Search This Blog

17.6.09

உலக நாடுகள் -தூரப்பார்வை- பிஜி-ஃபின்லாந்து-




பிஜி (Fiji)

பசிபிக் பெருங்கடலில் உள்ள இத்தீவைக் கண்டுபிடித்தவர் டச்சுக்காரரான ஆபல் ஜான்சன் டாஸ்மன் என்பவர். இவர் கண்டுபிடித்த 1643 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரிட்டனைச் சேர்ந்த கேப்டன் ஜேம்ஸ் குக் இத்தீவுக்கு 1744 இல் வந்தார். இத் தீவுகளில் இருந்த சந்தன மரங் களும் கடல் வெள்ளரியும் மேலை நாட்டாரை இத்தீவின் மீது கவனம் செலுத்த வைத்தது.
1874 அக்டோபர் 10 முதல் பிஜித் தீவு பிரிட்டனின் காலனியாக மாறியது. இந்த நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும், அதன் வாயிலாக அதனைச் சுரண்டவும் பிரிட்டிஷ் ஏகாதிபத்யம் தன் இன்னொரு காலனி நாடான இந்தியாவிலிருந்து கூலித் தொழிலாளர்களைக் கொண்டு வந்து குடி அமர்த்தியது. கரும்புத் தோட்டங்களில் இவர்கள் பட்ட கஷ்டங்களைப் பாரதி கூட அந்நாள்களில் பாடியதுண்டு.

1970 அக்டோபர் 10 ஆம் நாள் இந்நாட்டுக்கு விடுதலை கிடைத்தது. பல்வேறு அரசியல் குழப்பங்கள் இன அடிப்படையில் இன்றளவும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இடையில் ராணுவத்தின் தலையீடும் ஆட்சியைக் கைப்பற்றலும் நடைந்துள்ளன. இந்தியரான ஒருவர் கூட பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் நடந்தது.

நியூஜிலாந்து நாட்டுக்கு அருகில் உள்ள இத்தீவு முழுக்க மலைகளாலும் எரிமலைத் தாக்குதலுக்கு ஆளான பகுதிகளும் நிறைந்தவை. இதன் பரப்பளவு 18ஆயிரத்து 270 சதுர. கி.மீ. மக்கள் தொகை 9 லட்சத்து 10 ஆயிரம். இவர்களில் 52 விழுக் காட்டினர் கிறித்துவர் கள். இந்துக்கள் 38 விழுக் காட்டினர். இசுலாமியர்கள் 8 விழுக்காடு.

ஆட்சி மொழியாக இங்கிலீஷ் உள்ளது. பிஜிமொழியும் இந்தி, தமிழ் ஆகியவையும் மக் களால் பேசப்படுகின் றன. 94 விழுக்காடு மக் கள் கல்வியறிவு பெற்றவர்கள். அதிபர், துணை அதிபர், பிரதமர் ஆகியோர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் வகையில் அமைந்த குடியரசு நாடு.

ஃபின்லாந்து

லாப் (Lapp) இனம் அல்லது சாமி (Sami) இனம் என்றழைக்கப்படும் மக்களைக் கொண்ட நாடு ஃபின்லாந்து. பொது ஆண்டுக் கணக்குக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பு ஃபின்னிஷ் மொழி பேசும் மக்கள் இங்கே குடியேறினர். அங்கிருந்து பூர்வ குடிகளை அடித்துத் துரத்தினர். துரத்தப்பட்டவர்கள் வடக்கே போய் ஆர்டிக் பகுதிக்கு (வடதுருவம்)ச் சென்றுவிட்டனர்.
11 ஆம் நூற்றாண்டில் பின்லாந்துப் படைகள் அடிக்கடி ஸ்வீடன் நாட்டுடன் மோதிக் கொண்டே இருந்தன. சுவீடனும் எதிர்த்தாக்குதல் தொடுத்து பின்லாந்தைத் தோற்கடித்து நாட்டைக் கைப்பற்றியது. 1808ஆம் ஆண்டில் ரஷியா சுவீடனைத் தாக்கியதால் மறு ஆண்டு சுவீடன் பணிந்து பின்லாந்து நாட்டை ரஷியாவிடம் ஒப்புக் கொடுத்துவிட்டது.

1917இல் ஜார் மன்னன் வீழ்த்தப்பட்டு சோவியத் புரட்சி வென்றபோது, பின்லாந்து விடுதலையை அறிவித்துக் குடியரசு நாடாகியது. சோவியத் ஒன்றியத்தில் இணைந் திருந்தது. பிரிந்துபோகும் உரிமை கொண்ட குடியரசுகளாக சோவியத் ஒன்றியத்தில் இணைந்து இருந்த காரணத்தால், பின்லாந்து தனியே பிரிந்தது 1922 இல்.
இரண்டாம் உலகப் போரின் போது 1940 இல் மாஸ்கோவில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி பின்லாந்து நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் ஏராளமான பரப்பு சோவியத்துக்குத் தாரை வார்க்கப் பட்டது. மீண்டும் 1944 இல் செஞ்சேனை பின்லாந்து மீது படையெடுத்தது. பெரும் பகுதி நிலத்தை யும் பல நூற்றுக்கணக் கான லட்சம் பணமும் போர்ச் செலவுகளுக் காகக் கொடுத்து பின்லாந்து சமாளிக்க வேண்டியதாயிற்று.1995 இல் பின்லாந்து அய்ரோப்பிய ஒன்றித்தில் இணைந்தது.

வடஅய்ரோப்பாவில் பால்டிக் கடலுக்குப் பக்கத்தில் சுவீடனுக்கும் ரஷியாவுக்கும் இடையே அமைந்துள்ள நாடு. இதன் பரப்பு 3 லட்சத்து 38 ஆயிரத்து 145 சதுர கி.மீ. மக்கள் தொகை 53 லட்சம். பல்வேறு கிறித் துவ மதப்பிரிவுகளைச் சேர்ந்த மக்கள். நூற்றுக்கு நூறு படித்தவர் கள். 94 விழுக்காடு மக் கள் பேசும் பின்னிஷ் மொழி ஆட்சி மொழி. சுவீடிஷ் மொழியும் 6 விழுக்காடு மக்கள் பேசுவதால் அதுவும் ஆட்சி மொழி.

6-12-1917 இல் விடுதலை நாளைக் கொண்டாடும் இந்நாட்டின் அதிபர் டார்ஜா ஹலோனன் என்பவர். பிரதமர் மாட்டிவான் ஹனன் என்பவர். எவ்விதப் பாதுகாப்பு பந்தாக்கள் இல்லாமல் மக்களோடு பழகும் அதிபரும், பிரதமரும் இந்நாட்டில் இருப்பதைக் கட்டுரையாளரே நேரில் கண்டிருக்கிறார்.

நோக்கியா செல் பேசி இந்நாட்டில்தான் தயாரிக்கப்படுகிறது. மின்னணுத் தொடர்பான பொருள்கள் உற்பத்தியில் முன்னணி நாடு.

------------------"விடுதலை"16-6-2009

0 comments: