tag:blogger.com,1999:blog-1474608369333206681.post870961236704905028..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகக் கூடாதா? சோக்களுக்கு சுரீர் என்று ஏறுகிறதோ!தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-72991225199827934632013-08-05T05:40:25.926+05:302013-08-05T05:40:25.926+05:30
ஒவ்வொரு ஊரிலும் ஒரு நூலகம் இருக்க வேண்டும்- நூலகம...
ஒவ்வொரு ஊரிலும் ஒரு நூலகம் இருக்க வேண்டும்- நூலகம் இல்லாத ஊரில் குடியிருக்கக்கூடாது

ஈரோடு, ஆக.4- ஈரோடு, 03-08-2013 சனிக் கிழமை, மாலை 5.30 மணி யளவில் மக்கள் சிந்த னைப்பேரவை நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழா வை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மாண்பமை நீதியரசர் பி.சதாசிவம் அவர்கள் புத்தகத் திருவிழா அரங் கினைத் திறந்து வைத்துப் பேருரை யாற்றினார். அவரது உரையில் குறிப் பிட்டதாவது:-

ஒவ்வொரு ஊரிலும் ஒரு நூலகம் இருக்க வேண்டும், நூலகம் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது, திருமண நிகழ்ச்சி போன்றவற்றிற்கு நல்ல புத்தகம் அன்பளிப்பாக வழங்கலாம், சால்வை, மலர்கொத்து போன்ற வற்றைத் தவிர்க்கவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிறு நூலகமாவது இருக்கவேண்டும். நமது ஆசிரியர்களை மதிக்க வேண்டும், தாய், தந்தைக்கு அடுத்தபடி ஆசிரியர் கள்தான், நான் அரசு தொடக்கப்பள்ளியிலும்,அரசு உயர்நிலைப் பள்ளியிலும் படித்தேன். உயர்ந்த பதவி கிடைத்த வுடன் எனது கிராமத்திற்கு வந்து எனது ஆசிரி யர்களை ச்சந்தித்து வாழ்த்துப்பெற்றேன் என்று தெரிவித்தார். விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வே.க. சண்முகம் தலைமை தாங்கினார், தேசிய நல விழிப்புணர்வு இயக் கத்தின் தலைவர் எஸ்.கே. எம்.மயி லானந்தன் வாழ்த்துரை வழங்கி னார். அனைவரையும் வரவேற் றும் அறிமுகப் படுத்தியும், மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குண சேகரன் உரையாற் றினார். இறுதியாக மக்கள் சிந்த னைப் பேரவைச் செயலாளர் பாலு நன்றி கூற, புத்தகத் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-49570099685087996622013-08-05T05:39:50.321+05:302013-08-05T05:39:50.321+05:30
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் தமிழகம் மு...
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் தமிழகம் முன்னேறும் கலைஞர் அறிக்கை

சென்னை, ஆக.4- சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றினால் தமிழகம் முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து செல்லும் என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளி யிட்ட அறிக்கை:

நோபல் பரிசு பெற்ற அமர்த்யா சென் மற்றும் ஜீன் டி ரெஸ் ஆகிய இருவரும் சேர்ந்து எழுதிய நிலையில்லாப் புகழ் - இந்தியாவும் மற்றும் அதன் முரண்பாடுகளும் (ஹ ருஉநசவய ழுடடிசல-ஐனேயை யனே வைள உடிவேசயனஉவடிளே) என்ற புத்தகத்தைப் படித்தேன்.

அதில் இந்தியாவில் உள்ள மாநிலங்களை ஒப்பீட்டு நோக்கத்துக்காக தனித் தனி நாடுகளாகப் பார்த்தால், கேரளமும், தமிழகமும் மற்ற எல்லா மாநிலங்களையும்விட முதல் நிலையில் இருந் திருக்கும். உத்தரப் பிரதேசமும், மத்தியப் பிரதேசமும் மிகவும் கடைசி நிலையில் இருக்கும்.

பொருளாதார வளர்ச்சியிலும், வறுமைக் குறைப்பிலும் இந்தியா வெற்றிகரமான அத்தி யாயத்தைத் தொடங்கியிருக்கிறது. சர்வதேச அளவில் ஏழ்மையின் இருப்பிடமாக இந்தியா இருந்து வருவதை மறைப்பதற்கு இல்லை.

இந்தியாவில் உள்ள குழந்தைகளில் பாதிப் பேர் சத்தற்ற உணவையே சாப்பிட்டு வருகின்றனர். மிகப் பெரிய மக்கள் தொகையும், அளவுக்கு மீறிய வறுமையும்தான் இந்தியாவின் எதிரே உள்ள சவால்கள் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இந்தியாவைப் பற்றி ஆய்வு நோக்குடன் அந்த நூலில் பல்வேறு கருத்துகள் கூறப்பட்டிருந்தாலும், கேரளமும், தமிழகமும் தனி நாடாக இருந்திருந் தால் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்த நாடாகத் திகழ்ந்திருக்கும் என்ற கருத்து ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது. அதேபோல மாநிலங்கள் அனைத் தையும் ஒரே அளவில் சீர்தூக்கிடாமல், அந்தந்த மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியையும், வளர்ச்சிக்கான கூறுகளையும் அடிப்படையாகக் கொண்டு தனித்தனி அளவுகோல்கள் நிர்ணயிக்கப் பட வேண்டும் என்று கூறியிருப்பதும் சிந்திக்கத் தக்கதாகும். எனவே, சேது சமுத்திரத் திட்டம் போன் றவற்றை தடுக்க நினைக்காமல், அதனால் ஏற்படக் கூடிய நன்மைகளை மட்டும் எண்ணிப் பார்த்து நிறை வேற்ற அனைத்து தரப்பினரும் முன்வர வேண் டும். அப்படி முன்வந்தால், அமர்த்யா சென் எழுதியிருப்பதைப்போல, தமிழகத்துக்கு எதிரே உள்ள சவால்களைப் புறந்தள்ளி, முன்னேற்றப் பாதையில் வேகமாகச் செல்ல முடியும் என்று கலைஞர் கூறியுள்ளார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-67088908093618616302013-08-05T05:38:52.740+05:302013-08-05T05:38:52.740+05:30
குஜராத் வளர்ச்சிபற்றி தற்பெருமை பேசும் மோடியின் ம...
குஜராத் வளர்ச்சிபற்றி தற்பெருமை பேசும் மோடியின் முகத்திரை கிழிகிறது மனித உரிமை ஆர்வலர் ஷப்னம் ஆஸ்மியின் குற்றச்சாட்டு

சென்னை, ஆக.4- மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக் காட்டாக ஒரு முன் மாதிரி மாநிலமாக குஜராத் விளங் குகிறது என்று பெருமை பேசிக் கொள்வதை மனித உரிமை ஆர்வலர் ஷப்னம் ஆஸ்மி மறுத்தொதுக்கி நையாண்டி செய்கிறார். 2014ம் ஆண்டு நிகழவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை யொட்டி தன்னை பிரதமர் வேட்பாளராக காட்டிக் கொள் வதற்காக தான் முதல்வராக உள்ள குஜராத் மாநிலம் அனைத்து வளங்களும் பெற்று முன்மாதிரியான மாநிலமாக விளங்குவதாக நரேந்திர மோடி பிரச்சாரம் செய்து வருவதாக `ஷப்னம் ஆஸ்மி கூறியுள்ளார். மோடியின் கூற்றுகளை மக்கள் கவனமாகவும் நுணுக்கமாகவும் பார்க்க வேண்டும் என அவர் கூறுகிறார்.

