tag:blogger.com,1999:blog-1474608369333206681.post7654367642158638182..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: தமிழ்நாடு சட்டப் பேரவைத் தீர்மானத்தை திராவிடர் கழகம் வரவேற்கிறது! ஆனால்!!தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-18210757064101005802013-04-02T05:35:05.512+05:302013-04-02T05:35:05.512+05:30
உரிமையுண்டு
எந்த மனிதனுக்கும் அவனுடைய கருத்து எ...
உரிமையுண்டு

எந்த மனிதனுக்கும் அவனுடைய கருத்து என்ற பெயரால் எதையும் எடுத்துச்சொல்ல உரிமையுண்டு. அதைத் தடுப்பது அயோக்கியத்தனம். - (விடுதலை, 2.4.1950)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-18338854066086247432013-04-02T05:34:05.999+05:302013-04-02T05:34:05.999+05:30
டார்பிடோ ஏ.பி.ஜே எனும் சுயமரியாதைச் சுடரொளி
- பே...
டார்பிடோ ஏ.பி.ஜே எனும் சுயமரியாதைச் சுடரொளி

- பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், அமைப்புச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்

திராவிடர் மாணவர் கழகத்தை வளர்த்தவர்களில் டார்பிடோ ஏ.பி. ஜனார்த்தனமும் ஒருவர் என்றால் அது மிகையாகாது. அக்கால விடுதலை ஏடுகளைப் எடுத்துப் பார்த்தால், திராவிடர் மாணவர் கழகப் பணிகளில் அவர் பொறுப் பேற்று நடத்தியது வியப்பளிக்கிறது. பிற்காலத்தில், நம் இயக்கத்திலிருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்த பொழுதும், அதன் பிறகு அனைத்திந் திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த பொழுதும் அவர் தன் பகுத் தறிவுக் கொள்கையை - சுயமரியாதைக் கொள்கையை கை விடவே இல்லை. எந்த நிலையிலும் தானொரு பெரியார் தொண்டன் என்று வெளிப்படுத்திக் கொள்ளத் தவறவே யில்லை. ஒரு முறை நாடாளுமன்றத் தில் பேசும் பொழுது, நாங்கள் பெரியார் ஈ.வெ.ராவின் திராவிடர் இயக்கத்திலிருந்து வந்தவர்கள்- எனக் கூறினார்.

1970 - ஆம் ஆண்டு, அவர் தி.மு.க. வில் இருந்தாலும், அவரை அழைத்து அண்ணாமலை நகரில் திராவிடர் மாணவர் கழகம் சார்பில் கருத்தரங்கம் நடத்தினோம். அப்பொழுது அவர் பேசுகையில், மதியழகன், தமிழர் தலைவர் ஆசிரியர், புலவர் இமயவரம்பன், வி.வி. சுவாமிநாதன் போன்றோர் காலங்களில் திராவிடர் மாணவர் கழகம் செயல்பட்ட விதம் குறித்து விளக்கமாக உரையாற் றினார். அறிஞர் அண்ணா தன்னை தமிழக மேலவை உறுப்பினராக நியமனம் செய்ததைச் சொல்லிச் சொல்லி குழந்தை போல், மகிழ்வார். அது போலவே, 1977ஆம் ஆண்டு நடை பெற்ற நாடாளு மன்ற மாநிலங்களவைக்கு தமிழக சட்ட மன்றத்தின் மூலம் சில உறுப்பினர்களைத் தேர்ந் தெடுக்கும் தேர்தலில், அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் தமது பெயரைத் தான் முதலா வதாக எழுதினார். பிறகுதான் மற்றவர் களின் பெயரை எழுதினார் என்று குழந்தை போலச் சொல்லி மகிழ்வார்.

எந்த நிகழ்ச்சியில் பேசினாலும் தந்தை பெரியார் பெயரைக் குறிப்பிடாமல் பேசவே மாட்டார். தமது பெயரை முதல் பெயராக எழுதினார் எம்.ஜி.ஆர். என்ற, அதே டார்பிடோ அவரோடு கருத்து மாறுபாடு கொண்டு, முதல்வர் எம்.ஜி.ஆரின் கோபத்திற்கும் ஆளானதுண்டு. முதல்வர் எம்.ஜி.ஆர் சிலரின் தவறான வழி காட்டுதலால், பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கு பொருளாதார அளவுகோல் (9000 ரூபாய் வருமானம் வந்தால், அவர்கள் பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகையைப் பெற முடியாது) என்ற தீர்மானம் கொண்டு வந்தபொழுது, டார்பிடோ ஏ.பி.ஜெ அவர்கள், முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களைச் சந்தித்து, இந்தப் பொருளாதார அளவுகோல், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்றவர்களின் கருத்துக்கு மாறானது என்று கூறி னார். அதற்கு முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் நீங்க எல்லாம் தி.க.காரர்கள் இப்படித் தான் சொல்லுவீர்கள் என்று கடிந்து கொண்டார். தனக்கு நாடாளுமன்ற உறுப் பினர் பதவி கொடுத்தவரை, இன் றைக்கு யாராவது இதுபோல் எதிர்த்து பேச முடியுமா? டார்பிடோ பேசினார் என்றால், அவரைப் பேச வைத்தது தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கையாகும்.

தந்தை பெரியாரின் உண்மைத் தொண்டராக வாழ்ந்ததால் தான், ஒரு முறை தமிழக மேலவை உறுப்பினர்; ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங் களவை உறுப்பினர் என்று பதவி வகித்திருந்தாலும், ஒரு சொந்த வீடுகூட இல்லாமல், தன் வாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டிலேயே வாழ்ந்தார். அரசியல் பதவி பெயரால் குடும்பத் தேவைகளைக்கூட நிறை வேற்றிக் கொள்ளவில்லை. வாழ்க ஏ.பி.ஜே. புகழ்!

- (இன்று ஏ.பி.ஜே. நினைவு நாள் - 1987).தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-51522854150348642592013-04-02T05:29:15.755+05:302013-04-02T05:29:15.755+05:30
தினமணிக்கு...
முட்டாள்களின் கீழ் உலகம் எனும் சி...
தினமணிக்கு...

முட்டாள்களின் கீழ் உலகம் எனும் சிறப்புக் கட்டுரை இன்றைய தின மணியில் (1.4.2013 பக்கம் 6) வெளி வந்துள்ளது.

அதில் ஒன்று: அட முட்டாள் புருனோ! நீ சொல்வதைப் போல உலகம் உருண்டையா னது என்றால் சொர்க்கம் எங்கேயடா இருக்கும்? இது மத குருமார்கள் முன்னிலையில் ஒரு நீதிபதி கேட்ட கேள்வி. அதற்கு புருனோ சொன்ன பதில், அதைத்தான் நானும் கேட்கிறேன். சொர்க்கம் எங்கே இருக்கும்?

இப்படி புருனோ கேள்வி கேட்டு கிறித்துவ மதக் குருமார்களை மடக்கியதை எல்லாம் சாங்கோ பாங்கமாக விவ ரித்து எழுதும் தினமணி அய்யர்வாள்களைக் கேட்க விரும்புவதெல் லாம் இதுதான்.

இரண்யாட்சதன் என் பவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலில் விழுந்தான்; பன்றி(வராக) அவதாரம் எடுத்து மகாவிஷ்ணு கடலில் குதித்துப் பூமியை மீட்டார் என்று தீபா வளிக்குக்கதை சொல் கிறீர்களே. அந்தத் தீபா வளிக்குச் சிறப்பு மல ரையும் வெளியிடுகிறீர் களே! தந்தை பெரியாரும், அவர் வழி வந்த கருஞ்சட் டைத் தொண்டர்களும் உங்களை நோக்கிக் கேட்ட கேள்வியும் அதுதானே!

அட முட்டாள்களே! உருண்டையான பூமியைப் பாயாக சுருட்டிக் கொண்டு போய் கடலில் எப்படி விழ முடியும்? என்று தானே அன்று முதல் இன்றுவரை கேட்டு வருகிறோம்.

இதுவரை யோக்கியமான முறையில் தினமணி தினமலர் துக்ளக், கல்கி, ஆனந்த விக டன் வகையறாக்களிட மிருந்து பதில் இல்லையே!

அதே நேரத்தில் கிறித் துவப் பாதிரியார்களை முட்டாள்கள் என்று சொல்லுவதற்கு பயன் படுமேயானால் பகுத்தறிவுவாதி போல வினா தொடுக்கத் தோள் தட்டி வருவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

வைத்தியரே முதலில் உமது நோயைக் குணப் படுத்திக் கொள்க!

கருஞ்சட்டைக்காரர்களைப் பொறுத்தவரை உங்களை நோக்கியும் வினா எரிமலை வெடிக்கும்!

கிறித்தவர் உட்பட எந்த மத மூடத்தனத்தை நோக்கியும் எங்கள் வினாக்கள் முட்டி மோதிக் கிளம்பத்தான் செய்யும்.

- மயிலாடன்-1-4-2013தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-43345071784483128242013-03-31T06:33:19.542+05:302013-03-31T06:33:19.542+05:30
எண்ணத்தில் எதை வைப்பது!
ஆத்திகன்: எண்ணத்தில் சிவ...
எண்ணத்தில் எதை வைப்பது!

ஆத்திகன்: எண்ணத்தில் சிவனை வைத்தால் எடுத்த காரியம் வெற்றியாகும்.

நாத்திகன்: எண்ணத்தில் எண்ணிய செயலை வைத்தால் எடுத்த (எண்ணிய) காரியம் (செயல்) வெற்றியாகும்.

- சு. ஆறுமுகம், நன்னிலம்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-80687322480841029862013-03-31T06:32:40.882+05:302013-03-31T06:32:40.882+05:30
இவர்தான் பூரி சங்கராச்சாரி!
கேரளத்தில் 1965ஆம் ஆ...
இவர்தான் பூரி சங்கராச்சாரி!

கேரளத்தில் 1965ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதியன்று காலடி என்ற ஊரில் நடைபெற்ற அகில இந்திய பிரா மணர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பூரி சங்கராச்சாரி குறிப்பிட்டதாவது:

ஆண்டவன் ஒரு மனிதனுக்குச் செய்யும் உயர்ந்த சிறப்பு அவனைப் பிராமணனாகப் பிறக்க வைப்பது; அப்பெருமைக்குத் தகுந்த வகையில் நடந்து கொள்வது பிராமணர்களது கடமையாகும்.
(ஆதாரம்: இந்து 8.12.1965 பக்கம் -12)

அது மட்டுமா? பச்சையான ஒரு வர்ணாசிரமவாதி என்று பகிரங்கமாக முழங்கியதும் இதே பூரிதான்.

எப்போது வர்ணாசிரமம் தழைக் கிறதோ அப்போதுதான் பாரதம் க்ஷேமம் அடைய முடியும். உலகமும் க்ஷேமம் அடையும்.

எல்லோரும் சமம் என்று வாழும் பிரச்சாரம் இக்காலத்தில் பரவிக் கிடக் கிறது. ஜாதி வகுப்புக்களற்ற சமுதாயம் என்றெல்லாம் சிருஷ்டியில் சமம் என்று வாதிப்பது சரியானதா? பிறக்கும்போதே ஆண் பெண் என்ற வித்தியாசத்துடன் தானே பிறக்கின்றோம்? ஒரே சமயத்தில் பிறந்தவர்களுக்கு உள்ளேயே தோற்றம் குணம் போன்றவற்றில் வேறுபாடுகள் காணப்படுகின்றனவே. பஞ்சேந்திரியங்கள் பயன்படுத்தப்படுவதைக் கவனமாகப் பார்த்தால் எத்தனையோ பேதங்கள் இருப்பது புலப்படும். இரட்டைக் குழந்தைகள் இடையேகூட பல பேதங்கள் இருக்கின்றன.

நமது தேகத்தில் ஓடும் இரத்தத்தில் கூட அல்லவா வேறுபாடுகள் காணப்படு கிறது. மேனாட்டு ரத்தப் பரிசோதனை நிபுணர்கள் மனுஷ்ய சரீரங்களில் ஓடும் ரத்தத்தை நான்கு வகையாகப் பிரித் திருக்கிறார்கள்.

ஓ, ஓஏ, ஏபி, பி என்பவையே அவை

இவற்றில் ஓ என்பது உயர்ந்த வகையான ரத்தம். இன்று ரத்த ஓட்டத்தை நான்கு வகையாகப் பிரிப்பதற்கு ஏற்பத்தான் நமது முன்னோர்கள் மனித சமுதாயத்தை நான்கு வர்ணங்களாகப் பிரித்திருக்கின்றனர் இதை ஆதார மாகக் கொண்ட வர்ணாசிரமம் தழைக் குமானால் பாரதம் க்ஷேமம் அடையும்; உலகமும் க்ஷேமமுறும்.

பூரி சங்கராச்சாரியார் (கோவர்த்தன பீடாதிபதி ஸ்ரீ ஜகத்குரு சங்கராச்சாரியாள் நிரஞ்சனா என்ற தீர்த்த சுவாமிகள்).

18.3.1965 அன்று சென்னை தியாகராய நகரில் உள்ள சிருங்கேரி சங்கரர் மடத்தில் பேசினார்.
(ஆதாரம்: சுதேசமித்திரன் பக்கம் 2 22.3.1965)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-5747148316764883952013-03-31T06:31:26.424+05:302013-03-31T06:31:26.424+05:30
தினமலர் விமர்சனம்
பெண் சிசுக் கொலைக்கு எதிரான க...
தினமலர் விமர்சனம்

பெண் சிசுக் கொலைக்கு எதிரான குரல், பலமாக ஒலித்து கொண்டிருக்கிறது; கருவிலேயே ஆணா, பெண்ணா என்று விஞ்ஞான முறையில் கண்டறிந்து சொல்லவும் தடை!

ஆனால், பெண்ணடிமைத்தனத்திற்கு பெரிதும் காரணம், இந்து மதத் தத்துவ கோட்பாடுகளே என்று தர்க்கிக்கிறது. பெண்ணியம் தோற்றமும், வளர்ச்சியும் என்ற நூல், அதிலிருந்து சில பகுதிகள்:

இந்துக் குடும்பங்களில், ஆண் குழந்தைகளுக்குத் தான் மதிப்பு அதிகம். இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட் டாலும், அடிப்படைக் காரணம், இந்து மதக் கோட்பாடுகள் தான். இந்தியக் குடும்பங்களில் பெற்றோர் இறந்தவுடன், அவர்களுக்கு இறுதிக் கடன்களை ஆற்றவும், பின், அவர்கள் ஆத்மா சாந்தியடையவும், ஆண் மக்களே தகுதி உள்ளவர்களாகக் கருதப்படுகின்றனர்.

தந்தை வழிக் குடும்பங்களில் குடும்பப் பெயரும், சொத்துரிமைகளும், ஆண் மக்களையே சென்றடையும். அதனால், குடும்பம் வழி வழியாக தழைத்தோங்க, ஆண் மக்களே தேவைப்பட்டனர்.

ஆண் மக்கள் பிறந்தது முதல் இறப்பது வரை, பெற்றோருடன் வாழ்ந்து வந்ததால், அவர்கள் பொறுப்பாயிற்று இது.

இதற்கு மாறாக, பெண் குழந்தைகள் திருமணமான பின், பெற்றோரைப் பிரிந்து, கணவன் வீடு சென்று, வாழ்ந்து வருகின்றனர்.

பெண் குழந்தைகளை, வளர்த்து ஆளாக்கி, திருமணம் செய்து கொடுப் பதும், பெற்றோருக்கு ஒரு சுமையான பொறுப்பாகி விட்டது.

கணவன் இறந்தாலோ, அவனால் கைவிடப்பட்டாலோ, அவர்களை வைத்துக் காப்பாற்றும் பொறுப்பும் பெற்றோரைச் சேர்கிறது.

அதிக பெண்களைப் பெற்ற தந் தையை, சமூகம் தாழ்வாகக் கருதுகிறது.

ஆண், தாழ்ந்த ஜாதியில் மணம் புரிந்து கொண்டாலும், அவன் குடும்பம் ஏற்றுக் கொள்கிறது; பெண், தாழ்ந்த ஜாதி ஆணைத் திருமணம் செய்து கொண்டால், குடும்பம் அவளைப் புறக்கணித்து, ஏற்பதில்லை.

- இப்படி இந்து மதக் கோட்பாடுகளே பெண் சிசுக் கொலைக்கு காரணமாகிறது என்கிறது இந்நூல். இது குறித்து நம்மவர்கள் சிந்தித்தால் என்ன?

(தினமலர்கள் வாரமலர் 17.9.2013)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-56911719797671002482013-03-31T06:30:51.924+05:302013-03-31T06:30:51.924+05:30
பெரியார் பெருந்தொண்டர்கள் பாரீர்!
திராவிடர் கழக...
பெரியார் பெருந்தொண்டர்கள் பாரீர்!

திராவிடர் கழகத்தில் இருக்கக் கூடிய பெரியார் பெருந்தொண்டர்களின் பெருமையை, கொள்கை உறுதி பேணும் பண்பாட்டை என்னவென்று சொல்ல.

எடமேலையூர் ஆர். சண்முகம் எண்பது வயது கடந்த இவர் தஞ்சை மாவட்ட திராவிடர் கழகப் பொருளாளராக இருந்தார். சிறு நீரகப் பாதிப்பின் காரணமாக வெளியில் வர முடியவில்லை என்றாலும், அந்த சுயமரியாதை உணர்வு கொஞ்சமும் குறையவில்லை ஒரு குறைபாடே தவிர மற்றபடி நான் நன்றாக இருக்கிறேன். 60 ஆண்டுகளுக்கு மேலாக சுயமரியாதைக்காரன் அந்த ஊட்டம் என்னை விட்டு அகலாது என்று உணர்ச்சி பொங்க கூறினார் அவரின் இளைய மகள் விடுதலைக்கு ஓர் ஆண்டு சந்தா தொகையும் அளித்தார். அவரின் இணையரும் அன்புடன் வரவேற்றார்.

எடமேலையூர் காசிநாதன் 82 வயதைக் கடந்த இளைஞர் இவர். அன்றாடம் விடுதலையை படிக்கத் தவறுவது கிடை யாது. அவரது தம்பி மேக நாதன் ஒன்றிய திராவிடர் கழகச் செயலாளர் இப் பொழுது ஆற்றும் பணி போதாது இன்னும் தீவிரமாக ஆற்ற வேண்டும் என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். ஆரோக்கியமாக இருக்கிறார். இணையர் அவர் களும் அன்புடன் வரவேற்றார்.

கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் நிகழ்ச்சிகளுக்காக சென்ற போது இந்தப் பெரியார் பெருந் தொண்டர்களை நேரில் சந்தித்து நலம் விசா ரித்தார். பட்டுக்கோட்டை மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் பொதுச் செயலாளர் தஞ்சை இரா. செயக் குமார் ஒன்றிய தலைவர் கணேசன் ஆகியோரும் உடனிருந்தனர்.

திண்டிவனம் அருகே தழுதாளி ஊர். 85 வயது. தழு தாளி சண்முகம் எப்பொழுதும் கருப்புச்சட்டைதான். வீட்டு வாசலில் ஒரு பெட்டி இருக்கும். அதில் விடுதலை இருக்கும். யாரும் வந்து படித்துப் போகலாம். கருப்புச்சட்டை அணிவதே ஒரு பிரச்சாரம் தான் என்று தந்தை பெரியார் சொன்னது முதல் எப்பொழுதும் அந்த உடையுடன்தான் காணப்படுவார். மகன் அன்புச்செல்வன் கழகப் பொறுப்பாளர் ஆக உள்ளார். இணையர் நலமுடன் உள்ளார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-9792297826972420782013-03-31T06:28:12.906+05:302013-03-31T06:28:12.906+05:30
சோதிடம் ஓர் அஞ்ஞானமா? விஞ்ஞானமா?
சோதிடம் ஒரு விஞ...
சோதிடம் ஓர் அஞ்ஞானமா? விஞ்ஞானமா?

சோதிடம் ஒரு விஞ்ஞானம் என்று கதைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சோதிடமும் ஒரு விஞ்ஞானமே என்பது மக்களை ஏமாற்றி, இதன் பால் இழுக்கச் சிலர் போடும் நாடகமே. சோதிடத்தைக் கிரகங்களின் அசைவுகளைக் கொண்டு கணிக்கிறார்கள் என்று கூறுவார்கள். நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் தான் மற்ற கிரகங்களும் சஞ்சரிக்கின்றன. அக்கிரகங்களின் நிலை மாற்றங்கள், மனிதனைப் பாதிக்காதா? என்பது பலரது சந்தேகமாகும். இக்கேள்வி சற்று விரிவாக விஞ்ஞானத்துடன் அணுக வேண்டியது. முதலாவதாகக் கிரகங்களைப் பற்றிச் சோதிடம் சொல்வதைக் காண்போம்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்று ஒன்பது கிரகங்கள் உள்ளன. இவற்றின் சஞ்சாரத்தைக் கொண்டே, சோதிடம் கணிக்கப்படுகிறது என்று சோதிடர்கள் கூறுகின்றனர். சோதிடத்தின் அஸ்திவா ரமே கேலிக்கூத்தாய் இருக்கிறது.

சூரியன் ஒரு கிரகமே அல்ல. அது ஒரு நட்சத்திரம், நட்சத்திரம் என்றால், ஹைட்ரஜன் வாயுவால் உருவானது. சூரியன் சுயமாக ஒளியையும், வெப்பத் தையும் உருவாக்க முடியும். கிரகங் களுக்கு இந்த ஆற்றல் கிடையாது. ஆக, சூரியனை ஒரு கிரகமாகப் பொய் கூறிச் சோதிடம் கணிக்கிறார்கள். சூரியனை மையமாகக் கொண்டுதான், பல கிரகங்கள் சுற்றி வருகின்றன.

மற்றொரு வேடிக்கை பார்த்தீர்களா? அவர்கள் கூறும் ஒன்பது கிரகங்களில், பூமியே இல்லை என்பதைக் கவனித் தீர்களா? நாம் வாழும் இந்த பூமியின் நிலை மாற்றங்களை தவிரவா மற்ற கிரகங்களின் நிலை மாற்றங்கள் நம்மைப் பாதிக்கப் போகின்றன. பூமியும் ஒரு கிரகம்தானே? பிறகு ஏன் அதனைச் சேர்க்கவில்லை. ஏன் என ஆராய்ந்தால், விஞ்ஞானம் வளர்ச்சி பெறாத காலக் கட்டத்தில் பூமிதான் மையம். அதனைச் சுற்றித் தான், சூரியன் வலம் வருகிறது என நம்பப்பட்டது.

மற்றொரு வேடிக்கை என்னவென் றால், சோதிடக் கிரகங்களில் சந்திரனும் ஒன்று. சந்திரன் கிரகமே இல்லை. அது ஒரு துணைக்கிரகம் ஆகும். சந்திரன் சூரியனைச் சுற்றி வருவதில்லை. பூமியைத்தான் சுற்றி வருகிறது. சூரியன் ஒரு நட்சத்திரம் என்பதை அறிந்தோம். சந்திரன் துணைக்கிரகம் என்பதை அறிந்தோம். ஆக ஏழு கிரகங்கள். பூமியைச் சேர்ந்தால் எட்டு கிரகங்கள். இந்த எட்டு கிரகங்களில், ராகு, கேது ஆகியவை கிரகங்களே இல்லை என விஞ்ஞானம் கூறுகிறது.

தற்போது விஞ்ஞானம் கூறுகிற கிரகங்களைப் பார்ப்போம்.

பூமி, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, வின்மம், சேண்மம், புளூட்டோ, சாரோன், மேக்மேக், ஹவு மியா, இரிஸ். ஆக, 13 கிரகங்கள் அக்டோ பர் 2011 வரை கண்டறியப்பட் டுள்ளன. இவை அனைத்துமே சூரிய னைத்தான் சுற்றி வருகின்றன. இந்த கிரகங் களை ஏன் சோதிடம் கைவிட்டு விட்டது. அவர்கள் கூறிய கிரகங்களுக்குத்தான் சோதிடத்தில் இடமுண்டா?

சூரியனிலிருந்து இந்தக் கிரகங்கள் பல கோடிக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்றன. இவ்வளவு தூரத்தில் இருக்கக் கூடிய இந்தக் கிரகங்களின் சஞ்சாரம் எப்படி பூமியில் இருக்கக்கூடிய ஒரு தனி மனிதனின் வாழ்வைத் தீர்மானிக்க முடியும்? உண்மையில், இதர கிரகங்களின் நிலை யினால், பூமிப் பந்தில்கூடத் திடீரென்று பெரிய அளவுக்கு மாறுதல்கள் ஏற்படுவ தில்லை. பிறகு, எப்படி தனி மனிதனின் வாழ்வில் அவை புகுந்து, தீர்மானிக்க முடியும்?

ஆயுள் ரேகை, நேர்த்தியாக அமைந் திருந்தால் ஒருவர் ஆயுளுடன் நோய் தொல்லை இல்லாமல், சுக வாழ்க்கை வாழ்வார். பலரிடமும் இந்த நம்பிக்கை ஆழமாய் பதிந்திருக்கிறது. ஒரு மனிதனின் ஆயுளைப் பலகாரணி கள் தீர்மானிக்கின்றன. உடல்வாகு, உணவுப் பழக்கம், வேலை முறை, தீய பழக்கம், எதிர்பாராத விபத்து போன் றவை. அத்தோடு சேர்ந்து வாழும் நாட்டின் சுகாதார வசதிகளுக்கும் ஒரு முக்கிய பங்குண்டு.

மனித வாழ்வின் அனைத்து அம்சங் களும், ஏற்கெனவே கைரேகைகளில் தீர்மானம் ஆகிவிட்டன., என்றால், மனித முயற்சிக்கும், தனி மனித ஆற்ற லுக்கும் அர்த்தமே இல்லாமல் போய் விடும். மனிதனை முடக்கிப் போட முயலுகிற கோரமான நம்பிக்கைகளில், கைரேகை சோதிடமும் ஒன்று, சோதிடர்கள் சூழ்நிலைக்காரர்கள். அதைக் கேட்பவர்கள் சூழ்நிலைவாதிகள்.

நம் வீட்டில் நடந்த சில நிகழ்வுகளை அப்படியே நேரில் பார்த்தது போலச் சொல்லி விடுகிறார்களே, அதற்கு என்ன சொல்கிறீர்கள்? என்று சிலர் கேட்கக் கூடும். நியாயமான கேள்வி தான்! பெரும் பாலும் சோதிடம் கேட்கப் போகிறவர் களே, தங்கள் வீட்டில் நடந்ததை, தாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என்பதை உளறி விடுவார்கள். சோதிடரும் இவர்களின் வாயைக் கிளறி வரவழைத்து விடுவார்கள். பிறகு என்ன? ஈரைப் பேனாக்கி, பேனை பெருமாளாக்கி விடுவார்கள்.

- நன்றி: கலைக்கதிர் பிப்ரவரி 2013தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-40830678117065705142013-03-31T06:26:34.412+05:302013-03-31T06:26:34.412+05:30முதல் அவதாரமான மச்ச அவதாரம் மீன். தண்ணீரை விட்டுக்...முதல் அவதாரமான மச்ச அவதாரம் மீன். தண்ணீரை விட்டுக் கரை ஏற முடியாது. மீனாக இருக் கும்போது சம்சாரக் கடலிலிருந்து நம்மை அது கரை ஏற்ற முடியுமா? இயலாது.

அடுத்து கூர்மம். ஆமை அவ தாரம்! அதன முதுகையே மந்தர மலை அழுத்துகிறவோது சம்சார பாரத்தை சுமந்து அதனால் அழுத்தப்படும் நம்மை அது மீட்க முடியுமா? இயலாது.

கழுத்துக்கு மேலே சிங்க உருவ மும், கழுத்துக்கு கீழே மனித உருவ மும் கொண்ட உருவம்தான் நரசிம்ம அவதாரம். இரண்டு உருவங்கள் கொண்டவனை நம்பமுடியுமா? விட்டு விடுவோம்!

அடுத்து உலகத்தையே தாவி அளந்த வாமன அவதாரம், ஆனால் சிறிய காலைக் காட்டி மூன்றடி மண் வேண்டி, பின்னால் பெரிதாக வளர்ந்து அளந்து கொண்டவன். அதனால் அவனிடத்தில் யாருக்கும் நம்பிக்கை பிறக்காது.

அடுத்து ஆவேச அவதாரமான பரசுராமனைப் பற்றலாம் என்றால் அவரே பெரும் கோபக்காரர். நாமோ கோபத்திலிருந்து விடுதலை அடையத் தவித்துக் கொண்டிருக்கிறோம். அவரை எப்படி பற்ற முடியும்? இயலாது.

