tag:blogger.com,1999:blog-1474608369333206681.post8548533488372036066..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பார்ப்பான் ஓட்டலில் சாப்பிடக் கூடாது-பெரியார் தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-32904138289740432872013-11-18T19:00:16.395+05:302013-11-18T19:00:16.395+05:30ரத்த உற்பத்திக்கு என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்
உட...ரத்த உற்பத்திக்கு என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்

உடலில் உள்ள ரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான ரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசிய மாகும்.

இயற்கை உணவுகள் மூலம் ரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம் என பார்ப்போம். நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் ரத்தம் அதிகமாக ஊறும். பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாள்களுக்கு ஊற வைத்து, பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும்.

தினசரி இரவு அரை தம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும். பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து ரத்தம் விருத்தியாகும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும். இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

இலந்தைப் பழம் சாப்பிட்டால் ரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது. விளாம்பழம் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-23794193220856854152013-11-18T18:59:06.237+05:302013-11-18T18:59:06.237+05:30
கொழுப்பைக் கரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் கொள...
கொழுப்பைக் கரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் கொள்ளு
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொழுத்தவனுக்கு கொள்ளு... இளைத்தவனுக்கு எள்ளு என்பது பிரபல மொழி. அந்தளவுக்கு கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கியமான இடமுண்டு. ஆனால், கொள்ளு என்பது குதிரைத் தீவனம் என்கிற நம்பிக்கையில், அதை லட்சியமே செய்வதில்லை பலரும்.

புரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு. நமது உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரி பார்க்கவும் புரதம் மிக அவசியம்.

புரதத்தில் சுப்பீரியர் புரதம் என்றும், இன்ஃபீரியர் புரதம் என்றும் இருவகை உண்டு. பொதுவாக அசைவ உணவுகளின் மூலம் கிடைப்பதெல்லாம் சுப்பீரியர் புரதம். பருப்பு வகையறாக்கள் இன்ஃபீரியர் புரதம். சோயாவும் கொள்ளும் சுப்பீரியர் புரத வகையைச் சேர்ந்தவை. எனவே, சைவ உணவுக்காரர்களுக்கு, அசைவ உணவுகளின்மூலம் கிடைக்கிற உயர்தர புரதத்தை அள்ளிக் கொடுக்கும் ஒரே தானியம் கொள்ளு.

கொள்ளின் பலன்கள்

கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முதலிடம். உடலிலுள்ள தேவையற்ற தண்ணீரைக் கொள்ளு எடுத்துவிடும். கொள்ளுத் தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும். வளரும் குழந்தைகளுக்கும், உடற்பயிற்சி செய்வோருக்கும் மிகவும் உகந்தது.

ஆயுர்வேதத்தில் கொள்ளை தலையில் வைத்துக் கொண்டாடாத குறைதான். அதில் பெரும்பாலான நோய்களுக்கு கொள்ளு மருந்தாகப் பயன்படுகிறது. பைல்ஸ் எனப்படுகிற மூல நோய்க்கு, ருமாட்டிசம் பிரச்சினைக்கு, இருமல் மற்றும் சளியை விரட்ட, காய்ச்சலைக் கட்டுப்படுத்த... இப்படி கொள்ளு குணமாக்கும் பிரச்சினைகளின் பட்டியல் நீள்கிறது.

அல்சர் எனப்படுகிற வயிற்றுப் புண்ணுக்கும், சிறுநீரகக் கற்களை வெளியேற்றவும், அதீத ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தவும்கூட கொள்ளு உதவுவ தாக ஆயுர்வேதம் சொல்கிறது. சிக்குன்-குன்யா நோய் பாதித்தவர்களுக்குக் கூட கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சூப் வைத்துக் கொடுக்கச் சொல்லிப் பரிந்துரைக்கப்படுகிறது.

ஆந்திராவில் மஞ்சள் காமாலை நோய்க்கு கொள்ளை மருந்தாக உபயோகிக்கிறார்கள். அது மட்டுமின்றி, கொள்ளை வேக வைத்து மசித்து, சருமப் பிரச்சினைகளுக்குத் தடவுகிறார்கள்.

சூட்டைக் கிளப்புமா?

கொள்ளு சூட்டைக் கிளப்பும் என்றும், அதனால் அடிக்கடி அதை எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் மக்களிடையே ஒரு எண்ணம் உண்டு. கொள்ளு சூடானது என்பது உண்மைதான், அதாவது, வளர்சிதை மாற்ற விகிதத்தை வேகப்படுத்தும். அதனால்தான் கொழுப்பைக் குறைக்க கொள்ளு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

குதிரைக்கு கொள்ளு கொடுப்பதன் பின்னணியும் இதுதான். குதிரை குண்டாக இருந்தால் அதனால் வேகமாக ஓட முடியாது. கொள்ளு கொடுப்பதால் தான் குதிரை கொழுப்பின்றி, சிக்கென்று இருக்கிறது. உடல் திண்மையுடன் வேகமாக ஓடுகிறது. மனிதர்களுக்கும் அப்படித்தான்.

எப்படியெல்லாம் எடுத்துக் கொள்ளலாம்?

கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சிட்டிகை உப்பும், மிளகுத்தூளும் சேர்த்து தினமும் அப்படியே குடிக்கலாம். வேக வைத்த கொள்ளை, சாலட் போல சாப்பிடலாம். கொள்ளை வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக் கொண்டு, சாம்பார், ரசம், பொரியல், கூட்டு என எல்லாவற்றிலும் சேர்க்கலாம்.

உணவின் மூலம் உடலுக்குள் சேரும் கொழுப்பிலிருந்து இது நம்மைக் காப்பாற்றும். அசைவம் சாப்பிடுகிறவர்கள், குறிப்பாக மட்டன் பிரியர்கள், அத்துடன் கொள்ளு சேர்த்து சமைக்கலாம். மட்டன் அதிக கொழுப்பு நிறைந்தது.

கொள்ளு அந்த கொழுப்பை உடலில் தங்க விடாமல் காக்கும். அதற்காக தினமும் மட்டன் சாப்பிட வேண்டும் என்கிற அவசியமில்லை. இது என்றோ ஒரு நாளைக்குத்தான். மதியமோ, இரவோ பலமான விருந்து சாப்பிடப் போகிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.

அன்றைய தினம் காலையில் நொய்யரிசியும், கொள்ளும் சேர்த்துக் கஞ்சி செய்து குடித்தால், அடுத்தடுத்த வேளைகள் சாப்பிடப் போகிற உணவின் கொழுப்பினால் உடலுக்கு பாதிப்பு வருவது தவிர்க்கப்படும்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-71232340455460406462013-11-18T18:58:15.103+05:302013-11-18T18:58:15.103+05:30
முள்ளிவாய்க்கால் முற்றம்: இடித்த இடத்திலேயே தமிழக...
முள்ளிவாய்க்கால் முற்றம்: இடித்த இடத்திலேயே தமிழக அரசு மீண்டும் கட்டித்தர வேண்டும்!

முள்ளிவாய்க்கால் முற்றம்: இடித்த இடத்திலேயே தமிழக அரசு மீண்டும் கட்டித்தர வேண்டும்!
தொல்.திருமாவளவன் அறிக்கை!

சென்னை, நவ.18- தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர்களை இடித்த தமிழக அரசே அதனைத் திரும்ப கட்டிக் கொடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

தஞ்சை அருகே விளார் கிராமத்தில் எழுப்பப் பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் எனும் நினைவிடத்தின் சுற்றுச்சுவரினை தமிழக அரசு திடீரென இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது.

மேலும், அவ்வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த பூங்காவும் சிதைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து நினைவிடம் கட்டப் பட்டிருப்பதாகவும், அதனால் சுற்றுச்சுவரை இடித்ததாகவும் பூங்காப் பகுதியைக் கைப்பற்றியிருப்ப தாகவும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கை தமிழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கட்டு மானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதில் தலையிடாமல் அமைதி காத்த அரசு, அதன் திறப்பு விழா முடிந்த ஒரு சில நாட்களில், திடீரென நூற்றுக்கணக்கான காவல்துறையினரை இறக்கி, அதிகாலை வேளையில் அவசரம் அவசரமாக இடித்து நொறுக்கியது ஏனென்று விளங்கவில்லை.

காலக்கெடு வேண்டாமா?

சட்டவிரோதமாக அரசு நிலத்தில் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டிருக்குமெனில் அதனை அப்புறப் படுத்துவதற்கு, உரிய காலக்கெடுவுடன் அரசு உரிய வர்களுக்கு அறிக்கை அனுப்பியிருக்க வேண்டும். அவ்வாறு எந்த அறிவிப்பையும் செய்யாமல் நினை விடத்தை எழுப்பியவர்களுக்குப் போதிய காலக்கெடு வையும் வழங்காமல், திடீரென அதிரடி நடவடிக் கையில் இறங்கியதன் மூலம் அரசுக்கு ஏதோ உள் நோக்கம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

இலங்கையில் காமன்வெல்த் கூட்டமைப்பின் மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கிற வேளையில், இந்திய அரசை எதிர்த்துத் தமிழகமே கொதித்துக் கொண்டிருக்கும் சூழலில், தமிழக மக்களின் எழுச்சியைத் திசை திருப்பும் வகையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது.