ஒரு கருத்தரங்கில் பேசிய `ஷப்னம் ஆஸ்மி உண்மை நிலையை மோடியின் கூற்றுக்கு எதிராக இருப்பதாக கூறியுள்ளார். பிரதமர் வேட் பாளராக அவரை முன்நிறுத் தும் அவரது பொது மக்கள் தொடர்பு குழுவினர் கடந்த ஓர் ஆண்டாகவே குஜராத்தை பற்றி இத்தகைய உண்மைக்கு புறம்பான தகவல்களை மக் களுக்கு அளித்து வருவதாக ஆஸ்மி குற்றம் சாட்டியுள்ளார் மோடியின் பிரச்சாரங்களில் குஜராத் வளர்ச்சி பற்றி அவர்கள் அளித்து வரும் - தனிநபர் வருவாய் உயர்வு மாநிலத்தின் மொத்த உற்பத்தி திறன் வளர்ச்சி, கல்வி கற்போர் எண்ணிக்கை வளர்ச்சி குழந்தை பிறப்பின்போது தாய்சேய் இறப்பு விகிதம் குறைந் துள்ளது போன்ற சமுக பொரு ளாதார புள்ளி விபரங்கள் போலி யானவை என்று கூறும் ஆஸ்மி அவற்றை மெய்ப்பிக்க மோடி தயாராக உள்ளாரா என சவால்விட்டுள்ளார். குஜராத் மாநில லோகஆயுக்த அமைப்பின் நீதிபதியாக நீதியரசர் ஆர். ஏ. மேதா நியமிக்கப்பட்டதை எதிர்த்து குஜராத் மாநில அரசு தாக்கல் செய்த மனுவை அண்மையில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை பற்றி குறிப்பிட்ட அவர் இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கை அலுவலர் அறிக்கையில் மோடி அரசு எத்தகைய ஊழல் அரசு என்பது வெளிப்படுத்தப்பட் டுள்ளது என்று அவர் கூறினார். இந்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி குஜராத் சட்டசபை யில் தாக்கல் செய்யப்பட்ட இவ்வறிக்கையில் நிதி ஊழல் களால் - குறிப்பாக பொதுத் துறை நிறுவனங்கள் தவறாக நிருவகிக்கப்பட்டதால் - அர சுக்கு 16000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறும் ஆஸ்மி. மாநில ஆளுந ரால் நியமிக்கப்பட்ட லோகா யுக்தா அமைப்பின் நீதிபதி நியமனத்தைத் தடுத்துநிறுத்த மோடி அரசு மேற்கொண்ட முயற்சிகளை மறைக்க முயற்சிக் கும் அளவுக்கு மோடி அரசு ஊழல் புரிந்துள்ளது என்பதற்கு அத்தாட்சியாகும். நல்லிணக் கத்திற்காகவும் மக்களாட்சிக் காகவும் இப்போதே செயல் படுங்கள் என்ற அரசு சாரா அமைப்பை ஆஸ்மி நடத்தி வருகிறார். பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கூட கலவரங்கள் பல நடந்துள்ளன என்னும் நிலையில் 2002ல் நடைபெற்ற குஜராத் கலவரங் களை பற்றியே மனித உரிமை ஆர்வலர்கள் ஏன் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர் என்று ஆர்.எஸ்.எஸ். கேட்டுள்ளதாக ஆஸ்மி கூறினார். குஜராத் கலவரத்தில் மிகவும் அதிர்ச்சி அளித்த அம்சம் என்ன வென்றால் ஒட்டு மொத்த அரசு இயந்திரமும் இந்த கலவரங் களுக்கு துணைபோனது என்ப துடன் இதற்கு அரசியல் ஆதரவு அளிக்கப்பட்டு அரசியல்வாதி களே இந்த காட்டுமிராண்டி தனத்தை அரங்கேற்றி யுள்ளனர் என்பது தான். கும்பல் கும்பலாக கலவரக்காரர்கள் பெண்களை பாலியல் வன் முறை செய்தது பற்றிய பல வழக்குகளை நான் ஆவணப் படுத்தியுள்ளேன். பல்வேறு பட்ட காரணங்களிற்காக இந்நிகழ்வுகள் பற்றி அறிக் கைகள் பதிவு செய்யப்படாத தால் வெளிவராமலேயே போய் விட்டன இக்கொடுமைகள் பல்வேறுபட்ட இடங்களில் ஒரே மாதிரி நடைப்பெற்றுள்ள நடைமுறையை பார்த்தால் இவையெல்லாம் திட்டமிட்டு செய்யப்பட்டவை என்று தெரி கின்றது என்று கூறுகிறார்.

மோடியின் புகழ் பாடும் வலதுசாரி கொள்கையாளர்கள் - குறிப்பாக உயர் மத்திய தர பிரிவு மக்களிடையே சமுக வலைதளங்களில் காணப்படும் மோடியின் மீதான காதலை பற்றி ஆஸ்மி புலம்பி தள்ளினார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-73927420658725015992013-08-03T18:33:50.902+05:302013-08-03T18:33:50.902+05:30சுயராஜ்யக்கட்சிக்கு தேசத்திலுள்ள செல்வாக்கு சென்றவ...சுயராஜ்யக்கட்சிக்கு தேசத்திலுள்ள செல்வாக்கு சென்றவிடமெல்லாம் சிறுமை

சுயராஜ்யக் கட்சியார் இதுவரை தங்களுக்குத் தேசத்தில் பிரமாதமான செல்வாக்கு இருப்பதாகவும் செல்லுமிடங்களிலெல்லாம் தங்கள் கட்சிக்குப் பெரிய ஆதரவு இருக்கிறதென்றும் பறையடித்துக் கொண்டு வந்தது வாசகர்கள் அறிந்திருக்கலாம். ஆனால், இதனுடைய உண்மை கடந்த ஒருமாத காலமாக ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, ஏ. ரெங்கசாமி அய்யங் கார், பண்டித நேரு முதலிய பார்ப்பனர்கள் பிரசாரத் திற்கென்று எங்கெங்கு செல்லுகிறார்களோ அங்கெல்லாம் இவர்களது இரகசியம் வெளியாகி பொது ஜனங்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமல் கூட்டத்தைக் கலைத்து விட்டு ஓடின வண்ணமாகவே இருக்கிறார்கள்.

உதாரணமாக, கும்பகோணத்தில் ஸ்ரீமான் ரெங்க சாமி அய்யங்கார் அவர்கள் பொது தலங்களில் கூட்டம் போட முடியாமல் ஒரு கட்டிடத்திற்குள் கூட்டம் போட்டும் அங்கும் பொது ஜனங்கள் ஒரு அக்கிராசனரைப் பிரேரேபிக்க பார்ப்பனர்கள் வேறு ஒருவரைப் பிரேரேபிக்க கடைசியாய் அய்யங்கார் போலீசார் தயவு தேட வேண்டியதாயிற்று.

மதுரை, திருநெல்வேலி முதலிய இடங்களில் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யரவர்கள் சென்ற காலத்திலும் கூட்டங்களில் பொது ஜனங்கள் கேட்கும் கேள்வி களுக்குப் பதில் சொல்ல முடியாமல் கூட்டத்தைக் கலைத்து விட்டு ஓடும்படியாகி விட்டது. பண்டித நேரு அவர்களும் செல்லுகிற இடங்களிலும் கூட்டங்களிலும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார்.

இவை சுதேசமித்திரன் பத்திரிகைகளில் பார்த்தால் தென்படாது. திராவிடன், வடநாட்டுப் பத்திரிகைகளில் காணலாம். இவர்கள் பேச்சைக் கேட்க இஷ்டமில்லாத ஜனங்களும் மற்றும் கேட்கும் கேள்விகளால் இவர்களது யோக்கியதையை வெளியாக்கும் ஜனங்களும் இவர்களுக்கு ஓட்டுப் போட்டு சட்டசபைக்கு அனுப்புவார்களா? பொது ஜனங்களே யோசித்துப் பார்க்கட்டும்.

- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 07.11.1926தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-30891488755227168922013-08-03T18:33:23.896+05:302013-08-03T18:33:23.896+05:30
பார்ப்பனர்களால் வந்த வினை
மலையாளக் குடிவார மசோத...
பார்ப்பனர்களால் வந்த வினை

மலையாளக் குடிவார மசோதாவை ஒழித்து விட்டார்கள். இனி தேவதான மசோதாவை ஒழிப்பதுதான் பாக்கி. இனியும் பார்ப்பனர் களுக்காவது அவர்களால் நிறுத்தப்பட்ட ஆட் களுக்காவது சட்டசபைக்கு ஓட்டுக் கொடுப்பீர் களானால் நமது கதி அதோ கதி தான்.

மலையாளக் குடிவார மசோதா சட்டசபையில் நிறைவேற்றக் கொண்டுவந்த காலத்தில் பார்ப்பன சட்ட மெம்பரான சர். சி.பி. ராமசாமி அய்யரவர்கள் ஆணவத் தோடு மிரட்டி இச்சட்டத்தை கவர்னரைக் கொண்டு நிராகரிக்கச் செய்து அமலுக்கு வராமல் செய்து விடுவேன் என்று வீரம் கூறியது வாசகர்கள் அறிந்திருக் கலாம்.

இப்போது அவர் சொன்னது போலவே சட்டசபையில் பெரும்பான்மையோரால் நிறைவேறின இச் சட்டத்தை ஏதோ சில நொண்டிச் சாக்குகளுடன் கவர்னர் பிரபு நிராகரித்து விட்டார். நமது நாட்டில் வெள்ளைக்கார அதிகார வர்க்க ஆட்சி, பார்ப்பன ஆதிக்க வர்க்க ஆட்சி என இரண்டு கொடுமையான ஆட்சிகளின் கீழ் நாம் பாசாணத்தில் புழு இருப்பது போல் காலந்தள்ள வேண்டியவர் களாயிருக்கிறோம்.

நம்முடைய மேன்மைகளும், முன்னேற்றங்களும் வெள்ளைக்காரருக்கோ, பார்ப்பனருக்கோ தங்களது ஆதிக்கத்திற்குக் கடுகளவு இடைஞ்சல் செய்வதா யிருந்தாலும், கொஞ்சமும் தயவு தாட்சண்யம் இல்லாமல் அடியோடு நசுக்கி விடுகிறார்கள். அரசாங்கத்தார் எந்தக் கட்சி ஜெயிக்குதோ அந்தக் கட்சியைத்தான் ஆதரிப்பார்களேயல்லாமல் நியாயம் சத்தியம் என்பவை களைக் கொஞ்சமும் கவனிக்க மாட்டார்கள்.

ஆதலால் அடுத்த சட்டசபையில் பார்ப்பனரல்லாதார் கட்சி வெற்றி பெறாமல் போய் பார்ப்பனர் வெற்றிபெற ஏற்படு மானால் பாக்கி இருக்கும் தேவதான மசோதாவையும் கண்டிப்பாய் ஒழித்து விடுவார்கள். இதை உத்தேசித் தாவது இனியும் பார்ப்பனர்களுக்காவது அவர்களால் நிறுத்தப்பட்ட ஆட்களுக்காவது சட்டசபைக்கு ஓட்டுக் கொடுப்பீர்களானால் நமது கதி அதோ கதிதான்.

- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 07.11.1926தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-90476783525090900212013-08-03T18:32:49.810+05:302013-08-03T18:32:49.810+05:30கல்பாத்தி
மலையாளத்தைச் சேர்ந்த பாலக்காட்டு கல்பாத...கல்பாத்தி

மலையாளத்தைச் சேர்ந்த பாலக்காட்டு கல்பாத்தி ரோடுகளில் ஈழவர், தீயர் சகோதரர்கள் நடக்கக் கூடாது என்கிற உபத்திரவம் இருந்து வருவதும், அதில் பிரவேசிக்கப் பல வருஷ காலமாய் பலர் முயற்சித்து வருவதும் வாசகர் அறிந்திருக்கலாம். இதை உத்தே சித்து சென்னை சட்டசபையில், பொதுத் தெருக்களில் யாரும் நடக்கலாம் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றி யதும் ஞாபகமிருக்கலாம்.

அத்தீர்மானம் அமலுக்கு வருவதற்கில்லாமல் வேலையிருந்தால்தான் போக லாம் என்று சட்ட மெம்பர் வியாக்யானம் செய்ததும் ஞாபகமிருக்கலாம். ஆனால், சென்ற வருஷங்கூட தாழ்த்தப்பட்ட கனவான்களுள் பலர் செல்ல முயற்சித்தும் அவர் களுக்கு 144 உத்தரவு போடச் செய்ததும் ஞாபக மிருக்கலாம். மற்றும் சில சமயங்களில் சிலர் மீறிச் சென்று அவர்கள் பேரில் நடவடிக்கை நடத்தப்பட்டு கோர்ட்டுகளில் விசாரணையாகி விடுதலை ஆனதும் ஞாபகமிருக்கலாம்.

மற்றொரு சமயம் ஆரிய சமாஜி என்கிற முறையில் ஒருவர் சென்ற பொழுது அவரைத் தடுத்து உபத்திரவப்படுத்தியதற்காகச் சில பார்ப்ப னர்கள் பேரில் நடவடிக்கை நடத்தப்பட்டு தண்டிக்கப் பட்டதும் ஞாபகமிருக்கலாம். இப்போது இம்மாதம் கல்பாத்தியில் ரதோற்சவமான படியால் மறுபடியும் ஈழவர்கள் எங்கு பிரவேசித்துவிடப் போகிறார்களோ என்பதாக நினைத்து மலையாளப் பார்ப்பனர்கள் இப்பொழுதிருந்தே வேண்டிய சூழ்ச்சிகள் செய்து வருவதாய்த் தெரிகிறது.

அங்குள்ள ஒரு பார்ப்பன மேஜிஸ்திரேட்டு இப்போதிருந்தே 144 தடைபோட ஆசை உள்ளவராக இருக்கிறார். முடிவு என்னவாகுமென்பது தெரியவில்லை. பார்ப்பனரல்லாதார் நன்மை காங்கிரஸ் மூலம்தான் ஏற்படும் என்று சொல்லும் காங்கிரஸ் பார்ப்பனர்கள் இது சமயம் திருடனைத் தேள் கொட்டியது போல் மௌனம் சாதிக்கிறார்கள்.

பார்ப்பனரல்லாதார் கட்சியும், அவர்களுடைய பொதுமக்கள் உணர்ச்சியும் இவ்வளவு பலப்பட்டிருக்கிற போதும், சட்டங்களும் அனுகூலமாயிருக்கிற போதும், தேர்தல் சண்டை இருக்கிறபோதும் தெருவில் நடக்கும் உரிமைகூட இல்லாமல் நம்மைக் கொடுமைப்படுத்த தயாராயிருப்பார் களேயானால் இவர்கள் கைக்கு ராஜ்யமே வந்துவிட்டால் நம்மை என்ன செய்யமாட்டார்கள் என்பதை நன்றாய் யோசித்துச் சட்டசபைத் தேர்தலில் பார்ப்பனர்களுக்குத் தக்க புத்தி கற்பிக்கக் கோருகிறோம்.

- குடிஅரசு - கட்டுரை - 31.10.1926தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-47979360232032725652013-08-03T18:32:21.531+05:302013-08-03T18:32:21.531+05:30
மார்க்கெட் நிலவரம் - சித்திரபுத்திரன் -
சட்டசபை,...
மார்க்கெட் நிலவரம் - சித்திரபுத்திரன் -

சட்டசபை, ஓட்டு ஒன்றுக்கு 1 முதல் ரூ.5

ஒரு கிராமத்தின் மொத்த ஓட்டுகளுக்கு மணியக் காரருக்கு ரூ.100

கணக்குப் பிள்ளைக்கு ரூ.50

பள்ளிக்கூட உபாத்தியாயருக்கு ரூ.25

கிராமாந்திரங்களில் செல்வாக்குள்ள குடித்தனக் காரருக்கு ரூ.5000 முதல் 15000 வரை கடன்

முனிசிபல் சேர்மென்களுக்குரூ.1000 முதல் ரூ.1500 வரை கடன்

வைஸ்சேர்மென்களுக்கு ரூ.250 முதல் ரூ.500

போலீஸ் ஆபீசர்கள் நிலவரம், பஜாரில் இன்னும் புதுசரக்கு வராததால் வாங்கு வாரில்லை.

முனிசிபல் ஓட்டுகளுக்கு, இவ்வாரம் ஓட்டு ஒன்றுக்கு ரூ. 5 முதல் ரூ. 15 வரை

சேர்மென்களுக்கு ரூ.150

வைஸ்சேர்மென்களுக்கு ரூ.250

20 ஓட்டு 30 ஓட்டுள்ள தொகுதிகளில்,

ஓட்டு ஒன்றுக்கு ரூ.150 முதல் ரூ.250 வரை

*போலிங் ஆபீசர்கள் விஷயம், கேட்போருக்கு மாத்திரம் தெரிவிக்கப்படும்.

பஜார் நோக்கம் இன்னமும் தொகை உயரும் போல் இருக்கிறது.

- குடிஅரசு - விமர்சனம், 17.10.1926தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-53721110991365503162013-08-03T18:29:32.657+05:302013-08-03T18:29:32.657+05:30
சென்னை அய்.அய்.டியில் நடைபெற்றுள்ள அத்தனை குறைபாட...
சென்னை அய்.அய்.டியில் நடைபெற்றுள்ள அத்தனை குறைபாடுகளையும் சி.பி.அய்.வெளியில் கொண்டு வர வேண்டும் தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை, ஆக.3- சென்னை அய்.அய்.டி.யில் நடைபெற்ற அத்தனை குறைபாடுகளையும் சி.பி. அய். விரைந்து விசாரணை நடத்தி வெளியில் கொண்டு வரவேண்டும் என சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய தலைவர்கள் வலியுறுத்தினர்.

சென்னை பெரியார் திடலில் உள்ள எம்.ஆர். ராதா மன்றத்தில் நேற்று (2.8.2013) மாலை 6.30 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில், சென்னை அய்.அய்.டி.யில் சமூக அநீதி தொடரலாமா? உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு என்ற தலைப்பில் சிறப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு வந்தவர்களை திராவிடர் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்று பேசினார். அகில இந்திய பிற்படுத்தப் பட்டோர் கூட்டமைப்பின் தலைவர் கோ.கருணா நிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிருவாகி வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., திராவிட முன்னேற்றக்கழக அமைப்பு செயலாளரும், நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்டோர் நிலைக்குழு உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகி யோர் பங்கேற்று உரையாற்றினார்.

