Search This Blog

19.4.09

கலைஞர் ஈழப்பிரச்சினையில் அரசியல் ஆதாயம் தேடுகிறாரா?


இலங்கையில் முழுப் போர் நிறுத்தமே உடனடித் தேவை!

மத்திய அரசுக்கு தமிழர் தலைவர் வேண்டுகோள்

இலங்கையில் முழுப் போர் நிறுத்தமே உடினடி யாகத் தேவை என்று திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர் கள் விடுத்துள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளார். அவ ரது அறிக்கை வருமாறு:


முதல்வரின் அவசர தந்தி

"இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் அறி வுறுத்தலை இலங்கை அரசு மதிக்காவிட்டால், அந் நாட்டு, அரசுடனான தூதரக உறவுகளைத் துண்டித் திட வேண்டுமென நமது முதல்வர் கலைஞர் அவர்கள் பிரதமர் மன்மோகன் சிங், அய்க்கிய முற்போக் குக்கூட்டணியின் தலைவர் திருமதி சோனியா காந்தி, பிரணாப் முகர்ஜி ஆகியோ ருக்கு அவசரத் தந்தியினை அனுப்பியுள்ளது மிகவும் சரி யான நேரத்தில் செய்யப் பட்ட சரியான வற்புறுத்தல் ஆகும்!

முதல்வர் கலைஞர் அவர்கள் ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையில் அரசியல் ஆதாயம் தேடுபவர் அல்ல; கருமத்திற்குரியவர் கடைசி வரையில் கடமையாற்றிடுபவர் என்ற பழமொழிக்கொப்ப, மனத் தால் மட்டுமல்ல, இனத் தாலும் உள்ளம் ஒன்று பட்டு நிற்பவர் ஆவார்!

இருமுறை ஆட்சியை இழந்தவர்

ஏற்கனவே இருமுறை அதற்காகவே ஆட்சியை இழந்த தீவிர ஈடுபாடு உடையவர் என்பதை காமாலைக் கண்ணன்களைத் தவிர நாட்டோர் ஏன் பன் னாட்டு மக்களும் அறிவார்கள்!

நச்சுப் புகைக் குண்டு களை வீசி - அதிலும் பாதுகாப்புப் பகுதிக்குச் சென்றுள்ள ஈழத் தமிழர்களின் மீதும், குழந்தை களின் மீதும் கூட போரை நடத்தும் ராஜபக்சே அரசுக்குப் போர் நிறுத்தம் 48 மணிநேரம் என்பது- நாம் ஏற்கனவே சுட்டிக் காட்டி யபடி - வெறும் போரில் அந் நாட்டு இராணுவத்தின ருக்குக் கொடுத்த போர் ஓய்வே தவிர, ஈழத்தில் நித்தம் நித்தம் செத்து மடியும் அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்றும் அறிவிப்பாக எடுத்துக் கொள்ள முடியாது!

தூதரக உறவைத் துண்டிக்கவேண்டும்

நமது மத்திய அரசு வற்புறுத்தியுள்ளதை இலங்கை அரசு ஏற்று உடனடியாக, முழுமையான போர் நிறுத் தத்தை கொணர வேண்டும்; இன் றேல் இந்திய அரசு அதன் ராஜிய உறவை - இலங்கை அரசுடனான தூதரக உறவைத் துண் டித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் சரியான ஆலோசனையாகும்.

புதுடில்லிக்கு அழைக் கப்பட்ட இலங்கையின் தமிழ்த் தேசிய நாடாளு மன்ற உறுப்பினர்களின் 4 பிரதிநிதிகள் திரு. சம்பந்தன் அவர்கள் தலைமையில், எம்.பி.க்கள் சேனாதிராஜா, பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் நேற்று டெல்லிக்கு அழைக்கப்பட்டு மத்திய அரசினால் ஆலோசிக் கப்பட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதொரு திருப்பமாகும்! அவர்களும் மத்திய அரசின் முயற்சியை யும் வரவேற்று அதை அகலப்படுத்த, ஆழப்படுத்த ஆலோசனைகளை வழங்கி யுள்ளனர்.

இவைகளுக்குப் பின்னணி முதல்வர் கலைஞர் அவர்கள் மத்திய அரசுக்குக் கொடுத்து வரும் இடையறாத அழுத்தமேயாகும் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்!

விடுதலைப்புலிகளின் ஆதரவு இணையதளமான தமிழ்நெட்டில் விடுதலைப் புலிகளின் வெளியுறவு அதிகாரி செல்வராஜா பத்மநாபனின் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது!

விடுதலைப் புலிகள் தயார்

உடனடியாக நிரந்தரப் போர் நிறுத்தம் என்றால், அரசியல் ரீதியான பேச்சு வார்த்தையில் பங்கு கொள்ள விடுதலைப்புலிகள் இயக்கம் தயாராக இருக்கிறது என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது!

உடனடியாக விடுதலைப்புலிகளை முற்றாக அழித்து ஒழித்துவிடுவோம் என்றோ, அவர்கள் ஆயுதங் களைக் கீழே போட்டால் தான் அரசியல் ரீதியான தீர்வுக்குரிய பேச்சு வார்த் தைகளை நடத்துவோம் என்றோ இராஜபக்சே அரசு கூறினால் அது நடை முறைக்கு ஒவ்வாத ஒன்று என்பதை உலக நாடுகள் -அய்.நா. பொதுமன்றம்- அதன்பொதுச் செயலாளர் பான் கி மூன் மற்றும் அவருடைய பிரதிநிதிகள் அதி காரிகள் அனைவரும் புரிந்து செயல்படவேண்டியது அவசர அவசியமாகும்!

அப்பாவித் தமிழர்கள் ஏற்கனவே ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டு வரும் நிலையில் முழுப் போர் நிறுத்தம் உடனடியாக அறிவிக்கப் படுவதே ஒரே ஒரு சரியான தடுப்பு நட வடிக்கையாகும்!

அதை விட்டு, மருந்து, உணவு அனுப்புவது எல்லாம் இரண்டாவது வகை உதவிகள்தான் என்பதை நமது மத்திய அரசு உணர்ந்து, நமது முதல்வரின் வேண்டு கோளுக்கு உடனடியாக செவி சாய்த்து இலங்கை அரசுக்கு பலமான அழுத் தத்தைத் தருவதோடு, எச் சரிக்க முன்வரவேண்டும்.

இப்போது இல்லா விட்டால் பின் எப்போது? (Now or never) என்ற கட்டத்தை அடைந்துவிட் டனர் ஈழத் தமிழர்களான எமது தொப்புள் கொடி உறவுகள்! அதை விட முக்கியம் இப்போது தேவை!

மனிதநேயம்! மனித நேயம்!!

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், நோர்வே போன்ற நாடுகள் சொல்லியும் கேட்க மறுத்தால், இலங்கை என்ன அவ்வளவு பெரியவல்லரசா?

நமக்கு இது வெறும் தேர்தல் பிரச்சினை அல்ல!

ஈழத் தமிழர் வாழ்வுரி மைப் பிரச்சினை!

ஜீவாதாரப் பிரச்சினை!

மனிதநேயப் பிரச்சினை!

இதை உலக நாடுகளும் , அய்.நா.வும் ஒரே குரலில் வற்புறுத்தி, இனப் படு கொலையைத் தடுத்து நிறுத் திட முன்வருதல் அவசரம்! அவசரம்!! அவசரம்!!!


----------------------'விடுதலை'- 18.4.2009

10 comments:

Anonymous said...

ஆதித்தியா, அல்லது சிரிப்பொலி நிகழ்ச்சிக்கு மாமா வீரமணியின் இதுபோன்ற அறிக்கைகளை அனுப்பி வையுங்கள். தமிழ்நாட்டுத் தமிழன் நன்றாகச் சிரிக்கவாவது பயன்படும்

தமிழ் ஓவியா said...

எங்களுக்கு வீரமனி அவர்கள் பெரியார் தத்துவத்தின் குறியீடு.

உங்களுக்கு மட்டும் உறவுக்காரர் போல் இருக்கிரது.
நாகரிகமாக பின்னூட்டம் இடவும். கருத்தை கருத்ததல் சந்திக்க வேண்டுகீரேன்.

கொச்சைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவது சரியல்ல. திருப்பி எழுதுவதற்கு வெகுநேரம் அகிவிடாது.

பெரியார் சொன்ன பன்பாடு தடுக்கிறது

Selva said...

கலைஞர் ஈழப்பிரச்சினையில் அரசியல் ஆதாயம் தேடுகிறாரா?
சந்தேகமே வேண்டாம்

தமிழ் ஓவியா said...

செல்வாவின் பார்வைக்கு

'முதல்வர் கலைஞர் அவர்கள் ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையில் அரசியல் ஆதாயம் தேடுபவர் அல்ல; கருமத்திற்குரியவர் கடைசி வரையில் கடமையாற்றிடுபவர் என்ற பழமொழிக்கொப்ப, மனத்தால் மட்டுமல்ல, இனத் தாலும் உள்ளம் ஒன்று பட்டு நிற்பவர் ஆவார்!

இருமுறை ஆட்சியை இழந்தவர்

ஏற்கனவே இருமுறை அதற்காகவே ஆட்சியை இழந்த தீவிர ஈடுபாடு உடையவர் என்பதை காமாலைக் கண்ணன்களைத் தவிர நாட்டோர் ஏன் பன் னாட்டு மக்களும் அறிவார்கள்!'

------கி.வீரமணி -"விடுதலை' 19-4-2009

mraja1961 said...

தோழரே எந்த காலத்தில் உள்ளிர்கள் தந்தி அனுப்பினாராம் நகைப்பாக இல்லையா? கடுமையாக ஒரு போன் கலைஞர் செய்தால் காங்கிரஸ்காரன் அலறியடித்துக் கொண்டு செய்வான் ஆனால் கலைஞரின் பதவி ஆசை தடுக்கிறது. இதுதான் உண்மை.

அன்புடன்
மகாராஜா

ஸ்ரீ சரவணகுமார் said...

தமிழ்ஓவியா,
உங்கள் விளக்கங்களையும், உங்கள் தலைவர் கி.வீரமணியின் வியக்யானங்களையும் படிக்காமலே சொல்கிறேன். கலைஞர் செய்துக் கொண்டிருப்பது மன்னிக்க முடியாத தவறு. மிகபெரும் அவலம் இன்னும் சில மணிதுளிகளில் நடைப் பெற போகிறது. பதிவிக்காகவும், பணத்திற்காகவும் தமிழர்களை காவு கொடுத்த கலைஞர் ஒழிக

அசுரன் திராவிடன் said...

காங்கிரசை ஒழிக்க வேண்டும் சரி ஒழித்து விட்டு மதவாத BJP யிடம் ஆட்சியை ஒப்படைக்கவேண்டும் என்கிற தோரணையில் பெரும்பாலானவர்களின் கருத்துகள் உள்ளன.BJP ஆட்சியில் இலங்கைக்கு ரூபாய் 300 கோடி மற்றும் பிற ஆயுத தளவாடங்களும் வழங்கப்பட்டதே …இந்திய ஆயுதம் அழிக்க விட்டால் ராஜபக்ச போரை நிறுத்தி விடுவாரா …..மாறாக சீனாவும் மற்றும் பாகிஸ்தானும் ராஜபக்சேவுக்கு ஆயுதம் வழங்கி வருகின்றனர் ….இந்தியா அனைத்து உதவிகளையும் நிறுத்தினாலும் அங்கு எந்த மாற்றமும் வரப்போவது இல்லை …ராஜபக்சேவை ஒழித்தால் மட்டுமே ஈழத்தமிழர்களுக்கு நிம்மதி ஏற்படுத்த முடியும் … அதை விடுத்தது இந்தியாவையும் கருணாநிதியையும் மற்றும் கூட்டணி தலைவர்களயும் இழிவு படுதுவதுவதால் தமிழ் ஈழமும் தமிழர்கள் கொல்லபடுவதும் நின்று விடாது …..வேண்டுமென்றால் அவ்வாறு குறை கூறுவது திமுக மற்றும் அதன் கூட்டணியில் உள்ள கொஞ்ச நஞ்ச விடுதலை புலிகளின் ஆதரவாளர்களையும் விடுதலை புலிகளின் எதிர்ப்பாளர்களாக மாற்றும் …
ஈழபிரச்சனை இந்தியா தேர்தலோடு முடிந்து விடாது ….
ஆட்சியாளர்களை முடிந்த வரையில் நமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் ….அதை விடுத்து அவர்களை எதிர்பதால் தனி ஈழம் அமைந்து விடாது …வேண்டுமால் அவ்வாறு எதிர்ப்பவர்கள் தங்களை ஈழ தமிழர்களின் பிரதிநிதிகள் போல காட்டி கொள்ளலாம் .

நம்பி said...

//selva said...

கலைஞர் ஈழப்பிரச்சினையில் அரசியல் ஆதாயம் தேடுகிறாரா?
சந்தேகமே வேண்டாம்
April 19, 2009 6:26 PM //

ஆதாயம் தேடி, இலங்கை அதிபர் தேர்தலுக்கு போட்டியிட்டு வாக்கு சேகரிக்கிறாரா..?

