tag:blogger.com,1999:blog-1474608369333206681.post5860909408113565219..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: கடுகளவு அறிவு நாகரிக உணர்ச்சி உள்ள எவரும் தமிழ்வருடப் பிறப்புக் கொண்டாட முடியுமா?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-19845460223642243872014-04-16T06:08:12.599+05:302014-04-16T06:08:12.599+05:30
மாட்டு வண்டியில் பயணித்து ரிசர்வ் வங்கியின் நிர்வ...
மாட்டு வண்டியில் பயணித்து ரிசர்வ் வங்கியின் நிர்வாகசபை வரை சென்றடைந்த ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் தமிழர் ஆர்.காந்தி

காந்தி என்ற பெயரைச் சொன்னதும் நெல் விளையும் திருநெல்வேலி மாவட்டத்தில் தேவநல்லூர் என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தவர் என்பது மட்டுமே சிலருக்கு தோன்றலாம்; ஆனால், ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஆர்.காந்தி பழகுவதற்கு இனிமை யானவர்; நேசிக்கத்தக்கவராகவும் விளங்குகிறார் என்பது அவரை நெருக்கமாக அறிந்தவர்களுக்குப் புரியும்.

அரசுத் துறையில் பதவி உயர்வு என்பது ஓர் புதிர் போல நிலைமை என்ற அளவில், காந்தி அவர்களுக்கு ரிசர்வ் வங்கியின் இந்த உயர்ந்த பதவிக்கு தேர்வானது நல்வாய்ப்பாக அமைந்துள்ளது என்பது மட்டுமல்ல; ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் வங்கியில் சிறந்த முறையில் சேவையும், நுண்ணறிவும் பெற்ற ஒருவருக்கு இந்த பதவி கிடைத்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

பணிமூப்பு அடிப்படையில் ஜி.கோபாலகிருஷ்ணா விற்கு இந்த வாய்ப்பு வராத நிலையில், பி. மொஹாபத்ரா அல்லது பி.விஜய் பாஸ்கர், இந்த இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என நினைத்த நேரத்தில், பள்ளிக்கு மாட்டு வண்டியில் சென்ற ஓர் விவசாயி மகன் காந்தி, வெற்றிக் குதிரையாக, இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இந்த பதவியில், வங்கி நடைமுறை மற்றும் மேம்பாடு பற்றிய துறையை அவர் கவனிப்பார். ரிசர்வ் வங்கியின் முக்கிய மாற்றங்களில், காந்தியின் பங்கு மகத்தானது. செபி எனும் பங்கு பரிமாற்றம் குறித்த கட்டுப்பாடு நிறுவனத்தில், காந்தியின் முன்னாள் தலைவர் டாக்டர் மேத்தாவின் வேண்டுகோளுக்கு ஏற்ப, செபியின் நடவடிக்கைகளை மேம்படுத்திட அரும்பணி ஆற்றியவர்.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர்களாக இருந்த எஸ். வெங்கிடரமணன், சி.ரங்கராஜன் இருவரது நம்பிக் கையும் பெற்று, அவர்களுக்கு செயல் உதவியாளராக பணியாற்றியவர் ஆர்.காந்தி. அதனால் தான், ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த டாக்டர் மேத்தா, செபி நிருவனத்தில் பொறுப் பேற்ற போது, காந்தியையும் உடன் அழைத்துச் சென்றார். எளிமையானவர்; நல்ல மனிதர் என அவருடன் பணிபுரியும் சக பணியாளர்களாலும், நண்பர்களாலும் பாராட்டப்படுவர் ஆர்.காந்தி.

அவர் தனது வாழ்க்கையில் இன்னும் அதிக முன்னேற்றத்தைக்கூட அடைந்திருக்க முடியும்; ஆனால், அவரது சமூக சூழ்நிலையில், தந்தையின் கட்டளைப்படி, ரிசர்வ் வங்கியில் பணியில் சேர்ந்தார். பொதுக்காப்பீட்டு கழகம், பாரத ஸ்டேட் வங்கி, ரிசர்வ் வங்கி என மூன்று நிறுவனங்களிலிருந்தும் ஆர்.காந்திக்கு அதிகாரி பதவி வழங்கியபோது, தந்தை யின் விருப்பப்படி, ரிசர்வ் வங்கியை தேர்ந்தெடுத்தார் என அவரை நன்கு அறிந்த அவரது நண்பர் கூறினார்.

களக்காடு க.அ.மொ.பீ.மீரானியா உயர்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பையும், பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியில் புதுமுக வகுப்பும், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் பட்டப்படிப்பும் மேற்கொண்டவர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பொருளாதாரத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர் இன்றைக்கு ரிசர்வ் வங்கியின் பல்வேறு பொறுப்புகள் பெற்று, துணை ஆளுநராக உயர்ந்திருக்கிறார் ஆர்.காந்தி. சிறிய கிராமத்தில் பிறந்த காந்திக்கு, பணி செய்வதிலும், புத்தகங்கள் படிப்பதிலும் அதிக ஆர்வம் உள்ளவர்.

எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் காந்தியின் இரண்டு மகன்களும், ரெய்கி எனும் ஜப்பானிய புத்த மார்க்கத்தின் ஓர் முறையை பயன்படுத்தி வருகிறார் கள். காந்தியும் அவரது துணைவியாரும், இந்த முறையை பயன்படுத்தி குணப்படுத்தும் முறையில் சிறந்த பயிற்சியாளர்களாகவும் உள்ளார்கள்.

வங்கியில் ஆர்.காந்தியின் மிகச்சிறந்த செயல்பாடு என்பது இன்றைக்கு பண வர்த்தகத்தை நாடு முழு வதும் வங்கிகள் செயல்படுத்தும், ஆன்லைன் மூல மாக பணத்தை ஒரு வங்கியின் கணக்கிலிருந்து எந்தவொரு வங்கியின் கணக்கிற்கும், துரிதமாக அனுப்பும் முறையை செயல்படுத்தியது.

இந்த முறையினால், பண வர்த்தகம், பல நாட்கள் கழித்து கணக்கில் சென்றடையும் நிலையை மாற்றி, சில நிமிடங்களில் சென்றடைந்து, வர்த்தகர்களுக்கு மிகப்பெரிய நன்மையை உண்டாக்கி உள்ளது. காந்தியின் வெற்றி தொப்பியில் மேலும் ஓர் இறகு இந்த ஆர்டிஜிஎஸ் எனும் பண வர்த்தக முறையை அமுல்படுத்தியதாகும்.

செபியில் பணியாற்றிய காலத்திலும், நிறுவனங்கள் பொய்யான வருமானத்தையும், லாபத்தையும் காட்டி, மக்களை ஏமாற்றி தங்களது பங்குகளை அதிக விலைக்கு விற்கும் மோசடித்தனத்தை, கட்டுப்படுத்தி அதனை நெறிப்படுத்தியதில் ஆர்.காந்தியின் பங்கு மகத்தானது. காந்தி ஓர் மக்கள் மனிதர் என்கிறார், செபி நிறு வனத்தின் முன்னாள் அதிகாரியும், சட்ட ஆலோசக ருமான பி.ஆர்.ரமேஷ்.

ஆம், மக்கள் மனிதர் ஆர்.காந்தி, ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பொறுப்பேற்பதில் நமது மகிழ்ச்சி யையும், வாழ்த்தையும் தெரிவிப்போம்.

Read more: http://viduthalai.in/page-7/78736.html#ixzz2z0NttKPA
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-23668595167030607682014-04-16T06:06:30.085+05:302014-04-16T06:06:30.085+05:30முனைவர் பட்டம் பெற்ற பார்வையற்ற முதல் பெண்
சிசுவி...முனைவர் பட்டம் பெற்ற பார்வையற்ற முதல் பெண்

சிசுவிலேயே கள்ளிப் பாலைப் புகட்டும் உசிலம் பட்டியில் பிறந்த அவர், பல தடைகளை உடைத்தெறிந்து தென்னிந்திய அளவில் முனைவர் பட்டம் பெற்ற பார்வையற்ற முதல் பெண். புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் வரலாற்று துறை தலைவராகப் பணி புரிந்து வரும் ராதாபாய்தான் இவ்வளவு சிறப்புக்கும் உரியவர். நான் இன்னைக்கு இந்தச் சிறப்பைப் பெற்றிருக்கிறேன் என்றால், அதற்கு என் தாயும் தந்தையும்தான் காரணம்.

எங்கள் வீட்டுக்கு நான் 8ஆவது குழந்தை. அதுவும் பார்வையற்ற குழந்தை. அந்தக் காலத்தில் பெண் குழந்தை என்றாலே வேண்டாப் பொருளாகப் பார்க்கும் ஊரில், பார்வையற்ற பெண்ணான நான் நிச்சயமாகக் கல்வி என்ற அறிவு ஒளியைப் பெற வேண்டும் என்று விரும்பியவர் என் தந்தை. பத்தாம் வகுப்பு வரை படித்த பிறகு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது திருச்சியில் உள்ள விழியிழந்தோர் பள்ளிக்குச் சென்றேன்.

அங்குதான் பி.யு.சி.யும், முதுகலை படிப்பும் படிக்க விதை விதைக்கப்பட்டது என்கிறவர், கடந்த கால நிகழ்வுகளில் மூழ்கினார். பி.யு.சி. படித்த பிறகு கல்லூரியில் அத்தனை சுலபத்தில் ராதாபாய்க்கு இடம் கிடைக்கவில்லை. விரும்பிய துறையும் கிடைக்கவில்லை. கிடைத்த வரலாற்றுத் துறையை விரும்பிப் படித்தார் ராதாபாய். 1989ஆம் ஆண்டில் தமிழகத்தில் பார்வையற்றோர் நிலையும், மறுவாழ்வும் என்ற தலைப்பில் முனைவர் பட்டம் படிக்க விரும்பினார்.