கோ.கருணாநிதி

1961ஆம் ஆண்டு முதல் சென்னையில் தொடங் கப்பட்டு நடைபெற்று வரும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சென்னை அய்.அய்.டி கல்வி நிறுவனம் என்பது மத்திய அரசின் மனித வளமேம்பாட்டுத் துறை என்ற கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஒரு மத்திய கல்வி நிறுவனமாகும்.

இந்த கல்வி நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து பேராசிரியர்களும் பார்ப்பனர்கள் ஆவர். இவர்கள் மத்தியில் பல ஆண்டுகளாக பணி யாற்றி, சமூகநீதிக்காக போராடி பதவி உயர்வை தற் போது பெற்றுள்ளவர் டாக்டர் வசந்தா கந்தசாமி ஆவார்.

இக்கல்வி நிறுவனத்தில் தகுதியில்லாத பார்ப்பனர்களுக்கு அங்கு பதவி அளிக்கப்பட்டு, தகுதியுள்ள நம் வசந்தா கந்தசாமிக்கு பதவி உயர்வு அளிக்கப்படாமல் புறக்கணித்த நிலையில், தற்போது நீதிமன்றம் சென்று வாதாடி பதவி உயர்வு பெற்றுள்ளார். அவருக்கு சமூகநீதி அடிப்படையில் தீர்ப்பு வழங்கிய நீதியரசருக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

தோழர் வீரபாண்டியன்

கடந்த 25 ஆண்டுகளாக நீதிமன்ற படிக்கட்டு களை ஏறி, இறங்கி நியாயமான தீர்ப்பை பெற்ற வீராங்கணை வசந்தா கந்தசாமி அவர்களை பாராட்டுகிறேன். சமூக நீதிக்காக உலத்திலேயே 80 ஆண்டுகளாக விடுதலை நாளிதழ் நடத்தப் படு வதும், அதற்கு 52 ஆண்டுகள் ஆசிரியராக பணி யாற்றி வரும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகத்தில் உண்மையான சுயமரியாதை இயக்கம் நடத்தியவர் தந்தை பெரியார்தான். தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர், அய்யோத்தி தாசர் ஆகியோர் கருத்துகளை தொடர்ந்து பரப்பி அதன் மூலம் இதுபோன்ற சமூக அநீதிகளை எதிர்க்கவேண்டும் என்றார்.

தொல்.திருமாவளவன்

1988ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை தொ டர்ந்து சட்ட பூர்வமாக நீதிமன்றம் சென்று போரா டிய, வெற்றி பெற்றுள்ள சென்னை அய்.அய்.டியின் கணிதத்துறை பேராசிரியர் வசந்தா கந்தசாமி அவர்களை வாழ்த்துகிறேன் பாராட்டுகிறோம்.

சமூகநீதியின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதியரசர் எஸ்.நாக முத்து அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இதன் மூலம் சென்னை அய்.அய்.டியில் நடைபெற்றுள்ள முறை கேடுகளை வெளியே கொண்டு வர உயர்நீதிமன்றம் வழி வகுத்துள்ளது.

600-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி தாள்களை வெளியிட்டுள்ளவர், பல ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்கியவர் வசந்தா கந்தசாமி. அப்படிப் பட்டவருக்கு அநீதி இழைத்துள்ளனர். எப்படி இந்த நீதிமன்ற தீர்ப்பை மதிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.

இந்த தீர்ப்பை வைத்து குடியரசுத் தலைவருக்கு மனு கொடுக்க வேண்டும் என்று தமிழர் தலைவர் விடுத்த வேண்டுகோளை ஏற்று குடியரசுத் தலை வரை நேரில் சந்தித்து விரைவில் மனு கொடுப்பேன் என்றார்.

டி.கே.எஸ். இளங்கோவன்

இந்த பிரச்சினையில் அய்.அய்.டி. சார்பாக வாதிட்ட வழக்குரைஞரின் வார்த்தைகள் ஒவ் வொன்றிற்கும் நீதியரசர் சரியான பதிலளித்திருக் கிறார். சென்னை அய்.அய்.டியில் திட்டமிட்டு ஆசிரியர், துணை பேராசிரியர், பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகளை செய்துள்ளனர். எனவே இதுபோன்ற முறைகேடுகள் இனி நடை பெறாமல் இருக்க பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட மக்களிடையே ஒற்றுமையை உருவாக்கிக் கொண்டால் நாம் எல்லாம் நல்ல நிலைக்கு வருவோம்.

இதுபோன்ற முறைகேடுகள் சிவில் சர்வீஸ் தேர்வுகளிலும் நடந்துள்ளது. எனவே இந்தப் பிரச்சினைக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி போராடுவோம் என்றார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-87359076213202818202013-08-03T18:27:14.962+05:302013-08-03T18:27:14.962+05:30
புரோகிதம் செய்வதும், அர்ச்சகரா வதும் இயல்பாக வர வ...
புரோகிதம் செய்வதும், அர்ச்சகரா வதும் இயல்பாக வர வேண்டியது என்று கூறுகிற அதே நேரத்தில் சங்கீதம், நடனம் போன்றதுதான் என்றும் கூறுகிறார். சமஸ்கிருத, சாஸ்திர அறிவு தேவை என்றும் இவற்றை வகுப்பெடுத்து சொல்லித் தந்துவிட முடியாது என்றும் கூறுகிறார். சங்கீதம், நடனம், சமஸ் கிருதம் போன்ற எதுவானாலும் ஆர்வமும், பயிற்சியும் இருந்தால் கற்றுக் கொள்ளக் கூடியவையே. இத்துறைகளின் நிபுணர் கள்கூட ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்து இது என்பதோடு அப்படி சாதித்தவர் களும் எவ்வளவோ பேர் இருக்கின்றனர். வழிபடுகிறவர்களும் புரிந்து கொண்டு அந்த வழிபாட்டில் ஈடுபட அந்த வழி பாட்டை நடத்துகிறவரான அர்ச்சகர் எளிமையான மக்களின் மொழியில் அதைச் செய்தால் அது இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து. அர்ச் சனைக்கான சுலோகங்களைத் தமிழில் மொழிபெயர்த்து அதைப் படித்துப் பார்க் கும்போது எவ்வளவு ஆனந்தமாகவும், எளிமையாகவும் இறைவனோடு நெருக் கத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது என்பதை மறுக்க முடியுமா? அந்த ஆன் மீக அனுபவத்தை ஏன் நாம் மற்றவர் களுக்கு மறுக்க வேண்டும்? ஆன்மீக அனுபவம்தான் புனிதமானதும், முக்கிய மானதுமேயன்றி மொழி என்பது ஒரு தொடர்புக்கருவியே என்பதை உணர்ந்து கொண்டால் குழப்பமில்லை. சமஸ்கிருத அர்ச்சனை என்பது மக்களின் விருப்பம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அர்த்தம் புரிகிற வழிபாட்டைவிட அர்த்தம் புரியாத வழிபாட்டை மக்கள் விரும்பு கிறார்கள் என்பது உண்மையானால் அந்த நிலை மாற்றப்பட வேண்டும். குழந்தைகள் ஆங்கில வழியில் படிப்பதும், நம் இறைவழிபாட்டை சமஸ்கிருதத்தில் செய்வதும் சமமானதல்ல. முதலாவது வேலை வாய்ப்பு மற்றும் வாழ்க்கைத் தேவைகள் சார்ந்தது. ஆனால் இறை வழிபாடு என்பது, உள்ளுணர்வு, இறை யனுபவம், பக்தி, கடவுளோடு நெருங்கிய உறவு, வாழ்க்கை நெறி ஆகியவை தொடர்பானது. சுயநலம், ஊழல், பொய், ஏமாற்று, வஞ்சகம் ஆகியவை பெருகி யுள்ள இந்த காலங்களில் இறைபக்தி மற்றும் இறையனுபவமே அவற்றை மாற்றும் வழி என்பதும் புரிந்த மொழியில் வழிபாடு அதற்கான ஒரு மிகப் பெரிய வாய்ப்பு என்பதிலும் சந்தேகமில்லை. திராவிடர் கழகத்தில் இருக்கிறவர்களையெல்லாம் தலைவராக்குங்கள் என்றோ செயலாளர் ஆக்குங்கள் என்றோ போராடினால் என்னவாகும்? என்று துர்வாசர் கேட் கிறார். ஆர்வமும், தகுதியும் இருந்தும் ஒருவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டால், அது திராவிடர் கழகமானாலும், ஆன் மீகத் தலமானாலும், அவருக்கு இழைக் கப்படுவது சமூக அநீதியே என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஜாதியின் அடிப்படையில் இழிவுபடுத் துவதும், தனிமைப்படுத்துவதும், ஒதுக்கப்படுவதும், மாற வேண்டும். அதற்கு முதலில் தேவை, வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்புகள் அளிப்பதே. மொழி, தரம், முறைகள் ஆகியவற்றில் உள்ள குறைகள் நாளடைவில் பயிற்சிகளின் மூலம் சரி செய்து கொள்ள முடியும். இத்தகைய போராட்டங்களைக் குறை சொல்வதும் அதைச் செய்கிறவர்களை அவர்களின் பல்வேறு குறைகளைக்கூறி மற்ற தோல்விகளைச் சுட்டிக் காட்டி தனிப்பட்ட முறையில் வெறுப்போடு விமர்சிப்பதைவிட, அத்தகைய கோரிக்கையின் பின்னணி என்ன, அதில் உள்ள நியாயம் என்ன என்கிற பட்சத்தில் அதைச் செயல்படுத்தும் வழி என்ன என்று அலசி ஆலோசனை சொல்வதோ, ஆதரிப்பதோ சிறப்பான தாயிருக்கும்.
- ரமேஷ்குமார், பெங்களூரு

குறிப்பு: கட்டுரை ஆசிரியரின் கருத்துக்கள் சிலவற்றில் மாறுபாடு நமக்கு உண்டு என்றாலும். நம்பிக்கை யாளர் ஆன்மீகக் கண்ணோட்டத்தில் துக்ளக்கை எதிர்த்து தம் சிந்த னையை வெளிப்படுத்தியுள்ளார்.

- ஆர்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-15630348388280379582013-08-03T18:27:05.171+05:302013-08-03T18:27:05.171+05:30துக்ளக்குக்கு ஓர் ஆன்மீகவாதியின் மனம் திறந்த மடல்
...துக்ளக்குக்கு ஓர் ஆன்மீகவாதியின் மனம் திறந்த மடல்

அன்புள்ள துக்ளக் ஆசிரியர் அவர்களுக்கு,

24.7.2013 தேதியிட்ட துக்ளக் இதழில் எல்லோரும் திராவிடர் கழகத் தலைவர்களே! என்ற துர் வாசர் எழுதிய கட்டுரை படித்தேன். இறை வழிபாடு என்பது அனை வருக்கும் உரித்தான ஒரு ஆன்மீகச் செயல்பாடு என்பதால் அது ஒரு தனிப்பட்ட சாதிப்பிரிவினருக்கு மட்டும் உரியதல்ல என்பதை நிலை நாட்டவும் சாதியை ஒரு இழிவாகக் கூறி கோயில் நுழைவு மறுக்கப்பட்ட நிலையை அடியோடு மாற்றவும் திராவிட இயக்கம் முன்னெடுத்த முயற்சிதான்அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கோரிக்கை. இறைவழிபாட்டின் அர்த்தம் உணர்ந்து உள்ளுணர்வுடன் அதைச் சொல்லும்போது முழுமையான மனநிறைவு கிடைக்கவும் அதில் பயன்படுத்துகிற அறம், நெறி, அன்பு போன்ற விழுமியங்களை காதில் கேட்கும்போது இறைவனுடன் நெருக்கமும், வழிபாட்டு அறத்தை வாழ்வியல் அறமாக மாற்றிக் கொள்ளவுமே தமிழ் வழிபாடு என்ற கோரிக்கை முன் வைக்கப்படு கின்றது. கட்டுரையாளர் தமது தனிப் பட்ட கோபத்தையும், பகடியையும் கட்டுரை முழுக்க வெளிப்படுத்தியி ருக்கிறார். அர்ச்சகர் பயிற்சி முடித்த வர்கள் வேறு வேலை செய்வதனால் அந்தத் திட்டமே வீண் என்று சொல்வது ஆசிரியர் பயிற்சி போன்ற வெவ்வேறு பயிற்சிகளை முடித்தவர்கள் வாய்ப்பு கிடைக்கும் வரை, வாழ்க்கைத் தேவைக்காக வேறு பணிகளை செய்தால் அவர்களுக்கான பயிற்சித் திட்டமே வீணானது என்று கூறுவது போன்றதாகும்.
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-72372939702330601222013-08-03T18:25:44.256+05:302013-08-03T18:25:44.256+05:30
மூடனே!
கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிச் சோம்ப...
மூடனே!

கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிச் சோம்பித் திரிந்துகொண்டு, தொட்டதற்கெல்லாம் கடவுள்மீது பழிபோட்டுத் திரிகின்றவன் ஒரு மூடனே! - (விடுதலை, 1.2.1969)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-6628490297975865102013-08-03T18:25:11.428+05:302013-08-03T18:25:11.428+05:30ஆசிரியருக்குக் கடிதம் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்...
ஆசிரியருக்குக் கடிதம் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம்

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் 30-ஆம் மாத நிகழ் வாக நடைபெற்ற டாக்டர் கலைஞர் அவர்களின் 90 ஆவது பிறந்தநாள் கருத்தரங்கம் மற்றும் பன்மொழிப்புலவர் அப்பாதுரையார் படத்திறப்பு விழாவில் ''மானமிகு சுயமரியாதைக்காரர்'' என்கிற தலைப்பில் திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு அவர்கள் பங்கேற்று மிகச் சிறப்பான ஆய் வுரையை நிகழ்த்தினார். டாக்டர் கலைஞர் அவர்கள் திராவிடர் இயக்கத்திற்கு ஆற்றிய பணிகள் குறித்தும், தமிழின எழுச்சிக்கு திராவிட இயக்கம் செய்த தொண் டுகள் குறித்தும் பல்வேறு வரலாற்றுப் பதிவுகளை தொகுத்து மிக சிறப்பா னதொரு கருத்துரையை ஆற்றினார் .அவ்வுரையை உலகத் தமிழர்கள் அனைவரும் அச் செய்தியினை அறிந்து கொள்ளும் வண்ணம் விடுதலை நாளேட்டில் தொடர்ந்து 6 கட்டுரைகளாக வெளியிட்ட விடு தலையின் ஆசிரியர் அவர்களுக்கும், திராவிட இயக்க ஆய்வாளர் க. திரு நாவுக்கரசு அவர்களுக்கும் ஊற்றங் கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் விரைவில் டாக்டர் கலைஞர், தமிழர் தலைவர் அவர் களின் அணிந்துரையை பெற்று ''மானமிகு சுயமரியாதைக்காரர்'' என்கிற தலைப்பில் புத்தகமாக வெளி யிடுகிற முயற்சியை விரைவில் ஊற்றங் கரை விடுதலை வாசகர் வட்டம் மேற்கொள்ளும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

- தணிகை ஜி. கருணாநிதி தலைவர் , ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் மாவட்டஅமைப்பாளர்,

திமுக பகுத்தறிவு கலை இலக்கிய பேரவைதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-21973231556841796372013-08-03T18:18:56.210+05:302013-08-03T18:18:56.210+05:30
இறையனார்பற்றி இன்குலாப்
அந்த அமீதியா ஆரம்பப் பா...
இறையனார்பற்றி இன்குலாப்

அந்த அமீதியா ஆரம்பப் பாடசாலையில்தான் அப்பொழுது பேராசிரியர் அ. இறையன் அவர்களும் பணியாற்றினார். அவர் எனக்கு நேரடியாக வகுப்புகள் எடுக்காவிட்டாலும் அவர் கூட்டங்களில் நிகழ்த்திய உரைகளால் ஈர்க்கப்பட்டிருந்திருக்கிறேன்.

(பேராசிரியர் அ. இறையனார் திராவிடர் கழகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தார். பெரியார் சிந்தனைகளுக்குத் தெளிவும், உணர்வும் மிக்க உரை விளக்கம் செய்தவர். திராவிடர் கழகத் தலை மையகம் அமைந்துள்ள சென்னை - _ பெரியார் திடலில் சுயமரியாதைத் திருமண நிறுவனத்தை இறைய னாரின் துணைவியார் திருமகள் பொறுப்பாளராக இருந்து நடத்தி வருகிறார். நூற்றுக்கணக்கான சாதி மறுப்பு, சுயமரியாதைத் திருமணங் களை இந்நிறுவனம் நடத்தி வைத் துள்ளது. என் இளையமகன் இன்குலாபுக்கு இந்த நிறுவனத்தின் மூலமாகத்தான் மணப்பெண்ணைத் தேர்வு செய்தோம்).

காக்கை சிறகினிலே மாத இதழில் ஆகஸ்டு 2013 - _ தோழர் இன்குலாப்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-81456514842343384612013-08-03T18:17:24.885+05:302013-08-03T18:17:24.885+05:30நமது பத்திரிக்கை
பள்ளிக்கூட படிப்பில்லாமலும் பத்த...நமது பத்திரிக்கை

பள்ளிக்கூட படிப்பில்லாமலும் பத்திரிகை அனுபவம் சிறிதுமில்லாமலும் உள்ள நிலையில் இப்பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டதும் நமக்கெதிராக அநேக பத்திரிகைகள் ஒன்று சேர்ந்து சதியாலோசனை செய்து எதிர்த்துக் கொண்டிருந்தன.

