Search This Blog

7.3.09

அரசு ஊழியர்களும் கலைஞரும் - 3


கலைஞர் ஆட்சியை கண்ணை
இமை காப்பதுபோல பாதுகாத்திடுங்கள்!

தமிழக அரசு அலுவலர்களுக்கு தமிழர் தலைவர் வேண்டுகோள்


கலைஞர் ஆட்சியை கண் இமைபோல் காத்து நன்றியுணர்ச்சியோடு இருப்பது உங்களுடைய பொறுப்பு என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் கடலூரில் 28.2.09 அன்று நடைபெற்ற மாநாட்டில் - திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

போராட வேண்டிய அவசியமில்லை

சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அரசு அலுவலர் துறையான கோரிக்கை களை கேட்டறிய காலமுறை ஆலோசனைக் கூட்டங்களைக் கூட்டிட அறிவுரை வழங்கியுள்ளார்கள். இது ஒரு தனித்தன்மையான - அவ்வப்பொழுது உங்களுடைய பளுவைக் குறைக்கின்ற செயல். நீங்கள் தேவையில்லாமல் வாதாடவேண்டும், போராடவேண்டும் என்ற அவசியமே இல்லை.

கலைஞர் அவர்களுடைய ஆட்சியிலே வாதாடுவதற்கே ஒன்றுமில்லை என்கிறபொழுது போராடவேண்டிய அவசியமே இல்லை.

தட்டுவதற்கு முன்னாலே
திறக்கப்படக் கூடிய கதவுகள்


காரணம் நீங்கள் கேட்பதற்கு முன்னாலே - நீங்கள் தட்டுவதற்கு முன்னாலே திறக்கப்படக் கூடிய கதவுகளாக கலைஞர் அவர்களுடைய ஆட்சி இருக்கின்றது.

நீங்கள் கேட்பதற்கு முன்னாலே கொடுக்கப் படக் கூடிய ஆட்சியாக கலைஞர் அவர்களுடைய ஆட்சி இருக்கின்றது. அவருடைய கரங்கள் இருக்கின்றன.

அடுத்து மருத்துவக் காப்பீடு உதவித் திட்டம். இந்தத் திட்டம் எட்டு மாதங்களிலே இதுவரை யிலே பத்தொன்பதாயிரத்து முன்னூற்றுப் பதினொரு அலுவலர்கள் பயன்படக் கூடிய அளவிற்கு இன்றைக்கு வந்திருக்கின்றது.

மருத்துவக் காப்பீடு திட்டம்

இதுவரையிலே செலவு 70 கோடி ரூபாய் ஆகி யிருக்கிறது. இந்த புள்ளி விவரங்கள் உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரிந்த புள்ளி விவரங்கள்.

இதுவரை இந்த ஆண்டுக்கு மட்டுமே இரண்டாயிரம் பேர் பயனடைந்து வந்தனர். இந்த ஆண்டுச் செலவு மட்டுமே 18 கோடி ரூபாய். பென் ஷனர்களுக்கும் மருத்துவக் காப்பீடு திட்டம். மிக அருமையான திட்டம். வாழ்வாங்கு வாழக்கூடிய ஒரு அற்புதமான மனிதநேயத்தைக் கொண்டது.

வாடிய பயிர்களாக பென்ஷனர்கள் இருக்கக் கூடாது. எனவேதான் அவர்களும் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் பென்ஷனர் களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டம். அய்ம்ப தாயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டது.

இத்திட்டம் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையிலே கணவன் - மனைவிக்கும் சேர்த்து விரிவாக் கப்பட்டிருக்கிறது. எல்லா தரப்பு மக்களுக்கும் வாய்ப்பு

இந்த நிதிநிலை அறிக்கையைப் பொறுத்தவரையிலே எல்லாத் தரப்பு மக்களுக்கும், எல்லா வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.

ஒதுக்கப்பட்ட சமுதாயமாக இருந்த அரவாணிகள்- திருநங்கைகள் இருக்கின்றார்களே, அவர்களுக்குக்கூட நியாயங்கள், சமூகநீதி அளிக் கப்படக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது.

சிலர் குறைசொல்லத் தேடித் தேடிப் பார்க்கிறார்கள்

எனவேதான், நண்பர்களே! சிலருக்கு இந்த ஆட்சியின்மீது குறை சொல்ல ஒன்றுமில்லையே என்பதற்காகத் தேடித் தேடிப் பார்க்கின்றார்கள்.

ஆனால், நீங்கள் இன்றைக்கு வழிகாட்டியிருக்கின்றீர்கள். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் உரிய நேரத்திலே, சிறப்பான நேரத்திலே இந்த மாநாட்டினைக் கூட்டி நன்றி தெரிவிக்கின்றோம் என்று போட்டிருக் கின்றீர்கள்.