அடுத்து இராமனைப் பற்றலாம் என்றால் அவனே சக்கரவர்த்தி திருமகன் மிக உயர்ந்தவன். எளிதில் நாம் அவரை அண்டிவிட முடியாது.

கண்ணன் எளியவன் ஆயிற்றே! அவனைப் பற்றலாமா? ஏலாப் பொய்களை உரைப்பான். சொல் லொன்று செயலொன்றாக இருப் பான். அவனை நம்ப முடியாது.

அவன் அண்ணன் பலராமனோ எப்போதும் சண்டைக்காரன். பாரதப்போரின் போது தம்பியையே கைவிட்டு விட்டு தீர்த்த யாத்திரை சென்று விட்டவர். நம்மையும் கைவிட்டு விடுவாரோ என்னவோ!

கடைசியான கல்கி அவதாரமோ இன்னும் ஏற்படவே இல்லை. எங்கே பற்ற? ஆகவே இவை அனைத்தையும் விடுத்து கடலில் மூழ்கிக் கிடந்த பூமாதேவியைக் கிளர்ந்து எடுத்த பன்றியையே நாம் பற்றவேண்டும் என்று சமாளிக்கிறார் கட்டுரை ளாளர் (துக்ளத் 20.3.2013) இன்னும் இந்நாள் வரை ஏற்படாத கல்கி அவதாரம் தாசாவதாரப் பட்டியலில் இடம் பிடித்துவிட்ட மர்மம் யாருக்கும் தெரியாது.

ஒரு மனிதனுள் இருப்பது நவதுவாரங்கள். அதாவது ஒன்பது ஓட்டைகள், மூக்கின் வழியே பன்றி வந்தாயிற்று! மிச்சமிருக்கும் எட்டு ஓட்டைகளை கழுதை, கரடி, காண்டா மிருகம், கரப்பான் பூச்சி என்று அவதாரங்கள் பல சேர்த்து சதாவதாரம் என்ற பெயரிட்டு மனிதர்களை மத போதையில், மடமையில் மூழ்கடித்து இன்னும் நிறைய காசு பண்ணலாமே. கயிறு திரிக்க பூணூல்களுக்கா பஞ்சம்?

வெறுமனே விட்டு வைக்கலாமா? அவதாரங்களை அடுக்கிக் கொண்டே போகலாமேதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-75782668688691157072013-03-31T06:26:29.448+05:302013-03-31T06:26:29.448+05:30
அவதாரங்கள் அவ்வளவுதானா? - சிவகாசி மணியம்
திருமால...
அவதாரங்கள் அவ்வளவுதானா? - சிவகாசி மணியம்

திருமாலின் பத்து அவதாரங்கள் பற்றிய புளுகு மூட்டைகள் நமக்குத் தெரியும். அந்தப் பத்தில் சிறந்தது எது என்று ஒரு பக்தனிடம் கேட்டால் என்ன சொல்வான்? இராமாவதாரம் என்பான். அல்லது கிருஷ்ணாவதாரம் என்பான். அதெல்லாம் இல்லை பன்றி அவதாரம் தான் சிறந்தது என்று நாம் சொன்னால் நிச்சயம் நம் மீது பாயத்தான் செய்வான். வம்புவந்து சேரும். ஆனால் இதையே பக்திப் போர்வையில் பாகவதம் என்ற பெயரில் தொடர் ஒன்றை எழுதும் வேளுக்குடி சொன்னால் அது சரியாக இருக்கும். பன்றி அவதாரம் தான் பெருமை வாய்ந்தது என்று அடித்துச் சொல்கிறார் அவர். அதைச் சற்று விரிவாக இங்கே பார்ப்போம்.

மற்ற அவதாரங்களைக் குறைத்துக் கூறுவதற்காக சொல்லப்படவில்லை. பன்றி அவதாரத்தின் பெருமையை நிலை நாட்டவே கூறப்படுகிறது. இதனை இலக்கியக் கண்கொண்டு மட்டும் ரசித்திட வேண்டும் என்று எடுத்த எடுப்பிலேயே கூறிவிடுகிறார். (இலக்கியக் கண் இதற்கு மட்டும் தான். மற்ற அண்டப்புளுகு, ஆகாசப்புளுகுக்களுகெல்லாம் குருட்டு நம்பிக்கை ஒன்றே போதும் என்கிறார் போலும்),
சிறப்பைப்பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் பன்றியின் பிறப்பு பற்றித் தெரிந்து வைப்போம். படைப்புத் தொழில் செய்யும் பிரம்மாவின் நான்கு பிள்ளைகளும் அத்தொழிலில் உதவிக்கு வர மறுத் தார்களாம். உடனே சுவாயம்புவ மனு என்ற இன்னொரு மகனை நான்முகன் உருவாக்கினான். உலகைப் படைக்கத் தொடங்கிய இந்த மகனும் அதைத்தொடர முடியாமல் நிறுத் தினான். ஏனென்றால் இரண்யாட் சன் என்ற அசுரன் பூமாதேவியை எடுத்து பிரளய ஜலத்துக்குள்ளே (கடல்) ஒளித்து வைத்துவிட்டான். மக்களைப் படைத்தால் அவர்கள் வாழ்வதற்கு இடமிருக்காது என்ப தால் சுவாயம்புவ மனு தன் தந்தை யான பிரம்மாவிடம் வந்து பூமியை விடுதலை செய்யுங்கள். அதன் பின்னர்தான் படைப்புத் தொழிலைச் செய்ய முடியும் என்றான்.

இதை எப்படிச் செய்யலாம் என்று பிரம்மன் யோசித்துக் கொண்டி ருக்கும் போதே அவருடைய ஒரு மூக்கிலிருந்து பன்றி ரூபம் ஒன்று தோன்றியது. (மூக்கிலிருந்து சளி தானே வரும், பன்றி எப்படி வரும்? பிரம்மாவோ நான்கு தலை கொண்ட நான்முகன். நான்கு மூக்கில் எந்த மூக்கிலிருந்து பன்றி வந்தது? என் றெல்லாம் ஏடா கூடமாகக் கேட்கக் கூடாது. தூணிலும் துரும்பிலும் இருக்கும் கடவுள் என்பதை மறந்து விடக்.கூடாது)

மூக்கின் வழியே வந்த பன்றி ஆயிரக்கணக்கான யானைகள் அளவுக்கு உயர்ந்து பருத்தது. அவரே வராகப் பெருமாள்! திருமாலின் முக்கியமான அவதாரம்! பன்றியின் தனிச்சிறப்பு; அதனால் நிலத்தில் நடக்க முடியும். நீரில் நீந்தவும் முடியும்! சகதியிலும் சுலபமாக நடக்க முடியும். பூமாதேவி கடலுக்குள் இருந்தபடியால் இந்தத் திறமைகள் எல்லாம் இருந்தால் தான் அவளைக் காக்க முடியும். அதனால் தான் பன்றி அவதாரம்!

தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-10719774913347626092013-03-31T06:11:40.797+05:302013-03-31T06:11:40.797+05:30
அரசு கவனத்தில் கொள்ளுமா?
இப்படி ஒரு கார்ட்டூனைப்...
அரசு கவனத்தில் கொள்ளுமா?

இப்படி ஒரு கார்ட்டூனைப் போட்டுள்ளது கருமாதி ஏடு.

யார் நல்லது செய்தாலும் தம் கொள்கைக்கு உடன்பாடு என்றால் அதனை முன்வந்து ஆதரிப்பதும் கொள்கைக்குக் குந்தகம் என்றால் அதனை எதிர்ப்பதும் திராவிடர் கழகத்தின் கொள்கை வழிப்பட்ட அணுகு முறையாகும்.

தமிழ்நாட்டு மக்களிடம் பத்திரிகை விற்று வயிற்றுப் பிழைப்பு நடத்தும் இனமலருக்கு முக்கால் நூற்றாண்டுக்கு மேல் செயல்பட்டு வரும் ஓர் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்த பொது அறிவுகூட இல்லாமல் அதே நேரத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஒன்று சொன்னால் அதனைக் கொச்சைப்படுத்தியே தீர வேண்டும் என்ற பார்ப்பனர் கொழுப்பெடுத்துக் கிறுக்குவதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா? கண்மூடித்தனமான எதிர்ப்பு கண்மூடித்தனமான ஆதரவு தான் சரி என்பது இனமலர்களின் புத்தியா?

ஜெயிலுக்கும் பெயிலுக்கும் அலைந்து கொண்டிருக்கும் ஜகத் குருக்களைப் பற்றி இந்த இனமலர் ஏடுகளின் கண்ணோட்டம் என்ன?

பக்கம் பக்கமாக இந்த ஏடுகளுக்கு விளம்பரம் கொடுக்கும் அதிமுக அரசு - ஆட்சி செய்யும் நல்லதுகளை பாராட்டி சொல்லுவதைக்கூட கொச்சைப்படுத்தி எழுது கிறதே - இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டாமா? 30-3-2013தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-3803999372960354452013-03-31T06:10:04.157+05:302013-03-31T06:10:04.157+05:30
காமன்வெல்த் மாநாட்டுச் சர்ச்சை
2013 நவம்பரில் இ...
காமன்வெல்த் மாநாட்டுச் சர்ச்சை

2013 நவம்பரில் இலங்கையில் நடக்க இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்ற கருத்து உரத்த முறையில் எழுந்துள்ளது.

இனப் படுகொலையைச் செய்த நாடு இலங்கை என்ற கருத்து உலகளவில் வலிமை பெற்றுள்ள நிலையில், எந்த நிலையிலும் இலங்கை அரசுக்கு மதிப்பை ஏற்படுத்தும் ஒரு நிகழ்ச்சிக்குத் துணை போகக் கூடாது என்ற கருத்து மேலோங்கியுள்ளது.

பிரிட்டனின் முன்னாள் குடியேற்ற நாடுகள் 54 காமன்வெல்த்தில் அங்கம் வகிக்கின்றன.