உதாரணமாக நமது பத்திரிகை விளம்பரத்தைக்கூட எவ்வளவு பணம் கொடுத் தாலும் விளம்பரப்படுத்த சுதேசமித்திரன் நவசக்தி போன்றவை மறுத்து விட்டன.

பத்திரிகை வெளிப்படுத்தும் விஷயத்தில் தபால் ரயில் இலாகாவிலும்கூட சகிக்க முடியாத தொல்லைகள் அனுபவிக்க வேண்டியதாயிற்று.

(குடிஅரசு தொகுதி 8 177ஆம் பக்கத்தில் இருப்பது)

-_ க. பழநிசாமி, தெ. புதுப்பட்டிதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-50956650657555510792013-08-03T18:16:55.342+05:302013-08-03T18:16:55.342+05:30
பெரியார் - அவர் புகழைப் பாடு...!
தாடிப் பெரியார...
பெரியார் - அவர் புகழைப் பாடு...!

தாடிப் பெரியாரைச் சாந்துணையும் தொண்டாற்றிக்
கோடிப் பயன்விளைத்த கோமகனை -_ நாடுங்கள்
நெஞ்சில் நினையுங்கள்! நம்முடைய ஈனங்கள்
பஞ்சாய்ப் பறந்துவிடும் பார்.
பேருக்கே நாம்தமிழர் பிச்சைக்கே நாம்தமிழர்
நாருக்கும் கேடின்று நம்நிலைமை -_ ஊர்தோறும்
வெண்தாடி வேந்தர் வரலாற்றைக் கற்பிப்போம்
காண்போம் எழுச்சி கனிந்து.
வள்ளுவர்க்குப் பின்வந்த தெள்ளுதமிழ்ச் சீயம்
கள்ளத் தனத்தார்க்குக் காட்டுத் தீ _ வெல்ல
வரும்பகையின் வால்நறுக்கி ஓடவிட்டார்: என்றும்
பெரியார்! அவர் புகழைப் பாடு.

- கவிமாமணி முனைவர் வேலூர் ம. நாராயணன்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-89521774046106582872013-08-03T18:14:59.408+05:302013-08-03T18:14:59.408+05:30
மோடி ஆட்சியில் பொருளாதார வளர்ச்சியா? தேசிய சாம்பி...
மோடி ஆட்சியில் பொருளாதார வளர்ச்சியா? தேசிய சாம்பிள் சர்வே அம்பலப்படுத்தியது

மாநில முதல்வர்களிடம் ஒரு புதுப்போக்கு காணப்படுகிறது. சிலருக்கு தேசிய ஆசை இருக்கிறது அவர்கள் தங் களது முன்னேற்ற மாதிரிகளை வீறு கொண்டு முரசறைந்து வருகின்றனர். ஒரே கட்சியைச் சேர்ந்த மாநில முதல் வர்கள் சில நேரங்களில் தனிமனிதச் செயல் வீரர்களாகி விடுகின்றனர். ஆனால் அந்த மாநிலங்களின் மக்கள் எவ்வாறு செயல்படுகின்றனர்? ஒரு குறிப்பிட்ட மாதிரி மற்றதை விடச் சிறந்ததா என்ற கேள்விகள் எழுகின்றன.

அதைக்கண்டு பிடிப்பத்தில் ஒரு முறை: சராசரியாக ஒரு மனிதன் ஒரு மாதத்தில் எவ்வளவு செலவு செய் கிறான் என்பது. இது மக்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டாகும். நுகர்வோர் பற்றி அண்மையில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள், பத்தாண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டவற்றுடன் ஒப்பீடு செய்யப்பட்டால் எந்த மாநில அரசு பயன் அளித்திருக்கிறது அல்லது கீழே தள்ளியிருக்கிறது என்பது தெளிவாகும்.

சில ஆச்சரிய விவரங்களைப் பார்ப் போம்.

கிராமப்புறச் செலவினங்களில் தரவரிசைப் பட்டியலில் குஜராத் நான்காம் இடத்திலிருந்து 8-ஆம் இடத்திற்கு இறங்கி இருக்கிறது. நகர்ப்புறச் செலவினத்திலிருந்து 7ஆம் இடத்திலிருந்து 9ஆம் இடத்திற்கு இறங்கியிருக்கிறது. இது தேசிய சாம்பிள் சர்வே நிறுவனம் கொடுத்துள்ள புள்ளி விவரம் அதன் அடிப்படையில் 2011-_12 மற்றும் 1999-_2000 ஆண்டுகளின் ஓப்பீட்டு ஆய்வில் இந்த உண்மை வெளியாகியிருக்கிறது.

பொருளாதார வளர்ச்சியைப் பற்றி குஜராத் ஏகமாக விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் பொரு ளாதாரத்தரத்தில் இறங்கிக் கொண்டே இருக்கும் மாநிலங்களில் அதுவும் ஒன்றாக இருக்கிறது. 2011-_2012, 1999-_2000 ஆகிய ஆண்டுகளின், ஒரு தனி மனிதனின் மாதாந்திரச் செலவுக் கணக்கை ஒப்பீடு செய்து ஆராய்ந்தால், குஜராத் மக்களின் நுகர் பொருள் செலவு மிகக்குறைவான அளவீட்டி லேயே வளர்வது தெரியவரும்.

நன்கு செயல்படும் மாநிலமாக ஆந்திரா விளங்குகிறது. 2000-இல் 11-ஆம் இடத்திலிருந்து 2012-இல் அய்ந்தாம் இடத்திற்கு கிராமப்புற செலவு வளர்ச்சியில் முன்னேறியிருக்கிறது. நகர்ப்புற வாசிகளின் செலவு முறையில் 11-ஆம் இடத்திலிருந்து ஆறாம் இடத்திற்கு முன்னேறியிருக்கிறது.

தரவரிசைப்பட்டியலில் பெரும் மாற்றம் அடைந்துள்ள மற்றொரு மாநிலம் தமிழ்நாடு. நகர்ப்புற தனி மனித வருமானத்தில் இரண்டாம் இடத்திலிருந்து ஏழாம் இடத்திற்கு இறங்கி இருக்கிறது. ஆனால் கிராமப் புற செலவுகளில், ஆறாம் இடத்திலிருந்து நான்காம் இடத்திற்குத் தரம் உயர்ந்து இருக் கிறது.

கிராமப்புற பொருளாதார வளர்ச் சியில் கேரளா, பஞ்சாப், ஹரியானா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, முதல் ஐந்து மாநிலங்களாக இடம் பிடித்திருக்கின் றன.

ஹரியானா, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப் ஆகிய 5 மாநி லங்கள் நகர்ப்புற பொருளாதார வளர்ச்சியில் முதல் 5 இடம் பெற்ற மாநிலங்கள்.

அந்தக்கால கட்டத்தில் வீட்டுச் செலவுக்கான வளர்ச்சி விகிதத்தின் உண்மை நிலையும் பிரதிபலிகின்றது. தேசிய அளவில் தனி மனிதனின் செலவு வளர்ச்சி கிராமப்புறங்களில் 165 விழுக்காடு ஆகவும் 2000--_2012 ஆண்டு களில் இருந்தது.

தேசிய சராசரியை விட நகர்ப்புற குடும்பங்களின் வருமானம் குறைந்து இருக்கும் மாநிலங்களில் குஜராத்தும், ராஜஸ்தானும் உள்ளன (177 விழுக் காடு) ஆனால் அவை உத்தரபிரதேசம், மேற்குவங்கம் ஆகிய வற்றைவிட குறைவான தாகவும், அஸ்ஸாம், தமிழ் நாடு ஆகியவற்றுடன் உயர்ந்தும் இருக்கிறது.

கிராமப்புறம் குடும் பங்களில் குஜராத்தில் தனி நபர் வருமானம் 165 விழுக்காடாக உயர்ந்துள் ளது. அது தேசிய அள வான 170 விழுக்காட்டை விடக்குறைவு. பல ஏழ்மை மிகுந்த மாநிலங்களான உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஒடிசா ஆகிய வைகளும் தேசிய சராசரியை விடக் குறைந்த வருமானம் கொண்டவையே. ஹரியானாவிலும் கூட கிராமப்புற வருமானம் தேசிய சராசரியை விட சற்றே அதிகம்.

சுருக்கமாகச் சொன்னால் அதிக செலவுக்குண்டான வருமானம் உடைய வளர்ச்சியற்ற மாநிலங்கள், ஆந்திர பிரதேசம், கேரளா, பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா ஆகும். இவை கிராம மற்றும் நகர்ப்புற வருமானங்களில் வளர்ச்சி பெற்றவை.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-17888717411069923832013-08-03T18:12:31.984+05:302013-08-03T18:12:31.984+05:30பர்தாவா? டிரவுசரா?
ஜூலை 14 அன்று புனேவில் உள்ள ஃப...பர்தாவா? டிரவுசரா?