முனைவர் பட்டம் படிக்கவும் வழிகாட்டி கிடைக்காமல் திண்டாடி, நீண்ட போராட்டத்துக்குப் பிறகே அந்தப் படிப்பையும் அவரால் சாதிக்க முடிந்தது. இத்தனை கஷ்டத்துக்குப் பிறகு கல்லூரியில் வேலை கிடைத்த பிறகும் ராதாபாய் சும்மா இருக்கவில்லை. வாழ்க்கை என்பதே சவால்கள் நிறைந்ததுதான்.

ஆனால், பார்வையற்றவர் களுக்குக் கூடுதல் சவால் நிறைந்தது வாழ்க்கை. அவர்களின் நிலை எனக்குத் தெரியும் என்பதால், பார்வையற்ற மாணவிகளுக்கு விழிப்புணர்வு தரத் தொடங்கினேன். சுற்று வட்டாரங்களில் உள்ள ஊர்களுக்குச் சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்.

நம்மால் நிச்சயம் படிக்க முடியும் என்று அவர்களிடம் நம்பிக்கை விதையை விதைக்கத் தொடங்கினேன். இப்போது பார்வையற்ற மாணவிகள் பலரும் கல்லூரிகளில் படிக்கிறார்கள். அது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார் ராதாபாய்.

Read more: http://viduthalai.in/page-7/78739.html#ixzz2z0NVA32r
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-85820798498977474522014-04-16T06:06:06.281+05:302014-04-16T06:06:06.281+05:30
அணையா நெருப்பு டீஸ்டா செடல்வாட்
குஜராத்தில் 200...
அணையா நெருப்பு டீஸ்டா செடல்வாட்

குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த மதக் கலவரத்தை நிகழ்த்திய மதவாதச் சக்திகளுக்கு எதிராக அதிகமாகப் போராடியவை மனிதஉரிமை அமைப்புகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும்தான்.

அப்படி குஜராத்தில் நேர்மையையும் நீதியையும் நிலைநாட்டப் போராடி வருபவர்களுள் நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பின் சார்பில் செயல்படும் டீஸ்டா செடல்வாட்டும் ஒருவர்.

பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கிய டீஸ்டா செடல்வாட், இந்தியாவின் முதல் அட்டர்னி ஜெனரலான எம்.சி. செடல்வாடின் பேத்தி. வழக்கறிஞர் அதுல் செடல்வாட், சீதா செடல்வாடின் மகள். மும்பையில் தி டெய்லி, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், பிசினஸ் இந்தியா ஆகியவற்றில் பணிபுரிந்தார்.

டீஸ்டா நினைத்திருந்தால், பரபரப்பான, பிரபலமான ஒரு பத்திரிகையாளராக மாறியிருக்க முடியும். ஆனால், அந்தப் பாதையை அவர் தேர்ந்தெடுக்கவில்லை. அவர் விரும்பிய பத்திரிகைப் பணியே, அவரது வாழ்க்கை யின் திருப்பத்துக்குக் காரணமாக அமைந்தது.

1993இல் மும்பையில் மதக் கலவரம் மூண்டபோது, அவரது வாழ்க்கை தலைகீழ் மாற்றம் கண்டது. பத்திரி கையாளர் என்பதால், கலவரச் சம்பவங்களுடன் அவர் நேரடியாக உறவாட வேண்டியிருந்தது. கண்ணெதிரே நிகழ்ந்த கலவரக் காட்சிகள், அவரை உலுக்கின. அதன் பிறகு முழுநேர மனித உரிமை செயற்பாட்டாளராக மாறினார்.

கம்யூனலிசம் காம்பாட் (மத அடிப்படை வாதத்துக்கு எதிரான போர்) என்ற மாத இதழைக் கணவர் ஜாவெத் ஆனந்துடன் சேர்ந்து தொடங்கினார். ஜாவெத் ஆனந்தும் ஒரு முன்னாள் பத்திரிகையாளர்தான்.

தொடர்ந்து மத அடிப்படைவாதச் சக்திகளுக்கு எதிராகவும், அவர்களது வெறுப்புணர்வுக் கொள்கைகளையும் மனச்சிதைவையும் அம்பலப்படுத் துவதை நோக்கமாகக் கொண்டு டீஸ்டா செயல்பட்டு வருகிறார்.

இப்படி மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தளராத உறுதியுடன் டீஸ்டா போராடினாலும், ஒருபுறம் அவருக்கு எதிரான அவப் பிரச்சாரமும் நடந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக குஜராத் அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்திருக்கிறது.

Read more: http://viduthalai.in/page-7/78739.html#ixzz2z0NKPAIy
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-82397136416280545312014-04-16T06:04:42.668+05:302014-04-16T06:04:42.668+05:30
மூட மக்கள்
ஒவ்வொருவனும் தன்னை அன்னியன், கீழ்ச் ...
மூட மக்கள்

ஒவ்வொருவனும் தன்னை அன்னியன், கீழ்ச் சாதி என்று கூப்பிடுவதைச் சகித்துக் கொண்டுதான் மற்றவனைக் கீழ்ச் சாதி என்று கூப்பிடுவதில் திருப்தியும், பெருமையும் அடைகிறான். அதுதான் மூட மக்கள் என்பதற்கு அடையாளம்.

- (விடுதலை, 24.9.1950)

Read more: http://viduthalai.in/page-2/78728.html#ixzz2z0LfXMr2
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-76211942647501832102014-04-16T05:58:19.970+05:302014-04-16T05:58:19.970+05:30
இந்தியாவுக்கே தேவைப்படும் திராவிடர் கழகத் தலைவரின...
இந்தியாவுக்கே தேவைப்படும் திராவிடர் கழகத் தலைவரின் குரல்!

பொதுத் தேர்தலுக்கு இன்னும் இடையில் எட்டு நாள்களே உள்ளன. தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் இயற்கைத் தட்ப வெப்ப நிலையோடு போட்டிப் போட்டுக் கொண்டு அனல் பறக்கிறது.

வட இந்தியாவிலிருந்து தலைவர்கள் படை எடுக்க ஆரம்பித்து விட்டனர். தலைநகரில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நேற்று இரு கூட்டங்களில் பிரச்சாரம் செய்தார். பொது மக்களும், இளைஞர்களும், சிறுபான்மையினரும் திரண்டு அவர் உரையைக் கேட்கிறார்கள்.

இவருடைய கருத்தும், உரையும் வித்தியாசமாகவே இருக்கிறது. நடக்க இருக்கும் தேர்தலின் தனித் தன்மை என்ன? என்பது குறித்துத் தமக்கே உரித்தான ஈரோட்டுக் கண்ணாடி அணிந்து கருத்துக்களை எடுத்து வைக்கிறார்.

ஒரு காலத்தில் ஜன சங்கமாக இருந்த அமைப்புதான் இன்றைய பாரதீய ஜனதா கட்சி; இதற்கு முன் தனது இந்துத்துவா திட்டத்தை இலை மறை காயாகத் தான் வைத்திருந்தது. அப்பொழுதெல்லாம் ஆர்.எஸ்.எஸ். என்ற அவர்களின் தாய் நிறுவனம் பின்புலத்தில் இருந்தது. நடக்கவிருக்கும் 16ஆவது மக்களவைத் தேர்தலில் அது முன்னுக்கு வந்து, பிஜேபியைக் கட்டளையிடும் இடத்திற்கு நகர்ந்துள்ளது.

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையைப் பார்த்தாலே அது எளிதில் விளங்கி விடும். தேர்தல் அறிக்கைக் குழுவின் தலைவர் முரளிமனோகர் ஜோஷியே அந்த உண்மையைப் பட்டாங்கமாய் ஒப்புக் கொண்டுள்ளார். ஆர்.எஸ்.எஸின் ஆலோசனைகளின்படிதான் தேர்தல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் நாங்கள் பெருமைப்படுகிறோம் என்றும் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தி விட்டார்.

அதன் காரணமாக ராமன் கோயில் கட்டுதல், பொது சிவில் சட்டம், காஷ்மீர் மாநிலத்துக்கான அரசமைப்புச் சட்டம் 370ஆவது பிரிவு நீக்கம் இவை பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

இதனையும் தாண்டி ஆர்.எஸ்.எஸின் முக்கிய கோட்பாடான பசுவதைத் தடுப்பு என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, பசு பாதுகாப்புக்கென்று தனித் துறையே உருவாக்கப்படும் என்ற தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களுக்கென்றுள்ள சிறப்புச் சலுகைகளும் மாற்றி அமைக்கப்படும் என்று பி.ஜே.பி. தேர்தல் அறிக்கை கூறுகிறது.

இதன் மூலம் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மதச் சார்பின்மை என்பதைத் தூக்கி எறிந்து விட்டு, இந்து ராஜ்ஜியம் என்கிற ஆர்.எஸ்.எஸின் அடிநாதக் கொள்கை என்பதை அரங்கேற்றக் கூடிய ஒரு திட்டத்தோடு தேர்தலைச் சந்திக்க உள்ளனர். இந்தக் கோணத்தில் தான் திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் மக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். அதனால்தான் இந்தத் தேர்தல் வழக்கம் போல வந்து போகும் தேர்தல் அல்ல; நமது தலை முறையைப் பாதிக்கச் செய்யக் கூடிய பிரச்சினைகள் இருக்கின்றன.

குறிப்பாக சிறுபான்மை மக்களைக் குறி வைத்து இந்தத் தேர்தலைப் பார்க்கிறது பி.ஜே.பி. ஏற்கெனவே நாட்டில் மதக் கலவரங்களைத் திட்டமிட்டு அது நடத்தி வந்துள்ளது.

நாடு தழுவிய அளவில் மதக் கலவரங்களின் பின்னணியில் சங்பரிவார் இருந்திருக்கிறது என்பதை இந்தியாவின் உள் துறையே சொல்லியிருக்கிறது. காவி பயங்கரவாதம் என்ற ஒரு சொலவடையையே கூட உள்துறை அமைச்சராகவிருந்த ப. சிதம்பரம் சொன்ன துண்டு.

மாலேகான் குண்டுவெடிப்பைக் கவனித்தால் சங்பரிவார்க் கும்பல் இந்திய இராணுவம் வரை ஊடுருவி இருப்பதை அறிய முடிகிறது. இராணுவத்தில் பயன்படுத்தப்படும் வெடி மருந்தை இவர்கள் கையாண்டுள்ளனர். இது சாதாரணமானதல்ல; மிகப் பெரிய சதித் திட்டம் இதன் பின்னணியில் இருக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போதே மிகப் பெரிய சதித் திட்டத்தை வகுத்து நாட்டில் கலவரத்தைச் செய்துள்ளது மதவெறிப் பிடித்த ஒரு கும்பல் என்றால், ஆட்சி அதிகாரத்துக்கு வந்து விட்டால் எப்படி யெல்லாம் ஆட்டம் போடுவார்கள் என்பதை ஒரே ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஏற்கெனவே பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸின் பாடத் திட்டங்கள் இடம் பெற்று விட்டன. மனு தர்மத்தைப் பாடமாக வைக்கும் அளவுக்கு நிலைமை மோசம். அரசு நிருவாகத் துறைகளிலும் இந்துத்துவா சக்திகள் ஊடுருவி விட்டன. இராணுவத் துறையிலும் பெரும் அளவுக்கு ஊடுருவி விட்டதாக கப்பல் படைத் தளபதியாக இருந்த விஷ்ணு பகவத் கூறியுள்ளார்.

ஏதோ வாக்குச் சாவடிக்குள் சென்று ஒரு பொத்தானை அழுத்துகிறோம் என்ற சம்பிரதாயக் கடமை என்று நினைக்காமல், இந்தியாவின் எதிர் காலத்தையே அச்சுறுத்தும், குறிப்பாக சிறுபான்மை மக்களைக் குறி வைக்கும், சமூக நீதிக்கும் எதிரான சக்திதான் பிஜேபி என்பதை மனதிற் கொண்டு அதனையும், அதற்கு முட்டுக்கொடுக்கும் கட்சி களையும் அடையாளம் கண்டு, ஒரே கல்லால் பல காய்களை வீழ்த்தும் வாக்களிப்புக் கடமையைச் செய்ய வேண்டும்; திராவிடர் கழகத் தலைவரின் இந்தப் பிரச்சாரம், வேண்டுகோள் தமிழ்நாட்டு அளவில் இருந்தாலும் - இந்தியத் துணைக் கண்டத்திற்கே தேவைப்படுவதாகும்.

Read more: http://viduthalai.in/page-2/78730.html#ixzz2z0LO7v7r
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-82182636745544270262014-04-16T05:56:58.689+05:302014-04-16T05:56:58.689+05:30
சிலர் ஹிட்லரைப்போல் வர கனவு காணுகிறார்கள் மோடிமீத...
சிலர் ஹிட்லரைப்போல் வர கனவு காணுகிறார்கள் மோடிமீது பவார் தாக்கு!

டில்லி.ஏப்.15- மத்திய வேளாண்மைத்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரசு கட்சியின் தலைவ ருமாகிய சரத் பவார் சமூக வலைதளமான டிவிட்டரில் தன்னுடைய கருத்தைப் பதிவிட்டுள்ளார். அப்பதி வில் சிலர் என்று மோடியை மறைமுகமாகக் குறிப் பிட்டு, சிலர் ஹிட்லராக வருவதற்கு கனவு காணு கிறார்கள் என்று தாக்கி உள்ளார்.

காங்கிரசே இல்லாத நாடாக இந்தியா வரும் என்று மோடி கூறியிருந்தார். பவார் அதைக்கண்டித்துக் கூறும்போது, மனநல மருத் துவமனையில் இருக்க வேண் டியவர் என்று சாடினார்.

தற்போது சிலர் என்று மோடியை மறைமுகமாகக் குறிப்பிட்டு ஹிட்லராக உருவாக கனவு காண்கிறார் கள். அப்படிப்பட்ட சக்தி களை வெற்றிபெற அனும திக்கக் கூடாது. அப்படிப் பட்டவரின் முயற்சிகளை நசுக்கிட வேண்டும் என் றார். மராட்டிய மாநிலத்தில் விதர்பாவில் தொடர்ச்சி யான இரு கூட்டங்களில் மோடி பேசும்போது, விவ சாயிகளைப் பாதுகாக்க வில்லை என்று பவார்மீது குற்றஞ்சாட்டிப் பேசினார்.

அதற்குப் பதிலடியாக பவார், நாம் அய்ம்பது விழுக்காடு பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண் டும் என்று கூறுகிறோம். ஆனால், பாஜக தலைவர் கள் தனிப்பட்ட முறையில் பெண்களை கேலிப் பொரு ளாக்குகிறார்கள். நாட்டை எப்படி அவர்கள் நடத்து வார்கள்? என்று கேட்டார்.

பாஜக தேர்தல் அறிக்கை, காங்கிரசு தேர்தல் அறிக் கையிலும் நாடாளுமன்றத் திலும், சட்டமன்றத்திலும் 33 விழுக்காடு இட ஒதுக் கீடு வழங்கப்படும் என்று கூறி உள்ளனர். மேலும், மோடியின் வரலாறு குறித் தும், அறிவு குறித்தும் கேலி செய்துள்ளார். காந்தி ஒத் துழையாமை இயக்கத்தை அகமதாபாத்திலிருந்து தொடங்கியதாக கூறாமல், வார்தாவிலிருந்து தொடங் கினார் என்றாரே என்று கேலி செய்துள்ளார். பவார் கட்சியான தேசியவாதக் காங்கிரசுக் கட்சி கடந்த பத்து ஆண்டு களாக அய்க்கிய முற் போக்குக் கூட்டணியான காங்கிரசு அணியில் 1999லி ருந்து அங்கம் வகித்து வருகிறது.
-ஹிந்துஸ்தான் டைம்ஸ், 14-4-2014, டில்லி பதிப்பு

Read more: http://viduthalai.in/e-paper/78727.html#ixzz2z0L42SVv
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-6293654188712243772014-04-16T05:55:33.713+05:302014-04-16T05:55:33.713+05:30
மோடி பற்றி கலைஞர் கருத்து
சென்னை, ஏப்.15- திமுக ...
மோடி பற்றி கலைஞர் கருத்து

சென்னை, ஏப்.15- திமுக - அதிமுக பற்றி மோடி தெரிவித்துள்ள கருத்துக் குறித்து திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கருத்து வருமாறு:

செய்தியாளர்: நேற்றைய தினம் மோடி ரஜினிகாந்த் அவர்களைச் சந்தித்ததைப் பற்றி, ரஜினிகாந்த் அவரை நல்ல நிர்வாகி என்று சொல்லியிருக்கிறாரே?

கலைஞர்: ரஜினி பேசியதைப் பற்றியோ, அவர் சொன்னதைப் பற்றியோ நோ கமெண்ட்ஸ், நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

செய்தியாளர்: இரண்டாவது கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடித்திருக்கிறீர்கள். அதுபற்றி உங்கள் கருத்து?

கலைஞர்: நான் மகிழ்ச்சி அடையத்தக்க அளவிற்கு இருந்தது.

செய்தியாளர்: அ.தி.மு.க.வினர் தொடர்ந்து ஒவ்வொரு கூட்டத்திலும் உங்களை சாடிக் கொண்டிருக்கிறார்களே?

கலைஞர்: அவர்கள் ஆத்திரத்தில் இருக்கிறார்கள். தோல்வி பயம் அதிகமாகி விட்டது. ஆகவே எங்களைச் சாடுகிறார்கள்.

செய்தியாளர்: முதன் முதலாக நேற்று தமிழகத்தில் பேசிய மோடி, திமுக - அதிமுக ஆகிய இரண்டு கட்சி களுக்குமே மக்களைப் பற்றி அக்கறை இல்லை என்று சொல்லியிருக்கிறாரே?

கலைஞர்: தமிழ்நாட்டில் முதன் முதலாக பிரச் சாரத்தைத் தொடங்கி இருக்கிறார். அப்போது ஒரு அருமையான வாசகத்தை முதன் முதலாக வெளியிட் டிருக்கிறார்.

தமிழ்நாட்டு மக்களின் வருத்தத்தை சம்பாதிக்க வேறு காரணமே தேவை இல்லை.

இவ்வாறு கலைஞர் அவர்கள் செய்தியாளர் களுக்குப் பேட்டி அளித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/78726.html#ixzz2z0KhxsRx
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-14825667354552275912014-04-15T07:32:06.630+05:302014-04-15T07:32:06.630+05:30நா.முத்துநிலவன் said...
// நமது தமிழ் ஓவியா தள...நா.முத்துநிலவன் said...

// நமது தமிழ் ஓவியா தளத்தை எனது தளத்தில் இணைப்புத் தந்திருக்கிறேன்.
சாப்பாடு நல்லாருக்கு னு சொல்றத விட, இன்னும் கொஞ்சம் போடுங்க னு சொல்றதுதானே உண்மையான பாராட்டு நன்றி பணிகள் தொடர்க. தொடர்வேன் பார்க்க - http://valarumkavithai.blogspot.in///

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும், இணைப்புக்கும் மிக்க நன்றி நா.முத்துநிலவன் அய்யா.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-66376174114367235442014-04-15T07:05:30.846+05:302014-04-15T07:05:30.846+05:30உடல் நலத்தைப் பாதுகாக்க உணவில் கவனம் அவசியம்
பரபர...உடல் நலத்தைப் பாதுகாக்க உணவில் கவனம் அவசியம்

பரபரப்பான தற்போதைய வாழ்க்கை சூழ்நிலையும், உணவு பழக்க வழக்கங்களும் நம்மை நோயில் தள்ளி விடுகின்றன. உணவு முக்கியம்தான். ஆனால், எது நல்லது என்பதை உணர்ந்து தேர்ந்தெடுத்து உண்பது சிறந்தது. பல ரெடிமேட் உணவுகள் கெட்டுப் போகாமல் இருக்க பல வேதிப் பொருட்கள் கலக்கப்படுகின்றன.