வர்த்தகத் தொடர்புகள் இந்த நாட்டுக்குள் அமைத்துக் கொள்வது போன்ற ஒப்பந்தங்கள் இருந்தாலும் 1997ஆம் ஆண்டில் இந்த அமைப்புக்கென்று சில குறிக்கோள்கள், கோட்பாடுகள் உருவாக்கப்பட்டன.

சட்டத்தின் ஆட்சி, சுதந்திரமான நீதித்துறை, ஜனநாயக உரிமைகள், ஊழலற்ற நிலை, இவற்றுடன் இனம், நிறம் பாராட்டாது அனை வருக்கும் சம உரிமை என்னும் கோட்பாடுகள் காமன்வெல்த் அமைப்புக்கென்று உருவாக்கப் பட்டுள்ளன.

இந்த நிலையில், இனப்படுகொலை செய்த, பேரினவாத அரசு நடக்கும், இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுவது சரியானதுதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரிட்டனை முதன்மைப் படுத்தி இயங்கும் காமன்வெல்த் மாநாட்டுக்கு பிரிட்டன், கனடா போன்ற நாடுகளே கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்து விட்டன.

இதில் குறிப்பிடத்தக்க ஒரு தகவல் உண்டு. எந்த நாட்டில் காமன்வெல்த் மாநாடு நடை பெறுகிறதோ, அந்த நாட்டின் ஆட்சித் தலைவர் தான் அடுத்த ஈராண்டுகளுக்கு அந்த அமைப்பின் தலைவராக இருப்பார் என்பது விதிமுறை. அதன்படி இனப்படுகொலையாளன், இட்லரின் மறுபதிப்பான ராஜபக்சே காமன் வெல்த்துக்குத் தலைமை தாங்குவதைவிட தலைக் குனிவு வேறு ஒன்று இருக்க முடியுமா? காமன்வெல்த்தில் அங்கம் பெறாத நாடுகள் கேலி செய்யாதா?

நிறவெறி ஆட்சி நடத்திய தெ. ஆப்பிரிக் காவை காமன்வெல்த் அமைப்பிலிருந்து விலக்கி வைத்த நிலைப்பாடெல்லாம் உண்டே!

இலங்கைப் பிரச்சினையில் மேலும் மேலும் இந்தியா தவறு செய்து கொண்டே போகும் நிலையில், அவற்றிற்குக் கழுவாய் தேடும் வகையில் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டுக்குச் செல்லக் கூடாது என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.

இந்த மனிதநேய மனித உரிமைக் கருத் தையும் இந்தியா புறக்கணிக்குமேயானால், இதற்குமேலும் இந்தியாவைக் காப்பாற்ற எந்த சக்தியாலும் முடியவே முடியாது.

போர்க்குற்றவாளியாக உலக நீதிமன்றத்தின் முன் இலங்கை அதிபர் ராஜபக்சே நிறுத்தப்பட வேண்டும் என்ற, மனித உரிமைக் குரல் உலகளவில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கக் கூடிய ஒரு கால கட்டத்தில், காமன்வெல்த் அமைப்புக்கு இனப்படுகொலையாளன் - சிங்களவெறியன் காமன்வெல்த் அமைப்பின் கோட்பாடுகளுக்கு விரோதமான நோக்கும் போக்கும் கொண்ட போர்க் குற்றவாளி எப்படி காமன்வெல்த் அமைப்புக்குத் தலைமை தாங்க முடியும்? அது தடுக்கப்பட வேண்டுமானால் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடை பெறுவது கண்டிப்பாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

காமன்வெல்த் நாடுகள் கருத்தூன்றிச் செயல்பட்டாக வேண்டும்.

இந்தியா இதற்காகக் குரல் கொடுக்குமா? குறைந்தபட்சம் இலங்கையில் நடக்க இருக்கும் காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்குமா? எங்கே பார்ப்போம்!30-3-2013தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-44549868075867496172013-03-31T06:06:25.689+05:302013-03-31T06:06:25.689+05:30
செய்தியும்-சிந்தனையும்
ஜாக்கிரதை!
செய்தி: குஜர...
செய்தியும்-சிந்தனையும்

ஜாக்கிரதை!

செய்தி: குஜராத்தில் குடிநீர்த் தட்டுப்பாட்டால் திருமணங்கள் ரத்து ஆகின்றன.

சிந்தனை: ஹி... ஹி.... இந்த மோடிதான் பிரதமராகப் போகிறாராம். குடிக்கத் தண்ணீர் கிடைக்காது - ஜாக்கிரதை!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-67281879615783248312013-03-30T06:01:55.882+05:302013-03-30T06:01:55.882+05:30
உண்மை
உண்மைதான் உலகத் தின் அறிவுச் செல்வம். தொழி...
உண்மை

உண்மைதான் உலகத் தின் அறிவுச் செல்வம். தொழில்களிலெல்லாம் தலை சிறந்த தொழில் உண்மையை நாடுவதேயாகும். உண்மை தான் மனித சமுதாய வளர்ச்சியின் அடிப்படை, மேல் கட்டடம், உச்சி மண்டபம் எல்லாம். உண்மையே இன்பத்தின் தாய்.

உண்மையைக் கடைப்பிடிப்பவன் நன்மையைச் செய்யும் மாபெரும் சக்தியைப் பெறுகிறான். ஆராய்ச்சியினாலும், சோதனையினாலும், பகுத்தறிவினாலும் உண்மையைக் கண்டு பிடிக்க முடியும். துணிவு பெற்றவனால்தான் உண்மையோடு நடக்க முடியும்.

கடவுளுக்கோ, மனிதனுக்கோ அஞ்சாத முழு உரிமையுடன் உண்மையை நாட வேண்டும். தடையோ, மறைவோ, ரகசியமோ இல்லாமல் உலக இலக்கியம் எதையும் படிக்கும் உரிமை வேண்டும். உண்மையைக் கண்டுபிடிப்பவன் உலகுக்கு வெளிச்சத்தைக் காட்டுபவன் ஆவான்.

-ஆர்.ஜி.இங்கர்சால் தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-25929838100761532712013-03-30T06:00:59.594+05:302013-03-30T06:00:59.594+05:30
அறிவுப்பூர்வ ஆதாரம்!
பொதுவாக நம் மக்களிடையே நில...
அறிவுப்பூர்வ ஆதாரம்!

பொதுவாக நம் மக்களிடையே நிலவிவரும் நம்பிக்கைகளில் சித்திரையில் குழந்தை பிறந்தால் ஏதோ பெரிய அசம்பாவிதம் நடந்து விடும் என்று கருதும் பழக்கம் படித்தவர், படியாதவரிடையே குறிப்பாக வயதான பாட்டிகளிடத்தேயும் உள்ளது அனைவரும் அறிந்ததே.

சித்திரையில் பிறந்த பெரியோர்கள்

சாமுவேல் ஜான்சன் - ஆங்கில அகராதியை தொகுத்தவர், சார்லி சாப்ளின் - உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர், விக்டோரியா - நீண்டகாலம் இங்கிலாந்தை ஆண்டவர், தற்போதைய இங்கிலாந்து அரசியார் 2ஆம் எலிசபெத், காண்ட் - ஜெர்மன் தத்துவஞானி, கார்ட்ரைட் - பவர்லூம் கண்டுபிடித்தவர், அலெக்சாண்டர் - உலக மாவீரன், காரல் மார்க்ஸ் - புதியசமதர்ம சமுதாயக் கருத்தை தந்த கம்யூனிசத் தந்தை, டார்வின் - பரிணாம வாத கொள்கையினால் வரலாற்றில் நிலையான இடம் பெற்ற மாபெரும் விஞ்ஞானி, சிக்மெண்ட் பிராய்ட் - மனோ தத்துவ ஆராய்ச்சியாளர், பிரான்சிஸ் டிரேக் - பிரிட்டனின் புகழ்பெற்ற கடற்படை தளபதி. - குமுதம், தகவல்: சம்பத்ராஜ், பேட்டவாய்த்தலைதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-81988532829226315362013-03-30T06:00:02.670+05:302013-03-30T06:00:02.670+05:30
இவர்கள் ஏமாற்றுக்காரர்கள்!
இந்த நாட்டில் எதற்கு...
இவர்கள் ஏமாற்றுக்காரர்கள்!

இந்த நாட்டில் எதற்கு கதை எழுதி வைக்கப்படவில்லை; எதற்கு காரணங்கள் கூறப்படவில்லை? தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்திலே வேதாரணியத்திற்கு அருகிலே கோடியக்கரை என்ற ஒரு ஊர் இருக்கிறது. ஒரு காடு இருக்கிறது. அந்த காட்டிலே ஒரு கருங்கல்லிலே இரண்டு பாதங்களை செதுக்கி வைத்து இருக்கிறார்கள். இன்றைக்கு சுற்றுலாப் பயணிகள் யாராவது போய் இது என்ன? கருங்கல் பாதங்கள் என்று கேட்டால் இங்கே நின்று கொண்டு தான் இராமர் இலங்கையை பார்த்தார் என்று சொல் கிறார்கள்.

திரவுபதை மஞ்சள் குளித்தாளா?