ஜூலை 14 அன்று புனேவில் உள்ள ஃபெர்குசன் கல்லூரியின் நிரம்பி வழிந்த அரங்கத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உரையாற்றினார். 30 நிமிட உரையில் காங்கிரஸ் போலி மதச்சார்பின்மையை கடைபிடிப்பதாகக் கூறித் தாக்கினார். காங்கிரஸ் அரசு எப்போதெல்லாம் தோல்வியுறுகிறதோ, எப்போதெல்லாம் அதன் தவறுகள் வெளிச்சத்துக்கு வருகின்றனவோ அப்போதெல்லாம் மதச்சார்பின்மை என்ற முகத்திரைக்குள் ஒளிந்து கொள்கிறது காங்கிரஸ். இதை கேள்வி கேட்காமலேயே இருக்க முடியாது என்றார் மோடி. 1,400 கி.மீ.க்கு அப்பால் ரோடக் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான தீபேந்தர் சிங் ஹூடாவின் தில்லி இல்லத்தில் இருந்த 4 ஆய்வாளர்கள் உடனடியாக பதிலடியில் இறங்கினார்கள். ஹூடாதான் கட்சியின் சமூக வலைத்தள உத்திகளைக் கையாள்பவர். இவற்றில் இயங்கும் திக்விஜய் சிங், சசிதரூர், மணிஷ்திவாரி, அஜ்ய்மேக்கன் போன்றோருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து மோடிக்கு உரிய பதில் தர கேட்டுக் கொள்ளப்பட்டது. சமூக வலைத் தள ஆய்வுக் குழுவிடமிருந்து எல்லா தலைவர்களுக்கும் நாம் காக்கி டிரவுசர் என்ற பதத்தை வைத்து மோடியை தாக்க வேண்டும் என்று குறுஞ்செய்தி பறந்தது. மாலைக்குள் தரூர் எதிர்வினை எழுதி அனைவருக்கும் அனுப்பினார். மதச்சார்பின்மை என்கிற பர்தாவுக்குள் நாங்கள் ஒளிந்து கொள்வதாக மோடி சொல்கிறார். சகிப்பின்மை மற்றும் வெறுப்பு என்கிற அவரது காக்கி டிரவுசரைவிட இது தேவலாம் என்றது ட்வீட்.

அன்று தாக்குதல் மேலும் கூர்மைப்பட்டது. 10.30 மணிக்கு திக் விஜய் சிங், மோடியின் பர்தா பேச்சுக்கு எதிர்வினையாக பண்டல்கண்ட் கவிஞர் அகில் அர்ஜரியாவின் இந்தி கவிதையொன்றை ட்வீட் செய்தார். 12 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு மய்யத்தின் தலைவரான அஜய்மேக்கன் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். உண்மையின் தாக்குதல் என்று பெயருள்ள இந்த முயற்சி சூடு பிடித்து. ஜூலை 22 அன்று ராகுல் காந்தி சற்றே மாறுபட்ட அறிகுறி காட்டினார். நாடு முழுவதுமிருந்து வந்திருந்த 240 தொண்டர்கள் கலந்து கொண்ட 2 நாள் தில்லி பயிலரங்கில் பேசிய ராகுல் ஒரே குரலில் பேசுங்கள். ஒற்றுமையாய் இருங்கள். பாசிடிவான அரசியலில் கவனம் செலுத்துங்கள் என்றார் மோடி குறித்த கவலையோ, அவரை ஒரு சவாலாகவோ காங்கிரஸ் பார்க்கவில்லை.

- இந்தியா டுடே 7.8.2013தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-69985716020048550572013-08-03T05:58:53.738+05:302013-08-03T05:58:53.738+05:30சாயிபாபா பற்றி ரஜனீஷ்?
பெண் இன்பத்தின் மூலமே இறைவ...சாயிபாபா பற்றி ரஜனீஷ்?

பெண் இன்பத்தின் மூலமே இறைவனை அடைய முடியும் என்பதைத் தத்துவார்த்தமாக ஆக்கிக் கொண்டிருக்கும் பக வான் என்று பக்தர்களால் போற்றப்படும் புனே சாமியார் பகவான் ரஜனீஷ் சாயிபா பாவைப் பற்றி கூறியிருப்ப தாவது: சாயிபாபா ஆணிடம் ஆண் உடலுறவு கொள்ளும் (ஹோமோசெக்ஸ்) வகையைச் சேர்ந்தவர் மட்டுமல்ல; தன்னிடமே ஆண் - பெண் உறுப்புகளைக் கொண்டுள்ளவர் Herma Phrodite) ஆவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆண் -பெண் உறுப்பு ஒருவர் கொண்டுள்ளதற்கு மண்புழுவை உதாரணமாக சொல்லி இருக்கிறார். ரஜனீஷ் (மண்புழு தன் உடலிலேயே ஆண் -பெண் ஆகிய உறுப்புகளைக் கொண்டு உடலுறவு செய்து இன விருத்தி செய்யும் பல உயிரினங்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது)

ஆதாரம்: சண்டே 11.2.1979.
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-24886140571728282042013-08-03T05:58:14.832+05:302013-08-03T05:58:14.832+05:30புரோகிதன் போடும் விலங்கு
அரசன் கைகளுக்கு விலங்கு ...புரோகிதன் போடும் விலங்கு

அரசன் கைகளுக்கு விலங்கு போடுகிறான். புரோகிதன் அறிவுக்கு விலங்கு போடுகிறான்.

-இங்கர்சால் தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-74147889332343972582013-08-03T05:57:45.123+05:302013-08-03T05:57:45.123+05:30
விஞ்ஞானியும் பார்ப்பானும்
ஒரு விஞ்ஞானி தன் ஆராய...
விஞ்ஞானியும் பார்ப்பானும்

ஒரு விஞ்ஞானி தன் ஆராய்ச்சி சாலையில் கண் டறிந்த உண்மையானது, மறு நாளே விளையாட்டுச் சாமான் செய்யும் தொழிலாளியையும் கூட 8 அணா சம்பாதிக்க வைக் கும்படி மேல் நாட்டில் வசதி ஏற்பட்டிருக்கிறது.

நமது நாட்டிலோ கோயில் பார்ப்பனன் ஏற்பாடு செய்த புஷ்பப் பல்லக்குக்கு மறுநாளே ஆயிரக்கணக் கான மைல் தூரமுள்ள ஏழைகளின் பணத்தையும் இழக்க வசதி உண்டு.

- புரட்சிக்கவிஞர்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-27025870587438294442013-08-03T05:56:54.992+05:302013-08-03T05:56:54.992+05:30
பாத பூஜைக்கு வேண்டிய சாமான்கள்
மஞ்சள் பொடி -10 ...
பாத பூஜைக்கு வேண்டிய சாமான்கள்

மஞ்சள் பொடி -10 கிராம், குங்குமம் - 100 கிராம், பசும்பால் -அரை லிட்டர், பசும்தயிர் - அரை லிட்டர், தேன் - 250 கிராம், அ.ஜீனி (சர்க்கரை) - 250 கிராம், திராட்சை - 250 கிராம், பேரீட்சை - 250 கிராம், வாழைப்பழம் - 25, தேங்காய் - 4, வெற்றிலை -25, பாக்கு -10 கிராம், உதிரி புஷ்பம் - 2 அல்லது 4 கிலோ கிராம், அரை முழம் புஷ்ப மாலை -2, பழவகைகள்: (ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி), நிவேதனம்: சர்க்கரைப் பொங்கல் (அல்லது) ரவா கேசரி, வடை.

குறிப்பு: (வஸ்திரம் சமர்ப்பணம் செய்வதாக இருந்தால்), சிறீசிறீ மஹாசந்நிதானம் அவர்களுக்கு மல் 10மீ சிறீசிறீ சந்நிதானம் அவர்களுக்கு ஜரிகை வேஷ்டி 8 முழம் 1 ஜோடி.

3.4.1980 அன்று உடுமலைக்கு வருகை தந்த சிருங்கேரி சங்கராச்சாரியாருக்கு பாதபூசை செய்ய விரும்புபவர்கள் மேற்கண்ட பொருள்களுடன் வரவேண்டுமென்று உடுமலையில் துண்டு வெளியீடு அச்சிடப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. (மாடர்ன் பிரிண்டர்ஸ், உடுமலை),

பாத பூசை செய்ய இவ்வளவு பொருள்களாம் உருப்படுமா நாடு?தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-69441984375297834742013-08-03T05:56:19.706+05:302013-08-03T05:56:19.706+05:30ஆரியக் கூலி கம்பனால் விளைந்த கேடு!
கம்பர், நடவாத ...ஆரியக் கூலி கம்பனால் விளைந்த கேடு!