இவை ஆரோக் கியத்துக்கு உகந்தவை அல்ல. மேலும் இத்தகைய உணவு சாப்பிடும் குழந்தைகளின் ஆரோக்கியம் கெட்டு, படிப்பையும் பாழாக்கி விடுகிறது.

பீட்சா, பாஸ்தா போன்றவை மைதா மாவில் இருந்து தயாரிக்கப்படுபவை. ருசிக்காக இவற்றை எப்போதாவது சாப்பிட்டாலும், இவற்றுக்கு பதிலாக கோதுமை உணவு களை உட்கொள்ளலாம். இவை சீக்கிரமாக குளுக்கோஸாக மாறாது. எண்ணெய்யில் பொரித்த உணவுகளிலும் சத்து கிடையாது என்பதோடு பல்வேறு சிரமங்கள்தான் மிச்சம்.

ஹைட்ரஜன் செறிவூட்டப்பட்ட எண்ணெய். இது பிஸ்கட்டிலும், பிற நொறுக்குத் தீனிகளிலும் அதிகமாக இருக்கும். உணவுப் பொருள்கள் நீண்ட காலம் கெடாமல் இருக்கவேண்டும் என்பதற்காக எல்லா நிறுவனங்களும் எண்ணெயில் ஹைட்ரஜனை அதிகம் செலுத்துகின்றன.

டிரான்ஸ்ஃபேட் எனப்படும் இதை நம் உடலால் எளிதில் செரிக்க முடியாது. இதை உண்பதால் உடலில் கெட்ட கொழுப்புச் சத்துதான் அதிகம் சேரும். இப்படி அதிகமாகும் கெட்ட கொழுப்பினால், காலப்போக்கில் நாளங்கள் கடினமாகிவிடும். பக்கவாதம், புற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சில உணவுப் பொருள்கள் உங்கள் குழந்தையின் உடல் அமைப்பில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்திவிடக் கூடும்.

ஒவ்வாமை, ஆஸ்துமா, அலர்ஜி, கிட்னி பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். நீர்ச்சத்தும் குறையும். இதுபோல் செயற்கை குளிர்பானங்களை தவிர்த்து, பழச்சாறுகளை அருந்துவது உடலுக்கு மிகவும் நல்லது. எந்த அளவுக்கு நொறுக்குத் தீனிகளை குறைக்கிறோமோ அந்த அளவுக்கு ஆரோக் கியம் பாழாகாமல் இருக்கும்.

இவற்றுக்கு பதிலாக பாதாம், அக்ரூட் போன்ற அதிக சத்துள்ள உணவு பொருட்கள், உடனடி சக்தி கிடைக்கும். இந்த கோடை காலத்தில் மிகவும் கவனம் அவசியம். நீர்ச் சத்து மிகுந்த பழங்களை உண்ணலாம்.

Read more: http://viduthalai.in/page-7/78682.html#ixzz2yulq11a7
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-1861341231927630262014-04-15T07:05:02.800+05:302014-04-15T07:05:02.800+05:30
மூலிகைகளால் நமக்கு ஏற்படும் மருத்துவப் பயன்கள்
ம...
மூலிகைகளால் நமக்கு ஏற்படும் மருத்துவப் பயன்கள்

மிளகையும், வெல்லத்தையும் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இருமல், நீர்க்கோவை ஆகியவை குண மாகும். சீரகத்தையும், கற்கண்டையும் மென்று தின்றால் இருமல் குணமாகும்.

நான்கு மிளகையும், இரு கிராம் பையும் நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு வெற்றி லையில் மடித்து மென்று விழுங்கினால் இருமல் குண மாகும். நான்கு வால் மிளகைச் சிறிதளவு புழுங்கலரிசியுடன் வாயில் போட்டு மென்று அதன் ரசத்தை பருகினால் இருமல் குணமாகும்.

தூய்மையான அருகம்புல்லை எடுத்து நன்றாக மென்று பற்களில் வலியுள்ள பகுதியில் ஒதுக்கினால் பல்வலி உடனே குணமாகும். பல் துலக்கி பின் தேனை ஈறு முழுவதும் தடவவேண்டும். சிறிது நேரம் கழித்து வாய் கொப்பளித்தால், பற்களில் உள்ள கிருமிகள் அழியும். தேங்காய் எண்ணெய்யை நாள்தோறும் பலமுறை உதட்டில் தடவினால் உதடு வெடிப்பு உதட்டு புண், தோல் உரிதல் ஆகியன குணமாகும்.

அரியையும், திப்பிலியையும் சிறிதளவு எடுத்து தேனில் பத்து நாட்கள் ஊறவைத்து, தினம் ஒரு திப்பிலியை வாயில் போட்டு அடக்கிக்கொண்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும். மழைக்காலத்தில் ஒரு தம்ளர் பாலில் சிறிதளவு சுக்கு பொடி கலந்து இரவு குடித்து வந்தால் காலையில் புத்துணர்வு பெறலாம்.

துளசி இலையை நன்றாக வெயிலில் காய வைத்து பொடி செய்து டீத்தூளில் சேர்த்து, டீ தயாரித்து குடித்து வந்தால் நன்கு பசி எடுக்கும். குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சளி, கபம் நீங்கும். அரிசி பொரியைத் தண்ணீரில் வேகவைத்து சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பினால் வரக்கூடிய தலை சுற்றல் குணமாகும். தலை சுற்றலுடன் வாந்தி ஏற்பட்டால் வெங் காயத்தினை சாறெடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.

துளசி இலைச்சாறு, 150 மிலி கற்கண்டு இவை இரண்டை யும் கலந்து சர்ப்பத்தாகக் காய்ச்சவேண்டும். அதில் ஒரு டீஸ்பூன் அளவு தினசரி இருவேளை உட்கொண்ட பின் பசும்பால் அருந்தலாம். இந்த சர்பத் சர்வரோக நிவாரணியாகும். மூளை, நரம்பு, இதயம், இரைப்பை ஆகியவற்றைப் பலப்படுத்தும். ஞாபகசக்தியை அதிகரிக்கும்.

Read more: http://viduthalai.in/page-7/78682.html#ixzz2yulde500
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-46010187917186906592014-04-15T07:03:58.588+05:302014-04-15T07:03:58.588+05:30சிறுநீரக நோய்களைத் தீர்க்கும் வாழைத்தண்டு
சிறுநீர...சிறுநீரக நோய்களைத் தீர்க்கும் வாழைத்தண்டு

சிறுநீர சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிற வர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்து வதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.

வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. எனவே, இதை நீர்ச் சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்தி வரலாம். மேலும், இது தேவையற்ற உடல் பருமனையும் குறைக்கும்.

சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிகப் பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது. வாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சு போன்றவை வெளியேறி விடும்

சிறுநீரகக் கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரகக் கற்களை வெளியேற்றலாம். வாழைத் தண்டுக்கு சிறுநீரகக் கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. வாழைத்தண்டை சுட்டு, அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் கலந்து பூசிவர தீப்புண், காயங்கள் ஆறும்.

வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் வாழைத் தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

வாழைத்தண்டை உலர்த்தி பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும். மேலும், கல்லீரல் வலுவ டையும். வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.

Read more: http://viduthalai.in/page-7/78673.html#ixzz2yulSPSj4
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-24816878604484411232014-04-15T06:52:19.911+05:302014-04-15T06:52:19.911+05:30
பொய் சொல்வதில் கை தேர்ந்தவர் நரேந்திரமோடி கருநாடக...
பொய் சொல்வதில் கை தேர்ந்தவர் நரேந்திரமோடி கருநாடக முதலமைச்சர் சித்தராமையா தாக்கு!

பெங்களூரு, ஏப்.14- பொய் சொல்வதில் கை தேர்ந்தவர் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி என்று கருநாடக முதல்வர் சித்த ராமையா தெரிவித்தார்.

பெங்களூரு மகாதே வப்புரா மாருத்தஹள்ளி யில் சனிக்கிழமை காங் கிரஸ் வேட்பாளர் ரிஸ் வான் அர்ஷத்தை ஆதரித்து அவர் பேசியதாவது:

20 தொகுதிகளைக் கைப்பற்றும்

பாஜக பிரதமர் வேட் பாளர் நரேந்திரமோடி குஜ ராத் மாநிலம் வளர்ச்சிப் பணிகளில் முதலாவதாக உள்ளதாக தான் பங்கு கொள்ளும் பொதுக்கூட் டங்களில் பேசி வருகிறார். இதில் உண்மையில்லை என்றாலும் அவர் அதைத் தொடர்ந்து பேசி வரு கிறார். பொய் சொல்வதில் கை தேர்ந்தவரான நரேந் திரமோடி, ஒரே பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையாக்க பார்க்கிறார்.

கருநாடகத்தில் அக்கட்சி யினர் செய்த ஊழலால் அக் கட்சியின் முதல்வர் உள்பட பலர் சிறைக்குச் செல்ல நேரிட்டது. இதனால் மக் களவைத் தேர்தலில் காங் கிரஸ் கட்சியை ஆதரிக்க மக்கள் முடிவு செய்துள்ள னர். கருநாடகத்தில் காங் கிரஸ் 20 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றார் அவர்.

மோடியின் முதுகில் ஏறி பாஜகவால் வெற்றி சவாரி செய்ய முடியாது என்று காங்கிரஸ் முன்னாள் அமைச் சரும், தேசிய செய்தித் தொடர் பாளருமான தாராதேவி சித்தார்தா தெரிவித்தார்.

இது குறித்து பெங்களூ ருவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

நாட்டில் எங்கும் நரேந் திரமோடிக்கு ஆதரவான அலை வீசவில்லை. இது பாஜகவினரால் அவிழ்த்து விடப்பட்டுள்ள பொய் மூட்டைகளில் ஒன்று. மக் களவைத் தேர்தல் முடிவு கள் வெளியான பிறகு கரு நாடகத்தில் மோடி அலை இல்லை என்பது தெளிவா கும். கருநாடகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பாஜகவி னர் நடத்திய ஆட்சியை மக்கள் கெட்ட கனவாக கருதியுள்ளனர்.

பாஜக ஆட் சிக் காலத்தில் மாநிலத்தின் இயற்கை கனிமவளம் கொள்ளை அடிக்கப்பட் டது. உற்றார் உறவினர் களுக்கு சாதகமாக ஆட்சி வளைந்து கொடுக்கப்பட் டது.

மோடியை முகமூடியாக அணிந்துகொண்டு...

5 ஆண்டுகாலத்தில் 3 முதல்வர்கள் பதவி வகிக் கும் அளவுக்கு ஆட்சியி லும், கட்சியிலும் குழப் பம். முதல்வராக இருந்த எடியூரப்பா உள்ளிட்ட பெரும்பாலான அமைச்சர் கள், தலைவர்கள் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் வரிசையாக சிறைக்குச் சென்றனர். நில ஒதுக்கீட் டில் முறைகேடு போன்ற ஏராளமான குளறுபடி களுக்கு இடையே பாஜக ஆட்சி முடிவுக்கு வந்தது.

எனவே, காங்கிரசை விமர் சிக்கும் தார்மீக உரிமையை பாஜக இழந்துள்ளது. பாஜக வின் மோசமான ஆட்சியை மறைப்பதற்காக அக்கட்சி யினர் மோடியை முகமூடி யாக அணிந்துகொண்டு வாக்கு கேட்க வந்துள் ளனர்.

மோடியின் பின்னால் இருப்பவர்கள் அனை வரும் ஊழலில் சிக்கிய தலைவர்கள் தான். அரசி யல் வியாபாரம் என்ற மோசமான வழக்கத்தைக் கொண்டு வந்தவர்கள் பாஜ கவினர். அதையெல்லாம் மூடிமறைத்துவிட்டு நீதி மான்களைபோல மக்கள் முன் பாஜக தலைவர்கள் பேசிவருகிறார்கள்.

நரேந் திரமோடியின் முதுகில் ஏறி பாஜகவினரால் வெற்றி சவாரி செய்ய இயலாது. ஊழல்வாதிகள் பாஜகவில் அய்க்கியமாகியுள்ளனர். ஊழல் புகாரில் இருந்து தப்பிக்க ஆட்சி அதிகாரம் தேவைப்படுவதால் ஒன்றா கியுள்ளனர். தேர்தலுக்கு பிறகு பாஜகவில் கோஷ்டிபூசல் தலைதூக்கும். அப்போது பாஜகவினர் ஒருவர் காலை ஒருவர் இழுத்துக்கொள் வார்கள் என்றார் அவர்

Read more: http://viduthalai.in/page-5/78669.html#ixzz2yuiTptzh
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-65375368915285804332014-04-15T06:51:20.602+05:302014-04-15T06:51:20.602+05:30நீலகிரி தொகுதியில் - அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. ஆதரவ...நீலகிரி தொகுதியில் - அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. ஆதரவு

12.4.2014 அன்று மாலையில் வந்த பத்திரிகை. பா.ஜ.க. கூட்டணியை உருவாக்குகிறேன் என்று ஒருவர் சொன்னார் - தமிழருவி மணியன். அவர் போகாத கட்சியே இல்லை. ஏராளமான கட்சிகளுக்கு ஒரு ரவுண்ட் போய்விட்டார். இனிமேல் போவதற்குக் கட்சியில்லை என்பதால் அவரே ஒரு இயக்கத்தை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கக் கூடியவர்.

அவர் சொல்கிறார்:

நீலகிரி தொகுதியில் அ.தி.மு.க.வுக்குத்தான் பாரதீய ஜனதா கட்சி ஆதரவு என்று சொல்கிறார்.

ஆகவே, இதிலிருந்து என்ன தெரிகிறது? பெரியார் சொல்வதைப்போன்று பூனைக்குட்டி வெளியே வந்தது. கோணிப்பையில் இருந்த பூனைக்குட்டி வெளியே வந்தது.
பா.ஜ.க. அறிவிப்பா?

இது பாரதீய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பா? என்று கேட்கலாம். இவர் (தமிழருவி மணியன்) தானே முன்னே நிற்கிறார். இதை இல்லை என்று அவர்கள் மறுக்கப்பட்டுமே! அவர் சொன்னது சொந்தக் கருத்து என்று மறுக்கவேண்டுமே! இந்தக் கூட்டத்தின் வாயிலாக கேட்கிறோம். இதிலிருந்து நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். இரண்டு பேரும் ஒன்றுதான். முன்பாகம், பின்பாகம். முன்பாகம் நாயக்கர் குதிரை; பின்பாகம் ராவுத்தர் குதிரை அவ்வளவுதான். குதிரை ஒன்றுதான்; நீங்கள் தடுமாறக் கூடாது.

இரண்டு பேரிடமும் அதே மதவாதம். ராமர் கோவில் திட்டம். ஒரே பிரச்சினை இருவரிடமும். ஆகவே, இவர்கள் வேறு திட்டம் போட்டிருப்பதை எண்ணி கவலைப்படவேண்டாம்.

Read more: http://viduthalai.in/page-4/78693.html#ixzz2yuiHx75W
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-15373184903082268072014-04-15T06:48:42.276+05:302014-04-15T06:48:42.276+05:30அம்பேத்கர் பிறந்த நாள் நமது சூளுரை
திராவிடர் கழகத்...அம்பேத்கர் பிறந்த நாள் நமது சூளுரை
திராவிடர் கழகத் தலைவர் பேட்டி

இன்று உலகத் தலைவர் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள். அவர் வாழ் நாளில் எல்லாம் மதவாதத்தை ஜாதிய வாதத்தை - சமதர்மத்திற்கு எதிரான சக்திகளை எதிர்த்து வந்தவர். தந்தை பெரியாரின் அன்புக்கும் மதிப்புக்குமுரியவர் - அவர்கள் இருவரும் ஒரு நாணயத்தின் இரு பக்கம் போல்.மதவாத சக்திகளும், ஜாதியவாதிகளும், பிற்போக்குவாதிகளும் தலை தூக்க எத்தனிக்கும் இந்தக் கால கட்டத்தில் அம்பேத்கர் அவர்கள் எண்ணங்களை நிறைவேற்றிட இந்நாளில் சூளுரை மேற்கொள்வோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.

- சென்னையில் செய்தியாளர்களிடம் 14.4.2014

Read more: http://viduthalai.in/e-paper/78677.html#ixzz2yuharuXT
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-15057300231462735512014-04-15T06:48:02.277+05:302014-04-15T06:48:02.277+05:30
முதல் அமைச்சர் சொன்னதை அப்படியே செய்த குடிமக்கள்!...
முதல் அமைச்சர் சொன்னதை அப்படியே செய்த குடிமக்கள்!

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தமிழ்நாடு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தொடர்ந்து ஒன்றைச் சொல்லிக் கொண்டு வருகிறார். தி.மு.க.வினரை விரட்டி அடியுங்கள் - விரட்டி அடியுங்கள் என்று சொல்லிக் கொண்டு வருவதைப் பொது மக்கள் அப்படியே அட்சரம் பிறழாமல் செய்கிறார்கள்.

தேனியில் அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை மக்கள் விரட்டியடித்தனர். கரூரில் தம்பித்துரையை விரட்டியடித்தனர். சொன்னவர் முதல் அமைச்சர் அல்லவா? குடி மக்கள் கேட்க வேண்டாமா? - (பொது மக்கள் கைதட்டி சிரித்தனர்). அதைத்தானே குடி மக்கள் செய்கிறார்கள்!

- ஆற்காடு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி

Read more: http://viduthalai.in/e-paper/78676.html#ixzz2yuhMvMhQ
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-10497674853273921312014-04-15T06:46:52.799+05:302014-04-15T06:46:52.799+05:30பா.ஜ.க. ஊடக விளம்பரம் மூலம் மோடி அலையை உருவாக்குகி...பா.ஜ.க. ஊடக விளம்பரம் மூலம் மோடி அலையை உருவாக்குகிறது: ராஜீவ் சுக்லா

சிம்லா, ஏப். 14- நாட்டில் எங்கேயும் மோடி அலை இல்லை. பா.ஜ.க. ஊடகங்களின் விளம்பரம் மூலம் மோடி அலை இருப்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சி செய்கிறது. என காங்கிரஸ் தலைவரும், மத்திய அமைச்சருமான ராஜீவ் சுக்லா இன்று கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர் களிடம் அவர் கூறுகையில், நாட்டில் பாதியளவில் கூட பா.ஜ.க. இல்லை. மோடி அலையை உருவாக் கும் ஊடக விளம்பரங்கள் கிராமப்புறங்களில் சென் றடைய வில்லை. ஏனென்றால் களத்தில் உண்மை நிலவ ரங்கள் வேறுபட்டுள்ளன.

அறிக்கைகளின் படி, பா.ஜ.க. ஊடக பிரச்சார விளம்பரங்களுக்காக பல கோடிகளைச் செலவு செய் துள்ளது. ஆனால் காங்கிரஸ், அய்க்கிய முற்போக்கு கூட்டணியின் சாதனைகள் மற்றும் செயல்பாட்டின் அடிப்படையிலேயே வாக்குகளை கேட்கும். இமாசல பிரதேசத்தின் 4 மக்களவை தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும். என்றார்.

மேலும், பிரதமரின் முன்னாள் ஊடக ஆலோசகர் சஞ்சய பாரு தன்னுடைய புத்தகத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி குறிப்பிட்டிருந்த கருத்துக்கு பதிலளித்த அவர், அது முற்றிலும் கற்பனையானது, உண்மையான தகவல்களின் அடிப்படையில் அந்த புத்தகம் எழுதப்படவில்லை. வணிக லாபத்திற் காகவே அது எழுதப்பட்டுள்ளது. ஏற்கனவே இது சம்பந்தமாக பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளி யிட்டிருந்தாலும், சஞ்சய பாரு தேர்தல் நேரத்தில் இந்த புத்தகத்தை வெளியிட்டிருப்பது கேள்விக் குரியது. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காகவே சிலர் சதியில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/78678.html#ixzz2yuhAC5n5
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-64038604387185645352014-04-15T06:45:50.486+05:302014-04-15T06:45:50.486+05:30
குஜராத் எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தாது!
நாட்...
குஜராத் எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தாது!

நாட்டில் நரேந்திர மோடி அலை இல்லை முரளி மனோகர் முண்டா தட்டுகிறார்

புதுடில்லி, ஏப்.14-நாட்டில் பாரதீய ஜனதா அலைதான் வீசுகிறது என்றும், நரேந்திர மோடி அலை இல்லை என்றும் முரளி மனோகர் ஜோஷி கூறி உள்ளார்.

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிப்பதற்கு அக்கட்சியில் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த தலை வர்களில் ஒருவர் முரளி மனோகர் ஜோஷி. முன் னாள் மத்திய அமைச்சரான இவர், அக்கட்சியின் தேர் தல் அறிக்கை குழுவின் தலைவராக இருந்து வருகிறார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அந்த தொகுதியை நரேந்திர மோடிக்கு விட்டுக் கொடுத்துள்ளார். இந்த நிலையில், செய்திச் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட் டியில் முரளி மனோகர் ஜோஷி கூறியதாவது:-

பிரதமர் பதவிக்கு பார தீய ஜனதாவின் பிரதிநிதி யாக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு கட்சி தலைவர்கள் ஆதரவு தெரி விக்கிறார்கள். நாடு முழுவ தும் ஆதரவு கிடைத்து வருகிறது.

நாட்டில் தற்போது பாரதீய ஜனதா அலை வீசு கிறது. அதை தனிப்பட்ட நபருக்கு (நரேந்திர மோடி) ஆதரவான அலையாகக் கருத முடியாது. குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டது போன்ற அபிவிருத்தி எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது.

அபிவிருத்தியில் எந் தெந்த மாநிலத்தில் நல்ல அம்சங்கள் இருக்கின்ற னவோ அவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். கட்சியில் இருந்து நீக்கப்பட் டுள்ள மூத்த தலைவருக்கு (ஜஸ்வந்த் சிங்), தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது இல்லை என தீர்மானித்தது மத்திய தேர்தல் கமிட்டி எடுத்த முடிவு அல்ல. அது கட்சி யின் தலைவர் (ராஜ்நாத் சிங்), மற்றும் ராஜஸ்தான் முதல்அமைச்சரால் எடுக் கப்பட்ட முடிவு. இவ்வாறு முரளி மனோகர் ஜோஷி கூறினார்.

அவர் இவ்வாறு கூறி இருப்பது பற்றி பாரதீய ஜனதா மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத்திடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர், முரளி மனோகர் ஜோஷி என்ன கூறினார் என்பது பற்றி முழுமையாக அறிந்து கொண்ட பின்னர் தான் அதுபற்றி கருத்து தெரிவிக்க முடியும் என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/78674.html#ixzz2yugpLe00
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-49488768789387917202014-04-15T06:41:52.076+05:302014-04-15T06:41:52.076+05:30
திராவிடர் கழகம் சொன்னால் அது அக்மார்க் முத்திரை!

திராவிடர் கழகம் சொன்னால் அது அக்மார்க் முத்திரை!

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை வெளி வந்த நிலையில் வாக்காளர்களின் மனப்பான்மையில் ஒரு திருப்பம் ஏற்படும் என்று எதிர்பாரக்கலாம்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் பி.ஜே.பி. வெளியிட்டு இருப்பது மக்களிடம் வாக்குறுதி கொடுக்கும் ஒரு தேர்தல் அறிக்கையாகத் தெரிய வில்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நெடு நாளாகக் கூறி வந்துள்ள ஹிந்து ராஷ்டிரம் அமைப்போம் என்பதற் கான அதிகாரப் பூர்வ அறிவிப்பாக பிஜேபியின் தேர்தல் அறிக்கையை நினைக்க வேண்டும்.

மதச் சார்பற்ற கொள்கையுடைய இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிந்து விட்டு, அதற்குப் பதிலாக ஹிந்து ராஜ்ஜியத்தின் சட்ட திட்டங்களை அறிவித்துள்ளார்கள். எந்த இடத்திலும் மதச் சார்பற்ற தன்மையைக் காப்போம் என்ற உறுதி மொழி இல்லை.

அதே நேரத்தில், மதச் சார்பற்ற தன்மைக்கு எதிரான செயல் திட்டங்களைப் பதிவு செய்துள்ளனர். ராமன் கோயில் கட்டுவது, பொது சிவில் சட்டம், காஷ்மீர் மாநிலத்திற்கென்றுள்ள தனி சலுகைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் 370ஆம் பிரிவு நீக்கம், பசுவதைத் தடுப்பு, வெளிநாடுகளில் வாழும் இந்துக் களுக்குப் பாதுகாப்பு (அதற்கென்றே தனித்துறை), வடகிழக்கு மாகாணத்தில் கடைப்பிடிக்கப்படும் பிரத்தி யேக வாய்ப்புகள் பறிப்பு (அவர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள்!) இவை எல்லாம் ஆர்.எஸ்.எஸின் ஹிந்துத்துவா செயல் திட்டங்களே!

இவற்றின் மூலம் சிறுபான்மை மக்கள் பிஜேபியை எதிர்த்தால் போதும் என்று நினைத்துவிடக் கூடாது; மதச் சார்பின்மையைத் தகர்க்கும் ஓர் அரசியல் சட்டம் மக்களை மிகப் பெரிய அளவில் செங்குத்தாகப் பிளந்து எறிந்து விடும். நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் மதமாச்சரிய நெருப்பை ஊதிவிட்டு கலகம் விளைவிப்பதை கலையாகக் கருதும் ஓர் மனப்பான்மை வந்து குதித்து விடும். சமூக அமைதி என்பது மயானத் தில் மட்டும்தான் என்ற நிலை உறுதிப்படுத்தப்படும்.

இதில் பெரும்பான்மை சிறுபான்மை என்ற கருத்துக்கு இடமில்லாமல் ஒட்டு மொத்தமான சமுதாயமே அமைதியைத் தொலைத்து விடக் கூடிய அபாயம் தலைக்கு மேல் வாளாகத் தொங்கிக் கொண்டு இருக்கிறது என்பதை உணர வேண்டும். கார்ப்பரேட் முதலாளிகள் மோடியைப் பிரதமராக் குவதற்கு சுயநலவெறி காரணமாக இருக்கிறது என்பது ஒரு பக்கம்; இன்னொரு பக்கம் சமுதாயத்தை மத ரீதியாகக் கூறு போட்டு மக்களின் வளர்ச்சிப் போக்குக்கு மரண குழி வெட்டும் வேலை! பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பிஜேபி கூறும் ஹிந்துத்துவாவை ஏற்கிறார்களா என்பது பிரச்சினையல்ல; பிஜேபி ஆட்சி அமைக்குமானால் அந்தப் பெரும்பான்மை மக்களின் சகல வாழ்வும் சுக்கு நூறாகி விடும் என்பதை மறந்து விடக் கூடாது பெரும்பான்மை என்ற போர்வையில் பிர்மாவின் நெற்றியில் பிறந்தவர்களாகத் தங்களை நினைத்துக் கொண்டிருக்கும் கூட்டத்தின் கைதான் ஓங்கும் - மீண்டும் மனுதர்மமே கோலோச்சத் தொடங்கும். இடஒதுக்கீட்டைப்பற்றி அவர்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாததைத் தெரிந்துகொண்டால் இந்தச் சூட்சுமத்தை எளிதில் விளங்கிக் கொள்ளலாம்.

எனவே, சிறுபான்மை மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் சமூக நீதியிலே அக்கறை உள்ளவர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், பகுத்தறிவாளர்கள், இடதுசாரி சிந்தனையாளர்கள் எல்லோரும் ஓரணியில் நின்று மோடியின் தலைமை யில் அணி வகுத்து நிற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியையே (என்.டி.ஏ.) ஒட்டு மொத்தமாக வீழ்த்திட முனைய வேண்டும். விவரம் தெரியாமல் வழக்கம் போல வந்து போகும் ஒரு பொதுத் தேர்தல் என்று மேம்போக்காகக் கருதிக் கொண்டு, கோட்டை விட்டால், சமூகநீதியின் அஸ்திவாரமே கலைந்து போய் விடும் எச்சரிக்கை!!

சிறுபான்மை மக்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்குள் இருக்கும் சிறு சிறு வேறுபாடுகளை, மாச்சரியங்களை ஓரத்தில் ஒதுக்கி வைத்து விட்டு, இப்பொழுது தேவை ஒட்டு மொத்தமான சமூக நீதி, மதச் சார்பின்மை என்பதை மனதிற் கொண்டு, ஒரு மூச்சுப் பிடித்து பிற்போக்கு அணியை ஊதித் தள்ளிட வேண்டும். நம்மில் சில மனிதர்கள், அமைப்புகள் பதவிப் பசி எடுத்து வித்தாரம் பேசுவார்கள் நீட்டி முழங்குவார்கள்; அந்த மத்தாப்பு வெளிச்சத்தில் மனதைப் பறி கொடுத்து அஸ்திவாரத்திற்குத் தங்களுக் குத் தாங்களே வேட்டு வைத்துக் கொள்ள வேண்டாம் என்பதே பதவி அரசியலுக்கு அப்பாற்பட்ட திராவிடர் கழகம் வேண்டுகிறது - அதன் தலைவர் குரல் கொடுக்கிறார்.

திராவிடர் கழகம் சொன்னால் அது அக்மார்க் முத்திரை என்பதை நினைவிற் கொள்வீர்!

Read more: http://viduthalai.in/page-2/78680.html#ixzz2yufpIX3Z
தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-67118526427454492372014-04-14T10:38:34.193+05:302014-04-14T10:38:34.193+05:30நமது தமிழ் ஓவியா தளத்தை எனது தளத்தில் இணைப்புத் தந...நமது தமிழ் ஓவியா தளத்தை எனது தளத்தில் இணைப்புத் தந்திருக்கிறேன்.
சாப்பாடு நல்லாருக்கு னு சொல்றத விட, இன்னும் கொஞ்சம் போடுங்க னு சொல்றதுதானே உண்மையான பாராட்டு நன்றி பணிகள் தொடர்க. தொடர்வேன் பார்க்க - http://valarumkavithai.blogspot.in/நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-53848420845792873912014-04-14T09:14:26.443+05:302014-04-14T09:14:26.443+05:301000 ee vay raa vanthalum thirutha mudiyathu aatu...1000 ee vay raa vanthalum thirutha mudiyathu aatuu manthai kootamAnonymoushttps://www.blogger.com/profile/00230706819765034111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-31721693337442354702014-04-14T06:11:03.094+05:302014-04-14T06:11:03.094+05:30முஸ்லிம்கள் மட்டுமல்ல - கிறித்தவர்கள் முகத்திலும் ...முஸ்லிம்கள் மட்டுமல்ல - கிறித்தவர்கள் முகத்திலும் விழிப்பதில்லை என்று கூட்டணிக் கட்சியினர் முடிந்த முடிவுக்கு வந்துவிட்டனரா?

8. பசு பாதுகாப்புக்கென்று தனியாகவே ஒரு துறை கொண்டு வரப் போகிறோம் என்று கூறியிருக்கிறார்களே - பி.ஜே.பி.யினுடைய தேர்தல் அறிக்கையில்!

விலங்குகளில் அது என்ன பசுவுக்கு மட்டும் பிரத்தியேகப் பாத்திரம்? இது அப்பட்டமான அவர்களின் ஹிந்துத்துவா குணம்தானே.

இந்தப் பசுப் பாதுகாப்பு என்று சொல்லித் தானே அன்றைய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பச்சைத் தமிழர் காமராசரை, இந்தியாவின் தலைநகரமான புதுடில்லியிலே பட்டப் பகலிலே (7.11.1966) ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், ஜனசங்கம் (இன்றைய பி.ஜே.பி.), பூரி சங்கராச்சாரிகள், நிர்வாண சாமியார்கள் கைகளில் கொலைக் கருவிகளுடன் கூடி வெறியாட்டம் போட்டு, காமராசரை உயிரோடு கொளுத்த திட்டம் போட்டார்களே - (தி.மு.க. தொண்டனால் தப்பிப் பிழைத்தார்) காமராசரின் சீடர் காந்தீய மக்கள் கட்சியின் நிறுவனர் அந்தப் பி.ஜே.பி. கோத்திரத்துக்கு கோவிந்தா! போட ஆரம்பித்துவிட்டாரே - அது எப்படி? நடந்த தென்ன என்று தமிழ்நாட்டு மக்கள் கேட்க மாட்டார்களா? (காந்தியாரைக் கொன்றவர் களோடு ஆலிங்கனம் செய்யத் தயாராகிவிட்ட நிலையில், இது எம்மாத்திரம் என்று பதில் சொல்லுவார்களோ!)

9. தன்னை எதிர்த்து நிற்கும் பி.ஜே.பி.பற்றி அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் ஒரு வரி விமர்சனம் கூட செய்யவில்லை. பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை வெளியான பிறகும், ஒரு முணு முணுப்புக்கூட அம்மையாரிடமிருந்து வெளிவர வில்லை. இதன்மூலம் அண்ணா என்ற பெய ரும், திராவிட என்ற இனக் கலாச்சார அடை யாளமும் அ.இ.அ.தி.மு.க.வுக்கு அறவே பொருத்தமற்றது என்று பகிரங்கப்பட்டுவிட்ட தல்லவா!

பச்சையான பாசிச ஹிந்துத்துவா தேர்தல் அறிக்கையைக் கொடுத்துவிட்டது பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். ஆலோசனை கேட்டுத்தான் தேர்தல் அறிக்கையைத் தயாரித்தோம் என்று தேர்தல் அறிக்கைக் குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டாரே - இதற்குப் பின்பும் வைகோ கம்பெனி என்ன செய்ய போகிறது? கூட்டுச் சேர்ந்தவர்கள்பற்றிச் கிஞ்சிற்றும் கவலையில்லை - அந்தக் காவிக் கட்சிக்கு! ஆனால், தீவிர வித்தாரம் பேசும் ம.தி.மு.க., பா.ம.க., மணியன் வகையறாக்கள் அனைத்தை யும் துறந்து, காட்டிக் கொடுத்து, அவலநிலைக்கு ஆளாகிவிடவில்லையா?
கையறு நிலைக்குத் தங்களைத் தாங்களே தள்ளிக்கொண்டு விடவில்லையா?

இதுபோன்ற ஏராளமான கேள்விகள் உண்டு.

முதலில் இவற்றிற்கு மட்டும் பதுங்காமல், பதில் சொல்லுவார்களா - பா.ஜ.க. பார்ட்னர்கள்?

Read more: http://viduthalai.in/page-8/78619.html#ixzz2yohLjiOIதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-20942014044843588462014-04-14T06:10:58.610+05:302014-04-14T06:10:58.610+05:304. ராமன் கோவில் கட்டுவோம், பொது சிவில் சட்டம் கொண்...4. ராமன் கோவில் கட்டுவோம், பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் - காஷ்மீர் மாநிலத்திற்கான 370 சட்டப் பிரிவை அகற்று வோம் - பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள - இவற்றின்மீது அக்கட்சி யுடன் கூட்டணி வைத்துள்ள ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க.வின் நிலைப்பாடு என்ன? தேர்தலில் வெற்றி பெற்றால் இவற்றை பி.ஜே.பி. செயல் படுத்தும்போது இந்தக் கூட்டணிக் கட்சிகள் என்ன செய்ய முடியும்?
சிறுபான்மை மக்கள் மத்தியில் மன்னிப்புக் கோருவார்களா? சிறுபான்மை மக்கள் முகத்தில் எந்தக் காலத்திலும் விழிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்களா? தேர்தல் அறிக் கையில் மதச் சார்பின்மைபற்றியும், (பக்கம் 15) சிறுபான்மையினர் நலன்பற்றியும் (பக்கம் 45) ம.தி.மு.க. குறிப்பிட்டுள்ளதே இவை எல்லாம் ஏட்டுச் சுரைக்காய்தான் என்று பகிரங்கமாக அறிவிக்கத் தயாரா?

5. ஈழத் தமிழர் (பக்கம் 11, 20), தமிழக மீனவர்கள் (பக்கம் 21) பற்றியெல்லாம் ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் முழங்கப்பட்டு இருக்கின் றனவே - இவைபற்றி ஒரே ஒரு வரிகூட பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் இடம்பெற வில்லையே - இதற்கு என்ன பதில்? இலட்சியத் தின்மீது உறுதி இருந்தால் இதுபற்றி குறைந்த பட்சம் வினா எழுப்பி இருக்கவேண்டாமா? அப்படியென்றால் இலட்சியமாவது - வெங்காய மாவது பதவிதான் எங்கள் பசி என்று பகிரங்க மாக ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்றுதானே பொருள்?

6. எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மற்றும் பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கான கல்வி மற்றும் சுயதொழில் வாய்ப்பு ஆகியவற்றில் அதிகம் கவனம் செலுத்தப்படும் என்று சுற்றி வளைத்துத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பி.ஜே.பி., அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங் குவதுபற்றி ஒரே ஒரு வரிகூட இடம்பெறச் செய்யாததற்குக் காரணம் என்ன?

எதைச் சொல்லி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களிடம் வாக்குக் கேட்க உத்தேசம்?

சமூகநீதிபற்றி ம.தி.மு.க. தேர்தல் அறிக்கை யில் (பக்கம் 14) குறிப்பிடப்பட்டுள்ளதே அதை என்ன குப்பைக் கூடையில் தூக்கிப் போடப் போகிறார்களா?

7. வடகிழக்கு மாகாணங்களுக்குக் கொடுக் கப்பட்டுள்ள சிறப்புச் சலுகைகள் அனைத்தும் மறுபரிசீலனை செய்யப்பட்டு மற்ற மாநிலங் களைப் போல மாற்றி அமைக்கப்படும் என்று பி.ஜே.பி. தேர்தல் அறிக்கை பகர்கிறதே - இதன் இலக்கு என்ன? பெரும்பாலும் கிறித்தவர்கள் வாழும் பகுதி என்ற கனல் கக்கும் கண்ணோட் டம்தானே இதில் காணக் கிடக்கிறது.

50 சதவிகிதத்தையும் தாண்டி அப்பகுதி மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறதே அதில் கை வைப்பதுதானே ஆரிய பி.ஜே.பி. யின் ஆத்திரம்!

தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-25090635057836982362014-04-14T06:10:49.896+05:302014-04-14T06:10:49.896+05:30பதுங்காமல் பதில் சொல்லட்டும்- பா.ஜ.க. பார்ட்னர்கள்...பதுங்காமல் பதில் சொல்லட்டும்- பா.ஜ.க. பார்ட்னர்கள்!

1. சிறுபான்மையினர்களுக்கு சலுகைகளை வழங்குவதுபோல பலவற்றைச் சொல்லுகிறது தேர்தல் அறிக்கையில் சொல்லுகிறது பி.ஜே.பி. சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களை நவீனப் படுத்துவோம் - உருது மொழி மேம்பாட்டை உறுதிப்படுத்து வோம் என்றெல்லாம் கூறத் தெரிந்த பி.ஜே.பி.,க்கு அவர்களுக்குச் சச்சார் குழு பரிந்துரைத்தபடி இட ஒதுக்கீடு அளிப் போம் என்று கூற மனம் இல்லையே ஏன்?

2. சிறுபான்மையினர் கலாச்சார பாரம்பரிய சின்னங்கள் புதுப்பிக்கப்படும் என்று பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் காணப்படுகிறது. முஸ்லிம் மக்களின் 450 ஆண்டுகால வரலாறு படைத்த பாரம்பரிய கலாச்சார சின்னமான பாபர் மசூதியை பட்டப் பகலில் பகிரங்கமாக அடித்து, உடைத்து நொறுக்கியவர்கள்தான் சிறுபான்மை மக்களின் பாரம்பரியச் சின்னங்களின் பாது காவலர்களா?

3. உத்தரப்பிரதேசத்தில் முசாபர் நகரில் நடைபெற்ற மதக்கலவரத்தைக் காரணம் காட்டி, உ.பி.யில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் சமாஜ் வாடி கட்சி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பிய பி.ஜே.பி., குஜராத்தில் 2002 இல் மிகப்பெரிய மதக்கலவரம் நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்களே - அப் பொழுது ஆட்சியில் இருந்த பி.ஜே.பி.யின் நரேந்திர மோடி பதவியை ராஜினாமா செய் யாதது ஏன்?

தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-54121626401406558472014-04-14T06:09:01.959+05:302014-04-14T06:09:01.959+05:30
நமது கட்சித் தலைவர்கள் எல்லாம் அந்தக் கோரிக் கைக்...
நமது கட்சித் தலைவர்கள் எல்லாம் அந்தக் கோரிக் கைக்காக ஒரு நாளை அறிவித்து பேராசிரியர், நாவலர், ஈ.வி.கே.சம்பத், நான் என தமிழகம் முழுவதும் சேது சமுத்திரத் திட்டத்திற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டோம். அப்படிப்பட்ட மாபெரும் திட்டம். நமது வளத்தை பெருக்குகின்ற திட்டம். அந்தத் திட்டத்தை நமது முதல் தேர்தல் அறிக்கையில் எடுத்து காட்டினோம்.

அண்ணா கண்ட கனவு சேதுசமுத்திரத் திட்டம்

அண்ணா மறைவுக்கு பிறகும் அண்ணா கண்ட கனவு சேதுசமுத்திரத் திட்டம். அந்தத் திட்டத்தை நிறைவேற் றினால் வளம் கொழிக்க, வாணிபம் செழிக்க, வியாபாரி கள் தங்களது பொருள்களை வெளிநாடுகளுக்கு அனுப்பு வார்கள் என்று தேர்தல் அறிக்கையில் அளித்து, அதை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டோம்.

அப்போது டி.ஆர்.பாலு அந்தத் திட்டத்தை எப்படி நிறைவேற்றவேண்டும் என்று முனைப்போடு செயல் பட்டார் என்பதை நினைத்து பார்க்கும்போது, அது என் நினைவில் பசுமையாக இருந்தது. டி.ஆர்.பாலு போன்ற இளைஞர்கள் காத்து இருக்கிறோம் என்று கூறுவதை போல் அன்றைக்கு இந்த சேதுசமுத்திரத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா மதுரையில் நடந்த போது, இந்திய அரசு இந்தத் திட்டத்தை ஆதரித்தது என்று மேடையில் இருந்தவர்கள் பேசினர்.

அந்தத் திட்டத்தை தொடங்கிய பிறகு, எம்.ஜி.ஆர்., அண்ணாவும் இல்லை. அம்மையார் இருந்தார். தமிழகத் திற்கு போதாத காலம் அம்மையார் ஆட்சி பொறுப்புக்கு வந்தார். அம்மையார் என்றால் புரியாது அம்மா என்றால் புரியும்.

உச்சநீதிமன்றத் திற்குச் சென்று தடைபெற்று இருக்கிறார்கள் என்றால், அவர்கள் தமிழகத்தைச் நேசிப்பார்களா?

டில்லிக்கு அம்மையார் சென்றார். ஏன் செல்கிறார் என்று பார்த்தால் உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கச் சென்று, தடையும் பெற்று இருக்கிறார். முழுமையானத் தடை அல்ல. அதை நிறைவேற்றுகின்ற முயற்சியை முடக்குகின்ற வரையில், தாமதப்படுத்தும் வகையில் தடை பெற்று இருக்கிறார். நீங்கள் தயவு செய்து எண்ணிப் பாருங்கள்.

மத்திய அரசு, தமிழகத்திற்குத் தருகின்ற நல்ல திட்டத்தை வேண் டாம் என்று யாராவது சொல்வார்களா? வேண்டாம் என்றால் பராவாயில்லை, உச்சநீதிமன்றத் திற்குச் சென்று தடை பெற்று இருக்கிறார்கள் என்றால், அவர்கள் தமிழகத்தைச் நேசிப்பார்களா? இவர்கள் தமிழகத்துக்காரர்கள் இல்லை என்பதற்கு இது போதாதா? தமிழகத்தில் ஆளும் கட்சி, தமிழகத்திற்கு என்ன தேவை என்று கேட்டு பெறக்கூடிய கட்சி, நீ கொடுத்து நான் வாங்கிக்கொள்ள மாட்டேன் என்பதைப் போல அந்தத் திட்டத்தை வேண்டாம் என்று கூறி விட்டார்.

கொடியேற்ற மாட்டாரா?

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15 சுதந்திர தினவிழா வில் கொடி ஏற்றும் உரிமையை பெற்று தந்தது யார், இந்தக் கருணாநிதி தானே.

ஜனநாயக இந்தியாவில் நான் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போது பிரதமர் இந்திராகாந்திக்கு ஒரு வேண்டுகோள் வைத்தேன். அம்மையார் அவர்களே நீங்கள் இந்தியப் பிரதமர். நான் முதலமைச்சர். ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் சுதந்திர தினவிழாவில் கொடி ஏற்றுகிறார்கள்.

அந்த நாளை அவர்களது அலுவலகத்தில் கொண்டாடு கிறார்கள். தமிழகத்தில் ஆட்சியருக்கு உள்ள உரிமை. முதல்வருக்குக் கிடையாதா? என்று கேட்டேன். இனிமேல் சுதந்திர தினத்தன்று எல்லா மாவட்ட ஆட்சி யரும் கொடியேற்றலாம். இந்தியாவில் உள்ள முதல மைச்சரும் தேசியக் கொடியை ஏற்றலாம் என்ற உரிமையை வெளியிட்டார்கள்.

அண்ணா நூல் நிலையம், படிப்பகம், இதைக் கருணாநிதி கொண்டு வந்தார். ஆகவே இதை நடத்தவிடமாட்டேன் என்று செயல்படும் ஜெயலலிதா, சுதந்திரதினத்தன்று கொடியேற்றும் உரிமையை கருணாநிதி கொண்டு வந்தார். அதனால் இனிமேல் கொடி ஏற்றமாட்டேன் என்று சொல்லக்கூடிய திராணி. தெம்பு ஜெயலலிதாவுக்கு இருக்கிறதா.
- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-5/78614.html#ixzz2yoh4dhjAதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-78569640342768768672014-04-14T06:08:57.007+05:302014-04-14T06:08:57.007+05:30
கோட்டையில் கொடியேற்றும் உரிமையை வாங்கித் தந்தது ய...
கோட்டையில் கொடியேற்றும் உரிமையை வாங்கித் தந்தது யார்? ஜெயலலிதாவிற்குக் கலைஞர் கேள்வி

தஞ்சாவூர், ஏப்.13- கருணாநிதி செய்தார் என்பதற்காக தி.மு.க. ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட திட்டங்களை முடக்கும் ஜெயலலிதா, ஆகஸ்டு 15 இல் கோட்டையில் கொடியேற்றும் உரிமையை வாங்கிக் கொடுத்தவர் கருணாநிதிதானே என்பதைச் சுட்டிக்காட்டினார் தி.மு.க. தலைவர் கலைஞர்.

தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் தஞ்சை திலகர் திடலில் நேற்று (12.4.2014) நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. தலைமை தாங்கினார்.

முன்னாள் அமைச்சர் உபயதுல்லா வரவேற்றார். முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி, தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எல்.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் கலந்து கொண்டு தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலுவை அறிமுகப்படுத்தி பேசி னார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள் முகத்தில் சிரிப்பை காணவேண்டும்

நாம் தேர்தலில் நிற்கிறோம் என்றால், ஏதோ சடங் கிற்காக அல்ல. மக்களுக்குத் தொண்டாற்றுவதற்காகத் தான், சாதனை செய்வதற்காக தான் நிற்கிறோம். விளை யாட்டாக அல்ல. தேர்தலில் ஈடுபடுவதற்கு தமிழ் நாட்டை உயர்த்தவேண்டும். மக்களை செழிப்படையச் செய்யவேண்டும். மக்கள் முகத்தில் சிரிப்பை காண வேண்டும் என்று தான் ஜனநாயகத் தேர்தலில் ஈடுபடுகி றோம்.

இங்கே யார் வேட்பாளர்கள் இன்று அறிவிப்பதற்கு முன்பே, தி.மு.க.வில் ஏதாவது பிளவு ஏற்படுத்த வேண்டும் என்று பாலுவா? அல்லது இந்த தொகுதி பழனிமாணிக்கமா? என்று இந்தத் தொகுதியிலே தி.மு.க. பிளவு கண்டு கிடப்பதை போலவும், பாலுவும், பழனி மாணிக்கமும் தெருச்சண்டை போட்டுக்கொள்வது போலவும், 2 பேரும் கட்டிப்பிடித்துச் சண்டை போடுவ தைப் போலவும் விழா எடுத்துக் கொண்டாடுகிறார்கள்.

(அப்போது டி.ஆர்.பாலுவும், பழனிமாணிக்கமும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு உயர்த்திக் காண்பித்தனர்)

இப்போது மேடையில் கண்ட காட்சி தான் இந்த இயக்கத்திலே என்னுடைய தம்பிமார்களிடத்தில் நான் விரும்பி, வேண்டி காணுகின்ற காட்சி. இந்தக் காட்சி. நம்முடைய ஒற்றுமைக்குச் சாட்சி. இந்தக் காட்சியின் காரணமாக எதிரிகளின் சூழ்ச்சிக்கு வீழ்ச்சி.

நமது முதல் தேர்தல் அறிக்கையில்...

நமது முதல் தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்றோம். அப்போது எனது அருமை நண்பர் எம்.ஜி. ஆரும் நம்முடன் இருந்தார். அவரும் ஆதரித்து பல கூட்டங்களில் பேசி இருக்கிறார். நானும் பேசி இருக்கி றேன்.

தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com