Search This Blog

9.5.09

சுவாமிக்கு படையல் செய்கின்றனரே -சுவாமி சாப்பிடுகிறதா?


சுவாமிக்கு படையல் ஏன்?

கேள்வி: சுவாமிக்கு படையல் செய்கின்றனரே -சுவாமி சாப்பிடுகிறதா?

பதில்: படையல் செய்வது சுவாமி சாப்பிடுவதற்காக அல்ல; சுவாமிக்கு நன்றி சொல்வதற்காகத்தான். இவை கிடைக்க கருணை செய்த இறைவனை மறவாமல், அவன் நினைவோடு சாப்பிடுவதற்காகத்தான் படையல் செய்கிறோம்.

----------'தினமலர்' வார மலர் 3.5.2009

சரி, சாமி சாப்பிடவில்லை; நன்றியை மட்டும் எதிர்பார்க்கிறதோ! நன்றியை எதிர்பார்ப்பது; நன்றி சொல்லாவிட்டால் தண்டிப்பது என்பது போன்ற சராசரிக்கும் கீழ்ப்பட்ட குணங்கள் கொண்டவன்தான் கடவுளா? எல்லாவற்றையும் கடந்தவர் என்று சொல்லப்படும் கடவுள், கடைசியில் பார்த்தால் எல்லாவற்றையும் விரும்புபவர் - வெறுப்பு விருப்பு உள்ளவன் என்றெல்லவா ஆக்கி விட்டார்கள்.

----------"விடுதலை"ஞாயிறுமலர் 9-5-2009

15 comments:

அது சரி(18185106603874041862) said...

//
பதில்: படையல் செய்வது சுவாமி சாப்பிடுவதற்காக அல்ல; சுவாமிக்கு நன்றி சொல்வதற்காகத்தான். இவை கிடைக்க கருணை செய்த இறைவனை மறவாமல், அவன் நினைவோடு சாப்பிடுவதற்காகத்தான் படையல் செய்கிறோம்.
//

உண்மையில் நன்றி சொல்ல வேண்டியது விவசாயிக்கும், அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் லாரி ட்ரைவர், தெருமுனை கடைக்காரர் போன்றவர்களுக்கும் தான்.....விவசாயி உழைக்காவிட்டால் எவனுக்கும் சோறில்லை...பிரட்டும் இல்லை....பிட்ஸாவும் இல்லை!

ஆண்டவன் படியளப்பான், ரொம்ப ஜாலியா இருந்தா அப்படியே கோழி பிரியாணியும் குவாட்டரும் சேர்த்து அளப்பான் என்று விவசாயி இருந்து விட்டால், அப்புறம் படியளக்கும் சிவனே சோத்துக்கு சிங்கி அடிக்க வேண்டியது தான்! (சிவனுக்கு பிச்சை எடுப்பது வழக்கம் தான் என்றாலும், பிச்சை போடுபவர்களே பிச்சை எடுக்க வேண்டி இருப்பதால், கடும் போட்டி தான்!)

dondu(#11168674346665545885) said...

உண்ணப்போகும் உணவுக்கு நன்றி கூறுவது என்பது எல்லா மதங்களிலுமே உண்டு. உதாரணத்துக்கு கிறித்துவர்கள் இதை grace என்று அழைப்பார்கள். இசுலாமியர்கள், யூதர்கள் ஆகியோரும் இவ்வாறு சடங்குகளை செய்கிறார்கள்.

ஆகவே இப்பதிவுக்கு லேபல் இடும்போது பார்ப்பனியத்துடன் கிறித்துவம், இசுலாமியம், யூத நம்பிக்கை என்பதையும் தைரியம் இருந்தால் போட்டு கொள்ளுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ரங்குடு said...

தமிழ் நாட்டிலேயே நாட்டார் தெய்வங்களுக்கு (நமது முன்னோர்களுக்கு) படையலிட்டு பிறகு உண்ணும் வழக்கம் இருந்து வருகிறது.

இன்றும் தமிழகத்தில் வீட்டில் உள்ள பெரியவர்கள் உண்ட பின் தான் மற்றவர்கள் உண்பார்கள். இதுவும் ஒரு வித படையல் தான். எல்லாம் வல்ல கடவுளுக்கு படையல் என்று ஒன்று தேவையில்லை. ஆனால் நம்பிக்கை உள்ளவர்களின் ஆத்ம திருப்திக்காக இது செய்யப்படுகிறது.

இதையே 'வெல்லப் பிள்ளையாரைக் கிள்ளி பிள்ளையாருக்கே நைவேத்தியம்செய்வது' என்று நகைச்சுவையாகவும் சொல்வார்கள். கடவுள் படையலை சாப்பிட்டு விட மாட்டார் என்று எங்களுக்கும் தெரியும். ஆனால் அந்தப் படையலை கடவுளுக்கு அர்ப்பணித்து பிறகு உண்பது ஒரு ஆனந்தம்.

பகுத்தறிவுப் பண்பாளர்களுக்கு எதை எடுத்தாலும் பார்ப்பனர்கள் / மூட நம்பிக்கை என்று வாதிடுவதைத்தவிர வேறு வழி தெரியாது.

//உண்மையில் நன்றி சொல்ல வேண்டியது விவசாயிக்கும், அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் லாரி ட்ரைவர், தெருமுனை கடைக்காரர் போன்றவர்களுக்கும் தான்.....விவசாயி உழைக்காவிட்டால் எவனுக்கும் சோறில்லை...பிரட்டும் இல்லை....பிட்ஸாவும் இல்லை!

ஆண்டவன் படியளப்பான், ரொம்ப ஜாலியா இருந்தா அப்படியே கோழி பிரியாணியும் குவாட்டரும் சேர்த்து அளப்பான் என்று விவசாயி இருந்து விட்டால், அப்புறம் படியளக்கும் சிவனே சோத்துக்கு சிங்கி அடிக்க வேண்டியது தான்! (சிவனுக்கு பிச்சை எடுப்பது வழக்கம் தான் என்றாலும், பிச்சை போடுபவர்களே பிச்சை எடுக்க வேண்டி இருப்பதால், கடும் போட்டி தான்!)//

விவசாயி நன்றி சொல்ல வேண்டியது மழைக்கு. அல்லது தப்பித்தவறி காவேரியில் தண்ணீர் வந்தாலும், கர்னாடகாவில் பெய்த மழைக்கு.

'வான் நின்று உலகம் வழங்கி வருதலான் தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று' - திருவள்ளுவர்.

லாரி டிரைவர் நன்றி சொல்ல வேண்டியது பெட்ரோலுக்கு, அது கிடைக்கும் பூமிக்கு.

தெருமுனைக் கடைக்காரர், ஓட்டல் காரர், பிரட் மேக்கர், பீட்ஸா மேக்கர் எல்லோரும் ஒரு விதத்தில் இயற்கைக்கு நன்றி சொல்ல வேண்டியவர்கள். நீங்கள் நன்றி சொன்னாலும், சொல்லாவிட்டாலும் இவர்கள் எல்லோரும் உழைக்க வேண்டும், அப்போது தான் பிழைக்க முடியும்.

பிச்சை எடுப்பது உலகின் மீது விருப்பு வெறுப்பு இல்லாதவர்கள் செய்ய வேண்டிய தொழிலாகும்.

முடிந்தால் திருவள்ளுவரின் திருக்குறளில் 'இரவு' (பிச்சைத்தொழ்ழில்) / 'இரவச்சம்' (பிச்சை எடுக்க அஞ்சுதல்) போன்ற அதிகாரங்களைப் படித்துத் தெளிவு பெறலாம்.

அது சரி(18185106603874041862) said...

//
தெருமுனைக் கடைக்காரர், ஓட்டல் காரர், பிரட் மேக்கர், பீட்ஸா மேக்கர் எல்லோரும் ஒரு விதத்தில் இயற்கைக்கு நன்றி சொல்ல வேண்டியவர்கள். நீங்கள் நன்றி சொன்னாலும், சொல்லாவிட்டாலும் இவர்கள் எல்லோரும் உழைக்க வேண்டும், அப்போது தான் பிழைக்க முடியும்.
//

Aye! That's what exactly I'm talking about!

முகம் தெரியாத மக்களின் உழைப்பால் வருவது தான் உங்கள் உணவு...ஏதோ கடவுள் வானத்தை பிளந்து கொட்டுவது போல, கடவுளுக்கு நன்றி சொல்வது.....stealing of credit!

அது சரி(18185106603874041862) said...

//
dondu(#11168674346665545885) கூறியது...
உண்ணப்போகும் உணவுக்கு நன்றி கூறுவது என்பது எல்லா மதங்களிலுமே உண்டு. உதாரணத்துக்கு கிறித்துவர்கள் இதை grace என்று அழைப்பார்கள். இசுலாமியர்கள், யூதர்கள் ஆகியோரும் இவ்வாறு சடங்குகளை செய்கிறார்கள்.

ஆகவே இப்பதிவுக்கு லேபல் இடும்போது பார்ப்பனியத்துடன் கிறித்துவம், இசுலாமியம், யூத நம்பிக்கை என்பதையும் தைரியம் இருந்தால் போட்டு கொள்ளுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

May 10, 2009 7:31 AM
//

அது!

தமிழோவியா ஐயா,

ஒவ்வொரு உணவுக்கு முன்னும் தேங்க் காட், ப்ரைஸ் த லார்ட் என்று சொல்லும் கிறிஸ்துவர்கள் குறித்தும், ஐந்து வேளை தொழ வேண்டும் என்று சொல்லும் இஸ்லாமியர் குறித்தும் பதிவிட்டு பகுத்தறிவை வளர்க்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்!

அசுரன் திராவிடன் said...

**********************************************************************
பார்ப்பனர்களே இந்த பண்பாட்டிற்கு கொஞ்சம் விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்
**********************************பார்ப்பனர்களின் குறும்புச் சடங்கு:



தை இரண்டாம் நாளை "மாட்டுப் பொங்கல்" என்கிறார்கள். உழவுக்குப் பயன்படும் (காளை) மாட்டுக்கு "நன்றி" பாராட்டும் நாள் என்கிறார்கள்.





அறுவடைத் திருநாளாம் பொங்கலை, "சங்கராந்தி" ஆக்கிய பார்ப்பனர், மாட்டுப் பொங்கலையும் பார்ப்பனப் பண்பாட்டு நிகழ்ச்சியாக்கி விட்டனர்.



ஓர் அய்யங்கார் அம்மணிக்குச் சொந்தமான தொலைக்காட்சியில் மாட்டுப் பொங்கல் நிகழ்ச்சியைக் காட்டினார்கள். பசு மாடுகள் வரிசையாகக் கட்டப்பட்ட தொழுவம். பார்ப்பன மடிசார் மாமிகள், கையில் பித்தளைத் தட்டில் கர்ப்பூரத்தைக் கொளுத்தி எடுத்துக் கொண்டு, பசு மாட்டின் பின்புறம் மலம், மூத்திரம் வெளிவரும் உறுப்புகளுக்குக் கர்ப்பூர தீபாராதனை காட்டும் காட்சியைக் காட்டினார்கள். இதுதான் பார்ப்பன பண்பாடு!



இந்து மதத்தின் எல்லாக் கடவுள்களும் பசு மாட்டில் வசிக்கின்றன என்ற முட்டாள்தனமான கருத்தின் அடிப்படையில் பசு மாட்டைக் கும்பிடும் பார்ப்பனர், இப்போது மாட்டுப் பொங்கலன்றே இதைச் செய்ய ஆரம்பித்து விட்டனர். பசுவின் மூத்திரம் வரும் வழியில்தான், லட்சுமி வாசம் செய்கிறாள் என்கிறது, இந்து மதம்! அதனால்தான், வைணவக் கோயிலில் விடிந்ததும் பூஜை நடக்கும்போது பெருமாள் முகத்திற்கு நேரே பசு மாட்டின் யோனியைக் காட்டுகிறார்கள்! கடவுள் லட்சுமியை தரிசனம் செய்கிறதாம்!

***********************************

அசுரன் திராவிடன் said...

******************************************************************************************************************
பார்ப்பனர்களே உங்களின் குழந்தையின் கேள்விக்கு கொஞ்சம் விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்
******************************************************************************************************************
மகன்:
அப்பா,நம்ம பாட்டி போன மாசம் செத்து சொர்கத்துக்கு போனாலே ,ஏன் இன்னும் திரும்பி வரலே ?

அப்பா :
சொர்க்கத்து போனவா எல்லாம் திரும்ப வரமாட்டா ,சாமியிண்டே இருப்பாடா!

மகன்:
நேற்று பெருமாள் கோயில் திறந்து சொர்க்க வாசல் போனவா நிறைய பேரை இன்னைக்கு டாஸ்மாக் கடையாண்டே பார்த்தேனே !!!

அசுரன் திராவிடன் said...

*********************************************************
பார்ப்பனர்களே பதில் சொல்லுங்கள்
*********************************************************
கடவுளுக்கு நன்றி சொல்ல உணவு என்கிறிர்கள்.கடவுளுக்கு உணவு சமைக்க கோவிலில் சமையலறை
(மடபுளி) கட்டி வைக்கிறிர்கள் .ஆனால் உண்ட பின் கடவுள் மலம் கழிக்க கழிவறை கட்டவில்லையே ஏன்?அல்லது அந்த கோவில் ப்ரோகிதப் பார்ப்பன் வாய் லேயே போய்டுவரா? அல்லது வேற எங்கே போவார்?

தமிழ் ஓவியா said...

தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி அதுசரி

தமிழ் ஓவியா said...

//ஒவ்வொரு உணவுக்கு முன்னும் தேங்க் காட், ப்ரைஸ் த லார்ட் என்று சொல்லும் கிறிஸ்துவர்கள் குறித்தும், ஐந்து வேளை தொழ வேண்டும் என்று சொல்லும் இஸ்லாமியர் குறித்தும் பதிவிட்டு பகுத்தறிவை வளர்க்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்!//

இந்த வலைப்பூவில் இது குறித்து ஏற்கனவே பதிவுகள் பதிவு செய்யப்படுள்ளது அதுசரி.