சென்னைக்கு அருகிலே உள்ள மாமல்ல புரம்; மகாபலிபுரம் என்றுதான் சொல் வழக்கு. ஆனால் உண்மையான பெயர் மாமல்லபுரம். மாமல்ல பல்லவனால் உருவாக்கப்பட்ட நகரம். அந்த மாமல்லபுரத்திற்கு சென்றால் அங்கே இருக்கின்ற பாறைகளை பார்த்தால் ஒரு பாறை பெரிதாக உருண்டு திரண்டிருக்கும். அந்த வழிகாட்டி நமக்கு விளக்கம் சொல்லுவார். உருண்டு திரண்டு இருக்கும் இந்தப் பாறை என்ன தெரியுமா? இது கிருஷ்ணனுக்காக உருட்டி வைக்கப்பட்ட வெண்ணெய்! என்பார். வெண்ணையையும் தொட்டு பார்த்து பாறை யையும் தொட்டுப்பார்த்து அதை நம்பினால் அவர்களைவிட முட்டாள் யாராவது இருக்கமுடியுமா? என்று நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன்னொரு இடத்திலே ஒரு பாறையிலே வெடிப்பு ஏற்பட்டு மழை பெய்த தண்ணீர் அதிலே தேங்கி இருக்கும்.

இது என்ன என்று? என்று கேட்டால் இங்கே தான் திரவுபதி மஞ்சள் குளித்தாள்! என்று சொல்லுவார்கள். இப்படி எதற்கும் ஒரு காரணம் - ஒரு விளக்கம். இவை அத்த னையும் தங்கள் பிழைப்பிற்காக என்று கணக் கிட்டுக் கொண்டு காரியங்கள் நாட்டிலே நடைபெற்று ஒரு பெரிய இனம் அதன் காரணமாக ஏமாந்து கிடக்கும் காட்சியை இன்றைக்கு நாம் காண்கிறோம்.

(20.5.1983 வெள்ளியன்று பெங்களூருவில் நடைபெற்ற முருகேசன் இல்ல மணவிழாவில் டாக்டர் கலைஞர் ஆற்றிய உரையிலிருந்து)
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-66666546072474133382013-03-30T05:58:18.323+05:302013-03-30T05:58:18.323+05:30
பரமசிவன் விரும்புகிறான் பார்ப்பனப் பிணவாடையை!
தி...
பரமசிவன் விரும்புகிறான் பார்ப்பனப் பிணவாடையை!

திருவாரூரில் ஓடம் போகியாறு கரையில் பார்ப்பனர்களுக்கென்று தனியாக ஒரு சுடுகாடு இருக்கிறது. இதிலிருந்து சுமார் ஒரு பர்லாங்கு தொலைவில் இருப்பது உருத்ர கோட்டீசுவரர் ஆலயம்.

சுடுகாட்டைச் சுற்றியுள்ள பகுதியில் இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு விட்டன. பிணத்தை எரிக்கும் போது வரும் புகையும் - வாடையும் சகிக்க முடியாததாக இருக்கிறது என்றும் - குடியிருப்புகள் பெருகி விட்டதால் சுடுகாட்டை வேறு ஒதுக்குப் புறமான இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் - நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இப்பகுதியில் உள்ள உருத்ர கோடீசுவர சுவாமிக்குப் பிணவாடை இருக்க வேண்டும் என்பது அய்தீகம் என்பது பார்ப்பனர்களின் எதிர்வாதம்! சட்டம் விசாரித்தது - அய்தீகம் வென்றதாம்.

எல்லாம் வல்ல இறைவனின் (?) மோப்ப சக்தி ஒரு பர்லாங்கிற்கு மேல் செல்லாதா? உயிரில்லாக் கற்சிலைக்கும் - உதவாத அய்தீகத்திற்கும் வக்காலத்து வாங்கும் பார்ப்பனர்கள் என்றுதான் திருந்துவார்களோ?

- சி.நா. திருமலைசாமி, சின்னநெகமம்
செய்திக்கு ஆதாரம்: மேகலா மாத இதழ் செப்டம்பர் 1983.
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-59484548870524412502013-03-30T05:55:42.702+05:302013-03-30T05:55:42.702+05:30
முதல்வர் குற்றச்சாற்று: டி.ஆர்.பாலு பதிலடி
சென்ன...
முதல்வர் குற்றச்சாற்று: டி.ஆர்.பாலு பதிலடி

சென்னை, மார்ச் 29- டி.ஆர்.பாலு ரயில்வே போர்டு தலைவராக இருப்பது குறித்த முதலமைச்சர் ஜெயலலிதா கூறிய குற்றச்சாற்றுக்கு டி.ஆர்.பாலு எம்.பி., அளித்த பதில் வருமாறு:-

தமிழக முதல்வர் ஜெயலலிதா (27.03.2013) தமிழக சட்டமன்றத்தில் பேசிய போது இலங்கைப் பிரச்சினைக் காக ரயில்வே நிலைக்குழுவில் இருந்து டி.ஆர்.பாலு ராஜினாமா செய்யவில்லையே ஏன்? என்று பேசியுள் ளார். தமிழக முதல்வர் அவர்கள் ஒரு முறை பாராளு மன்ற மேலவை உறுப்பினராக பணியாற்றி இருக்கிறார். இப்போது மூன்றாம் முறை தமிழக முதல்வராக பணியாற்றி வருகிறார். நாடாளுமன்ற நடவடிக்கைகளும் சட்ட மன்ற நடவடிக்கைகளும் எப்படி நடைபெறுகின்றன என் பதையும் அவற்றின் நெறி முறைகளையும் அவர் அறிந்திருப்பார் என்று கருதுகிறேன். அதிமுக உறுப்பினர்கள் இடம்பெறவில்லையா?

பாராளுமன்ற உறுப்பினராக இருக் கும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் உட்பட ஒவ் வொருவருக் கும் ஏதாவது ஒரு துறைக் கான நிலைக்குழுவிலும் மற்றொரு துறைக் கான கலந்தாய்வுக் குழுவிலும் இருப்பதற்கு அவைத் தலைவர் ஆணை பிறப்பித்து அந்த மரபுப்படி பாராளு மன்ற உறுப்பினர்கள் செயல்பட்டு வருகின்றனர். அந்த அடிப்படையில் நாடாளுமன்ற ரயில்வே நிலைக்குழுவிலும் நிதித் துறையிலும் மற்றும் சில குழுக்களிலும் நான் பணியாற்றி வருகிறேன். பாராளு மன்றத்தில் நீண்ட காலம் பணியாற்றி வரும் மூத்த உறுப்பினர்களில் ஒருவன் என்ற முறையில் ரயில்வே நிலைக்குழுவின் தலைவராகவும் பணியாற்ற அவைத் தலைவர் ஆணை பிறப்பித்து இருக் கிறார்.

பொதுவாக நிதிநிலை அறிக்கையினை நிதி அமைச்சர் அவையில் படித்த பிறகு சம்மந்த பட்ட துறைக்கான மானியக் கோரிக்கைகளை நாடாளுமன்றத்தின் அவைத் தலை வரால் நியமிக்கப்படும் இரு சபைகளின் உறுப்பினர்கள் அடங்கிய நிலைக்குழு ஆய்வு செய்து நாடாளுமன்றத் திற்கு அறிக்கை அனுப்பிவைக்கும். இந்த நடை முறையின் அடிப்படையில்தான் என்னை போன்ற பலர் நிலைக்குழு உறுப்பினர்களாகவும் குழுக்களின் தலைவர்களாகவும் பணியாற்றி வருகிறோம். அரசியலுக்கு அப்பாற்பட்டு நாடாளுமன்ற நடவடிக்கைகளில் எல்லா கட்சிகளின் உறுப்பினர்களும் இணைந்து அறிக்கைகளைத் தயாரித்து நாடாளு மன்றத்தின் ஒப்புதலுக்கு வழங்கும் ஒரு ஏற்பாடாகத்தான் நிலைக் குழு செயல்படுகிறது. இதில் அமைச்சர்களின் குறுக்கீடும் கிடையாது அரசியல் தலையீடுகளும் இருக்க முடியாது என்பது குறைந்தபட்ச அரசியல் அறிந்தவர் களுக்குக்கூட தெரியும். நான் அங்கம் வகிக்கும் ரயில்வே நிலைக்குழு உறுப்பினர் நியமனத் திற்கும் அய்க்கிய முற்போக்கு கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அமைச்சர்களை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். நிலைக்குழு மற்றும் இலாக்காக்கள் சம்மந்தப்பட்ட ஆலோசனைக் குழுக்களை நாடாளு மன்றத்தின் சபைத் தலைவர்கள் நியமிக்கிறார்கள். அ.தி.மு.க.வில் தம்பிதுரை உள்ளார்.

அ.தி.மு.க. குழுவின் தலைவர் தம்பிதுரை கூட பாராளுமன்றத்தின் அவைத் தலைவரும் துணைத் தலைவரும் இல்லாத நேரத்தில் அவை நடவடிக்கைகளை நடத்தும் மாற்று தலைவர் குழுவில் உறுப்பினராக இருக்கிறார். பல நேரங்களில் அவைத் தலைவர் ஆசனத்தில் அமர்ந்து அவை நடவடிக்கைகளை நடத்துகிறார். இதைப் போலவே நாடாளுமன்ற மேலவை யில் எங்கள் இயக்க உறுப்பினர் திருச்சி சிவா நாடாளுமன்ற மேலவையின் நட வடிக்கைகளை நடத்தும் பொறுப்பு வகிக்கிறார்.

சபாநாயகரின் வரம்புக்கு உட்பட்டவை

அரசியல் கூட்டணி அமைப்புகள் - அமைச்சர் பொறுப்புக்கள் என்பவை பிரதமரின் அதிகார வரம்பு களுக்கு உட்பட்டவை. நாடாளுமன்ற நடவடிக்கைகள் - அதன் குழுக்களின் நடவடிக்கைகள் என்பவை சபாநாயகர் அவர்களின் அதிகார வரம்புக்கு உட்பட்டவை.