இந்த ஆட்சி உங்களுடைய மீட்சிக்காக...

இந்த ஆட்சி உங்களுடைய மீட்சிக்காக இருக்கிறது. இந்த இனத்தின் மீட்சிக்காக இருக்கிறது. இதற்கு முன்னாலே நாங்கள் - யாசிப்பவர்களாக இருந்தோம்.

ஆட்சியாளர்கள் யோசிப்பவர்களாக இருந்தார்கள்.

ஆனால், நாங்கள் இந்த ஆட்சியிலே யாசிப்பவர்களாக இல்லை. சுவாசிப்பவர்களாக இருக்கிறோம் என்று காட்டக்கூடிய அளவிற்கு அற்புதமாக இன்றைக்கு அருமையாக ஒரு சூழல் ஏற்பட்டி ருக்கிறது.

கண்ணை இமை காப்பதுபோல...

எனவேதான், இந்த ஆட்சியை கண்ணை இமை காப்பதுபோல காக்கவேண்டிய பொறுப்பு மற்ற வர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ, முதலில் வழிகாட்டக் கூடியவர்கள் நாங்கள்தான் என்று நீங்கள் முன்வரிசை அணியிலே வந்திருக்கின் றீர்கள்.

8 கோடி தமிழர்கள் சார்பாக நன்றி!

அதற்காக எட்டுக் கோடி தமிழர்கள் சார்பாக மனம் நிறைந்த பாராட்டுதல்களை உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காகத்தான் எங்களைப் போன்ற பெரியார் தொண்டர்கள் இங்கே வந்தி ருக்கின்றோம்.

நாங்கள் எதையும் உங்களிடமிருந்து எதிர் பார்க்கவில்லை.


ஆனால், நாங்கள் எதிர்பார்க்காமலேயே நீங்கள் எங்களுக்குக்கூட 200-க்கும் மேற்பட்ட விடுதலை நாளிதழுக்குரிய சந்தாக்களை தந்திருக்கின்றீர்கள்.

அமைச்சர் இருவரும் கேட்டார்கள்.

உங்களுக்கு என்ன கொடுப்பார்கள் என்று?

எங்களுக்குக் குத்துவிளக்கு கொடுக்கிறார். உங்களுக்கு என்ன கொடுப்பார் என்று வேளாண் மைத்துறை அமைச்சர் வீரபாண்டியார் கேட்டார்.

நான் சொன்னேன் - நிச்சயமாக யாருக்கு என்ன கொடுப்பது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

ஆகவே, உங்களுக்குக் குத்துவிளக்கு கொடுத்தால், எங்களுக்கு மின்சார பல்பு போன்ற ஒன்றைக் கொடுப்பார்கள்.

வெளிச்சத்தைப் பரப்பும் விடுதலை ஏடு

வெளிச்சத்தைப் பரப்பக்கூடியது. அதுதான் விடுதலை ஏடு. ஆகவே, அந்த விடுதலை ஏடு எல்லா இடங்களுக்கும் பரவவேண்டும்.

தாமஸ் ஆல்வா எடிசன் என்றைக்கு மின்சார பல்பைக் கண்டுபிடித்தாரோ அதே ஆண்டுதான் தந்தை பெரியார் பிறந்தார் என்ற வரலாறு சில பேருக்குத் தெரியாது.

அந்த வகையிலேதான் நாங்கள் உங்களுக்கு நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கின் றோம். நீங்கள் அரசுக்கு நன்றி தெரிவிக்கின்றீர்கள்.

நீங்கள் விடுதலை ஏட்டிற்காக சந்தா ஒரு லட்சம் ரூபாய் தந்தீர்கள். இது முதல் தவணை - இன்னும் தருகிறேன் என்று சொன்னீர்கள்.

விடுதலை ஏடு தனிப்பட்டவர்களுடைய ஏடு அல்ல.

அரசு ஊழியர்கள் பகுத்தறிவாளர்களாக...

மாறாக, பகுத்தறிவைச் சொல்லக்கூடிய ஏடு. அதிலும் குறிப்பாக அரசு ஊழியர்கள் பகுத்தறி வாளர்களாக இருக்கவேண்டும் என்பது எங்களைப் போன்றவர்களுடைய பேரவா- பேரா சையும் கூட. நியாயமானது.

ஏனென்றால், இப்பொழுதெல்லாம் உங்களுக்கு ஏராளமான பணம் திடீரென்று கிடைக்கும். பெரும்பகுதியை நீங்கள் திருப்பதி உண்டியலிலே போட்டுத் திரும்பிவிடக்கூடாது.

