovia.blogspot.com/ (THAMIZHOVIA) மிக நுணுக்கமான வெறுபாட்டைக் கவனித்தீர்களா? எனது வலைப்பூவில் oviya (தமிழ் ஓவியா) என்று இருக்கும் வேறு ஒரு நபர் தொடங்கிய வலைப்பூவில் ovia (THAMIZHOVIA) என்று இருக்கும் . எனவே தோழர்கள் ஏமாறாமல் இருக்கும்படி கெட்டுக் கொள்கிறேன். அந்த வலைப்பூ விற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தோழர்கள் இதைக் கவனத்தில் கொண்டு தமிழ் ஓவியா வலைப்பூ விற்கு ஒத்துழைக்கும் படி வேண்டுகிறேன். நன்றி


அய்யா இது எனது தனி முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூ. எனது வலைப்பூவை தவறாக விமர்சனம் செய்யாதீர்கள். உங்களது வலைப்பூ
எமது தளத்தின் பெயரில் இருப்பது எமக்கு தெரியாது. இருவரது தளத்திற்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம் இருப்பது தற்போது தாங்கள் கூறி தான் எமக்கு தெரியும். இதற்கு முன்பு தங்களது தளம் இந்த பெயரில் இருப்பது எமக்கு தெரியாது. ஆகையால் தங்களது தளத்தில் தெரிவிக்கும் விமர்சனத்தை நீக்கும்படி கூறுகிறேன்.

இப்படிக்கு,
http://thamizhovia.blogspot.com/
http://ayyyyya.blogspot.com/
http://tcwebs.blogspot.com/

தமிழ் ஓவியா said...

"அய்யா இது எனது தனி முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூ. எனது வலைப்பூவை தவறாக விமர்சனம் செய்யாதீர்கள். உங்களது வலைப்பூ
எமது தளத்தின் பெயரில் இருப்பது எமக்கு தெரியாது. இருவரது தளத்திற்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம் இருப்பது தற்போது தாங்கள் கூறி தான் எமக்கு தெரியும். இதற்கு முன்பு தங்களது தளம் இந்த பெயரில் இருப்பது எமக்கு தெரியாது."

என்று சொல்லியுள்ள இவர்

http://thamizhovia.blogspot.com/2009/07/blog-post_2111.html

http://thamizhovia.blogspot.com/2009/07/blog-post_9855.html

http://thamizhovia.blogspot.com/2009/07/blog-post_24.html

மேற்கண்ட சுட்டிகளைப் படித்துப் பாருங்கள் தமிழ் ஓவியா வலைப்பூவிலிருந்து பதிவு செய்யப்பட்ட பதிவுகளை அப்படியே எடுத்து பயன் படுத்தியுள்ளர்.

ஆனால்

பின்னூட்டத்தில் தமிழ் ஓவியா என்ற வலைப்பு இருப்ப்து தெரியாது என்கிறார்.இது சரியா?

இது குறித்து வாசகர்களே முடிவு செய்யட்டும்.

மீண்டும் சொல்கிறேன்:

உங்கள் வலைப்பூவில் சிறப்பாக செயல்படுங்கள். இப்போதுதான் நீங்கள்
http://thamizhovia.blogspot.com/ என்று ஆரம்பித்துள்ளீர்கள். நான் 2007 முதல் செயல் பட்டு வருகிறேன். எனவே தாங்கள் அருள்கூர்ந்து வேறு பெயரில் செயல்பட வேண்டுகிறேன்.

எனவே அரூள்கூர்ந்து இதில் ஈகோ எதுவும் பார்க்காமல் வேறு பெயரில் செயல் படுமாறு வேண்டுகிறேன்.

இது எனது அன்பான வேண்டுகோள்.


பல் தோழர்கள் தொலைபேசிமூலமூம், திரு டோண்டு அவர்கள் பின்னூட்டம் மூலம் ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு மிக்க நன்றி

அடுத்த நடவடிக்கை தங்களின் பதில் கண்டு ....AyyA

Unknown said...

Oviya ,

is it true that the bearded swine was a mean and vicious on of a bitch and a taliban like terrorist and all his black shirt dogs were all trained foot soldiers for his terrorist army?