தமிழக சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டத்தை நடத்தி இந்திய அரசைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றிய ஓரிரு நாட்களில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்திருப்பது, தீர்மானம் நிறைவேற்றியதையே கேள்விக்குள்ளாக்குவ தோடு, தமிழக அரசின் நம்பகத்தன்மையின் மீதும் அய்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாக எழுப்பப்பட்டுள்ள இந்த முற்றம் தமிழ் மக்களின் இனம்சார்ந்த உணர்வுகளோடு தொடர்புடையதாகும். அத்தகைய சிறப்பைப் பெற்ற நினைவு மண்டபத்தை இடித்ததன் மூலம் தமிழக அரசு ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தையும் வெகுவாகக் காயப்படுத்தியுள்ளது.

அதிமுக அரசு, ஈழத் தமிழர்களுக்கு உற்ற துணையாய் நிற்கும் என்று நம்பியவர்களுக்குப் பெரும் ஏமாற்றத் தையும் அவநம்பிக்கையையும் உருவாக்கியுள்ளது. முள்ளிவாய்க்கால் முற்றம், தனியார் இடத்தில் எழுப்பப்பட்டிருந்தாலும் அது ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் சொந்தமான நினைவிடமே என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

எனவே, உலகத் தமிழர்கள் அனைவருக்கும் சொந்த மான முள்ளிவாய்க்கால் முற்றத்தில், தமிழக அரசு மீண்டும் சுற்றுச்சுவரை எழுப்பவும் பூங்காவை அமைக்கவும் முன்வர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள்கிறது.

அத்துடன், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட சிறைப்படுத்தப்பட்ட அனைவரையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டுமெனவும், அவர்கள் மீதான பொய் வழக்கு களை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டு மெனவும் தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு தொல்.திருமாவளவன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-4857907529061098142013-11-18T18:57:11.337+05:302013-11-18T18:57:11.337+05:30
பெரியார், அம்பேத்கர் சிலைகளை அமைக்க கோரிக்கடவு ஊர...
பெரியார், அம்பேத்கர் சிலைகளை அமைக்க கோரிக்கடவு ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

கோரிக்கடவு, நவ. 18- தந்தை பெரியார், புரட்சி யாளர் அம்பேத்கர் சிலை களை அமைக்க கோரிக் கடவு ஊராட்சி மன்றத் தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. இது குறித்து பழனி கழக மாவட்ட பகுத்தறிவா ளர் கழக செயலாளர் ச. திராவிடச் செல்வன் தெரிவித்திருப்பதாவது:- திண்டுக்கல் மாவட்டம், பழனி கழக மாவட்டம், கோரிக்கடவு கிராமத் தில் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத் கர் ஆகியோர்களின் சிலைகளை அமைக்க கோரிக்கடவு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.

கழக விண்ணப்பத் தினை ஏற்று 24.10.2013-ஆம் தேதி ஊராட்சி மன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி அங்கீகரிக்கப்பட்டது.

தந்தை பெரியார் சிலை வைக்க அங்கீகரிக் கப்பட்ட தீர்மான எண்: 137, புரட்சியாளர் அம் பேத்கர் சிலை வைக்க அங்கீகரிக்கப்பட்ட தீர்மான எண் 138 என் பதை பெருமகிழ்ச்சியு டன் தெரிவித்துக் கொள் கிறேன்.

அங்கீகரிக்கப்பட்ட தீர்மானங்களின்படி கோரிக்கடவு திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார், புரட்சி யாளர் அம்பேத்கர் ஆகி யோரின் சிலைகளை அமைத்து பராமரித்துக் கொள்ள திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அனுமதி வேண்டி 13.11.2013 அன்று விண்ணப்பித்துள்ளோம் என்று திராவிடச் செல் வன் தெரிவித்துள்ளார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-63181274135178241892013-11-18T18:55:18.855+05:302013-11-18T18:55:18.855+05:30
டெசோவின் தீர்மானங்கள்
சென்னையில் நேற்று (17.11.2...
டெசோவின் தீர்மானங்கள்

சென்னையில் நேற்று (17.11.2013) கூடிய டெசோ கூட்டத்தில் சிறப்பான அய்ந்து தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் டெசோ இத்தகு தீர்மானங்களை நிறைவேற்றி யுள்ளது - உலகின் கவனத்தை ஈர்க்கக் கூடியதாகும்.

மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை சென்ற இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் - பாதிக்கப்பட்ட தமிழர்களின் பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிப்புக்கு ஆளான தமிழர்களின் உள்ளக் குறைகளை நேரில் தெரிந்து கொண் டுள்ளார். உதயன் பத்திரிகை அலுவலகத்திற்கும் சென்றுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற இனப்படு கொலையை உலக நாடுகளின் கண்களில் படாமல் தப்பிக்கச் செய்யலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்த ராஜபக்சேவின் கபட முகத் திரையை ஒரு பயணத்தின் மூலம் கிழித்து ராஜபக்சே என்னும் மிகப் பெரிய இனப் படுகொலையாளியைச் சர்வதேச நாடுகளின் முன் குற்றவாளியாக நிறுத்தி விட்டார்.

இலங்கைக்குப் பல்லக்குத் தூக்கிக் கொண்டி ருந்த நாடுகள்கூட, உலகின் மிக முக்கிய நாடான இங்கிலாந்து நாட்டின் பிரதமர் தம் மனந்திறந்த பேட்டியைச் செவி மடுத்த நிலையில், தங்கள் கண்களைக் கழுவிக் கொண்டு, அகல விரித்து உண்மை நிலையைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்புப் பிரகாசமாகி விட்டது.

ஏற்கெனவே பிரிட்டன் 4 அலைவரிசை வெளியிட்ட படங்கள் பேரதிர்ச்சி அலைகளை உலகம் முழுவதும் தட்டி எழுப்பின. இப்பொழுது அந்தப் பிரிட்டன் பிரதமர் அலைவரிசை நான்கின் நம்பகத் தன்மையை நன்கு வெளிப்படுத்தி விட்டார்.

இதற்காக உலகத் தமிழர்கள் மட்டுமல்ல; மனித உரிமையாளர்கள், மனிதநேயவாதிகள் ஒரு முறை நன்றி உணர்ச்சியுடன் மிகப் பெரிய வணக்கத்தைத் (ளுயடரவயவடி) தெரிவிக்க வேண்டும்.

அவருடைய கருத்து எந்த அளவுக்குப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதற்கு அளவுகோல் - ராஜபக்சேவின் மிகப் பெரிய அலறலில் இருந்து அறிய முடிகிறது.

இந்த நேரத்தில் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இங்கிலாந்து எடுத்திருக்கும் இந்த நிலைப்பாட்டை - பாத்திரத்தை நியாயமாக இந்தியா அல்லவா செய்திருக்க வேண்டும்; இந்தியா ஆற்ற வேண்டிய கடமையை இங்கிலாந்து ஆற்றிய பிறகாவது இந்தியாவின் மனசாட்சி உலுக்கப்பட்டு, புதிய சிந்தனைச் சாளரம் திறந்தால், இதுவரை அது நடந்து வந்துள்ள பழிகளுக்குக் கழுவாய்த் தேடிக் கொள்ள முடியும்.

இங்கிலாந்து பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்ற போராட்டம் இங்கிலாந்தில் நடைபெற்றது. அதனைப் பொருட் படுத்தாமல் பிரதமர் டேவிட் கேமரூன் செல்லு கிறாரே என்ற மனக் குறை இருந்ததுண்டு.

ஆனால், அவர் அதில் கலந்து கொண்டு, அவர் மேற்கொண்ட அணுகுமுறை அவர் கலந்து கொண்டதற்கான மிகப் பெரிய அர்த்தத்தை, நியாயத்தை ஏற்படுத்தி விட்டது.

தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி, காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இங்கிலாந்து பிரதமர் செயல்பட்டதுபோல செயல்பட்டு இருந்தாலாவது ஆறுதல் பெற்றிருக்க முடியும். அந்தக் கூட்டத்தில் அவர் எடுத்து வைத்த கருத்தென்ன? இலங்கை அரசை எந்த வகையிலாவது வலியுறுத்தி ஈழத்தில் அவதிப்படும் தமிழர்களுக்கு நல்லது நடக்க வழி செய்தாரா?

மாநாட்டில் கலந்து கொண்டால்தானே ஈழத் தமிழர்களுக்குப் பயன் ஏற்பட வலியுறுத்த முடியும் என்று அரசனை விஞ்சிய விசுவாசிகளாக தொண்டையைக் கனைத்துக் கொண்டு வார்த்தை ஜாலங்களை வண்ண வண்ணமாகக் குழைத்துச் சொன்னவர்கள், இப்பொழுது தங்கள் முகங்களை எங்கே கொண்டு போய் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இந்த நிலையில், இந்தியா சார்பில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்து கொண்டு இருப்பதை டெசோ கண்டித்தது மிகவும் சரியான நடவடிக்கையே!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-29839410792744021752013-11-18T18:54:12.493+05:302013-11-18T18:54:12.493+05:30
பெரிதாக்குகிறார்கள்
தண்ணீரில் வீழ்ந்து உயிருக்கு...
பெரிதாக்குகிறார்கள்

தண்ணீரில் வீழ்ந்து உயிருக்கு மன்றாடுபவன் ஒரு புல் மிதந்து வந்தாலும் அதைப் பிடித்துக் கொண்டு கரையேற நினைப்பது போல், இன்று பார்ப்பனரும், அவர்கள் கூட்டாளி களும் பதவி ஆசையால் அற்பக் காரியங்களையும் பெரிதாக்குகிறார்கள்.
(விடுதலை, 12.7.1972)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-43152232115365802692013-11-18T18:53:25.320+05:302013-11-18T18:53:25.320+05:30
கடவுள் கருணையோ!
திருவண்ணாமலையேறிய பக்தர் மாரடைப்...
கடவுள் கருணையோ!

திருவண்ணாமலையேறிய பக்தர் மாரடைப்பால் சாவு

திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை மலையேறிய பக்தர் ஒருவர் திரும்பி வரும்போது நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்தார்.

சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த குணசேக ரன் (62). இவர் தனது நண்பர் நாகராஜுடன் தீபத் திருவிழாவைக் காண வந்தார். திருவண்ணாமலை யில் உள்ள தனது தங்கையின் வீட்டில் தங்கியிருந்த அவர், ஞாயிற்றுக்கிழமை மாலை, மலையேறிச் சென்றார்.
மீண்டும் இறங்கி வந்துகொண்டிருந்தபோது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாம். தீயணைப்பு வீரர்கள் குணசேகரனை அழைத்து வந்து, 108 ஆம்பு லன்ஸில் திருவண்ணாமலை அரசு மருத்துவ மனையில் மாலை 6.30 மணிக்கு சேர்த்தனர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.

திருவண்ணாமலை சென்று திரும்பிய பக்தர்கள் 4 பேர் விபத்தில் சாவு

தருமபுரி, நவ.18- தருமபுரி அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் திருவண்ணாமலைக்குச் சென்று தீபத்தை தரிசித்து விட்டு வந்த பக்தர்கள் நால்வர் சம்பவ இடத் திலேயே பரிதாபமாக இறந்தனர். தருமபுரி அருகே ஒடசல்பட்டி கூட்டுரோடு என்ற இடத்தில் எதிரே வந்த கார் மீது லாரி ஒன்று மோதியது. இதில், காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார்கள். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக மருத்துவமைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மேற் கொண்ட விசாரணையில், விபத்தில் கார்த்திகை தீபமான நேற்று திருவண்ணாமலை சென்று விட்டு திரும்பிய போது விபத்தில் சிக்கியது தெரிய வந்தது. விபத்துக் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின் றனர்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-44197068927332672932013-11-18T18:52:43.981+05:302013-11-18T18:52:43.981+05:30
உலகமயமாகும் பெரியார் தத்துவங்கள்!
அமெரிக்காவில் ...
உலகமயமாகும் பெரியார் தத்துவங்கள்!

அமெரிக்காவில் சுயமரியாதை வாழ்க்கை ஒப்பந்தங்கள்

2013 நவம்பர் 2 - அட்லாண்டா நகரில்!

அமெரிக்காவில் இப்போதெல்லாம் மதச் சடங்குகள் இல்லாத பல பகுத்தறிவு வாழ்க்கை இணை விழாக்கள் நடந்து வருகின்றன.

எந்த மதச் சடங்குகளும் இல்லாமல் வாழ்விணை யர்கள் தாங்களே தயாரிக்கும் ஒப்பந்தங்களைப் படித்தோ அல்லது நீதி அரசர்கள் சொல்வதைச் சொல் லியோ, அல்லது பதிவு செய்து கொண்ட வாழ்விணை ஒப்பந்தங்கள் நடத்துவோர், அல்லது நீதிமன்றங்களில் பதிவு செய்து கொண்டு என்று நடத்திக் கொள் கின்றனர். இன்று அமெரிக்க இளைஞர்களில் பலர் விரும்பிச் செய்து கொள்ளப் பெற்றோர்களும் இணைந்து கொள்கின்றனர். இரண்டு மதங்களில் இருந்து இணைவோருங்கூட இந்த ஒப்பந்தங்களைச் செய்து கொள்கின்றனர்.

தமிழர்களில் முதலாவதாக மானமிகு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களது செல்வி அருள், பாலகுரு வாழ்க்கை ஒப் பந்த விழா நடந்து சுமார் 20 ஆண்டுகள் ஆகி விட் டது இப்போது பல தமி ழர்கள் பல நகரங்களில் செய்துள்ளனர். (அடுத்து ஆசிரியர் தலைமையில் சிகாகோவில் எனது மூத்த மகள் கனிமொழி வாழ்விணையர் ஏற்பு இப்படி எல்லாம் ஜாதி மறுப்பு, சுயமரியாதைத் திரு மணங்களாகவே நடந்தது.

அட்லாண்டா நகரிலே நவம்பர் 2ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தர்மபுரி பெரியார் பெருந் தொண்டர் எம்.என். நஞ்சையா அவர்களது பெயர்த்தியும், மருத்துவர் நல்லதம்பி - மீனா இவர்களது செல்வியுமான கவிதாவிற்கும், ஒடிசாவைச் சேர்ந்த மருத்துவர் நாராயண், சித்ராராத் அவர்களின் செல்வன் பிரகாஷ் அவர்கட்கும், நீதியரசர் வெஸ்லிசேனன், வாழ்க்கை ஒப்பந்த உரையைச் சொல்லி மணமக்கள் மோதிரங்கள் அணிந்து கொள்ளச் சிறப்பாக நடந்தது. தமிழகத்தி லிருந்தும், பிரான்சிலிருந்தும் மற்றும் அமெரிக்காவின் பல இடங்களிலிருந்தும் குடும்பத்தினரும், நண்பர்களும் வந்து வாழ்த்தி சிறப்பு செய்தனர். ஆசிரியர் அவர்களும், அவருடைய வாழ்விணையரும் தொலைபேசியில் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

அட்லாண்டாவின் புகழ் பெற்ற எமரி பல்கலைக் கழக அறிவரங்கத்தில் 250 பேர் என்று மிகவும் ஆடம்பர மில்லாத மணமக்கள் விருப்பப்படியே ஆனால் மிகவும் சிறப்பான ஏற்பாடுகளுடன் விழா நடந்தது. மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

மணமகன் ஒடிசா மாநிலத்தவர் ஆகையால் தந்தை பெரியார் கருத்துரைகள் கொண்ட ஒடிசா மொழி புத்தகத்தையும், ஆங்கில நூல்களையும் மணமக் களுக்கு ஆசிரியர் அனுப்பி, மணப் பரிசு வழங்கினார்.

- சோம இளங்கோவன்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-38820582299676355122013-11-18T18:52:09.594+05:302013-11-18T18:52:09.594+05:30நமது நாட்டில் அறிவியல் மனப்பான்மை இல்லை விஞ்ஞானி ர...
நமது நாட்டில் அறிவியல் மனப்பான்மை இல்லை விஞ்ஞானி ராவ் வருத்தம்

பெங்களூரு, நவ.18- அறிவியலுக்குப் போது மான நிதி ஒதுக்காததால், அரசியல்வாதிகள் முட்டாள்கள்' என்று பாரத ரத்னா விருதுக்கு தேர்வாகியுள்ள விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் விமர்சித்தார்.

இதுகுறித்து பெங்களூருவில் ஞாயிற்றுக் கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சிகளுக்குப் போதுமான நிதி ஆதாரங்களை ஒதுக்க வேண் டும். அரசு அளித்துள்ள நிதியைக் காட்டிலும், அளவுக்கு அதிகமாக அறிவியல் ஆராய்ச்சிகளை அறிவியல் துறை செய்து காட்டியுள்ளது. அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு அரசியல்வாதிகள் போதுமான நிதி ஒதுக்கவில்லை. இதனால், அவர்கள் முட்டாள்கள்.
எங்களுக்கு கிடைத்த நிதிக்குத் தகுந்தவாறு பணி செய்துள்ளோம். இந்தியாவில் அறிவியல் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளது மட்டுமல்லாமல், காலதாமதமாகவும் அளிக்கப் படுகிறது.

சீனாவின் வளர்ச்சிக்கு நம்மைத்தான் காரணம் காட்ட வேண்டியுள்ளது. சீனர்களைப் போல இந்தியர்கள் கடுமையாக உழைப்பதில்லை. எதையும் நாம் எளிதாக எடுத்துக் கொள்கிறோம். தேசியவாதிகளைப் போல நாம் செயல்படுவ தில்லை. நமக்குக் கூடுதலாகப் பணம் கிடைத் தால், வெளிநாடுகளுக்குச் செல்லத் தயாராக இருக்கிறோம்.

தகவல் தொழில்நுட்பத்திற்கும், அறிவிய லுக்கும் சம்பந்தமில்லை. நமது நாட்டில் அறிவியல் உணர்வு இல்லை.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி யாற்றுவோர் அனைவரும் மகிழ்ச்சியில்லாமல் வேலை செய்கிறார்கள். தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்வோர் அடிக்கடி தற் கொலை செய்து கொள்ளும் செய்தியைப் படிக் கிறேன்.

என்னைப் பாருங்கள், 80 வயதிலும் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னிடம் குறை கூற எதுவுமில்லை. நாம் செய்வதில் திருப்தி கிடைத் தால், அதுதான் மகிழ்ச்சி என்று கருதுகிறேன் என்றார் ராவ்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-38022973309871196092013-11-17T17:29:14.219+05:302013-11-17T17:29:14.219+05:30
கழகப் பொருளாளர் சாமிதுரை மறைவிற்கு பேராசிரியர் க....
கழகப் பொருளாளர் சாமிதுரை மறைவிற்கு பேராசிரியர் க.அன்பழகன் இரங்கல்

சென்னை, நவ.17- திராவிடர் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை அவர்கள் கடந்த 9.11.2013 அன்று சென்னையில் மறைவுற்றார். அவரது மறைவிற்கு தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் இரங்கல் தெரிவித்து, கழகத் தலைவருக்கு அனுப்பிய கடிதம் வருமாறு:-

திராவிடர் கழகப் பொருளாளரும், இளமை முதல் தந்தை பெரியாரின் தொண்டருமாக விளங்கிய தோழர் கோ.சாமிதுரை அவர்களின் மறைவு குறித்து அறிந்தபோது, மிகவும் வருத்தமுற்றேன்.

கொள்கையில் உறுதி,

இலட்சியத்தில் ஆர்வம்,

இயக்கத்தில் பிடிப்பு,

தலைமையை மதிக்கும் பண்பு ஆகியவற்றால் பெருமை பெற்றவராக, திராவிடர் கழகத் தலைவர் திரு.வீரமணி அவர்களின் முழு நம்பிக்கையைப் பெற்றவராகத் திகழ்ந்த தோழர் சாமிதுரை அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்றாகும்.

அவரது மறைவால் துயருற்றவர்கட்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

- இவ்வாறு பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் எழுதியுள்ள அவரது இரங்கல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-6367067952874683492013-11-17T08:04:04.637+05:302013-11-17T08:04:04.637+05:30உங்கள் இந்தப் பதிவை வாசிக்க நேர்ந்தது. நல்ல ஒரு பத...உங்கள் இந்தப் பதிவை வாசிக்க நேர்ந்தது. நல்ல ஒரு பதிவு. இதற்கு ஒரு பின்னூட்டம் இடலம் என்று நினைது எழுத அது ஒரு இடுகை அளவு பெரிதாகிப் போனதால், அதை உங்கள் இந்த பதிவை சுட்டி என் வலைபூவில், என் சிந்தனைகளுடனும், கருத்துக்களுடனும் பதிந்து விட்டென். "பெரியார் கொள்கைகளில் மிகவும் உன்னதமான சாதி ஒழிப்புப் போராட்டத்திற்கு மட்டும் கிடைக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் தமிழகத்தில் கிடைக்கவில்லஒயோ என்ற ஐயம் என்னை விட்டு அகல மறுக்கிறது. முற்பட்டோர்களுக்கும், பிற்பட்டோர்களுக்கும் இடையில் உள்ள படு குழியை மண்ணுக்கு சமமாக்குவதில் ஓரளவிற்கு வெற்றி கண்ட தமிழகம், அதேபோல், அதைவிட ஆழமாகவும், அகலமாகவும் பிற்பட்டோர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இடையில் இருந்த பள்ளத்தை, படு குழியை மறந்தே போனதோ என்று தோன்றுகிறது........." "தங்கள் சாதிக் காரர்களுக்காக பலவித கல்லூரிகளை நிறுவத் தொடங்கினார்கள். விளைவோ, சாதியில்லாத திராவிட சமூகம் சாதிச் சிறையில். (திருவள்ளுவர், மைலாப்பூரில் பிறந்த ஒரு அந்தணர் என்று, அன்று கதை கட்டினார்கள். இதோ இன்று, ராஜராஜ சோழனையும், ஏன் ஔவையாரையுமே ஒரு சாதி வட்டத்திற்குள் கொண்டு வந்துவிட்டார்களே!........" " தந்தை பெரியாரின் பாசறை இருந்த திராவிட நாட்டில், திராவிட மக்களின் மனது ஏன், எப்படி இப்படி மாசானது? சாதி ஒழிப்பையும், கலப்புத் திருமணத்தையும், ஊக்குவித்தப் பெரியார் அதன் அவசியத்தை உணர்த்திய பேச்சுக்கள, தமிழர்கள் செவியில் எப்போதும் முழங்க வேண்டும். கருத்துக்கள் எப்போதும் பரிமாறப்படவேண்டும்........" - thillaiakathu chronicles. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-15956338315209909952013-11-17T08:03:13.200+05:302013-11-17T08:03:13.200+05:30உங்கள் இந்தப் பதிவை வாசிக்க நேர்ந்தது. நல்ல ஒரு பத...உங்கள் இந்தப் பதிவை வாசிக்க நேர்ந்தது. நல்ல ஒரு பதிவு. இதற்கு ஒரு பின்னூட்டம் இடலம் என்று நினைது எழுத அது ஒரு இடுகை அளவு பெரிதாகிப் போனதால், அதை உங்கள் இந்த பதிவை சுட்டி என் வலைபூவில், என் சிந்தனைகளுடனும், கருத்துக்களுடனும் பதிந்து விட்டென். "பெரியார் கொள்கைகளில் மிகவும் உன்னதமான சாதி ஒழிப்புப் போராட்டத்திற்கு மட்டும் கிடைக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் தமிழகத்தில் கிடைக்கவில்லஒயோ என்ற ஐயம் என்னை விட்டு அகல மறுக்கிறது. முற்பட்டோர்களுக்கும், பிற்பட்டோர்களுக்கும் இடையில் உள்ள படு குழியை மண்ணுக்கு சமமாக்குவதில் ஓரளவிற்கு வெற்றி கண்ட தமிழகம், அதேபோல், அதைவிட ஆழமாகவும், அகலமாகவும் பிற்பட்டோர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இடையில் இருந்த பள்ளத்தை, படு குழியை மறந்தே போனதோ என்று தோன்றுகிறது........." "தங்கள் சாதிக் காரர்களுக்காக பலவித கல்லூரிகளை நிறுவத் தொடங்கினார்கள். விளைவோ, சாதியில்லாத திராவிட சமூகம் சாதிச் சிறையில். (திருவள்ளுவர், மைலாப்பூரில் பிறந்த ஒரு அந்தணர் என்று, அன்று கதை கட்டினார்கள். இதோ இன்று, ராஜராஜ சோழனையும், ஏன் ஔவையாரையுமே ஒரு சாதி வட்டத்திற்குள் கொண்டு வந்துவிட்டார்களே!........" " தந்தை பெரியாரின் பாசறை இருந்த திராவிட நாட்டில், திராவிட மக்களின் மனது ஏன், எப்படி இப்படி மாசானது? சாதி ஒழிப்பையும், கலப்புத் திருமணத்தையும், ஊக்குவித்தப் பெரியார் அதன் அவசியத்தை உணர்த்திய பேச்சுக்கள, தமிழர்கள் செவியில் எப்போதும் முழங்க வேண்டும். கருத்துக்கள் எப்போதும் பரிமாறப்படவேண்டும்........" - thillaiakathu chronicles. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-12265367652537729582013-11-17T06:19:49.774+05:302013-11-17T06:19:49.774+05:30 மத்தியக் கல்வித் துறையின் மக்கள் துரோகம்
தமிழ்ந... மத்தியக் கல்வித் துறையின் மக்கள் துரோகம்

தமிழ்நாட்டில் மத்திய அரசு, ஏற்கெனவே ஆக்கிரமித்தது போதாது என்ற முறையில், கல்வித் துறையில் புதியதோர் ஆக்கிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் ராஷ்டிரிய ஆதர்ஷ் வித்தியாலயா திட்டப்படி, மத்திய அரசும், தனியாரும் கூட்டுச் சேர்ந்து மாதிரிப் பள்ளிகள் என்று தனியே தொடங்கிட முயற்சிப்பதாக வந்துள்ள செய்தி- சரியாக இருக்குமானால் _ அதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கல்வி என்பது ஏற்கெனவே மாநிலப் பட்டியலில் இருந்த முக்கிய துறையாகும்; அதனை _- நெருக்கடி கால நிலையில் _- ஓசையில்லாமல் மத்திய அரசு, பொதுப் பட்டியலில் மத்தியக் கல்வித் துறையின் மக்கள் துரோகம் கொண்டுபோய்ச் சேர்த்து மாற்றம் ஏற்படுத்தியது.

இது நடந்தது 1976-இல்; அதன்பின் வந்த ஆட்சிகள் இதை ஒரு முக்கிய பிரச்சினையாக எடுத்துக் கொண்டு, மீண்டும் பழையபடி மாநிலப் பட்டியலுக்குள் கல்வியைக் கொண்டு வரத் தவறியதன் விளைவே, பல்வேறு சமூக அநீதிகளும், சமூகக் கொடுமைகளும் சட்ட பூர்வமாகவே மத்திய அரசால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன _- மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை என்ற கல்வித் துறையின் மூலம். எடுத்துக்காட்டாக, மாநில அரசு ஒழித்த பொது நுழைவுத் தேர்வு என்பதை _- மருத்துவக் கல்வி, மற்றும் தொழிற்படிப்புகளில் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை ஆதிக்க அதிகார சக்திகள் செய்து வருகின்றன. ஏற்கெனவே உச்ச நீதிமன்ற பெரும்பான்மைத் தீர்ப்பு நுழைவுத் தேர்வு ரத்து சரிதான் என்று கூறிய பிறகும் மருத்துவக் கவுன்சில் மறுசீராய்வு மனுவைப் போட்டுள்ளது; மத்திய அரசும் அதனை ஆதரிக்கிறது!

இது போன்ற கல்வியில் இரண்டு எஜமானர்கள் ஒரே நேரத்தில் அதிகாரம் செலுத்தும் விசித்திர நிலை ஏற்பட்டுள்ளது!

மாநிலங்களின் உரிமைகள் _- அதிகாரங்கள் ஏற்கெனவே பெரிதும் பாதிக்கப்பட்டு, வெறும் முனிசிபாலிட்டிகளைப் போன்று மாநில அரசுகள் ஆக்கப்பட்டுள்ள நிலையில், இது போன்ற புதிய அறிவிப்புகள் மேலும் மேலும் மாநிலங்களின் அதிகாரப் பறிப்புக்குத்தான் வழி வகுக்கும். தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் அறிக்கை, காலத்தால் தரப்பட்ட சரியான எச்சரிக்கை மணி!

மாநில அரசின் ஒப்புதலோ, அல்லது அதனுடன் கலந்து ஆலோசிக்காமலோ இப்படி தன்னிச்சையாக மத்திய அரசு நடந்து கொள்வது எவ்வகையில் நியாயம்?

கல்வியை வியாபாரமாக்காதே என்ற குரல் ஓங்கி முழங்கிக் கொண்டே இருக்கும் நிலையில், வெளிநாட்டுப் பெரும் வணிகத் திமிங்கிலங்களுக்குக் கதவு திறந்து விட்டு, நம் நாட்டில் சில்லறை வணிகத்தினை அழிப்பது போல, இப்போதுள்ள பள்ளிகளையும்கூட மறைமுகமாக கொஞ்சம் கொஞ்சமாக இத்தகைய மாதிரிப் பள்ளிகள் -_ வணிகமயம் ஆகும்; அதுவும் மத்திய அரசும் தனியாரும் (Private - Public Partnership) நடத்துவது எவ்வகையில் நியாயப்படுத்தக் கூடியது?

கல்வி அடிப்படை உரிமை (Education is Citizen’s Fundamental Right - Right to
Education) என்று அரசமைப்புச் சட்டத்தில் சட்ட ரீதியாக அறிவிக்கப்பட்டபின், இப்படி மத்தியக் கல்வித்துறை ஒரு முடிவு எடுத்திருப்பது மிகப் பெரிய, அரசியல் சட்ட விரோதப் போக்காகும்!

இதனை, தமிழ்நாட்டுக் கல்வி அறிஞர்கள், மாநில உரிமை காக்க விழைவோர், உண்மையான ஜனநாயக விரும்பிகள், அனைவரும் ஒட்டு மொத்தக் குரலில் எதிர்க்க வேண்டும்; தமிழக அரசும் முதல்வரும் உடனடியாக எதிர்ப்பைப் பதிவு செய்தாக வேண்டும்.

முன்பு ராஜீவ்காந்தி கொண்டு வந்த நவோதயா பள்ளிகளே ஹிந்தித் திணிப்புக்கு மறைமுக வழி என்று கண்டித்து நிறுத்திய தமிழ்நாடு, இப்பொழுது சும்மா இருக்காது _- இருக்கவும் கூடாது. கிளர்ந்தெழ வேண்டும்.

- கி.வீரமணி, ஆசிரியர்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-49979324354178611202013-11-17T06:16:25.479+05:302013-11-17T06:16:25.479+05:30 பேரிழப்பு
திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை... பேரிழப்பு

திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை மறைவு!

திருச்சிக்கு 9.11.2013 அன்று காலை சென்றபோது, திராவிடர் எழுச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள்பற்றி கழகப் பொறுப்பாளர்களிடம் கலந்து பேசிக் கொண்டிருந்தபோது, பேரிடி போன்ற செய்தி ஒன்று எங்களைத் தாக்கியது.

எனது வாழ்விணையர் திருமதி மோகனா அவர்களும், கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்களும் என்னை நெருங்கி, தயங்கி நின்று சொன்னார்கள்.

கழகப் பொருளாளர் எனது அன்பு சகோதரர் கோ.சாமிதுரை அவர்கள் சற்றுமுன் சென்னையில் உள்ள (கோட்டூர்புரம் பகுதி) இல்லத்தில் காலமானார் என்ற அதிர்ச்சிச் செய்தியால் மிகவும் தாக்குண்டோம்!

சில காலம் உடல் நலிவுற்று இருந்த நிலையில், அவர் தேறி வந்தது ஆறுதலாக எங்களுக்கு -_ இயக்கத்திற்கு இருந்தது! ஆனால், சற்றும் எதிர்பாராத விதத்தில் அவரது முடிவு ஏற்பட்டதை எப்படித் தாங்கிக் கொள்வது என்பதே தெரியவில்லை.

எங்களாலேயே ஏற்றுக்கொள்ள முடியாத நிலை இச்செய்தி என்ற நிலையில், அவரது அன்புச் செல்வங்களான மகன்கள், மகள்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் எப்படித்தான் தாங்கிக் கொள்ள முடியும்?

மாணவப் பருவம் தொட்டே சகோதரர் மானமிகு கோ.சாமிதுரை அவர்கள் எனக்கு நெருக்கமான இயக்கத்தவர். அரை நூற்றாண்டுக்குமேல் எங்கள் பாசமும், உறவும், நட்பும் மேலானதாக இருக்கும் ஒன்று. அவர் பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ., படித்தபோது, நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அதே காலத்தில் படிப்பில் இருந்தவன். திராவிடர் மாணவர் கழகம் எங்களை இணைத்தது. சட்டக் கல்லூரியில் இருவரும் இணை பிரியாதவர்களாக இருந்தோம்.

இயக்கத்திற்குச் சோதனை ஏற்பட்ட போதெல்லாம், சற்றும் சபலமோ, சலனமோ கொள்ளாத இளைஞர் அவர் அன்று. எனவேதான், அருமை அய்யாவின், அம்மாவின் பெரும் நம்பிக்கை, பாராட்டைப் பெற்ற எனது உற்ற தோழர் என்ற பெருமைக்கு ஆளாகி, கடைசிவரை காத்தவர்.

வழக்குரைஞர் தொழில் தொடங்கும்போது கடலூரில் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்தோம். அவர் கல்லக்குறிச்சியில் பிரபலமான நிலையில், வழக்குரைஞர் தொழிலைக்கூட கடந்த 10 ஆண்டுகளுக்குமுன் துறந்து, இயக்கத் தொண்டாற்ற பெரியார் திடலுக்கே தன்னை ஒப்படைத்துவிட்டு, சென்னைவாசியானார் என்னைப் போலவே!

அவரது வாழ்விணையர் மறைந்த சரோஜா அவர்களும், எனது வாழ்விணையரும் கடலூரில் உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். இப்படி இரு குடும்ப உறவுகளும் என்றும் மறக்க முடியாதவை -_ பிரிக்க முடியாதவை!

பாழும் சாவு பிரித்துவிட்டதே!

வரும் (நவம்பர்) 26 ஆம் தேதி அவரது 81ஆம் ஆண்டு பிறந்த நாள்; என்னைவிட ஒரு சில நாள்கள்தான் மூத்தவர் அவர்!

அவரது பிரிவு கழகத்திற்கு ஏற்படுத்தியிருக்கும் பள்ளமும், இழப்பும் எளிதில் ஈடுசெய்ய முடியாத ஒன்று!

என்றாலும், தந்தை பெரியாரின் அறிவுரைக்கேற்ப, இயற்கையின் கோணல் புத்திக்குமுன் என்ன செய்ய இயலும்?

எனவே, நாம் அவருக்குப் பிரியா விடையைக் குளமாகும் கண்களோடும், கனத்த இதய வலியோடும் தந்து வீர வணக்கத்தைத் தெரிவித்து, எங்களது பெரும் பெரியார் குடும்பமான அந்தக் குடும்பத்துச் செல்வங்களுக்கும் தேற்ற முடியாத எமது ஆறுதலை, இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

- கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-86472687166372538002013-11-17T06:13:13.891+05:302013-11-17T06:13:13.891+05:30நட்சத்திரக் கூட்டம்
பூமியிலிருந்து 1300 கோடி ஒள...நட்சத்திரக் கூட்டம்

பூமியிலிருந்து 1300 கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள நட்சத்திரக் கூட்டத்தை டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்யும் கோவாவைச் சேர்ந்த இந்திய அமெரிக்க விஞ்ஞானி விதால் தில்வி, அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் பிங்கல் ஸ்டீல் மற்றும் அவரது ஆராய்ச்சி மாணவர் மிமி சாங் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.

உலகிலேயே முதன்முறையாக இந்த நட்சத்திரக் கூட்டத்தைப் பார்த்தது மிகவும் உற்சாகமாக இருப்பதாகவும், இந்தக் கண்டுபிடிப்பு பிரபஞ்சம் உருவானது பற்றி பல கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் விதால் தில்வி கூறியுள்ளார். அண்டவெளியில் ஏற்பட்ட பிக்பேங் என்ற பெரு வெடிப்புக்குப் பின் 700 மில்லியன் ஆண்டுகளில் இந்த நட்சத்திரக் கூட்டம் உருவாகியிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-79473273642369192112013-11-17T06:12:38.118+05:302013-11-17T06:12:38.118+05:30துளிச் செய்திகள்
பூமியிலிருந்து 127 ஒளி ஆண்ட...துளிச் செய்திகள்

பூமியிலிருந்து 127 ஒளி ஆண்டு தூரத்தில் 7 கிரகங்களுடன் கூடிய சூரியக் குடும்பத்தைக் கண்டுபிடித்த அய்ரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் அதற்கு எச்.டி.10180 என்று பெயரிட்டுள்ளனர்.

பூமியிலிருந்து 700 ஒளி ஆண்டு தூரத்திலுள்ள புதிய கிரகத்தை நாசா அனுப்பிய கெப்லர் விண்கலம் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. அதற்கு கெப்லர் 78பி எனப் பெயரிட்டுள்ளனர்.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் மங்கல்யான் விண்கலத்தைத் தாங்கிய பி.எஸ்.எல்.வி.சி_25 ராக்கெட் நவம்பர் 5 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது.
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-19946838637220618172013-11-16T23:11:59.440+05:302013-11-16T23:11:59.440+05:30
சர்க்கரை வியாதி முற்றிலும் குணமாகுமா?
சர்க்கரை ...
சர்க்கரை வியாதி முற்றிலும் குணமாகுமா?

சர்க்கரை வியாதி என்றால் என்ன? இரத்தத்தில் அதிக அளவு குளுக்கோஸ் இருந்தால் அது சர்க்கரை வியாதி எனப்படுகிறது. இந்த குளுகோஸை சரியான அளவில் வைத்திருக்கும் வேலையைத் தான் கணையம் செய்கிறது. இன்சுலின் என்ற ஹார்மோனை கணையம் சுரக்கிறது. இந்த இன்சுலின்தான் குளுக் கோஸை சரியான அளவில் இரத்தத்தில் சேர்க்கிறது. மிஞ்சி இருக்கும் குளுகோஸை சேமித்து வைத்து தேவைப்படும் போது வழங்குகிறது.

சர்க்கரை வியாதி ஏன் வருகிறது? கணையம் இன்சுலின் சுரப்பதை நிறுத்திவிட்டால் குளுகோஸை கட்டுப்படுத்தும் நிலை இல்லாமல் ஆகி விடுகிறது. எனவே அளவின்றி குளுகோஸ் இரத்தத்தில் கலக்கிறது. இதனால் சர்க்கரை வியாதி வருகிறது.

இந்த குளுக்கோஸ் எங்கிருந்து வருகிறது? நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்கள் செரிமானமானதும் குளுகோஸாக மாற்றப்படுகிறது. இந்த குளுகோஸ் இரத்தத்தில் சேர்ந்து பயணமாகி செல்களுக்கு வழங்கப்படுகிறது. செல்களில் குளுக்கோஸ் எரிக்கப்பட்டு சக்தி கிடைக்கிறது. குளுக்கோஸ் சக்தியைத் தானே தருகிறது? அதிகம் கலந்தால் ஏன் வியாதியாகிறது? அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதானே.

தடுக்க என்ன வழி? தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அரைமணி நேரமாவது காலாற நடக்க வேண்டும். பரம்பரையாக வரக்கூடும் என்பதால் முன்னோருக்கு இவ்வியாதி இருந்தால் எச்சரிக்கை மிக அதிகம் தேவை. இரத்த பரிசோதனை மூலம் சர்க்கரை அளவை அறிய வேண்டும். வெறும் வயிற்றில் சர்க்கரை அளவை அறிய வேண்டும் வெறும் வயிற்றில் 100.1நி சாப்பிட்ட பின் 140.1நி இருந்தால் அது சர்க்கரை வியாதியின் தொடக்கம் என அறிதல் வேண் டும். மேலும் செய்ய வேண்டியது என்ன?

உணவுக் கட்டுப்பாடு மிக மிக அவசியம் இரத்தத்துக்கு எவ்வளவு குளுகோஸ் தேவையோ அந்த அளவுக்குத்தான் சாப்பிட வேண்டியதிருக்கும். எனவே வயிறுமுட்ட சாப்பிடக் கூடாது. குளுகோஸ் அதிகமுள்ள கிழங்குகள், பழங்கள் ஆகியன குறைவாக உண்ண வேண்டும். பட்டினியும் இருக்கக் கூடாது. மது, புகை, மாமிச உணவுகள் வேண்டாம். உடல் எடை போடக் கூடாது. தேவையற்ற கவலைகள் தேவையில்லை. மிஞ்சிய சர்க்கரையின்போது இன்சுலினை ஊசி மூலம் செலுத்தி நிவாரணம் பெறலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி வியாதி உள்ளவர்கள் செயல்பட வேண்டும். முற்றிலும் குணமாக்க முடியுமா? அப்படி ஒரு மருந்து இதுவரை இல்லை. எனவேஉணவுக் கட்டுப்பாடு தான்மிகவும் பயனுடையது. சர்க்கரை வியாதியின் பின் விளைவுகள் மோசமானது. இதயம், சிறுநீரகம், கண்பார்வை போன்ற முக்கியப் பகுதிகளைப் பாதிக்கும். எனவே அலட்சியமாக இருக்கக் கூடாது.

- பொதிகை மின்னல், நவம்பர் 2013தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-44514367257904648232013-11-16T23:10:21.095+05:302013-11-16T23:10:21.095+05:30
பார்ப்பனச் சேரி
சதுர்வேதி மங்கலங்கள்
அக்ரகாரமா...
பார்ப்பனச் சேரி

சதுர்வேதி மங்கலங்கள்
அக்ரகாரமாய்ச் சுருங்கி
தேய்ந்த கட்டெறும்பாய்
அதுவுமான பார்ப்பனச் சேரிகள்
தம் அடையாளங்கள் தொலைக்க
ஆதலினாலங்கு குடியேறிய
ஒரு சூத்திரன் வீட்டு
பட்டாசாலையில் அமர்ந்து
தங்கள் சரிந்த சரிதம் எண்ணி
தங்களுக்காக தான் அழுவது
புகையினால்தான் எனக்காட்டி
வரிகள் சரியா எனத்தெரியாத
புரியாத மொழியில்
அவசர அவசரமாய்
மந்திரங்களை ஓதும்
அந்த கருப்புப் பார்ப்பன புரோகிதனின்
கவனங்கள் என்னவோ
யாசகப் பையில்தான்.
அக்ரகாரம் = பார்ப்பனச் சேரிகள் (Madras University
1936ல் வெளி யிட்ட Tamil Lexicon

தொகுப்பு: வையாபுரிப் பிள்ளை தலைமை யிலான குழு)

- பரமத்தி வேலூர் செல்மா காமராசன்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-40246547708691081662013-11-16T23:07:56.514+05:302013-11-16T23:07:56.514+05:30
ஏழைகளின் பிரதிநிதிகளாம் இவர்கள்!
ஏழைகளின் பிரதி...
ஏழைகளின் பிரதிநிதிகளாம் இவர்கள்!

ஏழைகளின் பிரதிநிதிகளாம் இவர்கள்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போது உள்ள 80 (எண்பது) நாடாளுமன்ற உறுப்பினர்களில் 52 பேர் கோடீஸ்வரர்கள்.

ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் சராசரியாக ரூபாய் 4 கோடியே 9 லட்சம் சொத்து உடையவர்கள்.

அதே உத்தரபிரதேசத்தில் சட்டப் பேரவையில் உள்ள 403 சட்டப் பேரவை உறுப்பினர்களில் 271 பேர் கோடீஸ்வரர்கள்.

இந்தியா ஏழை நாடு என யார் சொன்னது?

இதுதான் இந்தியா
தலைமயிர் காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கொடுக்கும் தலைமயிர் காணிக்கை மூலம் இந்தஆண்டு வருவாய் 72 கோடி என அறியப்படுகின்றது. திருப்பதி செல்லும் பக்தர்கள் பெரும்பாலும் தென்னிந்தியர்கள் எனினும் அதிகம் மயிர்க் காணிக்கை செலுத்துவோர் தமிழ்நாட்டு மக்களே ஆவர். உயிருக்கு இல்லையேனும், மயிருக்காவது மதிப்பு இருப்பதை எண்ணி ஆறுதல் அடையலாம். உலகிலேயே அதிக நீளமான முடி இந்தியப் பெண்களுக்கே உள்ளது என்பது தற்போதைய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மாசுபாடு பட்டியலில் நமக்கு முதலிடம்

அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி அதிக மாசடைந்த நகரங்களின் பட்டியலில், இந்தியாவிலுள்ள லக்னோ நகரம் முதலிடத்தில் உள்ளது. உலகில் அதிக மாசடைந்த 25 நகரங்களில் இந்தியாவில் பெருவாரியாக 4 மாநிலங்கள் முறையே லக்னோ 1ஆவது இடத்திலும், கொல்கத்தா 14ஆவது இடத்திலும், மீரட் 17ஆவது இடத்திலும், மும்பை 21ஆவது இடத்திலும் உள்ளன. இந்நகரங்களில் காற்று மற்றும் நீர் மாசுபாடு அதிகமாகக் காணப்படுவதாக ஆய்வுக் குழுவினரால் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தொடரும் இடிபாடுகள்

அண்மைக் காலமாக மகாராட் டிரா மாநிலத்தில் அடுக்குமாடிக் கட்டட இடிபாடுகளால் உயிரிழப் போரின் எண்ணிக்கை அதிக ரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக மும்பை, தானே பகுதிகளில் கடந்த 6 மாதங்களில் 4 அடுக்குமாடிக் கட்டடங்கள் இடிந்துள்ளன. கட்டட இடிபாடு களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை சற்றொப்ப 168 பேர். இவ்வாறு இடிந்த கட்டடங்கள் அனைத்தும் சட்டத்திற்கு புறம்பாகக் கட்டப்பட்டவை. மிக அதிக விலை கொடுத்து நிலங்களை ரியல் எஸ்டேட் மூலம் பெறப்பட்டதே இத்தகைய சட்டவிரோத கட்டடங்கள் உருவானதற்கான மூல காரணங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

- தமிழ் இலெமுரியா அக்டோபர் 15 2013தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-54974752172604797042013-11-16T23:05:59.132+05:302013-11-16T23:05:59.132+05:30எடை மேடை
நிழலற்ற பயணம்
பி.ஆர்.சுபாஸ் சந்திரன் எ...
எடை மேடை

நிழலற்ற பயணம்

பி.ஆர்.சுபாஸ் சந்திரன் எதையும் கொடுக்காமல் ஒன்றை இலவச மாகக் கொடுக்க முடியாது. இது இயற்கை வகுத்த வழி.உழைப்பின் தரத்தையும் அள வையும் பொறுத்தே ஒருவனுக்குக் கிடைக்கும் புகழ்,பதவி,மரியாதை போன் றவை அமையும் என்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறார் சுசில் குமார் சிந்தே. தலித்வாடாவிலிருந்து தலைநகர் வரை (தற்போது நடுவண் அரசில் உள்துறை அமைச்சராக இருக்கும்) சிந்தே அவர்களின் பிறப்பு வளர்ப்பு என்பதில் தொடங்கி அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த எத்தனையோ சுவையான நிகழ் வுகள் "நிழலற்ற பயணமாக"(வாழ்க்கை வரலாறாக) தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

ஆங்கிலம்,இந்தி,தெலுங்கு,மராத்தி ஆகிய மொழிகளில் வெளிவந்துள்ள இந்நூல்,தமிழுக்குப் புது வரவு.ஆற்றல் மிக்க எழுத்தாளர் பி.ஆர்.சுபாஸ் சந்திரனால் எழுதப்பெற்ற சிறந்த நூல்.நல்ல மொழி நடையோடு வந்துள்ள ஓர் அருமையான தமிழ்ப்படைப்பு.

- மூனாதானா.

நூல் வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098.

பக்கங்கள்: 454. விலை:ரூ.300.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-61977083756645128232013-11-16T23:05:01.811+05:302013-11-16T23:05:01.811+05:30
தாலிபற்றி ஒரு தகவல்
அறிவுலக ஆசான் தந்தை பெரியார்...
தாலிபற்றி ஒரு தகவல்

அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்கள் கருத்துகள் பகுத்தறிவு சிந்தனை மக்களை சென்றடைந்துள்ளது என்பதற்கு உதாரணமாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நான் பார்த்ததை விடுதலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

புதுயுகம் என்ற தனியார் தொலைக்காட்சியில் வீடு தாண்டி வருவாயா என்ற நிகழ்ச்சியில் ஒருவர் கூறியது. அவர் சிறு வயதாக இருந்தபொழுது உறவினர் ஒருவர் தன் மனைவி அவர் சொல்வதை அப்படியே ஏற்று கொள்ள வேண்டும் எனவும் எதிர்த்து கேட்கக் கூடாது; ஏன்னா நான் தாலி கட்டியவன் என அடிக்கடி கூறுவார். ஒரு முறை அவர் மனைவி கோபப்பட்டு தாலியை கழற்றி வீசி விட்டார். குடும்பத்தினர் அனைவரும் அதிர்ந்து விட்டனர்; பின் அனைவரும் மனைவியை சமாதானபடுத்தி தாலி அணிவித்தனர். சில நாட்களில் மீண்டும் அதே போன்று தாலி கட்டினவன் சொன்னா கேட்கனும் என கூறவும், மனைவி கோபத்தில் தாலியை கழற்றி அம்மியில் வைத்து நசுக்கி விட்டார். பின் அனைவரும் சமாதானபடுத்த மீண்டும் அணிந்து கொண்டார் எனவும், தாலி பெண்களை அடிமைபடுத்துகிறது எனவும் கூறினார். தாலிமீது தனக்கு நம்பிக்கையில்லை எனவும் தன் திருமணத்திற்கு பின் மனைவியுடன் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று வீடு வந்த பொழுது மனைவியின் தாலி எங்கோ தொலைந்து விட்டது. எனவும் மனைவி இதனால் பயந்துவிட்டார். உறவினர்கள் பூசை பரிகாரம் கூறினர். நான் எதுவும் ஆகாது பயப்பட வேண்டாம் என மனைவிக்கு ஆறுதல் கூறினேன். உறவினரின் தாலிபற்றிய கதையைச் சொன்னேன் உறவினரையும் அவருக்குக் காண்பித்து ஆறுதல் கூறினேன் என்று அவர் நிகழ்ச்சியில் தெரிவித்தார். இப்படி அவர் அறிந்தோ அறியாமலோ பெரியார் கொள்கை அவரைச் சென்றடைந்துள்ளது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-5568298782861199722013-11-16T23:02:17.532+05:302013-11-16T23:02:17.532+05:30டில்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டுக் கிருஷ்ணனும்: சித்...டில்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டுக் கிருஷ்ணனும்: சித்திரபுத்திரன்

டில்லியில் உள்ள பாலகிருஷ்ண சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி என்கிற பண்டிகையின்போது தீண்டாதவர்கள் என்கிறவர்களை எல்லாம் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு பத்திரிகையில் காணப்படுகிறது. புராணங்களின்படி கிருஷ்ணன் என்பதாக ஒரு சுவாமியோ, ஆசாமியோ இருந்ததாக நாம் ஒப்புக்கொள்வதானால் அது ஒரே சாமியாகத்தான் இருந் திருக்கலாமே தவிர, டில்லிக்கு ஒரு கிருஷ்ணனும், தமிழ்நாட்டுக்கு ஒரு கிருஷ்ணனும் இருந்திருக்க முடியாது. அப்படியிருக்க டில்லி கிருஷ்ணன் தீண்டாதவர்கள் கோவிலுக்குள் போனால் ஓடிப்போகாமல் கோவில்களுக் குள்ளாகவே தைரியமாய் உயிருடன் இருக்கும்போது, நமது தமிழ்நாட்டுக் கோவில்களில் உள்ள கிருஷ்ணன் மாத்திரம் தீண்டாதவர்கள் உள்ளே போனால் கோவிலைவிட்டு ஓடிப்போவதோ அல்லது ஒரே அடியாய் செத்துப்போவதோ ஆனால் இந்தமாதிரி கிருஷ்ணனை வைத்து பூஜை செய்வதால் நமக்கு என்ன பலன் அவரால் உண்டாகக்கூடும்? ஒரு மனிதன் உள்ளே வந்தால் தாக்குப்பிடிக்காத கிருஷ்ணன யாருக்கு என்ன செய்ய முடியும்? ஆதலால் தமிழ் நாட்டு கிருஷ்ணனை துரத்திவிட்டு டெல்லி கிருஷ்ணனைத்தான் தருவித்துக் கொள்ளவேண்டுமேயல்லாமல் இந்த மாதிரி சக்தியில்லாத, கிட்டப்போனால் ஓடிப்போகிற கிருஷ்ணன் நமக்கு அரை நிமிஷங்கூட கண்டிப்பாய் உதவவே உதவாது.
- குடிஅரசு - கட்டுரை - 28.8.1927தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-69974908283347825822013-11-16T23:01:48.240+05:302013-11-16T23:01:48.240+05:30
தேசூர் உபாத்திமைச் சங்கத்தில் பார்ப்பனக் குறும்பு...
தேசூர் உபாத்திமைச் சங்கத்தில் பார்ப்பனக் குறும்பு

தேசூர், போர்டு எலிமென்டரி ஆண்கள் பாட சாலையில் 10-09-1927இல் உபாத்திமைச் சங்கம் கூடிற்று. அதில் அக்கிராசனம் வகித்தவர் ஒரு பார்ப் பனர், காரியதரிசியும் ஒரு பார்ப்பனர். மேற்படி தேதியில் ஒற்றுமை என்கிற விஷயத்தைப் பற்றிப் பேசினவரும் ஒரு பார்ப்பனர். இவர் இவ்விஷயத் தைப்பற்றிக் கூறிக்கொண்டு வரும்போது சில மேற்கோள்களை எடுத்துக்காட்டினார். அதில், தற்காலந்தான் ஒற்றுமையைப்பற்றி ஒவ்வொரு சங்கத்திலும் பேசப்பட்டு வருகிறது. இதற்கு முன் பேசப்பட்டதே கிடையாது. மேன்மை தங்கிய விக்டோரியா மகாராணி காலத்திலும், எட்வர்ட் அரசர் முற்பாதி அரசாட்சி யிலும் ஒற்றுமையைப் பற்றி கூறினதே கிடையாது. காங்கிரஸ் கட்சியும், ஜஸ்டிஸ் கட்சியும் தோன்றி, ஜஸ்டிஸ் கட்சியார் ஒரு பூடக மாகயிருந்த இந்து மத விஷயங்களை வெளிப் படுத்தியதால் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் ஒற்றுமை சீர் குலைந்தது என்று கூறினார். பாவம் இப்பார்ப்பனர், பார்ப்பனரல்லாதாருக்கு இழைத்து வரும், வருகின்ற தீங்குகளை, அப்படியே காக்கக் கடவுள் கருணைகூர்ந்தார் போலும்.

மேலும் கவர்ன்மெண்ட் உத்தியோகங்களில் உள்ள பார்ப்பன உத்தியோகஸ்தர்களுக்கு அதிகக் கடினமான விஷயங்களையும், பார்ப்பனரல்லாத உத்தியோகஸ்தர்களுக்கு இலேசான விஷயங் களையும் கொடுத்து விவகாரங்கள் நடத்தப்பட்டு வருகிறது என்றார். பார்ப்பனர்களுக்குத்தான் அதிகப் புத்திக் கூர்மை, அதனால் பார்ப்பனர்களைக் கொண்டு மிகக் கடின விஷயங்கள் நடத்தப்பட்டு வருகிறது என்பதை இப்பார்ப்பனர் தம் உள்ளக் கிடக்கையாய்க் கொண்டு பார்ப்பனரல்லாதாரை இழித்துக் கூறினார். என்னே! இப்பார்ப்பனரின் ஒற்றுமைக் கூற்று. மேலும் இவர் கைவிரல்களில் ஏற்றத்தாழ்வு இருப்பதுபோல், மானிட வர்க்கத்திலும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் உண்டு என்று ஓர் ஆதி திராவிட உபாத்தியாயரைப் பார்த்து பஞ்சமன்-பஞ்சமன் என்று பல தடவைகளில் மிகத் தாழ்வு படுத்திக்கூறி அமர்ந்தார். பிறகு ஓர் ஆதி திராவிட உபாத்தியாயர் எங்களை பஞ்சமன் என்று சொல் லுவது கிடையாது. ஆதிதிராவிடர் என்று கூறப்படு கிறது, கவர்ன்மெண்டாராலும் அங்கீகரிக்கப் பட்டிருக் கிறது. ஆகையால் எங்களை இவ்விதத் தாழ்வுபடுத் திக் கூறினது இச்சங்கத்திற்கழகல்ல எனக்கூறி அமர்ந்தார். பிறகு ஓர் உபாத்தியாயர் வருணாசிரமம் பிரித்தவர்கள் நான்கு வருணங்களைத்தான் பிரித்திருப்பதாகத் தெரிகிறது. பஞ்சமன் என்ற ஒரு வருணத்தை உண்டாக்கினதாகத் தெரியவில்லை. ஆகையால் முதலில் பேசிய அங்கத்தவர் அவ்வார்த் தையை வாபஸ் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று கூறினார். உடனே அப்பார்ப்பன ஆசிரியர் வாபஸ் வாங்கிக் கொள்ளமாட்டேன். தொன்று தொட்டு வந்த வார்த்தையை நாம் ஏன் தள்ளவேண்டும்? அப்படித் தள்ளுவது கூடாது என்று கூறினார். என்னே இப்பார்ப்பனரின் தைரியம். பிராமணத் தன்மையினின்றும் நீங்கியவர்கள் சண்டாளன் என்று இவர்கள் வேதமே கூறுகின்றன. ஆகையால் இதற்கு இப்பார்ப்பனர் என்ன சமாதானம் கூறப் போகிறார்?

பிறகு அக்கிராசனாதிபதி மத விஷயங்களை இங்கு புகுத்தக்கூடாது என்று கூறினாரேயொழிய, தாழ்வான வார்த்தைகளை உபயோகித்தது தவறு என்று கூறினாரில்லை. என்னே! இப்பார்ப்பனர்களின் ஒற்றுமை. பிறகு ஓர் அங்கத்தினர், முதலிலேயே தடுத்திருந்தால் மிகவும் நல்லது. இப்பொழுது தடுப்பது அவ்வளவு உசிதமல்ல எனக்கூறினார். முதலில் பேசிய இப்பார்ப்பன ஆசிரியர், தன்னிடத் தில் இவ்வளவு வகுப்புப் பிரிவினைகளை வைத்துக் கொண்டு ஒற்றுமையைப் பற்றிப் பேசுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறதென்று நாம் கடாவுவதற்கு என்ன சமாதானம் கூறப் போகிறார். இப்பார்ப்பனரின் ஒற்றுமையே ஒற்றுமை. பளா! பளா!!
- குடிஅரசு - கட்டுரை - 18.09.1927தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-57900103399905941332013-11-16T23:00:53.495+05:302013-11-16T23:00:53.495+05:30
தேசூர் உபாத்திமைச் சங்கத்தில் பார்ப்பனக் குறும்பு...
தேசூர் உபாத்திமைச் சங்கத்தில் பார்ப்பனக் குறும்பு

கும்பகோணத்தில் நடைபெற்ற நாடார் மகாஜன சங்க 11ஆவது மகாநாட்டில் சொற்பொழிவு

இம்மாதிரியான வகுப்பு மகாநாடுகள் நமது நாட்டில் நடந்து வருவது நாட்டின் முற்போக்குக்கு ஏற்றதா இல்லையா என்பது கேள்வி. பலர் இது கெடுதல் எனச் சொல்லுகிறார்கள் எனினும் வகுப்பு மகாநாடு அல்லாத (வகுப்புவாதமல்லாத) மகாநாடுகளே இந்நாட்டில் இல்லை என்பதே எனது அபிப்பிராயம்.

ஒவ்வொரு வகுப்பாரும் தங்களுடைய உரிமைகளைக் கேட்கவே மகாநாடுகள் நடத்துகிறார்கள். மற்றொரு வகுப்பார் தலையெடுக்காமல் அடிக்கவும், மற்ற வகுப்பார் உரிமைகள் பெறாமலிருக்கவுமே பலர் பல மகாநாடுகளை நடத்துகிறார்கள். ஆனால் நமது நாடார் மகாநாடோ அப்படியில்லை. பிறருக்குக் கெடுதல் செய்யாமல் நாடார் மகாஜனங்களின் நன்மையை நாடியும், உரிமைகளைப் பெறவுமே இம் மகாநாடு நடைபெறு கின்றது. வகுப்பு மகாநாடுகளும், வகுப்பு வாதங்களும் மேல் ஜாதியாராலும் அவர்களுடைய கொடுமைகளாலும் தான் ஏற்பட்டவை. துவேஷத்தை உண்டாக்க நாம் மகாநாடுகள் கூட்டுவதில்லை துவேஷம் வேண்டாம், எல்லோரும் சமம் என்று சொல்லுங்கள்; சொல்லவே நாம் இம்மகாநாடு கூட்டியிருக் கிறோம்.

நம் நாட்டில் அடிக்கடி சொல்லப்பட்டுவரும் ஒற்றுமை என்ற வார்த்தைகளும், பிரச்சினைகளும் வெளிவேஷமே. தங்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய நிலைமை ஒவ்வொரு வருக்கும் ஏற்பட்ட பின்னரே உண்மை ஒற்றுமை ஏற்படும். ஒருவருக்கொருவர் ஒற்றுமையும் நம்பிக்கையும் ஏற்பட வேண்டியது அவசியம். அதற்கான வேலைகளைச் செய்யச் சுதந்திரம் ஒவ்வொரு சமூகத்துக்கும் இருக்கவேண்டும். ஒவ்வொரு வகுப்புக்கும் சுயமரியாதை, சமத்துவம், சுயமதிப்பு ஏற்பட வேண்டும். அதன் மூலந்தான் தேச முன்னேற்றமடையும். உண்மையான தேசியம் என்பது சுயமரியாதை ஒன்றே சுயமரியாதையைப் பொறுத்தேதான் சுயராஜ்ஜியமிருக்கிறது. சகலரும் ஒன்று. மேலோர், கீழோர் என்று உணர்ச்சி இருக்கவே கூடாது.
- குடிஅரசு - சொற்பொழிவு - 09.10.1927தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-57692317379588708562013-11-16T22:54:23.168+05:302013-11-16T22:54:23.168+05:30
அழித்தாக வேண்டும்
மக்களைச் சுயமரியாதை இல்லாமல்...
அழித்தாக வேண்டும்

மக்களைச் சுயமரியாதை இல்லாமல் செய்து மிருகங்களாக்கி, நாய், பன்றிகளைவிட இழிவாய் நடத்த ஆதாரமாய் இருக்கும் மதம் எதுவானாலும் அதை அழித்தாக வேண்டும்.
(குடிஅரசு, 18.12.1927)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com