டோண்டு ராகவன் அவர்கள் அப்பதிவுகளை பொறுமையாய் படிக்க வேண்டுகிறேன்.

தமிழ் ஓவியா said...

//ஒவ்வொரு உணவுக்கு முன்னும் தேங்க் காட், ப்ரைஸ் த லார்ட் என்று சொல்லும் கிறிஸ்துவர்கள் குறித்தும், ஐந்து வேளை தொழ வேண்டும் என்று சொல்லும் இஸ்லாமியர் குறித்தும் பதிவிட்டு பகுத்தறிவை வளர்க்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்!//

இந்த வலைப்பூவில் இது குறித்து ஏற்கனவே பதிவுகள் பதிவு செய்யப்படுள்ளது அதுசரி.

டோண்டு ராகவன் அவர்கள் அப்பதிவுகளை பொறுமையாய் படிக்க வேண்டுகிறேன்.

Unknown said...

டோண்டு ராகவன் போன்றவர்கள் இதை கூர்ந்து கவனிக்குமாறு வேண்டுகிறேன் http://thamizhoviya.blogspot.com/2009/01/blog-post_197.html

இதைப்பற்றி தங்கள் கருத்துகளையும் கூறுங்கள்

Thamizhan said...

நரித்தன்மிக்க கூழைக் கும்பிடுகள் மீண்டும் மீண்டும் தங்கள் ஆதங்கத்தைக் கிருத்துவ ,இஸ்லாமியருடன் இணைத்து எழுதுவது எதற்கு என்பது அனைவர்க்கும் தெரியும்.

கடவுள் இல்லை,கடவுள் இல்லவே இல்லை யென்று தான் சொன்னார்,பெரியார்.இது எல்லா கடவுள்களுக்கும் பொருந்தும் என்பது மேல்தாவிகளுக்குத் தெரியாத மாதிரி நடிப்பது வேடிக்கையல்ல,விஷமம்.
பெர்ட்ரண்டு ரஸ்ஸ்லின் "நான் ஏன் கிருத்துவனல்ல" போன்ற நூல்களைக் குறைந்த விலையில் வெளியிட்டவர் பெரியார்.அவர் தொடாத மதமும் இல்லை,கடவுளும் இல்லை.
புத்தரின் கருத்துக்களைப் பரப்பியவர் பெரியார்.
திருமால் கோவில் நெய்யொழுகும் படையல்கள்,அடைகள் கோவில் பூசாரி அய்யங்கார் ஆத்துக்குப் போவதும்,அவாள் நன்னா இருப்பதற்குந்தான் படையல்கள் என்பதும் நன்னா புரிந்தவா வேறு என்ன சொல்வா?

Unknown said...

ஒவ்வொரு முறை இந்த கேள்வி எழும் போதும் அதை பார்பனர்களுக்கு எதிராக திசை திருப்பி விடுவது ஏன்? இந்த கேள்விகளை கேட்பவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள் தான் என்று நீங்கள் நினைப்பது தவறு. அது போகட்டும். தி.க வில் மற்ற மதத்தினர் யாரும் இல்லையா. அப்படி இருந்தால் அவர்களும் தம் மதங்களில் உள்ள சடங்குகள் பற்றி எதாவது கூறலாமே? இல்லை அவர்கள் யாருக்கும் பகுத்தறிவு என்பது தேவை இல்லை என்பது தி.க.வின் கொள்கையா?

Thamizhan said...

திசை திருப்புவது திருப்புபவர்களுக்கு நன்றாகத் தெரியும்.தமிழர்களுக்குத் தான் சரியாகப் புரிய மாட்டேன் என்கிறது.
திராவிடர் கழகத்தில் அன்று முதல் இன்று வரை கிருத்துவர்கள்,இஸ்லாமியர் இருந்துள்ளார்கள்,இருக்கிறார்கள்.
பகுத்தறிவு எல்லா மனிதர்களுக்கும் உள்ளது தான்.அதை மதத்திடம் அடகு வைத்து விடுவதும்,மதம் பிடித்து அலைவதும் எல்லா மதத்திலும் உள்ளது தான்.
அதனால் தான் மனித நேயம் வேண்டுமென்றார்.மனித நேயத்தின் எதிரியாக மதம் ஆகி விட்டதைத் தான் எதிர்த்தார்.
பக்தி சொந்த(பாத் ரூம்) விஷயம்,
ஒழுக்கம் (பப்ளிக்) பொது விஷயம் என்ற அளவில் பெரியார் சொன்னதை ஏற்றுக் கொள்ளவும் மறுப்பவர்கள்
பெரியாரைப் புரிந்து கொள்ளாதவர்கள்,அல்லது நடிப்பவர்கள்.