நீங்கள் பகுத்தறிவாளர்களாக இருக்கவேண்டும்.

உங்களுடைய எதிர்காலத்தைப் பத்திரப்படுத்த வேண்டும். அதிக வட்டி கிடைக்கும் என்று சில நிதிநிறுவனங்களுக்குச் சென்று ஏமாந்துவிடக் கூடாது.

டெபாசிட் இழந்தவர்கள் சங்கம்

இந்த நாட்டிலேயே டெபாசிட் இழந்தவர்கள் என்ற பெயரில் சங்கம் வைத்தவர்கள் நம்மவர்கள்தான். வேறு யாரும் கிடையாது.

அதிலே, பலர் அரசு அலுவலர்களும், ஓய்வு ஊதியக்காரர்களாகவும் இருப்பது இன்னும் கொடுமையான செய்தி.

ஆகவேதான், நீங்கள் நல்ல பகுத்தறிவாளர்களாக வாழுங்கள்.

நல்ல இன உணர்வாளர்களாக, நல்ல கடமையாளர்களாக இருங்கள்.

அது உங்களுக்காக மட்டுமல்ல, உங்கள் சந்ததிக்காக - உங்கள் பிள்ளைகளை - உங்களைவிட பெரிய நிலைக்கு அனுப்புவதற்கு நீங்கள் வாய்ப்பை உருவாக்கிக் கொடுங்கள்.

எல்லா தீர்மானத்தையும் படித்தேன்

இறுதியாக இன்னொரு வேண்டுகோள்: உங்கள் சகோதரர் என்ற முறையிலே படிப்பு என்று சொன்னால், பி.ஏ. படித்தேன்; எம்.ஏ. படித்தேன் என்று ஒரு தீர்மானத்திலே இருக்கிறது.

நான் எல்லாத் தீர்மானத்தையும் படித்து விட்டுப் பேசுகின்றேன். திறந்தவெளிப் பல் கலைக்கழக படிப்பில் ஒரு சிக்கல் வந்திருக்கிறது. அண்மையிலே உச்சநீதிமன்றத் தீர்ப்பிலே அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்த ஒரு படிப்பு.

இனிமேல் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., பி.ஏ. போன்ற பட்டம் பெற்று பிறகு அடுத்த பட்டம் பெற்றால்தான் அந்த எம்.ஏ. பட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியிருக்கிறது.

அதையும் நீங்கள் தயவுசெய்து கணக்கிலே எடுத்துக்கொண்டு மற்றவர்களிடம் பரப்புங்கள்.

நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய மிக முக்கியமான படிப்பு கணினித் துறை.

இனிமேல் கணினிதான்...

இருபாலரும் இங்கே இருக்கின்றீர்கள். அரசு ஊழியர்களிலே, சகோதரிகளும் இருக்கின்றீர்கள். சகோதரர்களும் இருக்கின்றீர்கள். தயவு செய்து computer learning என்ற கணினிப் பயிற்சியைப் பெறுங்கள். ஒரு பதினைந்து நாள் முயன்றால் போதும்; நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும் கணினி பயிற்சியைப் பெறலாம்.

literacy என்று சொன்னால், எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் என்பது முன்னாலே.

ஆனால், literacy என்று சொன்னால், 21 ஆம் நூற்றாண்டிலே கணினி படிப்புப் படித்தவர் கள்தான் படித்தவர்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு கம்ப்யூட்டர் லிட்டரசி என்று வரக்கூடிய அளவிற்கு இருக்கும்.

எனவே, நீங்கள் அதற்கு முயற்சி செய்யுங்கள்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் தயார்

உங்களுக்குப் பயிற்சிகளை கொடுக்கவேண்டும் என்று விரும்பினால், எந்தெந்த மய்யங்களுக்கு கொடுக்கவேண்டும் என்று விரும்புகின்றீர்களோ அதற்கு அதிக செலவு இல்லாமல் மிகக்குறைந்த அளவிலேயே உங்களிடத்திலே வந்து பயிற்சி கொடுப்பதற்கு பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் தயாராக இருக்கிறது.

காரணம், இதிலே பயன்பெற வேண்டியவர்கள் நீதியரசர்கள். நீதித்துறையிலே இருந்தவர்கள் எல்லாம் எங்களிடத்திலே பயன்பெற்றார்கள். அங்கு வரவேண்டுமென்ற அவசியமில்லை.

சில, சில மய்யங்கள் இருந்தால் ஒரு வாரம், பதினைந்து நாள். அதிகபட்சம் போனால் ஒரு மாதத்திற்குள்ளாக நீங்கள் கணினியைப் பயின்று கொள்ளலாம்.

அடுத்து வரப் போகின்ற யுகம் இருக்கிறதே அது மின்னஞ்சல் நிர்வாகம் என்று சொல்லக்கூடியது.

மின்னஞ்சல் நிர்வாகம்

எனவே, மின்னஞ்சல் நிருவாகத்திற்கு நீங்கள் எல்லாம் இப்பொழுதே ஆயத்தமாகிவிடவேண் டும்.

இனிமேல் கட்டுக்கட்டாக கோப்புகளை எழுதி வைக்கவேண்டிய அவசியம் கிடையாது.

எல்லாமே கணினியிலே பதிவாகக்கூடிய அளவிற்கு மென்பொருளிலே (சாஃப்ட்வேர்) பதிவா கக் கூடிய அளவிற்கு வளர்ந்து கொண்டிருக்கிறது.

அதற்கும் நீங்கள் ஆயத்தம் ஆகுங்கள் என்று சொல்லி, உங்கள் பிள்ளைகளையும், உங்களு டைய குடும்பத்தவரையும் நன்றாக நீங்கள் வாழ வையுங்கள்.

சேமியுங்கள்!

அதற்கு சேமியுங்கள். தந்தை பெரியாருடைய சிக்கனம் தமிழ்நாட்டின் பொக்கிஷம் என்று சொல்வார்கள். எனவே, சேமிப்பு அவசியம்.

சம்பளத்தை உயர்த்திக் கொடுங்கள். அதிகமாகப் பெறவேண்டும் என்று கேட்பதைவிட, வருகின்ற சம்பளத்திலே உங்களுக்கு சேமிப்பு மிக முக்கியம்.

அந்த சேமிப்பையும் பெற்று, உங்கள் குழந்தை களை உங்கள் பிள்ளைகளை உங்கள் எதிர் காலத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதற்கு எல்லாம் அடிப்படையாக இந்த ஆட்சியிடம் நாங்கள் மிகுந்த நன்றியுணர்ச்சியோடு இருப்போம் என்ற உணர்வை நீங்கள் காட்டுங்கள்.

நீங்கள் அந்த நன்றியுணர்ச்சியோடு இருக்கின்றீர்கள் - இருப்பீர்கள் என்ற எண்ணத்தினாலே தான் ஒரு புதிய கோரிக்கை எழுப்பப்பட்டிருக்கிறது - சில அரசியல் கட்சிக்காரர்களாலே!

ஒரு புதிய கோரிக்கை

என்ன அந்தப் புதிய கோரிக்கை என்று சொன்னால், வருகின்ற பொதுத்தேர்தலிலே - மாநில அரசு ஊழியர்கள் தேர்தல் அதிகாரிகளாக இருக்கக் கூடாது.

மத்திய அரசு ஊழியர்கள்தான் வெளியே இருந்து வரவேண்டும் என்ற ஒரு விசித்திரமான கோரிக்கை. மத்திய அரசு ஊழியர்கள் என்பவர்கள் எங்கோ இருந்து பொத்தென்று குதித்தவர் கள் அல்ல. அவர்களும் நம்முடைய சகோதரர்கள்தான்.

என்ன தகுதி குறைந்தவர்கள்?

மாநில அரசு ஊழியர்கள் என்ன தகுதி குறைந்தவர்கள். இதிலிருந்து அவர்களுக்கு என்ன பயம் வந்திருக்கிறது - உங்களுடைய நன்றி உணர்ச்சி பலரை அச்சுறுத்தி இருக்கிறது என்பதுதான் அதற்கு அடையாளம்.

அதையும் நினைவிலே வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி, வாய்ப்பளித்ததற்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

- இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

2 comments:

Unknown said...

//தந்தை பெரியாருடைய சிக்கனம் தமிழ்நாட்டின் பொக்கிஷம் என்று சொல்வார்கள். எனவே, சேமிப்பு அவசியம்.

சம்பளத்தை உயர்த்திக் கொடுங்கள். அதிகமாகப் பெறவேண்டும் என்று கேட்பதைவிட, வருகின்ற சம்பளத்திலே உங்களுக்கு சேமிப்பு மிக முக்கியம்.

அந்த சேமிப்பையும் பெற்று, உங்கள் குழந்தைகளை உங்கள் பிள்ளைகளை உங்கள் எதிர் காலத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். //

அவசியமான நல்ல அறிவுரை

Anonymous said...

ஆண்டவா இவங்களைக் காப்பாத்து. பாவங்கள் சோத்துக்கு சிங்கி அடிக்கிறாங்கோ...