ரயில்வே நிலைக்குழு வில் இருந்து டி.ஆர்.பாலு விலக வேண்டும் என்று ஜெயலலிதா சாடி இருக்கி றார். இது நாடாளுமன்ற அவைத் தலைவரின் அதிகாரத் திற்கு சவால் விடுவது மட்டுமல்ல; எனது நாடாளுமன்ற உரிமைப் பிரச்சினையில் தலையிடுவதும் ஆகும் என்பதை ஜெயலலிதா அவர்களுக்கு முதலும் முடிவுமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மத்திய அமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கழகம் முடிவு செய்து, தலைவர் கலைஞர் அவர் கள் ஆணையிட்ட போது, பன்னிரண்டு மணி நேரத்திற்குள் டெல்லிக்கு சென்று பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து அமைச்சர் பதவியை துறந்தவன் நான்.

இழப்புக்கு ஆளானவர்கள் தி.மு.க.வினர்

ஈழத் தமிழர் பிரச்சினையில், பல்வேறு கட்டங்களில் இழப்புக்கு ஆளானவர் கள்தான் தி.மு. கழகத்தினர் என்பதை ஜெயலலிதா புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு டி.ஆர்.பாலு எம்.பி. தனது அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-12098575538846261962013-03-30T05:52:20.271+05:302013-03-30T05:52:20.271+05:30
அன்று தமிழர் தலைவர் எழுதியது - இதற்கும் பொருந்தும...
அன்று தமிழர் தலைவர் எழுதியது - இதற்கும் பொருந்தும்!

இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதருக்கு இந்தியாவுக்குள் தலையிடும் அளவுக்கும், பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலும் பேசக் கூடிய துணிவு வந்துள்ளது என்றால் அதற்குக் காரணம் இந்தியாவின் பலகீனமே!

வேறு எந்த நாட்டிலாவது இந்த நிலை ஏற்பட்டு விட முடியுமா? அப்படி கருத்துச் சொல்லியிருந்தால் அந்தத் தூதர் அடுத்த கணமே விமானத்தில் ஏற்றப்பட்டு இருப்பாரே!

இலங்கையில் 75 சதவிகிதமாக உள்ள சிங்கள வர்களின் பூர்வீகம் என்பது இந்தியா என்பதால், அந்தச் சிங்களவர்களின் உரிமைகளைப் பாதுகாப் பதில்தான் இந்தியா கவலை கொள்ள வேண்டும். டில்லியில் உள்ள இலங்கைத் தூதர் பிரசாத்கரிய வாஸம் கூறி இருக்கிறார். (இந்தியாவின் செயல் பாட்டைப் பார்க்கும் போது அந்த அடிப்படையில் தான் காரியங்கள் நடந்ததோ, நடக்கிறதோ என்ற அய்யமும் ஏற்படுகிறது)

இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தனே இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் மூக்கோடு ஒப்பிட்டு ஆரிய இனவழி வந்தவர்கள் நாம் என்று ஒப்பிட்டுச் சொன்னவராயிற்றே ஜெயவர்த்தனே!

இலங்கைத் தூதரின் விஷமமான பிரச் சாரத்தைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் கண்டனக் கணைகள் வெடித்தும்கூட, இந்தியா இதுவரை வாய் திறக்கவில்லை.

120 கோடி மக்களைக் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தை சுண்டைக்காய் தீவான இலங்கை இன்னும் என்னென்ன வழிகளில் எல்லாம் சிறுமைப்படுத்துமோ தெரியவில்லை.

இந்தியாவின் இந்த மவுனத்தால் நேற்று ஒருபடிமேலே சென்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கேவலமான சொற்களில் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் (9.6.2011) ராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும், இலங்கையின்மீது பொரு ளாதார தடையை ஏற்படுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியதை இலங்கை அதிபர் ராஜபக்சேயின் தம்பியும், இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபய ராஜபக்சே தரக் குறைவாக விமர்சனம் செய்த போது திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டாரே! இது வெளிநாட்டவர் கூற்று என்பதால் இதற்காக உரிய ஒழுங்கு நடவடிக்கையை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய அரசினுடையது அல்லவா என்ற வினாவையும் அந்த அறிக்கையில் எழுப்பி இருந்தார். கொச்சைப்படுத்திப் பேசியிருப்பது - மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முதல் அமைச்சரிடம் மாறுபடுபவர்கள்தான் நாம் பல்வேறு பிரச்சினைகளில், அவரது அணுகுமுறைகளில் என்றாலும் அது வேறு - இது வேறு.

இப்படி இங்குள்ள எவராவது பேசினால் அது சட்டமன்ற உரிமைப் பிரச்சினையாகி, அத்தகை யவர்களை சட்டமன்றத்திற்கு முன் கொண்டு வந்து நிறுத்தி விசாரணை நடத்தி தண்டனைகூட கொடுத்திருக்க முடியும்!

இது வெளிநாட்டவர் கூற்று என்பதால், இதற்காக ஒழுங்கு நடவடிக்கையை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய அரசினுடையதல்லவா? மத்திய அரசு இதில் மவுன குருவாக இருக்கலாமா? கூடாது! கூடவே கூடாது!! என்று திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்திருந்தார்களே! (விடுதலை 12.8.2011)
கோத்தபய ராஜபக்சேகூட ஓர் அரசியல்வாதி - இந்தியாவில் உள்ள இலங்கைக்கான தூதர் அரசியல்வாதியா? ஓர் அதிகாரியல்லவா? அதிகாரி களுக்கென்று ஒரு வரம்பு உண்டே! எல்லா வற்றையும் தூக்கி எறிந்து தெருச் சண்டை போடும் நிலைக்கு வந்து இருக்கிறார் என்றால் இதைவிட கேவலம் இந்தியாவுக்கு உண்டா?
இது 120 கோடி மக்களையும் துச்சமாக மதிக்கும் போக்கிரித்தனமாகும்.
இந்தியா செயல்படும் அரசாக இருக்க வேண் டும் - இதற்குமேல் என்னதான் சொல்ல முடியும்? 29-3-2013தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-32757219832834443112013-03-30T05:50:23.812+05:302013-03-30T05:50:23.812+05:30
இலங்கையில் தமிழர் பகுதிக்குள் ஊடுருவும் சீனா...

இலங்கையில் தமிழர் பகுதிக்குள் ஊடுருவும் சீனா...

யாழ்ப்பாணம், மார்ச். 29- இலங்கையில் மெல்ல மெல்ல கால் ஊன்றி ஆதிக்கம் செலுத்தி வரும் சீனா தமிழர்கள் வாழும் பகுதிக்குள்ளும் காலடி எடுத்து வைத் துள்ளது. யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு அடிப்படை வசதி களைச் செய்ய பல மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளது. இலங் கையில் சீனாவின் ஆதிக் கம் கடந்த சில ஆண்டு களாகவே தலை தூக்கி வருகிறது. சீனாவின் ஆயுதக் கிடங்கு இலங் கையில் திறக்கப்பட்டுள் ளது. இலங்கையில் உள்ள துறைமுகத்தை சர்வதேச துறைமுகமாக மாற்றும் குத்தகை சீனாவுக்கு கொடுக்கப் பட்டுள்ளது. கடல் மார்க்கம் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது. தற் போது மன்னார் வளை குடாவில் பெட்ரோல் எடுக்கும் உரிமமும் சீனா வுக்கு வழங்கப்பட்டுள் ளது. இந்நிலையில் யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு 20 மில்லி யன் ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை சீன அரசு அளித்துள்ளது. இந்த நிதியில் ஏசி, கணினி நகல், இயந்திரங்கள், உள் ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப் பட்டன. யாழ் பொது நூலகத்தில் யாழ் மாநகர சபை முதல்வர் யோகேஸ் வரி பற்குணராசா தலை மையில் நடைபெற்ற விழாவில் அவரிடம் சீன அரசின் முதலாவது செய லாளர் கியூ, ஸ்கியூபிங் இந்த உதவிகளை வழங் கினார். சிங்களர்கள் வாழும் பகுதியில் மட் டுமே ஆதிக்கம் செலுத் திய சீனா, மெல்ல மெல்ல யாழ் நூலகம் வரை தனது ஆதிக்கத் தினை வளர்த்துக் கொண் டுள்ளது. இந்த நாட் டைத் தான் இந்தியா வின் நண்பன் என்கிறது மத்திய அரசு.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-43605561167306664782013-03-30T05:49:47.177+05:302013-03-30T05:49:47.177+05:30
இலங்கைக்கு உதவும் இந்தியா
இலங்கையில் இருந்து வர...
இலங்கைக்கு உதவும் இந்தியா

இலங்கையில் இருந்து வரியில் லாமல் இறக்குமதி செய்யும் ஆயத்த ஆடைகளின் அளவை இந்தியா அதிக ரித்துள்ளது. அண்மையில் இலங்கை சென்ற இந்திய தொழிற் துறை அமைச் சர் ஆனந்த் சர்மாவிடம், வரிவிலக் குடன் ஏற்றுமதி செய்யப்படும் ஆடை களின் அளவை அதிகரிக்க அந்நாட்டு அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

இதனடிப்படையில், வரியில் லாமல் இறக்குமதி செய்யக்கூடிய பருத்தி ஆயத்த ஆடைகளின் அளவை 50 லட்சத்தில் இருந்து 80 லட்சமாக இந்தியா உயர்த்தியுள்ளது.
இதுதவிர, தெற்காசிய சுதந்திர வணிக உடன்படிக்கைப்படி, இலங் கையில் இருந்து இறக்குமதியாகும் ஆடை வகைகளுக்கு விதிக்கப்படும் வரியை 11 சதவீதத்தில் இருந்து 5 சதவீ தமாக இந்தியா குறைத்திருக்கிறது.

மேலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளை இறக்குமதி செய்வதற்கான அனுமதி காலத்தை 6 மாதங்களில் இருந்து ஓராண்டாக இந்தியா அதிகரித்துள்ளது. இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசும் அரசி யல் கட்சிகளும் வலியுறுத்தி வரும் நிலை யில், இலங்கை அரசுக்கு புதிய சலுகை களை வழங்கியிருக்கிறது இந்தியா.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-1850805253809854932013-03-30T05:49:06.821+05:302013-03-30T05:49:06.821+05:30
10-க்கு ஒன்பது
மத்திய அரசின் பணி யாளர் தேர்வாணை...
10-க்கு ஒன்பது

மத்திய அரசின் பணி யாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் 10 பேர்களில் ஒன்பது பேர் வட மாநிலத் தவர்கள்; மற்றொருவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். தமிழ் நாட்டிலிருந்து ஒரு வரும் இலர் - இந்தத் தகவலை தருமபுரி மக்க ளவை உறுப்பினர் இரா. தாமரைச் செல்வன் மக்க ளவையில் ஆதாரப்பூர்வ மாக எடுத்துச் சொல்லி யிருக்கிறார்.

இது ஒரு முக்கியமான பிரச்சினை. இந்தியாவில் முதல் நிலை அதிகாரம் படைத்த அய்.ஏ.எஸ். போன்ற பதவிகளுக்கான தேர்வாணையத்தில் பெரும் பாலும் இந்தி பேசும் மாநி லங்களைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருப்பது நீதிக்கு விரோதமான தாகும்.

இந்தி பேசுவோர் ஆதிக் கத்தில் இந்த ஆணையம் இருப்பதால், இந்தியைத் தாய் மொழியாகக் கொண் டவர்களுக்குச் சாதகமான முறையில் தேர்வு முறைகள் சிந்திக்கப்பட்டு செயல் வடிவமும் அளிக்கப்படு கிறது. புதிய திட்டம் என்ற பெயரால் இந்தி பேசாத மாநிலங்களில் உள்ளவர் கள் தத்தம் தாய் மொழி களில் தேர்வு எழுத முடியாத ஒரு நிலை திணிக்கப்பட் டுள்ளது.

கடந்த பல ஆண்டு காலமாக தாய்மொழியில் தேர்வு எழுதி வெற்றி பெற்று அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அய்.எஃப். எஸ். போன்ற பதவிகளில் இருப்பவர்கள் எல்லாம் தகுதியற்றவர்களாக ஆகி விட்டார்களா?

இந்தியிலும், இங்கிலீ லும் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் தான் திற மையின் கிரீடமாக ஜொலிக்கிறார்களா?

வட மாநிலங்களில் மாவட்ட ஆட்சியர்களுக்கு டிஸ்டிரிக்ட் மேஜிஸ்ட்ரேட் என்று பெயர். இரண்டு வார்த்தை ஆங்கிலத்தில் பேசத் தடுமாறுகிறார்கள்.

இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டால் தான் இதற்குள் அடங்கிய சூழ்ச்சியின் கூர்முனை என்னவென்று விளங்கும்.

இந்தி பேசாத மாநிலங் களைச் சேர்ந்தவர்கள் அவரவர் தாய்மொழியில் எழுத வாய்ப்பு அளிக்கப் பட்ட பொழுது, இந்தி பேசாத மாநிலங்களிலி ருந்தும் அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர்.

இந்த நிலைதான் பெரும்பாலும் இந்தி வாலாக்களாக இருக்கக் கூடிய தேர்வாணையத்தின் கண்களை கருவேல முள் ளாக உறுத்தியிருக்கிறது. அதன் தீய விளைவுதான் புதிய திட்டம். இது போன்ற பதவிகளில் அனைத்து மாநிலத்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டியது அவசிய மாகும்.
திராவிடர் கழகம் இதற் காக களத்தில் இறங்கிப் போராடியது. மக்களவையி லும் எதிர்ப்புப் புயல் வீசியது!
முக்கியமான பிரச் சினைமீது சிறப்பாகக் கருத்துக்களை எடுத்து வைத்த இரா. தாமரைச் செல்வன் எம்.பி. பாராட் டுதலுக்கு உரியவரே! - மயிலாடன் 29-3-2013தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-63023221405372035622013-03-29T05:49:36.378+05:302013-03-29T05:49:36.378+05:30ஹோலி - 11 சிறுவர்கள் பலி!
அய்தராபாத்: ஆந்திர மாந...ஹோலி - 11 சிறுவர்கள் பலி!

அய்தராபாத்: ஆந்திர மாநிலம், நிஜா மாபாத் மாவட்டத்தை சேர்ந்த 15 மாணவர்கள் குக்கட்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் குளிப்ப தற்காக நேற்று சென் றனர். ஏரியின் ஆழம் பற்றி ஏதும் தெரியாத தால், நடுப்பகுதிக்குச் சென்ற அவர்கள் அனைவரும் நீரில் மூழ்கினர். நீந்தத் தெரியாத அவர்கள் எழுப்பிய கூக்குரல் கேட்டு அப்பகுதி மக்கள் நீரில் குதித்து சிலரை மீட்டனர். எனினும், அப்ரோஸ், இம்ரான், அப்ராஸ், தவுஷிக், மது ஆகிய 5 சிறுவர்கள் நீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந் தனர். இவர்கள் அனைவரும் 17 வயதுக்குட்பட்ட, பள்ளி இறுதியாண்டு மாணவர்கள் ஆவர். இதே போல், குட்கப் பள்ளியை சேர்ந்த வேறொரு குளத்தில் குளித்த 15 வயது மாணவன் நீரில் மூழ்கி பலியானான். கரீம்நகர் மாவட்டத் திலும் குளிக்கச் சென்ற 5 சிறுவர்கள் நேற்று நீரில் மூழ்கி பரிதாப மாக உயிரிழந்தனர்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-14239647785354877052013-03-29T05:49:26.906+05:302013-03-29T05:49:26.906+05:30பழனிக் காவடி - அடிதடி பக்தை பலி!
பழநி: பழநியில், ...பழனிக் காவடி - அடிதடி பக்தை பலி!

பழநி: பழநியில், தனி யார் தங்கும் மடத்தில், இரு காவடிக் குழுவின ருக்கு இடையே ஏற் பட்ட மோதலில், பெண் பக்தர் பலியானார். ஒட்டன்சத்திரம் அருகே, அத்திக்கோம்பையைச் சேர்ந்த, 200 பக்தர்கள் காவடிகளுடன், பழநி காந்தி சாலையில் உள்ள, ஒக்கலிக கவுடர் மடத் தில் தங்கினர். அதே மடத்தில், நடுப்பட் டியைச் சேர்ந்த, 20 பக்தர்கள் தங்கி இருந் தனர். நேற்று காலை, பத்து மணியளவில், அத்திக்கோம்பையைச் சேர்ந்த, மச்சராணி, 45, வரதராஜன், 32 மற்றும் குழுவினர், சமையல் செய்தனர். நடுப்பட்டி குழுவினர், மடத்தை காலி செய்வதற்காக, ஏற் கெனவே அங்கு வைத் திருந்த பாத்திரத்தில் இருந்த தண்ணீரைக் கீழே கொட்டினர்.
"சமையல் செய்யும் இடத்தில் தண்ணீரை கொட்டக் கூடாது' என, மச்சராணி கூறினார். இதனால், இரு காவடிக் குழுவினருக்கும் இடையே, தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர், சமையல் கரண்டி, இரும்பு கம்பி, கட்டைகளால் தாக்கிக் கொண்டனர். மோதலில், பலத்த காயமடைந்த மச்சராணி, வரதராஜன் ஆகியோர், பழநி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்; சிகிச்சை பலனின்றி, மச்சராணி இறந்தார். நடுப்பட்டியைச் சேர்ந்த, 20 பேரை, போலீசார் கைது செய்தனர்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-18099321526314195462013-03-29T05:49:17.827+05:302013-03-29T05:49:17.827+05:30தண்ணீரை வீணடித்த சாமியார் மீது புகார்
சூரத்: தண்ண...தண்ணீரை வீணடித்த சாமியார் மீது புகார்

சூரத்: தண்ணீரை வீணடித்ததாக, மகாராஷ்டிராவில் சர்ச்சைக்குள்ளான, சாமியார் அசாராம் பாபு, குஜராத்திலும் அது போன்ற சர்ச்சை யில் சிக்கியுள்ளார். குஜராத்தை சேர்ந்தவர், சாமியார் அசாராம் பாபு. நில அபகரிப்பு, கொலை முயற்சி, சர்ச்சைக்குரிய விதத்தில் பேச்சு போன்ற, பல புகார்களுக்கு ஆளா னவர். சமீபத்தில், மகா ராஷ்டிரா சென்றிருந்த போது, ஹோலி பண்டி கைக்கான முன்னேற் பாடு என்ற பெயரில், ஏராளமான தண்ணீரை வீணடித்தார் என, அவர் மீது கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்நிலையில், குஜ ராத்தின், சூரத் நகரில், நேற்று நடந்த ஹோலிப் பண்டிகையில், சாமியார் அசாராம் பாபு பங்கேற் றார். வண்ணப் பொடி கள் கலக்கப்பட்ட தண் ணீரை, இயந்திரங்கள் மூலம், பக்தர்கள் மீது தெளித்தார். இதன் மூலம், ஏராளமான தண் ணீரை வீணடித்தார் என, பலரும் புகார் தெரிவித்தனர். இதை அறிந்த சாமியார் கொதித்தார்." மகாராஷ் டிராவில் ஓர் அமைச்சர் வீட்டுத் திருமணத்திற் காக, 42 ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டன; அதற்காக நூற்றுக்கணக் கான லாரி தண்ணீர் ஊற்றப்பட்டு, தரை சமன்படுத்தப்பட்டது. நான் சில லிட்டர் தண் ணீரையே பயன்படுத் தினேன்; என் மீது, தண்ணீரை வீணடித்தேன் என புகார் கூறுகின் றனர்,'' என்றார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com