கம்பர், நடவாத பொய்க் கதையாகிய இராமாயணத்தைத் தமிழில் மொழி பெயர்த்துச் செய்தமையால் வடமொழிப் பொய் வழக்கில் பழகிவிட்ட அவரது நா, அதன்கண் இலக்கியச்சுவை தோன்ற கூற வேண்டிய இடங்களிலும் பொய்யானவனவே புனைந்து கூறி இழுக்கினார்.

இங்ஙனமே, கம்பர்க்கு பின் வந்த தமிழ்ப்புலவர்களெல்லோரும், பொதுமக்களை ஏமாற்றுதற் பொருட்டுப் பார்ப்பனருங் கோயிற் குருக்கண் மாரும் வடமொழியில் வரைந்து வைத்த பொய்யான புராணங்களையும் தல புராணங்களையுமே பெரும்பாலும் தமிழில் மொழி பெயர்த்து வைத்துப் பண்டைத் தண்டமிழ் மெய் வழக்கினை அடியோடழித்து விட்டனர்.

இப்பிற்காலமொழி பெயர்ப்பு நூல்களிலும் ஒரோவிடங் களிலும் இலக்கியச் சுவை காணப்படுமேனும், முதலிலிருந்து முடிவரையில் அவற்றினைப் பொய்யாகவே தொடுக்கப்பட்டிருந்தலால், அவற்றின் பயிற்சி மக்கட்கு மெய்யுணர்வினையும் மெய்யறிவு விளக்கத்தினையுந்தராது.

- மறைமலையடிகள் (முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவர் பக்கம் -145தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-44385185489942628092013-08-03T05:55:47.013+05:302013-08-03T05:55:47.013+05:30
பார்ப்பனர் மதம் - தர்மம்
பார்ப்பனர்கள் எந்த கார...
பார்ப்பனர் மதம் - தர்மம்

பார்ப்பனர்கள் எந்த காரியத்திலானாலும் எந்தத்துறையிலானாலும் தங்கள் சொந்த ஜாதி (உயர்வு) நலனை அடிப்படையாகக் கொண்டுதான் பார்ப்பார்களே தவிர, மக்களின் பொது நலனைப் பற்றிய கவலையே அவர்களுக்கு ஏற்படுவதில்லை. பார்ப்பனர்களுக்கு மதம் தர்மம் என்பதே அவர்களது ஜாதி பாதுகாப்பாகத்தான் ஆகிவிட்டது.

- தந்தை பெரியார், 22-5-1967 விடுதலை தலையங்கத்தில் ஒரு பகுதிதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-77194171793259416662013-08-03T05:55:02.535+05:302013-08-03T05:55:02.535+05:30
இங்கர்சால் மணிமொழிகள்
தேவலோகம் என்று ஒன்று இருக...
இங்கர்சால் மணிமொழிகள்

தேவலோகம் என்று ஒன்று இருக்கு மானால் - அதில் எல்லையற்ற இறைவன் இருப்பது உண்மை யானால் அவர் கோழைகளின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார். நயவஞ்சகர் களின் செயல்களைக் கண்டு மகிழ மாட்டார். இந்த வஞ்சகர்களைக் கண்டு ஒருக்காலும் திருப்தியடையமாட்டார்.

மனித இதயத்திலிருந்து உரிமையை - நியாய புத்தியை பிரித்து விடும் மதங்கள் அவற்றின் கொள்கைகள், கோட்பாடுகள், நூல்களைப் பாதுகாக்க நிற்கும் சட்டங்கள் இவைகளை தூக்கி, தூரப் போடுங் கள். சிந்திக்காதே அது பெரிய ஆபத்தான காரியம் என்ற அபிப்பிராயம் எந்த மூலையில் எந்த வடிவில் உங்கள் முன் வந்தாலும் அடித்து நசுக்குங்கள்

அறியாமை - இரகசியத்தின் தாய்; துன்பத்தின் பிறப்பிடம் குருட்டு நம்பிக்கையின் அன்னை; சங்கடம் தோன்றிய இடம்; அழிவும், மறுமையும் வாழும் தாயகம்.

முடிவில்லாத முதல்வன் இருப்பது உண்மை யானால் மக்கள் அனைவரும் ஒரே மாதிரியான எண்ணம் உடையவராய் இருக்க வேண்டும் என்று அவர் கருதுவாரானால் ஏன் அவன் ஒருவனுக்கு குறைந்த அறிவும், மற்றொருவனுக்கு அதிக அறிவும் கொடுத்தான். அனைவரும் ஒரே மாதிரியாக எண்ண வேண்டும்; ஒரே மாதிரியாக உணரவேண்டும் என்பது அவன் நோக்கமானால் அறிவு வித்தியாசங்கள் ஏன்?

எனக்கு இந்த உரிமைகள் வேண்டும் என்று கூறுகின்றவர் அதே உரிமையை மற்றவர் விரும்பும் போது அளிக்க மறுத்தால் அவன் எந்த பாகத்திலிருந்தாலும் அவன் எவ்வளவு உயர்ந்தவன் என்று கூறினாலும் அவன் காட்டுமிராண்டியின் நிலைக்குச் சமீபத்தில் வசித்தவன் என்று நான் கூறுவேன்.

மனித குலம் கூவிய கூக்குரலும் கோரிக்கைகளும் பக்தியும் பைத்தியகாரத் தன்மையும் கடவுள்களுக்குத் திருப்தியை உண்டு பண்ணியதா?இல்லை. இல்லவே இல்லை. மனித இனத்திற்கு வரவிருந்த எந்த விபத்தாவது தவிர்க்கப்பட்டுவிட்டதா? புதிய வரப்பிரசாதம் ஏதும் கிடைத்ததா? இல்லை அப்படியிருக்க இந்த ஆண்ட வனுக்கு - இந்தக் கண்மூடிக் கபோதி ஆண்டவனுக்கு நாம் நன்றி செலுத்தலாமா? கைகூப்பி வணங்கலாமா? தேவை இல்லை.

தொகுப்பு: மு.இராசசேகரன், கணியூர்.
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-84161219855347894722013-08-03T05:54:01.972+05:302013-08-03T05:54:01.972+05:30
மாணவர்கள் உண்டு ஆசிரியர்கள் இல்லை... டும்! டும்!!...
மாணவர்கள் உண்டு ஆசிரியர்கள் இல்லை... டும்! டும்!! டும்!!!

கேள்வி :- 2012-2013ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் அனைவருக்கும் இடை நிலைக்கல்வித் திட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பல பள்ளிகளில் தமிழகத்தில் ஆசிரியர்களே இல்லை என்ற குறைபாடு பெரிதாகச் சுட்டிக்காட்டப்பட்டி ருப்பதாகக் கூறுகிறார்களே?

கலைஞர் :- ஆமாம்; அந்த அறிக்கையில் விழுப்புரம், சென்னை, வேலூர், நீலகிரி, கோயம் புத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 16 பள்ளிக் கூடங்களில் ஆசிரியர்களே இல்லை என்று கூறப்பட் டுள்ளது. தமிழகத்திலே உள்ள 2,253 பள்ளிகளில்; ஒவ்வொரு பள்ளியிலும் ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் தான் பணியிலே இருக்கிறாராம்.

விழுப்புரம் மாவட் டத்தில் 113, சிவகங்கை 134, வேலூர் 127, திருவண்ணா மலை 159, தர்மபுரி 131, கிருஷ்ணகிரி 195 என்ற அள விற்கு பள்ளிகள், ஓராசிரியர் பள்ளிகளாகச் செயல் படுகின்றன. ஓராசிரியர் பள்ளிகளில் மட்டும் 83,641 மாணவர்கள் படிக்கிறார்களாம். ஆரம்பப் பள்ளி கள் ஓராசிரியர் பள்ளிகளாக இயங்குவதில் தவறில்லை. ஆனால் ப்ளஸ் 2 வரையிலே உள்ள இடை நிலைக் கல்விச் சாலை ஒன்றில் 765 மாணவர்கள் ஒரே ஒரு ஆசிரியரால் பயிற்றுவிக்கப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையிலே தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் உள்ள 16,421 பள்ளிகளில் இரண்டே இரண்டு ஆசிரியர்கள்தான் இருக்கிறார் களாம். மாநில, மத்திய, தனியார் பள்ளிக் கூடங்கள் அனைத்தையும் சேர்த்துப் பார்த்தால், மூன்றில் ஒரு பகுதிப் பள்ளிக் கூடங்களில் மூன்றுக்கும் குறைவான ஆசிரியர்கள்தான் பணியாற்றுகிறார்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

கற்பிக்கும் ஆசிரியர்கள் தேவையான எண்ணிக்கையில் இல்லாத கல்வி, கடையாணி இல்லாத வண்டியைப் போல் திசை மாறிச் சென்று விடும் என்பதை எண்ணிப் பார்த்திட வேண்டும்.

-கலைஞர் (முரசொலி, 2.8.2013)
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com