Search This Blog

14.6.09

உலக நாடுகள் -தூரப்பார்வை- எரித்ரியா-எஸ்டோனியா-ஈகுவேடோரியல் கினியா-




எரித்ரியா


மூன்றாம் நான்காம் நூற்றாண்டுகளுக்கிடையில் எரித்ரியா எத்தியோப்பியப் பேரரசைச் சேர்ந்த அக்சம் பகுதியாக இருந்தது. 1500 களில் துருக்கியின் ஓட்டோமான் அரசவம்சம் எரித்ரியாவைக் கைப்பற்றியது. 1941-இல் பிரிட்டன் எரித்ரியாவைப் பிடித்து ஆளத் தொடங்கியது 1949 முதல் அய்.நா. மன்றத்தின் நாடு எனும் வகையில் ஆட்சி செலுத்தியது. 1962-இல் எத்தியோப்பியா தன் நாட்டுடன் எரித்ரியாவைச் சேர்த்துக் கொண்டது.
பொது வாக்கெடுப்பு நடந்தபோது எரித்ரியர்கள் முழு விடுதலை வேண்டும் என வாக் களித்தனர். 1993 மே 24-ஆம் நாள் விடுதலை பெற்றது.

1999-இல் எத்தியோப்பிய நாட்டுடன் எல்லைப் பிரச்சினைகள் ஏற்பட்டு சண்டை தொடங்கியது. 2000 ஜூன் மாதத்தில் இரு நாடுகளுக்குள் உடன்பாடு ஏற்பட்டு அமைதிக்கான ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

1 லட்சத்து 21 ஆயிரத்து 320 சதுர கி.மீ. பரப்புள்ள இந்நாட்டின் மக்கள் தொகை 47 லட்சம் ஆகும். இவர் கள் முசுலிம், கோப்டிக் கிறித்துவ, ரோமன் கத் தோலிக, புரொடஸ்டன்ட் எனப் பல மதங் களையும் சேர்ந்தவர் கள். அபார், அரபி உள்பட பல மொழிகளைப் பேசுகின்றனர். சுமார் 59 விழுக்காட்டினர் மட்டுமே படிப்பறிவு பெற்றுள்ளனர். அதிபராக இசையாஸ் அசெவெர்க்கி உள்ளார். இவரே ஆட்சித் தலைவரும்கூட.

எஸ்டோனியா


எஸ்டோனியாவின் வடபகுதியை டென்மார்க் நாடு தன் கைப்பற்றில் 14-ஆம் நூற்றாண்டில் வைத்திருந்தது. அதே கால கட்டத்தில் எஸ்டோனியாவின் தென்பகுதியை ஜெர்மனியின் டியூடானிக் தளபதிகள் கைப்பற்றி ஆண்டு வந்தனர். 1346-இல் தங்கள் வசம் இருந்த எஸ்டோனியா நாட்டுப் பகுதிகளை டேனிஷ் அரசு டியூடானிக் தளபதிகளிடமே விற்று விட்டனர். முழு நாடும் தங்கள் பிடிக்குள் வந்து விடவே, நாட்டை அடிமை நாடாக்கினர் டியூடானிக் தளபதிகள்.

1526-இல் ஸ்வீடன் நாடு எஸ்டோனியா வைத்தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. சுவீடன் நாட்டிடம் இருந்து ரஷியா 1721-இல் எஸ்டோனியாவைக் கைப்பற்றி ஆளத் தொடங்கியது.

1918-இல் எஸ்டோனியா சுதந்திரப் பிரகடனம் செய்தது. ஆனாலும் 1940-இல் எஸ் டோனியாவை மீண்டும் சோவியத் கைப்பற்றிக் கொண்டது. இறுதியாக 1991- ஆகஸ்ட் 20-இல் எஸ் டோனியாவுக்கு விடு தலை கிடைத்தது. நாடோஅமைப்பிலும் அய்ரோப்பிய ஒன்றியத்திலும் 2004-இல் எஸ்டோனியா உறுப்பு நாடானது.

கிழக்கு அய்ரோப்பாவில் ஃபின்லாந்து, லாட்வியா நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் அருகில் உள்ள இந்நாட்டின் பரப்பளவு 45 ஆயிரத்து 226 சதுர கி.மீ. ஆகும். பால்டிக் கடலில் உள்ள இந்நாட்டுக்குச் சொந்தமான 1520 தீவுகளின் பரப்பளவும் சேர்ந்து இந் நாட்டு மக்கள் தொகை 14 லட்சம் ஆகும்.

கிறித்துவ மதத்தின் நூற்றுக்கணக்கான பிரிவுகளுக்கும் பின்பற்றுவோர் இந்நாட்டில் உண்டு. ஆட்சிமொழியாக எஸ்டோனிய மொழியும்பேச்சு மொழிகளான ஃபின்னிஷ், ரஷ்ய, உக்ரேனிய மொழிகளும் இருக்கின்றன. அனைவரும் படித்தவர்கள்.

இந்நாட்டின் குடியரசுத் தலைவராக அர்னால்டு ரூடெல்லும் பிரதமராக ஆன்ட்ரூஸ் அன்சிப்பும் உள்ளனர்.

ஈகுவேடோரியல் கினியா

பிக்மிக்கள் எனும் மிகவும் குள்ள மனிதர்கள் இந்நாட்டின் பூர்வ குடிகள் ஃபாங் மற்றும் புபி எனும் இனத்தவர் தான் இங்குள்ள இரு பெரும் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 17-ஆம் நூற்றாண்டில் குடியேறியவர்கள்.

15-ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் இந்நாட்டிற்கு வந்தனர். 1477-இல் பெர்னான்டோ போ தீவை ஸ்பெயின் நாட்டுக்குத் தந்தது. அத்தீவு தற்போது பியாகோ என அழைக்கப்படு கிறது.

1968-இல் ஸ்பானிஷ் கினியா எனப்படும் பகுதி குடியரசாகி ஈகுவேடோரியல்சினியா என அழைக்கப்படு கிறது. இங்கே 1996-இல் எண்ணெய் வளமும் இயற்கை வாயுவும் இருப்பது கண்டறியப்பட்டது. ஆப்ரிகாவில் பெட்ரோலியம் கிடைக்கும் முக்கிய நாடாக இது தற்போது இருக்கிறது.

மத்திய ஆப்ரிகாவில் அமைந்துள்ள இந் நாட்டின் பரப்பளவு 28 ஆயிரத்து 51 சதுர கி.மீ. ஆகும். மக்கள் தொகை அய்ந்தரை லட்சம் ஆகும். ரோமன் கத்தோ லிக மதத்தினர். 86 விழுக்காடு மக்கள் படிப்பறிவு உள்ளவர்.

குடியரசு நாடான இந்நாட்டின் அதிபராக ராணுவத் தளபதி தியொடர் ஒபியாங் என்குமா மொப சாகோ என்பவர் 1979 முதல் இருக்கிறார்.


-------------------"விடுதலை" 13-6-2009

0 comments: