tag:blogger.com,1999:blog-1474608369333206681.post7761339415103149797..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பிள்ளைப்பேறு - உடல்கூறு கல்வி பற்றி பெரியார்தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-24942537811036579352014-10-02T07:26:12.364+05:302014-10-02T07:26:12.364+05:30அறிஞர்களின் வாழ்வில்....
Print E-mail
மில்டனின்...அறிஞர்களின் வாழ்வில்....
Print E-mail

மில்டனின் சொல்லாற்றல்

லண்டனில் பிறந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றவர் மில்டன். கவிஞர் மட்டுமன்றி, சிறந்த மேதையாகவும் விளங்கியவர். மில்டனின் எழுத்துகளை, காலத்தால் அழியாத எழுத்துகளும் அறிவும் செய்து கொண்ட திருமணம் என்று வோர்ட்ஸ்வொர்த் கூறியுள்ளார்.

மில்டன் பெரும் பிரச்சினைகள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். முதலாம் சார்லஸ் மன்னன் கொல்லப்பட்டது சரியே என்று மில்டன் கூறினார். இந்தக் கூற்றைக் கேட்டுக் கோபமடைந்தார் சார்லசின் மகன் இரண்டாம் ஜேம்ஸ். மில்டனை அழைத்து, முதலாம் சார்லஸ் மன்னரின் கொலையினை நியாயப்படுத்துவதால்தான் உங்கள் கண்கள் குருடாகி விட்டன. உங்களுக்கு தெய்வம் தந்த தண்டனை இது என்றார் மன்னர்.

இதனைக் கேட்ட மில்டன், நடக்கும் சில துரதிர்ஷ்டவசமான நிகழ்ச்சிகள் தெய்வ கோபத்தின் குறியீடுகள் என்று மேன்மை பொருந்திய மன்னர் நினைத்தால், தங்கள் தந்தையாரின் முடிவு குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அட, எனக்காவது 2 கண்கள் மட்டும்தான் போயின; உங்கள் தந்தைக்கு தலையே போய்விட்டதே என்றாராம்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-10826436732036177482014-10-02T07:25:09.217+05:302014-10-02T07:25:09.217+05:30பெரியாரைப் பின்பற்றுவோம்!
பெரியார் என்ற சொல்லுக...பெரியாரைப் பின்பற்றுவோம்!

பெரியார் என்ற சொல்லுக்கு மனிதநேயம் என்றே பொருள்! இதை அகராதியில் அச்சிட்டாலும் அதில் பிழையேதும் இல்லை.

ஆம். பெரியார் என்ற ஒற்றைச் சொல்லின் உள்ளடக்கம் மிகப் பெரியது. ஈ.வெ.ராமசாமி என்பவருக்குப் பெண்கள் அளித்த சிறப்புப் பெயர் பெரியார் என்றாலும், அப்பெயர் அவரால் தனித் தன்மையும், தனிப் பெருமையும், உயர்தகுதியும் பெற்றுவிட்டது என்பதே உண்மை!

பெரியார் என்ற தனி மனிதர் வழக்கமாக உலகில் பிறந்து, வாழ்ந்து, மறையும் சராசரி மனிதர் அல்லர். அல்லது மக்கள் மத்தியில் பரவலாக அறியப்படும் ஒரு சிலரைப் போன்றவரும் அல்லர்.

அவர் ஒரு சகாப்தம்! காலகட்டம்! சரித்திரம்! திருப்புமுனை! தீர்க்கதரிசி! உலக நாயகர்! சிந்தனைச் சுரங்கம்! ஆதிக்கம் அழித்த சமதர்மச் சிற்பி! இப்படி எத்தனையோ இலக்கணங்களுக்கு இலக்கியமாகத் திகழ்ந்தவர்! அதனால்தான், உலக அமைப்பான அய்.நா.மன்றம் இவரை இருபதாம் நூற்றாண்டின் தீர்க்கதரிசி என்று, இவ்வுலகில் எவருக்கும் அளிக்காத பெருமையை அளித்தது.

அவர் ஒரு தொலைநோக்காளர் என்பதற்கு அவரது இனிவரும் உலகம் என்ற நூலே சான்று. அவர் ஒரு தத்துவ மேதை என்பதற்கு அவரது தத்துவ விளக்கம் என்ற நூலே சான்று. அவர் ஒரு பத்திரிகையாளர் என்பதற்கு குடியரசு, விடுதலை, உண்மை போன்ற இதழ்கள் சான்று!

அவர் ஒரு புரட்சியாளர் என்பதற்கு அவரது போராட்டங்கள் சான்று.

அவர் ஒரு சாதனையாளர் என்பதற்கு அவரது பிரச்சாரப் பயணங்களும், மேடை முழக்கங்களும் சான்று.

அவர் ஒரு கொள்கையாளர் என்பதற்கு அவரது வாழ்வே சான்று!

புரட்சி, போராட்டங்கள் நடத்தி தன் வாழ்விலே விடிவும் கண்டு, விளைவுகளையும் கண்டவர் பெரியார் மட்டுமே!

தன்னைப் போலவே, உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் உணர்வுள்ளவன், உரிமையுள்ளவன், மானமுள்ளவன், மதிக்கப்பட வேண்டியவன், சமமானவன், உறவு கொண்டு வாழ வேண்டியவன். ஆண்டான் அடிமை இல்லை; தீண்டத்தகாதவன், வணங்கத்தக்கவன் இல்லை! பிறப்பொக்கும் எல்லா மனிதர்க்கும் என்பதே இவரது கொள்கை. இவற்றிற்காகவே வாழ்ந்தார்; இவற்றிற்காகவே போராடினார்.

எனவேதான் பெரியார் என்றால், மனிதநேயம் என்று சொன்னேன்!

ஆனால் ஆதிக்கவாதிகள், குறிப்பாக ஆரியப் பார்ப்பனர்கள், பெரியாரின் பரந்துபட்ட இந்த உணர்வைச் சுருக்கி, குறுக்கிக்கூட அல்ல, மறைத்து, குறைத்து, மாற்றி, திரித்துக் கூறினர். பெரியாரின் பெருமையை, புகழை, சிறப்பை, புரட்சியை பிறர் அறியாமலிருக்கும்படிச் செய்தனர்; செய்தும் வருகின்றனர்.

எடுத்துக்காட்டாக, செப்டம்பர் மாதம் பிறந்த தலைவர்களைப் படம் போட்டுக் காட்டிய தினமணி சிறுவர் மணி, பெரியார் படத்தைப் போடவில்லை. முதலில் போடவேண்டிய பெரியாரின் படத்தை முற்றாக நீக்கினர். சிறுவர்கள் பெரியாரை அறியக்கூடாது என்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்; கவனமாக இருக்கின்றனர்.

பெரியார் என்றால் கடவுள் இல்லை யென்பார்; பார்ப்பானைத் திட்டுவார் என்ற அளவில் பெரியாரை பிறர் அறியும்படிச் செய்கின்றனர்.

ஆனால், இவ்வளவுதான் பெரியாரா? பிஞ்சுகள் சிந்திக்க வேண்டும்; தெரிந்துகொள்ள வேண்டும்.

பெரியார் செய்தது இவை மட்டுமென்றால், அய்.நா.மன்றம் எப்படி உலகில் யாருக்கும் அளிக்காத பெருமையை _ பட்டத்தை பெரியாருக்கு அளித்துச் சிறப்பித்திருக்கும்? என்ற வினாவோடு பெரியாரைத் தேடவேண்டும்; பெரியாரின் சிந்தனைகளைக் கிளற வேண்டும்; தோளிட வேண்டும்.

அப்படிச் செய்தால் பெரியாரின் பல்துறைச் சிந்தனைகள், பணிகள், போராட்டங்கள், புரட்சிகள் வெளிப்படும்.

வெளிப்பட்டவற்றை விடாது பிடித்துச் சிந்தித்தால், தெளிவு, துணிவு, ஒழுக்கம், நாணயம், நேர்மை, தொண்டு, சமத்துவம் போன்ற பல உயரிய கொள்கைகள் நம்முள் குடிகொள்ளும்; நம்மை வழிநடத்தும்.

பெரியாரின் சிந்தனைவழிச் சென்றால், தன்மான உணர்வு தானே வரும். தன்மான உணர்வு தலைதூக்கினால், நம் இழிவு, தாழ்வு, அறியாமை எல்லாம் அகலும். நாமும் மனிதன், நாம் யாருக்கும் அடிமையல்ல என்ற உண்மை உள்ளத்துள் பதியும். விழிப்பு, துணிவு, தெளிவு, காரணம் கேட்கும் சிந்தனை வரும்போது நம் வாழ்வு சிறக்கும் _ உயரும். நம் தலைமுறை தலைநிமிரும்.

பெரியார் வழி நடக்கும் பிஞ்சுகள், வாழ்வில் என்றும் வீழ்வதில்லை. எனவே, பெரியாரைப் பின்பற்றுவோம், வாழ்வில் சிறப்போம்; பிறர் வாழ்வு சிறக்கவும் உழைப்போம்! இதுவே இக்காலத்தில் நம் உள்ளத்தில் கொள்ள வேண்டிய உறுதி!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-49341959725367583952014-10-02T07:19:43.764+05:302014-10-02T07:19:43.764+05:30அய்யாவின் அடிச்சுவட்டில்... கடந்த பாதை...
திராவி...அய்யாவின் அடிச்சுவட்டில்... கடந்த பாதை...

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தன் வரலாறு அய்யாவின் அடிச்சுவட்டில்... என்ற தலைப்பில் புதிய பார்வை 1995 _ செப்டம்பர் 1ஆம் இதழில் தொடராக வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து உண்மை இதழில் கடந்த சில ஆண்டுகளில் நான்கு பாகங்களாக வெளிவந்து, புத்தகமாகவும் வெளியிடப்பட்டுள்ளது. 1933 ஆசிரியர் கி.வீரமணி பிறப்பு முதல் அறிஞர் அண்ணா மறைவு (1969) வரை முதல் பாகமாகவும், 1969 முதல் தந்தை பெரியார் மறைவு (1973) வரை இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களாகவும், அய்யா காலத்திற்குப் பின் அன்னை மணியம்மையார் தலைமையிலான காலப் பதிவுகள் (1974_1978) நான்காம் பாகமாகவும் வெளிவந்துள்ளன.

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் காலத்திற் குப் பிறகு இயக்கத்தின் பொறுப்பை ஏற்ற நாளில் இருந்து தொடங்குகிறது அய்யாவின் அடிச்சுவட்டில் அய்ந்தாம் பாகம்.

இதழ்களின் பார்வையில்...

தமிழ்நாட்டின் கடந்த அரை நூற்றாண்டு அரசியல் வரலாற்றை உள்ளடக்கியதாக, இந்நூல் அமைந்துள்ளது. சுவையும் விறுவிறுப்பும் கலந்த நடையில், வீரமணி இப்புத்தகத்தை எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் அரசியல் நிகழ்வுகள் பற்றிய அபூர்வமான ஆவணமாக இந்தப் புத்தகம் திகழ்கிறது.

- தினத்தந்தி 31.12.2008

தந்தை பெரியாரிடம் அறிமுகமானது முதல், அவரது நிழலாக வளர்ந்தது வரையிலான காலத்து, தனது வாழ்க்கைக் குறிப்புகளைத் தொகுத்தளித்திருக்கிறார் கி.வீரமணி. தமிழக அரசியலைப் புரட்டிப் போட்ட பல அரசியல் நிகழ்வுகளை பெரியாரின் அருகிலிருந்து பார்த்த அவர், சுவாரசியம் குறையாத நடையில் அவற்றை விவரிக்கிறார். திராவிட இயக்க அரசியல்மீது ஆர்வம் காட்டும் எல்லோரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

- தினகரன் 4.1.2009

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி 1944ஆம் ஆண்டு முதன்முறையாக ஈ.வெ.ரா பெரியாரைச் சந்தித்ததில் இருந்து 1971ஆம் ஆண்டு வரையும் அவருக்குக் கிடைத்த பல்வேறு அனுபவங்களைப் பதிவு செய்துள்ள நூல். மாணவப் பருவத்தில் அவர் பங்கு கொண்ட இயக்கங்கள், போராட்டங்கள், எதிர் கொண்ட இடர்ப்பாடுகள் அனைத்தும் கூறப்பட்டுள்ள நூல், திராவிட இயக்க வரலாற்றைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்குப் பயன்படும்.

- தினமணி 5.1.2009

வாழ்க்கை வரலாற்று நூல்களில் மிகமிகக் குறைவான பொய்கள் இடம் பெறுவது சுயவரலாற்று நூல்களில்தான் என்கின்ற பொருள்படும் ஆங்கிலப் பொன்மொழி உண்டு. தாமறிந்த தம்முடைய வரலாற்றுச் செய்திகளை முடிந்தவரை பதிவு செய்வது என்பது மிக மிக அவசியமான வரலாற்றுக் கடமை. அதனைச் செய்ததற்காக கி. வீரமணிக்குப் பாராட்டுகள். அய்யாவின், அடிச்சுவட்டில் உறுதியாகப் பயணம் செய்பவர் வீரமணி. இதில் சந்தேகம் இல்லை. இந்நூல் அதனை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

- தீக்கதிர் 18.1.2009

பெரியாரின் அணுக்கத் தொண்டராக அவரின் கடைசி வாழ்நாள் வரையிலும் அருகில் இருந்த கி. வீரமணியின் தன் வரலாற்று நூல். அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பெரியாரோடு இணைந்ததுதான் என்ற அளவில், பெரியாரின் பண்புகளையும், கொள்கைகளையும் சிறப்பாக நம்முன் வைக்கிறது. தன் வரலாறு என்பதைவிட, வரலாற்றுப் பார்வை என்பதே பொருத்தமாக இருக்கும். தமிழகத்தின் மகா புருஷனுக்கு அருகிருந்து பணி செய்த அனுபவத்தை நேர்த்தியுடன் விவரித்திருக்கும் பாங்குதான் இந்தப் புத்தகத்தின் அருமையான பண்பு!

- ஆனந்த விகடன் 14.1.2009

ஒரு தன் வரலாறு எழுதப்படும்போது மேதாவித்தனமும், சிலிர்ப்பும், பெருமை கூட்டி எழுதுவதும் வழக்கம். அப்படிச் செய்யாமல் தனது அறிவாசானின் நிழலில் நின்று நிதானமாக இயல்பாக மிக நேர்மையுடன் பதிவு செய்திருக்கிறார் தனக்குத் தானே எடை போட்டு மதிப்பீடு செய்யும் முயற்சிதான் தன் வரலாறு என்பதை உணர்ந்த ஆசிரியர் கி. வீரமணி. இவ்வகையிலும் இந்நூல் முக்கியக் கவனத்திற்குரியதாகிறது. அடுத்தடுத்த பாகங்கள் எப்போது வரும் என்கிற ஆவலைத் தூண்டுகிறது இந்த முதல் பாகம்.

- புதிய பார்வை ஜனவரி 1 -15, 2009தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-1959690875917437162014-10-02T07:16:54.074+05:302014-10-02T07:16:54.074+05:30நனவாகுமா? நீதிபதிகள் கேள்வி
பதவியேற்றவுடன் 2500 க...நனவாகுமா? நீதிபதிகள் கேள்வி

பதவியேற்றவுடன் 2500 கோடி ரூபாயை கங்கையைச் சுத்தப்படுத்த ஒதுக்கப்(!) போகிறோம் என்றது பா.ஜ.க. அரசு.

கங்கை நதியைச் சுத்தப்படுத்துவது தொடர்பாக நீங்கள் (மத்திய அரசு) தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தை ஆய்வு செய்து பார்த்தால் இன்னும் 200 ஆண்டுகள் ஆனாலும்கூட கங்கையைச் சுத்தப்படுத்துவது என்பது ஒரு கனவுத் திட்டம். மாசில்லாத சுத்தமான கங்கையை நம்மால் பார்க்க முடியுமா? முடியாதா? என்று தெரியவில்லை என சவுக்கைச் சுழற்றியிருக்கிறார்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.தாக்குர், ஆர் பானுமதி ஆகியோர்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-76335482868108679282014-10-02T07:16:14.750+05:302014-10-02T07:16:14.750+05:30கடவுள் மறுப்பு மட்டுமல்ல
1967இல் தந்தை பெரியார் க...கடவுள் மறுப்பு மட்டுமல்ல

1967இல் தந்தை பெரியார் கடவுள் மறுப்பு வாசகத்தை அறிமுகப்படுத்திய பிறகு கழகக் கூட்டங்களில் தொடக்கத்திலேயே அதைச் சொல்வதுண்டு. அன்று பெரியார் பிஞ்சுகளாக இருந்த நாங்கள் (என் சகோதரர் மற்றும் சகோதரி) தேவகோட்டையில் ஆர்ச் அருகில் தந்தை பெரியார் பங்கேற்ற கூட்டத்தில் கடவுள் மறுப்பு வாசகத்தை மனப்பாடம் செய்து மேடையில் கூறினோம். அதைக் கவனித்த அய்யா அவர்கள், அதோடு போதாது; ஆத்மா மறுப்பும் சொல்ல வேண்டும். அது தெரியுமா? என்று கேட்டு, பின்னர் அவர்கள் வைத்திருந்த ஓர் அட்டையில் எழுதப்பட்டிருந்த ஆத்மா மறுப்பைக் காட்டி, அதைப் பார்த்துப் படிக்கச் சொன்னார்கள். தன் கொள்கையில் முழுமையும், தெளிவும் அவசியம் என்பதில் உறுதியோடிருந்தவர் பெரியார்.

- இறைவிதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-67000858939361274482014-10-02T07:15:50.089+05:302014-10-02T07:15:50.089+05:30இந்திய உபகண்டத்திலேயே ஜாதி ஒழிப்புக்காகவும், ஜாதி ...இந்திய உபகண்டத்திலேயே ஜாதி ஒழிப்புக்காகவும், ஜாதி ஆணவ ஆதிக்கங்களை ஒழிப்பதற்காகவும் உண்மையிலேயே பாடுபட்டு உழைத்து வருபவர் பெரியார். இந்த இருபதாம் நூற்றாண்டிலேயே பெரியார் ஒருவர்தான் இருக்கிறார். ஆகவே, ஜாதி ஒழிப்பில் ஆர்வமிக்க அனைவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் பெரியார் அவர்களுடன் ஒத்துழைப்பதுடன், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் மேடைகளில் அவரது அறிவுரைகளைக் கேட்கும்படி வசதி ஏற்படுத்திக் கொள்வது நல்லது.

- பாபு ஜெகஜீவன்ராம் (விடுதலை, 18.10.1960)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-11135456620358373742014-10-02T07:15:24.969+05:302014-10-02T07:15:24.969+05:30
பெண்களைப் பற்றி அந்தக் காலத்தி லேயே அறிவுப்பூர்வம...
பெண்களைப் பற்றி அந்தக் காலத்தி லேயே அறிவுப்பூர்வமாகப் பேசியவர் பெரியார். அந்தக் காலத்துக்கு அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. இன்றைக்கும் அது பொருத்தமாகத்தான் இருக்கிறது. பெண்களைப்பற்றி இத்தனை கரிசனத்துடன் ஒருவர் சிந்தித்தது நினைத்துப் பார்க்க வேண்டிய விஷயம்.

முக்கியமாக இந்து தர்மத்தைக் காப்பாற்றியதாகச் சொல்லப்படுகிற முனிவர்களும், ரிஷிகளும் பெண்களை எவ்வளவு கேவலப்படுத்தியவர்கள் என்பதை முதலில் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர் பெரியார்தான்.

நம் தெய்வீகத் திரைப் படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும் மிக உயரத்தில் தூக்கி வைத்துச் சித்திரித்துக் காட்டும் இந்த ரிஷிகள், முனிகளின் பிம்பத்தை உடைத்துக் காட்டவேண்டும் என்ற ஆவல் எனக்கு உண்டு. அந்த வேலையை மிகச் சாதாரணமாகச் செய்துவிட்ட துணிச்சல்காரர் பெரியார். அந்தத் துணிச்சலை நினைத்து சந்தோஷப்படுகிறேன்.

- இராஜம் கிருஷ்ணன் (எழுத்தாளர்)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-84653326481436001872014-10-02T07:14:59.283+05:302014-10-02T07:14:59.283+05:30பெரியார் வாழ்வில்....
நம் பிள்ளைகள் அரசுப் பணிக்...பெரியார் வாழ்வில்....

நம் பிள்ளைகள் அரசுப் பணிக்குப் போகவேண்டும்

தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தந்தை பெரியாருக்கு உதவியாளராக வந்து பணியாற்றிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அந்த இளைஞருக்கு அரசுப் பணி வாய்ப்பு வந்து, அதற்கான ஆணையும் கிடைத்தது. அந்த ஆணையை எடுத்துக்கொண்டு இளைஞரை அழைத்துச் செல்ல அவருடைய உறவினர் வந்திருந்தார். ஆனால் அய்யாவுக்கு உதவியாக இருப்பதே தனக்குப் பெரிதும் மகிழ்ச்சி என்றும், அய்யாவுடனிருக்கும் வாய்ப்பைத் தான் இழக்க விரும்பவில்லை என்றும் அந்த இளைஞர் அரசுப் பணியை மறுக்கும் எண்ணத்தை வெளியிட்டார். இதனை புலவர் இமயவரம்பன் மூலம் அறிந்த தந்தை பெரியார், நம் பிள்ளைகள் அரசுப் பணியில் _ அதிகாரத்தில் அமர வேண்டும் என்பதற்காகத்தானே நான் பாடுபட்டு வருகிறேன். அப்படி வந்த பணியை விட்டுவிடுவதா? எனக்கு உதவிக்கு வேறு ஆட்களைப் பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் சென்று பணியில் சேருங்கள். என்று அந்த இளைஞருக்கு எடுத்துச் சொல்லி, உறவினருடன் அனுப்பி வைத்தார். தந்தை பெரியார் என்பது சும்மா அழைக்கப்பட்ட பெயரா என்ன?தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-8642794307664764762014-10-02T07:13:35.665+05:302014-10-02T07:13:35.665+05:30விநாயகனின் மர்ம விளையாட்டுகள்
கிராமங்களில் இந்து...விநாயகனின் மர்ம விளையாட்டுகள்

கிராமங்களில் இந்துக்கள் என்ற அடையாளத்தோடு தாழ்த்தப்பட்டோர் குடியிருக்கும் சேரிக்குள்ளும் வரச் சொன்னால், தனக்குத் தீண்டாமை ஒட்டிக் கொள்ளும் என்று சிலிர்த்துக் கொண்டு போகும் இந்துக் கடவுள்கள்;

நகரங்களில் தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்கு இந்துக்கள் என்று முக்கியத்துவம் கொடுத்து;

இந்துக்கள் அல்லாத இஸ்லாமியர் தெருவழியாக அதுவும் மசூதிகள் வழியாகத்தான் போவேன் என்று பிள்ளையார் அடம் பிடிப்பதன் மர்மம் என்ன?

சென்னை மீனவர்களை இந்துக்கள் என்று அடையாளப்படுத்தி, விநாயகரை மீனவர் குடியிருப்புகளுக்கும் மீனவரை விநாயகர் ஊர்வலத்திற்கும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்துச் செல்லும் இந்து அமைப்புகள்;

திருவல்லிக்கேணி அக்ரஹாரத்தைச் சுற்றி, அடிக்கடி பல்லக்கில் உலா வரும் பார்த்தசாரதியையும், மயிலாப்பூர் கோவிலை சூத்திர பக்தர்கள் சும்மா சும்மா சுற்றி சுற்றி வருவதைப் போல், அடிக்கடி அக்ரஹாரத்தைச் சுற்றி வருகிற மயிலை கபாலிஸ்வரனையும், மிக அருகில் இருக்கும் மீனவர் குப்பத்திற்குள் வீதி உலா அழைத்துச் செல்லாமல் இருப்பதன் மர்மம் என்ன?

2004 டிசம்பர் 26 அன்று சென்னை மண்ணின் மைந்தர்களான மீனவர்களைப் பலி கொண்டது சுனாமி.

எஞ்சியவர்கள் உயிர் தப்ப அருகிலிருந்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மயிலை கபாலிஸ்வரர் கோவில்களை நாடி ஓடினார்கள்;

ஆனால் அந்த மாபெரும் இந்துக் கோவில் கதவுகள் மீனவ இந்துக்களுக்குத் திறந்து தங்க இடம் தந்தால் அசுத்தம் செய்து விடுவார்கள், தீட்டாகி விடும் என்று மூடியே இருந்தது.

100 சதவீதம் இந்துக்களான சென்னை மீனவர்களுக்கு சுனாமி தாக்குதல்களின் போது, கிறித்துவ சாந்தோம் சர்ச் கதவுகளே திறந்து அடைக்கலம் தந்தது.

அடைக்கலம் தந்தவன் மீனவர்களுக்கு அந்நிய மதக்காரன் விரட்டி விட்டவன் சொல்கிறான்.

சுனாமியின் போது விரட்டி அடித்தவர்கள் இப்போது விநாயகன் சிலையோடு மீனவக் குப்பங்களுக்குள் இந்து விளையாட்டு விளையாட வருவதன் மர்மம் என்ன?

கோவில்களில் விநாயகர் உட்பட சமஸ்கிருத மந்திரங்கள் சொல்லி வணங்கும் கடவுள்களுக்கு, வழக்கமாக மிருதங்கம், கடம், வீணை, புல்லாங்குழல் போனறவைதான் இசைக்கப்படும்; வீதி உலா புறப்படும்போது நாதஸ்வரம், தவில் கொண்டுதான் வாசிப்பார்கள்.

ஆனால் இப்போது விநாயகர் நகர் உலா புறப்படும்போது பறை அடித்துக் கொண்டாடுவதன் மர்மம் என்ன?

- வே.மதிமாறன்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-51813582691536138522014-10-02T07:12:57.565+05:302014-10-02T07:12:57.565+05:30
தலைவர்கள் போற்றும் தலைவர்!
கொள்கைக் குன்றம்
இ...

தலைவர்கள் போற்றும் தலைவர்!

கொள்கைக் குன்றம்

இன்று நான் கழகப் பணியாற்றுவதாயிருப்பினும், பொதுப் பணி ஆயினும், கலைப் பணி ஆயினும், எழுத்துப் பணி ஆயினும், கொள்கைப் பிரச்சாரப் பணியாயினும், முரசொலி நாளேட்டுப் பணியாயினும் ஓய்வு கொள்ளாமல், உறக்கம் கொள்ளாமல், உணவு கூட அருந்தாமல் உழைப்பதற்குப் பயிற்சி பெற்றிருப்பது, குடிஅரசு அலுவலகத்திலும் ஈரோடு இல்லத்திலும் அந்தக் கொள்கைக் குன்றம் பகுத்தறிவுப் பகலவனிடம்தான் என்பதை எண்ணியெண்ணி இப்போதும் இன்பம் காணுகிறேன்.

- முத்தமிழறிஞர் கலைஞர்

ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி

ஆயிரம் ஆண்டெனும்
மூதாட்டி
அவள் அணிந்திராத
அணியாவார்
அறிந்திராத அறிவாவார்
இப்பெரிய தமிழர்நாடு
கணந்தோறும்
எதிர்பார்க்கும்
தலைவராவார்
கழறவோ அவர் பெயர்தான்
இராமசாமி.

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

பெரியாரிடத்தில் நம்பிக்கை வைத்து நடந்து கொள்ளுங்கள்

பார்ப்பனரல்லாதோருக்கு நான் சொல்வது என்னவென்றால் - தலைமைத்துவம், மக்கள் ஒற்றுமை, தலைவரிடம் மரியாதை ஆகியவற்றை மாற்றார்களிடமிருந்து பார்த்துப் படித்துக் கொள்ளுங்கள். காலம் கடவா முன்னர் கற்றுக் கொள்ளுங்கள். ஆதலால் உங்கள் தலைவரைக் குறைகூறுவது புத்திசாலித்தனமான காரியமாகாது. எனவே, தலைவர் பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வைத்து மதித்து நடந்து கொள்ளுங்கள்.

- அண்ணல் அம்பேத்கர் (குடிஅரசு, 30.9.1944)

நீதிமன்றின்...

நோபல் பரிசு

பெரியார் அவர்கள் மட்டும் தமிழ்நாட்டிலே பிறவாமல் இருந்து, மற்ற நாடுகளிலே பிறந்து, இத்தகைய கருத்துகளைச் சொல்லியிருப்பாரேயானால், அவருக்குக் கண்டிப்பாக நோபல் பரிசு கிடைத்திருக்கும். அவ்வளவு சிந்தனை மிக்க கருத்துகளைச் சொல்லி இருக்கிறார்; எழுதியிருக்கிறார்.

- நீதிபதி பி.வேணுகோபால்

பதவியை விரும்பாத தலைவர்

அய்யா அவர்கள் பதவியை விரும்பவில்லை; அரசியலை விரும்பவில்லை; பதவியை வெளிப்படையாக வெறுத்தார்; ஊரைத் திருத்த வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார். மக்கள் மானத்தோடும், மரியாதையோடும் வாழ வழி சொல்லிப் பிரச்சாரம் செய்தார். அதில் பெரும் அளவிற்கு வெற்றி கண்டார் என்றே சொல்லலாம்.

- நீதிபதி ஏ.வரதராசன்

பெரியார் இல்லை என்று சொன்னால்...

பகுத்தறிவு மேதை, பகலவன் போல் கதிரொளி வீசிய தலைவர் பெரியார் இல்லை என்று சொன்னால் இன்று உயர் நீதிமன்றத்திலே இத்தனை பேர் நம்மவர்களாக வந்திருக்க முடியாது! அறிவுக் கண்களைத் திறந்துவிட்ட ஒரே தலைவர் பெரியார்.

- நீதிபதி எஸ்.மோகன்

ஆயுட்காலம் முழுவதும்
ஆயுட்காலம் முழுவதும் மனத்திலே இருக்கின்ற மாசினையும் அறிவிலே இருக்கின்ற திருக்கத்தையும் ஒழிக்கப்பாடுபட்ட ஒருவர் பெரியார்.
- நீதிபதி எம்.எம்.இஸ்மாயில்

தன் அறிவை முன்வைத்து...

கீழைநாடுகளைப் பற்றிப் பெர்ட்ரண்ட் ரசல் ஒரு நூலில் எழுதும் பொழுது, இங்குள்ளவர்கள் எதை எழுதினாலும், பேசினாலும் மேற்கோள் காட்டிப் பேசுவதுதான் வழக்கம். தனது கருத்து என்று வெளியிட மிகவும் தயங்குவார்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். நான் அறிந்தவரையில் மேற்கோள் காட்டிப் பேசாமல், தனது அறிவையே முன்வைத்துப் பேசும் தனித்த சிந்தனையாளர் பெரியார் ஒருவர்தான்!

- நீதிபதி ஏ.எஸ்.பி. (அய்யர்)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-51269101836910278212014-10-02T07:12:09.086+05:302014-10-02T07:12:09.086+05:30பெரியாராம் பேரண்டம்!
இருளை வெடிவைத்துப்
பிளந்த எ...பெரியாராம் பேரண்டம்!

இருளை வெடிவைத்துப்
பிளந்த எரிமலை!
இன உணர்வை ஏற்றிய தீபம்!

ஆயிரங் காலத்து
அடிமைச் சேவகத்தை
அடி தெரியாமல் நொறுக்கிய பூகம்பம்!

ஆணவச் சிரிப்பின்
அடங்கா ஆரியத்தை
அக்னிச் சிரிப்பால்
அழித்திட்ட அரிமா!

பிறவிப் பேத
சமுத்திரக் காட்டை
அறிவுப் புனலால்
உறிஞ்சிய அகழி!

எங்கே எங்கே
ஏற்றத் தாழ்வென்று
முகவரி தேடி
மோதிய வேழம்!

மதமாம் யானையை
சம் ஹாரம் செய்து
மன்பதை காத்திட்ட
மானுட மீட்பர்!

அமைதித் தேன்குழல் தென்றல் காற்றை
வையத்து வாயினில்
ஊட்டிய செவிலி!

யாரிந்த மானுடர்?
ஈரோட்டுத் தொட்டிலில் குழந்தையாய்ப் பிறந்த
பெரியாராம் பேரண்டம்!

- கவிஞர் கலி. பூங்குன்றன்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-2197619942867251412014-10-02T07:10:48.257+05:302014-10-02T07:10:48.257+05:30வாழ்வைக் கெடுத்த ஜாதகம்!
எனது கட்சிக்காரர் (Clien...வாழ்வைக் கெடுத்த ஜாதகம்!

எனது கட்சிக்காரர் (Client) அவர்களுக்கு சுமார் 65,70 வயதிருக்கும். அவரின் ஒரே மகளுக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணத்திற்கு முன்பு பெண்ணின் ஜாதகத்தையும் பையனின் ஜாதகத்தையும், வயதும் அனுபவமிக்கவரும் கைராசிக்காரருமான ஜாதகக்காரரிடம் கொடுத்து ஜாதகத்தைக் கணிக்கும்படிச் சொல்லியிருக்கிறார். ஜாதகக்காரரும் இருவரின் ஜாதகத்தையும் பார்த்து பஞ்சாங்கங்களையும் புரட்டி கூட்டல் கழித்தல் கணக்குப் போட்டு இருவர் ஜாதகமும் மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் அனைத்துப் பொருத்தங்களும் இருப்பதனாலும் இருவருக்கும் ஆயுள் மிக கெட்டியாக இருப்பதாலும் திருமணம் செய்யலாம் என்று நல்வாக்குக் கொடுத்துவிட்டார். ஜாதகக்காரரின் பேச்சை நம்பி பெண்ணின் தகப்பனார் ஏராளமாக செலவு செய்து பார்ப்பனப் புரோகிதனை வைத்து சமஸ்கிருத மந்திரங்களை ஓதி சீரும் சிறப்புமாக திருமணம் செய்து வைத்தார்.

திருமணமான 6, 7 மாதங்கழித்து மாப்பிள்ளை தனியாக அடிக்கடி ஒரு புற்றுநோய் மருத்துவரைச் சந்தித்து ரகசியமாக சிகிச்சைப் பெற்றுள்ளார். ஒரு நாள் பெண்ணின் தகப்பனார் சந்தேகப்பட்டு, மாப்பிள்ளையைப் பின்தொடர்ந்து சென்றபோது மாப்பிள்ளை புற்றுநோய் மருத்துவரைச் சந்தித்தது தெரியவந்தது. மாப்பிள்ளை வெளியில் வந்த பிறகு, பெண்ணின் தகப்பனார் அந்த டாக்டரை விசாரித்தபோது, அவருடைய மாப்பிள்ளைக்கு இரத்தப் புற்றுநோய் (Blood Cancer) இருப்பதாகவும், தான் அவருக்குச் சில ஆண்டுகளாக வைத்தியம் பார்ப்பதாகவும், அவருக்குத் திருமணமான விவரம் தனக்குத் தெரியாது என்றும் அவர் திருமணமே செய்திருக்கக் கூடாது என்றும் கூறினார். திருமணமான 11ஆவது மாதத்தில் மாப்பிள்ளை இரத்தப் புற்று நோயால் இறந்தார். அப்பொழுது அந்தப் பெண் 6, 7 மாத கர்ப்பிணி.

கணவன் இறந்து 2, 3 மாதத்தில் அந்தப் பெண்ணிற்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. சந்தேகத்தின்பேரில் அந்தக் குழந்தையின் இரத்தத்தைப் பரிசோதித்ததில் அந்தக் குழந்தைக்கும் இரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு இன்றுவரை (வயது 11) சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவர் தன் சக்திக்கு மீறி பல லட்சக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து தன் பேரனுக்கு வைத்தியம் பார்த்து வருகிறார். திருமணமான 11 மாதத்தில் விதவைக்கோலம் கொடுமையிலும் கொடுமை. ஜாதகக்காரனால் 10 பொருத்தம் பார்த்தவனால் பையனுக்குத் தீராத நோய் இருப்பதைக் கண்டறிந்து சொல்ல முடியவில்லை. மாறாக, நீண்ட ஆயுள் உள்ளதாக சொல்லி உள்ளான்.

அவன் பேச்சை நம்பி திருமணம் நிச்சயிக்கப்பட்டு பின் சாஸ்திர சம்பிரதாயப்படி பார்ப்பனப் புரோகிதனை வைத்து சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லப்பட்டு முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாகச் செய்யப்பட்ட மண வாழ்க்கையின் ஆயுள் வெறும் 11 மாதங்களே.

ஜாதகம் பொய்! பார்ப்பனப் புரோகிதன் சமஸ்கிருதத்தில் சொல்லும் மந்திரம் பொய்!! இதை மக்கள் உணரும் நாள் எந்நாளோ?

-ஆர்.டி. மூர்த்தி, திருச்சிதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-62228538447216148882014-10-02T07:09:53.560+05:302014-10-02T07:09:53.560+05:30மதமற்றவர் என்று அறிவித்துக்கொள்ளும் உரிமை!
தன்னை...மதமற்றவர் என்று அறிவித்துக்கொள்ளும் உரிமை!

தன்னை மதமற்றவர் என்று அறிவித்திட தனி மனிதனுக்கு உரிமை உண்டு; அதில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது என்று மண்டையில் அடித்ததுபோல மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இந்தியாவில் உள்ள எவரிடமும் அவர் தனது மதம்பற்றிக் குறிப்பிடவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் உரிமை எந்த அரசுக்கும் கிடையாது என்ற திட்டவட்டமான தீர்ப்பு ஒன்றை மும்பை உயர் நீதிமன்றம் 23.9.2014 அன்று அளித்து வரலாறு படைத்துள்ளது!

கிறித்துவ மதப் பிரிவில் ஒன்றான Full Gospel Church of God என்ற அமைப்பில் உள்ள சில உறுப்பினர்கள், அவர்கள் ஏசு கிறிஸ்துவை நம்புகிறவர்கள்தான்; ஆனால், கிறித்துவ மதத்தை நம்பாதவர்கள் என்ற நிலைப்பாடு உடையவர்கள்!

அம்மூவர் (டாக்டர் ரஞ்சித் மொய்ட்டி, கிஷோர் நசாரே, சுபாஷ் ரணவேர் என்பவர்கள்) மராத்திய அரசின் அச்சகப் பதிவிதழில் (கெசட்டில்) நாங்கள் கிறிஸ்துவர்கள் அல்ல; எந்த மதத்தையும் சேராதவர்கள் என்று வெளியிட (கட்டணம் கட்டி) விண்ணப்பித்திருந்தார்கள்.

அவர்களது விண்ணப்பங்களை மராத்திய அரசும், அச்சகத்துறையும் ஏற்று வெளியிட மறுத்துவிட்டன. அவர்களது மனு நிராகரிக்கப்பட்டது.

எனவே, அவர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு (PIL) ஒன்றினைத் தாக்கல் செய்து, நீதி கேட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜஸ்டீஸ் அபய் ஒக்கா, ஜஸ்டீஸ் ஏ.எஸ்.சந்துர்கர் ஆகிய இரு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு மேற்கூறியவாறு, அரசு யாரையும் மதத்தைப் போடவேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது, தங்களுக்கு மதமில்லை (“No Religion”) என்று அறிவிப்பதற்கு எவருக்கும் முழு உரிமை உண்டு என்று தீர்ப்பளித்துவிட்டனர்!

மதம் என்ற கேள்விக்கு நேராக அரசின் எந்த மனுவையும், பூர்த்தி செய்யும்போது மதமற்றவர் எனக் குறிப்பிடலாம் _- இத்தீர்ப்பின்மூலம் மதம் என்பது சட்டப்படி தெளிவாக்கப்பட்ட தனி மனித உரிமையாகிவிட்டது!

எனக்கு எந்த மதத்தின்மீதும் நம்பிக்கை இல்லை; நான் எந்த மதத்தையும் சேர்ந்தவனல்ல என்று கூறும் உரிமை ஒவ்வொரு தனி மனிதருக்கும் உண்டு என்று ஆணியடித்த தீர்ப்பை மிகச் சிறப்பாக நாட்டோருக்கு அளித்துள்ளது!

மதச்சார்பற்ற (செக்குலர்) அரசின் கீழுள்ள மக்கள் மதங்களைச் சாராதவராகவோ, மதம் பிடிக்காதவர்களாகவோ இருக்க முழு உரிமையுடையவர்கள் ஆவார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது _- இத்தீர்ப்பின் மூலம்.

இந்திய அரசியல் சட்டத்தின் 25ஆம் பிரிவின்கீழ் இவ்வுரிமை -_ அடிப்படை உரிமையாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்!

நாட்டில் மதங்களால் ஏற்பட்ட நன்மைகள் ஏதாவது இருப்பின், அது துளியளவே; ஆனால் தீமைகளோ மலையளவு!

வரலாற்றில் ரத்த ஆறு எப்பொழுதெல்லாம் ஓடியதாகக் கூறப்படுகிறதோ, காட்டப் படுகிறதோ அவை மதங்களால் உருவான சண்டைகளால்தானே!

புனிதப் போர்கள், சிலுவைப் போர்கள் எல்லாம் நல்ல எடுத்துக்காட்டுகள் அல்லவா? மதங்களைப் பரப்பிட வாள் முனையைத்தானே பல மதங்கள் இன்றளவும் நம்புகின்றன?
ஈராக்மீது போர் தொடுத்து சதாம் உசேனை அழித்த (ஜூனியர்) ஜார்ஜ் புஷ்- _ கடவுள் தான் இந்தப் போரை நடத்தும்படி தனக்குக் கட்டளையிட்டார் என்று புளுகவில்லையா? கடவுள், மதத்தினால் மனிதகுலம் பெற்ற நன்மைகள் இவை!

மதங்களின் அடிப்படைவாதிகள் (Fundamentalists) என்ற வெறியர்கள் தலிபான் போன்றவர்கள் - மற்ற பிரிவினர், கிறித்துவ, ஹிந்துமத சாமியார், சாமியாரிணிகளும் எவ்வளவு வன்முறை வெறியாட்டங்களை நடத்தியுள்ளனர்!

பாபர் மசூதி இடிப்பும், அதன் எதிர் விளைவுகள் எவ்வளவு கொலை, கொள்ளைகள், உயிர்ச்சேதங்கள், அமைதியற்ற கொடுமைகளை இன்றளவும் உருவாக்கிக் கொண்டுள்ளன!

இந்து மதம் சகிப்புத் தன்மையுடைய மதமாம்! நேற்று முன்தினம் வந்த நீதிமன்ற வழக்கு என்ன? அதே மதத்தின் ஒரு பிரிவினர் ஊர்வலம் போனால், வைணவப் பிரிவின் மற்றொரு கடவுள் சிலையைத் திரை போட்டு மூடி, கதவைச் சாத்திய கேலிக் கூத்தைப் பார்க்கவில்லையா? அடிதடி நடக்கவில்லையா? வழக்கு மன்றத்தில் நிலுவையில் இப்பிரச்சினை இருக்கிறதே! இதுதான் சகிப்புத்தன்மையின் அடையாளமா? வெட்கமாக இல்லையா?

உண்ணுதலில், உடுத்துவதில், எண்ணுதலில் எல்லாம் அன்றாட வாழ்க்கையில்கூட மதம் புகுந்து மனிதர்களிடையே வேற்றுமையைத்தானே உருவாக்கியுள்ளது!

யானைக்குப் பிடிக்கும் மதத்தைவிட ஆபத்தானது!

யானைக்கு மதம் பிடித்தால் ஏற்படும் கேட்டைவிட, மக்களுக்கு மதம் பிடித்தால் ஏற்படும் கேடுகளை, கலவரங்களை நாடு அன்றாடம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறது!

எனவே, மதமற்ற மக்களாக வாழுங்கள், மதம் பிடிக்காத மனிதநேயம் உள்ளவர்களாக மாறுங்கள் தோழர்களே, தோழியர்களே!

- கி.வீரமணி, ஆசிரியர்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-72116594815596332302014-10-02T07:08:58.663+05:302014-10-02T07:08:58.663+05:30
மதச்சார்பற்றவர்கள் விரும்பியபடி திருமணங்களைச் செய...
மதச்சார்பற்றவர்கள் விரும்பியபடி திருமணங்களைச் செய்துகொள்ளலாம் இண்டியானாவில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

அமெரிக்காவில் இண்டியானா பகுதியில் மனிதநேய அமைப்பைச் சேர்ந்த தம்பதியர் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்புக்கு முன்பாக அத்திருமணங்கள் சட்டப்படி செல்லாதவையாக இருந்துள்ளன.

அப்படி மாற்றமுடியாத சட்டத்தை சிகாகோவை மய்யமாகக் கொண்டுள்ள அமெரிக்காவின் ஏழாம் சர்க்குயூட் நீதிமன்றம், மனித நேயர்களுக்கான திருமண உரிமையை கடவுள் நம்பாமல் இருப்பதைக் காரணமாகக் காட்டி, மறுப்பது என்பது அரசியலமைப்பு முதல் விதி கூறுகின்ற மத ரீதியிலான சுதந்திரம் குறித்த உரிமைகளை மறுப்பதாக ஆகிவிடும் என்று நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

1950ஆம் ஆண்டின் சட்டத்தின்படி இண்டியானாவில் திருமணங்கள் மதரீதியில் உடையணிந்தவர் (மதக்குரு) நடத்திட வேண்டும் அல்லது அரசு அலுவலர்களைக் கொண்டு நடத்த வேண்டும் என்று உள்ளது. மனுதாரரான மனிதநேயர் வாதிடும்போது, மனிதநேயர்களின் திருமண உரிமையை மறுப்பது என்பது தத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதை மறுப்பதாகும். மதரீதியில் உள்ளவர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளித்ததாக ஆகிவிடும் என்று கூறினார்.

மனிதநேயரான ரேபா போயிட் உட்டன் கூறும்போது, நீதிமன்றம் தேவையான உரிமையைப் பெற்றுள்ளது என்றார். மதச் சார்பற்ற மணமகன் என்று மனுதாரருக்குச் சான்றளிக்கும் அவர் மேலும் கூறும்போது, ஒருவர் நாத்திகராகவோ, கடவுளை நம்புவதில் அய்யம் உள்ளவராகவோ, மனிதநேயராகவோ அல்லது மதரீதியிலான திருமணத்தைச் செய்ய விரும்பாதவராகவோ இருந்தாலும் தற்போது, இதுபோன்ற அற்புதமான நேரங்களில் தங்களுடைய கவுரவத்தைக் காத்துக் கொள்வார்கள். அவர்களின் வாழ்வில் நடைபெறும் விழாக்களையும் மகிழ்வாகப் பகிர்ந்து கொள்வார்கள் என்று உட்டன் கூறியுள்ளார்.

புளோரிடா, மெய்ன் மற்றும் தெற்குக் கரோலினா ஆகிய பகுதிகளில் நோட்டரி பப்ளிக் மூலம் சான்று பெற்றபின், மனிதநேயர்களுக்கு அலுவல்ரீதியாக திருமணம் செய்வதற்கு அனுமதி உள்ளது. அதுபோன்றே இண்டியானாவிலும் அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுபோல் இரண்டு டசன் மக்கள் மனிதநேயர்களாகப் பதிவு செய்து கொண்டுள்ளனர்.

மனிதநேயர்களுக்கான அமைப்பின் விசாரணை மய்யத் தலைமைச் செயல் அலுவலர் மற்றும் அதன் தலைவராக உள்ள ரொனால்ட் ஏ. லிண்ட்சே கூறும்போது, அனைத்து மதச் சார்பற்ற அமெரிக்கர்களுக்கும் இது மிகப் பெரிய வெற்றியாகும். ஏற்க முடியாத அளவில் அமெரிக்க அய்க்கிய நாடுகளில் மக்கட்தொகையில் ஒரு பிரிவினர் வேகமாக நம்பிக்கையாளர்களாக வளர்ந்து வருவதாகக் கூறப்பட்டாலும், பாரபட்சமாக நடத்தப்படுவதாலும், மதரீதியில் சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாலும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது என்று கூறினார்.

வடக்கு கரோலினாவிலும் திருமணச் சட்டங்கள் சவாலாகத்தான் உள்ளன. திருமணம் செய்து கொள்பவர்கள் சட்டப்படியான திருமண உரிமைச் சான்று (Legal Marriage Licence) பெற்றிருக்க வேண்டும் என்று யுனைடெட் சர்ச் ஆஃப் கிறிஸ்ட் பாஸ்டர்கள் என்கிற மதக் குழுவினர் அரசு கேட்பதாகக் கூறித் தொல்லை கொடுத்து வருகின்றனர். வடக்குக் கரோலினாவில் ஓரினத் திருமணங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஓரினத் திருமணச் சடங்குகளை நிறைவேற்றக்கூடிய பாதிரிகள்மேல் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், அந்தப் பாதிரிகளும், மற்றவர்களும் அவர்களின் நம்பிக்கைப்படி ஓரினத் திருமணங்களையும் நடத்திட வலியுறுத்தி வருகின்றனராம்.

நன்றி: வாஷிங்டன் போஸ்ட், 14.7.2014தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-24962761255778871672014-10-02T07:05:15.701+05:302014-10-02T07:05:15.701+05:30திருமணத்திற்கு முன்பு மட்டுமல்ல, பின்பும்கூட ஆண்டு...திருமணத்திற்கு முன்பு மட்டுமல்ல, பின்பும்கூட ஆண்டுக்கு ஒருமுறையாவது ஆண், பெண் இருவருமே முழு உடல் பரிசோதனை செய்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது இல்லறத்திற்கு வலு சேர்க்கும். இதனால் கணவனுக்குத் தெரிந்துவிடும் என்று மனைவியோ, மனைவிக்கு தெரிந்துவிடும் என்று கணவனோ அச்சப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் நோயை வளர்த்து உயிரைப் பறிகொடுக்கும் நிலையும் தடுக்கப்படும்.

- கவிஞர் சல்மாதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-75213269071952313132014-10-02T07:04:30.090+05:302014-10-02T07:04:30.090+05:30பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வசிப்பதாக தமிழர்களிடம் அ...பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வசிப்பதாக தமிழர்களிடம் அச்ச உணர்வு மேலோங் கியுள்ளது. கடந்த காலங்களில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து பலமுறை வன்முறைச் சம்பவங்கள் நேரிட்டுள்ளன. எனவே, 13ஆவது சட்டத் திருத்தத் தில் காவல்துறையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாகாண அரசுக்கு வழங்கப்படாது என்று கூறுவதை ஏற்க முடியாது. ராணுவ அதிகாரம் வேண்டும் என்று நாங்கள் கோரவில்லை. சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க காவல் துறை அதிகாரத்தை மட்டுமே கேட்கிறோம். இது அதிகாரப் பகிர்வின் முக்கிய அங்கமாகும். இது தொடர்பாக, இந்தியாவிடமும் அய்.நா.சபையிடமும் இலங்கை அரசு ஏற்கெனவே உறுதி அளித்துள்ளது.

- இரா.சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-57671236269878038252014-10-02T07:04:05.599+05:302014-10-02T07:04:05.599+05:30சொல்றாங்க...
2009 இறுதிப் போரில் தமிழ் மக்கள் அங...சொல்றாங்க...

2009 இறுதிப் போரில் தமிழ் மக்கள் அங்கு அனுபவித்த சிரமங்கள் நமக்குத் தெரியும். அப்போது பாதுகாப்பாக தமிழகத்தில் இருந்த மக்கள் இனியாவது அங்கு சென்று அவர்களுக்கு தோளோடு தோளாக நின்று தங்களின் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்களின் கடமை இது.

இல்லாத ஒரு நாட்டையே இஸ்ரேல் என்ற பெயரில் யூதர்கள் கட்டியெழுப்பினர். நாங்கள் இருக்கிற நாட்டைக் காப்பாற்ற வேண்டாமா? தமிழகத்தில் உள்ள ஏதிலியர்கள் முதலில் தாயகம் திரும்பினால், அதைப் பின்பற்றி உலகம் முழுவதும் உள்ள ஈழத்தமிழர்கள் வந்து சேருவார்கள்.

- சந்திரஹாசன், ஈழ அகதிகள் மறுவாழ்வு இயக்கம். தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-22187288567564655082014-10-02T07:00:58.601+05:302014-10-02T07:00:58.601+05:30ஆம், நான் பெண்தான். எனக்கு மார்புகள் உண்டு
இந்தி...ஆம், நான் பெண்தான். எனக்கு மார்புகள் உண்டு

இந்தி திரைப்பட நடிகை தீபிகா படுகோனே ஓராண்டுக்கு முன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றின் காணொளியை, தனது இணையதளத்தின் பொழுதுபோக்குப் பக்கத்தில் ஓ மை காட்: தீபிகா படுகோனேவின் மார்புப்பிளவுக் காட்சி என்று தலைப்பிட்டு வெளியிட்டது. இதைக் கண்டு கோபமடைந்த தீபிகா, இந்தியாவின் மிக முக்கியமான ஒரு நாளேட்டுக்கு இது தான் முக்கியச் செய்தியா? வேறு எதுவுமில்லையா? என்று சூடாகக் கேட்டார். தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதிய தீபிகா, ஆம். நான் பெண்தான். எனக்கு மார்புகள் உண்டு. ஒரு மார்புப் பிளவும் (Cleavage) உண்டு.

அதனால் உனக்கெதுவும் பிரச்சினையா? என்று கொதித்துவிட்டார். அடுத்தடுத்து திரைப்பட நடிகர் நடிகைகளும் தீபிகாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். எங்களுக்கான முதல் குரலை நீ கொடுத்திருக்கிறாய் என்று பாராட்டினார் பிரியங்கா சோப்ரா. இதற்குப் பதிலளிக்கிறோம் என்று தீபிகா படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்த கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு, இதற்கென்ன பதில் என்று கேட்டிருக்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா. கதாபாத்திரங்களுக்காக நான் நடிக்கும் போது அது என் தொழில்.

ஆனால், தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் அதே கண்ணோட்டத்தில் பார்ப்பதா? என்று கேட்டிருக்கிறார். அய்யய்யோ... ஆபாசமாக இருக்கிறார்களே என்று ஊளையிடும் ஊடகங்கள் அந்தப் படங்களைப் போட்டுத்தானே பிழைப்பு நடத்துகின்றன.

இந்தப் பிரச்சினையிலும் அதே தான் நடந்தது. அது எந்தப் படம், எந்தப் படம் என்று திரும்பத் திரும்பப் போட்டும் பிழைத்தன சில பத்திரிகைகள்.
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-34723624291025261842014-10-01T19:19:23.937+05:302014-10-01T19:19:23.937+05:30வாழ்வியல் சிந்தனை
அய்யா,
தங்களது வாழ்வியல் சிந்த...வாழ்வியல் சிந்தனை

அய்யா,

தங்களது வாழ்வியல் சிந்தனைகள் மூன்றாம்பாகம் படித்தேன். வாழ்க்கை முறை எப்படிப்பட்டது என்பதை அனை வரும் அறிந்து கொள்ள வேண்டிய அற்புதமான நூல்.
மனித சமூகத்திற்கு எழுதப்பட்ட சிறப்பான நல்ல நூல். இந்த நூலைப் படித்து மனநிறைவு அடைந்தேன்.

இன்பம் வரும்போதும், துன்பம் வரும்போதும் துலாக்கோல் போல சமநிலையுடன் மனதைப் பக்குவப் படுத்திக் கொண்டால் எப்போதும் மகிழ்ச் சியாகவே மனிதன் வாழலாம் என்று முக்கியமாக சொல்லப்பட்டிருக்கிறது,

நான் சிறு வயதில் கஷ்டப்படும் காலத்தில் தமிழ்வாணனின் துணிவே துணை என்ற தலைப்பில் கற்கண்டு நூலைப் படிப்பேன். துன்பம் என்றால் என்ன என்பதே தெரியாமல் வாழ்ந்த வன். அதுமட்டுமல்ல, ஏவிஎம் மெய் யப்பச் செட்டியார் அவர்கள் முயற்சி திருவினையாக்கும் என்ற சொல்லைக் கேட்டிருக்கிறேன்.

என்னுடைய சிறு முன்னேற்றத்தி லும் வாழ்வியல் சிந்தனையின் பெரும் பங்கு எனக்கு உண்டு என்பது தெளிவு. பார்த்தேன்; படித்தேன்; சிந்தித்தேன். படிக்கப் படிக்க தேன்போல் இனிமை யாகத் தித்தித்தது. பகுத்தறிவுப் பணிக்கு என் இனிய வாழ்த்துகள். நன்றி!

- ம.ச.நாராயணன்

Read more: http://viduthalai.in/page-2/88517.html#ixzz3EtvRClDI
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-88924005363616254762014-10-01T19:18:13.725+05:302014-10-01T19:18:13.725+05:30சகித்துக் கொள்ள முடியாத சாதியக் கட்டமைப்பு கோல்வால...சகித்துக் கொள்ள முடியாத சாதியக் கட்டமைப்பு கோல்வால்கரின் நூலிலும் இன்றைய காவிப் படை யினரிடத்திலும் எதிரொலிப்பதைக் காணலாம். ஏனெனில் மனுஸ்மிரு தியும் `ஆரியர் சமூக அமைப்பின் அடிப்படையில் அமைந்த ஒன்றுதான். ஆரியர் அல்லாதவர்களுக்குள்ள முரட்டுத்தனம், கொடூரமானவனாக இருத்தல் மற்றும் சடங்குகளைப் புரியும்போது வழக்கமாகத் தோல் வியுறுதல் அனைத்தும் இந்த உலகில் அவர்கள் கறைபட்ட கருப்பையி லிருந்து பிறந்தவர்கள் என்பதைத் தெளிவாய்க் காட்டும். (58, அத்தியாயம் 10). ஆயினும் தாங்கள் விரும்பும் `இந்து ராஷ்ட்ரம் நிறுவப்படவேண் டுமாயின், அதற்கு ஆரியர்கள் இந்த நிலத்தின் பூர்வகுடியினர்தான் என்றும், அவர்கள் வேறெங்கிருந்தும் வந்தேறியவர்கள் அல்ல என்றும் மறுக்கவியலாத அளவிற்கு மெய்ப்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

நம்பிக்கையின் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் அனைத்து வரலாற்றுச் சான்றுகளையும் தள்ளுபடி செய்து விடுகிறது. வரலாற்றாசிரியர் ரொமிலா தாபர், சமஸ்கிருத வேதத்தின் மொழி யியல் சாட்சியமானது ஈரானிலிருந்து ஓர் இந்தோ-அய்ரோப்பிய மொழி இந்தியாவிற்குள் வந்தது, ஆனால் அது இந்தியா ஆரியர்களின் தாய்நாடு என்னும் கற்பிதத்தினை ஆதரித்திட வில்லை, (செமினார் 400, டிசம்பர் 1992) என்று நிறுவியிருக்கிறார். இவ்வாறு ஆர்எஸ்எஸ் கூட்டத்தினர், வரலாற்றிற்கு மேல் புராணத்தையும், தத்துவஞானத்திற்கு மேல் மத நம் பிக்கையையும் வைத்து, `நம்பிக்கையின் அடிப்படையில் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். இத்தகைய கேடுகெட்ட சமூக அமைப்புதான் இன்றைய இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து அநீதிகளை இழைத்து வருகிறது. நீதிக்கான போராட்டத்தைத் தொடங்கிட இந்த சமூக நிலைமை தூக்கி எறியப்பட்டாக வேண்டும்.

இந்திய வரலாற்றை மாற்றி எழு திக் கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ்/ பாஜக நிகழ்ச்சி நிரலானது, யார் யார் எல்லாம் இந்துக்கள் கிடையாது என்று அவர்கள் கருதுகிறார்களோ அவர்கள்அனைவருக்கும் அடிப்படை மனித உரிமைகளை மறுக்க வகை செய்வதுடன், இத்தகைய ஏற்றுக் கொள்ள முடியாத சமூக ஒடுக்கு முறையும் தொடர்ந்து நீடித்திருக்கக் கூடிய விதத்தில் வரையப்பட்டு வருகிறது.

நன்றி: தீக்கதிர், 1.10.2014

Read more: http://viduthalai.in/page-2/88515.html#ixzz3EtuzQhDfதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-47925591152575766862014-10-01T19:18:08.188+05:302014-10-01T19:18:08.188+05:30உண்மையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூலவேர்கள், `இந்து ...உண்மையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூலவேர்கள், `இந்து சட்டத்தின் (‘Hindu code’)
மத ரீதியான ஒப்புதலுடன் அமைக்கப் பட்டு, அவைஆர்எஸ்எஸ் இயக்கத் தினரால் மிகவும் புனிதமாகப் போற்றப்படும் ஆர்எஸ்எஸ் தலைவர் மாதவ சதாசிவ கோல்வால்கரால் சரி என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவை களாகும்.1939 இல் நாம் அல்லது வரையறுக்கப்பட்டநம் தேசம் (We or Our Nationhood defined (1939,) என்று கோல்வால்கர் எழுதிய தன் புத்த கத்தில், கோல்வால்கர் மனுவை உலகின் முதலாவதும், மாபெரும் சட்ட வல்லுநருமாவார் என்று போற்றிப் பாராட்டியிருப்பதுடன், அவர்தான் தன்னுடைய மனு தர்மத்தில், உலகில் உள்ள அனைத்து மக்களும் இந்துஸ்தானுக்குச் சென்று அந்நாட்டிலுள்ள `முதலில் பிறந்த பிராமணர்களின் புனிதக் காலில் விழுந்து வணங்கி, தங்களுடைய கடமைகள் என்ன என்பதைக் கற்றுத் தெளிய வேண்டும், என்றும் கட்ட ளையிட்டிருக்கிறார். (கோல்வால்கர், 1939, பக். 55-56). பிராமணன் தலை யிலிருந்து பிறந்தவன், சத்திரியன் (அரசன்) கைகளிலிருந்து பிறந்தவன், வைசியன் தொடைகளிலிருந்து பிறந்தவன், சூத்திரன் கால்களிலிருந்து பிறந்தவன்.

இதன் பொருள் மக்கள் இவ்வாறு நான்கு மடிப்புகளாக ஆக்கப்பட்டி ருக்கிறார்கள் என்பதே, அதாவது இந்து மக்கள் நம் கடவுள். இப்போது மனுஸ்மிருதி என்ன கூறுகிறது என்று பார்ப்போம். சூத்திரனுக்கு மிகவும் சிறந்த இயற்கையாய் அமைந்த செயல் பிராமணர்களுக்குப் பணிவிடை செய்வதுதான் என்று பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது. இதைத் தவிர அவன் வேறு எதைச்செய்தாலும் அவனுக்குப் பலனளிக்காது.`` (123, அத்தியாயம் 10)பின்னர் மனுஸ்மிருதி சமூகத்தில் சாதியற்றவர்கள் என்றும் தீண்டத் தகாதவர்கள் என்றும் குறிப்பிடப் படுபவர்களை வரையறுப்பதைத் தொடர்கிறார். அவர்களுக்கு சமூகத் தில் எந்த இடமும் எப்போதும் கிடையாது என்று கூறும் அவர், அவர்களது இழி செயல்பாடுகள் குறித்தும் வரையறுக்கிறார்.

தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-89239847062186846232014-10-01T19:17:55.923+05:302014-10-01T19:17:55.923+05:30வரலாற்றை மாற்றி எழுதும் முயற் சியில் ஈடுபட்டுள்ள ஆ...வரலாற்றை மாற்றி எழுதும் முயற் சியில் ஈடுபட்டுள்ள ஆர்எஸ்எஸ் தன்னுடைய சமீபத்திய நடவடிக் கையாக, இந்து சுவடிகளின்படி சூத்திரர்கள் எப்போதுமே தீண்டத் தகாதவர்களாக இருந்ததில்லை, என்று கூறியிருக்கிறது. ஆர்எஸ்எஸ் இயக் கத்தின் குருமார்கள் அமைப்பில் இரண்டாவது குருமாராக இருக்கும், பையாஜி ஜோஷி, இவ்வாறு கூறி யிருக்கிறார். மத்தியக் காலத்தில் இஸ் லாமியர்களின் அட்டூழியங்கள்தான் தீண்டத்தகாதவர்கள், தலித்துகள் மற்றும் இந்திய முஸ்லிம்கள் உரு வானதற்குக் காரணம் என்றும் கூறுகிறார். இதே தொனியை எதி ரொலித்து ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மற்றொரு மூத்த தலைவர், இஸ்லா மியர் காலம் தொடங்கிய காலத்தில், பிராமணர்களுக்கும் சத்திரியர் களுக்கும் எதிராக அட்டூழியங்கள் நடைபெற்றதன் விளைவாகத்தான், ஒடுக்கப்பட்ட சாதிகளும், கீழ் சாதி களும் தோன்றின என்றும் தலித்துகள் என்போர் துருக்கியர், முஸ்லிம்கள் மற்றும்மொகலாயர் சகாப்தத்தில் சிருஷ்டிக்கப்பட் டனர் என்றும் எழுதி இருக்கிறார்.

இந்திய வரலாற்றை இவ்வாறு திரித்து எழுதும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கீழ் இயங்கும் அமைப்பு ஒன்று சமீபத்தில் ரகசியக் கூட்டம் ஒன்று நடத்தியதாகவும் அதில் நூற்றுக்கும் மேற்பட்ட வரலாற்றாசிரியர்கள் பங்கேற்று, தற்போதுள்ள பாடத் திட்டங்களில், இந்துக்கள் அனை வரையும் ஒருமுகப்படுத்தும் தங்கள் குறிக்கோளை எய்திடுவதற்காக சாதி அல்லது கீழ் சாதி ஆகியவற்றிற்கும் அப்பால் இந்து அடையாளத்தை நிலைநிறுத்தக்கூடிய விதத்தில், மாற்றங்களைக் கொண்டுவருவது தொடர்பாக விவாதித்தார்கள் என்றும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருக்கின்றன. சாதிய அமைப்பும் அதனையொட்டி நடை பெற்று வரும் சமூக அட்டூழியங்களும் புராதன இந்து சமூகத்தில் எப் போதுமே நடந்ததில்லை என்பது போலவும், முஸ்லிம்கள் படை யெடுத்து வந்தபின்னர்தான் சமூகத்தில் இவை உருவாயின என்று கூறுவதும் இதுவரை எழுதப்பட்டுள்ள வர லாற்றையும், காலங்காலமாக வாய் மொழி வழியாகக் கூறி வரும் வள மான அனுபவங்களையும் முழுமை யாகத் திரிக்கும் செயலாகும்.

தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-4814842526719968182014-10-01T19:17:42.736+05:302014-10-01T19:17:42.736+05:30ஆர்எஸ்எஸ் புத்தகங்களில் பொய் மூட்டைகள்!
- சீதாராம...ஆர்எஸ்எஸ் புத்தகங்களில் பொய் மூட்டைகள்!

- சீதாராம் யெச்சூரி எம்.பி.,

சமூக ஒடுக்குமுறை என்பது சாதிய ஒடுக்குமுறையையும் (caste oppression) பாலின ஒடுக்குமுறையையும் (gender oppression) உள்ளடக்கிய ஒன்று. இவற்றை ஆர்எஸ்எஸ் தங்களுடைய இந்து ராஷ்ட்ரத்தை நிறுவிடும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே மேற் கொண்டு வருகிறது. அதன் சமீபத்திய நிகழ்வுதான் பாஜக ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில், பிகானீர் -ஜெய் பூரில் உள்ள அரசுப் பள்ளிக்கூடம் ஒன்றில், உயர்சாதி ஆசிரியருக்காக வைத்திருந்த மண்பானையிலிருந்து தண்ணீர் குடித்தார்கள் என்று கார ணம் காட்டி பதினொரு தலித் மாண வர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்ப தாகும். நம் நாட்டில் சாதிய மற்றும் சமூக ஒடுக்குமுறை இப்போதும் மிகவும் உச்சத்தில் இருப்பதையே இந்நிகழ்வு வெளிப்படுத்துகிறது.

இவ்வாறு ஒரு பக்கத்தில் தலித் மாணவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்ட அதே சமயத்தில், ஆர்எஸ்எஸ் இயக் கத்தின் தலைவர் தலித்துகள் இவ் வாறு ஒடுக்குமுறைக்கு உள்ளாகி இருப்பதற்குத் தாங்கள் காரணம் அல்ல என்பதைக் காட்டும் விதத்தில் மூன்று புத்தகங்களை வெளியிட்டிருக் கிறார். அந்தப் புத்தகங்கள் மூன்றிலும், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பல இதர ஒடுக்கப்பட்ட குழுவினர் மீது ஒடுக்குமுறை ஏவப்படுவதற்குத் தாங்கள் காரணம் அல்ல என்றும், மத்தியக் காலத்தில் அயல்நாடுகளிலி ருந்து படையெடுத்து வந்த முஸ்லிம் கள்தான் காரணம் என்றும் அந்தப் புத்தகங்களுக்கு அணிந்துரை அளித் துள்ள ஆர்எஸ்எஸ் தலைவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். (தி இந்துஸ்தான் டைம்ஸ், செப்டம்பர் 22, 2014). தங்கள் இயக்கத்தின் அரசியல் அங்கமாகத் திகழும் பாஜக மத்திய அரசாங்கத்தில் அமர்ந்திருப்பதால் தைரியம் அடைந்துள்ள ஆர்எஸ்எஸ் இந்தியாவில் உள்ள அனைத்துக் குழு வினரையும் ஒன்றாக்கி, ஒரே நூலின் கீழ், ஒரே இந்து அடையாளத்தின் கீழ் கொண்டுவந்து, அதனை சட்டப்படி செல்லத்தக்கதாக மாற்றவும் முயற்சி களைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கு, மாபெரும் நம் நாட்டின் பல நூறு ஆண்டுகால வரலாறு, அவர்கள் விடும் சரடுகளுக்கு ஏற்ப, திருத்தி எழு தப்பட்டாக வேண்டியது அவசிய மாகும்.

தற்போதைய நவீன மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, அவர்கள் கருத்தாக்கமான இந்து ராஷ்ட்ரமாக மாற்றி அமைப்பதற்கு, இது அவசியமாகும். பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா வில் இருந்துவரும் பலதரப்பட்ட கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள், பழக்க வழக்கங்கள், மொழிகள் கொண்டவர்களை இந்துயிசம் என்னும் ஒரே குடையின்கீழ் அடைத் திட அவர்கள் முயற்சிக்கிறார்கள். இரண்டாவதாக, ஓர் அயலக எதிரியை (இந்துக்களுக்கு அயலாக உள்ளவரை அதாவது முஸ்லிம்களை,) உருவாக்க வேண்டியது அவர்களுக்குத் தேவை. தங்கள் குறிக்கோளை எய்துவதற்காக இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட் டுள்ளார்கள்.

தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-49854859222377525422014-10-01T19:16:36.722+05:302014-10-01T19:16:36.722+05:30மூளையின் ரத்த ஓட்டம் குறையத் தொடங்கும். மூளையின் எ...மூளையின் ரத்த ஓட்டம் குறையத் தொடங்கும். மூளையின் எடைகூட ஆண்களுக்கு 10 சதவிகிதமும், பெண் களுக்கு 12 சதவிகிதமும் குறையக் கூடும்!

அதுபோலவே, எலும்புகளின் பலம் ஆண்களுக்கு முதுமை காரணமாக 3 சதவிகிதமும், 10 ஆண்டுகாலத்தில் பெண்களுக்கு 8 சதவிகிதமும் குறைவு ஏற்படும்.

தசைகளின் (Muscles) பலமும் குறையும். சில நேரங்களில் விரைத்து Stiffness எளிதில் மடக்குவது இயலாத நிலை - அதன் காரணமாக உடல் வலி களும் ஏற்படுவது தவிர்க்க இயலாததாக வும் அமையலாம்!

இந்த Muscles Mass என்பது (சதையின் தோற்றப் பொலிவு) 25 முதல் 30 சதவிகிதம் குறையவே செய்யும்.

காதுகளின் கேட்கும் திறன் பெரிதும் குறையவே செய்யும்.

இதயத்தின் செயல்பாடும், பலமும் கூட முன்பைவிட முதுமை ஏற ஏற, சற்று குறைந்து காணுதல் - இரத்த அழுத்தம் (Blood Pressure) மேலே உள்ள அளவீடு (Systolic BP) கூடுதலாக ஆக வாய்ப்புண்டு. காரணம், இரத்த ஓட்டத்தை இதயத்திற்குக் கொண்டு செல்லும் இரத்தக் குழாய்கள் நெகிழ்வுத் தன்மை (Elasticity) க்கு இழப்பு ஏற்பட்டு குறைந்து வரக்கூடும்.

இதன் விளைவு இதய நோய் (Coronary Heart Disease) வர வாய்ப்பு அதிகம் உண்டு.

சிறு நீரகங்கள் செயல்பாடு - முதுமை காரணமாக 60 சதவிகித செயல் திறன் குறைவு ஏற்படும் (குறைந்தே இயங்கிடும் தன்மையை அடையக் கூடும்). நோய் ஏதும் ஏற்படாமலேயே!

பொதுவாக உணவு எடுத்துக் கொள்ளுதலும் குறையவே செய்யும்.

முன்புபோலவே, வேகமாக நடத்தல், எதையும் துடிப்புடன் விரைந்து செய்தல் என்பதன் வேகத் தன்மை குறையும்; இந்த மாறுதல் பளிச்சென்று தெரியும் - நமக்கே புரியும்.

பல்வேறு பிரச்சினைகள் - குடும்பப் பிரச்சினைகள் காரணமாக மன உளைச்சல் காரணமாக மன அழுத்தம் (Depression) முதுமையில் ஏற்படுவதும் சர்வ சாதாரணம் ஆகும்!

இவைகளுக்கெல்லாம்கூட விதி விலக்கானவர்கள் நாட்டில் இல்லாமல் இல்லை; எனவே இவற்றைப் படிக்கும் முதியவர்கள் அனைவரும் பயம் கொள்ளத் தேவையில்லை.

பொதுவான உடல்நலம்பற்றிய முது மையின் உடல்கூறுகள்பற்றிய மருத் துவத் தகவல்கள்தான் மேலே உள்ளவை.

எல்லா விதிகளுக்கும் விலக்குகள் உண்டு என்று கருதி, நலவாழ்வும், நீண்ட ஆயுளும் பெற்று வாழுபவர்கள் பலரும் இருந்திருக்கிறார்கள்; இருந்து கொண்டும் இருக்கிறார்கள்; கடும் உழைப்பு - மனமகிழ்ச்சி - எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் மனப் பக்குவம்தான் எல்லாவற்றையும்விட பெரும் மருந்து அருமருந்து மறவாதீர்!

Read more: http://viduthalai.in/page-2/88514.html#ixzz3EtugVYNkதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-64081932182186933702014-10-01T19:16:31.116+05:302014-10-01T19:16:31.116+05:30உலக முதியோர் நாளில், பயனுறு சிந்தனைகள்!
இன்று அக்...உலக முதியோர் நாளில், பயனுறு சிந்தனைகள்!

இன்று அக்டோபர் ஒன்றாம் தேதி - உலக முதியோர் நாள்! World Elders Day - 1.10.2014)
எதிர்பாராத வகையில், பிரபல மருத்துவர் எம்.எஸ்.இராமச்சந் திரன் அவர்களுடன் உரையாடும் வாய்ப்புப் பெற்றேன். அப்போது முதியோர்நலம், பாது காப்பு - வாழ்வியல் முறைப்பற்றி சில அரிய குறிப்புகளை அவர் என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

அக்குறிப்புகள் அனைத்து முதி யோர்களுக்கும் பயனுள்ளதாக இருக் கும் என்ற நம்பிக்கையில், கருத்துகளை எழுதுவதில் பெருமகிழ்ச்சியும், மன நிறைவும் அடைகிறேன்.

1. வயதாவதின் காரணமாக பலவகை உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பேயாகும். அதற்காக யாரும் மனத்தளர்ச்சியோ, விரக்தியோ, அச் சமோ கொள்ளவேண்டியதில்லை.

2. நீண்ட காலம் முன்பு நிகழ்ந்த நினைவுகள் அனைத்தும் நம்முள் அழியாமல் நினைவில் இருக்கும்; எளிதில் மறக்காது; ஆனால், அண்மை யில் நடந்த நிகழ்வுகளை நம் நினைவில் இருந்து மறக்கக்கூடும்; இதைத் தான் ஆங்கிலத்தில் டாக்டர்கள் ‘‘Short term Memory Loss’’
என்று கூறுகிறார்கள்!

நரம்பு மண்டலங்கள் முதுமை யினால், அவற்றின் பலம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவரத் தொடங் குவது இயற்கை; தவிர்க்க முடியாதவை. இது கால்களிலும், பாதங்களிலும் நன்றாய் உணரக்கூடியதாகும். (தடுமாறி விழவும் கூடும்).

தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com