என்னே! உங்களது அரசியல் பார்வை...

இங்குள்ள எங்களுக்கு எதுக்கு ஈழம்..?

அதை பத்தி மூச்சே விடாதவங்களுக்கு கூட நாங்க வாக்களிப்போம்...? (தமிழக மக்கள்)

கொலைப்பட்டினியா இருக்கிறவனிடம் பகுத்தறிவுப் பிரச்சாரம் எடுபடாது...

அவனுக்கு முதலில் தேவை சோறு..அதை போட்டுட்டு மத்ததை அப்புறமா பேசு...!

இது தான் இங்க நிலைமை!...இதுல ஈழம் எங்கேயிருந்து வந்தது....?

நம்பி said...

//mraja1961 said...

தோழரே எந்த காலத்தில் உள்ளிர்கள் தந்தி அனுப்பினாராம் நகைப்பாக இல்லையா? கடுமையாக ஒரு போன் கலைஞர் செய்தால் காங்கிரஸ்காரன் அலறியடித்துக் கொண்டு செய்வான் ஆனால் கலைஞரின் பதவி ஆசை தடுக்கிறது. இதுதான் உண்மை.

அன்புடன்
மகாராஜா

April 20, 2009 9:44 AM//

ஏன் அலறியடிக்க வேண்டும்?

அரசியல் என்பது என்ன? தொழில் நிறுவனமா..?

காங்கிரஸ் என்பது தமிழக அரசின் எதாவது செயல் துறையா?

காங்கிரஸ் என்பது தமிழகத்திற்கு மட்டுமே செயல்படும் மாநிலக்கட்சியா!

வேறக்கட்சி கூட அவங்களுக்கு தொடர்பே இல்லையா...? ஒரே மாதிரி மனநிலையைக் கொண்ட கோஷடி பூசலே இல்லாத கட்சியா?

எல்லாக் கட்சியிலும் குழு அரசியல் உண்டு...உடகட்சி அரசியல் உண்டு. காங்கிரசில் அது அதிகமாகவே உண்டு.

போதாக்குறைக்கு இந்தக்கட்சிக்கு இந்த குரல்களினாலே மிக்ப்பெரிய பாதிப்பும் உண்டு. பொதுவாக இந்த உண்மையை மறுக்க முடியாது. மறக்கவும் முடியாது. மறைக்கவும் முடியாது.

இது தலையில மண்ணவாரிக் கொட்டிகிட்ட செயல். போதாக்குறைக்கு தமிழக மக்களின் சோத்துல மண்ணை வாரிப்போட்ட சொயலும் கூட.

இலங்கை நாட்டு ஒற்றுமையற்ற ஈழக்கோரிக்கைக்காக இங்குள்ளவர்களின் வாழ்வாதாரத்தை, தேவைகளை பலி கொடுக்க முடியாது.

இங்குள்ள மக்களின் தீர்ப்பை உதாசீனப்படுத்த முடியாது.

அவ்வளவு நன்றியுணர்ச்சியுள்ள நல்லவாளா..? நீங்க!

இருந்தா! இலங்கை தமிழ் மக்களே ஒன்று திரண்டு போராடி இருப்பார்களே!

இது இப்போது இலங்கையிலேயே சிறுபான்மையினரின் குரலாகத்தானே இருக்கிறது! இன்னுஞ் சொல்லப்போனால் அங்கிருந்து வருகின்ற குரலும் இல்லை!

ஏதாதவது! ஒற்றுமையுடன்...நடந்ததா?

நம்பி said...

//Blogger நன் நிலா said...

ஆதித்தியா, அல்லது சிரிப்பொலி நிகழ்ச்சிக்கு மாமா வீரமணியின் இதுபோன்ற அறிக்கைகளை அனுப்பி வையுங்கள். தமிழ்நாட்டுத் தமிழன் நன்றாகச் சிரிக்கவாவது பயன்படும்

April 19, 2009 11:53 AM//

தமிழ்நாட்டுத் தமிழர்கள் எந்த நிலைமையில் இருக்கிறார்கள் என்று இணையத்தில் இருந்து இறங்கி வந்தாவது பார்க்கமுடிந்ததே! ரொம்ப சந்தோஷம்....

எல்லோரும் வாய்விட்டு சிரிக்கும் நிலையில் இருக்கிறார்களா? அதாவது தெரியுமா...? எத்தனை சதவீதம் பேர் சிரிக்கும் நிலையில் இருக்கிறார்கள்? எங்கே? சொல்லுமே பார்ப்போம்!